Sunday, October 31, 2021

சாத்து வாங்கிய சாயந்திரமும், குதித்தெழுந்த பதிவும் !

 நண்பர்களே,

வணக்கம். சாயந்திரத்துக்குள் வேலைகளையெல்லாம் முடித்து, ஒதுக்கி வைத்து விட்டு, முறுக்கு...சிப்ஸ்... அப்பாலிக்கா யாரோவொரு அனாமதேய அன்பர் அனுப்பியிருந்த  ஒரு பெரிய Premium Giftbox-ன்  நொறுக்குத் தீனிகளையும் எட்டும் தொலைவில் வைத்துக் கொண்டு (thanks நண்பரே !!) டாணென்று ஏழரை மணிக்கு கிரிக்கெட் மேட்சைப் பார்க்க செம குஷியாய் அமர்ந்தது மட்டும் தான் ஞாபகமுள்ளது ! ஒரு முறுக்கை முழுங்கும் நேரத்துக்குள் நமது அணியில் பாதிப் பேர் முக்காடைப் போட்டபடிக்கே கிளம்பியிருக்க, சிப்ஸ் பாக்கெட்டை உடைப்பதற்குள் 20 ஓவர்களே முடிந்திருந்தன !! "இதுக்குப் பதிலா ஸ்டீல் பொழிந்து கொண்டிருந்த கவிதைகளைக் கூட ஜீரணிச்சிடலாம் போலும்" என்று தோன்றினாலும் - "ஆங்...பேட்டிங் சொதப்பியிருக்கலாம் ; பவுலிங்கில் பின்னாம விட மாட்டாங்க நம்ம ஆளுங்க !!" என்ற நம்பிக்கை ஒருபக்கம் எட்டிப் பார்த்தது ! ஆனால் இன்றைய மாலைக்கு புனித மனிடோவின் திட்டங்கள் வேறு போலும் !! "ஒரு இரும்பு தெய்வத்தின் கவிதைகளை புறக்கணிச்சிட்டா வந்தே - மவனே, இங்கேர்ந்து உன்னைத் துரத்தி விடறேனா இல்லியா பாரு ?!" என்று பவுலிங்கிலும் நம்மவர்கள் பீச்சோ பீச்சென்று பீச்சும் ஆட்டத்தைக் காட்டச் செய்து, என்னைத் தலை தெறிக்க இங்கே ஆஜர் ஆகச் செய்து விட்டார் ! ராத்திரி முழுக்க ஸ்டீல் - கொட்டையும், குழலையும் ஊதிக்கினே எத்தினி டப்பாங்குத்தைக் குத்தினாலும் பரவால்லே, இனி ஒரு ஆறு மாசத்துக்காச்சும் டி-வி பொட்டியின் பக்கமாய்த் தலை வைத்துப் படுப்பதாக இல்லை ! ஆத்தாடி...என்னவொரு மரண அடி !!

நேற்றின் பின்மாலைப் பொழுதும், இன்றைய நாளின் முழுமையும் "ஒற்றை நொடி...ஒன்பது தோட்டாக்கள்" இறுதி எடிட்டிங்கில் ஓட்டமெடுத்துள்ளது ! 270 பக்கங்கள் கொண்ட மெகா த்ரில்லர் எனும் போது, பிதுக்கி விட்டது வேலை ! நான் எழுதியதே என்றாலும், ஒரு கோர்வையாய் முழுக் கதையாய் வாசிக்கும் போது ஆங்காங்கே தென்பட்ட சொதப்பல்களை சரி செய்வதும் சுலபமான பணியாக இருக்கவே இல்லை ! எனக்குப் பொதுவாய் நெடும் கதைகளினுள் பணியாற்றும் போது நம்ம XIII-ன் வியாதி தொற்றிக் கொள்வதுண்டு ! "இந்தாளுக்கு கோவிந்த்சாமின்னு பேரா ? கொயந்தசாமின்னு பேரா ?" என்ற ரீதியில் சந்தேகங்கள் எழுந்திடுவதுண்டு ! இங்கோ ஒண்ணரை ஆண்டு இடைவெளிக்குப் பின்பாய்த் தொடர்ந்திடும் பணியெனும் போது - இந்தச் சிக்கல் நிரம்பவே படுத்தி எடுத்தது ! So துவக்க அறிமுகப் பக்கங்களில் பயன்படுத்தியிருந்த பெயர்களையெல்லாம் ஒரு நோட்டில் குறித்துக் கொண்டு அப்பப்போ அதனைப் பார்த்துக் கொண்டே தொடர்ந்தேன் ! And கதையை ஒரு முழு வாசிப்புக்கு உட்படுத்தும் போது - இதன் பிதாமகர்களின் விஸ்வரூபம் துல்லியமாய்த் தெரியத் துவங்கியது ! இந்தக் கதையின் துவக்கப் புள்ளியை உருவகப்படுத்திய சமயத்திலேயே கதாசிரியர் இங்கே 5 அத்தியாயங்களை தனக்குள் சிருஷ்டித்து - எந்தெந்த அத்தியாயங்களில் எந்தெந்த முடிச்சுகளை போடப் போகிறோம் ? என்பதையும் தெள்ளத்தெளிவாக ரெடி செய்திருக்க வேணும் என்பேன் !! Becos ஒற்றை முடிச்சு கூட விளக்கமின்றித் தொங்கிக் கொண்டிராது, கதை நிறைவுறும் வேளைக்குள்ளாக அத்தனைக்குமே  செம ஷார்ப்பான தீர்வுகளைத் தந்துள்ளார் ! Simply a masterpiece !! Maybe இதனை இன்னும் ரெண்டோ / மூன்றோ பாகங்களுக்கு நீட்டித்திருக்கவும் முடியும் தான் ; in fact இன்னும் கொஞ்சம் கதை மாந்தர்களைக் கூடுதலாக்கி - கதையின் வீரியத்தையுமே ஒரு மிடறு அதிகப்படுத்தியிருக்கலாம் தான் ! ஆனால் அம்சமான அளவே போதுமென்று 'சிக்' தீர்மானத்துடன் - கதாசிரியர் மிளிர்கிறார் !

And இங்கே பேனா பிடித்த அனுபவத்தினில், பைபிள் வரிகளைத் தேடுவதில் துவங்கி, லத்தீன் பாஷையின் சொற்றொடர்கள் ; அமெரிக்க அரசியல் வரலாறு ; அமெரிக்க சீரியல் கில்லர்கள் ; கொரிய யுத்தம் - என்று ஏதேதோ சமாச்சாரங்களை கூகுளில் துளாவிட்டதும் சேர்த்தி !! நிறைய ஆக்ஷன் கதைகளையெல்லாம் கையாண்டுள்ளோம் தான் ; XIII-ன் 18 பாக நீளங்களையும் பார்த்து விட்டோம் தான் ; அந்த அளவுகோளின்படிப் பார்த்தால் 270 பக்கங்கள் no big deal என்று தோணலாம் தான் ! ஆனால் நம் மத்தியில் நிரம்ப காலத்துக்கு நினைவில் நிற்கப்போகும் த்ரில்லராய் இது இராமல் போகாதென்று காதினுள் பட்சிராஜா சொல்கிறார் !! Fingers crossed !!

So அடுத்த சில நாட்களில் இன்றைய திருத்தங்களைப் போட்ட கையோடு, ஒருக்கா சரி பார்த்து விட்டு, அப்புறமாய் ஒரு உள்ளூர் பள்ளியின் சீனியர் தமிழாசிரியரிடம் பிழை திருத்தங்கள் போட மொத்தமாய் அனுப்பிட வேணும் ! இந்த  மாதம் முதலாய் அவர் நமக்கு உதவிடவுள்ளார் என்பதால் - பற்களை ஆடச் செய்யும் எழுத்துப் பிழைகள் தொடராதென்ற நம்பிக்கையுள்ளது !! ஆக FFS மெகா இதழின் ஒரு பாதி, தீபாவளி முடிந்த பிற்பாடே அச்சுக்கு கிளம்பிவிடும் !

And  நாளை நம்ம சிரிப்புப் பார்ட்டீஸான ஹெர்லக் ஷோம்ஸ் & வேஸ்ட்சன் உடன் எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் உள்ளது !! இவர்களின் இறுதி appearance ஆல்பம் என்பதால், அமர்க்களமாய் டாட்டா சொல்லி அனுப்பிட எண்ணியுள்ளேன் ! இரண்டு நாட்களுக்குள் அவர்களது மொழிபெயர்ப்பு நிறைவுற்று விட்டால் - அப்புறமாய் நமது XIII காத்திருப்பார் !! அவரை மட்டும் ஒரு நாலு நாட்களுக்குள் சமாளித்து விட்டால் - அதன் பின்பாய் FFS இதழ்களின் புக் # 1 பக்கமாய் குதித்து விடலாம் ! So குவிந்து கிடந்த "பணி மலை" அடுத்த வாரம் இந்நேரத்துக்கு - "தாண்டி முடித்த மலை"யாகியிருப்பின் - அப்புறம் ஸ்டீல் கச்சேரியில் நானுமே சேர்ந்து கொள்ள நேரமிருக்கும் !! உஷார் மக்களே !!

அப்புறமாய்  "கதை எழுதட்டா ? கவித எழுதட்டா ? பாட்டுப் பாடட்டா ?" என்று மாய்ந்து மாய்ந்து வாட்சப்பில் மெசேஜ் அனுப்பி வந்த சீனியர் எடிட்டருக்கு "GO AHEAD !" என்று பச்சை சிக்னலும் தந்து ; பதில்கள் கோரிய உங்களின் ஒரு டஜன் கேள்விகளையும் தந்தான பின்னே - ஸ்டார்டிங் ட்ரபிளோடு தடுமாறிடுபவரை அவசரப்படுத்தும் வேலை பாக்கியிருக்கும் !! "30 நாட்களில் எண்ணங்களை சுவாரஸ்ய எழுத்தாக்குவது எப்படி ?" என்ற புக்கை சீக்கிரமே சீ.எ.கரைத்துக் குடித்து விடுவாரென்ற நம்பிக்கையில் I am waitingggggg !! 

In the meanwhile - உங்களிடம் கோரிக்கைகள் guys :

1. FFS புக்கில் உங்களின் போட்டோக்கள் வேண்டுமெனில், சீக்கிரம் ப்ளீஸ் ! முன்னர் நான் சொன்ன டிசம்பர் 5 தேதிக்கு முன்பாகவே FFS புக் # 1-ம் அச்சுக்கு ரெடியாகி விடுமென்பதால் - the earlier the better folks !!

2. "வாசக நினைவலைகள்" அழகாய் எழுதி, நிறைய நண்பர்களின் flashbacks தேர்வானது நினைவிருக்கலாம் ! அந்த நண்பர்களுக்கொரு வேண்டுகோள் : ப்ளீஸ் - உங்களின் அந்தப் பின்னூட்டங்களை ஒரு மின்னஞ்சலாய்த் தட்டி விடுங்களேன்  ? நாலு நாளைக்கொரு பதிவென்று போட்டுத் தாக்கி வரும் மும்முரத்தில் உங்களின் பின்னூட்டங்கள் தாங்கிய பதிவானது பின்னே ஓடி விட்டிருக்கும் ! நேரம் செலவிட்டால் நாங்கள் அதனுள் துளாவித் தேடிடுவோம் தான் ; ஆனால் உங்களுக்கு அது சுலபப் பணியாக இருக்கும் பட்சத்தில் - please help ! 

Before I sign out - இந்த தீபாவளியைத் தெறிக்க விட்டு வரும் நமது மஞ்சச் சட்டைக்காரரின் இந்த படத்துக்கொரு கேப்ஷன் எழுதுங்களேன் - பார்க்கலாம் ? பரிசு ? அடுத்த டெக்ஸ் ஹார்ட்கவர் இதழ் - whichever that might be !! Top 3 கேப்ஷன்களுக்குப் பரிசிருக்கும் !! And ஆளுக்கு maximum மூன்றே வாய்ப்புகள் தான் !! So காட்டுங்களேன் உங்களின் வித்தைகளை guys !!

Bye all...see you around !! தீபாவளி அலசல்கள் தொடரட்டுமே ப்ளீஸ் ?

193 comments:

  1. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. // Simply a masterpiece !!//

      ஆக... FFS #2 தெறி ஹிட் என்பது உறுதியாகி விட்டது.

      Delete
  2. வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  3. Waiting for Herlock Shomes... My favorite cartoon.

    ReplyDelete
  4. A அதான் இவ்வளவு மஞ்ச சட்டை துவைச்சு கிடக்கே பின்ன என்ன யோசனை?

    B அட இருய்யா வாரேன்.

    C அந்த துவைக்காத மஞ்ச சட்டதானே நமக்கு ராசி. அது தான் எத்தனை தோட்டா வந்தாலும் சும்மா புல்லட் ஃப்ரூப் மாதிரி தாங்கும்.

    ReplyDelete
  5. நண்பர்களுக்கு இரவு வணக்கம்.

    ReplyDelete
  6. A: ஒரு கேப்சன் எழதுங்களேன்..B: ஏம்ப்பா மாட்டி வுடுறே..C:ஏற்கனவே ரம்மி நல்லாவே காய்ச்சுவாப்பிலே.. இதிலே இத்தனை மஞ்ச சட்டையை பார்த்தா காலிலே சலங்கை கட்டி ஆடுவாப்பிலியே..

    ReplyDelete
  7. DUKE - first part completed. I liked it. Real western unlike TEX based MGR stories :-)

    Marks for Part 1: 8/10

    Over to second part now ..

    ReplyDelete
  8. A. என்னப்பா tex என்னோட தீவாளி பரிசை பார்த்து மலைச்சு போய்ட்டியா?
    B. ரொம்பவே... (கொஞ்சம் எரிச்சலுடன்)
    C. கிழத்துக்கு (கார்ஸன்) கண்ணு சரியாய் தெரில போல, வேற வேற கலர்னு நெனைச்சு எல்லாத்தையுமே ஒரே மஞ்ச கலராக இல்ல எடுத்தாந்திருக்கு.

    ReplyDelete
  9. எ. இத்தனை மஞ்ச சட்டையை பார்த்து திகைச்சுட்டியாப்பா?
    பி. இதுல இருக்குற மறைமுக உண்மையை எடிட்டர் எப்படி சுட்டி காட்டுகிறார் பாரேன்.
    சி. 12 மாதமும் நமக்கு இடம் உண்டு என்று 12 சட்டை மூலமாக வாசகர்களுக்கு உணர்த்துகிறார்

    ReplyDelete
  10. Duke - ஒரு முறை கொன்றுவிடு 

    இதுவரை நான் படித்த எந்தக் கதைக்கும் இப்படி உடனே கருத்து எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை. மேலும் கேப்டன் பிரின்ஸ் கதைகளுக்கோ ஹெர்மன் ஓவியங்களுக்கோ பெரிய ரசிகனும் கிடையாது. ஏதோ வருகிறதே என்று வாங்கிப் படிப்பதுண்டு. ஆனால் இம்முறை Duke - என்னை மிகவும் கவர்ந்துவிட்ட ஒரு கதை.

    Real சினிமாத்தனமில்லாத வைல்ட் வெஸ்ட் களத்தில் நல்ல action கூடவே கொண்டிருக்கும் கதை. ஒரு Tex அல்லது Blueberryயின் வேகம் இல்லைதான் - எனினும் was a swift reading !

    மதிப்பெண்கள் : 9/10
    அடுத்த வருடம் Duke உண்டா இல்லையா ?

    ReplyDelete
  11. கண்ணே கொலைமானே ....,

    பனியில் ஒரு புதுநேசம்......,


    பருந்துக்கொரு பரலோகம் ......,


    இந்த மூன்று டெக்ஸ் வில்லர் கதைகளுக்குமிடையே இரண்டு ஒற்றுமைகள் உள்ளது. அவை என்ன ?

    சொல்லுங்கள் நண்பர்களே ?!

    ReplyDelete
  12. சார் மீண்டுமோர் அட்டகாசப் பதிவு...ஒநொஒதோ உங்க உற்சாகத்த கூட்டியது போல எங்களின் சகல சந்தோசத்தையும் மேலும் கூட்டப் போவது ஸ்பைடர் மட்டுமல்ல எனும் உறுதிய பட்சிக்கு முன்னால் சொன்னதால் இன்னும் கூடுது எதிர்பார்ப்புகள்....அருமை சார்...நம்ம பிதா மகருக்கு என்ன பாட்ட அனுப்பி கேள்வி கேக்கலாம்னு யோசனையை கூட்டிய பதிவு ....இரத்தப் படலம் இந்த மாதத்துக்குள்ள அடுத்த மாதம் அல்லவா....இதோ காலத்தோடு போட்டி போட்டு நாம சரியான நேரத்த பிடிச்சத கொண்டாட இரத்தப் படலத்த விட பொருத்தமான கதை எதிருக்கப் போவுது... அடுத்த மாததத்த ஆவலோடு எதிர் பார்க்கிறேன்...எஃப்எஃப்எஸ் அடுத்த எதிர்பார்ப்பில் மேலும் ஒரு மாத இடைவெளியா ...அடுத்த வருடம் இந்த வருடத்துக்குள்ள நுழைய வாய்ப்புண்டா...

    ReplyDelete
    Replies
    1. நானும் இப் முதல் புத்தகத்த படிச்சு முடிச்சாச்சு....எத்தனை தடவ படிச்சன்னு நினைவில்லை...படிக்கும் போதெல்லாம் ஆஹா இத முன்னரே சொல்றாரே என கதை பின்பகுதி குறித்த சுவாரஸ்யம் கூடுது...இரத்தப் படலம் எப்ப படிச்சாலும் நமக்கு சந்தோசத்த கூட்டுவதுறுதி பதிமூன போல ஞாபக சத்தி நமக்கிருந்தா....புதுசா படிப்பது போல் கூடுதல் விறுவிறுப்பு...அதே மிஞ்சுவது ஒநொஒதோ எனும் போது முருகான்னு உங்க திசைக்கோர் கும்பிடு...எகிறும் உற்சாகத்தோடு வெய்ட்டிங் ....காலங்கடந்து நிற்கப் போகும் அடுத்த இதழுக்காக காத்திருப்பது டன் ...இரண்டாம் சுற்றும்...மூன்றாம் சுற்றும் நாளையிருந்து படிக்க போறேன் வாய்ப்பு கிடைக்கயிலெல்லாம் லேடி Bய வரவேற்க்க

      Delete
  13. ஏ....சார் உங்களுக்காக தனித்தடத்த கடைல நாங்களும் வச்சாச்சு..
    பி....இத அப்படியே பார்சல் பன்னுங்க ...ஆசிரியர் வேற அடுத்தடுத்து சண்டைக்கு அனுப்புவார்
    சி....பாக்குறதெல்லாம் மஞ்சளாத் தெரியுதுன்னு பாத்தா இங்கயுமா

    ReplyDelete
  14. ஓநாய் ஜாக்கிரதை அசத்தல் மிக துல்லியமான சித்திரங்கள் ஒரு களவாணி கொடுரனை விரட்டும் டெக்ஸின் முன்னால் ஒரு ஓநாய் எதிர்பட அதை சுட நினைக்கும் டெக்ஸ் சடுதியில் மனம் மாறி இது சாதா மிருகம் கொடுர மனித மிருகம் தப்பித்து ஓடுகிறது அதை வேட்டையாடுவோம் இந்த ஓநாயை விட்டு விடுவோமென ஓநாயை கொல்லாமல் போக அதன் பலனை கொஞ்ச நேரத்திலேயே டெக்ஸ் அடைய டெக்ஸ் காப்பாற்றிய பலனை அந்த ஓநாயும் பெற கொடுர மனித மிருகமும் எமனின் தோளில் கை போட்டு டாட்டா காண்பித்து சென்று விட ஓநாயை உயிர் பிழைக்க வைத்து விட்டு டெக்ஸ் விடைபெற அந்த காட்டிலுள்ள மற்ற ஓநாய்கள் கூட்டம் இதுவரை மனித உருவத்தில் எமனை மட்டுமே பார்த்திருக்க முதல் முறைய மனிதனில் கடவுளை கான்கிற மகிழ்ச்சியோடு கதை நிறைவடைய அருமை மாஸ் ஹீரோவான டெக்ஸ் பஞ்ச் வசனங்கள் இல்லாமல் உடல் மொழியாலேயே ஜெயித்திருக்கார் புதிய முயற்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. செம செம. எனது மனதில் உள்ளதும் இதுவே சத்யா. அருமையாக சொல்லி உள்ளீர்கள்.

      Delete
    2. பொதுவாக செந்தில் சத்யா எந்தக் கதைக்கும் விமர்சனமே எழுதுவதில்லை! வசனங்களே இல்லாத இந்தக் கதை அவரை எழுதவைத்திருக்கிறது - அதுவும் ஆத்மார்த்தமாக!

      செம செ.சத்யா!

      Delete
    3. நன்றிகள் பரணி சகோ & செயலர்
      மற்ற நண்பர்களின் விமர்சனம் கனிப்பு எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்

      Delete
  15. Edi Sir.. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி Tex கதைகள் அருமை. பொ.தே.ப & ஓ.ஜா -ம் முடித்துவிட்டேன். ப.ப இனிமேல் தான் ஆரம்பிக்கனும்.

    ReplyDelete
  16. A:என்னப்பா டெக்ஸ்,அந்த சட்டைகளை ரொம்ப நேரம் பார்த்துகிட்டு இருக்க !
    B:ம்,எந்த சட்டையை போடறதுன்னுதான் !
    C:இத்தனை சட்டைகளை துவைச்சி போட்டவங்க,ஒரு துணியக் கூட அயர்ன் பண்ணி வெக்காம போயிட்டாங்களே,கசங்குன சட்டைய போட்டு போனா என் கெத்து என்ன ஆகறது...!!!

    ReplyDelete
  17. A:என்னப்பா டெக்ஸ்,அந்த சட்டைகளையே ரொம்ப நேரம் பார்த்துகிட்டு இருக்க !
    B:ம்,எந்த சட்டையை போடறதுன்னுதான் !
    C:ராம்ராஜ் வேஷ்டி எடுத்தாக் கூட ஏழு நாளைக்கு ஏழு கலரில் சட்டை தர்றாங்களாம்,விதி எப்பப் பாரு எனக்கு மஞ்சச் சொக்காதான்,அதுவும் முழுக்கை சொக்காயே தான் தருவாங்களாம்...!!!

    ReplyDelete
  18. நிதிக்குத் தலைவணங்கு:

    ஆஸ்டின் நகரத்தில் இருந்து சில்வர் சிட்டிக்கு கால்நடை மந்தையை ஓட்டிச் செல்லும் பொறுப்பை ஏற்கிறார் நம்மாள் லக்கி,இடையில் பொகோஸ் நதி வழிப்பாதையில் ராய்பின்ஸ் எனும் வில்லங்கம் குறுக்கிட லக்கி ராய் "பீன்ஸை" வேக வைத்தாரா ?!
    ராய் "பீன்ஸ்" லக்கிக்கு தண்ணி காட்டினாரா ?!
    கால்நடை மந்தைகளின் கதி என்ன ?!
    -கதைக் களத்தில் நகைச்சுவையுடன் காணலாம்...
    "கால்நடைத் திருடங்களுக்கு எங்க ஊர்ல மாலை,மரியாதைலாம் பண்றதில்லே !"
    "எங்க ஊர்லயுமே தான் தாத்தா !"

    "இப்போல்லாம் இந்தச் சூரியனுக்கும் வயசாகிடுச்சி ! சீக்கிரம் சீக்கிரமாத் தூங்கப் போயிடுது"

    -ஹா,ஹா,ஹா,கிச்சு கிச்சு மூட்டும் வசனங்கள்...

    "கருமாதி & கோ 24 மணி நேர வேலை" ("சேவை"ன்னு வெச்சிருந்தா இன்னும் குசும்பா இருந்திருக்குமோ ?!)

    லாங்க்ட்ரியில் வரவேற்புப் பலகையில்,"அந்நியரே இது லாங்க்ட்ரி,இங்கே ஜனத்தொகை -புதன்கிழமை-225...

    -லக்கி கதைகளுக்கே உரிய டெம்ப்ளேட்டுகள்...

    நெருக்கடியான வாழ்வியல் சூழல்களில் நகைச்சுவைக் களங்கள் நம் மனதை இலகுவாக்குகின்றன,ஏன் நாம் கார்ட்டூன்களை மிஸ் பண்றோம்னு வாசிப்பின் இடையே ஒரு கேள்வி மனதில் தொக்கி நின்றது...

    கதையில் வறட்சியா,இல்லை நம் வாசிப்பில் வறட்சியா ?!

    மேலும் இந்த முறை ஒரு சிந்தனை தோன்றியது,முதல் வாசிப்பில் வசனங்களுடன் படங்களைப் பார்த்துக் கொண்டே படித்தேன்...
    மீண்டும் மறுமுறை வசனங்களைப் படிக்காமல் படங்களைப் மட்டும் கவனித்து இரசித்துக் கொண்டே வந்தேன்...
    அடடே,என்ன வியப்பு, இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கே...!!!

    முன்பக்க சுருக்கத்தில்,
    மா டால்டன் மற்றும் ஜட்ஜ் ராய் பீன் வன்மேற்கின் நிஜ மாந்தர்கள் பற்றிய குறிப்பு சுவராஸ்யம் கூட்டியது...

    எமது மதிப்பெண்கள்-9/10.

    தாயில்லாமல் டால்டனில்லை அல்டிமேட் காமெடி இரகம்,மிகவும் இரசித்தேன்...

    நிதிக்குத் தலைவணங்குவை விட தாயில்லாமல் டால்டனில்லை நகைச்சுவையில் ஒரு மிடறு கூடுதலாக எனக்குத் தோன்றியது...

    ReplyDelete
  19. பொக்கிஷம் தேடிய பயணம்:

    பாவ்னீ இனத்தை சேர்ந்த தேஷாவின் வம்சாவளிப் புதையலை மையமாய் வைத்து பின்னப்பட்ட கதைக் களமானது,தொடக்கத்திலேயே நம்மை உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்கிறது...
    புதையலை கைக்கொள்ள வரும் கும்பலை டெக்ஸ் & கோ தனது பாணியில் ஒடுக்குகின்றனர்,
    வழக்கம்போல் பிளாஷ் பேக்கில் கதையின் களம் விரிகிறது...
    தேஷாவிற்கும் டெக்ஸிற்குமான எதிர்பார்ப்பில்லாத அந்த கள்ளமில்லா அன்பும்,அபாரமான நட்பும் சற்றே நெகிழத்தான் வைக்கிறது...

    டெக்ஸ் & கோ கதைகளில் பெரும்பாலும் முடிவுகள் சுபமாகவே இருக்கும்,நீதிக்கும்,அநீதிக்கும் நடக்கும் போராட்டமே அடிநாதம்...
    இருப்பினும் ஒவ்வொரு கதையிலும் நம்மை கதையுடன் பிணைத்து இழுத்துச் செல்கிறது என்பதே ஒரு புதிர்தான்...

    பாவ்னீ இனத்தவருக்கும்,சியோக்ஸ் இனத்தவருக்கும் நடக்கும் சண்டையானது பரபரப்பை கிளப்புகிறது...

    "வளரும் புற்களைக் காற்று தரையில் சாய்ப்பது ஏன் ?"
    "பருந்து வானில் வட்டமிடுவது ஏன் ?"
    "பெருச்சாளி எதற்காக மண்ணில் துளையிடுகிறது ?"
    "ஒரே குடும்பமாக வாழ வேண்டியவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது எதற்காக ?"
    வாழ்க்கையின் புதிரான கேள்விகள் !!
    -நச் வசனம்...

    அட்டகாசமான கலரிங்,அசத்தலான ஓவிய பாணிகள்,சான்ஸே இல்லாத அட்டை வடிவமைப்பு,சிறப்பான பைண்டிங்,பரபரப்பான கதை நகர்வு,மனதிற்கு நெருக்கமான நாயகர்...
    இதை ஆனந்தம் வேறென்ன வேண்டும் நமக்கு....

    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
  20. பருந்துக்கொரு பரலோகம்:

    என்ன பிரச்சனைன்னா,பக்கங்கள் முன்னும்,பின்னுமாய் வந்துருந்ததால் தேடிப் படிப்பதற்குள் தலை சுத்திடுச்சி...
    அலுவலகத்தில் கேட்டதற்கு மாற்று இதழ் அனுப்புவதாய் சொல்லி உள்ளனர்....
    நானும் என்னுடைய இதழை அலுவலகத்திற்கு அனுப்பிட்டேன்...

    மாற்று இதழ் வந்தவுடன் இன்னொரு வாட்டி படிச்சிட்டு முடிந்தால் விமர்சனம் போடனும்...

    (புக் இல்லாமலே படித்ததை வைத்து விமர்சனம் இடுகிறேன்)

    சுருக்கமா சொல்லனும்னா ஒரு கிறுக்கு ஷெரீப்பின் (என்னங்க சார் உங்க சட்டம்,என்னங்க சார் உங்க திட்டம்-இந்த தலைப்பு இவருக்கு ரொம்ப பொருந்தும்) முட்டாள்தனமான முடிவுகளும்,சைக்கோத்தனமான ஈகோவும்,அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகளும்,இவற்றை சரிசெய்ய போராடும் டெக்ஸ் & கோவும் தான் கதைக் களம்...

    ஆனா ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது,இந்த கதை சரியான மாஸ் மசாலா பேக்கேஜ்,கொஞ்சம் கூட விறுவிறுப்புக் குறையாமல் வாலில் தீப்பத்த வெச்ச மாதிரி சும்மா அனல் பறக்க கதை நகர்ந்தது,ஏகப்பட்ட திருப்புமுனைகள்,அதிரடிகள்...

    ஓப்பனிங்கில் தொடங்கும் பருந்துடனான போராட்டம் அசத்தலான காட்சியமைப்பு...

    இந்த "ஒரு கிறுக்கனின் அத்தியாயம்" கூட வெச்சிருக்கலாம்,ஏன்னு கதையை படிப்பவர்களுக்கு புரியும்...

    பிரதான ரோலில் கிட் வில்லர்,அடுத்து டெக்ஸ் வில்லரும் டைகர் ஜாக்கும்,கெஸ்ட் ரோலில் கார்சன்,ஆனாலும் பொறி பறக்கும் கதை...

    துணைப் பாத்திரங்களாக வரும் கிட் வில்லரின் நண்பன் ப்ரான்கோ,உளவுப் பணியை திறம்பட புரியும் விசுவாச செவ்விந்தியன்,வெகுமதி வேட்டையாடி,மற்றும் இன்ன பிறன்னு நிறைய கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை பின்னியிருப்பதால் வலுவான கதைக்களமாய் இயல்பாகவே மாறிவிட்டது...

    நட்பும்,பாசமுமாய் ஜொலிக்கிறது பருந்துக்கொரு பரலோகம்...

    மொத்தத்தில் ஒரு ஆக்‌ஷன் பிளாக் பஸ்டர் சாகஸமிது...

    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
  21. ஓநாய் ஜாக்கிரதை:

    இங்கே யார் ஓநாய் எனும் வினா வாசிப்பினிடையே நமக்கு எழுந்தால் வியப்பில்லை...

    டெக்ஸை தாக்கும் அந்த கரடி,யப்பா என்ன ஒரு ஆகிருதியான உடலமைப்பு...
    இது போன்ற வலுவான விலங்குகளை எதிர்கொள்ள பெரும் மனத்திடம் வேண்டும்..

    இது சித்திர விருந்து...

    நிறைய க்ளோஸ் அப் ஷாட்கள்,டெக்ஸின் இறுகிய முகத்தை சிறப்பாக வடித்துள்ளார்கள்,அதிலும் ஒரு கண்ணை மட்டும் புருவத்தின் வளைவுகளுடன் க்ளோசப்பில்
    காட்டும் ஷாட் ப்பா செம...

    32 பக்க கதையில் மொத்தமே 17 வார்த்தைகள் தான்,அதில் வசனங்களாய் எதுவுமில்லை, டெக்ஸ் கதையில் இது ஒரு துணிச்சல் முயற்சி,சிறுகதையில் இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுப்பது பாராட்டுக்குரிய விஷயம்...

    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
    Replies
    1. செம விமர்சனம் அறிவரசு அவர்களே!

      கதையைப் பற்றியும் உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்?

      Delete
  22. ட்யூக்....
    என்னத்தச் சொல்ல...
    ஹும்...

    ReplyDelete
  23. தீபாவளி புத்தகங்கள் கைப்பற்றியாகிவிட்டது எனது மகளிர்க்கு சாக்லெட்டிற்கு நன்றிகள் பல.

    நான் முதலில் படித்தது ஒருமுறை கொன்றுவிடு...

    அட்டை படம் நன்றாக இருக்கிறது எனக்கு பிடித்திருக்கிறது.

    ஆர்ட் ஒர்க் பிடித்திருந்தது வித்தியாசமாக இருந்தது. கலரிங் நன்றாக இருந்தது.

    பகல் = ஆரஞ்சு
    பனி = வெள்ளை
    இரவு = கருப்பு ( இதில் தான் பல நண்பர்களுக்கு உடன் பாடு இல்லை, ஆனால் அதன் முதல் பயன்பாட்டிலேயே பிடித்துவிட்டது எனக்கு, மனைவி மகளை இழந்தவர் தன்னை மறந்து நேரம் காலம் தெரியாமல் உட்கார்ந்திருக்கிறார் அதில் இரவு வந்ததும் மொத்தமாக கருப்பாகி இருப்பார் அந்த வெளிப்பாடு ஏனோ எனக்கு பிடித்திருந்தது அதில் இருந்து தொடர்ந்து கருப்பின் பயன்பாடு இருந்து உள்ளது)


    வன்மேற்கின் சாயம் பூசாத முகம் என்ற அடை மொழியிலும் உடன்பாடு இல்லை

    கதை ஒரு டிப்பிக்கள் வன்மேற்கு ஹீரோவின் கதை

    பார்க்கும் பெண்கள் அனைவருக்கும் அவரை பிடிக்கும்

    அவரை பற்றி ஒரு கதாபாத்திரம் பில்டப் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்

    அவர் அதிகம் பேச மாட்டார் பெரிய துப்பாக்கி வீரர்

    மிக அதிபுத்திசாலி போல காமித்துக்கொள்கிறார் ஆனால் மிகப்பெரிய பிரச்சனையாக நான் கருதுவது அவர் செய்யும் செயல்களுக்கு சரியான விளக்கங்களே இல்லை.
    மல்லீன்ஸ் சந்திக்க ஏற்று கொண்டதில் இருந்து பழைய காதலியை சந்திக்கும் வரையில் அவர் செய்யும் ஒரு செயலுக்கும் விளக்கம் இல்லை.

    அதிகமாக டுரங்கோ பவுன்சர் ஆக முயற்சிப்பதாக தோன்றியது.

    ஆனால் அவ்வாறு பார்க்காமல் ஒரு கதையாக பார்த்தால் ok வான கதை தான் ஒருமுறை படிக்கலாம்.

    கண்டிப்பாக 16+ தான் அதனை போட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து சார்.

    அடுத்து தலையுடன் பயணம் ஆரம்பம்

    ReplyDelete
    Replies
    1. // மிக அதிபுத்திசாலி போல காமித்துக்கொள்கிறார் //

      அதற்கு ஏற்றார் போல் காட்சிகள் இல்லை. சுற்றி உள்ளவர்கள் பில்டப் கொடுத்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு வேளை அடுத்த பாகத்தில் இதற்கு விளக்கம் கிடைக்குமோ?

      Delete
    2. ///மிக அதிபுத்திசாலி போல காமித்துக்கொள்கிறார் ஆனால் மிகப்பெரிய பிரச்சனையாக நான் கருதுவது அவர் செய்யும் செயல்களுக்கு சரியான விளக்கங்களே இல்லை.
      மல்லீன்ஸ் சந்திக்க ஏற்று கொண்டதில் இருந்து பழைய காதலியை சந்திக்கும் வரையில் அவர் செய்யும் ஒரு செயலுக்கும் விளக்கம் இல்லை.
      ////

      +1

      Delete
    3. இல்லை நண்பரே பெரிய முதலாளியை பகைக்க நேரிடும்...அந்த கால நீக்ரோகளுக்கு பரிந்து பேச யாருமில்லை...நீக்ரோ கொல செஞ்சா தூக்கு நிச்சயம்...இவர் அவனை சுட போகும் போது தலை சுத்தும்....துப்பாக்கிய லோட் செய்வார் பாருங்க திணறி குதிரையில் ஏறும் போது...வில்லனே அவன் கங்கானிய சுடுவான் ஆளனுப்பி....அங்கதான் ஹெர்மன் நிக்குறார்....ட்யூக் சுட்டா கடுமை கூடலாம்...முதலாளிக்கும் பிரச்சனை பெருசாகி மக்களை கொந்தளிக்க விட விருப்பமில்லை...அவராளே சுடுறான்...இதனால் ஓர் குரூர திருப்தியுமே...சாயம் பூசாரி வன்மேற்கல்லவா....அவன் காதலியை தேடிப் போன பின் விறுவிறுப்பு மேலும் கூடுதே....என்ன பேசுறான் முதலாளி என்பது தொடரும் பாகங்களில் வரலாம்

      Delete
    4. கரெக்டா சொன்ன மக்கா.

      Delete
    5. ஒரு மாதிரி சரியான எழுத்துக்களை மாற்றிப் போட்டு உங்கள் கருத்தை படித்து விட்டேன் ஸ்டீல் - நல்லாத்தான் சொல்லிருக்கீங்க - கரெக்ட்டா புரிஞ்சுருக்கீங்க. 

      Delete
  24. டியர் எடி, தீபாவளி பலகாரங்கள் எல்லாம் சாப்பிட்டு எத்தனையோ வருடமாச்சு... அனாமதேய பார்சலுக்கு கொடுத்து வைத்தவர் நீங்கள் :)

    ஒற்றை நொடி எதிர்பார்ப்புகள் அள்ளுகிறது. நீங்கள் கூறிய அந்த கதைகளில் இவர்கள் என்ற சுட்டிகாட்டலை ஏன் நாமும் முதல் பக்கமாக போடகூடாது. ராணி காமிக்ஸ் முதல் பக்கம் அக்காலத்தில் கதையொடு ஒன்ற ஏதுவாக இருந்தது... இப்போது முன்பும் பின்பும் படித்து நினைவில் கொள்கிறேன்.

    கோரிக்கைகள் 1 & 2 இன்றே அனுப்பி வைக்கிறேன், மெயிலில்.

    ReplyDelete
  25.  இந்த தீபாவளியைத் தெறிக்க விட்டு வரும் நமது மஞ்சச் சட்டைக்காரரின் இந்த படத்துக்கொரு கேப்ஷன் எழுதுங்களேன் - பார்க்கலாம் ///_
    கார்சன்: என்னப்பா யோசனை?

    டெக்ஸ்: இல்ல, இன்னிக்கு மாறுவேஷத்துக்கு எந்த சொக்காய போட்டா சரியாயிருக்கும்னு யோசிக்கறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஐ இது நல்லாருக்கு :-)

      Delete
    2. அட ஆண்டவனே...
      மாண்ட்ரேக் அதுக்குள்ள டெக்ஸ் வசியம் பண்ணீட்டாரோ

      Delete
  26. தீபாவளி மலர் 21..

    புத்தகத்தை கையில் ஏந்தும் பொழுதெல்லாம் அவ்வளவு மகிழ்வு..செமயான அட்டைப்படம் ஒன்றுக்கு மூன்றாய் டெக்ஸ் சாகஸம் என ,மாஸான ..அழகான சித்திரங்கள் என இம்முறையும் தீபாவளி மலர் பட்டாஸாய் வெடித்துள்ளது..

    முதல் சாகஸமாய்

    பொக்கிஷம் தேடிய பயணம்..

    டெக்ஸ் குழு அனைவருமே முதல் பக்கத்தில் முதல் பேனல் லியே கண்டவுடனே தெரிந்து விட்டது கதை ஓகே என..அதற்கு இன்னும் சிறப்பு சேர்வதற்கு என்றே தெளிவான ,அழகான சித்திரங்களும் ,வண்ணக்கலவைகளும்..டக்கென்று முடிந்து விட்டது போல் ஓர் எண்ணம் மட்டுமே ..கதையில் இளம் டெக்ஸ் சாகஸமும் இணைந்து வந்தது அருமை...

    அடுத்து வந்த ஓநாய் ஜாக்கிரதை..

    நினைத்தே பார்க்க வில்லை..ஒரு வார்த்தை இல்லாமல் டெக்ஸ் சாகஸமா ..சித்திரங்களே கதையை சொல்கிறது என பாராட்டி சொல்வது உண்டு ...இந்த ஓநாய் ஜாக்கிரதை கதை அதை நிரூபித்து விட்டதே..டெக்ஸ் இன்னும் எப்படி ..இப்படி வித வித பாணியில் கலக்குகிறாரே..ஓநாய்க்கு ஓர் அழகான பூங்கொத்து...

    இனி வருவது பருந்துக்கொரு பரலோகம்..

    வண்ணமும் அழகு தான் ஆனால் கருப்பு வெள்ளை வண்ணமும் அழகுதான் என்பது பல டெக்ஸ் கதைகள் நிரூபிக்கும் ..அந்த பலவற்றில் இந்த பருந்துக்கொரு பரலோகமும் ஒன்று...வண்ண டெக்ஸை முடித்து விட்டு தூக்க கலக்கமாக உள்ளதே நாளை படிக்கலாமோ என்ற எண்ணம் மனதில் உதித்தாலும் தொடங்கி தான் பார்ப்போமே என்று ..நவஹோ ரிசர்வ் பிராந்திய மலை உச்சியில் நமது கதை தொடங்குகிறது என தொடங்க ஆரம்பித்தால் கனத்த இதயத்தோடு கதையை முடிக்கும் வரை தூக்கம் என்றால் என்ன என்ற வினவ வைத்து விட்டது மீண்டும் இந்த டெக்ஸின் சாகஸம்..அருமை.. அருமை..அருமை..

    தீபாவளி மலர் 21..

    "கொடியவர்களுக்கு மத்தியில் இவர்களை போன்ற நல்ல இதயங்களும் இருப்பதை காணும் பொழது தான் வாழ்க்கையில் நம்பிக்கையே வருகிறது " என கிட்டிடம் அவரின் தோழன் கூறும் பொழுது உண்மையிலேயே எனக்கு நமது காமிக்ஸ் நண்பர்கள் நினைவுக்கு வந்தனர்..எவ்வளவு சத்தியமான வாரத்தைகள்..

    அதே சமயம்.. ஹீரோவாக செயல் பட்டு என் அண்ணனை போல் என் கதை முடிந்து விட கூடாது என ப்ரோன்கோ சொல்லும் பொழுது புன்சிரிப்பை ஏற்படுத்திய கனம் நீ என் உயிர் நண்பன் எனவே செயல்பட்டேன் என கூறிய பொழுது கை தட்டிய மனது அடுத்த நிமிடங்களில் அவன் உயிர் அடங்கும் பொழுது மனம் கனத்து போனது கிட் மட்டும் அல்ல வாசித்த நானும..அதே கனத்த இதயத்தில் கதையை தொடர்ந்த பொழுது "சூறாவளி என்றுமே அமைதியாய் வருவதில்லை லேங்டன் " என டெக்ஸ் உள் நுழையும் பொழுது ஒரு ரஜினி பட காட்சி போல் அப்படி ஓர் மகிழ்ச்சி..

    அதே போல் தான் பெற்றெடுக்காத பிள்ளையின் பிரச்சனை என்றால் எனக்கு வேகம் பிறக்காத என கார்ஸன் கூறும் பொழுது அவர்களின் நட்பில் நம்மையும் மனம் கனிய வைக்கிறார்..

    இதே போல் கதையில் மறக்க முடியாத பாத்திரமாக வருகிறான் லேட்..அவன் முடிவும் மனதை கனக்க வைக்கிறது.

    மொத்தத்தில் பல வித கலவையான உணர்ச்சிகளை இந்த "பருந்துக்கொரு பரலோகம் " இதழ் மனதில் புகுத்தியது உண்மை...மீண்டுமொரு முறை இந்த கதையை வாசிக்க வேண்டும் என்று கதையை முடித்தவுடனே மனதில் தோன்றியது பாருங்கள் அதுதான் கதையின் வெற்றி...

    தீபாவளிமலர் 21

    - மறக்க முடியாத அழகான குறிஞ்சி மலர் ..என்பது 100 சதவீதம் உண்மை..


    இதனை எங்களுக்கு அளித்த ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி...

    ReplyDelete
  27. A:லிலித்: ஏனுங்க எங்கப்பாருக்கு கிஃப்டா வாங்கின கோணி ஊசிய உங்க மஞ்ச சட்டைப்பையில வச்சேன்னு சொன்னீயலே, சீக்கிரம் எடுத்துட்டு வாங்க... அவரு குரதையில ஏறப்போறாரு.. சீக்கிரம்.
    B:டெக்ஸ்: இதோ இப்பவே எடுத்துட்டு வந்துடுரேன்
    C: டெக்ஸ் மைண்ட்வாய்ஸ்: இத்தனை மஞ்ச சட்டை வாங்கி வச்சுருக்கேனே!!! எதுலேன்னு தேட, லேட்டாச்சுன்னா நான் அவ்வளவுதான்!!!
    எதற்க்கும் அஞ்சாத சூரர், வூட்டம்மாவின் கோபத்தை என்னி பயந்து உரைந்த்தார்

    ReplyDelete
  28. Caption contest

    Entry 1
    A: கிட் கார்சன்: டெக்ஸ், ரெடியாப்பா? போலாமா?
    B : டெக்ஸ்: ஒரு நிமிஷம் கிட். எந்த சட்டை போடுறதுனு யோசிக்கிறேன்

    (கிட் கார்சன்: மனதிற்குள்: இவனுக்கென்ன உடம்பு சரியில்லையா??? மஞ்சகாமாலைப் பயலுக்கு மஞ்ச சட்டைய விட வேற என்ன இருக்காம்?)

    C: டெக்ஸ்(யோசனை): ஒரு வேளை கார்சன் சொல்றது சரியோ. இத்தனை கலர் இருக்க, மஞ்சசட்டை மட்டும் தான வாங்குறேன்.

    Entry 2
    A: கிட் கார்சன்: டெக்ஸ், ரெடியா, போலாமா?
    B: இருப்பா, வரேன்
    C: (மைன்ட் வாய்ஸ்) லாண்டரிக்காரன் லக்கிலூக்கின் சட்டையையும், என்னோடதையும் ஒண்ணா குடுத்துட்டானே. எது என்னதுன்னு தெரியலியே. லக்கியின் சட்டையைப் போட்டா, கார்ட்டூன் ரசிகர்கள் நம்மளை டின் கட்டிடுவானுன்களே. என்ன பண்றது?

    Entry 3
    A : கிட் கார்சன்: டிரஸ் பண்ணினது போதும், வாப்பா வெளிய.
    B : தோ வரேன் கிட்.
    C : மைன்ட் வாய்ஸ் (எடிட்டருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலியே. மஞ்ச சட்டை தொங்க விட்டது ஒகே. ஆனா என் வெள்ளை முடிக்கு ஏன் டை அடிக்காம வுட்டாருன்னு தெரியலியே. மூஞ்சை முப்பது வயசாக்கி, உண்மை 70 வயசை முடியில் காட்டுறாரா? என்ன பிரச்சினை அவருக்கு. கிநா வுக்கு யோசிச்சு யோசிச்சே செவ்விந்தியன் கைப்பட்ட கபாலம் போல் இருக்கும் அவரின் கேசத்தினால், பொறாமை கொண்டு என் தலை மேல் கைவச்சாரோ?

    ReplyDelete
  29. A:ஏங்க தீபாவளிக்கு வாங்குன உங்க புது மஞ்ச சட்டைக்கு காலர்ல மஞ்சள் பூசி ஹேங்கர்ல தொங்க விட்ருக்கேன்...போட்டுட்டு வர இவ்வளவு நேரமா...அப்பா காத்திருக்கார் ரெம்ப நேரமா...
    B:இதோ வந்திட்டேன் மா..
    C: (கடவுளே.பேரு தான் நமக்கு பெத்த பேரு.நம்மளோடது எல்லாமே மஞ்சள் சட்டை. இதுக்குள்ள புது மஞ்சள் சட்டைய எப்டீ காண்றது.இதில மஞ்ச புதுசுக்கு மஞ்சள் வேற பூசி வச்சிருக்காளாமே.அட மானிடோ!!! காப்பாத்துப்பா...பெருசு பாடு தேவலை...)

    ReplyDelete
  30. இந்த மாத டெக்சின் கடைசிக் கதை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ஓநாயும் அருமை. கலர் டெக்ஸ் ஒகே. தேஷா கொஞ்சம் போர் தான்.

    ஜட்ஜ் சுகப்படவில்லை. சுமார் ரகம். இந்த டுபாக்கூர் ஜட்ஜை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேன். நமது காமிக்சிலா அல்லது வேறு என்கேயுமா தெரியவில்லை.

    தாயில்லாமல் டால்டன் இல்லை. முன்பே படித்து விட்டதால், பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லை. வெளியிடவேண்டிய எவ்வளவோ காமிக்ஸ் குவிந்திருக்க, மறுபடி மறுபடி மறு பதிப்பா என்ற கடுப்பே இருந்தது. ஒரிஜனலையே பதினைந்து முறை படித்திருப்பேன். ஆனால் என்னவோ தெரியவில்லை, மிக அதிக சிரிப்பை வரவழைத்து விட்டது இந்த இதழ். நன்றி ஆசிரியரே.

    ஹெர்மான் காமிக்ஸ். ஹீரோ பேர் மறந்துவிட்டது. கமான்சே சாயல் உள்ளது. ஆனால் அந்தளவிற்கு வீரியம் இல்லை. உண்மைக்கருகில் கமான்சே இருந்தது. இதில் அத்தனை ரசிக்கவில்லை. கொஞ்சம் போர் தான்

    ReplyDelete
    Replies
    1. // கமான்சே சாயல் உள்ளது. ஆனால் அந்தளவிற்கு வீரியம் இல்லை. உண்மைக்கருகில் கமான்சே இருந்தது. //

      ஆமாம். ரெட் டஸ்ட் நீங்கள் சொல்வது.

      Delete
    2. ///ஹெர்மான் காமிக்ஸ். ஹீரோ பேர் மறந்துவிட்டது///

      நெத்தியடி! :)

      Delete
  31. Sir. If possible, get rights of ROAD TO PERDITION and FROM HELL (jack the ripper). They are great for Rs. 500 குண்டு புக். it may be useful for any special editions. and people will love them due to suspense and availability as movies in net

    ReplyDelete
  32. தீபாவளி மலர்

    பொக்கிசம் தேடிய பயணம்.:-

    ஓலியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தில் சித்திரங்கள் கண்களை கொள்ளை கொள்கின்றன.! இதைப் பார்க்கும்போது தலையில்லாப் போராளியை அதே சைசில் முழுவண்ணத்தில் காணவேண்டுமென்ற ஆசையை அடக்கமுடியவில்லை.!

    தன் உடன்பிறவா சகோதரி தேஷாவின் பொக்கிசத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் வில்லருக்கு.. அதற்கு ஒரு ஆபத்து வரவிருக்கிறது என்ற தகவல் கிடைக்கிறது.!

    தன்னுடைய குழுவினர் ஒத்துழைப்போடு.. பொக்கிசத்தையும் காப்பாற்றி தேஷாவையும் காப்பாற்றி கயவர்களை காலன் வசம் ஒப்படைக்கிறார் வில்லர்.!

    ஜிம்மியை பற்றி ஆரம்பத்திலேயே கோச் வண்டியில் வரும்போதே யூகித்துவிட்டேன்..!

    ஓரிரு இடங்களில் சிறு பிழைகள் தென்பட்டன என்றாலும் அதையெல்லாம் தாண்டி கண்களுக்கும் மனதிற்கும் அருமையான விருந்து இந்த பொக்கிசம் தேடிய பயணம்.!

    ஓநாய் ஜாக்கிரதை :

    பொத்
    ப்ளாம்ம்
    கர்ர்ர்ர்
    உர்ர்ர்ர்ர்
    ர்ர்ர்ர்ர்ர்ரா
    சதக்
    சத்
    விஷ்ஷ்ஷ்
    சர்ர்ர்ரேல்
    டுமீல்
    ஆஆஆஆஆ

    இன்னாடாது இது..
    நல்ல லட்சணமான புத்திசாலி பையனாச்சே.. திடீர்னு இப்படி உளருறானே.. என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு பாக்குறிங்களா...

    ஓநாய் ஜாக்கிரதை என்கிற 30 பக்க டெக்ஸ் வில்லர் கதையில் இருந்த மொத்த எழுத்துக்களுமே மேலே கூறியவை மட்டும்தான்.!

    வசனமே இல்லாமல் ஒரு அட்டகாச சிறுகதை..! இங்கும் ஓவியங்களே பிரதானம்.. செம்ம அழகு.!

    இன்னும் பருந்துக்கொரு பரலோகம் மட்டுமே பாக்கி.! நாளைக்கு சோலிய முடிச்சிரோணும்.!

    ReplyDelete
    Replies
    1. ///இன்னாடாது இது..
      நல்ல லட்சணமான புத்திசாலி பையனாச்சே.. திடீர்னு இப்படி உளருறானே.. என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு பாக்குறிங்களா...///

      பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வாணாமா kok?!!

      Delete
    2. லட்சணம் - ம்க்கும்...

      புத்திசாலி - பைக் சாவிய சட்டை பையில போட்டுகிட்டு வீடெல்லாம் தேட்ற பார்ட்டீ..
      .

      பையன் - ங்ஙே... கீழடியிலருந்து இன்னிக்கு வந்த பார்சலு மெர்சலாய்ரிச்சி...

      Delete
  33. ***** நோ போட்டிக்காண்டி *****

    கார்சனு : ஏம்பா டெக்சு.. இன்னுமா தீவாளி பர்சேசு முடியலை? அதான் புது சொக்காய்க்கு நானே பில்லு தரேன்னு சொல்லியிருக்கேன்ல.. சீக்கிரமா வாப்பா - எனக்குப் பசிக்குது!

    டெக்சு : தோ.. இப்ப வந்திட்டேன் கார்சனு!

    மைன்டு வாய்சு : பயபுள்ளை எதுக்கு ப்ளான் பண்றான்னு எனக்குத் தெரியாதா என்ன? அஞ்சு டாலருக்கு ஒரு பீத்த சட்டைய வாங்கிக்கொடுத்துட்டு, ட்ரீட்டுன்ற பேர்ல சலூனுக்குக் கூட்டிப்போய் எனக்கு 50 டாலர் மொய் வச்சிடுவான்!
    பயல்ட்ட எந்த சட்டையுமே சரியா ஃபிட் ஆகலைன்னு சொல்லி இந்தத் தபாவும் எப்படியாவது சமாளிச்சுட வேண்டியதுதான்!

    இப்பப் புரியுதா மக்களே - ஒத்தை சட்டையப் போட்டுக்கிட்டு நான் ஏன் ஊர்ஊரா குருதையில சுத்திக்கிட்டிருக்கேன்னு?!!

    ReplyDelete
  34. பொக்கிஷம் தேடிய பயணம்

    அறிமுக பதிவில் வந்த அட்டைப்படம் மற்றும் உட்பக்கம் பார்த்து கொஞ்சம் mixed பீலிங் தான் இருந்தேன். அதுவும் டெக்ஸ் ஆர்ட் பார்த்து கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

    ஆனால் கையில் புத்தகம் ஏந்தி பார்த்த பொழுது அந்த கலக்கம் எல்லாம் தீர்ந்தது. அட்டை படம் நகாசு வேலையில் நன்றாக இருக்கிறது கிட்டிற்கு அட்டையில் இடமும் நன்றாக இருக்கிறது.

    முதல் கதை அக்மார்க் டெக்ஸ் கதை, ஜிம்மி ஆறிமுகத்தின் போதே என்ன நடக்கும் என்று தெரிந்து விடுகிறது. ஆனால் நாம் டெக்ஸ் கதை படிப்பது அதற்காக இல்லையே. 2 நங் 2 கும் இறுதி வெற்றி தான் நமக்கு தேவை.

    அவை இக்கதையில் நிறைந்துள்ளது அதிலும் டெக்ஸ் மட்டும் இல்லாமல் கடைசில் கார்சனிற்கும் ஒரு கும் வாய்ப்பு வேற.

    வசனங்களில் நகைச்சுவை தெரிகின்றது ஒரு இடத்தில் வந்த சாரே தவிர மற்ற அனைத்தும் சிறப்பு.

    தற்பொழுதைய டெக்ஸ், இளம் டெக்ஸ் என கலந்து கட்டி கலக்கி இருக்கிறார்கள்.

    தீபாவளிக்கு ஏற்ற கதை.

    ஓநாய் ஜாக்கிரதை.

    கலர் டெக்ஸ் எப்பொழுதுமே ஆர்ட் ஒர்க் அட்டகாசமாக இருக்கும் இதுவும் விதிவிலக்கு அல்ல. மேலும் இக்கதைக்கு ஆர்ட் ஒர்க் நன்றாக இருக்கவேண்டிய தேவை அதிகம். அதற்கு ஆர்ட் கண்டிப்பாக பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். அந்த கரடியுடனான சண்டை ஆர்ட் ஒர்க் அட்டகாசம்.

    ஆனால் கதையை பொருத்த வரை கொஞ்சம் mixed பீலிங் தான். ஒரு புது முயற்சி. ஓநாய் அவ்வாறு செய்வதற்கான விளக்கம் சரியாக இல்லை, 32 பக்கத்திருக்குள் அது கஷ்டம் தான் இருந்தாலும் முயன்றிருக்கலாம். அந்த கரடி சண்டை ஆர்ட் நன்றாக இருந்தாலும் அது கதைக்கு தேவையா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு பதில் ஓநாய் பற்றி கொஞ்சம் விளக்கம் சேர்த்திருக்கலாம்.

    அதன் கூட்டத்திற்கு பிரச்னை வராமல் இருப்பதற்கு அது உதவியது என்று எடுத்துக்கொள்ளலாமா?

    பருந்துடனான பயணம் போய் கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  35. For photo in FFS,can we send it whatsapp or in mail only .Also it is passport size or normal size

    ReplyDelete
    Replies
    1. Edi Sir.. Whats app ல அனுப்பிச்சா போதும்னு நம்ப லயன் ஆபிசுலே சொன்னாங்களேன்னு Whatsapp ல Passport size போட்டோ அனுப்பிச்சு இருக்கேனே..
      இப்ப என்ன பண்றது.. ? மெயிலுக்கு ஒருதடவை அனுப்பட்டுங்களா?

      Delete
  36. கேப்சன்கள்:
    (போட்டிகளுக்காக..)

    பதிவு 1 :
    B.சூப்பர்..ஒரு டஜன் சிஸ்கே(CSK) ஜெர்சி ரெடியா இருக்கு..ஐபிஎல்க்கு போய் ஒரு கலக்கு கலக்கிட வேண்டியதுதான்

    A.யோவ் டெக்ஸ்.. ஐபிஎல் முடிஞ்சு அரை மாசமாச்சு..இது உலகக்கோப்பை.. ஆனா அதுக்கும் நீ போற வேலை இருக்காது..இன்னும் 5 நாளுல அவங்களே திரும்பி வந்துடுவாங்க

    C.(அடச்சே.. இந்த விசயம் தெரியாம போச்சே)


    பதிவு 2:
    B.என்ன கார்சன்..ஒரே சட்டைங்களா வாங்கி வச்சிருக்க..ஒரு ஃபேன்ட்ட கூடக் காணோம்?

    A.ஒவ்வொரு மாசமும் நாம வெளிவரப்பலாம் வாசகர்கள் எப்படியும் நம்ம டவுசர உருவத்தான் போறாங்க..அப்புறம் எதுக்கு ஃபேன்டுனுதான் வாங்காம விட்டுட்டேம்பா

    C.(ம்க்கூம்...இரண்டு சட்டை வாங்குனா பத்து ஃப்ரீனு எவனாவது ரோட்ல வித்துருப்பான்..அதுல வாங்கிட்டு வந்துட்டு எப்படிலாம் சமாளிக்குது பாரு கிழம்...)


    பதிவு 3:
    B.இத்தனை சட்டைங்க இருந்தாலும் இப்பல்லாம் இந்த மஞ்ச சட்டையை போடணுமுனு நினைச்சாலே பயமாயிருக்குப்பா...

    A.ஏம்ப்பா டெக்ஸ்?

    C.வேற என்ன...இதை போட்டதும் நான்தான் அந்த மஞ்ச சட்டை மன்மதன்னு சொல்லிடுவாங்களோனுதான்

    ReplyDelete
  37. (இனி வருபவை போட்டிகளுக்காண்டி இல்லை..ஜாலிக்காண்டி..)

    1.
    A.டெக்ஸ் காலை 6-7 அப்புறம்
    மாலை 7-8..மறந்துடாத

    B.என்னதுய்யா கார்சன் இதெல்லாம்?

    A.பட்டாசு வெடிக்கறதுக்கான டைமுப்பா..
    எப்பவும் போல மஞ்சா சொக்காயப் போட்டுக்கிட்டு,கண்ட நேரத்துல போய் எவனையாவது சுட்டு வச்சுடாத...அந்த சத்தத்த கேட்டு ஏதோ பட்டாசுதான் வெடிச்சோமுனு சொல்லி நம்மள தூக்கி உள்ள வெச்சுடுவாங்க

    C.(ஆஹா..குடிக்க தடை போடுவாங்கனு பார்த்தா வெடிக்க தடை போட்ருக்காங்களா..ஹம்..)


    2.
    B.முத்து ஐம்பதுக்கு இதுல எந்த டிரெஸ்
    போட்டுட்டு வரட்டும் சார்

    A.ஆங் முத்து ஐம்பதா..அஸ்க்கு புஸ்க்கு..சரியா பனிரெண்டு மாசத்துக்கு பனிரெண்டு டிரெஸ்தான் அனுப்பிருக்கேன்..இதுக்கே ஊருக்குள்ள ஏச்சு பேச்செலாம் வாங்க வேண்டி இருக்கு

    B.ஹிஹி..ஒகே சார்..ஒகே சார்..

    C.(மசிய மாட்டேங்கறாரே..ம்ம்...தீபாவளி டிஸ்கவுண்ட் சேலுல மொத்தமா வாங்கி ஒரு வருசத்துக்கு அனுப்பிட்டாரு போல)


    3.
    B.லலித் நான் கொஞ்ச நேரம் வெளிய....

    A.வீட்டுல ஆயிரம் வேலை கிடக்குது..மளிகை கடைக்கு போகணும்.முறுக்குப் பிழியணும்....பட்டாசு
    வாங்கணும்.. அதெல்லாம் விட்டுப்புட்டு அந்த ஒண்ணுக்கும் உதவாத கிழடோட சேர்ந்துகிட்டு நேர்மை நாணயமுனு ஊரு சுத்தப் போறேனு சொன்ன,அவ்ளோதான் சொல்லிப்புட்டேன்.எனக்கு வாய்ச்சதுதான் சரியில்லேனு பார்த்தா வயித்துல வந்தது அதுக்கு மேல இருக்கு..எல்லாம் என் தலையெழுத்து

    C.(குடும்பஸ்தனா இருக்கது ரொம்ப கஷ்டம்டா சாமி.....)


    4.
    B.கார்சன்...ரொம்ப நாளா லைசென்ஸ் எடுக்காமயே இருக்கேன்..அதான் இன்னைக்கு புது சொக்காய் போட்டுக்கிட்டு போயி எடுத்துட்டு வந்திடறேன்

    A.அதெல்லாம் சரிப்பா..உன் குதிரை கரெக்டா எட்டு போட்டுடுமா?

    C.(நறநற...)

    ReplyDelete
  38. கேப்ஷன்..

    என்னப்பா யோசிச்சுட்டே இருக்க சீக்கிரம் சட்டையை மாட்டிட்டு வா...


    இரு கிழவா இதுல எந்த சட்டை போட்டா நான் மன்மதனாட்டம் இருப்பேன்னு யோசிச்சுட்டு இருக்கேன்..

    எத போட்டாலும் நீ கிட்டுக்கு அப்பன்ங்கிறது இந்த மகானுத்துக்கே தெரியும் ஐல்தியா கிளம்புற வழிய பாரு..

    ReplyDelete
  39. கேப்ஷன் 2..

    ஏப்பா அந்த ஆறாவதா இருக்குற சட்டையை எடுத்து மாட்டிட்டு கிளம்பு போகலாம்...

    ஆறாவது இருக்குற சட்டைல அப்படி என்ன இருக்கு...


    இல்லப்பா அதான் கொஞ்சம் டல்லா இருக்கு இந்த ரம்மி மாதிரி ஆளுக உன் கதை கொஞ்சம் டல்லு டல்லு ங்கிறாக இதை போட்டுட்டு வந்தா ரம்மி சொல்றதும் உண்மையா தான் போகட்டுமே பாவம்..

    ReplyDelete
  40. கேப்ஷன் 3

    என்னப்பா யோசிக்குற..?!

    இல்ல இன்னிக்கு திங்க கிழமை அதான் இருக்குற கலர்ல எந்த கலர் சட்டையை போடலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்..


    க்கும்..வாரத்துக்கு ஏழு நாள் இல்ல முப்பது நாள் வந்தாலும் அதுல எந்த சட்டையை வேணாலும் மாட்டிட்டு வா எவனும் கண்டுபிடிக்கா மாட்டான் பழைய சட்டைன்னு..

    ReplyDelete
  41. B: தீபாவளிக்கு எந்த சட்டையப் போடலாம்..?
    A: மைண்ட் வாய்சுன்னு நினைச்சு சத்தமா பேசுற டெக்ஸ்... மஞ்ச சட்டையப் போட்டுட்டு கிளம்பு.
    C: ம்ம்ம்ம்ம்... எந்த மஞ்ச சட்டையப் போடலாம்..?

    ReplyDelete
  42. **** ஓநாய் ஜாக்கிரதை ***
    மஞ்சள் சட்டை போட்ட ஒருத்தன் குதிரையில் வேகமாக செல்கிறான், எதிர்பார்த்த மாதிரியே அவன் விஷமிட்ட குதிரை இறந்து கிடக்கிறது, இரையை நெரிங்கிய ஓநாயின் சந்தோஷம் அவனுக்கு. தனது விண்செஸ்டரை எடுத்துக்ககொண்டு ஒரு காலடி தடத்தை பின் தொடர்ந்து செல்கிறான், அடுத்த காட்சியில் யரை தேடி செல்கிறான் என்று தெரிகிறது, வங்கியிலிருந்து மலை வாழ் மக்களுக்கு கொடுக்கும் மானியத்தை கொண்டு செல்லும் ஊழியன் அவன். பனியில் தடுக்கி கீழே விழும் காசுகளை பத்திரமாக பொறுக்கி எடுத்தக் கொண்டு மீண்டும் கால் நடையா பயணத்தை தொடர்கிறான், எப்படியாவது தனது கடமையை முடிக்க வேண்டும் என்று.
    பின் தொடர்ந்து வரும் போக்கிரியின் வழியில் ஓநாய் குறுக்கிடுகிறது, சுட்டால் பணம் எடுத்து செல்லும் அதிகாரி சுதாரித்து விடுவான் என்று சுடாமல் விட, பெரிய துப்பாக்கியை கண்ட ஓநாயும் விலகி செல்கிறது. அரசு உழியன் கிரமத்தை நெருங்க அற்றின் மீது இருக்கும் கயிற்று பாலத்தை நோக்கி வலைவு பாதையில செல்ல, போக்கிரியும் வந்து விடுகிறான், தன் விண்செஸ்டரை வைத்து அரசு உழியரின் முதுகை குறிவைத்து சுடுகிறான் ஆணால் குறி தவறிவிடுகிறது. இந்த சத்தத்தை கேட்டு கிராமத்தின் காவல் கரடி அந்த போக்கிரியை தாக்குகிறது. அவன் அதை கழுத்தை அறுத்து கொல்கிறான். காவல் கரடியும் செத்துவிட, தன்னை தற்காத்துக்கொள்ள தன் கைத்துப்பாக்கியை எடுக்கிறான் அரசு ஊழியன், அவன் கவணம் வேற பக்கம் இருக்கிறது என்று தெரிந்த ஓநாய், அவன் மீது பாய்கிறேது. வெறுவழியில்லாமல் அந்த அரசு ஊழியன் ஓநாயை சுடுகிறான், இதான் சான்ஸ் என்று அந்த போக்கிரி அரசு ஊழியனின் நெஞ்சில் குண்டை பாச்ச, அவன் கால் தடுக்கி கிழே விழுந்து மறிக்கிறான். குண்டடி பட்ட அந்து ஓநாய்ககு வைத்தியம் பார்கிறான் போக்கிரி. அப்பொதுதான் தெரிகிறது, அந்த ஓநாயும், அதன் கூட்டத்துக்கும் இவன் தான் தலைவன் என்று. அரசு ஊழியனின் உடலை புதைத்துவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு செல்கிறான். அந்த "ஒநாய்" அவன் "ஜாக்கிரதை".

    என்ன அருமையான கி.நா.

    ReplyDelete
    Replies
    1. @Giridharasudarsan

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 செம செம!

      ரம்மியின் பாசறையில் மற்றுமொரு சகா!

      Delete
    2. 😂😂 நல்ல கற்பனை என்ன செய்ய உங்களால் கற்பனை மட்டும் தான் செய்ய முடியும் நிஜத்தில் தலை கெத்து தான்

      Delete
  43. கேப்ஷன் 1

    லிலித்: நானே சீக்கிரம் கிளம்பிட்டேன். இன்னும் கிளம்பாம என்ன செஞ்சிக்கிட்டுருக்கீங்க.

    B : இதோ வந்துட்டேன்மா.

    C : எந்த சட்டை துவைச்சது எந்த சட்டை துவைக்காததன்னு மண்டைய உடைச்சுக்கிட்டு இருக்கேன். நடுவுல இவ வேற. இதை கேட்டா சோறு வேற கிடைக்காது.

    கேப்ஷன் 2

    கார்சன் : யப்பா நேரம் ஆகுது, சீக்கிரம் வாப்பா..

    B : அட, கொஞ்ச நேரம் சும்மா இருயா... எப்ப பார்த்தாலும் புலம்பிகிட்டே இருக்க வேண்டியது.

    C : வழக்கம் போல இங்கி பிங்கி பாங்கி போட்டு பாத்துட வேண்டியது தான்.

    கேப்ஷன் 3

    கிட் வில்லர்: டாடி, கொஞ்சம் சீக்கிரம் வெளிய வாங்க. நானும் ரெடியாகணும்.

    B : தோ வந்துட்டேன்பா.

    C : எனக்கு என்னவோ என் சட்டையை தான் இந்த பயலும் போட்டுக்கிட்டு, மேல ஒரு சிவப்பு துண்டு போட்டு ஒட்டிக்கிறானோன்னு ரொம்ப நாள் டவுட். எப்படி க்ளியர் பண்றது, நம்ம டவுட்டை..

    ReplyDelete
    Replies
    1. ///எனக்கு என்னவோ என் சட்டையை தான் இந்த பயலும் போட்டுக்கிட்டு, மேல ஒரு சிவப்பு துண்டு போட்டு ஒட்டிக்கிறானோன்னு ரொம்ப நாள் டவுட். ///

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

      Delete
  44. கேப்ஷன்
    A: ஏம்பா பொண்ணுங்க கூட சீக்கிரம் கிளம்பிடுவாங்க போல நீ கிளம்ப இவ்வளவு நேரமா
    B: தோபா கிளம்பிட்ட
    C : இந்த ஃபேன்ட்ட கூட ஒரு மாசம் துவைக்காம போட்டுக்கலம் அதுக்கு மாசிங்கா ஷர்ட் போடறது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு

    ReplyDelete
  45. விஜயன் சார், பல முட்டுச்சந்தை பார்த்து உங்களுக்கு தைரியம் அதிகமாகி விட்டது சார். அனாமதேய பார்சலில் வந்த பட்சனங்களை சாப்பிடுகிற அளவுக்கு தைரியம் ஜாஸ்தி ஆகிவிட்டது :-)

    ReplyDelete
  46. A: அண்ணாத்தே என்ன யோசனை? சீக்கிரம் டிரஸ் பண்ணுங்க, குதிரை வெயிட்டிங் ..
    B: இல்லை இந்த தீபாவளிக்காவது வேற கலர் டிரஸ் போடலாம்னு பார்த்தேன்!! ஆனா நம்ம பேன்ஸ் விட மாட்டேங்குறாங்க.
    C: போற போக்குல நம்ம பாடி'யும் மஞ்ச கலரா மாறிடும் போல?

    ReplyDelete
  47. எடிட்டர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை.
    நாங்கள் அனைவரும் இது வரை உங்களின் காமிக்ஸ் சார்ந்த அனுபவங்களை "சிங்கத்தின் சிறு வயதில்" படித்து சிலாகித்து இருக்கிறோம்.

    இப்போது முத்து பொன்விழா ஆண்டில் சீனியர் எடிட்டர் அவர்களின் முத்து காமிக்ஸ் சார்ந்த அவர் சந்தித்த சவால்கள் / அனுபவங்களை / சுவாரஸ்யமான நினைவுகளை இந்த பொன்விழா ஆண்டு முழுவதும் அவர் எழுதி அதை நம் அனைவருடன் பகிர்ந்தால் நன்றாக இருக்குமே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் எண்ணம் புது வருடத்தில் இருந்து நடக்க இருப்பதை ஆசிரியர் அறிவித்து விட்டார் நண்பரே..அதுவும் சந்தா நண்பர்களுக்கு மாதா மாதம் அவரின் அனுபவங்களும் ,சிறு காமிக்ஸ் கதைகளும் இலவசமாக கிடைக்க பெற போகிறது நண்பரே..

      Delete
    2. நல்லது நண்பரே.
      ஆனால் அனைவருக்கும் அவரது அனுபவ சுவாரசியம் கிடைக்கும் விதத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்.

      Delete
  48. சார்...அட்டவனை புத்தகத்தில் அடுத்து வரும் தீபாவளி மலர் இதழில் டெக்ஸ் சாகஸம் ஒன்றும் இளம் டெக்ஸ் சாகஸம் ஒன்றும் இனைந்து வருவதாக காட்டுகிறது..இதுவரை வந்த இளம் டெக்ஸ் கதைகளை தனியாக வரிசைப்படுத்தி படிக்கவும் ,இளம் டெக்ஸை தனியாக வரிசைப்படுத்தவும் இளம் டெக்ஸ் இதழ் தனித்து வெளியிட முடியுமா சார்..?!

    ReplyDelete
    Replies
    1. Good Idea sir - we can join any 224 page TEX story with Deepavali Malar and keep the Young Tex as a seperate issue.

      ஆனாக்கா சந்தா கட்டின யாரவது ஒருத்தர் அடுத்த அக்டோபர் மாசமா பார்த்து "ஏய்யா நீ Texum மினி Texum ஒண்ணா சேர்ந்து சேப்பு கலர் அட்டைல போடுவேன்னு சொல்லித்தானே நான் சந்தா கட்டினேன். இப்போ நீ மஞ்சா அட்டைல அப்பன் tex மட்டும் சேர்த்து போட்டு எனக்கு புடிக்காம பண்ணிபுட்ட"ன்னு கும்ம வந்துருவாய்ங்களோன்னு பயம்மா கீது தலீவரே ! :-) :-)

      Delete
  49. கார்சன்: ஏம்ப்பா.. டெக்ஸு..அடுத்த கதைக்கு நாம என்ட்ரி கொடுக்கிற நேரம் வந்துருச்சு. சீக்கிரம் கிளம்பு. என்ன தேடிக்கிட்டு இருக்க.
    டெக்ஸ்: ஒண்ணுமில்ல. கண்ணே கொலை மானே கதையில போட்டுட்டு வந்த சர்ட் நல்லா இருந்தது அதையே இந்த கதைக்கும் போடலாம்னு தேடிட்டு இருக்கேன்.
    கார்சன்: ஃபீல்டுக்கு வந்து எழுபது வருஷம் ஆகுது.பயபுள்ள இன்னும் யூத்து மாதிரி பில்டப் கொடுக்கிறதை பாரு. யப்பா.. அது பிளாக் அண்ட் வொயிட் கதை. அடுத்த கதையும் பிளாக் அண்ட் வொயிட்டு. அதுக்கு ஏத்த மாதிரி சட்டைய போட்டுக்கிட்டு வா போதும்.
    டெக்ஸ் : வழக்கமா பெருசுதான் நம்மகிட்ட பல்பு வாங்கும் இப்ப என்னடான்னா நாம அதுங்கிட்ட பல்பு வாங்கற மாதிரி ஆயிடுச்சே.நெசமாவே நமக்கு வயசு ஆயிடுச்சு போல.

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. A (கார்சன்) : மஞ்ச சட்ட மாட்டிகினு மஜாவா வாய்யா..
    B (டெக்ஸ்) : பெருசு... கலர்'அ மாத்துலாமா'ன்னு யோசிக்கிறேன்ப்பா
    C (டெக்ஸ்): (மைண்ட் வாய்ஸ்) "என்னத்த மாத்தி என்ன செய்ய? கதையை மாத்துறோமா?"

    ReplyDelete
  53. கார்சன்: என்னப்பா.. டெக்ஸ்.. இன்னும் கிளம்ப மனசு வரல்லியா உனக்கு.

    டெக்ஸ்: இல்லே..எல்லா ஷர்ட்டும், மஞ்சள் கலர்ல கண்ண பறிக்குது. அதுவும் 12 ஷர்ட்டு. மாதத்துக்கு ஒரு புது ஷர்ட் போட்டுக்கிட்டு கையில துப்பாககியோட , குதிரையில நாம கதையில என்ட்ரி கொடுத்தா சும்மா எப்படி இருக்கும்..

    கார்சன்: உனக்கு ஏன் இந்த கொலவெறி? ஏதோ வருடத்துக்கு ஒண்ணு, ரெண்டுனு கலர்ல வர்ற. ரசிகர்களும் ஆஹா, ஓஹோன்னாங்க. இதுவே நீ மாசாமாசம் மஞ்ச கலர்ல வந்த, அங்க இக்குன்னே ஒரு தானா சேர்ந்த கூட்டம் இருக்கு.அவிங்க உன்னிய ராமராஜன் ரேஞ்சுக்கு ஆக்கி, மஞ்ச கலரு ஜிங்குச்சான்னு ஓட்டியே , கலாய்ச்சுத் தள்ளிப்புடுவாங்க. ஜாக்கிரதை. சொல்லிட்டேன்.

    டெக்ஸ்: மறுபடியும் பெருசுகிட்ட பல்பு வாங்கிட்டனே. எனக்கு நேரம் சரியில்ல

    ReplyDelete
  54. டெக்ஸ்: லிலித்..இந்த துணிக்கடையில அந்த மஞ்ச சட்டையெல்லாம் நல்லாயிருக்கு இல்லே.

    லிலித்: காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்ங்குறது சரியாத தான் இருக்கு. ஏங்க..அது கோயிலுக்கு நேர்ந்துகிட்டவங்க போடுற சட்டை. வெள்ளை சட்டைய மஞ்சள்ல நனைச்சு காயவெச்சிருக்காங்க. மானத்த வாங்காம வர்றீங்களா?

    டெக்ஸ்: லக்கிலூக் தப்பிச்சான். தனிமையே என் துணைவன்னு ஓடிட்டான். நம்ம நேரம்.

    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. ***** ச்சும்மாக்காண்டி *****

    ரவுடி கும்பல்: யாரப்பா நீ? இங்கே என்ன பண்ற? மஞ்ச சட்டையோட ஒருத்தன் இங்கே வந்தானா?

    டெக்ஸ் : எம் பேரு டிடெக்டிவ் ராபினுங்க. இங்கே கொஞ்சநேரம் துப்புதுலக்கிட்டுப் போலாம்னு வந்தேனுங்க. மஞ்ச சட்டையோட இங்கே யாருமே வர்லீங்களே!!

    மைன்டு-நாய்ஸ் : அப்பாடா!!! ஒவ்வொருவாட்டி மஞ்சசட்டையக் கழட்டிட்டு லிலித் முன்னாடி போய் நிக்கும்போதும் யாரோ புது ஆள்னு நினைச்சு அலறுவா! நல்லவேளையா அது டக்குனு ஞாபகத்துக்கு வந்ததால இப்ப உயிர் பிழைச்சேன்!

    ReplyDelete
  57. கிட் வில்லர் : டாடி நான் கடை வாசல்லயே வெயிட் பன்றேன். நீங்களே எனக்கும் தீபாவளி ட்ரெஸ் எடுத்துட்டு வந்துடுங்க.

    டெக்ஸ் : ஓகே. செம க்ராண்டா செலக்ட் பண்ணிட்டு வந்துட்றேன்.

    டெக்ஸ் : (மனதுக்குள்) ம்க்கும். என்னத்த கிராண்டா. போடுறது ஒரே கலர் மஞ்சள் கலர் சொக்கா. நான் கெட்டதும் இல்லாம என் பையனையும் கெடுத்து வச்சாச்சு. ம்ம்ம்...

    ReplyDelete
  58. A: இவைகள் மட்டும்தானா? நமக்கு மேலும் தேவை வில்லர்.

    B: இவை மட்டுமே. சாரி நண்பரே.

    C: செவ்விந்திய வாரியத்திற்கு நன்கொடைகேட்டால் ,எனது உடைகளை லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறதா சொல்லி போட்ருந்த சட்டையையும் கழட்ட வச்சுட்டானே இந்த ஏலக்காரன். அடுத்து Pantடையும் கேட்ருவானோ.



    A: சார்! உங்க ஸ்பெஷல் ஆர்டருக்கு ஏற்றவாறு சர்ட்டுகள் அமைந்துள்ளனவா?

    B அருமையாக அமைந்துள்ளன நண்பரே. நன்றி.

    C இவை எத்தனை சாகசங்களுக்கு தாக்கு பிடிக்குமோ ?!!!

    ReplyDelete
  59. கார்ஸன்: என்னப்பா யோசிக்கிர. நீ போடுறது மஞ்ச சொக்கா மட்டும்தான். என்னமோ கலர் கலரா ட்ரெஸ் பண்ற மாதிரி ரொம்பதான் சீன் போட்ற. எதையாச்சும் உருவிட்டு சட்டுபுட்டுனு வெளியில வாப்பா.

    டெக்ஸ் : போக்கிரி யாரையாச்சும் மொகரையில குத்து விட்றதுனா ரொம்ப சுலபமா இருக்கு ட்ரெஸ் செலக்ட் பன்றதுதான் ரொம்ப கஷ்டம் போல.

    டெக்ஸ் (மனதுக்குள்) மஞ்ச சொக்கானு கார்ஸன் மானத்த வாங்குரான். எடிட்டர் விஜயன் சார பொனொலி குருப் கிட்ட கொஞசம் நாளைக்கு என் ட்ரெஸ் கலர மாத்த சொல்லி ரெகமண்ட் பண்ண சொல்லனும்.

    ReplyDelete
  60. A: லிலித்: டேய் கிட்டு.முந்தா நேத்து உங்கப்பன் கிழிச்சிட்டு வந்த சட்டைல வடாம் காய போட்ருக்கேன், போயீ எடுத்துட்டு வா...
    B: டெக்ஸ்: கிழிஞ்சது போ!!!அத எப்டிடீ கரெக்ட்டா கண்டுபிடிச்ச லிலித்து!!!
    C:( "என்னம்மா அங்க சத்தம்" ஒண்ணுமில்லங்க மாமா...எங்கன ஒளிச்சி வச்சாலும் கண்டுபிடிச்சிட்றா...மஞ்ச சட்ட மாவீரன்னு தாம் பேரூ)

    ReplyDelete
  61. ***** ஓநாய் ஜாக்கிரதை *****

    ஸ்பாய்லர் அலர்ட் : இக்கதையை படிக்காதவர்கள் இந்த விமர்சனத்தையும் படிக்காமல் கடந்துசென்றுவிடுவது நல்லது! ஆனால் அப்படிச் செய்து ஒரு முக்கியமான சமாச்சாரத்தை நீங்கள் தவறவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல! (ஹிஹி! கொஞ்சம் ஓவர் பில்ட்அப் தான்!)

    'வசனங்களே இல்லாமல் ஒரு கி.நா வந்தால் சூப்பரா இருக்குமே?' என்று ஒரு சிலநாட்களுக்கு முன்புதான் எடிட்டரின் 'சின்னச் சின்ன ஆசைகள்' பதிவில் கேட்டிருந்தேன்! அது இம்புட்டு சீக்கிரம் நிறைவேறிடும் என்று கனவிலும் நினைக்கவில்லை; அதுவும் - அதிகாரியின் சாகஸம் மூலமாய்!!!

    கதை :
    அதிகாரி ஒரு சதிகாரனைத் தேடி வருகிறார். வழியில் ஒரு குதிரை வியர்வையில் நனைந்து குற்றுயிராய் கிடக்கிறது. அருகே தெளிவான காலடித்தடங்கள் மரங்கள் அடர்ந்த பகுதிக்கு நீண்டு செல்கிறது. அதைப் பின்தொடர்ந்து நடந்து செல்லும் அதிகாரியை ஒரு ஓநாய் வழிமறிக்கிறது. துப்பாக்கியை உயர்த்துகிறார் அதிகாரி. ஓநாயின் கண்களில் ரெளத்திரம் இல்லை. உயர்த்திய துப்பாக்கியை தாழ்த்திக் கொள்கிறார் அதிகாரி. ஓநாய் ஓடிச் சென்று மறைகிறது.

    நடந்து சென்ற களவாணியை கண்டுவிடும் நேரத்தில் ஆளுயர கரடியொன்று வழிமறித்துத் தாக்கிட, கத்தியால் குத்தி உயிர்தப்புகிறார் அதிகாரி. அதிகாரியைச் சுட நினைக்கும் களவாணியின் மீது ஓநாய் பாய்ந்திட, கிடைத்த நொடியில் களவாணியை சுட்டுவீழ்த்துகிறார் அதிகாரி. சாகும் முன்பு களவாணி சுட்ட குண்டொன்று ஓநாயைத் தாக்கிட, தன்னுயிர் காத்த ஓநாயின் உடலிலிருந்து குண்டை வெளியே எடுத்து வைத்தியம் பார்த்துவிட்டு, இரவுப்பொழுதை ஓநாயின் அருகிலேயே கழிக்கிறார் இரக்கசிந்தையுள்ள அந்த அதிகாரி!
    விடிந்ததும் ஓநாய் நலம் பெற்றுச் சென்றுவிட, தன் குதிரை இருக்குமிடத்தை நோக்கிக் கால்நடையாக அக்காட்டுப்பகுதியில் பயணமாகிறார் அதிகாரி!

    காட்டுக்குள் சென்று மறைந்த அந்த கணிவுள்ள ஓநாய், தன் கூட்டத்தினரை அழைத்து வந்து அதிகாரி அறியாவண்ணம் அவரைத் தொலைவிலிருந்தே அடையாளம் காட்டிவிட்டு அடர்ந்த காட்டுக்குள் திரும்பிச் செல்வதாக முடிகிறது கதை!

    இதை எப்படி எடுத்துக்கொள்வது?!!

    பொதுவாக ஓநாய்கள் ரத்தவெறி பிடித்தவையே! நாயின் அளவுக்கு அவற்றுக்கு நன்றி விசுவாசம் காட்டவெல்லாம் தெரியாது! இந்த லாஜிக் எல்லாம் பார்க்காமல் கதையை கதையாக மட்டுமே பார்த்ததில் பின்வரும் இரண்டு வழிகளில் இக்கதையைப் புரிந்துகொள்ள முயற்சித்திருக்கிறேன்...

    1. வாய்ப்புக் கிடைத்தும் தன்னைக் கொல்லாமல் விட்ட அதிகாரியின் மேல் அந்த ஓநாய்க்கு ஒரு நல்ல எண்ணம் உருவாகியிருக்கலாம். அதிகாரி ஆபத்திலிருக்கும்போது தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிட இந்த நன்றியுணர்வே காரணமாக இருந்திருக்கலாம்.
    தனக்காக குண்டடிபட்ட ஓநாய்க்கு நன்றிக்கடனாக - அதற்கு சிகிச்சையளித்துத் காப்பாற்றுகிறார் அதிகாரி. நலம் பெற்று காடு திரும்பும் ஓநாய், தன் கூட்டத்தை அழைத்துவந்து அதிகாரி அறியா வண்ணம் "அவரை நல்லா பார்த்துக்கிடுங்க.. இனிமே அவரும் நம் குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி. அவரோட பேர் தெரியலை. அதனால ஒரு அடையாளத்துக்காக இன்னிலேர்ந்து அவரோட பேரை 'இரவு ஓநாய்'னு வைக்கிறேன். நம்ம ஆட்கள்ல யாராவது இனிமே அவரை எங்கே பார்த்தாலும் தாக்க முயற்சிக்கக் கூடாது. இதுவே இந்த ஓநாய் தலைவனின் கட்டளை, சாசனம் - எல்லாம். புரிஞ்சதா?" என்று அடையாளம் காட்டிவிட்டு தன் கூட்டத்தோடு அடர்ந்த காட்டுக்குள் சென்றுமறைந்திருக்கலாம்! இது சாதாரணமான சிந்தனைதான். நம்மில் பலருக்கும் புரிந்துகொண்டிருப்போம்!

    2. நம்பினால் நம்புங்கள் - அந்த ஓநாய்.. மறுபிறப்பெடுத்த லிலித்! எந்தவொரு ஓநாயின் கண்களிலும் ஒரு மனிதனைக் காணும்போது இத்தனை நேசத்தைக் காட்டிவிட முடியாது! அ..அதன் கண்களைக் கவனியுங்களேன்.. அது.. அது லிலித்தே தான்!

    ய்ய்யீஈஈஈக்!!!

    ReplyDelete
  62. EDI A : வாசகர்ஸ் , அடுத்த வருஷம் கண்டிப்பா மாதம் ஒரு Tex . என்னை நம்புங்க. என்னப்பா Tex சரிதானே ?

    Tex B : ஆமா ஆமா

    Tex C : இவரை நம்பி 12 சட்டை வாங்கிட்டோம். மாதம் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

    ReplyDelete
  63. A: சட்டு புட்டுன்னு ஒரு சட்டைய எடுத்து மாட்டிகிட்டு வாப்பா டெக்ஸ்... கொலைப்பசி எனக்கு!!!
    B: இதோ வந்துட்டேன் பெருசு ...
    C: மாசத்துக்கு ஒரு சொக்காய்னு 12 மஞ்ச சட்டை தள்ளுபடில எடுத்தாச்சு...அது சரி... ஒரு டவுட்!!! இப்போ முன்னால இருக்கிற சட்டைல இருந்து ஆரம்பிக்கணுமா இல்ல பின்னால இருந்தா?

    ReplyDelete
  64. \\மனைவியை அதி தீவிரமாக நேசிப்போர் சங்கம் சார்பாக: கேப்சன் 2\\
    (A) ஈ.வி : நம்புங்கள் டெக்ஸ் - அந்த ஓநாய் தான் மறுபிறப்பெடுத்த லிலித்!!!!
    (B) டெக்ஸ்: அடடா எனக்கு தெரியாம போச்சே...
    C: ஒக்கமக்க... லேட்டா சொல்லுறியே தம்பி... முன்னாடியே தெரிஞ்சுருந்தா நடு மண்டைய நாலா பொளந்து இருக்கலாமே... சைக்கிள் கேப்ல எஸ்கேப் ஆயிட்டாளே...

    ReplyDelete
    Replies
    1. 🤣🤣🤣🤣🤣 நீங்களும் அதே சங்கத்தை சார்ந்தவர் தானா?!! 🤣🤣🤣

      Delete
    2. உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் பப்ளிக் பப்ளிக் ஈ.வி :P

      Delete
    3. கவலையேபடாதீங்க. இப்ப இங்க ஒரு ஈ காக்கா கூட கிடையாது! இது டின்னர் டைம்ன்றதால நம்ம ஆளுங்க எல்லாரும் கிச்சன்லேர்ந்து 'ஜொய்ய்ங் ஜொய்ங்'னு வரும் தோசை சுடற சத்தத்துல லயிச்சுக்கிடப்பாய்ங்க! 😜

      Delete
  65. உங்கள் ***** ஓநாய் ஜாக்கிரதை ***** ரிப்ளை படித்ததும் தான் இந்த கேப்சன் யோசனை வந்தது ஈ.வி.... நன்றி _/\_

    ReplyDelete
  66. இன்னிக்கு 1 ந் தேதி நவம்பர் பொஸ்தகம் எல்லாம் எப்போ சார் அனுப்புவிங்கோ...

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. A: டெக்ஸ்! நாம் தேடி வந்த பட்டண மொட்டையன் பார்ட்டனும் , கறிவெறியன் ஹியூஜ் கோட்டும் இங்குள்ள சலூனில்தான் தங்கியுள்ளதாக டைகர் செய்தி அனுப்பியுள்ளான். எனவே சட்டென உடையணிந்து சிட்டென கிளம்பி வா.

    B: இதோ நிமிடத்தில் வந்து விடுகிறேன் நண்பா.

    C: எங்கே கொஞ்சம் லேட்டாய் போனாலும் வறுத்த கறியெல்லாத்தையும் அவனுக தின்னு தீத்துடுவாங்கன்னு நீ பதறது எனக்கு தெரியாதா குறுந்தாடி குப்பா!

    ReplyDelete
  69. அன்பு ஆசிரியருக்கு...
    காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு...

    முதற்கண்...
    சிறு வயது முதல் எங்களை காமிக்ஸ் எனும் கனவுலகில்,
    நீண்ட வருடங்களாக மிதக்க வைத்து, எங்களின் குழந்தை உள்ளங்களை,
    பல இன்னல்களுக்கு மத்தியில் ,
    இந்த பொம்மை புத்தகத்தின் மூலம்
    ஆனந்தம் பெற செய்த தங்களுக்கும்,
    உங்களுக்கு துணையாக இருக்கும்
    செளந்தர் ஐயாவுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்,முக்கியமாக
    எங்களுக்காக இரவு பகல் பாராது உழைக்கும்
    லயன்&முத்து தொழிலாளர்களுக்கும்,
    ஆபீஸ் ஸ்டாஃப்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும்...
    அனைத்து காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக
    இதயம் கனிந்த தீபாவளி நல் நல்வாழ்த்துக்களை பகிர்கிறேன்.

    தீபாவளி இதழ்களுக்காக காத்திருக்கிறேன்சார்.
    இன்னும் கையில் வரவில்லை.

    சென்ற மாத கண்ணே கொலைமானே
    நல்ல த்ரில்லர் கதை.
    ஒரே மூச்சில் படித்தாயிற்று. நீண்ட வருடங்களுக்கு பின் கீழே வைக்காமல் படித்த முதல் காமிக்ஸ் இந்த க கொ.
    வாசகர் கடிதம் இல்லாதது சற்று வருத்தம்.

    பிறகு என்னளவில் யோசித்த வாசகங்கள்...
    1)
    A-டெக்ஸ் 12 மாசத்துக்கு 12 சாகசம். 12 சட்டை ரெடி. நீ ரெடியா?

    B-நா எப்பவும் ரெடி.

    C-மாசம் ஒரு சாகசம் தானா?
    இன்னும் 4 சாகசம் கொடுத்தா என்ன?

    2...
    A)-என்னப்பா யோசனை?

    B)-இல்ல இந்த சட்டை கலர் மாத்தினா என்ன?.
    நான் எங்க போனாலும்,
    இந்த மஞ்சள சட்டையை பாத்தே யார்னு தெரிஞ்சு போகுது, ஒரு த்ரில் இல்ல, சுவாரஸ்யம் இல்ல,ஒரு பரபரப்பு இல்ல,
    கலர் மாத்துனா நல்லாருக்கும்.
    யார்னு தெரியாது, த்ரில்லாகவும் இருக்கும்.
    சரி போகட்டும்....
    அடுத்த வருசம் எத்தனை விதமான எதிரிகளை பந்தாடனுமோ?

    C)- இத நா பேசி என்ன யூஸ்?.
    என்னை எழுதும் ஆசிரியர் தான முடிவு பண்ணனும்?!

    3...
    A--டெக்ஸ் சார்...
    குண்டு பட்டது,கத்தி கீறியது, சின்ன சின்ன டேமேஜ் ஆன சட்டையெல்லாம் தூக்கி போட்டாச்சு. இது எல்லாமே புதுசு தான்.
    அப்பறம் என்ன?

    B--ஆ..ஆ....பாத்துட்டேன். எல்லாம் ஒகே.

    C--ஹூம்...புதுசுங்கறானுக,
    கொஞ்சம் ஆயுதங்கள் செளகர்யமா வெக்கற மாதிரி உடை அமைச்சிருக்கலாம். மாஸ் ஹீரோன்னு என்னை உலகமே கொண்டாடுகிறது.அதுக்கு தகுந்த மாதிரி இந்த சட்டையிலாவது மாஸாக வடிவமைத்தால் என்ன? சரி இதான் நமக்கு வாய்த்தது.
    மனதில் வீரமும், ரசிகர்களின் அன்பும் இருக்க, வெற்றி நமதே.
    உடை எப்படி இருந்தால் என்ன?
    நமக்காக ரசிகர்கள் வெய்ட்டிங்
    கிளம்புவோம்.

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹

    ReplyDelete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
  71. **** ச்சும்மா ஜாலிக்காண்டி *****

    A : ஷாட் ரெடி! கேரவன்ல இருக்கற ஹீரோவை வரச்சொல்லுங்கப்பா!

    B : இதோ.. இப்ப வந்திடறேன் டைரக்டர் சார்...

    மைன்டு வாய்ஸ் : ஹூம்... சினிமாவுல ஹீரோ வேஷங்கட்டினா விதவிதமா ட்ரெஸ் போட்டுகிட்டு, கிளுகிளுப்பா ஹீரோயின்களோட டூயட் பாடலாம்னு நினைச்சு இந்தப்படத்துல நடிக்க வந்தேன். யாரோ டெக்ஸு வில்லராம்.. பீரியட் ஃபிலிமாம்.. வெறும் மஞ்ச சொக்காய்களை மட்டும் மாட்டிவிட்டு, ஒரு பிஞ்ச தாடி பெரிசு கூடவே மொத்தப்படத்தையும் எடுத்து முடிச்சுட்டானுக - படுபாவிக!

    ReplyDelete
    Replies
    1. மைன்டு-வாய்ஸின் தொடர்ச்சி : இதுலவேற இந்தப் படத்தை சூட்டோட சூடா தமிழ்லயும் ரிலீஸ் பண்ண உரிமைகள் வேணும்னு கேட்டு யாரோ ஒரு தமிழ்நாட்டு டப்பிங் ஸ்டூடியோ ஓனர் தினமும் நாலுவாட்டி மெயில் அனுப்பி நச்சரிச்சுக்கிட்டே இருக்காராம்! கஷ்டகாலம்டா சாமீ!!

      Delete
    2. This part is hilarious :-)

      /* A : ஷாட் ரெடி! கேரவன்ல இருக்கற ஹீரோவை வரச்சொல்லுங்கப்பா!

      B : இதோ.. இப்ப வந்திடறேன் டைரக்டர் சார்...

      மைன்டு வாய்ஸ் : ஹூம்... சினிமாவுல ஹீரோ வேஷங்கட்டினா விதவிதமா ட்ரெஸ் போட்டுகிட்டு, கிளுகிளுப்பா ஹீரோயின்களோட டூயட் பாடலாம்னு நினைச்சு இந்தப்படத்துல நடிக்க வந்தேன். யாரோ டெக்ஸு வில்லராம்.. பீரியட் ஃபிலிமாம்.. வெறும் மஞ்ச சொக்காய்களை மட்டும் மாட்டிவிட்டு, ஒரு பிஞ்ச தாடி பெரிசு கூடவே மொத்தப்படத்தையும் எடுத்து முடிச்சுட்டானுக - படுபாவிக! */

      Delete
    3. // , ஒரு பிஞ்ச தாடி பெரிசு// ஹா ஹா ஹா 😂😂😂

      Delete
    4. சூப்பர் ஈவி. //அதுவும் பிஞ்ச தாடி பெரிசு கூடவே//
      😂🤣🤣😂😂

      Delete
  72. தீபாவளி மலர் – பொக்கிஷம் தேடிய பயணம்

    இக்கதைக்குள் நுழையும் முன்னர் இளம் டெக்ஸ் வரிசையில் வந்த எதிரிகள் ஓராயிரம் கதையை ஒருமுறை நினைவில் ஏற்றிக் கொண்டால் ஒரு தொடரினை வாசித்தது போல இருக்கும். அதில் பாவ்னி இனத்தலைவர் க்ரே பியரின் மகள் தேஷா மற்றும் இளம் டெக்ஸ்வில்லர் இருவரும் செவ்விந்தியர்களுக்குச் சொந்தமான பொக்கிஷத்தை ஒரு ரகசிய குகையில் பத்திரப்படுத்துவதோடு நிறைவு பெற்றிருக்கும். இக்கதையில் அதை கவர எண்ணி தேஷாவை கடத்த திட்டமிடும் வஞ்சகர்களை டெக்ஸ் மற்றும் தேஷா கூட்டணியினர் எவ்விதம் முறியடித்து பொக்கிஷத்தை காப்பாற்றுகிறார்கள் என்பதை சூடான ஆக்சன் கலந்து பரிமாறியுள்ளனர்.

    டெக்சின் விதியை தீர்மானிப்பவளாக தேஷா இருப்பாள் என கிரே பியர் கூறுவதில் நிறைய சூட்சுமம் இருப்பதாக தெரிகிறது. இனிவரும் டெக்ஸ்/தேஷா கதைகளை எதிர்பார்க்கத் தூண்டுகிறது.

    இளம் தோர்கல் வரிசையில் உருவாக்கப்படும் பாத்திரங்கள், சம்பவங்களை அதன் கிளைத் தொடரான ஓநாய்க்குட்டி மற்றும் சமீபத்தைய கதைகளில் தொடர்புபடுத்தப்பட்டு அருமையாக புனையப்படும் யுக்தியை நான் இதிலும் காண்கிறேன்.

    இளம் டெக்ஸ் கதை வரிசையில் உருவாக்கப்படும் பாத்திரங்களை தற்போதைய கதைகளில் சாமர்த்தியமாக உள்நுழைத்து களத்தை விரிவாக்கம் செய்வதன் வாயிலாக டெக்சின் ரெகுலர் டெம்லேட் கதைகளிலிருந்து மாறி அடுத்த திசை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது, டெக்ஸை பிடிக்கா ரசிகர்களையும் வாசிக்கத் தூண்டும் வண்ணம் இனி கதைகளை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.

    இவ்விதம் கதைகள், அவற்றில் நிகழும் சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப் படுவதை நான் மிகவும் ரசிக்கிறேன். அது நம் தேடலை தூண்டுகிறது, சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

    என்னுடைய ரேட்டிங்: 8.5/10

    ReplyDelete
    Replies
    1. Good!

      // இவ்விதம் கதைகள், அவற்றில் நிகழும் சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப் படுவதை நான் மிகவும் ரசிக்கிறேன். //

      +1

      Delete
    2. NOT FOR COMPETITION. JUST FOR JOLLY:

      A: சட்டைகளை துவைத்து எடுத்து விட்டேன் . பாண்ட்களை நீங்களே துவைத்து கொள்ளுங்கள் அன்பே. நேற்று சாப்பிட்ட சில்வண்டு பொரியல் வயிற்றில் என்னமோ செய்கிறது.
      B: நீ ஓய்வெடு அன்பே. நான் துவைத்துக்கொள்கிறேன்.

      C: அடிங்கொப்பன் மவளே சில்வண்டா??!! நான் காட்டு அவரை விதை என்றல்லவா நினைத்து சாப்பிட்டு விட்டேன் .

      Delete
    3. @KS

      நிஜமாவே இது 'கேப்ஷன்' தானா? அல்லது யதார்த்தமான வீட்டுநடப்புகளை பதார்த்தமாகப் பதிவிட்டிருக்கிறீர்களா?!! :D

      Delete
    4. ///இளம் டெக்ஸ் கதை வரிசையில் உருவாக்கப்படும் பாத்திரங்களை தற்போதைய கதைகளில் சாமர்த்தியமாக உள்நுழைத்து களத்தை விரிவாக்கம் செய்வதன் வாயிலாக டெக்சின் ரெகுலர் டெம்லேட் கதைகளிலிருந்து மாறி அடுத்த திசை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது, டெக்ஸை பிடிக்கா ரசிகர்களையும் வாசிக்கத் தூண்டும் வண்ணம் இனி கதைகளை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.///

      அடடே!! நோட் பண்ணுங்க மிதுன் & கணேஷ்குமார்!

      Delete
    5. // யதார்த்தமான வீட்டுநடப்புகளை பதார்த்தமாகப் பதிவிட்டிருக்கிறீர்களா //

      YES :-)

      Delete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete
  75. A: தம்பி, சண்டைல கிழியாத சட்டை வேணும்னு கேட்டியே... அங்க பாரு சட்டை குடோனையே வெச்சிருக்கேன்... கூச்சப்படாம பார்த்து எடுத்துக்கோங்க! வர்ட்டா!!

    B: தீபாவளிக்கு நீ புது துணி குடுத்த
    லட்சணம் இதுதானா கார்சன்?


    C: தீபாவளிக்கு புது துணி போடலாம்னு, சட்டை கிழிஞ்சுடுச்சுனு பெரிசு கிட்ட புருடா விட்டது தப்பாயிடுச்சே!!!

    ReplyDelete
  76. தீபாவளி ஸ்பெஷல் பதிவில் ஸ்பெஷல் அறிவிப்பு உண்டான்னு தலைவர் கேக்கச் சொன்னாருங்க சார்...!!!

    ReplyDelete
    Replies
    1. பக்கத்து இலைக்கு பாயாசமா :-)

      கண்டிப்பாக உண்டு அறிவரசு.

      Delete
  77. NOT FOR COMPETITION. JUST FOR JOLLY:

    A: அடுத்த ஒரு வருடத்திற்கான உங்கள் சட்டைகளை போனெல்லி குழுமத்தார் ஸ்பான்ஸர் செய்துள்ளார்கள், டெக்ஸ். உங்கள் அடுத்த சாகசங்கள் தெறி மாஸாக இருக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    B: எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் அவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள்.

    C: சட்டைகள் ஓகே. பேண்ட்கள்???. ஒருவேளை தமிழ்நாட்டிலிருந்து “அவர்“ அனுப்புவாரோ?!.

    ReplyDelete
    Replies
    1. 'அவரே' அப்பப்போ முட்டுச்சந்துல சிக்கி பேண்ட் சட்டையெல்லாம் கிழிச்சுகிட்டு கிடக்காராம்... 😝😝

      Delete
  78. 1. A: என்னங்க போடுவது எல்லாம் மஞ்சள் சட்டை இதில் எதாவது ஒன்றை எடுத்து போட்டு வர ஏன் இவ்வளவு நேரம்?

    B. இதோ வந்துட்டேன் செல்லம்.

    C. இங்கு வந்துள்ள கேப்ஷனை பார்த்தால் பலருக்கு வீட்டில் இதே பிரச்சினை என தெரிகிறது. அதனை வீட்டில் காட்ட முடியாமல் நம்பளை கலாய்க்கிற மாதிரி அவங்க மனதில் உள்ளதை சத்தமாக சொல்லிட்டு போறாங்க. எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்.


    2. A: என்னங்க போடுவது எல்லாம் மஞ்சள் சட்டை இதில் எதாவது ஒன்றை எடுத்து போட்டு வர ஏன் இவ்வளவு நேரம்?

    B. செல்வம் இதோ வந்துட்டேன்டா.

    C. நம்ப போடுறதே மஞ்சள் சட்டை மட்டும் தான் இதுக்கே தலைசுத்துது. ஆனால் நம்ப கதைக்கு தமிழில் எழுதும் இந்த சிவகாசிகாரரை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருது.

    3. A: என்னங்க போடுவது எல்லாம் மஞ்சள் சட்டை இதில் எதாவது ஒன்றை எடுத்து போட்டு வர ஏன் இவ்வளவு நேரம்?

    B. இதோ வந்துட்டேன் செல்லம்.

    C. ஹீம் இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினால் ஆசிரியர் என்ன கேப்சன் போடுகிறார் என பார்க்கலாம் என்றால் விடமாட்டாள் போல் உள்ளது.

    ReplyDelete
  79. 'ஒரு முறை கொன்று விடு'
    இரண்டாம் பாகம் படித்து (ஒரு வழியாக) முடித்துவிட்டேன்.
    கிர்ர்ர்...குழப்பமே மிஞ்சுகிறது. நிறைய முரண்கள். ஒரு வேளை இது தான் வன்மேற்கின் நிஜமான முகமோ?

    ReplyDelete
  80. \\டெக்ஸை அதி தீவிரமாக நேசிப்போர் சங்கம் சார்பாக: கேப்சன் 3\\
    (A) ரம்மி : ஏங்க... சட்டுபுட்டுன்னு ஒரு சட்டையை செலக்ட் பண்ணிட்டு வராமா இம்புட்டு லேட் பண்ணிகிட்டு... (சத்தமாக) ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு டெக்ஸ்கும் தேவையா???
    (B) டெக்ஸ்: இதோ முடிஞ்ச மாதிரி தான் ப்ரதர்...
    C: அடேய்... அடேய்... விலை *கம்மி கடை* ன்னு மட்டும் சொன்னானே, இது *ரம்மி கடை*. ன்னு சொல்லவே இல்லையே... அவ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  81. This comment has been removed by the author.

    ReplyDelete
  82. ஏக் தம்மில் தாயில்லாமல டால்டனில்லை முடிச்சாச்சு..
    லக்கி, டால்டன் பிரதர்ஸ் காம்பினேஷன் என்றுமே சோடை போனதில்லை. இதுவும் அதற்கேற்ற கதை. அதுவும் கூடவே மதர் டால்டனின் லூட்டிகள் வேறு. பக்கத்துக்கு பக்கம் சிரிப்பு மழை. மீசையில்லாத டால்டன்களின் மா டால்டன்முகி மேக்கப் செம்ம..
    மா டால்டன், மற்றும் டால்டன் பிரதர்ஸ் ரியல் கேரக்டர்கள் என்பது ஆச்சரியமான, கேள்விப்படாத சங்கதி. அதுவும் 15 பிள்ளைகள். மா டால்டன் 16ம் பெற்று பெருவாழவு வாழ நெனச்சிருப்பாங்க போல. ஜஸ்ட் ஒண்ணு மிஸ்.

    ReplyDelete
  83. ஜாலியோ ஜாலி

    ஹ்ம்ம் .அன்னிக்கு எழுதின எழுத்து எழுதினதுதான் ..யாராலயும் மாத்த முடியாதுன்னு ரொம்ப விரக்தியா சொல்லிட்டு போறாரு தலே ..
    யாரு ஜாக்கு ?
    உங்க ஆஸ்தான டெய்லர்தான் ..25 வருசத்துக்கு முன்னாலே உங்க சட்டை அளவை குறிச்சி வச்சாராம் ..இன்னிக்கு வரைக்கும் அதே பிட்டா இருக்கீங்களாம்

    ReplyDelete
  84. ஜாலியோ ஜாலி

    ஏகப்பட்ட போன் கால் வருது டெக்ஸ் சார் ..என்ன சொல்ல ?
    யார் கிட்டே இருந்து எடிட்டர் சார் ?
    யாரோ திருப்பூர் பனியன் கம்பெனி ஓனராம் ..அவரோட பனியன் கம்பெனி விளம்பரத்துக்கு இந்த போஸ் சூப்பரா இருக்காம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க வெட்டுக்கிளி சார்! நலம்தானே? இப்பவும் பெங்களூரில்தான் ஜாகையா? உங்கள் வீட்டு கவிதாயினி நலமா?

      Delete
  85. ஜாலியோ ஜாலி
    நாலு முழம் இருக்கும் டெக்சு ..தொங்கபோட்டுட்டு வந்தேன் ..வேஸ்ட்
    எதை சொல்றே கார்சன்
    என்னோட நாக்கைதான் ..சும்மா தகதகன்னு மின்னுற மாதிரி பன்னெண்டு உருப்படி இருக்கு உடனே வந்து செலக்ட் பண்ணுன்னு தகவல் அனுப்புனியே இதுதான் அந்த பன்னெண்டா ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா! அட்டகாசம் வெட்டுக்கிளி சார்! :))))))

      Delete
    2. இதெல்லாம் ஓவர். கார்சன் பாவம். டெக்ஸ் தான் காய்ச்சி எடுக்கிறார்னா இங்கேயுமா?...

      Delete
  86. நிதிக்கு தலைவணங்கு..
    அக்மார்க் லக்கியின் காமெடி மேளா.
    ராய் பீன், ப்ளாக் டிக்கெட் ஜட்ஜ் அட்ராசிட்டி அமர்க்களம். முதல் பக்கத்தில் இருந்து கடைசி வரை காமெடி எக்ஸ்பிரஸ். தீபாவளிக்கு தன் பங்கை, இரண்டு கதைகளிலும் லக்கி சிறப்பாக நிறைவு செய்திடுகிறார். லக்கி கதைக்கு எழுதுவதற்கு மட்டும் ஆசிரியர் தனியாக பேனா வைத்திருககிறார் போல. நகைச்சுவை வசனங்களால் ஃப்ரேம் பை ஃப்ரேம் பின்னி எடுக்கிறார். சூப்பர். வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  87. A: டெக்ஸ்! உன்னைக்காண பிங்கர்ட்டன் ஏஜென்சி யிலிருந்து Mr.பிங்கும், Mr.டன்னும் வந்துள்ளனர். எருமைகளை வற்றலாக்கி கடத்தும் கும்பலை பிடிக்க உன் உதவி தேவையாம்.

    B: அவர்களுக்கு பீரும், பிங்கர் சிப்சும் கொடுத்து உபசரி கார்ஸன்.

    C: நானே இப்பதான் பாலைவனத்துல அலைஞ்சு திரிஞ்சு வத்தலாகி திரும்பியிருக்கிறேன். அதுக்குள்ள எரும வத்தல் கேசா போங்கடா டேய் !

    ReplyDelete
  88. ஓநாய் ஜாக்கிரதை..
    முதல் முறையாக பன்ச் வசனங்கள், நக்கல், நையாண்டிகள் , கும் ணங் இல்லாமல், படம் பார்த்து கதை சொல்லு பாணியில், ஒரு டெக்ஸ் கதை. ஆச்சரியம். வித்தியாசமான முயற்சி. ரசிக்கும் படியாகவே இருந்தது. லேசாக எம்ஜிஆரின் வேட்டைக்காரன் படத்தில், சிங்கத்தை எம் ஜி ஆர் காப்பாற்றும் காட்சியை நினைவூட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ///வேட்டைக்காரன் படத்தில், சிங்கத்தை எம் ஜி ஆர் காப்பாற்றும் காட்சியை நினைவூட்டுகிறது///

      யெஸ்! கெளபாய் உடையில், துப்பாக்கிகள் இடையில், மிடுக்கான நடையில் - வசீகரமாய் இருப்பார் புரட்சித்தலைவர்!

      Delete
    2. ஜெய்சங்கரை விட தலைவருக்கு கௌபாய் உடை (கச்சிதமான உடலமைப்பால்) செம கெத்தாகவே இருக்கும்.அந்த படத்தில் மிகமிக சுறுசுறுப்பாக இருப்பார் தலைவர்.

      Delete
  89. ஜாலியோ ஜாலி

    பல வருஷங்களா தீபாவளியை ஒட்டி வர்ற அதே கனவு இன்னிக்கும் வந்தது டாடி
    என்ன கனவு மகனே ?
    எனக்கு கல்யாணமாகி தலைதீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு போற மாதிரியும் அவரு இதேமாதிரி வரிசையா ட்ரெஸ்ஸை காட்டி எடுத்துக்குங்க மாப்பிள்ளைன்னு சொல்ற மாதிரியும்தான்

    ReplyDelete
  90. ஜாலியோ ஜாலி

    நான்தான் கணக்கிலே வீக்குன்னு தெரியும்லேப்பா அப்புறம் ஏன் என்னை இம்சிக்கிறே?
    என்னப்பா பெரிசா கேட்டுட்டேன்..தையல் கூலி ஒரு சட்டைக்கு 175 ரூபா வீதம் 12 சட்டைக்கு எவ்வளவு தரணும்னு கேட்டேன் இது ஒரு இம்சையா கார்சன் ..
    அதுமட்டுமா ..முத சட்டையிலே முக்கா கைதான் இருக்கு அதுக்கு ஒரு முப்பத்தேழு ரூபா கழிச்சுக்கோ அடுத்த சட்டையிலே அஞ்சே பட்டன் தான் இருக்கு அதுக்கு ஒரு எட்டார் ரூபா கழிச்சுக்கோ ன்னு ஒவ்வொரு சட்டைக்கும் நொட்டை சொல்றதை எதிலே சேத்துக்கிறதாம் ..

    ReplyDelete
  91. ஜாலியோ ஜாலி

    பழனிக்கு பால் காவடி எடுக்கிற கூட்டம் எதுக்கு இங்கே வந்திருக்கு?
    ஏன் கேட்க மாட்டே ..ஊர்லே இருக்கிற அதனை மஞ்சசட்டையையும் நீ அள்ளிட்டு வந்துட்டே..பக்தர்கள் எதை போட்டுட்டு போவாங்களாம்

    ReplyDelete
  92. Caption 1

    A : என்னப்பா டெக்ஸ் யோசனை!

    B : 2022ல் வருசம் முழுசும் மாச மாசம் தவறாம வரேனாம். அத ஞாபகபபடுத்த தான் எடிட்டர் இப்படி முன்னாடி வச்சிருக்கிறாறோ.

    C : அதெல்லாம் இல்ல, என்ன ஒரு குரூப் துவைச்சு தொங்கபோடறதிலேயே குறியா இருக்குது. அதைத்தான் சிம்பாலிக்கா காட்டியிருக்கிறார்.

    Caption 2

    A : என்னப்பா தீவிர யோசனை!

    B : 2022ல் நிறைய புதுவரவுகள் வருதாம். அதை சமாளிக்க எந்த சட்டையை எந்த மாசம் இறக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன். ஆனா நம்ம சட்டை எல்லாமே ஒரே மாதிரி இருக்கே.

    C: அதுமட்டுமா ஒ.ஒ.தோட்டா, இரத்தப்படலத்துக்கே டப் கொடுக்குமாம். சமாளிச்சு ஆகனுமே. சூப்பர் ஸ்டார் அந்தஸ்த தக்க வைக்கிறது எவ்வளவு கஷ்டம். இது சத்தமாகவும் சொல்ல முடியாது.

    ReplyDelete
  93. "இத சத்தமாகவும் சொல்ல முடியாது"

    ReplyDelete
  94. ஏ....யப்பாடா... எல்லாக் கடைகள்லயும் இருந்த ட்ரஸ் இவ்ளோதான்........இனி மஞ்ச சாயம் புதுசா வந்தா தானாம்...
    பி....சண்டனு வந்துட்டா சட்ட கிழியுதே பெருசு பெருசு...
    சி....லக்கிப்பய நெசமாவே லக்கி தான்...நாமதா காமெடியா போய்ட்டமோ

    ReplyDelete
  95. ஏ...தீபாவளிக்கு இதுல ஒன்ன போட்டுட்டு வெடிய கொளுத்து
    பி....அடடா எல்லாமே அம்சமாருக்கே...எத எடுக்க
    சி....மஞ்சளா மங்களகரமாருக்கு பொங்களுக்கும் ஒன்ன எடுத்து பத்ரமா வச்சிக்கனும்

    ReplyDelete
  96. ஏ...தீபாவளிக்கு அவ்ளோவும் உனக்குத்தான் தம்பி
    பி...போன தீவாளிக்கும் இப்படிதான காமிச்ச பெருசு
    சி...பொங்களுக்காவது மாத்த சொல்லி புனித மானிடோக்கு பொங்க வைக்க வேண்டியதுதா ஆசிரியர்ட்ட சொல்லி

    ReplyDelete
  97. A: ஏம்பா டெக்ஸ், நான் பிரேக் பாஸ்ட் 2 ரவுண்டே முடிச்சுட்டேன்... அங்கே என்னப்பா உனக்கு யோசனை வேண்டியிருக்கு?

    B: நீ 3 வது ரவுண்ட் முடிக்கிறதுக்குள்ளே நான் ரெடியாகி குதிரை மேல் இருப்பேன், பார்க்கிறியா கார்சன் ?

    C: ச்சே..!
    அப்ப எல்லாம் அட்டைப்படத்துல பச்சை, சிவப்பு ன்னு எத்தனை விதமான சட்டை போட்டு விடுவாரு எடிட்டர்... ஏற்கனவே என் கதையெல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு, அட்டை மட்டும் தான் மாறுதுன்னு பசங்க கலாய்க்கறாங்க... இதுல எப்பவுமே இந்த மஞ்சள் சட்டை தானா? இனிமேலாவது கதை அட்டை போடும்போது எனக்கு கலர் கலரா சட்டை யும் கொடுப்பாரா? ம்ஹும்...

    ReplyDelete
  98. சார் நாளை தீபாவளி ஸ்பெஷல் பதிவு உண்டா?

    ReplyDelete
    Replies
    1. பதிவில்லாத தீபாவளியா?!!

      இன்னிக்கு நைட்டா.. நாளை காலையிலான்னுதான் தெரியலை!!

      இந்தவாரம் வேலைகளை முடிச்சுட்டா அப்புறம் கச்சேரியில் கலந்துக்கறதாச் சொல்லியிருக்காரு! முடிச்சுட்டாரா இல்லியான்னு தெரியலை!! ஆனாலும் அசுரப் பணி தான்!!

      Delete
  99. This comment has been removed by the author.

    ReplyDelete
  100. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  101. This comment has been removed by the author.

    ReplyDelete
  102. பாயாசம் A : பாருங்க ஒரே கதை - வேற வேற கலர்ல அட்டை...

    டெக்ஸ் B: இங்கேயும் வந்துட்டீங்களா மகா பிரபு...

    டெக்ஸ் C: ( ஒரே கலர் - பனிரெண்டும் வேற வேற மஞ்சள் சட்டைனு போட்ருவோம்ல)...

    ReplyDelete