Monday, November 09, 2020

தீபாவளி வந்தாச்சூ !!

 நண்பர்களே,

வணக்கம். "தீபாவளி வாரமிதுடோய்" என்பதை அழுத்தம் திருத்தமாய் உணர்த்தும் விதமாய் தெறிக்கத் துவங்கிவிட்டுள்ளது சிவகாசி பஜார் ! And நம் பங்குக்கு குண்டு குண்டான கூரியர் டப்பிக்கள் சகலத்தையும் இன்றைய பகலில் அனுப்பிய கையோடு - அவற்றை இன்றைய லோடிலேயே ஏற்றுவதை உறுதி செய்ய அக்கடவே காவல் நின்று வருகிறோம் ! Maybe புதன்கிழமை வரையிலும் கூரியர் புக்கிங்குகள் வாங்குவார்களென்று தோன்றுகிறது ; அதன் பின்பான பார்சல்கள் எல்லாமே தீபாவளிக்குப் பின்னே தான் இங்கிருந்து புறப்படும் போலும் ! So ஆன்லைனில் ஆர்டர் செய்திட எண்ணும் நண்பர்கள் இந்த ஒருமுறை மட்டும் தாமதிக்க வேணாமே - ப்ளீஸ் ! 

ஸ்பைடரும் சேர்ந்த 4 புக்ஸ் கூட்டணியானது - DIWALI '20 Pack என்ற பெயரில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது : 

https://lioncomics.in/product/2020-diwali-pack/

https://lion-muthucomics.com/latest-releases/649-2020-diwali-pack-.html

"ஸ்பைடர் வேணாம்" என்போருக்கும் ; ஏற்கனவே அதற்குப் pre-booking செய்துவிட்டோருக்கும், ஸ்பைடர் இல்லாத 3 இதழ்கள் "NOVEMBER '20 Pack" என்ற பெயரினில் இருந்திடும் : 

https://lioncomics.in/product/2020-november-pack/

https://lion-muthucomics.com/latest-releases/650--2020-november-pack.html


So ஒரு வழியாய் எங்களின் அந்தப் 17 நாள் மெகா குட்டிக்கரணங்களின் பலன்களை  உங்களிடம் ஒப்படைத்தாச்சூ !! நாளையோ, மிஞ்சிப் போனால் அதன் மறு நாளோ உங்களை அவை எட்டிப்பிடித்திட வேண்டும் ! சூட்டோடு சூடாய் புக்ஸைப்  படிக்க  நேரம் ஒதுக்குவது சிரமமே என்பது புரிகிறது ; maybe புரட்டிப் பார்க்க ; தடவிப் பார்க்க ; மேலோட்டமாய் ஒரு வாசிப்பு விட முனைந்திட்டால் தொடரும் நாட்கள் இங்கு சுவாரஸ்யமாகிடும் ! 

அப்புறம் போன மாதத்து early birds-களுக்கு வாக்குத் தந்தபடியே ஸ்பாஞ் கேக்குகளும் ; ப்ளம் கேக்குகளும், இன்றைக்கு புறப்பட்டாச்சு ! இம்முறை - இந்தப் பண்டிகை மாதத்து மெகா டெக்சினுள் முந்திக்கொண்டு மண்டையை நுழைப்போர்க்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகைப் போட்டுத் தாக்கிடலாமா ?  Sweet Reading folks !!

336 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கள் ஆசிரியரே வார வாரம் முதலிடத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறீர்கள்

      Delete
    2. செல்லாது செல்லாது 🤷🏻‍♂️
      .

      Delete
    3. முதலிடத்தை அலங்கரிப்பது மட்டுமின்றி செயலாளரிடமிருந்து அபகரித்துக் கொண்டிருக்கிறீர்கள்

      Delete
    4. வாழ்த்துகள் எடிட்டர் சார்🌹🌹🌹🌹🌹

      Delete
    5. எப்படி சார் இப்ப எல்லாம் மொத வாசகராய் பதிவில் முந்தி விடுகிறீர்கள்..

      அந்த சூட்சமத்தை தான் கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்..:-)

      Delete
    6. அதெப்படிங்க எடிட்டர் சார், ஆசிரியர் பதிவு போடுற டைம் உங்களுக்கு மட்டும் தெரியுது.:-)

      Delete
    7. செல்லாது,செல்லாது...

      Delete
  2. VOW!!! Super Sir!!! Waiting for Diwali Saravedi :-)

    ReplyDelete
  3. அரேயோ சம்போ....ஆளில்லாத கடையிலே ஞான டீ ஆத்துது !

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் வந்து விட்டோம் சார் டீ ஆற்ற

      Delete
    2. கொஞ்சம் கொஞ்சமாக கூடுது சார்...

      ஆள்களும்...,டீயும்...:-)

      Delete
  4. இதுவரை நமது தளத்திற்கு ஆசிரியராக மட்டும் இருந்தவர் இப்போது பதவி உயர்வு பெற்று முதல்வராகி விட்டார் என்பதைெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் பத்து சார், அதே..அதே..!!!

      Delete
    2. முதல்வனே முதல்வனே என்ற முதல்வன் பட பாடலை இந்த பதிவின் பிண்ணனி இசையில் இணைத்து ரசித்தவாறே படிக்கவும்...;-)

      Delete
    3. ///ஆம் பத்து சார், ///

      டக்'னு படிச்சதுல 'ஆபத்து சார் 'னு படிச்சிட்டேன்.:-)

      Delete
  5. Happy advance Deepavali wishes 😶🐕🎇🎇🎆🎆🎆🎇🎇🎇🎇🎇🎆🎆🎆🎆🎆🎆🎇🎇🎇🎇✨✨✨✨✨✨

    ReplyDelete
  6. வெளியூருல இருக்கிறதால, பார்சல் வந்தாலும் பார்க்க முடியாது... 😤😤😤😤

    ReplyDelete
    Replies
    1. Same pinch. புத்தகம் நாளை சேலம் சென்று சேர்ந்து விடும். நான் வியாழன் காலை தான் சென்று சேரு வேன்

      Delete
    2. அப்படி போடு மைசூர்பா போட்டியில் 2 விக்கெட் காலி!😉😉

      Delete
    3. இரு மேன் சேலம் டிரான்ஸ்ஃபர் வந்த பிறகு உங்களை கவனிக்கிறேன்.

      Delete
  7. நான் தீபாவளிக்கு முன்பே அனைத்து இதழ்களையும் படித்து முடித்து விட்டு வருகிறேன் சார். வியாழன் மற்றும் வெள்ளி லீவ் போட்டு விட்டேன்.

    ReplyDelete
  8. உண்மையிலேயே உங்களால்தான் எங்களுக்கு தீபாவளி மட்டுமல்ல மாத மாதங்கள் களை கட்டிக்கொண்டிருக்கிறது நன்றிகள் ஆசிரியரே

    ReplyDelete
  9. நாங்களும் வந்தாச்சு சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  10. செம்ம கலக்கலா இருக்க போகுது இந்த தீபாவளின்னு பட்சி சொல்லுது சார் 😍😍😍
    .

    ReplyDelete
    Replies
    1. உங்க பக்கத்து ஊர் பச்சிங்களா அய்யா!

      Delete
    2. புரட்டாசி முடிந்த பிறகு உங்க ஊரில் பட்சியை எல்லாம் இன்னும் இருக்கா :-)

      Delete
  11. தீபாவளி வந்தாச்சுடோய்....

    ReplyDelete
  12. யான் க்ரெடிட் கார்டில் ஆர்டர் செஞ்சூ - பக்ஷே பணம் குறைஞ்ச பின்னே ஓட்டோ லோகௌட் ஆகியானு ! ஓபிசுக்கு மெயில் அனுப்பிட்டு !

    ReplyDelete
  13. ஹேப்பி தீபாவளி....🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎇🎇🎆🎇

    ReplyDelete
  14. 22வது தீபாவளிமலர் க்காக வெயிட்டிங்!

