Tuesday, May 18, 2021

நிஜங்களின் நிழல்கள்..!

 நண்பர்களே,

வணக்கம். நேற்றைய வில்லன்ஸ் பதிவு மெய்யாகவே உங்களின் நினைவாற்றல்களுக்கும் சரி, ரசனைகளுக்கும் சரி - சூப்பரானதொரு ஆடுகளமாகி இருந்ததை ரசித்தேன் ! Loveable வில்லன்ஸ் வரிசையில் தேர்வு ரொம்பவே சுலபமாய் இருந்தது டால்டன் சகோதரர்களின் புண்ணியத்தில் ! ஜோவும் சரி, மங்குணி அவ்ரெல்லும் சரி, ஏகப்பட்ட பேங்குகளை மாத்திரமின்றி ஏகப்பட்ட மனங்களையுமே கொள்ளையடித்திருப்பது புரிகிறது ! 

என் மட்டிற்கோ - அந்தப் பதவிக்கு ரொம்பவே உரிமையானவர் நமது மதியில்லா மந்திரியார் - 'நா மோடி மஸ்தான்'' தான் ! ஒவ்வொரு தபா புதுசாய் ஒரு திட்டம் துளிர்விடும் போதும் அந்தக் கண்களில் தெறிக்கும் ஆர்வமும், சுல்தானைப் பார்த்தவுடன் மட்ட மல்லாக்கா மட்டையாகிப் பசப்புவதும், எல்லாம் சொதப்பியான பின்னே தலையில் துண்டைப் போட்டபடிக்கே புலம்புவதும் செம class ! துரதிர்ஷ்டவசமாக மீசைக்காரருக்கு நீங்கள்  get out சொல்லிப் போட்டதால் - மனுஷனுக்கு மனசில் மட்டுமே இடம் தர வேண்டிப்போயுள்ளது ! அப்புறம் நியூயார்க்கையே கயிற்றைக் கட்டி இழுத்தும் போன அந்த ஸ்பைடருடன் மோதும் கண்ணாடிக்காரப் பார்ட்டியுமே "ஆதர்ஷமான வில்லர்ர்ர்ர்" பட்டியலில் உசத்தியான இடத்திலேயே !! இப்போ மட்டும் மனுஷன் வேலையின்றி சும்மா இருந்தாக்கா தமிழ்நாட்டையே அலேக்கா நகற்றி கொஞ்ச காலத்துக்கு நியூசிலாந்து பக்கமாய் இடமாற்றம் செய்யச் சொல்லிக் கேட்டுப் பார்க்கலாம் - அங்கெல்லாம் கொரோனாவே இல்லையாமே !! 

"டெர்ரர்" வில்லனெனில் -துளியும் தயக்கமின்றி  "தங்கக் கல்லறை" லக்னரை தான் சொல்லுவேன் ! அமரர் சார்லியே உருவாக்கிய இந்த வெறி கொண்ட கதாபாத்திரம் , ஓவியர் ஜிரோவின் கைவண்ணத்தில் ; அந்த மெர்சலாட்டும் கலரிங்கில் வேறொரு பரிமாணத்தில் மிரட்டியது ! என்றைக்கேனும் ஒரு crisp ஆன கௌபாய்ப் படம் எடுக்க எனக்கொரு வாய்ப்பு மட்டும் கிட்டினால், கண்ணை மூடிக்கொண்டு "தங்கக் கல்லறை"யை தான் ஆட்டையைப் போடுவேன் ! தனுஷை டைகர் வேஷத்துக்கும், தம்பி ராமையாவை ஜிம்மி ரோலுக்கும் போட்டுப்புடலாம் ! லக்னராக விஜய் சேதுபதி ? சும்மா தூள் கிளப்பாது ? யாராச்சும் அம்பது, அறுபது சி ரெடின்னா சொல்லுங்க சாரே - உங்களை புரொட்யூசராக்கிடலாம் !

நேற்றைய பதிவை டைப் செய்யும் போதே, அடுத்த டாபிக் பற்றியும் தலைக்குள் ஓடியது !  வில்லன்ஸ் - ரைட்டு ! நாயகர்கள் - ரைட்டோ ரைட்டு !! ஆனால் கடைசி வரையிலும் நாயகனுக்கு நிழலாகவே பின்தொடர்ந்து, அவன் வாங்க வேண்டிய சாத்துக்களையும் வாங்கிக்கொண்டு ; நட்பின் இலக்கணமாய் மிளிர்ந்து கொண்டு ; சாகசங்களில் சரி சமமாய்ப் பங்கெடுக்கும் அந்த "friend " கதாப்பாத்திரத்தை நாம் நிறைய நேரங்களில் taken for granted என்று எடுத்துக் கொள்கிறோம் ! 

  • CID லாரன்சுடன் மொட்டை ஜூடோ டேவிட் இல்லையெனில் ஏகப்பட்ட தருணங்களில் பல்ப் வாங்கியிருப்பார் !! 
  • நம்ம ஜானி நீரோ சாருக்கோ அழகான அம்மிணி ஸ்டெல்லாவின் சகாயங்கள் இல்லையெனில் கதை கந்தலாகிப் போயிருக்கும் !
  • நட்புக்குப் புது இலக்கணமே சொல்லும் வில்லி கார்வின் இல்லாத மாடஸ்டியை நினைத்தாவது பார்க்க முடியுமா ?
  • நிழலாய் ரிப் கிர்பிக்கு பணியாற்றும் பட்லர் டெஸ்மாண்ட்...
  • மாயாஜால மன்னன் மாண்ட்ரேக்குக்கு உறுதுணையான லொதார்....
  • சிஸ்கோவுடன் பயணிக்கும் பான்சோ....
  • 'உர்ர்ர்ர்,,,கிர்ர்ர்ர்.' என்றபடிக்கே மார்டினை கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்கும் ஜாவா...
  • சரக்கடிப்பதே சொர்க்கமென்று கிடந்தாலும் கேப்டனை பாதுகாக்கும் பெருசு பார்னே ....
  • 'சரக்குக்கே சகலமும்' என்று திரிந்தாலும், 'தளபதி'யின் வலது கரமாக உலவும் ஜிம்மி,...
  • "சர்வமும் நானே" என பிரகடனம் செய்திடும் 'தல'யின் ஆத்மார்த்த நண்பனான வெள்ளி முடியார் கார்சன்....
  • "சின்னக் கழுகாரை" கண்ணிமை போல காத்திடும் டைகர் ஜாக்...!
  • ஜாலியான முதலாளி லார்கோவின் ஜாலியா ஜாலியான தோஸ்த் சைமன்...
  • நிழல்களுக்கு 4 கால்களும் இருக்கலாம் தானென்று நிரூபிக்கும் ஜாலி ஜம்பர்..
  • மொக்கைபீஸாக வலம் வந்தாலுமே மாஸ்டரை விட்டுத் தரா டாக்டர் வேஸ்ட்சன்....

என்று அடுக்கிக் கொண்டே போகலாமல்லவா - நாம் இதுவரையிலும் பார்த்துள்ள நிஜங்களின் நிழல்களைப் பற்றி ? So இன்றைய பதிவில் சொல்லுங்களேன் guys - உங்களின் ஆதர்ஷ துணை நாயகர் யாரென்று ? ஏனென்று ? 

And இந்த மேற்படிப் பட்டியலில் இன்னமும் சேர்த்திட வேண்டிய பெயர்களை பற்றி ? 

Bye guys....Safe Tuesday to all ! See you around !












156 comments:

  1. Replies
    1. அதான்...

      நீங்கள் இருக்குறிங்களே வைத்தியரய்யா...

      நலமாக இருக்கிறீர்களா

      Delete
    2. ஐ...நேத்துலருந்து உங்கள காணமேனனு நெனச்சிட்டே இருந்தேன் செனா.....இன்னைக்கு கேட்டு பதிவிடலாம்னு தயங்கிட்டிருந்தன்...வந்தாச்

      Delete
    3. Welcome Sir.
      நீங்கள் இல்லாமல் நிறைய விஷயஙகளை மிஸ் செய்து உள்ளோம்.

      Delete
  2. நம்ப முடியவில்லை

    ReplyDelete
  3. அப்பாடா நாளுக்குள்ள யாது வந்தாச்சு

    ReplyDelete
  4. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  5. // அந்தப் பதவிக்கு ரொம்பவே உரிமையானவர் நமது மதியில்லா மந்திரியார் - 'நா மோடி மஸ்தான்'' தான் ! ஒவ்வொரு தபா புதுசாய் ஒரு திட்டம் துளிர்விடும் போதும் அந்தக் கண்களில் தெறிக்கும் ஆர்வமும், சுல்தானைப் பார்த்தவுடன் மட்ட மல்லாக்கா மட்டையாகிப் பசப்புவதும், எல்லாம் சொதப்பியான பின்னே தலையில் துண்டைப் போட்டபடிக்கே புலம்புவதும் செம class ! //

    100% Agreed. I liked this special vanakam "சுல்தானைப் பார்த்தவுடன் மட்ட மல்லாக்கா மட்டையாகிப் பசப்புவதும்"

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. // // ஒரு crisp ஆன கௌபாய்ப் படம் எடுக்க எனக்கொரு வாய்ப்பு மட்டும் கிட்டினால், கண்ணை மூடிக்கொண்டு "தங்கக் கல்லறை"யை தான் ஆட்டையைப் போடுவேன் ! தனுஷை டைகர் வேஷத்துக்கும், தம்பி ராமையாவை ஜிம்மி ரோலுக்கும் போட்டுப்புடலாம் ! லக்னராக விஜய் சேதுபதி ? //

      செம தேர்வு! கதை மற்றும் அதன் கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள், ஆனால் தம்பி ராமையாவிற்கு பதில் வேறு யாரையாவது யோசிக்கலாம் சார்!

      Delete
  7. என்னுடைய ஃபேவரைட் எப்போதுமே கார்சன் தான்.

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. என்னோட சாய்ஸ் ஜாலி தான்; இல்லன்னா ஒவ்வொரு முறையும் சலூன் ஜன்னல்ல இருந்து குதிக்கற லக்கியை தாங்கி பிடிக்கிறது யாராம்?

      Delete
    2. செம்ம இல்ல செம்ம

      Delete
  9. பதிவை முழுவதும் படித்து விட்டேன்! நன்றி!

    ReplyDelete
  10. எனது ஓட்டு வெள்ளி முடியாரே ( குணத்தில் தங்கம் அல்லவா )❤❤❤❤❤❤❤❤❤❤

    ReplyDelete
  11. ஏன் மதியில்லா மந்திரியாரின் ஆல்கை இருக்காரே நிழலாக...

    ReplyDelete
  12. // உங்களின் ஆதர்ஷ துணை நாயகர் யாரென்று ? ஏனென்று ? //
    எப்போதும் சிறந்த துணைவர் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் கார்ஸன் தான்...
    ஏனெனில் அவர்களுக்கு இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி அபாரமானது...
    இருளின் மைந்தர்கள் கதையில் கூட இக்கட்டான ஒரு தருணத்தில் டெக்ஸை காக்க கார்ஸனும்,கார்ஸனை காக்க டெக்ஸும் போராடுவார்கள்...
    பல ஆபத்தான தருணங்களில் கார்ஸன் டெக்ஸிடம் சொல்வது எதுவாயினும் இணைந்தே ஆபத்தை ஏற்போம்...
    இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம்...

    ReplyDelete
  13. நானும் ஒரு முறை யோசித்தேன் ஆசிரியரே தங்க கல்லறையை படமெடுத்தால்... ஹீரோவை பற்றி யோசிக்கவில்லை ஆனால் வில்லனாக செந்திலையும் செந்தில் போன்றே இருக்கும் இன்னொரு நடிகரையும் ( பெயர் நினைவில்லை யாருக்காவது தெரிந்தால் ஞாபகப்படுத்தவும் ) வயிற்று எடுக்கலாம் என்று நினைத்தேன். தங்க கல்லறை புத்தகத்தைப் படித்தபோது...

    ReplyDelete
    Replies
    1. ///செந்திலையும் செந்தில் போன்றே இருக்கும் இன்னொரு நடிகரையும் ( பெயர் நினைவில்லை யாருக்காவது தெரிந்தால் ஞாபகப்படுத்தவும் )///

      ஜெயமணி.!

      Delete
    2. 👌👌👌👌😂🙏🙏🙏🌹

      Delete
  14. Replies
    1. சூப்பர் பழனி

      Delete
    2. நம்ம எண்ணம் எப்பவும் அங்கயே சுத்துதா தலைவரே வேற வழி...

      Delete
    3. வாவ்....உங்களின் இரத்தபடல காதல் வேறு லெவல்ல பயணிக்கிறது பழனி. தொடருங்கள்& ஆச்சர்யங்களையும்!

      Delete
    4. என்ன இந்த ஆகஸ்ட் வரை பேசுவோம்.. அப்புறம் மறுபடியும் ஆரம்பிக்க 5-6 வருஷம் ஆகிவிடுமே...

      Delete
    5. ///மறுபடியும் ஆரம்பிக்க 5-6 வருஷம் ஆகிவிடுமே...///

      ஹா...ஹா....!! சரியான டைமிங்!

      (அந்த இடைவெளியில் டிஜிட்டல் மீடியம் வந்துடும்னு நினைக்கிறேன்)

      Delete
    6. நிச்சயமா நண்பரே...வேற லெவல்ல போய்க்கொண்டு இருக்கும் நம்ம காமிக்ஸ்.... digital சந்தா prime சந்தா என பட்டைய கெளப்பிக்கொண்டிருக்கும்..சார் இரத்தப்படலம் வேணும் என கேட்டால் எப்படி வேணும் 3 பாகமா 4பாகமா என நண்பர்களின் விருப்பங்களுக்கேற்ப்ப வாங்கும் வசதி வந்துவிடும்...நாமலே சொந்தமா குண்டு புக் பைண்டிங் மெஷின். வாங்கியிருப்போம்...

      Delete
  15. Dear Editor
    My favorite Sideshow man is Carson without a doubt
    He is the reason Tex is such a success
    In fact to me the most iconic tex book of all time is Karsonin Katandha Kalam.
    His willingness to put himself in the line of danger thats directed at Tex separates him from any other aforesaid sideshow men.
    He is the backbone of Tex Willer comics
    success .
    Regards
    Arvind

    ReplyDelete
  16. நிழல்களுக்கு 4 கால்களும் இருக்கலாம் தானென்று நிரூபிக்கும் ஜாலி ஜம்பர்.

    சர்வமும் நானே" என பிரகடனம் செய்திடும் 'தல'யின் ஆத்மார்த்த நண்பனான வெள்ளி முடியார் கார்சன்....


    இவர்களோடு...

    சிக்பில்லுக்கு நிழலாக வரும் குள்ளன்..!பலமுறை குள்ளன் இல்லையென்றால் சிக்பில்லின் கதி அதோகதியாகியிருக்குமே.!

    and of course... டாக்புல் மற்றும் கிட் ஆர்டின்..! இவர்கள் இல்லையென்றால் கதையே நஹி..!

    ReplyDelete
  17. ///தங்கக் கல்லறை"யை தான் ஆட்டையைப் போடுவேன் ! தனுஷை டைகர் வேஷத்துக்கும், தம்பி ராமையாவை ஜிம்மி ரோலுக்கும் போட்டுப்புடலாம் ! லக்னராக விஜய் சேதுபதி ? ///

    தயவுசெய்து இதுபோன்று விபரீத கற்பனைகள் செய்வதை தவிர்க்கவேண்டுகிறேன் ஐயா..! ;-)

    ReplyDelete
  18. தலைவர் ஸ்பைடர் கூட இருக்குற ப்ரொபெஸர மறந்துடீங்களே எடிட்டர்...

    ReplyDelete
  19. மனதை கவர்ந்தவர்கள் என்று பார்த்தால்,

    1. பார்னே
    2. டெஸ்மாண்ட்
    3. ஜிம்மி
    4. கார்ஸன்
    5. டைகர்

    ஆனால் யதார்த்தம் யாதெனில், பிரிக்கவே முடியாத ஜோடிகள் இவர்களே,

    1. மாட்ஸ்டி & வில்லி கார்வின்
    2. லாரன்ஸ் & டேவிட்
    3. இரட்டை வேட்டையர் ஜார்ஜ் & ட்ரேக்

    ஆனால் கற்பனையில் கூட பிரித்து பார்க்க முடியாத, நிழலாகவே தொடரும்

    "ஜாலி ஜம்பர்"

    தான் பொருத்தனான தேர்வாக இருக்கும்



    ReplyDelete
    Replies
    1. //
      ஆனால் கற்பனையில் கூட பிரித்து பார்க்க முடியாத, நிழலாகவே தொடரும்

      "ஜாலி ஜம்பர்"

      தான் பொருத்தனான தேர்வாக இருக்கும் // சத்தியமான உண்மை. வரவர அருமையாக எழுதுறீங்க வாழ்த்துக்கள்.

      Delete
    2. சிறு வயது முதலே "ஹாட் லைன்" ரசிகர்களுக்கு எழுத வரவில்லை என்றால் தான் ஆச்சர்யம் ஜி

      Delete
    3. Thirunavukkarasu Vazzukkupparai @ very good!

      Delete
    4. நன்றிகள் பல நண்பர்களே

      Delete
  20. எனது ப்ரோபைல் படத்திலேயே பதில் இருக்கு அது ஜகஜால கில்லாடி
    ஜாலி ஜம்பர்.

    ReplyDelete
  21. தாங்கள் குறிப்பிடும் அனைத்து துணை பாத்திரங்களும் ரொம்பவே பிடிக்கும் எனினும் என் மனதுக்கு எப்போதும் நெருக்கமாக உணர்வது பிரின்ஸ் கதைகளில் வரும் 'பார்னே' தான். பிரின்ஸ் கதைகள் நம் மனதை கொள்ளை கொண்டதற்கு அந்தக் கதையில் வரும் பார்னேவும் முக்கிய காரணம். அதுவும் 'கொலைகார கானகத்தில்' இவர் நிகழ்த்தும் சாகசம் அட்டகாசமான ஒன்று.

    அடுத்து 'டெஸ்மாண்ட்'. குறிப்பாக 'காசில்லா கோடீஸ்வரனில்' எனக்கு இவரை அவ்வுளவு பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. // என் மனதுக்கு எப்போதும் நெருக்கமாக உணர்வது பிரின்ஸ் கதைகளில் வரும் 'பார்னே' தான். //

      +1

      Delete
    2. எனக்கு பிடித்த இருவரையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

      இன்னொருவரையும் நான் குறிப்பிடுகிறேன். ஜூடோ டேவிட்.(இவருடைய தனித் தன்மை தெரியவேண்டுமானால் 'பனிக்கடலில் பயங்கர எரிமலை' 'சிறைப்பறைவைகள்' உணரலாம்)

      அப்புறம் ஒன்றை சொல்ல மறந்து விட்டேன் கார்வின் இவர்களிலெல்லாம் அடங்க மாட்டார்.

      என்மனத்தில் இவருக்குத்தான் முதல் இடம்!!!

      Delete
  22. My ஃபேவரைட்

    1. பார்னே
    2. டெஸ்மாண்ட்
    3. டேவிட்
    4. கார்சன்
    5. Kid ஆர்டின்

    ReplyDelete
  23. என்னளவில் சிறந்த துணை என்றால் அது பூப்போட்ட டவுசரின் செகரட்டரி - அழகுப் பதுமை - ஸ்டெல்லா தான்!😻😻😻

    காரணம் :
    சம்பளம் வாங்குவது செக்கரட்டரி வேலைக்குத்தான் என்றாலுமே கூட, தன் உயிரையும் பணயம் வைத்து பல சமயங்களில் தன் முதலாளியின் உயிரைக் காப்பாற்றிவரும் அந்த டெடிகேஷன் தான்!

    அப்படியாப்பட்ட சிறந்த செகரட்டரியை - அந்த அழகுப் பதுமையை - அந்த பூப்போட்ட டவுசர் பார்ட்டி எப்போதுமே கண்டுகொள்வதே இல்லை என்பதே என் நீண்டகால கொந்தளிப்பு!😠😠😠

    அந்தப் பிஞ்சு மனசு என்ன பாடுபட்டிருக்கும்?!!😩😩😩

    வெட்டத்தெரியாதவனுக்கு ஆயிரம் அரிவாளாம்!! ஹூம்..😤😤😤

    ReplyDelete
    Replies
    1. ///அப்படியாப்பட்ட சிறந்த செகரட்டரியை - அந்த அழகுப் பதுமையை - அந்த பூப்போட்ட டவுசர் பார்ட்டி எப்போதுமே கண்டுகொள்வதே இல்லை என்பதே என் நீண்டகால கொந்தளிப்பு!😠😠😠///

      அவரு கண்டுக்காம இருக்கிறதுதான் நமக்கு நல்லது குருநாயரே.!

      Delete
    2. ///அவரு கண்டுக்காம இருக்கிறதுதான் நமக்கு நல்லது குருநாயரே.!///

      நமக்கா?!!🤔🤔🤔

      Delete
    3. // செக்கரட்டரி வேலைக்குத்தான் என்றாலுமே கூட, தன் உயிரையும் பணயம் வைத்து பல சமயங்களில் தன் முதலாளியின் உயிரைக் காப்பாற்றிவரும் அந்த டெடிகேஷன் தான்! //

      Well said!

      Delete
    4. ///அவரு கண்டுக்காம இருக்கிறதுதான் நமக்கு நல்லது குருநாயரே.!///

      நமக்கா?!!🤔🤔🤔//////



      தெரியாத்தனமாக இவ்வளவு பொதுவெளியில் ஒப்புதல் வாக்குமூலம் குடுத்திருக்கீங்களே ....கிட்.

      உங்களுடைய குருநாயர் தனக்கு ஒன்னுமே தெரியாத மேரி நழுவறத பாருங்க.

      Delete
    5. அவருக்கு மெய்யாலுமே ஒண்ணுமே தெரியாதுங்க.!

      Delete
    6. @Sri ram & KOK

      மெய்யாலுமே நீங்க என்ன பேசுறீங்கன்று நேக்கு புரியலை!😌😌

      Delete
  24. எப்போதுமே நம்ம ஜிம்மி தான் ஆல்டைம் பேவரிட்.. சிறுவயதில் படம் பேர் போடும்போது கவுண்டமணி செந்தில் பேர் வரவில்லை எனில் மனதில் ஒரு மெல்லிய சோகம் வரும். அதே சோகம் ஜிம்மி இல்லாத சாகசத்தை படிக்கும் போதும் வரும்.

    அவரை அடுத்து பார்னே தான் பெஸ்ட்.

    ReplyDelete
  25. அடுத்த சிறந்த துணை - வில்லி கார்வின்!

    உலகம் முழுக்க நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களும், எண்ணிலடங்கா டாக்டர்களும் பாய் ஃப்ரண்டுகளாக இருந்தபோதிலும் (தமிழ்நாட்டிலும் உள்ளதென்று கேள்வி!) அதையெல்லாம் கண்டும் காணாமல் சகித்துக்கொண்டு, கூப்பிட்ட குரலுக்கு 'இதோ வந்துட்டேன் இளவரசி' என்று தன் கேர்ள் ஃப்ரண்டைக்கூட பாதியிலேயே தவிக்கவிட்டுத் தாவியோடி வந்து நிற்கும் அந்த நிபந்தனையில்லா நட்பை என்ன சொல்லிப்பாராட்டுவது?!!

    கார்வின்.. யூ ஆர் க்ரேட்!!
    🤝🤝

    ReplyDelete
    Replies
    1. // வில்லி கார்வின் கூப்பிட்ட குரலுக்கு 'இதோ வந்துட்டேன் இளவரசி' //
      // அந்த நிபந்தனையில்லா நட்பை என்ன சொல்லிப்பாராட்டுவது?!! //

      +1
      I like him!

      Delete
  26. தங்க கல்லறை படமாக்க அம்பது அறுபது சி வேணுமா சார்... 🤔🤔🤔🤔

    ReplyDelete
    Replies
    1. அது என் டைரெக்ஷனுக்கான சம்பளம் சார் ; தனுஷ் ; விஜய் சேதுபதிலாம் கலை சேவை செய்வார்கள் !

      Delete
    2. யாரங்கே..
      அடுத்த வருசத்தின் சிறந்த டைரடக்கருக்கான 'தாத்தா' சாக்கேப் பால்கே விருதை தயாரா வையுங்கோ.!

      Delete
    3. அடி ஆத்தி 🙄🙄🙄🙄

      Delete
    4. திடும்னு கலைத்துறை மேல ஆசிரியருக்கு ஆர்வம் ஏற்பட்டது ஆச்சர்யமா இருக்கு.

      பத்ம பூசண்,பத்ம ஸ்ரீ விருதுகள் அந்த துறையில் இருப்பவர்கள் பெறுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
      கலைத்துறையோ, பத்திரிக்கைத்துறையோ சரியான பங்களிப்பை செய்தால் , அதற்குரிய அங்கீகாரம் நிச்சயமாக இருக்கும்.

      உழைப்பின் பலன் நிச்சயம் ஏமாற்றமாக இருக்காது என்பதுதான் உண்மை.
      பத்திரிக்கைத் துறையில் இருப்பவர்கள் பத்ம ஸ்ரீ விருது பெற இயலாது என்ற நிலை இருப்பது போல் தோன்றவில்லை.

      இயக்குனரை விடவும் சிறந்த பத்திரிக்கையின் ஆசிரியர் என்ற குல்லாதான் சிறப்பாக இருப்பது போல் தோன்றுகிறது.

      அனைத்தையும் விடவும் ஆசிரியர் அவர்களது மேன்மையான உடல் நலமும், ஆரோக்கியமான வயதும் அதிகரித்தால் அனைத்தையும் தங்களுடைய காலடியில் காலம் கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.💐💐💐💐💐.

      Delete
  27. அவ்வளவு ஆகுமா சார் 🤔🤔🤔🤔

    ReplyDelete
  28. முத்து 50வது ஆண்டு மலர். அடுத்த வாரம் மிகப்பெரிய யுத்தம் இருப்பதுபோல் பற்றி சொல்கிறது..

    ReplyDelete
  29. ///And இந்த மேற்படிப் பட்டியலில் இன்னமும் சேர்த்திட வேண்டிய பெயர்களை பற்றி ? ///

    என்ன சார் ஸ்பைடரின் சகாட்கள் - பெல்ஹாம் & ஆர்டினியை விட்டுப்புட்டீங்களே?

    ReplyDelete
    Replies
    1. குற்றச் சக்கரவர்த்திக்கு ஆராச்சும் துணை என்று சொன்னாலே கண்ணைக் குத்திப்புட மாட்டார் ? அவனுக அல்லக்கை பட்டியலுக்கே !

      Delete
  30. /// தனுஷை டைகர் வேஷத்துக்கும், தம்பி ராமையாவை ஜிம்மி ரோலுக்கும் போட்டுப்புடலாம் ! லக்னராக விஜய் சேதுபதி ? சும்மா தூள் கிளப்பாது ? யாராச்சும் அம்பது, அறுபது சி ரெடின்னா சொல்லுங்க சாரே - உங்களை புரொட்யூசராக்கிடலாம் !///

    தமிழ்நாட்டிலே ஆள் கிடைக்கறது கஷ்டம்! நீங்கவேணா இலங்கைப் பக்கம் தேடிப்பாருங்களேன் சார்? 😁😁

    ReplyDelete
  31. ஹீரோக்களை விடவும், வில்லன்களை விடவும் துணை வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே அற்புதம் தான் என்னும் போது ஒருவர் மட்டும் தெரிவு செய்வது என்பது இயலாத காரியம் என்னளவில்!

    ReplyDelete
  32. வில்லி கார்வின். யதார்த்த வாழ்க்கையில் பெண்ணிற்கு இது போன்ற ப்ளாடினிக் நண்பன் கிடைப்பது அரிது.

    அப்பறும் ஜாலி ஜம்பர்.

    அப்புறம் கார்சன்

    ReplyDelete
  33. அனைவருக்கும் வணக்கம் சொல்வது சின்னமனூர் சரவணர்ங்க....

    ReplyDelete
  34. மதியில்லா மந்திரி போடுற குயுக்தியான திட்டங்களும் அவை சுவாரசியமான முறையில் தோல்வியடைவதையும் நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார்கள்.

    ReplyDelete
  35. கார்வின்
    கார்சன்
    ஜிம்மி
    பார்னே.

    ReplyDelete
  36. டைலன் டாக் +க்ரொளசோ

    ReplyDelete
  37. ஜில் ஜோர்டான் .இவர் ஜோடிப் பெயர் மறந்துவிட்டதே?

    ReplyDelete
  38. 1.Jolly
    2. Karson

    3. Jimmy & Red
    4. Belham
    5. Simon

    ReplyDelete
  39. ரொம்ப சிரமமான தேர்வாகத்தான் இருக்கும்.

    இரட்டையர் ஜோடிகளில் நாயகனுக்கு இணையான தோழமை.

    எதிர்பார்ப்புகள் அற்ற நிபந்தனையில்லாத அன்பு.
    ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இயலாத சூழலிலும் மனதை புரிந்துகொள்ளும் ஆற்றல்.

    தன்னலம் பாராமல் ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பது என்று பலதரப்பட்ட காரணங்களை உட்படுத்தினால் மாடஸ்டி-வில்லி கார்வின் இணைதான் சிறந்தது.

    மனிதர்களுக்கு அப்பாற்பட்டும் குருதையோடும் நட்பு பாராட்ட முடியும் என்று லக்கி பல இடங்களில் சாதித்துள்ளது புரிகிறது.

    டெக்ஸ்,லார்க்கோ,மாடஸ்டி,டைகர்(ஜிம்மி-ரெட்) இன்ன பிற நாயகர்களுக்கு பக்கபலமாக பல நண்பர்கள் இடம்பெற்ற சாகசங்கள் உண்டு.

    ஆனால் தனிமையே துணைவனாக பயணிக்கும் லக்கி லூக்கிற்கு ஜாலி ஜம்பரை விடவும் சிறந்த நட்பு அமைவது கடினம்.


    ஜாலி ஜம்பர் என்னுடைய தேர்வு.



    ஜாலி ஜம்பர்;

    ஏ....லக்கி நீ தம்மடிக்கிறத....விடுப்பா...

    லக்கி லூக்....(ஏனென்ற கேள்விகளோடு ஜாதியை பார்க்கிறார்.)

    ஜாலி ஜம்பர்;

    இல்லப்பா ....தம்மடிக்கிறவங்கள விடவும் ....பக்கத்தில் இருக்கிறவங்க தான் அதிகமாக பாதிக்கப்படறதா...இந்த மேகஸின்ல போட்டிருக்கு.... அதான்.

    லக்கி லூக்;
    தனிமையே துணைவனா இருக்கிற எனக்கு பக்க பலமா எப்பவும் கூட இருக்கிறது நீதான்.உனக்காக இதக் கூடவா விட்டுத்தரமாட்டனா???

    ஜாலி ஜம்பர்;
    அப்ப அதுக்கு பதிலா இந்த புல்லை வாயில் கடிச்சுக்கோ..... எளிதில் மறந்து விடலாம்.

    லக்கி லூக்;

    நான் புல்லை கடிப்பது இருக்கட்டும் பையா....மேகஸின்ல பாதிதா இருக்கே....மீதி பாதி எங்கடா கண்ணா!!!! விழுங்கிக் டியா????.

    ஜாலி ஜம்பர்;

    ஏவ்வ்வ்வ்வ்வ்வ்....(பெரிதாக ஏப்பம் விடுகிறது.)

    ReplyDelete
    Replies
    1. @ பரணி

      சும்மாதான இருக்கிறம்னு எழுதறது.

      குவாரண்டைன் நாட்களை மன அழுத்தம் இல்லாமல் கடக்க தளம் உதவிகரமாக உள்ளது.
      தினப்படி ஒரு பதிவு என்பது ஆசிரியருக்கு சற்று சவாலான விஷயம்.இதற்காக ஆசானுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

      சில நேரங்களில் நண்பர்களுடைய பதிவுகளுக்கு பதிலளிக்க முடியாமல் அமைந்து விடுகிறது.அந்த வருத்தம் மனதுக்குள் எப்பொழுதும் இருக்கிறது.

      இவற்றையெல்லாம் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளது.

      தளத்தில் ஏதாவது பதிவிட்டு நம்முடைய பங்களிப்பையும் தர வேண்டும் என்ற ஆர்வத்தில் சில பதிவுகளை இடுகிறேன்.

      காமிக்ஸை நேசிக்கும் பல நூறு வாசகர்களில் மிகவும் சாதாரணமான (comen man) வாசகர்களில் ஒருவன்.

      மற்றபடி இந்த தளத்தில் மற்றவர்களுடைய பதிவுகளை வாசிப்பதில் தான் நிறைவே.



      தளத்தை உயிர்ப்போடு வைத்துள்ள ஒவ்வொருவரும் வணக்கத்துக்குரியவர்கள்தான்.

      தங்களுடைய அன்புக்கு அளவுகடந்த நன்றி.

      Delete
    2. @sriram அருமை சார், லக்கி ஜாலி டயலாக்!

      Delete
    3. @ Saravanakumar.

      நன்றிகள் சார்.

      Delete
    4. தயவு செய்து சார் என்ற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்த வேண்டாம் நண்பர்களே!

      அது நமது ஆசிரியர் மற்றும் செனா அனா போன்றவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

      இயல்பாக ஒருமையில் அழைக்கலாம்.

      Delete
  40. கார்சன் , கார்வின், சைமன், ஜாலி , ஜாவா, பார்னே ..

    //சேர்த்திட வேண்டிய பெயர்களை பற்றி//

    ஜால்ரா பாய் , டாக் புல், ஸ்குபி - ரூபி (bluecoats)..

    ReplyDelete
  41. கார்வின்


    கார்ஸன்..


    சைமன்

    ReplyDelete
  42. ஆஹா! எத்தனை இன்பமடா உலகில்!!

    காலை எழுந்ததும் படிப்பது :
    காமிக்ஸ், பிஸினஸ் லைன்

    பின்பு கணிவு கொடுக்கும் நல்ல பாட்டு :
    தமிழ், தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு

    மாலை முழுதும் விளையாட்டு :
    சேஸ், கேரம்

    என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா!

    வழக்கப்படுத்திக் கொள்ள கொரானாவும், பாக்கெட்டில் உள்ள பணமும் குறையாமல் நீடிக்க வேண்டும்!

    ஆனாக்கா வாய்ப்பில்லையே! எப்படியும் ஒன்று குறைந்தே தீருமே!!

    ReplyDelete
  43. கார்ஸன்

    வில்லி கார்வின்

    சைமன்

    ஜாலி ஜம்பர்

    ReplyDelete
  44. காமெடி த்ரில்லர்....லார்கோவ முதல் பாகத்ல நாடகமாடி காக்கும்....பைக்ல ஏல ஆஃபீசுக்குல நுழைஞ்சு லார்கோ சொத்த மீட்டுத் தந்த....பைக்கை எடுத்தாலே கலக்கி....காமடிலயும் தூள் கிளப்பும் லார்கோ வின்ஞ் ஏர்லைன்ஸ் சேர்மன் சைமன்தான் நண்பனுக்கெல்லா நண்பன்

    ReplyDelete
  45. ஆதர்ச துணை நாயகன் என்றால் எனக்கு என்றும், எப்பொழுதும்... "வில்லி கார்வினே"....

    இளவரசிக்கு எவ்வளவோ நண்பர்கள் இருந்தாலும்... வில்லி கார்வினைப் போன்ற ஒரு உயிர் நண்பன் மட்டுமில்லையேல்... அவரது அதிரடி சாகசங்கள் தம் shineஐ இழந்திடும்... சற்றும் அயராமல், இளவரசியின் எந்தவொரு உத்தரவு/அவா ஆக இருந்தாலும்... ஏனென்று கேட்காமல் திறம்பட செய்யும் கார்வினின் நட்பைப் பெற்ற... இளவரசி கண்டிப்பாக ஒரு அதிர்ஷ்டசாலியே... Peter O'Donnell எந்தளவிற்கு இளவரசியை உருவாக்கிட சிரத்தை மேற் கொண்டாரோ... அந்தளவிற்கு கார்வினையும்... பார்த்து பார்த்து வடித்துள்ளார்... கார்வினின் lazy witஉக்கும், sarcastic humorஉக்கும் நான் ஒரு பரம விசிறி...

    So my vote is for WILLIE GARVIN.... !!!

    ReplyDelete
    Replies
    1. டாக்டர்களின் விருப்பம் தெரிந்தது தானே..

      Delete
    2. Rummi,

      // டாக்டர்களின் விருப்பம் தெரிந்தது தானே. //

      Timing :-)

      Delete
  46. எனது சாய்ஸ்

    1. கார்வின் இளவரசியின் உற்ற நண்பன். அவர் மனதில் நினைப்பதை செய்து முடிப்பவர்

    2. கார்சன் அந்த குருந்தாடிகாரர் இல்லாமல் தலையை நினைத்து பாற்கமுடியவில்லை. அவர் இல்லாமல் தலையின் பயணங்கள் சிறக்காது. அனைத்து தருணங்களிலும் கூட இருந்து புலம்பினாலும் காப்பவர். பல நேரங்களில் தல பிழைத்தாரா என தெரிந்துகொள்ள அவரிடம் உள்ள பதட்டம் நமக்கு வந்துவிடும்.

    3. பார்னே மற்றும் பொடியன் : இருவருமே பிரின்ஸ் கழுகில் இன்றியமையாதவர்கள் அதுவும் அந்த சதுப்பு நிலத்தில் கொசுக்கள் படை சூழ ப்ரின்ஸை தோளில் சுமந்து கொண்டு வந்து காப்பாற்றும் ஒரு நிகழ்வு போதும்.

    4. டெஸ்மாண்ட் : ripkirpy யே ஒரு அமைதியானவர் அவருக்கு ஏற்ற துணை. சிறந்த பட்லர். அவரும் சில நேரம் பிரச்னையில் மாட்ட அவர் சொல்லாமலே ரிப் வந்து உதவுவது அவர்களுக்குள் உள்ள அந்நியோனியத்தை பறைசாற்றும்

    5. குள்ளன் மற்றும் சிக்பில் : ஷெரீப் பண்ணும் அராஜகம் மற்றும் கிட் ஆர்டின் அப்பாவித்தனம் அனைத்தையும் சமாளித்து அவர்களை காப்பாற்றுவார்கள்.

    6. ஜாலி - லக்கியின் உற்றதுணை ஜாலி இல்லாமல் லக்கியால் கண்டிப்பாக சமாளிக்க முடியாது. அவருக்கு காபி கொடுப்பதில் இருந்து தூங்கினால் பாதுகாப்பாக கீழே விழாமல் கூட்டி போவதில் இருந்து அனைத்து விஷயமும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

    8. ப்ரொபெசர் மட்டும் ஆர்டினி : என்னதான் ஸ்பைடர் மேல் உள்ள பயத்தினால் கூட இருந்தாலும். எந்த நேரம் அவன் எப்படி மாறுவான் என்று தெரியாவிட்டாலும் பல நேரங்களில் அவர்களது விசுவாசத்தை காட்டியுள்ளார்கள்.

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. 1. Willie Garvin - nothing can ever reach that which exists between Modesty and Willie
    2. Kit Carson

    ReplyDelete
  49. 1.கார்சன்- நிறைய சம்பவங்களில் இவர் டெக்ஸின் நிழலாக உற்ற துணையாக இருந்து உள்ளார். ஓருயிர்-ஈருடல்!

    பவளசிலை மர்மம் & இருளின் மைந்தர்கள்- சமீபத்திய உதாரணங்கள்!

    2.ஜிம்மி- பல கதைகளில் ஜிம்மி இல்லைனா டைகருக்கு ஜெயம் இல்லை! அதேபோல ஜிம்மயின் உயிரை டைகர் பலதடவை காத்துள்ளார். பரஸ்பரம் அருமையான சோடி! அந்த தங்கத்தில் கால் பாகத்தை ஜிம்மி க்கும் ரெட்டுக்கும் பகிர்ந்தளிப்பது டைகர் உயர்ந்த இடம்.

    3.டெஸ்மான்ட்- ஜென்டில்மேன் ரிப்புக்கு அற்புதமான தோழன். ஒரு கதையில் கோல்ஃப் விளையாட்டில் ரிப் வெல்ல வாய்ப்பே இல்லாத நிலையில், டெஸ்மான்ட் தன் மனவலிமையால் அந்த பாலை பாக்கெட் பண்ணுவார். ரிப் அபார வெற்றி பெறுவார். எதிராளி திகைத்து நின்றிடுவான். டெஸ்ஸின் நட்பில் உச்சகட்டமாக இதை நான் கருதுகிறேன்.

    ஸ்பெசல் தேர்வு:-

    வில்லி கார்வின்-- பல உதாரணங்கள்! கழுகு மலைக்கோட்டை படிச்சிட்டு இவர்கள் நட்பை பார்த்து ஸ்டன் ஆகாதோறும் உண்டோ!
    (சென்றாண்டு நடைபெற்ற "என் டாப் காமிக்ஸ் நாயகன்"-கட்டுரை போட்டியில் இந்த சோடியை பற்றி கட்டுரை எழுதி இருந்த அருமை நண்பர் டாக்டர்.AKK- முதல் இடம் பெற்றார். நடுவராக இருந்த என்னை சரப்ரைஸ் பண்ணியது இந்த சோடியின் மீது நண்பர் டாக்டர் காட்டிய பற்று)

    ReplyDelete
  50. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

    வில்லி கார்வினுக்கு நன்றி செலுத்துதல் ஒரு காரணமாக இருந்தாலும் அதெயெல்லாம் மீறி life risk எடுக்கும் கார்வினின் நட்பே முதல் 3 இடங்களில் 1

    வெள்ளிமுடியார் கார்ஸன் ,டெக்ஸ் இல்லையென்றால் உயிர் வாழ்ந்து என்ன செய்ய என்று யோசிக்கும் அளவுக்கு டெக்ஸ்தாசன் ."டெக்ஸ் மட்டும் இறந்திருந்தால்ல அந்த மேஜர் வெல்மேனை இந்த கரங்களால் கழுத்தை நெறித்து கொல்வேன்" என்று சபதம் செய்யும் அளவுக்கு வெறி பிடித்த உற்ற நண்பன் முதல் 3 இடங்களில் 2

    ஸ்டெல்லா மோதலில் தொடங்கிய நட்பு ,காரியதரிசியாக தொடர்கிறது.ஆனால் முதலாளி தொழிலாளி நட்பு அல்ல அதையும் தாண்டி புனிதமானது."இந்த முயற்சியில் ஸ்டெல்லாவை நான் நிரந்தரமாக இழக்கவும் நேரிடலாம்" என்று ஜானியே கலங்கும் அளவுக்கு நட்பு முதல் 3 இடங்களில் 3

    சிக்பில் ,குள்ளன் நட்பு வழக்கத்துக்கு மாறான நட்பு (டெக்ஸ் போன்ற ஹீரோவுக்கு நிகரான)ஒரு செவ்விந்தியன் அனைவருடனும் நட்புடன் இருக்கும் அழகிய கதையமைக்குக்காகவே 2 ம் இடம்

    டேவிட் உத்தியோகம் சார்ந்த நட்பு.சார் என்று லாரன்ஸை அழைத்தாலும் ஒரு நெருக்கம்.பதவி தாண்டிய பந்தம் (!!) இருவருக்கும் .இடம் 3

    டெஸ்மாண்ட் ,இங்கும் முதலில் நன்றிக்காக தொடங்கும் உறவு.பின்பு ஏற்றத்தாழ்வு பாராத நட்பாக பரிணமிக்கிறது.டெஸ்மண்ட் பாஸாக இருக்கும் ஒரு நிகழ்வில் ரிப் "நான் மிக கவனமாக வேலை செய்யவேண்டும் ,இல்லாவிடில் பாஸ் என்னை டிஸ்மிஸ் செய்துவிடக்கூடும்" என்று சொல்லும் அளவுக்கு இடம் 4

    லக்கிலூக் ,ஜாலியின் அற்புத சகா பல இடங்களில் சாகஸம் செய்தாலும், லூக்கின் உயிரை பல இடங்களில் காப்பாற்றும் ஜாலியை வேலை வாங்கும் லூக் உற்ற நண்பனா என்ன?ஆஹா மாத்தி யோசிக்கிறோமோ

    ReplyDelete
  51. கார்சன் மட்டுமே ,,,

    ReplyDelete
  52. என்னுடைய சாய்ஸ்

    கார்வின் - உன்னத நட்பிற்கு இலக்கணம்
    கார்சன் - நட்பிற்காக எதையும் செய்யும் நண்பன்

    ReplyDelete
    Replies
    1. குட் சாய்ஸ்!

      டெக்ஸ்-கார்சன் நட்பிற்கு இந்த ஓரு வசனமே ஆகச் சிறந்த எடுத்துகாட்டு,

      டைனமெட் ஸ்பெசலில் வந்த "புயலுக்கொரு பிரளயம்" கதையில் ஜெயிலில் அடைபட்ட டெக்ஸை மீட்க துரிதமாக செயல்படச் சொல்லும் கிட்டிடம், கார்சன் பேசும் இடம் நட்பின் உண்மை சொரூபம்.

      """என் ஜீவனின் ஒரு பாதி அங்கே அடைந்து கிடக்கும் போது உணவோ-உறக்கமோ அவசிமாகாது இந்தக் கட்டைக்கு"""

      Delete
  53. 1. கார்சன் Tiger Jack kit villar
    2. ஜாலி ஜம்பர்
    3. ஸ்டெல்ல
    4. பார்னே & ஜின்
    5. ஜிம்மி & ரெட்
    6. ஜுடோ டேவிட்
    7. வில்லி காட்வின்

    ReplyDelete
  54. //ஜாலியை வேலை வாங்கும் லூக் உற்ற நண்பனா என்ன//

    இது என்னங்க புதுசா இருக்கு.

    எதுக்கும் லக்கி லூக் கதைகளை மறுபடியும் ஒருவாட்டி மீள்வாசிப்பு செய்யணும்.

    ReplyDelete
  55. 1940களில்நாயகனுக்கு நிழலாக ஆரம்பித்துசுமார்70வருடங்களா காமிக்ஸ் சாம்ராஜ்யத்தின்முடிசூடாமன்னனாகத்திகழும்சூப்பர் ஸ்டார்டெக்ஸ் வவில்லரையும்இந்தலிஸ்டில்சேர்க்கலாமாங்கசார் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  56. எனது ஓட்டை" வில்லிகார்வினுக்கு" பதிவு செய்கிறேன்.
    மற்ற சகாக்களும், சுவராஸ்யமானவர்களே.
    ஆரம்பகாலத்தில் ஜுடோ ேடேவிட் தான்
    பின் வில்லி கார்வின், அடுத்து பார்னே, தற்போது - லார் ேகாவின் நண்பன் சைமன் தான்.

    ReplyDelete
  57. வில்லி கார்வின் பெரும்பான்மை ஓட்டு வாங்குவது போல தெரிகிறது

    அதற்கு அடுத்த இடத்தில் வெள்ளிமுடியார் இருக்கிறார்

    ReplyDelete
    Replies
    1. வெள்ளி முடியாருக்கு வெற்றி இல்லையா???

      "கழகு மலைக்கோட்டை" தான் காரணமாக இருக்கும்.

      Delete
    2. அதே தான் விஜய் கழுகு மலை கோட்டை தான் தட்டி பறித்துவிட்டது

      மேலும் எனக்கு ராணி காமிக்ஸ் தான் காரணம் நட்பை அவர்கள் மாற்றி காட்டியதனால் எனக்கு உண்மை தெரிந்த போது ஆச்சர்யமாக இருந்தது

      Delete
    3. ஆம்! தோர்கலையும் ஆரிஸியாவையும் அண்ணன்-தங்கைனு போட்டாங்க.

      கார்வினையும்-மாடஸ்தியையும் காதலர்கள்னு சித்தரித்தனர்..!!

      பொம்மையை பார்த்து கதை சொல்லி விட்டார்கள்!😉

      Delete
    4. கிருஷ்ணா@ வெள்ளி முடியார் வெற்றிக்கோட்டை தொட்டுடுவார் போல.. நிறைய வாக்குகள் இன்று கிடைத்து உள்ளது.

      Delete
  58. 1நிழல் கதாபாத்திரங்கள்சம்பந்தமான பதில்கள் நட்பு சம்பந்தமானதாக மாறிவிட்டதால். நட்புக்கு இலக்கணம் என்றால் அதுமாடஸ்டி கார்வின் தான் இருவருமே ஈருடல் ஓருயிர் என்பது போன்ற சிந்தனை உடையவர்கள்நெருக்கடியான நேரங்களில் ஒருவர் நினைப்பதை மற்றவவர்உணர்ந்துசெயல்பட்டுஎதிரிகளைவீழ்த்துவர். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  59. கார்சனுக்கும் கார்வினுக்குமே

    மிகப்பெரிய ஜெ 💪🏼💪🏼💪🏼

    நரகமே ஆனாலும் உன்னுடன் வரத்தயார் என தோள்தட்டும் கார்சனும்

    கார்வினின் unconditional support to Modesty
    வேறுயாரால் தர இயலும் 🤷🏻‍♂️

    ஆகையால் இவர்களே எனது தேர்வு சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  60. ஆசிரியர் மற்றும் நண்பர்களே,
    நமது காமிக்ஸ் தளத்தின் இதுவரை மொத்த பார்வைகள் 49,96,282; 50,00,000 பார்வைகளை தொட இன்னும் தேவை 3,718. அனேகமாக நாம் நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் 50,00,000 பார்வைகளை தொட்டு விடலாம் என நினைக்கிறன் நண்பர்களே! ரெடி ஸ்டார்ட் தி மியூசிக் நண்பர்களே!!

    விஜயன் சார், 50,00,000 பார்வைகளுக்கு ஏதாவது சிறப்பு புத்தக அறிவிப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. இது வரைக்கும் அப்படி தானே கம்பெனி ரூல்ஸ் போய்ட்டு இருக்கு. ஐம்பது லட்சம் பார்வைகள் ஒரு புதையல் வேட்டை திரில்லர். இன்னும் ஒரு ஸ்பெஷல் புக் சார். நமது eroad ஆன்லைன் புத்தக விழா விற்க்கு.

      Delete
  61. வில்லி கார்வின் & மாடஸ்ட்டி தான் நட்பு என்றவுடன் நினைவுக்கு வருபவர்! கழுகு மலை கோட்டையில் மாடஸ்ட்டி கார்வின்காக எடுக்கும் ரிஸ்க் ஒருபக்கம் எனில் மறுபக்கம் கார்வின் மாடஸ்ட்டி தனது உயிரை கொடுத்து காப்பாற்றுவது மறுபுறம்! மாடஸ்ட்டி சொல்லும் விஷயங்களை தட்டாமல் செய்து முடிப்பது, ஏன் என்று ஒரு முறை கூட கேள்வி கேட்டது இல்லை, ஒருவரை ஒருவர் மதிப்பது, தேவை இல்லாமல் நண்பர்களை கிண்டல் செய்வது கிடையாது! தியாகத்தில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை! நண்பர்கள் ஒருவரை ஒருவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தவறாக நினைத்தது இல்லை, சந்தேகபட்டது இல்லை!

    சிறுவயதில் இருந்தே இவர்களில் கதைகளில் காணப்படும் நட்பு என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்தது!

    ReplyDelete
  62. ஸ்பைடர் ஆர்டினி!, ஸ்டீல் க்ளா மோரிஸ், ஹெர்குலீஸ் மூசா, ஆர்ச்சி தாம்ஸன் விக்டர்,
    அப்புறம் சார், எனக்குப் பிடித்த ஆதர்ஷ (துணை ) நாயகர் வில்லி கார்வின்தான்! மாடஸ்டியை விடவும் பிடிக்கும். முன்பு ராணி காமிக்ஸ் ல் வந்த ஒரு கதையில் கார்வின் கைதியாகக் கடத்தப்படுகையில் "இங்கேயே கொன்று விடலாம் என்று ஒருவன் சொல்லும் போது நம் இடத்திற்கு கூட்டிச் சென்று கொல்ல லாம் என்று ஒருவன் சொல்ல "என் ஓட்டு உனக்குத்தான்" என்று கார்வின் சொல்வதை நண்பரும் நானும் சிலாகித்து ரசித்திருக்கிறோம்.
    ஆனால் ராணி காமிக்ஸ் ல் அபாண்டமாக மாடஸ்டியின் காதலன் என்று கார்வினைக் குறிப்பிட்டிருக்கையில் அவர்களுக்கிடையே இருப்பது இனம் புரியாததொரு நட்புறவு அதைக் காதலாகக் காட்டினால் கொச்சையாகிவிடும் என்று தாங்கள் சொன்ன பிறகு கார்வினின் மீது ஈர்ப்பு மிக அதிகமானது. முன்பெல்லாம் (22 வருடங்களுக்கு முன் )நண்பர்கள் நாங்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு எங்களை நாங்களே வில்லி கார்வின் என்று சொல்லிக் கொண்டு தோப்பில் தென்னை மரத்தின் மீது கத்தி எறிந்து பழகிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
    கார்வின் கார்வின்தான்

    ReplyDelete
  63. லார்கோ - சைமன் நட்பு அப்படி ஒன்றும் சொல்லி கொள்ளவது மாதிரி கிடையாது! இவர்களை எனது லிஸ்ட்டில் சேர்க்கவில்லை!

    ReplyDelete
  64. ஆத்மார்த்த நண்பனேன்றால் கார்சனே முன்னிலை ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை உதாரணம் சமிபத்திய சாகசம் நெஞ்சே எழு வில் சிரிகாகுவா வீரர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் போது கூட அவனில்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து பார்க்கவே முடியவில்லை பேசாமல் நானும் செத்து தொலைத்துவிட வேண்டியதுதான் என்று புலம்பும் அந்த ஒரு இடம் போதுமே கார்சனே ஆத்மார்த்தமான நண்பன் என்பதை உணர

    ReplyDelete
  65. கார்வின் மட்டும்தான் இதற்கு பொருத்தமாக இருப்பார்

    ReplyDelete
  66. ஆண் பெண் நட்பென்றாலே அங்கு ஒரு புனிதமான உறவு இருக்கும். நூலிழை அளவாவது இடைவெளி இருக்கும்.நம்ம மாடஸ்தி கார்வின் மாதிரி. ஆனால் நட்பென்றாலே நண்பர்கள் இடையே கேலி கிண்டல் செய்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் இன்ப,துன்பத்திலும் , கஷ்டநஷ்டத்திலும் பங்கு கொண்டு தன்னுடைய நண்பனுக்காக தன்னுயிரையும் தியாகம் செய்ய முன்வரும் டெக்ஸ் மற்றும் கார்சன் தான் எனது தேர்வு.

    ReplyDelete
  67. டெக்‌ஷ் கார்சன் ஜோடி.நட்பு,கடமை உணர்வு,நகைச்சுவை, ஆக்ரோசம்,ஆக்சன், ரேஞ்சர் பதவி,துப்பாக்கி சுடும் திறமை,முஷ்டி பிரதோசம் என இவர்களது சிறப்புகளை கூறிக் கொண்டே போகலாம் ஆசிரியரே...

    ReplyDelete
  68. மிகச்சிறந்த துணை நாயகர் -

    தனிமையே துணைன் என்று சொன்னாலும் லக்கிலூக்கை விடாத ஜாலி ஜம்பர்தான்

    ReplyDelete
  69. 50lakh view special ennava irukkum

    ReplyDelete
  70. சார் இன்றைய பதிவு???

    ReplyDelete
  71. சார்....இன்றைய பதிவை எப்ப போடுவீர்கள்.

    ReplyDelete
  72. எடிட்டரின் இன்றைய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete
  73. dylon dog ---groucho.

    magic wind----poe

    ReplyDelete
  74. என்னுடைய தேர்வாக இருப்பது:

    வில்லி

    ஜாலி

    கார்சன்

    சைமன்

    ReplyDelete