Sunday, December 27, 2020

ஆண்டறிக்கை - பாகம் 2 !

 நண்பர்களே,

வணக்கம். கிருஸ்துமஸும் கடந்து போயாச்சு…! புத்தாண்டு எட்டித் தொடும் அண்மையில் மினுமினுக்கிறது! And இதோ the year in review பதிவு தனது இறுதிப் பாகத்தை நோக்கிப் பயணமாகிறது :

ஜுலையில் ஆண்டுமலர் & Co. அழகாய் நிறைவுற – மாமூலாய் நாம் எதிர்பார்ப்பதோ ஈரோட்டுப் புத்தக விழாவினையும், நமது வாசக சந்திப்பு மேளாவையுமே! ஒவ்வொரு ஆண்டின் ஜனவரியை சென்னை நமக்கு நினைவில் இருத்திட உதவிடுமெனில், ஆகஸ்டையும், அந்த அதகள சந்தோஷங்களையும் குத்தகைக்கு எடுத்து நிற்பது ஈரோடே! ஆனால் இம்முறையோ அதற்குத் துளியும் வாய்ப்பின்றிப் போக, ‘பழைய நெனப்புடா பேராண்டி!‘ என்றபடிக்கு முந்தைய ஈரோட்டு விழாக்களின் போட்டோக்களைப் போட்டு ஒரு பதிவுப் பெருமூச்சிட மட்டுமே சாத்தியப்பட்டது இம்முறை! விழாவோ - இல்லியோ; நமது மாதாந்திர காமிக்ஸ் கேரவனின் சக்கரங்கள் சுழன்றாக வேண்டுமல்லவா? 

So ஆகஸ்ட் மாதத்தனில் பயணம் தொடர்ந்த போது அதிரடி காட்டிய முதல் ஆசாமி நமது மறதிக்கார XIII தான்! இரத்தப்படல இரண்டாம் சுற்று - மேப்ளவர்; ஜுன்ப்ளவர் என்று வரலாற்றுப் பின்னல்களோடு ‘சல சல‘வெனத் துவங்கியிருப்பதாய் ஆல்பங்கள் # 20 முதல் 25 வரை எனக்குப்பட்டது! (May be உங்களில் பலருக்கும் / சிலருக்கும்?) உள்ளதைச் சொல்வதானால் ரொம்பவே சோர்வாகத் தானிருந்தது இந்த மெது ஓட்டத்தின் காரணமாய் ! So 2132 மீட்டர் இதழை வேலைக்கு எடுத்த போது கணிசமான தயக்கம் உள்ளிருந்தது! ஆனால் பதுங்கியதெல்லாம் சூறாவளியாய்ப் பாய்ந்திடத் தான் என்பதைக் கதாசிரியர் அதிரடியாய்க் காட்டிய போது ‘ஜில்‘லென்றிருந்தது! நிறையவே மெனக்கெட அவசியப்பட்ட இதழே இது; ஆனாலும் செமத்தியான நிறைவைத் தந்த இதழ்! சித்திரங்களும், கலரிங்கும் இந்த ஜெட் வேக அத்தியாயத்தை வேறொரு லெவலுக்கு இட்டுச் செல்ல – எனது ரேட்டிங் 9.5/10.

மாதத்தின் அடுத்த surprise இத்தாலிய முகமூடியாரின் உபயத்தில்! பெரிய சைஸ் ஓ.கே… அழகான அட்டைப்படம் டபுள் ஓ.கே… ஆனால் கதையின் அழுத்தம் மிதமே என்ற முத்திரையோடு ஆண்டில் இரண்டாம் முறையாக டயபாலிக் களமிறங்கிய போது எனது எதிர்பார்ப்பு மீட்டர்கள் ரொம்பவே தணிந்தே இருந்தன! ஆனால் pleasant surprise – கதையின் சித்திர பாணி மாத்திரமின்றி, ஓட்டமும் சுவாரஸ்யமாயிருக்க – ஒரு சன்னமான ஹிட்டடித்தது “துரோகம் ஒரு தொடர்கதை” எனது மார்க்: 8/10.

ஆகஸ்டின் ஒரு அலசல் களமாக உருப்பெற்ற கிராபிக் நாவலான “பனியில் ஒரு குருதிப்புனல்” நடப்பாண்டின் ஒரு memorable moment – என்னளவிற்காவது! ரொம்பவே புதிதானதொரு கதைக்களம்; சித்திர பாணி; கலரிங் பாணி என்று லயிக்கச் செய்தது ஒரு பக்கமெனில், ஏகப்பட்ட open ends கொண்ட அந்த க்ளைமேக்ஸ் ரொம்பவே கவனத்தைக் கோரியது. Of course – என்ன இழவு கதையோ? புண்ணாக்கோ? என்று நிறைய நண்பர்களின் சலிப்புகளை இது ஈட்டக்கூடுமென்பது புரிந்தது தான்; ஆனால் எனது குரங்கு பல்டிகளுக்கென பிரத்யேகமாய் வாய்த்திருக்கும் அந்த கிராபிக் நாவல் சந்தாவினில் இதை நுழைக்கும் அவாவை அடக்கிட முடியவில்லை! எக்கச்சக்கமாய் கூகுள் தேடல்களோடே இந்த ஆல்பத்துக்குப் பேனா பிடித்ததும் சரி; தொடர்ந்த நாட்களில் நாமெல்லாம் அலசியதும் சரி, 2020ன் ஞாபகத்தில் நின்ற நொடிகள்! 8/10 என் டயரியில்!

ஆகஸ்டின் இதழ் # 4 ஆக அமைந்தது நவீனயுக ஜேம்ஸ் பாண்ட் 007-ன் “நில்…கவனி…கொல்”!  இன்றைய உலகிற்கு; இன்றைய டெக்னாலஜிக்கு ரொம்பவே ஒத்துப் போகும் விதமாய் ஜப்பானின் பின்புலத்தில் தடதடத்த .இந்த ஆல்பம் நான் மார்க் போட்டுத் தானா தேறப் போகிறது? Was a smash hit!

செபடம்பரிலும் 4 .இதழ்கள் தலைகாட்டின – அண்ணாத்தே ஆர்ச்சியின் முழுவண்ண; விலையில்லா இதழின் உபயத்தில்! MAXI சைஸில், கலரில் ஒரு லோடு புய்ப்பங்களை நமது சட்டித்தலையன் சூட்டி விட்டிருந்தாலும் – அந்த வண்ண visual treat; நமது பால்யத்து நினைவுகள் – என பல சமாச்சாரங்கள் கரம் கோர்த்து ஜிலோவென்று தூக்கி விட்டன இந்த இதழை! ஜாம்பவான்களுக்கு ரேட்டிங்க்ஸ் பண்ண முனைவது மதியீனமே என்பதால் சட்டித்த ‘தல‘க்கு ஒரு பெரிய ‘ஓ‘ மட்டும் போட்டு வைக்கிறேன்!

செப்டம்பரின் class act – கௌபாய் ‘தல‘ டெக்ஸின் “பந்தம் தேடிய பயணம்” தான்! இந்தக் கதையைத் தேர்வு செய்யும் சமயமே, இது பட்டையைக் கிளப்பிடும் என்பதில் எனக்குச் சந்தேகங்கள் இருந்திடவில்லை! இருந்தாலும் கதையின் ஓட்டத்தில் ‘தல‘ & வெள்ளிமுடியார் second fiddle வாசிக்க நேரிடும் என்பதையோ – அந்தப் பெண்களே ஒளிவட்டத்தை முழுமையாய் தமதாக்கிக் கொள்வர் என்பதையோ நான் எதிர்பார்த்தே இருக்கவில்லை தான்! நடப்பாண்டில் இன்னொரு டெக்ஸ் ரகளை & one for the ages too! ஸ்பஷ்டமாய் 9/10.

செப்டம்பரில் MAXI சைஸின் லக்கி லூக் – ”பிசாசுப் பண்ணை” சிறுகதைகளின் தொகுப்பாய்த் தலைகாட்டியிருந்தது! தயாரிப்புத் தரம்; அந்தப் பெரிய சைஸ் என்று எல்லாமே அம்சமாக அமைந்திருந்தாலும் கதைகளில் வலு ரொம்பவே சுமாராக இருந்ததைக் கவனிக்காது இருக்க முடியவில்லை! அந்நாட்களில் இவற்றை வெகு சுமாரான தயாரிப்புத் தரங்களிலுமே நாம் ரசித்திருப்பதை நினைத்துப் பார்க்கும் போது பேந்தப் பேந்த முழித்தபடியே 5/10 தான் போடத் தோன்றுகிறது!

ஜம்போவின் சார்பில் களமிறங்கிய “தனித்திரு. தணிந்திரு” மறுபடியுமொரு அழுத்தமான வாசிப்புக்கு வழிசெய்திருந்தது! நிஜத்தைச் சொல்வதானால் அந்த முதியவர் ஆண்டர்சனின் பார்வையில் கதையோடு ஒன்றிட நமக்கு சாத்தியப்பட்டாலொழிய ‘ஙே‘ என்று முழிக்க மட்டுமே செய்திருக்கலாம்! பெருசாய் கதை என்று இங்கே எதுவும் கிடையாதெனும் போது அந்த உணர்வுகளின் வெளிப்பாடுகளே; நிறவெறியின் பரிமாணங்களே ஆல்பம் முழுக்க வியாபித்திருப்பதை உள்வாங்கிட இயன்றிருந்தால் மட்டுமே இது ரசித்திருக்கும்! And உங்களின் பாராட்டுக்கள் அந்த சேதியைக் கச்சிதமாய்ச் சொல்லின! 8/10.

அக்டோபரும் புலர்ந்த போது நமது ஆன்லைன் புத்தகவிழா மாதத்தை ஆச்சர்யமூட்டும் அழகோடு துவக்கித் தந்தது! நான்கே நாட்கள்; நம் ஆபீஸ் மாடியில்; நம்மவர்களோடு எனும் போது – பெருசாய் எந்த எதிர்பார்ப்புகளும் இருந்திருக்கவில்லை! ஆனால் அந்த நாலு நாட்களையுமே ஒரு மினி திருவிழாவாய் மாற்றித் தந்து ஒரு மித நகரத்துப் புத்தகவிழாவின் விற்பனை எண்ணிக்கையை கண்ணில் காட்டின பெருமை உங்களையே சேரும்!

அக்டோபரின் ரிப்போர்டர் ஜானி டபுள் ஆல்பம் – again பணியாற்றும் போதும் சரி, உங்கள் அலசல்களின் போதும் சரி, செம சுவாரஸ்யங்களை உருவாக்கியதொரு இதழாக அமைந்தது! ஜானி 2.0 எனக்கு பிரமாதமாகவும், க்ளாசிக் ஜானி சுமாராகவும் தென்பட – உங்கள் தீர்ப்புகளோ உல்டாவாக இருந்தது. எது எப்படியோ மொக்கை போடாத இதழ் என்ற திருப்தியோடு 7.5/10 போடுகிறேன்!

கிராபிக் நாவல் தடத்தின் களம் கண்ட XIII spin off இந்தாண்டின் தெளிவான இதழ்களுள் இடம்பிடித்தது இன்னொரு சந்தோஷ நிகழ்வு! கடைசியாக வெளியான ஸ்பின்-ஆப்கள் எவையுமே பெருசாய் சோபித்திருக்கா நிலையில் “சதியின் மதி” தெளிந்த நீரோடையென பயணித்ததில் எனக்கு நிரம்ப நிம்மதி! வழிநெடுக ஏகமாய் கூகுள் ஆராய்ச்சிகள் அவசியப்பட்டாலும், அந்த மெனக்கெடல்களின் பலனாய் இதழ் குழப்பமின்றி அமைந்தது மட்டுமன்றி நானுமே ஏகப்பட்ட விஷயங்களைக் கற்றறிந்த திருப்தியும் கிட்டியது! In fact நடப்பாண்டின் பல தருணங்களில் நான் கற்றுக் கொள்ள நேரிட்ட சமாச்சாரங்கள் முன்னெப்போதையும் விட ஜாஸ்தி! நெப்போலிய ரஷ்ய தோல்விகள் பற்றியோ; ஒரேகானின் மரணப் பாதைகள் பற்றியோ; அமெரிக்கத் தேர்தல் அரசியல்கள் பற்றியோ; செச்சன்ய-ரஷ்ய பகைகள் பற்றியோ இந்த வயசில் நான் படிக்க முகாந்திரங்கள் எங்கிருந்து எழப் போகின்றன? So ஜாலியான பணிகளோடே, சிலபல புதுப் பாடங்களும் கற்கச் சாத்தியங்களைத் தந்த “சதியின் மதிக்கு” 8/10.

அக்டோபரின் இன்னொரு ஆசானாய் அமைந்த இதழ் – ஜம்போவின் “மா…துஜே…சலாம்!” முற்றிலும் மாறுபட்ட ரஷ்ய-செச்சன்ய யுத்த பூமி… ஒரு கார்ட்டூன் ஸ்டைலிலான பாட்டிம்மா… ப்ளஸ் ஒரு புள்ளைத்தாச்சி – என்ற கதை மாந்தர்களோடு 96 பக்கங்களுக்கு நம்மைக் கட்டுண்டு வைத்திருந்த அந்த வாசிப்பு அனுபவம் நம்மளவிற்குப் புதியது தானே! வித்தியாசமான சித்திர பாணிகள்… நிறைய வரலாற்றுத் தகவல்கள்… அதே சமயம் அலுப்பூட்டாத கதை நகற்றல் என்று பயணித்த இந்த ஆல்பத்துக்கு எனது தரப்பில் 9/10. Oh yes – இது ரொம்போ ஓவர் என்று எண்ணிடும் நண்பர்களும் நிறையவே இருப்பர் என்பதில் ஐயங்களில்லை; ஆனால் இங்கே டவர் சித்தே வீக்கா இருப்பதால் அடுத்த டாபிக்குக்குத் தாவுறேன்… ஓவர்… ஓவர்…. ஓவர்!

அக்டோபரின் புத்தக விழா ஸ்பெஷலாய் வெளியான “தலைவாங்கிக் குரங்கு” அந்த MAXI சைஸுக்கென வாங்கிய தர்ம அடிகளின் மகிமையால் ‘பளிச்‘சென்று நினைவில் நிற்கும் இதழ்! இதனை இத்தாலியில் பார்த்த ரசிகர்கள் கரவொலி எழுப்பியிருப்பது வேறு கதை; உள்ளூரிலோ ‘நான் எக்ஸ்ட்ரா நம்பர் கேட்டேனா?‘ என்ற கேள்விகளே பிரதானப்பட்டு நிற்பதால் இனிமேற்கொண்டு ஈக்களை அதே பாணிகளில் அடிப்பதென்ற தீர்மானத்துக்குத் திடமாய் வந்து விட்டேன்! Old habits die hard என்பது நம்மட்டிற்காவது வேதவாக்கே என்பதால் மாற்றமின்மைகளே மாறாததாய் இருந்திடும! And மறுபதிப்பே எனும் போது மார்க் போட மெனக்கெடுவானேன்?

ஸ்பெஷல் # 2 ஆக வந்த ”நேற்றைய நகரம்” சில ஆண்டுகளுக்கு முன்பாக நீங்கள் மொத்துவீர்களோ என்ற பீதியில் பீரோவுக்குள் பதுங்கிப் போனதொரு இதழே! ஆனால் எவ்வித பில்டப்களும் இன்றி, சத்தமின்றி சாகஸ வீரர் களம் கண்ட வேளையில் – ‘அட தேவலாமே‘ என்பதே ரியாக்ஷனாகியது எனக்கு ஆச்சர்யமே! கதையின் பலவீனம், சித்திரங்களின் வீரியத்தால் பூசி மெழுகப்பட்டாலும், நான் மார்க் போடுவதாக இருப்பின் 6/10 என்பேன்! 



நவம்பரின் தீபாவளி மலர்… டெக்ஸின் அதகளம்… குண்டு புக்கின் ரம்யம்… முற்றிலும் மாறுபட்ட 2 மெகா நீள சாகஸங்கள் என்று தெறிக்க விட்ட இந்த ஹார்ட்கவர் ஆல்பமே நடப்பாண்டின் topseller! இன்னமும் 60+ பிரதிகளே கைவசமுள்ளன என்பதால் தைப் பொங்கலைத் தாண்டாது என்று தோன்றுகிறது! இந்தப் புள்ளிவிபரத்துக்குப் பின்னேயும் மார்க் போட நான் முனைந்தால் என்னை மிஞசிய பேமானி யாருமிருக்க முடியாது தான்! குத்துமதிப்பாய் 175 போட்டுக் கொள்வோமே – 10-க்கு !!

வானமும் வசப்படும்”… உடுப்புத் தியாகத்தில் சீரிய புரட்சியில் இறங்கிய அம்மாயியின் கதை! அதாவது கதை மாதிரி! அந்த அட்டைப்படத்துக்கோசரம் ஏதாச்சும் பார்த்து மார்க் போடலாம்; அந்த apocalyptic லோகத்தின் பின்புலத்துக்கும் இன்னும் கொஞ்சம்! அதற்கு மேல் உங்களுக்குத் தெரியாத சட்டங்களில்லை… நியாயங்களில்லை யுவர் ஆனர்! எந்தப் பிரிவில் எத்தனை போடலாமென்று நினைக்கிறீர்களோ – அதை மகிழ்வோடு போடுங்க!

கால வேட்டையர்” ஏக காலமாய் பதுங்கிக் கிடந்து போன மாதம் வெளிச்சத்தைப் பார்த்த இதழ்! ஒரு hi-tech விட்டலாச்சார்யா கதையாய்ப் பார்த்திடாத பட்சத்தில் – கதைநெடுக இழையோடும் விறுவிறுப்பும், அந்த சித்திர நேர்த்தியும் not bad என்று சொல்ல வைக்கக் கூடும்! Not entirely convincing என்பதால் 6.5/10 போடுவோமே ?

தொடர்ந்து கூர்மண்டை ஜாம்பவானின் “சர்ப்பத்தின் சவால்”! அலசல்களுக்கு அப்பாற்பட்ட ஆதிக்க நாயகரின் ஆல்பமிது என்பதால் - அலசிடவோ; மார்க் போடவோ முனைந்திட மாட்டேன்! மாறாக – விண்வெளிப் பிசாசு… சைத்தான் விஞ்ஞானி போன்ற மிதக்கதைகளை விடவும் சர்ப்பங்களுடனான இந்த மோதலில் சுவாரஸ்யம் அதிகம் என்பதையும்; இதே ஆல்பம் ‘80களின் இறுதிகளில் வெளிவந்திருப்பின் விற்பனை அதகளத்தில் கூரை பறந்திருக்கும் என்பதையும் சொல்லிட முனைவேன்! A classic from the classic hero!



டிசம்பரின் இதழ்களை நீங்களே இப்போது தான் அலசி வருகிறீர்கள் எனும் போது அதன் பொருட்டு நீட்டி முழக்காது சிம்பிளாக மார்க் போட முனைகிறேன்:

ஒரு கசையின் கதை”:

ம்ம்ம்… அது வந்து.. என்ன சொல்ல வர்றேன்னா… அந்தக் கசை இருக்கில்லே… ஆங்… பசை இல்லீங்கோ... கசை… கசை…! அதை வச்சிக்கினு ஆளாளுக்கு ரவுசு விட ‘தல‘ புகுந்து தண்டால் எடுக்கிறார்! நம்மவரின் உசரத்துக்கு இந்தப் புராதன, மித நீளக் கதைகள் இப்போது வேடிக்கையாய்த் தென்படுவது எனக்கு மட்டும் தானா – தெரியவில்லை! 6/10.

“நரகத்தின் நம்பர் 13”:

எனக்கு இந்த concept ரொம்பவே பிடித்தமானது! And கதைகளும் சிம்பிளானது; தெளிவாய் ஓட்டமெடுப்பவை என்பதால் 7/10 போட நினைக்கிறேன்!

பயமே ஜெயம்”:

கதை மட்டும் இன்னும் சாரத்தோடு இருப்பின் இந்த கேரட் மீசைக்காரர் தொட்டிருக்கக் கூடிய உசரமே தனி என்பேன்! 7/10 என் பார்வையில்!

“தகிக்கும் பூமி”:

நாயகரை இன்னமுமே முழுமையாய் எடை போட்ட பாடில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது! அறிவுஜீவியாகக் காட்டுவதா? ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டுவதா? இரண்டின் கலவையுமாகக் காட்டுவதா? என்ற கேள்விக்கேக் கதாசிரியர் இதுவரையிலுமான நமது 2 ஆல்பங்களிலுமே பதில் ஏதும் சொன்னதாய் எனக்குத் தெரியவில்லை! என்மட்டிற்கு மாமூலான அந்த முரட்டு கௌபாய் stereotype–ஐ சிதறச் செய்யும் Lone ரேஞ்சர் கதாப்பாத்திரம் வரவேற்புக்கு உரியதே… ஆனால் தீர்ப்பு உங்கள் கைகளில் எனும் போது இந்த ஆல்பத்துக்கு 7/10 போட்ட கையோடு நடப்பாண்டின் review-களைக் கையைத் தட்டிடுகிறேன்!

Before I sign out – ஒரு தகவல் + சில கேள்விகள்:

1. 2020ல் களம் கண்டுள்ள இதழ்களின் மொத்த எண்ணிக்கை: -46 !! இவற்றுள் உங்களின் Top 3 எவையோ ?

2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?

3. நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?

4. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?

- Brilliant     - OK      - Not Bad       - அடங்கப்பா…!

5. தி Lone ரேஞ்சர்: இவர் தொடர்ந்திடப்பட வேண்டியவரா? தற்காலிக VRS வழங்கப்பட வேண்டியவரா?

6. புயட்சிப் புயழ் அம்மினி: தொடரலாமா? டாட்டா காட்டலாடமா?

கேள்விகள் இந்த அரை டஜனே என்பதால் இனி தகவல் பக்கமாய்த் தாவுகிறேன்!

ஜனவரியில் சென்னைப் புத்தக விழா இல்லையென்று ஆன பிற்பாடு பிப்ரவரியில் நடந்திடுமா? என்றறியக் காத்திருப்போம்! அதன் மத்தியில் நமது ஆன்லைன் புத்தகவிழா – 2 பொங்கல் விடுமுறைகிளினிடையே நடந்திடும் – நமது அலுவலக மாடியினில்!

போன தபாவின் பாணியே பெரும்பாலும் தொடர்ந்திடும்; சிற்சிறு அவசியமான மாற்றங்களுடன்! And 3 ஸ்பெஷல் இதழ்கள் உண்டு இந்தப் புத்தகவிழா வேளையினில் என்பது கொசுறுச் சேதி!

தேதி : ஜனவரி 14 to ஜனவரி 17 முடிய தினமும் காலை 10.30 to மாலை 6.30 வரை !

2021-ன் பிற்பகுதியினில் நிலவரங்கள் சகஜம் கண்டிருக்கும்; ரெகுலரான புத்தகவிழாக்களும் துவக்கம் கண்டிருக்கும் என்ற நம்பிக்கை ஓரளவிற்குத் துளிர்விட்டிருப்பதால் – ஆன்லைன் புத்தகவிழா # 3 2022-க்கு முன்பாய் இராதென்று நம்பலாம். அரைத்த மாவையே ஓவராய் அரைத்து உங்களுக்கு அயர்ச்சியூட்டிடக் கூடாதில்லையா?

ஜனவரி இதழ்களின் எடிட்டிங்கும், ARS MAGNA-வின் மொழிபெயர்ப்பும் சட்டையைப் பிடித்து இழுத்து வருவதால் நான் புறப்படுகிறேன் all! மீண்டும் சந்திப்போம்! Have a cool weekend! Bye for now!

234 comments:

  1. Need extra days for Madi book fair or it's not fair

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. 1) பிரிவோம்...சந்திப்போம்! போர்முனையில் ஒரு பாலகன், பனிவனப் படலம்-தீபாவளி மலர்.
      2) சந்தேகமே இல்லாமல் தலைவாங்கி குரங்கு தான், அப்பப்பா! என்ன கலரிங்!

      Delete
    2. 3)போர்முனையில் ஒரு பாலகன், இந்த கொரொனா பேரிடர் காலகட்டத்தில் பிரேக்கிங் நியூஸிலிருந்து விடுபட்டு வாய்விட்டு சிரிக்கச் செய்து மனதை இலேசாக்கிய இதழ்.

      4)இந்த ஆண்டின் சூழ்நிலையைக் கணக்கில் கொண்டால் Brilliant தான்.

      Delete
    3. 5) Lone Ranger: ஒரு வித்தியாசமான கௌபாய் வாசிப்பு அனுபவம், நிச்சயமாக தொடரலாம். வசனங்களும் கதை சொல்லும் பாணியும் அருமை. (எ-டு) தகிக்கும் பூமி, டோண்டோ கடத்தப்படும் இடம், பின்னணியில் நாடோடிக்கதை.

      Delete
    4. 6) இந்த Post apocalyptic genre ல் அமாயாவுக்கு பதில் ஜெரெமயாவைத் தொடரலாம், அருமையான தொடரை பாதியிலேயே விட்டு விட்டோம்...
      அமாயா கதையே இல்லை!

      Delete
  3. ஞாயிறு காலை வணக்கம் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  4. 1. தனித்திரு தணிந்திரு, கண்ணான கண்ணே, நில் கவனி வேட்டையாடு
    2. தீபாவளி மலர்
    3. கண்ணான கண்ணே
    4. பிரில்லியண்ட். 85% கதைகள் எனக்கு பிடிச்சிருந்தது. 6 மாத கதைகளை ஒட்டுக்கா படிக்கும் போது நமது நிறுவனத்தின் வெரைட்டியின் பலம் நன்றாகத் தெரிகிறது.
    5. ஆங்கிலத்தில் மொத்தத் தொகுப்பும் படித்துமிருக்கிறேன். எனக்கு லோன் ரேஞ்சர் முதல் தொகுதி படித்தேன். பிடித்திருந்தது. இரண்டாவது இன்னும் படிக்கவில்லை. விற்பனையில் சாதித்தால் தொடரவும்.
    6. அமாயா அம்மிணி மிடிலிங்க. அந்தம்மா, மற்றும் ஸ்பைடர் தாத்தா கதைகள் இரண்டுமே மிடில. ஒவ்வொரு ஆறு பக்கத்துக்கப்புறம் மறுபடி “காலையில 6 மணி இருக்கும்” னு ஆரம்பிச்ச மாதிரி ஒரு பீலிங். ஆர்ச்சி கலர்ல வந்ததால என் மகளைக் கவர்ந்தது. அவளுக்கு படித்து காமித்ததால் அந்தக் கதையை முடிச்சேன் மற்ற இரண்டு கதைகளை விட பரவால்லை எனத் தோன்றியது. இதற்கென ரசிகர்கள் இருத்து விற்பனை நன்றாக இருந்தால் தொடருங்கள். இல்லன்னா வேணாம்.

    ReplyDelete
  5. 1. தீபாவளி வித் டெக்ஸ்
    கண்ணான கண்ணே
    மா துஜே சலாம்

    3. பனிவனப்படலம்
    4. OK
    6. டாடா பிர்லா எல்லாத்தையும் காட்டிடலாம்

    ReplyDelete
  6. 5. தி Lone ரேஞ்சர்: இவர் தொடர்ந்திடப்பட வேண்டியவரா? தற்காலிக VRS வழங்கப்பட வேண்டியவரா? -

    தொடர்ந்தால் நன்று ஐயா. டிசம்பர் மாத லோன் ரேஞ்சரை டெக்ஸ் வில்லர், டைகரோடு ஒப்பிடாமல் படித்தால் அது ஒரு மாஸ்டர் பீஸ் என்பதை உணர முடியும்.



    மேலும், இந்த இரண்டாவது இதழில் சற்றே தொடர்ச்சி விட்டுப் போனதாக தகவல். கதைகளை தனித்தனியாக புரிந்து கொள்ள முடிந்தாலும், வரிசைப்படி வந்தால் அவருடைய மார்க் மேலே ஏறவும் கூடும்.

    2. இந்த ஆண்டின் காமிக்ஸ் பயணம், கொரோனாவின் தாக்கத்தை, கடுமையை சற்றே இலகுவாக்கிக் கொண்டு விட உதவியது என்றால் மிகையல்ல. இந்த சோதனையான காலகட்டத்தில் எங்களுக்காக நீங்கள் எழுதிய எழுத்துக்கள் புத்தகங்களில் ஹாட்லைன்களாகவும், மொழிபெயர்ப்பாகவும் மற்றும் ப்ளாக்கில் பதிவுகளாகவும் அழகுற மிளிர்ந்தன. என்னை பொறுத்தவரையில், BRILLIANT YEAR IT IS



    இறுதியாக, நேற்றைய நகரம் & கால வேட்டையர் - குறைந்தது 8/10 மார்க் போடலாம் ஐயா. இன்னும் எததனை இதழ்கள் இப்படி வெளிச்சம் காணாமல் உள்ளனவோ? அவற்றையும் வெளியே கொண்டு வர உதவும் இந்த மதிப்பீடு.

    நன்றி!

    ReplyDelete
  7. ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!

    வணக்கம் சார்.

    மதிப்பீடுகளை பார்த்துட்டு வந்துடலாம்.

    தீபாவளிமலர் என்ன ஸ்கோரு???

    ReplyDelete
  8. அட்டைப்படத்தில் top Archie இதழ் தான்!

    ReplyDelete
  9. ஒரு வேண்டுகோள் 🙏
    சென்ற புத்தக விழாவில் என்னை பொறுத்தவரை இலாபம் ஈட்டியது STகூரியர் கம்பெனியே! 7 இதழ்கள் வா.ஆப் வழியாக ஆர்டர் செய்திருந்தேன் (2 பத்தக விழா ஸ்பெஷல் & ஸபைடர்). அதில் 2 புக்குகள் தவறாக அனுப்பிவிட்டனர், அதனால் நான் திரும்பி அனுப்ப ரூ 50 & நீங்கள் திரும்பி அனுப்ப ரூ40ஏனும் செலவிட்டிருப்பீர்கள்.
    20% தள்ளுபடிக்கு பின் வரும் இலாபத்தை மறு கூரியருக்கு கொடுத்தால் கம்பெனிக்கு எப்படி சார் கட்டுபடியாகும்???
    அதனால் புத்தக விழா surprise இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங்கை, விழா ஆரம்பிக்கும் அன்றோ அல்லது இரண்டாம் நாளோ ரெடி செய்தால் சில குழப்பங்களை தவிர்க்களாமே?
    நன்றி

    ReplyDelete
  10. புரட்சி அம்மணி வேண்டாமே!

    ReplyDelete
  11. 1. கண்ணான கண்ணே, நில் கவனி வேட்டையாடு, மா துஜே சலாம்
    2. நில் கவனி கொல் டாப் அட்டைப்படம்
    3. Undoubtedly கண்ணான கண்ணே
    4.இந்த வருடம் absolutely Brilliant
    5. Lone Ranger very good we can continue
    6. அமாயா ok தான்.

    ReplyDelete
  12. 1.

    அ.மா..துஜே..சலாம்

    ஆ. பொன் தேடிய பயணம்( லக்கியின் முதல்கதை)

    இ. தீபாவளி வித் டெக்ஸ்..

    2.2132 மீட்டர்

    3.எடிட்டரே இதழில் இடம் பெற்ற கதை

    4.OK

    5.ரேஞ்சர் சுகப்படல

    6.அமாயா- வேணாம்..

    ReplyDelete
    Replies
    1. ஓவ்... பனியில் ஒரு செங்குருதிப்புணல்...!!! வித்தியாசமான சாய்ஸ்!
      கதை பாணி தங்களை வெகுவாக கவர்ந்துள்ளது!

      Delete
  13. 1. 2020ல் களம் கண்டுள்ள இதழ்களின் மொத்த எண்ணிக்கை: -46 !! இவற்றுள் உங்களின் Top 3 எவையோ ?

    1.பிரிவோம் சிந்திப்போம் .. மிகவும் எதார்த்தமான கதை .. ஹீரோ வில்லன் என்று யாரும் இல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ப REACT செய்யும் CHARACTERS பலம் ..

    2. YOUNG TEX .. சரவெடி .. BEST TEX THIS YEAR ..

    3.LUCKY'S பொன் தேடிய பயணம் , சதியின் மதி ..

    2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?

    diabolik s துரோகம் ஒரு தொடர்கதை, பிரிவோம் சிந்திப்போம் , zarof ,தலைவாங்கிக் குரங்கு

    3. நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?

    பிரிவோம் சந்திப்போம்

    4. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?

    IN BETWEEN Brilliant - OK sir .. considering the circumstances ..

    5. தி Lone ரேஞ்சர்: இவர் தொடர்ந்திடப்பட வேண்டியவரா? தற்காலிக VRS வழங்கப்பட வேண்டியவரா?

    LONE RANGER தொடரலாம் SIR .. ஆக்ஷன் கலந்த கிராபிக் நாவல் மாதிரி உள்ளது .. நேர்கோட்டு பாணி தான் என்றாலும் நிறைய எதார்த்தமான CHARACTERS உள்ளனர் ..

    6. புயட்சிப் புயழ் அம்மினி: தொடரலாமா? டாட்டா காட்டலாடமா?

    பண்ணிய புரட்சியே போதும் சார் .. மிடில ..

    ReplyDelete
  14. இந்த ஆண்டு ஓகே ரகம் நமக்கு!

    ReplyDelete
  15. மறக்க இயலாத இதழ் மா துஜே ஸலாம்!

    ReplyDelete
  16. Top3 தீபாவளி மலர்,மா துநே ஸலாம், தகிக்கும் பூமி!

    ReplyDelete
  17. // 3 ஸ்பெஷல் இதழ்கள் உண்டு இந்தப் புத்தகவிழா வேளையினில் என்பது கொசுறுச் சேதி! // இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

    ReplyDelete
  18. 1. நில் கவனி வேட்டையாடு, பிரிவோம் சந்திப்போம் & மா துஜெ சலாம்
    2. தகிக்கும் பூமி
    3. நில் கவனி வேட்டையாடு (போன பதிவில் பிரிவோம் சந்திப்போம், இந்த பதிவில் இது, ஆக இரண்டையும் சொல்லியாயிற்று)
    4. கால சூழ்நிலை வைத்து பார்க்கும்போது Brilliant!!!
    5. 2021 அட்டவணையில் அவர் இல்லாதது ஆச்சரியமே, தொடரலாம்.
    6. இன்னும் ஒரு வாய்ப்பு தந்து முடிவு செய்வதெ நியாயமாக படுகிறது.

    ReplyDelete
  19. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  20. 1. 2020ல் களம் கண்டுள்ள இதழ்களின் மொத்த எண்ணிக்கை: -46 !! இவற்றுள் உங்களின் Top 3 எவையோ ?
    அ)நில் கவனி வேட்டையாடு,
    ஆ)லக்கி லூக் ஆண்டு மலர்,
    இ)தீபாவளி வித் டெக்ஸ்.

    2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?

    தீபாவளி வித் டெக்ஸ்...

    3. நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?

    நில்,கவனி,வேட்டையாடு...

    4. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?

    Brilliant...

    5. தி Lone ரேஞ்சர்: இவர் தொடர்ந்திடப்பட வேண்டியவரா? தற்காலிக VRS வழங்கப்பட வேண்டியவரா?

    தொடரலாம்,முடிந்தால் ரெகுலரில்...

    6. புயட்சிப் புயழ் அம்மினி: தொடரலாமா? டாட்டா காட்டலாடமா ?

    பை பை,சீ யூ,டாட்டா...

    ReplyDelete
    Replies
    1. அதே நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களில் டெக்ஸும் சளைக்கவில்லை,பேரிடர் கால தருணத்தில் நம் வாசிப்பை சிறப்பாக்கியதில்,
      ஒரு துளி துரோகம்,இளம் டெக்ஸ்,பந்தம் தேடிய பயணம்,தீபாவளி வித் டெக்ஸ் ஆகியவை பிரதான இடம் பிடித்தன...

      Delete
  21. 1.ஆக்ஷன், செண்டிமெண்ட், மற்றும் நிறைவானஅஓவியங்களுடன் அமைந்த டெமக்லீஸ் பிழையில்லாமழலைமுதலிடமும் சோடாவின் திசைமாறியதேவதை இரண்டாமிடமும் நில் கவனி வேட்டையாடுமூன்றாமிடமும் பிடிக்கின்றன
    2.டாப் அட்டைப்படம் நில் கவனி வேட்டையாடு. 3.இல்லை.4.brilliant5.லோன் ரேஞ்சர் தொடர்ந்திடவேண்டும். 6.அமாயா டாடா. எங்களுக்கு இளவரசியே போதும்.

    ReplyDelete
  22. // ஒரு லோடு புய்ப்பங்களை நமது சட்டித்தலையன் சூட்டி விட்டிருந்தாலும் – அந்த வண்ண visual treat; நமது பால்யத்து நினைவுகள் – என பல சமாச்சாரங்கள் கரம் கோர்த்து ஜிலோவென்று தூக்கி விட்டன இந்த இதழை! //

    அதே,அதே சார்...

    ReplyDelete
  23. // செப்டம்பரின் class act – கௌபாய் ‘தல‘ டெக்ஸின் “பந்தம் தேடிய பயணம்” தான்! //
    பொழுதுபோக்கு,நல்ல கதைக்களம் என்ற இரு அம்சங்களிலும் இந்த இதழ் ஸ்பெஷல் தான்...

    ReplyDelete
  24. // நிறவெறியின் பரிமாணங்களே ஆல்பம் முழுக்க வியாபித்திருப்பதை உள்வாங்கிட இயன்றிருந்தால் மட்டுமே இது ரசித்திருக்கும்! //
    கதை பின்னணி முழுக்கவே ஒருவித இருள் சார்ந்த காட்சியமைப்புகளும்,நெடுக இழையோடும் ஒருவித மென்சோகமும் இதற்கு ரொம்பவே வலு சேர்த்தன...

    ReplyDelete
  25. // இந்த ஹார்ட்கவர் ஆல்பமே நடப்பாண்டின் topseller! இன்னமும் 60+ பிரதிகளே கைவசமுள்ளன என்பதால் தைப் பொங்கலைத் தாண்டாது என்று தோன்றுகிறது! //
    சூப்பர் சார்,சூப்பர் சார்,சூப்பர் சார்......
    இதை விட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்.....

    ReplyDelete
  26. // குத்துமதிப்பாய் 175 போட்டுக் கொள்வோமே – 10-க்கு !! //
    சரித்தர நாயகனுக்கு இந்த பெருமை உரித்தானது தான்.....

    ReplyDelete
  27. // சிற்சிறு அவசியமான மாற்றங்களுடன்! And 3 ஸ்பெஷல் இதழ்கள் உண்டு இந்தப் புத்தகவிழா வேளையினில் என்பது கொசுறுச் சேதி! //
    அடடே,அடடே,அடடே.....

    ReplyDelete
  28. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?

    - Brilliant  என்றே கூறுவேன்.
    நமது காமிக்ஸிம்,உங்களது பிளாக்கும்.

    நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?

    பிரிவோம்;சந்திப்போம்.
    எனது மனைவிக்கும், மகனுக்கும்,எனக்கும் ரொம்பக் பிடித்த யதார்த்தமான கதை.

    டாப் 3 இதழ்கள்;
    பிரிவோம்;சந்திப்போம்,
    சதியின் மதி,
    மா துஜே சலாம்
    என்னளவில் இம்மூன்றுமே முதலிடத்திற்கு தகுதியான கதைகள்.


    ReplyDelete
  29. இணைய வசதி இல்லாததால் தலைவர் இங்கே தலைகாட்ட இயலவில்லையாம் சார்,ஆதலால் ஜனவரி 2021 இதழ்களை புத்தாண்டு தொடக்கத்தில் அனுப்பினால் மகிழ்வாய் இருக்கும் என்று சொல்லச் சொன்னார் சார்...
    எனது கோரிக்கையும் இதுவே என்பது சொல்லித் தெரிய வேண்டுமா சார்...ஹி,ஹி,ஹி...!!!

    ReplyDelete
  30. விஜயன் சார், யதார்த்தமான கமான்சே தொடரை இடையில் கைவிட்டது போல, லோன் ரேஞ்சரையும் கைவிட்டு விடாதீர்கள். பரகுடாவின் வசனங்கள் தான் சிறப்பானவை என்று நம்பியிருந்த போது, லோன் ரேஞ்சர் வசனங்களில் புது உயரங்களைத் தொடத் தொடங்கியுள்ளார். எனவே இவரைத் தொடருங்கள் சார். நான் இதுவரை வாசித்த காமிக்ஸ்களில் லோன் ரேஞ்சரின், "விண்ணில் இருந்தபடி நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம் நம்பிக்கைக்குரியோருக்கு, நாம் செய்ய வேண்டியது இரண்டே. ஒன்று, அவர்களைப் போற்றி நினைவுபடுத்துவது. இரண்டு, நல்ல செயல்கள் செய்து அவர்கள் அங்கிருந்தவாறு புன்னகைக்க ஒரு சந்தர்ப்பம் தருவது." (Thaniyoruvan) என்ற வசனம் தான் சார் இன்றும் நினைவில் பதிந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அருமை அருமை அருமை

      Delete
    2. // லோன் ரேஞ்சர் வசனங்களில் புது உயரங்களைத் தொடத் தொடங்கியுள்ளார். //
      உண்மை,உண்மை...

      Delete
  31. அப்புறம் கண்ணான கண்ணே,மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்ட அனைவருக்குமான இந்தக் கதையை எங்களுக்களித்த எடிட்டர் சார் அவர்களுக்கு பணிவான நன்றிகள்.

    ReplyDelete
  32. Top 3
    1. தீபாவளி with டெக்ஸ்
    2. நில் கவனி வேட்டையாடு
    3. பனியில் ஒரு குருதிப்புனல்

    அட்டைப்படம்
    இருளின் மைந்தர்கள் (1&2)

    மறக்க முடியாத இதழ்
    தீபாவளி மலர்

    Performance rating - OK. காரணம்: மறுபதிப்புகள், சந்தா D, பழைய நாயகர்கள் என இந்த வருடம் சற்று நெழிந்தது உண்மை.

    Lone Ranger - 50/50

    அமாயா - Big No Sir

    ReplyDelete
  33. காலை,வணக்கம்,ஆசிரியரே

    ReplyDelete
  34. Sent message for slot reservations sir :)

    ReplyDelete
  35. 1. 2020ல் களம் கண்டுள்ள இதழ்களின் மொத்த எண்ணிக்கை: -46 !! இவற்றுள் உங்களின் Top 3 எவையோ ?

    1.நில் கவனி வேட்டையாடு
    2.பிரிவோம் சந்திப்போம்
    3.அந்தியின் ஒரு அத்தியாயம்

    2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?

    தீபாவளி மலர்

    3. நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?

    போர்முனையில் ஒரு பாலகன்

    4. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?

    - Brilliant - OK - Not Bad - அடங்கப்பா…!

    75% Brilliant..!
    20% Ok..!
    5% Not Bad..!
    0% அடங்கப்பா..!

    5. தி Lone ரேஞ்சர்: இவர் தொடர்ந்திடப்பட வேண்டியவரா? தற்காலிக VRS வழங்கப்பட வேண்டியவரா?


    அதுவந்து... இப்ப நான் உங்களுக்கு என்னா சொல்றது.. அதாவது..
    50:50



    6. புயட்சிப் புயழ் அம்மினி: தொடரலாமா? டாட்டா காட்டலாடமா?

    வசனமே இல்லாம வெறும் படங்கள் மட்டும் கலரில் வர வாய்ப்பிருக்கா சார்...!?

    ReplyDelete
    Replies
    1. ///வசனமே இல்லாம வெறும் படங்கள் மட்டும் கலரில் வர வாய்ப்பிருக்கா சார்...!?///

      ஹிஹி! +1
      அதுவும் பெரிய்ய்ய படங்களோடு மேக்ஸி சைஸில்!

      Delete
    2. ஆசை,தோசை,அப்பளம்,வடை...

      Delete
    3. ///வசனமே இல்லாம வெறும் படங்கள் மட்டும் கலரில் வர வாய்ப்பிருக்கா சார்...!?///

      ஆஹான்... அப்புறம்.

      Delete
    4. // வசனமே இல்லாம வெறும் படங்கள் மட்டும் கலரில் வர வாய்ப்பிருக்கா சார்...!? //

      ஆஹான்... அப்புறம்.

      நீங்கள் வசனத்தை படிக்காமல் படத்தை மட்டும் பார்த்தால் போதும் கண்ணா :-)

      Delete
    5. ///நீங்கள் வசனத்தை படிக்காமல் படத்தை மட்டும் பார்த்தால் போதும் கண்ணா :-)///

      அட.. அதுக்குதான் வழியில்லாம வசன பலூன்கள் மறைச்சிடுதே பரணி..?
      வசனங்களை ஓரமாப் போட்டா பாக்கவாப் போறோம்..? :-)

      Delete
    6. ஆங் புரியுது புரியுது :-)

      Delete
    7. ஆனா பாருங்க கண்ணா நம்ம கம்பெனிக்கு இது எல்லாம் சரிப்படாது :-)

      Delete
  36. 1.படித்த வரை
    ஸ்பைடரின் சர்ப்பத்தின் சாபம்
    ஆர்ச்சி பனி அசுரர் படலம்
    13
    2.பார்த்ததும் குதிக்க வைத்த அந்த பெரிய சைஸ் மஞ்சளட்டை ஆர்ச்சி தான்...இதுவரை டாப்கூட
    3.ஆர்ச்சிதா
    4.சூப்பராதான் இருக்கும்
    5. தடதடக்கட்டும் தனியொருவன்..படிச்சிட்டிருக்கேன்
    6.அம்மணிக்கு ஒரு சான்ஸ் தந்து பார்ப்போம்...ஏற்கனவே ராணில வந்ததுதானே...புதுசா ஒன்ன பாப்பமே

    ReplyDelete
  37. 1. 2020ல் களம் கண்டுள்ள இதழ்களின் மொத்த எண்ணிக்கை: -46 !! இவற்றுள் உங்களின் Top 3 எவையோ ?

    இதழ்கள் என்றாலே நமக்கு குண்டுபுக் தான் ஆல்வேஸ் டாப்ஸ்!!! தங்களது கேள்வியும் அதையே வினவ என் சாய்ஸ் எளிதாக, டாப்3 இதழ்கள்:-

    1.தீபாவளிமலர்2020!

    2.டியூராங்கோ-ஆறாது சினம்!

    3.லக்கி ஆண்டுமலர்2020&எதிரிகள் ஓராயிரம்!

    டாப் 3கதைகள் என கேள்வி இருக்குமானால்....,

    1.பிரிவோம் சந்திப்போம்!--அவரவர் தலைமையில் இயல்பான கேரக்டர்களாக உலவும், வன்மேற்கின் யதார்த்த உலகில் நடக்கும் ஒன்ஷாட்! கதையே நாயகன் இங்கே!

    2.எதிரிகள் ஓராயிரம்:-கதைகள் ஓராயிரம் வரலாம் போகலாம். ஆனா தல டெக்ஸின் இளம்பிராயத்தை அறியச் செய்யும் கதை! போனெல்லியின் கதை1 எனும்போது தனியொரு இடம் இருக்க தான் செய்கிறது.

    3.பனிவனப்படலம்:- கனடிய பனியில் நாமும் வாழ்ந்த அனுபவத்தை வழங்கிய கதை!

    தீபாவளிமலர் உடன் இலவச இணைப்பாக வந்த விண்டர் ஸ்பெசல், "அபாச்சே கைதி"! ஒரு ஸ்பெசலான கதை!
    கைதி பாட்ரீசியாவா அல்லது அபாச்சே போராளியா என கதையோட்டத்தில் கலங்கடத்த கதை!

    ReplyDelete
  38. சார் அதிருது மூனு இதழ்கள் சர்ப்ரைசில்...ஓரிதழாவது குண்டா வரணும்...முடிஞ்சா குண்டா கென்யாவ தரணும்...அதிருமுல்ல

    ReplyDelete
  39. 2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?

    நிறைய டாப் அட்டைகள் வருடம் முழுதும் கண்களுக்கு விருந்தளத்தன. டஃப் கொஸ்டியன்.

    அ.தீபாவளிமலர் 2020

    ஆ.2132மீட்டர்

    இ.நில்..கவனி.. கொல்.




    3. நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?

    தீபாவளிமலர்!


    4. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?

    - Brilliant...அசாத்திய சூழலில் தங்களது மனதிற்கு தெம்பூட்டியது நமது இதழ்களும்; அதுசார்ந்த விசயங்களும்,நடப்புகளுமே! என்னளவில் திருப்தியான ஆண்டே!

    ReplyDelete
  40. ////1. 2020ல் உங்களின் Top 3 எவையோ ?////

    ரொம்ம்ம்ம்ப்ப சிரமமான கேள்வி சார்! நிறைய்ய்ய நல்ல இதழ்கள் வந்துள்ள நிலையில், நிறைய நேரம் யோசித்தும் கூட 1,2,3 என்று வரிசைப்படுத்திட இயலவில்லை!

    ////2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?/////

    பிரம்மிக்க வைத்த அட்டைப்படம் + ஆக்கம் என்பதால் - 'தீபாவளி வித் டெக்ஸ்'

    ///3. நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?///

    மனதை பாதித்த, நெகிழச் செய்த இதழ் என்பதால் - 'கண்ணான கண்ணே!'

    ////4. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?////

    9/10

    லோன் ரேஞ்சரும், அமாயவும் இன்னும் படிக்கவில்லை என்பதால் கருத்துச் சொல்ல இயலவில்லை!

    ReplyDelete
    Replies
    1. // அமாயவும் இன்னும் படிக்கவில்லை //

      படிப்பது கிடக்கட்டும், படத்தை பார்த்ததை வைத்து சொல்லுங்கள் :-)

      Delete
  41. 1. 2020ல் களம் கண்டுள்ள இதழ்களின் மொத்த எண்ணிக்கை: -46 !! இவற்றுள் உங்களின் Top 3 எவையோ ?

    1. 2132 மீட்டர்
    2. துரோகம் ஒரு தொடர்கதை
    3. நில்... கவனி...வேட்டையாடு!... or ஆறாது சினம்

    2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?

    எதிர்காலம் எனதே...! அல்லது தனியே...! தன்னந்தனியே...!

    3. நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?
    நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வண்ணத்தில் விருந்து வைத்த ஆர்ச்சியின் பனி அசுரர்கள் படலம். சர்ப்ரைஸ் இதழென்றாலும், அசர வைத்த, நினைவில் நிற்க வைத்த படைப்பு இது!

    4. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?

    - Brilliant

    5. தி Lone ரேஞ்சர்: இவர் தொடர்ந்திடப்பட வேண்டியவரா? தற்காலிக VRS வழங்கப்பட வேண்டியவரா?

    Yes. To be continued as per original series...

    6. புயட்சிப் புயழ் அம்மினி: தொடரலாமா? டாட்டா காட்டலாடமா?

    உங்கள் விருப்பம்... வருடத்திற்கு ஒரு கதை கொடுக்கலாமே... (இது எங்கள் விருப்பம்)

    ReplyDelete
  42. 1. 2020ல் களம் கண்டுள்ள இதழ்களின் மொத்த எண்ணிக்கை: -46 !! இவற்றுள் உங்களின் Top 3 எவையோ ?
    அ ) நில் கவனி வேட்டையாடு
    ஆ) பிரிவோம் சந்திப்போம்
    இ) நேற்றைய நகரம். (வண்ணம் மட்டுமே மிஸ்ஸிங்)

    2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?

    கனவே கலையாதே

    3. நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?

    நில் கவனி வேட்டையாடு

    4. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?

    - Brilliant

    5. தி Lone ரேஞ்சர்: இவர் தொடர்ந்திடப்பட வேண்டியவரா? தற்காலிக VRS வழங்கப்பட வேண்டியவரா?
    VRS

    6. புயட்சிப் புயழ் அம்மினி: தொடரலாமா? டாட்டா காட்டலாடமா?
    முடியல. இதுக்கு பதிலா முத்து காமிக்ஸில் வந்த ரிப் கெர்பி காரிகன் ஜார்ஜ் கதைகளை மறுபதிப்பாக போடலாம்.

    ReplyDelete
  43. 5. தி Lone ரேஞ்சர்: இவர் தொடர்ந்திடப்பட வேண்டியவரா? தற்காலிக VRS வழங்கப்பட வேண்டியவரா?

    தொடரப்படவேண்டியவரே!
    ஆனால் ஜம்போவில் அல்ல!
    ரெகுலர் தடத்தில் என்பது என் கருத்து சார்.

    ஜம்போ என்றாலே அங்கே ஒரு பென்ச்மார்க் செட் பண்ணிவிட்டீர்கள்.

    லோன்ரேஞ்சர்1(தனியோருவன்)---சிறப்பான ஆரம்பமாகவே இருந்தது.
    இம்முறை வந்த 2வது இதழ் "தகிக்கும் பூமி" அதே அளவு பரபரப்பாக இல்லை. 4பாக கதை கொஞ்சம் நீட்டி முழக்கிட்டது.

    ஜம்போவில் நிலவும் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இல்லை.

    ஏற்கெனவே கமான்சே பாதியில் நிற்கிறது. இதையும் அப்படி நிறுத்த வேணாம். தகுந்த இடத்தில் வெளிவரட்டும் சார்.



    6. புயட்சிப் புயழ் அம்மினி: தொடரலாமா? டாட்டா காட்டலாடமா?

    முதல் முறையாக ஒரு தொடர் வேணாம் என ஓப்பனாக சொல்ல வைத்த இதழ் இது. இங்கே படிக்க ஒன்றும் இல்லை. படம் பார்த்து "கதை சொல்க" என்பதை விட "ரசித்து செல்க" என்பதே இதற்கு சாலப் பொருந்தும். ரசிப்பதை தனியே ரசித்து விட்டால் போச்சுது!😉

    ReplyDelete
    Replies
    1. // முதல் முறையாக ஒரு தொடர் வேணாம் என ஓப்பனாக சொல்ல வைத்த இதழ் இது. இங்கே படிக்க ஒன்றும் இல்லை. படம் பார்த்து "கதை சொல்க" என்பதை விட "ரசித்து செல்க" என்பதே இதற்கு சாலப் பொருந்தும். //

      +1

      Delete
    2. //படம் பார்த்து "கதை சொல்க" என்பதை விட "ரசித்து செல்க"//

      ROFL

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  44. 2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?

    தனித்திரு தணிந்திரு

    3. நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?

    தனித்திரு தணிந்திரு

    4. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?
    OK

    6. புயட்சிப் புயழ் அம்மினி: தொடரலாமா? டாட்டா காட்டலாடமா?

    டாட்டா..‌ திரும்பி பார்க்காமல் அம்மணியை ஒடச்சொல்லலாம்.

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதுவரை வந்த நமது காமிக்ஸில் படித்து முடித்த உடன் எங்கள் வீட்டில் இருந்து தூரத்தி அடிக்கப்பட்ட முதல் இதழ் என்ற பெருமை அம்மணிக்கு தான் :-)

    ReplyDelete
    Replies
    1. 2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?

      தனித்திரு தணிந்திரு இரண்டாம் இடம் 2132 அட்டைப்படம்.

      Delete
    2. . நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?

      இரண்டாம் கதை நில் கவனி வேட்டையாடு

      Delete
    3. // மறக்கவியலா இதழ் //
      Third place பந்தம் தேடிய பயணம்
      Fourth place “மா…துஜே…சலாம்!”

      Delete
    4. PFB Top 1 தான் கேட்டாங்கோ,Top 10 இல்லை...ஹி,ஹி...!!!

      Delete
    5. டாப் டென் சொல்ல வேண்டாம் என சொல்லைங்கோ அறிவரசு :-)

      Delete
    6. 5. தி Lone ரேஞ்சர்: இவர் தொடர்ந்திடப்பட வேண்டியவரா? தற்காலிக VRS வழங்கப்பட வேண்டியவரா?

      He is my favorite. If it sells have it else drop it.

      Delete
    7. ஆயிரம்... இரண்டாயிரம்... மூவாயிரம்.. :-)

      Delete
  45. 3 ஸ்பெஷல் புத்தகங்கள் உண்டு இந்தப்புத்தகவிழா வேலைதனில்.மகிழ்ச்சியான செய்தி. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  46. Sir, My answers:

    1. 2020ல் களம் கண்டுள்ள இதழ்களின் மொத்த எண்ணிக்கை: -46 !! இவற்றுள் உங்களின் Top 3 எவையோ ?

    I have to read a lot yet. But as far as I have read:
    a) Bluecoats album
    b) Vaanavilluku Niramedhu
    c) Nil .. Gavani .. Kol (super racy, entertainer of the year 2020)


    2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?

    Pisaasu Pannai - Lucky Luke

    3. நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?

    Vaanavillukku NiramEdhu

    4. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?

    - Brilliant - OK - Not Bad - அடங்கப்பா…!

    I go with KO Kannan. 75% Brilliant, 20% OK, 5% Not Bad

    5. தி Lone ரேஞ்சர்: இவர் தொடர்ந்திடப்பட வேண்டியவரா? தற்காலிக VRS வழங்கப்பட வேண்டியவரா?

    For me he is a personal favourite. If it sells, have it. If not, drop it.

    6. புயட்சிப் புயழ் அம்மினி: தொடரலாமா? டாட்டா காட்டலாடமா?

    No

    Additional comment: Do not know why! I loved Meendum King Cobra a lot :-)

    ReplyDelete
  47. LONE RANGER , AMAAYA ரெண்டும் வேண்டவே வேண்டாம்

    ReplyDelete
  48. தகிக்கும் பூமி
    மார்லேயை தேடும் லோன் ரேஞ்சர் அவனின் இருப்பிடத்தை சொல்லும் செனட்டரே நடக்கும் பிரச்சனைகளின் மையப்புள்ளி என்பதை லேட்டாக புரிந்து கொள்ளும் லோன் ரேஞ்சர் செனட்டரை என்ன செய்தார் என்பதே கதை! செனட்டர் மேல் உள்ள குற்றம் என்ன? சிக்காகோ நகரதிற்கும் லோன் ரேஞ்சருக்கும் உள்ள பிணைப்பை பிளாஷ் பேக் மூலம் லோன் ரேஞ்சரின் குடும்பம் பற்றி சொல்லுவது அழகு அதிலும் சிறுவயதில் அம்மாவிடம் கதை கேட்டு பழகிய லோன் ரேஞ்சர் பள்ளி கூடம் செல்ல விரும்பவில்லை என சொல்லும் காரணம் ரசிக்க செய்தது அதன் பின்னர் அவரின் தந்தை இரவு நேரம் கதை சொல்ல ஆரம்பித்தது கவிதை! டோண்டோ மற்றும் லோன் ரேஞ்சர் சிக்காகோ நகருக்கு பொருத்தமில்லாதவர்கள் என்பதை கதையின் போக்கில் சொன்னது நன்று!

    மார்லே கதாபாத்திரம் அருமை; அவனுக்கு சொன்ன சிறிய பிளாஷ்-பேக் "குற்றவாளிகள் பிறப்பது இல்லை உருவாக்க படுகிறார்கள்".

    டோண்டோ இரவில் தூங்கும் போது விழித்தெழுந்து நடக்க ஆரம்பிக்கும் போது நடக்கும் சண்டை மற்றும் அதன் வசனங்கள் நன்று, அவனின் கடந்த காலத்தில் சில விஷயங்களை இதன் மூலம் சொன்ன விதம் அருமை.


    கதையில் மிக பெரிய பிளஸ் ஓவியங்கள் அடர் வண்ணத்தில் ரசிக்கும் படி இருந்தது; லோன் ரேஞ்சர் குழந்தை பருவத்தை காட்டும் ஓவியங்கள் அழகு. கதையில் ஆங்காங்கே தென்படும் ஆக்ஷன் காட்சிகளில் ஓவியங்கள் மிக பெரும் பங்குவகிக்கிறது! அதுவும் முதல் பாகத்தில் முதல் பக்கத்தில் ஆடம்பர கப்பலில் அதகளம் செய்யும் டோண்டோ மற்றும் லோன் ரேஞ்சர் அதன் காரணம் என்ன என சொல்லிவிட்டு கடைசி பக்கத்தில் அதே படத்தை ஒவ்வொருவரின் முகத்தை கிளாஸ்-அப் ஷாட்டில் அதே வசனங்களுடன் முடித்த விதத்தை மிகவும் ரசித்தேன்!

    ஆனால் பெயரளவில் ரேஞ்சர் என உள்ள லோன் ரேஞ்சர் பெரியதாக சாகசம் செய்யவில்லை! முகமுடி மற்றும் துப்பாக்கியை வைத்து கொண்டு பூச்சாண்டி காட்டுவது சிக்கன் பிரியாணி விருந்து என சாப்பிட உட்கார்ந்தால் தக்காளி சாதம் பரிமாறியது போன்ற ஏமாற்றம்!

    செல்வம் அபிராமி சொன்னது போல் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது! ஆமாம் பெயரளவில் ரேஞ்சர் ஆனால் இயல்பான மனிதர்களிடம் இருக்கும் ஒரு ஆக்ரோஷம் அல்லது பழி வாங்கும் குணம் இல்லை! செனட்டரை தேடி வந்து இறுதியில் அவரை பெரிதாக ஒன்றும் செய்யாமல் செல்வது பெரிய ஏமாற்றம்!

    தகிக்கும் பூமி - அழகான வாசனை மலர்கள் பல உள்ளன ஆனால் அவற்றை வலுவான நாரில் கட்டி பூமாலையாக்க தவறி விட்டார் கதாசிரியர்!

    ReplyDelete
    Replies
    1. ///பெயரளவில் ரேஞ்சர் என உள்ள லோன் ரேஞ்சர் பெரியதாக சாகசம் செய்யவில்லை///--

      அதே....அதே...!!

      Delete
    2. விமர்சனங்களில் பின்றீங்க PfB!

      Delete
    3. நாளைக்கு நேருக்கு நேர் விமர்சனம் போடலாம் என உள்ளேன் விஜய் :-)

      Delete
  49. ஜெரெமயா 2 (பேரழிவுக்கு பிந்தைய பூமி):
    மிரண்ட விழிகள்- கதிரியக்கத்தால் மியூட்டேட் ஆன குரங்கு, அந்த கதைக்களம் ; யுகமெல்லாம் பரிசோதனைகளே- இளமை கிளினிக் கதை இவையெல்லாம் ஹெர்மானின் அசாத்திய படைப்புகள்... atleast என்னளவிலாவது...

    அமாயா இதற்கு அருகில் நெருங்கக்கூட முடியாது.

    வாய்ப்பு இருந்தால் ஜெரெமயாவை ஒவ்வொரு ஆல்பமாகவாச்சும் வெளியிடலாம்..

    ReplyDelete
  50. // And 3 ஸ்பெஷல் இதழ்கள் உண்டு இந்தப் புத்தகவிழா வேளையினில் என்பது கொசுறுச் சேதி! //

    இது நியூஸ்! செம!!

    அந்த மூன்று புத்தகங்கள் வேலை பளுவின் காரணமாகத்தான் இங்கு நீங்கள் அடிக்கடி தலை கட்டாததன் காரணமா! அறிவரசு நோட் திஸ்!

    அந்த மூன்றில் ஒன்று டெக்ஸ் ரெண்டாவது லக்கி லூக் மூன்றாவது ARS என நிறைகிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. ஒன்று லக்கி லூக் கௌபாய் எக்ஸ்பிரஸ் தான். மற்ற இரண்டும் டெக்ஸ், ARS கிடையாது, ஏனென்றால் அவை இரண்டும் சந்தாவில் வருகிறது. ஸ்பெஷல் வெளியீடுகள் இல்லை

      Delete
    2. கென்யா, ஒற்றை நொடி ஒன்பது தோட்டா, route 66

      Delete
    3. கௌபாய் எக்ஸ்பிரஸ்
      ஒற்றை நொடி ஒன்பது தோட்டா
      டெக்ஸ்/old hero மறுபதிப்பு

      Delete
    4. //கென்யா, ஒற்றை நொடி ஒன்பது தோட்டா, route 66//
      யாரும் எதிர்பாராதது....முழுதும் புதிய நாயகர்கள்....வந்தா பட்டய கிளப்புமே

      Delete
    5. கென்யா,

      ஒற்றை நொடி ஒன்பது தோட்டாலாம் --
      5 பாகங்கள் , 4பாகங்கள் என நீளும் கதைகள்.

      எடிட்டர் சாருக்கு நேரம் வேணும் ஃப்ரெண்ட்ஸ்.

      3 சிங்கிள் ஆல்பங்களை எதிர்பார்ப்போம்.

      1.கெளபாய் எக்ஸ்பிரஸ்

      2.டெக்ஸ் மறுபதிப்பு

      3.ஏதாவது சஸ்பென்ஸ் ஹீரோவின் சாகசம்.

      Delete
    6. // அறிவரசு நோட் திஸ்! //
      நோட்டியாச்சி PFB...

      Delete

    7. கென்யா - 6 பாகம்
      மெபிஸ்டோ - 5 பாகம் (முழு வண்ணத்தில்)
      ஒற்றை நொடி ஒன்பது தோட்டா - 6 பாகம்

      (கற்பனை நம்மோடதுதானே..!:-))

      Delete
    8. ///3 சிங்கிள் ஆல்பங்களை எதிர்பார்ப்போம்.

      1.கெளபாய் எக்ஸ்பிரஸ்

      2.டெக்ஸ் மறுபதிப்பு

      3.ஏதாவது சஸ்பென்ஸ் ஹீரோவின் சாகசம்.///


      மிகச் சரி...!

      Delete
    9. // ARS கிடையாது, ஏனென்றால் அவை இரண்டும் சந்தாவில் வருகிறது. //

      ARS ரெகுலர் சந்தா இதழ் என்றாலும் சஸ்பென்ஸ் ஆக புத்தக திருவிழாவில் இறக்கினால் ஒரு மெகா ஹிட் + விற்பனையில் சாதிக்க மிக சரியான தருணம் இது ஜி!

      மறுபடியும் 2 டெக்ஸ் புத்தக திருவிழாவில் என்றால் என்னால் தாங்க முடியாது :-)

      எனவே ஒரு டெக்ஸ் மறுபதிப்பு + லக்கி லூக் + ஏதாவது ஒற்றை ஆல்பம்! (அது ARS ஆக இருக்க வாய்ப்பு அதிகம்) அல்லது கென்யா :-)

      Delete
    10. // மறுபடியும் 2 டெக்ஸ் புத்தக திருவிழாவில் என்றால் என்னால் தாங்க முடியாது :-) //
      நீங்களே இது போன்று நினைப்பது வியப்பையும்,ஆச்சிரியத்தையும் ஏற்படுத்துகிறது PFB...!!!

      Delete
    11. தற்போதைய நிலையில் முழு வெற்றிக்கான அடையாளத்தை அளிப்பதே டெக்ஸ் இதழ்கள்தானே...!!!
      ஆசிரியருக்கு தேவையானதும் அதுவே...

      Delete
    12. //ஏதாவது சஸ்பென்ஸ் ஹீரோவின் சாகசம்//

      முதலைப்பட்டாளம் - ப்ருனோ ப்ரேஸில்

      Delete
    13. டெக்ஸ் எனக்கு எப்போதும் அளவோடு இருப்பதே பிடிக்கும் என்பதே காரணம் அறிவரசு.

      Delete
    14. கண்ணா @ கார்டூன் 5 புத்தகங்கள் கொண்ட பாக்ஸ் செட். அதில் ஸ்மர்ப்ஸ், ரின் டின் கேன், லியார்டினோ, மதியில்லா மந்திரி மற்றும் சுட்டி லக்கி கற்பனைக்கு எல்லை எல்லாம் கிடையாது :-) எப்பூடி :-)

      Delete
    15. // தற்போதைய நிலையில் முழு வெற்றிக்கான அடையாளத்தை அளிப்பதே டெக்ஸ் இதழ்கள்தானே...!!!
      ஆசிரியருக்கு தேவையானதும் அதுவே... //

      உண்மை தான். ஓரு லக்கி இவரும் விற்பனையில் டெக்ஸ்க்கு சளைத்தவர் இல்லை + டெக்ஸ் + புதிய சிங்கிள் கதை :-)

      Delete
    16. PFB@ 2டெக்ஸ் கதைகள் என யாரும் சொல்ல வில்லை. 2 என்பது வரிசை எண். ஏன் இந்த குழப்பம்!

      1 லக்கி+ 1 டெக்ஸ்+ 1 சந் தாவில் வாய்ப்பு இல்லாத ஹீரோ வின் புதிய கதை (நண்பர் முகைதீன் சொன்ன மாதிரி முதலை பட்டாளம்) என இருந்தால் எல்லாம் ok.

      Editor sir கையை பலப்படுத்த டெக்ஸ் சோ சிம்ப்ள்ஸ்.

      இருக்கும் 3 குண்டு புக்ஸ் ல ஒரு மாதம் தோர்கள், மறு மாதம் ARS , கடைசி மாதம் பிரள்யம் என்பது santha வரிசை. இதில் எப்படி மாற்றம் கான?? பிறகு பிப்ரவரியில் சந்தா ரசிகர்களுக்கு எதை தர???
      😀😀😀😀

      Delete
    17. /// ஏதாவது ஒற்றை ஆல்பம்! (அது ARS ஆக இருக்க வாய்ப்பு அதிகம்) அல்லது கென்யா :-)///

      ????? 2020இல் மீதி இருக்கும் புக்ஸ் வைத்து 3 மாதங்கள் ஒட்டனும். 7or 8புக்ஸ் தான் இருக்கும். அதில் ஒன்றை இப்போ தர இயலாது என நினைக்கிறேன்.சோ ARS no சான்ஸ்.

      Delete
    18. // மற்ற இரண்டும் டெக்ஸ், //

      இது நமது குமாரின் பின்னூட்டம் விஜயராகவன். அதன் காரணமாகவே எனது கருத்தை பதிவிட்டேன் :-)

      Delete
    19. // ARS no சான்ஸ். //

      இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு காத்துக்கொண்டு இருப்பேன் :-)

      Delete
    20. // இது நமது குமாரின் பின்னூட்டம் விஜயராகவன். அதன் காரணமாகவே எனது கருத்தை பதிவிட்டேன் :-) // பரணி ஒன்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சொன்னது 3 இதழ்களில் ஒன்று லக்கி, அது போக மற்ற இரண்டு இதழ்களில் ஒன்று டெக்ஸ் ஆகவோ மற்றும் ஒன்று அர்ஸ் மேக்னா ஆகவோ இருக்க வாய்ப்பு இல்லை என்று தான் சொல்லி இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை படித்து பார்க்கவும்.

      Delete
    21. இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன் குமார். நன்றி.

      Delete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. அமாயா ஐய்யய் ேயா ரேஞ்சர்.ே வேண்டாம்

    ReplyDelete
  53. எனது வரிசை
    1.2132 மீட்டர்கள்
    2.சதியின் மதி
    3.தீபாவளி மலர். அவ்வளவே....

    ReplyDelete
    Replies
    1. கீழ போட்டிருக்குறது சரி!!

      2132 மீட்டர்..சரி

      2132 மீட்டர்கள்... தப்பு

      அளவைகளுக்கான அலகுகளை பன்மையில் குறிப்பிடுவது மரபல்ல..

      சென்னை - திருச்சி 300 கிலோமீட்டர்
      சரி

      300 கிலோமீட்டர்கள் ..சரியல்ல..

      ஈவியின் உயரம் ஆறு அடி 2 அங்குலம்- சரி

      6 அடிகள் 2 அங்குலங்கள்..சரியல்ல

      ப்ராம்ப்டர் பண்ணின தப்புக்கு இவ்வளவு பெரிய லெக்சர் தேவையாங்கறீங்களா?

      இரண்டு அடி 3 அங்குலம் உள்ள ஒரு ஸ்கேலாலே ரெண்டு அடி அடிச்சதா நினைச்சுக்குங்க! :-)

      Delete
    2. விட்டுருங்க செல்வம். பாவம் இனிமேல் இப்படி எழுத மாட்டார் நமது பழனி :-)

      Delete
  54. சிறந்த அட்டைப்படம்

    2132 மீட்டர்

    ReplyDelete
  55. புத்தக திருவிழாவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்....

    ReplyDelete
  56. 2.இந்த ஆண்டின் சிறந்த அட்டைப்படம்
    நிறைய உள்ளது ஒன்றுதான் என்பதால்
    2132 மீட்டர்

    ReplyDelete
  57. 3.நடப்பாண்டின் மறக்க முடியாத இதழ்(கள்)

    பனி அசுரர் படலம்
    ஆர்ச்சியை கலரில் பார்த்தது ரசித்தது இந்த ஜென்மத்தில் மறக்க இயலாது

    கண்ணே கலைமானே

    என் சொந்த வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை ஒத்திருந்ததால் இந்த புத்தகத்தையும் மறக்கவியலாது

    ReplyDelete
  58. 4.2020 ல் நமது காமிக்ஸ் பயணம்

    Brilliant

    இந்த கொரோனா காலத்திலும் எங்களிடம் காமிக்ஸை கொண்டு சேர்க்க நீங்கள் பட்ட கஷ்டம் எடுத்துக்கொண்ட சிரத்தைக்கு ஒரு மெகா சல்யூட்

    ReplyDelete
  59. 1)நில் கவனி வேட்டையாடு, கண்ணான கண்ணே, டெமக்கலீஸ்.... என்னளவில்
    2) தீபாவளி வித் டெக்ஸ்
    3) கண்ணான கண்னே - சமீபத்தில் மாரடைப்பில் இறந்த என் மைத்துனருடைய ஒரே சிறு வயது மகளின் மனோஇயல்பை அப்பட்டமாக பிரதிபலிப்பதால்
    4) Brilliant- இந்த சங்கடமான காலகட்டத்திலும் முடிந்தளவு இதழ்களை வெளியிட்டதிலும், லாக்-டவுன் நேரங்களை கலகலப்பாகவும் ஒவ்வொருவரின் தனித்திறமைகளை வெளிச்சம் போட்டு காட்டியதிலும்
    5) லோன் ரேஞ்சர்- இன்னும் சில இதழ்கள் போகலாமே
    6) அமாயா அம்மணி- தாராளம் ஹிஹி ஆனால் டாட்டா காட்டலாம்

    ReplyDelete
  60. Dear Editor,

    Chanced to read SODA today (completing my backlogs in this vacation week). Just amazing. As much as it is a good time pass - the side track comedy (like the ones in the park, the ones by the various killers etc which actually reminded me of the side gigs in Leonardo) make it a pleasant entertainer !!

    Definitely going to be a hit in the coming years !!

    ReplyDelete
    Replies
    1. /// the side track comedy (like the ones in the park, the ones by the various killers etc which actually reminded me of the side gigs in Leonardo) make it a pleasant entertainer !!

      Definitely going to be a hit in the coming years !!///


      Yes.. Yes..!

      +1

      Delete
    2. ஸோடா ஒரு டாப் கிளாஸ் இதழ்...

      டாப் 3 -ல இதை கொண்டு வரலாமான்னு யோசனை இருந்துச்சு..

      ஆனா பொன் தேடிய பயணம் ஆரம்பத்துலர்ந்து முடியற வரைக்கும் அகலமா சிரிக்க வச்சதால அதுக்கு இடம் கொடுத்தாச்சு...எடிட்டரின் மிக சிறந்த மொழிபெயர்ப்புகளில் ஒன்று..லக்கி லூக் வரிசையில்..

      Delete
    3. Soda - இந்த வருடத்தின் மிகச்சிறந்த அறிமுகம். 2022 முதல் இரண்டு மூன்று கதைகள் இணைந்து ஒரு ஆல்பமாக வந்தால் நன்றாக இருக்கும்.

      Delete
  61. சார் 
    இப்பொழுது படித்து முடித்தது - ஆர்ச்சி இருக்க பயமேன். வந்த புதிதில் ஏனோ படிக்க மனம் செல்லவில்லை. இப்போது ரிலாக்ஸ் செய்து படிக்கையில் - simply superb. பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுத்தது. ஆர்ச்சியின் ரகளை வசனங்கள் டாப் கிளாஸ். 
    வழக்கமாக ஸ்பைடர் தவிர சந்தாவில் வந்த லாரன்ஸ்-டேவிட், மாயாவி இத்யாதிகளை கடாசி விடுவேன். ஆனால் இவ்வருடமோ - மீண்டும் கிங் கோப்ரா, சர்ப்பத்தின் சவால் மற்றும் ஆர்ச்சி இருக்க பயமேன் ஆகியவை மிகவும் பிடித்தது - may be just silly entertainers என்பதனால் இருக்கலாம் ! :-)

    ReplyDelete
  62. 1.A.தீபாவளி வித் டெக்ஸ்.
    B.பிரிவோம் சந்திப்போம்.
    c.தகிக்கும் பூமி

    ReplyDelete
  63. 2.தீபாவளி வித் டெக்ஸ்.

    ReplyDelete
  64. 3.தனித்திரு...தணிந்திரு.

    ReplyDelete
  65. 4.Brilliant.
    5.லோன் ரேஞ்சர்- தொடரலாம்.
    6.அமாயா -வேண்டும்.

    ReplyDelete
  66. அந்தியின் ஒரு அத்தியாயம் 
    இப்போதான் படிச்சேன் - கதை சூப்பர். பிரிவோம் சந்திப்போமைவிட இக்கதை நன்றாக இருந்ததாய்ப் பட்டது. ஒரு கிளாசிக் வெஸ்டர்ன் சினிமா பார்த்த effect. முத்து காமிக்ஸ் மெயின் lineல் வந்திருக்க வேண்டியது.

    ReplyDelete

  67. 1. 2020ல் களம் கண்டுள்ள இதழ்களின் மொத்த எண்ணிக்கை: -46 !! இவற்றுள் உங்களின் Top 3 எவையோ ?

    SODA
    Maa tuje Salaam
    Kanavae kalyathae

    2. நடப்பாண்டின் Top அட்டைப்படம் எதுவோ? Just one ப்ளீஸ் ?
    Spider

    3. நடப்பாண்டின் மறக்கவியலா இதழ் என்று குறிப்பிட ஏதேனும் உள்ளதா? Again – ஒரேயொரு தேர்வு மட்டும் ப்ளீஸ்?
    Maa tuje Salaam

    4. இந்தப் 12 மாதங்களின் ஓட்டத்தினில் நமது காமிக்ஸ் பயணத்தை எவ்விதம் rate செய்வீர்கள்?

    - Brilliant - OK - Not Bad - அடங்கப்பா…!

    Ok


    5. தி Lone ரேஞ்சர்: இவர் தொடர்ந்திடப்பட வேண்டியவரா? தற்காலிக VRS வழங்கப்பட வேண்டியவரா?

    No, VRS for now

    6. புயட்சிப் புயழ் அம்மினி: தொடரலாமா? டாட்டா காட்டலாடமா?

    Yes, thodaralam

    ReplyDelete
  68. எப்பவுமே தல டெக்ஸ் is the பெஸ்ட்

    அவரை விட்டுட்டு பாத்தா..

    1) நில் கவனி வேட்டையாடு
    2) கால வேட்டையர்
    3) கால்வின் வாக்ஸ்
    4) தானைத்தலைவர் ஸ்பைடரின் சர்ப்பத்தின் சவால்
    5) ஆர்ச்சியின் - பனி அசுரர் படலம்
    6) Lone Ranger - ஆர்ட் வொர்க் அட்டகாசம்

    எனக்குப் பிடித்திருந்தது.

    ReplyDelete
  69. எடிட்டர் சார் 
    கம்பி நீட்டிய குருவி எப்போ வரும்?
    dr நோ இன்னும் வரலை தானே ?
    (விண்ணில் ஒரு வேதாளம் படிச்சிக்கிட்டிருக்கேன் - அதான் டவுட்டு வந்திச்சு :-D )

    ReplyDelete
  70. பெருமதிப்பிற்குறிய ஆசிரியர் சார் மற்றும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! மேலும் சேலம் டெக்ஸ் விஜயராகவன் சாருக்கும், அடுத்த வருட சந்தாவை எனக்கு இலவசமாக வழங்கியுள்ள, பெயரும் முகமும் அறியாத அந்த சாருக்கும் கோடி நன்றிகள்!

    மொபைல் இல்லாத காரணத்தால், நான் இந்த வலை பக்கத்தில் கமெண்ட் பதிவுகளை போட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. கோரோனாவினால் 8 மாதங்களாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்தேன். நான் வேலை பார்த்து வந்த ஓட்டல் 2 மாதங்கள் மட்டுமே மூடி இருந்தது. மே மாத இறுதியில் கடையை திறந்துவிட்டார்கள். ஆனால் வேலைதான் கொடுக்கவில்லை. வேலை கேட்டு வந்த போதெல்லாம் "வியாபாரம் இல்லை, வியாபாரம் நல்லா அமைஞ்சதும் கூப்புடுறோம்" என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். மார்ச் மாத சம்பளமும் முழுதாக கொடுக்காமல் பாதி பாதியாக 3 தவணைகளில் கொடுத்த காரணத்தால், 2020 சாந்தாவின் இரண்டாவது தவணையை கட்ட முடியாமல் போய்விட்டது. அக்டோபர் 30-ம் தேதிதான், எங்கள் கடையின் வேறொரு கிளையில் வேலைக்கு அழைத்தார்கள். ஆனால், அரை சம்பளம் தான் கொடுக்கிறார்கள்.

    பல கவலைகளோடு நான் கடையில் அமர்ந்து இருந்த போதுதான் சேலம் டெக்ஸ் விஜயராகவன் சார் கடைக்கு வந்தார்.அவரை பார்த்ததும் எனக்கு மேலும் கவலை அதிகமானது. ''நான் சந்தாவின் இரண்டாம் தவணை காட்டாமல் விட்டது லயன் ஆபீஸ் மூலமாக இவருக்கு தெரிந்திருக்குமோ. காரணம் கேட்க வந்திருக்கிறாரோ.'' என்று நினைத்துக் கொண்டு அவரை வரவேற்றேன். என் சூழ்நிலையை இவரிடம் எடுத்து சொல்ல வேண்டும் என தோன்றியது. ஆனால் வேலை நேரத்தில் அதற்கு வழியில்லாமல் போய் விட்டது.

    அவர் என்னை பார்க்க வந்த அன்று வரை நான் அடுத்த ஆண்டின் சந்தாவை எப்படி கட்டுவது என்று முடிவெடுக்க முடியாமல் இருந்தேன். காரணம், இந்த லாக்டவுன் நேரத்தில் எனக்கு நாற்பதாயிரம் ரூபாய் லோனுக்கு வட்டி கட்டவேண்டிய நிலைமை உண்டாகிவிட்டது. என்ஜின் ஆயில் மாற்றாமால் விட்டதில் ஜூன் மாதத்தில் என் ஸ்கூட்டியின் என்ஜின் பழுதாகிவிட்டது. அதை சரி செய்ய 15 ஆயிரம் லோன் கேட்க அம்மாவை அழைத்துக் கொண்டு மேட்டூர் LIC-க்கு சென்ற போது, அங்கிருந்த ஊழியர் என் அக்கவுண்டிற்கு 39700 எலிஜிபில் என்று சொல்லிவிட, அந்த முழு தொகைக்கும் லோன் போடும்படி என் அம்மா வற்புறுத்தி விட்டார்கள். வண்டி என்ஜினுக்கும், புதிய பேட்டரிக்கும், பிற செலவுகளுக்கும் சேர்ந்து வண்டிக்கு 12 ஆயிரம் செலவாக, மீதி 27 ஆயிரம் வீட்டு செலவுக்கு போய் விட்டது.
    இப்போது.. முழு வட்டியும் நானே கட்ட வேண்டும், LIC PREMIUM தொகையும் கட்ட வேண்டும், ரூம் வாடகையும் கட்ட வேண்டும், வண்டிக்கு பெட்ரோல் செலவும் உண்டு, ஒரு புதிய மொபைல் போனும் வாங்க வேண்டும். மேற்கண்ட செலவுகள் அலைக்கழிக்கும் போது, காமிக்ஸ் சந்தாவை கட்ட எப்படியாவது ஏற்பாடு செய்ய வேண்டுமே என்று விழி பிதுங்கிக் கொண்டிருந்தேன்.

    அந்த நேரத்தில் தான், கடவுளே வந்து குறையை தீர்த்து வைத்தது போல, கடவுளைப் போலவே எங்கோ மறைந்திருக்கும் ஒரு சார் அவர்கள், சேலம் டெக்ஸ் விஜயராகவன் சாரை அனுப்பி வைத்து என் குறையை தீர்த்து விட்டார். அவருக்கும், விஜயராகவன் சாருக்கும் எனது கோடி கோடி நன்றிகள்!!

    சேலம் டெக்ஸ் விஜயராகவன் சார் என்னை பார்க்க வந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டது. இத்தனை நாட்கள் தாமதமாக, தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்கு மன்னித்து விடுங்கள், விஜயராகவன் சார்! உங்களிடம் நான் காண்பித்த மொபைலுக்கு, சரி செய்ய முடியாத நிலை உண்டாகிவிட்டது. ஒரு புதிய மொபைல் வாங்க எப்ரலில் தான் வழி கிடைக்கும். ஆனால், உங்களுக்கு ஒரு நன்றியை இந்த லயன் வலைத்தளத்தில் தெரிவிக்க ஒரு வாய்ப்பு கிடைக்க வழி தெரியாமல் இருந்தேன். ஓட்டல் மேனேஜர் லீவு போட்ட இன்று, இதற்கு ஒரு வழி கிடைக்க, ஓட்டல் கம்ப்யூட்டரை பயன்படுத்தியுள்ளேன். ஏப்ரல் மாதம் முதல் வழக்கம் போல புதிய புத்தகங்களை பற்றிய கருத்துக்களை வெளியிடுவேன்.

    மேலும், இந்த வலைத்தளத்தில் உலா வரும் காமிக்ஸ் பிரியர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    மீண்டும், விஜய ராகவன் சாருக்கும், சந்தாவை அன்பளிப்பாக வழங்கியுள்ள சாருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள்!! கோடி கோடியாய்..!! மில்லியன், பில்லியன்களாய்...!!!

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சம் நெகிழ்ந்த நிகழ்வு.

      Delete
    2. உங்கள் நிலைமை புரிகிறது ஜெகன்.

      கவலை வேண்டாம். நாங்கள் உங்களுடன் உள்ளோம். அனைத்தும் விரைவில் சரியாகும்.

      Delete
    3. மாம்ஸ் விஜயராகவனுக்கும் அந்த நல்ல மனம் கொண்ட நண்பருக்கும் காமிக்ஸ் (கார்ட்டூன்) ரசிகர்கள் சார்பாக கோடானுகோடி நன்றிகள்.!

      எதிர்காலம் இனிதாய் அமையட்டும் ஜெகத்குமார்.!

      Delete
    4. ஜெகத்குமார் 2021 நலமாக அமைய வாழ்த்துக்கள் சந்தா பரிசளித்து காமிக்ஸ் ரசனையை வளர செய்த செய்கிற நல்ல உள்ளங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

      Delete
    5. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் ஜெகத்குமார்!

      உதவிய அந்த அன்புள்ள அநாமதேயரே கூட - தான் செய்த உதவி இந்த அளவுக்கு உதவிகரமாய் அமையுமென்று எதிர்பார்த்திருக்க மாட்டார் தான்! சரியான தருணத்தில் மிகச் சரியான உதவி!! பெருமையும், மகிழ்ச்சியும் நெஞ்சை நெகிழச் செய்கிறது! கரம் கூப்பிய நன்றிகளும், வாழ்த்துகளும் அநாமதேயரே!! நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க! அங்கிருந்தே வாழ்க!

      நண்பர் ஜெகத்குமார் தன் பணியிடத்தை மாற்றியிருந்தபோதும், தேடிச் சென்று நண்பரின் நிலையறிந்து அநாமதேயரின் உதவி கிடைக்க பெரும் உறுதுணையாய் இருந்த நண்பர் STVR க்கும் என் வாழ்த்துகளும், நன்றிகளும்!

      ஜெகத்குமாரைத் தேடிப் பிடிக்கும் பணி என்னிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நான் அதைச் செய்ய எத்தனிக்கும் முன்பே மின்னல் வேகத்தில் அதை செயல்படுத்தித் தகவல்களை அளித்து என் வேலையைச் சுலபமாக்கிய STVRக்கு எக்ஸ்ட்ரா நன்றிகள் சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறேன்!

      இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!!
      🙏🙏🙏🙏🙏🙏

      Delete
    6. // மின்னல் வேகத்தில் அதை செயல்படுத்தித் தகவல்களை அளித்து என் வேலையைச் சுலபமாக்கிய STVRக்கு எக்ஸ்ட்ரா நன்றிகள் //

      Yes. Much appreciated his efforts.

      Delete
    7. அழகான பதிவு ஜெகன். நண்பர்கள் டெக்ஸ் விஜயராகவன் மற்றும் முகம் தெரியாத அந்த நண்பருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள். Lion is a family.

      Delete
    8. """""Lion is a family"""""

      ஜெகத்@ கவலை வேணாம். காலம் மாறும். எதிர்காலம் இனிதாக அமையட்டும்.

      Delete
    9. நண்பர்களே @ அநாமதேய நண்பரின் உதவி ஜெகத்துக்கு கிடைக்க செய்ய எடிட்டர் சாரிடம் வேண்டுகோள் வைத்து விட்டு,
      ஜெகத்தை தேடிப்பிடிக்கும் பணியை என்னிடமும் , ஈவியிடமும் ஒப்படைத்து இருந்தது நம்ம நண்பர் பெங்களூரு பரணி!

      இந்த நல்ல விசயத்தில் என் பணி வெறும் போஸ்ட் மேன் தான்.

      ஜெகத்தின் நன்றிகள் & நண்பர்களது பாராட்டுகள் அனைத்தும் சேரவேண்டியது நண்பர் பெங்களூரு பரணிக்கே!

      இந்த நல்ல விசயத்தில் ஒரு கருவியாக இருந்தது எனக்கு மனிநிறைவை தந்து இருந்தது.

      முகம் தெரியாத நண்பருக்கு எனது வாழ்த்துகளும்💐💐💐

      நண்பர் ஜெகத்துக்கு மேற்கண்ட சந்தாவை ஒதுக்கிய நம்ம அன்பின் எடிட்டர் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏

      Delete
  71. நாளைய இரவு புத்தாண்டு பதிவில் ஜனவரி மாத புத்தகங்கள் அனுப்பியாச்சு என சொன்னால் எப்படி இருக்கும்:-)

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டின் முதல் இனிய செய்தி அதுதான்...

      Delete
    2. நானும் தோர்கலுக்காக அதுவும் பாக்ஸ் செட்டா அல்லது ஹார்ட் பௌன்டா என சஸ்பென்ஸ் உடன் :-)

      Delete
    3. எல் பட்சியே சொல்லியாச்சு....அதப்போடலாம்னு இங்க வந்தா நீ கனவு காணும் காட்சி...

      Delete
    4. புத்தாண்டு பதிவு நிச்சயமாக வரும். புத்தகங்கள் பொங்கல் லீவுக்கு வரும்னு நினைக்கிறேன்.

      டிசம்பர் புத்தகங்கள் எல்லா நண்பர்களுக்கும் கிடைக்க போதிய அவகாசம் வேணும் தானே????

      தோர்கல்- குண்டுபுக்காக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

      பாக்ஸ் செட்டா????
      ஒரே தொகுப்பா???

      சஸ்பென்ஸ் தொடருது!!!!

      புத்தாண்டு பதிவுல இதற்கு விடை தெரிஞ்சா கூட மகிழ்ச்சி😍😍😍😍

      Delete
    5. புத்தாண்டு பதிவுவை சிறப்பிக்க தோர்கல் டீசர் வந்தால் நன்றாக இருக்கும்.

      Delete
    6. செல்வம் அபிராமி @ இந்த ஸ்டீலுக்கு கொஞ்சம் பாடம் எடுக்க முடியுமா? தோர்கல் என்பதை தோர்கள் என சொல்றான்?

      // தோர்கள பாத்து ரண்டு வருசமாச்சே //

      சரி சரி ஏன் ஸ்டீல் என்ற உடன் தலைதெறிக்க ஓடுறீங்க :-)

      Delete
  72. டியர் நட்பூஸ்!

    கொரோனா பிரச்சினையால் வேலையை இழந்து, பொருளாதாரம் நலிவடைந்து மிகுந்த மனப்புழுக்கத்தில் உள்ள நம் நண்பர்கள் இன்னும் நிறைய எண்ணிக்கையில் இருக்கத்தான் செய்கிறார்கள்! தற்போதைய சூழலில் அவர்கள் தங்களைத்தாங்களே மீட்டெடுக்க நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தில் ஓரளவு வெற்றி கண்டுகொண்டிருந்தாலும், நிலைமை சீரடைய இன்னும் பல மாதங்கள் பிடிக்குமென்பதே நிதர்சனமான உண்மை! அந்த நண்பர்களின் தற்போதைய சூழ்நிலைகளை பிரதிபலித்திடும் கண்ணாடியாக நண்பர் ஜெகத்குமாரின் இந்தப் பதிவை எடுத்துக் கொண்டோமேயானால் நிச்சயம் அது மிகையல்ல தான்!

    அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருக்கும் நண்பர்கள் இருவரை இன்று நான் தொடர்பு கொண்டு பேசியபோது அவர்களில் ஒருவர் "ரேஷன் கடையில் 2500 ரூபாய் பணம் கிடைக்கப்போகுதுங்க ஜி! அதை வச்சு அடுத்தவருட சந்தாவைக் கட்டிடலாம்னு இருக்கேன்" என்றார்!

    மற்றொருவரோ "கொரோனாவால் வேலையை இழந்துவிட்டேன். வேறு வழியின்றி தற்போது சுயதொழிலில் இறங்கியிருக்கிறேன். எப்படியாவது மீண்டுவிடவேண்டுமென்ற முனைப்பிலேயே இரவும் பகலும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்" என்கிறார்!

    இன்னும் எத்தனைபேர் இதுபோல மனப்புழுக்கத்தில் உழல்கிறார்களோ - மனிடோவிற்கே வெளிச்சம்!!

    இயன்ற நண்பர்கள் யாரேனும் மேற்கூறிய நண்பர்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ சந்தா பரிசளித்து உதவிக்கரம் நீட்ட முடிந்தால் என் வாட்ஸ்அப் நம்பர் 7598325050ஐ தொடர்பு கொள்ளுங்கள்.. அவர்கள் யாரென்ற விவரங்களைச் சொல்கிறேன்.. முடிந்தால் உதவுங்கள் ப்ளீஸ்!

    ReplyDelete