Monday, March 06, 2023

V = WE = அடுத்த 3 மாதங்கள் !

 Hi Boss,

வணக்கம். விக்ரம் ஹியர் ! நம்ம V காமிக்ஸின் முதல் quarter புக்ஸ்களை நல்லபடியாக உங்களிடம் கொண்டு சேர்த்ததில் ரொம்பவே மகிழ்ச்சி ! ஸாகோர் ஆரம்பித்து விட்டிருக்கும் இந்த short & sweet வாசிப்புகள், நம்ம V காமிக்சின் அடையாளமாகி விட்டால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி ! ஆக்ஷன் கதைகள் ; பிரமாத அர்ட்வொர்க் ; சிம்பிள் ஸ்டைல் என்பதோடேயே V தொடர்ந்து வெளி வரும் & இதோ அடுத்த 3 மாதங்களுக்கான புக்ஸ் பற்றிய விபரங்கள் ! 

***லயன்-முத்து சந்தாவில் இருப்பவர்களுக்கு தனியாக கூரியர் காசு கட்ட தேவை இருக்காது - ரூ.300 அனுப்பினால் போதும். 

***சந்தாவில் இல்லாவிட்டால் ரூ.400 அனுப்ப வேண்டி வரும் !

Please can you subscribe ?!

அப்பா ஏற்கனவே சொல்லி வருவது போல, ஸாகோரும்-(இளம்) டெக்ஸ் வில்லரும் சந்தித்துக் கொள்ள (அடித்துக் கொள்ள) இருக்கும் 128 பக்க சாகசம் தான், இந்த ஆண்டுடைய இரண்டாவது quarter-ல் highlight ஆக இருக்க போகிறது ! இது வரைக்கும் வந்துள்ள 2 ஸாகோர் கதைகள் டிரெய்லர் மாதிரி என்றால், மெயின் பிக்ச்சர் ஏப்ரல் மாதம் வெயிட்டிங் ! 

அதற்கு பிறகு ஸாகோரின் டார்க்வுட் நாவல்ஸ் வரிசையில் கதை # 3 & ஏஜெண்ட் ராபினின் அடுத்த க்ரைம் த்ரில்லர் ! ராபினின் இந்த ஆல்பத்துக்கு, டேவிட் ரிகமாண்டி என்றொரு இளம் கதாசிரியர் பொறுப்பேற்றிருக்கிறார் & ராபின் 2.0 தொடரின் வெற்றியின் பெரும் பங்கு இவருக்கே போகும் என்று நெட்டில் வாசித்த போது தெரிந்து கொள்ள முடிந்தது ! ஒரிஜினல் கதாசிரியர் நிஸ்ஸியை விடவும் இவர் ராபினுக்கு கூடுதல் வெயிட் தந்துள்ளார் என்று ரொம்பவே பாராட்டுக்கள் ! So இத்தாலியில் போலவே  நம்ம V காமிக்சிலும் ராபின் அடுத்த கியரை போட - "தப்புத் தப்பாய் ஒரு தப்பு" உதவிடும் என்று நினைக்கிறேன் ! 

2023-ன் மூன்றாவது quarter-ல் ஜங்கிள் ஸ்டார் MISTER NO அறிமுகமாகிறார் & இன்னொரு புது தெறி ஆக்ஷன் ஹீரோவும் அறிமுகம் ஆகிறார் ! அநேகமாய் ஜூலை முதலான அந்த quarter-ல் நம்ம V காமிக்ஸ் மாதம் 2 புக்ஸ் என்று வரக்கூடும் ! முதல் தேதியின் புக், லயன் & முத்து காமிக்ஸ் டப்பாக்களுக்குள் செலவின்றி டிராவல் செய்திடும் ; 15-ம் தேதிகளுக்கான புக் மட்டும் போஸ்டல் சர்வீஸில் அனுப்பினால் செலவு குறைவாக இருக்கும் அல்லவா ?

And மினி-காமிக்ஸ் வேலைகளும் வேகமாக நடந்து வருகின்றன ! செம funky ஆக ஒரு லோகோவை, அட்ரஸ் இல்லாத ஒரு ஈ-மெயிலில்  வாசகர் ஒருவர் அனுப்பியிருக்கிறார் ! அதை இன்னும் கொஞ்சம் improve செய்து பயன்படுத்திட இருக்கிறோம் ! வானிச்சாமி விஜய் சார், உங்களுக்கு நன்றிகள் ! உங்கள் contact details அனுப்புங்கள் ப்ளீஸ் ! 

இந்த முதல் 3 மாதங்களுக்குள்ளேயே நிறைய பாடங்கள் படித்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் குறைகளை சரி செய்து கொண்டு, இன்னும் தெளிவான புக்ஸ்களோடு ஜூன் மாதம் மீண்டும் உங்கள் முன்னே ஆஜராகிறேன் ! Thank you very much for supporting me ! Bye everybody !

322 comments:

  1. Replies
    1. ஐ விக்ரம் பதிவுக்கு டாக்டர் விக்ரம் முதல் கமெண்ட்! சூப்பர்!

      Delete
  2. வணக்கம் நண்பர்களே 🙏

    ReplyDelete
    Replies
    1. ஷெர்லாக் ஹோம்ஸ் விற்பனைக்கு ஒரு பேய் புத்தகம் நல்ல காமெடியாக இருக்குமா நன்றாக இருக்குமா இந்த

      Delete
    2. Yes. Coloring and pictures are special in ஷெர்லாக் ஹோம்ஸ்

      Delete
    3. அது ஷெர்லாக் ஹோம்ஸ் அல்ல, ஹெர்லாக் ஷோம்ஸ்

      Delete
  3. Me வந்துட்டேன்..😍😘😃😀

    ReplyDelete
  4. வணக்கம் ஜுனியர் எடிட்டர் 🙏🙏சார்

    ReplyDelete
  5. அடடே அற்புதம்

    ReplyDelete
  6. ஜூனியர் எடிட்டர் ஐயா பெரிய எஜமான் கிட்ட ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்துங்கோ கேப்சன் போட்டி ரிசல்ட்டும் ஸாகோர் ஜோடி பெயர் சூட்டும் போட்டியின் ரிசல்ட்டும் பெண்டிங்

    ReplyDelete
    Replies
    1. ஏன் சாமி - நல்லாத் தானே போய்க்கிட்டிருந்தது ?

      Delete
  7. உண்மையிலேயே வி காமிக்ஸ் அனைத்தும குறைந்த நேரம் எடுக்குது படிக்க & நிறைய ரசிக்க.

    வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர 💐🤝

    ReplyDelete
  8. @Editor 900..😍😘😃😀

    வாங்க..வாங்க..
    வணக்கம்..😍🙏😘

    கலக்குங்க .. ❤கலக்குறோம்..❤❤
    கலக்குவோம்..❤❤❤

    நீங்க நம்ம ஊட்டு புள்ளைங்கோ..😘💪

    நம்ம சப்போர்ட்டு எப்பவுமே உண்டுங்கோ..😃

    அப்புறம் நம்ம காமிக்ஸ் ..அதானுங்க V=We காமிக்ஸ் அடுத்த quarter சந்தா கட்டியாச்சுங்கோ..😘😍

    நமக்கு இந்த குவார்ட்டர் எல்லாம் கட்டுபடியாகறதில்லீங்..
    புல் சந்தா எம்பூட்டுன்னு சொல்லுங்.. ஒரே மூச்சுல கட்டி போடுவோங்.. 👍✊👌💐

    ReplyDelete
  9. ஜூலை முதல் V காமிக்ஸ் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.Mr நோ அண்ட் அந்த தெறி ஆக்சன் ஹீரோ யாரு?

    மாதம் ரெண்டு காமிக்ஸ்? அடடே இது சூப்பர் டுப்பர் நியூஸ்

    ReplyDelete
  10. விக்ரம் சார் v காமிக்ஸின் முதல் மூன்று இதழ்களும் அற்புதமான வெற்றி பெற்றுள்ளது அடுத்தடுத்த இதழ்களும் அபார வெற்றி பெறும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

    ReplyDelete
  11. @Edi 900..😍😘😘

    mini comics லோகோ அட்டகாசங்க..👌
    அருமைங்க.. 👍
    கலர் அல்லுதுங்க..💪

    ReplyDelete
  12. @Edi 900..😍😘

    நம்ப V comics அ..*10 நாளைக்கு ஒண்ணு வீதம் மாசம் 3 கொடுத்தாலும்*..

    Trible O.k..ங்க..❤💛💙

    ReplyDelete
  13. @Edi 900..😍😘

    அடுத்த குவார்ட்டரில்
    *ஜம்பிங் ஸ்டார் ஸாகோர்* ஸாகஸம் ரெண்டு வரப்போவதற்கு ஸாகோர் பேரவையினர் சார்பாக ஜம்பிங் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்..😘😘😘💐🌷🌹🌸🌺🌻

    ReplyDelete
  14. ஙே…900 எடிட்டர் பதிவு அவரு பேசறதை விட சுருக்கமா முடிஞ்சிருச்சி்😲. ஆனாலும் கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்கலை..அதிரடி அறிவிப்பு.
    மூணாவது குவார்ட்டர்ல இருந்து மாதம் ரெண்டா…சொக்கா என்ன பண்ணுவேன். அதிரடியா இருக்கே.

    எ.போ. சோ. சொக்கர்களுக்கு வருட சந்தாவா அறிவிச்சிட்டா எளிதா இருக்குமே..

    ReplyDelete
    Replies
    1. 3மாசம் ஒரு தபா ப்ளான் எனும்போது மாற்றங்களை உட்புகுத்திட்டே இருக்கலாம் மாப்பு... இப்போதைக்கு இது நல்ல ஆப்சனாக உள்ளது.. ஒராண்டுக்கு சந்தா ஆரம்பத்தில் வாங்கியிருந்தா இந்த தோடர் கதை& மாதம் 2லாம் வெயிட்டிங்ல இருந்து இருக்கணுமே.. பரால்ல நாங்களும் 3மாதம் ஓரு தடவை சின்ன சின்ன பட்ஜெட் ஆக கட்ட எளிது...

      Delete
    2. இந்த 1 வருஷம் இந்த பார்முலாவிலேயே ஓடட்டும் சார் ; அடுத்த வருஷம் யோசிப்போம் - ஓராண்டுச் சந்தாவாய் அறிவித்து விடுவதா என்று !

      Delete

  15. அட டே வெல்கம் விக்ரம்@எடிட்டர்900.....
    உங்களோட முதல் பதிவுக்கு ஓரு பூங்கொத்து 💐 💐 💐

    ReplyDelete
  16. வணக்கம் ஜூனியர் எடிட்டர் சார்.

    ReplyDelete
  17. We love V comics...

    First 3மே செமயான பிரிஸ்க் சாகசஸங்களாக அமைந்து நல்ல ஸ்டார்ட் தந்துட்டீங்க... இதே ஃபார்ம் கன்டினீயூ பண்ணுங்க... பாலோ பண்ண நாங்க ரெடி...!

    ReplyDelete
  18. V காமிக்ஸ் சந்தா கட்டியாச்சுங்க. மூன்று மாதத்திற்கொரு முறை சந்தா செலுத்த கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. மொத்தமாக சொன்னால் நன்றாக இருக்கும் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்க....மொத்தமா பணம் புரட்டுறது தானே சிக்கலா இருக்கணும் ?

      Delete
    2. இல்லைங்க சார். ஞாபக மறதியும் வேலையும் எனக்கு ஜாஸ்தி. கட்டிட்டோமா ? கட்டலையோனு சந்தேகம் வந்துவிடும் எனக்கு.V காமிக்ஸ் சந்தா சின்னத் தொகை தானே ? ஒரே முச்சூடா கட்டிட்டு நான் பாட்டுக்கு மாச மாசம் புத்தகத்தை ஆசையோடு எதிர்பார்த்து ஆவலோடு வந்ததும் படிப்போம்ல. அதற்குத் தான் சார்.

      Delete
  19. Replies
    1. இதிலே ஏதாச்சும் உள்குத்து இருக்கா ?

      Delete
    2. சேச்சே நேர்குத்துதானுங்சார்..

      பவுன்சருக்கு McGrath,....

      சிக்கனுக்கு McDonald's....

      பழங் காமிக்ஸ்க்கு Muthu Comics

      மினி காமிக்ஸ்க்கு MC....

      லெமன் ஜூஸ், ஆரஞ்சி ஜூஸ் தாண்டி ஏதும் அறியா பச்சை மண்ணுங்க நாங்களாம்....

      இந்த வாரம் கூட பாருங்க ஜம்மிங் தலைவரு, ஆஞ்சநேயர் கோவில் அருகே ஆப்பிள் ஜூஸ் வாங்கி தந்தாரு......🥰🥰🥰

      Delete
  20. அடுத்த 3மாச ப்ளானிங் செம.... 3ம் 3வித வெரைட்டி... இப்படி தான் அதிரடியாக பண்ணனும்....செம ஹிட் அடிக்க போகுது.....
    காதைக்கொடுங்க.... எடிட்டர்899 க்கு கேட்டு விடப்போவுது...!!! அவரு ஆரம்பத்தில் தொடர்ச்சியாக மாடஸ்தியை போட்டு சறுக்கி பொறவுதான் ஸ்பைடர், ஆர்ச்சினு வெரைட்டி யை புகுத்தினார்.. நீங்க மாசாமாசம் ஒரு ஹீரோனு வெற்றி ஃபார்முலாவை கப்புனு பிடிச்சிட்டீங்க... அடிதூள் பண்ணிங்க...அடுத்தும் ஹாட்ரிக் சிக்ஸர்தான்...

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்கண்ணா, ரண்டே ரண்டு மாடஸ்டிய போடுறது "தொடர்ச்சியா" போடுறதுங்களா ?

      Delete
  21. டெக்ஸ் vs ஸோகோருக்கு ஆவலுடன் வெயிட்டிங்....😜

    ரெண்டு ஹீரோ யிருந்தா அடிச்சிக்குவாங்க.. பிறகு ரெண்டுபேரும் சேர்ந்து வில்லனை பின்னி எடுப்பாங்க... இவுங்ககிட்ட வாங்கி கட்டிக்கப்போகும் வில்லனை பார்த்து விடுவோம்...

    ReplyDelete
  22. ////முதல் தேதியின் புக், லயன் & முத்து காமிக்ஸ் டப்பாக்களுக்குள் செலவின்றி டிராவல் செய்திடும் ; 15-ம் தேதிகளுக்கான புக் மட்டும் போஸ்டல் சர்வீஸில் அனுப்பினால் செலவு குறைவாக இருக்கும் அல்லவா ?//---

    யெஸ்.... அவ்வாறே செய்யலாம்.....!!!!

    அப்போலாம் எங்க சின்ன வயசுல 1ந் தேதி & 15ல ராணி காமிக்ஸ் வரும்... ஒரு புக் 007னா அடுத்து ஒரு கெளபாயோ அல்லது வர ஏதோ ஒரு வெரைட்டியோ வரும்....
    அடுத்த புக் வருவதற்கு இடையே உள்ள அந்த 14நாட்களில் தினம் 10காசு, 25 காசுனு சேர்த்து புத்தக விலையான1.50ஐ சேர்த்து விட்டுதான் ஸ்நாக்ஸ் பக்கம் பார்வையை திருப்புவௌம்...

    அந்த பழைய நாட்களுக்கே உங்களின் இந்த 1&15 திட்டம் அழைத்து சென்றுட்டது....🥰🥰🥰🥰

    மெனி தேங்ஸ் விக்ரம்@எடிட்டர்900...

    ReplyDelete
    Replies
    1. போஸ்ட்மேன் பிரதர்ஸ் தான் மனசு வைக்கணும் 15-ம் தேதியின் இதழ்களை சிக்கலின்றிப் பட்டுவாடா செய்திட !

      Delete
    2. இதெல்லாம் இப்ப நல்லா டெலிவரி ஆகுதாங் சார்... துணிஞ்சி அனுப்புங்க சார்..

      ஜம் பண்ணியே வந்திடாது????

      Delete
    3. இன்றைய இந்திய தபால்துறை பார்சல் சர்வீஸில் படு அட்டகாசமாய் செயல்படுகிறது. பார்சலை பெற்றவுடன் பார்சல் பெறுபவர்க்கு மொபைலில் தகவல் அனுப்புகின்றார்கள். பார்சல் என் ஊர் தபாலாபீஸ்க்கு வந்ததையும் தெரிவிக்கின்றார்கள். டெலிவரியான தகவலும் மொபைலுக்கு வந்துவிடுகிறது. கட்டணமும் குறைவு. ஒரே குறை ஒரு நாள் தாமதமாகும். சத்தியமாகச் சொல்கின்றேன் சார் இனிமேல் என் பார்சலை தபால் துறை மூலம் கூட அனுப்புங்கள் சார்.பக்காவாகச் செயல்படுகின்றார்கள்.

      Delete
  23. அருமை விக்ரம்....மிஸ்டர் நோ குறித்து கேக்கனும்னு நினச்சு படிக்க படிக்க தந்தை போல சளைக்கா தனயனின் பதில்கள் ....மகிழ்ச்சி....வெற்றியடைய என்றும் செந்தூரான் துணை நிற்கட்டும்...சூப்பர் விக்ரம்...லோகோ வித்தியாசமா இருக்கு...சூப்பர்

    ReplyDelete
  24. Dear editor sir,
    லக்கி லுக் புயலுக்கு ஒரு பள்ளிக்கூடம் புத்தகத்தை ஆர்டர் செய்யும் பொழுது quantity 500 இருக்கிறது மாற்ற இயலவில்லை

    ReplyDelete
    Replies
    1. சரி பண்ணி விட்டார்கள் ப்ரோ !

      Delete
  25. ஓநாய் வனத்தில் டெக்ஸ்:-
    பாரில் நடக்கும் ரகளையில் தொடங்கும் ஹீரோவின் மாஸ் என்ட்ரியைத் (இந்த இடத்தில் தமிழ் சினிமா ஹீரோ என்ட்ரியை பிஜிஎம்-மோடு கற்பனை செய்து கொள்ளவும்) தொடர்ந்து நடக்கும் ஒரு சிறு வழிப்பறிக் கொள்ளை.... கொள்ளையன் வில் தொழிலுக்குப் புதுசு. பெரிய டான் ஆகவேண்டும் என்ற மிதப்பில் 'ஓநாய் கூட்டத்'தில் சேர, வில்லின் சகோதரி ரேபா, தம்பி கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக தேடப்படும் குற்றவாளி டெக்ஸின் உதவியை நாட, 'பகையாளிக் குடியை உறவாடிக் கெடு'க்க டெக்ஸ் ஓநாய்க் கூட்டத்தில் இணைகிறார். இடையில் டெக்ஸை வேட்டையாடத் துடிக்கும் வெகுமதி வேட்டையன் ஸ்மித்... ஓநாய் கூட்டத்தில் இருந்து வில் மீட்கப்பட்டானா? ஸ்மித்தின் வெகுமதி வேட்டைப் "பொருள் " கிட்டியதா? ஓநாய்களின் "திட்டம்" நிறைவேறியதா? விடைகாண .... டுமீல்... டுமீல்... சத்... விஷ்க்....கும் .... மடேர்... சொத்... ஆஆ... தொபுக்க்... சரேல்ல்... ணங்... சரக்.. டமார்.... இன்னும் நிறைய பிஜிஎம்-களோடு இளம் டெக்ஸ் இறங்கி அடிக்கிறார்... சிக்ஸர்!

    ReplyDelete
    Replies
    1. பணியாற்றும் சமயம் நானும் ரொம்பவே ரசித்த இதழிது சார் !

      Delete
    2. This was super sizzling action !

      Delete
  26. அட 900 பதிவு நபர் திரும்ப வந்திட்டாரே... வெல்கம் பேக் விக்ரம். 🥰 சந்தா செலுத்தியாச்சு இரவோடு இரவாக.👍

    மாஸ்டர் நோ அறிவிப்பு செம்ம.... ஆவலுடன் Waiting

    V Comics மாதம் இரண்டு என்பது லயன் முத்து மற்ற மாத இதழ்கள் நடுவே ஓவர் டோஸாகி விடும் வாய்ப்புகள் அதிகம். கவனம் ப்ளீஸ்.

    அதற்கு பதில் மாதா மாதம் இரண்டு மினி, ஒரு V Comics என்பதே சரியான தேர்வாக இருக்கும். மாத கூரியர் டப்பாக்களில் சேர்ந்து பயணம் செய்ய ஏதுவாக.

    ReplyDelete
    Replies
    1. //V Comics மாதம் இரண்டு என்பது லயன் முத்து மற்ற மாத இதழ்கள் நடுவே ஓவர் டோஸாகி விடும் வாய்ப்புகள் அதிகம். கவனம் ப்ளீஸ்.//

      ஒன்றுக்கு மேலான அத்தியாயங்கள் கொண்ட சாகசங்கள் வெளியாகும் மாதங்களில் மாத்திரமே சார் !

      Delete
    2. அப்புறம் "மினி காமிக்ஸ்" மாதா மாதம் என்றில்லாது, புத்தக விழாக்களின் அட்டவணைகளுக்கேற்ப சின்ன விலைகளில் அமைந்திடும் சார் !

      Delete
  27. சூப்பர் நியூஸ் எடிட்டர் 900

    ReplyDelete
  28. அருமை அருமை...

    இது மீண்டும் காமிக்ஸின் பொற்காலத்தை நினைவூட்டுகிறது...

    நன்றி ஜீனியர் எடிட்டர் சார்...


    வெகு வெகு ஆவலுடன்....

    ReplyDelete
    Replies
    1. தலீவரே.....நம்ம காமிக்ஸ்....நம்ம எடிட்டர்....!

      நோ "சார்" !

      Delete
  29. முதல் மூன்று மாதங்களில் குறைங்களாங்க சார்.நீங்கதான் சொல்றிங்க நாங்க தேடித்தேடி பார்க்குறோம் ஒண்ணும் காணாங்களே.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீங்க ராஜசேகர் சார்.

      Delete
    2. அதுக்கு தான் டிப்பர் லாரி ஹெட்லைட் மெரி கண்ணுங்க வேணும்னு சொல்றது சார் !!

      Delete
    3. ////தம்பி ...ஆ ...வுணா ...கொடிய தூக்கிகிட்டு கூட்ட கூட்டமா வராங்க...////
      ஒரு விரல் கிருஸ்ணாராவ் கதையா, நம்ம கதை ஆயிருச்சோ.

      Delete
  30. Warm welcome to V editor vikram to our blog.
    அப்போ இனிமே வாரம் இரண்டு பதிவுகள் உண்டுங்களா?.
    சனிக்கிழமை லயன், முத்து எடிட்டரின் பதிவு.
    புதன்கிழமை V காமிக்ஸ் எடிட்டரின் பதிவு.
    இந்த ஐடியா நல்லா இருக்குங்களா எடிட்டர் சார்?

    ReplyDelete
    Replies
    1. அருமையான ஐடியா சார்....

      சனி&ஞாயிறு...லயன்

      செவ்வாய் &புதன்--V for We

      ஆஹா... பதிவுகள் ஜொலிக்கட்டும்..

      ஞாயிறு& புதன்.. இந்த ஃபார்முலா ரொம்ப பரிச்யமானதே......

      Delete
    2. அஸ்கு...அஸ்கு...! இங்கே ஒரு நாயர் தனியா டீ அத்துறது போறாதுன்னு தொணைக்கு இன்னொரு கடை போட வைக்கிற ஐடியாவா ? கார்பரேஷனிலே பெர்மிஷன் குடுக்க மாட்டங்களாம் சார் !

      Delete
    3. அதானே பார்த்தேன் :-)

      Delete
  31. @Padhu ji..😃😍

    அருமையான ஐடியாங்க..👍

    வாரம் ரெண்டு பதிவு..😘
    மாசம் ரெண்டு காமிக்ஸ் 😍😘
    Super..Super..😍😘😃😀

    ReplyDelete
    Replies
    1. தீட்ட , தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும்.
      பதிவு போடப் போடத்தான் V காமிக்ஸ் ஜொலிக்கும்.

      Delete
    2. ரத்தினசுருக்கம்.
      விகரம் சார்,
      வாங்க நிறைய பேசுங்க.

      Delete
    3. கொடுமைங்கய்யா...! காது வரைக்கும் நீளும் வாயோடு ஒருத்தன் லோ லோன்னு விடிய விடிய இங்கனக்குள்ள பெனாத்திக்கினு இருந்தா அந்தத் தெருவிலேயே ஆளே இருக்கிறதில்ல !

      ஆனாக்கா அளவு மீல்ஸாட்டம் அளந்து பேசுற ஆளை - 'பேசு..எழுதுன்னு ' சொல்றீங்க ! என்ன கொடுமைங்க சார் ?

      Delete
    4. சிங்கத்தின் சிறுவயதில் தொடர்ந்து நமது காமிக்ஸில் எழுதுங்க என சொல்லுறோம் ஆனால் நீங்கள் தான் எழுதுவது இல்லை :-)

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. எடிட்டர் (மைண்ட்வாய்ஸ்): இப்படித்தான் உசுப்பேத்தி, உசுப்பேத்தி உடம்ப புண்ணாக்கிடுவாங்கோ. பாத்து சூதானமா இருந்துக்கய்யா..

      Delete
    7. நா சும்மாவே, நாலு வரியா இருந்தா நானூறு வாட்டி படிபேன். அதுவே நாலு பக்கமா இருந்தா நாள் முழுக்க படிச்சுகிட்டே இருப்பேன். இந்த யூத்துக்கு இருக்கிற எண்டர்டைமண்ட் இதுதான். இத குறைக்கலாம்ன்னு பாக்குறீங்களா. ஊகூம்.

      Delete
    8. பரணி சார் கொக்கிய சரியான நேரம் பார்த்து தான் போடறீங்க ஆனா ...
      கழுவற மீன்ல நழுவற மீனால இருக்குறார் 🤣😂

      Delete
    9. ""சிங்கத்தின் சிறுவயதில்""
      தனி புக்கா " Special edition " ல தா வேணும். அதுவு தண்டியா. இன்னைக்கி வரைக்கும் சொல்லுங்க. Part - 1 , part - 2 அப்புடின்னு வந்தாலு Ok தான்.

      Delete
  32. V comics சந்தா phone pe மூலமாக கட்டியாச்சுங்க சார்.

    ReplyDelete
  33. காலை வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  34. Replies
    1. வந்திரும் மந்திரியாரே !

      Delete
  35. விக்ரம் @ நமது V காமிக்ஸ் பற்றி விற்பனை முகவர்கள் என்ன சொல்லுகிறார்கள்! இதன் வரவேற்பு அவர்களிடம் எப்படி உள்ளது என சொல்ல முடியுமா!

    ReplyDelete
    Replies
    1. வாயைத் திறப்பார்னு நம்புறீங்க?!!

      Delete
    2. // வாயைத் திறப்பார்னு நம்புறீங்க?!! //
      வாயை திறக்கிற மாதிரி தெரியும் ஆனா திறக்கமாட்டார் :-)

      Delete
    3. Early days தான் சார் ; ஆனால் ரெகுலர் தடத்தின் இதழ்களுக்கு சளைக்காத ஆர்டர்கள் இதுவரையிலுமாவது !

      காத்துள்ள second & third க்வாட்டர்களில், கதைகளின் tempo இன்னும் கொஞ்சம் வேகமெடுக்கவுள்ளதெனும் போது V for "விற்பனையிலும் வேகம்" என்று நம்பிக்கை கொள்ள கணிசமான இடமுள்ளது சார் ! And புத்தக விழாக்களில் மித விலையிலான இந்த இதழ்கள் doing well too !

      Delete
  36. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  37. டியர் விக்ரம்..

    மீண்டும் பதிவில் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது! 'சிக்'கென்று எல்லோரையும் கவரும் விதத்திலான புத்தக வடிவமைப்பில், நேர்கோட்டு சாகஸங்களைத் தேர்ந்தெடுத்து 'ஹாட்ரிக் வெற்றிக்கு' வழிவகுத்து, V-காமிக்ஸை வெற்றி காமிக்ஸாக்கி தடதடக்கும் பயணத்தின் அடுத்த காலாண்டுக்கு அடியெடுத்து வைக்கயிருக்கும் உங்களுக்கும் 'நீ அடிச்சு விளையாடு மகனே.. ஆகவேண்டியதை நான் பார்த்துக்கிடறேன்' என்று உங்களை குஷிப்படுத்திவரும் 899 எடிட்டருக்கும் எங்களது வாழ்த்துகள்!

    அந்த நண்பர் அனுப்பியிருக்கும் லோகோ அருமை! சிறுவர்களுக்கேற்ற டிசைன். அந்த குட்டிச் சிங்கமும் பொருத்தமாய் உள்ளது. ஆனால் கண்களை மூடியிருப்பது போலவோ, சோகத்திலிருப்பது போலவோ தோற்றமளிப்பது சற்றே வினோதமாய் படுகிறது! முடிந்தால் ஏதாவது செய்யவும்!

    அடுத்த மாத வெளியீட்டில் டெக்ஸ் Vs கோடாலிகாரர் மோதயிருப்பது எதிர்பார்ப்பை கிளறியிருக்கிறது. இதுவரை வந்த 2 கதைகளிலுமே கோடாலி மாயாத்மா ஏதோ துணை நடிகரைப் போலவே வந்து சென்றிருக்கிறார். இனிவரும் காலங்களில் இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அழுத்தமான கதையாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

    போலவே, அமேஜான் காடுகளில் அதகளம் செய்யயிருக்கும் மிஸ்டர் நோ கதைகளைப் படித்திடவும் ஆவல். சாக்குபோக்கு சொல்லாமல் சீக்கிரமே களமிறக்கிடுங்கள்!

    உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்ட mystery டைப் சாகஸங்களையும் தேடிப் பிடித்து தமிழுக்குக் கொண்டுவாருங்கள்! காத்திருக்கிறோம்!!

    'மாதத்திற்கு இரண்டு V காமிக்ஸ் இதழ்கள்' என்பது முடிவானால் அதில் ஒன்றை சற்றே வித்தியாசமான கதைக்களத்திற்காக ஒதுக்கிடக் கோருகிறேன்! இரண்டில் ஒன்று நேர்கோடாகவும், மற்றது சற்றே வளைந்த கோடாகவும் இருக்கட்டுமே?

    இன்றிரவுக்குள் அடுத்த குவார்ட்டருக்கான சந்தாவை அனுப்பிவிடுகிறேன்!

    ஜெய் V-காமிக்ஸ்!!


    ReplyDelete
    Replies
    1. எக்கச்சக்க வளைந்த கோடுகளைப் போட்டு, மூக்கும் கொஞ்சம் வளைஞ்சே இருக்கும் நைனாவை நெதமும் ஊட்டுல, ஆபீசில பார்க்குமில்லீங்களா புள்ளை ? அப்புறமும் படிச்சுக்காதுங்களா பாடம் ?

      நேர்கோட்டிலேயே தெறிக்க விடும் வழிகளுக்கு நிறையவே வாய்ப்புகள் வெயிட்டிங் சார் !

      Delete
    2. ///மூக்கும் கொஞ்சம் வளைஞ்சே இருக்கும் நைனாவை நெதமும் ஊட்டுல, ஆபீசில பார்க்குமில்லீங்களா புள்ளை ?//!!

      ஹா....ஹா....ஹா... தோசையை வாயில் வெச்சிகிட்டு ப்ளாக் பக்கம் எட்டி பார்க்க கூடாதுனு புரிஞ்சிட்டு.... சிரிச்சி சிரிச்சி.....

      Delete
    3. // ஆனால் கண்களை மூடியிருப்பது போலவோ, சோகத்திலிருப்பது போலவோ தோற்றமளிப்பது சற்றே வினோதமாய் படுகிறது! முடிந்தால் ஏதாவது செய்யவும்! //

      +1 Agreed!

      Delete
  38. ஜூலை முதல் V காமிக்ஸ் இரட்டையர் அவதாரமா வாழ்த்துகள் விக்ரம்,இவ்வளவு சீக்கிரம் அடுத்த பாய்ச்சலில் V காமிக்ஸ் மகிழ்ச்சி அளிக்கிறது...
    வாழ்க,வளர்க...

    ReplyDelete
    Replies
    1. ஒற்றை அத்தியாயத்தோடு நிறைவுறா கதைகள் வெளியாகிடும் மாதங்களில் மட்டுமே 15-ம் தேதிக்குமொரு இதழ் வெளிவந்திடச் செய்ய உத்தேசம் சார் !

      *MISTER NO கதைகளில் 2 பாக சாகசங்கள் உள்ளன !
      *காத்துள்ள புது நாயகரின் சாகசமோ 3 அத்தியாயங்கள் கொண்டது !
      *இன்னும் ஸாகோரின் ரெகுலர் தடக் கதைகளிலும் 2 அத்தியாய ஆல்பங்கள் அநேகம் !

      So அத்தகைய படைப்புகளை குண்டாய் ஒன்றிணைத்துப் போட்டே தீருவது என்ற template-க்கு சற்றே டாட்டா காட்டி விட்டு, இத்தாலியில் வெளியாகும் அதே பாணிக்கு நாமும் பழகித் தான் பார்ப்போமே ? என்பது # 900 கொண்டுள்ள எண்ணம் !

      பார்ப்போமே சார் !

      Delete
    2. எனக்கு புத்தகம் வந்தால் சரி அது ஒன்றாக போட்டாலும் சரி தனித்தனியாக பிரித்து போட்டாலும் சரி.

      Delete
    3. // ஒற்றை அத்தியாயத்தோடு நிறைவுறா கதைகள் வெளியாகிடும் மாதங்களில் மட்டுமே 15-ம் தேதிக்குமொரு இதழ் வெளிவந்திடச் செய்ய உத்தேசம் சார் ! //

      இதுக்கு தான் (தெளிவாக புரியும் படி சொல்ல) இந்த (விஜயன் சார்) ஆல் இன் ஆல் வேணும்கிறது :-)

      Delete
    4. அப்ப வாரம் வாரம் வெளிவரட்டுங்க சார்.

      Delete
    5. ஒன்றோ இரண்டோ எனக்கு புத்தகம் வந்தாப் போகும். அங்குட்டு மாதிரி இங்குட்டும் வருவதை வரவேற்கின்றேன்.

      Delete
    6. விரைவில் ரெகுலர் இரட்டையராக வரட்டும்...

      Delete
  39. @ ALL : ஹல்லோ...ஹல்லேலோ.....# 915 ஸ்பீக்கிங் ! இது யார்டான்னு யோசிக்கிறீங்களா ?

    இப்போதைய பதிவு எண்ணிக்கை 917 ! அவற்றுள் ரண்டு பதிவுகளை சின்னவருக்கு தந்த கணக்க கழிச்சுப்புட்டா மிஞ்சுறது 915 தானே ? So 915-ம் நானே ; மூ.ச.காதலனும் ஞானே !

    வந்தோமா - பதிவ போட்டோமா - வழக்கம் போல சைலன்ட் mode க்குப் போனோமான்னு V காமிக்ஸ்க்காரவுக கிளம்பிட்டதாலே, தோ - வழக்கம் போல அடியேன் ஆஜர் !

    ReplyDelete
    Replies
    1. சார்.. உங்களுக்கும் நீங்க விரும்பிய ஜானரை எங்க V-காமிக்ஸ் எடிட்டர்ட்ட கேட்கலாம்! உலகின் எந்த மூலையில் அந்தக் கதைகள் இருந்தாலும் தேடிக் கொண்டுவந்து தமிழில் இறக்கிடுவார்!

      அடுத்ததா நாங்க டிஸ்னி கதைகளைக் கேட்டுவாங்கலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கோம்!

      உங்களுக்கு என்ன வேணும்? ஆர்டர் ஆர்டர்!!

      Delete
    2. ரண்டு பன் பரோட்டா ?

      Delete
    3. எடிட்டர் சார் ROFL :-))))))))))

      Delete
    4. செயலரை நம்பி பன்னும் சரி…பரோட்டாவும் சரி ஆர்டர் பண்ணுவது அவ்வளவு உசிதமல்ல. அவரே லபக் லபக் பண்ணிடுவாரு

      Delete
    5. அவரே லவட்டிருவாரா. அப்ப கம்பெனிக்கு....

      Delete
    6. ஏங்க, அவரு ஒன்னும் கல் நெஞ்சுக்காரர் கிடையாதுங்க. பன் பேக்டரி ஆரம்பிச்சு " பன் வாரமே " கொண்டாடுவாரு.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. தந்தை மகர்க்காற்றும் உதவி ...

      Delete
  40. ஆஹா...

    உங்களது முதல் பதிவிற்கு தாமதமாய் அட்ன்னஸ் சொல்லதற்கு மன்னிக்கணும் ஜூ.எடிட்டர்(சார்)..!

    ஸ்ரீலங்காவிற்கு கொஞ்சம் முன்னாடி வரைக்கும் (கன்னியாகுமாரி) போய் நான்கு நாட்கள் சுற்றி வந்ததால் எட்டிப்பார்க்க இயலவில்லை.!

    V காமிக்ஸின் வெற்றிக்கு என்னளவில் ஒரு ஆதாரம் சொல்லட்டுமா..?

    எப்போதும் முதலில் கார்ட்டூன்.. அடுத்து டெக்ஸ்னு இதுவரை படிச்சிக்கிட்டு இருந்த நான் .. இப்போ கடந்த மூணு மாசமா முதலில் படிப்பது V காமிக்ஸைத்தான்..!

    அடுத்த காலாண்டில் இருந்து மாதமிருமுறை என்ற அறிவிப்புக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி எடிட்டர் V (சார்).!

    அடுத்த கட்டமாக வாரம் ஒருமுறை என்ற அறிவிப்புக்காக ஆவலுடன் வெயிட்டிங்..!

    அச்சம் வேண்டாம்.. நாளிதழ் போல தினமும் வேணும்னு எல்லாம் கேட்டுடமாட்டோம்..!:-)

    அப்புறம்....
    புது எடிட்டர் மாதிரி நீங்களும் மாதமிருமுறை முயற்சி செய்யலாமே எடிட்டர் சார்..!
    அவர் இத்தாலியை எடுத்துக்கிட்ட மாதிரி.. நீங்க ஃப்ரான்ஸ்.. பெல்ஜியம்.. ஜெர்மனி.. ன்னு ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கே சார்..!

    நான் போயிட்டு அடுத்த வாரம் வரேன்...🏃🏃🏃🏃🏃

    ReplyDelete
    Replies
    1. ப்ளஸ்ஸோ ப்ளஸ் மாம்ஸ்.....!!!!

      4வாரம் 4 பார்சல்....!!

      போஸ்டல் பீனிக்ஸ் இருக்கு....

      Delete
    2. ஆஹா... ஆஹா...வார வாரமா..ம்...இந்த ஆட்டம் சூப்பரோ சூப்பரா இருக்குபா...

      Delete
  41. சார் இந்த நேர் கோட்டு கதை நேர் கோட்டுகதைன்னு சொல்றிங்க ளே.மாடஸ்டி கதையும் இந்த ஜேனர்லதானே வரும்.v.comicsலமாடஸ்டியும்வர சான்ஸ் இருக்குங்களா.

    ReplyDelete
    Replies
    1. ஏன் அந்த ஜூலயா, அமாயா, லேடி எஸ் லாம் வேணாமுங்களா???? மாடஸ்காவேதான் வேணுமா ஜி.....!!!???--- அப்டீனு மச்சான்ஸ் கேட்க சொன்னாங்க!!!

      Delete
    2. V காமிக்ஸ்ல நல்லா விக்குற கதைகளை மட்டும்தான் செலக்ட் பண்றாங்கன்னு கேள்விப்பட்டேனே..!

      Delete
    3. ///சார் இந்த நேர் கோட்டு கதை நேர் கோட்டுகதைன்னு சொல்றிங்க ளே.மாடஸ்டி கதையும் இந்த ஜேனர்லதானே வரும்///

      ஏங்க ராஜசேகர் சார்...

      அந்த காலத்துல கவர்ச்சி கூடாதுன்னு சொல்லி.. மாடஸ்காவோட கிளுகிளுப்பான படங்கள் வரும் இடங்களில எல்லாம்..
      உள்ளூர் ஓவியர்களை வெச்சி.. கோடு கோடா போட்டு ட்ரெஸ் மாதிரி மேட்ச் பண்ணாங்க..!
      அதை வெச்சி எல்லாம் மாடஸ்டி கதைகள் நேர்கோட்டு கதைகள்னு வாதம் பண்ணலாமா சார்... இது நியாயமா.??!

      Delete
    4. ஓ...அதான் அந்த மாடஸ்கா- நேர்கோட்டு கதைகளின் ரகசியமா.....😜

      Delete
    5. நல்லாத் தானே போயிகிட்டு இருக்குது...

      Delete
    6. ஏனுங்க.....சிவ சிவான்னு வருசத்துக்கு ஒரு ஸ்லாட்டில் தலை காட்டி வரும் அம்மணியை கையை புடிச்சி இழுப்பானேன் ?

      Delete
    7. நேர்கோட்டுக் கதைகள் என்பதன் விவரம் புரிந்துகொண்டேன். நன்றி Kok.

      Delete
  42. வீசிரியருக்கு வணக்கம்,

    ஒரு வழியாக இப்போதுதான் V காமிக்ஸின் முதல் இதழைப் படித்து முடித்தேன், நான் படித்த ஸாகோரின் முதல் இதழ்! இதழின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது, வாழ்த்துகள்.

    KGF-ன் முதல் பாகத்தில் வருவதைப், யாரோ ஒரு பத்திரிக்கையாளர், கதையின் நாயகரைப் பற்றி, யாரோ ஒரு பெரியவரிடம் பில்டப் கேள்விகளைக் கேட்டு, பில்டப் பதில்களை வாங்கும் முதல் ஓரிரு பக்கங்களிலேயே, "கோடாரியா, கொட்டா(வி/ரி)யா?" என்ற கேள்வி எழுந்தது. கதையும், நடையும் கூட பெரிதாகக் கவரவில்லை. V-ன் மற்ற கதைகளைப் நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்க வேண்டும்!

    நீங்கள் இங்கே சுருக்கமாக எழுதி நடையைக் கட்டுவதால் மிச்சமாகக் கூடிய நேரத்தில், வேறு புதிய தளங்களின் வாயிலாக மேலும் பல புதிய வாசகர்களை நீங்கள் சென்றடைய முயற்சிப்பீர்கள் என்று கூறிய கையோடு, நானுமே சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன் Veditor அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. அடடா...சிவாஜி செத்துட்டாரா கார்த்திக் ?

      Delete
    2. @ஆசிரியர்:
      சார், அதைவிடக் கொடுமை என்னவென்றால், இப்புத்தகத்தின் பிரதி ஒன்றை, தெரியாத்தனமாக நண்பர் ஒருவரின் காலேஜ் செல்லும் மகளுக்கு, "தமிழ் காமிக்ஸ் படிச்சுப் பாரு, சூப்பரா இருக்குமாக்கும்", என்று ஏக பில்ட்-அப்புடன் கொடுத்திருந்தேன். அன்றைய நாள் மதுரையில், ஷாப்பர்ஸ் ஸ்டாப்பில் இதை சும்மாவாச்சும் வாங்கி இருந்தேன், நண்பரைப் பார்த்தவுடன் அப்படியே அள்ளிக் கொடுத்து விட்டேன்.

      ஒரு மாதத்திற்குப் பிறகு, "ஒரு வழியாக இப்போதுதான் V காமிக்ஸின் முதல் இதழைப் படித்து முடித்தேன்" என்ற அரிய கமெண்டை எழுதி போஸ்ட் செய்ததும், மேற்கண்ட சம்பவம் நினைவுக்கு வந்தது! அந்த நட்டநடு நள்ளிரவில் நடுமண்டையிலேயே நச்சு நச்சென்று நான்கு முறை குட்டிக் கொண்டேன்! இதற்குத்தான் படித்துப் பார்த்த பின் தான் பரிந்துரைக்கவோ, கொடுக்கவோ வேண்டுமென்பது! இதை சரி செய்யும் விதமாக, அட்டகாசமான புத்தகமொன்றை பரிந்துரையுங்களேன் நண்பர்களே?!

      @வீசிரியர்:இப்படிப்பட்ட தர்மசங்கடங்களை, எப்படித் தவிர்க்கப் போகிறீர்கள்?!

      Delete
    3. நண்பரின் மகளுக்கு வயது 18-க்கு மேல் இருக்குமென்றாலும், இப்படிப்பட்ட 18+ காட்சிகள் கொண்ட புத்தகத்தை அவரிடம் கொடுக்கும் உரிமை எனக்கு இல்லை என்றே நம்புகிறேன். புத்தகத்தின் அட்டையில் ஏதேனும் குறிப்பு இருந்திருந்தால் இது தவிர்க்கப் பட்டிருக்கும்.

      Delete
    4. வேணும்னா ஒரு 'ஜட்டி' icon front கவர்ல போடலாம் சார் - பார்த்த ஒடனே யார் படிப்பதற்கு என்று புரிந்து விடும் ;-) :-)

      Humor apart, these kind of skin shows can carry 'For Mature Audience' tag regardless of the price !

      Delete
    5. Takeaways கார்த்திக் : சிவாஜியின் பேரன் ஹீரோவாகி மாமாங்கம் ஆச்சு ; ஈரோட்டில இடைத்தேர்தல் முடிஞ்சும் நாழியாச்சு ; OTT தளங்களில் 'தாறுமாறு தக்காளிச்சோறு' ரக வெப் சீரியல்களும் போட்டுத் தாக்கி வருகின்றன ஏக காலமாய் ; vulgarity இல்லாத வரைக்கும் சற்றே mature ஆன சமாச்சாரங்களைக் கையாளும் பக்குவங்களும் இன்றைய இளைய தலைமுறைக்கு இருக்குமென்றும் எடுத்துக் கொள்ளலாம் தான் ; and most importantly நாம படிக்காததை பரிந்துரைக்காதும் இருக்கலாம் !

      Delete
    6. I agree - நண்பரின் மகளுக்கு தந்து விட்டு விழிப்பது தர்மசங்கடமானதென்று ! But நண்பரின் மகளும் உங்களை போலவே சாவகாசமாய்ப் படிப்பவராக இருப்பாரென்ற நம்பிக்கை கொள்ளுங்கள் !

      Delete
    7. Sir - /* and most importantly நாம படிக்காததை பரிந்துரைக்காதும் இருக்கலாம் ! */ The act is a trust based on past slick flicks sans skin shows. You want to build that to reach more folks?

      /*நண்பரின் மகளும் உங்களை போலவே சாவகாசமாய்ப் படிப்பவராக இருப்பாரென்ற நம்பிக்கை கொள்ளுங்கள் !*/

      .. but you want V to be hot cakes? just not always 'steaming' hot? :-)

      அடுத்தவன் கமெண்டுக்கு பதில் சொல்ற ஜாலி இருக்கே - ஹி ஹி !!

      Delete
    8. Example - Onaai vanathil Tex is a perfect fair-dinkum V comics album ! With the right publicity and word of mouth it is a top of shelf flyer !!

      Delete
    9. @ஆசிரியர்:
      //and most importantly நாம படிக்காததை பரிந்துரைக்காதும் இருக்கலாம் !//ஆமாம் சார், இனி எனது வேலையைச் சரியாகப் பார்க்கிறேன்.

      //But நண்பரின் மகளும் உங்களை போலவே சாவகாசமாய்ப் படிப்பவராக இருப்பாரென்ற நம்பிக்கை கொள்ளுங்கள் !//
      உண்மைதான், அதுவும் இந்தக் கதையைப் பொறுத்த வரையில் பத்து பக்கங்களைத் தாண்டியிருந்தாலே அதிகமென்பேன்!

      //mature ஆன சமாச்சாரங்களைக் கையாளும் பக்குவங்களும் இன்றைய இளைய தலைமுறைக்கு இருக்குமென்றும்//
      18+ சமாச்சாரங்களை இளசுகள் படிப்பதற்கு, பார்ப்பதற்கு நான் எதிரியல்ல. அதை நானே தட்டில் வைத்து அவர்களிடம் தரமாட்டேன், அவ்வளவுதான்! 

      மற்றபடி, நீங்கள் குறிப்பிடும்  'தாறுமாறு தக்காளிச்சோறு' சீரிஸ்களை எடுக்கும் தயாரிப்பாளர்களும், ஒளிபரப்பும் OTT-க்களும், சும்மா பெயருக்கேனும் "அடல்ட்ஸ் ஒன்லி" ரேட்டிங்கைப் போட்டு விடுகிறார்கள். ஆகையால், நாமும் அவற்றை குடும்பத்தோடு கண்டு களிப்பதில்லை. அதை இங்கே எதிர்பார்க்க முடியாது என்பதற்கான சிறியதொரு நினைவூட்டலாக இந்த மதுரை சம்பவத்தைக் கடந்து செல்கிறேன், நன்றி!

      @ராகவன்:
      //The act is a trust based on past slick flicks sans skin shows.//
      +1 

      //அடுத்தவன் கமெண்டுக்கு பதில் சொல்ற ஜாலி இருக்கே - ஹி ஹி !!/
      அதைவிட ஜாலி, அடுத்தவருக்கு ஓசியில் உபதேசம் சொல்வது! அவ்வப்போது மூக்கை உடைத்துக் கொண்டு, ப்ளூபெர்ரி அவதாரம் எடுக்க வேண்டியிருக்கும் என்பது கொசுறு ஜாலி... ஹெ ஹெ ;)

      Delete
    10. me thinking....

      அப்படி என்ன 18+ பிரியமுடன் ஒரு போராளியில்???

      தாங்கள் தர்ம சங்கட படும் அளவிற்கு ஏதும் இல்லை என்பது என் கருத்து.

      மற்றும், இன்றைய தலைமுறை பெரியோர்கள் பெரிதாய் நினைத்து மறைப்பதை எளிதாக எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

      freeya vidunga ;-)

      Delete
    11. //Onaai vanathil Tex is a perfect fair-dinkum V comics album ! With the right publicity and word of mouth it is a top of shelf flyer !!//

      I agree sir ; but isnt word of mouth at a premium these days ?

      Delete
    12. //freeya vidunga ;-)//

      சாகோரை "பிரீயா விட்டதால்" நேர்ந்த சர்ச்சை நண்பரே 😀

      Delete
    13. ஒரு வெகுஜன நாயகரின் கதையோட்டத்துக்கு சற்றே mature பாதையினை வழங்க படைப்பாளிகள் முயன்றிடும் போது சித்திரங்களில் இயன்ற கத்திரி போடுவதைத் தாண்டி நாம் செய்திடக்கூடியது ஏதுமிராது !

      மைக் ஹேமர் போன்ற ஒன் ஷாட் 18+ சாகசங்களை maybe இனிவரும் காலங்களில் அறவே தவிர்த்து விடலாம் ; ஆனால் ஸாகோரின் case அவ்விதமிராது ! எல்லா நாயகர்களுமே 'தல' டெக்ஸ் பாணியில் பயணித்து விட்டால் சிக்கல்களே இராது தான் !

      Delete
    14. //சாகோரை "பிரீயா விட்டதால்" நேர்ந்த சர்ச்சை நண்பரே 😀// ha ha unmaithaan sir :-)

      //மைக் ஹேமர் போன்ற ஒன் ஷாட் 18+ சாகசங்களை maybe இனிவரும் காலங்களில் அறவே தவிர்த்து விடலாம்// - Nooooooo pls sir, 18+ sticker venumna potuvidalam sir.


      Deadwood Dick ah வாசிக்கும் போது RAW ஆ உள்ள வசனங்கள் மற்றும் படங்கள் கொடுக்கும் அனுபவம் அருமையானது sir. PPV ல் எனக்கு மிஸ் ஆன விசயங்கள் இவை , வாசிக்கும்போது ஒன்றுதலை கெடுக்கக்கூடியவையாக இருந்தது.

      ரசனையில் முதிர்ந்தோருக்கான காமிக்ஸ் இன்னும் நிறைய raw ஆன மொழிபெயர்ப்பில் வரவேண்டும் என்பதே என் அவா.

      Personally I am waiting very much for Deadwood Dick's other albums in Tamil.

      Delete
  43. கார்த்திக் சார் . பத்திரிகையாளர் கேள்விகள்கேட்டுபதில் (ஃப்ளாஷ்பேக் கில்) கதைவிரிவடையும் யுக்தி kgfக்கு முன்னாடியே ஒரு தலைவன் ஒரு சகாப்தம்(டெக்ஸ்) நம்மிடையே ஏற்கனவே வந்துவிட்டதுங்கசார்

    ReplyDelete
    Replies
    1. அருமை சார்... இப்படிப் பட்ட காட்சிகள், பல கதைகளில்/படங்களில் நிச்சயமாக வந்திருக்கும்தான்! ஆனால், KGF-தான் சட்டென்று நினைவுக்கு வந்தது! அந்தக் காட்சிகள் அந்த அளவுக்கு cringy ஆக இருக்கும் :)

      Delete
    2. என்னது மைக் ஹேமர் இன்னும் இருக்காரா.
      வேணுமுன்னா,
      மாடஸ்டி புக் தண்டியா கூட வெளியிடுங்க.
      முழுசா படிச்சு நாலு வரி கூட எழுதுறேன்.
      இல்லாகாட்டி
      ஃஸ்மர்ஸ் வெளியிட்டு, டெஸ்ட் கூட வையுங்க. எப்படியாவது பாஸ் ஆகி காட்டுறேன்.
      கிராபிக் நாவல் விடுங்க. ரசிகன் ஆயிறேன்.
      டெக்ஸ் மாயாஜால கதையை மட்டும் வெளியிட்டு பாருங்க.
      கதையை Research செஞ்சு, Phd பட்டம் வாங்கி காட்டுறேன்.
      ஆமா நல்லா தானே பேசுறேன்.

      Delete
  44. போயிட்டு அடுத்தவாரம் வர்றேன்னு சொன்னிங்களே தெய்வமே . மாடஸ்டி பேரசொன்னவுடனே மறுபடிவந்துட்டிங்களே. இதுதான் தானாடாவிட்டாலும் தன் "அப்படின்னு ஒருபழமொழி சொல்வாங்க

    ReplyDelete
  45. "தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு "பழமொழி

    ReplyDelete
  46. தற்போதைய என்னுடைய சூழலில் V காமிக்ஸ் ஐ பதிவுத் தபாலில் பெறுவது முடியாத காரியமாக உள்ளது. ஆகவே எனது புத்தகங்களை பதிவுத் தபாலில் தயவு செய்து அனுப்ப வேண்டாம். செலவு அதிகமானாலும் பரவாயில்லை கூரியரில் மட்டுமே அனுப்புங்கள். அதுதான் எனக்கு வசதியாகவும் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பதிவுத் தபாலா ??? - அது கூரியரை விடவும் costly சார் ! குறிப்பிட்டது சாதா தபாலை சார் !

      Delete
  47. சாதா தபால் தாராளமாக அனுப்பலாம்சார்.ஒரு நாள் தாமதமாக வருகிறது .பரவாயில்லைங்கசார். முன்பெல்லாம் book post என்றொரு நடைமுறை இருந்தது. தற்போதும் இருந்தால் நாம்முயற்சிக்கலாம்சார்

    ReplyDelete
    Replies
    1. உள்ளது சார் ; அதனில் அனுப்பிடத் தான் எண்ணியுள்ளோம் !

      Delete
  48. @ALL : சற்றே தாமதமான ஒரு இரங்கல் செய்தி :

    நமது வெய்ன் ஷெல்டன் தொடரின் கதாசிரியர் தியரி கெய்லியடூ கடந்த பிப்ரவரி 23 ம் தேதியன்று தனது 63-வது வயதில் காலமாகிவிட்டார் !

    வான் ஹாம் ஆரம்பித்துத் தந்த தொடரினை அவர் திரும்பிடும் வரையிலும் கெய்லியடூ பார்த்துக் கொண்டார் ! தொடரின் ஆல்பம்ஸ் 3 to 8 வரை இவரது கைவண்ணமே ! RIP

    ReplyDelete
  49. ஆசிரியருக்கு,
    வலையிலுருந்து விமர்சனங்கள் காணக் கண்டேன்.
    அதில் இன்னும் கூடுதலாக நீங்கள் விமர்சனங்களை பதிவிட முடியுமா.
    Or
    வலைகளில் வரும் வாசகர்களின் விமர்சனங்கள் ஒரு சுழற்சி முறையில் பதிவு செய்யலாமா.
    இது பெயர் இல்லாத ஊருக்கு வழி தேடும் விசயமாய் கூட இருக்கலாம்.
    ஆனால் தங்களது வரிகள் மிளிர்வதை அனைவரும் விரும்பவே செய்வார்கள்.
    இப்பொழுது கிட்டத்தட்ட பலர் சில வரிகளாவது எழுதுகிறார்கள்.
    அந்த வரிகளை பொன்னேடுகளில் பொறித்து நமது நண்பர்களை நாம் கௌரவப் படுத்தலாம் என்று எண்ணுகிறேன்.
    இது எனது கருத்து மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. தாராளமாய்ப் போடலாம் சார் ! அவசியப்பட்டால் கூடுதலாய் இன்னொரு பக்கம் ஒதுக்கலாம் !

      Delete
    2. நன்றி எடிட்டர் சார்.

      Delete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. ஒருத்தன் சொன்னானாம்

    இப்படித்தான் எங்கூருல ஒருத்தன் இருமும்போது மூக்கு கழண்டு விழுந்துடிச்சி.

    இன்னொருத்தன் சொன்னானாம்

    இப்படித்தான் எங்கூருல ஒருத்தன் தும்மும்போது நாக்கு கழண்டு விழுந்துடிச்சி.

    இதைப்பாத்த மூணாவது ஒருத்தன் சொன்னானாம்

    இப்படித்தான் எங்கூருல ஒருத்தன் கொட்டாவி விடும்போது குடலு வெளியே வந்து விழுந்துடிச்சாம்.

    இந்தப் புளுகுகளுக்கு சற்றும் சளைக்காத புளுகுகளை இந்தத் தளத்தில் இன்று பார்க்கமுடிகிறதே.. அடடே.!

    ReplyDelete
  52. ஐயா மினி காமிக்ஸ் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுங்கள்

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. ...தப்பிச் சென்ற தேவதை...
    கதையில் பாதிக்கு மேல் படங்கள் மூலமாகவே கதை நகர்கிறது.
    மேடம் சோடாவையும், பாஸ்டர் @ போலீஸ் சோடாவையும் தவிர மற்றவர்கள் எல்லாம் க்ளைமாக்ஸில் செத்து விடுகிறார்கள். லார்சியின் மரணம் பரிதாபத்திற்குரியது.
    கீச்சலான சித்திரங்களும் கதைக்கு பலமே.
    சோடா, லெமன் கலந்தது, தூக்கி அடிக்கிறது...
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ///சோடா, லெமன் கலந்தது, தூக்கி அடிக்கிறது...///

      லெமன் கலந்ததுக்கேவா..😉

      Delete



  55. என்னென்ன சொல்றாங்க பாருங்க..
    கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்க..

    ReplyDelete
  56. ...புரவிகளின் பூமி...
    சித்திர விருந்து.
    இந்தக் கதையின் க்ளைமாக்ஸை படிக்கும் போது எனக்கு சிவாஜி நடித்த 'சித்ரா பெளர்ணமி ' படம் நினைவுக்கு வந்தது.
    அதிலும் க்ளைமாக்ஸில் வில்லன் மனோகரை சிவாஜியின் குதிரை துரத்தி துரத்தி மிதித்து கொன்றுவிடும்.
    அது போலவே குதிரையின் கண்களில் வில்லன் உருவம் தெரிவதும்,
    நீயா படத்தில் இச்சாதாரி பாம்பின் கண்களில் அதனை கொன்றவர்களின் உருவம் தெரிவது போன்ற அதே Sequence.
    சிம்பிளான 'நேர்கோட்டு'க்கதை (KOK).

    ReplyDelete
    Replies
    1. ///சிம்பிளான 'நேர்கோட்டு'க்கதை (KOK///

      அது வேற கோடு இது வேற கோடு சார்..!

      அந்த காலத்துல மாடஸ்டிக்கு இன்னொரு பேரு கோடஸ்டி ன்னா பாத்துக்கோங்களேன்..😂

      Delete
    2. நேர் கோடஸ்டி..

      Delete
  57. இன்றைய துணை..

    ஓநாய் வனத்தில் டெக்ஸ்

    ReplyDelete
  58. இந்த மாதம் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்.
    தடிமனான, உறுதியான அட்டைப் பெட்டி.
    இது போன்ற பெட்டியே எல்லா மாதங்களிலும் தொடரும்படி செய்யுங்கள் சார்.

    ReplyDelete
  59. ... ஓநாய் வனத்தில் டெக்ஸ்...
    தம்பியை தீய வழிக்கு செல்லாமல் தடுத்துக் காப்பாற்றத துடிக்கும் தமக்கைக்குத் துணையாக டெகஸ் களமிறங்கும் கதை.
    ஆரம்பம் முதல இறுதி வரை வேகம் தான்.
    கதைக்கு சித்திரங்கள் பெரிய பலம். காட்டை ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அழகாக காட்டும், கண்களை உறுத்தாத சித்திரங்கள்.
    டெக்ஸ் இந்த மாதமும் ஜெயிக்கிறார்.

    ReplyDelete
  60. Replies
    1. அதுக்கு என்னா இப்போ.?

      Delete
    2. பாயாசங் காய்சலாம்னு வந்த பிள்ளையை ஏன்யா மிரட்டுறாய்!

      Delete
  61. Konja naal kazhichu blog ippa thaan konjam paraparappa irukku

    ReplyDelete
    Replies
    1. எல்லாம்V comic ன் வெற்றி, டாக்டர்.
      அடுத்து மினி காமிக்ஸ் ன் மகிமை என்ன பண்ணும்னு பார்ப்போம்!!!!

      நடுவால ஆன்லைன் கொண்டாட்டம்னு முக்கா டஜனோ ஒரு டஜனோ வரவுள்ளது. அது என்ன பரபரப்பை உண்டு பண்ண உள்ளதோ!!!!

      Delete
  62. @all..😍😘

    #ஓசூர் புக்ஃபேர் 2023# 😍

    14.7.2023 முதல் 25.7.2023 வரை...💐🙏🥰👍💃

    ReplyDelete
  63. இன்று ஒரு தகவல். நேர்கோட்டு கதைகள் பற்றிய அரிய பல விசயங்களைக் தெரிந்து கொண்டேன்.நன்றி திரு k.o.kஅவர்களே.(இனிமே வாயத்திறக்க மாட்டேன்.சும்மாதெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறிங்களே.)

    ReplyDelete
    Replies
    1. அடா...
      இப்படி முடிவெடுத்திட்டிங்கன்னா எனக்கு பொழுது எப்படி போகும் சார்..?
      மாடஸ்காவோட கொபசெ ஏகேகே ராஜா சாரின் தாங்கும் சக்தியை பார்த்து நாம எல்லோரும் கத்துக்கணும் சார்.!

      Delete
  64. இந்த மாத காமிக்ஸ்களுக்கும், என் மனைவிக்கும், நியூட்டனின் மூன்றாம் விதிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

    மூன்று புள்ளிகளை இணைக்கும் ஒரு மெல்லிய' நேர்கோட்டு'க்கதை.

    கடந்த தீபாவளி முதல் சென்ற மாத இறுதிவரை, திருவண்ணாமலையில் புது வீடு சம்பந்தமான வேலைகள் + தொழிலக வேலை என செம பிஸியோ பிஸி.
    புத்தகங்கள் திருப்தியாக படிக்க நேரம் அமைவதில்லை.
    இந்த மாதம் முதல் வாரத்திலேயே சிறிது ரிலாக்ஸ் ஆகிவிட்டதால்,
    என் மகன் எங்களை பெங்களூருக்கு அவன் வீட்டிற்கு வரச்சொல்லி அன்பு அழைப்பு.
    எனவே, என் இல்லத்தரசியை மட்டும் பெங்களுர் அனுப்பி வைத்தேன். நான் செல்ல இயலவில்லை.
    மனைவி உடன் இல்லை, வீட்டுவேலைகள், வெளி வேலைகள் (duty க்கு செல்வது தவிர) என எதுவும் பெரிதாக இல்லாததால், plenty of time காமிக்ஸ் படிக்க கிடைத்தது -
    So, ஏக் தம்மில் நேற்று மாலை தொடங்கி 3 புத்தகங்களும் படித்தாகி விட்டது. செம ரிலாக்ஸ்.
    அதெல்லாம் சரி,
    இதில நியூட்டன் எங்கே வருகிறார் என்கிறீர்களா?...
    every action will be a reaction என்பதுதானே, நியூட்டனின் மூன்றாம் விதி.
    அதுதான்..
    மகன் அழைக்க,. மனைவி ஊருக்குச் செல்ல,. நேரம் கிடைக்க,. காமிக்ஸ் முழுவதுமாக படிக்க,. நேர்ந்தது எல்லாமே மூன்றாம் விதியின் செயல்பாட்டின் மெல்லிய கோடே..
    All is fate.

    ReplyDelete
    Replies
    1. அருமை சார்.... என்ஜாய் த மென்ஸ் டே ஹாலிடேஸ்.....எவ்ரிடே வித் 3காமிக்ஸ்..


      (நேற்று விமன்ஸ் டே தானே ஏன்யா உளருரே எனக் கேட்கும் அன்பர்களுக்கு, ஆண்கள் தினம் எப்போ கொண்டாடுவீங்கனு கேட்க நம்ம தலைவர் வடிவேலு, """"அதெங்கம்மா இருக்கு, வொய்ப் ஊருக்கு போகும்போது நாங்களே கொண்டாடிக்குவோம்"""----னு சொல்வாரு!!!---நேற்று அந்த மணி அடிக்கும் வேலையில இருப்பாரே அந்த போஸ்ல அந்த மீம் போட்டு இருந்தாங்க)😁🤣

      Delete