Saturday, November 20, 2021

லேட்டானாலும் லேட்டஸ்ட்டாய்...!

 நண்பர்களே,

வணக்கம். கார்த்திகை தீபமும் அழகாய் ஆச்சு ; முருகரின் பெயரைச் சொல்லி அரை டஜன் பொரிகடலை உருண்டைகளையும் உள்ளே தள்ளியாச்சு ; நவம்பரின் பெரும் பங்கும் ஓடியாச்சு ; டிசம்பர் இதழ்களின் டெஸ்பாட்ச் தேதியுமே கூப்பிடு தொலைவுக்கு நெருங்கியாச்சு ; நான்கில் மூன்று அச்சாகி, பைண்டிங்கும் ஆகியாச்சு ; எஞ்சிய ஒன்றும் அடுத்த சில நாட்களில் அச்சாகி விட்டால் - "நவம்பரில் டிசம்பரும் சாத்தியமாகிப் போச்சு" என்ற திருப்தியுடன் நடப்பாண்டுக்கு விடை தந்தது போலாகி விடும் ! 

Phew ....இதுவரையிலும் 2021-ன் ஓட்டம் உங்களுக்கெல்லாம் எவ்விதம் இருந்ததோ - ஞான் அறிஞ்சில்லா ; பச்சே இங்கே எங்களுக்கு "வாம்மா...மின்னல் !!" என்று ஓட்டம் பிடிக்காத குறை தான் ! ஏப்ரலில் புதுச் சந்தா துவங்கியது நேற்றைய நிகழ்வு போலவும் ; மே மாதத்தில்  லாக்டௌன் துவங்கியது அதற்கு முந்தா நாள் நிகழ்வைப் போலவும் தோன்றினாலும், இதோ இந்த டிசம்பரின் நான்கையும் சேர்த்தால் - 31 இதழ்களைக் கடந்து விட்டிருக்கிறோம் - இடைப்பட்டுள்ள நாட்களில் ! இவற்றுள் - லயன் # 400 ; தீபாவளி with டெக்ஸ் ; சில book-fair ஸ்பெஷல்ஸ் என்ற மெகா இதழ்களும் இடம்பிடித்திருக்க, பேரிடர் பொழுதுகளிலுமே பொம்ம புக் தாக்குதல் தொடர்ந்திருப்பது புரிகிறது !! And இன்னொரு 4 வெயிட்டிங் - ஜம்போவின் சீசன் # 4-ன் அட்டவணையில் ! அவற்றையுமே அடித்துப் பிடித்து இந்த ஒன்பது மாதங்களுக்குள் புகுத்தியிருப்பின், "மாதம் 4" என்ற கணக்கு ஓடியடைந்திருக்கும் !! இன்னொரு Phew !! 

எது, எப்படியோ - தொடரும் ஆண்டினில் எண்ணிக்கைகள் சற்றே கட்டுக்குள் இருப்பது உறுதி ; ஆனால் பருமனில் குண்டு கல்யாணத்துக்குப் போட்டி தரக்கூடிய இதழ்கள் கணிசம் என்பதால் "எண்ணிக்கை குறையும் ; ஆனா வாசிப்பு குறையாது !" என்றே சொல்லத் தோன்றுகிறது !!  

ரைட்டு....டிசம்பரின் பிரிவியூக்களில், இன்னமும் கண்ணில் காட்டியிரா இளம் டெக்சின் "திக்கெட்டும் பகைவர்கள்" பக்கமாய்ப் பார்வைகளை ஓடச் செய்யலாமா ? இதோ -  5 பாகங்கள் கொண்ட இளம் 'தல' சாகஸத்தின் first look - ஒரிஜினல் அட்டைப்படத்துடன் ! 

வழக்கம் போல கதை மௌரோ போசெல்லி அவர்களின் பொறுப்பிலிருக்க, "சின்னவர்" சோலோவாய் கதையினை முன்னெடுத்துச் செல்கின்றார் ! And இங்கேயும் தேஷா உண்டு ; black & white-ல் கூட கண்ணைப் பறிக்கும் வசீகரத்தோடு ! போசெல்லி மட்டும் நம்ம ஊர்ப் பக்கமாய் கொஞ்ச காலம் ஒதுங்கியிருப்பின், அம்மணிக்கும், சின்னவருக்கும் சம்திங் ..சம்திங் என்பதாகக் கதையைக் கொண்டு போயிருப்பார் ; and சும்மா விசில் பறக்க நாமும் அதகளப்படுத்தியிருப்போம் ! இந்தக் கதையில் கூட, சின்னவரோடு வரும் பசங்கள், "அது உன் டாவு இல்லியா ப்ரோ ?" என்று சீண்டிக் கொண்டே வருவதைப் பார்க்கலாம் ! ஆனால் நமது மஞ்சள் சட்டை அண்ணாத்தே, பாசமிகு அண்ணாத்தேவாகவே தொடர்கிறார் ! போனெல்லியில் இந்த 64 பக்க மாதாந்திர 'இளம் டெக்ஸ்' வரிசையை ரெண்டு வருஷங்களுக்கு முன்னே அறிவித்த போது - சற்றே ஆர்வ மிகுதியின் திட்டமிடலாகவே எனக்குத் தென்பட்டது ! இணைதடங்களில் - சின்னவர் + மூத்தவர் கதைகளை ஒரே வாசக வட்டத்துக்கு விடிய விடிய எவ்விதம் வழங்குவது ? சின்னவரின் 'இஸ்திரி'யில் அப்படி பெருசாய் என்ன சுவாரஸ்யத்தை விதைக்க இயலும் ? என்ற கேள்விகள் என்னுள் இருந்தன தான் ! ஆனால் செம fresh அணுகுமுறையோடு, ஒவ்வொரு இதழும் (அத்தியாயமும்) வெறும் 64 பக்கங்களே ; ஒவ்வொன்றுக்கும்  ஒரு மிரட்டலான அட்டைப்படம் ; 'கச கச'வென்ற குளறுபடிகள் இல்லா நேர்கோட்டில் பயணம் - என்பதே போச்செல்லியின் திட்டமிடலாக இருந்திட, இந்தத் தொடருக்கான response அங்கும் சரி, இங்கும் சரி - wow ரகம் !! இதோ ஓவியர் Brindisi-ன் கைவண்ணத்திலான உட்பக்க டிரெய்லரும் :

Moving on, ரயிலின் அடுத்த ஸ்டேஷன் புத்தாண்டின் FFS தான் எனும் போது அந்தப் பணிகளின் இறுதிக் கட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன !! And சிறுகச் சிறுக அதன் கதைகள் / நாயகர்கள் பற்றிய முன்னோட்டங்களுக்குள் புகுந்தால் தப்பில்லை என்று பட்டது !! 

