Wednesday, June 16, 2021

இது "நெத்த" பூமி !!

 நண்பர்களே,

வணக்கம்.  நினைவில் நின்றதொரு விஷயம் ; இரு ஜாம்பவான்கள் சார்ந்தது ! சும்மா ஒரு ஒப்பீடுக்காக இங்கே சொல்ல நினைக்கிறேன் ; so "அவங்களோட compare பண்ணிக்கிற அளவுக்கு நீ பெரிய அப்பாடக்கராகிப்புட்டியாக்கும் ??" என்று பொங்கல் வைக்க வேண்டாமே ?  ஏற்கனவே வைத்துள்ள பொங்கலே தீபாவளி வரைக்கும் இருக்கும் !

சுமார் 20 வருஷங்களுக்கு முன்பாய் டைரக்டர் ஷங்கரின் "பாய்ஸ்" திரைப்படம் வெளிவந்திருந்தது நினைவிருக்கலாம் ! அதற்கு திரைக்கதையிலும், வசனங்களிலும் ஒத்தாசை செய்திருந்தவர் மறைந்த ஜாம்பவான் எழுத்தாளர் சுஜாதா சார் என்பதுமே நினைவிருக்கலாம் ! படத்தில் ஒரு சீன் உண்டு - டீனேஜ் நடிகர் சிதார்த் மவுண்ட் ரோடில் அம்மணமாய் ஓடுவது போல் ! படம் வந்த பிற்பாடு, படமும் சரி ; அந்தக் காட்சியும் சரி - செம ரெய்டுக்கு ஆளாயின ! அந்த நேரம் குமுதத்தில் ஷங்கர் சார் ஒரு பேட்டியில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தார் ! படம் வெளிவருவதற்கு ரொம்பவே முன்னர், படத்தின் 'ரஷ்' பார்த்த பின்னே - இந்தக் காட்சிக்கும் சரி, படத்துக்கும் சரி, வெகுஜன விமர்சனம் இன்ன மாதிரி..இன்ன மாதிரி இருக்கும் ; ஊடகங்களின் விமர்சனங்கள் இன்னின்ன மாதிரி இருக்கும் என்பதை சுஜாதா அவர்கள் ஒரு தாளில் எழுதி டைரக்டரின் கையில் திணித்து விட்டுப் போயிருந்தாராம் ! And கிட்டத்தட்ட அனைத்துமே - சுஜாதா சாரின் கணிப்புகளின்படியே, யூகங்களின்படியே பின்னாட்களில் இருந்தனவாம் ! 

நேற்றைக்கு இந்த விஷயம் தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது - "காத்திருக்கும் கூத்து " குறும்பதிவினை upload செய்த போது ! 

  • மண்டகப்படி - டிக் 
  • சிலாகிப்பு - டிக் 
  • கதையைக் காணோம் - டிக் 
  • கலாச்சாரச் சீரழிவு - டிக் 
  • நூறு ரூபாய்க்குப் பிடித்த கேடு - டிக் 

திரும்பவும் சொல்கிறேன் - ஒன்னரையணா பேனாவைக் கையில் பிடித்திருப்பதால் என்னை சுஜாதா சாரோடு ஒப்பிட்டுக் கொள்வதோ ; "பாத்தீங்களா - பாத்தீங்களா - nostradamus-க்கு சித்தப்பா முறையாகும் நான் !" என்று பீற்றிக் கொள்வதோ இங்கே எனது நோக்கங்களல்ல ! மாறாக - உங்களின் ரசனைகளை முழுசுமாய் புரிந்திட இயலாது போயினும் , உங்களின் ரியாக்ஷன்களையாவது கணிக்க முயற்சித்த திருப்தியின் வெளிப்பாடு மட்டுமே !

"ஒரு தோழனின் கதை !"

ஏப்ரலில் ஏதோவொரு சமயத்தில் இதனில் பணியாற்றியது, இந்தப் பேரிடர் பொழுதுகளின் புண்ணியத்தில் தலைக்குள் அத்தனை fresh நினைவுகளாய் இருந்திருக்கவில்லை - நேற்று வரைக்கும் !  கோங்குரா காரங்களோடு பின்னூட்டங்கள் வரத்துவங்கிய பின்னே,  அவசரம் அவசரமாய் புக்கை மறுக்கா புரட்டிய போது, எங்கெங்கெல்லாம் நண்பர்களுக்கு இடறியிருக்கக்கூடும் என்பது நினைவுக்குத் திரும்பின ! நண்பரொருவர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார் - "இதனையே கொஞ்சமாச்சும் எடிட் செய்து ; சற்றே "கோடஸ்தி " ரீதியினில் தந்திருக்கலாமோ ? நண்பர்களுக்கு இத்தனை நெருடிடாது போயிருக்குமோ ?" என்று ! For starters - கதையினில் கைவைக்க நமக்கு அனுமதி இருந்திருக்கவில்லை ! தவிர, அந்தச் சுதந்திரம் இருந்திருந்தாலுமே - நான் இந்த ஆக்கத்தினில் கத்திரிகளையோ, தார் டப்பிகளையோ பயன்படுத்தியே இருக்க மாட்டேனென்பது தான் நிஜம் ! 

ஒரு மிகையான கற்பனையும் ; ஒரு யதார்த்த வாழ்வின் சித்தரிப்பும் இணைதடங்களாய்,வினோத நண்பர்களாய் ஓடிடும் இந்தப் படைப்பில் titillation - அதாவது கிளர்ச்சியூட்டும் நோக்கம் கிஞ்சித்தும் கிடையாது என்பது எனது புரிதல் ! நாம் சந்தோஷங்கள் / பொழுதுபோக்குகள் / வாழ்வின் தேடல்கள் எனக் கருதிடும் சமாச்சாரங்கள் மீது ஒரு மௌனமான மூன்றாம் மனுஷனின் பார்வையைப் படர விட்டுக்காட்டுவதும் ; மனித அபிலாஷைகளின் மீதான பகடிகளும் ; முற்றுப்புள்ளிகளும் கூட ஒரு பொழுதில் கமாவாகிடக் கூடுமென்று நம்பிக்கை தருவதும் இந்தப் படைப்பின் குறிக்கோள்களுள் சில - என்று எனக்குத் தோன்றியது ! அவ்விதமிருக்க, இதனை சரோஜா தேவி சமாச்சார treatment-க்கு உட்படுத்த எனக்கு மனம் ஒப்பவில்லை !  By intent இங்கே சித்திர பாணிகளை கார்ட்டூன் ஸ்டைலில் அமைத்துள்ளனர் படைப்பாளிகள் ! அந்த எழுத்துரு கூட ஒரிஜினலில் இதே ஸ்டைலில் தானிருக்கும் ! So ஒட்டு மொத்தமாய் ஒரு light atmosphere தனை உருவாக்கி, அதனூடே கொஞ்சம் கனமான வாழ்வியலைச் சொல்ல படைப்பாளிகள் எண்ணியிருப்பதாய் நினைத்தேன் ! இத்தனை தெளிவாய் சிந்தித்து ; இத்தனை சிரத்தையாய் அவர்கள் உருவாக்கிய படைப்பை சிதைவுகளின்றி அப்படியே வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்திடலே முறை என்று தோன்றியது எனக்கு - so துடைப்பங்கள் பறக்குமென்பது புரிந்த போதிலும் துணிந்தேன் ! என்ன - உலக்கைகளும் பறக்கும் படையில் பங்கெடுக்கும் என்பதைத் தான் யூகித்திருக்கவில்லை நான் ! 

கிராபிக் நாவல்கள் என்றாலே அழுகாச்சிகளாகிப் போய் விட்டன ; ஏற்கனவே இருண்டு கிடக்கும் பொழுதுகளில் இந்த நோவு வேறு தேவையா ? என்ற கேள்வி போன வருடமே ஒலிக்கத் துவங்கிட - "ரைட்டு.. கொஞ்ச காலத்துக்கேனும் no more dark stuff என்று தீர்மானித்தேன் ! "பிரளயம்" கதையை ஏகமாய் செலவழித்து வாங்கிய பின்னே மூலை சேர்த்தது கூட இதன் பொருட்டே ! அந்நேரம் கண்ணில் பட்டது தான் இந்தப் படைப்பு ! இதற்கு ஆங்கிலத்தில் scanlation உள்ளதாய் இன்றைக்கொரு நண்பர் சொல்லத்தான் கேள்விப்பட்டேன் ; ஆனால் நான் பரிசீலனைக்கு எடுத்ததோ பிரெஞ்சு version தான் ! வழக்கம் போல கதைச் சுருக்கம் ; இணைய தள விமர்சனம் என்ற பின்னணிகளோடு பரிசீலித்த போது - "heavy stuff told light" என்றதொரு விமர்சனம் கண்ணில் பட்டது ! 'அடடே...இது நமது கிராபிக் நாவல் தடத்துக்கு ; அதுவும் இந்தப் பொழுதுகளில் சுகப்படுமே !!' என்று தோன்றியது ! Plus அந்த காம்பாக்ட் சைசும் வசீகரிக்க, டக்கென்று தேர்வு செய்தேன் ! 

கதைச் சுருக்கங்கள் ; அலசல்களென்பதெல்லாம் வேறு - real stuff என்பது நாமே பணியாற்றும் போது உள்வாங்கிட சாத்தியப்படும் உணர்வுகளே என்பதை நானறிவேன் ! And ஏப்ரலில் இதனில் பணியாற்றிய போது புரிந்தது - இது ஏகோபித்த அங்கீகாரங்களை ஈட்டக்கூடியதொரு சமாச்சாரமே அல்லவென்று ! நிறைய extreme reactions இதற்கு இருந்திடுமென்று புரிந்தது ! ஆனால் "பிரளயம்" முயற்சியை மூட்டை காட்டியது போல் இதனையும் பரணுக்கு அனுப்ப மட்டும் மனசு ஒப்பவில்லை ! காமிக்ஸ் ரசனைசார் விஷயங்களில் 100% ஒருமித்த கருத்துக்களை அந்த லுக்கி லூக் மனுஷனைத் தாண்டி வேறு யாருமே ஈட்டியதில்லை என்பது bottomline ! சரி, ஏதேதோ முயற்சித்து விட்டோம் - இந்த வினோதக் கற்பனையையும்  ஓரளவுக்கேனும் ஏற்றுக் கொள்ளாது போக மாட்டோம் என்ற (அசட்டு) நம்பிக்கை எங்கிருந்தோ துளிர் விட - துணிந்தேன் !

மொழிபெயர்ப்பினை முடித்த நொடியினில் - இது வெளியான பிற்பாடு எவ்வித ரியாக்ஷன்களை வரவழைக்கக்கூடுமோ என்று யூகித்துப் பார்க்க முனைந்தேன் ! அன்றைக்கு மனசில் தோன்றியதை ஒரு நோட்டின் பின்பக்கமாய் எழுதி வைத்தது தான் - நேற்றைய குறும்பதிவின் வரிகள் ! In fact இந்த லாக்டௌன் இருந்திராவிடின் மே மாதமே இதனை உங்களிடம் ஒப்படைத்து, ஒரு மாதத்துக்கு முன்னமே வீங்கின மண்டையை தடவியிருப்பேன் தான் ! To cut a long story short - 'சகிக்கலை" என்ற விமர்சனங்களும் ; "not bad " என்ற எண்ணங்களும் பதிவாகியுள்ள நிலையில் எனக்கு பெரிதாய் வியப்புகள் இல்லை தான் ! So மாமூலான நாட்களாய் இவையிருப்பின், 'ஆங்...போ..போ...போ..ஆடு களவே போகலையாம் ...பஞ்சாயத்தை கலைச்சாச்சு..கிளம்பு..கிளம்பு !!" என்று சுனா-பனா வடிவேலாய் கிளம்பியிருப்பேன் தான் ! ஆனால் இவை அசாதாரண நாட்கள் & கொஞ்ச காலமாகவே எனக்குள் ஒருவித நெருடல் : 

நீங்கள் விரும்புவதை நான் தராது - நான் நினைப்பதையே உங்களின் தொண்டைகளுள் திணிப்பதான எண்ணம் நிறைய நண்பர்களுக்கு இருப்பதில் இரகசியங்களில்லை ! 

  • "ரோஜா மாளிகை ரகசியம்" கேட்டாக்கா ரோஜரை கண்ணிலே காட்டுறான் !
  • "வைரஸ் X " ஐ கேட்டாக்கா "வயசாகிட்டு - காரிகனுக்கு"ன்னு சொல்றான் !
  • "வேதாளரை" கேட்டாக்கா விளங்காத பாஷையிலே என்னென்னமோ பேசறான் !
  • "பேரிக்காய் போராட்டம்' கேட்டாக்கா பெட்டக்சில் கிள்ளி வைக்கிறான் !
  • "XIII ஸ்பின் ஆப்" கேட்டா நம்மளையே சுத்துலே விடறான் !!

என்று ஆளுக்கொரு ரூபத்தில் விசனங்களோடு குடியிருப்பதில் ஏது ரகசியம் ? ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாகிட வேண்டிய சூழலில் என்னையும், எனது தேர்வுகளையும் அவ்வப்போது சகித்திடத் தான் வேண்டிப் போகிறது நண்பர்களில் நிறைய பேருக்கு ! 

போன மாதத்து முத்து காமிக்ஸ் 50-வது ஆண்டுமலர் அலசல்களின் களேபரத்தின் போது, இது அப்பட்டமாகவே தென்பட்டது ! End of the day - நான் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலுமே - அவரவர் தலைக்குள் போட்டு வைத்திருக்கும் அந்த காமிக்ஸ் சார்ந்த personalized வட்டங்களைத் தாண்டி வெளிவருவது என்பது அத்தனை சுகானுபவமே அல்ல என்பது தெரிந்த சமாச்சாரமே ; ஆனால் இம்முறை அவை வெளிப்பட்ட ரூபங்களில் அழுத்தம் அதிகமே  ! More than anything else - "கேட்டதை போடுறதை விட்டுப்புட்டு - இவனா என்ன நாட்டாமை ?" என்ற எரிச்சல் விரவியிருப்பதாக எனக்கு உணர முடிகிறது ! I might be wrong ...ஆனால் எனது gut feel இதனில் பொதுவாய்ப் பொய்ப்பதில்லை ! 

And நேற்றைக்கு நண்பர் மொஹிதீன் பதிவிட்டிருந்ததில் "பொம்ம புக் - பொம்ம புக்காவே இருந்துட்டுப் போகட்டுமே ?" என்ற வரிகளில் தொனித்த யதார்த்தம் எனக்கு தப்பிதமாய்த் தோன்றவில்லை ! So "ஒரு தோழனின் கதை" வெற்றியாக அமைந்திட்டாலும் சரி, தோல்வியாய் புதைந்தாலும் சரி - ஒரு course correction-க்கு உதவிடாது போகாது என்ற மட்டில் மகிழ்ச்சி எனக்கு !  பார்ப்போமே - இந்த அனுபவத்தில் நான் எடுத்துச் செல்லும் பாடங்கள் ஏதேனும் இருந்திடுமா ? இருந்திடுமெனில் அவை நமக்கு  பயன்பட்டிடக்கூடுமோ என்று ! 

அதற்காக நாளைக்கே "மணாளனே மங்கையின் பாக்கியம்" ரேஞ்சுக்கு கதைகளைத் தேடிட ஆரம்பிப்பதாகவெல்லாம் இல்லை ; நாளை மறுநாளே XIII ஸ்பின்-ஆப்களை போட்டு உங்கள் குடல்களின் மீதங்களை உருவுவதாகவும் இல்லை ! ஆனால் இனி வரும் நாட்களில் - உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு நெருக்கமானதாய் எனது தேர்வுகளை அமைத்திட முயற்சிப்பேன் - of course அவை கற்களைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்கச் சொல்லும்  பரிந்துரைகளாக இல்லாத பட்சங்களில் ! 

And rest assured, இது நேற்றும், இன்றுக்குமான காரசாரப் பின்னூட்டங்களின் நீட்சியான எனது knee jerk ரியாக்ஷனும் அல்லவே அல்ல ! கொஞ்ச நாளாகவே மனதை அரித்துக் கொண்டிருந்த சமாச்சாரத்தினை பகிர்ந்திட மட்டுமே செய்கிறேன் ! ஏகமாய் வெறுப்பை ஈட்டுவதே எனது  ஒவ்வொரு பரீட்சார்த்தமான குட்டிக்கரணங்களின் இறுதிப் பலனெனில் - 'what's the point anyways ?' என்று உள்ளுக்குள் தோன்றி வருகிறது இப்போதெல்லாம் ! So நமது ஹோட்டலின் மெனுக்களை சற்றே வாசகர் friendly ஆக்கிடப் பார்க்கலாம் என்றுள்ளேன் ! அவ்விதத்தில் இம்மாத கி.நா. செம முக்கியமானதே ! 

அலசல்கள் தொடரட்டும் guys !! And போன பதிவின் பின்னூட்டங்களில் சொன்னது போல - எதிர்மறை அபிப்பிராயங்கள் பதிவாகிடும் பட்சங்களில் அவற்றினை கையாளும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள் ப்ளீஸ் ! ஒரு உஷ்ணமான topic மேலும் உஷ்ணமாகிட அனுமதிப்பானேன் guys ? எதுவாயினும் பார்த்துக் கொள்ளலாம் ஜாலியாய் ! 

அப்புறம் இந்த மாதத்தில் மேற்கொண்டும் 2 புக்ஸ் உள்ளன என்பதையும் மறந்துப்புடாதீங்கோ ப்ளீஸ் ! Bye all...see you around !

Memes : Prasanth Karthick :


Memes : Dr.பார்த்தீபன், கரூர் :



 

312 comments:

  1. Replies
    1. எப்படி இருக்கீங்க, நண்பரே

      Delete
  2. வணக்கம் இரண்டாமிடம்

    ReplyDelete
  3. இப்போது தான் படித்து முடித்தேன்.. பின்னுரை எல்லா விளக்கங்களையும் கொண்டுள்ளது.. செம..

    ReplyDelete
  4. சட்டென்று கிரகிக்க முடியவில்லை தான் ஆனாலும் அரைக்காசுக்கு கூட ஆபாசமான படைப்பாய் தோன்றவில்லை..

    ReplyDelete
  5. எழுத்துருக்கள் கண்களை சோதித்து விட்டன...

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  7. அனைவருக்கும் வணக்கம் சொல்வது சின்னமனூர் சரவணர்ங்க...

    ReplyDelete
  8. ஓரு டோலனின் கதை!

    ஒரு பொதிகை தொலைக்காட்சி நாடகம்.
    1990களின் ஆரம்பத்தில் பார்த்தது.

    விண்வெளி கிரகத்தில் இருந்து ஒரு ஏலியன் வரும் தமிழ்நாட்டுக்கு. அந்த ஏலியன் பெயர் பாஞ்சோ! ஒரு விரல் கிருஷ்ணராவ் தான் அந்த ஏலியன். ஒரு சின்ன பாப்பா தான் ஏலியனின் பிரண்ட். அவஙு்க இருவரும் நிறைய பேரின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பாங்க...அந்த பாப்பாவின் கண்களுக்கு தான் பாஞ்சோ தெரியும்

    இரும்புதான் பாஞ்சோவின் உணவு. ஒருநாள் அது இரும்புனு நினைத்து கேஸ் சிலிண்டரைக் கடித்துடும். டமாஆஆஆஆர்னு சிலிண்டர் வெடிக்க...பாஞ்சோவின் பாதுகாப்பு உபகரணங்கள் சேதாரம் ஆகிடும்.

    கவச உடை இல்லாத காரணமாக பாஞ்சோ எல்லோருக்கும் தெரிய ஆரம்பிக்கும்... பாஞ்சோவை ஆராய்ச்சி பண்ண சிலர் முயல, அந்த சின்ன பாப்பா அதை பத்திரமாக மீட்டு, பலவித போராட்டங்களுக்கு பிறகு அவிங்க ஸ்பேஸ்ஷிப்புல ஏற்றி பாஞ்சோவோட கிரகத்துக்கே அனுப்பிடும்.

    கதை சுபம்...13வாரங்கள் தொடராக வந்த கதை 80's கிட்ஸ் இடையே செம ஃபேமஸ்!


    (ஒடு ஓடு எல்லோரும் கல் எடுப்பதற்கு முன்னாடி ஓடிற்றா கைப்புள்ள...)

    ReplyDelete
    Replies
    1. நானும் இந்த நாடகத்தை பார்த்திருக்கிறேன் சகோ

      By Boopathi

      Delete
    2. நம்ம செட்டு எல்லாம் பார்த்து இருப்பாங்க சகோ!

      லயன் கி.நா. வெளியீடு தோழனின் கதை பற்றி பேசினால் தான் சிக்கலாகுது. நாம ஏன் இன்னும் ரணமாக்கனும்???
      சோ நாம இப்டிக்கா போவோம்!!!

      Delete
    3. Serial name is Amloo. Baby Shalini was the lead. Oru viral krishna Rao was Baanjo. It was a 13 week serial on DD. Super entertainment ..

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. udhay... 1986ல தான் முதல் தமிழ் சீரியல் சென்னை தொலைக்காட்சில ஒளிபரப்பாகி உள்ளது.
      1983 களில் மீ 7வயசு.. சுத்தமாக நினைவில்லை..

      1986 ஷர்ஜா கப்ல சர்மா பாலில் மியான்தத் சிக்ஸர் அடிச்சது நினைவிருக்கு...அந்த மேட்ச் பார்த்து உள்ளேன். இந்த தமிழ் சீரியஸ் அதற்கு பின்பே வந்திருக்கனும்...!!

      பஞ்சு பட்டு பீதாம்பரம்,

      YGM து அந்த கிளிமூக்கு ஷாம்பு கேரக்டர் நினைவிருக்கு...

      அந்த என் இனிய இயந்திரா நிலா சிபி நினைவிருக்கு..ஷாருஹாசன் தான் PM.
      ஆனா முடிவு புரியல அப்போது....!!

      Delete
  9. அருமையான அலசல் ஐயா! தொடரட்டும்!

    (குறிப்பு : இந்த மாத புத்தகங்கள் இன்னும் வரவில்லை)

    ReplyDelete
  10. ///So நமது ஹோட்டலின் மெனுக்களை சற்றே வாசகர் friendly ஆக்கிடப் பார்க்கலாம் என்றுள்ளேன் ! ///

    ---யூசர் ப்ரெண்ட்லி மாதிரி வாசகர் ப்ரெண்ட்லி!!! கேட்சிங்கா இருக்கு சார். சந்தா அறிவிப்பு தேதியில் விடை கிட்டும்.

    ReplyDelete
    Replies
    1. //வாசகர் பிரண்ட்லி//

      டெக்ஸ தவிர மத்ததெல்லாம் ஸ்பேடரு, ஆருச்சி, மாயாவி கதைகளா இருக்குமோ 😳

      Delete
  11. /// உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு நெருக்கமானதாய் எனது தேர்வுகளை அமைத்திட முயற்சிப்பேன்///

    ----இது கடந்த ஒருமாத கேள்வி பதில் செக்‌ஷன்களின் பயன் போல தோணுது! கேள்வி நல்லது!

    ReplyDelete
  12. Dear Edi,

    இன்னும் படிக்கவில்லை. ஆனால், பிடிக்கவில்லை என்றால், இன்னொரு 100 ரூபாய் இதழ் சந்தாவில் தரப்படும் என்ற உங்கள் வாக்கினை நம்புகிறேன்.

    இதற்காகவாது புதிய ஜானர்களை தொட எத்தனிக்கும் உங்களுக்கு அந்த வாய்ப்பினை, தோழனின் கதை போன்ற வித்தியசமான காமிக்ஸை படித்து விமர்சனம் செய்வதன் மூலம் செயல்படுத்தலாம், என்பது என்னுடைய எண்ணம்.

    ReplyDelete
  13. மாடசாமி ஒரு நதிக்கரை ஓரம் போய்க்கொண்டு இருந்தான்.
    திடீர் காற்று மற்றும் மழை….
    ஒரு மரத்தருகே ஒதுங்க முயல , மண் சரிய ஆறுக்குள்ளே நெடிய பள்ளம் வழியே ஆற்றின் புரண்டோடும் நீர்ப்பெருக்கில் விழ இருந்தவன் ஒரு வேரை பிடித்து தொங்கினான்..

    கீழே குனிந்து பார்த்தான் , நேர் கீழே சில முதலைகள் செடிகளிடுக்கில் தென்பட்டன ..

    அவன் வேரை பிடித்து தொங்கிய இடத்தின் கையெட்டும் தூரத்தில் விஷ நாகம் ஒன்று விழித்து எழுந்தது…

    பிடித்து தொங்கி கொண்டு இருந்த வேர் அறுநது விழும்போல தோன்றியது ...

    சட்டென அவன் தோளின் மேல் ஏதோ விழுந்தது

    மேலே அண்ணாந்து பார்த்தான்..
    மரக்கிளையில் இருந்த தேன்கூட்டில் இருந்து தேன் காற்றின் வேகத்தில் சொட்டு சொட்டாக கொட்டியது

    மாடசாமி வாயைத் திறந்து காட்ட தேன் நாவில் பட்டு உள்ளிறங்க என்ன சுவை என்ன சுவை என்று நினைத்தான் .

    பழைய இக்கதையின் சாராம்சமே நவீன நடையழகில் ஒரு தோழனின் கதை

    வாழ்வின் அக்கணத்தை ரசி என்பதே ..

    தேடல் இல்லா வாழ்வில் ஏது ருசி என்பதுமேயாகும்

    கடந்து போனதில் மனதை உழலவிடாமல் எதிர்கால கனவுகளில் மனதை அலையவிடாமல் அன்றைய பொழுதை
    ரசனைக்குள்ளாக்கு என்பதே .



    இக்கதை படிக்க சுவாரஸ்யமானது ,,,

    ஒருவித துள்ளல் கதை நெடுக வழிகிறது..

    கதையில் நிகழும் சம்பவங்களை மட்டும் வைத்து எடை போடாதீர்கள்..

    முக்கியமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பையும் உடன் உள்ள படத்தையும் அந்தந்த அத்தியாயத்தின் நிகழ்வுகளையும் கோர்த்து பாருங்கள்..இது மிக முக்கியம்

    வட்ட வடிவம் எல்லா அத்தியாய படங்களிலும் ஏதோ ஒரு விதத்தில் இடம் பிடிப்பதை பாருங்கள்

    எழுத்தில் கூட வட்ட வடிவம் பாரிசின் மிக பிரபலமான காபி ஷாப் பெயரில் LA ROTONDE என இடம் பெறுவதை கவனிக்கத்தான் வேண்டும்

    வட்ட வடிவம் எதை குறிக்கிறது என்பதை ஆராய முற்பட்டால் சிந்தனைக்கு விருந்தாகும் ..

    தத்துவம் ,, அல்கெமி தாண்டி ஆரம்பம் முடிவில்லா இவ்வடிவம் மானுடவியலில் தனிப்பட்டமனித உணர்வுகளின் பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது ..

    வீனஸ் அத்தியாயத்தில் வீனஸ் கிரகம் எதை பற்றியது என படித்து பின் அந்த அத்தியாய சம்பவங்களை மறுபடி ஒருமுறை படிக்கவும் ..

    ஒரு வட்டம் சதுரமாகிறது ..
    அதிக இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய அத்தியாயம் .

    SQUARING THE CIRCLE என்பது மிக பிரபலமான METAPHOR..
    கணித சாஸ்திரத்தால் நிகழ்த்த இயலா ஒன்று ..அதாவது
    ஒரு வட்டத்தை அதே பரப்பளவு உள்ள சதுரமாக மாற்ற இயலாது

    எனவே செய்ய இயலாத ஒன்றை SQUARING THE CIRCLE என கூறுவார்கள்…

    அந்த அத்தியாயத்தில் இறுதியில் நாயகன் எடுக்கும் முடிவு முக்கியம் … நிர்வாண நங்கை வெறும் உவமானம் மட்டுமே கதாசிரியர் சொல்ல விரும்புவதற்கு உதவி செய்யும் பலமான காரணிகள் என்பது தாண்டி ஆபாசம் என்பது கிஞ்சித்தும் இல்லை ..

    வீனஸ் காதல் , அன்பு , சமூக தோழமை , கணவன் மனைவி இது போன்ற உணர்வு பிணைப்புகளை குறிப்பது.
    அந்த அத்தியாயத்தில் உள்ள நம் நாயகனை மனைவி – தனது சின்ன வீடு இருவரையும் மற்றும் அனைத்து பெண்களையும் வெறும் சதைப் பிண்டங்களாக பார்த்து நிற்கும் மனிதனாய் காணும் நாம் தனது துயர நிலைக்கு எது வடிகால் என்ற நிலைப்பாட்டை சுய பரிசோதனை செய்து தற்கொலை அளவு சென்று பின் மேம்படும் மானிடனாய் காண்கிறோம் ..

    அடைய முடியா பெண்ணை அடைந்தும் அவன் பிரிய காரணம் அலுப்பல்ல . அவன் மனதில் அவள் மேல் அன்பில்லாததே காரணம்…. மனைவியும், மிஸ்ட்ரெஸ்சும் அவனை விட்டு பிரிவதற்கான அதே காரணம்….நிர்வாண நங்கை அவனை சிறிதும் மன சஞ்சலமின்றி அவனை போக சொல்வதை பாருங்களேன்… அவளுமே…

    கிரிஸ்டியன் என்ற பெயர் தமிழில் தங்கமணி போல் அம்மொழியில் இருபாலருக்கும் பொதுவானது ..

    எனவே கதாசிரியர் கூற விழைவது ஆண் , பெண் இருபாலினத்தவருக்கும் பொருந்தும்

    கடைசி அத்தியாயத்துக்கு எரிகல் என்ற பெயர் ஏன் இடப்பட்டது என யோசிக்க வேண்டியிருக்கிறது.

