Sunday, August 21, 2022

காலை எழுந்தவுடன் கடுங்காப்பி !

 நண்பர்களே,

வணக்கம். அக்கா பையனுக்குத் திருமணம் ; அதுவும் குற்றாலத்தில் ! So சனிக்கிழமை காலங்கார்த்தாலே 'விலாவை சிறப்பிக்கக்' கிளம்பிடும் முன்பாய் ஒரு க்விக் "உள்ளேன் ஐயா" போட நினைத்தேன் !! Unfortunately - அது வேலைக்கு ஆகவில்லை ! So இதோ - கல்யாணத்துக்கு கிளம்பும் முன்னே அதிகாலையில் எனது அறையின் பால்கனியிலிருந்து லொட்டு லொட்டென்று டைப்பி வருகிறேன் - சாலையின் மறுபுறம் இப்போதே பிசியாக இயங்கிவரும் டீக்கடையொன்றைப் பராக்குப் பார்த்தபடிக்கே ! மாடுகள் கண்முழிக்கும் முன்னமே, இங்கே மக்கள் கூடிவிடும் மாயம் என்னவென்ற யோசனை தான் ஓடுகிறது தலைக்குள் ! "காலை எழுந்தவுடன் காபி" என்பது பலருக்கும் ஆயுட்காலப் பழக்கங்களாய் இருப்பது ஜகஜம் தான் ; ஆனால் இம்மி கூட சர்க்கரையோ, பாலோ சேர்க்காத கடுங்காப்பி ? மேற்கத்திய நாடுகளில் சாயாவோ ; காபியோ - செம ஸ்ட்ராங்காய் ; dark ஆகக் குடிப்பது வாடிக்கை ! ஆனால் இனிக்க இனிக்க சகலத்தையும் உள்ளே தள்ளிப் பரிச்சயப்பட்டிருக்கும் நமக்கோ அது கொஞ்சம் கஷ்டம் தான் ! But ருசிகளைப் பரிசீலிக்கும் நாவோடு நாம் தயாராக இருப்பின் - அந்தக் கடுங்காப்பியிலும், கட்டஞ்சாயாவிலும் ஒரு சுவை இருப்பது புலனாகாது போகாது !! 'இன்னாடா டேய்...டீ மாஸ்டர் ரேஞ்சுக்குப் பின்றியே ?" என்கிறீர்களா ? காரணமுள்ளது - becos காத்திருப்பதொரு கடுங்காப்பி அனுபவம் - உபயம் நம்ம தாத்தாஸ் !

போன வருஷத்தின் சூப்பர்ஹிட் இதழ்களுள் ஒன்றான "அந்தியும் அழகே" நமக்கு அறிமுகம் செய்து வைத்தது ரொம்பவே மாறுபட்ட 3 நாயகர்களை ! செமத்தியான சிலாகிப்புகளை பரவலாகவும் , பாசமான / நேசமான நெஞ்சங்களின் "தாறுமாறு தக்காளிச்சோறு" விமர்சனங்களை ஆங்காங்கே க்ரூப்களிலும் ஈட்டிய சாதனையாளர்கள் இந்தப் பல்போன பெருசுகள் ! In fact விமர்சனங்களின் உஷ்ணம் கூடக்கூட, இக்கட சேல்ஸ் பிய்த்துக் கொண்டு சென்றது ! அதே நடைமுறை தாத்தாக்களின் ஆல்பம் # 2-க்கும் தொடர்ந்திடும் பட்சத்தில், ஒரு சூப்பர்ஹிட் செப்டெம்பர் வெயிட்டிங் என்பேன் - becos போன வருஷம் நாம் பார்த்த தாத்தாக்களின் அந்த அறிமுக இதழ் வெறும் டிரெய்லர் தான் ! மெயின் பிக்சரே இந்த ஆல்பம் # 2 முதலாய்த் தான் ! Make no mistake -  கும்மிருட்டான ரூமுக்குள், தப்பித்தவறிக் கூட வெளிச்சக் கீற்றுக்கள் ஏதும் புகுந்திடக்கூடாதென கதாசிரியர் வில்பிரிட் லுபானோ பியூஸ் கட்டையையும் பிடுங்கி, தூர வீசி விட்டிருக்கிறார் ! So காத்திருப்பது செம டார்க்கான ; செம அடர்த்தியான ஒரு வாழ்க்கைப் பயணத்தின் சித்தரிப்பு ! ஆகையால் சமீப மாதங்களில் நேர்கோட்டுக் களங்களில் சைக்கிள் விட்டுப் பழகி, "ஹை..ஜாலி...ஜாலி.." என்று கைதட்டி வரும் நண்பர்கள் - திடு திடுப்பென ஒரு முழு லோடு பலாப்பழ லாரியில், கொடைக்கானல் மலையினில் ஏறும் அனுபவத்தினை எதிர்கொள்ளவுள்ளனர் ! அதே சமயம் மாண்ட்ரேக் ஆரஞ்சு பழங்களை பிழிவதைப் பார்த்து நொந்து நிற்கும் நண்பர்களுக்கு இங்கொரு கோங்குரா காரமுடனான மீல்ஸ் ஆறுதல் தரக்கூடும் ! எது எப்படியோ - காத்திருக்கும் "துள்ளுவதோ முதுமை" - வாழ்க்கையின் விளிம்பில் நின்று வரும் முதிய நண்பர்களுடனானதொரு பயணம் ! "எங்க வூட்டுப் பெருசுகளைக் கட்டி மேய்க்கவே தாவு தீருது..இந்தக் கொள்ளையிலே காமிக்ஸிலும் பெருசுகளா ? கிழிஞ்சது போ !" என்று அலறிடக்கூடிய நண்பர்கள் இந்த இதழினை skip செய்திடும் வாய்ப்பினை ஏற்கனவே தந்துள்ளோம் ! 

But surprise ...surprise ....இந்த இதழுக்கு "no" சொல்லியுள்ளோர் இதுவரைக்கும் வெறும் எட்டே பேர் தான் and இன்னமும் ஆகஸ்ட் 23 வரை அதற்கென அவகாசமுள்ளது ! So "தொண்ணூறு ரூபாய்க்குப் பிடிச்ச கேடு" என்ற பறைசாற்றலை செப்டெம்பர் முதல் வாரத்தில் FB-யில் செய்திடக் காத்திருக்கும் ஆர்வலர்ஸ் & கோ. இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினால், அந்தத் தொகைக்கொரு credit voucher தந்திடுவோம் ! பின்னாட்களில் சந்தாக்களிலோ ; புத்தக விழாக் கொள்முதல்களிலோ ; ஆன்லைன் பர்சேஸ்களிலோ அதனை ஈடு செய்து கொள்ளலாம் ! "அஸ்கு..பிஸ்க்கு....அது எப்புடி...? நாங்க புக்கை வாங்கத்தான் செய்வோம் ; அப்பாலிக்கா போட்டு துவைக்கத் தான் செய்வோம் !" எனும் அணியா ? Thanks in advance for the impending smash hit sales !!

தாத்தாஸ் கதைகளின் அந்தக் கடுங்காப்பி ஸ்டைலின் ஒரு முக்கிய அம்சம் - அவர்களுக்குள்ளான அந்த சம்பாஷணைகளும்.... நக்கல்... குதர்க்கங்கள்...எவன் எக்கேடு கெட்டொழிஞ்சால் எனக்கென்ன ? என்ற பாணியிலான வசன நடையும் தான் ! நிஜத்தைச் சொல்வதானால் என்னை இந்தத் தொடருக்குள் ஈர்த்த முக்கிய காரணி அந்த வசன நடை தான் என்பேன் ! இங்கிலீஷில் அந்த துவக்க ஆல்பத்தைப் படிக்கும் போதே - "தெய்வமே...எந்த விளக்குமாற்றுச் சாத்து வாங்கினாலும் பரவாயில்லை - இந்தத் தொடரை தமிழுக்குக் கொணர்ந்தே தீரணுமே !" என்ற உத்வேகம் உள்ளுக்குள் ஊற்றடித்தது !  இதன் தமிழாக்கம் சார்ந்த பணிகள் மனுஷனை உண்டு-இல்லை என்றாக்கி விடுமென்பதும் அப்போதே ஸ்பஷ்டமாய்ப் புரிந்தது ! But இந்த funky தொடரை உங்களுக்கு அறிமுகம் செய்திடும் ஆர்வத்தில் முதல் ஆல்பத்தில் உருண்டு, புரண்டு பணியும் செய்தாச்சு ; அதைத் தொடர்ந்து வருஷம் ஒன்று உருண்டோடியும் போச்சு ; and அடுத்த ஆல்பத்தின் பணிகள் துவக்கும் நேரமும் வந்தான போது தான் அத்தியாயம் இரண்டினை முழுமையாய் வாசிக்க முடிந்தது ! And boy .....திக்கான டிகாக்ஷனை மட்டுமே டபராவில் ஊற்றிக் குடிக்கும் ஒரு உணர்வு மேலோங்குவதைத் தவிர்க்கவே இயலவில்லை, becos இந்த பாகம் # 2 - பியரோ மேயோ தாத்தாவின் வாழ்க்கைப் பயணத்தை மட்டுமன்றி, குண்டு மில்சே தாத்தாவின் திரும்பிப் பார்க்கும் படலத்தோடும் பயணிக்கின்றது ! And பற்றாக்குறைக்கு சுற்றுப்புறச் சூழல் மீதான தனது அக்கறையினை மீண்டுமொருமுறை கதாசிரியர் செம அழுத்தமாய்ப் பதிவு செய்கிறார் ! முதல் ஆல்பத்தில், புள்ளைத்தாய்ச்சி சோபி வாயிலிருந்து பிரவாகமெடுக்கும் அக்னி வார்த்தைகளில் அந்த வேகம் தென்பட்டதெனில், இங்கே அது கதையின் இறுதி 3 பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது ! 

