Wednesday, April 28, 2021

ஏப்ரலில் மே !

 நண்பர்களே,

வணக்கம். காத்திருக்கும் இந்த வாரயிறுதி, நெடும் விடுமுறைகளோடு என்பதால் இன்றைக்கே மே மாதத்து இதழ்களை உங்கள் இல்லங்கள் நோக்கிப் படையெடுக்க வழியனுப்பி வைத்தாச்சு ! ட்யுராங்கோ + டெக்ஸ் + மாயாவிகாரு என்ற தெறி மாஸ் கூட்டணி இம்முறை ! So வாரயிறுதியில் எந்தக் கட்சி பட்டாசு போட்டாலும் சரி, எந்தக் கட்சி  முகாரியினை இசைத்தாலும் சரி, நமது காமிக்ஸ் கட்சியின் சார்பாய் ஒரு ஜாலி சரவெடி வெடிக்கலாம் ! And அதற்கென நேர காலக் கட்டுப்பாடுகளோ ; ஊரடங்குகளோ அமலில் இராது ! 

இக்கட சின்னதாயொரு நினைவூட்டல்  guys

மாயாவியின் "கொரில்லா சாம்ராஜ்யம்" 2020 சந்தாவின் கிராபிக் நாவல்களின் E பிரிவினில் தொக்கி நின்ற தொகையினை சமன் செய்திடத்  தயாராகியுள்ள இதழ் என்பதை நினைவூட்டுகிறேன் !  So 2020-ல் கிராபிக் நாவல் பிரிவிற்கும் சந்தா செலுத்தியிருந்த பட்சத்தில் மட்டுமே  வண்ணத்திலான மாயாவியை இம்மாத டப்பியில் உங்களுக்கு சேர்த்து அனுப்பியிருப்பார்கள் ! And 2021 முதலாய் சந்தாவில் ஐக்கியமாகியுள்ள (புது) நண்பர்களுக்கு "கொ.சா."அனுப்பப்பட்டிராது ! 

இதோ, ஆன்லைனில் லிஸ்டிங்களும் போட்டாச்சு : 

https://lion-muthucomics.com/latest-releases/834-2021-may-pack.html

https://lioncomics.in/product/2021-may-pack/

கூரியர் நண்பர்கள் நாளைய பொழுதில் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டுவார்களென்றும் , இந்த வாரயிறுதியை இந்த powerful கூட்டணியோடு நாம் கலக்கலாமென்றும் நம்பிடும் கையோடு - ஜூன் மாதத்து காம்போவை நோக்கி நடையைக் கட்டுகிறேன் folks ! Bye for now !!  See you around !! 

178 comments:

  1. வந்துட்டேன் 3 ல்

    ReplyDelete
  2. நாளைக்கு திருவிழா தான்.

    ReplyDelete
  3. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  4. // கூரியர் நண்பர்கள் நாளைய பொழுதில் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டுவார்களென்றும் //
    அருமை...

    ReplyDelete
  5. Top 10 ல வரலாம்னு பாத்தா ...வட போச்சே ...

    ReplyDelete
    Replies
    1. வடை போனால் என்ன. அதுதான் இலை இருக்குல்ல 😂

      Delete
  6. எல்லார்க்கும் சலாம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. எடி மற்றும் குழுவினர்களுக்கு
    நன்றிகள்.

    ReplyDelete
  9. வண்ணத்தில் வரும் மாயாவிக்கு வரவேற்புகள் ஓராயிரம்.

    ReplyDelete
  10. நன்றி. வரும் வாரத்தின் மனச்சுமையை பெரிதும் குறைக்க உதவும்

    ReplyDelete
  11. அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  12. நடந்த பஞ்சாயத்தில் இன்னும் அதிகாரப் பூர்வ தீர்ப்பு வரலிங்களே ஆசானே?!

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்க நட்புகளா டெக்ஸ்க்கு கிட்டத்தட்ட 100வாக்கு வந்திருக்கும்.... இதற்கும்மேல தீர்ப்பு வேற வேணுமா??


      வாரம் பூரா வந்த மெசேஜ் டெக்ஸ்... டெக்ஸ்னு தானே பதிவாகி இருந்தது

      Delete
    2. அப்படி சொல்லுங்க நண்பா 👍

      Delete
  13. முதலில் மாயாவி...
    இரண்டாவதாக தல டெக்ஸ் வில்லர் படிக்கவேண்டும்.

    ReplyDelete
  14. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  15. ஏப்ரலில் மே அருமை சார்! எங்கள் ஊரில் எந்த நேரத்தில் முழு லாக்டவுன் போடுவார்களென்றே தெரியவில்லை! அதனால் புத்தகங்கள் முன்னதாக வருவது மகிழ்ச்சி தான்! அதுவும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு வரும் மாயாவி காரு வண்ண இதழை பார்க்க ஆவல்! அத்தோடு தல டெக்ஸ் & டியூராங்கோ சேர்ந்து கொண்டால், கோடையை விட இவர்களது கொளுத்தலே (அனலே)அதிகமாக இருக்கும் 😍

    ReplyDelete
  16. 31ம் பக்கத்தில்சோடாவுடன் பேசிக்கொண்டிருக்கும்சார்ஜெண்ட் மெயரின் ஷுமீதுபெயிண்ட்சொட்டுகிறது. 34ம் பக்கத்தில்இறந்துகிடக்கும் நபரின்அருகில் சார்ஜெண்ட் மெயர்அதே பெயிண்ட் சொட்டிய ஷுவுடன் நிற்கிறார்இதுபோல் சின்னச்சின்னநகாசு வேலைகள்புத்தகம் முழுதும்நிறைந்துகிடக்கும் போல. சாலமன் டேவிட் மொத்தத்துல்திரும்பதிரும்ப வாசிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ராஜசேகரன் சார். நானும் கவனித்தேன்.

      Delete
    2. அந்த பெயிண்ட்க்கு என்ன சார் அர்த்தம்?

      Delete
  17. சூப்பர். நாளைக்கு புக் கெடச்சுட்டா இவ்வாரயிருதி நல்லா இருக்கும்.

    ReplyDelete
  18. Replies
    1. கழுகு வேட்டை :

      செம்ம மேக்கிங்...

      கதை சிறுவயதில் (நெசமாத்தாங்க) படித்தது.! மியூசிக் லாக்கெட், அண்ணன் தம்பி மூவரில் ஒருவன் ஆற்றில் குதித்து தீயில் இருந்து தப்பிப்பது, அந்த ஒற்றைக்கு ஒற்றை க்ளைமாக்ஸ் போன்ற சில சம்பவங்கள் மட்டுமே லேசாக நினைவில் இருந்தது.!
      இபேபோது படிக்கையில் நினைவில் நின்றது, நில்லாதது எல்லாம் கலவையாக சேர்ந்து ஒரு புதுவித வாசிப்பனுபவத்தை கொடுத்தது.!

      புத்தகத்தை கண்கவரும் வகையில் சிறப்பாக தயாரித்து வழங்கிய பாங்கிற்கு...
      தொப்பித் தூக்கல்கள் சார்.!

      Delete
    2. கழுகு வேட்டை ஒரு மிகச் சிறந்த அனுபவமே. சூப்பர் ஆக சொன்னீர்கள் கண்ணா. Book making வேற லெவல். Awesome

      Delete
  19. குறித்த நேரத்திற்கு முன்பே புத்தகங்கள் கிடைக்கவிருப்பதில் மகிழ்ச்சி! நன்றிகள் எடிட்டர் சார்!

    ReplyDelete
  20. எடிட்டர் அவர்களுக்கும், குழுவினருக்கும் நன்றிகள் பல.
    வாசிப்பை சுவாசமாக எண்ணும் எனக்கு தற்போதைய சூழ்நிலை கொடுக்கும் மன அழுத்தத்தில் புத்தகங்களை வாசிப்பதே சிரமத்தை தருகிறது. இந்த சூழலில் சற்றேனும் ஆசுவாசத்தை கொடுப்பது நமது பொம்மை புத்தகங்களே!
    இரத்தப்படலத்துக்கு இன்னும் பணம் அனுப்ப முடியாததை நினைத்தால் இன்னும் டென்ஷாகுது. மே மாதம் அனுப்பி விட முடியும் என நம்புகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்திலிருந்தும் மீண்டு எழுவோம் நண்பரே.நம்பிக்கையுடனிருப்போம் நண்பரே.

      Delete
  21. கிளம்பிட்டேன்......

    ReplyDelete
  22. வந்துட்டேன்

    ReplyDelete
  23. //வணக்கம். காத்திருக்கும் இந்த வாரயிறுதி, நெடும் விடுமுறைகளோடு என்பதால்//
    எங்க சார்..எங்க.. எங்க..

    ReplyDelete
  24. ஏப்ரலில் மே. நெடும் விடுமுறைகள் உற்சாகமாகப் பறக்கப்போவது உறுதி. Yes. K. S. சார், கிரிதர்சுதன், சார்பெயிண்ட்டுக்கு ஏதேனும் விளக்கம் இருக்கும் என்றேஎதிர்பார்க்கிறேன். நண்பர்கள் யாரேனும் விளக்கம் கூறுவார்கள் என்றுதான்இந்தப்பதிவே போட்டிருந்தேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  25. மதிப்பிற்குரிய ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் வணக்கம். சென்ற பதிவில் தல எதற்கு என்று கேட்ட நண்பருக்கும் அதற்கு ஆசிரியரின் அற்புதமான பதில்களை கேட்ட பிறகு.... என் பதிவின் தாக்கம் வெறும் எண்ணங்களே....
    டெக்ஸ் என்ற மூன்றெழுத்து அதிகமாக வரும் ஆதலால் இந்த மூன்று எழுத்தை பிடிக்காதவர்கள் அடுத்த கமெண்ட் படிக்க செல்லலாம்.
    1972 இல் வந்த முத்து, 1984 இல் தொடங்கிய லயன்.. ஆனால் எனக்கு பரிச்சயமானது என்னவோ 1988 அல்லது 89. அப்போது கிடைக்கும் 10 பைசா 20 பைசா சேர்த்துவைத்து மாதக்கடைசியில் கடைக்கு ஓடிச்சென்று வாங்கும் முதல் புக் இரும்புக்கை மாயாவி மற்றும் ஸ்பைடர். அடுத்த பூக்கள் எல்லாம் அதற்கு பிறகு கையில் காசு இருந்தால்...
    இப்போது மாதம் நான்கு இல்லை நாற்பது புக்கு வந்தாலும் வாங்க முடியும் இறைவன் அருளால்.... அப்படி இயலாத நிலையில் என்னால் ஒரு புக்கு தான் வாங்க முடியும் என்றால் அது டெக்ஸ் டெக்ஸ் டெக்ஸ்...
    2012 இல் இரண்டாவது திறப்புவிழா கண்ட போதும் சரி முன்பும் சரி சந்தா கட்டியது இல்லை. புத்தகங்களை தேடிப்பிடித்து வாங்குவதில் கிடைக்கும் சந்தோஷம். மடியில் வந்து விழும் போது கிடைக்கவில்லை என் மட்டிலும்... முதன்முதலாக சந்தா கட்டினேன் டெக்ஸ் க்கு என்று தனித் தடம் வந்தபோது. ஏதேனும் ஒன்றை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சத்தால். அது இன்று வரை தொடர்கிறது.
    சரி விவாத பொருளுக்குள் வருகிறேன். இதில் முதல் தவறாக ஆசிரியர்கள் அவர்களை குறிப்பிடுகிறேன். சில வருடங்களுக்கு முன்பு தீபாவளி என்றால் அது டெக்ஸ்ட் உடன் தான் என்றீர்கள். அதுவே குண்டு புக்காக வந்தால் வாசகர்களுக்கும் சரி விற்பனையாளர்களுக்கும் சரி சரியான தீனி என்றான பிறகு.,.
    2021ல் தளபதி தீபாவளி என்று அறிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன? ( இந்த அறிவிப்பு வந்த போதும் சரி இப்போதும் சரி என் எதிர்ப்பு இதுதான். உங்களின் பரீட்சார்த்த முயற்சி எல்லாம் மற்ற பதினொரு மாதங்களில் வைத்துக்கொள்ளுங்கள். தீபாவளி என்றால் தல ( குண்டு ) தீபாவளி தான். உங்களின் பெயரை பிள்ளைக்கு பெண் பார்க்கும் படலம் வந்தாலும்கூட இதையே தொடருங்கள் விவாதம் வரவே வராது. ( தொடரும்)

    ReplyDelete
  26. பார்சலை கைப்பற்றியாயிற்று...

    ஐயம் ஹேப்பி...

    ReplyDelete
  27. டெக்ஸ்க்கு அதிகமான இடங்களை தருவதாக 10% அல்லது 25% ஒலித்த குரலுக்காக tex ன் தனி தடத்தை எடுத்து விட்டீர்கள். எனக்கு கிராபிக் நாவல் சுத்தமாக பிடிக்கவில்லை. அதற்காக அதை வெளியிடாதீர்கள் என்றும் அதற்கு பதில் டெக்ஸி வெளியிடுங்கள் இன்றும் கருப்பு கொடி தூக்கியது இல்லை. அனைத்தையும் வாங்குவேன் பிடித்ததை படிப்பேன் மற்றதை அடுக்கி வைப்பேன் அவ்வளவுதான் விஷயம். நல்ல காரியத்துக்கு புறப்படும்போது பூனை குறுக்கே வந்த கதை போலவும் சில நாத்திகவாதிகளால் பல கோயில்களை மூடுவது போன்றும் சில உளறல் வாதிகளால் ( நண்பர்கள் மன்னிக்கவும்) டெக்ஸ்ன் தனி தடத்தை மூடியது அதுபோலவே என் மனதிற்கு தோன்றுகிறது. நீங்கள் என்ன காரணம் கூறினாலும் இத்தாலி மக்களைப் போல் ஒவ்வொரு மாதமும் தலையுடன் பாலைவனத்திலும் காடுகளிலும் எப்போது திரும்ப பயணம் செய்யப் போகிறோம்?????…
    சவுதியில் வசிக்கும் எனக்கு நேரடி புக் பார்சல் கிடையாது தற்போதுவரை.ஊருக்கு வரும் யாரிடமாவது கெஞ்சிக்கூத்தாடி புக் வரவழைத்து படிப்பது வழக்கம். எடை கூடி விடக்கூடாது என்பதற்காக டெக்ஸ் வில்லர் டைகர் லார்கோ என்று சிம்பிளாக முடித்துவிடுவேன். சில வருடங்களுக்கு முன்பு ஆஹா ஓஹோ என்று அதிகமாக பில்டப் தந்த பிஸ்டலுக்கு பிரியாவிடை புக்கை வரவழைத்தேன் ஒரு முறை,. உண்மையில் கதை நன்றாக இருந்தது ஆனால் வந்தபோது படித்ததோடு சரி மறுவாசிப்புக்கு என்று இதுவரை எடுத்ததில்லை. ஆஹா ஓஹோ என்று கிராபிக் நாவலைப் பற்றிச் சொல்லும் நண்பர்கள் இதுபோன்ற கதைகளை எத்தனை முறை மீள் வாசிப்பு செய்து உள்ளீர்கள். ( நண்பர்கள் மனசாட்சி இடமே விட்டுவிடுகிறேன் )...
    நேற்று படித்தவரை சர்வமும் நானே பத்தாவது முறை... டைனமைட் ஸ்பெஷல் ஐந்தாவது முறை மற்ற டெக்ஸ்ட் எல்லாம் பத்துக்கும் மேலே.
    கொஞ்சம் பயமாகவும் நிறைய வெறுப்பாகவும் இருக்கிறது. இந்த வரிகளைப் படித்த போது என்னுள் இருந்த சங்கடம். நண்பர் மனது சங்கடப்படாமல் இதற்கு என்ன பதில் சொல்வது,, அப்போது ஒரு படத்தில் இடம்பெற்ற வசனம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. படத்தின் பெயர் சமுத்திரம். கணவனிடம் கோபித்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்த மகளை பார்த்து அம்மா சொல்லும் வசனம். என் அண்ணனின் குடும்பத்திலேயே உன்னால வாழ முடியலையே வேற எங்க போய் வாழப்போற. பேசாம செத்து போய்விடு என்று சொல்வார்கள். அதே தான் இங்கேயும்.. டெக்ஸ்ட் கதையே உங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது என்றால்.. மற்ற கதைகளைப் படித்து என்ன பிரயோஜனம். உடனே என்ன சொல்கிறீர்கள் நாங்கள் டெக்ஸ் வேண்டாம் என்று சொல்லவில்லையே சந்தில் சிந்து பாட வேண்டாம் என்றுதானே சொல்கிறோம். தமிழ் காமிக்ஸின் சந்தே இப்போது டெக்ஸ்ட் தான். பின்னே சிந்து பாடாது இருந்தால் எப்படி???
    நண்பர்கள் சொல்வதுபோல்
    அதே நேர்கோட்டு கதை
    அதே கதை களம்
    அதே கதை மாந்தர்கள்
    அதே டமால் டுமீல்
    அதே சதக்.. குமாங்
    அதே குதிரை
    அதே சலூன்
    அதே செவ்விந்தியர்
    அதே நீதி
    அதே நேர்மை
    அதே கடமை... அதே அதே அதே...
    ஆனால் அந்த அதே... ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது.. ( தொடரும்)

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் கதைதான் லயனின் தூண்.
      Sema ji.

      Delete
    2. Agree. We need seperate monthly tex. I have more than 1800 tex in soft copies in italian language. When are we goibg to read that all

      Delete
    3. Agree. We need seperate monthly tex. I have more than 1800 tex in soft copies in italian language. When are we goibg to read that all

      Delete
  28. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்...
    சில பானைகளும் அந்தந்த பானைகளில் ஒரு சாதமும்..
    1. தலை வாங்கி குரங்கு : ஒரு அறிமுக ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த அதிரடியான அற்புதமான கதை. எடுத்த எடுப்பிலேயே சோலோவாக இறங்கி சிக்ஸர் அடித்த ஹீரோ.
    2. பவளச் சிலை மர்மம் : நமது ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை காப்பது போல் ஒரு நல்ல மாந்திரிகன் இன் பாரம்பரிய திருட்டுப்போன சிலையை தேடிச்செல்லும் கதை. மற்றவர்களை ஆபத்தில் தள்ளுவதே இவரது பழக்கம். இப்படி ஒரு கரும்புள்ளி அவரிடம் உள்ளது. இந்தக் கதையின் கிளைமாக்ஸ் சீனில் மற்றவர்களை அனுப்பிவிட்டு கயிற்றை வெட்டி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தன்னை பலி கொடுக்க தயங்காத tex யும் சரி அவரை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காத கார்சனின் நட்பையும் அறியாமல் போய் விட்டோமோ!!!!.
    3. பழிவாங்கும் பாவை : செவ்விந்திய பெண் சொல்லும் வசனம். தோலின் நிறம் பார்ப்பவர் அல்ல. மனங்களைப் பார்ப்பவர் டெக்ஸ். இந்தக் காலகட்டத்தில் ஜாதி மதம் என்று பிரிந்திருக்கும் மக்களிடையே இருக்கவேண்டிய மிகப்பெரிய பண்பு அல்லவா இது...
    இதுபோல் ஒவ்வொரு கதைகளுமே சம்மட்டி அடி போல் நீதி நேர்மையை பயிற்றுவிக்கிறது. என்னை பொருத்தவரை பள்ளியில் கற்ற அறிவை தாண்டியும் அனுபவ அறிவை ஊ ட்டியதில் டெக்ஸ்ன் பங்கு மிக அதிகம்., அதிலும் சர்வமும் நானே கதையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இடங்கள் நிறைய இருந்தபோதிலும்.. ஒன்று மட்டும் " மலைகளில் நடந்து வந்த களைப்பு நீங்க ஒரு மணி நேரம் ஓய்வு கேட்பார் கார்சன். அப்போது துப்பாக்கி முழக்கம் கேட்க tex ன் மகன் ஆபத்தில் இருக்கிறான் என்று அறிந்து அந்த அறுபது வயதிலும் தன் வலியை மறந்து செல்லப் பிள்ளைக்கு ஆபத்து என்று ஓடும் அந்த இடம்... பாசத்தின் உச்சகட்ட மன்றோ!!¡
    இதேபோல் கார்சனின் கடந்த காலத்தில் இருபது மைல்கள் பாலைவனத்தில் நடந்து வந்து ஓய்வு கூட எடுக்காமல் அங்கிள் ஹிட்டுக்கு என்னவாயிற்று என்று உடனே புறப்படும் இடம்... மெய் சிலிர்த்த இடங்கள்!!!!!
    இப்போது எல்லாம் இது போன்ற பாசம் நட்புகடமை இது எல்லாம் வெறும் மியூசியம் தானே...
    நண்பர் சொன்ன மாதிரி மதுக்கடை பானமோ சிகரெட்டோ tex ன் தலைக்கனமோ இன்னும் எவ்வளவோ சொன்னார். ஆனால் எனக்கு இது எதுவுமே தெரியவில்லையே.. ( ஒருவேளை பாலை மட்டுமே பருகும் அன்னப்பறவையோ 😂😂😂😂).
    இதுபோல் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.ஆசிரியர் சொல்வது போல் டெக்ஸ் இல்லாமல் காமிக்ஸ் வரும் என்றால்.. அந்த நாளே காமிக்ஸ் வாங்குவதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு பழைய tex கதைகளை மட்டும் படித்துக் கொண்டு வாழ்க்கையை வாழ்வேன்.
    என்னைப் பொறுத்தவரை காமிக்ஸ் வகைகளில் டெக்ஸாண் என்ஜின்.. மற்ற கதைகள் எல்லாம் சாதாரண பெட்டிகள் தான்...
    Lion is family என்றால்
    Tex is my life.
    நன்றி வணக்கம்... 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. அசத்தலான பதிவு.நல்ல ஆராய்ச்சி.மனதிலுள்ளதை பட்டவர்த்தமாகச் சொல்லியுள்ளீர்கள்.நன்றி தல.

      Delete
    2. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

      Delete
    3. அதெல்லாம் ஒன்றும் இல்லை தலைவரே... கடைசில என்னையும் தலையா கேட்டீங்களா 😂😂😂😂

      Delete
    4. சூப்பர்....இருளின் மைந்தர்கள் கார்சன் டெக்ஸ் நட்புக்கு வேற லெவல்....கார்சன் டெக்ஸ் மேல் எரிந்து விழுவது அட்டகாச வசனங்கள்

      Delete
    5. உண்மை உண்மை. முதுகை ஒட்டி கொண்டு உட்கார்ந்து செல்லும் காட்சி. ரிலே ரேஸ் செல்லும்போது கார்சனின் உயிரை காப்பாற்ற வேறு திசையில் செல்லும் டெக்ஸ். அதை சமாளிக்கும் பாங்கு 👌👌👌

      Delete
    6. எனது, வாசக நண்பர்களது எண்ணங்களை திறம்பட்ட வார்த்தைக் கோர்வைகளால் பிரதிபலிக்கச் செய்து விட்டீர்கள்.கார்சனின் கடந்த காலம்,சர்வமும் நானே,கழுகு வேட்டை,பந்தம் தேடிய பயணம்,ஒக்லஹாமா,பாலைவனத்தில் ஒருக் கப்பல்,நேற்று வெளிவந்த நெஞ்சே எழு etc etc போன்றவை சோறு பதங்கள்.எங்களைப் போன்றோரின் பால்யத்தைப் பாதுகாத்து ,கதைகளை சிறப்பான முறையில் மொழிபெயர்த்து, புத்தகங்களைத் தரமான முறையில் தயாரித்து வெளியிடும் விஜயன் சாருக்கும் அவரது குழுவினருக்கும் ஆத்மார்த்தமான அழியாத நன்றிகள்.

      Delete
    7. சூப்பர் ஜி.
      வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு விமர்சனம்.
      One and only lionking Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Tex.
      //ஆசிரியர் சொல்வது போல் டெக்ஸ் இல்லாமல் காமிக்ஸ் வரும் என்றால்.. அந்த நாளே காமிக்ஸ் வாங்குவதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு பழைய tex கதைகளை மட்டும் படித்துக் கொண்டு வாழ்க்கையை வாழ்வேன்//
      எனது முடிவும் இதுவே.
      நன்றி ஜி.

      Delete
    8. 👌👌👌👌👌❤❤❤❤❤❤😂👌👌👌

      Delete
    9. //இதுபோல் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.ஆசிரியர் சொல்வது போல் டெக்ஸ் இல்லாமல் காமிக்ஸ் வரும் என்றால்.. அந்த நாளே காமிக்ஸ் வாங்குவதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு பழைய tex கதைகளை மட்டும் படித்துக் கொண்டு வாழ்க்கையை வாழ்வேன்.
      என்னைப் பொறுத்தவரை காமிக்ஸ் வகைகளில் டெக்ஸாண் என்ஜின்.. மற்ற கதைகள் எல்லாம் சாதாரண பெட்டிகள் தான்...//

      Very Well said !! I have regularly subscribed to lion Muthu comics and here in this blog,, I have been only a silent observer till now. Since childhood I was attracted to Tex willer comics. Everyday after school I used to cycle to various shops to see if lion comics has come. If tex willer story was there,, that day was heaven. And if it was Diwali,, it was always a Tex festival !! When the much respected Editor is willing to satisfy one and all and is doing a fine balancing work,, this perpetual brooding by some,, against Tex ,, whether it is separate subscription or special editions on festival days or Summer special or Book exhibition specials,, seems unnecessary.

      Every saturday evening & then sundays,, I used to keep checking if new blog by Editor has come,, that and the posts & replies,,which were funny and delightful,,...it was a stress buster !! But these days,,.....it's like reading a graphic novel.

      About graphic novels,, I happen to like this genre too,, they are like art work & most of the time refreshing.
      But graphic novel is for the brain,, Tex is for the heart. Brain cannot function without heart but heart can keep pumping even if brain is dead !!

      Tex should have separate subscription category and it is sacred tradition that Diwali means massive bulky Tex edition !! Heart felt request to Editor. Appreciate and respect your great efforts to satisfy one and all. Thank you sir. With kind regards,, Dr Rajesh Ranganathan,, Chennai.

      PS: trying very hard to master typing in beloved tamil. For posting in english,, kindly excuse.

      Delete
  29. ஏப்ரலில் மே மாதப் புத்தகப் பார்சல் வந்து சேர்ந்தது. சானிடைசர் தெளித்து, பார்சலை பிரித்தாயிற்று. முதலில் கையில் வழுக்கி விழுந்தது மாயாவிக்காரு. சும்மா சிக்னு சின்ன சைசில் நச்னு இருக்கிறார். ஏனோ எனக்கு இந்த சைஸ் எப்பவுமே பிடிக்கும். மூன்று புத்தகங்களும் அட்டைப் பட டிசைன் மற்றும் கலரிங்கிலும் ஒன்றுக்கொன்று போட்டியில் சும்மா அள்ளுது. அடுத்த மாதம் நாண்கு புத்தகங்கள் வருகிறது விளம்பரங்கள் ஆவலை தூண்டினாலும், டெக்ஸ் இல்லை என்பது பெரிய குறையே. அதேபோல் உள் பக்க பேப்பர் தரம் சற்று பழுப்பு நிரத்தில் இருப்பதும் குறையே. இதுவரை பளிச்சென்று பார்த்துவிட்டு, இப்போது டல்லாக தெரிவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது. பரவாயில்லை போகப் போகப் பழகிக்க வேண்டியதுதான். மொத்தத்தில் மே மாதம் மூன்று புத்தகங்கள் மட்டுமே என்றாலும், டெக்ஸ் புக் இருப்பதால் முழு திருப்தியே. படிக்க மே ஒன்றுக்காக வெயிட்டிங்.

    ReplyDelete
    Replies
    1. காகித நிறம் குறைவாய்த் தென்பட்டது எந்த புக்கில் சார் - டெக்சிலா ?

      Delete
    2. யெஸ் சார். ஒன்றும் பாதகமில்லை. சில பக்கங்கள் மட்டுமே.

      Delete
    3. வாய்ப்பே இல்லை சார் !! நம்மிடம் கையிருப்பில் உள்ள ஆர்ட்பேப்பரில் கொரியா சரக்குள்ளது ; சீனா சரக்குள்ளது ; இந்தோனேஷியச் சரக்குள்ளது ! அவற்றுள் நுண்ணிய வேற்றுமை இருக்கக்கூடும் தான் !

      ஆனால் டெக்ஸுக்கான வெள்ளைத்தாள் இதோ ஈரோட்டின் பள்ளிப்பாளையத்தில் உள்ள மில்லில் இந்த ஜனவரியில் ஏக் தம்மில் வாங்கியது - டிசம்பர் வரைக்குமான தேவைக்கேற்ப ! So ஜனவரி முதலே ஒரே காகிதமே பயன்பாட்டில் உள்ளதெனும் போது அதனில் complaint இருக்க வாய்ப்புகள் ரொம்பவே சொற்பம் சார் !

      Delete
  30. பக்கத்து வீட்டு நண்பரிடம் பலபுத்தகங்கள் கொடுத்து படிக்கச்சொன்னேன்(லார்கோ, ஷெல்டன், கமான்சே, மேஜிக்விண்ட், டெக்ஸ்ஜேம்ஸ் பாண்ட் ப்ரின்ஸ், டைகர்மாடஸ்டி)அவர் முழுதாகப் படித்துமுடித்ததுமாடஸ்டி, டெக்ஸ். இப்பொழுதுமீண்டும் கேட்பது டெக்ஸ் புத்தகங்களே. ஒருபுதியவாசகரைகவர டெக்ஸ் ஒருவரால்மட்டுமே முடியும் தல தலதான். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. தலைய போய் வேண்டாம்னு சிலபேர் சொல்றாங்களே அத நினைக்கும் போதுதான் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.. 😂😂😂

      Delete
    2. ரசனைகள் பல விதமிருப்பது இயல்பே நண்பரே !

      நமது அன்றாடத்து சாம்பாரையே எடுத்துக் கொள்ளுங்களேன் - அண்டை மாநிலமான கர்நாடகத்தில் சாம்பார் லைட்டாக இனிக்கும் ! அவர்களுக்கோ நம்மது காரசாரமாய் தென்பட்டு முகம் சுளிக்கச் செய்யும் ! இரண்டுமே ஒரே குழம்பின் இரு பரிமாணங்களே ! இதில் யாரது ரசனை சரி - யாரது தவறென்பீர்களோ ?

      Delete
    3. உண்மைதான் ஆசான் சாம்பார் பலவிதம் தான் ஆனால் சென்னையை சார்ந்தவரே சென்னை சாம்பார் சரியில்லை என்று சொன்னால் எப்படி.... ( ஒருவேளை அவர் கர்நாடகாவை சேர்ந்தவராக இருப்பாரோ 😂😂😂😂).

      Delete
    4. இப்படியும் சொல்லலாம் அல்லவா! சவுதியில் தான் சாம்பார் அரிது. அதனால் ரசம் கிடைத்தாலே ஆத்மதிருப்தி அடைந்து விடுவர். சென்னை சாம்பார் சென்னைவாசிக்கு பழகிப் போய் இருந்திருக்கலாம். போன பதிவில் நயத்துடன் நன்கு பரிமாறிக் கொண்ட ரசமான கருத்துக்களை அவரவர் ரசனை என்று கூட கொள்ளலாம் அல்லவா சார்??? பல்வேறு ரசனைக்கும் பகிர்ந்து கொள்ள இடமுண்டு தானே இங்கு??? எந்த ஊராக இருந்தால் என்ன சார்???

      Delete
    5. அடடா அடடா வேற லெவல் 🙏🙏🌹🌹🌹🌹🌹

      Delete
    6. 🙏🙏🙏 புரிதலுக்கு நன்றி சார்

      Delete
  31. ட்யூராங்கோ..

    தெர்ர்ர்ர்ர்றிறி.!

    ReplyDelete
    Replies
    1. நா திங்கள்கிழமை தான் தொடவே முடியும்

      Delete
  32. கொரில்லா சாம்ராஜ்யம் படிச்சாச்சு ...விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கதை.

    ReplyDelete
  33. வணக்கம், இன்று வந்த ரெளத்திரம் கைவிடேல் புத்தகத்தில் பக்கம் எண் 76'லிருந்து 92 வரை இல்லை. மற்ற பக்கங்களும் மாறி மாறி பைண்டிங் செய்யப்பட்டு உள்ளது....

    ReplyDelete
    Replies
    1. ஆபிசுக்கு உங்கள் சந்தா எண்ணுடன் ஒரு மின்னஞ்சலை அல்லது வாட்சப் தகவலை அனுப்பிடுங்கள் சார் ; மாற்றுப் பிரதியினை அனுப்புவார்கள் !

      Delete
    2. Lion office contact

      +91 98423 19755

      வாட்ஸப்பில் தொடர்பு கொண்டு அங்கே சொன்னீங்கன்னா சரியா இருக்கும் நண்பரே.

      Delete
  34. ரௌத்திரம் கைவிடேல்!

    அமர்க்களமான ஆரம்பத்தை கொடுப்பதில் ஒரு முறை கூட சோடை போகாத தொடர் "ட்யுராங்கோ" இருக்கிறது!

    டைகருக்கு பிறகு ட்யுராங்கோ தான் நம்ம ஃபேவரிட் கௌபாய்!

    இத்துடன் தொடர் முடிவது வருத்தம் தான்!!

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு கௌபாய் 2022-ல் வெயிட்டிங் ! பார்ப்போம் - அவர் என்ன செய்கிறாரென்று !

      Delete
  35. புத்தகங்கள் வந்து சேர்ந்தன. கொரில்லா சாம்ராஜ்யம் சும்மா கலர்ல அள்ளுது.
    ட்யூராங்கோ மேக்கிங் சூப்பர். 450வது இதழுக்கு உரிய கம்பீரத்தை வெளிப்படுத்துகிறது.
    டெக்ஸ்..இவரும் வண்ணத்தில் வந்திருந்தால், கோடைகால சிறப்பிதழ்கள் மூன்றும் வண்ண மயமாக இருந்திருக்கும்.
    படிக்கலியான்னு கேட்டா, இன்னும் இல்லே. புத்தகங்களை புரட்டி, புரட்டி பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. புரட்டுங்க....புரட்டுங்க..!

      Delete
  36. சார் என்னத்த சொல்ல ....எண்ணத்த சொல்ல வார்த்தைகள் போதுமா....வண்ணமெல்லாம் எண்ணமாகிடுமா...எண்ணமெல்லாம் வண்ணமாகி விட்டதா...அருமை சார்

    ReplyDelete
    Replies
    1. பாட்டா படிச்சிடுங்க ஸ்டீல்

      Delete
    2. ஷெரீஃப் செம செம.....

      Delete
  37. பிடித்ததை படிப்பேன் மற்றதை அடுக்கி வைப்பேன் அவ்வளவுதான் விஷயம்//

    அதே தான் இங்கேயும்!! ஆனால் அடுக்கப்படுவதோ "அதிகாரி"!!

    ReplyDelete
    Replies
    1. அடுக்கப்படும் அதிகாரி கொஞ்சம் இங்கே பார்சல்.. 😂😂😂

      Delete
  38. ரௌத்திரம் கைவிடேல் யப்ப்பா இரத்த பூமி .....

    கதையை படித்து விட்டு உடனே ஓடி வந்து இருக்கிறேன் பதிவிட. கண்ணன் சொன்னது போல தெர்ர்ர்ரி முதல் பாகத்தில் ஆரம்பித்து அப்படியே 3 பாகமும் படித்து விட்டு தான் புத்தகத்தை கீழே வைத்தேன். என்னா அடி வெஸ்டர்ன் சினிமா பார்ப்பது போல இருந்தது.

    நண்பர் மிதுன் இடம் இருந்து இரவல் வாங்கி
    // அமர்க்களமான ஆரம்பத்தை கொடுப்பதில் ஒரு முறை கூட சோடை போகாத தொடர் "ட்யுராங்கோ" இருக்கிறது! // துளியும் சளைக்காத தொடர். இந்த முறை 3 கதைகளுமே அருமை.

    பல இடங்களில் வசனம் அருமை. உதாரணத்திற்கு " விவேகமும், பொறுமையும் உன் பிஸ்டலின் தோட்டாக்களை போலவே விலைமதிப்பற்றவை என்பது நினைவிருக்கட்டும்!"

    போன பாகமான ஆறாது சினம் அந்த அளவு இம்ப்ரெஸ் செய்ய வில்லை. ஆனால் இந்த முறை நெற்றி அடி. எதிரிகளை மட்டும் இன்றி எனது தலையிலும் Durango சுட்டது போல இருந்தது. சண்டை ஒவ்வொன்றும் சும்மா தூள். மறுபடி Durango ஆரம்பத்தில் இருந்து ஒரு முறை படித்தே ஆகவேண்டும் என தோன்ற வைத்து விட்டது.

    எனது மதிப்பெண் 100/10.

    Awesome awesome last story to give a perfect farewell to Durango. What a Man...

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேலை லார்கோ போல முடியவில்லையே....

      Delete
    2. ஆக ஒரு தொடர் இனிதே நிறைவுறுகிறதென்றால் சந்தோஷமே ! ஆனானப்பட்ட லார்கோவே தடுமாறினார் எனும் போது நமது மவுன ட்யுராங்கோவின் சாதனை மெய்யாலுமே பாராட்டுக்குரியதே - of course அனைவருக்குமே இம்மாத "ரௌத்திரம் கைவிடேல்" பிடித்திருக்கும் பட்சத்தில் !

      Delete
  39. ட்யுராங்கோ


    டாப் க்ளாஸ்!

    இந்த மாதத்தின் நம்பர் ஒன் காமிக்ஸ்!


    டைகர் 2.0

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ளாறவா படிச்சாச்சு நண்பரே ?

      Delete
    2. //அதுக்குள்ளாறவா படிச்சாச்சு நண்பரே ?//

      இல்லை சார், இந்த ஒரு புத்தகம் மட்டும் தான்!

      Delete
  40. நெஞ்சே எழு Tex&co வின் அட்டகாசம் ...நாலே வில்லன் ...நச்சுனு ஒரு கதை ...வழக்கம் போல Tex திட்டம் போடுகிறார் ஆனால் எதிரி கூட்டத்திலும் சில புத்தியுள்ள கேசுகள் அவரது திட்டங்களை மோப்பம் பிடித்து பதிலடி கொடுக்கின்றனர் ...இதை எல்லாம் மீறி கைல கதத்திக்குத்து வாங்கிட்டு ஜெயிக்கிகிறார் ....அவ்ளோதான்.

    ReplyDelete
    Replies
    1. இது பாயசமா ? குருமாவா ? திங்கிங் !

      Delete
    2. பாயசம் தான் சார்

      Delete
    3. Payasam ...kuruma ...what is the difference? ...

      Delete
    4. அந்த சந்தேகம் ரொம்ப நாளாவே எனக்கும் இருக்கிறது... 🤔🤔🤔🤔

      Delete
    5. Editor விளக்குவார் என்று நம்புவோம்

      Delete
  41. புத்தகங்கள் கிட்டி!

    கொ.சா - அட்டைப்படம் படு நேர்த்தி! உள் பக்கங்கள் சிவப்பு, பச்சை, காவி என்று - வண்ண ஜாலம்!!

    ட்யூராங்கோ - அட்டைப்படம், கெட்டி அட்டை, புத்தகத் தடிமன் - என்று எல்லாமே அமர்க்களமாய் குதூகலப்படுத்த; ஒரு மெளனப் புயலின் இறுதி இதழ் இதுவென்ற நினைவு மனதில் எழுந்தபோது - கூடவே எழுந்தது ஒரு மென் சோகமும்!

    டெக்ஸ் - அட்டைப்படமும் சரி; உள்ளே சித்திரத் தரமும் சரி - பட்டாசான ஒரு வாசிப்பு அனுபவம் காத்திருப்பதாக சத்தியம் செய்யாத குறைதான்! அதிகாரியின் சற்றே தடிமனான புத்தகத்தை கையில் ஏந்திடும்போது கிடைக்கும் உற்சாகம் - என்றுமே அலாதியானது தான்!

    இனி படிப்பதற்கு தோதான தருணத்தை எதிர்நோக்கி...

    ReplyDelete
    Replies
    1. அதிகாரியின் தடிமனான புத்தகத்தை கையில் இருந்த போது கிடைக்கும் அனுபவமே அலாதியானது... சூப்பராக சொன்னீர்கள் 🌹🌹🌹🌹🌹

      Delete
  42. கொரில்லா சாம்ராஜ்யம் : மாயாவியின் முழு வண்ண ஆக்கம் வசிகரிக்கவே செய்கிறது. அதிலும் அட்டைப்படம் ஒவியரின் கைவண்ணத்தில் ஒருப்படி அதிகமாகவே மிளிர்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இந்த சைஸ்தான். காம்பேக் சைஸில் கச்சிதமாக இருக்கிறது.

    நெஞ்சே எழு: போசெல்லியின் கதை & க்ளவ்டியோ வில்லா அட்டகாசமான சித்திர காம்போ இந்த இதழை ரொம்ப எதிர்ப்பார்க்க வைக்கிறது. (சைனாவின் ஆதாயம் நமக்கு இப்போது இல்லாதது வளையும் அட்டையிலும், பளீர் வெள்ளை நிறமற்ற தாள்களிலும் காண முடிகிறது.)

    ட்யூராங்கோ: ப்ரிண்டிங், பைண்டிங் மேக்கிங் எல்லாமே அட்டகாசம். இந்த தொடரின் இறுதி இதழ் என்பதில் வருத்தமே. இதுவரையில் கதை & சித்திரம் என இரண்டும் கலந்து விருந்து படைத்த Yves Swolfs கடைசி இந்த 3 ஆல்பத்தில் கதையை மட்டும் கையாள, Thierry Girod அட்டகாசமான அதே பாணிச் சித்திரத்தில் அதகளப்படுத்தியுள்ளார். ஒரு நீண்டத் தொடர் முழு வண்ணத்தில் 3 அல்லது 4 பாகமாக அவ்வப்போது வெளி வந்து இன்று நிறைவைக் கண்டுயுள்ளது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். இப்பொழுது இந்த ஆல்பத்தின் 5 தொகுப்பையும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் போது உற்சாகம் பீறிடுகிறது. (இதுப் போன்றே தொடர்களான கமான்சே, ஜெரெமினியா, லேடி S etc.. போன்றவைகளை பாதிலேயே மங்களம் பாடியதெல்லாம் வேறக் கதை)

    ReplyDelete
  43. இரும்புக்கை மாயாவி...யின் கொரில்லா சாம்ராஜ்யம்...