    தொடர்ந்து வரும் எழுத்துகளை பார்த்தபின் மேலும் எழுத நேரம் அனுமதிக்கையில் எழுத விருப்பம்
    9.95/ 10

    ReplyDelete
    Replies
    1. சிக்மண்ட் பிராய்டை வாசிக்கும் அந்த ஏலியன் மனித உணர்வுகளை பற்றி என்ன நினைத்து இருக்கும்? மனித மனத்தின் affective domain குறித்து அறிந்து அதை கிரிஸ்டியனிடம் செயல்படுத்துகிறது என எண்ணினேன். உங்கள் கருத்து?

      Delete
    2. செனா அனா சார். நீங்கள் கூறிய பாய்ண்ட் எல்லாம் மனதில் வைத்து இன்னும் ஒரு முறை படித்து விட்டு வருகிறேன். அட்டகாசமான விமர்சனம்.

      Delete
    3. அருமையான விமர்சனம் சார்... இன்னும் எனக்கு புத்தகம் கிடைக்கவில்லை... கிடைத்தவுடன்... முதல் வேலை தோழனை புரட்டுவதுதான்... ஆவலுடன் waiting...!!!

      Delete
    4. //சிக்மண்ட் பிராய்டை வாசிக்கும் அந்த ஏலியன் மனித உணர்வுகளை பற்றி என்ன நினைத்து இருக்கும்? மனித மனத்தின் affective domain குறித்து அறிந்து அதை கிரிஸ்டியனிடம் செயல்படுத்துகிறது என எண்ணினேன். உங்கள் கருத்து?//

      கதையின் முடிவு அதை தெளிவு படுத்துகிறதே சார்..

      சொற்ப நாட்கள் ஒரேயொரு மானிடனுடன் பழகியோ sigmond Freud படித்தோ மனித உணர்வுகளை எடை போட முடியுமா சார்?

      அதன் பரிசுகள் கிறிஸ்டியனுக்கு எள்ளளவும் பயனளிக்கவில்லையே?

      விரக்தியும் எதிலும் பிடிப்பின்றி துவக்கத்தில் இருக்கும் கிறிஸ்டியன் நம்பிக்கையோடு வாழ்வேன் என செய்தி அளிப்பதற்கு காரணம் என்ன என யோசியுங்களேன்..

      ஏலியன் மனிதன் மேல் போடும் கணக்கு மிகத் தவறானது..

      Delete
    5. //சொற்ப நாட்கள் ஒரேயொரு மானிடனுடன் பழகியோ sigmond Freud படித்தோ மனித உணர்வுகளை எடை போட முடியுமா சார்?//

      சூப்பர் சார்!

      Delete
  14. //And நேற்றைக்கு நண்பர் மொஹிதீன் பதிவிட்டிருந்ததில் "பொம்ம புக் - பொம்ம புக்காவே இருந்துட்டுப் போகட்டுமே ?" என்ற வரிகளில் தொனித்த யதார்த்தம் எனக்கு தப்பிதமாய்த் தோன்றவில்லை //

    வாழ்க்கையை ரசி என்ற ரெண்டு வார்த்தையை இவ்ளோ அழகா சொல்ற புக் சார் இது!

    ஒரு வட்டம் சதுரமாகிறது சேப்டர் படம் ஆபாசமே இல்லை சார்..

    வட்டம் ,சதுரம்னு கதாசிரியர் ஏன் சொல்றாருன்னு இந்த ரெண்டும் பிலாஸபிக்கலா,மத ரீதியாக ,மெட்டஃபோரிக்கலா எதை ரெப்ரசெண்ட் பண்ணுதுன்னு இணையத்துல ஒரு எட்டு பாத்துட்டு ரெண்டையும் இணைச்சு பாத்தா கதாசிரியர நினைச்சு ஆச்சர்யபடாம இருக்கவே முடியாது..


    வெளிப்பார்வைக்கு தெரியறத விட ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்குது சார்!


    ReplyDelete
    Replies
    1. புக் இன்னுமே கிடைக்கலை சார்.. கிடைத்ததும் நீங்கள் கூறியபடி படிக்க முயற்சிக்கிறேன்.. 🙏🏼🙏🏼🙏🏼

      Delete
    2. வரிக்கு வரி ஆமோதிக்கிறேன் செனா அனா சார். நீண்ட இடைவெளிக்குப் பின் தளத்திற்கு தங்களின் வரவை வரவேற்கிறேன்.

      Delete
    3. அருமையான விமர்சனம் செ.அ சார்... அப்படியே அந்த 56 ஆம் பக்க அளவீட்டை பற்றி ஒரு லைன் பிளீஸ்...

      Delete
    4. நீண்டநாட்களுக்குப் பிறகு உங்கள் பாணியில் ஒரு விமர்சனத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது செனா அனா!

      ஆனால், என்னதான் சொல்வது செனா அனாவாகவே இருந்தாலும் நானே ஒருதபா கதையைப் படிக்காம எதையும் நம்பறதா இல்லை!

      புக் இன்னும் கிடைக்கவில்லை!

      Delete
    5. கண்ணால் காண்பதும் பொய்..
      காதால் கேட்பதும் பொய்..
      படித்தறிந்து காண்பதே மெய்..
      ஆத்தாவுக்கு ஆடி மாதக் கூழை அட்வான்சாக ஊற்றினால் இன்றே புத்தகங்கள் கைக்கு கிடைப்பது உறுதி ஈ.வி.

      Delete
    6. ஆத்தா இப்போ கோவிட் ட்யூட்டில பிஸியா இருக்காங்க பத்து சார்.. அதனாலதான் 'புக்கு வரலை ஆத்தா'னு சின்னச்சின்ன சமாச்சாரத்துக்கெல்லாம் கூப்பிடாம இருக்கேன். நாம கூப்பிட்டா எப்படியாப்பட்ட எமெர்ஜென்சி வொர்க்கா இருந்தாலும் படக்குனு போட்டுட்டு வந்து புக்கோட நிப்பாங்கன்னா பார்த்துக்கோங்களேன்!

      Delete
    7. நான் கண்டுபிடிச்சு..கொரோனா டியூட்டில இருந்தா ஆத்தாவா இருந்தாலும் சமூக இடைவெளி முக்கியம்னு தானே நீங்க ஆத்தாவ கூப்பிடல.

      Delete
    8. Saravanakumar17 June 2021 at 07:47:00 GMT+5:30
      அருமையான விமர்சனம் செ.அ சார்... அப்படியே அந்த 56 ஆம் பக்க அளவீட்டை பற்றி ஒரு லைன் பிளீஸ்...//


      ஒரு வட்ட உலகம் படம் எனக்கு கூண்டில் உள்ள வளர்ப்பு சுண்டெலி சக்கரம் ஒன்றில் ஓடுவதை நினைவூட்டியது..


      56 - ம் பக்க படம் உணர்த்துவதாக நான்

      நினைப்பது நாலாபுறமும் அதாவது உனக்கு

      மேலும் கீழும் உனக்கு உள்ளேயும் வெளியேயும் தெளிவாக பார்த்து உன்னிடமிருந்து விடுதலை பெறு..என்பதே


      சதுரத்தின் நான்கு பக்கங்கள் உணர்த்துவது இதையே...

      இது சாதாரண காரியம் அல்ல...


      இது தன்னால் முடியாது என எண்ணும் கிறிஸ்டியன் தற்கொலை செய்து கொள்ள போக அம்மாவின் மரண செய்தியால் காப்பாற்றப் படுகிறான்..


      இதுதான் அவன் செல்போனுக்கு வரும் முதல் அழைப்பு ..

      சமுகத்தை விட்டு விலகியிருக்கும் கிறிஸ்டியன் 86, 87 பக்கங்களில் சோஷியலைஸ் செய்து கொண்டிருக்கும் படங்கள் அவனது மாற்றத்தை உணர்த்துகின்றன..


      Finally christian squared the circle an impossible task; ie self examined and evolved ...now he is a person who values love and loves the work he does and he is no longer bored and more importantly he is hopeful..


      தத்துவரீதியாக ஒரு வட்டம் சதுரமாவது உணர்த்துவது மனித மனம் at peace with world or in essence "world peace"

      Delete
    9. //சமுகத்தை விட்டு விலகியிருக்கும் கிறிஸ்டியன் 86, 87 பக்கங்களில் சோஷியலைஸ் செய்து கொண்டிருக்கும் படங்கள் அவனது மாற்றத்தை உணர்த்துகின்றன..//

      ஆமாம் சார்!

      பூமியில் இல்லாத எது அவனுடைய நம்பிக்கையைத் தூண்டி வாழ்க்கையை ரசிக்க வைத்து இருக்கும்?

      அந்த மியூசிக் டேப்கள் கிரிஸ்டியனை சுற்றியுள்ள அழுத்தங்களாக, பிரச்சினைகளாக உருவகப் படுத்த படுகின்றன.

      தான் செல்லும் இடமெல்லாம் அவற்றை கொண்டே செல்கிறான். அவனது காதலி வீட்டிற்கு, உறவு முறியும்போது அவள் தூக்கி எறிவது, விண்வெளி பயணத்திற்கு மூட்டைக் கட்டி கொண்டு கிளம்புவது என...

      தன் சுமைகளை (இங்கே மியூசிக் டேப்களாக காட்டப் படுபவை) உதறி விட்டு வாழ்க்கையை அதன் போக்கில் ரசிக்க தயாராகும் நிலையே புது கிரகம் செல்வதாக உள்ளது.

      அந்த மருந்து... ம்ம்ம்...

      கதாசியர் தொட்டுள்ள எல்லை ஊகிக்க சாத்தியமே இல்லை சார்!

      வளங்கள் ஏதும் இல்லா விண்வெளி. அறிவியல் வளர்ச்சியில் கொடிகட்டி பறந்தாலும் உணர்வுகளை உணரும் (புரிதல் அல்ல) சாத்தியமற்ற ஏலியன் இனம்.

      கிரிஸ்டியனை நம்பிக்கை கொள்ளச் செய்ய வேறென்ன வேண்டும்?

      Delete
    10. /!அந்த மியூசிக் டேப்கள் கிரிஸ்டியனை சுற்றியுள்ள அழுத்தங்களாக, பிரச்சினைகளாக உருவகப் படுத்த படுகின்றன.

      தான் செல்லும் இடமெல்லாம் அவற்றை கொண்டே செல்கிறான். அவனது காதலி வீட்டிற்கு, உறவு முறியும்போது அவள் தூக்கி எறிவது, விண்வெளி பயணத்திற்கு மூட்டைக் கட்டி கொண்டு கிளம்புவது என...

      தன் சுமைகளை (இங்கே மியூசிக் டேப்களாக காட்டப் படுபவை) உதறி விட்டு வாழ்க்கையை அதன் போக்கில் ரசிக்க தயாராகும் நிலையே புது கிரகம் செல்வதாக உள்ளது.//

      சார்! செம!!!

      புயலின் மையப்புள்ளிக்கு கிராமஃபோன் ரெகார்டுகள் படம் ஏன் என்பதற்கு செம விளக்கம் சார்..

      I didn't get it earlier...an elegant perspective...

      Delete
  15. நணபர்களுக்கு !

    Don't get sidetracked by the illustrations.

    Instead look into the chapter titles and theirs respective sketches..

    Try corroborate the title and events happening in that particular chapter.

    The titles are not random or arbitrary but they are very much relevant..




    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல different perspective செனா அனா. வெல்கம் பேக். நீண்ட நாளுக்கு பிறகு உங்களுடைய நெடிய விமர்சனம்.

      Delete
  16. மகிழ்ச்சி சார்..ஏதோ ஒரேயடியா கதையை தலை முழுகி யாரும்....இன்னும் கதை எனக்கு வரல...வேலைப் பளு...நேராக ஹெட் ஆஃபீஸ் செல்ல ஏலல..டிடிசி நண்பர்கள் இப்ப வேலையில் இல்லை...இருந்தாலும் ஆபீசில் உள்ளவரிடம் கேட்டு பதிலளித்தனர்....பணியாளர்கள் நெகிழச் செய்தனர்...நேத்து மீண்டும் கேட்டு அவர்களுக்கு தொல்லை தர மனம் சம்மதிக்கவில்லை...இன்று நேரத்லயே ஹெட் ஆஃபீஸ் கிளம்பியதும்...சப்ளையர் போறதுக்கு முன்னரே...கதை குறித்த குறித்த தங்களின் கருத்துகள் ஆறுதலாய் இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களின் மீம்ஸ் அதகளம்...
      2 ம் 4ம் பட்டய கிளப்புது...இரத்தப் படல ஸ்பின் ஆஃப்புக்கும் (4)இந்நிலை வரும்

      Delete
    2. ஒரே கலெக்சனா இப ஸ்பின் ஆஃப் தொகுப்பா லிமிட்டெட்ல வர ..வந்து அது பட்டய கிளப்ப செந்தூரான் அருளனும்

      Delete
  17. முழுக்க முழுக்க ஸ்பின்ஆப் களின் மீதான உங்கள் பார்வை எனக்கு சற்று வருத்தமே சார்.. மீண்டும் மீண்டும் கிநா வுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் ஏன் ஸ்பின்ஆப் க்கு பொருந்தவில்லை என புரியவில்லை சார்..அதை அனைத்தையும் போட்டேதீரனும் என்பதை நான் கூறவில்லை சார். அதிலும் நல்லதை தேர்ந்தெடுத்து தேவையானதை போடுங்க என வேண்டுகோள் வைக்கிறேன் சார்... ஸ்பின் ஆப் என ஒரு தொடர் மங்கூஸ் வந்த பிறகு நீங்கள் கூறிய பின்தான் எங்களுக்கு தெரிந்தது..அதுபோல் அதிலும் உள்ள சில நல்ல கதைகளுக்கு வாய்ப்பு கொடுங்க சார்...இன்னும் 8 பாக்கி..

    பெலிஸிட்டி
    ஜூடித்
    பில்லி...ஐ தவிர

    ஜோன்ஸ்
    இரினா
    ஆலன்
    ஜோனதன்
    மார்த்தா... இவைகளில் ஒரு கதைக்கு வாய்ப்பு கொடுக்கலாம் சார்...

    கால்வின் வாக்சை போல் நிச்சயம் இதுவும் ஜெயிக்கும் சார்..

    ஒரு ஸ்லாட் ஒரே ஒரு ஸ்லாட்...ப்ளீஸ் சார்..

    ReplyDelete
    Replies
    1. மங்கூஸ் மாதிரியான ஒரு பவர்ஃபுல் ஸ்பின்ஆஃப் என்றால் நிச்சயம் வரவேற்கலாம் தான்!

      Delete
    2. ஆலன்
      ஜோனதன்
      இரினா...க்ரைமில் நிச்சயமா ஏமாற்றாது

      மார்த்தா..ஜோன்ஸ்
      நம்ம கிநாவுக்கு சற்றும் சளைக்காத உணர்வுகளின் வலியை நமக்கு உணர்த்தும் ஈவி..ஆசிரியர் மனது வைத்தால்தான் உண்டு...

      Delete
    3. என்னதான் ஆங்கித்தில் படித்தாலும் (புரியாது)நம்ம எழுத்துநடைக்கு ஈடாகவில்லை ஈவி..காலம் கனியும் என காத்திருக்க வேண்டும்...

