Saturday, July 31, 2021

'தல'யோடு தாண்டவம் !

 நண்பர்களே,

வணக்கம். சர்ச்சைகள் என்றாலே நமது புலவர்கள் துள்ளிக் குதிக்கும் படலங்களின் லேட்டஸ்ட் அத்தியாயத்தினை Smashing  '70s-ன் புண்ணியத்தில் பார்த்து வருகிறோம் ! Back to the future என காலச்சக்கரத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் நம்மவர்கள் வீறு கொண்டு எழுவதைப் பார்க்கும் போது -     "குணா" படத்தில் கமல் பாடும் அந்தப் பாட்டின் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகின்றன :

(Vintage) கண்மணி... அன்போடு (காமிக்ஸ்) காதலன் நான் எழுதும் கடிதமே...!!

(Classic) பொன்மணி.... உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே...!

உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது...!

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...!

(கண்மணி)

(எதிர்ப்போரால்) உண்டான காயம் எங்கும் தன்னாலே ஆறிப் போகும்

மாயம் என்ன பொன்மானே பொன்மானே....!!

என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்

(விமர்சனங்களை) உந்தன் மேனி தாங்காது செந்தேனே....!!

எந்தன் (பால்யக்) காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது......!!

எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது.....!

(புதுயுக) மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல.....

அதையும் தாண்டிப் புனிதமானது......!!

(பாட்டைச்) சுட்டதுக்கும், (வார்த்தைகளைச்) சேர்த்ததற்கும் கவிஞர் வாலி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வோம் ; ஆனால் மேலுள்ள வரிகள் இங்குள்ள ஒவ்வொரு "க்ளாஸிக் காதலர்களுக்கும்" அட்சர சுத்தமாய்ப் பொருந்துவது தானே நிதர்சனம் ! 

நிஜத்தைச் சொல்வதானால் பெர்சனலாக எனக்கு இந்த நேசத்தின் பின்னுள்ள தீவிரத்தைப் புரிந்து கொள்ள இயல்வதில்லை தான் ! அதனால் நிறைய சந்தர்ப்பங்களில் "க்ளா.கா." நண்பர்களின் அதே wavelength-ல் நான் இல்லாது போவதும் ; அதன் பொருட்டு அவர்களின் (உள்ளுக்குள்ளான) கோபங்களை ஈட்டிடுவதும் புரிகிறது ! Maybe அனுதினமும் தினுசு தினுசான பொம்ம புக்குகளோடே குடித்தனம் செஞ்சு பழகிப் போய்விட்ட எனக்கு, நார்மலான ரசனைகளின் முனை, லைட்டாக மழுங்கி விட்டதோ - என்னவோ ?! தவிர, நான் பணி செய்திடுவதும், நீங்கள் வாசித்திடுவதும், ஒரே ஆக்கமாக  இருப்பினும், அதன் மீது எனக்கு வாய்த்திடும்  பார்வைக்கோணமானது - உங்களினதோடு நிரம்பவே வேறுபட்டிடுவதுண்டு ! So பார்வைகள் வேறாகிடும் போது - தீர்ப்புகளும் மாறி இருப்பதனில் வியப்புகளில்லை தான் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்வேன் ! But பல தருணங்களில், கல்லுளிமங்கனாட்டம் குந்திக் கிடப்பினும், க்ளாஸிக் நாயகர்களுக்கான கதவுகளை சந்தர்ப்ப சூழ்நிலைகள் உடைத்துத் திறந்திடுவதைப் பார்க்கும் போது - மேலுள்ளவருக்குமே இந்த குணா" பாடல்வரிகள் அவ்வப்போது காதில் விழுந்திடுமென்று நம்பத் தோன்றுகிறது ! எது எப்படியோ - the proof of the pudding is in the eating என்பதனை Smashing '70s தினமுமே நிரூபித்து வருகின்றது - கிட்டி வரும் முன்பதிவுகளின் வாயிலாய் ! And க்ளாஸிக் காதலர்கள் இதன் பொருட்டு பிரவாகமெடுக்கச் செய்து வரும்  சந்தோஷங்களைப் பார்க்கும் போது - இந்த முயற்சியினை சூப்பர் டூப்பர் இதழ்களாக்கிட,  தெரிந்த சகல குட்டிக்கரணங்களையும் அடித்தே தீர வேண்டுமென்ற உத்வேகம் இரட்டிப்பாகிறது ! காத்திருக்கும் ஆகஸ்ட் & செப்டெம்பருக்குள் - Muthu 50-ன் பணிகளை நிச்சயமாய் நிறைவு செய்து விடுவேன் ! அந்த மெகா பணிகளில் எனது portion-ஐ முடித்து விட்டால், தயாரிப்பின் பொறுப்பை ஜூனியரிடம் ஒப்படைத்து விட்டு, வேதாள மாயாத்மாவின் முதல் இதழின் பணிகளுக்குள் குதித்திட வேண்டியது தான் ! So காத்திருக்கும் மாதங்களில், காத்துள்ள பணிகளின் சகலமுமே தத்தம் பாணிகளில் சவால்களோடு நிற்பதும், காத்திருப்பன எல்லாமே எவ்வித முன்னுதாரணங்களும் இல்லாத freshers என்பதும் -  37 வருஷங்களுக்கு முன்பானதொரு ஜூலையில் கொயந்த பையனாட்டம் நின்ற நாட்களின் த்ரில்லை உள்ளுக்குள் மறுஅறிமுகம் செய்கின்றது !! புனித மனிடோ வழிகாட்டுவாராக !!   

And அவரது அசாத்தியக் கடைக்கண் பார்வை மட்டும் இல்லாது போயின், கடந்த 2 வாரங்களை முழுசாயக் கடந்து, கழன்றிடாத மறையோடு இப்போது இக்கட ஆஜராகியிருக்கவுமே வழியிருந்திராது தான் ! Simply becos ஒரு குருவி தலையில் வைக்க முனைந்த அம்மிக்கல்லை, ரொம்பச் சீக்கிரமே ஒட்டு மொத்தமாய்ச் சுமக்க நேர்ந்து போன 2 வாரங்கள் இவை !! இந்த அம்மிக்கல் கூத்தின் துவக்கம் ஏப்ரலின் இறுதியினில் ! லயன் # 400-க்கென "புத்தம் புது பூமி வேண்டும்" - மெகாநீள டெக்ஸ் சாகசத்தினைத் திட்டமிட்டிருந்தோம் தானே ? அதன் இத்தாலிய மொழிபெயர்ப்பு நமக்கு வந்து சேர்ந்ததே ஏப்ரலின் மூன்றாம் வாரத்தில் தான் எனும் போது - தமிழாக்கத்தை சடுதியாய்ச் செய்திட எண்ணியிருந்தேன் ! சமீபமாய் பேனா பிடித்து வருமொரு தென்மாவட்ட இல்லத்தரசிக்கு இதனை அனுப்பிட எண்ணிய போது தான் - அவரது கணவருக்கு கொரோனா தாக்கமிருந்தது ! ஓரிரு வாரங்களில் அவருக்கு குணமாகிய பின்னே எழுத முயற்சிக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்க, அந்நேரத்துக்குள்  திடு திடுப்பென லாக்டௌன் வேறு இங்கே போட்டுத் தாக்கியிருந்தனர் ! சரி, சுகவீனத்திலுள்ள கணவரை கவனித்து வருபவரைத் தொந்தரவு செய்திட வேண்டாமே என்ற எண்ணத்தில் 376 பக்கங்கள் கொண்ட இந்தக் கத்தையைத் தூக்கி  நமது கருணையானந்தம் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன் ! But முழு லாக்டௌன் ; திரும்பிய திக்கெல்லாம் நோயின் பீடிப்புத் தகவல்கள் ; தடுப்பூசித் தட்டுப்பாடு என்ற எல்லாமே கன்றாவியாய்த் தோற்றமளித்த அந்த இருண்ட நாட்களினில், இத்தனை பெரிய கதைக்குள் புகுந்து பணியாற்றிடும் ஆர்வத்தை அவரால் தேற்றிட இயலவில்லை ! 'ரைட்டு....அட்டவணையினில் இந்த இதழைக் கொஞ்சம் பின்னே தள்ளிப்போட்டு விட்டு, நாமளே எழுத ஆரம்பிக்கணும் போலும் !' என்று நினைத்திருந்த வேளையினில் தான் நினைவுக்கு வந்தது - இது 400 என்ற மைல்கல் இதழ் & இதற்கு முந்தைய நம்பர்களைத் தாங்கி நிற்கும் ஏகப்பட்ட இதழ்களின் அட்டைப்படங்கள். நம்பர்கள் சகிதம் அச்சாகி விட்டன என்பது ! So இதழ் # 399 வரை ஜூலை மாதத்தினில் நிறைவுற்றிருக்கும் & இந்த டெக்ஸ் மெகா இதழை நாம் தள்ளிப் போட நேரிடும் பட்சத்தில் - "இரத்தப் படலம்" வண்ண தொகுப்புகளுமே தள்ளிச் செல்ல நேரிடுமென்பது புரிந்தது - becos அவற்றின் நம்பர்ஸ் 401 & 402 !! ஆக "புத்தம் புது பூமி வேண்டும்" தாமதமாகிடும் பட்சத்தில் - பின்னே காத்துள்ள அத்தனை ரயில்களும் லேட்டாகிப் போகுமென்பதால், ஒத்தி வைக்கும் சிந்தனை சுகப்படவில்லை ! அதே சமயம், திடு திடுப்பென இத்தனை முரட்டுப் பணியினை ஒற்றை நாளில் எனது அட்டவணைக்குள் நுழைத்தால் - ஏற்கனவே நான் பார்த்துக் கொண்டிருந்த சகலமுமே சொதப்பிடக் கூடுமென்பதும் புரிந்தது ! MUTHU ஆண்டுமலர் # 50 சார்ந்த கதைத்தேடல்கள் ; திட்டமிடல்கள் ; பேச்சு வார்த்தைகள் - என செம முக்கியமானதொரு phase வேறு அது ; so நம்பியாரைப் போல கைகளைப் பிசைந்து கொண்டிருந்தேன் ! இங்கே ஒரு இடைச்செருகல் :

