Sunday, March 27, 2022

ஒரு ஏட்டையாவின் கதை !

 நண்பர்களே,

வணக்கம். ஸ்டேஷனில் ஏட்டையா வடிவேல் இருக்கும் போது ஒரு இளம் ஜோடி மாலையும், கழுத்துமாய் ஓடி வரும் - "வீட்டுக்கு தெரியாம கண்ணாலம் கட்டிக்கினோம் ஆபீசர் ; நீங்க தான் காப்பாத்தணும் !" என்றபடிக்கே ! பின்னாடியே வருசையாய் கடாமாடு சைசில் ஆட்கள் அணிவகுக்க - "இவனுங்கல்லாம் யாருமா ?" என்று ஏட்டையா கேட்க, "இது என் புருஷன் ; அது அவருக்கு முந்தினவரு ; இவரு நம்பர் 3 " என்று அடுக்கிக் கொண்டே போக, கிறுகிறுத்துப் போகும் வடிவேல் இறுதியில் சீட்டுக் குலுக்கிப் போட்டு பாப்பாவுடன் போகப்போகும் புருஷன் யாரென்று தீர்மானிப்பார் ! கிட்டத்தட்ட அந்த ஏட்டையா நிலைமை தான் எனக்கு இந்த வாரத்தினில் !! 

ஜம்போவின் "உளவும் கற்று மற" பணிகளே ஏப்ரல் இதழ்களின் last ! கோடை மலர் அச்சாகி, பைண்டிங்கில் இருக்க, டெக்ஸ் சிங்கிள் ஆல்பமும் பிரின்டிங் முடிந்து விட்டது ! ரைட்டு, இந்த ஜம்போ one shot உலகை உலுக்கியதொரு பெண் உளவாளியான மாட்டா ஹாரியின் கதை ; செமையா இருக்கப் போகுது ; ஏற்கனவே கருணையானந்தம் அங்கிள் மொழிபெயர்ப்பு செய்தது DTP எல்லாம் முடிந்து கிடப்பதால் - போறோம்...எடிட்டிங் முடிக்கிறோம், ஏப்ரல் பணிகளுக்கு 'சுபம்' போடுறோம் என்ற கனவில் திரிந்தேன் ! பணியினை எடுத்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பின் கத்தையையும் தூக்கிக் கொண்டு அமர்ந்தேன் ! 'அடடா...சித்திரங்கள் அள்ளுதே ; ஓஹோஹோ...கலரிங் பின்னுதே...!!' என்றபடிக்கே மெதுமெதுவாய் நகர்ந்தேன் ! மொழிபெயர்ப்பினில் கணிசமாகவே கை வைக்க வேண்டியிருப்பது புரிந்தது - becos இது வரலாறு இணைந்ததொரு ஆல்பம் என்பதால் கூகுள் துணையுடன் நிறையவே தேடல்களை நடத்தி, அதற்கேற்ப தமிழாக்கத்தை அமைத்தாலன்றி, புரிதலில் சிக்கல்கள் எழுந்திடும் என்று தோன்றியது ! 

But ஏழோ, எட்டோ பக்ககளைத் தாண்டுவதற்குள் மண்டைக்குள் லைட்டாய் ஒரு குறுகுறுப்பு எழத் துவங்கியிருந்தது - "இந்த மாட்டா ஹாரி அக்கா எப்போ உளவு பாக்க கிளம்புவாங்க ? அதுக்கான அறியும் காணோமே, குறியும் காணோமே "? என்ற ரீதியில் ! இன்னும் லைட்டாய் தட்டுத் தடுமாறி முன்னேற - ஸ்டேஷனில் ஏட்டையா வடிவேலின் இக்கட்டுக்குள் புகுவது போலவே எனக்கும் பீலிங்கு மேலோங்கியது ! ஊஹூம்....இது வேலைக்கு ஆகாது ; முதலில் இந்த மாட்டாக்கா பற்றி ஓரளவுக்காவது தெளிவாய் கூகுளில் தெரிந்து கொள்ளாமல் இந்தப் பணியினை கையில் எடுப்பது கதைக்கு ஆகாது ! என்று தீர்மானித்தேன் ! அதன் பின்னே விக்கிப்பீடியாவையும், இன்ன பிற தகவல் தளங்களையும் browse செய்த போது தான் புரிந்தது, எனக்குக் காத்திருப்பது சாட்சாத் சீட்டுக் குலுக்கிப் போடும் பொறுப்பே தான் என்று !! Simply becos - "மாட்டா ஹாரி ; பெண் உளவாளி ; ஜேம்ஸ் பாண்டுக்கு அத்தாச்சி முறை ; சும்மா உளவு பாத்து பின்னியெடுத்து ஒலக போரையே one hand-லே நிறுத்திப்புட்டாங்க !" என்ற ரீதியிலான மாயைகளெல்லாம் எத்தனை பெரிய டுபாக்கூர் என்பது சிறுகச் சிறுகப் புரிந்தது ! ஒரு பெண்ணை firing squad முன்னே நிறுத்தி சுட்டுத் தள்ளிய பிரெஞ்சு அரசாங்கத்துக்கு - "அவ பயங்கர சொர்ணக்கா ; ஆக்ஷன் கிங் அர்ஜூனே நம்ம நாட்டைக் காப்பாத்த வந்தா கூட, அவருக்கே tough தரக்கூடிய பிஸ்தா இவள் ; மாடஸ்டி பிளைசிக்கும் , ஜேம்ஸ் பாண்டுக்கும் தூரத்து பங்காளிமுறை  !" என்ற ரீதியிலான கதைகளைக் கட்டி விட்டு, தங்கள் செயலை நியாயப்படுத்தும் அவசியம் இருந்துள்ளது ! எதிரி நாடான ஜெர்மனியோ  - "ஊஹூம்..இந்த அக்கா எங்களுக்குலாம் உளவு பாக்கலை ; இதோட ஜகவாசமே எங்களுக்கு நஹி !" என்று மறுப்புத் தெரிவிக்கும் முனைப்பில், மாட்டா ஹாரி பற்றிய பிம்பத்தை ஊதிப் பெருசாக்கிட உதவியுள்ளனர் ! And உலக யுத்தப் பின்னணி ; ஒரு கவர்ச்சி பாம் ; ஜெர்மனி ; பிரான்ஸ் ; ஹாலந்து, ஸ்பெயின் ; இங்கிலாந்து ; ஆஸ்திரியா என்று றெக்கை காட்டாத குறையாய் சுற்றித் திரிந்ததொரு மர்ம அழகி - என்ற template கிடைத்தால் ஊடகங்கள் விட்டு வைத்திருப்பரா ? "குற்றம்...நடந்தது என்ன ?" என்ற ரேஞ்சுக்கு பில்டப் தந்து, உலகுக்கே Mata Hari என்றால் ஒரு உளவாளிப் புலி என்ற மாயையை ஏற்படுத்தி விட்டனர் !

ஆனால் நிஜத்தினில் இந்த அம்மணி செய்த ஜாகஜங்களின் முக்காலே மூன்று வீசம், விதவிதமான ஐரோப்பியக் கட்டில்களில் மாத்திரமே !  டோக்கன் போடாத குறையாய், ஐரோப்பிய மேல்வர்க்கத்து ஆண்களின் மோகங்களை தன் வீட்டு வாசலில் குவிந்திடச் செய்ததொரு ஜாலக்காரியே என்பது புரிந்த போது கவுண்டர் ஸ்டைலில் ரொம்பவே 'டெலிகேட் பொஷிஷன்' எனக்கு !! சும்மா சூப்பராய் அட்டைப்படமெல்லாம் ரெடி பண்ணி, பின்னட்டையினில் "உலகை உலுக்கிய பெண் உளவாளி" என்ற ஸ்டைலான tagline வேறு போட்டாச்சு !! சரி, கதைக்குள் புகுந்திட இந்த ஞானமே போதும்டா சாமீ ; என்றபடிக்கே ஒரு பேப்பரை எடுத்து நோட்ஸ் எடுக்கத் துவங்கினேன் ! "ஆங்..இந்த மீசைக்காரன் ஜெர்மனி டாவு ; இந்த ஹாலந்து தாத்தா அப்பாலிக்கா குத்தகைக்கு எடுத்திருக்காரு ; இந்த பிரெஞ்சு ஆபீசர் மிக்ஸர் பார்ட்டி ; இந்த இசைக்கலைஞர் தாத்தாக்கு முன்னாடி, ஆனா மீசைக்காரனுக்குப் பின்னாடி !" என்ற ரீதியில் நோட்ஸ் தொடர்ந்தது ! ஒரு மாதிரியாய் சனியிரவே இந்த அம்மணியின் பஞ்சாயத்தெல்லாம் முடிந்து - இன்றைக்கு நம்மாட்கள் திருத்தங்களை செய்து திங்களன்று அச்சுக்குத் தயாராக்கிடவுள்ளனர் ! Phewwww !! இயன்றமட்டுக்குப் புரிதல்களில் சிக்கல்கள் நேரா வண்ணம், அவசியமற்ற பெயர்களை, நபர்களை ஓரம்கட்ட முனைந்து, இயன்றமட்டுக்கு கதையினை (!!) நகற்றிச் செல்ல முயற்சித்துள்ளேன் ! மாட்டாவின் இஸ்திரி ; ஜியாகிரபி என சகலத்தையும் தெரிந்து கொண்டான பிற்பாடு, எடிட்டிங்கும் செய்தான பின்னே, இரண்டாவது வாசிப்பின் போது கொஞ்சம் தேவலாம் போலிருந்தது ! MATA HARI விஷயத்தினில் நிஜத்துக்கும், மிகைக்கும் மத்தியினில் உள்ள வித்தியாசங்களை சமீப காலங்களில் தான் துகிலுரிந்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள் ! சரி, ஐரோப்பிய வரலாற்றின் ஒரு மாயையைப் பற்றி நாமுமே தெரிந்து கொள்வோமே இம்மாதம் !

இதோ - நமது சென்னை ஓவியரின் கைவண்ணத்திலான அட்டைப்படத்தின் முதல் பார்வை :

உட்பக்கத்து preview இதோ : 

And இம்மாதத்து 'தல' ஆல்பத்தின் preview க்கு முன்பாய் - "பழனிவேல் ஸ்பெஷல்" இதழாய் வந்திடவுள்ள TEX க்ளாசிக்ஸ் # 2-ன் முதல் பார்வை இதோ : 



முழுக்கவே க்ளாஸிக் கதைகளிலான இந்த ஆல்பத்துக்கு, அதே ஒரிஜினல் (ஓவியர் மாலையப்பன்) சித்திரங்கள் முன் + பின் அட்டைப்படங்களாகியுள்ளன ! And உட்பக்கங்களில், ஓவியர் சிவிடெல்லியின் ஜாலங்கள் வண்ணத்தில் மிளிர்வது செம அனுபவம் !! இன்னமும் இந்த ஆல்பத்துக்கு முன்பதிவு செய்திரா நண்பர்கள், இன்றைக்கு இதற்கென கொஞ்சமாய் நேரம் ஒதுக்கிட முனைந்திடலாமே - ப்ளீஸ் ? இது சந்தாக்களின் அங்கமல்ல என்பதை இங்கொருமுறை அடிக்கோடிட்டு விடுகிறேனே !!

Moving on from classic TEX to regular TEX - இதோ "சிகாகோவின்  சாம்ராட்" சிங்கிள் ஆல்பத்தின் previews : 




தொடரும் நாட்களில் ஜம்போவின் அச்சு + பைண்டிங் முடிந்த கையோடு ஏப்ரல் இதழ்களின் டெஸ்பாட்ச் இருந்திடும் ! Hopefully வாரயிறுதிக்கு புது இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திட வேண்டும் !

Before I sign out, ஒரு சின்னதான மஹாசிந்தனை ! நீளமான பதிவுகள் ; அவற்றிற்கு வாசிக்கத் தேவையாகிடும் நேரங்கள் ; பின்னூட்டமிடும் நோவுகள் - என்பனவற்றை தொடரும் காலங்களில் உங்களுக்கு மட்டுப்படுத்திட, 'சிவனே' என்று நாமளும் ஒரு வாட்சப் க்ரூப்பினை உருவாக்கி, இந்தக் கும்மிகளை அதற்குள் வைத்துக் கொண்டாலென்ன guys ? வாசிக்கவும், பதிவிடவும், உங்களுக்கு ஈஸியாகிடாதா ? மாறி வரும் காலங்களில் நாமளுமே மாறிப்போமே ? 

Bye all...ரிப் கிர்பியோடு அன்னம், தண்ணீர் புழங்கப் புறப்படுகிறேன் ! Have a fun Sunday ; see you around !



257 comments:

  1. பதிவை எதிர்பார்த்துக்கொண்டே இருந்தோம் சார் 💐💐💐

    ReplyDelete
  2. Edi Sir..
    Sunday வணக்கங்கள் ...

    ReplyDelete
  3. ***நீளமான பதிவுகள் ; அவற்றிற்கு வாசிக்கத் தேவையாகிடும் நேரங்கள் ; பின்னூட்டமிடும் நோவுகள் - என்பனவற்றை தொடரும் காலங்களில் உங்களுக்கு மட்டுப்படுத்திட, 'சிவனே' என்று நாமளும் ஒரு வாட்சப் க்ரூப்பினை உருவாக்கி, இந்தக் கும்மிகளை அதற்குள் வைத்துக் கொண்டாலென்ன guys ? வாசிக்கவும், பதிவிடவும், உங்களுக்கு ஈஸியாகிடாதா ? மாறி வரும் காலங்களில் நாமளுமே மாறிப்போமே***

    வரவேற்கிறோம் சார்.
    வாராவாரம் காத்துகிடப்பதற்கு, அவ்வப்போது பேச ஏதுவாக இருக்கும் இந்த வாட்சப் குழு.
    ஆரம்பியுங்கள் சார்.

    ReplyDelete
  4. அல்லாருக்கும் வணக்கமுங்க

    ReplyDelete
  5. வணக்கம் நட்பூக்களே.

    ReplyDelete
  6. ஜம்போ அட்டைப்படம் சூப்பர்

    ReplyDelete
  7. Whatzapp group ok தான் ...ஆனால் இங்கே எல்லாமே Streamlined record ஆக இருக்கும். உதாரணமாக 10 வருஷத்துக்கு முன்னாடி என்ன புக்கு போட்டோம்ன்ற Deatail எடுக்கலாம் ..இது எந்த அளவிற்கு Whatzapp ல சாத்தியம்னு தெரியலை.

    ReplyDelete
  8. அருமை அருமை அருமை ..

    எனக்கு தெரிந்து தமிழ் மாத நாவல் இதழ்களின் அட்டைப்படம் போல் இந்த மாத உலகை உலுக்கிய உளவாளியின் அட்டைப்படம் அமைந்து உள்ளது சார்..:-)

    ReplyDelete
  9. க்ளாசிக் டெக்ஸ் அட்டைப்படம் க்ளாசிக் சார்..

    இரு கதைகளும் வண்ணத்தில் பட்டையை கிளப்புவது உறுதி..

    ReplyDelete
  10. வாட்ஸ்அப் குரூப் ஓகே தான் சார்..

    ஆனால் தளமும் ,வாரம் ஒரு தள பதிவும் மறைந்து போக கூடாது சார்..

    ReplyDelete
    Replies
    1. தலீவரே,,,ரிட்டையர் ஆன பிற்பாடு நெதத்துக்கும் போன் கூட போட்டு குசலம் விசாரிச்சுப்புடலாம் ; இப்போதிக்கி ஏதாச்சும் ஒண்ணே சாத்தியம் !

      Delete
    2. சார் ஒன் டே மேட்ச் வந்தபின் டெஸ்ட் மேட்ச் மறயலயே....20..20..வந்த பின் அவ்விரண்டும் மறயலயே

      Delete
  11. Edi Sir..
    Whatsapp குரூப் ..தினமும் பார்த்து அளாவளாவும் நண்பனைப்போல..
    ஆனால் தளத்தில் வாராவாரம் வரும் பதிவு ஸ்வீட்டோடு வரும் மாமாவின் வருகையைப்போல..
    ஆவலுடன் வந்தவுடன் மாமா என்ன வாங்கி வந்திருக்கிறார் என்று அவர் பையை ஆராய்வது .. தனி சுகம்..
    மாமா.. மாமாவாகவே இருக்கட்டும் Edi Sir..

    ReplyDelete
    Replies
    1. பையை ஆராயும் ஆர்வம் இருக்கிற வரைக்கும் மாமாவின் விஜயங்களில் சிக்கல்களில்லை சார் !

      Delete
  12. நீங்கள் மாத்தா ஹாரி பற்றி சொன்னதை படித்த போது நீங்கள் இந்த கதையை drop செய்து விட்டு வேறு கதை வெளியிடப் போவதாக நினைத்தேன்.

    இந்த முறை இந்த புத்தகம் வந்ததும் இன்னும் ஒரு இரத்த பூமி காத்து இருக்கு....

    I'm waiting

    ReplyDelete
    Replies
    1. www.நெத்தபூமி.com என்ற domain free-யா உள்ளதா என்று பார்க்கணும் போல சார் !

      Delete
  13. டியர் எடி,

    மாட்டா ஹாரி வடிவேலு ஒப்பீடு அலாதி... அதுவும் சென்னை ஓவியர் போட்டு தந்த அட்டை ஓவிய 'வளைவுகளே' பல கதைகள் செல்லும்... ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

    அப்புறம், பதிவுகளை சிறுக வைத்து காமிக்ஸ் அறிவிப்புகள், விமர்சனங்கள் என்று மாற்றுவதற்க்கு டபுள் ஓகே. ஆனால், அரட்டைகளுக்கு வாட்ஸ்ஆப் குழு வேண்டாமே... தினமும் 300+ கருத்துகள், தனி தனி டாபிக்குகள், என்று அங்கு தலையும் வாலும் புரியாமல், நோட்டிபிகேஷன் சகட்டுமேனிக்கு வரும் குழுவை ம்யூட் செய்தாலும் விலகமுடியாத தர்மசங்கட நிலைதான்.

    அதற்கு பதில் ஃபேஸ்புக் குழுமமே சிறந்தது. வாத, விவாத, அரட்டைகளை அந்த அந்த தனி பதிவில் நெரிபடுத்தலாம்... பிடிக்காதவர்கள் மற் பதிவுகளில் கருத்திடலாம்.. இல்லை பின்பு வாசிப்பிற்கு ஒதுக்கி வைத்து தொடரலாம்... இது வாட்ஸ்ஆப்பில் சாத்தியமே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. FB குரூப் ஒன்றை உருவாக்குவதை விடவும், வாட்சப் க்ரூப் உருவாக்கிடுவது சுலபம் என்று நினைத்தேன் சார் - நண்பர்களின் செல் நம்பர்கள் நம்மிடம் ஏற்கனவே இருப்பதால் ! தவிர பதிலிடவும் வாட்சப் எனில் சுலபம் என்று நினைத்தேன் !

      பார்ப்போமே நண்பர்கள் என்ன நினைக்கிறார்களென்று !

      Delete
    2. Watsapp grp vendam sir....blog is enough....watsapp max 250 members only can join...space constraint in Phone memory also to be considered...watsapp msg can not be referred in future..but blog msg can be referred at any point of time...

      Delete
  14. தளம் முதல்

    வாட்ஸ் அப் குரூப் இரண்டாவது

    ReplyDelete
    Replies
    1. தளம் தான் முதல் எப்போதும். :-)

      Delete
    2. அப்படீங்கறீங்க ? பாக்கலாம் ரம்யா !!

