Wednesday, January 12, 2022

தையும்...புதுக் கரும்பும்...!

 நண்பர்களே,

வணக்கம். திக்கெட்டும் பகைவர்கள் இளம் டெக்ஸை சூழ்ந்து நிற்க, திக்கெட்டும் தினுசு தினுசான பெயர்களுடனான வைரஸ்கள் நம்மை ரவுண்டு கட்டிச் சாத்தி வருகின்றன ! ஆய்வுக்கூடத்திலிருந்து பயங்கர வைரஸ் கிருமிகள் கொண்டதொரு டப்பியைத் தூக்கிக் கொண்டு ஓடிய தாத்தாவைப் பற்றி காரிகனின் அந்நாட்களது க்ளாஸிக் கதையொன்றில் வாசித்த போது த்ரில்லாக இருந்தது தான் ! ஆனால் நிஜ வாழ்வில் தெளிய வைத்துத், தெளிய வைத்து மொத்தும் முட்டுச் சந்து டெக்னீக்கை கற்று வைத்துள்ள இந்த வைரஸை பார்க்கும் போது பேஸ்தடிக்கிறது ! 

நிரம்ப எதிர்பார்ப்புகளோடு தமிழகப் பதிப்புலகமே எதிர்நோக்கியிருந்த சென்னைப் புத்தக விழா ஒத்தி வைக்கப்பட்டிருக்க, அதன் முதுகில் இம்முறையாவது நல்லபடியாக  சவாரி செய்திடலாமென்ற நம்பிக்கை பணாலாகிப் போயிண்டே !! So மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த வத்தல், வடாமை ஒதுக்கிய கையோடு - நமது ஆன்லைன் புத்தக விழாவுக்கு ரெடியாகி வருகின்றோம் ! 

நிஜத்தைச் சொல்வதானால் டிசம்பர் 31 தேதிக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சேதி கிட்டிய நொடியே அரக்கப் பறக்க ஒரு சிங்கிள் ஆல்பம் & ஒரு டபுள் ஆல்பம் என 2 out of sylabus இதழ்களை ரெடி செய்திட ஆரம்பித்து விட்டிருந்தேன் ! ஏற்கனவே சென்னை விழாவுக்கென ரெடி செய்திருந்ததொரு மாயாவி மறுபதிப்பும் மேஜையின் ஓரத்தில் காத்திருந்தது ! So அவற்றுடன் லயன் லைப்ரரி # 1 - TEX க்ளாஸிக்ஸும் இணைந்திடும் போது, மொத்தம் 4 ஸ்பெஷல்ஸ் இந்த ஆன்லைன் விழாவின் highlight ஆக அமைந்திடுமென்று திட்டமிட்டிருந்தேன் ! ஆனால் no Chennai Bookfair என்றானவுடன், மாயாவி பின்சீட்டுக்கு நகர்ந்து விட்டிருந்தார் ! And ஏற்கனவே FFS ; இன்னும் காத்திருக்கும் வேதாளன் ஸ்பெஷல் என்ற ஹெவி மீல்சுக்கு நடுவே இந்த ஸ்பெஷல் சமோசாக்களையும், பாவ் பாஜியையும் வம்படியாய்த் திணித்தால், அஜீரணமாகிப் போகுமென்ற பயம் தொற்றியது ! 'ரைட்டு...சமோசா மட்டும் இருக்கட்டும், பாவ் பாஜி வாணாம் ; சிங்கிள் ஆல்பம் மட்டுமாவது ஓ.கே. ' என்று அடுத்த மகா சிந்தனை எழுந்தது ! ஆனால் FFS புக்கில் பொம்மை பார்க்கும் படலத்தைத் தாண்டவே இன்னும் நம்மில் நிறைய பேருக்கு அவகாசம் கிட்டில்லா - என்பதை கவனித்த போது, சமோஸாவையும் பதுக்கி விட்டேன் ! So  வேறேதேனுமொரு வேளைக்கு அவை காத்திருக்கும் ! 

இந்தத் தருணத்தில் ஒரு விஷயம் நம் கவனத்தைக் கோருவதாய் எனக்குப் படுகிறது ! இந்த "குண்டு புக்" மோகங்கள் என்பனவெல்லாம், நமது   முன்னாட்களது வாசிப்பு வேகங்கள் சார்ந்த 'பழைய  நெனைப்புடா பேராண்டி !' அனிச்சைக் குரல்கள் என்றே இப்போதெல்லாம் தோன்றுகிறது ! அழுத்தமான கதைக்களங்களெனில்,சேர்ந்தார் போல 25 பக்கங்களை வாசிக்கும் நேரமோ, பொறுமையோ இன்றைக்கு நம்மில் அநேகருக்கு இருப்பின், லைனாக அவர்கள் அனைவருக்குமே மெரினா பீச்சின் ஓரமாய் சிலைகளை வைத்து விடலாம் என்பேன் ! ஏற்கனவே நிறைய பேரின் போட்டோக்கள் நமது மெயில்பாக்சில் உள்ளன எனும் போது, சிலை செய்ய டகாலென்று ஆர்டர் தந்து விடலாம் !! செல்போன் நோண்டல்கள் ; வாட்சப் அளவளாவல்கள் ; ரீல்ஸ் குட்டி வீடியோக்கள் ; இன்ஸ்டா ஊர்வலங்கள் ;  OTT தளங்களில் ரக ரகமாய் சினிமாக்கள் - என்ற நமது மின்மய அன்றாடங்களுக்கு மத்தியில் நெடும் வாசிப்புகளுக்கு நேரம் திரட்டுவது குதிரைக் கொம்பென்பது புரிகிறது ! Of course - "புழைப்பு..புழைப்பு" என்றதொரு சமாச்சாரத்தையும் இடையிடையே பார்க்க வேண்டியதும் இருக்கும் தான் !! 

So நமது SMASHING '70ஸ் concept இந்நாட்களுக்கு பொருந்திடுமென்றே தோன்றுகிறது ! ஒவ்வொரு கதையும் மிஞ்சிப் போனால் 20 பக்கங்கள் or 22 பக்கங்கள் தான் ; and ஒவ்வொன்றுமே தனித்தனி one shots தான் எனும் போது, காலையில் பாரியாளுக்கு டீ போட தண்ணீர் கொதிக்க வைக்கும் வேளையில் ஒரு கதை ; ரைஸ் குக்கரில் சோறு பொங்குவதை மேற்பார்வை செய்யும் தருணங்களில் இன்னொரு கதை ; சீக்கிரமாய் துணி காயப்போட்டு முடித்து விட்டால், மொட்டை மாடியில் வைத்தே இன்னொரு கதை என்று முடித்து விடலாம் தான் !! Intense ஆன நெடுந்தொடர்களை இனி கணிசமான யோசனைகளுக்குப் பின்னேயே கையில் எடுத்திட வேண்டும் என்பது புரிகிறது ! And ஜவ்வுமிட்டாய்ப் பார்ட்டிகளுக்கு கல்தா தந்து விட்டு, crisp ஆக ரெடி செய்துள்ள நடப்பாண்டின் கமர்ஷியல் அட்டவணையினை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன் ! Going ahead, இனி முழுக்க முழுக்கவே entertainers-க்கு மட்டுமே நம் மத்தியில் இடமிருக்கும் என்பது புரிகிறது ! 

இங்கேயொரு கேள்வி guys : "இரத்தப் படலம்" போலான நெடும் தொடரினை 1986-ல் துவங்கி God knows when வரையிலும் நாம் அத்தியாயம் அத்தியாயமாகவே வாசித்து வந்திருக்கிறோம் ! So இனி வரும் நாட்களில் "தொகுப்புகளாய் வாசிப்போம்" என்ற கொடியினை கிட்டங்கிக்குள் கிடத்தி வைத்து விட்டு, "நிதானமாய் வாசிப்போம்" என்ற கொடியினைக் கையில் எடுத்தால் என்ன ? ஜேசன் ப்ரைஸ் ஆல்பங்களை அடுத்தடுத்த 3 மாதங்களில் வெளியிட்டது போல, இனிமேல் கண்ணில்படக்கூடிய 3 பாக / 5 பாக ஆல்பங்களை மாதாந்திரத் தவணைகளில் முயற்சிப்பது பற்றிய உங்களது அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ் ? End of the day - வாங்கும் இதழ்களை நீங்கள் வாசித்திட வேண்டும் என்பதே நமது ஒரே அவா ; so அதற்கு உதவிடக்கூடிய எதுவாயினும் worth some thought ! யோசியுங்களேன் நண்பர்ஸ் ? 

Of course - வாசிப்புக்கென இன்னமும் நேரமும், பொறுமையும் கொண்டுள்ள நண்பர்களும் இங்கு கணிசம் என்பதை மறுக்கவே மாட்டேன் ! அவர்களின் உத்வேகங்களே நம்மை நகர்த்தி வரும் தூண்டுகோல்கள் என்பது யதார்த்தம் ! But sadly அவர்களது எண்ணிக்கை குறைச்சல் என்பதுமே யதார்த்தம் ! இங்கு தான் புதிய தலைமுறையினை ; குட்டீஸ் தலைமுறையினை நமது 'பொம்ம புக்' அரங்கிற்குள் நுழைத்திடும் அவசியங்கள் முன்னெப்போதையும் விட ஸ்பஷ்டமாய் மிளிர்கின்றன !! அவர்கள் நம்மைவிடவும் இப்போதெல்லாம் சூப்பர் பிசி என்பது தெரிந்த சமாச்சாரம் தான் ; ஆனால் குட்டிக்கரணம் அடித்தேனும் அவர்களை நமது பொம்ம புக் உலகிற்குள் நுழைக்க முயற்சிப்பது order of the day என்பேன் ! 

'ஏன்டாப்பா டேய்...நீ போடற கதையைப் படிச்சி எனக்கே அப்பப்போ தலைமாட்டிலே சாவிக்கொத்தையும், பூரிக்கட்டையையும், விளக்குமாத்தையும் வைச்சுக்க வேண்டி போகுது ; இந்த அழகிலே புள்ளீங்களை இதனுள்ளாற கூட்டியாறதா ? விளங்குனாப்டி தான் !' என்ற மைண்ட்வாய்ஸா ? No worries guys ! பசங்களை நம் உலகினுள் அழைத்து வருவதன் முதற்படியாய் நாமே ஏன் அவர்களின் உலகுக்குள் நுழைந்து பார்க்கக்கூடாது ? 'இவன் ரொம்ப குழப்புறானே ?!' என்ற கவுண்டர் மைண்ட்வாய்ஸ் கூட கேட்கிறது இங்கே ! நான் சொல்ல வருவது சிம்பிள் !! உலகெங்கும் குட்டீஸ்களுக்கென ஒரு செட் கதைகள் புழக்கத்தில் உண்டு தானே - அலாவுதீனும் பூதமும் ; அலிபாபாவும் 40 திருடர்களும் ; ஜாக் & தி பீன்ஸ்டாக் ; சிண்ட்ரெல்லா இத்யாதி, இத்யாதி  என்று ! அவற்றையே நம் குட்டீஸ்களுக்கு காமிக்ஸ் வடிவில் தந்தாலென்ன ? 

To cut a long story short, சென்றாண்டின் ஒரு பொழுதினில் இது சார்ந்த ஒரு அலசலுக்குள் ஜூனியர் எடிட்டரும், நானும் புகுந்திருந்தோம் ! And அதன் பலனாய் நமது படைப்பாளிகளிடமே இந்த classic fairy tales - காமிக்ஸ் வடிவங்களில் இருப்பதைக் கண்டறிந்தோம் ! அவர்கள் உருவாக்கியிருந்த ஆல்பங்கள் கீழ்க்கண்ட template-ல் இருந்தன :

  • 30 பக்கங்களுக்கு காமிக்ஸில் கதை சொல்லும் முயற்சி !
  • 10 பக்கங்களுக்கு அதே கதையினை சுலப நடையில், வரிகளில்  சொல்லும் முயற்சி !
  • 8 பக்கங்களில் அந்தக் கதையின் ராஜ, ராணி, மந்திரி, ஆனை, வாத்து, கரடி, குரங்கு - என சகலத்தையும் சுலபமாய் வரைந்திடும் பயிற்சிப் படலம் !

So 48 பக்கங்களில் நம் குழந்தைகளுக்குத் அழகானதொரு கதையினை வெவ்வேறு வடிவங்களில் சொல்வது மட்டுமன்றி, அவற்றை வரைந்து பார்க்கும் ஆர்வங்களையும் இந்த ஆல்பங்களில் நிறைத்திருப்பதாய் எனக்குப் பட்டது ! என்ன ஒரு சிக்கல் - காமிக்ஸ் பக்கங்களில், முழுக்க முழக்கவே அந்நாட்களில் சார்லி சாப்ளின் திரைப்படங்களை போல silent பாணியிலேயே கதைகளை நகர்த்தியிருந்தனர் - சுத்தமாய் டயலாக் இல்லாமல் ! கொஞ்சமேனும் வாசிக்க வரிகளின்றிப் போனால் சுகப்படாதே ? என்று நெருடிட, படைப்பாளிகளிடமே கேட்டேன் - "இதில் கதையை நகற்றும் பாணியில் வரிகளை நாங்கள் சேர்த்துக் கொள்ளலாமா ?" என்று ! சிறிது சிந்தனைக்குப் பின்பாய் ஒரேயொரு மாதிரிப் பக்கத்தை ரெடி பண்ணிக் காட்டச் சொல்லி அவர்களும் கோரிட, அடிச்சுப் பிடித்து அனுப்பி வைத்தேன் ! படைப்பாளிகளும் ஓ.கே. சொல்லிட, நமது லயன் லைப்ரரி வரிசையினில் மெய்யான குட்டீஸ் ஐட்டத்தை நுழைத்திடும் திட்டம் ஊர்ஜிதம் கண்டது !  இது 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' சமாச்சாரமெல்லாம் கிடையாதென்பது உறுதி ; அமர் சித்ர கதா / டிங்கிள் / பூம்பட்டா போன்ற இதழ்களெல்லாம் இதற்கு அண்ணனான உருவாக்கங்களை நமக்குக் காட்டியுள்ளனர் என்பதை நன்றாகவே அறிவேன் தான் ! ஆனால் இந்த ஒரே புக்கில் காமிக்ஸ்-சிறுகதை-சித்திரம் என்ற concept கொஞ்சம் புதுசு என்பதோடு,  வீட்டிலிருந்தபடிக்கே ஆன்லைன் க்ளாஸ்களில் கரணமடிக்கும் வாண்டுகளுக்கு கொஞ்சமேனும் பொழுதுகளைப் போக்க இந்த 3-in-1 உதவிடக்கூடும் என்று நினைத்தேன் ! 

இந்த முயற்சி வெற்றி காணுமா ? சொதப்புமா ? என்றெல்லாம் நான் பெரிதாய் மண்டையைப் பிய்த்துக் கொள்ளவில்லை என்பதற்குக் காரணங்கள் 2 உண்டு ! பிய்க்கும் அளவுக்கு அங்கே எதுவும் கிடையாதென்ற obvious முதல் காரணத்தைத் தாண்டி, இந்த 50 ஆண்டுப் பயணத்தினில், நமது ஜூனியர்களுக்கானதொரு exclusive சமாச்சாரமாய் நாம் எதையும் செய்திருக்கவில்லை என்ற உறுத்தல் தான் காரணம் # 2 ! மிஞ்சிப் போனால் ஒரு புக்கின் filler pages-களில் இடம்பிடித்திருக்கக்கூடிய கபிஷோ ; விச்சு-கிச்சுவோ ; சமீபத்தைய எலியப்பாவோ குட்டீஸ்களின் கவனங்களை ஈர்த்திருக்கலாம் தான் ! இன்னும் ஒரு படி மேலே போனால், ரின்டின் கேன் ; லக்கி லூக் போன்ற ஆல்பங்கள் புரட்டிப் படம் பார்க்கும் அளவுக்காவது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம் ! ஆனால் - "அவர்களுக்கே அவர்களுக்கானது" என்று சொல்லும் விதமாய் (நம்மிடம்) எதுவும் இல்லை என்பது தானே நடைமுறை ?! So முயற்சித்துத் தான் பார்ப்போமே - இந்தத் தடமானது நமது ஜூனியர்களின் முகங்களில் பல்ப் எரியச் செய்கின்றதா ? அல்லது எனது சொட்டை மண்டைக்கொரு பல்ப் வாங்கித் தருகிறதா என்று ?! 

This is how it will pan out....

  1. CINDERELLA (சிண்ட்ரெல்லா)
  2. JACK & THE BEANSTALK (பீன்ஸ் கொடியில் ஜாக் ! )
  3. SNOW WHITE (பனித்துளி இளவரசி)
  4. THE UGLY DUCKLING (எல்லாம் அழகே)

ஆகிய 4 க்ளாஸிக் கதைகள் April'22 முதல் சீரான இடைவெளிகளில் வெளிவந்திடும் ! 

**நமது ரெகுலர் (லக்கி லூக்) சைசில் .. 
**48 வண்ணப் பக்கங்களுடன் ..  
**ரூ.100 விலையில் ..

ஒவ்வொரு இதழும் இருந்திடும் ! 

And இந்த இதழ்கள் நமது ரெகுலர் இதழ்களுடன் ஒரே பார்சலில் ஒரு போதும் பயணிக்காது !! So 4 இதழ்களுக்குமான shipping cost (தமிழகத்தினுள்) ஆக ரூ.25 x 4 = ரூ.100 என்று இருந்திடும் ! 

ரூ.500-க்கு உங்கள் வீட்டுக் குட்டீசின் பெயரில் சந்தா செலுத்திடும் பட்சத்தில், சந்தாக்கள் பதிவு செய்யப்படுவதே அவர்களின் பெயர்களில் தானிருக்கும் & பார்சல்கள் அவர்களது பெயர்களுக்கே அனுப்பிவைக்கப்படும் !  So இனி வீட்டுக்குள் நுழையும் போது உரக்கவோ, கிசுகிசுப்பாகவோ - 'எனக்கு காமிக்ஸ் பார்சல் வந்துச்சா ?' என்ற குரல் கொடுப்பது நீங்கள் ஒருவராக மட்டுமே  இருந்திடக் கூடாதென்பதற்கே இந்த ஏற்பாடு ! 

And ஒவ்வொரு புக்கின்  முதல் பக்கத்திலும்  - "இந்த புக் Master / Ms.__________ன்   பொக்கிஷம் !" என்று அச்சிடப்பட்டிருக்கும் !  கெத்தாக அவர்களது பெயர்களை அதற்குள் கிறுக்கி வைத்துக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ளட்டுமே ? 

அப்புறம் இரண்டோ,மூன்றோ வாரங்களுக்கு முன்பாய், "குட்டீஸ்களுக்கொரு  ஏற்பாடு & அது குறித்து உங்களின் ஒத்தாசைகள் எனக்கு அவசியமாகிடும்" என்று நான் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம் ; நான் உங்களிடம் கோரிடப் போகும் ஒத்தாசைகள் மூன்று விதங்களிலானவை :
  1. உங்கள் இல்லங்களில் இவற்றை வாசிக்கக்கூடிய வயதுகளில் சுட்டிகள் இருக்கும் பட்சத்தில் - சந்தா ப்ளீஸ் !
  2. இந்த இதழ்கள் வெளிவரும் மாதங்களில் மட்டுமாவது, பிள்ளைகளுக்கு அவற்றை வாசித்துக் காட்டிடவும், கதை சொல்லிடவும், படம் வரைந்து காட்டி குஷிப்படுத்திடவும் அவசியம் அவகாசம் ஒதுக்கிக் கொள்ள வேண்டுமென்பது எனது request # 2 !
  3. பள்ளிகளுக்கு வழங்கிட ; உங்கள் நட்பு வட்டத்தினுள் / சுற்றத்தாரின் மத்தியில் அன்பளிப்பு தந்திட இவை உதவிடக்கூடும் ! So maybe worth a thought please ?
Last but not the least - ஒவ்வொரு புக்கின் பின்பகுதியிலும் இடம்பிடித்திடவுள்ள சிறுகதையினை தமிழில் எழுதி அனுப்பிட உங்கள் முன்னே கோரிக்கை # 4 வைக்கின்றேன் !! காமிக்ஸ் ஆக்கத்தினை நான் பார்த்துக் கொள்கிறேன் guys ; சிறுகதை வடிவத்தில் தொடர்ந்திட வேண்டிய வரிகளை சிம்பிளான, அழகான தமிழில் எழுதி அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ? The best ஆகத் தேர்வாவதை அந்தந்த புக்கினில் பயன்படுத்திக் கொள்வோம் ! 

முதல் இதழாக வரவிருப்பது சிண்ட்ரெல்லா ! உலகத்துக்கே தெரிந்த இந்தக் கதையினை நம் வீட்டுப் பிள்ளைகள் ரசிக்கும் பாணியில் அழகாய் தமிழில் எழுதி அனுப்பிடுங்களேன் ? 










So "கதை சொல்லும் காமிக்ஸ்" என்ற இந்த குட்டீஸ்களுக்கான தொடருக்கு நமது ஆன்லைன் புத்தக விழாவிலிருந்து சந்தா சேகரிப்பினைத் துவங்கிடவுள்ளோம் ! தொடரவுள்ள 4 நாட்களில் (13 ; 14 ; 15 & 17 ஜனவரி) உங்களுக்கான புக்ஸ்களை ஆர்டர் செய்திடும் போது இவற்றிற்கும் சேர்த்து ஏற்பாடு செய்திட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ! 

இவை  நமது  மாமூலான outlet-களில் எத்தனை தூரத்துக்கு விற்பனை காணும் என்பதோ ; முகவர்களில் எத்தனை பேர் வாங்குவர் என்பதோ சத்தியமாய்த் தெரியாத சமாச்சாரங்களே ! So சத்தமின்றி இது ஜெயிக்கவும் கூடும் ; பிரமாதமாய் சொதப்பவும் கூடும் ! வெற்றியோ, தோல்வியோ, we gave it a decent try என்ற திருப்தி இதனிலிருந்து எடுத்துச் செல்ல இயலுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! Fingers crossed !

And now, here you go with details for the Online Book Fair folks !
  • சமீபத்தைய டெக்ஸ் ஆல்பங்களில் எல்லாமே ஸ்டாக் நஹி என்பதில் ரகசியங்கள் கிடையாது ! கொரோனா கொடுமைகளுக்குப் பயந்து நாம் பிரிண்ட்ரன்னைக் குறைத்திருந்தது ஒரு காரணமெனில், ஊருக்கே தெரிந்த காரணம் # 2 ! So 8 டைட்டில்களில் ஒரு சிறிய அளவு மறுக்கா ரெடி பண்ணியுள்ளோம் ! 
  • அப்புறம் 10 ஆண்டுகளுக்கு முன்னே LION NEW LOOK ஸ்பெஷல் இதழின் 2 கதைகளுள் ஒன்றான "வானவில்லைத் தேடி !" (லக்கி லூக்)- ஒரு சிங்கிள் ஆல்பமாய் ; ஒரிஜினல் அட்டைப்படத்துடன் வருகிறது !
  • And of course - TEX க்ளாசிக்ஸ் 1 - பழிக்குப் பழி - முழுவண்ணத்தில் ; ஹார்டுகவரில் ; ஏகப்பட்ட அட்டைப்பட நகாசு வேலைகளுடன் தக தகத்திடவுள்ளது !
  • அப்புறம் எல்லா கொள்முதல்களுக்குமே மாயாவி போஸ்டர் நமது அன்புடன் !
  • அது மாத்திரமன்றி, கடைசி நிமிடத்தில் போனெல்லியில் சம்மதம் வாங்கியாச்சு இன்னொரு 'தல' போஸ்டருக்கு ! So இந்த பொங்கல் புத்தக விழாவின் எல்லா கொள்முதல்களுக்குமே ஒரு TEX போஸ்டரும் நமது அன்புடன் !
And தினசரி ஊக்கங்களாய் -

*கூடுதலான தொகைக்கு ஆர்டர் செய்திடும் நண்பருக்கு - "இரத்தப் படலம்" Black & White தொகுப்பு பரிசாகிடும் ! 

*கூடுதலான எண்ணிக்கை புக்ஸ் வாங்கிடும் நண்பருக்கு (சமீபத்தைய) கலரிலான "கழுகுமலைக் கோட்டை" பரிசாகிடும் !

ஒவ்வொரு தினத்தின் வெற்றியாளர் அன்றிரவு இங்கே அறிவிக்கப்படுவார் ! And as usual - கூடுதல் டிஸ்கவுண்ட் கொண்ட இதழ்கள் ; CINEBOOK ஆங்கில இதழ்களுக்கு டிஸ்கவுண்ட் ; ரூ.1200-க்குக் கூடுதலான கொள்முதல்களுக்கு தமிழகத்தினுள் கூரியர் கட்டணம் தள்ளுபடி - என்ற சலுகைகள் உண்டு ! 



PLEASE NOTE : ஜனவரி 16 - ஞாயிறன்று ஊரடங்கு என்பதால் நாமும் பூட்டியே இருப்போம். அதற்குப் பதிலாய் மறுதினம் (17 - திங்கள்) we will be around !

And here's the STOCK LIST :





ஷப்பா....ரெம்ப நேரமாய் கொத்தவால் சாவடியில் கூவிக் கொண்டேயிருக்கும் பீலிங்கு எழுவதால் நடையைக் கட்டுகிறேன் folks ! 

And அந்த LIVE QUIZ மேட்டர் பற்றி !!

சனிக்கிழமை மாலை 6 to 6-30-க்கு ஓ.கே.வாகிடுமா உங்களுக்கு ? And if yes - எத்தனை பேருக்குக் கலந்து கொள்ள தோதுப்படும் ? 

கொஞ்சமாச்சும் நண்பர்கள் தேறிடாத பட்சத்தில் தனியாய் டீ ஆத்துவது செம மொக்கையாக இருக்கும் ! So சொல்லுங்களேன் guys - உங்களின் சனி மாலை அட்டவணை இன்னான்னு ? அவ்விதம் அரங்கேறுவதாக இருப்பின் - QUIZ இருந்திடவுள்ளது - சிஸ்கோவின் "சத்தமாயொரு மௌனம்" & "என் பெயர் டேங்கோ" விலிருந்தே ! நீங்க ரெடியாகிறதை பொறுத்தே நானும் கேள்வி கேட்க ரெடியாகணும் ; becos அவற்றை எழுதிய நாட்களெல்லாம் ஏதோவொரு தூரத்து தினத்தில் என்பதாகப் புதையுண்டு கிடக்கின்றன மண்டைக்குள் ! 

Bye all ; see you around !!  அனைவருக்கும் முன்கூட்டிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! பொங்கலும், புதுக் கரும்புகளும், மட்டில்லா மகிழ்வுகளும் இல்லமெங்கும் இனிக்கட்டும் !

230 comments:

  1. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  2. புதுப்பதிவு.மகிழ்ச்சி.💞🌹💞

    ReplyDelete
  3. எட்டாவது நானா ?!

    ReplyDelete
  4. வந்தாச்சு.
    எல்லாருக்கும் வணக்கம்

    ReplyDelete
  5. தை பிறந்தால் நல்ல வழி பிறக்கும் தங்கமே விஜயன் சார் :-)

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. அருமை ஆசிரியரே!

      வாண்டு ஸ்பெஷல் அறிவித்த கையோடு நின்றுபோனதில் ஏக வருத்தம் எனக்கு...

      இது நம் இல்லக் குட்டீஸ்களுக்கு செம அருமையான பரிசாக இருக்கும்.

      நிச்சயம் வெற்றிபெறும்.

      Delete
  7. புது வருடம் புது முயற்சி... அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார் 🎊🎉🎊🎉

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ### இந்த "குண்டு புக்" மோகங்கள் என்பனவெல்லாம், நமது முன்னாட்களது வாசிப்பு வேகங்கள் சார்ந்த 'பழைய நெனைப்புடா பேராண்டி !' அனிச்சைக் குரல்கள் என்றே இப்போதெல்லாம் தோன்றுகிறது ! ###

    இல்லவே இல்லை , குண்டு புக் இருக்கட்டும் சார்

    ReplyDelete
  10. Edi Sir..present போட்டுக்குங்க..

    ReplyDelete
  11. சனிக்கிழமை மாலை 6 to 6-30-க்கு ஓ.கே.வாகிடுமா உங்களுக்கு ?

    yes sir

    ReplyDelete
  12. ஐ ஜாலி குட்டீஸ் ஸ்பெஷல். சூப்பர் கோபால் சூப்பர்.

    ReplyDelete
  13. சார்@ லக்கி லூக் இதழ் & டெக்ஸ் க்ளாசிக் விலை விபரங்கள் ப்ளீஷ்...

    ReplyDelete
  14. ஜேசன் ப்ரைஸ் ஆல்பங்களை அடுத்தடுத்த 3 மாதங்களில் வெளியிட்டது போல, இனிமேல் கண்ணில்படக்கூடிய 3 பாக / 5 பாக ஆல்பங்களை மாதாந்திரத் தவணைகளில் முயற்சிப்பது பற்றிய உங்களது அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ் ?

    தொடர் கதைகளாக படிப்பது சிரமமில்லை சார். ஆனால் எதோ ஒரு காரணத்துக்காக அந்த தொடரை பாதியில் நிறுத்தி விடாமல் இருந்தால் எனக்கு ஓகே தான்

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம் நண்பரே - பெரும்பான்மையின் அபிப்பிராயங்கள் என்னவென்று !

      Delete
  15. //*கூடுதலான தொகைக்கு ஆர்டர் செய்திடும் நண்பருக்கு - "இரத்தப் படலம்" Black & White தொகுப்பு பரிசாகிடும் !

    *கூடுதலான எண்ணிக்கை புக்ஸ் வாங்கிடும் நண்பருக்கு (சமீபத்தைய) கலரிலான "கழுகுமலைக் கோட்டை" பரிசாகிடும் !//

    சொக்கா.. சொக்கா...

    ReplyDelete
  16. குழந்தைகளுக்கான முயற்சிக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள் சார். இப்பொழுது தான் மகள் அ ஆ படிப்பதால் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து தான் முயற்சி செய்ய வேண்டும்.

    குண்டு புக் தனி தனியே வெளியிடுவது வேண்டாம் என்பது எனது கருத்து. முதல் பாகம் நன்றாக இருந்தால் அடுத்த பாகம் வர காத்திருக்கும் நேரம் கொஞ்சம் கடுப்பாக இருக்கும்.

    முதல் பாகம் நன்றாக இல்லாத பட்சத்தில் அடுத்த அடுத்த பாகத்தின் மீதான ஈர்ப்பு இல்லாமல் போகும்.

    நல்லதோ கெட்டதோ ஒரே புக்காக வருவது எனக்கு ஓகே சார் தொடர்ந்து படிக்கும் போது தான் ஒரு திருப்தி வருகிறது.

    FFS அனைத்து புத்தகங்களும் படித்தாகிவிட்டது லயன் லைப்ரரி மற்றும் s70 தான் மீதம் நாட்களை கடத்த தேவை.

    சனி மாலை ஓகே தான் சார் 🙏🏼.

    ReplyDelete
  17. குழந்தைகளுக்கான சந்தாவுக்கு என்ன பெயர்? பணம் கட்டிட்டு ஆபிஸ்ல என்ன சந்தான்னு சொல்லனும்?

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி..."ஆந்தையின் இஸ்பெஸல்"னு சொல்லலாம் சார் ; அவர்களுக்கே இனி நாளை காலையில் தான் விபரம் சொல்லணும் !!

      "கதை சொல்லும் காமிக்ஸ்" (KSK சந்தா) !!

      Delete
    2. /* "கதை சொல்லும் காமிக்ஸ்" (KSK சந்தா) !! */

      எங்கேருந்து சார் இப்டி பேர் கண்டுபுடிக்கிறீங்க ? :-)

      Delete
    3. அதுக்கு எட்டு பேர் கொண்டதொரு குழு அமைக்க ஆசை தான் சார் ; ஆனாக்கா கம்பெனி நிதி நிலைமைக்கு அதெல்லாம் ஒத்து வராதென்பதால் - மோட்டைப் பார்த்த முதல் நொடியில் மனதில் ஓடும் பெயரை வைச்சுப்புடறது !

      Delete
  18. சனிக்கிழமை மாலை quizக்கு என் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள் சார்...

    ReplyDelete
  19. //சனிக்கிழமை மாலை 6 to 6-30-க்கு ஓ.கே.வாகிடுமா உங்களுக்கு //
    மாட்டு பொங்கல், வீட்டில் சாமி கும்பிட்டு முடிக்கவே இரவு 10ஆகிவிடும்

    ReplyDelete
  20. TEX க்ளாசிக்ஸ் 1 - விளம்பரத்தில் கானக்கோட்டை (பின்பக்க அட்டையில்) + பழிக்கு பழி என உள்ளது கோபால். அப்படி என்றால் இரண்டு கதைகளா கோபால்? உங்களின் நீளமான பதிவை படித்த பிறகு தோன்றிய கேள்வி இது கோபால் :-)

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க பரணி. கானக்க்கோட்டை + பழிக்குப் பழி.

      Delete
    2. நன்றி மகேந்திரன்

      Delete
  21. சனி மாலை ஓகே தான் சார் ஆனால் நான் வெறும் பார்வையாளராக மட்டும் கலந்து கொள்வேன் சார்.

    ReplyDelete
  22. //"சத்தமாயொரு மௌனம்" & "என் பெயர் டேங்கோ"//

    இனிமே தான் படிக்க ஆரம்பிக்கணும் (பொங்கல் லீவுல தான் படிக்க பிளான்), ஆனா படிச்சு முடிக்க முடியுமான்னு தெரியல.

    ReplyDelete
    Replies
    1. பரீட்சைக்குப் படிக்கும் வேகத்தில் படியுங்க நண்பரே !

      Delete
  23. ஒரு சந்தேகம் சார்...

    இந்த fairy tales முயற்சி மிக அருமையாக இருந்தாலும்... இந்தக் கதைகள் இப்பொழுதுள்ள குழந்தைகள் அனைவருக்கும் மிக மிக பழக்கமானதாயிற்றே... வேறு அதிகம் அறியப்படா fairy tales கதைகளை வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமே...!?

    என்னளவில் இது பக்கத்து இலைக்கு பாயாசம் போலத்தான்... என் பத்து வயது பையன்களிடம் இதைப்பற்றி கூறியபோது... பெரிதாக exciteஆகவில்லை... இவற்றை பல templateகளில் பார்த்துவிட்டதால் ஏற்பட்ட அயர்ச்சி என எண்ணுகின்றேன்... இதுவே வேறு அறியாத கதைகளாக இருப்பின்.... ஒரு வித்தியாச விருந்தாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து...

    ReplyDelete
    Replies
    1. Valid point sir...ஆனால் 10 வயதுப் பிள்ளைகள் இன்றைக்கு Quantum Physics படிக்க வல்லவர்கள் ! நமது target audience இன்னும் குட்டீஸ் !

      Delete
  24. ஆன்லைன் புத்தக விழா பற்றி மிக தெளிவாக சொல்லி உள்ளீர்கள், இல்லைனா புக் ஆர்டர் பண்ணிட்டு எப்போ புக் வரும்னு நிறய போன்கால் வரும். அருமை சார்.

    ReplyDelete
    Replies
    1. திங்கள் அரசு விடுமுறை ; செவ்வாய் தைப்பூசம் - என்று ஏகமாய் லீவுகள் (நமக்கில்லை தான்) காத்திருக்கும் போது நம்மாட்கள் வீணாய் மொத்துப்படக்கூடாதே என்ற முன்ஜாக்கிரதை தான் நண்பரே !

      Delete
  25. Sir, do we have an option to pay for Jumbo-4 during online book fair.

    ReplyDelete
    Replies
    1. You can just send a GPay payment anytime sir..and follow it up with an e-mail or a call !

      Delete
  26. கூடுதல் தொகை'ன்னா என்ன சார்?எனக்கு சரியாக புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதியிருப்பது ஒரு வண்டி சார் ; எங்கிருந்து கேட்கிறீர்களென்பது புரியவில்லையே ?

      Delete
    2. //*கூடுதலான தொகைக்கு ஆர்டர் செய்திடும் நண்பருக்கு - "இரத்தப் படலம்" Black & White தொகுப்பு பரிசாகிடும் ! //

      அவர் கேட்பது இதை தான்னு நினைக்குறேன்

      Delete
  27. மகனுக்கான முதல் சந்தாவை அனுப்பியாச்சு டியர் விஜயன் சார் .. 😍😍

    குறித்துகொள்ளவும் ..

    ReplyDelete
  28. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா...

    படு வேகமான ஆக்ஷன் திரில்லர் தான்; எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்பதும் உண்மைதான். ரகளையான வாசிப்பு அனுபவம் டபுள் டிக்...


    ஆனால் நிற்க.


    இரத்தப்படலம் முதல் ஆல்பம்... இடைவெளி... அடுத்த ஆல்பம்... இடைவெளி... ஆல்பங்ளுக்கிடையிலான நேரத்தில் மறுவாசிப்பு... அடுத்த ஆல்பம் வருவதற்கு முன் நினைவுபடுத்திக்கொள்ள பழைய ஆல்பங்கள் மீள்வாசிப்பு... என்றான காத்திருத்தல்... கதையோ மனப்பாடம்...

    ONOT:

    சில நண்பர்கள் இரத்தப்படலத்தைப் போல இல்லை... ஏதோ குறைகிறது என்ற சன்னமான விசும்பல்.

    ஒருவேளை ஜேசன் ப்ரைஸ் போல ஒவ்வாரு மாதம் ஒவ்வொரு பாகமாக வந்திருந்தால்

    ஒவ்வொரு பாகமும் மீள்வாசிப்பு செய்ய நேரம் கிடைத்திருந்தால்...

    ONOT முதல்முறை வாசித்து ரகளையான அனுபவத்தைத் தந்தாலும் முடித்தபின் சம்பவங்கள் மனதில் நிற்கவில்லை... மறுவாசிப்புக்கு பின்னர் கொஞ்சம் பரவாயில்லை.

    என்னுடைய கருத்து:

    இதுபோன்ற இன்டென்சிவான அதிக கவனத்தைக் கோரக்கூடிய கதைகளுக்கு ஜேசன் பிரைஸ் மெத்தடாலஜி சரியாக இருக்கும் என தோன்றுகிறது.

    மொத்தமாக மட்டும் படிப்பவர்களும் ஒன்றாக சேர்த்தபின்னர் படித்துக் கொள்ளலாம்.


    மற்றபடி டெக்ஸ், தோர்கல், போன்றவைகளை எவ்வளவு குண்டாக போட்டாலும் OK SIR.

    ReplyDelete
    Replies
    1. தனித்தனியா வரும்போது ஹார்ட்கவர் கிடைக்க வாய்ப்புருக்காது என்பதும் ஒரு குறை.

      Delete
    2. சுலபமாக படித்து புரிய சிங்கிள் ஆல்பம் வேண்டும்..

      பாதுகாத்து பத்திரப்படுத்த முழுதொகுப்பும் ஹார்ட் கவரோட வேண்டும்..

      ஆனால்...

      இருப்பதோ ..ஒரே வாய்ப்பு.!

      நான் என்ன செய்வேன்..!

      Delete
  29. "கதை சொல்லும் காமிக்ஸ்" சாரே நம்ப வீட்டில் நாலு குழந்தைகள் உண்டு சாரே. எங்களது குடும்பத்துக்கு ஒரு சந்தா பார்சல் சாரே :-)

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு குட்டி குழந்தைகளோட பெயர போட்டுக்கோங்கோவ் :-)

      Delete
  30. வணக்கம் சார்...

    கடந்த நான்கு நாட்களாக மீட்டிங் நடத்தி வருகிறோம்.

    நிறைய நண்பர்கள் ஜூம் உபயோகிக்க திணறுவது தெரிகிறது...

    ஆகையால் வாட்ஸ்அப் வழியே நடத்தினால் என்ன என்பதை உங்கள் வசம் விடுகிறேன்...

    J

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் எது வசதியோ - அதுவே எனக்கும் ஓ.கே. சார் ! நண்பர்களுடன் கலந்து பேசி, நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் சார் !

      Delete
    2. ஜனா வாட்ஸ்அப் குவாலிட்டி நன்றாக இருக்காது. மேலும் வாட்ஸ்அப் குரூப் காலில் சில லிமிடேஷன் இருக்கும் என நினைக்கிறேன்.

      Delete
  31. Zoom நாற்பது நிமிடங்கள் மட்டுமே.


    ReplyDelete
    Replies
    1. 40 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அவர்கள் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

      Delete
  32. இந்த சிரமங்கள் உள்ளதால் வாட்ஸ்அப்பே மேல்...

    ReplyDelete
  33. // அப்புறம் எல்லா கொள்முதல்களுக்குமே மாயாவி போஸ்டர் நமது அன்புடன் !


    அது மாத்திரமன்றி, கடைசி நிமிடத்தில் போனெல்லியில் சம்மதம் வாங்கியாச்சு இன்னொரு 'தல' போஸ்டருக்கு ! So இந்த பொங்கல் புத்தக விழாவின் எல்லா கொள்முதல்களுக்குமே ஒரு TEX போஸ்டரும் நமது அன்புடன் // 🙌🙌

    ReplyDelete
  34. FFS 1

    தனியாக புத்தக அட்டைகள் கேட்டதற்கு அட்டைகளில் அவைகளை கொண்டு வந்தது நல்ல யோசனை சார். அட்டைகளை பார்க்கவும் நன்றாக இருந்தது.

    எனது குடும்ப புகைப்படம் சிறப்பாக வந்துள்ளது நன்றிகள் பல.

    FFS வெளியீடுகள் அனைத்துமே ஒரு ஹாலிவுட் படத்திற்கான கதையம்சம் கொண்டவைகளாக இருந்தது சிறப்பு.

    ஆல்பா

    இதுவரை கருத்து கூறிய நண்பர்கள் அனைவரும் சரியாக தான் கூறியுள்ளார்கள்.
    இக்கதையில் ஆல்பா ஒரு ஹீரோ என்று கண்டிப்பாக சொல்ல முடியாது கதையில் ஒரு கதாபாத்திரம் அவ்வளவுதான்.

    கொஞ்சம் குழப்பமான கதைக்களம் இருந்தாலும் காப்பாற்றியது மொழிபெயர்பு தான். அவ்வளவு வசனங்கள் சலிக்காமல் எழுதிய உங்கள் கைகளுக்கு தான் பூங்கொத்து கொடுக்கவேண்டும் சார்.

    ஸ்பாய்லர் அலர்ட்:

    இரண்டு நாட்டின் ஒற்றர்கள் குழு சேர்ந்து செய்யும் சதியாட்டம் நடுவில் மாட்டிக்கொண்ட ஹீரோ. கடைசி வரைக்கும் அவராக எதுவும் செய்யவில்லை மற்றவர்கள் செய்ய சொல்வதை மட்டும் செய்து கொண்டு போகிறார்.

    மற்றபடி ஒரு த்ரில்லர் படத்திற்கு தேவையான திருப்பங்கள் ஆக்சன் காட்சிகள் காதல் காட்சிகள் கதாபாத்திரங்கள் என நன்றாக இருக்கிறது.

    என்ன சிலசமயம் கதை எங்கே போய் கொண்டிருக்கிறது என்ற சலிப்பு மட்டும் சில சமயம் வருகிறது.

    மொத்தத்தில் ஒரு முறை வாசிக்க உகந்தது.

    ஆல்பா தேருவாரா என்பது வரும் கதைகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

    சிஸ்கோ -

    இதிலும் சிஸ்கோ நமது வழக்கமான ஹீரோவாக ஏற்று கொள்ள முடியவில்லை, முதல் காட்சியிலேயே ஒரு கொலை செய்கிறார் பிரஸிடெண்ட்காக, அதற்கான விளக்கம் இருந்தாலும் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    அக்கொலையை ஒருவன் பார்த்து விட அவனை கொல்ல தொடர்ந்து போக அதில் இருக்கும் குழப்பம் இடையில் ஒரு வில்லன் அதற்கான காரணமும் ஓகே ரகம் தான்.

    யோசித்து பாருங்கள் இது போன்ற ஒரு திரைப்படம் இருந்தால் கொன்றவன் தான் வில்லனாக இருப்பான் அக்கொலையை பார்த்த சாமான்யன் தான் ஹீரோவாக இருப்பான் கடைசியில் வில்லனை கொன்று சாமான்ய ஹீரோ எப்படி தப்பித்தான் என்பதே கதையாக இருக்கும் அப்படி இருக்க வில்லனை எப்படி ஹீரோ என எடுத்துக்கொள்ள?

    இவரும் அடுத்து வரும் கதைகளை பொறுத்தே முடிவெடுக்க வேண்டும்

    டேங்கோ-

    பிக் ஆப் த லாட் என கூறலாம். Man on Fire போன்ற திரைப்பட கதை.

    மறைந்து வாழும் ஹீரோ எதார்த்தமாக ஒரு சிறுவன்/சிறுமி ஆபத்தில் சிக்கி கொள்ள அவர்களை காப்பாற்றும் ஹீரோ.

    சிம்பிள் ஆன கதைகளம் நல்ல மொழிபெயர்ப்பு, தேவையான அளவு ஆக்சன் மற்றும் காதல் காட்சிகள், ஒரே பாகத்தில் முடிந்த கதை என அதன் அட்வான்டேஜ் சொல்லிக்கொண்டே போகலாம்

    மொத்தத்தில் கண்டிப்பாக படிக்க வேண்டிய கதை. டேங்கோவை இருகரம் நீட்டி வரவேற்கிறேன். அடுத்த கதையை படிக்க ஆவலுடன்

    ReplyDelete
    Replies
    1. விரிவான அலசல் கிருஷ்ணா !

      உள்ளதைச் சொல்வதானால் FFS புக்குடன் தந்த ஒவ்வொரு புக்மார்க்கிலும், அந்தந்தக் கதைகள் குறித்த preview தர எண்ணியிருந்தேன் & அவ்விதமே தயாரும் செய்திருந்தோம். ஆனால் கதைக்குள் புகும் முன்பாய் அந்தக் குறிப்புகள் சுவாரஸ்யத்துக்கு வேட்டு வைத்து விடுமோ, என்ற பயத்தில் கடைசி நிமிடத்தில் மாற்றி விட்டேன் !

      ALPHA-வுக்குத் தந்திருந்த குறிப்பின் முதல் வரியே - "ஜேம்ஸ் பாண்ட் போலானவர் ; ஆனால் ஜேம்ஸ் பாண்ட் அல்ல !" என்பதே !! உளவாளிகள் என்றாலே அதிரடிப் பார்ட்டிகள் ; சர்வதேச டூர் பார்ட்டிகள் ; பார்ட்டிகளில் அழகான அம்மணிகளைக் கரெக்ட் செய்திடும் ஜொள்ளு பார்ட்டிகள் ; ஸ்டைலாக "shaken ..not stirred " என்றபடிக்கே உயர்தரச் சரக்கிருக்கும் கிளாஸை நாசூக்காய் உதடுகளுக்கு உயர்த்தும் ரோமியோக்கள் - என்பதானதொரு பிம்பத்தை இயன் பிளெமிங் உபயம் செய்துவிட்டுப் போயுள்ளார் என்பேன் ! நிஜத்தினில் அவர்களது பிழைப்புகள் அவ்விதம் இராதென்பதே எனது யூகம் & புரிதல் !

      ஓரிரு நாட்களுக்கு முன்னே நமது ஸ்பெஷல் பிரான்ச் போலீசாரின் அல்லல்கள் பற்றி சவுக்கு ஷங்கரின் வீடியோவினைப் பார்த்தேன் ; அவர்களது பணிகள் anything but glamorous என்பது புரிகிறது ! So ஜேம்ஸ் பாண்டின் அளவுகோல்கள் கொண்டு பார்க்கும் போது ALPHA falls short ! ஆனால் யதார்த்தத்துக்கு நெருங்கிய உளவாளி என்ற ரீதியில் பார்த்தால் - நிச்சயமாய் not bad at all என்பேன் கிருஷ்ணா !

      Delete
    2. And சிஸ்கோவைப் பொறுத்தவரையிலும் அவர் கதையின் நாயகரே அன்றி - நமது சினிமாக்கள் காலங்காலமாய் பில்டப் செய்து தந்திருக்கும் 'நல்லவன்-வல்லவன்-நாலும் தெரிந்தவன்' என்ற goody-goody கதாநாயகன் அல்ல ! மனுஷனிடம் முன்கோபம் உண்டு ; மனிதாபிமானம் லேது ; பெண்களை மதிக்கும் இயல்பு கொண்டவனல்ல ; மரியாதையோ, ஒழுக்கமோ மருந்துக்கும் கிடையாது ! ஆனால் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியும் களப்பணியாளன் !

      கொஞ்ச காலம் முன்னே, துருக்கிய மண்ணிலிருந்த தங்களின் தூதரகத்தில் கண்டம்துண்டமாய் அறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட சவூதி அரேபிய பிரஜையான ஜமால் கஷோகியின் கேஸ் நினைவுள்ளதா கிருஷ்ணா ? (https://en.wikipedia.org/wiki/Assassination_of_Jamal_Khashoggi )

      துள்ளத்துடிக்க அந்தப் பத்திரிகையாளரைக் காலி செய்தது எந்த உளவுத்துறை ? என்பது குறித்து NEW YORK TIMES ஒரு தலையங்கமே எழுதியது - பகிரங்கமாய் ! And KGB ; Mossad போன்ற உளவுத்துறைகளின் இன்னொரு முகம் பற்றி உலகமே அறியும் தானே ? So இந்த ராஜாங்கச் சதுரங்க ஆட்டங்களில் சிஸ்கோ போன்றோர் வெறும் சிப்பாய்களே ; நிஜ ராஜாக்களும், ராணிகளும்,எங்கெங்கோ மறைவிலிருக்கும் உயர்மட்டத்தினர் !

      By no means சிஸ்கோ ஒரு conventional hero ஆகக் காட்சி தரப்போவதில்லை ; நிஜத்தின் பிரதிபலிப்புகளுக்கு நெருக்கமானதொரு கதாப்பாத்திரம் மட்டுமே ! தொடரவுள்ள அத்தியாயங்களில் பாருங்களேன் - ரவுண்டு கட்டி அடிக்கவுள்ளார் !

      Delete
    3. விளக்கங்களுக்கு நன்றிகள் பல சார். ஆல்பா அவரது அறிமுக சாகசம் தற்போது தான் ட்ரைனிங் முடிந்து அணியில் சேர்ந்துள்ளதால் அவரும் இப்பொழுது தான் கற்றுக்கொள்கிறார் என்று கொள்ளலாம் சார், எதார்த்த ஹீரோவாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் அவரது திறமை வெளிப்படுத்தும் இடங்களும் வைத்திருக்கலாம் கதாசிரியர் என்பதே எனது கருத்து சார். கண்டிப்பாக வரும் சாகசங்களில் அதில் மாற்றங்கள் இருக்கிறதா என்று.

      நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை சார் உளவுத்துறைகளின் நிஜ முகங்கள் அவ்வாறாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதில் மாற்று கருத்து இல்லை சார். சிஸ்கோவின் வரும் சாகசங்கள் அவரை எங்கு கொண்டு செல்கின்றன என்று பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் சார்.

      Delete
  35. போஸ்டரெல்லாம் ஆன்லைன்க்கு மட்டும்தானா ? அல்லது போன் பண்ணி பணம் கட்டி புக் செச்சௌதாலும் உண்டாங் கஎடி ?

    ReplyDelete
    Replies
    1. ஆட்டைக் குட்டியோடு போட்டாலும், குட்டியை தூக்கி ஆட்டோடு போட்டாலும் எவ்வித வித்தியாசமும் இராது நண்பரே !

      Delete
  36. அழுத்தமான கதைக்களங்களெனில்,சேர்ந்தார் போல 25 பக்கங்களை வாசிக்கும் நேரமோ, ////பொறுமையோ இன்றைக்கு நம்மில் அநேகருக்கு இருப்பின், லைனாக அவர்கள் அனைவருக்குமே மெரினா பீச்சின் ஓரமாய் சிலைகளை வைத்து விடலாம் என்பேன்///

    சத்தியமான உண்மை சார்.

    இரத்தப்படலம் B/W.ஐ கிடைத்த கேப்பில் எல்லாம் படித்து ஏப்பம் விட்ட காலங்கள் பழங்கதையாகிப் போயின.!

    So sad..😔😔😔

    ReplyDelete
    Replies
    1. டெக்நாலஜி யுகத்தில் நாம் ஈட்டுவது நிறைய ; இழப்பது கொஞ்சம் ! தவிர்க்க இயலா flipside சார் !

      Delete
  37. ஜேசன் ப்ரைஸ் ஆல்பங்களை அடுத்தடுத்த 3 மாதங்களில் வெளியிட்டது போல, இனிமேல் ///கண்ணில்படக்கூடிய 3 பாக / 5 பாக ஆல்பங்களை மாதாந்திரத் தவணைகளில் முயற்சிப்பது பற்றிய உங்களது அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ்///

    சிங்கிள் ஆல்பங்கள் சட்டெனப் படிக்க வசதியாக உள்ளது சார்.

    ReplyDelete
    Replies
    1. மாறிடும் காலங்களுக்கேற்ப நாமும் மாறிக் கொள்ள வேண்டிப் போனால் நிச்சயமாய்த் தயங்கிட மாட்டோம் சார் !

      Delete
  38. ///ரூ.500-க்கு உங்கள் வீட்டுக் குட்டீசின் பெயரில் சந்தா செலுத்திடும் பட்சத்தில், சந்தாக்கள் பதிவு செய்யப்படுவதே அவர்களின் பெயர்களில் தானிருக்கும் & பார்சல்கள் அவர்களது பெயர்களுக்கே அனுப்பிவைக்கப்படும் ! So இனி வீட்டுக்குள் நுழையும் போது உரக்கவோ, கிசுகிசுப்பாகவோ - 'எனக்கு காமிக்ஸ் பார்சல் வந்துச்சா ?' என்ற குரல் கொடுப்பது நீங்கள் ஒருவராக மட்டுமே இருந்திடக் கூடாதென்பதற்கே இந்த ஏற்பாடு ! ///

    நல்லதொரு முயற்சி சார்.

    ஆல மரமா இருந்தாலும்..
    வாழ மரமா இருந்தாலும்..
    (ஒரு ஃப்ளோல வந்திடுச்சு.)விதை போடணும்..அதுதான் முக்கியம்.

    இந்த விதை முளைவிட்டு..செடியாகி..பூப்பூத்து..மரமாகிட மனம் விழைகிறது.

    ReplyDelete
    Replies
    1. விதைகளே போடவில்லை இதுவரையிலும் - என்ற குறையை நிவர்த்திப்போம் !

      Late than never I guess !

      Delete
    2. நல்லதொரு ஆரம்பம்..பாதி வெற்றி எனும்போது...

      மீதியும் நல்லதே நடக்கும் சார்.

      Delete
  39. கதை சொல்லும் காமிக்ஸ் குழந்தைகளுக்கான இந்த முயற்சியை வரவேற்கிறேன் சார்...


    எனது இல்ல வாண்டுகள் புத்தகம் வந்தவுடன் பிரித்து ரசித்து சித்திரங்களை ரசிக்கின்றனர்..ஆனால் வாசிப்பு எனில் ஓடி விடுகின்றனர் ..இந்த சந்தா இவர்களை வாசிக்க வைக்கும் என நம்புகிறேன் சார்..

    ReplyDelete

  40. ///And ஒவ்வொரு புக்கின் முதல் பக்கத்திலும் - "இந்த புக் Master / Ms.__________ன் பொக்கிஷம் !" என்று அச்சிடப்பட்டிருக்கும் ! கெத்தாக அவர்களது பெயர்களை அதற்குள் கிறுக்கி வைத்துக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ளட்டுமே ? ///

    Heaven of children.

    💐💐💐

    ReplyDelete
  41. அருமை சார் அருமை.
    நீண்ட நாளாக மனதில் இருந்த எண்ணம்,
    இந்த குழந்தைகளை கவரும் விதமாக, லயன் காமிக்ஸில் சிறப்பாக எதும் இல்லையே என,
    அந்த குறை இன்று நிவர்த்தியானது.
    நல்ல முயற்சி சார். வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்.ஜூ எ க்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

    //25 பக்கங்களை வாசிக்கும் நேரமோ, பொறுமையோ இன்றைக்கு நம்மில் அநேகருக்கு இருப்பின், லைனாக அவர்கள் அனைவருக்குமே மெரினா பீச்சின் ஓரமாய் சிலைகளை வைத்து விடலாம் என்பேன் !//
    💯/💯 உண்மை சார்.
    பல வருடங்களாக, பலவிதமான பொழுதுபோக்குக்கு மனசு பழகிவிட்டபின்,
    மறுபடியும் மனசுக்கு பிடித்த காமிக்ஸை மனதில் நுழைக்க மிகுந்த பிரயாசனப்படவேண்டி உள்ளது.
    உண்மையை எப்படித்தான் கண்டுபிடிக்கறீங்களோ?.

    இதெல்லாம் கூட தேவலை.
    ஆனா ரீபிரின்ட் என டெக்ஸ் கதைகள் ஒரு லிஸ்ட் போட்டீங்க பாருங்க.
    அடிவயிறே கலங்கி சார்.
    கடந்த சில மாதங்களாக, தேடியும் கிடைக்காத நிலையில்,3 மடங்கு "கூடுதல்" விலை கொடுத்து வாங்கிய அரிய புக்ஸ்கள் அவை.
    நல்லவேளை இதோடு நிறுத்தினீங்களே!.
    இன்னமும் பல புக்ஸ் போட்டிருந்தால்...

    ஆயினும் இன்னமும் பல வாசகர்களின் தேடலாகவே உள்ளதுதான் இந்த புக்ஸ்.
    அவர்களுக்கு இந்த வெளியீடுகள் மிக்க மகிழ்ச்சி தரும் எனும்போது, சற்று ஆறுதலாக உள்ளது.
    வரவேற்கிறேன் சார்.

    இந்த முறை இத்தனை ஆஃபர் தருகிறீர்கள் சார்.கடைசியாக நடந்த ஆன்லைன் திருவிழாவில் எந்த இலவசமும் இல்லயே சார்.
    அந்த பில்லை காண்பித்தால் இப்ப ஏதாவது தர முடிந்தால் சந்தோசம்.
    பரிசீலிக்கவும் சார்.

    ReplyDelete
    Replies
    1. வெற்றுக் காகிதத்தை கூரியரில் அனுப்புவதாயின் கூட இன்றைக்கு மொத்தச் செலவு ரூ.45 ஆகிவிடும் சார் ( டப்பா + கூரியர்). And அத்தனை பேருக்கும் அனுப்பிடாவிட்டால் அதற்கொரு மண்டகப்படி நிகழும் ! நடைமுறைக்கு சாத்தியமே இல்லையே சார்!

      Delete
  42. ரத்த படலமும் (கருப்பு வெள்ளை), கழுகு மலை கோட்டையும் தனியாக கிடைக்க வாய்ப்பு உள்ளதா சார், confirm please.

    ReplyDelete
  43. ஜேசன் ப்ரைஸ் ஆல்பங்களை அடுத்தடுத்த 3 மாதங்களில் வெளியிட்டது போல, இனிமேல் கண்ணில்படக்கூடிய 3 பாக / 5 பாக ஆல்பங்களை மாதாந்திரத் தவணைகளில் முயற்சிப்பது பற்றிய உங்களது அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ் ?


    ###₹₹##


    தொகுப்பு தொகுப்பு தொகுப்பு..


    தொகுப்புக்கே எனது தோரண கொடி சார்..

    பாகம் பாகமாய்...


    வேண்டவே வேண்டாம்..

    ReplyDelete
    Replies
    1. தொகுப்புக்கே எனது தோரண கொடி சார்..//

      என் வழி தலீவர் வழி…

      Delete
  44. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  45. உங்கள் இல்லங்களில் இவற்றை வாசிக்கக்கூடிய வயதுகளில் சுட்டிகள் இருக்கும் பட்சத்தில் - சந்தா ப்ளீஸ் !
    இந்த இதழ்கள் வெளிவரும் மாதங்களில் மட்டுமாவது, பிள்ளைகளுக்கு அவற்றை வாசித்துக் காட்டிடவும், கதை சொல்லிடவும், படம் வரைந்து காட்டி குஷிப்படுத்திடவும் அவசியம் அவகாசம் ஒதுக்கிக் கொள்ள வேண்டுமென்பது எனது request # 2 !

    ###₹₹₹


    கண்டிப்பாக சார்...

    ReplyDelete
    Replies
    1. கலக்குங்க தலீவரே !

      Delete
    2. அந்த குழந்தையே எங்கள் தலைவர் தான் :-)

      Delete
  46. *///கூடுதலான தொகைக்கு ஆர்டர் செய்திடும் நண்பருக்கு - "இரத்தப் படலம்" Black & White தொகுப்பு பரிசாகிடும் !

    *கூடுதலான எண்ணிக்கை புக்ஸ் வாங்கிடும் நண்பருக்கு (சமீபத்தைய) கலரிலான "கழுகுமலைக் கோட்டை" பரிசாகிடும் !///

    அடடே...

    சூப்பர் வாய்ப்பு..!

    செம சான்ஸ்..

    வுட்றாதீங்க யப்போவ்.

    ReplyDelete
  47. டெக்ஸ் போஸ்டரும்..

    மாயாவி போஸ்டரும்..

    ஆன் லைன் புக் ஃபேர் களை கட்டுதே.

    ReplyDelete
  48. அன்புள்ள ஆசிரியரே,
    கண்டிப்பாக குண்டு புக் வேண்டும். வந்த 4 நாட்களில் அனைத்து FFS புக்ஸையும் படித்து விட்டு அடுத்த மாத புக்ஸை எதிர்நோக்கியுள்ளேன். என்னைப் போன்றவர்களும் (அமைதியாக)இருக்கிறோம். எனவே எங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

    மேலும் எங்கள் வீட்டு வாண்டு விரும்பி படிப்பது
    1.'தலை' புக்ஸ்
    2.ஸ்மர்ப்ஸ்
    3.லக்கிலூக்
    4.கிட் ஆர்டின்
    5.ப்ளூகோட்.
    எனவே அந்தப் புக்ஸும் கிடைக்க ஆவண செய்யவும்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வீட்டு வாண்டு விரும்பும் புக்ஸ் தான் நம்மிடம் கணிசமாய் ஸ்டாக் உள்ளனவே சார் ; Stock List மேலே upload செய்துள்ளேன், பாருங்களேன் !

      Delete
    2. அவை அனைத்தும் சந்தாவிலேயே வாங்கியுள்ளேன் சார். பத்திரமாக உள்ளது. அனைத்தையும் படித்து விட்டு புதிதாக வேண்டும் என டிமான்ட் செய்கிறாள்.
      தங்கள் பதில் பதிவுக்கு மிக்க நன்றி.
      தைப்பொங்கல் வாழ்த்துக்கள் ஆசிரியரே!!!💐💐💐💐

      Delete
    3. // அவை அனைத்தும் சந்தாவிலேயே வாங்கியுள்ளேன் சார். பத்திரமாக உள்ளது. அனைத்தையும் படித்து விட்டு புதிதாக வேண்டும் என டிமான்ட் செய்கிறாள். //

      அப்படி போடுங்க.

      Delete
  49. Single albums in a sequence is welcome sir - but announce it as a seperate sequence sir - do not add all the albums to yearly count sir !

    ReplyDelete
  50. Sir, Started with first reading Alpha in FFS and noticed the censoring(removal) of certain panels in page 50 and thanks for doing that. I hope where-ever publishers allow, you would continue to do that. And kudos to clean translation as well considering the complex premise and lengthy dialogues in original.

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தான் சார் ; பெண்டை நிமிர்த்தியது ALPHA மொழிபெயர்ப்பு ! இம்மி பிசகினாலும் புரிதலில் சிக்கலாகிப் போகும் என்பதால் ரொம்பவே மெனெக்கெட வேண்டியிருந்தது !

      Delete
  51. Edi Sir..
    Online book fair books படங்கள் லிஸ்ட் தெளிவாக இல்லீங்களே.. ஒருவேளை எனக்கு கண் டிக் அடிக்குதோ என்னவோ..

    ReplyDelete
    Replies
    1. Compress பண்ணி எனக்கு அனுப்பும் போது ஓவராய் compress செய்து விட்டார்கள் போலும் சார் ; காலையில் மாற்றிடலாம் !

      Delete
  52. சிண்ட்ரெல்லா கதைக்கு வீட்டில் மிகப்பெரிய வரவேற்பு சார். சீக்கிரம் கண்ணில் காண்பியுங்கள் சார். எனது மகளும் மகனும் படத்தை பார்த்தே ஒரளவு என்ன பேசுகிறார்கள் என சொல்ல ஆரம்பித்து விட்டார்கள், இதில் எனது மகள் ஒரு படி மேல் கூகுள் மூலம் translate செய்து சில பக்கங்களை ஆர்வம் மிகுதியில் படிக்க ஆரம்பித்து விட்டாள் :-)

    இனிமேல் இது போன்ற சந்தாக்களுக்கு எனது பெயரை முதலில் எழுதி விடுங்கள் :-) by default we will be there.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சந்தா நம்பர் 7 ஆக இருக்க வேண்டிவரும் சார் ; முதல் 5 நம்ம பல்லடம் ஆசிரியர் & # 6 சம்பத் புக் பண்ணியுள்ளனர் !!

      Delete
  53. // அப்புறம் எல்லா கொள்முதல்களுக்குமே மாயாவி போஸ்டர் நமது அன்புடன் !


    அது மாத்திரமன்றி, கடைசி நிமிடத்தில் போனெல்லியில் சம்மதம் வாங்கியாச்சு இன்னொரு 'தல' போஸ்டருக்கு ! So இந்த பொங்கல் புத்தக விழாவின் எல்லா கொள்முதல்களுக்குமே ஒரு TEX போஸ்டரும் நமது அன்புடன் //

    Double sixers sir :-)

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் புகழும் படைப்பாளிகளுக்கே சார் !

      Delete
  54. Sir, last week in two days have completed all FFS books..Single books are good..excellent translation ( except initial pages of Alpha), and drawings are awesome...Jasen, already coming part by part does not give continuity Sir...we can not read again every time...it is best to keep albums in a single book..FFS, all new four Hero's are good in their level..Keep continue all four, but entire volume in a single book Sir..

    ReplyDelete
  55. வந்துட்டேன் அட்டகாசமான அறிவிப்புகள். பொங்கல் திருவிழா ஆரம்பம். சும்மா பட்டையை கிளப்பும் இந்த குட்டீஸ் ஸ்பெஷல்

    ReplyDelete
  56. சத்தம் இல்லாமல் "கதை சொல்லும் காமிக்ஸ்" மிக பெரிய வெற்றியை தரும்.

    ReplyDelete
  57. விஜயன் சார்,

    தொகுப்புக்கே எனது தோரண கொடி (நன்றி தாரை பரணி). இங்கே எனது வாசிப்பு அனுபவத்தை சோதிப்பது அதிக படியான பக்கம் பக்கமான வசனங்கள். ஒரிஜினலில் இருப்பது தான் என்றாலும் வசனங்கள் குறைவாக ஆக்ஷன் அதிகம் உள்ள கதைகளாக கொடுங்களேன்!

    ஆல்பாவை இப்போதுதான் எடுத்துள்ளேன், கடந்த 15 நிமிடங்களில் 6 பக்கங்களை தான் தாண்டி உள்ளேன்! சொந்த வேலை மற்றும் ஆபீஸ் வேலைக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில் இது போன்ற வசனங்கள் அதிகம் உள்ள கதைகள் அவைகளை படிக்கும் ஆர்வத்தை தள்ளி போட்டு விடுகிறது!

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு சார் ...காமிக்ஸில் இப்படிக் கொஞ்சம் ; அப்படிக் கொஞ்சமென்று கதைகள் உள்ளன என்பதால் என்னவாச்சும் செய்து கொள்ளலாம் ! ஆனால் இலக்கியம் வாசிப்போரையோ ; வரலாறை / அரசியலை ஆராய்வோரையோ எடுத்துக் கொள்ளுங்களேன் - அவர்களுக்கான சாய்ஸ் என்னவாக இருக்குமென்று சொல்லுங்களேன் ?

      எஞ்சிடும் நேரங்களது வாசிப்புகள் எப்போதுமே சுலபமாயிராது சார் !

      Delete
    2. கொரோனா காலத்திற்கு முன்னர் ஆபீஸ் சென்று வேலை பார்த்த போது இது போன்ற கதைகளை படிக்க நேரம் ஒதுக்கி இரண்டு நாட்களில் படித்து விடுவேன்! இப்போது வீட்டில் இருந்து வேலை என்பது + வீட்டில் குழந்தைகளை பார்த்து கொள்வது + குழந்தைகளின் ஆன்லைன் பாடம் என நேரம் ஓடிவிடுகிறது! 11 மணிக்கு பிறகு தான் நேரம் கிடைக்கிறது, அப்போது புத்தகத்தை எடுத்தால் தூக்கம் ஒருபக்கம் என்றால் மறுநாள் சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும் என்ற பயம்! சரி சரியான நேரம் கிடைக்கும் போது படிப்போம் என நினைத்தால் படிப்பதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை கடந்த ஆண்டு வந்த இரண்டு புத்தகங்கள் இன்னும் படிக்கவில்லை. :-)

      Delete
    3. 'கடந்த ஆண்டு வந்ததில் படித்ததே 2 புக்குகள் தான் !' என்று சொல்லக்கூடிய அணிக்கு மத்தியில் நீங்களெல்லாம் தேவுடு சார் !

      Delete
  58. தொகுப்பிற்கே எனது ஓட்டு .. Online specials and children s santha when ll be online listing sir ..

    ReplyDelete
  59. கதை சொல்லும் காமிக்ஸ் - தேவையான முயற்சி சார். வீட்டில் மாஸ்டர் இப்பொழுது தான் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறார்.

    ReplyDelete
  60. Sir - Work from home and taking care of kids - teaching them etc is taking a lot of time. As Parani said, that is what is eating into reading time.

    Also with kids at home you tend to spend more of your free time with them and they expect that too. All these contribute to the lack of reading time sir - it is not tecnological intrusion.

    Single Franco-Belgian albums will help mitigate a bit and for annual affairs fat books will do count !

    ReplyDelete
    Replies
    1. New Normal இது தானென்று ஆகி விட்டிருக்கும் நிலைகளில் நிச்சயமாய் யாரையும் குறை சொல்வதில் அர்த்தமிராது என்பது புரிகிறது சார் ! In fact I work with an almost similar kind of situation at home !! அதனால் தான் இந்தப் பதிவின் துவக்கத்தில், "குண்டு புக்ஸ் era நிறைவுக்கு வந்து விட்டது" என்று எழுதியிருந்தேன் !

      Given a choice - 48 பக்கங்களே ஒவ்வொரு ஆல்பத்தின் ceiling என்றிருக்க வேண்டுமென்பேன் ! பார்க்கலாமே....... நண்பர்களின் எண்ணங்களை !

      Delete
  61. சார், ஜெரமையா பார்ட் 2 பயணங்கள் முடிவதில்லை, &லோன் ரேஞ்சர் பார்ட் 2 தகிக்கும் பூமி லாரன்ஸ்&டேவிட் ப்ளைட் 731, திகிலூட்டும் நிமிடங்கள் போன்ற கதைகள்சேல்ஸ் லிஸ்ட்டில் உண்டுங்களாங்க சார் . கரூர் ராஜ சேகரன் .

    ReplyDelete
    Replies
    1. லிஸ்ட்டில் இல்லாவிடின் இருப்பில் இல்லை என்று கொள்ளலாம் சார் ! ஜெரேமியா 2 & லோன் ரேஞ்சர் 2 - ரொம்பக் குறைவாகவே அச்சிட்டிருந்தோம் என்பது நினைவுக்கு வருகிறது !

      Delete
  62. சார் அருமை...நான் ரொம்ப விரும்பும் சிண்ட்ரெல்லா துவக்கத்தில் சூப்பர்.....லக்கி+டெக்ஸ்+சிறுவர் இதழ் மொத்தமா கொரியருடன் எவ்வளவு அனுப்பன்னு சொன்னா இப்பவே அனுப்பிடுவேன்

    ReplyDelete
  63. இன்று நண்பர் ஒருவருடன் ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் அவரது பார்வை மற்றும் அலசல்கள் ஆச்சார்யம் ஏற்படுத்தின சார்.

    அமெரிக்க கிளாசிக்களின் குறியீடுகள் , உண்மையில் வாழ்ந்த நபர்களின் சேர்க்கை என ஆச்சர்ய படுத்தியது.

    கட்டிடக்கலை ஆளை கொல்லும் இடத்தில் தொலைக்காட்சி பெட்டியில் ஓடும் உண்மையான ஹாலிவுட் படத்தின் காட்சியின் தத்ரூப ஆர்ட், படத்தில் அந்த நேரத்தில் வரும் அதே வசனங்கள், படத்தின் பெயர் சார்ந்த வசனங்கள் என பார்த்து பார்த்து கதாசிரியர் சேர்த்துள்ளார்.

    புகைப்படக்காரன் இருக்கும் வீட்டின் ஓனராக கூறப்படும் நடிகை உண்மையிலேயே வாழ்ந்த ஒரு நடிகை அவள் இறந்ததும் அதில் கூறியது போல 1960 இல் தான், ஆவி அவளது ரசிகர்.
    மேலும் உண்மையான நடிகைக்கும் கென்னடிக்கும் இடையிலான நட்பு, அவர் தேவைப்படும் போது அம்மணிக்கு கால் செய்து பாட சொல்லி கேட்பாராம்.

    Wonderball உண்மையிலேயே அந்த காலத்தில் இருந்த nestle வந்த சாக்லேட். அதில் பொம்மையும் இருக்கும்.

    அடுத்து கிளாசிக் wizard of Oz சார்ந்த வசனங்கள் என அவர் சொல்ல சொல்ல ஆச்சர்யம் அதிகமாகியது. இப்பொழுது அந்த கதை மேலும் பிடித்து போய்விட்டது.

    ReplyDelete
    Replies
    1. Spock ; Charles Manson ; Wizard of Oz என்று எண்ணற்ற நிஐ வாழ்வு references உண்டென்பதால் அவை இம்மி கூடக் குறைந்திடலாகாது என்பதில் கவனமாக இருந்தேன் கிருஷ்ணா ! In fact அவை ஒவ்வொன்றையும் cross check செய்து கொண்டே தான் கதையோடு பயணித்தேன் !

      Delete
    2. அருமை சார். நன்றிகள் பல. இம்மாதிரியான கதைகள் தமிழில் படிக்க கொண்டு வந்ததற்கு.

      Delete
    3. Krishna V V, that was True Wonderbar - not Nestle Wonderball :-) :-) :-) :-) Overaa scanlation padikkadeenga ;-)

      Delete
    4. @Raghavan ji

      The Wonder Ball is a brand of chocolate manufactured in the United States by Nestlé and later by the Frankford Candy & Chocolate Company. The spherical candy, which weighs 3 grams, has an outer shell that is pure milk chocolate and a hollow interior containing candies. The wonder ball is wrapped in foil, placed in a small box, and packaged with a collectible sticker

      https://en.m.wikipedia.org/wiki/Wonder_Ball

      Delete
  64. கதை சொல்லும் காமிக்ஸ் முதல் வெளியீடு எப்போது கிடைக்கும் சார்?

    ReplyDelete
  65. தொகுப்பே தான் வேண்டும் ஆசிரியர் சார்.

    ReplyDelete
  66. மகனாருக்குச் சந்தா செலுத்த ஆசை. பிப்ரவரியில் கட்டலாமா சார் ?

    ReplyDelete
    Replies
    1. Yes sir..வசதிப்படும் வேளையில் (ஏப்ரலுக்கு முன்பாய்) கட்டிடலாம் !

      Delete
  67. கதை சொல்லும் காமிக்ஸ் - நல்லதொரு முயற்சி. வெற்றி பெற பழனியாண்டவனை வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  68. // ஜேசன் ப்ரைஸ் ஆல்பங்களை அடுத்தடுத்த 3 மாதங்களில் வெளியிட்டது போல, இனிமேல் கண்ணில்படக்கூடிய 3 பாக / 5 பாக ஆல்பங்களை மாதாந்திரத் தவணைகளில் முயற்சிப்பது பற்றிய உங்களது அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ் ? //
    குண்டு புக்குக்குத் தான் சார் எனது ஓட்டு...
    ஒரே தொகுப்பே எனது சாய்ஸ்,..

    ReplyDelete
  69. பழிக்குப் பழி, கானகக் கோட்டை விலை விவரம் தெளிவாக இல்லையே சார். விலை ப்ளீஸ்.

    ReplyDelete
  70. சார் குண்டு புக் வரட்டும்....மொத்தமா வந்தால்தான் நல்லாருக்கும்....ஆனா விற்பனையையும் கணக்கில் கொள்ளுங்கள்....ட்யூராங்கோ பட்டய கிளப்பிச்சே....சோர்ந்து போக வேண்டாம்....பொங்கல் ஓட்டங்களில் படிக்க நேரமில்லாது போகலாம்...படிக்காம இருக்கப் போவதில்லையே யாரும்..

    ReplyDelete
  71. நம் வீட்டு செல்லங்களை காமிக்ஸ் படிக்க வேண்டுமென்றால் முதலில் அவர்களை காமிக்ஸோடு விளையாட வைக்க வேண்டும்.இதை இரண்டு,மூன்று வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும்.நம்மில் நிறைய பேர் செய்கிற தவறு அப்படி பழக்கும்போது சில புத்தகங்கள் கிழிந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.'கிழிக்க கூடாது ..மடக்க கூடாது 'என்று ஆரம்பத்திலேயே நாம் அதட்டும்போது குழந்தைகள் மனதில் ஒரு ஈர்ப்பு வராது.எனது அண்ணணின் பிள்ளைகளுக்கு இப்படித்தான் ஆரம்பித்து வைத்தேன்.சில திரும் கிடைக்காத புத்தகங்களை பத்திரமாக வைத்துவிட்டு ஓரளவு விற்பனைக்கு கிடைக்கும் காமிக்ஸ்களை குவியலாக கொடுத்துவிடுவேன்.அவர்கள் (2,3 வயதில்) படிப்பது போல போஸ் கொடுப்பார்கள்: அடுக்கி வைத்து விளையாடுவார்கள்.இதனால் என்னுடைய காமிக்ஸ்கள் சிலபல கிழியும்..சேதமடையும்.ஆனாலும் விளையாட அனுமதிப்பேன்.இதனாமாயாவி,ஸ்பைடர்,டெக்ஸ்வில்லர்,லக்கிலூக் போன்ற பெயர்கள் அவர்களின் மனதில் பரிச்சயமாகின.அதன்பின்பு ஒருமுறை 2016-புத்தக. திருவிழாவிற்கு நம் காமிக்ஸ் ஸ்டாலுக்கு அழைத்து வந்து அவர்கள் கேட்கும் புத்ததகங்களை வாங்கினேன்.அதன்பின்பு எனது அண்ணன் வெளியூரில் செட்டிலாகிவிட அதற்கடுத்த வருடங்கள் கூட்டிவர இயலாமல் போனது.இப்போது எனது அவர்களுக்கு 15,12. வயதாகிறது.இதில் 15வயதான அண்ணன் மகன் இப்போது டெக்ஸ்வில்லரின் தீவிர ரசிகன்.கார்சனின் கடந்த காலம்,டிராகன் நகரம்,போன்ற கதைகள் அவனது பேவரைட்.அவனது தங்கையோ லக்கிலூக்கின் ரசிகை.ஊருக்கு வரும்போதெல்லாம் காமிக்ஸ்களை அள்ளிச்செல்வார்கள்.அதன்பின்பு எந்த கதைகள் படித்தோம் எப்படி இருந்தது என்பதை போனில் விவரிப்பார்கள்.நான் எந்த புக் வாங்கினாலும் அவர்களிடம் வீடீயோ காலில் அல்லது வாட்ஸ்அப்பில் காட்டுவேன்.இப்போது என் வீட்டு வாண்டுகளிடமும் இப்படித்தான் ஆரம்பித்துள்ளேன்.சில புத்தகங்கள் கிழிந்தாலூம்,சேதமடைந்தாலும் வாட்ஸ்அப் குழக்களில் வாங்கிக்கொள்வேன்.புத்தக வாசிப்பை இப்படித்தான் பழக்க வைக்க முடியும் நண்பர்களே..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக...

      புத்தகங்களை கையாளும்போது பிள்ளைகளை கட்டாயம் அதட்டக்கூடாது.

      Delete
  72. எடிட்டர் சார்..

    நேற்றிரவு இந்தப் பதிவைப் படித்தபோது ஒரு குபுக் உற்சாகம்! உடனே என் குழந்தைகளிடம் "சின்ட்ரெல்லா, அக்லி டக்லிங் எல்லாம் லயன் காமிக்ஸில் வரப் போகிறதாம்" என்று அறிவித்தபோது அவர்களிடமிருந்து "யேஏஏஏஏ" என்று ஆரவாரமான கூக்குரல்கள்!! இதில் ஆச்சரியமான சாமாச்சாரம் என்னவென்றால், எனக்கு சிண்ட்ரெல்லாவைத் தவிர்த்து வேறு யாரையும் அறிமுகமில்லை. ஆனால் அவர்களோ - CINDERELLA,
    JACK & THE BEANSTALK,
    SNOW WHITE,
    THE UGLY DUCKLING - ஆகிய நான்கு கதைகளையுமே தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நேற்றிரவு என் பெரிய மகளிடம் சிண்ட்ரெல்லாவின் கதையையும், சின்னவளிடம் அக்லி டக்லிக் கதையையும் சொல்லச் சொல்லி கேட்டபோது அசந்துதான் போனேன்!! காரணம் - அவர்களின் கதை சொல்லிய நேர்த்தி ஒருபுறம் இருக்க; குழந்தைகளுக்காகவே படைக்கப்பட்ட அக்கதைக்களங்களின் வசீகரம் தான்!

    என் மகள்களின் பெயரில் ஒரு சந்தாவை இன்றே கட்டிவிட இருக்கிறேன். ஆத்தா என் குழந்தைகளுக்காகக் கொண்டுவரும் கொரியர் டப்பியை அவர்கள் பிரித்துப் பார்த்துக் குதூகலிப்பதை நான் பொறாமையோடு நோக்கிடும் நாள் சீக்கிரமே புலரட்டும் ப்ளீஸ்!

    சில சொந்தப் புலம்பல்கள் :
    FFSஐ இன்னும் படிக்கவில்லை! ஆபீஸிலில் வேலைப்பளு கூடுதலென்றால், வீட்டிலிருக்கும் நேரத்தை என் இரு மகள்களும் முழுவதுமாக ஆக்கிரமித்துவிடுவதே முக்கியக் காரணமாகிவிடுகிறது. போதாக்குறைக்கு அவ்வப்போது குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்படும் உடல்நலக் குறைவுகளும் தொடர்ந்து புத்தகங்களைக் கையில் எடுக்கமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்திவிடுகின்றன. ஷெல்ஃபில் ஓய்வெடுத்துக் கொண்டிர்க்கும் FFS புத்தகங்களை அவ்வப்போது ஒரு பெருமூச்சோடு லுக்கு விட்டு காலத்தை ஓட்டி வருகிறேன் - இந்த இறுக்கமான சூழ்நிலையும் விரைவில் கடந்துபோகும் என்ற நம்பிக்கையோடு!

    ReplyDelete
  73. FFS படிச்சு முடிச்சு ஒரு வாரம் ஆகப்போகுது ...பழைய குண்டு புத்தங்களில் பெரும்பாலும் வருவது 60 To 70 page one shot கதைகளே ...இங்கி பிங்கி பாங்கி போட்டு புடிச்ச கதையை முதலில் படிச்சிரலாம் ...சீக்கரம் முடிஞ்சிறும் ...இப்போ உள்ள புக்குகள் ஒவ்வொரு அத்தியாயதத்திலும் ஒரு set of characterஐ உள் நுழைக்கின்றன ..அதை ஞாபகம் வைத்துக்கொண்டு அடுத்த அத்தியாயம் தொடர்வதுதான் Challenge. X111 , Tiger தொடர் சாகசங்களில் இது போன்ற நிலை இருக்காது ...பெரும்பாலும் இரு அத்தியாயங்களில் கதை முடிந்து விடும் ஒரு Good feel factorடு..அடுத்த அத்யாத்திற்கான Lead மட்டும் இருக்கும். மற்றபடி குண்டு புக் வாசிக்கும் சுகமே தனி ...தயவு புரோட்டா மாதிரி பிச்சி போட்றாதீங்க...பொறுமையா படிக்குறவங்க நீங்க மாசம் ஒரு Page Release பன்னாலும் அவங்க வேகத்திற்குதான் வருவாங்க ...

    ReplyDelete
  74. ஒரு பிரளயப் பயணம்,நெஞ்சே எழு புத்தகங்கள் உண்டுதானே சார்..?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். மேலே உள்ள டெக்ஸ் விளம்பரத்தை பாருங்கள். நீங்கள் கேட்ட கதைகள் உள்ளன

      Delete
  75. ஹலோ ஆன்லைன் புக்பேர புத்தகங்கள் வாங்க கடையை எப்ப திறப்பாங்க? :-)

    ReplyDelete
  76. /// இனி வரும் நாட்களில் "தொகுப்புகளாய் வாசிப்போம்" என்ற கொடியினை கிட்டங்கிக்குள் கிடத்தி வைத்து விட்டு, "நிதானமாய் வாசிப்போம்" என்ற கொடியினைக் கையில் எடுத்தால் என்ன ///

    தொடர்களை சிங்கிள் ஆல்பங்களாக பிரித்து போட்டாலும், அவை மீண்டும் ஹார்டு பவுண்டு அட்டையுடன் ஒரே ஆல்பமாக வெளியிடச் சொல்லி கேட்கப்படப்போவது நிச்சயம்.
    ஏன் வீணாக இரண்டு வேலை.
    எனவே தொடர் ஆல்பங்களை ஒரே தொகுப்பாகவே வெளியிடுங்கள்.
    மேலும், எல்லோராலும், எல்லா கதைகளையும் ஏக்தம் மில் படித்து முடிப்பது என்பது இயலாதது.
    காமிக்ஸ் படிப்பது என்பதே மனதை ரிலாக்ஸ் செய்திடத்தானே.
    அதனை பொறுமையாக செய்தால் தான் சிறக்கும்.
    So, குண்டு புக் version ஐ மாற்ற வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் குண்டு புக் எப்போதும் மற்ற வேண்டாம்.

      Delete
  77. தொகுப்புகளாய் வாசிப்போம்., அதனை நிதானமாய் வாசிப்போம்.

    ReplyDelete
  78. பழிக்குப் பழி / கானகக்கோட்டை விலை with கொரியர் ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. Edi Sir..
      ரூ.1200 -க்கு மேல் வாங்கினால் Postel charges free தானுங்களே?

      Delete
  79. //ஜேசன் ப்ரைஸ் ஆல்பங்களை அடுத்தடுத்த 3 மாதங்களில் வெளியிட்டது போல, இனிமேல் கண்ணில்படக்கூடிய 3 பாக / 5 பாக ஆல்பங்களை மாதாந்திரத் தவணைகளில் முயற்சிப்பது பற்றிய உங்களது அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ் ?//

    ஆசிரியர் விஜயன் சாருக்கு (மட்டுமே)

    இந்த கேள்வி நீங்கள் கேட்டது நல்லது. இதனைப் பற்றி சிரமம் பாராமல் offline வாசகர் கருத்தும் கேட்டு பாருங்கள் சார்.

    சார், அயல்நாட்டிலே ஒரிஜினலாக தயாரிப்பது போல 48 பக்க மாதாந்திர சிங்கிள் ஆல்பமாக அடுத்தடுத்து வந்தால் படிப்பது ரொம்பவும் சுலபம். ஒரிஜினல் அட்டைகள் அத்தனையும் கிடைக்கும். கூடுதலாக ஒவ்வொரு இதழுக்கும் ஒவ்வொரு வெளியீட்டு என கிடைக்கும்.
    இது டெக்ஸ் வில்லர் போன்ற 112 பக்க இரண்டு, அல்லது மூன்று பாக கதைகளுக்கும் அமைந்தால் இன்னமும் சிறப்பு.

    கார்ட்டூன் ஸ்பெசலில் வெளியிட்டது போல கூடுதலாக box செட் (கூடுதல் கிரயம் சேர்த்து கொள்ளலாம்) தயார் செய்து கொடுத்தால் இன்னமும் சிறப்பு.
    முன்பு போல மல்டிஸ்டார் ஸ்பெசல் குண்டு புத்தகங்களுக்கு, முழுவண்ண மறுபதிப்பு கதைகளுக்கு ஹார்ட்பௌண்ட் கிடைத்தால் இன்னமும் சிறப்பு.

    எனினும் ஜேசன் ப்ரைஸ் போன்ற surefire சூப்பர் ஹிட் கதைகளுக்கு குண்டு புக் ஹார்ட்பௌண்ட் வரவேற்கிறேன், சார்.

    ReplyDelete
  80. என் பெயர் டேங்கோ... ஒன் (சிங்கிள்) ஷாட் ஆல்பம் அசத்தல்... விறுவிறுப்பாக சென்று சித்தர விருந்து படைத்திட்ட கதை...
    சாவதற்கு நேரமில்லை போன்றே (கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட கதையாக) உள்ளது.
    என் ரேட்டிங் 4/5

    ReplyDelete
    Replies
    1. துரோகம் ஒரு தொடர்கதை...!
      தலைப்புகள் வசீகரமாக, வல்லமையாக வைப்பதில் ஆசிரியர் போல நான் யாரையும் பார்த்ததில்லை... (தனிப்பட்ட முறையில் பள்ளிக்கூட நாட்களுக்கு பின் எனக்கு ஆரம்பித்த கதை இது... இன்னமும் முடிந்த பாடில்லை.)
      8ந்தேதி சனிக்கிழமை, இரவு 12.26am, இப்போது இந்த மூன்று பாக கதையை முடித்து விட்டேன்...
      லார்கோ வின்ச் கதையை விட இது எனக்கு சிறப்பாக தெரிகிறது.
      ஆல்பா ரொம்பவே impress செய்துவிட்டார்.
      Still in Climax Hero Image Total Damage. But I appreciate the reality things happen to Hero too.
      மேரா ரேட்டிங்: 3.9/5

      Delete
  81. குண்டு புக், தொகுப்பு, collectors edition , கம்ப்ளீட் கலெக்ஷன் ப்ளீஸ்..

    ReplyDelete
  82. //And தினசரி ஊக்கங்களாய் -

    *கூடுதலான தொகைக்கு ஆர்டர் செய்திடும் நண்பருக்கு - "இரத்தப் படலம்" Black & White தொகுப்பு பரிசாகிடும் !

    *கூடுதலான எண்ணிக்கை புக்ஸ் வாங்கிடும் நண்பருக்கு (சமீபத்தைய) கலரிலான "கழுகுமலைக் கோட்டை" பரிசாகிடும் !
    //

    போன புத்தக விழாவில் இந்த ஊக்கத் தொகை இருந்தால் இந்த 2 பரிசும் எனக்கு தான். Lucky luke Cinibooks அனைத்தும் + 10 இதர புக்ஸ் என வாங்கினோம். என் லக் எப்போதுமே அப்படிதான் :).
    2016 முதல் அனைத்து புத்தக விழாவிலும் ஒரு 10-12 புக்ஸ் வாங்கிவிடுவது & எல்லா சந்தாவிலும் சேர்ந்து almost stockல் உள்ள அனைத்து புக்ஸும் வாங்கியாச்சு, இனிமே புத்தக விழா ச்பெஷல் மட்டுமே வாங்க வாய்ப்புள்ளது. so பரிசு பெரும் நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    இ.ப இருக்கு ஆணால் கழுகு மலைக்கோட்டை தான் இல்லை'

    ReplyDelete
    Replies
    1. "கழுகு மலைக்கோட்டை" உங்களுக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள் நண்பரே.

      Delete
  83. Online book fair purchase is done at 10.15 :-)

    ReplyDelete
    Replies
    1. Superb, But I waited till 10.30 am as per the announcement.

      Delete
    2. Okay, sago... I have called by 10.37am, by that early time also, some people made their orders.

      Delete
  84. Sir, Special Listing not updated in lion-muthucomics.com site yet.

    ReplyDelete
  85. Sir Please arrange special listing on lionmuthu.com as soon as possible

    ReplyDelete
  86. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சார், ஆன்லைன் bookfair இம்முறை எல்லாவருடத்தை விட அமர்க்களமாக இருக்கிறது. ஏராளமான 30 சதவீத புக்ஸ் டிஸ்கோவுண்ட் எங்களை போன்று பரிசுகள் பகிர்வோருக்கு கொண்டாட்டம் தான்.
      ஒரு வேண்டுகோள் சார்...மாயாவி போன்று பிரம்மாண்ட போஸ்டர் போல அல்லாமல் சென்ற வருட புக் fair ல் கொடுத்த லக்கி லூக் (any கார்ட்டூன் for kids) போன்று அடக்கமான போஸ்டர்கள் (டெக்ஸ் வில்லருக்கு பதிலாக) சாத்தியமாகுமா சார், ப்ளீஸ்?

      Delete
  87. தொடர் கதைகளை ஒரே குண்டு புத்தகமாக போடலாமா அல்லது தொடர்ச்சியான மாதங்களில் போடலாமா?


    அர்ஸமேக்னா போன்ற கதைகளை போடும் போது ஒரு விடையும், XIII கதைகளை போடும் போது ஒரு விடையும் எதிரெதிர் திசைகளில் வருவது எனக்கு மட்டும் தானா?!

    ReplyDelete
  88. ////// ஜேசன் ப்ரைஸ் ஆல்பங்களை அடுத்தடுத்த 3 மாதங்களில் வெளியிட்டது போல, இனிமேல் கண்ணில்படக்கூடிய 3 பாக / 5 பாக ஆல்பங்களை மாதாந்திரத் தவணைகளில் முயற்சிப்பது பற்றிய உங்களது அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ் ? ////

    ---பெ...பெ.....பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும் சார்...

    ---இவன் குண்டுபுக் காதலன்....😍


    ஆயிரம் ப்ளஸ், மைனஸ்களை வைத்தாலும் மனசு கடைசியா குண்டுபுக்கை கையில் எடுக்கும்போது அதன் வசீகரித்திற்கு மயங்கிடுது...

    இன்னும் ஒரு 4ஆண்டுகளுக்கு மணந்தால் மகாதேவிதான்....!!!!

    (அது ஏன் 4னு கேட்கும் நண்பர்களுக்கு, 50தாண்டுச்சினா ஓரு மாற்றம் வர்லாமில்லியா.....)

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்கோ... ஐம்பதிலும் ஆசை வரும்...

      Delete
    2. ஆஹா.... அனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.... அப்ப குண்டுபுக் காதலை நம்மிடம் இருந்து பிரிக்கவே இயாலாதாங் பத்து சார்?😍

      Delete
  89. ஆன்லைன் விழா அதளகப்படுத்தும் விழாவாக அமையட்டும் சார்....!!!

    சிஸ்கோவை எப்படியோ எடுத்தாச்சி...போட்டியின் பெயரைச்சொல்லி...

    சும்மா மின்னல் தெறிக்கும் வேகம்...

    துவக்கமே the enemy of the state வர்றதுபோல சாட்சியை கொல்ல சிஸ் ஓடுறார்.... ஸ் அப்பாடி சரியான ப்ரேக் எடுத்துட்டாங்க... சமயம் பார்த்து...😜

    ReplyDelete
  90. To join the meeting on Google Meet, click this link:
    https://meet.google.com/ebc-egss-fcq
    FFS காமிக்ஸ் போட்டி
    Or open Meet and enter this code: ebc-egss-fcq

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே...

      மேலே தந்துள்ள கூகுள் மீட்டிங் லிங்க் மூலம் இன்று நடைபெறும் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்...


      சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை எடிட்டர் நடத்த உள்ள FFS போட்டிக்கு தயாராகும் விதமாக இன்றைய மீட்டிங் அமையும்.


      போட்டி: சனிக் கிழமை...

      நாள் : 15/01/2022.
      நாளை மறுநாள்...

      போட்டி கதைகள் :

      சத்தமாய் ஒரு மௌனம். மற்றும்

      என் பெயர் டேங்கோ...

      நேரம் : 30 நிமிடங்கள்.

      எடிட்டர் வீடியோ மீட்டிங்கில் கேள்விகள் கேட்பார்.

      உங்கள் பதில்களை A4 பேப்பரில் எழுதி எடிட்டர் குறிப்பிடும் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப வேண்டும்...

      நன்றி

      J

      Delete
  91. //ஜேசன் ப்ரைஸ் ஆல்பங்களை அடுத்தடுத்த 3 மாதங்களில் வெளியிட்டது போல, இனிமேல் கண்ணில்படக்கூடிய 3 பாக / 5 பாக ஆல்பங்களை மாதாந்திரத் தவணைகளில் முயற்சிப்பது பற்றிய உங்களது அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ் ? //

    இது ஒரே சந்தாவில், ஒரு மாதம்கூட இடைவிடாமல் வருமாயின்... முயற்ச்சிக்கலாம். அதுவும் அந்த கடைசி பாகம் என நினைக்கும் கதையில் ஒரு நிறைவு இருக்க வேண்டும்.
    ***என் பேயர் டைகர்*** டைகரிடமிருந்து களவாட பட்ட அவருடைய பணத்தை நினைத்து இன்றுமே மனசு கஷ்டப்படுது :( :( :(

    ReplyDelete
  92. stock list மற்றும் விளம்பரங்களிலும் முத்து 50 லோகோவே பயன்படுத்துங்கள். இந்த வருடம் முழுவதும்.

    ReplyDelete
  93. கானகக் கோட்டை + பழிக்குப்பழி Booking done.

    ReplyDelete
  94. நட்பூக்களே...

    இன்று இரவு 8 மணிக்கு கூகிள் மீட்டிங்

    ReplyDelete
  95. சார், சுஸ்கி விஸ்கியுடன், குழந்தைகளுக்கான காமிக்ஸ் KSK நல்ல முயற்சி. என்னுடைய வாண்டுகள் இப்போதுதான் அ, ஆ வே ஆரம்பிக்கிறார்கள். KSK ஒரு சந்தா பிளீஸ். மேலும் தொகுப்புக்கே எனது ஓட்டு. ஆண்டு சந்தாவை GPay செய்ய முடியுமா. என்னுடைய Xoom/Paypal account ல் இருந்து செலுத்த முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. //ஆண்டு சந்தாவை GPay செய்ய முடியுமா//

      Yes sir...

      Delete
  96. நாளைய பதிவின் பெயர் "பொங்கலும் வேகவைத்த பனங்கிழங்கும்" என இருக்குமோ?

    குமாரு & அறிவு எப்பூடி:-)

    ReplyDelete
    Replies
    1. ஐ இந்த தலைப்பு நல்லா இருக்கு:-)

      ஜனா, மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியாமைக்கு உங்களுக்கு வாட்ஸ்அப் செய்துள்ளேன்.

      Delete
  97. சிஸ்கோ..... சத்தமாயொரு மெளனம்....


    சரசரவென ஓடிய திரைக்கதை போன்ற காட்சியமைப்புகளில் இருபாகங்கள் சீட்டின் நுனியில் கட்டிபோடுகிறது.....

    பிரெஞ்சு பிரெஸிடெண்டுக்காக ஆகாத நபர்களை களையெடுக்கும் அமைப்பில் நடக்கும் டபுள்கிராஸ், ட்ரிபிள்கிராஸ் தான் கதைக்களம்....

    அதை கதையாக பின்னிய நேர்த்திதான் சபாஷ் போடவைக்கிறது...

    ஒரு இடத்தில் கூட பல்ஸ்மீட்டர் ரீடிங் குறையாத கடகடவென நகரும் கதை...

    களையெடுக்கும் காட்சியில் ஆரம்பித்து, அதை பார்த்து தொலைத்துவிடும் நபர் மரெட்டியை துறத்த ஆரம்பித்தது முதல் வெர்ராட்டுக்கு "சம்பளம்" தரும் வரை மூச்சு விட அவகாசம் தராமல் சிஸ்கோ கூடவே நாமும் ஓடுறோம், தாவுறோம், அடிபடறோம், சுகிக்கிறோம், தண்டனை தர்றோம்....

    மெதுவாக ஆரம்பித்து வேகம் எடுக்கும் பழம்பாணி டிடெக்டிவ், 007களுக்கு மாற்றாக சடுதியில் வேகம், அதே வேகத்தோடு பயணம்.....!!!

    ஒரு பாகத்தில் சொதப்பும் திட்டம், மர்ம முடிச்சி; 2வது பாகத்தில் தீர்வு.... கிட்டத்தட்ட ஒரு லார்கோ பாணி!

    கதையின் ஹைவோல்டேஜ் கருதி கேரக்டர்கள் பேசும் வார்த்தைகள் பொருத்தமாக கையாளப்பட்டுள்ளன....!!

    ஒரு நல்ல தொடர் கிடைத்து உள்ளது.....

    ரேட்டிங், ரேங்கிக் எல்லாம் 10/10!!!!

    ///"தெய்வமே இந்த நிமிசமே லைனைக் கட் பண்ணிவிட்டு ஏதாவதோரு பப்ளிக் பூத்தில் இருந்து என்னைக் கூப்பிட வழி பாருங்கள்"////----- அப்படியே எடிட்டர் சார் நமக்கு கதை சொல்வது போலவே எழுதப்பட்ட வசனங்கள் பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறது....!!!

    ReplyDelete