Saturday, December 03, 2022

வீடியோவுக்கு வாரீகளா ?

 நண்பர்களே,

வணக்கம். புது இதழ்கள் மசி மனம் மாறாது உங்கள் கைகளில் இருக்கும் வேளையினில், புதுசாய்ப் பதிவொன்றை மாங்கு மாங்கென்று போடும் நேரத்துக்கு - நண்பர் Dr.ஹரிஹரன் அவர்கள் முன்மொழிந்த YouTube முயற்சியினை கையில் எடுத்தால் என்னவென்று தோன்றியது ! சார் 2 மாதங்களுக்கு முன்பே ஒரு வீடியோ பதிவினை அனுப்பியிருந்தார் தான் ; ஆனால் அதனை எடிட் செய்ய திணறியதில் பொழுது ஓடியே போய்விட்டது ! Hopefully அடுத்த மாதம் முதலாய் இந்த புக்ஸ் ரிலீஸ் பதிவுகளுக்கு மட்டும் YouTUbe பக்கமாய் தாவிப் பார்க்கலாம் & ஒவ்வொரு மாதமும் நண்பர்கள் சுழற்சி முறையில் இதனை நடைமுறைப்படுத்திட உதவினால் even better !! 

இதோ - டிசம்பர் இதழ்களின் அறிமுகம் ஒரு வீடியோவாய் ! மொத்தம் நான்கு இதழ்கள் ; அப்பாலிக்கா சந்தா பற்றி ; and then "வாங்கியது-வாசித்தது ?" பற்றி பேசும் போது பொழுது ஓடியே விடுகின்றது ! தொடரும் மாதங்களில் இன்னும் கொஞ்சம் crisp ஆக்கிக் கொள்ள முயற்சிப்போம் & yes - வீடியோ பதிவு செய்யும் போது செல்போனை சயனவசமாய் வைக்கவும் நினைவில் இருத்திக் கொள்வோம் ! இந்தவாட்டி அடஜஸ்ட் செஞ்சுக்கோங்க ப்ளீஸ் !

இதோ லிங்க் : https://youtu.be/0SbwE-GQXhA

தொடரும் பொழுதுகளில் நமது YouTube சேனலை உயிர்ப்போடு தொடரச் செய்ய முனைந்திடுவோம் என்பதால் - ப்ளீஸ் அந்த subscribe பட்டனிலும் ஒரு தட்டு தட்டிப்புடுங்களேன் ? 

கமெண்ட்களை ; அலசல்களை வழக்கம் போல் தொடர்ந்திடுங்களேன் ப்ளீஸ் ! Bye for now...see you around ! Have a cool weekend !



47 comments:

  1. வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறேன் சார்

    ReplyDelete
  2. புத்தகங்கள் கொரியர்காரங்க திங்கள் கிழமை வந்து தருகிறேன் என சொல்லி விட்டார்கள்:-)

    ReplyDelete
    Replies
    1. நல்லா காயவைத்து தருவார்கள் சார். அவங்களுக்கு என் மேல் ரொம்ப பாசம்:-)

      Delete
  3. பதிவு வரும் என்று பார்த்தால் வீடியோ பற்றிய பதிவு. நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம், இல்லை என்றால் ஹெட் போனை தேடி பிடித்து மாட்டிக்கொண்டு கேட்க வேண்டும்.

    ReplyDelete
  4. Me வந்துட்டேன்..😍😃😀😘.

    ReplyDelete
  5. ஹைய்யா புதிய பதிவு....

    ReplyDelete
  6. // தொடரும் மாதங்களில் இன்னும் கொஞ்சம் crisp ஆக்கிக் கொள்ள முயற்சிப்போம் & yes - வீடியோ பதிவு செய்யும் போது செல்போனை சயனவசமாய் வைக்கவும் நினைவில் இருத்திக் கொள்வோம் ! இந்தவாட்டி அடஜஸ்ட் செஞ்சுக்கோங்க ப்ளீஸ் ! //

    Thank you sir :-)

    ReplyDelete
    Replies
    1. 15 நிமிடங்கள் வீடியோ ஓகே சார்.‌இதையே தொடரலாம் சார்.

      Delete
    2. வீடியோவில் நீங்கள் ரொம்ப யூத்தாக தெரிகிறீர்கள் சார்.

      Delete
  7. சிறப்பான காணொளி சார்...
    செமையான அறிமுகம் கொடுத்திருக்கிங்க...

    ReplyDelete
  8. உதிரத்தின் நிறம் கறுப்பல்ல :
    இரத்தமும் சதையுமாய்,இரணகளமும் ரெளத்திரமாய் களமாடும் மேற்கத்திய பூமியின் கதையிது...
    நிறங்கள் குறித்தான விஷம சிந்தனைகள் மனித இனத்தை எப்படி குரூர தன்மையுடன் மாற்றியுள்ளது என்பதை வாசிக்கும் போது மனம் சற்று ஆடித்தான் போகிறது...
    கதை பயணப் போக்கிலும்,டிக்கின் விவரிப்பிலும் நம் கண்முன்னே விரிகிறது...விரியும் கதையின் துவக்கத்தில் வரும் காட்சி அமைப்புகளும்,கதை மாந்தர்களின் காரமேறிய வார்த்தைகளும் இது பெரியவர்களுக்கானது என்பதை தெள்ளத் தெளிவாய் கோடிட்டுக் காட்டி விடுகிறது...

    டிக்கிற்கும்,சிரிகாகுவா செவ்வியந்தினுக்குமான உரையாடலும், காட்சி அமைப்பும் அபாரமாக கையாளப்பட்டுள்ளது...
    சிரிகாகுவா செவ்விந்தியனின் கேள்வியும்,டிக்கின் தடுமாற்றமும் மனதை ஊடுறுவும் காட்சிகள்...
    காட்சியின் முடிவில் டிக் எடுப்பது செம அதிரடியான தில்லான முடிவு...

    டிக்கிற்கும் டிக்கின் நண்பன் லெராய்க்ற்குமான (கொலைகள் செய்வது குறித்தான) உரையாடல்களும் ஆழமானது,எது அவசியமானது,எது அநாவசியமானது என்ற நோக்கம் சிறப்பாய் கையாளப்பட்டுள்ளது...

    பெண்களை வெறும் சதைகளாக பார்ப்பது,குடித்து விட்டு கும்மாளம் போடுவது,குளிக்காமல் சுத்தறது,நிறவெறி இனவெறியோட சுத்தறதுன்னு எம்புட்டு மோசமா வாழ்ந்துருக்கானுங்க பக்கி பயலுங்க...

    கதையின் மையக்கருவாய் எதை வரையறுப்பது ?!
    துவக்கத்தில் செவ்வியந்திர்கள் வெள்ளை இனப் பெண்களை கொடூரமாய் வேட்டையாடுகின்றனர்...
    கறுப்பினத்தவன் என்ற ஒரே காரணத்திற்காக பிணம் கூட சூறையாடப்படுகிறது...
    டிக் தேடித் தேடி வேட்டை ஆடப்படுகிறார்,டிக்கால் மொத்த ஊரே வேட்டை ஆடப்படுகிறது...
    இங்கே,
    எது சரி ?!
    எது தவறு ?!
    யார் நல்லவர் ?!
    யார் கெட்டவர் ?!

    வசனங்கள் ரெளத்திர தாண்டவமாடுகிறது,

    "துரதிர்ஷ்டவசமாய் ஆண்டவன் அந்த நொடியில் அங்கேயில்லை ! நான்தான் இருந்தேன் "

    "கஷ்டங்களில் இருந்து தன்னைக் காப்பாற்றின ராஜகுமாரன் பனி போல வெள்ளையாக இருந்ததாக அவள் பாடினப்போ எனக்குமே கோபம் கோபமா வந்திச்சி"

    "தோலின் நிறத்தைத் தவிர்த்து பாக்கி எதுவுமே மாறலை ! அதே தரித்திரம்,அதே வறுமை"

    "பார்வைகளாலே எங்களைச் சங்கறுக்க அந்தக் கையாலாகாத கும்பல் முயற்சி பண்றது புரிஞ்சது!
    அவன்களுக்கு அது மட்டும்தான் முடியும்"

    -அனலடிக்கும் வசனங்கள்...

    டிக் பிணம் போல் குதிரையில் தப்பிக்கும் காட்சிகள் கொஞ்சம் ஜெர்க் அடிக்கத்தான் செய்கிறது...

    ஊரையே வேட்டையாடும் டிக்கின் கோபத்திற்கான நியாயமும் சரியாகவே கையாளப்பட்டுள்ளது...
    அப்பப்பா எத்தனை டுமீல்கள்....
    ஊரையே வேட்டையாடிட்டு வந்தவுடன் பெண்களுடன் சல்லாபிப்பது-இவ்வளவு ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பான்னு நமக்குத் தோணும்,அதை கேட்ச் செய்த விதமாய் அடுத்து வரும் வசனம் நம்மை சிரிக்க வைக்கிறது...

    டிக்கின் கேரக்டர் வடிவமைப்பு கிட்டத்தட்ட டியூராங்கோவின் கேரக்டரை ஒட்டியது தான்,சூழலை பொறுத்து முடிவெடுப்பது,யாருக்கும் நல்லவனுமில்லை,யாருக்கும் கெட்டவனுமில்லை...

    ரத்தமும்,வன்மமும்,வசவுமாய் கதையில் தோய்ந்திருப்பினும் அழுத்தமான கதைக் கரு நம்மை ஈர்க்கத்தான் செய்கிறது...

    ரணகள சூழலிலும் நக்கலும்,நையாண்டியுமாய் டிக்கின் பார்வையில் கதை நகர்வது இறுக்கமான சூழலை சற்றே தளர்த்துகிறது...

    வாசிப்பில் இருந்து வெளியே வந்தவுடன் எங்கே இருக்கிறோம் என்ற சிந்தனை எழுந்தது,சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் தோன்றியது...

    இறுதி பன்ச் செம,பிரியாவிடை,பரிதாப வடைன்னுல்லாம் எதும் நிகழலை ! அவரவர் பாதைகளிலே மெளனமாய்ப் புறப்பட்டோம்...

    உதிரத்தின் நிறம் கறுப்பல்ல,மேற்கத்திய இருள் முகம்...

    அடுத்த டிக்கின் பயணத்திற்காக ஆவலுடன்...

    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
    Replies
    1. / 2023 -க்கு டிக்கை 'டிக்' அடிக்காது விட்டுப்போட்டோமே என்ற கவலை மட்டுமே மேலோங்குகிறது //
      பாறை போலான டிக்கை அசைத்து பார்க்கும் இடமான சிரிகாகுவா செவ்விந்தியனுடனான உரையாடலும்,செவ்விந்தியக் குழந்தையைப் பார்த்தவுடன் டிக் இளகும் காட்சியும்,டிக்கும் அவன் நண்பன் லெராயும் பேசும் உரையாடல்களும் இது சாதாரண கதையல்ல என்று உணர்த்தியது சார்,ரொம்பவே டச்சிங்கான இடங்கள்,ஒருவனின் நிறத்தை வைத்து குணாம்சங்களை எடை போடும் சமூக அமைப்பைப் பார்த்து எள்ளி நகையாடும் காட்சிகள் அவை...
      மீண்டும் என்னைப் படிடா வெண்ணை என டிக் சொல்கிறார் சார்,வாசிப்பாளனை அசைத்துப் பார்க்கும் சில கதைகளில் இதுவும் ஒன்று...

      Delete
    2. இன்னமும் 'தல' சாகசம் பற்றி யாரும் மூச் காட்டக் கூடக் காணோம் என்பதே இந்தப் போக்கிரிப் பையனின் முதல் வெற்றி சார் !

      Delete
    3. ஒற்றைக்கண் ப்ராத்தெல் அம்மணி ; சிறிகாகுவா செவ்விந்தியன் ; நண்பன் லெராய் ; அதிரடித் தள்ளுபடி அம்மணி ஸாலி ; பெருசு க்ரிம்ப் ; சிறுவன் ப்ரோடி - என இங்கே நாம் சந்திக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரமுமே ஏதோவொரு விதத்தில் முத்திரை பதிக்கின்றது ஸ்பெஷல் என்பேன் சார் !

      Delete
    4. நான் வரேன் தல சாகசத்தை பற்றி எழுத. இப்போது தான் படித்து முடித்தேன்.

      Delete
    5. உண்மை சார்,பேசப்படாத கதை மாந்தர்கள் என்னை மன்னித்து அருள்வார்களாக...

      Delete
    6. பெருசு க்ரிம்பின் சலம்பல் கட்டை சாயும் நேரத்திலும் தூக்கல்தான்...

      Delete
    7. வாவ்!! பட்டைய கிளப்பியிருக்கீங்க அறிவரசு ரவி!!! ரொம்பவே ரசிச்சு.. லயிச்சுப் படிச்சிருக்கீங்க.. அல்லது கதை உங்களை அப்படிப் பண்ணியிருக்கு!!

      சமீபத்தில் நான் படித்த விமர்சனங்களில் மிகச் சிறப்பான விமர்சனம்!! நல்லது, கெட்டது, டிக்கின் குணாதிசயம் என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள்!! வாழ்த்துகளும், பாராட்டுகளும்!!

      Delete
  9. Edi Sir..😍😘

    புத்தம் புது பூமியில் லயன்..😍💐

    நீ குழாயில் (அதாங்க Youtube) சிங்க உலா..🐱🐯

    வரவேற்க தக்க முயற்சி..😍💐🌷🌹🌸🌺

    இனிமேல் வீடியோவில் நேரில் அனைவரையும் தரிசிக்கலாம் ..😍😃👍

    You tube video பார்த்துட்டேன் Edi Sir..👏
    Very informative..🙏

    ReplyDelete
  10. பார்த்துட்டேன்.. பார்த்துட்டேன்... வீடியோவை முழுசா பார்த்துட்டேன்! கதைகளைப் பற்றிய எடிட்டரின் இன்ட்ரோ அருமை!! இந்த புதிய முயற்சி அருமை எடிட்டர் சார்!!

    மக்களே.. வீடியோவின் முடிவில் ஒரு சர்ப்ரைஸ் சமாச்சாரத்தைச் சொல்லியிருக்கார் - மிஸ் பண்ணிடாதீக!!

    ReplyDelete
  11. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே..

    ReplyDelete
  12. நீங்க வீடியோவில் சொல்லியது போல பெட்டியை பிரித்த உடனே எனக்கு முதலில் தென்பட்ட புத்தகம்

    உத்திரத்தின் நிறம் கறுப்பல்ல

    அதிரடியாக ஆரம்பித்த கதை..

    எங்கெங்கோ தொட்டு எங்கெங்கோ சுற்றி நிலைக்கு வந்து நின்ற பொழுது, கடைசி பக்கத்தில் இருந்த அந்த மூன்று ஓவியத்திலும் மனதை பறிகொடுத்து விட்டு அங்கேயே நின்றுக் கொண்டிருந்தேன். முதல் பேனலில் இருந்த மலைகள் கைகள் போல் தெரிகின்றதா என்று கண்ணை துடைத்து விட்டு பார்த்தவன் சரி அடுத்த பேனலுக்கு போக அப்படியே கடைசி பேனலுக்கு போக பிரமிப்பின் உச்சத்தில் அந்த கடைசி பக்கத்தில் இருந்து வர முடியாமல் புத்தகத்தை மூடி வைக்க முடியாமல் நின்றுக் கொண்டிருந்தேன்.

    பல இடங்களில் வசனங்கள் துவம்சம் செய்கின்றது.

    "நரகத்தின் கதவைத் தான் சுரண்டிக் கொண்டு நின்றிருப்பேன்"

    அதில் ஒரு சோற்றுப் பருக்கை மேலிலுள்ள வசனம்.

    DEADWOOD DICK 10/10

    ReplyDelete
  13. please record video speaking on some microphone, echo over rides your voice and it is not clearly audible sir
    .

    ReplyDelete
  14. மொத்த புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன்.

    வருடத்தின் கடைசி மாதம் உண்மையாகவே அருமையாக முடிந்து விட்டது.

    4கதைகளும் அருமை சார். டெட் வுட் டிக் உடன் தொடங்கி, மார்டின் படித்து விட்டு, மாடஸ்டி யின் இரண்டு சாகசங்களை ரசித்து கடைசியாக இரவுக் கழுகில் வந்து முடித்தேன்.

    பிளாக் அண்ட் ஒயிட் மாதம் ரொம்பவே நன்றாக இருந்தது. இந்த மாத கதை செலக்சன் எல்லாமே அருமை. எந்த கதையும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.

    அட்டகாசமான வருட முடிவு சார். உங்களுக்கு ஒரு அழகான பூங்கொத்து வாசகர்கள் சார்பில்.

    2022 நமது காமிக்ஸ் பயணத்தில் மிக சிறப்பான வருடம்.

    ReplyDelete
  15. நிழல்களின் ராஜ்யத்தில்

    கதையின் ஆரம்பமே அமர்க்களம். ஒரு பேய் கதை படிப்பது போலவே கதை நெடுகிலும் அமானுஷ்யம். அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஓவியங்கள். பயமாகவே உள்ளது கதை முழுவதும்.

    இந்த வருடத்தின் மிகச் சிறந்த டெக்ஸ் கதை. என்னைப் பொறுத்தவரை 2021 தான் டெக்ஸ் கதைகளின் பெஞ்ச் மார்க்.

    இந்த வருடம் ஆரம்பம் முதலே அதனை தொட முடியவில்லை. தீபாவளி மலர் வரை இப்போது வருட இறுதியில் இந்த கதை. You saved the best for the last.

    உங்களுக்கு ஏனோ டெக்ஸ் அமானுஷ்ய கதைகள் பிடிப்பது இல்லை. ஆனால் எனக்கு அவை மிகவும் பிடிக்கும். சைத்தான் சாம்ராஜ்யம், மரண முள், மந்திர மண்டலம், மரணத்தின் நிறம் பச்சை, கடைசியாக வந்த இருளோடு யுத்தம் அந்த வரிசையில் இப்போது இந்த கதை.

    எனது மதிப்பெண் 10/10.

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி மலர் வரும் வரை என்று சொல்லி இருக்க வேண்டும். எனக்கு டெக்ஸ் தீபாவளி மலர் ரொம்பவே பிடித்து இருந்தது.

      Delete
    2. // இந்த வருடத்தின் மிகச் சிறந்த டெக்ஸ் கதை. என்னைப் பொறுத்தவரை 2021 தான் டெக்ஸ் கதைகளின் பெஞ்ச் மார்க்.//
      10 க்கு 10 வாவ் சூப்பர் தம்பி,நான் நாளைக்கு வர்றேன்...

      Delete
  16. YouTube ல் நமது லயன் கிங் காமிக்ஸ்.
    வளர்க வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  17. அருமை சார்.....டெட் வுட் அஞ்சு நாளைக்கு முன்ன படிக்க ஆரம்பிச்சேன்.....பரபரப்பா பாயுது கதை ....முடிக்க நேரம் கிடைக்கலை....இந்த வாரம் ரண்டு புத்த்த்தயும் படிக்க வாய்ப்பு கிட்டுமான்னு பாக்னும்....
    அடுத்த வாரம் நானும் சந்தா எக்ஸ்பிரஸ்ல ஏறிடுவேன் வழக்கம் போல கடசி வாரத்திலல்லாமல்

    ReplyDelete
  18. நா சந்தால இருக்கேன்...நா சந்தால இருக்கேன்...நா சந்தால இருக்கேன்...சர்பெரஸ்க்காக ஒரு மாசம் காத்திருக்கனுமே என்ட குருவாயூரப்பா. மார்ட்டீன் - கூட போய் காலப்பயணம் செஞ்சி இந்த சஸ்பன்ஸ் என்னன்னு கண்டு பிடிக்க யாராவது துணையாக வர வாங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. // நா சந்தால இருக்கேன்...நா சந்தால இருக்கேன்...நா சந்தால இருக்கேன்... //

      Super Super Super

      Delete
    2. பரணி சார்,
      உங்களின் நட்புக்கு என் ஆயுசு முழுவதும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். நீங்கள் எனக்கு உபகாரங்கள் நிறைய. உங்கள் அனுமதி இல்லாமல் எப்படி சொல்வேன்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  19. கேப்சன் போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. நண்பரின் கருணையால் நானும் சந்தா வில் இடம் பிடித்து விட்டேன்

    ReplyDelete
    Replies
    1. Super. அந்த நல்ல நண்பருக்கு பாராட்டுக்கள்.

      Delete
  21. ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே...

    ReplyDelete