CIA ஏஜெண்ட் ALPHA !! FFS-ன் முதல் புக்கில், ஒளிவட்டத்தின் மிகுதி பாய்ந்திடுவது இந்த ஸ்டைலான நாயகர் மீதே !  இந்த ஹீரோவுடனான எனது  பரிச்சயத்துக்கு  வயது 25 !! செம ஷார்ப் சித்திரங்கள் ; தெறிக்க விடும் ஆக்ஷன் ; இளவரசர்கள் வழக்கத்தை விடவும் ஜாஸ்தியாய் ஜொள்ளிட தகுதி வாய்ந்ததொரு அழகுப் பெண் - என்ற combo-வில் இந்தத் தொடரின் முதல் ஆல்பம் 1996-ல் வெளியாகிய போது, நமக்கு மாதிரி புக் ஒன்றினை அனுப்பியிருந்தார்கள் ! (அந்நாட்களிலெல்லாம் தான் இந்த டிஜிட்டல் கோப்புப் பரிவர்த்தனைகள் கிடையாதே ?!)  அந்த புக்கினை அச்சிட்டிருந்த பேப்பர் கூட ஒரு வித மினுமினுப்புடனான ஏதோ ஸ்பெஷல் ரகம் போலும் ; கலரில் சும்மா டாலடித்தது !! பக்கங்களை புரட்டப் புரட்ட எனக்குள் உற்சாகம் ஊற்றடிக்கத் துவங்கியது ! And அந்நாட்களில் கூகுள் ; டூகுள் ஏதும் கிடையாதெனும் போது, இந்தப் புதுத் தொடர் மீது உடனடி ஆராய்ச்சிகளும் சாத்தியமாகிடவில்லை & அதற்கு அவசியம் இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை ! So "அட்றா சக்கை..புடிச்சாச்சு பாரு, ஜேம்ஸ் பாண்டுக்கு சவால் விடற ஹீரோவை !!" என்ற வேகத்தில் - இது ஒரு தொடர்கதையா ? one shot-ஆ ? என்றெல்லாம் கவனிக்காது "இதை வெளியிடணுமே ப்ளீஸ் " என்று மாக்கானைப் போல பிரான்சுக்கு ஒரு fax தட்டி விட்டேன் ! அவர்களும் சீக்கிரமே சம்மதம் தெரிவிக்க,இதைக் கொண்டு "1997 கோடை மலர்" என்று  பீப்பீ ஊதிடலாமென்ற கற்பனைகளில் திளைத்துப் போய், மாலையப்பனிடம் அட்டைப்பட டிசைன் போடவெல்லாம் ஏற்பாடு செய்து விட்டேன் !  ராயல்டி தொகைகளை தேற்றி அனுப்பிட அப்போதெல்லாம் நமக்கு ஒரு மாமாங்கம் ஆகிடுவது வழக்கம் என்பதால் இந்தப் பக்கம் பணிகளை ஆரம்பித்த கையோடு, வசூல்களில் ஒரு பகுதியினை ராயல்டிக்கென ஒதுக்கிட குட்டிக்கரணம் போட ஆரம்பித்திருந்தேன்  ! அந்தத் தாமதம் தான் நம்மை அன்றைக்கு காப்பாற்றியது, becos பிரெஞ்சு to english மொழிபெயர்ப்புக்கு அந்நாட்களில் பணி செய்து வந்த மதுரையிலிருந்த பிரெஞ்சு டீச்சருக்கு இந்தப் பக்கங்களை அனுப்பிய ரெண்டாவது நாளே அவரிடமிருந்து போன் வந்தது - "இது தொடர்கதையாச்சே ? முழுசையும் அனுப்புங்களேன் ?" என்ற கோரிக்கையோடு ! "கிழிஞ்சது போ" - என்றபடிக்கே படைப்பாளிகளிடம் விசாரித்தால் - 'Yes ..வருஷத்துக்கொரு பாகம் ; 3 பாகங்களில் முதல் சுற்று நிறைவுறும் !' என்று பதில் கிட்டியது ! சரியாகப் 10 வருஷங்களுக்கு முன்னே "இரத்தப் படலம்" இதழினை இதே போல one shot என்று நம்பி வாங்கியது மனதில் நிழலாட - அவசரம் அவசரமாய், "இல்லீங்க...தொடர் முடியட்டும் ; அப்புறமா வாங்கிக்குறோம் !" என்று சொல்லி வைத்தேன் ! 1998-ல் முதல் சுற்று முற்றுப் பெற்றிருந்த நேரத்திற்கு, பாக்கி 2 ஆல்பங்களுமே தக தகதகத்தபடிக்கே வந்து சேர்ந்திருந்தன ! So மூன்று ஆல்பங்களையும்  பெருமூச்சோடு ஒருசேரப் புரட்டிப் புரட்டிப் பார்த்தவனுக்கு - 139 பக்கங்கள் கொண்ட அந்த முழுக் கதையினை எவ்விதம் கையாள்வதென்றே தெரிந்திருக்கவில்லை ! தொடர்கதையாய்ப் போடுவதா ? - அபச்சாரம் !! விலையைக் கூடுதலாகி, ஒரே புக்காய்ப்  போடுவதா ? - விஷப் பரீட்சை ! - என்ற ரீதியில் உள்ளுக்குள் சிந்தனைகள் ஓட, "ரைட்டு...இந்தப் பழம் புளிக்கிறா மெரி தெரியுதே...அப்புறமா பாத்துக்கலாம் !" என்று ஓரம் கட்டி விட்டேன் ! நாட்களும், மாதங்களும், வருடங்களும் ஓட்டமெடுத்திருக்க, நமது FFS திட்டமிடல் ; குண்டு புக் ஆர்வம்  ; கௌபாய் அல்லாத தொடர்களின் தேடல் - என்ற முக்கோணப் புள்ளிகள் சங்கமித்த வேளையில் என் பீரோவில் பத்திரமாய் இருந்த ALPHA எட்டிப் பார்த்தார் !! அப்புறமென்ன - மலரும் நினைவுகளுக்கு மத்தியில் CIA ஏஜெண்ட் சாரை தமிழ் பேசிட வரவழைத்தோம் ! And லேட்டாய் வந்தாலும், செம ஸ்டைலாய் வந்திறங்கியிருக்கும் இந்த மனுஷனின் பிரிவியூ பக்கங்களை பாருங்களேன் : 


சந்தேகமின்றி, இந்த முப்பாக ஆல்பத்தின் highlight அந்தச் சித்திரங்களும், கலரிங் அமர்க்களமுமே  ! இரத்த படலம் - இரண்டாம் சுற்றின் ஓவியரே இங்கு ஆர்ட்டிஸ்ட் ; in fact ஆல்பாவில் துவங்கி மிரட்டியதன் தொடர்ச்சியாகவே XIII இரண்டாம் சுற்றுக்குப் படம் போடும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியுள்ளது ! கதை நெடுக நாம் பார்த்திடவுள்ள அட்டகாசமான கார்கள் ; பாரிஸின் தெறிக்கும் அழகுடனான landmarks ; இரண்டாம் பாகம் முதலாய் மாஸ்கோவின் அழகு - என்று இங்கு நமக்கு காத்துள்ள visual treat வேறொரு லெவல் ! 


And of course - கதை ஒரு அக்மார்க் spy த்ரில்லர் ! அழகானதொரு கதைக்கரு ; அதனை ஐரோப்பியப் பின்னணியினில் சொன்ன சாகசம் - இவற்றினை நீங்கள் முழுசுமாய் உள்வாங்கிட எண்ணிடும் பட்சத்தில் பொறுமையாய் ; நிதானமாய் இங்கு பயணிக்க வேண்டி வரும் ! ஒவ்வொரு பிரேமிலுமே சின்னச் சின்னதாய் ரசிப்பிற்குரிய விஷயங்கள் இருப்பதை அவசர வாசிப்பில் மிஸ் செய்திடாதீர்கள் ப்ளீஸ் ! And லார்கோவின் (துவக்க) ஆல்பங்களை போலவே - சில பக்கங்களில் வசனங்கள் மிகுந்தே இருந்திடும் - complex ஆனதொரு கதையை கதாசிரியர் சிறுகச் சிறுக முடிச்சவிழ்க்கும் தருணங்களில் ! பேனா பிடித்த நானே பேஸ்தடிக்காது அவற்றினூடே பயணித்து விட்டுள்ளேன் எனும் போது - வாசிப்பினில் ஜமாய்த்தீர்களெனில் "துரோகம் ஒரு தொடர்கதை" தரும் high octane த்ரில்களை முழுமையாய் ரசிக்கலாம் ! அதே சமயம் - இந்த நாயகர், almost a real life ஏஜெண்ட் போலவே வலம் வந்திடுவார் - மிகையான ஸ்டண்ட்ஸ் அடிக்காமல் ! So பன்ச் டயலாக்ஸ் இன்றி ; ஜேம்ஸ் பாண்ட் 2.0 செய்திடும் ரணகள ஆக்ஷன்ஸ் இன்றி, ஒரு மிரட்டலான spy த்ரில்லர்  காத்துள்ளது ! அப்புறம் அந்த ரஷ்ய அம்மணிக்கு நற்பணி மன்றம் அமைக்க விரும்புவோர் டபுள்யூ.டபுள்யூ.ஜொள்ளுமணி.டாட்.காம். என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் !! 

கிளம்பும் முன்பாய் சில updates :

1.இனிப்பு லட்டுக்கள் ஒன்றுக்கு இரண்டாய் confirmed !! ஒன்று குட்டி லட்டு ; இன்னொன்று ரெகுலர் லட்டு ! பூந்தியாய் உள்ளதை உருண்டை பிடிக்க இன்னும் நாலைய்ந்து நாட்கள் எடுக்கும் என்பதால் லிட்டில் வெயிட்டிங் ப்ளீஸ் !!

2 .கார லட்டு ? Again ஒன்று ரெடி ! இன்னொன்றுக்கு முயற்சிகள் முழு முனைப்பினில் ! புனித மனிடோ மனசு வைத்தால் அதுவும் க்ளிக் ஆகி விடும் ! இங்குமே கொஞ்சம் பொறுமை ப்ளீஸ் !! 

ஐரோப்பாவில் மறுக்கா கொரோனா தாண்டவமாடத் துவங்கியிருக்க, பணிகள் ரொம்பவே தடைபட்டு வருகின்றன !! ஜெர்மனியில் தினசரி 50,000 கேஸ் ; பெல்ஜியத்தில் நாளொன்றுக்கு 16,000 ; ஆஸ்திரியாவில் லாக்டௌன் ; ஹாலந்தில் லாக்டௌன் ; இங்கிலாந்தில் 40,000 தினமும் - என்ற ரீதியில், காதில் விழும் சேதியெல்லாமே குலை நடுங்கச் செய்து வருவதால் - லட்டுக்களை உருண்டை பிடிக்க கூடுதல் நேரமெடுக்கிறது ! So அவர்களது இன்னல்களை புரிந்து கொள்வதோடு, நாமும் இங்கே கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்தால் தப்பில்லை என்று தோன்றுகிறது !! தடுப்பூசி guys ; முகமூடிஸ் guys - மறவாதீர்கள் ப்ளீஸ் !!

3.அந்தியும் அழகே - தாத்தாஸ் சீக்கிரமே வெள்ளித் திரையில் லூட்டியடிக்க உள்ளனர் ! பிரெஞ்சில், இந்தத் தொடர் திரைப்படமாகிறது !! பாருங்களேன் :

The three stars of the film,Pierre Richard, Eddy Mitchell and Bernard Le Coq, have started shooting in Simorre in France ! 

4.அப்புறம் FFS புக்கினில் உங்களின் போட்டோக்கள் இணைத்திட வேண்டுமெனில், முன்பதிவு செய்திட or சந்தா செலுத்த அவசரம் காட்டிட வேண்டி வரும் ப்ளீஸ் ! "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" திங்களன்று அச்சுக்குச் செல்கின்றது ! And அதன் மறுவாரம் FFS புக் # 1  அச்சாகிடவுள்ளது ! And புக் # 3 ஆன - "தி கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல்"  அட்டை to அட்டை 68 பக்கங்களுக்கும் கதைகள் கொண்டிருப்பதால் - அங்கே உங்களின் போட்டோக்களை நுழைக்க சாத்தியமாகிடாது ! So தாமதித்திடும் பட்சத்தில் FFS-ன் மெயின் புக்ஸ் எவற்றிலும் உங்களின் போடடோக்களை இணைத்திட இயலாது போய்விடும் guys !! அதன் பின்னே, புக் # 4 ஆக வந்திடவுள்ள அந்த விலையில்லா இணைப்பினில் மட்டும் தான் இடமிருக்கும் ! சற்றே கவனம் on this ப்ளீஸ் !

Bye all...see you around ! Have a chill Sunday !!

192 comments:

  1. இடத்தை பிடிச்சாச்சு இனி பதிவை படிச்சுவிட்டு வருகிறேன் :-)

    ReplyDelete
  2. எல்லாருக்கும் வணக்கமுங்க

    ReplyDelete
  3. ஆல்ஃபா இப்போதாவது வெளியே வர நேரம் கிடைத்ததே :-) இதன் ஆரம்ப புள்ளி பற்றிய விபரங்கள் நன்று.

    நாளை சந்தா செலுத்தி விட்டு ஃபோட்டோ அனுப்பி வைக்கிறேன் சார்.

    ReplyDelete
  4. அட்டை படம் செம்ம கலக்கல்

    ReplyDelete
  5. ஆல்பா வண்ணங்கள் மிரட்டல்!!

    கார லட்டு என்ன சார்????????????????????????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  6. அம்மாடியோவ்!!!! ஆல்ஃபா உள்பக்க சித்திரங்கள் பிரம்மிக்கச் செய்கின்றன!!!! என்னா கலைநயம்.. என்னா கலரிங்!!! ச்சும்மா அள்ளுது போங்க!!! குறிப்பா அந்த இரண்டாவது பக்க ப்ரீவியூவின் கடேசியில் அந்த ரொமான்ஸ் - ப்பா!!

    இதெல்லாம் 25 வருசத்துக்கு முன்னே உருவான படைப்புகள்னா சத்தியமா நம்ப முடியலை!!

    கண்களுக்கு ஒரு கெடா விருந்து காத்திருப்பது உறுதியாகிறது!!

    ReplyDelete
  7. லட்டுக்கான காத்திருப்பு மேலும் தொடர்கிறது. காத்திருக்கிறோம் சார். ஆல்பா பார்க்க வசீகரமாக இருக்கிறார் படிக்க ஆவலடுடன் இருக்கிறேன்.

    சார் S70 தொடர்பான சில சந்தேகங்கள் இருக்கிறது போன பதிவின் இறுதியில் கேட்டிருந்தேன் உங்களால் பார்க்க முடிந்ததா தெரியவில்லை. மீண்டும் இங்கு போடட்டுமா. கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் சார்.

    இன்றைய காமிக்ஸ் உரையாடல் பொழுது கமான்சே விற்பனை சரியாக இல்லை என்று பேசிய பொழுது நண்பர்கள் டூரங்கோ போல குண்டு புத்தகமாக வந்துருந்தால் விற்பனை நன்றாக இருந்திருக்க வாய்ப்பு அதிகம் என்று கூறினார்கள் அது எனக்கு சரியாக தோன்றியது. உங்களது கருத்தும் சொல்லுங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. லேடி S ; சாகச வீரர் ரோஜர் ; டிடெக்ட்டிவ் ஜெரோம் ; இவர்களும் சிங்கிளாய் வந்து குப்புற விழுந்தோர் ! இவர்களையும் தொகுப்புகளாக்கிட வேணாமா - அதே அளவுகோல்களை பொருத்திப் பார்ப்பதாயின் ?

      ரைட்டு ...அதை விடுங்க ; ஜெரெமியா தொகுப்பாய்த் தானே வந்தது ? ஆனாலும் பள்ளத்துக்குள் சிக்கிய லோடு ஆட்டோவாய்த் திணறியது ஏனோ கிருஷ்ணா ?

      தொகுப்புகள் மெருகூட்ட உதவிடுமே தவிர்த்து, சுமார் சரக்கை சூப்பர் சரக்காக்க உதவிடுவதில்லை ! டெக்ஸ் சிங்கிளாயும் ஜொலித்து ; தொகுப்பிலும் சாதிப்பவர் தானே ? கமான்சே ரசிக்கலை for several reasons ! Simple as that sir !

      Delete
    2. // மீண்டும் இங்கு போடட்டுமா. //

      போடுங்களேன் கிருஷ்ணா !

      Delete
    3. கமான்சே கதை ஓவியம் ஹீரோ என நன்றாக இருந்தும் ரசிக்காமல் போனதன் காரணம் மர்மமாகவே உள்ளது சார்.

      ஜெரோமியா எனக்கு ஏனோ முதல் பார்வையிலேயே படிக்க தோன்றவில்லை சார். ஆகையால் இன்னும் படிக்கவில்லை. காரணம் ஓவியமா அல்லது இங்கு புத்தகத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களா தெரியவில்லை.

      மற்றபடி லேடி S ரோஜர் பற்றி கூறியதும் சரியே.

      Delete
    4. கௌபாய் கதைகளில் ஆக்ஷன் + விறுவிறுப்பு இல்லாது போயின் அங்கே செல்ப் எடுக்காது நண்பரே ! கமான்சேவில் பிரதான காரணம் அதுவே !

      இதே கமான்சேவில் ஒற்றை ஆல்பம் 20 வருடங்களுக்கு முன்னே வந்து ஹிட்டடித்தது - becos நான் தேர்வு செய்திருந்தது - தொடரின் ஆல்பம் # நான்கை - ஆக்ஷனுக்காக !

      Delete
    5. புரிந்தது சார் நன்றி.

      Delete
  8. சார்.. 'அந்தியும் அழகே' தாத்தாக்கள் பிரெஞ்சில் சினிமாவாக வரயிருப்பது சர்ப்ரைஸ் செய்தி!! சரி, நீங்களும் ஏன் அந்தப் படத்தை வாங்கி டப்பிங் செய்து தமிழ்நாட்டில் ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னேன்?!!

    ReplyDelete
    Replies
    1. ரீமேக் பண்ணுவோம்ங்கிறேன் ; நம்மகிட்டே தாத்தாக்களுக்கா பஞ்சம்ங்கிறேன் ? கரிச்சட்டிக்குள் தலையை முக்கி எடுக்காட்டி ஏகப்பட்ட கேண்டிடேட்ஸ் இருப்பாங்கங்கறேன் !

      Delete
    2. நம்ம கிட் ஆர்ட்டின் கண்ணன் கணக்கச்சிதமாக பொருந்துவார் ஆசிரியரே

      Delete
    3. மூணு தாத்தாவுக்கும் ஆளிருக்கு. க்+இளவரசர், மேச்சேரி மெபிஸ்டோ, தாரை தாத்தா. நாலாவது அஞ்சாவது ஆல்பத்தில் வர சோபியோட பாய்பிரண்ட் ரோலை நான் பாத்துக்கறேன்.

      Delete
    4. மூணு தாத்தாவுக்கும் ஆளிருக்கு. க்+இளவரசர், மேச்சேரி மெபிஸ்டோ, தாரை தாத்தா. நாலாவது அஞ்சாவது ஆல்பத்தில் வர சோபியோட பாய்பிரண்ட் ரோலை நான் பாத்துக்கறேன்.

      #####

      ரெண்டு பேரை கரீட்டா சொல்லிட்டீங்க ஷெரீப்..தாரை மனிதரை தான் தப்பா கெஸ் பண்ணிட்டீங்க ஏன்னா அவருதான் அந்த பேத்தி வயத்துல இருக்குற கரு குழந்தை...:-)

      Delete
  9. டிசம்பர் மாத புத்தகங்கள் என்று அனுப்பும் வாய்ப்பு உள்ளது சார் 27 இரவு நான் சென்னை கிளம்பும் வாய்ப்பு உள்ளது அனுப்பும் தேதி பொறுத்து நான் பழனி அல்லது சென்னை அனுப்ப சொல்லிவிடுவேன்.

    ReplyDelete
  10. அன்பு ஆசிரியருக்கு...
    காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு 🙏...

    திக்கெட்டும் பகைவர்கள் அட்டைப்படம்,
    திக்கெட்டும் மிரட்டுகிறது.
    பெஸ்ட் கண்ணா பெஸ்ட்.


    அடுத்து ஆல்ஃபா...
    அந்த பெண்ணின் கண்களே பல அர்த்தங்கள் பேசுகிறது.கண்டிப்பாக சக்ஸஸ் தான்.

