Friday, October 14, 2022

தொடரும் ஒரு ஆட்றா ராமா...தாண்ட்றா ராமா !!

 நண்பர்களே,

வணக்கம். கம்பெனி ரூல்ஸ்படி உபபதிவு ரெண்டு நாட்களுக்கு முன்னமே வந்திருக்கணும் தான் ; ஆனால் எதையாச்சும் உருப்படிக்கணக்குக்குப் போட்டு வைப்பதற்குப் பதிலாய், உருப்படியாய்ப் போட்டால் தேவலாமே என்று நினைத்தேன் ; so இதோ சித்தே லேட்டாக என்றாலும் லேட்டஸ்ட்டாய் வந்தாச்சு ! 

டெக்ஸ் தீபாவளி மலர் smash ஹிட் என்பது ஊர்ஜிதம் ஆகியாச்சு ; already இந்த இதழில் ஸ்டாக், ரேக்கின் ஒண்ணரைத்  தட்டு ரேஞ்சுக்கு வந்தாச்சு ! இப்போதெல்லாம் புது ரேக்குகளின் புண்ணியத்தில் - "ஆங்...பிஸ்டலுக்குப் பிரியாவிடையா ? - 4 தட்டு ! லார்கோவா ? மூணு தட்டு ! கமான்சேயா ? ஒரு நாலரைத் தட்டு" என்று எங்க கணக்கே வேறாகி விட்டது ! ஸேகாரும் சூப்பர்-டூப்பர் ஹிட் என்றாகிய நிலையினில் அன்னாருக்கும் கிட்டக்கவே தட்டுக்களைப் போட்டுத் தந்தாச்சு ! அடுத்த 3 மாதங்களுக்குள் இந்த இத்தாலிய இருவர் நம் கிட்டங்கிக்கு முழுமையாய் விடை தர நேரிட்டால் ஆச்சர்யமே கொள்ள மாட்டேன் ! 

So தீபாவளிக்கு ஆபீசில் போனஸைப் போட்டோமா ? 2023 அட்டவணைக்கான ஆஞ்சநேய வால் நீளத்துப் பதிவை எழுத ஆரம்பிச்சோமா ? என்ற சிந்தனைகளில் கொஞ்சமே கொஞ்சமாய்க் காலாட்டிக் கொண்டிருந்திருக்கலாம் தான் ; moreso - நவம்பர் இதழ்களில் எனது பணிகள் கிட்டத்தட்ட 75% நிறைவுற்றுவிட்டபடியால் ! ஆனால் இந்தாண்டின் இதுவரையிலுமான முழுமைக்கும் பிசியாக இருந்து பழகிய பிற்பாடு, இந்த லாத்தல் ; இந்த சோம்பல் ; இந்த ஒய்வு வித்தியாசமாய்ப்பட்டது ! அரை நாளுக்கு சுதாகர்-கோபியோடு 'கெக்கே பிக்கே' என்று யூ-டியூபில் கழித்துப் பார்த்து விட்டு, அதன் பின்னே அமேசான் ப்ரைமில் சிக்கிய ஒன்றிரண்டு படங்களைப் பார்த்த பிற்பாடு எதை பார்த்தாலும் ரசிக்கவில்லா !! இரவு பத்து மணிக்கெல்லாம் சுவற்றைப் பிறாண்டாத குறை தான் ! சரி, டிசம்பர் பணிகளை முன்கூட்டிப் பார்க்க ஆரம்பிப்போமா ? என்றால் அதிலும் டெட்வுட் டிக் நீங்கலாய் all else is done ! இது இன்னாடா சோதனை ? என்றபடிக்கே மண்டையைச் சொரிந்து கொண்டிருந்த போது தான் அந்த மகா சிந்தனை எழுந்தது ! 

தீபாவளிக்குப் பத்தே தினங்கள் தான் உள்ளன ; ஆனால் அதற்கு முன்பாய் அடித்துப் பிடித்து ஸ்பெஷலாய் திட்டமிட்டு புக் எதையாச்சும் ரெடி செய்து தான் பார்ப்போமா ? என்ன இருந்தாலும் தீபாவளி புலரும் சமயத்துக்கு ஸேகாரும் ; இளம் டெக்ஸும் ஆறிப் போன பணியாரங்களாய்த் தான் தென்படுவர் ! அந்நேரத்துக்குள் சுடச் சுட எதையாச்சும் பரிமாற சாத்தியப்படுமா ? என்று கடிகாரத்தோடும், காலெண்டரோடும் ஒரு போட்டி போட்டுப் பார்ப்போமா ? என்ற கேள்வியே அந்த மகா சிந்தனையின் சாரம் ! பற்றாக்குறைக்கு நவம்பரில் 'தல' தலைக்காட்டப் போவதில்லை எனும் போது அங்குமொரு void விழும் ! So தொடரும் நாட்களில் ஆபீசுக்கே ஒட்டு மொத்தமாய் சீட்களுக்கு அடியில் சின்னதாய் லட்சுமி வெடிகளை பொருத்தி வைத்து, அத்தினி பேரையும் தீபாவளி வரைக்கும் பரபரப்பாக்கித் தான் பார்ப்போமே ! என்ற நினைப்பில் பிறந்தது தான் "தீபாவளி சரவெடி ஸ்பெஷல் 1 & 2 "!! திட்டமிடும் இதழ்களை ஏதாச்சும் ராக்கூத்து அடித்து, வரும் புதன் / வியாழனுக்குள் ரெடி பண்ணி விட்டால், அடுத்த வாரயிறுதிக்கு முன்பாய் உங்களிடம் ஒப்படைத்து விடலாமே என்று நினைத்தேன் - and so here we go !!

தட புடாவென்று ஆபீசுக்கு ஓட்டமெடுத்து "சுடச் சுட என்ன இருக்கு ?" என்று மைதீனிடம் கேட்டேன் - அடையார் ஆனந்த பவனுக்குள் நுழைந்தவனைப் போல ! அவனோ கொஞ்சமாய்த் திருத்திருவென்று முழித்தபடிக்கே பீரோவை உருட்டினான் ! அவனிடத்தினில் வேறு யாராக இருந்திருந்தாலும், "ஆரம்பிச்சுட்டான்யா அடுத்த ஏழரையை !!" என்று மனசுக்குள்ளேயே என்னைக் குமட்டில் குத்த ஆரம்பித்திருப்பார்கள் ! ஆனால் மைதீன் புனித மனிடோவின் நமக்கான பிரத்தியேக ஆக்கம் என்பதால், கொஞ்ச நேரத்தில் பீரோவுக்குள் இருந்த புதுக் கதைகளை மாடியிலுள்ள எனது மேஜையில் அடுக்கித் தள்ளினான் ! சத்தியமாய் இது பீற்றல் அல்ல guys ; ஆனால் அடுத்த ஓராண்டுக்கு கதைகளே வாங்காமல், கையிருப்பைக் கொண்டே ஒரு சந்தாவினை உருவாக்க எண்ணிடும் பட்சத்தில் we are all set !! 

  • கார்ட்டூன்கள் வேணுமா ? இருக்கி !!
  • கி.நா.வேணுமா ? வண்டி வண்டியாய் இருக்கி !
  • புதியவர்கள் வேணுமா ? இக்கடச்சூடு கண்ணா !
  • க்ளாஸிக் நாயகர்கள் வேணுமா ? ஒரு தலைவாழை விருந்துக்கே தேவையான சரக்கு இருக்கி ! 

Phew !! எனக்கே லைட்டாக வியர்த்து விட்டது - அங்கேயும், இங்கேயுமாய் புத்தக விழாக்களில் தேற்றிய காசெல்லாம் வங்கியிருப்பில் இல்லாது, இப்படி பீரோவாசத்தில் நாட்களைக் கடத்துகின்றனவே என்று !! தெரியும் தான், நமது கதைக்கையிருப்பு பெரிதென்று - ஆனால் மொத்தமாய் அடுக்கிப் பார்க்கும் போது தான் புலனாகிறது - its just massive என்பது !! இந்தக் கதைகளெல்லாம் "காசு-பணம்-துட்டு-மணி--மணி" என்று நர்த்தனம் ஆடிடும் பட்சத்தில், எந்நேரமும் ஒல்லி-பெல்லியாய் இலியானவைப் போல காட்சி தரும்  நமது வங்கிக் கணக்கானது, சும்மா நவீன அனுஷ்காவைப் போல புஷ்டியாய் இருந்திருப்பது உறுதி ! But மிட்டாய்க்கடைக்குள் நுழையும் பால்வாடிக் குழந்தையின் mindset நமக்கு அகலாத வரைக்கும், ஆபீஸ் ரூம்களில் பீரோக்களும், கிட்டங்கிகளில் ரேக்குகளும் பிரதானமாய் இடம்பிடிப்பது குன்றிடாது தான் ! 

To cut a long story about the stories in hand short - கையில் உள்ள கதைகளுள் டைப்செட்டிங்கும் முடிந்து அச்சுக்குச் செல்ல ரெடியாய் உள்ள கதைகள் எவையென்று filter செய்ய ஆரம்பித்தேன் ! And பிரதானமாய் 'தல' டெக்ஸ் இருந்தால் தேவலாமே என்ற கண்ணோட்டத்திலும் பார்த்தேன் !! டெக்ஸ் க்ளாசிக்ஸ் 3 ஆல்பத்துக்கென - "பாலைவனப் பரலோகம்" பூரணமாய் முடிவுற்றும் ; அதனுடன் வரவிருந்த "ஓநாய் வேட்டை" கதையானது பாதி முடிந்த நிலையிலும் இருக்கக் கண்டேன் ! இரண்டையும் இணைத்து - விளம்பரப்படுத்தியிருந்தது போலவே ஒரே ஹார்ட்கவர் ஆல்பமாய் உருவாக்குவதெனில் சத்தியமாய் பைண்டிங்கிற்கு நேரம் போதவே போதாது என்பது புரிந்தது ! ரைட்டு - சிங்கத்தை சங்கத்தோடு வரச் செய்வதற்குப் பதிலாய், சிங்கிளாய் இறக்கி விட்டால் - தயாரிப்பும் லேசு ; பைண்டிங்கும் சாத்தியப்படக்கூடும் என்று பட்டது ! அப்புறமென்ன - "பாலைவனப் பரலோகம்" ஒரு தனி, முழுவண்ண இதழ் எனத் தீர்மானித்தேன் ! டெக்ஸ் க்ளாசிக்ஸ் 3-க்கென ஏற்கனவே அட்டைப்பட டிசைன் ரெடியாக இருந்தது ; and அதனில் பின்னட்டையில் இடம்பிடித்திருந்தது "பா.ப" ! "பின்னட்டையைத் தூக்கி முன்னுக்குப் போடுங்க ; புதுசாய் ஒரு back cover ரெடி பண்ணுங்க !" என்று காலில் சுடுதண்ணியை ஊற்றிக் கொண்டு நான் பரதம் ஆட, பின்னட்டைக்கென வழக்கம் போல  கதைக்குள்ளிருந்து படங்கள் எடுக்க முனைந்தனர் நம்மாட்கள் ! அப்போது தான் எனக்கு நினைவுக்கு வந்தது - ரொம்பச் சமீபமாய் நண்பர் ஒருவர் நமக்குச் செய்திருந்த உபகாரம் !! டெக்சின் இதழ்களில் அவ்வப்போது வெளியாகும் pinup போஸ்டர்கள் நிறையவே உண்டு & நெட்டில் அவற்றைப் பார்த்திட இயலும் தான் ! அவற்றில் ஒரு கணிசமான எண்ணிக்கையினை நண்பர் சேகரித்தாரா ? அல்லது எங்கேனும் சேகரிப்பாகவே பார்த்தெடுத்தாரா - தெரியலை ; but கிட்டத்தட்ட 150+ டிசைன்களை ஒரு pdf file ஆக நமக்கு அனுப்பியிருந்தார் - ஓசூரைச் சார்ந்த திரு.அகஸ்டின் ! அதனை வேக வேகமாய்ப் புரட்டினேன் and yes - எதிர்பார்த்தது போலவே "பாலைவனப் பரலோகம்" இதழுக்கென போனெல்லி போட்டிருந்த pinup போஸ்டரும் உள்ளுக்குள் இருந்தது ! அப்படியே ஒரு கூடையைப் போட்டுக் கவிழ்த்து அந்த டிசைனை நமது பின்னட்டையாக்கிக் கொண்டோம் ! நன்றி அகஸ்டின் சார் !! And here is the cover :

இரண்டுமே ஒரிஜினல் சித்திரங்கள் - நமது கலர் மேம்படுத்தல்களோடு ! And சூட்டோடு சூடாய், ராவோடு ராவாய், உட்பக்கங்களைப் பிழைத்திருத்தம் போட்டேன் - ஞாயிறன்று அச்சுக்குச் செல்ல வேண்டுமென்ற இலக்கோடு ! And பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.போல 'தல' கலரில் சும்மா  டாலடிப்பதை நாள்முழுக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலும் !! அந்த மலைச்சிங்கங்களோடு நம்மவர் மோதும் sequences 27 ஆண்டுகளுக்குப் பின்பாய் நான் மறுக்கா பார்க்கிறேன் - அன்றைய அதே த்ரில்லோடு !! பாருங்களேன் : 

So டைனமைட்டோடு அதகளம் செய்யும் 'தல' தீபாவளியின் ஆரவாரத்துக்குப் பொருத்தமாக இருப்பாரென்று நினைத்தேன் ! And நவம்பர் மாதத்து வெளியீடுகளோடு இந்த டெக்ஸ் இதழையும் சேர்த்துக் கொண்டால், ஏஜெண்ட்களிடமும் நமது சிரம் தப்பும் ! So 'மாதமொரு டெக்ஸ்' என்ற வாக்குறுதிக்கும் அல்வா தராது சமாளித்த திருப்தி எனக்கு !

And "தீபாவளி சரவெடி-2" கூட இன்னொரு இத்தாலிய / போனெல்லி பிரஜையே ! 2021-ல் அறிவிக்கப்பட்டு ; அப்பாலிக்கா வெட்டியான் ஸ்டெர்னுக்கு வழிவிடும் பொருட்டு பின்சீட்டுக்குச் சென்ற CID ராபினின் "நடுநிசி  வேட்டை" ரெடியாய், பிழைத்திருத்தங்களும் செய்யப்பட்டுக் காத்திருந்தது ! அட்றா சக்கை ; ராபினைக் கண்ணில் காட்டியது போலவும் ஆச்சென்று, அவரது black & white சாகசத்தினை டிக் அடித்தேன் ! And இதோ - மின்னல் வேகத்தில் ரெடி செய்த அட்டைப்படமும், ஒரிஜினல் டிஸைனுடன் !!

Black & White-ல் இதோ ராபினின் வழக்கமான க்ரைம் த்ரில்லர் : 

So ரூ.150 + ரூ.80 = ரூ.230 + கூரியருக்கு ரூ.35 = ரூ.265 என்பதே இந்தச் சரவெடியின் package ! வெளி மாநிலமெனில் ரூ.230 + ரூ.60 = ரூ.290 .

வியாழனுக்கு டெஸ்பாட்ச் செய்திடுவோம் என்பதற்கேற்ப நீங்கள் ஆர்டர் செய்திடலாம் guys ; இயன்றவரைக்கும் புதனன்றே அனுப்பிட பிரயத்தனங்கள் செய்வோம் ! Of course - இப்படி நினைத்து நினைத்து இதழ்களை நுழைப்பது எரிச்சல் மூட்டலாம் தான் ; ஆனால் நிலவரங்களுக்கேற்பவே திட்டமிடவும் இயல்கிறது ! ஓராண்டுக்கான அட்டவணை + திட்டமிடலில் இது போன்ற "split second decisions-களுக்கெல்லாம் provision வைப்பது அசாத்தியமாகிறது ! So உங்களின் புரிதலுக்கு முன்கூட்டிய நன்றிகள் guys ! And of course - இரு இதழ்களையும் நீங்கள் தீபாவளிக்கு அப்புறமாயும், தோதுப்படும் பொழுதுகளில் வாங்கிக்கொள்ளலாம் ; நிச்சயமாய் நம்மிடம் ஸ்டாக் இருக்கும் ! 

அப்புறம் இந்த அறிவிப்பு பற்றி நமது front desk க்கு இப்போது வரையிலும் எதுவும் தெரியாது ! நாளை காலையில் சொல்லும் போது அவர்கள் காட்டவுள்ள reactions எவ்விதமிருக்குமென்று இப்போதே எனக்கு யூகிக்க முடிகிறது ! 'ஆட்றா ராமா...தாண்ட்றா ராமா !!' தொடர்கிறது ! 

Bye folks ; see you around !! Have a great weekend !!

307 comments:

  1. Replies
    1. நீங்கதானா நான் யாரோ ஒரு பூனக்குட்டி ன்னு நெனைச்சிடேன் ங்க.. 😉😉

      Delete
    2. அது நீங்க தான்னு தெரியும் .. 😊😊😊

      Delete
    3. எனக்கு இந்த 'ஐ பர்ஸ்ட்' போடறதெல்லாம் துளிகூடப் பிடிக்காதுப்பா!!

      Delete
  2. வாங்க. எல்லாரும் வாங்க.

    ReplyDelete
  3. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  4. Replies
    1. டெக்ஸ்க்கும்
      ராபினுக்கு பணம் கட்டியாச்சுங்க டியர் எடி
      லேட் பண்ணாம மத்தவங்களுக்கு முன்னாடியே எனக்கு அனுப்பிடுங்க போதும் .. 😆😆

      Delete
  5. டெக்ஸ் மற்றும் ராபின் டபுள் ஓகே. நான் படிக்க ரெடி.

    ReplyDelete
  6. அட்டகாசமானபதிவு சார்.அற்புதம் அதி அற்புதம்

    ReplyDelete
  7. /// கார்ட்டூன்கள் வேணுமா ? இருக்கி !!
    கி.நா.வேணுமா ? வண்டி வண்டியாய் இருக்கி !
    புதியவர்கள் வேணுமா ? இக்கடச்சூடு கண்ணா !
    க்ளாஸிக் நாயகர்கள் வேணுமா ? ஒரு தலைவாழை விருந்துக்கே தேவையான சரக்கு இருக்கி ! ///

    இப்படி நீங்க அடிக்கடி பாயை பிராண்டுரது கஷ்டமாத்தான் இருக்குங்க டியர் எடி .. ஆனா நீங்க இப்படி போட்டு தாக்கினாத்தான் தல தாண்டவம் ஆடுறார்ன்னு எல்லார்க்கும் புரியும் .. டியர் எடி .. வெரி ஹேப்பீ .. இன் த தீபாவளி .. 😍😍😍

    ReplyDelete
  8. *Zagor - புதிதாய் ஒரு புயல்*

    முதலில் கதைத் தேர்வுக்கு ஒரு சபாஷ். நல்லவேளை பழய ஆரிஜின் ஸ்டோரியை தேர்வு செய்யாமல் புதிதாக வெளி வந்த போசெல்லியாரின் யங் ஸாகோர் ஆரிஜின் கதையை தேர்வு செய்தது சரியான முடிவு. பழய ஆரிஜின் ஸ்டோரியில் ஸாகோரின் heroism சில காரணங்களால் பலவீனமாக இருக்கும். அவற்றை ரீமேக் செய்யும போது சரி வர எடிட் செய்திருப்பதால் இந்த version முந்தயதை விட நன்றாக இருக்கிறது.

    ஆக்சன் காட்சிகள். டுப்பு டுப்புன்னு குண்டு தீராமல் சுட்டு கொண்டே இருக்காமல், பெரும்பாலான சண்டைக் காட்சிகள் hand on hand combat முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பாக இருக்கிறது. ஓவியங்களில் ரத்தமும் நமது உடலில் அடரினலினும் தெறிக்கிறது.

    பெற்றோரை கொன்றவர்களை பழி வாங்கி, அமானுஷ்ய தேவதைகளின் உதவியுடன் தன் வாழ்க்கை நோக்கத்தை அறிந்து கொண்டு பேட்ரிக் நீதிக்காவலன் ஸாகோராக உருமாறுவது தான் கதை.

    முதல் 4 பாகங்கள் பெரிய அமானுஷ்ய நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் செல்கிறது. 5 பாகத்தில் வந்துள்ள அமானுஷ்ய நிகழ்வுகளும் ஆக்சனும் கூட முந்தய version உடன் ஒப்பிடும் போது குறைவு தான். ஆறாவது பகுதியும் ஆக்சன் குறைவுதான்.

    ஆரிஜின் கதையில் வரும் வானவில் பாலம், மற்றும் மீதமிருக்கும் எதிரிகளையும் அழித்து ஸாகோர் டார்க்வுட்டின் தாதாவாக நிலை பெறுவது இனி வரும் கதைகளில் நடைபெறும் என்று நினைக்கிறேன்.

    ஒரே மூச்சில் 330 பக்கங்களை தொடர்ந்து படித்துவிட்டு அதற்கு மேல் தொடர்ந்தால் வெளியே தள்ளி கதவை சாத்தி விடுவார்கள் என்பதால் நிறுத்த வேண்டி ஆகியது. கதை எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது.

    ஓவியங்களும் வர்ணச்சேர்க்கையும் அபாரமாக உள்ளது.

    *I loved it. Welcome Zagor. *

    ReplyDelete
    Replies
    1. Me too loved it ஷெரீஃப். One of the best intros this year.

      Delete
    2. க்ளாஸிக் ஸேகார் & நவீன ஸேகாருக்கு மத்தியில் நெருடல்களின்றிச் சவாரி செய்வதே இனியான சவால் சார் !

      Delete
  9. நிஜமாகவே தீபாவளி இதுதான். சூப்பர் சார் சூப்பர். உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை. எங்களின் மைண்ட் செட் புரிந்து அதற்கு தகுந்த மாதிரி திட்டமிடும் உங்களை போன்ற ஒருவர் கிடைத்தது எங்கள் பாக்கியமே.

    ReplyDelete
    Replies
    1. அட..பிரீயா விடுங்க சார் !

      இண்டிகேட்டர்களே இல்லாத நாட்களிலேயே, கையையும், காலையும் இப்டிக்கா, அப்டிக்கா நீட்டி வண்டி ஓட்டிப் பழகிய நமக்கு, இதெல்லாம் சவாரியின் ஒரு அங்கம் தானே ?

      Delete
  10. தீபாவளி சரவெடி 2 காப்பி புக் பண்ணியாச்சு..

    அதனால ரிசர்வ் பண்ணி வச்சிருந்த தீபாவளி மலரை படிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் அதே கதைதான்.. :⁠-⁠)👍🏼👍🏼👍🏼

      Delete
    2. இப்படியும் ஒரு ஆங்கிளா ? அட !!

      Delete
    3. // அதனால ரிசர்வ் பண்ணி வச்சிருந்த தீபாவளி மலரை படிக்கலாம். //

      நானும் உங்களைப் போலத் தான்.

      Delete
  11. Edi Sir..
    பட்டைய கிளப்பிட்டேள் போங்க...😍😀

    தீபாவளி சரவெடி ஸ்பெஷல் 1&2

    பாலைவனப்பரலோகம்

    ReplyDelete
  12. ஆஹா. அருமையோ அருமை. தீபாவளிப் பரிசுக்கு நன்னிங்கோ.

    ReplyDelete
  13. அட புதிய பதிவு 😍😍

    ReplyDelete
  14. CID ராபினின் "நள்ளிரவு வேட்டை"


    சார் நான் நள்ளிரவு வேட்டைன்னதும் சற்றே கொளம்பித்தான் போய்ட்டேன் ஒரு வேளை தீபாவளிக்கு ரெண்டு டெக்ஸோன்னு .. !!! ..

    ராபின் ஸ்டோரி பெயர் நடுநிசி வேட்டைதானே ..!!?? 😉😉

    நீங்களும் கொஞ்சம் கன்பீஸ் ஆகீட்டீங்க போல .. 😳😳😳

    ReplyDelete
    Replies
    1. நடுச்சாமத்தில் நள்ளிரவை, நடுநிசியென திருத்திடுவோம் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  15. நடுநிசிவேட்டை..👍
    CID ராபின் ..

    சூப்பர் சார்..

    Rs.265 (150+80+c35 ) இதோ உடனே Gpay பண்ணிடறேன்.😍😘

    ReplyDelete
    Replies
    1. வந்திடுத்து !! நன்னி சார் !

      Delete
  16. பணமும் அனுப்பி விட்டேன் சார். நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
    Replies
    1. வந்திடுத்து !! நன்னி சார் !

      Delete
  17. // வியாழனுக்கு டெஸ்பாட்ச் செய்திடுவோம் என்பதற்கேற்ப நீங்கள் ஆர்டர் செய்திடலாம் guys ; இயன்றவரைக்கும் புதனன்றே அனுப்பிட பிரயத்தனங்கள் செய்வோம் ! //
    சூப்பரு,அப்ப தீபாவளி கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இல்லை...

    ReplyDelete
  18. பாலைவன பரலோகத்திற்க்கு நீங்க ஏதும் போஸ்டர் தருவீங்களா சார் 😉😉 .. போனெல்லி கொடுத்தது போல .. ??!!!

    ReplyDelete
    Replies
    1. அது போஸ்டர் இல்லீங்க சாமி ; புக்கினுள் நடு நடுவே கலரில் எப்போதாவது போனெல்லி பிரிண்ட் செய்திடும் ஒற்றைப் பக்கம் !

      Delete
  19. // அப்புறம் இந்த அறிவிப்பு பற்றி நமது front desk க்கு இப்போது வரையிலும் எதுவும் தெரியாது ! நாளை காலையில் சொல்லும் போது அவர்கள் காட்டவுள்ள reactions எவ்விதமிருக்குமென்று இப்போதே எனக்கு யூகிக்க முடிகிறது ! ' //
    பாவம் சார் அவங்க...!!!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் சோடா (பாட்டில்களில் வருவது) ; க்ளுக்கான் D என்று வாங்கி வைத்து விட்டுச் சொல்லணும் சார் !

      Delete
  20. // இரு இதழ்களையும் நீங்கள் தீபாவளிக்கு அப்புறமாயும், தோதுப்படும் பொழுதுகளில் வாங்கிக்கொள்ளலாம் ; நிச்சயமாய் நம்மிடம் ஸ்டாக் இருக்கும் ! //
    ஸ்டாக் இருக்கும் சார்,ஆனால் நமக்கு அதற்கான பொறுமைதான் இல்லை,ஹி,ஹி...!!!

    ReplyDelete
  21. சீக்கிரம் ஆன்லைன் அப்டேட் பண்ணிடுங்க சார்,இரண்டு அறிவிப்புகளுமே அசத்தல் சார்,உண்மையில் தீபாவளிக்கு இரண்டு லட்டுகள் கிடைத்தது போல் உள்ளது...

    ReplyDelete
  22. முன்பதிவு done சார். எங்களை மகிழ்விக்க அடிக்கும் அத்தனை கரணங்களுக்கும் நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. நன்றியெல்லாம் வேண்டாமே சார் ; என் வேலையே இது தானே ?

      Delete
  23. பதிவு நாளை காலைக்குள் கண்டிப்பா லோட் மோர் ஆயிடும் சார்,மதியத்திற்குள் 300 ஐ தாண்டிடும்,நாளை மாலையே புது பதிவை ரெடி பண்ணிடுங்க...

    ReplyDelete
    Replies
    1. அண்ணே என்ன இருந்தாலும் நாளை பதிவுக் கிழமை அல்லவா?

      Delete
    2. ஐயா....சனி & ஞாயிறு ஐயாம் குப்பை கொட்டிங் வித் ஏஜெண்ட் சிஸ்கோ ! அழகிய ஆபத்து !

      Delete
    3. // ஐயா....சனி & ஞாயிறு ஐயாம் குப்பை கொட்டிங் வித் ஏஜெண்ட் சிஸ்கோ ! அழகிய ஆபத்து ! //

      ஆமாம் சார்! நான் எனக்கா கேட்கிறேன் இந்த சேலம் குமாருக்காக கேட்கிறேன், இதோ நமது விமர்சன புயல் அறிவரசுக்காக கேட்கிறேன், நம்ப சின்னமன்னூர் சரவணனுக்காக கேட்கிறேன்; நமது வழக்கமான சனியிரவு ஆடல் பாடல் எங்களுக்கு வேண்டும் சார் :-) இல்லை என்றால் நாளை காலை கறிக்கடை பதிவை நம்ப விஜயராகவனுக்காக போடுங்கள் சார்!

      Delete
    4. PFB கரெக்ட் பாயிண்ட்ஸ்...

      Delete
  24. சூப்பர் சார் நள்ளிரவு வேட்டை என்று சொன்னதும் டெக்ஸ் கதையோ நினைச்சு ரொம்ப ஆசையா இருந்தேன். ஆனா ராபின்
    பரவால்ல வரடும்.

    ReplyDelete
  25. // அதனுடன் வரவிருந்த "ஓநாய் வேட்டை" கதையானது பாதி முடிந்த நிலையிலும் இருக்கக் கண்டேன் ! //
    இது பொங்கல் ஸ்பெஷலா சார்...

    ReplyDelete
    Replies
    1. நமக்குப் பண்டிகைகளுக்கா பஞ்சம் சார் ? ஏதாச்சும் ஒரு நாள்-பொழுதுக்கு களமிறக்கி விடுவோம் !

      Delete
    2. ஒண்ணுமே கிடைக்கலையா - நம்ம 'தலீவருக்கு' ஐம்பதாவது பிறந்தநாள் விழா மலர் என்று போட்டுத் தாக்கிப்புடுவோம் !

      Delete
    3. ஹா,ஹா,செம சார்,ஆனா இந்த விஷயம் தலைவருக்கு தெரியாம பார்த்துக்கனும் சார்...

      Delete
    4. // நம்ம 'தலீவருக்கு' ஐம்பதாவது பிறந்தநாள் விழா மலர் //

      🤣🤣🤣🤣

      Delete
    5. "பதுங்கு குழி ஸ்பெஷல்"

      Delete
    6. என்னது ஐம்பதாவது பிறந்த நாள் விழா மலரா ..

      சார் அதுக்கு இன்னும் 26 வருசம் இருக்கு....:-(

      Delete
    7. பதுங்கு குழி ஸ்பெஷல்...


      :-)))))))

      Delete
  26. Tex முன்னட்டை பின்னட்டை ரெண்டும் சூப்பர் ஒரிஜினாலிட்டிய ஃபேஸ் பண்ணிருக்கீங்க தேங்க்ஸ்

    ReplyDelete

  27. // ஆனால் அடுத்த ஓராண்டுக்கு கதைகளே வாங்காமல், கையிருப்பைக் கொண்டே ஒரு சந்தாவினை உருவாக்க எண்ணிடும் பட்சத்தில் we are all set !!

    கார்ட்டூன்கள் வேணுமா ? இருக்கி !!
    கி.நா.வேணுமா ? வண்டி வண்டியாய் இருக்கி !
    புதியவர்கள் வேணுமா ? இக்கடச்சூடு கண்ணா !
    க்ளாஸிக் நாயகர்கள் வேணுமா ? ஒரு தலைவாழை விருந்துக்கே தேவையான சரக்கு இருக்கி ! //

    👆 இதுல எது இருக்கோ? இல்லியோ? அடுத்த ஆண்டு சந்தால மாதம் ஒரு டெக்ஸ் கதை இருக்கணும். 12 டெக்ஸ் புக்குக்கு ஒண்ணுகூட குறையக் கூடாது. அதிகமா வந்தாக்கூட பரவாயில்லை.

    ReplyDelete
    Replies
    1. படிங்க ; பகிருங்க பாபு ! 'தல' தன்னாலே வருவார் !

      Delete
  28. அருமை அருமை பதிவு நன்றி 🙏 ஐயா!!எங்கே தீபாவளிக்கு எதுவுமே படிக்கவில்லையே என நினைத்தேன் தித்திப்பாய் ஒரு பதிவை போட்டு எங்களை சந்தோஷ படுத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏 ஆசானே

    ReplyDelete
  29. // So டைனமைட்டோடு அதகளம் செய்யும் 'தல' தீபாவளியின் ஆரவாரத்துக்குப் பொருத்தமாக இருப்பாரென்று நினைத்தேன் ! //
    இப்பவே டெக்ஸ் ஜுரம் இப்படி இருக்குன்னா,அடுத்த வருஷம் டெக்ஸ் 75,ஆர்ப்பரிப்பான மழையாய் கொட்டித் தீர்க்கப் போகிறார் தல...

    ReplyDelete
  30. அப்படியே அந்த ஆன்லைன் புத்தகத் திருவிழா…

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி முடியட்டும் சார் ; பார்த்துக் கொள்ளலாம் !

      Delete
    2. அடடே இந்த கொண்டாட்டம் வேறு இருக்கா, ஆண்டு முடிவு விழா ஸ்பெஷலோ...

      Delete
    3. உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...கிட்டங்கிக்கு வந்த ஒரே மாதத்தில், புத்தம் புது 3 ரேக்குகளுடன் - STRAIGHT FROM THE STOCK SALE !!

      அப்டின்னு போட்டுத் தாக்கணும்னு நான் நினைக்கலை சார் ; ஆனால் அப்படி நடந்திடுமோன்னு தெரிலே !

      Delete
    4. நல்லதே நடக்கும் சார்...

      Delete
  31. சார்,எப்படி சார் இது ? பிண்றீங்க

    நான் ரொம்ப நாளாய் எதிர்பார்த்த CID Robin அதுவும் தீபாவளிக்கு!!!

    ReplyDelete
    Replies
    1. கரணங்கள் தானே சார் நமது அடையாளமே ? எனக்கே போர் அடித்துப் போய்விடும் பல்டியில்லாப் பயணமெனில் !

      Delete
  32. அருமையாக பதிவு, இந்த dewali ku ரெண்டு லட்டு

    ReplyDelete
  33. தீபாவளிக்கு படிக்க புக் இல்லையேன்னு இந்த மாத புத்தக பார்சலை பிரிக்காம வெச்சுருந்தேன்..

    நாளைக்கு பார்சலை பிரிச்சுற வேண்டியதுதான்..

    ReplyDelete
  34. அப்படியே ஒரு நாள் இது மாதிரி கேப்டன் பிரின்ஸ் Surprise இதழ் ஒன்று வெளியிட்டீர்கள் என்றால் செம்மயா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. கேப்டன் பிரின்ஸ் இன்னும் reprint காண அதிகமில்லை என்று நினைக்கிறேன் சார் ; maybe இன்னுமொரு மூன்றோ-நான்கோ ?

      Delete
    2. நிச்சயமாய் சார் ! பார்ப்போம் - நண்பர்கள் மத்தியிலும் இளவரசருக்கு மவுசு தொடர்கிறதா என்று !

      Delete
    3. பிரின்ஸுக்கு வெல்கம்...

      Delete
    4. @Vijayan Anna!
      கேப்டன் பிரின்ஸ் மறுபதிப்புல "நியூயார்க்கில் பார்னே!" (Lion Top 10 special) கதை வெளியிட முடியுமா??

      Delete
    5. //maybe இன்னுமொரு மூன்றோ-நான்கோ ?//

      இன்னும் 5 மறுபதிப்பு பாக்கி உள்ளதே, நீங்கள் அறியாததா எடிட்டர் சார்?

      1.(சைத்தான் ஜெனரல்) General Satan, story by Greg, illustrations by Hermann
      2. (நியூயார்க்கில் பார்னே!) Manhattan Adventure, Greg/Hermann
      3. (பனி மண்டல கோட்டை) Fortress of Fog, Greg/Hermann
      4. (காணாமல் போன கழுகு) Target: Cormoran, Greg/Hermann
      5. (பிரின்ஸ் in ஆப்பிரிக்கா) The Trap of 100,000 Spears, Greg/Dany

      இது போக ஒரு புதிய கதையும் உண்டே ...
      New one yet to publish in Tamil:
      Miss Dynamite, Greg/Aidans

      Delete
  35. நிஜமான தீபாவளி பரிசு..... களை கட்ட ஆரம்பித்துட்டது தீபாவளி 2022....
    எதிர்பாரா சரவெடியை தாக்கிட்டீங்க மகிழ்ச்சிங் சார்💞

    ReplyDelete
  36. உலகத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ஒரே தீபாவளிக்கு இரு டெக்ஸ் ஸ்பெசல்கள்....💃💃💃💃💃

    ReplyDelete
    Replies
    1. அட...ஆமாம்லே ?

      Delete
    2. ஆம்...சார்...செம செம மகிழ்வான செய்தி...

      Delete
  37. தீபாவளிக்கு ஏதும் பட்டாஸு பார்சல் ஏதும் சர்ப்ரைஸா அனுப்புவீங்களா விஜயன் சார் .. சாக்லெட்க்கு பதிலா பட்டாஸு 😔😔

    ReplyDelete
    Replies
    1. சுடச் சுட அல்வா கிண்டிவிடலாம் சம்பத் !

      Delete
  38. கண்ணை சுழற்றி வரவேற்ற தூக்கம்,சொக்கி சுழலும் நேரத்தில் வந்த அட்டகாச பதிவால் பறந்து போயிற்று...

    ReplyDelete
    Replies
    1. தாரமங்கலத்துக்குப் பக்கமோ சார் மல்லூர் ?

      Delete
    2. தாரையில் இப்போ நடுராத்திரியாம் சார்...

      Delete
    3. குடுத்து வைச்ச ஆத்மா சார் ; உறங்கட்டும் நிம்மதியாய் !

      Delete
    4. // தூக்கம்,சொக்கி சுழலும் நேரத்தில் வந்த அட்டகாச பதிவால் பறந்து போயிற்று... //

      +1

      Delete
    5. Absolutely sir - oru manikku koranju thookamE varaadhu namakku :-(

      Delete
    6. 10 வருட இரவு பணி காரணமாக எனக்கும் ஸ்லீப்பிங் disorder உண்டு.
      8 மணிக்கே படுக்க விழுந்தாலும் விடிஞ்ச பிறகே உறங்க செல்கிறேன்.

      Delete
    7. :-)


      நன்றி சார்....:-)

      Delete
  39. உள்ளேன் ஐயா..!

    ஹேப்பீ தீபாவளி...😍😍😍

    ReplyDelete
  40. Transferred the money for both the books! Thank you Sir!

    ReplyDelete
  41. விஜயன் சார், சும்மாவா சொன்னாங்க சார், ஆடியகாலும் பாடிய வாயும் சும்மாவா இருக்குமா சார்! இது போன்ற கரணங்கள் எல்லாம் உங்களுக்கு ரவுண்டு பன்னு சாப்பிடுவது போல சார்!

    செம நியூஸ்!

    ReplyDelete
    Replies
    1. பன்னுலாம் ஏப்பமே விட்டாச்சு சார் - என் பங்குக்கு ! பிரின்டிங் & பைண்டிங் மட்டுமே பாக்கி இனி !

      Delete
  42. **பீரோ பீஸ்ட்ஸ்*" அல்லது **பீரோ பீரங்கீஸ்** என்று ஒரு தடம் ஆரம்பித்து அதில் இருக்கும் கதைகளை லிஸ்டிங் போட்டு அதிக ஓட்டுகள் பெறும் கதையை மாதமோ இரு மாதங்களுக்கு ஒருமுறை என வெளியிடலாம்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா....வாத்து பிரியாணி ஆக்கிப்புட்டோமென்று ஆகிடப்படாது சார் !

      Delete
    2. அதையும் சாப்பிட்டு பார்ப்போமே சார்.

      Delete
    3. க்வாக்..க்வாக் ..க்வாக் !

      Delete
  43. இந்த தீபாவளி நம்ம காமிக்ஸுக்கு ரொம்பவே ஸ்பெஷல் சார்,3 ஆண்டுகள் கோவிட் தாண்டவத்திற்கு பிறகு புதிய வாசல்கள் திறந்துள்ளன..
    முத்து 50 கொண்டாட்டம்,
    காமிக்ஸ் இதழ்கள் பல்க் ஆர்டர் சந்தோஷம்,
    தீபாவளி ஸ்பெஷல் அறிவிப்புகள் கொண்டாட்டம்,
    அடுத்து ஆன்லைன் திருவிழா கொண்டாட்டம்...
    -கொண்ட்டாங்கள் வரிசை கட்டட்டும்...
    எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா சுத்திப் போடுங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. சொல்ல மறந்து விட்டேன் சார் ; சென்னையில் "OMR புத்தக விழா" என்றொரு bookfair பெருங்குடியில் நடத்தி வருகிறார்கள் - சில பல ஆண்டுகளாகவே ! IT நிறுவனங்கள் மிகுந்திருக்கும் corridor ! இம்முறை அங்கே நமது இதழ்கள் இருந்தே ஆக வேண்டுமென்று கோரி, அமைப்பாளர்கள் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர் !!

      Delete
    2. புனித மனிடோவும், ஓடினும் துணை நிற்பார்கள் சார் - நம் சிறு குடும்பத்துக்கு !

      Delete
    3. மகிழ்ச்சியின் அளவு பெருகட்டும்...

      Delete
    4. ஆஹா..வாழ்த்துக்கள் சார்...

      Delete
  44. தோர்கல் next part எப்ப வரும்

    ReplyDelete
  45. சார் சூப்பர்.....பாலை வனப்பரலோகம்னதும் இதுதானா என அலட்சியமாக பாத்த என்னை தூக்கி வீசியது அட்டைப் படமும்...உள் பக்கங்களும்....நானும் பாருடா ராமா ஆடுறா நா'மான்னு குதிக்கின்றேன் டாப் பட்டை இதான்னு.... செம விருந்து சார் கண்களுக்கு....
    அடுத்த ராபினட்டையும் வித்தியாசமா அதகளம் பன்னுவது சூப்பர்...பணத்தை அனுப்பிட்டு வாரேன்..

    ReplyDelete
  46. Thanks for the Deepavali Books sir :-) Brings a smile !!

    ReplyDelete
  47. Replies
    1. எதாவது வெடி அட்டை விளம்பரமோ...அல்லது கொள்ளு பட்டாசு டப்பியோ அனுப்பவும்...நண்பர்கள் வேண்டு கோள் நிறைவேத்துனதுக்கு மகிழ்ச்சி...முடிச்/ஞ்சா காரிகனையும் அனுப்பலாமே....சரவேடி தீபாவளி மலர்னு அட்டையை இருக்கட்டும்

      Delete
    2. சாரி சாரி....இருக்கு இருக்கு ...நான் நெனச்சத ஏற்கனவே அட்டைல வச்சதுக்கு நன்றிகள் சார்....

      Delete
  48. அருமையான தீபாவளி பரிசுகளுக்கு பல கோடி நன்றிகள் சார்...‌ இந்த முறை தீபாவளி definiteஆன தலை தீபாவளி தான்....

    ReplyDelete
  49. டெக்ஸ் தீபாவளி மலரை அடுத்த வாரம் தீபாவளி நேரத்தில் படிக்கலாம் என எடுத்து வைத்து இருந்தேன்.

    இப்போது மேலும் இரண்டு புத்தகங்கள் என்பதால் அதனை தூத்துக்குடிக்கு அனுப்பச் சொல்லி நமது அலுவலகத்திற்கு தகவல் அனுப்பி விட்டேன். தீபாவளி சமயத்தில் தூத்துக்குடியில் படிக்க வசதியாக இருக்கும்.

    ஸோ ஒரிஜினல் டெக்ஸ் தீபாவளி மலரை நாளையிலிருந்து படிக்க ஆரம்பிக்கலாம் என உள்ளேன்.

    அப்படியே சிவகாசியில் இருந்து standard company பட்டாசுகளை எனது நெருங்கிய உறவினர் வாங்கி அனுப்பியவை தூத்துக்குடி பத்திரமாக வந்து விட்டன.

    ReplyDelete
  50. தீபாவளிக்கு சுவீட்டு பட்டாசோடு சிவகாசி மத்தாப்பும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்த ஆசிரியருக்கு நன்றியோ நன்றி 2023 அட்டவணையை தீபாவளி முதல் நாளன்று 23 நம் தேதி இரவு வெளியிட முடியுமா ஆசிரியரே தீபாவளி இன்னும் களை கட்டும்

    ReplyDelete
  51. அப்போ தீபாவளிக்கு ஸாகோரோட அடுத்த குண்டு ஷ்பெசல் இல்லையா.?
    🏃🏃🏃🏃

    ReplyDelete
  52. அதிரடியான அறிவிப்புக்கு நன்றிகள்.எனக்கு ராபின் மிகவும் பிடித்த ஹீரோ சார்.இந்தமுறை டெக்ஸுடன் வருவது மகிழ்ச்சி.வீடியோவில் ஒரு வெடிகுண்டு போல தரமான கதைகளாக இவருக்கு அமைந்துவிட்டால் நம்மிடையே இருக்கும் டிடெக்டிவ் பற்றாக்குறையை நீக்குவார்.சீக்கிரமாக அந்த வீடியோவில் ஒரு வெடிகுண்டு கதையுடன் கொலைப்பொக்கிஷம்,பனியில் ஒரு பிணம்,மைடியர் மம்மி,சிலந்தியோடு ஒரு சதுரங்கம் என எதாவது கதைகளை இணைத்து ஹார்ட் பவுண்ட் அட்டையுடன் ஒரு ராபின் ஸ்பெஷலாக போட்டுத் தாக்குங்கள் சார்.ஒன்றிரண்டு கதைகளை தவிர இவர் எப்போதுமே பரபரப்பான கதைகளுக்கு சொந்தக்காரர்.

    ReplyDelete

  53. ///கார்ட்டூன்கள் வேணுமா ? இருக்கி !!
    கி.நா.வேணுமா ? வண்டி வண்டியாய் இருக்கி !
    புதியவர்கள் வேணுமா ? இக்கடச்சூடு கண்ணா !
    க்ளாஸிக் நாயகர்கள் வேணுமா ? ஒரு தலைவாழை விருந்துக்கே தேவையான சரக்கு இருக்கி ! ///

    இவற்றையெல்லாம் அவ்வபோது சமயம் வாய்க்கும்போது முன்பதிவுக்கென கொஞ்சம் கொஞ்சமாய் வெளியிட்டு விடுங்களேன் சார்..!

    சந்தாவில் இல்லாமல் புத்தக திருவிழாக்கள்.. தீபாவளி.. பொங்கல்.. கோடை.. இவற்றோடு கருப்புசாமி கொடை.. மாரியாத்தா நோம்பி.. காதுகுத்து.. கெடாவெட்டுன்னு கிடைக்கிற கேப்புல போட்டுத்தாக்கிட்டா.. ரெகுலர்ல பார்க்க முடியாத கார்ட்டூன்ஸ்.. கி.நாக்களை நாங்களும் பார்த்தமாதிரி ஆயிடும் இல்லிங்களா சார்?

    ReplyDelete
    Replies
    1. Right dhaan thalaivaa - vaangaradhu yaaru namma rendu perum thavira? :-)

      Delete
    2. நான் இருக்கேன் ஜி

      Delete
  54. அருமை சார்.
    ஸாகோரையும் டெக்ஸையும் வாங்கிய முதல் வாரத்திற்குள் படித்து விட்டு ரிவிஷனும் செய்த பின்னர் நானும் பாயை பிறான்டினேன்.
    இந்த பதிவை பார்த்த பிறகு லயன் டாப்10 ஸ்பெஷலும் அதைத் தொலைத்த கதையும் ஞாபகம் வந்தது.
    ரொம்ப தேங்ஸ் சார் மீண்டும் தலை தீபாவளியை கொடுப்பதற்கு.
    ஜீ-பே செய்து விட்டேன்.
    கேப்டன் பிரின்ஸ் கதைகள் மிகவும் அருமையாக இருக்கும். நீங்கள் இறக்குங்கள். நாங்கள் அனைவரும் படிக்க ரெடி.
    ஒரு வேண்டுகோள். Please publish the gpay number in the on-line portal /Blogspot front page. Thanks again.

    ReplyDelete
  55. அருமையான அறிவிப்பு சார், போட்டு தாகுங்க, அடுத்த வருடம் டெக்ஸ் ஸ்பெஷல், டீஸர் பிளீஸ் சார்

    ReplyDelete
  56. எடிட்டர் சார்..
    உண்மையாகவே அதிரடி சரவெடி அறிவிப்புகள் சார்! டெக்ஸின் பாலைவனப் பரலோகம் வரயிருப்பது மகிழ்ச்சி தான் என்றாலும், அதைவிடக் கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி டிடெக்டிவ் ராபினின் புத்தம் புதிய கதையும் வரயிருப்பது! கூடவே, ராபினின் கடந்த சில கதைகள் கொஞ்சம் ஆவரேஜ் ரகத்தில் அமைந்துவிட்டபடியால், இதுவும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்துவிடுமோ என்ற கிலேசமும் கொஞ்சூண்டு எட்டிப்பார்க்காதில்லை தான்! ஆனால் அந்த உள்பக்க ப்ரிவியூ - மிரட்டுகிறது! மொத்தக்கதையும் மிரட்டலாக அமைந்திட புனிதமனிடோ அருள்புரியட்டும்!

    நாளை காலை M.O அனுப்பி நான் எனக்கான பிரதியை முன்பதிவு செய்வேன்!

    (இத்துடன் ஒரு கார்ட்டூன் ஸ்பெஷலும் இடம் பெற்றிருந்தால் இந்தத் தீபாவளி மிகச் சிறப்பானதாய் அமைந்திருக்கும்!)

    ReplyDelete
  57. அட்டைப்படத்தில் அந்த இரண்டு மாமிசமலைகளுக்கு நடுவே ஸ்கூல் பையனாட்டம் தக்கணூண்டு நிற்கும் தல'யை பார்க்கும் போது எனக்கே பாவம் பாவமாய் வருகிறது!

    முன் & பின் அட்டை இரண்டுமே ஒரே காட்சி - ஆனால் வேறு வேறு கோணத்தில் அமைந்திருப்பது - தனிச் சிறப்பு! நம் வெளியீடுகளில் வேறு எதுவும் இதுபோல வந்ததாய் எனக்கு ஞாபகமில்லை!!

    ReplyDelete
  58. தீபாவளி சரவெடி ஸ்பெஷல் சும்மா தகதகனு மினுக்குது. நன்றிங்க ஆசிரியர் சார். உண்மையான தீபாவளி இது தாங்க சார். மீண்டும் நன்றியோ நன்றிங்க ஆசிரியர் சார்.

    ReplyDelete
  59. // சென்னையில் "OMR புத்தக விழா" என்றொரு bookfair பெருங்குடியில் நடத்தி வருகிறார்கள் - சில பல ஆண்டுகளாகவே ! IT நிறுவனங்கள் மிகுந்திருக்கும் corridor ! இம்முறை அங்கே நமது இதழ்கள் இருந்தே ஆக வேண்டுமென்று கோரி, அமைப்பாளர்கள் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர் !! //

    காமிக்ஸின் மதிப்பை மேலும் உணரச் செய்கிறது இந்த செய்தி... வளரட்டும் காமிக்ஸ்! 💫🔥💥💥💥

    ReplyDelete
  60. தீபாவளிக்கு 2 சரவெடிகள் - ஒன்று டெக்ஸ் மறுபதிப்பு, மற்றொன்று CID ராபினின் புதுப்பிப்பு... இடைச்செருகல் என்றாலும், இது நல்ல செய்தியே...

    தீபாவளி மாதம் முழுவதுமே இப்படியான சரவெடிகள் நிகழ்வது அலாதியானது... மிக்க நன்றி ஐயா!

    ஒரே ஒரு வேண்டுகோள் - ரானினின் முன் அட்டையில், மேலும் கீழும் காலி இடம் உள்ளதாக தோன்றுகிறது. முடிந்தால் ஏதாவது மாற்றம் செய்ய முயற்சி செய்யுங்கள்!

    ReplyDelete
  61. இனி வரும் குண்டு புத்தகங்களில், புக் மார்க் செய்ய வசதியாக நூல் கொடுத்தால் நான்றாக இருக்கும். புக் மார்க் அட்டைகள் சேகரிப்பில் அங்கமாக உள்ளதால், 300 பக்கங்களுக்கு மேல் உள்ள இதழ்களுக்கு, புக் மார்க் நூல் இணைத்து வந்தால் படிக்க மிக வசதியாக இருக்கும்!

    ReplyDelete
  62. "பாலைவனப் பரலோகம்" .....இது டாப் 10 ஸ்பெஷலில் வந்த எனக்கு மிகவும் ஸ்பெஷலான பல நினைவுகளைக் கொண்ட ஒரு கதை. நான் படித்த முதல் டெக்ஸ் கதை (93இல் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தாலும் டெக்ஸ் அறிமுகம் தாமதமாகவே நிகழ்ந்தது), முதல் குண்டு புக். ராணிக் காமிக்சில் சில கதைகள் மூலம் அறிமுகமாயிருந்த கௌபாய் உலகின் மேல் எனக்கு முதல் & தீராத காதலை உருவாக்கியது எல்லாமே இந்தக்கதை தான். குறிப்பாக அந்த ராட்ஸச மலைச் சிங்கங்களும், டெக்ஸ் டைனமைட் பயன்படுத்தும் காட்சியும், கிங்கரன் சைசில் வரும் வில்லன்களும் பசுமையாக பதிந்து போயினர்.

    அப்போது யாழ்ப்பாணத்தில் லயன்காமிக்ஸ் வந்த 2 நாளில் தீர்ந்துவிடும். முன்னதாக லயன் செஞ்சுவரி ஸ்பெஷலை இவ்வாறு மிஸ் பண்ணியதால் டாப் 10 ஐயும் விட்டுவிடக் கூடாது என்று அடிக்கடி புத்தகக்கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புவேன். தற்செயலாக ஒருநாள் நண்பனின் வீட்டுக்குச் சென்ற போது (அந்த) குண்டு புக்கை பார்த்து வாய் பிளந்து அவசரமாக புத்தக கடைக்கு பறந்து சென்று வாங்கிய நினைவுகள் இன்னமும் எதோ சில வருடங்கள் முன் நடந்தது போல் பசுமையாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அருமையான நினைவுகள் அபி. நம் ஒவ்வொருவருக்கும் இது போல ஒரு புத்தகம் இருக்கும். இதை நீங்கள் பகிரும் போது நானும் உங்களுடன் கூடவே கடைக்கு ஓடி வந்து புத்தகம் வாங்கிய ஃபீலிங்.

      Delete
    2. காமிக்ஸ் சார்ந்த தேடல்கள்....நமதாயினும் , நண்பர்கள்தமதாகினும் சூப்பர்

      Delete
  63. ராபினை வரவேற்கிறேன் சார்.
    டெக்ஸ் மறுபதிப்பு வருவதும் மகிழ்ச்சியே...
    அடுத்த வருடமாவது "இரத்த முத்திரை" அதே அட்டைப்படத்தோடு கருப்புவெள்ளையில் கெட்டித்தாளில் ரிப்ளிக்கா போன்று வெளியிட கேட்டுக்கொள்கிறேன்..
    அப்புறம் சார் "இரும்புக்கை மாயாவி" ரிப்ளிக்கா என்னாச்சு?

    ReplyDelete
  64. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி வித் டிடெக்டிவ் ராபின்... சூப்பர் சார்... இந்த வருடமும் வந்துவிட்டார்.

      டெக்ஸ் கிளாசிக்ஸ் #3

      முன்கூட்டியே வருவது சந்தோஷமென்றாலும் ஒற்றைக்கதை ஹார்ட்கவர் இல்லையென்பது கொஞ்சம் வருத்தம். அவை ஒரேமாதிரி இரண்டிரண்டு கதைகளாக வரும் என நினைத்திருந்தேன்.

      எனிவே நவம்பர் டெக்ஸ் ஹேப்பி!!!

      Delete
    2. // ஒற்றைக்கதை ஹார்ட்கவர் இல்லையென்பது கொஞ்சம் வருத்தம். //
      எனது கருத்தும் இதுவே...

      Delete
  65. Amount transferred yesterday night. And sent message also.

    ReplyDelete
  66. ஆஹா..திடீர் பதிவு....

    திடீர் சர்ப்ரைஸ்....


    திடீர் மீண்டும் தீபாவளி சிறப்பிதழ்...


    அதுவும் டெக்ஸ் அன்ட் ராபின் சூப்பர் சார்...


    கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா ...:-)

    ReplyDelete
  67. டியர் எடி,

    தீபாவளிக்கு முன்னாடி ஸ்கோர், பிக்ஸ் தொகுப்பை படித்து முடிக்கிறேன்னோ இல்லையோ, வழக்கம் போல இந்த அதிரடி ஸ்பெஷல்களை வாங்கி போட்டுடுவோம்ல ... எனவே, உண்டியில் பணம் போட்டு ஸ்கிரீன்ஷாட் அனுப்பியாச்சு.. ☺️

    ராபின் மறுவருகை என்ற ஒரு அறிவிப்பு போதுமே. 80களில் கோளோச்சிய துப்பறியும் கதைகளில், அரிதாக தப்பி பிழைத்த கதாநாயகர்... தொடரட்டும் அவர் சாகஸம்.

    டெக்ஸ் இரண்டாவது அட்டையில் மஞ்சள் சட்டை பச்சையாக தெரிவது எனக்கு மட்டும்தானா ?!?! 😁

    ReplyDelete
    Replies
    1. பீரோவில் கூடியிருக்கும் முதலீட்டை பற்றி .... தயை கூர்ந்து 2023 சந்தாவில் அதில் கிளாசிக் மற்றும் புதிய நாயகர்களையாவது அறிவித்து வெளியிடுங்கள்.

      கோரோனா காலத்திற்கு பின், எந்த ஒரு நிறுவனத்திற்கும் இப்படி பணத்தை உபயோகம் இல்லாமல் முடக்கி வைக்கும் Luxury இல்லை. If it can bring the liabilities to profit, let it be done.

      Delete
    2. Agree with Rafiq sir. You might want to increase the number of classics and new books for the next 2-3 years to offset the sleeping beauties .. the logic is simple .. when printed and stocked up - there is a possibility of sales better than when they remain on paper. May be it is time to implement some low priced editions for some of these un-released stories - making it easier for school kids - you might want to consider Lion-Muthu Economy Editions (LMEE) !

      Delete
    3. //கோரோனா காலத்திற்கு பின், எந்த ஒரு நிறுவனத்திற்கும் இப்படி பணத்தை உபயோகம் இல்லாமல் முடக்கி வைக்கும் Luxury இல்லை. If it can bring the liabilities to profit, let it be done.//

      கத்தி மீது நடக்கும் பயணமிது சார் ; நண்பர்களின் ஆதரவு தான் உள்ளதே என்று கையிருப்பில் உள்ளவற்றையெல்லாம் ஏக் தம்மில் இறக்கி வைத்து , சுமையை அக்கட மாற்றிடக் கூடாதே என்பது உள்ளுக்குள் நெருடும் சமாச்சாரம் !

      பொறுமையாய் ...சிறுகச் சிறுக அவற்றைக் களமிறக்கிட வேண்டும் என்று எண்ணியுள்ளேன் சார் !

      Delete
    4. // பொறுமையாய் ...சிறுகச் சிறுக அவற்றைக் களமிறக்கிட வேண்டும் என்று எண்ணியுள்ளேன் சார் ! //
      இதுவே என் எண்ணமும் எடி ....

      ஆசிரியர் - வாசகர் ஒத்த எண்ணத்தில் பயணிப்பது நமது சிறு காமிக்ஸ் வட்டத்தில் தான் என்பதே இதன் தனிச்சிறப்பு .... 👍

      Delete
  68. Edi Sir..
    நம்ப காமிக்ஸ் சகோஸ் *தீபாவளி சரவெடி ஸ்பெல் 1&2* க்கு விடிய விடிய முன்பதிவு செய்ற வேகத்தை பார்க்கிறப்ப இன்றைக்கு மதியானத்துக்குள்ள எண்ணிக்கை 200+ தாண்டிடும் போல இருக்கே..😍😘😃

    இதை கொண்டாடுறதுக்காகவே ஒரு பதிவு போட்டு தாக்கிடுங்க Edi Sir..
    😃🙏💐

    ReplyDelete
  69. சரவெடி 1,2
    பணம் அனுப்பியாச்சே...

    மலைச் சிங்ககங்களோடு தலயின் ருத்ர தாண்டவம்..
    கதையின் முதல் பக்கத்திலே பற்றிக் கொள்ளும் தீ, இறுதிப் பக்கம் வரை காட்டுத் தீ வேகத்தில் பரவுகிறது...

    உண்மையான சரவெடி தீபாவளிதான்...

    ReplyDelete
  70. சார் கூடுதல் இதழ்கள் ஆர்டர் செய்தால் கூரியர் செலவு இல்லை என்ற தேர்வு உள்ளதா ?!
    இருப்பின் அதையும் ஆன்லைனில் அப்டேட் செய்யுங்கள் சார்...

    ReplyDelete
    Replies
    1. Courier charges is based on weight of books. So additional books additional charges.

      Delete
  71. பாலைவனத்தில் பரலோகம் பற்றிய எனது நினைவு. நான் எட்டாம் வகுப்பு வரை என் கிராமத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கதை புத்தகங்கள் காமிக்ஸ் புத்தகங்கள் பற்றியும் எனக்குத் தெரியாது. 1995 ல் .ஒன்பதாம் வகுப்புக்கு கிராமத்திலிருந்து தாராபுரம் டவுனுக்கு வந்தேன். அப்போது பஸ் நிலையத்தில் ஏதேச்சையாக ராணி காமிக்ஸை பார்த்து முகமூடி வீரர் மாயாவி/வேதாளர் கதை வந்திருந்தது அதை முதன்முதலில் வாங்கினேன். அந்தப் புத்தகத்துடன் என் வீட்டிற்கு வந்த போது என் அக்கா என் அம்மாவிடம் சொல்ல என் அம்மா உனக்கு படிப்பு தான் முக்கியம் என்று கூறி புத்தகத்தை நான் படிக்கும் முன்னே வாங்கி தீக்குள் போட்டுவிட்டார். பின்னர் என் அம்மாவுக்குத் தெரியாமல் மீண்டும் அந்தப் புத்தகத்தை வாங்கி யாருக்கும் தெரியாமல் படித்து வந்தேன். இந்த நிலையில் பள்ளியில் என் வகுப்புத் தோழன் லயன் டாப் 10 ஸ்பெஷல் இதனை எனக்கு அறிமுகப்படுத்தினான். அன்று அதன் விலை 25 ரூபாய்.

    ReplyDelete
  72. அப்போது பள்ளிக்கு செல்லும் பஸ் கட்டணம் ரூ1.25+1.25=2.50.
    அப்போது எனக்கு ஐந்து ரூபாய் தருவார்கள். பஸ் கட்டணம் போக மீதி இருக்கும் 2.50 பைசா மிச்சம் செய்துதான் காமிக்ஸ் வாங்க வேண்டும். அவ்வாறு செய்து தான் ராணி காமிக்ஸ் வாங்கிக் கொண்டிருந்தேன். பத்துநாள் காசு மிச்சம் செய்து லயன் டாப் 10 ஸ்பெஷல் அந்த நண்பனிடம் இருந்து வாங்கினேன். நான் படித்த முதல் கதை தல யின் பாலைவன பரலோகம் தான். அட்டகாசமாக இருந்தது. அன்றே நான் தல ரசிகன் ஆகிவிட்டேன். அதன் பின் மெல்ல மெல்ல லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் வாங்க ஆரம்பித்தேன். இதில் என்ன கூத்து என்றாள் லயனும் முத்துவும் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறைதான் வரும். கடைக்காரர் எனக்குத் தெரிந்தவர் என்பதால் எனக்காக ஒரு பிரதி எடுத்து வைத்திருப்பார். நான் அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பணம் கொடுப்பேன். அந்த நாளில் காமிக்ஸ் படித்த ஞாபகம் அலாதியானது. அந்த சந்தோசம் தற்போது வருடம் 32 புத்தகங்கள் படித்தாலும் வருவதில்லை. இனிமையான நாட்கள். நான் பள்ளிப் படிப்பை முடித்தபின் 2008 வரை தொடர்ந்து லயன் முத்து படித்துக் கொண்டு வந்தேன். 2008ல் இருந்து தாராபுரத்தில் புத்தகங்கள் வருவது நின்று விட்டன. கடைக்காரர் தற்போது அந்த நிறுவனம் புத்தகங்கள் வெளியிடுவதை நிறுத்தி விட்டது என்று கூறிவிட்டார். சரி என்று மனதைத் தேற்றிக்கொண்டு காமிக்ஸ் படிப்பதை விட்டு கிரைம் நாவல் படிக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது பழைய காமிக்ஸ்களை படித்து ஆறுதல் அடைந்து கொண்டிருந்தேன். நான்வெளியூர் சென்றிருந்த ஒரு தருணத்தில் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் எனது அம்மா பழைய புத்தக காரருக்கு போட்டுவிட்டார். அதனால் நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    ReplyDelete
  73. Dear editor sir,
    Please create online listings in our websites for these 2 books..
    Happy diwali all..

    ReplyDelete
  74. பின்னர் ஏதேச்சையாக தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ஜேபி புத்தக சென்டரில் தளபதியின் மின்னும் மரணம் தொகுப்பின் விளம்பரத்தைப் பார்த்து கடைக்கு சென்ற போதுதான் லயன் காமிக்ஸ் திரும்ப வந்தது எனக்குத் தெரிந்தது. முதலில் மின்னும் மரணம் வாங்கிவிட்டு தொடர்ந்து அதே கடையில் வாங்கிக்கொண்டு இருந்தேன். போகப்போக அவர்கள் புத்தகங்கள் கொண்டு வருகையில் காலதாமதம் ஏற்படுத்தியதால் கடந்த நான்கு வருடங்களாக சந்தா கட்டி புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு வருகிறேன். நான் லயனில் முதலில் படித்த அந்த புத்தகம் மீண்டும் திரும்ப வருவதில் எனக்கு மகிழ்ச்சி. எனது ஆசை எல்லாம் இனி ஒன்றே ஒன்றுதான். அப்போதெல்லாம் லயன் கோடை மலர் தீபாவளி மலருக்கு மட்டுமே டெக்ஸ் வருவார். அப்போது நான் பிடித்த கிளாசிக் கதைகளான மரணமுள் கனவுக் கோட்டை ஆகிய இரண்டு இதழ்கள் வந்துவிட்டன. அப்போது படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த நள்ளிரவு வேட்டை மரண ஒப்பந்தம் கானலாய் ஒரு காதல் காலம் தீர்த்த கணக்கு மரண நடை ஆகிய கதைகளை திரும்பவும் வண்ணத்தில் மறுபதிப்பு செய்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு பிடிக்கும் என்று நான் பதிவிட்ட மரணமும் கானா கோட்டை தற்போது பாலைவன பரலோகம் ஆகியவை வந்துவிட்டது. மற்ற இதழ்களையும் விரைவில் மறுபதிப்பு செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்

    சதாசிவம் வெள்ளியம்பாளையம்

    ReplyDelete
  75. தீபாவளி ஸ்பெஷல் புக் பண்ணியாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. பிறந்த நாளின் போது புக்கிற்கு பணம் கட்டியது மகிழ்ச்சியளிக்கிறது....!

      Delete
    2. அடடே...பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் !

      Delete
    3. மகிழ்ச்சி மிதுன்

      Delete
  76. Manymore Happy returns of the day Mithun ji..❤💛💙💚💜👍💐🌷🌹

    ReplyDelete
  77. This comment has been removed by the author.

    ReplyDelete
  78. https://www.facebook.com/100075992877119/posts/pfbid0D4jyP5wECWtRa9Cc38crbNLfiJyU6xscvPigyhUqx1PLTPAWq7cL2YsUFbNZRuiol/?app=fbl

    ReplyDelete
  79. நமது முத்து காமிக்ஸை பற்றிய பொன்வண்ணன் அவர்களின் மலரும் நினைவுகள்.

    ReplyDelete
  80. ஹைய்யா! நானும் தீபாவளி சரவெடிக்கான பணத்தை அனுப்பிட்டேன்!

    ReplyDelete
  81. புத்தக காதலனின் வாக்குமூலம்..📖

    https://fb.watch/ga8eKDAR0W/

    ReplyDelete