      Delete
  15. போன பதிவு வரை ஜம்போ மீது இருந்த ஆர்வம் இப்பொழுது பயமாக மாறி இருக்கிறது. ஜம்போவின் வெற்றிநடையை நிறுத்தம் இதழாக இருந்துவிட கூடாது 😢

    வாட்ஸ் அப் இந்த பதிவுகளின் extension ஆக இருக்கலாம் சார் ஆனால் இதற்கு மாற்றாக வேண்டாம். திடீரென்று ஒரு வார பொங்கி விட்டால் அவ்வளவு தான் நீங்கள் மாடரேட் செய்ய முடியாது.

    ஆனால் உங்களின் நேரிடையாக தொடர்பில் இருக்க நல்ல ஒரு வழி தான் அதில் சந்தேகம் இல்லை.

    டெக்ஸ் கிளாசிக் ஏப்ரல் முதல் வாரம் முன்பதிவு செய்கிறேன் சார்.

    சாம்ராட் ஆர்ட் ஒர்க் கருப்புவெள்ளையில் அள்ளுகிறது. படிக்க ஆவலுடன்.

    ReplyDelete
    Replies
    1. //திடீரென்று ஒரு வார பொங்கி விட்டால் அவ்வளவு தான் நீங்கள் மாடரேட் செய்ய முடியாது.//

      வருஷத்துக்கொரு தபா என்பது அப்புறம் வாரத்துக்கொரு பொங்கலோ பொங்கல் ஆகிடுமோ ?!! ஆமால்லே !!

      Delete
  16. 1998-1 99ல் மாட்டா ஹரி பற்றி படித்த போது, ரஷ்ய இராணுவ தளபதி *பெரியா-வை* மயக்கியவள் என்று எழுதி இருந்தார்கள்.

    உள்ளுக்குள் காதல் இருந்தாலும், நாட்டுப்பற்றில் ஊறி இருந்த பெரியா மாட்டா ஹரியை போட்டு தள்ளு கதை முடியும்.

    காமிக்ஸ் வடிவில் எப்படி இருக்குமோ என பார்க்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பெரியா..சின்னய்யா போட்டுத் தள்ளலைங்க சார் - firing squad தான் ! And அது முழுக்கவே பிரெஞ்சு உளவுத்துறையின் கைங்கர்யம் !

      Delete
  17. வாட்ஸ்அப் ல் அதிகபட்சமாக 250 பேர் மட்டுமே ஒரு குரூப்பில் இருக்க முடியும். நாம் அவ்வளவு தானா?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..இப்படி ஒரு வரைமுறை உண்டா நண்பரே ? எனக்குத் தெரிந்திருக்கவில்லையே !!

      Delete
  18. ரிப் கிர்பியோடு அன்னம், தண்ணீர் புழங்கப் புறப்படுகிறேன் ! //////

    ரிப் கிர்பியை ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன்.

    ReplyDelete
  19. வாட்ஸ் குரூப்பை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். நல்ல மாற்றம் இது. நல்ல செய்தியும் கூட.

    ReplyDelete
  20. // நீளமான பதிவுகள் ; அவற்றிற்கு வாசிக்கத் தேவையாகிடும் நேரங்கள் ; பின்னூட்டமிடும் நோவுகள் - என்பனவற்றை தொடரும் காலங்களில் உங்களுக்கு மட்டுப்படுத்திட, 'சிவனே' என்று நாமளும் ஒரு வாட்சப் க்ரூப்பினை உருவாக்கி, இந்தக் கும்மிகளை அதற்குள் வைத்துக் கொண்டாலென்ன guys ? வாசிக்கவும், பதிவிடவும், உங்களுக்கு ஈஸியாகிடாதா ? மாறி வரும் காலங்களில் நாமளுமே மாறிப்போமே ? //

    Sorry. Not interested in WhatsApp group.

    Please continue in blog only.

    ReplyDelete
    Replies
    1. பார்ப்போமே சார் - நண்பர்களின் அபிப்பிராயங்கள் எவ்விதம் உள்ளன என்று !

      அதென்ன ரம்யா - 9 லக்கி நம்பரா ? :-))

      Delete
    2. @Vijayan Sir
      ஆமாங்க ஆசிரியரே😁😁😁

      Delete
  21. என்னைப் பொருத்தவரை இந்த தளம் தான் சிறந்ததாக படுகிறது. ஏனென்றால் வாட்ஸ்அப் குரூப்பில் சில சங்கடங்கள் இருக்கின்றன. இந்த தளத்தில் என்றால் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பதிவை படித்துக்கொள்ளலாம். ஆனால் வாட்ஸ்அப் குரூப்பில் அவ்வாறு செய்ய இயலாது. நண்பர்கள் பதிவிட ஆரம்பித்ததும் முக்கிய பதிவு மேலே சென்று விடும். பத்திருபது பதிவுகளுக்கு மேல் சென்றால் அதைக் கீழே இழுத்து விட்டு தான் பார்க்க வேண்டும். புது பதிவு போட ஆரம்பித்தால் நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அது ஸ்குரோல் ஆகி கீழே வந்துவிடும். விஜயன் சார் எனக்கென்னமோ இந்த தளம் தான் சரி என்று படுகிறது

    ReplyDelete
    Replies
    1. எனக்குமே இது தான் வசதி சார் ; ஆனால் என் வசதி என்பதை விடவும், பெரும்பான்மைக்கு எது சவுகரியம் என்ற ரீதியில் யோசிக்கணுமே !

      Delete
    2. எனக்கு இதுதான் சவுகரியம் :-)

      Delete
  22. நீளமான பதிவுகள் ; அவற்றிற்கு வாசிக்கத் தேவையாகிடும் நேரங்கள் ; பின்னூட்டமிடும் நோவுகள் - என்பனவற்றை தொடரும் காலங்களில் உங்களுக்கு மட்டுப்படுத்திட, 'சிவனே' என்று நாமளும் ஒரு வாட்சப் க்ரூப்பினை உருவாக்கி, இந்தக் கும்மிகளை அதற்குள் வைத்துக் கொண்டாலென.


    வைத்துக் கொள்வோம்....


    ReplyDelete
  23. உளவும் கற்று மற - நீங்கள் எழுத ஆரம்பித்த விதத்தை படிக்க ஆரம்பித்த உடன் ஆகா இந்த கதை பரணுக்கு போகப் போகுது போல அதற்கு தான் வழக்கம் போல ஆசிரியர் சுற்றி வளைத்து எழுதுகிறார் என நினைத்தேன். ஆனால் முடிவில் சர்ப்ரைஸ் இந்த கதை திட்டமிட்டபடி வரவுள்ளது என்பது முடித்தது சிறப்பு.

    விஜய் @ இந்த கதையில் பல வளைவு நெளிவுகள் இருக்கும் போல தெரிகிறது :-) கவனமாக படிக்கனும் வழுக்கி விழுந்து விடாமல் :-) ஆமாம் வாயில் இருந்து வேர்க்காமல் படிக்கனும்:-)

    ReplyDelete
  24. வாட்ஸ் அப் குரூப் வேண்டாம் சார்
    இதுவே போதும்
    கிளாசிக் டெக்ஸ் அட்டைகள் அருமை
    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  25. இன்றைக்கு என்‌ன சாப்பிட்டோம் நாளை எங்கே போறோம் காலை வணக்கம் இதற்கு வேண்டும் என்றால் வாட்ஸ் அப் வைச்சுக்கலாம் சார்:-)


    காமிக்ஸ் பற்றி பேச விவாதிக்க இந்த தளமே சிறந்தது. என்றைக்கு வந்தாலும் பழைய பதிவுகளை தேடிப் படிப்பதற்கு தளமே ஏற்றது.தளம் பல பல ப்ளஸ்களை கொண்டது நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்:-)

    ReplyDelete
  26. நாங்க தளத்தையே வாட்ஸ்அப் மாதிரிதான் யூஸ் பண்றோம்.... தலீவர் மைண்ட் வாய்ஸ்..!
    😂😂😂😂😂

    ReplyDelete
    Replies
    1. அது நீங்க தான் என்று ஊருக்குள் பேசிக்கிறாங்க கண்ணா :-)

      Delete
  27. Replies
    1. அருமை சார்.....அட்டைப் படங்கள் ஒன்றையொன்று மிஞ்சுது....அட்டைப்படம் இதுவரை வந்ததிலே டாப்னு வண்ணத்ல குழைந்த(படி) மார்த்தா சொல்ல கீழே இறக்குனா வண்ணக்கலலவைல என்னச் சொல்லுன்னு டெக்ஸ் அதகளம் புரியுறார்.அதுக்கும் கீழ் இம்மாத டெக்ஸ் பதினாறடி பாய்றார்ர் நானே டாப்பு அதெல்லாம் டூப்பு என....மார்த்தா பற்றி நீங்க சொல்ல சொல்ல ரைட்டு மங்களத்த மங்களம் பாடியுள்ளார் போல என மகிழ....இல்ல இவர் வருவார் என தொடர் ...அட்டைப் படமும் அந்த வண்ணப்பக்கமும்...நாயகி குறித்த சுவாரஸ்ய அலசலும் வந்தே ஆகனும்னு மனசு கூட விசிலடிக்கே

      Delete
    2. மாரியாத்தா...

      Delete
  28. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  29. வாட்சப் அதிக பட்சம் 250 உறுப்பினர் மட்டுமே சாத்தியம்..

    டெலிகிராமில் குரூப் ஆரம்பித்தால் அதிக பட்சம் 5000 பேர் என நினைக்கிறேன்..

    அதே டெலிகிராமில் சேனல் ஆரம்பித்தால் வகை தொகை இல்லாமல் நண்பர்களைச் சேர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து

    ReplyDelete
  30. வாட்ஸ் அப் பலவிதங்களில் தர்மசங்கடமானது.

    Realtime follow up -க்கு தளமே உசிதமானது.

    பாரியாள் பார்வைக்கு சுலபமாக தென்படும்

    கஸ்தூரி மற்றும் இதர நடிகைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இரக்க சிந்தனையுள்ள ஈ.இளவரசர்கள் பகிர்ந்தால் எளிதில் பட்டத்து இளவரசிகள் கண்ணில்பட்டு
    இப்போதைய இலங்கைக்கு துரத்தப்படும் அபாயமுண்டு.

    I say NO to whats app

    ReplyDelete
    Replies
    1. ஆனா அந்த கஸ்தூரிக்கா போட்டோக்களை பாத்து காண்டானது நான் மட்டுமில்லே என்ற புரிதல் இன்னா மெரி மனசுக்கு நெறைவா இருக்கு தெரியுமா சார் ? ஹய்யோ....!!

      Delete
  31. சார், இப்படி பங்கு பிரித்து விட்டு விடுங்கள் :-)

    1) அரட்டை தவிர்த்த இதர கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் கேள்விகளுக்கும், எப்போதாவது எழுதுபவர்களுக்கும், கருத்துக் கல்வெட்டு பதித்து அதன் அருகிலேயே அமர்ந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் லயன் வலைப்பூ பக்கம்

    2) தனித்தனி தலைப்பில், குழுக்களாக பிரிந்து அளவளாவ மற்றும் மிதமாக அடித்துக் கொள்ள லயன் முகநூல் குழுமம் 

    3) எவ்வித விதிமுறைகளுக்கும் உட்படாத கருத்துப் பகிர்தலுக்கும், பலமான அடிதடிகளுக்கும் லயன் வாட்ஸப் குழுமம் 

    ReplyDelete
    Replies
    1. ஆங், அப்புறம்...

      4. இவருக்கு ஒரு தனி க்ரூப்: "கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் கந்த வேலனுடன் ச. பொன்ராஜ்"

      Delete
    2. ஜனவரி முதலாய் digital marketing செய்து தரும் நிறுவனம் இயன்ற திக்கிலெல்லாம் diversify செய்திடப் பரிந்துரைத்தது கார்த்திக் ! அதன் ஒரு படி தான் இந்த மஹா சிந்தனை ! நீங்கள் சொல்வது போல் மூணு டிராக் சுகப்படும் தான் ; எனக்கு 3 பக்கங்களிலும் தலைகாட்ட நேரம் ஒதுக்கிட இயலும் பட்சத்தில் ! அதற்கான திட்டமிடல்களைச் செய்த கையோடு முயற்சிக்கணும் !!

      ஆங்...கோவைப் புயல் இல்லாத குழுமமா - வாய்ப்பில்லே ராஜா !!

      Delete
    3. //எனக்கு 3 பக்கங்களிலும் தலைகாட்ட நேரம் ஒதுக்கிட இயலும் பட்சத்தில் ! //

      2) & 3) - இந்த இரு ஏரியாக்களில் புது வலைப்பதிவுகளின் இணைப்பு, புதிய இதழ்களின் அட்டைப்படங்கள் - இவற்றை போட்ட கையோடு அப்படியே எஸ்.(கேப்) விஜயன் ஆகி விடுங்கள் சார்...

      வேண்டுமானால் ஜுனியரை உங்கள் அளவுக்கு ஆயத்தப் படுத்த நினைத்தால், அப்படியே அலேக்காக உள்ளே இறக்கி விட்டு விடுங்கள். மற்றவை தானே நடக்கும் :)

      Delete
    4. ஜூனியர் பதில் to me : வாய்ப்பில்லே ராஜா !!

      Delete
    5. மேலும் வாட்சப்பில் நீங்கள் டைப் அடித்து தான் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஆடியோவிலும் உங்கள் கணீர் குரல் மூலம் எங்களோடு உரையாடவும் சாத்தியம் அல்லவா?
      சுலபத்தில் நமது இதழ் நேரடி அறிவிப்புகளை மற்றவர்களுக்கு ஏன் புதியவர்களுக்கு கூட பகிர்ந்திட இயலும்.
      ரொம்பவும் privacyக்கு உரியது.
      அட்மின் தேவைப்படும் வேளை குரூப்பினை முழு கண்ட்ரோல் எடுத்து கொள்ளலாம்.
      ஒரே செயல்பாடு, பதிவுகள் கொண்ட 4 வாட்சப் குரூப்கள் மூலம் நண்பர்கள் அனைவரையும் இணைக்கலாம்.
      வீடியோ லைவ் பதிவு கூட சாத்தியமே.
      இந்த தளத்தில் ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் மொட்டை கடிதாசி Fake id தொல்லைகள் இல்லை.
      இப்படி இன்னும் ஏராளமான நன்மைகள் உள்ளன.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. பிளாகில் இணைய விரும்பாதவர்கள் இருப்பது போல வாட்ஸப்பில் இணைய விரும்பாதவர்கள் இருக்கலாம். ஆனால் உடனுக்குடன் நண்பர்களை தொடர்பில் வைத்திருக்க வாட்சப் கை கொடுக்கும்.

      One common post for all whatsapp, blogspot, fb, instagram, telegram even youtube also is needed for our comics growth.

      For direct communication whatsapp will help a lot.

      Delete
  32. இது ஒரு காத்திருப்பு.. ஞாயிறுகளின் போதை... காதலியின் வரவிற்காக வழி மேல் விழி வைத்த காதலனின் நிலைதான்.
    இப்படியே இருப்பதே நம் காமிக்ஸ் நண்பர்களை பரவசத்தில் வைத்திருக்கும் என்பதே என் சிந்தனை.

    ReplyDelete
    Replies
    1. பரவச நிலை சில தருணங்களில் மோன நிலைக்குப் போய் அப்பாலிக்கா குறட்டை நிலைக்குப் போயிடப்படாதே ! என்ற எண்ணம் தான் சார் !

      Delete
  33. வாட்ஸ் அப் சிறந்தது...

    டெலகிராம் மிகச்சிறந்தது...

    சிக்னல் சாலச் சிறந்தது...

    பஞ்சாயத்துக்கெல்லாம் நீட்டி முழக்கி சமாதானப்படுத்த தேவையில்லை...

    தானா சமாதானமாக்கீடும்...

    ஏன்னா அத ஸ்காரோல் பண்ணி பாக்குறதுக்குள்ள ,"என்னமோ போகட்டும்டா மாதவா"ன்னு தானே சமாதானமாயிடும்...

    கொஞ்ச நாள் கழிச்சு பதிவே இல்லாமப் போயிடூம்...

    இஸ்திரி யெல்லாம் நோண்டி தோண்ட முடியாது...

    ஆகவே மேற்சொன்ன மூன்றில் வாட்ஸ்ஸப் தவிர்த்து மற்றவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால்...

      எதுனாலும் நீங்க டைப்படிக்கத்தான் வேணும்...

      Delete
    2. புதுக் கணக்காண்டு ஏப்ரலில் துவங்கட்டும் சார், சிக்கிய சந்து பொந்தில் எல்லாம் ஒரு டெண்டு கொட்டாயைப் போட்டுப்புடுவோம் !

      கடந்த 2 மாதங்களாய் நமக்கு உதவி வரும் ஒரு digital marketing நிறுவனமும் இதையே பரிந்துரைத்துள்ளது ! பார்ப்போமே !

      Delete
  34. உளவும் கற்று மற..
    அட்டைப் படம் செம்ம மாஸ்..
    வர்ணச் சேர்க்கைகள் கலக்கல் ரகம்!!

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ஒரு காரணம் சார் - இந்த இதழ் பின்சீட்டுக்குச் செல்லாது போனதற்கு !

      Delete
  35. Compared to WhatsApp, FB would be a better option as we can have a structure to the discussion forum with easy moderation. This blog is a place where you, the editor, initiates the conversation and people put in their two cents. But with WhatsApp, you could be put in a reactive position and lead to tangential discussions. On the other hand, an FB page/group with tight moderation would definitely be an upgrade to the Blog experience. But for selfish reasons ( I don't have an FB account because of the privacy concerns), I vote for continuing the blog :D

    ReplyDelete
    Replies
    1. //But for selfish reasons ( I don't have an FB account because of the privacy concerns), //

      எனக்குமே தான் சார் ; "ஆல் இந்தியா ரேடியோ ...ஷெய்திகள் வாஷிப்பது சரோஜினி நாராயணன்" என்று கேட்டு வளர்ந்த கிழ போல்ட்டுக்கு இன்றைய FB ரகளைகள் கொஞ்சம் அந்நியமாய்த் தெரிவதால் நமது காமிக்ஸுக்கான FB பக்கம் தவிர்த்து, அக்கட பெருசாய் interaction செய்திட தோன்றியதில்லை ! But காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் தேவைப்படுமெனின், மண்டையைச் சாயச் சட்டிக்குள் ஒரு முக்கு முக்கிய கையோடு அங்கேயும் ரவுண்டு அடிச்சுப் பார்க்க வேண்டியது தான் நண்பரே !

      Delete
    2. // மண்டையைச் சாயச் சட்டிக்குள் ஒரு முக்கு முக்கிய கையோடு அங்கேயும் ரவுண்டு அடிச்சுப் பார்க்க வேண்டியது தான் நண்பரே //

      எங்கே நம்ப கண்ணன் இருக்கிற மேச்சேரி பக்கமா சார்:-)

      Delete
    3. Me too didn't have FB account. I deleted it because I'm wasting too much time on it.

      Delete
  36. //ஆங்..இந்த மீசைக்காரன் ஜெர்மனி டாவு ; இந்த ஹாலந்து தாத்தா அப்பாலிக்கா குத்தகைக்கு எடுத்திருக்காரு ; இந்த பிரெஞ்சு ஆபீசர் மிக்ஸர் பார்ட்டி ; இந்த இசைக்கலைஞர் தாத்தாக்கு முன்னாடி, ஆனா மீசைக்காரனுக்குப் பின்னாடி !" என்ற ரீதியில் நோட்ஸ் தொடர்ந்தது//

    சேந்தம்பட்டி குழுவின் கார் ஞாபகம் வருகிறது

    :-)

    ReplyDelete
  37. This is better than whatsapp group as it will be tough to search your post amid other comments. Also this will be permanent compared to whatsapp as we may clear the chat for one or other reason .

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தான் சார் ; இங்கே ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் போல "எல்லாமே இருக்கு ...நல்லாவும் இருக்கு " !!

      நண்பர்களுக்குப் பொறுமையும், நேரமும் இருந்தாக்கா இதுவே ஓ.கே. தான் !

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. // Hopefully வாரயிறுதிக்கு புது இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திட வேண்டும் ! //
    அப்ப மார்ச்சில் ஏப்ரலா,சூப்பர் சார்...

    ReplyDelete
  40. No WhatsApp. Only blog.

    Blog ங்கறது lover மாதிரி. எதிர்பார்ப்பு இருக்கும்.

    Whatsapp group ங்கறது... (ஹி.ஹி...) வூட்டம்மா மாதிரி. ஒரு லெவலுக்கு மேல கடுப்பேத்திடும், இல்லேன்னா போரடிக்கும்

    ReplyDelete
  41. சார்

    Whatsappற்கு எனக்கு double ok... மிக விரைவாக விஷயங்கள் பகிர வாட்ஸ்அப்பே சிறந்த ஊடகம் என்பது என் கருத்து...

    ReplyDelete
  42. //ஐரோப்பிய மேல்வர்க்கத்து ஆண்களின் மோகங்களை தன் வீட்டு வாசலில் குவிந்திடச் செய்ததொரு ஜாலக்காரியே என்பது புரிந்த போது கவுண்டர் ஸ்டைலில் ரொம்பவே 'டெலிகேட் பொஷிஷன்' எனக்கு !!//

    தோனின்னு நினச்சு உள்ற இறக்குனீங்க! அது ஜடேஜாவா மாறிப் போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க!

    ப்ரான்ஸில் ஒரு சிவகாசி ஜெயலெட்சுமி!!!!

    ReplyDelete
  43. // 'சிவனே' என்று நாமளும் ஒரு வாட்சப் க்ரூப்பினை உருவாக்கி, இந்தக் கும்மிகளை அதற்குள் வைத்துக் கொண்டாலென்ன guys ? //
    தளத்துக்கு இணை தளம் மட்டுமே சார்,தற்போதைக்கு அதற்கு மாற்று தேவை இல்லை என்றே தோன்றுகிறது,காலப்போக்கில் அவசியம் எனில் மற்ற குரூப்களை பற்றி யோசிக்கலாம்,அதை இன்னொரு மாற்று ஏற்பாடாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்,தளத்தின் பூரணத்துவத்தை எதுவும் நிறைவு செய்ய முடியாது என்பது எனது கருத்து...

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்து அண்ணா

      Delete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. // ஐரோப்பிய மேல்வர்க்கத்து ஆண்களின் மோகங்களை தன் வீட்டு வாசலில் குவிந்திடச் செய்ததொரு ஜாலக்காரியே என்பது புரிந்த போது கவுண்டர் ஸ்டைலில் ரொம்பவே 'டெலிகேட் பொஷிஷன்' எனக்கு !! //
    // "உலகை உலுக்கிய பெண் உளவாளி" என்ற ஸ்டைலான tagline வேறு போட்டாச்சு !! //

    ”உலுக்கிய” என்பதற்கு பதிலாக “குலுக்கிய” ன்னு tagline போட்டிருந்தால் சரியா இருந்திருக்கோமோ சார்...

    ReplyDelete
  47. நிஜத்தினில் இந்த அம்மணி செய்த ஜாகஜங்களின் முக்காலே மூன்று வீசம், விதவிதமான ஐரோப்பியக் கட்டில்களில் மாத்திரமே ! டோக்கன் போடாத குறையாய், ஐரோப்பிய மேல்வர்க்கத்து ஆண்களின் மோகங்களை தன் வீட்டு வாசலில் குவிந்திடச் செய்ததொரு ஜாலக்காரியே என்பது புரிந்த போது கவுண்டர் ஸ்டைலில் ரொம்பவே 'டெலிகேட் பொஷிஷன்' எனக்கு ///
    கதையை படிக்கும் போது நெருடல்கள் இல்லாமல் இருந்ததால் சரி.
    எதற்கும் மு.ச, மூ.ச பக்கமெல்லாம் சுத்தம் செய்து வைக்க வேண்டி வரலாம் என்று பட்சி சொல்லுது

    ReplyDelete
  48. உளவும் கற்று மற உட்பக்க பிரிவியூ பக்கத்தின் வர்ணச் சேர்க்கை அசத்தல் சார்...

    ReplyDelete
  49. பனிக்கடல் படலம் வர்ணத்தில் அசத்தும் போல...

    ReplyDelete
    Replies
    1. +1

      சாதாரண கருப்பு வெள்ளையிலேயே கலக்கலாக இருக்கும் சித்திரங்கள் .

      வண்ணத்தில் இன்னும் பட்டையை கிளப்பும்..

      Delete
  50. உங்களுக்கு நேரமும் காலமும் பொறுமையும் நிறைய இருப்பது போல் தெரிந்தால் ஒரு 5-6 வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என போட்டு தாக்குதல்கள் சார், நமது வளர்ச்சிக்கு இவை தேவையெனில். ஆனால் நான் தளத்துடன் நின்று கொள்கிறேன்:-)

    ReplyDelete
  51. Continue in blog sir.

    WhatsApp-easily people get hurt and leave group.

    Fb-unnecesaary outside elements can hurt healthy discussions

    ReplyDelete
  52. வலைப்பூ - தளம் என்னும்போது நீங்களே - தல-நாங்கள் வெறும் பின்னூட்டம் மட்டுமே..எனவே - காமிக்ஸ் ரசிகர்களுக்கு இதுவே சுகப்படும்..
    மேலும், இதனால் செல்போன் - Store age-க்கு அதிக லோடு கிடையாது என்று நினைக்கிறேன்...(நீங்கள் வெளியிடும் அட்டைப்படங்கள் - மற்றும் பிடித்தமான சில புகைப்படங்களை மட்டுமே- Download_செய்து கொள்கிறோம்..
    ஆனால்,What's App -யில் அப்படி இல்லை-எல்லோரும் பதிவும் போடுவார்கள்- Images களையும் போடுவார்கள்-பாப்பா படம் - சாமிப் படம் போட்டு காலை வணக்கம் தெரிவிப்பார்கள்-
    அப்றம் - ஆங்கில படங்களின் - ஆக்ஷன் க்ளிப்பிங்ஸ் (வீடியோக்கள்-ஜாக்கிஜான்-ஆர்னால்ட் என்று) வெளியிடுவார்கள்"
    அப்றம் - அரசியல் கருத்துக்களை பதிவிடுவார்கள்-தளம் சும்மாதானே இருக்கு என்று...
    வேண்டாம் சார்..இந்த விளையாட்டு-.
    உங்கள் ஆபிஸ் - Cell No-யை தொடர்ந்து பார்வையிடுவீர்கள் எனில் - ஏதேனும், தனிப்பட்ட முறையில் எதும் கருத்துக்களோ- Images களோ-மட்டும் பதிவிடலாம். (ஏனெனில் - எனக்கு e-mail-அனுப்புவது அவ்வளவு புரிபடவில்லை-அடுத்தவர் உதவியை நாட வேண்டி உள்ளது..) நன்றி சார்..

    ReplyDelete
    Replies
    1. 100 க்கு 100 சரி பத்து ஜி..
      குட்மார்னிங் message லயே என் ஃபோன் நிரம்பி வழியுது.

      Delete
    2. உண்மை நண்பரே...

      Delete
  53. ஏப்ரலில் மூன்று லட்டுகள் மொத்தம்.

    1.டெக்ஸ் கிளாஸிக் 2.

    2.நார்மல் டெக்ஸ் .

    3.ரிப் கிர்பி.

    மகிழ்ச்சிங்கோ.

    ReplyDelete
  54. மாட்டா ஹாரியை தூக்கிருவாரோ என்ற தோற்றம் தந்தது பதிவு. இல்லை என்றான பின்னே மனம் நிம்மதி அடைந்தது. எத்தனையோ கதைகள் படித்தாலும் மாட்டா ஹாரி போன்ற வித்தியாசமான கதைகளுக்கு மனம் ஏங்கவே செய்கிறது.

    ReplyDelete
  55. Sir -

    NO to whatsapp group ONLY presence. People like me are not part of any whatsapp group or social media - this is the ONLY site I vist apart from Cricinfo for time pass. There could be many people like me.So this has to be predominant - you may choose to keep the articles concise however and share the link in your whatsapp group if needed.

    ReplyDelete
    Replies
    1. Whatsapp group - if it happens will definitely not be the ONLY option sir ! அதன் குறைகளை ஆளாளுக்கு அழகாகவே சுட்டிக் காட்டி விட்டனர் ! So அதையொரு கூடுதல் தடமாக்கிட வேண்டியது தான் !

      Delete
  56. அட்டை படங்கள் அருமை. மார்தா ஹரி இனை வளைவுகள் அசரடிக்கின்றன. சொப்பன சுந்தரியின் காரை யாரு வச்சிருக்காக? என்று பெரிய லிஸ்ட் எடுக்கணும் போலிருக்கே. “சிகாகொவின் சாம்ராட்” இன் உட்பக்க பிரீவியூ சித்திரங்கள் கறுப்பு வெள்ளையில் துல்லிதம் ஆக தெரிகிறது. தளத்தில் இப்போது போலவே தொடர்வது நலம் என்பது எனது தாழ்மையான கருத்து. நண்பர் சரவணனார் கூறியது போன்று, 10 வருடத்திற்கு முன்பு ஆன பதிவுகளை, உடனே எடுக்க முடியுமா என்பது தெரியாது என்பதுடன் நினைத்தபோது தளத்தில் புதிய நண்பர்கள் இணையமுடியும். அது இலகு. மேலும் தளம் ஒரு பரிமாணத்தில் எமது விளம்பரபலகை ஆகவும் மிளிர்கின்றது. தளத்தில் மொனப்பார்வையாளர்களும் உலவமுடியும். What’s-up இல் அது சாத்தியமில்லை என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  57. 'பிளாக்' மட்டுமே போதுமானது.வாட்ஸ்அப் குரூப் வேண்டாம் என்பது என் கருத்து

    ReplyDelete
  58. No WhatsApp or FB. Please continue this blog sir. Thanks

    ReplyDelete
  59. “Only whatsapp group” என்பது வேண்டாம். ஆனால் ஒரு அபிசியல் வாட்ஸப் மற்றும் முகநூல் குரூப் ப்ரொமோசனுக்கு தகவல் பரிமாற்றத்துக்குத் தேவை. 250 பேர் என்னும் லிமிட் வாட்சப்பில் இருப்பது ஒரு சிக்கல். மாடரேசனில் நிறைய நேர விரயமாகும் என்பது அடிசனல் சிக்கல்.

    ReplyDelete
  60. இரண்டு அட்டைப்பட ஓவியங்களும் செமயா இருக்கு

    ReplyDelete
  61. தலீவரே,,,ரிட்டையர் ஆன பிற்பாடு நெதத்துக்கும் போன் கூட போட்டு குசலம் விசாரிச்சுப்புடலாம் ; இப்போதிக்கி ஏதாச்சும் ஒண்ணே சாத்தியம் !

    ####

    அப்படியானால் தளம் தான் சார் சரியானது..

    வாட்ஸ்அப்பில் பல சங்கடங்கள் உள்ளது..

    குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நபர்களை இணைக்க முடியும் ..

    பிறகு இங்கு தேவையற்ற சில பதிவுகள் வரும் பொழுது அதை மறுதலித்து காணாமல் போக்க உங்களுக்கு உரிமை உண்டு .ஆனால் வாட்ஸ்அப்பில் பகிர்ந்தவர் மட்டுமே அதனை காணாமல் போக செய்ய முடியும்..

    இது போல் பல சங்கடங்கள் உள்ளது சார்...

    எனவே தளமே நிரந்தரம்..

    ReplyDelete
  62. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    டெலிகிராம்தான் ஒத்துவரும் 2000 பேர் இருக்கலாம்.வாட்ஸப் 256 எனும் ரெஸ்ட்ரிக்‌ஷன் கொண்டது .சரிப்பட்டு வராது

    ReplyDelete
  63. ஒலகத்துல எவ்ளோ கதை இருக்கும் போது இந்த 'மாத்தம்மா' கதையை தேடி புடிச்சு காமிக்ஸ் உருவாக்கிய படைப்பாளிகளை பத்தி என்ன சொல்றதுன்னே தெரியலே. Hats off.

    ReplyDelete
    Replies
    1. ஒலகத்துல எவ்ளோ கதை இருக்கும் போது இந்த 'மாத்தம்மா' கதையை தேடி புடிச்சு திட்டமிட்ட அந்த முழியான்கண்ணனை பத்தி என்ன சொல்றதுன்னு முதலில் சொல்லுங்க சார் !

      Delete
    2. புத்தகம் வரட்டும் சார். அப்பறம் பாருங்க எங்கெங்கே என்னென்ன சொல்லராங்க என்று

      Delete
    3. சார் உங்களை குத்தம் சொல்ல முடியாது ...உலகின் நம்பர் 1 Spy ..சிங்கப்பெண் என்று உங்கள உசுப்பேத்தி இருக்கலாம் ...இம்சை அரசன்ல வர்ற வடிவேலு தலை ...உடல் செட்டிங் செஞ்ச மாதிரி ...100 வருஷம் கழிச்சி படிக்கிறவங்களுக்கு என்ன தெரியப்போகுதுன்னு நினைச்சி இருக்கலாம்... நீங்க Google தேடிப்பார்த்து சொல்லலேன்னா இங்க 'மாத்தம்மா' ஆர்மி உருவாகி இருக்கும் ...உண்மையை சொல்லி மொத்தமா முடிச்சி விட்டுடிங்க.

      Delete
  64. அந்த நாலு ஆல்ப டைகர் தொகுப்பு பத்தி கேக்கறதுக்கு இது சரியான நேரமான்னு தெர்ல. ஆகஸ்ட் புத்தக விழாக்கு வர வாய்ப்பிருக்குங்களா?

    ReplyDelete
    Replies
    1. ஷெரீப் ஜி..
      டைகரின் 4 ஆல்பத்தின் வியாபார சாத்தியங்கள் குறித்து Whatsapp குரூப்பில் ஒரு survey எடுங்களேன். ஆதரவு %ஐ ஆசிரியருக்கு தெரிவிப்போம். அவருக்கும் களமாட வசதியாக இருக்கும்.

      Delete
    2. உள்ளதைச் சொல்வதானால் - இப்போது "பழனி ஸ்பெஷல்" ஆக வரவிருக்கும் TEX க்ளாசிக்ஸ்-2 நடப்பாண்டின் இறுதிக்கெனத் திட்டமிடப்பட்ட இதழே !! டிசம்பர்வாக்கில் தான் இதனைக் கண்ணில் காட்டிட எண்ணியிருந்தேன் - அம்மாசத்தினில் ரெகுலர் டெக்ஸ் இராதென்பதால் ! And அதற்கெல்லாம் ரொம்பவே முன்னமாய் "இளம் டைகர்" 4 பாக தொகுப்பினை நுழைத்திருக்க எண்ணியிருந்தேன் ! ஆனால் எதிர்பாரா, துரதிர்ஷ்ட சூழலின் பொருட்டு 'தல' இதழினை fast track செய்திட நேர்ந்து விட்டது ! So 'தளபதி' பின்னே செல்ல வேண்டியதொரு சூழல் !

      அவருக்கு முன்னதாய் "உயிரைத் தேடி" & "சுஸ்கி-விஸ்கி" - லயன் லைப்ரரி வரிசையினில் # 3 and # 4 ஸ்லாட்களில் காத்துள்ளன !!

      Delete
    3. And அடுத்த 2 மாதங்களுக்கு நமது நேரங்களில் கணிசத்தை IPL விழுங்கக் காத்திருப்பதால், திட்டமிடல்களை அதற்கேற்பவே செய்திட வேண்டி வரும் சார் ! யானை நடக்கும் பாதையினில் எறும்புகள் ஓரம்கட்டிட வேண்டுமல்லவா ?

      Delete
    4. ஆனால் எதிர்பாரா, துரதிர்ஷ்ட சூழலின் பொருட்டு 'தல' இதழினை fast track செய்திட நேர்ந்து விட்டது ! So 'தளபதி' பின்னே செல்ல வேண்டியதொரு சூழல் !//

      தளபதி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரட்டுங்க சார். 👍🙏

      Delete
    5. // லயன் லைப்ரரி வரிசையினில் # 3 and # 4 ஸ்லாட்களில் காத்துள்ளன !! //
      அப்ப 5 வது ஸ்லாட் டெக்ஸ்-3 தானே சார்,ஆண்டின் இறுதியில் போட்டுடுங்க சார்,ஏற்கனவே ஒரு மாசம் தல தலையைக் காட்டலை...

      Delete
    6. // கணிசத்தை IPL விழுங்கக் காத்திருப்பதால், திட்டமிடல்களை அதற்கேற்பவே செய்திட வேண்டி வரும் சார் ! //
      இந்த பஞ்சாயத்துக்கு முடிவே இல்லை சார்,பார்க்கறவங்க பார்த்தாலும்,படிக்கறவங்க படிச்சிகிட்டுதானே இருப்பாங்க...

      Delete
  65. வாட்சப் காலத்தின் கட்டாயம் சார். ஏராளமான பிளஸ் பாயிண்ட்ஸ் வாட்சப் தளத்தில் உள்ளது... ஆகவே தயங்காமல் வாட்சப் குரூப் ஒன்றை launch செய்யலாம்.

    ReplyDelete
  66. Edi Sir..
    Tigerக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முடியுங்களா?..

    ReplyDelete
  67. Edi Sir..
    S'70- ரிப் கெர்பி ஸ்பெஷல் ல என்னென்ன கதைகள் வருதுன்னு ஏதாவது ஹிண்ட் கொடுங்களேன் ப்ளீஸ்..

    ReplyDelete
    Replies
    1. பட்லர் டெஸ்மாண்ட் வர்றார் ; ஹனி வர்றார் ; ரிப்பும் வர்றார் - என்பதைத் தாண்டி இந்த newspaper strip கதைகளுக்கு என்ன hint கொடுப்பது சார் ? எல்லாமே early '70s கதைகள் என்பது maybe இன்னொரு hint !

      Delete
  68. Edi Sir..
    என்னோட சின்ன வயசுல சில பல பெரிய ஊர்களில் பஸ் ஸ்டாண்டில் உள்ள பல கடைகளில் முத்து காமிக்ஸ் வரிசையாக அடுக்கி வச்சிருப்பாங்க. கடைக்கு முன்னாடி கயி.துல வரிசையா தொங்க விட்டிருப்பாங்க. பாக்கிறப்பவே வாங்க தோணுங்க. அந்த மாதிரி பொற்காலத்தை மறுபடியும் கொண்டுவர ஏற்பாடு பண்ணுங்க Edi Sir.. மண்பானை சமையல்,மஞ்சப்பை எல்லாம் மறுபடி வந்து சக்ஸஸ் பண்ற மாதிரி "ஊருக்கு ஊரு..கடைக்கு கடை காமிக்ஸ்".. என்ற விசயத்தை முன்னெடுங்க ஜி..

    இன்னும் காமிக்ஸ் வருதா ன்னு கேக்கிற Book worms இருக்காங்க.
    இவங்கள்ள பலபேரு FB ல இல்லை.Whatsapp,Telegram ல இல்லை... இவங்கள Target பண்ணுங்க Edi sir..

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, 2 நாட்களுக்கு முன்னே தான் முதல் மாதத்து டிஜிட்டல் மார்கெட்டிங்கின் ரிப்போர்ட் கைக்கு வந்தது :

      எட்டிய (புது) வாசகர்களின் எண்ணிக்கை : 89000+

      அதனிலிருந்து விற்பனையாய் உருமாற்றம் கண்டது : 35 பிரதிகள் !

      ஆக, கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ரூபாய் செலவில் 35 புது வாசகர்களை மட்டுமே எட்டிப் பிடிக்க முடிந்துள்ளது என்பது தான் யதார்த்தம் !

      "என்னாது...சிவாஜி செத்துட்டாரா ?" ; "என்னாது....பொம்ம புக் இன்னும் வருதா ?" என்ற கேள்விகளெல்லாம் கேட்போர், என்றைக்கோ இந்த ரசனைக்கு விடைதந்து விட்டோர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது !! விஷயம் தெரிய வரும் முதல் நொடியினில் அவர்களெல்லாம் புக் வாங்க துள்ளிக் குதிப்பதில்லை என்பதே வார்னிஷ் பூசா நிஜம் !

      Delete
    2. வருத்தமான செய்தி தான் சார். ஆனால் உண்மையும் கூட

      Delete
    3. என்னுடன் சேர்ந்து காமிக்ஸ் படித்த எனது சித்தப்பா பசங்கள் இருவரும் இப்போது காமிக்ஸ் படிப்பது இல்லை. நானும் இரண்டு பேருக்கும் தலா 1000 ரூபாய் செலவு செய்து லக்கி லூக், புது பாண்ட் என ஆன்லைன் புக் fair மூலம் வாங்கி கொடுத்தும் ஒரு உபயோகமும் இல்லை.

      ஒருவர் புத்தகத்தை படிக்கவே இல்லை, இன்னொருவர் படித்தாரா இல்லையா என்றே தெரியல...

      என்னமோ போடா மாதவா moment...

      Delete
    4. // எட்டிய (புது) வாசகர்களின் எண்ணிக்கை : 89000+ //

      சிறப்பு சார். இந்த விதை கண்டிப்பாக விருட்சமாய் விரைவில் மாறும்.‌ சிறப்பான செயல்.

      35 பிரதிகள் விரைவில் 3500 பிரதிகளாக மாறும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என நம்பிக்கை உள்ளது.

      Delete
    5. Maybe we could try some way to reach the children directly? I first noticed our comics after seeing the colorful front cover of புதையல் பாதை in a bookstall.

      Delete
  69. Replies
    1. WhatsApp குழுவில் 250 பேருக்கு மேல் சேர்க்க முடியாது என்பதால் வேறு மாற்று ஆட்டக்காரர்களை பார்கலாம் சார்:-)

      Delete
  70. வணக்கம் நண்பர்களே...!

    ReplyDelete
    Replies
    1. Whatsapp ல் நிறைய இடைஞ்சல்கள் உள்ளதென நினைக்கிறேன் சார். பதிவுகளை மேனேஜ் செய்வது அட்மின் கையில் இல்லை. எளிதாக ஸ்பேம் செய்ய இயலும்.

      டெலிகிராம் கொஞ்சம் வசதி... உங்கள் லேட்டஸ்ட் பதிவை பின் செய்து விட்டால் நண்பர்கள் பாலோ செய்ய வசதி. வாட்ஸ்அப்பை விடவும் நிறைய வசதிகள் இருக்கிறது. நிறைய பாட்ஸ் உபயோகம் உண்டு.

      முகநூல் சிறந்தது. ஆனால் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியமாகி விடும்.

      தளம் (blog) சற்று பழைமை என்றாலும் என்னைப் பொருத்தவரையில் அது ஈடிணையற்றது.

      தளத்தோடு கூடுதலாக மற்றவைகளில் இணைந்து பயணிக்கலாம். ஆனால் தளத்துக்கு மாற்றாக அல்ல.

      Delete
  71. //அதனிலிருந்து விற்பனையாய் உருமாற்றம் கண்டது : 35 பிரதிகள்//

    30 பிளஸ் வாசகர்கள் என்று கூட எடுத்து கொள்ளலாமே சார்... ஒரு புதிய காமிக்ஸ் வாசகரை கண்டடைய 1200 ரூபாய் அதிகம் என்று ஆவதில்லை, மேலும் அது நீண்டகால முதலீடு மட்டுமே என்பது என் எண்ணம் சார்... வேண்டிமானால் மாதம் 5 புதிய successful வாசகர்கள் என்று கூட டார்கெட் செய்து மார்க்கெட்டிங் செய்யலாம் தான். இது விதை போன்றது.

    ReplyDelete
  72. Edi Sir..
    ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் புத்தக விழா போல ஒவ்வொருமாதம் காமிக்ஸ் திருவிழா நடத்தலாம்.
    அல்லது *நடமாடும் காமிக்ஸ் பஸ்* ஒன்றை, மாதம் ஒவ்வொரு பெரிய சிறிய ஊர்களில் சுற்றிவர செய்து வியாபாரத்தை அதிகபடுத்த முயற்சிக்கலாம். பரிட்சார்த்தமாக கோவை,திருச்சி,ஈரோடு,மதுரை,சேலம், நாகர்கோயில் ..போன்ற 4,5 ஊர்களில் முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கனவுலகம் வாட்சப் குரூப்பில் நண்பர்களிடையே நடந்த உரையாடல். இந்த பதிவுக்கு சம்பந்தமானது என்பதால் இங்கே பதியப்படுகிறது.

      Delete
    2. //இல்லைனா அட்மீன் ஒன்லி ஆப்சன் தான்//

      interaction இல்லாமல் இருப்பது க்ரூப் ஆரம்பிப்பதின் பயனை நொறுக்கி விடும். ஆனால் வீண் அரட்டை, காலை இரவு வணக்க மற்றும் பொன்மொழி சமாச்சாரங்களை மாடரேட் செய்ய வேண்டும்..பிளாக் போல் அல்லாமல் இமேஜ் மற்றும் லிங்குகளை பதிவிட முடிவது அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்லும். ஆனால் அனாமதேயர்கள் அட்டகாசம் அளவில்லாமல் போகவும் வாய்ப்புண்டு.

      250 என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்

      எப்படி இருந்தாலும் 80:20 பாரெடோ விதிப்படி இதிலும் பிளாக் போல 20 சதவிதம் வாசகர்கள் மட்டுமே குழுவில் 80 சதவீத செயல்பாடுகளுக்கு காரணமாயிருப்பார்கள் ..

      வருங்காலத்தை நோக்கி நகரவேண்டுமென்றால் பேஸ்புக்,டெலிக்ராம் மற்றும் இன்ஸ்டாகிராம் மட்டுமே சிறந்தது.

      டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் முக்கிய நோக்கம் புதிய வாசகர்களை வரவைப்பது..இருப்பவர்களை தக்க வைப்பது அடுத்து...இட் ஷுட் பீ ஓபன் டு ஆல்..ஆனால் அதற்கான விலை ஹெவி மாடரேஷன்...இல்லையென்றால் முக்கியமான தகவல்கள் மேலே போய்விடும்..

      பேஸ்புக்கில் பிளாக் போல தகவல் மேலிருந்து வாசகர்கள் கமெண்ட் கீழே வருவது வசதி..கமெண்டுகள் லைக் செய்யப்படுவதை பொறுத்து வாசகர் மனா ஓட்டங்களை தெரிந்து கொள்ளலாம்..வாக்கெடுப்புகள் நடத்துவது எளிது..

      Whatsapp gives us easy of usage and closeness..Facebook allows us to understand collective opinion…Telegram gives new users access to message history on top of whatsapp usage

      டெலியில குரூப் மற்றும் சேனல் ஆரம்பிக்கலாம். குழுக்களில விவாதமும் சேனல்ல அறிவிப்புகள் + விமர்சனங்கள் வரலாம்.

      சேனல் பொதுவானது. யார் வேண்டுமானலும் சர்ச் செய்து இணையலாம். ஆனால் போஸ்ட் செய்ய முடியாது.

      குழு அட்மின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

      Delete
    3. நல்ல அகுடியா தான் 👍👌

      Delete
  74. சார் 
    KSK சீரிஸ் எப்போதிலிருந்து துவங்கும்? வீட்டில் வாண்டுகள் கேட்க ஆரம்பித்து விட்டன !

    One suggestion would be to do two this summer - May and June and one during Navaratri break and one during Christmas/New Year break - to cater to target audience !

    ReplyDelete
  75. டெக்ஸ் கிளாசிக் - 2

    பணம் செலுத்தியாச்சு + சிறிய தொகையுடன்

    ReplyDelete
  76. FB கணக்கே இல்லை! WHAT’SAP எந்த குரூப்பிலும் இல்லை!! மீறி யாராவது குரூப்பில் சேர்த்தாலும் உடனே வெளியே வருவதே வாடிக்கை!!! Telegram யூஸ் பண்ணினதே இல்லை!!!


    மிகமிக (தொழில் ரீதியாக) பயனுள்ளதாக இருப்பதால் Twitterல் மட்டும் தொடர்ந்து இருக்கிறேன்!! Twitterல் நமது சரக்கை பதிவிடவும், தேவையானவற்றை மட்டும் follow செய்து பயன்பெறவும் மிகவும் சவுகரியமாக உள்ளது!

    Face Bookல் account ஓபன் செய்த அதே நாளே account குளோஸ் செய்தவன் தான் இன்று வரை அந்தப் பக்கமே தலை வைப்பதில்லை!

    ReplyDelete
  77. சார், தளம் தான் சிறந்தது, வேண்டிய போது படித்து கொள்ளலாம், பதிவிடலாம், ஆனால் வாட்ஸ் அப்பில் ஒரு அரை நாள் தவற விட்டாலும் follow செயவது கடினம் நிரம்பி விடும். குறிப்பாக பழைய பதிவுகளை தளத்தில் உள்ளது போல் சுலபமாக படிக்க இயலாது. நான் சமீபத்தில் கூட அட்டவனை பதிவையும், லாக் டவுனில் முத்து 50 சார்ந்த பதிவுகளையும் படித்து மகிழ்ந்தேன்.

    ஆக பதிவை நிறுத்தி விட வேண்டாம். முடிந்தால் mata Hari யின் அட்டைப்படத்தை மாற்ற முயற்சிசியுஙகள் சார். பார்த்தால் நமது காமிக்ஸ் போல் இல்லை. பொன்னியின் செல்வன் அட்டைப் படம் போல் இருக்கிறது. நமக்கு பொருந்தவில்லை.

    ReplyDelete
    Replies
    1. //முடிந்தால் mata Hari யின் அட்டைப்படத்தை மாற்ற முயற்சிசியுஙகள் சார்//


      வழிமொழிகிறேன்..a sense of alienation
      From our comics cover world..

      Delete
    2. கதையிலயும நடராஜர் சிலை, சிவனுக்கு அர்ப்பணிப்புன்னு நிறைய நம்மூர் ரெபரன்ஸ் இருக்கு. ஒரிஜினல் அட்டைப்படங்கள் எல்லாம் அதீத கவர்ச்சி. அதனால தான் இந்த மாதிரி அட்டைப்படத்துக்கு செட்டிலாயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

      Delete
  78. No WhatsApp plz Except advertisements and promotions.

    பிளாக்கில் உங்கள் எழுத்துக்களை படித்து பழகி விட்டோம் ஐயா. இது தொடர வேண்டும்...

    ReplyDelete
  79. தளம் எப்போதும் போல தொடரட்டும் சார்.

    ஆனால் மாறி வரும் கால மாற்றங்களுக்கு ஏற்ப வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் வாசக தொடர்பு, விளம்பரம் செய்யலாம்.

    அதிலும் வாட்ஸ்அப் மற்றவைகளை காட்டிலும் அனைவரும் பொதுவாக அதிக அளவில் உபயோக படுத்துகின்றனர் எனவே, வாட்ஸ்அப்பீல் அட்மின் ஒன்லி மட்டுமே கொண்டு செயல் படலம்.

    அனைத்து வாசகர்களையும் ஒன்றிணைத்து பல குழுக்களை உருவாக்கி

    1) தளத்தில் பதிவு வரும் போது அதன் லிங்க் பகிரலாம் அது அனைவரும் எளிதில் அறிந்து கொள்ள உதவும் மற்றும் அம்மாதத்து வெளியீடுகள் பற்றிய விளம்பரங்கள்
    2) சந்தா தாரர்களுக்கு அம்மாதத்து கூரியர் அனுப்பிய செய்தியை போடலாம்
    3) புத்தக விழா பங்கேற்பு செய்தியை போடலாம்
    4) கையிருப்பிலுள்ள புத்தக தகவல்கள் மற்றும் தள்ளுபடி
    5) ஒவ்வொரு மாவட்டத்திலும் நமது வெளியீடுகள் கிடைக்கும் முகவர்களின் கைப்பேசி எண், முகவரி போன்ற தகவல்களை பகிர்ந்தால் எல்லோருக்கும் சுலபமாக இருக்கும்

    அதே போல பெண் வாசகர்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வாட்ஸ்அப்பீல் தனி குழு ஏற்படுத்தலாம் எந்த வித சர்ச்சை & பிரச்னைகளுக்கு இடம் கொடா வண்ணமாக இருக்கும் என்பதால் சொல்கிறேன்.

    இது எனக்கு தோன்றியவை.
    இதில் மேற்கொண்டு நடை முறை சாத்தியங்கள் & பட்டி டிங்கரிங் பார்த்து உங்களுக்கு ஏற்புடைய வகையில் மாற்றி அமைத்து கொள்ளவும்.

    ReplyDelete
  80. சார் என் போன்று வேலைப்பளு அதிகமாக உள்ளவர்களுக்கு வாட்ஸ் அப் குழு ஒத்துவராது. அன்று பதிவு போட்ட பின்னர் இங்கு வர தான் எனக்கு நேரம் கிடைத்தது. ஆனால் நண்பர்கள் இட்ட பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்து விட்டேன். ஆனால் வாட்ஸ் அப்பில் அதற்கு வழி இல்லைங்க சார். அவ்வாறு வாட்ஸ்அப் குழு உருவானாலும் நான் வெளியில் தான் இருக்க வேண்டி வரும் என் தளத்தை விட்டு நான் வரமாட்டேன்

    ReplyDelete
  81. திருப்பூர் புத்தக விழா வரப் போகுது. அதுக்கு எதும் ஸ்பெசல் இல்லியான்னு கேட்டு போராட்டம் இல்லியா?

    ReplyDelete
    Replies
    1. வேப்பிலையை நூலிலே கோர்த்தாச்சா ? பதுங்கு குழிக்கு தகவல் சொல்லி ஆள் அனுப்பியாச்சா ? தலீவருக்கு சேலத்தில் மீட்டிங் ; டிலல்லியிலே பொதுக்குழுன்னு சொன்னாங்களே ?

      Delete
  82. நாம் உள்ளே நுழையலாம் என்று என்னும் போது, கல்யாண வீட்டில் முதல்நாள்சீட்டுக்கச்சேரிக்ரூப் போன்று ஒருடிஸ்கசன் ஓடிக் கொண்டிருக்கும் வாட்ஸ் ஆப்பில். நாம் நடுவே உள்ளே நுழையாமல், சங்கடத்துடன்பாய்ண்ட் வரட்டும், பாய்ண்ட் வரட்டும் என்று காத்திருக்கதூக்கம் மட்டுமே நமக்கு வரும்.வேறு வழியில்லாமல் ஆடிக்கு ஒருதரம் அமாவாசைக்கு ஒருதரம் வாழ்த்துச் செய்தி மட்டும் பதிவிட்டு ஆஜர் டீச்சர் என்று அட்மினாருக்கு ஒரு அட்டெனன்ஸ் மட்டுமே கொடுக்கமுடியும். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான பதிவு நண்பரே. ரொம்பவே பிராக்டிகல்

      Delete
  83. போர் முனையில் தேவதைகள். மிகவும் சென்ஸிடிவ்வான கதை. மிக ஜாக்கிரதையாக யாரையில் சங்கடப்படுத்தாமல் முள் மேல் நடப்பதுபோன்ற மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள் சார்.குற்றவாளிகள் என்று எண்ணப்படுபவர்களைஅதிகாரிகள்பின் தொடர்வதுஇதுவரை நமது வேறு எந்தக்கதைகளிலும்இவ்வளவுதெளிவாகக் காட்டப்படவில்லை. விறுவிறுப்பாக இருந்தது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. விறுவிறுப்பான கதை சந்தேகம் இல்லாமால்

      Delete
    2. நிஜம் தான் சார் ; ரொம்பவே தட்டுத்தடுமாறி மொழிபெயர்ப்பினைக் கையாள வேண்டிப் போனது !

      Delete
  84. *சிகப்பாய் ஒரு சிலுவை*

    நீண்ட நாள் வாசித்தலில் விழுந்த சுணக்கத்தை டெக்ஸ்வில்லரால தான் உடைக்க முடிஞ்சுது. ஆல்பாவை முடிச்சுட்டு வேதாளரோடு போராடி முடியாம படிக்கறதுலயே கேப் விழுந்துடுச்சு. அதை இன்னிக்குத்தான் உடைக்க முடிஞ்சது.

    பெரிய அப்பாடக்கர் கதையெல்லாம் ஒண்ணுங் கெடையாது. வழக்கம் போல ரெண்டு கிழமும் வேற ஊருக்கு நண்பனை பாக்க வருது. எப்ப டெக்சுக்கு நண்பனைப் பாக்கனும் தோணுதோ அப்பவே அந்தாளுக்கு சங்கூதிருப்பாங்க. இல்லேன்னா 71//2 சனி ஆரம்பிச்சிருக்கும். இதுல சங்கூதிட்டாங்க. அதுக்குக் காரணம் யாரு, KKK வா சுத்தற கேப்மாறிக யாரு அப்படிங்கறதை எந்த திடுக்கிடும் திருப்பமும் இல்லாமலேயே சுவராஸ்யமா சொல்லிருக்காங்க.

    சரியான டைம்பாஸ். ஒரு மணி நேரத்துல இலகு வாசிப்பு. இது முடிச்ச தெம்புல ப்ளூகோட்ஸ் எடுத்துருக்கேன்.

    *எனக்கு பிடிச்சிருக்கு*

    ReplyDelete
    Replies
    1. புகழாப் புகழ்ச்சி அணி..

      Delete
    2. வேதாளர் பாசறையின் சார்பாக டெக்ஸஸுக்கு ஆட்டோ ஒன்றை அனுப்ப ஓலாவில் கேட்ருக்கோம் ; வண்டிய தான் இன்னமும் காணோம் !!

      Delete
    3. வேதாளர்கதைகள் செலக்சன், மொழிபெயர்ப்பு, மேக்கிங் எல்லாம் பிராமதாத்தான் இருந்ததுங்க சார். ஆனா ஆல்பா, அண்டர் டேக்கர், ஒ. நொ. ஒ. தோ. மாதிரி வண்ண சித்திர அதகளங்களை படிச்சப்பறம் ஸ்ட்ரிப் ஓவியங்களை ஏனோ ரசிக்க முடியவில்லை.

      Delete
  85. பொட்டி கிளாம்பியாச்சு என்று இன்று பதிவு வருமோ ?

    ReplyDelete
  86. போர்முனையில் தேவதைகள் ஒரே ஆல்பம் தானா ? தொடர்ச்சி ஏதுமிருக்கின்றதா சார் ?

    ReplyDelete
  87. 2023ல் தல டெக்ஸின் 75 ஆண்டு வருகிறது.75ஐ சிறப்பிக்க மகா மெகா குண்டு டெக்ஸ் இதழை எதிர்பார்க்கின்றோம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
    Replies
    1. 2023ல் தல டெக்ஸின் 75 ஆண்டு வருகிறது.75ஐ சிறப்பிக்க பல மகா மெகா குண்டு டெக்ஸ் வண்ண இதழ்களை எதிர்பார்க்கின்றோம் ஆசிரியர் சார்.

      Delete