    அயல்நாடுகளில் கொரோனா நிலை மனதை சற்று ஸ்தம்பிக்க செய்கிறது.
    கடவுளே! அனைவரும் நலமுடன், விரைவில் இந்த தொந்தரவில் இருந்து மீள வேண்டும்.

    இந்த இக்கட்டான நிலையிலும், எங்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்
    என வேண்டுகிறேன்.

    லட்டுக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவது எல்லையற்ற மகிழ்ச்சி.
    ஜனவரி 2022 அதிர் வெடி வேட்டுக்களாக, மற்றுமொரு தீபாவளி உறுதி.
    இது ஆண்டு வெற்றி கொண்டாட்டத்திற்கு தொடக்கமாக அமைவதில் எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.

    ஃபோட்டோ அனுப்ப கடைசி தேதி?

    சுகமான சுமைகள் கூட கூட பதற்றமும் ஆர்வமும் அதிகரிக்கிறது.
    நல்லபடியா முடியும் சார்.
    வாழ்த்துக்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹

    ReplyDelete
  11. சார் 70 பற்றிய சந்தேகங்கள்.

    இதற்கு முன்பு பதில் சொல்லிவிட்டீர்களா என்றும் தெரியவில்லை. அப்படி கூறி இருந்தால் நண்பர்கள் கூறவும்.

    70 கண்டிப்பாக முன்பதிவுக்கு மட்டும் தானா?

    முன் பதிவு முடிந்ததும் வாங்கவே முடியாதா?

    வாங்கினால் கண்டிப்பாக 4 புத்தகமும் சேர்த்து தான் வாங்க வேண்டுமா?

    வேதாளர் மட்டும் அல்லது காரிகன் மட்டும் என்று தனியாக வாங்க முடியாதா?

    புத்தகவிழாக்களில் தனியாக விற்பனைக்கு வருமா?

    முன் கூட்டிய நன்றிகள்.

    காரணம் வேதாளருக்காக நான் இரண்டாவது சந்தா கட்டியுள்ளேன் தனியாக கிடைக்கும் வாய்பிருந்தால் சந்தா தவிர்த்துவிட்டு தனியாக வாங்கிக்கொள்வேன்

    ReplyDelete
    Replies
    1. சிம்பிள் லாஜிக் கிருஷ்ணா !

      "பழசு ...க்ளாஸிக் நாயகர்கள்: ...என சதா கோரிக்கைகளை முன்வைத்தது நண்பர்களே ! And உரிமைகளை வாங்கிட ஒற்றைத் தேரை இழுத்தால் போதாது - நான்கையுமே இழுக்க வேண்டிய சூழல் ! நான் 'தம்' கட்டி கழுத்து வரை தண்ணீருக்குள் உங்களின் பொருட்டு இறங்கியான பின்னே - "பிஸ்லெரி மட்டும் போதுமே ; ஆற்றுத் தண்ணீர் வேணாமே ?" என்றால் என்பாடை யோசித்துப் பாருங்களேன் ?

      முன்பதிவு போக கூடுதலாய் ஒரு சிறு எண்ணிக்கையில் அச்சிடவுள்ளோம் ; 'ரத்தப் படலம்' சமாச்சாரத்தில் ஆனது போல் இங்கும் ஆகிடக்கூடாதென்பதற்காக ! ஆனால் -

      1.Online listing தொடர்ந்திடும் - மொத்தமாக - 4 இதழ்களுக்குமே சேர்ந்தே !

      2.முன்பதிவு முடிந்தும் வாங்க முடியும் - செட்டாக !

      3.புத்தக விழாக்களுக்கு ஆண்டின் இறுதியில் வரக்கூடும் - ஸ்டாக் இருக்கும் பட்சத்தில் ! Not before that !

      4.Of course - முன்பதிவு செய்துள்ளோர் வேதாளனை தனியாக ஏதேனுமொரு விலைக்கு
      விற்பனைக்கு லிஸ்டிங் போடுவது நடக்காது போகாது - ஆனால் அதனில் நாம் செய்திடக்கூடியது எதுவும் இராது !

      'வேதாளன் மட்டும் போதும் ; & காரிகன் மட்டும் போதுமென்றால் - ஆண்டின் இறுதி வரைக் காத்திருந்து பார்க்க வேண்டி வரும் கிருஷ்ணா !

      Delete
    2. ஏற்கனவே மறுபதிப்புக் கோரிக்கைகளில் நிறைய சாத்து வாங்கியாச்சு - மும்மூர்த்திகள் + ஸ்பைடர் + ஆர்ச்சி பெயரைச் சொல்லி ! அவற்றுள் முடங்கிப் போன பணம் ஆறிலக்கங்களில் ! திரும்பவும் இங்கேயும் அதே சாத்து வாங்க தெம்பில்லை உடம்பில் !

      Delete
    3. தெளிவான விளக்கங்களுக்கு நன்றிகள் பல சார்.

      Delete
    4. அருமை சார் வேதாளன தனியா கள்ள மார்கட்ல விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு நான்கையும் இங்கயே வாங்க தயாராகிடுவர்...நெத்தியடி...

      Delete
    5. வேதாளருக்கு இரண்டாவது சந்தாவா?? புரியவில்லையே. வேதாளர், மாண்ட்ரேக் வருவது தளி FFS முன்பதிவில் தானே ??

      Delete
    6. Rafiq S70 என்ற தனி சந்தாவில் 4 புத்தகங்கள் 4 ஹீரோக்கள் வருகிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா அது சம்பந்தமான கேள்விகளே மேலே.

      நான் ஒரு சந்தா கட்டினேன். 4 புத்தகங்களும் சேர்த்து தான் வாங்க வேண்டும் என்பதால் எனக்கு வேதாளர் மட்டும் மற்றொரு காபி தேவை என்றாலும் இரண்டாவது சந்தாவும் கட்டியுள்ளேன். அதற்கான விளக்கமே ஆசிரியர் கூறி உள்ளார்

      Delete
    7. ரைட்டு... FFS 4 புத்தகத்துக்கும் சந்தா என்று அழைத்ததால், வந்த குழப்பம்.

      Delete
  12. கொரோணா காலத்தை கவர் செய்து நம்ம தல முகக்கவசம் போட்டிருக்கார்ன்னு என கொள்வோம் ..

    😉😉😉

    புது கதாநாயகன் என்ன பண்ணப்போறார்ன்னு காத்திருந்து பார்கக்லாம் .. 😍

    ReplyDelete
  13. அருமை சார்....இது வரை வந்த அனைத்து அட்டைகளையும் தூக்கிச் சாப்பிடுது இந்த டெக்ஸ் அட்டை... அதேதான் இதான் டாப்...இது வரை வந்த அனைத்து வண்ணக்கதைகளையும் சுருட்டி லபக்கிட்டது ஆல்பா...தெறிக்கும் ஓவியம்...வண்ணம்...அனைத்து நாயகிகளையும் பின்னுக்குத் தள்ளிய யுவதி பதிமூனின் ஜெலினியாவயும்...லார்கோ போலவா தேமேன்னு இருக்கார் நாயகர்...எஃப்எஃப்எஸ் மின்னலாய் மகிழ்ச்சி

    ReplyDelete
  14. கொரோணாவின் நான்காவது அலை ரொம்ப ரொம்பவே மோசமாக இருந்திடக்கூடும் என்கிற தகவல்கள் என் அயல்நாட்டு நண்பர்கள் மூலம் வருகின்றன .. எனவே இரண்டாம் டோஸ் போட்டவங்க மட்டும் கொஞ்சம் .. *கவனிக்க கொஞ்சமே தப்பித்துக்கொள்ள வாய்ப்புண்டு ..
    எதையும் சாதாரணமாக கடந்து போகாதீங்க நண்பர்களே
    அதுவே உங்க & உங்க குடும்பத்துக்கு *ரணமாகும் வாய்ப்புகள் அதிகமுண்டு

    அனுபவித்ததால் சொல்கிறேன்

    ஊசி போடாதவங்க இனி வரும் இரண்டு மாதங்களில் போட்டுக்கொள்ளுங்க ..

    நம்பேமிலி நமக்கு ரொம்ப முக்கியம். 👍👍

    ReplyDelete
    Replies
    1. அனைத்து நண்பர்களும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுகின்றேன்.

      Delete
    2. கண்டிப்பாக சம்பத்.

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. ஃபோட்டோ அனுப்ப கடைசி தேதி இந்த மாதம் 30 தான் கடைசியா சார்?.

    டிசம்பர் இதழ்கள் இந்த மாதமே வந்து விடுமா?
    அல்லது வரும் தேதி சொல்லுங்க சார்?.

    ReplyDelete
  17. முத்துவின் முதல் சாகசமான இரும்புக்கை மாயாவி அச்சு அசலாக முதல் புத்தகம் அடித்ததை போலவே ௧ொடுத்தால் நலம். இல்லையென்றால், 50 ரூபாய் விலையில் வந்த மறுபதிப்பு ௧தை௧ளை போல ஆகி விடும்

    By Boopathi

    ReplyDelete
    Replies
    1. Replicate என்றால் அதானே அர்த்தம்.... கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம்.

      Delete
  18. குண்டு தாத்தாவுக்கு சரியா ஆள் சிக்கலையோ, எல்லாரும் ஒரே மாதிரி இருக்காங்க

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இதே தான் தோன்றியது

      Delete
  19. ஜனவரி 2022 தான் உண்மையான தீபாவளி. காமிக்ஸ் தீபாவளி. முத்து பொன் விழா ஆண்டுச் சிறப்பிதழை ஜனவரி 1லும் S70s முதல் இதழான வேதாளனை பொங்கல் சிறப்பிதழாகவும் தரலாம். ஜனவரி மாதம் முழுவதும் கொண்டாட்டங்கள் காத்திருக்கின்றன என்பதை நினைத்தாலே வாயில் ஜலம் ஊறுகிறது.

    ReplyDelete
  20. திக்கெட்டும் பகைவர்கள்” அட்டைபடம் கலக்கல். பின் அட்டை படம் முன்பாக வந்திருந்தாலும் செமையாக இருக்கும். ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகிறது. இளம் Tex ன் சட்டை கலர் மாறி உள்ளதும் ரசிக்க வைக்கிறது. உட்பக்க பிரீவியூ ம் அருமை.
    1997ம் ஆண்டிலேயே ஆல்பா வந்திருப்பின் முத்து ஒன்று கிடைத்திருக்கும். அவ்வளவு அபாரம். கலரிங் செம. சித்திரங்களின் துல்லிதம் அருமை. பிரான்ஸ் இல் பிரசித்தி பெற்ற இடங்களை சித்திரங்களில் கண்முன் கொண்டுவருகின்றார். லூவர் சதுக்கமும், கத்ரல் , சென் நதிக்கரையும், சுற்றுலா பஸ், கோட்டையும் அள்ளுகின்றன. WWW.ஜொள்ளுமணி. COM இல் என்னையும் இணைத்து கொள்ளுங்க ஸார்.

    இனிப்பு லட்டுகள் இரண்டா? அட டே கூடவே கார லட்டுமா? பேஷ் பேஷ் பிரமாதம்! வரும் ஆண்டு அமர்க்களம் ஆக உள்ளது கண்கூடு.

    தாத்தாஸ் தொடர் உலகளாவிய ரீதியில் ஹிட் அடித்திருந்தால், அதை வெள்ளித்திரையில் திரைப்படமாக எடுக்க முனைந்திருப்பார்கள் என்பது கண்கூடு. குண்டு தாத்தா மட்டும் ஒல்லியாக இருக்கின்றார். படத்தின் பெயர் என்ன சார்?

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஆல்ஃபா ஓவியங்கள் மிகவும் நன்றாக உள்ளது. கவரில் ரசிப்பதற்கு ஏற்ற கதையாக தெரிகிறது.

      Delete
  21. சார்,
    ட்ராகன் நகரம், வைகிங் தீவு மர்மம், நெஞ்சே எழு, ஒரு பிரளய பயணம் போன்ற புத்தகங்கள் இன்னொரு மறுபதிப்பு வந்தால் நன்றாக இருக்கும்.
    It should be Win-Win situation.
    Print run - குறைவாக மற்றும் விலை சற்று அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
    I mean due to less print and inflation making cost of the book will definitely go up. So please increase the price and print out of stock books in demand again.
    Thanks.

    ReplyDelete
  22. Sir,
    Alpha - Book pages look great.
    Thanks for bringing this one in Tamil.

    ReplyDelete
  23. "தி கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல்" ஐ இந்த பெயர் சூப்பராக உள்ளதே.

    ReplyDelete
  24. கலை நயம்மிக்க சின்னங்களும், இடங்களும் சிலைகளும் அவ்வளவு அழகு. ஈபிள் கோபுரமும் சதுக்கமும் கண்முன் நடமாகின்றன. பல வித கோணங்களில் படங்கள் எடுத்து இன்ச் இன்சாக வரைவாரோ?

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. எடிட்டர் சார்

    ஆல்ஃபா கதையின் சித்திரங்கள் அபாரம்! அப்புறம் அந்தியும் அழகே படமாக ஏற்கனவே 2018ஆம் ஆண்டு வெளிவந்து விட்டது. இப்போது எடுத்துக் கொண்டிருப்பது இரண்டாம் பாகம் (Les Vieux Fourneaux 2)

    ReplyDelete
  27. //உங்கள் "சின்னச் சின்ன ஆசைகள்" சாத்திய எல்லைகளுக்குள் இருந்து, அவை நம் நண்பர்களுக்கும் பிடித்திருக்குமென்ற நம்பிக்கைகளை விதைப்பதாக இருப்பின், அவற்றுக்கு சிறகுகள் தந்திட நிச்சயமாய் தயங்கிட மாட்டோம் !

    I repeat - ஆளுக்கு ஒற்றை சின்னச் சின்ன ஆசை only !! And கல்யாண வீட்டு ஷாப்பிங் லிஸ்ட்கள் வேணாமே - ப்ளீஸ் !! "//

    https://lion-muthucomics.blogspot.com/2021/10/blog-post_41.html

    பாக்கெட் சைஸ் திரும்பிடல் வேண்டும்...

    1.புதிய கதைகள் பாக்கெட் சைஸில்.

    "கழுகுமலை கோட்டை" போன்ற (A6 அளவில்) பாக்கெட் சைஸில் மாடஸ்டி, ஜேம்ஸ் பாண்ட், ரிப்கிர்பி, காரிகன், மான்ட்ரேக் போன்ற கிளாசிக் நாயகர்கள் கதைகள் (மறுபதிப்புகள்) இரு பேனல் bw கதைகளாக மீண்டும் வெளியிடப்பட வேண்டும்.

    A6 அளவு பாக்கெட் சைஸில் எழுத்துகள் பொடியதாகி விடுகின்றன என்பது கற்பனையே... தற்போது பெரிய சைஸில் வரும் படங்ககளின் அளவை விட கழுகுமலை கோட்டை படத்தின், எழுத்துருக்கியின் அளவு பெரியதே...

    2.மறுபதிப்பில் பாக்கெட் சைஸ்

    இதுவரை மறுபதிப்பில் வெளிவராத அதிகம் மறுபதிப்பில் வெளிவராத விற்பனையில் சாதித்த மாயாவி, ஸ்பைடர், மாடஸ்டி, மற்ற ஹீரோஸ் கதைகள் மேப்லித்தோ பேப்பரை விட இரண்டரை மடங்கு விலை குறைவான foreign நியூஸ்ப்ரிண்ட் பேப்பரில், தற்போதைய duplex அட்டைப்பட தரத்தோடு நமது காமிக்ஸ் ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளுடன் தொடர்ந்து மக்கள் பார்வையில் காணப்பட கடைகளில் காட்சியளிக்க வேண்டும்.

    ஒரு புத்தகம் முழுவதும் விற்பனையானால் மட்டுமே அடுத்த புத்தகம் என்கிற முறைமையில் மெதுவாக வெகுஜன மக்களையும் சென்றடையும் பொருட்டு காமிக்ஸ் விற்பனைமுறை கொண்டு வரலாம்.

    சராசரி மக்கள் வாங்கும் வகையில் 128, 160 பக்க பாக்கெட் சைஸில் (Rs 25, 30), குறைந்த பட்சம் 5000, 6000 பிரதிகள் பிரின்ட் ரன் எண்ணிக்கையோடு ஏஜெண்ட்களின் வாயிலாக மீண்டும் தமிழ்நாடு கடைகளில், கால வரைவுகள் ஏதுமின்றி அனுப்பி வைத்து மீண்டும் ஏஜெண்ட் முறையில் காமிக்ஸ் விற்பனை கொண்டு வந்தது போலவே அனைத்து மக்கள் வாங்கும் விலையில் மீண்டும் கடைகளில் மலிவு விலை பாக்கெட் சைஸ் இதழ்களை கொண்டு வந்தால், அதுவே புதிய பழைய வாசகர்களை கவர்ந்திழுக்கும் ஒரு காமிக்ஸ் விளம்பரம் செய்தது போலவும் ஆகிவிடும்.

    குறைவான விலை பாக்கெட் சைஸ் காமிக்ஸ் சீக்கிரமே விற்றுத்தீரும்... கைகளை கடித்திடாத பட்ஜெட்....இரு பேனல் பாக்கெட் சைஸில் கதைகள் விறுவிறுப்பாக செல்லும்... மற்ற பத்திரிக்கை போல வழிப்பிரயாணங்களில் படிக்க இலகுவானதாகவும் விலை பட்ஜெட்டில் இருக்கும். மேலும் முக்கியமாக, தேவையில்லாத படங்களை சுலபமாக பாக்கெட்டில் சைஸில் எடிட் செய்து விடலாம்... இதழின் உள்ளே தற்போதைய தரமாக வெளிவரும் காமிக்ஸ் சந்தா பற்றி அறிவித்து ஒரு விளம்பர யுக்தியாக இதனை செய்து பார்க்கலாம்.

    And resizing classic or any other comics stories is not at all tough task when using our computer graphic design softwares.

    வணக்கம் சார்,
    எனது ஆசை... ஆதங்கம்... நிச்சயம் உங்களுக்கு சின்ன ஆசையாக இருக்க முடியாது தான்... தோன்றியது, எண்ணத்தை பதிவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. Edi Sir..என் மன ஆசையும் நண்பர் கூறியதுதான்.தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் முத்து,லயன் காமிக்ஸ்கள் கடைகளில் கிடைத்திட வேண்டும்.அனைவரும் காமிக்ஸ் படிக்க வேண்டும். அடுத்ததலைமுறையினரும் காமிக்ஸ் படிக்க வேண்டும்.அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுங்கள் Edi Sir..

      Delete
    2. விரல் நோவ இத்தனை டைப்படித்திருக்க வேணாமே நண்பரே !

      பாக்கெட் சைஸ் ; ஜிப்பா சைஸ் புக்ஸுக்கு நீங்களும் நானும் மட்டும் மனசு வைத்தால் போதாதே - படைப்பாளிகளின் இசைவு என்றொரு சமாச்சாரமும் உண்டாச்சே ? தற்போதைய அந்த கலர் டெக்ஸ் இணைப்பு புக்ஸுக்கும் சின்னதான சைஸ்களுக்கு நோ அனுமதி ; இதையே கெஞ்சிக் கூத்தாடித் தான் வாங்கியுள்ளேன் !

      காலங்கள் ; களங்கள் மாறி விட்டன ; சிறுகச் சிறுகவாவது மனசுகளையும் மாற்றிக் கொள்ளத்தான் வேணும் !

      Delete
    3. பதில் தந்தமைக்கு நன்றிகள் சார்.

      நம் காமிக்ஸ் தொடர்புக்கு வந்தவுடன் இப்படி ஏதாவது உங்களுக்கு தெரியப்படுத்தி கொண்டு தான் உள்ளேன்... அதில் பலவை 2012க்கு பிறகு நடைமுறையில் வந்துவிட்டது... இப்படி சிற்சில suggestion சொல்லிடுவது வாசகனாக என் கடமையாகவே கருதுகிறேன்.

      அதற்காக கொஞ்சம் மெனக்கெடலாம் தானே ஐயா... மேலும் நான் ஐரோப்பிய, இத்தாலிய மற்றும் வேறெந்த வண்ண படைப்புளையும் சைஸ் மாற்ற சொல்லவில்லை...

      பிரிட்டிஷ் கருப்பு வெள்ளை கதாநாயக நாயகியர் மட்டுமே பாக்கெட் சைஸில் கேட்கிறேன். அதுவும் மாடஸ்டி, ஸ்பைடர் சமீபத்தில் பாக்கெட் சைஸில் வந்ததால் அது இன்னமும் அதிகமாய் தேவை என்று சொல்கிறேன்.

      ஒருவேளை பாக்கெட் சைஸ் முடியாவிடில், பத்து ரூபாய் புக் சைஸில் (7.5"X 5") அதே இரு பட பேனல்களில் வெளியிடலாம்... (வண்ணமில்லாமல், சென்டர் பின் அடித்து, நியூஸ் பிரிண்ட் பேப்பரில் கொரில்லா சாம்ராஜ்யம் போல) மீண்டும் கடைகளில் விற்பனையை பொறுத்து வருடம் 4 முதல் 6 காமிக்ஸ்கள் வரை வெளியிட்டு பார்க்கலாம். கருப்பு வெள்ளையில் ஆனந்த விகடன் போன்றதான மற்ற பத்திரிக்கை பலவே பட்ஜெட் விலையில் எப்போதும் விற்பனைக்கு இருப்பது, காமிக்ஸ் இன்னமும் வருகின்றன என்ற ஒரு அறிவிப்பை தொடர்ந்து ஏற்படுத்தும்...

      இந்த பட்ஜெட் காமிக்ஸ் மூலம் ஒரு 100 சந்தாதாரர் இணைந்தால் மாற்றம் முன்னேற்றம் தானே... காமிக்ஸ்க்கு விளம்பரம் காமிக்ஸ் தான்.

      (பின் குறிப்பு முக்கியமாக தானை தலைவனின் 122 பக்க பாக்கெட் சைஸ் இரு பட பேனல் "சதுரங்க வெறியன்" 1986ம் வருஷம் பின் தமிழில் மறுப்பதிப்பே ஆகவில்லை... கலெக்டர் வாசகர் தேடலில் உள்ள இன்னொரு 150 பக்க பாக்கெட் சைஸ் புத்தகம் 1987ல் வெளிவந்த "நீதிக்காவலன் ஸ்பைடர்" கூட மறுபதிப்பே ஆகவில்லை.)

      Delete
  28. ********இனிப்பு லட்டுக்கள் ஒன்றுக்கு இரண்டாய் confirmed !! ஒன்று குட்டி லட்டு ; இன்னொன்று ரெகுலர் லட்டு ! பூந்தியாய் உள்ளதை உருண்டை பிடிக்க இன்னும் நாலைய்ந்து நாட்கள் எடுக்கும் என்பதால் லிட்டில் வெயிட்டிங் ப்ளீஸ் !!********


    அப்ப கறுப்புக் கிழவி அல்லது ஆபத்தைத் தேடி....கோடீஸ்வரர் சில்லிடச் செய்யும் சாகசத்துக்கு அருள்வாரே அக்கதைகளோதான ஆசிரியரே

    ReplyDelete
  29. கார் லிட்டில் இரு முழு நீளக்கதைகளா சூப்பர் சார்....அதன் விலைகளும் அறிவியுங்ங

    ReplyDelete
  30. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  31. // டிசம்பர் இதழ்களின் டெஸ்பாட்ச் தேதியுமே கூப்பிடு தொலைவுக்கு நெருங்கியாச்சு //
    இந்த வாரக் கடைசியில் டிசம்பரில் நவம்பர் கொண்டாடிலாமுங்களா சார் !!!???

    ReplyDelete
    Replies
    1. /// இந்த வாரக் கடைசியில் டிசம்பரில் நவம்பர் கொண்டாடிலாமுங்களா சார் ///

      டைப் ஸ்லிப் ஆயிடுச்சுங்களா ரவி சார்..
      நவம்பரில் நவம்பர் வேணா இந்த வார கடைசியில் கொண்டாடலாம்.
      டிசம்பரில் நவம்பர்ன்னா, அடுத்த மாதக் கடைசியில இந்த மாத புக்ஸ்ஸை வெச்சுக்கிட்டு கொண்டாடலாம்.

      Delete
  32. டெக்ஸ் அட்டைப்படமும் சரி ..உட்பக்க சித்திரங்களும் சரி அசத்துகிறது...அருமை சார்.

    இளம் டெக்ஸ் எப்பொழுது கைகளுக்கு வருவார் என இப்பொழுதே ஆவல் மேலிடுகிறது..

    ReplyDelete
  33. ஆல்பா நாயகர் நம்ம மறதிக்காரர் மாதிரியே தெரியுறாரேன்னு நெனச்சேன். அதே ஓவியர் தானா. Super.

    ReplyDelete
  34. புதுமுக ஹீரோ ஆல்பாவின் சித்திரங்களும் ,ஸ்டைலும் அப்படியே லார்கோ வை நினைவுப்படுத்துகிறது..

    லார்கோ வை போல் இவரும் பட்டைய கிளப்புவார் என இப்பொழுதே பட்சி சொல்கிறது ..வெகு ஆவலுடன் புத்தாண்டுக்கு காத்திருக்கிறேன்..:-)

    ReplyDelete
  35. மீண்டும் லட்டா.

    வாவ்...சூப்பரோ சூப்பர் சார்..

    ReplyDelete
  36. ஆண்டினில் எண்ணிக்கைகள் சற்றே கட்டுக்குள் இருப்பது உறுதி ; ஆனால் பருமனில் குண்டு கல்யாணத்துக்குப் போட்டி தரக்கூடிய இதழ்கள் கணிசம் என்பதால் "எண்ணிக்கை குறையும் ; ஆனா வாசிப்பு குறையாது !" என்றே சொல்லத் தோன்றுகிறது

    #####


    இதைத்தான் குண்டு காதலர்கள் நாங்கள் எதிர்பார்த்தது மிக்க மிக்க நன்றி சார்..

    ReplyDelete
  37. சார்

    மொத்தம் நான்கு அதிகப்படியான லட்டுக்கள் என்றாகிறது - அடுத்த பதிவு முதல் வாரம் ஒன்றாக அறிவித்து விடுங்கள் ப்ளீஸ்.

    ReplyDelete
  38. Edi Sir..அதிரடிகளை அறிவித்து கொண்டே இருக்கிறீர்களே.சூப்பர் சார்..சனிக்கிழமை வந்தாலே ஊருக்கு போன அப்பா நமக்கு என்ன வாங்கிவருவார் என்ற சிறு குழந்தையின் ஆவலுடன் மனசு காத்திருக்கிறது.

    ReplyDelete
  39. சார்முத்து 50க்கு பணம் கட்டிட்டு வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்புனா போதுமாமெய்ல்பண்ணுமா

    ReplyDelete
  40. டியர் சார்., சமீபகாலமாகா Tex-அட்டைப்படம் ஒரே கலக்கலாக (அட்டகாசமாக) உள்ளது.
    "கண்ணே கொலைமானே"-அட்டைப்படம் பார்க்க பார்க்க - நமக்குள்ளேயே-ஒரு கதை விரிந்து செல்கிறது..
    "ஆல்பா "ஒரு சித்திர விருந்து என்பது தெளிவாகத் தெரிகிறது.. கதைதான்.,. நம் ரசிகர்கள் அதிக ஆக்ஷனை எதிர்பார்த்து ஏமாந்துவிடக் கூடாது...
    - அப்றம் - லேடி S-ம் ஓவியங்கள் சிறப்பாக இருக்கும். ஆக்ஷன் குறைவு என்றாலும், கதையாக சென்று ஒரு முக்கியமான கட்டத்தில் நின்றது போல் இருந்தது..(அடுத்த ,அடுத்த பாகங்களின் கதையை பற்றிய ஒரு முன்னோட்டத்தை சொல்லி இரண்டு இரண்டு பாகங்களாக வெளியிடலாமே..)எனக்கு அந்த ஓவிய அழகை மிஸ் பண்ணமுடியவில்லையே. லேடி S_ஒரு ஜீப்-பின் மேல் உட்கார்ந்து இருக்கும் அழகு-அப்படியே சினிமா படம் போல் உள்ளது.. ஆல்பா-வின் சித்திர அழகை ரசித்த பிறகாவது லேடி S-க்கு ஆதரவு பெருகுகிறதா என்று பார்ப்போம்..சார்..

    ReplyDelete
  41. ஆசிரியர் சார்@ இந்த பொண்ணு அஸ்ஸியா டொன்கோவா எதோ மார்வாடி பாசை மாதிரி பேசுதே.... //...சந்திக்குதா? வீட்டுக்கு வருது, நான் வரும்...///
    ---இப்படி ஒரு இடத்தில் தானா அல்லது கதை முழுதுமா??

    அது ரொம்ப அழகா இருக்கு! அதன் அழகில் தடுமாறுவது, ஹி...ஹி... வழக்கந்தான்..

    அங்கே பாஷையும் தடுமாறினா ரொம்ப வழிவதுபோல ஆகிடாது.... உண்மை அதான்னாலும் இப்படி ஓப்பனாவா......???

    ReplyDelete
  42. ////கதை நெடுக நாம் பார்த்திடவுள்ள அட்டகாசமான கார்கள் ; பாரிஸின் தெறிக்கும் அழகுடனான landmarks ; இரண்டாம் பாகம் முதலாய் மாஸ்கோவின் அழகு - என்று இங்கு நமக்கு காத்துள்ள visual treat வேறொரு லெவல் ! ///

    ---இந்த ஓவியரின் அசாத்திய ஓவியங்களுக்காகவே இம்முறை இதான் முதல் ரீடிங்கு....

    (டொன்கோவை பார்த்து ரசிக்க என்பதை இப்படி மாற்றி சொல்றானே STV னு நீங்களாம் நினைப்பது இங்கேயே கேட்குது நண்பர்களே.....😉)

    ReplyDelete
  43. ///இரத்த படலம் - இரண்டாம் சுற்றின் ஓவியரே இங்கு ஆர்ட்டிஸ்ட் ; in fact ஆல்பாவில் துவங்கி மிரட்டியதன் தொடர்ச்சியாகவே XIII இரண்டாம் சுற்றுக்குப் படம் போடும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியுள்ளது///----இரத்தபடலம் 2ம் சுற்று முதல் சுற்றைவிட ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் அந்த ஓவியங்கள் அந்த குறையை தெரியாமல் பார்த்து கொண்டன.... அதேஓவியர் தான் ஆல்பாவுக்கும் எனும்போது கண்களுக்கு தலைவாழைவிருந்து வெயிட்டிங்....

    ReplyDelete
  44. ஆல்ஃபா தொடர் 1996ல் வெளியானது என்பது என்னை வியக்க வைத்தது. நான் இவர் சமீபத்திய புது நாயகர் என நினைத்தேன்.

    ReplyDelete
  45. போட்டோவை எங்கு அனுப்ப வேண்டும்.சென்ற முறை கழுகு வேட்டை புத்தகத்திற்கு இருமுறை Email அனுப்பியும் படம் வரவில்லை ...சரியான Email id Or whatapp number கொடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இதே அனுபவமே. So, இந்த முறை நான் மிகவும் உஷாராக 2 mail id க்கும் photos attach பண்ணி 7 mail அனுப்பி விட்டேன். நவம்பர் 1 ம் தேதி, அக்.14ம் தேதி, செப்.27ம் தேதிகளில்.

      Delete
    2. Photo அனுப்பியாச்சி ...

      Delete
  46. தொகுப்புகள் மெருகூட்ட உதவிடுமே தவிர்த்து, சுமார் சரக்கை சூப்பர் சரக்காக்க உதவிடுவதில்லை ! டெக்ஸ் சிங்கிளாயும் ஜொலித்து ; தொகுப்பிலும் சாதிப்பவர் தானே ? கமான்சே ரசிக்கலை for several reasons ! Simple as that sir !

    ######


    உண்மை தான் சார்...!

    ReplyDelete
  47. தனிப்பட்ட முறையில் அனைத்து நண்பர்களுமே கமான்சே நன்றாக இருப்பதாகவே தெரிவிக்கின்றனர். இருந்தாலும் கமான்சேவின் தோல்விக்கான காரணம் புரியவில்லை. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  48. ஒரு வேளை ஆசிரியரின் பிரத்யேக மொழிபெயர்ப்புநடை இல்லாமல் முழுக்க சாதாரணமான மொழிபெயர்ப்பில் வந்ததுதான் காரணமோ. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  49. இளம் டெக்ஸ் ஐ எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து.
    பின்னாளில் இந்த தொடர் குண்டு புக்காக வண்ணத்தில் வர 100% வாய்ப்பு உள்ளது.
    இப்பொழுதே Italy இல் வண்ணத்தில் வந்த வண்ணம் உள்ளது.ஆசிரியர் ஆவண செய்ய வேண்டும்.

    ReplyDelete
  50. எது, எப்படியோ - தொடரும் ஆண்டினில் எண்ணிக்கைகள் சற்றே கட்டுக்குள் இருப்பது உறுதி ; ஆனால் பருமனில் குண்டு கல்யாணத்துக்குப் போட்டி தரக்கூடிய இதழ்கள் கணிசம் என்பதால் "எண்ணிக்கை குறையும் ; ஆனா வாசிப்பு குறையாது !" என்றே சொல்லத் தோன்றுகிறது !!///////|


    குண்டு புத்தகங்களா வருடம் முழுவதும்.

    சந்தோஷம்.

    மிக்க சந்தோஷம்.

    ReplyDelete
  51. இளம் டெக்ஸ் அட்டை சும்மா சூப்பர் சார். இந்த மாதம் 4 புத்தகங்களும் பட்டைய கிளப்ப போகிறது. இத்தனை வருட Blog இல் நவம்பர் மாதத்தில் ஜனவரியில் வரப் போகும் புத்தகங்களை பற்றி எழுதியது இப்போது தான் முதல் முறை. ஆல்ஃபா ரொம்பவே இம்ப்ரஸ் செய்கிறார். FFS ஒரு மைல் கல் இதழாக அமையப் போகிறது என்பதில் ஐயம் இல்லை. இன்னும் இரண்டு ஹீரோக்கள் பற்றியும் அடுத்த பதிவில் சொல்வீர்கள் என்று ஆவலுடன் நான்.

    ReplyDelete
  52. சார். வரும் ஆண்டில்(2022)ல் இளம் டெக்ஸ் கலரில் வருகிறதுங்களா? இல்லாவிட்டால்ஏதாவது ஒரு புத்தகமாவது (இளம் டெக்ஸ்) கலர் ஏற்பாடு பண்ணுங்க ப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. வருகிறது. மொபிஸ்டோ வுடன் அடுத்த தீபாவளி மலர்.

      Delete
  53. டியர் எடி,

    ஆல்ஃபா தொடர் சினிபுக்கில் இரண்டு படித்திருக்கிறேன்.... அவ்வளவு பிடித்தம் என்று சொல்ல முடியாதுதான். அதுவும் அந்த பேனல் லேஅவுட், மற்றும் கலரிங் டாப் ஆஃப் சார்ட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    எனவே தமிழில் மீண்டும் முயற்சிக்க நான் ரெடி.

    இளம் டெக்ஸ் வழக்கம் போல எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறார். மாடஸ்தி கார்வின் போல ஒரு வித்தியாசமான உறவு முறையை டெக்ஸ் கதைகளிலும் பார்ப்பதில் ஒரு இனம் காணா உணர்வு.

    லட்டுக்கள் என்று கண்களுக்கு விருந்தாக பட்டியலிடப்படும் என்று ஆவலுடன் வெயிட்டிங். :-)

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் இளம் டெக்ஸ் ஏமாற்ற மாட்டார்.

      Delete
    2. இதுவரை இல்லை என்பதால் ஆவலுடன் வெயிட்டிங் :)

      Delete
  54. பொக்கிஷம் தேடிய பயணம்

    தேஷா....
    தேஷா....
    தேஷா..

    ஒன்று..தேஷாவைப் பற்றி பேசுகிறார்கள்..

    இல்லை..தேஷாவை நினைத்து உருகிறார்கள்...

    இல்லை..தேஷாவை அழகில் மயங்குகிறார்கள்..

    அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தேஷா...மனதை திருடியதில் ஆச்சரியமில்லை.

    எனக்கென்னமோ ஆபரணப் புதைய்லை விட தேஷாவைத்தான் ஆசிரியர் பொக்கிஷமாக உருவகித்துள்ளார் எனத் தோன்றுகிறது.

    யாருங்க அந்த தேஷா.?

    எனக்கே அவுங்களைப் பார்க்கணும் போல இருக்கு.

    "தேஷா...தேஷா....!
    நீயில்லாமல் வாழ்வது லேசா..!"

    ReplyDelete
    Replies

    1. தேஷா..கண்ணுக்கினிய புதையல் என்றால்..சிவிடெல்லியின் ஓவியங்கள் இன்னொரு புதையல்.க/வெள்ளையிலே நம் கண்களைக் கட்டிப் போடுபவர்.கூட கலரில் எனும்போது.. செய்வினை வைத்ததைப் போல் நெஞ்சமெலாம் நிறைந்த ஓவியங்கள்..!

      Delete
  55. திக்கெட்டும் பகைவர்கள்...
    திக்கெட்டும் வெற்றிகள்...

    ReplyDelete
  56. கேள்விக்குறியாகத் தொடங்கியது...ஆச்சரியக்குறியாக முடிவடைந்தது..

    ஓநாய்கள் ஜாக்கிரதை செம்ம.!

    ReplyDelete
  57. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எடிட்டர் ஐயா
    அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
    சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼

    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼🙏🏼🙏🏼

    🎂🎂🎂🎂🎂
    🍧🍧🍧🍧🍧
    💐💐💐💐💐
    🍫🍫🍫🍫🍫
    🍉🍉🍉🍉🍉
    .

    ReplyDelete
    Replies
    1. இன்று தனது திருமணநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எடிட்டர் ஐயா
      அவர்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
      சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼

      இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼🙏🏼🙏🏼

      🎂🎂🎂🎂🎂
      🍧🍧🍧🍧🍧
      💐💐💐💐💐
      🍫🍫🍫🍫🍫
      🍉🍉🍉🍉🍉
      .

      Delete
    2. நமது அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....

      Delete
  58. திருமணநாள் தான் சரியானது
    தவறுதலாக பிறந்தநாள் என போட்டுவிட்டேன் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  59. அன்பு எடிட்டர், இனிய திருமண நாள் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  60. ஆசிரியர் தம்பதியருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  61. ஆசிரியர் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  62. அன்பிற்குரிய ஆசிரியர் சார் அவர்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்💐💐💐💐💐

    ReplyDelete
  63. இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் ஆசிரியரே...

    ReplyDelete
  64. அடிச்சி பிடிச்சி 2022 சந்தா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸில் இடம் பிடிச்சாச்சி! இந்த முறை சந்தா செலுத்த கொஞ்சம் தாமதமாகி விட்டது! அடுத்து நல்ல போட்டவா பார்த்து இன்று ஆசிரியருக்கு அனுப்பிவிடனும்! எதுக்கும் வேப்பிலையை கையில் வைத்து கொண்டு என் படத்தை பாருங்கள் சார் :-)

    ReplyDelete
    Replies
    1. ஏற்கெனவே ஏகப்பட்ட கட்டு வேப்பிலை ஆசிரியரின் டேபிளை சுற்றி குவிந்து கிடக்குதாம். ஒவ்வொரு கட்டுக்கும் சந்தா எண்ணோட Tag அடிக்கவே ஸ்பெஷலாக ஒரு ஆள் போட்டிருக்கிறாராம்.

      Delete
    2. இதை சொல்ல மறந்துட்டேன். ஈரோடு கட்டுக்கு மட்டும், கூடவே ஆத்தா படமும் சேர்த்து Tag அடிக்கச் சொல்லியிருக்கிறாராம்.

      Delete
    3. பத்து @ ஆகா நம்பளை போல டெரரா நிறைய பேர் இருப்பார்கள் போல :-)

      Delete
  65. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் எடிட்டர் சார்.🎊🎉🎊🎉🎊🎉💐💐💐💐

    ReplyDelete
  66. Many many happy returns of the day, Sir

    ReplyDelete
  67. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார்.
    🎂🎁💐🌹🎊🎆🎉🌈💥🎇🍰

    ReplyDelete
  68. ஆசிரியருக்கு இனிய திருமணநாள்வாழ்த்துக்கள்சார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  69. புக் # 4 ஆக வந்திடவுள்ள அந்த விலையில்லா இணைப்பினில்..../////


    விலையில்லா புக்கான 4ல் என்ன கதை இடம்பெறுமோ?!

    ReplyDelete
  70. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பர்களே !!

    :-))

    ReplyDelete
  71. இனிய திருமண நாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்... iii

    ReplyDelete
  72. இன்றைய எடிட்டரும், நாளைய தயாரிப்பாளருமாகிய எங்கள் இனிய எடிட்டருக்கு தித்திப்பான திருமணநாள் வாழ்த்துக்கள்!!
    🎂🎁💐🌹🎊🎆🎉🌈💥🎇🍰

    ReplyDelete
    Replies
    1. ஹீரோ நீங்கதானே.. கன்ஃபார்ம் ஆயிடுச்சா?..

      Delete
    2. ஹிஹி! மொதல்ல வில்லன் வேஷத்துல நடிச்சுட்டு அப்பறமா ஹீரோ ஆகிக்கிடுறேன் பத்து சார்!

      தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீங்க! :P

      Delete
    3. உனக்கு பதில் சொல்ல நினைக்கும் போது கவுண்டமணி காமெடி ஞாபகத்துக்கு வருகிறதுலே :-) என்ன விஜய்:-)

      Delete
  73. காமிக்ஸ் காதலருக்கு இனிய கல்யாண நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  74. திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  75. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார்

    ReplyDelete
  76. ஆழ்ந்த வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
  77. Edi Sir..
    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.🙏💐❤

    ReplyDelete
  78. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் விஜயன் சார்.

    ReplyDelete
  79. Dear Edi அவர்களுக்கு, Alpha கதையில் வரும் பெண்ணின் வசன நடையை மாற்ற இயலுமா? பழைய புராதன நெடி அடிக்கிறது. 'விடுது நான், வீட்டுக்கு வருது, போன்றவை.

    ReplyDelete
  80. ஆல்ஃபா
    //கௌபாய் அல்லாத தொடர்களின் தேடல்//
    100% வரவேற்கிறேன்,சார்

    ReplyDelete
  81. ஆசிரியரின் மொழிபெயர்ப்பு, மொழிநடை creativityயை விமர்சிப்பதை நண்பர்கள் தவிர்க்கலாம்.

    ReplyDelete
  82. இளம் டெக்ஸ் சட்டை அட்டையில் மஞ்சள் நிறம் மாறி ஆரஞ்சு நிறமாக தோற்றமளிப்பது அருமை...

    ReplyDelete
  83. இனிய திருமண நாள் வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  84. இனிய திருமணநாள் வாழ்த்துகள் எடிட்டர் சார் !

    ReplyDelete
  85. தளம் மிக மிக மிக அமைதியாக இருக்கின்றதே, என்னாச்சு ?


    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் நவம்பரில் டிசம்பரை கொண்டு வர பிசியா இருப்பாரு. அதனால கொஞ்சம் டல்லா இருக்கும்.

      Delete
  86. வணக்கம் நண்பர்களே.....

    ReplyDelete
  87. புத்தகங்கள் நாளை கிளம்புமோ ?!

    இல்லை

    திங்களன்று கிளம்புமோ ?!

    ReplyDelete
  88. Load more கூட இன்னும் வரலை... அவ்வளோ பிஸி

    ReplyDelete
  89. #கௌபாய் கதைகளில் ஆக்ஷன் + விறுவிறுப்பு இல்லாது போயின் அங்கே செல்ப் எடுக்காது நண்பரே ! கமான்சேவில் பிரதான காரணம் அதுவே !

    இதே கமான்சேவில் ஒற்றை ஆல்பம் 20 வருடங்களுக்கு முன்னே வந்து ஹிட்டடித்தது - becos நான் தேர்வு செய்திருந்தது - தொடரின் ஆல்பம் # நான்கை - ஆக்ஷனுக்காக !#
    1. ஏதேனும் புத்தக விழா ஸ்பெசலாக வண்ணத்தில் மறு பதிப்பு வெளியிடுங்கள் சார்!
    2. ஒரு தோழனின் கதை, சித்திரமும் கொலைப்பழக்கம், ட்யூக் போன்ற கதைகளுக்கு கமான்சே ஆயிரம் மடங்கு மேல் சார்!
    3. அதனால் வருடத்துக்கு ஒரு ஸ்லாட்டாவது கமான்சேவுக்கு ஒதுக்குங்கள்...ப்ளீஸ்!

    ReplyDelete
  90. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete