Saturday, July 01, 2023

ஜூன் போனால்..ஜூலை காற்றே...!

 நண்பர்களே,

வணக்கம். பூனையாரின் வாய்க்குள் போன ரவுண்டு பன்னைப் போல  ஆண்டின் முதல் பாதி லொஜக்கென்று கடந்து போயிருக்க, இதோ - இரண்டாம் பாதியின் வாயிலில் 'பச்சக்'கென்று மிகச் சரியாக நிற்கின்றோம் ! ஓட்டமெடுக்கும் நாட்களானவை, அடுத்தடுத்த மைல்கல் வேளைகளை முன்னிறுத்தக் காத்திருக்க, பணியாற்றிட எங்களுக்கும், வாசித்திட உங்களுக்கும் பொழுதுகள் பிஸியாய் இருக்கப் போவது உறுதி ! And ஜூலை எனும் போதே - வாடகை சைக்கிள்...சேரன் தாடி...ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே பாட்டு...என்று, மனசு 1984 நோக்கி ரிவர்ஸ் கியர் போடும் பாணியில் இம்முறையும் மாற்றங்களில்லை ! 

1984-ல் நாம் லயனுக்கு பிள்ளையார் சுழி போட எத்தனித்த வேளையில், ராகுல் காந்திக்கும் அரை நிஜார் போட்டுத் திரியும் வயது தான் ; நமது 'தல' டெக்ஸுக்கோ வயது 36 தான் ; விராத் கோலி பிறந்திருக்கவே இல்லை ; மாட்டு வண்டிகள் சாலைகளில் பயணித்துக் கொண்டிருக்கவும் செய்தன தான் ; தலைவருக்கு தலை நிறைய கேசம் இருக்கவும் செய்தது தான் and 128 பக்க ஸ்பைடர் புக்கில் இருபதாயிரம் பிரதிகளை அச்சிட்டு  ரெண்டே ரூபாய்க்கு விற்கவும் முடிந்தது தான் ! அன்றைக்கு கம்பியூட்டர்கள் லேது ; செல்போன் நஹி ; GPS கிடையாது ; பாதைகளை நினைவில் இருத்திக் கொள்ளத் தெரிந்திருக்காவிட்டால் எக்மோரிலிருந்து சென்ட்ரலுக்குப் போக, மீனம்பாக்கம் வழியாகவும் ஒரு ரூட் இருப்பதை  ஆட்டோக்களிலேயே ஆராய வழி பிறந்திருக்கும் ! இன்றைய நவீனங்களிலும், வசதிகளிலும் கால் பங்கு கூட அன்றைக்குக் கிடையாதென்றாலுமே, given a choice - கால இயந்திரத்தில் ஏறி மறுக்கா பால்யங்களுக்கே சென்றிடும் ஆவல் அலையடிப்பது எனக்கு மாத்திரமே என்றிராது தானே guys ? 

1984 முதலாய் ஒவ்வொரு ஜூலை பிறக்கும் போதும் "ஆண்டு மலர்" என்ற நினைப்பே மனசுக்குள் ஒரு LED பல்பை எரியச் செய்திடத் தவறியதே இல்லை ! அதுவும் ஸ்பைடர் ; ஆர்ச்சி ; மாயாவி என்று ஏகப்பட்ட க்ளாஸிக் ஜாம்பவான்களோடு குதூகலமாய்ப் பயணம் செய்து வந்த அந்த ஆரம்பத்து ஆண்டுகளை ஆசை போட்டால் - ஆத்தாடியோவ் ; சான்ஸே கிடையாது ! நாற்கால் பாய்ச்சலில் ஓடிவிட்ட ஆண்டுகளோடு நமது பழக்க வழக்கங்களில் ; ரசனைகளில் மலையளவு மாற்றங்கள் நிகழ்ந்திருப்பினும், இந்த "காமிக்ஸ் ரசனை" என்ற சமாச்சாரத்தினில், நாம் பழமையுடனான பந்தங்களை இன்னமும் உடும்புப்பிடியாய் தொடர்வது தான் ஆச்சர்யங்களில் பிரதானமானது என்பேன் ! And பழசோடு புதுசையும் அரவணைக்கும் உங்களின் அந்தப் பாங்கு தான் இந்தப் பயணத்தினை இன்றளவிற்கும் ஜாலியாய் நகர்த்திச் செல்கிறதென்று சொல்லலாம் ! இன்னமும் மாயாவிக்கு மவுசு குறையவில்லை ; ஜாலியாய் கலாய்த்தபடிக்கே ஸ்பைடரோடு ரவுண்டடிக்கிறோம் ; சிறுபிள்ளைகளாகி சுஸ்கி & விஸ்கியை ரசிக்கிறோம் ; yet லார்கோவுக்கும் நம் மத்தியில் இடமுள்ளது ; XIII க்கும் வாஞ்சையான வாசஸ்தலம் இருக்கிறது ; கிராபிக் நாவல்களுக்கும் திண்ணையினில் இடமிருக்கிறது ! So இதுவரையிலான இந்த 39 ஆண்டுப் பயணத்தின் standout புள்ளியாக எனக்குத் தென்படுவது - உங்களின் இந்தப் பன்முகத்தன்மையே ! So "அம்பியும் நீயே.........ரெமோவும் நீயே...!! சம்மரானது சுருங்கி வந்தால்  சாத்தியெடுக்கும் ஸாகோரும் நீயே !!" என்று களத்தூர் கண்ணம்மா மாடுலேஷனில் பாடிக் கொண்டே, கரம் கூப்பி நிற்கின்றேன் இந்த 39வது ஆண்டுமலரின் தருணத்தில் ! 

லக்கி லூக் !! பின்னூட்ட நம்பரைப் போட்டு பதிவுகளில் நம்ம texkit தனது இருப்பைப் பதிவு செய்வதைப் போல, கொஞ்ச காலமாகவே "ஆண்டுமலர்" என்றால் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் நமது ஒல்லி கௌபாயார் தான் இந்த ஜூலையிலும் லூட்டியடிக்கக் காத்திருக்கிறார் ! And "லயன்'s லக்கி ஆண்டுமலர்" - எப்போதும் போலவே டபுள் ஆல்பமாய் ஆஜர் ! லக்கி லூக் தொடரினில் தற்போதைய எண்ணிக்கை எண்பதைத் தாண்டியாச்சு ! ஆனால் அதன் பொற்காலம் - பிதாமகர் மோரிஸ், ஜாம்பவான் கோசினியுடன் கரம் கோர்த்த 47 ஆல்பங்கள் வெளியான நாட்களைத் தான் சொல்லுவேன் ! பின்னாட்களில் புதுப் புது கதாசிரியர்களோடு மோரிஸ் அவர்கள் 2002 வரைக்கும் கூட்டணி போட்டிருந்தார் ; அங்கும் கணிசமான smash hits உண்டு தான் !  அவரது மறைவுக்குப் பின்பாய் முற்றிலும் புது டீம் தான் வண்டியினை ஓட்டி வருகிறது ! நாம் லக்கியின் தொடரில் ஒட்டுமொத்தமாய் கிட்டத்தட்ட 45+ கதைகளை வெளியிட்டிருப்போம் என்று நினைக்கிறேன் and அவற்றுள் சூப்பர் ஹிட் அடித்த கதைகள் பெரும்பாலும் மோரிஸ்-கோசினி கூட்டணியின் கைவண்ணங்களே ! And அதிர்ஷ்டவசமாக காத்துள்ள ஆண்டுமலரின் 2 காமெடி மேளாக்களுமே this அசாத்தியர்களின் இணைந்த படைப்புகளே !  

அதிலும் இம்முறை முதல் ஆல்பமான "டால்டன்களோடு தக..திமி..தா" செம ரவுசு !! டால்டன்களும் சரி, ரின்டின் கேனும் சரி, இம்முறை அடிக்கவிருக்கும் சிக்ஸர்கள் பந்தை ஸ்டேடியத்துக்கு வெளியே பறக்கச் செய்யும் ரகம் ! லக்கியும், ஜாலியும் மெக்சிகோவுக்குள் தேடுதல் வேட்டையில் புகுந்திட, துணைக்கு ரி.டி.கே.யும் கோர்த்துக் கொள்ள - ஒரு செமத்தியான சூறாவளி சிரிப்பு மேளா வெயிட்டிங் ! கார்ட்டூன்களுக்குப் பேனா பிடித்தே ரொம்ப காலம் ஆகியிருக்க, இந்த ஆல்பம் நாம் எதை miss செய்து கொண்டிருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது - yet again !! கார்டூன்களையும் ஆக்ஷன் நாயகர்களுக்கு இணையாய் நம் மத்தியினில் உசத்திடலாமே folks ? நம்மைச் சுற்றி அரங்கேறி வரும் அரசியல் காமெடியானது, கார்ட்டூன் வறட்சியினைப் போக்கிட பெருமளவு பயன்படுகிறதென்றாலும், ஒரிஜினலான சிரிப்புப் பார்ட்டிக்களையும் ஆதரிப்போமே - ப்ளீஸ் ?

ஜாகஜம் # 2 : ரொம்ப காலமாய் விளம்பரத்தோடே நின்று வந்திருந்த "கானம் பாடும் கம்பிகள்" ! Yes - அந்த டிரேட்மார்க் "கெட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளி" கதைக்களமே ! ஆனால் வன்மேற்கின் வரலாற்றினூடே லக்கி லூக்கோடு பயணிப்பதென்பது, திருச்செந்தூர் பதநீரை மட்டை கட்டிக் குடிக்கும் சுகத்துக்கு விடுதலில்லாததாச்சே ?! தந்திச் சேவையினை அமெரிக்க தேசத்தினில் நிறுவும் பணியில் அவரோடு நாமும் பயணிக்கவுள்ளோம் ! And இதோ - அட்டைப்படத்தின் preview & உட்பக்க preview : 


Moving on, இம்மாதத்தினில் இரவுக்கழுகார் மீண்டும் தனது black & white டபுள் ஆல்ப வாடிக்கைக்குத் திரும்புகிறார் ! "கைதியாய் கார்சன்" பட்டாசாய்ப் பரபரக்கவிருக்கும் ஆக்ஷன் மேளா ! கலரில் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் சித்திரங்களும், கலரிங்கும் அமைந்திருந்தாலுமே, இந்த b & w சாகசங்களில் தான் மெய்யான அனல் பறப்பது புரிகிறது ! ஒரிஜினல் அட்டைப்படம் இதற்கு ; அந்தக் கோப்புகளை கேட்டு வாங்க மறந்து வைத்து விட்டேன் என்பதால் preview செய்திட வழியில்லாது போகிறது ! ஆனால் அந்தக் குறையை நிவர்த்திக்க, இதோ - கா.க.கா.அட்டைப்பட preview(s) !!

4 விதமான பின்னணி வர்ணங்களோடு உள்ள டிசைன்களில் எது உங்களுக்கு best ஆகத் தெரிகிறதோ guys ? அப்புறம் கனவுக்கன்னி லீனாவின் அகில உலக ரசிகர் மன்றத்தின் சார்பில் பின்னட்டையில் அவரது வதனத்தையும் இணைக்கச் சொல்லிச் சொல்லியாச்சு ! அடுத்த சில தினங்களில் அதுவும் ஆகி விடும் !

OPTION : RED

OPTION : NIGHT BLUE

OPTION : SKY BLUE

OPTION : BROWN

OPTION : WHITE

ஒவ்வொரு டிசைனின் கீழேயும் அந்தந்த வர்ணத்தினைக் குறிப்பிட்டு Option மார்க் செய்துள்ளேன் folks ; உங்கள் தேர்வு எதுவோ அதனை சுட்டிக்காட்ட வர்ணத்தின் பெயரை சொன்னால் போதும் ! And இங்கே நீங்கள் தரும் விடைகளை எண்ணி, sort செய்வதற்குப் பதிலாய் அந்த ஓட்டு போடும் தளத்தினையே பயன்படுத்திடல் சுலபம் என்று நினைத்தேன் ! So இதோ இவ்வாரத்து poll : https://strawpoll.com/e7ZJGLxBWy3

"கார்சனின் கடந்த காலம்" இதழினில் அழகுக்கு அழகு சேர்க்க உங்களின் போட்டோக்களை இணைத்திட எண்ணிடும் பட்சத்தில் ஜூலை 15 தேதிக்குள் அனுப்பிடல் அவசியம் !! மறவாதீர்கள் ப்ளீஸ் ! 

அப்புறம் இந்த இதழில் 1 MAXI சைஸ் பக்கம் காலி உள்ளது ! கா.க.க. இதழ் சார்ந்த உங்களின் நினைவுகளை அசைபோடுவதாயின் - இந்தப் பக்கத்தினை அதற்கென ஒதுக்கிடலாம் ! அதற்கான இறுதித் தேதி ஜூலை 6th !! 

And இங்கொரு கொசுறுத் தகவலுமே !! நண்பர்கள் proof reading செய்திடும் முயற்சியானது, துரதிர்ஷ்டவசமாக அத்தனை சோபிக்கவில்லை ! ஒவ்வொரு கதையினையும் அடுத்தடுத்து இருவர் செக் பண்ணியுமே, எண்ணிலடங்கா பிழைகள் !!  சில தருணங்களில் திருத்தமென்ற வேகத்தினில் சரியாக உள்ளவற்றையும், தவறாக  மார்க் செய்திடும் சங்கடங்களும் அரங்கேறியுள்ளன ! So மறுபதிப்புகள் தானே....நண்பர்களிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வாய்க் கொஞ்சம் அல்வா கிண்டிக்கலாமென்று எண்ணியிருந்த எங்களுக்கு double whammy !! ஒட்டுமொத்தமாய் அத்தனையையும் மீள்வாசிப்புக்கு உட்படுத்தும் கட்டாயம் எனக்கும், திருத்தங்களை திருத்தம் பண்ணும் அவசியம் DTP பிரிவினருக்கும் !! Sorry guys ; an experiment without much success !!

Before I sign out - இதோ ; இன்னொரு கேள்வி ! இம்முறை இது சம்மர் ஸ்பெஷல் முடிந்த கையோடு என்பதால் ரொம்பவே முக்கியமானதாகிறது !! 2022 முதலாய் நம்மோடு வலம் வந்து கொண்டிருக்கும் புதியவர்கள் நால்வர் ! 

C.I.A ஏஜெண்ட் ஆல்பா 

பிரென்ச் ஏஜெண்ட் சிஸ்கோ

லோன்ஸ்டார் டேங்கோ 

&

டிடெக்டிவ் ரூபின் 

இந்த நால்வரில் டேங்கோ safe zone-ல் உள்ளார் ; கதை பாணிகளில் ; சித்திர பாணிகளில் சாதித்துக் காட்டியிருப்பதால் ! I agree - சம்மர் ஸ்பெஷல் இதழில் வந்த டேங்கோ கதை # 3 அத்தனை ஆழமில்லை தான் ; but இதற்கு முன்பான இரண்டுமே செம என்பதால் டேங்கோவுக்கு இப்போதைக்கு டேஞ்சர் இல்லை ! பாக்கி மூவரில் அடுத்தாண்டின்  ரெகுலர் தடத்தில் நீங்கள் யாரைப் பார்க்க விரும்புவீர்கள் ? யாரை ஓரம்கட்டச் சொல்வீர்களோ ? இன்னார் இருக்கட்டும் என்றால் அதற்கான காரணம் & இன்னார் வேண்டாமே என்றால் அதற்குமான காரணம் - briefly ப்ளீஸ் ? 

ஜூலை இதழ்களுள் லக்கி லூக் ஆல்பம் பிரிண்ட் ஆகி 5 நாட்கள் ஆகிவிட்டன & பாக்கி இதழ்கள் சகலமும் திங்களன்று அச்சுக்குச் செல்லவிருக்கின்றன ! நிதானமாய் பைண்டிங் செய்து வரும் வாரயிறுதிக்குள் அனுப்பிட எண்ணியுள்ளோம் ! So சற்றே பொறுமை ப்ளீஸ் ?

Bye all...see you around ! Have a cool Sunday !

P.S : ஈரோடு விழாவுக்கு வர திட்டமிட்டுள்ளார் யாரெல்லாம் ? என்றறிய போன வாரம் நடத்தியிருந்த poll-ல் (https://strawpoll.com/GeZAOwWAEnVஇப்போது வரைக்குமான பதில்கள் இதோ :

*Oh yes ...அவசியம் வாரேன் : 88 

*வர எண்ணியிருக்கிறேன் ; நெருக்கவட்டில் உறுதி பண்ணுகிறேன் : 42 

*இல்லீங்கோ..வரல்லீங்கோ : 11 

So இந்த எண்ணிக்கைகளை ஒரு உத்தேச கணக்காக எடுத்துக் கொண்டு அதற்கேற்ப அரங்கினைத் தேடிப் பிடிக்க முயன்றிடுவோம் ! Thanks guys ! 

184 comments:

  1. காசனின் கடந்த காலம் அட்டைப்படம் நன்றாக உள்ளது

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே🙏 ங

    ReplyDelete
  3. குமார், பரணி சார், சேலம் டெக்ஸ்
    தலைவர் செயலாளர் பொன்ராஜ்
    எல்லாரும் வாங்க.

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டேன் சார்.

      Delete
    2. கிரிக்கெட் டூர்னமன்டுல, பால் பன் நிச்சயமாக கவிஞருக்கு...

      Delete
    3. நட்பூஸ் அனைவருக்கும் வந்தனம்.

      Delete
    4. வந்துட்டேன்.. நானும் வந்துட்டேன்..

      Delete
  4. ///128 பக்க ஸ்பைடர் புக்கில் இருபதாயிரம் பிரதிகளை அச்சிட்டு ரெண்டே ரூபாய்க்கு....////

    அது ஒரு இனிய காலம்...

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஓட்டு...ஓட்டு...! வெளியிலே சொல்லப்படாது சார் !

      Delete
    2. Done சார். இங்கே சொன்ன பிறகு தான் realised

      Delete
  6. அடுத்த மூவருமே அடுத்த வருடம் வேண்டும் சார். ஆல்ஃபா, சிஸ்கோ, ரூபின் மூவருமே.ஆல்ஃபா இப்போது தான் செம்மையாக செல்கிறது. சிஸ்கோ one of the Top stars in our Comics. எல்லா கதைகளும் ஜெட் வேகம்.

    ரூபின் பற்றி சொல்லவே வேண்டாம் எனக்கு மிகப் பிடித்த ஸ்டார் இப்பொழுது சோடா போலவே. அதும் துப்பறியும் ஒரு கதாநாயகி.

    இந்த கேள்வியே செல்லாது சார்.

    ReplyDelete
  7. கா க கா பற்றிய நினைவுகள் இங்கேயே பகிரவா இல்லை Mail அனுப்பவா சார்?

    ReplyDelete
    Replies
    1. இங்கேயே ஓகே தான் சார் ! Or an e-mail too !

      Delete
  8. எனக்கு நால்வருமே தொடருவதில் தான் விருப்பம்.
    டேங்கோ - as you said, the best of the four
    சிஸ்கோ - a refreshing take on the anti-hero and my second favorite
    Rubin - a really fun and quirky read.

    Alfa - சம்மர் ஸ்பெஷல் showed a marked improvement. Definitely needs one more chance.

    ReplyDelete
  9. ///C.I.A ஏஜெண்ட் ஆல்பா

    பிரென்ச் ஏஜெண்ட் சிஸ்கோ

    லோன்ஸ்டார், டேங்கோ

    &

    டிடெக்டிவ் ரூபின் ////

    ஆல்பா சிஸ்கோ - வின்
    தற்போதைய இதழ்கள் டேங்கோவின் தற்போதைய இதழை காட்டிலும் விறுவிறுப்பாக உள்ளது..
    மற்றபடி மக்களின் தீர்ப்பே.

    ரூபின் ,
    இருக்கறதே ஒரு பாப்பா.
    அதையும் வீட்டுக்கு அனுப்பிட்டு, நாங்க தாடி வைச்சு கிட்டு திரிய வேண்டியதுதான்.

    ஆனா எடிட்டர் சார்,
    உங்களுக்கு இந்த வாலிபர்கள்
    மேலே இம்புட்டு கோபமா...

    ReplyDelete
    Replies
    1. //தாடி வைச்சு கிட்டு திரிய வேண்டியதுதான்.//என்னத்த தரங்குது ஆண்டுமலரிலோர் பப்பி

      Delete
  10. விதமான பின்னணி வர்ணங்களோடு உள்ள டிசைன்களில் எது உங்களுக்கு best ஆகத் தெரிகிறதோ guys ?
    எல்லாமே தான்.. அந்த ஆட்டு தாடி மட்டுமே பிரதானமாக தெரிகிறது.. மத்ததெல்லாம் இரண்டாம் பட்சமே..

    ReplyDelete
    Replies
    1. பாருங்க நம்ம ரம்மிக்கு கூட அந்த ஆட்டுதாடி தான் பிரதானமா தெரியுதாம்..


      இளமையான கார்சன் போட்டோ அட்டையில் போடலாம் சார்
      ...

      Delete
  11. C.I.A ஏஜெண்ட் ஆல்பா

    பிரென்ச் ஏஜெண்ட் சிஸ்கோ

    லோன்ஸ்டார் டேங்கோ

    &

    டிடெக்டிவ் ரூபின்
    சிஸ்கோ கெட்டியாக வேணுங்க..

    ReplyDelete
  12. 4 ஹீரோக்கள் கதையுமே நல்லா தான் இருக்கு.

    சிஸ்கோ தான் கொஞ்சம் டச் பண்ணலை

    ReplyDelete
  13. மீண்டுமோர் செம சூப்பர் பதிவு சார்....அட்டைப்படம் லக்கிக்கு இது வரை வந்ததிலே இதான் டாப்பாயிருக்கும்....காட்டியுள்ள பக்கத்தில் கடைசி இரு கட்டங்களும் குபீர் சிரிப்பை வரவழைக்க....


    கார்சனின் கடந்த காலம் அட்டைப்படம் எல்லாமே கலக்க...நீலக்கலர் விரும்பியான நானோ அதல்லாம் மறுத்துபுட்டு... முதலா கடைசியான்னு திகைக்க...விக்கிரமாதித்தனோ வெள்ளை அதாவது வொயிட் கடைசின்னு முடிக்க...தாவும் மனமோ சிவப்ப மீண்டும் பாக்க முடியல சார் ...வொயிட் ஆச்சுன்னு மனச அடக்கிட்டு பாஞ்சா நம்ம பாஞ்சாலி லினாவுக்கும் பின்னட்டைல இடம் எங்கே ...காணலியே சின்னப் பெண்ணை ...நான் பிரிந்து வந்த காதல் தேவதையன்னு கண்ணன் பாட இளவரசர் ஆட......லிப்பு தடுமாற ...சாரி நண்பர்களே வரிகள்தான்...வரல

    ReplyDelete
  14. "கார்சனின் கடந்த காலம்" இதழினில் அழகுக்கு அழகு சேர்க்க உங்களின் போட்டோக்களை இணைத்திட எண்ணிடும் பட்சத்தில்


    இந்த லொள்ளு தானே வேண்டாங்கறது புக்கை பிரிச்சு என் போட்டோவை பார்த்தவுடன் என் மனைவி மூஞ்சி போற போக்கை பாத்தா இந்த மாதிரி பேச மாட்டிங்க

    ReplyDelete
  15. எல்லாருமே வரட்டும் சார்...முதல் கதை இப்பதான் படிச்சு என் ஃபுல் சப்போட்டையும் ரூபிக்கு தந்தாச்...

    ஆல்ஃபா இதுக்கு முந்திய இரு கதைகளையும் படிச்சு...காதலனின் காகிதம் வரலாறோட பயணிக்க ...இவர விடுவதா ...விடாதீங்க சார்...அதாவது புடிச்சுப் போடுங்க...நிச்சயம் வேண்டும்...

    சிஸ்கோ முதல் கதை வில்லன் போல தெரிய...இரண்டாம் கதை இன்னும் படிக்கல...நண்பர்கள் இரண்டாம் கதய சிலாகிச்சதா நினைவில்...ஆகையால் 50/50 வந்தாலுஞ் சரி...வராட்டியுந்தான்

    ReplyDelete
  16. சிஸ்கோ: இவரது கதைகள் படு வேகம் ஆளும் செம சுறு சுறுப்பு கண்டிப்பாக இவர் வேண்டும்
    டேங்கோ : ஆக்சன் ஹீரோ இவரது கதை ஆரம்பிப்பதும் தெரியாது முடிவதும் தெரியாது முஷ்டி மடக்குவதில் மன்னர் இவரும் கட்டாயம் வேண்டும்
    ஆல்ஃபா : தட்டுத்தடுமாறி இப்பதான் கரெக்ட் ரூட்டுக்கு வந்திருக்கிறார் இந்த நேரத்தில் கேட்டு போட்டா அநியாயமாகிடும் அதனால் இவரும் வேண்டும்
    ரூபின்: இந்த பாப்பா உறுதியாக வேண்டும் சார் அவ்வளவுதான் வேறென்ன சொல்ல

    ReplyDelete
  17. லக்கி லூக் அட்டை ஜேன் இருக்க பயமேன் அட்டை மெருகூட்ட பட்டுதக தகவென மின்னுகிறது

    ReplyDelete
  18. ஓட்டு போட்டாச்சு சார் !!!

    ReplyDelete
  19. 1 . சிஸ்கோ : வேண்டாம்; வேட்டை hound ஐ எல்லாம் நாயகனாக ஏத்துக்க முடியல.நேர்மையான அதிகாரிய கொல்வது மட்டுமல்லாமல் அதைப் பாத்துட்ட விண்டோ கிளீனரை கொல்ல துரத்தறது டூ மச். முகமூடியில் டயபாலிக். ( Diabolic in disguise).



    2. ஆல்ஃபா: சூப்பராத்தான் இருக்கு.
    தோ! வஞ்சம் மறக்கா வரலாறு முடிக்க போறேன்.அமெரிக்க - ரஷ்ய confrontation எப்பவுமே நல்லா இருக்கும்.

    3. ரூபின்:
    தனித்துவமான கதை வரிசை.
    வோட்டு அம்மிணிக்குத்தான். வசனங்கள் செமயா இருக்கு.
    Thuggish yet honest lady detective or police .- அப்டிங்கற கான்செப்ட் ரொம்ப புடிச்சிருக்கு.


    ஆல்பா - வை எப்பாடுபட்டாவது உள்ளே வர முயலவும்.

    ReplyDelete
  20. எனக்கு நால்வருமே தொடருவதில் தான் விருப்பம்.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. நைட் ப்ளூ ஓ.கே சார்.

    ReplyDelete
  23. விளம்பரம் செய்த போது காட்டிய படத்தை ஒப்பிடும் பொது, இன்று பகிர்ந்துள்ள கா.க.கா அட்டைபடங்கள் எனக்கு அவ்வளவாக ஒட்டிவில்லை ஐயா.

    கார்சனின் கடந்த காலத்தில் காரன் வெண்தாடி வேந்தராக இல்லாமல், இளமையாக மிடுக்காக வருவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.

    முதல் பதிப்பாக வந்த, கா.க. கா-வின் அட்டையில் குறுந்தாடியுடன் அருமையாக இருப்பார்.

    மாற்றுவது தங்கள் விருப்பம்!

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. பூபதி அண்ணன் சொல்ற மாதிரி வெண்தாடி நல்லா இல்லை சார்..


      இளமையான கார்சன் போட்டோ அட்டையில் போடலாம் சார்..

      Delete
  24. நால்வரில் ஆல்பாதான் எனக்கு குழப்பமாகவே இருக்கிறார் . ஒற்றைநொடி ஒன்பது தோட்டாக்கள் கதையைக்கூட இரண்டு முறை படித்துவிட்டேன்.கதை நீளமானதாக இருந்தாலும் குழப்பமில்லாதால் படிக்க முடிகிறது.ஆனால் ஆல்பா தான் இன்னும் அவரது முதல் கதையையே பத்து பக்கங்களுக்கு மேல் எத்தனை முறை முயன்றாலும் படிக்க முடியவில்லை.சிஸ்கோ முதல் கதையில் சற்று நெகட்டிவ் ஆக காட்சியளித்தாலும் கதை என்னமோ படுவேகம். மற்றும் ரூபின்.. ஆஹா.. இவங்கப்போய் நான் வேணாம்னு சொல்லமுடியுமா..?அடுத்த கதையில இன்ஸ்பெக்டர் ரூபினி'ன்னு பெயர் மாத்த முடியுமா..

    ReplyDelete
  25. Anyhow it is going to be a treat for all comics lovers. 😍🥰. We are preparing ourselves for the feast to the eyes.😊

    ReplyDelete

  26. ///நண்பர்கள் proof reading செய்திடும் முயற்சியானது, துரதிர்ஷ்டவசமாக அத்தனை சோபிக்கவில்லை//

    ////ஒட்டுமொத்தமாய் அத்தனையையும் மீள்வாசிப்புக்கு உட்படுத்தும் கட்டாயம் எனக்கும், திருத்தங்களை திருத்தம் பண்ணும் அவசியம் DTP பிரிவினருக்கும் !! Sorry guys ; an experiment without much success !!///

    ----நிறைய வாசிப்பதால் திருத்தம் பண்ண இயலும்னு நினைத்திருந்தேன் சார்..

    ஆனா வாசிப்பு அனுபவம் மட்டுமே போதாது எனப் புரிகிறது. திருத்தம் செய்ய தனித்த புலமையும் இலக்கண வல்லமையும் அவசியம்னு புரிகிறது.

    நல்லதொரு அனுபவம் ஆக அமைந்தது...லயன் ஆபீஸ்க்கு பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது என்னளவில் பெரும்பேறு!
    இந்த நினைவுகள் எப்போதும் நீடித்திருக்கும்...
    வாய்ப்புக்கு நன்றிகள் சார்!

    திருத்தம் பெற்று வரும் முழு வண்ண கா.க.கா த்தை வாசிக்க ஆவலுடன்....

    ReplyDelete
  27. கா கா கா வின் விலை 300 இல்லை 900. சில அட்டைபடங்களின் சைடில் 300 என போட்டிருக்கிறது. சரி பார்க்கவும்.

    ஈரோடு புத்தகங்களை முன்பதிவு செய்பவர்களுக்கு முக்கியமாக நேரில் வராத முன்பதிவாளர்களுக்கு கொரியர் இலவசமாக அனுப்பலாமே. கொஞ்சம் கன்சிடர் செய்யவும்.

    ReplyDelete
  28. ***"பாக்கி மூவரில் அடுத்தாண்டின் ரெகுலர் தடத்தில் நீங்கள் யாரைப் பார்க்க விரும்புவீர்கள் ? யாரை ஓரம்கட்டச் சொல்வீர்களோ ?****

    யாரையும் ஒதுக்கி வைக்க கூடாது சார். .

    அதனால அடுத்த வருஷம் இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம் சார். .

    ReplyDelete
  29. ஈரோடு வருவது 90% உறுதி.

    ReplyDelete
  30. முதலிரண்டு அட்டையில் விலை ரூ.300/- என்று உள்ளது.

    ReplyDelete
  31. டியர் எடி,

    எனது சாய்ஸ் Option White... இது வரை அட்டையில் வெள்ளை பின்னணியில் நமது இதழ் எதுவும் வந்ததில்லை என்பதால்... ஒரு வித்தியாச தேர்வாக இது இருக்கும் என்பதால்.

    ReplyDelete
  32. வணக்கம் ஆசிரியர் சார் & நண்பர்களே.

    ReplyDelete
  33. எனது தேர்வு..
    OPTION : RED அல்லது OPTION : BROWN என்றுதான் இருக்கும். இதிலும் பின்வானத்தில் மேப்போடு கூடிய வானம் உள்ளதால் பிரவுன் எனில் ok.

    குதிரை வீரர்கள் பின்னணியில் பிரமாண்ட கார்சன் சித்திரம் கண்களில் உயிரோட்டமாக சும்மா தெறிக்க விடுகிறது. மேலே சிலர் வெள்ளை தாடி வேண்டாம் என்று அபிப்ராயப்பட்டுள்ளனர். என்னளவில் இந்த வெள்ளைத் தாடி சரிதான். வெண்தாடி சிங்கத்தின் பிளாஷ்பேக் என்பதால் இந்தப் படம் ok என்றே தோன்றுகிறது.

    டியர் sir... பட்ஜட் காரணமாய் என்னால் முன்பதிவில் இணைய இயலவில்லை. பின்னொருநாளில் கார்சனின் கடந்த காலத்தை வாங்கிக்கொள்ளலாம் என்றுள்ளேன். ஆகையால்.. மேற்படி பிரதி முன்பதிவின் அளவிற்கு மட்டும்தான் அச்சாகிறதா அல்லது கூடுதலாக அச்சாகுமா?

    ReplyDelete
  34. நால்வரும் ஓரளவு செட்டில்டு.மாற்றம் வேண்டாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார். மாற்றம் வேண்டாம்

      Delete
  35. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  36. Replies
    1. ரூபின் - மை பேவரிட்
      ஆல்பா - CIA. ஏஜெண்ட் குட்
      டேங்கோ- ஓவியங்கள் செம, இந்த அட்வெஞ்சர் குட்

      சிஸ்கோ - கொஞ்சம் யோசிக்கனும்

      Delete
  37. சார் குதிரையில் வருகிற ஏழு பேரில் மூன்று பேர் டெக்ஸ்வில்லரின்
    மஞ்சள் சட்டை ப்ளூ ஜீன்ஸ் பேண்ட் உடைகளில் வருகிறார்கள். யூனிஃபார்ம் மாதிரி உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அவை எற்கனவே மாற்றப்பட்டு விட்டன நண்பரே !

      Delete
  38. நண்பர்கள் proof reading செய்திடும் முயற்சியானது, துரதிர்ஷ்டவசமாக அத்தனை சோபிக்கவில்லை//

    ////ஒட்டுமொத்தமாய் அத்தனையையும் மீள்வாசிப்புக்கு உட்படுத்தும் கட்டாயம் எனக்கும், திருத்தங்களை திருத்தம் பண்ணும் அவசியம் DTP பிரிவினருக்கும் !! Sorry guys ; an experiment without much success !!///

    மன்னிக்கவும் ஆசிரியரே
    தவற விட்டது நிறையவே
    நாங்களும் நிறைய இம்ப்ரூப் செய்ய வேண்டும்

    வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள் ஆசிரியரே
    Its a big thing for me

    ReplyDelete
  39. Edi ji, Carson கடந்த காலம் அட்டை படத்தில் அவரது இளமைக்கால படத்தை போட்டால் நன்றாக இருக்கும் அல்லவா

    ReplyDelete
  40. சிவப்பு வண்ண அட்டைகள் எப்போதுமே ஒரு ஈர்ப்பை, பிரம்மாண்டத்தை, மிரட்சியை ஏற்படுத்திவிடும் என்பதால் என்னுடைய தேர்வும் அதுவே!

    ஆனால் 'சிவப்பு வழக்கமா போடறதுதானே' என்று நினைத்திடும்பட்சத்தில் அந்த பிரவுன் வண்ணம் எனது இரண்டாவது சாய்ஸ்! ஒரு க்ளாசிக் டச்'சை உணரவைக்கும் வண்ணமிது! பார்க்கவும் அழகாக இருக்கிறது!

    அப்புறம்.. ஆல்ஃபா, சிஸ்கோ, டேங்கோ கதைகளில் இதுவரை ஒன்றுகூட படித்திராத துரதிர்ஷ்டசாலி என்பதால் (ஆனாலும் ஒரு மனுசனுக்கு இம்புட்டு பிஸி ஆவாதுப்பா!) இங்கே கருத்துச் சொல்ல தகுதியற்றவனாகிறேன்!

    ReplyDelete
  41. சார் முதல் அட்டையும் இரண்டாவது அட்டையும் 300 ரூபாய் போட்டு இருக்கு சார் அது மாத்துங்க சார்

    ReplyDelete
    Replies
    1. இவை அனைத்துமே draft copies மாத்திரமே நண்பரே !

      Delete
  42. //C.I.A ஏஜெண்ட் ஆல்பா

    பிரென்ச் ஏஜெண்ட் சிஸ்கோ

    டிடெக்டிவ் ரூபின்//

    மூன்றுமே நல்லா தான் சார் இருக்கு .. எதையும் ஓரம்கட்ட வேண்டாம் .. அடுத்த வருடம் இது மூன்றும் கலந்து SUMMER SPECIAL போட்டு விடுங்கள் சார்..

    MIKE HAMMER வேண்டுமானால் CUT பண்ணி விடுங்கள் ..

    ReplyDelete
    Replies
    1. //MIKE HAMMER வேண்டுமானால் CUT பண்ணி விடுங்கள் ..//

      +1

      Delete
    2. Mike Hammer மொத்தமே ஒரே கதை தான் நண்பரே !

      Delete
    3. ஆத்தாடி...தப்பிச்சேன் ஏழு குண்டல லாலா.....

      Delete
  43. Manjaa - sevappu attai vendum !! :-)

    ReplyDelete
  44. ஓட்டு போட்டாச்சு. ஆனால் நால்வருமே வந்தால் OK தான்.

    ReplyDelete
  45. // And இங்கொரு கொசுறுத் தகவலுமே !! நண்பர்கள் proof reading செய்திடும் முயற்சியானது, துரதிர்ஷ்டவசமாக அத்தனை சோபிக்கவில்லை ! ஒவ்வொரு கதையினையும் அடுத்தடுத்து இருவர் செக் பண்ணியுமே, எண்ணிலடங்கா பிழைகள் !! சில தருணங்களில் திருத்தமென்ற வேகத்தினில் சரியாக உள்ளவற்றையும், தவறாக மார்க் செய்திடும் சங்கடங்களும் அரங்கேறியுள்ளன ! //

    I am sorry to hear this sir.

    ReplyDelete
  46. சார் இளமையான கார்சன் அட்டையில் போட முடியாதா? வயதான கார்சன் பல அட்டை படங்களில் பார்த்தாகி விட்டது. இக்கதை விட்டால் வேறு எங்கும் இளமை கார்சன் போட முடியாது. கொஞ்சம் பாருங்கள் சார்

    ReplyDelete
  47. பெண். நாலாம் நாலாம்
    கதநாலாம் ஆல்ஃபாக்கும்
    சிஸ்கோக்கும் இரு தாளாம்
    ஆண் : இளைய ரூபினும்
    டேங்கோ இணையுடன் லயனுத்
    தேரில் வருவாராம்

    பெண். நாலாம் நாலாம்
    கதநாலாம் ஆல்ஃபாக்கும்
    சிஸ்கோக்கும் இரு தாளாம்
    ஆண் : இளைய ரூபினும்
    டேங்கோ இணையுடன் லயனுத்
    தேரில் வருவாராம்

    நாலாம் நாலாம்
    கதநாலாம் ஆஹா
    ஆஆம்ம்ம்

    டேங்கோ அலைகடலினில்
    ஆல்ஃபா
    ரூபின் தேடலில்
    டேங்கோ அலைகடலினில்
    ஆல்ஃபா
    ரூபின் தேடலில்

    அங்கு போடும்
    கதைகள் ஆயிரம்
    அது முத்து
    விசயனின் காவியம்
    அதில் ஒருவர்
    தனிமையாம் ஒருவர் வெறியராம்
    இருவர் தேடலே பாடலாம்

    ஓஹோ ஹோ
    ஓஹோ ஓஹோ
    ஆஆ ஆஆ ஆஹா
    ஆஆ ஹா ஆஆ ஆஆ
    ஆஆ ஹா
    ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

    ReplyDelete
  48. ம்ம்ம்... அதுவந்து..... மேலேயிருக்கும் அட்டைப்படத்தை ரசிக்கும்போது கார்ஸனின் முகம் வேறொரு பழக்கப்பட்ட முகத்தை எனக்கு நினைவூட்டியது! சும்மா நையாண்டி பண்ணணும்னு இதைச் சொல்லலை. நிஜமாகவே அந்த முகம் எனக்கு நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணாச்சிக்கு ஆட்டுத்தாடி வைத்து, மீசையை முறுக்கிவிட்டாப்லதான் தெரியுது! அந்த ஷார்ப்பான பார்வையுமே கூட அவரது பார்வையை ஞாபகப்படுத்துகிறது! (இப்போல்லாம் நான் நக்கல், நையாண்டி, கு*ம்பை விட்டுட்டேன் சார்.. நம்புங்க ப்ளீஸ்)

    அந்த பரிதாபப்பட்ட ஜீவனுக்கு நேற்றைக்கு ஃபோன் பண்ணியிருந்தேன். சிவகாசியில் ஏதோவொரு ஆப்செட் கம்பெனியில் வாட்ச்மேன் வேலைக்குச் சேர்ந்திருப்பதாகக் கூறினார். 'முன்னமாதிரி இப்போல்லாம் ஊர்ஊரா அலைய முடியலைங்க அண்ணாச்சி' என்றார். மனசு லேசாய் வலித்தது!

    கிட்டத்தட்ட நம் எடிட்டருக்கு இணையாக காமிக்ஸ் நண்பர்களையும், ஏஜென்டுகளையும் நன்றாக அறிந்து வைத்திருப்பர் அவர் மட்டுமே! "எனக்கு மகன் பொறக்கலை அண்ணாச்சி.. நம்ம காமிக்ஸ் நண்பர்களைத்தான் மகன் ஸ்தானத்துல பார்க்கறேன்" என்று அடிக்கடி சொல்வார்!

    கடமையே கண்ணாக அவர் பணியாற்றுவதை புத்தகத்திருவிழாக்களில் பலமுறை பார்த்து வியந்திருக்கிறேன். இனிவரும் புத்தகத் திருவிழாக்களில் அவர் இல்லாமலிருப்பது ஒரு பெரும் குறையே! 'மாற்றம் ஒன்றே மாறாததே!' என்பதற்கு யாருமே விதிவிலக்காகிவிட முடியாதே!

    ReplyDelete
    Replies
    1. அடடா.....
      எங்கிருந்தாலும் சந்தோஷம் துணையிருக்கட்டும்...
      நமக்கு காமிக்ஸ் போல

      Delete
    2. நிஜமே சார் ; எற்கனவே இதய நோயாளி ! புத்தக விழா சீசனில் ஊர் ஊராய் சுற்றச் செய்யும் போது தாக்குப் பிடிக்க சிரமப்பட்டே வந்தார் !

      காலச் சக்கரத்தின் சுழற்சிக்கு யாருமே விதிவிலக்காகிட மாட்டார்கள் போலும் !

      Delete
    3. I am not aware of this. I meet him everyday in Tuticorin book fair. I/we will be missing him but will keep in touch regularly.

      Thanks Vijay for sharing this information.

      Delete
    4. மனதிற்கு மிகுந்த கஷ்டத்தை தருகிறது...

      Delete
    5. அப்போ கோவை புத்தகத் திருவிழாவுக்கு அண்ணாச்சி மிஸ்ஸிங்கா?....

      Delete
  49. கார்சனின் கடந்த காலம் பின் அட்டைபடத்தில் அந்த 5'clockல் இருக்கும் படத்தை மட்டும் மாற்ற முடியுமா சார்...??

    ReplyDelete
    Replies
    1. அதைப் பார்த்து நீங்க ஏன் ரம்மி 2 o' clock படத்திலிருப்பது மாதிரி முழிக்கறீங்க?!!

      Delete
  50. வயதான கார்சன்??. இளம் கார்சனாக இருந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  51. 1. Alpha.... must be for every year 100%
    2. Tango....must be for every year 100%
    3. CISCO.... 50/50

    ReplyDelete
  52. சார் photo அனுப்ப வேண்டிய முகவரி தெரிவிக்கவும்

    ReplyDelete
  53. தமிழில் எழுத்துப்பிழை திருத்துவது மிகவும் சுலபம்
    சார்.. என்னால் நம்பவே முடியல... 🤭... தமிழ் மொழியை நன்றாக அறிந்திருக்க வேண்டும்
    அடிப்படை இலக்கணம் போதும்.. அதில் பிழையா
    ..? 🤭.. ❤️

    ReplyDelete
    Replies
    1. 🤣🤣🤣🤣இப்படிதாண்ணே நாங்களும் நினைச்சோம்....
      பண்ணிபாருங்க அப்பத்தான் அதில் உள்ள "கண்ணி"-கள் புலப்படும்....பெஸ்ட் ஆஃப் லக்💐

      Delete
  54. I want to vote for this original cover. But no options 😔

    https://shop.sergiobonelli.it/tex/2023/04/28/libro/tex-il-passato-di-carson-nuova-edizione-1023036/

    ReplyDelete
  55. அல்லாருக்கும் வணக்கம்பா..

    ReplyDelete
  56. Blue Design- different & refreshing ஆக இருக்கும்.

    1. ஆல்ஃபா triple ok
    2. சிஸ்கோ double ok
    3. டேங்கோ ok
    4. ரூபின் முதல் கதை பிடிக்கல but இரண்டாவது கதை சூப்பர்

    ReplyDelete
  57. ஆல்பா, சிஸ்கோ, டேங்கோ, & ரூபின். நாலு பேருமே எனக்கு ஓகே.

    ReplyDelete
  58. ////given a choice - கால இயந்திரத்தில் ஏறி மறுக்கா பால்யங்களுக்கே சென்றிடும் ஆவல் அலையடிப்பது எனக்கு மாத்திரமே என்றிராது தானே guys ? ////----
    ஆண்டுமலர், கோடைமலர், தீபாவளி மலர் இவைகளின் வெற்றி ரகசியத்தை படார்னு சொல்லலிட்டீங்க சார்.....🤩

    இவைகளைப் பார்க்கும் போது உணருவதை வார்த்தைகள் ல சொல்லவே இயலாது தான்

    ReplyDelete
  59. ஆண்டுமலர் அட்டை படம் பழைய ஜேன் இருக்க பயமேனை நினைவுபடுத்தினாலும் இந்த பிண்ணனி அட்டகாசம் சார்...

    ரின் டின் ரசிகனான நான் ஆவலுடன் காத்துள்ளேன் ஆண்டுமலருக்கு!!!!

    ReplyDelete
  60. சிஸ்கோ,
    டேங்கோ,
    ஆல்ஃபா,
    ரூபின்..கூட்டணி ஆட்சியும் சிறப்பாகத்தானே உள்ளது....

    தொடரட்டும் சார்....

    ஐ லைக் ஆல் ஃபோர்ஸ்...


    அவுங்க பாட்டுக்கு ஓரே புக்கில் வந்தாங்களா, மகிழ்விச்சாங்களானு உள்ளார்கள்..ஏன் இவர்களை தொந்தரவு பண்ணனும்??? தொடரட்டும் சார்...

    ReplyDelete
  61. """"""""""""""""லயன் ஆண்டுமலர்கள்"""""""""""

    #"பர்த்டே"---குழந்தைகள்கிட்ட இந்த நாள் கொணரும் உற்சாகமும், கொண்டாட்டங்களும் ரொம்பவே ஜாலியானவை.

    #வளர்ந்த "குழந்தை"களுக்கு இந்த கொண்டாட்டங்கள் வேறுமாதியானவை!ஹி...ஹி...!!!

    #லயன் காமிக்ஸ் ஆண்டுமலர் பற்றிய அன்பின் எடிட்டர் விஜயன் சாரின் முன்னோட்டங்கள், அவரின் சிறுவயது நினைவுகளை ஹாஸ்யத்துடன் வெளிக்கொணர்ந்து இருந்தது......

    #லயன்ல தீபாவளிமலரும், கோடைமலரும் டாப் கவனங்களை எடுத்து கொள்ள, இடையே வெளிவரும் ஆண்டுமலர் உண்டாக்கும் எதிர்பார்ப்பு ஒரு வகையானது! அந்த இரு அதிரடி இதழ்களுக்கு இது எப்படி ஈடுகொடுக்கப் போகிறதோ என்ற எதிர் பார்ப்பு எப்போதும் நிலவும்.....ஆண்டுமலரும் ஒவ்வொரு முறையும் இந்த எதிர்பார்ப்பை ஈடுசெய்தே வந்துள்ளது.

    #1995ல இருவண்ணத்தில் வந்த, "பூம்பூம் படலம்"- என் முதல் ஆண்டுமலர் வாசிப்பு.....பல முறை வாசித்தது அது.. பிற்பாடு வண்ணத்தில் வந்தபோது ரொம்ப ரொம்ப ரசிக்க வைத்து , அந்த காலத்திற்கே கூட்டிபோனது....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆண்டுமலர் கொண்டாட்டாம் எந்த இதழில் இருந்து ஆரம்பித்தது நண்பர்களே????

      லயன் ஆண்டுமலர் பட்டியல் இதோ....!!!! நினைவுகளைக் கிளறுங்களேன்.....

      1.சைத்தான் விஞ்ஞானி-1985
      2.பவளச்சிலை மர்மம்-1986
      3.அதிரடிப் படை-1987
      4.கானகத்தில் கண்ணாமூச்சி-1988
      5.நடுக்கடலில் அடிமைகள்-1989
      6.எமனுடன் ஒரு யுத்தம்-1990
      7.மர்ம முகமூடி-1991
      8.மின்னலோடு ஒரு மோதல்-1992
      9.கானகக் கோட்டை-1993
      10.மந்திர மண்ணில் மாடஸ்தி-1994
      11.பூம் பூம் படலம்-1995
      12.இரத்தப் படலம்-VI-1996
      13.பேங்க் கொள்ளை-1997
      14.கானகத்தில் கலவரம்-1998
      15.தலைவாங்கும் தேசம்-1999
      16.இரத்த பூமி-2000
      17.மெக்சிகோ படலம்-2001
      18.பயங்கரப் பயணிகள்-2002
      19.பரலோகத்திற்கொரு பாலம்-2003
      20.----------------------------2004
      21.----------------------------2005
      22.சூ மந்திரகாளி-2006
      23.----------------------------2007
      24.----------------------------2008
      25.----------------------------2009
      26.----------------------------2010
      27.----------------------------2011
      28.நியூ லுக் லக்கி ஸ்பெசல்-2012-(கம்பேக்கிற்கு பின்பு)
      29.ஆல் நியூ ஸ்பெசல்-2013
      30.லயன் மேக்னம் ஸ்பெசல்-LMS-2014
      31."தி லயன் 250"-Texஸ்பெசல்-2015
      32.பெல்ஜியம் எவர்கிரீன் ஜானி,XIII&பிரின்ஸ் மலர்-2016
      33.லயன் 300 ஸ்பெசல்-2017
      34.லூட்டி வித் லக்கி-2018
      35.தி லக்கி ஆண்டுமலர்-2019
      36.லக்கி’s லயன் ஆண்டு மலர்-2020
      37.லயன் ஜாலி ஆண்டுமலர்-2021
      38.லயன் லக்கி ஸ்பெசல்-2022
      39.லயன்'S லக்கி ஆண்டு மலர்-2023

      Delete
    2. #இந்த 39ஆண்டுகளில் எத்தனை விதமான பயணங்கள் என அந்தந்த ஆண்டுமலர்களின் பெயர்களைப் பார்க்கும் போதே தெரிகிறது.

      #வாசிப்பு உச்சத்தில் இருந்த 1980கள்& 1990களில் வளர்ந்த நாம் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்களே!

      #1990களின் ஹாட்லைன்ஸ் பார்க்கும் போதே எடிட்டர் சாரின் உற்சாகம் நம்மையும் தொத்திகிறது.

      #தொடர்ந்து 19ஆண்டுகள் ஆண்டுமலர்கள் வந்ததே பெரிய சாதனைதான்!

      #வாசிப்பிற்கு சோதனை வந்த 2000களில் எடிட்டர் சாரின் ஹாட்லைன் படிக்கும்போதே, அவரின் வேதனை, சூழலின் கடுமை புரிகிறது.

      #வசந்தம் மீண்ட 2012க்கு பிறகு 2ம் பிற்காலத்தில் ஆண்டுமலர்கள் பீடுநடையுடன் கோலோச்சுகின்றன.

      #ரூ3க்கு வெளிவந்த முதல் ஆண்டுமலர் ஆகட்டும், அதிகபட்சமாக ரூ550க்கு வந்த LMSஆகட்டும் கையில் ஏந்தும்போது உண்டாகும் உற்சாகம் ஒன்றே!

      #50வது, 100வது , 200வது ஆண்டுகள்......என லயனின் வெற்றிப் பயணம் சிறக்க வாழ்த்துக்களுடன்.....💐💐💐💐💐

      வித் KOK, ஷெரீப், பேபி& கனவுலகம் ப்ரெண்ட்ஸ்---STV

      Delete
    3. இந்த வாரக் கடைசியில் வரவுள்ள "லயன்'S லக்கி ஆண்டு மலர்-2023"- ஐ-- 19வயசு கல்லூரி மாணவனாக 1995ல ஆண்டுமலரை கையில் ஏந்திய அதே துள்ளும் ஆவலுடன் எதிர்நோக்கி...😍😍😍

      Delete
    4. சைத்தான் விஞ்ஞானி வாங்னதுக்கப்புறந்தா மாதாமாதம் வருதுன்னு விவரமாயிருப்பன்னு நெனைக்கிறேன்

      Delete
  62. என்னது ஆல்பா வேணுமா, வேண்டமாவா. இப்ப தான் சார் படிச்சு முடிச்சிட்டு வரேன். வித்தியாசமான கதை, பிரமாதமான ஆர்ட் வொர்க், மனதை அள்ளும் ரம்மியமான கலரிங், அதோடு சொதப்பல் இல்லாத ஷார்ப்பான அச்சும் சேர, மிக மிக தரமான ஆர்பாட்டமில்லாத சம்பவத்தை அரங்கேறியுள்ளார் ஆல்பா.

    முடிந்தால் இந்த மாதிரி உள்ள கதைகளில் சித்திரங்களை maxi சைசில் வெளியிடுங்கள். பிரமாதமாக இருக்கும். So, no doubt, ஆல்பா கட்டாயம் வேண்டும்.

    இம்முறையும் ஆல்பாவுக்கு சளைக்காமல் ஒரு தொடக்கம் ரூபினின் கதையியிலும் தென்பட்டது. ஏன் அதை விட ஒரு படி மேல். ஆனால் பாதி கதையிலேயே கொலையாளி யார் என்பது தெரிந்து விட்டதால் second half கொஞ்சம் மட்டு பட்டு விட்டது. என்னை பொறுத்தவரை ரூபினும் can go forward.

    மீதி இருப்பது சிஸ்கோ தான். முதல் கதை சூப்பர், இரண்டாம் கதை சுமார், மூன்றாவது இனி வந்தால் தான் தெரியும். அதற்குள் கேட்டால் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கதை வெளிவந்ததும் முடிவெடுப்பதே சரி.

    சார் ஒரு கேள்வி, இம்முறை டேங்கோ சித்திரங்கள் அவ்வளவாக தெளிவாக
    இல்லையே ஏன்.




    ReplyDelete
  63. வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  64. Rubin and Dango are sure shot entertainers. Alpha and Cisco are boring.

    ReplyDelete
  65. டியர் எடி ..

    ஆப்சன் Red
    In my option.

    ( மேற்கொண்டு ஒரு கேள்வி நீங்கள் போட்டுள்ள ரேப்பர்களில் முதல் இரு ரரேப்பர்களில் விலை 300/- எனவும் அடுத்து வரும் 3 ரேப்பர்களில் 900/- எனவும் பதிந்திருக்கிறதே!!! எதனால் விலை மாற்றம் ஏடும் உள்ளதா ??? )

    ReplyDelete
  66. "கிட் ஆர்டின் உஷார் "இரண்டு பெரிய மனிதர்களின் பகையின் காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்கள் அவர்களை "க்ளின்" பண்ண கிட் என்னும் ஒரு துப்பாக்கி வீரனுக்கு தந்தி அனுப்புகின்றனர்.தந்தியை பெறுவது நம்ம கிட். ஆர்டின் சார்.கதை முழுக்க எதிரிகளை அழிப்பதை. "சுத்தம் "செய்ய என்றே அனைவரும் பேசநம்ம ஆர்டின் சார் துடைப்பத்துடன் ரகளை செய்கிறார். துப்பறியும் சாம்பு பாணியில் நகர் கிட்டின் துப்பாக்கியால் தானாகவே சுத்தம் செய்யப்படுகிறது. மொழிபெயர்ப்பில் நகைச்சுவையில் பட்டையை கிளப்பியுள்ளார் ஆசிரியர். பல இடங்களில் வெடிச்சிரிப்பு .மொத்தத்தில் கிட்ஆர்டின் உஷார் கொண்டாட்டம். எனது மார்க்100/100

    ReplyDelete
  67. Sir.. I did not vote for any...Bcos we expected young Carson and young lina only in front cover. Found Lina in back cover after you mentioned only. Big Disappointment. Sorry Sir.
    Alpha - OK (Ivar kathai fulla pesikitae irukkar...konjam action layum irangalam)
    Cisco - double OK
    Tango - double OK
    Rubin - double ok
    Thnx.

    ReplyDelete
  68. இந்த ஆட்டோ கரெக்ட் தாண்டி ஒரு நாலு வரி பதிவு பண்றதுக்கு நாக்கு தள்ளுது.ஆனால் கவிஞர் மட்டும்ஆகா ஓகோ ஆஹாஹா ஹம்மிங்லாம்பதிவு பண்றாரே எப்படி? ஈரோட்டில் நேரில்பார்த்து கேட்டே ஆகணும்

    ReplyDelete
  69. சார் வன்மஏற்கு கதை 75 இருக்கு v காமிக்ஸ்ல வருசத்துக்கு நான்கு ஐந்து போட்டு தாக்குங்க

    ReplyDelete
    Replies
    1. பாலன் சார் எங்கே ரொம்ப நாளாக ஆளை காணோம்?

      Delete
  70. ஜி 25நாள் எப்படிங்க .ஆகஸ்ட்5தானேஈரோட்டில்புத்தகங்கள் வெளியீடு.ஏதும் மாற்றம் உண்டோ

    ReplyDelete
    Replies
    1. சரிதான் நண்பரே....நான் ஒன்னாந்தேதிய கணக்கு பண்ணிட்டேன்...30 தே நாட்கள்

      Delete
    2. இந்த மாத புத்தகங்கள் இந்த வார இறுதியில் கிடைத்து விடும். I'm waiting

      Delete
  71. Option Sky Blue : but with Young Carsen:-)

    ReplyDelete
  72. நாளைக்கு ஜுலை இதழ்கள் கிளம்புதாமே...!!!
    மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நிஜமாக தான் சொல்கிறீர்களா?

      Delete
    2. அப்படித்தான் என நம்புகிறேன்...

      Delete
    3. ஆகா ஆகா ஆகாகக

      Delete
  73. சார் நம்ம Tintin ஈரோடு புத்தக விழாவில் வெளிவர வாய்ப்பு உள்ளதா?

    படைப்பாளிகளின் ஒப்புதல் கிடைத்து விட்டதா???

    ReplyDelete
  74. ஆண்டு மலராக-லக்கிலூக்கின் "இரண்டு ஆல்பம்" கிடைப்பதில் ரொம்ப சந்தோசம்..
    இதே போல் "கிட் ஆர்டின் "-க்கும் அமைந்து இரண்டு ஆல்பமாக கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்..
    .அதிலும்-சமீபத்திய ஒன்று இரண்டு கதைகள் "கிட் ஆர்டினை "யே-மையமாக வைத்து செம கலகலப்பாக அமைந்துவிட்டது..

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருட ஆண்டு மலர் இரண்டு கிட்...இரண்டு லக்கி....இரண்டு சுஸ்கி விஸ்கி

      Delete
    2. கேளுங்க ஸ்டீல் யார்ட்ட கேக்கறீங்க இன்னும் ரெண்டு மூணு book சேர்த்து கேளுங்க

      Delete
    3. ரெண்டு ஸ்மர்ஃப் ...
      மூனு 13 ஸ்பின் ஆஃப்...
      அதாவது டாக்டர் மார்த்தா...
      ஆலன்...டயானா

      Delete
  75. Post atleast weekly twice sir. Keep us busy

    ReplyDelete
  76. கா.க.கா எல்லா அட்டைபடம்களும் நன்றாக உள்ளது, எது வந்தாலும் எனக்கு ஒகே சார்!

    ReplyDelete
  77. விஜயன் சார், லயன் ஆண்டு மலர் என்றால் எனக்கு எப்போதும் ஒரு சந்தோஷம் சார், ஆமாம் வருடம்தோறும் தவறாமல் இரண்டு லக்கி-லூக் கதைகள் வரும் மாதம் :-) கார்ட்டூன் கதை பிரியனான எனக்கு இரண்டு லக்கி-லூக் கதை மிகவும் மகிழ்ச்சியை தருகிறது! கடந்த மாதம் கிட் & சிக் பில் இந்த மாதம் லக்கி-லூக், ஐ ஆம் ஹாப்பி அண்ணாச்சி!

    ReplyDelete
  78. எடிட்டரின் புதிய பதிவு நேற்றே ரெடி நண்பர்களே!!

    ReplyDelete