Tuesday, December 05, 2023

சுறாக்களின் மாதம் !

 நண்பர்களே,

வணக்கம்.  நேற்றைய தினத்தில் சென்னையில் கொட்டித் தீர்த்த பேய் மழையினை திகிலோடு கவனித்தபடிக்கே, கூரியரில் இதர நகரங்களுக்கான புக்ஸ்களை மாத்திரமே டெஸ்பாட்ச் செய்திருந்தோம் ! கொஞ்சமே கொஞ்சமாய், மழை விட்ட பிற்பாடு சென்னைக்கான டப்பிக்களை அனுப்பிடச் சொல்லி நான் தான் சக்கையைப் போட்டிருந்தேன் ! அவையும் இன்று (செவ்வாய்) கிளம்பி விட்டன - ஒரு எக்ஸ்டரா பாலிதீன் கவரோடு ! பத்திரமாய் இருந்து கொண்டு, பத்திரமாய்ப் புக்ஸ்களை பெற்று கொள்ள புனித மனிடோ நண்பர்களுக்கு அருள் பாலிப்பாராக ! Stay safe folks !!

தற்செயல் தான் ; ஆனால் டிசம்பர் கூட்டணியின் 2 அட்டைப்படங்களில் இரு சுறாக்கள் இடம்பிடித்திருப்பது something of a surprise ! பொதுவாய் நமது கதைகளில் வன விலங்குகள் கணிசமாய் இடம்பிடித்துள்ளன - "மர்ம தேசம் கென்யா" பாணியில் ! அட, பாம்புகள் ; ராட்சச நண்டுகள் ; ஏன் - டைனோசார்களே டெக்ஸ் கதைகளில் கூட இடம்பிடித்துள்ளன தான் ! ஆனால், எனக்கு நினைவுக்கு வரும் வரையிலும் திமிங்கலம் ; சுறா என்றெல்லாம் கடல்வாழ் கொலையாளி மீன்களை அவ்வளவாய் நாம் பார்த்தது இல்லை ! (எங்கேயோ ஆக்டொபஸ் மீன்களை பார்த்த ஞாபகம் உண்டு!)  So ஒரே மாதத்தில் நமது 'தல'யோடு ஒருக்கா ; 'பம்' காட்டும் பாப்பாவோடு இன்னொருக்கா - என டபுள் ஆக்ட் கொடுத்துள்ள சுறாக்கள் இந்த டிசம்பருக்கு மெருகூட்டுகின்றன !  

ஏற்கனவே 4 இதழ்கள் பற்றியும் previews பார்த்து விட்டோம் என்பதால், புதுசாய் சொல்ல, கம்பி கட்டும் கதைகளேதும் மீதமில்லை ! So ஒரு வாசகனாய், இந்த நான்கில் நான் எதை - எந்த வரிசையில் தேர்வு செய்வேனென்ற வரலாற்றுத் தரவினை பதிவிட இந்த மினி பதிவில் விழைந்திடுவேன் guys !!  

பொதுவாய் இங்கி-பிங்கி-பாங்கி போடுவதே விஞ்ஞானபூர்வ நடைமுறை ; ஆனால் இம்மாதத்து 4 இதழ்களும், அதனதன் பாணியில் வித்தியாசப்பட்டு நிற்க, நிதானமாய் ரோசனை செய்வேன் ! Doubtless - தண்ணீருக்குள் உள்நீச்சலடிக்கும் 'தல' தான் வாசிப்பின் வரிசையில் முதலிடம் பிடித்து நிற்பார் ! மங்கு மங்கென்று பாலைவனங்களிலும், காடு-மேடு-மலைகளிலும் சவாரி செய்பவர் சுறாவுக்கு 'ஹல்லோ' சொல்ல என்ன முகாந்திரம் இருக்கக்கூடுமோ ? என்ற குறுகுறுப்பு எனது முதல் தேர்வினை வழிநடத்திடும் ! பற்றாக்குறைக்கு ஆரம்பமே சான் பிரான்சிஸ்கோ ; ஒரு ஆசாமியைக் கண்ணைக்கட்டி கடலுக்குள் அழைத்துப் போகும் sequence எனும்போது மாமூலிலிருந்து இந்த சாகசம் விலகிப் பயணிப்பது புரியும் ! So குஷியாய் டெக்ஸ் & தாத்தாவோடு பயணத்தினை ஆரம்பிப்பேன் !

அதே காரணமே - எனது தேர்வு # 2 ஐ கூட நிர்ணயிக்கும் ! பொதுவாகவே கிராபிக் நாவல் என்றாலே ஏதோவொரு புதுக்களம் என்பது உறுதி ! And "காலனின் கால்தடத்தில்" முன்னட்டையிலும் சரி, பின்னட்டையிலும் சரி - கோடிட்டுக் காட்டப்படுவது ஒரு ஹாரர் த்ரில்லர் காத்துள்ளதென்பதை ! இது பேய்-ஆவி-அமானுஷ்யம் என்ற ரேஞ்சிலான கதையாக இருக்குமா ? அல்லது வேறு ஏதேனும் ஹாரரா ? என்பதை தெரிந்து கொள்ள பரபரப்பாய் கி.நா.வுக்குள் புகுந்திருப்பேன் ! 

'டக்'கென்று அடுத்ததாய் நான் புரட்டியிருப்பது V காமிக்சின் "கொலைநோக்குப் பார்வை" யாகத் தானிருக்கும் - simply becos எப்போதும் போலவே இங்கு crisp வாசிப்பு உறுதியென்பதை ராபின் சொல்லியிருப்பார் ! அந்த ஸ்டைலிஷான லைன் டிராயிங்ஸ் black & white-ல் செமையாய் ஈர்ப்பது இன்னொரு காரணமாகியிருக்க, வேகமாய் ராபினோடு நியூ யார்க்கில் நூறு ரூபாய்ச் செலவினில் லேண்ட் ஆகியிருப்பேன் ! 

Which means - நமது புன்னகைமன்னர் ஜானி எனது வாசிப்பில் இறுதி இதழாக இருந்திருப்பார் ! And சில நேரங்களில் saving the best for the last என்றும் சொல்வார்களல்லவா - அது நிஜமாகி டிசம்பரின் நான்கில் "ஜானிக்கொரு தீக்கனவு" தான் டாப்பாகவும் இருந்திடக்கூடும் ! இம்மாதத்தின் ஒரே கலர் இதழும் என்பது இந்த இதழை ரசிக்க ஒரு கூடுதல் காரணியாகியிருக்கக்கூடும் ! 

ரைட்டு...நீங்கள் எந்த வரிசையில் வாசிக்கத் தீர்மானித்திருந்தாலும் சரி, வாசிப்பின் பலன்களை பகிர்ந்திட மறவாதீர்கள் ப்ளீஸ் ! And இதோ - ஆன்லைன் லிஸ்டிங் ரெடி : https://lion-muthucomics.com/latest-releases/1148-december-pack-2023.html

Happy Shopping & Happier Reading folks ! மீண்டும் சந்திப்போம் !

228 comments:

  1. Here crocodile walked the street sir - not far from a day when Sharks come for sight-seeing - 2030la nichiyam :-) !!

    ReplyDelete
  2. Sir the 2023 catalogue post on the right top may change to 2024 catalogue?

    ReplyDelete
  3. December month pack ordered today sir.
    This month no one avoided.thanks sir.

    ReplyDelete
  4. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  5. உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி :
    வழக்கமா கதை கும்,நங்,சத் என தொடங்கும்,இம்முறை புலனாய்வுகளுக்கு இடையில் ஆங்காங்கே அதிரடிகளுடன் டெக்ஸ் கதைகளுக்கே உரித்தான வேகத்துடன் கதை பயணிக்கிறது...
    கமர்ஷியல் பாணி கதைகளில் பொதுவாய் லாஜிக் பார்க்கத் தேவை இல்லை என்று சொல்லப்பட்டாலும் இரண்டு விஷயங்கள் சற்றே துறுத்தலாய் தெரிவதாக எனது வாசிப்பில் புலப்பட்டது....
    1.சான்பிரான்சிஸ்கோவின் திறன்மிக்க காவலர்களால் மாதக்கணக்கில் துப்பறிந்தும் மழைத்துளியின் அளவுகூட எச்செய்தியும் சான்பிரான்சிஸ்கோ காவலர்களின் காதுகளுக்கும் எட்டவில்லை, குற்றத்தின் சிறுபொறியும் சான்பிரான்சிஸ்கோ காவலர்களின் கண்களுக்கும் தட்டுப்படவில்லை எனும்போது டெக்ஸ் & கார்சன் புலனாய்வைத் தொடங்கியவுடன் சீட்டுக்கட்டு போல் சரிவை சந்திப்பது சற்றே உறுத்தல்தான்...
    2.கதையின் மையப்புள்ளியே இங்கு பிரச்சனையாகவும் வலு இல்லாததாகவும் தோன்றுகிறது,பொதுவில் டெக்ஸ் & கார்ஸன் குழுவால் அழிக்கப்படும் வில்லனின் செயல்கள் சட்டத்திற்கு எதிராக இருக்கும் அல்லது சாதாரண மக்களுக்கு எதிரான கடும் குற்றங்கள் புரிவதாய் இருக்கும்,அச்செயல்களின் நீட்சியாய் வில்லன் கதாபாத்திரம் அழிக்கப்படும்போது நமது மனநிலையில் அச்செயலுக்கான நியாயம் கற்பிக்கபடும்,அதை ஒரு வாசிப்பாளனால் எளிதில் உறுத்தல் இன்றி ஏற்றுக் கொள்ள முடியும்...
    கதையின் வெற்றிக்கான கட்டமைப்பை இந்த உளவியல்தான் தீர்மானிக்கிறது என்று நம்புகிறேன்...
    -ஆனால் இக்கதையில் அந்த கட்டமைப்பு வலுவாக இல்லை, டெக்ஸ் & கார்சன் நீதியை நிலைநாட்ட குற்றவாளிகளை சிறையில் அடைக்கின்றனர்,அவர்களைக் கொல்வது என்பது தவிர்க்க இயலா சூழலில் எடுக்கப்படும் முடிவாகிறது,அதை நம்ம பாஸ் முதலிலேயே செய்கிறார் அவ்வளவே...
    ஏனோ உங்களைக் கொன்றதில் முழுமையான மகிழ்ச்சி இல்லைதான்...
    மற்றபடி வாசிப்பில் சோடை போகாத கதை என்பதில் ஐயமில்லை...
    எமது மதிப்பெண்கள்-8/10...

    ReplyDelete
    Replies
    1. விமர்சனம் சூப்பரா எழுதியிருப்பீங்கன்னு தெரியும். ஆனா இப்போதைக்குப் படிக்க மாட்டேன்.

      Delete
    2. நல்ல விமர்சனம் ரவி

      Delete
    3. //இப்போதைக்குப் படிக்க மாட்டேன்.//
      புக்கையா,விமர்சனத்தையா...!!!

      Delete
  6. மிக அழகான அட்டைப் படங்கள்,
    க்ராபிக் காமிக்ஸ் தவிர.
    புத்தக விழாக்களில் சிறார்களும் காமிக்ஸை பார்வையிடுகிறார்கள் என்பதால் அட்டைப்படத்தை மாற்றியிருக்கலாம். 18+.
    மற்றபடி அனைத்து இதழ்களும் வழக்கம்போல ஜோர்.

    ReplyDelete
    Replies
    1. இது புத்தக விழாக்களுக்குச் செல்லாது நண்பரே !

      Delete
    2. ///இது புத்தக விழாக்களுக்குச் செல்லாது நண்பரே///

      நல்ல முடிவு சார்!

      Delete
  7. வணக்கம் நண்பர்களே


    நன்றி எடிட்டர் சார்.
    சென்னை மக்களுக்கு ஒரு நாள் தள்ளி பார்சல் அனுப்பும் ஐடியாவிற்கு.

    எங்கே இந்த மழையில் பார்சல் எப்படி வருமோ என்ற கவலை இருந்தது.
    தங்கள் இந்த மாற்று ஏற்பாடு மகிழ்ச்சியே 🤩🙏

    ReplyDelete
    Replies
    1. சென்னையில நிறையப்பேரு அவங்க வீட்ல ஹால்லயே சோப்புப் போட்டுக் குளிச்சுக்கறாங்களாமே.. நீங்க எப்படிங்க நண்பரே?

      Delete
    2. அப்ப ஷாம்பு போட முடியாதா ஈ.வி...

      Delete
    3. சென்னையில் ஒரு மழைக்காலம்

      Delete
  8. ஜானிக்கொரு தீக்கனவு :
    இடியாப்பம்னா இடியாப்பம் அப்படியொரு இடியாப்பம்,வழக்கம்போலான ஜானியின் லோல்படலும்,சதிவலையில் சிக்கி சின்னாபின்னாமாகுதலும்,கடைசி பக்கங்களில் புதிரை அவிழ்த்தலுமாய் அக்ஃமார்க் ஜானியின் பாணி களம்...
    தொடக்கத்திலேயே ஜானியின் கழுத்தை கிடுக்கிப்பிடியாய் பிடிக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையா ?!
    ஜானி யாருக்காக இதைச் செய்கிறார்,ஏன் செய்கிறார் ?!
    சதி வலையின் முடிச்சை எப்படி அவிழ்க்கிறார் என இறுதிவரை சுவராஸ்யமாய் கதையை நகர்த்திச் சென்றுள்ளனர்...
    வாசிப்பினிடையே இரண்டு இடங்களில் என் கணிப்புகள் சரியாக இருந்தது...
    கதை முழுக்க மொத்து வாங்கும் ஜானியைப் பார்க்க நமக்கு கொஞ்சம் பாவமாகத்தான் உள்ளது....
    ஓவியங்கள் நிறைவு...
    அடுத்த வருஷமும் கண்டிப்பா ஜானி ஜானி யெஸ் பாப்பாதான்...
    ஜானியின் தீக்கனவு,வாசிப்பின் பார்வையில் இனிய கனவு...
    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
    Replies
    1. சிட்டி ரோபோ மாதிரி புத்தகத்த கைல வாங்கின உடனேயே படிச்சு முடிச்சிட்டிங்களோ ரவி ப்ரோ..

      Delete
  9. //கொஞ்சமே கொஞ்சமாய், மழை விட்ட பிற்பாடு சென்னைக்கான டப்பிக்களை அனுப்பிடச் சொல்லி நான் தான் சக்கையைப் போட்டிருந்தேன் ! அவையும் இன்று (செவ்வாய்) கிளம்பி விட்டன - ஒரு எக்ஸ்டரா பாலிதீன் கவரோடு !//

    அருமை ஆசிரியரே...

    ReplyDelete
  10. சார் காலனின் கால் தடம் இதழில் பல பக்கங்கள் பிரிண்ட் ஆகாமல் வெறும் தாட்களாக உள்ளன,இங்கே கடைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள இயலுமா சார் ?!
    இல்லை அலுவலகத்திற்குதான் அனுப்ப வேண்டுமா சார் ?!

    ReplyDelete
    Replies
    1. @Arivarasu@Ravi ji..😍

      Lion office Whatsapp எண்ணில் போட்டோவுடன் தகவல் தெரிவித்துவிட்டு courier ல் லயன் ஆபிஸ்க்கு return அனுப்பிவிடுங்கள்.. இரண்டொரு நாளில் புது புக் வந்துவிடும்..👍

      Delete
    2. சாரி சார் ...நாளை வேறொரு பிரதியினை அனுப்பச் செய்கிறேன ; இதனை திருப்பி அனுப்பி யாருக்கும் பிரயோஜனமாகாது தானே ?

      Delete
    3. //லயன் ஆபிஸ்க்கு return அனுப்பிவிடுங்கள்..//
      ம்ம்...

      Delete
    4. // சாரி சார் .. //
      சாரி சொல்லி சங்கடப்படுத்தாதீர்கள் சார், வேறு மார்க்கத்தில் யோசித்து இருக்க வேண்டுமோ என தற்போது யோசிக்கிறேன்...

      Delete
    5. அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது தாங்கள் கி.நா புதிய இதழை எனக்கு அனுப்பச் சொல்லியதாக தகவல் கூறினார்கள் சார்,டிசம்பர் நடுவாக்கில் அடுத்த செட் இதழ்களை அனுப்பும்போது அதனுடன் கி.நா இதழை சேர்த்து அனுப்பச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளேன்...
      நன்றி சார்...

      Delete
  11. *தீபாவளி Tex புக்கில் அனைத் து உள்பக்க பேனல்களும் மறைந்து இருந்தன சார்‌. இது போல் நிகழாமல் பார்த்துக் கொள்ளுதல் நலம்*
    இது பழைய பதிவு‌.
    இந்த மாத டெக்ஸ் புக்கிலும் அதே கதை தான். காலனின் கால் தடம் புக்கிலும் கருப்பு பல பக்கங்களில் மிகையாக படர்ந்து சிதறி உள்ளது சார் 😤

    ReplyDelete
    Replies
    1. Graphic novel இதழின் கலரிங்கே grey shades சார் ; நார்மலான கோட்டோவிய black அல்ல !

      டெக்ஸ் இதழ் பைண்டிங் பிசகினை நிவர்த்திக்க ஆவன செய்கிறேன் சார் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  12. ராபினைத்தான் சும்மா புரட்ட எடுத்தேன். பரபரபர..

    ReplyDelete
  13. சுறா ஒற்றுமையை நினைத்துக் கொண்டே இருக்கையில் இந்தப் பதிவு. அசத்தல். இந்த ஆண்டு போட்டிகளுக்கு மத்தியிலும் இத்தனை இதழ்களைக் கொண்டு மெர்சல் காட்டியது நிச்சயம் சாதனைதான் சார். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சார் ! நமது இலக்குகளை என்றைக்குமே நிர்ணயிப்போர் - நம் வாசக நண்பர்களே !!

      உங்கள் அவாக்கள், நம் இதழ்களாகிடுகின்றன - அவ்வளவே !

      Delete
  14. டெக்ஸ் அண்டு தாத்தா...


    டெக்ஸே தாத்தா தானே...ஹிஹ்ஹி...

    அதும் 75 வயஸ் தாத்தா...

    பரபரன்னு போகுது...

    அந்த "காலனின் தண்ணீர் தடத்தில்" சூப்பர்...

    கண் நிறைந்த காட்சிகளாக...
    கண் விரியும் காட்சிகளாக...
    கண்ணீர் காட்சிகளாக...
    கண்ணீர் மட்டுமே சாட்சிகளாக...
    கடல்நீரோடு கண்ணீர் கரைவதாக...
    கடலும் கண்ணீரும் உப்புக்கரிப்பதாக...
    கடலளவு நெஞ்சம் கனப்பதாக...
    பிகினியை பின்னுகுத் தள்ளிய பிக்குகளாக...
    பிகினி முடிச்சளவு சுருங்கிய மனித நேயங்களுக்காக...
    பிக்குணிகளாய் குண்டதிகாரம் படைத்தவர்களாக...
    படைத்திட்ட குண்டுகளை காத்திடவியலாதவர்களாக...
    படையலிடப்பட்ட குண்டு விற்பனையாளர்களாக...
    படைகாட்டி நடுங்க வைக்கும் பூஞ்சைகளாக...
    வெந்து கனறும் அணுச் சோதனைப் பள்ளங்களாக....
    வெந்ததையுண்ண முடியா வாய்வேக்காட்டுக்களாக...
    வெந்தே நொந்துகிடக்கும் மானிடச் சிதைவுகளாக...
    அணுவாயுதத்தடைகள் பற்றி வாய்வீச்சு போதகர்களாக...
    அணுவணுவாய் சுண்ணாம்பாகும் மானுடவர்க்கத்தினைப் பாரீர்!! பாரீர்!!! பாரீர்!!!
    அவர்தம் கொள்கையும் கொள்ளையும் காணீர்! காணீர்! காணீர்!


    காலனின் கால் தடத்தில்....

    ReplyDelete
  15. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  16. நான் முதல் ஆளாய் பிகினித்தீவில் ஆஜர்!

    ReplyDelete
    Replies
    1. காலனின் கால் தடத்தில்...

      நல்ல குவிக் ரீட் ஹாரர் (மிஸ்ட்ரி?) கி.நா.
      வேகமாக செல்லும் கதையோட்டத்தில் ஒரு திகில். நல்ல கனக்டிவிட்டி!!

      கருப்பு வெள்ளையே கதிகலங்க வைக்கிறது.
      நல்ல வேளை வண்ணத்தில் இல்லை!!

      குட் டூ ரீட்!!

      Delete
  17. My first choice will be Graphic Novel sir🥰😍

    ReplyDelete
  18. நான் கூட கிராபிக் நாவல் தான் முதலில் sir.. ❤️👍.. Tex எல்லாம்
    அப்புறம்..

    ReplyDelete
  19. எப்போதும் கி.நா.என்றாலே மூன்றடி தள்ளி நிற்கும் நான் இம்முறை கி.நா வுக்கும் சேர்த்தே ஆர்டர் போட்டிருக்கிறேன்..
    (காரணம் அட்டைப் படம் அல்ல )
    அந்த ஹாரர்+த்ரில்லர் என ஆசிரயர் சொல்லியிருக்கும் போது என் கவனம் முழுமையாக இம்மாத கிநாவிலேயே லயித்துள்ளது..
    புத்தகங்கள் வந்து சேர்ந்தவுடன் என் முதல் வாசிப்பு கி.நா வே!

    ReplyDelete
  20. கொலை நோக்கு பார்வை:

    நீண்ட நாட்களுக்கு பிறகு ராபின் தாரை தப்பட்டை கிழிய அடித்து நொறுக்கி தூள் கிளப்பி இருக்கிறார். முதல் பக்கத்தில் ஆரம்பித்த ஓரு வித FIRE 🔥 கடைசி வரைக்கும் நீண்டு நம்மை யும் கதையோடு சேர்த்து ஓட, இல்லை இல்லை பறக்க வைக்கிறது.

    Come back க்கு பின் சுமாரான கதைகளில் மட்டுமே தலை காட்டி வந்த ராபின், இக்கதையின் மூலம் பழைய இடத்துக்கு திரும்பி விட்டார் என ஆணித்தரமாக கூறலாம். பழைய கில்லியின் தரமான புதிய சம்பவம் இது.

    மார்வினின் கலாய்ப்பு, ஆல்பியின் தெனாவட்டு, ஜிம்மியின் brilliance, மேலதிகாரிகளின் நம்பிக்கை, ஓட்டு மொத்த போலீஸ் இலாகாவில் செயல்பாடு, வித்தியாசமான வில்லன் என அனைத்து ஏரியாவிலும் டிக் வாங்கி இருக்கிறது.

    SPOILER ALERT
    கடைசி வரை தொடர் கொலை சங்கிலியின் முதல் கொலையாளி யார் என்று தெரியவில்லையே. அது ""பக்"" தானா, அல்லது விடையில்லாமலே முடிந்து விட்டதா.

    ஃபிளாஷ் பேக் கதைக்கு ஓரளவேனும் ஒரு விடை இருக்கிறது. ஆனால் நிகழ் காலத்தில் நடந்த செனட்டர் கொலைக்கான காரணம் தெரியாமலேயே கதை முடிந்து விட்டதே. அடுத்த பாகம் ஏதாவது உள்ளதா?

    மேலும் இக்கதைக்கான முன் மற்றும் பின் அட்டைபடங்கள் இதுவல்ல. மேலும் ஒரு பாகம் இருக்குமோ என கேட்க இதுவும் ஒரு காரணம்.

    எது எப்படியோ இது போன்ற கதைகளை தேர்வு செய்து வெளியிட்டால் ராபினின் graph உச்சாணிக்கு சென்று விடும் எனபது உறுதி

    நன்றி

    ReplyDelete
  21. எடிட்டர் சார்,

    சென்ற மாத தல தளபதி புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். பார்த்தவுடன் இதை நம்ம ஸ்டீல் பாணியில் சொல்ல தோன்றியது. இதுவரை வந்த அட்டைப் படங்களில், இது ரெண்டும் தான் டாப் ! Excellent மேக்கிங்.

    ReplyDelete
  22. /// எங்கேயோ ஆக்டொபஸ் மீன்களை பார்த்த ஞாபகம் உண்டு!///
    பாம்புத்தீவு..

    ReplyDelete
  23. நேற்றிரவு புத்தக டப்பி கைக்கு வந்து சேர்ந்தது! மேலோட்டமாகக் புரட்டிய வகையில் முதலில் படிக்கத் தூண்டியது கி.நா'வே! அட்டைப்படத்தில் அந்தச் சுறா எதற்காக அப்படிச் சிரிக்கிறதென்பதைக் கண்டுவிட ஆவல்!
    தவிர, ஐ லவ் கி.நா'ஸ்!

    ReplyDelete
    Replies
    1. ///ஐ லவ் கி.நா'ஸ்!///
      அப்படியா....🤭🤭🤭

      Delete
    2. உங்களுக்கு ரொம்ப நல்லா தொலை நோக்கு பார்வை ஜி.

      Delete
  24. ஏதோ ஒரு ஊருக்குச் சென்றிருப்போம்.. அந்த ஊரில் எங்கோ ஒரு புத்தகக்கடைத் தெருவில் நிற்போம்...
    கடைக்குள் நுழைந்தால் கருப்புவெள்ளை கலர் என தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் மலைபோல் குவிந்து கிடக்கும்..! அது ஒண்ணு.. இது ஒண்ணு.. அப்புறம் அதுவும் வேணும்.. இதோ.. இதுவும் எடுங்க... அயயோ.. எல்லாத்திலும் ஒவ்வொன்னு குடுங்கண்ணேன்னு வாங்கி.. தூக்கமுடியாத அளவு பார்சலை மார்போடு அணைத்து வெளியே வரும்போது விடிந்துவிடும்.. கண்விழித்துப் பார்த்தால் தலகாணியை அணைத்துக்கொண்டு பப்பரப்பேவென படுக்கையில் கிடப்போம்..!
    காமிக்ஸ் வாசகர்கள் 99% பேர் கண்டுள்ள கனவு இது..!

    1990ல் இருந்து 2010 வரை இதுபோன்ற கனவுகள் மாதமொருமுறையோ இருமுறையோ வருவதுண்டு...

    கம்பேக் ஸ்பெசலுக்குப் பின் திகட்டத் திகட்ட காமிக்ஸ் கிடைத்துவிடுவதால் அடிமன ஏக்கம் நிறைவேறிவிட்டது..! எனவே இதுபோன்ற கனவுகள் இப்போது வருவதில்லை.!

    உங்களுக்கும் நேர்ந்ததுண்டா.!?

    ReplyDelete
    Replies
    1. ஓஓஓஓஓ முன்னலாம் நிறைய வரும் இதுபோல.... இது இப்பலாம் என்வருவதில்லை என இப்பதான் புரிகிறது...!!!

      கைநிறைய காமிக்ஸ்
      நெஞ்சுநிறைய ஹேப்பினஸ்💕💕💕💕💕

      Delete
    2. எனக்கு இந்த வருடத்தின் ஆரம்பித்தில் வந்தது
      திருச்சியில் ஒரு கடையில் நுழைந்தவிடன் காமிக்ஸ் புத்தகங்கள் இருக்க கண்டேன்
      ஆனால் புத்தகங்களை பில் போட எடுத்து சென்ற போது, எல்லா புக்ஸ் தர மறுத்து விட்டனர்😑😑😑

      இதற்கு அப்புறம் 2020, 2021 இல் வாங்க முடியாமல் போன புக்ஸ் இந்த வருடம் 75% புத்தகங்கள் வாங்கினேன்

      நமது காமிக்ஸ் ஆன்லைன் மேளா நிறையா புக்ஸ் வந்தது

      ஈரோடு 2023 மீட் அப்போ திருநாவுகரசு சகோ பட்டிமன்றத்தில்
      "வாழ்வில் ஒரு தடவையாவது காமிக்ஸ் கடையில் கனவில் உலா வந்திருப்போம்" என்று சொன்னபோது
      நமக்கு மட்டுமல்ல காமிக்ஸ் ஆர்வாளர்களுக்கு அனைவருக்கும் வரும் கனவு என்பது தெரிந்தது 😊😊😊

      தத்தம் சகோதரர்களின் காமிக்ஸ் கனவுகள் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி

      Delete
  25. கனவுகள் மெய்ப்படும்...

    ReplyDelete
  26. கொலை நோக்குப் பார்வை :
    டெக்னாலஜியின் வளர்ச்சி,எந்த அளவுக்கு சமூக வளர்ச்சிக்கு உதவுகிறதோ,அந்தளவுக்கு குற்றச் செயலுக்கும் உதவுகிறது...
    அசுரத்தனமான இணைய வளர்ச்சியில் குற்ற அரக்கனின் நவீன முகமூடிகளை மாட்டிக் கொண்டு,முகமறியா குற்றவாளிகள் ஆங்காங்கே உலாவிக் கொண்டுதான் உள்ளனர்...
    இனி காவலர்கள் ஹைடெக் அவதாரில்தான் துப்பறியுனும்...
    கொலை நோக்குப் பார்வைக்கான தொடக்கப்புள்ளி அதிகாரம் மீதான போதைதான்...
    ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத கொலைகளின் மைய முடிச்சை நோக்கி ராபின் நகர்வது விறுவிறுப்பான முறையில் கதையில் கையாளப்பட்டுள்ளது...
    2019 ஆம் ஆண்டிற்கும்,1998 ஆம் ஆண்டிற்குமான புள்ளி ஒரு இடத்தில் இணைவதாய் நினைக்கிறேன்..
    குற்ற உலகின் தொலைநோக்குப் பார்வை முற்றும் அல்ல,தொடரும் போலும்...
    மீள் வாசிப்புக்கு தகுதியான இதழ்...
    கொலை நோக்குப் பார்வை வீரியமான பார்வை...
    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
  27. அடுத்து கி.நா இதழுக்காக வெயிட்டிங்...!!!

    ReplyDelete
  28. பார்சல் இன்னும் பிரிக்கவில்லை.
    இன்று இரவு அல்லது சனி இரவு.

    ReplyDelete
  29. ....ஜானிக்கொரு தீக்கனவு....
    வழக்கமாக குற்றத்தின் முடிச்சில் உள்ள சிக்கல்களை அவிழ்க்க ஜானி முயன்று இறுதியில் முடிச்சுக்கள் அவிழும்.
    இந்தக் கதையில் ஜானி ஆரம்பத்திலேயே சிக்கலில் மாட்டிக் கொண்டு போலீஸிடம் இருந்து தப்பி ஓடுகிறார்.
    போலீஸால் துரத்தி வேட்டையாடப்படுகிறார்.
    நடுவில் சிலரால் கடத்திச் செல்லப்படுகிறார்.
    யார் அவர்கள் ?
    ஜானியுடன் கமிஷனரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
    ஏன்?
    ஒரு புறம் போலீஸ், மறுபுறம் வில்லனின் கையாட்கள் என மத்தளத்திற்கு இரண்டுபக்கமும் இடி என்ற கதையாக ஜானியை துரத்தும் படலம் நடந்தேறுகிறது.
    ஜானி ஏன் துரத்தப்படுகிறார்?
    போலீஸில் உள்ள கறுப்பு ஆடு யார் என்னும் சிக்கலின் மர்ம முடிச்சு இறுதியில் சுவாரஸ்யமாக அவிழ்கிறது.
    விறுவிறுப்பான கதை. ஜானியின் மேல் நமக்கு பரிதாபம் ஏற்படும் அளவிற்கு தப்பி ஓடுகிறார்.
    எனக்குத் தெரிந்து இந்தக் கதையில் தான் ஜானி இவ்வளவு ஓட்டம் பிடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.அவ்வளவு அசாத்திய ஓட்டம்.
    அருமையான கதை.
    ஏக் தம் ரீடிங்கிற்கு கியாரண்டியான கதை.
    ஆசிரியருக்கு நன்றிகள், மீண்டும் ஒரு விறுவிறுப்பான ஜானி கதையை அளித்ததற்கு.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. ....கொலை நோக்குப் பார்வை...
    ராபின் கதைகளை படிப்பது என்பதே ஒரு தனி ரசனை கலந்த சுவாரஸ்யம்.
    நவீன இணையதள டெக்னாலஜி மூலம் கொலையையும் அரங்கேற்றலாம் என்பதே ஒன்லைன் ஸ்டோரி.
    வெவ்வேறு இடங்களில் நடந்த இரண்டு கொலைகளை ராபின் துப்பு துலக்க முயல்கிறார்.
    இரண்டு கொலைகளுக்கும் இடையிலான ஒரு மையப் புள்ளி.
    அது எங்கே? ஏன்?...
    உன்னுடைய தேவைக்காக ஒரு கொலை நடத்தப்படும்.
    பதிலுக்கு நீ ஒரு கொலை அசைன்மெண்டை செய்ய வேண்டும் என்பது அந்த இணையதளத்தின் கண்டிஷன்.
    (இது போன்ற ஒரு அக்ரிமெண்ட் வருவது போன்ற சம்பவம் மிகச்சமீபத்தில் டிடெக்டிவ் ரூபினின் ஒரு கதையில் வந்ததாக ஞாபகம்)
    இதனை ராபின் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை
    இதில் ராபினின் நண்பனாக வரும் கம்ப்யூட்டர் நிபுணர் கார்னெட்டும், அவரது நண்பன் மேட்டும் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
    அருமையான விறுவிறுப்பான கதை.
    நேரம் போனதே தெரியவில்லை.
    இதுவும் ஏக் தம் ரீடிங்தான்.
    பாராட்டுக்கள் சார்.

    ReplyDelete
  32. ஆசிரியரின் வாசிப்புத் தேர்வு
    என் வரையில் உல்டாவாகி விட்டது.
    முதலில் ஜானி,
    இரண்டாவதாக ராபின்,
    நாளை கி. நா,
    கடைசியாக டெக்ஸ்.
    ரசனைகள் பலவிதம்.
    ஒவ்வொன்றும் ஒரு விதம்.


    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போல, எனது முதல் வாசிப்பும் ஜானி தான் இன்று இரவு.

      ஜானி ஜானி தான் என்றும்...

      Delete
  33. *காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சன போட்டி*

    முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
    தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

    வாழ்க்கை ஒரே மாதிரி போய் போரடிக்குதா....புதுசா த்ரில்லர் தேடி போவோமா ஆளில்லாத் தீவுக்கு என அழைக்கும் ஆசிரியர நம்பி 125 ரூவா டிக்கட்ட எடுத்து புத்தக கதவ தட்டுனா ....
    மிரட்டலா உள்ள வராதன்னு எச்சரிக்குது சுறா மீன்....நம்ம குடந்தை எழுத்தாளர் ஜே...சுறாப்பார்வை ஆசிரியர் உள்ள போய் எழுதிருக்காங்களே நம்பிக்கையோடு போ என்று மனசு த்ரில்ல கூட்ட ...(அந்த பெண்ணின் நீரின் வெளியே தெரியும் தலையையும் சுறாவின் வாலையும் தவிர எல்லாமே...ஃபோட்டோவோ ஏஐ வேலையோன்னு சத்தியம் செய்யுது மனசு)...அதுக்கும் மேலா அந்த பெண்ணே நீந்தும் போது நான் என
    மீறித் திறந்தா வானத்துல பறக்கிறோம்....இந்தியா சுதந்திரம் பெறுவதற்க்கு ஒரு வருடம் முன்னால்....அணு குண்டின் கதிர் வீச்சின் அளவை வீரியத்தை அளக்க அப்பாவி உயிர்களை பலி கொடுக்கும் வல்லரசின் இரக்கமற்ற முகத்திரையோடு பிகினித் தீவை கண்ணாடியணிந்து பாருங்கப்பா எச்சரிக்கையோடு என்ற ஓசையால் அப்படியே காண்கிறோம்...


    ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று


    பிகினி தீவுக்கு பிக்கினிக் போறாக...பிகினி தீவுங்றதாலயோ என்னவோ கதை முழுக்க யாராவது ஒருவர் பிக்கினியில் வாராக...

    இரண்டு ஜோடிகள் த்ரில்லுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயார்....ஒரு தாயார்- மனநலம் குன்றிய மகன்... தன் இறந்த கணவர் ஆசைக்காக...ஒரு யூ ட்யூபர்
    சம்பாதிக்க...மாலுமி அல்லது பாதுகாவலாளி....இவர்களை தலைமை தாங்கி நடத்திச் செல்ல ஒரு வழிகாட்டி....


    கதையின் துவக்கமே ஜோடிகளின் ஊடலைக் காட்ட ....கையில் பிடித்த ஒரு மீன் கதிரியக்கத் தால் பாதிப்படைந்த அகோர உயிரி எனக் காட்ட...இதான் கதை ...அந்த மன நோயாளி இவர்களை கொன்னுடுவான்னு ஜேம்ஸ்பாண்ட் மூளையோடு பயணமாகிறேன்....

    கடலுக்குள் திரும்பிய பக்கமெல்லாம் சுறாக்கள் நெளிய...அதன் நடுவே அந்த பிரம்மாண்ட சுறாவை முதல்ல கப்பல்னே நினைத்தேன்... அலறியடித்து அந்தத் தாய் கரையேற சாரி கப்பலேற...அந்த க்ரே நிற பக்கங்கள்முதல் கொலை விழுந்ததும் அடேயப்பா என கொலையாளி பத்திய பீதிய கிளப்பி வைக்க ....


    தொடரும் கொலைகள் ...அனைவரும் இறந்து விடுவார்களோ என படிப்பதற்கு பதில் அனைவரும் இறந்தே ஆக வேண்டுமென அந்த அசுரனோடு துரத்த....தப்பிய மீதியாட்கள் சுறா கையால் சாவார்கள் என அந்த குண்டு வெடிப்பால் பாதிப்படைந்த உயிரிகள் சார்பாக நானும் துரத்த....கதாசிரியரின் கருணையால் இருவர் மட்டுமே பிழைக்கிறார்கள்....அந்த இருவர் யாரென படித்து தெரிஞ்சுக்கோங்க...


    சுறாக்களுக்கு மஞ்சள் வெண்ணிற ஆடை ...கீழ இறங்குனா இரையாக தெரிவீங்கன்ன பாடத்த கடந்தா.....



    இன்னோர் பாடம் நரமாமிச கோஷ்டிகள் அயலார் யார் வந்தாலும் கொல்லலாம்....கொன்று தின்றால் ஆன்மா சாந்தியடையாது திரியுமாம்...அதனால் அங்கே வாழும் அந்த உருமாறிய அசுரன் மனித இனத்த பழி வாங்க அந்த வரத்தைப் பெற்று துவைத்து கிழிக்கிறான்...தலைகளை தொங்க விட்டபடி விரட்டுறான் மிரட்டலாய்....சும்மா சுறாவேகத்ல சீறிப் பாயும் கதையின் வேகத்தை அழகாய் படம் பிடித்து காட்டும் வரிகள்....அதற்கு துணையாய் காட்சிப்படுத்தும் ஓவியங்கள் என்னையும் விரட்ட பக்கத்துக்கு பக்கம் தெறித்து வேட்கையோடலைந்தேனென்றால் மிகையல்ல...

    ஊடல் ஜோடிகள் இங்க வந்ததே ...அதெல்லாம் பயணத்தால் மாறிடும்னே வந்தோம் என துவங்குவதும்...அதே போல் தெளிவதும்....

    அந்த மனநோயாளி மேல் கடுப்பான நாயகன் மேல் கோபமுற்ற நாயகி ...கல்லூரி நாட்களிலும் இவன் இப்படிதான் தன் வீரபிரதாபத்த காட்ட அப்பாவிகளை தேடிப்பிடித்து தம்பிமுத்து வீரனாவது என குமுற....அந்த கோரன் விரட்டும் போது நடுங்கி கட்டிலடியே கிடக்கும் நாயகனும்...அந்த அகோரனை கோவப் பார்வை பார்க்கும் அந்த சிறுவனும்...அந்த பார்வை தாக்கத்தாலா அல்லது இவன் நிலையுணர்ந்து இரக்கப்பட்டு விட்டுடுச்சா அந்த அசுரன்னு சிண்டை பிடிச்சு மண்டை காய்ங்கன்னு கதாசிரியர் விட்டு விட....அந்த கட்டங்கள் என்னை மிகக்கவர்ந்த இடங்கள்...யாரையும் எதையும் வைத்து எடை போட்டிடாதே

    ReplyDelete
    Replies
    1. அந்த கட்டமே என்னையும் திணறடிக்க....பிறரைத் தேடி ஓடுகிறேன்....


      நாயகனோ இப்போது படகை தள்ளி வர...அந்த சிறுவன் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி வர அமைதியாக தள்ளுமிடத்தில் நாயகியின் சிரிப்பு கிண்டலா...ஒரு வித சந்தோசமா நாயகன் நிலை கண்டு...


      என கேள்விகளோடு பாய நாயகனின் துணிச்சல்...செயல் திறம் அடேயப்பா....


      அதோ அந்தத் தீவில் இருவர் இருக்கிறார்கள் ...யாராவது காப்பாத்த வருவாங்கன்னு ஆசிரியரும் ஜேயும் எழுதி வச்சிட்டு வந்துட்டாங்க...நண்பர்களே யாராவது தயாரா அழேத்து வர



      மீதியை

      காலனின் இரு கால் தடத்தில் முளைத்த இரு அசுரர்கள்....விலங்கு கொடியதா ...மனிதசுரன் கொடியவனா ...கடலுக்குள் நான்...கரையில் நீன்னு உலவி வந்த அசுரர்கள் நிலை என்ன ....பயணம் போகத்தயாராகுங்கள்


      எங்கே வாழ்க்கை தொடங்கும்
      அது எங்கே எவ்விதம் முடியும்
      இது தான் பாதை இது தான் பயணம்
      என்பது யாருக்கும் தெரியாது

      பாதையெல்லாம் மாறி வரும்
      பயணம் முடிந்து விடும்

      செந்தூர் வேலர்களுடன் ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்

      8870863122

      Delete
    2. //முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
      தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே//

      👌👌👌

      Delete
    3. அடேங்கப்பா என்ன ஒரு விமர்சனம் ஸ்டீல். தருமாறு தக்காளி சோறு....

      Delete
    4. .திருத்தங்கள்..


      அப்பாவிகளை தேடிப்பிடித்து தம்பிமுத்து வீரனாவது என குமுற....

      ....அப்பாவிகளை தேடிப்பிடித்து வம்பிழுத்து வீரனாவது என குமுற..

      .....அந்த அகோரனை கோவப் பார்வை பார்க்கும் அந்த சிறுவனும்...


      .....அந்த அகோரனை கோவப் பார்வை பார்க்கும் அந்த மகனாகிய இளைஞனும்...





      Delete
    5. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

      Delete
    6. முதல் முறையாக போட்டியில் கலந்து கொள்ளும் க்ளாவை வருக வருக என கனவுலகம் வரவேற்கின்றது.....💐💐💐

      Delete
    7. அந்தச் சிறுவன் மன நோயாளியல்ல ஸ்டீல் ...

      Delete
    8. மனவளர்ச்சியில்லா இளைஞன் நண்பர்களே....திருத்தியதற்க்கு நன்றிகள் சார்

      Delete
  34. "டெக்ஸ் வில்லர்" - இதழில் எனது ரொம்ப நாள் ஆசை நிறைவேறியது..(முன்னும்-பின்னும் வண்ண அட்டைப்படம்.. ii).
    முதலில் கவனிக்காமல் - டெக்ஸ் இதழைப் புரட்டி "ஹாட்லைன்" இருந்ததால் அதனை முதலில் படித்துவிட்டு டேபிளில் போட்டுவிட்டு-
    மீதி இதழ்களை புரட்டி உள்ளே பார்வையிட்டு-கடைசி பக்கங்களில் அடுத்த வெளியிடுகளை தெரிந்துகொண்டு மறுபடி டேபிளைப் பார்த்தால் - மற்றொரு டெக்ஸ் இதழ் இருக்கிறது..
    சொல்லவே இல்லையே - இரண்டு டெக்ஸ் இதழ்கள் என்று..
    அப்படி நினைத்து எடுத்து பார்த்த பின்தான். தெரிந்தது.
    ஒரே இதழ் இரண்டு அட்டைப்படங்கள் என்று..
    அருமை..அழகு..
    இதையே இனிவரும் இதழ்களிலும் தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன்..
    கதையும் அருமை..
    இந்த கதை யில் என்னவோ -
    சுஜாதா - வின் கணேஷ் & வசந்த் ஞாபகம் வந்து அப்படியே படிக்க ஆரம்பித்து ஒரே ஸ்பீடில் முடித்துவிட்டேன்.
    அட்டகாசமான துப்பறியும் கதை-
    அதற்கேற்ப வரைந்த ஓவிய பாணி..
    அப்றம் - கதைக்கு வேறு ஏதேனும் தலைப்பு வைத்திருந்தால் அப்படியே கடந்துபோய் இருப்பேன்.."உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி" - அப்டின்னு யார் சொல்கிறார்..?i.
    சட்டத்தின் பக்கம் இருந்து டெக்ஸ் வில்லரா? i..
    அல்லது இயக்கத்தின் தலைவன் .ஒவ்வொருவரையும் சொல்லும்போது- சொல்லிக் கொள்ளும் வாசகமா..'?i
    கதைக்கு இந்த தலைப்பை வைத்ததால் நமக்கே எந்த பக்கம் சாய்வது என்று குழப்பம் ஏற்படுகிறது..இதுவும் சரிதான்..
    அதுவும் சரித்தான் என்பதாக உள்ளது..
    Tex - இதழ்களில் நினைவில் இருக்கும் இதழ்..

    ReplyDelete
  35. ஒரு மாண்ட்ரேக் கதையில கூட சுறாமீன் வருமே...😃

    ReplyDelete
  36. இன்றோடு சேலம் புத்தக விழா இனிதே நிறைவடைந்தது. புத்தக விழா புள்ளி விபரங்களை சார் சீக்கிரமே கொடுப்பார் என்று நினைக்கிறேன். ஆக மொத்தம் மனதுக்கு இனிய நிகழ்வு இது. ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டும் புத்தக விழா பற்றி சீக்கிரமே...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்.... விரைவில் எழுதுங்க குமார்..... அதீத நேர பற்றாக்குறை காரணமாக ஓரிரு முறை எட்டிதான் பார்க்க இயன்றது...

      தினம் சென்று விற்பனைக்கு உதவி, நடப்புகளை கவனித்த உங்கள் வாயிலாக ஒட்டுமொத்த நிகழ்வையும் காணலாம்..😍

      விழா சென்று ஆசிரியருக்கு உதவிய அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏& வாழ்த்துகள்💐💐💐💐

      Delete
    2. ///ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டும் புத்தக விழா பற்றி சீக்கிரமே...///

      காத்திருக்கிறோம் KS...

      Delete
    3. நண்பர்களே கீழே கட்டுரை உள்ளது.

      Delete
  37. **** காலனின் கால் தடத்தில் ****

    தெளிவான, விறுவிறுப்பான கதை நகர்வோடு மிரட்டலாய் ஒரு கி.நா(?!!). வண்ணத்தில் வெளியாகியிருந்தால் இன்னும் பல மடங்கு மிரட்டியிருக்குமோ என்ற ஆதங்கம் பல பேனல்களில் ஏற்படுகிறது!

    வழக்கமாக தன் கமெண்டுகளில் சற்றே குழப்பமான பாணியை கடைபிடிக்கும் நமது J என்கிற ஜனார்த்தனன் அவர்கள், இக்கதையின் வசனங்களுக்கு மிக எளிமையான தமிழைக் கையாண்டு நிம்மதிப் பெருமூச்சு விடவைத்திருக்கிறார்!!

    ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது!

    இதுவரை கி.நா பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும்!

    10/10

    ReplyDelete
    Replies
    1. இதிலே உள்குத்து ; வெளிக்குத்து ; சைடுக்குத்து என்று எதுவும் இல்லியே ?

      Delete
  38. சேலம் புத்தக விழா 2023

    எனது பார்வையில்

    இந்த வருடம் சேலம் புத்தக விழா நவம்பர் மாதம் 21ஆம் தேதி துவங்கியது. நண்பர்களுடன் நானும் முதல் நாள் மாலை நமது லயன் ஸ்டாலுக்கு சென்று சுற்றி பார்த்து விட்டு அப்படியே மொத்த அரங்குகளையும் நோட்டமிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பினேன். முதல் நாள் என்பதால் அவ்வளவாக கூட்டம் எதுவும் இல்லை. நமது ஜோதி மேடம் அன்று ஸ்டாலில் இல்லை வேறு ஒரு உதவியாளர் தான் இருந்தார்.

    அதற்கு பிறகு அந்த வாரம் நான் கொஞ்சம் வேளைகளில் busy, ஆனால் ஞாயிறு அன்று நமது எடிட்டர் சார் வருகிறார் என்று அறிந்தவுடன் மறுபடி ஆட்டம் சூடு பிடித்து விட்டது. நமது ஸ்டாலுக்கு வருகை புரிந்த எடிட்டர் சார் அங்கே கூடியிருந்த நண்பர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கொடுக்க மரத்தடி மீட்டிங் நடக்காத குறை அன்று தீர்ந்தது. Tintin ஜனவரியில் வர இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    ஜோதி மேடம் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். கோவை புத்தக விழாவில் ஜோதி ஆற்றிய பணியைப் பற்றி ஏற்கனவே சகோதரி கடல் யாழ் குறிப்பிட்டு இருந்தார். இங்கே அவரை பார்த்ததும் தான் கடல் யாழ் சொன்னது அனைத்தும் வார்த்தைக்கு வார்த்தை உண்மை என்பதை அறிந்தேன். அவர் நமது வாசகர்களை அடையாளம் கண்டு கொள்வதும், மற்ற வாடிக்கையாளர்களை கையாளும் விதமும் Simply Superb. எல்லா புத்தகங்களையும் எடுத்து அழகாக அடுக்கி வைப்பது ஆகட்டும், அவை குறையும் போது மீண்டும் புத்தகங்களை நிரப்பி வைப்பது ஆகட்டும், நாம் ஸ்டாலில் உதவிக்கு நின்று கொண்டு இருந்தால் ஒரு புத்தகத்தின் பெயர் சொல்லி யாராவது கேட்டால் அவர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அந்த புத்தகம் எங்கே இருக்கிறது என்று சொல்வது ஆகட்டும், பேரம் பேசும் வாசகர்களை சமாளிக்கும் விதம் ஆகட்டும், எல்லாமே அருமை. காலையில் எப்படி முகத்தில் புன்சிரிப்புடன் இருக்கிறாரோ அதே போலவே கொஞ்சமும் முகத்தில் களைப்பை காட்டாமல் மாலை வரை வேலை செய்கிறார். எனக்கு ரொம்பவே ஆச்சரியம்.



    தொடரும்...

    ReplyDelete
  39. இந்த புத்தக விழாவில் உறுதுணையாக இருந்த இரண்டு நண்பர்களை பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.

    1. நண்பன் ரகுராமன் சேலம் 27 ஆம் தேதியில் இருந்து நமது லயன் ஸ்டாலில் ஆற்றிய பணியைப் பாராட்டி சொல்ல வார்த்தைகள் இல்லை. கூட்டம் கூட்டமாக வந்த பள்ளி மாணவ மாணவியர்களை சமாளிக்க சகோதரி ஜோதிக்கு உதவியது ஆகட்டும், உள்ளே நுழைந்து ஆர்வமாக புத்தகங்களை நோட்டமிடும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் கதைகளை வாங்க உதவியது ஆகட்டும், ஸ்டாலில் நுழைந்தவர் அனைவரின் கைகளிலும் 2 புத்தகங்களை வாங்க வைத்து அனுப்பியது ஆகட்டும், காலை முதல் இரவு வரை ஸ்டாலில் இருந்தது ஆகட்டும். இந்த பணியின் மூலம் 2% வாசகர்கள் ஆவது அதிகரிக்க வேண்டும் என்பது நண்பனின் ஆவல். அது நிறைவேற வேண்டும்.

    2. நண்பர் யுவா கண்ணன் போன வருட புத்தக விழாவில் அவர் ஆற்றிய பணி, பணம் இன்றி வரும் குழந்தைகளுக்கு தனது காசை போட்டு புத்தகம் வாங்கித் தரும் தயாளம், இது எதையும் பெயருக்காகவோ, விளம்பரத்துக்காகவோ செய்யாமல் இருக்கும் ஒரு நல்ல உள்ளம். இந்த முறையும் 3 ஆம் தேதி ஞாயிறு அன்று நேசக் கரங்கள் குழந்தைகள் இல்லத்தை சேர்ந்த குழந்தைகள் நமது ஸ்டாலுக்கு வர அவர்களுக்கு வாங்கி கொடுத்த புத்தகங்கள் மட்டுமே சில ஆயிரங்கள். அன்று மட்டும் வேறு சிலருக்கு வாங்கிக் கொடுத்த புத்தகங்கள் பல ஆயிரம்.

    உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள் நண்பர்களே.

    தொடரும்...

    ReplyDelete
    Replies
    1. தம்பி யுவாவிற்கு பணி சிறப்பானது, அண்ணன் ரகுவின் பணியும் வாழ்த்துக்குரியது...

      Delete
  40. இங்கே நான் இருந்த நேரத்தில் சந்தித்த மறக்க முடியாத புதிய நண்பர்கள்

    துரை பாண்டியன் எடப்பாடி முதல் நாள் அவர் வந்த போது ஸ்டாலில் நானும் ரகுவும் இருந்தோம். இப்போதும் காமிக்ஸ் வருகிறதா என்ற அதிர்ச்சியில் நின்று இருந்த அவரை அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பே 2000 ரூபாய்க்கு புத்தகங்களை நண்பன் போணி செய்து விட்டான். அவர் வேதாளர் வேண்டுமே வேண்டும் என்று கேட்க சுப்ரீம் 60s சந்தாவை கட்ட வைத்து, அப்படியே 2024 வருட சந்தாவையும் பற்றி சொல்லி அதையும் கட்ட வைத்து இருந்த பல புத்தகங்களை கொத்தாக அள்ளி சென்றார் நண்பர். கிட்ட தட்ட 4,5 முறை நமது ஸ்டாலுக்கு வந்து இருப்பார் அவர். பல ஆயிரம் ரூபாய்க்கு அவர் ஒருவர் மட்டுமே வாங்கி இருப்பார். அவரை பார்க்கும் போது, அவருடன் பேசும் போது எல்லாம் உற்சாகம் கரை புரண்டு ஓடும்.

    ஓவியர் ஜெகன் அவர்கள் நெடுநாள் காமிக்ஸ் வாசகர். அவர் குமுதம், விகடன் எல்லாம் வரைந்து இருக்கிறார். அவரிடம் விடுபட்ட புத்தகங்களின் லிஸ்ட் உடன் வந்து இருந்தார். பல ஒவியர்களிடம் தொடர்பில் இருக்கிறார். ஓட்டுநராக பணி புரியும் இவர். காமிக்ஸ் மீது கொண்ட காதல் அளப்பரியது.

    டாக்டர் ராஜேஷ் கண்ணன் அரசு மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரியும் இவர் முதல் முறை சந்தித்த போது அதிகம் பேசவில்லை. எனது மொபைல் எண்ணை நான் Share செய்ய எனது பெயரை மறந்து விட்டார் எனவே எனது பெயரை கேட்க திரும்ப நமது ஸ்டாலுக்கே திரும்ப வந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிக் கொண்டு இருந்தார். இதில் என்ன அதிசயம் என்றால் Doctor A K K அவர்களின் நண்பர் தான் இவர் என்று குழுவில் இவரை சேர்த்த பின் தான் தெரிய வந்தது.

    இன்னும் பலப்பல நண்பர்களை சந்தித்தேன் இந்த முறை

    தொடரும்...

    ReplyDelete
    Replies
    1. // துரை பாண்டியன் எடப்பாடி முதல் நாள் அவர் வந்த போது ஸ்டாலில் நானும் ரகுவும் இருந்தோம் //
      யெஸ் துரைபாண்டியன் சார் அள்ளிட்டாரு...

      Delete

  41. மொத்தத்தில் ரொம்பவே நிறைவான விழாவாக இந்த சேலம் புத்தக விழா அமைந்தது. இப்போது தான் தெரிகிறது நாம் இதில் ஈடுபடும் போது எவ்வளவு அருமையாக இருக்கும் என்று. நண்பர் EV இது போல பல ஈரோடு புத்தக விழாக்களில் , போன வருடம் சேலத்தில் புத்தக விழா நடந்த போது வேலையில் அவ்வளவு busy ஆக இருந்த போதும் ஒவ்வொரு மாலையும் வீட்டுக்கு செல்லும் முன்பு நமது ஸ்டாலுக்கு வந்து சென்றது ஏன் என்று புரிகிறது.

    நமது அன்பின் ஆசிரியருக்கும், அலுவலக பணியாளர்களுக்கும், எனது அன்பு நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மீண்டும் அடுத்த வருடம் உங்கள் அனைவரையும் எதிர் நோக்கி சேலம் புத்தக விழாவில் காத்து இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அருமை அருமை சகோதரரே
      சேலம் புத்தக விழாவினை பற்றி விவரித்தற்கு நன்றிகள் பல

      Delete
    2. தங்களுக்கும், ரகுராமன் சகோ, யுவா கண்ணன் சகோ நன்றிகளும் பாராட்டுகளும் சகோதரர்களே

      Delete
    3. புத்தக விழாவினில் பணியாற்றுவது ஒரு மனமார்ந்த அனுபவம்

      Delete
    4. // புத்தக விழாவினில் பணியாற்றுவது ஒரு மனமார்ந்த அனுபவம் // சத்தியமான உண்மை.

      Delete
    5. சிறப்பாக தொகுத்து அளித்து உள்ளீர்கள் KS.....அருமை....

      விழாவின் முக்கிய தருணங்களையும் புதிய அறிமுகங்களை விவரித்ததும் நன்று....!!


      லயன் அலுவலக பணியாளர் சகோதரி ஜோதி ரொம்ப நல்லபடியாக பணியாற்றினாங்க...

      இரவு நான் 8மணிக்கு மேல செல்லும் போதும் அவுங்க கிட்ட கவனிச்ச விசயம்... வாடிக்கையாளர்களிடம் மாறாத சிரித்த முகம்.. காலையில் இருந்து இரவு வரை அந்த உற்சாகத்தை மெயின்டென் பண்ணுவது அவஙு்களுக்கு இயற்கையாக அமைந்துள்ளது போல..

      வெகு சீக்கிரமே லயன் ஸ்டாலின் வசீகர முகம் ஜோதி சகோ என்றாகிடும்.

      புத்தகங்கள் பற்றிய அவுங்களது நுட்பமான அறிவு வியக்க வைத்தது...

      லிஸ்ட்டை பார்த்துதான் இது இது இந்த நாயகர்களில் வந்துள்ளதுனு நாம சொல்வோம்.. சகோதரி ஜோதி சரளமாக இன்னின்ன ஹீரோக்களில் இத்தனை கதை உள்ளதுனு மடமடனு சொல்லி அடுக்கி வைக்க அந்தந்த ஷெல்பில இடம் சொன்னாங்க பாருங்க ஒரு நொடி அசந்துட்டேன்...!!!அபார நினைவாற்றல் & அசாத்திய ஈடுபாடு இருந்தாதான் இது சாத்தியம்.....

      Delete
    6. // லிஸ்ட்டை பார்த்துதான் இது இது இந்த நாயகர்களில் வந்துள்ளதுனு நாம சொல்வோம்.. சகோதரி ஜோதி சரளமாக இன்னின்ன ஹீரோக்களில் இத்தனை கதை உள்ளதுனு மடமடனு சொல்லி அடுக்கி வைக்க அந்தந்த ஷெல்பில இடம் சொன்னாங்க பாருங்க ஒரு நொடி அசந்துட்டேன்...!!!அபார நினைவாற்றல் & அசாத்திய ஈடுபாடு இருந்தாதான் இது சாத்தியம்.....// அதையும் அவர்களிடம் பேசும் போது சொன்னாங்க இந்த புத்தகம் அனுப்புவது அழகாக அடுக்கி வைப்பது இதில் எல்லாம் அவங்களுக்கு ரொம்பவே ஈடுபாடு உண்டு என்று.

      Delete
    7. ஆமா...அவுங்களோட உரையாடும் போது ஒவ்வொரு ஹீரோவையும் அவஙு்களோட உள்ளூர் பாஷையில் சொல்லும் போது ரொம்ப அழகு...

      கிராஃபிக் நாவல், ஹார்டு கவர் புக், தோர்கல், சோடாவை அவுங்க ஸ்லாங்ல அவுங்க உச்சரித்து கேட்கும்போது ரொம்ப வித்தியாசம்..


      டெஸ்பாட்ச் தினத்தன்று லயன் ஆபீஸ்ல பேக்கேங் நடப்பதை ரொம்ப விலாவரியாக அவுங்ககிட்ட கேட்டு கொண்டேன்....போர் அடிக்கும் ஒரு நாளில் எழுதுறேன்...!!

      நண்பர்களே@ சந்தாவில் உள்ளோம்..எல்லாம புக்ஸ் நமக்கு வந்துடுது....லயன் ஸ்டாலில் நாம என்ன புக்ஸ் வாங்குறமோனு நினைக்காம ஜோதி சகோதரி தமிழை கேட்கவே ஒரு வருகை புரியுங்க..!!

      Delete
    8. ஆமா அவங்க slang ஐ பற்றி நான் எழுத நினைத்தேன் ஆனால் எழுதாமல் விட்டு விட்டேன். சூப்பர் டெக்ஸ்.

      Delete
    9. // டெஸ்பாட்ச் தினத்தன்று லயன் ஆபீஸ்ல பேக்கேங் நடப்பதை ரொம்ப விலாவரியாக அவுங்ககிட்ட கேட்டு கொண்டேன்....போர் அடிக்கும் ஒரு நாளில் எழுதுறேன்...!! //

      ஆமாங்க STV ... அது ஒரு சுவாரஸ்யமான விசயம் தான்.

      உங்கள் பாணியில் எழுதுங்கள், நம் வாசக நண்பர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.

      நமது லயன் ஆபீஸ் மேடம் மற்றும் அனைத்து பணியாளர்களின் பங்களிப்புக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்....

      Delete
    10. உங்களின் விவரிப்பு புத்தக விழாவை நேரில் பார்த்தது போலிருந்தது நன்றி நண்பரே

      Delete
    11. ரெகுலராக அலசல்களில் சிலாகிக்கப்படுவதோ ; சாத்தப்படுவதோ ஞானே எனும் போது, இத்தனை காலத்தில் பழகிப் போனதொன்றாகி விட்டது ! ஆனால் பின்னணியில் உள்ள நமது டீம் மீது ஒளிவட்டம் பாய்வது செம சுவாரஸ்யமான சமாச்சாரம் !

      எனக்கே வருஷம் முடிந்த பிற்பாடு, பெயர்கள் - நாயகர்களில் கொயப்பம் மேலோங்கிடும் ! But நமது front office பெண்கள் அதை மனப்பாடமாக ஒப்பிப்பார்கள் !

      என்ன - ஆரும் பொஸ்தவத்துக்குள்ளாற தலை நுழைப்பது மாத்திரம் கிடையாது ! "நாலு பக்கம் பொரட்டுறதுக்குள்ளே தூக்கம் தூக்கமா வருது sir!" என்று சொல்லக்கேட்ட நாள் முதலாய் - "நீங்க டெஸ்பாட்ச் செஞ்சா மட்டுமே போதுமுங்கோ !" என்று சொல்லி விட்டேன் !

      Delete
    12. அருமை நண்பர்களே...நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

      Delete
    13. ////எனக்கே வருஷம் முடிந்த பிற்பாடு, பெயர்கள் - நாயகர்களில் கொயப்பம் மேலோங்கிடும் ! But நமது front office பெண்கள் அதை மனப்பாடமாக ஒப்பிப்பார்கள் !///
      ஆசிரியர் சார்@
      இதை நேரடியாக பார்த்த போது அசந்து போயிட்டேன் சார்....

      30 தட்டுகளில் எந்தெந்த ஹீரோவை எங்கே அடுக்கணும், ஒவ்வொன்றிலும் எத்தனை டைட்டில் உள்ளதுனு சரளமாக சகோ ஜோதி சொல்ல சொல்ல ஆச்சர்யமாகவும் மலைப்பாகவும் இருந்தது ங் சார்...

      ஒரு 15பதினைந்து பெட்டிகளை உடைத்து புத்தகங்களை எடுத்து அடுக்கி கொண்டே, ஒவ்வொரு ஹீரௌவின் டைட்டில்ஸ் வரவர மனசுக்குள் கணக்கு வைத்துக் கொண்டே இன்னும் இத்தனை டைட்டில் பாக்கியுள்ளது, அடுத்தடுத்த பெட்டிகளில் வரும்னு சொன்னாங்க பாருங்க..அப்படியே ஸ்டின்னிங் ஆகி நின்றேன்...

      எல்லா பெட்டியும் உடைக்க உடைக்க தட்டைகள் ஃபில் ஆகி கொண்டே வந்தது... எல்லாம் உடைச்சி முடிச்சபோது அந்தந்த ஹிரோஸ் அவுங்கவுங்க ஸ்லாட்ல கச்சிதமாக இடம்பிடித்திருந்தனர்...

      அசாத்தியமான கணக்கீடு....

      நாங்க சீட்டு ஆடும்போது தானாகவே கை, ரம்மி சீட்டுகளை வரிசையாக ஒரு பக்கம், பரில்லா சீட்டுகளை ஒரு பக்கம், ஜோக்கர்களை ஒரு பக்கம், உதிரிகளை டிஷ்கார்டு பண்ண ஒரு பக்கம்னு ஸ்பான்டேனியஸாக அடுக்கிடும். அந்த நளினம் ரொம்ப ப்ராக்டீஸ் இருந்தாதான் வரும்...

      அதே நளினம் புத்தக ரேக்குகளில் அடுக்கும்போது சகோ ஜோதிக்கு வருகிறது, அசாத்தியம் சார்!!!

      Delete
  42. //சேலம் புத்தக விழா 2023

    எனது பார்வையில்//

    சேலம் புத்தக விழா ...குறித்து உங்கள் கட்டுரைகள் அனைத்தும் நன்றாக இருந்தன.

    பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே.

    உங்களுக்கும் பக்கம் பக்கமாக கோர்வையாக தெளிவாக எழுத முடியும் என்பதை இன்று தான் முதன் முதலில் காண்கிறேன். தங்களின் இந்த திறமை இதுவரை நான் அறியாதது அருமையாக விவரித்து உள்ளீர்கள் தொடர்ந்து எழுதுங்கள் KS.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா. முதலில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாமல் இருந்த என்னை உனது உற்சாகமும் ஸ்டாலில் நீ சந்தித்த மாணவர்களை பற்றி நீ சொன்னதும் என்னை இன்னும் ஈடுபாட்டுடன் தினமும் ஸ்டாலுக்கு அழைத்து வந்தது . உனது உற்சாகம் எனக்கும் பரவி விட்ட்து.

      Delete
    2. // நன்றி நண்பா. முதலில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாமல் இருந்த என்னை //

      இதே வேகத்தோடு... ஒரு கதைக்கு மொழிபெயர்ப்பு செய்து விடுங்களே நண்பரே !

      Delete
  43. 3 புத்தகங்கள் படித்து முடித்து விட்டேன். ஜானி, கி நா, ராபின் 3மே 3 விதம். அட்டகாசம்.

    அனைத்து இதழ்களும் 10/10.

    இன்னும் டெக்ஸ் மட்டும் பாக்கி.

    ஜானி இந்த முறை ரொம்பவே அருமை. ஜானியா? சோடாவா? என்று கேட்ட கேள்விக்கு நான் பின்னவருக்கு தான் வாக்கு அளித்து இருந்தேன். ஆனால் இந்த கதை எனது முடிவு தவறு என்று புரிய வைத்தது. Simply Superb Sir.

    ReplyDelete
    Replies
    1. ஜானி.....

      பேனா பிடிப்பவரின் விரோதி !

      வாசிப்போரின் நண்பன் !

      Delete
    2. // ஜானி இந்த முறை ரொம்பவே அருமை. ஜானியா? சோடாவா? என்று கேட்ட கேள்விக்கு நான் பின்னவருக்கு தான் வாக்கு அளித்து இருந்தேன். ஆனால் இந்த கதை எனது முடிவு தவறு என்று புரிய வைத்தது. Simply Superb Sir. //

      சபாஷ்...

      உங்களுக்கு இப்போ கூட வாய்ப்புவும் நேரமும் உள்ளது நண்பரே ஜானியின்... ரத்த காட்டேரி மர்மம் + பிசாசு குகை இரு கதைகளின் மறு பதிப்பு கோரிக்கைக்கு உங்கள் ஓட்டு ஒன்றை இன்றே பதிவு செய்யுங்கள்...

      Delete
  44. காலனின் கால்தடத்தில்....

    நியூசிலாந்து, பாப்புவா நியூ கினிக்கும் ஹவாய் தீவுகளுக்கும் இடைபட்ட பசிபிக் பிராந்தியத்தில் பரந்துள்ள அமெரிக்க கட்டுபாட்டில் இருந்த ஆயிரம் தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் மார்ஷல் தீவுகள்.

    இதில் ஒன்றான பிகினி தீவில் 1940/50களில் 67முறை அணுசோதனை அமெரிக்கா செய்கிறது.. மக்களோ மாக்களோ காலி செய்யப்படாமலேயே... விளைவு விவரிக்க இயலா இன்னல்கள். கொடூர பாதிப்பு.. தீவு கைவிடப்படுகிறது.....

    30,40ஆண்டுகள் கழித்து வித்தியாசமானதை விரும்பும் சுற்றுலா பயணிகள் தீவுக்கு வருகின்றனர்..

    கதிரியக்கம் பாதித்து பிறந்த கோர மனித ஜந்து தீவுக்கு வரும்இவர்களை நரவேட்டையாடுகிறது....

    நரவேட்டை எல்லாம் அப்பட்டமான கிறுகிறுக்க வைக்கும் ஓவியங்கள்...

    நரவேட்டையனை சுற்றுலா பயணிகள் எப்படி வேட்டையாடுகின்றனர் என்பதை க்ளைமேக்ஸ் விவரிக்கிறது.

    கி.நா. விரும்பியான என்னையே ரொம்ப கலங்கடித்திட்டது..
    ரொம்ப தொய்வாக இருக்கும் கி.நா. மார்க்கெட்டை உயர்த்த இதுபோன்ற கதைகள் உதவாது என்பதே என் எண்ணம்...

    குடல் குப்பிலாம் சரிஞ்சி இரத்தக்களறியுடன் ஒரே கோரமாக உள்ளது... குழந்தைகள் கண்ணில் படாம பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது...

    தவிர்த்து இருக்கலாமோனு கூட ஒரு கணம் நினைக்க வைத்துட்டது!
    ரொம்ப நாள் கழித்து ஒரு கதைக்கு தம்ஸ்டவுன் போடவைத்துட்டது!

    ReplyDelete
    Replies
    1. //குடல் குப்பிலாம் சரிஞ்சி இரத்தக்களறியுடன் ஒரே கோரமாக உள்ளது... //

      இது மட்டும் வண்ணத்தில் வந்திருந்தால்.... என்னாலும் வாசித்திருக்க முடியாது. அவ்வளவு கோர்!!

      நல்லவேளை!! கருப்பு வெள்ளையால் பிழைத்துக் கொண்டேன்.

      Delete
    2. ஆம் நண்பரே... இவ்வளவு கோர் வேணாமோ நம் படைப்புகளில்னு தோண வெச்சிட்டது.....

      இரு வெட்டியான்கள் கதைகள், டெட்வுட்லாம் கூட கொஞ்சம் கோர் தான்.. ஆனா அந்த ஊர்களின் வாழ்க்கை முறை, அக்கால கட்டத்தின் அவலங்களை அறிய இயன்றது...

      ஆனா இது கொஞ்சம் விரும்பத்தகாத உணர்வை தோற்றுவிக்கிறது...

      கி.நா. னா கொஞ்சம் வித்தியாசமான தேடல்,
      தோழனின் கதை போன்ற கற்பனை, தாத்தாஸ் போன்ற செமி வல்கர் ரியாலிட்டிகள்,
      அண்டர்டேக்கர், ஸ்டெர்ன் போன்ற ரியல் லைஃப் பின்னணி கதைகள்
      ரசிக்க உகந்தவை...

      கல்லூரி நாட்களில் The cannibals of the mountain god போன்ற படங்களை லாம் ரசித்து உள்ளேன்... அந்த படத்தில் கூட இத்தனை விரும்பத்தகா உணர்வு எழவில்லை...
      ஒருவேளை வயசாச்சோ எனக்கு!!!🤔

      அடுத்து டெக்ஸை எடுத்து நாலு சில்லுகளை சிதறவைத்தா சரியாகிடும்....

      குறிப்பு: நம்ம 007 முதல் படம் Dr.Noவின் நாயகி Ursala Andrewsஐ "முழுமையாக" மேலே நான் சொல்லி உள்ள படத்தில் ரசிக்கலாம்.😻

      Delete
    3. இரத்த பூமி என்றால் அப்படிதான் இருக்கும். Jason X, Wrong Turn போன்ற படங்களை பார்த்த எனக்கு இது ஒரு பெரிய விஷயமாக தோணவில்லை.

      // ஒருவேளை வயசாச்சோ எனக்கு!!!🤔 // ஒருவேளை இல்லை Confirmஆ வயசாயிடுச்சு

      Delete
    4. இது டிரெய்லர் மட்டுமே ....மெயின் பிக்ச்சர் இன்னும் தாறுமாறு !

      Delete
    5. ஆஹா அந்த மெயின் picture எப்போ சார்?

      Delete
    6. ///இது டிரெய்லர் மட்டுமே ....மெயின் பிக்ச்சர் இன்னும் தாறுமாறு !///

      ஆஆஆஆஆத்திஈஈஈஈஈஈ....எஸ்கேப்....🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

      மீக்கு நோ மோர் குடல் குப்பி இரத்தக்களரி கதைகள்......

      சாய்ஸ்ல விட்டுடறேன்.....

      Delete
  45. சேலம் குமாரின் பதிவுகளை படித்து, எனக்கும்ஆசை வந்து விட்டது.இரண்டு நாட்களில் எழுதுகிறேன்...

    தலைப்பை இப்போதே சொல்லி விடுகிறேன்

    எனது தலைப்புகள்...

    சேலம் புத்தக கண்காட்சியும், எனது மர்ம பாஸ் சும்

    தன்னைத் தானே புகழ்ந்தான் படலம்

    ReplyDelete
    Replies
    1. எழுதுங்க, படிக்க ரெடியாக இருக்கோம் சகோ

      Delete
    2. // சேலம் குமாரின் பதிவுகளை படித்து, எனக்கும்ஆசை வந்து விட்டது.இரண்டு நாட்களில் எழுதுகிறேன்... // ஓ ஹோ

      தலைப்புகள் வேற ரொம்ப டெரர் ஆக உள்ளதே

      Delete
  46. ...காலனின் கால் தடத்தில்... (உறுதியான இதயத்துடன் உள்ளே நுழைகிறோம்.)
    கருப்பு, வெள்ளையில் வந்த கி.நா.
    கலரில் வந்திருந்தால் இன்னும் படு பயங்கரமாக இருந்திருக்கும்.
    இவ்வளவு கோரமான ஹாரர் கதை தேவையா என்றும் கொஞ்சம் யோசிக்க வைத்தது.
    பக்கத்து பக்கம் திகிலும், ஹாரரும் கலந்து கட்டி அடிக்கிறது.
    பிகினித்தீவுக்கு சுற்றுலா வரும் பயணிகள் மர்மமான ஒரு ஜந்துவால் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.
    அந்த ஜந்து எது?....ஏன்?...
    திரும்பும் திசையெங்கும் திகில்.
    கடைசியில் அந்த அசுர ஜந்து கொல்லப்படுகிறது.
    இறுதிக் காட்சியில் ஆலனும், லிஸெட்டும் தங்களை மீட்டு அழைத்துப் போக கப்பல் ஏதாவது வருமா என்று காத்திருக்கும் கட்டம் மனதை உருக்குகிறது.
    யாராவது வருவார்கள் தானே என்று ஆலன் அப்பாவியாக கேட்பது நம்மை உலுக்குகிறது.
    காலனின் கால் தடத்தில்.. கனத்த இதயத்துடன் வெளியேறுகிறோம், அவர்கள் இருவரை மட்டும் தனியாக விட்டு விட்டு.

    ReplyDelete
    Replies
    1. காமிக்சில் இத்தகைய கதைகளுக்கும் ஒரு தனி வட்டம் உள்ளது சார் - இரத்தக் காட்டேரிகள் ; டிராகுலா ; சாம்பி ; இரத்தக்களரிக் கதைகள் என்று ! அதனுள் லைட்டாக மட்டுமே எட்டிப்பார்க்கும் ஒரு சிறு முயற்சி இது !

      Delete
    2. எட்டிப் பார்த்ததே இப்படின்னா..இறங்கினா?
      வேண்டாம் சார், விஷப்பரீட்சை.
      நம்ம வாசகர்கள் எல்லாம் பிஞ்சு மனசுக்காரங்க.
      தாங்க மாட்டாங்க.

      Delete
    3. ஆஹா..அப்ப நாளை எனது நிலைமை...:-(

      Delete
    4. என்னைப் பொருத்த வரை அத்துமீறும் மனித குலத்துக்கு தேவையான எச்சரிக்கை...

      Delete
    5. // நம்ம வாசகர்கள் எல்லாம் பிஞ்சு மனசுக்காரங்க.
      தாங்க மாட்டாங்க. // நான் நல்லா தாங்குவேன்.

      Delete
  47. /// ஜானி.....
    பேனா பிடிப்பவரின் விரோதி !
    வாசிப்போரின் நண்பன் !///
    நீங்கள் பேனா பிடித்ததால் தான் அவர் எங்களுக்கு நண்பராக ஆனார் சார்.

    ReplyDelete
    Replies
    1. வேறு யாராச்சும் எழுதினார்களெனில் எனக்குமே ஜானி அண்ணாத்தே தோஸ்த் தான் சார் !

      அது சரி, அந்த ஜானி 2.0 இன்னொருக்கா ?

      Delete
    2. எனக்கு 2.0, 3.0 எல்லாமே ok தான் சார். கதை நீங்கள் சொல்லும் அந்த Crispy readingக்கு உத்திரவாதமானதாக இருக்க வேண்டும்.
      உண்மையில் இந்த மாதம் கதைகள் எல்லாமே ஏக் தம் ரீடிங்காகவே அமைந்தது. புத்தகத்தை எடுத்ததும் தெரியவில்லை. முடித்ததும் தெரியவில்லை.
      எல்லாமே அவ்வளவு அருமையான செலக்டிவ்வான கதைகள்.
      2024க்கு ஆவலுடன் வெயிட்டிங்.

      Delete
    3. // அது சரி, அந்த ஜானி 2.0 இன்னொருக்கா ? // Definitely definitely

      Delete
    4. பத்து சார் இன்னும் 2023 பாக்கி உள்ளது. சிஸ்கோ அண்ட் விங் கமாண்டர் ஜார்ஜ். 15 ஆம் தேதி வாக்கில்

      Delete
    5. //அது சரி, அந்த ஜானி 2.0 இன்னொருக்கா ?//

      Noooooo🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

      Delete
    6. ஜானி மறுக்கா மறுக்கா ஓகே சார்...


      ஆனால் ஜானி 2.0 ..

      வேண்டாம் சார் ...

      Delete
    7. பழைய ஜானி கதைகள் ரீபிரிண்ட்ஸ் போட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன், ஆசிரியரே

      Delete
    8. //ஜானி மறுக்கா மறுக்கா ஓகே சார்...


      ஆனால் ஜானி 2.0 ..

      வேண்டாம் சார் ...//

      +9

      Delete
  48. *நான் படித்த வரிசை அப்படியே ஆசிரியருக்கு நேர்மாறாக அமைந்து விட்டது....


    முதலில் ஜானிக்கொரு தீக்கனவு...இரண்டாவது ராபினின் கொலைநோக்கு பார்வை மூன்றாவது டெக்ஸ்ன் உங்களை கொன்றதில் மகிழ்ச்சி...


    மூன்று இதழ்களுமே சரி ...தரத்திலும் ..கதை தேர்விலும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் மிக விறுவிறுப்பாய் சென்று அசத்தி விட்டது...

    மூன்று கதைகளுமே ஒரு பணி சார்ந்த மணித்துளிகளில் படிக்க நேர்ந்தாலும் கதையை படிக்க ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு கதையும் முடித்தவுடன் தான் கீழே வைக்க முடிந்தது.. இன்னும் படிக்க மீதம் இருப்பது கிராபிக் நாவல் மட்டுமே..அது நாளை...

    படித்த இதழ்களின் விரிவான விமர்சனம் விரைவில்...:-)

    ReplyDelete
    Replies
    1. குட் நைட் தலீவரே....ஏது இந்த சாமத்திலே முழிச்சி ?

      Delete
  49. காலனின் கால் தடத்தில்: அருமையான ஒரு திரில்லர் படத்தை முழுமையாக பார்த்த திருப்தி.. எங்கேயும் கதையில் தொய்வில்லாமல் பரபரவென திகிலுடன் நகர்கிறது.. கி. நா வில் இது போன்ற கதைகள் தொடர வேண்டும் 👏

    ReplyDelete
  50. Read the graphic novel. It's like a thriller movie. Nice storyline

    ReplyDelete
  51. எனது review காலனின் கால் தடத்தில்...

    ஆள் அரவமற்ற ஆபத்தான தீவை adventure க்காக நாடி வரும் ஒரு குழு. கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட அந்த தீவில் mutate ஆன மீன்கள், செடிகொடிகள் மட்டுமின்றி வேறு ஒன்றும் உள்ளது. அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    எனக்கு இந்த கதை பிடித்தே இருந்தது. அட்டகாசமான ஓவியங்கள், பரபரப்பான ஓட்டம், கடைசி பத்து பக்கங்கள் சும்மா தெறி, நமக்கே மனதை கனக்கவைக்கும் முடிவு.

    எனது மதிப்பெண் 10/10.

    ReplyDelete
    Replies
    1. அதும் நாயகன் துவக்கத்ல ஒரு மாதிரி காட்டி கடைசில வீரன் தான் காட்டிய விதம்

      Delete
  52. இந்த மாத புத்தகங்கள் அனைத்தும் படித்து விட்டேன். கடைசியாக படித்தது டெக்ஸ் எப்போதும் போல யாராலும் முடிக்க முடியாத கேசை முடித்து கொடுக்க டெக்ஸை அழைக்க, அவர் கால் வைத்த உடன் அத்தனை துப்புக்களும் அவர்கள் மடியில் விழ, டெக்ஸ் , கார்சன் இருவரையும் கொல்ல 1000 முறை வாய்ப்பு இருந்தும் அந்த தலைவன் உட்பட யாரும் அதனை செய்யாமல் விட, வேறு என்ன எல்லாம் சுபம் தான்.

    ஆசிரியர் சொன்னது போல கார்சன் மட்டும் கோவிட் patient போல கதை முழுதும் வருவது கண்ணை உருத்துகிறது.

    எனது மதிப்பெண் 6/10.

    ReplyDelete
  53. கொலை நோக்குப் பார்வை


    அக்மார்க் ராபின்.ரொம்ப நாளாச்சி இது மாதிரி ராபினைப் பார்த்து.அட்டைக்கு திருஷ்டி சுத்திப் போடணும் அழகு.சமீப ராபின் கதைகளைப் பபடிக்காமல் இருந்தாலும்..இதைப்படிக்க வைத்ததே அட்டைப்படத்தின் ஈர்ப்பே..

    அடுத்த கைதட்ட.ல் ஓவியங்களுக்கே..ஒவ்வொரு ப்ரேமின் ஆங்கிள்களும் க/வெ யில் தூரிகையின் ஜாலங்கள் கண்ணிலே ஒற்றிக் கொள்ளலாம் போலுள்ளது..

    அதற்கடுத்த விசில் பறப்பது கதைறில். நெட்டி முறிக்ப்பதற்கும்...ண்ணி குடிப்பதற்க்கும் கூடஎங்கும் நகராதபடி கட்டுற வைத்த அதிசயம் நடந்த கதை..

    வாழ்த்துகள் V காமிக்ஸ் @ ராபின்
    😍😍😍
    உங்களிடமிருந்து
    இது போன்ற கதைகளையே எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  54. *உங்களை கொன்றதில் மகிழ்ச்சி*



    முழுநீள கதையிலும் நமது டெக்ஸ் அன்ட் கோ குதிரை மீது ஏறாமல் பயணம் செய்த சாகஸம் இந்த உங்களை கொன்றதில் மகிழ்ச்சி ....தலைப்பும் வித்தியாசம்..கதை ஆரம்பமும் வித்தியாசம் வழக்கமான டெக்ஸ் சாகஸம் போல் இல்லையே என ...

    ஆனால் அந்த வித்தியாசமே கதைக்கு ப்ளஸ் எனலாம் ...ஒரு அட்டகாசமான துப்பறியும் சாகஸத்தை படித்த திருப்தி ஆனால் என்னளவில் வாசிக்க ,வாசிக்க வில்லனின் நோக்கம் சரியானது தானே....இதையே தானே டெக்ஸ் அன்ட் கோவும் பல கதைகளில் செய்கிறார்கள் என்ற ஒப்புக்நோக்கலும் கூடவே வந்தது...இறுதியில் வில்லன் டெக்ஸ் கார்சனை கடத்தி சித்தரவதை செய்யும் அந்த இறுதி நேரத்தில் தான் அவனை என் மனம் வில்லனாக ஒத்துக்கொள்ள தொடங்கியது...

    இப்படி வில்லனின் பக்கமும் நியாயம் இருக்கிறதே என்ற எண்ணவோட்டம் கதையில் ஏற்பட்டாலும் கதையின் விறுவிறுப்பும் ,பரபரப்பும் கொஞ்சம் கூட குறைய வில்லை வழக்கமான டெக்ஸ் கதையை போல...

    மொத்தத்தில் எப்பொழுதும் போல மீண்டும் அதே ருசியான ,சுவையான பதார்த்தமே இந்த உங்களை கொன்றதில் மகிழ்ச்சி...

    உண்மையில் சிறிது வேலை பளுக்கிடையில் கிடைத்த இடைவெளியில் ஒரு முப்பது நாப்பது பக்கம் படித்து விடலாம் பிறகு இரவு படிக்கலாம் என நினைத்து வாசிக்க ஆரம்பித்து இறுதியில் கதையை முழுவதுமாக படித்து முடித்தவுடன் தான் இதழை கீழே வைக்க முடிந்தது எப்பொழுதும் போலவே டெக்ஸ் டெக்ஸ் தான்

    ReplyDelete
  55. ஜானிக்கொரு தீக்கனவு...


    இந்த முறை டெக்ஸ்தான் வித்தியாசம் என்றால் ரிப்போர்ட்டர் ஜானியும் அதே....வழக்கமாக குற்றங்கள் நடந்து குற்றவாளியை சுற்றி ஜானி வலை பின்னுவார் ...இந்த முறையோ ஜானியே சிலந்தியாக சிக்க அவரை சுற்றி காவல்துறை வலை பின்னுகிறது...எனக்கு எப்பொழுதுமே ரிப்போர்ட்டர் ஜானியில் சாகஸம் மிக மிக பிடிக்கும்...அட்டகாசமான துப்பறியும் கதை பாணி மட்டுமல்ல அவரின் சாகஸங்களின் ஓவியமும் அவ்வளவு அழகாக நேர்த்தியாக .. ஒவ்வொருவரின் உணர்வுகளையும் முகத்தில் அப்படியே பிரதிபலிக்கும் அந்த தத்ரூபமான சித்திரங்கள் என ஜானி அப்பொழுதே என்னை வசியம் செய்ய வைத்த நாயகர் ..அவர் மயிரிழையில் தப்பித்து மீண்டும் வருவது என்னை பொறுத்தவரை மிக மிக சந்தோசமான செய்தி....

    அது சரியே என அதற்கு உண்டான பதிலடி சாகஸமே ஜானிக்கொரு தீக்கனவு...


    அருமை....

    ReplyDelete
  56. கொலை நோக்கு பார்வை....


    இங்கும் வித்தியாசமான ரசிக்க வைக்கும் தலைப்பு....முன்னர் வந்த ராபினை விட இப்பொழுது வி காமிக்ஸில் வரும் ராபின் மிக மிக ரசிக்க வைக்கிறார்...கதை நிகழ்வுகள் அனைத்தும் ப்ளாஷ்பேக் நிகழ்வாக அமைந்தாலும் நிகழும் நிகழ்கால சம்பவங்கள் அந்த ப்ளாஷ்பேக்கை சரியான இடத்தில் அமைந்து கதை ஆசிரியர்கள் சரியான விதத்தில் ரசிக்க வைத்து விடுகிறார்கள்...முன்வந்த கதைகளில் ப்ளாஷ்பேக்கை கொண்டு குற்றவாளியை பிடித்து வர இந்த முறை அது குற்றங்களுக்கான காரண நிகழ்வாக மட்டும் அமைந்து இருக்க அதுவே ரசிக்க வைத்தாலும் மீண்டும் இதை கொண்டு இந்த கொலைநோக்கு பார்வை சாகஸம் தொடருமோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை...

    மொத்தத்தில் ராபினும் டெக்ஸ் ,ஜானியை போல அசத்தி விட்டார்..

    ReplyDelete
  57. ஜானிக்கொரு தீக்கனவு..

    தொலைநோக்குப் பார்வை..

    காலலின் கால் தடத்தில் !

    உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி !

    இதுவரை இந்த நான்கு கதைகளும் படிக்காத நண்பர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களும் விடுமுறை நாட்களாக இருந்தால் செமத்தியான, சுவாரஸ்யமான நாட்களாக அமைத்து கொடுக்க... தரமான விறுவிறுப்பான இந்த நான்கு கதைகளும் உங்களை அசத்தப்போவது உண்மையே !

    ReplyDelete
  58. சார்,
    நாளை பதிவுக்கிழமை...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வியாழக்கிழமை:- சார், நாளை மறுநாள் பதிவுக்கிழமை..


      அதற்கடுத்த மாசம்:- புதன்கிழமையிலயே... சார், நாளைக்கு மறுநாளைக்கு மறுநாள் பதிவுக்கிழமை..

      6மாசம் கழித்து...

      சனிக்கிழமை யில.. சார்,அடுத்த சனிக்கிழமை பதிவுக்கிழமை!😜😜😜😜

      Delete
  59. வாட்ஸ் அப் தளத்தில் நண்பர் ரவீந்திரன் G, திருச்சி அவர்கள் எழுதிய விமர்சனம்.

    காலனின் கால் தடத்தில்...


    மிகவும் அருமையான கதை அனு ஆயுத வெடிப்பினால் ஏற்படும் பக்க விளைவுகளை படம்பிடித்து காட்டுகிறது. ஆரம்பம் முதல் கடைசி வரை திக் திக் கதையில் வந்த அனைத்து பாத்திரமும் அருமை ஒரு சினிமாவிற்கு இனையான புத்தகம். 1மணி நேரம் போனதோ தெரியவில்லை மிக அருமையான கதை நண்றி லயன் காமிக்ஸ் ஆசிரியருக்கு இது போல் சில கதைகளை முயற்சிக்கலாம்👏👏👍🤝💐😁

    ReplyDelete
  60. *மோதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்*

    *வன்மேற்கின் அத்தியாயம் 4*

    *ஜிம் பிரிட்ஜர், ஸாகாவீ, பாட், நாய் ரேஞ்சர் இவர்களுடன் டேவி கிரோக்கட்*

    வன் மேற்கின் சட்ட திட்டங்கள் எப்படியெல்லாம், குடியேறியவர்களையும், ஏற்கனவே குடியிருந்த மண்ணின் மைந்தர்களையும் பாடாய்படுத்தின என்பதை அழகுற சித்திரக் கதைகளாக, வண்ணத்தில் வடிவமைத்து இருக்கிறார்கள்.

    ஓஹையோ பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் ஜிம் பிரிட்ஜெர் குடும்பத்தினருக்கு இந்த முறை சோதனை வருவது ஸாகாவீயின் உடல்நிலை மூலமாக. கடும் குளிரிலிருந்து ஸாகாவீயை காக்க வேண்டுமானால், மிதவெப்ப காலநிலை உள்ள பகுதிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் இப்போது...

    எனவே, ஓஹையோவில் இருந்து டெக்ஸாஸ் நோக்கி நகர்ந்து செல்ல விரும்புகிறது இந்த சின்னஞ்சிறு குடும்பம்...

    கப்பலில் பயணிக்க விரும்பும் ஜிம் பிரிட்ஜரின் குடும்பத்தினருக்கு கிளம்பத் தயாராக இருக்கும் கப்பலில் அவர்களுடன் ஏற்கனவே இருந்த நண்பனின் மூலமாக இடம் கிடைக்கிறது.

    நாய் ரேஞ்சரின் அட்டகாசத்துடன் அந்த கப்பல் நியூ ஓர்லியன்ஸ் நோக்கி பயணத்தை தொடங்குகிறது. கடல் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் அந்த கப்பலிலேயே பயணம் செய்கிறான் துரோகி அர்கண்டாவ்...

    கடல் கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை ஜிம் பிரிட்ஜெரின் வீரம் மற்றும் சாதுரியத்தினால் காப்பாற்றும் போது, பாட் கடத்தப்படுகிறான். பாட் -டினை மீட்க எண்ணும் போது, எதிர்பாராத இடத்தில் இருந்து ஜிம்முக்கு, சாகச வீரர் டேவி க்ரோக்கெட் மற்றும் அவருடைய நண்பர் ஜார்ஜ் வழியாக உதவி வந்து சேருகிறது.

    இடையே, பாட் - ஐ நடுக்கடலில் தவிக்க விட்டு விட்டு அர்கண்டோவ் கும்பல் கிளம்பி விட, பாட் சமயோசிதமாக செயல்பட்டு கரை சேர்கிறான். ஜிம் மற்றும் டேவி க்ரோக்கெட் ஜோடி, பாட்டினை எப்படி கண்டறிகிறார்கள் என்பதும், அதிகப்பிரசிங்கி சிறுவன் என்னவெல்லாம் செய்து அர்கண்டோவ் கும்பலை வெல்கிறான் என்பது முதல் கதை...

    அர்கண்டோவ் கும்பலிடம் இருந்து பாட்டை மீட்டவுடன், க்ரோக்கெட் தன் வழியில் கிளம்ப, நியூ ஓர்லியன்ஸ்- ல் தரையிறங்கும் ஜிம், டெக்ஸாஸ் நோக்கி செல்கிறார்.

    எங்கு பார்த்தாலும் அடிமைகளும், செவ்விந்திய ஒடுக்குமுறைகளும் இருக்கும் டெக்ஸாஸ் மாநிலம் ஜிம்மின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற அமைதியான இடம் ஒரு வழியாக கிடைக்கிறது. இடைப்பட்ட பயண நேரத்தில், அவர்களுடைய முகாமுக்கு திருட வரும் போக்கிரியை பாட் மடக்கி வைக்க, அவனையும் அரவணைத்து செல்கிறார் ஜிம். கமான்சே செவ்விந்தியர்கள் குழு ஜிம்மின் குழுவின் மேல் தாக்குதல் நடத்த, அதில் செவ்விந்திய தலைவனின் தம்பி தவறுதலான புரிதலால் மரணமடைகிறான். அவனுடைய மரணத்திற்கு காரணமானவர்களை கொல்லும் நோக்கில் சூளுறைக்கிறார் செவ்விந்திய தலைவர்.

    ஒஹையோவில் இருந்து பாடுபட்டு டெக்ஸாஸ் வந்து, செவ்விந்தியர்களின் பகைமையை சுமந்து நிற்கும் அந்த குடும்பம் என்ன செய்து பிழைக்கும் என்பதை சுவைபட விளக்கியுள்ளார் கதாசிரியர்...

    *கதையில் மனதில் நின்ற விஷயங்கள், திருட வந்த போக்கிரி இறுதியாக சொல்லும் டயலாக் மற்றும் டமால் - டுமீல் என மிகையில்லாமல் நகர்ந்து செல்லும். கதையோட்டமும் தான்...!*

    ரேட்டிங் - 9/10

    ReplyDelete
  61. கிளாசிக் ஜானியின்
    இரத்த அம்பு
    மரண பட்டியல்
    இரத்தக்காட்டேறி மர்மம்
    பிசாசு குகை
    மர்ம முத்திரை
    பயங்கரவாதி ஜானி
    விசித்திர நண்பன்
    விண்வெளி படையெடுப்பு போன்ற கதைகள் ரீ பிரிண்ட் வருமா ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. வந்தால் நன்றாக இருக்கும் தோழரே

      Delete
    2. செம்ம லிஸ்ட் சத்யா.

      Delete
    3. இந்த லிஸ்டில் பாதி கதைகள் வந்தால் கூட போதும் ஆனந்தம் தான்

      Delete
  62. This month s Robin story was a super fast story. Freshly thought detective storyline

    ReplyDelete
  63. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  64. புதிதாக ஏதாவது கதை களம் கிடைக்குமா என்று எதிர்பார்த்த எனக்கு, இந்த மாத புத்தகத்தில் முதலில் கையில் எடுத்தது, காலின் கால் தடத்தில், கதையும் ஏமாற்றவில்லை அருமை வருடத்திற்கு ஒருமுறை இதுபோல ஒன்றை மட்டும் தான் வெளியிடுங்கள்.

    ReplyDelete
  65. ஜானிக்கொரு தீக்கனவு..

    தொலைநோக்குப் பார்வை..

    காலலின் கால் தடத்தில் !

    என்ற வரிசையில் படித்தேன் மூன்றாவதாக காலலின் கால் தடத்தை படித்துவிட்டு, அந்த கதையின் பாதிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அடுத்த புக்கை படிக்க மனமே வரவில்லை. நல்ல திரில்லர் கதை.

    ReplyDelete