    அழகான நிலவோளியில் ஒரு நரபலி இதழை விட சிறிது பெரிய ஆனால் அழகான சிறிய அளவில் அதுவும் வண்ணத்தில் இரும்புக்கை மாயாவி அதுவும் இதுவரை மறுபதிப்பு காணாத ,அதுவும் இதுவரை நான் படிக்காத கதை எனும் பொழுது இவ்விதழை ரசிப்பதற்கும் ,படிப்பதற்கும் முதலில் எடுப்பது என மறுக்க தான் முடியுமா என்ன...?அனைத்தும் அருமை...ஆனால் கதையை படிக்க ஆரம்பித்தவுடன் நாம் சிறுவனாகவே இருந்து இருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை..:-) சக்ரவர்த்தி போன்ற சில தூய தமிழ் பெயர்களும் நமது இதழ்களில் நீண்ட நாட்கள் கழித்து படிக்க முடிந்தது.. கதை பற்றி நோ கமெண்ட்ஸ்...பட் இதழ் மெகா ஹிட் அடிக்கும் என்பது உண்மை...அதுவும் புத்தக காட்சி விழாக்கள் நடைபெறும் சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக விரைவில் இந்த இதழ் வாஸ் அவுட் தான் என்பது உறுதி..எனவே சந்தா கட்டி இதழை பெறாதவர்கள் உடனடியாக முந்துங்கள் தோழ்ர்களே...

    ReplyDelete
    Replies
    1. தலீவரே, நீங்க வளர்ந்துட்டீங்க ; அதுனால தான் கொ.சா. குட்டியாத் தெரியுது உங்களுக்கு !

      நிலவொளியில் நரபலியும் ; கொரில்லா சாம்ராஜ்யமும் நிஜத்தில் ஒரே அளவுகளே !

      Delete
    2. அழகான நிலவோளியில் ஒரு நரபலி இதழை விட சிறிது பெரிய...


      #####

      நி.நரபலியை விட கொரில்லா சாம்ராஜ்யம் பெரிதாகவே இருந்த்து போல தான் எனது எண்ணம் சார்..அதை தவறான வர்த்தை பிரயோகங்களால் கருத்து மாறுவது போல ஓர் சூழல் தவறுக்கு மன்னிக்க சார்..!

      Delete
    3. இதே சைஸில் காமிக்ஸ் கிளாசிக்ஸ் அமைந்திருந்தால் வெற்றி அடைந்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.. 🌹🌹🌹

      Delete
  44. ட்யூராங்கோ...வின் ரெளத்திரம் கை விடேல்...

    முதலில் முத்து 450 வது இதழுக்கு வாசக நண்பர்களின் சார்பாக ஒரு மாபெரும் பூங்கொத்து சார்..இந்த சிறப்பிதழுக்கான ஏற்ற சிறப்பான தேர்வு...இந்த மாதம் ட்யூராங்கோவின் இறுதி தொகுப்பு என்ற முன்அறிவிப்பால் இதற்கு முன் வந்த நான்கு தொகுப்பு இதழ்களையும் இந்த வாரம் தான் படித்து முடித்து இருந்தேன். அவைகளை இதுவரை படிக்காமல் இருந்தால் கூட எந்த குழப்பமும் நேராமலும் தான் ட்யூராங்கோவின் தொகுப்பு இருக்கும் என்பதுமே உண்மையே..

    ஹார்ட்பைன்ட் இதழாக செம ஸ்டைஷிலான அட்டைப்படமே இதழை இன்னும் சிறப்பு சேர்க்கிறது எனில் உட்பக்க ஒரே நேர்க்கோட்டின் மூன்று தொகுப்பு கதைகளின் அச்சுத்தரம் ,சித்திரதரம் மேலும் சிறப்பிதழுக்கு சிறப்பை சேர்க்கிறது.ஆரம்ப காலங்களில் போல் இப்பொழுது எல்லாம் உறங்குவதற்கு முன் காமிக்ஸ் படிக்கும் நேர சூழல் பணி சூழலால் நிகழ்வதில்லை..ஆனால் நேற்று இரவு எட்டு மணி அளவில் ஏதோ ஒருவித மனசஞ்சலம் ,மனவருத்தம் போல் மனம் அமைய ( இ.கை.மா .சத்தியமாக காரணம் அல்ல) முதல் ஒரு பாகமாகவுது படித்து விட்டு மனதை திருப்பலாம் என்று நினைத்து தான் முதல் பக்கத்தில் நுழைந்தேன்..ஆனால் படிக்க ஆரம்பித்தவுடன் மூன்று பாகங்களையும் ஒரே மூச்சில் படித்து விட்டு தான் ( நடுச்சாமம் ஒண்பது மணிக்கு மேல் ஆகியும் ) இதழை கீழே வைக்க முடிந்தது என்பது உண்மை..அழகான சித்திரங்கள் ,சிறந்த மொழிஆக்கம் ,விறுவிறுப்பான ,பரபரப்பான கதை செல்லல் என இதழை பாதியில் வைக்க மனமே வரவில்லை என்பதும் ஓர் இரண்டு மணி நேர அளவில் அனைத்தையும் மறந்து அந்த வன்மேற்கு உலகில் நானும் எதிரிகளை துரத்தி கொண்டு இருந்த அனுபவம் அருமை...இதழை இன்னும் பலர் கைகளுக்கு சென்று சேராத நிலையில் வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை...ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல தோன்றுகிறது..எப்படி ஷெல்டனின் சாகஸத்தில் இது இறுதியானது இனி அவர் தலைகாட்டமாட்டார் என்ற செய்தியோடு அவரின் கடைசி சாகஸத்தை படித்து முடித்தவுடன் ஒரு வித வருத்தத்தையும் இனி ஷெல்டன் வரமாட்டாரா என்ற ஆதங்கத்தையும் ஒரு சேர ஏற்படுத்திய நாயகர்களில் இந்த இதழை படித்து முடித்தவுடன் ட்யூராங்கோவும் அதே எண்ணத்தை விதைக்கிறார்.

    இதுவரை வந்த ஐந்து தொகுப்புகளிலுமே சிறிது கூட ஏமாற்றம் அளிக்காத மெளன நாயகரே

    ஐ மிஸ்யூ ....


    ரெளத்திரம் கை விடேல்...கதை மாந்தர்களை மட்டுமல்ல வாசக நண்பர்களையும் கை விடாத வன்மேற்கு நாயகர்..

    ReplyDelete
    Replies
    1. // அனைத்தையும் மறந்து அந்த வன்மேற்கு உலகில் நானும் எதிரிகளை துரத்தி கொண்டு இருந்த அனுபவம் அருமை..// உண்மை தலைவரே அதே அனுபவம்.

      Delete
    2. நீங்க மிஸ் பண்ணினது ஷெல்டனையா ? ஹானஸ்டியையா ?

      Delete
    3. ஹீஹீ...

      உள்ளே ஹானஸ்டி..

      வெளியே ஷெல்டன் ..சார்..:-)

      Delete
  45. நெஞ்சே எழு ...

    செம செம மாஸான அட்டைப்படமும்..செம செம அழகான சித்திர பாணிகளும் ,இந்த அளவில் ,இந்த பக்கங்களில் ஒரு குண்டு புத்தக எண்ணைத்தை விதைக்கும் புத்தக தோற்றமும்..வன்மேறகின் நிரந்தர நம்பர் ஒன் நாயகர் டெக்ஸ்வில்லரும் ஒன்று சேரும் பொழுது நெஞ்சே எழு வெற்றி கொடி நாட்டி செல்வதில் சந்தேகம் தான் கொள்ளல் ஏது ...?!


    இன்னும் படிக்காத பொழுதே இதன் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டன என்றாலுமே கூட இன்று படித்து விட்டே வருகிறேனே..:-)

    ReplyDelete
  46. கொரில்லா சாம்ராஜ்யம் காம்பாக்ட் சைஸ் (சிக் சைஸ்!) எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏற்கனவே இந்த சைஸில் வந்த நிலவொளியில் நரபலி/கலர் டெக்ஸ் தொகுப்பு ஆகியனவும் ரொம்ப பேவரைட்! ஒரு கை விரல்களைக் கொண்டே புத்தகத்தைத் தாங்கி பிடித்தபடி படித்து முடித்து விடலாம்!

    ReplyDelete
    Replies
    1. //ஒரு கை விரல்களைக் கொண்டே புத்தகத்தைத் தாங்கி பிடித்தபடி படித்து முடித்து விடலாம்!//

      True !!

      Delete
    2. Maybe in an year or two - டெக்ஸ் வில்லரின் ரெகுலர் இதழ்களுமே இந்த சைசுக்கு மாற்றம் காணத்தான் வேண்டி வரும் என்று படுகிறது - விலைவாசிகள் ஓட்டமெடுப்பதை பார்க்கும் போது ! ஓரளவுக்கு மேல் புக்சின் விலையேற்றம் சிக்கலுக்குத் தீர்வாகாதெனும் போது, இது மாதிரியான மாற்று உபாயங்களே கைகொடுக்க வேண்டி வரக்கூடும் ! So இப்போவே பழகிக்குவோம் !

      Delete
    3. ///Maybe in an year or two - டெக்ஸ் வில்லரின் ரெகுலர் இதழ்களுமே இந்த சைசுக்கு மாற்றம் காணத்தான் வேண்டி வரும் என்று படுகிறது ////

      ஆஹா சிறப்பு சார்....


      இந்த சைஸ் ஏதோ வசீகர மந்திரம் கொண்டுள்ளது... ஆவலுடன் வெயிட்டிங்

      Delete
    4. சூப்பர் சூப்பர் மிக அழகான செய்தி.. தொடர்ந்தால் சூப்பர்தான் 🌹🌹🌹

      Delete
    5. மறுபடியும் வருகிறதோ பாக்கெட் சாய்ஸ் ❤❤❤❤

      Delete
    6. //Maybe in an year or two - டெக்ஸ் வில்லரின் ரெகுலர் இதழ்களுமே இந்த சைசுக்கு மாற்றம் காணத்தான் வேண்டி வரும் என்று படுகிறது//

      டெக்ஸுக்கு இந்த காம்பாக்ட் சைஸ் கனகச்சிதமான பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் சார்.

      Delete
  47. Gorilla Samrajyam remembers me The planet of apes triology.

    ReplyDelete
  48. Compact size , never read this story before. Mayavikaru colourl pinrar. Other steel claw stories may be published in this format.

    ReplyDelete
  49. இம்மாத புத்தகங்கள் கைப்பற்றியாச்சுது...

    ஹைலைட் இரும்புக்கை மாயாவியார் தான்! வேறு லெவல்ல கலக்குது...

    கியூட் சைஸ்.... பார்க்க பார்க்க பரவசமூட்டுது.

    எனக்கு பெர்சனலாக இந்த கியூட் கியூட்டான குட்டி புக்குகளே கொள்ளை பிரியம்....!!!

    ஏற்கனவே வெளியான பாக்கெட் சைஸ் குண்டுபுக்குகளை கன்னத்தோடு வைத்து அழகு பார்க்கும் போது மனசு சிலிர்க்கும்... உள்ளம் உற்சாகத்தில் கூத்தாடும்.

    அவ்வப்போது அந்த போட்டோக்குளை ஷேர் செய்து என் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன்.

    இம்மாத கொரில்லா சாம்ராஜ்யம் குட்டி புக்கும் அதே மகிழ்ச்சியை திரும்ப கொண்டு வந்தது. கையில் வைத்து தடவி பார்த்து பார்த்து மகிழ்ந்து போனேன்.

    அந்த கியூட் சைஸ், கலரில் பக்கத்துக்கு 2ஏ பேணல்கள் என புரட்டி புரட்டி பார்ப்பதிலயே நாள் ஓடிப்போச்சுது.

    நேற்றே கையில் இருந்த மாடஸ்தியின் கழுகு மலைக்கோட்டை வண்ண மறுபதிப்புடன் கம்பேர் பண்ணி பார்த்து மகிழ்ந்தேன்.

    டீயூராங்கோ... டெக்ஸ்... இரும்புக்கையார் என 3 ஹெவிவெய்ட் மோதும் மாதம்... யார் முந்தபோவது??? மில்லியன் டாலர் கேள்வி!

    ReplyDelete
  50. நேற்று இரவே வீட்டில் இருந்து இருப்பதிலயே மிகவும் குட்டியான புக் ஸ்பைடரின் "விசித்திர சவால்" மறுபதிப்பை எடுத்து அழகு பார்த்தேன்...

    இன்று
    விசித்திர சவால்---மினி நேனோ சைஸ்

    கழுகு மலைக்கோட்டை-கலர் மறுபதிப்பு-மினி பாக்கெட் சைஸ்

    கொரில்லா சாம்ராஜ்யம்-நிலவொளயில் ஒரு நரபலி- காம்பாக்ட் சைஸ்

    கழுகு வேட்டை-ரெகுலர் டெக்ஸ் சைஸ்

    டியூராங்கோ-A4 சைஸ்

    தலைவாங்கிக்குரங்கு-பனி அசுரர் படலம்-மேக்ஸி சைஸ்....

    என எல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாக சைஸ் வாரியாக அடுக்கி வைத்து பார்க்கும் போது ஆஹா இத்தனை சைஸ்களா என மனசு விசில் போடுது!

    ReplyDelete
  51. டியர் சார்,
    முத்துவின் "450வது இதழுக்கு " வாழ்த்துகள் சார்.
    . சாரி சார், நமக்கு தான் இது போல் இருண்ட களங்கள் ரசிக்காதே. ஒரு அத்தியாயம் படித்ததோடு நிற்கிறது.
    "நெஞ்சே எழு "ஓவியம் அருமை'.டெக் ஸும் - அதே "ட்யூராங்கோ" கதைக் களத்தில் வருவது போல். பயங்கரத் தன்மையில் மிரட்டி.பாதி பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை..
    அடுத்து வரும் " விளம்பரங்கள் தான் "நெஞ்சே எழு " என்று உத்வேகம் கொள்ள வைக்கின்றன்.. அபிமான "மாட ஸ்டி" வருவதும் "பாண்டு" ம் இ ணைந்த ஒரு இதழாய் பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது. ஜூன் வெளியிடு தானே _ ராணிக்காமிக்ஸில் - பாண்டும் - லயனில் மாட ஸ்டியும் என்று கலக்கியது.
    அப்றம், பிரிய நண்பர் "ரிப்.ஜானி வருகிறார்.
    ப்ளூ கோட் - வெளிகிரகவாசி என்று அடுத்த மாதம் தான் மனதில் களை கட்டும்..
    நமக்கு _ காமிக்ஸ் என்றால் " மாடஸ்டியும், ரிப் ஜானி, ரிப் கிர் பி, காரிகன்" போன்றோரே.. இவர்களை படிப்பதே உற்சாகமூட்டுகிறது. நன்றி..\

    ReplyDelete
  52. நிரவொளியில் நரபலி

    கொரல்லா சாம்ராஜ்யம்

    ----- இந்த வரிசையில்

    கலர், காம்பேக்ட் என அதிரடியாக ஆண்டுக்கு சில புத்தகங்கள் எதிர்பார்க்கிறோம் சார்...!!!

    குறிப்பாக டெக்ஸ் வண்ண மறுபதிப்புகள் இந்த சைசில் சும்மா சொல்லி அடிக்கும் விற்பனையில்....

    பழிக்குப்பழி,

    இரத்த வெறியர்கள்,

    இரத்த முத்திரை,

    இரும்புக் குதிரையின் பாதையில் என

    இந்த சைசுக்கு ஏற்ற கதைகள் நிறைய வெயிட்டிங்ல உள்ளன....!!!

    3 மாசத்துக்கு ஒன்றாக போடுங்க சார்.


    ReplyDelete
    Replies
    1. அப்படியே நள்ளிரவு வேட்டையையும் மறுக்க புக் போடுற list la சேத்தா ரொம்ப சந்தோஷம். நான் மொதல்ல படிச்ச டெக்ஸ் கதை....

      Delete
  53. லயன் ஆபிஸில் ஸ்டாக் சோல்டு அவுட் ஆன,

    டெக்ஸ் மினி ஃப்ரீ தொகுப்புகள்,

    1.புனிதப்பள்ளத்தாக்கு-3மினி கதைகள்

    2.விரட்டும் விதி-3மினி கதைகள்

    3.ரெளத்திரம் மற-4மனி கதைகள்

    இத்தோடு தீபாவளி மலர் 2020ன் இலவச இணைப்பு & 2020 பெப்ரவரி யின் இலவச ப்ரீ "இருளோடு யுத்தம்" எல்லாம் இணைத்து ஒரு மெகா குண்டுபுக் ஆக வெளியிடலாம்.
    இது லாங் ஷாட்தான்!

    இலவச தொகுப்புகள் காலியாகியவை இப்போது தேடலில் இருக்கும் போல... டிமாண்டில் போகுது....!!!

    ReplyDelete
  54. Durango நமது டெக்ஸ் வில்லரின் 'கணவாய் யுத்தம்' கதையின் அப்பட்டமான காபி..இந்தக்கதையில் வரும் Bound script ah அப்படியே சுட்டு உள்ளனர். கணவாய் யுத்தத்தில் வருவது போல இதிலும் Main villan சகலத்தையும் Moving train la plan பன்னுறான் ...நான் சொல்றத சொல்லிட்டேன் ..நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்.

    ReplyDelete
  55. மினி கலர்டெக்ஸ் அடுத்த மறுபதிப்புக்குமிகநல்லசாய்ஸ். ஒருஆர்ப்பாட்டமானஅட்டகாசமானஅருமையான ஆல்பம். விரைவில்ஏற்பாடு செய்யுங்கள் ஆசிரியர் சார். ப்ளீஸ் ப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  56. நெஞ்சே எழு ....

    வெகு நாட்களுக்கு பிறகு ரசித்து படித்த ஒரு டெக்ஸ் கதை. அதுவும் கார்சன் பேசும் டயலாக் எல்லாம் வெடிச் சிரிப்பு. இந்த முறை பக்கா வாத்தியாரே. ரொம்ப நாள் ஆச்சு இது போல சிரித்து. கதை சும்மா பட்டாசு ஆரம்பத்தில் எடுத்த வேகம் இறுதி வரை. கடைசியில் தான் சட் என்று முடிந்து விட்டது போல ஒரு உணர்வு. ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி.

    எனது மதிப்பெண் 9.5/10. அரை மதிப்பெண் குறைக்க காரணம் சட் என்று முடித்த தாலே

    ReplyDelete
    Replies
    1. //ரொம்ப நாள் ஆச்சு இது போல சிரித்து.//

      ஆங் ..இது கூட பாயாசமா ? குருமாவா ? தெரியலியே ...

      Delete
    2. பாயசம் இல்லை சார் குருமா தான். டெக்ஸ் மற்றும் கிட் இருவரிடமும் பேசும் போது கார்சன் கொடுக்கும் கவுன்டர் களை மிகவும் ரசித்தேன். அந்த நிலைமையில் நாம் இருந்தாலும் அப்படித்தான் பேசுவோம் அதனால் தான் அப்படி சொன்னேன்.

      Delete
  57. கொரில்லா சாம்ராஜ்யம் புத்தக ஆக்கம், கலர் பக்கங்கள் அனைத்தும் அருமை. ஆனால் பழைய மொழிபெயர்ப்பினை இப்போது படிக்கும் போது பற்கள் ஆடுவதை தவிர்க்க முடியவில்லை. மாயாவி ரசிகர்களுக்கு தீபாவளி. இந்த விசயத்தில் தலைவர் கட்சி தான் நான்.

    ReplyDelete
  58. ட்யுராங்கோ எக்ஸ்பிரஸ்..
    என்னும் ட்ரிபிள் ஏ.ஸி.கம்பார்ட்மென்ட் எக்ஸ்பிரஸ்ஸிற்கு,
    காமிக்ஸ் வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

    முதல் கம்பார்ட்மென்ட். 'ரௌத்திரம் கைவிடேல்'.
    ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.சி. கம்பார்ட்மென்ட்.

    சுரங்க முதலாளி கெய்ன்ஸ்வொர்த்திடம் சுரங்கத்தை அடாவடியாய் எழுதி வாங்க முயலும் வில்லன்? லான்ஸ் ஹார்லான்.அவர் மறுத்து விடுவதால், வெடி விபத்தை ஏற்படுத்தி, அவரை மாய்த்து, அவர் மகன் டாமியை பிணையாக்கி, அவர் மனைவி மிஸஸ் கெய்ன்ஸ்வொர்த்தை மிரட்டி எழுதி வாங்க முற்பட, அவனைத் தேடி அந்த ஊருக்கு வரும் ஹீரோ ட்யுராங்கோ, அதில் குறுக்கிட்டு, அந்த கும்பலுடன் மோதி, அவர்களை வீழ்த்தி, சிறுவனை விடுவிக்க, அந்தப் பெண் மகனுடன் தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார். ஹார்லானிடமிருந்து தான் தேடும் நபர் பற்றிய தகவலை பெறும் நமது ஹீரோ தன் பயணத்தை தொடர்கிறார்.
    துவக்கம் முதல், இறுதி வரை பர்ஸ்ட் கம்பார்ட்மெண்ட் தடதடக்கிறது. ப்ளாம், ப்ளாம் என துப்பாக்கி சப்தம் கம்பார்ட்மெண்ட் முழுக்க கிடுகிடுக்கின்றது. விறுவிறுப்புக்கு பஞ்சம் வைக்காத அசுர வேகம்.
    கம்பார்ட்மெண்ட்டை விட்டு இறங்க மனமில்லாமல் இறங்குகிறோம். ஹீரோவோடு அடுத்த கம்பார்ட்மென்ட்டுக்கு நாமும் போகவேண்டுமே.
    வாருங்கள் போவோம்.

    ReplyDelete
  59. இரண்டாவது கம்பார்ட்மெண்ட். ' எல் கோப்ரா'.
    2 டயர் ஏ.ஸி. கம்பார்ட்மென்ட்.
    தான் தேடும் நபர் பற்றி அறிய லாரன்ஸை தேடி வரும் ட்யுராங்கோ, வழியில் எல் கோப்ராவை சந்திக்க நேர்கிறது. இருவரும் தேடுவது ஒரே நபரை.அவனோ பயந்து மறைவிடத்தில் பதுங்கி இருக்கிறான்.அவன் காதலி மேரியை மிரட்டி அவன் இருப்பிடத்தை அறிந்து எல் கோப்ரா அங்கு செல்கிறான். மேரியை காப்பாற்றும் ஹீரோவும் அவள் உதவியுடன் அங்கு செல்கிறான். இடையில் உள்ளூர் முதலைகளும் குறுக்கிட உச்சக்கட்ட மோதல் வெடிக்கிறது. எல் கோப்ராவை வீழ்த்தும் ட்யுராங்கோ தன் இறுதிக் கட்ட, உச்சக்கட்ட பயணத்தை தொடர்கிறார். எதிரியைத் தேடி. நாமும் தொடர்கிறோம்.

    பர்ஸ்ட் கிளாஸ் கம்பார்ட்மெண்ட்டுக்கு சற்றும் வேகம் குறைவில்லாத இடம். அதே விறுவிறுப்பு, தடதடப்பு, ப்ளாம்,ப்ளாம். எதிரிகள் மட்டுமே வேறு. இனி 3rd ஏ.ஸி.க்கு போகலாமா..

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. முன்றாவது கம்பார்ட்மெண்ட்.' நாகத்தின் நெருக்கத்தில்'.
      3rd ஏ.ஸி. 3 டயர் கம்பார்ட்மெண்ட்.
      ஸ்டெய்னர். ட்யுராங்கோ தேடி வரும் வில்லாதி வில்லன். தங்கச்சுரங்கத்தை தனதாக்க காய் நகர்த்தும் அயோக்கியன். அதுவும் நகர்ந்து கொண்டே இருக்கும் டிரெயின் கம்பார்ட்மெண்ட்டையே தன் இருப்பிடமாக்கி அதிலேயே பாதுகாப்புடன் இருப்பவன். உள்ளுர் பழங்குடியினரை பலி கடாக்களாக்கி தனக்கு ஆதாயம் தேட முயல்பவன். விண்ட்பேர்ட் எனும் பெண்ணின் உதவியுடன் உண்மையை எல்லார்க்கும் புரியவைக்கும் ட்யுராங்கோ, வில்லன் ஆட்களுடன் மோதி அவர்களை வீழ்த்துகிறார்.இறுதியில் வில்லனும் வீழ்கிறான்.
      முதலிரண்டு கம்பார்ட்மெண்ட்களைப் போலவே இதுவும் அசுரவேகம். இடையில் எங்கும் தொய்வில்லாத வேகம். கடைசி வரை மோதல், மோதல், மோதல்தான்..சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்.
      ஒரே வருத்தம் என்னவென்றால் இந்த எக்ஸ்பிரஸ் இத்துடன் முற்றுப்பெறுவதுதான். goodbye ட்யுராங்கோ.

      இன்று மாலை 5 மணிக்கு இந்த புத்தகத்தை எடுத்தேன். இரவு 8 மணிக்கு முடித்தேன்.ஏக் தம்மில் படித்து முடித்தேன். உண்மையில் இது எனக்கே ஆச்சர்யம்தான். சமீபத்தைய நிகழ்வுகளில் இருந்து என்னை வெளிக்கொண்டுவர இது எனக்கு உதவியிருக்கிறது. நன்றிகள் எடிட்டர் சார்.
      முத்து 450க்கான சிறப்பை இது எல்லாவகையிலும் நிறைவு செய்திருக்கிறது.
      இதன் மேக்கிங்கில் பணிபுரிந்த அனைவர்க்கும் வாசர்கள் சார்பில் மிகப்பெரிய மலர்க்கொத்துடன் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்

      Delete
    2. அட்டகாசமான விமர்சனம் பத்து சார். இதுவரை Durango படித்தவர்கள் அனைவருமே ஏக் தம்மில் படித்தவர்கள் தான். நீங்கள் படிக்க ஆரம்பித்து விட்டால் கடைசி வரை படிக்காமல் கீழே வைக்க முடியாது. அவ்வளவு விறுவிறுப்பு. எடிட்டர் சார் போட்ட குட்டிக் கரணத்தின் பலன்.

      Delete
  61. நண்பர்கள் மன்னிக்கவும்.
    இன்னும் பலருக்கு புத்தகங்கள் சென்று சேராத நிலையில், பலர் புத்தகத்தை இன்னும் படிக்காத நிலையில் நான் முழுமையாக விமர்சனம் பதிவிட்டது தவறாக இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இட்ஸ் ஓகே பத்து சார்.

      நம்ம ரசிகர்கள், தங்களின் நீஈஈஈண்ட விமர்சனங்கள் பார்க்கும் போதே கதைசொல்லப்பட்டு இருக்கும் என முடிவு பண்ணிடுவோம்.

      அலேக்காக ஸ்கிப் பண்ணிட்டோம். கதையை படித்துட்டு ,பின்னர் வந்து இதை படிக்கிறோம்!!!

      Delete
  62. மூன்றுமே மிகச்சிறந்த இதழ்கள்.நன்றி ஆசிரியரே.

    ReplyDelete
  63. மாஸ்டர் பிளான் - கொரில்லா சாம்ராஜ்யம்!

    முதன் முறையாக படிக்கும் வாய்ப்பு. கதை நன்றாக இருக்கிறது. அட்டைப்பட‌ வடிவமைப்பு அழகோ அழகு. வசனங்கள் மிக எளிமையாகவும் வாசிக்கும் போது புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது. பெரிய லாஜிக் ஓட்டை எதுவும் இல்லாமல், நம்பமுடியாத ஒரு விபரீத சம்பவத்தை கதையாக கொடுத்துள்ளனர்.

    மாயாவியின் அடர் சிவப்பு கோட்; டாக்டர் கிம்பரின் வயலட் நிற பேண்ட்டுக்கு மேட்ச்சாக பளீர் வெந்தய கலர் கோட்; பச்சை வண்ணத்திலான விமானங்கள், படகு, கட்டிடம் - ஆகிய வர்ணக் கலவைகள் சற்றே கண்களை உறுத்துகிறது.

    ஒரு கொரில்லா, தன் மாஸ்டரின் அபூர்வ விஞ்ஞானக் கண்டுபிடிப்பை தனதாக்கிக் கொண்டு, ஒரு சிறிய ஆப்பிரிக்க நாட்டையே கபளீகரம் செய்யப் போடும் மாஸ்டர் பிளான் தான் கொரில்லா சாம்ராஜ்யம் !!

    ReplyDelete
  64. வணக்கம்டெக்ஸ் கதைகளில்இனி மறுபதிப்பு வேண்டுமெனில் பலிக்கு பலி என்ற கதைக்கு முன்னுரிமை கொடுங்கள் நன்றி

    ReplyDelete
  65. டியூராங்கோ ஆரம்பமே படு அசத்தல் வழக்கம்போல....

    3 ப்ளாம்... 3 பட்..

    எகெய்ன் Once upon a time in the West ஸ்டைலில்....!!!

    தன் திறமை பற்றிய ஆங்கிலத்தில் இருக்கும் க்ளைடே, டியூராங்கோ முன்னாடி அற்பமான இரை!!!


    """ அக்னியே... முதலும் முடிவுமாய்"""

    என்ற தலைப்பில் அக்னியின் கோரதாண்டவத்தை வார்த்தைகளில் வடித்திருப்பது செம ஸ்டன்னிங் ரைட்டிங் சார்...!!!!

    யப்பா,

    "ஏதோவொரு அதிசய நிகழ்வாய் அந்த நெருப்புப் பிரளயத்திலிருந்து தப்புவோரும் உண்டுதான்! ஆனால்,
    தீரா அக்னியை ஆன்மாக்களில் சுமந்து திரியும் ஜாதியாகிடுவர் அவர்கள்!" அக்னியே...

    """" முதலும் முடிவுமாய்"""

    இதழிலின் வேற்றிக்கு கட்டியம் கூற இந்த துவக்கமே போதுமே.😍😍😍

    ..... தொடருது டியூராங்கோ இதழ்!

    ReplyDelete
    Replies
    1. டயலாக்ஸ் எழுதும் போது செம நையாண்டி மூடில் இருந்து இருப்பீர்கள் போல சார்..


      அடுத்து மிகவும் ரசித்த டயலாக்ஸ்.. பக்கம்19ல...

      கையில், 'பொருளின்றி' நடமாடும் ரகமல்ல நீ ஹார்லான் ! ஆனால், ஷெரீப்பின் கவனம் இங்கு தானிருப்பதால்....

      ....நம் பழகிப் பார்க்கும் படலத்தை வேறொரு சந்தர்ப்பத்துக்கு வைத்துக் கொள்வோம்!

      ---ஹா...ஹா...செம...செம...!!!

      தொடருது பக்கங்கள்...

      Delete
    2. / "" அக்னியே... முதலும் முடிவுமாய்"""

      இதழின் வெற்றிக்கு கட்டியம் கூற இந்த துவக்கமே போதுமே..///
      உண்மை STV சார்.நேற்று பதிவிடும் போது அதையும் எழுத நினைத்தேன். ஆனால் இந்த வசனங்கள் அப்போது நினைவுக்கு வரவில்லை. ஒரு பக்கம் முழுவதும் அக்னி தாண்டவமாடியிருக்கும். ஆசிரியருக்கு ஸ்கோப் செய்ய கிடைத்த அருமையான இடம். வார்த்தைகள் சரளமாக வந்து விழுந்திருக்கும். Super.

      Delete
    3. ///ஆசிரியருக்கு ஸ்கோப் செய்ய கிடைத்த அருமையான இடம். வார்த்தைகள் சரளமாக வந்து விழுந்திருக்கும். Super.///

      ---உண்மை பத்து சார். கொஞ்சமா அவரது அனுபவங்கள்!!!

      சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவாரு... இப்ப ஆட்டோ கேப்பே கிடைத்தால், டாரஸே ஓட்டுவார்....!!

      முதன் முறையாக லைவா விமர்சனம் பண்ணுவோம்னு படிக்க படிக்க ரசித்ததை எழுதி வர்றேன்... நல்லா இருக்கா இந்த ஸ்டலைல்???

      Delete
    4. அடுத்த மாதத்துப் பணிகளுக்குள் புகுந்த பின்னே, பத்தே நாட்களுக்கு முன்பான சமீபப் பணிகள் கூட மண்டையின் பின்சீட்டுக்குச் சென்றுவிடுவதுண்டு ! ஆனால் ட்யுரங்கோவின் அந்த "அக்னி" பக்கம் மட்டும் இன்னமும் fresh ஆகவே நினைவில் நிற்கிறது !

      பொதுவாய் ட்யுராங்கோ கதையினில் நாயகர் அடக்கி வாசிக்கும் ஜாதி என்பதால், அவருக்குப் பெருசாய் பன்ச் எழுதவெல்லாம் இடமிராது ! ஆனால் ஒருவித தத்துவார்த்தமான வர்ணனைகளை கதாசிரியர் ஆங்காங்கே கண்ணில் காட்டியிருப்பார் ! அவற்றை இறுகப் பற்றினால் மட்டுமே நாம "உள்ளேன் ஐயா" போட முடியும் ! இது அந்தப் பட்டியலில் இடம்பிடித்ததென்று சொல்லலாம் !

      Delete
    5. பக்கம் 22...

      கெய்ன்ஸ்வொர்த் மேல ஷார்டி வெடியை கொளுத்தினான் என்றால், நம்ம மேல் மிஸஸ் கெய்ன்ஸ்வொர்த் வீசுகிறாள்.

      """ பாழாய் போன சுரங்கங்கள் உங்களுடைய ஆன்மாவை விழுங்கியது போதாதென்று இப்போது உங்களையே விழுங்கி விட்டனவே.."""

      ---- எத்தனை அசாத்திய அர்த்தம் பொதிந்த வரிகள்.

      சுரங்கம், அதைசார்ந்த விசயங்கள், அதன்மூலம் கிடைத்த பெரிய மனுசன் தோரணை, அதனால் கிடைத்த புகழில் கெய்ன்ஸ்வொர்த் அடைந்த அகங்காரம் அவனுடைய ஆன்மாவை கபளீகரம் செய்துள்ளது....!!

      அடுத்த பத்தி இன்னும் அதிர்ச்சி வைத்தியம்,

      "" கடவுளே என்னை மன்னியும்...! ஆழ்மனதில் ஹென்றியிடமிருந்து விடுதலை பெற வேண்டுமென நான் ஆசைபட்டதென்னவோ உண்மைதான்...! ஆனால் சத்தியமாக இந்த வகையில் அல்ல...!""

      ---கணவன் எனும் மனித மிருகம் ஆட்டிபடைக்க, அவளின் பெண்மை விடுதலை வேண்டி பிரார்த்திப்பது எத்தனை.......துர்லபம்?????

      1800களின் வன்மேற்கில் பெண்களின் நிலைமை தான் நாம பல இடங்களில் பார்த்தே வந்துள்ளோம்.

      Delete
  66. கொக்கு தலையில் வெண்ணெய்க் கட்டி ! நெஞ்சே எழு..!


    இது ஒரு கதை விமர்சனம் மட்டுமே அல்லாது டெக்ஸ் ரசிகர்கள் மனம் புண்படும் படி எதுவும் எழுதப்போவதில்லை!

    நான்கு தவணைகளாக டெக்ஸ் வில்லரின் இந்த மாத புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். அரிசோனா மாநிலத்தில், டக்ஸன் என்றொரு நகரத்தில், ஒரு கறாரான ஷெரிப், ஒரு கொக்கைப் பிடித்து அதன் தலையில் வெண்ணெய்க் கட்டியை வைத்து அது வெயிலில் உருகும் வரை காத்துக் கொண்டிருக்கிறார்.
    இந்த சம்பவத்தைச் சுற்றி அரங்கேறும் நாடகமே இக்கதை!

    சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற வழக்கமான சமூக விரோதிகளின்/ சட்ட காவலர்களின் வேட்டையாடும் கதை! இங்கு சட்டம் என்றால் டெக்ஸ் வில்லர் மற்றும் கார்சன் என்பதை அறிக!

    வழக்கமான இந்த கதையில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக பல புதிய யுக்திகளை கதாசிரியர் கையாண்டிருக்கிறார்! அதில் உச்சகட்டமாக கிட் கார்சன் மற்றும் கிட் வில்லர் ஆகியோரை ஒரு நாடகத்தில் நடிக்க வைத்திருக்கிறார்!

    போலவே, கதையில் உச்சகட்ட பயங்கரம் தெரிய வேண்டும் என்பதற்காக அவசியமே இல்லாமல் ஒரு நேருக்கு நேர் அதுவும் நான்கு சேர நேருக்கு நேர் என்ற காட்சியை வலுக்கட்டாயமாக புகுத்தியுள்ளார். மீண்டும் கொக்கு தலையில் வெண்ணெய்க் கட்டியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்!

    புத்திசாலியான மனுவேல் லோகனை கோழையாக காட்ட சில இடங்களில் சிரமப்பட்டு சித்தரிக்கின்றனர். நெஞ்சே எழு - கதையின் தலைப்புக்கு யாராவது காரணம் சொன்னால் நன்றாக இருக்கும் !! (இங்குள்ள வாசகர்களின் மைண்ட் வாய்ஸ்... இளைய தளபதி! இளைய தளபதி! இளைய தளபதி!)

    பக்கம் 109 லிருந்து பக்கம் 172 வரையில் ஆக்சன்; திகில்; பரபரப்பு; படுபயங்கரம்; வெறி கொண்ட தாக்குதல் நிறைந்த ஒரு முழுநீள டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் படித்த உணர்வைத் தருகிறது. செயின்ட் சேவியர் சர்ச் வளாகத்தில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் டாப் க்ளாஸ்!

    ஒருவிதத்தில் பரபரப்பான நல்ல ஆக்சன் நிரம்பிய கதைதான் இது But ஆனால் நான்தான் டெக்ஸ் வில்லர் ரசிகன் இல்லையே ❤️

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா.... டெக்ஸ் வில்லர் ரசிகர்கள் ரசித்துட்டு போகட்டும் UK.

      நீங்கள் உங்க பேவரைட்டை கவனியுங்க!

      உங்க ஃபேவரைட் "டைகர்" என கணிக்கிறேன் சரிதானே!😉

      Delete
    2. STV:

      //உங்க ஃபேவரைட் "டைகர்" என கணிக்கிறேன் சரிதானே//

      Yes Sir!

      Delete
    3. "இளமையில் கொல்"- பார்ட்1க்கு இப்படி ஒரு விமர்சனம் போடுங்களேன்...

      இதே அளவுகோல் மட்டுமே யூஸ் பண்ணனும் ஓகேவா????

      Delete
    4. காத்திருக்கும் இன்றைய மாலையின் பதிவினை நீங்களும் சரி, "அதிகாரி அலர்ஜி" கொண்டோரும் சரி, தாண்டிச் சென்று விடல் நலமென்பேன் நண்பரே !

      Delete
    5. //"இளமையில் கொல்"- பார்ட்1க்கு இப்படி ஒரு விமர்சனம் போடுங்களேன்...

      இதே அளவுகோல் மட்டுமே யூஸ் பண்ணனும் ஓகேவா????//

      :)))

      Delete
    6. //காத்திருக்கும் இன்றைய மாலையின் பதிவினை நீங்களும் சரி, "அதிகாரி அலர்ஜி" கொண்டோரும் சரி, தாண்டிச் சென்று விடல் நலமென்பேன் நண்பரே !//


      ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்கள் சார்... உங்கள் பதிவுக்காக நிச்சயம் காத்துக் கொண்டிருப்பேன் சார்!

      Delete
    7. ஊய்...ஊய்.... ஊய்...

      தீபாவளி மலர்-- தலைதான்னு கன்ஃபார்மா அறிவிக்கப்போறீங்கனு கிளாவின் "பட்சி" கூவுதுங் சார்....!!!

      அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து கொண்டாட்டத்திற்கு டெக்ஸ் ரசிகர்கள் & தீபாவளியை தலையோடு ரசித்து மகிழும் காமிக்ஸ் அன்பர்களும் ரெடியாகிக் கொள்கிறோம்!!!

      அல்லது இத்தாலியில் புதிதாக தலையின் ஏதாவது அவதாரம் லாஞ்ச் ஆகப்போவுதோ?? நாமும் அதை உடனடியாக அமல்படுத்தப்போகிறோம்./// என்ற அதிரடி அறிவிப்பாகவோ இருக்கவும் வாய்ப்பு உண்டுதான்.

      ஆனா இது தேர்தல் முடிவு நேரங்கள் என்பதால் தீபாவளி மலர் அறிவிப்பையே கணிசமான அளவில் எதிர்பார்க்கிறேன்...😍😍😍


      Delete
    8. //பக்கம் 109 லிருந்து பக்கம் 172 வரையில் ஆக்சன்; திகில்; பரபரப்பு; படுபயங்கரம்; வெறி கொண்ட தாக்குதல் நிறைந்த ஒரு முழுநீள டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் படித்த உணர்வைத் தருகிறது. செயின்ட் சேவியர் சர்ச் வளாகத்தில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் டாப் க்ளாஸ்!//
      மிக அருமையான விமர்சனம்.
      ஒரு டெக்ஸ் ரசிகராக இல்லாதவர் இவ்வளவு இரசிக்க முடிகிறது என்றால் அது தல தளபதி ரசிகர் தவிர யாராலும் முடியாது.

      Delete
  67. காத்திருக்கும் இன்றைய மாலையின் பதிவினை நீங்களும் சரி, "அதிகாரி அலர்ஜி" கொண்டோரும் சரி, தாண்டிச் சென்று விடல்
    நலமென்பேன் நண்பரே !
    சூப்பர் சார்
    அப்போ மாலையில் தல தளம் அதிரபோகிறது.

    ReplyDelete
  68. KS க்கும், ஈவிக்கும் வேலை வைக்காம எடிட்டர் சாரே மாலைப் பதிவு பற்றிய தகவலை உறுதிபடுத்திட்டார்...!!

    இருவரும் விடுமுறை தினம் என்பதால் அதை செலபரேட் பண்ணிட்டு இருக்காங்க போல...!!!

    ReplyDelete
    Replies
    1. இன்றைய பதிவுக்கு வெயிட்டிங்....

      Delete