Sunday, May 05, 2024

சந்தோஷம் - ஒரு தொடர்கதை !

 நண்பர்களே,

வணக்கம். Phewww !! அடை மழை பெய்து ஓய்ந்த மாதிரி ஒரு பீலிங் - நமது இரு தின ஆன்லைன் மேளாவின் நிறைவினைத் தொடர்ந்து !! 

ரெண்டு நாட்களுமே நமது ஆபீஸ் போன்களின் கீ-பேட்களும் சரி, கால்குலேட்டர்களின் பட்டன்களும் சரி, சட்னியாகாத குறை தான் ! இதற்கு முன்பான விழாக்களின் போது, போன்கால் பேசியே நாக்கு வறண்டு போயிருந்த நம்மாட்கள், இம்முறை கூலாக டைப் பண்ணியே 2 தினங்களின் ஆர்டர் பிரவாகங்களைச் சமாளித்து விட்டுள்ளனர் என்று தான் எட்ட இருந்து பராக்குப் பார்க்கும் படலத்தின் போது நினைத்திருந்தேன் ! ஆனால் கொஞ்ச நேரம் கிட்டக்க இருந்து கவனித்த போது தான், எந்த புக் எந்த டிஸ்கவுண்ட் விகிதத்தில் ? மொத்த லிஸ்டின் கிரயமென்ன ? யார்-யார் எந்த free books தேர்வு செய்துள்ளனர் ? And அவற்றை எங்கே அனுப்புவது ? அப்புறம் புது இதழ்களுக்கான ஆர்டர்கள் என்ன ? என்ற விபரங்களை பதிவு செய்வதெல்லாம் மொத்தமாய் குறுக்கைக் கழற்றிடும் பணியாகிப் போனதை புரிந்து கொள்ள முடிந்தது ! இந்த ரகரகமான டிஸ்கவுண்ட்களும் சரி, FCBD விலையில்லா இதழ்களின் திட்டமிடலும் சரி, 8 புது ரிலீஸ்களின் அறிவிப்பும் சரி, கணிசமாகவே டெஸ்பாட்ச்சில் கசரத் வாங்குமென்பதை எதிர்பார்த்திருந்தேன் தான் ; ஆனால் அதன் முழுப் பரிமாணத்தையும் 2 நாட்களாய்ப் பார்த்த போது, இருக்கும் சொற்ப (wo)man பவரைக் கொண்டு, கொஞ்சம் டூ மச் ; த்ரீ மச்சாகத் தான் இழுத்து விட்டுப்புட்டோமோ ?? என்று தோன்றியது ! But புண்ணியத்துக்கு 8 புது ரிலீஸ்களில் யாருமே, "எனக்கு இது வேணும் ; அது வேணாம் !" என்ற ரீதியில் pick & choose பண்ணியிருக்காது மொத்தமாகவே செலெக்ட் செய்து விட்டதால் அதன் பொருட்டு நோவுகளின்றித் தப்பித்து விட்டார்கள் ! And சஞ்சீவி மலையையே தூக்கி தலையில் வைத்தாலும், முகம் சுளிக்காது - 'சரிங்க சார் !' என்று செயலாற்றிடும்  நம்மவர்களின் புண்ணியத்தில் நானும் தப்பித்தேன் !

மாலையில் பலத்த காற்றும், லேசான மழையுமாய் பெய்ததில் கரண்ட் கட்டாகிப் போயிட ஆபீசில் wi-fi பணாலாகியதால், கடைசி ஒரு மணி நேரத்து ஆர்டர்களுக்கு சரி வர தொகைகளைச் சொல்ல முடிந்திருக்கவில்லை ! அவர்களுக்கும் இந்த 2 தினங்களின் சலுகைகள் உண்டென்பதால் no worries ; திங்கட்கிழமையின் உள்ளூர் திருவிழா  விடுமுறை முடிந்து, செவ்வாய் காலையில் ஆபீசுக்கு வந்தவுடன் சொல்லி விடுவார்கள் ! So லேட்டாக ஆர்டர் செய்திருந்த நண்பர்கள் ஒரு நாள் பொறுத்துக்க கொள்ளுங்கள் - ப்ளீஸ் ! I repeat - திங்கள் நமது அலுவலகம் உள்ளூர் திருவிழாவின் பொருட்டு விடுமுறையிலிருக்கும் !

ரைட்டு....பொதுவாய் என்ன விற்றது ? அதற்கு ஈடாக Free Comics லிஸ்டிலிருந்து எதைத் தேர்வு செய்தார்களென்று பார்த்த போது - made for interesting viewing !! 

*நம்ம மீசைக்கார ஷெல்டன் சார் புதுசாய் ஜாகைகள் தேடிட ஒரு வழியாக இந்த 2 நாட்களிலும் மனசு இறங்கியுள்ளார் !! நல்லதொரு நம்பரில் ஷெல்டன் புக்ஸ் நகன்றுள்ளன !!

*விறு விறுப்புக் காட்டியுள்ள இன்னொரு title - "உயிரைத் தேடி" ! போன வருஷம் இதே சமயம் வெளி வந்திருந்த இந்த cult hit-ன் black & white இதழ்கள் அப்போதே காலியாகியிருந்தன ! கலர் புக்ஸ் மட்டும் ஸ்டாக்கில் இருக்க, அவற்றில் brisk sales !

*பொதுவாகவே ஹார்ட்கவர் இதழ்களில் நல்ல நகர்வுகள் !! அதுவும் கென்யா கிட்டத்தட்ட அனைவரது லிஸ்ட்டிலும் இருந்துள்ளது !!

*மிதமாய் நகர்ந்துள்ளது சுஸ்கி & விஸ்கி ஹார்ட் கவர் Book # 2.

*சுப்ரீம் '60s ஹார்ட்கவர் இதழ்களும் fast movers !! 'நீ தெற்கே போய்க்கோடே  ...மேற்கே போய்க்கோடே ...!! ஆனா நாங்க பாட்டுக்கு சிக்ஸர் அடிச்சிகினே தனி வழியிலே டிராவல் பண்ணிப்போம் !' - என்று க்ளாஸிக் பார்ட்டீஸ் சொல்லாத குறை தான் !   

*Talking of hardcovers - போன மாசத்து பெளன்சர் அடித்திருக்கும் சிக்சரின் புண்ணியத்தில் முந்தய பெளன்சர் இதழ்களும் செம decent ஆக நகர்ந்துள்ளன !

*And சர்ப்ரைஸ்....சர்ப்ரைஸ்....கிட்டத்தட்ட அனைவரது தேர்விலும் இடம் பிடித்துள்ள ஒரு பார்ட்டி - நம்ம இளவரசி மாடஸ்டி தான் !! சின்ன விலைகள் ; அதிலுமே டிஸ்கவுண்ட்ஸ் என்பதைத் தாண்டி, இவர் இன்றைக்கு ஏதோவொரு வசீகரத்துடன் செம hot property ஆகத் தெரிகிறார் ! போகிற போக்கில் அடுத்த க்ளாஸிக் தொகுப்புகளின் பட்டியலில் அம்மணிக்குமொரு பெசல் போட வேண்டிப் போகும் போலும் !! 

*இன்னொரு surprise தேர்வு - நம்ம வலைமன்னன் தான் ! நிறைய நண்பர்கள் ஸ்பைடர் இதழ்களை pick செய்துள்ளனர் !! And அந்த புது ஸ்பைடர் + ஆர்ச்சி சாகசம் எப்போதென்று எக்கச்சக்க ஆர்வங்ஸ்கி !! நம்ம தானைத் தலைவர் ஸ்பைடரை கம்பியூட்டர் மேக்ஸும், ஆர்ச்சியும் பந்தாடுவதைப் பார்த்து நிறைய பற்கள் நறநறக்கப்படுமென்பது உறுதி !! 

*கைவசமுள்ள ஒன்-ஷாட் ஜம்போ கிராபிக் நாவல்களிலிருந்து "மா..துஜே ஸலாம்" நிறையப் பேரின் லிஸ்ட்களில் இருந்துள்ளதில் எனக்கு பெர்சனலாக நிரம்ப மகிழ்ச்சி !! நான் ரசித்த சமீப ஆண்டுகளின் புக்சில் அதற்கொரு முக்கிய இடமுண்டு என்பதில் ஏது ரகசியம் ? 

*புது இல்லங்களைத் தேடி டெமக்ளீஸ் டீமும் புறப்படுவது சந்தோஷமான இன்னொரு சேதி !! சில பல வருஷங்களுக்கு முன்னே ஈரோட்டில் வெளியான நாள் முதலாய் கிட்டங்கியில் நீண்ட நெடு நாள் குத்தகையினை எடுத்திருக்கும் இந்த இதழ் கொஞ்சமாகவேணும் நகர்ந்திருப்பதில் ஹேப்பி !

*ஆச்சர்யமாய் இம்முறை - அயல்நாட்டுப் பங்களிப்புகளும் கணிசம் ! புக்ஸை இங்குள்ள முகவரிகளுக்கு அனுப்பப் கோரினார்களா ? என்பது எனக்குத் தெரியலை - but கண்முழித்திருந்து கனடாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் நண்பர்கள் ஆர்டர் செய்துள்ளனர் ! And நம் அண்டை வீட்டு ஸ்ரீ லங்காவினை குறிப்பிடாதிருக்க இயலுமா ? அங்கிருந்தும் செம handsome orders !!

*இந்த தபா "இரத்தப் படலம்" தொகுப்புகள் ஏதேனும் surprise விற்பனைக்கு இல்லியா ? என்று கேட்டோரும் நிறைய !! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஏற்பாடுகளை குளறுபடிகளின்றிச் செயல்படுத்திடும் முனைப்பிலும், புது புக்ஸ்களின் பணிகளிலும் மறந்தே போய்விட்டேன் !! 

*மொத்தமான 40 விலையில்லா புக்ஸையும் ஆங்காங்கேயுள்ள நூலகங்களுக்கு அனுப்பிடக் கோரியுள்ள நண்பர்களே கணிசம் !! அவை வெறும் 10 சதவிகிதப் புது வாசகர்களைச் சென்றடைந்தாலுமே இந்த முயற்சி செம வெற்றி என்றாகிடும் !! 

பந்தாவாய் அறிவிச்சாச்சு ; விழாவையும் தெறிக்க விட்டாச்சு ; இனி டெஸ்பாட்ச் செய்திடும் பணி நம்மாட்களுக்கும், எஞ்சியுள்ள 2 புது இதழ்களுக்கான பணிகளை சட்டென்று முடிக்கும் பொறுப்பு எனக்கும் வெயிட்டிங் !! So இந்த 2 நாட்களாய் வேறொரு மண்டலத்தில் உலாற்றிக் கொண்டிருந்ததிலிருந்து தரையிறங்கி, பணிகளுக்குள் மூழ்கியாக வேண்டும் ! But பற்பல காமிக்ஸ் ஜாம்பவான்கள் கொண்டாடிய ஒரு மைல்கல் தினத்தினில் சுண்டெலி ரேஞ்சுக்காவது நாமும் களமாடிய மகிழ்ச்சியில், காத்துள்ள பணிகளின் பளு அழுத்தவே காணோம் !! And guess what - கையிலுள்ள இரண்டும் முடிந்த நொடியில், அடுத்ததாகக்  காத்துள்ளோர் நம்ம XIII-ம், தாத்தாக்களும் தான் ! 'கரும்பு தின்னக் கூலி' என்ற தேய்ந்த பழமொழியினை நாமறிவோம் ; அதனை மெய்யாலுமே yet again அனுபவித்திடும் வரம் எனக்குக் காத்துள்ளது ! புனித மனிடோ - yet again நன்றிகள் ஓராயிரம் !

Bye guys ...see you around !! And thanks for being the wonderful people you are !! எந்தவொரு முயற்சிக்கும் சர்வ நிச்சயமாய்த் தோள் கொடுப்போமென்பதை ஒவ்வொரு தருணத்திலும் நிரூபித்து வருகிறீர்கள் !! Thanks a million !! Have a beautiful week ahead !!

P.S : மகளிரணித் தலைவி - தனது கேப்ஷன் தேர்வினை அறிவிக்கலாம் !!

286 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே

      Delete
    2. டபுள் வாழ்த்துகள் சகோதரர்களே

      Delete
  2. மீண்டும் மீண்டுமா🙃😁🥳

    ReplyDelete
  3. Happy to hear the Massive Success of Online Book fair & FCBD sir🤩
    மனமார்ந்த வாழ்த்துக்கள்👏👏👏

    Many more years like this yet to come🙌🙌🙌

    ReplyDelete
  4. வணக்கங்கள் ஆசிரியரே
    பன் போட்டிக்கு நடுவராக என்னை நியமித்தற்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்
    மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது 🙏🙏🙏💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. பண்பட்ட நண்பர்களின் பண் பாடும் பன் போட்டிக்கு, எங்கள் அபிமான மகளிரணித் தலைவியை தேர்வு செய்ய முடிந்ததில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி !

      Delete
    2. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

      Delete
  5. மிக்க மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
    Replies
    1. இது பதிவு எண் 995

      Delete
    2. சூப்பர் குமார்

      Delete
    3. குமார் சார்..பீதியை கெளப்பிட்டே இருக்கீங்களே ?

      Delete
    4. சார் இதே ரீதியில் போனால் இந்த மாத இறுதியில் அல்லது ஜூன் துவக்கத்தில் 1000 ஆவது பதிவு.

      S60 Announcement, Magic Moment Special+ 1000 ஆவது புத்தக அறிவிப்பு, ஈரோடு புத்தக விழா இதை பற்றி எல்லாம் எழுதினால் போதும் அல்லவா. உங்களுக்கு ஒரு reminder மட்டுமே நான்.

      Delete
    5. இப்போவே கண்ண கட்டுதே moment !!

      Delete
    6. இருக்கு பெருசா சம்பவம் இருக்கு.

      Delete
    7. குமார் @ நீங்கள் ஏதோ பெரியதாக ஆசிரியரிடம் இருந்து 1000 பதிவுக்கு பெரியதாக எதிர்ப்பது தெரிகிறது 😄

      Delete
    8. நான் மட்டும் இல்லை பரணி. இங்கு உள்ள ஒவ்வொரு நண்பரும்.

      Delete
    9. எனக்கு என்னமோ நீங்கள் தான் எல்லாருக்கும் எழுதி கொடுக்கிற மாதிரி தெரியுது 😂

      Delete
  6. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  7. வணக்கம் நம் காமிக்ஸ் உறவுகளே 💜

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு இரவுக்கழுகா ? ஆஹா !

      Delete
  8. விழா வெற்றி அடைந்தத்தில் மகிழ்ச்சி சார் நேரடி புத்தக விழாவை மிஸ் செய்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருந்துள்ளது. இம்முறை free புக் ஐசிங் ஆன் தி கேக் தான்.

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தான் கிருஷ்ணா ; புத்தக விழாக்கள் என்ன தான் பரவலாக நடந்தாலும், அவை இன்னமும் ரீச் செய்திடா ஊர்கள் கணிசம் ! So இது போன்ற முயற்சிகள் அவரவரது செல்போனுக்கே விழாவினைக் கொண்டு வந்தது போலாகி விடுகிறது !

      Delete
  9. வணக்கங்கள் சகோதரர்களே

    சகோதரர்களின் கேப்ஷன்கள் படித்திட குதுகலமாக இருந்தது, சிரித்து கொண்டே இருந்தேன்

    நடுவராக மதிப்பெண்கள் போடும் போது ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக மாற வேண்டி இருந்தது

    கலந்து கொண்ட 17 சகோதரர்களில் மூன்று சகோதரர்கள் லீடிங்

    மூவரில் ஒரு சகோதரருடைய கேப்ஷன் சிறந்ததாக இருந்தது

    வின்னர் இந்த பதிவின் முதல் கமெண்டின் சொந்தகாரர்

    💐💐💐💐💐💐💐JSVP @Tex Tiger💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே. ரம்யா நடுவர் வேலையை சிறப்பாக செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அவரது பதிலை இங்கு சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

      Delete
    2. அந்த கேப்ஷனையும் இணையுங்கள் சகோ.

      Delete
    3. Yes ; அந்த கேப்ஷனையும் போடுங்க நடுவரே !

      Delete
    4. கீழே பதிவிட்டுடேங்க ஆசிரியரே

      Delete
    5. வாழ்த்துகள் JSVP....💐💐💐


      நல்லபடியாக நடுவர் பணியாற்றிய கடலுக்கு பாராட்டுகள்💐💐💐

      Delete
    6. நம்பவே முடிய வில்லை ரம்யா sis 😳 already நீண்ட நாள் ஆசையான 1St comment பண்ணும் வாய்ப்பு கிடைத்ததில் பயங்கர சந்தோசத்தில் இருந்தேன்... இப்போ நீங்கள் என் கமெண்ட்டை தேர்வு செய்து, மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்தது விட்டீர்கள்😍

      மிக்க மிக்க நன்றிகள் ரம்யா சிஸ்🙏🙏🙏

      இந்த வாய்ப்பை வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கும் மிக்க மிக்க நன்றி ஸார் 🙏🙏🙏

      போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும், captions களை படித்து ரசித்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்🥰🤝🙏

      Delete
    7. அடடே வாழ்த்துக்கள் JSVP நண்பரே. சூப்பர் கடல். Job welldone.

      Delete
    8. வாழ்த்துக்கள் நண்பரே💜🥳

      Delete
    9. Thank u very Much Krishna sir, Sri sir🙏🙏🙏😊

      Delete
    10. Thank u So Much STV sir🤝, Kumar sir🤝, Karthick sir🤝
      🙏🙏🙏

      Delete
    11. வாழ்த்துக்கள் JSVP நண்பரே. சூப்பர் கடல். Job welldone

      Delete
    12. வாழ்த்துக்கள் JSVP நண்பரே.

      ஜட்ஜம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.

      Delete
    13. நன்றிகள் பல சகோ @சேலம் டெக்ஸ் விஜராகவன்🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

      Delete
    14. Thank u Very much Saravanan sir🤝, Sivalingam sir🤝, Steel Sir🤝🤗

      Delete
    15. நன்றிகள் சகோதரர்களே
      தங்கள் பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைகிறேன்

      @Sivalaingam 💐💐💐
      @Kumar 💐💐💐
      @கிருஷ்ணா 💐💐💐
      @Saravanan💐💐💐

      Delete
  10. வாழ்த்துகள் சகோ JSVP @ Tex Tiger

    ReplyDelete
  11. வெற்றி பெற்றவரின் கேப்ஷன்

    JSVP @ Tex Tiger


    டைகர்:

    வோ... சின்ன கழுகாரின் சலம்பலையும், வெள்ளி முடியாரின் அலம்பலையும், புலம்பலையும் இரவுக் கழுகார் எளிதில் சமாளித்து விடுவார்...
    இந்த ஒல்லி பிச்சாரால் சமாளிக்க முடியுமா? பார்ப்போம் 🤔

    B. லக்கி லூக்:

    இந்த பொடியன் மிடுக்கா இருந்தாலும், துடுக்கா பேசுறான்...
    செவ்விந்தியனோ ' வோ ' ஐ தவிர எதுவும் பேச மாட்டுறான்...
    பெருசோ பேசியே கொல்லுது 🙄
    இவிங்களுக்கு அந்த டால்டன் பிரதர்ஸே தேவலாம் போல🤔
    டேய் ஜாலி, எங்க இருந்தாலும் சீக்கிரம் வாடா...

    C. கிட்:

    அங்கிள், சிவகாசில எதோ பன்னு சாப்பிடும் போட்டி நடக்க போவுதாம்...🍔
    உங்க வயசுக்கு ஏத்த போட்டி தானே...
    கலந்துகிட்டா ஃபர்ஸ்ட் பிரைஸ் கண்டிப்பா உங்களுக்கு தான் அங்கிள்🏆

    D. கார்சன்:

    டேய் சுள்ளான், நக்கல் பேச்சில் உங்க அப்பனையே மிஞ்சிடுவ போல... பன்னு லாம் தாத்தாஸ் சாப்பிடுறதுப்பா...

    என்னை மாதிரி யூத்த்து கலந்துக்கணும்னா வறுத்த கறியை வெடுக்னு கடிச்சு காலி பண்ணும் போட்டியோ, இல்லனா சுக்கா ரோஸ்ட்டை பக்காவா முழுங்கி வைக்கும் போட்டியோ வைக்க சொல்லு... அப்புறம் தெரியும் இந்த கார்சன் யாருன்னு💪

    ReplyDelete
    Replies
    1. 2nd Caption

      தலைப்பு : மெபிஸ்டோவை தேடி)

      A. டைகர் :

      " கழுகார் " இருக்க வேண்டிய இடத்தில் " குருவியார் " போல இருக்கும் ஒல்லி பிச்சார். மெஃபிஸ்டோவை இவரால் பிடிக்க முடியுமா?🙄
      இவரும் மஞ்சள் சட்டை மாவீரர் என்பதால் முடியும் என்று தான் நம்புகிறேன்... வோ...🤔

      B. லக்கி லூக் :

      டால்டன்ஸ் னா தரதரனு புடிச்சி இழுத்துட்டு வந்துடலாம்...
      இவன் யாரோ மெபிஸ்டோவாம், மந்திரவாதியாம்...
      இவனை எங்க போய் தேடுறது?
      ரின் டின் கேன் இருந்தா கூட, பயலை மோப்பம் புடிக்க விட்டு, அதுக்கு எதிர் திசையில் போய் கண்டு புடிச்சிடலாம்...
      ஜாலி வேற இல்ல... பேசாம " தனிமையே என் துணைவன்" பாட்டை பாடிகிட்டே, பொடி நடையா ஊரு போய் சேர்ந்துடலாமா 🤔

      C. கிட் :
      அங்கிள், மெபிஸ்டோவை பிடிக்க லக்கி அங்கிளுக்கு, கட்டப்பா போல பக்க பலமா இருக்க டாடி உங்களை தான் நம்பி விட்டுருக்காரு... சொதப்பிடாதிங்க...

      D. கார்சன்:

      அட போப்பா,
      மெபிஸ்டோவ பிடிக்க என்னை இந்த ஒல்லி பிச்சான் கூட கோர்த்து விட்டுட்டு உங்கப்பன் மட்டும் e- pass வாங்கிக்கிட்டு ஊட்டி போய் என்ஜாய் பண்ணுறான்...
      நான் இந்த அரிசோனா பாலைவனத்துல காய்ஞ்சி கருவாடா கிடக்கிறேன்...
      என் லெவல்க்கு ஒரு ராஷ்மிகா வோடயோ இல்ல ஆலியா பட் கூடயோ D.I.S.C.O...
      disco disco nu டூயட் பாட வேண்டியவனை போய் இப்படி அலைய விடுறிங்களே... இதுலாம் நியாயமா?

      Delete
  12. பன் பெறும் புலவருக்கும், நடுநிலையாய்த் தீர்ப்புச் சொன்ன நக்கீர ரம்யாவுக்கு நமது வாழ்த்துக்கள் !! சூப்பர் !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ஆசிரியரே

      Delete
    2. பாண்டிய மாமன்னருக்கு நன்றிகள் ஆயிரம் 🤗🙏🙏🙏

      Delete
  13. வாழ்த்துக்கள் நண்பரே 👏👏👏
    & Good job ஜட்ஜம்மா🎉

    ReplyDelete
    Replies


    1. ஐ...இது கூட நல்ல பேரா இருக்குதே !!

      Delete
    2. இன்று முதல் நீவிர் அன்போடு "ஜட்ஜம்மா " என்று அன்போடு அறியப்படுவீராக ரம்யா !

      Delete
    3. நான் வழிமொழிகிறேன்

      Delete
    4. நான் வழிமொழிகிறேன் *2

      Delete
    5. Thank u Very Much Giri sir🙏, Surya jeeva Sir🙏

      Delete
    6. சிறந்த கேப்ஷனை தேர்வு செய்த ஜட்ஜம்மா ரம்யாவுக்கு வாழ்த்துக்கள்

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. மகளிரணி தலைவி, கொள்கை பரப்பு செயலாளர், இப்போது ஜட்ஜம்மா

      நன்றிகள் ஆசிரியரே😊😊😊😍😍💐💐💐💐💐

      Delete
    9. @செந்தில் சத்யா
      நன்றிகள் தோழரே 💐💐💐💐💐

      Delete
    10. பேர் வச்சதுக்கு பன்னு கிடைக்குமா இல்லை முதுகுல டின்னு கிடைக்குமா ன்னு தெரியலையே?!?

      Delete
    11. Thank u senthil Sathya sir🙏
      @Giri sir- பன்+ டின் இரண்டுமே கிடைக்குமோ🤔🤗

      Delete
  14. மகிழ்ச்சி சார் மகிழ்ச்சி...
    எடைக்கு எடை ஆஃபர் என்றதும் ஒரு கணிசமான அளவில் ஸ்டாக் நகர்ந்துவிடும் என்ற கணிப்பு பொய்யாகலை,
    மேலும் அந்த இலவச புக்ஸ் மூலம் அதை படிக்காத வாசகர்களுக்கு,நண்பர்களுக்கு பல புத்தகங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல்,நூலகம், அன்பளிப்புக்கு,ஸ்கூல் பிள்ளைகளுக்கு என நண்பர்கள் சொல்லும் போது மனதில் அளப்பறிய சந்தோஷம். நிச்சயமாக இவையெல்லாம் உங்களால் மட்டுமே சாத்தியம்.
    லயன் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐 சார்.❤️

    ReplyDelete
  15. 1. ஆபுவி வெற்றி அடைந்தது மிகுந்த மகிழ்ச்சி.
    2. பரிசு பெற்ற நண்பர்களுக்கும் திறம்பட நடுவராக செயல்பட்ட மகளிரணி தலைவிக்கும் வாழ்த்துகள் & பாராட்டுகள்.
    3. அப்ப டமாஸ்டிக்கு தனி சந்தா அறிவிச்சுடலாம் தானே.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் M.P சார் 🙏🙏🙏
      கண்டிப்பாக மாடஸ்டி ஸ்பெஷல் போட வேண்டும்😊😀

      Delete
    2. சகோ தாங்கள் புதிய நபர்
      அவர நம்பி மாடஸ்டி பக்கம் போகாதீங்க
      நாங்கள் இங்க இருக்கோம், மாடஸ்டி யின் உண்மையான ரசிகர்கள்

      Delete
    3. நன்றிகள் மஹி சகோ💐💐💐

      Delete
  16. மா.. துஜே.. ஸலாம்... என்னை
    மிகவும் பாதித்த கதைங்க சார்.. ❤️🙏..

    ReplyDelete
  17. ஆன் லைன் மேளா வெற்றியடைந்ததற்க்கு வாழ்த்துக்கள் ஆசிரியரே தங்கள் அலுவலக பணியாளர்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் JSVP
    குட் job Ramya

    ReplyDelete
  19. இம் மாத வெளீயிடுகள் எனது வரிசை
    1.டாக் புல் & கிட் ஆர்ட்டின் 90/100
    2.ராபின் 85/100
    3.டேங்கோ 84/100

    ReplyDelete
  20. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் JSVP!
      💐💐💐💐💐💐💐


      பாராட்டுகள் ஜட்ஜம்மா...!!
      👏🤝👏🤝👏🤝

      Delete
    2. நன்றிகள் சகோ 💐💐💐

      Delete
    3. மிக்க நன்றிகள் நேபாள நாயகரே🙂🤝🤝🤝

      Delete
  21. விற்பனை தகவல்கள் உற்சாகம் தருகிறது சார்

    ReplyDelete
  22. ஆன்லைன் மேளாவின் விற்பனை தகவல்கள் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
    இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  23. வாழ்த்துகள் JSVP ப்ரோ.


    பாராட்டுகள் ஜட்ஜம்மா...கடல் சகோ!!!

    ReplyDelete
  24. ஆன்லைன் மேளாவின் விற்பனை தகவல்கள் தெறி உற்சாகம் தருகிறது சார்.

    ReplyDelete
  25. ஆன்லைன் திருவிழாவை உற்சாகமாக நடத்திக் கொடுத்த ஆசிரியர் அவர்களுக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் விற்பனையில் பங்கு உண்டு சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  26. ஆன்லைன் மேளா மூலம் காமிக்ஸ் மழை பொழிந்த ஆசிரியர் அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இன்னும் பல சிறப்பான தருணங்கள் உள்ளன. பல நல்ல ஸ்பெஷல் வெளியீடுகளை வெளியிட்டு எங்கள் மனங்களை குளிர்ச்சியடையச் செய்ய ஆசிரியர் அவர்களை பணிவுடன் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  27. இளவரசி Spl க்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  28. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  29. ஆன்லைன் மேளா அட்டகாச வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! எடிட்டர் மற்றும் அவருடைய டீமின் உழைப்பிற்கு வந்தனங்கள்!

    பன்னு போட்டியில் பக்காவான கேப்ஷன் எழுதி வெற்றிவாகை சூடிய நண்பர் JSVP க்கு வாழ்த்துகள்!! மிகுந்த ரசணையோடு எழுதியிருக்கிறீர்கள் நண்பரே!

    சிறந்த கேப்ஷனைத் தேர்ந்தெடுத்த 'ஜட்ஜம்மா' கடல் சகோவிற்கும் வாழ்த்துகள்!

    பி.கு : சமீப காலங்களில் எனக்கு இந்த பன்னுகளே பிடிப்பதில்லை. பாலிதீன் கவரிலிருந்து அவற்றை பிரித்தெடுப்பதே பெரும் சிரமமென்றால், அதை வாயில் போட்டு சவக் சவக் என்று மெல்லும்போது அவை பற்களிலும், மேலன்னத்திலும் பிசின் மாதிரி ஒட்டிக்கொள்வது ஒரு மகா அவஸ்த்தை!! அப்படியே கஷ்டப்பட்டு விழுங்கினாலும் தொண்டையில் 'கார்க்' மாதிரி அடைத்துக் கொண்டு இறங்குவேனா என்கிறது! அடுத்தநாள் காலையிலுமே கூட இதே 'கார்க்' பிரச்சினை தான் - ஆனால் இம்முறை தொண்டையில் அல்ல!

    நண்பர் JSVP தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பன்னு சாப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. செயலாளரே, அதற்காக ஈரோட்டில் பன் தராமல் இருந்து விடாதீர்கள்

      Delete
    2. உங்களுக்கு பெஷல் பன்னு ஜட்ஜம்மா! நானே தயாரித்து எடுத்து வரேன். பல மாதங்களுக்கு அந்த பன்னு வாயிலேயே இருக்கும்.. ம்ம்ம்... அதாவது , பன்னின் சுவை வாயிலேயே இருக்கும்னு சொல்ல வந்தேன்!

      Delete
    3. /// கஷ்டப்பட்டு விழுங்கினாலும் தொண்டையில் 'கார்க்' மாதிரி அடைத்துக் கொண்டு இறங்குவேனா என்கிறது! அடுத்தநாள் காலையிலுமே கூட இதே 'கார்க்' பிரச்சினை தான் - ஆனால் இம்முறை தொண்டையில் அல்ல! ///
      லொள்ளு சபா ...

      Delete
    4. நன்றிகள் சகோ 😊😊💐💐💐

      Delete
    5. 😨😨😨
      பரவாயில்லைங்க செயலாளரே, தாங்கள் சொன்னதை பார்த்தால் தேலே போய் ஒட்டி கொள்ளும் பன் எதற்கு கஷ்டபட்டு சாப்பிட்டு
      I am fineங்க, சகோ
      தங்கள் அன்பு ஒன்றே போதுங்க

      Delete
    6. வாழ்த்துக்கு நன்றிகள் ஆயிரம் விஜய் ஸார் 🙏🙏🙏 ஆனா இந்த பன்னு மேட்டர் தான் பயமுறுத்துது...😱

      பேசாம அந்த பன் பார்சலை உங்களுக்கு கூரியர் அனுப்பி விடட்டுமா?🤗

      Delete
    7. ///பேசாம அந்த பன் பார்சலை உங்களுக்கு கூரியர் அனுப்பி விடட்டுமா?////

      உங்க அன்புக்கு நன்றி நண்பரே! ஆனால் நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை. இப்போதெல்லாம் புளித்த மாவில் யீஸ்ட்டு சேர்த்து பன்னுகள் தயாரிக்கப்படுவதால், சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே வயிறு பறக்கும் பலூன் மாதிரி ஊதிப் போய்விடுகிறதாம்! இந்த gas தான் சிவகாசியில் வெடிவிபத்துகள் நடக்கவும் காரணம் என்று தெரியவந்திருக்கிறது!

      நீங்க பன்னு சாப்பிடும்போது எதுக்கும் தீயணைப்புக் கருவிகளை தயாரா வச்சுக்கோங்க நண்பரே!

      Delete
    8. சந்தோசத்தை பீதியாக மாத்தி விட்டுடீங்களே சார்...
      புனித மனிடோ தான் காப்பத்தணும்😳😀

      Delete
    9. //அதுக்குத்தான் அவரு இந்த பிட்ட போட்டாரு...ஏமாந்ராதிய//
      😁😁😀😀😀

      Delete
    10. //சந்தோசத்தை பீதியாக மாத்தி விட்டுடீங்களே சார்...//

      நண்பரே.. கொரியர் அனுப்பப்படும் பன்னு பாக்கெட்டுகள் கொளுத்தும் வெயிலில் பயணித்து வீடு வந்து சேரும்போது 'வர்க்கி' மாதிரி கெட்டியாக வந்து சேரும். அதுவே கொரியர் ஓரிரு நாட்கள் லேட் ஆகிடும்பட்சத்தில் வர்க்கி தூள்தூளாகி; சம்பா ரவை மாதிரி வந்து சேரும். அதுவொன்றும் பிரச்சினை இல்லை - அந்தத் துகள்களை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது தண்ணீர், சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கி, சில முந்திப் பருப்புகளைத் தூவினால் சுவையான பிரட் அல்வா ரெடி! சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே ஃபேஸ் ஃப்ரெஷ் ஆவது உறுதி!

      இந்த முயற்சியை உங்களது விடுமுறை நாளுக்கு முந்தைய நாள் மாலையில் செய்து பார்ப்பது நல்ல பலனளிக்கும்!!

      Delete
    11. 😅😅😅 அனுபவித்து சொல்றிங்க சார்...
      Nice idea👌👌👌

      Delete
  30. வாழ்த்துகள்.. ஆசிரியர் சார் மற்றும் நண்பர்களே..

    ReplyDelete
  31. வாழ்த்துகள் @JSVP நண்பரே.💐💐💐

    ReplyDelete
    Replies
    1. Thank u so much கோவிந்த ராஜ் sir 🤝, ராஜ சேகரன் sir 🤝, Ravi sir🤝
      🙏🙏🙏

      Delete
  32. சிறப்பான கேப்சனை கேட்ச் செய்த ஜட்ஜம்மாவுக்கும் வாழ்த்துகள்.💐💐💐

    ReplyDelete
  33. பன்போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் jsvpஅவர்களுக்கு வாழ்த்துக்கள் . நடுவராக செயல்பட்ட ஜட்ஜம்மாவிற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பன் போட்டியில் வென்ற நண்பருக்கும்,ஜட்ஜ் அம்மாவுக்கும் வாழ்த்துகள்.....

      Delete
    2. நன்றிகள் ராஜசேகரன் சகோ 💐💐💐

      Delete
    3. நன்றிகள் ரவி சகோ 💐💐💐

      Delete
  34. ஆபுவியை அழகாக நடாத்தி வெற்றிக்கொடி கட்டிய ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.💐💐💐

    ReplyDelete
  35. // ரெண்டு நாட்களுமே நமது ஆபீஸ் போன்களின் கீ-பேட்களும் சரி, கால்குலேட்டர்களின் பட்டன்களும் சரி, சட்னியாகாத குறை தான் ! //
    ஆன்லைன் புத்தக திருவிழாவின் அதிரிபுதிரி வெற்றிக்கு வாழ்த்துகள் சார்...

    ReplyDelete
  36. ஆ.பு.வி புக்ஸ் கடைகளில் கிடைக்குமா சார்...

    ReplyDelete
  37. ஆபுவியை அல்லோகல்லோலப்படுத்திய நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.💐💐💐

    ReplyDelete
  38. அடுத்தநாள் காலையிலும் கூட இதே கார்க் பிரச்சனைதான் .ஆனால் இம்முறை தொண்டை"யில் அல்ல. ஹாஹா.

    ReplyDelete
  39. டேங்கோ முதல் ஆல்பம் தான் Top, First impression made a mark. அதன் சித்திரங்கள் எப்போதும் Top notch.

    Alpha ரோம்ப ஹிஸ்டரி dependent, நிறைய பெயர்கள் ஞயாபகம் வைக்க குஷ்டமா இருக்கு, இருந்தாலும் அந்த Characterisation பிடிக்குது.

    Sisco, action and twist, no mortality, என்ன செய்வார் எது செய்வார் எது செய்யமாட்டார் என்று தெளிவாக இல்லை, so 3rd

    ReplyDelete
  40. Very glad to hear that the May Fair went well sir - the new titles also look to be fast and breezy reads keeping the momentum up with the theme of the year. I was also sure that folks from abroad - especially lovers of classic comics would make use of such opportunities to buy reprint stock. Again glad it worked this well !

    ReplyDelete
  41. பன்போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் jsvp அவர்களுக்கு வாழ்த்துக்கள் .. நடுவராக செயல்பட்ட ஜட்ஜம்மாவிற்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  42. Modesty special would not be out of place sir - but like one book in two years or so.

    We can even try a 007 special with a repeat of popular titles from Rani Comics like Suraa Vettai, Manthira Theevi, Azhagiyaith Thedi, Dr No etc.

    ReplyDelete
  43. Congrats to JSVP and kudos to Ramya!

    ReplyDelete
  44. ஆன்லைன் புத்தக விழாவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சார்.
    இனிவரும் ஆண்டுகளில் மே மாதத்தில் 3 திருவிழாக்கள்.
    முத்து ஆண்டு மலர்.
    கோடை மலர்.
    ஆன்லைன் புத்தக விழா.
    திருவிழாக்கள் களை கட்டட்டும்.

    ReplyDelete
  45. கேப்ஷன் போட்டியில் முதல் பரிசு வென்ற நண்பர் J S V Pஅவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    தேர்ந்தெடுத்த நடுவர்,சகோ ஜட்ஜம்மா கடல் யாழ்அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல பத்மநாபன் ஸார் 🤝🤝🤝🙏

      Delete
    2. நன்றிகள் சகோ 💐💐💐

      Delete
  46. டேங்கோ இரண்டாம் பாகமும் தாண்டியாச்...என். ஞாபகசக்தியில் கொள்ளி வைக்க...இவ்வளோ விசயம் நடந்திருக்கா....ஏதும் நினைவில்லாம நாலாம் பாகத்த ஃபிரஷ்ஷா கடந்திருக்கேன்...படிச்சனான்னும் தெரியல...ஆனா அங்கு நாலாம் பாகத்ல ஏதும் உறுத்தலில்லை...தனியாகவும் படிக்கலாம்....மூன்றாம் பாகம். நள்ளிரவுக்கு துணையிருக்கு இன்று...அட்டகாசமான நண்பர்கள் இருவரும்....ஆனா அர்ஜண்டினாவுக்கு டேங்கோவ கொண்டு போவதிலே குறியாயிருக்கார் நண்பர்...போதைப் பொருள் கலாச்சார பணபரிவர்த்தணைகள இணைக்கும் புள்ளி...ஊழல் அரசியல்வாதிகள் ...என அட்டகாசமான தொடும் வரிகள் நம்ம நாட்டையும் உலுக்க...எங்கே போகிறார்களென சத்தமில்லாம...சலசலக்காம போலீஸ்காரர் போலவே தொடரனும்

    ReplyDelete
  47. இந்த மாத புத்தகங்கள் மூன்றையும் படித்து ஆயிற்று.
    டேங்கோ. தவணையில் ஒரு துரோகம்.
    கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு என்பது போல், கொஞ்சம் அதிரடி கொஞ்சம் வரலாறு என கதை கலந்து கட்டுகிறது.
    விறுவிறுப்பான கதை. சிறப்பான ஓவியங்கள், கலரிங் அருமை.
    நேரம் போனதே தெரியவில்லை.
    டேங்கோ முதலிடம் பிடிக்கிறார்.
    ராபின். தலைவனுக்கு ஒரு தாலாட்டு.
    விறுவிறுப்பான கதை.
    மாபியா கும்பலை FM ரேடியோ மூலமாகவும் அதன் தலைவன் வழி நடத்த முடியும் என்பது புதுமையான பிளாட்.
    ராபின் எப்படி கண்டுபிடிக்கிறார என்பதே கதை .
    ராபின் வழக்கம்போல் அதிரடியாக அசர வைக்கிறார்.
    விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத கதை.
    ராபின் இரண்டாம் இடத்தை தக்க வைக்கிறார்.
    சிக்பில். கடமையை கைவிடேல்.
    சிரிப்பு மேளா.
    கிட் ஆர்டினை வங்கி பாதுகாப்புக்கு நியமித்து வங்கிக் கொள்ளையை தடுக்க முயலும் கதை.
    ஒவ்வொரு முறை கொள்ளை போகும்போது கிட் பல்பு வாங்குவது நம்மை சிரிக்க வைக்கிறது
    உத்தரவாதமான காமெடி மேளா.
    சிக்பில் மூன்றாம் இடம்.
    சிறப்பான கதைத் தேர்வுகளுக்கு பாராட்டுக்கள் சார்.

    ReplyDelete
  48. வெற்றி பெற்ற நண்பர் JSVP க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... இனிய நினைவுகள்...

    ReplyDelete
  49. ஜட்ஜம்மாவுக்கு பணிவான வணக்கங்களும்.. வாழ்த்துகளும்.. இனிய கடமையை செய்தமைக்கு.. மேலும் சிறக்கட்டும் தங்கள் பணி...

    ReplyDelete
  50. ஆன்லைன் புத்தக விழா மகிழ்ச்சிகரமான வெற்றி பெற்றமைக்கு... சந்தோசமான வாழ்த்துக்கள்...

    காமிக்ஸ் விற்பனை ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றியை காணும் போது ஏனோ மனதிற்கு விவரிக்க இயலாத ஒரு ஆனந்தம். இந்த மாதிரி ஒரு மகிழ்ச்சி இப்பொழுது எல்லாம் சொந்த வாழ்க்கையில் மனம் குதுகளிப்பது இல்லை. ஆனால் நமது காமிக்ஸ் அடையும் உயரங்களையும் வெற்றிகளையும் பார்க்கும்போது ஏதோ நானே சாதித்து விட்டது போல ஒரு இறுமாப்பு ... சட்டை காலர் தானாகவே உயர்ந்து நிற்கிறது. எனது பங்களிப்பு ஏதும் இல்லை என்றாலும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பா. நமது எடிட்டர் ஒவ்வொரு முறை இந்த புத்தக விழாவில் நல்ல விற்பனை இருந்தது என்று சொல்லும் போது எல்லாம், நமக்கும் மிகுந்த சந்தோசம் தான்.

      Delete
    2. அருமையான கருத்து ஸார்...
      உண்மை தான்👏👏🤝🤝🤝

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. // நமது எடிட்டர் ஒவ்வொரு முறை இந்த புத்தக விழாவில் நல்ல விற்பனை இருந்தது என்று சொல்லும் போது எல்லாம், நமக்கும் மிகுந்த சந்தோசம் தான். //

      +1 Totally agreed friends

      Delete
  51. Dear edi
    எனது பேஸ்புக் டிபியில் அந்தந்த மாதம் லைன், முத்து காமிக்ஸ் அட்டை படங்களை அப்டேட் செய்வது எனது வழக்கம்,

    அந்த அட்டை படங்களின் மூலம் குவைத்தை சேர்ந்த தமிழ் நண்பர் அறிமுகம் ஆகி இருந்தார் எனக்கு சில மாதங்களுக்கு முன்பு. என்னால் இயன்றவரை காமிக்ஸ் புத்தகங்கள் பற்றியும் அதில் வரும் ஹீரோக்களை பற்றியும் சொல்லி வருவேன் வாட்ஸப் மூலமாக அவருக்கு.

    ஆன்லைன் மேல பற்றியும் அவருக்கு சொல்லி இருந்தேன், எனக்கு அவற்றை வாங்கி தர முடியுமா என்று கேட்டிருந்தார், தற்போது பெரிய ஆஃபரில் உள்ளது கண்டிப்பாக வாங்கி தருகிறேன் என்றேன், நீங்களே புத்தகங்களை தேர்வு செய்து கொடுங்கள் என்றார்.
    Democlas
    Bouncer full set
    60's full set
    Kenya
    Wayne Shelton full set
    Classic tex
    Robin full set
    இன்னும் பல புத்தகங்களை அவருக்கு recommend பண்ண செய்து இருந்தேன். மொத்தம் Rs.5975/- வந்தது.
    நீங்கள் கொடுத்த அத்தனையும் புத்தகத்தையும் வாங்கலாமா என்றார், அத்தனையும் பொறுக்கி எடுத்த முத்துக்கள், வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்ல மொத்தமாக பணத்தை அனுப்பி வைத்துவிட்டார். தற்போது நமக்கு குவைத்தில் ஒரு நண்பர் கிடைத்து விட்டார்.

    எனக்கு இதில் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் ஏடிஜி தற்போது வாங்கிய விலைக்கு (5975/-) 40 புத்தகங்களுக்கு மேல் வந்தால் என்ன செய்வீர்கள். அதற்கு ஈடாக வேறு புத்தகங்களை தருவீர்களா .

    ReplyDelete
    Replies
    1. மிகச் சிறப்பான செயல் நண்பரே!! ஒரு முகநூல் Dp எந்த அளவுக்கு வேலை செய்திருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!
      வாழ்த்துகளும், நன்றிகளும்!!

      Delete
  52. Caption போட்டியை சிறப்பாக திறம்பட செய்துமுடித்த அருமை தங்கை யம்மா கடல் ரம்யாவிற்கு பாராட்டுக்கள்...

    போட்டியில் வென்ற நண்பருக்கும் கலந்து கொண்டு கலக்கியவர்களுக்கும் பாராட்டுக்கள்

    J

    ReplyDelete
  53. //மிதமாய் நகர்ந்துள்ளது சுஸ்கி & விஸ்கி ஹார்ட் கவர் Book # 2.//
    😔😔😔

    ReplyDelete
  54. //இன்னொரு surprise தேர்வு - நம்ம வலைமன்னன் தான் ! நிறைய நண்பர்கள் ஸ்பைடர் இதழ்களை pick செய்துள்ளனர் !! And அந்த புது ஸ்பைடர் + ஆர்ச்சி சாகசம் எப்போதென்று எக்கச்சக்க ஆர்வங்ஸ்கி !!//
    👌👌👌🤩🤩

    ReplyDelete
  55. //நம்ம தானைத் தலைவர் ஸ்பைடரை கம்பியூட்டர் மேக்ஸும், ஆர்ச்சியும் பந்தாடுவதைப் பார்த்து நிறைய பற்கள் நறநறக்கப்படுமென்பது உறுதி !! //
    😱😱😬😬😬😬😬

    ReplyDelete
  56. ////நம்ம தானைத் தலைவர் ஸ்பைடரை கம்பியூட்டர் மேக்ஸும், ஆர்ச்சியும் பந்தாடுவதைப் பார்த்து///

    'அரக்கன் ஆர்டினி'யை விட இந்தக் கதை பயங்கரக் காமெடியாக இருக்கப்போவது உறுதி!

    ReplyDelete
  57. Hi Editor sir! Very happy that Online mela became a huge success. It was well planned and executed. Vazthukkal sir!!!

    ReplyDelete
  58. இளவரசி ஸ்பெஷலை வரவேற்கிறேன்

    ReplyDelete
  59. இளவரசி ஸ்பெசல் .ஸ்பெசல் நன்றிகள் சார்

    ReplyDelete
  60. டேங்கோ. .ஒரு சித்திரக்கதை என்பதையும் மீறி நாவல் போன்ற அளவுக்கு பத்தி பத்தியாக வசனங்கள் வர்ணனைகள் .என்றாலும் படிக்க படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே உள்ளேன்.தவணையில் துரோகம் இந்த ஆண்டின் டாப்10 க்குள் நிச்சயம் இடம் பிடிக்கும் .

    ReplyDelete
  61. Sir - SPIDER classic collection please ! No backlog issues left at all except 2.

    ReplyDelete
    Replies
    1. ஸ்பைடர் க்ளாசிக் கலக்சனுக்கு +1000...

      S70 and S60 ல முத்து ஹீரோஸ் இடம் பெற்றனர்...

      3வது சீசனில் லயன் 1980s Top ஹூரோஸ் ஸ்பைடர், மாடஸ்தி, ஆர்ச்சி...போன்றோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படணும் என்ற கோரிக்கையை பதிவு செய்கிறோம் சார்..

      Delete
    2. இஸ்பைடர் இஸ்பெஷல் வேண்டும்! 5 சூப்பர் ஹிட் காமெடி கதைகள் + சினிஸ்டர் செவன் (அல்லது) புதிய கதை கலரில்!

      கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்!!

      Delete
    3. போட்டு விடுங்க சார்.

      1. பாதாள போராட்டம்
      2. சிறு பிள்ளை விளையாட்டு
      3. நீதிக் காவலன் ஸ்பைடர்
      4. கல் நெஞ்சன்
      5. மிஸ்டர் மர்மம்
      இன்னும் பலப்பல

      Delete
    4. செம லிஸ்டுங்க KS!

      Delete
    5. அப்படியே 'யார் அந்த மினி ஸ்பைடர்'உம்!!

      Delete
    6. ///3வது சீசனில் லயன் 1980s Top ஹூரோஸ் ஸ்பைடர், மாடஸ்தி, ஆர்ச்சி...போன்றோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படணும்///

      I second that sir👍👍👍
      (ஆர்ச்சி மட்டும் கொஞ்சம் doubt, மத்த ரெண்டு பேரும் double ok)

      Delete
    7. கடத்தல் குமிழிகள்ம் சேர்த்து சூப்பர் சிக்ஸ்ஸா ஆகிடாது...

      Delete