காலமெல்லாம் இரு "இளைஞர்களின்" வயோதிகப் பேனாக்களோடே இந்தப் பயணம் தொடர்ந்திடல் சாத்தியமாகிடாது என்பதை எப்போதோ உணர்ந்திருந்தேன் என்பதாலும், ஒரே பாணியில் கொட்டும் குப்பைகளிலிருந்து சற்றே மாற்றம் அத்தியாவசியம் என்பதாலும் - சத்தமின்றி இணையத்தில் இதற்கென உள்ள சில திறன் தேடல் தளங்களில் 2020 லாக்டௌன் முதலாகவே "எழுதிட ஆர்வமுள்ளோர் தேவை" என விளம்பரம் செய்து வருகிறேன் ! And எதுவும் சரியாய் set ஆகாது போக, மறுபடியும் 3 மாதங்களுக்குப் பின்னே முயற்சி ; மறுக்கா-மறுக்கா முயற்சி என இதுவரையிலும் நாம் பரிசீலித்துள்ளது மொத்தம் 181 நபர்களை !!! Yes... 181 !!! ஒவ்வொருவருமே ஏதேதோ விதங்களில் உயர்கல்வித் தகுதிகள் ; கவிதை எழுதிய அனுபவங்கள் ; தளங்களுக்கு content எழுதியவர்கள் என்று திறன் கொண்டவர்களே ; ஆனால் ஏனோ தெரியவில்லை, நமது பணிகளுக்கு அவர்களுள் பெரும்பான்மை ஓ.கே. ஆகிடவில்லை ! கொஞ்சப் பேருக்கோ, கதைகளுக்கு நாம் தந்திடும் ராயல்டிக்கு ஈடான சன்மான எதிர்பார்ப்புகள் இருந்தன ! ஒரு மாதிரியாய் நிறைய அலசல்களுக்குப் பின்பாய், அவர்களுள் ஒரு நாலைந்து பேரை மட்டும் shortlist செய்து கொண்டு - கொஞ்சம் கொஞ்சமாய் நமது பணிகளுக்கேற்ப அவர்களை ரெடி செய்து கொள்ளலாமென்ற எண்ணத்தில் முயற்சிக்கவும் செய்தேன் ! அதற்கான பொறுமை சிலருக்கு இருக்கவில்லை ; 'நீங்க சும்மா சும்மா 'நொட்டை நொசுக்குன்னு' பிழை சொல்லிட்டே இருக்கீங்க ; இதிலே என்ன தப்பாம் ?" என்று ஒருவரும்....."நானே 10 பேருக்கு translation வேலை கொடுத்திட்டு வர்றவனாக்கும் ; எனக்கே நீ பாடம் நடத்துறியா ?" என்று இன்னொருவரும் கண்சிவக்க - "ரைட்டுங்கண்ணா" என்று விடைபெற்றுக் கொள்ள நேரிட்டது ! பொறுமையாய் முயற்சித்து வருவோரில் 3 பெண்கள் மட்டும் எஞ்சியுள்ளனர் - ஆனால் அவர்களுள் இருவர் முனைவர் பட்ட ஆய்வினிலும் பிசியாக உள்ளவர்கள் எனும் போது - நமது திடீர் திடீர் கூத்துக்களுக்கான அவகாசங்கள் அவர்களிடம் இருப்பதில்லை ! தவிர, அவர்களது பணிகளுமே நமக்கு set ஆகிட இன்னும் கணிசமான நேரம் எடுத்துக் கொள்ளும் தான் ! So திடு திடுப்பென மே மத்தியினில் நெருக்கி 400 பக்கங்களுக்கானதொரு மெகா பணியினைத் தந்து விட்டு, அவர்களை எழுதச் சொல்ல வாய்ப்பிராதென்பது புரிந்தது ! ஆக எஞ்சியிருந்தது ஒரேயொரு பெண்மணி மாத்திரமே ! அவர் ஓரளவுக்கு சீராய் எழுதக்கூடியவராய் தோன்றிட்டதால் காத்திருக்கும் டிரெண்ட் ஆல்பத்தினை முயற்சிக்க வாய்ப்பளித்திருந்தேன் ! And 'நிச்சயமாய் மோசமில்லை !" என்று சொல்லும் விதத்தில் நான் படித்துப் பார்த்த அந்தப் பணியின் துவக்கம் அமைந்திருந்ததால் - அந்த இக்கட்டான நொடியில் மண்டைக்குள் பல்ப் எறிந்தது !! உடனே டெக்சின் "நெஞ்சே எழு" புக்கையும், புதுக்கதையின் முதல் 10 பக்கங்களையும் அனுப்பி, என்ன மாதிரியாய் இதனில் பணியாற்றிட வேண்டிவரும் என்பது குறித்து கொஞ்சம் guidelines-ம் தந்திருந்தேன் ! பொறுமையாய் அவரும் எழுதி அனுப்பிய அந்தப் 10 பக்கங்கள் decent ஆகத் தென்பட்டது ! "டெக்ஸ் கதை தானே...அதுக்கு மீறி கொஞ்சமாய் திருத்தங்கள் அவசியப்பட்டால் போட்டுக் கொள்ளலாம் !" என்ற நம்பிக்கையில் கதையினை மறு நாளே அந்த இளம் எழுத்தாளருக்கு அனுப்பி வைத்தேன் ! 

அவ்வப்போது எழுதுவதை மேலோட்டமாய்ப் பார்க்க ; எத்தனை பக்கங்களை முடித்திருக்கிறார் ? என்று தெரிந்து கொள்ள மட்டுமே நேரமெடுத்துக் கொண்டு - அவரை இடையூறுகளின்றி எழுதிட அனுமதித்தேன் ! ஒரு மாதிரியாய் முழுக் கதையினையும் 2 மாதங்களுக்குள் நிறைவு செய்து அனுப்பிட, ஜூலை இதழில் பந்தாவாய் - "அடுத்த வெளியீடு : லயன் # 400 " என்ற விளைபரத்தைப் போட்டுச் சாத்தியாச்சு ! 

And நம்மாட்கள் அடுத்த ஒரே வாரத்துக்குள் ஆளுக்குப் பாதியாய்ப் பணிகளைப் பிரித்துக் கொண்டு டைப்செட்டிங்கில் நொறுக்கித் தள்ளி, என் மேஜையில் ஒரு குட்டி கோபுரத்தை ஏற்றிவிட்டனர் ! And போன திங்களன்று ஜாலியாய் எடிட்டிங் பணிக்குள் புகுந்தேன் - 'போறோம்...தட்றோம்...தூக்றோம்' என்ற நம்பிக்கையில் ! பணி துவக்கிய சற்றைக்கெல்லாம் சிறுகச் சிறுக ஒரு அசௌகரிய உணர்வு வயிற்றுக்குள் உருவெடுப்பது போல தென்பட, இருபது பக்கங்களைத்  தொட்டிருந்த நேரத்தில் அந்த உணர்வு கை கால்களையெல்லாம் விறைக்கச் செய்திருந்தது !! சிறு குருவியிடம் சக்திக்கு மீறியதொரு சுமையைச் சுமக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டது தீர்க்கமாய்ப் புரிந்தது ! டெக்ஸ் ஆல்பங்கள் எல்லாமே நேர்கோட்டுக் கதைகளே ஆயினும் அவற்றுள்  சில நடைமுறைச் சிக்கல்களுண்டு - பேனா பிடிக்கும் போது ! To start with - இத்தாலிய மொழியிலிருந்து இங்கிலீஷுக்கு மொழிபெயர்ப்போ அனைவருமே அந்நாட்டவர்கள் ; இத்தாலிய மொழியினைத் தாயமொழியாகக் கொண்டவர்கள் ! So அவர்களின் புரிதல்களில் இம்மியும் பிசகிறாது ! மாறாக - அவர்களின் ஆங்கிலப் புலமைகள் அதே உச்சங்களில் இருப்பதில்லை ! So அவர்களின் பேனாக்கள் நமக்குத் தந்திடும் ஆங்கில ஸ்கிரிப்ட்ஸ் கொஞ்சம் மெனெக்கெடலை அவசியப்படுத்திடுவதுண்டு - மறு தமிழ் மொழிபெயர்ப்பின் போது ! அது மட்டுமன்றி, அந்த வன்மேற்கு டயலாக்களில் வரக்கூடிய வார்த்தைப் பிரயோகங்கள் ; செவ்விந்திய பேச்சு பாணிகளின் புரிதல்கள் - என நிறையவே விஷயங்கள் அனுபவத்தில் தான் கிட்டிடும் ! டெக்ஸ் வில்லருக்கும் , புதுப் பேனாவுக்கும் அதுநாள் வரையிலும் துளிப் பரிச்சயமும் கிடையாதெனும் போது அவர் எக்கச்சக்கமாய் ; எக்கச்சக்க எக்கச்சக்கமாய்த் தடுமாறியிருப்பது ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது ! ஒரு முரட்டு ஆட்டுக்கல்லை கழுத்தில் கட்டிவிட்டு, அதனை சிரமங்களின்றி அவர் சுமந்திடணும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த என்னைப் போலொரு பேமானி, சுத்துப்பட்டிகளில் சல்லடை போட்டுச் சலித்துத் தேடினாலுமே கிட்டிடப்போவதில்லை என்பது மட்டுமே அந்த நொடியினில் புரிந்தது ! 

நீச்சல் தெரியாதவனை மொதக்கடீர் என குளத்துக்குள் யாரோ கடாசியது போலிருந்தது அந்தத் தருணத்தில் ! வேறெதையும் யோசிக்க நேரமில்லை ; கடப்பாரை நீச்சலோ ; சுத்தியல் நீச்சலோ ; மண்வெட்டி நீச்சலோ - எதையோ ஒன்றை இந்த நொடியில் அடித்துக் கரைசேர்வது மட்டுமே முக்கியம் என்ற புரிதலில், எங்கிருந்தோ பிறந்த வேகத்துடன் பணியாற்ற ஆரம்பித்தேன் - பேய் பிடித்தவனைப் போல ! அவர் எழுதியிருந்ததில் ஒரு பத்து சதவிகிதம் தேறும் என்றிருக்க, அது நீங்கலான பாக்கி 90 சதவிகிதத்தை - கடந்த 11 நாட்களில் எழுதியுள்ளேன் - முற்றிலுமாய் புதுசாய் !! 

Oh yes - ஜாலியான கதை தான் ; நம்ம டெக்ஸ் ; கார்சன் ; டைகர் ; கிட் - என அத்தினி பேரும் பங்கேற்கும் சாகஸம் தான் ; ஆனால் 376 பக்கங்களை வெறும் பத்தே நாட்களில் , இதர பணிகளுக்கும் குந்தகங்களின்றிச் செய்வதென்பது - சத்தியமாய் வெறுங்காலோடு சுடும் வெயில்நாளில், குண்டும் குழியுமான ரோட்டில் நாள்முழுக்க ஓடுவதைக் காட்டிலும் சிரமமே என்பதை அனுபவத்தில் சொல்ல முடிகிறது ! அதிலும் மொத்தமாய்க் கடாசி விட்டு, மொத்தமாய்ப் புதுசாய் எழுதுவதைக் கூட ஒருவிதத்தில் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம் ; ஆனால் ஏற்கனவே உள்ள ஸ்கிரிப்டில் - தக்க வைப்பது எது ? கடாசுவது எது ? நகாசு வேலைகள் செய்வது எங்கு ? என்று தேடிப் பணியாற்றுவது சிரமங்களின் ஒரு அசாத்திய உச்சம் ! 

