Sunday, May 16, 2021

Version 2.0 x 2

 நண்பர்களே,

வணக்கம். அதிகாரியோடு வாரத்தைக் கடத்தியான பின்னே - இதோ  மாமூலுக்கு இன்றைய பொழுதில் திரும்புகிறோம் ! வீட்டில் அடைந்து கிடப்பினும் , நாட்களின் ஓட்டம் நின்றபாடில்லை என்பதால், ஜூன் இதழ்கள் சார்ந்த பணிகள் ஒரு பக்கம் ஓடி வருகின்றன ! 4 இதழ்கள் கொண்டதொரு பிஸியான மாதம் என்பதால் இம்முறை ஆக்ஷனும் உண்டு ; கார்ட்டூனும் உண்டு ; black & white இதழும் உண்டு ; கிராபிக் நாவலும் உண்டு ! As always ஆக்ஷனே முதலில் கைதூக்கி நிற்பதால் - ரிப்போர்ட்டர் ஜானி தோன்றும் "காற்றில் கரைந்த கலைஞன்" தான் இன்றைய preview-ல் இடம்பிடிக்கின்றது !

ஜானி....ஐந்தாறு மாதங்களுக்கு முன்னே தான் இவரது டபுள் ஆல்பத்தில் பணியாற்றியது போலுள்ளது எனக்கு ; ஆனால் அதற்குள் 2021-ன் இதழுடனான புலனாய்வுக்கு வேளை புலர்ந்து விட்டது ! ஜானியின் version 2.0 கதைவரிசையினில் மேற்கொண்டுமொரு புது ஆல்பம் பிரெஞ்சில் வெளியாகியிருக்கும் நிலையில், பெர்சனலாக எனது சாய்ஸ் அந்த நவீன ஜானியாகவே இருந்திருக்கும் ! கடைசியாய் வெளிவந்த அந்த டபுள் ஆல்பத்தில் கூட, ஜானி 2.0 சாகஸமே எனக்குப் பிடித்திருந்தது ! ஆனால் பழகியதை ; பரிச்சயமானதை ஓரம்தள்ள உங்களுக்கு ஒரு போதும் பிடித்தம் இருப்பதில்லை என்பது நூற்றியொன்றாவது தடவையாக நிரூபணம் ஆனதால், நடப்பாண்டின் தேர்வுக்கு back to the classics !! எப்போதுமே ஜானி தொடரிலும் சரி, சிக் பில் தொடரிலும் சரி - துவக்க வரிசைக் கதைகள் ஓ.கே.வாகவும், பின்னுள்ளவை சுமார் ரகங்களாகவும் இருப்பது வாடிக்கை ! இரண்டுக்குமே ஓவியர் திபெத் என்பது தான் இங்கே சுவாரஸ்ய ஒற்றுமை ! Anyways - தற்போதைய ஜானி சாகசமானது 1979-ல் வெளியானதென்பதால் க்ளாசிக்ஸ் பட்டியலில் இடம் பிடிக்கிறது ! கதைத்தரத்திலும் செமத்தியாக அமைந்திருந்து உங்களது "ஜானி க்ளாசிக்ஸ்" பட்டியலுக்குள்ளும் இந்த ஆல்பம் புகுந்திடின் ஹேப்பி !!

As always, 44 பக்க சாகசம் ; அதன் ஒட்டுமொத்த கிளைமாக்ஸ் முடிச்சவிழ்ப்போ பக்கம் 44-ல் தான் !! ஜானி கதைகள் என்றாலே இது தான் trademark என்று நமக்குமே பழகிப் போய்விட்டது and  ஒவ்வொரு ஜானி ஆல்பத்தின் இறுதிப் பக்கத்துடனான மல்யுத்தத்தில் முன்மண்டை மேற்கொண்டு காற்றாடுவதுமே மாமூல் என்றும் ஆகிப் போய்விட்டது ! In fact இம்முறை முதல் 43 பக்கங்கள் அச்சுக்குத் தயாராக உள்ளன ; அந்த இறுதிப் பக்கம் மட்டும் இன்னமும் என் மேஜையில் ! வழக்கம் போல நமது கருணையானந்தம் அவர்களே இதற்குப் பேனா பிடித்துள்ளார் & வழக்கம் போலவே அவரது classic நடையினை யதார்த்த லெவெலுக்குக் கொண்டு வர நான் முயற்சித்துள்ளேன் ! தவிர, கதையின் க்ளைமாக்ஸை முழுசையும்  மாற்றி எழுதியுள்ளேன் ! As stories go , இந்த ஆல்பம் முந்தைய ஜானி இடியாப்பங்களை விட ரொம்பவே தேவலாம் என்பேன் ! கண்ணில் தென்படும் கொய்யாப்பழம் விற்பவரையும் ; கோவக்காய் விற்பவரையும் சந்தேகப்படாது - கதையை ஜானியுடன் ஸ்மூத்தாகவே நகற்றியுள்ளனர் ! And வழக்கம் போல் சித்திரங்களும், கலரிங்கும் தீ தான் !! 

இம்முறை சிக்கலின் பெரும்பங்கு எழுந்தது அட்டைப்படத்தினில் தான் ! சமீப காலமாகவே ஒரிஜினல் ராப்பர்களை ஏதேனும் வர்ண மெருகூட்டல்களோடு ; மாற்றங்களோடு பயன்படுத்துவதே நடைமுறை என்றாகியுள்ளதை நீங்கள் அறிவீர்கள் ! ஜானியின் இந்த சாகசத்துக்குமே அதையே செய்தும் விடலாமென எண்ணியிருந்தேன் & ஒரு மாதம் முன்பாய் இதனை ரெடி செய்திட நம்மாட்களிடம் சொல்லியிருந்தேன் ! ஆனால் இந்த ஆல்பத்துக்கான ஒரிஜினல் டிசைனோ ரொம்பவே சுமாராய் ; ரொம்பவே சுரத்தின்றி இருப்பதை அப்புறம் தான் கவனித்தேன் ! வெவ்வேறு கலர் பின்னணிகளை பொருத்திப் பார்த்து ஏதேதோ குட்டிக்கரணங்கள் அடித்துப் பார்த்தோம் ; ஊஹூம் ...உறங்கும் அட்டைப்படம் உறங்கிக் கொண்டே தானிருந்தது ! ரைட்டு...இதைத் தேற்ற முயற்சிக்கும் நேரத்துக்கு கொஞ்சம் செலவு பண்ணி, புதுசாயொரு டிசைனே போட்டு விடலாமென்று தீர்மானித்தவனாய் நமது சென்னை டிசைனரிடம் கேட்டேன் ! 'உடனே போட்டுத் தருகிறேன் !" என்றிட, நானும் மின்னஞ்சலில் ஜல்தியாய் நமக்கு ஏற்றார் போலொரு மாதிரியைத் தேர்வு செய்து அனுப்பி வைத்தேன் ; பின்னணிக்கான வர்ண சேர்க்கை எவ்விதம் வேண்டும் என்ற reference சகிதம் ! சரியாய் 24 மணி நேரங்களுக்குள் லொஜக்கென கிட்டிய  டிசைன் இதோ - இதுவே !  





பட்டாம்பூச்சியின் பரிணாம வளர்ச்சி !! 

அச்சுக்குச் செல்ல அந்த இறுதிப் பக்கம் நீங்கலாய் பாக்கி எல்லாமே ரெடி ! காமிக்ஸ்டைம் பகுதி மாத்திரம் அடுத்த வாரயிறுதியினில் இந்த லாக்டௌன் சூழலைப் பொறுத்து மாற்றங்களுக்கு உட்படக்கூடும் ! மற்றபடிக்கு  we are good to go on this !!

Before I shift topics - உங்களுக்கான கேள்வி guys :

2022-ன் அட்டவணையின் பெரும்பான்மை ரெடி - முத்துவின் 50-வது ஆண்டுமலர் நீங்கலாய் ! அதற்கென ஒருசில திட்டமிடல்கள் உள்ளன தான் ;  அது பற்றி இன்னொரு ஞாயிறில் கொஞ்சம் பேசலாம் (maybe next sunday) ! இந்த நொடியில் எனது கேள்வி ரொம்பவே சிம்பிள் : 

"ரிப்போர்ட்டர் ஜானி - அட்டவணையில் இடம் பிடிச்ச்ச்சே தீர வேண்டிய நாயகரா ? அல்லது ஒற்றையாண்டுக்கு இவர் ஓய்வெடுப்பின் ஓ.கே. தானா ?" 

ஒரு டைட்டான அட்டவணையினில் absolutely essential என்றோருக்கு மட்டுமே இடமிருக்க முடியும் என்பதால் எனது மேற்படிக்கேள்வி ! So இதை தெய்வக்குற்றம் ரேஞ்சுக்குப் பார்த்திடாது பதில் ப்ளீஸ் ? அவசியமென்று எண்ணினால் fine ; ரசனைசார் விஷயத்துக்கு விளக்கம் தேவைப்படாது ! ஆனால் "அத்தியாவசியமில்லை" என்று எண்ணிடும் பட்சத்தில், அது குறித்து சிம்பிளாய் ஒரு விளக்கமும் ப்ளீஸ் ?





உங்களின் கேள்வி # 2 - ஏற்கனவே கேட்டிருந்தாலுமே !! 

லக்கி லூக்கின் version 2.0 பாணியில் வெகு சமீபத்தில் வெளியாகியுள்ள ஆல்பம் பிரெஞ்சில் ரொம்பவே அழகாய் வரவேற்புப் பெற்றுள்ளதாம் ! நமக்கு வந்திருக்கும் கோப்புகளை பார்க்கும் போது எனக்கு இந்த ஆல்பம் அட்டகாசமாய்த் தென்படுகிறது ! ஆனால் மாமூல்களைத் தாண்டிய பயணங்களில் உங்களின் தயக்கங்கள் உலகப்பிரசித்தம் என்பதால் மண்டையை நோண்டியபடிக்கே காத்திருக்கிறேன் ! வேறொரு மொழியில் லக்கி லூக்கை வெளியிடும் எடிட்டரொருவர் எனக்குப் பரிச்சயம் ; அவரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது - இந்தக் கதையைப் பற்றி செமத்தியாய் சிலாகித்தார் !! சொல்லுங்களேன் guys - இது பிடுங்க வேண்டிய ஆணியா ? இல்லியா ? நாளைய தினம் லக்கி பதிப்பகத்துடன் ஒரு ஆன்லைன் மீட்டிங் இருப்பதால், இது குறித்தான நமது பதிலைச் சொல்ல வேண்டியிருக்கும் ! Is it a definite NO ??? பரிசீலனைக்கு அவசியமே லேதுவா ?



Bye all....மாடஸ்டி அழைப்பதால் கிளம்புகிறேன் ! See you around !! Stay home...stay safe !!

199 comments:

  1. மாலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. 3rd,. ரிப்போர்ட்டர் ஜானி கதை கண்டிப்பாக ஒன்று வேண்டும், லக்கி லூக்கின் இந்த புதிய பாணியை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமே.

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. லக்கி 2.0 ஆல்பம்#1ல் லக்கியுடன் ஒன்ற இயலவில்லையே தவிர கதையோட்டத்தில் குறையெதுவும் இல்லை சார்...

      ஆல்பம் #2 நீங்கள் இருமுறை கேட்பதைப் பார்த்தால் ஏதோ வசியமுள்ளதைப் போலத் தெரிகிறது. போட்டு பார்க்கலாம் சார்!

      Delete
    2. ஜானிக்கு விடுமுறையா...? நெவர்!!

      Delete
  4. விஜயன் சார், என்ன சார் மாடஸ்டி அழைக்கிறார் என இரண்டு நாட்களாக சொல்லுறீங்க. கதை அந்த அளவு கனமான களமா இந்த முறை மாடஸ்டிக்கு?

    ReplyDelete
    Replies
    1. வர்றதே ஒண்ணு - அதுலயும்
      வச்சிராதீங்க கண்ணு....!!!!

      Delete
    2. மாடஸ்டி கார்வின் அல்லவா அழைப்பார்கள் என்ன இந்த முறை நம் எடிட்டரை கூப்பிடுகிறார்கள்

      Delete
  5. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  6. ஜானி லக்கி இருவருக்குமே ஓகே ஓகே தான்.

    ReplyDelete
  7. ரிப்போர்ட்டர் ஜானி நிச்சயமாக வேண்டும் சார்.லக்கி லூக் முயற்சித்து பார்க்கலாம் சார்.

    ReplyDelete
  8. ரிப்போர்டர் ஜானிக்கு ஒய்வு கொடுக்க வேண்டாம் sir. லக்கியும் ஓகே.

    ReplyDelete
  9. லக்கிலுக் கதையை ஒரு முறை முயற்சி செய்யலாம் சார்

    ReplyDelete
  10. விஜயன் சார் @ ஜானி எனக்கு மிகவும் பிடித்தமானவர் தான். ஆனால் தற்சமய சூழ்நிலையில் அவருக்கு ஒரு ஆண்டு மட்டும் விடுப்பு கொடுக்கலாம்.

    லக்கி லூக்கின் புதிய சாகசம் கண்டிப்பாக வேண்டும். ப்ளீஸ். தமிழ் காமிக்ஸ் மட்டும் அதிகம் படிக்கும் எனக்கு இந்த லக்கி சாகசம் நமது இதழில் விரைவில் வரட்டும் சார்.

    ReplyDelete
    Replies
    1. விஜயன் சார் @ ஜானி எனக்கு மிகவும் பிடித்தமானவர் தான். ஆனால் தற்சமய சூழ்நிலையில் அவருக்கு ஒரு ஆண்டு மட்டும் விடுப்பு கொடுக்கலாம்/////

      +1

      Delete
  11. Please give vacation leave for Johny&give support to Lucky luke 2.0

    ReplyDelete
  12. Johnny and Lucky கண்டிப்பாக வேண்டும்..

    ReplyDelete
  13. பட்டாம்பூச்சியின் பரிணாம வளர்ச்சி - அசத்தலாய் இருக்கிறது, எடிட்டர் சார்!

    ReplyDelete
  14. சார்....

    ஜானி இல்லாத ஒரு வருடத்தை கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது... கண்டிப்பாக... 2022லும் 2023லும் 2024லும்... 2125லும்... வேண்டும்.. வேண்டும்... வேண்டும்...

    Wanted Lucky Luke Wanted Definitely....

    ReplyDelete
  15. // லக்கி லூக்கின் version 2.0 பாணியில் வெகு சமீபத்தில் வெளியாகியுள்ள ஆல்பம் பிரெஞ்சில் ரொம்பவே அழகாய் வரவேற்புப் பெற்றுள்ளதாம் ! //

    முயற்சிக்கலாம் சார்...

    ReplyDelete
  16. சார்...

    ஒவ்வொருமுறையும் "இளவரசி அழைக்கிறார்.." எனக் கிளம்பிடுகிறீர்களே...!!!

    சீக்கிரம் வேண்டும் இளவரசி Update...

    ReplyDelete
  17. சார் அட்டகாசப் பதிவு....அட்டைப்படம் அருமை....உள் பக்கம் கலரிங்கில் பிச்சு உதறுது....
    ஜானி ஒன்றரை வருடம் பின்னர் பார்த்துக் கொள்வோம்...
    டெக்ஸ்....ஐம்பதாம் ஆண்டு மலர்...கென்யான்னு தாக்க ஏராள அதிரடி ஐட்டங்க இருக்கே
    லக்கி உங்க நண்பர் சிலாகித்ததா சொல்றீங்களே...ஒரு வாய்ப்பு கொடுப்பமே

    ReplyDelete
  18. // ரிப்போர்ட்டர் ஜானி - அட்டவணையில் இடம் பிடிச்ச்ச்சே தீர வேண்டிய நாயகரா ? அல்லது ஒற்றையாண்டுக்கு இவர் ஓய்வெடுப்பின் ஓ.கே. தானா ?" //
    மாடஸ்டி,டயபாலிக் எல்லாம் வரும்போது ரிப்போட்டர் ஜானிக்கு என்ன சார் குறைச்சல்,இப்படி ஒரு கேள்வியே அனாவசியம் சார்,ரொம்ப வருத்தமா இருக்கு சார் நீங்க இப்படி கேட்டது...
    இப்படியெல்லாம் சொல்ல நினைச்சாலும்,தெய்வக்குற்றம் ரேஞ்சுக்கு ஆயிடும்னு நீங்க சொல்வதால்...
    ஜானி கண்டிப்பாக வேண்டும்,
    ஜானி கண்டிப்பாக வேண்டும்,
    ஜானி கண்டிப்பாக வேண்டும்...

    ReplyDelete
  19. லக்கி லூக்கின் version 2.0 -
    yes வேண்டும் சார்

    ReplyDelete
  20. ரிப்போர்ட்டர் ஜானி, புது பாணியிலான கதை படித்ததிலிருந்து இது அவ்வளவாக ஈர்க்கவில்லை. பெரும்பாலான வாசகர்கள் விருப்பமாக கேட்டால், தொடரும்.
    லக்கி லூக் - புதிய பாணியில் கண்டிப்பாக கொண்டு வாருங்கள். அன்றும் இன்றும் என் பதில், நிச்சயமாக வேண்டும்

    ReplyDelete
  21. ///ரிப்போர்ட்டர் ஜானி - அட்டவணையில் இடம் பிடிச்ச்ச்சே தீர வேண்டிய நாயகரா ? அல்லது ஒற்றையாண்டுக்கு இவர் ஓய்வெடுப்பின் ஓ.கே. தானா ?" ///

    கண்டிப்பாக இடம்பிடித்தே தீரவேண்டும்.!

    லக்கி லூக் 2.0 :முயற்சித்துப் பார்க்கலாம்.!

    ReplyDelete
  22. ஜானி...வேண்டும்... லக்கி லூக்...ஓகே...முயற்சிக்கலாம்...

    ReplyDelete
  23. படைப்பாளிகளின் நோக்கம் புரிகிறது. லக்கி லூக் template எதிர்காலத்தில் போர் அடித்து விடும் என்று upgrade செய்ய ட்ரை பன்றாங்க. ஆனால்....

    உயர உயர பறக்க ட்ரை பண்ணினாலும் லக்கி லூக் காமெடி கதைக்கு தான் செட் ஆவார். தல-தளபதி ஆக முடியாது.

    ஜானி 1.0 கண்டிப்பாக வேண்டும் சார். நிறுத்தி விடாதீர்கள்.

    ReplyDelete
    Replies

    1. உயர உயர பறக்க ட்ரை பண்ணினாலும் லக்கி லூக் காமெடி கதைக்கு தான் செட் ஆவார். தல-தளபதி ஆக முடியாது.

      ####


      :-)

      Delete
    2. ஆனால் லக்கி லூக் மற்ற நாயகர்கள் அனைவரையும் விடவும் சிறந்த நீதிகாவலன்.

      மிகவும் சீரியஸான கதாபாத்திரத்திரம் லக்கி லூக்.

      மற்ற பாத்திரங்கள் தான் நகைச்சுவையாக படைக்கப்பட்டிருக்கும்,கதை களமும் ,கதையை நகர்த்திச் செல்லும் விதமும் தான் நகைச்சுவையாக அமைந்திருக்கும்.

      லக்கி லூக் எப்பவும் சீரியஸான கதாபாத்திரத்திரம்.

      Delete
    3. ஆனால் லக்கி ரொம்ப நைஸ் guy நண்பரே.

      சீரியஸ் கொடூர வில்லன்களுக்கு செட் ஆகா மாட்டார். இப்போதேல்லாம் தம் கூட அடிக்கமாட்டார்.

      Delete
    4. மிகவும் சீரியஸான கதாபாத்திரத்திரம் லக்கி லூக்.

      மற்ற பாத்திரங்கள் தான் நகைச்சுவையாக படைக்கப்பட்டிருக்கும்,கதை களமும் ,கதையை நகர்த்திச் செல்லும் விதமும் தான் நகைச்சுவையாக அமைந்திருக்கும்////
      அட இத்தினி நாளா இத கவனிக்காம விட்டு விட்டோமே! 👌

      Delete
  24. ஜானி நிச்சயம் வேண்டும்...வேண்டும்... வேண்டும்...

    நீங்கள் குறிப்பிடுவதால் ஏதோ விசயம் இருக்குமென்பதால் மட்டும் லக்கிக்கு யெஸ்...

    ReplyDelete
  25. நமக்கு இது அது எதுல்லாம் வேணாம்...

    காமிக்ஸ் ன்னு எத குடுத்தாலுமே
    படிக்கத் தான் போறோம்...

    கொரில்லா சாம்ராஜ்யத்தையே படிச்சிட்டோமானப்ப...இதெல்லாஞ் சும்மா...

    ReplyDelete
  26. Johnny yes Papa!Lucky luke 2.0 இறுதியாக ஒரு வாய்ப்பு கொடுக்கலம்.தேறவில்லை என்றால் ஓரம் கட்டவெண்டியதுதன்.

    ReplyDelete
  27. 1.0&2.0 ரெண்டுலயுமே ஒண்ணொண்ணு கிடைச்சா ரொம்ப ஜாலியா இருக்கும் சார்.

    ReplyDelete
  28. புது லக்கிக்கு ஜே.. ஜே.. ஜே..

    ReplyDelete
  29. வணக்கம் சார்🙏
    வணக்கம் நண்பர்களே!🤜🤛

    ReplyDelete
  30. 1. ஜானி வேணடும் சார்.
    2. லக்கியின் காமெடி கதைகளையே வரவேற்கிறேன். டைட்டான schedule ல் லக்கியின் புதிய ஆக்கத்திற்கு பதில் ஒன்று அல்லது இரண்டு போனெலியின் 110 பக்க கறுப்பு வெள்ளை கிராபிக் நாவலை fill செய்யலாமே. கனிசமான வரவேற்பும் பெற்று, ஓரளவு விற்பனையிலும் சாதித்த இத்தடத்தை 2021 விட்டு விட்டோம். 2022ல் மீண்டும் முயற்சி செய்யலாமே சார். வாகான தருணத்தில் வரும் ஆண்டுகளில் லக்கி லூக்கின் புதிய கதையை பரீசலிபோமே.

    ReplyDelete
    Replies
    1. கிராஃபிக் நாவல் அடுத்த வருடமாவது குறைந்தது 6 கிராஃபிக் நாவல் வேண்டும்

      Delete
    2. அதுவும் கருப்பு வெள்ளை கிராஃபிக் நாவல் களின் ரசிகன் நான்.

      Delete
    3. ஆமாம், கி.நா. வேண்டும் சார்!

      Delete
  31. கண்டிப்பாக ஜானி வேண்டும் சார்..

    அவர் கதைகளின் அழகான தெளிவான சித்திர தரத்தை காணவே கண் நூறு வேண்டும்..இதில் அட்டகாச திடுக் சஸ்பென்ஸ் வேறு படிக்கும் அனைவரையும் கவரும் பொழுது ரிப்போர்ட்டர் ஜானிக்கு ஓய்வா ..


    தோ...நோ...

    ReplyDelete
  32. லக்கி அனைவரும் பாராட்டும் ஆல்பமாக இருப்பதால் ஒரு முறை முயற்சித்து தான் பார்த்து விடலாம் சார்...மேலே நண்பர் சொன்னபடி கொரில்லாவையே சமாளிச்சுட்டோம்..புது லக்கியை சமாளிக்க மாட்டோமா என்ன...?..:-)

    ReplyDelete
  33. ஜானயின் அட்டைப்படம் செம செம செம அழகாக அமைந்துள்ளது சார்..பட்டாம்பூச்சியின் பரிணாம வளர்ச்சி சிறப்பு ..அழகு..

    அட்டைப்படத்தை சிறப்பித்தவருக்கு அழகான பூங்கொத்து பரிசு...

    ReplyDelete
  34. Classic Johny ok sir.
    நீயூ லுக் லக்கி லூக் காமெடிக்கு ஓகே இதற்கு செட் ஆவார தெரியவில்லை ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் சார்.

    ReplyDelete
  35. ஆஹா அடுத்த வாரம் முத்து 50 க்கான எண்ணவோட்டமா ..இப்.பொழதே பதிவிற்காக ஏங்க தொடங்கியாயிற்று...

    ReplyDelete
  36. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  37. ஜானி அட்டை படம் சூப்பர் சைத்தான் வீட்டை நினைவு படுத்தும் விதமாக உள்ளது. ஜானி கருப்பு வெள்ளையில் தரிசிக்க ஆசை முடியுமா சார்.

    ReplyDelete
  38. கண்டிப்பாக ஒரு சாகசமாவது இருந்தால் மகிழ்ச்சியே ஆனால் இவர் இடத்தை வேறு பெட்டர் கதை கிடைத்தால் ஒரு வருடம் ஓய்வு ok.

    2 0 ஜானி மிஸ் ஆவது வருத்தமாக உள்ளது சார் நமது தற்சமய மாறுதலுக்கு ஏற்றவாறு இருப்பதாக எனது கருத்து. ஆனால் விற்பனை வேறு விதமாக உள்ளது வருத்தமாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. லக்கி புது அவதாரத்திற்கு எனது ஓட்டு கண்டிப்பாக உண்டு

      Delete
  39. முத்து 50 க்கு காத்திருக்கிறேன் சார்.

    ReplyDelete
  40. ஆசிரியருக்கு இப்போதைய சூழ்நிலையில் ஜானி ஓய்வு எடுத்தால் நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.... இப்போதைய சூழ்நிலையில் புத்தகத்தின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டே வருகிறீர்கள். இந்த சமயத்தில் கிட்டங்கியில் சேரக்கூடிய எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர்களை நிறுத்திவிட்டு விற்பனையிலும் தொய்வு ஏற்படுத்தாத ஹீரோக்களை களத்தில் இறக்கினால் நன்றாக இருக்கும்...
    ஆரம்பம் முதலே ஜானியின் கதைகளை படிக்கும்போது க்ரைம் நாவல்களை படிப்பது போல்தான் தோன்றும். அந்த கதை நம் மனதிலிருந்து மறைந்தால் தான் மீண்டும் அதை எடுத்து படிக்க முடியும் அது போல்தான் ஜானியின் கதைகளும்... ஒரு முறை வாசிப்புக்கு மட்டுமே உகந்த
    புத்தகங்களை தவிர்த்துவிட்டு மறு வாசிப்புக்கு உகந்த கதைகளை மட்டுமே வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடு... எல்லாக் கதைகளையும் வெளியிடுவது சிறப்பு தான் ஆனால் கிட்டங்கியை நிரப்புவதில் என்ன பயன்..
    கொரோன காலம் சிறப்பான கதைகளை வெளியிட முயற்சிப்போம் சார்

    ReplyDelete
  41. ரிப்போட்டர் ஜானி வேண்டும் சார். “லக்கியை சுட்டது யார்?” இதழும் நன்றாகதானே இருந்தது? லக்கி உம் வரலாமே. ஜானியின் அட்டைபடம் அருமை. சென்னை டிசைனர் கலக்கியுள்ளார்.

    ReplyDelete
  42. முத்து 50வது ஆண்டு மலர் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அடுத்தவாரமே இதைப் பற்றி பேச இருப்பது மிகச் சிறப்பு...
    பட்ஜெட் என்ற கொரோனா நோயாளியை தூக்கி எறிந்துவிட்டு ..... வாழ்நாள் சாதனை புத்தகமாக வெளிவர இருக்கும் புத்தகத்தை மிக மிகச் சிறப்பாக வெளியிட வேண்டும் ஆசிரியரே... ( இந்த சாதனை புத்தகத்தில் எங்க தலையையும் கொஞ்சம் நுளைத்து விடுங்கள்... முத்துவிலும் தலை காட்டியது போல் இருக்கும் ).. ப்ளீஸ்

    ReplyDelete
  43. ஜானியின் அட்டைப்படம் அமர்க்களமாக உள்ளது அவருக்கு ஒரு பூங்கொத்து 🌹🌹🌹🌹🌹...
    வெளியீடு நம்பர் 2451 ஒன்று என்று உள்ளது முடிந்தால்.....

    ReplyDelete
    Replies
    1. அச்சாகியுள்ளதில் திருத்தியுள்ளது நண்பரே !

      Delete
  44. சார் ஜானி ஓ கே
    லக்கி டபுள் ஓ கே

    ReplyDelete
  45. லக்கி விற்பனையில் சாதிக்கக்கூடியவர் தானே வரட்டும்... தாராளமாக வரட்டும்... ஆனால் காமெடி லக்கிதான் இங்கு பேர் சொல்லும் பிள்ளை... 🌹🌹🌹

    ReplyDelete
  46. லக்கி விற்பனையில் சாதிக்கக்கூடியவர் தானே வரட்டும்... தாராளமாக வரட்டும்... ஆனால் காமெடி லக்கிதான் இங்கு பேர் சொல்லும் பிள்ளை... 🌹🌹🌹

    ReplyDelete
  47. ரிப்போர்ட்டர் ஜானி - அட்டவணையில் இடம் பிடிச்ச்ச்சே தீர வேண்டிய நாயகரா ? அல்லது ஒற்றையாண்டுக்கு இவர் ஓய்வெடுப்பின் ஓ.கே. தானா ? -

    இப்படி கேள்விகளே கேட்கப்படாமல் இடம் பிடிக்க வேண்டியவர் ரிப்போர்ட்டர் ஜானி. முடிந்தால் 2.0-வையும் கண்ணில் காட்டுங்கள்...






    லக்கிலூக் - Is it a definite NO ??? பரிசீலனைக்கு அவசியமே லேதுவா ?

    லக்கிலூக், எப்படி வந்தாலும் ஆதரவு கொடுக்க இயலும்.





    நன்றி!

    ReplyDelete
  48. க்ளாசிக் வெளியீடுகளில் ஜானி கட்டாயம் வேண்டும்.


    லக்கி லூக் வெர்சன் 2.0 (லக்கி லூக்கை சுட்டது யார்) இன்னமும் வாசிக்க வில்லை.

    இந்த ஆண்டு வெளியீடுகளில் சில பல வெளியீடுகள் படிக்கவில்லை.

    லக்கி லூக் தவிர்க்க முடியாத நாயகன்.எப்படி இருந்தாலும் வேண்டும்.

    ReplyDelete
  49. இருப்பதே ஒன்று இரண்டு டிடெக்டிவ் தான் சார். எனவே ஜானியை விட்டு விட்டு வெளியிட வேண்டாமே

    ReplyDelete
  50. காற்றில் கரைந்த கலைஞன்.


    அட்டைப்படம் சிறப்பாக உள்ளது.


    இத்தனை ஆண்டுகளில் ,இத்தனை கதை படித்தும், ஒரேயொரு ஜானி ஜாகசம் கூட நினைவில் இல்லை.

    ஆனாலும் ஜானி கதைகளில் ஏதோவொரு ஈர்ப்பு உள்ளது.

    ReplyDelete
  51. நீங்க முடிவபண்ணி எந்த புக்கு வெளியிட்டாலும்
    எங்களுக்கு ஓகேதான் சார் 👍🏼🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  52. லக்கி லூக் கண்டிப்பாக வேண்டும் சார், ஆட்டைப்படம் & ஒவிய ஸடைல் புத்தக விழாக்களில் புது வாசகர்கள் கவனத்தை ஈர்க்கும்... இது சத்தியம்.
    ஜானி ட்ரை பண்ணலாம்.

    ReplyDelete
  53. தாமதமாக என் கருத்தை சொல்வதற்கு மன்னிக்கவும்

    அந்தருக்கும் நமஸ்காரமண்டி

    கிளாசிக் ஜானிக்கும் எனக்கும் அவ்வளவு பரிச்சியமில்லை. அதனால் முதல் கேள்வியை பாஸ் செய்கிறேன். இந்த புதிய லக்கி கதையை நான் ஆங்கிலத்தில் படிச்சாச்சு.

    “The Man Who Shot Lucky Luke” மொக்கையை விட இது எவ்வளோ மேல். ஆக்க்ஷன், காமெடி என்று ஓரளவு ஜனரஞ்சகமான கதை.

    ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் எடி சார்.

    ReplyDelete
    Replies
    1. One more vote for lucky 2.0 இந்த முறை ஆதரவு பெருகி விட்டதே. என்ன ஒரு அதிசயம்.

      Delete
    2. எதோ நம்மால முடிஞ்சது அண்ணே

      Delete
  54. ஜானி வேண்டும் & புது லக்கி லூக் இன்னொரு முறை முயற்சிக்கலாம் சார்.

    ReplyDelete
  55. 1,ஜானிக்கு கொஞ்சம் லீவு கொடுக்கலாம் சார் புதிய தொடர்கள் எனது விருப்பம் 2, லக்கி ok ok யாகரி தமிழில் வருமா சார்

    ReplyDelete
  56. ஜானி 2.0
    லக்கி 2.0 இரண்டுக்கும் ஆதரவு எப்போதும் உண்டு சார்!

    ReplyDelete
  57. * க்ளாசிக் ஜானி - நிச்சயம் வேண்டும்!
    * ஜானி2.0 - வந்தால் சந்தோசமே! வராவிட்டால் வருத்தமில்லை!
    * 'லுக்கியைச் சுட்டது யார்' - கதையும் எனக்குப் பிடித்தே இருந்தது என்பதால் லக்கி2.0வை வரவேற்பதில் தயக்கமில்லை!

    ReplyDelete
  58. கண்டிப்பாக ரிப்போர்ட்டர் ஜானி வேண்டும்.

    ReplyDelete
  59. லக்கி லூக் 2.0 ஜயோ ஆளைவிட்டால் போதும்.
    வேண்டவே வேண்டாம்.

    ReplyDelete
  60. க்ளாசிக் ஜானி சும்மா நச்சென்று இருக்கும் சார். சித்திரமும், வர்ணக் கலவைவும் வேற லெவல கண்டிப்பாக ஓரிடம் கொடுங்கள்.

    லக்கியின் WANTED இதழை ஆகஸ்டில் online B.F. இதழ் 2 வாக இறக்குங்கள்.

    ReplyDelete
  61. YES .. FOR BOTH CLASSIC ஜானி AND லக்கி 2.0 ...

    ReplyDelete
  62. க்ளாஸிக் ஜானியின் கதை ஒன்று + 2.0 ஒன்று என்று தொடரலாம் சார்.

    ReplyDelete
  63. சார், ஜனவரியில் வரவிருக்கும் முத்துவின் 50 -வது ஆண்டு ஸ்பெஷல் மிக பிரம்மாண்டமாக வெளியிடுங்கள். சந்தாவில் சேர்க்காமல் தனி முன் பதிவில் அடுத்த மாதம் முதல் புக்கிங் ஆரம்பித்து விடுங்கள்.

    பட்ஜெட், அது, இது என்று எதெல்லாம் முட்டுக்கட்டையோ அதையெல்லாம் அப்படி ஓரமா கடாசிட்டு, காலணா, அரையணா சேர்த்து டிசம்பருக்குள் புக் பண்றோம். இதழை தட்டித் துாக்குறோம், ஆமா....

    ReplyDelete
    Replies
    1. முத்து 50ஆவது ஆண்டு மலர். Mohideen சார் சொன்னது போல பட்ஜெட் எல்லாம் வேண்டாமே சார் இந்த ஒரு இதழுக்கு, இதெல்லாம் என் வாழ்நாளில் ஒரு தடவை தான் நடக்கும் எனவே அட்டகாசமான ஹார்ட் பவுண்ட் இல் ஒரு 1000 பக்க இதழை வெளியிட வேண்டுகிறேன்.

      Delete
    2. குமார் @

      // முத்து 50ஆவது ஆண்டு மலர். Mohideen சார் சொன்னது போல பட்ஜெட் எல்லாம் வேண்டாமே சார் இந்த ஒரு இதழுக்கு, இதெல்லாம் என் வாழ்நாளில் ஒரு தடவை தான் நடக்கும் //

      இது எல்லாம் நமது எல்லோர் வாழ்விலும் ஒரு முறை தான் வரும் :-)

      Delete
    3. நண்பா இதுவரை வராத விலையில் இருக்கனும்....இரத்தப்படலம்தான் அதிக விலை....அத விட 100ரூவாயாவது அதிகமிருக்கனும்....50வது ஆண்டு மலரல்லவா....இத்தருணத்துக்கு இனி அடுத்த ஐம்பதாண்டு தவங்கிடக்கனும்

      Delete
    4. // இது எல்லாம் நமது எல்லோர் வாழ்விலும் ஒரு முறை தான் வரும் :-) // தெரிஞ்சா சரி பரணி.

      Delete
    5. இங்கே பட்ஜெட் என்பது பணத்துக்கு மாத்திரமன்றி உழைப்புக்கும் உண்டு நண்பர்களே ! நடப்பாண்டின் ஒவ்வொரு மாதத்திலும் 4 புக்ஸ் இருக்கும் நிலையில் - "சூ..மந்திரகாளி...சனவரியிலே ஆயிர, ரெண்டாயிரத்துக்கு புக்ஸ்" என்று அறிவித்தால் என் லங்கோடு கந்தலாகிப் போகும் சார் ! ஞாயிற்றுக் கிழமை விலாவரியாய்ப் பேசலாமே !

      Delete
    6. சார் சார் இப்படி எல்லாம் சொல்ல கூடாது சார். ஜனவரி kku ஒரே ஒரு சிங்கிள் புக் போதும் சார். மறக்க முடியாத மைல் கல் இதழாக அமைய வேண்டும் என்பது தான் எங்களின் அவா!!!!

      Delete
    7. // இங்கே பட்ஜெட் என்பது பணத்துக்கு மாத்திரமன்றி உழைப்புக்கும் உண்டு நண்பர்களே // இதனை ஏற்றுக் கொள்கிறேன் சார் பட்ஜெட் பணம் மட்டும் அல்ல உங்கள் உழைப்பும் சேர்ந்து உள்ளது. ஆனாலும் ஒரு ஆசை சார்.

      Delete
  64. லக்கி லூக்!!??!!

    ReplyDelete
  65. 1. ஜானி கிளாசிக் மறுபதிப்புகளில் ஒன்று வந்தால் சந்தோசம். கிட்டங்கியில் நிறைய இருந்தால் லீவு விடலாம்.
    2. லக்கி 2.0 வந்தால் சந்தோசம். ஆனா கிளாசிக் லக்கியின் ஸ்லாட்டை எடுக்கலன்னா டபுள் சந்தோசம்.

    ReplyDelete
  66. ரிப். ஜானி எல்லாம் எங்கள் ஆரம்பகால நண்பர் சார். - விட்டுக்ெகாடுக்க முடியாது.
    நாங்கள், மறுபதிப்பு ஏதும் வெளியிட ெசால்லி கட்டாயப்படுத்தவில்லையே.
    (அந்த சிவப்புப்பாதை - விசித்திர நண்பன்.)
    புது கதைகள்தானே. வருடம் ஒன்று இருக்கட்டுமே சார்..
    லக்கிலூக்-லயன் ஆண்டு மலரில் இரண்டு
    கதைகள் வந்துவிடும் அல்லவா -
    ேவறு தடத்தில் லக்கி 2.0வை வெளியிடலாமே...

    ReplyDelete
  67. ஜானி கதைகள் மைல்டான கிரைம் த்ரில்லர் வரிசை... மிகவும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அதே வேளை விறுவிறுப்பாக இருக்கும்..

    Classic ஜானி ஆலலது ஜானி2.0 ஏதவாது தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன்.

    நம்ம லக்கி புதுசா வருவது வரவேற்கிறேன்.

    ReplyDelete
  68. இரண்டு க்கும் +1 போட்டுறலாம்

    ReplyDelete
  69. ஜானியும்வரட்டும்..!
    லக்கியும் வரட்டும்..!
    முத்து 50 இது வெறும் மைல்கல்லோ!வெறும் ஆண்டுமலரோ அல்ல அதையும் தாண்டி......
    இதைமிகப்பிரமாதப் படுத்திவிடவேண்டும் ஆசிரியர்சார் மறக்கவியலாத இதழாக இருக்கவேண்டும் சார் நான் முத்து காமிக்சின் ஆரம்பகால வாசகன் என்றமுறையில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் சார்
    👉டாக்டர் சார் சொன்னது போல தலையும் இதில் வந்தால் சூப்பராக இருக்கும் சார்!
    ஏதாவது வழிஉண்டாசார்!..
    இலங்கையில் இருந்து -சர்மா

    ReplyDelete
    Replies
    1. லயன் நாயகர்கள் லயனில் மட்டுமே வலம் வருவர் சார் !

      Delete
    2. // லயன் நாயகர்கள் லயனில் மட்டுமே வலம் வருவர் சார் ! // ஹப்பா இப்போது தான் நிம்மதி சார்.

      Delete

    3. // லயன் நாயகர்கள் லயனில் மட்டுமே வலம் வருவர் சார் ! //

      அப்பாடி!!!

      Delete
  70. ரத்தப்படலம் முன்பதிவு செய்தவர்கள் குறித்த விவரங்கள் பற்றிய பதிவுகள் பிளீஸ் எடிட்டர் சார்

    ReplyDelete
    Replies
    1. பழைய பட்டியலோடு மேற்கொண்டு 25 கூட்டிக்கொள்ளுங்கள் !

      Delete
    2. 247+25=272 முன் பதிவுகள்

      Delete
  71. முத்து 50 என்பது ஒரு மைல்கல் இதழ்.ஒரு தடவை தான் வரும்.எனவே இதில் பட்ஜெட் எல்லாம் பார்க்காமல் ஒரு மெகா மெகா குண்டு இதழை வெளியிட வேண்டுகின்றேன்.இதிலெல்லாம் எங்களால் விட்டுக் கொடுக்க முடியாது ஆசானே?!!!.
    அதனால் நல்லமுறையில் கொண்டாட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.
    அப்புறம் எங்களைப் போராட்டக் களத்தில் தள்ளிவிட்டதற்கும் தாங்களே காரணமாகிட வேண்டாம் என்பதையும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    நன்றி ஆசானே..!!!

    ReplyDelete
  72. ஆசிரியரே இதுவரை வராத விலையில் இருக்கனும்....இரத்தப்படலம்தான் அதிக விலை....அத விட 100ரூவாயாவது அதிகமிருக்கனும்....50வது ஆண்டு மலரல்லவா....இத்தருணத்துக்கு இனி அடுத்த ஐம்பதாண்டு தவங்கிடக்கனும்

    ReplyDelete
    Replies
    1. இரத்த படலம் விட அதிக விலையாக இல்லை என்றாலும் மின்னும் மரணத்தை விட அதிக விலையாக இருந்தால் போதும்.

      Delete
    2. ஒரு மார்க்கமாய் ஸ்டீல் தானென்றில்லாது நிறைய நண்பர்களுமே இருப்பது போல் தெரிகிறது ! ஆயிரம் பக்கம் ; ரெண்டாயிரம் பக்கமென்று இதுவரைக்கும் வெளிவந்துள்ள 2 மெகா புக்ஸும் மறுபதிப்புகள் என்பதை நினைவூட்டுகின்றேன் folks ! ஒற்றை மாதத்தில் புதுசாக ஆயிரம் - ரெண்டாயிரமென்று பக்கங்களை உருவாக்க கடவுளுக்கு மட்டுமே சாத்தியமாகும் !

      Delete
    3. நாமலும் ஏற்கனவே 800-900 பக்க சூப்பர் ஸ்பெஷல் உருவாக்கியர்கள் என்பதை நினைவூட்டுகிறேன் சார்..1000-1500 ஒரு பெரிய விஷயமே அல்ல தற்போது உள்ள சூழ்நிலையே...ஆனால் சரியாகிவிடும் சார்.. திட்டமிடல் 1000 பக்கத்திற்க்கு குறைவில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் சார்...

      Delete
    4. பின்னூட்டத்தை தூக்கம் தெளிஞ்ச பிற்பாடு இன்னொருக்க படிங்க சாமி !

      Delete
    5. சார் நமது லயன் 400 ஆவது இதழ் 500 ரூபாயில் 386 பக்கங்களுடன் முழு வண்ணத்தில் ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது. முத்து 50ஆவது ஆண்டு மலர் இதை விட பெரியதாக அசத்தலாக அமைய வேண்டும் என்று விரும்புகிறோம் சார்.

      Delete
    6. இதே உவமையுடன் இன்னும் கொஞ்சம்
      யோசியுங்கள் சார் ...நடைமுறைச் சிக்கல் என்னவென்பது புலர்ந்திடாது போகாது !

      Delete
    7. ///ஒற்றை மாதத்தில் புதுசாக ஆயிரம் - ரெண்டாயிரமென்று பக்கங்களை உருவாக்க கடவுளுக்கு மட்டுமே சாத்தியமாகும் !///

      கடவுளே.. நீங்க என்ன சொல்றீங்க?

      Delete
    8. EV செம்ம செம்ம.

      Delete
  73. Tex வெவ்வேறு தடம் பற்றி ஆசிரியர் சொன்ன போது போனெல்லி குழூமத்தின் அசாத்திய உழைப்புதான் கண்ணில் தெரிகிறது.

    கதைகள் நிகழும் காலகட்டம் தோராயமாக 1850 To 1870 எடுத்துக் கொண்டால் ...இந்த குறுகிய காலகட்டத்தில் உண்மைத்தன்மை மாறாமல் இத்துனை கதைக்களங்களை உருவாக்குவது சாதாரண விஷயம் அல்ல ...Hats off to them.
    சென்ற பதிவில் Tex maxi இதழ் பற்றி கேட்டீர்கள். உண்மையை சொல்வதாயின் Maxi இதழ்கள் எளிதில் முனை மடங்கி விடுகின்றன ...அதற்கு பதிலாக லக்கி லூக் ..டியுராங்கோ சைசில் Hardcoverல் கொடுத்தால் நலம்.

    ------------
    ஜானியின் விற்பனையை பொறுத்துது அவரை சேர்ப்பதா அல்லது விலக்குவதா என்று முடிவு செய்யவும் ...சந்தா மற்றும் ஆன்லைன் விற்பனையை மட்டுமே நம்பி இருக்கு இருக்கும் இந்த காலகட்டத்தில் நிச்சய விற்பனையை உறுதி செய்யும் நாயகர்களை களமிறக்குவதே சிறப்பு.

    ReplyDelete
  74. முத்து காமிக்ஸ் பொன்விழா இதழ் இப்படி இருக்க வேண்டும்.
    1.டெக்ஸ் வில்லர் இதழ் சைஸ்.
    2.இரண்டு பக்க மெகா குண்டு இதழ்கள்.
    3.ஆயிரம் பக்க கறுப்பு வெள்ளை இதழ்.
    4.500 பக்க வண்ண இதழ்.
    இப்படித் தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம் ஆசானே.!.
    நீங்கள் செய்வீர்களா ஆசானே?!

    ReplyDelete
    Replies
    1. முழிச்சாச்சா சார் தூக்கத்திலேர்ந்து ? செம கனவுகள் போலிருக்குதே !

      நடைமுறையில் சாத்தியங்களுக்குள் திட்டமிடுவோமே ப்ளீஸ் ?!

      Delete
  75. Editor sir,

    ஜானியும் வரட்டும்
    லக்கியும் வரட்டும்..!

    ReplyDelete
  76. ஜானியுன் வேண்டும்.லக்கியும் வேண்டும் ஆசிரியரே..

    ReplyDelete
  77. ஜானிக்கு ஓய்வு அவசியமில்லை சார்.. நிச்சயம் வேண்டும்..

    லக்கி ..வரட்டுமே...

    ReplyDelete
  78. ஜானியின் படம் முன்பு வந்த இதழில் உள்ள அதே படம் சார்..எனினும் இதிலும் நல்லா கலர்புல்லா உள்ளதால் தொடரலாம்....

    ReplyDelete
    Replies
    1. திகல் திருமணம் என நினைக்கிறேன்

      Delete
  79. + 1 for lucky Luke

    No comments for Johnny.

    ReplyDelete
  80. Dear Editor
    1000 pages is my choice too for Muthu 50 Special.
    Please consider it
    With regard 2 your questions
    1.Johnny 1.0 is must for me
    2.Lucky luke 2.0 not preferred
    Regards
    Arvind

    ReplyDelete
  81. // ஒரு டைட்டான அட்டவணையினில் absolutely essential என்றோருக்கு மட்டுமே இடமிருக்க முடியும் என்பதால் எனது மேற்படிக்கேள்வி //

    புரிந்து கொண்டேன் சார். ஜானிக்கு ஒருவருடம் ஒய்வு கொடுக்கலாம்.

    ReplyDelete
  82. பின்னூட்டத்தை தூக்கம் தெளிஞ்ச பிற்பாடு இன்னொருக்க படிங்க சாமி !//

    அதெல்லாம் முடியாது சார்...ஜனவரி வரை டைம் உள்ளது .. பிப்ரவரி 2 இதழ்களை குறைத்து ஜனவரிக்கு முத்து 50 ஆயிரம் பக்கத்திற்கு குறையாம ஜொலிக்கனும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம்.

      Delete
    2. பேஷா ஜொலிக்க விடலாமே... அம்பதாயிரம் பக்கங்களோடேயே ஜொலிக்க விடலாமே ....காசா - பணமா ? கனவு தானே ?

      Delete
    3. ///ஜொலிக்க விடலாமே ....காசா - பணமா ? கனவு தானே ?///

      இதுக்கு முன்னே நாங்க கண்ட கனவுகளெல்லாம் பலிச்சிருக்கு எடிட்டர் சார்! எங்க கனவுகளை நிஜமாக்கிடத்தான் வசமா ஒருத்தர் வந்து சிக்கியிருக்காரே?!!

      Delete
    4. //இதுக்கு முன்னே நாங்க கண்ட கனவுகளெல்லாம் பலிச்சிருக்கு எடிட்டர் சார்! எங்க கனவுகளை நிஜமாக்கிடத்தான் வசமா ஒருத்தர் வந்து சிக்கியிருக்காரே?!! // ஆமா ஆமா (வடிவேலு மாடுலேஷனில் படிக்கவும்)

      Delete
    5. அப்படி சொல்லுங்க ஈவி...

      Delete
  83. முத்து50. ஆயிரம் பக்கம்...

    ReplyDelete
    Replies
    1. முத்து50. ங்கரது முத்து 50ஆயிரமா ஆசான் படிச்சிட்டாரு மக்கா.. ஆயிரம் பக்கம்தான்..போதும்...

      Delete
  84. முத்து 50ஆம் ஆண்டை ஒற்றை இதழுடன் கொண்டாடினால் எப்படி?

    வருடம் முழுவதும் கொண்டாட வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. முத்து 50 years தனி லோகோவுடன்...

      Delete
    2. முத்துவில் மட்டும் 50 புத்தகங்கள் ஆண்டு முழுவதும்!

      Delete
    3. அந்த 50 புத்தகங்களை ஒன்றாக வைக்க ஒரு மெகா பாக்ஸ் வருட இறுதியில்...

      Delete
    4. 50 x 100 ஐயாயிரம் பக்கங்கள், வருடம் முழுக்க கொண்டாட்டம்!

      Delete
    5. ஸ்பெஷல் னா அது குண்டுதான் நண்பரே...

      Delete
    6. பெட்டியோட தூக்குனா பயங்கர குண்டாதான் இருக்கும் நண்பரே!

      Delete
    7. நான் சொல்ற பெட்டி பாக்ஸ்... நீங்க வேற 'பெட்டி'யை நினைச்சா நான் பொறுப்பில்லை

      Delete
    8. ///நான் சொல்ற பெட்டி பாக்ஸ்... நீங்க வேற 'பெட்டி'யை நினைச்சா நான் பொறுப்பில்லை///

      ஹா ஹா! :))))))

      Delete
  85. http://lion-muthucomics.blogspot.com/2012/07/blog-post.html

    முத்து 40 - NEVER BEFORE SPECIAL அறிவிப்பு பதிவு

    ReplyDelete
  86. சார் இது வரை மொழி பெயர்த்து சிறப்பாக உள்ள கதைகள்....கென்யா ஏகப்பட்ட பாகங்கள் இருக்காமே...அதெல்லாம் சேத்தா வந்து விடாதா....மனமிருந்தால் மார்கமுண்டு...பொன் விழா சார்....முடிஞ்ச அளவு பாத்து பன்னுங்க...பிரம்மாண்டம் தெறிக்கனும்

    ReplyDelete
  87. கால் கட்டை விரலை கடவாயில் திணிப்பதைத் தவிர்ப்பதற்காகவேணும் கால்கள் தரையில் திடமாய் பதிந்திருக்க வேண்டுமென நான் எத்தனை முயற்சித்தாலும், உங்களின் உற்சாகமும், உத்வேகமும் என்னை ஏதாச்சும் செய்யத் தூண்டுகின்றன என்பதே நிஜம் ! உங்களின் அண்மையும், ஆண்டவனின் அருளும் என்றும் தொடர்ந்திடுமென்ற நம்பிக்கையோடு இந்த Never Before முயற்சிக்குப் புள்ளையார் சுழி போட்டுள்ளேன் !! Fingers Crossed guys !

    ReplyDelete
  88. http://lion-muthucomics.blogspot.com/2012/07/blog-post.html

    முத்து 40 - NEVER BEFORE SPECIAL அறிவிப்பு பதிவு

    முத்து 40 - NEVER BEFORE SPECIAL அறிவிப்பு பதிவு

    ReplyDelete
    Replies
    1. கருத்துகளை கச்சிதமாகக் கவ்வி கலக்கறீங்க ப்ளூ!

      Delete
    2. அருமை ப்ளூ அவர்களே. NBS போன்ற ஒரு உலகத் தரம் வாய்ந்த கதம்ப குண்டு book ஒன்றோ இரண்டோ சாய்ஸ் உங்களுடையது சார்.

      Delete
    3. //NBS போன்ற ஒரு உலகத் தரம் வாய்ந்த கதம்ப குண்டு book//

      ஏனுங்ண்ணா....இந்த படைப்பாளிங்க..படைப்பாளிங்கன்னு அசல் நாட்டிலே சிலர் இருக்காங்களே...அவங்க மனசு வைக்கணும்னு ஒரு சமாச்சாரம் இருக்கிறதை அல்லாருக்கும் லைட்டா நினைவூட்டறேனுங்னா ...!

      Delete
    4. அப்போ பாக்ஸ் செட் ஒன்று சார்.

      Delete
    5. Box set ல்லாம் நல்லா இருக்காதுங்க...Lms ல படைப்பாளிகள் ஒத்துக்காத ஹீரோக்களை தனியா போட்டா மாதிரி குண்டு புக்தான் சரி ...

      Delete
    6. படைப்பாளிங்க..படைப்பாளிங்கன்னு அசல் நாட்டிலே சிலர் இருக்காங்களே...அவங்க மனசு வைக்கணும்னு ஒரு சமாச்சாரம் இருக்கிறதை அல்லாருக்கும் லைட்டா நினைவூட்டறேனுங்னா ...///// இதுக்கு ஒரே வழி British Rebellion குண்டு புக்குதான்.

      Delete
  89. Never Before முயற்சிக்குப் புள்ளையார் சுழி போட்டுள்ளேன் !! Fingers Crossed guys !//
    இந்த முறை பிள்ளையார் சுழியை கொஞ்சம் பெரிசா போடுங்க ஆசானே... எல்லாம் நல்லபடியா நடக்கும்..

    லட்சியம் 1000 நிச்சயம் அதுக்குமேல்

    என உறுதியெடுப்போம்...சரிதானே நண்பர்களே...

    ReplyDelete
  90. முத்து 50 ல் ஜானிக்கு இடம் வேண்டும் ...அவர் பழம்பெரும் ஹுரொ ...முடிஞ்சா பிரின்ஸ் 2 பக்க சாகசமாக இருந்தாலும் சரி...அப்புறம் டைகர் ...லக்கி...சிக்பில் ...சோடா ... Etc...combined. வேணும்.இது மாதிரி கதம்ப Special பாத்து ரொம்ப நாள் ஆச்சு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கதம்பமா 50 புக்ஸ் + மெகா பாக்ஸ்

      Delete
    2. ijayan8 July 2012 at 17:34:00 GMT+5:30
      princebecks : நியாயமான ஆதங்கமே ! அதே சமயம் இது போன்றதொரு மெகா பட்ஜெட் தயாரிப்பிற்கு ஒரு 'பளிச்'star cast தேவைப்படுகின்றதே ! லார்கோ ; டைகர் ; XIII என்று ஹிட் அடிக்கும் ஹீரோக்கள் தவிர்க்க இயலா அவசியங்களே

      Delete
    3. 50 பொஸ்தவங்களைப் புடிக்க டிரங்கு பொட்டி தான் ஆர்டர் போடணும் சார் !

      Delete
    4. செம்ம டைமிங் ஆசிரியரே!!! ROFL

      Delete
    5. //50 பொஸ்தவங்களைப் புடிக்க டிரங்கு பொட்டி தான் ஆர்டர் போடணும் சார்//

      ROFL ..

      Delete
  91. முத்துவின் 50 வது ஆண்டு மலர் NBS விட கூடுதலான பக்கங்கள் குறைந்தது 15 கதைகள் வேண்டும் முடிந்தால் எவர்கீரின் ஹீரோக்களுக்கு வாய்ப்பு தாருங்கள் முத்து காமிக்ஸின் தூணல்லவா அவர்கள்

    ReplyDelete
  92. சார் பழைய நினைவுகள் மீள பாக்கெட் சைஸ் குண்டு புக் ஒன்று முத்து 50 மலருக்காக

    தவிர ஒரு குண்டு புக் நார்மல் சைசில்

    ReplyDelete
  93. @ ALL : ஞாயிற்றுக்கிழமைக்கு வைத்துக் கொள்வோமே ஆண்டுமலர் # 50 பற்றிய அலசல்களை ?! ஞாயிறு காலையின் முதல் குறும்பதிவில் திட்டமிடலின் முகவுரை இருக்கும். அதன் மீது ஒரு புரிதல் கிட்டிய உடன் குறும்பதிவு # 2 போட்டிடுவேன் ! இதனில் ஆண்டுமலருக்கு என்ன சாத்தியம் ? என்ற முதல் template & அதன் சாதக, பாதகங்கள் இருக்கும். அதன் மீதான அலசல்கள் நிறைவுற்ற பின்னே, குறும்பதிவு # 3 - ஆண்டுமலரில் என்ன போடலாமென்ற template # 2 சகிதம் தலைகாட்டும் ! அதிலும் அலசியான பின்னே குறும்பதிவு # 4 with template # 3 !

    ஆகையால் ஞாயிறுக்கு உங்கள் பொழுதுகளை இந்த அலசல்களுக்கென ஒதுக்கி வைத்துக் கொண்டு பிரெஷாக ஆஜராக முயற்சியுங்களேன் guys ?

    ReplyDelete
    Replies
    1. சரி சார். இன்றைக்கு இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வைத்துக் கொள்வோம்.

      Delete
    2. அதைவிட வேறுஎன்ன வேலை விடுமுறை வேறு...சொல்ல வேண்டுமா..ஆசானே..ஒரு தரமான பட்டியலோடு கத்தை கதைகளோடு வருக...நாங்க ரெடி...நீங்க ரெடியா...??

      Delete
  94. NBS க்கு பிறகு வந்த ஆண்டுமலர்கள் சோபிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க சார்... டியுராங்கோ தவிர...

    ReplyDelete
  95. லேடி s. குளிர்கால குற்றங்கள்...இதுமாதிரி...

    ReplyDelete
  96. 50-வது ஆண்டு மலர்.



    நிச்சயமாக ஒரு மைல்கல் தருணம்.

    மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.


    ஆண்டு முழுவதும் 12 இதழ்கள் .

    புத்தம் புதிய ப்ரெஷ்ஷான மூன்று அல்லது ஐந்து பாக கதைகளாக , குண்டு புக்காக ஹார்ட் கவரில் வெளிவந்தால் வருடம் முழுவதும் கொண்டாட்டம்தான்.

    கத தேர்வை முடித்துவிட்டு,தனி சந்தாவை அறிவித்துவிடலாம்.

    முத்து காமிக்ஸ்காக சிறப்பு லோகோவோடு ஜொலிக்கும் புத்தம் பதிய இதழ்கள்.புத்தம் புதிய நாயகர்கள்.


    லோகோவை வடிவமைக்கும் வாசக நண்பருக்கு வாழ்த்துக்கள்.


    ஆசிரியர் குழுவுக்கு சாத்தியப்பட்டால் தெறிக்க விடலாம்.

    மற்ற வாசகர்களுடைய எண்ணங்களையும் முன்வைக்கட்டும்.அதன் பிறகு முடிவெடுக்கலாம்.

    ReplyDelete
  97. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete