Thursday, October 14, 2021

ஒரு பண்டிகை..ஒரு பதிவு !!

 நண்பர்களே,

வணக்கம். பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் ! வீட்டிலும், தொழில்கூடங்களிலும் மகிழ்வும், வெற்றிகளும் தொடர்கதைகளாகிடட்டும் ! இங்கே நம்மிடத்திலோ காலையிலேயே சீக்கிரமாய் வேலை துவங்கியாச்சு ! So தீபாவளி மலரின் வண்ணப் பக்கங்களின் அச்சும், மங்களகர மஞ்சளில் அழகாய் அச்சாகியாச்சு !! விடுமுறைகள் முடிந்தான பின்னே, திங்களன்று black & white பக்கங்களும் பிரிண்ட் ஆகி விட்டால், 'தல' - தீபாவளிக்குத் தயாராகி இருப்பார் ! And இம்முறையுமே இரவுக்கழுகாருக்குச் சமமாய் சின்னக்கழுகாரும் சாகசம் செய்கிறார் !! 

And லக்கி டபுள் ஆல்பத்தில் கிட்டத்தட்ட முக்கால் பங்குப் பணிகள் done !! நடுவே 2022-ன் அட்டவணை ; அதற்கான ஆஞ்சநேய வால் நீளப்பதிவு என்று பிஸியாகிப் போனதால் மொழிபெயர்ப்பினில் ஒரு 25 பக்கங்கள் தொக்கி நிற்கின்றன ! நாளைக்குள் அத்தனையும் பூர்த்தி செய்து விட்டால், காத்திருக்கும் வாரத்தில் ஒல்லியாரும் தன் பங்குக்கு மஞ்சள் இங்கை வாளி வாளியாய் கபளீகரம் செய்திடத் தயாராகி விடுவார் !

நவம்பரில் மூன்றாவது இதழான ட்யூக்கும் தடபுடலாய் தயாராகி வருகிறது ; அநேகமாய் லக்கியின் பிரின்டிங் நிறைவுறும் தருணத்துக்கு ஹெர்மனின் அழகர்களுமே அச்சுக்கூடத்தினில் ஆஜராகியிருப்பர் ! நிஜத்தைச் சொல்வதானால் - காத்துக் கிடக்கும் பணிகளின் பரிமாணங்களைக் கண்டு, கடந்த சில வாரங்களாகவே பேய் முழி முழித்துக் கொண்டே தானிருந்தேன் !! 

** தீபாவளிக்கு முன்பாகவே 3 பெரிய புக்ஸையும் உங்களிடம் ஒப்படைக்க வேண்டுமே என்ற பட படப்பு !

**டிசம்பரின் இதழ்களின் சகலத்துக்கும் பேனா பிடிக்கவுள்ளது நானே என்பதால் அங்கே ஒரு மண்டகப்படிப் பணிகள் வெயிட்டிங் !!

**Muthu # 50-ல் இன்னும் 30% பணிகள் பாக்கி நிற்கும் நெருடல் !!

** And இதன் மத்தியினில் கேட்லாக் 2022 சார்ந்த last minute திட்டமிடல்கள் & பதிவுக்கான முஸ்தீபுகள் & பஞ்சாயத்துக்களுக்கான ஜமுக்காள drycleaning பணிகள் !!!

ஆனால் "அவசரம் ; deadlines நெருங்குகின்றன !!" - என்று மண்டைக்குள் அலாரம் அடிக்கத் துவங்கும் நொடிகளில், விரல்களுக்கு சுறுசுறுப்பும், புத்திக்கு காரிய சித்தியும் புனித மனிடோவின் புண்ணியத்தில் கிட்டி விடுவதை yet again உணர்ந்து வருகிறேன் !! "கொஞ்ச நேரம் IPL பார்ப்போம் ; கொஞ்ச நேரம் மட்டையாகிக்கலாம் ; அப்புறமாய் வேலைகளை பார்த்துக்கலாம்" - என்று டிமிக்கி தந்த பாங்கு நொடிப்பொழுதினில் காணாது போயிட, சுறுசுறுப்பு சுப்புடுவாகி வரிசை கட்டி வேலைகளைப் பந்தாடி வருகிறேன் ! In many ways உங்களின் உற்சாகங்களே எனது சேருக்குக் கீழே ராக்கெட் எரிபொருளாய்ச் செயல்பட்டு வருவதில் எது ரகசியம் ?! ஒரு தூரத்து நாளில் ஈஸிசேரில் அமர்ந்தபடிக்கே, இந்த நாட்களையெல்லாம் அசை போட ஒரு வாய்ப்பை ஆண்டவன் வழங்கினாரெனில் - சத்தியமாய் மலைப்பே மேலோங்கும் பிரதானமாய் !! And that will be because - ஒரு அடிப்படைச் சோம்பேறியை இத்தனை பல்டிக்களை அடிக்கச் செய்து, இத்தனை பணிகளை சாத்தியப்படுத்தியுள்ள உங்கள் ஒவ்வொருவரையும் நினைக்கும் போது தோன்றிடும் பிரமிப்பும், பெருமையுமே காரணமாக இருந்திடும் ! ! 

Anyways, வேலைகளோடு வேலையாய் பதிவையும் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறேன் ! அநேகமாய் இன்றைக்கு சாயந்திரத்துக்குள் 'சுபம்' போட்டு விடுவேன் என்றே தோன்றுகிறது ! 

So பதிவை எப்போன்னு நீங்க சொல்றான் ; அப்போ நான் டணாலென்று போடறான் !!

And இப்போதைக்கு நிம்பள் கிளம்பறான் ! சீக்கிரமே நெக்ஸ்ட் மீட் பண்றான் ! நீங்கள் சுண்டல்களை அளவோடு சாப்பிடறான் !! Bye all !!

142 comments:

  1. வணக்கம்.
    இரண்டாவது.

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. // பதிவை எப்போன்னு நீங்க சொல்றான் ; அப்போ நான் டணாலென்று போடறான் !! //

    Tonight Pelase!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இன்றே பதிவை போட்டு விடுங்கள் சார்.

      Delete
  4. ///பஞ்சாயத்துக்களுக்கான ஜமுக்காள drycleaning பணிகள் !!!///

    ஹா ஹா ஹா! :))))

    ReplyDelete
  5. நிஜத்தைச் சொல்வதானால் - காத்துக் கிடக்கும் பணிகளின் பரிமாணங்களைக் கண்டு, கடந்த சில வாரங்களாகவே பேய் முழி முழித்துக் கொண்டே தானிருந்தேன் !!

    நீங்கள் அப்படி முழிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம் சார் :-)

    ReplyDelete
  6. வந்திட்டேன் சார் 🙏🏼

    நண்பர்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதிபூஜை நல்வாழ்த்துகள் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  7. ///
    So பதிவை எப்போன்னு நீங்க சொல்றான் ; அப்போ நான் டணாலென்று போடறான் !!///

    ரெடியாயிடுச்சின்னா.. மத்தியானம் போட்டுவிடுங்க..! பூஜை முடிச்சிட்டு ஃப்ரீயாத்தான் இருப்போம்.!

    சாயுங்காலம் போட்டாலுமே சரிதான்.!

    ReplyDelete
  8. / So பதிவை எப்போன்னு நீங்க சொல்றான் ; அப்போ நான் டணாலென்று போடறான் //
    முடிந்தால் மாலை 04.00 To 06.00...
    இல்லை எனில் இரவுக்குள்...

    ReplyDelete
  9. அட்டவணைப் பதிவை இன்று மாலை 8 மணிவாக்கில் போடுங்க சார்!

    ReplyDelete
  10. நள்ளிரவு 12.01 மணிக்குப் போட்டுத் தாக்குங்கள் சார் அட்டவணைப் பதிவை.

    ReplyDelete
  11. ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  12. சார் இரவு போட்டுவிடுங்கள். என்ன எனக்கெல்லாம் இன்று விடுமுறை நாளை வேலை நாள் என்ன செய்வது.

    ReplyDelete
  13. // நிஜத்தைச் சொல்வதானால் - காத்துக் கிடக்கும் பணிகளின் பரிமாணங்களைக் கண்டு, கடந்த சில வாரங்களாகவே பேய் முழி முழித்துக் கொண்டே தானிருந்தேன் !! //
    உங்கள் உழைப்பு அபாரமானது சார்...
    காமிக்ஸ் மேல் உள்ள காதலே இப்படி உங்களை பரபரப்பாக வைத்திருக்கிறது...

    ReplyDelete
  14. ஆசிரியர் மைண்ட் வாய்ஸ் : பேசாமல் இவங்களை கேட்காமல் நாமளே அட்டவணை நேரத்தை முடிவு பண்ணி இருக்கலாம்...!!!

    ReplyDelete
  15. இன்னிக்கு பொழுதோட போடுங்க சார்..

    ReplyDelete
    Replies
    1. மாலை பொழுதுதானே ரம்மி...:-)

      Delete
  16. ஆசிரியருக்கும், சீனியர் சாருக்கும், ஜூனியருக்கும், அலுவலக நண்பர்களுக்கும், அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதிபூஜை நல்வாழ்த்துகள் 🙏🏼🙏🏼🙏🏼

    திருப்பூர் ப்ளூபெர்ரி...

    ReplyDelete
  17. எப்ப வேணா பதிவை போட்டுக்குங்கோ.. நாங்க பேனா, பென்சில், கால்குலேட்டர் எக்ஸ்ஸெல் ஷீட்டோட ரெடியா இருக்கோம்.. முட்டு சந்துக்கு கூட்டிகிட்டு போக....

    ReplyDelete
  18. So பதிவை எப்போன்னு நீங்க சொல்றான் ; அப்போ நான் டணாலென்று போடறான் !!

    இன்று இரவு 9 மணிக்கு சார்..

    எல்லாரும் சாப்பிட்டு விட்டு ரெடியாக இருந்திடுவர்...

    ReplyDelete
  19. ஆங்.. அப்புறம் சொல்ல மறந்துட்டோம்..


    ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகள்

    Reply

    ReplyDelete
  20. http://lion-muthucomics.blogspot.com/2020/10/2021.html?m=1

    ReplyDelete
    Replies
    1. போன வருஷம் மாலை 05.00 மணிக்கு அட்டவணை பதிவு போட்டிருக்கிங்க சார்,(ஒரு தேர் இழுக்கும் பதிவு),ஈ.வி தான் முதல் கமெண்ட்...
      இப்பவும் மாலை 05.00 மணிக்கே முடிந்தால் போடலாம்...

      Delete
    2. வாவ்...இதை தலைகீழாக நின்று வழிமொழிகிறேன்...:-)

      Delete
  21. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் பண்டிகை தின வாழ்த்துக்கள் புது வருட அட்டவணை இன்றய நன்னாளிலே வெளியிடுங்களேன்

    ReplyDelete
  22. இன்றே போட்டுத்தாக்குங்க சார்...நமக்கு ஐபில் பரபரப்பைவிட இதுதான் பரபரப்பாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ப்ளஸ்ஸோ ப்ளஸ்...

      அதுவும் எனக்கெல்லாம் ஐபிஎல்லுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது..:-)

      Delete
  23. இரவு ஏழு மணிக்கு மேல் 10 மணிக்குள் அட்டவணை போடலாம் சார்.
    ஆசிரியர் மற்றும் லயன் முத்து நிறுவன ஊழியர்கள் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. "வேண்டும் - வேண்டாம் " தீர்ப்பு என்னாச்சு நண்பர்களே ?!

    ReplyDelete
    Replies
    1. பதில் இன்றைய மாலை பதிவில் சார்..:-)

      Delete
  25. தயவு செய்து இன்றே பதிவை இடுங்கள் சார்...அதே சமயம் நடுச்சாமம் ஒன்பது மணிக்குள்ளும் பதிவு வருமாறும் பார்த்து கொள்ளுங்கள் சார்..ப்ளீஸ்..!

    ReplyDelete
  26. இன்று இரவு 9 மணிக்கு புதிய அட்டவணை ரிலீஸ் சரியாக இருக்கும் சார். Smashing 70's புக் பண்ணியாச்சு. பெரிதாக விருப்பம் இல்லாவிட்டாலும், நமது வெளியீடுகளை அதுவும் இந்த தரத்தில் வருவதை தவிர்க்க மனமில்லை. இனி வரும் காலங்களில் அனைவரும் விரும்பும் கதைகளுக்கு வருடம் ஒன்றிரண்டுக்காவது இத்தகைய தரத்தை அளித்தால் கூடுதல் சிறப்பாக அமையும். சார். உதாரணம்: maxi சைஸில் லக்கி ஆண்டு மலர், தோர்கல் ஆண்டு/கோடை மலர், திக்கான தாளில் டெக்ஸ் தீபாவளி மலர் அல்லது போனொலி கூட்டு கலவை etc.

    ReplyDelete
    Replies
    1. ஆமோதிக்கின்றேன்.

      வழிமொழிகின்றேன்.

      Delete
    2. // mashing 70's புக் பண்ணியாச்சு.//

      Good! Super!

      Delete
  27. சார் எந்த நல்ல காரியத்தையும் தல்லி போடக்கூடாது. நன்றே செய் அதை இன்றே செய்ன்னு எதோ ஒரு பெரிய மாகான் சொல்லியிருக்கிறார்...
    அதுவும் இல்லாமல் 'மு.பு.', 'வா.ஆ.' 'இன்ஸ்டா'லாம் ஆ.. ஊ.. னா செயல் இழக்குது. அதனால் இப்ப இப்ப இப்ப இப்பவே போடுங்க ஆமாம்.

    ReplyDelete
  28. மறந்தும் மறவாதே:
    திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை தழுவம் பிரபலங்கள், ஏன் எப்படி என்பதை நமது காமெடி கர்னல் கண்டு பிடிக்கிறார் என்பதை நகைச்சுவையோடு விறுவிறுப்பாக சொல்லி உள்ளார்கள்! தன்னை ஜேம்ஸ் பாண்ட் என கற்பனை செய்து கொண்டு சிந்திக்கும் இடங்கள் சூப்பர், அதே நினைவில் அவர் குண்டு பல்ப் வாங்குவதும் செம காமடி. கர்னலுக்கும் மிஸ் பாட்ரிட்ஜ் இடையே நடக்கும் மெல்லிய சிரிப்புடன் கூடிய உரையாடல்களை மிகவும் ரசித்தேன்; கர்னலை செயல்களை இஞ் பை இஞ் தெரிந்து வைத்திருக்கும் இவர் பல இடங்களில் அட போட வைக்கிறார்! கர்னல் தனது நண்பர் கல்லஹன் வீட்டுக்கு சென்று இரண்டு பேர் தன்னை வேவு பார்க்கிறார்கள் என தெரிந்து கொள்ளும் இடம் சிறப்பு அவர்களிடம் இருந்து உண்மையை தெரிந்து கொள்ள செய்யும் ஐடியா இவர் ஒரு துப்பறியும் புலி என நிரூபிக்கிறது! கல்லஹன் வீட்டில் வேலை செய்யும் பெண் பணம் வேண்டும் என்பதற்காக அடிக்கும் கூத்துக்கள் இதழோரம் சிரிப்பை கொடுத்தது!

    தொப்பி போட்ட வில்லன் அடியாள் இறுதியில் துப்பாக்கியை காட்டி தப்பித்த பின்னர் பேசும் டயலாக் சிரிப்பு, கொஞ்சம் யோசியுங்கள் இதை சிரிப்பு கண்டிப்பாக வரும், அவன் துப்பாக்கியை காட்டி அனைவருடன் தப்பித்து இருந்தால் அவன் பெரிய கில்லாடி என எடுக்கலாம்!

    முதல் ஆறு பக்கங்கள் சர் டெரன்ஸ் போன்ற கோடீஸ்வர்கள் மற்றும் அவர்களில் பணியாளர்கள் படும்பாட்டை இதைவிட நகைச்சுவையாக பகடி செய்ய முடியாது!

    மேலோட்டமாக படித்தால் கொஞ்சம் சிரிப்பு குறைவாக தெரியும் ஆனால் கொஞ்சம் நிதானமாக படங்கள் மற்றும் கதையில் வரும் கதாபாத்திரங்களின் தன்மையை உள்வாங்கி படித்தால் நிறைய இடங்களில் சிரிப்பை தரும்.

    ReplyDelete
    Replies
    1. குறிப்பிட்ட நேரத்தில் மாரடைப்பை தூண்டி இறக்க செய்யும் மருந்தை கர்னலுக்கு கொடுத்த பிறகு கர்னல் அதில் இருந்து தப்பிக்க மயக்க மருந்து எடுத்து கொண்டு மயக்கமாகி விடுகிறார்! மயக்கமடைந்து விட்டால் அவர்கள் கர்னலுக்கு செலுத்திய மாரடைப்பு மருந்து வேலை செய்யாதா? நண்பர்கள் யாராவது எனது சந்தேகத்திற்கு விளக்கம் கொடுக்க முடியுமா:-)

      Delete
    2. அந்த மருந்தை செலுத்தின அப்புறம் விகார தோற்றங்கள் வந்து அந்த பயத்தில் மாரடைப்பு வருகிறது ! So மயக்கமானாலோ தூங்கிவிட்டாலோ விகாரத் தோற்றங்கள் தோன்றுவதில்லை (இந்த கதையைப் பொறுத்தவரை).

      Delete
    3. சூப்பர் விமர்சனம் PfT! ரசிச்சுப் படிச்சிருக்கீங்க! முன்பைவிடவும் சமீப காலங்களில் உங்கள் ரசிப்புத்தன்மை ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது! குழந்தைகளுக்குப் படித்துக்காட்டி கதை சொல்வதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்!! குட்!!!

      Delete
  29. ஆசிரியருக்கு,

    இன்று மாலை அட்டவணை வெளிவந்தால் சிறப்பு.

    Smashing 70's முன்பதிவு தேதி தீபாவளி வரை நீட்டித்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  30. Smashing 70's முன்பதிவு தேதி தீபாவளி வரை நீட்டித்தால் நன்றாக இருக்கும்....
    -ஆமாம் சார் நிறைய நண்பர்கள் முன்பதிவு செய்யவில்லை-
    இன்றய இரவு பதிவில் அதையும் extend செய்து அறிவித்திடுங்கள்

    ReplyDelete
  31. பதிவை முடிச்சுட்டீங்கன்னா உடனே எப்ப வேணா போடுங்க சார்!

    இந்தவாட்டி மொத ரெண்டு சந்தா கட்டிப்புடணும்..ஒரு வருஷம் கூட மொத சந்தா இத்தினி வருஷத்துல கட்டினதில்ல..

    ReplyDelete
    Replies
    1. /* பதிவை முடிச்சுட்டீங்கன்னா உடனே எப்ப வேணா போடுங்க சார்! */

      Yes sir ! As soon as you finish.

      Delete
  32. என் பிரியமான காமிக்ஸ் ஆசிரியருக்கு, நட்பான காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு...

    மகிழ்ச்சியான ஆயுத பூஜை & விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.❤️💕❤️❤️❤️❤️❤️❤️❤️.

    சுவாரஸ்யமோ,இல்லையோ உங்கள் பதிவை பார்ப்பது மகிழ்ச்சி. என்ன தகவல் சொல்ல போகிறார்? என்று.
    எப்ப வேணாலும் போடலாம்.
    எந்த இதழ் வருமென்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்/றோம்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் &உங்களின்/எங்களின் லயன் அலுவலக தோழர்களுக்கும் அன்பு நிறைந்த ஆயுத/விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
    மீண்டும் அடுத்த பதிவில் 🌹...

    ReplyDelete

  33. எடிட்டரின் அட்டவணைப்பதிவு ரெடின்னு அறிவிச்சுடலாங்களா சார்?

    ReplyDelete
    Replies
    1. 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
      👀👀👀👀👀👀👀👀👀
      🙏🙏🙏🙏🙏🙏🙏🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

      Delete
    2. ஈ.வி.யின் இடத்தில ATR சார்.