      Delete
    4. காலம் எக்கச்சக்கமாய்க் கனியட்டும் பழனி ! அதுவரைக்கும் Cinebook கொண்டு வண்டியோட்டுங்கள் !

      Delete
  18. நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  19. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  20. // என்னையும், எனது தேர்வுகளையும் அவ்வப்போது சகித்திடத் தான் வேண்டிப் போகிறது நண்பர்களில் நிறைய பேருக்கு ! //

    கிட்டத்தட்ட ஒரு சுய புலம்பலை ஒத்திருத்திப்பது ஏனோ சார்,அயற்சியூட்டும் விமர்சனக் கணைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்த பணிகளை கவனியுங்கள் சார்...!!!

    ReplyDelete
    Replies
    1. அயர்ச்சி விமர்சனங்களின் பொருட்டல்ல சார் ; நான் சந்திக்காத சர்ச்சைகளா ? End of the day ஒரு பகுதி நண்பர்களுக்கு நான் விரோதியாகவே தென்படுகிறேன் எனும் போது எனது முயற்சிகளின் பாதை சரி தானா ? என்ற கேள்வியே எழுகிறது !

      Delete
    2. எல்லோருக்கும் நல்லவராய் படைத்த இறை சக்தியாலும் இருக்க முடியவில்லையே சார்,நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ???!!!
      படைப்பை வெளியிடும் நோக்கத்தில் தவறில்லை எனும் பட்சத்தில் வருந்தத் தேவையில்லை சார்...
      பார்வைகள் பலவிதம்,இரசனைகள் பலவிதம்,இதுவே நமக்கு பலமாகவும்,சமயத்தில் பலவீனமாகவும் ஆகிவிடுகிறது போல...
      இதழ்கள் இன்று கிடைத்தன...
      இன்றைய முதல் வாசிப்பு "ஒரு தோழனின் கதை" தான்...

      Delete
    3. "இது நெத்த பூமி" பதிவின் டைட்டிலை படித்ததும் இதழோரத்தில் புன்னகை அரும்புவதை தவிர்க்க முடியவில்லை சார்,இரணகளத்திலும் கிளுகிளுப்புதான் நம்மை புன்னகையுடனும்,உயிர்ப்புடனும் வைத்திருக்கிறதோ ???!!!

      Delete
    4. கூடவே குந்தியிருக்கும் குசும்பு அத்தினி சீக்கிரமாய் போயிடுமா சார் ?

      Delete
    5. // அயர்ச்சி விமர்சனங்களின் பொருட்டல்ல சார் ; நான் சந்திக்காத சர்ச்சைகளா ? End of the day ஒரு பகுதி நண்பர்களுக்கு நான் விரோதியாகவே தென்படுகிறேன் எனும் போது எனது முயற்சிகளின் பாதை சரி தானா ? என்ற கேள்வியே எழுகிறது ! //

      கேள்வி நல்லது சார்! இது போன்று கேள்விகள் இருந்தால் தான் வாழ்கை சுவாரசியமாக இருக்கும்!

      // படைப்பை வெளியிடும் நோக்கத்தில் தவறில்லை எனும் பட்சத்தில் வருந்தத் தேவையில்லை சார்... //

      இது போன்று நடக்கும் என நீங்கள் யூகித்து இருந்தால்/இல்லாவிட்டாலும் கவலை & அயர்ச்சி கொள்ள வேண்டாமே! இதுவும் ஒரு அனுபவம் என்று எடுத்து செல்லாம், புதியதாக இன்று ஒரு பாடம்! அவ்வளவுதான் சார்!

      Delete
  21. டியர் விஜயன் சார், நீங்கள் பரிசோதனை முயற்சியில் கிட்டதட்ட கமல் மாதிரி என்றுதான் தோன்றுகிறது.
    அவர்தான் 20 வருடத்திற்கு பின்பு வரக்கூடிய படத்தை இப்போதே எடுத்து வணிக ரீதியில் பலமுறை தோல்வியும் சில முறை வெற்றியும் பெறுவார்.
    தோழனின் கதை நல்ல கதையாக இருக்கலாம் சார்...
    ஆனால் இந்த லாக் டவுன் நேரத்தில் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டபடும்போது கவனத்தை திசை திருப்ப காமிக்ஸை நாடும்போது அது தோழனின் கதை ரூபத்தில் இன்னொரு கொரானாவாக பயமுறுத்துகிறது என்பதே நிதர்சனம்...
    தோழனின் கதை இன்னும் இருவருடங்கள் கழித்து சிலாகிக்கப்படலாம் ..கொண்டாடப்படலாம்...
    ஆனால் இது வெளிவந்த காலகட்டம் சற்றே சரியில்லையோ என்றே தோன்றுகிறது சார்...

    ReplyDelete
    Replies
    1. காலகட்டம் நார்மலாக இருந்திருந்தாலுமே நமது ரியாக்ஷன்ஸ் பெரிதாய் வேறுபட்டிராது சார் ! காமிக்ஸ் வாசிப்புக்கென நம்மவர்கள் போட்டு வைத்திருக்கும் அந்த வட்டங்களைத் தாண்டிடுவது எல்லா தருணங்களிலுமே சுலபமாய் இருந்திராது தான் என்பது புரிகின்றது !

      Delete
    2. டியர் விஜயன் சார் தங்களுடைய தேடலில் கிடைத்த புத்தகங்கள்தான் நில் கவனி வேட்டையாடு மற்றும் பிரிவோம் சந்திப்போம் போன்ற முத்துக்கள்...
      கண்ணான கண்ணே மற்றும் தோழனின் கதை போன்ற மென் சோகங்களை இப்போதெல்லாம் ரசிக்க முடிவதில்லை..
      மேலும் காமிக்ஸை ரசிக்க புற சூழ்நிலைகளும் முக்கியமே சார்...
      இந்த கொரானா யுகம் அல்லாது வேறு நார்மலான காலகட்டத்தில் தோழனின் கதை பலருக்கு தோழனாக இருந்திருக்கலாம் தான்...
      மேலும் ரத்த படலம் போன்ற மென் சோக கதையில் ஆக்க்ஷனும் கலந்திருப்பதால்தான் பலராலும் ரசிக்க முடிகிறதோ என்றுதான் தோன்றுகிறது...
      மேலும் நீங்கள் கமல் மாதீரி சார்..
      புதிய முயற்சிகளை கை விட மாட்டீர்கள் என நம்புகிறேன்...
      சீக்கிரமே நில் கவனி வேட்டையாடு போன்ற அருமையான கதை கலன்களை தேர்ந்தெடுத்து டாப் கியரில் நீங்கள் பட்டையை கிளப்புவீர்கள் என்று நம்புகிறேன்...

      பின்குறிப்பு:-
      மென்சோகத்தீல் ஆக்க்ஷன் கலந்திருந்திலும் ரத்த படலம் ஸ்பின் ஆப் கதைகளை ரசிக்க முடிவதில்லை.

      Delete
    3. சில ஸ்பின்ஆப் கதைகளில்தான் இரத்ததப்படலத்தின் சில மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன சார்.அதற்கு மிகச்சிறந்த உதாரணம் கால்வின் மாக்ஸ். ஒருவேளை ஆலன்ஸ்மித் வெளிவந்தால் அவசியம் படியுங்கள்.அதில் ஸ்டன்ட்மேனாக கொல்லப்பட்டது யாரென்று தெரியும்.

      Delete
  22. சார் நான் சென்னையில் இருக்கும் ஒரு வாசகன். 2007 முதல் சந்தாவில் இருக்கிறேன். இதுவரை இந்த பதிவில் எதுவும் எழுதியதாக நினைவில்லை, இங்கே வரும் பதிவுகளுக்குதான் நீங்கள் முக்கியத்துவம் தருவதாக கேள்விப்பட்டேன் நீங்கள் வெளியிடும் அனைத்து புத்தகங்களையும் வாங்குகிறேன். ரொம்ப சுமாரான கதைகளையும் சேகரித்து வைத்து இருக்கிறேன். என்னிடம் 1000+ தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் தற்போது வந்த ஒரு. தோழனின் கதை என்ற புத்தகத்தை காமிக்ஸ் என்ற வரிசையிலேயே என்னால் சேர்க்க முடியவில்லை.என் சேகரிப்பிலும் வைக்க விருப்பமில்லை. எத்தனையோ மிக அருமையாக இருக்கும் பழைய புத்தகங்கள் பல்வேறு காரணங்களுக்காக உங்களால் போட முடியவில்லை, ஆனால் இது நிச்சயம் தேவையில்லாத, புரியாத,புரிந்துகொள்ள முடியாத ஒரு கதை. தயவு செய்து இது போன்ற மரண மொக்கை கதைகளை சந்தாவில் முயற்சிக்க வேண்டாமே சார்.

    ReplyDelete
    Replies
    1. எங்கே கேள்விப்பட்டீர்களோ தெரியலை சார் - ஆனால் நான் புழங்கிடும் ஒரே பொதுவெளி இது மாதிரமே எனும் போது வாசக நண்பர்களின் குரல்களுக்குக் காது கொடுக்க எனக்கிருக்கும் ஒரே மார்க்கம் இதுவே ! So இங்கு பதிவாகும் எண்ணங்கள் என்னை சுலபமாய் எட்டிடும் என்பது மட்டுமே வசதி ! அடிக்கடி இங்கு எழுத முயற்சியுங்கள் சார் !

      Delete
    2. Warm welcome Gops!

      // அடிக்கடி இங்கு எழுத முயற்சியுங்கள் சார் ! //

      +1

      Delete
    3. எனக்குத் தெரிந்து உங்களை இங்கு இப்போது தான் சந்திக்கின்றேன் சகோதரா.!

      உங்களை வரவேற்கின்றேன் .

      தொடர்ந்து எழுதுங்கள்.

      Delete
  23. ஒரு தோழனின் கதை

    கதை நாயகன் நம்ம தோழர் இருக்காரே, அதுல பாருங்க..அதாவது...அது வந்து...நான் என்ன சொல்ல வர்ரேனா....

    சித்த இருங்கோ, ப்ளுகோட்ஸ் பட்டாளம் படிச்சிட்டு வந்து சொல்றேன். :-))

    ReplyDelete
    Replies
    1. ஜோடா கீடா ஏதாச்சும் வேணுமா சார் ?

      Delete
    2. நோ.. தாங்க்ஸ் சார். இப்பதான் ஹார்லிக்ஸ் குடிச்சேன். :-))

      Delete
    3. இன்னும் ஹார்லிக்ஸ் குடிக்கிற இந்த சின்ன பையன ஒரு தோழனின் கதை படிக்க வச்சிட்டிங்களே சார் ! இந்த சின்ன வருத்தம்தான் எனக்கு ம்ம்ம்... :-))

      Delete
    4. நான் வளர்கிறேனே மம்மி !!

      Delete
  24. இந்த கிராபிக் பஞ்சாயத்தில் அட்டகாசமாய் அதனதன் பாணியில் வெற்றி கொடி நாட்டிய இதழ்களை மறந்து விடாதீர்கள் நண்பர்களே..

    ஜானியும் சரி ,ப்ளூகோட் பட்டாளமும் சரி பட்டைய கிளப்புகிறார்கள்..

    ReplyDelete
  25. ரிப்போர்ட்டர் ஜானியின் காற்றில் கரைந்த கலைஞன்..

    ஆரம்ப கால இதழ்களில் சில விமர்சன கடிதங்களில் ( என்னுடையதிலுமே) இதழின் விலை அட்டைப்படத்திற்கே சரியாகி விட்டது என்று அடிக்கடி வரும் ..அந்த விமர்சன வரிகள் கண்டிப்பாக இந்த ஜானி இதழுக்கு பொருந்தும் ..அவ்வளவு அழகு...அந்த அட்டைப்பட அழகையே பல நிமிடங்கள் ரசித்தவாறு கதையும் அவ்வாறு அழகானதா அமையிட்டும் என நினைத்தபடியே வாசித்தால் அதுவும் உண்மையே .வழக்கமான அதே விறுவிறு ஜானி நடை ..அதே மர்மம் ..க்ளைமேக்ஸில் அதே அதிரடி திருப்பம் எதிர்பார்த்த மாதிரியே எதிர்பாரா நபரே குற்றவாளியாக ..ஒரே மூச்சில் படிக்க வைத்த விறுவிறு த்ரில்லர் காற்றில் கரைந்த கலைஞன்..இந்த பழைய பாணி ஜானியின் மிகவும் விரும்புவதற்கு மற்றொரு காரணம் இவரின் சாகஸங்களின் அந்த தெளிவான சித்திர தரம் ..இதிலும் அவ்வாறே..

    ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தை அரைமணி நேரத்தில் பார்த்த உணர்வு..


    காற்றில் கரைந்த கலைஞன் என்றுமே கரையாத கலைஞன் இந்த ரிப்போர்ட்டர் ஜானி என்பதை நிரூபித்த மீண்டும் ஓர் இதழ்

    ReplyDelete
  26. இனியெல்லாம் சுகமே...

    பக்கத்திற்கு பக்கம் வெடிச்சிரிப்பை எதிர்பார்த்திடாமல் இவர்களின் லூட்டியை ரசித்தால் அழகான வாசிப்பு என ஆசிரியர் தெரிவித்து இருந்தார்..ஆனால் சில இடங்களில் என்னால் வெடிச்சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரிக்க வைத்தனர் இந்த காமெடி ராணுவ பட்டாளம் .அதிலும் குறிப்பாக ராணுவ மருத்துவர் தனது அனுபவத்தை சொல்ல வாசிப்பதை நிறுத்தி விட்டு அவ்வளவு சிரிப்பு போலவே பிழைப்பாரா பிழைக்க மாட்டாரோ என இருக்கும் குதிரைப்படை தளபதியிடம் சார்ஜ் என்றவுடன் எகிறி எழும் காட்சிகளும்,கிணற்றில் தண்ணீர் எடுக்க பாடுபடும் காட்சிகளும் வாய்விட்டு சிரிக்க வைத்தன. க்ளைமேக்ஸ் நிகழ்வுகளோ இன்னும் செம ரகளையாய் .மொத்தத்தில் ஏற்கனவே சொன்னது போல இந்த ப்ளூகோட் பட்டாளம் என்னை ஏமாற்றியதே இல்லை இம்முறையும் அதை நிரூபித்து விட்டவர்கள் முன்னை விட ஒரு படி மேலே சென்று தனது கொடியை நிலைநாட்டி விட்டார்கள் ..தாராளமாய் இவர்களுக்கு வருடம் ஒருமுறையாவது இடம் கொடுப்பது கார்ட்டூன் நாயகர்களுக்கே கொடுக்க வேண்டிய மரியாதையே ..

    இனியெல்லாம் சுகமே ..

