Saturday, July 31, 2021

'தல'யோடு தாண்டவம் !

 நண்பர்களே,

வணக்கம். சர்ச்சைகள் என்றாலே நமது புலவர்கள் துள்ளிக் குதிக்கும் படலங்களின் லேட்டஸ்ட் அத்தியாயத்தினை Smashing  '70s-ன் புண்ணியத்தில் பார்த்து வருகிறோம் ! Back to the future என காலச்சக்கரத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் நம்மவர்கள் வீறு கொண்டு எழுவதைப் பார்க்கும் போது -     "குணா" படத்தில் கமல் பாடும் அந்தப் பாட்டின் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகின்றன :

(Vintage) கண்மணி... அன்போடு (காமிக்ஸ்) காதலன் நான் எழுதும் கடிதமே...!!

(Classic) பொன்மணி.... உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே...!

உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது...!

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...!

(கண்மணி)

(எதிர்ப்போரால்) உண்டான காயம் எங்கும் தன்னாலே ஆறிப் போகும்

மாயம் என்ன பொன்மானே பொன்மானே....!!

என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்

(விமர்சனங்களை) உந்தன் மேனி தாங்காது செந்தேனே....!!

எந்தன் (பால்யக்) காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது......!!

எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது.....!

(புதுயுக) மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல.....

அதையும் தாண்டிப் புனிதமானது......!!

(பாட்டைச்) சுட்டதுக்கும், (வார்த்தைகளைச்) சேர்த்ததற்கும் கவிஞர் வாலி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வோம் ; ஆனால் மேலுள்ள வரிகள் இங்குள்ள ஒவ்வொரு "க்ளாஸிக் காதலர்களுக்கும்" அட்சர சுத்தமாய்ப் பொருந்துவது தானே நிதர்சனம் ! 

நிஜத்தைச் சொல்வதானால் பெர்சனலாக எனக்கு இந்த நேசத்தின் பின்னுள்ள தீவிரத்தைப் புரிந்து கொள்ள இயல்வதில்லை தான் ! அதனால் நிறைய சந்தர்ப்பங்களில் "க்ளா.கா." நண்பர்களின் அதே wavelength-ல் நான் இல்லாது போவதும் ; அதன் பொருட்டு அவர்களின் (உள்ளுக்குள்ளான) கோபங்களை ஈட்டிடுவதும் புரிகிறது ! Maybe அனுதினமும் தினுசு தினுசான பொம்ம புக்குகளோடே குடித்தனம் செஞ்சு பழகிப் போய்விட்ட எனக்கு, நார்மலான ரசனைகளின் முனை, லைட்டாக மழுங்கி விட்டதோ - என்னவோ ?! தவிர, நான் பணி செய்திடுவதும், நீங்கள் வாசித்திடுவதும், ஒரே ஆக்கமாக  இருப்பினும், அதன் மீது எனக்கு வாய்த்திடும்  பார்வைக்கோணமானது - உங்களினதோடு நிரம்பவே வேறுபட்டிடுவதுண்டு ! So பார்வைகள் வேறாகிடும் போது - தீர்ப்புகளும் மாறி இருப்பதனில் வியப்புகளில்லை தான் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்வேன் ! But பல தருணங்களில், கல்லுளிமங்கனாட்டம் குந்திக் கிடப்பினும், க்ளாஸிக் நாயகர்களுக்கான கதவுகளை சந்தர்ப்ப சூழ்நிலைகள் உடைத்துத் திறந்திடுவதைப் பார்க்கும் போது - மேலுள்ளவருக்குமே இந்த குணா" பாடல்வரிகள் அவ்வப்போது காதில் விழுந்திடுமென்று நம்பத் தோன்றுகிறது ! எது எப்படியோ - the proof of the pudding is in the eating என்பதனை Smashing '70s தினமுமே நிரூபித்து வருகின்றது - கிட்டி வரும் முன்பதிவுகளின் வாயிலாய் ! And க்ளாஸிக் காதலர்கள் இதன் பொருட்டு பிரவாகமெடுக்கச் செய்து வரும்  சந்தோஷங்களைப் பார்க்கும் போது - இந்த முயற்சியினை சூப்பர் டூப்பர் இதழ்களாக்கிட,  தெரிந்த சகல குட்டிக்கரணங்களையும் அடித்தே தீர வேண்டுமென்ற உத்வேகம் இரட்டிப்பாகிறது ! காத்திருக்கும் ஆகஸ்ட் & செப்டெம்பருக்குள் - Muthu 50-ன் பணிகளை நிச்சயமாய் நிறைவு செய்து விடுவேன் ! அந்த மெகா பணிகளில் எனது portion-ஐ முடித்து விட்டால், தயாரிப்பின் பொறுப்பை ஜூனியரிடம் ஒப்படைத்து விட்டு, வேதாள மாயாத்மாவின் முதல் இதழின் பணிகளுக்குள் குதித்திட வேண்டியது தான் ! So காத்திருக்கும் மாதங்களில், காத்துள்ள பணிகளின் சகலமுமே தத்தம் பாணிகளில் சவால்களோடு நிற்பதும், காத்திருப்பன எல்லாமே எவ்வித முன்னுதாரணங்களும் இல்லாத freshers என்பதும் -  37 வருஷங்களுக்கு முன்பானதொரு ஜூலையில் கொயந்த பையனாட்டம் நின்ற நாட்களின் த்ரில்லை உள்ளுக்குள் மறுஅறிமுகம் செய்கின்றது !! புனித மனிடோ வழிகாட்டுவாராக !!   

And அவரது அசாத்தியக் கடைக்கண் பார்வை மட்டும் இல்லாது போயின், கடந்த 2 வாரங்களை முழுசாயக் கடந்து, கழன்றிடாத மறையோடு இப்போது இக்கட ஆஜராகியிருக்கவுமே வழியிருந்திராது தான் ! Simply becos ஒரு குருவி தலையில் வைக்க முனைந்த அம்மிக்கல்லை, ரொம்பச் சீக்கிரமே ஒட்டு மொத்தமாய்ச் சுமக்க நேர்ந்து போன 2 வாரங்கள் இவை !! இந்த அம்மிக்கல் கூத்தின் துவக்கம் ஏப்ரலின் இறுதியினில் ! லயன் # 400-க்கென "புத்தம் புது பூமி வேண்டும்" - மெகாநீள டெக்ஸ் சாகசத்தினைத் திட்டமிட்டிருந்தோம் தானே ? அதன் இத்தாலிய மொழிபெயர்ப்பு நமக்கு வந்து சேர்ந்ததே ஏப்ரலின் மூன்றாம் வாரத்தில் தான் எனும் போது - தமிழாக்கத்தை சடுதியாய்ச் செய்திட எண்ணியிருந்தேன் ! சமீபமாய் பேனா பிடித்து வருமொரு தென்மாவட்ட இல்லத்தரசிக்கு இதனை அனுப்பிட எண்ணிய போது தான் - அவரது கணவருக்கு கொரோனா தாக்கமிருந்தது ! ஓரிரு வாரங்களில் அவருக்கு குணமாகிய பின்னே எழுத முயற்சிக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்க, அந்நேரத்துக்குள்  திடு திடுப்பென லாக்டௌன் வேறு இங்கே போட்டுத் தாக்கியிருந்தனர் ! சரி, சுகவீனத்திலுள்ள கணவரை கவனித்து வருபவரைத் தொந்தரவு செய்திட வேண்டாமே என்ற எண்ணத்தில் 376 பக்கங்கள் கொண்ட இந்தக் கத்தையைத் தூக்கி  நமது கருணையானந்தம் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன் ! But முழு லாக்டௌன் ; திரும்பிய திக்கெல்லாம் நோயின் பீடிப்புத் தகவல்கள் ; தடுப்பூசித் தட்டுப்பாடு என்ற எல்லாமே கன்றாவியாய்த் தோற்றமளித்த அந்த இருண்ட நாட்களினில், இத்தனை பெரிய கதைக்குள் புகுந்து பணியாற்றிடும் ஆர்வத்தை அவரால் தேற்றிட இயலவில்லை ! 'ரைட்டு....அட்டவணையினில் இந்த இதழைக் கொஞ்சம் பின்னே தள்ளிப்போட்டு விட்டு, நாமளே எழுத ஆரம்பிக்கணும் போலும் !' என்று நினைத்திருந்த வேளையினில் தான் நினைவுக்கு வந்தது - இது 400 என்ற மைல்கல் இதழ் & இதற்கு முந்தைய நம்பர்களைத் தாங்கி நிற்கும் ஏகப்பட்ட இதழ்களின் அட்டைப்படங்கள். நம்பர்கள் சகிதம் அச்சாகி விட்டன என்பது ! So இதழ் # 399 வரை ஜூலை மாதத்தினில் நிறைவுற்றிருக்கும் & இந்த டெக்ஸ் மெகா இதழை நாம் தள்ளிப் போட நேரிடும் பட்சத்தில் - "இரத்தப் படலம்" வண்ண தொகுப்புகளுமே தள்ளிச் செல்ல நேரிடுமென்பது புரிந்தது - becos அவற்றின் நம்பர்ஸ் 401 & 402 !! ஆக "புத்தம் புது பூமி வேண்டும்" தாமதமாகிடும் பட்சத்தில் - பின்னே காத்துள்ள அத்தனை ரயில்களும் லேட்டாகிப் போகுமென்பதால், ஒத்தி வைக்கும் சிந்தனை சுகப்படவில்லை ! அதே சமயம், திடு திடுப்பென இத்தனை முரட்டுப் பணியினை ஒற்றை நாளில் எனது அட்டவணைக்குள் நுழைத்தால் - ஏற்கனவே நான் பார்த்துக் கொண்டிருந்த சகலமுமே சொதப்பிடக் கூடுமென்பதும் புரிந்தது ! MUTHU ஆண்டுமலர் # 50 சார்ந்த கதைத்தேடல்கள் ; திட்டமிடல்கள் ; பேச்சு வார்த்தைகள் - என செம முக்கியமானதொரு phase வேறு அது ; so நம்பியாரைப் போல கைகளைப் பிசைந்து கொண்டிருந்தேன் ! இங்கே ஒரு இடைச்செருகல் :

காலமெல்லாம் இரு "இளைஞர்களின்" வயோதிகப் பேனாக்களோடே இந்தப் பயணம் தொடர்ந்திடல் சாத்தியமாகிடாது என்பதை எப்போதோ உணர்ந்திருந்தேன் என்பதாலும், ஒரே பாணியில் கொட்டும் குப்பைகளிலிருந்து சற்றே மாற்றம் அத்தியாவசியம் என்பதாலும் - சத்தமின்றி இணையத்தில் இதற்கென உள்ள சில திறன் தேடல் தளங்களில் 2020 லாக்டௌன் முதலாகவே "எழுதிட ஆர்வமுள்ளோர் தேவை" என விளம்பரம் செய்து வருகிறேன் ! And எதுவும் சரியாய் set ஆகாது போக, மறுபடியும் 3 மாதங்களுக்குப் பின்னே முயற்சி ; மறுக்கா-மறுக்கா முயற்சி என இதுவரையிலும் நாம் பரிசீலித்துள்ளது மொத்தம் 181 நபர்களை !!! Yes... 181 !!! ஒவ்வொருவருமே ஏதேதோ விதங்களில் உயர்கல்வித் தகுதிகள் ; கவிதை எழுதிய அனுபவங்கள் ; தளங்களுக்கு content எழுதியவர்கள் என்று திறன் கொண்டவர்களே ; ஆனால் ஏனோ தெரியவில்லை, நமது பணிகளுக்கு அவர்களுள் பெரும்பான்மை ஓ.கே. ஆகிடவில்லை ! கொஞ்சப் பேருக்கோ, கதைகளுக்கு நாம் தந்திடும் ராயல்டிக்கு ஈடான சன்மான எதிர்பார்ப்புகள் இருந்தன ! ஒரு மாதிரியாய் நிறைய அலசல்களுக்குப் பின்பாய், அவர்களுள் ஒரு நாலைந்து பேரை மட்டும் shortlist செய்து கொண்டு - கொஞ்சம் கொஞ்சமாய் நமது பணிகளுக்கேற்ப அவர்களை ரெடி செய்து கொள்ளலாமென்ற எண்ணத்தில் முயற்சிக்கவும் செய்தேன் ! அதற்கான பொறுமை சிலருக்கு இருக்கவில்லை ; 'நீங்க சும்மா சும்மா 'நொட்டை நொசுக்குன்னு' பிழை சொல்லிட்டே இருக்கீங்க ; இதிலே என்ன தப்பாம் ?" என்று ஒருவரும்....."நானே 10 பேருக்கு translation வேலை கொடுத்திட்டு வர்றவனாக்கும் ; எனக்கே நீ பாடம் நடத்துறியா ?" என்று இன்னொருவரும் கண்சிவக்க - "ரைட்டுங்கண்ணா" என்று விடைபெற்றுக் கொள்ள நேரிட்டது ! பொறுமையாய் முயற்சித்து வருவோரில் 3 பெண்கள் மட்டும் எஞ்சியுள்ளனர் - ஆனால் அவர்களுள் இருவர் முனைவர் பட்ட ஆய்வினிலும் பிசியாக உள்ளவர்கள் எனும் போது - நமது திடீர் திடீர் கூத்துக்களுக்கான அவகாசங்கள் அவர்களிடம் இருப்பதில்லை ! தவிர, அவர்களது பணிகளுமே நமக்கு set ஆகிட இன்னும் கணிசமான நேரம் எடுத்துக் கொள்ளும் தான் ! So திடு திடுப்பென மே மத்தியினில் நெருக்கி 400 பக்கங்களுக்கானதொரு மெகா பணியினைத் தந்து விட்டு, அவர்களை எழுதச் சொல்ல வாய்ப்பிராதென்பது புரிந்தது ! ஆக எஞ்சியிருந்தது ஒரேயொரு பெண்மணி மாத்திரமே ! அவர் ஓரளவுக்கு சீராய் எழுதக்கூடியவராய் தோன்றிட்டதால் காத்திருக்கும் டிரெண்ட் ஆல்பத்தினை முயற்சிக்க வாய்ப்பளித்திருந்தேன் ! And 'நிச்சயமாய் மோசமில்லை !" என்று சொல்லும் விதத்தில் நான் படித்துப் பார்த்த அந்தப் பணியின் துவக்கம் அமைந்திருந்ததால் - அந்த இக்கட்டான நொடியில் மண்டைக்குள் பல்ப் எறிந்தது !! உடனே டெக்சின் "நெஞ்சே எழு" புக்கையும், புதுக்கதையின் முதல் 10 பக்கங்களையும் அனுப்பி, என்ன மாதிரியாய் இதனில் பணியாற்றிட வேண்டிவரும் என்பது குறித்து கொஞ்சம் guidelines-ம் தந்திருந்தேன் ! பொறுமையாய் அவரும் எழுதி அனுப்பிய அந்தப் 10 பக்கங்கள் decent ஆகத் தென்பட்டது ! "டெக்ஸ் கதை தானே...அதுக்கு மீறி கொஞ்சமாய் திருத்தங்கள் அவசியப்பட்டால் போட்டுக் கொள்ளலாம் !" என்ற நம்பிக்கையில் கதையினை மறு நாளே அந்த இளம் எழுத்தாளருக்கு அனுப்பி வைத்தேன் ! 