இதன் பொருட்டே சமீப நாட்களில் நமது நண்பர்களுள் பேனா பிடித்திட ஆர்வம் காட்டிய 5 நண்பர்களிடமும் நான் நாசூக்காய் மறுப்புச் சொல்லி, அவர்களது கடுப்புகளையும் ஈட்டிய புண்ணியம் கிட்டியுள்ளது ! அவர்களின் அவைவருக்குமே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் தந்திருந்தோம் தான் ; ஆனால் அன்பின் மிகுதியில் பணியாற்ற முன்வருவோரிடம் - நமது எதிர்பார்ப்புகளின் பரிமாணங்களைச் சொல்லி - "இதைத் திருத்துங்க ; அதை மாத்தி எழுதுங்க ! அதை அடிச்சிட்டு வேற எழுதுங்க !" என்ற ரீதியில் தினம் தினம் குடலை உருவி அலசி, ஆராய்வதெல்லாம் எனக்கே ஓவராய்ப்பட்டது ! தொழில்முறையில் பணியாற்ற முன்வருவோரையும் ; அன்பின் பொருட்டு, ஆர்வத்தின் பொருட்டு முன்வருவோரையும் ஒரே மாதிரி கசரத் வாங்கிட மனம் ஒப்பவில்லை ! So  அவர்களை சிரமப்படுத்திட வேண்டாமே என்று தீர்மானித்தேன் ! மேலோட்டமான திருத்தங்களை ; மாற்றி எழுதிடும் அவசியங்களை சமாளிப்பதென்பதில் பெரிய நோவுகள் லேது தான் ; ஆனால் wholesale மாற்றங்கள் அவசியமாகிடும் போது என் வண்டியும் தள்ளாடத் துவங்குவதே இங்கு சிக்கல் ! So பரீட்சார்த்த முயற்சிகள் கொஞ்ச காலத்துக்காவது வேண்டாமே எனத் தீர்மானித்துள்ளேன் ! Of course - அதற்காக நான் எழுதும் சகலமும் பிரம்மனின் வரிகளென்ற பிரமையெல்லாம் எனக்குக் கிடையாது தான் ; and சரளமாய் எனது பணிகளிலும் பிழைகள் கண்டிடலாம் தான் ! ஆனால் end of the day - இவை பொதுவெளிக்கு வந்திட வேண்டிய பணிகளெனும் போது - சாத்துக்களோ - சிலாகிப்புகளோ - என்னில் ஆரம்பித்து, என்னிடமே ஓய்ந்தும் விடுமல்லவா ? Exactly for this reason - முத்து காமிக்ஸ் ஆண்டுமலரின் அத்தனை கதைகளையும், சிரட்டையைக் கவ்விய நாய்க்குட்டியாட்டம் கவ்விக் கொண்டே திரிகிறேன் ! அடுத்த ஒரு வருஷத்துக்காவது - பேனாக்களும், பேப்பர்களுமே எனது துணைவர்களாகிடுவார் !! And of course - நமது "எழுத்தாளர்" தேடல்கள் தொடரவே செய்யும் - maybe இன்னும் கூடுதல் கவனங்களோடு ! 

Back to reality - கை கடுக்க, புஜம் வலிக்க எழுதிக் கொண்டே இங்கே பதிவுப் பக்கமும் எட்டிப் பார்த்தால் - "டெக்ஸ் & கோ முஷ்டியை மாத்திரமன்றி, புத்தியையும் பயன்படுத்தும் பாணிகளில் கதை அமைந்தால் ஜூப்பரு " - என்ற ரீதியில் பின்னூட்டம் ! அந்த நொடியில் நானோ நிஜாரைத் தொலைத்த தலீவரைப் போல 'ஓ'வென்று அழும் நிலையில் தானிருந்தேன் - simply becos எனது வேண்டுதலோ உல்டாவாக இருந்தது !! "தெய்வமே....கதையின் நடு நடுவே கொஞ்சம் சண்டைக் காட்சிகளைச் சரளமாய் அமைத்துத் தாங்களேன்... 'டமால்..டுமீல்.. யாஹீஈஈ' என்றபடிக்கே பக்கங்களைக் கடத்திக் கொள்வேன் !!" என்று நான் வேண்டிக்கொள்ளாத குறை தான் ! ஆனால் கதையினில் டெக்ஸ் & டீமோ சும்மா திட்டம் போடறாங்க...போடறாங்க...வண்டி வண்டியாய்ப் பேசிக்கொண்டே திட்டம் போடறாங்க !! Phew !!! 

எழுதி முடிப்பதோடு எனது வேலை முடிந்திடாதே ; பின்னாடியே எடிட்டிங் & பிழை திருத்தப் படலமும் காத்திருக்கும் என்ற போது - 'அன்னிக்கு காலையிலே ஆறு மணியிருக்கும்...கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சா ?' என்ற கதையை நூற்றி எட்டாவதுவாட்டிக் கேட்ட கையோடு கிறங்கிக் கிடக்கும் கும்பல் தான் நினைவுக்கு வந்தது ! ஒரு மாதிரியாய் எழுதி முடித்த நிம்மதியுடன், இந்த புதனன்று  இங்கே வந்து ஒரு மினி உப பதிவைப் போட்டுவிட்டுக் கிளம்பலாமென்று பார்த்தால் - அதுவோ ஒரு L.I.C ஆகிட, அப்பாலிக்கா மீண்டும் எடிட்டிங் படலம் ! ஒரு மாதிரியாய் சகலத்தையும் முடித்த கையோடு, இன்று காலையில் துவங்கியிருக்கும் அச்சினை ஜாலியாய் மேற்பார்வை செய்திட்ட போது, மனசுக்குள் வடிவேல் தான் ஓடிக்கொண்டே இருந்தார் ! இனி எந்தவொரு சந்துக்குள் சிக்கி என்ன மெரி அடி வாங்குனாலும் தாக்குப் புடிக்கிற அளவுக்கு தேறிட்டோமோன்னு தோன்றாத குறை தான் !   கடந்த பத்தாண்டுகளில் ஏதேதோ கரணங்கள் அடித்திருக்கிறேன் தான் ; இதைவிடவும் complex ஆன பணிகளுக்குள் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் தான் ; ஆனால் இம்முறையிலான பணியின் நீளம் முன்னெப்போதையும் விட எக்கச்சக்க ஜாஸ்தி & கைவசமிருந்த அவகாசமோ எக்கச்சக்கக் குறைச்சல் ! 

பன்னிரெண்டே நாட்களில் ஐந்து வயசு கூடிப் போனதான பிரமையுடன் மோட்டைப் பார்த்தபடிக்கே நான் அமர்ந்திருக்க, ஓசையின்றி ரூமுக்குள் வந்த மைதீன் - " அந்த ஆன்லைன் book fair ஸ்பெஷல் புக்ஸ் பிரிண்டவுட் எடுத்து ரெடியா இருக்குது...கொண்டு வரட்டுமா ?" என்று கேட்ட நொடியில் ஓரிரு நிமிடங்கள் மலங்க மலங்க மட்டும் முழித்தேன் !! மண்டைக்குள் "ஆட்றா ராமா....தாண்ட்றா ராமா !" என்று மட்டும் கேட்க - "கொண்டு வா..கொண்டு வா !!" என்றேன் ! இந்தப் பேரிடர் நாட்களின் உபயத்தில் - ஏராளமான  சகோதரர்களுக்குப் பணியாற்றும் வரங்களில்லை என்றிருக்க, எனக்கோ அவ்விதமொரு குறையினைத் தந்திருக்காத புனித மனிடோவுக்கு நன்றியொன்றைச் சொல்லியபடிக்கே புகுந்து விட்டேன் - அடுத்த பணிகளுக்குள் ! 

Before I sign out - இதோ இந்த இதழுக்கான அட்டைப்பட முதற்பார்வை  ! ஒரிஜினலாய் "நெஞ்சே எழு" கதைக்கான டிசைன் இந்த மைல்கல் இதழின் அட்டையினை அலங்கரிக்கவுள்ளது ! And நேரில் புக்காகப் பார்க்கும் போது இதனில் செய்துள்ள நகாசு வேலைகள் அனைத்துமே டாலடிக்கும் பாருங்கள் ! இங்கே கண்ணில் தென்படா நுணுக்கமான நகாசுகள் புக்கில் மட்டுமே தென்படும் ! And தொடர்வது உட்பக்க preview !! 

அச்சில் பார்க்கும் போது as usual 'தல' ஜொலிக்கிறார் !! பாயசப் பார்ட்டிகளை நினைச்சா தான் பாவமா இருக்குது ! 


Bye all...see you around ! Have a fun weekend !

P.S : ஒரு கலர் டெக்ஸ் சிறுகதையும் பெரிய சைசில் உண்டு - இணைப்பாய் ! 

Wednesday, July 28, 2021

ஒரு உப்மாவின் பரிமாணங்கள் !

 நண்பர்களே,

வணக்கம். வாழ்க்கை ஒரு வட்டம் போலும் ! ஏனென்கிறீர்களா ? 10 வருஷங்களுக்கு முன்னே இதே "உப்மா" சார்ந்த அடையாளங்கள் தான் தரப்பட்டன - நமது மறுவருகையின் வேளைதனில் ! And 10 years down the line - அதே உப்மாவை சுகமானதாய் ; சுவையானதாய் தந்திட முடியுமென்ற நம்பிக்கையுடன் இன்றைக்கு அடுக்களையினில் நிற்க சாத்தியப்படுகிறது எனக்கு ! 

இந்தப் "பழசு vs புதுசு" சர்ச்சையானது - லெமூரியா கண்டத்தை விடவுமே பழசானதுதானென்றாலும், ரசனைசார் விஷயங்களில் எந்தவொரு நிலைப்பாடும் நிரந்தரம் கண்டிடுவதில்லை எனும் போது, இந்த topic ஒவ்வொரு முறையுமே புதுப் புதுக் கோணங்களில் அலசல்களை தருவிக்கின்றது !  And இந்த ஒற்றை விஷயத்தினில் மட்டும் ஒரு தரப்பினை, மறுதரப்பின் நியாயங்களைப் பார்க்கச் செய்வது, காவிரி நீர் விவகாரத்தில் நம் மாநிலமும், அண்டை மாநிலமும் மல்லுக்கட்டுவதற்குச் சளைக்காத சிரமமே ! But still - வாரத்தின் நடுவாக்கில், LION # 400 சார்ந்த பணிகளை முடித்த நிம்மதியில் ஒரு உபபதிவு !! 

If ever there was a team of "anti-oldies" (aunty oldies இல்லீங்கோ) அதன் நிரந்தரக் கொ.ப.செ.பதவியினை பிட்டம் நிறைய பெவிகாலைத் தடவியபடிக்கே ஆக்கிரமிக்கக் கூடியவனாக நானே தான் இருப்பேன் ! 

