Sunday, June 06, 2021

அந்த 28 நாட்கள்..!

 நண்பர்களே,

வணக்கம். வாரங்கள் நான்கு - நாற்கால் பாய்ச்சலில் தாண்டிச் சென்று விட்டன ! இடைப்பட்ட நாட்களில் தேசத்தில் என்னென்னமோ நடந்து விட்டுள்ளது ! போன மாதம் இதே வேளையில் - முழுசாயத், திடமாய், தாட்டியமாய் இருந்த பலர் இன்றைக்கு வெறும் நினைவுகளாய், எண்ணற்ற குடும்பங்களின் கண்ணீர்களில் கரைந்து போய்விட்டுள்ளனர் எனும் போது மறக்கப்பட வேண்டியதொரு கறுப்பு அத்தியாயமிது என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்துக்கள் இருந்திட இயலாது தானே ? எஞ்சியுள்ள நாம் செய்யக்கூடியது - நம்மையும், நம்மைச் சார்ந்தோரையும் காத்து வரும் முன்கள வீரர்கள் அனைவருக்குமே கரம் கூப்பிய நன்றிகளைச் சொல்வதும், விடைபெற்றுச் சென்ற அத்தனை ஆத்மாக்களுக்கும் நிம்மதி கோரிப் பிரார்த்திப்பதும் தான் ! இனியொரு அலை வாரிச் சுருட்ட வாய்ப்புகள் தந்திடாது, தடுப்பூசிகளை, முகக்கவசங்களை ; சமூக இடைவெளிகளை நாடியே நாம் ஓடிடவும் முயற்சிப்போமே guys ? இன்னொரு ஊழித்தாண்டவத்தைத் தரிசிக்கும் தலைவிதி வேண்டாமே யாருக்கும் ? !

எது எப்படியோ - இந்த நாலு வார லாக்டௌன் தினங்களை நகர்த்திட இங்கே கைகொடுத்த உங்களின் அத்தனை பேருக்குமே முதுகில் ஒரு பெரிய ஷொட்டு folks ! 

  • ஏதேதோ தலைப்புகளில் 28 பதிவுகள் !
  • சுமார் 93,000 பார்வைகள் !!!! 
  • தோராயமாய் 6000 பின்னூட்டங்கள் !
  • எண்ணற்ற சந்தோஷ நொடிகள் !
  • ஆனந்தமான அலசல்கள் !
  • ஆவேசமான சில குமுறல்கள் !
  • பஞ்சாயத்துக்கள்  !!
  • தீர்ப்புகள்  !!

இந்த ஒற்றை மாதத்தினில் இங்கே நாம் பார்த்துள்ள உணர்வுகளின் பிரவாகங்கள் தான் எத்தனை எத்தனை ?! ஊரெல்லாம் அழுகுரல் செவிகளைச் சித்திரவதை செய்து வந்த நாட்களில் இங்கே நாம் சற்றே அடக்கி வாசித்தால் தேவலாமோ ? என்று தோன்றும் தான் ; ஆனால் சூழ்ந்து கிடந்த இருளிலிருந்து சன்னமாயொரு மாற்றம் தேடி வரும் நண்பர்களுக்கு இங்கேயும் முகாரி இசைப்பானேன் ? என்ற அவாவினில் தான் இயன்றமட்டுக்கு உற்சாக டானிக் மட்டுமே இக்கட பரிமாறிட முனைந்திருந்தேன் ! 

போன பதிவின் வால்பகுதியில் "இங்கே சும்மா அரட்டையும், கும்மாளமும் மட்டும் தானா ? சீரியஸாய் பகிர்ந்திட இங்கு மெனக்கெடல் இல்லையா ?" என்றொரு பின்னூட்டம் கண்ணில்பட்டது ! ஆழ்ந்த சிந்தனைகள் மாத்திரமே ஆண்டவனின் வரமல்ல நண்பரே ; சிரிப்பதும் - சிரிக்கச் செய்வதும் மனிதனுக்கு மட்டுமே இறைவன் அள்ளித்தந்திருக்கும் கொடையல்லவா ? யாரையும் வருத்திடாது - சூழ்ந்திருப்போரை மகிழ்ச்சி கொள்ளச் செய்ய முயற்சிப்பது, ஆழங்களற்ற மனப்பாங்கின் அடையாளமென்று பார்க்கப்படுமெனில் - "ஹையோ...I'd take that any day & every day ! ஏற்கனவே நமக்கு கடப்பாரை நீச்சல் கூட தெரியாதெனும் போது, ஆழமே வாணாம்டா சாமியோவ் நமக்கு ! 

  • 'தல' டெக்ஸ் சார்ந்த எக்கச்சக்கப் பதிவுகள்  !
  • தொடரவுள்ள நாட்களுக்கான திட்டமிடல்கள்  !
  • அடுத்தாண்டின் மெகா கொண்டாட்ட வேளைகள் குறித்த அளவளாவல்கள் ; அடிதடிகள்  !
  • பழசுக்குக் கொடி !
  • புதுசுக்கு கட்டவுட் !
  • யாருக்கு கெட் அவுட் ?
  • என்ன வேணும் ?
  • என்ன வேணாம் ?

Phewww....! உங்களின் இந்த 93000 பார்வைகளினூடே தான் நாம் அலசியுள்ள சமாச்சாரங்கள் எத்தனை-எத்தனை  ? நார்மலான நாட்களில் மாதமொன்றுக்கு இங்கே 37000 பார்வைகள் பதிவாகிடும் ; இரண்டரை மடங்குக்கு அதிகமாய் இம்முறை இங்கே நீங்கள் போட்டிருக்கும் இந்த attendance - நம்பர்களைத் தாண்டிய சேதிகளைச் சொல்வதாய் எனக்குத் தென்பட்டது !  பொழுது போகாதிருக்கும் நாட்களின்  இலக்கற்ற கும்மியாய் இந்த நான்கு வார ரவுசுகளை நான் பார்த்திடவில்லை ! மாறாக - காமிக்ஸ் மீதான உங்களின் காதல் இன்னமும் உயிர்ப்போடே தொடர்கிறது என்ற புரிதலையும் ; சூழ்ந்திருப்பது இருளாயினும் - இங்கே நட்பெனும் வெளிச்சத்தில் இதம் சாத்தியமே என்ற நம்பிக்கையினையும்  ; பூமியே மல்லாக்கா சுத்துனாலுமே இந்த பொம்ம புக்குகளை நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டே தான் கிளம்புவோம் என்ற தகிரியத்தையும் உங்களின் வருகைகள் பறைசாற்றுகின்றன guys !! இதுவரைக்கும் பதிவே இட்டிரா நண்பர்கள் கூட தலைகாட்டிட முனைந்தமை - என்னை மட்டுமன்றி, இங்குள்ள ரெகுலர் நண்பர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்ததென்றால் அது மிகையாகாது ! 

"IT டீம் ; மீம்ஸ் டீம் ; proof reading டீம்" என்று இந்த ஜாலி நாட்களுக்கு மத்தியில் கிட்டியுள்ள ஆதாயங்கள் ஒரு பக்கமெனில், முன்செல்லும் பாதை குறித்த தெளிவு முன்னெப்போதையும் விட கூடுதலாய் எனக்குக் கிட்டியுள்ளது icing on the cake என்பேன் ! வேறெதனில் அது பிரதிபலிக்கின்றதோ - இல்லையோ ; காத்திருக்கும் முத்துவின் 50-வது ஆண்டுமலரில் அந்த விவேகம் தெறிக்காது போகாது !! இரு நாட்களுக்கு முன்பான இந்த வெள்ளியன்று MUTHU 50 சார்ந்ததொரு முக்கிய பிள்ளையார்சுழி போடச் சாத்தியப்பட்டுள்ளது என்பது கொசுறுச் சேதி guys ! புயலடிக்கும் கடலுக்குள்ளும் நம்ம தம்மாத்தூண்டுக் கட்டமரத்தைத் தள்ளிப் போகும் தைரியத்தை உங்களின் ஒட்டுமொத்த உந்துதலே தந்துள்ளது என்றால் அது நிச்சயமாய் முகஸ்துதியின் வார்த்தைகள் நஹி guys ! Thanks a ton & more !!

