Wednesday, February 07, 2024

மார்டினின் பிதாமகர் !

 நண்பர்களே,

வணக்கம். ஒரு sad news !! இத்தாலியின் போனெல்லி குழுமத்தின்  தலைசிறந்த கதாசிரியர்களுள் ஒருவரும், நமது அபிமான மர்ம மனிதன் மார்டினின் பிதாமகருமான திரு.அல்பிரேடோ காஸ்டெலி அவர்கள் இன்று காலை தனது 76 -வது வயதினில் இயற்கை எய்தியுள்ளார் ! 1971 முதலாய் போனெல்லியில் பணிதுவக்கியவர் கடந்த சில நாட்களுக்கு முன்வரையிலும் பிசியாக இருந்து வந்திருக்கிறார் ! எண்ணற்ற கதைகள் ; தொடர்கள் ; கட்டுரைகள் என்று எழுதிக் குவித்துள்ள ஜாம்பவான் ! 

And ஒரு ஆளுமை மிகுந்த பெயராய் மாத்திரமன்றி, இவரை ஓரளவுக்கு நேரிலும் எனக்குப் பரிச்சயம் என்பதால் இந்த இழப்பு கூடுதலாய் நெருடுகிறது ! நேரில் சந்தித்த சமயத்தில் தனது அலுவல் அறைக்கு இட்டுச் சென்று துளி கூட பந்தா இன்றி எனது கேள்விகள் சகலத்துக்கும் பதில் சொன்னார் ! ஒரு நூலகம் பிச்சை எடுக்கணும் - அவரிடம் உள்ள புத்தகத் தொகுப்பின் முன்னே !! திடீரென்று மெயில் போட்டிருந்தார் - "இத்தாலிக்கு மார்ட்டின் புக்ஸ் 5 (மெல்லத் திறந்தது கதவு) அனுப்ப எவ்வளவு ஆகும் ?" என்று வினவி ! நம்மாட்களும் மாமூலான சேகரிப்பாளர் போலும் என்று எண்ணி ஏர்மெயில் கட்டணமெல்லாம் சொல்லி வைக்க, அவர் பணத்தை அனுப்பும் வழிமுறைகளை கேட்டு மின்னஞ்சல் அனுப்பிய போதுதான் என் கண்ணில்பட்டது ! பதறிப் போய் பதிலனுப்பி, புக்ஸையும் அனுப்பியிருந்தோம் ! கடைசியாய் அவரிடமிருந்து வந்த மெயில் அதுவே ! 

எனக்குத் தலையும் புரியாது, வாலும் புரியாது குழப்பிடும் "உலகத்தின் கடைசி நாள்" (டைலன் டாக் + மார்ட்டின் இணைந்த சாகசம்) கதை பற்றி அவரை நேரில் சந்திக்கும் போது விளக்கம் கோரிட எண்ணியிருந்தேன் ; ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றே அவரது கடைசி நாளாகிப் போய்விட்டது !

R.I.P காஸ்டெலி சார் ; காமிக்ஸ் இருக்கும் வரையிலும் உங்களின் கீர்த்தியும்  நிலைத்திடும் ! You will be greatly missed !!


114 comments:

  1. R.I.P காஸ்டெலி சார் ; காமிக்ஸ் இருக்கும் வரையிலும் உங்களின் கீர்த்தியும் நிலைத்திடும் !

    ReplyDelete
  2. வருத்தமான செய்தி! RIP! 💐

    ReplyDelete
  3. RIP திரு.அல்பிரேடோ காஸ்டெலி

    ReplyDelete
  4. ஆழ்ந்த அனுதாபங்கள்.
    இனி மார்ட்டின் கதை படிக்கும் போதெல்லாம் அடுத்து இந்த செய்தியும் ஞாபகம் வரும்.😢🙏

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies

    1. அச்சச்சோ ஆழ்ந்த இரங்கல்கள் சார்...

      Delete
  6. ஆழ்ந்த இரங்கல்கள் சார்..

    ReplyDelete
  7. ஆழ்ந்த இரங்கல்கள்!!

    ReplyDelete
  8. Rip😭 .. அல்பிரடோ காஸ்டெலி Sir..😭😭

    ReplyDelete
  9. ஆழ்ந்த இரங்கல்கள் !

    ReplyDelete
  10. ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  11. ஆல்ப்ரடோ கோஸ்டெலீ ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  12. அப்டீன்னா குலுக்கலு 18 ந் தேதியா சாமீ...

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களின் வருகை / வசதியினைப் பொறுத்து 17 அல்லது 18 சார் !

      Delete
    2. ஆளில்லாம நானா குலுக்கிப்புட்டு, அப்புறமா ஆயுசு முழுக்க மொத்து வாங்க தம்மில்லை !

      Delete
  13. Replies
    1. மார்டினின் பிதாமகர் திரு. அல்பிரேடோ காஸ்டெலியின் ஆன்மா சாந்தியடைய வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏

      Delete
  14. RIP அல்பிரேடோ காஸ்டெலி sir 🙏 அவரையும் அவரது கதைகளையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி விஜயன் சார்.

    ReplyDelete
    Replies
    1. இது நாம் கரம்கோர்த்து இழுக்கும் தேரோட்டம் நண்பரே ; வாசிப்பின் உங்களது பன்முகத்தன்மை எனது தேடல்களுக்கு பெட்ரோல் ஆகின்றது ! So நன்றிகளெல்லாம் அவசியமா - என்ன ?!

      Delete
  15. வருத்தமான செய்தி!

    ReplyDelete
  16. உங்களது ஆன்மா இறைவன் திருவடி
    சேரட்டும்

    ReplyDelete
  17. ஆழ்ந்த இரங்கல்கள் சார்..
    கிராபிக் நாவல்களை படிப்பதைவிட மார்டின் கதைகள்
    படிக்கப் பிடிக்கும்..
    அதிலும், குறிப்பாக வெளி கிரகவாசியின் ஆன்மா புகுந்த (கற்பனையை ) கதையை ரொம்ப ரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. எனது favorites -"கனவின் குழந்தைகள் " & "இனியெல்லாம் மரணமே" சார் ! அவற்றை தமிழாக்கம் செய்த அந்த நாட்கள் இன்னமும் நினைவில் பசுமையாய் உள்ளன !

      Delete
    2. "கனவின் குழந்தைகள் " & "இனியெல்லாம் மரணமே" எனக்கு இந்த இரண்டு கதைகளும் ரொம்ப பிடிக்கும்!

      Delete
  18. வருத்தமான செய்தி...

    ReplyDelete
  19. Martin mystique is one of my favorites. How a person can imagine many mystery ideas. We can see how much research he underwent before writing a single book. In his books there won't be a single needless frame. Tightly knit stories. Thanks for giving us your wonderful ideas as books sir. Thanks editor on finding such a pearl

    ReplyDelete
    Replies
    1. நீங்களெல்லாம் தந்திடும் தைரியம் தான் சார் - மார்ட்டின் போன்றோரை நம் மத்தியில் உலவச் செய்திட்டதன் காரணி !

      Delete
  20. RIP அல்பிரேடோ காஸ்டெலி Sir.
    அவரின் நினைவாக மார்டின் மற்றும் டைலன் டாக் இணைந்த அந்த கதையை மீண்டும் ஒரு முறை முயற்சிக்கலாமா சார்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் ஓய்வாய்....மற்ற பணிகள் நெருக்காததொரு வேளையில் நான் மறுபடியும் முயற்சிக்க வேண்டிய கதைகள் 2 உள்ளன சார் :

      1 .உலகத்தின் கடைசி நாள்
      2 .வைகறைக் கொலைகள்

      இரண்டையுமே எப்பாடு பட்டேனும் கரை சேர்த்திடுவேன் !

      Delete
  21. @ ALL : மார்ட்டின் கதைகளில் 'பளிச்' என்று நினைவில் நிற்கும் கதை எதுவோ நண்பர்களே ? எனது favorites - "கனவின் குழந்தைகள்" & "இனியெல்லாம் மரணமே !"

    இந்தப் புது வரவுகளில் அல்லாது முன்னாட்களின் தேர்வுகளில் best என்று ஒன்றே ஒன்றைச் சொல்வதாயின் - "அமானுஷ்ய அலைவரிசை !" நினைவுள்ளதா ?

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்ன எல்லாமே சூப்பர் சார்....

      அந்த பத்து
      கட்டளைகள் கொண்ட கதை மிரட்டுமே

      Delete
    2. சரித்திரத்தை சாகடிப்போம்

      Delete
    3. எனக்கு இனியெல்லாம் மரணமே ரொம்ப பிடிக்கும்.

      Delete
    4. பழிவாங்கும் ரா

      எனக்கு ரொம்ப பிடிச்ச கதை

      Delete
  22. Replies
    1. என்னை கட்டி போட்ட ஈர்ப்பான கதைக்களங்கள்...யாராலும் நிறைவு செய்ய இயலா மர்மக்கதை மன்னர்...

      பெர்முடா படலத்த சீக்கிரம் காட்டுங்க

      Delete
  23. மார்டினின் பிதாமகருக்கு எங்கள் அஞ்சலி. R I P காஸ்டெலி சார்.

    ReplyDelete
  24. "உலகத்தின் கடைசி நாள்
    2 .வைகறைக் கொலைகள்

    இரண்டையுமே எப்பாடு பட்டேனும் கரை சேர்த்திடுவேன் "
    கரையிலேயே காத்திருக்கிறோம் சார்.

    ReplyDelete
    Replies
    1. அநேகமாய் அதை முடிக்கும் சமயத்தில் மரத்தில் தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டபடிக்கே, நான் குடிச்சிருக்கக்கூடிய பாதி ஆத்துத் தண்ணியை வெளியேற்ற வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன் சார் !

      Delete
    2. தலையால தண்ணி குடிச்சு பார்த்துட்டேன்னு சொல்றது இதைத்தானா சார்?

      Delete
  25. மை ஃபேவரைட் மார்டின் ஸ்டோரி... கட்டத்தில் ஒரு வட்டம்....!

    ReplyDelete
    Replies
    1. It's also to me and iniyellaam maraname.

      Delete
    2. //கட்டத்தில் ஒரு வட்டம்....!//

      சூப்பரா இருக்கும்

      Delete
  26. காமிக்ஸ் எனும் கனவுலகம்

    போட்டி எண் - 21

    விமர்சனம் -2

    லயன் கிராஃபிக் நாவல்

    எல்லாம் கிழமயம்

    மூன்றாம் அத்தியாயம்

    1.
    அந்த கிராமத்தில் ஓர் யுவதி, கிராமத்து திருவிழாவுக்கு செல்ல விரும்பி, தன் காதலனை உடன் வர அழைக்க, அவனும் தயக்கத்துடன் வர சம்மதிக்கிறான்.
    அந்த யுவதியும் பேரானந்தம் கொண்டு, தன்னை அலங்கரித்துக் கொண்டு, அவன் வரவுக்காக காத்திருக்கிறாள் பல மணி நேரமாக.

    2.
    வயல்களுக்கு தெளிக்க படும் பூச்சி கொல்லி மருந்து காரணமாக, தேனிக்கள் பெரும் அளவில் அழியத்தொடங்க,
    " பாதை உண்டு...பார்வை இல்லை"
    என்ற அமைப்பின் தலைவி ஃபிஃபி தனது போராளிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த, அது கலவரமாகி கைது மற்றும் விசாரணைக்கு கொண்டு செல்ல படுகிறார்கள். அதன் தலைவி, மனநலம் பாதிக்கப்பட்டவரா என்று அறிய, கஸ்டடியில் வைக்க படுகிறாள்...

    3.
    கேரன்-செர்வியா கம்பெனி, அதன் விரிவாக்கத்திற்காக மேலும் நிலங்கள் தேவைப்பட, பெர்தா நிலம் தர மறுத்து விடுகிறாள். இதன் விளைவாக அந்த கம்பெனி வேறோரு இடத்திற்கு புலம் பெயர்ந்து விடுகிறது. இதனால் அந்த கிராம மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட, அதனால் அவர்கள் அவளை ஒதுக்கி விடுகிறார்கள்.

    4.
    எர்லோஸ் தனது நண்பன் " லெ பியூஷ்" காண, பல விசயங்களை மறந்தவனாக நீண்ட தொலைவு தேடி வருகிறான்.

    5.
    மில்ஸே, உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வேளையில், அவனது தலையில் ஓர் பல் புதைந்து காணப்பட, ஏதோ போர்களத்தில் அவன் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நண்பர்கள் எண்ணுகிறார்கள்.

    6.
    அந்த கிராமத்து சில போக்கிரி வாண்டுகளால், "கிறுக்கு" என கேலி கூத்தாக்கப்படும்
    அந்த வயதான மூதாட்டி, அவர்களால் பெரும் அவதிக்கு உள்ளாகிறாள்.
    அதோடு,
    அவள் அவளது இளம் வயதில் , ஊரில் இருந்த சந்தையை அவளது டிராக்டரை ஓட்டி துவர்சம் செய்து நாசம் செய்கிறாள்.
    அதோடு அடுத்த நாளே " ரக்பி மேட்ச்" நடக்கும் இடத்தையும் சேதம் செய்து விடுகிறாள் .
    அந்த மேட்ச்சும் கைவிடப்பட்டது .
    இதனால் ஊர் மக்கள் அவள் மீது வன்மம் கொள்கின்றனர்.

    7.
    இந்த அனைத்து கிளைக் கதைகளோடு,
    சோஃபியா மற்றும் பெர்தா இவர்களின் உறவு நிலை மற்றும் அன்பு பரிமாற்றத்தை எடுத்து சென்று, இந்த கதை பயணிக்கிறது.


    மேட்ச் தடை பெற்றதால் ஊரை விட்டு வெளியேறிய மில்ஸே என்னவானான்..?

    "பாதை உண்டு...பார்வை இல்லை"
    இயக்கம் முடக்கப்பட்டதால், போராளிகள் தளர்ந்து போனார்களா...?

    Mr கேரன் செர்வியாவின் வாரிசாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சோஃபியா பெற்றுக் கொண்ட சொத்துக்கள் அனைத்தும் அபகரிக்கப்பட, அவள் என்ன செய்தாள்...?

    ரசிக்க:

    மூன்று வயதான "தேனீக்களை" கண்டு போட்டோ பிடிக்கும் அவனை, "தேனீக்கள்" கொட்டாதகுறையாய் பாய...

    "பெர்தா" மீது "அன்ட்வான்" கொண்டிருக்கும் வன்மம் மற்றும் காழ்ப்புணர்ச்சி.. இருவருக்கும் இடையே நடக்கும் சண்டைகள்...

    சிறுவர்கள் தேடும் "புதையல்",
    யாருக்கானது
    யார் அடைய நினைப்பது
    யாருக்கு தான் அது கிடைக்கப் போகிறது...

    "முட்டை" குறித்து அன்ட்வானுக்கு ஏற்படும் அதிர்ச்சிகள்...

    "லூசெட்" ன் தோழி...?

    "லூசெட்" யாரிடம் முட்டை வாங்கினாள்..?

    இந்த கதை
    நிகழ்ந்ததற்கான தளம்:

    உலக யுத்தத்திற்கு பிறகு,
    வடக்கு நேச நாடுகளை எதிர்த்த ஜெர்மன் நாட்டைச் சார்ந்த
    SS படைப்பிரிவோடு ( டாஸ் ரெய்ச் ) கிராமத்தின் சில குடும்பங்கள் சகஜமாக பழக, ஊர் மக்கள் அந்த குடும்பங்களை ஒதுக்கி வைக்கிறார்கள். அதனால் பாதிக்கப்பட்ட ஓர் சிறுமிக்கு ஏற்படும் பாதிப்புகளால் நகர்கிறது, இந்த கதையின் மையக்கதை.

    நான் ரசித்த காட்சிகள்:

    1. அந்த ஒளியின் வெளிச்சத்தில். இரண்டு வேறு வேறு காட்சிகளின் பின்புலத்தில்.
    பக்கம் 7, ஃபேனல் 6 முதல்,
    பக்கம் 8 ஃபேனல் 3 வரை.

    2. மீண்டும்
    அந்த ஒளியின் வெளிச்சத்தில்.
    பக்கம் 10 ஃபேனல் 3 முதல்,
    பக்கம் 11 ஃபேனல் 6 வரை.

    3. மீண்டும் அந்த வட்ட வெளிச்சம்.
    பக்கம் 13 ஃபேனல் 1 முதல்,
    பக்கம் 14 ஃபேனல் 3 வரை.

    4. "நல்லா இருடா"...
    பக்கம் 15 , முதல் 3 ஃபேனல்கள்.

    5. " ஜெர்மன் பெட்டையும் மூணு தறுதலைகளும் "
    பக்கம் 54, ஃபேனல் 5 மற்றும் 6.

    6.. அந்த "முட்டை" அபிஷேகம்
    ( தாத்தாக்களின் "ஜெர்மானிய முட்டைகள் சதி" )
    பக்கம் 56, ஃபேனல் 6 முதல்,
    பக்கம் 57 ஃபேனல் 8 வரை.


    7. "அந்த தடியனுக்கு மட்டும்
    விதிவிலக்கு ஏனாம் ".
    பக்கம் 58, ஃபேனல் 4 விருந்து 6 வரை.

    8. அந்த "ஃபிளாஷ் பேக் லவ் ஸ்டோரி ".
    இந்த கதையின் அதிர்வுகளுக்கான பின்னனி.

    9. " வாயை மூடிக்கிட்டு, 'கம்'னு உட்கார்ந்து...இல்லிங்காட்டி...கிளம்பி போய்க்கிட்டே இருப்பேன்...
    சோஃபியா-வின் கோபம்.
    பக்கம் 55 , ஃபேனல் 5.

    10. சோஃபியா -வுக்கும்‌ பெர்தாவுக்கும் இடையிலான உரையாடல்.
    பக்கம் 42.
    அனைத்து ஃபேனல்களும்.

    -தொடரும்

    ReplyDelete
    Replies
    1. -தொடர்கிறது

      கதை முழுவதும் வசீகரமான டயலாக் வரிகள் உள்ளன.

      1. சுனாமி எங்கயாச்சும் கண்ணாடி போட்டுகிட்டு தாக்குறதை பாத்திருக்கியா
      2. இந்த ஊர்கார முதேவிகளை பற்றி எனக்கென்ன கவலை
      3. என்னாது?? முட்டை வாங்கினாயா அவகிட்ட..?
      4. ... இந்த ஈட்டியை ஒரே சொருகா சொருகிட்டா...
      5. ஜூலியட் பாப்பாவுக்கு என்ன மாதிரியான...யோசிக்கவாச்சும் செய்றீங்களா...
      6. கோபத்தை நியாயமாய் வெளிப்படுத்த ............. உலகத்துக்குக் காட்டினாலும் தப்பில்லை!

      ... ... ....

      அதோடு,
      கதையில் கவிதைத்துவமான விசயங்களையும், அடாவடியான பல விசயங்களையும் மிகுதியாக காணலாம்.

      நான் வாசித்த நாவல்களில், சமூக சீரழிவுகளை, கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனங்களை நய்யாண்டி மூலமாக ரசிக்கச்செய்து நம்மையும் சிந்திக்க வைத்து விடுகிறார் நாவலின் ஆசிரியர்.

      தனது ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு திறமையாக நகர்த்தி, நம்மை உற்சாகத்தின் உச்சத்திலேயே வைத்திருக்கிறார்.
      கசகச ஓவியங்கள் என்றாலும், பெருசுகள் கதையின் முக்கிய பாத்திரங்கள் என்றாலும், உலகலாவிய கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கி , மனித உணர்வுகளை மெல்லிய கோடாக உட்புகுத்தி நாவலை படிப்போர்க்கு மெய்சிலிர்க்கும் உணர்வை தருகிறார் .

      காமிக்ஸ் ரசிகர்களுக்கு, இந்த நாவல் தொடர் ஓர் "வரப்பிரசாதம்" .

      தி ஹிட் சீரியஸ் வரிசையில் இதுவும் இடம் பிடிக்கக் கூடும்.

      அடுத்த உள்ள 4 அத்தியாயங்களும் ஒரே இதழாக "ஹார்ட்வேர் பைண்டிங்" ல் வந்தால், இதன் ஆசிரியர்களை Lupano (a) Cauuet கௌரவிக்கும்.

      இறுதியாக,
      நான் கொண்டாடுவது,
      65 ம் பக்கத்தில் வரும் 4 மற்றும் 5 ஃபேனல்களைத்தான்.

      சோஃபியா வாழ்த்து சொல்வதும்
      பெர்சா அதை பெற்று கொள்வதும்.

      The end...

      மதிப்பெண் :
      உலகின் தலை சிறந்த படைப்புகளை நீங்கள் எண்களுக்குள் அடக்கி விட முடியாது.

      எழுத்து : புன்னகை ஒளிர்

      ஊர் : மதுரை

      Delete
    2. சுவாரஸ்யமான அலசல் சார் ! ஆனால் பல்லாயிரங்களில் விற்றுக் கொண்டிருக்கும் ஒரு தொடரின் பிஸியான படைப்பாளிகளை, நமது துக்கனூண்டு சர்குலேஷனில் ஒரு தொகுப்பைப் போட்டுத் தான் கவுரவிக்கணும் என்றில்லையே ! ஒண்ணொன்னாய் , நிதானமாய் தா(த்)தாக்களை ஆண்டுக்கொரு தபா வெளியிட்டபடியே நடை போடுவதே நமக்கு சரிப்படும் !

      Delete
    3. புன்னகை ஒளிர் @ ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க! பாராட்டுக்கள்!

      Delete
  27. R.I.P அவரின் நினைவாக 500 ருபாய்க்கு மார்ட்டின் ஸ்பெஷல் வந்தால் நன்று,,,

    ReplyDelete
  28. மார்ட்டின் கதைகளில் எனக்குப் பிடித்தவை. 1.கட்டத்துக்குள். சதுரம். 2 .உண்மையின்உரைகள்

    ReplyDelete
  29. 2 .உண்மையின் உரைக"ல்"

    ReplyDelete
  30. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  31. எனக்கு மாட்டின் கதையில் மிகவும் பிடித்தது பழிவாங்கும் ரா மற்றும் பேழையில் ஓர்வாள் என்று இரண்டு பாகமாக வந்த கதையும்

    ReplyDelete

  32. தென்றல் வந்து என்னைக் கொல்லும்....


    1874-75ல் டெக்ஸாஸ் பகுதியில் நடந்தது ரெட்ரிவர் யுத்தம்... உள்ளூர் ஜனங்களான கமான்சேக்கள், கியோவாக்கள், தெற்கு செயன்னீக்கள் & அரபாஹோ செவ்விந்திய பூர்வகுடிகளை தெற்கு சமவெளி பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் உள்ள ரிசர்வேசன்களுக்கு விரட்டியடிப்பதே நோக்கம்.

    இந்த யுத்தத்தின் ஒரு பகுதியாக அடோப் வால்ஸ் டிரேடிங் போஸ்ட்டில் ஜூன்27, 1874ல் 28 டெக்ஸாஸ் எருது வேட்டையர்களுக்கும் சுமார்700பேர் கொண்ட செவ்விந்திய சிறு படைக்கும் இடையே நடந்த ஜீவ மரண போராட்டமே, இம்மாத லயன் கிராஃபிக் நாவல் வெளியீடு, "தென்றல் வந்து என்னைக் கொல்லும்..!"-இதழின் கதை!

    அன்று நடந்த யுத்தம் அச்சு அசலாக அசாத்தியமான ஓவியங்களில் வசீகரிக்கும் படைப்பாக 3 அத்தியாயங்களில் நம் கண்ணே காட்சிகளாக ஓடுகிறது. கதையோட்டமும் ஓவியமும் ஒன்றோடொன்று போட்டி போட்டு நம்மை பரபரப்பாக நகர்த்துகின்றன.

    ஆசிரியர் விஜயன் சாரின் காம்ரமைஸ் துளியும் இல்லாத வசனங்கள் கதையோட்டத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. ஓவியங்களை காட்சிகளாக நம் முன்னே விரியச்செய்யும் வசீகர மந்திரம் ஆசிரியரின் எழுத்துக்கள் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமே கிடையாது.

    கதையும் ஓவியமும் வசனமும் ஒன்றையொன்று விஞ்சும் காட்சிகள் பல உண்டு....வசனங்கள் நிச்சயமாக வயது வந்தோர்களுக்கு மட்டுமே!

    ஓவியங்கள் கதை நெடுக அசரடித்தாலும் சிலதை மட்டும் குறிப்பிடுகிறேன்...

    #17ம் பக்க அடாப் வால்ஸ் டிரேடிங் போஸ்ட் கழுகு கண் காட்சி..

    #38ம் பக்க சலூன் இரவு துயில் காட்சி

    #47&48 ம் பக்கங்களின் மரண விடியல்...மலையில் இருந்து இறங்கி அணிவகுக்கும் செவ்விந்திய படை...தூரத்தில் மரணத்தை கொண்டுவரும் அதிகாலை டெக்ஸாஸ் சூரியன்.

    #53ம் பக்கத்தின் கோரமுற்றுகை..செவ்விந்திய படைக்கு பின்னால் இருந்து நீளும் காட்சி செமயாக...

    #65ம் பக்க மயான நிசப்தம்....

    #73ம் பக்க கமான்சேக்களின் காட்டுமிராண்டித்தன "சூரிய நடனம்"

    #79ல் அலை அலையாக வரும் கமான்சே படையை உயரத்தில் இருந்து பார்க்கும் ஓல்ட்ஸ் பார்வை..

    #89&89ன் மரண தாண்டவ இரத்தக்களரி

    #105 சலூன் மேலேயிருந்து சுடும் பேட்& நுழைய பார்க்கும் கமான்சேக்கள்.. சான்சேயில்ல செமத்தியான ஓவியம்.

    #150ம் பக்க ஓயிட் ஹாட் ஜாக்கின் தீரமான முடிவு. டெட்வுட்டின் பார்வை சொல்லும் நிதர்சனம், ப்பா!

    #165ல் டெக்ஸாஸின் சிறு நகரம்

    #176-177ல் விலகிச்செல்லும் டெட்வுட்டின் வலி...நம்மையும் கலங்க வைக்கிறது.

    இந்த யுத்தம் எருது வேட்டையையும் செவ்விந்திய நடமாட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, அந்த பகுதியில் இருந்து பூர்வகுடிகளை நிரந்தரமாக வெளியேற்றும் முடிவுக்கு அமெரிக்கர்களை தள்ளுகிறது.

    யுத்தமும் கோரமும் வரலாறு நெடுக மனித மனங்களின் கொடூரத்தை பறைசாற்றியபடி......!!!








    ReplyDelete
  33. இந்த மாதம் முதலில் படித்தது இளவரசியின் சாகஸம் கதை நன்றாக இருந்தது, ஓவியங்கள் அருமை மாடஸ்டியை முட்டாளாக கருதும் கூலிப்படை தோற்று போவதில் ஆச்சரியம் எதுவுமில்லை
    வசனங்களும் மிக அருமை அட்டைப்படம் தூள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க பரணி சகோ 🙂🙂🙂

      Delete
    2. ஆமாங்க பரணி ஃப்ரம் பெங்களூர் சகோ 😋😋😋

      Delete
    3. பரணிஃப்ரம் பெங்களூரு-
      என்ன." அப்படியா"..
      பெங்களூருல போய் ஒளிஞ்சி கிட்டு..
      சேலத்துக்காரங்களே தோத்துட்டாங்க..எங்க இளவரசி கிட்ட..
      அடுத்த கதைல தூத்துக்குடி வில்லன்களாம் என்ன ஆகுறாங்கன்னு பாருங்க..ii.

      Delete
  34. R.I.P காஸ்டெலி சார்!

    my favorites:
    1.பழிவாங்கும் ரா
    2.கனவின் குழந்தைகள்" & "இனியெல்லாம் மரணமே !
    3.சரித்திரத்தை சாகடிப்போம் ..

    ReplyDelete
  35. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. உண்மை. மே ஆன்லைன் புத்தக விழாவை பத்தி கோடி காட்டலேன்னாலும் ஒரு லட்சமோ ஆயிரமோ காட்ட வேண்டிக்கொள்கிறோம்

      Delete
    2. அப்படி இல்லாட்டி MYMOS, சுப்ரீம் 60 ஸ்பெஷல் பற்றிய அறிவிப்பு வேண்டும்.

      Delete
    3. ஸ்பைடர் என்னதான் பன்னிட்டிருக்கிறார்....இன்னுமா சினிஸ்டர்களோட போராடுறார்...சட்டுபுட்டுன்னு முடிச்சிட்டு கதையை சொல்ல வரச்சொல்லி ஸ்பைடர்ட்ட ரசிகர்க சார்பாக கோரிக்கை வைங்க இன்னனய பதிவுலயாச்சும்

      Delete
    4. வரும்லே வரும் சீக்கிரம் வரும் :-)

      Delete
  36. மாடஸ்டி சார்பாக இன்று பதிவுக் கிழமை என்று பதிவு செய்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Salem Kumar சார்பாக இன்று பதிவுக் கிழமை என்று பதிவு செய்கிறேன்😊

      Delete
    2. எனது சார்பாக.....பரணிப்பயலின் சார்பானSalem Kumar சார்பாக இன்று பதிவுக் கிழமை என்று பதிவு செய்கிறேன்😊

      Delete
    3. நன்றி பரணி, நன்றி ஸ்டீல்

      Delete
  37. மாடஸ்டி சார்பாக .தேங்க்ஸ் ஸிஸ்டர்

    ReplyDelete
  38. இன்று பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.

    ReplyDelete
  39. காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் ..
    படிக்கலாம். கொஞ்சம் விறுவிறுப்பாகவே உள்ளது. கதை பிளாட் வலுவாக இல்லை. ஆனால் சித்திரங்கள் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் ரகம். ரகளையான மொழிபெயர்ப்பு. அட்டகாசமான அட்டைப்படங்கள்.

    என் கண்ணில் பிழைகள் தென்படவில்லை.

    ஜெய் ஷீப்காப்ரா.

    ReplyDelete
  40. Dead wood - Rendu aathiyayam mudithu vitten. Semayaga pokuthu

    ReplyDelete
    Replies
    1. மூணாவது அத்தியாயம் எல்லாம் கண்ணுல ஜலம் வந்துடும் பரணி.

      Delete
    2. Yes Kumar. Completed the book now. Excellent story

      Delete

  41. மார்ட்டின் கதைகள் 80-களின் துவக்கத்தில் பசிபிக் பெருங்கடலில் இருந்ததாகச் சொல்லப்பட்ட மியு கண்டம் , அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்ததாகச் சொல்லப்பட்ட அட்லாண்டிஸ் கண்டம் இரண்டுக்குமிடையேயான போராட்டத்தின் பிரதிபலிப்பாக கொண்டு செல்லப்பட்டது.இந்த அடிப்படை கருத்து அப்போதைய அமெரிக்க - ரஷ்ய பனிப்போரின் தாக்கத்தை எதிரொலித்ததால் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

    90- களின் மத்தியில் ரஷ்ய அரசியலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த அடிப்படை கருத்து வரவேற்பிழந்தது .

    ஒரு ஆசானின் இரு பிரதான சீடர்கள் பாதைகளில் மாற்றம் ஏற்பட்டதால் இரு துருவங்களாக மாறினர்.நேர்மறை எண்ணங்களுடன் மார்ட்டின்.
    எதிர்மறை எண்ணங்களுடன்
    செர்ஜே ஓர்ல்ஆஃப்.
    பின்னாளில் மார்ட்டினுக்கு பல எதிரிகள் ஏற்பட்டனர்.
    மென் இன் ப்ளாக் ,ஜின்க்ஸ் உட்பட பல விரோதிகள்.

    பொதுவாக மார்ட்டின் குழுவினர் இந்த உலகில் விசித்திரமான பொருட்கள் , உயிரிகள் போன்றவற்றை இந்த நவீன உலகம் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் பெறும்வரை மறைத்து பாதுகாக்க முயல்வர்

    எதிர்தரப்போ இத்தகையவற்றை, இத்தகையவர்களை அழிக்க முற்படுவர்.உலக வரலாற்றை மாற்றி எழுத முற்படுபவர்கள் மார்ட்டினின் எதிர்தரப்பினர். நாம் கடைசியாக படித்த மார்ட்டின் கதையின் வாயிலாகவும் இதனை அறியலாம்.

    மார்ட்டின் கதைகளில் முன்னர் வந்த ரே கன் மியு கண்டத்தில் இருந்து வந்ததுதான் .

    சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக கோலாச்சி வந்த கேஸ்டெல்லியின் எழுதுகோல் சாய்ந்தது வாசகர்களுக்கு பேரிழப்புதான்.




    ReplyDelete
  42. சார் கள்ளக்குறிச்சி புத்தக கண்காட்சியில் நமது ஸ்டால் உண்டா

    ReplyDelete
  43. சார் பதிவு உண்டுங்களா?

    ReplyDelete
  44. Sir...Appo inimel Martin kathaigal varatha?...or veru writer vaithu thodarvargala?

    ReplyDelete
  45. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  46. நான் முத்து காமிக்ஸ் 1972ல் ஆரம்பத்தில் மூன்று வருடங்கள் விடாமல் படித்திருக்கிறேன். பின்னர் வேலை தேடும் படலத்தில் விட்டு போய் விட்டது. மீண்டும் 2010ல் ஆரம்பித்தேன். இப்போது மீண்டும் இடைவெளி.

    ReplyDelete