Sunday, August 07, 2022

தொடரும் ஒரு காதல் கதை !

 நண்பர்களே,

வணக்கம். போதி தர்மர் காலத்திலிருந்தே நமது வலைப்பக்கத்துப் பதிவுகளை எழுதி வருவது போலொரு பீலிங்கு எனக்கு ரொம்ப காலமாகவே ! தொடரும் இந்த வாரயிறுதிப் பழக்கத்தினில் ஒரு நடைமுறைச் சிக்கல் உண்டு !! ஒரு சமாச்சாரத்தை ஏதேனும் ஒரு பதிவினில் நான் ஏற்கனவே எழுதிவிட்டு, அதைச் சுத்தமாய் மறந்த கையோடு, மறுக்கா எங்கேனும் அதைப் பற்றியே எழுதி வைத்து பல்ப் வாங்கும் ஆபத்தே என்னை மிரட்டும் அந்தச் சிக்கல் ! ஆனால் நமது பொம்ம புக் பயணத்தினில், சில அட்டவணைகள் அட்சர சுத்தமாய் அதே பொழுதுகளில், சீராகத் தலைகாட்டுவதே இயல்பு எனும் போது, நானுமே அவற்றைப் பற்றி மறுக்கா மறுக்கா எழுதுவது தவிர்க்க இயலாதே போகிறது ! And இந்த நொடிதனில் நமது ஒட்டுமொத்த கவனக் குவிவும் ஈரோட்டுப் புத்தக விழாவின் மீதே எனும் போது - at the risk of sounding repetetive - அக்கட உலா செல்லல் அத்தியாவசியமாகிறது !

ஈரோடு !!! 

சில பொறாமைக்கார 'பன் நேசர்கள்' காதுகளில் புகை விட்டுத் திரியும் ஆபத்து மாத்திரம் இல்லையெனில் - கவிஞர் முத்துவிசயனார் இந்த நொடிதனில் தலைதூக்கி - "ஈரோடே ..... நீ வரவேற்கிறாய் எங்களைச் சீரோடே !!" என்ற ரீதியில் கவிதை மழையாய்ப் பொழிந்து தள்ளியிருக்கும் வாய்ப்புகள் செம bright !! பாவம்....அவர் காதுகளைக் கருகச் செய்யும் புண்ணியம் நமக்கு வேண்டாமே என்ற தயாள சிந்தையின் காரணத்தினால், ஆடிப்பெருக்குக்குப் பெருக்கெடுக்கும் காவிரியைப் போலாய் பொங்கிடும் கவிதைகளை உள்ளுக்குள்ளேயே போட்டு அடக்கிட வேண்டியதாகிப் போகிறது !!  Jokes apart, "ஆகஸ்ட்" என்றவுடனே இப்போதெல்லாம் நமக்கு நினைவுக்கு வருவது சுதந்திரதின விழாவின் ஆரஞ்சுச்சுளை முட்டாயும் ; ஈரோட்டுப் புத்தக விழாவும் தானே ? And அந்தப் புத்தக விழாவின் பெயரைச் சொல்லி, நண்பர்களின் ஒரு பெரும் திரளை அங்கே சந்திப்பதென்பது - 2013 முதலாய் நமக்கொரு அட்டகாசமானதொரு வாடிக்கையாகி விட்டுள்ளதல்லவா ? 

குறுக்கும், நெடுக்கும் பயணிக்கும் பல ரயில்கள் ஈரோட்டின் வழியாகவே செல்லும் எனும் போது, அது வரையிலும் ஈரோட்டுடனான எனது பரிச்சயம் - பிஸியான அந்த ரயில் நிலையத்தோடும், அங்குள்ள கடைகளில் செக்கச் செவேரென்று செங்கல்கட்டியாட்டம் அடுக்கிக் கிடக்கும் அல்வாக்களை மிரட்சியோடு பராக்குப் பார்ப்பதோடும் முடிந்திருந்தது ! முதன்முறையாய் 2013-ல் அந்த VOC பார்க் மைதானத்துப்  புத்தக விழாவினில், சொற்பமான நண்பர்கள் அணியினை மரத்தடியினில் சந்தித்தது இன்னமும் நினைவில் 'பளிச்' என்றுள்ளது ! தொடர்ந்த ஆண்டுகளில் - தொடர்ந்த நினைவலைகள் ஒவ்வொன்றுமே செம ரம்யம் என்பேன் !! குறிப்பிட்டுச் சொல்வதானால் :

  • 2014-ல் LMS ரிலீஸ் சார்ந்த கும்மிகள் !! 
  • 'தல' vs 'தளபதி' என்ற அப்போதைய செமத்தியான ரகளைகள் !
  • "மின்னும் மரணம்" முழுவண்ணத் தொகுப்பின் அறிவிப்பு !
  • நண்பர் சிபியின் பிறந்தநாளுக்கு மரத்தினடியில் கேக் வெட்டிய பொழுது !
  • முதன்முதலாய் LE JARDIN ஹோட்டலில் ஒரு தம்மாத்துண்டு ஹாலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நமது வாசகச் சந்திப்பினை நடத்தியது !
  • தொடர்ந்த ஆண்டினில் எழுத்தாளர் சொக்கன் சாரை நமது விழாவுக்கு சிறப்பு விருந்தினராய் அழைத்து வந்த வேளை !
  • இரத்தப் படல ரிலீஸ் & அது சார்ந்த ரவுசோ ரவுசுகள் !!
  • கொரோனா எனும் கொடூரன் குறுக்கிடும் முன்பாய் 2019-ல் தெறிக்க விட்ட உற்சாகங்களுடனான சந்திப்பு !  
  • பின்மாலைப்பொழுதுகளிலும், முன்னிரவுகளிலும் அங்குள்ள அந்த மரங்களுக்கே காதில் தக்காளிச் சட்னி கசியும் ரேஞ்சுக்கு நீண்டு சென்ற எண்ணற்ற நமது காமிக்ஸ் அளவளாவல்கள் ; கும்மாளங்கள் !!
இன்னமும் அந்தக் கொரோனா பூதம் பாட்டிலுக்குள் முழுமையாய் அடங்கிப் போயிருக்கவில்லை என்பதால் 2020 ; 2021 & 2022 என ஹாட்ரிக் அடித்துள்ளோம் - ஈரோட்டு சந்திப்புகளுக்கு கல்தா தந்த வகையினில் ! God Willing - 2023-ல் ; நமது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டினில், விட்டதையெல்லாம் பிடிக்கும் வாய்ப்புகள் பிறக்குமென்று நம்புவோமாக !! Fingers crossed, an year in advance !!

Back to reality, வெள்ளி மாலையில் புதியதொரு இலக்கில் துவங்கிய புத்தக விழாவினில் நமக்கு மிதமான விற்பனை தான் ! ஆனால்...ஆனால்...சனிக்கிழமை காத்திருந்த விற்பனைச் சுனாமிக்கு வெள்ளி ஒரு அமைதியான முன்னுரை மட்டுமே என்பது தாமதமாகத் தான் புரிந்தது !! இந்த மாதிரியான மிரட்டலான விற்பனை நம்பர்களை சென்னைப் புத்தக விழாக்களில் மட்டுமே இதற்கு முன்பாய்ப் பார்த்திருக்கிறோம் ! போன வாரத்து கோவைப் புத்தக விழாவின் வாரயிறுதிகளில் செம brisk சேல்ஸ் எனும் போது, அந்த நம்பரை ஈரோட்டிலும்  தொட்டு விட சாத்தியப்படுமா ? என்ற வினா என்னுள் சத்தமின்றிக் குந்தியிருந்து ! அந்த நம்பரைத் தொட்டுப்புட முடிஞ்சா மாடி கிட்டங்கிக்கு இன்னொரு ரேக் செய்ய அட்வான்ஸ் தந்துப்புடலாமே !! என்ற ஆசை உள்ளுக்குள் அலையடித்தது ! இரண்டு வெவ்வேறு மாடிகளில் இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சமென்று இறைந்து கிடக்கும் இதழ்களை சேகரித்து ஒட்டுக்கு ஒரே இடத்தில் ஒழுங்காய் அடுக்கிக் கொடுத்து விட்டால், நம்மாட்களின் பெண்டுகள் கழறுவது சற்றே மட்டுப்படுமே என்ற ஆதங்கம் தான் !! சனியும் புலர்ந்தது ; விழாவின் பிரதான நாளும் துவங்கியது & சுனாமியின் தாக்கமும் தான் !! 

"கோவையின் விற்பனை நம்பரை தொ-டு-வ-தா ? போவியா நீ.....அதை நான்காய் மடித்து ஜோப்பியில் நாங்க வைத்துக் கொள்வோமாக்கும் !" என்று ஈரோட்டு நண்பர்கள் தெறிக்க விட்டுள்ளனர் ரெகார்ட் படைக்கும் ஒரு விற்பனைத் தொகையுடன் !! அதிலும் ஒற்றை நண்பரின் கொள்முதல் மட்டுமே ரூ.18,000-க்குக் கொஞ்சம் குறைச்சல் !! And surprise ..surprise ...குடும்பத்தோடு வருகை தந்திருந்த அந்த நண்பரின் காமிக்ஸ் காதலுக்கோ, தெறிக்கவிட்ட மெகா கொள்முதலுக்கோ அவரது இல்லத்தரசி தடா போட்டிருக்கவில்லை !! நண்பரின் காமிக்ஸ் வேட்கைக்கொரு பெரும் thumbs up எனில், அவரது மறுபாதிக்கும், புதல்விக்கும் நமது மெகா சல்யூட் ! "இந்தக் காசுக்கு 2 பட்டுப்புடவைகள் வாங்கி இருக்கலாமே பாவி மனுஷா !!" என்று சொக்காயைப் புடித்து உலுக்கிடக்கூடிய  யதார்த்த மனைவியருக்கு மத்தியில் சகோதரி is quite a difference !! அவருமே நமது பொம்ம புக் உலகினில் உலவிப் பழகியவராக இருந்தால் வியப்படைய மாட்டேன் தான் !! Thank you to the family who made our day !!!

And இங்கே நமது நண்பர்கள் அட்டகாசமாய் உருவாக்கியுள்ளதொரு வாட்சப் குழுவின் பங்களிப்பினை நான் சிலாகிக்காது போனால் - ஸ்பைடரின் அசிஸ்டண்டாகி, ஆயுசுக்கும் தானைத் தலைவரிடம் மிதிபடும் விதி எனதாகிடக்கூடும் !   நண்பர்களின் privacy களுக்கு இம்சை கொடுக்க வேண்டாமே என்று சும்மா எட்டி மட்டும் பார்த்து விட்டு, நான் வெளியேறியிருந்த சமயமே நூற்றிச் சொச்சம் அங்கத்தினர்கள் இருந்தனர் அந்த க்ரூப்பில் ! ஸ்டாலில் நமது பண்டல்களை உடைக்கும் நேரத்திலிருந்து, அண்ணாச்சி லுங்கி கட்டிக்கொண்டு புக்ஸை அடுக்கும் நேரலை வரைக்கும் சுடச் சுட அங்கே போட்டோக்களாகவும், வீடியோக்களாகவும், ஜாலியான மீம்ஸ் சகிதம் தெறித்துக் கொண்டிருந்தது ! And விழா துவங்கிய பொழுது முதலாய் உள்ளூரிலும், அருகாமைகளில் உள்ள நண்பர்களும், தம்வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்தும் உத்வேகத்தோடு ஸ்டாலுக்குப் படையெடுத்து வருவது கண்கொள்ளாக் காட்சி ! அதிலும் பாகுபலி 3 ஷூட்டிங்குக்கு லீவு சொல்லி விட்டு, நமது ஸ்டாலில் போட்டுத் தாக்கிவரும் அந்த மீம்ஸ் மன்னர் காட்டி வரும் அக்கறை - simply stunning ! ஒட்டுமொத்த பாசிட்டிவ் சிந்தனைகளின் வலிமை என்னவென்பதை ஒருங்கிணைந்து கண்முன்னே காட்டி வருகிறார்கள் நண்பர்கள் அத்தனை பேருமே !! தூரத்தில் இருந்தாலும் கூட, அவரவரால் இயன்ற விதங்களில் அந்தக் குழுவினை உயிர்ப்போடு வைத்திருந்து, உற்சாகங்கள் இம்மியும் குன்றிடாது பார்த்துக் கொள்கின்றனர் ! என்றேனும் ஒரு தூரத்து தினத்தில் - "இந்த பொம்ம புக் பயணத்தில் என்னடாப்பா சம்பாரிச்சே ?" என்று யாராச்சும் கேட்கும் பட்சத்தில், இம்மியும் யோசிக்காது  - "அன்பைச் சம்பாரிச்சோமுங்க சார் ! நல்ல மனுஷங்களின் அக்கறைகளைச் சம்பாரிச்சோசோமுங்கண்ணா ! எதிர்பார்ப்புகள் இல்லாத அரவணைப்புகளைச் சம்பாரிச்சோம் சார் !!" என்று சொல்வேன் ! அந்த மூன்று "அ"-க்களுக்குமே அந்நேரத்துக்குள் GST போட்டுத் தாக்கியிராதிருக்க இப்போவே புனித மனிடோவிடம் ஒரு மகஜரைப் போட்டு வைப்போம் !! Thanks a ton guys !! ஈரோட்டில் நாம் ஈட்டக்கூடிய ஒவ்வொரு ரூபாயிலும், உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஏதேனுமொரு ரூபத்தில் இருக்குமென்பது நிச்சயம் !! இன்னமும் 10 நாட்கள் காத்திருக்க, வர்ண பகவான் மட்டும் சற்றே மனம் இளகினால் ஈரோட்டில் இந்தாண்டு ஒரு புது அத்தியாயம் எழுதிடல் சாத்தியமாகிடும் என்பது உறுதி !! 

And இன்றைய விற்பனையின் தளபதிகள் பரிச்சயமான அதே முகங்களே !! "மாயாவி...மாயாவி....ஓ மை மாயாவி !!" என்று மாயாவி புக்ஸை அள்ளிக்கொள்ளும் நோஸ்டால்ஜியா நேசர்கள் ; அதன் பின்பாய் "டெக்ஸோடு தெறி" என்று 'தல'யை வேட்டையாடும் அணி பிரதானமென்றால் - கார்ட்டூன் பார்ட்டிஸ்களும் மஞ்சள் நகரில் உற்சாகமாய் புது இல்லங்கள் தேடிப் பயணித்துள்ளனர் ! கணிசமான குடும்பங்கள் இன்று நம் ஸ்டாலுக்கு வருகை தந்திருக்க, லக்கி லூக் ; smurfs என்று வாண்டுகள் ஆளுக்கொரு புக்கைத் தூக்கிப் போவதை நண்பர்களின் போட்டோ updates தெரிவிக்கின்றன ! அது மட்டுமன்றி "பீன்ஸ்கொடியில் ஜாக்"  & இன்றைக்கு ஸ்டாலுக்கு வந்து சேர்ந்த சிண்ட்ரெல்லாவும் குட்டிகளின் கொள்முதல் லிஸ்ட்களில் !!!

And before I forget - சனி பகலில் சிண்ட்ரெல்லா சந்தா புக்ஸ் அனுப்பியாச்சூ ! திங்களன்று உங்கள் வீட்டுக் குட்டீஸ்களிடம் ஒப்படைத்திடலாம் folks !! 

ஸ்டாலில் எவையெல்லாம் காலியோ, அவற்றினில் மேற்கொண்டு புக்ஸ் அனுப்பிட சனிக்கிழமை மாலையில் நம்மாட்கள் கிட்டங்கியிலிருந்து அள்ளி வந்த வேளையில் நான் அங்கு தானிருந்தேன் !! அந்த டைட்டில்களை கொஞ்ச நேரம்  மௌனமாகப் பார்த்துக் கொண்டேயிருந்தேன் !! மாயாவி....லாரன்ஸ்-டேவிட்....லக்கி லூக்....டெக்ஸ் வில்லர்....கென்யா...பீன்ஸ்கொடியில் ஜாக்....Alpha ....கலவையாய் கொஞ்சம் கார்ட்டூன்ஸ் !! No அர்ஸ் மேகினா....No கி.நா......No ஷெல்டன்....No லேடி S .....No மர்ம மனிதன் மார்ட்டின்....No அழுத்தமான கதைகள் !! இப்டிக்கா திரும்பினால் கூரியருக்கென போட்டு அடுக்கியிருந்த டப்பிக்களில் கணிசமாய் வேதாளர் boxes ..ரிப் கிர்பி boxes ...மாண்ட்ரேக் boxes ...! கையில் மிஞ்சியிருந்த டப்பிக்களை வேறேதோ புக்ஸ் அனுப்பிட நம்மாட்கள் பயன்படுத்துகிறார்கள் போலும் என்றெண்ணி - "இந்த டப்பாக்களில் வேற புக்ஸ் அனுப்பாதீங்க ; அதுபாட்டுக்கு உள்ளே இருக்கட்டும்" என்றேன் !! "ஊஹூம்...இவற்றினுள் உள்ள அனைத்துமே SMASHING 70s புக்ஸ் தான் சார் ; இன்னமும் Smashing-க்கு தினமும் புதுசா சந்தா கட்டுறாங்க சார் ; அந்தந்த box லேயே வைச்சு அனுப்புறோம் !!" என்று நம்மவர்கள் பதில் சொன்ன போது எனக்கு மறுக்கா மண்டை blank ஆகிப் போனது !! 

"மூக்கை முன்னூறு தபா சுத்துற கதைகளை எதுக்குடா தேடித்திரியுறே ? எதை பிரியமா வாங்குறாங்களோ - அதைச் சிவனேன்னு போட்டுப்புட்டு போக வேண்டியது தானே ? ரசனையை உசத்துறேன் ; ரசத்துக்கு பொடி போடுறேன்னு எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை ?" என்று என்முன்னே குந்தியிருந்த மாண்ட்ரேக் சார் கேட்பது போலவே இருந்தது !!  இந்தப் புள்ளிகளை நிறையவாட்டி இந்தக் கடைசிப் பத்தாண்டுகளில் பார்த்தாச்சு தான் & இதே கேள்விகளை ஏகப்பட்டவாட்டி என்னையே கேட்டுக் கொண்டும் விட்டாச்சு தான் ! ஆனால் அவையெல்லாமே இந்த SMASHING '70ஸ்க்கு முன்பான பொழுதுகள் !! இம்முறை இந்த க்ளாஸிக் நாயகர்கள் + high quality books என்ற கூட்டணியிலான சந்தாப் பிரிவு மாற்றி எழுதியிருப்பது எக்கச்சக்கச் சந்தா இலக்கணங்களை :

**4 இதழ்களையும் சேர்த்து வாங்கினால் மட்டுமே சந்தா என்றோம் - வேதாளர் நீங்கலாய் மீதப் பேர் கிட்டங்கிக்குக் குடி வந்திடப்படாதே என்ற பயத்தினில் !! 

**வேதாளருக்குப் பணம் செலுத்தும் போதே - ரிப் கிர்பிக்கும் அட்வான்ஸ் அவசியமென்றோம் முகவர்களிடம் - அதே பய முகாந்திரத்தினில் ! 

ஆனால்...ஆனால்...நீங்கள் தெறிக்க விட்டிருக்கும் வாணவேடிக்கைகளில் எங்கள் மூஞ்சிகளில் முழுக்கக் கரி ! வேதாளருக்குச் சவாலிட்டார் ரிப் கிர்பி ! ரிப்புக்கு tough தருகிறார் மாண்ட்ரேக் !! "காரிகன் எப்போ ??" என்று நம்மவர்களை இப்போதெல்லாம் அதட்டுகிறார்கள் முகவர்கள் !! 

இன்னொரு பக்கமோ Soda ; சர்பத் என்ற இதழ்களை மாங்கு மாங்கென்று பணியாற்றித் தயாரித்து அதே முகவர்களிடம் கொண்டு போனால்,,"சரி...சரி...5 புக் அனுப்பி வையுங்க...அடுத்த மாசமா காசு தர்றேன் !" என்கிறார்கள் ! சத்தியமாய்த் தெரிலீங்கோ இந்த நொடியில் எது சரியென்று !! 

And yes - இந்த செம ஹிட் பட்டியலில் இம்மாதத்து சுஸ்கி & விஸ்கியையுமே சேர்த்துக்கோங்கோ ப்ளீஸ் ! தீபாவளியை தரிசிக்கும் வரைக்கும் இந்த dutch ஜோடி நம் கிட்டங்கிகளில் இருந்தால் நான் ரொம்ப ரொம்ப வியப்பு கொள்வேன் ! And அதே கதை தான் - வேதாளர் + ரிப் + மாண்ட்ரேக் ஆல்பங்களுக்குமே !! நடப்பாண்டின் இறுதிக்கு முன்பாய் இவர்கள் மூவருமே சிவகாசிக்கு விடைதந்திருப்பார்கள் என்பது நிச்சயம் !! இவர்கள் அனைவருக்கும் மத்தியிலான பொதுவான அம்சங்கள்  என்னவென்று ஆராய பெரியதொரு ராக்கெட் விஞ்ஞானமெல்லாம் அவசியமாகிடாது !!

  • *அனைவருமே க்ளாஸிக் நாயக / நாயகியர் !
  • *அனைவருமே பால்யங்களின் நினைவூட்டிகள் !
  • *நேர்கோடே எங்கள் மூச்சு !" என்போர் இவர்கள் சகலரும் !
  • *அட்டகாசத் தயாரிப்புத் தரங்கள் !
  • *சேகரிக்க அழகான இதழ்கள் !
  • *ஹார்ட்கவர்ஸ் !
இதோ - மேஜை மீது குவிந்து கிடக்கும் தொடரும் மாதங்களது tough stories பக்கமாய்ப் பார்வை தன்னிச்சையாய் ஓடுகின்றது !! 2023-ன் இறுதி செய்யப்பட்ட அட்டவணை பக்கமாகவும் ஒரு துரிதப் பார்வை நீள்கிறது !  பார்த்த கையோடு கண்ணாடி முன்னே போய் நின்றால், ரின்டின் கேனுக்குச் சித்தப்பு போலொரு பேமானி மண்டையன் தான் அங்கே தென்படுகிறான் !! அவ்ரெல் டால்டன் கூட அந்த பேமானி மண்டையனை விட விவேகமானவனாக தென்படுகிறான் இந்த நொடியினில் ! என்ன சொல்கிறீர்கள் folks அந்த அனுமானத்தினைப் பற்றி ?

க்ளாசிக்ஸ் காதல் தான் topic எனும் நிலையில் இதோ - நெடுநாள் அறிவிப்பாய் தொடர்ந்து வரும் இன்னொரு classy கிளாசிக் !! சீக்கிரமே உங்களை சந்திக்கத் தயாராகி வருகிறது !!



சீக்கிரமே முன்பதிவு விபரங்களோடு உங்களை சந்திக்கிறேன் ! Adios for now amigos !! See you around ! Have a rocking Sunday !!

Photos from Erode :






















248 comments:

  1. வணக்கம் 🙏 ஐயா

    ReplyDelete
  2. Today received Mandrake and suski wishy along with July books... very Well made.. the quality is the best... Going to start from Thorgal......

    Thanks Edi sir..

    ReplyDelete
  3. சுஸ்கி விஸ்கி செய்...இதன் ஏன் வேண்டாம்னு தாமதமாச்சுன்னு தான் தெரியல....

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே🙏🙏

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஏனப்பா தோர்கல் சனி கடாக்ஷம் நிறையவே இருக்கும் போல.. குழந்தைகளை கண்டுபிடிக்கவும் சமாதானப்படுத்த வருமே நேரம் சரியான இருக்கும் போல...
    அடுத்த கதை இருக்குங்களா

    ReplyDelete
  7. சுஸ்கி விஸ்கி அட்டகாசமாக இருந்தது. மாயாஜால மன்னனை படித்துக்கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  8. யாருக்கும் தூக்கம் வரலையோ 😍😍🥱🥱

    ReplyDelete
  9. சுஸ்கி விஸ்கி
    நேற்றிரவு தான் படிக்க நேரம் கிடைத்தது சார்..

    நீண்ட நாட்களுக்கு பிறகு காமெடி கதையை வாய்விட்டு சிரித்தது நேற்றுதான் ..

    ரா.ரா.ஜா ஏற்கனவே படித்த கதை என்பதால் சற்று அசுவாரசியமாகவே படிக்க ஆரம்பித்து 25 பக்கங்களோடு நேற்று முன்தினம் நிறுத்தி விட்டேன்..
    மறுபடியும் நேற்றிரவு அனைவரும் தூங்கிய பின் படிக்க ஆரம்பித்தபோது புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் இரண்டு கதைகளையும் சிரித்து கொண்டே படித்து முடித்தேன்..

    இந்தளவிற்க்கு ஹாஸ்யத்திற்க்கு காரணம்,
    மொழி பெயர்ப்பினில் சமகால சொல்லாடகளும் & நையாண்டி வசனங்களுமே நகைச்சுவை மிகுதியானதன் காரணம்..

    அதிலும் தலைவர் என்று முந்திக்கொண்டு செல்வதும் பின்னர் பல்பு வாங்கும் வசனங்கள் எல்லாம் வேற ரகம் ..

    இடையில் ஒரு வசனம்
    "இதெல்லாம் ரொம்ப தப்புங்க"
    மிகச்சரியான இடத்தில் காரணத்தோடு பொருந்தியதால் இலகுவாக ரசிக்க முடிகிறது..

    இனிமேல் காமெடி வகை கதைகளை மொழி பெயர்க்க கண்ணை கட்டி கொண்டு கண்ணன் அண்ணா விடம் நம்பிக்கையுடன் கொடுக்கலாம்...

    ReplyDelete
  10. உயிரைத் தேடி..
    அட்டைப்படம் கொள்ளை அழகுடன், தரமோ தரம்...

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  12. சூப்பர் சார்...உயிரைக் தேடி அட்டைப் படம் சும்மா மிரட்டுது...ஈரோட்டுக்கு ராயல் சல்யூட் நண்பர்களுக்குமே....உங்களே வேகமா இயக்கி உயிரைக் தேடிய வரவழைக்க சாத்தியமான அக்காதலுக்குமே.....காந்திபுரத்திலிருந்து 4கிமீ வீடு வந்து சேரும் வரை படித்துள்ளேன்....இதன் பயண நீளம் சுமார் 4 கிமீ....அந்த ஸ்பைடர்யும் சேத்து விட்டா கசக்குமா என்ன

    ReplyDelete
  13. ஹைய்யா புதிய பதிவு....

    ReplyDelete
  14. ஈரோடு சர்ப்ரைஸ் வெளியீடு எதுவுமில்லிங்களா சார் ?!

    ReplyDelete
  15. மெளன நகரம் :
    மர்ம நகரம்னு தலைப்பு வெச்சிருந்தா கூட இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்,
    அட்டைப்படம் சிறப்பு,ஓவியங்கள் பிரமாதம்...
    ரொம்ப சிலாகிக்கும் கதை இல்லை எனினும்,போரடிக்காமல் கதை ஓட்டம் அமைந்திருந்தது,
    சில்வர் பள்ளதாக்கின் கும்பல் மனோபாவத்தின் தவறுகளுக்கு இறுதியில் இயற்கையே தண்டனை அளிப்பது போலான காட்சியமைப்பு ஏற்கக்கூடிய முடிவுதான்...
    கடினமான தருணங்களில் அறத்தை கைவிடாமல் இருப்பது ஆகச்சிறந்த சவால்,சில்வர் பள்ளத்தாக்கு மக்கள் ரேஞ்சர் க்ரீன்போர்டை பலி கொடுத்து டாலர்களை கபளீகரம் செய்தது கூட்டுக் கொள்ளைக்கு இணையானது,சுயநலம் சார்ந்த முடிவு அது...
    சீமஸ் கதாபாத்திரம் ஒரு சூழ்நிலை கைதியாக,கையறு நிலை பாத்திரமாக பரிதாபத்திற்குரியது,ஊருக்கு ஒருவர் இப்படி இருப்பார் போல,மனதளவில் ஏற்பு இல்லை எனில் இந்த காதாபாத்திரங்கள் ஒருவித குற்ற உணர்ச்சியுடன்தான் உலாவும்...
    வில்லன் கதாபாத்திரமாக எந்த ஒரு வலுவான கேரக்டரையும் முன்னிறுத்தாதது சிறு பலவீனமாக தோன்றியது,மேயரின் வில்லத்தனத்திற்கு எந்த வலுவான பின்னணியும் அமைக்கபடவில்லை,அதில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் வலுவாய் இருந்திருக்கும்...
    ஆங்காங்கே கொஞ்சம் சிந்தனை வித்துகளை தூவி செல்லும் நல்லதொரு பொழுதுபோக்கு கதை...
    எமது மதிப்பெண்கள்-8.5/10.

    ReplyDelete
  16. கைப்புள்ள ஜாக்:
    கலகல,காட்சியமைப்புகளும்,
    வசனங்களும் ஆர்வமூட்டுகின்றன,வெல்கம் கைப்புள்ள...

    ReplyDelete
  17. ஜட்ஜ் ட்ரெட் Files:
    ட்ரெட் பண்ற சில சீரியஸான விஷயங்கள் சிரிப்பையும் வரவழைக்குது,கொஞ்சம் அபத்தமும்,கொஞ்சம் காமெடியும்,கொஞ்சம் சீரியஸூமா போகுது,வாசித்து முடிக்க சிரமமா இருந்தது...
    சிங்கிள் ஸ்ட்ரிப்பும்,காட்சியமைப்புகளில் ஈர்ப்பு இல்லாமையும் ஜட்ஜை அந்நியப்படுத்துகிறது...
    முழுநீள சாகஸங்களை நண்பர்கள் விரும்பினால் வெளியிடலாம்,அதுவும் S '70 போன்ற வெளியீடுகளுக்கு இணைப்பாக மட்டுமே வெளியிட இவை உகந்தது...

    ReplyDelete
  18. தோர்கல்:
    கூண்டிலொரு கணவன்:
    காலாதோர்னின் உதவியுடன் ஆரிஸியாவையும் ஜோலன் மற்றும் ஓநாய்க் குட்டிகளை தேடி பயணிக்கும்போது,நடப்பதறியா ஆரிஸியா சர்டாஸிடம் போய் உதவி கேட்கும்போது தவறாய் எதுவும் நடந்து விடக்கூடாது என மனம் பதைக்கத்தான் செய்கிறது...
    ஒருவழியாக மீண்டு வரும் ஆரிஸியா இருப்பிடம் பயணமாக, பின் தொடரும் சர்டாஸின் வெறிக் கும்பல் பின்தொடர,தேடல் நிறைவுற்ற தோர்கலும் தீவிற்கு வர,எல்லாமே ஒரு புள்ளியில் இணைய,தோர்கலின் சாகஸம் சர்டாஸை கும்பலை கருவறுக்க,ஆரிஸியாவின் காதல் மீண்டும் கெலிக்க,முதல் பாகம் இனிமையுடன் நிறைவுறுகிறது...
    முதல் பாக முடிவில் இந்த காதல் ஜோடிகளை இப்படியே சந்தோஷமா விட்டுடுங்க கதாசிரியர்களேன்னு நாம நினைக்காமல் இருந்தால்தான் வியப்பு...

    ReplyDelete
    Replies
    1. அடுத்து,
      சிலந்தியின் சாம்ராஜ்யம் :
      ஓப்பனிங் காட்சியிலேயே தெரிஞ்சி போச்சி,தோர்கல் அந்த பனிமூட்டத் தீவுக்கு போய் மாட்டப் போறான்னும்,அந்த ராஜ அர்ச்சகர் கேரக்டர்தான் வில்லனா இருக்கப் போகுதுன்னும்...
      மூட மக்கள் எங்குமுண்டு,அவர்களை மூடர்களாய் வைத்திருக்கும் தந்திரமும்,அதிகாரமும் மிக்க ஒரு தலைமைக் கூட்டமும் உண்டு...அதற்கு கதைகளும் விதிவிலக்கல்லதான்...
      ட்ரகான்-மகள் அராக்னியா-எலியோக்கிள்-
      இருவரின் காதல்...
      வழக்கம்போல காதலுக்கு வில்லன்,எலியோக்கிளுக்கு சங்கு,ட்ரகானின் அபத்தமான வேண்டுதல்-கொடூர சாபம்-சாபத்துடன் பாதாளத்தில் அராக்னியா-பாதளத்தில் ஓநாய்க்குட்டி- மீட்கப் போகும் தோர்கல்-அங்கே ஒரு ட்விஸ்ட்+கோப்பையில் ஆவி...
      ஒரே வலைப் பின்னல் தான் கதையில்,அட கதையில் சிலந்தியும் இருக்குல்ல,அதான் ஏகப்பட்ட பின்னல் போல...
      மீட்பர் யார் ?! வழி எப்படி ?!
      அப்புறமென்ன தோர்கலின் வீரம் துணையிருக்க இருக்க முடிவு சுபமே..
      ஒருவழியா இன்னொரு படகில் ரெண்டு நாள் நடுக்கடலை சுத்திப்பார்த்து சலிச்சிப் போன ஆரிஸியாவும்,குட்டீஸூம் வந்து சேர...
      எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை ஒரு பாட்டை போட்டு ஆட வேண்டியதுதான்..
      அற்புதமான, மனநிறைவான வாசிப்பு...

      மொழிபெயர்ப்பு யாருங்க சார்,

      காலாதோர்னிடம் தோர்கல் சொல்வது,"எனக்கு நானே மாஸ்டராக இருப்பதையே நான் விரும்புகிறேன்...
      -அற்புதமான வாக்கியம் சில நிமிடங்கள் என்னால் கதையை தொடர இயலவில்லை,அந்த வாக்கியம் என் மண்டைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது...
      ஸைரேனின் இச்சை அழைப்பை மறுத்து தோர்கல் மனத்திண்மையுடன் பேசும் வசனம் சிறப்பு,
      "இறுதி இரவை வெட்டவெளியில்,சுத்தமான காற்றோடும்,கண் சிமிட்டும் நட்சத்திர ஒளிகளோடும் மறுபரிச்சியம் செய்ய இருக்கிறேன்"...
      -நல்லா இருந்தது வசனங்கள்...

      எமது மதிப்பெண்கள் கண்ணைக் மூடிக் கொண்டு-10/10...

      Delete
    2. மொழிபெயர்ப்பு யாருங்க சார் - திரு.கருணையானதம்

      Delete
  19. பதிவை படிக்க ,படிக்க ஈரோட்டை நினைத்து மிக்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சார்...அனைத்து நண்பர்களுக்கும் மனமார்தந்த பாராட்டுகளும் ,வாழ்த்துகளும்..

    ReplyDelete
  20. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  21. பதிவைப் படித்தேன். சுவைத்தேன். சிரித்தேன். அழுதேன். அழுகைக்குக் காரணம் ஆனந்தக் கண்ணீருங்க. Smashing 70 பெற்ற வெற்றிக்குத் தான் ஆனந்தக் கண்ணீருங்க. கிளாஸிக் நாயகர்களின் அட்டகாசமான கதைகளை அழகான தயாரிப்புத் தரத்தினில் தந்ததே மிகப் பெரிய வெற்றிக் காரணம்ங்க. சுஸ்கி விஸ்கியும் மிகப் பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தேன். நடந்து விட்டது. S70 மற்றும் சுஸ்கி விஸ்கிகளை மாபெரும் வெற்றி பெற வைத்த நண்பர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  22. தற்போது உடல் நிலை சுகமாகிவிட்டதா சார் ? பல்வலி விட்டுவிட்டதாங்க சார் ?

    ReplyDelete
  23. உயிரைத் தேடி வரப் போகின்றதா ? ஆவலுடன் காத்திருக்கின்றோம் சார்.

    ReplyDelete
  24. ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவை தெறிக்கவிடும் நமது காமிக்ஸ் காதலர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். நன்றிகள் நண்பர்களே.

    ReplyDelete
  25. Edi Sir..
    இனிய Sunday morning வணக்கங்கள் ..

    ReplyDelete
  26. Edi Sir..

    Today விர்ர்ர்ர்ருருருரும்ம்ம்ம் to Erode...😃

    😍Me ஒரே ஹேப்பி அண்ணாச்சி..

    ReplyDelete
  27. Replies
    1. என்ன ...விடிந்து விட்டதா...

      Delete
  28. ஈரோடு புத்தகத்திருவிழா ஆல்வேஸ் ஸ்பெஷல் என்பதை நேற்றைய தினம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஈரோடு சென்று நண்பர்களை சந்திக்க முடியவில்லை நமது ஸ்டாலை பார்வையிட முடியவில்லை மற்றும் ஆசிரியரை சந்திக்க முடியவில்லை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக. கடந்த மூன்று வருடங்களாக தடைபட்ட நமது காமிக்ஸ் சந்திப்பு 2023 நடைபெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே.நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன். இந்தாண்டும் தங்களைப் போன்ற நண்பர்களைச் சந்திக்க ஆவலோடு இருந்தேன். கொரோனா அரக்கனால் பாழ்பட்டுவிட்டது.

      Delete
    2. Yesterday night I saw our old photos from 2019 meetup so much emotional pictures are there Anna!🥺😅

      Delete
    3. கண்டிப்பாக விரைவில் சந்திப்போம் நண்பர்களே!

      Delete
  29. Looks like cartoons are doing well!🥳 Makes happy to see that childers are so euthanized to buy lucky Luke, bluecoats etc...🤩

    ReplyDelete
    Replies
    1. "euthanized " ????

      அதற்கான பொருளை ஒருவாட்டி செக் பண்ணிப் பாரேன் அகில் ?

      Delete
    2. It seems Akil tried to write enthusiastic but touched the wrong Google prompter word euthanized unknowingly. This often happens.

      Delete
    3. // It seems Akil tried to write enthusiastic //

      Yes :-)

      Delete
  30. " சர்பத் என்ற இதழ்களை மாங்கு மாங்கென்று பணியாற்றித் தயாரித்து அதே முகவர்களிடம் கொண்டு போனால்,,"சரி...சரி...5 புக் அனுப்பி வையுங்க...அடுத்த மாசமா காசு தர்றேன் !" என்கிறார்கள் ! சத்தியமாய்த் தெரிலீங்கோ இந்த நொடியில் எது சரியென்று !! "

    என்னைப் போன்ற பழமைக்காதலர்களுக்கு ஆத்ம திருப்தி தருவதே பழைய Fleet way போன்ற தெளிவான சித்திங்களுடன் கூடிய நேர்கோட்டு கதைகளே, ( மற்றபடி Serious literature க்கு நாங்க ஜெயமோகன், லா.சா.ரா ன்னு போய்ருவோம்)

    போனெல்லி நிறுவனம் போல முந்தைய வெளியீடுகளை Replica Model ல் கொண்டு வரும் நாளையும் எதிர்நோக்கி உள்ளேன் Sir

    ReplyDelete
    Replies
    1. சோடாவை ஒரு முறை படித்து பாருங்களேன் நண்பரே! கண்டிப்பாக பிடிக்கும்!

      Delete
    2. பரணி...ஒரு சிலருக்கு அது பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது... அதாவது...படமாக இருக்கலாம்...இல்லை மனம் சுமையோடு இருந்தாலும் பிடிக்காமல் போகும்...

      எதார்த்த ஞாயிறில் ரிலாக்ஸ்டாக தொட்டால் தெறிக்கும்....

      நான் பெரும்பாலும். ஞாயிறின் காலையில் ஃபிரேக் பாஸ்ட்க்கு அப்புறமாக ரிலாக்ஸ்டாக உணரும் மனநிலையில் கார்ட்டூனார்களை மேய்வதுண்டு...

      Delete
    3. சோடாவை படிக்கிறனோ இல்லையோ வாங்கிருவேன் Sir

      Delete
    4. நான் பழைய கிளாசிக் கதைகளையும் படிப்பேன் நண்பரே. அனைத்துமே ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை தருபவை. எந்த காமிக்ஸ் கதை வந்தாலும் படித்து விடுவேன்.

      Delete
    5. 😄😄😄 என்னைப் போல் ஒருவர்

      Delete
    6. எனவே புதிய கதைகளையும் படியுங்கள். கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு பிடிக்கும்..

      Delete
  31. கூண்டிலோரு கணவன் - ஷைகானக இருந்து மீண்டும் தோர்கலாக மாறிய பிறகு தமது குடும்பத்துடன் இணைய நடக்கும் சம்பவம்களை ரசிக்கும் படி கொடுத்துள்ளார்; இதில் தோர்கலை மீண்டும் கணவனாக ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு ஆரிசியா சொல்லும் காரணம் பெண்களின் மனதை படம் பிடித்து காட்டும் வகையில் இருந்தது; அவள் இறுதியில் தோர்கலுடன் சேரும் போது சொல்லும் காரணம் மற்றும் அந்த காட்சியமைப்பு இயல்பு, தாய் தந்தை மீண்டும் ஒன்று சேர்த்த உடன் அந்த குழந்தைகளின் ஆனந்தம் படிக்கும் நம்புடன் ஒட்டி கொள்வது கதையின் வெற்றி. சிறப்பான மொழி பெயர்ப்பு வசனகள் பல இடங்களில் அட போட வைத்தது! திரு.கருணையானதம் அவர்களுக்கு பாராட்டுக்கள்! குறைத்த பக்கத்தில் சுவாரசியமான சம்பவங்கள், பாச போராட்டம், வில்லன், மாஜிக், மற்றும் ஆக்ஸன் என விறுவிறுப்பான கதை இது! சித்திரங்கள் மற்றும் வண்ணக்கலவை கதைக்கு வலு சேர்க்கும் வகையில் இருந்தது!

    ReplyDelete
  32. மனதிற்கு நிறைவான,நெகிழ்வான பதிவு.🥰👌❤️.
    இந்த ஈபுவி நிகழ்வுகளும், உங்கள் பதிவும்,
    வாசகர்களின் ஆதரவும்,

    "இந்த பொம்ம புக் பயணத்தில் என்னடாப்பா சம்பாரிச்சே ?" என்று யாராச்சும் கேட்கும் பட்சத்தில், இம்மியும் யோசிக்காது - "அன்பைச் சம்பாரிச்சோமுங்க சார் ! நல்ல மனுஷங்களின் அக்கறைகளைச் சம்பாரிச்சோசோமுங்கண்ணா".
    உண்மை சார். நல்ல நட்புகளின் நட்பை கொண்டிருப்பதே பெரிய விசியம்.

    இன்று (7.8.22) பல நண்பர்களை காணும் வாய்ப்பு உள்ளது.
    ஒரே ஒரு குறை நீங்கள் வராதது மட்டுமே.
    பரவாயில்லை.இன்னும் பல சந்தோஷ சம்பவங்கள் காத்துள்ளது என்பதால் அடுத்த முறை சந்திப்போம்.

    ReplyDelete
  33. பயங்கர பயணம் -
    போர் இல்லாத அமைதியான உலகம் சாத்தியமா அதனை கொண்டு வருவது யார் கையில் என்ற ஒரு சிந்தனையை கதைவடிவில் அனைவரும் ரசிக்கும் படி செய்ய வைத்துள்ள ஒரு பயணம் இது! பூமிக்கு உதவ விண்வெளியில் இருந்து வரும் பொருள் என்ன அதனை தேடி செல்வதில் ஆரம்பிக்கும் கதை, இறுதி வரை சிரிப்பு மற்றும் ஆக்ஸன் என கலந்து கட்டி ஒரே மூச்சில் படிக்க வைத்து விட்டது இந்த பயங்கர பயணம்! மிக்கி "தலைவர்" என அடிக்கும் கூத்துக்கள் செம இயல்பு, இவர் பேசும் வசனங்கள் & செயல்கள் அனைத்தும் டாப் கிளாஸ் சிரிப்பு ரகம். இவர் கூடவே பயணிக்கும் வில்சன் மிகவும் சரியான ஜோடி, தேவைபடும் இடத்தில இவர் புரியும் ஆக்ஸன் நன்றாக உள்ளது! சுஸ்கி-விஸ்கிக்கு இந்த கதையில் வாய்ப்புகள் குறைவு தான். ஸ்பைடர் வில்லன் என் வரும் நபர் நன்றாகவே வில்லத்தனம் செய்கிறார்!

    கதையின் முடிவு செம, நமது மண்டையில் நட்ச் என உரைக்கும் படி சொன்ன விதம் அருமை!

    மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்; சுஸ்கி-விஸ்கி விரைவில் கிட்டங்கியை விட்டு புறப்பட்டு விடும்! இதே தரத்தில் விலை அதிகம் என்றாலும் தொடர வேண்டும் இந்த தொடரை!

    ReplyDelete
  34. Replies
    1. சுஸ்கி-விஸ்கி மொழி பெயர்ப்பு மற்றும் காமெடி இயல்பாக அமைத்தது சிறப்பு, இது கதையுடன் நம்மை கட்டி போட, ரசிக்க ஒரு காரணம்! இனி வரும் கதைகளில் இது போன்று அமைந்தால் நன்றா இருக்கும்! பயங்கர பயணம் சரியான காமெடி முதல் கதையை விட, அதுவும் தலைவர் என்ற பெயரில் அடிக்கும் காமெடி செம! வாழ்த்துக்கள் கண்ணா, அருமையான மொழிபெயர்ப்பு!

      Delete
  35. உயிரை தேடி - அட்டைப்படம் செம செம! முன் அட்டையும் சரி பின் அட்டையும் சரி மிரட்டல் ரகம்!

    ReplyDelete
  36. // நண்பரின் காமிக்ஸ் வேட்கைக்கொரு பெரும் thumbs up எனில், அவரது மறுபாதிக்கும், புதல்விக்கும் நமது மெகா சல்யூட் ! "இந்தக் காசுக்கு 2 பட்டுப்புடவைகள் வாங்கி இருக்கலாமே பாவி மனுஷா !!" என்று சொக்காயைப் புடித்து உலுக்கிடக்கூடிய யதார்த்த மனைவியருக்கு மத்தியில் சகோதரி is quite a difference !! அவருமே நமது பொம்ம புக் உலகினில் உலவிப் பழகியவராக இருந்தால் வியப்படைய மாட்டேன் தான் !! Thank you to the family who made our day !!! //

    மிகவும் அழகான குடும்பம்! எல்லா நலத்துடன் வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  37. S70s மிது எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருந்தது, மாண்ட்ரேக் மட்டுமே "நானும் ரவுடிதான்... நானும் ரவுடி தான்ய்யா..." என்று ஜீப்பில் தொற்றிக்கொள்ளும் நாய் சேகர் வடிவேலு மாதிரி feeling இருந்துச்சு. இரண்டு கதை முடுச்சாச்சு, ரோம்பவே ரசித்தேன்.
    மாண்ட்ரேக் சேய்யும் ஹிப்னாட்டிசம் பின்னாடி இருக்கும் லாஜிக்கை கேள்வி கேட்ட Peter கிரியை, இங்கே உணக்கு என்ன வேலைன்னு துரத்தி விட்டு படித்தேன், First இரென்டு கதை முடுச்சாச்சு ரொம்பவே Delightfulஆக இருந்தது.

    ReplyDelete
  38. சுஸ்கி விஸ்கி - அட்டகாசமான கதை, மொழி பெயர்ப்பு, அருமையான காமெடி, உயர்தர தயாரிப்பு...சூப்பர் ஹிட்...அடுத்தது எப்போது ?

    ReplyDelete
  39. மிக்க மகிழ்ச்சி தந்த பதிவு. இன்னும் மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துகளும் ப்ரார்த்தனைகளும். Missing the fun n participation. :-(

    ReplyDelete
  40. Humble request sir uyirai thedi wrapper is not expected level sir...kindly retune or change front cover sir...my opinion only sir

    ReplyDelete
  41. smashing 70'ஸ் கண்டிப்பா ஹிட் ஆகும்னு தெரியும். வேதாளர் பிரஸ்ட் புக்கோட தயாரிப்பு தரம், huge சைஸ், பேப்பர் குவாலிட்டி பாத்தபோதே தெரிந்தது. கலக்ஷனுக்கு ஏற்ற இதழ். நான் இன்னும் ரிப் கிர்பி படிக்கல. ரெலாக்ஸ்சா இருக்கும் போது படிக்கலாம்னு இருக்கேன். ஒரு 10 புக்ஸ் படிக்காம வெச்சு இருக்கேன். படிக்க என்னிக்கு நேரம் வருமோ தெரியலே.

    எனக்கு வேதாளர் / மாண்ட்ரெக் 50 / 50 அல்லது 51 / 49 என்று கூட வைத்து கொள்ளலாம். என் பால் மனம் மாறாத வயதில் என்னை கவர்ந்த நாயகர்கள் இவர்கள். ஆனால் கடைகளில் இன்னும் புக்ஸ் வராத காரணத்தினால் ஸ்டில் வைட்டிங்.

    உயிரை தேடி கலரில் வராது என்ற போது எனக்கு மிகவும் வருத்தம். ஏற்கனவே பிச்சு பிச்சு படித்த கதை தானே. நான் கலரில் வரும்போது மட்டுமே வாங்குவேன் என்று முறுக்கி கொண்டு இருந்தேன். ஆனால் நாள் ஆகா ஆக, இப்ப வாங்காட்டி கலர்ல வருமோ வராதோ என்ற திகில் பரவிட. இப்பொழுது அட்டை படம் பார்த்தவுடன்... சல சளவென ஜொள்ளுடன் எப்பொழுது என்று வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  42. Replies

    1. சுஸ்கி விஸ்கி
      என்ன வார்த்தைகள் சொல்லி பாராட்டுவதென்று தெரியவில்லை ஒன்றாம் வகுப்பில் கூட படித்த தோழனை கனவிலாவது பார்க்க முடியுமா என என்னி கொண்டிருக்கும் போது அவன் நேரில் வந்து கட்டியணைத்து தோளில் கை போட்டு பேசும் போது என்னென்ன உணர்வுகள் வருமோ அதனை அப்படியே கொடுத்தது சுஸ்கி விஸ்கி பிரமாதமான பேக்கிங் தரமான மொழி பெயர்ப்பு (ஸ்பெஷல் தேங்ஸ் கண்ணன்) கண்ணை உறுத்தாத கலரிங் என மிக மிக அருமையான படைப்பாக சுஸ்கி விஸ்கியை தந்ததற்கு ஆசிரியரின் காலில் விழலாம் கணக்கிலடங்கா நன்றிகள் ஆசிரியரே ஒரு வேண்டுகோள்
      சுஸ்கி விஸ்கி ரெகுலர் சந்தா வில் வந்தால் நன்றாக இருக்கும்

      Delete
    2. //சுஸ்கி விஸ்கி ரெகுலர் சந்தா வில் வந்தால் நன்றாக இருக்கும்//
      1000+

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ரெகுலர் சந்தா பட்ஜெட் சமாளிக்க முடியாது என்பது எனது எண்ணம். ஹார்ட் பௌண்ட் மற்றும் வண்ணத்தில் இந்த தரத்தில் தர தனி சந்தாவே சிறந்தது என்பது எனது தாழ்மையான கருத்து.

      Delete
    5. செம்ம சத்யா செம்ம விமர்சனம்.

      Delete
  43. ஈரோடு புத்தக விழா போட்டோக்களை பார்க்கும்போதும் விற்பனை பற்றிய செய்தியை கேட்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த வருடம் இந்த விழாவில் கலந்துகொள்வேன் என்று நினைக்கிறேன். Fingers crossed.

    ReplyDelete
    Replies
    1. Warm Welcome Sago. அந்த கடிக்க முடியாத மிட்டாயை மறுபடியும் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் .. பழங்கதை& மறக்கமுடியாத நினைவுகள் சகோ .. 😉😉

      Delete
  44. சுஸ்கி விஸ்கி கதைகள் நன்றாக இருக்கும் . ஆசிரியர்க்கு பிடிக்காததால் இத்தனை நாள் அவர் வெளியிடவில்லை.

    இப்போது தான், வாசகர்கள் வேண்டுகோளுக்கு வரம் அளித்து உள்ளார்.

    சுஸ்கி விஸ்கி நிறைய கதைகள் பல உள்ளது. அதில் உள்ள நல்ல கதைகள் வெளியிட வேண்டும். பல குழந்தை வாசகர்கள் கிடைப்பார்கள்

    ReplyDelete
  45. ஸ்டாலில் சுஸ்கி விஸ்கி & இரத்தக்கோட்டை இன்னும் ஒரு புத்தகங்களே இருக்கிள்றன ..

    பீ.கொ.ஜாக் & சிண்ட்ரெல்லா & சு/வி நல்ல சேல் .. டெக்ஸ்தான் படம் போடுகிறார் .. கூடவே பாகுபலியின் பேச்சினில் மயங்கி ஒன்றைத்தேடி வரும் காமிக்ஸ் ரசிகர்கள் கை நிறைய அள்ளிச்செல்வதை பார்க்க முடிந்தது

    ReplyDelete
    Replies
    1. அங்கே குழுமியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவருமே நமது பாகுபலிகள் தானே சம்பத் ! கலக்குங்கள் !

      Delete
    2. கலக்கிட்டோம்ங்க டியர் எடி புதியதாய் இணைந்த கருரார் ன் கிளாஸ்மேட் தோழி ஏகப்பட்ட புத்தகங்களை அள்ளிய பின்பு ஸ்மாஸிங் 70 ஐ ஞாபகப்படுத்தினோம் அதற்க்கும் ஒரு சந்தாவை கட்டிவிட்டே கிளம்பினார்கள் .. எப்பேர்பட்ட காமிக்ஸ் வாசகி அவங்க .. செம்ம சார் இப்படி எல்லாம் எல்லாரையும் கவர் பண்ணி வச்சிருக்கீங்க நீங்கன்னா அது மிகையல்ல .. 🙌🙌

      Delete
  46. சிலந்தியின் சாம்ராஜ்யம் செம திகிலான சாம்ராஜ்யம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க பரணி எனக்கே வீட்டில் சிலந்தி ஊறுவது போல ஃபீலிங். நைட் டைம் படித்தால் சும்மா டெரராக இருக்கும்.

      Delete
  47. பயங்கரம் பயணம்.....சும்மா வேகமோ வேகம்....நண்பர் கண்ணன் ஜொலிக்கிறார்....சமாதானம் முடியவே முடியாதோ....
    கடவுளின் படைப்பிலே வலியது வேட்டையாடிப் பிழைக்குது...வலுவற்றதை அடித்து கொன்று தின்னாமல் உலகை மாற்ற முடியாதோ....
    சண்டையில்லை என அனைத்துப் பாத்திரங்களும் நம்மோடு சேர்ந்து உற்சாகப்படுகையில் உருகுது சமாதானம் இக்கதையின் கடவுள்களின் தீர்ப்பால்....
    சுஸ்கி விஸ்கி இனம்புரியாத உற்ச்சாக உலகம்....இதனோடு ஸ்மர்ஃப்பும் கரம் கோர்த்து....லிமிட்டெட் எடிசனிலாவது வலம் வரனும்

    ReplyDelete
  48. இன்றைய ஈரோடு கள நிலவரம் என்னங்க ?

    ReplyDelete
    Replies
    1. நல்ல வரவேற்புதான்.. ஏகப்பட்ட டைட்டில் காலியாகிவிட்டது.

      Delete
    2. ஏகப்பட்ட ஏகப்பட்ட டைட்டில்கள் அங்கே இல்லவே இல்லை ..

      முக்கியமா முத்து காமிக்ஸ் ன் பழைய தலைகளை தேடினவங்கதான் ஏராளம் .. ஸ்டால்ல அவங்கள்ளாம் காணமயே போய்டாங்க நாளைக்கு புத்தகங்கள் ஏதும் வந்தாத்தான் ஆச்சு *எடி ஏதாவது பெரிய மனசு வச்சு பரண்ல இருக்குற புத்தகங்களை எல்லாம் எடூத்து அனுப்பி வைக்கோணும்* இல்லேன்னா காலியாண ஸ்டால வச்சு ஒண்ணும் பண்ண முடியாது .. டெக்ஸ் இம்மாத புத்தகம் + சு/வி 007அதிரடியாக காலி ஆகிடுச்சு

      முக்கியமா டைகர் ஆல்மோஸ்ட் ஸோல்டு அவுட்

      மாடஸ்டி அக்காவை கண்ணுலயே காணோம் தடாலடி ஸேலாமே 🤔🤔😀😀

      Delete
  49. சார் அப்படியே அந்த முன்பதிவை அறிவிக்கலாம். 4 புத்தகங்கள் உள்ளன அனைத்துமே ஹிட் ஆகும் என்பது எனது நம்பிக்கை
    1. Zagor
    2. வன் மேற்கின் கதை
    3. Sinister Seven
    4. உயிரைத் தேடி.

    எனக்கு வன் மேற்கின் கதை போட்டே ஆகணும்.

    ReplyDelete
    Replies
    1. இது நாலையும் ஜனவரி புத்தக விழாவி்ல் ஸ்பெசல் இதழ்களாக போட்டா ஸ்டாக்கும் காலியாகும். வருங்காலங்களில் பேப்பர் விலை, எக்ஸ்சேஞ்ச் ரேட் ஏற ஏற விலை அதிகரிக்குமே ஒழிய குறையாது. அதனால் முடிவு செய்த புத்தகங்களை எவ்வளவு சீக்கிரம் போட போட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போடறது நல்லது.

      Delete
    2. //அதனால் முடிவு செய்த புத்தகங்களை எவ்வளவு சீக்கிரம் போட போட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போடறது நல்லது.//

      +1111

      Delete
    3. // எக்ஸ்சேஞ்ச் ரேட் ஏற ஏற விலை அதிகரிக்குமே ஒழிய குறையாது. //
      நிலவரங்களை பார்த்தால் இதுதான் நடக்கும் போல...

      Delete
    4. // அனைத்துமே ஹிட் ஆகும் என்பது எனது நம்பிக்கை //
      உண்மை,எவ்வளவு சீக்கிரம் களமிறக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் களமிறக்குங்கள் சார்...

      Delete
    5. // வருங்காலங்களில் பேப்பர் விலை, எக்ஸ்சேஞ்ச் ரேட் ஏற ஏற விலை அதிகரிக்குமே ஒழிய குறையாது. அதனால் முடிவு செய்த புத்தகங்களை எவ்வளவு சீக்கிரம் போட போட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போடறது நல்லது.//

      உண்மை..

      Delete
    6. ///முடிவு செய்த புத்தகங்களை எவ்வளவு சீக்கிரம் போட போட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போடறது நல்லது.///

      ஆம் சார்..... 2+2வாக போட்டு விடலாம்... "ஜாகோர்+வன்மேற்கின் கதை"---அக்டோபர் ஆன்லைன் விழாவில்.....

      சினிஸ்டர்+உயிரைத்தேடி --- ஜனவரி விழாவில்.....!!


      Delete
  50. காமிக்ஸ் காதலர்கள் குவிந்ததால் குலுங்கியது ஈரோடு.

    ReplyDelete
  51. இந்தநாள் இனியநாள்:-

    *இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பின் ஈரோடு புத்தகவிழா சந்திப்புக்கு காலை 10மணிக்கு கிளம்பினேன். முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட மீட்டிங் ஆக எதுவும் இம்முறை இல்லை என்றாலும் வருகை புரியும் நண்பர்களை மரத்தடியில் சந்திக்க இயலும் என்பதான திட்டத்துடன்.

    *11.30க்கு ஈரோடு பேருந்து நிலையம், கரைபுரண்டு ஓடிய காவேரி அன்னையை தரிசித்த பின் அடைந்தேன்... ஈராடு பஸ்நிலையம்ல பிருந்தாவன்ல ஒரு செட் தோசையை விழுங்கிட்டு.....சக்திரோட்ல 7ம் நம்பர் பஸ்ஸில சிறு பயண முடிவில் CNC கல்லூரி வளாக புத்தக அரங்கு வரவேற்றது.....

    *அரங்கின் நுழைவாயிலிலேயே 6வதாக இடம் பிடித்திருந்த நமது லயன்-முத்து அரங்கை அடைந்தேன்..

    ReplyDelete
    Replies
    1. *வாயிலில் நின்று கொண்டிருந்த புனித சாத்தான் உடன் இணைந்து நமது ஸ்டாலை அடைந்தேன்; ஹூய் என விசில் போட்ட மனதை அடக்கி கொண்டே... ஏற்கனவே அங்கேயிருந்த ஸ்டாலின் ஜி, டாக்டர் சுந்தர், GP, சேலம் குமார், ஜெகதீசன்&அறிவரசு எ ரவி....என வரவேற்றனர்!!! ராதாகிருஷ்ணன் அண்ணாச்சியின் பிறந்தநாளை முன்கூட்டியே நெல்லை லாலாவின் மினி பால்கோவா கொடுத்து ரவி கொண்டாடிக் கொண்டருக்க, ஒரு 4 உருண்டைகளை மட்டுமே லபக்கினேன்..(நம்புங்கப்பா)

      *2வது நிமிடம் கரூர் ராஜசேகரன், சில மாதங்களாகவே சந்திக்க எண்ணியிருந்த ஸ்ரீ எ சிவகுமார்-திருப்பூர், ஆருயிர் தம்பிகள் சம்பத்&சிவக்குமார் சிவா இணைந்து கொண்டனர்... நம்மை சந்திக்க என்றே வந்திருந்த கோபி சதீஸ்குமார் உடன் சிறிது நேரம் மட்டுமே பேச இயன்றது. சிண்ட்ரெலா வாங்கிட்டு அவர் விடைபெற்றுச்செல்ல...ஸ்டால் முன்பு இப்போது கணிசமான கூட்டம்.

      *டாக்டர் சுந்தரும் குடும்பத்துடன் வந்திருந்த காரணமாக உடனே கிளம்பிட்டார்... சிலபல க்ளிக்குகளை மடமடனு எடுத்துக்கொண்டு அரங்குக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெயிட்டிங் ஹாலில் தஞ்சமடைந்தோம்...

      Delete
    2. *வெயிட்டிங் ஹாலில் நீள் வட்டமாக சேர்களை அமைத்துக் கொண்டு உட்கார்ந்து வழக்கமான அளவலாவலைத் துங்ங்கினோம். இரண்டு ஆண்டு இடைவெளியை அது கொணர்ந்த சிக்கல்கள், இப்போதைய உற்சாக சந்திப்பு என பேச்சி களைகட்டியது. புதிய நண்பர்களுக்கு அனைவரையும் அறிமுகம் செய்து வைத்துக்கொண்டு.....

      *சிறிது நேரத்தில் யுவா, MKS ராம்& புதிய வாசகர் திணேஷ் 3ரும் சேலத்தில் இருந்து வந்துசேர்ந்தனர். நீண்ட நாட்களாக சொல்லிக் கொண்டு இருந்த தேன்முட்டாய்& கடலைபர்பியை பைக்குள் இருந்து நண்பர் ஸ்ரீ எடுத்த அவருடைய அன்போடு அனைவருக்கும் அளித்தார். அரை ட்ராயர் பருவத்துக்கே அழைத்துச் சென்றன அவையிரண்டும் என சொல்லனுமா என்ன??!.

      *இப்போது ஸ்ரீபாபு நாமக்கல்லில் இருந்து இணைந்து கொண்டார். இந்த இரு ஆண்டு இடைவெளி கொணர்ந்த மற்றோரு பழைய வாசகர் ஸ்ரீபாபு. அவரும் உற்சாக வெள்ளத்தில் ஐக்கியமாக,.....ஸ்டாலுக்கு சென்ற சம்பத்தும், சிவாவும் இரு சின்ன பெட்டிகளுடன் வந்து சேர்ந்தனர். அவற்றினுள் சம்பத் கைவிட்டு ஒரு கவரை எடுத்து பிரிக்க....

      Delete
    3. *சிறு சிறு பேக்கிங்களில் வகைவகையான நம் சிறு பிராயத்து ஸ்நாக்ஸ்கள் கண்சிமிட்டின...

      அந்த ஸ்நாக்ஸ் வகைகள்...

      1.தேங்காய் ஒப்புட்டு...

      2.தேன் மிட்டாய்

      3.கடலை பர்பி

      4.கமர்கட்

      5.சுத்தர மிட்டாய்

      6.மிக்சர்

      அறுசுவை போல அறுவகையான ஸ்நாக்‌ஸ் உடன் 7வதாக நம்ம மாரிமுத்து சாரின் அன்பும் சேர்ந்து இருந்தது...😍😍😍

      *அனைவருக்கும் நண்பர்கள் வழங்க சின்ன குழந்தைகளாகவே மாறிப்போன மூத்த குழந்தை ஸ்டாலின் ஜி பம்பர மிட்டாய் யை சுழற்றி விளையாடினார்....

      Delete
    4. *மிட்டாய்களை சுவைத்து விட்டு மீண்டும் ஸ்டாலுக்கு வந்தோம், அங்கே நம்ம மாரிமுத்து சார் நிஜ பம்மரமாக சுழன்று விற்பனையைக் கவனித்துக் கொண்டு இருந்தார்.

      அப்போது நடந்த சில சுவாரயஸ்யங்கள்....

      #மாடஸ்தியின் கடைசி இதழைக் கைப்பற்றினார் ஒரு ரசிகர்.

      #ஸ்மாஷிங் 70க்காக பணம் செலுததி
      புக்கிங் செய்தார் சேலம் வாசகர் கணபதி.

      #காமிக்ஸ் தொடர்பு எல்லையில் இருந்து விலகி இருந்து மீண்டும் இணைந்து கொண்டு, ஸ்டாலின் ஜி வாயிலாக அனைதது இதழ்களும் வாங்கும் சென்னிமலை விஸ்வநாதன் உடன் ஒரு க்ளிக்

      #பல்க் பல்க்காக ஆன விற்பனை அனைத்தும் டெக்ஸ்...டெக்ஸ்...டெக்ஸ.....!!

      *நேரம் 3மணி ஆகியிருக்க பசித்த வயிறுக்கு பெட்ரோல் போட பொடி நடையாக நடந்து அருகேயிருந்த கோங்கு பரோட்டா ஸ்டாலை அடைந்தோம்..... அங்கே...

      Delete
    5. கட்டுரை எழுதுவதில் உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.

      Delete
    6. நேற்றைய சந்திப்பை அழகாக எழுதி உள்ளீர்கள் விஜயராகவன்!

      Delete
    7. நன்றிகள் நட்புகளே... இடைவேளைக்குப் பின்பானவற்றை இன்று கம்ப்ளீட் பண்ணிடலாம்... நிறைய சுவாராயஸ்யமான நடப்புகள் உண்டு...

      Delete
  52. தோர்கள் கூண்டிலொரு கணவன்.....அரிசியா கணவனை புனிதபடுத்த அடைத்திருப்பாளோ...அங்க மகன் தாயைக் காத்தத் தனயனாக...

    சிலந்தி ராஜ்ஜியத்தில் மகள் தந்தையைக் காக்கிறாள்...பச்சை பழுப்பு என பக்கமெல்லாம் ஒரே நிறத்திலே தூள் கிளப்ப

    ஓர் அட்டகாச கற்பனை பண்ண இயலா கதைக்குள் பயணிக்கிறோம்


    அன்பு சாம்ராஜ்யமே இக்கதை நாயகனப் பொறுத்த வரையிலும் ....வில்லனும் பொறுத்த வரையிலும்....

    சுஸ்கி விஸ்கி தோர்கள் அன்பின் பரிமானங்கள்

    அடுத்த வெளியீடு இம்மண்ணின் அற்புத உலகில் வாழும் டேங்கோ மற்றும் தாத்தாக்களின் புதையலைக் காண ஆவல்....
    நாளை சிண்ட்ரெல்லா அடி தூளு








    ReplyDelete
  53. ஏகப்பட்ட ஏகப்பட்ட டைட்டில்கள் அங்கே இல்லவே இல்லை ..

    முக்கியமா முத்து காமிக்ஸ் ன் பழைய தலைகளை தேடினவங்கதான் ஏராளம் .. ஸ்டால்ல அவங்கள்ளாம் காணமயே போய்டாங்க நாளைக்கு புத்தகங்கள் ஏதும் வந்தாத்தான் ஆச்சு டியர் எடி ஏதாவது பெரிய மனசு வச்சு பரண்ல இருக்குற புத்தகங்களை எல்லாம் எடுத்து அனுப்பி வைக்கோணும் இல்லேன்னா காலியான ஸ்டால வச்சு ஒண்ணும் பண்ண முடியாது .. டெக்ஸ் இம்மாத புத்தகம் + சு/வி & 007 & ஸம் ஹீரோஸ் அதிரடியாக காலி ஆகிடுச்சு

    முக்கியமா டைகர் ஆல்மோஸ்ட் ஸோல்டு அவுட் !!!!

    மாடஸ்டி அக்காவை கண்ணுலயே காணோம் தடாலடி ஸேலாமே 😉😉😉

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷமான செய்தி!

      Delete
    2. அப்போ தங்க கல்லறை collected edition கனவு நடந்திருமோ சார் ? Btw, தாங்களும் நண்பர்களும் EBF watsapp group இல் அதகளம் செய்து வருகிறீர்கள். சென்னையில் இருந்தாலும், திருவிழாவில் இருப்பதைப் போன்ற உணர்வு. பொறாமையாக இருந்தாலும் thanks for sharing sir. Happy to see the sale details and all your Sunday visit posts. Made my day.

      Delete
  54. எனது ஆவல் ஈரோடு புத்தக திருவிழாவில் நமது குடோனில் உள்ள புத்தகங்கள் முழுவதும் காலியாகி ஆசிரியர் சென்னை புத்தக திருவிழாவிற்கு செல்ல நம்மிடம் அதிக டைட்டில் இல்லை என்று அடுத்த மூன்று மாதங்களில் முன்பதிவுக்கு என ஒரு 15 புத்தகங்களை அறிவித்து ரெடி செய்யும் சூழ்நிலை வர வேண்டும்! வரும்! விரைவில் வரும்!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அருமையாக இருக்கும் பரணி...

      Delete
    2. கேட்க நல்லாதான் இருக்கு,நடந்தால் உங்க பால்கோவா தான்...

      Delete
  55. கோவை மற்றும் ஈரோடு புத்தக திருவிழாவில் காணும் உற்சாகத்தை கண்டால் மூன்று வருடங்களாக டிவி மொபைல் என இருந்தவர்களுக்கு அவற்றின் தீமைகள் என்ன அது தங்களை எந்த அளவு ஆட்டிப்படைக்கிறது என்பதை புரிந்து கொண்டு வாசிக்கும் பழக்கத்திற்கு மீண்டும் திரும்பி வந்தது போல் இருக்கிறது! இது சென்னை புத்தக திருவிழாவிலும் தொடரும் என நம்புகிறேன்! நமது காமிக்ஸ் அனைவரிடமும் செல்ல வேண்டும் நமது வாசகர்கள் வட்டம் அதிகரிக்க வேண்டும்!

    ReplyDelete
  56. Please return to SMURFS.,,🤗🤗🤗

    ReplyDelete
  57. *தல Vs இளையதலைமுறை*

    கடந்த வருடங்களைக் காட்டிலும் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களிடம் டெக்ஸ் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்திருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது! கடந்தகாலத்தின் ஏதோவொரு தருணத்தில் ஏற்கனவே டெக்ஸ் கதையை வாசிக்க நேர்ந்த சிறுவர்கள் மீண்டும் டெக்ஸுக்காகவே நம் ஸ்டாலைத் தேடி வருவதும் நிறையவே நிகழ்கிறது!

    இளைய தலைமுறைகளிடமும் டெக்ஸ் தனது கீர்த்தியைப் பரப்பிவருவதை கடந்தவருடங்களைக் காட்டிலும் இந்த வருடத்தில் அழுத்தமாகவே உணரமுடிகிறது! இது பூசிமொழுகாத உண்மை!!

    எப்படியோ டெக்ஸால் தமிழ் காமிக்ஸ் புத்துணர்வு பெற்றால் நமக்கு அது பேரின்பம் தான்!

    110 பக்க டெக்ஸ் கதைகளை புத்தகத் திருவிழா சமயங்களில் கணிசமாகக் கையிருப்பு வைத்திருந்தால் மாணவர்கள் தங்கள் பாக்கெட் மணிக்கு ஏற்ப வாங்கிச் செல்ல வசதியாக இருந்திடும்!

    இன்று இப்படி வாங்கிச் செல்லும் மாணவர்கள் பின்னொரு காலத்தில் 1000 பக்க டெக்ஸ் கதைகளை வெளியிடச் சொல்லி போராட்டம் நடத்திடவும் நிறையவே வாய்ப்புகளுண்டு!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதான் பூனையாரே

      Delete
    2. // எப்படியோ டெக்ஸால் தமிழ் காமிக்ஸ் புத்துணர்வு பெற்றால் நமக்கு அது பேரின்பம் தான்! //
      தல கதையில் மட்டும் மீட்பர் அல்ல,நிஜத்திலும் தான்...
      தல கேரக்டர் சாகாவரம் பெற்று காமிக்ஸை வாழ்வாங்கு வாழ வைக்கட்டும்...

      Delete
    3. ////எப்படியோ டெக்ஸால் தமிழ் காமிக்ஸ் புத்துணர்வு பெற்றால் நமக்கு அது பேரின்பம் தான்!////

      ---- ஆல்ரெடி இது நடைமுறை காண ஆரம்பித்திருந்தாலும் அடுத்த தலைமுறைக்கு டெக்ஸ் சென்று சேருமோ என இருந்து கொஞ்ச நஞ்ச ஐயத்தையும் இந்த ஈரோடு விழா போக்கியுள்ளது...

      முகநூலில் Lion comics பக்கத்தில் செய்யப்படும் அப்டேட்களே இதற்கு முழு காரணம்னு நினைக்கிறேன்.

      இக்கால டீனேஜர்கள் முகநூலில் comics என தேடும்போது Lion comics page நிச்சயமாக கண்ணில்படும். அந்த பேஜ்ல உள்ள டெக்ஸ் விளம்பரங்கள் அவர்களை ஈர்த்துள்ளது. தொடர்ச்சியாக , டெக்ஸ் விமர்சனங்கள் பரவலாக தெரியவர அவர்களும் டெக்ஸைத் தேடி பிடிக்க ஆரம்பித்துள்ளர்.

      நீண்ட நெடுங்காலம் டெக்ஸ் தன் ஆதிக்கத்தை அரிசோனாவில் மட்டுமல்ல தமிழ் மண்ணிலும் தொடர்வார் என்ற நம்பிக்கையை விதைத்து உள்ளது.....
      எல்லாப்புகழும் லயன் பேஜ்க்கே.....

      டெக்ஸை எல்லாப்பக்கமும் கொண்டு செல்லும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி💃💃💃💃

      Delete
  58. விஸ்கி & சுஸ்கி - 9.5/10

    மௌன நகரம் - 9.0/10

    தோர்கல் - 8.9/10

    கைப்புள்ள ஜாக்- 9/10

    ஜட்ஜ் ட்ரெட்- மிடில

    சிண்ட்ரெல்லா- 9/10

    மாண்ட்ரேக்.. ( படிக்க துவங்கியிருக்கேன்..லேட்டர்)

    ReplyDelete
    Replies
    1. // தோர்கல் - 8.9/10 //
      ரொம்ப கறாரான டாக்டரா இருப்பார் போல...

      // ஜட்ஜ் ட்ரெட்- மிடில //
      அதே,அதே...

      Delete
    2. /ரொம்ப கறாரான டாக்டரா இருப்பார் போல...//

      :-)

      Delete
  59. வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  60. During these book fairs one college student can be rented and can wear lucky like or tex filler or smurfs costume and stand near the stall on saturday and sunday evenings.

    Koottam summa allum

    ReplyDelete
  61. சிண்ட்ரெல்லா புத்தகம் வந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்னும் வர்லை..😔😔😔😔

      Delete
    2. எனக்கும் வந்து விட்டது.

      Delete
    3. சிண்ட்ரெல்லா கதையை எனது மகனுக்கு இப்போது தான் சொல்லி முடித்தேன். மகிழ்ச்சி.

      Delete
  62. #அப்படியே அந்த முன்பதிவை அறிவிக்கலாம். #

    #4 புத்தகங்கள் உள்ளன அனைத்துமே ஹிட் ஆகும் என்பது எனது நம்பிக்கை#

    #1. Zagor
    2. வன் மேற்கின் கதை
    3. Sinister Seven
    4. உயிரைத் தேடி.#

    #எனக்கு வன் மேற்கின் கதை போட்டே ஆகணும்.#

    😎Edi sir..
    Me too..😍

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி நண்பரே

      Delete
  63. //'இங்கே நமது நண்பர்கள் அட்டகாசமாய் உருவாக்கியுள்ளதொரு வாட்சப் குழு"//

    Contact details please sir.

    ReplyDelete
    Replies
    1. http://lion-muthucomics.blogspot.com/2022/07/blog-post_30.html#comment-form இந்த பதிவில் ஈரோடு விஜய்யின் இந்த பின்னூட்டத்தில் whatsup குரூப் லிங்க் உள்ளது.

      // Erode VIJAY 4 August 2022 at 08:53:00 GMT+5:30
      நண்பர்களே!!

      ஈரோடு புத்தகத் திருவிழா நாளை (5/8/22) துவங்கயிருப்பதை முன்னிட்டு, புத்தகத் திருவிழா குறித்த தகவல்கள், நிகழ்வுகள், புத்தகங்கள், விமர்சனங்கள், கதைகள், எழுத்தாளர்கள் குறித்த நிகழ்வுகளை நமக்குள் பகிர்ந்துகொள்ள கீழ்க்காணும் வாட்ஸ்அப் லிங்கில் இணையுங்கள்!

      ஈரோடு புத்தகத் திருவிழா 2022

      வாருங்கள் கொண்டாடுவோம்!! //

      Delete
  64. This comment has been removed by the author.

    ReplyDelete
  65. This comment has been removed by the author.

    ReplyDelete
  66. அருமை நண்பர்களே!

    ஈரோடு புத்தகத் திருவிழா 5/8/2022 துவங்கி கோலாகலமாக நடந்துகொண்டிருக்கிறது! புத்தகத் திருவிழா குறித்த தகவல்கள், நிகழ்வுகள், புத்தகங்கள், விமர்சனங்கள், கதைகள், எழுத்தாளர்கள் குறித்த நிகழ்வுகளை நமக்குள் பகிர்ந்துகொள்ள கீழ்க்காணும் வாட்ஸ்அப் லிங்கில் இணையுங்கள்!


    ஈரோடு புத்தகத் திருவிழா 2022


    வாருங்கள் கொண்டாடுவோம்!!

    ReplyDelete
  67. ஈ. பு. விழாவில் நான் வாங்கிய புத்தகங்கள் 1.பயணங்கள் முடிவதில்லை. ஜெரெமையா பார்ட்2 2.தகிக்கும்பூமி லோன்ரேஞ்சர் பார்ட்2 நான் வாங்கமுடியாமல்விட்டுவிட்ட இரண்டு புத்தகங்களையும்லட்டுபோல் அள்ளிக்கொண்டுவிட்டேன். மேலும் குமார் சேலம்சாரின்அன்பு அன்பளிப்பாக சிண்ட்ரெல்லா. மூன்று புத்தகங்களுடன் திருப்தி அடையமுடியவில்லை. மேலும் எதாவது வாங்கவேண்டுமே என்று தேடியதில் கண்டுபிடித்ததுலாரன்ஸ்&டேவிட்டின்திகிலூட்டும் நிமிடங்கள்+மஞ்சள்பூமர்மம் அடுத்தது என்ன என்று. யோசித்துக்கொண்டிருந்தபோது பாகுபலி கைகொடுத்தார். மாடஸ்டியின் கடைசி இரண்டு புத்தகங்கள் என்று அறிவிக்க பழிவாங்கும்புயலையும் கைப்பற்றினேன்மொத்தம் 6 புத்தகங்கள் . மனநிறைவுடன் வீடுதிரும்பினேன். கரூர் ராஜ சேகரன். .

    ReplyDelete
  68. தோர்கல் முதல் கதை சுமார் ரகம்
    தோர்கல் 2-ம் கதை படு சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. தோர்கல் வரும் ஆண்டு ஓய்வு தரலாம்.

      Delete
    2. மாயஜால உலகிற்கு ஓய்வா,அய்யகோ...!!!

      Delete
  69. ஸ்மேஷிங் 70 ஸ் புத்தகங்களை இரண்டாவது ரவுண்டு வரும் பொழுது அட்டகாசமான கலரில் எதிர்பார்க்கிறோம்
    வண்ணங்களில் அதன் மயக்கமே தனி. நன்றி

    ReplyDelete
  70. இந்த மாத இதழ்களில் Top :
    கைப்புள்ள. அட்டைப்படமும் கூட.
    சிறுவர்களை இது மிக சுலபமாய் ஈர்க்கும். புத்தக விழாவில் கண்டிப்பாக சேல்ஸ்க்கு இருக்க வேண்டிய இதழ். ₹ 30 Or ₹ 40- க்கு விற்கலாம்.
    கடந்த சில ஆண்டு காமிக்ஸ் வெளியீடுகளில் மிக சிறந்த வெளியீடு.

    ReplyDelete
  71. Tex

    50/- ரூபாயில் புக்பேர்ல் மாணவர்களுக்கென்றே டெக்ஸ் கதைகள் ரீ பிரிண்ட் என வரவேணும் ..சாதா பேப்பராக இருந்தால் நல்லது .. ( எதற்க்கும் அந்த கலர் 50/- டெக்ஸ்ஸை பாக்கட் சைஸ் .. இதை களமிறக்க முயற்சிக்கலாமே டியர் எடி)

    எடி மனது வைத்தால் இளம் தலைமுறையினரை கவர முடியும் வருங்காலத்தில் அவர்கள் நம்மையெல்லாம் முந்தி செல்ல வாய்ப்புண்டு .. பழைய 50/- டெக்ஸ் களை பாக்கட் சைஸ்ஸில் ரீபிரிண்ட் செய்தால் மிக்க நன்று

    ReplyDelete
  72. மாண்ட்ரேக் ஸ்பெஷல் உள்பக்கங்கள் மனதை அள்ளுகிறது.ஆனால் அவரது தனித்துவமே மாஜிக்தான்.அதை அட்டைப்படத்தில் காட்டாமல் மாண்ட்ரேக்,லொதார் இருவர் கைகளிலும் துப்பாக்கியை கொடுத்துள்ளது நியாயமாக இல்லை.ஓவியமும் படு மொக்கையாக உள்ளது.நீங்கள் நமது ஓவியருக்கும் வேலை கொடுப்பதாக இருந்தால் மௌன நகரத்திற்கு செய்ததுபோல பட்டி டிங்கரிங் செய்து கொடுத்தால் போதும்.தயவு செய்து இனிவரும் கதைகளுக்காவது ஒரிஜினல் அட்டைப்பபடங்களையே கொஞ்சம் திருத்தங்களோடு தொடருங்கள்.

    ReplyDelete
  73. 'சின்ட்ரெல்லா' என்றாலே அழகான யுவதியின் எழில் தோற்றம் தான் நம் மனக்கண்ணை ஆக்கிரமிக்கும்!
    ஆனால் மிகச் சமீபத்தில் லயன்-லைப்ரரியில் வெளியாகியிருக்கும் சின்ட்ரெல்லாவைக் காட்டி 'இதான் சின்ட்ரெல்லா' என்று சொன்னால் என் 5 வயது மகளே நம்ப மறுக்கிறாள்! என்னதான் கார்ட்டூன் பாணி ஓவியம் என்றாலும் குறைந்தபட்சம் சின்ட்ரெலாவையாவது கொஞ்சம் அழகாக வரைந்திருக்கலாம் இப்படைப்பின் ஓவியர்!
    வண்ணக் கலவைகள் கண்களுக்கு பரவசமூட்டுகின்றன. என்றாலும் இந்த பாணி ஓவியம் குழந்தைகளைக் கவருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. 2K சின்ட்ரெல்லா அப்படித்தாங்க இருக்கும்..!

      Delete
  74. நன்றிகள் பல நண்பர்களே..🙏

    ReplyDelete
  75. // ஜெரெமையா பார்ட்2 //
    என்ன ஒரு மன தெகிரியம் உங்களுக்கு...
    // 2.தகிக்கும்பூமி லோன்ரேஞ்சர் பார்ட்2 //
    இது மொழிபெயர்ப்புக்காகவே படிக்கலாம்,அதுதான் இக்கதைக்கு பலம்...

    ReplyDelete
  76. சின்ட்ரெல்லா இன்று இல்லம் வந்தடைந்தது...

    ReplyDelete
  77. // மாடஸ்டியின் கடைசி இரண்டு புத்தகங்கள் என்று அறிவிக்க பழிவாங்கும்புயலையும் கைப்பற்றினேன். //
    இளவரசியின் மீட்பர்...

    ReplyDelete
  78. மாண்ட்ரேக் 3 கதைகள் முடிச்சி இப்பதான் இ.வி.இ.கோ வந்துருக்கேன்,படித்த வரை ஓகே,கொஞ்சம் காதில் பூ ரகம்னாலும் ரொம்ப சுத்தலை,எனினும் மாண்ட்ரேக் ஈர்க்கிறார்...
    மாண்ட்ரேக்கில் லாஜிக் பார்த்தால் மேஜிக்கை ரசிக்க முடியாது...

    ReplyDelete
  79. இருளின் விலை இரண்டு கோடி சுவாரஸ்யமா இருக்கு, S '70யில் வேதாளர் கதையில் இதே மாதிரி கும்பலா சேர்ந்து கொள்ளையடிக்கும் கூட்டத்தை பற்றி ஒரு கதையை படித்த ஞாபகம்...
    என்னன்னு தேடிப் பார்த்தா கானக் ஒலிம்பிக்ஸ் கதை...

    ReplyDelete
  80. மாண்ட்ரேக் முடிச்சாச்சி,மேஜிக் உலகில் உலாவி விட்டு வெளியே வந்த பீலிங்...
    கடைசி கதையான கலாரசிகனின் கதையில் ஓவியங்கள் ரொம்ப சுமாராக இருந்ததாய் ஒரு பீல்...
    மற்றபடி கதைகள் படிக்க ஓகேதான்...
    அடுத்த வருட மாண்ட்ரேக் சாகஸத்துகாக வெயிட்டிங்...

    ReplyDelete
  81. எட்டாப்புப் படிக்கும் என் மகள் சுஸ்கி-விஸ்கியின் இரண்டு கதைகளையுமே படித்து முடித்துவிட்டாள்! என்னுடைய நிர்பந்தம் ஏதுமின்றி அவளே இரு கதைகளையும் படித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி!

    அவள் அவ்வப்போது குலுங்கிச் சிரித்தபடியே ஆர்வமாய் படித்திடுவதை எட்ட நின்று ரசித்திடும்போது ஏதோவொரு பெருமிதம்+சந்தோசம்+நிறைவு எனக்குள்!

    படித்து முடித்தபிறகு அவளிடம் 'எப்படியிருக்கு?' என்று ஒரு மெல்லிய 'திக்திக்' உணர்வுடன் கேட்டேன். "ம். நல்லாருக்கு டாடி. நடுவிலே கொஞ்சம் கொஞ்சம் மொக்கையா இருந்தாலும் ஓவராலா எனக்குப் பிடிச்சிருக்கு!" என்றாள்!

    'இரண்டில் எந்தக் கதை உனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு?' என்றேன். பளிச்சென்று பதில் வந்தது "ராஜா ராணி ஜாக்கி"!

    சுஸ்கி-விஸ்கிக்கு ஒரு ஜே!!

    ReplyDelete
    Replies
    1. செம சுஸ்கி விஸ்கி பாஸ்....


      அடுத்த ஆண்டு கார்டூன் சந்தாவுலயே சேர்த்துடுங்க ஆசிரியர் சார்...

      Delete
    2. அருமை செயலரே...:-)

      Delete
  82. Edi Sir..
    😍❤️ஒருவழியா *சிண்ட்ரெல்லா* இன்னைக்கு வீடு தேடி வந்துட்டா..👍🤓💐

    ReplyDelete
  83. இறுதியாக மாயாஜால மன்னன் மாண்ட்ரேக்கின் படா இதழையும் முடித்தாயிற்று..

    அன்று மாதம் ஒரு இதழ் வரும்பொழுது அடுத்து வரும் இதழ் மாண்ட்ரேக் என அறிவிப்பு இருந்தால் கொஞ்சம் ஆர்வம் குறைவாகவே இருக்கும்...ஆனால் சமீப காலங்களில் பலதரப்பட்ட களங்களை ஆசிரியர் வெளியிட்டு நம்மை புக வைத்த பொழுது மனதில் மீண்டும் மாண்ட்ரேக் எல்லாம் வந்தால் எப்படி இருக்கும் என பலமுறை நினைத்திருக்கிறேன்...அந்த நினைவை வட்டியும் முதலுமாய் ஆசிரியர் ஒரு மெகா அளவில் ,செம தரமான தாளில் ,பளபளக்கும் அட்டைப்பட ஜொலிப்பில் எட்டுக்கதைகளை ஒட்டுமொத்தமாய் அளிப்பார் என யார் தான் எதிர்பார்த்திருக்க முடியும்..தினம் இரு கதைகள் ,மூன்று கதைகள் என வாசித்து மூன்று நாளில் அனைத்து கதைகளையும் வாசித்தாயிற்று..காதில் பூ சுற்றும் நாயகரே ஆனால் அந்த பூ சுற்றல் ஒரு மேஜிக் மந்திர நாயக நபர் என்ற நம்ப கூடிய பிம்பத்தால் எந்த பூ சுற்றலும் நம்மை கடுப்பேற்ற வைக்காமல் புன்னகைக்க வைக்கிறார் இந்த மாண்ட்ரேக்.ஆரம்ப கதையே மாண்ட்ரேக் ,லொதார் எப்படி அறிமுகமானார்கள் என்பதான கதை ஆரம்பம் இதழுக்கு வலிமை சேர்க்கிறது..பின் வரும் சில கதைகளும் ஒரே வில்லனின் தொடர் நிகழ்ச்சி எனும் பொழுது எதிர்பார்ப்பு இன்னமும் சுவையூட்டுகிறது..மொத்ததில் மூன்றாவது க்ளாசிக் நாயகரும் அனைத்து விதத்திலும் அசத்தி விட்டார்..வேதாளர் ,ரிப்கெர்பி ,மாண்ட்ரேக் என மூவருமே அடித்து ஆடி விட்டார்கள் என்றால் இந்த மாதம் அனைவருமே களத்தில் அதே போல் அடித்து ஆடி விட்டார்கள் என்பதும் உண்மையே...


    மொத்ததில் இந்த மாதம் டெக்ஸ்ம் சரி ,விஸ்கி சுஸ்கி யும் சரி ,தோர்கலும் சரி ,மாண்ட்ரேக்கும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பதை நிரூபித்து இந்த மாதத்தின் அனைத்து இதழ்களுமே வெற்றிக்கொடியை நாட்டுகின்றன அனைத்து விதத்திலும் ..

    அருமை ..அருமை.. அருமை ..அருமை...

    பின்குறிப்பு ஒன்று..

    நீதி தேவன் தொடரலாமா என வினவி இருந்தீர்கள் சார்.. வேண்டாமே விஷ தேர்வு என்பதே எனது கருத்து சார்..:-)

    பின்குறிப்பு 2

    ஆகஸ்டில் செப்டம்பர் உண்டா என கேட்பது தவறு இல்லையே சார்..:-)

    ReplyDelete
  84. Sir
    நம்ம இந்த வெப்சைட்
    google லில் தேடினால்
    சரியாக கிடைக்கவில்லை
    என்ன ஆச்சு?

    ReplyDelete
  85. சுஸ்கி & விஸ்கி :
    ராஜா ராணி ஜாக்கி,பயங்கரப் பயணம் இரண்டுமே திருப்தியான கதைகள்,இலகுவான வாசிப்புக்கு ஏற்றவாறு நல்லதொரு மொழிபெயர்ப்பில் நிறைவான கதைக் களங்கள்...
    குட்டிஸுக்கு பிடித்தால் வியப்புற ஏதுமில்லை,முதல் கதையை விட இரண்டாம் கதைக்கு கலரிங் நச் என அமைந்திருந்தது,காடு சார்ந்த களம்தான் காரணமோ...
    இருகதைகள் மட்டுமே என்பதாலோ என்னவோ ஹார்ட் பைண்டிங் அட்டைக்கு நடுவே கதைகள் ஒளிந்திருந்தது போல் தோணிச்சி...

    பரபரப்பான வேலைகள் இருந்தா முடிச்சிட்டு இக்கதைகளை எடுத்தா மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்னு கண்டிப்பா தோணும்,அதுவே இக்கதையின் பலம்...
    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
    Replies
    1. // பரபரப்பான வேலைகள் இருந்தா முடிச்சிட்டு இக்கதைகளை எடுத்தா மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்னு கண்டிப்பா தோணும்,அதுவே இக்கதையின் பலம் //

      +1

      Delete
  86. மாண்ட்ரேக், மார்கோ போலோ மற்றும் பில்கேட்ஸ்

    செங்கிஸ்கானின் பேரனான குப்ளாய் கான் ஸாங் பேரரச மன்னர்களை வென்று சீனா முழுதும் தன் குடையின் கீழ் கொண்டு வந்து யுவான் வம்சத்தை உருவாக்கி ஆட்சி புரிந்தான்.
    அப்போது மங்கோலிய பேரரசு தற்போதைய ஈராக், ஈரான், பாகிஸ்தான், காஷ்மீர்- டெல்லி வரை இந்திய பகுதிகள், ஆப்கானிஸ்தான்,
    ரஷ்யாவின் பகுதிகள், மங்கோலியா ,சீனா என பரந்து விரிந்து இருந்தது.

    13-14 - நூற்றாண்டுகளில் இத்தாலியிலிருந்து தனது பயணத்தை துவக்கிய மார்கோ போலோ 4 ஆண்டுகள் ஆசியா நெடுக பயணம் செய்து குப்ளாய் கான் தனது தலைநகராக கொண்டு ஆட்சி செய்த டடு ( தற்போதைய பெய்ஜிங்) வை வந்தடைந்தார்.

    போலோவின் அறிவு, இனிமையான பண்பு மற்றும் பயண அனுபவம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட குப்ளாய் கான் சீனாவின் ஒரு பகுதிக்கான கவர்னாராக நியமித்தார்.

    பல ஆண்டுகள் வரை( சுமார் 17 ) அங்கிருந்தபோதுதான் குப்ளாய் கானின் கோடைகால தலைநகராக விளங்கிய SHANG- TU வை பார்க்கும்
    வாய்ப்பு போலோவுக்கு கிட்டியது.

    மாண்டரின் மொழியில் SHANG-TU என்பதற்கு அழகும், அமைதியும் தவழும் இடம் எனப் பொருள். இதன்
    அழகு, வசதிகள் பற்றி தனது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார் மார்கோபோலோ.தாயகம் திரும்பிய
    மார்கோ போலோ பரம வைரிகளான ஜெனோவா குடியரசு படைகளால் சிறை வைக்கப்பட்டார்.அப்போது சிதறிய அவரது பயண நூல்கள் பின்னர் சேகரிக்கப்பட்டன.

    குப்ளாய் கானின் மரணத்துக்கு பின்
    சுமார் 50 ஆண்டுகள் கழித்து மிங் வம்ச அரசர்கள் மங்கோலியர்களை துரத்தியடித்து சீனாவை ஆளத் துவங்கினர். பின்னர் சுமார் 600 ஆண்டுகள் வரை shang- tu பற்றி யாரும் பேசவில்லை.

    ஜப்பானியர்கள் மஞ்சூரியாவை தாக்கியபோது SHANG TU பற்றி அரசபுரசலாய் தெரியவந்தாலும் அப்போதைய நிகழ்வுகள் பின்னர் வந்த கம்யூனிச அரசு ஆகியவற்றால்
    தெரியாமலே போய்விட்டது.

    ReplyDelete
    Replies
    1. 1812- வாக்கில் மார்கோ போலோவின் பயண நூல்களால் தூண்டப்பட்டு ( ஓப்பியமும் உதவி செய்தது) ஆங்கில கவிஞரான சாமுவேல் டைலர் கோல்ட்ரிஜ் உலகப்புகழ் பெற்ற குப்ளா கான் என்ற கவிதையை எழுதினார்.

      Kubla Khan
      BY SAMUEL TAYLOR COLERIDGE
      Or, a vision in a dream. A Fragment.

      In Xanadu did Kubla Khan
      A stately pleasure-dome decree:
      Where Alph, the sacred river, ran
      Through caverns measureless to man
      Down to a sunless sea.
      So twice five miles of fertile ground
      With walls and towers were girdled round;
      And there were gardens bright with sinuous rills,
      Where blossomed many an incense-bearing tree;
      And here were forests ancient as the hills,
      Enfolding sunny spots of greenery.

      But oh! that deep romantic chasm which slanted
      Down the green hill athwart a cedarn cover!
      A savage place! as holy and enchanted
      As e’er beneath a waning moon was haunted
      By woman wailing for her demon-lover!
      And from this chasm, with ceaseless turmoil seething,
      As if this earth in fast thick pants were breathing,
      A mighty fountain momently was forced:
      Amid whose swift half-intermitted burst
      Huge fragments vaulted like rebounding hail,
      Or chaffy grain beneath the thresher’s flail:
      And mid these dancing rocks at once and ever
      It flung up momently the sacred river.
      Five miles meandering with a mazy motion
      Through wood and dale the sacred river ran,
      Then reached the caverns measureless to man,
      And sank in tumult to a lifeless ocean;
      And ’mid this tumult Kubla heard from far

      Delete
    2. Ancestral voices prophesying war!
      The shadow of the dome of pleasure
      Floated midway on the waves;
      Where was heard the mingled measure
      From the fountain and the caves.
      It was a miracle of rare device,
      A sunny pleasure-dome with caves of ice!

      A damsel with a dulcimer
      In a vision once I saw:
      It was an Abyssinian maid
      And on her dulcimer she played,
      Singing of Mount Abora.
      Could I revive within me
      Her symphony and song,
      To such a deep delight ’twould win me,
      That with music loud and long,
      I would build that dome in air,
      That sunny dome! those caves of ice!
      And all who heard should see them there,
      And all should cry, Beware! Beware!
      His flashing eyes, his floating hair!
      Weave a circle round him thrice,
      And close your eyes with holy dread
      For he on honey-dew hath fed,
      And drunk the milk of Paradise.

      SHANG- TU என்ற மாண்டரின் வார்த்தை ஆங்கிலத்தில் XANADU
      - ஸனாடு என மாறியது.

      தற்போது XANADU சீனாவின் ஷென்கிலன் பகுதியில் பெய்ஜிங்கிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில் சிதிலம் மட்டுமாக உள்ளது. இப்போது இது ஒரு சுற்றுலா தலமும் கூட.

      Delete
    3. மாண்ட்ரேக் கதாசிரியர் லீ பால்க் கவிதை பிரியர். மாண்ட்ரேக் என்ற பெயரே JOHN DONNE என்ற புலவரின் கவிதையிலிருந்து எடுக்கப்பட்டது என ஏற்கனவே தெரிந்ததுதான். அவரின் வாசஸ்தலமும் சாமுவேல் டைலர் கோல்ட்ரிஜ் கவிதையிலிருந்தே எடுக்கப்பட்டிருக்கலாம்.

      ஷநாடு, சனாடு என அழைக்கப்பட்ட நமக்கு மிகவும் பரிச்சியமான பெயரை பற்றி அறிய விரும்பியதின் விளைவே இப்பதிவு.

      திரைப்படம், இசைத் தொகுப்பு, கால்பந்து குழு என பல விதங்களில் இடம் பெறும் இப்பெயர் சென்னை முகப்பேரில் BRIGADE XANADU என அடுக்கு மாடி ஸ்பானிஷ் தீம் குடியிருப்பாகவும் உள்ளது.

      அமெரிக்க கோடிஸ்வரர் பில் கேட்ஸின் இல்லம் வாஷிங்டனில்
      வாஷிங்டன் ஏரி அருகே 66000 சதுர அடியில் உள்ளது. 140 மில்லியன் டாலர் மதிப்புள்ள இவ்வீட்டில் ஹைடெக் மாயாஜாலங்கள் உள்ளது. Money magic. இதன் பெயர் XANADU 2.O.

      யோசித்து பார்த்தால் அன்பான மனைவி , அருமையான குழந்தைகள் இருப்பின் 600 சதுர அடி வீடாக இருப்பினும் அது ஸனாடுதான். ( XANADU= அமைதியும், அழகும், ஆனந்தமும் தவழுமிடம்)

      ஈபுவில் நண்பர்கள் கொண்டாட்டம் ஆனந்தம் ஆகியவற்றை பார்க்கையில்
      முத்து ஸ்டால்- XANADU
      எனப் போட்டிருக்கலாம் எனத் தோன்றத்தான் செய்கிறது.

      Delete
    4. XANADU பற்றிய விபரங்கள் அருமை.

      Delete
  87. தோர்கல்:
    வழக்கம் போல் அட்டகாசம்.
    புத்தகத்தை கையில் எடுத்தால், முடிக்காமல் கீழே வைக்க முடியாத கதைகளில் தோர்கல் என்றும் முதலிடம் தான்.

    முதல் கதையே விறுவிறுப்பு என்றால், இரண்டாம் கதை விறுவிறுப்பின் உச்சகட்டம்...

    (ஜட்ஜ் ட்ரெட் ஓகே... பெரிய கதையாக வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்)

    ReplyDelete
    Replies
    1. அடடே வாங்க சார் welcome to the club

      Delete
    2. மற்றும் ஒரு தோர்கல் ரசிகர். வணக்கம்.

      Delete
    3. வணக்கம் சார்...
      மிக்க மகிழ்ச்சி & நன்றி:):):)

      Delete
  88. டெக்ஸ் & கார்சன் வின் மௌன நகரம் கதை அழகாக சென்றது...

    கதையை விட ஓவியங்கள் மிக அற்புதம்...
    டெக்ஸ் மட்டுமல்ல அனைத்து character களுமே தத்ரூபமாக, நேர்த்தியாக வரையப் பட்டுப் இருக்கிறார்கள் (குதிரைகள் உட்பட)
    Hats off to Rossano Rossi...

    ReplyDelete
  89. இன்றிலிருந்து 5 நாட்கள் விடுமுறை. அடுத்த சில நாட்கள் மாண்ட்ரேக் உடன் மந்திரலோகப் பயணம்.

    ReplyDelete
  90. மௌன நகரம் - நாலு பேர் நல்லா இருக்க ஒருத்தன் கஷ்டப்பட்டா தப்பில்லை என பல படங்களில் வசனமாக பார்த்து இருப்போம்; இங்கு ஒரு ஊர் நன்றாக இருக்க ஒருத்தரை மனமில்லாமல் வேறுவழி இல்லாமல் கொல்கிறார்கள்! அவர் யார்? அவரை கொல்லக் காரணம் என்ன? டெக்ஸ் கார்சனுக்கு என்ன வேலை? என்பதை தெளிவான ஓவியம், ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பாக ஒரு கமர்சியல் கதையை கொடுத்து இருக்கிறார்கள்! மிரட்டும் புயல் மற்றும் நிலச்சரிவு கதையின் முக்கிய கதாபாத்திரமாகவே வருகிறது! வழக்கமான டெக்ஸ் ஆக்ஷன் ஆனால் கதைக்கு தேவைபடும் விதத்தில் இருந்தது சிறப்பு!

    கதையின் வில்லன் சூழ்நிலை அந்த சூழ்நிலை அங்கு உள்ள மனிதர்களை மிருகம் ஆக்கிவிடுகிறது என்பதை அழகாக சொல்லி உள்ளார்கள்!

    இறுதி காட்சியில் துப்பாக்கி இல்லாமல் இருக்கும் டெக்ஸ் வில்லனிடம் மாட்டிக்கொள்ள அவருக்கு துப்பாக்கி கிடைத்து வில்லனை தெறிக்க விடுவது விசில் அடிக்கும் காட்சிகள். தந்தை மகள் பாசம், நண்பர்களின் நட்பு என சென்டிமென்டுகளும் ரசிக்கும் படி உண்டு.

    கதையின் இறுதி முடிவு மிகவும் சரியானது. மிகவும் சரியான கதை தலைப்பு!

    கொசுறு செய்தி:- சிண்ட்ரல்லா என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை இந்த கதையில் வரும் ஒலிவியாவை பார்த்து தெரிந்து கொண்டேன் இளவரசே :-) மிகவும் அழகாக வரைத்து அழகாக காட்டி உள்ளார்கள் ஒலிவியாவை :-)

    ReplyDelete
  91. அமெரிக்காவில் இருந்து வந்தாகி விட்டது. இரண்டு மாத புத்தக பார்சல் நண்பர் வீட்டில் இருந்து வாங்கியாகிவிட்டது.
    பெட்டிகள் பிரிக்கப்பட்டு புத்தங்கள் மீது முதல் பார்வை ஓட விட்டாயிற்று.
    மாண்ட்ரெக் ஸ்பெஷல் மேக்கிங் அற்புதம்.
    சிறு நெருடல். அந்த துப்பாக்கி மட்டுமே.
    மாண்ட்ரெக் மீதான ஈர்ப்பே , மாஜிக் செய்யும் அந்த விரல்களின் ஜாலம்தான்.
    இரும்புக்கை மாயாவியின் அந்த நீண்டு விரிந்த விரல்கள் போல்.
    அட்டையில் அது மிஸ்ஸிங்.
    மாண்ட்ரெக் கையில் துப்பாக்கி இருப்பது, டெக்ஸின் கையில் தோர்கலின் வில் இருப்பது போன்று ஒரு முரணான தோற்றம்.
    மற்றவை இனிமேல்தான்.

    ReplyDelete