இதோ - நாளை முதல் பழைய மாதிரி அன்றாடப் பணிகள் ; வாரமொரு பதிவு - என்று back to the routine ! இங்கே அனுதினமும் நிகழ்ந்து வந்த வாண வேடிக்கைகள் அவ்வப்போது கசப்புகளையுமே நாவிற்கு அறிமுகம் செய்திருப்பினும், அவை சகலத்தையும் கடாசி விட்டு, சந்தோஷ நினைவுகளை மட்டுமே மூட்டை கட்டிச் செல்வேன் - காத்திருக்கும் மெகா மெகா பணிகளுக்குள் புகுந்திட அவை 'ஜிலோ'வென்ற உத்வேகத்தைத் தருமென்ற நம்பிக்கையினில் ! பதிவாகியுள்ள இந்த 93,000 பார்வைகளுள் குறைந்த பட்சமாய் மூவாயிரமாவது சீனியர் எடிட்டரின் உபயமாக இருக்குமென்பது எனக்குத் தெரியும் ! நிச்சயமாய் அவருக்குமே இந்த நினைவுகள் நிரம்ப நாட்களுக்கு விலகிடாதென்பது நிச்சயம் ! ஆண்டவன் சித்தம் - இந்த லாக்டௌன் தினங்களில் இங்கு நாம் உணர்ந்த நேசங்களை  நேரிலும் அனுபவிக்கவொரு வாய்ப்பு 2022-ல்  கிட்டட்டும் ! God be with us !

அப்புறம் நான் பாட்டுக்கு கேள்வி கேக்காமப் போயிட்டா எப்புடி ? So சொல்லுங்களேன் guys : இந்த 28 நாட்களின் உங்கள் ஆதர்ஷ நினைவுகள் என்னவோ ?

Stay Safe all ! See you around...Bye for now !!

And a HUGE THANK YOU again !!

மீம்ஸ் அதகளம்ஸ் - by MKS Ram 








மீம்ஸ் அதகளம்ஸ் - by Dr.Partheeban, Karur :





😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

222 comments:

  1. வந்திட்டேன் சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  3. மீம்ஸ் எல்லாம் கலக்கல்ஸ். ஶ்ரீ & பார்த்தி சகோ சிரிச்சு மாளலை.

    ReplyDelete
    Replies
    1. மீம்ஸ்கள் தினம் மெருகு ஏறிட்டே போகின்றன.....!!!!

      நாளை முதல் வாரம் ஒரு முறை தானா...!!

      Delete
  4. ஆதர்ச நினைவுகள் வேறென்ன வேண்டும் சார் டெக்ஸ் பதிவுகள் தான்.
    தினந்தோறும் டெக்ஸ் சூப்பராக இருந்தது சார்.

    ReplyDelete
  5. //இந்த 28 நாட்களின் உங்கள் ஆதர்ஷ நினைவுகள் என்னவோ ?//

    முத்து 50 பற்றி நாமெல்லாம் விவாதித்தது தான். மாற்றுக் கருத்துகள் எல்லாம் முன்னே வைக்கப்பட்டெல்லாம், ஆங்காங்கே சில்லு மூக்குகள் உடைக்கப்பட்டாலும் ஒரு குடும்ப நிகழ்வை எப்படி செய்வது என்பதை குடும்பத்தோடு உக்காந்து விவாதித்த உணர்வு.

    ReplyDelete
  6. கமல் அண்ட் பிரகாஷ் ராஜ் மீ ம் ஸ் சூப்பர் சார்.

    ReplyDelete
  7. Dr's first மீம்ஸ் . Cartoons(சிரிக்க) பிடிக்காத doctor. பாவம் patients. O my god.😂😂😂😂😂😂

    ReplyDelete
  8. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  9. ///இந்த 28 நாட்களின் உங்கள் ஆதர்ஷ நினைவுகள் என்னவோ ? ///

    Muthu-50க்கு தலைப்பு வைக்கும் களேபரங்கள்! ஆனாலும் நம்ம நண்பர்களின் ஆர்வம், காமிக்ஸ் காதல், ஈடுபாடு, நகைச்சுவை உணர்வு, ஆதங்கம் என்று சகலமும் வெளிப்பட்டு ஆச்சரியப்படுத்திய நிகழ்வு அது!

    இத்தனைக்கப்புறமும் இன்னமும் தலைப்பு என்னவென்று தெரியாமலிருப்பது - அடுத்த ஆச்சரியம்! :)

    ReplyDelete
    Replies
    1. குடோன் காவலருக்கு இடமில்லை இரண்டு வருடத்திற்குன்னு சொல்லி...சொல்லி அடிச்ச அந்தக்கா நேசம் நண்பர்களுக்காக

      Delete
  10. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  11. ஆதர்ஷ நினைவுகள் எனில் முத்து காமிக்ஸ் 50 ஆண்டு மலர் குறித்தான நிகழ்வுகள் தான் சாரே.

    ReplyDelete
  12. இன்னிக்கும் மீம்ஸ் எல்லாமே கெக்கபிக்கே ரகம்! தெறிக்க விடறீங்க நண்பர்களே!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
  13. ////
    ஏதேதோ தலைப்புகளில் 28 பதிவுகள் !
    சுமார் 93,000 பார்வைகள் !!!!
    தோராயமாய் 6000 பின்னூட்டங்கள் !
    ////

    சூப்பர் சார்!!👏👏👏👏

    ////சூழ்ந்து கிடந்த இருளிலிருந்து சன்னமாயொரு மாற்றம் தேடி வரும் நண்பர்களுக்கு இங்கேயும் முகாரி இசைப்பானேன் ? என்ற அவாவினில் தான் இயன்றமட்டுக்கு உற்சாக டானிக் மட்டுமே இக்கட பரிமாறிட முனைந்திருந்தேன் ! ///

    தினமும் சளைக்காமல் பதிவிட்டு எங்களின் இந்தக் கடின நாட்களை இலகுவாக்கியதற்கு உங்களுக்கும் எங்களின் நன்றிகள் எடிட்டர் சார்!🙏🙏💐

    ReplyDelete
    Replies
    1. ///தினமும் சளைக்காமல் பதிவிட்டு எங்களின் இந்தக் கடின நாட்களை இலகுவாக்கியதற்கு உங்களுக்கும் எங்களின் நன்றிகள் எடிட்டர் சார்!🙏🙏💐///

      +111

      Delete
    2. என்னுடைய நன்றிகளும்🙏🙏🙏🙏🙏

      Delete
    3. என் நன்றிகளும் சார்.

      Delete
  14. //இந்த 28 நாட்களின் உங்கள் ஆதர்ஷ நினைவுகள் என்னவோ ?//


    Lady S கதைகள் அனைத்தையும் படித்து வியந்து இவ்வருடம் வருமா என்று கேட்டு - வராது விற்பனையில் தொய்வு என்று தெரிந்து நொந்து போனது!

    லாக்டவுனில் எவ்வளவோ முயன்றும் - டெக்ஸ் வில்லரின் குண்டு புத்தகங்கள் ஒன்றில் கூட பத்து பக்கங்களைத் தாண்ட முடியாதது! இதில் ஜாலியான விஷயம் என்னவென்றால் எல்லா டெக்ஸ் குண்டு ஸ்பெஷல் புத்தகங்களையும் 3, 4 என்று வாங்கி அடுக்கி வைத்துள்ளது தான் :))

    பல நேரங்களில் எடிட்டரின் கேள்விகளுக்கு தெளிவான(?!) பதில் அளித்தது!

    ஆலமரம் பஞ்சாயத்து அனைத்திலும் கலந்து கொண்டது!

    போராட்டத்தின் வலிமை என்ன என்பதை மாடஸ்டி விஷயத்தில் தெரிந்து கொண்டது!

    வழி தெரியாமல் வேகமாக ஓடி முட்டுச் சந்துக்குள் மோதி நின்றது!

    இன்னும் பல...

    ReplyDelete
    Replies
    1. ///லாக்டவுனில் எவ்வளவோ முயன்றும் - டெக்ஸ் வில்லரின் குண்டு புத்தகங்கள் ஒன்றில் கூட பத்து பக்கங்களைத் தாண்ட முடியாதது!///

      Same blood!!! 😂😂😂

      Delete
    2. ரெண்டு பேரும் அந்த டெக்ஸ் குண்டுகளை என் அட்ரஸ்க்கு அனுப்பிடுங்க...

      அதிலும் உதயகுமார்; 3,4னு வாங்கி அடுக்கி வைத்து வீண் செய்வானே!
      நிறைய நண்பர்கள் டெக்ஸ் குண்டுபுக் கிடைக்காமல் அல்லாடுறாங்க... உங்களை கையெடுத்து கும்பிடு போட்டு வாங்கிகிடுவாங்க.... ப்ளீஸ் கன்சிடர்!