மறுவருகைக்கு முந்தைய காலகட்டங்களில், நமது தேடல்கள் ; ரசனைகள் ; விலைகள் - என சகலமுமே ஜனரஞ்சகங்களை நோக்கியே இருந்திட்டதால் அன்றைக்கு எதுவுமே out of place ஆகத் தென்படவில்லை ! அத்திபூத்தார் போலொரு XIII ஆல்பமோ ; ஒரு டைகர் சாகசமோ மட்டும்  நமது சீரான நேர்கோட்டுப் பயனத்திற்கொரு சின்ன மாறுதலைத் தந்து வர, பாக்கி நாட்களில் எவ்வித நெருடல்களுமின்றி straight as an arrow போய்க்கொண்டே இருந்தோம் ! ஆனால் ஒரு நெடும் இடைவெளிக்குப் பின்னே, மாறிப் போயிருந்த விற்பனைக்களங்களில்  ; மாறிப்போயிருந்த (தயாரிப்பு) எதிர்பார்ப்புகளுடன் ; அவற்றிற்கேற்ற புதுத் திட்டமிடல்களோடு  ; புது விற்பனை வழிமுறைகளையோடு பயணிக்கத் தயாரான சூழலில் தான் புரிந்தது - இடைப்பட்ட நாட்களில் நீங்களும் வளர்ந்து விட்டீர்கள் ; நானுமே வளர்ந்து விட்டேன் & நமது ரசனைகள் ரெம்போவே முன்னேறி விட்டிருந்தன என்பது ! 

எல்லாமே புதுசாய் இருக்க, பரிமாறப்படும் பதார்த்தங்கள் மட்டுமே பாட்டியின் recipe-க்களோடு இருந்தால் வேலைக்கு ஆகாதென்று நான் உணர்ந்தது நமது Comeback Special இதழிலேயே ! அது நாள் வரைக்கும் நமது திகில் காமிக்சின் ஜாம்பவான் பட்டியலில் இருந்த கேப்டன் பிரின்சின் கதையினில், 2011-ன் இறுதிவாக்கில் வேலை செய்த சமயம் லைட்டாக ஜெர்க் அடித்தது ! "சரி...சரி..இது மாமூலான கதாசிரியர் கிரெக் எழுதிய கதையில்லை ; யாரோ Yves H-ன்னு புதியவர் எழுதியிருக்கார் ; அதான் ரசிக்கலை போலும்" என்று என்னைத் தேற்றிக் கொண்டேன் ! மெது மெதுவாய் லார்கோவுக்குள் புகுந்தோம் ; அந்த fresh ரசனை ; அந்தப் பணியிலிருந்த சவால்கள் என எல்லாமே ரசிக்கச் செய்தன ! மெது மெதுவாய் ஷெல்டன் இணைந்து கொண்டார் ; ஒரு வான் ஹாம் கௌபாய் கிராபிக் நாவலும் தலை காட்டியது ; க்ரீன் மேனர் பரிச்சயமானது ; கார்ட்டூன்களில் ப்ளூகோட் பட்டாளம் ; fantasy-ல் தோர்கல் - என புது வரவுகள் பட்டியல் நீண்டிட, உற்சாகமும் எகிறியடித்தது ! இடை இடையே லக்கி லூக் ; டெக்ஸ் வில்லர் ; சிக் பில் ; கேப்டன் டைகர் ; XIII போன்ற பழகிய ; yet யுகங்களாகினும் சலிக்கா நாயகர்களும் தொடர்ந்திட  - அந்நாட்கள் ஒரு மழை நாளின் மெரினா கடற்கரையின் அழகுடன் பயணித்தன ! சும்மாவே 'ஆட்றா ராமா - தாண்ட்றா ராமா' என்று கரணமடிக்கும் எனக்கு - உங்களின் உற்சாகங்களும், புதுப் பணிகள் தந்த உத்வேகங்களும் ஒரு கூட்டத்துக் குரங்குகளின் ஆர்வத்தை உருவாக்கிட, ஏதேதோ திக்குகளில் கல்லை வீச ஆரம்பித்தேன் ! புதுசு புதுசாயக் கதை ரகங்கள் ; ஜானர்கள் என்று சிக்கிட, மொத்தமாய் பழசுக்கு டாட்டா சொல்லியிருந்த நாட்கள் அந்த 2012 to  2015 வரையிலான பொழுதுகள் ! 

உப்மா உருவான கதை !!

ஆனால் மெது மெதுவாய் பெருமூச்சுகள் காதில் விழுந்த வண்ணமே இருந்தன - "மாயாவி இருந்தாக்கா நல்லாயிருக்கும் ; என்ன இருந்தாலும் பழசு போல் வருமா ?" என்ற ரீதியில் ! அதே தருணமே - நமது கையிருப்பில் titles அதிகமாகிடுவது - தொடரும் புத்தக விழாக்களில் பங்கேற்றிட ஒரு அவசியம் ஆகிடும் என்ற நிர்ப்பந்தம் தலைதூக்கியது ! அன்றைக்குத் துவங்கின - மொள்ளமாய் ரிவர்ஸ் கியர் போட்ட நாட்கள் !  "மும்மூர்த்திகள் + ஸ்பைடர் மறுபதிப்புகள் தனித்தடத்தினில் வெளி வரவுள்ளனர்" என்ற அறிவிப்பின் காலையில் சுமார் 300+ பின்னூட்டங்கள் இங்கே ரவுசு கிளப்பியது இன்னமும் எனக்கு நினைவுள்ளது ! And தொடர்ந்த சென்னைப் புத்தக விழாவினில் "நயாகராவில் மாயாவி" விற்ற துரிதத்தைப் பார்த்த போது மிரண்டே போனேன் ! 

உப்மா அலுத்த கதை !!

அடுத்த 3 ஆண்டுகளுக்கு, மாதமொரு மறுபதிப்பு உங்களது கூரியர் டப்பிக்களில் இடம்பிடிக்கத் துவங்கின and திரும்பிப் பார்க்கும் இன்றைக்கு - maybe உப்மா மீதான அலர்ஜியை புதுமைக் காதலர்களின் மத்தியினில் பன்மடங்காக்கிய நாட்களுமே அவை தான் போலும் ! That was probably the overkill !! And மாதா மாதம் அந்த oldie நாயகர்களின் கதைகளில் தொனித்த புராதனம், கார்ட்டூன்கள் விதைத்த ஹியூமரை விடவும் ஜாஸ்தியாய்ப் பகடிகளை விதைக்க, ""உப்மா வேலைக்கு ஆவாது !" என்ற எண்ணம் நிறையவே வலுப்பெற்றது ! And அந்த அணியினில் நானுமே ஒரு முன்னணி இடம் பிடித்திருந்தேன் ! புராதனைக் கதையோட்டங்கள் ; புராதன மொழிபெயர்ப்பு ; புராதன க்ளைமாக்ஸ்கள் என்று எல்லாமே என்னை ஜெர்க்கடிக்கச் செய்தன அந்நாட்களில் ! புருனோ பிரேசிலின் "முகமற்ற கண்கள்" எடிட்டிங்கின் போது, "இத்தனை காலமாய் நாம் ஆராதித்த கதைகளா இவை ??" என்று  எனக்குள் ஓடிய நெருடல் இன்னுமே நினைவுள்ளது ! 

புதுக் கதைகள் & புது ஜானர்களுக்குள் இந்நேரத்துக்கு உள்நீச்சல், வெளிநீச்சல், சைட்நீச்சல் என எல்லா ரகங்களையும் முயற்சித்து இருந்தவனுக்கு - அவற்றின் சவாலான பரிமாணங்களைப் பார்த்தான பின்னே, புராதனங்கள் கூடுதலாய் ஜெர்க்கடிக்கச் செய்தது போலிருந்தது  ! ஒரு ரசிகனாய் மட்டுமே இருந்த நாட்களில் - எனது அசாத்திய favorites-களுள் இடம்பிடித்திருந்த கதைகள் ஒவ்வொன்றாய் இன்றைக்கு எழுகழுதை வயதிலான என்னை disappoint செய்திட்ட போது, ஜீரணிக்க ரொம்பவே சிரமமாய் இருந்தது ! And அந்த அஜீரணம் ரொம்பச் சீக்கிரமே அயர்ச்சியாகவும் மாறி விட்டது ! "வேண்டவே - வேண்டாம் இனி இந்தப் பழம் பஞ்சாங்கம்" என்று எனக்குள் உறுதிப்படச் சொல்லிக் கொண்ட அந்த நாட்களில் - "உப்பு" என்று காதில் விழுந்தால் கூட - "உப்புமாவா ???" என்று கூரையில் தலை தட்டும் உசரத்துக்குக் குதிக்க ஆரம்பித்திருந்தேன் ! In fact நடப்பாண்டின் இந்த கொரோனா இரண்டாம் அலை துவைக்க ஆரம்பித்த மே மாதம் வரையிலுமே எனது நிலைப்பாடு இதுவாகவே இருந்தது ! 

உப்மா மறுவருகை செய்த கதை !!

இரண்டாம் அலையின் தாக்கம் நிறையவே விதங்களில் யோசிக்கச் செய்தன !! And நிறைய விஷயங்கள் ஏக காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் மே முதலாய் நிகழ்ந்திட்டதும் ஒரு தற்செயலான ஒற்றுமையே !!

**இனி கொஞ்ச காலத்துக்கேனும் அழுகாச்சிக் கதைகளோ ; இருண்ட noir களங்களோ வேண்டாமென்று கூட்டாய் நாம்  தீர்மானித்தோம் ! So கிராபிக் நாவல்களில் பெரும் பகுதி தேர்வு லிஸ்டுக்குள் நுழையவே இடமின்றிப் போனது ! 

**மும்மூர்த்திகள் & இதர பிரிட்டிஷ் நாயகர்கள், உங்களின் ரசிப்பு விளிம்புகளிலிருந்து மெது மெதுவாய் நகன்றிருந்ததை சென்றாண்டின் "சர்ப்பங்களின் சவால்" & ஆர்ச்சி புதுக் கதைகளுக்கும் கிட்டிய thumbsdown சங்கடத்தோடு சொல்லியிருந்தன  ! In fact "சர்ப்பங்களின் சவால்" ஒரு மெகா ஹிட்டடிக்கும் என்று கனவு கண்டிருந்த எனக்கு செம ஷாக் ! பற்றாக்குறைக்கு சமீபத்தைய "நியூயார்க்கில் மாயாவி "க்குமே கிட்டிய lukewarm response !! இந்தத் தொய்வுகளின் காரணமாய் கைவசமுள்ள இன்னும் 2 மாயாவி மறுபதிப்புகள் + ஒரு ஆர்ச்சி புதுக் கதை + 1 ஸ்பைடர் மறுபதிப்பு அந்தரத்தில் தொங்கலில் உள்ளன !

** கார்ட்டூன்களிலுமே பெரிதாய் லயிக்க உங்களின் பெரும்பான்மைக்கு எதுவும் தென்படவில்லை ! லக்கி லூக் & சிக் பில் நீங்கலாய் தலை தப்பியது ப்ளூ கோட் பட்டாளத்துக்கு மட்டுமே ! So கார்ட்டூன் கேட்டுமே பணாலென்று அடைந்து போனது - இந்த லாக்டௌன் தினங்களின் தினசரி அலசல் மேளாவினில் !

