Saturday, April 17, 2021

முன்பதிவுகள் முடிவதில்லை ?

 நண்பர்களே,

வணக்கம். இந்த "நியூ நார்மல் " உலகினில் திருவிழாக்களுமே புது தினுசாய்த் தானிருக்கும் போலும் ! நினைவு தெரிந்த நாள் முதலாய் அம்மன்கோயில் திருவிழாக்களின் பொருட்டு  ஒவ்வொரு ஏப்ரலிலும், மே மாதத்திலும் களைகட்டும் ஊரானது, போன வருஷம் ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்ந்திருந்ததெனில், இம்முறையோ subdued தொனியினில் தயாராகி வருகிறது ! விடிய விடிய ஜொலிக்கும் கோவில் வீதிகளோ இப்போது இரவு எட்டுக்கே அமைதியை அரவணைத்து விடுகின்றன !  ஆனால் தஞ்சைப் பெரிய கோவிலுக்கே பூட்டு ; மதுரையில் சித்திரைத் திருவிழாவினில் பக்தர்களுக்குத்  தடா எனும்  இந்த நாட்களில் - இந்தமட்டுக்காவது சாத்தியப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ந்து கொள்ளணும் போலும் ! 'இரண்டாம் அலை' தேசத்தையே  துவைத்துத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், சமயப்பற்றைப் பறைசாற்றும் கும்ப மேளாக்கள் நமக்கு சுகப்படாது தான் என்று நினைத்துக் கொன்டேன் ! இப்போதெல்லாம் ஊடகங்களோடு நேரம் செலவிடும் போது கபாலம் கிறுகிறுக்கிறது ! போன வாரம் வரை 'மாஸ்க்கா ? அப்டின்னா இந்த வேதாளர், டயபாலிக்லாம் போடுவாங்களே - அந்த சமாச்சாரமா ?' என்று கேட்கும் விதமாய் ரணகளக் கூட்டங்கள் சேர்வதை  'தேமே' என்று வேடிக்கை பார்த்தோர், இன்றைக்கு மாய்ந்து மாய்ந்து அறிக்கை விடுவதைப் பார்க்கும் போது, சங்கிலி முருகன் ஆலமரத்தடியில் சட்டையைக் கிழிக்க முற்படுவதே நினைவுக்கு வருகிறது ! எது, எப்படியோ - ஒரு தூரத்து எதிர்கால தினத்தில் "மெகா சாத்துக்கள் வழங்கியது 2020-ஆ ? 2021-ஆ ?" என்று பட்டிமன்றம் நடத்துவார்களோ     - என்னமோ ?! இப்போதெல்லாம் டி-வியில் IPL எனும் அந்தக் கல்லா கட்டும் திருவிழாவைத் தாண்டி எதையும் பார்க்கத் தோன்றுவதில்லை & வாசிப்பெனில் நம்ம பொம்மை புக்கைத் தாண்டி வேறெதையும் கையில் தொடவே பயம்மா கீது !! ஒருவித ஆற்றமாட்டாமையும், கையாலாகாத்தனமும் பிடுங்கித் தின்பது போல் உள்ளுக்குள் உணறுகிறது - நாடெங்கிலும் அரங்கேறி வரும் நோயின் ருத்திர தாண்டவங்களைப் பார்க்கும் போது ! எங்கோ தூர தேசங்களில் இதே ரணங்களெல்லாம் நிகழ்ந்த போது வெறும் செய்திகளாய்த் தென்பட்ட விஷயங்கள் இன்றைக்கு நாமறிந்தோர் வசிக்கும் ஊர்களிலும் அகோரமாய் தாண்டவமாடும் போது , இரத்தத்தையும், தக்காளிச் சட்னியையும் தான் நினைவூட்டுகின்றன ! எது எப்படியோ - தகுதியுள்ளோர், கிடைத்த தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டு, முடிந்தமட்டும் பத்திரமாய் இருக்க முனைந்திடுவோம் guys !! மும்பையிலும், பூனேவிலும், நாஷிக்கிலும் அரங்கேறிடும் காலனின் ஊழித்தாண்டவம் நமக்கு வேண்டாமென்று வேண்டிக் கொள்வோமே !

Moving on to brighter stuff - கடுவன் பூனை மாதிரியான ட்யுராங்கோவுடன் இரண்டு வாரங்களாய்க் கட்டி உருண்டான பிற்பாடு, செம ஜாலியான அனுபவம் நம்ம 'தல' புண்ணியத்தில் கிட்டியுள்ளது ! ரொம்பவே மண்டை காய்ந்த நிலையில் டெக்சின் "நெஞ்சே எழு" பணிகளுக்குள் குந்திய போது - 'தெய்வமே...இதுவும் புரட்டி எடுக்கும் ரகமாய் இல்லாதிருந்தால் தேவலாமே ?!" என்று தான் எண்ணம் ஓடியது ! கதை "Mauro Boselli " என்பதை முதல் பக்கத்தில் பார்த்த போதே 'ரைட்டு...பாயசச் சட்டிக்கு  இந்தவாட்டி வேலை இருக்காதுடோய் !!' என்ற சந்தோசம் பெருக்கெடுத்தது ! And சித்திரங்கள் அசாத்திய அமர்க்கள ரகம் என்ற போது வாயெல்லாம் பல்லாகிப் போனது ! மெது மெதுவாய் உள்ளே புகுந்தால், சிங்கப்பூரின் சாலைகளில் சறுக்கிச் செல்லும் பென்ஸ் கார் போல கதை சும்மா சிட்டாயப் பறக்கிறது ! அடுத்த தபா கதாசிரியர் போசெல்லியைப் பார்க்கும் போது - 'நமக்குள்ளாற மட்டும் இருக்கட்டும் சார் ; ஆனா நீங்க பம்பாயில இருந்தச்சே உங்க பெயர் என்ன ?" என்று கேட்க நினைத்திருக்கிறேன் - simply becos, ஒரு blockbuster தமிழ் திரைப்படத்துக்கான சகல லட்சணங்களுடன் மனுஷன் இத்தாலியில் கதையெழுதுவது இது முதன்முறையே அல்ல ! தெறிக்கும் ஆக்ஷன் ; அழகாய் குடும்ப செண்டிமெண்ட் ; நண்பர்களின் அன்னியோன்னியம் ; மிரட்டலான வில்லன்கள் ; அதகள கிளைமாக்ஸ் என்று பின்னியெடுத்துள்ளார் ! இதோ - கீழுள்ள ஒற்றைப் பக்கத்தைப் பாருங்களேன் - இல்லாத கேசக்கால்களும் சிலிர்த்துக் கொள்ளும் ! பொதுவாய் அதிகாரியின் கதைகளில் பணிசார்ந்த அயர்ச்சி தென்படுவது அதன் நீளங்களின் பொருட்டே ! எழுத எழுத ; எடிட் செய்ய, எடிட் செய்ய, குதிரைச் சவாரிகள் நீண்டு கொண்டே போவது போலிருக்கும் ! ஆனால் இம்முறையோ டக்சனிலும், எல்லைக் கோட்டைத் தாண்டி மெக்சிகோவினுள்ளும் நாமே பயணம் போவது போலொரு உணர்வு ; மீசைக்கார மெக்சிக பேமானிகளை நம்மவர்கள் வறுத்தெடுக்கும் போது - 'அவன் மீசையைப் பிடுங்குங்க தல !' என்று ஆர்ப்பரிக்கும் வேகம் அலையடிக்கிறது ! "ரொம்பச் சின்ன knot இருந்தாலே போதும் ; டெக்ஸ் எனும் ஜாம்பவானும், வன்மேற்கினில் கதைகள் புனையும் எனது ஆற்றலுமாய் இணைந்து ரகளை செய்து விடுவோம் !" என்று MB அவர்கள் நிரூபித்திருப்பது நூற்றியோராவது தடவையாய் ! நடப்பாண்டில் டெக்ஸ் (புது) சாகசங்களுக்கு ஒரு துவக்கம் தந்திட இப்படியொரு பட்டாசு கிட்டியதில் செம ஹேப்பி அண்ணாச்சி ! And இதோ பட்டாசை அட்டையிலேயே கொளுத்தி நிற்கும் நம்மவர் - கோகிலாவின் வண்ண மெருகூட்டலுடன் : 


அப்புறம் நடப்பு மாதத்தின் அட்டவணையில் ஒரு சிறு மாற்றம் ! குறுக்கால புகுந்திடும் "கொரில்லா சாம்ராஜ்யம்" புக்கானது - 2020-ன் all in all அழகுராஜா சந்தாவினில் இருந்திட்ட நண்பர்களுக்கு விலையின்றியிருக்கும் தான் ; ஆனால் கடைகளில் வாங்கும் இதர நண்பர்களுக்கு அவ்விதமிராதே ?! ஏற்கனவே ட்யுராங்கோ 300 ரூபாயில் ; டெக்ஸ் 150-ல் என்றிருக்க, மாயாவியும் ஒருபக்கம் பட்ஜெட்டை ஏற்றிடுவதால் - இம்மாதம் வந்திருக்க வேண்டிய "ஒரு தோழனின் கதை" (கிராபிக் நாவல்) அடுத்த மாதத்துக்கு நகன்று கொள்கிறது ! தவிர, எனக்கு இன்னொரு சன்னமான பயமுமே :

ட்யுராங்கோ

டெக்ஸ் வில்லர்

மாயாவி

என இம்மாதத்து மூவருமே அதிரடி கமர்ஷியல் கிங்ஸ் ! இவர்கள் ஒருசேரக் களமிறங்கும் மாதத்தில், சவலைப் பிள்ளையைப் போல ஒரு கி.நா.புகுந்து, சட்னியாகிடப்படாதே என்ற பயமும் தான் ! (So அடுத்த மாதம் வரை வெயிட்டிங் சேலம் குமார் சார் !) புக்ஸ் மூன்றே எனும் போது ஏப்ரலில் ஏப்ரலுக்கு முயற்சிப்போம் - if all goes well ! 

Looking ahead, சுருக்கமான பதிவுகளோடு வாரயிறுதிகளுக்கு நான் பாடிடும் மங்களங்களில் மிச்சமாகிடும் நேரத்தைக் கொண்டு 2022-ன் திட்டமிடல்களை உரமேற்றிட முடிந்து வருகிறது !! Maybe இன்றைக்கு சற்றே 'சுருங்கின வாய் சுருளியாய் ' நான் தென்பட்டாலும், அதன் பலன்கள் காத்திருக்கும் ஆண்டினில் பிரதிபலிக்காது போகாது என்றே தோன்றுகிறது ! Fingers crossed ! 

கிட்டியுள்ள இந்த அவகாசத்தினில் செய்த தேடல்களில் - 2 அதிரடியாளர்கள் கிட்டி ! ஒருத்தர் மாமூலாய்க் குருத மேலே சவாரி போகும் ரகமெனில், இரண்டாமவர் ஒரு ஆக்ஷன் நாயகர் ! இதுவரைக்கும் நமது இதழ்களில் நாம் அதிகம் பார்த்திரா தேசங்களின் பின்னணியில் தட தடுக்கிறது இவரது சாகசம் ! இருவருமே 2022 அட்டவணைக்குள் ஏற்கனவே கட்டையைக் கிடத்தி விட்டார்கள் ! தவிர, இன்னும் 2 ஆக்ஷன் மேளாக்களும் நமது shortlist-ல் காத்துள்ளன ! இரண்டுமே இரு பாக சாகசங்களே என்ற நிலையில், முதல் பாகங்கள் வெளியாகி விட்டுள்ளன & அவை இரண்டுமே செமத்தியான action blocs ! க்ளைமாக்ஸ் பாகத்துக்கோசரம் வெயிட்டிங் & இரண்டுமே நடப்பாண்டில் ஜூலை & அக்டொபரில் வெளியாகிடுமாம் ! அவையும் முதல் பாகங்களின் டெம்போவுக்குக் குறையின்றி இருப்பின், 2022 will see a refreshing change from the cowboys !!

அப்புறம் போன பதிவினில் "சுஸ்கி & விஸ்கி' இதழ்களுக்கு ஓரளவுக்கு encouraging results கண்ணில்பட்டது நிச்சயமாய் எனக்கு ஆச்சர்யமே ! ஆனால் இவர்களுக்கு மீள்வருகை தருவதாயிருப்பின், நான் ஏற்கனவே சொன்னது போல - ஒரு தொகுப்பாக்கி, "முன்பதிவுகளுக்கு மட்டுமே" - என்ற ரீதியில் தான் களமிறக்கியாக வேண்டும் ! ரெகுலர் கார்ட்டூன் தடத்தில் இந்தப் புள்ளீங்களை இறக்கி விட்டு விஷப் பரீட்சை செய்திடல் எனக்கு விவேகமாய்ப் படவில்லை ! 

"முன்பதிவுகளுக்கு மட்டுமே" என்ற தலைப்பினில் நாம் நிலைகொண்டிருக்கும் வேளையில் - கொஞ்சம் அலசலை நீட்டித்திடுவோமா ? துவக்கம் - இதோ கீழுள்ள விளம்பரப்படி, நமது XIII தொகுப்பின் முன்பதிவுப் பூர்த்திகள் பற்றி ! 

இன்றைய நிலவரப்படி புக்கிங் நிற்பது நம்பர் 226-ல் ! தொடரும் நாட்களில் இந்த வேகம் தொய்வின்றி நகன்றிடும் பட்சத்தில் - XIII one last hurray-க்கு அழகாய்த் தயாராகி விடுவார் ! So மக்களே : இப்போதைக்கு பந்து உங்கள் பக்கமே !

"முன்பதிவுக்கு மாத்திரமே' என்று போன வருஷம் இதே சமயம் நாம் விளம்பரப்படுத்திய 2 மெகா புராஜெக்ட்கள் பற்றி இனி : 2004 டிசம்பர் வரையிலும் நம்மில் முக்காலே மூணு வீசத்தினரின் vocabulary களில் "சுனாமி " என்ற பதமே இருந்திராது தான் ; ஆனால் ஒரு டிசம்பரில் உக்கிர நாளுக்குப் பின்பாய் அதுவொரு இரத்தம் தோய்ந்த வார்த்தையாகிப் போய்விட்டதல்லவா ? அதே போல, போன வருஷத்தில் துவக்கம் வரைக்கும் "கொரோனா" என்பது சீனர்களின் உடமை என்பதாய் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த நாட்களில் :

ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா...!

கென்யா

என 2 ஸ்பெஷல் இதழ்களை 2020 ஈரோட்டுக்கென திட்டமிட்டிருந்தோம் ! ஆனால்..ஆனால்...தொடர்ந்தது என்னவென்று தான் அறிவோமே ?! வேறு வழியின்றி 2 திட்டமிடல்களையுமே ஒத்திப் போட்டோம் - 2021-ல் பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடிடுமென்ற நம்பிக்கையில் ! நிலவரம் இன்னமும் கலவரமாகவே தொடர்ந்திட, எனக்கோ இவற்றை எவ்விதம் களம் காணச் செய்வதோ ? என்று தெரியலை ! பெரும் தொகைகள் & உழைப்பு இவற்றினுள் முடங்கியிருப்பது மாத்திரமன்றி, அடுத்ததாய் வேறெதுவும் திட்டமிடவுமே பயமுறுத்தி வருகின்றன ! Maybe இரண்டில் ஏதேனும் ஒரு புக்கை நடப்பாண்டின் தீபாவளி ஸ்பெஷல் இதழாய் முன்பதிவுகளுக்கென அறிவிக்கலாமா ? என்ற யோசனை எழுவதும், மங்குவதுமாய் உள்ளது ! சத்தியமாய் இந்த நொடியில் எனக்கு எதுவும் தீர்மானிக்கத் தெரியலை !!

உங்கள் சிந்தனைகள் என்னவோ folks ? 

'பொறுத்தது பொறுத்தோம் ; அடுத்த வருஷம் வரைக்கும் டிக்கியை மூடல் தேவலாம் !" என்பீர்களா ? 

அல்லது 

"தீபாவளி"க்குப் பட்டாசைப் போட்டு விடலாமா ? 

போடலாமெனில் இரண்டில் எது உங்கள் தேர்வாய் இருக்குமோ : ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாவா ? கென்யாவா ?


சொல்லுங்களேன் folks ? Bye all...see you around ! Have a safe weekend !

215 comments:

  1. வணக்கமுங்கோ.மீ... டூ...

    ReplyDelete
  2. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே... 🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  3. Yes for diwali pattasu .. My choice ஒற்றை நொடி 9 தோட்டா ..

    ReplyDelete
    Replies
    1. எனது சாய்ஸ் உம் அதுவே. அதிரடி ஆக்ஷன். Booking start பண்ணலாம் சார்.

      Delete
  4. TEX இல்லாத தீபாவளி புஸ்வானமே

    தல இருந்தாத்தான் அது தீபாவளி .. ஸோ டெக்ஸ் மேல கை வைக்காம வெளியிடுவதென்றால் ஓகே டியர் எடி ...

    டெக்ஸ் கூடவே கென்யா வும் ஒன்பது தோட்டா வும் வரட்டுமே ..

    ReplyDelete
    Replies
    1. உண்டான அட்டவணையினில் மாற்றங்கள் ஏதும் செய்வதாக இல்லை சம்பத் ! அறிவித்தவை அறிவித்தது போலவே வெளிவந்திடும் - நிலவரங்கள் சென்றாண்டை போலாகாத பட்சங்களில் !

      Delete
    2. அயோ சரிதானுங் ..

      நிலவரம் கலவரமா இல்லை வரமா ன்னு தெரியாம முடிவெடுக்க வேணாம்ங்க சார் ..

      Delete
    3. நிலவரம் மீன்ஸ் - கொரோணா பேபி

      Delete
  5. நெஞ்சே எழு அட்டை படம் சூப்பர் சார்.

    ReplyDelete
  6. வந்திட்டேன் சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  7. ஓஒற்றை நொடி..ஒன்பது தோட்டா தான் வேண்டும் சார்

    ReplyDelete
  8. தீபாவளிக்கு தல தான் சார் சரியான ஆள்.விற்பனை மற்றும் ரசனைக்கு தல ஒன்லி மை சாய்ஸ் சார்.

    ReplyDelete
  9. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா தீபாவளிக்கு.

    ஆகஸ்டில் புத்தக விழாக்கு (அட்லீஸ்ட் ஆன்லைன்) ஏதாவது இருக்குங்களா?

    ReplyDelete
    Replies
    1. இல்லேன்னா தீபாவளிக்கு ரெண்டையுமே போட்டுடலாம் 😍.

      Delete
    2. ஆமாம்... இரண்டையும் கொடுத்தால் ரொம்ப சந்தோஷம் சார்!

      Delete
    3. நிலவரம் நீங்களெல்லாம் நினைப்பது போலில்லை...

      காசு...
      பணம்...
      மணி...

      மைனராரதெல்லாம் அப்பறமா...

      Delete
  10. சுஸ்கி விஸ்கி முன்பதிவுக்கு மட்டும் என்பது நல்ல முடிவு.

    ReplyDelete
  11. // புக்ஸ் மூன்றே எனும் போது ஏப்ரலில் ஏப்ரலுக்கு முயற்சிப்போம் //
    அடுத்த கேள்வி இதைத்தான் கேட்கலாம்னு தோணிச்சி,அருமை சார் அருமை...

    ReplyDelete
  12. // இம்மாதத்து மூவருமே அதிரடி கமர்ஷியல் கிங்ஸ் //
    பெருந்தலைகள் வரவில் புதுவரவு வலுவாய் இல்லாவிடின் காணாமல் போகும் அபாயம் உண்டுதான்...

    ReplyDelete
  13. டெக்ஸ் அன் கோ என்றால் அது டாப் தான். நெஞ்சே எழு டெக்ஸ் வரிசையில் ஒரு மைல்கல் இதழாக அமையும்.

    ReplyDelete
  14. நெஞ்சே எழு அட்டைப்படம் வர்ண ஜாலம் சார்,சும்மா அள்ளு கிளப்புது...

    ReplyDelete
  15. // Maybe இரண்டில் ஏதேனும் ஒரு புக்கை நடப்பாண்டின் தீபாவளி ஸ்பெஷல் இதழாய் முன்பதிவுகளுக்கென அறிவிக்கலாமா ? என்ற யோசனை எழுவதும், மங்குவதுமாய் உள்ளது ! சத்தியமாய் இந்த நொடியில் எனக்கு எதுவும் தீர்மானிக்கத் தெரியலை !! //

    இரண்டு புத்தகங்களையும் முன்பதிவுக்காக அறிவிக்கலாம். இல்லை ஒரு புத்தகம் மட்டும் தான் தீபாவளி ஸ்பெஷல் என்றானால், மற்றோரு புத்தகத்தை எதாவது ஒரு ஆன்லைன் புத்தக திருவிழாக்கு ஒதுக்கலாம்.

    இந்த வருடத்தில் ஒன்றுதான் என்று நீங்கள் ஒற்றை காலில் நின்றால், ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா எனது சாய்ஸ் ...

    ReplyDelete
    Replies
    1. // மற்றோரு புத்தகத்தை எதாவது ஒரு ஆன்லைன் புத்தக திருவிழாக்கு ஒதுக்கலாம் // brilliant idea

      Delete
  16. அட்டை படம் செம. சித்திரங்கள் பிரமாதம். தீபாவளிக்கு ... ஒற்றை நொடி ஒன்பது தோட்டா வரட்டுமே சார். கென்யாவை வாய்ப்பான தருணம் பார்த்து களம் இறக்குங்களேன். ஆனால் கென்யா தொடரில் அடுத்தடுத்து பல புக்குகள் கிட்டுமே ., .. பார்ப்போம் அதற்கு ஒரு தருணம் வராமலா போகும்

    ReplyDelete
  17. தீபாவளி ஸ்பெஷலாய் ஒற்றை நொடி ஒன்பது தோட்டாவை வெடிக்க விடுங்கள்

    ReplyDelete
  18. தீபாவளிக்கு டெக்ஸெ உறுதியாக வேண்டும். முன்பதிவுக்கு நீண்ட நாள் களாய் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் +கென்யா இரண்டைப்பற்றியும் எதுவும் தெரியாது தான் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கும் என்பதே இந்தத்தேர்வுக்குக் காரணம்.. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  19. // 2022 will see a refreshing change from the cowboys !! //
    அடுத்த ஆண்டு புதுவரவுகள் நிறைய இருக்கும் போல,கெளபாய்ஸ் மேளா...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா எடிட்டர் சார் சொன்னது கௌபாயில் இருந்து ஒரு மாற்றம் இருக்கும் என்று.

      Delete
  20. // ஒரு தொகுப்பாக்கி, "முன்பதிவுகளுக்கு மட்டுமே" - என்ற ரீதியில் தான் களமிறக்கியாக வேண்டும் //
    சூப்பரு...

    ReplyDelete
    Replies
    1. முன் பதிவாக வெளியிடுவது சிறப்பு.

      Delete
  21. // தீபாவளி"க்குப் பட்டாசைப் போட்டு விடலாமா ? //
    தீபாவளிக்கு வெடியைப் போட்டா பொருத்தமா இருக்கும் சார்...

    // போடலாமெனில் இரண்டில் எது உங்கள் தேர்வாய் இருக்குமோ : ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாவா ? கென்யாவா ? //
    இரண்டுமே இருந்தா நல்லாதான் இருக்கும்,இயலாத பட்சத்தில்,ஒன்று மட்டும் எனில் ஒ.நொ.ஒ.தோட்டா ஓகே தான்...
    கென்யாவை ஆன்லைன் திருவிழாவில் இறக்கலாம்...

    ReplyDelete
  22. இந்த வார மீள்வாசிப்பு இரண்டு பொக்கிஷங்கள்:
    1.வல்லவர்கள் வீழ்வதில்லை,
    2.கார்ஸனின் கடந்த காலம்.

    வல்லவர்கள் வீழ்வதில்லை இதழின் மீள்வாசிப்பில் சுவாரஸ்யமாக ஒரு செய்தி புலப்பட்டது,
    கார்ஸனின் கிராமத்து வருகையின்போது,கிட் அவரிடம் வினவுவது லினாவும்,டோனாவும் எப்படியுள்ளனர் ?!
    கார்ஸனின் பதில்:நன்றாக இருக்கிறார்கள்,தயாள சிந்தனையுடைய சிலர் வழங்கிய முதலீட்டைக் கொண்டு ஒரு விடுதியைத் தொடங்கி இருக்கிறார்கள்...

    வியப்பான விஷயம் என்னவெனில்,கார்ஸனின் கடந்த காலம் கதை நடந்த காலகட்டம் முடிந்தவுடன் அடுத்து வல்லவர்கள் வீழ்வதில்லை கதையின் காலகட்டம் தொடங்கும் போல...!!!

    சந்தேகம் என்னவெனில் கார்ஸனின் கடந்த காலத்தில் ரே க்ளம்மன்ஸ் வைத்திருந்த தங்கத்தை லினாவும்,டோனாவும் வைத்துக் கொள்ள கார்ஸன் அனுமதி அளிப்பது போல் கதை முடிக்கப்பட்டிருக்கும்,அப்படியிருக்க லினாவும்,டோனாவும் விடுதியை பிறரின் முதலீட்டில் தொடங்கியுள்ளனர் என்று கார்ஸன் வல்லவர்கள் வீழ்வதில்லை சாகஸத்தில் கிட்டிடம் சொல்வது சற்றே முரணான செய்தியாக தோன்றியது...

    ReplyDelete
    Replies
    1. அட்டிகா கோல்ட் கம்பெனியிலே தங்கத்தை வைச்சு காசு வாங்கி தொழில் தொடங்கியிருப்பாங்களோ ?

      Delete
    2. கார்ஸன் ரொம்ப தன்னடக்கத்தோட, தயாள சிந்தனையுடைய சிலர்ன்னு சொல்லியிருக்கார்.அவருக்கு சுய விளம்பரம் பிடிக்காது. அதான்.

      Delete
    3. // கார்ஸன் ரொம்ப தன்னடக்கத்தோட, தயாள சிந்தனையுடைய சிலர்ன்னு சொல்லியிருக்கார்.அவருக்கு சுய விளம்பரம் பிடிக்காது. அதான்.//
      அடடே,இது கூட நல்லா இருக்கே...!!!

      Delete
    4. // அட்டிகா கோல்ட் கம்பெனியிலே தங்கத்தை வைச்சு காசு வாங்கி தொழில் தொடங்கியிருப்பாங்களோ ? //
      தங்கத்தை நாம வாங்கினாலும்,அடகு வைங்கன்னு ஒரு கோஷ்டி,எங்ககிட்ட வந்து பணமாவே வாங்கிக்குங்கன்னு ஒரு கோஷ்டி என பல கோஷ்டிகள் சுத்துதே...
      அந்த மாதிரி ஏதாவது ஒரு கோஷ்டியிடம் கொடுத்துட்டாங்களோ என்னவோ சார்...ஹா,ஹா,ஹா...

      Delete
    5. அந்த பணத்த அவங்க இல்லாதவர்களுக்கு குடுத்துட்டு தேமேன்னு நிக்கயில் கார்சன் உதவுறாப்புல....

      Delete
  23. தீபாவளிக்கு.. ஓற்றை நொடி..ஒன்பது தோட்டா..

    ReplyDelete
  24. சலாம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க....

    ReplyDelete
  25. அடேங்கப்பா செம பட்டாஸான பட்டாசு டெக்ஸ்ன் அட்டைப்படம்..இங்கேயே இப்படியே என்றால் இதழில் நேரில்...


    கலக்க போவது உறுதி...:-)

    ReplyDelete
  26. தீபாவளி மலரில் எது வேண்டுமானாலும் வெளியிடுங்கள் சார்...ஆனால் அந்த மாதம் கண்டிப்பாக டெக்ஸ் வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்

    ReplyDelete
  27. சுஸ்கி விஸ்கி தொகுப்பாக முன்பதிவுக்கு நல்ல திட்டமே சார்..


    எத்தனை கதை தொகுப்பு..என்ன விலை...என்ற விளம்பர்த்தை விரைவில் காண ஆசை..:-)

    ReplyDelete
  28. ட்யூராங்கோ...டெக்ஸ்...வண்ண மாயாவி....


    ஆஹா நாள்களே விரைந்து செல்லுங்கள்...

    ReplyDelete
  29. இனிய மாலை வணக்கம்.

    ReplyDelete
  30. வந்துட்டேன் வந்துட்டேன்

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. சிஸ்கோ+விஸ்கி இனை தொகுப்பாக முன்பதிவுகளுக்கு மட்டுமே என்று களம் கண்டால் நலமே.

    ReplyDelete
  33. டெக்ஸ் அட்டைப் படமும் ஓவியங்களும் கலக்கல்

    ReplyDelete
  34. சார்,
    டீவீயில் நீங்கள் அனுபவிக்கும் மண்டை நோவு தவிர எனக்கு முன்னோருக்கு முன்னோருக்கு முன்னும், முன்னோருக்கு முன்னும், முன் தலைமுறையும், என்னைப் பின் தொடர்ந்தவருமே மருத்துவர்களாக வந்திருப்பதால் :

    - காமிக்ஸ் என்று வந்து விட்டால் அதோ அந்த fair வரும், இந்த fair வரும் என்று காத்திருக்க வேண்டாம். வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து வெளியிட்டு விடுங்கள் ப்ளீஸ்.

    - அமெரிக்காவில் பலரும் 2 ஷாட்கள் போட்டுக்கொண்ட பிறகும் 3வது அலை இரண்டாவது அலையயைவிட அதிக தாக்கம் ஏற்படுத்துக்கொண்டுள்ளது என்பது ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்த விஷயமே - எனவே 2020, 2021 என்ற பந்தயத்தில் 2022ம் சேர்த்துக் கொள்ளும் என்பதே நிதர்சனம் (விருப்பம் அல்ல - எல்லோரும் ஆரோக்கியத்துடன் வாழவே விருப்பம் - ஊழிக்காலத்தில் இறைவனின் அளவைகள் வேறாகிவிடுகிறதே !! :-(). எனவே plan well and publish என்பதே நான் வைக்கும் கோரிக்கை. ஒத்திப்போடாதீர்கள் சார். Shoot for either of the titles for Deepavalai. என்னைக்கேட்டால் தீபாவளி வரை பொறுக்க வேண்டாம் என்பேன். ஆண்டு மலர் அருகிலோ - அல்லது ஒரு ஐடியா - "Erode book fair-ஐ E -Road book fair-ஆக மாற்றி விடலாமே? ஒரு virtual meet-ம் ஆச்சு ஒரு வெளியீடும் ஆச்சு?"

    ReplyDelete
    Replies
    1. ஆகஸ்டில் எற்கனவே லயன் # 400 புஷ்டியான விலையில் (ரூ.500 ) காத்துள்ளது சார் ; அதனோடு இவற்றில் எதேனும் ஒன்றை இணைத்தால் அம்மாதத்து பட்ஜெட் ஆயிரங்களில் எகிறி விடும் !

      Delete
  35. கென்யா மற்றும் ஒ.நோ.ஒ.தோ....இரண்டுமே பணிகள் முடிந்த நிலையில் இந்த ஆண்டே சமயம் பார்த்து வெளியிடுங்கள்... முன் பதிவு மூலம் களமிறக்கலாம் எடி சார்.

    ReplyDelete
  36. தீபாவளிக்கு ஒற்றை நொடி ஒன்பது தோட்டா களை தெறிக்க விடலாம் சார்!

    ReplyDelete
  37. நெஞ்சே எழு,அட்டை படம் மிக அருமை,மூன்று இமயமும் ஓரே நேரத்தில் சந்திக்கும் போது,மூன்றுமே சீக்கிரம் குடேனை காலி செய்து விடுவார்கள்,நன்றி ஆசானே

    ReplyDelete
  38. July masam onnu Diwali kku onnu aga motham...onnu onnu

    ReplyDelete
  39. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா with தீபாவளி.

    ReplyDelete
  40. நெஞ்சே எழு அடர் சிகப்பு நிறத்தில் மிக மிக அற்புதமாக வந்துள்ளது அட்டைப்படம்.
    சுஸ்கி விஸ்கி முன்பதிவுக்கு தேர்ந்தெடுப்பது நல்ல விஷயம். நான்கு ஐந்து கதைகளை சேர்த்து அதை முன்பு போல் மினி லயன் சைஸில் வெளியிட்டால் மிக மிக நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். ஒற்றை நொடி ஒன்பது தோட்டா தீபாவளிக்கு வந்தால் சூப்பராக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மினி லயன் சைசில் வெளியிட ஆசை என்று சொன்னாலே அவர்கள் நெஞ்சைப் பிடித்து விடுவார்கள் நண்பரே ! இது டிஜிடல் யுகம் ; அவர்களின் தர எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யாவிடின் நம்மை நடையைக் கட்டச் சொல்லி விடுவர் படைப்பாளிகள் !

      Delete
  41. Dear Editor
    Its a tough year for all of us already
    our books give us relief
    Want more smiles on Diwali
    Give us both Kenya and ONOT
    Tex single album looks weak
    Add these two without hesitation
    Can start pre booking from now on so that ull have time 2 assess feasibility
    Regards
    Arvind

    ReplyDelete
  42. என்னைப் பொறுத்தவரையில்..
    1) கென்யா
    2) சுஸ்கி விஸ்கி
    3) ஒற்றைநொடி ஒன்பது தோட்டா

    இந்த வரிசையில் வெளியிடலாம்.
    மூன்றையும் ஒன்றாக வெளியிட்டாலும் அறிவிப்பு வந்தவுடனே புக்செய்திடுவேன் (எந்த தொகையாயிருந்தாலும்).

    உத்தேசமாக ஒரு நூறுபேர் உடனடியாக புக்செய்வார்கள் என்று கருதலாம் ஏனையோர் எப்படி இருப்பார்கள் அவர்களுக்கு புக் செய்திட வசதி இருக்குமா என்று தெரியவில்லை.

    நமது விருப்பம் முதலில் கென்யா வித்தியாசமான சூழல் மாதிரி இருப்பதால் இதுவே முதல் சாய்ஸ்.

    இரண்டாவது சுஸ்கி விஸ்கி ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் என்பதாலும் படித்த கதைகள் அனைத்தும் சோடைபோகாத ரகம்.

    மூன்றாவது ஒற்றைநொடி ஒன்பது தோட்டா இதை படித்தபிறகுதான்(பார்த்த) அபிப்ராயம் கூற இயலும்.


    டெக்ஸ் -ன் உட்பக்கப் படங்கள் தெளிவாக இருக்கிறது. சூப்பர்👌.

    ReplyDelete
    Replies
    1. சுஸ்கி -விஸ்கி உரிமைகளை வாங்கும் படலமே இன்னும் ஆரம்பிக்கவில்லை சார் ; அதுக்கென நிறைய திட்டமிடல் ; அவகாசம் அவசியமாகிடும் !

      Delete
  43. தீபாவளிக்கு எந்த கதை சரியென உங்களுக்குபடுகிறதோ அதனை வெளியிடுங்கள். உங்கள் சாய்ஸே எனது சாய்ஸ். ஆனால் தீபாவளிக்கு கண்டிப்பாக ஒரு காமெடி கதை இருப்பது போல் பார்த்து கொள்ளுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. // "தீபாவளி"க்குப் பட்டாசைப் போட்டு விடலாமா ? //

      தாராளமாக.

      Delete
  44. 66 திஸ் டைம்.. ப்ளாக் போஸ்ட் வந்தா நாலு க்ரூப்புலயும் அலர்ட் பண்ணுங்கப்பா...

    ReplyDelete
  45. தீபாவளின்னாலே எங்களுக்குப் பட்டாசான காமிக்ஸ்களே வேண்டும்.. அதுவும் கொத்துக்கொத்தாய் குண்டு புக்காய்.. ஆழ்கடல் அதிரடி போன்ற கதைகள்.. இராணுவ கதைகளையெல்லாமே நினைத்தாலே இனிக்கிறது சார்.. அதுமாதிரி மெர்சலூட்டும் கதைகளையே தீபாவளிக்கு திட்டமிட்டால் மகிழ்வோம்.. நன்றி..

    ReplyDelete
  46. வாவ்வ்வ்.. வொண்டர்பால்தான் ஒ.நொ.ஒ.தோவா..என்ற சாய்ஸ்னா இதான் சாமீய்ய்ய்...

    ReplyDelete
    Replies
    1. ///வொண்டர்பால்தான் ஒ.நொ.ஒ.தோவா..என்ற சாய்ஸ்னா இதான் சாமீய்ய்ய்...///

      ஆமாஞ்சாமீய்ய்ய்..!
      என்ர சாய்ஸூம் அதேதான் சாமீய்ய்ய்..!

      Delete
  47. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. இரண்டையும் இந்த வருடமே தீபாவளிக்கோ (அ) குறிப்பிட்ட இடைவெளியிலோ முன்பதிவு அடிப்படையில் வெளியிடலாம்...

      ஒன்றுதான் எனில் ஒ.நொ.ஒ.தோ எனது சாய்ஸ்...

      Delete
  48. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாதான் எனது சாய்ஸ் சார்! சுஸ்கி & விஸ்கி நான்கு கதை சேர்த்து (நான்கும் வித்தியாசமான கதைக்களங்களாக) தொகுப்பாகவே அறிவிப்பு கொடுக்கலாம்! முன்பதிவை பார்த்து போடலாமா வேண்டாமான்னு நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்! அப்புறம் நெஞ்சே எழு அட்டைப்படமும், சித்திரமும் அசத்தலாக உள்ளது! விதி போட்ட விதி கதையின் ஓவியராக இருப்பாரென நினைக்கிறேன் - அசத்தல்

    ReplyDelete
    Replies
    1. ///ஒற்றை நொடி ஒன்பது தோட்டாதான் எனது சாய்ஸ் சார்! சுஸ்கி & விஸ்கி நான்கு கதை சேர்த்து (நான்கும் வித்தியாசமான கதைக்களங்களாக) தொகுப்பாகவே அறிவிப்பு கொடுக்கலாம்! முன்பதிவை பார்த்து போடலாமா வேண்டாமான்னு நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்///


      + 999 999 999

      Delete
  49. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  50. சார் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா டபுள் ஓ கே..

    ReplyDelete
  51. முன்பதிவுக்கு என்று காத்து நிற்கும் இதழ்களை மூன்று மாதத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் ஒவ்வொன்றாக களமிறக்கி முடித்து விடலாம் சார்... ஒ.நொ.ஒ.தோ, கென்யா, ரூட் 66, இளம் டைகர், சுஸ்கி விஸ்கி என்று ஒரு மிகப்பெரிய கியூவே தேங்கிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியா. 3 மாதத்துக்கு ஒரு book அப்படி இல்லை என்றால் 4 மாதத்திற்கு ஒன்று

      Delete
  52. "ஆனால் இவர்களுக்கு மீள்வருகை தருவதாயிருப்பின், நான் ஏற்கனவே சொன்னது போல - ஒரு தொகுப்பாக்கி, "முன்பதிவுகளுக்கு மட்டுமே" - என்ற ரீதியில் தான் களமிறக்கியாக வேண்டும் !"

    ஆவலுடன் காத்திருக்கிறோம் Sir, நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. சுஸ்கி விஸ்கி ஆரம்ப கட்டத்தில் மூன்று இதழ்களுடன் நிறுத்தப்பட்டது. அதை இப்பொழுதும் தேடுவோர் பலர், இவை தொடர்ச்சியாக வெளியிடப்பட்டிருந்தால் லக்கி லூக் மற்றும் சிக்பில்லுக்கு இணையான அல்லது அதிகமான வெற்றியை பெற்றிருக்கும் என்பது எனது கருத்து.

    ReplyDelete
  53. எடிட்டர் சார்..

    ஒரு மிகப்பெரிய தொகையும், நிறைய உழைப்பும் ஒ.நொ.ஒ.தோ & கென்யா'வில் முடங்கிக்கிடப்பது சங்கடமான சமாச்சாரமே! இரண்டில் ஒன்றையோ அல்லது இரண்டையுமேவோ வாகானதொரு தருணத்தில் நீங்களே களமிறக்கிடுங்கள் சார்! எப்போது களமிறக்கினாலும் வாங்கிடத் தயாராக இருந்திடுவோம்! இரண்டு கதைகளுமே சிலபல மாதங்களாகவே எதிர்பார்ப்புகளை எகிறச் செய்திருக்கும் கதைகளே என்பதால் விற்பனை எண்ணிக்கையிலும் நல்லதொரு ஸ்கோர் செய்திடும்!

    நெஞ்சே எழு - அட்டைப்படம் - ப்பா அபாரம்!!

    கி.நா தள்ளிப்போனதில் கொஞ்சம் வருத்தமே!

    ReplyDelete
    Replies
    1. // எப்போது களமிறக்கினாலும் வாங்கிடத் தயாராக இருந்திடுவோம்! //

      +1

      Delete
  54. நெஞ்சே எழு ஆர்ட் ஒர்க் அமர்க்களமாக இருக்கிறது சார்.

    நால்வரும் சேர்ந்து வரும் சாகசம் என்பது மேலும் மகிழ்ச்சியை கூட்டுகின்றது.

    தீபாவளிக்கு எனது ஓட்டு ஒற்றை நொடி ஒன்பது தோட்டா. முதன் முதலில் நீங்கள் அட்டைப்படத்தை பதிவில் அறிமுகம் செய்ததில் இருந்து காத்திருக்கிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் தீபாவளி என்றாலே தலயின் தாண்டவம் தான் வழக்கம் அதனை மிஸ் செய்தால் தெய்வகுத்தம் அகிவிடும் சார்.அதற்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்

      Delete
    2. // நால்வரும் சேர்ந்து வரும் சாகசம் என்பது மேலும் மகிழ்ச்சியை கூட்டுகின்றது.//

      +1

      Delete
    3. நால்வரும் சேர்ந்து வந்த சாகசம் கடைசியாக எப்போது வந்தது என்று நினைவில் இல்லை. எனவே இது சூப்பர் ஹிட் தான்.

      Delete
  55. தீபாவளினா டெக்ஸ் டெக்ஸ்னா தீபாவளி அது உறுதி சார்... எனது சாய்ஸ் கென்யா...சார்...

    ReplyDelete
  56. சுஸ்கி விஸ்கி முன்பதிவு முடிவு நல்லதே. அதனை அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம். கண்டிப்பாக உங்களுக்கும் உரிமம் வாங்குவதில் இருந்து கதை தேர்வு என காலம் எடுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. 'செய்யணும்' என்ற முனைப்போடு இறங்கினால் ஒரே மாதத்தில் சாதித்து விடலாம் தான் ; ஆனால் பையில் டப்பும், இங்கே மார்க்கெட்டில் சகஜமும் இருத்தல் அவசியமாகிடும் ! தற்சமயம் இரண்டுமே மிஸ்ஸிங் எனபதே பிரச்சனை !

      Delete
  57. படத்துக்கு கென்யா, பட்டாசுக்கு ஒற்றை நொடி 9 தோட்டா எதுவாக இருந்தாலும் ஓகே...

    இரண்டுமே இந்த ஆண்டிலேயே வெளியிட்டால் நன்று...

    இரத்தப்படலம் முக்கால் கிணறு தாண்டியது மிக நல்ல செய்தி

    ReplyDelete
    Replies
    1. // இரண்டுமே இந்த ஆண்டிலேயே வெளியிட்டால் நன்று... //

      +1

      Delete
  58. ///இவர்களுக்கு மீள்வருகை தருவதாயிருப்பின், நான் ஏற்கனவே சொன்னது போல - ஒரு தொகுப்பாக்கி, "முன்பதிவுகளுக்கு மட்டுமே" - என்ற ரீதியில் தான் களமிறக்கியாக வேண்டும் ! ரெகுலர் கார்ட்டூன் தடத்தில் இந்தப் புள்ளீங்களை இறக்கி விட்டு விஷப் பரீட்சை செய்திடல் எனக்கு விவேகமாய்ப் படவில்லை ! ////

    வெல்கம் பேக் சுஸ்கி விஸ்கி..😍😍

    ReplyDelete
  59. ///தீபாவளி"க்குப் பட்டாசைப் போட்டு விடலாமா ?

    போடலாமெனில் இரண்டில் எது உங்கள் தேர்வாய் இருக்குமோ : ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாவா ? கென்யாவா ?///

    வெடியை தீபாவளிக்கே போட்டுடலாம்.!

    எனது தேர்வு ஒற்றைநொடி ஒன்பது தோட்டா.!
    தீபாவளிக்கு கறிகஞ்சி டெக்ஸ்.. சரி.!
    தீபாவளிக்கு வெடி ஒ.நொ.ஒ.தோ.. சரி.!
    தீபாவளி ஸ்வீட் எங்கே..!?
    கென்யாவையும் போட்டுத் தாக்குங்க சார்.!

    ReplyDelete
  60. ###"தீபாவளி"க்குப் பட்டாசைப் போட்டு விடலாமா ? ###

    பேஷா போடலாம் சார்..


    ##எது உங்கள் தேர்வாய் இருக்குமோ : ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாவா ? கென்யாவா ?##

    எனது ஓட்டு
    ஒற்றை நொடி ..
    ஒன்பது தோட்டா.

    ReplyDelete
  61. ஒற்றைநொடி ஒன்பது தோட்டா +11111111. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  62. ஏப்ரலில் ஏப்ரலுக்கு முயற்சி ப்போம். ஏப்ரலில் மே இல்லை.இடையில் சனி ஞாயிறு. எதாவது அதிசயம் நடந்துஏப்ரலில் மே ஓ. கே ஆனால்செயலரின் ஆத்தாவுக்கு கூழ் அக்கவுண்டில் +1. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. பேசாம இனிமே வாராவாரம் ஒண்ணாந்தேதி வரணும்னு சட்டம் கொண்டுவந்துருவோம் ராஜசேகரன் சார்..!

      Delete
  63. சுஸ்கி விஸ்கி தொகுப்பு வெளியீடு உறுதியாகிவிட்டால்..

    முதல் தொகுப்பில் பேரிக்காய் போராட்டமோ அல்லது ராஜா ராணி ஜாக்கியோ இடம்பெற்றால் கூடுதல் சிறப்பாக அமையக்கூடும்..!

    இருந்தால் ஓ.கே.. இல்லைலேன்னாலும் நோ ப்ராப்ளம்.!

    ReplyDelete
    Replies
    1. இது அத்தனை சுலபமுமல்ல ; நாளையே நடைமுறைக்கு வரக்கூடிய சமாச்சாரமும் அல்ல சார் ! "முன்பதிவுகள் எங்களுக்கு தேறுச்சுன்னா போடுவோம் ;
      இல்லாங்காட்டி வேணாம் !" என்ற கண்டிஷனில் உள்ளுர் சிந்துபாத்துக்குக் கூட உரிமைகள் வாங்கிட சாத்தியமாகாதெனும் போது அசல்தேசத்தில் கேட்கவும் வேணுமா - என்ன ? So மஹாதேவியோ, முட்டியைப் பெயர்க்கும் தேவியோ - இரண்டுக்குமே தயார் ஆகிக்கொண்டு - 4 கதைகளை வாங்கவும் தம் கட்டிய பிற்பாடே பேரிக்காயா ? வெள்ளரிக்காயா என்ற யோசனைகளுக்குள் இறங்கியாக வேண்டி வரும் சார் !

      கரையிலிருந்தே நீச்சல் பழக முடிஞ்சா தான் இந்நேரத்துக்கு நான் டின்டினுக்கு சித்தப்பா வரைக்கும் ரூட் விட்டிருப்பேனே ?!

      Delete
    2. புரிந்துகொள்ள முடிகிறது சார்..!
      அதனால்நான் இருந்தால் சந்தோசம் இல்லையேல் கிடைப்பதை ஏற்றுக் கொண்டாடுவோம் என்று கூறியிருந்தேன்.!

      லக்கி 'சிக்பில் ரேஞ்சுக்கு அணுகாமல்.. ஒரு சில்ட்ரன் அட்வென்சர் வித் எனஃப் ஹ்யூமர்னு வாசகர்கள் அணுகினால் சுஸ்கி விஸ்கி தமிழில் பெரும் வெற்றியடையும்..!

      ஒண்ணுமேயில்லையென்றால் அந்தத் தொடரில் எப்படி முன்னூறுக்கும மேற்பட்ட ஆல்பங்கள் வெளியாகியிருக்கும் என்று நம்மாட்கள் யோசித்தால் போதும்.!

      அக்கரையில் இருக்கும் ஆப்பிள் மேல் இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கையிலேயே இருக்கும் கொய்யா மேல் இருக்காதாம்..!

      அதுபோல நாம் தமிழில் ரசிக்கும்.. ரசித்துக்கொண்டிருக்கும் கதைகளின் அருமையை புரிந்துகொள்ளாமல் ஓரிரு கதைகள் வெளியானதும் கழுவி ஊற்றி சோலியை முடித்து உக்காரவைத்துவிடுகிறோம்.!
      சுஸ்கி விஸ்கி சிறாருக்கான அற்புதமான தொடர்.. பெரியவர்களும் மனமிருந்தால் ரசிக்கலாம்..!

      Delete
    3. எனக்கு இங்கன கெடக்கிற நெல்லிக்கா போதும் ப்பா...

      Delete
    4. ///ஒண்ணுமேயில்லையென்றால் அந்தத் தொடரில் எப்படி முன்னூறுக்கும மேற்பட்ட ஆல்பங்கள் வெளியாகியிருக்கும் என்று நம்மாட்கள் யோசித்தால் போதும்.!///

      அந்த ஊர்காரவுக எல்லாரும் ரசணையோடிருக்காங்கன்னு அர்த்தம்! நம்மூர்ல காமிக்ஸ் படிக்கிற ஆளுங்களே கொறச்சல்.. அவங்கள்லயும் பாதிப்பேர் படக்கதையவே நாவல் மாதிரி படிச்சுட்டு மூடி வச்சா அப்புறம் இப்படித்தான் இருக்கும்!

      Delete
    5. அருமையான பதில் நண்பரே

      Delete
  64. // So அடுத்த மாதம் வரை வெயிட்டிங் சேலம் குமார் சார் ! // வெயிட் pannaren சார். No பிராப்ளம்.

    ReplyDelete
  65. சார் அருமையான பதிவு மீண்டும்...மாயாவி என துவங்கயில் அடுத்த மாதத்துக்கு தள்ளி வச்சிருவீங்களோன்னு பயந்துட்டே நகர ...நல்லவேள அப்படி ஏதுமாவல....அடுத்த மாத ஆவலுக்கு காரணமே மாயாவிதான...
    சார் தொகுப்பா முன் பதிவா சுஸ்கி மட்டுமல்ல வாய்ப்பிருந்தா ஊதாப் பயலுவவயும் முயற்சிக்கலாமே....வாண்டு மலர்னாலுமே வாண்டுவளுக்கு மட்டுமல்லவே இவை

    அப்புறம் கென்யாவா....ஒற்றை நொடியான்னா ரெண்டுமே வரட்டுமே...ஒன்னுதான்னியல்னா சும்மா பண்டைய கால பட்சி பறக்கும் கென்யாவுக்கே போவோம் வீட்டிலிருந்த படியே

    ReplyDelete
  66. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் மன்னிக்க வேண்டுகின்றேன்.கொரோனாவால் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையால் தடுமாறிக் கொண்டிருக்கும் என் போன்றோர் சில நல்ல இதழ்களை முன்பதிவு செய்து வாங்க இயலாது.நார்மலாகவே வந்தால் மிக நன்றாக இருக்கும்.நன்றி நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. சரவணன் சார் இதற்கு எதற்கு மன்னிப்பு எல்லாம், உங்களுக்கும் சேர்த்து முன்பதிவு செய்து விடலாம். அது மட்டும் இன்றி புத்தகம் முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இன்றி மற்ற நண்பர்களுக்கும் கடையில் கிடைக்கும் அல்லவா??

      Delete
    2. நடைமுறையின் கஷ்டங்களே எனது தயக்கங்களுக்குக் காரணம் சரவணன் சார் ! சிரமங்கள் நன்றாகவே புரிகின்றன !

      Delete
    3. ///சில நல்ல இதழ்களை முன்பதிவு செய்து வாங்க இயலாது.நார்மலாகவே வந்தால் மிக நன்றாக இருக்கும்.///

      ---+1

      நண்பரது கருத்தே எனதும்...

      ஏற்கனவே நிறைய நண்பர்கள் சந்தா கட்ட இயலாமல் விழி பிதிங்கி கொண்டு இருக்கிறார்கள்..

      வெளியே சொல்ல கூச்சம் தடுக்கும் பல நண்பர்களை பார்க்கிறோம்.

      இயன்ற இதழ்களை கடையில் வாங்கி கொள்ளும் முடிவில் பலர் உள்ளனர்.

      மேற்கொண்டும் ஸ்பெசல் இதழ்கள்+ முன்பதிவுகள் என்பது இந்தாண்டு சரிப்படாது என்றே நானும் கருதுகிறேன்.

      இடைப்பட்ட நாட்களில் கொரோனா குறைந்து ஈரோடு விழா நடக்குமானால் இயன்றளவு ஸ்பெசல் இதழ்களை வெளியிடலாம். ஒ.நொ.ஒ.தோ& கென்யா இரண்டுமே கூட போடலாம்.

      எதுவும் சரிப்படலனா அடுத்த ஆண்டு ரெகுலர் இதழ்களில் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா இடம்பெறட்டும்...

      டியூராங்கோ இல்லாத 2022சந்தாவில் இது ஹைலைட்டாக அமையும்...!!!

      கென்யா ஏதாவது ஆன்லைன் விழாவில் அல்லது இயன்ற சந்தர்பத்திலோ வெளியிடலாம்...

      நடப்பாண்டுக்கு அறிவிக்கப்பட்ட சந்தாவோடு இரத்தப்படலம் வரட்டும்.!

      9 மாதங்களுக்கு குறைவான சந்தா என ப்ளானிங் பண்ணி இருந்தது சூழலை கருதிதானே!

      Delete
    4. நன்றிகள் சேலம் குமார் சார்.உங்கள் அன்பிற்குத் தலைவணங்குகின்றேன் ப்ரோ
      .

      Delete
    5. நன்றி டெக்ஸ் விஜய்.

      Delete
  67. யாரும் " ப " வைட்டமினப் பத்தி பேசவோ நெனக்கவோ இல்ல...

    இருக்குறவங்க பத்தி நா பேசப் போறதில்ல...

    நம்மிடையே இன்னும் எத்தனை நண்பர்கள் நெஞ்சில் காமிக்ஸ் என்ற ஆசை மட்டுமே உந்தித் தள்ள கைக் காசில்லாமல் குடும்பம் நடத்துவதே பெரும் கவலைகளோடு உள்ளனரோ...

    ஆகவே எடிட்டர் சார்...

    சில பல விஷயங்கள்ல நீங்க விக்ரம் ஜூனியர் மாதிரி முடிவெடுக்கணும்...

    ReplyDelete
    Replies
    1. ////
      நம்மிடையே இன்னும் எத்தனை நண்பர்கள் நெஞ்சில் காமிக்ஸ் என்ற ஆசை மட்டுமே உந்தித் தள்ள கைக் காசில்லாமல் குடும்பம் நடத்துவதே பெரும் கவலைகளோடு உள்ளனரோ...///

      என் கவலையும் இதான் ஐயனே!!!

      சுவீட் கடையை பார்த்து எங்கும் சிறுவர்கள் போல காமிக்ஸை பார்த்து வளர்ந்த குழந்தைகள் ஏங்கும் சூழல் வந்திடப்படாது.

      Delete
  68. //அக்கரையில் இருக்கும் ஆப்பிள் மேல் இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் இக்கரையில் இருக்கும் கொய்யாமேல்இருக்காதாம்//+1111111. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  69. 'நெஞ்சே எழு' அட்டைப்படத்தில் கொலைவெறியோடு பாய்ந்து வரும் செவ்விந்தியர்களை நம் அதிகாரி சுட்டுத்தள்ளும் காட்சி - அடர் சிவப்பு வண்ணத்தில் மிரட்டலாய் அமைந்திருக்கிறது!😲😲 அ..ஆனால்... துப்பாக்கியை முழக்கியிருக்கும் திசையை வைத்துப் பார்த்தால் நம் அதிகாரி அந்தச் செவ்விந்தியர்களின் நெஞ்சைக் குறிவைத்த மாதிரி தெரியலையே...?!!🤔🤔🤔

    சரி, தல எது செஞ்சாலும் அதிலே ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யும்! கதையைப் படிச்சு காரணத்தைத் தெரிஞ்சிக்கிடுவோம்..என்ன இப்ப!😌😌

    ReplyDelete
    Replies
    1. ஒரு பெரிய குண்டாவா வாங்கித் தந்து ரம்மி கிட்டே சொல்லி பாயசம் போட சொல்லணும் போலிருக்கே ! அதிகாரிக்கு இல்லே ...

      Delete
  70. கரையிலிருந்தே நீச்சல் பழக முடிஞ்சா தான் இந்நேரத்துக்கு நான் டின்டினுக்கு சித்தப்பா வரைக்கும் ரூட் விட்டிருப்பேனே ?!//// ஆமாம் சார். பேப்பர் விலை, ராயல்ட்டி தொகை, விற்பனை நிலவரம் இவற்றையே புத்தகம் வெளியிடுவதைத் தீர்மானிப்பவையாக நினைக்கையில் படைப்பாளிகளின் இசைவு என்ற ஒன்றை மறந்து விடுகிறோம். (ஆனால் இப்புடி முட்டாய காட்டி புள்ளங்கள தூண்டி விட்டுட்டு.....)

    ReplyDelete
  71. டியர் சார்,
    "சுஸ்கி& விஸ்கி "- ஒரு புதிய சிந்தைக்கு வழிவகுத்திருக்கிறது. என்றே கருதுகிறேன். சார்.
    அதாவது இரண்டு இரண்டு ஆல்பங்களாக
    ெவெளியிடுவது. -
    சிங்கிள் ஆல்பமாக செண்டர் Pin-அடித்து இதழ் வருவது அவ்வளவு ரசிக்கவில்லைேயே. - நிறைய கதைத்ெதாடர்கள். வருடத்திற்கு ஒரு ஆல்பம் வருவது ஜுரணிக்க முடியவில்லைேயே..
    (உ-ம்) சிக்பில், மேக் & ஜாக்,ேசாடா,
    எனவே, முதலில் இவைகளை அடுத்த ஆண்டு சரி செய்ய முயற்சி எடுக்கலாமே..
    அடுத்து, ஹார்டு பவுண்ட் அட்டை..
    அட்டையில் நிறைய நகாசு ேவைலைகள்
    செய்து ரசிக்க ைவைக்கிறீர்கள்தான். ஆனால் இடத்தை அடைக்கிறது..
    என் அபிமான பல கதைகள் ஹார்டு பவுண்ட் அட்டையில் கிடைத்துவிட்டன.
    எனவே இனிமேல் சாதா அட்டையில் வருவது வருத்தப்பட ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன்..


    ReplyDelete
  72. இரத்தபடலம்-X111-முன்பதிவு விளம்பரத்தை பார்த்து அப்படியே ஷா...க்க் ஆயிட்ேடன். 19 தனித்தனி ஆல்பங்களாகவா...என்று..

    வில்லியம் வான்ஸ்-அட்ைப்பட டிசைனே தனி தனி அழகுதான்..

    ReplyDelete
  73. கென்யா களம் இறங்குங்கள் ஜி, ஆக்ஷன் கதைகள்தான் அடிக்கடி படிக்கிறோமே, சயின்டிஃபிக் கதைகளாக இருந்தா வித்தியாசமாக இருக்கும்.

    ReplyDelete
  74. தீபாவளி சிறப்பு வெளியீடு கென்யா வேண்டும்.
    ரொம்ப நாளா காத்திருக்கோம்...

    ReplyDelete
  75. சுஸ்கி விஸ்கியும் சீக்கிரமே வெளியிட ஏற்பாடு செய்யுங்க ஆசிரியரே!!!

    ReplyDelete
  76. Kenya + ஒற்றை நொடி 9 தோட்டா இரண்டும் வேண்டும்

    ReplyDelete
  77. This comment has been removed by the author.

    ReplyDelete
  78. ///ஒரு blockbuster தமிழ் திரைப்படத்துக்கான சகல லட்சணங்களுடன் மனுஷன் இத்தாலியில் கதையெழுதுவது இது முதன்முறையே அல்ல ! தெறிக்கும் ஆக்ஷன் ; அழகாய் குடும்ப செண்டிமெண்ட் ; நண்பர்களின் அன்னியோன்னியம் ; மிரட்டலான வில்லன்கள் ; அதகள கிளைமாக்ஸ் என்று பின்னியெடுத்துள்ளார்///---

    டெக்ஸ் எப்போதும் இப்படி பிளாக்பஸ்டர் தான்..

    பாயாச பார்டிகளுக்கு முக்கிய பாயிண்ட் கண்ணில் படுவதில்லை... உடனே அண்டாவை ஏத்திடுதாங்க.

    ReplyDelete
  79. ///இம்முறையோ டக்சனிலும், எல்லைக் கோட்டைத் தாண்டி மெக்சிகோவினுள்ளும் நாமே பயணம் போவது போலொரு உணர்வு//--

    1990களில் ஆரம்பத்தில் டெக்ஸ் கூட ஏறினதுதான் இன்னும் பயணம் முடியலை...😎🤠

    ///மீசைக்கார மெக்சிக பேமானிகளை நம்மவர்கள் வறுத்தெடுக்கும் போது - 'அவன் மீசையைப் பிடுங்குங்க தல !' என்று ஆர்ப்பரிக்கும் வேகம் அலையடிக்கிறது///

    --- இது எல்லா கதையிலும் நடப்பது தானே!😉

    ReplyDelete
  80. அட்டை படத்துக்கு அடுத்துள்ள பக்கத்தில் கொரோனா "டயட்டில்" 3 வேளையும் வறுத்தகறி தின்றே உப்பிய தொந்திகளோடு ரேஞ்சர் பார்டிகள் இருப்பதாகப் படுகிறதே!!!

    ReplyDelete
    Replies
    1. ஆம் அப்படித்தான் இருக்கிற மாதிரி தெரிகிறது ஜி

      Delete
  81. /// "சுஸ்கி & விஸ்கி' இதழ்களுக்கு ஓரளவுக்கு encouraging results கண்ணில்பட்டது நிச்சயமாய் எனக்கு ஆச்சர்யமே ! ஆனால் இவர்களுக்கு மீள்வருகை தருவதாயிருப்பின், நான் ஏற்கனவே சொன்னது போல - ஒரு தொகுப்பாக்கி, "முன்பதிவுகளுக்கு மட்டுமே" - என்ற ரீதியில் தான் களமிறக்கியாக வேண்டும் !///

    அவிக வந்தா மட்டும் போதும்; ஆமா வந்தா மட்டும் போதும்.

    ReplyDelete
  82. ///பொறுத்தது பொறுத்தோம் ; அடுத்த வருஷம் வரைக்கும் டிக்கியை மூடல் தேவலாம் !" என்பீர்களா ?

    அல்லது

    "தீபாவளி"க்குப் பட்டாசைப் போட்டு விடலாமா ? ///

    ஆப்சன் 1 என்னுடைய தேர்வு...!!!

    இந்தாண்டு அறிவிக்கப்பட்ட இதழ்களே போதுமானது!

    ReplyDelete
  83. என் பெயர் டைகரில் OK காரல்லை நினைவுபடுத்தும் டெக்ஸ் வில்லரின் ப்ரிவியூ பக்கங்கள் அசத்தல்.

    க்ளாடியோ வில்லாவின் நேர்த்தியான ஓவியங்கள் எப்போதும் ஒருபடி மேலேதான்.கூடவே கதை சொல்லியாக மௌரோ போசெல்லியும் இணையும் போது..அற்புதமான அனுபவம் காத்துள்ளது என்று சொல்லலாம்.

    ReplyDelete
  84. சார் 

    ஒரு புறம் invest செய்த பெருந்தொகை உங்களுக்கு முடக்கம். இன்னொரு புறம் இந்த pandemic காலத்தில் அதிக பணம் காமிக்ஸ் பொருட்டு செலவு செய்ய முடியாத நண்பர்கள் - ஒரு யோசனை தோன்றுகிறது. நடைமுறை சாத்தியம் எப்படி என்பதை நீங்களே அறிவீர்கள்.
    Kenya மற்றும் ஒற்றை நொடி 9 தோட்டா இரு புத்தகங்களையும் - பல மாத பல தவணை முன்பதிவுகளில் இறக்கி விடுங்கள் சார். தற்போது XIIIக்கு செய்வது போல ஆனால் அதே சமயம் 6 டு 8 தவணைகள் வரை என்று முடிந்தால். அனைவரும் ஒரு வருடத்துக்குள் பயனடைய முடியலாம் சார்.

    Or the other option is to include them in 2022 main subscription - as Lion and Muthu Annuals.

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசனை! இயன்றவர்கள் ஒரே தவணையிலும், மற்றவர்கள் 5 அல்லது 6 மாதத் தவணைகளிலும் பணம் செலுத்தச் சொல்லலாம்!

      Delete
    2. 6 - 8 தவணைகள் என்பது பொதுவாகவே சாத்தியமற்றது.


      2 - 3 தவணைகள் என்பதே சரிவரலாம்.

      Delete
    3. ///2 - 3 தவணைகள் என்பதே சரிவரலாம்.///

      ஆம் அண்ணா மிகச்சரி!

      கென்யா & ஒ.நோ.ஒ. தோ...

      ஆசிரியர் சார்@

      இரண்டும் தீபாவளி பட்டாசாக வர ஜூன்ல( இரத்தப்படல புக்கிங் முடிந்த பிறகு ) முன்பதிவுகள் ஆரம்பிக்கலாம்...

      தோராயமாக ஒரு 1200 எனில் 3 தவணைகளில் ஜூன்-ஜீலை-ஆகஸ்ட் என விண்டோ தரலாம்... செப்டம்பர் & அக்டோபரில் தயாரிப்பு பணிகள்

      நவம்பரில் கொளுத்திடலாம் வெடிகளை!

      இதில் உள்ள சாதக பாதகங்களை நாங்கள் அதிகப்பட்சமாக 5% தான் கணிக்கலாம்.

      ///ஐஸ்பெர்க் கடல் மட்டத்துக்கு மேலே கொஞ்சம் தான் தெரியும்; மீதி முழுதும் மறைந்து இருக்கும்///--

      போலவே தங்கள் பணிகளின் பின்புலம் தாங்கள் மட்டுமே அறிந்தது.

      இதில் ஏதாவது தவறாக இருப்பின் அருள் கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்!🙏

      Delete
    4. அதேதான் நண்பரே STVR...
      DON'T FREEZE!
      LET US MOVE SLOWLY...
      AND REACH THE GOAL DELAYED THAN NEVER!

      Delete
  85. நெஞ்சே எழு கதைக் களத்தில் ஒரு பேனலில் நால்வர் அணி நிற்பதை பார்க்கும் போது ”நில் கவனி சுடு” கதையில் வரும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது...

    ReplyDelete
  86. சார் கென்யா மற்றும் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா இரண்டு இதழ்களும் இணைந்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா,அப்படி வந்தால் உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன ?!
    இந்த கேள்வி அபத்தமாய் இருப்பின் மன்னிச்சூ சார்...
    சில நண்பர்களுக்கு வாங்க சிரமமாய் இருக்கலாம்,ஆனாலும் திட்டங்களைத் தள்ளிப் போடுவதால் பெரிய பயன் விளையுமா என்பதற்கான உத்திரவாதங்களும் இல்லை ...!!!
    எது எப்படியோ சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நீங்கள் ஒரு நல்ல முடிவாய் எடுங்கள்...

    ReplyDelete
  87. இன்றுதான்"சிக் பில்" - மன்னிக்க"டாக்டில்-கிட் ஆர்மன் படிக்க முடிந்தது. சரியான
    காமெடி ேதாரணங்கள். -வில்லத்தனம் சரியான கலவையிலும்-. டாக்புக் சீரியஸாகேசவதும். கிட் ஆட்டினின் கலகலப்பும்
    கதை நீளமும். சரியான வாசிப்பனுபவத்ைதை தந்தது.
    எனவே, இனிமேல் அடுத்த ஆண்டிலிருந்து இரண்டு ஆல்பங்களை இணைந்து வெளியிடேட்டுக்கொள்கிறேன்..

    ReplyDelete
  88. பொறுத்தது பொறுத்தோம் ; அடுத்த வருஷம் வரைக்கும் டிக்கியை மூடல் தேவலாம்

    ReplyDelete
  89. வணக்கம் சார்...

    புத்தகம் வெளியிடுவதின் மூலம் உடனடி விற்பனை + முன்பதிவு விற்பனை மூலம் அனைத்தும் விற்று விடப் போவதில்லையே... இருப்பில் இருக்கும் புத்தகங்களை உடனடியாக வாங்க இயலாத நண்பர்கள் தங்களுக்கு இயன்ற நேரத்தில் வாங்கிக் கொள்ளலாமே..! வெளியிடாமல் முதலீட்டை freeze செய்வதைக் காட்டிலும் மெதுவாக நகருவது இலக்கை சென்றடைய வழி என நினைக்கிறேன்.

    2/3 தவணை முன்பதிவு என்பதும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும். மே மாதம் இரத்தப்படலம் முன்பதிவு நிறைவு பெற்ற பின்னர் ஜூன் மாதம் முதல் இதற்கான முன்பதிவை ஆரம்பித்தால் கூடுதல் அவகாசம் கிடைக்கும்.

    எதுவாயினும் தங்கள் முடிவினை ஏற்றுக் கொள்கிறேன்!!
    நன்றிகள் சார்.

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம் சார் ; இம்மாத இதழ்களின் பணிகள் நிறைவுற்ற பிற்பாடு கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு சிந்திப்பேன் !

      Delete
    2. // வெளியிடாமல் முதலீட்டை freeze செய்வதைக் காட்டிலும் மெதுவாக நகருவது இலக்கை சென்றடைய வழி என நினைக்கிறேன். //
      அதே,அதே நண்பரே...

      Delete
  90. வரிக்கு வரி வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  91. எனக்கு ஒரு சந்தேகம் Wonderball தான் ஒன்றை நொடி ஒன்பது தொட்டவா ?

    ReplyDelete
  92. சார் பீரோவிலும் பரணிலும்முன்உரிமை பெற்றபலபுத்தகங்கள்உறங்குவதாக முன்பு குறிப்பிட்டுள்ளீர்கள். அடுத்த ஆண்டு அட்டவணையின் போது அவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு தனித்தடமாகவேனும் அவற்றை வழியனுப்பிவையுங்கள் சார் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ராஜசேகர் ஜீ..
      'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்யமே..' - எடிட்டர் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது!

      Delete
    2. //பீரோவிலும் பரணிலும்முன்உரிமை பெற்றபலபுத்தகங்கள்உறங்குவதாக முன்பு குறிப்பிட்டுள்ளீர்கள்.//

      காரணங்களின்றி அவை துயில் பயிலாதல்லவா சார் ?

      And துயில் பயில்வதே அவை இன்றைக்கு மீள்வருகை காணவொரு முகாந்திரமாகிடவும் முடியாதே !

      Delete
  93. நெஞ்சே எழு அட்டைப்படம் மிக அருமையாக உள்ளது ஆசானே.இதழை கையில் ஏந்த ஆவலுடன் உள்ளேன்

    ReplyDelete
  94. 2020 சந்தாவில் நான் இல்லை.எனக்கு கொரில்லா சாம்ராஜ்யம் புத்தகத்தை மே இதழ்களுடன் அனுப்ப முடியுமா சார்? நான் எவ்வளவுப் பணம் அனுப்பவேண்டும்?

    ReplyDelete
  95. ட்யூராங்கோ தொடர் நிறைவு பெறுவது வருத்தம் தந்தாலும் நல்ல தொடரை முழுமையாகப் படித்தது மகிழ்ச்சி தருகிறது.

    ReplyDelete
  96. ஏப்ரலில் மே சாத்தியம் என்ற செய்தி தேனாய்த் தித்திக்கிறது.மூன்று ஜாம்பவான்கள் கலக்கும் மே இதழ்கள் விற்பனையில் பட்டயக் கிளப்பப் போவது உறுதி.

    ReplyDelete
  97. /சதுயில் பயில்வதே இன்றைக்குமீழ்வருகை காண முகாந்திரமாகிடாது. துயில்பயிலும் காரணம் புரிகிறதுங்க சார். இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே எடிட்டர்சொன்னது அதில் அர்த்தம் உள்ளது// . கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  98. தோர்கல் - அழகிய அகதி..
    இப்போதுதான் படித்து முடித்தேன்.
    ஐந்து பாகங்களும் அருமை. அதிலும் ஐந்தாவது கதை ' தலை காப்பான் தனயன்' வித்தியாசமான காலப்பயணம் பற்றிய கதை.
    இதற்கு முன்பு வந்த காலப்பயணக்கதையில் தோர்கல் காலப்பயணம் செய்வார். இதில் அவரது மகன் ஜோலன்.அதிலும் பெரிய ஜோலன், சிறிய ஜோலன் என இருவரும் வருவது, வித்தியாசமான கற்பனை. 30000 வருஷ எதிர்காலத்தில் இருந்து கண்காணிப்பாளர் ஜாக்ஸ் வந்து கால நிகழ்வுகளில் ஏற்பட்டிருக்கும் சிறு தவறை சரி செய்ய முற்பட்டு, இருவரும் ஒகோடையின் கிரீடத்தை மீட்பது,டைம் ட்ராவலர் மூலம் கடந்த காலத்திற்கு சென்று சதியால் கொல்லப்படும் தோர்கலைக் காப்பாற்றுவது, ஆரிசியா, ஒநாய்க்குட்டி, கிரிஸ் என அனைவரின் மரணத்தையும் மாற்றுவது ஆரிசியாவையும், தங்கையையும் மீட்பது, மீண்டும் டாரெக்குடன் படகில் பயணம் செய்த காலக் கட்டத்திற்கு சென்று படகு விபத்தை நிகழ்வதை மாற்றுவது, டாரெக், அவன் தங்கை லேஹ்லா இருவரின் மரணத்தையும் மாற்றியமைப்பது, இறுதியில் தீவை அடைவது, பெரிய ஜோலன் 30000 வருடங்கள் தாண்டிய காலத்திற்கு சென்றுவிடுவது என எல்லாமே கற்பனையின் உச்சம்.
    அறிவியல் கற்பனையின் உச்சக்கட்டத்திற்கே நம்மை வான்ஹாம்மே எனும் காமிக்ஸ் அசுரர் கைப்பிடித்து கூட்டிச்செல்கிறார். அதிலும் காலப்பயணத்தைப் பற்றி,ஜாக்ஸ் ஜோலனுக்கு விளக்கும் இடம் கிர்ர்ரின் உச்சம் தொட்ட இடம்.
    ஒரு அருமையான டைம் டிராவல் ஃபேன்டஸி கதை.
    பக்கத்துக்குப் பக்கம் அற்புதமான சித்திரங்கள். ரசித்துப் பார்க்க,படிக்கத் தவறவிடக்கூடாத கதை. இது போன்ற சிறந்த கதைகளை தேடிப் பிடித்து வந்து நமக்குத் தந்து கொண்டு இருக்கும் ஆசிரியருக்கு நமது பாராட்டுக்கள்.அவரது தணியாத காமிக்ஸ் மீதான காதலுக்கு நமது வாழ்த்துக்கள். இந்த அற்புதங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. பத்து சார்.. உங்க விமர்சனத்தைப் படிக்கும்போதே தெரிகிறது - கதையை நீங்கள் எவ்வளவு ரசித்து உள்வாங்கிப் படித்திருக்கிறீர்கள் என்பது! அருமையான விமர்சனம்!! பாராட்டுகள் சார்!!
      இக்கதையை படிக்கும் யாருக்கும் கதாசிரியர் & ஓவியரின் படைப்பாற்றலை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது!!

      Delete
    2. அருமையான விமர்சனம் சார்!
      நன்றி!!

      Delete