Wednesday, November 02, 2022

ஒரு புறப்பாடும், ரெண்டு இளவரசியும்....!

 நண்பர்களே,

வணக்கம். மழை பெய்து ஓய்ந்தது போல், வாரயிறுதியின் அட்டவணை அலப்பரைகளுக்குப் பின்பாய் தளம் அமைதியாய் இருப்பது, ஒரு விதத்தில் நம்மூர்களின் நிஜ மழை நிலவரங்களை ஒத்தே உள்ளதென்பேன் ! திங்களும், செவ்வாயும் போட்டுத் தாக்கிய மழைக்குப் பின்னே கதிரவன் இன்று தான் புன்னகைத்து வருகிறார் - at  least எங்க ஊரில் !  So வானம் வெறித்த முதல் கணத்தில், உங்களின் நவம்பர் டப்பிக்கள் கூரியர் பயணங்களைத் துவக்கி விட்டன ! Hopefully நாளை உங்கள் இல்லங்களை காரிகனும், சிஸ்கோவும், மேக் & ஜாக் ஜோடியும் தட்டுவார்களென்று எதிர்பார்க்கலாம் ! But உங்களின் முனைகளில் அரங்கேறிடக்கூடிய வர்ண பகவானின் தாண்டவ நிலவரங்கள் தாமதங்களை உருவாக்கிடலாம் ! Fingers crossed !!

நவம்பரின் புக்ஸ் ஓரிரு நாட்கள் தாமதமாகியதற்கு கொட்டிய மழை மாத்திரமே காரணமல்ல ! அட்டவணையினை என்ன தான் நான் சிண்டைப் பிய்த்து உருவாக்கியிருந்தாலுமே, உங்களின் ஏகோபித்த ரியாக்ஷன்ஸ் என்னவாக இருக்குமென்பதை அவதானித்த பின்பாகவே அட்டவணையினை அச்சுக்கு அனுப்பிட எண்ணியிருந்தேன் ! ஏதேனும் ஒரு தேர்வோ / தேர்வின்மையோ, நான் முழுசுமாய் எதிர்பார்த்திரா திக்கில் உங்களின் மத்தியில் நெருடல்களை உருவாக்கி இருக்கும் பட்சத்தில், அதனைச் செப்பனிட்டே திங்களுக்கு அட்டவணையினை பிரிண்ட் செய்யலாமென்று மகா சிந்தனை  ! Take nothing for granted என்பதே தாரக மந்திரம் - இப்போதெல்லாம் ! (வயசாகிடுத்து அல்லவா - கொஞ்சம் எக்ஸ்டரா முன்ஜாக்கிரதை முன்சாமி அவதார் !!) So திங்களன்று அட்டவணை பிரிண்ட் ஆகிவிட்ட போதிலும் மழையின் தாக்கத்தினால் பைண்டிங் மறுநாளுக்கே சாத்தியமானது ! And இதோ இன்றைக்கு ஆரவாரமாய்க் கிளம்பி விட்டனர் நவம்பர் பார்ட்டீஸ் - 32 பக்க அட்டவணையுடன் ! Please note guys : இம்மாதம் "கைப்புள்ள ஜாக்" விலையில்லா இதழானது டப்பிக்களில் இருந்திடாது ! டிசம்பரோடு குள்ள வாத்தின் முதல் ஆல்பம் நிறைவு காண்கிறது ! 

இம்மாதத்து package ரொம்பவே சுவாரஸ்யமூட்டும் கூட்டணி - என்னளவிற்காவது ! 'தல' எனும் show stealer நஹி எனும் போது, வெளிச்ச வட்டத்தை இந்த next level நாயகர்கள் தமக்குள் எவ்விதம் கையாள்கிறார்களென்று பார்க்க ஆவல் ! காரிகனை முதலில் வாசிப்புகளுக்கு உட்படுத்தப் போகிறீர்களா ? சிஸ்கோவுடன் கரம் கோர்ப்பது திட்டமா ? அல்லது கார்ட்டூன் பார்ட்டிகளே வரிசையில் முதல்வர்களா ? Any ideas yet guys ? எது எப்படியோ - இம்மாதம் அட்டவணையின் 32 பக்கங்கள் உங்களை முதலில் ஈர்க்காது போனால் தான் வியப்பு கொள்வேன் ! என்ன தான் இங்கே நெட்டில் பார்த்திருந்தாலும், ஒரு புக்காய்ப் பார்க்கும் அனுபவமே வேறு தானே ?! 

ரைட்டு...குறும்பதிவோடு, நான் டாட்டா சொல்லிக் கிளம்பலாம் தான் ; அந்த இளவரசி மேட்டர் மட்டும் இல்லாங்காட்டி ! ஆங்...வார்த்தைப் பிரயோகம் சற்றே வில்லங்கமாய்த் தொனிக்குதோ ? நிஜத்தைச் சொல்வதானால் இதனை "இளவரசர் மேட்டர்" என்று தான் சொல்லணும் ! என்ன ஓவராய் குழப்புறானே - என்று நீங்கள் பற்களைக் கடிக்கும் முன்பாய் விஷயத்துக்கு வந்து விடுகிறேன் :

The B & B ஸ்பெஷல் - 2 என க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் + இளவரசி மாடஸ்டி இணைந்த ஆல்பம் நடப்பாண்டிற்கென திட்டமிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! டிசம்பர் 2022-ல் இந்த இதழ் இடம்பிடிப்பதாய் திட்டமிடல் ! So இந்த ஜூன் மாதத்தின் ஒரு பொழுதினில் கதைகளைத் தருவிக்க பணம் அனுப்பினோம் - தலா ஒரு மாடஸ்டி + ஒரு க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைக்கு என்று ! ஜேம்ஸ் பாண்ட் & மாடஸ்டி & புயச்சி புயல் அமாயா கதைகள் மட்டும் நமக்கு வருவது இங்கே இந்தியாவில் உள்ள ஏஜெண்ட் வாயிலாய் ; பாக்கி சகலமும் அயல் தேசங்களிலுள்ள படைப்பாளிகளுடன் நேரடித் தொடர்புகளே ! பணம் அனுப்பிய மறுநாளே மாடஸ்டி 'டாணென்று' வந்தார் ; ஆனால் JB-க்குப் பதிலாய் வந்தது, இங்குள்ள ஏஜென்ட்டிடமிருந்து ஒரு போன்கால் மாத்திரமே ! அதன் சாரம் பின்வருமாறு : 

"தவிர்க்க இயலாவொரு சூழல் !! ஆகையால் க்ளாஸிக் JB கதைகளை தமிழில் வெளியிட உங்களுக்குக் கொஞ்ச காலத்துக்கேனும் கதைகள் வழங்க இயலாது.......தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்...ஜேம்ஸ் பாண்டுக்கென அனுப்பியிருந்த பணத்திற்கு ஈடாக வேறு மாடஸ்டியோ ; அமாயாவோ வாங்கிக் கொள்கிறீர்களா ?" என்றும் கேட்டார் 45 ஆண்டுப் பரிச்சயமான அந்த நண்பர் ! அவர் குறிப்பிட்ட "தவிர்க்க இயலாச் சூழல்" எதுவென்பது எனக்குப் புரிந்தது & அது குறித்து வினவிய போது எனது யூகம் சரியே என்றார் ! (Pretty sure, quite a few of you would be aware of that too !) அதனைப் பொதுவெளியில் இங்கே விளக்கிப் பதிவிடுவது தொழில் நாகரீகம் ஆகிடாது என்பது  நிலவரம்  ! So அவர் சொல்ல வந்ததை மறுப்பின்றிக் கேட்டுக் கொண்டு, பணத்துக்கு ஈடாக என்ன வாங்குவதென்று யோசித்துச் சொல்வதாய் கூறினேன் ! "இளவரசியா ? புயட்சிப் புயலா ?" என்ற கேள்விக்குள் அன்றைக்கு ஊன்றிப் போனேன் !  அம்மணி அமாயா புயட்சி செய்ய வேண்டிய அளவுக்குத் தற்காலிகமாய் நம் மத்தியினில் பிரச்சனைகள் இல்லை என்றுபட்டது ! So இரண்டாவதாயொரு மாடஸ்டி கதையினையே தேர்வு செய்து சொன்னேன் & மறுநாளே டாணென்று அது வந்து சேர்ந்தது ! ஆகையால் க்ளாஸிக் J.B. இருந்த  இடத்தினில், மாடஸ்டியின் இரண்டாவது சாகசத்தை அமர்த்தி  - டிசம்பரினை ஒரு இளவரசி டபுள் டமாக்கா மாதமாக்கிட எண்ணியுள்ளேன் ! அதனால் தான் 2023-ல் இன்னொரு இளவரசி ஆல்பத்தை அறிவிக்காது,  அதற்கடுத்த ஆண்டினில் பார்த்துக் கொள்வோமென்று விட்டு விட்டேன் ! Hope you'll understand guys ! So டபுள் மாடஸ்டிக்கு டபுள் ரைட்ங்களா ? இல்லாங்காட்டி சிங்கிள் ரைட்டாவது ??

And க்ளாஸிக் JB இப்போதைக்கு இல்லையென்றாகி விட்டுள்ள நிலையில் JB 2.0-க்கு இன்னும் ஆர்வமாய் துண்டை விரிக்கத் தயாரான சமயத்தில் தான் டாலர் எகிற ஆரம்பித்து சில்லுமூக்குக்குச் சேதாரம் ஏற்படுத்தி வைத்தது ! But அட்டவணைப் பதிவினில் சொல்லியிருந்தது போல - JB 2.0-க்கு படைப்பாளிகளை நேரில் சந்தித்துப் பேசிட எண்ணியுள்ளேன் ! Fingers crossed big time !

இங்கே சின்னதாயொரு கோரிக்கை all : நிலவரத்தை நான் விளக்கியது உங்களிடம் as always எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் பாணியில் தான் ! So இந்த நிகழ்வுகளை விமர்சிப்பதோ ; கருத்துக் கூறுவதோ வரவேற்கப்பட மாட்டாது - because இது படைப்பாளிகள் சார்ந்தது என்பதால் ! ஆகையால், இதைத் தகவலாய் மாத்திரமே காதில் போட்டுக் கொண்டு, இளவரசிக்கொரு டபுள் 'ஜே' போடுவோமா  ? 

And please -"குடியே முழுகிப் போச்சு ; ஏமாற்றத்தில் நொந்து நூடுல்சாகிப் போய்விட்டேன் ; சுருள்முடி ஜேம்ஸ் இல்லாங்காட்டி அன்னம், தண்ணி உள்ளாற போகாதே !! இந்த வருஷமே போச்ச்சே !!" என்ற ரீதியில் பொதுவெளி விசனங்கள் வேண்டாமே ப்ளீஸ் ?  ஏமாற்றங்கள் என ஏதேனும் இருப்பின், அவற்றை மின்னஞ்சலில் முழுசாய்க் கொட்டித் தள்ளி நமக்கே அனுப்பிடுங்கள் ! அதே போல க்ளாஸிக் J.B. மீது அபிமானம் இல்லாதோரும் அதனை பொதுவெளியினில் express செய்திடவோ  ; பகடி செய்வதோ வேண்டாமே ப்ளீஸ் ? அவர்களுமே ஒரு ஈ-மெயிலில் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்திடலாம் ! Just this once - lets keep things in check & private please !

அப்புறம் இன்னொரு கோரிக்கையுமே folks : "எனது சர்வீஸில், இது வரையிலும் இதைத் தொனித்த வெற்றியை நான் பார்த்ததே இல்லை !!" என்று சொல்லத் தூண்டும் SMASHING '70s தனித்தடம் இம்மாதத்துடன் நிறைவுறும் நிலையினில், அந்த 4 ஸ்பெஷல் இதழ்களையும் கையில் விரித்து வைத்துக் கொண்டோ ; உங்கள் முன்னேயான மேஜையில் பரப்பிப் போட்டோ ; அடுக்களையில் பாத்திரம் கழுவும் வேளைதனில், ஈரம் படாத ஒரு முனையில் நிறுத்தி வைத்தோ, போட்டோ எடுத்து அனுப்புங்களேன் - ப்ளீஸ் ? Maybe அதிர்ஷ்ட தேவதையின் ஆதர்ஷம் கிட்டிடும் பட்சத்தில் - தொடரும் சீஸன்களோ ; வேறு சில இதழ்களோ இதை மிஞ்சிய வெற்றியினையும் ஈட்டிடலாம் தான் ! ஆனால் சிகரத்தில் மொதவாட்டி ஏறும் வீரர் கொஞ்சம் ஸ்பெஷல் தானே ? So பல் போன வயசில் 'பழைய நெனப்புடா பேராண்டி' என்று அசைபோடும் தருணங்களில் இந்த போட்டோக்களை ஞான் ரொம்பவே வாஞ்சையோடு பார்க்க முனைவேன் அல்லவா ? காமெராக்களை வெளியே எடுங்க ; தொந்திகளை உள்ளுக்குள்ளே தள்ளுங்கோ ; சிரிச்சா மெரி போஸ் கொடுத்தபடிக்கே SMASHING '70s இதழ்கள் நான்கையும் தெரியச் செய்யுங்களேன் - ப்ளீஸ் ? இங்கே பதிவிலும், FB பக்கத்திலும் போட்டுத் தாக்கிடுவோமே ? And thank you ever so much - for making it a stunning success !!

Bye all ....see you around ! Have a safe week !! 

P.S : நவம்பர் இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் போட்டாச்சு : 

https://lion-muthucomics.com/latest-releases/1043-november-pack-2022.html


247 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. நன்றிகள் பல சார்.... என்னமோ ஏதோன்னு பயந்து இருந்தேன்.... அற்புதமான செய்தி...

    இனி வருடந்தோறும் "டபுள் டமாக்கா" எதிர் நோக்கி ஆவலுடன்....

    ReplyDelete
  3. வணக்கம் நட்புக்களே 🙏🍵

    ReplyDelete
  4. இரட்டை ஓகே!

    இளவரசிக்கு.........

    ReplyDelete
  5. வேண்டும் ரெண்டு மடாஸ்தி அக்கா வேண்டூம் ..😆😆

    அக்கா இல்லாத தமிழ் காமிக்ஸ் உலகம் என்ன செய்யும் ..??

    ReplyDelete
  6. Super Sir
    இளவரசிக்கு
    waiting அதுவும்
    இரண்டு கதைகள்

    ReplyDelete
  7. Sir please consider classic Sherlock Holmes for 2024 .i think 6 to 8 have been published in Muthu so far .All are too good

    ReplyDelete
  8. வணக்கம் ங்க சார்

    நினைத்தேன்...

    நடந்துவிட்டது...

    நல்லது.

    நம்ம இளவரசி டபுள் ஆல்பமா...

    தொழிலதிபரூங்களுக்கு சும்மா கிர்ர்ர்ரூன்னு ஆயிடுமே...

    டாக்டருங்கள கேக்கவே வேணாம்...

    காங்கோ...கால் கராத்தே...நெட் வொர்க்...

    வில்லி எப்டி இருக்காரு...அவரு பங்குக்கு என்னத்தையாவது கையில கெடைச்சத கரெக்ட்டா தூக்கி எறிவார்ல...

    வாரே...வா...

    ReplyDelete
    Replies
    1. /// தொழிலதிபரூங்களுக்கு சும்மா கிர்ர்ர்ரூன்னு ஆயிடுமே...

      டாக்டருங்கள கேக்கவே வேணாம்... ///

      முக்கியமா கரூர் டாக்கடர்ங்கள கைலை பிடிக்கவே முடியாது .. 😉😉😉

      Delete
  9. For some reason,i never liked James Bond particularly the latest one.Hence this change was good to me

    ReplyDelete
  10. Edi Sir...
    நம்பிள் முதல்லே கன்..கன்... காரிகன்..
    படிக்கிறான்..🤓😍💪💪💪

    ReplyDelete
  11. // And க்ளாஸிக் JB இப்போதைக்கு இல்லையென்றாகி விட்டுள்ள நிலையில் //
    வந்தால் மகிழ்ச்சி,வரவில்லை எனில் வருந்த ஒன்றுமில்லை, வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுவோம்...

    ReplyDelete
  12. இளவரசி ஸ்பெஷல்..சூப்பர்ல.

    ReplyDelete
  13. @Dr.AKK Sir...😍😘😃

    மாடஸ்டி Double தமாக்கா டிசம்பர்ல..😍

    இப்ப ஹேப்பிங்களா..😃💐💛❤💙💚💜

    @Salem Kumar ji..👍

    உங்க வாயிலே சர்க்கரைதாங்க போடோணும்..😃

    சொன்னீங்க ..நடந்துருச்சு..👏👌

    ReplyDelete
    Replies
    1. இன்னா சொன்னாருங்கோ - சர்க்கரையை போடறதுக்கோசரம் ?

      Delete
    2. சார் கண்டிப்பாக அடுத்த வருடம் இளவரசி உண்டு என்று சொன்னேன். அது இப்போ முன் கூட்டியே இந்த டிசம்பரில் வந்து விட்டது. அதற்குத்தான் சர்க்கரை

      Delete
  14. // மாடஸ்டியின் இரண்டாவது சாகசத்தை அமர்த்தி - டிசம்பரினை ஒரு இளவரசி டபுள் டமாக்கா மாதமாக்கிட எண்ணியுள்ளேன் ! //
    எதிர்பாராத தகவல்,இரண்டுமே புதிய கதைகளா சார் ?!
    மாடஸ்டி கதைகளை பொருத்த மட்டில் ஒருமுறையாவது படிக்கிற மாதிரிதான் இருக்கும்,ஓவியங்கள்தான் எப்படி இருக்கும்னு தெரியலை...சரி வரட்டும் பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. Yes sir....இரண்டுமே புதுசு & இரண்டுமே செமத்தியான கதைகள் !