      Delete
    3. அத வச்சி படித்து மகிழும் காலங்களில் லேடி எஸ் போல கூடுதல் சந்தோசமிருக்கும் நண்பரே...என்ஜாய்

      Delete
    4. சேலம் Tex விஜயராகவன்:

      //ரெண்டு பேரும் அந்த டெக்ஸ் குண்டுகளை என் அட்ரஸ்க்கு அனுப்பிடுங்க//

      யோசிக்கலாம் நண்பரே - குறைந்தபட்சம் இப்போதைக்கல்ல!

      Delete
  15. முடிஞ்சதா அதற்குள்....அட டா!!

    தினம் ஒரு பதிவு....

    கேள்வி பதில்கள்....

    போராட்டங்கள்......

    புள்ளி விபரங்கள்...

    50லட்சம் பார்வைகள்...

    சிறப்பிதழ்கள்.....

    கேப்சன் போட்டிகள்...

    என ரொம்ப ஜாலியா நாட்கள் போச்சுது....


    Find of the break:- "மீம்கள்"

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் கொஞ்சம் வெயிட் போட்டுட்டிங்க...

      Delete
    2. லைட்டா....!!!😉

      நமக்கு எப்ப மழை விடுமோ....!!!

      Delete
    3. மழை விட்டாலும்,தூறல்கள் தொடரும் போல...

      Delete
  16. கொங்கு மண்டலத்திற்கு இன்னும் விடிவு காலம் வரலையே!!!???

    ReplyDelete
    Replies
    1. ஆமா...நமக்கு இன்னும் இறுக்கம் தொடர்கிறதே!!!

      Delete
    2. Uh oh...தொடர்ந்து கவனமாய் இருங்க நண்பர்களே !

      Delete
  17. மின்னும் மரணம் வாங்காத & கிடைக்காத நண்பர்களுக்காக மீண்டும் ஒரு ஒரு ( டைப்பிங் மிஸ்டேக் லேதுண்ட்டி) மறுபதிப்பு பதிக்க முடியுமா ஆசானே??

    ReplyDelete
    Replies
    1. பேஷா போட்டுடலாமே ! ஒரே புக்கா போட்டதை இந்தவாட்டி தனியா தனியா போட்ரலாமா ? Start the bookings !

      Delete
    2. ஒரே புக்காவே போடுங்க சார்! ஆனா இத்தவாட்டி பாகங்களை shuffle பண்ணிப் போடுங்க. எந்த பாகம் எங்கிருக்குன்னே தெரியாமத் தேடிதேடி படிப்பது ஒரு ஜாலியான அனுபவமா இருக்கும்! (எப்படியும் நான் Arizona loveஐத் தான் தேடிப்பிடிச்சுப் படிக்கப்போறேன்றது வேற விசயம்!😝)

      Delete
    3. தனித்தனி புக்கா போட்டு பாக்ஸ் செட்டில் கூட கொடுக்கலாம்...
      ஹி,ஹி,எப்பூடி...

      Delete
    4. ஈவி@ அப்படியே சாரின் கத்திரிக்கோலையும் ஒளித்து வைத்துடுங்க...😉

      Delete
    5. // மின்னும் மரணம் வாங்காத &கிடைக்காத நண்பர்களுக்காக மீண்டும் ஒரு ஒரு ( டைப்பிங் மிஸ்டேக் லேதுண்ட்டி) மறுபதிப்பு பதிக்க முடியுமா ஆசானே?? //

      +1

      Delete
    6. But please release it in A4 size, Sir!

      Delete
  18. // இந்த 28 நாட்களின் உங்கள் ஆதர்ஷ நினைவுகள் என்னவோ ? //
    காமிக்ஸ் வாசிக்க தொடங்கிய பொழுதுகளில் காமிக்ஸ் படிப்பதே வியப்பாய் இருக்கும்,பாடப் புத்தகங்களில் வைத்து படித்த நாட்களும் உண்டு,அதனைத் தொடர்ந்து மொத்துகளை வாங்கிய அனுபவமும் உண்டு...
    ஒரு கட்டத்தில் சேர்த்து இதழ்கள் எல்லாம் எப்படியோ மாயமாய் போனது,வீட்டில் கள்ள மெளனம் தொடர்ந்தது,அப்பாவை எதிர்த்து பேச இயலாது,மீறிக் கேட்டால் நீ படிக்கும் லட்சணத்திற்கு இது இப்ப தேவையா என்று கேள்வி எழும்...
    ஒரு இனிய பொழுதில் மீண்டும் கிட்டிய இதழ்களை தொகுப்பிட்டு வைக்க,தந்தையின் இழப்புகளும் அதன் நீட்சியாக பொருளாதாரத் தேவைகளும் பின் தொடரும் நிழலாய் துரத்த,தொடர்ந்த இருண்டதொரு நாளில் நிஜங்களாய் பரணில் உறங்கிக் கொண்டிருந்த இதழ்கள் கையை விட்டுப் போய் வெறும் நினைவுகளாய் மாறின...
    அப்போதெல்லாம் தோன்றியவை காமிக்ஸிற்கும் நமக்குமான தொடர்பு அவ்வளவுதானா என்று மனதில் வினா தொக்கி நின்றது ???!!!
    பின்னொருநாளில் இந்த தளத்தின் அறிமுகம் கிடைத்தது,அன்று கிட்டிய மகிழ்ச்சி,இன்றும் முழுமையாக கிட்டுகிறது,தளத்திற்கு வந்து பதிவிடுவது,உங்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதான ஓர் உணர்வை அளிக்கிறது சார்...
    இந்த 28 நாட்களும் அப்படியே...
    தொடர்ச்சியாக,
    தசாப்தங்கள் கடந்து நல்லதொரு நாளில் நல்நட்புகள் அறிமுகமாயினர்,அத்தருணத்தில் கிட்டாத இதழ்களும் கிட்டின,ஆனால் கிடைத்த இதழ்களை விட நட்புகளின் மனங்கள் பெரிதாய் தெரிந்தன...எனினும் வாசிப்பின் நேசிப்பின் அடிப்படையில் துலாகோலில் வைக்கும்போது இதழ்களும்,நட்புகளும் சம அளவே என்பது உண்மையும் கூட...!!!

    ReplyDelete
    Replies
    1. உள்ளத்தின் அருமையான வெளிப்பாடு அறிவரசு அவர்களே!!

      Delete
    2. //// வாசிப்பின் நேசிப்பின் அடிப்படையில் துலாகோலில் வைக்கும்போது இதழ்களும்,நட்புகளும் சம அளவே///

      💯💯💯💯💯💯💯💯

      வெல்செட் ரவி!

      எனக்கு, இதழ்கள்:நட்புகள் - 60:40ஆக இருந்தது... இப்போது 40:60ஆகிட்டது!

      Delete
    3. இதயத்தை தொட்ட பின்னுட்டம்

      Delete
    4. ரவி அண்ணா அருமையான பதிவு. மனதில் உள்ளதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்.

      Delete
  19. // வாரங்கள் நான்கு - நாற்கால் பாய்ச்சலில் தாண்டிச் சென்று விட்டன ! //
    உண்மைதான் சார்,நமக்கெல்லாம் எத்தனை வருஷம் லாக்டவுன் போட்டாலும் கவலை இல்லை,படித்து கிழிக்க பல இதழ்களும்,பல டைட்டில்களும்,பார்க்க தரமான சினிமாக்களும்,பேச நிறைய செய்திகளும்,கேட்க இசையும்,மொக்கைப் போட நட்புகளும் இருக்கும் போது கவலைக் கொள்வானேன்...

    ReplyDelete
    Replies
    1. வேணாம் சார் ; இந்தப் பேரிடர் ஆங்காங்கே உருவாக்கியிருக்கும் ஜீவனச் சிரமங்கள் மனதைப் பிசைகின்றன ! இத்தகையதொரு இக்கட்டின் வாயிலாய் நமக்குக் கிடைக்கும் நெடிய பிரேக்கை விட, சகஜமான சமயங்களின் குட்டியூண்டு பிரேக் கூடப் போதுமென்பேன் ! போதுமடா சாமி - இந்த ஆயுசுக்கு இத்தகையதொரு பிரளயம் !

      Delete
    2. வாஸ்தவம்தான் சார்...

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. பேசாம இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஸ்பெஷலாய் போட்டுடுவோமா சார்...!!!

      Delete
    2. ஐந்து இலட்சப் பார்வை --> திருத்தம் அறிவரசு! ஐம்பது லட்சம் பார்வைகள்!

      Delete
    3. அந்த ஸ்பெஷல் இதழ் அறிவிப்பு எப்போது சார் வரும்???

