Saturday, November 12, 2022

ப்ராங்க்பர்ட் டயரி - 2 !

 நண்பர்களே,

உஷார் : 

1 .இன்னொரு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இது !

2.போன பதிவு : ஆந்தையன் - the traveler-ன் பதிவென்பதால் சற்றே கெக்கேபிக்கே ரகமாக இருந்திருக்கலாம் ! இதுவோ ஆந்தையன் - the editor-ன் பதிவென்பதால் has to be businesslike ! So இது அதுவல்ல....அது இதுவல்ல..!

வணக்கம் . முதல் பாகம் நன்றாக அமைந்து விட்டால், இறுதிப் பாகம் அதே அளவினில் அமைவதில்லை என்பதொரு பொதுவான jinx ! பார்க்கலாமே - இந்த ப்ராங்க்பர்ட் டயரியின் இறுதிப் பாகம் அந்த நியதிக்குக் கட்டுப்படுகிறதா- விதிவிலக்காகிறதா என்று!

அக்டோபர்...20...! மப்பும், மந்தாரமுமான அந்த ஜெர்மானியக் காலைப் பொழுதினில்  புத்தக விழாவின் வாயிலில் நின்றபடிக்கே என் கையிலிருந்த காகிதத்தை வாசிக்கலானேன் - யாரை ? எத்தனை மணிக்குச் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் உள்ளதென்று ! இளம் குளிருக்கு ஆளாளுக்கு மப்ளர்களுக்குள்ளும், கோட்களுக்குள்ளும் புதைந்து கிடக்க, நானோ “அபியும்... நானும்” படத்து பிரகாஷ்ராஜ் போல, ஒரேயொரு மெல்லிசான ஸ்வெட்டரை போட்டுக்கினு- ”குளிரலியே... எனக்குக் குளிரலியே...” என்பதாய் சீன் போட்டுக் கொண்டிருந்தேன்! 2020-க்கு முன்னே வரையிலும், பையைத் தூக்கிக் கொண்டு தேசாந்திரம் போவதெல்லாம் அடிக்கடியான நிகழ்வுகளாக இருந்து வந்ததால் -'இந்த மாசத்துக்கு ; இந்த ஊருக்கு ; இந்த ட்ரெஸ் தோதுப்படும் ; இதை-இதை எடுத்துப் போகணும்' - என்பதெல்லாம் அத்துப்படியாக இருந்து வந்தது ! ஆனால் கொரோனா புண்ணியவானின் உபயத்தில் வீட்டிலேயே கிட்டத்தட்ட 36 மாதங்களாய்க் குப்பை கொட்டிக் கொண்டதன் பலன் - துணிகளையும் காணலை ; கண்ணில் படுபவைகளோ தொந்திக்கும் சேரலை ! வாசலிலேயே நின்றிராமல், உள்ளே புகுந்தால் ஊதைக் காற்று படுத்தாது என்பதால் உள்ளுக்குள் புகுந்தேன் - முதுகில் செமையாய் உப்புமூட்டை நமது காமிக்ஸ் மாதிரிகளுடன் ! அதிலும் எனது முதல் சந்திப்பே போனெலியுடன் எனும் போது, ​​அவர்களுக்கென கொண்டு சென்றிருந்த டெக்ஸ் ஹார்ட்கவர் இதழ்களெல்லாம் பிசாசுகளாய்க் கனத்தன !

ஆளாளுக்கு செல்போன்களில் வைத்திருந்த டிக்கெட்களை வாயிலில் நீட்ட - “ப்ளியாங் ... ப்ளியாங்”! என்ற ஓசைகளோடு அவற்றைச் சரிபார்த்து உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தனர். எனக்கோ என் முறை வரும் வரை படபடப்பு - 'இல்லியே... இந்த மூஞ்சியைப் பார்த்தால்லாம் பத்திரிகையாளனாட்டம் தெரியலியே ! போயி உண்டான டிக்கெட்டை வாங்கிட்டு வா!' என்று மூக்கில் குத்தி திருப்பியனுப்பிவிடுவார்களோ - என்று! ஆனால் எனக்கும் ஒரு 'ப்ளியாம்'... ஒரு புன்னகை... and I was into the Fair !

காகிதத்தில் கிறுக்கியிருந்த அட்டவணையில், போனெலியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு காலை 10-30க்கு என்றிருந்தது ! அவர்களோ புத்தக விழாவினில் ஸ்டால் எடுத்திருக்கவில்லை ! மாறாக - புத்தக விழா க்ரவுண்டுடனே இணைக்கப்பட்டிருந்த ஒரு சொகுசு ஹோட்டலில் தங்கி, அங்கே முதல் மாடியில் இருந்த ஹாலை 2 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தனர். So அவர்களைச் சந்திக்க Hotel Maritim என்ற அந்த இலக்கைத் தேடி நடக்க ஆரம்பித்தேன்! பொதுவாகவே வழி கண்டுபிடிப்பதில் நான் நயம் புளி! கூகுள் மேப்பைப் போட்டுக் கொண்டாலும் சரி, GPS-ஐ ஆன் செய்து பயணித்தாலும் சரி, கனகச்சிதமாய் தப்பான ரூட்டில் போவது எனக்குக் கைவந்த கலை! So புலிக்கேசி பாணியில் “இப்டிக்கா போனா பாதாளக் கிணறு ; இது தான் வந்த பாதை!” ! என்று சுற்றிச் சுற்றி வந்தேன் ! மணி வேறு பத்தேகால் ஆகியிருக்க, பதட்டமும் தொற்றிக் கொண்டது! ஒருவழியாய் இரண்டு தப்பான மாடிகளையும், இரண்டு தவறான கட்டிடங்களையும் கடந்த பிற்பாடு, ஹோட்டலுக்கான இணைப்பு இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன்! உசரமான கண்ணாடிக் கதவுகள் சாத்தி நிற்க, அவற்றைப் பிடித்து தள்ளிப் பார்த்தால்... ஊஹும்...'கிச்'சென்று பூட்டிக் கிடப்பது புரிந்தது ! இது ஆகுறதுக்கில்லே...! மரியாதையாய் வெளியே போய், கொஞ்சம் சுற்றி என்றாலும் ஹோட்டலுக்கு சாலை வழியாகவே போய்விடலாமென்று தீர்மானித்தேன் ! உள்ளே புகுந்த வேகத்தை வி்ட இரட்டிப்பு துரிதத்துடன் நான் வெளியேறுவதைப் பார்த்த வாயிலில் இருந்த பெண்ணுக்கோ வியப்பு! கவுண்டரின் அந்த ரொ-மா-ன்-டி-க் புன்னகையை அந்தத் திக்கில் உதிர்த்தபடிக்கே, ஓட்டமும், நடையுமாய்ப் போனவன் மூன்றே நிமிடங்களில், Maritim என்ற கம்பீரமான கண்ணாடி முகப்புடனான ஹோட்டலை எட்டி விட்டேன்! “இதுக்கு பேரு தான் பேலஸு!” என்ற வடிவேலுவின் டயலாக் தான் நினைவுக்கு வந்தது - உள்ளாற கால்வைத்த நொடியிலேயே ! திரும்பும் திக்கிலெல்லாம் செல்வச் செழிப்பின் அடையாளங்கள் விரவிக் கிடக்க, வேகமாய் ரெஸ்ட்ரூமைத் தேடிப் போனேன் - காற்றில் திசைக்கு ஒன்றாய் நட்டுக் கொண்டிருந்த கேசத்தோடு சமாதானம் பேசி, லேசாய்ப் படியச் செய்ய! ஒரு மாதிரியாய் அவர்களது மீட்டிங் ஹாலைத் தேடிப்பிடித்துப் போய் விசிட்டிங் கார்டை நீட்டினால் - நிறையப்பேர் ஓவர் கோட், கைகளில் பெட்டிகள் என்று நிற்பது தெரிந்தது ! “இன்ன மெரி...இன்ன மெரி, நான் இந்தியாவிலேர்ந்து வர்றேன்... இன்ன மெரி..இன்ன மெரி....மேடம் xxx-கிட்டே எனக்கொரு அப்பாயிண்ட்மெண்ட்  உள்ளது !" என்று டேபிளின் நின்று கொண்டிருந்த யுவதியிடம் சொன்னேன் ! அவர் என்னை ஒரு தினுசாய்ப் பார்த்தார்! 'ஒரு வேளை படிய வச்சது மறுக்கா நட்டுக்கிச்சோ? ... அல்லது ஒரு வேளை, அப்பாயின்ட்மெண்டை தப்பாகக் குறித்துக் கொண்டு லேட்டாகவோ ; சீக்கிரமாகவோ வந்து தொலைத்து விட்டேனோ?' என்ற யோசனையோடே மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தேன் ! குறைந்தது ஒரு டஜன் தனித் தனி மேஜைகள் & ஒவ்வொன்றிலும் 4 நாற்காலிகள் என்று ஜம்மென்று காட்சியளித்தது ! ஓரங்களிலோ கொஞ்சமாய் காமிக்ஸ் இதழ்கள் நின்று கொண்டிருந்தன ! 

என்னைப் பார்த்தவுடனே 'ஓ... மை காட்!' என்றபடிக்கே வந்தார் – நான் சந்திக்கவிருந்த நிர்வாகி ! அவருமே ஓவர் கோட்... கையில் பிரயாணத்துக்கான பெட்டி சகிதம் நிற்க, எனக்கு ஏதோ உதைத்தது! “ரொம்ப சாரி ... ரொம்ப சாரி” என்றபடிக்கே அவர் என் கையைக் குலுக்க, நான் நம்ம ட்ரேட்மார்க் முழியை முழித்து வைத்தேன்! தொடர்ந்த 2 நிமிடங்களில் அவர் பொரிந்ததன் சாராம்சம் இது தான் : 19 & 20 ஆகிய இரு தேதிகளுக்கு மாத்திரமே ப்ராங்பர்ட் புரோகிராம் அவர்களுக்கு! அன்று மாலை இத்தாலிக்குத் திரும்ப ஜெர்மானிய ஏர்லைன்ஸான Lufthansa-வில் அவர்களுக்கு டிக்கெட்! ஆனால் அன்று Lufthansa -வின் சார்பு நிறுவனமான German Wings என்ற குறைந்த கட்டண சர்வீஸின் பணியாட்கள் திடீரென்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பார்கள் போலும்! அவர்களுக்குத் தோள்தர Lufthansa பணியாட்களில் ஒரு பகுதியினருமே முன்வர, அன்றைக்கு மதியம் முதலாய் பிராங்க்பர்டிலிருந்து கிளம்பும் நிறைய விமானங்கள், காலவரையின்றி ரத்தாகிடும் அறிவிப்பு வந்துள்ளது போலும்! So நின்ற நிற்பில், அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்ட்ரைக் முடியும் வரை ஊருக்குத் திரும்ப முடியாது என்பது அவர்களது இக்கட்டு ! தவிர, அடுத்த சில நாட்களிலேயே இத்தாலியில், லூக்கா நகரில் ஐரோப்பாவின் பிரம்மாண்டமான காமிக்ஸ் திருவிழா அரங்கேறவிருந்த நிலையில், அதன் டாப் பங்கேற்பாளர்களான போனெலி முன்நின்று ஏகமாய் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய சூழல் ! So இந்த எதிர்பாரா வேலைநிறுத்தத்தால் , புத்தக விழாச் சந்திப்புகள் சார்ந்த  திட்டமிடல்கள் நிறையவே  சொதப்பிவிட்ட தாளா வருத்தம் அவர்களுக்கு ! And அவசரமாய்க் கிளம்பி, ஏர்போர்ட்டுக்கு ஓட்டமாய் ஓட வேண்டியுள்ளது என சங்கடத்தோடு விளக்கினார் ! அவர்களது அன்றாடங்கள் எத்தனை அசாத்திய பிஸியான பொழுதுகள் என்பதை இத்தாலியிலேயே நேரில் பார்த்தவன் என்ற முறையில், அவர்களின் இக்கட்டு எனக்குப் பூரணமாய்ப் புரிந்தது !

'என்னடா இது சோதனை - முதல் அப்பாயிண்ட்மென்டே இப்படி ஆகிப் போய்விட்டதே'  என்று உள்ளுக்குள் காற்று பிடுங்கியது போலிருந்து ! ! ஆனால் அவர்களது சங்கடங்களும் புரியாது இல்லை ! So நின்று பேசிக் கொண்டிருந்தால், அவர்கள் அனைவரின் புறப்பாடுமே தாமதப்படும் என்பதால் - “அடுத்த சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் !" என்றபடிக்கே விடைபெற்றேன் ! ஏழேகால் கிலோ காமிக்ஸ் பொதியுடன், மறுக்கா விழா நோக்கி நடை ; மறுக்கா அந்த 'ப்ளியாங்' டிக்கெட் பரிசோதனை வாயிலில் க்யூ ; மறுக்கா அதே புன்னகை அம்மணி! 'ஊசிப் போன மசால் வடையைத் தின்னுப்புட்டு, ஓட்டமாய் ஹோட்டலுக்கு ஓடியவன் இப்போது திரும்பி வந்துள்ளான் போலும்!' என்று அம்மணி உள்ளுக்குள் நினைத்திருக்கலாம்; ஆனால் மாறாப் புன்னகையோடு உள்ளே அனுமதித்தார்!

வரிசையாய் 20 & 21 தேதிகளில், நமது பல்வேறு படைப்பாளிகளுடன் சரம் கோர்த்த மாதிரியான சந்திப்புகள் இருந்தன ! முதலாவதாய் நான் சந்திக்கவிருந்தது நமது Lombard நிறுவனமே ! கேப்டன் பிரின்ஸ் ; ரிப்போர்ட்டர் ஜானி ; தோர்கல் ; ரோஜர் ; சிக் பில் என்று எண்ணற்ற கதை வரிசைகளை நமக்கு வழங்கியுள்ள இந்த ஜாம்பவான்களிடம் எனக்கு எப்போதுமே ஒரு மிடறு வாஞ்சை அதிகம் ; simply becos, வாழ்க்கையில் முதன்முறையாய் ஒரு கான்டிராக்ட்டில் கையெழுத்து இடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது Lombard நிறுவனத்துடன் தான் ! கொயந்தபுள்ளையாய் 1985-ல் பிராங்பர்ட்டில் புத்தக விழாவில் சந்தித்து, கேப்டன் பிரின்ஸ் கதைக்கு டிக் அடித்த கையோடு, அடுத்த சில நாட்களிலேயே பிரஸ்ஸல்ஸ் நகரினில் அவர்கள் குடலை உருவ, அவர்களது ஆபீசில் ஆஜராகியிருந்தேன் ! அப்போது பொறுப்பிலிருந்த நிர்வாகிக்கோ என்னை விடவும் மூன்று மடங்கு வயது ஜாஸ்தியிருக்கும்  ! முகம் முழுக்கப் புன்னகையோடு, எனது குழந்தைத்தனமான அவசரங்களை சகித்துக் கொண்டு, கான்டிராக்டை ரெடி செய்து, அங்கேயே என்னைக் கையெழுத்திட வாய்ப்பேற்படுத்தித் தந்தார் ! பொதுவாய் புத்தக விழாக்கள் முடிந்து ஊர் திரும்பியான பிற்பாடு, அவர்களின் ரெகுலர் பப்ளீஷர்களுக்கான கதைகளையும், கான்டிராக்ட்களையும் ரெடி செய்திடவே ஒரு மாதத்துக்கு மேலாகி விடும் ! அன்றைக்கு நாமோ, முகமில்லா அனாமதேயங்கள் ; கை நிறைய  பட்டாணிச் சுண்டல் வாங்க அவசியமாகிடக்கூடிய ராயல்டியினை மாத்திரமே தர முன்வந்திருந்தோம் & இந்தக் கொள்ளையில் "ஊருக்குத் திரும்புறச்சே, கையில் ஒரு கான்டிராக்டையாச்சும் கொண்டு போகாவிட்டால் கவுரத பிரச்சனையாகிப் போகும் !" என்ற வேண்டுகோளுடன் நின்றிருந்தேன் ! அத்தனைக்குமே சம்மதித்து, என் கையில் "பனிமண்டலக் கோட்டை" கான்டிராக்டைத் தந்து Good luck என்று வழியனுப்பினார் அன்றைய நிர்வாகி ! So எப்போதுமே அந்த நிறுவனத்தின் மீது நமக்கொரு லெவல் கூடுதலாய் நேசம் ! 