மொழிபெயர்ப்பினைப் பொறுத்தவரையிலும், வரிகளுக்கு குஷன் போட்டு விடும் பாணியை தலைமுழுகி கொஞ்ச காலமாகி விட்டதென்பதால் -  ஒரிஜினலின்  கோங்குரா காரத்துக்கு கடிவாளம் போட்டிட நான் முனையவே இல்லை !  So செம raw வரிகள் நிறைய இடங்களில் இருப்பதைப் பார்த்திடப் போகிறீர்கள் !! நிறையவே புருவ உயர்த்தல்கள் ; நிறையவே கலாமிட்டி ஜேன் பாணியிலான @#%* வாழ்த்துக்கள் பலனாகிடக்கூடும் என்பது அப்பட்டமாய்ப் புரிந்தாலும், இந்தத் தாத்தாக்களுக்கென கதாசிரியர் சிருஷ்டித்துள்ள ஸ்டைலை விசுவாசமாய்ப் பின்பற்றிடுவது என்பதில் தீர்மானமாய் இருந்தேன் ! So முட்டுச்சந்துக்கள் பல காத்திருப்பது கண்ணுக்குத் தெரிந்தாலும் - எல்லாப் புகழும் கதாசிரியருக்கே !! என்றபடிக்குப் பணியாற்றியுள்ளேன் ! ஒரு வண்டிக்கதைகளில் இது வரையிலும் பயணம் பண்ணியுள்ளேன் தான் ; but this must count amongst the toughest so far ! "இந்த பில்டப் படலத்தைக் கேக்குறப்போவே கண்ணைக் கட்டுதே...இந்தப் புண்ணாக்கையெல்லாம்  எங்க தலைகளில் கொட்டுவானேன் ?" என்ற கேள்வி உங்களின் கணிசமானோரின் உள்ளங்களில் ஓடக்கூடும் தான் ! நிஜத்தைச் சொல்வதானால், இந்தக் கேள்விக்கான பதில் சொல்லத்தெரியவில்லை எனக்கு ! பொதுவாகவே வாசிப்பில் நான் ரசித்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் அவாவே எனது (புதுத்) தேர்வுகளின் பொதுவான பின்னணிகள் ! And இங்கேயும் அதுவே கதையின் பின்னணிக் கதை ! காமிக்ஸ் வாசிப்பின் ஒரு extreme பாணியுமே இந்தியாவின் # 1 காமிக்ஸ் வாசக வட்டத்துக்கு  ஒவ்வாது போகாதென்று தலைக்குள் ஒரு குரல் கேட்டது ! அதை நடைமுறைப்படுத்தும் முயற்சியே இந்த தாத்தாசுடனான பயணம் ! திட்டுங்கள் என்னை, but ஒருக்கா வாசித்திட மட்டும் தயங்காதீர்கள் ப்ளீஸ் ! 

இதோ - இதழின் அட்டைப்படம் + உட்பக்க preview !! 


ரைட்டு..இதற்கு மேலும் நான் தாமதித்தால் "தாய் மாமாவைக் காணோம் !" என்று மைக்கில் குரல் கொடுத்து விடுவார்கள் என்பதால் நடையைக் கட்டுகிறேன் ! கிளம்பும் முன்பாய் - இதோ இம்மாதத்தில் என்னைப் பிழிந்தெடுத்த பணி # 2 பற்றிய preview-ம் !

டேங்கோ !!! முத்து ஐம்பதாவது இதழில் அறிமுகமான ஒற்றை வேங்கை !! இங்கே நாயகர்கள் மூவர் என்பேன் ! முதலாவது டேங்கோ ; இரண்டாவது அந்த ஓவியர் ; மூன்றாவது அந்தக் கலரிங் ஆர்ட்டிஸ்ட் ! உலகின் exotic மூலைகளைத் தேடிப் பிடித்து அவற்றை இந்தக் கதைகளின் பின்புலங்களாக்கிடும் பாணி இம்முறையும் தொடர்கிறது ! And இந்த தபாவோ நாம் மேற்கிந்தியத் தீவுகளின் ஒரு மூலைக்குப் பயணமாகிடவுள்ளோம் ! கதை என்னமோ ஒரு அரைக்கால் வரியில் அடக்கிடக்கூடிய சமாச்சாரமே ; ஆனால் அதை அந்த நீலக்கடலின் துணையோடு, மிரட்டும் ஆங்கிள்களிலான சித்திரங்களுடன் சொல்லியுள்ள விதம் அள்ளுகிறது ! பொதுவாய் இது போலான கதைகளில் பணியாற்றுவதில் பெருசாய் மொக்கைகள் போட முகாந்திரங்கள் இருந்திடாது தான் ; ஆனால் இங்கோ கதாசிரியர் Matz-க்கு வசனங்களில் கதையை நகர்த்துவத்தைக் காட்டிலும் background voiceover-களில் கதை சொல்லவே பிடிக்கிறது என்பதால் அவரது ஸ்டைலிலேயே நானும் பேனா பிடிக்க முயற்சிக்க வேண்டிப் போனது ! So நிறைய இடங்களில் "இதெல்லாம் எக்ஸ்டரா நம்பரா ?உன்ர வேலையாடா முழியான்கண்ணா ?" என்ற சந்தேகங்கள் உங்களுக்கு எழக்கூடும் தான் ! But rest assured - சகலமும் ஒரிஜினலில் கதாசிரியர் டயல் பண்ணியிருந்த நம்பர்கள் மாத்திரமே !! And அதுவே பெண்டைக் கழற்றித் தந்து விட்டது - 68 பக்க நீளத்தில் ! டேங்கோ - நீலக்கடல்களின் நில்லா நாயகன் !! "சிவந்த மண்" - as exotic as they come !!


Bye folks....see you around ! Have a cool Sunday !

247 comments:

  1. ரொம்ப நாளுக்கு பிறகு முதலிடம்.. 😍😘Happy Annachi..😃

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் விடியவிடிய ப்ளாக் வாசல்ல தூங்காம உக்காந்துட்டு இருந்தீங்களே. எப்ப பதிவு வரும்னு.

      Delete
    2. பாபுஜி தூங்கவே இல்லையோ?!!

      Delete
    3. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

      Delete
    4. வாழ்த்துக்கள் பாபு ஜி

      Delete
  2. நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  3. இரண்டாவது காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  5. பத்துக்குள்ளே வந்தாச்சு..

    ReplyDelete
  6. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  7. Can't wait to read the satirical approach towards life through the three wise men dear edi

    ReplyDelete
  8. ரொம்பவும் எதிர்பார்த்திருந்த டேங்கோவும் தாத்தாஸும் ஒரே மாதத்தில்... தூள் கிளப்பட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இந்த வருடம் நான் மிகவும் எதிர்பார்த்த இரண்டு இதழ்கள் ஒரே மாதத்தில் வாரே வா

      Delete
  9. Replies
    1. புரிஞ்சவுக மொகத்துல Curved lips

      Delete
  10. காலைக் கடனை எல்லாம் முடிந்த பிறகு தான் காஃபி:-)

    ReplyDelete
  11. தாத்தாஸ் & டேங்கோ - சூப்பர் அப்பு

    ReplyDelete
  12. விஜயன் சார், *துள்ளுவதோ இளமை* பற்றி ஒரு ரசிகராய் உங்கள் கருத்து என்ன? நீங்கள் சொல்லியிருப்பது எல்லாமே, கல்யாணத்தில் சமைக்கும் தவசிப்பிள்ளை பந்தியில் சாப்பிடிபவர்கள் என்ன சொல்வார்களோ என்பது போல உள்ளது. பந்தியில் சாப்பிட்ட ஒருவராய் உங்கள் review please.

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பொறுத்தவரைக்கும் இது வெறொரு லெவல் சார் ! கதை மாந்தர்களின் உருவகப்படுத்துதலில் ; அவர்களின் வாழ்க்கைப்பயணத்தினை நிகழ்காலத்துடன் அழகாய் இணைத்து நகற்றிச் செல்வதில் ; satire எனும் வாழ்க்கைப் பகடியை அனாயாசமாய்க் கையாள்வதில் - என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ! எனது ஒரே பயம் - சமீப வாரங்களில நேர்கோட்டு ஜாலிலோ ஜிம்கானா கதைகளுக்குள் குதூகலித்துக் கும்மியடித்து வந்த நண்பர்களுக்கு, இது என்ன மாதிரியான ஷாக்காய் இருக்குமோ என்ற பீதியே !

      Come what may - இந்தத் தொடரை தமிழில் முழுமையாய் வெளியிடாது கடையைச் சாத்த மாட்டோம் ! ஓவர் . ஓவர் ... வேஷ்டியை இடுப்பில் நிலைகொள்ளச் செய்யும் படலத்துக்கு மத்தியிலிருந்து தென்காசியிலிருந்து ஆந்தையன் !

      Delete
    2. satire - இது போதுமே நம்மவர்களை கவர்

      Delete
    3. // satire - இது போதுமே நம்மவர்களை கவர் // இந்த வருடத்தின் கடுங் காபி குடிக்க ஆவலுடன் நான்.

      Delete
    4. என்னாது...

      "தொடர முழுசா வெளியிடாம...

      போக...


      மாட்டோமா..."

      நல்லாருக்கே இந்த satire...

      Delete
  13. டேங்கோ அட்டைப்படம் - ஸ்தம்பிக்கச் செய்திடும் அழகு!

    தாத்தாஸ் அட்டைப்படம் - வித்தியாசமாக இருக்கிறது! நேரில் பார்க்கும்போதுதான் மிச்சத்தைச் சொல்ல முடியும்.
    தமிழ் பொம்மைபொஸ்தவ வாசிப்பாளர் வட்டத்தில் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தியுள்ள தாத்தாஸ் மீண்டும் ஒரு சூப்பர்-டூப்பர் வெற்றியை ஈட்டித்தருவர் என்பது உறுதி! எதிர்பாராத ஒரு திக்கிலிருந்து இதைப் பற்றிய சிலாகிப்புகள் வந்து சேர்ந்து நம்மைப் பெருமை கொள்ளச் செய்யப்போவதாக உள்ளுணர்வு உரக்கச் சொல்கிறது!

    பின்னாளில் ஒருநாள், மிகவும் தேடப்படும் புத்தகங்களில் ஒன்றாக இது இருந்திடப்போவது உறுதி!!

    பதிவில் EBF பற்றிய எந்தச் செய்தியும் இல்லாதிருப்பது துளியூண்டு கலக்கத்தை ஏற்படுத்துகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு - தெறி மாஸ் ரோடு ! அதிகாலை நாலரை மணி டைப்பிங்கில் மண்டை மச மசவென்று இருந்ததால் மிஸ்ஸிங் ! தவிர அங்கிருந்த மீத புக்ஸ் நேரடியாய்க் கரூர் போய்விட்டதால் விற்பனை புள்ளிவிபரங்கள் இன்னும் கையில் கிட்டில்லா !

      ஓவர் .... ஓவர் ....சாம்பார் வாளியுடன் ஓவர் ஓவர் !!

      Delete
    2. // So காத்திருப்பது செம டார்க்கான ; செம அடர்த்தியான ஒரு வாழ்க்கைப் பயணத்தின் சித்தரிப்பு ! //
      பெருசுகளின் லைஃப் ஸ்டைலை நேர்கோட்டு வாசிப்பில் சொல்லி இருந்தால் பத்தோடு பதினொன்றாய் போயிருக்கலாம் சார்,டார்க் ஹியூமரில் ரிஸ்க் எடுப்போம் என்ற நிலைப்பாடே இதை ஸ்பெஷல் வகையில் சேர்த்து விவாதப் பொருளாக்கியுள்ளது போல,விவாதத்தை ஏற்படுத்தும் படைப்பு ஏதாவதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்...
      அடர்த்தியான கதைக் களமாயிருப்பதால் சம அளவிலான அனைத்து வகை விமர்சனங்களையும் தாத்தாஸ் எதிர்கொள்வார்கள்...
      எனக்கும் இந்த கோங்குரா ஸ்டைல் மீல்ஸ் பிடிச்சிருக்கு,ஆவலுடன்...!!!

      Delete
    3. அப்பாடா!! இப்பத்தான் இக்ளியூண்டு நிம்மதி!!

      பை த வே, சாம்பார் இட்லி, சாம்பார் வடை மாதிரி சாம்பார் பன்னு எப்படியிருக்கும் ஒருநாள் சாப்பிட்டுப் பார்த்திடணும்!

      Delete
    4. இருந்தாலும். ஒங்க இரக்க சிந்தனைக்கு சாம்பாரில்லாமல் போச்...

      பை த பை இந்த சாம்பார் கேசரி சாப்டதுண்டா...

      Delete
    5. தேங்காய் சட்னியும் பன்னும் சூப்பராக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

      அதேபோல் விருதுநகர் சிவகாசி பக்கம் கல்யாண வீடுகளில் பன் அல்வா ரொம்ப ஃபேமஸ். அடுத்த வருடம் சிவகாசி காமிக்ஸ் விழாவில் பன் அல்வாவுடன் சிறப்பித்து விடுமோம்.

      Delete
    6. /// தவிர அங்கிருந்த மீத புக்ஸ் நேரடியாய்க் கரூர் போய்விட்டதால் விற்பனை புள்ளிவிபரங்கள் இன்னும் கையில் கிட்டில்லா ! ///

      நல்ல வேளை.. பொறுமையா கரூர் திருவிழா முடிஞ்ச பிறகு மொத்தமா கணக்கு பார்த்து பிறகு, "ஈரோடு - கரூர் புத்தக திருவிழா விற்பனை விபரம்" என்றே போடுங்கள்..

      ஈரோட்டு வெற்றில நாங்களும் குளிர் காய்ஞ்சுக்குவோம்..🤣🤣

      Delete
    7. /* ஓவர் .... ஓவர் ....சாம்பார் வாளியுடன் ஓவர் ஓவர் !! */

      Sir at your age one bucket sambar - odambukku aagaadhu ;-) Konjam kammiyaa saapidavum !

      Delete
  14. // டேங்கோ - நீலக்கடல்களின் நில்லா நாயகன் !! //
    கமர்ஷியல் ஹிட்டருக்கு உண்டான எல்லா அம்சங்களும் சாலப் பொருத்தமாய் டேங்கோவிற்கு அம்சமாய் பொருந்துகிறது சார்,டேங்கோவிற்காகவும் ஆவலுடன்...!!!

    ReplyDelete
  15. டேங்கோ அட்டைப் படம் நச்,தாத்தாஸ் பக்கங்கள் கலரிங் வித்தியாசமா இருக்கு...

    ReplyDelete
  16. ஆஹா.....ஆஹா.....ஆஹா....
    தன்யானேன் சார்..... காலை கறிகடை பதிவாக மலர்ந்துள்ளது....

    இது இது இதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்....மிக்க நன்றிகள் சார்....💐🙏

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ல...

      இக்கட இருக்குற கூட்டத்துல டென்ஷன் இல்லாம தனிக்கறி கேட்டுட்டு நிக்கிறேன்...

      தனித்தனி - ₹ 800/-
      எலும்பு கறி - ₹700/-

      ஆனாலும் இந்த கறிக்கட பாய் சோதிக்கிறாரு முக்கா மணி நேரமா...

      Delete
    2. போற போக்கை பார்த்தா இனிமே இதான் ஆடு, 4கால்ல நடக்கும்; ஒரு காலத்தில் காலையில மக்கள் உணவுக்காக போட்டிபோட்டுட்டு வாங்குவாங்க...., யாராவது சொல்ல கேள்வி படும்படி ஆகிடும்போலயே!!!!



      இக்கட மீம் புடிச்சாச்சி....180/கிலோ.. ஏரி கட்லா.....ஒந்தய கிலோ....!!!!

      Delete
  17. அடுத்த வெளியீடு விளம்பரத்தில் தாத்தாஸ் விலை.100/- என இருக்கு,இங்கே அட்டைப் படத்தில் விலை 90/- என இருக்கு,சிறு குழப்பம் விளைந்ததோ ?!
    நிழல்களின் இராஜ்யத்தில் “தல” தரிசனம் எப்போது சார் ?!

    ReplyDelete
  18. பதிவுல எதிர்பார்த்த அனைத்தும் உள்ளது..... ஈரோட்டு விவரங்களை வாரமத்தியில் உப பதிவில் தாக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் சார்....

    முதல் முகூர்த்தம் விருந்தும் நல்லபடியாக நடக்கட்டும்...

    ReplyDelete
  19. ஆஹா வந்துட்டேன்

    ReplyDelete
  20. செப்டம்பர் இதழ்கள் ஆகஸ்ட் இறுதியில் கிடைக்க வாய்ப்பு இருக்குங்களா சார் ?!
    வியாநகர் சதுர்த்தி விடுப்பு மாத இறுதியில் வருதுங் சார்,புக்ஸை அதுக்குள்ள கண்ணில் காட்டினீர்கள் எனில் விடுப்பை வெச்சி செய்யலாம்...
    ஈரோடு விற்பனையில் கிட்டங்கியில் இருந்து துண்டைக் காணோம்,துணியைக் காணோம்னு யாராவது ஓடிப் போயிருக்காங்களா சார்,துணைக்கு போனவங்க லிஸ்டையும் சொன்னிங்கன்னா மகிழவும்,அப்படியே கொஞ்சம் புது புக்ஸ் கேக்கவும் வசதியா இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. லக்கி லூக் ஏகப்பட்ட titles கிட்டத்தட்ட காலி என்ற நிலை சார் ; மாயாவி சாரும் almost துடைச்சாச்சு - கொரில்லா சாம்ராஜ்யம் நீங்கலாய் ! And அதிசயம், ஆனால் உண்மை - கமான்சே "ஓநாயின் சங்கீதம்" நெருக்கிக் காலி !

      பொங்கல் திவ்யம் என்ற தகவலுடன் ஓவர்...ஓவர்.. !

      Delete
    2. ஃப்ரூட் கேசரியும் பந்தியில உண்டாங் சார்.....

      இந்த கேசரி்க்காகத்தான் இந்த ஜெலுமம் எடுத்ததே....

      Delete
  21. அக்கா மகனின் திருமண நாளன்றும், மாங்கு மாங்கென்று "தட்டச்சுத் தாண்டவம்" புரியும் உங்களின் கடமை உணர்ச்சியை என்னவென்று சொல்ல!!! :) தாத்தாஸ் கதையின் தலைப்பு, நம் வாசகர் வட்டத்தில் சில பலருக்குப் பொருந்தக் கூடியதாக இருக்கிறது! :D இல்லையா, செ.அ.?! ;)

    ReplyDelete
    Replies
    1. அத்திப்பட்டி ரேஞ்சுக்கு கூகுள் மேப்பில கண்டுபிடிக்க முடியாத என்னோட ஊரை காஸ்மோபாலிடன் நகரம் சொன்னதை சொந்த மண் பற்றுன்னு நீங்க எடுத்துகிடணும்.

      ரெண்டே ரெண்டு டீக்கடை உள்ள ஊர்ல பப், டிஸ்கொதே - ன்னு எழுதனுத தற்குறிப்பேற்றணியா வச்சுக்கிடலாம்.( அந்த டீயை குடிச்சா வயித்தை கலக்கறதுல கால் தானா டான்ஸ் ஆடும்)

      மத்தபடி தலை எடிட்டர் சார் சாப்பிட்டு இருக்கற இட்லி மாதிரி வெள்ளையா இருக்கறதாலாயோ( பித்த நரைங்க),
      இன்னும் ரெண்டு மாசத்தில பேத்தி பொறக்கப்போறதாலாயோ( எனக்கு குழந்தை திருமணங்க) கண்ணு கொஞ்சம் மசமசன்னு மங்கலா தெரியறதாலாயோ( இப்பல்லாம் பள்ளிக்கூட பசங்களுக்கே வெள்ளெழுத்து வருதாம்) நீங்க அவசரப்பட்டு எனக்கு கொஞ்சம் வயசாயிடுச்சுன்னு முடிவுக்கு வந்துடப்படாது...:-)

      Delete
    2. "சில "- க்கு அப்புறம் போட்ருக்குற "பலருக்கு"...

      Delete
    3. அவசரப்பட்டு எனக்கு கொஞ்சம் வயசாயிடுச்சுன்னு முடிவுக்கு வந்துடப்படாது...:-)//

      ஆமா…நிதானமா யோசிச்சா நிறைய வயசாயிடுச்சுங்கறது புரிய வரும்.

      Delete
    4. //ஆமா…நிதானமா யோசிச்சா நிறைய வயசாயிடுச்சுங்கறது புரிய வரும்.//


      ஆஹா! நிஜங்கள் நிசப்தமாக இருக்கவேண்டுமென அறியாமல் உண்மையை உரக்க சொல்லமுயலும் ஓர் குரல்.

      மௌனநகரமாய் திகழவேண்டிய அமெரிக்க நகரிலிருந்து மெய் சொல்ல முனையுமோர் ஒலி.

      இரக்க சிந்தனையுள்ள ஈ. இளவரசரின் யானைப் படைக்கு வேலை வந்துவிட்டது.

      ஆனால் இளவரசரே இப்போது ஒரு " யானைப்படையளவுக்கு" பல்க்காக இருப்பதால் இடையில் உள்ள பசிபிக் பெருங்கடலும் ஒரு பொருட்டல்ல.

      எதிர்கொள்ள ஷெரீஃப்கள் தயாராக இருங்கள். ( இளவரசரில் உள்ள "இ' க்கு பதிலாக கியன்னாவை மேற்படி ஷெரீஃப்கள் பயன்படுத்துவதால் ஏற்கனவே கடும் கோபத்தில் இருக்கும் இளவரசரை எதிர்கொள்ள முடியுமா?)

      Delete
    5. மூன்று வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஷெரீப்பை சில யானைப்படைகளும், குதிரைப்படைகளும், கொரில்லா படைகளும் கூட்டமாகத் தாக்கி இடறச் செய்ததில் அவர் பிடறியில் குதிகால் படும்படி அமெரிக்காவுக்கே ஓடிப்போன சம்பவமும் நடந்தேறியதுங்க செனா அனா!

      மறுபடியும் இயனாவுக்கு பதிலாக கியனா போட்டு கியா கியான்னு கத்த மாட்டாருன்னு நினைக்கிறேன்!

      Delete
    6. க்+இளவரசர் ஓகேயா கிளவரசரே?

      Delete
  22. ஹாரர் கதைகள் வேண்டுமென்று குழந்தைகள் வருகிறார்கள். நம்மிடம் உள்ள ஹாரர் கதைகள் டைட்டில்ஸ் எவை. ஜேசன் பிரைஸ் சீரிஸ்மட்டுமேஞாபகத்தில்உள்ளது. மேஜிக் விண்ட் ஆத்மாக்கள் அடங்குவதில்லை வேறுடைட்டில்கள் ஞாபகப்படுத்தி ஒருலிஸ்ட் ப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸூ கதைங்களா கு(கெ)டுக்கலாமே...

      Delete
    2. மார்ட்டின் மற்றும் நமது ஜானி மற்றும் சிகப்பு கருப்பு சட்டை கோட்காரரின் கதைகளை கொடுக்கலாம்.

      Delete
  23. இரண்டு preview களுமே பட்டயை கிளப்பி ஆர்வத்தை தூண்டுகிறது.

    படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  24. Replies
    1. முதுகுல வெய்யில் விழுந்திடுச்சி...வேறென்ன...

      Delete
    2. ஓ முதுகுலையா :P :P :P

      Delete
    3. அதுக்கு கீழ் லுங்கி இருக்...

      Delete
  25. "விலாவை" சிறப்பிக்கக்' கிளம்பிடும் முன்பாய்

    "விழா" இதானே சரி

    சொற்பிழை உள்ளது ஆசிரியர் சார் 😇😇

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...இன்னும் கொஞ்சமாய் யோசியுங்களேன் - அது பிழையா இல்லையாவென்று ?

      Delete
    2. ஐயோ...ஐய்யோ...(வடிவேலு )

      Delete
    3. ஓஹோ வண்டி அப்படி போகுதா 😁😇😁😃😇

      Delete
    4. ஆஹா...."விலா" வா....ம்ம....நடக்கட்டும் சார்....
      "நல்லி"-களையும் நலம் விசாரிச்சுடுங்க......😉


      Delete
  26. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  27. இந்த தாய் மாம்ஸ் வேலையும் நல்லாத் தான் கார சார டிகாக்ஸனா இருக்கு...

    தாத்தாஸ் பதிவ " கரெக்ட்டா தாத்தாஸ் டே " அன்னிக்கி பாத்து போட்ருக்கீகள்ல...

    என்னா குசும்பு...

    இப்டீக்கீ...

    இந்தியாவின் நம்பர் 1 தாத்தாஸ் காமிக்ஸ் வாசகாஸ்...

    ReplyDelete
  28. "விலா"வை - இம்சை அரசனில் - ஒற்றன் - முத்துக்காளை மாடு லேசனில் படிக்கவும்..
    அந்தியும் அழகே - யில் வரும் யாராவது ஒரு ஹிரோ - வின் மாடுலேசனில் படிக்கவும்.

    ReplyDelete
  29. Replies
    1. விலா நோக சிரிக்கணும்...என்ன...

      Delete
  30. டேங்கோ vs தாத்தா.....

    டைட்டில் ஃபைட் ஆஃப் த மன்த் ஆக இருக்க கூடும்.....

    ரெண்டுமே ஏக எதிர்பார்ப்பை கிளறிட்டு....

    ReplyDelete
  31. தாத்தா 1 "- முடியும்போது கொள்ளையா பணம் கொடுத்து விடுவாரு அந்த பேத்தி குட்டிக்கு.....!!!!

    பேத்தி எப்படி அந்த பணத்தை செலவு பண்றானு காத்திருக்கும் கேள்விக்கு விடை கிட்டுமோ???

    கூடவே பேத்திகுட்டியை குட்டிபோட பண்ணியவன் ஆருணும்?????

    ReplyDelete
  32. உலகின் exotic மூலைகளைத் தேடிப் பிடித்து அவற்றை இந்தக் கதைகளின் பின்புலங்களாக்கிடும் பாணி இம்முறையும் தொடர்கிறது ! //

    மாடஸ்டி கதைகளிலும் exotic இடங்கள் இடம் பெறுவது அதன் வசீகரங்களில் ஒன்று.டாங்கோ கதையோடு மாடஸ்டி கதைகளோடு ஒப்பிடுவதா என்றால் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

    IT ALWAYS TAKES TWO TO TANGO.;-)

    டாங்கோ preview - ல் வில்லன் படத்தை பார்க்கும்போது எடிட்டர் சாருக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விழைகிறேன்.

    ஊருக்கு வரும்போது பஸ்ஸில் வர நேர்ந்தால் கறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு வரவும்.உங்கள் கண்கள் அளவு காரணமாக " முறைத்து பார்த்ததாக " தவறாக கருதி வழியில் இறக்கிவிடப்படும் இன்னலைத் தவிர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டி வாழ்க..!!!<\b>

      Delete
    2. அங்க வண்ணம் மிஸ்ஸிங் நண்பரே....வண்ணமே தந்தாலும் டேங்கோ போல ரம்மியமான இடக்காட்சிகள் கிட்டுமா

      Delete
  33. தாத்தாக்கள் தொடர்ந்து வர இருப்பது கண்டு எனக்கு மகிழ்ச்சி. தாத்தாவுக்கு நான் காத்திருக்கிறேன். எனக்கு இதுபோன்ற நேர்கோட்டு கதைகளை விட தாத்தா போன்ற டார்க் கதைக்களம் தான் மிகவும் பிடிக்கும். தொடர்ந்து இதுபோன்ற கதைகளை கடை வெளியிடவும் ஆசிரியரை கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  34. வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  35. பிரியாணி பக்கெட் கையில் எடுத்து விட்டீர்களா ஓவர் ஓவர்:+)

    காலிஃப்ளவர் பிரை எப்போது ஓவர் ஓவர்:-)

    ReplyDelete
  36. //And அதிசயம், ஆனால் உண்மை - கமான்சே "ஓநாயின் சங்கீதம்" நெருக்கிக் காலி ! //
    மீதி இருக்கும் கதைகள் எவ்வளவு சார். ஒரே புத்தகமாக hard cover ல் போட்டு கமான்சேக்கு ஒரு tribute கொடுத்து விடலாமே. இனியும் ஏன் இத்தொடர் தொங்களில் வேண்டாமே சார்.

    ReplyDelete
  37. இவ்வருடத்தில் படித்ததில் பிடித்தது Top 10.
    ஆண்டு மலர் + இம்மாத புத்தகங்கள் வரும் விடுமுறைகளில் முடித்து விடுவேன்.

    1. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்
    2. கென்யா
    3. விடாது வஞ்சம்
    4. பாலைவனத்தில் பிணம் தின்னிகள்
    5. FFS - Alpha + Sisco + Tango
    6. கோடை மலர் - ரூபின் + ஜானி + சிக்பில்
    7. வெள்ளை செவ்விந்தியன்
    8. மேற்கே இது மெய்யடா
    9. களமெங்கும் காதல்
    10. மேகி கேரிஸன்

    ReplyDelete
  38. டேங்கோ - டீசர் பக்கத்தில் உள்ள படங்களை பார்த்தால் இந்த முறை கதை ரொம்ப சுவாரசியமாக இருக்கும் போல தெரிகிறது! எனவே இந்த முறை முதல் வாசிப்பு "டேங்கோ " தான் :-)

    ReplyDelete
  39. "துள்ளுவதோ முதுமை" - தாத்தாக்களில் மற்றும் ஒரு ராவடியான வாழ்க்கை பயணத்தை பயணத்தை படிக்க பயணிக்க ஆர்வமுடன் உள்ளேன்! அந்த வயதான பெண்மணியின் positive அணுகுமுறை எனக்கு பிடித்து இருக்கிறது, அதுவும் கம்ப்யூட்டர் ஹேக்கர் ஆக வேண்டும் என்ற லட்சியம் சூப்பர், படிக்க வயது தடை இல்லை; நமது ஓய்வு காலத்தில் இப்போது நேரம் இன்மையால் படிக்க/செய்ய முடியாத விஷயங்களை அப்போது செய்யவேண்டும்; அப்படி செய்வதால் ஓய்வு காலத்தில் நமது வாழக்கை இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

    ReplyDelete
  40. அருமை சார்...நானும் ஊரில் ஓர் ஃபங்சனில்....சிவந்த மண் அட்டைப்படம் படு அட்டகாசம்...தாத்தா அட்டைப்படம் வித்யாசமாயிருக்கு.....தாத்தா உள் பக்கங்கள் தூள்

    ReplyDelete
  41. மௌன நகரம் மறுபடியும் டெக்ஸ் வில்லர் தான் நம்பர் ஒன் என்று நிருபித்துவிட்டார்கள். மாஸ் ஹிட்.

    ReplyDelete
  42. காத்திருக்கிறேன் இதழ்களுக்கு...:-)

    ReplyDelete
    Replies
    1. நானும் தல... ஆகஸ்டில் செப்டம்பர்???

      Delete
    2. நானும்தானுங்கோ...

      Delete
    3. இன்னும் எட்டு நாட்கள்..:-(

      Delete
  43. டின்டின்னும் சுஸ்கி & விஸ்கியும்.

    டின்டின்னுக்கும் சுஸ்கி & விஸ்கிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.

    Claire line - ஓவியங்கள். டின்டின் - ன் ஆசிரியரான ஹெர்ஜ்- ஜிடம் சுஸ்கி &விஸ்கி ஆசிரியர் வாண்டர்ஸ்டீன் இதன் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார்.

    முதன்முதலில் வாண்டர்ஸ்டீன் கதை ரிக்கி& சுஸ்கி எனத்தான் வந்தது.( பதிப்பாசிரியர் விருப்பத்தினால்) இதில் ரிக்கியும் விஸ்கியும் சகோதரன்- சகோதரி.இதில் ரிக்கிக்கு டின்டின் சாயல் அதிகம் இருந்ததால்
    ரிக்கி கழற்றிவிடப்பட்டு விஸ்கியின் அத்தை டிக்கி அனாதையான சுஸ்கியை தத்து எடுத்துக் கொள்வது போல் கதையை மாற்றியமைத்தார் வாண்டர்ஸ்டீன்.

    டின்டின்னுக்கு தாய் தந்தை என உறவுகள் இல்லை.
    சுஸ்கி & விஸ்கிக்கும் தாய், தந்தை இல்லை.
    இது இவர்களின் சாகசங்களுக்கு உகந்தது.பெற்றோர்கள் பாதுகாப்பு கருதி இவர்களின் தடாலடி சாகங்களுக்கு தடையிடுவார்கள் அல்லவா?சுஸ்கிக்கு அத்தை இருப்பினும் டிக்கியையும் ஒரு சாகசப் பிரியையாக காண்பித்து இருக்கிறார் வாண்டர்ஸ்டீன்.

    டின்டின்னில் விஞ்ஞானியாக வரும் கால்குலஸ்.( Cuthbert calculus)

    சுவியில் விஞ்ஞானியாக வரும் பார்லே .

    இருவருமே நல்லவர்கள். ஆப்சன்ட் மைன்டைட் புரபஸர்ஸ்.

    டின்டின்னில் வரும் கேப்டன் ஹேடக்,
    சுவியில் வரும் மிக்கி இருவருக்கும் ஒற்றுமை இருப்பதாகப் படுகிறது.

    கதை சீரியஸாக சென்று கொண்டிருக்கையில் சிரிப்புண்டாக்க
    செய்து சூழ்நிலையின் இறுக்கம் போக்க வல்லவர்கள்.

    டின்டின்னுக்கு உயிருள்ள நாய் ஸ்நோவி ( snowy) போல விஸ்கிக்கு உயிரற்ற
    பொம்மை. ( இதற்கு பல பெயர்கள் உண்டு.மோலி,மஃபின், sawdust)

    மறுபடி மறுபடி வரும் வில்லன்கள் இரண்டிலும் உண்டு.

    வேறு எதாவது ஒற்றுமை உங்களுக்குத் தென்படுகிறதா?

    ReplyDelete
    Replies
    1. அருமையான ஒப்பீடுகள்.

      இருவருமே பல நாடுகளுக்கு போய் சாகசங்கள் செய்வார்கள்.

      டின் டின் 23 கதைகள் மட்டுமே. ஆனால் சுஸ்கி விஸ்கி 398 (நாட் அவுட்) https://nl.wikipedia.org/wiki/Lijst_van_verhalen_van_Suske_en_Wiske

      டின் டின் நிஜ உலகில் மட்டுமே இருப்பார். சுஸ்கி விஸ்கியோ கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட இடங்களில் சாகசங்களை புரிவார்கள்.

      இருவருமே பல மொழிகளில் வந்துள்ளனர். (டின் டின் தமிழில் எப்போது வருவார் என எதிர்பார்ப்போர்களில் நானும் ஒருவன். சீக்கிரமே நம் ஆசிரியர் மனது வைப்பாயாக.).

      இருவருக்குமே தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

      இருவருக்குமே யூரோ நாணயங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

      மீதியை தெரிந்தவர்கள் தொடருங்கள்

      Delete
    2. செம சங்கர் சார்..

      Delete
    3. சூப்பருங்க செனா அனா!! டின்டின்'க்கும் சு-வி'க்கும் இடையிலான இந்த ஒற்றுமை குறித்து ஏற்கனவே ஒரு டவுட் ஓடிக்கிட்டிருந்தது.. இப்ப க்ளியர் ஆகிடுச்சு!

      இனி சு-வி'யை நாம் 'ஏழைகளின் டின்டின்' என்று அன்போடு அழைப்போமாக!

      Delete
    4. சங்கர் ஜி'க்கு ஒரு சலாம்!!

      Delete
    5. நா இன்னும் சுஸ்கி விஸ்கி படிக்கலங்க

      Delete
    6. டின் டின் பற்றி அதிகம் அறியாததால் பெரியவங்க உரையாடலை கண்டுக்கிறேனுங்க...😍

      மிரட்டலான விவரங்களை அள்ளி வழங்கியுள்ளீர்கள் செனா அனா& சங்கர் 🙏
      சுஸ்கி விஸ்கி ரொம்ப நாள் லயன்ல ஆதிக்கம் செலுத்தும் னு புரிகிறது... 400கதைகள் இருப்பதால் லக்கிலூக்குக்கு எதிர்கால போட்டியாக வரும் வாய்ப்பு கூட உண்டுனு தெரிகிறது...

      Delete
    7. புன்னகை ஒளிர்@ உடனடியாக வாசியுங்கள் ஐயா.... சொக்கிப்போவீர்கள்....தரத்தில்...தயாரிப்பில்...வண்ணத்தில்...கதையில்....வசனத்தில்....விஸ்கியோட சிகையலங்காரத்தில்...

      Delete
    8. டின்டின்னை படித்ததில்லை ..ஆனால் திரைப்படத்தில் கண்டு உள்ளதால் செனாஅனாஜீயின் ஒப்பீட்டை அருமையாக உணரமுடிகிறது..செயலர் சொல்வது போல இது "ஏழைகளின் டின்டின் " என்பதும் அழகே...:-)

      Delete

    9. //Tintin is racist//

      TINTIN IN CONGO - வைப் பற்றி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.
      காங்கோ மக்களைப் பற்றி ஹெர்ஜ் எழுதிய விதம் இந்த காண்ட்ராவர்ஸியை எழுப்பியது உண்மை.இதே புத்தகத்தின் மேல் மிருகவதை பற்றிய முரண்கருத்துகள் எழுந்ததும் உண்மை.

      இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்து இருந்தபோது PRONAZISM ( நாஜி ஆதரவு), யூத எதிர்ப்பு ( ANTISEMITISM) கார்ட்டூன்கள் வரைந்ததாக ஹெர்ஜ், வாண்டர்ஸ்டீன் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதும் உண்மை

      Delete
    10. @STV..
      Me also like that விஸ்கி *சிண்டு*..😍

      Delete
  44. இது என்னயா தாத்தாக்களுக்கு வந்த சோதனை... பதிவில் இது வரை 100 கமெண்டுதானா... (அதிலயும் ஒண்ணு மஹியின் கள்ள ஓட்டு).... டேங்கோ இடைசொறுகல் கூட வேலைக்கு ஆகலயே...

    எது எப்படியோ, தாத்தாக்களின் லூட்டி எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று என்று ஆகி போய் விட்டபடியால், 2 க்கு ஆவலுடன் காத்திருககிறேன். 😊

    ReplyDelete
    Replies
    1. தாத்தாக்கள் புக் ரிலீஸ் ஆன பிற்பாடு அபிப்பிராயங்களுக்குப் பஞ்சமே இராது சார் !

      Delete
    2. வரட்டும் எடி... இம்முறை கட்டங்கள் நன்றாக கட்டபட்டு செமத்தியாக கொடுத்து அனுப்பபடும் 😁

      Delete
  45. தாத்தாக்கள் வைத்து வண்டி ஓட்ட நினைக்கும் உங்களை நினைக்கும் பொழுது . 😂😂😂😂😂😂.

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்கணா ....கரண்ட் ஸ்விட்சுக்குள்ளாற கைய விட்டு காணாமப் போறவரை வைச்சே 50 வருஷங்களை ஓட்டிட்டோமே - வாழ்க்கையை ரசித்து வாழும் இந்தப் பெருசுகளை வைச்சு சந்தோஷமா ; பெருமையா பொழுதுகளை ஒட்டிட மாட்டோமா - என்ன ?

      ஒரு வெகுஜன தொடரைக் கொண்டு காலத்தைத் தள்ள எந்தக் கொயந்தப்புள்ளைக்கும் சாத்தியமே ; ஆனால் இத்தகையதொரு தொடரின் அருகாமைக்குப் போகவே ஒரு தில் வேணும் ! அது நமக்கும், நண்பர்களுக்கும் இருப்பது doubtless ஒரு பெருமிதத் தருணம் !

      Delete
    2. சரியான நெத்தியடி பதில் எடி.

      வருடத்திற்கு 50+ புத்தகங்கள் வெளிவரும்போது தாத்தா கதை ஒன்றை வைத்துதான் வண்டி ஓட்டுவதாக நினைப்பவர்களை நினைத்தால்தான், சிரிப்பு சிரிப்பாக வருகிறது 😂

      Delete
    3. ரஃபிக்@ ஜூன்ஸ் படத்துல ஒரு டயலாக்கு வரும்....

      ///உனக்கு ஆடு வாங்க தெரியாது? கோழி வாங்க தெரியாது? ஜோடா மட்டும் வாங்க தெரியுமா? ஜோடா.....!!!//

      அது மாதிரி சந்தாவுல ஆக்சன் வருது, அட்வென்ஜர் வருது, டெக்ஸ் வருது, டெட் வுட் வருது, லக்கி வருது, கென்யா வருது, கி.நா.ஸ்டெர்ன்லாம் வருது....அதெல்லாம் கண்ணுக்கு தெரியலை...

      ஒத்தை புக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு "தாத்தா"---வருது மட்டுமே தெரியுதாமா????😉

      Delete
    4. வண்டி...ஓட்றாகளா...

      தேவையற்ற சொற்பிரயோகம்...

      வேண்டுமென்றால் வாங்கலாம் என்ற ஆப்ஷன் உண்டே...

      மற்றபடி வண்டியைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம்...

      அது ப்ரகாஷ் பப்ளிஷர்ஸ் ஸின் நிலைபாடேயன்றி...

      Delete
    5. @விஜய்.... எடியின் அனைத்து முடிவுகளையும் நல்லதோ கெட்டதோ விமர்சிக்கும் என்னையே பொங்கி எழ வைத்து விட்டது அந்த வண்டி ஓட்டுறாங்க என்ற சொல்தொடர்...

      எப்படி இவர்களால் இப்படி பேச முடிகிறது.... கடவுளுக்கே வெளிச்சம்.

      Delete
    6. ///இவர்களால் இப்படி பேச முடிகிறது.... கடவுளுக்கே வெளிச்சம்//.--- முகமூடி தரும் தைரியம்& பின்னிருந்து இயக்கும் சிலபல "நல்ல" முகங்கள் தான்....


      ரொம்ப அநாகரீகமான வார்த்தை பிரயோகம் அது..

      தளத்தில் காரசாரங்கள் வேணாம்னு அனைவரும் ஒதுங்கிப்போவது இப்படி எதை வேணா பேசலாம்ங்கிற தைரியத்தை தருகிறது...வேறென்ன!!!

      Delete
  46. இன்றைக்கு உலகின் entertainment king Walt Disney ஜெயித்தது குழந்தைகளுக்கு பிடித்த cartoon characters ஐ வைத்துதான் என்பதை தயவு கூர்ந்து கவனிக்க வேண்டும் sir. நமது காமிக்ஸ் தடம் மாறி விட்டது போன்ற எண்ணம் . அவ்வளவுதான். மேலும் எங்களது இரும்பு கை மாயாவியை போய் தாத்தாவோடு compare செய்ததற்காக கண்டனத்தை பதிவு செய்கிறேன். அப்புறம் cartoon பிடிக்காது cartoon negative comments பதிவிடும் சிலருக்கும் அப்புறம் இந்த i don't like cartoons என்று comments பதிவிட்டு பெருமை படும் நபர்களுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா எனக்கு கார்ட்டூன் பிடிக்கும். கிராஃபிக் நாவல் உம் பிடிக்கும். நான் என்ன செய்ய?

      Delete
  47. என்னது. தாத்தாவ வச்சு தா வண்டி ஓட்டணுமா. நா ஸ்டி(டீ)ல் யூத்துங்க. எந்த கதை வேணா போட்டு பாருஙக. படிச்சு துவைக்கிறேனா இல்லையா பாருங்க. அப்படியே போகிற போக்குல ஜுலியா கதையு போட்டு தாக்குங்க

    ReplyDelete
    Replies
    1. ஜூலியா மட்டுல்ல.. மாடஸ்தி,லேடி S,மேரி கேசன் மற்றும் அதிரடி பார்ட்டி ரூபி ஆகியோர் கதைகள் அடங்கிய ஒரு குண்டு புத்தகமாக "லேடிஸ் ஸ்பெஷல் " போட சொல்லலாம் சார்.

      Delete
    2. இது சூப்பர் ப்ளான் மகேஷ்.

      Delete
    3. கூடவே ஒரு shelf ஒரு tubelight மற்றும் ஒரு புதிய துண்டு ;-)

      Delete
  48. ஒரு வருஷத்துக்கு 35+புத்தகங்கள் வருது இதில் ஒண்ணே ஒண்ணு தாத்தாஸ் வருவதில் தடை எதற்கு நட்பூஸ் !!

    ReplyDelete
  49. "துள்ளுவதோ இளமை" பற்றி நானும் வேறுபட்ட கருத்தைத்தான் அதை கொண்டிருந்தேன். மேற்கித்திய கலாச்சாரத்தை மையமாக கொண்ட கதை என்பதால். பலநாட்கள் படிக்காமல் பரணில் இருந்த புத்தகம் அது. அதில் குறைகளை கண்டு காரசாரமாக எழுதலாம் என்பதற்காய் படித்தேன். ஆனால் கதையோ சமூகம் சார்ந்த பல்வேறு கேள்விகளை சாட்டையடியாய் படிப்பவரை சாடிய நாவல் அது.

    ReplyDelete
    Replies
    1. ////கதையோ சமூகம் சார்ந்த பல்வேறு கேள்விகளை சாட்டையடியாய் படிப்பவரை சாடிய நாவல் அது.///

      ---- தாத்தாக்களின் சராம்சத்தை நச்சுனு சொன்னீங்க... இந்த சாட்டையடியே 2ம் பாகத்தின் மேல அதீத ஆவலை தூண்டியுள்ளது...

      Delete
  50. செப்டம்பரில் என் முதல் வாசிப்பு.....

    """"தாத்தா"""""

    ஆம் என்போர் தொடர்ச்சியாக பதிவிடுக....

    ReplyDelete
    Replies
    1. முதல்ல தாத்தாவா... இல்லை டேங்கோவான்னு சின்ன ஊசலாட்டம் இருக்குன்னாலும் தாத்தாஸ்தான் மை பிரிஃபரன்ஸ்.

      Delete
    2. பர்ஸ்ட்டோ ,செகண்ட்டோ ஆனா ஆவலுடன் காத்திருக்கிறேன் தாத்தாவிற்கு டெக்ஸ்...!

      Delete
    3. தாத்தாஸ்…ஒரு வித்யாசமான ஜாலியான அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

      Delete
    4. ஆகஸ்ட் இறுதியில் என் முதல் வாசிப்பு 'தாத்தாஸ்' தான்!

      Delete
  51. @STV..

    ஆம்..செப்டம்பரில் தாத்தாதான் என் முதல் வாசிப்பு..😍I love Thatha..

    ReplyDelete
    Replies
    1. எனது முதல் வாசிப்பும் தாத்தா தான்

      Delete
    2. சந்தேகமே வேண்டாம் முதல் பகுதி படித்தவுடனே அடுத்த பாகம் எப்போது வரும் என நீண்ட நாள் வெயிட்டிங்.

      இந்த புக் மார்ச் மாதம் வரும் என எதிர்பார்த்தது இப்போது தான் வருகிறது.
      @STV முதல் வாசிப்பு "தாத்தாஸ்" தான் 😃😇😇😃

      Delete
  52. செப்டம்பரில் என் முதல் வாசிப்பு.....

    """"தாத்தா"""""

    ReplyDelete
  53. என் முதல் வாசிப்பு " தாத்தா " தான்.

    ReplyDelete
  54. ஜாகோர் மற்றும் மேகி காரிஸன் இரண்டும் வேண்டும். 350+100+Courier 50=500. 500அனுப்பினால் போதும் தானே?!

    ReplyDelete
  55. தாத்தாவோ ,பாட்டியோ ,குமரனோ ,குமரியோ எனக்கு யாரா இருந்தாலும் கதை நல்லாருந்தா ஓகே ..:-)


    தாத்தாவின் முதல் சாகஸம் எனக்கு பிடித்து இருந்தது... எனவே இரண்டாவது சாகஸத்திற்கு ஆவலுடன் வெயிட்டிங்...

    ReplyDelete
  56. ரொம்ப வருடங்களுக்கு பிறகு இந்தியாவின் தலைச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் திரு கே பாக்யராஜ் அவர்களின் இது நம்ம ஆளு படம் பார்த்துக்கொண்டு இருந்தேன்.!

    அந்தப் படத்தில் கதாரிசிரியர் கலைஞானம் அவர்களும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்...
    அவர்.. திரு பாக்யராஜ் அவர்களைப்பற்றி ஷோபனாவிடம் பேசும் வசனம் ஒன்று..

    " ஒரு வேளை அவன் ஃப்ராடு , கிரிமினல் , டேஞ்சர் டயாபாலிக் அப்படி இப்படின்னு தவறான தகவல் வருதுன்னு வைய்யி.. அப்போ என்ன செய்வே.? "

    இந்த வசனத்தை எழுதியதும் திரு பாக்யராஜ் அவர்கள்தான்.. டேஞ்சர் டயாபாலிக்கை வசனத்தில் பயண்படுத்தி இருக்கிறார் என்றால் அவரும் (தமிழோ ஆங்கிலமோ ) காமிக்ஸ் ரசிகர் என்பதில் நாமும் பெருமித கொள்வோம்..!

    ReplyDelete
    Replies
    1. டேஞ்சர் டயாபாலிக்-ங்கறது ஒரு வழக்குச் சொல் கண்ணன்...அவ்வளவாக படிக்காதவர்கள் கூட இச்சொல்லை பயன்படுத்தி கேட்டிருக்கிறேன்.

      Delete
    2. அவ்வளவு ரீச்சாயிருக்காப்லயா அந்த ஈவாவோட டாவு..!

      செனா அனா..

      நானும் அப்புறம்தான் தேடிப்பார்த்தேன்.. டேஞ்சர் டயபாலிக்னு நிறைய படம்லாம் வந்திருக்கு..!

      Delete
    3. டேஞ்சர் டயபாலிக்'னு ஒரு இங்கிலீஸ் படம் 1968ல ரிலீஸ் ஆகி பல்வேறு நாடுகள்லயும் சக்கைபோடு போட்டதாக விக்கி சொல்கிறது!
      சென்னையிலும் ரிலீஸ் ஆகியிருக்கலாம்..
      இப்போதைய தாத்தா-பாட்டீம்மாக்கள் கொஞ்சம் கிளுகிளுப்பான காட்சிகள் நிறைந்த அந்தப் படத்தை கார்னர் சீட்ல உட்கார்ந்து இலந்தை வடை சாப்டுக்கிட்டே பார்த்து ரசிச்சிருக்கலாம்...
      இப்படியாக மனசுல பதிஞ்சு போன 'டேஞ்சர் டயபாலிக்'ன்ற அந்தப் பெயரை பாட்டீம்மாக்கள் 'வழக்குச் சொல்'லாக மாத்தியிருக்கலாம்!

      பாக்யராஜும் படம் பார்த்த ஆட்கள்ல ஒருதரா இருந்திருக்கலாமோ என்னமோ!! வாய்ப்பிருக்கு! ஏன்னா படம் ரிலீஸ் ஆனபோது பாக்கியராஜுக்கு 18 வயது!

      Delete
  57. Suske Wiske published in the below languages.

    Language Collected
    Antwerps Yes
    Brabants NL [dialect] Yes
    Chinese: 波布和波贝特 (Bobu & Bobete in 1996) and 苏苏和维维 (Susu & Weiwei since 2011) Yes
    Danish: Finn & Fiffi (later: Bob & Bobette) Yes
    Drents [dialect] Yes
    Dutch: Suske & Wiske Yes
    English (UK): Bob & Bobette (later: Spike & Suzy) Yes
    English (US): Willy & Wanda Yes
    Esperanto: Cisko kaj Vinjo Yes
    Finnish: Anu ja Antti Yes
    Flamish Yes
    French: Bob & Bobette Yes
    Fries/Frisian Yes
    German: Ulla und Peter (later: Bob und Babette/Suske und Wiske/Frida und Freddie) Yes
    Gronings [dialect] Yes
    Icelandic: Siggi og Vigga Yes
    Italian: Bob e Bobette Yes
    Japanese: ススカとウィスカ (Susuka to Wisuka) Yes
    Kalmthouts [dialect] Yes
    Latin: Lucius et Lucia Yes
    Limburgs NL [dialect] Yes
    Loois [dialect] Yes
    Portuguese: Bibi & Baba Yes
    Spanish: Bob y Bobette, Bob y Bobet Yes
    Swedish: Finn och Fiffi Yes
    Taiwanese version: 達達和貝貝歷險記 (Dada & Beibei) Yes
    Tamil: Suske & Wiske / Suski & Wiski (சுஸ்கி & விஸ்கி) Yes
    Tibetan: Baga & Basang Yes
    Twents [dialect] Yes
    African: Neelsie & Miemsie No
    Brabantian: Suske en Wieske No
    Greek: Bobi & Lou No
    Hebrew: Bob & Bobet No
    Indonesian: Bobby dan Wanda (later: Suske dan Wiske) No
    Irish: Spike agus Suzy No
    Norwegian: Finn & Fiffi No
    Persian: بوبی و بوبت ( Bobi & Bobet ) No
    Polish: Lucek i Luśka No
    Portuguese (Brazil): Zé & Maria No
    Russian: Спайк и Сьюзи No
    Slovenian: Spike in Suzy No
    Swahili: Bob na Bobette No

    Few more miles to go..

    ReplyDelete
    Replies
    1. இந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே வெளியாகியிருக்கிறது போலிருக்கிறதே!!

      Delete
    2. Come on Tiger, உங்க திறமைகளை வெளியே கொண்டு வாங்க சங்கர் சகோ

      Delete
    3. ஆம் சகோ. நம் தமிழில் வந்த பல காமிக்ஸ்கள் வேறு இந்திய மொழிகளில் வந்ததில்லை. அவ்வகையில் நாம் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்.

      Delete
  58. நான் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் 1980 ல் , +2 படித்த போது, எங்களுக்கு leisure வகுப்பில் எங்கள ஆசிரியர், மதிப்பிற்குரிய திரு.ஜெயக்குமார் தேவநேசன் அவர்கள் எங்களுக்கு ஆங்கில திரைப்படங்களான டென் கமாண்ட் மெண்ட்ஸ், மெக்கன்னாஸ் கோல்ட் , டேஞ்சர் டயபாலிக் திரைப்படங்களின் கதையை சுவாரஸ்யம் குறையாமல் சொல்வார். நேரம் போவதே தெரியாது. அடுத்த வார வகுப்பு எப்போது வரும் என்று காத்திருப்பேன். டயபாலிக் மீது ஈர்ப்பு ஏற்படுத்திய பெருமைக்கு உரியவர் அவரே.

    ReplyDelete
    Replies
    1. ///டென் கமாண்ட் மெண்ட்ஸ், மெக்கன்னாஸ் கோல்ட்!///--- இந்த இரு படங்களையும் 1998 க்கு பிறகு எங்க கிராமத்துக்கும் கேபிள் டிவி கனெக்சன் கிடைக்கப்பெற்ற பிற்காலத்தில் Star movies, HBO ல் பலமுறை பார்த்து வியந்து உள்ளேன்

      குறிப்பாக மெக்கன்னாஸ் கோல்ட்.... எப்ப டிவியில ஓடினாலும் ஆஆஆனு வாயை பிளந்து ரசித்தபடம்... இப்பவும் அந்த பிரமிப்பு அப்படியே உள்ளது...

      அப்போது டெக்ஸ்& டைகர் கதைகள் வாசித்து கெளபாய் ரத்தம் நாடி நரம்புகளில் ஓடிய பொழுது.... குறிப்பாக "தங்க கல்லறை"&"மின்னும்மரணம்"--- அந்த புதையல் எடுக்க போகும் தங்க கல்லறை காட்சிகள் அச்சு அசலாக மெக்கன்னாஸ் கோல்டுல உயிர்பெற்ற போது ஸ்டன்னிங் ஆகிட்டேன்...

      மெக்கன்னா அப்படியே சாட்சாத் நம்ம டெக்ஸ் வில்லர், முகம், பாடிலேங்வேஜ், நடத்தை, குணம், புத்திசாலித்தனமான முடிவு,மோதல் எல்லாமே....

      அந்த மேப்பை நினைவு வைத்து கொள்ளும் காட்சிலாம் அப்படியே தல...

      Delete
    2. நண்பரே.. அதே பள்ளியில் 92 பேட்ச் மாணவன் நான்.இனிமையான நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

      Delete
  59. இந்த படங்கள் எல்லாம் சென்னையை தாண்டி மற்ற ஊர்களுக்கு வரும் வாய்ப்புகள் அந்த நாளில் லேது .
    எங்கள் ஊரில் நான் பார்த்த முதல் ஆங்கிலப்படம், 3 ஃபண்டாஸ்டிக் சூப்பர்மென், இதற்கு தமிழில் ஓட்டப்பட்ட போஸ்டரின் தலைப்பு,
    3 இணையற்ற எம் ஜி ஆர் வீரர்கள். இந்த தலைப்புக்காகவே, ஓடிப்போய் படம் பார்த்த நாட்கள் அவை.
    பின்னர் 1983 ல் சென்னையில் தேவி 70MM தியேட்டரில் முதன் முதலாக மெக்கன்னாஸ் கோல்டு படம் பார்த்த போது ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் என் கண்ணில் நிற்கிறது.
    பின்பு, 1984 ல் ஈரோடு ராயலில் சீன திரைப்படங்கள், ஜாக்கிசான் படங்கள் பார்த்தது எல்லாம் தனிக்கதை.
    That golden moments are never comes.

    ReplyDelete
    Replies
    1. //That golden moments are never comes.//

      """Those golden moments will never come back again ""
      Is appropriate and grammatically correct

      Delete
    2. ///That golden moments are never comes///

      எங்கே செனா அனா கண்ணுல பட்டுடுமோன்னு நினைச்சுட்டிருந்தேன்... பட்டுடுச்சு!

      Delete
    3. BTW, இது ஒரு நல்ல விசயம்!! யாராவது ஒருத்தர் சொன்னால் தானே சின்னச் சின்ன பிழைகளைத் திருத்திக் கொள்ள முடியும்?!!

      அந்தவகையில் செனா அனா ஒரு நல்ல வாத்தியார்!!

      Delete
    4. /////எங்கே செனா அனா கண்ணுல பட்டுடுமோன்னு நினைச்சுட்டிருந்தேன்... பட்டுடுச்சு!///--- மீ டூ....!!

      செனா அனா சொல்லவும் தான் சரியான சொல்லாடல் உப்ப அறிகிறோம்..

      நாமளும் அப்படியே அடிச்சி விடலாம்ல இனி...

      Delete
    5. ///செனா அனா சொல்லவும் தான் சரியான சொல்லாடல் உப்ப அறிகிறோம்..

      நாமளும் அப்படியே அடிச்சி விடலாம்ல இனி...///

      யெஸ்! எனக்கும்கூட ஒரு நல்ல டாக்டர்கிட்ட இங்கிலீஸ் கத்துக்கிடணும்னு தான் ரொம்ப நாளா ஆசை!

      Delete
    6. ///டாக்டர்கிட்ட இங்கிலீஸ் கத்துக்கிடணும்னு தான் ரொம்ப நாளா ஆசை!///

      ---- இங்லீஷ்க்கு மட்டுமே போதும்... இங்க வந்து வேணும்னே பிரச்சினை பண்ணும் முகமூடிகளை டீல் பண்ணுவதுல ஏதும் கத்துகிடாதீங்க...

      Delete
  60. ****** மெளனநகரம் *****

    ஒரு கதைக்கு ஒரு வில்லனையோ, ரெண்டு வில்லன்களையோ - ஏன்; ஏழெட்டு வில்லன்களைக்கூட பார்த்திருப்போம்... ஆனால் ஒரு ஊரிலுள்ள ஒட்டுமொத்த மக்களுமே வில்லன்களாகிப் போனால்?!!! அதுவும் டெக்ஸ் வில்லருக்கு எதிராக?!!!

    காணாமல்போன தன் சக ரேஞ்சரைத் தேடிப் பயணிக்கும் டெக்ஸும், கார்ஸனும் இம்முறையும் துப்பாக்கிகளுக்கு அதிக வேலை கொடுக்காமல், புலனாய்வில் ஈடுபடுவது நல்ல மாறுதல்!! ஒதுக்குப் புறமான ஒரு நகரில் தங்கள் புலனாய்வை ஆரம்பிக்கும் டெக்ஸுக்கும், கார்ஸனுக்கும் ஆரம்பம் முதலே அந்நகர மக்களின் மர்மமான செய்களால் தொல்லைகள் வந்து சேர, அவற்றையெல்லாம் சமாளித்துத் தங்கள் சகாவை மீட்டார்களா என்பதே கதை!