    வாசிக்க வாசிக்கவும் சுகமே

    ReplyDelete
  27. இனியெல்லாம் சுகமே...கேரண்டியான சிரிப்பு மேளா.
    இன்னும் பத்து பக்கம் தாண்டல. சிரிச்சு மாளல. (என்னா ஒரு ரைமிங்).
    " இதுக்கு தான் அழகான ஆயாக்களா வேலைக்கு வேண்டாம்னேன். கேட்டாங்களா..இந்நேரம் என் சம்சாரம்
    இருந்திருந்தா, தெற்கத்தியனுங்க துப்பாக்கிய கீழே போட்டுட்டு சரண்டராகியிருப்பானுங்க"
    " ஸ்கூபி உனக்குமா காயம்?"
    "அதுவா, கணுக்கால்ல லேசா சுளுக்கு."
    " போரின் அடையாளம்னு அதுவாவது இருக்கே..
    கால்ல எப்படி சுளுக்கு."
    " அதுவந்து..சார்ஜ்ன்னதும் என் குதிரை மண்ணைக் கவ்விடுச்சி. எடுத்தேன் பாருங்க ஒட்டம்."
    இது சாம்பிள் மட்டுமே.
    "

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் ரொம்ப தவறான செயல்ங்க...என எடப்பாடியாரின் வசனமும் செம...

      Delete
    2. நிறைய இடங்களில் ரசித்து சிரித்தேன் சார்...

      ரொம்ப நாளைக்கு பிறகு 3 இதழ்களை ஒரே நாளில் படித்தது இப்போதான்...

      Delete
    3. //எடப்பாடியாரின் வசனமும்//

      தெய்வமே ...கோர்த்து விட்டுப்புடாதீங்க !!

      Delete
  28. சாம்பிள் 2.
    " அப்படின்னா எங்கள வச்சி தான் தொழில் பழகுறீங்களா டாக்டர்?"
    " இப்பல்லாம் ரொம்பவே தேறிட்டேன்.ஆறு மாசமா மயக்க மருந்துன்னு நெனச்சு பினாயில ஏத்தி சொதப்பிக்கிட்டிருந்தேன்."
    செம்ம காமெடி..

    ReplyDelete
    Replies
    1. அந்த வசனத்தில் "பினாயில்" மட்டுமே எனது ஒட்டு ; பாக்கியெல்லாமே ஒரிஜினலின் பகடியே ! But still டாக்டர்கள் மன்னிப்பார்களாக !!

      Delete
  29. அப்புறம் விஜயன் சார், இப்பொது எல்லாம் உங்களுக்கு இது போன்று ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல என ஊருக்குள் பேசிக்கிறாங்க :-)

    ReplyDelete
    Replies
    1. தூத்துகுடியிலே இருக்கீங்கள்லே...கணேஷ் பேக்கரி...சாந்தி பேக்கரி ரஸ்க் ஞாபகம் வராட்டா எப்புடி ?

      Delete
    2. ஆமாம் சார்! எங்க ஊர் ரஸ்க் உலகம் முழுவதும் பேமஸ், அடித்துக்க ஆளே கிடையாது!

      Delete
    3. இன்னும் சில மாதங்களுக்கு தூத்துக்குடி தான் :-)

      Delete
    4. ///எங்க ஊர் ரஸ்க் உலகம் முழுவதும் பேமஸ், அடித்துக்க ஆளே கிடையாது!//;

      அப்படீன்னா அடுத்தவாட்டி EBF வரும்போது ஒரு லோடு ரஸ்க்கு பாக்கெட்களை வாங்கிட்டு வந்திடுங்க PfT.. ஒரு அண்டா கருப்புக் காப்பியோடு காத்திருப்பேன்...

      ரவுண்டுபன்னுகளை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப் போய் கெடக்கு!

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. // அப்படீன்னா அடுத்தவாட்டி EBF வரும்போது ஒரு லோடு ரஸ்க்கு பாக்கெட்களை வாங்கிட்டு வந்திடுங்க PfT //

      Sure! I will get Macroon also!

      Delete
  30. சில வருடங்களுக்கு முன் இங்கே ஒரு பதிலை பதிவு செய்திருந்தேன் ஆச்சர்ய வியப்புடனே ..சில நண்பர்கள் கதையின் பேனலில் வரும் தீப்பந்தம் எறியும் திசையை வைத்து பல காரணிகளை முன்வைத்து ஆச்சர்ய படுத்தினார்கள் .ஆனால் நான் ஒரு காமிக்ஸ் கதையை படிக்கும் பொழுது கதை செல்லும் வேகத்தில் என்னால் அங்கே தீப்பந்தம் இருந்தால் அது எரிகிறதா ,இல்லையா என்பதை வேண்டுமானால் கவனித்து கொண்டு கதையினை தொடரமுடியும் .ஆனால் அந்த தீக்கனல் தெற்கு நோக்கி எரிகிறதா ,வடக்கு நோக்கி எரிகிறதா,கிழக்கு நோக்கி எரிகிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து தான் நான் ஒரு காமிக்ஸ் கதையை புரிந்து கொள்ள வேண்டுமெனில் எனக்கு கிடைக்கும் அந்த குழந்தைத்தனமான காமிக்ஸ் மகிழ்ச்சி கிடைக்குமா எனில் கண்டிப்பாக சந்தேகமே..அதே நிலைப்பாடு தான் சார் இந்த தோழனின் கதையில்.எனில் குழந்தை தனமான காமிக்ஸ் இதழ்களே போதுமானது என்பது அர்த்தமல்ல இதன் சாரம்சம். பராகுடா ,பெளன்சர் ஏன் சமீப பல கிராபிக் நாவல்கள் உட்பட கொண்டாடும் நிலையில் நாம் வளர்ந்து கொண்டு தானே உள்ளோம்.அதற்கு காரணமும் உங்களின் அந்த பலமுனை தேடல்களாலும் ,உங்கள் புது முயற்சிகளின் பலனாலும் தானே சார்..
    சில சமயங்களில் தோழனின் கதை போல் கற்கள் இடறும் பொழுது உங்கள் புது முயற்சிகளின் மீதே மொத்தமாக மடை மாற்றுவது எங்கள் நோக்கமல்ல சார். எங்களால் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு ஒரு காமிக்ஸ் கதையை படிக்க முயலவில்லை ,இயலவில்லை என்பதே முழு காரணம்.சில நண்பர்களுக்கு அது கைகூடலாம் ஆனால் எங்களுக்கு.."நான் வளரவில்லையே மம்மீ" என மீண்டும் நாங்கள் கதறுவது உண்மைத்தானே சார்..

    காமிக்ஸ் கதையில் பல ஜானர்களை மாற்றி அமைத்து உள்ளீர்கள் சார்..காமிக்ஸே ஜானர் மாற்றும் பொழுது தான் உடன்வரமுடியவில்லை போலும். ஒரு சமயம்.. இந்த இடைப்பட்ட காலத்தில் எங்களை பல தூரம் அழைத்து வந்தது போல பல வருடங்கள் கழித்து தோழனை போல் வளர வைத்து கூட அழைத்து வருவது நடந்து இருக்கலாம் சார்..

    எனவே இதன் பொருட்டு உங்கள் மாற்று தேடல் தடைபோட வேண்டாம் சார்..இங்கே + 18 ஒரு பொருட்டே அல்ல .. பட் நீங்களே சொன்னது போல் கதையே இல்லாத கதையோ..அல்லது சில குறீயீடுகளால் தான் காமிக்ஸ் கதையவே உணரமுடியும் போன்ற கடின காமிக்ஸ் இதழ்களையோ நாங்களும் உணர சில காலங்கள் ஆகலாம் சார்..அந்த வளர்ச்சியை எட்ட எங்களை போன்றோருக்கு நீண்ட காலங்கள் கூட ஆகலாம்..அந்த காலத்திற்கும் எங்களை அழைத்து செல்ல வும் உங்களால் மட்டும் தானே சார் முடியும்..எனவே மாறுதல் படைப்புகளை ,மாற்று சிந்தனை படைப்புகளை நிறுத்தாமல் தொடருங்கள் சார் எக்காலமும்.. என்ன ஒன்று..!? இன்றைய எங்கள் ( அனைவரையும் அல்ல) வளர்ச்சியை அதிகமாக மனதில் கொண்டுவிட்டீர்கள் சார்..அது உங்கள் தவறும் அல்ல..:-)


    இப்படிக்கு..


    என்றென்றும் உங்கள் கரம் பிடித்து நடக்கும்


    காமிக்ஸ் குழந்தை..👶🏻

    ReplyDelete
    Replies
    1. 50வயசான குழந்தையை இப்பதான் பார்க்கிறேன்:-)

      Delete
    2. 50 க்கு நடுவில் பாயிண்ட் வைக்க மறந்து விட்மீர்கள் சார்...:-)

      Delete
  31. இனியெல்லாம் சுகமே.. படித்தாயிற்று.
    வடக்கு, தெற்கு அமெரிக்க யுத்த பூமி. போரில் காயமடைந்த வடக்கத்திய வீரர்கள். அருகேயுள்ள தெற்கத்தியர்களின் கிராமம் ஒன்றில் தங்க நேரிடுகிறது. அங்கே நடந்தேறும் சம்பவங்களை ஒரு அருமையான காமெடித் தோரணமாக்கி நம் கண் முன்பாக நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர். frame by frame காமெடி கொடிகட்டிப் பறக்கிறது. ப்ளு கோட் பட்டாளம் நம்மை ஏமாற்றாமல் தங்களுக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்கிறார்கள். கார்ட்டூன் என்றாலே ஆசிரியரின் பேனா முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை கதக்களி ஆடுகிறது. Super சார்.

    ReplyDelete
    Replies
    1. ///frame by frame காமெடி கொடிகட்டிப் பறக்கிறது. ப்ளு கோட் பட்டாளம் நம்மை ஏமாற்றாமல் தங்களுக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்கிறார்கள். கார்ட்டூன் என்றாலே ஆசிரியரின் பேனா முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை கதக்களி ஆடுகிறது///

      நானும் படித்து ரசிக்க ஆவலோடு வெயிட்டிங்...

      Delete
  32. இன்னிக்கும் கொரியர் ஆபீஸ் போயிருந்தேன்.. புக்கு வரலைன்னு சொல்லிட்டாங்க. நேத்திக்கு லயன் அலுவலகத்தை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு ட்ராக்கிங் நம்பர் கேட்டிருந்தேன். இன்னிக்கு புக்கை அனுப்பி வைக்கப் போறதா சித்தே முன்பு பதில் வந்திருக்கு!

    நாளைக்காவது வருமா?

    வரட்டும்.. என்ன இப்ப?!! எனக்கு காமிக்ஸுன்னாலே அவ்வளவா புடிக்காதுப்பா!😌😌

    ReplyDelete
  33. Dear Editor,

    I also tend to agree with Dr Sundar's comments regarding the timing of the release - the foremost reason why I did not buy nor intend to buy Kannaana KannE !

    While I totally welcome Dr Selvam's views and am going to read the book (story) - perhaps years like these are not the times for such stories. Now is the time for fast paced action or some good comedy - of which genre we just have two choices, I agree :-(


    ReplyDelete
  34. ஆத்தா கிட்ட ஒரு மன்னாப்பு கேட்டுப்புடுங்க. அப்புறம் இனியெல்லாம் சுகமே..

    ReplyDelete
    Replies
    1. இதோ இப்பவே மன்னாப்பு கேட்டுடறேன் பத்து சார்!😁😁

      Delete
  35. காற்றில் கலந்த கலைஞன்.

    நல்ல விறுவிறுப்பான கதைக்களம். நல்ல வேகம். ட்விஸ்ட் அனைத்தும் நன்றாக இருந்தது. Climax நான் யூகித்திருந்தாலும் முதல் காட்சிக்கும் இறுதிக்காட்சிக்குமான இணைப்பு நன்றாக இருந்தது.

    மற்றொரு ஹிட் ஜானிக்கு.

    ReplyDelete
  36. ஒரு தோழனின் கதை

    எடிட்டரின் கதைத்தேர்வுகள் 90% நேரம் ரசிக்கும்படியாகவே இருக்கும். அல்லது அவரின் டேஸ்டிற்கு நாம் செட்டாகிவிட்டோமோ என்னவோ. ஒரு தோழனின் கதை ஒரு பின்நவீனத்துவ கதை எனலாம். post modernism.அப்படினா? ஆரம்பிக்கிறதும் தெரியாது, முடியறதும் தெரியாது. ஒரு சில நாளின் சம்பவங்கள் தான் கதை. நாம் தினமும் ஆபிஸ் போவதே ஒரு கதை தானே. ஆனால் அதிரடி கிளைமாக்ஸ் எல்லாம் இருக்காதே, "பூரி சாப்பிட்டு குறட்டை விட்டோம்" என்பது தான் நம் கதையின் கடைசி வரியாக இருக்கும். இந்த பின் நவீனத்துவ கதையின் கிளைமாக்சை அப்படித்தான் எடுத்த்துக்கொள்ள வேண்டும். கதை வெகு சுவாரசியம். மொழிபெயர்ப்பும். ஆசிரியர் போன்ற, நம்மைப் போன்ற நடுத்தர வயது சாதாரன ஆசாமியின் தினசரி கிளிகிளுப்புகள் செம ஜாலியாக இருந்தது. எல்லாம் இருந்தும் சந்தோஷம் என்றால் என்னவென்றே மறந்து போயிருந்ததை, வேற்று கிரக ஆசாமி உணர வைக்கிறான். வழக்கமாக காமிக்ஸ் கதையை பையனிடம் சொல்வேன். இந்தக்கதையை அப்படி சொல்ல முடியாததால் மனைவியிடம் சொன்னேன். "அவன் சின்ன வீட்டுக்கு போனானா..." என்று கதையின் ஆரம்ப பகுதியை சொல்லி முடிப்பதற்குள், "கருமம், கருமம்" என தலையிலடித்துக் கொண்டால். இந்த 18+ சமாச்சாரம்லாம் வெளிநாட்ல தான். நம்மூர்ல 40+ என போர்டு வைக்கணும் போல.

    ReplyDelete
    Replies
    1. //மனைவியிடம் சொன்னேன். "அவன் சின்ன வீட்டுக்கு போனானா..." என்று கதையின் ஆரம்ப பகுதியை சொல்லி முடிப்பதற்குள், "கருமம், கருமம்" என தலையிலடித்துக் கொண்டால்.//

      ஆனாலும் உங்க தைரியத்துக்கு ஒரு சிலை வைக்கலாம் டாக்டர் !!

      Delete
    2. ////மனைவியிடம் சொன்னேன். "அவன் சின்ன வீட்டுக்கு போனானா..." என்று கதையின் ஆரம்ப பகுதியை சொல்லி முடிப்பதற்குள், "கருமம், கருமம்" என தலையிலடித்துக் கொண்டால்.//

      எனக்கென்னமோ அதை நீங்க ஒரு உள்நோக்கத்தோடுதான் சொல்லியிருப்பீங்களோன்னு ஒரு டவுட்டு வருதுங்க டாக்டர்!😜😜

      Delete
    3. ///இந்த 18+ சமாச்சாரம்லாம் வெளிநாட்ல தான். நம்மூர்ல 40+ என போர்டு வைக்கணும் போல.///

      ஹாஹாஹா!

      Delete
  37. This week reporter johnny is a blockbuster. Cant stop reading the book. For a change, climax was known 2 pages before last page ;-)

    ReplyDelete
  38. "பொம்ம புக் - பொம்ம புக்காவே இருந்துட்டுப் போகட்டுமே ?"

    கிராபிக் நாவல்களில் ஆயிரக்கணக்கான புதையல்கள் இருக்கின்றன. Road to perdition, from hell எல்லாம் நெட்டில் கிடைக்கிறது. படிக்க ஆரம்பித்தால் ஆயிரம் பக்கங்கள் முடிக்கும் வரை கீழே வைக்க முடியாது. சும்மா டென்ஷனா பரபரப்பா இருக்கும். ஆனால் அதிலும் கொஞ்சம் அடல்ட்ஸ் சமாச்சாரம் உண்டு. அதை ஒன்னும் பண்ண முடியாது. Daniel craig நடித்த ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்குவார். பழைய ஜேம்ஸ்பாண்ட் எல்லாம் மடிப்பு கலையாமல் வசனம் பேசுவர். இன்னமும் டீசண்டான டிரஸ் போட்டு, டீசண்டாக பேசி, தோட்டா குறையாமல், சாகாமல் சுட்டுக்கொண்டே இருக்க வேண்டும் எனும் புக்குகளை விரும்பினால், மறுபதிப்பு மட்டுமே சாத்தியம். பராகுடாவில் இல்லாத கிளுகிளுப்பா, ஆனால் என்ன அதிரடியான கதை. சினிமா பார்ப்பது போல இருந்ததே. ஒரு தோழனின் கதை வெகு சுவாரசியாமாக இருந்தது. "எல்லாம் இருக்கிறதே, ஏன் சந்தோஷம் இல்லை" என யோசிக்க வைத்தது. பிடித்தால் படியுங்கள். பிடிக்காவிட்டால் Rs.100/5000 = 2% செலவு தான் தண்டம் என தூக்கிப்போட்டு விடுங்கள். மரண மொக்கை என்றெல்லாம் சொல்ல வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ///டீசண்டான டிரஸ் போட்டு, டீசண்டாக பேசி, தோட்டா குறையாமல், சாகாமல் சுட்டுக்கொண்டே இருக்க வேண்டும் எனும் புக்குகளை விரும்பினால்,///

      சிம்ப்பிளா 'டெக்ஸ் புக்கு'ன்னு சொல்லியிருக்கலாம்!😜😜

      Delete
    2. ஹிஹி. நான் சொல்லலீங்கோ. ஈவியை புடிச்சு கட்டி வைங்க. மெபிஸ்டோ ஆள்னு நினைக்கிறேன்

      Delete
    3. நம்மாளுங்க கிட்டே சொல்லி இன்னிக்கும் புக்கை ஜார்கண்டு பக்கமாய் அனுப்பப் சொல்லிப் போடணும் !

      Delete
    4. //பிடிக்காவிட்டால் Rs.100/5000 = 2% செலவு தான் தண்டம் என தூக்கிப்போட்டு விடுங்கள்//

      அதுக்கு அவசியமே இராது டாக்டர் ; அடுத்த பதிவில் தகவல் !

      Delete
    5. அப்போ இன்னும் ஒரு கி நா உண்டு இந்த வருடம் என்று சொல்கிறீர்களா சார்?

      Delete
    6. ஹா.. ஹா. எதிர்பார்த்ததுதான். என்ன சார், ஆர்ச்சியை பெரிய சைஸ்-ல இறக்கப் போறிங்களா...?

      மாற்று இதழ் எல்லாம் ஒன்றும் வேண்டாமே...! பிடிக்கலேன்னு சொல்லி என்னோடு 4 பேர் நின்றால், ஹாஹா பேஷ் பேஷ் ன்னு சொல்லி எதிரே ஒரு பத்து நிற்கிறார்கள். so அந்த மாதிரி முயற்சி இருந்தால் ப்ளீஸ் கைவிட்டுவிடுங்கள். அந்த மாதிரியெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஒரு இதழ் பிடிக்கும், மற்றொன்று பிடிக்காது, அதற்காக இப்படியே போய் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது.

      Delete
    7. //பிடித்தால் படியுங்கள். பிடிக்காவிட்டால் Rs.100/5000 = 2% செலவு தான் தண்டம் என தூக்கிப்போட்டு விடுங்கள்.//

      Dr. போல் பேசுங்கள் சார், விமர்ச்சித்தவர்கள் எல்லோரையும் மட்டம் தட்டுவதுப் போன்று உள்ளது தங்களது பேச்சு. உங்களிடம் இதழ் பிடிக்காத யாராவது நூறு ருபாய் கொடுங்கள் என்று கொடி பிடித்தார்களா....? விமர்ச்சித்தவர்களை கேவலப் படுத்தாதீர்கள்.

      Delete
    8. // அந்த மாதிரி முயற்சி இருந்தால் ப்ளீஸ் கைவிட்டுவிடுங்கள். அந்த மாதிரியெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஒரு இதழ் பிடிக்கும், மற்றொன்று பிடிக்காது, அதற்காக இப்படியே போய் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. //

      +1 Well said! No need to give another replacement book!!

      Delete
    9. ///கதை வெகு சுவாரசியாமாக இருந்தது. "எல்லாம் இருக்கிறதே, ஏன் சந்தோஷம் இல்லை" என யோசிக்க வைத்தது. பிடித்தால் படியுங்கள்.///

      +111

      Delete
    10. ///சிம்ப்பிளா 'டெக்ஸ் புக்கு'ன்னு சொல்லியிருக்கலாம்!😜😜///

      நீங்க நல்லவரா? கெட்டவரா? STV

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. இப்படி இன்னொரு புக்கு குடுத்தா, அப்பறம் நாங்க எல்லா புக்கையும் சரியில்லைன்னு சொல்லி வேற புக்கு கேப்போம்... we are bad'u boys

      Delete
  39. /// சிம்ப்பிளா 'டெக்ஸ் புக்கு'ன்னு சொல்லியிருக்கலாம்!😜😜///
    அவரு பொள்ளாச்சி போயி, புளியம்பட்டிக்கு வர்றார்.

    ReplyDelete
  40. சார்...
    கரூருக்கு இன்னைக்கும் புக் கிடைக்கல... ஜோதில ஐக்கியமாக DTDC விட மாட்டேங்கிறாங்க...

    ReplyDelete
    Replies
    1. சொன்னா நான் கொண்டு வந்து கொடுத்திருப்பேனே சார்...

      Delete
    2. ST CORIERவந்து மூன்று நாட்கள் ஆச்சு சார்...இன்னைக்கு பண்டலே வந்தாச்சு...

      Delete
    3. டாக்டர் சார். DTDC ல எனக்கு நேற்றே வந்திடுச்சே. எதுக்கும் லயன் ஆபிசுக்கு ஒரு போன் பண்ணுங்க.

      Delete
  41. ஒரு தோழனின் கதை..

    விறுவிறுப்பான,அதிரடி திருப்பங்களற்ற, சற்றே வித்தியாசமான,ஒரு தோழனின் கதை...

    வேற்றுக்கிரக வாசிகளுடன் கை கோர்த்திட தயாராகும் பூமியின் ஆயத்தங்கள்,கதை நாயகனுக்கு பெரிதாய் ஆர்வத்தை தராவிட்டாலும்,நமக்கு நிறையவே எதிர்பார்ப்பை தருகிறது...

    கற்பனைகளை தாண்டிய மெட்டல் உருவங்களாய்,பகடி செய்யும் விரல் உருவத்துடன் வந்து சேரும் ஏலியன்கள், இங்கிருக்கும் மனிதர்களது வாழ்க்கை முறைகளை அறிய முற்படுகிறது...

    பொறுப்பான மகனாய் இருந்தாலும் நடுத்தர வயதுக்கான பால் உணர்வுகளோடு,நவீன விஞ்ஞானத்தை நையாண்டி பண்ணிடும் க்ரிஸ்டியானோதான் கதையின் நாயகன்..

    மன அழுத்தங்களிலிருந்து தற்காலிக விடுதலைக்காக,அவன் தேர்ந்தெடுத்த பாலியல் தேடல்கள் தவறென தோன்றவில்லைதான்..உண்மையில் இது போன்ற விபரீதமான கற்பனைகள் தோன்றாதவர்கள் நம்மில் யாரேனும் இருக்கிறார்களா என்ன?

    அவனிடம் சிடியை வாங்க வரும் வேற்றுக்கிரக வாசியுடனான நட்பு, அவனது வாழ்வியலை மாற்றுவதோடு,
    ஆய்வுக்கான மாதிரியாகவும் மாறி விட்டிருந்த அவன் வாழ்விலும் சில மாற்றங்களையும் கொண்டு வருகிறது...

    க்ரிஸ்டியானோவின் தேடல்கள்,அவனது பாலியல் கனவுகளை நிஜமாக்கி தந்து விட்டு,ஒருநாள் விலகியும் செல்கிறான் அந்த இயந்திரத் தோழன்...

    தேடல்கள் எல்லாம் கையில் கிடைத்தும் வெறுமையாகவே திரிகிறான் க்ரிஸ்டியன்...உண்மையில் பிடித்தமான விசயங்களே நாள்பட சலிப்பூட்டுவதில் ஆச்சர்யம் இல்லைதான்..
    சந்தோசம் என நாம் எண்ணி தொடர்வன எல்லாம் நிஜமாகவே சந்தோசம்தானா என்ன..?

    சக மனிதர்கள் நிறைந்த உலகில்,ஒரு ஓவியமே நிம்மதி தரும் என வாழ்ந்தவன், அவன் வெறுத்திட்ட ஏலியன்களால் புரிந்து கொள்ளப்பட்டவனாகிறான் என்பதும் சுவாரசியமே...இத்தனைக்கும் அந்த வேற்றுலக வாசிகள் பேசிடும் மொழிக்கூட எங்கேயும் காட்டப்படவில்லை..

    உண்மையில் சில ஒரு "ஸ்விட்ச்" வாழ்க்கையின் இரண்டு வெவ்வேறுப் பக்கங்களுக்கான பாதையைக் காட்டிடும்..அதில் எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்..வட்டங்கள் சதுரமாகி விடக் கூடிய சூட்சுமங்களும் அதுதான்...

    "விஞ்ஞானிகள் அத்தனை பேரையும் நாடு கடத்திட்டா நல்லது","வான்வெளி பயணம் மாக்கான்களுக்கே" என்ற க்ரிஸ்டியான், இறுதியில் தானும் அந்த மாக்கானாய் மகிழ்ச்சியாய் பயணிப்பது நம் மனதுக்கும் நிறைவாய் இருக்கிறது...
    பூமியில் முழுமையடையாத அவன் தேடலுக்காய்,வேற்றுலக நண்பன் அழைத்திருப்பானோ என்னவோ...?
    அங்கிருந்து ஆறுதலற்ற சித்திக்கும் அவள் எப்போதும் கேட்கும் கார்ட்டை அனுப்புகிறான்..

    இறுதியாய்,தனக்கான சரியான இடத்தில் சந்தோசமாக பதிகிறான் நாயகன்... நம்பிக்கைளால் நிறைந்த நட்சத்திரங்களின் வானில் அவனும் ஓர் எரி நட்சத்திரமாகிறான்...

    ஓவியங்களும் வண்ணங்களும் கதை நெடுக கதைக்கு தேவையான இறுக்கத்தை தருகின்றன..முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே,பால்யங்களில், காமிக்ஸ் நிர்வாணங்களை கண்டிட்ட நமக்கு, இந்த கதைப்போக்கான நிர்வாணங்களை கடந்திடுவதும் சுலபம்தான்....

    இன்றைய தொலைக்காட்சிகளும், மொபைல்களும், நிஜ வாழ்க்கை காட்டிடும் பாலியல் பயங்கரங்களுக்கும் முன், இந்த புத்தகத்தின் படங்கள் பெரிய விசயமுமில்லை...

    தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு நகர்வதே வாழ்க்கை...
    ரசனைகள் நிறைந்த வாழ்வே மகிழ்ச்சியானது நம்  மனதுக்கு உரைத்துப் போகும் இந்த தோழன் நிச்சயம் நமக்கானவன்தான்...

    ReplyDelete
    Replies
    1. பட்டையை கிளப்பும் விமர்சனம்.

      Delete
    2. அட்டகாசமான விமர்சனம்.

      Delete
    3. அற்புதமான விமர்சனம் சார். பாராட்டுக்கள்.

      Delete
    4. அருமை சார்... நல்ல விமர்சனம்!

      Delete
    5. அட்டகாசமான அற்புதமான அருமையான விமர்சனம்

      Delete
    6. அருமையா எழுதியிருக்கீங்க பார்த்திபன்!!

      Delete
  42. பார்சல் வந்தாயிற்று. இரவு ஒரு தோழனின் கதையை படித்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  43. இனியெல்லாம் சுகமே...

    பக்கத்திற்கு பக்கம் வெடிச்சிரிப்பை எதிர்பார்த்திடாமல் இவர்களின் லூட்டியை ரசித்தால் அழகான வாசிப்பு என ஆசிரியர் தெரிவித்து இருந்தார்..ஆனால் சில இடங்களில் என்னால் வெடிச்சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரிக்க வைத்தனர் இந்த காமெடி ராணுவ பட்டாளம் .அதிலும் குறிப்பாக ராணுவ மருத்துவர் தனது அனுபவத்தை சொல்ல வாசிப்பதை நிறுத்தி விட்டு அவ்வளவு சிரிப்பு போலவே பிழைப்பாரா பிழைக்க மாட்டாரோ என இருக்கும் குதிரைப்படை தளபதியிடம் சார்ஜ் என்றவுடன் எகிறி எழும் காட்சிகளும்,கிணற்றில் தண்ணீர் எடுக்க பாடுபடும் காட்சிகளும் வாய்விட்டு சிரிக்க வைத்தன. க்ளைமேக்ஸ் நிகழ்வுகளோ இன்னும் செம ரகளையாய் .மொத்தத்தில் ஏற்கனவே சொன்னது போல இந்த ப்ளூகோட் பட்டாளம் என்னை ஏமாற்றியதே இல்லை இம்முறையும் அதை நிரூபித்து விட்டவர்கள் முன்னை விட ஒரு படி மேலே சென்று தனது கொடியை நிலைநாட்டி விட்டார்கள் ..தாராளமாய் இவர்களுக்கு வருடம் ஒருமுறையாவது இடம் கொடுப்பது கார்ட்டூன் நாயகர்களுக்கே கொடுக்க வேண்டிய மரியாதையே ..

    இனியெல்லாம் சுகமே ..

    வாசிக்க வாசிக்கவும் சுகமே

    எனது மதிப்பெண் 9.5/10

    பின் குறிப்பு: நன்றி தலீவரே

    ReplyDelete
  44. மாற்று இதழ் எல்லாம் ஒன்றும் வேண்டாமே...! பிடிக்கலேன்னு சொல்லி என்னோடு 4 பேர் நின்றால், ஹாஹா பேஷ் பேஷ் ன்னு சொல்லி எதிரே ஒரு பத்து நிற்கிறார்கள். so அந்த மாதிரி முயற்சி இருந்தால் ப்ளீஸ் கைவிட்டுவிடுங்கள். அந்த மாதிரியெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஒரு இதழ் பிடிக்கும், மற்றொன்று பிடிக்காது, அதற்காக இப்படியே போய் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது

    #$#$$$$$$$$


    +1


    வழிமொழிகிறேன் .அந்த திட்டத்தை கை விட்டு விடுங்கள் சார்..

    ReplyDelete
  45. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். எனக்கு இன்னும் புத்தகங்கள் கிடைக்கவில்லை. மேலும் பலருக்கும் கிடைக்காமலோ அல்லது கிடைத்தும் வாசிக்காமலோ இருக்கலாம். ஆதலால் விமர்சனம் எழுதும் போது கதையை அப்படியே எழுதமாலும் , ஸ்பாய்லர்கள் இல்லாமலும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். (முதல் ஒரு வாரம் மட்டுமாவது)அல்லது spoiler alert என குறிப்பிட்டுவிடின் அந்த குறிப்பிட்ட பதவினை தவிர்க்க உதவியாக இருக்கும். நன்றி!

    ReplyDelete
  46. எதிர்பார்ப்புகள் இல்லாமல் படிக்கும்பொழுது கதை நன்றாகவே உள்ளது. குட்டி குட்டியாக ரசிக்க நிறையவே உள்ளது. ஒரு முறை கூட அந்த ஸ்க்ரூ மண்டையன் வாயைத்திறந்து பேசவேஇல்லை நம்மகிறிஸ்டியனேஅவன் பேசாததை நமக்குட்ரான்ஸ்லேட் பண்ணுவது அழகு.அந்த56ம்பக்கம்சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. அப்புறம் இந்தமாதம் 3 அட்டைகளுமே புதுமாதிரியாய் பழபழக்கிறது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  47. காலைல 8க்கே ஹெட்டுக்கு போனா...பத்து மணிக்கு வாங்கன்னு அனுப்ப...சரி குழந்தை குட்டிகளோட ஊர் சுத்துவம் பொழுது போகன்னு சுத்துனா...பணி நிமித்தம் அவசர அழைப்பு வர......அங்கே செல்ல இன்றும் வரல....சரி ஆபிசுக்கு ஃபோன் செய்வோம்னு ட்ரேக் நம்பர் கேக்க...அடுத்த செகண்டு பொத்துன்னு வந்து விழுது மெசேஜ் வாயிலாக...நன்றிகள் சகோதரி...ட்ராக் பட்டன தட்ட 15க்கே வந்தாச்சுன்னு காட்டுது...பின் கோடு 4 என்பதோ ஆறா போச்சு...எங்கண்ணுலயுந்தா ...அதனால் ஆவரம்பாளய பார்சல் பீளமேடு போயிடுச்சு போல....(இரண்டு மாதமாக சரியாத்தான் வருதுன்னு பின் கோடு மாத்தாததாய் விட்ட என் சோம்பலை திட்டிய படி)....சரின்னு வந்த வேலய விட்டுட்டு மூனுக்கு ஹெட்டுக்கு போனா ஒரு மணிக்கே எல்லாரும் போயாச்சுன்ன செக்யூரிட்டிய வற்புறுத்த மனமில்லாம நகர....எதுக்கும் லோக்கல் ஆபீசுக்கு போவம்னு போக ....அங்க பாத்துட்டு ஹெட்டுக்கே போங்கன்னு சொல்ல...சரி நாளை போவோம்னு வர ....செந்தூரான் சிரிக்கிறான்...தம்பி உன்ன காப்பாத்திருக்கன்னு...ஏன்னு கேட்டா...நீ பாட்டுக்கு மேலோட்டமான படிச்சிட்டு கடாசுனா டாக்டருக எல்லாம் உனக்கு ரண சிகிச்சை பன்னிருப்பாங்கன்னு...மீண்டுமொரு முறை படிச்சு பாத்து நல்லாருக்கேன்னு தோனிருக்கும் ஸ்பைடரின் சூப்பர் ஹீரோ ஸ்பேசல் போலன்னு கொசுவத்திய சுத்திக் காட்ட....நாளைக்காவது 9.30 வர யாரும் கூப்பிடாம பாத்துக்கப்பா செந்தூர் வேலான்னு வேண்டிட்டே பைக்கை விரட்டினேன் நம்ம ப்ளாக் குக்கு...செனா நல்வரவு...செனா வரவு நல்வரவு ஆசிரியருக்கும்தா...

    ReplyDelete
  48. புக்கு வந்துடுச்சாம் தகவல் வந்திருக்கேஏஏஏஏஏய்ய்ய்...

    ReplyDelete
    Replies
    1. இப்போ தான் புளூகோட்ஸ் படிச்சு முடிச்சேன்! பரபரப்பான போர் சூழலில் ஸ்கூபி மட்டும் தனியாக புலம்பவதை போல எல்லோரும் விமர்சனக் கணைகளை வீசி, ஓயப் போகிற நேரத்திலே,

      "புக்கு வந்திருக்கேஏஏஏஏஏய்ய்ய்"

      இரண்டு நாளாக ஈவி மட்டும் தனியா புலம்பிட்டிருக்கார்! யாரும் கண்டுக்க மாட்டேங்கறீங்க!

      சா...ர்ர்..ஜ்...
      க்ர்ர்ர்... டுர்ர்ர்... அடி நொறுக்கு..

      ர்ர்ர்.. விடாதே.. டுர்ர்.. முன்னேறு...

      😂😂😂

      Delete
    2. ஹிஹி!! இப்போ என் நிலைமை அப்படியாகிடுச்சுங்க மிதுன்! :)

      Delete
  49. ': ஒரு தோழனின் கதை எதிர்பார்த்தது போலவே பாஸிட்டிவாகவோ நெகடிவ்வாகவோ அதிர்வுகளைக்கிளப்பியுள்ளது குட்டி. குட்டியாய் ரசிக்க எவ்வளவோ இருக்கு.நடுநடுவே விஞ்ஞானிகளைகலாய்ப்பது ரசிக்கவைக்கிறது. மொத்தத்தில் ஏதோஇருக்கு. ( அதாவது கிராபிக்நாவல்). கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ///குட்டியாய் ரசிக்க எவ்வளவோ இருக்கு.நடுநடுவே விஞ்ஞானிகளைகலாய்ப்பது ரசிக்கவைக்கிறது///

      உண்ம!

      Delete
    2. //குட்டி. குட்டியாய் ரசிக்க எவ்வளவோ இருக்கு//

      நீங்க சொல்ல வர்றது : குட்டி = சின்னதாய் ; சுருக்கமாய் ...... என்ற அர்த்தத்தில் தானே ராஜசேகரன் சார் ?

      ஏன்னா உங்களுக்கு 'ஊம்' கொட்டியிருக்கிற பார்ட்டி வேற அர்த்தத்தில் புரிஞ்சிருக்கலாமோன்னு ஒரு டவுட்டு எனக்கு !

      Delete
  50. ஒரு தோழனின் கதை - விளிம்புநிலை மனிதர்களின் மனப்பேராட்டத்தை நேரடியாக உணர வாயப்ப்பளிக்கிறது.

    நவீனமாகி வரும் உலகத்தில் வழக்கொழிந்த லேஸர் டிஸ்க் வியாபாரம் செய்யும் ஒருவனுக்கு தொழிலில் வீழ்ச்சி, சொந்த வாழ்க்கையிலும் தன் காதலிக்கும் உண்மையாக இல்லாமல், மனைவிக்கும் உண்மையாக இல்லாமல், வீணாக நாட்களை கடத்தும் போது, திடீரென்று கிடைக்கும் ஒரு வேற்றுகிரகவாசியின் நட்பால், உலகை புதுவிதமாக பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை வித்தியாசமான கார்டூன் ஓவிய பாணியில் வெளிகொணர்ந்திருக்கிறார் கதாசிரியர்.

    இப்படி வாழ்க்கையை ஒரு வட்டத்தினுள் திரும்ப திரும்ப வாழும் மனிதனுக்கு, சதுரமாக அதை வகைபடுத்தி, ஒவ்வொரு உறவு, ஆசை இவற்றை நிதானமாக அனுபவிக்க கற்று கொடுக்கிறது, அந்த வின்வெளி தோழன்.

    கதைக்கு தேவை இல்லாத விரச காட்சிகளை தவிர்த்து விட்டு பார்த்தால், இது நமக்கு கிடைத்திருக்கும் ஒரு வித்தியாசமான கதை சொல்லும் ஜானர் வகை என்று புரிய வரும்.

    சென்றை ஆண்டு இதே லாக்டவுன் சமயத்தில் வந்த கண்ணாண கண்ணே, ஒரு குழந்தையின் பார்வையில் உலகை உணரும் கதை என்றால், இது ஒரு நடுத்தர மனிதனின் பார்வையில் அவன் உலகம் என்று புரிந்திருக்கும். அதை நீங்கள் ரசித்திருந்தால், இதையும் ரசிப்பீர்கள்.

    ப்ளாக் மற்றும் குழுக்களில் இத்தனை விமர்சனம் வாங்க, அப்படி ஒன்றும் குறையுள்ள கதை இது இல்லை. எப்போதும் முஷ்டியை மடக்கி குத்து விடும் கதைகளும், நவீன ரக காரில் வலம் வரும் நவநாகரிக கதைகளுக்கு மத்தியில் உணர்வை பிரதிபலிக்கும் இந்த கதை எனக்கு ஒரு வித்தியாசமான கதைசொல்லலை படமாக்குகிறது.

    ReplyDelete
    Replies
    1. //கண்ணாண கண்ணே, ஒரு குழந்தையின் பார்வையில் உலகை உணரும் கதை என்றால், இது ஒரு நடுத்தர மனிதனின் பார்வையில் அவன் உலகம் என்று புரிந்திருக்கும்.//

      Very true sir...

      Delete
    2. //கதைக்கு தேவை இல்லாத விரச காட்சிகளை தவிர்த்து விட்டு பார்த்தால், இது நமக்கு கிடைத்திருக்கும் ஒரு வித்தியாசமான கதை சொல்லும் ஜானர் வகை என்று புரிய வரும்.//

      +1

      அவை இல்லாமலும் கூறி இருக்கலாம்

      Delete
    3. //கண்ணாண கண்ணே, ஒரு குழந்தையின் பார்வையில் உலகை உணரும் கதை என்றால், இது ஒரு நடுத்தர மனிதனின் பார்வையில் அவன் உலகம் என்று புரிந்திருக்கும்.//

      --- நல்ல ஒப்பீடு ஜி.

      நமக்கும் அந்த வயசு என்பதால் கதை நம்மை பற்றியா என கேள்வி எழுகிறது...!!!

      (நமக்குனா எனக்கு....)

      Delete
    4. //கதைக்கு தேவை இல்லாத விரச காட்சிகளை தவிர்த்து விட்டு பார்த்தால்..//
      👌

      Delete
    5. //அவை இல்லாமலும் கூறி இருக்கலாம்//

      நான் அப்படி நினைக்கவில்லை நண்பரே ! வாழ்வின் வெறுமையைப் போக்கிட சிற்றின்பங்களே கிறிஸ்டியானின் துணைகள் ! அவற்றில் திளைக்கத் திளைக்க முங்கிய பின்னே அதன் மீதே ஒரு சலிப்பு ஏற்படுகிறது அவனுக்கு ! இதுவே கதையோட்டம் எனும் போது - அவனது வேட்கைகளையும், அவையே அவனுக்கு விருந்தாகிடுவதையும் காட்டாது கதாசிரியர் உருவகப்படுத்தியிருக்கும் தாக்கம் சாத்தியப்பட்டிராது !

      They add layers to the tale & therefore remain an integral part of it !

      கதையின் (??) ஒவ்வொரு மாந்தருக்கும், நிகழ்வுக்கும், கதாசிரியர் கச்சிதமாயொரு பொறுப்பினை ஒப்படைத்துள்ளார் சார் !

      Delete
  51. காற்றில் கரைந்த கலைஞன்..
    முதலில் இருந்து கடைசிவரை விறுவிறுப்பு குறையாத கதை. வழக்கமான ஜானியின் டெம்பிளேட். கடைசி பக்கத்தில் மர்மங்கள் முடிச்சவிழ்கின்றன. ஆனால் சஸ்பென்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என்பது பாதியிலேயே நம்மால் யூகிக்க முடிகிறது. விறுவிறுப்பான வாசிப்புக்கு குறை வைக்காத கதை.

    ReplyDelete
  52. ஒரு தோழனின் கதை!!!

    'கதைக்கு தேவை இல்லாத விரசக் காட்சிகள் என்பதே சிலரது எண்ணம்'

    அதை தவிர்த்து விட்டால் கதையே லேதுங்களே!

    கொஞ்சம் மாற்றி யோசித்து பாருங்கள்! இக்கதையை காமிக்ஸாக இல்லாமல், கார்ட்டூன் போல இல்லாமல், ஒரு முழுநீள நாவலாக இருந்திருந்தால் எத்தனை விரசமாக இருந்திருக்கும்! வரிக்கு வரி வர்ணிக்க வேண்டியிருக்கும்!

    நண்பர் சொன்னது போல, அந்த ஓவியத்தில் உள்ள கும்பூ பாண்டா பற்றியெல்லாம் வர்ணிக்க வேண்டிய தர்ம சங்கடம் உண்டாகியிருக்கும்!

    படைப்பாளிகள் ஒரு சிக்கலான, மிகவும் அவசியமான, தேவையான சமாச்சாரத்தை ரொம்ப புத்திசாலித்தனமாக கையாண்டிருக்கிறார்கள்!

    இதே சாயலில் எடுக்கப்பட்ட "சூப்பர் டீலக்ஸ்" தமிழ்ப்படத்தைக் காட்டிலும், எவ்வளவோ நளினமாகவே, கருத்தைப் பதியச் செய்திருக்கிறார்கள் படைப்பாளிகள்!

    10/10

    ReplyDelete
    Replies
    1. ///படைப்பாளிகள் ஒரு சிக்கலான, மிகவும் அவசியமான, தேவையான சமாச்சாரத்தை ரொம்ப புத்திசாலித்தனமாக கையாண்டிருக்கிறார்கள்!///

      அருமை!

      Delete
  53. Just Finished Reading "Oru Thozhanin Kadhai". Interesting Story in a fresh genre. But couldn't understand the logic behind censoring the illustrations in stories such as Largo winch, XIII, Axa etc and releasing this book. Hope we'll get unedited/uncensored dialogues/illustrations going forward starting from the upcoming XIII reprint, with suitable warning on the cover.

    ReplyDelete
    Replies
    1. Pretty simple logic sir..the intentions behind the risqué illustrations in AXA & LARGO & the others were to add glamor and to titillate ! But here nudity and et al were an integral part of the storytelling...and not meant to arouse. Hence the censorship applicable there wasn't quite needed here !

      Going forward there isn't going to be any change to our patterns as such !

      Delete
  54. i am yet to read this month books, waiting for weekend. The above Calvin id is a different person, plz dont confuse it with my id as it is similar.

    ReplyDelete
    Replies
    1. ஆங்! புரிஞ்சுகிட்டோம் சத்யாவுக்கு கா.பி.கா.பி!

      Delete
  55. ஒரு தோழனின் கதை வித்தியாசமான முயற்சி. சிலருக்கு புரியவில்லை சிலருக்கு பிடிக்கவில்லை. 😌😌😌😌😌

    ReplyDelete
    Replies
    1. ஒற்றை வரியில் நறுக்குனு சொன்னீங்க போங்க!!

      Delete
  56. ஒரு புத்தகம் ஒரு சாரரை கவரவில்லை என்பதற்காக, உடனே மாற்று இதழ் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதே "ஒரு தோழனின் கதை" நிறைய பேரை ஈர்த்திருக்கிறது என்பதை இங்கேயும், ஃபேஸ்புக்கிலும் காணமுடிகிறது. மேலும் இதுவே தொடர்கதையாகிடும் அபாயமும் உள்ளது. என்னைப் பொருத்த வரையில், எனக்கு நன்றாக டைம் பாஸாக வேண்டும். அது சினிமாவாக இருந்தாலும் சரி புத்தகமாக இருந்தாலும் சரி. மண்டையை உடைத்து கூகுல் ஆராய்ச்சி எல்லாம் செய்து ரசிக்க வேண்டிய அளவுக்கு பொறுமையும் இல்லை அதற்கு நேரமும் இல்லை. இதுதான் எனது பிரச்சனையே. நகரும் இன்றைய வாழ்க்கை டென்ஷனில் இருந்தும், மன அழுத்தத்தில் இருந்தும் கொஞ்சமாச்சும் ரிலிஃப் வேண்டும். அது இந்த பொம்மை புத்தகங்கள் தருகிறது. அதை 100 சதவீதம் தரும் கதைகளை ஆர்வமுடன் ரசித்து படிப்பேன். அப்படி எனக்கு செட் ஆகாத கதைகளாக இருந்தாலும் ஒரு முறை படித்துவிட்டு புத்தக ஷெல்பில் பத்திரபடுத்திவிடுவேன். அதற்காக அந்த புத்தகத்தை அருவருப்பான எண்ணத்தில் ஒதுக்கி விட மாட்டேன். ஏன் என்றால் அதுவும் பலரை கவர்ந்த படைப்புதானே? அதனால்தான் நான் எந்த படைப்புகளையும் "குப்பை" என்று இதுவரை நான் சொன்னதில்லை. அப்படி சொல்வதும் எனக்கு பிடிக்காது.

    எனவே ஒவ்வொரு படைப்பும் வெற்றி அல்லது தோல்வி என்பது அதன் அதன் தலையெழுத்தை பொறுத்தது. அதற்காக காரணங்களை தேடி நேரங்களை செலவிட்டுக் கொண்டிருந்தால் அடுத்த இலக்கை அடைவது கடினம்.

    இதனால் நான் சொல்ல வருவது ஒ.தோ.க புத்தகத்துக்கு மாற்றாக இன்னொன்று என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இல்லை இல்லை நான் மாற்று புத்தகம் வெளியிட்டே ஆவேன் என்று எடிட்டர் உறுதியாக இருப்பாரேயானால், அந்த புத்தகத்தை தேவைப்படும் வேறு நண்பருக்கு கொடுத்துவிடும்படி இப்போதே கோரிக்கை வைக்கிறேன். அல்லது எனக்கு அனுப்ப வேண்டாம். நான் ஆன்லைனில் விலை கொடுத்து வாங்கிக்கொள்வேன். நன்றி.

    இவை அனைத்தும் எனது சொந்த கருத்துகளே.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவு வரையிலும் ரிலாக்ஸ் செய்திடுங்கள் சார் !

      Delete
    2. நல்லா சொல்லியிருக்கீங்க...

      கார்த்திகேயன்👍

      Delete
    3. கார்த்திகேயன் சகோதரரே உங்கள் கருத்தை வரிக்கு வரிக்கு ஆமோதிக்கின்றேன்.

      Delete
    4. அடுத்த பதிவு ஆவலை தூண்டுகிறது. அப்படி என்ன தான் சொல்லப் போகிறாரோ???

      Delete
  57. ஒரு தோழனின் கதை
    சும்மா ஒரு ஜாலிக்கு , விஜய் டி.வி ல வந்த கடவுள் பாதி மிருகம் பாதி மாதிரி ஒரு முயற்சி.

    ** நண்டு பார்வை**
    இது காமிக்ஸா இல்ல கசா முசா புக்கா??
    படமா வரஞ்சுருக்காங்க, அந்த மூக்க பாக்க சகிக்கல...
கதையா? அபப்டின்னா என்னப்பா, எங்க இருக்குன்னே தெரியலியே?!!
    ஏலியன் வருதாம், பப்புக்கு போகுதாம், கண்ட cd பாக்குதாம், இதெல்லாம் காதுல பூ..
    அப்பாடா கதை முடிய பொகுது , அந்த சிடுமூஞ்சி குதுச்சு சாகப்போறான்னு பாத்தா ஒரு போன் வந்து கெடுத்துடுது.
    முடிவாவுது interesting’அ இருக்குமான்னு பாத்தா, அதுவும் இல்லை…
    சீக்கிரமே எல்லாத்தையும் வெறுக்கும் ஒருத்தனுக்கு எத்தினி நாள்தான் இந்த விண்வெளி புடிக்கும்??? ஓரு தோழனின் கதை - பாகம் 2 வேர வருமோ?? தேவுடா

    ** சிண்டு பார்வை**
    கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற ' யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற ஆழ்ந்த அர்த்தமுள்ள சொர்க்களை உணர்த்தும் deep story, அருமை.

    ஒரு சீன் வரும் பாருங்க, x-ray கண்ணாடில எலும்பு கூடா தெரியும் ஜனம் “காயமே இது பொய்யடா, வெரும் காற்றடைத்த பையடா” சித்தர் வார்த்தைகள்…. அட! அட! அடடா!!!

    “ஆசை அருபது நாள், மோகம் முப்பதே நாள்” என்ற தங்க வரிகளை சுலபமா புரிய வைக்கிர ஹீரோவின் VR ஓவிய வாழ்க்கை. என்ன சொல்றது.

    “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” என்று வள்ளுவர் பெருந்தகையின் குறளுக்கு இலக்கணமாய் ஒரு காவியம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா!! வித்தியாசமான பார்வை!! ரசிக்க வைத்திடும் எழுத்துக்கள்!!

      Delete
    2. அது சரி...நீங்க நண்டா ? சிண்டா ?

      Delete
    3. நான் வெள்ளை கவுன் போட்ட ஏஞ்சல் சார்

      Delete
  58. இதற்க்கு பதில் இலவசமாக இன்னொன்று எனில் அதிகாரிகள் கதைகளுக்கு பதிலாக வேறு புத்தகங்களை கேட.க விழைகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் இப்புட்டு உஷார் ஆகாது ரம்மி!

      Delete
    2. எல்லையில் ஒரு யுத்தம் னாலும் வேண்டாமா?

      Delete
  59. ஒரு தோழனின் கதை

    கிராபிக் நாவல்களை இதுவரை நான் கண்டமட்டில் இரண்டு வகைப்படுத்தலாம்.

    1. பராகுடா, ARS மேக்னா, நில் கவனி வேட்டையாடு போன்ற அதிரடி சரவெடிகள்.

    2. நிஜங்களின் நிசப்தம், மா துஜே சலாம், கோழைகளின் பூமி போன்ற அமைதியான, ஆனால் ஆழமாக தன் தடங்களை பதித்து செல்லும் கன்னி வெடிகள். ஒ.தோ.கதை இரண்டாம் ரகம்.

    ஆனால் இரண்டுக்குமே கதை மற்றும் விசாலமான கற்பனையே நாயக/நாயகியர். அதனால் தான் மற்ற ஜானர்களை விட கிராபிக் நாவல்கள் ஒரு மிடர் தூக்கலாக படுகிறது என்னளவில்.

    பார்சல் தாமதமாக இன்று பிற்பகலில் கிட்டியதால், அதுவரை இங்கே நடந்த விவாதங்களில் கவனம் செலுத்தி வந்தேன். என்னைப்பொருத்தவரை நேரம் வண்டி வண்டியாய் இருந்தாலும் படிக்கும் சூழலுக்கு மனம் ஏற்றால் மட்டுமே காமிக்ஸை தொடுவேன் (டெக்ஸ், லக்கியாக இருந்தாலும்). எந்த புத்தகத்தையும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிதானமாக படிப்பது வழக்கம். அவ்வகையில் எக்கசக்கமான எச்சரிக்கைகளையும், எவ்வாறு இக்கதையை அனுகவேண்டும் என்கிற ஆசிரியரின் முன்மொழிதலோடும் கூடுதல் கவனத்தோடே இக்கதையினுள் நுழைந்தேன்.

    கதையை படித்து முடித்தவுடன் ஆசிரியர் குறிப்பையும் படித்து விட்டு மீண்டும் பல பக்கங்களை புரட்டினேன். மெல்ல மெல்ல என்னால் புரிந்து கொள்ள முடியாத க்ளைமாக்ஸை உணர்ந்து கொள்ள முடிந்தது. மேலும் திரு செல்வம் அபிராமி, கண்ணன், பார்த்தீபன் மற்றும் சில இதர நண்பர்களின் விளக்கமும் கதையை மேலும் புரிந்து கொள்ள உதவியது. மீண்டும் ஒரு முறை புகுந்து பார்த்தால் எவ்வளவு புதைந்து கிடக்கப்போகிறதோ தெரியவில்லை. ஆகையால் இதுவரையிலும் நான் உணர்ந்தவற்றை பகிர்கிறேன்.

    1. முதல் பக்கத்திலிருந்து முடியும் வரை தங்கு தடையின்றி சுவாரஸ்யமாகவே சென்றது.
    2. துளி கூட விரசமாகவோ, ஆபாசமாகவோ படவில்லை எனக்கு.
    3. மேலும் சித்திரம், கலரிங், எழுத்துரு, சைஸ் எல்லாமே கதைக்கு கச்சிதமாக பொருந்துகிறது.
    4. மொழிபெயர்ப்பு மற்றும் கதை சொல்லும் விதத்தில் இருந்த ஒரு வித்தியாசம் ரசிக்க வைக்கிறது.
    5. இடையிடையே டைலாக்கில் தெறிக்கும் நையாண்டிகளும் சிறப்பு.
    6. மேலும் மேலோட்டமாக இல்லாமல் ஒன்றிப்படித்தால் ஒருவித ஈர்ப்புசக்தி இக்கதையில் உண்டு.

    இரத்தப்ப்டலம், தங்ககல்லறை போல் வாய்பிளக்க வைக்காவிட்டாலும், இதுவும் ஒரு வித்தியாசமான, தரமான படைப்பே.
    என்னை பொருத்தவரை தங்களின் முயற்சி வீண் போகவில்லை. ஒரு தோழனின் கதை, நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துப போக தோள் கொடுப்பான்.





    ReplyDelete
    Replies
    1. அருமையா எழுதியிருக்கீங்க @Thirunavukkarasu Vazzukkupparai

      Delete
    2. //
      இரத்தப்ப்டலம், தங்ககல்லறை போல் வாய்பிளக்க வைக்காவிட்டாலும், இதுவும் ஒரு வித்தியாசமான, தரமான படைப்பே // சந்தேகமின்றி

      Delete
    3. //ஒரு தோழனின் கதை, நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துப போக தோள் கொடுப்பான்.//

      அடுத்த கட்டத்தில் யாரோ ஒரு பெரியவர் பவுடர் பூசிட்டு இருக்கா மெரியே எனக்கொரு பீலிங்கு சார் !! :-) :-) :-)

      Delete
  60. //நீங்க நல்லவரா? கெட்டவரா? STV//

    ---நீங்கள் தான் சொல்லனும் மிதுனரே...

    கிறிஸ்டியான் கதைக்கும் ஆண்ட்ரேயர் க்கும் ஒரு தொடர்பு இருக்க மாதிரி தோணுதே????

    ReplyDelete
  61. ///அடுத்த பதிவு வரையிலும் ரிலாக்ஸ் செய்திடுங்கள்///

    ---கதையிலதான் புதிர்னா எடிட்டரும் புதிர் போடுகிறார்....🤔

    சனிக்கிழமை மாலை தெரிஞ்சிடப்போவுது.

    ReplyDelete
    Replies
    1. நான் மட்டும் சட்டையைக் கிழிச்சுகிட்டா போதுமா ? அப்போப்போ உங்களையும் கிழிச்சுக்க செய்ய வேணாமா ?

      Delete
  62. ப்ளூகோட் பக்கத்திற்குப் பக்கம் செம காமெடி.இம்மாத இதழ்களில் முதலிடம் இவருக்கே.
    ரிப்போர்ட்டர் ஜானி வழக்கம் போல விறுவிறுப்பு இறுதியில் முடிச்சவிழ்ப்பது அருமை.
    "தோழனின் கதை"
    தளத்தில் வாசக நண்பர்கள் இக்கதையை அணுகிய விதம்,புத்தகத்தில் எடிட்டரின் பின்னுரைக்குப் பிறகு எந்த எதிர்பார்ப்புமின்றி மீண்டும் வாசித்ததில் புரிந்து கொள்ள முடிந்தது‌.
    ஓவியப்பாணி,எழுத்துருக்கள்,கதை சொன்ன விதத்தில் நிஜங்களின் நிசப்தம்,
    கோழைகளின் பூமி போன்று இக்கதையும் சிறந்ததொரு படைப்பே.

    ReplyDelete
    Replies
    1. அழகான அலசல் சார் !

      Delete
  63. // உண்மையில் சில ஒரு "ஸ்விட்ச்" வாழ்க்கையின் இரண்டு வெவ்வேறுப் பக்கங்களுக்கான பாதையைக் காட்டிடும்..அதில் எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்..வட்டங்கள் சதுரமாகி விடக் கூடிய சூட்சுமங்களும் அதுதான்... //

    @Partherban
    அருமை சார்...

    வாழ்க்கையை நாம் ரசிக்கவோ இல்லை சலிக்கவோ காரணம் நாம் தேர்ந்தெடுக்கும் ஸ்விட்ச் தான். அது நம் கையிலேயே உள்ளது!

    ReplyDelete
  64. ஒரு தோழனின் கதை ..

    சிம்பிளா சொல்லனும்னா..

    எனக்கு புரிஞ்சிருக்கு &
    பிடிச்சிருக்கு.

    அவ்ளோதான் ஆசானே..

    ReplyDelete
  65. தோழனின் கதை - one of the best one shots in recent time.. Straight away into my all time favourite list.. To be frank every normal pereon goes through this phase in their life..

    மென் சோக graphic novel கதைகளுக்கு எனது ஆதரவு என்றும் இல்லை.. As they bring the mood down.. But this story is real funny.. Am not a frequent writer here.. But this story made me to write a few words about your honest effort.

    ReplyDelete