Cut to the present : அங்கே ஏற்கனவே பொறுப்பில் இருந்த லேடியோ கொரோனா ப்ரேக் சமயத்தில் விலகியிருந்தார் ! So அவரிடத்தில் பொறுப்பிலிருந்த புதியவரோடு நமக்கு மின்னஞ்சல் பரிச்சயம் மாத்திரமே! பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த அவர்களது ஸ்டாலில் நான் போய் நின்ற நொடியே அவர் அடையாளம் கண்டுகொண்டார்- இந்தியாவிலிருந்து அடிக்கொருதரம் ஈ-மெயிலில் உசிரை வாங்கும் மலைமாடு இது தானென்று ! முகம் நிறையப் புன்னகையோடு என்னை அமரச் செய்து நலம் விசாரித்தபடிக்கே பேச ஆரம்பித்தார் ! நாம் சமீபங்களில் புதிதாய்ப்  பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள் தவிர்த்த பாக்கி அனைவருமே, நமக்குப் பத்தோ - இருபதோ - முப்பதோ ஆண்டுகளாய்த் தெரிந்தவர்களே என்பதால் இந்தச் சந்திப்புகள் எல்லாமே அந்த நட்புகளை உரப்படுத்திக் கொள்ளும் பாணியிலானவை மட்டுமே! தவிர, என்ன வேண்டுமானாலும் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால் விபரங்கள்; கதைக் கோப்புகள் கிட்டி விடும் எனும் போது, அவர்கள் முன்னே ஆஜராகி, பூமியைப் புரட்டிப்போடவல்ல காரியங்களைச் சாதிக்க வேண்டிய நிலைமையினில் இல்லை தான் ! So புதிதான கதை வரவுகள் ; திட்டமிடல்களில் உள்ள சமாச்சாரங்கள் ; சில பல முந்தைய தொடர்களின் புனர்ஜென்மங்கள் சார்ந்த வினவல்கள் என்பனவே நமது படைப்பாளிகளிடம் நான் வாயைப் பிடுங்க எத்தனித்தவை ! And அவற்றின் பலன்களைக் கீழே தொகுத்துள்ளேன் - நமக்கு சுவாரஸ்யம் தரும் விதமாய் : 

1. நமது செம்பட்டைத் தலை ஜேம்ஸ் ... அது தான் முதலைப்படையின் கமாண்டர் ப்ரூனோ ப்ரேசில் இருக்கிறார் அல்லவா? அவரது version 2.0 மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே இரு பாக ஆல்பம் வாயிலாக அறிமுகம் கண்டுள்ளது ! And அவரது ஆல்பம் # 3 ரொம்பச் சமீபமாய் வெளியாகியிருக்க, அங்கே பிராங்பர்ட்டில் அதன் ஹார்ட்கவர் ஆல்பம் கம்பீரமாய் ஷெல்பில் அமர்ந்திருந்தது! ஆர்வமாய் எடுத்துப் புரட்டினேன்; அட்டகாசமான சித்திரங்கள்... கலரிங் பாணி !! அது பற்றியும், தொடரின் எதிர்காலம் பற்றியும் கேட்டுக் கொண்டேன் ! Sounded very promising !!

My கேள்வி # 1 to you :

What say Folks - முதலைப் பட்டாளத்தின் இரண்டாவது சுற்றுக்கு நாம் தயாராகிக்கலாமா ? காத்திருக்கும் ஆண்டினில் முதலைப்பட்டாளத்தை மறுக்கா ரசிக்க ஆரம்பிக்கலாமா ?

2. கொரோனா லாக்டவுனிற்கு ஓரிரு வாரங்கள் முன்னே வெளியான வெளியான ZAROFF நினைவில் உள்ளாரா ? தென்னமெரிக்காவின் அமேசான் காடுகளில் நடந்த அந்தத் 'தெறிக்கும்' ஜீவமரண போராட்டம் - “நில் ... கவனி ... வேட்டையாடு” ஆல்பத்தை சூப்பர் ஹிட்டாக்கியிருந்தது. ப்ரெஞ்ச்சிலும் இவருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதால் Zaroff இன்னொரு ஒன்-ஷாட்டில் களமிறங்கவுள்ளாராம் & ஆட்டகளம் இம்முறை மாஸ்க்கோவாம் ! 2023-ல் ஏப்ரல்வாக்கில் இந்த ஆல்பம் ரெடியாகுமாம்!

My  கேள்வி #2:

ஹீரோவாய்ப் பார்ப்பதா ? வில்லனாய்ப் பார்ப்பதா இந்த மனஷனை ? இவரது இரண்டாவது ஆல்பத்துக்கும் நம் மத்தியினில் ஆர்வங்கள் சேஸ்தானு ? இவருக்கும் 'ரைட்' சொல்லி வண்டியில் தொற்றிக் கொள்ளலாமா நாம் ?


3. அப்புறம் தோர்கல் பற்றி!! ஏற்கனவே இளம் தோர்கல் தனித்தடம் ஓட்டமெடுத்து வர, இப்போது “THORGAL SAGA” என்று புதியதொரு மினித்தடம் உருவாகி வருகிறதாம்! இப்போதைய திட்டமிடல் - மொத்தம் 4 ஆல்பங்கள் என்பதே ! 2023-ல் துவங்கி, ஆண்டுக்கு ஒன்று வீதம் வெளியாகிடவுள்ளதாம் ! ஒவ்வொரு ஆல்பமும் 112 பக்கங்களில் இருக்க ; 4 வெவ்வேறு ஓவியர்கள் இதனில் பணியாற்றுவராம் ! இந்தத் தொடரின் கதைக்கருவைப் பற்றிச் சொன்னார்கள்  - 'WOWWW' என்று தான் சொல்லத் தோன்றியது எனக்கு! முதல் ஆல்பம் ஜனவரி '23-ல் வெளிவரவுள்ளதாம்! So அந்தப் preview ரெடியாகும் சமயமாய் கதை பற்றிய பகிர்ந்திடலாம் folks!

My கேள்வி #3:

இந்தத் தனித்தடத்தின் முதல் ஆல்பம், அநேகமாய் டிசம்பரில் நமக்குக் கிட்டிவிடும்! படித்துப் பார்த்து விட்டு ரம்யமாய்த் தெரியும் பட்சத்தில், இதனுள்ளேயும் மூக்குகளை நுழைக்க ஓ.கே.வா ?

4. LONESOME !! ட்யுராங்கோவின் பிதாமகரான Yves Swolfs உருவாக்கியுள்ள இன்னொரு கௌ-பாய் தொடர் இது! ட்யுராங்கோ பாணியில் சித்திரங்கள் இருந்தாலும், கதை பாணியில் இது மாறுபட்டது! 4 ஆல்பங்களில் முதல் சுற்று & ஜுலை 2023-ல் க்ளைமாக்ஸ் ஆல்பம் வெளியாகிடவுள்ளது ! And இரண்டாம் சுற்றில் தொடர் தொடரும் போலும் - been a huge hit there already !!

My கேள்வி # 4:

இந்தத் தொடரின் காண்டிராக்ட் நம்மிடம் கொஞ்ச காலம் முன்னிருந்தே உள்ளது ! முதல் சுற்றின் முற்றுப்புள்ளி கண்ணில் தெரியும் வரையிலும் 'தேமே' என்றிருப்போம் என்ற எண்ணத்தினில் இருந்தேன் ! Now that the climax is in sight - ட்யுராங்கோ பாணியில் நாலு அத்தியாயங்களையும் ஏக் தம்மில் 2024-ல் களமிறக்கி விடலாமா? ? அல்லது அடுத்தடுத்த மாதங்களில் சிங்கிள் ஆல்பங்களாகவா ?


5. ட்யுராங்கோ பற்றிய Topic-ல் இருக்கும் போதே- இளம் ட்யுராங்கோ பற்றியுமே  பேசிப்புடலாமா ? இது என்ன- புது மேட்டரா கீதே ? என்கிறீர்களா? Oh Yes - 4 பாகத் திட்டமிடலில், ட்யுராங்கோவின் இளமை நாட்களைச் சித்தரிக்க படைப்பாளிகள் ரெடியாகி விட்டனர் ! இதோ- இம்மாதமே அதன் முதல் ஆல்பம் ரிலீஸாகிறது… and 2023-ன் இறுதிக்குள் முதல் சுற்று பூர்த்தி காணவுள்ளது ! 

My கேள்வி #5:

இளம் ட்யுராங்கோ காலத்தின் கட்டாயாமா folks - நமது அணிவகுப்புகளில்? Again - ஒரே தொகுப்பா ? அல்லது சிங்கிள் இதழ்களிலா ?

6. ரிப்போர்ட்டர் ஜானி 2.0

இந்தப் புது வரிசையில் ஆல்பம் # 6 வெளியாகி உள்ளது & ப்ராங்க்பர்ட்டில் அதனைப் பார்க்கவும் செய்தேன்! செம அழகாய் இருந்தது! ஒரு வருஷம் க்ளாஸிக் பார்ட்டி ; மறுவருஷம் version 2.0 ஜானி எனப் பயணித்தால் அயர்வின்றியிருக்குமென்று மனசுக்குப் பட்டது!

My கேள்வி #6:

ஏற்கனவே துடைப்பத்தால் சாத்தி, பதிலும் சொல்லியுள்ளீர்கள் தான் ; but still இந்தக் கேள்வியினைக் கேட்காது இருக்க இயலவில்லை ! மாற்றங்களைக் கண்டாலே ஒய் திஸ் கொலவெறி guys? 'வேணவே வேணாம்' என்று அடம்பிடிக்கும் அளவுக்கு இந்த ஜானி 2.0 மோசமும் இல்லை & 'மணந்தால் மகாதேவி தான்!' என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு க்ளாஸிக் ஜானி ஒரு அசாத்தியமும் அல்ல  என்பது எனது அபிப்பிராயம் ! பெட்ரோமேக்ஸ் லைட்டை அவ்வப்போது மாற்றித் தான் பார்ப்போமே ?

7. நிஜத்தில் அரங்கேறிய சில க்ரைம்களைப் பற்றியதொரு தொடரை சமீபமாய் உருவாக்கியுள்ளனர் படைப்பாளிகள்  ! நிகழ்ந்த அந்தப் புதிரான கொலைகள் ; அது சார்ந்த புலனாய்வின் கட்டங்கள் ; விசாரணைகள் ; முடிச்சவிழ்ப்புகள் பற்றியெல்லாம் பதிவிட்டு 150+ பக்க நீளத்துக்கு ஆல்பங்கள் உருவாக்கியுள்ளனர்! நிஜ சமாச்சாரங்கள் எனும் போது maybe இங்கே மிகைப்படுத்தப்பட்ட டமால்-டுமீல்-ணங் சமாச்சாரங்கள் இல்லாது போகலாம்; ஆனால் நிஜமான புலனாய்வுகள் பொதுவாய் இந்த சினிமா பாணியில் இருப்பதில்லை தானே?!

My கேள்வி #7:

டமால்-டுமீல்-ணங் இல்லாங்காட்டியும் ரசிக்க ஓ.கே.வா guys? அல்லது இதை கி.நா. அணிக்குள் தள்ளி விடுவதே உசிதமாகிடுமா ?

8. நாகரிக வெட்டியானின் ஆல்பம் # 5 ஏப்ரல் 2023-ல் வெளிவரவுள்ளது. ஸ்டெர்னின் பயணம் ப்ரெஞ்சில் ரொம்பவே ரசிக்கப்பட்டு வருகிறதாம் !

My கேள்வி #8:

நம் மத்தியில் ஸ்டெர்ன் வேரூன்றியிருப்பது கண்கூடு ! ஆண்டுக்கொரு ஸ்லாட் இனி இவருக்கு உறுதிப்படுத்தி விடலாமா ? அல்லது முன்பதிவுகளில் "விரும்புவோர் வாங்கட்டும்" என்பதே சுகப்படுமா ? 

9. ஒரிஜினல் வெட்டியானின் (THE UNDERTAKER) ஆல்பம் # 7 இரு அத்தியாயக் கதையாக, வழக்கம் போல் வெளிவருகிறதாம் ! சுற்றின் முதல் கதை செப்டம்பர் 2023-ல் வெளிவரவுள்ளதாம் ! அதன் க்ளைமேக்ஸ் பாகமும் வெளியான பிற்பாடு ஒன்றிணைத்துப் போட்டு விடலாம் ! ஓ.கே. தானே guys?



10. நமது மறதிக்கார XIII-ன் ஆல்பம் # 28 இம்மாதம் ரிலீஸ் ஆகிடுகிறது & அதன் ஹார்ட்கவர் ஆல்பமும் அங்கே ஸ்டாலில் கண்ணில்பட்டது ! ப்ரெஞ்சில் இருந்தாலும், படம் பார்க்க அதை எனக்குத் கோரினேன் & மறுநொடியே தந்து விட்டார்கள் ! க்யூபாவில் ஓட்டமெடுக்கும் இந்தக் கதை - அடுத்த ஆல்பத்தோடு நிறைவு காணவுள்ளதாம் ! அதாவது ஆல்பம் #29 will wind up Cycle # 2. மாஸ்கோவில் பயணிக்கும் இந்த இறுதி ஆல்பத்தில், மேற்கொண்டான சுற்றுக்களுக்கு வாகான  கொக்கிகளைப் போட்டே வைத்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை! ஆனால் இப்போதைக்கு சுற்று # 3 பற்றிப் பெரிதாய்த் திட்டமிடல்கள் எதுவும் இல்லையாம் !


11. இரத்தப் படலம் மெயின் தொடரில் பெரிதாய் ஆக்ஷன் இப்போதைக்கு இல்லையெனினும், முக்கியக் கதாப்பாத்திரமான லெப்டினெண்ட் ஜோன்ஸ் பிஸியாகவே இருந்திடவிருக்கிறார் ! Because இவருக்கெனவொரு பிரத்தியேக 3 பாக தனித்தடம் தயாராகி வருகிறது! 2023-ல் ஆரம்பித்து, ஆண்டுக்கொன்று என 2025 வரையிலும் இந்தத் தொடர் உருவாக்கம் கண்டிடவுள்ளதாம்! XIII spin-offs வரிசையில் ஏற்கனவே ஜோன்ஸுக்கு ஒரு ஆல்பம் உண்டெனினும், அவரை ஒரு முப்பாகத் தொடருக்கு நாயகியாக்கிட முன்வந்துள்ளனர் இம்முறை ! இது 2025-ல் தான் நிறைவுறும் என்பதால் நிறையவே அவகாசம் உள்ளது நமக்கு - இதைப் பற்றித் தீர்மானிக்க!


12. அப்புறம் ஒரு ஜாம்பவான் கதாசிரியரின் முன்நாட்களது கௌபாய் தொடரானது புதுப்பிக்கப்பட்டு 2023-ன் மத்தியில், புது கலரிங் சகிதம் களம் காணவுள்ளது! மொத்தம் 6 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடரின் சுற்று 2023-ன் இறுதிக்குள்ளேயே நிறைவும் காணவுள்ளதாம்!

My Question #9:

கதாசிரியர் ஒரு செம ஆற்றலாளர் என்பதற்காகவே இந்தத் தொடரினை நாம் பரிசீலனை செய்திடலாமா ? அல்லது - காது வழியே cowboys வெளிப்படும் அளவுக்கு ரொம்பவே திகட்ட ஆரம்பித்து விட்டது சாமீ என்பீர்களா ?

13. கௌபாய்களின் கரடுமுரடான உலகிலிருந்து நேராய்க் கோடீஸ்வரக் கோமகனின் `W` சாம்ராஜ்யம் பக்கமாய்ப் பயணித்தால் - 2023-ன் இறுதியில் லார்கோ வின்ச்சின் புதிய ஆல்பத்தின் க்ளைமேக்ஸ் ஆல்பம் வெளியாகுமென்று அறிய வருகிறோம்! So 2024-ல் லார்கோ நம் மத்தியில் இருப்பாரென்று எதிர்பார்க்கலாம்!

கதாசிரிய ஜாம்பவான் வான் ஹாம் இந்தத் தொடரிலிருந்து விடைபெற்றான பின்னே விற்பனைகள் எவ்விதம் உள்ளன? என்று கேட்டு வைத்தேன்! வான் ஹாமின் உச்சத்தின் போது 'லார்கோ ஆல்பங்கள்' தலா 4 இலட்சம் விற்பனையாகினவாம்! இன்றைக்கு அத்தனை இல்லை என்ற போதிலும் செம decent ஆனதொரு விற்பனை எண்ணிக்கையைக் குறிப்பிட்டார்கள்! நாமளோ 10 வருஷங்களாய் ப்ளு ஜீன்ஸ் பில்லியனரின் கையிருப்பைக் கரைக்க கதகளி ஆடி வருகிறோம்! Phew!!

14. Last but not the least - தங்கத்தலைவனின் புது தடம் ஒன்றினை புதுப் படைப்பாளிகளுடன் துவக்கியிருந்தனர் 2019-ல் ! அதன் க்ளைமாக்ஸ் பாகம் 'புலி வருது..புலி வருது' கதையாய் ஜவ்வு இழுத்து வந்தது ! Finally அது 2023-ன் இரண்டாம் பாதியில் வெளியாகிடுமாம் ! So அடுத்தாண்டினில் ஒரு புது டபுள் ஆல்பம் கிட்டியிருக்கும் தளபதியின் ரசிகர்களுக்கு ! Fingers crossed !

இங்கும் அங்குமாய் மந்தியாட்டம் சுற்றிச் சுற்றி நமது பல்வேறு பதிப்பகங்களிடமிருந்து சேகரிக்க இயன்ற சேதிகள் இவையே! இவை தவிர்த்து, புதுசு புதுசாய் ஏகப்பட்ட தொடர்களைக் கண்ணில் காட்டிட, அவற்றின் கோப்புகளை அனுப்பச் சொல்லியுள்ளேன்! And அந்தக் குவியலைப் பார்க்கும் போது , இப்போதே இன்னொரு அட்டவணையினை போட்டாலென்ன என்ற பேராசை பொங்காத குறை தான்! ஆனால் ஓவர் ஆசை உடம்புக்கு ஆகாது என்பதால், ஒரு பெருமூச்சோடு கதைகளை எனது டயரியில் குறித்துக் கொண்டு, இப்போதே 2024 பக்கமாய் கோழி எப்போது கூவுமென்று காத்திருக்கிறேன்!

ஒவ்வொரு ஸ்டாலாய்க் குதித்துக் குதித்து ஒவ்வொரு பதிப்பகத்தோடும் குசலம் விசாரித்த களைப்பில் வயிறு பிறாண்டிய போது சாப்பிட வெட்டவெளியில் அமைந்திருந்த அமைந்திருந்த Food Trucks பக்கமாய் நடையைக் கட்டினேன்! உள்ளே ஸ்டால்களிலும் ; ஒவ்வொரு அரங்கிலும், நடைபாதையிலும் தென்படாத பரபரப்பு - இங்கே சாப்பாட்டுக் கடைகளின் முன்னே தெறித்துக் கொண்டிருந்தது! நம்மூரில் போல முண்டியடித்துக் கொண்டு முன்னே போக இங்கெல்லாம் வழி லேது என்பதால், நெளிந்த பாம்பைப் போல நீண்டு நின்ற க்யூவின் வாலில் போய் நின்று கொண்டேன்! 5 நிமிடங்கள்ஆகியிருக்கும் ; ஆனால் வரிசை இம்மியூண்டு கூட நகர்ந்தது போல் தெரியக்காணோம் ! நமக்குத் தான் பசியில் கண்ணடைக்கிறதா என்று பார்த்தால் -  'இன்னியோட உலகம் முடிஞ்சே போய்விடும்!' என்ற பயம் வந்தவர்களைப் போல, ஆளாளுக்கு ரவுண்ட் கட்டிக் குமுறிக் கொண்டு ஆர்டர் தருவதைப் பார்க்க முடிந்தது ! எனது முறை வர குறைந்தபட்சம் அரை அவராவது ஆகும் போலத் தோன்றியது! “அடப் போங்கைய்யா, உங்க காய்ஞ்ச ரொட்டியைத் தின்ன இவ்வளவு காத்திருக்க முடியாது!' என்றபடிக்கே மறுபடியும் விழா அரங்குக்குள் புகுந்தேன்! அந்த லஞ்ச் வேளையின் அடிபிடிக் கூட்டம் மட்டுப்பட்ட பின்னே, திரும்பப்போய் சாப்பிட்டுக் கொள்வதென்று தீர்மானித்தேன்! அது வரையிலும், புது ஸ்டால்களுக்குப் போய் பராக்குப் பார்த்தபடிக்கே, அவர்களது கேட்லாக்களை வாங்கிக் கொண்டே, விருந்தாளிகளை உபசரிப்பதற்கென வைத்திருக்கும் பிஸ்கெட்களையும், சாக்லெட்டுகளையும் லைட்டாய் ருசி பார்த்தேன் ! So தேசம் தேசமாய் புக்ஸ் & பிஸ்கெட்ஸ் ருசி பார்ப்பதில் எனது மதியம் நகன்றது !

நாம் மாமூலாய் குப்பை கொட்டும் ப்ரெஞ்சு பதிப்பங்களைத் தாண்டி வேற்று காமிக்ஸ் பதிப்பகங்களைத் தேடியபடியே நடக்க, கொரிய; ஜப்பானியப் பதிப்பகங்கள் கண்ணில்பட்டன! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஆண்டில் நான் எதிர்பார்த்திருந்த பரபரப்பு ஒரு மிடறு குறைச்சலே ! முன்னெல்லாம் எந்த நேரம், எந்த அரங்கில் நடைபோட்டாலும், ஸ்டாலில் உள்ளோர் பிஸியாக இருப்பதுண்டு ! ஆனால் இம்முறையோ செல்லை நோண்டிக் கொண்டு காலை நீட்டி ஓய்வெடுத்த ஜனம் கணிசமாய்க் கண்ணில் பட்டனர்! And காமிக்ஸ் பதிப்பகங்களின் பங்கேற்புமே குறைவு தான் ! அமெரிக்க ஜாம்பவான்களில் கிட்டத்தட்ட யாருமே வந்திருக்கவில்லை ; ஹாலந்திலிருந்தும் யாருமே கண்ணில்படவில்லை! அதற்கு மீறி வந்திருந்த பதிப்பகங்கள் ஸ்டால் போட்டிருக்காமல்; பொதுவான இடங்களில் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருந்தனர்! நமது ப்ரெஞ்ச் அல்லாத படைப்பாளிகளில் சிலரைக் கூட இது போல் ஆங்காங்கே இருந்த Coffee ஷாப்களில் தான் சந்திக்க நேர்ந்தது!

இம்முறையின் அரட்டைகளின் போது, பொதுவாகவே அனைத்துப் பதிப்பகங்களும்  சொன்னவொரு விஷயம் ரொம்பவே பெருமூச்சிடச் செய்தது என்னை! இந்த இரண்டரை ஆண்டுகால லாக்டௌன் நாட்களில் காமிக்ஸ் விற்பனைகள் ப்ரெஞ்சு மார்க்கெட்களிலும் சரி, அமெரிக்க மார்க்கெட்களிலும் சரி, செம ஏற்றம் கண்டுள்ளனவாம் ! இதுதான்; அது தான் என்றெல்லாம் இல்லாது, எல்லா தேசங்களிலும், எல்லா மொழிகளிலுமே புக்ஸ் செம சேல்ஸ் போலும்! கேட்க ரொம்பவே பிரம்மிப்பாக இருந்த போதிலும், உள்ளுக்குள் லைட்டாக நெருடாமல் இல்லை - நமக்கெல்லாம் எதிர்மாறான தாக்கம் தான் கிட்டியுள்ளதே என்று! அது மட்டுமன்றி, வழக்கத்தை விடவும் ஜாஸ்தியாய் புக்ஸ் விற்று வரும் சூழலில் இருப்போரிடம்; அதுவும் சிலபல இலட்சங்களில் ப்ரிண்ட்ரன் கொண்டிருப்போரிடம் போய் நின்று - “தர்மதுரை… ஆயிரத்துச் சொச்சம் ப்ரிண்ட்ரன்னுக்குப் பார்த்து, ஏதாச்சும் பண்ணிப் போடுங்க எசமான்!” என்று கேட்பதே கூசச் செய்தது தான்! ஆனால் விரல்களில் ஐந்தும், ஐந்து ரகம் என்பதைப் புரிந்திருக்கும் படைப்பாளிகள் - நம்மை யாசகம் தேடுவோராய் ஒற்றை நொடி கூட உணரச் செய்திடாது பார்த்துக் கொண்டது தான் நீ்ங்களும், நாங்களும் செய்த புண்ணியங்களின் பலன்! And இப்போதெல்லாம் தரைமட்டமான ராயல்டிகளை நாமுமே கோருவதுமில்லை; கொஞ்சமேனும் decent ஆனதொரு தொகையாய் இருந்தாலன்றி, விரும்பும் திக்குக்கெல்லாம் படைப்பாளிகளை இழுப்பதென்பது நடவாக் காரியமாகி விடும் என்ற பயம் உள்ளுக்குள்!

ப்ராங்க்பர்ட் புத்தகவிழாவில் தொழில்முறை விசிட்டர்களே முக்கால் பங்கு! உள்ளூர் ஜனம் பராக்குப் பார்க்க வருவதோடு சரி - சர்வதேசப்  பதிப்பங்களிடமிருந்து புக்ஸ் எவற்றையும் வாங்கிட இயலாது! ஆனால் ஒரேயொரு முரட்டு அரங்கிலிருந்து உள்ளூர் புள்ளீங்கோ சாரையாய் வெளிப்படுவதும்; ஆளாளுக்குக் கைநிறைய புக்ஸோடு வலம் வருவதையும் பார்க்க முடிந்த போது தான் ஞாபகத்துக்கு வந்தது - ஜெர்மானியப் பதிப்பகங்களுக்கு மாத்திரமே விழாவின் போது விற்பனை செய்திடும் அனுமதி உண்டென்பது! 

நம்மைப் போலவே வேற்றுமொழிப் பதிப்புகளின் உரிமைகளை வாங்கி, ஜெர்மன் மொழியில் பிரசுரிக்கும் ஒரு காமிக்ஸ் நிறுவனத்தை ஏற்கனவே எனக்குத் தெரியும்! ரைட்டு… அவர்களைப் போய் எட்டிப் பார்க்கலாமே என்றபடிக்கு உள்ளே நுழைந்தால் - மூச்சடைக்காத குறை தான்! பொன்னியின் செல்வன் ஷுட்டிங் ஸ்பாட்டில் என்னவொரு திரளும், பரபரப்பும் இருந்திருக்குமோ - அதைக் காட்டிலும் மூன்று மடங்கு தெறி! ஒவ்வொரு பதிப்பகமும் டபுள், ட்ரிபிள் ஸ்டால்கள் எடுத்து புக்ஸை மலை உசரத்துக்கு அடுக்கி வைத்திருக்க, மக்கள் மொய்த்தெடுத்துக் கொண்டிருந்தனர்! நாவல்கள்; காமிக்ஸ்கள், இலக்கியம்; பொது ரசனை என்று புஸ்தக பாணிகள் எதுவாயினும், சகலத்திலும் சொல்லி மாளா ஜனம்! ஒரு பெரும் பப்ளிஷரின் ஸ்டாலிலோ - அழகானதொரு யுவதி முகம் நிறையச் சிரிப்போடு ஒரு உசரமான மேஜையருகே, உசரமான ஹீல்ஸ் அணிந்து நின்றிருக்க, அவருக்கு முன்னே நீளமானதொரு வரிசையில் மக்கள் தேவுடு காத்து நின்றனர்! அனைவரின் கைகளிலும் ஒரே புக்! ஆஹா…. அந்த அழகு அம்மணி தான் அதன் எழுத்தாளர் போலும் ; புக்கை வாங்கிய கையோடு ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டு, ஒரு ஸெல்ஃபியும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது புரிந்தது! அந்த வரிசையில் இளவரசரின் ஆகிருதிகளிலும், ஈரமான கடைவாய்களோடும் சிலர் நிற்பதையும் பார்க்க முடிந்தது! 'இவனுங்களைப் பார்த்தாக்கா இம்மாம்தண்டி புக்குகளைத் தலைக்கு வச்சுப் படுக்கிற பார்ட்டிங்க மாதிரிக் கூடத் தெரியலியே ?' என்று மைண்ட்வாய்ஸ் சொல்லியது! அவர்களும் அம்மணியருகே நின்று, ப்ராங்க்பர்ட்டிலிருந்து ஹாம்பர்க் வரை விரியும் இளிப்புகளோடு selfie எடுத்துக் கொள்வதைப் பார்த்த போது காதுகள் புகை சமிக்ஞைகளை எழுப்பாத தான் ! அதே சமயம் நமது இந்தச் சிறுவட்டத்தின் விதியையும் எண்ணி இளித்துக் கொள்ளாதிருக்கவும் இயலவில்லை ; இங்கெல்லாம் selfie எடுத்தாக்கா டாலடிக்கும் கபாலமும், கோல்ட்பிஷ் கண்களும்  தானே வாய்க்கும் !! Poor you folks !!

நடுநாயகமாய் Carlsen Venlag என்றிருந்த காமிக்ஸ் பதிப்பகத்து ஸ்டாலினுள் போனால்  கிறுகிறுத்துப் போனேன்! ஒரு ஜெர்மன் காமிக்ஸ் வாசகனுக்கு பூலோக சொர்க்கமென்று ஏதேனும் இருக்குமெனில் – அது அந்த ஸ்டாலைத் தவிர்த்த வேறு ஏதுமாய் இருக்க வாய்ப்பு பூஜ்யமே! நாமெல்லாம் ஓரமாய் நின்று பராக்குத் தான் பார்க்க வேண்டும் - அவர்களது காமிக்ஸ் நாயக / நாயகியரின் அணிவகுப்பின் முன்னே ! 37 ஆண்டுகளுக்கு முன்னமே இதே பிராங்க்பர்ட்டில் அவர்களைச் சந்தித்திருந்தேன் தான்; அன்றைக்கே ரவுண்ட் கட்டி அடித்துக் கொண்டிருந்தனர் தான் ; ஆனால் இப்போதோ முற்றிலுமாய் ஒரு உச்சத்தில் வீற்றிருப்பது புரிந்தது! ஸ்டாலுக்கு நான்கு திக்குகளிலும் வாயில்கள்; எல்லா வாயில்களிலும் கம்ப்யூட்டர் சகிதம் பில் போட பசங்கள் / பிள்ளைகள்! டன் டன்னாய் காமிக்ஸ் இதழ்கள் உள்ளே குவிந்து கிடக்க, ஆளாளுக்கு பில்லிங் கவுண்டர்களில் குமுறிக் கொண்டிருந்தனர்! இன்னொரு பக்கமோ, ஒரு சிறார் பதிப்பகம் - சிறுவர் கதையெழுதும் ஒரு author-ஐ இட்டு வந்து, அவரது கதை பற்றிய முன்னோட்டம் பின்னே இருந்த டி-வியில் ஓடியபடியே இருக்க, சிறுசுகளை அரங்கிலேயே அமர்த்தி, அவரோடு அளவளாவ விட்டிருந்தனர்! அருகே ஒரு அம்மணி அமர்ந்து, அவரது லேட்டஸ்ட் புக்கிலிருந்து நிதானமாய் வாசித்துக் கொண்டே போக, அரை டிக்கெட்கள் அனைத்தும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த காட்சியின் ரம்யத்தை எழுத்துக்களில் கொண்டு வர யாரேனும் பிறந்து வந்தால் தானுண்டு! பொறாமையாக இருந்தது - இந்தத் தலைமுறையில் ஒரு பகுதியினராவது வாசிப்பில் இத்தனை கொண்டிருப்பதைப் பார்க்கும் போது! Phewwww! 

பதிப்புத் துறையானது என்றைக்குமே அஸ்தமனம் காணாது என்ற நம்பிக்கையோடு அந்த அரங்கிலிருந்து வெளிப்பட்ட போது, வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது! கொஞ்ச நேரம் பராக்குப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு, லேசாக மழை ஓய்ந்த சமயமாய் குடையை விரித்துக் கொண்டு சர்வதேச பதிப்பக அரங்குக்குள் புகுந்தேன்! அடடே- பரிச்சயமான தமிழ் முகங்கள் எதிர்ப்பட வேகமாய் நடை போட்டேன்! அரசின் சார்பினில் சென்னைப் புத்தக விழாவினை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கினில் பயணித்திருக்கும் ஆய்வுக் குழுவினர் என்பதால் அவர்களது முயற்சிகள் எத்தனை மகத்தானது என்பது புரிந்தது! பரபரப்பாய், பம்பரமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருந்தோரிடம், அதிகமாய்ப் பேச இயலவில்லையென்றாலும், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பணிக்குப் பிள்ளையார் சுழி போட வந்திருந்தோரைச் சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது!

அரங்கினுள் தொடர்ந்து நடை போட்டால் நமது நாட்டுப் பதிப்பகங்களின் ஸ்டால்கள் கண்ணில்பட்டன ! முக்கால்வாசிப் பதிப்பகங்கள் டில்லியைச் சார்ந்தவை & சிறுவர் புக்ஸ் வெளியிடும் துறையில் இருப்பது புரிந்தது! சர்வதேசத் தரங்களுக்குப் போட்டி போடும் விதமாய் படைப்புகளும், தரங்களும் இருப்பதை பராக்கு பார்த்தபடிக்கே நடந்தேன்! ஆனால் வழக்கமான எண்ணிக்கையில் இம்முறை இந்திய ஸ்டால்கள் இல்லை என்பதை உணராது இருக்க முடியவில்லை! சிக்கனங்கள் இந்த நொடிகளின் தேவை எனும் போது புரிந்து கொள்ள முடிந்தது தான்!

மாலை 5.30-க்கு எனது கடைசி அப்பாயி்ண்ட்மென்ட் நிறைவுற, அதனையும் முடித்த கையோடு ட்ராமைப் பிடிக்க வெளியேறி வந்தேன்! செம ரம்யமான க்ளைமேட்டைப் பார்த்த போது - அட ... முக்கால் கிலோ மீட்டர் தூரம் தானே ஹோட்டலுக்கு ! நடந்தே போய் விடலாமென்றுபட்டது! தோளிலிருந்த காமிக்ஸ் மாதிரிகளில் டெக்ஸ் நீங்கலாக பாக்கி  எல்லாமே அந்தந்தப் படைப்பாளிகள் வசம் தாவியிருந்ததால், பளு போட்டுத் தாக்கவில்லை! சாவகாசமாய் நடக்கலானேன்! மைய ரயில் நிலையத்தைத் தாண்டியே எனது ஹோட்டலுக்குச் சென்றாக வேண்டும் & ரயில் நிலையத்தின் சுற்றுப்புறங்களில் காலங்காலமாய் சரக்கடித்துத் தள்ளாடும் கும்பல் இம்முறை செம அதிகளவில் சுற்றித் திரிவதைப் பார்க்க முடிந்தது! முக்கால்வாசிப் பேர் கஞ்சாவின் போதையில், கண்களெல்லாம் வெறித்து நிற்பதும், தங்களுக்குள் கத்திக் கூப்பாடு போட்டுக் கொள்வதுமாய் இருந்து வந்தனர். அது ஏனோ தெரியவில்லை - எது மாறினாலும் 'நகரின் மையத்தினில் இந்த ஒச்சம் மட்டும்  மாற்றம் காணக் காணோம்!

ஒரு மாதிரியாய் ரூமிற்குப் போன பின்னே, மறுநாள் அதிகாலையில் திரும்பும் ப்ளைட்டைப் பிடிக்க வேண்டியிருந்ததால், அழுக்குத் துணியைப் பெட்டிக்குள் திணித்துப் போட்டு விட்டு தயாரானேன்! வியாழன் & வெள்ளி - என 2 நாட்களே ஜெர்மானிய ஜாகை என்ற போதிலும் நாம் பார்க்க வேண்டிய அத்தனை பதிப்பகங்களிடமும் அட்டெண்டன்ஸ் போட்டு வைத்திருந்த திருப்தி விரவிக் கிடந்தது! And எனது குறிப்புகளில் இடம்பிடித்திருந்த புதுக் கதைகளும், தொடர்களும் அடுத்த சில ஆண்டுகளுக்கு நமக்கு வழிகாட்டிடும் என்ற மகிழ்வுமே! காமிக்ஸ் எனும் கனவுலகில் ஆழ்ந்தபடிக்கே தூங்கிப் போனவன் அதிகாலையில் எழுந்து பெட்டியை உருட்டிக் கொண்டு போய் சீக்கிராய் ஏர்போர்ட்டில் குந்திய போது தான் உரைத்தது - ஆஹா இன்று சனிக்கிழமை aka பதிவுக்கிழமை என்று ! ஒரு ஓரமாய் ஒதுங்கியபடியே, விறுவிறுவென எழுத ஆரம்பித்தேன் - ஆபீஸுக்கு வாட்சப்பில் சூட்டோடு சூடாய்ப் பக்கங்களை அனுப்பியபடிக்கே !

சென்னைக்கு ப்ளைட் மாற அபுதாபியில் இறங்கிய போது தான் ஜுனியர் இங்கே பதிவினை upload செய்து கொண்டிருக்க, ஒரு பீட்ஸா சாப்பிட ஆர்டர் தந்த கையோடு, லைனில் நின்றபடிக்கே கண்ணில்பட்ட பிழைகளை என் செல்லிலிருந்தே திருத்திட முயன்று கொண்டிருந்தேன்! கடைக்காரர் சூடு பண்ணித் தந்திருந்த பீட்ஸாவை பதிவினை வாசித்தபடிக்கே வாய்க்குள் திணிக்க, சூட்டில் நாக்கும், மேல் அன்னமும் புண்ணாகிப் போனது! ஆத்தாடியோவ் ... பதிவில் சூடுபடுவது பற்றாதென்று இது வேறயா? என்றபடிக்கே மடக் மடக்கென்று தண்ணீரைக் குடித்து, சென்னை ப்ளைட்டைப் ப்ளைட்டைப் பிடித்து ஞாயிறு அதிகாலையில் நம்மூர் திரும்பிய போது அதிகாலை 3.30. ! அங்கிருந்து மதுரைக்கான ப்ளைட்டை உறக்கத்தில் சாமியாடியபடியே பிடித்து வீடு சென்று போது காலை 9 ஆகிவிட்டிருந்தது & மறுநாள் தீபாவளி ! தொடர்ச்சியாய் 3 தினங்கள் விடுமுறைகள் என்ற குஷியில் ஒரு கெட்டத் தூக்கத்தைப் போடலாமென்று நினைத்தால் - ஊஹும்; காத்திருந்த அட்டவணை சார்ந்த சிந்தனைகள், குறுக்கும், நெடுக்குமாய் ஓட்டம் பிடித்தன! ப்ராங்க்பர்ட் புதுவரவுகளில் எதையேனும் உள்ளே புகுத்தலாமா? அல்லது அட்டவணையினை நோண்டாமல் விட்டு விடலாமா? ! என்ற தர்க்கம் ஓடியது உள்ளுக்குள் ! இறுதியில் இந்தப் புதுவரவுகளை முறைப்படி பரிசீலிக்க அவகாசம் எடுத்துக் கொண்டு, அவற்றிற்கான ஏற்பாடுகளையும் செய்தான பின்னே திட்டமிடலே சிறப்பென்று தீர்மானித்தேன்!

For sure - 2 புதுத் தொடர்கள் பற்றிய அறிவிப்பு சீக்கிரமே இருந்திடும்! 

And பாக்கி சகலமும் 2024-க்கே சாத்தியம் என்பதால் நமது பீரோவுக்கு இவை குதூகலமான புதுவரவுகளாகிடும் !  ஏதேனுமொரு கனவு தினத்தில் ஆண்டுக்கு 100 புக்ஸ் போடும் ஆற்றல் நமக்கும், அவற்றை வாங்கிட, வாசித்திட நேரம் உங்களுக்கும் வாய்க்கும் பட்சத்தில் - அட...அடா...அடாாா...ஒரு திருவிழாவையே கண்ணில் பார்த்து விடலாமன்றோ ?! புலரும் ... அத்தகையதொரு பொழுது ஒரு தூரத்து நாளில் புலருமென்ற கனவோடு கிளம்புகிறேன்! Bye all... See you around! Thanks for reading this !!

P.S: 

SUPREME '60s 

&

ரெகுலர் சந்தா 2023 

இரண்டிலுமே இணைந்து கொள்ள எண்ணும் நண்பர்கள், அவசியமாகின் 3 தவணைகளில் பணம் செலுத்தலாம் !

171 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. ஐந்துக்குள் வந்தாச்சு.

    ReplyDelete
  3. நானும் வந்துட்டேன்.

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  5. // Zaroff இன்னொரு ஒன்-ஷாட்டில் களமிறங்கவுள்ளாராம் & ஆட்டகளம் இம்முறை மாஸ்க்கோவாம் //
    அட்டகாசமான தகவல்...

    ReplyDelete
  6. // இளம் ட்யுராங்கோ காலத்தின் கட்டாயாமா folks - நமது அணிவகுப்புகளில்? Again - ஒரே தொகுப்பா ? //
    இதெல்லாம் சிங்கிள் ஷாட் செட் ஆகாது சார்,2024 இல் ஏதாவது ஒரு கேப்பில் தொகுப்பா போட்டுடுங்க..இருக்கவே இருக்கு முத்து ஆண்டுமலர்...

    ReplyDelete
  7. ஹை புதிய பதிவு! சில கடமைகளை முடிச்சுட்டு இன்னும் ஒரு மணிநேரத்துல இங்கிட்டு ஓடோடி வர்றேன்!

    ReplyDelete
  8. // இந்த ஜானி 2.0 மோசமும் இல்லை & 'மணந்தால் மகாதேவி தான் //
    இதற்கு சிறந்த வழி,ஜானி டபுள் ஆல்பம் தான், க்ளாசிக்கும்,ஜானி 2.0 வையும் கலந்து கட்டி காம்போவா விட்டுடுங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. மாத்தி மாத்தி போடலாம் சார். இரண்டையும்

      Delete
  9. முதல்ல கமெண்ட் போட்டு வைப்போம், அப்புறம் பதிவ படிப்போம், எப்ப பன்னு கிடைக்கும் எப்ப கடலை மிட்டாய் கிடைக்கும்னு தெரியலையே

    ReplyDelete
  10. ஆஹா... ஆஹா...
    அத்தனையும் பொன்னாச்சே...!
    அத்தனையும் பொன்னாச்சே...!
    நான் என்ன பண்ணுவேன்???

    ReplyDelete
    Replies
    1. #1. முதலைப் பட்டாளம் 2.0 - நோ ஐடியா! உங்களுக்கு ஓகே எனத்தோன்றினால் போடலாம்.

      #2. Zaroff 2. Waiting sir...

      #3. Thorgal Saga! அட்டகாசமான செய்தி சார்... செமத்தியான கதைக்கரு என்றுவேறு சொல்கிறீர்கள்... தாங்க முடியவில்லை!!!

      Delete
    2. #4. நமக்கு ட்யூராங்கோ பாணிதான் சரிப்படும் என நினைக்கிறேன் சார்.

      #5. இளம் ட்யூராங்கோ வரவேற்பைப் பொறுத்து பார்க்கலாங்க சார். ஆனால் அதுவும் செம்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

      Delete
    3. #6. கிளாசிக் ஒன்று + 2.0 ஒன்று. இந்த டீல் ஓகேங்க சார்.

      #7. இது செம சுவாரஸ்யமாக இருக்கிறது. நிச்சயமாக வேண்டும். ரெகுலரிலேயே வரட்டும்... வாய்ப்பில்லாத படசத்தில் அட்லீஸ்ட் கி.நா.விலாவது...

      Delete
  11. @Edi Sir..😍😘

    #ஏதேனுமொரு கனவு தினத்தில் ஆண்டுக்கு 100 புக்ஸ் போடும் ஆற்றல் நமக்கும், அவற்றை வாங்கிட, வாசித்திட நேரம் உங்களுக்கும் வாய்க்கும் பட்சத்தில்#

    😍👍கனவு நிஜமாகும் Edi Sir..👏👍

    எங்கள் அனைவரின் ஆசையும் அதுதான்..💐

    😘கனவு மெய்ப்படும்..✌💪

    ReplyDelete
  12. கேள்வி # 1 - yes sir
    கேள்வி # 2 - yes sir
    கேள்வி # 3 - 4 ஆல்பங்கள் ஒரே தொகுப்பாக
    கேள்வி # 4 - 4 ஆல்பங்கள் ஒரே தொகுப்பாக
    கேள்வி # 5 - 4 ஆல்பங்கள் ஒரே தொகுப்பாக
    கேள்வி # 6 - ஜானி டபுள் ஆல்பம்
    கேள்வி # 7 - --
    கேள்வி # 8 - --
    Question #9 - 6 அத்தியாயங்கள் கொண்ட ஒரே தொகுப்பாக வெளியிடலாம் sir

    ReplyDelete
  13. Maritim என்ற கம்பீரமான கண்ணாடி முகப்புடனான ஹோட்டலை எட்டி விட்டேன்! “இதுக்கு பேரு தான் பேலஸு!”

    Time sence la comedy panrathula ungala yarume adichukka mudiysthunga dear EDI .. 😉😉😍

    ReplyDelete
  14. தோர்கலுக்காக waiting ✋ 😍

    ReplyDelete
  15. @Edi Sir..😍😘

    அத்தனை வினாக்களுக்கும் என் பதில் *Yes* தான் Sir..😃👍💪✊✌👌💐

    உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை Edi Sir..
    😍

    நீங்கள் பார்த்து எது செய்தாலும் அது சரியாகதான் இருக்கும்
    Edi Sir..😃😘

    ReplyDelete
  16. 1. முதலை பட்டாளம் - yes, at least on a trial basis
    2. Yes for Zaroff
    3. Definitely yes for Thorgal, but not as single albums.. முடிந்தால் குண்டு book please
    4.100 yeahs for Lonesome. And definitely single book instead of individual albums
    5. If they are anything like our Durango books, yes please (as குண்டு book)
    6. IMO, 2024 should be Johny 2.0
    7. ராபின் துப்பறியும் கதைகள் are some of my favorite.. definitely yes for such true crime comics.
    8. ஸ்டர்ன் அவரை prove செய்து விட்டார் அல்லவா? Such soulful stories. He deserves yearly slots
    9. Cowboys will always have a place in here. முயற்சித்து பார்க்கலாம் என்பதே என் ஓட்டு.

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஜானி double album - classic and Johny 2.0. யார் பெருசு என்பதை அடிச்சு காமிக்கட்டும் 😅

      Delete
    2. //Definitely yes for Thorgal, but not as single albums.. முடிந்தால் குண்டு book // நானும் தோர்கல் குண்டு புக் எதிர்பார்க்கிறேன்

      Delete
  17. Zaroff 2 யாரெல்லாம் waiting

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Dear Edi sir,
    நவம்பர் 17 to 27 விருதுநகர் முதல் புத்தக கண்காட்சியில் நமது அரங்கு இடம் பெறுகிறதா??

    ReplyDelete
  20. எங்களையும் ஒரு காமிக்ஸ் திருவிழா கூட்டி சென்று வந்துவிட்டீர்கள் சார். எங்களுக்கு செலவில்லாமல் 😀

    கண்டிப்பாக நாமும் ஒரு நாள் வருடம் 100 புத்தகங்கள் வெளியிடுவோம் சார்.

    அதுவரை உங்களுடன் நாங்களும் காமிக்ஸ் கனவில் இணைகிறோம்.

    முதலை பட்டாளம் மற்றும் ஜானி 2.0 கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.

    கிளாசிக் மற்றும் 2.0 மாறி மாறி வருவது நல்ல யோசனை.

    Zarroff கதையை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள் சார். தெறிக்க விடும் சித்திரங்கள் இருந்தால் டபுள் ஓகே.

    Lonesome கண்டிப்பாக வேண்டும்

    டூரங்கோ இளம் மற்றும் இளம் thorgal அங்கு வெற்றி அடைவதை பொறுத்து முடிவு செய்யலாம்

    ஸ்டெரன் மற்றும் அண்டர்டேக்கர் நோ செகண்ட் தாட்ஸ்

    அடுத்த கவ்வாய் தொடர் டிக் மற்றயமற்றும் duke அளவிற்கு மோசம் இல்லாமல் இருந்தால் வேண்டும்.

    உடைந்த மூக்கர் ரசிகர்களுக்கு சீக்கிரம் தீபாவளி வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. இன்னும் இரண்டு மூன்று ஜென்மங்கள் தேவைப்படும் போல... அதற்குள் நிறைய புது கதைகள் வந்துவிடும்...

    இருக்கின்ற இந்த ஜென்மத்தில் எவ்வளவு கிடைத்தாலும் மகிழ்ச்சியே..

    ஆண்டவன் அருளால் உங்களுக்கும் எங்களுக்கும் ஆரோக்கியமான வாழ்வும் பொருளாதார வசதியும் கிடைக்கட்டும்..

    ReplyDelete
  22. நூறு புத்தகங்கள் கஷ்டம்தான் எனும்போதும் ஒரு முறை 50 ட்ரை பண்ணலாம் சார். இப்பொழுதே 27+5+6 எங்கே எப்போது + 1 Mandrake + 1 உயிரைத்தேடி என்று எடுத்துக்கொண்டால் 40 புத்தகங்கள் வந்துவிட்டது சார் 2023க்கு. Another 10 must be doable.

    ReplyDelete
    Replies
    1. எட்டக் கூடிய இலக்குதான்...

      Delete
  23. //2 புதுத் தொடர்கள் பற்றிய அறிவிப்பு சீக்கிரமே இருந்திடும்! //

    2023ல்! அட்டகாசம் சார்!

    ReplyDelete
  24. அருமை சார்..

    சூப்பரோ சூப்பர்...

    ReplyDelete
  25. அருமையான
    பதிவு
    நீங்கள் எது
    சொன்னாலும்
    ok Sir

    ReplyDelete
  26. 1, 2 , 7, 11 வேண்டாம். ஊகூம் என்றால் Limited edition ...

    ReplyDelete
  27. // ஆனால் எனக்கும் ஒரு 'ப்ளியாம்'... ஒரு புன்னகை... and I was into the Fair ! //
    சிரிப்பு வந்துடுச்சி சார்,அந்த இடத்திலேயே இருந்த ஒரு உணர்வு...

    ReplyDelete
  28. // For sure - 2 புதுத் தொடர்கள் பற்றிய அறிவிப்பு சீக்கிரமே இருந்திடும்! //
    வரவேற்க ஆவலுடன்...!!!

    ReplyDelete
  29. // காத்திருக்கும் ஆண்டினில் முதலைப்பட்டாளத்தை மறுக்கா ரசிக்க ஆரம்பிக்கலாமா ? //
    ஒன்று முயற்சிப்போம் சார்,வரவேற்பை பொறுத்து முடிவெடுங்கள்...

    ReplyDelete
  30. // இப்போது “THORGAL SAGA” என்று புதியதொரு மினித்தடம் உருவாகி வருகிறதாம்! //
    கேட்கும் தகவல்கள் எல்லாம் இனிப்பாய் உள்ளதே,தோர்கலுக்கும் தனித்தடம் இருந்தா நல்லாதான் இருக்கும்...

    ReplyDelete
  31. // ட்யுராங்கோ பாணியில் நாலு அத்தியாயங்களையும் ஏக் தம்மில் 2024-ல் களமிறக்கி விடலாமா? ? //
    இம்முறைக்கு மினிமம் கியாரண்டி உத்திரவாதம் இருப்பதால் இதையே முயற்சிக்கலாம் சார்...

    ReplyDelete
  32. // இளம் ட்யுராங்கோ காலத்தின் கட்டாயாமா folks - நமது அணிவகுப்புகளில்? Again - ஒரே தொகுப்பா //
    ரெகுலர் ட்யுராங்கோவின் அனல் குறையா குணம் இருப்பின் இதையும் தொகுப்பா ஒரு கை பார்த்திடுவோம்...

    ReplyDelete
  33. // டமால்-டுமீல்-ணங் இல்லாங்காட்டியும் ரசிக்க ஓ.கே.வா guys? //
    எதார்த்த பாணியிலான புலனாய்வு எனில் கி.நாவில் முயற்சிப்பதே உசிதம்...

    ReplyDelete
  34. // நம் மத்தியில் ஸ்டெர்ன் வேரூன்றியிருப்பது கண்கூடு ! ஆண்டுக்கொரு ஸ்லாட் இனி இவருக்கு உறுதிப்படுத்தி விடலாமா ? //
    ரெகுலர் ஸ்லாட்டுக்கு தாரளமாக பாஸ் கொடுக்கலாம் இலக்கிய வெட்டியானுக்கு...

    ReplyDelete
  35. // ஒரிஜினல் வெட்டியானின் (THE UNDERTAKER) ஆல்பம் # 7 இரு அத்தியாயக் கதையாக, வழக்கம் போல் வெளிவருகிறதாம் ! //
    அசத்தல் தகவல், ஒரிஜினல் வெட்டியானில் வரும் வில்லன் கேரக்டர் நாயகனுக்கு வலுவான போட்டியைக் கொடுப்பதால் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  36. பதிவு முழுதும் நகைச்சுவை களைகட்டியது.பாராட்டுக்கள்.
    நவம்பர்20 -30 சேலம் புத்தகத் திருவிழாவில் நமது ஸ்டால் உண்டா சார்?

    ReplyDelete
  37. //நமக்குத் தான் பசியில் கண்ணடைக்கிறதா என்று பார்த்தால் - 'இன்னியோட உலகம் முடிஞ்சே போய்விடும்!' என்ற பயம் வந்தவர்களைப் போல, ஆளாளுக்கு ரவுண்ட் கட்டிக் குமுறிக் கொண்டு ஆர்டர் தருவதைப் பார்க்க முடிந்தது ! //

    சிரிக்க வைத்த வரிகள்... எழுத்துக்களில் ஏகமாய் சிரிக்க வைக்கும் கலை உங்களை போல ஒரு சிலருக்கே கை வந்தது...

    ReplyDelete
  38. @Edi Sir..😍
    கடைசிவரை சாப்பிட்டீர்களா என்பதை சொல்லவே இல்லையே..😃

    அந்த காமிக்ஸ் ஸ்டால்களில் இருந்த சாக்லேட் & பிஸ்கெட்டுடன் முடித்துவிட்டீர்களா?😁😀

    ReplyDelete
  39. படித்து விட்டு வருகிறேன் சார்

    ReplyDelete
  40. அருமையான பதிவு.

    ReplyDelete
  41. @Edi Sir..😍😘

    *காரிகன் ஸ்பெஷல் 1*-

    இதுவரை 8 கதைகள் படித்து விட்டேன். மீதம் 3 கதைகள் படிக்க வேண்டி உள்ளது.👍

    கதைகள் அத்தனையும் விறுவிறுப்பாக உள்ளன.😍
    ஆரம்பித்தால் முடிக்காமல் வைக்க இயலவில்லை.👍

    *கரீபிய வேட்டை* என்ற கதை நமது முத்து காமிக்ஸில் வந்தது என்று நினைக்கிறேன்.🤔 ஏற்கனவே படித்தது போல் உள்ளது.

    மேலும் சமீபத்திய நடிகர் தனுஸ் படத்தில் *கரீபிய வேட்டை* கதையில் வருவதுபோல தனுஸ் எதிரிகளை ஓடவிட்டு வில் அம்பால் காலிபண்ணுவார்.😃
    (இங்கிருந்து சுட்ட சீன் அது என்று நினைக்கிறேன்😍😘😄)

    ஒவ்வொரு கதையிலும் காரிகன் கிளைமாக்ஸிற்கு முன் வில்லன் குரூப்பிடமிருந்து துப்பாக்கி குண்டடி படுகிறார்.🤓

    அதேபோல் இரண்டுகதைகளில் காரிகனை சுடமுயலும் வில்லனை கதையில் வரும் பெண் காரெக்டர்கள் கல்லால் அடித்து துப்பாக்கியை கீழே விழ வைத்து காரிகனை காப்பாற்றுகிறார்கள்..😄🤓

    10/10

    ReplyDelete
  42. "கேப்டன் பிரின்ஸ் ; ரிப்போர்ட்டர் ஜானி ; தோர்கல் ; ரோஜர் ; சிக் பில் என்று எண்ணற்ற கதை வரிசைகளை நமக்கு வழங்கியுள்ள இந்த ஜாம்பவான்களிடம் எனக்கு எப்போதுமே ஒரு மிடறு வாஞ்சை அதிகம் ; ..........................................வேண்டுகோளுடன் நின்றிருந்தேன் ! அத்தனைக்குமே சம்மதித்து, என் கையில் "பனிமண்டலக் கோட்டை" கான்டிராக்டைத் தந்து Good luck என்று வழியனுப்பினார் அன்றைய நிர்வாகி ! So எப்போதுமே அந்த நிறுவனத்தின் மீது நமக்கொரு லெவல் கூடுதலாய் நேசம் !"

    "பனிமண்டலக் கோட்டை" All time favorite... லைப்ரரியில் வாடகை எடுத்து படித்த முதல் பிரின்ஸ் கதை... கிளாஸ் ரகம். இதில் வரும் கடத்தல்காரன் குபாக் ஒரு மறக்க இயலா பாத்திரப்படைப்பு...

    1.50, 2 ரூபாய் என்று ராணி காமிக்ஸ் விலையை கட்டுக்குள் வைத்திருந்த போது, இது தான்பா உலகத்தரம் என்று 2.25 ரூபாய் விலையில் நீங்கள் வெளியிட்ட அந்த திகில் காமிக்ஸ் இணையாக என்ன தான் hitech பேப்பர் அச்சு பேப்பர் எல்லாம் வந்தாலும் இன்றும் தன்னிரகற்று தனித்து நிற்கிறது இந்த இதழ். அந்த முதல் ஆண்டு திகில் காமிக்ஸ் எல்லாமே நியூஸ் பிரிண்ட், மெல்லிய அட்டைப்படம் தவிர்த்து மொழிபெயர்ப்பு, அட்டைப்பட ஓவியம், அச்சுத்தரம், விளம்பரங்கள் லே அவுட் ஆர்ட்ஒர்க் எல்லாமே இன்றும் பிரமிக்க வைக்கும் தரமான சர்வதேச தரம்.
    17 வயது வாலிபரை ஊக்குவித்தும் தரமான பிரின்ஸ் கதையினை தமிழ் காமிக்ஸ் உலகிற்கு உங்கள் மூலமாய் கொடுக்க வகை செய்த Lombard நிறுவன அந்த பெண்மணி இன்றைக்கு இல்லாவிடினும் நிசமாகவே ஒரு good soul.

    ReplyDelete
  43. 1. ப்ரூனோ பிரேஸில் 2.0 -
    நிச்சயம் வேண்டும் சார்.

    2. Zaroff - அவசியம், தள்ளிப்போட வேண்டாம்.

    3. தோர்கல் - கதை OK எனில் காத்திருந்து மொத்தமாக போடுவது நலம்.

    4. Lonesome - நன்றாக இருந்தால் மட்டும் வெளியிடுங்கள். தொகுப்பே சிறந்தது.

    5. இளம் ட்யூராங்கோ - நன்றாக இருந்தால் மட்டும் முயற்சிக்கலாம். இங்கும் தொகுப்பே சிறந்தது.

    6. ரிப்போர்டர் ஜானி - தாரளமாய் 2.0 வரட்டும். ஆனால் கிளாஸிக் ஜானியை நிறுத்தாமல் டபுள் ஆல்பமாக வரட்டும்.

    7. டமால் டுமீல் இல்லையெனிலும் இந்த க்ரைம் புல்னாய்வு தொடரை எப்படியாவது கண்ணில் காட்டி விடுங்கள், அது எந்த தடமாக இருப்பினும் சரி. இந்த ஜானர் நம் மத்தியினில் குறைந்து வருவது வருத்தமே.

    8. ஸ்டெர்ன் - ரெகுலராகவே வரலாம். இந்த வருட அட்டவணையில் இல்லையே.

    9. ஜாம்பவானில் பழைய தொடர் என்கிறீர்கள், ஆனால் எந்த கதை, யார் ஜாம்பவான் என தெரிந்த பின் தான் முடிவெடுக்க முடியும்.

    சார் அப்படியே நம்ம ராபினின் சமீபத்திய ரீ எண்ட்ரீ படைப்புகளையும் பரீசீலியுங்கள்.

    ReplyDelete
  44. @Edi Sir..😍😘

    # படங்கள் ; preview க்கள் இரவினில் upload செய்கிறேன் ! #

    நடுராத்திரி ஆயிடுச்சுங்க..😄சீக்கிரம் Uploadங்க ..😃

    அப்புறம் பொழுது விடிஞ்சிடும்..😃😍

    ReplyDelete
  45. ஒரு அற்புதமான பயண கட்டுரை இது. உங்களுடன் backpacker ஆக பிரயாணம் செய்து வந்தது போன்று இருந்தது.
    Awaiting for XIII, Largo and Blueberry sir.

    ReplyDelete
  46. கிளாசிக் ஜானி தொடர்ந்து வரட்டும் 2.0 எப்போதாவது இரண்டாவது ஸ்லாட்டாக வரட்டும்

    ReplyDelete
  47. Sir.. என்னமோ.. பக்கத்தில ஈரோடு போய்ட்டு வந்த மாதிரி சொல்றீங்க... படிக்கிற எனக்கு வயித்த கலக்குது... இடமெல்லாம் எப்படி நினைவு வைக்கறது..
    எல்லாரும் ஹாலிவுட்
    படத்தில வர மாதிரி இருப்பாங்க...
    வேற கிரகத்தில
    நுழைஞ்ச மாதிரி இருக்கும்...
    இம்ஹீம்.... 🙏.....

    ReplyDelete
  48. ஸ்மாஷிங் 70 - கதை எண் 1 - அசுர மண்டலம்:

    இதுவரை நான் படித்த காரிகன் கதைகளிலேயே மிகவும் வித்தியாசமான கதை இது. இங்கே டாக்டர் 7 இல்லை. காரிகனை குறி வைத்து தாக்கும் வில்லன்கள் இல்லை. வாழும் ஜீவராசிகளை வாழ விடுங்கள் என்பதே கதையின் சாரம். 5 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் வான் எல்லையில் காணாமல் போன விமானத்தின் ஒரு பகுதி திடீரென்று கிடைப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அந்த விமானத்தில் பயணித்தவர் ஐன்ஸ்டீனுக்கு நிகராக கருதப்பட்ட மாபெரும் மூளைக்கார விஞ்ஞானி ஜோனாஸ் ப்ரான்வெல்ட். அவருடைய கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைக் கொண்டு, மேற்கும், கிழக்கும் தங்களுடைய டாப் உளவாளிகளை அனுப்பி கண்டுபிடிக்க முனைகின்றனர். அந்த டாப் உளவாளிகள் அமெரிக்காவின் பிலிப் காரிகன் மற்றும் ரஷ்யாவின் கர்னல் தான்யா க்ராப். எதிரும், புதிருமான இரு நாடுகளின் டாப் உளவாளிகள் இருவரும் தென்னமெரிக்காவில் இருக்கும் டாக்டர் எரிக்ஸ்டோனின் குழுவினருடன் சேர்ந்து காணாமல் போன விமானத்தை - விஞ்ஞானியை கண்டுபிடிக்க செல்கிறார்கள்.

    அடர்ந்த கானகத்திற்குள் செல்லும் குழுவானது அசுர மிருகங்களை காண நேரிடுகிறது. இந்த அசுர மண்டலத்தில் இருந்து, தேடுதல் குழு விஞ்ஞானியை கண்டுபிடித்து மீட்கிறதா? அவருடைய ரகசிய கண்டுபிடிப்பு தான் என்ன? அது காக்கப்படுகிறதா? உளவாளிகளில் வெற்றி பெற்றவர் யார் என்று வேறொரு பரிமாணத்தில் கதைகளை சொல்லியிருக்கிறார்கள். உளவாளியின் கதையில் வேதாளனின் சொர்க்கத்தை காட்ட முயற்சித்திருக்கிறார்கள், 1967 முதல் 1980 வரையிலான காலகட்டங்களில் காரிகன் கதைகளுக்கு பணி செய்த ஆர்ச்சி குட்வின் மற்றும் ஆல் வில்லியம்சன் ஜோடி!

    Rating : 8/10


    *காரிகன் ஸ்பெஷல் 1 - கதை எண் 2 - நடுக்கடலில் சடுகுடு*

    இந்த கதைக்கு நடுக்கடலில் நாசகாரி என்று பெயர் வைத்திருக்கலாம் என்ற அளவுக்கு வில்லி முத்திரை பதித்து விட்டாள். கூடவே வரும் ஜோ ஐஸும் தான் பணியை செவ்வனே செய்துள்ளான்.

    பயங்கரவாதிகளின் தலைவனான சாங்-வூவை கைது செய்ய காரணமாக இருந்த காரிகனை வீழ்த்துபவர்கள் அமெரிக்க பயங்கரவாத கிளைக்கு தலைவர் ஆகி விடலாம் என்பது போட்டி.

    இந்த போட்டிக்கு தயாராகி, கவனமாக வலை விரிக்கிறாள் மேடம் லீ. தன் மீது தொடரப்படும் தாக்குதல்களை, ஒரு தேர்ந்த உளவாளிக்குரிய எச்சரிக்கைகளுடன் சரியாக செயல்பட்டு, வலை விரிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து கொள்கிறார் காரிகன். இங்கே இரையாகவிருந்தது, வேட்டைக்கு கிளம்பி விட்டது.

    வேட்டையர்களும் சளைத்தவர்களல்ல என்பதால் கதை விறுவிறுப்பாக செல்கிறது. ஒரு கட்டத்தில் மேடம் லீயின் கை ஓங்கி இருக்கும் என்றாலும், தன்னுடைய மேதாவித்தனத்தை மேலே உள்ளவர்களுக்கு உணரச் செய்யும் தலைக்கனத்தில் வாய்ப்பை இழக்கிராள். பிறகென்ன, காரிகன் ஜமாய்த்து விடுகிறார். அதுவும் அந்த கப்பலில் நடக்கும் ஒற்றைக்கு ஒற்றை சம்பவம் வெகு சிறப்பு...

    ரேட்டிங் - 9/10

    *காரிகன் ஸ்பெஷல் 1 - கதை எண் 3 - கேமரா!.. ஆக்ஷன்!... ஷூட்!...*

    காரிகனுக்கு அமெரிக்க ஜேம்ஸ் பாண்ட் என்றும் ஒரு பெயர் உண்டு!

    ஒரு மோசடியான நடிகன் - போமென்! அப்பாவியான துணை நடிகை - எவிலின் டான், இராணுவ ரகசியம் இவர்களுடன் உளவாளி காரிகன்!

    இரகசிய இலாகவில் வேலை செய்யும் ஒருவரால், அந்த துறையின் ரகசியங்கள் திருடப்பட்டு விடுகிறது. மெக்சிகோ எல்லையில் நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் ரகசியம் கைமாற திட்டம்.

    களவு போன ரகசியம் எங்கே இருக்கலாம் என்று யூகிக்கும் இடத்திலும், அந்த பேப்பர்கள் யாரிடம் இருக்கலாம் என்று யூகம் செய்வதிலும் காரிகன் பளிச்சிடுகிறார்.

    ஆனால், பொமென் ஒட்டுக் கேட்பதையும், இறுதியாக மயக்கமடைந்து விழும் போதும் சற்றே சறுக்குகிறார். ஆனாலும் இறுதியில் வெற்றி! 🥰

    எனது ரேட்டிங் - 7/10

    மற்ற கதைகள் இன்னும் படிக்கவில்லை. டாக்டர் 7 மற்றும் வேறு எதுவும் மறுபதிப்பு கதைகள் உள்ளதா என இனிமேல் தான் பாக்கனும்...

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம்- டாக்டர் செவனை S,60-தான் சந்திக்கலாம் போலும்..

      Delete
  49. அருமையானதொரு பயணக் கட்டுரை sir. லோன்ஸம் மற்றும் டியூராங்கோ எல்லாம் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டியவர்கள் sir. மற்றும் எங்கள் தங்கத் தலைவர் டைகருக்காக மிகுந்த ஆவலுடன் வெயிட்டிங் sir.

    ReplyDelete
  50. காரிகன் ஸ்பெஷல் ஒரு வழியாக முடித்தாயிற்று சார்,முதல் கதையான டைனோசர் கதையை படிச்சி முடிக்கவே கொஞ்சம் டைம் எடுத்தது,இதுவரை வெளியான காமிக்ஸ் கதையில் எவ்வளவு சுமாரான கதைகளாக இருப்பினும் அதை ஒரு முறையாவது படித்து விடுவேன்,ஒரு வாசிப்பாளன் என்ற அடிப்படையில் படிக்காமல் விடுவதோ,விமர்சிப்பதோ சரியான செயலாய் இருக்காது என்பது என் எண்ணம்...

    காரிகன் கதைகளில் சில கதைகளும்,ஓவியங்களும் ஓகே இரகம்,மற்றபடி பல கதைகளும், ஓவியங்களும் ரொம்ப சுமார் ரகம்,கதைகள் செல்ப் எடுக்காத வண்டி போல ஏனோ திணறியது,
    நாம இறங்கிதான் வண்டியைத் தள்ளனும் போல,ஓய்வு நேரம் அமைந்தால் தொடர் வாசிப்பில் ஆழ்ந்து விடும் எனக்கு இக்கதையில் தொடர் வாசிப்பில் தொடர இயலவில்லை, முயற்சித்தால் அது அயற்சியை கொணரும் என்ற நிலை...
    ஒவ்வொரு கதைகளாக படித்து முடித்தேன்...

    எனது பார்வையில் இந்த வருட S '70 இதழ்களின் தரவரிசைகள் :
    1.ரிப்கெர்பி ஸ்பெஷல்,
    2.மாண்ட்ரேக் ஸ்பெஷல்,
    3.வேதாளர் ஸ்பெஷல்,
    4.காரிகன் ஸ்பெஷல்.

    இதுபோல பழைய இதழ்கள் வரும்போது எனக்கு தெரிந்து நடக்கும் நல்ல விஷயங்கள் இரண்டு,
    1.கிடைக்காத இதழ்கள்,வாசிக்காத இதழ்கள் பெற வாய்ப்பு,
    2.பழங்காமிக்ஸ் மார்க்கெட்டில் எகிடுதகிடாய் விலையேறும் அபாயம் குறையும்...
    அந்த வகையில் மகிழ்ச்சி தான்...

    ReplyDelete
    Replies
    1. துப்பறிவாளின்_என்றவரிசையில் காரிகன்-ரிப் கிர்பி எனக்கு பிடித்தமானவர்களே..
      கதையின் ஆழத்தை. - ரொம்ப ஆராய்வதில்ைல.
      அதிலும்-காரிகனின் - இந்த ஆல்பத்தில்-இந்த ஓவியரின் கைவண்ணம் - அட்டகாசம்..ஒவ்வொரு Frame-யிலும் காரிகனை- ரொம்ப ஸ்டைலாக - வரைந்து உள்ளார்..
      எனது ஆதங்கம். - ஒவ்வொரு இதழும் அட்டை வடிவமைப்பினால் செம மாஸாக தெரிவது-- உள்ளே
      திறந்து பார்த்ததும்-டல்லடித்து போவதுதான்.
      - கலரில் இல்லாததால் -
      முழு வண்ணம் தேவையில்லாததுதான்.
      ஆர்ட் ேப ப்பரும் தேவை இல்லைதான்.
      இதே தாளில் அந்த காலகட்டத்தில் வெளியிட்டது போல் இருவண்ணத்தில் வெளியிட்டிருந்தால் நிச்சயம் முழுமை அடைந்திருக்கும்.
      'அனைத்து இதழ் கழும் வெளிவந்தபிறகு அனைவரின் கருத்து ேக ட்டு- Supreme 60, / க்கு -
      விலையை கூட்டுவது-அல்லது பக்கத்தை (கதையை) குறைத்தாவது
      இருவண்ணத்திற்கு ஆவண செய்திருக்கலாம்.
      என்பது எனது எண்ணம்.
      அனைவருமே. இதை பரிசீலித்தால் நன்றாக இருக்கும்..

      Delete
  51. இளம் ட்யுராங்கோ காலத்தின் கட்டாயாமா folks - நமது அணிவகுப்புகளில்? Again - ஒரே தொகுப்பா ?

    Yes
    ஒரே தொகுப்பு.

    ReplyDelete
  52. // சாம்ராஜ்யம் பக்கமாய்ப் பயணித்தால் - 2023-ன் இறுதியில் லார்கோ வின்ச்சின் புதிய ஆல்பத்தின் க்ளைமேக்ஸ் ஆல்பம் வெளியாகுமென்று அறிய வருகிறோம்! //
    பங்குச் சந்தையின் பரபரப்பான நாயகனை வரவேற்போம்...

    ReplyDelete
  53. ப்ரூனோ பிரேஸில் 2.0 -
    நிச்சயம் வேண்டும் சார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த கதையைப் பற்றி சொன்னதாக ஞாபகம்.

    2. Zaroff - அவசியம் வேண்டும், கதை மற்றும் சித்திரங்கள் நன்றாக இருந்தால் :-)

    ReplyDelete
    Replies
    1. Zaroff ஓவியங்கள் சிறப்பாக இருக்கும் நண்பா,கதையை படிச்சிட்டுதான் சொல்ல முடியும் ஹி,ஹி...

      Delete
    2. ஆசிரியருக்கு கதையை படித்து தேர்வு செய்யும் வாய்ப்புள்ளதே அறிவரசு ஹி ஹி :-)

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ஆசிரியர் படித்த அவருக்கு பிடித்த கதை எல்லோருக்கும் பிடித்து விடுகிறதா PFB ?!

      Delete
  54. ப்ராங்க்பர்ட் புத்தகத் திருவிழாவுக்குள் நாங்களுமே உங்களுடன் மூச்சிரைக்க நடந்ததுபோல ஒரு உணர்வு எடிட்டர் சார்!

    பதிவில் என்னை குஷிப்படுத்திய அம்சங்கள்:

    * இளம் தோர்கல்
    * இளம் ட்யூராங்கோ
    * ஸ்டெர்னுக்கு வருடம் ஒரு ஸ்லாட்
    *தங்கத் தலைவனின் டபுள் ஆல்பம்
    * நிஜமான புலனாய் ஆல்பங்கள்
    * அண்டர்டேக்கர்
    * zaroff
    * lonesome

    'வந்த வரட்டும்.. பார்த்துக்கிடலாம்' என்று நினைக்கத் தோன்றிய அம்சங்கள் :
    * ப்ரூனோ ப்ரேசில்
    * ஜானி 2.0
    * XIII
    * ஜோன்ஸ்

    நான் குண்டூஸின் காதலன் என்பதால் எல்லாமே குண்டூஸாக வருவதையே விரும்புவேன். எனினும், சிங்கிள்ஷாட் கதைகள் எனில் சிங்கிள் ஆல்பமாக வந்தாலும் ஓகே தான்! நீங்க பார்த்து எப்படி வேணாலும் போடுங்க எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. ரெகுலர் சந்தா :
      இளம் தோர்கல்
      இளம் ட்ராங்கோ
      தங்க தலைவன் டபுள் ஆல்பம்
      இளம் அண்டர் டேக்கர்
      ஸ்டெர்ன்
      ஜானி 2.0
      XIII

      Rest of other....
      Limited edition

      Delete
  55. My கேள்வி #3: பேஷாக செய்யலாம்.

    ReplyDelete
  56. My கேள்வி # 4: ஓரே தொகுப்பாக மட்டும்.

    ReplyDelete
  57. My கேள்வி #5: ஒரே தொகுப்பாக போட்டுத் தாக்குங்கல் சார்.

    ReplyDelete
  58. My கேள்வி #6. ஓகே.
    ஒரு வருடம் கிளாசிக் ஜானி அடுத்த வருடம் ஜானி 2.0 என்ற உங்கள் ஐடியா நன்றாக உள்ளது. இந்த ஐடியாவை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  59. 1. ப்ரூனோ பிரேஸில் 2.0 -
    நிச்சயம் வேண்டும் சார்.

    2. Zaroff - அவசியம், தள்ளிப்போட வேண்டாம்.

    3. தோர்கல் - நாமும் வருடத்திற்கு ஒன்று என்று போடலாம் சார்.

    4. Lonesome - . தொகுப்பே சிறந்தது.

    5. இளம் ட்யூராங்கோ - நன்றாக இருந்தால் மட்டும் முயற்சிக்கலாம். இங்கும் தொகுப்பே சிறந்தது.

    6. ரிப்போர்டர் ஜானி - தாரளமாய் 2.0 வரட்டும்.

    7. டமால் டுமீல் இல்லையெனிலும் இந்த க்ரைம் புல்னாய்வு தொடரை எப்படியாவது கண்ணில் காட்டி விடுங்கள், அது எந்த தடமாக இருப்பினும் சரி.

    8. ஸ்டெர்ன் - ரெகுலராகவே வரலாம். இந்த வருட அட்டவணையில் இல்லையே. இடையில் வரும் என்று நினைக்கிறேன்

    9. ஜாம்பவானில் பழைய தொடர் என்கிறீர்கள், ஆனால் எந்த கதை, யார் ஜாம்பவான் என தெரிந்த பின் தான் முடிவெடுக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்குதான் இந்த ஊருக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்.

      Delete
    2. // இதுக்குதான் இந்த ஊருக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும். //

      LOL

      Delete
  60. என்னை பொருத்தவரை இந்த கேள்வி அனைத்துக்கும் ஒரே விடை எஸ் என்பதே. விஜயன் சார் நீங்கள் எந்த கதையை வெளியிட்டாலும் நான் வாங்குவதற்கு தயாராக உள்ளேன். அது வெளியிடுவதற்கு வாகன தருணங்களை நீங்களே முடிவு செய்யலாம்.
    வருடத்திற்கு 100 புத்தகங்கள் என்பது தற்போதைய சூழ்நிலையில் இயலாது என்பது தான் மறக்க முடியாத மறுக்க முடியாத உண்மை. ஆனால் தற்போதைய அட்டவணையின் படியே கிட்டத்தட்ட 40 இதழ்கள் இடம் பிடித்துள்ளன. நீங்கள் சற்று முயற்சி செய்தால் இன்னும் ஒரு பத்து புத்தகங்கள் வெளியிட்டு ஐம்பதை சர்வ சாதாரணமாக கடக்கலாம் அதற்கான முயற்சிகளை பார்த்து பண்ணுங்க சார்

    ReplyDelete
  61. 1. ப்ரூனோ பிரேஸில் 2.0 - No sir - too old - we can focus on the NEW


    2. Zaroff - No again - too violent for even leisure reads

    3. தோர்கல் - wait - collect - release as hard bound

    4. Lonesome - . either ways is fine but please include as special in 2024 at least

    5. இளம் ட்யூராங்கோ - only if good - Durango was good for me but not a No 1 - won't lose sleep over Durango not coming

    6. ரிப்போர்டர் ஜானி - Was always rooting for 2.0 - if you combine 2.0 with classic it would be an annual double album

    7. டமால் டுமீல் இல்லையெனிலும் - No opinion sir - not a fan but won't discard without trial either

    8. ஸ்டெர்ன் - Sure welcome - as a regular or a bound

    9. ஜாம்பவானில் பழைய தொடர் - to me this is like Uyirai Thedi sir - you may decide after you read an album

    More than these I am expecting a Modesty Maxi album in the Classic 70s fashion sir - may be as a first book in 2024. That style makes it endearingly collectible.

    ReplyDelete
  62. My கேள்வி #7: வேண்டவே வேண்டாம். மார்த்தா ஹாரி (?) அம்மணி படித்த பிறகு போதும்டா சாமி போதும் என்று ஆகிவிட்டது. சாரி சார்.

    My கேள்வி #8: நாகரீக வெட்டியான் கண்டிப்பாக தேவை. ரெகுலர் சந்தாவில் ஓகே.

    My கேள்வி #8: அந்த புதுப்பிக்கப்படும் கௌபாய் யார் எனத் தெரிந்தால் முடிவு எடுக்க வசதியாக இருக்கும் சார்.

    ReplyDelete
    Replies
    1. // வேண்டவே வேண்டாம். மார்த்தா ஹாரி (?) அம்மணி படித்த பிறகு போதும்டா சாமி போதும் என்று ஆகிவிட்டது. சாரி சார். // ஆமா அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

      Delete
    2. அது வேறொன்னுமில்லை .. நம்மவர்களுக்கு ஒன்னு துப்பறிவாளி (!) கொஞ்சம் வயசானவளா இருந்து 'ஒன்னுமே' போட்டுக்காம வில்லன் நெத்தியில துப்பாக்கியை நீட்டணும் இல்லேன்னா துப்பறிவாளனாய் (!) இருந்து துப்பாக்கி தோட்டாக்களை குருதையின் 'பின்னம்பக்கம்' load பண்ணனும் - ரெண்டுக்கும் நடுவால இருந்தா 'நோ' ;-) :-p :-)

      Delete
    3. உண்மை கதையின் அடிப்படையில் வந்த கதை என சொன்னதாக ஞாபகம் ஹி ஹி :-)

      Delete
  63. Hee Hee .. then that தங்கத் தலைவனின் டபுள் ஆல்பம். If you can attach Thangak Kallarai with old dialogues and make it a four-album collect - heh heh - more good :-)

    ReplyDelete
  64. எல்லோரும் அட்டவணை டென்சனில் இருக்கும் போது - நீங்கள் எங்களுக்காக மேலும்-மெனக்கெட்டு- வெளிநாடு வரை சென்று வந்திருக்கிறீர்கள்.. நன்றி சார்..
    பழைய நாயகர்களிலேயே நிறைய ஆர்வத்தைத் தூண்டும்
    விசயங்கள் உள்ளனவே..
    அவைகளை சந்தித்துவிட்டாலே மிகவும் சந்தோசம் அடைவோமே சார்.. முதலில் அவைகளை சைடு
    கேப்பில் வெளியிட முயற்சி செய்யுங்கள் சார்...

    ReplyDelete
  65. சார் இன்னும் ஒரு அட்டகாசமான பதிவு. அப்படியே ப்ரீயாக ஒரு ஐரோப்பிய டூர் சென்று வந்தது போல இருந்தது.

    2 புதிய தொடர்கள் பற்றிய அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்.

    ReplyDelete
  66. Edi Sir..😍😘

    கலர் படங்கள் இல்லாத இன்றைய பதிவு சிலுக்கு டான்ஸ் இல்லாத 90'ஸ் படங்களை பார்ப்பதுபோல் உள்ளது..😃

    Content இருந்தாலும் Colour ம் கொஞ்சம் வேணும் இல்லீங்களா?..😍😃

    ReplyDelete
    Replies
    1. சிலுக்கு ரெடிங்கோ !

      Delete
    2. // கலர் படங்கள் இல்லாத இன்றைய பதிவு சிலுக்கு டான்ஸ் இல்லாத 90'ஸ் படங்களை பார்ப்பதுபோல் உள்ளது. //

      :-) 😂

      Delete
  67. Edi,
    Bruno 2.0, Jhonny 2.0 கண்டிப்பாக ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்,
    Zaroff man hunt வரட்டும், வெட்டியான் கதை தொடர் நன்றாக உள்ளது வரட்டும்., Lonsome and Durango புதிய கதைகள் வந்தால் வெளியிட்டுக் கொண்டே இருங்கள்.

    ReplyDelete


  68. My கேள்வி # 1 to you :

    What say Folks - முதலைப் பட்டாளத்தின் இரண்டாவது சுற்றுக்கு நாம் தயாராகிக்கலாமா ? காத்திருக்கும் ஆண்டினில் முதலைப்பட்டாளத்தை மறுக்கா ரசிக்க ஆரம்பிக்கலாமா ?

    2.0 வெர்ஷன் - புது யுக தயாரிப்பு என்பதால் ஓகேதான்.

    My கேள்வி #2:

    ஹீரோவாய்ப் பார்ப்பதா ? வில்லனாய்ப் பார்ப்பதா இந்த மனஷனை ? இவரது இரண்டாவது ஆல்பத்துக்கும் நம் மத்தியினில் ஆர்வங்கள் சேஸ்தானு ? இவருக்கும் 'ரைட்' சொல்லி வண்டியில் தொற்றிக் கொள்ளலாமா நாம் ?

    முதல் கதை அவ்வளவாக வசீகரிக்கவில்லை. சிஸ்கோவின் இரண்டாவது கதை படித்தபின் சிஸ்கோ முதல் கதை ஏற்படுத்திய மன நிலைப்பாடு மாறியது போல் இரண்டாம் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்

    .My கேள்வி #3:

    இந்தத் தனித்தடத்தின் முதல் ஆல்பம், அநேகமாய் டிசம்பரில் நமக்குக் கிட்டிவிடும்! படித்துப் பார்த்து விட்டு ரம்யமாய்த் தெரியும் பட்சத்தில், இதனுள்ளேயும் மூக்குகளை நுழைக்க ஓ.கே.வா ?

    தோர்கலுக்கு எப்போதும் ஓகேதான்!

    My கேள்வி # 4:

    இந்தத் தொடரின் காண்டிராக்ட் நம்மிடம் கொஞ்ச காலம் முன்னிருந்தே உள்ளது ! முதல் சுற்றின் முற்றுப்புள்ளி கண்ணில் தெரியும் வரையிலும் 'தேமே' என்றிருப்போம் என்ற எண்ணத்தினில் இருந்தேன் ! Now that the climax is in sight - ட்யுராங்கோ பாணியில் நாலு அத்தியாயங்களையும் ஏக் தம்மில் 2024-ல் களமிறக்கி விடலாமா? ? அல்லது அடுத்தடுத்த மாதங்களில் சிங்கிள் ஆல்பங்களாகவா ?

    Lonesome - as WHOLESOME குண்டுபுக்காக

    My கேள்வி #5:

    இளம் ட்யுராங்கோ காலத்தின் கட்டாயாமா folks - நமது அணிவகுப்புகளில்? Again - ஒரே தொகுப்பா ? அல்லது சிங்கிள் இதழ்களிலா ?

    இ.ட்யூராங்கோ- கா.கட்டாயம்.

    ஒரே தொகுப்பு.

    My கேள்வி #6:

    ஏற்கனவே துடைப்பத்தால் சாத்தி, பதிலும் சொல்லியுள்ளீர்கள் தான் ; but still இந்தக் கேள்வியினைக் கேட்காது இருக்க இயலவில்லை ! மாற்றங்களைக் கண்டாலே ஒய் திஸ் கொலவெறி guys? 'வேணவே வேணாம்' என்று அடம்பிடிக்கும் அளவுக்கு இந்த ஜானி 2.0 மோசமும் இல்லை & 'மணந்தால் மகாதேவி தான்!' என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு க்ளாஸிக் ஜானி ஒரு அசாத்தியமும் அல்ல என்பது எனது அபிப்பிராயம் ! பெட்ரோமேக்ஸ் லைட்டை அவ்வப்போது மாற்றித் தான் பார்ப்போமே ?

    ஷ்யூர். கிளாஸிக்- 2.0 ஆல்டர்னேட் செய்யலாம்.

    My கேள்வி #7:

    டமால்-டுமீல்-ணங் இல்லாங்காட்டியும் ரசிக்க ஓ.கே.வா guys? அல்லது இதை கி.நா. அணிக்குள் தள்ளி விடுவதே உசிதமாகிடுமா ?

    புலனாய்வுதானே! ரசிக்க ரெடி.

    கி.நாவில் தள்ள அவசியமில்லை.

    My கேள்வி #8:

    நம் மத்தியில் ஸ்டெர்ன் வேரூன்றியிருப்பது கண்கூடு ! ஆண்டுக்கொரு ஸ்லாட் இனி இவருக்கு உறுதிப்படுத்தி விடலாமா ? அல்லது முன்பதிவுகளில் "விரும்புவோர் வாங்கட்டும்" என்பதே சுகப்படுமா

    ஸ்டெர்ன்- க்கு ஆண்டுக்கொரு ஸ்லாட்

    தரலாம்.தரணும். தரப்படவேண்டும். :)

    My Question #9:

    கதாசிரியர் ஒரு செம ஆற்றலாளர் என்பதற்காகவே இந்தத் தொடரினை நாம் பரிசீலனை செய்திடலாமா ? அல்லது - காது வழியே cowboys வெளிப்படும் அளவுக்கு ரொம்பவே திகட்ட ஆரம்பித்து விட்டது சாமீ என்பீர்களா ?

    கௌபாய் கதைகள் திகட்டுமா என்ன?

    தாராளமாக வரலாம்.

    ReplyDelete
  69. புருனு பிரேசில் தாத்தா(சதாபிஷேகம்) ஜானி தாத்தா(கனகாபிஷேகம்)இவங்களையெல்லாம் வெளிநாட்டிலேயே விட்டிரலாம் சார்!

    நம்மளச் சுத்தி எங்க பாத்தாலும் கிரைம் தான்.. இதுல படிக்கிற புத்தகமும் கிரைமா? அம்மாடியோவ்வ்... 🤯🤯

    தோர்கல்.. இனிக்கும் மாம்பழம்,தித்திக்கும் பலாப்பழம்.
    விட்டுருவோமா என்ன? இளம் தோர்கல் தொகுப்பா அதுவும் உடனே வேணும் சார்!!

    Lonesome.. இளம் டியூராங்கோ.. கொத்தா.. கொத்துக்கொத்தா2023
    லயே வேணும் சார்... ஸ்டீல் சொன்ன மாதிரி இரண்டாவது அட்டவணை போடுங்க சார்!! ரெடி ரெடி!

    Zaroff.. இது ஒரு சித்திர வெற்றி! நீங்களே டிசைட் பண்ணுங்க சார்!

    ReplyDelete
  70. எப்போதுமே கௌபாய் கதைகளுக்கு ஒரு மெகா சல்யூட் தான்... இவர்களின்றி ஓர் அணுவும் அசையாது...

    ReplyDelete
  71. பிராங்க்பர்ட்டில் தமிழ்வாணன் போல பிராங்க்பர்ட்டில் விஜய(ம்)ன்,
    இரண்டு தொகுதிகளும் அருமையாக இருந்தது சார். இவ்வளவு கதைக் குவியல்களுக்கு மத்தியில் தொலைந்து போக எங்களுக்கும் ஆசைதான்! பிராங்க் பர்ட்டில் தமிழ்வாணன் துப்பறிவார், நீங்கள் துப்பறிபவர்களை துப்பறிய சென்றீர்கள்.. தமிழ்வாணன் போல, வாண்டு மாமா போல உங்களுக்கும் ஒரு பெயர் வைக்க ஆசையாய் இருக்கிறது சார்.. காமிக்ஸ் உலகத்தில் நீங்கள் சாதித்திருக்கிற
    விஷயங்கள் நிறைய பேருக்கு தெரியாமலேயே இருக்கிறது.. ஒரு பத்மஸ்ரீயாவது தர வேண்டாமா? எத்தனை பேரை அமைதிப்படுத்தி இருக்கிறீர்கள் காமிக்ஸ் கதைகளின் கதவுகள் மூலமாக..
    உங்களின் ஆர்வமே எங்களின் வாழ்க்கையாகி விட்டிருக்கிறது சார்.

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டாருக்கு...துருவ நட்சத்தித்துக்கு....சரியான பேர் தேடுவோம்...

      Delete
    2. சார்...நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு....திடு திப்புன்னு 'பத்ம ஸ்ரீ ' ரேஞ்சுக்கு கூட்டிப் போய்விட்டீங்களே ?!

      இதுவொரு சிறு வட்டம் ; & இது ரொம்பவே குறைவானோரின் ரசனைக்கு உட்பட்ட ஜானர் எனும்போது - நிறையப் பேருக்கு இது பற்றித் தெரியாது இருப்பதில் no surprises ! கிரிக்கெட் ஆட விசாலமான மைதானம் அவசியம் ; கோலி ஆட நமது முட்டுச் சந்துகளே போதுமல்லவா ? அந்தச் சந்தை வெளிச்சமாய், காற்றோட்டமாய் வைத்துக் கொண்டு, ஜாலியாய் ஆடிச் செல்வோமே ?

      Delete
    3. And வட்டம் சின்னதோ, பெருசோ - இந்த ஆத்மார்த்த அன்பு, மிகப்பெரிய அங்கீகாரங்களையெல்லாம் விட மதிப்பு வாய்ந்ததாச்சே !

      Delete
  72. மேலே நீங்கள் சொன்ன பொக்கிஷங்களின் மூலமாக 2023ன் தனி முன்பதிவுத்தடத்தினை திட்டமிட முடியுமா என்று கொஞ்சம் பாருங்களேன் சார்.. ஈரோடு சந்திப்பின் தேதியைச் சொன்னீர்கள் என்றால் அங்கே கூட இது குறித்து பேச ஆவலாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சார்....வாமண அவதாரம் எடுத்தாலொழிய இந்த 'பொம்ம புக்' உலகின் முழு விஸ்தீரணத்தை நார்மலான அடிகளில் அளந்திடுவது படைத்தவருக்கே கஷ்டம் ! So பார்ப்பதையெல்லாம், பார்த்த நொடியிலேயே ஒரு தனித்தடமாக்குவது சூப்பர்மேனுக்கு கூட சாத்தியமாகிடாது !

      Delete
  73. மேலே நண்பர்கள் சிலர் சொல்வது போல் ஒரு 6-9 கதைகள் கொண்ட எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் 2023 சந்தா தடத்தை ஜனவரியில் அறிவிக்க முடியுமா விஜயன் சார்?

    ReplyDelete
    Replies
    1. வாத்து கொஞ்சமே கொஞ்சமாய், அதன் போக்கில் முட்டையிடட்டும் சார் ; ப்ராய்லர் வாத்தாக்கிட முயற்சிக்க வேண்டாமே ?

      Delete
  74. எடி ஜி,

    ரிப்கிர்பி, mandrake and phantom சாகசங்களில் இருக்கும் தெளிவான படங்கள் காரிகன் கிளாசிக் புத்தகத்தில் இல்லையே எதனால் ஜி,
    பல இடங்களில் ஏன் ஒரு கதையின் கூட resolution சுத்தமாக இல்லையே.

    ReplyDelete
    Replies
    1. வெவ்வேறு ஓவிய பாணிகள் என்பதை மட்டுமே சொல்ல இயலும் சார் ; becos நான்குக்குமே ஒரே resolution-ல் தான் King Features ஒரிஜினல் files உள்ளன !

      Delete
  75. இப்போது எல்லாம் மாதம் மாதம் வரும் நமது காமிக்ஸை படிக்க முடிகிறதோ இல்லையோ எனது மனைவி படித்து விடுகிறார், சிஸ்கோ நன்றாக உள்ளதாம் கதை விறுவிறுப்பாக சென்றதாம். ஆனால் கதையில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளதால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதால் படித்த பக்கங்களை சில முறை மீண்டும் படித்ததாக கூறினார்.

    ReplyDelete
  76. வணக்கம். Smashing 70's ல் சமீப இதழான காரிகன் ஸ்பெஷலில்
    பைண்டிங், அட்டைப்படம், காகித தரம் போன்றவை சிறப்பாக உள்ளது. ஆனால் அச்சுத் தரம் திருப்த்திகரமாக இல்லை. கோடுகள் பளிச்சென்று இல்லை. ஆங்காங்கே பிசிறடிக்கிறது. முதல் கதையின் முதல் பேனல் இதற்கு நல்ல உதாரணம். ஒரிஜனல் சித்திரங்களே இப்படியென்றால் ஒன்றும் செய்வதற்கில்லை.

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் முயற்சி இது எனும் போது, அதற்கென ஒரு tolerance அவசியம் நண்பரே !

      இன்றைய டிஜிட்டல் யுகத்தின் துல்லியத்தை அவற்றுள் கொண்டு வர வேண்டுமெனில், அமெரிக்காவில் IDW செய்வது போல, பக்கத்துக்கு இரண்டே panels என்ற அமைப்புடன், செம உயர்தர காகிதத்தில் அச்சிடவும் ஏற்பாடுகளுடன், சித்திரங்களை முழுசுமாய் டிஜிட்டலில் மேம்படுத்திட உழைத்திட வேண்டும் ! ஆண்டுக்கொரு ஆல்பம் & தோராயமாய் ரூ.4000 விலை எனும் போது அவர்களுக்கு அந்த மெனக்கெடல் ஓ.கே. ! அதில் பத்திலொரு பங்கு விலையில், ஒரு சுண்டைக்காய் சர்குலேஷனுடன் சுற்றி வரும் நமக்கு ??

      Delete
    2. Smashing 70's இதழ்களில் நம் காகித தரம் மற்றும் அட்டை தரம் ஒரு premium feel தருது. ஆனால் அச்சு மட்டும் அந்தளவு இல்லை என்று கூற வந்தேன். நடைமுறை சிக்கல்கள் உள்ளது புரிகிறது சார்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. //துல்லியத்தை அவற்றுள் கொண்டு வர வேண்டுமெனில், அமெரிக்காவில் IDW செய்வது போல, ......சித்திரங்களை முழுசுமாய் டிஜிட்டலில் மேம்படுத்திட உழைத்திட வேண்டும் !//
      Agree with you Sir... In future, we can avoid those kind of print quality stories if possible.

      Delete
  77. SUPREME '60 s
    &
    ரெகுலர் சந்தா 2023

    இரண்டிலுமே ஒருசேர இணைந்து கொள்ள எண்ணும் நண்பர்கள், அவசியமாகின் 3 தவணைகளில் பணம் செலுத்தலாம் !

    ReplyDelete
  78. @ all..😍😘

    # SUPREME '60 s
    &
    ரெகுலர் சந்தா 2023

    இரண்டிலுமே ஒருசேர இணைந்து கொள்ள எண்ணும் நண்பர்கள், அவசியமாகின் 3 தவணைகளில் பணம் செலுத்தலாம் ! #

    அருமையான அறிவிப்பு..😍

    அட்டகாசமான அறிவிப்பு..😘👍👏

    ReplyDelete
  79. காரிகன் ஸ்பெஷல் இந்த S70 ஸ்பெஷலின் திருஷ்டி பரிகாரம் என்று சொல்லலாம். நிச்சயம் பேப்பரின் தரம் மாண்ட்ரேக், வேதாளர் போல இல்லை. புத்தகத்தின் தடிமன் நிச்சயம் மாண்ட்ரேக் வேதாளரை விட குறைவு தான். அதனால் தான் சித்திரங்கள் மறுபுறம் தெரிகிறது. ஒரிஜினல் ரெஸலூஷன் அதிகமாக இருந்தாலும் அச்சு தரம் குறைவுபோல தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. மாண்ட்ரேக்கும், காரிகனும் அச்சானது ஒரே நேரத்தில் ; ஒரே மில்லில் வாங்கிய காகிதத்தில் ! அது இது இல்லை ; இது அது இல்லை என்ற உங்களின் யூகங்களுக்கு சொல்ல என்னிடம் பதிலும் இல்லை !

      இந்த மஞ்சள் shade பேப்பர் உற்பத்தி செய்வது மிகக் குறிப்பிட்ட மில்கள் மாத்திரமே ; so அரையணா மிச்சம் செய்திட நான் எண்ணினாலும், அதற்கு மார்க்கங்கள் கிடையாது - simply becos சந்தையில் விற்பனைக்கு உள்ளது ஒரேயொரு மில்லின் சரக்கு மட்டுமே !

      அப்புறம் வெறும் ப்ளாக் & ஒயிட்டில் அச்சுத் தரம் பற்றிய தங்களின் அநுமானத்துக்கு - sorry sir ; have no comments !

      Delete
    2. அனுமானம் இல்லை சார். புத்தகங்கள் கையில் உள்ளது. கருப்பு வெள்ளை என்றாலும் கருப்புகளில் வேறுபாடு உண்டல்லவா?. பல இடங்களில் வெளுத்து உள்ளது. காரிகன் அச்சு பின்புறம் தெரிகிறது. ஒரே மில்லாக இருந்தாலும் பேப்பரின் தரம் வேறு என்பது நிச்சயம். உங்களை குறை சொல்லவில்லை. அந்த பேப்பர் சரியில்லை. இனி நீங்கள் அதை உபயோகிக்காமல் இருக்கலாம் அல்லவா..?? எல்லோரையும் போல் அருமை சார் அபாரம் சார்ன்னு சொல்லிவிட்டு போக விருப்பம் இல்லை சார்.

      Delete
  80. My கேள்வி # 1 to you :

    Bruno Brazil- கதையும் ஓவியமும் நன்றாக வெளியிடலாம் ஆசிரியரே

    My  கேள்வி #2:

    ZAROFF-க்கு ரைட்
    நம் வண்டியில் ஏற்றி கொள்ளலாம்

    My கேள்வி #3:

    தோர்கல் கண்டிப்பாக வேண்டும் 

    My கேள்வி # 4:
    //ட்யுராங்கோ பாணியில் நாலு அத்தியாயங்களையும் ஏக் தம்மில் 2024-ல் களமிறக்கி விடலாமா? ? அல்லது அடுத்தடுத்த மாதங்களில் சிங்கிள் ஆல்பங்களாகவா ?// 

    ஏக் தம் ஒகே

    My கேள்வி #5:

    இளம் ட்யுராங்கோ சிங்கிளாக வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது

    My கேள்வி #6:
    மன்னிக்கவும் ஆசிரியரே...ரிப்போர்ட்டர் ஜானி 2.0 ஏனோ பிடிக்கவில்லை 

    My கேள்வி #7:
    ப்ளீஸ் கொண்டு வாங்க ...டமால்-டுமீல்-ணங் இல்லாங்காட்டி ஒகே...இந்த புது முயற்சி  தேவை தான் 

    My கேள்வி #8: 

    ஸ்டெர்ன்-க்கு ஆண்டுக்கொரு ஸ்லாட் வேண்டும்

    My Question #9:

    செம ஆற்றலாளர் என்றால் முயற்சித்து பார்க்கலாமே ஆசிரியரே

    ReplyDelete
  81. விஜயன் சார், மிகவும் பெரிய பதிவு! படிக்கச் எடுத்து கொண்ட நேரம் 28 நிமிடங்கள்! கடந்த பதிவு உங்கள் பயணம் பற்றி காமெடியாக எழுதி இருந்தீர்கள், இந்த பதிவில் காமிக்ஸ் புதிய & பழைய நாயகர்களின் மறு அவதாரம் பற்றி சுவாரசியமாக + நகைச்சுவையுடன் எழுதி உள்ளீர்கள்; அந்த கதைகள் உடனே கைகளில் தவழ்ந்து விடாதா என ஆர்வமாக உள்ளது. நன்றி!

    ReplyDelete
  82. ஸ்மாஷிங் 70s - காரிகன் ஸ்பெஷல் 1 - கதை 4 - விடுமுறை வில்லங்கம்

    மெத்தப் படித்த விஞ்ஞானி, ஆகச்சிறந்த கடும் உழைப்பிற்குப் பிறகு தன்னுடைய அறிவு மற்றும் முயற்சியினால் ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார். அது வெள்ளோட்டம் விடப்பட ஒரு வாரம் இருக்கும் போது அவருடைய கையாலேயே அழிக்கப்படுகிறது.

    இதுதான் கதையின் பின்னணி!

    இதுபோன்ற தொடர் சம்பவங்கள் ஏற்கனவே நிகழ்ந்திருக்க FBI-க்கு மூக்கு வேர்க்கிறது.

    பணிகளை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு திரும்பி வந்திருக்கும் காரியம் தன்னுடைய மனைவி வில்டாவுடன் விடுமுறைக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

    ஆனால் அவர் தேர்ந்தெடுக்கும் விடுமுறைக்கான இடம் ஏற்கனவே இது போன்ற சம்பவம் நடந்தபோது விஞ்ஞானி லைமேன் என்பவர் சென்று வந்த இடமாகும்.

    அந்த நகரில் பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும் ஒரு ஹோட்டலில், நியாயமான விலை, நல்ல வசதிகள், உபசரிப்பு என எல்லாம் கிடைக்கிறது.

    அந்த ஹோட்டலுக்கு காரிகனும் அவருடைய மனைவி வில்டாவும் செல்கிறார்கள். அதே ஹோட்டலுக்கு வருகை தருகிறார் புகழ்பெற்ற உயிர் வேதியியல் விஞ்ஞானி எர்னெஸ்ட் லாஸ்லோ.

    ஹோட்டலில் என்ன மர்மம் உள்ளது?

    தன்னுடைய சொந்த உழைப்பையே அழிப்பதற்கு விஞ்ஞானிகள் எப்படி தயாராகிறார்கள்?

    என்பதை சுவைபட கதையுடன் நகர்த்திச் சென்று இருக்கிறார்கள்.

    ஓவியங்கள் மட்டும் சற்றே பிசிறடித்தது போல் உள்ளன. கதையும் கதை மாந்தர்களும் நடக்கும் சூழலும் நிதர்சனமாகவும் நம்பக்கூடியனவாகவும் உள்ளன. விடுமுறை வில்லங்கம் படித்தால் விரும்புவீர்கள்!

    ரேட்டிங் - 8/10

    ReplyDelete
    Replies
    1. பூபதி அருமை அய்யா. யாருமே காரிகன் ஸ்பெஷல் பற்றி எழுதாத போது நீங்கள் அருமையாக எழுதியுள்ளீர்கள்.

      Delete
  83. 1) முதலைப்பட்டாளத்தின் இரண்டாவது சுற்றுக்கு - சந்தோஷத்துடன் தயார் சார். மறுக்கா ஆரம்பிக்கலாம் சார். முதலைப்பட்டாளத்தை -The À team போன்று பால்யத்தில் ரசித்தது பசுமையாக உள்ளது
    2) ZAROFF - “ நில் கவனி வேட்டையாடு” இன் அதிரி புதிரி ஹிட். இனால் வில்லன் கலந்த ஹீரோ இன் இரண்டாவது ஆல்பத்திற்கு ரைட்டோ ரைட்
    3) THORGAL SAGA - நன்றாகப் போய்க்கொண்டு உள்ள தொடர். ஏதோ பார்த்து செய்யுங்கள் சார்வாள்
    4) Lonesome- கிளைமாக்ஸ் ஆல்பம் வெளியானவுடன் - தாங்கள் படித்து தெரிவு செய்யுங்கள் சார்!- டியூராங்கோ மாதிரி நாலு அத்தியாயங்களை ஏக் தம்மில் களமிறக்கலாம் சார்
    5) இளம் டியூராங்கோ- ஒரே தொகுப்பாக
    6) ஒரு வருடம் கிளாஸிக் ரிப்போட்டர் ஜானி , மறுவருடம் - ரிப்போட்டர் ஜானி 2.0 என்று முயற்சிக்கலாம்.
    7) டமால்-டூமீல்-ணங் இல்லாங்காட்டியும் ரசித்தான் பார்ப்போமே
    8)நாகரிக வெட்டியானிற்கு ஆண்டுக்கொரு ஸ்லாட் உறுதிப்படுத்தலாம் சார்.
    9) மிஸ்டர் க்ரோ இன் ஆல்பம் #7 இற்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
    10) XIII இன் ஆல்பம் #28 இன் கோப்புகள் கிட்டியதும் நாமும் வெளியிட்டலாமே சார். கியூபா இன் அழகை நாமும் கொஞ்சம் பருகலாமே என்றுதான்…… ஹி…. ஹி

    11) இரத்தபடலம் இல் நண்பர் XIII ஹீரோ ஆக இருக்கலாம் , லெப்ரினட் ஜோன்ஸ் இற்கும் ரசிகர் பட்டாளம் கணிசம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகையால் XIII spin-off வரிசையில் லெப்ரினட் ஜோன்ஸ் வந்தால் கசக்கவா என்ன?
    12) கதாசிரியர் செம ஆற்றலாளர் என்பதால் அவரின் கொளபாய் தொடர் இனை நாம் பரிசீலிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
    13) ஆஹா… கோடீஸ்வரக் கோமான் வரப்போனார். ….. பராக் பராக்
    14) தளபதி வர கட்டியம் கூறும் உங்கள் வாயில் சர்க்கரை தான் போட வேண்டும்.

    ReplyDelete
  84. Edi ji,

    நமது காமிக்ஸ் வருகையில் திகில் ஹரர் போன்ற கதைகள் முற்றிலுமாக வருவதில்லை என்று தோன்றுகிறது மறுபடியும் கருப்பு கிழவி கதைகள் மற்றும் திகில் கலந்த பேய் கதைகளை போல நல்ல தரமான கதைகளை வெளியிடும் வாய்ப்பு உண்டா.

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு தான் நம்ப பொன்ராசு கவிதை இருக்கே பயமுறுத்த :-)

      Delete
    2. சின்ன கதைகள், திகில் கதைகள்... அர்த்தமுள்ள கதைகள்...அது கருப்பு கிழவி கதைகள்...மீண்டும் வெளிவர வேண்டும்... ஆவண செய்யுங்கள் ஆசிரியரே

      Delete
  85. காரிகன் ஸ்பெஷல்..
    அசுர மண்டலம்..
    இதுவரை நான் படிக்காதது.
    கென்யாவின் B/w , Old Version படிக்க விரும்பினால் அசுர மண்டலம் படிக்கலாம். விறுவிறுப்பான கதை..
    காணாமல்போன ஆராய்ச்சியாளரை தேடி வரும் குழுவில் காரிகனும் ஒருவர். வந்த இடத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிக் கொள்ள, அங்கு பண்டைய காலத்தில் அழிந்துபோன டினோசர்களையும், பறவைகளையும், உயிருடன் நடமாடுவதை காண்கிறார்கள்.
    ஆராய்ச்சியாளரையும் கண்டுபிடிக்கிறார்கள். பிறகு நடந்தது என்ன?..
    அவசியம் படியுங்கள் நண்பர்களே..
    அருமையான கதைத் தேர்வு சார்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  86. இதே டெம்ப்ளேட்டில் முகமூடி வேதாளன் கதை ஒன்று அந்த கால குமுதத்தில் படித்த ஞாபகம்.

    ReplyDelete
    Replies
    1. இதே டெம்ப்ளேட்டில் டெக்ஸ் வில்லர்ர் கதையும் ஒன்று இருக்கிறது.

      Delete
  87. நடுநிசி வேட்டை - CID ராபின் கதை

    வெகு நாட்களுக்குப் பிறகு, ராபினின் ஆரம்ப கால கதைகளை நினைவூட்டும் அசாத்தியமான திரில்லர் இது!

    ஒன்லைன் - வியட்நாம் யுத்தம் முடிந்த பின்னர் மனப்பிறழ்வு அடைந்த சிலர், அதே போன்ற வெறியாட்டத்தை அமெரிக்க மண்ணில் செய்தார்களாம்!


    நியூயார்க்கின் மையமாக உள்ள சென்ட்ரல் பார்க்கில் அடுத்தடுத்து கொடூர கொலைகள். கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் கடைந்தெடுத்த கயவர்கள், விபச்சாரிகள் மற்றும் தறுதலைகள் எனும் போது பொது ஜனத்துக்கோ மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

    ஆனால், நடக்கும் கொலைகள் அனைத்தும், நியூயார்க் போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கும், ராபினின் திறமைக்கும் சவால் விடுகின்றன!

    கொலை செய்வதில் திருப்தியடைய சைக்கோ கொலைகாரன், எப்போது வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் பாயலாம் என்ற நிலையில், இவனெல்லாம் கொலைகாரனாக இருப்பானா என்று நினைக்கத் தோன்றும் வகையில் வெவ்வேறு நபர்களின் மேல் சந்தேகம் எழுகிறது.

    இடியாப்பச் சிக்கலை நோக்கி நகரும், கொலை வழக்கில், ஒரு துப்பறிவாளனுக்கே உரிய பாணியில் சிந்தனையை செலுத்தும் ராபின் கொலையாளி யார் என்று எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதை இரத்தம் தெறிக்கும் வகையில் சொல்லி இருக்கிறார் கதாசிரியர்...

    கதையில் பரிதாபமான ஜீவன்களும் உண்டு, ஆக்சன் சீக்யுவன்ஸ்களும் உண்டு என்பது கொசுறு செய்தி!

    ரேட்டிங் - 10/10

    ReplyDelete
  88. எடி ஜி,

    பாக்கெட் சைஸ் புத்தகங்களை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது ஏதாவது ஒரு பாக்கெட் சைஸ் புத்தகங்களை இந்த வருடம் வெளியிடங்களும் ஒரு சூப்பர் கதையுடன்.

    ReplyDelete
  89. எடிட்டரின் புதிய பதிவு எப்பியோ ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  90. அந்நாளைய ஹிட் அடித்த ஹீரோ கதைகளை இப்போது போலவே தனி தடத்திலும் புதிய கதைகளை சந்தாவிலும் தொடரலாம் சார்.

    அவ்வப்போது புத்தக விழாவில் அதிகம் எதிர்பார்க்கும் மாயாவி கதைகளையும் ஒரு மாக்ஸி தொகுப்பாகவோ இல்லை தற்போது வருவது போல் அதே சைஸ்லயும் கூடுதல் பிரதிகளை கொண்டுவரலாம்.

    கள நிலவரம் பார்த்து முடிவெடுங்கள் சார். அதேபோல் இதுவரை மறுபதிப்பு காணாத கதைகளையும் வெளியிட வேண்டும்.

    ReplyDelete
  91. +1 இன்னும் இன்னும் வெளியிடாத சில கதைகள் ஸ்பைடர் ,ஜானி , லாரன்ஸ் டேவிட் கதைகள் உள்ளது, eg ஜானி in லண்டன் ஸ்பைடர் இன் கல்நெஞ்சன் சிறுபிள்ளை விளையாட்டு பரலோக பயணம் லாரன்ஸ் டேவிட் இவர்களது கதைகளை முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  92. மேலும் சில மறு பதிப்புகள் prince கதைகளில் காணாமல் போன கழுகு, சைத்தான் ஜென்ரல், மேலும் சிப்பில் கதைகளில் அதிரடி மன்னன்.

    ReplyDelete