      Delete
    2. அடடே இது ஆர்வத்தை தூண்டுதே...!!!

      Delete
    3. And 2 கதைகளுமே ஒவியர் ரோமெரோவின் அட்டகாசச் சித்திரங்களில் !

      Delete
  15. இந்த மாதம் சிஸ்கோ,மேக் & ஜாக் அடுத்து காரிகன் என்ற வரிசையில் வாசிக்க யோசனை...
    ஆர்வத்தை இதுவரை பெரிதாய் எதுவும் தூண்டவில்லை,கதையில் Content இருந்தால் சர்ப்ரைஸ்தான்...

    ReplyDelete
    Replies
    1. சிஸ்கோ உங்கள் கூரியர் டப்பியில் புன்னகைத்துக் கொண்டிருப்பார் சார் - content சார்ந்த உங்கள் comment பார்த்து !

      Delete
  16. @Edi Sir...

    எதிர்பாராத பதிவு...😘

    இரண்டு தகவல்கள் ..

    1)ஒன்று எதிர்பார்த்தது..

    நவம்பர் புக்ஸ் கிளம்பிடுச்சு..💝

    2)ஒன்று எதிர்பாராதது..😍

    அதிரடியாக இரட்டை மாடஸ்டி அறிவிப்பு..💘

    ReplyDelete
  17. இம்மாதம் டெக்ஸ் ஸ்பெஷல் ஏதும் உண்டாங்க டியர் எடி .. 😎😎

    ReplyDelete
  18. காரிகன் ஸ்பெஷலுக்காக மரண வெய்ட்டிங் ஸ்மாஷிங் 70 ல் நான் முதன்மையாக கருதுவது
    காரிகனை த்தான் மறு பதிப்பு என்ன வந்திருக்குமோ என்ற ஆவல் இரண்டாவது வைரக்கல் எங்கே
    மிஸ்டர் பயங்கரம்
    வைரஸ் x
    மரண வலை
    இதில் எதாவது இடம் பெற்றால் டாப் பாக இருக்கும் பார்ப்போம் நாளை காரிகன் என்ன சர்ப்ரைஸ் கொண்டு வருகிறாரென்று

    ReplyDelete
  19. இளவரசியின் தொகுப்புக்களை ஆங்கிலத்தில் பார்த்து இருக்கிறேன்.

    ReplyDelete
  20. 2023 அட்டவணை தனியாக வருகிறதா சார் ?!

    ReplyDelete
    Replies
    1. தனியாக எதுக்கு சார் - கூரியர்களில் இணைந்தே தான் !

      Delete
  21. எடிட்டர் சார்.. சிஸ்கோவின் முந்தைய பாகத்தைப் படிக்க (FFS) இப்போதுவரை நேரம்காலம் அமையவில்லை! முந்தைய பாகத்துக்கும் இப்போது வரயிருக்கும் பாகத்துக்கும் தொடர்பு உண்டா அல்லது சிங்கிள்-ஷாட் கதைகள் போலதானா?

    காரிகன் ஸ்பெஷல் கலக்கப்போகிறது என்றாலும் க்ளாசிக் சமாச்சாரம் என்பதால் என் வாசிப்பு வரிசையில் கொஞ்சம் பின்னுக்கே நிற்கிறது.

    என் ஆவலைத்தூண்டும் சமாச்சாரம் இம்மாதத்தில் - மேக் & ஜாக்!!

    இளவரசிக்கு டபுள் ஒகே சார்!!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் கதைகளைக் காட்டிலும் அட்டவணை புக்லெட்டுக்கே ஆர்வம் முச்சூடும்!

      Delete
    2. சிஸ்கோ கதை புரிய முன்பாகம் அவசியமாகிடாது சார் ; ஆனால் முன்சாமி ஆரு ? கோயின்சாமி ஆரு ? காதர்பாய் ஆருன்னுல்லாம் புரிஞ்சுக்க மட்டும் லைட்டா திக்கக்கூடும் !


      பேசாமே தலீவர் கிட்ட கதை சொல்லச் சொல்லிக் கேட்டுப்புடுங்க !

      Delete
    3. @விஜயன் சார்
      நாங்க எல்லாம் கிராபிக் நாவலையே தலைகீழா படிச்சவங்க சார்.
      தங்க தளபதி கதையை நடுவாக்கில் இருந்து படிச்சு புரிஞ்சுகிட்டவங்க சார்.
      அதனால் முனுசாமி கோவிந்தசாமி பற்றி எல்லாம் கவலை இல்லைங்க சார்

      Delete
  22. வெறும் இரண்டு புத்தகங்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்த மாதத்தை ஓட்ட வேண்டுமே!!! ஓட்டுவோம், ஓட்டித்தான் பாப்போம்!

    ReplyDelete
    Replies
    1. SMASHING '70s வாங்கலியா சார் ?

      Delete
  23. எங்க இளவரசி திரும்ப அதுவும் இரண்டாக வருவது மிக்க மகிழ்ச்சி. இளவரசி இல்லாமல் நொந்து போய் இருந்த எங்களை அப்படியே மகிழ்ச்சி கடலில் எங்களை தள்ளி விட்டு விட்டீர்கள் விஜயன் சார் நன்றி. 2023லும் பார்த்து பண்ணுங்க சார்.
    இளவரசிக்கு ஜே இளவரசிக்கு ஜே

    ReplyDelete
  24. சாக்லேட் ஐஸ்கிரீம் வருமென்று நினைத்தால் டபுள்டெக்கர் ஐஸ்கிரீம் வருகிறது.

    JB - NO- OK

    MB SQUARE= வாரேஹ் வா

    டபுள் மாடஸ்டி - டெர்ரிஃபிக் !!!

    ReplyDelete
  25. ஒரே மாதத்தில் 2 ஆக்சன்.
    மாடஸ்டி காணமேனு கேட்டவங்களுக்கும், அடுத்த வருடம் மாடஸ்டி இல்லைனு வருத்தப்பட்டவங்களுக்கும்.
    ஜேம்ஸ் பாண்ட் இல்லைனா கூட விட்டுட்டாங்க யாருமே கேக்கலை.
    ஆனா அடுத்த வருடம் மாடஸ்டி இல்லைனு தெரிஞ்சதும், இங்க சொல்ல வெக்கபட்டுட்டு, வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும் புலம்பி தள்ளிட்டாங்க. இந்த செய்தி அவங்க அழுகைக்கு நல்ல நிவாரணி.
    அடுத்த வருட ஸ்லாட் எல்லா ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் சார்.
    வாழ்த்துக்கள் 💐

    ReplyDelete
    Replies
    1. அது தான் சொல்லியிருந்தேனே சார் ; இளவரசிக் கதையொன்று உள்ளதென்று ?! அதற்குள் அழுகாச்சிகளா ?

      Delete
  26. காரிகனுக்கு waiting... இளவரசிக்கு டபுள் ஜே ! இந்த மாசம் டெக்ஸ் வராதுன்னு தெரிஞ்சு தீபாவளிக்கு வந்த டெக்ஸ படிக்காம வச்சிருக்கேன் .. :-)

    ReplyDelete
  27. ஐ ஜாலி.

    விஜயன் சார் டெட்வுட் டிக் கதை இந்த மாதம் கிடையாதா?

    ReplyDelete
  28. இரண்டு மாடஸ்டி கதை என்பது என்னை பொறுத்தவரை படிப்பதற்கு மிக கடினமான செயலாக இருக்கும் எனவே ஒரு மாடஸ்டி கதைக்கு பதில் மார்டீனை இணைக்கலாமே சார்

    ReplyDelete
  29. மாடஸ்டி double damaka டபுள் ஒகே.
    ஜேம்ஸ் பாண்ட்க்கு லேடி ஜேம்ஸ் பாண்ட் நிச்சயமான தரமான கதை கியாரண்டி... 90 ரூபாய் விலைய பார்த்தபோதே double சாகசம் என்பதை யூகித்து விட்டேன்... போதாக்குறைக்கு அதி தீவிர ரசிகர் ஒரு ஹிண்ட் வேறுகொடுத்தார்... நிச்சயம் பக்காவாக எடிட் செய்து போடுவீர்கள் எனும் போது உடனே வாசிக்கும் புத்தகமாக மாடஸ்டி கதைகள் உள்ளன... என்ன ஒரு வருசம் காத்திருக்கணும்..

    ReplyDelete
    Replies
    1. இரட்டை இளவரசி வரயிருப்பது இந்த வருட டிசம்பரில் தான் சகோ! ஒரு வருடம் தேவையில்லை - ஒரு மாதம் காத்திருந்தாலே போதுமானது!

      Delete
    2. நிஜமாவா சகோ, ஏதோ மொழிபெயர்ப்பு பிரச்னை எல்லாம் எடிட்டர் போன பதிவில் சொன்ன மாதிரி இருந்ததே. ஒகே, அப்ப சூப்பர்.

      Delete
  30. சார் முதலில் காரிகனுக்கு தான் ரொம்ப waiting...
    அதற்கு பிறகு சிஸ்கோ

    ReplyDelete
  31. உயிரைத் தேடி புத்தகம் அடுத்த மாதம் தான் வருகிறதா எடிட்டர் ஜி

    ReplyDelete
  32. விஜயன் சார், கடைசி நேர மாற்றத்தால் இரண்டாவது மாடஸ்டி கதையை குட்டிக்கரணம் அடித்து பிடித்து தயார் செய்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றி சார்.

    இப்ப எல்லாம் நீங்களும் நமது அலுவலக நண்பர்களும் 2-3 நாட்களில் புத்தகங்களை ரெடி செய்து அனுப்புவதில் expert ஆகி விட்டீர்கள். வரும் காலங்களில் வாரம் ஓரு காமிக்ஸ் புத்தகம் என மற்ற தமிழ் வார நாளிதழ்கள் போல நாமும் வர ஆரம்பித்தது விடுவோம் என நம்புகிறேன். அந்த நாளை எதிர்நோக்கி ஆர்வமுடன் உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ///இப்ப எல்லாம் நீங்களும் நமது அலுவலக நண்பர்களும் 2-3 நாட்களில் புத்தகங்களை ரெடி செய்து அனுப்புவதில் expert ஆகி விட்டீர்கள். வரும் காலங்களில் வாரம் ஓரு காமிக்ஸ் புத்தகம் என மற்ற தமிழ் வார நாளிதழ்கள் போல நாமும் வர ஆரம்பித்தது விடுவோம் என நம்புகிறேன்.///

      வெரிகுட் அப்ஸர்வேஷன் PfB!!

      Delete
    2. அட, நீங்க வேற ஏன் சார் உசுப்பி விடறீங்க ? அங்கங்கே க்ரீக் ..க்ரீச்ன்னு சத்தம் போடற முட்டி கிட்டி எல்லாத்துக்கும் க்ரீஸ் தடவி ஒப்பேத்திக்கினு வரேன் !

      Delete
  33. தொழில்நிமித்தம் வருடம் முழுவதும் வாசகர்களுக்காகக் கஷ்டப்படும் ஒரு தொழிலதிபரையும், சில மருத்துவர்களையும் உற்சாகப்படுத்திட இளவரசியின் இந்த இரட்டை இதழ் உதவிடுமானால் அதையே ஒவ்வொரு வருட டிசம்பரிலும் செய்திடக் கோருகிறேன்.

    (சார்.. இளம் டெக்ஸ், இளம் டைகர், இளம் தோர்கல் வரிசையில 'இளம் இளவரசி' கிடைக்குமாங் சார்?!! ஹிஹி ஒரு ஆர்வந்தேன்!)

    ReplyDelete
    Replies
    1. இளம் மரத்திலே செஞ்ச நயம் பூரிக்கட்டைக்கு இப்போல்லாம் காங்கோ மாதிரி பயன்பாடு உண்டாம் ! அதிலும் ஈரோட்டு இல்லத்தரசிகள் அதைக் கையாள்ற கலையிலே செம தேர்ச்சி பெற்றாச்சாம் !

      ஊருக்குள்ளாற பேசிக்கிட்டாங்க !

      Delete
    2. ஈவி மைண்ட் வாய்ஸ்..
      வீழ்வது நாமாயினும், வாழ்வது மாடஸ்டியாகட்டும்..

      Delete
  34. யக்கோவ்..
    வந்திட்டியாக்கா..
    வாக்கா..
    வாக்கா..

    மாடஸ்டி மலர்ந்தே (ச்சே..) வந்தே தீரும்...

    ReplyDelete
  35. வணக்கம் காமிக்ஸ் காம்ரேட்களே.

    ReplyDelete
  36. போட்டோக்களை ஆசிரியரின் மெயில் ஜடிக்குத் தானே அனுப்ப வேண்டும் நண்பர்களே ?!

    ReplyDelete
  37. இரட்டை இளவரசியை வரவேற்கிறேன். அதுவும் ரொமேரோவின் சித்திரங்களுடன்.. அருமை.

    அடுத்த வருடமும் இளவரசி வந்தால் இன்னும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  38. சூப்பர் சார்....என்ன நடந்திருக்கும்னு புரியுது....கும்முன்னு மாடஸ்டியக்கா வருவது மாடஸ்டி கேட்ட நண்பர்களுக்கு கொண்டாட்டத்தை கூட்டும்....பாண்ட் கேட்ட நண்பர்களுக்கும் உற்சாகப் செய்தி தர முயற்சிக்கிறீர்கள்....உங்க நல் மனசுக்காக செந்தூரான் அருள் புரிய வேண்டுகிறேன்.....அட்டவணையை பாக்கும் ஆவல் கூடுது...அமயா ஒரு கதையை பாத்துருக்கலாமோன்னு எனக்கும் ஓர் ஆசை ஓசையில்லாது கூடுவது என்னவோ உண்மைதான்...ஆனா மாடஸ்டி மன்னர்களுக்காக அமுங்கியே போகுது...மேலும் நம் முன்னே காத்திருக்கும் அதிரடி கதைகள் என அடுத்த வருட அதிரடிப்...லார்கோ...கடல் கொள்ளையர்...நமீபியா முன் களக் கதைகள்...ரூட்...ஸ்பைடர்...இரு கௌபாய்...மெபிஸ்டோ....சுஸ்கி....குண்டுகள்...60....என காத்திருக்கும் உற்சாகங்கள் கொஞ்சமல்லவே.....


    அந்த ட்யூராங்கோவை மறந்தே போனேன் அட்டவணை செய்த மாயமோ...அதுதான் அந்த கௌபாயா...அல்லது வேறு உண்டா....

    ReplyDelete
  39. மாடஸ்டிடபுள்ஓகே. இதுநாள்வரை வெளியேவராமலிருந்த இளவரசியின் அபிமானிகள் மெல்லவெளியே வருகிறார்கள். மாற்றம்முன்னேற்றம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  40. இளவரசி 70'களில் முத்து காமிக்ஸின் முதல் வருடத்தின்அறிமுகம். .80'களில்லயனிலும் முதல் வருடத்தின் அறிமுகம். 90'களில்தமிழ் காமிக்ஸ் உலகின்முதுகெலும்பு. தலைவியுடன் சக அறிமுகங்கள் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்&டேவிட்., ஜானி, சார்லிஇன்று மறுபதிப்புகளில் மட்டுமே.இன்றளவும் புதுக்கதைகளுடன் வந்து கொண்டிருப்பவர் இளவரசி மட்டுமே. இளவரசி ஒரு சகாப்தம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  41. இது மகிழ்வான செய்தியே...


    ஆவலுடன் வரவேற்கிறேன்...ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்..

    ReplyDelete
  42. நானும் தொழில் அதிபர் தான் JJJJJJJ

    ReplyDelete
  43. Sir make the double modesty a hard bound please - perhaps as a way of thanks for super success of smashing 70s?!

    ReplyDelete
    Replies
    1. Sorry, not a possibility sir ; Modesty covers have been printed 3 months back. And on a Rs.90 book, there just can't be any room for a hardcover's budget !

      Delete
  44. நவம்பர் பொக்கிஷத்தை கைப்பற்றியாச்சி,பன்னுடன் பத்திரமாக இலக்கை அடைந்தது பெட்டி,நண்பருக்காக பதிவு செய்த கூடுதல் பெட்டி வராததால்,இது யாருதா இருக்கும்னு கூரியர் அலுவலகத்திலேயே பார்சலை பிரிச்சா பன் மொத்தமான ஒரு தட்டுவடை சைஸில் வெளியே வந்தது,அதை பார்த்த கூரியர் நண்பர் சிறிது வியப்புடன் சிரித்து விட்டார்,என்ன சார் உங்களுக்கு புக்கோட ஸ்னாக்ஸ் எல்லாம் வருதுன்னு...

    ReplyDelete
  45. ஆஹா சூப்பர் நியூஸ் ஃபார் டபுள் மாடஸ்டி :-)

    ReplyDelete
  46. டூ இன் ஒன் மாடஸ்டி புக்.
    போகுற போக்குல, டாக்டர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு, இளவரசர்களுக்கு, கவிஞர்களுக்குன்னு , வகைவகையா மாடஸ்டி புக்ஸ் ஒரே ஸ்லாட்ல வரும் போலிருக்கே.
    என்ன தவம் செய்தனை..யசோதா..

    ReplyDelete
  47. முதல் புரட்டலில் சிஸ்கோ மேக்கிங் அசத்தல்,ஓவியங்கள் நச்...
    மேக் & ஜாக் கொஞ்சம் அடர்ந்த கலரிங்குடன்...
    காரிகன் பட்டையைக் கிளப்பும் மேக்கிங் தரத்துடன்,அட்டையை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல,செதுக்கி வெச்சிருக்கிங்க சார் அட்டையை, காரிகன் ஸ்டில் ஹாலிவுட் படங்களை நினைவூட்டுது...
    அடுத்த வெளியீட்டில் தலைவன் மார்ட்டின் வர்றார் போல,டெட்வுட் டிக்,டெகஸ்,இளவரசி என டிசம்பரில் எதிர்பார்ப்பு கூட்டணிகள்,கூடவே வருட இறுதி சர்ப்ரைஸ் இதழ் உயிரைத் தேடி உண்டுதானே,விளம்பரம் எதுவும் இல்லையே ?!

    ReplyDelete
  48. S' 70 இதழில் முன்பக்கத்தில் அல்லது விளம்பர அட்டையில் இந்த இதழில் இடம்பெற்ற கதையின் தலைப்புகளை வரிசைக்கிரமாய் போட்டுருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...
    வேதாளர் கதையில் இதுபோல இடம் பெற்றிருந்ததாய் நினைவு...

    ReplyDelete
  49. அட்டவணையில் உள்ளபடி தீபாவளி ஸ்பெஷலான The Sixer Spl உடன் சேர்த்து ஓநாய் வனத்தில் டெக்ஸ் -இளம் டெக்ஸ் ஸ்பெஷலின் அறிவிப்பில் உள்ள 2 சாகஸங்களையும் சேர்த்து வெளியிட முடியுமா சார் ?!
    அப்படி செய்தால் காலியாகும் இடத்தில் இன்னொரு டெக்ஸ் இதழை நுழைக்கலாமே சார்...

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார் ; திட்டமிடல்கள் ; தொகைகள் இறுதியானவை ! நூறு சந்தாக்களுக்குக் கிட்டே வந்தான பின்னே, "புதுசாய் டெக்ஸ் நுழையுது ; இன்னொரு 160 அனுப்புங்கள்" என்று சொன்னால் - முதுகு பழுத்து விடும் நம்மாட்களுக்கு !

      Delete
    2. புரியுது சார்,காலியாகும் அந்த மாதத்தில் டெக்ஸின் மந்திர மண்டலத்தை முன்பதிவுக்கு நுழைத்து விட்டு,போனெல்லியில் 2023 இல் வெளியாகும் ஒரு ஸ்பெஷல் இதழை முன்பதிவில் லயன் லைப்ரரியில் வெளியிட முயற்சிக்கலாமே சார்...

      Delete
    3. மந்திர மண்டலம் வருவது எங்கே எப்போது ல. சந்தாவில் இல்லை. சந்தாவில் 10 டெக்ஸ் தான்.

      Delete
    4. தெரியும் ஷெரீப்,ஆனா ஏதாவது ஒரு மாதத்தில் வரும் இல்லையா...அதையோ அல்லது வேறு டெக்ஸையோதான் அந்த ஓநாய் வனத்தில் டெக்ஸிற்கு பதிலாக நுழைக்க சொன்னென்,ஓநாய் வனத்தில் டெக்ஸை தீபாவளி யங் டெக்ஸோடு இணைத்து விடலாம்,திடீர் இதழை முன்பதிவுக்கு அறிவித்து விடலாம்,இதில் சந்தாவும் மாறாது, கூடுதலாய் ஒரு டெக்ஸ் இதழும் கிடைக்கும்...

      Delete
  50. ஒரு திருத்தம் கரூர் ராஜசேகரன் சார்.மாடஸ்டி அறிமுகமானது முத்து காமிக்ஸின் 35வது இதழான கழுகு மலைக்கோட்டை.
    பிப்ரவரி 1975 ல்தான் முதலாண்டில் அல்ல.

    ReplyDelete
  51. Only last 2 posts can be seen in blog. Pls do the needful

    ReplyDelete
    Replies
    1. No Doc - all are seen. You need to click on older posts to view older posts (bottom of each page). Or if you use laptop - then scroll to the right panel and pick links based on time period you want to view.

      Delete
    2. On the phone, next to Home button at the bottom you will have '>' to see previous post and '<' for next post.

      Delete
  52. ###போட்டோ எடுத்து அனுப்புங்களேன்####

    இன்னைக்கு பார்சல் வரலையாம் சார்..
    நாளைக்கு வரும் போல..

    ReplyDelete
  53. புத்தகம் வந்து விட்டது. வீட்டில் இருந்து தகவல்

    ReplyDelete
  54. அட்டவணை பதிவை பார்த்ததும் சும்மா -வாச்சும் உற்சாகம் வந்தது. இன்று புக் பார்சலை பார்த்ததும்-(காரிகனையே- பார்த்தும்-)-லேசா வந்த உற்சாகம்-4.00 மணி போல் பதிவை படித்ததும் வந்ததே ஒரு உற்சாகம்.. ii_ஆஹா - டிசம்பருக்கு
    இப்போதே வெயிட்டிங்..

    ReplyDelete
  55. எடி ஜி,
    2023 சந்தா அட்டவணை பரம திருப்தி எனக்கு, உங்கள் வாசகர்கள் என் ன்னோட்டத்தை முழுவதுமாக புரிந்து வைத்துள்ளீர்கள். அட்டவணையை படித்து முடித்து சந்தத் தொகையை அனுப்பிவிட்டு தான் படுத்து உறங்கினேன். சந்தா வாசகர்கள் அன்பளிப்பு கைப்புள்ளை ஜாக் கொடுத்து விடுவீர்களா என்று பயந்து கொண்டு இருந்தேன்.
    இத்தனை வருடத்தை விடவும் 2023 வருடம் அட்டவணை மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது எனக்கு. இடையே பணம் கிடைத்தால் இன்னொரு சந்தா கூட கட்டிவிடலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
  56. ஷெர்ல ஹோம்ஸ் கிளாசிக் மற்றும் ஜெஸ்long கதைகள் துப்பறியும் கதைகளில் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. எனவே விரைவில் அதையும் முயற்சி செய்யுங்கள்

    ReplyDelete
  57. Books arrived.
    எடிட்டர் சார் மன்னிக்கவும். ஒரு சிறிய விண்ணப்பம்.
    2023ல் வரக்கூடிய புத்தகங்களுக்கான அட்டைப் பெட்டி இன்னும் கொஞ்சம் தரமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இந்த வருடம் ஒரு சில மாதங்கள் தவிர்த்து மற்ற பெட்டிகள் அனைத்தும் நசுங்கியும், தரமற்றுமே இருந்தன.

    ReplyDelete
    Replies
    1. நியாயமான கோரிக்கையே பத்து சார்! போன மாதம் என்னுடைய தீபாவளி மலரின் பின்னட்டை முனை மழுங்கியே வந்து சேர்ந்திருந்தது! இந்தவாட்டி காரிகன் ஸ்பெஷலும் அப்படியே!!

      பார்த்து ஏதாவது செய்யுங்க எடிட்டர் சார்!

      Delete
    2. காரிகன் boxes எருமை கனத்துக்கு இருந்தவை ; அவற்றையே கூரியரில் சேதமாக்குகிறார்கள் என்றால் என்ன சொல்வதென்று தெரியலை ! இதற்கும் மேலே கனத்தைக் கூட்டினால் டப்பிக்களை மடிக்க ; பேக்கிங் செய்ய மிஷின்களுக்கே சாத்தியமாகிடும் ! கையால் பேக் செய்திட இயலாது !

      Delete
    3. கூரியரில் ரொம்ப அலட்சியமா பார்சலை கையாள்வார்கள்,அது நைட் ஷிப்டில் அந்த பார்சல் படும் பாடு சொல்லி மாளாது,பார்சலை புக் செய்தவர் அங்கே இருந்தால் அழுதே விடுவார்...
      ஒரு காலத்தில் கூரியர் பணியில் இருந்த அனுபவம்...

      Delete
    4. பெட்டிக்கு கனத்தை கூட்ட வேண்டாம் சார். layer bonding தான் problem. bonding சரியாக இல்லாததால் layer தனியாக உறிந்து தொங்கிவிடுகிறது. So பெட்டி வலுவிழந்துவிடுகிறது.
      மின்னும் மரணம், LMS, ஈரோட்டில் இத்தாலி போன்ற புத்தகங்கள் வந்த பெட்டிகள் இன்றுவரை ஸ்ட்ராங்காக உள்ளன.

      Delete
  58. வணக்கம் நண்பர்களே!

    மாடஸ்தியின் டபுள் ஆல்பம்... சர்ப்ரைஸ்! இளவரசியின் ஆர்வல நண்பர்களுக்கு கொண்டாட்டம்தான். கலக்குங்கள்! கொண்டாடுங்கள்!!

    ReplyDelete
  59. இன்று காலையே புத்தகங்கள் கிட்டி! டப்பியை கையில் வாங்கும்போதே ஏகத்துக்கும் மேடுபள்ளமாய்த் தெரிய, சின்னதாய் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும் கணநேரத்தில் அது மறைந்துபோய் குஷியாய் மாறியது - யெஸ், ரவுண்டு பன் & ஸ்பாஞ்ச் கேக் ('ஜ பர்ஸ்ட்' போட்டியில் வென்றதற்கு எடிட்டரின் ருசியான பரிசு).

    ஆபீஸுக்குப் போனபின் பன்னையும், ஸ்பாஞ்ச் கேக்கையும் (கூட இருந்தவங்களுக்கு கொஞ்சமாய் பங்கு கொடுத்துவிட்டு) வாயில் கரையவிட்டபடிக்கே அட்டவணை புக்லெட்டை ஆரஅமர ரசித்த அந்த சுகம் இருக்கே... ப்பா வேற லெவல்!!!

    அட்டவணையை புத்தக வடிவில் புரட்டும்போது ஒரு இனம்புரியாத கிளுகிளுப்பு! தல - தாண்டவமாடியிருக்கிறார்!! புரட்டிய பக்கங்களில்லெல்லாம் தலயே மாஸ் காட்டியிருக்கிறார்!

    ஆனாலும் இது போதாது! ஆசைகள் அடங்காது! டெக்ஸ்-75க்கு இன்னும் இன்னும் ஏதாவது செய்யணும்! போனெலி பாஸ் செய்வார்.. நம்ம எடிட்டரும் செய்வார்! காத்திருப்போம்...

    ReplyDelete
    Replies
    1. //கூட இருந்தவங்களுக்கு கொஞ்சமாய் பங்கு கொடுத்துவிட்டு//

      இதெல்லாம் நம்புறா மாதிரியா இருக்கு ?

      Delete
    2. அபாரமான மோப்ப சக்தி கொண்டவர்கள் சார்! வாசனையை வைத்தே கடையின் அட்ரஸ் வரை சொல்லிவிடுவார்கள்!

      அதனால் வேறு வழியில்லாமல் கொஞ்சூண்டு கொடுத்தேன்! கொஞ்சூண்டுன்னா.. இக்ளியூண்டு!

      Delete
  60. நவம்பரில் ஆன்லைன் புத்தகம் உண்டா? இருக்கும் என்ற நம்பிக்கையில் தீவாளி சரவெடிஇதழ்கள் ஆர்டர் பண்ணாம இருக்கனே

    ReplyDelete
    Replies
    1. திட்டமிடுவோம் சார் ... கிட்டங்கி டு கிட்டங்கி கொஞ்சம் ஷிப்ட்டிங் செய்ய வேண்டியுள்ளது ! அதை முடித்த பின்னே பார்ப்போமே !

      Delete
    2. அருமையான செய்தி...

      Delete
  61. மேக் அண்ட் ஜாக் :

    நம்மாள் ஜாக் ஹாலிவுட்டில் ரீல் ஹீரோவுக்கு டூப்பாக சென்று ரியல் ஹீரோவாக மாறி அடிக்கும் லூட்டிகளே கதை .. வசனங்கள் செம .. SSS ன் final slot க்கு my choice s Mak and jak ..

    ReplyDelete
    Replies
    1. எனது சாய்ஸும் மேக் அண்ட் ஜாக் தான்.

      Delete
    2. பார்க்கலாமே சார் - இந்த ஆல்பத்துக்குப் பிற்பாடு இந்த ஜோடியின் ரேட்டிங் கூடுகிறதாவென்று !

      Delete
  62. முதலில் படித்தது சிஸ்கோ தான்.

    பக்கத்துக்கு பக்கம் பரபரப்பு ஆரம்பம் முதலே....

    பிரஸிடெண்டின் மகளுக்கு காவலுக்கு சிஸ்கோவை அனுப்ப அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும் திருப்பங்களும் தான் கதை.

    கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாத ஹீரோ, தெறிக்கும் ஆக்சன், பரபரப்பான துரத்தல்கள், விறுவிறுப்பான கிளைமாக்ஸ்...

    எனது மதிப்பெண் 10/10.

    அட்டகாசம் சார். தயவு செய்து இந்த தொடரை முழுவதும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  63. சிஸ்கோ :
    உஷார் அழகிய ஆபத்து:
    அதிகார போதையில் ஆட்டம் போடும் அம்மணிக்கு காவல் காக்கும் ஒரு கடுவன் பூனை போக,அதிகாரத்தின் அந்தரங்கங்களை "ரேட்டிங்" என்ற அடிப்படையில் தன்னைப் முதன்மைப்படுத்திக் கொள்ளவோ,பொது நோக்கம் என்ற அடிப்படையில் சுய இலாபத்திற்காகவோ வெளியே கொண்டு வரத் துடிக்கும் மீடியாவின் அசுரப் பசி...
    மனித சமூகத்தை கூரிய நகங்கள் கொண்டு பிராண்டும் கொடிய ஜந்துவான போதை மாஃபியா...
    தன்னைக் காக்க அதிகாரத்தைக் கொண்டு எந்த எல்லைக்கும் செல்லத் துணியும் அதிகார மட்டம்...
    விட்டுச் சென்ற அடையாளங்கள் தன்னை முன்னிறுத்திக் கொள்ள எடுக்கும் கடும் முடிவுகள்...
    தலையை உள்ளே விட்டாச்சி,பத்திரமா வேலையக் காப்பாத்திக்கனும்டா சூனா பானா என்று பரபரப்பாய் ஓடிக் கொண்டே இருக்கும் நாயகன்....
    எல்லாவாற்றிற்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் இந்தக் களம்...
    இங்கு இருக்கும் ஒரே ஒற்றுமை எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பணமோ,பதவியோ,
    அதிகாரமோதான் பிரதானம்...

    பதினாறாவது பிராந்தியத்தில் நாமெல்லாம் கள்ளன்-போலீஸ் ஆடப் போகிறோமாம்...
    -இந்த வசனத்தில் சிரிப்பு வந்துடுச்சி...

    ஆங்காங்கே கொஞ்சம் இராவான வசனங்கள்,கிளுகிளுப்பான காட்சி அமைப்புகள்,எடிட்டிங்கை எல்லாம் தாண்டி இவை இருக்கின்றன என்றால்,ஒரிஜினலில் இன்னும் இராவாய் இருந்திருக்குமோ ?!

    அசத்தல் ஓவியங்கள்,தரமான மேக்கிங்,சிறப்பான ஓவியக் கோணங்கள்,நல்ல கலரிங்குகள்,இது எல்லாம் இருந்தா சாதிக்காமல் இருப்பாரா சிஸ்கோ...

    அழகிய ஆபத்து அக்மார்க் ஆக்‌ஷன் மேளா,அதிகார விளையாட்டு...

    எமது மதிப்பெண்கள்-9/10...

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசம் அண்ணா. சும்மா அத்தனை விஷயங்களையும் அழகாக விவரித்து உள்ளீர்கள். ஆமா ரொம்பவே Raw ஆன கதைதான்.

      Delete
    2. ஆம் தம்பி,என்ன இதிலும் சில இடங்களில் "இழவு" எனும் பேவரட் வார்த்தை இடம் பிடித்துள்ளது, எனக்கு தெரிந்து 3 இடங்களில்...!!!

      Delete
  64. ரீலா ? ரியலா ?
    மேக்கை விட ஜாக்கிற்கு செம ரோல் இதில்,ஜாக் அட்டாவே அசத்தியிருக்கார்,பாரில் மொக்கையான சரக்கடிக்கும் பொழுதில் நடக்கும் ஓர் சந்திப்பில் ஹாலிவுட் ரீல் ஹீரோவாகவும்,நாயகியுடன் ஜொள்ளவும் வாய்ப்பு கிட்ட...
    கிடைத்த வாய்ப்பில் அசத்தினாரா ஜாக் அட்டாவே ???!!!

    கொஞ்சமே அசந்தாலும் சீரியஸாய் அமைந்திடும் வாய்ப்புள்ள கதையை கலகலப்பாய் நகர்த்தியுள்ளனர்...

    கொலைகாரக் கொடூரன்கள் நாயகனாய் மாற ஜாக் அடிக்கும் கூத்துகள் கலகலப்பு...

    முடிவில் Finishing Touch நல்லா இருந்தது,ஆனா Predictable Scene ஆக போய் விட்டது...

    கலரிங் பாணிகள் மட்டும் கொஞ்சம் உறுத்தல்,ரொம்பவுமே டார்க்காய் பல இடங்களில் காட்சியமைப்புகள் தோன்றுவது எனக்கும் மட்டும்தானா ?!

    தாராளமாய் இரசிக்கலாம்,வாசிக்கலாம் இந்த ரீலா,ரியலா...

    எமது மதிப்பெண்கள்-8/10...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நான் படிக்கவில்லை சீக்கிரமா படித்து விட்டு வருகிறேன்.

      Delete
    2. தொடரின் ஆரம்பத்துக் கதைகளுள் ஒன்று சார் ; 40 ஆண்டுகளுக்கு முன்னே வெளியானது ! கலரிங் புராதன பாணிகளில் இருப்பது அதனால் தான் !

      Delete
  65. தேங்க்ஸ்r. R. A. T. Sirமாடஸ்டிமுத்து முதலாண்டில் அறிமுகம் என்ற எனது தவறான எண்ணத்தை திருத்தியதற்கு நன்றி. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  66. ஒவ்வொருமாதமும் இறுதியாக புத்தகங்களைப்பறும் அறிவரசு ரவி சாருக்கு இம்மாதம் விரைவாகப் புத்தகம் கிடைக்கப்பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்சார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே,எதிர்பார்த்தது நடந்தது மகிழ்ச்சி....

      Delete
  67. ரீலா ரியலா ரொம்பவே ரசித்த கதை சமீபத்தில்.

    வழக்கமான ஆள் மாறாட்டம் தான் கதை, நிறைய இடங்களில் சிரிப்பு வந்தது.

    அதும் முதல் முறை ஜாக்கும் ரேண்டால்ஃப் சந்திக்கும் இடம் எல்லாம் தெறி.

    ரசிகைகளை வைத்து ஜாக்கை கண்டுபிடிக்க மேக் செய்யும் ஐடியா எல்லாம் ரொம்பவே நன்றாக இருந்தது.

    Work Stress அப்படியே relieve ஆகி விட்டது.

    கார்ட்டூன் வாழ்க. அடுத்த வருடம் SSS இல் மேக் அண்ட் ஜாக் இருவருக்கும் ஒரு இடம் பிளீஸ் சார்.

    ReplyDelete
  68. பன் நல்லா இருந்தது சார்,நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தென்னங்குருத்து ஒண்ணு உங்களுக்கு இன்னும் சாம்பிள் காட்டணும் சார் !

      Delete
  69. விடுமுறையில் இருப்பதால் புத்தகங்கள் கைகளுக்கு கிடைக்க லேட் ஆகும் எனவே corrigon படித்தவர்கள் என்னென்ன கதைகள் உள்ளது என்பதை பற்றி சொல்ல முடியுமா

    ReplyDelete
    Replies
    1. கதை சொல்லும் காமிக்ஸ் - வெண்பனி இளவரசி + எல்லாம் அழகே
      சிரித்து சகா வேண்டும் - மாடஸ்டி (2 கதைகள், இரண்டாவது கதை பெயர் தெரியவில்லை)
      வரலாற்றின் வாடி வாசல் - மார்ட்டின்
      நிழல்களின் ராஜ்யத்தில் - டெக்ஸ்
      உத்திரதின் நிறம் கறுப்பல்ல - டெட்வுட் டிக்

      Delete
    2. சார் .. அவர் உத்திரம் கறுப்பா ? சிகப்பா ? என்று வினவவில்லை :-)

      காரிகன் ஸ்பெஷலில் இடம்பிடித்திருக்கும் கதைகளின் பட்டியலைக் கோரியுள்ளார் !

      Delete
    3. சாரி சார்! அவரின் கேள்வியை சரியாக படிக்கவில்லை!

      Delete
  70. விஜயன் சார், உயிரை தேடி அடுத்த மாதம் வருமா சார்? அல்லது அதனை ஆன்லைன் புத்தகத்திருவிழாவின் போது வெளி இட முடியுமா சார் ?

    ReplyDelete
  71. பேசாம உயிரை தேடி சிறுவர்மலர் வெளியிட்டது போல மாதமிருமுறை தொடராக வெளியிட்டால் படிக்காதவர்களுக்கு ஒரு சூப்பர் உயிரை தேடி அனுபவம் கிட்டலாமே....

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இதிலே உடன்பாடில்லை சகோ! முழுக்கதைகளையே தொடர் போல படிக்கும்படிதான் நேரம் கிடைக்கிறது இப்போதெல்லாம்!
      அப்படிக்கிப்படி தொடராக வெளியானால் 'அரக்கன் ஆர்டினி' கதையை ஐந்தாறு முறை படித்து ஒரு முடிவைத் தேடிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு!

      Delete
    2. சும்மா சொல்லி பார்த்தேன் ஐயா

      Delete
    3. //'அரக்கன் ஆர்டினி' கதையை ஐந்தாறு முறை படித்து ஒரு முடிவைத் தேடிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு!//
      Better you can read "Rowthira Ranger" for that.

      Delete
  72. அடுத்தமாதம் வெளியாகயிருக்கும் மார்ட்டின் கதையின் தலைப்பு 'வரலாற்றின் வாடி வாசல்' என்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம்!

    இது மரியாதையில்லா தலைப்பு என்பதைப் பார்த்தவுடனே புரிந்துகொள்ள முடிகிறது! எனவே, உடனடியாகத் தலைப்பை 'வரலாற்றின் வாங்க வாசல்' என்றோ, 'வரலாற்றின் வாம்மா வாசல்' என்றோ மாற்றிவைக்குமாறு எடிட்டர் சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம்! இல்லாவிட்டால் தலீவரின் தலைமையில் சிவகாசி கரோனேஷன் பேக்கரி வாசலில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

    ReplyDelete
  73. விஜய சகோ, நீங்கள் பள்ளிக்கூட நாட்களை நினைவு படுத்துகிறீர்கள்...
    நீங்கள் ஏன் அதனை மரியாதை குறைவாக எடுத்து கொள்வானேன்?

    வா டி(யர்) வாசல் என்றும் புரிந்து கொள்ளலாமே

    ReplyDelete
    Replies
    1. இப்படிப் புரிந்துகொள்ள நான் ரெடி சகோ! ஆனா 'அவங்க' புரிஞ்சுப்பாங்களா?!! :D

      Delete
  74. எனக்கு இப்போதுதான் பார்சல் வந்தது

    ReplyDelete
  75. 2023 அட்டவணை பிரமாதம்.
    டெக்ஸ் 75 இல் அவருக்கு குறைந்தது 14 கதைகள் 11 இதழ்களில்.90 ஸ் இல் வந்த மொத்த டெக்ஸ் கதைகளை இந்த வருடம் மட்டுமே தல தாண்டி சாதனை புரிந்துவிடுவார் போல.

    இளம் டைகர் சாதிப்பாரோ இல்லையோ அவருக்கு வரவேற்பு கண்டிப்பாக உண்டு.முத்துவின் ஆண்டு மலராக டைகர் அறிவிப்பு பிரமாதம்.

    பௌன்சர் அந்த வன்முறை, அருவருப்பான ஆபாச மிகுதியான கதைக்களம் எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.

    தோர்கல் அடுத்த கதைகள் இரண்டுமே தனித்தனி சாகசங்கள்.ஒன்றாக வெளியிடாமல் தனித்தனி புத்தகங்களாக வெளியிட்டால் தோர்கல் ரசிகர்களுக்கு இரண்டு அட்டைகளுடன் இரண்டு புத்தகங்கள் கிடைக்கும். ப்ளீஸ் சார்.

    ஸாகோருக்கு ஒரே ஒரு ஸ்லாட் என்பது ஏமாற்றம். டெக்ஸ், டைகர்,லக்கி மற்றும் பலர் என்று மழை பொழிந்து வெள்ளமாய் தேங்கியுள்ள நமது கௌபாய் உலகில் சற்றே வித்தியாசமான பாணி புதியவர் ஒருவர் கொஞ்சம் பிரபல நாயகனாக உருவெடுக்க வேண்டுமெனில் ஆரம்பத்திலாவது அவர்கள் குறைந்த இடைவெளியில் இடைக்கிடை தலைகாட்ட வேண்டியது அவசியமென்று தோன்றுகிறது சார். அறிமுகமானவுடனேயே அடிக்கடி அசத்தும் கதைகளுடன் வந்த டைகர், லார்கோ,ஷேல்டன்,ட்யுராங்கோ போன்றோர் போல் இல்லாமல் ஏறத்தாழ காணாமல் போயுள்ள மேஜிக் விண்ட் முதல் டைலன் வரை பலர் மனதில் அழுத்தமாக பதியாததற்கு எப்போதாவது தலை காட்டியதும் காரணம்.

    தயவு செய்து ஸாகோருக்கும் வேதாளருக்கும் ஒற்றை ஸ்பெஷல் வழிமுறை+ முன்பதிவு முறையில் இருந்து பிரமோஷன் கொடுத்து 2024 முதல் வருடம் 2-4 ரெகுலர் ஸ்லாட் கொடுங்கள் சார்.

    ReplyDelete
  76. Replies
    1. ///வெள்ளை நிறம் அட்டகாசமா ஜொலிக்குது தளம்///

      பழைய நிறமே சிறந்தது!
      இந்த வெள்ளை நிறத்தில் உள்ள குறைகளாவன :

      * அதிக ஒளியை உமிழ வேண்டியிருப்பதால் பேட்டரியை சீக்கிரம் காலி பண்ணிவிடும்.
      * இரவில் இந்த வெண்மை கண்களைப் பதம் பார்த்துவிடும்.


      ரவுண்டு பன்னின் மேற்புறத்தையொத்த பழைய வண்ணமே சிறந்தது!

      Delete
  77. நான் எனது ஏரியா பெயரை பெங்களூர் முகவரியில் கொடுக்காததால் பெங்களூரை கடந்த இரண்டு நாட்களாக எனது பார்சல் சுற்றி வருகிறது 😀

    ReplyDelete
  78. சென்னை புத்தக விழா ஜனவரில வருது. மிக பிரம்மாண்டமா நடக்கப் போறதா வேற கேள்வி. இதுல ரெகுலர் சந்தா இதழ்களைத் தவிர எங்கே எப்போதிலிருந்து ஏதாவது வர வாய்ப்பிருக்கா?

    புத்தக விழாவில் மாயாவியைத் தேடும் நண்பர்கள் அதிகம். எனவே BBS ஓ கூடவே அவங்களுக்குத் துணையா பௌன்சரோ வருவாங்களா?

    ReplyDelete
    Replies
    1. அருமையான ஐடியா ஷெரீஃப். Please Consider this Sir

      Delete
    2. சந்தாச் சேர்க்கைகள் ஒன்றுக்கு இரண்டாய் (Supreme '60s & 2023 Regular) அரங்கேறி வரும் வேளையில் - "முன்பதிவு டிராக்" என்ற ஆவர்த்தனத்தை இன்னொரு பக்கம் நடத்த முயன்றால், நிறையச் சட்டைகள் கிழிபடுவது உறுதி சார் !

      "எங்கே - எப்போது" இதழ்கள் மார்ச்சுக்குப் பின்பாகவே !

      Delete
    3. //"எங்கே - எப்போது" இதழ்கள் மார்ச்சுக்குப் பின்பாகவே !//
      Thanq Sir

      Delete
    4. புத்தக விழாவை டார்கெட் செய்து மாயாவி வந்தால் விற்பனையும் அதிகரிக்கும். பிற்பாடு எப்படியும் வரத்தானே போகிறது? அப்ப ஒன்பது மாசத்துக்குள்ள ஆறு முன்பதிவு வந்தா பரவல்லியா? முன்பதிவுகளை ரெண்டு மாசத்துக்கு ஒன்று என்று அறிவிச்ச ஆறையுமே வெளியிடலாமே?

      Delete
    5. "எதை ?" என்று திட்டமிட்டவனுக்கு "எப்போது ?" என்பதும் தெரிந்திடாது போகாதென்று நம்பலாமே நண்பரே ?

      Delete
  79. Finished reading SISCO - racy as always ! Now on to Mac and Jack ! The 2023 year book is outstanding sir - one idea though - from 2024 onwards you can include a small monthly calendar on the right bottom or upward corner - would serve as a good calendar too :-)

    ReplyDelete
    Replies
    1. எந்த இதழ் எந்த மாதத்துக்கென்ற தீர்மானங்கள் ஒரு நூறு மாற்றங்கள் காண்பவை சார் ! காலெண்டர்களை பொத்தாம் பொதுவாய் மாத்திரமே place செய்திட இயலும் !

      Delete
    2. ஜம்போ காமிக்ஸ் என்னவாயிற்று சார்?

      Delete
  80. This comment has been removed by the author.

    ReplyDelete
  81. காரிகன் அட்டை பார்சல்ல அசத்த...அரங்க பார்க்க கிழிச்சி கொத்தாக இழுத்து அத பாக்காம கைய பார்சலுக்குள்ள நுழைச்சா எனக்கும் பன்னு குடுத்துட்டீங்களேன்னு பார்சல பாக்க அட்டைகள்...

    ReplyDelete
  82. பொங்கல் வாழ்த்து அட்டைகளான நன்றி...காரிகன் அட்டைகள் பார்த்தபடியே சவ்வு தாளுக்குள்ள நுழைக்க டெக்ஸ் அட்டவணைய தாங்கி நிக்க....பாக்கலாம்னு படபடப்பாய் ஒதுக்க...சிஸ்கோ அட்டை ஈர்க்க செமயார்க்கே ...மேக் ஜாக் நசுங்கிய எலியாய் காட்சி தர...அட்டையோ அசத்த ...காரிகன்....என்னா ஒரு அட்டகாசம்...கோட்டையெல்லாம் அழிச்சிருங்க...பரிசையெல்லாம் அளிச்சிருங்க இவ்வட்டைக்கே...
    என்னா காட்சி...வண்ணம்...எழுத்து தாங்கிய மினுமினு சிவப்பு...இப்படியோரட்டை இனிய கனவிலும் வாய்க்காது...செம சார்...
    இனி அட்வணைக்குள் தலை நுழைத்து வருகிறேன்

    ReplyDelete
  83. யானையில் காலடியில் மாட்டியது போல கூரியர் பெட்டி நசுங்கி வந்தது. பெட்டியே இப்படியென்றால் உள்ளேயிருக்கும் புத்தகங்களுடன் பன்னும் ஸ்பாஞ்ச் கேக்கும் என்ன கதியாகியிருக்குமோ என்று பதைபதைப்புடன் பெட்டியை பிரித்தால் காரிகன் மட்டும் முனைகளில் மடங்கி வந்தார். ஆனால்....
    உள்ளே பன்னுமில்லே...ஸ்பாஞ்ச் கேக்குமில்லே...! கர்....ர்ர்....?

    ReplyDelete
    Replies
    1. சாரி சார் ; அட்டவணைப் பதிவின் முதல் 100 பின்னூட்டங்களுக்குள் இடம்பிடித்தோருக்கு மட்டுமே பன் & அதனில் முதலிடத்தைப் பிடித்தவருக்கு மட்டும் கேக் கூடுதலாய் !

      Delete
    2. புனைப்பெயர்ல இருக்கறதால, அஞ்சாவது கமெண்ட் போட்டும் , அடடா பன்னு போச்சே ;)

      Delete
    3. //முதல் 100 பின்னூட்டங்களுக்குள் இடம்பிடித்தோருக்கு மட்டுமே பன்//
      Thanq Sir for the bun....

      Delete
  84. மேக்ஜாக்....என்னா வண்ணம்...அள்ளித் தெளிக்குறாங்க...முதல்ல இதத்தான் படிச்சி வண்ணத்ல கரைஞ்சிடனுமென எண்ணமெல்லாம் வண்ணமாய் மின்ன...வண்ணத்துக்கு ஒரு டாப்ப போட்டபடி புரட்ட கடைசி பக்கத்துக்கு முன்னால் இருக்கும் இரு பக்கம் தாங்கிய அந்த விளம்பரம் நச்...எப்படி சார் தோணிச்சி ...நடிகர் ரஜினியின் பிரம்மாண்ட நடுப்பக்க மனிதன் தினத்தந்தி விளம்பரத்தை நினைவு படுத்த...அசத்தல் சார்...அட்டகாசம்...

    ReplyDelete
  85. சிஸ்கோ ..
    படித்தாயிற்று.
    செம வேகம்.
    க்ளைமாக்ஸ் நாம் எதிர்பார்க்காதது.
    முதல் பக்கம் தொடங்கி கடைசிவரை ஓட்டம்தான்.
    போதைக்கு அடிமையான, பிரெஸிடென்ட்டின் மகளை பாதுகாக்க மெனக்கெடும் சிஸ்கோ எதிர்கொள்ளும் பிரச்னைகளே கதையின் மையக்கரு.
    பரபரப்பான நகர்வுகள்.
    விறுவிறுப்பான கதைக்கு பாராட்டுக்கள் சார்.
    ஏக் தம்மில் படித்தாயிற்று.
    நாளை காரிகன் அல்லது மேக் & ஜாக்.

    ReplyDelete
  86. ரீல் அத்து போகாத ரியலான காமெடி
    ரீலா?ரியலா?
    9/10

    ReplyDelete
  87. அட்டவணையைப் பார்த்தாச்சு....அருமை சார்....டெக்ஸ் இரண்டு கவர்களும் வேண்டும்னா கூடுதல் பணத்தை சந்தால. சேர்த்தே கட்டிரலாமா...
    கொலைப் படை பிரம்மாண்டமான விளம்பரப்படுத்தி இருக்கலாம்கிற ஏக்கத்த தவிர அட்டவணை அருமை......

    ஆனா கடல் கொள்ளையர்....
    லார்கோ...
    இ.ப...
    அண்டர் டேக்கர்...
    ட்யூராங்கோ போல நாயகர்...
    இவைகளையும் எங்கே எப்போல சேத்துருக்கலாம்....

    ReplyDelete
  88. 2024 ல் ....அதென்ன புது டெம்ப்ளேட் 60.. களுக்கு வண்ணமா...டாலர் 40 க்கு வரும் போல

    காம்பேக்ட் சைசில் விலையில்லா டெக்ஸ்...மேல் பாக்கெட் சைசிலா

    ReplyDelete
  89. இன்று பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.

    ReplyDelete
  90. @Saravanan..

    #கொஞ்சம் பொறுப்பா.. போடுவாங்க# 😃😀😍

    ReplyDelete