    ReplyDelete
  15. Replies
    1. வாங்க இருளின் இரவு கழுகாரே...:-)

      Delete
  16. நானும் தீபாவளி பயணம் வியாழன் அன்று எனவே நாளை இதழ் கைகளுக்கு கிடைத்து விட்டால் அனைத்து இதழ்களையும் ரசித்து விட்டு ஒரு இதழையாவது படித்து முடித்து விடலாம்...


    வெயிட்டிங்...

    ReplyDelete
  17. ////இன்றைய லோடிலேயே ஏற்றுவதை உறுதி செய்ய அக்கடவே காவல் நின்று வருகிறோம்////

    ---ஆஹா நம்ம பொட்டி கொரியர் வண்டில ஏறி இருக்கனுமே சாமி!!!!

    ReplyDelete
    Replies
    1. என் பெட்டி கண்டிப்பாக இருக்கும்.

      Delete
  18. புத்தகம் கிடைக்கப் பெற்ற நண்பர்களுக்கு நாளை தான் தீபாவளி

    ReplyDelete
  19. நாளை முதல் காமிக்ஸ் யாத்திரைக்கு தயார்....:-)

    ReplyDelete
  20. // "தீபாவளி வாரமிதுடோய்" என்பதை அழுத்தம் திருத்தமாய் உணர்த்தும் விதமாய் தெறிக்கத் துவங்கிவிட்டுள்ளது சிவகாசி பஜார் ! //

    WOW! Business is slowly becoming normal!! Good to hear this news :-) Super!!!

    ReplyDelete
  21. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்கி பணிகிறேன்.

    உலகத்தீமை அனைத்தும் வெடித்து சிதறி ஒழிந்து போகட்டும்.

    டெக்ஸ் கதையை படிக்க ஆவலாய்....

    -மாடஸ்டியின் கடைக்குட்டி தம்பி!

    ReplyDelete
  22. நாளை முதல் தீபாவளிக்கு தயார். கசேகரன் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  23. எடுடா மேளம் அடிடா தாளம்

    இனி தான் தீபாவளி கச்சேரி ஆரம்பம் :-)

    ReplyDelete
  24. தாராபுரம் துக்கு நாளை வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். பார்ப்போம் புனித தேவன் மானிடா விட்ட வழி

    ReplyDelete
  25. தீபாவளி போட்டியில நானும் கலந்துக்கலாம்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  26. ஹைய்யா! நாளைக்கு பொட்டி வருது!

    ReplyDelete
  27. தானைத் தலைவன் ஸ்பைடரைத் தரிசிக்க ஆவலாய் உள்ளேன்.
    வாழ்க ஸ்பைடர்.

    ReplyDelete
  28. வந்தேவிட்டது தீபாவளி..
    ஹையா ஜாலி...ஜாலி.

    ReplyDelete
  29. தீபாவளி வெடிகளை பார்க்க மறந்தோம்
    லயன் புத்தகங்களால் மீண்டும் பிறந்தோம்

    ReplyDelete
  30. /// அனைத்து இதழ்களையும் ரசித்து விட்டு ஒரு இதழையாவது படித்து முடித்து விடலாம்///

    இதழில் கதை எழுதும் நேரமிது.

    ReplyDelete
  31. கொரியர் டப்பியை முதலில் கைப்பற்றப்போவது யார்?!!

    தீபாவளி குதூகலத்தை முதலில் எதிர்கொள்ளப் போவது யார்?!!

    விடை - இன்னும் சில or பல நிமிடங்களில்!!

    ReplyDelete
  32. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. //அப்புறம் போன மாதத்து early birds-களுக்கு வாக்குத் தந்தபடியே ஸ்பாஞ் கேக்குகளும் ; ப்ளம் கேக்குகளும், இன்றைக்கு புறப்பட்டாச்சு ! இம்முறை - இந்தப் பண்டிகை மாதத்து மெகா டெக்சினுள் முந்திக்கொண்டு மண்டையை நுழைப்போர்க்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகைப் போட்டுத் தாக்கிடலாமா//
    அதிகாரி கதைதானே!!!
    வடக்கு கமாண்டர் ஒருவர் டேக்ஸின்(இப்போது அவர் அதிகாரி இல்லை) உதவிய நாடுகிறார், பலஆயிரம் உயிர்களைக்காக்கவும் நீதியை நிலைநாட்ட குதிரையில் ஏறிச் சென்று.. டூமீல் டூமீல்.. கும்ம்.. கும்ம்.. இறுதியில் வேற்றி வடக்கிற்கே. சுபம்.
    **பனிவணப் படலம்**
    ரேஞ்சர் அதிகாரி, ராயல் மயுன்ட் அதிகாரியுடன் சேர்ந்து ஸலெட்ஜ் நாய்களின் உதவியுடன் கிளம்பி டூமீல்...டூமீல்.. கும்ம்.. கும்ம்.. இறுதியில் வேற்றி வடக்கிற்கே I mean, வடக்கு நாடான கனடா நீதிக்கே!!!
    (தருமி வாய்சில்) பரிசில் எங்கே, நெய் மைசுர்பாக்குகள் எங்கே??? நாவில் ஜாலம் ஊற்றெடுக்கின்றதே... 1/2 கிலோவா?..1 கிலோவா?.. அல்லது 5 கிலோவா?..மைசுர்பாக்குகள் எங்கே???மைசுர்பாக்குகள் எங்கே???

    ReplyDelete
    Replies
    1. கதையை முழுவதும் படிக்காமல் இது நீங்ளே சொந்தமா கதையை உருவாக்கி சொல்ற கதை மாதிரி தெரியுது :-)

      Delete
    2. வரும் மைசுர்பாக்கிள் பாதி உங்களுக்கு ;)

      Delete
    3. மைசூர் (கொட்டை) பாக்கு கூடக் கிடைக்காது இதுக்கு !

      Delete
    4. பரவாயில்லை, எனக்கு பாக்கு போடும் பழக்கம் இல்லை :D :D :D

      Delete
    5. // வரும் மைசுர்பாக்கிள் பாதி உங்களுக்கு //

      :-)

      நீதிடா நேர்மைடா :-) இந்த போங்கு ஆட்டத்துக்கு நான் வரவில்லை கிரி :-)

      Delete
    6. /!மைசூர் (கொட்டை) பாக்கு கூடக் கிடைக்காது இதுக்கு //

      ROFL

      Delete
    7. புக் வருவதற்கு முன்பே பாயசமா???? கிரி சார் செம்ம செம்ம ஹிஹிஹி

      Delete
  35. S T Courier முக்கியமான நேரத்தில் சொதப்பிடுச்சி....
    என்ன கொடுமை சார் இது....

    ReplyDelete
  36. பெருந்தேவன் மாணிடோவோ, கூழ் குடிக்கும் ஆத்தாவோ எனக்கு நேரத்தில் பொட்டி கிடைக்க அருள்புறிந்ததில்லை. "கூரியர் கூத்துகள்" என நமது கார்ட்டூன் சந்தாவில் புது தொடர் ஆரம்பித்து வுட்சிட்டி குருப்பிற்க்கு டப் கொடுக்கலாம். அவ்வளவு கதை உள்ளது:(

    ReplyDelete
  37. யாருக்கு பொட்டி வந்ததா???

    ReplyDelete
  38. Next month books...

    ஒரு கசையின் கதை- Tex

    நரகத்தின் நம்பர் 13-13வது தளம்

    தகிக்கும் பூமி- lone ranger

    (நன்றி:early birds)

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் டெக்ஸ்

      Delete
    2. Barani and KS@ only 2 cartoon left for 2020!

      கிளிப்டன் & ஹேர்லிக் ஷோம்ஸ்

      But 4 மாதம்கள் பாக்கி..

      So 2 month's without cartoons. That's reality. We have to accept dears.

      In coming days , cartoons 6ம் ஹெல்ட் தெய்ர் பிளேஸ் பண்ணி விட்டால் போதும்.

      Delete
  39. இன்னைக்கு லீவ் போட்டாச்சு. புத்தகத்துக்காக வெய்ட்டிங். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. என்னை விட பயங்கரமான ரசிகராக இருக்கிறாரே

      Delete
  40. வாவ்...எதிர்பாராத சர்ப்ரைஸ்!! பொட்டிய ஓபன் பண்ண உடனே ”தி விண்டர் ஸ்பெஷல்” பெரிய சைஸ் கலரில் ”சூப்பர் ஸ்டார்” டெக்ஸ் பட்டைய கிளப்புகிறார் !! :)

    அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  41. கொரியர் ஆபீஸுக்குப் போனா "இன்னும் லோடு வந்து சேரலை சார்.. அரைமணி நேரம் ஆகும்"னாங்க. ஆபீஸுக்கு லேட்டானாலும் பரவாயில்லன்னு அங்கேயே காத்திருந்தேன். முக்கால் மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு லோடு வந்து இறங்கிச்சு. ரெண்டு பெரிய்ய்ய லோடு பைகளை பிரிச்சு எல்லா டப்பிகளையும் எடுத்து அடுக்கற வரைக்கும் பொறுமையா, பரபரப்பை வெளியே காட்டிக்காம நின்னுட்டிருந்தேன்.

    எனக்கு வரலை!

    கூழ்வினைப் பயன்(?!)

    'நம்ம டப்பி' ஒரே ஒருத்தருக்கு மட்டுமே வந்திருந்துச்சு. sri ram'னு எழுதியிருந்துச்சு! (நம்ம 'பேங்க்' sri ramனு நினைக்கிறேன்) அதிர்ஷ்டகார நண்பர்!

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் ST குரியரில் 3 பேருக்கு மட்டுமே புத்தக பார்சல் வந்து இருந்த்து (நான் தேடிய வரை)...

      எனக்கு(ம்) இன்று புத்தகங்கள் வரவில்லை...

      Delete
    2. நாகராஜன் @ அவரின் கூழ் வினைப்பயன் உங்களையும் பாதித்தது விட்டதா :-) அவர் கூட சேர்ந்து நீங்கள் ஏதாவது கூழ் பாக்கி வைத்து இருக்கிறார்களா? 🤔

      Delete
    3. @PfB காத்து லைட்டா இங்கேயும் அடிச்சு இருக்கு போல... :(

      Delete
  42. செயலரின் கூழ் நேர்த்திக்கடன்களால் வந்த வினை இது. பரிகாரம். இந்த மாதம் மட்டும்புத்தகப்பார்சலை வாங்கியவுடன் பிரிக்காமல் ஒரு சேரின் மேல் வைத்து விட்டு ஒருமணிநேரம் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  43. ஊ(கூ)ழ்வினை உறுத்து வந்தூட்டும்.

    ReplyDelete
  44. பொட்டி வந்துடுச்சூ....

    ReplyDelete
  45. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
    வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
    தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
    கிடைக்க்காதம்மா…
    கொரியர்ல யார் வந்தது? நாம் படிக்கும் போது
    யாரோடு யாரரை படிப்பது?

    வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

    இங்கே யாரார்க்கு என்ன
    பிடிக்குமோ
    யாரார்க்கு எந்த லோகோவோ
    படிக்கும் வரைக் கூட்டம் வரும் படிப்பு நின்றால் ஓட்டம் விடும்
    லயனாலே வந்தது டிடிசியாலே வெந்தது
    லயனாலே வந்தது டிடிசியாலே வெந்தது
    வரும் என்று பார்சலை யார் சொன்னது

    வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

    பிடித்தாலும் கழுவி ஊற்றுவார் இங்கே படிக்காமயும் கழுவி
    ஊற்றுவார்
    உண்டாவது விஜயனாலதான் ஊர்போவது கொரியராலதான் லயனோடு வந்தது ஸ்பைடரோடு போவது
    லயனோடு வந்தது ஸ்பைடரோடு போவது
    ஸ்பைடர் உள்ள பார்சலை யார் பாத்தது

    வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

    ஸ்பைடர் வரும் நேரம்தான் உச்சக் காட்சி
    நடக்குதம்மா
    டிடிசிய கலைக்கவும் எஸ்டிய எடுக்கவும் வேலை
    நெருங்குதம்மா
    பாதைகள் பல மாறியே வந்த புத்தகம் கிடைக்கலம்மா
    விஜயன் கொண்டு தந்ததை அனுப்பியே வைத்ததை
    யாரோ கொண்டு போகும் நேரமம்மா

    ReplyDelete
  46. சப்ளயர்வரலன்னார்....பார்சல் வந்துச்சாம்... ஆஃபீஸ்க்கு ஓடறேன்...டிடிசி வாழ்க

    ReplyDelete
  47. சேலம் வண்டி , அமெரிக்க சேலம் போய் விட்டதா.....!!!
    😀😀😀

    ReplyDelete
    Replies
    1. போச்சா போச்சா.

      Delete
    2. இல்ல சுட்டிங்...
      😉😉😉😉

      Delete
  48. நம்ம ஊரு அண்ணா அவர் ஊர்ல் இருக்க மாட்டர்னு நம்ம address use செய்கிறார்.

    அவர்கு DCTC, நம்ம ST...!!!
    ஆனா 2 லும் ஆள் வர்லே நு நினைத்த போது அவரது வந்து விட்டது...!!!

    Me waiting..!!!

    அண்ணா Diwali கழித்து தான் வருவார்.

    ஆங் அதே தான்.. அவரதை சுட்ட்டிங்... hi..Hi..!!!

    ReplyDelete
  49. Wowwwwwwwwww....

    அட்டணை புக் செம்ம....

    007 ,

    Tex,

    Lucky

    எல்லாம் gun வைத்து கொண்டு செம்ம போஸ்...
    கண்ணே பட்டு விடும் போல..

    In ஒயிட் பேக் ரவுண்ட் அட்ட காஸ்...
    ---STV

    ReplyDelete
  50. ரவி அவர்களும் நானும் அலைபேசியில் எனக்கும் பார்சல் வரவில்லையப்பா ,எனக்கும்தாம்பா தகவல் வரவில்லை என பேசிக்கொண்டே ....இதோ இப்பொழுது தான் நேரம் கிடைத்து தளத்தை ஓப்பன் செய்து இன்று ஏமாற்றமே சார் புத்தகம் வரவில்லை என்ற வாக்கியத்தில் புத்தகம் என்ற வரியை எழுதும் அதே விநாடியில் சார் பார்சல் என்று என்று எதிரே கொரியர் நண்பர்


    என்ன மகிழ்ச்சி என்ன மகிழ்ச்சி இதோ இன்னும் பார்சலை பிரிக்கவில்லை மாலை பொழுதினில் கிடைத்து விட்டது பொக்கிஷம் என்று எழுத ஓடோட வந்து பதிந்து விட்டு பார்சலை பிரிக்க மீண்டும் பறந்து செல்கிறேன்...

    வெயிட் அன்ட் சீ...
    என்று நினைத்தபடியே...

    ReplyDelete
  51. தீபாவளி மலர்...

    நேரில் வேற லெவல் ல இருக்க...!!!

    அட்டை ஆஹா... பார்த்து கொண்டு இருக்க சொல்லுது...

    அற்புமானது, அழகானது என சொல்லும் adjective எடுவும் போதாது....

    செம்ம எடிட்டர் sir....
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    கனவு அட்டை என்றே சொல்வேன்....!!!

    தீபாவளி- இன் blue colour

    Tex in dark பச்சை...
    2 ம் ரெட் பின்னணி லே wow... என சொல்ல வைக்கு...

    ---STV

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி..ஹி... ஆமா ரவி...
      நீங்களும் இதே வார்த்தைகளை நாளை சொல்வீங்க... 😉😉😉😉

      Delete
  52. உள் பக்கம் அட்டை களில் Tex படங்க அருமை...!!!

    தலை வாங்கி குரங்கு,
    பாலை வனதில் ஒரு கப்பல்,
    ஒரு ரவுதிற ரேஞ்சர்,
    என old hit photos use பண்ணி உள்ளது சூப்பர்...

    I like it very much...

    ---STV

    ReplyDelete
  53. ஒரு டெக்ஸ் கதை படிச்சாச்சு
    மனிரத்தினத்தின் இராவணன் படம் பார்த்த பீலிங்... visually stunning, குறிப்பாக பக்கம் 12ல் வரும் செவ்வாணம், பக்கம் 13ல் பாயும் குதிரைகள் & பக்கம் 18ல் பிரேம் வெளியே ஆக்ட்டேவியஸ்...

    ReplyDelete
    Replies
    1. ஓ மினி Tex.. yes visual treat தான்!!! Fantastic colour

      Delete
  54. புத்தகத்திலே ஸ்வீட் எதுவும் வைக்கல இல்லை..புக் வரை இன்னைக்கு ஊருக்கு கிளம்புவதால் வாங்கி மட்டுமே வைப்பாங்க..

    ReplyDelete
  55. உத்த பூமியில் Tex--

    பிதா மஹர்கள் art& ஸ்டோரி....

    சும்மா சுண்டி இழுக்குது....
    North Vs South war பின்னணி விவரங்கள் & மேப் செம்ம...

    உள் பக்கங்கள் பால்ய Tex கதை காலங்களில் கொண்டு சேர்க்கிறது...

    கழுகு வேட்டை போன்ற classic Tex art return...!!!

    2 வது ஸ்டோரி dynamite special தெற்கே ஒரு தங்க தேட்டை கதையை நின்னவு செய்கிறது...
    ஆட்டை போட்ட bookle இருந்து mysoorpa போட்டில் இறங்கி விட வேண்டியது தான்... ஹி.. ஹி.. ஹி..
    ---STV

    ReplyDelete
  56. புத்தகம் கிடைக்கப்பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  57. 1. Tex வாழ்த்து அட்டை--- டாப்.. (ஸ்வீட் இல்லா குறையை இது போக்கி விட்டது)

    2.'"தி வின்டர் ஸ்பெஷல்"---stunning!!!
    No words to describe it!!!! Perfect gift, editor sir. Many many thanks for this wonderful book.

    இந்த சூழலில் தங்களது இதயத்தில் இருந்து அளித்த இந்த தீபாவளி பரிசு ரொம்ப நாட்கள் மனசில் நிற்கும்---- எல்லா Tex ரசிகர்கள் சார்பில்--- சேலம் Tex vijayaragavan!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  58. After so லாங் time JUMBO books சீரியல் number's corrected.

    Classic olden டைம்ஸ் ரசிகர்கள் உற்சாகம் பிச்சி கொள்ள போகுது...

    நல்ல அற்புத ஓவியம்...!!!

    மீண்டும் 120 book ரூ 60 மட்டும் என்பது 2 து தீபாவளி கிஃப்ட். ஆனா தங்களுக்கு ஏற்படும் பாதி தொகை நஸ்டம் ஒரு பக்கம் மனசை நெருட செய்கிறது sir.

    ReplyDelete
  59. Amaya--- no comments...!!!

    திருவிளையாடல் வசனம்,

    """"பார்த்து ரசிப்பது-???

    கலையும் அழகும்""""!!!

    ReplyDelete
  60. Ks நாங்கள்ளாம் இதிலே சீனியராக்கும் கரூர் ராஜ சேகரன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் சார். ஹிஹிஹி

      Delete
  61. Ok... I am on the way in mysoorpa வேட்டை!

    Once again happy Diwali friends!

    ReplyDelete
  62. தீபாவளி பொக்கிஷ பெட்டியை பிரித்து ரசித்து கொண்டாயிற்று....


    முதல் பார்வையில் என்னை அட்டைப்படத்திலியே ரசிக்கவும் பிரமிக்கவும் வைத்தது எவர் என சொல்லவும் வேண்டுமா....


    தீபாவளி வித் டெக்ஸ ..தீபாவளி வித் டெக்ஸ் ,தீபாவளி வித் டெக்ஸ்...

    ஹார்ட் கவர் அட்டையும்,அசத்தலான அட்டைப்படமும் ,அட்டகாசமான டிராகன் நகரம் பாணி முதல் பாணி சித்திரங்களும் ,லேட்டஸ்ட் பாணி இரண்டாவது கதை சித்திரங்களும் ( மர்ம மனிதன் மார்ட்டின் ஓவியர் நினைவுக்கு வருகிறார் இந்த சித்திரங்களை பார்க்கும் பொழுது) இதை விட புரட்ட ,புரட்ட தொடர்ந்து கொண்டே இருக்கும் கதை பக்கங்களும் என படிக்காமலே முதல் இடத்தை பிடித்த இதழ் இதுவென்று சொல்லவும் வேண்டுமா...?

    ( உண்மையான தீபாவளி மகிழ்ச்சி இந்த கனத்த இதழை கைகளில் ஏந்தியதும் தான் பிறந்தது )

    *******

    அடுத்த இதழாக அட்டைப்படத்தின் மூலமே ரசிக்க வைத்த இதழ் வானமும் வசப்படும் .அட்டைப்படமும் சரி உட.பக்க சித்திரங்களும் கண்களை கவர்கின்றனர்..நாயகியோ இன்னமும் ஈர்க்கிறார்..முதல் புரட்டலில் இந்த இதழின் தென்பட்ட ஏமாற்றமும் ஒன்று உண்டு எனில் அது மீண்டும் வருகை தந்த பொடி எழுத்து பாணி.அதுவும் முதல் பக்கத்தில் முன்கதை சுருக்கத்தில் என்னத்தான் உற்று பார்த்தாலும் எழுத்துக்கள் தெரிகிறதே தவிர வார்த்தைகள் தெரியவில்லை..

    ( இது ஆசிரியர் குறை அல்ல நமது குறை வயசாகுதுடா பரணி என்பது புரிந்தாலும் சொல்ல வேண்டும் போல் தோன்றியது சார் ..மன்னிக்க ) மற்ற படி கதையை படிக்க ,படிக்க அந்த குறை மறைய வைக்கும் என நம்புகிறேன்..காத்திருக்கிறேன்.

    *********

    கால வேட்டையர்..

    வித்தியாமான சித்திர பாணி அட்டைப்படம் ,நமது பழைய லயன் ,முத்து இதழ்களின் உட்பக்க சித்திர பாணி ,முதன்முறையாக சயின்ஸ்பிக்‌ஷன் ஓரம் என இதழ் எதிர்பார்க்க வைக்கிறது.( முதல் பாக முடிவின் கடைசி பக்கத்தை பார்க்கும் பொழுது பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தை பார்த்த உணர்வுகள் என்பது மட்டுமல்ல பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியையின் நினைவுகளுமே மேலோங்கியது என்பதும் உண்மை :-).

    முதல் அறிமுக நாயகி கலக்குவாரா ..காத்திருக்கிறேன்....


    ******

    இந்த மாதம் தீபாவளி இலவச இணைப்பு மினி டெக்ஸ் என்பது வரும் என்பது அறிந்தது தான்.ஆனால் இப்படி மெகாசைஸ் மினி டெக்ஸ் என்பது உண்மையிலேயே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி விட்டது..இந்த இலவச இணைப்பை பார.க்கும் பொழுது ஒரு தலைவன் ஒரு சகாப்தம் இதழ் அப்படியே நினைவிற்கு வருகிறது .இப்படி பட்ட இதழ் இலவசமா..?

    செம சார்...அருமை..வாழ்த்துகளும் ,பாரட்டுகளும் சார்..

    *******

    சர்ப்பத்தின் சவால் ஸ்பைடர் இதழை பொறுத்தவரை ரவி அவர்கள் மூலம் நான் வாங்கியுள்ள படியால் சந்தா அவருக்கு வந்து அவர் என்னிடம் சர்ப்பத்தை ஒப்படைக்கும் பொழுது தான் அதனை பற்றி அறிய முடியும் .காத்திருக்கிறேன்..

    *****

    தீபாவளி முன் தீபாவளியை கொண்டாட வைத்த தங்களுக்கும் ,தங்கள் குழுவினருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள் தெரிவத்து கொண்டு இனி...



    இனி என்ன ஒவ்வொரு இதழாக படித்து விட்டு வரவேண்டியது தான்..

    ReplyDelete
    Replies
    1. கலக்குங்க தாரை பரணி

      Delete
    2. நீங்க பெரிய கலா ரசிகர் தலைவரே !!!!!!!!

      Delete
    3. டான்ஸ் மாஸ்டர் கலாவோட ரசிகரா ?🤔

      Delete
  63. பார்சல் இரண்டுமே வந்துவிட்டது.(இரண்டாவது பார்சல்... ஸ்வீட் எடு!!..கொண்டாடு!!.. ஆனா..?? இது எனக்கு மட்டுமா?...எல்லோருக்குமா?...புரியல்லே..?)

    சார்...சத்தியமா நீங்க வேற லெவல்.
    போன முறை ரவுண்டு பன் சதுரமாகிவிட்டது என்ற குறையை போக்க, தனி கெட்டி அட்டைப் பெட்டி. செம்மயான பேக்கிங்.தீபாவளியை கொண்டாட சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். நன்றி..நன்றி..நன்றி... மற்றவை பிறகு..

    ReplyDelete
    Replies
    1. // இது எனக்கு மட்டுமா? //

      Only for u :-)

      Delete
    2. உங்களுக்கு மட்டும்...


      உங்களுக்கு மட்டுமே...


      :-))))

      Delete
  64. Tea time ல சந்தா புக்கை புரட்ட பின் அட்டைல ஒரு சின்ன மிஸ்டேக் தென் பட்டது.... In 2Nd line,

    """சந்தா:Falooda:(No கிராபிக் நாவல்:(சந்தா:A+B+c+E) மொத்தம் 27 புக்ஸ்"""
    --- என இருக்கு.

    " (No கிராபிக் நாவல்:""--- என்ற இடத்தில் "(எல்லா சந்தா பிரிவுகளும்) என்பதே சரி. சந்தா Falooda வில் கிராபிக் நாவல் உண்டு. இது தளத்தில் சந்தா அறிவிப்பில் சரியா இருக்கு சார்.

    ஸ்டிக்கர் ஒட்டி இருப்பின் நன்றாக இருந்து இருக்கும்.

    ---STV

    ReplyDelete
  65. விஜயராகவன் @ கமென்ட் அள்ளி தெரிந்துக் கொண்டு இருக்கிறீர்கள்.உங்களை தீபாவளி கொண்டாட்டம் பற்றி கொண்டு விட்டது தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே பரணி!

      இட்ஸ் சோ ஹேப்பி movement...!!!

      3 Tex ஸ்டோரி...
      1amaya...

      தீபாவளி ஸ்பஷல் எப்போதும் நம்ம டாப் பிக் ஆப் தி year.
      🙏🏻❤️😍😍😍😍😍

      Delete
  66. டெக்ஸ் ஜி..பாலாஜி யாரு?

    ReplyDelete
    Replies
    1. நம்ம son online class atten செய்கிறார். அவர் மொபைல் screen Kali... நம்ம போன் அவன் வைத்து இருக்கான்.

      Morning 10 to 8 my work time.

      இந்த நேரங்களல கமென்ட் போட என் assistant cell use செய்கிறேன்.
      So morning 10 to night 8 வரை balaji my I'd and night 8 to 10 வரை நம்ம ரெகுலர் id... ஒரு 2 மாசம் மட்டும்..

      பெயர் குழப்பம் இருப்பதற்கு சன்னமான சாரி , பத்து sir and friends!

      Delete
  67. Rich plum Cake, plain Sponch Cake ரெண்டுமே செம delicius. சூப்பர். என் மகன், தீபாவளிக்கு பெங்களுரில் இருந்து வந்திருக்கின்றான்.அவனுக்கு கேக் மிகவும் பிடித்திருந்தது. ஆச்சரியப்படுகிறான். இப்படிக் கூட இருப்பார்களா என்று. நமது வட்டத்தைப் பற்றியும் முகமறியா நண்பரின் லட்ச ரூபாய் கதையையும் சொன்னேன். Really he wonder.

    ReplyDelete
    Replies
    1. // என் மகன், தீபாவளிக்கு பெங்களுரில் இருந்து வந்திருக்கின்றான் //

      Enjoy :-)

      Delete
    2. Wow.. Very நைஸ் பத்து sir. Enjoy.. ஹேப்பி தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

      Delete
    3. வாழ்த்துக்கள் நண்பரே...

      Delete
    4. சார் - லட்ச ரூபாயையும் ; நம்ம இருநூறு ரூபாய் மேட்டரையும் ஒரே ரேஞ்சில் பேசிடலாமுங்களா ? அது இமய உசரமெனில், நம்ம ஐட்டம் பரங்கி மலைக்கு கூட எட்டாதே ?

      Delete
    5. ஆனால்..அந்த உள்ளம் என்று ஒன்று இருக்கிறதே, சார், அது...

      Delete
  68. நண்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள். குறைகள் ஏதேனும் தென்பட்டாலும், தற்போது பதிவிட வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நிறையோ - குறையோ ; அவற்றைப் பதிவிட நண்பர்கள் வரட்டும் சார் !

      Delete
  69. நிறைகளை உரக்கச் சொல்வோம்.

    ReplyDelete
  70. Got all the books except spider. I paid for it along with courier charge through online mode. Was expecting it with this parcel... that's the only small let down.
    But,
    Lot of great things to make me feel better.
    Tex..... OMG 🤩
    The art work is wonderful, as our editor sir said, I spent a lot of time in enjoying the cover.
    எனக்கு மட்டும் தானா என தெரியவில்லை. டெக்ஸ் அட்டை ஒவ்வொரு ஆங்கிலில் ஒவ்வொரு வண்ணம்... தெறிக்க விட்ட மத்தாப்பு... 🥰

    ReplyDelete
    Replies
    1. அடடா...! ஒரேயொரு வாட்சப் தகவல் மட்டும் ஆபீசுக்குத் தட்டி விடுங்கள் சார் ; ஏற்கனவே அனுப்பாது இருப்பின், நாளையே அனுப்பி விடுவார்கள் !

      Delete
  71. Got all the books .. முதல் பார்வையில் டெக்ஸ் அட்டைப் படம் awesome ..color combination s super .. Mini Color TEX க்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது first look ல்..

    And thanks for sponge cake sir .. Round bun எதிர்பார்த்த எனக்கு இது ஒரு pleasant surprise ..

    ReplyDelete
    Replies
    1. ஹை...!! உங்களது பார்சலும் டெலிவரி ஆகி விட்டதா ? சூப்பர் சார் !

      Delete
  72. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே சார்...

    பார்சலை பிரித்து வாழ்த்து அட்டையை மகளிடம் வழக்கம் போல் கொடுத்த பொழது அவள் கேட்ட வினா ..ஓ...வாழ்த்து வந்துருச்சா ..அப்புறம் டைரி மில்க் இருக்குமே எங்கப்பா ..என்றாள்...?

    பனி எப்படி பார்த்தாயா சளி இருமல் வந்துரும்ன்னு இந்த தடவ கொடுக்கல குட்டி என்றவுடன் ஓகேப்பா என்று தலையை ஆட்டி விட்டார்கள் ...:-)

    ReplyDelete
    Replies
    1. // பனி எப்படி பார்த்தாயா சளி இருமல் வந்துரும்ன்னு இந்த தடவ கொடுக்கல குட்டி என்றவுடன் ஓகேப்பா என்று தலையை ஆட்டி விட்டார்கள் ...:-) //

      குழந்தையை நீங்கள் சமாளிக்கும் விதமே தனி பரணி. 😍

      Delete
  73. சர்ப்பத்தின் சவாலை எதிர் கொள்ள,
    கால வேட்டையர் உடன் வர,
    டெக்ஸ் துணையுடன்,
    யுத்த பூமியில் நுழைந்து,
    பனி வனப் படலம் வழியே
    வெளிவந்தோமெனில்,
    வின்டர் ஸ்பெஷலின்
    வரவேற்புடன்
    2021ல்
    வானமும் வசப்படும்.

    ஹி..ஹி.. அட்டைப்படம் + மேலோட்டமான புரட்டல் முடிந்தது.
    மைசூர்பா உண்டுங்களா?

    ReplyDelete
    Replies
    1. ///மைசூர்பா உண்டுங்களா?///---மேலே இதற்கான பதில் உள்ளது சார்!! 😘😘😘😘

      Delete
    2. ///மைசூர் (கொட்டை) பாக்கு கூடக் கிடைக்காது இதுக்கு///

      இது தானே சார்..
      எதுக்கும் ஒரு இலைய போட்டு வைக்கலாமேன்னு தான்.

      Delete
  74. ம்ஹும். எனக்கு வரலே...
    எங்கெங்கயோ பார்சல் போகுது. 50கி.மீ. தள்ளி இருக்குற எனக்கு எப்பவுமே லேட் ஆகுது.
    அடப்போங்கப்பா... அடுத்த சந்தால கூரியர் சார்ஜஸ் இல்லாம ஒரு ஸ்லாட் போடுங்க சார். நேர்ல வந்தே வாங்கிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. எக்குத்தப்பான ரஷ் சார் அத்தனை கூரியர் & லாரி சர்வீஸ்களில் !

      Delete
  75. தி விண்டர் ஸ்பெசல்:-

    """கனவுகள் வேறு... நிஜங்கள் வேறு"""

    விசேட நாட்களில் கொரியர் பார்சல்கள் அதிகம் இருப்பது வழக்கம். நேற்று என் பார்சலும் சிவகாசி டூ சேலம் வண்டியில் இடம் பெறல போல.

    மதியம் நம்ம வீட்டு அருகே உள்ள அண்ணாரின் பார்சல் வந்து சேர, அவசரத்துக்கு அதையே உடைத்து இதழ்களை தரிசித்து இருந்தேன்!

    கனவு இதழான தீபாவளிமலரை ஏழெட்டு தடவை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டு இருந்து விட்டு, எதைப் படிக்கலாம் என தேர்வு செய்யும் சமயத்தில் எடிட்டர் சாரின் அன்பு பரிசான "தி விண்டர் ஸ்பெசல்"- என்னை எடு என்னை எடு என சொல்ல அதையே கையில் எடுத்தேன்.

    ரெகுலர் வண்ண இதழ்கள் அளவில் "வாமண" டெக்ஸ் கதைகளில் ஒன்றை தயாரித்து இருந்தது இதுவே முதல் முறை!பொருத்தமான தீபாவளி கிஃப்ட்!

    இதழை புரட்ட புரட்ட உன்னதமான ஓவியங்கள் உச்சஸ்தாயில் கண்ணிற்கு விருந்தளித்தது.

    அபாச்சே பிராந்தியத்தில் தங்களது அதிகாரத்தை விஸ்தீரனமாக்க தாமஸ் கோட்டையை சேரந்த ராணுவம் சமாதான ஒப்பந்தத்தை மீறி, அபாச்சே விளைநிலங்களை கைப்பற்றுகிறது.

    ஒப்பந்தத்தை மீறிய கர்னல் கிரேவ்ஸை தண்டிக்க எண்ணி, கர்னலை காண வரும் அவரது மனைவி பாட்ரீசியாவை கடத்துகிறான் அபாச்சே அக்டேவியோ!

    காதலில் விழுகிறான் பாட்ரீசியாவிடம்; ராணுவத்தால் பாட்ரீசியாவை மீட்க இயலவில்லை!

    ராணுவத்துக்கு ஒத்தாசையாக நம்ம தல டெக்ஸ்ம் தாத்தா கார்சனும் களமிறங்க கதையில் அணல் பறக்கிறது.

    டெக்ஸ் & கார்சன் பாட்ரீசியாவை மீட்க, விடாமல் துறத்தும் காதல் மன்னன் அக்டேவியோ என்ன ஆனான்????

    கர்னலை சென்றடைந்தாளா பாட்ரீசியா???

    அக்டேவியோவின் ஒருதலைக்காதல் என்னவாயிற்று???

    காதல், வஞ்சகம், வீரம், மனிதாபமானம்...என மனித மனதின் நுட்பங்களை 32 பக்கங்களில் வீரியத்துடன் விவரிக்கின்ற கதையோட்டம்.

    ரியாலிட்டி தெறிக்கும் ஸ்டன்னிங் க்ளைமாக்ஸ்;

    டெக்ஸ் vs அக்டேவியோ - ஒற்றைக்கு ஒற்றை மோதல் அபாச்சேக்களின் வீரத்தை வெளிக்காட்டும் இடம்.

    மாறுபட்ட கலரிங்& ஓவியபாணி (இந்த பாணியின் டெக்னிக்கல் பற்றி விசயம் அறிந்தவர்கள் சொன்னா நாமும் தெரிந்து கொள்ளலாம்) வசீகரிக்கிறது!

    ரேட்டிங், ரேங்கிங் 10/10 என இதழுக்கு மதிப்பீடு செய்யும் வேளையில், இந்த அற்புத இதழை இந்த கடினமான சூழலில் தீபாவளி பரிசாக அளித்த எடிட்டர் சாரின் அன்பை மதீப்பீடு செய்ய எண்ணிக்கை என் வசம் இல்லை!!!

    #பக்கம்1ன் அபாச்சே குடியிருப்பு...

    #பக்கம்12ன் இயற்கை வண்ணம்...

    #பக்கம் 18&19ன் முக பாவங்கள்...

    #பக்கம் 27ன் தாமஸ் கோட்டை தோற்றம்...

    #பக்கம் 31ன் இழவுகழுகின் இரக்கம்...

    #கதை முழுதும் பாட்ரீசியாவுன் அசத்தும் அழகு..

    ---என ரசிக்க நிறைய விசயங்கள் நிறைந்துள்ளன!

    ஓவியர் Tisselli உழைப்பு மீண்டும் இதழை புரட்ட வைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. மைசூர் பாக் உங்களுக்கு தான் போல் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

      Delete
    2. ஒரேயொரு திருஷ்டிப்பொட்டு: பக்கம் 2ல் கர்னலின் மனைவியை "மிஸ் பாட்ரீசியா க்ரேவ்ஸ்"--- என கார்சன் அழைப்பது!. "மிஸஸ் பாட்ரீசியா க்ரேவ்ஸ்" -என இருந்து இருக்க வேணும்!

      Delete
    3. ///மைசூர் பாக் உங்களுக்கு தான் போல் தெரிகிறது. வாழ்த்துக்கள்///---நன்றிகள் நண்பரே!

      இதற்கு மைசூர்பா மடித்துத்தரும் பட்டர் பேப்பர் தான் கிடைக்கும்!

      எடிட்டர் சார் மைசூர்பாவுக்கு "தீபாவளிமலர்" --- விமர்சனத்தை அல்லவா போட்டியாக அறிவிப்பு செய்து உள்ளார்.😉

      Delete
    4. ஓ இது மினி டெக்ஸ் விமர்சனமா. அப்ப உங்களுக்கு மைசூர் பாக் டப்பா கூட உங்களுக்கு கிடையாது. சாரி :-)

      Delete
  76. மே மாத இதழ்கள் வந்து விட்டன. எனக்கு இன்றுதான் தீபாவளி. நன்றி சார்.

    ReplyDelete
  77. அதிர வைக்கும் அட்டைப் படங்கள். இதோ இந்த ஸ்பைடர் அட்டைப்படம் எத்தனை பேர் உற்ச்சாகத்த தட்டி எழுப்பியதோ.உள் பக்கங்கள் திறந்ததுமே அதிருதுல்ல.துவக்க வரிகளை என்பது களுக்குள் இழுக்க நண்பர் ஜேகே நினைவும் வேதனை தருகிறது.ஸ்பைடரின் இந்த அட்டைப்படமும்....முதன் முறையாக ஈடுஇணையற்ற ஸ்பைடரை வெளியீட்டாளர்களுக்கு முன்னரே வெளியிட ஒப்புதல் தந்த பெருந்தன்மையும் நமது மேல் அவர்களுக்குள்ள நம்பிக்கையை பறை சாற்றுகிறது.உள் பக்கம் நிரம்பி வழியும் பலூன்கள் போலவே நிரம்பி வழியுது மனமெங்கும் உற்ச்சாகமே.வசனங்களே பெரிதும் ஈர்க்கும் என் மனதளவில் சித்திரக்கதைகள் எனும்போதும் .கதை விண்வெளிப் பிசாசு...யாரந்த மினி ஸ்பைடர் சித்திரங்களை நினைவில் காட்டி ஈர்க்கிறது வாருங்கள் பால்ய நண்பரே என்பதுகளுக்குள் என்றவாறே.

    ReplyDelete
  78. டெக்சின் கனமும் உள்பக்கம் திறந்தா அந்த சிவப்பு பக்கங்களும் அருமை. பால்ய சிநேகிதன் டெக்ஸ் சுண்டியிழுக்கிறார் .அட்டைப்பட வண்ணமும்...வண்ண எழுத்துக்களும் முதுகும் புறமும் அருமை.குண்டு ஹார்டுபௌண்டு ஹேப்பி அண்ணாச்சி.சொரசொரப்பும் வழவழப்பும் போட்டி போட்டு சந்தோசத்த கூட்டுது அழகிய இரு முன்பின்னட்டைகள் வாயிலாய்..

    ReplyDelete
  79. ஆமாமா அட்டைப்படம் சுண்டியிழுக்க ஸ்பைடரோடு போட்டி போடுது...ராணியில் வந்த அதே கதைன்னாலும் (வேறு கதையாருக்கும்னு நினைச்சேன்)மகிழ்ச்சி.அற்புதமான கதை அது.ஓவியங்கள் அதகளம்

    ReplyDelete
  80. கால் வேட்டை துவக்கமே ஜெட் வேகம்.நிச்சயம் அதிர்வெடியாத்தானிருக்கும்.ஓவியங்களுமருமை.

    ReplyDelete
  81. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    ஸ்பைடரே! ஸ்பைடரே! ஸ்பைடரே!
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் மீண்டதே
    அது ஏன்? ஏன்? ஏன்? ஸ்பைடரே!

    டெக்ஸ் அமாயா ஆர்ச்சி தீபாவளி
    இதைத் தவிர கால அட்டவணை கண்டாய்

    புத்தகம் கையிலே
    புத்தியோ என்பதிலே
    என்னைப் பார்த்ததும்
    ஒதுங்குவாய் கற்பனையிலே

    இப்பவும் நாடகம்
    கதையெல்லாம் காவியம்
    பழையவன் புதியவன்
    இல்லையே உன்னிடம்

    புத்தகம் விட்டதும் ஸ்பைடராய் மாறினாய்
    இளமையும் வந்தது முதுமையும் போனது

    லார்கோவென்றும் ஷெல்டனென்றும்
    தோர்கள் என்றும் ட்யூரோவென்றும்
    நூறு புத்தகம் வந்த பின்பும்
    தேடுகின்ற பால்யமெங்கே?
    நூறு புத்தகம் வந்த பின்பும்
    தேடுகின்ற பால்யமெங்கே?
    பால்யம் எங்கே?



    அவனவன் கையிலே ஆயிரம் கதைகள்
    அழுவதும் சிரிப்பதும் கதைகளின் விளைவுகள்

    மில்லியனர் வெட்டியான்
    மறந்தவன் தேடுறவன்
    புதையல் கடற்கொள்ளை
    கதையிலே பார்க்கிறோம்
    எண்ணமே சுவைகளாய்
    இதயமே இன்பமாய்
    எண்ணமே சுவைகளாய்
    இதயமே இன்பமாய்
    உன்னை பிடித்தவன் எவனுமே
    ரசிக்கிறான் சிரிக்கிறான்

    ReplyDelete
    Replies
    1. அண்ணன் கிளம்பிவிட்டார். நான் நான்கு நாட்கள் கழித்து வருகிறேன். நன்றி.

      Delete
  82. தீபாவளி மலரின் மேக்கிங் மற்றும் தாக்கம் அருமை. பார்த்த நண்பர்களின் feedback நமக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

    இன்னும் கால வேட்டை யர் , ஸ்பைடர், அமாயா இருக்கு. இன்று புத்தகங்கள் வந்து விடும் என்று நினைக்கிறேன். நாளை முதல் வேலையாக ஊருக்கு சென்றதும் புத்தகம் படிக்க வேண்டியது தான்.

    நண்பர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது தளத்தில். எடிட்டர் சார் நீங்களும் உங்களின் சிறிய டீம் மும் அடுத்த 17 நாள் குட்டிக்கரணம் வீண் போகவில்லை.

    உண்மையான ஹீரோக்கள் நீங்களும் உங்கள் டீமும் தான். நன்றிகள் சார்.

    தீபாவளி வாழ்த்துக்கள் சார்.

    நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. // எடிட்டர் சார் நீங்களும் உங்களின் சிறிய டீம் மும் அடுத்த 17 நாள் குட்டிக்கரணம் வீண் போகவில்லை.

      உண்மையான ஹீரோக்கள் நீங்களும் உங்கள் டீமும் தான். நன்றிகள் சார். //

      சரியாக சொன்னீர்கள்.

      +1

      Delete
    2. ///
      நண்பர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது தளத்தில். எடிட்டர் சார் நீங்களும் உங்களின் சிறிய டீம் மும் அடுத்த 17 நாள் குட்டிக்கரணம் வீண் போகவில்லை.///

      --- ஆம் KS..!!! மிகச்சரி.

      இதழ்களை பார்க்கும் போதே ஆக்கத்திற்கு எடுத்து கொண்ட சிரத்தையை உணரமுடிகிறது!

      எடிட்டர் & டீம் - நம்ம பண்டிகை நாட்களை சிறப்பாக என்சாய் பண்ண வழி வகுத்து உள்ளார்கள்.

      நாம எல்லாம் சேர்ந்து அவுங்களுக்கு கிருஷ்ணா சுவீட் மைசூர்பா வாங்கித்தருவது தான் சரி!

      Delete
  83. யுத்தபூமியில்டெக்ஸ். நான் எப்படி ஏன் டெக்ஸ்ஆனேன்.எனடெக்ஸின்ப்ளாஷ்பேக்காகவே விரிகிறது. ஆரம்பத்தில்ஒருமந்தையை விற்பனைக்காக டெக்ஸ் ஓட்டிச்செல்லதெற்கத்தியராணுவ குழு ஒன்று முறையற்ற வகையில் மந்தையை அபகரிக்கநினைக்ககைப்டனின்தொந்தியில் டெக்ஸின் துப்பாக்கி உரச எனமெல்லமெல்ல ஒரு ராணுவ வீரகிறார் டெக்ஸ். ஊதியிம் வேண்டாம்ஆனால் எனக்கான முடிவுகளை நானே எடுப்பேன் என்று சுயசார்புடன் ப,படையில் முன்னோடியாகச்

    ReplyDelete
  84. சேர்கிறார், ஆனால் டெக்ஸ் அதுவல்லவே. தெற்கத்தையர்களின் ஒருகப்பலைஅழிக்கிறார் யூனியன் சிட்டிக்குவடக்கத்தையர்களின் ஒரு தாக்குதல்ஏற்பாடு செய்யப்பட்டிருக்கஅஆனால் அங்கு தெற்க்கத்தையர்களின் ஒரு படைப்பிரிவுரயிலில் பெருமளவு வருகிறது. தகவல் அறிந்த டெக்ஸ் ரயிலை அழிக்கிறார். டைகரின் ஒரு நல்ல கதையைப் போலவே விறுவிறுப்பீகச் செல்கிறது. கார்சன் இல்லாத குறையை ஈடு செய்கிறார் டிக். செயல் வீரன் பேசமாட்டான் பேசுபவன் செய்யமாட்டான்நீ எந்த ரகம் என்று நீயே தீர்மானித்துக் கொள் ரகங்களில்வசனங்கள் முழு மசாலாப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன. தீபாவளிக்கு அருமையான, பட்டையைக்கிளப்பும் கத்யைக்கொடுத்துள்ளார் ஆசிரியர் கதையின் வீரியத்தை விமர்சனங்களால் வெளிப்படுத்திவிட முடியாது அனுபவித்து ரசித்துப் படிக்க வேண்டிய கதை

    ReplyDelete
    Replies
    1. ராஜசேகரன் சாருக்கு அரை கிலோ மைசூர் பா பார்செல்..........

      Delete
    2. அட டே மைசூர்பா வெல்லப்போகும் ராஜசேகரன் ஜிக்கு வாழ்த்துகள்!🌹

      Delete
    3. வாழ்த்துக்கள் ராஜசேகரன்.
      நீங்கள் நிஜ மைசூர்பாகை வெல்லுங்கள்.
      நாங்கள் நிஜாம் பாக்கை மெல்லுகிறோம்.
      (என்னா ஒரு ரைமிங்கு..என்னமோ போடா மாதவா..)

      Delete
    4. கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் செவக்கும்னு...பாட்டு படிப்போம் வாங்க பத்து சார்!

      அவரு ஆபீஸ் லீவு போட்டுட்டு "பரீட்சை "--க்கு படிக்கிறாரு😉😉😉

      Delete
  85. டெக்ஸ் விஜயராகவன்ஜிசிங்கத்தின் சிறுவயதில் கதையில் என்னை இழவெடுத்த டிக்என்பார்கள் என்று அறிமுகமாகும் அதே டிக் தானே இவர். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நேற்று மாலை மினி டெக்ஸில் இருந்ததால் இன்று தான் யுத்த பூமியில் குதிக்கனும் ராஜசேகரன் ஜி.

      நீங்கள் குறிப்பிட்ட டிக் டெய்டன் அந்த காலகட்டத்தில் தான் உலாவருகிறார்.

      இந்த யுத்த பூமி கதை 1860களில் நடக்கும் கதை என அறிமுகத்தில் சொல்லபட்டு உள்ளது. எனவே அதே டிக் தான் "இவரும்" ஆக இருக்க இயலும்.

      டெக்ஸ் மந்தையை ஓட்டி செல்லும் காலத்தில் வருவது இந்த கேரக்டர் தான்.

      Delete
  86. நன்றி நண்பர்களே கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  87. இன்று பார்சல் வருமா வராதா என்ற கேள்விகளுடன் :-)

    ReplyDelete
  88. இன்று பார்சல் வந்தாலும் இரண்டு நாட்கள் கழித்துதான் பார்சலை பிரிக்க முடியும்! அப்ப சரியாக தீபாவளி அன்று புத்தகங்களை படிக்க ஆரம்பித்து கொண்டாட வேண்டியது தான் :-)

    ReplyDelete
    Replies
    1. Hi PFB மண்டே காலை பேக் செய்யப்பட்டது இன்று புதன் காலை இரண்டு நாள் கெடு முடிந்து விட்டது பேக்கேஜ் ஓரத்தை மட்டும் வெட்டி புத்தகங்களை வெளியே கவுத்து விட்டால் இன்றே பார்க்கலாம் படிக்கலாம். இதுவே நான் பின்பற்றும் வழிமுறை. மற்றபடி உங்கள் விருப்பமே.

      ஆனால் எனக்கு இன்னும் பார்சல் வரவில்லை 😔

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. அப்போ உங்களுக்கு டபுள் தமாக்கா தீபாவளின்னு சொல்லுங்க

      Delete
    4. எந்த பார்சலையும் நான் ரெண்டு நாள் கழித்து திறப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

      பார்சல் அனுப்பிய பிறகு இடைபட்ட நாட்களில் அதனை கையாண்டு நமது கைகளில் சேர்பதில் ஏதவாது கிருமிகள் இருந்தால் அதனை தவிர்க்கவே :-) கடந்த 8 மாதங்களாக எந்த பார்சல் வந்தாலும் இதே வழி முறைதான் :-)

      There can be different opinion on this, but we wanted to follow this for some more time :-)

      Delete
    5. லோக்கல் கடைகளில் போய் மளிகை பொருள்கள் அல்லது காய்கறிகள் வாங்கி வந்தாலும் இதே process தான் :-)

      Delete
  89. Perfect👍to each his own..

    கடைசி ஸ்டெப் சொல்ல மறந்து விட்டேன் 🙃 கட்டாயமாக சோப் போட்டு கை கழுவிட்டு புத்தகத்தை கையாளவும்.

    ReplyDelete
  90. வானமும் வசப்படும்....

    சுத்தமான சிறைச்சாலை ஒன்று ,பாதி பாதிப்பால் பாதிக்கப்பட்ட பழுதடைந்த சிறைச்சாலை ,முழுவதுமாக சீரழிந்து போன சிறைச்சாலை இந்த மூன்று சிறைச்சாலைகளில் எதில் இருந்து , எந்த சிறைச்சாலையில் இருந்து எந்த சிறைச்சாலையில்
    இந்த புரட்சி பெண் தனது சுதந்திரத்தை தேடி செல்கிறாள்.சுதந்திரம் கிடைத்ததா ,கிடைத்தாலும் அந்த சுதந்திர உலகில் அவள் கனவு மெய்ப்பட்டதா கண்டறிய படியுங்கள் வானமும் வசப்படும்..பெரிய அளவில் அழகான சித்திரங்கள் கதையை விறுவிறுப்போடு படிக்கவைக்கிறது...என்ன சித்திரத்தின் அளவுகள் இன்னும் பெரிதாக இருந்தால் செயலர் இன்னும் ஊன்றி கலைநயங்களை நன்கு ரசித்து படிப்பார்..( பக்கத்து இலை பாயசம் இல்லை) ..முன் கதை சுருக்கம் மட்டும் கொஞ்சம் கண்களை உருட்டி படிக்க நேர்ந்தது மற்றபடி உட்பக்கங்கள் ஓகே...

    தனது அறிமுக சாகஸத்தில் அமாயா அழகாக ஓகேவாகி விட்டார் ..இனி தனது சாகஸ தொடர்களின் மூலம் இளவரசியிடம் போட்டியிட வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..


    வானமும் வசப்படும் ...எனக்கு வானம் வசப்படுகிறதோ இல்லையோ அமாயா என்னை வசப்படுத்திவிட்டாள்.

    ReplyDelete