Monday, January 01, 2024

சிம்மத்தின் சந்தோஷ ஆண்டு !

 நண்பர்களே,

வணக்கம். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! நலமும், வளமும், மகிழ்வும்  இல்லமெங்கும் பிரவாகமெடுக்கும் அற்புத வருஷமாய் இந்த 2024 அமைந்திட புனித மனிடோ ஆசீர்வதிப்பாராக ! புது நம்பிக்கைகளோடு, புது இலக்குகளோடு நமது ஒவ்வொரு தேடலும் வெற்றியில் முடியட்டும் !

And yes - புலர்ந்துள்ளது நமது லயனின் 40-வது பிறந்தநாள் ஆண்டுமே கூட ! இந்த ஜூலை புலர்ந்திட்டால், செங்கோலை கையில் பிடித்து நிற்கும் நமது சிங்கம் சாருக்கு கேக் மீது 40 மெழுகுவர்திகளைச் செருகிட வேண்டி வரும் ! இதோ - அதற்கு முன்னோட்டமாய் இப்போதே ரெடியாகி இருக்கார் பாருங்களேன் !  

கடந்து சென்றுள்ள இந்த நான்கு தசாப்தங்களுக்குள் நிறைய flashbacks பார்த்தாச்சு ; பேசியாச்சு ; எழுதியாச்சு - so "40 வருஷங்களுக்கு முன்னே கம்பு சுத்தினேன் பாரு"ன்னு மறுக்கா ஆரம்பிக்க எனக்கே தம் லேது ! ஆனாலும் "1984" என்ற வருஷம் மனதில் நிழலாடும் போது, ஏகமாய் mixed feelings மனசுக்குள் பிரவாகமெடுப்பதைத் தவிர்க்க இயலவில்லை !  தென்பட்ட அத்தினி சுவர்களிலும், 'ணங்கு..ணங்கு..ணங்கு' என்று முட்டிக் கொண்ட புளகாங்கித அனுபவத்தினை(!!!) அந்த ஆண்டின் முதல் பாதியும், வீங்கிக் கிடந்த கபாலத்துக்கு ஒத்தடம் கிடைத்த அனுபவத்தினைப் பின்பாதியும் தந்திருந்தன ! அன்றைக்கு யாரும் என்னிடம் வேலை மெனெக்கெட்டு - "ஏண்டாப்பா டேய்- இந்தத் துறையிலே 40 வருஷம் குப்பை கொட்டுற வரம் உனக்கு இப்போ கிடைச்சா நீ ஹேப்பியா இருப்பியா ?"ன்னு ஒரு கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார்கள் தான் ! ஆனால் அப்படியொரு வேளை யாரேனும் கேட்டிருந்தால், 'ஆத்தீ...கடிச்சு,கிடிச்சு வைச்சிருவாரோ இந்தாளு ? கொஞ்சம் விலகியே போயிடுவோம் !' என்று தான் நான் ஜகா வாங்கியிருப்பேன் !  480 மாதங்களுக்குப் பின்னேயும், சிங்கத்தின் தோளில் கரம் போட்டுப் பயணம் செய்யும் வரம் தொடர்ந்திடும் என்று ஒரு ரம்யமான சொப்பனத்தில் கூட அன்றைக்கு கற்பனை பண்ணத் தோன்றியிராது தான் ! But such is the beauty of life !!! Thank you Gods above !!!

பல்லாயிரங்கள், லட்சங்கள் என்றெல்லாம் இன்றைக்கு நமது விற்பனை நம்பர்கள் கிடையாது தான் ! So "40 வருஷங்களில் இதைத் தூக்கி நட்டி வைச்சுட்டேன் ; அதை நிமிர்த்திப்புட்டேன்"  என்றெல்லாம் நெஞ்சை நிமிர்த்த முகாந்திரங்கள் லேது ! And yes - அகவைகள் 40 கண்ட பின்னேயும் amateurish ஆக பிழைகளும், பிசகுகளும் தொடர்ந்திடவே செய்கின்றன தான் ! So அனுபவத்தில் அசகாய சூரனாகிப்புட்டேனாக்கும் என்று மார் தட்டவும் வழி நஹி ! ஆனாலும் ஒரு அழகான நேசத்தினை வாழ்க்கையாய்க் கொண்டிடும் வாய்ப்பும், அதனை அடுத்த தலைமுறையின் கையில் ஒப்படைக்கும் சாத்தியமும், அன்பே உருவானதொரு நண்பர் வட்டத்தை ஈட்டிடும் சூழலும் கிட்டியிருப்பது ஆண்டவனின் கொடையே எனும் போது,  குருத ஓட்டிடுவது குண்டுச்சட்டிக்குள் தான் என்றாலுமே மனம் துள்ளுகிறது !

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாய் முத்துவின் 50-வது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன தான் ; அது சந்தேகமின்றி இதை விடவும் பெரியதொரு மைல்கல் தான் ! And yes - அந்த 50 ஆண்டுகளில், துவக்கப் 15 ஆண்டுகளுக்குப் பின்பான பாக்கி 35 ஆண்டுகளும் வண்டி ஒட்டியது அடியேன் தான் ! Yet - விகிதாச்சாரங்கள் வேறுபட்டிருந்தாலும், எனது பங்களிப்பு பகிர்ந்ததொன்றே என்பதை மறுப்பதற்கில்லை ! So லைட்டாக அங்கே அடக்கி வாசிக்கவே தோன்றியது எனக்கு. ஆனால் இங்கோ வண்டிக்கு மாடு தேடிய நாள் முதலாய், மாட்டுக்குத் தீவனம் வைத்து, தண்ணி காட்டி, சாணி அள்ளியது வரை சகலமும் ஆல் இன் ஆல் ஆந்தைராஜா தானெனும் போது - இங்கே நோ நெருடல்ஸ் at all ! Oh yes - இந்தப் பேட்டைகளில் எப்போவுமே புது ரௌடியும் ஞானே ; மூ.ச.க்களில் சகட்டு மேனிக்கு சாத்து வாங்கிப்புட்டு..."அடுத்த பஞ்சாயத்து எந்த ஊரிலேப்பா ?" என்று கெத்து காட்டும் சுனா-பனாவும் ஞானே எனும் போது, இந்த 40-வது பிறந்தநாள் ஆண்டினை ரகளையாய் முன்னெடுத்துச் செல்ல உள்ளுக்குள் துருதுருக்கிறது ! இந்தாண்டு முதலாய் இலகுரக சுவாரஸ்ய வாசிப்புகளுக்கே முன்னுரிமை என்ற டிராக்கில் ரெகுலர் அட்டவணை பயணிக்கவிருப்பதால், வந்தே பாரத் ரயில்களின் வேகங்களை எதிர்பார்க்கலாம் ! And சிக்கும் சந்தர்ப்பங்களிளெல்லாமே ஒரு புது வந்தே பாரத் அறிவிக்கப்படுவதை போல - சைக்கிள் கேப் கிடைத்தாலும் டிசைன் டிசைனாய் ஏதேனும் surprise இதழ்களை களமிறக்க முனைவோம் !  

And இந்த நொடியில் உங்களிடம் இரு கேள்விகள் !! 

கேள்வி # 1 : இந்த 40 ஆண்டுப் பயணத்தினில் நீங்கள் இணைந்து கொண்டது எப்போது முதலாய் ?

கேள்வி # 2 - இந்த நானூற்றிசொச்ச ஆல்பங்களுக்கு மத்தியில் ஒரேயொரு புக்கை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பிகினி தீவுகளுக்குப் போகும் வாய்ப்பு (!!!!) உங்களுக்கு கிட்டிடும் பட்சத்தில் - what would be your pick ? ஒற்றை மறக்கவியலா இதழ் என்றால் அது உங்கள் பார்வையில் எதுவோ ?

Bye all folks....have a wonderful...wonderful year ahead !! God be with us !!


262 comments:

  1. Replies
    1. முதல் கமெண்ட் வாழ்த்துகள் சகோ

      Delete
    2. வாழ்த்துக்கள் பரணி...

      Delete
  2. வந்துட்டேன். அருமையான புது வருட துவக்கம். நன்றிகள் சார்.

    ReplyDelete
  3. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 😀🎉🎉

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்...
    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. // சைக்கிள் கேப் கிடைத்தாலும் டிசைன் டிசைனாய் ஏதேனும் surprise இதழ்களை களமிறக்க முனைவோம் ! //

    I jolly

    ReplyDelete
  6. எனக்கு விபரம் தெரிந்தது முதல் எத்தனுக்கு எத்தன் முதலாக.

    ReplyDelete
    Replies
    1. கேள்வி 2: கார்சனின் கடந்த காலம்

      Delete
    2. //எனக்கு விபரம் தெரிந்தது முதல் எத்தனுக்கு எத்தன் முதலாக.//

      1984 - September

      Delete
    3. 5 வயதில் இருந்தே. செம்ம செம்ம

      Delete
  7. Replies
    1. சிறுவயதில் பக்கத்து வீட்டில் வாங்குவார்கள் அவர்களிடம் இருந்து வாங்கி படித்து வந்தேன் Sir

      Delete
  8. இந்த மாதமே 3 லக்கி reprint. ஆரம்பமே சர்ப்ரைஸ் இதழ்கள் உடன். ஜனவரி இதழ்கள் எப்போது சார் கிளம்பும்?

    ReplyDelete
    Replies
    1. லட்சியம் புதன் சார் !

      Delete
    2. சூப்பர் சார் . அதற்குள் இந்த புத்கங்களை முடித்து விடுகிறேன்.

      Delete
    3. சீக்கிரமாக புதன் கிழமை வரட்டும்.
      அப்ப தா டிசம்பர் மாதபுத்தகங்களை
      மற்றும் சிஸ்கோ வை
      அனுப்ப சொல்ல முடியும்.
      அவைகளை
      படிக்கும் போது தான்,
      கிறிஸ்துமஸ் கேக் கே
      சாப்பிட போறேன்.
      அன்னைக்கு தான்,
      வருசபிறப்பையே
      கொண்டாடணும்.

      Delete
  9. சகோதரிகள், சொந்தங்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், லயன் பணியாளர்கள் & லயன் காமிக்ஸ் வாசக அன்பர்கள் அனைவருக்கும் இனிய இனிப்பான இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்....💐💐💐💐🎂🎂🎂🎂🎇🎇🎇🎇🎇

    ReplyDelete
  10. மாயாவி கதை,
    எதுவென்று தெரியவில்லை...

    ReplyDelete
  11. QN 1 : some 20 to 25 yrs sir ..

    QN 2 : ரத்த படலம் ..

    ReplyDelete
  12. ஆமா.
    சிங்கத்தின் தோளில் கை போட்டு நிற்பவர்...?

    ReplyDelete
  13. கேள்வி 1 :
    முதன்முதலாக இந்த "ராசுக்குட்டி" நமது லயன் காமிக்ஸ் பணத்தில் இணைந்துக் கொண்டது1986 மத்தியில்.

    கேள்வி 2 :

    கிளாசிக் ரசிகனாக இருந்தாலும்...
    என்னுடன் எடுத்து செல்லும் விரும்பும் புத்தகம்... இரத்தப் படலம் தொகுப்பு

    ReplyDelete
  14. 1.பழிவாங்கும் புயல்-1992

    2.லயன் சூப்பர் ஸ்பெசல், லயன் தீபாவளி மலர்1986, லயன் கோடைமலர் 1986, 1987, லயன் சென்சுரி ஸ்பெசல், டாப் 10 ஸ்பெசல், தி லயன் 250, மின்னும் மரணம், இரத்தப்படலம், சுப்ரீமோ ஸ்பெசல், சர்வமும் நானே, சிகரங்களின் சாம்ராட்......

    ReplyDelete
  15. ///இந்த ஜூலை புலர்ந்திட்டால், செங்கோலை கையில் பிடித்து நிற்கும் நமது சிங்கம் சாருக்கு கேக் மீது 40 மெழுகுவர்திகளைச் செருகிட வேண்டி வரும் ///

    அப்ப அந்த மாசம் "கேக்" உண்டு.
    நேரே‌ சிவகாசி க்கே போயிரலாம்.
    பதுங்கு குழி தலைவர்,
    நமது மீட்டிங் கை
    அங்கு தயார் செய்யவும்.

    ReplyDelete
  16. ஜம்பிங் ஸ்டார் குரூப்,
    ரொம்ப நாளா காணோமே.

    ReplyDelete
  17. எதிர்பாராத புத்தாண்டு பதிவுக்கு நன்றிகள் சார். இந்த 40 ஆண்டு, 50 ஆவது ஆண்டாக மீண்டும் ஒரு விழா ஈரோட்டில் நடக்க வேண்டும் சார். 2034 லயன் 50. I'm வெயிட்டிங்.

    ReplyDelete
    Replies
    1. // 50 ஆவது ஆண்டாக மீண்டும் ஒரு விழா ஈரோட்டில் நடக்க வேண்டும் சார். 2034 லயன் 50. I'm வெயிட்டிங். //

      அதன் தொடர்ச்சி விழா சேலத்திலும்... மறந்துவிடாதீர்கள் எடிட்டர் சார்

      Delete
  18. HAPPY NEW YEAR 2024


    எனதினிய
    அன்பு
    நண்பர்கள் அனைவருக்கும்

    இந்த இனிய புத்தாண்டு
    உங்களுக்கு ஒரு இனிய
    சிறந்த துவக்கமாக இருக்கட்டும்

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤

    புத்தாண்டு தினம் என்பது வெற்று புத்தகத்தின் முதல் பக்கம்: ஒரு அற்புதமான கதையை எழுதுங்கள்!

    எதிர்காலம் என்பது உங்கள் வாழ்க்கை கதையை எழுதுவது…
    அடுத்த ஆண்டை இன்னும் சிறந்ததாக மாற்றுங்கள்.

    புத்தாண்டு என்பது வெற்று புத்தகம் போன்றது, பேனா உங்கள் கையில்.. 👍👍

    புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2024 ஆம் ஆண்டு உங்களுக்கான ஆண்டு 😍😍

    ReplyDelete
  19. 1 1986 ( பவளச்சிலை மர்மத்திலிருந்து உங்கள் பின்னே ஞானும் )

    2 திக்கு தெரியாத தீவில் ..

    ReplyDelete
  20. எடிட்டர் சார்,

    மிகுந்த ஆவலுடன் தங்களிடம் ஒரு பதில்...

    கேள்வி 2 க்கு
    தங்களுக்குப் பிடித்த அந்த ஒற்றை இதழ் எதுவாக இருக்கும் ? சார் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. சார்....நாமெல்லாம் தருமி மாதிரி....கேள்விகளைக் கேட்க தான் சுகப்படுவோம் !!

      Delete
  21. நண்பர்கள் அனைவருக்கும், ஆசிரியர் அவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... ❤️❤️👍🙏....,.................
    இரத்தப்படலம்.. தான் sir.. நான்
    முத்து 1.. இரும்புக்கை மாயாவி மாம்ஸ், லாரன்ஸ் &டேவிட் சித்தப்பு, ஜானி நீரோ மச்சி, ஸ்டெல்லா சிஸ்டர், காரிகன் அங்கிள்.. இவங்க கூட "அன்னம், தண்ணி புழங்குன ஆள் sir.. மறக்க மாட்டீங்க தானேங் sir.. 😄😄😄❤️🙏

    ReplyDelete
  22. ஆசிரியருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐

    1. 2016 முதலாய்
    2. தலையில்லாப் போராளி & நிழல்களின் ராஜ்யத்தில்

    ReplyDelete
  23. கேள்வி # 1 : இந்த 40 ஆண்டுப் பயணத்தினில் நீங்கள் இணைந்து கொண்டது எப்போது முதலாய் ?



    "சிறுபிள்ளை விளையாட்டு இதழ் முதல்."

    ReplyDelete
  24. கேள்வி # 2 - இந்த நானூற்றிசொச்ச ஆல்பங்களுக்கு மத்தியில் ஒரேயொரு புக்கை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பிகினி தீவுகளுக்குப் போகும் வாய்ப்பு (!!!!) உங்களுக்கு கிட்டிடும் பட்சத்தில் - what would be your pick ? ஒற்றை மறக்கவியலா இதழ் என்றால் அது உங்கள் பார்வையில் எதுவோ ?

    டிராகன் நகரம்.

    கார்சனின் கடந்த காலம்.

    லயன் சூப்பர் ஸ்பெஷல்.

    இரத்தப்படலம்.

    சுப்ரிமோ ஸ்பெஷல்.

    LMS special.

    LION 250 SPL.

    சர்வமும் நானே.


    ReplyDelete
  25. கத்தி முனையில் இளவரசியின் கதை மற்றும் உலகப்போரில்Aarchi இரண்டு கதைகளும் இந்த வருடம் மறு பதிப்பாக வந்தால் நன்றாக இருக்கும்.sir

    ReplyDelete
    Replies
    1. // ஏதேனும் surprise இதழ்களை களமிறக்க முனைவோம் ! //

      Delete
  26. 1. 1990 முதலாக தொடர்ந்து படிக்கவும் சேகரிக்கவும் ஆரம்பித்தேன்.

    2. ஒரு புத்தகத்திற்கு பதிலாக ஒரே ஒரு பீரோ என்றால் நான் ரெடி...

    ReplyDelete
  27. டியர் விஜயன் சார்,

    புத்தாண்டு, நாற்பதாம் ஆண்டு மற்றும் ஐம்பத்தாறாம் ஆண்டு நல்வாழ்த்துகள்!

    //கேள்வி # 1 : இந்த 40 ஆண்டுப் பயணத்தினில் நீங்கள் இணைந்து கொண்டது எப்போது முதலாய் ?//
    நீங்கள் 1984-ம் ஆண்டு ஜுலை மாதம், லயனின் முதல் இதழ் வெளியிட்ட போது, ஈரோடில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டிலேயே லயன் மற்றும் ராணியின் அறிமுகம் கிடைத்தது நன்றாக நினைவிருக்கிறது என்றாலும், லயனின் எந்த இதழில் இருந்து என்பது சரியாக நினைவில் இல்லை!

    //கேள்வி # 2 - இந்த நானூற்றிசொச்ச ஆல்பங்களுக்கு மத்தியில் ... மறக்கவியலா இதழ்//
    ஒன்றை மட்டும் சொல்வதெல்லாம் இயலாத காரியம்! தீவுக்கெல்லாம் எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்றால், நல்ல தடியாக இரத்தப் படலம் முழுத்தொகுப்புடன் தான் செல்வேன்!

    //அன்பே உருவானதொரு நண்பர் வட்டத்தை ஈட்டிடும் சூழலும் கிட்டியிருப்பது ஆண்டவனின் கொடையே எனும் போது//
    பெயரில் "விஜய" இருப்பதோடு, அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய புத்தகங்களுக்கு இணையாக சர்குலேஷன் மட்டும் இருந்திருந்தால், யார் கண்டது, நீங்கள் அடுத்த முதலமைச்சராகக் கூட ஆகியிருக்கலாம் சார்! ரமணா பட டயலாக்கைப் போல, நம்மாட்களுக்கு கொஞ்சம் சென்டிமென்ட் கூடுதல். பள்ளி வயதில் இரசித்த படைப்புகளை வெளியிட்டவருடன், நாற்பதாண்டுகள் கழித்தும் அன்புடனும், அவ்வப்போது அடிதடி ரேஞ்சிலும் அளவளாவும் வாய்ப்பு அனைவரிடத்திலும் வாய்ப்பதில்லையே? ஹாட்லைனில் தொடங்கி இன்று வரை, வாசகர்களிடம் மாறாத அன்புடன் நீங்கள் இருப்பது தான் அதன் அடிப்படைக் காரணம்!

    //ஏதேனும் surprise இதழ்களை களமிறக்க முனைவோம் ! //
    "கேப்டன்" டைகர் மற்றும் "கேப்டன்" பிரின்ஸ் - கதைகள் ஒவ்வொன்றை மறுபதிப்பாக வெளியிடலாம்.

    ReplyDelete
  28. ஆசிரியருக்கும் காமிக்ஸ் உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete

  29. இந்த 40 ஆண்டுப் பயணத்தினில் நீங்கள் இணைந்து கொண்டது எப்போது முதலாய்

    யார் அந்த மினி ஸ்பைடரில் இருந்து தொடர்ந்து வரும் பந்தம்

    ReplyDelete
  30. //இந்த நானூற்றிசொச்ச ஆல்பங்களுக்கு மத்தியில் ஒரேயொரு புக்கை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பிகினி தீவுகளுக்குப் போகும் வாய்ப்பு (!!!!) உங்களுக்கு கிட்டிடும் பட்சத்தில் - what would be your pick ? ஒற்றை மறக்கவியலா இதழ் என்றால் அது உங்கள் பார்வையில் எதுவோ ?//

    இரத்தப் படலம் ஜம்போ ஸ்பெஷல் & இரட்டை வேட்டையர்களின் திக்கு தெரியாத தீவில்

    ReplyDelete
  31. சென்ற வருடத்தின்
    டாப் 3
    1.கார்சனின் கடந்த காலம்
    2.சுஸ்கி விஸ்கி ஸ்பெஷல் 1
    3.கொலைப்படை

    டப்சா 3
    1.ஜாகோரின் சிங்கிள் ஷாட் கதைகள் சில
    2.உயிரைத்தேடி
    3.எதுவும் இல்லை

    ReplyDelete
  32. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  33. 1. நாப்பதுல அம்பது. அதாவது என்னோட லயனுடனான பயணம் கத்தி முனையில் மாடஸ்டி வெளியான போதே தொடங்கியது. அப்போ எனக்கு பத்து வயசுக்கு 75 நாட்கள் இருந்தது. அப்போ லயனின் நாற்பதாவது வருடத்தில் எனக்கு ஐம்பது என்பது சரி தானே?

    2. தங்கத்தலைவன் தளபதியின் மின்னும் மரணம்.

    ReplyDelete
    Replies
    1. 2 மின்னும் மரணம் முத்துவில் வந்தது. லயனில் வந்தது என்றால் ரத்தப்படலம் வண்ண இதழ்.

      Delete
    2. லார்கோ வந்தது முத்துவில்

      Delete
    3. பிரியாணி, சில்லி, தந்தூரி, பெப்பர் ப்ரை எதுனாலும் ஆரிஜின் சிக்கன்தானப்பா...😉

      Delete
  34. ஆசிரியருக்கும்...நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுநல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  35. லயன் படிக்க ஆரம்பித்த வருடம் ,இதழ் நினைவில்லையே சார்..


    தனித்தீவில் ஒரு இதழ் எனில் அதே நினைவில்லா நாயகரின் இரத்தப்படலம் முழு தொகுப்பே...!

    ReplyDelete
  36. Q1: கத்தி முனையில் மாடஸ்டி ப்ளைசி
    Q2: பழிவாங்கும் புயல்

    ReplyDelete
  37. கேள்வி 1: 1990 முதல் அறிமுகம், தொடர்ச்சியாக படித்தது 1994 முதல்.

    கேள்வி 2: திக்குத் தெரியாத தீவில்

    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  39. வணக்கம் நண்பர்களே!!

    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. 2023 ரிப்போர்ட் கார்ட்

      வாங்கியவை அனைத்தும்

      வாசித்தவை: 25க்கும் குறைவே. எந்த வருடமும் இப்படி தேங்கியதில்லை. இந்த வருடம் ரொம்பவே பெண்டிங் ஆகிவிட்டது.

      S60 அனைத்தும் ஒன்றிரண்டு கதைகள் மட்டுமே வாசித்துள்ளேன். மீண்டும் எடுக்க தோன்ற மாட்டேன் என்கிறது.

      மறுபதிப்புகள்: பிக் பாய்ஸ் ஸ்பெஷல் தவிர்த்து அனைத்தும் வெயிட்டிங்.

      படித்தவற்றில் அட்டகாசமான இதழ் (ஒருவேளை இனி படிக்கப் போகும் இதழ்களையும் சேர்த்தி இருக்கலாம்) இந்த வருடத்தின் ஆகச் சிறந்த பெஸ்ட்: தாத்தாஸ்!!
      ரொம்பவும் ரசித்துப் படித்தேன்.

      பிப்ரவரியிலாவது தாத்தாஸ்க்கு ஸ்லாட் கொடுத்திடுங்க சார்!!

      Delete
  40. எட்டு ( அ) ஒன்பது வயதிலிருந்து படிக்கிறேன் என்று நினைக்கிறேன்
    எந்த எதை முதலில் படித்தது என்று நினைவில் இல்லை

    எனது சாய்ஸ் புத்தகம்
    லயன் மெகா ட்ரீம் ஸ்பெசல்

    ReplyDelete
  41. 1.லயன் இதழ் எந்த ஆண்டு முதல் படிக்க ஆரம்பித்தேன் என்பது சரியாக நினைவு இல்லை சார்...
    ஆனால் முதன் முதலில் படித்த இதழ்கள் பாட்டில் பூதம் மற்றும் மனித எரிமலை ஆகியவைதான்...
    2.நமக்கு ஒரு எல்லாம் பத்தாதுங்களே சார்,முடிஞ்சா செலக்டிவான புக்ஸ் எல்லாம் கொஞ்சம் எடுத்து பெருசா ஒரே புக்கா பைண்டிங் வேணும்னா எடுத்துட்டு போவேன்...

    ReplyDelete
    Replies
    1. .நமக்கு ஒரு புக் எல்லாம் பத்தாதுங்களே சார்,முடிஞ்சா செலக்டிவான புக்ஸ் எல்லாம் கொஞ்சம் எடுத்து பெருசா ஒரே புக்கா பைண்டிங் செய்து எடுத்துட்டு போவேன்...
      ReplyDelete

      Delete
  42. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..சார்..
    40- ஆண்டுகளாய் உங்களுடன் பயணிப்பது - முதல் இதழிலிருந்தே..
    பிகினி தீவு-என்றால் அந்த அணுகுண்டு சோதனை நடத்தினார்களே ...அந்தத் தீவா.?i.
    ஏன்..சார்..?i..
    எங்களது தேர்வு எதுவாக இருக்கும் என்று உங்களுக்கே தெரியும்..
    ஆத்தூரில்-வெள்ளம் சூழ்ந்ததில்-வீட்டிற்குள் 10 அடி தண்ணீர்..
    புத்தக அலமாரியில் 1-1/2 ஆண்டு புத்தகங்கள் இருந்ததால்
    - அந்த நேரத்தில் மாடிக்கு கொண்டு செல்ல தோணவில்லை..
    அனைத்தையும் தூக்கி லாப்டில்தான் போடமுடிந்தது.
    அனைத்தும் நனைந்துவிட்டன..
    வண்ண இதழ்கள் அனைத்தும்
    காயவைத்ததில் - ஒட்டிக்கொண்டு வீணாகிவிட்டன..
    குறிப்பாக- இரத்தபடலம்-தொகுதி I
    கேப்டன் டைகர் தீபாவளி ஸ்பெஷல்
    லக்கிலூக் ஆண்டு மலர் இதழ்கள்".
    மன்னிக்கவும்-நீங்கள் -ே கேட்டதால் குறிப்பிட்டுவிட்டேன்..
    பரவாயில்லை சார்..
    இந்த புத்தாண்டில்தான் -
    டின்டின் வாரார் - மற்றும் அனைத்து சிறப்பான இதழ்களும் இருக்கின்றனவே..
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. ii

    ReplyDelete
    Replies
    1. புத்தகங்களின் இழப்பு புரிந்து கொள்ள முடிகிறது சகோ
      புத்தாண்டு தங்களுக்கு பல நல்ல விஷயங்களை கொடுக்க வேண்டுகிறேன் சகோ

      Delete
    2. நன்றி..ii..
      உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. ii

      Delete
    3. எனக்கு இன்று. B - Shift..
      10.00-PM- தான் Shift-முடிந்தது- சந்திக்க இயலவில்லையே..

      Delete
  43. 2023-இல் கால்வாசி நான் படித்துள்ளேன்
    அம்மா எல்லாவற்றையும் படித்து விட்டார்
    அவரோட லிஸ்ட் அப்புறமாக

    நான் படித்ததில் எனது டாப் 3
    1. சம்மர் ஸ்பெசல்
    2. தோர்கல்
    3. எல்லாம் கிழமயம்

    டப்ஸா என நினைப்பது
    1. மைக் ஹாம்மர்
    2. ப்ளாக் மெயில் பண்ண விரும்பு

    ReplyDelete
  44. ஆசிரியர்கள்,பணியாளர்கள் & நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...

    ReplyDelete
  45. இனிய நண்பர்கள் ஆகிய உங்களுக்கும் 🤗 Lion Vijayan sir,,🥰🥰 அவர்கள்
    உங்கள் குழந்தைகளுக்கும் 🥰
    உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் 🥰🥰
    எனது 🥰🥰💐💐🌺🌺

    🌸🌸🌸 இனிய ஆங்கில புத்தாண்டு 2024

    வாழ்த்துக்கள் 🌸🌸🌸🌸

    💥💥💥💥💥💥💥💥💥💥💥
    💥💥💥💥💥💥😋😋😋😋😋💥💥💥💥😋.

    💐💐💐💐 வாழ்க வளமுடன்🥰 🌺🌺🌺🌺

    ReplyDelete
  46. கேள்வி # 1 : இந்த 40 ஆண்டுப் பயணத்தினில் நீங்கள் இணைந்து கொண்டது எப்போது முதலாய் ?

    பதினொன்னாங்கிளாஸ் படிக்கிறப்போ...
    அதாவது 2015ஓ 16ஓ..!


    உண்மையைச் சொல்லணும்னா.. சத்தியமா ஞாபகம் இல்லீங்க சார்..! விவரம் தெரிய ஆரம்பிச்ச வயசுலயே படிக்க ஆரம்பிச்சிட்டேன்..! அப்போல்லாம் பழைய புத்தக கடைகளில் இருந்துதான் புத்தகங்களை அப்பா வாங்கி வருவார்..! லயன் முத்து மட்டுமில்லாம பல காமிக்ஸ்கள்.. சிறுவர் இதழ்கள்னு கலவையா படிச்சிக்கிட்டு இருந்த காலம்..! அதனால் வருடம் நினைவில் இல்லை..!

    கடைகளுக்கு போயி பொருட்கள் வாங்கியாரச் சொல்லி அனுப்பும்போது மிச்சம்பிடிச்ச பத்துகாசு இருபதுகாசுன்னு சேத்துவெச்சி நானாக முதன்முதலில் காசுபோட்டு கடையில் வாங்கின புது புத்தகம் ஞாபகம் இருக்கு..!

    டெக்ஸ்வில்லரின் பழிவாங்கும் புயல்

    ReplyDelete
  47. கேள்வி # 2 - இந்த நானூற்றிசொச்ச ஆல்பங்களுக்கு மத்தியில் ஒரேயொரு புக்கை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பிகினி தீவுகளுக்குப் போகும் வாய்ப்பு (!!!!) உங்களுக்கு கிட்டிடும் பட்சத்தில் - what would be your pick ? ஒற்றை மறக்கவியலா இதழ் என்றால் அது உங்கள் பார்வையில் எதுவோ ?


    பிகினி தீவுக்கு புக் எடுத்துக்கிட்டு போயி என்ன பிரயோஜனம்னு மனசுக்குள்ள இருக்குற வாலிபன் கேட்டாலும்....

    ஒரே ஒரு புக் மட்டுமே என்றால்...

    மின்னும் மரணம்


    ஒற்றை மறக்கவியலா இதழ் என்றால்...

    (தனிப்பட்ட காரணங்களுக்காக)

    விண்ணில் ஒரு எலி

    ReplyDelete
  48. சூப்பர் சார்...
    என்ன சொன்னாலும் ஒரு புக்கு முடியவே முடியாது....

    இரத்தப் படலத்த என் கையிலும்
    கார்சனின் கடந்த காலத்த என் மனைவி கையிலும்
    லார்கோ கொத்த மூத்த மகன் கையிலும்
    ஸ்பைடரின் கொலைப் படைய
    என் இளைய மகன் கையிலும் கொடுத்து நான்கு புத்தகங்களோடு போவோம்ல

    ReplyDelete
    Replies
    1. எண்ட பொன்னு மோனே ....போகப் போறது பிகினி தீவுக்கு ! அங்கே வூட்டுக்காரம்மா, பசங்க, பக்கத்து வூட்டு பூனைக்குட்டின்னுலாம் கூட்டிக்கினு போகப்படாது !

      Delete
    2. ROFL... செம்ம சார்.

      Delete
    3. ஆமாம் sir.. ஆத்தாடி.. 😄😄😄😄..

      Delete
    4. பிகினி தீவுல புஸ்தவத்துக்கு மட்டும் என்ன வேலையாம்?

      Delete
  49. சார் மறுபதிப்பு இதழ்கள் பற்றிய விவரங்கள் ப்ளீஸ்,ஸ்டாக் தீர்ந்த இதழ்கள் மட்டும் முன்பதிவா ?!
    இல்லை புதிய மறுபதிப்பு இதழ்களா ?!
    விவரங்களை சொன்னால் ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஏதுவாக இருக்கும்,ஆன்லைன் லிங்க் எப்போது ஓப்பன் ஆகும் சார் ?!

    ReplyDelete
  50. எடிட்டர் ஐயா மற்றும் வாசக நண்பர்கள் , அலுவலக நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  51. 2012 முதல் இணைந்துள்ளேன். ரத்தப்படலம், உயிரைத் தேடி

    ReplyDelete
  52. முதன் முதலில் பணத்தை கொடுத்து கடையில் வாங்கிய புத்தகம், ரிப் Kirby in பொக்கிஷம் தேடிய பிசாசு, அதன் பிறகு எனது பயணம் தொடங்கியது. ஒரு சில புத்தகங்களை தவிர்த்து அனைத்தையும் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  53. Lucky Luke reprint இரண்டாவது புத்தகம் பற்றிய நீங்கள் அறிவிக்கவில்லையே ji, என்ன புத்தகம் ஜி.

    ReplyDelete
  54. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

    கேள்வி # 1 : இந்த 40 ஆண்டுப் பயணத்தினில் நீங்கள் இணைந்து கொண்டது எப்போது முதலாய் ?

    லயனின் முதல் இதழிலிருந்தே (அப்போ எனக்கு 12 வயசாக்கும்)

    கேள்வி # 2 - இந்த நானூற்றிசொச்ச ஆல்பங்களுக்கு மத்தியில் ஒரேயொரு புக்கை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பிகினி தீவுகளுக்குப் போகும் வாய்ப்பு (!!!!) உங்களுக்கு கிட்டிடும் பட்சத்தில் - what would be your pick ? ஒற்றை மறக்கவியலா இதழ் என்றால் அது உங்கள் பார்வையில் எதுவோ ?

    பிகினி தீவு, அதுக்கெல்லம் சான்சே லேது. நீங்க கேட்டதால் சொல்கிறேன்

    சந்தேகமே இல்லாமல் “இரத்தப் படலம்” தான் ! (கருப்பு வெள்ளை தொகுப்பு ஒன்று, கலர் தொகுப்பு ஒன்று)

    ReplyDelete
  55. தலை வாங்கிக் குரங்கு

    ReplyDelete
  56. வல்லவர்கள் வீழ்பவதில்லை

    ReplyDelete
  57. பிகினி island எடுத்துச் செல்ல கண்டிப்பா ஒரே ஒரு புத்தகம் select செய்வது கடினம்.

    ReplyDelete
  58. அனைவருக்கும் மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 😇🙏🏻
    லயன் காமிக்ஸ் எனக்கு அறிமுகமானது என் 12 வயதில்.. 1998 முதல்..
    பிகினி தீவுக்கு நான் போனால் என் கையில் டெக்ஸ் வில்லரின் பழி வாங்கும் புயலை கொண்டுபோவேன்

    ReplyDelete
  59. Around 1999 year end regular buy sir..
    கார்சனின் கடந்த காலம்..
    இரத்தப்படலம்...

    ReplyDelete
  60. புது வருட வாழ்த்துக்கள் விஜயன் சார். 2003 முதல் லயன் காமிக்ஸ் படிக்கிறேன். எனக்குப் பிடித்த இதழ் tex இன் காற்றில் கரைந்த கழுகு, எமனின் எல்லையில் (முதல் பாகத்தின் பெயர் மறந்து விட்டது.) இந்த தொடரை ஒரே புத்தகமாக வண்ணத்தில் மறுபதிப்பில் வெளியிடுங்கள் சார். 🙏

    ReplyDelete
  61. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே 🎈🙂

    ReplyDelete
  62. 1. 1990 முதல்
    2. மின்னும் மரணம்

    ReplyDelete
  63. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  64. பவளச்சிலை மர்மம், தங்க கல்லறை

    ReplyDelete
  65. உங்கள் போன பதிவில் டெக்ஸ் சிக்சர் ஸ்பெஷல் தன உங்கள் டாப் என்று சொல்லி இருந்தீர்கள், surprised . இளம் டெக்ஸ் கதைகள் என்னை சுத்தமாக கவரவில்லை அதுவும் இப்போ வந்த இளம் டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷல் படிக்க முடியவில்லை. மரண அறுவை , டெக்ஸ் எங்கே சென்றாலும் அவரை காப்பாத்த ஒருத்தன் வருகிறான் நடிக்காட்டிலும் கூட நான்கு பாகங்களை படிப்பதற்குள் நாக்கு தள்ளி விட்டது. அப்படியே தூக்கி வைத்து விட்டேன் .
    Tex - The Supremo Special இது வரை வந்த எந்த ஒரு டெக்ஸ் ஸ்பெஷலும் என்னை கவர்ந்ததில்லை ஆனால் Tex - The Supremo Special விதி விலக்கு , 4 கதைகளுமே படித்து விட்டேன் அருமை . மேக்கிங் அருமை

    ReplyDelete
  66. தங்கக் கல்லறை ஒரு கையில் மின்னும் மரணம் இன்னொன்றில்

    ReplyDelete
  67. பதில் 1: பாம்புத்தீவு, பேரிக்காய் போராட்டம், ஊடு சூனியம் என அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருந்தாலும், தொடர்ந்து லயன் முத்துவுடன் பயணித்திருப்பது 2011 மீள்வருகைக்குப் பிறகே.

    பதில் 2: மின்னும் மரணம் மற்றும் கார்சனின் கடந்த காலம் (2023)

    கேள்வி 1: சென்னை புத்தக விழா மறுபதிப்புகள் 2011க்கு பின்பு வந்திருக்கின்றனவா ? இல்லை முதல்முறை மறுபதிப்புகளா, சார் ?

    ReplyDelete
  68. சார் நீங்கள் அனுப்பிய புத்தாண்டு பரிசு கிடைத்தது. மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் அலுவலக பணியாளர்களுக்கும்.

    2024 வெற்றி ஆண்டாக துவங்கியது.

    ReplyDelete
  69. காமிக் உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  70. மினி டெக்ஸ் பருந்துக்கொரு பொறி

    இந்த முறை கிட் வில்லரின் சாகசம். சும்மா டாப் கியரில் ஆரம்பிக்கும் கதை கடைசி வரை அதே வேகம். போன முறை வந்த மினி டெக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை அதற்கும் சேர்த்து இந்த கதை ஈடு செய்து விட்டது.

    ஒரு நகருக்கு வரும் கிட் வில்லர் அங்கே அடி பட்டு விழும் ஒருவருக்கு உதவி செய்ய அவரை தாக்கிய கும்பல் தனது தந்தையால் தேடப் படும் கொலை கும்பல் என்று தெரிந்து அவர்களை பிடிக்க வர சொல்லி தந்தி கொடுக்கிறார். இங்கே தான் சின்ன டுவிஸ்ட். அந்த கும்பலிடம் கிட் மாட்டிக் கொள்ள அவர்கள் கிட்டை வைத்து டெக்ஸ், கார்சன் பொறி வைத்துப் பிடிக்க திட்டமிட.

    அதை தொடர்ந்து நடப்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    எனது மதிப்பெண் 10/10.

    அருமையான துவக்கம்.

    சார் ஒரு வேண்டுகோள் இது போல மினி டெக்ஸ் தொகுப்பை வருடம் 4 முறை 4புத்தகம் கொண்ட தொகுப்பாக வெளியிடலாம் இது எனது நீண்ட நாள் வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. வாம்மா மின்னல்...

      Delete
    2. பொறி பறக்குதுன்னு சொல்லுங்க.

      Delete
    3. உண்மை தான் GP அதை எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன். பிறகு வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

      நன்றி அண்ணா.

      Delete
  71. காமிக்ஸ் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2024 வாழ்த்துகள் 🎉🎉🎂🎉🎂🎉🎂

    ReplyDelete
  72. 1. கத்தி முனையில் மாடஸ்டி

    2. ஒரே புத்தகம் என்றதால், உடனே மனதில் தோன்றியது முதன்முதலாக 10 ரூபாய் விலையில் வந்த அன்றைய தீபாவளி மலர் பாக்கெட் சைஸ் குண்டு புத்தகம். அதை பார்த்த போது அடைந்த மகிழ்ச்சியும், வியப்பும. பால்யத்தின் மறக்கவே இயலாத தருணங்களில் ஒன்று.

    ReplyDelete
  73. Sir,

    So surprising to receive Wing Commander George hardbound and SISCO on the New Year day - smiles can't have a better reason to start 2024 :-)

    Question 1: I joined the month the big size Robot Archie was printed with red cover.
    Forgot both the title and the year. Trichy Padma Cafe bookshop (manned by brothers) had this hung out and I bagged a copy.

    Question 2: For me the dearest is Super Circus - as a boy and first grandson in family I was bereaving the loss of my paternal grandfather - this book made me laugh like anything - especially after the villain loses the diamond tooth :-) For that age it was a laugh riot - and this one redeemed the fun in me.

    ReplyDelete
    Replies
    1. The other titles in Lion dearer to me are:
      THE UNFORGETTABLE LION SUPER SPECIAL (1987 Deepavali)
      - Dragon Nagaram
      - Puratchi Thee
      - All BATMAN titles
      - Mr Z
      - Danger Diabolik (first book)

      Delete
  74. //ஏதேனும் surprise இதழ்களை களமிறக்க முனைவோம் ! //
    Lend me your ears sir ("That Thangakk Kallarai Hard Bound" ... psssstt) :-D ;-)

    ReplyDelete
  75. நான் 1995 இல் ஒன்பதாம் வகுப்பு செல்லும் வரைநான் படித்தது கிராமத்தில்தான். எனவே காமிக்ஸ் இதழ்களோ வேறு புத்தகங்களோ எனக்கு அறிமுகம் ஆகவில்லை. ஆனால் நான் நகரத்திற்கு படிக்கச் சென்ற போது பஸ் ஸ்டாண்டில் பார்த்து ஏதாச்சியாக ராணி காமிக்ஸ் வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அதில் வந்த வேதாளரை முகமூடி வீரர் மாயாவி என்று எனக்கு அறிமுகமானது. ஏதாச்சையாக தோழன் ஒருவனால் லயன் டாப் 10 ஸ்பெஷல் மூலம் லயன் காமிக்ஸ் எனக்கு அறிமுகமானது. நான் படித்த முதல் கதை தலையின் பாலைவன பரலோகம் தான். அப்போது வரை காமிக்ஸ் என்றால் ராணி காமிக்ஸ் என்று இருந்தவனுக்கு எனக்கு லைன் காமி சித்தேஸ்மான் அனுபவத்தை தந்தது.அதன் பின் லைன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் செய் தேடித் தேடி வாங்க ஆரம்பித்தேன். புத்தகக் கடை வைத்திருந்தவரும் எனக்குத் தெரிந்தவர் தான் என்பதால் புத்தகங்கள் கிடைப்பதில் எனக்கு சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் புத்தகங்கள் வர தாமதமாகிய போது நான் போய் தினமும் கேட்டபோது அவரே என்னை ஒரு ஜந்துவை பார்ப்பது போல் பார்க்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் சந்தா என்றால் என்னவென்றே தெரியாது. வீட்டிலும் அதற்கு அனுமதியும் கிடையாது. கையில் காசும் கிடையாது என்னும்போது காத்திருந்து படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக படிப்பை விட்டு விட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்த பொழுது என் கையில் பணம் புரள ஆரம்பித்தது. ஆனால் அப்பொழுது லைன் காமிக்ஸ் வருவது கிட்டத்தட்ட நின்று விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சரி நிறுவன நிறுத்தி விட்டார்கள் போல் தெரிகிறது என்று சமாதானப்படுத்திக் கொண்டு இருந்து விட்டேன். 2012 மறுவருகையும் எனக்கு தெரியாமல் போய்விட்டது. ஒருமுறை தாராபுரத்துக்குச் சென்ற போது ஏதாச்சியாக ஜெபி புத்தக சென்டரில் தளபதியின் மின்னும் மரணம் ஆயிரம் ரூபாய் விலையில் வருவதாக கட்டவுட் வைத்திருந்ததை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதன்பின் ஓர் இரு வருடங்கள் அந்த கடையிலேயே சென்று வாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு உஸ்தவம் வருவதும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை தான் என்பதால் பல புத்தகங்கள் தவறவிட வேண்டியதாகி விட்டது. அதன் பின் தற்போது வரை சந்தா கட்டி படித்து வருகிறேன். எனக்கு முத்துகாமிக்சில் இன்றுவரை பிடித்த இதழ் தங்க கல்லறை மற்றும் மின்னும் மரணம். எனக்கு லைனில் மிகவும் பிடித்த இதழ் மரண முள் தான். பிகினி தீவுக்கு எடுத்துப் போவதாக இருந்தால் ரத்தப் படலத்தை எடுத்துக் கொண்டு செல்வேன்.

    ReplyDelete
  76. The Lion Comics 40th year milestone is exciting sir !

    Lion Comics 40 - MY OWN COMICS !

    I have read the best of comics from across the world sir - from our very own Indian brands like ACK, STAR, Tinkle - to international brands like DC, MARVEL - nothing just nothing resonates with LION COMICS and the logo sir !

    ReplyDelete
  77. டிசம்பரின் அடுத்தகட்ட இதழ்கள்,
    1.விங் கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷல்-1,
    2.மினி டெக்ஸ்,
    3.ஏஜெண்ட் சிஸ்கோ.
    இதழ்கள் இன்று மதியம் கிடைத்தன சார்...

    ReplyDelete
  78. விங் கமாண்டர் ஜார்ஜ் அட்டகாசமான பைண்டிங்,தகதக அட்டையில் கலரிங் என அசத்துகிறது...
    சிஸ்கோ உள்ளே வர்ணஜாலம் செய்கிறார்...

    ReplyDelete
  79. Cisco - very much intresting, action packed...but need to wait for next parts.. Pls try to release balance as early as possible Sir, delay will hurt...

    ReplyDelete
  80. Q1- mid 80s
    Q2- 1987 kodai malar...kundu book

    ReplyDelete
  81. ////கேள்வி # 1 : இந்த 40 ஆண்டுப் பயணத்தினில் நீங்கள் இணைந்து கொண்டது எப்போது முதலாய்////

    சுத்தமாக ஞாபகமில்லை சார்...பழைய புத்தகக் கடைகளிலேயே நிறைய புக்ஸ் கெடச்சது..புது புக்கா வாங்கினது கௌபாய் எக்ஸ்ப்ரஸ்.

    டெக்ஸ் வில்லர்ல மந்திர மண்டலம்.

    அதிலேர்ந்து கடைகளிலே ரெகுலரா வாங்கி விடுவேன்.

    ReplyDelete
  82. ஒரேயொரு புக் என்றால்..

    மின்னும் மரணம் தான்.

    ReplyDelete
  83. Tex - Parunthukkoru Pori - super fast, don't miss it.. Superb krispy story

    ReplyDelete
  84. 2023 ல் டாப் 5

    மீண்டு வந்த மாயன்.
    தளபதி ஸ்பெஷல்.
    எந்தையின் கதை
    சுப்ரிமோ ஸ்பெஷல்.
    கொலைநோக்குப் பார்வை

    (படித்ததில் படிச்சது)

    ReplyDelete
  85. 2023 சுமாரான கதை

    மீண்டும் ஒரு அசுரன்.
    காலனின் கால் தடத்தில்..

    ReplyDelete
  86. Best அட்டைப்படம்..

    தளபதி ஸ்பெஷல்.

    ReplyDelete
  87. 2023 சந்தாவின் கடைசி இதழ் சற்றுமுன் வந்து கிடைத்தது...

    இதழ் ரொம்பவே இளைத்துள்ளதில் இருந்தே தெரிகிறது, பைண்டிங்ல எவ்வளவு அடி வாங்கியிருக்கும்னு...😉

    ப்ரீ டெக்ஸ் அருமையான தயாரிப்பு தரம் சார்..

    ஐ யாம் கோயிங் டூ செலிபரேட் நியூ இயர் வித் டெக்ஸ்..🎇🎆😻

    ReplyDelete
  88. பருந்துக்கொரு பொறி,
    அரிஸோனாவில் சின்னக் கழுகின் என்ட்ரியுடன் ஆரம்பிக்கும் கதைக்களமானது ஆரம்பத்திலேயே ஆக்‌ஷன் சூட்டுடன்தான் ஆரம்பிக்கிறது...
    தேடப்படும் குற்றவாளிகளுடன் ஏற்படும் உரசல் சூழ்ச்சி திட்டத்தால் நேரடி மோதலாய் மாற,தேடப்படும் கும்பல் குழுவாய் வலை விரிக்க,சின்னக் கழுகு சிங்கிளாக சிவக்க...
    அனல் பறக்கும் ஆக்‌ஷன் மேளாதான்...
    மோதலின் இறுதியில் சின்னக் கழுகு தப்பித்தாரா ?!
    தந்தை டெக்ஸ்வில்லர் வந்து காப்பாற்றினாரா ?!
    2024 இல் இதுபோன்ற பொறிபறக்கும் டெக்ஸ் மினிவெடிகள் இல்லை என்பது வருத்தமே,அடுத்த ஆண்டாவது வரும் என எதிர்பார்க்கிறேன்...
    வழுவழுப்பான தாள்களில்,சிறப்பான கலரிங்கில்,தரமானதொரு இலவச இணைப்பு...

    ReplyDelete
  89. TeX- பருந்துக்கொரு பொறி...

    கிட் வில்லரையும் நாயகனாக கொண்டு ஒரு கதை படைங்கப்பானு போனெல்லியில யாரோ கேட்டிருப்பாங்க போல....

    டெக்ஸ்& சார்சரை ஒதுக்கிட்டு சாட்சாத் சின்ன கழுகே நாயகன்..

    கதையென்னவோ டெக்ஸை வரவைக்கும்படி நகர்ந்து நமக்கு போக்கு காட்டிட்டு, சின்னவரே ஆடித் தீர்த்திடுறாரு...

    பொடி கதைக்கு ஏற்ற அனல் பொறி...

    கதை 10/10

    ஓவியங்கள், கலரிங் 10/10

    வசனங்கள் 8/10 (கிரிஸ்ப் கொஞ்சம் குறைவு)

    தயாரிப்பு 10/10

    நெருடல்கள்...

    பக்கம் 23# விரியன் பாம்பை சாரைப்பாம்பு என போட்டிருப்பது.

    பக்கம் 25# ல 5தோட்டா காலி என கிட் சொல்லிட்டு, பக்கம் 28ல க்ளவுஸ் & எஸ்டபென் இருவரையும் அடுத்தடுத்து சுடுவது! திடீர்னு இன்னொரு தோட்டா எங்கிருந்து கிடைத்தது??

    ReplyDelete
    Replies
    1. // பக்கம் 23# விரியன் பாம்பை சாரைப்பாம்பு என போட்டிருப்பது.// கரெக்ட் அது Rattle Snake

      பக்கம் 25# ல 5தோட்டா காலி என கிட் சொல்லிட்டு, பக்கம் 28ல க்ளவுஸ் & எஸ்டபென் இருவரையும் அடுத்தடுத்து சுடுவது! திடீர்னு இன்னொரு தோட்டா எங்கிருந்து கிடைத்தது??

      இதையும் நான் கவனித்தேன்.

      Delete
  90. பருந்திற்கொரு பொறி

    கடுகு சிறுத்தாலும் காரியம் பெரியது என்பது மாதிரி, 32 பக்க மினி டெக்ஸ் சின்னக் கதைனாலும் சும்மா தெறி ரகம்! ஆக்ஷன் பேக்ல பரபரவென நகர்கிறது. கதையில் வரும் தந்தி அனுப்பும் அந்த ரகசிய வார்த்தைகள் அடடே என சொல்ல வைக்கிறது. டெக்ஸ் கதைதான், ஆனால் ஹீரோ அவரல்ல. யாரென்று அறிய மினி கிட் இதழைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜாகோர் டார்க்வுட் சீரிஸில் வந்த கதைகளின் கதாசிரியரான மொரேனோ புராட்டினி இந்த கதையைப் பரபரவென படைத்துள்ளார். அதற்கு பக்கபலமாக ஓவியர் ரபெல்லே டெல்லா மோனிகா கைவண்ணத்தில் அட்டகாசமான சித்திரங்கள்.

    மினி டெக்ஸ் ஒரு அமெச்சூர் ஓவியருக்கான முகாந்திரத் தளமாக இருப்பதுண்டு. ஆனால், இந்தக் கதையில் ஏற்கனவே டெக்ஸின் 'சிகப்பாய் ஒரு சிலுவை' போன்ற கதைகளில் பணியாற்றிய ஓவியர் டெல்லா மோனிகாவின் தூரிகை வர்ணஜாலத்தில் மலர்ந்துள்ளது.
    கதை சிம்பிள் பட் பவர்ஃபுல்.

    ReplyDelete
  91. ஆரம்பிச்சது 1991 ஆ இல்ல 1992 ன்னு சரியா ஞாபகம் இல்லை.
    எது முதல் கதைன்னும் ஞாபகம் இல்லை. ராணிக் காமிக்ஸ் வந்த காலகட்டம்றதால இரண்டையும் படித்தது அப்போது.

    ReplyDelete
  92. இரத்தப் படலம் வண்ணத் தொகுப்பும் & காராசனின் கடந்த காலம் மேக்ஸி சைஸ் புக்கும்.

    ReplyDelete
  93. சாரி சார்....சின்ன மாற்றம்....தோழர்கள் மறந்துட்டேன்....கொலைப் படைக்கு பதிலா தோர்கள்....


    நான் இரண்டாம் வகுப்பு படிக்கைல ரொம்ப நாளாக கடைல தொங்கிய இரும்பு மனிதன்தான் முதல் கதை...

    ReplyDelete
  94. கேள்வி - 1,
    பவளச்சிலை மர்மம்
    கேள்வி - 2
    இரத்தப்படலம்&
    மின்னும் மரணம்

    ReplyDelete
  95. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ.

      Delete
    2. மிக்க நன்றி சகோ, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐

      Delete
  96. இன்னாது பிகினிதீவா.. அப்பீட்ட்ட்ட்...

    ReplyDelete
  97. 1986களில் இருந்துதான் லயன் காமிக்ஸ் ஆங்காங்கே உறவினர்கள் வசமிருந்து போக்குக் காட்டிக் கொண்டே இருக்கும். திருக்கோவிலூரில் மட்டுமே அப்போது லயன் வரும் என்பதால் அங்கே தொங்கும் அட்டைகளை இன்னுமே மனக்கா.சியில் காண முடிகிறது. லயன் சந்தாதாரராக இணைந்து வீட்டுக்கே லயன் வந்ததில் இருந்து லயன் வீட்ல ஒருத்தர்தான். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  98. Rathapadalam . I bought in 1972 irumbu Kai mayavi and continuing and with same even more enthusiasm by the way of all disciplines like story design dialogues colours history behind and making mad of us thanks for all.

    ReplyDelete
  99. I used to see how movies and read English action and humourous novels since 1970. Now our comics taken over all my attention as I cannot miss single frame. I am very lucky to have your brotherhood .GOD bless you all as you people astonishing me. Carry on and shine ever, sirs.

    ReplyDelete
  100. வணக்கம் சார்.

    2023ல் வெளியான அனைத்து இதழ்களையும் வாங்கிவிட்டேன்.

    .. இன்னும் படிக்காதது கீழே உள்ளவை தான்.

    1.டைகர் ஸ்பெஷல்.
    2.காலனின் கால்தடத்தில்.
    3.கலாஷ்னிகோவ்.
    4.விங் கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷல்.
    5.இலவச சிறு டெக்ஸ் புக்.

    . நன்றிங்க சார்.

    ReplyDelete
  101. கலாஷ்னிகோவ் காதல்

    அக்மார்க் சிஸ்கோ அதிரடி. எடுத்ததும் தெரியல முடித்ததும் தெரியல சும்மா ஜெட் வேகம்.

    அல்பேனிய அரசுக்கு எதிராக ஃப்ரெஞ்ச் President ஐ நா சபையில் ஒரு உரை நிகழ்த்த நியூயார்க் செல்ல முடிவு செய்ய, அதை நடக்க விடாமல் செய்ய ஒரு கும்பல் களம் இறங்க, தெறிக்குது கதை அவர்கள் சிஸ்கோ வின் சகோதரியை கடத்தி செல்ல அவளை மீட்க சிஸ்கோ ஆடும் ருத்ர தாண்டவம் தான் இந்த கதை.

    எனக்கு மிகவும் பிடித்தது

    மதிப்பெண் 10/10.

    ReplyDelete
  102. இன்னும் விங் கமாண்டர் ஜார்ஜ் மட்டும் பாக்கி. நாளுக்கு ஒன்றாக அவர் கதைகளை படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  103. 2023ல் இன்னும் படிக்காத கதைகள்

    1. கார்சனின் கடந்த காலம் (படிக்க எடுத்தால் படங்களை ரசிப்பதிலேயே நேரம் போய் விடுகிறது. ஒரு முழு நாளுக்காக காத்திருக்கிறேன்)
    2. காலனின் கால்தடத்தில். (இன்று படித்துவிடுவேன்)
    3. கலாஷ்னிகோவ் காதல்.
    4. விங் கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷல்.
    5. இலவச சிறு டெக்ஸ் புக்.

    3-5 இன்னும் கைக்கு வந்து சேரவில்லை.

    ReplyDelete
  104. 1. 1990லிருந்து தொடர்ந்து படிக்கவும் சேகரிக்கவும் ஆரம்பித்தேன்.
    2. ட்ராகன் நகரம்/தங்கக் கல்லறை/மின்னும் மரணம்/இரத்தப் படலம் /அதிரடிப் பொடியன் (லக்கி லூக்)/ராஜா ராணி ஜாக்கி இவை அனைத்தும் இணைந்த மெகா இதழ் மேக்ஸி சைசில் இருந்தால் பிகினி தீவு என்ன, பெர்முடா முக்கோணத்திற்கே போக ரெடி.


    மேற்கண்ட கதைகள் தனித்தனியாக மேக்ஸி சைசில் வெளியிடுங்கள் சார்...

    ReplyDelete
  105. 1 . எனது புத்தக வாசிப்பு அனுபவம் 1988 இல் ராணி காமிக்ஸில் தொடங்கியது - சிலந்தி வலை, லயன் காமிக்ஸில் இஸ்தான்புல் சதி இல் தொடங்கியது
    2 . ஒன்னு அண்ட் ஒன்லி மின்னும் மரணம்.....

    ReplyDelete
  106. லயன் காமிக்ஸ் பொருத்தவரை கத்தி முனையில் மாடஸ்டியிலிருந்து, ஆனால் முதலில் படித்தது முத்து வீக்லி என்று நியாபகம். எங்கள் தந்தை ஒரு புத்தக பிரியர் என்பதால் நான் புத்தகத்தில் முதன் முதலில் படம் பார்த்து பழகியதே முத்துவில் தான்.

    ReplyDelete
  107. ஒரு அக்மார்க் ஜேம்ஸ் பாண்ட் குணம் என்ன?


    ஆணவம் அகந்தை கர்வம் அதீத தன்னம்பிக்கை


    இருக்கு


    பெண்கள் இவர் மீது மையல் கொள்வார்கள்


    இருக்கு


    துரத்தும் படலம் அதிகம் இருக்கும்


    இருக்கு


    கண்டமேனிக்கு சுட்டுக் தள்ளுவார். பிறர் சாவது கண்டு வருத்தப் படமாட்டார்.


    இருக்கு



    இப்படி அனைத்து ஜேம்ஸ் பாண்ட் குணங்களும் கொண்டவர் தான் மைக் ஹேம்மர்


    ஆனால் ஜேம்ஸ் பாண்டுக்கு இருக்கும் ஒரு குணம் இங்கு மிஸ்ஸிங். அது என்ன என்று நீங்களே கண்டுபிடிங்க. அந்த மிஸ்ஸிங் பாய்ண்ட் தான் இந்த மரணம் சொன்ன இரவு கதையின் நெகடிவ் விமர்சனத்துக்கு காரணம் என்று நினைக்கிறேன்.


    முதல் மூன்று பக்கங்கள் ஓவிய கண்காட்சி, வசனங்கள் எதுவும் இல்லாத பர பர சேஸிங் சீன். கேமிரா அங்கிள் சுழல்கிறது. மைக் ஹேமர் எப்படியாக பட்டவன் என்று எடுத்துச் சொல்ல இந்த முன்கதை அவசியமாகிறது. இந்த முன்கதையிலேயே மைக் ஹேம்மர் யார் என்பதை உணர்ந்துக் கொள்ளலாம்.


    அதன் பின் நடப்பது ஒரு பெரிய சதி வலைப் பின்னல். அதில் மைக் ஹேம்மர் எப்படி அந்த சதி வலையில் இருந்து வெளியே வந்தார் என்பது தான் கதை. யார் வில்லன் என்பதிலேயே கதை நகர்கிறது. திரைக்கதை அமைக்கும் பொழுது செய்யக் கூடாத தவறு என்று ஒன்று உள்ளது. அது தான் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் காட்சி வைப்பது.


    இங்கு அந்த தெருவோரத்தில் வாழும் கேப்டன் என்ன பார்த்தார், எதற்காக அவரைக் கொன்றனர் என்பது தான் சஸ்பென்ஸின் மையப்புள்ளி. அதை எங்காவது ஒரு இடத்தில் ஆரம்பத்திலேயே உட்புகர்த்தி இருக்க முடியும். அந்த ஒற்றைப் புள்ளியில் கோட்டை விட்டதால் சிறு ஏமாற்றம் மிஞ்சுகிறது. ஆனால் சரவெடிக் கதை தான். அதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை


    பிளஸ்


    ஓவியங்கள்
    கதை நகர்த்தல்


    மைனஸ்

    பெண்களில் உடலமைப்பு சற்று ஓவராக சித்தரிக்கப் பட்டுள்ளது


    ஏற்கனவே நிறைய சினிமாக்களில் பார்த்த கேட்ட பன்ச் டைலாக்ஸ்


    45 ஆம் பக்கமும் 46 ஆம் பக்கமும் பக்கம் பக்கமாக சென்டர் பேஜ் லே அவுட்டில் இருந்திருக்க வேண்டியது. அதை முன் பின்னாக போட்டு குழப்பியது.


    கதை 8.5/10
    ஓவியங்கள் 8.5/10
    மேக்கிங் 8/10

    (போட்டிக்காக எழுத நினைத்தது. கடைசி நேரத்தில் வேலை பளுவால் இங்கு குறித்த நேரத்தில் பதிவு செய்ய இயலவில்லை )

    ReplyDelete
  108. கலாஷ்னிகோவ் காதல்

    வழக்கமான சிஸ்கோ கதை இல்லை, சென்ற ஆல்பத்தின் தொடர்ச்சி மட்டுமல்லாது, சிஸ்கோ வின் பூர்வீகம் குறித்தும் நான் லீனியர் முறையில் கதை பின்னிப் பிணைந்து செல்கிறது. அடுத்த பாகத்துக்கு காத்திருக்க முடியவில்லை என்பது தான் சிக்கலே. சஸ்பென்ஸ் என்பது எனக்கு பிடிக்காத சங்கதி. ஆனால் இந்த கதையை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. நேற்று இரவு 7 மணிக்கு புத்தகம் கைக்கு வந்தது. அதற்குள் மூன்று முறை புரட்டி விட்டேன். படிக்க எடுத்துக் கொண்ட நேரம் 1 மணி நேரம்.

    மேக்கிங் 8/10

    ReplyDelete
  109. பருந்துக்கொரு பொறி

    என்னடா இது கிட் இப்படி மாட்டிக் கொண்டானே, இப்ப டெக்ஸ் வந்து காப்பாத்தினால் தான் ஆச்சா. என்று ஆயாசமாக பக்கங்களை புரட்டினால் ஆச்சரியங்கள்.. ஆஹா என்று நிமிர்த்து உட்கார்ந்ததில் இந்த கதையில் இருந்த பல லாஜிக் மிஸ்டேக்ஸ் புறந்தள்ளி படித்துக் கொண்டே இருந்தேன்.

    மேக்கிங் 9.5/10

    ReplyDelete
  110. //கேள்வி # 1 : இந்த 40 ஆண்டுப் பயணத்தினில் நீங்கள் இணைந்து கொண்டது எப்போது முதலாய் ?//

    தீபாவளி ஸ்பெஷலாக வந்த ‘இரும்பு மனிதன்’ தொடங்கிவைத்த பயணம்.

    //கேள்வி # 2 - இந்த நானூற்றிசொச்ச ஆல்பங்களுக்கு மத்தியில் ஒரேயொரு புக்கை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பிகினி தீவுகளுக்குப் போகும் வாய்ப்பு (!!!!) உங்களுக்கு கிட்டிடும் பட்சத்தில் - what would be your pick ? ஒற்றை மறக்கவியலா இதழ் என்றால் அது உங்கள் பார்வையில் எதுவோ ?//

    ஒரு கோச் வண்டியின் கதை

    ReplyDelete
  111. கத்தி முனையில் மாடஸ்தி புத்தகத்தில் இருந்தே ஸ்டார்ட் பண்ணியாச்சு, அந்த நேரத்தில தூத்துக்குடியில உங்க புத்தகங்கள் சரியா கிடைக்காததால நிறைய புத்தகங்கள் மிஸ்ஸிங்.. பிடிச்ச கதை: தங்க கல்லறை

    ReplyDelete
    Replies
    1. நா இங்க வரதுக்கு முந்தி வாங்குவதே...அதாவது கோடைல மதுரை தூத்துக்குடிலதா...கோவைக்கெல்லாம் பிறகுதான் வரும்...அருகிலிருப்பதாலோ என்னவோ

      Delete
  112. நேத்து மதியமே வந்தாச்சாம்....இப்பதா தகவல் வந்தது ..:பக்கத்து பேக்கரில கொடுத்திருக்காங்க நானும் ஊர்ல இருந்ததால் பிடிக்க முடில ...போய் வாங்கி...இரவு வருகிறேன்

    ReplyDelete
  113. 1985 இருந்து படிக்க ஆரம்பித்தேன். இன்னும் விடலை. முத படிக்க ஆரம்பித்த book நினைவு இல்ல. All time best na இரத்த படலம், பாரகுடா , பிஸ்டளுக்கு பிரிய விடை and மனதில் உறுதி வேண்டும்

    ReplyDelete
  114. கேள்வி 1:
    1987ம் ஆண்டு எனது அப்பா கீழே கிடந்த அந்த பாக்கெட் சைஸ் 'நீதிக்காவலன் ஸ்பைடர்" காமிக்ஸ் புக் கண்டெடுத்து உள்ளே இருந்த 5 ரூபாய் நோட்டு எடுத்து கொண்டு "இந்தாடா அப்பு, பொம்மை
    புக்" என்று அதனை எனக்கு கொடுத்தார்.

    3ம் வகுப்பில் தமிழ் படிக்க கற்று கொண்டாலும் எனது அக்கா மூலமே ஒவ்வோரு பக்கமாக கொஞ்சமும் புரியாமல் கேட்டறிந்து கொண்டேன். ஸ்பைடர் சொல்லும் "நான் வணங்கும் அக்னார்க்? தேவதை மேல் சத்தியம்' என்ற வசனம் ஆழமாய் பதிந்த ஒன்று.
    பின் எழுத படிக்க தெரிந்த போது 5ம் வகுப்பு நண்பன் ராஜேஷ் ஆர்வமூட்டி படிக்க செய்திட்டான்.

    1988ம் வருடம் ஜூன் மாதம் முதலே காமிக்ஸ் என்னும் சுவை அறிந்து புரிந்து கொண்டேன். நண்பன் அறிமுகம் செய்திட்ட (ராணி )காமிக்ஸ் மூலம் இந்த சித்திர கதை உலகில் உள்ளே வந்தேன்.

    பெய்ரூட்டில் ஜானி எனக்கு சொந்தமாக கிடைத்த முதல் பாக்கெட் சைஸ் புத்தகம்... 50 பைசா விலைக்கு வாங்கியது என்று நினைக்கிறேன்.
    சூப்பர் ஸ்டார் ஸ்பைடர் உடன் நான் கேட்டு கடை பெரியவரிடம் இலவசமாய் வாங்கின முதல் காமிக்ஸ் கொள்முதல்.

    இராட்சத குள்ளன் நான் 50 பைசா விலையில் ஒரு பழைய கடை தாத்தாவிடம் வாங்கிய ஒன்று, எனது முதல் லயன் முழு நீள காமிக்ஸ் புரிந்த கதையானது என்று தான் நினைக்கிறேன்

    யார் அந்த மினி ஸ்பைடர்? நான் ரெட் refill கொண்டு மினிஸ்பைடர் ஸ்பைடர் மோதும் ஸ்டில் நண்பனிடம் வரைந்து கொடுத்து கிரயமாய் படித்த கதை.

    தொடர்ந்து வெளிவந்த வந்த நான் முதலில் கடையில் நேரடியாக வாங்கின சிறுப்பில்ளை விளையாட்டு, அதன் பின் இறந்தவனை கொல்லாதே, விசித்திர நண்பன் போன்றவை எல்லாம் நான் கடையில் வீட்டில் அம்மா அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கின லயன் திகில் காமிக்ஸ்.

    இறந்தவனை கொல்லாதே கருப்பு கிழவி கதை ஒன்று படித்து என் அம்மா என்னை நிரம்பவே பாராட்டியது மறக்க இயலா அனுபவம்.

    1988கள் எனக்கு அது ஒரு காசில்லா கனாக்காலம்.

    ReplyDelete
  115. //சிறைப்பிறவைகள் (பெய்ரூட்டில் ஜானி அதன்பின்) எனக்கு சொந்தமாக கிடைத்த முதல் பாக்கெட் சைஸ் புத்தகம்... 50 பைசா விலைக்கு வாங்கியது என்று நினைக்கிறேன்.
    அத்துடன் சூப்பர் ஸ்டார் ஸ்பைடர் booklet ம் நான் கடை பெரியவரிடம் இலவசமாய் கேட்டு வாங்கின முதல் காமிக்ஸ் கொள்முதல்.//

    ReplyDelete
  116. 1.நடுநிசி கள்வன் Ist edition
    2.இரத்தப் படலம்

    ReplyDelete
  117. கொரியர் வந்துவிட்டது.
    விங் கமாண்டர் ஜார்ஜ் அட்டைப்படமே அசத்தல் ரகம்.
    அற்புதமான தயாரிப்பு.
    இனிமேல் குண்டு புக் கிடையாது என்பது ஏங்கவும் வைக்கிறது.
    சிஸ்கோவும் அட்டைப்படத்தில் அசத்துகிறார்.
    நாளை தான் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  118. Wing commander jeorge collection கைகளுக்கு வந்து விட்டது, my favourite ஹீரோ, வெகு நாட்களாக உங்களிடம் வேண்டுகோள் வைத்தது, ஒரு வழியாக கிடைத்து விட்டது, நன்றி எடிட்டர் ஜி, ஒவ்வொரு கதையாக வைத்து படிக்கலாம். பத்து கதைகளில் முதலில் ,பத்து டாலர் நோட்டு முடிந்தது. அடுத்தது நெப்போலியன் பொக்கிஷம்.

    ReplyDelete