      Delete
    3. ஒரு சின்ன வித்தியாசம்.. ஈ.வி. ஆசிரியரின் பதிவு ரெடி நண்பர்களேன்னே சொல்லிடுவாரு.

      Delete
    4. வாழ்த்துக்கள் STVR.

      Delete
  34. பதிவை எப்போன்னு நீங்க சொல்றான் ; அப்போ நான் டணாலென்று போடறான் 😊😊😊

    ReplyDelete
  35. Please release the plan for 2022 immediately. We have to plan based on your plan.

    ReplyDelete
  36. இரும்புக்கவிஞர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.எடிட்டர் உமது கான மழையில் நனைந்து கொண்டேதான் அட்டவணையை வெளியிடுவேனென்று அடம் பிடிக்கிறார்.
    முதலில் பல்லவியை எடுத்து விடுங்கள். அதற்கும் எடிட்டர் அசைந்து கொடுக்காவிட்டால் அனுபல்லவி, சரணம் என்று போய்க்கொண்டே இருங்கள். பக்கவாத்தியமெல்லாம் தயாராக இருக்கிறது. இன்று நாமா எடிட்டராவென்று பார்த்துவிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. வந்தாச்சு....காத்திருப்போம்....இரவு கானமழை கச்சேரிக்கு வாய்ப்பிராது...வந்திடுவார்னு நெனைக்கிறேன்...

      Delete
  37. இனிய விஜயன் சாருக்கு, விஜய தசமி நல்வாழ்த்துக்கள். ஆவல் தாங்க முடியலை சார்.. சீக்கிரமே அட்டவணை ரிலீஸ் பண்ணுங்க சார்..

    ReplyDelete
  38. Sir,

    Also ensure the payment gateway is available and set up AHEAD of your blog entry please !

    ReplyDelete
  39. அட்டவணை ஆன் தி வே...!!

    ReplyDelete
    Replies
    1. 2022 முழுச் சந்தா கட்டினால் சர்ப்ரைஸ் கிப்ட் இதழ்கள் ஏதேனும் உண்டா ஆவலுடன் ?!

      Delete
    2. A T R சார் முழு வீச்சுடன் தயாரா இருக்கிங்க போல....

      Delete
  40. அட்டவணை போடறதுக்குள்ள சந்தா தொகை எவ்வளவுன்னு சொல்லிட்டிங்கன்னா இன்று இரவுக்குள் குத்துமதிப்பாக 50 சந்தா வந்துடும் போலயே...

    ReplyDelete
  41. அட்டவணை வந்ததும்??🥰🥰

    ReplyDelete
  42. /// பஞ்சாயத்துக்களுக்கான ஜமுக்காள drycleaning பணிகள் !!! ///
    பவானி ஜமுக்காளம், கூடவே கருர் பெட்ஷீட் ஒரு டஜன் சிவகாசிக்கு பார்சேல்ல்..

    ReplyDelete
    Replies
    1. சேலம் ஸ்டீல்ல சொம்பு இல்லீங்களே பத்து சார்... பித்தளை சொம்பு ஓகேவா?

      Delete
    2. கும்மோணத்துக்காரர்கிட்ட சொன்னா சொம்பும் ரெடி.

      Delete
  43. பதிவை இப்பொழுதே போட்டாலும் ok தான் சார். ஏன்னா, எனக்கும், கிரிக்கெட்டுக்கும் காத தூரம். (மத்த விளையாட்டுக்களுக்கும் அதே தூரம்தான்.)
    நண்பர்கள் அனைவருக்கும், ஆசிரியருக்கும், அலுவலக பணியாள நண்பர்கள் அனைவருக்கும்,சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. வணக்கம். A. T. R. Sir. புல் பார்ம்ல இருக்கீங்க வாழ்த்துக்கள். வெல்கம் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  45. 2022க்கான சந்தா தொகையை 3 தவணைகளில் செலுத்தும் வசதி தந்தால் என் போன்றோர் பயன் பெறுவார்கள்.

    இதில் ஜம்போ + அனைத்துப் பிரிவு சந்தா செலுத்துபவர்களுக்கு 3 தவணைகளில் செலுத்தும் வசதி தரலாம்.

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார்
      எனது வேண்டுகோளும் இதுவேதான். ஏதோ கொஞ்சம் பார்த்து செய்யுங்கள்.

      Delete
  46. சென்றாண்டு போலவே இந்தாண்டும் மாலை 5 மணிக்கே அட்டவணைப் பதிவு வந்தால் மிக நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  47. வணக்கம்.

    அனைவருக்கும்,சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

    நமது காமிக்ஸ் மற்றும் தங்களது பிளாக் மட்டுமே எங்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும் சமாச்சாரங்களாகும்.

    இன்று மாலை ஐந்து மணிக்குள் புதிய பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்.

    நன்றி.

    ReplyDelete
  48. Replies
    1. நண்பர்கள், எடிட்டர் சார், லயன் பணியாளர்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை திருநாள் நல்வாழ்த்துகள்💐💐💐💐

      Delete
  49. நண்பர்கள் ரொம்ப உற்சாகமாக காணப்படுகிறார்கள் சார்.... பதிவு ரெடினா தாக்கிபுடலாம் உடனே!


    இன்று உற்சாக மீட்டர் வேகமாக காணப்படுது.... நல்லநாளு இன்றே அறிவித்துடலாம்.... 50,60சந்தாவும் பர்ஸ்ட் நாளே புக்கிங் ஆகிடும் போல... நல்ல சயனங்கள் தான்....

    """மாலை 6:30 டூ 7:30 நல்ல நேரம்"""

    ஆயுதபூஜைக்காக வெள்ளனவே எழுந்து வேலை பார்த்த நண்பர்கள் அப்படியே தொத்தி கொள்கிறோம்...

    ReplyDelete
  50. நானும் ரெடி ஒரு வாரமாக ரெடி. வாராதோ பதிவே.

    ReplyDelete
    Replies
    1. தெரியும் சார். இன்று மாலை நம் கனவு நனவாகும் நேரம்.

      Delete
  51. /// 50,60சந்தாவும் பர்ஸ்ட் நாளே புக்கிங் ஆகிடும் போல... நல்ல சயனங்கள் தான்....///
    நான் ரெடி..சந்தா செலுத்த.

    ReplyDelete
  52. அட்டவணைப் பதிவை உடனடியாகப் போடுங்க…

    ReplyDelete
  53. அப்பறம் இதை எப்பவுமே சொல்லனும்னு தோணும். இப்ப சொல்லலைன்னா அப்புறம் எப்ப சொல்ல…

    @செனா அனா…so far we loved you for your contribution in the blog, for your contribution to our beloved comics, and for being a nice human being. Now onwards we will love you very much for your contribution to the society as well…

    அப்புறம் நான் மொத சந்தா கட்டணும்னு ஆசைப்பட்டேன். உங்கே பின்னூட்டத்தைப் பாத்தனா…அதனால நீங்க கட்டிய பிறகு கட்டிக்கலாம்னு இருக்கேன். ஆனா ராக்ஜி இப்பவே பணத்தை கட்டி வைச்சிட்டு ஐ பர்ஸ்ட்டுன்னு மெயில் போட ரெடியா இருப்பாருன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. I do not subscribe for myself Mahi ji :-)

      Delete
    2. ஏங்க அந்த ஜி யெல்லாம் ஈவி மாதிரி பழுத்த பழங்களுக்கு யூஸ் பண்ண வேண்டியதுங்க. பேசாம மஹின்னே சொல்லுங்க.

      Delete
    3. நானும் இனிமே உங்களை ராக் னே கூப்பிட்டுடறேன் 🤣🤣🤣

      Delete
    4. ///ஈவி மாதிரி பழுத்த பழங்களுக்கு யூஸ் பண்ண வேண்டியதுங்க///

      பழுத்த பழம் தான்!
      அறிவிலே ப.ப!
      அன்பிலே ப.ப!
      அனுபவத்திலே ப.ப!
      அமைதி காப்பதிலே ப.ப!
      அஞ்சா நெஞ்சிலே ப.ப!
      அனுசரணையிலே ப.ப!

      ஆனா வயசிலே பூம்பிஞ்சு!

      Delete
    5. அய்! எனக்கும் ஜி இல்ல...:-)

      ஷெரீஃப்@ தாங்ஸ் !!!

      ராகவன் ( ஜி கட்) வாட்ஸ் அப்ல ஒரு ஐடியா கொடுத்தாரு...அதுப்படி வழக்கம் போல ரெட்டை சந்தா கட்டிட்டேன்..மொத ரெண்டு வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியல..ஒரு முயற்சிதான் :)

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  54. இன்றே என்றால் மாலை 5 மணி உகந்த நேரம்.

    உபபதிவை இரவு 8 மணிக்குப் போட்டுக் கொள்ளலாம்.

    ReplyDelete
  55. சீக்கிரமா பதிவ போடுங்க தல....

    ReplyDelete
  56. இன்று 5 மணிக்கே அட்டவணைப் பதிவு வரும்னு பட்சி சொல்லுது.பலிக்குமா ?1

    ReplyDelete
  57. ஸ்குரோல் செஞ்சு.செஞ்சு விரல்ல நகசுத்தி வந்துரும் போல...🧐🧐🧐
    புளீஸ்....

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கே அப்படின்னா நம்ம ஈ.வி க்கு ?!

      Delete
    2. சித்த நேரம் அந்தண்டை போய் வருவதற்குள் என்னைப் பத்தி ஏதேதோ பேசிவச்சிருக்கீங்க போலிருக்கே?!!

      Delete
    3. ஈ.வி. 7 மணி ட்ரெயினுக்காக காத்திருக்கிறார் சார்.

      Delete
  58. Smashing 70s முன்பதிவு இன்றுடன் முடிவடைகிறது நண்பர்களே.

    ReplyDelete
  59. மணி அஞ்ச தாண்டிடுச்சு! இனி அடுத்த ட்ரெயின் 7 மணிக்குத்தான் வரும்!

    ReplyDelete
    Replies
    1. எந்த ஊர்லையோ மணி 7 ஆயிடுச்சு

      Delete
    2. காமிக்ஸ் பயணிகளின் கனிவான கவனத்திற்கு சந்தா எக்ஸ்பிரஸ் நெ.2022 இன்னும் சற்று நேரத்தில் ஃப்ளாட்ஃபார்ம் எண் ச்சே பதிவு எண்98ல வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது....

      Your attention plz... Comics santha express will arrive in plat form no che post no98....

      யாத்திரியே காடி நெ.2022.....(இந்தி தெரிஞ்ச யாரும் கம்ப்ளீட் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்..)

      Delete
  60. கடவுளே.. தளத்தின் பார்வைகள் 10 நிமிஷத்துல 400ஐ தாண்டுதே!!!

    யாராவது F5 key மேல ஏறி உட்கார்ந்துட்டிருந்தீங்கன்னா உடனே இறங்குங்க பார்க்கலாம்!

    ReplyDelete
  61. மாதிரி அட்டவணை ;

    1.மொத்த சந்தா தொகை -4500.

    2.முத்து 50 இதழ் விலை -800 to 900.

    3.36 இதழ்கள்.

    4.டெக்ஸ் ஆல்பங்கள் 10.

    5.மாடஸ்டி 1.
    ஜானி 1.
    மார்ட்டின் 1.
    ராபின் 1.
    மேக் & ஜாக் 1.
    ப்ளுகோட்ஸ் 1.
    கிளிப்டன் 1.
    டெக்ஸ் 10
    ஜேம்ஸ் பாண்ட் 1
    தோர்கல் 4
    சிக்பில் 2
    லக்கி லூக் 2
    தாத்தாக்கள் 1
    ட்ரெண்ட் 1
    டெட்வுட் டிக் 1
    XIII 1
    டைகர் 2
    புதிய அறிமுகம் 2
    ஒன்ஷாட் 2

    மொத்தம் 36 .

    மறுபதிப்புகள் , மறுமறுபதிப்புகள் ,
    புத்தகவிழா ஸ்பெஷல்கள் தனி.

    ReplyDelete
  62. எடிட்டர் சார்.
    6 - 7.30 எமகண்டம் சார். அதற்குள் அட்டவணையை போட முடிந்தால் போடுங்கள். இல்லாவிட்டால் 7.30 க்கு மேல் போடுங்கள்.

    ReplyDelete
  63. TO WHOMSOEVER IT MAY CONCERN :

    என்னுடைய நடப்பாண்டின் சந்தா முகமறியா (அல்லது அறிந்தும் அறியாமலே) நண்பர் ஒருவரால் அன்புப் பரிசாக அளிக்கப்பட்டது! அதன் பின்னணியிலுள்ள ஒருவர் நான் சந்தா செலுத்தயிருந்த பணத்தோடு இன்னும் ஏதாவது தொகை சேர்த்து என் மகள்களின் எதிர்காலச் சேமிப்பிற்காக உபயோகிக்குமாறு அன்புக்கட்டளை இட்டிருந்தார்! அன்புடனும் நன்றியுடனும் அவ்வாறே செய்யப்பட்டது!

    ஆனால் என் அன்பு நண்பர்களே! அஸ்கார்ட்டின் புனித மனிடோவின் அருளாலும், லோக்கல் ஆத்தாவின் அரவணைப்பாலும் எனக்கான சந்தாவை நானே செலுத்திக் கொள்ளும் நிலையிலேயே இன்றும் இருக்கிறேன் என்பதையும், எனக்கான சந்தாவை இம்முறை நானே செலுத்திக்கொள்கிறேன் என்பதையும், உங்கள் அன்பையும் நட்பையுமே என் ஆயுட்காலச் சந்தாவாக யாசிக்கிறேன் என்பதையும் இக்கணத்தில் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்!🙏🙏🙏🙏

    ReplyDelete
  64. ஆசிரியரின் அட்டவணை பதிவு ரெடி நண்பர்களே

































    அப்படின்னு செயலர் இன்னும் சற்று
    நேரத்தில் பதிவிடுவார்

    ReplyDelete
  65. ஆசிரியர் அவர்களுக்கும்
    லயன் அலுவலக நண்பர்களுக்கும்
    2022-யின் காமிக்ஸ் அட்டவணையை தரிசிக்க காத்திருக்கும் நண்பர்களுக்கும்
    இனிய விஜயதசமி-ஆயுதபூஜை திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  66. பாட்டும் நானே பாவமும் நானே
    அட்டவணை உனை நான் கேட்டுவைப்பேனே
    பாட்டும் நானே பாவமும் நானே
    அட்டவணை உனை நான் கேட்டுவைப்பேனே
    (பாட்டும்)

    கூட்டும் கதையும் முத்தின் கதையும்யும்
    கேட்கும் என்னிடம் அட்டவணை சொல்ல வருவாயோ
    கூட்டும் கூட்டமும் கேட்கும் முறையும்
    காட்டும் என்னிடம் கதை சொல்ல வருவாயோ
    (பாட்டும்)

    வளரும் முத்தின் கதையும்யும் நீயே
    படக் கதையின் நாயகன் நீயே
    எழுதும் கதையின் இயக்கமும் நீயே
    எழுதும் கதையின் இயக்கமும் நீயே
    உன்கதை படித்தால்ல் அசரும் நமதுலகே…
    உன்கதை படித்தால் அசரும் நமதுலகே…

    நீ விட்டால்ல் படிக்கும் அகிலமெல்லாமே
    நீ விட்டால் படிக்கும் அகிலமெல்லாமே
    அறிவாய் விசயா உன் அட்டவணை சிறிதா
    அறிவாய் விசயா உன் அட்டவணை சிறிதா
    ஆலவாயனொடு கேட்டுவந்ததொரு
    பாடும்வாயை இனி மூடவந்ததொரு
    (அட்டவணை)

    ReplyDelete
    Replies
    1. ///அறிவாய் விசயா உன் அட்டவணை சிறிதா///

      😁😁😁

      Delete
    2. எப்படிங்க இப்படி ?!

      ஸ்டீல் நீர் சிறந்த புலவர் என்று நிருபித்துவிட்டீர்.

      சபாஷ்.

      Delete
    3. சபாஷ் கவிஞரே சபாஷ்.

      Delete
  67. சூப்பர் ஸ்டீல்.

    ReplyDelete
  68. வேணாம்....
    ஸ்குரோலிங்...
    வேண்ணாம்....
    ஸ்குரோலிங்...
    வலிக்குது....
    ஸ்குரோலிங்...
    அழுதுருவேன்....அழுதுருவேன்....
    அவ்வ்வ்....

    ReplyDelete
  69. புதிய அட்டவணையில் இரத்தப்படலம் மறுபதிப்புப் பற்றி ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்பதே இப்போதைய கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. எஏஏஏஎஎஎன்ன்ன்ன்???

      Delete
    2. அப்ப சந்தா ₹.10,000/- மாக இருக்குமோ...

      Delete
  70. அடடா...

    பொன்ராசூ சூப்பரப்பு

    ReplyDelete
  71. வந்தேன்டா அட்டவணைக்காரன் அடடா

    வந்தேன்டா அட்டவணகாரன் அடடா
    புதுசந்தா பத்தி பாடப்போறேன்
    புது கத கட்டி ஆடப்போறேன்

    வந்தேன்டா அட்டவணகாரன் அடடா
    புதுசந்தா பத்தி பாடப்போறேன்
    புது கதய கட்டி ஆடப்போறேன்

    சந்தா கொடுத்தா கதை கிடைக்கும்
    இல்லாட்டி முடியாது தம்பி
    அட பாதி கதை கிடைக்குதப்பா
    உங்க சந்தா தொகய நம்பி

    வந்தேன்டா அட்டவணகாரன் அடடா
    புதுசந்தா பத்தி பாடப்போறேன்
    புது கதய கட்டி ஆடப்போறேன்

    என் ரத்தத்தில் ஒரு பாதி
    கததையாக தருவதுது
    என்னோடட வேலையப்பா

    குறைவாக தந்தாலும் அதவாங்கி
    நிறைவாக விப்பது
    திருடனின் மூளையப்பா

    என் ரத்தத்தில் ஒரு பாதி
    கததையாக தருவதுது
    என்னோடட வேலையப்பா

    குறைவாக தந்தாலும் அதவாங்கி
    நிறைவாக விப்பது
    திருடனின் மூளையப்பா

    சந்தா தந்தா வரும்பாரு
    விலையும் குறையும் வழிபாரு
    உனக்கு என்ன வரலாறு
    உண்மை சொன்னா தகராறு

    நீ சந்தா கட்டி வாங்கனுமே
    நீ விலைய குறைக்க கட்டனுமே



    வந்தேன்டா சந்தாகாரன் அடடா
    புதுசந்தா பத்தி பாடப்போறேன்
    புதுகதய கட்டி ஆடப்போறேன்

    அட நா விட்ட
    கதபாரு நீ படிச்சா
    சுகம்பாரு சந்தாதாரன் சொன்னதுங்க

    கதை வாங்னாலும் உனதாகும்
    வாங்காட்டடி களவாகும்
    நான் கண்டு சொன்னதுங்க


    அட நா விட்ட
    கதபாரு நீ படிச்சா
    சுகம்பாரு சந்தாதாரன் சொன்னதுங்க

    கதை வாங்னாலும் உனதாகும்
    வாங்காட்டடி களவாகும்
    நான் கண்டு சொன்னதுங்க

    நா வாங்கி படைச்சதெல்லாம்
    இன்பம் வளர்க்கும் கதை தானுங்க
    விசயன் நானாக்கி குடுப்பதெல்லாம்
    அன்பு வளர்க்கும் நட்பு தானுங்க

    தந்தை வாரி கொடுத்தது
    முத்து பாரு
    என்னை வாழ வைத்தது
    லயன் பாரு

    வந்தேன்டா....

    ReplyDelete
  72. ஒரு கிசுகிசு..!

    புது அட்டவணையில் சூப்பர்ஹீரோ சூப்பர் ஷ்பெசல்.. வண்ண மறுபதிப்பு தீபாவளி சிறப்பிதழா வரப்போகுதாம்.....!!

    ReplyDelete
  73. எடிட்டரின் அட்டவணைப்பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete