Wednesday, May 12, 2021

அதிகாரி புதன் !!

 நண்பர்களே,

வணக்கம். அதிகாரியுடனான அட்டகாசப் பயணம் தொடர்கிறது ! ஏதோவொரு வேகத்தில் தினத்துக்கு updates என்று சொல்லியாச்சு and புனித மனிடோவின் புண்ணியத்தில் முதலிரண்டு பதிவுகளும் செம சுவாரஸ்யமாய் அமைந்தும் போயாச்சு எனும் போது அடுத்து எதைப் பற்றி எழுதுவதோ ? என்ற கேள்வி எழாதில்லை ! ஆனால் 'தல'யை நம்பினோரை 'தல' கைவிட்டதாய் சரித்திரம் தான் ஏது ? So இதோ ஒரு பொன்னான புதனின் அதிகாரி update - பாகம் 3 !

"டெக்ஸ் ஓவர்டோஸ்..."

"அதிகாரிக்கு ஓவராய் ஸ்லாட்ஸ்"

"வர வர இவருக்கான முக்கியத்துவம் கூடுவது போலிருக்கு"

அவ்வப்போது லேசாய், மிக லேசாய், மிகச் சொற்ப நண்பர்களிடமிருந்து கேட்கும் முணுமுணுப்பு இதுவென்பதை நாம் நன்றாகவே அறிவோம் ! அதனில் அவர்களது "டெக்ஸ் அயர்ச்சி" யைத் தாண்டியதொரு சாரம் பெருசாய் இருப்பதாய் நான் நினைக்கவில்லை என்பதால் அவ்வப்போதைய சிற்சிறு சமாதானங்கள், விளக்கங்களோடு நகர்ந்து விடுகிறேன் ! ரைட்டு...ஆண்டுக்கு 30% இடத்தைப் பிடிக்கும் போதே இந்த சலனங்கள் நம்மிடையே எழுகின்றதே ; இத்தாலியில் நிலவரம் எவ்விதமிருக்குமோ ? என்ற curiosity சமீபத்தில் எழுந்தது எனக்கு !  அதன் பின்புலத்தில் ஒரு பொழுதுபோகா தினத்தில் கொஞ்சமாய் தேடல்களை நடத்தினேன் & கண்களை அகலமாய் ...ரொம்பவே அகலமாய்...அட...ரொம்ப ரொம்பவே அகலாய் விரித்தது தான் பலனாகியது ! ஏனென்கிறீர்களா ? போனெல்லியின் ; இத்தாலியின் ; வன்மேற்கின் தலைமகனுக்கு அக்கட தேசத்தில் உருவாக்கியுள்ள தனித்தடங்கள் எத்தனை என்பதைப் பார்த்த போது அகன்ற ஆந்தை விழிகள் இன்னமும் அப்படியே தொடர்கின்றன ! 

ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல...நான்கல்ல....மொத்தம் 10 வெவ்வேறு தடங்களைப் பதித்துள்ளார்கள் TEX எக்ஸ்பிரஸ் தடதடக்க !! 

அவற்றுள் ஐந்தை இன்றைய பதிவிலும், (வீட்டம்மா போனில் உள்ள data-வை மறுக்கா ஆட்டையைப் போட்டு இன்னிக்கே பழனிவேல் குழம்பு வைக்காது இருக்கும் பட்சத்தில் ) பாக்கி ஐந்தை நாளைக்கும் பார்ப்போமா folks ? 

எதிர்பார்க்கக்கூடியபடியே டெக்சின் புதுப் படைப்புகள், black & white -ல் மாதம்தோறும் 112 பக்கங்களுடன் வெளிவருவது அவர்களது பிரதான இதழ் !  இப்போதெல்லாம் புதிதாய் வெளிவரும் கதைகள் 224 பக்கங்களுடன், இரண்டே பாகங்களில் நிறைவுறும் விதமாய் பெரும்பாலும் திட்டமிட்டு வருகிறார்கள் என்பதால் "ஆண்டினில் 6 முழுக்கதைகள்" என்பதே template ஆக உள்ளது ! Of course சற்றே நீளம் கூடுதலான கதைகளும் படைக்கப்படுகின்றன தான் ; ஆனால் 224 pages என்பதே தற்போதைய எழுதப்படா விதி ! ஒரு விதத்தில் இது நம் போன்ற இதர மொழிப் பதிப்பகங்களுக்கு வேலையை சுலபமாக்கிடுகிறது ! முன்னெல்லாம் ஒரு இதழில் ஆரம்பித்து, வெறும் 18 பக்கங்களில் "தொடரும்" போட்டுவிட்டு, அடுத்த புக்கில் முழுசுமாய் ஓடிய பிற்பாடு புக் நம்பர் 3-ல் ஒரு 70 பக்கங்களுக்கு ஓடி நிறைவுறும் ! So தலயின் தலை எங்கே ? வால் எங்கே ? எனத்தேடுவதில் நாக்குத் தொங்கி விடும் ! நமது டைனமைட் ஸ்பெஷல் இதழில் வெளியான அந்த நெடுங்கதையோ, கிட்டத்தட்ட 6 தனித்தனி TEX ஆல்பங்களில் பயணித்த கதை என்பதாக ஞாபகம் ! மிலன் நகரில் உள்ள காமிக்ஸ் மியூசியத்தில் குந்தியிருந்ததொரு ஞாயிறன்று அவர்களது சேகரிப்பிலிருந்த டெக்ஸ் ஆல்பங்களை ஒன்றொன்றாய் உருட்டி, எடுத்த குறிப்புகளிலிருந்து வரவழைத்தேன் "டை.ஸ்பெ." சமயத்தில் ! So இன்றைக்கு ஓரளவுக்கு அந்த நோவுகள் லேது ! And இந்தப் புதுக்கதைத் தடம் தற்சமயமாய் நிற்பது # 727-ல் !!  


புதுக்கதைகள் மாதமொறுக்கா என்றிருக்க, "க்ளாஸிக் டெக்ஸ்" என்றொரு இணை தடம் 15 நாட்களுக்கொருமுறை போனெல்லியின் துவக்க காலத்து க்ளாஸிக் கதைகளை மறுபதிப்பிடுகிறது - 64 பக்க இதழ்களாய் - இம்முறையோ முழுவண்ணத்தில் ! துவக்க வேலைகளின் கதைகளில் நிறையவே 160 பக்கங்களில் ; 170 பக்கங்களில் முடிவுறும் விதங்களாய் இருப்பதால் தோராயமாய் மூன்றல்லது, நான்கு "க்ளாஸிக் டெக்ஸ்" இதழ்களில் அவை ஓடி முடிகின்றன ! And பெரியவர் G.L.போனெல்லியின் கதைகளுக்கே இங்கு முக்கியத்துவம் ! So புதுசு b &w-ல் ; மறுபதிப்புகள் வண்ணத்தில் என்பதே படைப்பாளிகளின் பார்முலாவாகவும் உள்ளது ! தற்சமயமாய் "க்ளாஸிக் டெக்ஸ் நிலைகொண்டிருப்பது # 109-ல் !