    மிரட்டும் புயல்,
    கொட்டும் மழை,
    பயமுறுத்தும் இரவுக் காட்சிகள்,
    இருட்டுக் குகை,
    நிலச்சரிவு,
    நிலச்சரிவு வெளிக்காட்டிய மனித உடல்கள்

    போன்ற அசாதாரண பின்னணியில் டெக்ஸையும், கார்ஸனையும் உலவவிட்டு மிரட்டியிருக்கிறார் ஓவியர்! சித்திங்களே ஒட்டுமொத்தக் கதையின் பலம்!

    9/10

    ReplyDelete
  61. இருளின் விலை இரண்டு கோடி

    ReplyDelete
    Replies
    1. இது என்னாது...கிராபிக் நாவலா...

      Delete
    2. மாண்ட்ரேக் படிக்கிறாராம்...

      Delete
    3. வுழுந்து.. வுழுந்து..

      Delete
    4. ஆஆத்தாடி. இப்ப இதை படிக்கிறது தா ட்ரண்டாமே..நா கூட க்ராபிஸ் நாவலோ, மர்ம நாவலோ, எப்படி வாங்காம விட்டோமுன்னு மிரண்டுட்டேன்

      Delete
  62. கிட்டங்கியில் ஸ்டாக் இருக்கும் மச்சான்களுக்கு ( Hero) களுக்கு விடுப்பு தரலாம். தோர்கல் உட்பட. ஸ்டாக் காலியாகும் வரைக்கும். அப்படியே வந்தால் குறைந்த பிரிண்டோடு ₹ 50 /- விலை கூட்டலாம். அதற்கு ஸ்ருதி ஏத்த டெக்ஸ் 3 இதழ்களை கூடுதலாக தரலாம். அவரை நம்பி எதையும் துணிந்து செய்யலாம். அந்த மிக நீண்ண்ண்ண்ண்ண் கதையை சீக்கிறாமா வெளியிடுங்க.

    ReplyDelete
  63. **** தோர்கல் - கூண்டிலொரு கணவன் *****

    இப்புத்தகத்தின் முதல் பாகத்தை ஒரு feel good love story என்று சொன்னால் அது மிகையாகிடாது தான்! தோர்கலுக்கும் ஆரிசியாவுக்குமிடையேயான அந்த அளவிலா காதலை அழகாக வெளிப்படுத்தியிருக்கும் பாகமிது!
    நினைவுகளைத் தொலைத்த தன் கணவன் தன் கண் எதிரிலேயே வேறொரு பெண்ணோடு(கிரிஸ் ஆப் வல்நார்) சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த காட்சியை எந்தப் பெண்ணால்தான் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியும்?!
    தீவுக்குத் திரும்ப வந்திருப்பது தன் ஆருயிர் கணவனே எனத் தெரிந்திருந்தும்; நம்ப மறுப்பதுபோல நடித்து கூண்டிலே சிறை வைத்துத் தன் மனக்காயங்களுக்கு மருந்து போட்டுக்கொள்வதிலாகட்டும், பிறகு ஊடல் தனிந்து கூடிடும் பொழுதிலாகட்டும் - ஆருஸியாவின் நடவடிக்கைகள் மூலம் பெண்களின் உளவியல் சங்கதிகள் கதைநெடுக அழகாகக் காட்சிபடுத்தப் பட்டிருக்கின்றன!

    இரண்டாவது பாகம் - நாம் வேறொரு விதத்தில் நம் தாத்தா-பாட்டீஸ் கதையாகக் கூறக் கேட்டது தான்! ஆனாலும் சுவாரஸ்யமாய் சொல்லப்பட்ட விதத்திலும், மிரட்டும் சித்திரங்களாலும் - தரமான ஒரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்துவிடுகிறது!

    படித்து முடிக்கும்போது 'அடடா.. அதற்குள் கதை முடிந்துவிட்டதா?!' என பெருமூச்சொரியும் அனுபவங்கள் அடிக்கடி நமக்கு வாய்த்திடுவதில்லை! இந்த இருபாகங்களும் அந்தவகையில் சேர்த்தி!!

    'இரத்தப்படலம்' தனித்தனி பாகங்களாக பெரிய்ய பெரிய்ய கால இடைவெளியில் வெளியானபோது அக்கதையின் முழுவீரியத்தை (நான் உட்பட) பலரும் உணர்ந்திருக்கவில்லை! இ.ப போலவே இந்த தோர்கல் தொடரும் அதிக டிமான்ட் உள்ள கதையாக எதிர்காலத்தில் இருந்திடப் போவது உறுதி! எனவே உங்களின் இன்றைய பிரதிகளை வரிசைக்கிரமப்படி பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்!

    10/10

    ReplyDelete
    Replies
    1. //தீவுக்குத் திரும்ப வந்திருப்பது தன் ஆருயிர் கணவனே எனத் தெரிந்திருந்தும்; நம்ப மறுப்பதுபோல நடித்து கூண்டிலே சிறை வைத்துத் தன் மனக்காயங்களுக்கு மருந்து போட்டுக்கொள்வதிலாகட்டும், பிறகு ஊடல் தனிந்து கூடிடும் பொழுதிலாகட்டும் - ஆருஸியாவின் நடவடிக்கைகள் மூலம் பெண்களின் உளவியல் சங்கதிகள் கதைநெடுக அழகாகக் காட்சிபடுத்தப் பட்டிருக்கின்றன!//

      செம இ.சி.ஈ.இளவரசரே!
      சுருக்கமாக ஆனால் தெளிவாக சொல்லி இருக்கீங்க..

      Delete
    2. //எனவே உங்களின் இன்றைய பிரதிகளை வரிசைக்கிரமப்படி பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்!//

      கிட்டங்கியில் தோர்கல் காலியாகி அனைத்து இதழ்களும் ஒரே தொகுப்பாக வரும் காலமும் வருமோ?

      Delete
    3. ///அனைத்து இதழ்களும் ஒரே தொகுப்பாக வரும் காலமும் வருமோ?///

      கண்டிப்பாக வரும் ஜி! ஆனால் அன்று இப்போதைய எடிட்டர் ஓய்வை அறிவித்துவிட்டு, அக்கடாவெனபழைய ஸ்பைடர் கதைகளைப் படித்துச் சிரித்து பொழுதை ஓட்டிக்கொண்டிர்ப்பார்! 'ஆமாப்பா! கொஞ்சம் காஸ்ட்லி தான்! வேணுமின்னா முன்பதிவு பண்ணு.. இல்லேன்னா நகர்ந்து வழிவிடு - காத்தாவது வரட்டும்' என்று பேசிடும் கறாரான எடிட்டர் ஒருவர் அங்கே அமர்ந்திருப்பார்! ய்யீஈஈஈஈக்!!!


      Delete
    4. என்னய கேட்டா ஆசிரியர் மீதக்கதைகள ஒரே கொத்தாக லிமிட்டட்ல விடலாம்....
      அப்புறம் தேவைப்பட்டா ரெண்டாம் எடிசன்

      Delete
    5. ///தீவுக்குத் திரும்ப வந்திருப்பது தன் ஆருயிர் கணவனே எனத் தெரிந்திருந்தும்; நம்ப மறுப்பதுபோல நடித்து கூண்டிலே சிறை வைத்துத் தன் மனக்காயங்களுக்கு மருந்து போட்டுக்கொள்வதிலாகட்டும், பிறகு ஊடல் தனிந்து கூடிடும் பொழுதிலாகட்டும் - ஆருஸியாவின் நடவடிக்கைகள் மூலம் பெண்களின் உளவியல் சங்கதிகள் கதைநெடுக அழகாகக் காட்சிபடுத்தப் பட்டிருக்கின்றன!///

      அதெல்லாம் அந்தக் காலமுங்கோ...!

      சமீபத்துல எங்கூருல... பொள்ளாச்சிக்கு போயிட்டு வந்தது அவிக புருசர்தானுன்னு நல்லாத் தெரிஞ்சேதான் தூக்கிப்போட்டு மெதிச்சாங்கோ...!

      Delete
  64. கமான்சே கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆனால் விற்பனையில் சுமார் என்பது சற்று அயர்ச்சிதான்.இந்த விற்பனை தொய்விற்கு காரணமே தொடருக்கு கமான்சே என்று பெயர் வைத்ததுதான் என்று நினைக்கிறேன்..ஏனென்றால் கதையில் கமான்சே என்பவர் முதலாளியாக வருவதே.அவர் கதைகளில் வீரசாகசம் நிகழ்த்துபவராக இருந்திருந்தால் சற்று விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஆனால் ரெட்
    டஸ்ட் எனும் தொழிலாளியாக பணிபுரிபவரே அநாயசமாக துப்பாக்கியை கையாள்வார்.ஒருவேளை ரெட் டஸ்ட் என்ற (கம்பீரமான) பெயரை இந்த தொடருக்கு பெயர் வைத்திருந்தால் சற்று வெற்றி பெற்றிருக்கும் என்பது என் மனதில் அடிக்கடி தோன்றும்.

    ReplyDelete
  65. என்னைப் பொருத்தவரை ரெட் டஸ்ட் என்பதை விட கமான்சே என்பதே கம்பீரமான பெயர் நண்பரே..!

    தொடரின் தோல்விக்கு காரணம் வேறு.. அதை நாம் இங்கே பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்...😍

    ReplyDelete
  66. மீதமுள்ள காமன்சே அத்தியாயங்களை Limited edition numbers ஆக ஒரே இதழாக வெளியிடலாம். அதோடு பழைய இதழ்களோடு படித்துப் பாருங்கள். அப்பொழுது உங்கள் சிந்தனை மாறுபட்டதாய் இருக்கும். சிறந்ததாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான விலையில். காலம் கனியும் போது...

      Delete
  67. மெளன நகரம்...
    சித்திர அதகளம்.
    கூண்டிலொரு கணவன்..
    சிலந்தியின் சாம்ராஜ்யமே சிறப்பு.

    ReplyDelete