      Delete
  21. வணக்கம் சார்.இன்றைய பதிவு சென்ற மாதத்தை பற்றியதாக இருப்பதால் ஒரு செய்தியை சொல்லிக்கொள்கிறேன். கடந்த மாதம் முழுவதும் முத்து-50 மற்றும் நிறைய ஜாலியான பதிவுகள் கலாட்டாவான வாக்கெடுப்புகள் என இருந்ததாலும் நம் வாசக நண்பர் திரு.S.செல்வம் அவர்களின் மரணச்செய்தியை பகிர முடியவில்லை.திருவண்ணாமலையை சேர்ந்த அவர் மாதந்தோறும் பணம் அனுப்பியே புத்தகங்களை பெற்றுக்கொள்பவர்.முத்து காமிக்ஸின் முதல் இதழிலிருந்தே வாசகராயிருந்த அவர் கடந்த மே-06 அன்று திடீரென மாரடைப்பால் காலமாகி விட்டார்.அன்றைய தினத்தில் எனது மொபைல் பழுதடைந்திருந்தால் இங்கே பகிர முடியவில்லை.பிறகு ஒருவாரம் கழித்தே முகநூலில் பகிரமுடிந்தது.சென்ற முறையே இரத்தப்படலம் இரண்டு பிரதிகள் வாங்கியவர் இந்தமுறையும் தன் உறவினர் ஒருவருக்காக ஒரு பிரதியை புக் செய்திருந்தார்.வருடந்தோறும் புத்தகவிழாவிற்கு உற்சாகமாய் வருவார்.இன்றோடு ஒருமாதம் ஆகிவிட்டது.இதை தாமதமாக சொன்னதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருத்தமான செய்தி! நமது காமிக்ஸ் குடும்பத்தில் மறுபடியும் ஒருவரை இழந்துநிற்கிறோம். நண்பரின் ஆன்மா சாந்தியடையட்டும் 😔🙏

      Delete
    2. நண்பரின் ஆன்மா சாந்தியடையட்டும் 😔🙏

      Delete
    3. ஆழ்ந்த இரங்கல்கள் ..

      Delete
    4. ஆழ்ந்த இரங்கல்கள்..😔

      Delete
    5. ஆழ்ந்த இரங்கல்

      Delete
    6. அடக் கடவுளே....அவருக்கு என்ன வயது சார் ?

      நமது ஆழ்ந்த இரங்கல்கள் !

      Delete
    7. அவரது ஆன்மா சாந்தி அடைவதாக.

      Delete
    8. கடவுளே! அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

      Delete
    9. ஆழ்ந்த இரங்கல்கள்!

      Delete
    10. ஆழ்ந்த இரங்கல்கள்...

      Delete
    11. RIP. ஆழ்ந்த இரங்கல்கள்.

      Delete
    12. அன்னாரின் ஆத்மா சாந்தி பெற வேண்டுகிறேன்🙏

      இழப்பின் வலியை உணர்ந்து நிற்கும் அன்னாரின் குடும்பத்தார்க்கு ஆறுதலை தெரிவிக்கின்றேன் -சர்மா

      Delete
    13. ஆழ்ந்த இரங்கல்கள்.😔

      Delete
    14. ஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே.

      Delete
    15. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்தி்க்கின்றேன்.
      🙏🙏🙏🙏🙏

      Delete
    16. நண்பரின் ஆன்மா சாந்தி அடையவும்...அன்னார் குடும்பத்தார் மீண்டு வரவும் செந்தூரான் அருளை வேண்டுகிறேன்

      Delete
    17. ஆழ்ந்த இரங்கல்கள் சார்.

      Delete
  22. 28 பதிவுகளுமே கலக்கல் தான் சார்.

    வெளியானபோது சற்று புரியாமல்
    எமது நெருங்கிய உறவின் பிரிவிற்குப் பின் ஏற்பட்ட மன அழுத்தத்தின் மீள் வாசிப்பின் போது கதை புரிந்து, மனம் உடைந்து அழுத "கண்ணான கண்ணே"


    முத்து ஐம்பதாம் ஆண்டு மலருக்காக உங்களின் வாசகர்களுடான கலந்துரையாடல்கள்!

    இளவரசி மாடஸ்தியின்
    ஸ்லாட்டுக்காக நடந்த போராட்டங்கள்!

    இம்மாதத்திலிருந்து தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மனதை நிறைய புன்னகைக்க வைத்த மீம்ஸ்கள்!

    "என்ன தவம் செய்தேன்(செய்தோம்) தமிழில் இன்றளவும் காமிக்ஸ் படிப்பதற்கு"

    இவற்றை உருவாக்கிய வாசக நண்பர்களுக்கும்,
    ஆசிரியரின் பதிவுகளுக்கும்
    எமது வாழ்த்துகள்! சிரம் தாழ்ந்த நன்றிகள்!!


    ReplyDelete
    Replies
    1. ///இம்மாதத்திலிருந்து தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மனதை நிறைய புன்னகைக்க வைத்த மீம்ஸ்கள்!
      ///

      +1

      Delete
    2. //மனம் உடைந்து அழுத "கண்ணான கண்ணே"//

      நல்ல படைப்புகளின் வீரியம் என்றுமே குறைவதில்லை என்பது புரிகிறது சார் !

      Delete
    3. நிச்சயமா ஸ்மர்ஃப்...போன்ற கதைகள் பின்னர் தேடப்படும்...உங்களது கதைகள் எதுமே சோடை போகாது சார் மறுவாசிப்பில்...இக்கதைகள் பிடிக்காம போயிருந்தா கமான்சே...மேஜிக் விண்ட் என எல்லாமே வாய்ப்பு கிடைக்கும் மறுவாசிப்பில் புரியலாம்...நிச்சயமா இதுவும் சுவாரஸ்யமே என

      Delete
    4. தனபாலன் சார், அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

      Delete
  23. Dear Editor
    Last 28 days
    Got covid
    Asmitted in hospital
    Spent 12 days and fortunately recovered.
    So god has given me more time to read comics
    🙏🙏

    ReplyDelete
    Replies
    1. ///So god has given me more time to read comics///

      💐💐👍

      Delete
    2. Oh wow !! Glad you are back safely sir !!

      Delete
    3. RAMG75 @ Good to hear you are back to action!

      Delete
    4. நீங்கள் நலம் பெற்று திரும்பியது மகிழ்ச்சி நண்பரே. இன்னும் கொஞ்ச காலம் பாதுகாப்பாக இருங்கள்.

      Delete
  24. சிரிப்பதும் - சிரிக்கச் செய்வதும் மனிதனுக்கு மட்டுமே இறைவன் அள்ளித்தந்திருக்கும் கொடையல்லவா ? யாரையும் வருத்திடாது - சூழ்ந்திருப்போரை மகிழ்ச்சி கொள்ளச் செய்ய முயற்சிப்பது, ஆழங்களற்ற மனப்பாங்கின் அடையாளமென்று பார்க்கப்படுமெனில் - "ஹையோ...I'd take that any day & every day !

    ######


    அருமை சார்...

    ReplyDelete
  25. ஆதர்ஷ நிகழ்வு/பதிவு

    1. ஆலமரம் 2. அந்த 10 option களை என்றும் மறக்க முடியாது. பலமுறை படித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    2. முதலாவது முயற்சி ப்ரீவியூவில் பணால் ஆக, பிறகு ஒன்றுக்கு இரண்டாவது முறை டைப்படித்து நள்ளிரவு 3 மணிக்கு upload செய்த மன்னர் கதை.


    ReplyDelete
    Replies
    1. நிஜத்தைச் சொல்வதானால் ஒரு மாசத்துக்கு என்னத்தை எழுதப் போறோம் ? என்ற தயக்கத்தை விட, ஒரு மாசத்துக்கு தினப்படி போடவுள்ள மொக்கைகளைப் படித்து, நம்மைக் கண்டாலே ஓட்டமெடுக்கும் நிலை உருவாகிடுமோ ? என்ற பயமே மேலோங்கியது சார் ! Phew !! தலைப்புகளின் சுவாரஸ்யங்களும், அலசல்களின் வேகங்களும் என் தலை தப்பிக்க உதவிவிட்டுள்ளன !

      Delete
  26. மீம்ஸ் மீண்டும் கலக்கல்கள்

    கலக்குங்க நண்பர்களே...:-)

    ReplyDelete
  27. கேப்சன் போட்டிகள்...பரிசு...மீம்ஸ்கள்... நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓட்டெடுப்பில் பங்கேற்பு என தினமும் தினமும் நிறையவே தங்களுடன் கனெக்ட் ஆன உணர்வு சார்..உண்மையில் மீம்ஸ்களும் கேப்சன்களும் கொரோனாப் பணி நெருக்கடியில் இருக்கும் எங்களை நாங்களே ரிலாக்ஸ் பண்ணிடவும் உதயவியதென்பதே நிதர்சனம்....

    ReplyDelete
    Replies
    1. அற்புதம் டாக்டர் !

      Delete
    2. இப்பேரிடர் காலத்தில் பொதுநலம் கருதி களப்பணியாற்றிடும் அனைத்து மருத்துவர்களுக்கும் கரம் கூப்பிய நன்றிகள். நீங்கள் இல்லையேல் யாருமே இல்லை.
      ஒரு நான்காம் தலைமுறை மருத்துவக் குடும்பத்தில் பிறந்தவன் (but I am an Engineer!) என்ற முறையில் சொல்கிறேன் - மருத்துவர்கள் என்றால் பெரும்பாலும் பணம் சுரண்டுபவர்கள் என்று சிலவிடங்களில் (not everywhere) இருந்த மாயை இப்பேரிடர் காலத்து மருத்துவப் பணியால் துடைத்தெறியப்பட்டிருக்கிறது.
       
      இதற்கு நடுவே இங்கே வந்து மீம்ஸ் போட்டு சிறப்பித்ததற்கும் நன்றிகள் !

      Delete
    3. // இப்பேரிடர் காலத்தில் பொதுநலம் கருதி களப்பணியாற்றிடும் அனைத்து மருத்துவர்களுக்கும் கரம் கூப்பிய நன்றிகள். //

      // இதற்கு நடுவே இங்கே வந்து மீம்ஸ் போட்டு சிறப்பித்ததற்கும் நன்றிகள் ! //

      Agreed!
      Thanks a lot to both the doctors.

      Delete
    4. இவ்வளவு கடினமான பணிகளுக்கும் நடுவிலும் நீங்கள் இடும் மீம்ஸ் எல்லாமே வேற லெவல் டாக்டர் சார்.

      Delete
  28. விஜயன் சார், கடந்த நான்கு வாரங்கள் தினமும் ஒரு பதிவு, பதிவுகளில் பல புதிய அறியாத சுவாரஸ்யமான விசயங்கள் மேலும் இங்கு சில மன கசப்பான விஷயங்கள் நடந்தாலும் உற்சாகம் குறையாமல் எழுதிய உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் உங்கள் தீராத காமிக்ஸ் காதலுக்கு தலை வணங்குகிறேன்.

    நண்பர்கள் அனைவரும் இங்கு தினமும் உற்சாகம் குறையாமல் பதிவிட்டது நாட்களை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றது.

    வாழ்க காமிக்ஸ் காதல். தொடரட்டும் இந்த காமிக்ஸ் நேசம்.

    ReplyDelete
  29. மீம்ஸ் அனைத்தும் கலக்கல்கள். சூப்பர். பாராட்டுக்கள் நண்பர்களே.

    ReplyDelete
  30. டியர் சார்,
    தற்போதைய சூழலில் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு சிரமங்களை- சந்தித்தாலும், கொரணா பாதிப்பு என்பது மிகவும் சங்கடத்திற்கு உரியதுதான்..
    ஏப்ரல் 20 ேபால் - பாதிக்கப்பட்டு ஆஸ்பத்ரியிலிருந்து மீண்டு வீடு வந்து மாடியில் தனிமைப்படுத்திக்கொண்ட ேபாது -
    மற்றவர்கள் வேண்டுமானால் மிகவும் போர் ஆக உணர்ந்திருக்கலாம்.
    ஆனால், எனக்கோ - மிகவும் பிஸியாக ேநேரம் போனது. தங்கள் பதிவுகளால்- காமிக்ஸ் புத்தகங்களால்,
    லார்கோ - புத்தகங்களை மூன்றாவது முறையாக நிதானமாக படித்து-வான் ஹாமேயின் திறமைையை வியந்தது-பின் ரிப் கிர்பி,காரிகன்-மாடஸ்டி என்று 21 நாட்கைளை சிறப்பாகவே கொண்டு சென்றேன்.
    அதிலும், பதிவுகளின் - பின்னூட்டங்களில் எனது ரசனையை ஒத்த நண்பர்களின் பின்னூட்டங்களை ரசிப்பது-
    தற்போது -memes என்ற ேபரில்- ரசிகர்களின் கலக்கல்கள் - அதில் உங்களையே அதிகம் கலாய்த்தது என்று 28 நாட்களும்ேபானதே தெரியவில்லை.
    மற்றவர்கள் எப்படி ேயா காமிக்ஸரசிகர்கள்-தங்களை புத்துணர்வுடன் வைத்துக்ெகாள்வார்கள்..சார்...
    எங்களுக்கு புத்தகங்கள் முக்கியமல்ல சார்.
    தங்கள் பதிவுகளே ேபாதும் சார்...

    ReplyDelete
    Replies
    1. இளங்கோ சார் இப்போது உடல் நிலை பரவாயில்லையா???

      Delete
    2. நலமே சார்.
      ேவலைக்கு ெசெல்ல ஆரம்பித்துவிட்டேன்..
      அதெல்லாம் நாம - பாஸிட்டிவ்-வா ? iஎடுத்துக்கணும் சார்..

      Delete
    3. உண்மை தான் உங்கள் பாஸிட்டிவ் மைண்ட் செட் க்கு +1000

      Delete
  31. All memes are awesome 👏🏽 👏🏽👏🏽
    Very funny 😆😆

    ReplyDelete
  32. கடந்த ஒரு மாதத்தில் எத்தனையோ சந்தோஷசெய்திகள் கஷ்டமான கேள்விகள் பலதரப்பட்ட விவாதங்கள் என புதிய அனுபவங்களின் கலவையாக சென்றது சார்..இத்தனை வருட ப்ளாக் அனுபவங்களை இந்த ஒருமாத அனுபவம் நிறைய தெளிவான விளக்கங்கள் கொடுத்துள்ளது ஆசானே...

    ReplyDelete
  33. இந்த ஊரடங்கில் நமது காமிக்ஸ் பதிவுகளோடு லார்கோவின் அனைத்து பாகங்களையும் மற்றும் டெக்ஸ் ,லக்கி என பல இதழ்களையும் மறுவாசிப்பில் முடித்தாயிற்று சார்..:-)

    ReplyDelete
  34. ஒரு டவுட்டு சார் லார்கோ வின் இறுதி சாகஸங்களில் தங்களின் ஹாட்லைனில் வேறொருவர் பணி புரிந்து வருகை தர ஏற்பாடு நடந்து வருவதாக தெரிவித்து உள்ளீர்கள் ..அது நடந்த்தா இல்லை விட்டு விட்டார்களா சார்..

    ReplyDelete
  35. // இந்த 93,000 பார்வைகளுள் குறைந்த பட்சமாய் மூவாயிரமாவது சீனியர் எடிட்டரின் உபயமாக இருக்குமென்பது எனக்குத் தெரியும் ! நிச்சயமாய் அவருக்குமே இந்த நினைவுகள் நிரம்ப நாட்களுக்கு விலகிடாதென்பது நிச்சயம் ! //

    Great news sir! happy to hear that your writing engaged our senior editor very well.

    ReplyDelete
  36. ஆதர்ஷ நினைவுகள்..எல்லாமே உங்களைப் பற்றியதுதான் சார்.
    முதல் சில நாட்கள் தளத்தின் பக்கம் வர இயலாத சூழல். வந்த பிறகு பார்த்தால் ஏகப்பட்ட பதிவுகள்.அதன் பின் தினமும் பதிவு.
    இந்த மனிதருக்கு எப்படி இவ்வாறு தினம் பதிவிட முடிகிறது என ஆச்சர்யம். அதுவும் துளி கூட சுவாரஸ்யம் குறையாமல், ஊடே சன்னமாய் நகைச்சுவை இழையோட ஒவ்வொரு பதிவும் சிறப்பே. இடையில் கைப்புள்ள கணக்காய் விழும் சாத்துகளையும் வாங்கிக்கொண்டு, அசராமல் கம்பீரமாய் (வலிக்காத மாதிரியே) நிற்கும் அந்த தெகிரியம்.. ரியலி கிரேட் சார் நீங்கள். எது எப்படி இருந்தாலும் நமது தளம் ஒரு மாதம், உங்கள் தயவால் சோர்வடையாமல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. நன்றிகள் சார்.

    ReplyDelete
    Replies
    1. தினம் ஒரு பதிவு சிறிதும் சுவாரஸ்யம் குறையாமல். அருமை பத்து சார்

      Delete
  37. மீம்ஸ்கள் எல்லாம் அருமை. இந்த 28 நாட்களும் புது உத்வேகம் எடுத்து ஓடியது போல உணர்வு. தினமும் கலக்கலாக, கலர் கலரான ராப்பருகள், எடிட்டரின் வழமையான, மனதுக்கு நெருக்கமான பதிவுகள், முத்து 50 இற்கான நண்பர்களின் ஆலோசனைகள், என்ன வேணும்? என்ன வேணாம் என்று எங்க காட்ல மழை..... ஹூம் இனி பதிலுக்காக சனிக்கிழமை வரும்வரை தவமிருக்க வேண்டும்.
    இப்போது ஒவ்வொரு பதிவிலும் மீம்ஸ்கள் இருக்கா என்று தேட வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  38. தினம் ஒரு பதிவு தான் ஸ்பெஷல் :
    இன்றைக்கு என்ன பதிவு வருமோ என்ன கேள்வியோ என்று எதிர்பார்க்க வைத்தது இந்த 28 நாட்களும்.
    ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது.
    எல்லா பதிவிலும் பங்குகொண்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
    ஒவ்வொரு பதிவிற்கும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது இங்கு வந்து கமெண்ட்ஸ் பதிவிடும் எல்லோருக்கும் தெரியும். எங்களுக்காக இவ்வளவு நேரத்தை கொடுத்த உங்களுக்கு என்றென்றும் நன்றிகள் உரித்தாகுக.

    ReplyDelete
  39. சார் மீள் ஆரம்பிக்கிறோம்...முத்து 50ம் ஆண்டு மலர்...எந்த நாயகரயும் முன்னிருத்தாது கதைகளை முன்னிருத்தி வருவது என்ற தங்களின் அறிவிப்பும் ....அடுத்த இரண்டு வருடம் மட்டும் குடோன் காவலர்கள ஓய்வெடுக்கச் செய்வோம் என்ற அறிவிப்பும்...அதன் மூலம் சினிஸ்டர் செவன் போன்ற சிறந்த கதைகள் இருவருடம் கழித்து வருமென்ற ஆர்வமும் அதிகரித்தும்...நம்ம துவக்க ஆசிரியரின் பார்வைகளும் நம்மோடென்பது சந்தோச தருணங்கள்...

    ReplyDelete
  40. சென்ற மாதம் மறைந்த திரு.செல்வம் அவர்களின் வயது கேட்டிருந்தீர்கள் சார் அவரது வயது 59.

    ReplyDelete
    Replies
    1. பிள்ளைகளை கரை ேசர்த்து -ேபரன், பேத்திகளுடன் - அப்பாடி என்று ரிலாக்ஸ் ஆகும் தருணம்-பாவம்.
      அவர் ஆத்மா சாந்தி அடையேண்டும்..

      Delete
  41. இன்றைய வாசிப்பில் இளவரசி . எதிர்காலம் எனதே. மிகப் பணக்காரரான ஒருஅறிவியல் புனைவுக்கதை எழுத்தாளர். அவரிடம்15 வருடங்களாக உதவியாளராக
    (எல்லாமுமாக) இருக்கும்பெண்ணை சற்றும் மதிக்காமல், அடிமையைப்போல் நடத்துகிறார். பழிவாங்கநினைக்கும் அப்பெண், எழுத்தாளரின்மனநல டாக்டரின்உதவியுடன்அவரைப்பழிவாங்கதிட்டமிடுகிறாள்.மாடஸ்டி குறுக்கிட திட்டம் தவிடுபொடியாகிறது. எதிர்கால பயணி என்ற டுபாக்கூர் திட்டம், பிற சயன்ஸ்பிக்சன்கதைகளைப்போலகுழப்பாமல்நேர்கோட்டுக்கதையாகச் செல்கிறது. புத்திசாலித்தனமான ஹைடெக் பித்தலாட்டத்தை, சர்வசாதாரணமாக முறியடிக்கும் மாஸ்ஹீரோயினாக கலக்குகிறார் இளவரசி. பெண்ணுரிமை, அற்புதமான ஆக்சன் சீக்வன்ஸ், அளவான கவர்ச்சி, மாடஸ்டிகார்வின் இடையேயானபுரிதல், வில்லனாக டாக்டர், கொள்ளையடித்தபணத்தைதர்மம்செய்வதுஎனபலவகையிலும் கதை வழக்கமான மாடஸ்டிகதையாக இல்லாமல் ஒரு கிராபிக் நாவலாக செல்கிறது. ரசித்து கொண்டாடப்படவேண்டிய கதை. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. என்ன ெசெய்ய..
      இைதையெல்லாம் விட்டுவிட்டு
      டாக்டரேnட மீன்பிடிக்க ேபானதையே ஞாபகம்
      வைத்திருக்கிறார்கள்.
      இதே ேபால் ஒரு கதை - "பூமிக்கு ஒரு பிளாக்மெயில் "- உண்மையை கண்டறிவதும் - அதன் பின் மாடஸ்டி சொல்லும் வசனங்களும்-நிச்சயம் பாடங்களே..

      Delete
  42. அனைத்து மீம்சும் அதகளம்...அதிலும் அந்த நாலாவதுல பத்து பொருத்தமும் பக்கா...இன்றைய மீம்சுல டாப் என்னளவில்...உண்மையைச் சொல்லும் டூன்...ஹஹஹஹ

    ReplyDelete
  43. திரு. செல்வம் சார்மறைவு . வருந்துகிறேன் . Ripசார்

    ReplyDelete
  44. நினைவில் இருப்பது முத்து 50 ஆம் ஆண்டு மலருக்கான திட்டமிடலும் அப்போது விழுந்த சாத்துகளும் தான் சார். ஆலமர பதிவுகள் எல்லாமே அட்டகாசம் தான்.

    தினம் ஒரு பதிவு, இந்த பேரிடர் காலத்தில் relax செய்ய மிகவும் பயன்பட்டது. வேலை, பதிவு என கொரோனா பயத்தை மட்டுப்படுத்த உதவியது.

    ReplyDelete
  45. இந்த 28 நாட்களில் கொரோனா கொடுமை கால கட்டத்தில் உங்கள் பதிவுகள் தந்த உற்சாகம் ஆறுதல் புத்துணர்ச்சி வேறெதிலும் இல்லை என்பதே உண்மை வாழ்வில் மறக்க இயலாத நாட்களில் இதுவும் ஒரு அங்கமாகி விட்டது இதற்கு காரணமான உங்களுக்கு கணக்கிலடங்கா நன்றிகள் ஆசிரியரே

    ReplyDelete
  46. கடந்த 28 நாட்களில் வேலையிழப்பு,வருமான குறைவு,தொற்றுநோய் பயம் ஆகியவற்றால் உடலும் மனமும் சோர்ந்திருந்த எங்களுக்கு அடுத்தடுத்து நீங்கள் வெளியிட்ட பதிவுகள் சற்று மகிழ்ச்சியையே கொடுத்தது. சரி... நேற்றைய பதிவுகளுக்கான கமெண்ட்டுகளை என்று பார்த்தால் ஒரு புது பதிவு காத்திருக்கும்.அதற்கடுத்த பதிவுகளோ முத்து-50 பற்றியதாக இருந்து அசத்தும்.

    ReplyDelete
  47. கண்டிப்பாக 50 சார்ந்த விவாதங்களே. நாங்கள் விடாமல் மாயாவி குண்டு புக் கேக்க நீங்கள் பொங்கி எழுந்து திருந்துங்கடே என்று கூறிய பதிவு மறக்க இயலாது.

    மீம்ஸ் கலக்கல் இந்த புதிய IT விங் அறிமுகமும் இந்த லாகடவுனின் வரவு

    ReplyDelete
    Replies
    1. ///மீம்ஸ் கலக்கல் இந்த புதிய IT விங் அறிமுகமும் இந்த லாகடவுனின் வரவு///

      யெஸ்!!

      Delete
  48. மீம்ஸ் லாம் சும்மா அள்ளுது சார்'😂😂😂😂

    ReplyDelete
  49. Even though i couldnt come daily, i saw all the pending posts yesterday. really enjoyed.

    and you are right வடிவேலுக்கு அடுத்தபடியாக கன்டன்ட் creator நீங்க தான். i accept

    ReplyDelete
    Replies
    1. ///and you are right வடிவேலுக்கு அடுத்தபடியாக கன்டன்ட் creator நீங்க தான். i accept///

      😂😂😂😂😂😂

      Delete
  50. தினசரி பதிவுகளால் இந்த ஒரு மாதமும் மனம் உற்சாகமாக இருந்தது இனி வாரம் ஒரு பதிவு தானா?

    ReplyDelete
  51. யாரையும் வருத்திடாது - சூழ்ந்திருப்போரை மகிழ்ச்சி கொள்ளச் செய்ய முயற்சிப்பது, ஆழங்களற்ற மனப்பாங்கின் அடையாளமென்று பார்க்கப்படுமெனில்//

    வாசகர்கள் சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருப்பது கூட சிலருக்கு பொறுக்கவில்லை போலும்.

    ReplyDelete
    Replies
    1. மஞ்சசட்டை :

      //வாசகர்கள் சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருப்பது கூட சிலருக்கு பொறுக்கவில்லை போலும்//

      அவங்கள மொத்தமா புடிச்சு உள்ள போடுங்க ஆபீசர்!

      Delete
    2. சட்டம் மன நிலை சரியற்றவர்களை எதுவும் செய்யாது. அவர்களை சைக்கோ வார்டுக்குத்தான் அனுப்ப வேண்டும் நண்பரே.

      Delete
    3. தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை யுவர் ஹானர்...

      எதையாவது சட்டுபுட்டுனு செஞ்சிமுடிங்க வக்கீல் சார்!

      Delete
    4. மலைப்பிரதேசங்களில் வெயில் குறைந்த உடனும் லாக்டவுன் முடிந்த உடனும் சரியாகி விடும் என்று நம்புவோம் நண்பரே

      Delete
    5. இனம் இனத்தை அறியும் என்பது எவ்வளவு பெரிய உண்மை?! உண்மைதான் போல!

      Delete
    6. தவறான புரிதல் நண்பரே. ஒரு மருத்துவருக்கு நோயாளியை அறிந்து கொள்ள முடியும். ஒரு காவலனுக்கு திருடனை புரிந்து கொள்ள முடியும். ஒரு ஆசிரியருக்கு மாணவனுக்கு விளக்க முடியும் என்பது போல்.

      Delete
    7. ஆனால் சிரிக்க தெரிந்த மனிதனுக்கு மரியாதை தெரியவில்லையே - என்ன கொடுமை சரவணன் இது?!

      Delete
    8. மறுபடி தவறான புரிதல். மரியாதை என்பது குடுத்து வாங்குவது ஆயிற்றே நண்பரே. பொதுவெளியில் மற்றவர்களுக்கு மரியாதை குடுத்தால் திரும்ப அது தேடி வரும். என்ன கொடுமை சிவனுடைய குமாரரே இது?!

      Delete
    9. மரியாதைக்கு மொத்த குத்தகைதாரர் நீங்கள்!

      இப்படி எடுத்துக் கொள்ளலாமா?!

      Delete
  52. அந்த 600 பக்க மேபிஸ்டோ கதை பலர் கேட்கிறார்கள். கண்டிப்பா நல்ல கதையாக தானே இருக்கும். ஏதாவது ஒரு ஸ்பெஷலில் ஷர்ப்ரைசாக போட்டு விடுங்கள் சார். லயன் மீண்டு வந்த போது வந்த கதைகள் போல் வித்தியாசமான டெக்ஸ் கதைகளும் வேண்டும்.

    கார்ட்டூன் கதைகள் பெரியோர் போலவே குழந்தைகளும் புரிந்து ரசிக்க கூடிய வார்த்தைகளுடன் இருந்தால் நிச்சயம் அருமையாக இருக்கும். அண்மையில் என் மாமா வீட்டு குட்டீஸ்களுக்கு என் வசம் இருந்த கார்டூன்கள் சிலவற்றை பரிசளித்தேன். நாம் அறியாத வேற்று இந்திய மொழி சொற்கள், சென்னைத்தமிழ் போன்றவை வருமிடங்களில் படிக்க சற்று திணறுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ////கார்ட்டூன் கதைகள் பெரியோர் போலவே குழந்தைகளும் புரிந்து ரசிக்க கூடிய வார்த்தைகளுடன் இருந்தால் நிச்சயம் அருமையாக இருக்கும். அண்மையில் என் மாமா வீட்டு குட்டீஸ்களுக்கு என் வசம் இருந்த கார்டூன்கள் சிலவற்றை பரிசளித்தேன். நாம் அறியாத வேற்று இந்திய மொழி சொற்கள், சென்னைத்தமிழ் போன்றவை வருமிடங்களில் படிக்க சற்று திணறுகிறார்கள்.///

      உண்மை! குழந்தைகளுக்குப் புரியும்படியான எளிமையான தமிழில் இருக்க வேண்டும்! உண்மையான 'வாண்டூஸ் ஸ்பெஷல்ஸ்' மட்டுமே இதைச் சாதிக்கும்!

      போனவருடமே வந்திருக்க வேண்டியது.. கொரோனாவால் எல்லாமே பணால்!! :(

      Delete
  53. 🎊🎊11 பேரும் 19 பாகங்களும் 🎉🎉

    ப்ரூப் ரீடிங் டீம் தயார்...விரைவில் முடித்து ஆசிரியருக்கு அனுப்பிவைக்கப்படும்...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்!
      மிகவும் நுணுக்கமான வேலை என்பதால் நண்பர்கள் அதிக சிரத்தையெடுத்து பணியை முடித்துக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

      இல்லாவிட்டாலும் பரவாயில்லை; என்றாவது ஒருநாள் 'தலையில்லா போராளி' சைசில் ஒரே புத்தகமாக வரும்போது செய்து கொள்ளலாம்! 😜😜

      Delete
    2. இல்லாவிட்டாலும் பரவாயில்லை; என்றாவது ஒருநாள் 'தலையில்லா போராளி' சைசில் ஒரே புத்தகமாக வரும்போது செய்து கொள்ளலாம்! 😜😜///

      தீர்க்கதரிசியின் வாய் முகூர்த்தம் நிச்சயமா பலிக்கும்..நிறைய முறை இதுபோல் நடந்துள்ளது.நன்றி ஈவி..

      Delete
    3. காத்திருக்கின்றோம் லோன் போட்டாவது அந்த 5ம் A4 மறுபதிப்பையும் புக் பண்ணுவோம்ல

      Delete
    4. சாத்தியமே!
      மனது வைத்தால் சாத்தியமே!
      எடிட்டர் மனது வைத்தால் சாத்தியமே!
      நம்ம எடிட்டர் மனது வைத்தால் சாத்தியமே!
      நம் கனவுகளை நனவாக்கிடும் நம்ம எடிட்டர் மனது வைத்தால் சாத்தியமே!


      * தலையில்லா போராளி சைஸ்
      * 19 பாகங்களும் ஒரே புத்தகமாய்
      * அசத்தலான பெங்களூர் மெஷின் பைண்டிங்கில்
      * தோராயமாய் ரூ.7500 விலையில்

      (மீண்டும் முதல் வரியிலிருந்து படிக்கவும்!)

      Delete
    5. +1

      பெங்களூர் மெஷின் பைண்டிங்கில் புத்தகம் வேண்டும் என்பதால் தான் இம்முறை நான் pre booking செய்யவில்லை!

      Delete
    6. ஓ அப்படி ஒரு பைண்டிங் உண்டா...அப்ப 2025 க்கு இப்பவே முன்பதிவு தொடங்கிரலாம்...வருடம் ஆயிரம்...தலையில்லா போராளி சைசுல...ஒத்தையா...ஒரே கந்தையா...நினைவில்லா போராளிய தரிசிச்சரலாம்

      Delete
  54. நெஞ்சே எழு....

    டெக்ஸ் கதைகளில் பெரும்பாலும் ஓவியங்கள் சிறப்பாகவே இருக்கும்.சிலது மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ராடினரியாகத் தென்படும்.அந்த வகையில்...
    முதல் பாராட்டு ஓவியருக்கே..!

    வாவ்... என்னமா ஓவியங்கள். ஓவியங்களைத் தாண்டி கதையில் நுழைவதே பெரும்பாடாக உள்ளது.அந்தளவிற்கு ஓவியரின் தூரிகை சும்மா துல்லியமா துள்ளி விளையாடியிருக்கு. ஓவியர் க்ளாடியோ வில்லா நமது லயனில்' 'விதி போட்ட விடுகதை,' 'பாலைவனத்தில் ஒரு புதையல் ' etc.. கதைகளில் தன் கைவரிசையைக் காட்டினாலும்.. இதில் வேதாளரைப் போல் கொஞ்சம் அழுத்தமாகவே முத்திரை பதித்துள்ளார்.

    க்ளோஸ் அப் காட்சிகளில் என்னே ஒரு தத்ரூபம்+உயிரோட்டம்...ப்பா..பயமுறுத்திவிட்டார், .மிடில் ஷாட்களில் ஒரு நளினமும்+ ஸ்டைலும்... ரசிக்க வைக்கிறார்.. லாங் ஷாட்களில் பாதி நிழலும் +வெளிச்சமுமான வேதிவினையில் பிரமாதப்படுத்துகிறார்.

    ஓவியர் இத்தனை அதகளப்பபடுத்தும் போது,கதாசிரியர் சும்மா விடுவாரா.? நூற்றியெட்டாவது தடவை வந்த கதைக்கருவை..வாழையடி வாழையாக வலம் வரும் கதையை தனக்கேயுரிய கைப் பக்குவத்தில் தலைவாழை விருந்தாக்கி அமர்களப்படுத்துகிறார்.

    வழக்கமாக தோசைக் கல்லில் சுடும் தோசையில்..கொஞ்சம் துருவிய கேரட்டும் வெங்காயமும் சேர்க்க..அது மதிப்பு கூட்டப்பட்ட பொருளாவது போன்ற டெக்னிக்கில் கதாசிரியர் கில்லாடி போலும்.வழக்கமான தோசைதான் என்றுணரும் முன்னே..அதன் ருசியும், மணமும் நம்மை வேறுமாதிரி உணரச்செய்வதில் வெற்றி கண்டுள்ளார்.

    கதையும் ,ஓவியமும் போட்டி போடுவது என்பது டெக்ஸ் கதைகளில் அபூர்வமான காம்பினேஷன்.தலையில்லா போராளிக்குப்பின். நான் மிகவும் ரசித்த காம்பினேசன்...'நெஞ்சே எழு.!'

    ReplyDelete
    Replies
    1. ருசியான விமர்சனம்

      Delete
    2. நண்பர்கள் சிலர் படித்திட பரிந்துரை செய்த டெக்ஸ் கதையிது... பக்கத்திலேயே எடுத்து வைத்திருக்கிறேன், தூக்கம் பறிபோனால் படித்திட... ம்ம்ம் பார்ப்போம்

      Delete
    3. "ெநஞ்சே எழு" - ஓவியத்தின் சிறப்பு.
      அதில் தெரியும்டெக்ஸ்-குழுவின் பர்சனாலிட்டி..புதியதாக யாருக்கும் படிக்க கொடுத்தால் ெராம்பவே ரசித்து படிப்பார்கள்..
      என்ன வருத்தென்றால் - இது போன்ற ஓவியச் சிறப்புள்ள கதைகள் வண்ணத்தில் வருவதில்லை - காலபெனியின் ஓவியத்தில் பிண்ணனியில் ஒருவித பிளைன்னாக இருக்கும்..
      கதைையை படித்து முடித்ததும்- இது ஏற்கனவே தெரிஞ்ச கதைதானே என்பதுபோல் உணர்ந்தாலும் - கதாசிரியர் கதையை எங்கே ஆரம்பிக்க வேண்டும் முன்னும் பின்னுமாக சம்பவங்களை கோர்த்து எப்படி கதையை சுவராஸ்யமாக நகர்த்திச்ெசல்ல முடியும் என்பதில் தான் அவர் திறமை இருக்கிறது..
      எனவே, மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டும் இதழ்.

      Delete
    4. ரசுச்சு ரசுச்சு படிச்சிருக்கீங்க GP! சிறப்பான விமர்சனம்!!

      Delete
    5. ///இது ஏற்கனவே தெரிஞ்ச கதைதானே என்பதுபோல் உணர்ந்தாலும் - கதாசிரியர் கதையை எங்கே ஆரம்பிக்க வேண்டும் முன்னும் பின்னுமாக சம்பவங்களை கோர்த்து எப்படி கதையை சுவராஸ்யமாக நகர்த்திச்ெசல்ல முடியும் என்பதில் தான் அவர் திறமை இருக்கிறது..///

      அருமையாச் சொன்னீங்க நண்பரே!!

      Delete
  55. *நீரின்றி அமையாது உலகு* வந்தவுடன் வாசித்தது, மிகவும் பிடித்திருந்தது. இப்போது மறுவாசிப்பு ரொம்பவும் பிடித்து விட்டது.

    பொதுவாக கார்ட்டூன்களை மட்டும் வாய்விட்டு படிப்பது வழக்கம். சிரிப்பு வருமிடத்தில் வாய்விட்டுச் சிரித்து விடுவேன்.

    சில அனுபவங்களை பெற நேரத்தையும் பணத்தையும் செலவிட நாம் தயங்குவதில்லை. எத்தனையோ பணம் செலவு செய்து சுற்றுலா செல்கிறோம்... அட்வென்சர், டிரக்கிங் என்று அதற்கென ஓர் தயாரிப்புடன் செல்கிறோம்! அனுபவித்து ஏற்றுக் கொள்கிறோம்.

    அதுபோல நம் மனதுக்கு நெருக்கமான கார்ட்டூன்களை வாசிக்கும் முன் அதற்கேற்ப கொஞ்சம் தயார்படுத்திக் கொள்ள முடிந்தால் அனைவருமே பென்னி முதல் ஸ்மர்ப்ஸ் வரை அனைத்து கார்ட்டூன்களையுமே ரசிக்கலாம்.

    அப்படி அந்த கார்ட்டூன்களை படிக்க வேண்டுமா என்றால் எவ்வளவு விலைகொடுத்தும் வாங்க முடியாத சிரிப்பை நமக்கு வழங்க தயாராக உள்ள கார்ட்டூன்களின் பொருட்டு நாமும் கொஞ்சம் தயாரானால் தவறில்லை தானே!

    ReplyDelete
    Replies
    1. ////எவ்வளவு விலைகொடுத்தும் வாங்க முடியாத சிரிப்பை நமக்கு வழங்க தயாராக உள்ள கார்ட்டூன்களின் பொருட்டு நாமும் கொஞ்சம் தயாரானால் தவறில்லை தானே!///

      +1

      Delete
    2. // எவ்வளவு விலைகொடுத்தும் வாங்க முடியாத சிரிப்பை நமக்கு வழங்க தயாராக உள்ள கார்ட்டூன்களின் பொருட்டு நாமும் கொஞ்சம் தயாரானால் தவறில்லை தானே! //

      Well said! You are correct!

      Delete
  56. தினசரிப் பதிவுகளைப் படித்து ரசித்த இந்த மனம் இனி வாரம் ஒரு பதிவு தான் என்று நினைத்து ஏங்குகிறது.வாழ்வாதாரம் இல்லா சூழல் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி என அனைத்தையும் மறக்கச் செய்து மகிழ்ச்சியை ,உற்சாகத்தை ,ஊக்கத்தை தந்தது இந்தத் தளமும் நண்பர்களும் ஆசிரியரும் தான்.சளைக்காது பதிவுகளைத் தந்த ஆசிரியர் விஜயன் சாரின் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டத் தக்கது.உறவில் கலந்து உணர்வில் நனைந்த காமிக்ஸ் உறவுகளான நண்பர்களையும் ஆசிரியரையும் மறத்தல் தகுமோ ?!.
    நன்றி.வணக்கம்.

    ReplyDelete
  57. குளிர்காலக் குற்றங்கள்!

    தலைப்பு - 10/10
    முன்னட்டை - 7/10
    பின்னட்டை - 10/10
    ஓவியம் - 10/10
    கலர் - 10/10
    கதை - 5/10
    வாசிப்பு அனுபவம் - 6/10

    ReplyDelete
  58. "எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க முடியாத சிரிப்பை நமக்கு வழங்கதயாராக உள்ள கார்ட்டூன்களின் பொருட்டு நாமும் கொஞ்சம் தயாரானால் தவறில்லைதானே". கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. // "எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க முடியாத சிரிப்பை நமக்கு வழங்கதயாராக உள்ள கார்ட்டூன்களின் பொருட்டு நாமும் கொஞ்சம் தயாரானால் தவறில்லைதானே" //

      Correct!

      Delete
  59. மந்திரியார் வந்தாலே சிப்பு சிப்பா வரும்.....

    ReplyDelete
  60. பார்சல் கிளம்பிய பதிவு எப்போது ???!!!

    ReplyDelete