நண்பர்களே,
வணக்கம். கொஞ்ச நாட்களுக்கு முன்வரையிலுமே சனிக்கிழமையானால் ”எதைப் பற்றி எழுதுவது?” என்ற கேள்வியோடு மோவாயைத் தடவிக் கொண்டிருப்பது வாடிக்கை! ஆனால் என்ன மாயமோ தெரியலை - சமீப வாரங்களாகவே ”எதையெல்லாம் இப்போ எழுதுறது? எதையெல்லாம் அப்பாலிக்காவுக்கா ஒத்தி வைப்பது?” என்ற வினா மாத்திரமே முன்நின்று வருகிறது! இதோ- இந்த வாரத்து மெயின் மேட்டர் கூட ஆயிரமாவது பதிவிலேயே வந்திருக்க வேண்டியது; but ஏகமான அறிவிப்புகளோடு இதுவும் சேர்ந்து கரைந்திட வேணாமே என்று ஒத்திப் போட்டேன்! So ஆஞ்சநேயரின் வால் போல் நீண்டு வரும் அறிவிப்புகளின் லேட்டஸ்ட் அத்தியாயம் என்னவென்று பார்த்துப்புடலாமுங்களா?
அட அது என்ன - குருநாதருக்கு மட்டும் தான் வால் நீட்டிடும் ஆற்றலெல்லாம் இருக்க முடியுமா? ஒரு க்யூட்டான சிஷ்யப்புள்ளைக்குமே அந்த வரம் வாய்க்க வாய்ப்பிராதா? ”இன்னாங்கடா டேய்... நல்ல நாளைக்கே மண்டையன் குழப்புவான் - இன்னிக்கு ரூம் போட்டுக் குழப்புறானே?” என்று தலைக்குள் கேள்வியா? விஷயம் வேறொன்றுமில்லை guys - ஆஞ்சநேயர் பாணியில் வால் நீட்டிடும் ஆற்றல் கொண்ட நமது பால்ய நண்பன் கபிஷ் விரைவில் நம்மிடையே மீள்வருகை செய்திட உள்ளான்! முத்து காமிக்ஸில் filler pages-களாக துவக்கத்தில் தலைகாட்டி; பின்நாட்களில் முத்து காமிக்ஸ் வாரமலரில் ரெகுலராகி; அதன் பின்பாய் பூந்தளிரில் உலா வந்த இந்த சுட்டிப் புயல் நமது புத்தக விழாக்களில் சிறாருக்கான வெளியீட்டு வரிசையில் இணைந்திடவுள்ளான்! நம் மத்தியில் கபிஷ் popular என்பது எனக்குத் தெரியும் தான் - ஆனால் மந்தித் தம்பிக்கு கேரளாவில் ; மலையாள காமிக்ஸ் ரசிகர்களின் மத்தியில் ஒரு tremendous வரவேற்பு இருப்பதை சமீபத்தில் தான் தெரிந்து கொள்ள முடிந்தது - அங்கே கபிஷின் மீள்வருகை செம தலைப்புச் செய்திகளாகியதைப் பார்த்த போது!
பைக்கோ க்ளாஸிக்ஸ் என்ற பெயரில் மலையாளத்தில் காமிக்ஸ் வெளியிட்டு வரும் பாரம்பரியமான பதிப்பகத்தினர் கபிஷுக்கென் exclusive ஆகவொரு இதழை வெளியிட்டிருந்தது மாத்திரமன்றி, பிரதான செய்தித்தாள்கள் அனைத்திலும் அதுவொரு முக்கிய செய்தியாகிடச் செய்திருந்தனர். மலையாளத்தில் மட்டுமன்றி, இங்கிலீஷ் பேப்பர்களிலும் நியூஸ் றெக்கை கட்டிட, நம்ம ஆந்தை விழிகளிலும் அது பட்டிருந்தது !
கபிஷ், ராமு-சோமு; காலியா; இன்ஸ்பெக்டர் கருடா இத்யாதி... இத்யாதி என ஒரு கணிசமான எண்ணிக்கையிலான தேசீயப் படைப்புகள் - 1970-களின் மத்தியிலிருந்து, மும்பையில் அமர் சித்ர கதா - டிங்கிள் போன்ற அற்புதங்களின் பின்னணியிலிருந்த திரு.ஆனந்த் பை அவர்களின் கைவண்ணத்தில் உருவாயின ! “அங்கிள் பை” என்று வாஞ்சையாய் அழைக்கப்பட்டவர், இந்த படைப்புகளை திறமையான உள்ளூர் ஓவியர்களைக் கொண்டு உருவாக்கியது மட்டுமல்லாது, அவற்றைப் பிற மொழி காமிக்ஸ் பதிப்பகங்களுக்கு சந்தைப்படுத்திடும் பொருட்டு Rang Rekha Features என்றதொரு நிறுவனத்தையும் மும்பையில் நிறுவியிருந்தார்.
சீனியர் எடிட்டருக்கு அமர் சித்ர கதா வெளியிட்டு வந்த IBH நிறுவனத்தோடு அந்நாட்களில் நல்லதொரு பரிச்சயம் இருந்ததால் - அங்கிருந்து கிளைவிட்டிருந்த Rang Rekha Features நிறுவனத்தோடு கரம் கோர்ப்பது வெகு சுலபமாக அமைந்து போனது! அப்போதெல்லாம் முத்து காமிக்ஸ் ரெகுலராக வெளிவந்து கொண்டிருக்க, வாயு வேக வாசு ; புத்தக பிரியன் பாபு ; சூரப்புலி சுந்தர் ; கபிஷ், கருடா, ராமு-சோமு போன்ற தொடர்கள், சுவையான கேக் மீதான ‘பளிச்‘ icing ஆகிப் போயின! சிம்பிளான கதைகள் ; ஈர்க்கும் நாயகர்கள் ; எளிதான சித்திர பாணிகள் என்ற template நம் அனைவருக்குமே பிடித்துப் போனதில் வியப்பில்லை ! And முத்து காமிக்ஸ் வாரமலரில் இரும்புக்கை மாயாவிக்கும், அதிமேதை அப்புவுக்கும் அடுத்தபடியாக செம popular ஆக இருந்த கோஷ்டி அனைவருமே மும்பைக்கர்ஸ் என்பதில் no doubts !!எக்கச்சக்கமான நாட்களில் மும்பையிலிருந்து வரும் கபிஷ் & கருடா கதைகள் அடங்கிய பார்சல்களை நானே உடைத்து, சகலத்தையும் படித்த கையோடு தமிழாக்கம் செய்யவும் அப்போதே முயற்சித்திருக்கிறேன்! So என்னைப் பொறுத்தவரையிலும் கபிஷ் ஒரு நிஜமான பால்ய நண்பன்!
ஆனால் ‘90களில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து Rang Rekha Features நிறுவனமானது கடை மூடும் நிலை நேர்ந்தது! அந்நேரம் நாமும் வேறு தடங்களில் பயணித்துக் கொண்டிருந்ததால் அவர்களோடு பெருசாய் touch-ல் இருந்திருக்கவில்லை ! And ‘90-களின் பிற்பாதிகளிலும், 2000-ன் முழுமைக்கும் நாமும் நொண்டியடிக்கவே செய்தோம் எனும் போது கபிஷ் பற்றிய சிந்தனைகள் பெருசாய் தலைதூக்கியிருக்கவேயில்லை ! 2012...நமது இரண்டாவது இன்னி்ங்ஸ் என்று வண்டி மறுக்கா ஸ்டார்ட் ஆன சமயத்திலோ புதுசு புதுசுாய் தேசங்கள்தோறும் பதிப்பகங்களைத் தட்டியெழுப்பி புதுசு புதுசாய் கதைகளை வாங்கும் மும்முரத்தில் கபிஷ் சுத்தமாய் நமது ரேடாரிலேயே இடம்பிடித்திருக்கவில்லை! So 2023 ஆகஸ்டில் “மலையாளத்தில் கபிஷ்” ஏற்படுத்தியிருந்த தாக்கத்தைப் பார்த்த சமயத்தில் ‘ஆஹா... இது இளம் / புது வாசகர்களுக்கு சுகப்படக்கூடியதொரு தொடராச்சே! சின்னச் சின்ன கதைகளென்றாலும், இவை நம் இல்லத்துக் குட்டீஸ்களுக்கு மாத்திரமன்றி, XL சைஸ் பெர்முடாக்களைப் போட்டுத் திரியும் மனசளவிலான குட்டீஸ்களுக்கும் பிடித்திடக்கூடுமே?!” என்று தோன்றியது!
அந்த நியூஸ் பேப்பர் செய்தியை முழுசாய்ப் படித்த போது தான் தெரிய வந்தது – திரு.ஆனந்த் பை தனது காமிக்ஸ் படைப்புகளின் உரிமைகளை ஆந்திராவிலுள்ள ஒரு அனிமேஷன் + ஊடகக் குழுமத்திடம் விற்பனை செய்து விட்டார் என்பது! சரி ரைட்டு, மும்பையில் கதவைத் தட்டுவதற்குப் பதிலாக இனி ஹைதராபாத்தில் தட்டினால் கபிஷ் & கோவை தமிழ் பரையச் செய்து விடலாமென்று பட்டது! தொடர்ந்த நாட்களில் ஹைதெராபாத்துக்கு ஈ-மெயில்கள் போட்டுத் தாக்கினேன் ! ஊஹும்... லக் இல்லை! அவர்களது ஃபோன் நம்பரைத் தேடிப் பிடித்து மாட்லாடுவோம் என்று நினைத்தால், சான்ஸே இல்லை – இணையத்தில் டெலிபோன் நம்பரைப் பிடிக்கவே முடியவில்லை! இதென்னடா முழியாங்கண்ணனுக்கு வந்த சோதனை – என்றபடியே ஹைதராபாத்தில் தெரிஞ்சவங்க யாராச்சும் இருக்காங்களா? என்று யோசிக்க ஆரம்பித்தேன்! அசாருதீனையும், அம்பத்தி ராயுடுவையும் எனக்குத் தெரியும் தான் – ஆனால் அவர்களுக்கு என்னைத் தெரியாதென்பதால் கொஞ்ச நாட்களுக்கு கபிஷை அந்தரத்தில் விட்டுவிட்டேன்! நமக்குத் தான் மூக்குக்கு முன்னே ஒரு புது வேலை முளைக்கும் நொடியில், முந்தின மணி வரையிலும் செய்து வந்தது மறந்து போயிடுமே... So கொஞ்ச காலத்துக்கு சுத்தமாய் மறந்தே போயிருந்தேன்!
அகஸ்மாத்தாய் ஒரு நாள் நமது வாசகர் குடும்பத்தின் ரொம்பவே பிரியமானதொரு அங்கத்தினர் சமீபத்தில் திருமணமாகி ஹைதராபாத்தில் செட்டிலாகியிருப்பது நினைவுக்கு வந்தது! And அவரது கணவர் கூட மீடியாவில் இருப்பவரே ! ரைட்டு... சஞ்சீவி மலையை ஏந்தி வரும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கலாமென்ற எண்ணத்தில் ஃபோன் அடிச்சு “இன்ன மேரி...இன்ன மேரி சுவத்திலே முட்டிகினு கீரேன் இக்கட! நீங்க அக்கட கொஞ்சம் ட்ரை பண்ணிப் பார்த்து – கபிஷ் உரிமைகள் தொடர்பாக யாருகிட்ட பேச வேண்டியிருக்கும்னு மட்டும் locate செய்து தந்தால், மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்!“ என்று சொல்லி வைத்தேன்! உற்சாகமாய் அவர்களும் முயன்றார்கள் – and தனது மீடியா தொடர்புகளைப் பயன்படுத்தி நிறுவனத்தோடு அவரது கணவர் பேசியும் விட்டார் ! ஆனால் இந்த உரிமைகள் சார்ந்த சமாச்சாரமெல்லாமே குழுமத் தலைவரின் நேரடி கவனத்தில் மாத்திரமே அரங்கேறிடும் & முதலாளி அமெரிக்கா போயிருக்கிறார்; திரும்ப நாளாகும்! என்ற பதிலே கிட்டியது! ”சரி ரைட்டு... பார்த்துக்கலாமென்று” நான் மறுக்கா எனது பணிகளுக்குள் மூழ்கிப் போனேன் ! ஹைதராபாத்திலிருந்துமே நிறுவனத்தின் தரப்பிலிருந்து மேற்கொண்டு feedback எதுவும் கிட்டியிருக்கவில்லை! ”சரி... ரைட்டு... சந்தர்ப்பம் அமையும் போது பார்த்துக்கலாம்!” என்றபடியே மனசை எல்லோரும் தேற்றிக் கொண்டோம்!
நாட்கள் ஓடின... நடுவே புத்தக விழாவினில் வழக்கம் போல நண்பர்கள் சந்திப்பு அரங்கேறியது ! அப்போது நண்பரொருவர் “கபிஷ் மறுக்கா போடலாமே? மலையாளத்திலெல்லாம் போடறாங்க பார்த்தீங்களா?” என்று வினவினார். ”போடலாம் தான் சார்... ஆனால் நடைமுறையில் சில communication சிக்கல்கள் உள்ளன” என்று நடந்த கதையைச் சொன்னேன்! “நான் ஏதாச்சும் முயற்சித்துப் பார்க்கவா ?” என்று நண்பர் கேட்ட போது, “வந்தால் மாங்காய்... போனா கல்லு தானே?!” என்ற நினைப்பில் “தாராளமாய் முயற்சியுங்கள் சார்!” என்றேன்! இது பேசி கிட்டத்தட்ட ஏழு மாதங்களிலிருக்கும். எந்தவித முன்னேற்றங்களும் இருந்திருக்கவில்லை! நடு நடுவே அவரிடம் வாட்சப்பில் பேசும் போது இது பற்றி ஒருவருக்கொருவர் நினைவூட்டிக் கொள்வோம்! வழக்கமான மார்க்கங்களில் முயற்சித்து முன்னேற்றம் காண முடியாத நிலையில் நமது நண்பர் கேரளாவில் கபிஷை வெளியிடும் நிறுவனத்தின் எடிட்டரிடமே நம் சார்பில் கோரிக்கையினை இறுதி அஸ்திரமாய் சமர்ப்பித்திருக்கிறார்! அவரும் தட்ட முடியாமல், “சந்தர்ப்பம் அமையும் போது ஹைதராபாத்தில் பேசி விட்டு உங்களுக்குச் சொல்கிறேனே!” என்று பதிலளித்திருக்கிறார்! நாட்களும், வாரங்களும், மாதங்களும் மறுக்கா ஓடிய நிலையில், ஒரு அழகான நாளில் நமது நண்பரின் தொடர் நச்சரிப்பு தாங்காதவராய், ஹைதராபாத் குழுமத் தலைவரோடு தொடர்பு கொள்ளத் தேவையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார் - மலையாள கபிஷின் எடிட்டர் அவர்கள் !
”கண்டேன் சீதையை!” என்றபடியே தகவலை என்னிடம் நண்பர் pass on செய்திட, அடுத்த அரை மணி நேரத்திற்குள் கபிஷ் தொடர்பான நமது கோரிக்கையை முறைப்படிச் சமர்ப்பித்திருந்தேன்! மலையாளத்துக்கு அடுத்தபடியாகத் தமிழில் வெளியிடும் ஆர்வம் தெரிவித்து ஒரு பதிப்பகம் முனைப்புக் காட்டியிருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி என்றவர் நமது முன்மொழிவை study பண்ணி விட்டுச் சொல்கிறேன் என்றும் அன்போடு பதிலளித்தார்! மீடியாத்துறையில்; அனிமேஷன் துறையில்; அரசியலில்; தொழிலதிபர்கள் வட்டத்தில் அவர் எத்தனை உயரிய இடத்திலிருக்கிறார் என்பதை கூகுளின் புண்ணியத்தில் தெரிந்து கொண்டிருந்தேன் ; மனுஷன் ஆந்திராவின் முக்கியஸ்தர்களின் லிஸ்ட்டில் ரொம்பவே உயரத்தில் இருப்பவர் என்பது புரிந்தது ! ”ஆஹா... தேசத்தின் முதலிரண்டு இடங்களில் இருப்பவர்களோடே கைகுலுக்கும் அன்னியோன்யத்தில் இருப்பவராச்சே?! இவரது அன்றாடப் பணிச்சுமைகளின் மத்தியில், நம்ம பொரிகடலைக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க அவகாசம் எங்கே கிடைக்கப் போகிறது?” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்! ஆனால் அற்புதமான பண்பாளர் – சொன்னது போலவே மறுநாளே அவராகவே அழைத்து மேற்கொண்டு கொஞ்சம் தகவல்கள் கேட்டுப் பெற்று தங்களால் என்ன முடியும் – முடியாது என்பதைத் தெளிவாக்கினார். தனது சம்மதத்தை போனிலேயே என்னிடம் தெரிவித்து விட்டு, மேற்கொண்டு ஆக வேண்டிய பணிகளைப் பார்த்துக் கொள்ள தனது உதவியாளரை கோர்த்து விட்டார் ! So மாதங்களாய் ஜவ்விழுத்த முயற்சிகள், உரியவரிடம் பேசிய சற்றைக்கெல்லாம் ஓ.கே.வாகிப் போயிருந்தன !! தொடர்ந்த நாட்களில் அவரது உதவியாளருடன் follow up செய்து ”புராஜெக்ட் கபிஷ்”க்கு ஒரு பிள்ளையார் சுழி போடச் சாத்தியமான நொடியில், விடாமுயற்சிக்காரரான நம்ம நண்பருக்கும், இதன் பொருட்டு நமக்காக நேரம் செலவிட்ட அன்பான ஹைதராபாத் தம்பதியினருக்கும், மகிழ்ச்சியோடு தகவல் தெரிவித்தேன்! செம உற்சாகம் அனைவருக்கும் – ஒரு பால்ய நண்பனை மறுக்கா சந்தித்திடும் வாய்ப்பு புலர உள்ளதை எண்ணி! So ஒரு வால் நீட்டும் மந்தியை தமிழ் பேசச் செய்திட அவசியமாகிய கூத்துகளுக்குப் பின்பாக, அதனை அழகாய் நடைமுறைப்படுத்திட வேண்டிய பொறுப்பு இப்போது நம்மிடம்! ‘தம்‘ கட்டிப் பணி செய்தால் ஈரோடு புத்தக விழாவின் போது கபிஷ் ஸ்பெஷல் – 1, ராமு-சோமு etc... சகிதம் தயாராகிட வேண்டும். But இந்த நொடியில் அதனை உறுதிப்படுத்த ‘தம்‘ லேது – டின்டினின் தயாரிப்புப் பணிகள் இடையே காத்திருப்பதால்! So இயன்றமட்டுக்கு முயற்சிப்போம் என்பதே இந்த நொடியின் நிலவரம்!
எல்லாம் ரைட்டு,, அந்த விடாப்பிடி நண்பர் யாரென்கிறீர்களா? அவரெல்லாம் ஆற்று வெள்ளத்துக்குள்ளேயே சாகஸம் செய்து பழகிய ராஜா! வெயிலிலும் மழையிலும் நம்மோடே பயணித்து வருபவர்! அவ்வப்போது ”இதைச் செய்யலாமே; அதைச் செய்யலாமே!” என்று suggestions தந்திடுபவர்! இதோ – ஒரு வாரமாய் ஓடிக் கொண்டிருக்கும் நமது காமிக்ஸ் வாட்சப் community கூட அவரது பரிந்துரைகளில் ஒன்றே! ஏற்கனவே கார்த்திக் சோமலிங்கா இதுபற்றி முந்தைய பதிவு ஒன்றில் பின்னுாட்டமிட்டிருக்க, அதனை நடைமுறைப்படுத்தத் தேவையான சில யோசனைகளைத் தந்தவர் இந்த ரபீக் ராஜாவே தான்! நன்றிகள் பல சார்; கபிஷுக்கு மட்டுமல்ல!!
நம்மைச் சுற்றிலும் அன்பெனும் அரண் அமைத்திட இவரைப் போலவே எண்ணற்ற நண்பர்கள் இன்றளவும் தொடர்வதாலேயே, இந்தப் பயணம் இன்னமும் வீச்சோடு தொடர்கின்றது ! புனித மனிடோவுக்கு நமது நன்றிகள் - ஒற்றைக்குடும்பமாய் கரம் கோர்க்கும் எண்ணம் கொண்ட நண்பர்களை வாசகர்களாக்கித் தந்தமைக்கு !!
சரி, ரைட்டு – கூப்பிடு தொலைவில் நமது ஆண்டு மலர் மாதம் காத்திருக்க அவை சார்ந்த previews-ம் முக்கியமாச்சே?! So – இதோ நமது தானைத் தலைவர் ஸ்பைடரின் மெகா சைஸ் வண்ண இதழின் அட்டைப்பட முதல் பார்வை!
அட்டைப்பட டிசைன் நமது அமெரிக்க ஓவியரிடமிருந்து வந்திருக்க, அதனை மெருகூட்டுவது ; பின்னட்டை டிசைனிங் என நமது கோகிலா பார்த்துக் கொண்டிருக்கிறார் ! கை ; கழுத்து ; காத்து ; மூக்கு - என்று ஒவ்வொரு அவயமும் அளவில் ஒழுங்கா கீதா ? என்று இயன்ற மட்டிற்குப் பார்த்திருக்கிறேன் தான் ; but நம்ம தலைவரின் டிசைன் எனும் போது ஏகமாய் அபிப்பிராயங்கள் வராது போகாதென்பது உறுதி ! ஏதோ, பாத்து பண்ணுங்க மக்கா !!
Before I sign out, இதோ, நம்ம ஒல்லியாரின் ஸ்பெஷல் ஆல்பத்திலிருந்து :
And நமது ஈரோட்டில் லயன் 40 தொடர்பாக ஓரிரு கோரிக்கைஸ் folks :
Me first
ReplyDeleteஆஹா! வாழ்த்துக்கள் சார். நினைத்ததை முடிப்பவர்..
Delete😍🙏
Deleteவந்தாச்சு மீ பர்ஸ்ட்🌟
Deleteவாழ்த்துகள் சகோ💐
😍🙏🙏
DeleteFirst ல First
ReplyDeleteஆஜர்
ReplyDeleteவணக்கம் காமிக்ஸ் உறவுகளே❤️😇
ReplyDeletePresent Sir
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteகபீஷ் வருகை மகிழ்ச்சி ஆசிரியரே
ReplyDeleteஅப்படியே நம்ம விச்சு கிச்சுவும் கண் கொண்டு பாருங்க
6th
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteடாப் 10
ReplyDeleteஸ்பைடர் அட்டை மிக அருமை சூப்பரோ சூப்பர்
ReplyDeleteஎன் ஆதர்ஷ கபீஷ் க்கு ஆஞ்சநேயனூரிலிருந்து வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி ...😍🤪🫣🥰😜💐😁👍😍
ReplyDeleteகபீஷ் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ReplyDelete16
ReplyDeleteHi..
ReplyDeleteMe
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteWow - Kapish is amazing inclusion - you are taking us back to the 80s sir !
ReplyDeleteடியர் எடி,
ReplyDeleteஒரு வழியாய் மீண்டும் கபீஷ் நம் இதழ்களில் பவனி வர போகும் அந்த அறிவிப்பு வெளிவந்தே விட்டது.... ராமருக்கு உதவிய அணில் போல என்னால் அது கைகூடியது கண்டு மகிழ்ச்சியே.
என்ன விடாமல் தொந்தரவு செய்ததற்கு பைகோ நண்பர் நம்மை ப்ளாக் லிஸ்டில் போடாமல் இருந்தார் என்பதே பெரிய விஷயம். ஆனால், ஹைதராபாத் பெரிய தலையை பற்றி இணையத்தில் தெரிந்துகொண்டபின் அவரிடம் பேசினால் நம்மையெல்லாம் மதிப்பாரா என்று ஒரு கலவரத்தோடே அவரை அணுகினேன்.
பைகோ நண்பர் முன்பே நம்மை அறிமுகபடுத்திய பிறகு தான் அவர் எண்ணை தந்தார் என்பதால்... ஜென்டில்மேன் போல வாட்ஸ்ஆப்பில் நமக்கு பதில் அளித்ததோடு, நேரம் ஒதுக்கி பேசவும் நேரம் குறித்துகொடுத்தார்.
பின்பு நடந்தது எல்லாம் சரித்திரம் என்னும் விதத்தில் நமது எடி, அடுத்த அடுத்த நாளில் உறுதி செய்து விட்டார். இனி தமிழில் அதை நேரில் பார்க்கும் நாளுக்கு காத்திருக்கலாம்.
கபீஷ் கூடவே மற்ற ரங்க் ரேகா கதைகளை பார்க்கும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கு... அப்ப எடி, அந்த வாரமலர் ரீப்ரிண்ட்களை தூசு தட்டலாமே.... 😎
விண்வெளி பிசாசு அட்டை ஓவியம் செம்ம... உலக பந்தையே ஏதோ ஸ்னோபவுலிங்குக்கு பயன்படுத்துவது போல அட்டகாசமான போஸ்... ஸ்பைடர் தீவிர ரசிகர்களான முருகன், உதய் இன்று கொண்டாட போகிறார்கள். 😎
Delete💐🙏🙏@ரபீக் ராஜா ஜி..❤💛
Deleteலவ் யூ ச்செல்லம்..😍😘😘😘
என் ச்செல்லாக்குட்டீ கபீஷை மீண்டும் கொண்டு வர முயற்சி எடுத்தமைக்கு..😍😘❤💛💙💚💜
கபீஷ்,
பண்டிலா,
மோத்து,
பீலு,
அந்த பேட்பாய் நரி (பேரு மறந்து போச்சே)
வேட்டைகாரன் ரங்கையா,..
எல்லாம் கண்ணு முன்னாடி ஓடுதே...😃😍👀👀
##Feeling excited## 😍😘
absolutely friend
DeleteAwesome Rafik.
Deleteஅடிச்சு தூள் கிளப்புவோம் இவர்கள் வருகையை 💓
Deleteமுயற்சிக்கு வாழ்த்துக்கள் ரபீக் ராஜா. 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤝👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️💥❤️👏❤️💥❤️👏❤️👏❤️👏❤️👏❤️👏❤️
Deleteரபீக் ஜி.. என்னத்தச் சொல்ல.. அய்யோ.. நேர்ல இருந்தா கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்திடுவேன்... 😘😘😘
Deleteஇதுவரையில் காணமல் போயிருந்த பழைய நண்பன் கபீஷை மீட்டுக் கொண்டு வந்தமைக்கு Thanks Rafiq Raja ஜி.
Deleteசெம ரஃபீக்
Deleteகபிஸ் எனக்கும் பால்ய சினேகிதன்தான் எடிட்டர் சார்.. வாழ்த்துக்கள் ராஜா...
Delete❤️. நன்றி... ஸ்பைடர் அட்டைப்படம்.. அட்டாஹாசம்.. ❤️👍
மிக்க நன்றி .. தல
Delete24th
ReplyDeleteWelcome back kapish
ReplyDeleteVery very happy news sir
ReplyDelete@Edi Sir...😍😘
ReplyDeleteஸ்பைடர் அட்டை பகா மாஸ்..😍👍👌
வேதாளர் ரெட் ட்ரெஸ் ல வந்த மாதிரி ஸ்பைடர் ரெட் ட்ரெஸ்ல O.k..😍😃
But ஸ்பைடர் பாடி ஃபிட்னெஸ், முகஜாடை எல்லாம் பாத்தா..
யங் டெக்ஸ் போல..
யங் ஸ்பைடர் மாதிரி தோணுறது எனக்கு மட்டும் தானா..😍😃😘😀
எனக்கு ஆசிரியராக தோனுதே
Deleteஒரு வேளை அப்படியும் இருக்குமோ...😃😃😃👍👌
Deleteககக கபிஷ்....போ
ReplyDeleteகபிஷ் எனக்கும் ரொம்ப பிடிக்கும் சார்😍
ReplyDeleteகாலியா கதைகளும் வந்தால் இன்னும் happy sir👍😊
Deleteகபீஷ்....வாவ்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவந்துட்டேன்..
ReplyDeleteWelcome Kabish.
ReplyDeleteஸ்பைடர் அட்டைப்படம் செம அட்டகாசம் சார்...சூப்பர்..
ReplyDeleteகபிஷ்..வருகை எதிர்பாரா ஆச்சர்யம்..வாழ்த்துக்கள் சார்...முயற்சி எடுத்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
கபிஷ் வருவதில் மிக்க மகிழ்ச்சி..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅடடே.. கபீஷ் மீண்டும் வருகிறதா? எனக்கு மட்டுமல்ல.. எனது தங்கைக்கும் பிடித்த தொடராச்சே..
ReplyDeleteசார்.. அப்படியே வேட்டைக்கார வேம்பு, காக்கை காளி..
ReplyDeleteபார்னே: பிரின்ஸ் ஸ்பைடர் அட்டைப்படம் பார்த்தியா ப்பா?
ReplyDeleteபிரின்ஸ்: பொடியா நீயாவது பார்த்தியா?
பொடியன்: எனக்கு தெரியாமலா? அட்டைப்படம் *தாறுமாறு தக்காளி சோறு* கேப்டன்..
😍😘💐❤💛💙💚💜
Deleteஸ்பைடர் முன் அட்டைப் படம் அசத்தல் சார்👌👌👌
ReplyDeleteநல்வரவு - கபீஷ்க்கு ..
ReplyDelete@Edi Sir...😍😘
ReplyDelete"உலகமே எனக்கு கீழேடா".. அப்படின்னு தலை ஸ்பைடரோட தெனாவெட்டு போஸே தனிதான்...🥰😍😍😍
வேட்டை கார் வேம்பு 100% வேணும்
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteஅப்படியே அந்த முத்து காமிக்ஸ் வாரமலர் ரீபிரிண்ட்..😍😘
மறந்துடாதிங்கோ..😍💐💐
Please Note this point, your Honour ❤️
Delete100%
Deleteசார் அத போடுறேன்னு வாக்கு கொடுத்து ஜம்பாரின் வாய அடைங்க
Deleteஆனந்தமான பதிவு....
ReplyDeleteஇன்றைய பதிவை படிக்கும் போதே மனம் 1985 களில் சஞ்சரிப்பது போன்ற உணர்வு.
நம்மில் பலருக்கு முத்து காமிக்ஸ் ல் கபீஷ் தொடராக வந்தது தெரியாமல் இருக்கலாம்,
லயன் காமிக்ஸ் "கபாலர் கழகம்"த்திலிருந்து சில மாதங்கள் வந்ததை கூட மறந்திருக்கலாம்,
ஆனால் "பூந்தளிர்" ல் கபீஷை படிக்காத ஆட்கள் மிக மிக சொற்பமே.
அன்றைய நாட்களில் கபீஷ், சிறுவர்களுக்கு பிடித்தமான சூப்பர் ஹீரோ.
உண்மையாகவே கபீஷ் இருப்பதாக நம்பிய காலம், பூந்தளிர் போன்ற சிறுவர் இதழ்களெல்லாம் மறைந்து, இந்த கபீஷும் பின் வருடங்களில் காணாமல் போச்சு.
எப்பவாவது பழைய இதழ்களை பற்றிய கட்டுரைகள் வரும் போது நினைத்து பார்ப்பதோடு இந்த கபீஷ் கதைகள் வரும் என்ற நம்பிக்கை கானல் நீராகிப்போனது.
சமீபகாலத்தில் கூட இதைப்பற்ற சில பதிவுகள் போட்டிருந்தேன்.
"மீண்டும் கபீஷ் வந்தால் நல்லாருக்கும்"என,
ஆனால் நண்பர் ரபீக்ராஜா இப்படியொரு முயற்சியை முன்னெடுத்ததின் பலன் மீண்டும் கபீஷ் வாசகர்கள் பார்வைக்கு வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
உண்மையில் எதிர்பாராத இன்ப அதிர்ச்சிதான் இந்த செய்தி.
"கபீஷ்" ,
முயல் “மோத்தி",
அதன் அத்தை "காரணி",
மான் "பிந்து" ,
புலி "பீலு",
நரி "ஸீகல்",
யானை "பந்திலா",
பந்திலாவின் அம்மா,
மயில் "மயூர்",
கரடி "பபூச்சா",
கழுகு "பாஞ்சா",
வேட்டைக்காரன் "தோப்பையா" என,இன்னும் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் மனதை விட்டு அகலா கதாபாத்திரங்கள்.
இவற்றை இன்றைய சிறுவர்கள் பார்வைக்கு கொண்டு வருது உன்னதமான செயல்
இதுக்காவே உங்களை பாராட்டலாம் சார்.
🌹விண்வெளிப்பிசாசு அந்த வாசகமே மாஸ் காட்டுகிறது,
"லயன் காமிக்ஸ்ன் முதல் சூப்பர் ஸ்டார்"👌.
"காமிக்ஸ் உலகமே ஸ்பைடரின் காலடியில்" என்பது போல அட்டைப்படம்🔥🔥.
தங்களின் அரிய முயற்சியால் தமிழில் கபீஷை உயிர்ப்பித்ததற்கு
மீண்டும் தங்களுக்கு வாழ்த்துக்களும்,
நண்பர் ரபீக் ராஜாவுக்கு நன்றிகளும்.
கபீஷோடு என்னுடைய முதல் அறிமுகமும் பூந்தளிர், தான் நண்பரே...
Deleteஅப்போது எல்லாம் முத்து காமிக்ஸ் வாங்கும் அளவிற்கு நமக்கு பைசா நஹி கதை தான். 😎
கபாலர் கழகம்....வார்த்தை அடடா
Deleteசுட்டி குரங்கு கபீஷ்..🐵
ReplyDeleteதமிழில்... கலரில்.. லயன் காமிக்ஸில்.. ❤️😍
அய்யோ..பகவானே..
என்ன பண்றதுன்னே தெரியலையே..😃😍😘😀
ஒரே Excitement ஆ இருக்கே..❤💛💙💚💜
ஆஹா!! கபீஸ் மீண்டும் வரயிருப்பதில் மகிழ்ச்சி! அதுவும் கலரில் வரயிருப்பது ரெட்டிப்பு மகிழ்ச்சி!
ReplyDeleteவிடாமுயற்சியுடன் உதவிய நண்பர் ரஃபீக் ராஜாவுக்கும், அந்த ஹைதராபாத் புதுமணத் தம்பதிகளுக்கும் காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக நன்றிகளும் வாழ்த்துகளும்!
ஸ்பைடர் அட்டைப்படம் - வண்ணம், துல்லியம், நேர்த்தி - என்று எல்லா.வகையிலும் பிரம்மிக்க வைக்கிறது! அமெரிக்க ஓவியருக்கும், கோகிலா சகோவுக்கும் வாழ்த்துகள்!!
🙏🙏
ReplyDeleteபாபு (மாடஸ்டி பிளைஸி)
ReplyDeleteகோயம்புத்தூர்.
ஆசிரியர் அண்ணா!
lion40erode@gmail.com மெயில் ஐடி க்கு இரண்டு முறை msg அனுப்பி கோரிக்கை கேட்டு வைத்திருக்கிறேன். அதற்கு ஒப்புதல் கிடைத்து விட்டதா / இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
நண்பர் ரஃபீக் ராஜா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். குட்டிக்குரங்கு கபீஷின் மீள் வருகைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteKapish hai jollyyy
ReplyDeleteசுட்டி குரங்கு கபீஷ் - Super news Editor Sir !!!
ReplyDeleteஎதே.. கபீஷா.. நம்ம லயன்லயா.. எண்ட குருயூரப்பா... ஆயிரமாவது பதிவிலிருந்து போட்டு தாக்கறாரு எடி.. சந்தோசத்துல ஹார்ட் நின்னுடும் போலயே... 😍😍😍🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍😍🙏🏻😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ReplyDeleteஅப்படியே இன்ஸ்பெக்ட்டர் கருடாவையும் இட்டுனு வாங்கோ சட்டுனு..
ReplyDeleteகபிஷ் ...கபிஷ்...கபிஷ்....கபிஷ் ரொம்ப பிடிக்கும் தான் ஆனா2012க்கு பிறகு புதுப்புது நாயகர்கள் புதுப்புது வித்யாசமான ஜேனர்கள் என நீங்கள் போட்டு தாக்க தாக்க சுத்தமான மறந்தே போன பால்ய நண்பன் கபிஷ் . ஆனா உள்ளூரமனசுக்குள்ள கபிஷுக்கு என்ன இடம்னுஇப்பதான் தெரியுது. இதோ இந்த நொடி யில கூட கபிஷ் தவிர வேறு நினைப்பு எதுவுமே இல்ல.நான் என்னையே மறந்து கரூர் குணா போல் ஆயிட்டேன். ராஜ சேகரன்
ReplyDeleteகபிஷின் மீள்வருகைக்கு மிகவும் நன்றி சார். இதற்காக உழைத்த ரபீக் ராஜாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இன்ஸ்பெக்டர் கருடாவையும் வர செய்யுங்கள் சார் ப்ளீஸ்
ReplyDeleteWow கபீஷ்! உண்மையில் இது எதிர்பாரத அறிவிப்பு. 70 களில் முத்து வில் வந்த கபீஷ் வாசித்ததில்லை.. ஆனால், பூந்தளிரில் தொடர்ந்து வாசித்து மகிழ்ந்துள்ளேன்.
ReplyDeleteசெம சூப்பர் சார்....கபீச படிக்கைல சந்தோசமா மன வால் நீள...ஆஞ்சநேயர் வாலாய் இன்னும் நீளப் போகும் கற்பனை தங்களுக்கு பீதியை கிளப்பி டக் கூடாதென மறைத்து...பாய... நம்ம அதிமேதாவி அப்பு அது இதுன்னு ஈர்க்க...அப்பு வந்தா நல்லாருக்கு மே என எண்ண...என்ன அதுவுமா .ஆஹான்னு மலைக்க....இந்திய தயாரிப்புகளா இவை நம்மவர்கள் தாம் எத்தகைய திறமைசாலிகள்....பார்படாஸ் தீவு காக்கை காளியான்னு அது தொடர...நம்ம ராமுவும் சோமுவும் வரனும்...ஆஹான்னு வானத்தில் பறந்த என்னை பூமி பந்த காட்டி கால்பதிக்கச் செய்கிறார் நீதிக்காவலர் தன் அட்டையில்...எல்லாமே மறந்து போச்சு கபீசும்தான்....செம சூப்பர் சார்....மீண்டும் டாக்டர் டக்கரை நினைவுறுத்தி 80 கோளின் அற்புத அட்டய தேடி தீட்டித் தந்ததற்கு நன்றிகள்...இது வரை வந்ததிலே...இனிமே வரப்போறதிலே டாப்புதானன்னு சொல்லாம சொல்வாரோ மெய்யான நீதியரசர்..பின்னட் டையும் அழகு....40 ம் ஆண்டு மலர்னு நம்ம முன்னட்டைல ...லோகோவை ஜிகுனாத்தாள் மிஸ்ஸிங்குன்ன நெனச்சு என்னை முதல் பார்வை வரிகள் சந்தோசப்படுத்துது இன்னுமுண்டே அட்டை படுத்த அழகு படுத்த என மறைந்திருக்கும் வரிகள்
ReplyDeleteசூப்பர் ரபீக்...நன்றிகள் நீளும் வாலாய்...கமீஸ் நிறம் பக்கங்களோட வரட்டும் சார்...ஒரு 400 பக்கம் 40 ம் ஆண்டு சிறப்பிக்க
Deleteடோலு போது...சனிக்கு பண்டுன்னுபட்டுன்னு தீவில் உலா வரும் என் மகனுக்கு...சுஸ்கி விஸ்கி...பீன்ஸ் கொடில் ஜாக்கிற்கடுத்து ....கபீஸ்
Deleteடோலு போது...சிக்கு பண்டு
Deleteகபீஷ ஈரோட்டுக்கு கூட்டி வாங்க ஆசானை..
ReplyDelete+100000000 😍😘
Deleteபாலையில் ஒரு போராளி :-
ReplyDeleteமிஸ்டர் நோ கதைகளின் மிகப்பெரிய பலமே எளிமையான அந்த கதை சொல்லும் பாணிதான்.!
எவ்வித மனநிலையிலும் மிஸ்டர் நோ கதைகளை நம்பி கையில் எடுக்கலாம்.. ஒரு மணி நேரம் நிம்மதியாக பொழுது கழியும்.. நான் உத்திரவாதம்.!
கதை ஆரம்பிக்கும் விதமே நிமிர்ந்து உட்கார வைக்கிறது.!
பத்தொன்பதாம் நூற்றாண்டின் புரட்சி கும்பலான கங்கசீய்ரோவின் தலைவன் ஜெரோனிமா ட்ராகோ இறந்துவிட்டதாக நம்பப்பட்ட நிலையில்.. மீண்டும் உயிருடன் வருவது போல ஆரம்பிக்கிறது கதை..!
பின்னர் அது ரேடியோ நாடகம் என நமக்குத் தெரியவருகிறது..!
கங்கசீய்ரோக்களின் கதையை ரேடியோவில் கேட்டு தன்னையே ஜெரோனிமா என நினைத்துக்கொள்ளும் ஒரு கோமாளியின் தலைமையில் இயங்கும் சிறு போக்கிரி கும்பலின் கையில் அந்த ரேடியோ நாடகத்தின் கதாசிரியர் சிக்கிக்கொள்ள... நாடகக் குழுவை துணைக்கு வைத்துக்கொண்டு அந்தக் கதாசிரியரை மிஸ்டர் நோ மீட்பதே மீதிக்கதை..!
(ஸ்பாய்லர்லாம் ஒண்ணுமில்லீங்கோ..)
ஒரு மொட்டை.. ஒரு தாடி.. கூட நாலு ஸ்கூல் பசங்கன்னு சொல்ற மாதிரி.. அந்த கோமாளி வில்லனின் கீழ் இயங்குவது ஒரு மொட்டை.. ஒரு நெட்டை.. ஒரு பெட்டை.. கூட ஒரு நோஞ்சான் செவ்விந்தியன்..! இவனுகளை பாத்தா நம்மூரு பால்வாடி பசங்க கூட பயப்படமாட்டாங்க.. ஆனா அந்த ஊரே பயப்படுது.!
அந்தக்கோமாளியின் லட்சியம் என்ன.. அவங்கல்லாம் ஏன் அவன் கும்பலில் இருக்காங்க.. என்ன தொழில் பண்றாங்க.. ஒரே மர்மமா இருக்கு.!
திருடுறதுலயாச்சும் ஒரு புத்திசாலித்தனம் வேணாமா..?! அண்டா குண்டா சட்டி பானைன்னு எதைப்பாத்தாலும் புடுங்கிக்கிறானுங்க..!
வில்லன் கும்பலின் மறைவிடமான அந்த தீவு வெகு அழகு.! ( அங்கு காவல் இருப்பதும் தள்ளாத வயசுல இருக்கும் ஒரு குடுகுடு தாத்தா.. அந்தக் கும்பலில் இவரும் ஒரு அடியாளு.! என்னா வில்லன் கோஷ்டியோ போங்க..! )
தன்னை ஜெரோனிமா என நினைத்துக்கொண்டிருக்கும் அந்தக் கோமாளி வில்லனை அவனுடைய ஆதர்ஷ ஹீரோவான ஜெரோனிமாவை உபயோகப்படுத்தியே வீழ்த்துவது செம்ம..! (இதை விளக்கமா சொன்னாத்தான் ஸ்பாய்லர் ஆயிடும்.)
மெயின் கதையைவிட உட்கதையாக வரும் ரேடியோ நாடகம் அருமையா இருக்கு.! அதிலும் ஜெரோனிமாவின் முகத்தை மிஸ்டர் நோ வாக உருவகப்படுத்தியிருப்பதும் இறுதியில் ஜெரோனிமா மிஸ்டர் நோவின் கேரக்டராக வடிவெடுப்பதும் அழகான நிகழ்வுகள்.!
சிறுவயதில் காணாமல் போன தங்கள் குடும்ப வாரிசுதான் ஜெரோனிமா என்று நினைத்து அவனுக்கு உதவும் அந்த பாட்டி கேரக்டர் நெகிழ்வு..!
மிஸ்டர் நோ இம்முறையும் ஏமாற்றவில்லை..!
@KoK ஜி..😃😍
Deleteஅருமையான விமர்சனம் ஜி..👍
ILU❤ ஜெரோனிமா..
Good review
Deleteசிறைப்பறவையின் நிழலில் :-
ReplyDeleteவழக்கம் போலத்தான்...
தாகமா இருக்கு.. ஏதாச்சும் குடிக்கலாமின்னு சலூனுக்கு வராங்க டெக்ஸும் டைகர் ஜாக்கும்.! அங்கே ஒரு மூணு பேரு கடைக்காரரை புடிச்சி மொத்தி காசு புடுங்க முயற்சி பண்ணிட்டு இருக்குறதை பாக்குறாங்க.!
நிம்மதியா ஒரு பீர் குடிக்க முடியுதா.. ஏண்டா.. எங்களுக்குன்னே வருவீங்களாடான்னு கடுப்பான ஜாக்கும் டெக்ஸும் ரெண்டு பேத்தை போட்டுத்தள்ளிட்டு ஒருத்தனை ஜெயில்ல தள்ளிடுறாங்க.! ( அது ஏன் ஒருத்தனை மட்டும் ஜெயில்ல தள்றாங்கன்னு உங்களுக்கு டவுட்டு வரும்.! மூணு பேரையும் அங்கேயே போட்டுத் தள்ளியிருந்தா கதையும் அங்கேயே முடிஞ்சிடுமே.. பாக்கி பக்கங்களில் பாட்டி பீட்சா சுட்ட கதையையா எழுதிவைக்க முடியும்.!)
அடுத்து என்ன.. ஆங்.. அதேதான்..! ஜெயில்ல போட்ட வின்ஸ் ஸ்டான்டன் தப்பிச்சிப் போயிடுறான்.!
வின்ஸோட சேர்த்து அவன் கும்பலையும் கும்பலின் தலைவன் மிச் ஃப்ரேசரையும் ஒண்ணா அமுக்கிறலாம்கிற ப்ளானோட டெக்ஸும் டைகர் ஜாக்கும் வின்ஸை போதுமான இடைவெளி விட்டு பின்தொடரந்து போறாங்க.! எப்படியும் நம்மாளுக அந்த கும்பலை நாஸ்தி பண்ணிருவாங்கன்னு நமக்கு தெரியும்தான்.. ஆனா அதை எப்படி சுவாரஸ்யமா பண்றாங்கன்றதுதான் டெக்ஸ் கதைகளின் உத்திரவாதமான வெற்றிக்கு காரணமே.!
வின்ஸ் போறவழியில மார்வின்கிற ஒரு ஆசாமிகிட்ட.. துப்பாக்கியை பேன்ட்டுல சொருகிக்க பயமா இருக்கு. உன் பெல்ட்டை குடுண்ணே.. வேகமா போகணும் அதனால சேணமிட்ட உன் குதிரையையும் குடுண்ணே.. பதிலுக்கு என் வண்டியை வெச்சிக்கோன்னு பண்டமாற்று பண்ணிக்கிட்டு.. போறபோக்குல மார்வினோட பொடனியில லேசா தட்டிட்டு போயிடுறான்.!
புள்ளபூச்சியாட்டம் இருக்கானேன்னு நினைச்சா மார்வின் கடும்கோவக்காரனா இருக்கான்.! தன்னை அடிச்ச வின்ஸை பழிவாங்கியே தீரணும்னு அண்ணன் தம்பி மாமன் மச்சான்னு குடும்பம் பூராத்தையும் கூட்டிக்கிட்டு அவனும் வின்ஸை பின்தொடர்ந்து போறான்.!
இதற்கிடையில வின்ஸோட கும்பலின் தலைவன் மிச்.. தன்னை ஏமாத்தின வின்ஸ் வந்தா பொளந்துடணும்கிற வெறியோட காத்திருக்கான்..! டெக்ஸ் & ஜாக்.. மார்வின் குடும்பம்.. மிச் கும்பல் இப்படி மூணு பக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்க.. இது எதுவுமே தெரியாத வின்ஸ்.. மிச் கும்பலோட இணைஞ்சிக்க ஜாலியா போயிட்டு இருக்கான்..!
தொடர்ந்து என்ன நடக்குது.. வின்ஸ் யார் கையில மாட்டுறான்... ஜெயிச்சது யார் டெக்ஸா மார்வினா மிச்சா என்பதே சுவாரஸ்யமான கதை.!
மிச் கொடூரமான வில்லன்னு காட்டணும்கிறதுக்காக ரொம்ப மெனக்கெட்டிருக்காங்க.!
மிச்.. உன் பேன்ட்டுல லேசா தையல் பிரிஞ்சிருக்குன்னு சொன்னாக்கூட.. இன்னாடா சொன்ன பேமானின்னு அவனை போட்டுத் தள்ளிடுவான் போல.!
மணி என்ன இருக்கும் மிச் னு கேட்டாக்கூட என்னையவே கேள்வி கேக்குறியான்னு அவனையும் போட்டுத் தள்ளிடுவான் போல.! காஃபியை சீக்கிரம் குடிச்சிட்டாக்கூட.. நான் தலைவன்.. எனக்கு முன்னாடியே காஃபியை குடிச்சி முடிச்சிட்டியா..? எவ்ளோ திமிர் உனக்குன்னு அவனையும் போட்டுத்தள்ளிடுவான் போல.!
இப்படி சுட்டுக்கிட்டே இருந்தா கும்பலில் எவன் மிஞ்சுவான்..? அதுக்கு முதல்ல இந்தமாதிரி கிறுக்கு வில்லன்கிட்ட எவன் வேலை செய்வான்..?!
இவன் ஒரு பக்கம்னா.. லேசா பொடனியில தட்டினதுக்காக.. பழிவாங்குறேன் பேர்வழின்னு குடும்பத்தையே கூட்டிவந்து காவுகுடுக்குற மார்வின் ஒரு பக்கம்.! எவன் பெரிய கிறுக்கன்றதுதான் போட்டியே.!
ஆனா.. இதையெல்லாம் மீறி.. கொஞ்சம் கூட சலிப்பே தட்டாமல் வெகு சுவாரஸ்யமாக.. சின்ன சின்ன திருப்பங்களுடன்.. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன்.. ரசிச்சுப் படிக்க அருமையான ஒரு கதை சிறைப்பறவையின் நிழலில்.!
TEX never ever disappoint us..!!
TEX..🐴Rocking always👍
Delete😍😃😘😀
Super review
DeleteYes, Tex Tex தான்.
Delete//. மிச்.. உன் பேன்ட்டுல லேசா தையல் பிரிஞ்சிருக்குன்னு சொன்னாக்கூட.. இன்னாடா சொன்ன பேமானின்னு அவனை போட்டுத் தள்ளிடுவான் போல.!
Deleteமணி என்ன இருக்கும் மிச் னு கேட்டாக்கூட என்னையவே கேள்வி கேக்குறியான்னு அவனையும் போட்டுத் தள்ளிடுவான் போல.! காஃபியை சீக்கிரம் குடிச்சிட்டாக்கூட.. நான் தலைவன்.. எனக்கு முன்னாடியே காஃபியை குடிச்சி முடிச்சிட்டியா..? //
ROFL 😂 😃😂🤣
எல்லாம் ஓகே.ஆனால் 80 களில் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான கறுப்பு கிழவியை ஆசிரியர் மறந்தது ஏன்?வேண்டும் வேண்டும் கறுப்புகிழவி கதைகள் டைஜஸ்ட்.
ReplyDeleteக பீஷ்.. இன்றைய சிறுவர்களுக்கு நிச்சயம் - ஒரு தமிழ் வாசிப்பு அனுபவத்திற்கு உதவும்.
ReplyDeleteஆனாலும் - இதை ஒரே தொகுப்பாக தராமல் -
முத்துக் காமிக்ஸ் வாரமலர் - போல் - தொடர்கதைகளாக இல்லாமல் - ஒரு முழுமையான - இன்ஸ்பெக்டர் கருடா வின் கதை. இரண்டு கபீஸ் கதைகள் - ராமு - சோமு, அதிமேதை அப்பு - என்பது போன்று - தற்போதைய Tex வில்லர்-சைஸில் - சாதா பேப்பரில் + கலரில் - வெளிவந்தால் சிறப்பாக இருக்கும். (எனக்கும் சின்ன பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கும் மாதிரி இருக்கும்)
ப்ளீஸ் சார் - இது மாதிரி பரிசீலனை செய்யுங்கள் சார்..
@Edi Sir..😍😘
ReplyDeleteமுன்பு முத்து லயன் காமிக்ஸ் களில் வந்தது போல தற்போது வெளிவரும் அனைத்து காமிக்ஸ் கதைகளிலும்
கபீஸ், விச்சு கிச்சு, காக்கா காளி, மணியன்.
😍😍
ஆகியோரை ஒரு சில பக்கங்களில் க/வெ -ல் இணைத்து தர இயலுங்களா சார்..😍😘🙏
நமது டெக்ஸ்வில்லர் குழுமத்தில் உள்ள DAMPYR ஹீரோ எப்படி சார் ,நம்மளுக்கு சரிப்பட்டு வருவாரா
ReplyDeleteஇரும்புக்கை மாயாவி
ReplyDeleteஜானி நீரோ
CID லாரன்ஸ் டேவிட்
ஸ்பைடர்
ஆர்ச்சி
மாடஸ்டி
வேதாளர்
சிறுத்தை மனிதன்
ஜேன் பாண்ட்
ரிப் கிபி
சார்லி
காரிகன்
மான்ட்ரேக்
விங் கமாண்டர் ஜார்ஜ்
கபீஷ்
ராமு சோமு
கபீஷின் வாலை விட நீளமாகி வருகிறது கிளாசிக் நாயகர்களின் பட்டியல்.
40வது ஆண்டில் இருக்கிறோம், ஆனால் 40 ஆண்டுகள் பின்னால் சென்று விட்டோமா என்று தோன்றுகிறது. இது போக மறுபதிப்புகளும் சேர்ந்து கொள்ள, கொஞ்சமும் சளைக்காமல் புதிய வெளியீடுகளுக்கு நிகராக இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறது.
40வது ஆண்டில் டின் டின் மட்டுமே போதும் என்று முடிவெடுத்து விட்டு கிடைக்கும் இடங்களில் எல்லாம் கிளாசிக் பார்டிகளையும், மறுபதிப்புகளையும் நிரப்புவது போல் தெரிகிறது.
40வது ஆண்டுமலரில் டெக்ஸ் வில்லருக்கு வெரும் 100 பக்கங்கள், சென்ற ஆண்டு வெளியாகி ஸ்டாக் அவுட் ஆகி இருக்கும் இளம் டைகர் அடுத்த சுற்று மீண்டும் தொங்களில், மற்ற கிராபிக் நாவல்கள் வரிசை கட்டி காத்திருக்க, மிக சுமாரான கதையான துணைக்கு வந்த மாயாவி முந்தி கொண்டு வந்தது என நிறைய தடு மாற்றங்கள் புதிய வெளியீடுகள் மற்றும் திட்டமிடல்களில்.
மொத்தத்தில் 40 ஆண்டு மலரும், 40து ஆண்டும் very very disappointing.
பி.கு. நானும் ஒரு காலத்தில் கபீஷ், முகமூடி வீரர் மாயாவி, ஸ்பைடர் ரசிகன் தான். ஆனால் இப்போது இல்லை, நான் முன்பு குறிப்பிட்டது போல், imax திரையரங்கில் ஜக்கம்மா படத்தை ஓட்டுவது போல் தான் இருக்கிறது. அட பரவாயில்லை, ஏதோவொரு சில காட்சிகள் ஓட்டினால் பரவாயில்லை, இருக்கும் 12 ஸ்க்ரீனில் 6
ஸ்க்ரீனில் ஓட்டுவது தான் ஜீரணிக்க முடியவில்லை.
நன்றி
கபீஷ இந்த கால குழந்தைகளை நமது காமிக்ஸ் படிக்க வைக்க உதவும். நமது பழைய வாசகர்களுக்கு பிடிக்கும் என்பது ஒரு பக்கம் என்றால் பள்ளி செல்லும் குழந்தைகளை நமது பக்கம் இழுத்து எதிர்கால வாசக வட்டத்தை உருவாக்க க்ண்டிப்பாக இது உதவும் என்ற எண்ணத்தில் நான் பார்க்கிறேன்.
Deleteஆம் பரணி சகோ... 100%
Deleteஉண்மை., நன்றி.. வாழ்த்துக்கள்.. ❤️👍🙏
//நானும் ஒரு காலத்தில் கபீஷ், முகமூடி வீரர் மாயாவி, ஸ்பைடர் ரசிகன் தான். ஆனால் இப்போது இல்லை, நான் முன்பு குறிப்பிட்டது போல், imax திரையரங்கில் ஜக்கம்மா படத்தை ஓட்டுவது போல் தான் இருக்கிறது. அட பரவாயில்லை, ஏதோவொரு சில காட்சிகள் ஓட்டினால் பரவாயில்லை, இருக்கும் 12 ஸ்க்ரீனில் 6
Deleteஸ்க்ரீனில் ஓட்டுவது தான் ஜீரணிக்க முடியவில்லை.//
😂😂😂😂
//பள்ளி செல்லும் குழந்தைகளை நமது பக்கம் இழுத்து எதிர்கால வாசக வட்டத்தை உருவாக்க க்ண்டிப்பாக இது உதவும் என்ற எண்ணத்தில் நான் பார்க்கிறேன்.//
Deleteநடந்தால் நல்லது தான் Pfb.
நாம்" யார் அந்த மினி ஸ்பைடர்?"படித்துக் கொண்டிருந்த வயதில் இந்த ஜெனரேஷன் குழந்தைகள் youtube சேனல் நடத்துகிறார்கள்.
எவ்வகை சித்திரக் கதைகள் அவர்கள் கவனத்தை ஈர்க்கும் என்பது தெரியவில்லை.
புத்தகத் திருவிழாவில் வரும் குழந்தைகளை இது கண்டிப்பாக கவரும்.
Deleteஅதுவும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் கிடைக்கும்படி செய்தால் மிகச்சிறந்த ஆரம்பமாக அமையும்.
Deleteரபீக் ராஜா @ வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
ReplyDeleteHyderabad நண்பர் குடும்பத்தினருக்கு உங்கள் முயற்சிக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநமக்கெல்லாம் இந்த மாதிரி வால் வளராதா என ஏங்கித் தவித்த நாட்கள் உண்டு. கபீஷ் கதைகளை என் பிள்ளைகள் ரசிப்பார்களா என தெரியவில்லை ஆனால் எனது நண்பன் ராமுவின் மகன்கள் ரசிப்பார்கள். குழந்தைகளுக்கு பரிசளிக்க அருமையான தமிழ் புத்தகம். நன்றி ரபீக் சார். நன்றி ஆசிரியரே
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteநல்வரவு கபீஷ்!!
Deleteஅட்டகாசமான பணி ரபீக் நண்பரே!! வாழ்த்துகள்!!
தம்பி,
Deleteநல்லா இருக்கீங்களா.
உங்க டூர் எப்படி இருந்துச்சு.
எங்களுக்கு தகவல் இல்லை. இப்பவாச்சு சொல்லுங்க ஜி.
நன்றாக இருந்ததுங்க அண்ணா... விரைவில் எழுதுகிறேன்...
Deleteவால் நீளும் கபிஷின் உலகில் உலாவி சுற்றி வந்த சிறு வயது காலத்தை மறக்க முடியாது
ReplyDeleteநன்றிகள் பல ரபீக் சகோதரரே🙏🙏🤝🏽🤝🏽🤝🏽💐💐💐💐💐
ஹைதரபாத் குடும்பத்தினருக்கும் நன்றிகள்🙏🙏🙏💐💐
முயற்சிகள் மேற்கொண்டு எங்களுக்காக கபிஷை மீள்வரவாக்கிய ஆசிரியருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்💐💐💐💐💐💐💐💐💐
நம்மளுக்கு மற்றுமொரு மைல்கல் சாதனை
சுட்டிக்குரங்கு கபீஷின் மீள்வருகை மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்!
ReplyDeleteதிகில் காமிக்ஸில் தொடர்கதையாக வந்த விண்வெளிப் பிசாசு இந்த கதையை, அத்தனை திகில் காமிக்ஸ் இதழ்களும் இருந்தாலும் இன்னமும் படிக்கவில்லை. ஒரு சேர வண்ணத்தில் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அட்டைப்படத்தில் பூமி உருண்டையின் மேல் அமர்ந்திருக்கும் ஸ்பைடரின் முகத்தில் வில்லத்தனம் மிஸ்ஸிங்! The Immortals மற்றும் Crime Unlimited ஆகிய ஒரிஜினல் அட்டைப்படங்களில் பார்த்த ஸ்பைடரின் முகத்திற்கும்,, இப்போது வந்து கொண்டிருக்கும் அட்டைப்படங்களுக்கும் ஏழாம் பொருத்தம் எனலாம்!
இறுதியாக லக்கிலூக்கின் ஒற்றைப்பக்கமே விவரிக்கிறது கார்ட்டூன் பிரிவில் அவர் தான் சூப்பர்ஸ்டார் என்பதை நிரூபிக்க! இந்த கதையோ ரயிலும் இணைந்து கலக்கும் சாகஸம் என்பது போல தெரிகிறது! வந்தால், இந்த கதையை தான் முதலில் படிக்கனும்!
\\பி.கு. நானும் ஒரு காலத்தில் கபீஷ், முகமூடி வீரர் மாயாவி, ஸ்பைடர் ரசிகன் தான். ஆனால் இப்போது இல்லை, நான் முன்பு குறிப்பிட்டது போல், imax திரையரங்கில் ஜக்கம்மா படத்தை ஓட்டுவது போல் தான் இருக்கிறது. அட பரவாயில்லை, ஏதோவொரு சில காட்சிகள் ஓட்டினால் பரவாயில்லை, இருக்கும் 12 ஸ்க்ரீனில் 6
ReplyDeleteஸ்க்ரீனில் ஓட்டுவது தான் ஜீரணிக்க முடியவில்லை.//
என் மனதை அப்படியே படித்து எழுதியது போல் இருந்தது
அருமையான அறிவிப்பு... மீண்டும் கபீஷ்... அதுவும் முழு வண்ணத்தில்... கபீஷோடு மற்ற டிங்கிள் கதாபாத்திரங்களையும் கதம்ப இதழாக வெளியிடுங்கள்...
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteகபீஷ் வரப்போகும் செய்தியைக் காட்டிலும், அதைப் பதிப்பிக்கும் உரிமை வாங்கிய பின்கதை பரபரப்பாக இருக்கிறது... வாழ்த்துகள், கபீஷ் தேடிய ரஃபிக்குக்கும் சேர்த்து! சிறுத்தை மனிதன் வகையறாக்களை விட, 32 அல்லது 48 பக்க கபீஷ் கதம்பங்கள் பல மடங்கு மேல் என்பேன் (புத்தக விழாவில் காமிக்ஸ் வாங்கும் மாணவர்களுக்கு)!
//விண்வெளிப் பிசாசு - நம்ம தலைவரின் டிசைன் எனும் போது ஏகமாய் அபிப்பிராயங்கள் வராது போகாதென்பது உறுதி//
அட்டைப் படம் ஜுப்பர் சார்! :-) பறந்து வரும் இரும்புப் பந்து மீது, பாய்ந்து அமரும் 'ஆயிரத்தில் ஒருவன்' கார்த்தியை நினைவூட்டும் அற்புதமான போஸ்! கதையின் தலைப்பையும், உலக உருண்டை மேல் ஒரு டைப்பாக உட்கார்ந்திருப்பவரையும் புத்தக விழாவில் முதன்முறையாகப் பார்ப்பவர்கள், "ஓ, இது தான் அந்த விண்வெளிப் பிசாசா?!" என்று பயந்து விடப் போகிறார்கள் :-D
ஏதோ, பாத்து பண்ணுங்க மக்கா என்று நீங்கள் அன்பாக கேட்டுக் கொண்டதால் தான் இந்த கமெண்டே தவிர, அவர் எனது பால்ய கால விருப்ப நாயகர்களில் ஒருவர் என்பதிலும், ஸ்பைடர் கதைகள் லயனின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கிலும், ஐயங்களில்லை! :-)
ReplyDeleteஎன்ன சொல்வது என்றே தெரியவில்லை. கபீஷ் ஒரு ஐகானிக் பாத்திரம். அதைத் தாண்டி வேறு எதுவும் முக்கியத்துவம் இருப்பதாக தெரியவில்லை. எலக்ட்ரிக் 80 's சந்தாவுக்கு இம்பிடன்ஸ் எதுவுமில்லை (impedence ). Myoms சந்தாவுக்கு எலக்ட்ரான்கள் ஓட்டமே இல்லை எனும்போது எதைச் சொல்வது?
கபீஷ், ராமு சோமு, வேட்டைக்கார வேம்பு, காக்கை காளி போன்றவை நாஸ்டால்ஜியா தாக்கத்தை ஏற்படுத்தலாம். படம் பார்த்து கதை சொல்ல அந்த வயது குழந்தைகளுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். தானாகவே படிக்கும் வயதுடைய குழந்தைகளுக்கு அவை இந்த காலகட்டத்தில் தாக்கம் ஏற்படுத்துமா?
லயோலா கல்லூரி மாணவர்கள் போல் ஒரு நம்பகமான நிறுவனம் மூலம் இந்த கால குழந்தைகள் எதை விரும்பி வாசிக்கிறார்கள்? சித்திர கதைகளில் எவற்றை அவர்கள் விரும்புகிறார்கள் என ஒரு சந்தை ரீதியிலான ஆராய்ச்சி முடிவுகள் கையில் இருந்தால் பரவாயில்லை என தோன்றுகிறது.
இங்கிருக்கும் வாசகர்களின், 40 பிராயங்களில் இருக்கக்கூடிய வாசகர்களின் எண்ண ஓட்டத்தை நீங்கள் அறிவீர்கள். இவர்கள் மத்தியில் கபீஷ் வெற்றிக்கொடி
நாட்டும் என்பதில் ஐயம் சிறிதளவும் இல்லை. சித்தாந்த ரீதியாகவும் சரி வணிக ரீதியாகவும் சரி.
கபீஷ், காக்கை காளி போன்றவை உளவியல் ரீதியாகவும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானவையே. உங்கள் மேலும் எந்த குறையும் இல்லை. எலியப்பா உட்பட எத்தனையோ புதுமையான முயற்சிகளை நீங்கள் பரீட்சித்து பார்த்திருக்கிறீர்கள்.
நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்த பத்திரிகை ஆசிரியர். பதிப்பகம் வைத்திருக்கிறீர்கள். இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் கதைகளையும் ஓவியங்களையும் ஒரு உள்நாட்டு தயாரிப்பாக உருவாக்குவது பற்றி நீங்கள் ஏன் யோசிக்க கூடாது? நீங்களும் நானும் கேட்டு வாசித்து வளர்ந்த சூழ்நிலைகளை புறம் தள்ளி படைப்புகள் இந்த கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் உருவாக்க முன்னுரிமை கொடுக்கலாம். ஜூனியர் எடிட்டர் இடம் இப்பொறுப்புகளை கொடுக்கலாம்.
To relive the past என்ற வரிகள் என்னுடைய புத்தகத்தில் கிடையாது. ஆயினும் கபீஷ் குறித்து உங்கள் எண்ணத்தை செயல் வடிவம் கொண்டு வர முயன்ற தங்கள் பங்களிப்பை செய்த ஹைதராபாத் நண்பர் குடும்பத்துக்கும், காமிரேட் ரபீக் ராஜா அவர்களுக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
உள்நாட்டு முயற்ச்சி சூப்பராருக்குமே
Deleteவரிக்கு வரி சரி! ஜூனியர் எடி மனசு வச்சா நடக்கும்! நம்ம எடிட்டரின் கதை மற்றும் வசனத்தோடு ஒரு அட்டகாசமான ஓவியரும் கிடைச்சாச்சுனா செம்ம்மயா இருக்கும். 😍😍😍😍
Deleteகபீஷஐ மீண்டும் நமது காமிக்ஸில கொண்டு வர நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் சார். இந்த முயற்சியில் தோழ கொடுத்த நண்பர்கள் அனைவரையும் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள் சார்.
ReplyDeleteகபீஷை பார்க்கப்போவதில் மட்டற்ற மகிழ்ச்சி...😍😍😍
ReplyDeleteநண்பர் ரஃபீக் ராஜாவிற்கு பலத்த கைதட்டல்கள்..👏👏👏
எனக்கொரு டவுட்டு..
எதிர்காலத்துல கபீஷ் ஷ்பெசல் இதழ் ஒன்றில் நமது போட்டோக்களை போட்டுத் தருவதாக வைத்துக்கொண்டால்... வித்தியாசம் ஏதாவது தெரியுமா.. இல்லே......!?
//எதிர்காலத்துல கபீஷ் ஷ்பெசல் இதழ் ஒன்றில் நமது போட்டோக்களை போட்டுத் தருவதாக வைத்துக்கொண்டால்... வித்தியாசம் ஏதாவது தெரியுமா.. இல்லே......!?//
Delete😂😂😂
Reply
கபீஸ்தா மனுசன் மாதிரி தெரியுமே
Deleteநா உங்களுக்கு சிலை வைக்கிறேன் தலைவா...
Deleteநீங்க இப்படியே போங்க. நா உங்க பின்னாடியே வர்றேன் ஜி....
KOK 😂😂😂😂
Delete@கிட் ஆர்ட்டின் கண்ணன் சகோ
Deleteதங்களது சிறு வயது போட்டோ குடுத்தால், ஆறு வித்தியாசம் கண்டுபிடித்து குடுத்துடுவோம், சகோ
தானைத்தலைவர் ஸ்பைடரின் விண்வெளிப் பிசாசு அட்டைப்படம் சூப்பர் 🥳🥳 ... 🔥🔥
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்புள்ள எடிட்டர1,
ReplyDeleteமேலே திரு.ரஃபீக் குறிப்பிட்டது போல, அடுத்து முத்து வாரமலர் - இரும்புக்கை மாயாவி கதை மறுபதிப்பு வெளிவந்தால் நன்றாக இருக்கும்.
முன்கூட்டிய நன்றிகள்
டியர் எடிட்டர்
ReplyDeletePost-pandemic விளைவான அசாத்திய வேலை பளுவில் சிக்கித் திணறும் வருடங்களில் - லயன் 40 ஒட்டி நீங்கள் தயாரித்திட்ட பல நிலை வாசிப்பு வரிசைகள் என்னைப் பொறுத்தவரை ஒரு welcome change.
என்னதான் டேங்கோ, சிஸ்கோ என்று பல புதிய அதிரடிகள் வந்தாலும் - மற்றும் தாத்தாக்கள், one-shots என்ற புதிய ரகங்கள் வந்தாலும் உட்கார்ந்து மனமொன்றி படிக்கவும் - இப்புதிய கதைகளின் ஓட்டங்கள், கதாபாத்திரங்கள் ஆகியவை நினைவில் வைப்பது கடினமாகிறது. எனினும் அவற்றினை மெயின் டிராக் சந்தாவில் சேர்த்தது ஒரு சிறந்த முயற்சியே.
மறுபதிப்புக்களை பொறுத்தவரை Nostaligia factor மட்டும் அல்ல - இக்கதைகள் வாசிப்பை எளிதாகி பணிக்குப் பின்னான நேரங்களை ஒரு விதமாய் லகுவாக்குகின்றன என்ற விதத்தில் - இந்த சைடு ட்ராக்களுக்கும் என் ஆதரவு உண்டு.
இரும்புக்கை மாயாவி
ஸ்பைடர்
ஆர்ச்சி
Alibaba
வேதாளர்
ரிப் கிர்பி
மான்ட்ரேக்
கபீஷ்
ராமு சோமு
(ராஜி மற்றும் வாயு வேக வாசு விட்றாதீங்கப்பா ...)
இந்த சிறிய பட்டியல் மட்டுமே எனக்கு மறுபதிப்புக்களில் பிடித்தது - தலைவன் Tex+ Lucky Luke தவிர - எனினும் அனைத்து மறுபதுப்புக்களையும் நண்பர்களின் ஆரவாரம் பொருட்டு வரவேற்கிறேன் - வாங்குகிறேன். பிடித்ததை அலமாரியிலும் பிடிக்காமல் படித்ததை இங்கே கோபாலபுரத்தில் உள்ள பழம்பெரும் நூலகத்தில் இலவசமாகவும் சேர்த்து விடுகிறேன்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பர் சுசீந்திர குமார் சாருக்கு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteHappy Birthday Susi. 🌹💐🎁
Deleteஇன்று தனது 85வது பிறந்தநாளை கொண்டாடும் சுசி அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் 🍫🍬🥧🧁🍰🎂🍪
Deleteஉங்களை விட இளையவர் என சொல்லுங்கள் 😁
Deleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்களும்
Delete(Fb யில் பதிவிட்டது இங்கும்)
ReplyDeleteநதிமூலம் க்யூபா!
#லயன்_காமிக்ஸ்
XIII
இம்மாதம் புத்தக பெட்டி வந்தவுடன் வாசிக்க எண்ணியது XIII தான். துவக்க இரண்டு பக்கங்களை தாண்டவே கடினமாக இருந்தது. XIIIன் ஆரம்பகால வாசகன்தான் எனினும், இடையில் வந்த சில புது XIII பாகங்களை பிறகு வாசிக்கலாம் என்று ஒத்திப் போட்டுவிட்டேன். ஆகையால் முந்தைய தொடர்சிகளை புரிந்துகொள்ள சிரமாக இருந்ததால் XIII வாசிப்பை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கைவிட்டேன். பதிலாக ‘பாலையில் ஒரு போராளி மட்டுமே வாசித்தேன். ஏனோ என்னை அந்தக் கதை அவ்வளவாக கவரவில்லை.
இன்று நேரம் கிட்டியதால் மீண்டும் நதிமூலம் க்யூபாவை விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன். இதில் வாலி ஷெரிடனின் விதவை மனைவி ஜேனட் ஃபிட்ஸிம்மன்ஸ் கணவராக நமது ஜேசன் இருப்பது தான் எனக்கு பெருத்த ஆச்சரியம். வில்லியம் வான்ஸ் கைவண்ணத்தில் ஃபிட்ஸிம்மன்ஸ் அவ்வளவு பேரழகியாக இருப்பாள். பேரழகிகள் எல்லாம் நமது ஜேசனுக்கு தோழிகள் ஆகி விடுகிறார்களே.. என்று புன்னகையோடு வாசிக்க ஆரம்பித்து முழுதும் வாசித்து விட்டுத்தான் புத்தகத்தை வைத்தேன். இதன் முந்தைய தொடர்ச்சியை நான் வாசிக்க வில்லையெனினும்... துவக்கம் முதல் இறுதிவரை பரபரவென்று கதையை நகர்த்தியுள்ளனர்.
க்யூபாவின் பொனியாடா சிறையில் ஒரு ஹேக்கர் சிக்கிக் கொள்கிறான், இவன் ரஷ்யாவின் உளவுத்துறையில் பயிற்சி பெற்று பணியாற்றியவன். ஆகையால் அவனை விடுவிக்க ரஷ்யா உளவுத்துறையுடன் பேரம் நடத்துகிறான் பொனியாடா ஜெயில் வார்டன்.
இதற்கிடையில் ஜேனட் ஃபிட்ஸிம்மன்ஸ் ஜேசனின் மூளையில் ஒரு சிப்பை வைத்து அவள் இஷ்டப்படி நடந்து கொள்ளும் நபராக ஜேசனை மாற்றி வைத்திருக்கிறாள். அமெரிக்க உளவுத்துறை மேற்படி ஹேக்கர் பேர மெயிலை இடைமறித்து தெரிந்து கொள்கின்றனர். தற்போதைய அமெரிக்க பிரஸிடண்ட் அல்லெர்டன் மீண்டும் அடுத்த தேர்தலில் ஜெயிக்கவும், கூடவே உதவி ஜனாதிபதியாக நமது ஜேசனை தேர்வு செய்திடவும் அந்த ஹேக்கர் தேவை என்று யோசிக்கும் ஜேனட் ஃபிட்ஸிம்மன்ஸ்... அந்த ஹேக்கரை கடத்தி வரும் பொருட்டு ஜேசனை ஒரு சிறு டீமோடு க்யூபா அனுப்புகிறாள்.
ஒருபக்கம் ஜெனரல் காரிங்டன் வரும் தேர்தலில் எதிர் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கப்போகிறார் போலிருக்கிறது. ஆகையால் இவர் ஜேனட் ஃபிட்ஸிம்மன்ஸ்க்கு எதிர் தரப்பு பார்ட்டி, என்று கதை நகர்கிறது.
ஒருபுறம் ரஷ்யாவின் GRU அமைப்பிலிருந்து ஹேக்கரை மீட்க வரும் டீமும் மறுபுறம் நமது ஜேசன் டீமும் மற்றும் காரிங்டனின் உளவாளி என... யார் அந்த ஹேக்கரை நெருங்குவார்கள் என பரபரப்பாக கதை சொல்லியுள்ளார்கள். கதையில் அடுத்தடுத்து இதுதான் நிகழும் என கணிக்க இயலாத வண்ணம் கதை சொல்லியுள்ளது சிறப்பு.
Yves Sente வின் இந்த அட்டகாசமான கதைக்கு ஏற்ப மிகவும் அபாரமான சித்திரங்களை Youri Jigounov கொடுத்து அசத்தியுள்ளார். அதும் வண்ணச் சேர்க்கை எல்லாம் நவீன டிஜிட்டலில் நம்மை அசத்துகிறது. Xiii கதை வரிசைக்கு Jean Van Hamme, William Vance கூட்டணிக்கு க்கு பிறகு மிகவும் அருமையான இந்த இருவர் கூட்டணி அமைந்துள்ளது நம் போன்ற தீவிர XIIIவாசகர்களுக்கு கிடைத்த லக் என்றே நினைக்கிறேன்.
தமிழ் மொழிப்பெயர்ப்பை எடிட்டர் விஜயன் மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார். (முந்தைய தொடர்ச்சியை நான் வசிக்க வில்லையெனினும் விஜயன் அவர்களின் அபாரமான தமிழாக்கத்தால்.. கடகடவென்று வாசித்து முடித்துதான் புத்தகத்தை வைத்தேன்.)
ஓகே.. பக்கம் 45ல் “வாசிலி சாயிட்சேவின்” எனும் பெயர் வருகிறது. அதை வாசக நண்பர்கள் யாரேனும் கவனித்தீர்களா? ஒரு அருமையான இயக்குநரின் இயக்கத்தில் வாசிலி சாயிட்சேவை பற்றி ஒரு அட்டகாசமான படமும் வந்துள்ளது.
புரிந்தவர்கள், படத்தின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்.
///படத்தின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்.///
Delete'Enemy at the gates'
படம் எல்லாம் பாக்கலீங்க நண்பரே.. Google ல தேடி கண்டுபுடிச்சேன்.
Btw, அட்டகாசமான விமர்சனம்!👌👌🌹
கரெக்டுங்க ஈரோடு விஜய் ஜி. Enemy at the gates (2001) இயன்றால் படம் பாருங்கள். அருமையான படம்.
DeleteVery good review
Deleteஅருமை நண்பரே...க்யூபாவில் என்ன நடந்திருக்கும்...பயிற்சிகளை காட்டுவார்களா என சிறு வயதில் ஏங்கிக் கிடந்த நமக்கு இன்ப அதிர்ச்சியா 13 ன் குருநாதரே மோதலுக்கு வந்து 13 ஐ மீட்டுவது அட்டகாசம்....ஆனா மீண்டுமோர் காதலி லயிக்க வைக்கலைன்னாலும் மாஸ்கோ பயணம் ஏக எதிர்பார்ப்பில்....இக்கதைய விட பட்டாசா தெறிக்கப் போகுது பிறவற்றை நினைவு படுத்துவதும்....பதிமூன காக்கவோ அழிக்கவோ தயாராகும் காரிங்டனும்....நம்ம ரஷ்ய நிபுணர்களும் ....பிட்சிம்சன் மனைவியின் அடுத்த மூவும் அடுத்த ஒரே கதையிலாவென மலைக்கச் செய்யுது....காத்திருப்போம் அடுத்து ஏதாவது தேடி போகும் மூன்றாம் சுற்றை வேண்டி
Delete
Delete//இதன் முந்தைய தொடர்ச்சியை நான் வாசிக்க வில்லையெனினும்... துவக்கம் முதல் இறுதிவரை பரபரவென்று கதையை நகர்த்தியுள்ளனர்.//
காமிரேட்! ஒரு திரைப்படத்தை இடைவேளைக்குப் பிறகு வரும் 30 நிமிடங்களை மட்டும் பார்த்து விமர்சனம் எழுதுவது எஞ்ஞனமோ?😄
//ஜேனட் ஃபிட்ஸிம்மன்ஸ் ஜேசனின் மூளையில் ஒரு சிப்பை வைத்து அவள் இஷ்டப்படி நடந்து கொள்ளும் நபராக ஜேசனை மாற்றி வைத்திருக்கிறாள். //
13 தொடரின் பிந்தைய கதைகள் மற்றும் ஸ்பின் ஆஃப்கள் வான் ஹாமே அவர்களின் மேற்பார்வையின் கீழ் வருகின்றன என்ற செய்தி உண்மையாயின் இதே விஷயத்தை ஆரிசியாவின் கணவரை மூளைச் சலவை செய்து தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் க்ரிஸ் வல்னார் மூலமாக தோர்கலில் பார்த்த மயக்கம் வான் ஹா மேவுக்கு கற்பனை வறட்சியோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மூளைச்சலவை என்றால் அது பேண்டஸி. மூளையில் சிப் வைத்தால் அது சயின்ஸ் பிக்ஷன். 😄
//தற்போதைய அமெரிக்க பிரஸிடண்ட் அல்லெர்டன் மீண்டும் அடுத்த தேர்தலில் ஜெயிக்கவும், கூடவே உதவி ஜனாதிபதியாக நமது ஜேசனை தேர்வு செய்திடவும் அந்த ஹேக்கர் தேவை என்று யோசிக்கும் ஜேனட் ஃபிட்ஸிம்மன்ஸ்... //
ஒரு நல்ல ஹேக்கர் கிடைத்தால் நமது இரக்க சிந்தனை உள்ள ஈ இளவரசரை அமெரிக்க ஜனாதிபதியாகவும் நமது ஷெரிப் மகேந்திரன் பரமசிவத்தை உதவி ஜனாதிபதியாகவும் ஆக்குவதற்கு நாம் எல்லாருமே சேர்ந்து முயற்சி செய்யலாம் 😂
அமெரிக்க ஜனாதிபதியாகுவதற்கு ஒரு திறமையான ஹேக்கர் இருந்தால் போதும் என்று அரிய உண்மை இப்போதுதான் தெரியவந்தது 😄
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு ரஷ்ய பயிற்சி பெற்ற ஹேக்கரின் பங்கு என்னவாக இருக்கும் என கோடிட்டு காட்டாத வரையில் கம்பி கட்டும் கதை போலத்தான் இருக்கும்😄
//Yves Sente வின் இந்த அட்டகாசமான கதைக்கு ஏற்ப மிகவும் அபாரமான சித்திரங்களை Youri Jigounov கொடுத்து அசத்தியுள்ளார். அதும் வண்ணச் சேர்க்கை எல்லாம் நவீன டிஜிட்டலில் நம்மை அசத்துகிறது.//
இந்த பாராவின் துவக்க வரி தவிர மீதி அனைத்தும் உண்மை. 😄. ஒரு கிலோ கறியில் முக்கால் கிலோ ஆட்டுக்கறி கால் கிலோ மாட்டுக்கறி என்பது போல் 😄.
//Xiii கதை வரிசைக்கு Jean Van Hamme, William Vance கூட்டணிக்கு க்கு பிறகு மிகவும் அருமையான இந்த இருவர் கூட்டணி அமைந்துள்ளது நம் போன்ற தீவிர XIIIவாசகர்களுக்கு கிடைத்த லக் என்றே நினைக்கிறேன்.//
எம் போன்றோரெல்லாம் "எரிமலை" விர 13 ரசிகர்கள் போலும். "தீ "போதவில்லை 😄
//நமது இரக்க சிந்தனை உள்ள ஈ இளவரசரை அமெரிக்க ஜனாதிபதியாகவும் ///
Deleteஅமெரிக்க ஜனாதிபதி மாளிகையிலும் அந்தப்புரம் சமாச்சாரமெல்லாம் இருக்கும்னா அந்தபதவியை ஏற்பதில் எனக்கொன்றும் ஆச்சேபனை இல்லைதான்! 😜
ஆனால் உதவி ஜனாதிபதியை நினைத்தால்தான் கொஞ்சம் உதறல் எடுக்கிறது!🙄
Delete@EV ❤💛
Deleteகிளிண்டன் மாதிரி நீங்க ஜனாதிபதி ஆகிடுங்க..😃😍😍 மோனிகா லெவின்ஸ்கி மாதிரி ஒரு அழகான அட்டகாசமான செகரட்டரிய வச்சிக்குங்க..😍❤❤❤
//கிளிண்டன் மாதிரி நீங்க ஜனாதிபதி ஆகிடுங்க..😃😍😍 மோனிகா லெவின்ஸ்கி மாதிரி ஒரு அழகான அட்டகாசமான செகரட்டரிய வச்சிக்குங்க.//
Deleteஇரக்க சிந்தனை உள்ள ஈ இளவரசர் பில் கிளின்டன் என ஆகிவிட்டால் ஹிலாரி கிளின்டனின் இந்திய வர்ஷன் பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து பரிபாலனம் செய்த இரண்டாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரை இ சி ஈ இளவரசர் பெறுவார் 😄
டின் டின் @ ROFL :-)
Deleteபொறாமை :-) கிழ இளவரசருக்கு கிழ இளவரசி கிடைப்பதில் கூடவா பொறாமை :-) :-)
செனா வாக்கெடுப்புல ஈவிஎம் அ ஹேக் பன்னலாம்
Deleteவிசயமில்லாம பன்ன மாட்டாங்கல்ல....இறுதி பாகம் சரவெடி உறுதி
Deleteஇல்ல இது விட அட்டகாசமா ஏதும் நடக்கலாம்...நடந்திருக்கலாம்...பதிமூன ரஷ்யா ஒரு சிப்ப அனுப்பி இருக்கலாம்...ரஷ்யால என்ன மூளைச்சலவை நடந்ததோ
Deleteஅந்த ஹேக்கர வச்சு ரஷ்ய ரகசியங்கள கறக்கலாமே...அவங்க பாதுகாப்பு ஊடுறுவி
Delete//செனா வாக்கெடுப்புல ஈவிஎம் அ ஹேக் பன்னலாம்//
Deleteஸ்டீல்! அமெரிக்காவில் ஈவிஎம் கிடையாது. வாக்கு சீட்டு தான். அதற்கு பல காரணங்கள் உண்டு.
இந்தியாவாகவே இருந்தாலும் இ வி எம் ஐ
ஹேக் செய்ய முடியாது. இதற்கும் விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் உண்டு
கிடையாதுதான் இப்பதானே நண்பரே....ஹேக்கர்ஸ் வேற லெவல் தானே...
Delete@ஜூம்பிங் தலீவர், செனா அனா, PfB
Delete😂😂😂👌👌👌😂😂😂👌😂😂😂
We do use EVMs and EVMs print paper ballot so they can validate manually as well if any issue arises.
Delete// சமீப வாரங்களாகவே ”எதையெல்லாம் இப்போ எழுதுறது? எதையெல்லாம் அப்பாலிக்காவுக்கா ஒத்தி வைப்பது?” என்ற வினா மாத்திரமே முன்நின்று வருகிறது! இதோ- இந்த வாரத்து மெயின் மேட்டர் கூட ஆயிரமாவது பதிவிலேயே வந்திருக்க வேண்டியது; but ஏகமான அறிவிப்புகளோடு இதுவும் சேர்ந்து கரைந்திட வேணாமே என்று ஒத்திப் போட்டேன்! //
ReplyDeleteஓகோ இப்படி கதை போகுதா 🤩
ஆமால....
Deleteஆனால் ...இதோட கரைஞ்சுடக் கூடாதுன்னு இன்னோர் இன்ப அதிர்ச்சியுமிருக்கு குண்டு புக் வடிவுல.....
ஏலே ஓடிப்போய் விடு 😄
Deleteபுக் வந்ததும்ல
Deleteமீண்டும் சொல்லுகிறேன் திரும்பி பார்க்காமல் ஓடி போய் விடு 🤣
Deleteகபீஈஈஈஈஈஈஈஈஈஈஷ்ஷ்ஷ்ஷ்ஷ்😍😍😍😍😍😍😍😍😍😍
ReplyDeleteசார் விண்வெளித் திருவிழாக்கு இன்னும் நான்கே தினங்கள்....இம்மாதம் விட்ட இடத்த பிடிக்க வாழ்த்துக்கள்...ஜுனில் ஜூலை
ReplyDeleteபோன மாசம் வந்த புத்தகங்கள் படத்தை முதல்ல பாருல ... படமும் பார்க்கிறது இல்ல படிப்பதும் இல்ல போலே போ 😁
Deleteஎல தம்பி துணைக்கு வந்த ஆவி...க்யூபா...சாகோர் முடிச்சாச்சுல...விமர்சனமெழுத நேரமில்லை....டெக்ஸ் முக்கா கிணறு தாண்டி சூப்பரா போவுது மக்கா....மூனு கதைகளும் சூப்பர்...
Deleteஎன்ன பெரிய நேரம் இல்லைனு கதவுடுறல, படிச்சு இருந்தா விமர்சனம் போடுல பார்க்கிறேன் :-)
Deleteஸ்டீல் சகோ கவிதையாக விமர்சனங்கள் போடுவார், பரணி சகோ
Deleteமுடிஞ்சா நாளை நனைய தயாராகுல
DeleteI am suffering from fever now only. Taking 1 week off sir 😀
Deleteநனஞ்சா ஜலதோஷம்தாம்ல
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநதி மூலம் க்யூபா' வில் மற்றும் ஒரு கவனிக்கத்தக்க விஷயம், ஜேஸனின் தலையில் குண்டு பாய்ந்த இடத்தில் இதுவரை இருந்து வந்த வெண்புள்ளி காணப்படாததே.
ReplyDeleteஇரத்தப்படலம் முதல் பாகத்தில், ஜேஸனுக்கு அறுவை சிகிச்சை செய்த மார்த்தா சொல்வது போல், அது காலப்போக்கில் தானாகவே மறைந்துவிட்டதோ என்னவோ?
(இல்லேன்னா ஜேஸன் தலைக்கு டை அடிச்சுக்கிட்டாரோ?)
ஆனால் அந்த வெண்புள்ளி தான் ஜேஸனின் முகத்துக்கு ஒரு அழகையும், வசீகரத்தையும் கொடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
என்ன ஒரு ஆழமான பார்வை. 😊
Deleteநம்ம வில்லியம் வான்ஸ் இருந்தா பாத்திருப்பார்தான்....நீங்க சொன்ன மாதிரி டை அடிச்சிருக்கலாந்தான்...
Deleteமேலும் கொஞ்ச ஞாபகம் திரும்பின மேஃப்ளவர்...ப்யூரிட்ன்ஸ் வருது.....மார்த்தா. சொன்னத கோத்திருப்பாரோ கதாசிரியர் உங்கள மாதிரியே மார்த்தா சொன்னத இருத்தி....இந்த கேள்விகள் எழுந்தா சுவாரஸ்யம் கூடுமுன்னு....ஆனாலும் பதிமூனு போலல்லாது அட்டகாச. ஞாபக சக்தி....அருமை நண்பரே
Delete//ஆனால் அந்த வெண்புள்ளி தான் ஜேஸனின் முகத்துக்கு ஒரு அழகையும், வசீகரத்தையும் கொடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.//
Deleteஎனக்கும் கூட ஒரு வெண்புள்ளி இருந்தது. எனக்கு அது கொடுத்ததோ தோல் மருத்துவருக்கான ஆலோசனை செலவும் ஒரு முழ நீள மருந்து சீட்டும்தான் 😄
Reply
// தோல் மருத்துவருக்கான ஆலோசனை செலவும் ஒரு முழ நீள மருந்து சீட்டும்தான் //
Deleteமருத்துவருக்கே இன்னொரு மருத்துவரா :-)
மார்த்தா மாதிரி ஒரு நல்ல டாக்டர் உங்களுக்கு கிடைக்க நீங்கள் கொடுத்து வைக்கவில்லை சார்.
Deleteஅன்பே வா படத்தில் நாகேஷ் புலம்புவது மாதிரி, வியாதி வர்றதுக்கு கூட மனுஷன் கொடுத்து வச்சிருக்கணுமய்யா...
கடந்த ஆண்டு V-காமிக்ஸில் வந்த ஸாகோர் நேர்கோட்டு கதையாக இருந்தாலும் நிறைவான வாசிப்பு அனுபவத்தை தரவில்லை; அதில் வந்த மற்ற கதைகள் சிறப்பு, குறிப்பாக ராபின் & நோ. இந்த ஆண்டு ராபின் & நோ நிறைவான வாசிப்பு அனுபவத்தை தந்தன, ஆனால் வேதாளர் சாரி; இவர் விற்பனையில் சாதிக்கலாம் ஆனால் நிறைவான வாசிப்பு அனுபவம் மிஸ்ஸிங்; சாரி விக்ரம்! இவரின் கதைகள் 70 & 80 என்ற சிறப்பு வெளிஈடாக வரும்போது இவரை V-காமிக்ஸில் தவிர்க்கலாமே? அதற்கு பதில் வேறு சில புதிய கதை/நாயகர்களை/நாயகிகளை முயற்சிக்கலாமே? அல்லது டயலான் / ஒல்லி குச்சி துப்பறியும் நாயகி இவர்களின் crisp ஆனா கதைகளை கொடுக்கலாமே சார்?
ReplyDeleteதண்டர் in ஆப்ரிக்கா - ஒரு ஆராய்ச்சி கதை, நிறைய தகவல்கள், அட்டகாசமான வண்ணத்தில் ஆனால் கதையை நகர்த்திய விதம் நிறைவான வாசிப்பு அனுபவத்தை கொடுக்க தவறிவிட்டது! ஒரு நேரத்தில் ஏதோ ஆராய்ச்சி கட்டுரையை படித்து கொண்டு இருக்கிறோமா என்ற எண்ணம் தலை தூக்கிவிட்டது! ஒரு ஆராய்ச்சி கதை என்று எடுத்து விட்டு அதற்கு ஒரு வில்லன் கும்பல் தேவை என கதாபாத்திரங்களை சேர்த்து விட்டு, கார்ட்டூன் பாணியில் ஓவியங்கள் ஆனால் கதை காமெடியாகவும் தெரியவில்லை சீரியஸாகவும் இல்லை; தண்டர் - இவரை எந்த பக்கம் சேர்ப்பது என்ற குழப்பம் கதையை படித்து முடித்த பிறகு!
ReplyDeleteSorry சார்.
படிச்சிட்டு வந்து மிதிக்கன்ல
Deleteஏலே மக்கா வீட்டில் அடி ஜாஸ்தியா :-) பாவம் வீட்டுல மீதி வாங்கிட்டு இங்க வந்து என்ன மிதிக்கிறேன்னு புலம்பரல :-)
Delete😂😂😂😂😂😂😂😂😂😂
Deleteதம்பி பொன்ராஜ் ( ம) பரணி சார்,
Deleteஉங்களது பொறுப்புகள் மத்தியில், எப்படி இப்படி சகஜமாய் இருக்கிறீர்கள்.
நான் கடந்த ஜனவரி பின்பாக நான் இன்னும் லயன் காமிக்ஸ் புத்தககங்கள் வாங்க வில்லை.
இந்த ஆண்டு நான் எனது சந்தாவை புதுப்பிக்க வில்லை.
நான் வேலை செய்யும் நிறுவனத்தில், நான் சில பிரட்சனையில் இருக்கிறேன்.
ஆனால் உங்களுக்கு இடையே நடக்கும் வார்த்தையாடல்கள் கடுப்பை தந்தாலும் கூட, எனது இந்த சூழலில், எனது முகத்தில் புன்னகையை தந்து விடுகிறது.
இதற்காக ஏதும் பீஸ் கேட்டு விடாதீர்கள்.
இத்தகைய நண்பர்களை, காசு பணம் இல்லாமல் கொடுத்த, ஆசிரியருக்கு, எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் இதுவரை,
லயன் காமிக்ஸ் பற்றிய விமர்சனங்கள், அச்சில் ஏறியதில்லை.
அந்த வருத்தம் எனக்கு நீண்ட காலங்களாய் உண்டு.
இது அனைவருக்குமான கனவு.
ஆசிரியர் அனுமதித்தால்,
இது வரை அச்சில் வராத லயன் காமிக்ஸ் அன்பர்களின் விமர்சனங்களை, பொறுப்பெடுத்து வாங்கித்தர நான் ரெடி.
உங்ஙகளைபோல பல நண்பர்கள்( லயன் அன்பர்கள்), எனது இந்த கஸ்டமான சூழலில் என்னோடு உறு துணையாய் இருந்திருக்கிறார்கள். எங்களை போன்ற கடுமையான இதயத்தை கூட, ரோஜா பூக்களாக மாற்றும் மாயாஜாலம் தமிழ் பேசும் லயன் காமிக்ஸ்க்கு உண்டு.
இந்த லிஸ்டில்,
டெட்வுட்க்கு இடமில்லை என்று தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன்,
இதை தாண்டி பஞ்சாயத்து வந்தால், அந்த பதுங்கு குழியில்,
நிரந்தரமாக தங்கி விடுகிறேன்.
...எனது இந்த 54 வருட வாழ்க்கையில், ...
DeleteThis comment has been removed by the author.
Deleteநண்பரே காமிக்ஸ் சார்ந்த விமர்சனங்கள் அட்டகாசமாத்தான இருக்கும்....அச்சேற்றுங்க தயக்கமின்றி
Deleteஎந்தக் கதையும் எனக்கு பிடிக்காமல் போனதில்லை முழுதும் படிக்காமல் விட்டதில்லை....ஆசிரியரின் ஏகப்பட்ட பில்டப்பில் வந்த தூங்கிப் போன டைம் பாம் தவிர்த்து
இந்த உலகத்ல கஷ்டம்னு ஒன்னு இல்லை நண்பரே...நாம்தான் பில்ட் அப் தந்துக்குறோம்....கடவுள் அழகா படைச்சு ...அடுத்த வாய்ப்பில் அதை நம்மை நோக்கி தள்ளி விடவும் செய்கிறார்....
//இந்த உலகத்ல கஷ்டம்னு ஒன்னு இல்லை நண்பரே...நாம்தான் பில்ட் அப் தந்துக்குறோம்....கடவுள் அழகா படைச்சு ...அடுத்த வாய்ப்பில் அதை நம்மை நோக்கி தள்ளி விடவும் செய்கிறார்....///
Deleteபிண்றீங்க ஸ்டீல்!
இந்த உலகத்ல சந்தோசம்னு ஒன்னு இல்லைங்க ஸ்டீல் ... நாம்தான் அதை தேடி ஓடுறோம் ....கடவுள் அலங்கோலமா படைச்சு ...அடுத்த வாய்ப்பில் ஒரு கஷ்டத்தை நம்மை நோக்கி தள்ளி விடவும் செய்கிறார்....
Delete(இப்படி படிச்சாலும் சரியா இருக்கற மாதிரி தானே இருக்கு?!!🤔)
Please share the review sir 😊
Deleteகல்யாணம் ஆனதை சொல்றீங்களா.. ஈ.வி.
Delete//கல்யாணம் ஆனதை சொல்றீங்களா.. ஈ.வி.//
Deleteபத்து சார் @😂😂😂😂
அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteகாலை வணக்கம் 🙏
Delete// இப்போது நம்மிடம்! ‘தம்‘ கட்டிப் பணி செய்தால் ஈரோடு புத்தக விழாவின் போது கபிஷ் ஸ்பெஷல் – 1, ராமு-சோமு etc... சகிதம் தயாராகிட வேண்டும். //
ReplyDeleteகபிஷ் வருகை,அடடே அருமை,அட்டகாசம்...
பூந்தளிர் நினைவுகள் கண்முன்னே அணிவகுத்து நிற்கின்றன...
சிறுபிராயத்தில் எங்கள் ஊர் நூலகத்தில் காலையில் நூலகம் திறந்த நேரம் முதல் மாலையில் நூலகத்தை மூடும் வரை அங்கேயே இருந்து பூந்தளிரில் கபிஷை வாசித்தது நினைவில் நிழலாடுகிறது,நூலகத்தின் அப்போதைய புத்தக அலமாரிகள் அனைத்தும் எமது பெயரை உச்சரித்த காலமது,ஒவ்வொரு புத்தக அலமாரியில் உள்ள நூல்கள் அனைத்தையும் எடுத்துப் பார்ப்பதும்,அடுக்கி வைப்பதுமாக பொழுதுகள் போயின,உண்மையில் பொற்காலம்தான் அது....
கபீஷின் வருகை,எமது நினைவுப் பேழையை சற்றே திரும்பிப் பார்க்க வைத்து விட்டது...
///நூலகத்தின் அப்போதைய புத்தக அலமாரிகள் அனைத்தும் எமது பெயரை உச்சரித்த காலமது///
Deleteஏன்.. எல்லா அலமாரியிலயும் உங்க பேரை கிறுக்கி வச்சிருப்பீங்களா?!!🤔
Super நினைவுகள்
DeleteConverted my MYOMS into Electric 80 Santhaa yesterday !!
ReplyDeleteSir - let us know when to pay for Erode specials sir - not much time left for the books to be released.
//Sir - let us know when to pay for Erode specials sir -//
Delete+1
200
ReplyDelete