ரைட்டு..புதுசும் ஆச்சு ; ரொம்பப் பழசும் ஆச்சு என்றான பிற்பாடு what next ? என்று யோசித்திருக்கிறார்கள் போலும் ! அடுத்த தடத்தை மறுபதிப்புகளுக்கே மறுக்காவும் தரத் திட்டமிட்டுள்ளனர் - இம்முறை ஒரிஜினலின் அதே வரிசைக்கிரமத்தில் - எல்லாமே black & white-ல் ; கனகச்சித நகல்களாய் !  "நிலவொளியில் நரபலி" போலான ஸ்பெஷல் இதழ்களை மட்டும் ஒரிஜினலைப் போலவே இந்த மறுபதிப்பு வரிசையிலுமே வண்ணத்தில் தயாரித்துள்ளனர் ! "ALL TEX" என்ற இந்தத்தடமும் மாதம்தோறும் ! And தற்போது நிலைகொண்டிருப்பது நாம் "நில்..கவனி..சுடு" என்று தமிழாக்கமாய் வெளியிட்ட கதை # 601-ல் !

தடம் # 4 வெகு சமீபமானது ; இளம் டெக்ஸ் வில்லர் கதைகளுக்கென இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாய்ப் போடப்பட்டது & திங்களன்று நாம் அலசிய அதே கதைவரிசையே ! 64 பக்கங்கள் ; black & white ; மாதம்தோறும் ஒரு வெளியீடு என்று விறுவிறுப்பான நகர்ந்து வருகிறது இளையவரின் புதிய வரிசையானது ! Now at # 30 !

தொடர்வது MAXI TEX !! மாமூலான கதைகளை விடவும் நீளத்தில், ஆழத்தில், அழுத்தத்தில் கூடுதலான கதைகளை - black & white-ல் ; ஆனால் மாமூலான சைசில் அல்லாது பெரிய சைசில் இதனில் வெளியிடுகிறார்கள் ! ஆறு மாதங்களுக்கொரு தபா வெளியாகும் இந்த இதழ்களில் 330 பக்கக் கதைகள் ; 276 பக்கக்கதைகள் ; 292 பக்கக்கதைகள் என்று டிசைன் டிசைனாய் உள்ளன ! ஒரு குறிப்பிட்ட பக்க நீளக் கட்டுப்பாடுகளை தந்து படைப்பாளிகளைக் கட்டிப்போடாது - அவர்களின் கதைகளுக்கு ஏற்ப களங்களை வழங்கிடும் முயற்சியாக இது எனக்குத் தென்படுகிறது ! இந்த MAXI TEX தற்போது தொட்டு நிற்பது # 28 !!



தடம் # 6 முதலாய் மீதத்தை நாளைய பதிவில் பார்ப்போமே guys ?

இதோ இன்றைக்கான உங்களின் கேள்வி + task !! சமீபத்தைய டிடெக்டவ் ஸ்பெஷல் இதழினில் டைலன் டாக் கலர் சிறுகதை 32 பக்கத்தில் வந்திருந்தது நினைவிருக்கலாம் ! Color Tex சிறுகதைகள் பாணியிலேயே டைலனின் வரிசையிலும் கொஞ்சம் short stories உள்ளன ! எல்லாமே சமீபப் படைப்புகள் ! 2022-ல் அவற்றை முயற்சித்துப் பார்ப்போமா - அல்லது நோ ஆணி pluckings-ஆ ? சொல்லுங்களேன் guys ! 

எது எப்படியோ - நம்மாள் டைலன் டாக் அட்டவணையில் இடம் பிடிக்கிறாரோ, இல்லியோ - இதோ இங்கு கேப்ஷன் போட்டியிலாச்சும் இடம்பிடிக்கிறார் ! 

ஞானே நடுவராக்கும் ; ஆளுக்கு இரண்டே முயற்சிகள் மாத்திரமே & பரிசு பெறும் caption க்கு "உயிரைத் தேடி " புக் நம் அன்புடன் !

Bye all ...have another safe & peaceful day !!

166 comments:

  1. சார் அருமையான பதிவு....மீண்டும்....டெக்சின் அட்டைப் படங்கள் சான்சே இல்ல...கொல்லுது....வழக்கமாய்....கலரில் பழசாய்....பழசில் முதலிருந்து கருப்பாய்...இளம் டெக்சாய்....மேக்சியாய்....சும்மா சொல்லக்கூடாது...இன்னும் தடங்கள் 12 கால் பாய்ச்சலில்...சார் அந்த 109 வது கிளாசிக் கலர் நாம் விட்டாச்சா....அசத்துது அட்டை....இங்க விட்டதிலே டாப் இளம் டெக்சு அட்டைதான்னு பட்சி பகிருது...அட்டைகள் அள்ளும் பொக்கிசங்கள்

    ReplyDelete
  2. மேக்சி கடைசியும் 276 பக்க பட்டாசு ஒரே குண்டா மேக்சிஸ் வந்தா எப்படியிருக்கும்....கார்சனின் கடந்த கால கார்சன நினைவு படுத்துறார் கார்சன்

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. டிடக்டிவ் ஸ்பெஷலில் வந்த டைலனின் சிறுகதைக்கே மிக்சுடு ரியாக்சன்ஸ் கிடைத்தது என்று நினைக்கிறேன். தொகுப்பாக போடும் அளவுக்கு இருக்குமா?

      Delete
  4. ரெண்டாவது டெக்ஸ் தண்ணிக்குள்ள மாயமாரிசன எதிர்கொள்கிறார் போல...
    இங்க காட்டிய நில் கவனி சுடு தவிர பிற கதைகள தனித்தடத்துல விடலாமா

    ReplyDelete
  5. அல்லது பன்னிரண்டு தடத்துலயும் ஒரு கதய உருவி நாம் ஒரு வருடத் தடம் போடலாமோ

    ReplyDelete
  6. டைலன் : குவாரண்டைன் ல இருக்கிறது எவ்வளவு கடுப்பான விஷயம் என்பது அனுபவிச்சாதான் புரியுது. இந்த கொடுமையில மேல யாரோ படுத்திருக்கிறப்போலயே ஒரு ஃபீலிங் இருக்குதே. ஒருவேளை கொரோனா சிண்டம்ஸ்ல இதுவும் ஒன்னோ..

    எலும்பு கூடு : அடேய் பேராண்டி டைலன், நான் உன் தாத்தண்டா. அந்த கால ப்ளேக்ல செத்துபோனவண்டா. கொரோனா வைரஸ்ல இருந்து எப்படி தப்பிக்கிறதுனு டிப்ஸ் குடுக்க வந்திருக்கேண்டா.

    ReplyDelete
  7. லாக் டவுனில் சோம்பிக்கிடக்கின்ற எங்களை இந்த நாட்களை உங்கள் பதிவுகள் தான் சுறுசுறுப்பாக்கி அர்த்தமுள்ளதாக கொண்டு செல்கிறது மிக்க நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  8. டியர் எடி,

    முதல் 5 வரிசையில், என்னை கவர்ந்தது இளம் டெக்ஸ் 64 பக்க இதழ்களே... இதை தனி தனியாக போட்டால் தனி அட்டைகளுடன், ஒவ்வொன்றையும் வரிசையாக படிக்க, மற்றும் சேர்க்க என்று கச்சிதமாக இருக்கும். கூடவே, பவுண்ட புக் எனும்போது நடுவில் இருக்கும் பக்கங்களின் எழுத்துகள் ஓரத்தில் படிக்க முடிவதில்லை. ரொம்ப முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது.

    சென்ற பதிவில் இந்த தனி இதழ் தடம் பற்றி என்ன முடிவெடுத்தீர்கள் என்று தெரியபடுத்துங்களேன்.

    பி.கு.: பிரின்ஸ் காமிக்ஸ் நிறுவனர் அலெக்ஸாண்டர் கொரோனாவில் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  9. டைலன்...இந்த எலும்பு கூட்டோட உயிரத் தேடி போனா உயிரத்தேடி புக் கிடைக்குமோ

    ReplyDelete
  10. 330+292+276 =898 பக்கங்கள் கொண்ட maxi size book - எப்படி இருக்கும் sir

    ReplyDelete
  11. அவற்றுள் ஐந்தை இன்றைய பதிவிலும், (வீட்டம்மா போனில் உள்ள data-வை மறுக்கா ஆட்டையைப் போட்டு இன்னிக்கே பழனிவேல் குழம்பு வைக்காது இருக்கும் பட்சத்தில் ) பாக்கி ஐந்தை நாளைக்கும் பார்ப்போமா folks ? //

    இல்லை சார் உங்க எழுத்து நடையிலேயே தொடரட்டும்..அதிலேதான் ஒரு ஈர்ப்பு உள்ளது...அதுவுமில்லாம அன்னைக்கு நைட் சாப்பாட்ட கட்பண்ணீட்டாங்க வீட்டம்மா...

    ReplyDelete
    Replies
    1. அத்தோட தப்பிச்சீங்களேன்னு சந்தோசப்படுங்க பழனி...

      Delete
  12. டைலன் : என்ன வாழ்க்கைடா இது அவன் அவன் பொண்ணுங்களோட ஜோடி போடுறானுங்க எனக்கு இந்த எலும்பு கூடு தான் ஜோடியா கிடைச்சிருக்கு சை
    எலும்பு கூடு : ஆமா இவரு பேய்ங்க கூட திரிஞ்ச திரிச்சலுக்கு நான் கிடைக்காம நயன்தாராவா கிடைப்பா

    ReplyDelete
  13. தற்போது இத்தாலிய இதழ்களுடன் நாயகர்கள் உருவம் பொறித்த நாணயங்கள் ஒவ்வொரு இதழ்களுடன் வருகிறதே சார்..தேவைப்படும் நண்பர்களுக்கு வரவழைத்து தர இயலுமா சார்...??

    அந்த காயின் வைக்கிற பெட்டியே 10 யூரோவாம்...புக்கு ஒவ்வொன்றும் தோராயமாக 4 யூரோமுதல் ஆரம்பம்... ஷிப்பிங் வேற இருக்கு என்ன பண்ணலாம் ஏதாவது பண்ணணும்....

    ReplyDelete
    Replies
    1. ஹல்லோ.காசியப்பன் பாத்திரக்கடைங்களா ?.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. பழனி @ நீங்க பேசாம நம்ப கஜா (இங்கே பாருங்க பழனி) மூலமா இத்தாலிக்கு கள்ளத்தோணி ஏறிப்போய் நீங்கள் சொல்லுறதையெல்லாம் நாளைக்கே வாங்கிட்டு வந்து விட வேண்டியதுதானே :-)

      Delete
  14. பதிவை படிக்க படிக்க பெருமூச்சு தான் வருகிறது ...அதுவும் இந்த ஐந்து தடத்திற்கே ..இன்னும் ஐந்து பாக்கி உள்ளது எனும் பொழுது ...


    ஆஹா இப்பவே தலையை சுத்துதே...

    ReplyDelete
  15. நேற்றைய ,இன்றைய டெக்ஸின் அட்டைப்படங்களை பார்க்கும் பொழது இதனிள் இடம் பெற்ற இதழ்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக வருகை தருமாயின் எப்படி இருக்கும் என்ற கற்பனையே கலக்குகிறது சார்...

    ஒவ்வொரு அட்டைப்படமும் அட்டகாசம்...

    ReplyDelete
  16. அனைவருக்கும் வணக்கம் சொல்லுவது சின்னமனூர் சரவணர்ங்க....

    ReplyDelete
  17. டைலன் க்கு டபிள் ஓகே ,போடுங்க சார்.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. செம்ம டாக்டர் சார்

      Delete
  19. டைலன் நோ ஆணி சார்.

    :-(

    ReplyDelete
  20. Dylan Dog: ஏய்... செல்லம்... ஒழுங்கா மாஸ்கும், தடுப்பூசியும் போட்டிருந்தா இந்த நிலம வந்திருக்குமா...!? கிரௌச்சோ நாம இப்படி இருக்கிறத பார்த்தான்.. கத கந்தலாயிடும்...!!!

    எலும்புக்கூடு: பாஸ்.... நான்தான் கிரௌச்சோ... நீங்க சொன்னத கேட்கல... அதான் இப்படி... !!!

    ReplyDelete
  21. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  22. டைலன் : ஆஹா எலும்பா யாரப்பா நீ ..உனக்காக என்ன கண்டுபிடிக்கனும்...?!


    எனக்காக நீ ஒண்ணும் கண்டுபிடிக்க வேண்டாம் டைலன் ..மாஸ்க் போடாம அங்கே ஆராய்ச்சி இங்கே ஆராய்ச்சின்னு அலைஞ்சுட்டு இருந்த நீயும் என்னை மாதிரி ஆயிருவே அதை மட்டும் நானே கண்டுபுடிச்சுட்டேன் பாத்து ...

    ReplyDelete
  23. சூப்பர் ஸ்டீல்

    ReplyDelete
  24. அதிகாரி கதைகள் இருபத்தி சொச்சம்.. அட்டை படங்களோ எழுநூத்தி சொச்சம் என்ற திருக்குறளை மறந்து விட வேண்டாம்..

    ReplyDelete
    Replies
    1. அதுசரி.. ஆனால் புளிக்கோ கதைகளும் மூணுதான் அட்டைப்படங்களும் மூணுதான் என்ற ஆத்திச்சூடியையும் மறந்துவிடவேண்டாம்.!

      Delete
    2. ஹாஹாஹா... செம...

      Delete
    3. Rummi and Kanna: Sema! counter attack!!!
      :-)
      :-)

      Delete
  25. உள்ளேன் ஐயா..!!
    உள்ளேன் வில்லர்..!!

