Saturday, April 08, 2023

ஒரு வாசகப் பார்வையில் ஏப்ரல்...!

 நண்பர்களே,

வணக்கம். ஆண்டின் "அந்த வேளை" இது....! தென்மாவட்டங்களின் அத்தனை அம்மன் கோவில்களும் திருவிழாக்கோலம் காணும் கோலாகலப் பொழுது இது ! ஒன்றுக்கு இரண்டாய் மெகா அம்மன்கோவில்கள் உள்ள எங்க ஊருமே அந்த ஜோதியில் அற்புதமாய் ஐக்கியமாகியிருக்க, திரும்பிய திக்கெல்லாம் பக்தியின் பிரவாகம் ! நம் அலுவலகம் இருப்பதே அம்மன்கோவிலின் வாசலில் தான் எனும் போது - பரவசத்துக்கு ஏது பஞ்சம் ? இதோ, சனி மாலை கதவைச் சாத்திக் கிளம்பினால், திருவிழா விடுமுறை முடிந்து இனி புதனன்று தான் ஊரே இயங்கிட ஆரம்பிக்கும் ! So ஏதேனும் புக்ஸ் ஆர்டர் செய்திடுவதாக இருப்பின் ஜல்தி - ப்ளீஸ் ! 

ஏப்ரல் புக்ஸ் ஒருவழியாய் அனைவரின் கைகளிலும் இருப்பதில் மகிழ்ச்சி ; இப்போதெல்லாம் கூரியர்களின் சேவை (???!!) மெய்யாலுமே தேவை தானா ? என்ற கேள்வி எழுகிறது ! மரியாதையாய் அஞ்சல் சேவையினை பயன்படுத்திவிட்டுப் போகலாமோ ? உங்கள் காசாவது மிச்சமாகும் ! Anyways - இம்மாதத்து இதழ்கள் மூன்றுமே தத்தம் ப்ளஸ்களை முன்நிறுத்தி  ஒன்றுக்கொன்று tough தருவது புரிகிறது ! உங்கள் இடத்தில் நானிருந்து, இந்தக் கதைகள் எவற்றையுமே படித்திருக்காது ; இந்த முக்கூட்டணி புக் பார்சல் என் முன்னே இருப்பின் - எந்த இதழினை எனது வாசிப்பில் பிரதானப்படுத்தியிருப்பேன் ? என்று ஆரும் கேக்கலை ; so நானாகவே கேட்டுக்குறேன் யுவர் ஆனர்ஸ் ! So தொடர்வது - ஒரு வாசகப் பார்வையில் ஏப்ரல் !

இங்கி-பிங்கி-பாங்கி போடாமலே நான் முதலில் தேர்வு செய்வது லயன் கிராபிக் நாவலின் "எந்தையின் கதை"யாகத்தானிருந்திருக்கும் ! Simply becos இம்மாதத்தின் ஒரே கலர் இதழ் அது தானே ? என்ன தான் நாம் குப்பை கொட்டிய பெரும்பான்மை black & white-ல் தான் என்றாலும், கலருக்கென்றான மவுசே தனி தானே ?  Moreover 56 பக்கங்களில் சிக்கென்று இருப்பதுமே என்னைத் தூண்டியிருக்கும் இரண்டாம் காரணமாக இருந்திருக்கும் ! மேலோட்டமாய்ப் புரட்டினாலே கண்ணுக்கு நோவு தராத இதமான அந்த வண்ணக்கலவையும், அட்டகாசமான சித்திரங்களும் would be the clincher ! "மத்த ஆணியெல்லாம் அப்பாலிக்கா !! பிடுங்க வேண்டிய மொத ஆணி இது தான் !" என்று தீர்மானித்திருப்பேன் ! 

எடிட்டரென்ற முறையினில் இந்த இதழுக்கு நிறையவே பில்டப்பெல்லாம் தந்தாச்சு ! So ஒரு வாசகனாய் என்னை லயிக்கச் செய்ய இதனில் என்ன இருக்கக்கூடுமென்ற கோணத்தில் புக்கை புரட்டுகிறேன் இப்போது ! நானொரு XIII தீவிரன் அல்ல தான் ; for that matter, எந்தவொரு நாயக / நாயகிக்கும் fanboy ஆக இருக்காது  - "இந்தக் கதை நல்லா இருக்கா ? இல்லியா ?" என்ற கோணத்தில் மாத்திரமே அணுகிட நினைத்திடுவேன் ! So ஒரு cult status கொண்ட தொடரின் கிளைக்கதை என்ற முறையில், வாசிக்கும் முன்பாய் மெயின் கதைத்தொடரை லேசாக நினைவூட்டிக் கொள்ள முனைவேன் ! இக்கட "முன்கதைச்சுருக்கம்" என்று ஏதும் இல்லாதது ஒரு குறை என்று உறுத்திடும் முதலில் ! அதிலும் வெண்டைக்காய்களை வேரோடு மேய வேண்டிய நம் மாதிரியான ஞாபக மறதிப் பார்ட்டிகளுக்கு - "இந்த அண்ணாச்சி இன்னார் ; அந்த அத்தாச்சி அன்னார் ; இவுகளுக்கும், அவுகளுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு..!" என்ற ரீதியில் விபரமாய் ஒரு நினைவூட்டும் பகுதி இருந்திருப்பின் வாசிக்கச் சுலபமாகியிருக்கும் ! ஆனால்... ஆனால்...கிட்டத்தட்ட 1200 பக்கங்களுக்கு ஓட்டமெடுத்திருக்கும் ஒரு மெகா தொடருக்கு, இரண்டோ, மூன்றோ பக்கங்களில் கதைச்சுருக்கம் தந்திடுவதாயின், ஷான் வான் ஹாம் தனது AI software சகிதம் வந்தாலொழிய, சாமான்யர்களுக்கெல்லாம் டிரவுசர் கழன்று விடும்  என்பது புரிவதால், சரி..போனால் போகட்டுமென்று எனது ஞாபகங்களை உருட்டிப் பார்க்க முனைந்திருப்பேன் ! இதர துணைக் கதாப்பாத்திரங்களைக் காட்டிலும் XIII தொடரினில் எனக்கு நினைவில் தங்கியோர் இருவரே ! தோட்டாக்காயத்தோடு கடலில் அடித்து வரப்படும் XIII-ஐ மீட்டிடும் அந்த குண்டு அம்மணி மார்த்தா தான் முதலாமவர் ! முதல் அத்தியாயத்திலேயே மனதைத் தொட்டவர் என்பதாலா ? அல்லது அந்தப் பெண்மணியினைச் சுற்றிய மென்சோகம் எனக்கு ஸ்பெஷலாகத் தெரிந்ததா ? என்று சொல்லத் தெரியலை - but that was a special character to me ! இரண்டாவது நபர் - ஜானதன் பிளை ! 'XIII-ன் பெயர் என்ன ? பின்கதை என்ன ? பூர்வீகம் என்ன ?' என்ற கேள்விகளெல்லாம் உயிர்ப்போடு ஓடிக்கொண்டிருந்த தருணத்தில் - "டாடி" என்ற கதாப்பாத்திரத்தில் உட்புகுந்த ஜானதனை சுவாரஸ்யமாய் அப்போதே ரசித்தவன் நான் ! கையில் ஒரு குட்டி கரடி பொம்மையைக் கொண்டிருக்கும் பாலக ஜேசனை, விரல் பிடித்துக் கூட்டிப் போகும் அட்டைப்படத்தில் (maybe part 6 ? part 7 ??) இடம்பிடித்திருந்த ஜானதன் எனது நினைவுகளிலும் தங்கியிருந்தார் ! So பெருசாய் குழப்பமின்றி வாசிக்க ரெடியாகி இருப்பேன் ! 

கதைக்குள் புகுந்த சற்றைக்கெல்லாம் இந்த spin-off கதையின் கதாசிரியரை எனக்கு நிரம்பவே பிடிக்க ஆரம்பித்திருக்கும் ! XIII தொடரின் அடிநாதமே - அமெரிக்காவின் வெள்ளை supremacy சார்ந்த  வெறி தான் எனும் போது, அந்த பாஸ்டர் கதாப்பாத்திரத்தை லாவகமாய் ஒரு கறுப்பினராய் படைத்திருப்பது 'அட' போட வைத்திருக்கும் ! அதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கும் - becos ஜானதன் பிளையின் மெயின் கதைப் பங்கினில் கு க்ளக்ஸ் க்ளான் கும்பலுக்கும் பிரதான இடமுண்டு ! And அந்த கு க்ளக்ஸ் க்ளானின் பிரதம வைரிகள் கறுப்பினர்கள் தான் ! So கொஞ்சம் கூட நெருடலின்றி கதையின் premises செட் ஆகி இருக்கக் கண்டு ஜரூராய் வாசிப்பினை தொடர்ந்திருப்பேன் ! இளம் பையனாய் ஜேசன் காணும் அறிமுகமும் ; இளமை நாட்களில் அவன் வேண்டாவெறுப்பாக தந்தையோடு கழித்த நாட்களையும் சொல்லும் phase-ல்  கதாசிரியரின் முதுகில் ஒரு மானசீக ஷொட்டு வைக்க எனக்கு நிரம்பவே சபலம் தட்டியிருக்கும் ! அதுவும் அப்பாவின் முதுகில் தழும்புகளைக் கண்டு பதறுவதும் ; டாடி கட்டுப்படுத்த நினைக்கும் தருணங்களில் எல்லாம் அடங்க மறுக்கும் அந்த போர்க்குணமும் - பின்னாட்களது (பெரிய) ஜேசனின் குணாதிசயங்களுக்கு ஒத்துப் போகும் இயல்பான அடித்தளமாய் அமைந்திருப்பதை எண்ணி வியந்திருப்பேன் ! ஊருக்குள் வரும் ஒரு டாம்பீகமான பொதுவெளிப் பிரமுகர் - மெகா புளுகுமூட்டையாய் இருப்பதை பார்த்தாலுமே, அந்தாளை விட்டுக் கொடுக்கத் தெரியாத அப்பாவித்தனம் ; "சும்மா சும்மா என் வாயை அடைக்காதீர்கள் டாடி ; நான் வாத்து மடையனெல்லாம் இல்லை ; எதுவாக இருந்தாலும் புரிந்து கொள்வேன் - நிஜத்தைச் சொல்லுங்கள் !!" என்று பொங்கும் வீரியத்திலும், நமது சிறுவயது நினைவுகளும், அவரவரது தந்தைமார்களுடன் ஏதோ ஒரு சூழலில் எழுந்திருக்கக்கூடிய வாக்குவாதங்களும் நினைவுக்கு வராது போகாதென்பேன் ! 

And ஜானதன் பிளையின் flashback-ல் நிஜம் தொனிக்கும் பாணியில் நிறைய சம்பவங்களை கொணர்ந்து, ரொம்பவே தத்ரூபமான ஒரு காலகட்டத்தைக் கண்முன்னே கொண்டு வர கதாசிரியரும், ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்ட்டும் போட்டி போட்டிருப்பதை வாய் பிளந்து ரசித்திருப்பேன் ! கதை ஓட்டத்தினில் நிமிஷம் கூடத் தொய்வின்றி நகர்த்திச் செல்வதென்பது ஒரு அசாத்தியக் கலை & அதனில் கதாசிரியர் ப்ரன்ஷ்விக் செம தேர்ச்சி பெற்றிருப்பது கண்கூடு என்பதால் அவருக்கொரு சலாம் போட்டபடியே க்ளைமாக்ஸுக்குள் புகுந்திருப்பேன் ! "முடிவு இது தான் ; இப்படித்தான்" என்பது பிதாமகர் வான் ஹாம் எப்போதோ நிர்ணயித்து விட்டார் என்பதால் ஜானதனின் முடிவு சங்கடமானதாகவே இருக்கும் என்பதில் ரகசியம் இருந்திராது தான் ; ஆனாலும் அந்த மனுஷன் எப்படியாவது தப்பி விட மாட்டாரா ? என்ற ஆதங்கம் உள்ளுக்குள் இருக்கவே செய்தது  ! அதுவும் அந்த FBI சினைப்பன்றி இறுதிப் பக்கத்தில் கூலாக இளம் ஜேசனுக்கொரு offer letter தந்து விட்டுக் கிளம்பும் போது பற்களை நற நறவென்று கடிக்கவே தோன்றியிருக்கும் ! So துவக்கமும் தெரிந்திருக்க ; முடிவும் தெரிந்திருக்க, இடைப்பட்ட மத்தியப் பகுதிக்கு மட்டுமே கதை எழுதி, தலைக்கும் நியாயம் செய்து, வாலுக்கும் நியாயம் செய்திருக்கும் இந்த ஆல்பத்தை நமக்குக் கண்ணில் காட்டக் காரணமாக இருந்த நண்பர் பழனியை நினைத்துக் கொண்டே புக்கை மூடி வைத்திருப்பேன் ! இறுதிக்கு முந்தைய அந்த பிரேமில் நிற்கும் ஜேசனின் close up சித்திரம் மட்டும் புக் மூடிய பிற்பாடுமே என்னுள் நிலைகொண்டிருந்திருக்கும் !! காத்திருப்பது என்னவென்று தெரியாமல் கலங்கி நிற்கும் ஒரு பாலகனை இதை விடவும் மிரட்டலாய், அமரர் வில்லியம் வான்ஸ் தவிர்த்த   வேறொரு ஓவியர் வரைந்திருக்க முடியுமா - நானறியேன் ! 

"எந்தையின் கதை" நிறைவுற்ற பின்னே கொஞ்ச நேரம் அதன் சோகத்தினில் திளைத்திருந்திருப்பேன் - நாமெல்லாமே அவலச் சுவைகளில் ஒருவித மகிழ்வை உணர்ந்திடுவோர் தானே ? அதன் பின்பாய், கொஞ்சமாய் இயல்புக்குத் திரும்பிய பிற்பாடு நான் தூக்கியிருப்பது இட்லிக்கன்னன் சார்லியின் அந்த டைஜெஸ்ட்டாகத் தானிருந்திருக்கும் ! ஏன் ? டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷல் - 1 ஒரு வாசகனாய் என்னுள் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ? என்பது நேரம் கிடைக்கும் அடுத்ததொரு தருணத்தில் ! Bye for now guys !!

புறப்படும் முன்பாய், இதோ - ஒரு பரிச்சயமான முகத்தின் தரிசனம் !! எங்கே ? எப்போ ? சொல்கிறேனே guys !! 


Have a wonderful weekend ! See you around !

எந்தையின் கதை - கதாசிரியர் Luc Brunschwig

எந்தையின் கதை - ஓவியர் Ta Duc


306 comments:

  1. @ சேலம் Tex விஜயராகவன் : இன்னமும் நாள் முடியவில்லை - so லேட்டானாலும், லேட்டஸ்டான பிறந்த நாள் வாழ்த்துக்கள் STV !! நலமோடும், வளமோடும், மகிழ்வோடும் வாழ பெரும் தேவன் மனிடோ அருளட்டும் !

    ReplyDelete
    Replies
    1. தேங்யூ சார்🙏😍

      நமக்கெலாம் இதானே பின்மாலைங் சார்.....😉

      Delete
  2. சூப்பர் செய்தி, மந்திர மண்டலம் பல வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் கதை

    ReplyDelete
  3. Happy birthdayசேலம்Tex விஜயராகவன் sir

    ReplyDelete
  4. எந்தையின் கதை அருமை சார்... என்னைப் பொருத்தவரை XIIIன் Spinoffsல்... the best என்பேன்... அருமையான சித்திரங்கள், crispஆன மொழி பெயர்ப்பு... அருமை அருமை...

    நண்பர் பழனிவேல் இதைக் கண்டிருந்தால் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்திருப்பார்...

    ReplyDelete
    Replies
    1. // நண்பர் பழனிவேல் இதைக் கண்டிருந்தால் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்திருப்பார்... // உண்மை தான் டாக்டர் சார்

      Delete
  5. டெக்ஸ்ட் கதைகளில் வண்ணத்தில் வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த பல கதைகளில் ஒன்று இந்த மந்திர மண்டலம்

    ReplyDelete
  6. மந்திர மண்டலமும் மரண நடையும். 🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘

    ReplyDelete
    Replies
    1. நான் நீண்ட நெடு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கதை மந்திர மண்டலம். எங்கே எப்போது என்று கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க சார்.

      Delete
  7. Buzz Sawyer என்றுமே என்னை பெரிதாக கவர்ந்ததில்லை...‌ அதிலும் அந்த ஓவியப் பாணிக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம்... மேலும் கிளாசிக்கின் புத்தக சைசும் மாறி வருகிறது என தெரிந்ததிலிருந்து... வருத்தமே மேலிட்டது...

    ஆனால், கையில் கிட்டிய பிறகுதான் தெரிந்தது, புத்தக அளவு கனகச்சிதம், அற்புதமான பைண்ட், அட்டைபடத்தின் அழகை பார்த்து ரசிக்கவே நேரம் போனது... சரி இனிதான் படிக்க முயற்சிக்க வேண்டும்...

    இதே போல் சைசில், ஆக்கத்தில் ரிப்பையும், காரிகனையும் காண ஆசை... ஆசை நிறைவேற any chances...!?

    ReplyDelete
    Replies
    1. Plenty of Chances Doc. இதுவரை இந்த சைஸ் ககு ஆதரவு நன்றாகவே உள்ளது புத்தகமும் குண்டாக இருக்கு. வேற என்ன வேண்டும்.

      Delete
    2. பார்ப்போமே சார் ...! இன்னுமொரு வாரம் போகட்டும் ; மேற்கொண்டும் சைஸ் குறித்த எண்ணங்கள் பதிவாகின்றனவா என்று பார்க்கலாம் !

      Delete
    3. அட்டகாசமாக சொன்னீங்க டாக்டர்.....

      ஐ லைக் திஸ் சைஸ் சோ மச்..

      அருமையான அமைப்பு..
      அந்த குண்டு பக்க பார்க்க பார்க்க உவகை பொங்குது

      Delete
  8. வணக்கம் சார் & வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  10. மந்திர மண்டலம் மற்றும் மரண நடை அட்டை படம் தெறிக்க விடுகிறது 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

    ReplyDelete
  11. // எந்தையின் கதை நிறைவுற்ற பின்னே கொஞ்ச நேரம் அதன் சோகத்தினில் திளைத்திருந்திருப்பேன் - நாமெல்லாமே அவலச் சுவைகளில் ஒருவித மகிழ்வை உணர்ந்திடுவோர் தானே// உண்மை தான் சார். அப்படியே அமர்ந்து விட்டேன். வேறு புத்தகம் எதையும் அதற்கு பிறகு படிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இதனில் பணி முடித்த கணத்தில் - இதை ரசிக்க பழனி நம்மிடையே இல்லையே என்ற ஆதங்கமே என்னை கட்டிப் போட்டது சார் ! உப்புச்சப்பில்லாத பெட்டி பார்னோவ்ஸ்கி இதழையே சிலாகித்த மனுசன்...!

      Delete
    2. "பெட்டி" நினைச்சாலே புன்னகை வருதுங்க. தேடி எடுத்து படிக்கப் போறேன்.

      Delete
  12. எந்தையின் கதை! அரசியல், துரோகம், கொலை என புத்தகத்தை கீழே வைக்க தோணாத அளவுக்கு விறுவிறுப்பாக சென்றது. பக்கம் 47ன் அரசியல் வசனங்கள் மிக அபாரம். சமயம் கிடைக்கும் போது இன்னும் விரிவாக எழுதுவேன். இப்போதே சொல்கிறேன்.. இவ்வருடத்தின் ஆகச்சிறந்த மாஸ்டர் பீஸ் என்பேன் எந்தையின் கதையை.

    ReplyDelete
    Replies
    1. ///இவ்வருடத்தின் ஆகச்சிறந்த மாஸ்டர் பீஸ் என்பேன் எந்தையின் கதையை.///

      ஆஹா!! அட்டகாசம்!

      Delete
    2. இப்போது தான் நீங்கள் குறிப்பிட்ட அந்த 47-ம் பக்கத்தைப் புரட்டினேன் சார் ; கனமான passage தான் !

      Delete
  13. // ஊருக்குள் வரும் ஒரு டாம்பீகமான பொதுவெளிப் பிரமுகர் - மெகா புளுகுமூட்டையாய் இருப்பதை பார்த்தாலுமே, அந்தாளை விட்டுக் கொடுக்கத் தெரியாத அப்பாவித்தனம் // செம்ம சார் ஒரு வாசகனாக உங்கள் பார்வை அட்டகாசம். அதனால் தான் இன்னும் உங்களால் எங்களது pulse ஐ இம்மி பிசகாமல் உணர முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. எனது வெற்றி என்பதைக் காட்டிலும் இது கதாசிரியரின் வெற்றி என்பேன் சார் !

      Delete
  14. Me வந்துட்டன்...😍😘

    ReplyDelete
  15. மரண நடையும், மந்திர மண்டலமும்..
    டேய் சம்முவம்.... அந்த அண்டாவை கீழ எறக்குடா...

    ReplyDelete
    Replies
    1. ரண்டு வருஷமா சம்முவத்துக்கு சம்பளத்த கண்ணிலே காட்டலியாமே..! அண்டாவை அண்ணாச்சி கடையிலே போட்டுப்புட்டு கெளம்பி ஆறு மாசமாச்சாமுங்கோ !

      Delete
    2. இப்படி கூட நடக்குதா...

      Delete
  16. // ஜானதனின் முடிவு சங்கடமானதாகவே இருக்கும் என்பதில் ரகசியம் இருந்திராது தான் ; ஆனாலும் அந்த மனுஷன் எப்படியாவது தப்பி விட மாட்டாரா ? என்ற ஆதங்கம் உள்ளுக்குள் இருக்கவே செய்தது ! அதுவும் அந்த FBI சினைப்பன்றி இறுதிப் பக்கத்தில் கூலாக இளம் ஜேசனுக்கொரு offer letter தந்து விட்டுக் கிளம்பும் போது பற்களை நற நறவென்று கடிக்கவே தோன்றியிருக்கும் ! //

    I felt the same while reading this story sir

    ReplyDelete
    Replies
    1. கதாசிரியரின் வெற்றி சார் !

      Delete
  17. எந்தையின் கதை...
    கதைக்களமும், ஓவியங்களும், வர்ணச் சேர்க்கையும் அபாரம். மொழி பெயர்ப்பு அட்டகாசம்.
    சிறிது குழப்பங்கள் டைம்லைனில்..

    ReplyDelete
    Replies
    1. வாட் குழப்பம்ஸ் என்று சொல்லுங்களேன் - நிவர்த்திக்க முடிகிறதாவென்று பார்ப்போம் !

      Delete
  18. Me also வாசிச்சுபையிங் *எந்தையின் கதை* because of same reasons Sir..
    கலர் & size..👍

    I லைக்குபையிங் வெரிமச்..😍😘😃

    அடுத்து நம்மாளு *பம்ப்ளிமாஸ் கன்னன் சார்லி* 😃

    கச்சித சைஸ் வெரிநைஸ்..😍😘
    இருந்தாலும் அந்த maxi size மிஸ் ஆகிற வருத்தம் இருக்கு..😍

    இரண்டு கதைகள்தான் ரசிச்சு வாசிச்சிருக்கேன்..😍😃
    அப்படியே குட்டிபையனாகிட்ட பழைய பீலிங்..😃
    பேசாம அப்படியே freeze ஆகி இருந்திருக்கலாம் போல..❤

    Next நம்ம தல & தளபதி..😍😘😘😘😘
    ரசிச்சு ருசிச்சு படிக்க..நிறுத்தி வச்சிருக்கேன்..😘😘

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் ஓவர் Flow ல போய்ட்டாரு நம்ம ஜம்பிங் தல. ஹிஹிஹி

      Delete
    2. ///கொஞ்சம் ஓவர் Flow ல போய்ட்டாரு நம்ம ஜம்பிங் தல. ஹிஹிஹி///

      ஹாஹா!! :))))

      Delete
    3. ஜாகோர் ஹிட் ஆகிட்டார்
      டெக்ஸ்க்கு போட்டி இப்ப அவர்தான்

      டைகர் வரது இல்லை....டைகரை மறந்துட்டாங்க 😭😭😭

      Delete
    4. கோடாலி சங்க தலைவரே, நல்லா கலர் கலரா ஆர்ட் வரைகிறீர்கள். ம்மாடன் ஆர்ட்டு செமையா இருக்குதுங்க.
      ஆனா எனக்கு மட்டும் அங்க அங்க எழுத்து எழுத்தா தெரியுதுங்க.

      Delete
  19. @எடி சார்..😍😃😘

    Tex ன் நல்முத்துக்கள் 😍😘😘
    *மரண மந்திரம்*.. கலரில்..
    Wow.😃😃😍💪👌

    எங்கே எப்போ?..
    ஆவலுடன்..

    ஆன்லைன்ல கொடுத்தாலும் சரி..😃
    ஆர்டினரில கொடுத்தாலும் சரி..😀😍
    எனக்கு ஒரு புக் பார்சல் ....😍😘😘

    ReplyDelete
    Replies
    1. தல அது மந்திர மண்டலம், மரண நடை. இப்படி பேரையே மாத்திப்புட்டிங்களே

      Delete
    2. @ஸா.பே.செ..😍😃😘

      அது நெக்ஸ்ட் வர்ர புது டெக்ஸ் டைட்டில்..😃😃
      ரணகள கதை..😃
      (மந்தி+ரம்+மண்டு+எல்லாம்..😃😃)

      மீதமான ரம்மை குடித்த மந்திகள் எல்லாம் மாண்டுபோக, காரணகர்த்தாவை தேடி நம்ப டெக்ஸ் அந்த மரண பாதையில் பொடி நடையாக நடந்தே கண்டுபிடிக்கும் கதைகளம்..😍😃😃👍👌💪

      Delete
    3. /////தல அது மந்திர மண்டலம், மரண நடை. இப்படி பேரையே மாத்திப்புட்டிங்களே////

      காலையில சிரிச்சு முடியல :)))))))))))

      Delete
    4. //
      மீதமான ரம்மை குடித்த மந்திகள் எல்லாம் மாண்டுபோக, காரணகர்த்தாவை தேடி நம்ப டெக்ஸ் அந்த மரண பாதையில் பொடி நடையாக நடந்தே கண்டுபிடிக்கும் கதைகளம்..😍😃😃👍👌💪 // அடடே செம்மையாக இருக்கே இந்த கதைக்களம்

      Delete
    5. ஜம்பிங் பேரவைத் தலீவரிடம் வெளியிலே தெரியுறது ஒரு ரூபம்... உள்ளாற உலவுறது பல ரூபங்கள் !!

      Delete
  20. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  21. கலவர பூமியில் கனவைத் தேடி :
    முந்தைய மாதம் வரை முற்றிலும் கமர்ஷியல் பாணியில் வந்த V காமிக்ஸ் வெளியீடுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சற்றே கனமான கதைக் களத்துடன் வெளி வந்திருப்பது மிக மகிழ்ச்சி...
    வழக்கமான டெக்ஸ் & ஸாகோர் கதைகளைப் போல இக்களத்தை எளிதான ஒரு வேகத்தில் நகர்ந்திட முடியவில்லை என்பதே நிதர்சனம்...

    பல்வேறு இனத்தவர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களும்,அவர்களுக்கு இடையிலான வாழ்வியல் முரான்பாடுகளும் இயல்பான முறையில் கதையில் பிணைக்கப்பட்டுள்ளது...
    அனேகமாக இந்த ஒப்பந்த முறைகள் வெள்ளையர்கள்,செவ்விந்தியர்கள்,அபாச்சேக்கள்,கமான்சேக்கள் என பல இனத்தவர்களுக்கு இடையே வரலாற்றின் ஓர் தருணத்தில் உண்மையாகவும் நிகழ்ந்திருக்கலாம் என்று அனுமானிக்கிறேன்,அதை அழகாக கதைக்களத்தில் கோர்த்தெடுத்து நகர்த்தியுள்ளனர் கதாசிரியர்கள்...

    ஏகப்பட்ட கதைமாந்தர்களும்,பலதரப்பட்ட பெயர் வகைகளும்,கொத்து கொத்தான வசனங்களும் கதையின் கனத்திற்கு வலுவூட்டுகின்றன...

    டெக்ஸ் & ஸாகோர் சந்திப்பு எப்போதுதான் நிகழும் என்ற சிந்தனை ஓட்டத்தின் ஊடேதான் கதை நகர்ந்து கொண்டிருந்தது...

    துடுக்குத்தனமும்,வேகமுமான டெக்ஸும்,அனுபவ முதிர்ச்சியுடன் அணுகுமுறையை கடைப்பிடிக்கும் ஸாகோருமாக அசத்தலான காம்போ...

    வன்மேற்கின் கலவர பூமியைப் பார்க்கும்போது,மனுஷன் வாழறதுக்கும்,அந்த நிலை நிறுத்திக் கொள்வதற்கும் என்னென்ன எல்லாம் செய்ய வேண்டியிருக்கு,நல்லது,
    கெட்டதுமாய் எல்லாம் கலந்த ஒரு போரட்டம்னுதான் தோணிச்சி...

    மீண்டும் ஒரு மறுவாசிப்பை இன்னொரு தருணத்தில் நிகழ்த்தியே ஆக வேண்டும்...

    3 மாதமாக சென்டர் பின்னுடன் வந்த V காமிக்ஸ் இந்த மாதம் மாறுபட்டு வந்தது மகிழ்ச்சி...

    பின்னாளின் ஒரு தருணத்தில் V காமிக்ஸின் முக்கிய வெளியீடாகவும்,மறக்கமுடியாத இதழாகவும் கலவரபூமியில் கனவைத் தேடி இதழ் இடம் பிடித்தால் அதில் வியப்பேதுமில்லை என்பேன்...

    கெட்டித் தாளும்,அசத்தல் ஓவியங்களும்,அதிக பக்கங்களுமாய் முந்தைய V காமிக்ஸ்களை விட இந்த இதழ் ஸ்பெஷல் என்று என்னளவில் சொல்வேன்...

    இதேபோன்ற கதைக்களங்கள் V காமிக்ஸில் அவ்வப்போது இடம்பிடித்தால் அதன் வளர்ச்சி இன்னும் சிறப்பாய் இருக்கும் என்று நம்புகிறேன்...

    எமது மதிப்பெண்கள்-9/10...

    ReplyDelete
    Replies
    1. அருமை அண்ணா. உங்கள் விமர்சனம் படிப்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியளிக்கும் விசயம்.

      கண்டிப்பாக பின்னாளில் V காமிக்ஸ் சரித்திரத்தில் இந்த புத்தகத்திற்கு ஒரு இடம் உண்டு.

      Delete
    2. சிறப்பு தம்பி...

      Delete
    3. அட்டகாசமான விமர்சனம் அறிவரசு ரவி அவர்களே!!

      ///பின்னாளின் ஒரு தருணத்தில் V காமிக்ஸின் முக்கிய வெளியீடாகவும்,மறக்கமுடியாத இதழாகவும் கலவரபூமியில் கனவைத் தேடி இதழ் இடம் பிடித்தால் அதில் வியப்பேதுமில்லை என்பேன்.///

      அடடே!!!

      Delete
    4. மகிழ்ச்சி ஈ.வி...

      Delete
  22. எந்தையின் கதை :
    "ஜேஸன் பிளை" யின் பால்ய கால நினைவுகள் கொஞ்சம் சோகமும்,கொஞ்சம் விறுவிறுப்பும்,கொஞ்சம் பரபரப்புமாய் சுவாரஸ்யமான நகர்வு...
    க்ளோவர் போன்ற இரட்டை வேடதாரிகள் எங்கும்,எப்போதும்,எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளனர்,சோகம் என்னவெனில் ஜேஸன் போன்றவர்களின் கள்ளமறியா உள்ளம் அவ்வளவு எளிதில் அதை உணர்ந்திடுவதில்லை...

    எந்தையின் கதை வாசிப்பில் சோடை போகாமல் சிந்தையில் நின்ற கதை...

    எமது மதிப்பெண்கள்-9/10...

    ReplyDelete
    Replies
    1. // க்ளோவர் போன்ற இரட்டை வேடதாரிகள் எங்கும்,எப்போதும்,எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளனர்,சோகம் என்னவெனில் ஜேஸன் போன்றவர்களின் கள்ளமறியா உள்ளம் அவ்வளவு எளிதில் அதை உணர்ந்திடுவதில்லை... // இதைத்தான் நான் சொல்ல வந்தேன் நீங்க அட்டகாசமாக சொல்லிவிட்டீர்கள். செம்ம

      Delete
  23. You just have written of my experience of reading this book and i saw many have felt so after reading comments. After reading this book I just want to be in that zone and doesn't want to think about anything else. This happened to me only once after reading velpari this is the second time. Really a masterpiece...

    ReplyDelete
    Replies
    1. Not only you all the readers who read this book thusfar can relate with our எடிட்டர் review.

      Delete
    2. Yes sir i felt the vibe in all those comments.. but editor described the feeling just perfectly like he had watched us while we were reading...

      Delete
    3. A common taste... a common bond sir...

      Delete
  24. இனிய காலை வணக்கங்கள் ஆசிரியரே

    ReplyDelete
  25. நேத்திக்கு தூங்க முன்னாடி பேச்சா ஒரு தடவை refresh பண்ணி பார்க்க மாட்டேனா

    ReplyDelete
    Replies
    1. @inigo..😃😍
      குட்டி boys எல்லாம் ரொம்ப நேரம் தூங்கணும்..😃
      அதுதான் ஹெல்த்துக்கு நல்லது..😃😍👍

      Delete
    2. ஆமா கோடாலி சங்க தலைவரே,
      குட்டி boys எல்லாம் சீக்கிரமா தூங்கணும். நா இனிமே சீக்கிரமா தூங்க பழகிக்கிறேன்.

      Delete
  26. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா அந்த சார்லி கதை விமர்சனம்?

      Delete
  27. வணக்கம் ஆசானே!!

    ReplyDelete
  28. // தென்மாவட்டங்களின் அத்தனை அம்மன் கோவில்களும் திருவிழாக்கோலம் காணும் கோலாகலப் பொழுது இது ! //
    இங்கேயும் அதே நிலைதான் சார்...

    ReplyDelete
  29. டியர் சார்.
    நீங்கள் விவரித்த விசயங்களை படிக்காமலேயே ஊகித்துவிட்டதால் -. எந்தையின் கதை-என் தந்தையை நினைவூட்டியதால் படிக்காமல் வைத்திருக்கிறேன்..இந்த வாரம்தான் படிக்க வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரமாகவல்லவா படித்திருக்க வேணும் சார் ?

      Delete
  30. // புறப்படும் முன்பாய், இதோ - ஒரு பரிச்சயமான முகத்தின் தரிசனம் !! எங்கே ? எப்போ ? சொல்கிறேனே guys !! //
    சார்,மந்திர மண்டலமா...!!! சூப்பர் சார்,அசத்திட்டிங்க....ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,ஆன்லைன் புத்தக விழாவில் ஏதோ ஒரு சிறப்பு அறிவிப்பு இருக்குன்னு சொல்லி இருந்திங்க,மந்திர மண்டல அறிவிப்பு இப்போது எனில் அந்த அறிவிப்பு தனி என நினைக்கிறேன்,அருமை,அருமை...

    ReplyDelete
    Replies
    1. Yesh....yesh...இது அதுவல்ல....அது இதுவல்ல சார் !

      Delete
    2. சார்… இன்னும் 10-12 நாளுக்கு கைல ப்ளட் பிரசர் மானிட்டரோட என்னை சுத்த விட்டுடுவீங்க போலிருக்கே. சீக்கிரம் சொல்லுங்க சார். சஸ்பென்ஸ் தாளலை.

      Delete
    3. எடிட்டர் சார்,
      எனக்கு நீங்க சொல்ல வர்றது புரியுது. புரிகிற மாதிரியும் இருக்குது. எனக்கு நீங்க சொன்னதிலே எந்த சந்தேகம் இல்லைன்னுதான் நினைக்கிறேன்.

      Delete
    4. """புக் மேளா"""க்காக வெயிட்டிங். New release பார்த்து Order list போடணும். அதோட சேர்த்து சந்தா புக் அனுப்ப சொல்லணும். ( ஒன்னே ஒன்னு அதுவே எ கண்ணே கண்ணு) V காமிக்ஸ். Tex vs zagor நாளாக நாளாக ஆவல் கூடுது. வெகு சீக்கிரமா படிக்க காத்திருக்கேன்.

      Delete
    5. // இது அதுவல்ல....அது இதுவல்ல சார் ! //
      இருக்கு,இருக்கு ஸ்பெஷல் அறிவிப்பு இன்னொன்னு இருக்கு...!!!

      Delete
  31. // டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷல் - 1 ஒரு வாசகனாய் என்னுள் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ? //
    சார்லி ஸ்பெஷல் இந்த சைஸ் ஏனோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார்,இனிவரும் சுப்ரீம் ஸ்பெஷல் இதழ்களும் இந்த சைஸேதானுங்களா சார்,இப்படியே வந்தால் மகிழ்ச்சி...
    கதைகளை இன்று தான் படிக்கனும்...

    ReplyDelete
  32. மெபிஸ்டோவின் பயங்கர முகத்தோடும், 'வாடா பாத்துக்கலாம்' என்ற பாணியில் தயாராக நிற்கும் தலயின் போஸுடனும் 'மந்திர மண்டலம்' அட்டைப்படம் மிரட்டலாய் இருக்கிறது! இந்த அட்டைப்படத்துக்காகவே புத்தகங்கள் சீக்கிரமே விற்றுத்தீர வாய்ப்புள்ளது!

    பின்னட்டையும் அருமை!!

    ReplyDelete
  33. சார்லி மேக்கிங் செம. கிர்பி பாதிபுத்தகங்கள் ரெடியாகிவிட்டதால் மாற்றத்திற்கு சான்ஸ் இல்லை. மீத ஸ்மாஸிங் 70sபுத்தகங்கள் சார்லி சைஸிற்கே o. K. பண்ணுங்கள்சார். மேக்ஸி சைஸில் புத்தகங்கள் படிக்கும்போது கதையுடன் ஒன்றவே முடிவதில்லை. பக்கங்களை வேடிக்கைபார்ப்பது போன்ற உணர்வு மட்டுமே உண்டாகிறது.

    ReplyDelete
  34. அப்படி இப்படிஎன்று இதோ ஆன்லைன் புத்தகவிழாகிட்டக்கவந்திருச்சு. ரெடியாகிற வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா வரும் வாரம் இல்லாமல் அதற்கு அடுத்த வாரம் தான். நான் போன மாதத்தில் இருந்தே ரெடி.

      Delete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. தாமதத்திற்கு மன்னிக்க டெக்ஸ்...


    காமிக்ஸ் பீடியா டெக்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    இன்று போல் என்றும் இனிதுடன் என்னைப்போல் இளமையுடனும் வாழ எனது வாழ்த்..:-)துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கும் இளமையின் வரம் தந்து, வயசு பையன் ஆக்கிய தலைவருக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்.

      Delete
    2. நன்றிகள் தலீவரே...உங்க அன்பு என்றும் உண்டு.

      Delete
  37. ஆசிரியர் சார் தங்களின் ரசிகனின் பார்வை அருமை...தாங்கள் ரசிகராய் இருப்பதால் தான் எங்களாலும் ரசிகனாய் இருக்க முடிகிறது என்பதே உண்மை..

    ReplyDelete
    Replies
    1. தலீவரே.... எடிட்டர் .. மொழிபெயர்ப்பாளன் .. .புடலங்காய் என்பதெல்லாம் ஒரு பணியின் குறியீடு மாத்திரமே !

      உருப்படியானதொரு வாசகனாய் இருப்பதே எல்லாவற்றிற்கும் ஆரம்பப் புள்ளி !

      Delete
    2. // உருப்படியானதொரு வாசகனாய் இருப்பதே எல்லாவற்றிற்கும் ஆரம்பப் புள்ளி ! // உண்மைதான் சார்.

      Delete
  38. Charley(sawyer)simply awesome...no terror villian ....no big stunts ...no damal doomil...no great art work...but rocks ..I don't know why

    ReplyDelete
    Replies
    1. யதார்த்தம் ...தெளிந்த கதையோட்டம்... நம்ம ஒண்ணு விட்ட மாமா பையனைப் போலான சிம்பிலான ஹீரோ ...! இந்தக் கூட்டணி போதுமே நண்பரே, மனதுக்கு நெருக்கமாகிட !

      Delete
    2. ரொம்பவே pleasing ஆக இருக்கு சார். சார்லி படிக்க. போன வருடம் ஸ்மாஷிங் 70s ல ரிப். இப்போ இந்த வருடம் சார்லி சுப்ரீம் 60s ல.

      Delete
  39. சார் அட்டைப்படம் செம சூப்பர்....உள் பக்கங்கள் அசத்தல்...கதை நிறய முறை படித்ததால் நன்றாக நினைவில்.வண்ண அசத்தலுக்காய் வெய்ட்டிங்..மரண நடை ஒரு முறைதான் படித்திருப்பேன்...சுத்தமா நினைவில்லை....காத்திருக்கிறேன் அசத்தலுகாய்

    ReplyDelete
  40. வாவ்..
    மந்திர மண்டலம்..

    ReplyDelete
  41. Wow! மந்திர மண்டலம் கலரில்!!! Eagerly waiting for this one!
    Please release it as soon as possible sir! Will be happier if this book gets released in April online book fair!

    ReplyDelete
    Replies
    1. முயற்சிப்போம் சார் !

      Delete
    2. // முயற்சிப்போம் சார் ! // ஆஹா இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...

      Delete
    3. அட. ஆசம். தனிப்பதிவா சொல்ல வேண்டிய விசயமாச்சே

      Delete
    4. அண்ணனுக்கு இன்னொரு ச்சாயா !!

      Delete
  42. மந்திரமண்டலம் விரைவில். பலவருடங்களாகவாசகர்கள் பலரின் "மறுபதிப்பு" கோரிக்கை. நமதுஎந்த கோரிக்கையையும் ஆசிரியர் மறுதலிப்பதில்லை.நேரம் வரும்வரையிலும் தள்ளிவைக்கிறார். அவ்வளவுதான் என்பது எனது நம்பிக்கை. அதுபோல் இரட்டை வேட்டையர்கள் ஜான் மாஸ்டர், ஜீனியர்,மினி லயனின் பல கதைளின்பலமறுபதிப்புகளும் நிச்சயம்வரும். நேரம் வரும்போது. என்ற நம்பிக்கை உறுதியாகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. ஓடிடுறா கைப்புள்ளே !

      Delete
  43. இது வரை பார்த்திராத அட்டை 😍 கோடை மலரில் வந்த மந்திர மண்டலம் (ரிப்பிரிண்ட்) சூப்பர் ஆசானே 🥰எதுமாதிரியும் இல்லாத புது மாதிரியான அட்டை 🙏🙏🙏

    ReplyDelete
  44. ////Lion Comics9 April 2023 at 18:53:00 GMT+5:30
    பார்ப்போமே சார் ...! இன்னுமொரு வாரம் போகட்டும் ; மேற்கொண்டும் சைஸ் குறித்த எண்ணங்கள் பதிவாகின்றனவா என்று பார்க்கலாம் !///

    ஆசிரியர் சார்@

    *ஒரு விசயத்தை ஓப்பனாக சொல்லித்தான் ஆகணும்....*

    *மேக்ஸி சைஸ் வந்தபோது ஒரு சிலர் "அது வேஸ்ட்டு, மேக்ஸினா சித்திரங்கள் பெரிசாக இருக்கணும்...காசு வீணாபோச்சு.., லேஅவட் பண்ண சரியாக பண்ணலனு பேசித்தான் செஞ்சாங்க..."*

    இப்ப அதே சின்ன சைஸக்கு தாங்கள் மாற்றியபோது,
    *"மேக்ஸி எவ்ளோ சூப்பரு, இது என்னாங்க குட்டியா இருக்கு, இதிலும் லேஅவுட் சரியில்லை, எழுத்து கோளாறு...காசுக்கு தண்டம்னு பேசத்தான் செய்வாங்க....*

    ஆக சிலருக்கு புக்கு மேலலாம் விருப்பம், ஆர்வம் இல்லை;
    *தாங்கள் எது செய்தாலும் அதை குறை சொல்லணும் என்ற எண்ணம் தான் மேலோங்கியுள்ளது..*

    *இது போட்டா இது நல்லாயில்லனு சொல்வாங்க; அதுபோட்டா அது நல்லாயில்லைனு சொல்வாங்க... மொத்தத்தில் எதையும் ஏத்துக்கு கூடாது என்று முன்பே முடிவு பண்ணகிட்டாங்க..*

    *இவுங்க எல்லாம் செய்யும் மிக முக்கிய தவறு, இங்கே தாங்கள் கருத்து கேட்கும்போது வாயே திறக்க மாட்டாங்க... இங்கே நண்பர்கள் தத்தம் எண்ணத்தை சொல்லி, ஓட்டிங்கில மெஜாரிட்டி பாஸ் பண்ணியதை தாங்கள் போட்டா அதையும் குத்தம் சொல்லிட்டு திரியுவாங்க...*

    *இங்கே தளத்தில்தான் எதையும் முடிவு பண்ணப்படுது.. இங்கே கேட்கும் போது கருத்தை சொல்லாம ஓரு புக் வந்தபின் அதற்கு வாக்களித்தவங்களையோ அதை கொண்டாடுறவங்களையோ குறை சொல்வதும், பர்சனல் அட்டாக் பண்ணுவதும், புத்தகம் வெளியிட்ட தங்களை ஏகத்துக்கு குறை சொல்வதும் "சிறுபிள்ளை விளையாட்டு"... இதை தொடர்ந்து செய்வது எத்தனை பேதமையான செய்கை..*

    *இதை போல சிலர் தொடர்ந்து செய்வதால் பைசா பிரயோசனம் இல்லைனு தெரிஞ்சாலும் தொடரத்தான் செய்யப்போறாங்க..*

    *தாங்கள் இவுங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவேணும்னா கேட்டுக்கொள்கிறோம். இந்த அற்ப குற்றச்சாட்டுகளை புறந்தள்ளிட்டு அடுத்த பணியை கவனிக்கலாம் சார் தாங்கள்.

    டெக்ஸ் க்ளாசிக் வேறு அள்ளுது😍😍😍😍

    ஆன்லைன் புக்ஃபேருக்கு அதை தர்ற பணியை தங்கள் கவனிக்க வேண்டுமாய் அனைத்து டெக்ஸ் ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. ///கொண்டாடுறவங்களையோ குறை சொல்வதும், பர்சனல் அட்டாக் பண்ணுவதும், ///

      அவங்களையெல்லாம் ஒரு பொருட்டா மதிச்சி பதில் சொல்லிக்கிட்டிருந்த காலம் மலையேறிப் போச்சி மாம்ஸ்..!
      உருப்படியான வேலைகள் நிறைய இருக்கு.. நல்லதைத் தேடிப் பார்க்கவே நேரம் போதவில்லை.. இதில் இதுபோன்ற பொறாமைப்பிண்டங்ளைப் பற்றி அக்கறை கொள்ள நேரம் ஏது..?
      அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்.. பார்ப்போருக்கும் படிப்போருக்கும் பழகுவோருக்கும் தெரியுமல்லவா..!

      Delete
    2. எக்ஸாக்ட்லி மாமா...!!!
      பொறாமையால சாதிக்க போவது எதுவுமில்லை என எப்பத்தான் புரியபோகுதோ!!!!!

      Delete
    3. சார் ...விமர்சனங்கள் நமக்குப் புதிதும் அல்ல ; அவற்றைக் கண்டு ஜெர்க் ஆகும் வயதும் எனக்கல்ல ! ஆளுக்கொரு அபிப்பிராயம் இருப்பது இயல்பே ; andஅதுவே gospel என அவரவர்மட்டுக்கு நம்புவதும் புரிந்திட முடிகின்றது தான் !

      ஆனால் மாற்றுச் சிந்தனைகளை காலுக்குள் போட்டு நடனமாட முனையும் போது தான் சிக்கலே ! And "பொறாமை" என்பதைக் காட்டிலும் "ஈகோ" என்பதே அத்தகைய சூழல்களில் பிரதானப்பட்டு நிற்கின்றது ! அனுபவமே அதனை பதப்படுத்தவல்ல ஆசான் - so காலப்போக்கில் எல்லாமே சரியாகிடும் என்ற நம்பிக்கையில் போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான் !

      அப்புறமா இன்னொரு மேட்டருமே ! ஆன்லைன் மேளாவின் புக்ஸ் வெளியாகட்டும்.. செம கச்சேரி வெயிட்டிங் என்பேன் !

      Delete
    4. ஆன்லைன் மேளாவின் புக்ஸ் வெளியாகட்டும்.. செம கச்சேரி வெயிட்டிங் என்பேன் !//

      தலைவரை பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிப் போக வேண்டுமென்றால் முன்கூட்டியே சொல்லிடுங்க சார். அவரு கொஞ்சம் பிசி. ப்ளான் பண்ண வசதியா இருக்கும்.

      Delete
    5. ////ஆன்லைன் மேளாவின் புக்ஸ் வெளியாகட்டும்.. செம கச்சேரி வெயிட்டிங் என்பேன் !///----
      ஆஹா அடுத்து என்ன சைஸ்ங் சார் வரப்போவுது???😉
      கச்சேரிக்கு வித்வான் ரெடினா வாத்தியங்களும் இங்க ரெடி!

      Delete
    6. ///அவங்களையெல்லாம் ஒரு பொருட்டா மதிச்சி பதில் சொல்லிக்கிட்டிருந்த காலம் மலையேறிப் போச்சி மாம்ஸ்..!
      உருப்படியான வேலைகள் நிறைய இருக்கு.. நல்லதைத் தேடிப் பார்க்கவே நேரம் போதவில்லை.. இதில் இதுபோன்ற பொறாமைப்பிண்டங்ளைப் பற்றி அக்கறை கொள்ள நேரம் ஏது..?
      அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்.. பார்ப்போருக்கும் படிப்போருக்கும் பழகுவோருக்கும் தெரியுமல்லவா..!///

      சூப்பரா சொன்னீங்க கிட்!!

      Delete
    7. ///அப்புறமா இன்னொரு மேட்டருமே ! ஆன்லைன் மேளாவின் புக்ஸ் வெளியாகட்டும்.. செம கச்சேரி வெயிட்டிங் என்பேன் !///

      தாய்மாமன் படத்தில் மீனா வீட்டு விசேசத்துக்கு வாசிக்க வந்த நாதஸ்வர கோஷ்டியை வழிமடக்கி வாசிக்க வெச்சி.. கவுண்டமணி அவர்களும் சத்யராஜ் அவர்களும் ஆடுவார்களே... அதுமாதிரி நானும் என்ர மச்சான் மகேந்திரனும் ஆடிட்டு இருக்கோம் சார்..💃💃💃

      Delete
    8. ///சூப்பரா சொன்னீங்க கிட்!!///

      தங்களின் யானைப்பால்தான் காரணம் குருநாயரே..!

      Delete
  45. சார் மந்திர மண்டலம் அட்டைப்படம் எனக்கு திருப்தியா இல்ல சார் சிலர் நல்லா இருக்குன்னு சொல்லி இருக்காங்க எனக்கு முதல் பதிப்பில் வந்த அந்த அட்டையை நல்லா இருக்க மாதிரி தோணுது முடிஞ்சா வேற அட்டைப்படம் ட்ரை பண்ணுங்க சார்

    ReplyDelete
  46. எந்தையின் கதை....ஒவ்வோர் தந்தையாரும் தன் மகனை வளர்க்கும் ....விரும்பும் விதம் போல....

    முதலில் ஜானதன் அந்த கருப்பு பாதிரியார் குறித்து அதாவது அவரது சபலங்களை மக்கள் உணர்ந்தால் என அச்சப்படுகிறார்...மவுண்ட் ரோஸ் விவகாரம் கம்யூனிஸ்டுகள் முந்துவதும் பிடிக்காமல் பலியாடாக்கப் பட்டார்கள் என மெயின் கதை...இங்கும் ஜானதன் நல்லது நடக்க வேண்டும் என்று போராடுகிறார்...
    கொலையாக்கப் பட்டோர் காணாமல் போகுமிடம் கண்டு பரிதாபமாய் அங்கேயே அதாவது கிரீன்ஃபால்சில் பலியாகிறார்....இக்கதை மெயின் கதை படித்தோர்க்கு மீதம் தெளிவாய் தெரியுமென்றாலும்...அதைப் படிக்காமலேயே தெளிவாய் முடிவு உணர்த்தும் வண்ணம் முடித்த விதமருமை...
    அதே இடத்தில் வில்லன் விடும் கதைகளைப் பார்த்தால் கடைசி வரை அவனே ஜெயிக்கிறான்....ஆனால் அங்கே தீமைக்கெதிராய் ஜேசனும் வளர்கிறான் நல்லது நடக்க பொய் சொன்னாலும் தவறில்லையென ஜானதன் போலவேயல்லவா.....
    வில்லனும் மறைக்கிறான் ஜானதனும் மறைக்க முயல்கிறார்...தான் விஸ்வரூபமெடுக்கவும்....கருப்பின மக்கள் சரிசமமாக விஸ்வரூபமெடுக்கவும்

    மகன் தந்தையைக் காண ட்ரௌட் மீனுடன் வரும் போதும் .தந்தை முக்கிய உரையாடல் போது கூட கடிந்து கொள்ளாது மகனை பேசி அனுப்பி வைக்க...மகன் தாமதமானதால் வருத்தத்தோடு மீனை கடாச காட்சிகளில் பாசப் போராட்டத்தில் நமது மனதும் தடுமாறுவதுடன் நமக்கும் மதிப்பெண் போட்டுக் கொள்ளலாம் நாம் எவ்வாறெனினும்....

    இரண்டாவதிடம் ஜேசன் இருளைக் கிழிக்கும் வண்ணம் சைக்கிளில் பாய பரிதாபமாய் ஜானதன் கலங்கிநிற்க...திரும்பும் மகனை கண்டிக்க முயன்று தோற்று நிற்க அடேயப்பா லாவகமாய் செல்லும் மூளைக்கும் இதயத்துக்குமான போராட்டம் ..அடேங்கப்பா...

    வில்லன் முன்னிலையில்.. மகன் உண்மைதானே பேசுவான் என கேக்க அவனோ அழகாய் சமாளிக்கிறான்...இது போல் யாரும் வேட்டையாடிய தில்லை என....அதில் ஒளிந்த மற்ற உண்மையை ரசிக்கிறார் தன் மகன் நல்லதுக்காய் போராடுவான்

    என.....


    கடைசியில் ஜேசன் மயங்கி விழ அங்கும் தந்தை ஜெயிக்கிறார்.....இரத்தப்படலம் முழுவதும் ஜேசனைக் கொண்டு உண்மை ஜெயிசிக்குது காலம் கடந்து ஜான்சனின் வித்தாய்...எந்தைக்கு வாழ்த்துக்கள்...



    ஓவியங்கள்.... வண்ணம் சேர்க்கைகள்....ஜானதனின் வீடு....ஓவியங்களில் பாயும் கருமை வெளிச்சம் என இரசிக்க ஏராளம்....
    தந்தையை காண உற்சாக ஒளியில் பாயும் சைக்கிளும்..தந்தை எதிரியை காண விரையும் இருள் பாய்ந்த சைக்கிளும் உதாரணம்...வண்ணக் கலவைகளின் வீச்சையும் வாங்கிப் படியுங்கள் சுவை கூட...

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே வெல்டன். உங்கள் ரசனை பிரமாதம். வாழ்த்துக்கள்.

      Delete
  47. உள்ளேன் ஐயா..

    சார்லி சைஸ் செம்ம..

    இன்னும் படிக்கவில்லை..! அதனால்கதைகளைப்பற்றி பிறகு.. இப்போ பாராட்டுகள் இந்த சைசுக்கு..! கையாள எளிதாக இருக்கிறது..!

    ReplyDelete
  48. @Salem Tex Vijayaragavan

    தளத்தில் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வதற்கு மன்னிக்கணும் மாமா..!

    (காரணம் உனக்கேத் தெரியுமே.)

    ReplyDelete
    Replies
    1. என்னப்பன் தண்டாயுதபாணி ஆண்டவருக்கு அரோகரா!🙏

      Delete
  49. ஓரு படைப்பாளியாக, மொழி பெயர்ப்பாளராக, வாசகராக, புத்தக வெளியீட்டாளராக உள்ள நண்பர் கார்த்திகை பாண்டியனின் பதிவு.....

    சார்லி புத்தகத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்த்துள்ளார்.....

    ///என்ன இருந்தாலும் மாயாவி, ஸ்பைடர் போல வருமா?

    எந்தப் புத்தகத் திருவிழாவுக்குச் சென்றாலும் அங்குள்ள காமிக்ஸ் ஸ்டாலில் ஒலிக்கும் வார்த்தைகள் இவை. மிகக் குறுகிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருந்தாலும் 50 ஆண்டுகளைத் தாண்டி இப்போதும் வெற்றிகரமாகக் காமிக்ஸ்களை வெளியிட்டு வருகிறது லயன்-முத்து காமிக்ஸ் (பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி). கார்ட்டூன், கிராஃபிக் நாவல்கள், வைல்ட் வெஸ்ட் என எத்தனை வந்தாலும் நாஸ்டால்ஜியா காரணமாக பழைய காமிக்ஸ்களை நோக்கிப் படையெடுக்கும் கூட்டமே இன்றும் அதிகம். அப்படிப்பட்ட உள்ளங்களைக் கவரும் பொருட்டு கடந்த இரண்டு வருடங்களாக கோல்டன் ஓல்டீஸ் காமிக்ஸ்களை லயன் நிறுவனத்தார் வெளியிட்டு வருகிறார்கள். சென்ற வருடம் ஸ்மாஷிங் 70ஸ் என்ற தலைப்பில் வேதாளர், காரிகன், ரிப் கெர்பியோடு மாண்ட்ரேக்கின் சாகசங்கள் வெளியாயின. இவ்வருடமும் சுப்ரீம் 60ஸ் என்கிற பெயரோடு இந்த (அந்நாள்) நாயகர்கள் நம்மிடையே உலா வருகிறார்கள். இம்முறை வேதாளர், டிடெக்டிவ் சார்லி, விங் கமாண்டர் ஜார்ஜ், காரிகன், ரிப் கெர்பி ஆகியோரின் சாகசங்கள் வெளியாகவுள்ளன. அதில் இந்த மாதம் வெளியாகி இருக்கும் சார்லி ஸ்பெசல் ஓர் இனிய ஆச்சரியம் என்றே சொல்ல வேண்டும். வடிவமைப்பு, தெளிவான சித்திரங்கள், எளிய நேர்க்கோட்டுக் கதைகள் எனப் பழைய யுக நாயகர்களுக்கு ஒரு புதிய பாதையை இந்தத் தொகுப்பு திறந்து விட்டுள்ளது. இனி வரவிருக்கும் தொகுப்புகளும் இதேபோல வெளியானால் நன்றாயிருக்கும். நாஸ்டால்ஜியாவில் உறைந்திருக்கும் காமிக்ஸ் நெஞ்சங்கள் தவறவிடக் கூடாத பிரமாதமான தொகுப்பு.

    டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷல் - 1
    முத்து காமிக்ஸ்
    தொடர்புக்கு: 9842319755///

    நன்றி: நண்பர் கா.பா.!

    ReplyDelete
  50. மெபிஸ்டோ / மந்திர மண்டலம் ஒரு வழியா வரது கன்ஃபார்ம் ஆயிடுச்சா.... சூப்பர் எடி. ஆன்லைன் புத்தக திருவிழாவில் வெளியிட்டிருங்கோ... பேஷா 🥰

    சேலத்தில் விஜயராகவன் பட்டாசு வெடிச்சு கொண்டாடி இருப்பாரே 😉

    ReplyDelete
  51. Really loving Charlie. So down to earth detective with sense of observation. Kannu munnadi oru 60s detective ippadi thaan irupparnu solliteenga.

    Downsides. Wrapper. Sema comedy with all Indian type faces with jaishankar time poster like wrapper.

    Hundreds of spelling mistakes. Athu kooda paravalla.

    I was avid supporter of normal size. This now is better than king size. Easy to hold and read and store. Thanks

    ReplyDelete
  52. சார்லி சைஸ் செம்ம.....சார் ...........2 கதை முடிச்சாச்சு .........டெக்ஸ் ....1 3 இன்னும் படிக்கலை ..............

    ReplyDelete
  53. ///உருப்படியானதொரு வாசகனாய் இருப்பதே எல்லாவற்றிற்கும் ஆரம்பப் புள்ளி !////

    ----எங்களுக்கு கிடைக்கும் பலதரப்பட்ட வெரைட்டிக்கு அந்த ரசிகனே(ரே) காரணம் னு பலமுறை உணர்ந்துள்ளோம் சார்.

    சமீபத்திய சார்லி இதழ் மேக்கிங்கிலும் இதை காண இயன்றது...

    வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க வைத்த மேக்ஸி சைஸ்ல இருந்து இன்று பலரையும் வாசிக்க வைத்துள்ளது, இந்த குண்டுபுக்...!
    வாங்கி செல்ஃபில் அடுக்குவதை விட வாசிக்க தூண்டுவதே முக்கியம், அந்த வகையில் இது 100%%வெற்றி.

    இப்ப அடுத்து ஆன்லைன் விழாவில் என்னென்ன சர்ப்ரைஸ் என அந்த முதல் ரசிகர் உணர்ந்து, அதே உற்சாகத்தை எங்களுக்கும் பாஸ் பண்ணுகிறார்...அடுத்த 12நாளும் எதிர்பார்ப்பில்...

    தீபாவளிமலருக்கு அடுத்து, சந்தா அறிவிப்புக்கு அடுத்து இப்ப மீண்டும் ஏக எதிர்பார்பை கிளறிட்டீங்க சார்...😍😍😍

    ReplyDelete
    Replies
    1. //வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க வைத்த மேக்ஸி சைஸ்ல இருந்து இன்று பலரையும் வாசிக்க வைத்துள்ளது, இந்த குண்டுபுக்...!
      வாங்கி செல்ஃபில் அடுக்குவதை விட வாசிக்க தூண்டுவதே முக்கியம், அந்த வகையில் இது 100%%வெற்றி//

      அருமையாகச் சொன்னீர்...😘😘😘

      Delete
    2. // தீபாவளிமலருக்கு அடுத்து, சந்தா அறிவிப்புக்கு அடுத்து இப்ப மீண்டும் ஏக எதிர்பார்பை கிளறிட்டீங்க சார்...😍😍😍 // ஆமா சார் ஆமா

      Delete
  54. **** கலவர பூமியில் கனவைத் தேடி *****

    V-காமிக்ஸ் இதற்குமுன்பு வெளியிட்ட ஸாகோர் கதைகள் அனைத்தும் நேர்கோட்டுக் கதைகளே! குறைச்சலான வசனங்களோடு சித்திரங்களே பெரும்பான்மை பக்கங்களை ஆக்கிரமித்திருப்பதும் வாடிக்கை!!

    ஆனால் இக்கதையில் கதையே வேறு! ரொம்பவே அழுத்தமான கதை! பரபரவென பக்கங்களைப் புரட்டி முக்கால் மணிநேரத்தில் முழுக்கதையையும் முடித்துவிட்டு 'சார் அடுத்தமாத இதழ்களை எப்போ வெளியிடுவீங்க?' என்று கேட்டிடும் கதையெல்லாம் இக்கதையிடம் செல்லாது! சிலபல அழுத்தமான வசனங்களை ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் திரும்பத்திரும்ப படிக்காவிட்டால் ஒரு மண்ணும் புரியாது! கதையென்னவோ - நாம் ஏற்கனவே பலமுறை படித்த அதே கதை தான்! அதாவது - வெள்ளை இனத்தவர் செவ்விந்தியரை கொன்று குவிப்பதும்.. செவ்விந்தியரின் பழிவாங்கலும்.. இதற்கு நடுவே நீதியை நிலைநாட்டப் போராடும் நாயகர்களும்! ஆனால் கதாசிரியர் மெளரோ போசெல்லியின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியால் கதை 'வேறு லெவலில்' பயணிக்கிறது! 5 பாகங்களாக சுமார் 500 பக்கங்களில் வந்திருக்க வேண்டிய கதையை நிறைய்ய்ய வசனங்கள் சகிதம் அடைத்து வைத்தாற் போல சொன்னதில் மட்டும் அவ்வப்போது கொஞ்சம் ஆயாசத்தை ஏற்படுத்திவிடுகிறார் கதாசிரியர். சரி, கதையை முடித்திருக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை! அந்த செவ்விந்தியத் தலைவரின் வெள்ளைஇன மனைவி காணாமல் போனது போனபடி அப்படியே தொங்கலில் விடப்பட்டு 'முற்றும்' போடப்பட்டிருக்கிறது! (இக்கதைக்கு இன்னொரு பாகம் உண்டுங்களா எடிட்டர் சார்?)

    கதையில் டெக்ஸும், ஸாகோரும் எவ்விதம் சந்தித்தித்துக் கொள்ளப் போகிறார்கள்.. அவர்களுக்குள் ஏன் அடிதடி ஏற்பட்டது - போன்ற கேள்விகள் நம் மனதிற்குள் சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருந்ததில்லையா? அந்த எதிர்பார்ப்பை கதாசிரியர் மிக அழகாகப் பூர்த்தி செய்திருக்கிறார். தான் மோதுவது கீர்த்திமிக்க ஸாகோருடன் என்று நன்றாகவே தெரிந்திருந்தும் அவரிடம் வம்பிழுத்து மோதிப்பார்க்கும் டெக்ஸின் 'தில்' - அலாதியானது! ஸாகோரும் தன்வயதுக்கேற்ற பக்குவத்துடன் பிரச்சினைகளை அனுகுவது ஸாகோரின் மீதான நன்மதிப்பை ஒருபடி உயர்த்துகிறது!

    நல்ல கதை, அழுத்தமான கதை, மிகச் சிறப்பான சித்திரத்தரம், வித்தியாசமான கதை நகர்வு பாணி, சிறப்பான மொழிபெயர்ப்பு, அனல் பறக்கும் இளம் டெக்ஸ் & ஸாகோர் கூட்டணி - இத்தனையும் இருந்தும் கிளைமாக்ஸ் நிறைவுதராமல் (தொங்கலில்) இருப்பதால் துளியூண்டு மதிப்பெண் குறைகிறது!

    9/10


    ReplyDelete
    Replies
    1. EV sir,

      உங்களது விமர்சனம் மெருகேறி வருகிறது.

      விமர்சனம் எழுதுவது ஓர் கலை.

      எவ்வளது தூரம் கதையை உள்வாங்குகிறோமோ அதோடு எவ்வளது தூரம் கதையோடு ஒன்றித்து போகிறோமோ, அதை பொறுத்தே விமர்சனம் அமைகிறது.

      விமர்சனத்தில் நாம் சில கொக்கிகளோடு கதை நிறுத்துவது, வாசிப்பவரை ஓர் பரவச நிலைக்கு இட்டுச் சென்று, அவரை அந்த புத்தகத்தை விரைவாய் வாங்க தூண்டி விடுகிறது.

      குறுப்பிட்ட சில வசனங்கள், வசனம் இல்லாமல் பேசும் பேனல்கள் மற்றும் கதா பாத்திரத்தின் உணர்வுகள் என்பனவற்றை பற்றி சிலாயித்து எழுதம் போது வாசிப்பவருக்கு கற்பனையாய் காட்சியை அவர் கண் முன்னே விரிய செய்து விடுகிறது.

      நீங்கள் இந்த வித்தையில் Master ஆகி விட்டீர்கள்.

      உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

      Delete
    2. ///உங்களது விமர்சனம் மெருகேறி வருகிறது.///

      மிக்க நன்றி புன்னகை ஒளிர் சார்! 12 வருடங்களாய் விமர்சனங்கள் எழுதிக் கொண்டிருந்தாலும், தற்போதாவது அது மெருகேறி வருவதில் மகிழ்ச்சி!!

      ///அதோடு எவ்வளது தூரம் கதையோடு ஒன்றித்து போகிறோமோ, அதை பொறுத்தே விமர்சனம் அமைகிறது.///

      உண்மைதான் சார்!! இது கொஞ்சம் சுமாரான விமர்சனம் தான்! ;)

      ///விமர்சனத்தில் நாம் சில கொக்கிகளோடு கதை நிறுத்துவது, வாசிப்பவரை ஓர் பரவச நிலைக்கு இட்டுச் சென்று, அவரை அந்த புத்தகத்தை விரைவாய் வாங்க தூண்டி விடுகிறது.///

      பரவச நிலைக்குக் கொண்டுபோகிறதோ இல்லையோ.. உடனே படிக்கவேண்டுமென்ற ஆவலை ஏற்படுத்தினால் போதும் சார்! ஏதோ என்னால் ஆனதைச் செய்துவருகிறேன்!

      ///நீங்கள் இந்த வித்தையில் Master ஆகி விட்டீர்கள்///

      ரொம்பவே பெரிய வார்த்தை சார்.. எனக்கே வெட்க வெட்கமாய் வருகிறது! இங்கே நல்ல, முதிர்ந்த விமர்சகர்கள் நிறைய உண்டு சார் - நானெல்லாம் பச்சபுள்ள!

      மீண்டும் நன்றிகள்!! _/\_

      Delete
    3. ////அந்த செவ்விந்தியத் தலைவரின் வெள்ளைஇன மனைவி காணாமல் போனது போனபடி அப்படியே தொங்கலில் விடப்பட்டு 'முற்றும்' போடப்பட்டிருக்கிறது! (இக்கதைக்கு இன்னொரு பாகம் உண்டுங்களா எடிட்டர் சார்?)////

      ----செவ்விந்திய பூமி முழுதும் இதுபோல ஆயிரமாயிரம் பெண்களின் கதை இருக்க கூடும் ஈவி...

      அது ஒரு ஓப்பன் எண்ட்டாக விடப்பட்டுள்ளதுனு நினைக்கிறேன்..

      சிந்தியா ஆன் பார்க்கர் தனக்கு ஓவ்வாத வெள்ளையினத்தவரோட வாழ வேண்டியதுதான்...

      Delete
    4. // தான் மோதுவது கீர்த்திமிக்க ஸாகோருடன் என்று நன்றாகவே தெரிந்திருந்தும் அவரிடம் வம்பிழுத்து மோதிப்பார்க்கும் டெக்ஸின் 'தில்' - அலாதியானது! //
      யெஸ்ஸோ யெஸ்...

      Delete
    5. சேலம் டெக்ஸ்,
      உங்களின் மிகுதியான தகவல்களை திரட்டித் தந்திருக்கிறீர்கள். மேலோட்டமாக பார்த்தபோதே அது தெரிந்தது. நான் இன்னும் இந்த கதையை படித்து விட்டு, உங்கள் தகவல்களுக்குள் உள் செல்லலாம் என்று இருக்கிறேன். எப்படியும் இந்த மாதம் கடைசியில் தான் அது நிகழும். மற்றபடி
      நீங்கள் ஆர்வத்துடன் செய்யும் இந்த பணியை மெச்ச கடமைப் பட்டிருக்கிறேன். அப்படியே உங்கள் பதிவை எனது வாட்ஸ்அப்-க்கு அனுப்பி வையுங்கள்.

      Delete
    6. புன்னகை ஒளிர் @ சார், தேங்யூ. இன்னமும் நிஜமான ஆராய்ச்சியாளர் நம்ம செனா அனா ஜி யின் விமர்சனம் காண ஆவலுடன் காத்து உள்ளோம்... அதில் கிடைக்க இருக்கும் தகவல்கள் எப்படி இருக்கும் னு ஏக எதிர்பார்ப்பில....

      Delete
    7. ///அது ஒரு ஓப்பன் எண்ட்டாக விடப்பட்டுள்ளதுனு நினைக்கிறேன்..///

      சேலம் டெக்ஸ்,

      இந்தக் கதையை இன்னுமொரு 200 பக்கங்களுக்கு அழகாக இழுத்துச் சென்று காசு பார்த்திடும் வாய்ப்பு படைப்பாளிகளின் கைவசம் லட்டு மாதிரி இருந்திடும்போது கதையை ஓப்பன்-எண்டெட் ஆக முடிப்பானேன்?!!

      எனக்கு நம்பிக்கையிருக்கிறது - இதற்கு தொடர்ச்சி இருந்திடக்கூடும் அல்லது இனிமேல்தான் வெளியாகிடக்கூடும்!

      Delete
  55. சார்லி புஷ்சாயர் கதைகளும் இதழ் அமைப்பும் கனகச்சிதம். 10/10.

    ReplyDelete
  56. ஆளாளுக்கு சார்லிய பத்தி விமர்சனம் பண்ணி பல்ஸ எகிற வைக்கிறீங்க மக்களே..
    சார்லி இன்னிக்குத்தான் கரூருக்கு நம்ம வூட்டு கதவ தட்டியிருக்கார்..
    ஈரோடு புத்தத திருவிழாவுல கலந்துக்க வேணும்னு என்னோட பயண திட்டத்த ஒத்தி வச்சிருக்கேன்..

    ஆகஸ்டு வரைக்கும் சார்லிய பாக்காம இருக்க முடியாதுன்னு ஆந்திராவுக்கு ஒரு புக் ஆர்டர் போட்டாச்சு..

    எப்ப வந்து சேருமோ..!!??

    வெறித்தன எதிர்பார்ப்புடன்....!!

    😊😊😊😊😊😊😊😊

    ReplyDelete
  57. 12-ம் தேதிக்குள்ள இருக்கிற நாலு முடியையும் பிச்சுகிட்டு மொட்டைத் தலையோட நிக்கப் போறேங்கறது மட்டும் உறுதி...

    ReplyDelete

  58. கலவர பூமியில் கனவைத்தேடி....

    V காமிக்ஸ்4வது இதழ் இதுவரை வந்த Vகளில் அதிக பக்கங்களோடு, பைண்டிங் இதழாக 132 பக்கங்களில் தடிமனான மென் மஞ்சள் நிற தாளில் கையில் ஏந்துகையிலயே கவருகிறது. இந்த தாளின் ப்ளஸ் பாயிண்டாக ஓவியங்கள் சற்றே தூக்கலாக மிளிர்கின்றன.

    தொடர்ச்சியாக 3வது முறையாக ப்ளாஷ்பேக்கில் கதை சொல்லும் யுக்தி. ஆரம்பமே அதகளமான தொடக்கம்.

    நிறவெறியும் இனவெறியும் உச்சத்தில் உள்ள டெக்ஸாஸ் மண்ணில் இருந்து மண்ணின் மைந்தர்களான கமான்சேக்கள் விரட்டியடிக்கப்படும் மென் சோகம் இழையோடும் கதையமைப்பு மனசை கனக்க வைக்கிறது.

    வெள்ளையர்களின் மேற்கு நோக்கிய பரவலை பலமுறை வரலாற்று நூல்களில் வாசித்து இருந்தாலும் சித்திரக்கதையாக வாசிக்கும்போது இரத்தமும் சதையுமாக காட்சிகள் கண்முன்னே டெக்ஸாஸ் மண்ணில் கோரதாண்டவம் ஆடுகின்றன.

    கதையின் நாயகனாக யாரை சொல்ல? ஸாகோர், இளம் டெக்ஸ், ஆடாம், க்ரே உல்ஃப், பக் பேரி, நெய்பர்ஸ், குவானா என பலர் இருந்தாலும் கதைக்களமே விஞ்சி நிற்கிறது....!!!

    பெர்னட், பெய்லர், சாம் ஹெகர் வகையறாக்கள் நிறவெறியின் துவேசத்தை பிரதிபலிக்கும் குரூர முகமாக கதை நெடுகிலும்..........!!
    வாஷிதாவுக்கு கமான்சேக்கள் இடமாறும்போது டெக்ஸாஸ் ராணுவமும் இந்த நிறவெறி முகமூடியை அணியும் அவலத்தைக் காணும்போது நெஞ்சம் பதறகிறது!

    தங்களின் மூதாதையர் நிலமான கமான்சேரியாவில் இருந்து பிய்த்து எறியப்படும் கமான்சேக்களின் பரிதாப நிலையைக் கண்டு துடிப்பது நெய்பர் மட்டுமல்ல! கதை சொல்லி போசெல்லி நம்மையும் கலங்க வைக்கிறார்.

    கதாசிரியருக்கு இணையாக ஓவியர் பிசினெல்லியின் தூரிகையும் ஜாலம் செய்துள்ளது. இத்தனை ஆழமான கதையின் உயிர்நாடி ஓவியங்களேயென்றால் அது மிகையல்ல!!!!

    V for We comics நான்காவது வெற்றியை அழுத்தமாக பதிவு செய்கிறது. வெளியிட்ட V editor விக்ரமுக்கும் தம் உயிர்ப்பான வசனங்கள் வாயிலாக போசெல்லியின் படைப்பை பன்மடங்கு சிறப்பித்த ஆசிரியருக்கும் 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. ஓவியங்கள் ரொம்ப நாட்கள் கண்ணிலியே நிற்கும்.....

      #துவக்க பக்கத்தின் புல்வெளியில் ஜாகோர் ஆரோகணிப்பது...

      #16ம் பக்க செவ்விந்தியர், ஜெர்மானியர் போராட்ட காட்சி..

      #38ம் பக்க ப்யூஸ் நதியின் கமான்சே குடியிருப்பு...

      #55ம் பக்கத்தின், தன் உயிரான கமான்சே பிரதேசத்தை கடைசியாக ஒருமுறை காணும் சிந்தியா ஆன் பார்க்கரின் வதனம்...

      #65ம் பக்க வயல்வெளிகள்...

      #66ம் பக்கத்தில் நள்ளிரவில் போஸ்கோ நதியில் பாயும் ஸோகோர்&க்வனா....

      #பெருந்தலைகள் டெக்ஸ் vs ஸோகோர் மோதும் காட்சிகள்....

      #101ம் பக்க காட்டெருமைக்கூட்டம்...

      மூன்று பாகங்களில் சொல்லப்பட்டிருக்க வேண்டிய நீஈஈஈண்ட நெடிய சாகஸம் இது!

      Delete
    2. குறிப்பிடத்தக்க இன்னொரு மிகமுக்கிய அம்சம் கமான்சேக்களின் கட்டுப்பாடான
      காட்டெருமை வேட்டைமுறைகள்...

      எருதுகள் மானாவாரியாக அழிக்கப்படாது இருக்க அவர்கள் வைத்துள்ள கடுமையான விதிமுறை அற்புதமான சமூக அமைப்பின் அடையாளம்!

      Delete
    3. சூப்பர் விமர்சனம் டெக்ஸ். ரொம்ப நாட்களுக்கு பிறகு உங்க பாணியில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை.

      Delete
    4. தேங்யூ KS... கதை மிரட்டிட்டது.

      கதையின் அழுத்தமான நகர்வு, டெக்ஸ் Vs ஸோகோர் சந்திப்பை ஒரு ஆர்டினரி நிகழ்வாக்கிட்டது என்றே சொல்வேன்....

      இதே சந்திப்பை வேறு மாதரியான கதையில் வைத்து இருந்தால் அதுதான் எளிதில் டாப் அம்சமாக வந்திருக்கும். ஆனா இந்த ப்ளாட்டில் அது ஒரு நகைப்புக்குரிய விசயமாக தோணுது.....

      Delete
  59. பனியில் ஓர் கண்ணாமூச்சி....
    தந்தைக்காக அழுகிறானா...
    ஏமாற்றத்தாலா....
    காதலுக்காகவா...
    காதலிக்காகவா....
    அட்டகாசமான துப்பறியும் கதை....
    குற்றம் நடந்தது எப்படியென அழகாய் முடிச்சவிழ்க்கும் சார்லியின்கதை....
    அன்று எந்த ஓவியத்தினால் ஈர்ப்பில்லையோ...
    இன்று அதே ஒவியத்தால் ஈர்ப்பாய் ....
    காலத்தின் மாற்றமா...
    அட்டகாச கதைக்கும்....
    மனதை மயக்கிய கதைக்கும் நன்றிகள் ஆசிரியரே

    ReplyDelete
  60. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. நம்ம கவுண்டர் வாய்ஸ் .....அங்கே அமெரிக்காவிலும்....சாதாரண சுடும் திறமையே கொண்ட அமெரிக்க அசகாயர்fbiயின் பாஸ்j.k.க்ளோவரைமிகப்பெரிய துப்பாக்கி சுடும் வீரராக பில்டப்கொடுத்து வைத்துள்ளன அமெரிக்க ஊடகங்களும் fbiயும். அகாடெமியில் துப்பாக்கிசுட்டுக்காட்டும் சூழ்நிலை டைரக்டருக்கு ஆறு குண்டுகளும் புஸ்.//சமீப காலமாய்ச்சுடும்போது கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது எனக்கு இன்றைக்கென்றுபார்த்து கண்ணாடியைப் கொண்டுவர மறந்து தொலைத்து விட்டேன்//அன்பு கூர்ந்து இதை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வீர்களென்றும் எதிர்பார்க்கிறேன். எனது சொதப்பலுக்குசாட்சி சொல்லும் இந்தப் பலகையை உடனே அழித்துவிட்டால் உத்தமம் என்பேன்........கவுண்டர் பொன்மொழி "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா."

    ReplyDelete
  61. புன்னகை ஒளிர் @ சார்,
    இந்த V comic's கதையில் வரும் சம்பங்கள் கமான்சேக்களின் இறுதி யுத்தத்தில் வருது.... 1868-1875களின் கடைசி கட்டபோராட்டங்களின் முடிவில் டெக்ஸாஸ் ஷெட்லர்ஸ், கமான்சேக்களை முழுமையாக தோற்கடித்து வடக்கு மாநிலமான ஒக்லஹோமாக்கு விரட்டி விடுகிறார்கள். நம்ம கதையில் வரும் சிவப்பு நதி யுத்தங்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில் நடக்கிறது..

    கதையை வாசியுங்க...கமான்சே இனத்தின் கடைசி வேர்கள் இரும்புக் கரம்கொண்டு அகற்றப்படுவதை காணலாம், கண்ணீரோடும்; கலங்கும் மனசோடும்!!

    ReplyDelete
  62. மந்திரமண்டலம் 90ஸ் களில் நான் தவறவிட்ட மிகச் சில டெக்ஸ் கதைகளுள் ஒன்று. வண்ணத்தில் மறுபதிப்பாக வருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    ReplyDelete
  63. சார்லி website ல காட்டலயே

    ReplyDelete
  64. சார்லியின் முதல் கதை “பனியில் ஒரு பித்தலாட்டம்!” வாசித்து விட்டேன். அருமை! பனியும் இரவும் அதனூடே ஒரு கொலையும் என கைகோர்த்து நகரும் நல்லதொரு திரில்லர். 29 ஆண்டுகள் கழித்து வந்துள்ள நம் தோழர் டிடெக்டிவ் சார்லி மீண்டும் மகத்தான வெற்றிப் பெற்றுள்ளார்.

    பேப்பர் ரகமும் தரம். உயர்ரக ஸ்கேனில் இடப்பட்ட அச்சு என்பதால் பிரிண்டிங் தரமோ உயர்தரம். (பக்கம் 332ல் மட்டும் பிரிண்ட் கலங்கலாக உள்ளது தவிர்த்து வேறெந்த குறைகளுமில்லை.)

    தற்போது வரும் இந்த சுப்ரீம் க்ளாஸிக் தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கு என்னுடைய சுளீரென்று ஒரு சல்யூட்டை சமர்ப்பியுங்கள்! ஒரு ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரின் மொழிநடையில் இந்த சுப்ரிம் க்ளாசிக்ஸ் கதைகள் வாசிக்க அற்புதமான அனுபவமாக உள்ளது. (முத்தாய்ப்பாக சொல்ல வேண்டுமென்றால் வேதாளரின் கானக மொழிகளை கூற வேண்டும். சிம்மத்தின் கம்பீரமான கர்ஜனை போல அத்தனை கம்பீரம் அந்த வரிகளில்.) இந்த கிளாசிக் மொழிநடை அந்நாளைய இந்தக் கதைகளுக்கு கூடுதல் மதிப்பை சேர்க்கிறது. கதையின் ஒரிஜினாலிட்டி மாறாமல் உள்ளதை உள்ளது போல வாசித்த நிறைவும் கிடைக்கிறது. அந்நாளைய முத்துவில் வந்திருந்த வேதாளர், ரிப் கிர்பி, மாண்ட்ரேக், காரிகன் தற்போது சார்லி காமிக்ஸ் கதைகள் தான் இதுவரையிலும் தமிழில் வந்ததில் வேறெந்த பதிப்பகத்தையும் விட சிறந்தது என்பேன் என் காமிக்ஸ் அனுபவத்தில். அந்தளவு மிகுந்த தரத்தினால்தான் ஆரம்ப முத்து இதழ்கள் அன்றும் இன்றும் என்றும் Cult Classic நிலையில் உள்ளது.. ஆனால் அதையும் விட இன்னொரு படி உயரே சென்றுள்ளது தற்போதைய முத்து சுப்ரீம் இதழ்கள். ஆம் இதன் மொழிபெயர்ப்பு மற்றும் குவாலிட்டிக்காகவே இந்த சுப்ரீம் இதழ்கள் அந்நாளைய முத்து போல விரைவில் அரிய இதழ்களாக மாறும். இந்த இதழ்கள் எதுவுமே நீண்டகாலம் கிட்டங்கியில் துயில்பயில வாய்ப்புகள் இருக்காது என்பேன்.

    ஏனெனில்.. இதன் அருமை உணர்ந்த பல காமிக்ஸ் முதலீட்டாளர்கள் வாங்கிப் பதுக்கி விடுவர். பின்னாளில் கொழுத்த விலைகளுக்கு விற்பதற்கு.
    ஆகையால் இதுவரை வாங்காதவர்கள் எவரும் இருப்பின் உடனே சுப்ரிம் ஸ்பெஷல்களை வாங்கி விடுங்கள் இல்லையெனில் பின்னாளில் வாசக வியாபாரிகள், ப்ரோக்கர்களிடம் அநியாய விலை கொடுக்க நேரிடும்.

    ReplyDelete
    Replies
    1. அழகாய்ச் சொன்னாய் ராஜ்..

      Delete
    2. ////டிடெக்டிவ் சார்லி மீண்டும் மகத்தான வெற்றிப் பெற்றுள்ளார்.

      பேப்பர் ரகமும் தரம். உயர்ரக ஸ்கேனில் இடப்பட்ட அச்சு என்பதால் பிரிண்டிங் தரமோ உயர்தரம். ///

      ---சார்லி ஸ்பெசலின் சிறப்புகளை அருமையாக சொல்லி உள்ளீர்கள் ராஜ்... இதன் ஹைலைட்டை இப்படி எடுத்துக் கூறும்போது என்னை போன்ற பழைய கதைகளின் அருமை தெரியாமல் உள்ளவர்களும் அறிந்து கொள்வோம்...
      நானும் முதன்முறையாக ஒரு பழைய ஹீரோவை முயற்சிக்க உள்ளேன்.

      Delete
  65. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. என் பின்னூட்டத்தில் என்ன சொல்ல வந்தேன் என்பது குறித்த விளக்கம் குறிப்பிட்ட வாட்சப் குழுவில் நேற்றே சொல்லியிருந்தேன் ஆனாலும் எனது பின்னூட்டம் வேறொரு கோணத்தில் மற்றொருக்கு புரிந்துள்ளது என்று எனக்கு வந்த தனிசெய்தி வழியாக நண்பர்கள் சிலர் சொன்னார்கள். சக வாசகனாக மற்ற வாசகர்களோடு நேசம் கரம் நீட்டவே எப்போதும் விரும்புபவன் யாரையும் புண்படுத்தும் நோக்கம் அறவே இல்லை . ஆகையால் கமெண்ட் ரிமூவ் செய்துள்ளேன்.

      Delete
  66. ஈ.வி.@ ////எனக்கு நம்பிக்கையிருக்கிறது - இதற்கு தொடர்ச்சி இருந்திடக்கூடும் அல்லது இனிமேல்தான் வெளியாகிடக்கூடும்!////

    என் மனசு கேட்பதும் இதையே. சிந்தியா ஆன் பார்க்கர் தன் குடும்பத்தோடும், தான் வளரந்த சுற்றமான கமான்சேக்ளோடு இணையனும்னு!

    ஆனால் இந்த கதையை கதாசிரியர் போசெல்லி உருவாக்கியிருப்பது ஓரளவு வரலாற்றை ஒட்டியே. நம்ம கதையின் சம்பவங்கள் நிகழும் காலகட்டமான இறுதி கமான்சே யுத்தத்தில் டெக்ஸாஸ் தலைமையின் கொள்கை விரட்டு அல்லது வைப் பண்ணுவதாக இருந்தது. அந்த கடுமையான சூழலில் சர்வைவலே மிகுந்த சிரமமான செயல்...

    செவ்விந்திய சிந்தியாக்களை மீட்பதுலாம் நடந்திருக்க வாய்ப்பு இருந்திராது என்றே கருதுகிறேன்.

    நம்முடைய சங்க பொருளாலர், மரியாதைக்குரிய செனா அனா ஜியின் விமர்சனத்திற்காக ஆவலுடன்....

    வரலாற்று நிகழ்வுகளை ஆழ்ந்து கிரகித்து சுவைபட விளக்கும் தளத்து "சுஜாதா" செனா அனாவின் பார்வையில் விடை கிடைக்க காத்துள்ளேன்.

    ReplyDelete
  67. இம் மாதம் மூன்று புத்தகங்களுமே முதலிடத்தில் இருப்பது போல தோன்றுவது எனக்கு மட்டும்தானா

    ReplyDelete
  68. டிடெக்டிவ் சார்லியின் பனியில் ஒரு பித்தலாட்டம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்..!
    புத்தக சைசும் சரி.. பைண்டிங்கும் சரி.. உட்பக்க அமைப்பும் சரி.. எல்லாமே அட்டகாசம்..!
    ஊருக்கு ஒண்ணு ரெண்டு கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.. என்ன பண்றதுன்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுதானே ஊருல இருக்க வேண்டியிருக்கு..!

    ReplyDelete
    Replies
    1. தெர்மா மீட்டர்ல மெர்க்குரி லெவல் ஏற ஏற கமெண்ட்டிலயும் அது பிரதிபலிக்கதானே செய்யும் மாமா!

      Delete
  69. டியர் சார்
    "எந்தையின் கதை."-முடித்துவிட்டேன்.. கதை நெடுக்க - பாகம்-VI & பாகம்-Vil_யில் வருபவர்களை தேடும் படலம் ஆகிவிட்டது..
    சார்லி- யை முடித்ததும்-பாகம்-6&7-யை படித்துவிட்டு மறுபடியும் படிக்க வே
    ண்டும்..

    ReplyDelete
  70. காமிக்ஸ்-படிப்பது என்பது ஒருவகை ரசனைதான். அதாவது நாவலாக படிக்கும் போது நாமே அனைத்து விசயங்களையும் கற்பனை செய்து படிக்க வேண்டும்.
    ஆனால் ,காமிக்ஸ்-ஸில் படங்களில் லயித்து உரையாடலை மட்டும் படித்து கடந்துபோகும் விசயம் தான்.
    ஆனாலும் - காமிக்ஸ் சை
    ஸ் என்று வரும்போது பக்கத்துக்கு 6 frame கள் அமைத்து 40 பக்கங்கள்-60 பக்கங்களில் கதை படிக்கும் சுவராஸ்யமே தனிதான்.
    இதற்கு நான் ரிப். ஜானியைத்தான் உதாரணம் சொல்வேன்..
    இப்பவும் - ஜானியின் - சிவப்புப்பாதை -யையும்,
    பிசாசுக்குகையை
    யும் - சுவராஸ்யமாய் படிக்கிறேன்..
    ஆனால், ஏனோ - தற் போதைய கலர்புல்லான ஜானி கதைகளை மறுவாசிப்பு செய்ய ஆர்வம் வர மாட்டேன்கிறது. (நிச்சயம் கதை சுமார் என்று நான் கருதவில்லை..)
    எனவே, எனவே, -- என் அபிமான காரிகனையும் இதே சைஸில்-தந்து விட்டால் இந்த பிறவியின் பயனை அடைந்து விடுவேன்.
    ஆனால், ஒன்று ..பிறவிப்பயனுக்காக மாடஸ்டியை இது போல் - Digest_ஆக கேட்பதாய் இல்லை..
    (கலர்புல்லான அட்டைப்படம் miss-ஆகிவிடுமே..ii)
    அப்றம், இதுவும் ஒருவகை ரசனைதான்..
    அதாவது, 100 பக்க இதழ்களில்-மேல் பின் அடித்து-பைண்டிங் செய்து தருவது- ஒரு தனி Look ஆக உள்ளது.
    அதைவிடுத்து, செண்டர் பின் அடித்து தருவது- 10 ரூ-கோல புக் போல் ஒரு feel தருகிறது..
    (உ-ம்) - ( ClD-ராபினின்-நடுநிசி வேட்டை-சூப்பர்..
    ஏஜெண்ட் ராபினின்- ப்ளாக்மெயில் பண்ண விரும்பு..
    (அழகான அட்டை வடிவமைப்பு-தரமான பேப்பர் - ஆனாலும்..)ஏதோ ஒன்னு குறையிதே..
    நிச்சயம் இது எனது ரசனை சார்ந்த விசயம்தான்..
    உங்களது இதழ் தயாரிப்பு பணியில் உள்ள சிரமங்கள் எனக்குத் தெரியாது..தான்..ஸாரி..

    ReplyDelete
  71. எந்தையின் கதை ஒரு வாசகன் பார்வையில் நீங்கள் எழுதியது மிகவும் அருமை! கதையின் முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள்! குழந்தைகள் நாம் சொல்வதை கேட்க்காமல் செல்லும் போது ஒரு தந்தையின் தவிப்பை பல இடங்களில் ஓவியர் மற்றும் வசனம் மூலம் சொல்லியுள்ளார்; சில விஷயங்களை அவர்களுக்கு சொல்லி புரியவைக்க முடியாமையின் வெளிப்பாடு இது, அவர்கள் சொன்னாலும் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இருப்பதில்லை; இதனை அனுபவ பூர்வமாக உணர்ந்து வருகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. எல்லா பெற்றவர்களுக்கும் இது போன்ற அனுபவம் கண்டிப்பாக இருக்கும்!

      Delete
  72. சார்லி ஸ்பெஷல் - சொன்னால் நம்பமாட்டீங்க புத்தகம் கிடைத்த மறுநாள் முதல் இரண்டு கதைகள் ஒரே மூச்சில் படித்து விட்டேன்; இன்று மாலை கையில் காஃபி கோப்பையுடன் படிக்க ஆரம்பித்து அடுத்த மூன்று கதைகளை முடித்து விட்டேன்! இதுவரை வந்த கிளாசிக் ஸ்பெஷல் கதைகளில் குறைந்த நாட்களில் அதிக கதைகளை படித்தது சார்லி ஸ்பெஷல் மட்டுமே.

    இதற்கு முதல் காரணம் என்றால் தெளிவான நேர்கோட்டு கதைகள், ஆனால் பாதிக்கதை வரை ஊகிக்க முடியாத கதை, அட்டகாசமான மொழிபெயர்ப்பு (எழுத்து மற்றும் இலக்கண பிழைகளுக்கு ஒரு கொட்டு), இயல்பான கதை ஓட்டம் கையை பிடித்து கதைக்குள் நம்மை உலாவிடுகிறது, படித்து முடித்தவுடன் முகத்தில் ஒரு மலர்ச்சி! இதே போன்ற உணர்வு ரிப்-கெர்பி கதைகளை படிக்கும் போது கிடைத்தது! இதற்கு முன்னால் ஒரு சில சார்லி கதைகளை படித்து இருக்கிறேன், மொத்தமாக அதிக சார்லி கதைகளை படிப்பது இதுவே முதல் முறை, நல்ல வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது சார்!

    இரண்டாவது கரணம் புத்தக வடிவமைப்பு சிறிய சைஸ் (டெக்ஸ் கதை புத்தத்தின் சைஸ்??) மற்றும் பக்கத்திற்கு குறைத்த படங்கள் மிக பெரிய பிளஸ்! மாக்ஸி சைஸில் வந்த கதைகளை படிக்கும் போது நிறைய படங்கள் + வசனங்கள் ஒரே பக்கத்தில், எப்போதுடா இந்த பக்கத்தை தாண்டுவோம் என மனம் நினைக்கும் (தற்போதைய சூழலில் படிக்க நேரம் இருப்பது இல்லை) ஒருகதையை படித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்! மாக்ஸி சைஸில் வந்த தலையில்லாத போராளியை தவிர பிறகதைகள் என்னை கவராமல் செல்ல காரணம் சிறிய படங்கள் ஒரே பக்கத்தில் நிறைய பேனல்கள்; மாக்ஸி சைசில் ஒரு கதை வருகிறது என்றால் பெரிய படங்கள் சிறப்பான ஓவியத்துடன் வண்ணத்தில் வந்தால் ரசிக்கலாம்!

    இதே சைஸில் மீதமுள்ள கிளாசிக் கதைகளை தொடருங்கள் சார்.

    ReplyDelete
  73. வணக்கம்...
    ஒரு சின்ன அறிமுகம்..
    சார்லியும் நானும்.
    நான் காமிக்ஸ் நேசித்து படிக்க ஆரம்பித்த காலத்தில் ஸ்பைடர், ஆர்ச்சி கதைகளை மட்டும் ரசித்து ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சார்லியின் கதைகளை படிக்க நேரிட்ட போது அதன் ஓவியங்களை பார்த்து இது நமக்கு சுகப்பட்டு வராது என ஒதுக்கி வைத்து விடுவேன் படித்ததே இல்லை. எதிர்பாராத ஒரு தருணத்தில் வேறு வழியே இல்லாமல் ஒரு கள்ளப் பருந்தின் கதையை படிக்க நேரிட்டபோது.. கதையில் ஆரம்பத்தில் சார்லி தன் மனைவி கிறிஸ்டி உடன் அமர்ந்து ஸ்வீனி என்ற நண்பனின் வேண்டுகோளை ஏற்று அவனது புது வீட்டிற்கு செல்ல தன் மனைவியை அழைக்கும் போது கிறிஸ்டி வேண்டா வெறுப்பாக இவர்கள் திருமணத்தின் ஸ்வீனி அன்பளிப்பாக கொடுத்த ஒரு கம்பளி கோட்டை பற்றி குறைவாக பேசுவாள். கிறிஸ்டிக்கு கம்பளி கோட் ரொம்ப பிடிக்கும் என்று தெரிந்ததால் ஸ்வீனி தானே ஒரு மலைப்பகுதிக்கு சென்று வேட்டையாடி ஒரு கம்பளி கோட்டை தயாரித்துக் கொண்டு வந்து அன்பளிப்பாக கொடுத்து இருப்பான். ஆனால் அது ரோமங்கள் அற்ற ஒரு கிழட்டு ஆடு என கிறிஸ்டி கேலி கூறுவாள். அதற்கு சார்லி "நோக்கத்தை தான் நாம் பார்க்க வேண்டும் நம் மீது என்ன ஒரு பிரியம் இருந்தால் அப்படி ஒரு சிரமத்தை எடுத்துக் கொண்டிருப்பான் ஸ்வீனி" என்று சார்லி நினைவு கூறும் இடமே எனக்கு சார்லின் கதைகளின் மேல் ஒரு பிடிப்பிற்கான துவக்க புள்ளி ஏற்பட்டது.

    ReplyDelete
  74. டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷல் -1

    நிச்சயமாக ஒரு தரமான அருமையான தயாரிப்பு என்பதில் சந்தேகமே வேண்டாம். இரண்டு கதைகள் படித்துள்ளேன் இரண்டு கதைகளுமே கருப்பு முத்துகள் தான்.
    இந்த ஆண்டில் பெரிய வெற்றியை அடைய போகும் புத்தகங்களில் இந்த ஸ்பெஷல் இதழ் ஒன்றாக நிச்சயம் இருக்கும். வரும் ஆண்டில் டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷல்-2. என் கணிப்பில் கிட்டத்தட்ட உறுதி.

    கதை எண் -1. பனியில் ஒரு பித்தலாட்டம்..
    பித்தலாட்டம் .. பித்தலாட்டம் கதையின் இரண்டாம் பக்கத்திலேயே ஆரம்பமாகி விடுவது மிகுந்த குதூகலத்தை ஏற்படுத்துகிறது. ஆனா ஏன் எதற்காக என்பதுதான் கதையின் வெற்றிக்கான முதல் படி.. சார்லி கதையில் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் குறைவான கதாபாத்திரங்கள் நிறைவான கதை அமைப்பு பளிங்கில் வரைந்தது போன்ற ஓவியங்கள் அதன் பாணி.

    கதையின் பிரதானமே பணம் .. போலிக் காதல்.. பிளாக்மெயில் ..கொலை.. ஆனால் கதையில் தொய்வே இல்லாமல் பரபரப்பாக செல்கிறது.

    ReplyDelete


  75. கதை எண் -2 : ஒரு காதலின் கதை.

    சார்லி, விக்டர் வான் ஐவெர் (விக்), வின்ஸ்டன் வான் ஐவெர் (வின்), ஹெலன் மற்றும் கடைசியில் போலீஸ் அவ்வளவுதாங்க. கதை சும்மா எங்கேயோ போகுது.

    மரணப் படுக்கையில் உள்ள தன் இரட்டை சகோதரர் விக்கை சந்திக்க வின் தன் மனைவி ஹெலனிடம் சொல்லிவிட்டு கென்யாவில் உள்ள நைரோபிக்கு பயணம் ஆகிறார். அங்கு சகோதரர் பூரண நலத்துடன் உள்ளதை காண்கிறார் சிறிய உணவுக்கு பின் இரட்டை சகோதரர்கள் உரையாடுகின்றனர் . அந்த உரையாடல் மட்டும் வின் சரியாக கையாண்டு இருந்தால் ? விதி யாரை விட்டது? வின் தன் சகோதரன் விக்கை சந்தித்த முதற்கொண்டு விக் தான் வில்லன் என்பது தோன்றலாம் உண்மையும் அப்படிதான் ஆனால்..
    அந்த உரையாடலில் பணம், பண்ணை என கடந்த கால உரையாடலின் போது வின் "நீ கேட்கவில்லை நான் சொல்லவில்லை " என்ற ஒரு பதில் சொல்ல, விக்கை மட்டும் அல்ல நம்மையும் உசுப்பேற்றும் விதமாக தான் இருக்கும்.
    அதே உரையாடலில் இரண்டாவதாக விக், ஹெலனை பற்றி பேசும்போது.. அந்த இடத்தில் தன் மனைவி என்று வின் பேசாமல் , விக்கின் முன்னாள் காதலியாகவே பேச்சை தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருப்பார் அதாவது விக்கின் காதலியை தான் மனைவியாக அடைந்ததை சாதனையாக பேசிக் கொள்வார். அந்த இடத்திலேயே புரிஞ்சு போச்சு .. சார் மீண்டும் வீட்டுக்கு திரும்ப போவதில்லை என்று.. அப்புறம் என்ன சில பல அதிரடியான திட்டத்திற்கு பிறகு , வின் பரலோக பயணம் செல்கிறார். விக்.. வின்னாக இடமாற்றம் செய்து கொண்டு பயணம் ஆகிறார் . மனைவியின் சந்தேகம் அதிகமாக டிடெக்டிவ் சார்லி உள்ளே வருகிறார் சில பல டிடெக்டிவ் ஆராய்ச்சி பின்பு இது வின் அல்ல .. விக் என்பது ஆதாரத்துடன் உறுதியாகிறது . சார்லி, போலீஸ் சீப் , டாக்டர், ஹெலனை சந்திக்க மாளிகைக்கு வருகின்றனர். இதனை மறைந்திருந்து பார்க்கும் விக் அவர்களது உரையாடலை கேட்கிறார். பணத்திற்காக ஆள் மாறட்டும் செய்யும் விக்காக இருந்தால் அப்போது கூட கம்பி நீட்டி இருக்கலாம். அப்படித்தான் நினைக்கத் தோன்றும் ஆனால் விக் அவர்கள் நால்வரும் இருக்கும் அறைக்குள் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு "குட் ஜென்டில்மேன்" அப்படி என்று ஒரு வசனத்தை கம்பீரமாக உச்சரிக்கும் போது புரிந்து விடுகிறது விக் வேறு ரகம். விக் மேல் ஆதாரத்துடன் குற்றம் சுமத்தப்படுகிறது அதுவரை பொறுமையாக தான் இருப்பார் விக். ஆனால் போலீஸ் சீப் பணத்திற்காக தான் இந்த கொலையை நீ செய்தாய் என சொல்லும் போது அதிர்ந்து போய் "நோ... அவனுடைய பணத்திற்காக நான் இந்த தப்பை செய்யவில்லை" என ஹெலனையும், ஹெலனின் கண்களை தீர்க்கமாக பார்க்கும் அந்த பார்வையும் (ஹெலனின் பின்புறம் தான் ஓவியத்தில் இருந்தாலும் நான் அப்படித்தான் புரிந்து கொண்டேன்) அந்த வசனமும் , அந்த ஓவியமும்.. விக்கின் வேதனையும் ஓவியத்தில் என்ன ஒரு தவிப்பு என்ன ஒரு உணர்ச்சி. முன்னரே தப்பித்து செல்லாமல் தான் சொல்ல வேண்டியதை ஹெலனிடம் சொல்வதற்கு இதுதான் ஒரு கடைசி வாய்ப்பு என புரிந்து கொண்டதால் தான் முன்னரே தப்பித்து செல்லாமல் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு ஹெலனிடம் தன் ஆழமான காதலை புரிய வைத்து விடுகிறார்.
    பின்னர் அங்கிருந்து தப்பி ஓடுகிறார் உயிரை காப்பாற்றிக்கொள்ள அல்ல.. தன் முடிவின் கடைசி பயணத்தை தனது வாழ்வின் சந்தோசமான நினைவுகள் நிறைந்த இடமான ஹெலன் உடன் சேர்ந்து பழகிய "லவ்வர்ஸ் லிப் " ஆற்றில் இனிய நினைவுகளுடன் ஐக்கியம் ஆகிட காருடன் எதற்கும் துணிந்த அந்த சூழ்நிலை வில்லன் பாய்கிறார். மீண்டு வராத ஒரு பாய்ச்சல். கதையினை மேற்கொண்டு சார்லி முடித்து வைக்கிறார் ஆனால் சார்லியின் முகத்திலும் அப்படி ஒரு சோகம். சார்லியின் கதைகளில் ஓவியங்களில் ஓவியர் நாட்டியமாடி உள்ளார்.


    ஒரு அருமையான ஸ்பெஷல் இதழினை தேர்ந்தெடுத்து வெளியிட்ட எடிட்டர் சார் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  76. @Raguraman Salem..😃😍

    அருமையான விமர்சனம் ஜி..👏👌💪

    அடுத்தடுத்த கதைகளுக்கும் தொடருங்கள் ஜி..🙏

    ReplyDelete
  77. @Edi Sir..😍😃

    ஆன்லைன் BFல் நெப்ஸ் பொக்கிஷம் வருது ன்னு பரவலா பேசிக்கிறாங்களே சார்..😘

    உண்மைங்களா..😃😍

    ReplyDelete