அவ்வப்போது எழுதுவதை மேலோட்டமாய்ப் பார்க்க ; எத்தனை பக்கங்களை முடித்திருக்கிறார் ? என்று தெரிந்து கொள்ள மட்டுமே நேரமெடுத்துக் கொண்டு - அவரை இடையூறுகளின்றி எழுதிட அனுமதித்தேன் ! ஒரு மாதிரியாய் முழுக் கதையினையும் 2 மாதங்களுக்குள் நிறைவு செய்து அனுப்பிட, ஜூலை இதழில் பந்தாவாய் - "அடுத்த வெளியீடு : லயன் # 400 " என்ற விளைபரத்தைப் போட்டுச் சாத்தியாச்சு ! 

And நம்மாட்கள் அடுத்த ஒரே வாரத்துக்குள் ஆளுக்குப் பாதியாய்ப் பணிகளைப் பிரித்துக் கொண்டு டைப்செட்டிங்கில் நொறுக்கித் தள்ளி, என் மேஜையில் ஒரு குட்டி கோபுரத்தை ஏற்றிவிட்டனர் ! And போன திங்களன்று ஜாலியாய் எடிட்டிங் பணிக்குள் புகுந்தேன் - 'போறோம்...தட்றோம்...தூக்றோம்' என்ற நம்பிக்கையில் ! பணி துவக்கிய சற்றைக்கெல்லாம் சிறுகச் சிறுக ஒரு அசௌகரிய உணர்வு வயிற்றுக்குள் உருவெடுப்பது போல தென்பட, இருபது பக்கங்களைத்  தொட்டிருந்த நேரத்தில் அந்த உணர்வு கை கால்களையெல்லாம் விறைக்கச் செய்திருந்தது !! சிறு குருவியிடம் சக்திக்கு மீறியதொரு சுமையைச் சுமக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டது தீர்க்கமாய்ப் புரிந்தது ! டெக்ஸ் ஆல்பங்கள் எல்லாமே நேர்கோட்டுக் கதைகளே ஆயினும் அவற்றுள்  சில நடைமுறைச் சிக்கல்களுண்டு - பேனா பிடிக்கும் போது ! To start with - இத்தாலிய மொழியிலிருந்து இங்கிலீஷுக்கு மொழிபெயர்ப்போ அனைவருமே அந்நாட்டவர்கள் ; இத்தாலிய மொழியினைத் தாயமொழியாகக் கொண்டவர்கள் ! So அவர்களின் புரிதல்களில் இம்மியும் பிசகிறாது ! மாறாக - அவர்களின் ஆங்கிலப் புலமைகள் அதே உச்சங்களில் இருப்பதில்லை ! So அவர்களின் பேனாக்கள் நமக்குத் தந்திடும் ஆங்கில ஸ்கிரிப்ட்ஸ் கொஞ்சம் மெனெக்கெடலை அவசியப்படுத்திடுவதுண்டு - மறு தமிழ் மொழிபெயர்ப்பின் போது ! அது மட்டுமன்றி, அந்த வன்மேற்கு டயலாக்களில் வரக்கூடிய வார்த்தைப் பிரயோகங்கள் ; செவ்விந்திய பேச்சு பாணிகளின் புரிதல்கள் - என நிறையவே விஷயங்கள் அனுபவத்தில் தான் கிட்டிடும் ! டெக்ஸ் வில்லருக்கும் , புதுப் பேனாவுக்கும் அதுநாள் வரையிலும் துளிப் பரிச்சயமும் கிடையாதெனும் போது அவர் எக்கச்சக்கமாய் ; எக்கச்சக்க எக்கச்சக்கமாய்த் தடுமாறியிருப்பது ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது ! ஒரு முரட்டு ஆட்டுக்கல்லை கழுத்தில் கட்டிவிட்டு, அதனை சிரமங்களின்றி அவர் சுமந்திடணும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த என்னைப் போலொரு பேமானி, சுத்துப்பட்டிகளில் சல்லடை போட்டுச் சலித்துத் தேடினாலுமே கிட்டிடப்போவதில்லை என்பது மட்டுமே அந்த நொடியினில் புரிந்தது ! 

நீச்சல் தெரியாதவனை மொதக்கடீர் என குளத்துக்குள் யாரோ கடாசியது போலிருந்தது அந்தத் தருணத்தில் ! வேறெதையும் யோசிக்க நேரமில்லை ; கடப்பாரை நீச்சலோ ; சுத்தியல் நீச்சலோ ; மண்வெட்டி நீச்சலோ - எதையோ ஒன்றை இந்த நொடியில் அடித்துக் கரைசேர்வது மட்டுமே முக்கியம் என்ற புரிதலில், எங்கிருந்தோ பிறந்த வேகத்துடன் பணியாற்ற ஆரம்பித்தேன் - பேய் பிடித்தவனைப் போல ! அவர் எழுதியிருந்ததில் ஒரு பத்து சதவிகிதம் தேறும் என்றிருக்க, அது நீங்கலான பாக்கி 90 சதவிகிதத்தை - கடந்த 11 நாட்களில் எழுதியுள்ளேன் - முற்றிலுமாய் புதுசாய் !! 

Oh yes - ஜாலியான கதை தான் ; நம்ம டெக்ஸ் ; கார்சன் ; டைகர் ; கிட் - என அத்தினி பேரும் பங்கேற்கும் சாகஸம் தான் ; ஆனால் 376 பக்கங்களை வெறும் பத்தே நாட்களில் , இதர பணிகளுக்கும் குந்தகங்களின்றிச் செய்வதென்பது - சத்தியமாய் வெறுங்காலோடு சுடும் வெயில்நாளில், குண்டும் குழியுமான ரோட்டில் நாள்முழுக்க ஓடுவதைக் காட்டிலும் சிரமமே என்பதை அனுபவத்தில் சொல்ல முடிகிறது ! அதிலும் மொத்தமாய்க் கடாசி விட்டு, மொத்தமாய்ப் புதுசாய் எழுதுவதைக் கூட ஒருவிதத்தில் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம் ; ஆனால் ஏற்கனவே உள்ள ஸ்கிரிப்டில் - தக்க வைப்பது எது ? கடாசுவது எது ? நகாசு வேலைகள் செய்வது எங்கு ? என்று தேடிப் பணியாற்றுவது சிரமங்களின் ஒரு அசாத்திய உச்சம் ! 

இதன் பொருட்டே சமீப நாட்களில் நமது நண்பர்களுள் பேனா பிடித்திட ஆர்வம் காட்டிய 5 நண்பர்களிடமும் நான் நாசூக்காய் மறுப்புச் சொல்லி, அவர்களது கடுப்புகளையும் ஈட்டிய புண்ணியம் கிட்டியுள்ளது ! அவர்களின் அவைவருக்குமே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் தந்திருந்தோம் தான் ; ஆனால் அன்பின் மிகுதியில் பணியாற்ற முன்வருவோரிடம் - நமது எதிர்பார்ப்புகளின் பரிமாணங்களைச் சொல்லி - "இதைத் திருத்துங்க ; அதை மாத்தி எழுதுங்க ! அதை அடிச்சிட்டு வேற எழுதுங்க !" என்ற ரீதியில் தினம் தினம் குடலை உருவி அலசி, ஆராய்வதெல்லாம் எனக்கே ஓவராய்ப்பட்டது ! தொழில்முறையில் பணியாற்ற முன்வருவோரையும் ; அன்பின் பொருட்டு, ஆர்வத்தின் பொருட்டு முன்வருவோரையும் ஒரே மாதிரி கசரத் வாங்கிட மனம் ஒப்பவில்லை ! So  அவர்களை சிரமப்படுத்திட வேண்டாமே என்று தீர்மானித்தேன் ! மேலோட்டமான திருத்தங்களை ; மாற்றி எழுதிடும் அவசியங்களை சமாளிப்பதென்பதில் பெரிய நோவுகள் லேது தான் ; ஆனால் wholesale மாற்றங்கள் அவசியமாகிடும் போது என் வண்டியும் தள்ளாடத் துவங்குவதே இங்கு சிக்கல் ! So பரீட்சார்த்த முயற்சிகள் கொஞ்ச காலத்துக்காவது வேண்டாமே எனத் தீர்மானித்துள்ளேன் ! Of course - அதற்காக நான் எழுதும் சகலமும் பிரம்மனின் வரிகளென்ற பிரமையெல்லாம் எனக்குக் கிடையாது தான் ; and சரளமாய் எனது பணிகளிலும் பிழைகள் கண்டிடலாம் தான் ! ஆனால் end of the day - இவை பொதுவெளிக்கு வந்திட வேண்டிய பணிகளெனும் போது - சாத்துக்களோ - சிலாகிப்புகளோ - என்னில் ஆரம்பித்து, என்னிடமே ஓய்ந்தும் விடுமல்லவா ? Exactly for this reason - முத்து காமிக்ஸ் ஆண்டுமலரின் அத்தனை கதைகளையும், சிரட்டையைக் கவ்விய நாய்க்குட்டியாட்டம் கவ்விக் கொண்டே திரிகிறேன் ! அடுத்த ஒரு வருஷத்துக்காவது - பேனாக்களும், பேப்பர்களுமே எனது துணைவர்களாகிடுவார் !! And of course - நமது "எழுத்தாளர்" தேடல்கள் தொடரவே செய்யும் - maybe இன்னும் கூடுதல் கவனங்களோடு ! 

Back to reality - கை கடுக்க, புஜம் வலிக்க எழுதிக் கொண்டே இங்கே பதிவுப் பக்கமும் எட்டிப் பார்த்தால் - "டெக்ஸ் & கோ முஷ்டியை மாத்திரமன்றி, புத்தியையும் பயன்படுத்தும் பாணிகளில் கதை அமைந்தால் ஜூப்பரு " - என்ற ரீதியில் பின்னூட்டம் ! அந்த நொடியில் நானோ நிஜாரைத் தொலைத்த தலீவரைப் போல 'ஓ'வென்று அழும் நிலையில் தானிருந்தேன் - simply becos எனது வேண்டுதலோ உல்டாவாக இருந்தது !! "தெய்வமே....கதையின் நடு நடுவே கொஞ்சம் சண்டைக் காட்சிகளைச் சரளமாய் அமைத்துத் தாங்களேன்... 'டமால்..டுமீல்.. யாஹீஈஈ' என்றபடிக்கே பக்கங்களைக் கடத்திக் கொள்வேன் !!" என்று நான் வேண்டிக்கொள்ளாத குறை தான் ! ஆனால் கதையினில் டெக்ஸ் & டீமோ சும்மா திட்டம் போடறாங்க...போடறாங்க...வண்டி வண்டியாய்ப் பேசிக்கொண்டே திட்டம் போடறாங்க !! Phew !!! 

எழுதி முடிப்பதோடு எனது வேலை முடிந்திடாதே ; பின்னாடியே எடிட்டிங் & பிழை திருத்தப் படலமும் காத்திருக்கும் என்ற போது - 'அன்னிக்கு காலையிலே ஆறு மணியிருக்கும்...கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சா ?' என்ற கதையை நூற்றி எட்டாவதுவாட்டிக் கேட்ட கையோடு கிறங்கிக் கிடக்கும் கும்பல் தான் நினைவுக்கு வந்தது ! ஒரு மாதிரியாய் எழுதி முடித்த நிம்மதியுடன், இந்த புதனன்று  இங்கே வந்து ஒரு மினி உப பதிவைப் போட்டுவிட்டுக் கிளம்பலாமென்று பார்த்தால் - அதுவோ ஒரு L.I.C ஆகிட, அப்பாலிக்கா மீண்டும் எடிட்டிங் படலம் ! ஒரு மாதிரியாய் சகலத்தையும் முடித்த கையோடு, இன்று காலையில் துவங்கியிருக்கும் அச்சினை ஜாலியாய் மேற்பார்வை செய்திட்ட போது, மனசுக்குள் வடிவேல் தான் ஓடிக்கொண்டே இருந்தார் ! இனி எந்தவொரு சந்துக்குள் சிக்கி என்ன மெரி அடி வாங்குனாலும் தாக்குப் புடிக்கிற அளவுக்கு தேறிட்டோமோன்னு தோன்றாத குறை தான் !   கடந்த பத்தாண்டுகளில் ஏதேதோ கரணங்கள் அடித்திருக்கிறேன் தான் ; இதைவிடவும் complex ஆன பணிகளுக்குள் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் தான் ; ஆனால் இம்முறையிலான பணியின் நீளம் முன்னெப்போதையும் விட எக்கச்சக்க ஜாஸ்தி & கைவசமிருந்த அவகாசமோ எக்கச்சக்கக் குறைச்சல் ! 

பன்னிரெண்டே நாட்களில் ஐந்து வயசு கூடிப் போனதான பிரமையுடன் மோட்டைப் பார்த்தபடிக்கே நான் அமர்ந்திருக்க, ஓசையின்றி ரூமுக்குள் வந்த மைதீன் - " அந்த ஆன்லைன் book fair ஸ்பெஷல் புக்ஸ் பிரிண்டவுட் எடுத்து ரெடியா இருக்குது...கொண்டு வரட்டுமா ?" என்று கேட்ட நொடியில் ஓரிரு நிமிடங்கள் மலங்க மலங்க மட்டும் முழித்தேன் !! மண்டைக்குள் "ஆட்றா ராமா....தாண்ட்றா ராமா !" என்று மட்டும் கேட்க - "கொண்டு வா..கொண்டு வா !!" என்றேன் ! இந்தப் பேரிடர் நாட்களின் உபயத்தில் - ஏராளமான  சகோதரர்களுக்குப் பணியாற்றும் வரங்களில்லை என்றிருக்க, எனக்கோ அவ்விதமொரு குறையினைத் தந்திருக்காத புனித மனிடோவுக்கு நன்றியொன்றைச் சொல்லியபடிக்கே புகுந்து விட்டேன் - அடுத்த பணிகளுக்குள் ! 

Before I sign out - இதோ இந்த இதழுக்கான அட்டைப்பட முதற்பார்வை  ! ஒரிஜினலாய் "நெஞ்சே எழு" கதைக்கான டிசைன் இந்த மைல்கல் இதழின் அட்டையினை அலங்கரிக்கவுள்ளது ! And நேரில் புக்காகப் பார்க்கும் போது இதனில் செய்துள்ள நகாசு வேலைகள் அனைத்துமே டாலடிக்கும் பாருங்கள் ! இங்கே கண்ணில் தென்படா நுணுக்கமான நகாசுகள் புக்கில் மட்டுமே தென்படும் ! And தொடர்வது உட்பக்க preview !! 

அச்சில் பார்க்கும் போது as usual 'தல' ஜொலிக்கிறார் !! பாயசப் பார்ட்டிகளை நினைச்சா தான் பாவமா இருக்குது ! 


Bye all...see you around ! Have a fun weekend !

P.S : ஒரு கலர் டெக்ஸ் சிறுகதையும் பெரிய சைசில் உண்டு - இணைப்பாய் ! 

363 comments:

  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு…

    ReplyDelete
  2. Replies
    1. வந்துட்டோம்ல

      Delete
    2. நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள போவதில்லை இந்த மனம்...

      பரவாயில்லை... ஆனால் உதவிட அடியேன் எப்பொழுதும் தயாரே...

      Delete
    3. // நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள போவதில்லை இந்த மனம்... //

      கவலை வேண்டாம் ஜனா. பொறுமையாக காத்திருங்கள். தாமதம் நல்லதிற்கே.

      Delete
  3. பத்துக்குள்ளே...

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நம்மளுக்கு சம்பந்திலாத பதிவு???

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒத்தவரி விமர்சனத்தை நான் பார்த்ததே இல்ல..ii i

      Delete
    2. ரம்மி @ ஆசிரியர் பதிவில் இந்த விஷயத்தை உங்களுக்காக எழுத மறந்து விட்டார் என நினைக்கிறேன் :-)

      Delete
  6. // பன்னிரெண்டே நாட்களில் ஐந்து வயசு கூடிப் போனதான பிரமையுடன் மோட்டைப் பார்த்தபடிக்கே நான் அமர்ந்திருக்க, ஓசையின்றி ரூமுக்குள் வந்த மைதீன் - " அந்த ஆன்லைன் book fair ஸ்பெஷல் புக்ஸ் பிரிண்டவுட் எடுத்து ரெடியா இருக்குது...கொண்டு வரட்டுமா ?" என்று கேட்ட நொடியில் ஓரிரு நிமிடங்கள் மலங்க மலங்க மட்டும் முழித்தேன் !! // சத்தியமாக சார் இதை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். நீங்கள் படும் கஷ்டத்தை எப்படி இப்படி எழுத முடிகிறது?

    ReplyDelete
  7. 22, தல பதிவு, படித்து விட்டு மீதம்

    ReplyDelete
  8. //பன்னிரெண்டே நாட்களில் ஐந்து வயசு கூடிப் போனதான பிரமையுடன் மோட்டைப் பார்த்தபடிக்கே நான் அமர்ந்திருக்க//

    தட் கால் & கட்டைவிரல் மொமன்ட். ஒன்ஸ் அகெய்ன். அப்பப்போ இதெல்லாம் இல்லாங்காட்டி உங்களுக்கு போரடிச்சிடும் எடிட்டர் சார்!! :-)

    ReplyDelete
  9. கடப்பாரையை முழுங்கிட்டு, சுக்கு கஷாயமும் குடிச்சிட்டு, சிரிச்சுக்கிட்டே ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுக்க உங்களால் மட்டுமே முடியும். ' நெஞ்சே எழு' தலைப்பு உங்களுக்கே பொருத்தமானது.
    A royal salute to the real editor.

    ReplyDelete
  10. லயன் 400 தல ஜொலிக்கிறார்,ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  11. தல - ஜொலிக்கும் அந்த அட்டைப்படம் மூச்சை இழுத்துப்பிடிக்க வைக்கிறது எடிட்டர் சார்! நம்ம ஸ்டீலின் பாணியில் சொல்வதென்றால் 'இதுவரை வந்ததிலேயே இதா பெஸ்ட்'! பச்சை வண்ணப் பின்னணியில் தலயின் அட்டைப்படச் சித்திரம் - அபாரம்!!

    இப்படியொரு அட்டைப்படம், ஜொலிக்கும் வண்ணங்களில் கதை, குண்ண்டுப்புத்தகம், 400 என்ற மைல்கல், அட்டகாசமான புத்துணர்வூட்டும் தலைப்பு, கொஞ்சூண்டு கதை, அதகள ஆக்ஷன், எல்லாவற்றிற்கும் மேல் - தல! வேறென்ன வேண்டும் ஒரு சூப்பர்டூப்பர் ஹிட் இதழுக்கு!!!

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன் செயலரே..

      Delete
    2. ////வேறென்ன வேண்டும் ஒரு சூப்பர்டூப்பர் ஹிட் இதழுக்கு!///

      கதை...கதை...

      அதுமட்டுமிருந்தா போதும் ஒஹோனு இருக்கும்.:-)

      Delete
  12. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    எடிட்டரை இப்படியே பிஸியாக வைத்திருக்க புனித மனிடோ அருளுவாராக.முத்துவில் வந்த
    வேதாளரின் கதைகளில் எனக்கு நினைவிருப்பவை இரண்டு கதைகள்தான்
    1)கூண்டில் தொங்கிய சர்வாதிகாரி
    2)சூனியக்காரியின் சாம்ராஜ்ஜியம்

    காரிகனின் கதைகளில் முடிவு பக்கங்கள் இல்லாமல் இருக்கும் கதைகள்(இருப்பதும் இரண்டுதான்)

    1)பனித்தீவின் தேவதைகள்
    2)வான் வெளி சர்க்கஸ்

    மாண்ரெக் கதைகளில் நினைவிருக்கும் 2
    1)கூலர் என்னும் வாடகை கொலையாளி வரும் கதை
    2)மந்திரக்கல்லூரியில் மாண்ரெக் தன் சகோதரன் ட்ரெக் உடன் படிக்கும் கதை
    (திபெத்தில் இருக்கும் மந்திரக்கல்லூரியில் படிக்க அனுப்பும்படி கேட்டு அம்மாவிடம் உதை வாங்கிய காலம் அது)
    ரிப் கிர்பி
    எதுவும் நினைவில்லை
    S70 க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  13. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  14. Back to reality - கை கடுக்க, புஜம் வலிக்க எழுதிக் கொண்டே இங்கே பதிவுப் பக்கமும் எட்டிப் பார்த்தால் - "டெக்ஸ் & கோ முஷ்டியை மாத்திரமன்றி, புத்தியையும் பயன்படுத்தும் பாணிகளில் கதை அமைந்தால் ஜூப்பரு " - என்ற ரீதியில் பின்னூட்டம் ! அந்த நொடியில் நானோ நிஜாரைத் தொலைத்த தலீவரைப் போல 'ஓ'வென்று அழும் நிலையில் தானிருந்தேன் - simply becos எனது வேண்டுதலோ உல்டாவாக இருந்தது !! "தெய்வமே....கதையின் நடு நடுவே கொஞ்சம் சண்டைக் காட்சிகளைச் சரளமாய் அமைத்துத் தாங்களேன்... 'டமால்..டுமீல்.. யாஹீஈஈ' என்றபடிக்கே பக்கங்களைக் கடத்திக் கொள்வேன் !!" என்று நான் வேண்டிக்கொள்ளாத குறை தான் ! ஆனால் கதையினில் டெக்ஸ் & டீமோ சும்மா திட்டம் போடறாங்க...போடறாங்க...வண்டி வண்டியாய்ப் பேசிக்கொண்டே திட்டம் போடறாங்க !! Phew !//////
    வர வர இந்த அதிகாரியின் அக்கிரமங்கள் எல்லை மீறி போகிறது... அதிகாரியினால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் ஆசிரியருமே இடம்பிடித்திருப்பதே இதற்க்கு சாட்சி..

    ReplyDelete
    Replies
    1. ரம்மி அல்டிமேட் காமெடி வாய்விட்டு சிரித்தேன்..


      :-)))))))))))))))))))

      Delete
  15. பொம்ம புக் பின்னாடி இவ்வளவு பிச்சனை இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. பாதி தான் சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன் நண்பரே..

      Delete
    2. "சொல்லாத கதைகள்" என்று இன்னும் சொல்ல பல கதைகள் ஆசிரியரிடம் இருக்கிறது நண்பரே.

      Delete
  16. அனைவருக்கும் வணக்கம் சொல்வது சின்னமனூர் சரவணர்ங்க..!!!

    ReplyDelete
  17. இந்த வருடம் டெக்ஸ் வில்லர் ஆதிக்கத்தோடு, அமர்க்களப்படுத்தியும் வந்து கொண்டிருப்பது சிறப்பு

    ReplyDelete
  18. உங்களின் கடின பணி எங்களை மகிழ்விக்கவே எனும் போது உங்களின் சுமை எங்களுக்கு சுகமான சுமைகளாகவும் அமையும் பொழுது மகழ்வதா வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை சார்..

    ஆனால் ஒன்று இந்த உங்களின் கடின பணியையும் மனதில் கொண்டே இனி இதழ்களின் வாசிப்பும் விமர்சனமும் அமையும் சார்..

    நெஞ்சார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  19. தல தாண்டவத்தின் முகப்பு செம செம செம செம செம செம பட்டாசாக அமைந்து உள்ளது சார்..

    சூப்பர்.

    ReplyDelete
  20. வண்ண டெக்ஸ் உடன் வண்ண டெக்ஸ் இலவசம்..


    கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா ..


    எங்களை விட ரம்மிக்கு கொண்டாட்டம் வாழ்த்துக்கள் ரம்மி..:-)

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. /// ஒரு கலர் டெக்ஸ் சிறுகதையும் பெரிய சைசில் உண்டு - இணைப்பாய் ! ///

    'ஒவ்வோர் முகத்திலும் புன்னகை'க்காக நீங்கள் செய்யும் மெனக்கெடல்கள் எங்களை திக்குமுக்காட வைக்கின்றன. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இத்தணூண்டு வட்டத்தின் சந்தோஷத்திற்காக எத்தனை பெரிய திட்டமிடல்கள்,வேலைகள்.அப்பப்பா. பிரமிக்க வைக்கும் செயல்பாடுகள்.
    உண்மையிலேயே நீங்க வேற லெவல் சார்

    ReplyDelete
  23. வெனிஸில் ஒரு வேங்கை*

    (நண்பர் பழய பதிவுல படிக்காம விட்டிருப்பாங்க மீள்பதிவு போடுங்கன்னதால)

    வழக்கம் போல வயதான அந்த ஆயாவுக்குத் துணையாக கைத்தாங்கலாய் கூட்டிக் கொண்டு வெனிசுக்கு விடுமுறைக்கு வருகிறார் கார்வின். ஆனால் இப்போதும் அடங்காபிடாரியாக உள்ள ஆயா 50 வருடத்துக்கு முன்னே (எப்படி இருந்திருப்பார் என சொல்லத் தேவையில்லை) மாலிக் தூங்கும் போது, கோழைத்தனமாக இரவில் மாலிக்கின் வீட்டிற்குள் புகுந்து மாலிக்கின் பாதுகாப்பில் இருக்கும் சிறுமியை அடவடியாகக் கடத்தி செல்கிறாள். அதற்கு பழி வாங்க வேங்கையாய் வெனிசிற்கு வரும் மாலிக் செயித்தாரா அல்லது ஆயாவின் மேல் இரக்க சுபாவம் கொண்ட கார்வினால் முறியடிக்கப்பட்டாரா என்பதே கதை.

    மாலிக்கின் ஆக்ரோசம், ரோசினாவின் தாய்ப்பாசம், கார்வினின் ஆயாவின் மேலான பச்சாதாபம் என கதை களை கட்டுகிறது. ஆங்காங்கே ஆயா க்ளோஸப்பில் (மேக்கப்பையும் தாண்டி வயது தெரிகிறது) நிறைய பயமுறுத்தினாலும் கதையின் வேகத்திலும் சுவராஸ்யத்திலும் பெரிதாகத் தெரியவில்லை. இருந்தாலும் மேக்கப்பில்லாத முகத்தை பார்த்தவுடனே ஹார்ட் அட்டாக்கில் மாலிக் இறப்பது துர்லபம். இளம் வயதில் பாத்திருந்தால் கதையே நடந்திருக்காது.

    ஆயா முன்னேற்ற சங்கத்தின் தலீவரான சிவகாசித் தொழிலதிபர் வருடத்திற்கொரு ஸ்லாட்டை எப்படியாவது தக்க வைத்து விட வேண்டுமென்ற சூழ்ச்சியில் வெற்றி பெற்று விட்டார் என்பதை மகிழ்ச்சியாக சொல்வதா நெகிழ்ச்சியாக சொல்வதா இல்லை தளர்ச்சியாக சொல்வதா என்று தெரியவில்லை.

    *ரேட்டிங்: எனக்கு பிடிச்சிருக்கு*

    விமர்சனம் படித்து விட்டு கோபப்படும் ஆயாவின் ரசிகர்கள் குத்து வாங்க வசதியாக ஏக்கர் கணக்கில் தொப்பையும், உதை வாங்க வசதியா மீட்டர் கணக்கில் இடுப்பும் இருக்கும் என் மச்சானை அணுகவும்.
    முகவரி:
    மேச்சேரி மன்மதடு (நிறத்தில்)
    மேச்சேரி
    அம்மெரிக்கா மாவட்டம்.

    ReplyDelete
    Replies
    1. அட...மாலிக் மண்டையைப் போட்டதுக்கு postmortem பண்ணாமலே காரணத்தைக் கண்டு புடிச்சிடீங்க போல ?!!

      Delete
  24. இன்னும் சிறிது நேரத்தில் ரம்மி அசத்தும் நெஞ்சே எழு விமர்சனம்.

    ReplyDelete
  25. *நெஞ்சே எழு *

    ரம்மி: அக்கிரமக்கார அதிகாரியின்…
    நான்: அண்ணே…ஒரு நிமிசம்..
    ரம்மி: இருங்க…சம்முவம் பிசி. அநியயாமாக தூக்கில்…
    நான்: கொஞ்சம் சொல்றதை கேளப்பா…
    ரம்மி: ஆவறதுக்கில்லே. முரட்டுதனமான அதிகாரி நல்லவர்களை…
    நான்: விசயத்தைக் கேட்டுட்டு…
    ரம்மி: நான் பாயசம் காச்சிட்டிருக்கேன்.
    நான்: யோவ்…புக்கு வித்து ஸ்டாக் அவுட்டாம். கொடோனு காலியாம். கேக்குதா காது. கொடோனு காலியாம். இனி பாயாசம் காச்சினா என்ன…காச்சாட்டி என்ன…பாயாசம் காய்ச்சறாராமாம்… பாயாசம். இதுக்கு பேட்டரி காச்சிருந்தா டெக்ஸ் கதை படிச்சிட்டு காச்சினதை கல்ப்பா அடிச்சிட்டி மல்லாக்க கவுண்டன் பாளையத்துல பேசாம குப்புறக்க படுத்து தூங்கிருருக்கலாம்…

    என்னோட ரேட்டிங்: ஐ லவ் யூ தல…நீ கலக்கு தல…சூப்பரு தல…

    ReplyDelete
    Replies
    1. ஷெரீப்.. செம்ம!!😂😂😂😂😂😂😂

      Delete
    2. மகி..ஃபுல் ஃபார்ம்முல இருக்கீங்க போல.. கலக்குறீங்க...

      Delete
    3. அது காமிக்ஸ் கைக்கு வந்தாலே பத்து வயசு குறைஞ்சி காலேஜுல இருக்கற பீலிங். அதனால செனா அனா, ரம்மி, தலீவரு, பாபு, எடிட்டர்னு எல்லாரையும் கையப்பிடிச்சு இழுக்கத் தோணுது. அவ்ளோ தான்.

      Delete
    4. பத்து வயசு கொறைஞ்சாலும் பாப்பா கைப்பிள்ளையா இருந்திருக்கணுமே ? அப்போ வரைக்கும் காலேஜில் இருந்தீகளோ ? Thinking...!!

      Delete
    5. ஷெரீப் செம செம...

      :-))))))))))))

      Delete
    6. Thinking..!! //

      எடிட்டர் நெம்ப யோசிச்சா நம்ம வண்டவாளமெல்லாம் தண்டவாளத்துல ஏறிடும். நாம அப்படியே நம்மளை சொல்லாத மாதிரி கண்டுக்காம விட்டுடுவோம்.

      Delete
  26. ஆசிரியர் சார் உங்கள் அன்பான சேவை (சிரமத்தின் மத்தியிலும்) புரிகிறது
    ஆனால் உங்கள் ஆரோக்கியம் மிக மிக முக்கியம் சார் இது காமிக்ஸ் நேசங்களின் அன்பான வேண்டுகோள் சார்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் மூன்றே மாதங்களில், காத்துள்ள மெகா பணிகளின் சகலத்தினையும் நிறைவு செய்த கையோடு workload ஐ நிச்சயமாய் குறைத்துக் கொள்வேன் சார் ; இந்த மெனெக்கெடல்கள் என் வயசுக்கேற்றவை அல்ல என்பது புரிகிறது !

      And நிபந்தனைகளில்லா அந்த அன்புக்கு நன்றிகள் sir !!

      Delete
  27. //வர வர இந்த அதிகாரியின் அக்கிரமங்கள் எல்லை மீறி போகிறது... அதிகாரியினால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் ஆசிரியருமே இடம்பிடித்திருப்பதே இதற்க்கு சாட்சி..//

    அதிகாரியை ஓரளவு அசைத்து பார்க்க இளம் புலியால் மட்டுமே முடியும். காரணம் மீள் வருகைக்கு பின் அனைத்து கதைகளையும் ஒரு முறை படித்ததோடு சரி. மீள் வாசிப்பு ஏதும் இல்லை. ஆகையால் டைகர் கதையில் சமீபத்தில் அதிகம் மூழ்க முடியவில்லை. ஆதலால் கௌபாய் வரிசையில் டெக்ஸ், டியுராங்கோ, டிரென்ட் என இதர கதைகளை படித்து கொண்டிருக்கையில், நீண்ட நாட்களாக பென்டிங்கில் இருந்த டைகரின் "மரண நகரம் மிசௌரி", "கன்சாஸ் கொடூரன்", "இருளில் ஒரு இரும்புக்குதிரை" கதைகளை படிக்க சமீபத்தில் வாய்ப்பு கிடைத்தது.

    படிக்கும் போதும் சரி, முடித்த பின்னும் சரி எழுந்த எண்ணத்தை சுருங்க சொல்வதானால் "டெக்ஸ் வில்லர் கதைகள் மெகா ஹிட்டடித்த "சித்தி, மெட்டி ஒலி, etc., போன்ற தினசரி சீரியல்கள் ரகம். கண்டிப்பாக இங்கும் கதாசிரியரின் உழைப்பும், சரித்திர ஆய்வுகளும், மெனக்கெடல்களும் உண்டு. ஆனால் அவைகள் சீரியல் அளவுகளோடு இருப்பவை. ஏதேனும் ஒரு சில எபிசோடுகள் கூடுதல் மெனக்கெடலுடனும், வீரியதுடனும் இருக்கும். மற்றபடி ஜன்ரஞ்சகமாய் பயணிக்கிறது. ஆனால் டைகரின் கதைகள் ஒரு தரமான திரைப்படத்திற்கு உண்டான தரத்துடன் வருகிறது. ஒவ்வொரு பிரேமிலும் கதாசிரியரின் உழைப்பு பிரதிபளிக்கிறது. டெக்ஸ் ரசிகனாக இருந்தாலும் டைகரின் கதைகளுக்கு ஒரு பெரிய சல்யூட். அது இளம் புலியானாலும் பாய்ச்சலில் குறைச்சலில்லை. Come back tiger. டெக்ஸ்க்கு tough fight கொடுக்கவாவது எழுந்து வா. காத்திருக்கிறோம் ஒரு ஆரோக்கியமான போட்டிக்கு.

    ReplyDelete
    Replies
    1. //ஆனால் டைகரின் கதைகள் ஒரு தரமான திரைப்படத்திற்கு உண்டான தரத்துடன் வருகிறது. //

      வருகிறது---- நோ

      வந்தது ------

      //Come back tiger. டெக்ஸ்க்கு tough fight கொடுக்கவாவது எழுந்து வா//


      பாரிஸின் மையப்பகுதியிலிருந்து சுமார் 6 மைல் தொலைவில் உள்ள செயின்ட் கிளவுட் நகரின் சர்ச்சில் உள்ள கல்லறை தோட்டத்தை கலைத்தால்தான் இது சாத்தியப்படும்..


      இங்குதான் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவரும் வர்ணிக்க இயலா மேதமையும் உள்ள ஜீன் மிச்செல் சார்லியர் துயில் கொள்ளுகிறார்.

      இறக்கும்போது வெறும் 64 வயதுதான் .


      இம்மேதை மட்டும் இன்னும் 15 வருடங்களாவது இருந்திருப்பின் ???

      பெருமூச்செறிவதுதான் முடிகிறது...

      Delete
    2. இளம் டைகரின் துவக்க ஆக்கங்களும் சார்லியருடையது எனபதை கவனிக்க தவறி விட்டேன். நீங்கள் சொல்வது போல பெருமூச்செறிவதுதான் முடிகிறது...

      Delete
    3. பாயச அண்டாக்கள் பற்றாது சார் ; குண்டாக்கள் ; டிரம், பேரல் என்றெல்லாம் கொண்டு வர வேண்டி வரும் ! தற்போதுள்ள கெத்தோடே டைகர் நினைவுகளில் ஜீவிக்கட்டும் !

      Delete

  28. அக்னி நட்சத்திரம் போஸ்டர் போன்ற ராப்பர்

    தல..எப்போதும் இல்லாத அளவுக்கு எக்ஸ்ட்ராவாக டாலடிக்கிறார்..மஞ்சச்சட்டை மேலும் ஜொலித்து கண்கூசும் அளவுக்கு மின்னுகிறது.

    சமீபத்திய இருள் பின்னணி ராப்பர்களே வர..இது நன்றாகவே மார்க் வாங்குகிறது.

    ReplyDelete
    Replies
    1. தலயின் கெத்தில் எல்லாமே மிளிர்வதில் வியப்பில்லை சார் !

      Delete
  29. ://// ஒரு கலர் டெக்ஸ் சிறுகதையும் பெரிய சைசில் உண்டு - இணைப்பாய் ! ///

    வாவ்...சர்ப்ரைஸ்..!இன்ப அதிர்ச்சி..!

    ReplyDelete
  30. #அச்சில் பார்க்கும் போது as usual 'தல' ஜொலிக்கிறார் !! பாயசப் பார்ட்டிகளை நினைச்சா தான் பாவமா இருக்குது ! #
    பாயசப் பார்ட்டிக லிஸ்ட போடுங்க சார்!@ரம்மிய தவிர எத்தனை பேர் என தெரிந்து கொள்ளலாமே?

    ReplyDelete
  31. இன்னும் சிறிது நேரத்தில் ரம்மி அசத்தும் நெஞ்சே எழுவிமர்சனம். ஆவலுடன் வெய்ட்டிங் சேலம் டெக்ஸ் வி and others. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  32. // அவர்களின் அவைவருக்குமே //

    அவர்களின் "அனைவருக்குமே" என வரும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  33. ஒரு பத்து சதவிகிதம் தேறும் என்றிருக்க, அது நீங்கலான பாக்கி 90 சதவிகிதத்தை - கடந்த 11 நாட்களில் எழுதியுள்ளேன் - முற்றிலுமாய் புதுசாய் !! //

    செம சார்.. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறது நீங்க ஒருத்தர் தான் சார்...

    ReplyDelete
    Replies
    1. சாத்து வாங்க இக்கட இருக்கிறது ஒருத்தன் தானெனும் போது தாங்கித் தான் ஆகணுமில்லியா பழநி ?

      Delete
  34. சூ... போ.. ன்னு விரட்டியிருந்தா அந்த வல்லூறு பறந்து போயிருக்கும். தேவை இல்லாம ஒரு ஜீவனை இப்படி கொண்னுட்டாரே... ஒரு வேளை இரவு உணவு தேவைக்காகத்தான் போட்டு தல்லிட்டாரோ???

    ReplyDelete
    Replies
    1. Note this point பாயாசக்கார் !

      Delete
  35. கண்மணி பாடல் செம பொருத்தம் சார்.

    ReplyDelete
  36. இதோ இந்த மாதத்து கவுன்டவுன் எனது ரசனையின் அடிப்படையில்.,

    1. லயன் ஜாலி ஆண்டு மலர் - 9/10

    வால் முளைத்த வாரிசு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, அதை பிசகில்லாமல் நிறைவேற்றியது சிறப்பு என்றால், எதிர்பார்ப்பே இல்லாமல் பலமாக ஸ்கோர் செய்த பேய் நகரம் தனிசிறப்பு. அடங்காத மாட்டின் மீது ஏறி அதை சாய்க்க முற்பட்டு பல்பு வாங்கும் காட்சிகளில் காமெடி சரவெடி. இரண்டு கதைகளும் சளைக்காமல் கதை முழுவதும் காமெடியில் களை கட்ட, வெளிவந்த முதல் மாதத்திலேயே முதல் இடம். செஸ்டர் அண்ட் செஸ்டர் அண்ட் செஸ்டர் அண்ட் செஸ்டர் vs டால்டன் அண்ட் டால்டன் அண்ட் டால்டன் அண்ட் டால்டன் - கவுன்டர் செம.

    2. இனியெல்லாம் சுகமே - 9/10

    ஒரு படி கீழிறங்கி இரண்டாவது இடம்

    3. கழுகு வேட்டை - 9/10

    ஒரு படி கீழிறங்கி மூன்றாவது இடம்

    4. ஒரு பிரளயப்பயணம் - 9/10

    துல்லியமான, ஷார்ப்பான சித்திரங்களுடன் பயணிக்கும் கதையில் சிரமமே இல்லாமல் நாமும் உற்சாகத்துடன் தொற்றி கொள்கிறோம். கப்பலில் நடக்கும் சம்பவங்கள், நதி பிரியும் பாதை, சதுப்பு நில பயணம் என நிறைய positives.

    ஆனால் உயிரையே பணயம் வைத்து கயிற்றில் தொங்கி பாறை இடுக்குகளில் வெடியை பொருத்தி விட்டு, கொஞ்சம் கூட மசாலா இல்லாமல் வா ராசா வா, வந்து என்னை சுடு என்று குன்றில் மேல் வெளிப்படையாக திரியை காட்டி கொண்டிருக்கும் மடத்தனத்தையும், ஆரம்பத்தில் பெரிய பில்டப்புடன் கூட்டத்தை கூட்டி சதித்திட்டம் தீட்டி வீட்டு பின்பு திட்டம் சொதப்பி தான் மாட்டிக்கொள்வது ஏறக்குறைய உறுதி எனத்தெரிந்தும் குறைந்த பட்ச எச்சரிக்கை கூட இல்லாமல் வந்து என்னை பிடித்துக்கோ என மாட்டிகொள்வது எல்லாம் ஆண்டு மலரை விஞ்சிய காமெடி. இந்த குறைகள் தான் டெக்ஸ் கதைகள் நன்றாக இருந்தும் ஒரு மைல்கல் இதழாக உறுவெடுக்காமல் அன்றே ரசித்தோம், கடந்தோம் என மனதில் இருந்து நீங்கி விடுகிறது.

    5. காற்றில் கரைந்த கலைஞன் - 9/10

    இரண்டு படி கீழிறங்கி ஐந்தாவது இடம்

    6. நெஞ்சே எழு - 8.5/10

    இரண்டு படி கீழிறங்கி ஆறாவது இடம்

    7. ரௌத்திரம் கைவிடேல் - 8.5/10

    இரண்டு படி கீழிறங்கி ஏழாவது இடம்

    8. ஒரு தோழனின் கதை - 8.5/10

    இரண்டு படி கீழிறங்கி எட்டாவது இடம்

    9. நித்தமும் உந்தன் நிழலில் - 8/10

    இரண்டு படி கீழிறங்கி ஒன்பதாவது இடம்

    10. ஒரு தலைவனின் கதை - 8/10

    இரண்டு படி கீழிறங்கி பத்தாவது இடம்

    11. நீரின்றி அமையாது உலகு - 8/10

    இரண்டு படி கீழிறங்கி பதினொறாவது இடம்

    12. B & B Special - 7/10

    i) வெனிஸில் ஒரு வேங்கை - 8/10

    இம்முறை பெட்டரான சித்திரங்களுடன் களமிறங்க பாதி வெற்றி உறுதி. வழக்கம் போல் கார்வின் & மாடஸ்டி திட்டமிடல்கள் ஆகச்சிறப்பு. போலி கார் விபத்தும், கடலில் மாடஸ்டியை சுட்டு வீழ்த்தும் நாடகமும் நிறைவு. க்ளைமாக்ஸ் சற்று வீக் என்றாலும் முழுக்கதையாக பார்க்கையில் வெற்றியே. ஆசிரியருக்கும், இளவரசி ரசிகர்களுக்கும் special பொக்கே.

    ii) ஹாட் ஷாட் - 6/10

    ஆரம்பத்தில் கதைக்குள் நுழைய தடுமாறினாலும் போக போக ஓரளவு ஒன்ற முடிகிறது. இடையிடையே மிடில பீலிங் எழுந்தாலும், சூரிய ஒளியில் விமானத்தை வீழ்த்தும் technology, உளவுத்துறை செயல்பாடுகள் என ஒரளவு ரசிக்கும் பகுதிகளும் இருப்பதால் தட்டு தடுமாறி கரை சேறுகிறார் bond. இம்முறை மூன்று black & white கதைகளின் வில்லன்களுக்குள் போட்டியே வைக்கலாம் யார் டப்ஸா என்று.

    கொரில்லா சாம்ராஜ்யம் - கௌரவத்தோற்றம். கவுன்டவுன், மார்க் எல்லாம் மாயாவிசாருக்கு கிடையாது.

    அடுத்த மாதம் எந்த கதைகள் எந்த இடத்தை பிடிக்கிறது என பார்ப்போம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பொறுமையான ; அழகான அலசல் !

      And yes - இம்மாதத்து வில்லன்கள் அத்தனை பேருமே அவ்ரெல் டால்டனுக்கு செம போட்டி தரவல்ல தத்திகள் தான் !

      Delete
    2. ///ஆனால் உயிரையே பணயம் வைத்து கயிற்றில் தொங்கி பாறை இடுக்குகளில் வெடியை பொருத்தி விட்டு, கொஞ்சம் கூட மசாலா இல்லாமல் வா ராசா வா, வந்து என்னை சுடு என்று குன்றில் மேல் வெளிப்படையாக திரியை காட்டி கொண்டிருக்கும் மடத்தனத்தையும்,////

      நானும் இதையே நினைத்தேன்! கதையின் மிகப்பெரிய ஓட்டை இது!
      அதன்பிறகு நடப்பது அதைவிட மடத்தனம்! வெடி வைத்திருப்பதை தூரத்திலிருந்தே நம்ம டெக்ஸ் & கோ கவனித்து விட்டாலும், கப்பலை நிறுத்த முயற்சிக்காமல் தொடர்ந்து முன்னேறி வெடியிலிருந்து மயிரிழையில் கடந்து செல்கிறார்களாம்! குறைந்தபட்சம் கிட் & டைகரிடமிருந்து ஆபத்து நீங்கியதற்கான சமிக்ஞை பெறும் வரையிலாவது கப்பலை நங்கூரமிட்டு நிறுத்தியிருக்கலாம் தானே?!! முடியலை!!

      இதன் காரணமாகவே டெக்ஸ் & குழு கொஞ்சமாச்சும் மண்டையையும் உபயோகிக்கும்படியான கதைகளைத் தேடிப்பிடித்து வழங்கச் சொல்லிக் கோரினேன்!

      Delete
  37. Edi Sir...Next issue..Spider or Irumbu kai Mayavi kathai (New Story) podunga sir...

    ReplyDelete
    Replies
    1. நாமளே கதை எழுதி, படமும் போட்டால் தான் மாயாவி புதுக் கதையெல்லாம் நண்பரே ! ஏதும் மிச்சம் கிடையாது !

      Delete
  38. விஜயன் சார், குட்டிக்கரணம் அடிக்கும் படலம் 102. வழக்கம் போல் சுவாரசியமாக இருக்கிறது. நன்றி.

    ஆனாலும் இந்த புதிய எழுத்தாளர்கள் மேல் அதிக நம்பிக்கை (இரண்டாவது முறை இதுபோல் நடக்கிறது என நினைக்கிறேன்) வைத்து உள்ளீர்கள் இவர்கள் மூலம் நீங்கள் நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளது என நினைக்கிறேன். :-)

    ReplyDelete
    Replies
    1. அந்த சகோதரியின் கணவர் கொரோனாவுக்குப் பலியானதில் எல்லா திட்டமிடல்களுமே வியர்த்தமாகிப் போனது தவிர்க்க இயலா துரதிர்ஷ்டம் சார் ! 4 ஆண்டுகளின் பயிற்சி கொண்டிருந்த அவரே எழுதியிருப்பின் - நான் மாமூலான டெக்ஸ் - கார்சனின் பகுதிகள் ; பன்ச் வரிகள் ; கொஞ்சம் காமெடி வரிகள் என்பதோடு நகர்ந்திருக்க முடிந்திருக்கும் ! ஆனால் உச்ச இழப்பினை உணர்ந்திருக்கும் அவரைத் தொந்தரவு செய்திட மனம் ஒப்பவில்லை !

      Delete
    2. // சகோதரியின் கணவர் கொரோனாவுக்குப் பலியானதில் எல்லா திட்டமிடல்களுமே வியர்த்தமாகிப் போனது தவிர்க்க இயலா துரதிர்ஷ்டம் சார் //

      ஞாபகம் உள்ளது சார்.
      அந்த சகோதரிக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று.

      Delete
  39. வணக்கம் காமிக்ஸ் உள்ளங்களே

    ReplyDelete
  40. Replies
    1. அக்டோபர் முதல் சித்தே ஆற அமரப் பயணிக்கத் திட்டம் சத்யா !

      Delete
    2. ///அக்டோபர் முதல் சித்தே ஆற அமரப் பயணிக்கத் திட்டம் சத்யா !///


      ஹா.. ஹா.. ஹா.. ஹைய்யோ.. ஹைய்யோ! ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்கும்னா நினைக்கறீங்க?!!

      Delete
  41. அகநானூறு, புறநானூரு, இது லயநானூறு !

    அட்டகாசமான வண்ண சேர்க்கை, அட்டையில்.

    ReplyDelete
    Replies
    1. (புக்கில்) பார்க்கும் போது இன்னும் அழகாய்த் தெரியும் சார் !

      Delete
  42. Sir/Friends, Would you please share online book fair date?
    Thanks in advance for your help.

    ReplyDelete
  43. பதிவு படித்து மனம் நெகிழ்ந்தேன்.எப்பேர்ப்பட்ட ஆசிரியர் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றார் என்பதை நினைந்து என் கண்கள் வேர்த்தன.பிறரை மகிழ்வித்துப் பார்க்கும் ஆசிரியர் எங்களுக்குக் கிடைத்தது நாங்கள் பூர்வஜென்மத்தில் செய்த புண்ணியம் தான்.

    ஆசிரியர் சார் தங்கள் உடல்நலனையும் கவனத்தில் கொள்ளவேண்டுகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. இத்தனை பெரிய வார்த்தைகள் தேவையா - என்ன சார் ?

      நிஜத்தை செல்வதானால் - இத்தனை காலமான பின்னேயும், இத்தனை பெரிய தமிழகத்தினில் பேனா பிடிக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்கா ஒரு வாத்து தான் முகம் பார்க்கும் கண்ணாடியில் எனக்குத் தெரிகின்றது !

      Delete
  44. அட்டை படம் சூப்பராக உள்ளது ஆசிரியரே ஆனால் தல தான் கொஞ்சம் வயதானது போல் ஒரு வேலை எனக்கு மட்டும் தான் அப்படி தெரிகிறதோ

    ReplyDelete
    Replies
    1. கன்னத்திலிருந்து தாடை வரை நீளும் அந்த மடிப்புத்தான் டெக்ஸை கொஞ்சம் வயதானவராக் காட்டுகிறதென்று நினைக்கிறேன்!
      'மடிப்பு அம்சா' மாதிரி இது 'மடிப்பு டெக்ஸ்'!

      Delete
    2. 'மடிப்பு அம்சா' மாதிரி இது 'மடிப்பு டெக்ஸ்'! - மடிப்பு மலை :-)

      Delete
  45. *கொரில்லா சாம்ராஜ்யம்*

    சர்ப்ரைஸ். நல்லாவே இருந்துச்சு். பேசாம பழய கதைகளை கருப்பு வெள்ளைல போடாம கலர்ல போட்டுடறது தான் பெட்டரோ 🤔

    ReplyDelete
    Replies
    1. ஆனா பாருங்க இதுபோன்ற கதைகளில் ராமராஜன் கலர அதிகம் உபயோகபடுத்துவத கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும் :-)

      Delete
    2. பச்சை கலரு சிங்குச்சா சிகப்பு கலரு சிங்குச்சா வண்ண வண்ண கலருங்க என் கண்களை பதம் பார்க்குதுங்க :-)

      Delete
  46. கூண்டில் தொங்கிய சர்வாதிகாரி - சமீபத்தில் செந்தில் சத்யா உதவியுடன் இந்த கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுதான் நான் முதன் முதலாக நமது காமிக்ஸில் வந்த வேதாளர் கதையை படித்தது. இன்னும் கொஞ்சம் சிறப்பாக இந்த கதை இருக்கலாம் என படித்து முடித்த உடன் தோன்றியது.

    Smashing 70sல் வரவுள்ள வேதாளரின் மற்ற கதைகளை விரைவில் படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.

    ReplyDelete
  47. விஜயன் சார், இது போல் அதிகப்படியான வேலைகளை செய்து முடித்த பின்னர் இனிவரும் காலங்களில் முடிந்த அளவு ஒரு break (ஓரு வாரமாவது) கொடுத்து விட்டு ஓய்வெடுங்கள். இது போன்ற ஓய்வு உங்களுக்கு தேவை, உடலுக்கும் மனதுக்கும் கண்டிப்பாக தேவை, மேலும் ஒரு புத்துணர்ச்சியை தரும்.

    அல்லது தலைவர் ரஜினி போல் ஒவ்வொரு பெரிய ப்ராஜெக்ட் முடிந்தவுடன் மலை வாஸ்தலங்கலுக்கு சென்று வாருங்கள் சார் (இந்த கொரோனா வேகம் முழுமையாக குறைந்த பின்னர்).

    ReplyDelete
    Replies
    1. ///இனிவரும் காலங்களில் முடிந்த அளவு ஒரு break (ஓரு வாரமாவது) கொடுத்து விட்டு ஓய்வெடுங்கள். ///

      ஆமாம் சார்! ஒரு வாரத்துக்காவது ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு ஜாலியா காமிக்ஸ் படிச்சு ரெஸ்ட் எடுங்க!

      Delete
    2. ஆமாம் சார் விஜயை பக்கத்தில் வைத்து கொண்டால் விடுமுறை இன்னும் மிகவும் சிறப்பாக இருக்கும், அவருக்கும் நீங்கள் படித்த கதைகளை ஒவ்வொரு இரவும் சொன்னால் நன்றாக தூங்குவார் :-)

      Delete
    3. ///நீங்கள் படித்த கதைகளை ஒவ்வொரு இரவும் சொன்னால் நன்றாக தூங்குவார்///

      என்னை 'பயங்கரப் பொடியன்- ஜோ'வாகவும், அவரை அந்தக் கதை சொல்லும் தாத்தாவாகவும் கற்பனை பண்ணிப் பார்த்தேன்.. ஹோ..ஹோ..ஹோ..!! :):):)

      Delete
    4. ஓசியிலே ஆப்புளை ஆட்டையைப் போட முயற்சித்து, பொளேரென்று புறங்கையில் சாத்து வாங்குற ஜோவா நானும் நினைச்சுப் பாத்தேன்.. ஹீ ..ஹீ ..ஹீ !

      Delete
    5. //இனிவரும் காலங்களில் முடிந்த அளவு ஒரு break (ஓரு வாரமாவது) கொடுத்து விட்டு ஓய்வெடுங்கள்.//

      ஒரு வாரமென்பது இப்போதைய அட்டவணைப்படி கிட்டத்தட்ட ஒரு மாசத்து இதழ்களின் பணிக்குச் சமானம் ; அந்தளவுக்கெல்லாம் நடப்பு அட்டவணையில் காலியிடம் நஹி சார் ! காத்திருக்கும் 2022 -ல் திட்டமிடல்களை சற்றே practical ஆக அமைத்துள்ளேன் ; பார்க்கலாமே !

      Delete
    6. // என்னை 'பயங்கரப் பொடியன்- ஜோ'வாகவும், அவரை அந்தக் கதை சொல்லும் தாத்தாவாகவும் கற்பனை பண்ணிப் பார்த்தேன் //

      :-)

      Delete
    7. சார் மனசு சந்தோசமா இருந்தாலே உடம்பு சரியாயிடும் தா..ஆனாலும் தேவைப்பட்டா தயங்காம ஓய்வெடுங்க

      Delete
  48. விஜயன் சார், பதிவில் கண்மணி கவிதையை படிக்க ஆரம்பித்த உடன் ஆகா ஏதோ கவிதை போட்டி போல தெரிகிறது திருச்செந்தூர் முருகனே இந்த பொன்ராசுக்கிட்ட இருந்து நீதான் எங்களை எல்லாம் காப்பாற்ற வேண்டும் என நினைத்து கொண்டு படித்தேன். நல்ல வேளை நீங்கள் அப்படி ஏதும் அறிவிக்கவில்லை; காப்பாற்றி விட்டீர்கள் பொன்ராசுவிடமிருந்து நன்றி :-)

    ReplyDelete
    Replies
    1. இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் ஒரு பாட்டை உல்ட்டா பண்ணி எழுதியிருக்கார் பாருங்களேன்?!!
      சவாலான வேலைகளுக்கு நடுவே ஹாஸ்யமாய் பதிவு போடுவது - இன்னொரு திறமை!!

      Delete
    2. திறமையா? பொறாமை!!!

      போன பதிவில ஷெல்லி ரேஞ்சுக்கு நீங்க கவிதை எழுதுனவுடனே பதிலுக்கு பைரன் ரேஞ்சுக்கு எசப்பாட்டு பாடிடனும்னு பேனாவை எடுத்துப்புட்டாரு பாத்தீங்களா? :-)

      ஆனாலும் நீங்க தீர்க்கதரிசி ஈவி !!!

      காட்டாற்று கவிதை பதிவுன்னு தலைப்புதான் இல்லையே தவிர நீங்க சொன்னமாரி கவிதையோடத்தான் பதிவே ஆரம்பிச்சிருக்கு பாத்தீங்களா?

      Delete
    3. ///திறமையா? பொறாமை!!!///

      நினைச்சேன்! போனவருசத்துக்கு முந்தின வருச தீபாவளிக்கு எல்லோருக்கும் கொரியர் டப்பிக்குள்ள ரவுண்டு பன்னு வச்சு அனுப்பியிருந்தாரர்.. ஆனா எனக்கு மட்டும் பன்னுல பேதி மருந்து கலந்திருந்ததை 'அனுபவிச்சப்பவே' நினைச்சேன்!

      /// ஆனாலும் நீங்க தீர்க்கதரிசி ஈவி ///

      இதுக்கு மின்னாடி லட்சக்கணக்கானோர் இதைச் சொல்லியிருந்தாலும், நீங்க சொல்லும்போது சந்தோசப்படாம இருக்க முடியலீங்க செனா அனா!!! :)

      Delete
    4. ஒரு பெஸல் பாயசத்தை இந்த தீவாளிக்கு ஈரோட்டுப் பக்கமா போட்டுப்புட வேண்டியது தான் !

      மைதீன்...அந்த குண்டா சட்டியை சித்தே கீழே இறக்குப்பா...!

      Delete
    5. //ஒரு பெஸல் பாயசத்தை இந்த தீவாளிக்கு ஈரோட்டுப் பக்கமா போட்டுப்புட வேண்டியது தான் !

      மைதீன்...அந்த குண்டா சட்டியை சித்தே கீழே இறக்குப்பா//


      :-)))))

      Delete
    6. ///ஒரு பெஸல் பாயசத்தை இந்த தீவாளிக்கு ஈரோட்டுப் பக்கமா போட்டுப்புட வேண்டியது தான் !///

      பன்னே பாயசம் மாதிரி ஆகிடுச்சு!
      இப்போ டைரக்டா பாயசமேவா?!! தொலைஞ்சேன்!

      Delete
    7. விஜயை பார்க்க பாவமா இல்லையா, இல்ல அவரு இன்னும் ஒரு (ரவுண்டு பன்னு ) கப் பாயசம் கேட்ட போதுதான் பாவமாக இருந்தது :-)

      Delete
    8. // சவாலான வேலைகளுக்கு நடுவே ஹாஸ்யமாய் பதிவு போடுவது - இன்னொரு திறமை!! //

      உண்மை விஜய்! இந்த திறமைதான் அவரால் நம்மோடு மல்லுக்கட்ட முடிகிறது அதே நேரம் நம்மை மகிழ்விக்கவும் முடிகிறது.

      Delete
    9. எல் தம்பி ஊர்லதான ருக்க....அடுத்த வாரம் கவிதையோட வர்ரேன் ...ஈவி உடுங்க இன்னொர் கவிதை....பின்னால் நானும் வாரேன்

      Delete
  49. சில மாதங்களுக்கு முன் 14 வயதிற்கு உட்பட்ட உறவுக்கார பொடிசுகளுக்கு கொடுக்கலாமே என்று ஏதோ ஒரு வேகத்தில் எக்கச்சக்கமாய் நமது கார்ட்டூன் காமிக்ஸ் இதழ்களை வாங்கித் தள்ளியிருந்தேன். தற்போது தான் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அள்ளிக் கொடுக்காமல், ஆளுக்கு நாலு என ஸ்மர்ப்ஃஸ், லக்கி லூக், சிக்பில், மதியில்லா மந்திரி தலா ஒவ்வொன்று கிள்ளிக் கொடுத்தேன். சில வருடங்களுக்கு முன்பும் இப்படி ஒரு முயற்சி நடந்து, படுதோல்வியில் முடிந்திருந்தாலும், தற்போது அவர்கள் தமிழ் ஓரளவுக்குப் படிக்கிறார்களே என்ற பெரு நம்பிக்கை இருந்தது.

    ஏழாவது படிக்கும் பயல், சிக்பில் ஓரிரு வரிகளை மட்டும் படித்து விட்டு, "ஒண்ணும் புரியலை" என்று மூடி வைத்து விட்டான். ஒன்பதாவது படிக்கும் பெண், ஸ்மர்ப்ஃஸில் சற்றே ஈடுபாடு காட்டியதோடு சரி.

    இது சரிப்படாது என, "யார் முழுசா படிக்கறீங்களோ, அவங்க என்ன கேட்டாலும் அதை வாங்கித் தறேன்" என ஆசையைத் தூண்டிப் பார்த்தேன். அவ்வளவு தான், ஆளுக்கு ஒரு மூலையில் படிக்க அமர்ந்தார்கள். ரொம்பப் பெருமிதமாக இருந்தது.

    ஆறாவது படிக்கும் என் பையன், வழக்கம் போல, தனக்கும் வாசிப்புப் போட்டிக்கும் எந்த தொடர்புமில்லை என்ற மிக மிகத் தெளிவான புரிதலுடன் அதி  உற்சாகமாக மற்ற இருவரையும் ஊக்குவித்துக் கொண்டிருந்தான் - 'ஐபோன் கேட்டுப் பாரு" என்றவனை, "அடேய், பட்ஜெட் ஐநூறு தான்" என்று அடக்கினேன்.

    அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், ஏழாவது படிப்பவன், "ஒண்ணுமே புரியல போ" என்றான். "சரிடா, சிக்பில் எல்லாம் ஒனக்கு சரிப்படாது... கொஞ்சம் லக்கி லூக்கை படியேன், நா வேணா படிச்சுக் காட்டுறேன்" சொல்லிக் கொண்டிருக்கும் போதே "ம்ச், ஒரு பக்கம் கூட புரியல" என்று ஆர்வமின்றி பேசினான்.

    ஒன்பதாவது படிக்கும் பெண், கிட்டத்தட்ட பத்து பக்கங்களைத் தாண்டி விட்டிருந்தாள்... சில வரிகளை, வசனங்களை புரிந்து கொள்ளத் தடுமாறினாலும், ஏற்கனவே பொடி பாஷை பற்றி விளக்கி இருந்திருந்ததால், ஆர்வத்துடன் பொடித்துக் கொண்டிருந்தாள்.

    அப்புறம், டீ, காபி, பலகாரம் என களை கட்டியது. அப்போது மூடி வைத்தவள் தான். நானும் ஒரேடியாக திணிக்க வேண்டாமே என விட்டு விட்டேன். காலையில் கேட்டதிற்கு, "அதான் நேத்தே போட்டியெல்லாம் முடிஞ்சிருச்சே, யாரும் ஜெயிக்கலியே, இப்ப ஏன் படிக்கணும்" என்று கேட்டாள்.

    ஆறாவது படிக்கும் என் பையன், "அப்பாட்ட நெறைய புக்ஸ் இருக்கு" என்றவாறே, மூலையில் சிதறிக் கிடந்த புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

    ReplyDelete
    Replies
    1. Smashing'70s முயற்சி not misdirected என்ற ஊர்ஜிதம் கிட்டும் இன்னொரு மொமெண்ட் #

      Delete
    2. வருத்தமான உண்மை ..

      ஆனால் நகைச்சுவையான எழுத்து நடை..

      உங்கள் எழுத்தை அதிகம் மிஸ் செய்கிறோம் கார்த்திக் சோமலிங்கம் சார்...:-)

      Delete
    3. ம்ம்... நமது கேப்ஷனை, "முப்பத்தேழில் இருந்து தொண்ணூற்றேழு வரை" என்று மாற்றி விடுங்கள் சார்! ஒரு பயலும் படிக்க மாட்டான் என்று சொல்லவில்லை, நமது வாசகர் வட்டத்திலேயே, தத்தம் பிள்ளைகளை தமிழ் காமிக்ஸ் படிக்க வைத்த சாதனையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் (எடுத்துக்காட்டாக, நமது பரணி ஃப்ரம் பெங்களூரு டு தூத்துக்குடி!). ஆனால், எண்ணிக்கையில் மிகக் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை.

      தவறான, பொதுப் படுத்தலாகவே இருந்து விட்டுப் போகட்டும், CBSE / ICSE பயல்களை இதற்குள் இழுப்பது (என் மகன் உட்பட) இயலாத காரியமாகவே படுகிறது.

      @பரணி K - எழுத்தை மட்டுமல்ல, நான் வாசிப்பையுமே கூட மிஸ் செய்கிறேன், எப்போது முந்தைய உற்சாகம் வரும் என்பது தான் தெரியவில்லை! :)

      Delete
    4. உற்சாகம் உடலளவில் இல்லை என்றால் மனம் ஒத்துழைக்காது ஐயா...
      நான் எனது மகளுக்கும் மகனுக்கும் புத்தகங்கள் பொதுவான சொத்து என்று சொல்லிவிட்டேன்...

      Delete
    5. //முப்பத்தேழில் இருந்து தொண்ணூற்றேழு வரை" என்று மாற்றி விடுங்கள்//

      வாசிப்பை "வீசம்படி என்ன விலை ?" என்று கேட்பதே இன்றைய (பெரும்பான்மை) பாலகர்களின் அடையாளங்கள் என்றாகி விட்டது சங்கடமான நிஜமே கார்த்திக் !

      அட, 23 வயதிலான எனது அக்கா புள்ளையாண்டனிடம் நீங்கள் செய்து பார்த்ததையெல்லாம் செய்து பார்த்து கணிசமாக பல்ப் வாங்கிய அனுபவமும் உண்டு ! மொழிக்குத் தரப்படும் மருவாதையும் ; சாதனங்களின் முன்னே பொஸ்தவங்கள் கவ்வும் மண்ணையும் பார்த்த போது - "இதுவும் கடந்து போகும் " என்று சொல்லிக் கொண்டேன் !

      என்ன - அந்த "இது " எதுவென்பது தான் முக்கால் டாலர் கேள்வி !!

      Delete
    6. பலனளிக்கவில்லை என்றாலும் எடுத்துக்கொண்ட முயற்சிக்காக உங்களைப் பாராட்டலாம் கார்த்திக்!

      Delete
    7. நாங்க எப்படியோ வாசிக்கும் வழக்கத்தை நல்லாவே விதைச்சுட்டோம். 3 வயதிலிருந்து இரவே வேளைகளில் தினம் ஒரு புக்கை வாசித்துக் காட்டி விட்டுத்தான் தூங்குவது (வீட்டம்மாவுக்கு) வழக்கம். இப்போது சிறுகதைகள், டிங்கிள், காமிக்ஸ் தாண்டி நாவல்கள் வரை முன்னேறியாச்சு. இது முடிந்தளவு டிவைஸ்களில் செலவழிக்கும் நேரத்தை எபெக்டிவாக குறைத்து விட்டது.
      லயனில் வந்த பழய ஆர்ச்சி ஸ்பைடர் கதைகள
      மூன்று எடுத்து படிக்க இந்த வாரம் குடுத்துள்ளேன்.

      என்ன ஒரே குறை படிப்பதெல்லாம் ஆங்கிலம் தான். தமிழ் கற்றுக் கொடுப்பது என்னுடைய பொறுப்பாக இருந்தது. மேத் மற்றும் அறிவியல் வீட்டுப்பாடங்கள் சொல்லித்தரவே எனக்கு நேரம் போதவில்லை என்பதால் தமிழை ஸ்கிப் பண்ணிட்டேன்.

      Delete
    8. //3 வயதிலிருந்து இரவே வேளைகளில் தினம் ஒரு புக்கை வாசித்துக் காட்டி விட்டுத்தான் தூங்குவது (வீட்டம்மாவுக்கு) வழக்கம்.//

      Clap !! Clap !! Clap !!

      Delete
    9. @மகேந்திரன் பரமசிவம் / ராகவன்: அருமை, இந்தப் பொறுமை அனைவருக்கும் வாய்ப்பதில்லை... ஆங்கிலம் என்றால் இங்கேயும் ஓரளவுக்குப் வாசிக்கிறான் தான்! Pokemon இரண்டு மூன்று கலெக்ஷன்களைப் படித்துத் தள்ளி விட்டான்!

      @ஈ.வி: அங்கே நிலவரம் எப்படியோ?

      @ஜே: ம்ம்.. அதுவும் சரி தான்!

      Delete
    10. பாராட்டுக்கள் நண்பர்களே...கார்த்தி நீங்க ஸ்பைடர் ஆர்ச்சி மாயாவிய தந்திருக்கனும்

      Delete
  50. அது ஒரு கொரோனா கால கருமிரவு...

    அலுவலகம் டூ வீட்டிற்கு இரு சக்கர வாகனம் பயணத்திலிருந்தேன்...டர்ய்ர்ர்ரடடட்...


    பெட்ரோல் போட மறந்ததன் விளைவு
    ஹோண்டா ஆக்டிவா ஓரமாக நின்று விட்டது.பங்க்...எந்த பக்கம் போனாலும் ரெண்டு கிலோமீட்டர்...
    போனை எடுத்து மகனாரிடம் சொல்லி பாட்டிலில் பெட்ரோல் வாங்கீட்டு வர சொன்னதுக்கே திட்டு...
    வர்றேன் அது வரைக்கும்...நில்லுங்க...
    மெதுவாக தள்ளிக்கொண்டு போகலாம் என்றால் முதுகுப்பை நிறைய வெயிட்...(வெங்காயம்... கத்திரிக்காய் 🍆 தக்காளி...நற...நற...)
    இத்தனக்கும் காலைலயே மகரிடம் பேங்க் போய்ட்டு வரும் வழியில் பெட்ரோல் போட்டு வரச் சொல்லியிருந்தேன்...இளைய தலைமுறை நம்மளவிட நெம்ப ஞாபகம் சாஸ்தி...

    இருட்டாக வேற இருக்கு...பை நெறைய பழைய காமிக்ஸ்...காய்கறி ...இத்யாதி...

    ReplyDelete
    Replies
    1. கொஞ்ச தூரம் தள்ளி சோகமா நின்னுட்டிருந்த தெருவெளக்குக்கு வரைக்கும் நைஞ்சி போன மனசோடு தளர்ந்து போன ஒடம்பயும் ஆக்டிவாவையும் சேத்து தள்ளிக்கிட்டு போனேன்...நெம்ப கஷ்டப்பட்டு நடுஸ்டாண்டப் போட்டு வண்டிய ஆசுவாசப்படுத்தீட்டு வாட்டர் பாட்டில்ல மிச்சமிருந்த தண்ணிய ஊத்தி கிட்டேன்...பையத் தொறந்து " பாதாள நகரம்" மாயாவி புக்க எடுத்து படிக்க ஆரம்பிச்சேன் வேர்வைய தொடச்சபடிக்கே...நைட் பத்தரை...
      போலீஸ் ஜீப் என்னய கடந்து போனத பாக்கல...நிறுத்தி ரிவர்ஸ்ல வந்த வண்டி எம்பக்கத்துல டுர்ருர்ர்ய்ர்ரிட்டு நின்றபிறகே நிமிர்ந்தேன்...

      யாரேப்பா நீ... லாக் டவுன்ல இந்நேரத்துல என்ன பண்ற?...(மரியாதைய கவனிங்க...)
      ஒண்ணுமில்ல...வண்டி பெட்ரோல் தீந்து போச்சி...எடுத்திட்டு வரச்சொல்லீரேக்கன்...)
      இந்நேரம் எந்த பெட்ரோல் பங்
      தொறந்திருக்கு..‌.கெளம்பு மொதல்ல!!!
      பெட்ரொல் வந்ததும் ஊத்தீட்டு கெளம்பீர்றேன்..‌.
      யார் நீங்க?
      இண்டியின் ஆயில்...
      அது என்ன கைல...
      காமிக்ஸ் புக்...
      அந்த பைல என்ன வச்சிருக்கான்னு பாத்துட்டு வாம்மா...

      Delete
    2. கருப்பா (அழகா இல்லாத)ஒரு குண்டு பெண் போலீஸ் பின் கதவ தெறந்துககட்டு ஆஜரானாங்க...பழைய திறந்து காட்டினேன்...
      கத்திரிக்கா வெங்காயம் தக்காளி 🍅 இருக்கு சார்...
      கீழ என்ன இருக்கு பாரூ...
      புஸ்த்தகமா இருக்கு சார்...
      பைய கொண்ட்டு வா...
      ஏம்ப்பா ஈஸ்ட் ஸ்டேஷன்ல வந்து பைய வாங்கிக்க...
      சாரி...பைய தர்ற மாதிரி இல்ல...முடியாது...அதுக்குள்ள நெறைய காமிக்ஸ் வச்சிருக்கேன்...தர மாட்டேன்...எதுக்காக பைய எங்ககிட்ட தரணும்?என்ன காரணத்துக்காக பைய நீங்க எடுத்துகிட்டு போகணும்?என்ன ரீஸன்?

      Delete
    3. யதார்த்தத்தின் முகம் J சார் !

      Delete
    4. இந்நேரத்தில் மகரின் போன் நம்பரை ஒன் பிளஸ் எய்ட் புரோவில் தட்டியிருந்தேன்..‌.
      உடனே ஆபீஸ் பணியாளர்கள் எல்லோருக்கும் போன் போயிருந்தது...
      எல்லோரும் சம்பவ இடத்துக்கு ஒருவர் பின் ஒருவராக சர்ரென்று வரத் தொடங்கியிருந்தனர்...
      போலீஸ் தரப்பில் ஒருவரும் மாஸ்க் அணியவில்லை...
      நான் டபுள் மாஸ்க்..‌.
      என் கம்பெனி ஆட்களும் மாஸ்க்கிலிருந்தனர்...போலீஸ் வண்டிக்கு முன்னால் மூன்று பைக்கும் பின்னால் எல்லோரும் நின்று கொண்டிருந்தனர்...கூட்டம் வந்தவுடன் எஸ் ஐயின் லாங்குவேஜில் மாற்றம்..‌.

      சார் யாருப்பா?
      எங்க ஓனரூ...
      என்ன ஓனரூ...
      இன்னாரென்று சொல்லப்பட்டதும்...சார் மொதல்ல மே சொல்லீருக்கலாம்ல...என்று கதவ திறந்து கொண்டு இறங்கினார்...
      நீங்க இதுவரைக்கும் பேசினப்ப என்ன பண்றீங்கன்னு கேக்கலையே...எதுக்கு நிக்கிறன்னு கேட்ட நீங்க அது கேக்கலையே...வண்டிய்ல Essential sevices ஒட்டீருக்கமே ஏன் பாக்கலை...பைய எதுக்கு பிடுங்கணும்? என்று நான் கேட்க அப்பொழுது தான் ஆஜராகியிருந்த என் மகருக்கு
      கோவம் வந்திட்டு...
      நேரே எஸ்ஐயிடம் போனவர், நீங்க ஏன் மாஸ்க் போடல...பதில் சொல்லுங்க...
      வண்டிய்ல இருக்கு...
      எதுக்கு அங்க இருக்கு...
      மாஸ்க் போடலைன்னு 200ரூவா ஃபைனல் போட்றீங்க...அப்ப ஒங்களுக்கு யாரு பைன் போட்றது... ஒங்களுக்கு கொரோனா வராதா..‌.இதற்குள் பெண் போலீஸ் மாஸ்க் மாட்டிக் கொண்டார்.‌‌..



      Delete
    5. போலீஸ் மகத்துவம்...
      மெய்க் கதை...
      J

      Delete
    6. ம்ம் இதுதான் நிஜம் ஜனா

      Delete
    7. J ji.. காய்கறிகளும், காமிக்ஸ் புத்தகங்களும் இருந்த பையை ஒரு போலீஸ்காரர் தன்னோட கஸ்டடிக்கு கொண்டுபோக நினைச்சிருக்கார்னா.. எனக்கென்னமோ அது நம்ம JSC Johnyயாத்தான் இருக்கும்னு தோனறது! :D

      Delete
  51. நயாகரா வில் மாயாவியிலிருந்து தீவை மீட்ட தீரன் வரையிலான கலெக்ஷன்ஸ்... கொரானோ கொடும் பிடி கெடுபிடிக்கு படிச்சி தப்பிக்க போன வருஷம் ஆபீஸ்க்கு கொண்டுட்டு போன சரக்கு...

    தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்...

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கு வந்து சகதர்மிணி ட்ட வசவெல்லாம் வாங்கி( பெட்ரோல் போட துப்பில்ல)
      மொத்த கழுவீட்டு சாப்ட ஒக்காந்தா...ுு "உப்மா"...

      நைட் பன்னெண்டு மணிப்பா...

      Delete
    2. அழுகையா சிரிக்கவா தெரியவில்லை ஜனா. உங்களின் எழுத்து நடை அருமை.

      Delete
    3. போலீஸ்ட்ட வீர வசனம் பேசும் ஆம்பளக்கி வீட்ல, " சிங்கப் பெண்ணே... சிங்கப் பெண்ணென்னு" மனசுக்குள்ள பாட மட்டுமே முடிஞ்சது பரணி

      Delete
  52. புஸ்தக வாசிப்பை பொறுத்த மட்டில் எங்கள் வீட்டில் கொஞ்சம் பரவாயில்லை. மகள் அமர் சித்ரா கதா / tinkle படித்துக்கொண்டிருக்கிறாள். yakari பல ஆல்பங்கள் படித்துத் தீர்த்தாள்.
    விரைவில் தமிழ் பக்கம் இழுக்க இருக்கிறேன்.

    மகனும் வயது குறைவால் இன்னும் காமிக்ஸ் அளவிற்கு வரவில்லை. எனினும் ஓரிரு யகாரி ஆல்பங்கள் படித்து பார்த்திருக்கிறேன். Geronimo and Thea Stilton remain favourites to both of them.

    என் தந்தை, மனைவி, நான் என்று எல்லோரும் எப்போதும் ஏதாவது ஒரு புஸ்தகமும் கையுமாய் இருப்பதால் இது சாத்தியமாகிறது.

    ReplyDelete
  53. The லயன் 400. ஒரு மைல்கல் இதழ். இதில் இடம் பிடித்திடும் 'புத்தம் புது பூமி வேண்டும்' கதையும் ஒரு சிறப்பைத் தாங்கி நிற்கிறது. யெஸ், டெக்ஸின் நீண்ட பக்கங்களைக் கொண்ட கதை வரிசையை லிஸ்ட் செய்தோமென்றால், முதல் பத்திடங்களில் இக்கதை 10-வது இடத்தைப் பிடிக்கிறது.

    இதற்கு முன் பார்த்திட்ட டெக்ஸின் 70-வது ஆண்டு சிறப்பிதழாக வந்த "டைனமைட் ஸ்பெஷலில்" இடம் பிடித்த "புயலுக்கொரு பிரளயம்" 2-வது இடத்திலும், தீபாவளி மலராக வந்திட்ட "சர்வமும் நானே" 7-வது இடத்திலும் & விரைவில் பார்க்கவிருக்கும் "புத்தம் புது பூமி வேண்டும்" 10-வது இடத்தையும் ஆக்கிரமிக்கின்றன. இன்னும் நாம் பார்த்திடாத அந்த 7 கதைகள் என்னவாகயிருக்கும் என்று யதார்த்தமாக எழும் அந்தக் கேள்விக்கு இங்கு பதிலையும் சொல்லி விடுகிறேன்.

    This is the Tex Willer's Top 10 list of Longest Adventure:

    1. Ritorno a Pilares, கதை-Nolitta, ஓவியர்-Letteri, வெ. எண்:387-392, 586-பக்கங்கள்.
    2. Il Grande Intrigo கதை-GL Bonelli, ஓவியர்-Nicolo, வெ. எண் :141-145, 511-பக்கங்கள்.
    3. L'uomo con la frusta, கதை- Nizzi, ஓவியர்கள்- Fusco & Civitelli, வெ. எண் : 365-369, 504-பக்கங்கள்.
    4. La storage di Red Hill, கதை- Nolitta, ஓவியர்கள்- Giolitti & Ticci, வெ. எண் : 431 - 435, 461-பக்கங்கள்.
    5. Athabasca Lake, கதை- Nizzi, ஓவியர்-Fusco வெ. எண் : 530 -533, 440-பக்கங்கள்.
    6. L'ombra di Mefisto, கதை- GL Bonelli, ஓவியர்-Galep, வெ. எண்.265 - 268, 401-பக்கங்கள்.
    7. El Supremo, கதை-Boselli, ஓவியர்-Dotti, வெ. எண்:637-640, 395-பக்கங்கள்.
    8. Trapper, கதை- GL Bonelli., ஓவியர்-Nicolo, வெ. எண் : 193 - 196, 390-பக்கங்கள்.
    9. Missione a Great Falls, கதை- Nolitta, ஓவியர்-Fusco, வெ. எண்:203-207, 381-பக்கங்கள்.
    10. Terra Promessa (Promised Land) கதை- GL Bonelli, ஓவியர்-Ticci, வெ. எண் :146 - 149, 375-பக்கங்கள்.

    எண்னற்ற கதாசிரியர்கள், ஒவியர்கள் டெக்ஸ்க்குப் பணிபுரிந்துள்ளார்கள் தான். ஆனால் ஒரே கதைக்கு 2 ஒவியர்கள் பணி செய்துள்ளனர் இந்த TOP 10 List ல் இடம் பிடித்துள்ள 2 கதைகளுக்கு, நமக்கிது ஒரு ஆச்சரியமான ஒரு விஷயம் கூட. அதில் முதலாவது, 3-வது இடத்தில் உள்ள கதைக்கு முதல் பாதிக்கு Fusco and மீதமுள்ளக் கதைக்கு civitelli-யும். அதைப் போல். இரண்டாவதாக 4-வது இடத்தில் உள்ள கதைக்கு முதல் பாதிக்கு Giolitti மீதமுள்ள கதைக்கு Ticci என இரு ஒவியர்கள் கைவண்ணத்தைக் காட்டியுள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! 'புத்தம் புது பூமி வேண்டும்' டெக்ஸின் டாப்-10 லிஸ்ட்டில் 10வது கதையா?!! செமயா இருக்கும்போலிருக்கே!!

      அட்டகாசமான தகவல்களுக்கு நன்றி மொய்தீன் சார்!!

      டாப்-10 லிஸ்ட்டில் இன்னும் 7 கதைகள் பாக்கியா?!! சொக்கா!!!!

      எடிட்டர் சார்.. உங்கள் தரப்பிலிருந்து ஏதேனும் கருத்துக்கள்?!!

      Delete
    2. மேற்படிப் பட்டியல் - கதை நீளங்களின் டாப் 10 சார் !

      இதனிலொரு சுவாரசியம் உண்டு ; அதனை மொய்தீன் சார் கவனிக்காது போனது ஆச்சரியமே ! புதுயுகக் கதாசிரியர் போசெல்லி & கிளாடியோ நிசி பணி செய்துள்ள 3 நெடுங்கதைகள் நீங்கலான பாக்கி ஏழுமே - பிதாமகர் போனெல்லி & அவரது மகன் செர்ஜியோ போனெல்லின் கைவண்ணங்களே ! NOLITTA என்பது புதல்வர் செர்ஜியோவின் புனைப்பெயரே ! டாடியின் பெயரோடு தனது பெயரை வாசகர்கள் குழப்பிக்க வேண்டாமென்று நினைத்தவராக மாற்றுப் பெயரில் எழுதி வந்தார் !

      சுவாரஸ்யங்களின் அடிப்படையிலான லிஸ்ட் ஆளாளுக்கு மாறுபட்டாலும், சகலத்திலும் "கார்சனின் கடந்த காலம்" இடம்பிடித்து நிற்கிறது !

      Delete
    3. And இந்த "நீண்ட கதை" லிஸ்ட்டில் 2 கதைகள் நம் வசம் உள்ளன ; சந்தர்ப்பம் சரியாக அமையும் போது களம் கண்டிடும் !

      Delete
    4. // "நீண்ட கதை" லிஸ்ட்டில் 2 கதைகள் நம் வசம் உள்ளன ; சந்தர்ப்பம் சரியாக அமையும் போது களம் கண்டிடும் ! //

      Appadi podu!

      Delete
    5. எடிட்டர் சார்! செமயான தகவல்கள்!!

      Delete
    6. ///மேற்படிப் பட்டியல் - கதை நீளங்களின் டாப் 10 சார் !
      ///

      ஆமாம் சார்! மொய்தீனும் அதைப் போட்டிருக்கார்.. நான்தான் சரியா கவனிக்கலை!

      Delete
    7. சார், அடுத்தாண்டு அந்த 2 கதையைப் போட்டு விட்டு, அதற்கு அடுத்தாண்டு டெக்ஸின் 75வது ஆண்டில் மீதமுள்ள 5 கதைகளையும் தனித்தனி குண்டு புக் ஸ்பெஷலாக போட்டு முடித்து விடுங்கள்.

      Delete
    8. "போட்டு முடித்து விடுங்கள் " என்பதை என்ன மெரியான மாடுலேஷனில் எடுத்துக் கொள்வதென்ற ரோசனை சார் !

      Jokes apart - இந்த அசுர நீளங்களுக்குள் பணியாற்ற ஒரு லோடு க்ளுக்கோன் D தேவையாகின்றன சார் ! தற்சமயமாய் டேங்க் காலி !

      Delete
    9. And இந்த "நீண்ட கதை" லிஸ்ட்டில் 2 கதைகள் நம் வசம் உள்ளன ; சந்தர்ப்பம் சரியாக அமையும் போது களம் கண்டிடும் !

      2022 Kodai Malar and Deepavali sir :-) :-) :-) :-)

      Delete
    10. மேலே உள்ள பட்டியலில 2 கதைகள் கைவசமுள்ளன, ஆனால், அதில ஒன்று மெபிஸ்டோவான்னு நான் கேட்கல.

      Delete
  54. டைகரின் கதைகள், ஜேம்ஸ் கேமரானின் படங்கள் போலபார்த்துப் பார்த்து பொறுமையாக ஆஸ்கர்குவாலியிட்டியில்செதுக்கப்பட்டவைடெக்ஸ்வில்லர் கதைகள் ஸ்பீல் பெர்க்படங்கள்போலஅனைத்துமே ஆஸ்கர் குவாலிட்டி என்றுசொல்லமுடியாவிட்டாலும்பல கதைகள் ஜேம்ஸ் கேமரூன் குகுவாலிட்டிதான். ஸ்பீல் பெர்க்கின்படங்கள் பிற டைரக்டர்களின் படங்களைவிட தரத்திலும் வசூலிலும் ஒருபடிஉயரேவேஇருக்கும். அது போல டெக்ஸ் வில்லர் கதைகளும் பிற கதைகளைவிடதரத்திலும் விற்பனையிலும்பலபடிகள் உயரேவே இருக்கின்றன. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஒப்பீடு ராஜசேகர் ஜி!

      Delete
    2. செம செம ராஜசேகரன்.

      Delete
  55. தேங்க்ஸ் நண்பர்களே. கரூர்

    ReplyDelete
  56. சார் ஆகஸ்ட் மாத புத்தகங்கள் எப்போது கிளம்பும்??? 9 அல்லது 10?? அதற்கு முன்பாகவே???

    ReplyDelete
    Replies
    1. முடிஞ்சா சீக்கிரம் அனுப்புங்க... அடுத்த லாக் டவுனுக்கு தயாராகுது நம்ம ஊரு ...

      Delete
  57. சார் அருமை....அவசியமான தருணங்களில் ஓய்வெடுத்துக்கங்க....டெக்ஸ் அட்டைப் நின்னுது...ஏகப்பட்ட நகாசு வேலைக் போல ...என்னைக்கு வருது....அந்த புக் ஃபேர் ஸ்பெசல் சொல்லலயே

    ReplyDelete
  58. மூன்றாம் அலை துவங்குதற்கான அறிகுறிகள் தெரிய துவங்கிவிட்டன...

    சிறப்பு மருத்துவ வாட்ஸ் அப் குழுமங்களில் பிரஸிடெண்ட்கள் எச்சரிக்கை அளிக்க துவங்கி விட்டனர்..

    அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்..

    Avoid mass gathering at any cost..

    Follow usual protocols...

    ReplyDelete
    Replies
    1. இங்கே சென்னையில் நான் வேலை செய்யுமிடத்தில் 9 தேதி வரை முழு லாக்டவுன் கடைகள் மூட உத்தரவு ஆல்ரெடி லாக் டவுன் ஆரம்பமாயிடுச்சி புத்தகங்கள் கையில் கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படுமோ என பீதியில் இருக்கிறேன் புனித மானிடோவின் அருள் கிடைக்குமா புத்தகங்கள் கையில் கிட்டுமா

      Delete
    2. கவனமாக இருங்கள் சத்யா.

      தகவலுக்கு நன்றி செல்வம் அபிராமி.

      Delete
    3. தகவலுக்கு நன்றிங்க சார்...

      Delete
  59. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கும்,
    வாசக நல் உள்ளங்களுக்கும் வணக்கம்....

    லயனுக்கு நான் அனுப்பும் முதல் மின்னஞ்சல் இது.

    லயன் காமிக்ஸ் 400 வது இதழ்.
    "புத்தம் புது பூமி வேண்டும்".

    முதல் இதழ் வாங்கியபோது இந்த சிங்கக்குட்டியை தடவிய சந்தோஷம்,
    இன்று வளர்ந்து நிற்கும் இந்த 400 வது இதழை பாக்கும்போது வருகிறது.

    ஆரம்பத்திலிருந்து சுமார் 8 வருடங்களுக்கு மேல்
    தீவிர வாசகனாக இருந்தாலும்,
    இன்றைய வாசகர்கள் இந்த சிங்கத்தின் மேல் வைத்திருக்கும் அன்பை பாக்கும்போது,
    (லயன் வருகிறதா? இல்லையா என தெரியாமல்,)
    சி(ப)ல வருடங்கள் இந்த சிங்கத்தை விட்டு பிரிந்த வலி காணாமல் போய் விட்டது.

    உங்களுக்கு பலமுறை வாசகர் கடிதங்கள் எழுதி கிழித்துப் போட்டிருக்கிறேன்.
    வீட்டிற்கு தெரிந்தால் லயனை படிக்க விடமாட்டார்கள் என்று.

    ஆனால் வசதி வாய்ப்புகள் வந்தபோது
    இந்த சிங்கத்தை விட்டு சில வருடங்கள் விலகும்படி ஆனது.

    மீண்டும் என்னை, இந்த வளர்ந்த சிங்கத்துடன் இணைத்த பெருமை
    "முகநூல் காமிக்ஸ் குரூப்" களின் முகமறியாத நட்புக்களையே சேரும்.
    லயன் இதழ்களைப் பற்றி,
    இதன் இன்றைய வளர்ச்சியை பற்றி,
    எப்பொழுது கேட்டாலும் ,
    தயங்காமல்,சளைக்காமல் பதில் தந்த,
    காமிக்ஸ் குழுக்களின் நட்புக்கள்
    மகேந்திரன் பரமசிவம், கலீல் கலீல் அஹ்மத்,
    சிவக்குமார் சிவா திருப்பூர்,
    பாபு,ரஃபிக் ராஜா,
    மற்றும் குழுவில் முதல்முதலாக அறிமுகமாகிய
    சேலம் டெக்ஸ் விஜயராகவன்.
    மற்றும் உங்களின் இந்த வலைதளத்தை அறிமுகப்படுத்திய இனிய நண்பர்
    பாபு, மற்றும்
    ஆசிரியயுடன் இப்படியொரு தொடர்பு உள்ளது என தெரிவித்த திருப்பூர் சிவக்குமார் சிவா.
    அனைவருக்கும் நெகிழ்வான நன்றிகள்.

    இவர்கள் மூலம் உங்களுடன் இணைந்தபோது,
    மீண்டும் 85 க்கே வந்துவிட்ட உணர்வுதான்
    மனதில் உள்ளது.
    2 ரூபாயை,இதழுக்காக மாதம் வரை சேமித்த கஷ்டமும்,சிரமமும் லயனை கையில் வாங்கினால் காணமல் போகும்.

    அன்று மனதில் இருந்த பரபரப்பு
    இந்த இதழின் முன்னோட்டத்தை பார்த்தபோது எப்ப வரும்,
    வாங்கலாம் என தோன்றியது.
    வாழ்த்துக்கள் லயன்.

    மிகச் சிறப்பான அட்டைப்படம்.
    400 வது இதழ். வாழ்த்துக்கள் லயன்.

    ஹப்பா....
    எத்தனை இடையூறுகள்,
    எத்தனை மேடு பள்ளங்கள்,
    எத்தனை சுக துக்கங்கள்,
    எத்தனை விமர்சனங்கள்,

    இவை அனைத்தையும் தாண்டி
    400 வது மைல் கல்லை தொட்டதற்கு
    உயிர் மூச்சாய் நேசித்த ,நேசிக்கும் வாசகர்களுக்கு மீண்டும் நன்றிகள்.
    உங்களால் மட்டுமே லயன் லயனாகவே வெற்றி நடை போடுகிறது.

    என்னைப்போல ஆரம்பகால வாசகர்கள்
    இந்த சிங்கத்தை,
    பாதிவரை நெஞ்சில் சுமந்தாலும்,
    இதுவரை தொடந்து சுமந்த பெருமை உங்களையே சாரும்.

    அடுத்த தலைமுறை தோள் கொடுக்கும் வரை, ஆனந்தமாக உங்களுடன் பயணிப்பதில் எனக்கு சந்தோஷமே.

    தொடர்ந்து இந்த லயனுடன்
    பயணம் செய்த ,செய்யும்
    அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
    நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்...
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹...

    ReplyDelete
    Replies
    1. அற்புதம் அற்புதம் உங்களை போல பழைய ரசிகர்கள் திரும்ப வரும் போது தான் நமது எண்ணிக்கை உயரும். அருமையாக எழுதி இருக்கிறீர்கள். தொடருங்கள் சார்

      Delete
    2. நல்வரவு நண்பரே!

      சமீப காலத்தில் அடை மழையாய், உங்களது அருமையான காமிக்ஸ் பதிவுகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். 'சிவகுமார்' என்ற பெயரில் முகநூலில் அருமையான பதிவுகள் இட்டுவரும் நண்பர் யார்? - என்று நண்பர்களிடம் கேட்டபோது அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை! ஆனால் உங்களது பதிவுகள் மூலம் நீங்கள் கோவையைச் சேர்ந்தவராக இருக்குமோ என்ற யூகித்துக் கொண்டேன்!

      காமிக்ஸை விட்டு சிறிதுகாலம் விலகியிருந்துவிட்டு இப்போது மீண்டும் புயலெனப் புகுந்து உற்சாகப் பதிவுகளிட்டு நிறைய நண்பர்களை உற்சாகத்தில் வைத்திருக்கும் உங்களுக்கு என் நன்றிகளும், வாழ்த்துகளும்!

      தொடர்ந்து கலக்க வேண்டுகிறேன்!

      Delete
  60. நான் பிறந்தது வளர்ந்தது கோவைதான்ங்க.சூழல் காரணமாக திருப்பூரிலேயே வந்து இதுவே சொந்த ஊராகி போனது.

    ReplyDelete