Saturday, February 24, 2024

ஜாவாவின் ஜலபுல ஜங்ஸ்..!

 ம்ம்ம்க்ஹ்ஹ்ஹ ,

ர்ர்ஹ்ஹ்ஸ்க்க் ! க்ஹ்ஹ்ர் ...? ப்ஹ்ர் !

என்ன கண்றாவிலே இது - என்கிறீர்களா ? அட, ஒண்ணும் இல்லே மக்கா, ஒரு வாரமா மார்ட்டின் கூட சுற்றித் திரிஞ்சேனா - அவரோட அசிஸ்டண்ட் ஜாவாவின் பாஷை நம்மளையும் தொத்திக்கிச்சு ! So அந்த குகை மனுஷனின் பாணியிலே..."அல்லாரையும் கும்புடறேன் ! நல்லா கீறீங்களா ?"ன்னு தான் கேட்டிருந்தேன் - மேலேயுள்ள பத்தியில் ! 

ஹீரோ மார்ட்டின் மேல பாசம் பீச்சிடலாம் - ஓ.கே. ; ஆனா அதென்ன சைடு பார்ட்டி ஜாவா மேலே திடீர் பாசம் என்கிறீர்களா ? காரணம் இருக்கே ! காத்திருக்கும் மார்ச் வெளியீடான "ஆர்டிக் அசுரன்" இதழில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜாவாவுக்கு முக்கியத்துவம் இருக்கே ! முக்கியத்துவம் மட்டுமில்லே ; முன்னெப்போதும் இல்லாத மாதிரி அவருக்கொரு லவ்ஸ் இருக்கே ! லவ்ஸ் மட்டுமில்லே...அத்தோட சேர்த்து ஒரு 'கபி..கபி'யும் இருக்குதே ! முன்னர் கார்சனுக்கொரு 'கபி கபி' தந்திட படைப்பாளிகள் மனம் இறங்கியது போல் பாவப்பட்ட ஜாவாவுக்கும் ஒரு ஜாலிலோவை இந்த ஆல்பத்தில் தந்துள்ளார்கள் ! பாருங்களேன் folks : 


ஆர்டிக் அசுரன் !

2 ஆண்டுகளுக்கு முன்னமே வெளிவந்திருக்க வேண்டியதொரு சாகசம் ! இதனையும், "வரலாற்றுக்கொரு வாடிவாசல்" ஆல்பத்தினையும் ஒருசேர வாங்கியிருந்தோம் ! And அந்த ஆண்டின் திட்டமிடலில் அசுரனே முதல் இடம் பிடித்திருக்க, கருணையானந்தம் அவர்களிடம் மொழிபெயர்ப்புக்குப் போயிருந்தது ! அவரோ, 'ஒண்ணுமே புரிலேப்பா !' என்று திருப்பி அனுப்பியிருந்தார் ! அந்நேரமோ, எனது மூத்த சகோதரியின் மகனது திருமண வேளை என்பது நினைவில் உள்ளது ! So 'அசுரனை அப்புறமா பார்த்துக்கலாம் மைதீன் ; 'வரலாற்றின் வாடிவாசல்' கதை பாதி எழுதினமட்டுக்கு இருக்கு ....மிச்சத்தை பூர்த்தி செஞ்சு தாரேன் !" என்றபடிக்கே, அந்தக் கப்பலில் ஏறி அந்த ஆண்டின் சவாரியைப் பூர்த்தி செய்திருந்தோம் ! மிகச் சரியாக, 2 ஆண்டுகளுக்குப் பிற்பாடு, எனது இளைய சகோதரியின் மகனது திருமணத் தருணத்தினுள், அசுரனை கரைசேர்க்கும் நேரமும் புலர்ந்திருந்தது செம தற்செயல் ! அதே போல மார்டினின் பிதாமகர் - திரு காஸ்டெல்லினி அவர்கள் இயற்கை எய்திய பொழுதோடு ஒத்துச் செல்லும் விதமாய் இந்த இதழது timing அமைந்ததுமே செம தற்செயல் ! 

ஸ்டீலின் பதிவுகளை / கவிதைகளை  வாசிச்சுக்கிட்டே, இடியாப்பத்தையும், நூடுல்ஸையும் ஒருசேரச் சாப்பிடும் உணர்வினை மார்டினின் கதைகள் விதிவிலக்கின்றித் தரவல்லவை என்பதில் no secrets ! ஆக எப்போது மார்ட்டின் கதைகளைக் கையில் எடுத்தாலுமே லைட்டாய் உதறுவது வாடிக்கை ; and இது "சுத்தமாப் புரிலேப்பா !" என்ற கமெண்ட் சகிதம் திரும்பி வந்த சாகசமெனும் போது உதறல் ஒரு மிடறு ஜாஸ்தியாகவே இருந்தது ! And இங்கு இன்னொரு பொதுவான விஷயமுமே ! இன்டர்நெட்டுக்கு முந்தைய காலகட்டங்களில், இது போன்ற நேர்கோடல்லாத கதைகள் புரியுதோ-புரியலியோ, மேம்போக்காய் பூசி மெழுகியிருந்திருப்போம் தான் ! ஆனால் இணையத்தில் தேடல்கள் சாத்தியமென்றான பிற்பாடு ஒவ்வொரு non-linear சாகசத்தினுள்ளும் வண்டி வண்டியாய் பின்னணித் தகவல்களைத் திரட்டிடல் அவசியமென்றாகி விட்டுள்ளது ! XIII தொடரில் ; டெட்வுட் டிக்கில் ; தாத்தாக்கள் கதைகளில் ; மார்ட்டின் ஆல்பங்களில் ; அட, டைகர் ஆல்பங்களில் கூட கூகுளாண்டவர் நமக்கு அருளியுள்ள விபரங்கள் ஒரு வண்டி !! And "ஆர்டிக் அசுரன்" அதற்கொரு பிரதம உதாரணம் ! கதைக்களமோ நடுக்கும் வட துருவம் ; கதைக்காலமோ 1850 ! கதைமாந்தர்களோ இன்யுவெட் எனப்படும் ஆர்டிக் வாழ் மக்களும், பிரிட்டிஷ் மாலுமிகளும், அப்புறம்...அப்புறம் சில பல அசுர ஜென்மங்களுமே ! So எங்கோ ஒரு தமிழக மூலையில் குந்திக் கிடக்கும் நமக்கு, 175 ஆண்டுகளுக்கு முன்பான இந்த  அந்நிய களம் பற்றிய பரிச்சயம் பூஜ்யமாகத் தானே இருக்கக்கூடும் ?! அந்தப் பூஜ்யத்தினில் துவக்கினேன் பேனா பிடிக்கும் படலத்தினை ! துவக்கம் என்னவோ சமகால நியூயார்க்கில் ரொம்பவே அழகான சித்திரபாணியில் இருந்திட, உற்சாகமாய் வண்டி ஸ்டார்ட் ஆனது ! ஆனால் கண்ணிமைக்கும் நொடிக்குள் கதாசிரியர் ஒரு யு-டர்ன் போட்டு நேரா ஒரு ஆர்டிக் புளியமரமாய்ப் பார்த்து வண்டியை அதன் மேலேற்றி....அதன் பின்னே மரத்துக்கு மரம் கப்பலில் டிராவல் என்று சொல்லாத குறையாய் ஏதேதோ அதிரடிகளை இறக்க ஆரம்பிக்க, அப்போது ஓபன் பண்ணினேன் கூகுள் டியூஷனை ! கழுத, பல்போகும் வயசிலே இன்றைக்குச் செய்திடும் ஆய்வுகளையும், எழுதிடும் டன் டன்னான பக்கங்களையும் நான் படிக்கிற வயசிலேயே செஞ்சிருந்தால், நிச்சயமா ஏதாச்சும் மெடல்-கிடலாச்சும் வாங்கியிருக்கலாம் போல - அம்புட்டுத் தேடல்கள் இப்போதெல்லாம் அவசியமாகின்றன ! நிஜ சம்பவங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும், துளியூண்டு அமானுஷ்யம் கலந்து கட்டி கதாசிரியர் பரிமாறியிருக்கும் இந்த விருந்தில் கூகுள் துணையின்றிப் புகுந்திருந்த கருணையானந்தம் அங்கிள்  திகைத்துப் போயிருந்ததில் வியப்பே இல்லை தான் என்பது புரிந்தது ! எங்கே நிஜம் முடிகிறது ? எங்கே கற்பனை சிறகு விரிக்கிறது ? வாய்க்குள் நுழையவே செய்யாத பெயர்களின் உச்சரிப்பென்ன ? பழம் கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் திகிலான ஜென்மங்களின் பின்னணி தான் என்ன ? என்று தேடித்தேடி எழுத வேண்டிப் போனது ! And கதை நிகழ்ந்திடும் 175 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்திலேயே ஒரு side track-ல் வைக்கிங்குகளின் வருகை ; அவர்களோடு ஒரு மினி பயணம் ; பச்சக்கென்று 'கட்' பண்ணி நிகழ்கால வடதுருவம் ; சச்சக்கென்று இன்னொரு 'கட்' பண்ணி சமகால நியூயார்க் ; இவற்றினூடே கதாசிரியரின் சில தார்மீக உணர்வுடனான கேள்விகள் - என்று தெறிக்கத் தெறிக்க  டிராவல் செய்கிறது இந்த 80 பக்க ஆல்பம் !  இதன் மத்தியில் நம்ம ஜாவாவின் ஜலபுல ஜங்ஸ் வேறு ! Phew ....!! டெக்ஸ் வில்லரின் கதைகள் 220 பக்கங்கள் கொண்டவை ; ஆனால் டிக்கியை இருத்தி எழுத ஆரம்பித்தால் கைவிரல்கள் நோவுமே தவிர்த்து, மண்டையைப் பிய்க்க அவசியமாகிடாது ! ஆனால் அதில் மூன்றிலொரு பங்குப் பக்கங்களே கொண்டிருந்தாலும், மார்டினை கரைசேர்ப்பதற்குள் தலைக்கு ரெண்டுவாட்டி டை அடிக்க வேண்டிப்போகும் போலும் !! சகலத்தையும் முடித்து இன்று மார்ட்டின் பிரிண்ட் ஆகியிருப்பதைப் பார்த்த போது மனசுக்குள் ஒரு இனம்புரியா சந்தோஷம் நிலவியதை மறுக்க மாட்டேன் ! 

ஆர்டிக் அசுரன் - ஒரு மறக்கவியலா டெரர் பயணம் !! பாருங்களேன் - இந்த இன்னொரு பக்க ப்ரீவியூவையும் :

மார்ச்சின் வாசிப்பில் இது முதலிடம் பிடித்தால் நான் வியப்படையவே மாட்டேன் தான் ! 

Moving on, இதோ - மார்ச்சின் நமது தலைமகன் !! நிஜத்தைச் சொல்வதானால் இந்த 2024 புலர்ந்தது முதலாய் முதல் 2 மாதங்களிலுமே நம்மவர் முதலிடத்தில் நிற்கவில்லை என்பதே நிஜம் ! ஜனவரியை டின்டினின் அதகள அறிமுகமும், லார்கோவின் பரபர மீள்வருகையும் ஆக்கிரமத்திருந்தன ! பிப்ரவரியின் ஒளிவட்டத்தை டெட்வுட் டிக்கும் ; இளவரசியும் பகிர்ந்திருந்தனர் ! So இந்த மார்ச் மாதத்திலும் தல ஒரு tough போட்டி சந்திக்கவிருக்கிறார் - சக இத்தாலிய ; சக போனெல்லி நாயகர்களின் ரூபத்தில் ! பார்க்கலாமே - இம்முறை நிலவரம் என்னவென்று ! இதோ - ஒரிஜினல் ராப்பருடன் டெக்ஸ் & கார்சனின் "புயலுக்குப் பின்னே பிரளயம்" சார்ந்த preview : 

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னே வெளியான "ஒரு மௌன நகரம்" கதையினை நினைவூட்டும் template இங்கும் ! ஆனால் கதை பயணிப்பதோ வேறொரு ரூட்டில் ! இந்த ஆல்பம் 2 மாதங்களுக்கு முன்னே வெளியாகியிருந்தால், வெள்ளக்காடாய் மிதந்து கொண்டிருந்த நம்மூர்களின் நிலையினைப் பிரதிபலித்தது போலிருந்திருக்கும் - becos கதை ஆரம்பிக்கும் போதே நமது ரேஞ்சர்கள் அறிமுகமாவது குதிரைகளின் மீதமர்ந்தல்ல !! மாறாக - 'ஏலேலோ ஐலசா..' என்று துடுப்புப் போட்டபடியே ஊருக்குள் நுழைகிறார்கள் ! And வெள்ளத்தில் அடித்து வரப்படும் ஒரு இளம் பெண்ணின் சடலம் அவர்களை வழிமறிக்கிறது ! யாரந்த மங்கை ? அவளைக் கொலை செய்த கொடூரன் யார் ? கொலைக்கான முகாந்திரமென்ன ? என்று தேடலை ஆரம்பிக்கிறார்கள் டெக்ஸ் & கார்சன் ! Yet another வித்தியாசமான ஓவிய பாணியில் - சிம்பிளாய், அழகாய் நமது ஆதர்ஷ நாயகர்கள் பவனி வருகிறார்கள் ! பாருங்களேன் ! 

இந்த மார்ச்சில் காத்துள்ள 3 இதழ்களுமே black & white தான் ; மூன்றுமே போனெல்லியின் நாயகர்கள் தான் (டெக்ஸ் ; மார்ட்டின் & மிஸ்டர் நோ) & மூன்றுமே செம crisp வாசிப்புகளே ! So பரணில் சாத்திப் போடும் படலங்களுக்கு இம்முறையுமே அவசியமிராதென்று தோன்றுகிறது ! Fingers crossed ! 

இந்த நொடியில் எனது கேள்வி இது தான் : இந்த மார்ச்சில் உங்களது முதல் வாசிப்புத் தேர்வு எந்த இதழாக இருக்குமோ guys ?

And கேள்வி # 2 : பிப்ரவரியின் மூன்று இதழ்களுக்கான உங்களின் ரேங்க் எவ்விதம் இருக்கும் ? (மாடஸ்டி ; டெட்வுட் டிக் & டெக்ஸ்) 

கலர் மேளா ஏப்ரல் முதலாய் தோரணம் கட்டத் தயாராகி வருகிறது ! And அதற்கொரு முன்னோடியாய் பெளன்சர் மறுக்கா ஆஜராகிறார் ஏப்ரலில் ! தெறிக்கும் கோடை மலர் guys ! மீண்டும் சந்திப்போம் ! Bye for now ...have a lovely weekend all ! 

237 comments:

  1. டெக்ஸ் அட்டைப்படம் வழக்கம்போல உள்ளது.
    ஆனா மார்ட்டின் அட்டைப்படம் கலரே அள்ளுகிறது.
    Different colour 🥰❤️

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. February

    1.Deadwood
    2. Tex
    3. Modesty

    March
    1. Tex
    2. No
    3. Martin

    ReplyDelete
  4. சீக்கிரமே....:-)

    நன்றி சார்...!

    ReplyDelete
  5. பிப்ரவரியில் முதலில் படித்ததென்னவோ மாடஸ்டியும், டெக்ஸ்ம், அடுத்து
    டெட்டிவுட் டிக் தான்,
    ஆனா மனத்தை விட்டு அகலாதது "டெட்டிவுட் டிக்" தான். அதிலும் அந்த க்ளைமாக்ஸ் 25 பக்கம் நெகிழச் செய்து விட்டது.
    காமிக்ஸ் கதையில் மனதை கொஞ்சம் அசைத்து பார்த்தது இந்த கதைதான்.

    மார்ச்சில் முதலில் படிக்க நினைப்பது மார்ட்டின் தான். "மீண்டும் ஒரு அசுரன்" க்கு பின் மார்ட்டின் கதைகளை மிகவும் எதிர்பாக்கிறேன். அடுத்தது என்ன என யூகிக்க முடியாத ஒரு பரபரப்பு மார்ட்டின் கதைகளில் உள்ளது. ஆர்டிக் அசுரனும் அதற்கு விதிவிலக்கல்ல என தங்களது பதிவு சொல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ////ஆனா மனத்தை விட்டு அகலாதது "டெட்டிவுட் டிக்" தான். அதிலும் அந்த க்ளைமாக்ஸ் 25 பக்கம் நெகிழச் செய்து விட்டது.
      காமிக்ஸ் கதையில் மனதை கொஞ்சம் அசைத்து பார்த்தது இந்த கதைதான்.///

      உண்மை உண்மை!

      Delete
  6. மார்ட்டின் இதழின் சித்திரங்கள் செம செம செம சிறப்பு ...சித்திரங்கள் அவ்வளவு அழகு சார்...சித்தரங்களை கண்டாலே அதைதான் முதலில் படிக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறது...

    ReplyDelete
  7. அரக்கன் ஆர்டினி,
    இதுவரை வாசிக்காத கதை,ஸ்பைடரை இந்தக் கதையில் வருவதைப்போல வேறெந்த கதையிலும் பங்கம் செய்து பார்த்ததாய் நினைவில்லை...
    அடிச்சான் பாரு அப்பாயிண்மெண்ட் ஆர்டரை சொல்ற மாதிரி,கடைசியா வெச்சாங்க பாரு ட்விஸ்டு...
    ஆனாலும் மரண பல்ப் வாங்கிட்டிங்களே ஸ்பைடர் அண்ணே...
    ஸ்பைடரின் ஈகோவும்,ஆர்டினியின் இரகளையும்,புரபஸர் பெல்ஹாமின் சலம்பலுமாய் ஒரு பக்கம் கலந்து அடிக்க,மறுப்பக்கம் அப்பல்லோ கும்பல்,புஷ்ஹவுஸ் கும்பல்,கொடுங்கோலன் ஸ்கேலஞ்சர்னு கும்பலா வந்து ஸ்பைடரை வரிசைக் கட்டி அடிக்கறாங்க...
    வாசிப்பில் கொஞ்சம் வியப்பு,கொஞ்சம் சிரிப்புன்னு கலந்து கட்டிய உணர்வுகள்...
    கதைக் களத்தில் வரும் இயந்திர அமைப்புகளையும்,அறிவியல் கற்பனைகளையும் பார்த்தால் கதாசிரியரின் கற்பனைத் திறனை வியக்காமல் இருக்க முடியவில்லை...
    இதெல்லாம் சாத்தியமா எனும் கேள்வியை ஓரம்கட்டி விட்டால் அரக்கன் ஆர்டினியின் அட்டகாசத்தை இரசிக்கலாம்...

    ReplyDelete
  8. நேபாள சுற்றுலா பரிசு வென்ற நண்பர் பல்லடம் சரவணக்குமார் அவர்களுக்கு தாமதமான வாழ்த்துக்கள்...கலக்குங்கள் நண்பரே....

    ReplyDelete
  9. காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்...
    எல் மோரிஸ்கோ வந்தாலே கதை தானா தீப்பிடிச்சிக்குது,
    ஷுப்காப்ராவின் வருகை முதுகுத்தண்டை சில்லிடத்தான் செய்கிறது,மரண முள்ளில் கிடைத்த திடுக் உணர்வு மீண்டும் ரிபீட்டு...
    அறிவியல்,அமானுஷ்யம்,த்ரில்,
    ஆக்‌ஷன் என கலந்து கட்டிய அசத்தல் காம்போ காட்டேரியின் சாம்ராஜ்யம்...
    இயற்கைக்கு முரணான ஆராய்ச்சியின் விளைவு எப்போதும் விபரீதமாகவே அமையும்...
    மரண முள்ளின் இறுதியில் மோரிஸ்கோவின் ஆராய்ச்சிக்கு எந்த முள்ளையும் விட்டு வைக்காமல் அழித்தொழித்து டிமிக்கி கொடுப்பார் டெக்ஸ்,ஷுப்காப்ராவை முழுமையாக அழித்தொழித்து அதே டிமிக்கியை மோரிஸ்கோவிற்கு இதிலும் கொடுக்கிறார் டெக்ஸ்...
    மோரிஸ்கோவின் மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்-"அடுத்த சாகஸத்திலாவது ஆராய்ச்சிக்கு எதையாவது விட்டுவைங்கய்யா"...
    ஹி,ஹி,ஹி...

    ReplyDelete
    Replies

    1. ///அடுத்த சாகஸத்திலாவது ஆராய்ச்சிக்கு எதையாவது விட்டுவைங்கய்யா///

      😂😂😂

      Delete
  10. பிப்ரவரி இதழின் தேர்வுகள் டெட்வுட் ..,டெக்ஸ்...,மாடஸ்தி..

    ReplyDelete
  11. டெட்வுட் டிக்...
    ராவான ரகளை...
    வறட்சியான களமும்,மிரட்சியான காட்சியமைப்புகளுமாய் மிரட்டும் கதையமைப்பு...
    டிக் & ஜாக்கின் நட்பு,டிக் & மில்லீயின் கிளர்ச்சியூட்டும் காதல்,டிக் & நாலுகால் சாத்தானுடனான பிணைப்புன்னு சொல்ல நிறைய இருக்கு...
    டிக் எதார்த்தங்களுக்கு நெருக்கமானவன்...

    ReplyDelete
  12. மார்ச் இதழ் கைகளுக்கு கிடைத்தவுடன் அப்பொழுதையை மனநிலையை பொறுத்துதான் சார்...

    ReplyDelete
  13. ஒரு பண்டமாற்றுப் படலம்,
    வழக்கமான மாடஸ்டி & கார்வினின் அபாரமான கெமிஸ்ட்ரி கதையை போரடிக்காமல் நகர்த்திச் செல்கிறது...
    ஜேஸன் & கரோல் ஜோடியும் கலக்குகிறது...
    மாடஸ்டி & கார்வின் ஜோடியின் உத்திகள் அதிரிபுதிரி, கதையின் வேகத்திற்கு கூடுதல் வலுவூட்டுகிறது...

    ReplyDelete

  14. *****மார்ச்சில் உங்களது முதல் வாசிப்புத் தேர்வு எந்த இதழாக இருக்குமோ guys ?*****

    1)மார்டின்
    2)டெக்ஸ்
    3) மிஸ்டர் நோ

    ReplyDelete
  15. 1. டெக்ஸ்
    2. மிஸ்டர் நோ
    3. மார்ட்டின்

    இதான் என்னோட வரிசையாக இருக்கும்.

    ReplyDelete
  16. // மார்ச்சின் வாசிப்பில் இது முதலிடம் பிடித்தால் நான் வியப்படையவே மாட்டேன் தான் ! //
    ஆர்டிக் அசுரன் அசுரத்தனமா வேலை வாங்கிட்டான் போல சார்...

    ReplyDelete
  17. February list

    டெக்ஸ்
    டெட்வுட் டிக்
    மாடஸ்டி

    ReplyDelete
  18. மார்ச் டெக்ஸ் ஓவியங்கள் பட்டாசா இருக்கும் போலவே...

    ReplyDelete
  19. // இந்த மார்ச்சில் காத்துள்ள 3 இதழ்களுமே black & white தான் ; //
    பிப்ரவரியில் மார்ச்சுங்களா ?! மார்ச்சில் மார்ச்சுங்களா சார் ?!

    ReplyDelete
  20. // கேள்வி # 2 : பிப்ரவரியின் மூன்று இதழ்களுக்கான உங்களின் ரேங்க் எவ்விதம் இருக்கும் ? //
    1.டெட்வுட் டிக்,
    2.டெக்ஸ்,
    3.மாடஸ்டி.

    ReplyDelete
    Replies
    1. எனது வரிசையும் இதுவே
      1.டெட்வுட் டிக்,
      2.டெக்ஸ்,
      3.மாடஸ்டி.

      Delete
    2. டெக்ஸ் அண்ணாத்தே கொஞ்சம் ஓரங்கட்டுங்கன்னு டிக் சொல்லிட்டாரோ...

      Delete
    3. என்னப்பா மாடஸ்தியை கடைசியில தள்ளட்டீங்க.....???

      Delete
  21. // இந்த மார்ச்சில் உங்களது முதல் வாசிப்புத் தேர்வு எந்த இதழாக இருக்குமோ guys ? //
    1.மார்ட்டின்,
    2.டெக்ஸ்,
    3.மிஸ்டர் நோ...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு முதலில் V காமிக்ஸ்
      1. மிஸ்டர் நோ
      2. மார்ட்டின்
      3. டெக்ஸ்

      Delete
  22. // And அதற்கொரு முன்னோடியாய் பெளன்சர் மறுக்கா ஆஜராகிறார் ஏப்ரலில் ! தெறிக்கும் கோடை மலர் guys //
    சாபம் சுமந்த தங்கம் கோடை மலராய் ஜொலிக்க போகிறதா சார்...

    ReplyDelete
  23. பிப்ரவரியில் முதலிடம் இளவரசி இரண்டாம் இடம் டெட் வுட் டிக் மூன்றாம் இடம் டெக்ஸ். மார்ச் வாசிப்பு முதலில் டெக்ஸ் வ இரண்டாவது மார்ட்டின் மூன்றாவது மிஸ்டர் நோ.

    ReplyDelete
    Replies
    1. ராஜசேகர் சார்,நினைச்சேன்,ஹி,ஹி,ஹி...

      Delete
    2. வாசிப்பிடம் முதலில் மாடஸ்திதாங்க.. ரேங்???

      Delete
    3. ராஜசேகர் சார், ,ஹி,ஹி,ஹி...

      Delete
  24. பிப்ரவரி
    1) மாடஸ்டி
    2) டெக்ஸ்
    டெட்வுட் டிக் இன்னும் படிக்கவில்லை, ஆசிரியரே

    மார்ச் இதழ்கள் சாய்ஸ்
    1) மிஸ்டர் நோ
    2) டெக்ஸ்
    3) மார்டின்

    ReplyDelete
  25. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. பிப்ரவரி
      1. டெட்வுட் டிக்
      2. டெக்ஸ் & மோரிஸ்கோ
      3. மாடஸ்தி

      Delete
  26. பிப்ரவரி இதழ்கள்..
    1. மாடஸ்தி & கார்வின்
    2. டெட் வுட் டிக்
    3. கிட் கார்சன்..

    ReplyDelete
    Replies
    1. அம்புட்டு மருவாதி - தல பெயரை சொல்ல கூட பயப்படுற அளவுக்கு !

      Delete
    2. கிட்ட கார்சன்னு சொல்ல வராது...கார்சன் கிட்ட ...இருப்பவர்னு சொல்ல கூட பயத்த வார்த்தை இடம் மாறி ...எழுத்து மாறி

      Delete
  27. மார்டினின் அட்டைப்படம் சூப்பராக உள்ளது
    பின்ட்டையிலுள்ள படங்கள் கொஞ்ணம் டெரர் கண்பிக்கின்றன

    டெக்ஸ் அட்டைப்படம் பார்க்க சாதாரணமா தெரிந்தாலும் கதை பேசுகின்றன, ஆழமாக

    ReplyDelete
  28. 1.டெட் வுட் டிக்- இரண்டு முறை படித்து முடித்தாயிற்று.சரவெடி💥💥💥💥
    2.மாடஸ்டி- இளவரசி always ultimate.💥💥💥
    3.டெக்ஸ்- ok.ok. அமானுஷ்யம் இல்லாமல்
    மோரிஸ்கோ எதற்கு என்று தெரியவில்லை.👻👻👻


    ReplyDelete
  29. காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்
    அட்டைப்படம் செம்ம

    மோரிஸ்கோவுடன் ஆரம்பிக்கும் கதை ஆர்வப்படுத்துகிறது.

    மோரிஸ்கோ ஷுப்காப்ராவை தேடி புறப்படுகிறார்
    டெக்ஸ், கார்ஸன், கிட், டைகர் ஜாக் ஆகிய நால்வரும் மடேரா என்னும் கொள்ளைக்காரனை தேடி செல்கின்றனர்
    இதற்கிடையில் ஒரு குழு பார்க்க செல்வந்தர்களாக தெரிய மேட்டு பாறைகளை நோக்கி பயணம் செல்ல, இவர்களை குறி வைத்து மடேரா இவர்களின் நோக்கம் என்ன, வேட்டையாடவோ, அன்வெட்ஞ்சர் போறவங்க மாதிரி தெரியவில்லை


    ஷுப்காப்ரா வாங்க வாங்க எங்களுக்கு நல்ல வேட்டை சொல்லிட்டு வேட்டையாடுதுங்க, ஸ்ரெட்டா கழுத்துக்கு தான் குறி

    இவர்கள் அனைவரும் சந்தித்து கொண்டார்களா, ஷுப்காப்ரா வேட்டையாடியது போக மீதம் எத்தனை நபர்கள் தப்பித்து வந்தனர் என்பது கதை

    நன்றாக விறுவிறுப்பாக இருந்தது,
    ஓவியங்கள் அருமை, கண்களின் தெரியும் உணர்ச்சிகள் அருமையாக வெளிப்படுத்தபட்டிருந்தது. ஷுப்காப்ரா நன்றாக வரைந்திருக்க ஓவியர். மேட்டு பாறைகள் சூப்பரா வரைந்துள்ளார், டமைமோவின் ஆராய்ச்சி கூடம் ஒருப்படி மேலே

    டெக்ஸ் பற்றி சிலாகித்து ஆகனும்
    ஷுப்காப்ராவின் வசிப்படத்தில் இருக்கும் வளாகத்தில் அந்த பக்கம் இன்னும் இருக்கா என்று பார்த்து விட்டு வருகிறேன் என்றி கிட்டுடன் போவார் பாருங்க, செம தில்லுங்க

    அங்கு இருப்பவர்கள் எல்லாருமெ தைரியசாலிகள் தான்
    முக்கியமா நால்வர் அணி
    ஆனால் டெக்ஸ்க்கு இருக்கிற தில்லு வேற லெவல்
    திடீர் திடீரென்று எங்கோ எங்கோ இருந்து வருதுங்க, இவரு அதுங்க இடத்தில உள்ள நுழைந்து தேடறாரு பாருங்க
    பத்து பதினைந்து இருந்தால் என்ன பண்ணுவார் பயம் எனக்கு, இதோ செக் பண்ணி பார்த்து வந்துடுறேன் போறாரு

    சிறுவயதில் இவர் மீது ஈர்ப்பு ஏற்பட காரணம் அவருகிட்ட இருக்கிற இந்த பயமில்லாத இந்த தில்லுதான்

    மோரிஸ்கோவிற்கு ஆராய்ச்சி செய்ய கொஞ்சம் கூட எதுவும் கிடைக்கவில்லை, அதில் அவருக்கு மட்டுமில்லை எனக்குமே வருத்தம்தான்
    முக்கியமா அதன் எலும்பு கூடுகளில் அப்படி என்ன சக்தி என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தது
    Between Danger Situation and Curisosity
    Morisco dares to chose curiosiry

    139 ஆம் பக்கத்தில் மோரிஸ்கோ ஒரு பேணலில் அந்த இருட்டில் முகத்தை வைத்து கொண்டு ஷுப்காப்ராக்கள் தானே சொல்லும் போது, பயமுறுத்துகிறார்

    யூசோப்பிய ஏற்படும் முன்னெச்சரிகை உணர்வுகளை யாரும் கேட்க மாட்டேகிறாங்க. இதிலும் அவர் சரியா சொல்கிறார்
    டெக்ஸ் கூட இருந்தாலும் நீ புலம்பவதை நிறுத்த போவத்தில்லைனு மோரிஸ்கோ யூசோபியாவை கலாய்க்கும் போது அவர்களிடையே உள்ள புரிதல் தெரிகிறது
    எவ்வளவு பயமிருந்தாலும் மாஸ்டரின் உயிரை தன் பிரதனமாக கருதும் யூசோபியா

    மெஸ்கலெரோக்கள், இரத்த கோட்டையிலும் இவர்கள் தான் பிரச்சினை பண்ணுவார்கள்

    டெக்ஸ் இரண்டு இடங்களில் தேவையான நேரங்களில் என்ட்ரி குடுத்து மனக்கலக்கத்தை போக்கினார்
    ஹீவெட் குழு மடேரா கும்பலிடம் மாட்டி கொள்ளும் போது மற்றும் மோரிஸ்கோ குழு ஷுப்காப்ராக்களிடம் மாட்டி கொள்ளிம் சூழ்நிலையிலும்

    நண்பர்களுக்காக ஷுப்காப்ராவை எதிர்த்து போராடும் மார்ட்டினோவையும் நாச்சோவையும் பாராட்டிட வேண்டும்

    அதிகார ஆத்திர புத்தி கொண்ட மடேராவுக்கு புத்திசாலினம் போதாது

    ஷுப்காப்ராக்கள் கொஞ்சம் பயமுறுத்தான் செய்தன
    அவைகள் அதே இடத்துக்கு ஏன் திரும்பி வருகின்றன என்ற கேள்விக்கு பதஅல் கிடைக்கவில்லை
    மோரிஸ்கோவிற்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நமக்கும் தெரிய வாய்ப்பிருந்திருக்கலாம்😞😞😞

    ReplyDelete
    Replies
    1. இந்த புக் எனக்கு ஸ்பெசல்
      முதன் முறையாக என்னுடைய எழுத்துகள் இடம் பெற்றுள்ளன, அதுவும் டின்டின் பத்தி எழுதனது😊😊😊😊😊

      நன்றி ஆசிரியரே

      Delete
    2. // அவைகள் அதே இடத்துக்கு ஏன் திரும்பி வருகின்றன//
      எங்கே சுற்றினாலும் அவை தோன்றிய இடத்திலேயே மீண்டும் வந்து இணைந்து கொள்ளும் ஏதோ ஒரு மாய சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்பதாய் மோரிஸ்கோ சொல்கிறார்...
      பொதுவாய் உயிரினங்கள் தோன்றிய இடத்திலேயே வசிப்பது இயல்புதானே,அது அரூப இணைப்பு என்று நான் நினைக்கிறேன்...

      Delete
    3. //அவைகள் அதே இடத்துக்கு ஏன் திரும்பி வருகின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை//

      வீட்டுக்கு திரும்பி வந்தால் வீட்டுக்காரம்மா இருப்பாங்கன்னு தெரிஞ்சும் கணவன்மார்கள் வீட்டுக்கு வராங்க பாருங்க ! அது மாதிரித்தான்.destiny bound.
      :-)

      Delete
    4. //எங்கே சுற்றினாலும் அவை தோன்றிய இடத்திலேயே மீண்டும் வந்து இணைந்து கொள்ளும் ஏதோ ஒரு மாய சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்பதாய் மோரிஸ்கோ சொல்கிறார்...//
      உணவு பற்றாக்குறை ஏற்படும் போது வேறு இடம் புலம் பெயராமல் அவைகளை கட்டுபடுத்தி இருக்கும்
      அந்த மாய சக்தி என்னவாக இருக்கும்

      //அது அரூப இணைப்பு என்று நான் நினைக்கிறேன்//

      இருக்கலாம் சகோ

      Delete
    5. அட்டகாசம் கடல் சகோ! ரசித்து ரசித்துப் படித்தவரால் மட்டுமே இத்தனை பெரிய விமர்சனம் எழுத முடியும். செம!!

      Delete
    6. @ Erode Vijay
      நன்றி விஜய் சகோ 😊💐

      @Parani from Bangalore
      நன்றி பரணி சகோ😊💐

      Delete
    7. தலைக்கு அட்டகாசமான விமர்சனம் கடல்...

      Delete
    8. செனா அனா பேக் டூ ஃபார்ம்...🤣

      Delete
    9. @சேலம் Tex விஜயராகவன்
      நன்றி சகோ 😊😊😊

      Delete
  30. *தோர்கல் மாயாஜால உலகம் - சீசன் 4*

    *பரிசுகள் விவரம்:*

    இரண்டு ரேபிட் சுற்றுகளின் இறுதியில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் வெற்றி பெறும் முதல் *பத்து* வெற்றியாளர்களுக்கு *2024 ஆன்லைன் புத்தக விழா* வெளியீடுகள் பரிசாக வழங்கப்படும்.

    கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களில் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச கட்ஆப் மதிப்பெண்ணுக்கு மேல் *(பாஸ்மார்க்)* எடுக்கும் அனைவருக்கும் என்றென்றும் நினைவில் நிற்கும் ஒரு *சிறப்பு பங்கேற்பாளர் பரிசு* வழங்கப்படும்.

    டாப் 10 பேர் பங்கேற்கும் போட்டியில் வெற்றி பெறும் ஒரு வெற்றியாளரின் புகைப்படம் சிறப்பிதழில் வெளிவரும்.

    இந்தப் போட்டியின் சிறப்பே அந்த *சிறப்பு பங்கேற்பாளர் பரிசு* தான் நண்பர்களே.!

    முன்கூட்டிய வாழ்த்துகளுடன்..

    காமிக்ஸ் எனும் கனவுலகம்

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான போட்டி அறிவிப்பு மற்றும் பரிசுகள்!!
      வெற்றிவாகை சூடப்போகும் நண்பர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!

      Delete
    2. அருமை... போட்டிகள் எப்போதும் நல்லது....நட்புணர்வை வளர்க்கும் முயற்சி வழக்கம் போல வெற்றியாகட்டும்..

      வெற்றியாளர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துகள்💐💐💐💐

      Delete
  31. *காமிக்ஸ் எனும் கனவுலகம்*

    *தோர்கலின் மாயாஜால உலகம் சீசன் 4*

    *போட்டித் தேதி மற்றும் போட்டிக்கான புத்தகங்கள் மற்றும் போட்டியின் அமைப்பு..*



    🔹09/03/2024 முதல் சுற்று:

    *மரணத்தின் நிறம் நீலம்*

    🔸16/03/2024 இரண்டாம் சுற்று:

    *மர்ம சாம்ராஜ்யம்*

    இரண்டிலும் தலா 50 வினாக்கள்..
    10 நிமிடங்கள்...
    ரேபிட் சிஸ்டம்..

    50×3 = 150

    50×3 = 150

    மதிப்பெண்கள்..

    *தவறான வினாக்களுக்கு நெகடிவ் (-1) மார்க்*

    🔸23/03/2024 இறுதிச் சுற்று: முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகளின் பெற்ற மதிப்பெண்களின் கூடுதலில் முன்னிலை பெற்ற பத்து பேருக்கு மட்டும்.

    *5 வினாக்கள் (பத்தி வினா) - 50 மதிப்பெண்கள்*

    *வெற்றியாளர்களுக்கு சிறப்பான பரிசு உண்டு.*

    *இம்முறை பரிசு சற்று வித்தியாசமானது நண்பர்களே.!*

    *பரிசுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் கலந்துகொண்டு வெற்றிபெற அருமையான வாய்ப்பு*

    *தயாராகுங்கள் நண்பர்களே.!*

    முன்கூட்டிய வாழ்த்துகளுடன்..

    *காமிக்ஸ் எனும் கனவுலகம்*

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா! நெகட்டிவ் மார்க்கிங் எல்லாம் இருக்கே. நீட் பரீட்சை லெவலுக்கு ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபிஸர்ஸா இருக்காங்களே.அருமை.
      அருமை!!

      Delete
  32. ///3 இதழ்களுமே black & white தான் ; மூன்றுமே போனெல்லியின் நாயகர்கள் தான் (டெக்ஸ் ; மார்ட்டின் & மிஸ்டர் நோ) & மூன்றுமே செம crisp வாசிப்புகளே ! ///

    மிஸ்டர் நோ வின் முதல் கதை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது சார்..! அடுத்த கதையின் விளம்பரமும் ஆர்வத்தை கிளப்புகிறது.. வெயிட்டிங்..!

    ReplyDelete
    Replies
    1. //மிஸ்டர் நோ வின் முதல் கதை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது சார்..! //
      ஆமாங்க சகோ, ஒரு மினி ஆக்ஷன் படம் போல் இருந்தது

      Delete
  33. ஆர்டிக் அசுரன்..

    வழக்கத்திற்கு மாறாக மார்டின் கதையின் ஓவியங்கள் செம்மயா இருக்கே சார்..😍

    ReplyDelete
  34. ///பிப்ரவரியின் மூன்று இதழ்களுக்கான உங்களின் ரேங்க் எவ்விதம் இருக்கும் ? (மாடஸ்டி ; டெட்வுட் டிக் & டெக்ஸ்) ///

    மாடஸ்பாட்டிக்கு ஹி.ஹி.ஹி..
    டெட்வுட் டிக்கிற்கு இம்மாதம் முதல் ரேங்க்..

    இம்மாத டெக்ஸ் சொதப்பல் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும் சார்.! மோரிஸ்கோ வரும் கதைகளெல்லாம் அறிவியலும் மாந்திரீகமும் கலந்துகட்டி நம்பகத்தன்மையோடு அருமையாக இருக்கும் வாசிக்க.! ஆனா. இம்முறை கொஞ்சமும் சுவாரஸ்யமோ ஆழமோ இல்லாத கதையாகிவிட்டது.! அடுத்தமாத டெ.க்ஸ் அதனை ஈடுகட்டிவிடுவார்னு நம்பிக்கை இருக்கு சார்.!

    ReplyDelete
    Replies
    1. Au Contraire எனக்கு கதை சொல்லப்பட்ட விதம் மிகவும் பிடித்திருந்தது.

      Delete
  35. பிபரவரி இதழ்கள் தர வரிசை

    1. டெட்வுட் டிக்
    2. மாடஸ்டி
    3. டெக்ஸ்

    மார்ச் படிக்கப் போவது

    1. டெக்ஸ்
    2.மார்ட்டின்
    3. மிஸ்டர் நோ

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்றிங்க செனா...!?!?
      மாடஸ்டிக்கு இரண்டாவது இடமா... அய்யகோ.. இதைக் கேள்விப்பிட்டால் அந்தப் பாட்டியோட மனசு என்ன பாடுபடும்.?

      Delete
    2. எதிர்காலத்தில் மாடஸ்டிக்கென ஒரு அனிமேட்டட் ப்ரமோ வீடியோ உருவாக்க உத்தேசம் உண்டு. அதில் celebrity வில்லன்கள் என உங்களையும் ஷெரீப்பையும் சித்தரிக்க எண்ணியுள்ளேன்.டெக்ஸ் கதை சுமார் என டெக்ஸ் ரசிகரான நீங்கள் சொல்வதில் " பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு"மொமண்ட் தெரிகிறமாதிரி மாடஸ்டி தர வரிசையில் நானும்.

      Delete
    3. பேபி சிட்டரா வர பாட்டி பத்தி கவலை இல்லீங்க செனா? ஹீரோயின் யாருன்னு சொல்லுங்க. அதை வைச்சுத்தான் வில்லனா வரதா வேணாமான்னு சொல்ல முடியும்.

      Delete
    4. ஹீரோயின்: உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் வேசம் போட்ட தலிவருதான்..

      Delete
    5. //எதிர்காலத்தில் மாடஸ்டிக்கென ஒரு அனிமேட்டட் ப்ரமோ வீடியோ உருவாக்க உத்தேசம் உண்டு//

      அருமை சகோதரரே

      Delete
    6. பாட்டிக்கு இளம் டாக்டரோட கைகோர்த்த சந்தோசத்ல கைநடுக்கத்தோட வில்லன்கள் இருவரோட உதடுநடுங்க இருவருக்கம் லிப்லாக் உம்மா குடுத்து சாவிய என்ட்ட குடுத்தா நா ஃபைனான்ஸ் பன்றேன்

      Delete
  36. 1. டெக்ஸ் - வழக்கம் போல பட்டாசு.
    2. டெட்வுட் டிக் - மற்றுமொரு கௌபாய் கதை.
    3. மாடஸ்டி - பால்ய நினைவுகளுக்காக வாசிக்கலாம்.

    லயன் வரலாற்றில் குறிப்பிட்டே ஆக வேண்டிய ஒரு அதகளமான ஜனவரி இதழ்களுக்கு அடுத்த வந்ததால் இந்த இதழ்கள் சற்றே ஏமாற்றமளித்தன. மூன்றுமே கறுப்பு வெள்ளை அடுத்த மூன்றும் கறுப்பு வெள்ளை என்பதும் ஒரு காரணம்.

    ReplyDelete
  37. ///இந்த மார்ச்சில் உங்களது முதல் வாசிப்புத் தேர்வு எந்த இதழாக இருக்குமோ guys ?///

    முதலில் மிஸ்டர் நோ
    அடுத்து டெக்ஸ்
    இறுதியாக மார்டின்


    (பொறுப்புகள் கூடிவருவதால் முன்போல் டீட்டெய்லாக விமர்சனங்கள் எழுத முடிவதில்லை..😐 )

    ReplyDelete
    Replies
    1. பொறுப்புகள் கூடிவருவதால் முன்போல் டீட்டெய்லாக விமர்சனங்கள் எழுத முடிவதில்லை..😐 )


      #####

      உண்மை....:-(

      Delete
  38. ரொம்ப நாளைக்கு பிறகு மார்டினுக்கு நல்ல ஹைப் கொடுத்திருக்கிங்க அப்ப மார்ட்டின் தான் இம் மாத பிளாக் பஸ்டர்

    ReplyDelete
  39. // அதற்கொரு முன்னோடியாய் பெளன்சர் மறுக்கா ஆஜராகிறார் ஏப்ரலில் ! //

    Wow. Super news

    ReplyDelete
  40. Beautiful writing editor sir . ha, ha.. Lovely... 😄❤️..

    ReplyDelete
  41. Sir - any summer online fair with special books in plan sir - consider Lion replicas sir.

    ---

    My reading order would be TEX MARTIN and NO

    ReplyDelete
    Replies
    1. ஆன்லைன் புத்தக விழா இந்த முறையும் இருக்குங்கற நம்பிக்கையோட ஒரு கூட்டம் சுத்திட்டிருக்கு

      Delete
    2. நம்பிக்கை... அதானே வாழ்க்கை.

      Delete
  42. FEB ranking:

    1. Tex
    2. Modesty
    3. Deadwood Dick

    ReplyDelete
  43. மார்ச் மாதம் முதல்.வாசிப்பு மார்ட்டின் தான்... மன்னிக்கவும் ஜாவா தான் கிர்ற்ர்

    ReplyDelete
  44. வணக்கம் நண்பர்களே...

    வணக்கம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
  45. வணக்கம் எடிட்டர் சார் ...
    பிப்ரவரி மாதம் அனைத்து புத்தகங்கள் படித்துமுடித்து விட்டேன் ....
    1. டிக் - மிகவும் அருமை
    2. இளவரசி - அருமை (புத்தகத்தில் whiteness சற்று கூடவும் , ஓவியங்கள் நன்றாக ரசிக்க முடில ....)
    3. வில்லர் வில்லர் ஆல் டைம் கில்லர் . கதை , ஓவியம் இரண்டுமே
    அருமை ....

    மார்ச் மாததில் ....
    முதல் வாசிப்பு -- மார்ட்டின் தான் ....
    டெக்ஸ் புக் ப்ரீவிவ் பார்த்தால் சற்று கலக்கமாகஉள்ளது ... புத்தகம் வந்தவுடன் பார்க்கலாம்
    மிஸ்டர் நோ ..ஹம்ம்ம்ம்ம் (வடை வரட்டும் ....)

    ReplyDelete
  46. இந்த மாசம்

    டிக்

    இளவரசி

    டெக்ஸ்

    வரப்போற மாசம்

    மொதல்ல மார்டீன்

    ரெண்டாவது நோ

    மூணாவது டெக்ஸ்...

    ReplyDelete
  47. பிப்ரவரி ரேங்க் 1 .மாடஸ்டி. 2 .டெட் வுட் டிக் 3 .டெக்ஸ். மார்ச் வாசிப்பு. 1 .டெக்ஸ். 2 .மார்ட்டின். .மிஸ்டர் .நோ .

    ReplyDelete
  48. February

    1. Modesty
    2. Deadwood
    3.. Tex

    March
    1. Tex
    2. No
    3. Martin

    ReplyDelete
  49. பிபரவரி இதழ்கள் தர வரிசை

    1. டெட்வுட் டிக்
    2. டெக்ஸ்
    3. மாடஸ்டி

    மார்ச் படிக்கப் போவது

    1.மிஸ்டர் நோ
    2.மார்ட்டின்
    3.TEX ..

    ReplyDelete
  50. பிப்ரவரி-
    மாடஸ்டி - மாடஸ்டி (இரண்டு தடவை படித்தது.
    டெக்ஸ்''
    அப்றம்தான்-டெட்வுட்டிக்..(ரொம்ப அருவருப்பா இருக்குமோன்னு நினைத்தது..ஆனால் சரியான விதத்தில் கதை அமைந்தது. (எனவே, எனது தரவரிசையில் இரண்டாம் இடம்.)
    மார்ச்.
    முதலில் Tex
    இரண்டாவது மார்டின்
    முன்றாவது Mr.No.

    ReplyDelete
  51. Feb top 3
    1. டெட்வுட் டிக்
    2. டெக்ஸ்
    3. மாடஸ்டி

    March
    1. டெக்ஸ்
    2. மார்டின்
    3. நோ

    ReplyDelete
  52. ஆன்லைன் புக் பேர் அறிவிப்பு எப்பங்க சார் சீக்கிரம் அறிவியுங்க .இப்பவே எதிர்பார்ப்பு மீட்டர் எகிற ஆரம்பிச்சிருச்சு

    ReplyDelete
  53. போன மாதம் டெக்ஸ் கடேசியாம் . இந்த மாதம் முதல் வாசிப்பு டெக்ஸ் தானாம். என்னோட லாஜிக் எனக்கே புரியல .அப்படி என்னதான் இருக்கு டெக்ஸ் கிட்ட .இப்ப கையில் " சட்டத்திற்கு ஒரு சவக்குழி"

    ReplyDelete
  54. சூப்பர் சார்...மார்ட்டின் சான்சை இல்ல...இந்த வண்ணக்கூட்டமைப்பு இதுவரை வந்ததில்லை....இது வரை வந்ததிலே டாப் இதான்.....

    அட கொஞ்சம் நில்லுங்க ...மழைக்காட்சி உள்ள வந்தாலே துள்ள வைக்கும்...டெக்சின் சட்டையை நனைக்கும் மழை கொண்ட அட்டைங்கைல ..இதான் டாப்பா....

    மறுபடியும் மேல் போய் கீழ் வர...மேல்..கீழ்...அட போங்கப்பா இது போங்குன்னாலும் ரேண்டுமே டாப்பாமே

    ReplyDelete
    Replies
    1. அது கதை முழுக்க நீங்க நனஞ்சும் அடிக்கிற வெயிலுக்கு ஜலதோசம் பிடிக்கலயான்னு படிக்க மழைதாகத்தோடு நாங்களும்

      Delete
  55. டெக்ஸ், டெட்வுட் டிக் கதைகள் படிச்சாச்சு..
    மாடஸ்டி கதையை படிச்சுட்டிருக்கேன்.. கதையின் போக்கும், சித்திரங்களின் தரமும் அபாரமாக இருக்கிறது!

    ReplyDelete
  56. 'கார்ஸனின் கபி கபி'யைத் தொடர்ந்து, 'ஜாவாவின் ஜலபுலஜங்ஸ்' மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது படைப்பாளிகள் சற்றே இளகிய மனதுடன் நடந்துகொள்வது அவர்கள் மீதான மரியாதையை இன்னும் அதிகரிக்திருக்கிறது! (இந்த மாத டெட்வுட் டிக்கிற்கும் கூட 'வழிநெடுக வாய்ப்பு' வழங்கிய படைப்பாளிகள் தாராளத்தைப் பாராட்டியே ஆகவேண்டும்!)

    இன்னும் இந்த லிஸ்ட்டில்..
    * கிட் வில்லர்
    * கிட்ஆர்டின், டாக்புல், சிக்பில், குள்ளன்
    * லக்கிலூக்
    * ஸ்டெர்ன்
    *சோடா
    உள்ளிட்டோர் பாக்கி இருப்பதைப் படைப்பாளிகளுக்கு ஞாபகப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்!

    ReplyDelete
  57. அப்புறம் எடிட்டர் சார்.. நடந்த முடிந்த திருப்பூர் புத்தகவிழா குறித்து நான் நமது 'நேபாள நாயகருடன்' கடந்தவாரம் உரையாடியபோது, கல்லூரிப் பெண்கள் பலரும் பேய் கதைகளையும், மென்மையான காதல் கதைகளையுமே கேட்பதை நே.நா மீண்டும் அழுத்தமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்!

    ஆகவே, மென்மையான காதல் கதைகள் ஏதேனும் ஒன்றிரண்டையாவது தேடிப் பிடித்து வெளியிடுமாறு எடிட்டர் சமூகத்தை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. காதல் கதைகள் ஓகே

      பேய் கதைகளும் கேட்டு இருக்காங்களே, அதுவும் வேணுமில்ல, சகோ

      Delete
    2. Egappatta manga comics andha genre il ulladhe

      Delete
    3. ////பேய் கதைகளும் கேட்டு இருக்காங்களே, அதுவும் வேணுமில்ல, சகோ///

      பாத்தீங்களா எடிட்டர் சார்.. பேய் கதைகள் பெண்களுக்குப் பிடிக்கும்னு நான் சொன்னது உண்மையாகிடுச்சு பாத்தீங்களா?!! :)

      Delete
    4. @SuryaJeeva சகோ
      சரியாக சொன்னீர்கள் சகோ

      @Erode vijay
      காதல் களங்கள் வேண்டும் என்றால் மங்காஸ் நிறையா உண்டுங்க, சகோ
      ஆசிரியர் கிட்ட பேசி தாங்கள் தான் கொண்டு வரணும்

      Delete
    5. ஆசிரியரே
      சகோ Erode Vijay நல்ல ஐடியா குடுத்துள்ளார்
      மங்காவிலும் நிறைய பேய் கதைகள் ஜான்ராஸ் உண்டு
      குழந்தைகளையும், பெண்களையும் கவர்ந்து விடலாம்

      Delete
    6. Eppadiyavadhu mangavai tamil pesa vaikka muyarchippor sangam vaazhga..

      Delete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. வாவ்!

    உங்க விவரிப்ப படிக்கும் போது மார்டின் தான் முதலில் அப்பாலிக்கா டெக்ஸ்.

    மேலேயுள்ள இரண்டு அட்டைப் படங்களும் செம்ம. அந்த எழுத்துருக்களும் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  60. ஜனவரி எல்லா புக்சும் படிச்சாச்சு.

    போன வருட படிக்காத கதைகளை எடுத்து படிப்பதால் பிப்ரவரி மாத புக்ஸ் இன்னும் ஆரம்பிக்கல.

    ReplyDelete
  61. என்னைப் பொருத்தவரை மார்ச் என்பது தலைவாழை விருந்தாகவே தெரிகிறது. ஏனென்றால் என் போன்ற தலையைச் சுற்றி மூக்கை தொடும் கதை பிரியர்களுக்கு மார்ட்டின் நல்ல விருந்து. மார்ட்டீனுக்காக காத்திருக்கிறேன். மார்ட்டின் படித்து முடித்த பின் தான் மற்ற எந்த கதை படிக்க வேண்டும் என்று முடிவு செய்வேன். எப்படியும் வருடம் ஒரு மார்ட்டின் கதை வெளியிடுங்கள்

    ReplyDelete
  62. இப்ப மார்ட்டின்னாலும் வந்து கைல பிடிச்ச பின்புதான் டெக்ஸ்னு முடிவு பன்னி மிஸ்டர் நோக்கு யெஸ் சொல்லனும்

    ReplyDelete
  63. டிக்
    டெக்ஸ்
    மாடஸ்டி ( எப்ப ரிட்டயர்மென்ட்?)

    ReplyDelete
  64. Nagaraj sethupathi. சார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  65. மார்டின் அப்படி ஓன்றும் கவரமாட்டார் எப்போதும்....
    இம்முறை ஜாவாவுக்கொரு ஜில்மா வாசிக்க தூண்டுது.....
    எப்படியாயினும் கடைசியாகத்தான் ம.ம.மா.!

    ReplyDelete
  66. டெக்ஸ் அட்டைப்படம் அசத்தல் சார்....
    ரொம்ப காலம் கழித்து ஒரு துப்பறியும் கதையில் தல வர இருப்பது கூடுதல் ஆர்வத்தை கிளப்புது... முதல் வாய்ப்பு தல தான்...
    ஓவியங்கள் வித்தியாசம் ஆக இருப்பது கூடுதல் அழகு...

    ReplyDelete
  67. இந்த நொடியில் எனது கேள்வி இது தான் : இந்த மார்ச்சில் உங்களது முதல் வாசிப்புத் தேர்வு எந்த இதழாக இருக்குமோ guys ?

    1.தல தல தல
    2.V
    3.ம.ம.மா.

    இடையே தோர்கல் போட்டி உள்ளது.. சோ மார்ச் மாதம் ஏக பிஸிபேளா பாத் மாதம் ஆக மாறிடும்...

    ReplyDelete


  68. And கேள்வி # 2 : பிப்ரவரியின் மூன்று இதழ்களுக்கான உங்களின் ரேங்க் எவ்விதம் இருக்கும் ? (மாடஸ்டி ; டெட்வுட் டிக் & டெக்ஸ்)

    1.டெட்வுட் டிக் 10/10
    கதை பட்டாசு,வரலாற்று நிகழ்வுகள் கலங்க வைத்தன..டெட்டின் காதல் சட்டென முறிந்த யதார்த்தம் வன்மேற்கின் கோரமான நிதர்சனத்தை காட்டியது....
    டெட்வுட் மனசில என்றும் இருப்பான்...

    2.டெக்ஸ்... நிறைய எதிர்பார்க்க வைத்து சட்டுனு முடிஞ்சிட்டது... மோரி்ஸ்கோ கஸ்ட் ரோல் பண்ணியது பெருந்த ஏமாற்றம்..

    3.மாடஸ்தி... என்னத்த சொல்றதுங்க...
    ஒரு பட காமெடியில பச்சை சொக்கா போட்ட ஒருவனை கட்டிபிடிக்க சொல்லி 5ஆயிரத்தை தருவான் மஞ்ச சொக்கா போட்ட ஒருவன்... பச்ச சொக்கா போட்ட அவன் இன்னொரு 5ஆயிரத்தை கொடுத்து மஞ்ச சொக்காகாரனை கட்டி பிடிக்க சொல்வான்..இதை பார்த்து மறுபடியும் மஞ்சை பத்தாயிரத்தை கொடுத்து பச்சையை கட்டிபிடிக்க சொல்லும்.. இடையே இருவரும் சட்டையை மாற்ற அந்த புள்ளை டென்சன் ஆகிடும...

    இங்கியும் அதேதான், மாடஸ்தி 4பில்டப்பை தூக்கி கார்வின் மேல போட, கார்வின் ஒரு 4பில்டப்பை தூக்கி மாடஸ்தி மேல போட...இது போதாதுனு ஜெரால்டு ஒரு 10பில்டப்பை தூக்கி இருவர் மேலும்போட..அடுத்து துணை கேரக்டர்களும் அப்படியே பில்டப்பை அள்ளி அள்ளி வீச...
    ஒரு பண்டமாற்று ச்சே ஒரு பில்டப் படலம் ஒரு வழியாக ஏக பில்டப்களோடு முடியுது...

    போதும் சார் இந்த கோட்டா சிஸ்டம்லாம்.... லயன் முதற் நாயகி மாடஸதிதான்..ஆனா இருக்கும் சொற்ப ஸ்லாட்ல மாடஸ்திக்கென ஒன்றை ஒதுக்கி வேஸ்ட் பண்ண வேணுமா என்ற கேள்வி எழுது...!

    40ஸ்லாட்ல ஒண்ணு போனா பரால்ல..இருக்கும் 25ஸ்லாட்ல தெரிஞ்சே ஒன்றை காலி பண்ணுவது??? டக் அவுட் ஆவான்னு தெரிஞ்சே ஒரு பேட்டரை இறக்குவது போல உள்ளது.
    அதைவிட சிறந்த கதைகள்லாம் ஓட்டிங் லைனுக்கு ட்ராப் ஆகும்போது ரெகமன்ட்ல வருவது அத்தனை சிறப்பாக இல்லை!

    ReplyDelete
    Replies

    1. As a rule of thumb பழைய நாயக, நாயகியருக்கு கும்ப மரியாதை செலுத்துவதில்லை. மாடஸ்டி வராவிட்டால் பரவாயில்லை.
      வந்தால் நன்றாக இருக்கும் அவ்வளவே.

      தவிர மாடஸ்டி முக்கிய சந்தா தடத்தில் வரவில்லையே. V காமிக்ஸ் தடத்தில்தான் வந்துள்ளார். தனிப்பட்ட முறையில் ஜம்பிங் ஸ்டார் zagor அலுப்பூட்டும் மோனோடோனி வரிசை நாயகர்.
      டெக்ஸ் கதைகளின் வசீகரம் இவரிடத்தில் இல்லை. இவரது கதைகள் மட்டுமே V காமிக்ஸ் தடத்தில் வருமோ என்ற அச்சம் வந்த நாட்களில் விலகியது.
      இவரது கதைகளே வருகையில் ???

      மாடஸ்டிக்கும் ஒரு தனி ரசிகப் பட்டாளம் உண்டு எனக் கருதுகிறேன். விற்பனையில் சாதிக்கவில்லை எனில் மாடஸ்டியை விலக்கலாம். இதுகுறித்து ஆசிரியரே அறிவார்.
      மாடஸ்டி லயன் காமிக்ஸைப் பொறுத்தமட்டில் ஒரு flagship model என்பது போல ஆசிரியர் கருதும் பட்சம் மாடஸ்டி மேல் ஒரு soft corner அவருக்கு இறுதிவரை இருக்கக் கூடும். ஆண்டுக்கு ஒரு ஸ்லாட் அளிக்குமளவிலாவது.

      Delete
    2. பிப்ரவரியில் வந்தது 3 அதில் 2 கதைகள் திருப்தியாக இல்லை எனும் போது, ஜனவரியின் அதகள துவக்கத்திற்கு பிறகு சட்டென ஒரு தடை வந்தது போல ஃபீலிங் எழுகிறது....

      டெக்ஸ் ஒன் ஆஃப் சொதப்பல்னு வைச்சிகிட்டாலும் 3வது புக்காவது பரபரப்பாக இருந்திருக்கலாம் என்பதே பாயிண்ட்...

      சென்ற மாத V யிம் அத்தனை சிறப்பாக இல்லை.... டின்டின்& லார்கோ வின் வசீகரம் அது தெரியாம பார்த்துகிட்டது.
      தொடர்ந்து 2வது மாதமாக V கவரவில்லை...

      ஆசிரியர் அடிக்கடி சொல்வது "ஆட்டை தூக்கி குட்டியோட போட்டாலும் குட்டியை தூக்கி ஆட்டோடு போட்டாலும் எல்லாமே ஒண்ணுதான்..

      ""வந்தது V யோ, A,B,C, D யோ எதுனாலும் வாசிப்பதே நாமே"""

      ஆசிரியருக்கு உள்ள சாஃப்ட் கார்னருக்காவே சில ஆண்டாக மாடஸ்தி வருதுனு நினைக்கிறேன்...ஒவ்வொரு காமிக்ஸ் வாசிக்க ஆரம்பிக்கும்போதும் ஒரு எதிர்பார்ப்போடே வாசிக்கறோம்....

      3மட்டுமே வரும் மாதங்களில் காம்பினேசன் இன்னும் கொஞ்சம் வலுவாக இருக்கலாம்..

      கொஞ்சம் 50:50பார்டியெல்லாம் கோடைவிழா , ஆன்லைன் விழா, ஈரோடு சிறப்பிதழ்கள்னு பஞ் ஆகபுக்ஸ் வெளிவரும் மாதங்களில் வெளியாகும்போது இத்தனை வெற்றிடம் உணரப்படாது போகலாம்...

      Delete
    3. // கொஞ்சம் 50:50பார்டியெல்லாம் கோடைவிழா , ஆன்லைன் விழா, ஈரோடு சிறப்பிதழ்கள்னு பஞ் ஆகபுக்ஸ் வெளிவரும் மாதங்களில் வெளியாகும்போது இத்தனை வெற்றிடம் உணரப்படாது போகலாம்... // இது கூட நல்ல பாயிண்டாதான் இருக்கு...

      Delete
    4. இம்மாத மாடஸ்டி படிக்கலை....ஆனா மாடஸ்டி கதைகள் பட்டய கிளப்புதாகவே எனக்குபடுது

      Delete
    5. " ஒரு பில்டப் படலம் ..? ii. "
      இது டெக்ஸ் வில்லருக்குத்தான் ரொம்ப பொருந்தும்..
      .. அதிலும் கதை ஒரே டெம்பிளேட் தான்.
      ஆனாலும், அட்டைபட சிறப்பினாலும் - விலையில் 160 - 300-700 - என்று மதிப்பினாலும் - உயர்வாக பார்க்கப்படுகிறது. (மேலும் ஆண்தான் ஹீரோயிசம் செய்ய வே ண்டும் என்று பொது சிந்தனை)
      ரூ 100-க்கும் குறைந்த விலையில் ஒரு இதழ் வந்து கொண்டு இருக்கிறது..
      . மாணவர்களும் வாங்கி படிக்கும் அளவிற்கு:
      அதையும் லார்கோ - ஸ்டாண்டர்டுக்கு பொருத்தி
      விமர்ச்சித்து.. அப்பப்ப்பா...
      சிறுவர்கள் படிக்கிற மாதிரி - விலையிலும் - இதழ்களே இல்லை என்று கருத்து தெரிவிப்பது...
      அப்பறம் - வேறு வழிகளில் வெளி வந்தாலும் இப்படி விமர்சிப்பது ..
      எது எப்படியோ மாடஸ்டியை விமர்சிப்பதை தவிருங்கள்...
      "அன்னப் பூரணி. " - படத்தில் கடைசியில் வரும் வசனம் தான் சொல்லத்தோன்றுகிறது..
      - என்ன தான் பெண்கள் -வீட்டில் சமைப்பதை ருசித்து சாப்பிட்டாலும் - Star Hotel - என்றால் ஆண் தான் செஃப் - ஆக இருக்க வே ண்டும் - என்ற மனோபாவத்தை - மாத்திக்க மாட்டோம்..? i - மாறணும்...

      Delete
    6. சேதி தெரியுமுங்களா ? பிப்ரவரியின் விற்பனையில் இரண்டாமிடம் பிடித்திருப்பது மாடஸ்டி !

      சுமாரென்று தீர்ப்புச் சொல்லப்பட்டிருப்பினும் 'தல' top of the heap !

      அப்புறம் ஏகமாய் சிலாகிக்கப்பட்டிருக்கும் டெட்வுட் தம்பி கட்ட கடேசி !

      நம்பர்கள் சொல்லும் மேற்படிச் சேதிகளை பொறுமையாய் உள்வாங்க முயற்சியுங்களேன் folks !

      Delete
    7. பகடிகள் பல கண்டு வந்தாலுமே மாடஸ்டி consistent ஆக ஒரு மினிமம் கியாரண்டி நாயகியாகவே இன்னமும் தொடர்ந்திடுகிறார் என்பதே நிஜம் ! அதன் பின்னணி நோஸ்டால்ஜியாவா ? பால்யத்து பிரேமமா ? சொல்லத் தெரியலை.....ஆனால் சின்ன பட்ஜெட்டில், பெரிய ஸ்டார்களெல்லாம் இல்லாமலே வெளியாகி, முதலுக்கு மோசமில்லை என கரை சேரும் படங்களை போல இளவரசியின் ஆல்பங்களைப் பார்க்கத் தோன்றுகிறது ! Oh yes - தவிர்க்க இயலா புராதனமும், யூகிக்க சுலபமான சம்பவக்கோர்வைகளும் அவ்வப்போது ஸ்பீட்பிரேக்கர்களாய் செயல்படுகின்றன தான் - மறுக்க மாட்டேன் ! Yet, ஒரு LADY S போலவோ, பென்சில் இடை நாயகியைப் போலவோ ஒட்டுமொத்தப் புறக்கணிப்பினை மாடஸ்டி சந்திக்கவில்லை என்பதே bottomline !

      Maybe ஆங்காங்கே அம்மணிக்குக் கிட்டிடும் பகடிகளே அவருக்கொரு பப்லிசிட்டியாகவும் செயல்படுகின்றனவோ ? என்றுமே எனக்கு அவ்வப்போது சந்தேகம் எழுவதுண்டு !

      Delete
    8. அப்புறம் ஒரு ஈரோவோ / ஈரோயினியோ முட்டை இடுகிறார்களா ? மொக்கை போடுகிறார்களா ? என்பதையெல்லாம் இனம் காண ரொம்ப ரொம்ப சுலபமான indicator - நமது ஸ்டாக் லிஸ்ட் தான் !

      மாடஸ்டி இதழ்களில் எத்தனை ஸ்டாக் உள்ளதென்று தான் பாருங்களேன் : பிப்ரவரி இதழைச் சேர்க்காமல் 4 மாத்திரமே இருக்கும் - அதுவும் ரூ.30 ; ரூ.40 விலைகளில் !

      அதே சமயம் ரிப்போர்ட்டர் ஜானி ; சிக் பில் ; வெய்ன் ஷெல்டன் போன்றோரை லேசாய் எட்டி மட்டும் பாருங்களேன் ! அட, நம்ம பிரபஞ்சத்தின் புதல்வரையுமே பாருங்களேன் !

      கோட்டாவில் வந்துள்ளவர் எனப்படும் மாடஸ்டி vs மெரிட்டில் வந்துள்ளோர் எனும் popular heroes - ஒரு பத்தாண்டின் காலகட்டத்தில் எவ்விதம் perform செய்துள்ளனர் என்பதை அலசினால் சில பல நவீன சொக்காய்களை உருவி விட வேண்டி வரும் guys ! Facts of life !

      Delete
    9. ///Maybe ஆங்காங்கே அம்மணிக்குக் கிட்டிடும் பகடிகளே அவருக்கொரு பப்லிசிட்டியாகவும் செயல்படுகின்றனவோ ? என்றுமே எனக்கு அவ்வப்போது சந்தேகம் எழுவதுண்டு !///

      இப்படில்லாம் சொன்னா நாங்க திருந்திருவோமா என்ன..?!
      கார் உள்ளவரை.. கடல்நீர் உள்ளவரை எங்கள் பகடியும் இருக்கும்..!

      (நிறைய வித்து நிறைய மாடஸ்கா புக்கு வந்தா எங்களுக்குத்தான் ஜாலி.. நிறைய கன்டென்டும் கிடைக்குமே..😉)

      Delete
    10. சார் டெட்வுட் டிக் முதல் இரு இதழ்களுமே செம நெகட்டிவ் விமர்சனம் தான். கடைசி இதழ் பின்னிப் பெடலெடுத்து விட்டது. இந்த புத்தகத்தை படிக்காதவர்கள் உண்மையாகவே ஒரு சிறந்த கதையை வாசிக்கும் அனுபவத்தை இழக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல

      Delete
    11. அலோ லயன் காமிக்ஸ் ஆபீஸ்ங்களா, அடுத்த மாடஸ்தி கதை எப்பங்க போடுவீங்க????

      Delete
  69. Martin
    Tex
    Mister no

    Modesty
    Tex
    Dick
    This is my reading taste ji...

    ReplyDelete
  70. செனா .ஆனா
    ஜி .உங்களுக்கு பிடித்த கதாநாயகி என்பது தாண்டி நடுநிலையுடன் பதிவிட்டுள்ளீர் கள் . வருடத்திற்கு ஒரு ஸ்லாட் நிலைக்க இறைவனை வேண்டுவோம் .தேங்க்ஸ் .

    ReplyDelete
    Replies
    1. 2025-க்கு ஏற்கனவே சீட் குடுத்தாச்சுங்க சார் ! V இருக்க பயமேன் !!

      Delete
    2. //2025-க்கு ஏற்கனவே சீட் குடுத்தாச்சுங்க சார் ! V இருக்க பயமேன் !!//

      🥳🥳🥳🥳🥳

      Delete
    3. சூப்பர் சார்.. முன்கூட்டிய அறிவிப்பிற்கு..
      என்னுடைய ஆதங்கம்..
      பழைய (மாடஸ்டி கதைகளில் அட்டகாசமான ஆக்ஷன், கதைக்களம் என்று நிறைய இதழ்கள் இருக்கின்றன.
      அப்போதைய சுமாரான காகித தரத்தில் ..
      அதை ஏதும் மறுபதிப்பு கேட்கவில்லை (டெக்ஸ் வில்லர் மாதிரி..)
      புதிய கதைகள் தரமான பேப்பரில் வந்து கொண்டு இருக்கின்றன. (அதுவும் வருடம் ஒன்றுதான். ) அதையும் விமர்சனம் என்ற பேரில் மறுதலிக்கிறார்களே..
      என்று தான்.. ii

      Delete
  71. மார்ச்சில் உங்களது முதல் வாசிப்புத் தேர்வு எந்த இதழாக இருக்குமோ guys ?

    1)மார்டின்
    2) மிஸ்டர் நோ
    3)டெக்ஸ்

    Feb top 3
    1. மாடஸ்டி
    2. டெட்வுட் டிக்
    3. டெக்ஸ்

    ReplyDelete
  72. 1).1.Mister No 2. Martin 3. TeX
    2.) 1. Modesty 2. Dick 3. Tex

    ReplyDelete
  73. 1.Tex willer
    2.Modesty
    3. Dick - for month of feb
    For March
    1.Martin
    2Mr.No
    3. Texwiller

    ReplyDelete
  74. //மார்ச்சில் உங்களது முதல் வாசிப்புத் தேர்வு எந்த இதழாக இருக்குமோ guys ?//

    1.மார்டின்
    2.டெக்ஸ்
    3.மிஸ்டர் நோ

    ReplyDelete
  75. மாதம் மாதம் மாடஸ்தி

    ReplyDelete
    Replies
    1. லைட்டா கேரா இருக்க மாதிரி ஒரு பீலிங்கு நண்பரே....! பொறுங்க...ஒரு சோடாவை போட்டுப்புட்டு வாரேன் !

      Delete
    2. சோடா வருகிறாரா சார்.. எப்ப ரிலீஸ்... (எப்படி கோர்த்து விடுது பார் பயபுள்ளன்னு திட்டாதீங்க சார் )

      Delete
  76. மாதம் மாதம் மாடஸ்டி.ஆனா வருசம் ஒண்ணுஅப்படிங்கறதுக்கே ஆப்பு போல் இருக்கே.

    ReplyDelete
  77. //2025க்கு ஏற்கனவே ஸ்லாட் கொடுத்தாச்சுங்க சார் v இருக்க பயமேன்// தேங்க்ஸ்ங்க சார் போதும் இதுக்குமேல கேக்க மாட்டோம்.

    ReplyDelete
  78. //ஆங்காங்கே அம்மணிக்கு கிட்டும் பகடிகளே.//நண்பர்களை கிண்டலடிப்பதுபோல் ஒரு வாஞ்சை சார் .மற்றபடி உள்ளுக்குள் மாடஸ்டி ரசிகர்களே அனைவரும் .

    ReplyDelete
    Replies
    1. கரெக்டா சொன்னிங்க ராஜசேகர் சார்..

      நம்ம டாக்டர்களையும் (செனா அனா & AKK ராஜா..) வயது முதிர்ந்த தொழிலதிபர்களையும் (எடிட்டர் உள்ளிட்ட)... தீவீர ரசிர்களையும் (கடல்யாழ் ரம்யா போல)... வம்பிழுத்து குஷியாவதில் உள்ளூர ஒரு சந்தோசம்.... இல்லேன்னா அந்தப் பாட்டிமாவை ஏனே கையைப்புடிச்சி இழுக்கப்போறோம்..!

      Delete
    2. கிட் கைய பிடிச்சிருந்தது தப்பில்ல...அந்த தலைல சுத்தும் மல்லிப்பூவ மாடஸ்டி(கா தலை)ல வைக்கப்பாத்ததுதான் தப்பு மைனரே

      Delete
    3. KOK@ கைய பிடிச்சி இழுத்தா மாடஸ்கா ரசிகர்கள் ரொம்பவே டென்சன் ஆகுறாங்கப்பா.....!!!!

      தெரிஞ்சிருந்தா ரெண்டு மூனு பிட்டு சேர்த்தே போட்டுருக்கலாம் போல🤭🤣🤣🤣🤣

      Delete
  79. Modesty Book Sales Report shows " We are Happy Annachi"...So Modesty Digest onnu pottu Thaakalaamae Sir...Pre Booking Only...Sir...if you get reasonable count which one will stop you from releasing Modesty Digest...

    ReplyDelete
  80. போற போக்கைப் பாத்தா மாடஸ்டி ஷ்பெசல் வந்திடும் போலிருக்கே...

    சரி.. நமக்கெதுக்கு வம்பு.. ஊரோட ஒத்துப்போயிவோம்..! எப்படியும் ஷ்பெசலுக்கு பேர் வைக்கிற போட்டி நடக்கும்.. அதனால இப்பவே பெயர்களை பதிவு பண்ணிடுவோம்..!

    1. தாய்கிழவி ஷ்பெசல்
    2.காவல்திலகம் கார்வின் ஷ்பெசல்
    3. தொழிலதிபர்கள் ஷ்பெசல்
    4. மருத்துவர்கள் மலர்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் மைன்ட் வாய்ஸ்: "ஆஹா.. எப்படி போனாலும் கேட் போடுறாங்கய்யா....!!!"

      Delete
    2. 🤣🤣🤣🤣
      'The'யை வுட்டுட்டீங்களே கிட்?!! ;)

      'The மருத்துவர் மீன்பிடி மலர்' (ஹைய்யா.. பரிசு எனக்குத்தான்!

      Delete
    3. Correction - The மருத்துவர்கள் மீன்பிடி மலர் 🤣

      Delete
  81. //அதே சமயம் ரிப்போர்ட்டர் ஜானி ; சிக் பில் ; வெய்ன் ஷெல்டன் போன்றோரை லேசாய் எட்டி மட்டும் பாருங்களேன் ! //

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்றது...?! சுகர் பேசன்ட்ஸ் இருக்குற ஊர்ல சுவீட் கடை வெச்சா ஓடுமா.?

      Delete
    2. அதற்கு காரணம் - காமிக்ஸ் என்றால் ஓவிய த்தை ரசித்தல் - கதையில் ஆக்ஷன் தவிர்த்து கதை சொல்லும் உத்திகளை ரசித்தல் என்றில்லாம்
      வீடியோ கேம் - மாதிரி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருப்பதை ரசிக்கும் மனோபாவம் தான் ...

      Delete
  82. வீடியோ கேம் மாதிரி சுட்டுக்கொண்டேஇருப்பதை ரசிக்கும் "மனோ"பாவம் தான்.// யாருங்க ஜி மனோ.கார்வின் எப்பவும்கத்தி தான் இளவரசிக்கும் துப்பாக்கி உபயோகிப்பது பிடிக்காது

    ReplyDelete
  83. எப்படியும் மாடஸ்டிஸ்பெசலுக்கு பேர் வைக்கிற போட்டி நடக்கும்
    .போட்டிய நடத்தப் போறதே நீங்கதானே.

    ReplyDelete
  84. ***** காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் *****

    குற்றவாளிகளைத் தேடி டெக்ஸ் குழு விரைய..
    வினோத மிருகத்தை ஆராய்ச்சி செய்ய மோரிஸ்கோ குழு விரைய..
    தொலைந்துபோன டாடியைத் தேடி வாரிசுகள் விரைய..
    வாரிசுகளிடம் தேட்டை போட அதே குற்றவாளிகள் குழு விரைய..
    அந்த வாரிசுகளைக் காப்பாற்ற டெக்ஸ் குழு விரைய..

    இவர்களெல்லாம் ஒரு கோட்டில் சந்தித்துக் கொள்ளும்போது..
    இவர்களின் ரத்தத்தையெல்லாம் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சியெடுக்கக் காட்டேரி மிருகங்கள் விரைகிறது!

    நிறைய உயிர் விரயங்களுக்குப் பின்னே ஜெயித்தது யார் என்பதை வாசகர்களுக்கு நேர விரயம் ஏற்படுத்தாமல் சொல்கிறது கதை!

    சித்திரங்கள் - செம செம! டெக்ஸை இளமையாக வரைந்து அசத்தியிருக்கிறார் ஓவியர். அந்த வினோத மிருங்களை வரைந்த விதத்திலும் மிரட்டியிருக்கிறார்!

    9/10

    ReplyDelete
  85. இரண்டு பேர் ஓடிய ரேசில் இரண்டாமிடம் வந்து மாபெரும் வெற்றி பெற்ற ஆயாக்கெயவிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    இந்த புக்கை பல காப்பிகள் வாங்கி சொந்தக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் குடுத்து அவர்களை இனிமேல் அண்டவிடாமல் பாத்துக்கொண்ட நண்பர்களுக்கு: You guys are genius and I love you all. ஒரு மெகா கலெக்டர் எடிசன் போட்டா நானும் நிறைய வாங்கி இந்த ஐடியாவை யூஸ் பண்ணிக்கறேன்.

    ReplyDelete