** And கிட்டத்தட்ட அதே நேரம் தான் "இரத்தப் படலம்" நூத்தியொன்றாவது மறுக்கா மறுக்கா பதிப்பின் முன்பதிவுக்கான இறுதித் தேதிகளும் நிறைவுக்கு வந்தன ! கதவைச் சாத்தும் நேரமாகி விட்டது என்பது புரிந்த கணத்தில் எங்கிருந்து இத்தனை உத்வேகம் துளிர் விட்டதோ தெரியலை - முகவர்களும் சரி, வாசக நண்பர்களும் சரி, தடுப்பூசி கேட்டு லைனில் காத்திருக்கும் ஜனத்தைப் போல தெறிக்க விடத் துவங்கினர் !  

** And அதே வேளையில் தான் முத்து காமிக்ஸ் 50-வது ஆண்டுமலரின் திட்டமிடல் சார்ந்த அலசல்கள் துவங்கியிருந்தன !! "ஒரு மைல்கல் தருணத்தில் கூட பழசுக்கு இடமில்லையா ?" என்று ஒரு சிறு குழாம் கோரிக்கையினை முன்வைக்க - வழக்கமான மண்டையாட்டலில் அதனை நிராகரித்து விட்டேன் ! நிறையவே குரல்கள் உசந்தன இங்கே ; ஆனால் "அகில இந்திய உப்மா வேண்டாமென்பொரின் சங்கத்தின்" வலுவே கெலித்ததால் நானும் "ஷப்பாடி !!" என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டேன் ! But அந்தத் தோல்வியினில் உப்மா ஆர்வலர்கள் அடைந்த வருத்தங்கள் உள்ளுக்குள் என்னவோ செய்தது !  "ஆங்...அம்பதாவது வருஷ புக்கா ? ரைட்டு...பாத்துக்கலாம் !!" என்ற ரீதியில் கேஷுவலாய் எருமைக்கடாவாட்டம் இருந்தவனை இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை உணரச் செய்ததே இங்குள்ளோரின் முழுமை தான் எனும் போது,  அதனின் ஒரு (சிறு) அணியின் வருத்தமுமே எனக்குப் பெரியதொரு சமாச்சாரமாய்த் தோன்றத் துவங்கியது !  

கிடைத்த ஒரு ஓய்வான பகலில் யோசிக்க முயற்சித்தேன் - இன்னமும் பழசின் அடையாளங்களாய் எஞ்சி நிற்போர் யாரென்று !   வேதாளன் கதைகள் தமிழில் வெளியிடக்கோரி ரொம்ப காலமாய் ஒரு அணியினர் கோரிக்கை வைத்து வருவது நினைவுக்கு வந்தது ! நானுமே கடந்த 2.5 ஆண்டுகளாய் அதன் பொருட்டு முயற்சித்துக் கொண்டே இருந்து மண்ணையே கவ்வியிருந்தேன் ! இடைப்பட்ட நாட்களில் மலையாளத்திலும், இங்கிலீஷிலும் வேதாளர் களம் கண்டிட, அவர்களே தமிழிலும் வெளியிட இருப்பதாகவும் ஒரு தகவல் காதில் விழுந்திருந்தது ! சரி, அவர்கள் specialize செய்திடும் நாயகரை நாம் நோண்டுவானேன் ? என்று வேதாளன் தொடர்பான எனது விக்ரமாதித்ய முயற்சிகளை ஓரம் கட்டியிருந்தேன் !  ஆனால் MUTHU 50-க்கென பழையவர்களில் மும்மூர்த்திகள் நீங்கலாய் யாரைத் தேர்வு செய்வதென்று யோசித்த போது, வரிசையாய் மனதில் தோன்றியவர்கள் - முத்து காமிக்சின் இதர க்ளாஸிக் King Features நாயகர்களான ரிப் கிர்பி ; காரிகன் ; மாண்ட்ரேக் ; சார்லி etc தான் ! ரைட்டு....பழசின் இருப்பும் MUTHU 50-ன் போது இருந்திட வேண்டுமெனில், இவர்களுள் யாரையேனும் தான் தேற்றிட வேண்டி வருமென்று தீர்மானித்தேன் ! அந்நேரத்துக்குள் நமக்கு சம்பந்தமே இல்லாததொரு சர்ச்சை காரணமாய்  King Features ஏஜெண்ட்களுடன் தொடர்பில் இருக்குமாறு ஆகிப் போக, பேச்சு "வேதாளர் in தமிழ்" பற்றியும் எழுந்தது ! "வேண்டுமானால் திரும்பவும் முயற்சித்துப் பாருங்கள் - தமிழில் வேறு யாரும் Phantom கதைகளை போடுவதாக இல்லையென்று" சொன்னார்கள் ! 

இவை சகலமும் அகஸ்மாத்தாய் ஒன்றன் பின், ஒன்றாய் நிகழ்ந்திட, மறுபடியும் வேதாளர் கதைகளுக்கு வேறொரு திட்டமிடலோடு முயற்சித்துப் பார்க்கலாம் என்ற முனைப்பு தோன்றியது ! அன்றைக்கு இரவு இந்த முனைப்பில் இருந்த போது தான் இன்னொரு விஷயமும் மனதில் ஓடியது ! இல்லாததைத் தேடுவது இயல்பு ; அதிலும் நம்மவர்களிடம் அது இயல்போ இயல்பு என்பது நினைவுக்கு வந்தது ! வேதாளனைக் கொண்டு வந்தால் - "மாண்ட்ரேக் லேதுவா ?" என்றும் ; மாண்ட்ரேக்கையும் இட்டாந்தால் - "எங்க ரிப் கிர்பி கண்ணுக்குத் தெரிலியா ? காரிகன்லாம் மனுஷனா தோணலியா ?" என்றும் கேள்விகள் எழுமென்பது உறைத்தது ! ஏக் தம்மில் நால்வரையும் தூக்கியாந்துட்டால் எப்புடி இருக்கும் ? என்று நான் யோசித்த போதே புலர்ந்தது - இத்தனை நாட்களாய் தோல்வியில் முடிவுற்ற Phantom உரிமைகளின் முயற்சி, நாலு நாயகர்களுக்கான ஒன்றிணைந்த கோரிக்கையாய் இருக்கும் பட்சத்தில் ஜெயம் கண்டிடக் கூடுமென்ற நம்பிக்கை ! Thus was born the SMASHING '70s !

நிறைய யோசித்தேன் ; நிறைய, நிறைய கதைகளை பரிசீலித்தேன் ; நிறைய புக்ஸை அமேசானில் வரவழைத்தேன் ; ஒவ்வொரு தொடரினிலும் உள்ள டாப் படைப்புகள் எந்தெந்த ஆண்டுகளில் உள்ளன என்பதை அறிய மெனெக்கெட்டேன் ; பரீட்சார்த்தமாய் சில பக்கங்களை ஒவ்வொரு தொடரிலிருந்து மொழிபெயர்த்துப் பார்த்துக் கொண்டேன் ! கவனமாய் தேர்வுகளைச் செய்தால், இக்கதைகளில் புராதன நெடி தூக்கலாய் இல்லாது பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை மெது மெதுவாய்ப் பிறந்தது ! அதன் பின்னே, வழக்கமான இதழ்களிலிருந்து இவற்றைத் தனித்து தென்படச் செய்ய என்னவெல்லாம் செய்யலாமென்று பட்டியல் போட்டேன் ; அவற்றை கற்பனையில் உருவகப்படுத்திடவும் முயற்சித்தேன் ! நிச்சயமாய் ஒரு ரசிக்கக்கூடிய ஆக்கமாய் இவற்றைச் செதுக்கிட சாத்தியமாகிடும் என்ற நம்பிக்கை பிறந்த பின்னேயே, மறுபடியும் உரிமைகளுக்கென கோரிக்கையினைத் திட்டமிட்டு முன்வைத்தேன் & yes - ஒற்றை வடத்தால் இழுக்க இயலாத தேரினை நான்கு வடங்கள் ஒன்றிணைந்த போது இழுப்பதில் ஜெயம் கிட்டியது !! இந்த இதழ்களின் தயாரிப்பிற்கென நான் திட்டமிட்டுள்ளதில் முழுசையும் உங்களிடம் பகிர்ந்திருக்கவில்லை ; புக்ஸ் வெளியாகும் போது ஒரு சன்னமான சர்ப்ரைஸாக அதெல்லாம் இருக்கட்டுமே என்று கொஞ்சம் பெவிக்காலோடு கூட்டணி போட்டுக் கொண்டேன் ! 

ஒரு அக்மார்க் anti-oldie ; பழசு இனி ஜென்மத்துக்கும் வேண்டாமென்று நினைத்திருந்த ஆந்தைவிழியன் ; முன்செல்லும் பயணத்துக்கு இவை சர்வ நிச்சய இடர்களே என்று வைராக்கியமாய்க் கருதியிருந்தவன் - ஒன்றுக்கு நான்காய் "உப்மா டூயட்கள்" இன்று பாடத் தயாராகி வருவதன் அட்சர சுத்தப் பின்னணி இதுவே guys !! ஒவ்வொரு சிறு நிகழ்வுக்கும் இங்கே பங்குண்டு & நாட்களின் ஓட்டம் என்னைக் கையைப் பிடித்து இழுத்து இதனுள் புகுத்தியிருப்பது போலவே உணர்கிறேன் ! And இந்த அறிவிப்பினைச் செய்த தினத்தில் இங்கே பிரவாகமெடுக்கக் கண்ட சந்தோஷங்கள் மெய்யாலுமே திகைக்க வைத்தன ! Was a stunningly humbling experience !!

Life with உப்மா :

பலங்களே பலவீனங்களாகவும், பலவீனங்களே பலங்களாவதும் விதியின் ஜாலியான வரிகள் என்பேன் ! "தனியான தடம் ; முன்பதிவுக்கு மட்டுமே ; வேண்டுமெனில் மட்டுமே வாங்கி கொள்ளலாம் " என்ற அறிவிப்புகளோடு களம் காணவுள்ள limited printrun கதைகளில் - "அகில உலக உப்மாவைக் கண்டு தெறித்தோடுவோர் சங்கத்துக்கு " விசனங்கள் எழ முகாந்திரங்கள் இருக்கலாகாது என்பதே ஒரு லட்சிய உலகின் எதிர்பார்ப்பு ! ஆனால் - "பிடித்தாலும், பிடிக்காது போனாலும், வாங்குவோமே " என்ற உங்களின் அற்புத ஆதர்ஷங்களே இந்த நொடியினில் நமது பாகுபலி பலமாகவும், " புடிக்காததை வாங்கிட்டோம் சரி,ஆனாக்கா விமர்சிக்காது இருக்க மாட்டோம் !" என்ற பிடிவாதங்கள் நமது ஓமக்குச்சி பலவீனங்களாகவும் இந்த சூழலில் மிளிர்வதே ஜாலியான யதார்த்தம் ! 

இந்த நொடியினில் என்னளவில் உறுதி - இவற்றை சிலாகிக்கப்படும் இதழ்களாய் உருவாக்கிட இயலுமென்று ! And இதோ - தெறிக்க விடும் உங்களின் முன்பதிவுகள் அந்த நம்பிக்கைக்கு உரம் சேர்க்கின்றன ! So  இனியொருமுறை நானோ, சீனியர் எடிட்டரோ எங்களது ஆயுட்காலங்களில் காண இயலாவொரு மைல்கல் பொழுதினில் உங்களின் ஆதர்ஷமான நாயகர்களைக் கண்ணில் காட்டிடவுள்ள   மகிழ்வே - இந்த அந்தர்பல்டியினிலிருந்து எனது takeaway !! Oh yes - ஐம்பதாவது அகவை காணவுள்ளது - சீனியர் எடிட்டரின் உருவாக்கம் என்ற போதிலும், அதனின் நிர்வகிப்பு முழுக்கவே என் கையில் இருக்கிறதெனும் போது - நான் செய்வதோ, செய்யாது போவதோ, காலத்துக்குமொரு (புது) வடுவாய் தொக்கிட வேண்டாமே என்ற உறுத்தலும் என்னை இயன்ற அத்தனை திக்குகளிலும் கர்ணம் அடிக்கச் செய்கிறது ! So ரயிலடியில் வயசான குருதைகளைக் கட்டி நிற்பதன் பின்னேயுள்ள காரணங்கள் இவையே guys !

Life after உப்மா !!

And என்னளவில் ரொம்பவே தெளிவாக உள்ளேன் folks - அன்னநடைகள் ஒரு குழந்தைத்தனமான ஆசைக்கு சுகப்படலாம் ; ஆயுசுக்கும் நம்மைக் கரைசேர்த்திடாதென்று ! இதோ ஒரு பக்கம் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பான கதைகளை தயார் செய்யும் அதே தருணத்தில், அடுத்த அரை தசாப்தத்துக்காவது நமது பயண இலக்காய் இருக்கவுள்ள புதுயுகக் கதைகளோடும் தடதடத்துக் கொண்டுள்ளேன் ! So "முழியான்கண்ணன் மேல் நோவாமல் பழசைப் போட்டு ஒப்பேத்த வழி தேடிப்புட்டான் ! இனி விளங்குன மெரி தான் !" என்று உதட்டைப் பிதுக்குவோர் 2022-ல் பிதுங்கிய உதடுகளை நேராக்க வழிகள் தேட வேண்டிப் போகலாம் ! Becos - புத்தாண்டினில் ; ரெகுலர் அட்டவணையினில் ; மருந்துக்கும் புராதனமோ, தொய்வோ இராது ; and thats a promise !! எனக்கென பணியாற்ற எஞ்சியிருக்கும் நாட்களில் - ஏதோவொரு ரூபத்தில் சவாலிடக்கூடிய கதைகளோடு மட்டுமே எனது பயணங்களின் பெரும்பகுதி இருந்திடுமே தவிர்த்து, "சொகுசா சாய்ஞ்சுட்டே போலாமே ?" என்ற எண்ணம் ஒரு போதும் தலைதூக்கிடாது ! 

And 'அகில உலக உப்மா நேசிப்போர் கழகத்துக்கும்' எனது சேதி இதுவே : இனி பரணிலிருந்து தூசி தட்டிட யாரும் லேதுங்கோ ; so "சார்லியை கூட்டியாரலியா ? ஜார்ஜைக் கூட்டியாரலியா ?" என்ற கேள்விகள் வேண்டாமே ப்ளீஸ் - thats simply not going to happen ! அடுத்த 2 ஆண்டுகளுக்கு மட்டும் இந்த Smashing '70s திட்டமிடல்  தொடர்ந்திடும் ! அதன் பின்பாய் - வேதாளருக்கு துணையாய் - மாண்ட்ரேக்க்கோ ; கிர்பியோ ; காரிகனோ - இவர்களுள் யார் சாதித்துக் காட்டுகின்றனரோ - அவர் மட்டுமே வந்திடுவார் ! ஒருக்கால் நீங்கள் மேற்படி அனைவரையுமே ஹிட்டடிக்கச் செய்யும் பட்சத்தில் & உங்களுக்கே இவர்கள் போர் அடிக்காது போகும் பட்சத்தில் - அதற்கேற்ப யோசிக்கலாம் ! 

So ஒரு மைல்கல் பொழுதினை பாகுபாடின்றி மகிழ்வானதாக்கிடும் எனது முனைப்பின் முதுகில் ஒன்றன் பின் ஒன்றாய் தாத்தா நாயகர்களையாய் ஏற்றிவிட்டு, என்னையும், நண்பர்களின் கணிசமானோரையும் பெண்டு நிமிர்த்திட வேண்டாமே - ப்ளீஸ் ! And இன்னும் கொஞ்சம் நான் உழைத்துக் கொள்ள அனுமதியுங்கள் folks - அப்புறம் தான் லயனின் 50-வது ஆண்டுக்கென ஜூனியரிடம் இதே ரீதியிலான பழசு சார்ந்த கோரிக்கையினை வைத்திட சரக்கிருக்கும் !! இன்றைய பொழுதுகளில் நான் விடாப்பிடியாய் பழசோடே பயணிக்கும்படி ஆகிப் போனால் - 2034-ல் இரத்தப் படலத்தை குப்புறடிக்கப் பிரிண்ட் செய்து - "உலக வரலாற்றில் முதல் தடவையாக" என்று என் புள்ளையாண்டான் போடும் choice மட்டுமே மிஞ்சி இருக்கக்கூடும்  ! 

A word again to "உப்மா கண்டு ஊரைவிட்டு ஓடுவோர் சங்கம்" !! கல்யாணவீட்டு சம்பந்தி விருந்துகளில் ஒரு பக்கம் அசைவம் தெறிப்பதும், இன்னொரு பக்கம் சைவப் பந்தி ஓடுவதையும் பார்த்திருப்போம் தானே ? சைவப் பந்தி ஓடுவதால் அசைவம் விரும்பும் நமக்கு நிச்சயமாய் பாதிப்புகள் இல்லை guys ! So 'அங்கே பாயசம் மணக்குது ; இது தேவையா ? இந்த மெனெக்கெடலாம் தேவையா ?" என்று முகம் சுழித்திட அவசியங்களில்லை ; simply becos உங்கள் விருந்தில் எதையும் குறைத்து அங்கே சுவையாய்ப் பரிமாறிட நான் முனைந்திடப்போவதில்லை ! இங்கும் சரி, அங்கும் சரி, பந்தியிலிருந்து எழும் போது அவரவருக்கு சுகமானதொரு ஏப்பமும், முகத்திலொரு திருப்தியின் புன்னகையும் நிலைத்திட வேண்டுமென்ற அவாவின் செயல்பாடே இந்த இரட்டைப் பந்தி ! 

Before I wind off - போன வாரம் வந்ததொரு மின்னஞ்சல் பற்றி ! நண்பர் இங்கே மௌன வாசகர் ; நமது புத்தக விழாவின் சந்திப்புகள் சகலத்திலும் தவறாது பங்கேற்பவர் ; அதிர்ந்து பேசத்தெரியா புன்னகையாளர் ! பிடித்ததை படித்து விட்டு, பிடிக்காததைத் தாண்டிப் போகும் ரகம் ; எந்த சர்ச்சைகளுக்குள்ளும் தலை நுழைக்காதவர் !

"சின்ன வயசில் ஏதாச்சும் வேண்டுமெனில் அழுது புரண்டு, கதறி கூப்பாடு போட்டு அதை வாங்கிக்குவேனாம் ! அழுகை அடங்கும் போது - "இப்போ உனக்கு ஜென்ம சாபல்யம் கிடைச்சிடுச்சாக்கும் ?" என்று அம்மா கேட்டுவிட்டுப் போவார் ! இதோ - இன்றைக்கு இத்தனை காலங்கள் கழித்து, எனக்கு அம்மாவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன !! உங்களின் Smashing 70s அறிவிப்பைப் பார்த்த கணத்தில் என் ஜென்மம் சாபல்யமடைந்ததாய் உணர்கிறேன் ; நன்றிகள் சார் !!" என்று எழுதியிருந்தார் !

இது அன்பின் மிகையா ? ஒரு பால்ய நேசம் திரும்பக்கிட்டப் போகும்  குதூகலத்தின் ஆர்ப்பரிப்பா ? - சொல்லத்தெரியவில்லை folks !! ஆனால் இந்தப் பேரிடர் காலங்களில் ஒரேயொரு நெஞ்சுக்கு இந்த நிறைவைத் தந்திட எனது மனமாற்றம் உதவியிருந்தாலுமே கூட  - அதற்கென ஒரு நூறு "உப்மா வேண்டாமே" நண்பர்களிடம் புரிதல் கோரி கையில்,காலில் விழுந்து விண்ணப்பித்தால் தப்பில்லை என்று படுகிறது ! சந்தோஷங்கள் விலைமதிப்பற்றவைகளாகிப் போய்விட்டுள்ள இந்நாட்களில் - சந்தோஷங்களை விதைக்க எனக்கு / நமக்குக்  கிட்டியுள்ள வாய்ப்பாக இதனைப் பார்த்திடுவோமே all ?

Bye all...see you around ! Have a cool week !


Saturday, July 24, 2021

மிஸ்டர் பிம்பனார் !

 நண்பர்களே,

வணக்கம். ஒரு 'கமர்ஷியல்' மாதத்தின் நடுவினில் சில பல சபலங்களும், சிந்தனைகளும் எழுகின்றதைத் தவிர்க்க வழியைக் காணோம் ! கொருக்குப்பேட்டை போய் ; கும்மிடிப்பூண்டி போய் ; அப்பாலிக்கா U-டர்ன் அடித்து சிங்காரச் சென்னையைத் தொடும் பாணியிலான கதைகளாய் இல்லாது ; நேர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோட்டுக் கதைகளாய் அமைந்து ; அவற்றினில் இடம் பிடிப்போரும் செம ஆதர்ஷ ஜாம்பவான்களாய் இருந்தால் பலன் என்னவாக இருக்குமோ ? Simple : கிட்டத்தட்ட அதே மாதத்தில் "ஸ்டாக் காலி !" என்று போர்டு மாட்டும் ஒரு சூழல் உருவாகும் ! 

Agreed - கொரோனா இரண்டாம் அலையின் தாண்டவம் துவங்கிய நாள் முதலாய் நமது பிரிண்ட் ரன்னை இன்னமுமே குறைத்து விட்டுளோம் தான் ; புத்தக விழாக்களின் முக்கிய circuit இந்த ஜூலை ; ஆகஸ்ட் ; செப்டெம்பர் & அக்டோபர் மாதங்களில் தானெனும் போது, இந்தாண்டும் அவையெல்லாமே கானல்நீராகிடக் கூடிய சூழலில், சும்மா குடவுனை ரொப்புவானேன் ? என்ற எண்ணத்தில் எண்ணிக்கையினைக் குறைத்திடத் தீர்மானித்தோம் தான் ! But still - குறைந்த எண்ணிக்கையே ஆனாலும் கமர்ஷியல் நாயகர்கள் பட்டையைக் கிளப்பும் அழகே தனி ! இதோ - இம்மாதத்து "பாயசப் பயணம்"....sorry sorry ..."பிரளயப் பயணம்" கிட்டத்தட்ட காலி ! "நெஞ்சே எழு" முற்றிலுமாய்க் காலி ; லக்கி ஆண்டுமலரில் இருப்பு மிதமே & B & B ஸ்பெஷல் கூட செம விறுவிறுப்பு - கதையினில் இல்லாட்டியும் - விற்பனையினில் !! 

இந்த இருப்பு நிலவரத்தைப் பார்த்தபடிக்கே கண்ணாடியைப் பார்க்கும் போது - அதில் தென்படும் பளிங்கு மண்டையன் 'கெக்கே பிக்கே' என என்னைப் பார்த்து சிரிப்பது போலுள்ளது ! ஏழு கடல் தாண்டி ; ஏழு மலை தாண்டி ; ஏழு நதிகளைத் தாண்டி ; ஏழு ராட்சஸர்களைத் தாண்டி - ஒரு அரண்மனைக்குள் பூட்டிக் கிடக்கும் பாப்பாவைத் தட்டி எழுப்பி - உங்க முன்னே கொணர்ந்து நிறுத்தி, "பாத்துக்கோங்க மக்களே ; இவுக தான் லேட்டஸ்ட் ஒலக அழகியான  ராசகுமாரி ! கன்னத்திலே போட்டுக்கோங்க !" என்று நான் சிலாகித்து நிற்கும் வேளையினில், ஆலமரத்தடியில் ஆராமாய்ப்  படுத்து காலாட்டியபடிக்கே - ஒரு மசால்வடையை உள்ளே தள்ளியபடிக்கே, உங்க செல்போனில் சுசுமிதா சென்களையும், ஆயிசுவர்யா ராய்களையும் தரிசித்துக் கொண்டு, நீங்கள் சந்தோஷமாய் இருப்பது புரியும் போது, கண்ணாடியின் பிம்பம் சிரிப்பதில் ஆச்சர்யம் தான் ஏது ? 

"இது அந்த ஜானர் ; இது இந்த கி.நா.ரகம் ; இது பிரான்க்கோ-பெல்ஜிய லோகத்தில் சிலாகிக்கப்படும் படைப்பாக்கும்" - என்று நான் 'தம்' கட்டித் தேடி அழைத்து வரும் நாயகர்களை / தொடர்களை - classic பார்ட்டிஸ் சும்மா ஒற்றைக்கையால் பந்தாடும் போது - மெய்யாலுமே சபலம் தட்டுகிறது ; மருவாதையாய் பரீட்சைகளைக் கொஞ்ச காலத்துக்கேனும் மூட்டை கட்டி வைத்து விட்டு, க்ளாஸிக் & கமர்ஷியல் குதிரைகளிலேயே சவாரி செய்து விட்டால் என்னவென்று ?! இதோ இம்மாதம் நீங்க ஹேப்பி ; ஏஜெண்ட்கள் ஹேப்பி & ultimately நானும் ஹேப்பி ! So இந்த பாணியை பின்தொடராமல் - "ரசனைகளை மாத்துறேன் ; ரசம் சமைக்க பாக்குறேன் ! என்ற விஷப்பரீட்சைகள் செய்வானேன்டா பீன்ஸ் மண்டையா ?" என்று மிஸ்டர்.பிம்பம் கேட்கும் போது பதில் சொல்லத் தடுமாறத் தான் வேண்டிப் போகிறது !

"இல்லே பிம்பம்ண்ணா....ஒரே மெரி சுத்தி சுத்தி வந்தாக்கா செக்கு மாட்டு routine ஆகிடும் ; இன்னும் நாம முன்னேற எவ்ளோ களங்கள் கீது தெர்மா ? In 1977 இது ரஷ்யாவிலே ஹிட் தெரியுமா ?" என்று நான் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போதே - கண்ணாடிக்குள் பிம்பம் சாரோடு நிறையவே நண்பர்களின் முகங்கள் தெரிகின்றன - ஒரேயொரு கேள்வியோடு ! "நாங்க எக்ஸ்டரா நம்பர் போடச் சொன்னோமா ? போடச் சொன்னோமா ?" என்று ரீங்காரமிடுகிறது சற்றைக்கெல்லாம் ! 

"இன்னாடா கொமாரு.....நாம ஊடு கட்டியடிச்சு, ரஜனைகளை செதுக்குவோம்னு நினைச்சாக்கா இப்டியொரு கோணத்திலே கேட்டைப் போடுறாங்களே ?...யோசிக்கணும் போலிருக்கே ?" என்று இல்லாத கேசத்தை சிலிப்பிக்கும் நேரத்திலே பார்த்தாக்கா - கண்ணாடியுள்ளாற கூட்டம் கூடுது !!

"ஆருப்பா நீங்கள்லாம் ? " என்றபடிக்கே உற்றுப் பார்த்தால் - முதலாமவர் கொரோனாக்கெல்லாம் முன்னமே முகமூடி போடத் துவங்கி விட்ட வேதாள மாயாத்மா ; அடுத்து நிற்பவர், கைப்புள்ளைக்கு மீசை வரைய inspiration தந்திட்ட மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் ; மூன்றாமவரோ IIT புரஃபஸர் ஜாடைக்கு அம்சமாய் காட்சி தரும் ரிப் கிர்பி & நாலாமவர் ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சிலான காரிகன் ! இந்த நால்வரின் திடகாத்திரத் தோள்களுக்குப் பின்னேயோ இன்னமும் ஒரு கொத்தாய் நண்பர்கள் குழாம் !! 'நாங்கள்லாம் Smashing '70s'க்கு முன்பதிவு பண்ணிட்ட நூற்றுச் சொச்ச கிளாசிக் காதலர்களாக்கும் !!" என்று அவர்கள் குரல் கொடுக்க, நானோ பேந்தப் பேந்த ஆபீசுக்கு போன்  அடிச்சு - "Smashing 70's முன்பதிவு நூறைத் தாண்டிடுச்சா அதுக்குள்ளாற ?" என்று கேட்க "109 சார் !" என்ற பதிலும், இந்தப் பட்டியலும் கிட்டுகிறது ! 

NO

NAME

PLACE

4001

Mr.J.ARUN PRASAD

MADURAI

4002

Mr.CHIDAMBARA NATARAJAN

AUSTRALIA

4003

Mr.VENKATESHWARAN

CHENNAI

4004

Mr.G.JEGADEESWARAN

ARANTHANGI

4005

Mr.P.VIJAY SEKAR

SALEM

4006

Mr.R.SRINIVASA RAGHAVAN

CHENNAI

4007

Mr.NANDHA KISHORE

KARUR

4008

Mr.KARTHIKEYAN

CHENNAI

4009

Mr.G.SIVAKUMAR

TRICHY

4010

Mr.R.SENTHIL KUMAR

TRICHY

4011

Mr.S.BALA SUBRAMANIYAN

BANGALORE

4012

Mr.V.V.KRISHNA

PALANI

4013

Mr.S.PADMANABAN

KARUR

4014

Mr.S.PON RAJ

COIMBATORE

4015

Dr.V.HARIHARAN

COIMBATORE

4016

Mr.B.RAJKUMAR

PUDUKOTTAI

4017

Mr.GANESH RAJENDRAN

KARAIKUDI

4018

Mr.SENTHIL MADESH

COIMBATORE

4019

Mr.K.SRINIVASAN

SALEM

4020

Mr.SUBRAMANIAN

DHARMAPURI

4021

Dr.RAJESH RANGATHAN

CHENNAI

4022

Mr.K.PARTHIBAN

TRICHY

4023

Mr.S.GOPINATH

CHENNAI

4024

Mrs.S.SUJATHA

COIMBATORE

4025

Mr.SADHASIVAM

TIRUPUR

4026

Mr.SENTHIL KUMAR

TIRUPUR

4027

Mr.G.RAJKUMAR

SALEM

4028

Mr.RJ.JEYA MURUGAN

MUMBAI

4029

Mr.ANANDHA SANKAR

TIRUNELVELI

4030

Mr.HASHIM MUHAMAD

TRICHY

4031

Mr.K.SRIDHAR

CHENNAI

4032

Mr.senthil kumar

Tirupur

4033

Mr.M.KARTHIKEYAN

ARUPPUKOTTAI

4034

Mr.S.KARTHICK

CHENNAI

4035

Mr.RANJITH

KANCHIPURAM

4036

Mr.M.A.ARAVIND

CHENNAI

4037

Mr.S.RAJ KUMAR

BANGALORE

4038

Mr.PARTHEEBAN

KARUR

4039

Mr.SARAVANAN

ARUPPUKOTTAI

4040

Mr.N.KUMAR

TIRUPUR

4041

Mr.A.GANESH KUMAR

COIMBATORE

4042

Mr.SHANKAR CHELLAPPAN

CHENNAI

4043

Mr.SHANKAR CHELLAPPAN

CHENNAI

4044

Mr.JEYA PRAKASAM

MADURAI

4045

Mr.G.BALAJI

RANIPET

4046

Mr.G.ARUNKUMAR

NAMAKKAL

4047

Mr.T.S.AMARNATH

SALEM

4048

Mr.RVC PATHY

BANGALORE

4049

Mr.C.GOKUL

KARUR

4050

Mr.HUSSAIN

TIRUCHIRAPALLI

4051

Mr.C.SELVAKUMAR

NAGAPATTINAM

4052

Mr.MITHUN CHAKARAVARTHY

GOBI

4053

Mr.M.K.SRIRAM

SALEM

4054

Mr.VIJAY BABU

RAJAPALAYAM

4055

Mr.JEYAKRISHNAN JEYAPANDIAN

COIMBATORE

4056

Mr.AMALRAJ ABRAHAM

CHENNAI

4057

Mr.SHANKAR CHELLAN

CHENNAI

4058

Mr.SIDICKANEES

CHENNAI

4059

Mr.SRIKANTH

BANGALORE

4060

Mr.MUTHUKUMARASAMY SELVA RAJ

CHENNAI

4061

Mr.G.SENTHIL KUMAR

TIRUPUR

4062

Mr.NATARAJ SRINIVASAN

CHENNAI

4063

Mr.T.RAVI

CHENNAI

4064

Mr.RAJARAMAN

TIRUPUR

4065

Mr.RAJESH

CHENNAI

4066

Mr.A.KALEEL

PONDICHERRY

4067

Mr.D.SENTHIL KUMAR

PONDICHERRY

4068

Dr.ELAMPARUTHI

DHARMAPURI

4069

Mr.PUSHPA RAJ

PALAKKAD

4070

Mr.NAGARAJAN BALASUBRAMANIAN

VIRUTHUNAGAR

4071

Mr.C.GANESH

DINDUGAL

4072

Mrs.M.V.ANURADHA

CHENNAI

4073

Mr.M.DINESH KUMAR

GOBICHETTIPALAYAM

4074

Mr.RAM KUMAR

NAMAKKAL

4075

Mr.KARTHICK KANNAN

BANGALORE

4076

Mr.T.S.MURUGESH

TIRUCHIRAPALLI

4077

Mr.M.KANISHK

TIRUCHIRAPALLI

4078

Mr.M.SOUNDARA PANDIYAN

RAJAPALAYAM

4079

Mr.M.SOUNDARA PANDIYAN

RAJAPALAYAM

4080

Mr.M.SOUNDARA PANDIYAN

RAJAPALAYAM

4081

Mr.N.DINAKARAN

DINDUGAL

4082

Mr.R.SARAVANA KUMAR

TIRUNELVELI

4083

Mr.A.T.RAJENDRAN

CUDDALORE

4084

Mr.SANKARALINGAM ULAGANATHAN

CHENNAI

4085

Mr.K.S.BALAJI

CHENNAI

4086

Mr.MADHAVAN NARAYANAN

Erode

4087

Mr.RAJESH BABU UNNI

TRIVANDRUM

4088

Mr.RAJA

BANGALORE

4089

Mr.KIRUBAKARAN

SALEM

4090

Mr.RAGHAVENDRAN MADHUSUDAN

COIMBATORE

4091

Mr.S.SIVAKUMAR

CHENGALPATTU

4092

Mr.CHANDRA SEKAR SANTHANAM

CHENNAI

4093

Mr.N.SHANMUGAM

TIRUCHENGODE

4094

Mr.RATHEESH KUMAR

DINDUGAL

4095

Mr.JAGATH KUMAR

SALEM

4096

Mr.KALANITHI RAMASAMY REDDY

ERODE

4097

Mr.SRIDHAR SADHASIVAM

PUNE

4098

Mr.B.GANESHAN

CHENNAI

4099

Mr.SATHYA BALAJI

BANGALORE

4100

Mr.P.ASOKAN

CHENNAI

4101

Mr.S.SHATHACKATHULLA

MADURAI

4102

Mr.S.PRASANNA

KARAIKAL

4103

Mr.S.JAFARDEEN

SALEM

4104

Mr.S.BALAJI

BANGALORE

4105

Mr.MAHESH KANNAN

ERODE

4106

Mr.KUMARESAN PALANIVEL

VIRUDHACHALAM

4107

Mr.THIRU CHELVAM PRAPANATH

FRANCE

4108

Mr.R.DHAYALAN

SINGAPORE

4109

Mr.BALA MURUGAN NATARAJAN

USA

Wow !! என்று மௌனமாய் வாய்பிளக்க மட்டுமே முடிகின்றது - உங்களின் இந்த உத்வேகத்தினைப் பார்க்கும் போது ! 

*லாஜிக் உதைக்கும் கதைகள் வேணாமே நண்பர்களே !!" - இது ஞான் !

"படிக்கிற எங்களுக்கு ஓ.கே.ன்னா உனக்கு ஏண்டாப்பா ஒதைக்கணும் ?" - இது நிங்கள் !

"புராதனம் தெறிக்குதுங்களே ?" - again ஞான் !

"ஏற்கனவே மாஸ்க்லாம் போட்ருக்கோம் ; தூசு நாசியில் ஏறாது !!" - again நிங்கள் !

"காலம் எவ்ளோவோ மாறிட்டு போகுதுங்களே ? நாம இன்னும் ஆமை வடை ; மோர்சாதம்ன்னு இருந்தாக்கா எப்புடி ?" - yet again ஞான் !

"எவ்ளோ காலமானாலும் வவுத்துக்கு இது ஒண்ணும் செய்யாது ! " - yet again நிங்கள் !

இந்த ஒற்றை மாதத்தினில் கமர்ஷியல் நாயகர்கள் + க்ளாஸிக் நாயகர்கள் கரம் கோர்த்திடும் சந்தர்ப்பம் அகஸ்மாத்தாய் அமைந்து போயிருக்க, முன்னவர்களின் விற்பனைத் துரிதமும், பின்னவர்களின் முன்பதிவு வேகமும் ஒன்றிணைந்து எனது மூக்கில் நொங்கு நொங்கென்று குத்துவது போலவே ஒரு பீலிங்கு ! Of course - அதற்காக நான் அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டு - "காயாத கானகத்தே ..நின்றுலாவும்...." என்று எட்டுக்கட்டையில் பாடக் கிளம்பிடவெல்லாம் மாட்டேன் தான் & கைவசமுள்ள கதைகளையும், தொடர்களையும் அப்படியே அம்போவென ஒதுக்கிடவும் முடியாது தான் ! பற்றாக்குறைக்கு Muthu # 50-க்கோசரம் தெறிக்க விடப் புது வரவுகளும் லைன் கட்டி நிற்கின்றனர் ! So இந்த நொடியில் எழும் எனது சபலம் நாளையே புதியதொரு காமிக்ஸ் லோகத்தினை நனவாக்கிடப் போவதில்லை தான் ! ஆனால் இந்நொடியினில் உங்களிடம் கேட்க எனக்குள்ள கேள்விகள் இவையே :

1.CLASSIC vs NEW AGE என்ற இந்தப் போட்டியினில் நீங்கள் இத்தரப்புக்கும், அத்தரப்புக்கும் போடக்கூடிய மார்க்குகள் என்னவாக இருக்குமோ ?  CLASSIC எனும் போது - நாம் பல காலமாய்ப் பரிச்சயம் கொண்டுள்ள எல்லா நாயக / நாயகியரையும் குறிப்பிட விழைகிறேன் ! NEW AGE எனும் போது நமது 2012 கம்பேக்குக்குப் பின்னே அறிமுகமான நாயக / நாயகியரை !!

2. Variety தான் நமது அடையாளம் 1984 முதலாகவே ! அது இன்னமுமே தேவை தானா ? அல்லது வாய்ப்பளித்துப் பரிசீலித்துப் பார்த்தான வெற்றியாளர்களை மட்டுமே சிறு அணிவகுப்பாக்கி, அவர்களோடே இனி பயணித்தால் போதுமென்பீர்களா ? YES to Variety ; NO to Variety - என்று பதிலளிக்கலாம் guys !!

3 .தற்போதைய மறுவருகைகள் - Phantom ; Mandrake & et al - குறித்து உங்களின் நிலைப்பாடுகள் ப்ளீஸ் ? சந்தோஷ மீட்டரில் பதிவிடுவதெனில் ஒன்றிலிருந்து பத்துக்குள் எத்தனை தருவீர்களோ ? On a scale of 1 to 10 ?

4 .இம்மாத 5 கதைகளிலும் ஒற்றை சமாச்சாரம் பொதுவானது : அது தான் இந்த "FEEL GOOD factor " ! எவ்வித நெகட்டிவ் சமாச்சாரங்களும் இல்லாத கார்ட்டூன்ஸ் ; வில்லன்களையே நேசிக்க இயலும் படைப்புகள் - என்று லக்கியின் ஆண்டுமலர் ! எதிரிகளை ; அராஜகம் செய்வோரை சட்னியாக்கும் 'தல' - "பிரளயப் பயணம்" இதழில் ! 007 & இளவரசியும் தத்தம் பாணிகளில் நல்லோரை நலமாய் இருக்க உதவிடுவது - B & B ஸ்பெஷல் இதழினில் ! இங்கெல்லாமே படிக்கும் போதும், படித்து முடிக்கும் போதும் முகங்களில் புன்னகைகள் மிஞ்சியிருக்கும் - அவை  திரைசீலைக்குள் போர்த்தப்பட்ட புலியைப் பார்த்தோ ; மாத்திரை சாப்பிடாமல் மாரைப் பிடிக்கும் மொட்டை வில்லனைப் பார்த்தோ ; நத்தைக்கறியைப் பார்த்து வெகுண்டெழும் வெள்ளிமுடியாரைப் பார்த்தோ !! எனது கேள்வி : இந்த FEEL GOOD Factor தான் உங்களின் இந்நாட்களின் வாசிப்புகளுக்கு சுகப்படுகின்றனவா ? 

F.G.F - Yes ; F.G.F - Not Really - என்ற ரீதியில் பதில் சொல்லிடலாம் guys !!

மனசில் படுவதைத் தயங்காது இக்கட பதிவிடலாம் ; அல்லது நமக்கு மின்னஞ்சலிலும் சொல்லிடலாம் ! இங்கே பதிவிடும் பட்சங்களில் - பின்னூட்டங்கள் மீதான விமர்சனங்கள் வேண்டாமே ப்ளீஸ் ! மனதில் படுவதை நண்பர்கள் பிரீயாய் சொல்லிடும் சுதந்திரம் இருக்கட்டுமே ! 

அதே சமயம் பதில்களில் - சிலபஸில் இல்லாத சமாச்சாரங்கள் இடம்பிடித்திட வேணாமே folks ? என் சில்லுக்குமூக்குக்கு ஏதேதோ காரணங்களின் பொருட்டு குறி வைத்திட இந்த பதில்களைக் களமாக்கிட முனைந்தால் - இந்த வேகத்தினில் நீங்கள் பதிவிட எண்ணிடும் கருத்துக்கள் மங்கிடக்கூடும் ! So கேள்விகள் இவையே ; உங்களின் பதில்களும் இவற்றோடு தொடர்பு கொண்டதாகவே இருந்து விடட்டுமே ?

Bye folks....See you around ! Have a Safe Weekend !!

Update # 1 : "இரத்தப் படலம்" பிரின்டிங் + அட்டைப்பட நகாசு வேலைகள் என்று சகலமும் முடிஞ்சு ! பைண்டிங்கில் அடுத்த 15 நாட்களுக்குள் பணிகள் நிறைவுற்றிட வேணும் ! பத்திரமாய் பேக் செய்து ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு டெஸ்பாட்ச் செய்திடவுள்ளோம் ! (XIII-க்கு பதின்மூன்றாம் தேதி டெஸ்பாட்ச் தானே பொருத்தமும் ?பிரிண்டிங்கில் போன முறையை விட இம்முறை தெளிவு ஜாஸ்தி ; இயன்றமட்டுக்குப் பிழைகளையும் களைந்திட முயற்சித்துள்ளோம் ; but fingers crossed on that ! 

Update # 2 : SMASHING '70s - முதல் ஆல்பமான வேதாளர் கதைகளுக்குள் ஆகஸ்டின் இறுதியினில் பணிகளைத் துவக்கிட எண்ணியுள்ளேன் ; அதற்கு முன்பாய் முத்து காமிக்சில் & முத்து மினி காமிக்சில் வெளியான வேதாளர் கதைகளின் பட்டியல் தேவை ப்ளீஸ் ? கொஞ்ச வருஷங்கள் முன்னே பார்த்த போது 15 கதைகள் என்ற மாதிரியொரு ஞாபகம் எனக்கு ! Correct me please ? And அவற்றுள் உங்களின் Favorite எதுவோ ? என்னது - ஜூம்போ !!