    ReplyDelete
  26. *காமிக்ஸ் எனும் கனவுலகம்*

    *அன்பார்ந்த நண்பர்களே.!*

    *இதோ நமது குழுவின் அடுத்த காமிக்ஸ் போட்டிக்கான அறிவிப்பு*

    *மொத்தம் 3 போட்டிகள்..*

    *வரும் 16, 23, 30/5/2021 ஆகிய மூன்று ஞாயிறுகளும் போட்டிகள் நடைபெறும்*
    *இம்முறை தோர்கல் ஷ்பெசல் போட்டிகள்*

    *ஒவ்வொரு போட்டியிலும் மூன்று பரிசுகள் வீதம் மொத்தம் ஒன்பது பரிசுகள் ப்ளஸ் ஒரு போனஸ் பரிசு.. ஆக பத்து பரிசுகள்*
    ~~~~~~~~

    *பரிசு- லயன் காமிக்ஸ் வெளியிடும் ஆகஸ்ட் புத்தகத்திருவிழா ஷ்பெசல் இதழான "உயிரைத் தேடி." ஒன்பது நபர்களுக்கு.. அத்துடன் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு கூடுதலாக ஒரு போனஸ் பரிசும் உண்டு.. அது பின்னர் அறிவிக்கப்படும்*

    *தோர்கல் போட்டிக்கான கதைகள்*

    *16/5/2021 ஞாயிறு இரவு 9மணிக்கு நடக்கவிருக்கும் போட்டிக்கான புத்தகங்கள்..*

    *1.பிரபஞ்சத்தின் புதல்வன்*
    *2.பனிக்கடலில் ஒரு பாழும் தீவு*
    *3.சாகாவரத்தின் சாவி(முதல் பாகம் மட்டும்)*

    ~~~~~~~~~

    *23/5/2021 ஞாயிறு இரவு 9 மணிக்கு நடக்கவிருக்கும் போட்டிக்கான இதழ்கள்*

    *1.சாகாவரத்தின் சாவி(இரண்டாவது பாகம் மட்டும்)*
    *2.மூன்றாம் உலகம்(இரண்டு பாகங்களும்)*
    ~~~~~~~~~~~

    *30/5/2021 ஞாயிறு இரவு 9 மணிக்கு நடக்கவிருக்கும் போட்டிக்கான இதழ்கள்*
    *1விண்வெளியின் பிள்ளை*
    *2. கனவு மெய்ப்பட வேண்டும்(இரண்டு பாகங்களும்)*

    *நடுவரின் முடிவே இறுதியானது*

    *பதில்கள் அனுப்ப ஒருமணி நேரம் அவகாசம்(அதாவது 9Pm -10pm)*

    *பதில்களை 9787222717 என்ற எனது வாட்ஸ்அப்பிற்கு மட்டுமே அனுப்பவேண்டும்*

    *ஒரு போட்டியில் வென்றவர் அடுத்த போட்டியிலும் கலந்துகொள்ளலாம்.. பரிசு ஒருமுறைதான்.. ஆனால் ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் சிறப்பு பரிசு வழங்ப்படுவதால் அனைத்து போட்டிகளிலும் கலந்துகொள்வது நலம்*

    *போட்டிக்கான கேள்விகள் குழுவில் பகிரப்பட்ட நொடியில் இருந்து போட்டி நேரம் முடியும்வரை குழுவில் மற்ற கமெண்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது*
    *மீறி கமெண்ட் செய்தால் போட்டி முடியும்வரை குழுவில் இருந்து தற்காலிமாக நீக்கப்படுவார்கள்*

    *கடந்த காமிக்ஸ் போட்டிகளைப் போலவே இதற்கும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்*

    *முன்கூட்டிய நன்றி நண்பர்களே🙏🏻🙏🏻*

    ReplyDelete
    Replies
    1. *நண்பர்களே சற்றுமுன் வந்த சந்தோசச் செய்தி*

      *மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் போட்டியாளருக்கான சிறப்புப் பரிசை தானே வழங்குவதாக நமது எடிட்டர் அறிவித்து இருக்கிறார்.!*

      *போனஸ் பரிசு லயன் 400 ஷ்பெசல் இதழ்*

      Delete
    2. நன்றிகள் ஆசிரியரே!

      Delete
    3. வாவ்....சூப்பர் சண்முகா எடுறா தோர்கலை...

      Delete
    4. அந்த 400 லயன் ஸ்பெஷல் இதழ் என்னன்னு சொல்ல முடியுமா சார்!

      Delete
    5. // வாவ்....சூப்பர் சண்முகா எடுறா தோர்கலை.. //

      என்ன தலைவரே உங்கள் பெயரை சண்முகா என்று எப்போது மாத்தினீங்க!! இந்த விழாவுக்கு எங்களுக்கு எல்லாம் சொல்லவே இல்ல :-) எடுறா சண்முகா அந்த வண்டியை :-)

      Delete
  27. அதிகாரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வாரம்தோறும் வராதா என்று ஏங்கிய காலம்...
    ஆனால் இப்போதோ தினந்தோறும் வாழ்க குரோனா என்று மிருக மனம் சொல்கிறது..
    தலையின் ஒவ்வொரு குறிப்பிடும் பார்க்கும் போது உற்சாகம் தொற்றிக் கொண்டு வருகிறது.. நன்றி ஆசிரியரே நன்றி தொடரட்டும் தலையின் தாண்டவம்..
    இத்தாலியில் பிறந்த மக்கள் அதிலும் தலையின் அபிமானிகள் மிகுந்த பாக்கியசாலிகள். ஆனால் இங்கேயோ மாதத்திற்கு ஒன்று வந்தாலே புலம்பும் மனிதர்களுக்கு மத்தியில் நாம் 😭😭😭😭😭👍. ஆசிரியருக்கு அன்பு வேண்டுகோள் தயவுசெய்து 2022-ல் டெக்ஸ் கென்று தனி தடம் துவங்கவும். நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  28. சார் டெக்ஸின் 75வது ஆண்டு மலருக்கு டெக்ஸின் மேக்ஸி கதைகள் இரண்டு சேர்த்து ஒரே குண்டு புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  29. கேப்ஷன்..1

    (A)டைலன் டாக்: ச்சே.! இந்தக் கதாசிரியர் பேச்சைக்கேட்டு மெஃபிஸ்டோ கதையில கெஸ்ட்ரோல் பண்ணினது தப்பாப்போச்சி.! படுபாவிப்பய.. என் அஸிஸ்டென்ட் க்ரௌச்சோவை எலும்புக்கூடா மாத்திப்புட்டானே..!!

    (B) க்ரௌச்சே : அட விடுங்க பாஸ்.. இப்பத்தான் குளிக்கவேண்டியதில்லை, ட்ரெஸ் போடவேண்டியதில்லைன்னு நானே நிம்மதியா இருக்கேன்.! அதுமட்டுமில்ல.. நான் சொன்ன ஜோக்கை கேட்ட மெஃபிஸ்டோவுக்கு ஒருவாரமா பேதி நிக்கவேயில்லையாம்.. எப்பூடி..!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கொஞ்சம் பெட்டரா யோசிக்கலாமே கண்ணா!

      Delete
  30. டைலன் : என்னப்பா எலும்பு கூடாரே என்ன சோகமா இருக்கீங்க???
    எலும்புக்கூடு : பின்ன என்னப்பா … வயசாகி செத்த என்னையும் கொரோனா லிஸ்டில் சேர்த்து விட்டார்களே இந்த கேப்ஷன் போட்டியாளர்கள் 😭😭😭😭😭

    ReplyDelete
  31. சார் மாக்ஸி டெக்ஸ் அனைத்தும் புதுகதைகள் தானா?

    அப்படி இருந்தால் நாம் ஏன் மாக்ஸி டெக்சில் மறுபதிப்பு மட்டும் வெளியிடுகிறோம்?

    புது கதைகள் அதே மாக்ஸி சைசில் வரும் வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. தலையில்லா போராளி ?

      Delete
    2. இதுக்கு தான் சார் STV வேண்டும் அவரிடம் பேசிவிட்டு கமெண்ட் செய்திருக்க வேண்டும்.

      வரும்காலத்தில் மேலும் புதிய மாக்ஸி சாகசங்கள் வெளியிட வேண்டுகிறேன்

      Delete
    3. சார் என்ன பன்னுவீங்களோ...ஏது பன்னுவீங்களோ...ஒரிஜினல் சைரஸ் மாக்ஸின்னா அதுலதா வரனும்...தலையில்லா போராளி சித்திரங்கள் எப்டி

      Delete
  32. தோர்கலின் மாயாஜால உலகம் – பகுதி -3

    #03:THE THREE ELDERS OF ARAN!
    சாகாவரத்தின் சாவி!

    தோர்கல் தொடரின் மூன்றாவது ஆல்பம் இது.

    சாவிகளின் காப்பாளர் (The Guardian of the Keys)
    இந்த ஆல்பத்தில் நமக்கு அறிமுகப்படுத்தப்படும் சாவிக் காப்பாளினி தோர்கல் தொடரில் ஒரு முக்கிய பாத்திரம். நார்வேஜியன் புராணங்களில் வரும் ஒன்பது உலகங்களை இணைக்கும் பாதைகளையும் அதற்கான சாவிகளையும் பாதுகாக்கும்/ கையாளும் பொறுப்பில் இருப்பவர். தொடரும் பாகங்களில் மிக முக்கிய பங்காற்றும் இந்த அரை நிர்வாண தேவதையை நாம் முதன் முதலாய் தரிசிப்பது இந்த ஆல்பத்தின் மூலமாகவே...

    திருமணம் முடிந்த பின் எளிமையான சுதந்திர வாழ்க்கையைத் தேடி வைகிங் பிரதேசத்திலிருந்து பயணப்படும் தோர்கல்-ஆரிசியா தம்பதியினர் ஆரொன் என்ற புதிய தேசத்தை வந்து அடைகிறார்கள். அங்கே ஓர் விசித்திரமான புதிரினை விடுவிப்பதன் மூலம் அந்நாட்டின் ராணியாகத் தேர்ந்தெடுக்கப் படும் ஆரிசியா; இதுநாள் வரையிலும் அந்நாட்டை வழிநடத்தி வருவதாக கூறப்படும் தயாள தெய்வங்களினால் வசியமாக்கப்பட அவரை எவ்வாறு தோர்கல் மீட்டு வருகிறார் என்பதுதான் கதையின் ஒற்றைவரி!

    ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தயாள தெய்வங்கள்; எவ்வாறு அத்தனை நீண்ட வாழ்நாளை தக்கவைத்துக் கொள்கிறார்கள் என்பதன் ரகசியம் சுவாரசியமான ஒன்று. அவர்கள் நடத்தும் வித்தியாசமான போட்டிகள்; அதில் வெற்றிபெற போட்டியாளர்கள் கடைபிடிக்கும் உத்திகள்; நெஞ்சை உலுக்கும் நயவஞ்சக துரோகங்கள் என பக்கங்கள் நகரும் வேகம் அதீதமானது! இறுதியில் சுபமாக முடியும் இந்த பாகம் தோர்கல் தொடரில் சிறந்த வாசிப்பைத் தரக் கூடிய ஒற்றை ஆல்பங்களுள் ஒன்று!

    நார்வேஜியன் வைகிங் கடவுள்கள், புராணங்கள், உலகங்கள் பற்றிய கூடுதல் வாசிப்புகள் நமக்கு தோர்கலின் கதையோட்ட புரிதலை எளிமையாக்கும். தொடரும் ஆல்பங்களில் அவற்றின் அவசியம் இன்றியமையாத ஒன்று!

    முத்து காமிக்சில் இந்த ஆல்பம் சாகாவரத்தின் சாவி என்ற இரட்டை ஆல்பத்தின் முதல் கதையாக வெளிவந்துள்ளது.

    தொடரும்...
    அரங்க. சரவணகுமார்

    ReplyDelete
  33. கேப்ஷன்..1

    (A)டைலன்: ச்சே ச்சே அம்புட்டு ரிஸ்க் எடுத்து இராவுல பேய் வூட்டுல தனியா தங்கி துப்பறிஞ்சும் இந்த ஹெலன் பொண்ணு பீஸ் கொடுக்கலையே இன்னமும்... கல்நெஞ்சக்காரி...

    (B) எலும்பன் க்ரௌச்சோ : கோடாரியால நம்ம மண்டைய பொளந்து பீஸாக்கிட்டு அப்பால ரோஸ்டாக்கிட்டோமேன்னு நினைச்சு பாஸ் நமக்காக ரொம்ப ஃபீல் பண்றாப்புல போல... ஹம்ம்ம்ம்
    (டிடெக்டிவ் ஸ்பெஷல் ஒரு கனவு இல்லம் பாதிப்பு)

    ReplyDelete
  34. கேப்சன் 2..

    டைலன் டாக் : ஹும்..! அந்த பண்டோரா தேசத்து மந்திரவாதியை எவ்வளவு பெரிய பிரச்சினையில இருந்து காப்பாத்தினேன்.! ஆனா அவனோ பீசு குடுக்க காசு இல்லைன்னு இந்த எலும்புக்கூட்டை என் தலையில கட்டிட்டானே.. இதைவெச்சி நான் என்ன பண்றதாம்.!?

    எலும்புக்கூடு : கவலைப்டாதிங்க டைலன்.. நான் டோலக்பூர் இளவரசி லெவன்தாரா.! ஒரு சூனியக்காரியின் சாபத்தால இப்படி ஆகிட்டேன்.! 60 வயசுக்கு அப்புறம் பழையமாதிரி ஆயிடுவேன்னு சொல்லியிருக்காங்க.. அதுவரைக்கும் பாத்துக்கிட்டிங்கன்னா போதும்.!

    ReplyDelete
    Replies
    1. (இதில் எக்ஸ்ட்ராவா)டைலனின் மைண்ட் வாய்ஸ்.: 60 வயசுக்கப்புறம் நீ எப்படி மாறினா எனக்கென்ன.. போம்மா தூரமா.!

      Delete
  35. டாக் - கவலை படாதே கொரோணா வில் இருந்து நான் காப்பாற்றுகிறேன்.

    எலும்பு - அடேய் டாக்கு மாஸ்க் போடாததால் தான் நான் எழும்பானேன் நீ மாஸ்க் போட்டு உன்னை முதலில் காப்பாற்றிக்கொள்

    ReplyDelete
  36. அட்டை படங்கள் எல்லாமே செம. கடைவாயில் குற்றாலம் பெருக்கெடுத்து ஓடுவதை தவிர்க்க முடியவில்லை. எல்லாமே வேண்டும்தான்.... ஆனால் முடியாதே. சித்திரங்களின் துல்லிதமும் வண்ணச் சேர்க்கைகளும்..... பிரமாதம். பிண்ணணியில் எப்படித்தான் காலநிலை சூழல்களை சிருஷ்டிக்கிறார்களோ. தெரியாது. சித்திர ஞானம் தெரிந்த நண்பர்களுக்கே வெளிச்சம். அதிலும் அந்த maxi Tex வேற லெவல். கடைசி அட்டை “ தீபாவளி with டெக்ஸ்” இல் உள்ள பனிவனப் படலம் இல் வரும் ரெட் டக், பிக் ஜீன் தானே சார்? அதனுடன் தொடர்பான ஆல்பமா சார்? கிளாசிக் டெக்ஸ் இன் அட்டையானது மற்றவைகளிலிருந்து வேறுபட்டு தனித்து மிளிர்கின்றது. அதில் மட்டும் டெக்ஸ் சிவப்பு சட்டையில் உள்ளார்

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. முழிப்பு வந்துடுச்சு...ஆசையில் ஓடி வந்தேன்...

    ReplyDelete
  39. கேப்ஷன்..2

    (A)டைலன்: அடச்சை... கிரகம்!!! இன்னமும் ரெண்டு வாரம்ல இருக்கு நம்ம டாஸ்மாக் தொறக்க!!! (ஃபீலிங்ஸ்)

    (B) எலும்பன் : அடப்பாவி!!! அக்கட கதியேன்னு கெடந்த என்னோட இந்த நெலமையப் பாத்துமாயா உனக்கு இன்னும் ஃபீலிங்கு??? ச்சை...கிரகம்...

    ReplyDelete
  40. டைலன்: லாக் டவுனா இருக்கு. செலவுக்கு ஏதாவது கேஸ் கொண்டு வாடானு இந்த க்ரேளச்சோ பய கிட்ட சொன்னா ரேஷன் கடையில கொரானாவுக்கு 2000 வாங்கி தர்ற கேஸை தள்ளி வுட்டுட்டு போயிட்டானே
    எலும்பு கூடு : கூட்டி வந்தவன் நான் செத்து போனவன் என்று தெரிஞ்சும் 50:50 னு சொன்னானே? பணம் கிடைக்குமா? எனக்கு ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரியே இருக்கே

    ReplyDelete
  41. Caption 1

    டைலன் டாக்.: இந்தியாவுக்கு சாகசம் பண்ணலாம்னு வந்தேங்க.. இந்த விக்கிரமாதித்தன் தன்னோட வேதாளத்தை என் தலையில கட்டிட்டு எஸ்கேப் ஆயிட்டாப்போல.!

    எலும்புக்கூடு : ஒரு கதை சொல்லட்டுமா சார்.! ஒரு விவசாயிக்கு மூணு சம்சாரமாம்.. அந்த மூணு சம்சாரத்துக்கும் வேற வேற வீட்டுக்காரனாம்.. அது எப்படி?

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்காரன்னா ஹவுஸ் ஓனருதானே.?

      Delete
    2. அருமையான கேப்சன் சுசீ ஆனா கண்ணன் வந்து அந்த டுவிஸ்ட் உடைத்து விட்டாரே.

      Delete
    3. நன்றி நண்பர்கள்களே. 🙏🙏

      Delete
    4. நெறய்ய அம்புலிமாமா படிச்சிருக்கேன் குமார்.! அதான் ஆர்வமிகுதியில ஹி.ஹி....!

      Delete
  42. Caption 2.
    டைலன் டாக் : ஒரு பத்து நிமிசம் இதைப் பாத்துக்கோ, பாத்ரூம் போயிட்டுவரேன்னு சொல்லிட்டுபோன ஆசாமிய இன்னும் காணோமே.?!

    எலும்புக்கூடு : ஹிஹி.. அவன் வரமாட்டான் நைனா.. என் இம்சை தாங்கமுடியாமத்தான் உங்கிட்ட கோர்த்துவிட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டான்..!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா... பொம்மைக்கு பொருத்தமான கேப்சன்..👌👌👌

      Delete
    2. செம்ம சுசீ உங்களுக்குள் இருக்கும் அந்த திறமை சும்மா சூப்பர் ஆக வெளிவந்து விட்டது.

      Delete
    3. அட டே... பொருத்தமான கேப்சன்....
      செம..செம.. லாக்டவுன் பல போட்டியாளர்களை வெளிக்கொணர்த்து உள்ளது...👌👌👌

      Delete
    4. நன்றி நண்பர்கள்களே. 🙏🙏🙏

      Delete
    5. செம. அவ்வளவு பெரிய மீசைக்குப் பின்னே இவ்வளவு காமெடி இருக்கா?

      Delete
  43. " இம்முறை ஒரிஜினலின் அதே வரிசைக்கிரமத்தில் - எல்லாமே black & white-ல் ; கனகச்சித நகல்களாய் ! "நிலவொளியில் நரபலி" போலான ஸ்பெஷல் இதழ்களை மட்டும் ஒரிஜினலைப் போலவே இந்த மறுபதிப்பு வரிசையிலுமே வண்ணத்தில் தயாரித்துள்ளனர் "

    அருமையான Idea sir, நம்ம என்ன அவங்களுக்கு குறைஞ்ச ஆளுகளா, இத்தாலில அவங்க எப்படி பெரிய தலைக்கட்டோ அதே மாதிரி இந்தியாவுல நம்மளும் பெரிய தலைக்கட்டுதான்னு சொல்லிருவோம், அப்புறம் Matter க்கு வர்ரேன்,

    அவுகள மாதிரியே நம்மளும் லயன், முத்து, மினி, திகில் எல்லாம் அதே Size ல அதே மாதிரி Classic தடம் போட்டா என்ன Sir?

    எப்படியும் எல்லா ரசிகர்களும் எனக்கு ஆதரவா ஆடலும் பாடலும் போட்டே ஆகனும்னு ச்சே Sorry Classic தடம் போட்டே ஆகனும்னு Support பண்ணுவாங்க 😄

    ReplyDelete
  44. கேப்சன் 1

    டாக்: தொழில் விருத்திக்காக எப்படி எல்லாம் ஃபோட்டோ ஷூட் நடத்த வேண்டியிருக்கு?

    எலும்புக்கூடு: டேய்! நீ மட்டும் கோட் சூட் போட்டுக்கிட்டு எனக்கு சுடிதார், ஜீன்ஸ், மிடி ன்னு எதையும் தராம அப்படியே போஸ் தர வச்சுட்டியேடா??


    கேப்சன் 2

    டாக்: கட்டழகு பெண்களை அனைத்து கொண்டே டிவி பார்த்த நான் இப்போது பழக்கத்தை விட முடியாம
    கட்டையில போனவ கூட சேர்ந்து பாக்க வேண்டியதா போச்சே???
    கொரோனா ஒழிக!

    எலும்புக்கூடு: உயிரோட இருந்தப்ப டம்மி பீஸ் nu என்னை ஒதுக்குனவன் இப்பவாச்சும் சேத்துகிட்டானே.
    கொரோனா வாழ்க!!!

    ReplyDelete
  45. கேப்ஷன் 1 :
    டைலன்: பிடிச்சே தீருவேன்.... இன்னைக்கு என்கிட்ட வசமா மாட்ட போகுது.
    எ.கூ: எலும்பு போட்டா நாயதான்டா புடிக்க முடியும்? பாவிப்பய, பேய புடிக்க பார்க்கிறானே!!!

    கேப்ஷன் 2:
    டைலன்: இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே இருக்கிறது? கிரௌச்சோ கொடுத்த ஐடியா அப்போ நல்லா இருந்துச்சே!?!

    எ.கூ: செத்து போன என்னை கட்டி புடிச்சா, இப்ப பேயா திரியற என் புருஷன் ஏன்டா கோவப்பட போறான்?!?! அவனுக்கு "பாயசம்" போட்டவளே நானு....

    ReplyDelete
  46. கேப்ஷன் :

    டைலன் :

    இந்த எடி, டெக்சுக்கு தனி சந்தா போடலாமா என்கிற ரேஞ்சுக்கு டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்காரு. நான் என்னடான்னா நமக்கு வருஷத்துக்கு ஒரு ஸ்லாட்டாச்சும் கிடைக்குமான்னு தேவுடு காத்து கிடக்க வென்ண்டியிருக்கு. என்னக் கொடும எலும்பா...

    எலும்புகூடு :

    இவருக்கு எப்ப ஒத்த ஸ்லாட் கிடைக்கிறது, அதுல நாம எப்ப வந்து பயமுறுத்துறது. என்னமோ போங்க டைலன்..

    ReplyDelete
  47. // பரிசு பெறும் caption க்கு "உயிரைத் தேடி" புக் நம் அன்புடன் ! //

    இது தான் இந்த பதிவின் highlight, ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு "உயிரைத் தேடி" புத்தகம் உறுதி என இதன் மூலம் தெரிகிறது! சூப்பர் நியூஸ்!

    ReplyDelete
  48. // Color Tex சிறுகதைகள் பாணியிலேயே டைலனின் வரிசையிலும் கொஞ்சம் short stories உள்ளன ! //

    இதுவரை வந்த டைலனின் முழுவண்ண கதைகளில் எனக்கு 3-4 கதைகள்தான் பிடித்து இருந்தது!

    எனவே அடுத்த வருடம் ஒரு மாற்றத்திற்கு இந்த சிறுகதை தொகுப்புகளை முயற்சி செய்து பார்க்கலாம் சார்! 4 short ஸ்டோரிஸை இணைத்து ஒரு புத்தகமாக கொடுக்கலாமே!

    // 2022-ல் அவற்றை முயற்சித்துப் பார்ப்போமா //
    +1

    ReplyDelete
  49. A) மாஸ்க் போடு தடுப்பூசி போடுன்னு சொன்னா கேட்டியா? இப்பப் பாரு... ஆஸ்பத்திரியிலயும் இடம் கிடைக்காம சுடுகாட்டுலயும் இடம் கிடைக்காம எலும்புக்கூடா உக்காந்துக்கிட்டிருக்க.

    B) ஊருக்குத் தான் உபதேசமா? முதல்ல நீ மாஸ்க்க போடு டைலன்டாக்.

    ReplyDelete
  50. டைலன்டாக் முயற்சிக்கலாம் ஐயா!

    ReplyDelete
  51. டைலன்: ஏய்..!! டைகரு...!! நீயாப்பா இது..!? எப்படியிருந்த நீ... இந்த கஷ்டகாலத்துல இப்படி ஆயிட்டீயே...!!!

    எலும்புக்கூடு டைகர்: அதனால இல்லப்பா... என் புஸ்தகம் வந்து வருஷமாயிடுச்சு... ஆனா அதிகாரிக்கோ தினந்தினம் update..!! அந்த காண்டுலதான் இப்படி ஆயிட்டேன்... சரி விடு... பூனைக்கு ஒரு காலம் வந்தா.. புலிக்கு ஒரு காலம் வராமலா போகும்... !!!??

    ReplyDelete
  52. டைலன் டாக் வரவேற்கின்றேன் சார்.

    ReplyDelete
  53. dylan -சரி சரி கவலை படாதே உன் பேர் என்ன சொன்னே ?
    டேவிட் சார்
    எப்படி செத்தே ?
    கோவிட் சார்

    ReplyDelete
    Replies
    1. வீரையன் சார் வெகு நாட்களுக்கு பிறகு வந்தாலும் சூப்பர் entrance. அருமை

      Delete
  54. dylan -ஆஹா எலும்பு கூடையா தொட்டேன் ,,நல்லா சோப்பு போட்டு கையை கழுவணும்
    ஆஹா ,,மனுசப்பயலையா தொட்டேன் ..நல்லா சோப்பு போட்டு கையை கழுவணும்

    ReplyDelete
  55. Dear sir/Madam,

    Pleae find the attached files for photo's of This month Durango Book.Pages from 76 is missing and next to page no 124 comes page 93.
    Kindly check and send me another Correct copy.

    I'am so sorry to inform you this very late. I have fever for the last week & I just reading all Durango from 1 book to Last Today to get the feel the completion.

    So just now found this error. Please help ASAP.

    I Will send this book to you If it's necessary. I also send the images to Whatsapp no also.

    Name : SIVASUBRAMANIAN

    2021 -Subscription No : 1095

    Address : 83, Gopal Street, Kovilpatti - 628502

    Mobile : +91 8778987433

    Regards,

    Sivasubramanian

    8778987433

    ReplyDelete
    Replies
    1. லயன் ஆபிசின் வாட்ஸ்அப் நம்பருக்கு இது அனுப்புங்கள் சகோ.

      Delete
    2. Uthavikku Nantri nanbare! I already send this e mail and whatsapp!

      Delete
  56. Dear sir/Madam,

    Pleae find the attached files for photo's of This month Durango Book.Pages from 76 is missing and next to page no 124 comes page 93.
    Kindly check and send me another Correct copy.

    I'am so sorry to inform you this very late. I have fever for the last week & I just reading all Durango from 1 book to Last Today to get the feel the completion.

    So just now found this error. Please help ASAP.

    I Will send this book to you If it's necessary. I also send the images to Whatsapp no also.

    Name : SIVASUBRAMANIAN

    2021 -Subscription No : 1095

    Address : 83, Gopal Street, Kovilpatti - 628502

    Mobile : +91 8778987433

    Regards,

    Sivasubramanian

    8778987433

    ReplyDelete
  57. டயலன்....இருப்பா உனக்கு உடை தயாராவுது
    எ.கூ...தயவு செஞ்சு மாஸ்கும் தந்துருப்பா....எலும்புக்கூடாருந்தே பொழச்சிக்கிறேன்...மூன்றாவது அலை வேற வருதாம்...இரண்டாவது அலை எனக்கு...மூன்றாவது அலை உனதாயிடக்கூடாது....மாஸ்க் போடு தம்பி...நீங்களும் மாஸ்க்க போட்டு படிங்கண்ணே

    ReplyDelete
  58. // அவ்வப்போது லேசாய், மிக லேசாய், மிகச் சொற்ப நண்பர்களிடமிருந்து கேட்கும் முணுமுணுப்பு இதுவென்பதை நாம் நன்றாகவே அறிவோம் ! //
    இதை நீங்களே திரும்ப,திரும்ப சொல்லத் தேவையில்லைன்னு தோணுது சார்...!!!

    ReplyDelete
  59. // ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல...நான்கல்ல....மொத்தம் 10 வெவ்வேறு தடங்களைப் பதித்துள்ளார்கள் TEX எக்ஸ்பிரஸ் தடதடக்க !! //
    இரகத்துக்கு ஒன்னுன்னா கூட இன்னொரு தனித் தடம் ஸ்பெஷலா உருவாக்கி போட்டுடலாம் போல...

    ReplyDelete
  60. // நமது டைனமைட் ஸ்பெஷல் இதழில் வெளியான அந்த நெடுங்கதையோ, கிட்டத்தட்ட 6 தனித்தனி TEX ஆல்பங்களில் பயணித்த கதை என்பதாக ஞாபகம் ! //
    யப்பா......!!!

    ReplyDelete
  61. // ஒரு குறிப்பிட்ட பக்க நீளக் கட்டுப்பாடுகளை தந்து படைப்பாளிகளைக் கட்டிப்போடாது - அவர்களின் கதைகளுக்கு ஏற்ப களங்களை வழங்கிடும் முயற்சியாக இது எனக்குத் தென்படுகிறது ! இந்த MAXI TEX தற்போது தொட்டு நிற்பது # 28 !! //
    போறப் போக்கைப் பார்த்தா,நம்ம டெக்ஸ் வில்லரை வெச்சே பி ஹெச் டி பண்ணலாம் போல,அவ்வளவு விஷயம் இருக்கு உள்ளே...!!!

    ReplyDelete
    Replies
    1. நல்ல விசயம் தான். அண்ணா நானும் நீங்களும் சேர்ந்து முயற்சிக்கலாமே

      Delete
  62. // 2022-ல் அவற்றை முயற்சித்துப் பார்ப்போமா - அல்லது நோ ஆணி pluckings-ஆ ? சொல்லுங்களேன் guys ! //
    இப்போதைக்கு நோ ஆணி,2023 இல் முயற்சிக்கலாம்...

    ReplyDelete
  63. டைலன் : எப்படியும் வருஷத்துக்கு 12 டெக்ஸ் புக்குக்கு மேல இந்த எடிட்டர் போடப் போறதில்ல,அப்புறம் ஏன் தினம் விதவிதமா போட்டோ போட்டு எல்லாத்தையும் உசுப்பேத்திகிட்டு இருக்காரு ???!!!
    எலும்புக்கூடு:தல புஸ்தகம் எல்லாத்தையும் படிக்க முடியாட்டியும் நம்மள மாதிரி எலும்புக் கூடு ஆகறதுக்குள்ள எல்லா அட்டைப்படத்தையுமாவது பார்த்துக்கட்டும்னும்தான்,இது கூட இவனுக்கு தெரியலை ???!!!

    ReplyDelete
  64. டைலன்டாக்:எப்படியோ டைம்மெஷினில் எதிர்காலத்துக்குப் போய் என்னோட எலும்புக்கூடை எடுத்தாந்துட்டேன். இனி நான் எதிர்காலத்திலே எப்படி இறந்தேன்கறதை கண்டுபிடிச்சுஎன்னோட இறப்பைத் தடுக்கமுடியுமானு யோசிக்கனும்

    ReplyDelete
  65. பதிவுக்காக,wait,sir

    ReplyDelete
  66. இந்த லயன் Blog அதிகாரி எங்கு போனார்..
    அதிகாரி வியாழன் க்காக Waiting...

    ReplyDelete
    Replies
    1. இக்கட மழை கொட்டித் தள்ளியதில் வீட்டிலிருக்கும் WI-FI போயிண்டே ! So மொக்கையான செல் நெட்வொர்க்கில் டைப் அடிப்பதற்குள் தாவு தீர்ந்து வருகிறது ! 5 மணிக்கு தயாராகிடும் !

      Delete
    2. மழையா.. அடக்கடவுளே இங்குட்டு வெயில் பொளந்து கட்டுது சார்..

      Delete
  67. 5"மணிக்கு,பதிவு காத்திருக்கேன் ஆசானே

    ReplyDelete
  68. இன்னும் நெட்வொர்க் இணைப்பு கிடைக்கவில்லை போலும்.
    எவ்வளவு லேட் ஆனாலும் வெயிட்டிங் சார்.

    ReplyDelete
  69. பதிவு வரும்ங்களா???



    300 கமென்ட்க்கு மேல் போனா உப பதிவுங்கறது கம்பெனி ரூலு.

    ஆனால் அதுக்காக கால் கடுக்க காத்திருந்த காலமெல்லாம் இருக்கு.

    தினத்துக்கு ஒரு பதிவுங்கறது சிரமமானதுதான்.

    குவாரண்டைன் நாட்களை கடத்துவதற்கு blog ஓரளவுக்கு உதவிகரமாத்தான் இருக்கு.ஆசிரியருக்கு தனிப்பட்ட விதத்தில் நன்றி சொல்ல வேண்டும்.

    இந்த முறை ஊரடங்கு நாட்களை மிகவும் சிரமமாக உணர முடிகிறது.



    ReplyDelete
    Replies
    1. ஈவிய காணல.

      ஆசிரியரின் புதிய பதிவு ரெடி ....நண்பர்களே!!!!.

      Delete
  70. எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete