Friday, October 22, 2021

ஒரு பட்டாம்பூச்சி தினம் !!

 நண்பர்களே,

வணக்கம். "சந்தோஷம்" என்பதற்கொரு உருவம் உண்டென்கில் நேற்றைய பதிவிற்கு நீங்கள் தந்துள்ள அசாத்திய வரவேற்பினில் - அதனைத் தொட்டு உணர்ந்திருக்க முடியும் ! ஒரு 'பொம்ம புக்' மட்டும் தான் ; ஒரு நூறு அன்றாடப் பொறுப்புகளுக்கு மத்தியினில் அதனை அணுகிட வேண்டியதொரு காலகட்டத்தில் இருக்கின்றோம் தான் ; காலங்கள் மாறியிருப்பினும் சில evergreen நாயகர்களின் மறுவருகைகள் நம் முகத்தினில் ஒரு புன்னகையைப் படர விடாது போகாதென்று எதிர்பார்க்கவும் செய்தேன் தான் ; ஆனாலும் கூட நேற்றைய சந்தோஷப் பிரவாகங்கள் absolutely stunning !! இரும்புக் கவிஞரின் நூற்றுச் சொச்சம் பின்னூட்டங்களுக்கு மத்தியில் ஒரு நூற்றுச் சொச்சம் நண்பர்களின் அந்தக் கலப்படமில்லா மகிழ்வும், அன்பும், ஆனந்தமும் என்னை ரொம்பவே...ரொம்ப ரொம்பவே humble ஆக உணரச் செய்து விட்டன folks !!  "ரெண்டு கடப்பாரைகளை காலை டிபனுக்கு விழுங்கணுமே !!" என்று சொன்னால் - "தொட்டுக்க காரச் சட்னியா ? மல்லிச் சட்னியா ?" என்று மட்டுமே கேட்கும் எருமையனாகி விட்டிருக்கும் எனக்கே கூட, நேற்றைய அனுபவம் நெஞ்சினில் பட்டாம்பூச்சிகளை நாட்டியமாடச் செய்து விட்டது !! ஓராயிரம் மும்முரங்களுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும், வெறும் ஐந்தே நிமிடங்களுக்காவது ஒரு புன்னகையினை விதைக்க எனக்கு சாத்தியமாகி இருப்பின் - அது புனித மனிடோ வழங்கியுள்ள வரமாகவே இருக்கும் & இதற்கென ஓராயிர குட்டிக்கரணங்கள் அடித்தாலுமே தகும் !! Thank you for the umpteenth time guys !! 

நேற்றைய பொழுதில் பட்டாம்பூச்சிகளின் நடனத்தை நான் உணர்ந்த இரண்டாவது தருணமுமே இருந்தது தான் & அந்த முற்றிலும் எதிர்பாரா சிறு நிகழ்வினை இன்றைய உப பதிவினில் பகிர்ந்திடத் தோன்றுகிறது ! Maybe இதனில் பரவலாய் அனைவருக்குமொரு சுவாரஸ்யம் இருந்திடுமா ? என்றெல்லாம் சொல்லத் தெரியலை எனக்கு ; ஆனால் சலவைக்கு லுங்கியையும், பனியனையும் அனுப்பிய கதையைக் கூட நான் பகிர்ந்து வரும் இந்நாட்களில், கண்களைப் பனிக்கச் செய்ததொரு நிகழ்வினை பற்றிச் சொல்வது தப்பில்லை என்று பட்டது !! So here you go !!

நண்பர் ஒரு முதுகலை பொறியியல் பட்டதாரி ; டாக்டரேட் பட்டதாரியும் கூட ; அப்பாலிக்கா அரசுப் பொறியியல் கல்லூரியினில் துணைப் பேராசிரியராகவும் உள்ளவர் !! இங்கே ரெகுலராய் வருகை தந்திடும் நண்பர் ; அழகாய்க் கருத்துக்களை பகிர்ந்திடும் பண்பாளர் ! நேற்று காலை அவரிடமிருந்து வந்ததொரு மின்னஞ்சலையும், அதனிலிருந்து இணைப்பினையும் படித்த போது - தொண்டையில் ஏதோ அடைப்பது போலுணர்ந்தேன் !! முதலில் அந்த மின்னஞ்சலைப் படித்திடுங்களேன் : 

////////Sir,

During last week's pooja holidays I managed to recollect some old (comics related) memories in which the letter (hopefully from our senior editor! Kindly Confirm!) attached herewith is a testimony of everything that's been happening around (in my life) for more than three decades.

The efforts taken to write a letter to a school kid in 1995 itself is sooooo awesome/unimaginable and no words can replace what I do feel even now sir. All I remember was a verbal spat I had with my father for still being into comics during my +2 and he tore a postcard from sivakasi  in which the recent issues were listed. My father had called the Sivakasi office it seems and the result was this letter.

Still I preserve this letter and it reminds me of how (Y)our comics (with the general notion it is meant for kids!!!) treats its readers. Fabulous Sir...

Kindly convey this to the Senior editor and convey my pranams... _/\_

Awesome memories i had/having even now sir!!!

Thanks for everything!!!

Regards Ever


Dr.T.S.Murugesh M.E., Ph.D., MIE. 

Associate Professor

Department of Electronics and Communication Engineering

Government College of Engineering Srirangam

Tiruchirappalli. 620 012

////////////////////

And இதோ அந்த மின்னஞ்சலுடனான இணைப்புகள் :






Let me explain now guys : சீனியர் எடிட்டரின் கடிதமென நண்பர் எண்ணியிருந்த இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது எனது தாய்வழித் தாத்தா தான் !! 1995-ல் நமது அலுவலகம் செயல்பட்டு வந்தது அவரது இல்லத்தின் முன்பகுதியினில் எனும் போது - நானங்கு இருக்கும் நேரங்களை விடவும் தாத்தா தான் ஜாஸ்தி நேரம் இருந்திருப்பார் ! நண்பர் முருகேஷின் தந்தையார் நமது அலுவலகத்துக்கு போன் செய்து - "பையன் காமிக்ஸ்..காமிக்ஸ் என்று படிப்பைத் தொலைத்து விடுவானோ - என்று பயமாக உள்ளது ; இனிமேல் உங்கள் ஆபிசிலிருந்து அவனுக்கு காமிக்ஸ் புக் சம்பந்தமாய் எதுவும் அனுப்பிடாதீர்கள் !" என்ற ரீதியில் சொல்லியிருப்பார் போலும் !! And அந்த போனை எடுத்து பேசியது தாத்தாவாக இருந்திருக்க வேண்டும்  !! பேசி முடித்த கையோடு அன்றைய பள்ளி மாணவ நண்பர் முருகேஷுக்கு தன் கைப்பட இந்தக் கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார் !! இது எதுவுமே எனக்கு நேற்றைய பொழுது வரையிலும் தெரியாது !! அன்றைய டீனேஜரை எத்தனை அழகாய்ப் புரிந்து கொண்டு, எத்தனை ஆத்மார்த்தமாய் தாத்தா எழுதியுள்ளார் என்பதை வாசித்த போது இனமறியா உணர்வுக்குள் உள்ளுக்குள் !!

1995 எனும் போது - தாத்தா காலமாகிடுவதற்கு இரண்டரை ஆண்டுகள் முன்பான நாட்களவை & அப்போது அவருக்கு அகவை 76 இருந்திருக்க வேண்டும் !! அந்தப் பொழுதிலும்,பேராண்டியின் முயற்சிகளை அவர் ஓசையின்றி ரசித்துக் கொண்டு, தன்னால் இயன்ற விதங்களிலெல்லாம் உதவிட எண்ணியிருப்பதை நண்பர் பத்திரப்படுத்தியிருக்கும் இந்தக் கடிதம் நூற்றியோராவது தடவையாய் எனக்கு நினைவூட்டிய போது மனசு ரொம்பவே கனத்துப் போனது ! தாத்தாவின் அந்தக் கையெழுத்து எனது ஆயுட்கால ஞாபகம் & தாத்தாவின் கடைசிப் 10 ஆண்டுகளில் அவர் அதிகமாய் நேரம் செலவிட்டிருந்தது என்னோடே !! நான் பெருசாய் எதையும் படித்து சாதித்திருக்காமல் போயிருக்கலாம் தான் ; ஆனால் "தாத்தா" எனும் பல்கலைக்கழகத்தில் "வாழ்க்கை" எனும் பாடத்தைப் படித்தவன் என்பது எனது பயணத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் பிரதிபலிக்கும் உணர்வு !! அதனை நேற்றைக்கு அழுந்த உணர உதவிய நண்பர் முருகேஷ் அவர்களுக்கு எனது நன்றிகள் !!! You made my day sir !!

இங்கொரு நிஜத்தையுமே பகிர்ந்திடல் அவசியம் என்று பட்டது ! நான் யூத்தாக இருந்த அந்நாட்களில், தாத்தாவின் சற்றே அலங்கார பாணியிலான எழுத்து நடைகளிலும், எல்லோரையும் நிறைய விசாரித்து ; நிறைய பேசும் பாங்கிலும் எனக்கு அவ்வளவாய் உடன்பாடிருந்ததில்லை ! 'இது எதுக்கு ?? இவ்ளோ நீட்டி முழக்கணுமா ?" என்று உள்ளுக்குள் தோன்றும் தான் !! ஆனால் இன்றைக்கோ தொட்டு விடும் தொலைவினில் senior citizen அந்தஸ்து எனக்கே காத்துள்ள நிலையினில், எனது அபிப்பிராயங்கள் தான் என்னமாய் மாற்றம் கண்டுள்ளன ?!! தாத்தா பேசியதும், எழுதியதும் - அவரது அனுபவங்களை ; வாழ்க்கையின் பாடங்களை ஏதோவொரு விதத்தில் சுற்றியிருப்போருக்கு pass on செய்திட அவர் எடுத்த மெனெக்கெடலே என்பது இன்றைக்குப் புரிகிறது !! அவரது வயதை எட்ட முடிந்தால் பாக்கியமே & அவரது அன்பை தொட முடிந்தால் அது வரமே என்பது இந்த நொடியில் புரிகிறது !! விண்ணுலகை நோக்கிக் கரம்கூப்புகிறேன் !!

Bye guys..."ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" பாகம் 4 அழைக்கின்றது ! See you around !!

217 comments:

  1. காலை எழுந்தவுடன் பதிவு. :-)

    ReplyDelete
    Replies
    1. பின்பு மணக்க மணக்க நல்ல காபி

      Delete
    2. அடுத்து மல்லீப்பூ இட்லி4, கொத்துமல்லிசட்னி!

      Delete
    3. சாம்பார் ரெடியாகுது ஆனால் இட்லியா தோசையா இல்லை வெறும் சாம்பார் மட்டும் தானா எனத் தெரியவில்லை :-)

      Delete
    4. அப்புறம் 4 இட்லி சாப்பிடுற ஆளு நான் இல்லீங்க :-)

      Delete
    5. நடுவுல 'மட்டும்' ங்கிற வார்த்தை விட்டுட்டீங்களா?

      Delete
  2. நெகிழ்ச்சியான பதிவுங்க சார் 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சார்... 🙏🙏🙏

      Delete
    2. புத்தகப்பிரியன் சார். நீங்கள் தான் புரபசர்ங்கறது சந்தோசங்க. இதை பத்திரமா பாதுகாத்து வைச்ச உங்களுக்கு ஸ்பெசல் பாராட்டு

      Delete
    3. நன்றிகள் சார் 🙏🙏🙏

      Delete
  3. வந்துட்டேன்

    ReplyDelete
  4. நெகிழ்ச்சியான பதிவு சார்..!

    புரொபசர் சாருக்கும்....😍🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார். எடிட்டர் இப்படி பதிவிடுவார் என நான் நினைத்து கூட பார்க்க வில்லை சார்.🙏🙏🙏

      Delete
  5. கனவுலகம் முகநூலில்
    —————————-

    போட்டிப்பதிவு :

    நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். 2022 ஆம் ஆண்டின் முழு சந்தாவை நீங்கள் கட்டியிருந்தால் அது சம்பந்தமான விவரங்களை இங்கு பதிவிடவும்.

    உங்கள் பெயர் மற்றும் சந்தா எண் மட்டும் இங்கே குறிப்பிட்டால் போதுமானது.

    மேலதிக விவரங்களை தனிச்செய்தியில் தெரிவித்தால் போதும்.

    உங்களில் சில நபர்கள் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

    கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பரிசு என்னவென்பதை நடுவர்குழு அறிவிக்கும்.

    இன்றிலிருந்து போட்டி துவக்கம் பெறுகிறது! ஒருவரே எத்தனை சந்தா வேண்டுமானாலும் கட்டிவிட்டு இங்கு பதிவு செய்யலாம்.

    போட்டியில் கலந்து கொள்ள தகுதியான சந்தாப்பிரிவு O-N-O-C. முதல் தவணை கட்டி சந்தா நம்பர் வாங்கினாலே கலந்துக்கிடலாம்.

    கடைசித் தேதி ஜனவரி 31 2022

    வாழ்த்துகள் நண்பர்களே!

    பின்குறிப்பு:
    1. நிபந்தனைகள் அற்ற போட்டி
    2. இந்த போட்டிக்கும் லயன் கம்பேனிக்கும் நோ லிங்கு.
    3. சந்தாதாரர்களை ஊக்குவிக்க வாசகநண்பர்கள் இணைந்து நடத்துவது.

    ReplyDelete
    Replies
    1. நன்று மகேந்திரன்.

      Delete
    2. சந்தா கட்டோனும்னு நிபந்தனை விதிச்சிட்டு, நிபந்தனையே இல்லைன்னு கப்சா வுடுறியே ஷெரீப்பு

      Delete
    3. அருமையான போட்டி

      Delete
    4. போட்டியே சந்தாதாரர்களுக்குத்தானே

      Delete
    5. பாராட்டுக்கள் & வாழ்த்துகள்.

      Delete
  6. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  7. நண்பர் முருகேசன் மிகவும் அழகாக எழுதி உள்ளார். நன்றி நண்பரே.

    சார் மிகவும் நெகிழ்வான பதிவு. மீண்டும் ஒருமுறை தாத்தா பேரன் உறவு சிலிர்க்க செய்கிறது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார். எடிட்டர் சாரின் இனிய நினைவலைகளை மீட்க உதவியதில் மிக்க மகிழ்ச்சி சார் எனக்குமே🙏

      Delete
  8. இனிய மலரும் நினைவுகள். மேன்மக்கள் ஆசி மிகச் சிறப்பு.

    ReplyDelete
  9. கண்கள் குளமாகின்றன தான்...

    தாத்தாவின் பாட்டியின் அன்பும் பாசமும் அபரிமிதமானவை.

    அனுபவித்தவர்களுக்கே அதன் ஆழம் புரியும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார். 🙏🙏🙏

      Delete
    2. அடடா...குடந்தை வாசியா...
      புரபசர் நீங்க...

      Delete
  10. அருமை சார்
    தங்களுடன் பகிர்ந்த நண்பருக்கும்,யதார்த்தமான பதிவுகளுடன் எங்களின் மனதை இலகுவாக்கிக் கொண்டிருக்கும்
    உங்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார். எடிட்டர் இப்படி உடனே பதிவிடுவார் என நான் நினைத்து கூட பார்க்க வில்லை சார்.🙏🙏🙏

      Delete
  11. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  12. அட்டகாசமான பதிவு சார். நீங்கள் எழுதிய உங்கள் தாத்தா பற்றிய நினைவுகள் இன்னும் நினைவில் இருக்கு. நீங்கள் இங்கே நண்பரின் மெயிலை பகிர்ந்தது மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி. தினம் ஒரு பதிவு. தளம் மறுபடியும் சூடு பிடித்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நினைவலைகளை மீட்டியதில் அனைவருக்குமே மகிழ்ச்சி தானே சார் 🙏

      Delete
    3. மகிழ்ச்சி தான் சார்.

      Delete
  13. அன்பு ஆசிரியருக்கு...
    காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு 🌹...

    அழகான நெகிழ்வான பசுமை நினைவுகள்.
    இது போன்ற வாசகர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான்.
    அருமையான பொக்கிஷத்தை பாதுகாத்துள்ளார்.

    அவர் இப்பவும் காமிக்ஸ் தொடர்பில் உள்ளாரா சார்?.

    கடந்த சில மாத பதிவுகளை விட,
    அடுத்த ஆண்டில் வரவிருக்கும் காமிக்ஸ்கள், சந்தா சலுகைகள்,
    சிறப்பிதழ் அட்டகாசங்கள், இலவச இணைப்புகள் என, வாசகர்களுக்கு பிடித்த மாதிரி வந்த,
    கடந்த 2 வாரப் பதிவுகள் பலரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது சார்.
    சற்று தள்ளியிருந்த வாசகர்களையும், இந்த பதிவுகள் கவர்ந்துள்ளது.2022 ல்
    மீண்டும் ஒரு பெரிய வரவேற்பைப் பெறும் இந்த காமிக்ஸ்.

    ஒருவரை ஒருத்தருக்கு பிடித்து விட்டால்,
    என்றுமே அவரை பிடிக்கும்.
    அது போல தான் நீங்களும்,உங்கள் பதிவும்.
    லயன் வேறு நீங்க வேறா?.

    90களுக்கு முன், வீட்டிலுள்ளோருக்கு அது "பொம்மை புக்". எங்களுக்கு அது தனி சந்தோசத்தை தரும் உலகம்.
    அதில் யாரும் வந்து கல்லெறிந்து விட அனுமதி இல்லை. இன்றுவரை.
    அப்படிப்பட்ட "ஸ்நேகிக்கும் சிங்கத்தின்" பதிவுகளை அடிக்கடி படிப்பதே மகிழ்வுதான்.
    தொடருங்கள்... வரவேற்போம்...

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரி சகோ... எல்லா கருத்துக்கும் +10000

      Delete
    2. முதல் நாளில் இருந்து உள்ளேன் சார்... நன்றிகள் சார் 🙏

      Delete
  14. நெகிழ்ச்சியான பதிவு சார்..!

    புரொபசர் சாருக்கும்....🙏🙏🙏

    ReplyDelete
  15. நெகிழ்ச்சியான பதிவு...

    அருமையான மலரும் நினைவுகள்.


    ReplyDelete
  16. Replies
    1. தாத்தாக்கள் பாசம் அவை எல்லாம் ஒரு வரம் சார்.‌‌

      Delete
    2. உண்மைதான் ஜி அந்த வரம் கடைசி வரை கிடைக்கவில்லை 3 வயதில் தந்தையை இழந்ததால் தந்தை பாசமும் இல்லை என் அம்மா மட்டுமே எந்த குறையும் தெரியாத அளவு வளர்த்தார் இனை பிரியாத தோழனாக காமிக்ஸ் கிடைத்தது 🙏🙏

      Delete
    3. உங்கள் இழப்பின் வலியும் வேதனையும் புரிகிறது சார்...

      Delete
  17. இது தாத்தாக்கள் மாதம் போலும்!!!

    பிரெஞ்சு தாத்தாக்கள் ஒரு பக்கம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க "பிரகாஷ் " தாத்தாவும் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்!!

    :)

    குருகுல வாசத்தின்போது மூணாப்பு படிக்கையில் மந்திரி குமாரி ருக்கு எழுதிய துண்டு சீட்டு லிகிதங்களை வெளியிட்டு மகிழ்விப்பாரா இ.சி.ஈ.இளவரசர்?:)

    ReplyDelete
    Replies
    1. அந்த அளவிற்கு மெனக்கெட்டு எழுத வேண்டும் என்று நினைத்தது அவரின் பெருந்தன்மைக்கு சாட்சி சார்... நான் இளவரசரை கூற வில்லை சார் 😁

      Delete
    2. @ செனா அனா

      மூணாப்பிலே இளவரசருக்கு பெண் நண்பிகள் நிறைய உண்டு எனினும், காதல் உணர்வுகள் எதுவும் தோன்றியிருக்கவில்லை! ருக்குவை சந்தித்தது அஞ்சாப்பிலே தான்! அந்த துண்டுச் சீட்டு சமாச்சாரங்களையெல்லாம் நான் இங்கே போட்டால் எடிட்டர் சமூகம் (பொறாமையில்) என்னை block பண்ணிவிடும் அபாயங்களுண்டு! ஹிஹி!!

      Delete
    3. ஓ...அஞ்சாவுதுலியே ரூட் விட்டது தான் அந்த ருக்குவா..எங்கிட்ட ருக்கு பேசறப்ப இத பத்தி சொல்லவே இல்ல செயலரே..:-)

      Delete
    4. நான்தான் ருக்குட்ட 'வயசானவங்ககிட்டேல்லாம் பேசும்போது கண்டதையும் உளறி வைக்காதே'ன்னு சொல்லியிருந்தேனுங்க தலீவரே!

      Delete
  18. நடுவுல மானே, தேனே, பொன்மானேல்லாம் உண்டு தானே?

    ReplyDelete
  19. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  20. அந்தக்கடிதத்த படிக்கயில தாத்தாவின் அன்பை...அக்கறையை உணர்ந்தேன்....நீங்க கீழ எழுதியது படிக்கயில மயிர்க்கால்கள் எழ ஜிவ்வென ஓர் சந்தோசம்....அருமை சார்....உங்க அன்பான நல்லெண்ணங்களுக்கான விதை இங்கருக்கு

    ReplyDelete
  21. எழுத்துக்களை பார்த்த பொழுது எனது மாமா நான் 2005இல் முதல் மாத சம்பளம் 3500 வாங்கிய பொழுது என்னை ஆசிர்வதித்து எழுதிய கடிதம் நினைவு வந்து கண்களை பணிக்கச்செய்தது. மேலும் எழுதியது உங்கள் தாத்தா என்ற பொழுது சிலிர்த்துவிட்டது சார். உங்கள் நிலையும் அவ்வாறே இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

    மனதை தொட்ட பதிவாக அமைந்துபோனது.
    இக்கடிதத்தை அனுப்பிய நண்பருக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நினைவலைகளை பகிர காரணியாக இருந்தமைக்கு எனக்குமே மகிழ்ச்சி தான் சார். நன்றிகள் சார் 🙏

      Delete
    2. இவ்வளவு நாள் தாள் கிழியாமல் பாதுகாத்து வைத்திருந்து தகுந்த நேரத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல சார்

      Delete
    3. சிறிதும் டேமேஜ் ஆகாமல் 26 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது சார். அதை முத்து 50 நினைவலைகளில் ஆசிரியர் குறிப்பிடுவார் என்று தான் சார் நான் நினைத்து இருந்தேன் 🙏🙏🙏...

      Delete
    4. இது போல் வேறு கடிதங்கள் உண்டா நண்பரே...சரியான தருணத்தில் பொறுமையா காத்திருந்து அனுப்பியதெல்லாம் வேற லெவல்

      Delete
    5. இது ப்ளான் பண்ணி அனுப்பியது இல்லை நண்பரே... யதேச்சையாக ஒரு பைலை லீவில் புரட்டும் போது கிடைத்தது ஸ்டீல்... ஈ.வி மேல் ப்ராமிஸ் 😁😂

      Delete
    6. ///இது போல் வேறு கடிதங்கள் உண்டா நண்பரே///

      ஸ்டீல்.. ரொம்ப ஆர்வமா இருந்தா பக்கத்துல ஏதாவது போஸ்ட் ஆபீஸுக்குப் போங்க.. அங்க டெலிவரி பண்ணமுடியாத கடுதாசிகளை எல்லாம் ஒரு சாக்குப்பையில போட்டு வச்சிருப்பாங்க. அங்கேயே ஒரு ஓரமா உட்கார்ந்து இன்னிக்கெல்லாம் படிச்சுட்டே இருக்கலாம்!😝

      Delete
    7. //இன்னிக்கெல்லாம் படிச்சுட்டே இருக்கலாம்!😝//

      🤣😂

      Delete
  22. நன்றிகள் சார் 🙏

    ReplyDelete
  23. நெஞ்சம் தொட்ட நெகிழ்ச்சியான பதிவு.
    இதயம் இனித்தது .
    கண்கள் பனித்தன.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக சார்..‌‌. இப்பொழுதாவது அதை யார் இத்தனை மெனக்கெட்டு எழுதியது என்று தெரிந்ததே சார்.‌‌. 🙏

      Delete
  24. நீங்கள் ஏற்கனவே பதிவிட்டு இருந்தபடியே உங்கள் தாத்தா உங்களுக்கு எவ்வளவு moral support ஆக இருந்துள்ளார் என்பது நெகிழ செய்யும் விஷயம். You are so blessed, Sir. நான் தந்தைவழியோ தாய்வழியோ தாத்தாவை பார்த்ததில்லை இல்லை. ஆனால் பெரியோர்கள் ஆசி எத்தனை வலிமையானது என்று எனக்கு ஒரளவு தெரியும். 1988 -1993 வாக்கில் ஓவியப் போட்டிக்கு நான் அனுப்பியிருந்த சிற்சில ஸ்பைடர் படத்தையும் உங்கள் தாத்தா பார்த்திருப்பின் ஒருவேளை எனக்கும் இப்படி ஏதாவது பதில் அனுப்பி இருப்பாரோ என்று எண்ணத்தான் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பொம்மை புத்தகத்தின் அரை நிஜார் பொடியனுக்காக
      எல்லாம் இந்த அளவிற்கு மெனக்கெட்டு கடிதம் எழுத வேண்டும் என்று அந்த வயதிலும் நினைத்தது தான் சார் mind blowing...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. அதான் நண்பரே....முருகன் ஆசிகள்....வாழ்த்துக்கள்....குடும்பத்திலுள்ளோர் போல அரவணைக்கும் எழுத்துக்கள் பிஸ்னச மீறி

      Delete
  25. Wooow... Puthagapriyan, You are that blessed boy ahh. Very happy to hear, Sir.

    ReplyDelete
    Replies
    1. Haa haaa at that time veetula CURSED boy also sir 😁😇🤗

      Delete
    2. Even a 'cursed' boy also can be 'blessed', right Sir? 🤗

      Delete
    3. காமிக்ஸ் படிச்சாலே Blessed boy தான் நட்புகளே!!!😉

      Delete
  26. அட டே... பிரியன் சாரா....😍😍😍😍😍

    அருமை.... அருமை....அட்டகாசம் பிரியன் சார்....!!!

    கலக்கலனா பதிவு சார்...

    இத்தனைகாலம் இந்த லெட்டர் ரொம்ப பாதுகாப்பாக இருந்து இன்றைய பதிவின் கன்டெண்ட் ஆக மாறியுள்ளது.... மிகவும் நெகிழ்ச்சியான விசயம்....

    உங்க மெயிலின் அட்டாச்மென்ட் பார்த்து எடிட்டர் சார் அப்படியே துள்ளி குதித்து இருப்பார்,

    நேற்று நாம...இன்று சாரு...!!!!

    இது எடிட்டர் சாரின் தாத்தாவின் ஆன்மா நம்மோடு இருந்து வழிகாட்டுது என்பதையே குறிக்கிறது!!!!

    எடிட்டர் சார்& பிரியன் சார்@ இருவருக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐

    சில ஆசீர்வாதங்கள் தெய்வாம்சம் பொருந்தியவை...இதுவும் அதில் ஓன்று.....!!!!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் அருமையாக அழகாக நயமாக சொல்லி உள்ளீர்கள் சார்... நன்றிகள் சார் 🙏🙏🙏.

      Delete
    2. அருமையாக சொல்லி உள்ளீர்கள் விஜயராகவன்.

      Delete
  27. Puthagapriyan0@ its very nice to share this letter at this golden moment..God bless you sir

    ReplyDelete
    Replies
    1. Credit entirely goes to our editor sir.. thanks a lot sir 🙏

      Delete
  28. அடடே!! நம்ம புத்தகப்பிரியன் தான் அந்த புரஃபசரா?!! நான் கூட யாரோ புதுசா ஒரு புரஃபசர்னு நினைச்சு பயந்துட்டேன்..! :D

    ReplyDelete
    Replies
    1. பிரியை இல்லையேன்னு இளவரசர் அப்செட் போல 😁🤪😝😛

      Delete
    2. புத்தகப்பிரியன் நண்பரே..

      எடிட்டரிடம் ஷேர் பண்ணவேண்டிய கடுதாசியை அவருக்கு அனுப்பி ஒரு நெகிழ்வான பொழுதை ஏற்படுத்திட்டிங்க! வெரிகுட்!

      அதே மாதிரி, உங்க கல்லூரிகாலங்களில் வந்த கடுதாசிகளை இ.சி.இளவரசரின் ஈமெயிலுக்கு எந்தவித சென்சாருமின்றி உடனே அனுப்பிவைத்து, இளவரசரின் நல்லாசிகளைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது!

      Delete
    3. ///பிரியை இல்லையேன்னு இளவரசர் அப்செட் போல 😁🤪😝😛///

      ஹிஹி! இளவரசரின் எண்ணவோட்டத்தைத் தெரியாதோர் இந்த நாட்டிலேயே இல்லை போலிருக்கிறது!

      Delete
    4. ஹா ஹா ஹா 🤣🤣🤣 முடியலை ஈ.வி 😁😁😁

      Delete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. 1995 ம்ம்ம்... வேலை தேடி கம்பெனி கம்பெனியா இண்டர்வியூக்கு அலைந்த அனுபவம்தான் இக்கட இருக்கு.

    இக்கடிதத்தின் உரிமையாளர் Dr.T.S.Murugesh உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவர்தான் ! வாழ்த்துக்கள் சார் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் சார். வேலை தேடுவதே வேலையாக அமைந்த அனுபவங்களும் 1999 ல் நிறையவே கிட்டிற்று சார்...

      Delete
    2. நன்றிகள் ஸ்டீல் சார் 🙏

      Delete
  31. Emotional post !

    Made me remember two things -

    a) The inland letters my grandpa would write from Trichy in early 80s. As usual lost with time!

    b) In mid-80s I had written a story for Tinkle (Reader's Choice entry). It was rejected but Editor Anant Pai sent a hand written letter explaining how the story was good and why it was not considered despite being good. He had further advised me to keep writing (which I did not) and had sent a copy of one of the Amar Chitra Katha titles as a compensation. (Again lost with time)!!

    ReplyDelete
    Replies
    1. நக்கல், நையாண்டி, குசும்பான கதைகளுக்குப் பெயர் போன ஒரு எழுத்தாளரை இந்த உலகம் இழந்துடுச்சுன்னு தோனுது!

      Delete
    2. Remembering the golden moments we seldom had in our life is definitely truly special sir...

      Delete
  32. இதுல அந்த தாத்தாவோட சாமர்த்தியத்தை கவனிக்கணும் எல்லாரும்.

    பையனோட அப்பா phone செய்து காமிக்ஸ் அனுப்பாதீங்க என்றார். தாத்தாவோ நைஸா லெட்டர் போட்டு "மார்க்கெட்ல என்ன விற்பனை ஆகுது","வாங்கி படி","அப்டி கிடைக்கலேன்னா பணம் அனுப்பு" எல்லாத்தையும் எழுதிவிட்டு "அப்டியே பாடம் நல்லா படிச்சு 1st ரேங்க் வாங்குதுப்பா" என்று தென் தடவிய கசப்பு மருந்தை ஊட்டி விட்டு ... யப்பா .. பெரியவங்க பெரியவங்கதான் :-)

    இதை நண்பரின் அப்பா பிடிச்சிருந்தா அந்த காமிக்ஸ் புஸ்தகங்களையும் வாங்கி தந்து விடத் தூண்டும் !!

    ReplyDelete
  33. ஒரு நெகிழ்ச்சியான நாள் அனைவருக்கும்...

    நன்றிகள் புத்தகப்பிரியன் சார்! நன்றிகள் ஆசிரியருக்கு!

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் புகழும்/நன்றிகளும்
      நம்ம எடிட்டருக்கே சார் 🙏🙏🙏

      Delete
  34. // Bye guys..."ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" பாகம் 4 அழைக்கின்றது ! See you around !! //
    அப்ப தீபாவளி புத்தகங்கள் ரெடியாகிடுச்சி போல,விரைவில் எதிர்பார்க்கலாமா சார்...!!!

    ReplyDelete
    Replies
    1. அரை லூசுக்கும் அடியேனுக்கும் இப்போதெல்லாம் பெரிய வித்தியாசம் கிடையாது சார் ! பெண்டு கழற்றுவது போல் ஒரு பணி படுத்திடும் பட்சத்தில் அடுத்ததற்குள் ஜம்ப் !

      Delete
    2. // பெண்டு கழற்றுவது போல் ஒரு பணி படுத்திடும் பட்சத்தில் அடுத்ததற்குள் ஜம்ப் ! //
      உங்களது உழைப்பு எங்களது மகிழ்ச்சி சார்...!!!

      Delete
  35. உண்மையில். 21/10/21. அன்று. திருப்பதியில். வெங்கடாஜலபதி யை தரிசித்து. கொண்டிருந்தேன் (முன்பு. எல்லாம். லட்டு. Limite. ஆனால். தற்போது. தேவஸ்தானம். வேண்டிய. அளவு. வாங்கி. கொள்ள. அனுமதி அளித்துஉள்ளது )அந்த. நேரத்தில்.எடிட்டர். சார். மூன்று. லட்டு. நியூஸ் உண்மையில். (. இரும்பு. கை. மாயாவி. ஸ்பைடர். Sextenblack. அறிவிப்பு)
    எனக்கு. Surprise. Dekshnamoorthy. Thiruvarur

    ReplyDelete
    Replies
    1. சார்... பெருமாளின் லட்டுக்களை சந்தோஷமாய் ருசியுங்கள் ; நம்மதுலாம் லாலா கடைச்சரக்குகள் !

      Delete
  36. நிச்சயமாக சார் 🙏

    ReplyDelete
  37. முத்துவோட தலை மகன் மாயாவிக்கு முத்து 50ல நல்ல காலம் பிறந்த மாதிரி தங்க மகன் டைகருக்கு ஏதாச்சும் நல்லது நடக்கனும் புனித மனிடோ…

    ReplyDelete
    Replies
    1. வாஸ்த்தவம்தான்..!

      ஆனா.. யங் டைகரை நெனைச்சாத்தான் கெதக்குங்குது..

      வேணுமின்னா..

      தங்க கல்லறையை யேக்ஸியில போடச்சொல்லி போராடுவோம்.!

      Delete
    2. மாயாவி ஒண்டியாவே பொழுதை ஒட்டிப்புட்டார் ; புலியாருக்கும் அதே போல "நல்லது" நடக்கணுமா சார் ?

      Delete
    3. ஆமா சார் அந்த தங்க கல்லறை மட்டும் பார்த்து ஏதாவது செய்யுங்கள்

      Delete
    4. Yes Sir 

      தங்கக்கல்லறை reprint - பழைய வசனங்களுடன் - நன்றாக இருக்கும் சார் - ஒரு மைல் கல் ஆண்டிற்குரிய பதிப்பு தான் சார்.

      Delete
    5. கொஞ்சம் இருங்க நான் புனித சாத்தானை வரச்சொல்கிறேன :-)

      Delete
    6. He loved the old scripts. He was against the modified dialogs.

      Delete
    7. என்னய கேட்டா டைகரோட ஒரு போஸ்டர் வந்துட்டா அது பாட்டுக்கு நீந்தும்...ரம்மி சொன்னா மாதிரியே வேகமா

      Delete
    8. புனித சாத்தான் ஒண்டிக்கட்டையா...
      அவரு சம்சாரினுல்ல நெனச்சேன்

      Delete
  38. டியர் விஜயன் சார்..
    நேற்று நீங்கள் கொடுத்த லட்டுகளுக்கு-
    வாசக நண்பர்கள் கொடுக்கும் - லட்டையும் (அன்பையும்) பார்க்க நெகிழ்ச்சியாக உள்ளது....
    எனக்கு முதல்முதலில் கடிதம் என்று எழுதியது ஞாபகம் வருகிறது. - அது லயன் தீபாவளி மலர். ரூ 10- இதழ் - க்கு தான்.
    Booklet அனுப்பி இருந்தீர்கள். கடிதமும் இருந்த ஞாபகம் இருக்கிறது. ( தேடிப்பார்க்கிறேன்.),
    இப்ப நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது..
    ()என்னைவிட இரண்டு வயசு தான் மூத்தவர்..இல்லையா? ii..ஏதோ.பெரிய ஆசிரியரிடம் இருந்து வந்தது பார்த்து பார்த்து பரவசமடைந்த காலம்..
    ஆனாலும் - எனது முதல் (காமிக்ஸ் காதல்) கடிதம் எழுதிப் பழகியது. அந்த இதழிலிருந்துதான்..

    ReplyDelete
    Replies
    1. நானுமோர் கவருக்குள்ள பத்து ரூவா ஸ்டாம்ப் வச்சு அனுப்புனேன் பாட்டில் பூதத்துக்கு...எப்படி பணமனுப்பனும்னு தெரியாமலோ அல்லது அதுக்கு ஈடாக ஸ்டாம்ப் அனுப்புவதால் பணம் சேந்துரும்னு நெனச்சோ....இன்னைக்கு வரை பதிலில்லை....வந்ததா நினைவிருக்கா சார்

      Delete
    2. இளங்கோ சார்@ நீங்களும் 60s kids தானா...!!!

      சீக்கிரம் லட்டரை மெயில் பண்ணுங்க...!!

      (MV:-எவ்ளோ சைலண்ட்டா குடியிருக்காங்க...!!!)

      Delete
  39. Edi Sir..மலரும் நினைவுகள் ..மனம் நெகிழ வைக்கும் தருணங்கள்.. முத்து 50.. களை கட்ட ஆரம்பித்து விட்டது..

    ReplyDelete

  40. மிக மிக உணர்வு பூர்வமான நெகிழ்வான தருணம் சார். நினைவுகளை அசை போடுவது சுகம். அவற்றை மீண்டும் கிழறி விட வழி சமைத்த பழைய பொக்கிசமான கடித வரிகள் அருமை. தாத்தாவின் பெருமைகளை தங்களின் பழைய பதிவிலிருந்து அறிந்து கொண்டோம். அது மீண்டுமொரு முறை நீண்ட காலத்தின் பின் வேறு வடிவத்தில் நிதர்சனம் ஆனது அருமை. தாத்தாவின் வைர மொழிகளின்படி கற்று வாழ்க்கையின் உயர்ந்த பேராசிரியரின் கடின உழைப்பிற்கு ஒரு ராயல் சலூட்.

    ReplyDelete
  41. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. இப்பவெல்லாம் தினம் பதிவுக்கிழமை தான்.

      Delete
    2. Magi ji.. ஆமாம்.. அனுதினமும் தீபாவளிதான்.. நம்ப Edi sir ன் ஒவ்வொரு பதிவும் சரவெடி.. அதிரடி..

      Delete
  42. Replies
    1. அதற்கு தனி புக் தான் போடணும். இன்னும் ஒரு வருடம் ஆகும்.

      Delete
    2. நீங்க அனுப்பிய 10 ருபாய் ஸ்டாம்ப் வெச்சு உங்களுக்கே நீங்க ஆர்டர் செய்த புஸ்தகங்களை அனுப்பியிருக்கக்கூடும் என்பது காற்று வாக்கில் வந்த செய்தி. எடிட்டருக்கே தெரியாமல் அந்த 10 ரூபாய் டீ, மசால் வடை, போண்டா இத்யாதிகளாகி இருக்கவும் கூடும் ;-)

      Delete
    3. ஆனா இரத்தப்படலத்த சிவகாசி போய் வாங்கிய பின்னரே ...நா சந்தா கட்டினேன் நம்ம ராதாகிருஷ்ண அண்ணாச்சியிடம்...

      Delete
    4. அதெல்லாம் எனக்குத் தெரியாது ராகவரே...ஸ்பைடரின் பாட்டில் பூதத்த இப்பவாச்சும் அனுப்பப் சொல்லுங்க

      Delete
    5. 5000 அனுப்பவும் - காமிக்ஸ் "நண்பரே" ஒருத்தர் அனுப்ப ரெடி :-)

      Delete
    6. கலர்லயே ஆசிரியர் ஹார்டுபௌண்ட்ல மேக்சி சைசுல...முன்னூறு ரூபாய்க்கு வெளியிடுவார்...எனக்கு மட்டும் அன்னைக்கு அனுப்பும் பத்து ரூபாய்க்கு ஈடா

      Delete
  43. @புத்தகப்பிரியன்:
    நண்பரே, இவ்வளவு ஆண்டுகளாக சீனியர் எடிட்டர் எழுதிய கடிதம் என்று நீங்கள் எண்ணியிருக்க, 26 ஆண்டுகள் கழித்து இப்படி எக்கச்சக்க திருப்பங்களா?! பேரனுக்குத் தெரியாமல் காமிக்ஸ் வாசகர்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்த ஒரு தாத்தா... தந்தைக்குத் தெரியாமல் காமிக்ஸ் கடிதங்களையும், சக வாசகர்களுக்குத் தெரியாமல் புனைப்பெயரில் பின்னூட்டங்களையும் எழுதிக் கொண்டிருந்த ஒரு வாசகர், அதே கடிதத்தின் வாயிலாக அவரை அடையாளம் காணச் செய்த ஒரு எடிட்டர்... குட் காம்பினேஷன் :)

    நானும், அதே 95-ல், அதே +2 படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஈரோடு விஜய் எல்லாம் குழந்தை குட்டியோடு செட்டில் ஆகியிருந்த சமயத்தில், கிட்டத்தட்ட காதல் கடிதங்கள் எழுத வேண்டிய வாலிப வயதில், இப்படித்தான் லயன் உட்பட பல்வேறு பதிப்பகங்களுக்கு வாசகர் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன்! ஆனால், அதற்கடுத்த ஆண்டே நிலைமை தலைகீழாய் மாறிப் போனது! பின்னே, சும்மாவா 96 என்று படம் எடுத்திருக்கிறார்கள் ;)

    இப்பவும் நான் காமிக்ஸ் கடிதங்கள் (மட்டும்) பின்னூட்டங்கள் வாயிலாக எழுதிக் கொண்டிருக்கிறேன் :D

    ஒரு செனா. அனா. ரக குறிப்பு.:
    கடிதத்தில், "இப்பொழுது தான்" என்ற பொருளில் கையாளப்பட்டுள்ள "இப்பவும்" என்ற சொல்லும், சீர்திருத்தத்திற்கு முந்தைய அழகிய லையும், னையும் கவனத்தைக் கவர்கின்றன! இந்த எழுத்துக்கள் Unicode-ல் ஏனோ இடம்பெறவில்லை!

    ReplyDelete
    Replies
    1. //நானும், அதே 95-ல், அதே +2 படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஈரோடு விஜய் எல்லாம் குழந்தை குட்டியோடு செட்டில் ஆகியிருந்த சமயத்தில்//


      ஹா...ஹா...ஹா...

      Delete
    2. ///ஈரோடு விஜய் எல்லாம் குழந்தை குட்டியோடு செட்டில் ஆகியிருந்த சமயத்தில்///

      மேற்கண்ட வரியில் 'குழந்தை' என்பதை மட்டும் எடுத்துட்டீங்கன்னா மத்தபடி எல்லாம் சரிதான், கார்த்திக்! 😁😁😁

      Delete
    3. ///அழகிய லையும், னையும் கவனத்தைக் கவர்கின்றன///

      என்னவொரு வார்த்தை விளையாட்டு!! இது..இது..இதான் கார்த்திக்!!!

      Delete
    4. //மேற்கண்ட வரியில் 'குழந்தை' என்பதை மட்டும் எடுத்துட்டீங்கன்னா மத்தபடி எல்லாம் சரிதான், கார்த்திக்! 😁😁😁//

      ROFL

      Delete
    5. அருமை அருமை... வழக்கமான வார்த்தை விளையாட்டுடன் அட்டகாசம் கார்த்திக் 🙏🙏🙏

      Delete
    6. ஈரோடு விஜய் எல்லாம் குழந்தை குட்டியோடு செட்டில் ஆகியிருந்த சமயத்தில்,//

      இதில் பேரக் என்பதை குழந்தையோடு சேத்திட்டீங்கன்னா எல்லாம் சரி தான் கா சோ.

      Delete
    7. ///இதில் பேரக் என்பதை குழந்தையோடு சேத்திட்டீங்கன்னா எல்லாம் சரி தான் கா சோ///

      வந்துடுவீங்களே.. கரெக்டா வந்துடுவீங்களே.. தேடிப்பிடிச்சு வந்து கமெண்ட்டு போட்டுடுவீங்களே!!! கிர்ர்ர்ர்.. 🤨🤨

      Delete
    8. தவறான தகவல் ஒரு இடத்துல பகிரப்படுதுன்னா அங்கே அதை சரி பண்ண மொத ஆளா வந்துடுவேன்னு உங்களைக்குத் தெரியாத க்+இ.

      Delete
  44. சார் டைகர் இல்லாத முத்து 50 கொண்டாட்டம், Tex இல்லாத தீபாவளி போல சார். அந்த தங்கக்கலறையை ஹார்ட் பவுண்டா, பழைய வசனங்களுடன் மறுபதிப்பு செய்தீர்கள் என்றால்
    - அல்லது நமது பணியாள நண்பர்கள் டீ சாப்பிட்டு மங்கலாக்கிய இரத்தத்தடம், இரும்புக் குதிரை (?!) - அந்த 4 parter - அதை மறுபதிப்பு பளிச்சுனு hard காவேரில் - இந்த 6ம் ஒரே ஹார்ட் கவர் பதிப்பில் தெறிக்க விட்டீர்களானால் ... சூப்பரோ சூப்பர் சார் !

    Then all the 23 albums will be in hard covers sir ...

    ReplyDelete
    Replies
    1. மீதமுள்ள இளம் டைகரை பதிப்பிக்கலாம் இரு பாகமாவது...அதற்குரிய விலையில்

      Delete
    2. ஓடீர்றா கைப்புள்ள...

      2022 புலிக்குட்டி தோஷம் ஜாஸ்தியாருக்கும் போலயே...பரிகாரம் தெரியலையே.

      Delete
  45. லட்டுகளை சுவைக்க காத்திருக்கும் நண்பர்களே உங்கள் மகிழ்ச்சியை இங்கு பதிவிட்டு விட்டு உங்கள் பங்களிப்பு முடித்து விட்டது என்று கருத வேண்டாம்.

    லட்டுகளுக்கு விலையாக ஒரு பைசா செலவில்லாமல் மௌன பார்வையாளர்கள் உள்பட நீங்கள் அனைவரும் செய்யக்கூடிய முயற்சி ஒன்றை மேற்கொள்ளுங்கள்!

    சந்தா எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்க நாம் அனைவரும் சில சிறிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சந்தா மற்றும் விற்பனை அளவு அதிகரித்தால் லட்டுகள் வருடம் முழுவதும் விநியோகிக்கப்படும் .
    பக்கங்கள் கூடலாம், இலவச இணைப்புகள் அதிகரிக்கலாம் .

    நீங்கள் ஒவ்வொருவரும் இன்றே செய்யக்கூடிய காரியம் உங்கள் கையில் இருக்கும்
    ஸ்மார்ட் போனில் இருக்கிறது.

    உங்கள் நட்பு மற்றும் உறவினர் வட்டத்தில் நமது காமிக்ஸ் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத குடும்பதலைவர்கள் நிச்சயம் இருப்பார்கள் !

    அவர்கள் அனைவருக்கும் நமது
    காமிக்ஸ் தொடர்புடைய links
    ஒவ்வொன்றாக What's app மூலம் அனுப்பி வையுங்கள் !
    முதல் நாள் வீடியோ link
    கடைசியாக நமது Blog முகவரி.

    www.lion-muthucomics.com

    www.facebook.com/LionMuthuComics.Sivakasi

    Youtube: https://youtu.be/QaRWOUyxUBU

    நமது வாசகர் வட்டத்தை விரிவு படுத்தும் இந்த முயற்சிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுங்கள் !

    இந்தியாவில் பிற மொழி பேசுபவர்களுக்கு கிட்டாத அரிய வாய்ப்புஒன்று நமது தமிழ் வாசகர்களுக்கு.மட்டுமே கிடைத்துள்ளது . அதை மேலும் விரிவாக்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன் !

    ...

    ReplyDelete
    Replies
    1. அருமையான கோரிக்கை செனா அனா!!

      சந்தா எண்ணிக்கை உயர்ந்தால் நிறைய லட்டுகள் நிச்சயம்!!

      Delete
    2. //சந்தா மற்றும் விற்பனை அளவு அதிகரித்தால் லட்டுகள் வருடம் முழுவதும் விநியோகிக்கப்படும் .
      பக்கங்கள் கூடலாம், இலவச இணைப்புகள் அதிகரிக்கலாம் .//
      விலை குறையக்கூட வாய்ப்பிருக்கே...விலை குறைப்புக்கு பதிலாக இலவச இணைப்புகள் அதிகரிக்கும்...ஆசிரியர் குறித்து தெளிவாய் அறிவோமே...இயன்றோர் எப்படியாவது சந்தால இணைங்க நண்பர்களே

      Delete
    3. நம்பிக்கையுடன்...

      Delete
    4. உங்கள் அனுமதி கேட்காமல் நானும் copy paste பண்ணி என் முகநூல் பக்கத்தில் மற்றும் குழுக்களில் பகிர்ந்துள்ளேன்.மன்னிக்க வேண்டுகின்றேன் சார்.

      Delete
    5. //மன்னிக்க வேண்டுகின்றேன் சார்.//

      உங்களுக்கு நன்றி நான் சொல்லவேண்டும் சரவணன்!!! எல்லா இடங்களிலும் இதை ஷேர் செய்வது அவசியம் கூட..

      நமது காமிக்ஸின் பொது நன்மைக்கான செய்தியை தாங்கி நிற்கும் பதிவுதானே இது..

      Delete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete

  48. \* "பையன் காமிக்ஸ்..காமிக்ஸ் என்று படிப்பைத் தொலைத்து விடுவானோ - என்று பயமாக உள்ளது ; இனிமேல் உங்கள் ஆபிசிலிருந்து அவனுக்கு காமிக்ஸ் புக் சம்பந்தமாய் எதுவும் அனுப்பிடாதீர்கள் !" என்ற ரீதியில் சொல்லியிருப்பார் போலும் !! */

    தங்கள் தாத்தாவின் கடிதம் கொண்டு பார்த்தால் அவ்வாறிருக்க வாய்ப்பில்லை.

    அடுத்த வெளியீடுகள் தாங்கி வந்த அஞ்சலட்டையை கிழித்ததால் தனது மகன் அடைந்த வருத்தமும் மன உளைச்சலும் போக்க, சிவகாசிக்கு தொலைபேசி மூலமாக பேசி அந்த இதழ்கள் பற்றி விசாரித்திருக்க கூடும்.

    அந்த அன்பையும், அக்கறையையும் உணர்ந்ததால் தானே வெறுமனே அஞ்சலட்டையை திரும்பவும் அனுப்பி கடனை கழிக்காது, கைப்பட கடிதமாய் எழுதி அனுப்பும் உள்ளம் கனிந்தது!!!
    உம் காமிக்ஸ் காதலுள் தன் பேரனை கண்டிருப்பார் போலும்

    ReplyDelete
    Replies
    1. அருமையான அனுமானம் @Navaneethan நண்பரே! நன்றாக யோசித்திருக்கிறீர்கள் - சபாஷ்!!!

      மகன் படித்துக் கொண்டிருந்தது +2 என்பதாலும், இதில் எடுக்கும் ஒவ்வொரு மார்க்குமே கூட தன் மகனின் வாழ்க்கைப் பாதையைத் நிர்மாணிப்பதாய் இருந்திடுமென்ற அக்கறையினாலும் -
      மகனின் நலம் விரும்பும்; அதே சமயம் மகனின் காமிக்ஸ் காதலை முழுவதும் ஒதுக்கிவிட மனமில்லாத ஒரு தந்தை பின்வருமாறு பேசியிருக்கக்கூடும்!

      "ஐயா.. என் மகன் முருகேசன் தற்போது +2 படித்துக்கொண்டிருக்கிறான். அவன் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கப்போகும் வகுப்பு இது என்பது தாங்கள் அறியாததல்ல. மற்ற எல்லாத் தந்தைகளையும் போல நானும் என் மகன் நன்கு படித்து, நல்லதொரு நிலையை அடையவேண்டுமென்ற கனவில் இருக்கிறேன். என் மகன் நன்றாகப் படிப்பவனே! எங்களுடைய அறிவுறுத்தல் ஏதுமின்றி அவனாகவே இதுவரை நல்ல மதிப்பெண்களையே பெற்றுவந்தாலும், காமிக்ஸ் மீது அவனுக்குள்ள காதல் பொதுத்தேர்வின்போது ஓரிரு மதிப்பெண்கள் குறைந்துவிடக் காரணமாகிவிடக்கூடாது என்று அஞ்சுகிறேன். இந்த அச்சத்தில் இன்று காலை அவனிடம் சற்று கடுமையாகவே நடந்துகொண்டுவிட்டேன். அது குறித்து என் மனம் இப்பவும் கனமாகவே உணருகிறேன். இன்று மாலை அவனைச் சந்திக்கும்போது "சரி, விரும்பும் காமிக்ஸைப் படித்துக் கொள். மார்க்கும் நன்றாக வாங்கிவிடு" என்று சொல்லிவிட முடியும் தான். ஆனாலும் மகனின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு சாதாரணத் தந்தை என்ற நிலையில் அப்படிச் செய்ய என் மனம் ஒப்பவில்லை! ஆகவே, நான் இப்படிப் பேசியதாக அவனிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் நீங்களாவே அவனுக்கு ஒரு கடிதம் மூலம் தொடர்பு கொண்டு என்னென்ன புத்தங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதையும், அவற்றை எங்கே பெறலாம் என்பது குறித்தும் தெரிவித்தீர்களானால் நிச்சயம் மகிழ்வேன். நன்றி!'

      இப்படிப் பேசியிருந்திருப்பாரோ?!!

      (ஒரு யூகம் தான்! தவறென்றால் ஃபோன் பண்ணியவரின் மகரும், கடுதாசி எழுதியவரின் பேரரும் மன்னிப்பார்களாக!)

      Delete
    2. அருமையான அனுமானம் சார்... 👌👌👌

      Delete
    3. உங்கள் எழுத்து நடை உங்கள் வயதை/அனுபவத்தை காட்டுகிறது ஈ.வி 😁

      Delete
    4. ///உங்கள் எழுத்து நடை உங்கள் வயதை/அனுபவத்தை காட்டுகிறது ஈ.வி ///

      இதுக்குப் பேசாம இளவரசரை எருமைக் காலில் போட்டு மிதித்திருக்கலாம்! 😌😌

      Delete
  49. சார் நாலாவது லட்டு குறித்த பதிவா...தீபாவளி வெளியீடுகள் குறித்த பதிவா....ஏங்கும் நெஞ்சங்களுடன்

    ReplyDelete
  50. இன்றைய பதிவில் 4 வந்து லட்டாக இரட்டை வேட்டையர்கள் வந்தால் எப்படி இருக்கும் ஆண்டவா சொக்கா

    ReplyDelete
  51. மழை ( மாலை ) வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  52. அக்டோபரில் நவம்பர் வருமா ?!

    ReplyDelete
  53. ஏய் நண்பங்களா கள்ளமார்கட்ட
    தூரமா தள்ளனும்
    என்ன தெரிஞ்சிதா

    சரிங்கண்ணே

    அங்க பார் ப்ளாக்ல எல்லாம்
    குறுக்க மறுக்க திட்டி
    போட்டிருக்காங்க அவிங்களை எல்லாம்
    கண்டுக்காம போகச் சொல்லுங்ப்பா

    ஒதுங்கி போவோம் ஒதுங்கி போவோம்

    அட கண்டுக்காம போக சொல்லுங்கப்பானா

    அட ஓரமா போயா
    ஓரம்போப்பா ஓரம்போ ஓரம்போயா

    ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ
    ஓரம்போ ஓரம்போ முத்துஃபிஃடி கதைக வருது
    ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ
    ஓரம்போ ஓரம்போ முத்துஃபிஃப்டி கதைக வருது
    ஓரம்போ ஓரம்போ முத்துஃபிஃப்டி கதைக வருது

    வாங்கயா வந்துபதிவ பண்ணுங்கயா
    வந்து புக்க வாங்கிக் கொள்ளுங்கயா
    சிவகாசி லயனத் தந்த முத்து சௌந்தர் பாண்டியர்
    புக்கிலே வர்றார்றோய்

    : ஓரம்போ ஓரம்போ முத்துஃபிஃப்டி கதைக வருது

    ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஹே பிளாக் மார்கட் குருவி ஐயோ

    அம்மாடி எம்மாடி மாரியாத்தா காளியாத்தா
    ஓசியா வித்த கதைக மேல விக்க முடியாம
    பன்னிட்டானுங்களே எம்மாடி

    ஹே கள்ளா புதுசா வருது
    கண்ணுக்கு தெரில ஓரமா போயேன்

    அட சி ஜால்ரா பாய்களா

    ஓரம்போ

    சி

    ஓரம்போ

    ஜால்ராபசங்கள

    ஓரம்போ ஓரம்போ முத்துஃபிஃப்டி கதைக வருது
    ஓரம்போ ஓரம்போ முத்துஃபிஃப்டி கதைக வருது

    புக்குல எல்லாம் கதைக ரொம்ப இருக்கு


    வாங்கி விடுங்க நல்ல படிச்சி விடுங்க
    வித்தா பின்னே எனக்கு பின்னே நீங்க கேக்க வேணாமே
    நெறயா வாங்காதீங்க

    வாங்தீங்க வாங்காதீங்க

    குறுக்கால விக்காதீதீங்க

    விக்காதீங்க விக்காதீங்க

    இனிக்கும் ஸ்பைடர் மாயாவி செக்ஸ்டன் பிளேக்க்கும்
    எடுத்துவாரேன் பத்தாட்டி நான் இன்னும் தாரேன் வோய்

    ஓரம்போ ஓரம்போ முத்துஃபிஃப்டி கதைக வருது
    ஏலேலோலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ

    இங்கிலாந்து ஃபிரான்சு நான்தான் கண்டு வருவேன்
    கதைகளெல்லாம் சிறப்பா வாங்கி தருவேன்
    ஆல்பா சிஸ்கோ டேங்கோ வாங்கி வருவேனே
    டைகரய்யா ரோடு மேலே

    நிக்கிறாரு நிக்கிறாரு

    அவர கொஞ்சம் ஒதுங்க சொல்லு

    ஒதிங்கிக்குங்க ஒதிங்கிக்குங்க

    வாரான் ஃபிஃப்டி முத்து ஜனவரி மேல ஊர்கோலமா
    தேர் போலே வாரானம்மா

    ஓரம்போ ஓரம்போ முத்துஃபிஃப்டி கதைக வருது

    ரசிகன பின்னால உக்கார வச்சு
    காமிக்ஸ் டவுன் எல்லாம் அழகா சுத்தி வருவேன்
    டைகரகூட வாங்கி தருவேன் ஆசைப்படி நானே
    குஷியான சவாரிதான்

    நல்லா பாரு நல்லா பாரு

    கொண்டாட்டம் சந்தோஷம்தான்

    நல்லா சொல்லு நல்லா சொல்லு

    கிடைக்காம போகும் ஆஸ்ட்ரிக்ச கூட வாங்கி தருவேன்
    பந்தையம் வப்பேன் சாகரயும் கூட்டி வருவேன் ஓய்

    ஓரம்போ ஓரம்போ முத்துஃபிஃப்டி கதைக வருது

    வாங்கயா வந்துபதிவ பண்ணுங்கயா
    வந்து புக்க வாங்கிக் கொள்ளுங்கயா
    சிவகாசி லயனத் தந்த முத்து சௌந்தர் பாண்டியர்
    புக்கிலே வர்றார்றோய்
    ஓரம்போ ஓரம்போ முத்துஃபிஃப்டி கதைக வருது
    ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ

    ReplyDelete
    Replies
    1. ஆத்தாடி......எம்மாம் பெரிய பாட்டு ?!

      எப்படி இப்படி ஸ்டீல் சார் ?

      Delete
    2. ஹா ஹா!! பின்றீங்க கவிஞரே!! :)))

      Delete
    3. ஸ்டீல்...:-)) செம!!!

      Delete
  54. தீபாவளி மலர் ஸ்பெஷல் இதழ்களின் தரிசனம் எப்போதோ என ஏங்குகிறது மனம்.

    ReplyDelete