Sunday, June 07, 2020

வோட்டுப் போட ஒரு பூத் ரெடி !

நண்பர்களே,

வணக்கம். நிலவரத்தின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, குழப்பத்தில் சிக்கி நிற்கும் நமக்கு உங்களின் inputs களைத் தந்திட முன்வந்துள்ள நண்பர்களுக்கு நன்றிகள் ! இதோ - அதே கேள்விக்கான பதிலை செம சுலபமாய்ப் பதிவிடவொரு option - ஜூனியர் எடிட்டரின் புண்ணியத்தில் : https://strawpoll.com/6pwcbgka 

மேற்படித் தளத்திற்குச் சென்று உங்களின் தேர்வினை க்ளிக் செய்தால் - ஸ்பஷ்டமாய் பதிவாகிடும் ! இந்த லிங்க்கை உங்களின் வாட்சப் குழுக்களில் பரிமாறினால், நம் blog பக்கங்களை பின்தொடரா வாசகர்களுமே கருத்துச் சொன்னது போலிருக்கும் எனும் போது - ஒரு முக்கியத் தீர்வினில் பெரும்பான்மையின் பங்களிப்பு இருந்தது போலாகிடுமன்றோ ? 

இக்கட RK நகர் பார்முலாக்களுக்கோ ; திருமங்கல பார்முலாக்களுக்கோ இடம் கிடையாதெனும் போது முடிவுகளை தைரியமாய் நம்பிடலாம் என்பேன் ! தவிர, ஒரு IP அட்ரசுக்கு ஒற்றை வாக்கு மட்டுமே ! So let's get polling people !!

அந்தக் கேள்விக்குப் பதில் போட்ட கையோடு - இதோ இதனிலுமே உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ் ?https://strawpoll.com/fszbza7y

Bye for now !!


146 comments:

  1. அதுக்குள்ளேவா.?

    ReplyDelete
  2. ரெம்ப வேகமாத்தான் போய்க்கிட்டிருக்கோம் போல..!

    ReplyDelete
  3. March 31 க்கே ஓட்டு போட்டேன்.

    ReplyDelete
  4. பதிவு செய்தாச்சு! மார்ச் 31 தான் அதிக வோட்டு விழும் போல 😊

    ReplyDelete
    Replies
    1. இல்லியே சார் ; டிசம்பர் 31 தான் டாப்பிலே போய்க்கிட்டுருக்கு !

      Delete
    2. ஆஹாங்! இதுக்கு நீங்க ஓட்டெடுப்பு நடத்தாமலேயே இருந்திருக்கலாம் போல சார்

      Delete
  5. A very fine poll system..with very minimal loopholes...

    Oviya army created so many ids for a single person and voted using these ids..( supposedly)

    But that won't happen here - one can believe - in the current scenario..

    ReplyDelete
    Replies
    1. எங்க குடும்பத்தில ஒரு பத்து பதினைஞ்சு நெம்பரும், எட்டு-பத்து ஃபோனு, ரெண்டு சிஸ்டம், நாலு லேப்டாப், நாலு டேப்லட் இருக்கு.. நானு எத்தனை ஓட்டு போடலாம்???

      Delete
    2. ஆனா, இது நிலவரத்தை தெரிந்து கொள்ளும் ஓட்டு பதிவே..

      எனவே நோ கள்ள ஓட்டு..

      Delete
    3. ///எங்க குடும்பத்தில ஒரு பத்து பதினைஞ்சு நெம்பரும், எட்டு-பத்து ஃபோனு, ரெண்டு சிஸ்டம், நாலு லேப்டாப், நாலு டேப்லட் இருக்கு.. நானு எத்தனை ஓட்டு போடலாம்???///

      ஓஹோ...

      Delete
    4. ஒவ்வொரு எலெக்ஷனுக்கும் முன்னே கரூர் IP முகவரிகளை டிராக் பண்ண தனியா ஒரு மென்பொருள் தயாரிக்கணும் போலிருக்குதே !

      Delete
    5. //A very fine poll system..with very minimal loopholes...//

      Yes sir !

      Delete
    6. கரூர் சரவணன் @ எலெக்ட்ரானிக்ஸ் கடை ஏதும் வைத்து இருக்கீங்களா ? :-)

      Delete
  6. ஓட்டு போட்டாச்சுங்கோ....!
    இருபது ரூபாய் டோக்கன் இல்லாமல் ஓட்டு போட்டாச்சுங்கோ!
    அண்டா ,குண்டா, குக்கர், மிக்ஸி வாங்காமல் ஓட்டு போட்டாச்சுங்கோ!
    குவாட்டரும், கோழி பிரியாணியும் இல்லாமல் ஓட்டு போட்டாச்சுங்கோ!
    ஆக மொத்தத்தில் கையில் 'கறை' படாமல் ஓட்டு போட்டாச்சுங்கோ!

    ReplyDelete
  7. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  8. ஓட்டுக்கு எவ்வளவு குடுப்பீங்க??
    குண்டு புக்கா.. இல்லே மறுபதிப்பா??

    ReplyDelete
  9. ஓட்டு போட்டாச்சி,ஜனநாயக கடமையை ஆத்தியாச்சி......

    ReplyDelete
  10. போட்டாச்சு ஓட்டு போட்டாச்சு.

    ReplyDelete
  11. ஆசிரியருக்கும், பட்டியல் போடும்(சந்தாதார) நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். மார்ச் மாதம் வந்த குட்டி இலவச புத்தகம் "இருளோடு/இரவோடு யுத்தம்" புத்தகத்தின் எண் என்ன? என்னிடம் உள்ள பட்டியலின்படி:
    372 ஒரு துளி துரோகம் Feb 20
    373 ஆர்ச்சி இருக்க பயமேன் Feb 20
    374 பிழையிலா மழலை Mar 20
    375 எதிர்காலம் எனதே Mar 20
    376 கனவே கலையாதே May 20
    377 வானவில்லுக்கு நிறமேது May 20
    378 அலைகடலில் அதகளம் May 20
    379 கைதியாய் டெக்ஸ் Jun 20
    380 விண்ணில் ஒரு வேதாளம் Jun 20

    என்னுடைய இந்த சந்தேகத்தை தீர்ப்பவர்களுக்கு ஆசிரியர் ஆயிரம் (பொற்)காசுகள் கொடுத்தாலும் கொடுப்பார் ;-)

    நன்றிகள் பல!

    ReplyDelete
    Replies
    1. அந்த இதழிலிருந்து இனி இணைப்பாக வரும் அந்த புத்தகத்திற்கு நம்பர் கொடுக்கப்படது என நினைக்கிறேன் 🤔😇

      ஏனெனில் அதற்கும் வரிசை எண் கொடுத்து பின்னர் மூன்று புத்தகங்களும் ஒன்றாக வந்தபின் அதற்கும் வரிசை எண் கொடுத்து 🤷🏻‍♂️

      நன்றி 🙏🏼
      .

      Delete
    2. நண்பர் பிரபாகர் சொல்வது சரியான பாயிண்ட். இதைத்தான் அந்த புக்வந்த போது எடிட்டர் சார் சொல்லி இருந்தார்.

      Delete
    3. நன்றி, PrabakarT & சேலம் Tex விஜயராகவன்

      Delete
    4. தமிழரசு@ உங்க சந்தேகம் இந்த புக் வந்தபோது ஏற்கெனவே ரவி கேட்டு இருந்தார்,

      ///Arivarasu @ Ravi2 March 2020 at 22:11:00 GMT+5:30
      இந்த மாத மினி டெக்ஸ் வெளியீடு எண் இல்லாமல் வந்துள்ளது போல......//!

      எடிட்டர் சாரின் பதில்,

      ///Vijayan3 March 2020 at 23:37:00 GMT+5:30
      அதைத் தேடிப் பொழுதைச் செலவிடாதீர்கள் சார் ; இந்த விலையில்லா இணைப்புகளுக்கு இனி நம்பர்கள் இராது ! இவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்புகள் மாத்திரமே நம்பரைத் தாங்கி வரும் !////

      Delete
    5. அட செமையாக பழைய பதிவில் ஆசிரியர் சொன்ன விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொண்டது மட்டும் அல்லாமல் அது எந்த பதிவு என தேடி எடுத்து பதில் சொல்லும் உங்களை எல்லாம் எப்படி பாராட்டுவது என தெரியவில்லை. சூப்பர் நண்பர்களே.

      Delete
  12. வந்திட்டேன் சார் 🙏🏼🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️
    .

    ReplyDelete
  13. வாக்களிப்பு செய்தாச்சு!

    மார்ச்31ல...!!!!

    நல்ல சிஸ்டம்!

    ReplyDelete
  14. ஆண்டு சந்தா. கட்டியாயகிவிட்டது இந்த வருடதுலய படிக்கத்தான் ஆசை மற்ற. வாசகர்களின். நிலைமையும். யோசிக்க வேண்டி உள்ளது அனைவரின் யோசனைகளையும் விட எடிட்டர் ஒரு முடி வெடுதிருப்பார் அதற்கு. தலை. வணக்குகிரென். தயவு செய்து kooriyur. ST or. DTDC சிவகாசி book. செய்யாமல். மதுரையில் இரண்டு நாட்கள். கழித்து. Book செய்கிறார்கள். சிவகாசி யில். அவர்கள் க்கு. வேலை அதிகமோ அல்லது. ஆட் கள். Patraakkuraiyo தெரியவில்லை ஆகையால் எப்போது. எங்களுக்கு. புத்தக கம். Kiddaikkum என விசாரித்து எங்களுடைய செல். No. SMS. செய்து விட்டால். எங்களுக்கு. வீன். அலைவது மிற்சும். உங்கள். Uliurkalukk u பதில். சொல்வது மிட்சும். (kooriyur). சமந்தம் அக. தயவு செய்வீர்களா ? செய்வீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. சார்... சிவகாசியில் ஒப்படைத்து ரசீது வாங்கிய பிற்பாடு அவர்கள் எங்கு கொண்டு செல்கின்றனர் ? எங்கு புக்கிங் செல்கின்றனர் ?என்ற டிடெக்டிவ் வேலைகள் செய்திட நமக்கு வாய்ப்புகள் ஏது ? சீரற்ற நிலையின் மத்தியில் மட்டும் தானே குளறுபடி நடந்துள்ளது ? மற்ற சந்தர்ப்பங்களில் இவ்வளவு சிரமங்கள் இருந்திருக்கவில்லையே ?

      Delete
  15. இப்போது இருக்கும் இறுக்கமான சூழலில் மாதம் 5 புத்தகங்கள் வாங்குவது கொஞ்சம் கடினம்தான். நம் நண்பர்கள் ”போடுங்க சார்” என்று சொல்லிவிட்டு.. வீட்டாம்மாவிற்கு தெரியாமல் அஞ்சரை பெட்டியை உருட்ட நேரிடலாம். ஸ்பெஷல் இதழ்கள் வந்தால் விலை இன்னும் அதிகமாகும். மாதா மாதம் கையை பதம் பார்க்காமல் காமிக்ஸ் படிக்கலாம் என்றால் மார்ச் வரை நிதானமாக பயணிக்கலாம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. //நண்பர்கள் ”போடுங்க சார்” என்று சொல்லிவிட்டு.. வீட்டாம்மாவிற்கு தெரியாமல் அஞ்சரை பெட்டியை உருட்ட நேரிடலாம்//

      நம்மாட்கள்லாம் சுத்தமான வீரர்களாக்கும் ; ஓன்னு கண்ணிலே தண்ணி வய்ச்சிட்டு நின்னு காரியம் சாதிச்சிடுவாங்களாக்கும் !

      Delete
    2. // வீட்டாம்மாவிற்கு தெரியாமல் அஞ்சரை பெட்டியை உருட்ட நேரிடலாம் //

      அட இது வேற நடக்குதா :-)

      Delete
  16. அழகான ஓட்டு முறை சார்...


    ஓட்டு போட்டாச்சு...:-)

    ReplyDelete
    Replies
    1. சொல்லியிருந்தாக்கா சன் டிவி OB வேன் ஒண்ணை அனுப்பி நீங்க ஜனநாயகக் கடமை ஆத்துறதை வரலாற்றில் பதிவு பண்ணி இருப்போம் தலீவரே !

      Delete
  17. வேகம் சூடு போடும் ; விவேகம் சோறு போடும் ! மார்ச் 2021 வரை நீட்டிப்பதே நலம் !

    ReplyDelete
  18. நம்பிக்கை தானே எல்லாம்...


    வாழ்க வளமுடன்...!

    ReplyDelete
  19. // இக்கட RK நகர் பார்முலாக்களுக்கோ ; திருமங்கல பார்முலாக்களுக்கோ இடம் கிடையாதெனும் போது முடிவுகளை தைரியமாய் நம்பிடலாம் என்பேன் ! தவிர, ஒரு IP அட்ரசுக்கு ஒற்றை வாக்கு மட்டுமே //

    ஹி ஹி ஹி... சும்மானாச்சும் அக்கட போய் மறுபடியும் அமுக்கி பார்த்தேன். :-)

    ReplyDelete
  20. ஜனநாயக கடமையை பொறுப்புள்ள வாசகனாக நிறைவேற்றிவிட்டேன். ஓட்டு போட்டாகி விட்டது. விரலில் மை இல்லை. கள்ள ஓட்டுக்கு வழி இல்லை. என்னா ஒரு polling idea.

    ReplyDelete
  21. ஹூம்... இந்த நடைமுறையை கடேசியா பிக்பாஸ்ல ஓவியாக்கு ஓட்டுப் போட்டப்போ பாத்தது...! :-)

    ReplyDelete
    Replies
    1. /// இந்த நடைமுறையை கடேசியா பிக்பாஸ்ல ஓவியாக்கு ஓட்டுப் போட்டப்போ பாத்தது...! ///

      "ஒட்டு போட்டுட்டு போவியா" ன்னு விரட்டிட்டாங்களோ?

      Delete
    2. அடடே..நீங்களுமா ?

      Delete

  22. /// ஹி ஹி ஹி... சும்மானாச்சும் அக்கட போய் மறுபடியும் அமுக்கி பார்த்தேன்.///

    நானும் அவ்வண்ணமே. you already voted for this poll என்று வருகிறது. செம்ம ஐடியா. hats of to ஜூ.எடி.

    ReplyDelete
    Replies
    1. நாமெல்லாம் எப்பேர்ப்பட்ட ஜனநாயகப் பின்னணிலேர்ந்து வர்றோம்னு ஜெர்மனிக்காரனுக்கு தெரிஞ்சிருக்கு சாரே !

      அந்த வோட்டிங் தளத்தை அமைத்திருப்பது ஒரு ஜெர்மானிய மென்பொருள் நிறுவனம் !

      Delete
    2. நம்ம பொலிடிக்கல் ஆளுங்கள இதுல விட்டீங்கன்னா, உள்ள புகுந்து, பிரிச்சு மேஞ்சிடுவாங்க. ஜெர்மனிக்காரவுகளுக்கே தண்ணிகாட்டுறவுங்க நம்மாளுங்க.

      Delete
  23. அண்ணோவ் ; ஒன்றல்ல - இரண்டு வோட்டிங் பூத் உள்ளதுங்கோ !

    ஒன்றில் 94 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன ; இன்னொன்றில் 51 மட்டுமே ! Pleashh - again voting !

    ReplyDelete
    Replies
    1. ஏம்பா யாருப்பா அது மீதி 43 பேர். சும்மா பயப்படாம பூத் உள்ள போய்ட்டு வாங்கப்பா.

      Delete
    2. எனக்கென்னவோ உங்க பிரச்சாரம் சரியா பண்ணலனு தோனுது. :-) வேனும்னா ஓட்டுக்கு 2000 ரூவா டிரான்ஸ்பர் பண்ணிப் பாருங்களேன். சும்மா போலிங் சூடு பறக்கும். ;-)

      Delete
    3. இப்போதைக்கு ரெண்டு ரவுண்ட் பன்னுக்கே உலக வங்கியிடம் லோன் போடணுமே ; ரெண்டாயிரத்துக்கு ட்ரம்ப் கிட்டேயே கேட்கலாமோ ?

      Delete
    4. அந்த ஜெர்மன் பன்னே விழி பிதுங்கி நிற்கிறது. நாம என்ன கேட்கிறது!!!

      Delete
  24. 'ஓட்டுப்போடாதவர்களுக்கு மட்டும்' தூங்கிப்போன டைம்பாம் கதை இலவசமாக அனுப்பப்படும் என்ற அறிவிப்பை எடிட்டர் வெளியிட்டால் போலிங் சும்மா...கிழி..கிழி..தான்!

    ReplyDelete
    Replies
    1. இது வேறயா :-)

      இன்னும் நான் அந்த கதையை முழுமையாக படிக்கவில்லை (படிக்க முடியவில்லை) :-)

      Delete
    2. சில கதைகள (ஒருதடவ) படிச்சாலே பிடிக்கும். சில கதைங்கள(பலதடவ) படிக்க படிக்கத்தான் பிடிக்கும். இன்னும் சில கதைகள படித்தால் பைத்தியம்தான் பிடிக்கும். நம்ம லிஸ்ட்ல இருக்கறது மூணாவது ரகம்.

      Delete
    3. இதுவரை நான் பாதி படித்த ஒரே காமிக்ஸ் தூ போ டைம்பாம் தான் சார்.மிடியல.

      Delete
  25. அதுவும் பலிக்காவிட்டால் ஓட்டுப்போடாதவர்களுக்கு பவர்ஸ்டாரின் 'லத்திகா' பட டிவிடி இலவசமாக அனுப்பப்படும் என்ற அறிவிப்பை வெளியிடலாம்!

    ReplyDelete
  26. ///
    ஹி ஹி ஹி... சும்மானாச்சும் அக்கட போய் மறுபடியும் அமுக்கி பார்த்தேன். :-)////----

    நாம இரண்டு ஓட்டு போட்டோமே!

    அது எப்டீனா என்ற பையன் செல்லில் இருந்து "கள்ள ஓட்டு".....ஹி...ஹி...!!! இனி நிம்மதியாக இருப்பேனாக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அதானே நமக்கு தெரியாத டெக்னிக்கா !! 😋

      Delete
  27. 7.30 நிலவரப்படி....
    ஓட்டு எண்ணிக்கை,

    பதிவானவை:139

    செல்லாதவை:27

    டிசம்பர் 31: 62

    மார்ச் 31:50

    டிசம்பர் லீடிங் கன்ட்டினீயூஸ்......

    ReplyDelete
  28. Sir, this voting idea is great, requesting you to use this technique for all such future surveys please. Good Job Vikram !!!

    ReplyDelete
  29. ஆமா. என்னமோ ஓட்டுங்கராங்களே எதுக்குசார்ஓட்டு நானும் காலைலேர்ந்துப்ளாக்லேயேதான் இருக்கேன் ஒண்ணுமே புரியலையே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  30. அந்த தூங்கிப்போன டைம்பாம்எனக்கு ஒண்ணு குடுங்க சார். ஏஜண்ட்327 எனக்கு ரெம்ப பிடிச்சவர் சார்

    ReplyDelete
  31. Dear Editor,

    I think it is way too early to decide on voting for this years books. As you verily said, printing and publishig them is easy. Selling them - revenue is going to be very tough !

    I have - for example - decided to get all this years books from May to Dec - either in Next Jan's Book Fair in Chennai OR via courier later to January if Bookfair does not happen!

    According to my friends connected to industry circles (and obviously you will know better) in TamiL Nadu as well as all over India 35% MSMEs are facing closure - and another 7% do not know when they will close or redeem. This being the case, there is going to be large scale unemploymenent in the months - years to come.

    With comics books relegated to Luxuries you have to be extremely careful !

    I may sound so very pessimistic but .. I better try to boom with this than to sing a melodious tune about the current situation !!

    இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்

    ReplyDelete
    Replies
    1. நிலவரம் கலவரமாய் இருப்பதை உணராதில்லை சார் ; in fact I saw this coming from mid April.ஆனால் வீணாய் நண்பர்களின் உற்சாகங்களை மட்டுப்படுத்த வேண்டாமே என்று வழக்கம் போலவே சுற்றி வந்தேன் !

      ஆனால் இன்றைக்கோ தேசிய அளவில் தமிழகம் செய்து வரும் கொரோனா "சாதனைகளைப்" பார்த்த பிற்பாடு யாருக்கும் இனி சந்தேகங்கள் இருக்க இயலாது !

      If need be - மூன்றே பணியாட்களோடே இந்தாண்டின் முழுமையையும் கடந்திடவும் அத்தனை இதழ்களை வெளியிடவும் ஏற்பாடுகள் are in place !

      And காத்திருக்கும் அடுத்தாண்டிற்கொரு சிக்கனத் திட்டமிடல் & அதனை இயன்றமட்டிலும் நோவின்றி முன்னெடுத்துச் செல்லவும் ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன !

      God willing, the show will go on for sure - வாசிக்க ஒரு குறைந்த பட்ச நண்பர் குழாம் தாக்குப் பிடித்திடும் வரையிலும் !

      Delete
    2. And நண்பர்களின் தாக்குப்ப்பிடிப்புத் திறன் என்றைக்குக் கேள்விக்குறியாகிடுகிறதோ - அன்றைக்கு PAUSE பட்டனை அமுக்குவதைத் தவிர்த்து வேறு மார்க்கமிராது !

      Hopefully that day would never dawn ! And hopefully a vaccine would be in place sooner than later !

      Delete
    3. // Hopefully that day would never dawn ! And hopefully a vaccine would be in place sooner than later ! //

      எனது எண்ணமும் இதுவே.

      Delete
    4. I assure you sir that day will never dawn....

      Delete
    5. // PAUSE பட்டனை அமுக்குவதைத் தவிர்த்து வேறு மார்க்கமிராது ! //

      அந்த பட்டனே தேவையில்லை‌/தேவைப்பட வேண்டாம்.

      Delete
    6. ///I assure you sir that day will never dawn....///

      +1

      ///அந்த பட்டனே தேவையில்லை‌///

      +1

      Delete
    7. 2:00pm Monday நிலவரப்படி....
      ஓட்டு எண்ணிக்கை,

      பதிவானவை:223

      எதுவாயினும் ஓகே:45

      டிசம்பர் 31: 99

      மார்ச் 31:79

      டிசம்பர் லீடிங் கன்ட்டினீயூஸ்......


      வாக்கு சதவீதம் & வாக்கு எண்ணிக்கை நிலவரம் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால்,

      ///அந்த பட்டனே தேவையில்லை‌///


      Delete
    8. "காமிக்ஸ் படிக்கப் போகும் கடேசி தலைமுறையினராக நிச்சயமாக நாம் இருக்கப்போவதில்லை!"

      Delete
  32. அப்பப்பா ஒரே தள்ளுமுள்ளு .... யாரும் வரிசையில் வந்து போடவில்லை .... இதுல அந்த மூன்று கட்சியின் ஏஜென்ட்கள் ஓட்டு போடும் இடத்தில் செய்யும் அட்டகாசம் தாங்கவில்லை... ஒரே வழியாக ஓட்டு போட்டாச்சு :-)

    ஓட்டு போட்டேன் என்பதை இப்படி சொன்னால் தான் சுவாரசியமாக இருக்கும் :-)

    காலை வணக்கம் நண்பர்களே. கவனமாக வேலைக்கு சென்று வாருங்கள். இனி வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கவனமாக பத்திரமாக இருங்கள் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. ///அப்பப்பா ஒரே தள்ளுமுள்ளு .... யாரும் வரிசையில் வந்து போடவில்லை .... இதுல அந்த மூன்று கட்சியின் ஏஜென்ட்கள் ஓட்டு போடும் இடத்தில் செய்யும் அட்டகாசம் தாங்கவில்லை... ஒரே வழியாக ஓட்டு போட்டாச்சு ///

      ஹிஹி! :))))

      Delete
  33. Social distancing maintained while voting. Situation of pressing Pause button will not happen ever

    ReplyDelete
  34. எனக்கு ஓட்டுப்போட தெரியலை. சார். இதுவரை என் ஓட்டையாரும்போட்டிருக்காதபட்சத்தில்மார்ச்31ல் எனது ஓட்டை பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நோ ப்ராப்ளம் ராஜசேகரன் சார். உங்கள் ஓட்டை தபால் ஓட்டாக கணக்கில் கொண்டு போய் விடுவார், எடிட்டர் சார்.

      Delete
  35. தயவுசெய்து ஓட்டு போடாதவங்க போட்டிருங்க இல்லைன்னா ஓட்டு போடதவங்களுக்கு வீராசாமி படத்தோட DVD அனுப்ப ஆசிரியர் திட்டமிட்டுள்ளார் ஓட்டு போடுங்க உயிரை காப்பாத்திக்குங்க

    ReplyDelete
  36. //And நண்பர்களின் தாக்குப்ப்பிடிப்புத் திறன் என்றைக்குக் கேள்விக்குறியாகிடுகிறதோ - அன்றைக்கு PAUSE பட்டனை அமுக்குவதைத் தவிர்த்து வேறு மார்க்கமிராது !//
    அதுக்கெல்லாம் வாய்ப்பு லேது சார்.
    அந்த pause பட்டனை எடுத்து எனது சட்டையில் உதிர்ந்துபோன பழைய பட்டனுக்கு பதிலாய் தைத்து மாட்டிக் கொண்டு மாதாமாதம் வரப்போகும் நமது பொக்கிஷ பார்சலுக்காக காத்துக்கிடக்கும் சிறுகூட்டத்தில் நானும் ஒருவனாக இருக்கப்போவதுதான் நடக்கப் போகிறது சார். கொரோனாவால் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களையெல்லாம் நிச்சயம் முறியடித்து மறுபடி சகஜ நிலமைக்கு நாம் மாறும் காலம் வரத்தான் போகிறது. நமது காமிக்ஸ் மறுவருகைக்கு பின் தடதடத்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமெடுத்து ஓடிவந்ததையும், விதவிதமான காமிக்ஸ்களை ஒவ்வொரு மாதமும் தாமதமில்லாமல் எங்கள் கைகளில் சேர்க்க நீங்கள் பட்ட சிரமங்கள் அத்தனையும் நிச்சயம் வீணாய் போகாது சார். கொரோனா உங்களை கொஞ்சம் ஓய்வெடுக்க அமரவைத்து வேடிக்கை பார்க்கிறது அவ்வளவுதான். மறுபடி நீங்கள் உசைன் போல்டாக அவதாரமெடுக்கத்தான் போகிறீர்கள். நாங்கள் உங்களைத் தொடர்ந்து ஓடிவரத்தான் போகிறோம். இது நடக்கிறதா இல்லையா என்று பார்த்து விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. // கொரோனா உங்களை கொஞ்சம் ஓய்வெடுக்க அமரவைத்து வேடிக்கை பார்க்கிறது அவ்வளவுதான். மறுபடி நீங்கள் உசைன் போல்டாக அவதாரமெடுக்கத்தான் போகிறீர்கள். நாங்கள் உங்களைத் தொடர்ந்து ஓடிவரத்தான் போகிறோம். //

      Well said!
      +1

      Delete
    2. அருமையாக சொன்னீர்கள் ஏடிஆர் சார்...:-)

      Delete
    3. ATR சார் சூப்பர் சூப்பர்

      Delete
  37. வெற்றி வாய்ப்பை தக்க வைத்து கொண்டே இருக்க்கிறார் நமது தொகுதி வேட்பாளர் திரு டிசம்பர் 31..

    ReplyDelete
    Replies
    1. தளத்தில்(கருத்து கணிப்புல) மார்ச் 31 லீடிங்போன மாதிரி பாவ்லா காட்டிட்டு, எலக்சன்ல டிசம்பரில் குத்திபுட்டாங்க தல!

      Delete
    2. தவறு டெக்ஸ் ..தளத்திலும் முண்ணனியில் இருந்தது டிசம்பர் 31 தான்...சரி பார்க்கவும்...:-)

      Delete
    3. ஹி....ஹி... ஆமா தல!

      என் கண்ணு இன்னும் கொஞ்சம் டொக்கு ஆகிட்டது போல...பாரப்பது எல்லாம் மார்ச்31 மாதிரி யே தெரிஞ்சது. உத்து பார்க்கவும் நிறைய 31/31....!!! போன பதிவுல இன்னும் நிறைய கமெண்ட்களும் வந்திருக்கு... உங்க தயவுல அவற்றையும் கவனிக்க முடிஞ்சது.....!!!!

      Delete
  38. டியர் சார்,
    எனக்கு தங்கள் கேள்வியில் ஒரே ஒரு பிரச்சனை மட்டும் தானே தெரிகிறது.
    அதைப் பற்றி மட்டும் கருத்துக் கேட்டால் போது மே ?'
    அதாவது, ஜம்போ - இதழ்களுக்கு ஆண்டு கட்டுப்பாடு கிடையாது. எனவே அது பிரச்னை இல்லை.
    2020- சந்தா வில் இரு இதழ்கள் மட்டுமே விலை கூடுதல் - ஒன்று -தோர்கல் ரூ 450-
    இரண்டு -தீபாவளி with_டெக்ஸ் - ரூ 450.
    இவை இரண்டு மட்டுமே சந்தாதாரர் தவிர்த்து கடையில் வாங்குபவர்களை பாதிக்கக்கூடிய விசயம்.
    ஆகையால், அவைகளை மட்டும் தனித்தனி இதழ்களாக விலை நிர்ணயம் செய்து வெளியிடுவது பற்றி மட்டும் கருத்து கேட்டால் போதுமே.?i
    மற்றபடி , நல்லதையே நினைப்போம்.
    நான் முன்பே குறிப்பிட்டது போல்.காமிக்ஸ் படிக்கும் ஆசை, என்பதை விட் அதுவும் ஒரு அச்சடிக்கும் தொழில் - தொழிலாளர்கள் பணி செய்யும் இடம்.எல்லோருக்கும் வேலை வாய்ப்பு வேண்டும். எனவே , அனைத்து தொழிலாளர்கருக்கும், முழு சம்பளமும் கிடைப்பது போல் - தாங்கள் திட்டமிட வேண்டும். என்று ஒரு தொழிலாளி காமிக்ஸ் வாசகனாக கேட்டுக் கொள்கிறேன்.சார்... |

    ReplyDelete
  39. there are 94 votes for Mar 31. Eventhough i voted for 31/31 i think we should consider the other friend's suggestion and understand their problems.

    ReplyDelete
  40. லார்கோவின் பிரியமுடன் ஒரு பிரளயம் நேத்துதான் படிச்சேன்.. ஹுரோயின் பத்து நாளா சாப்பிடாத கொரானா ஃபேஷன்ட் மாதிரி இருக்குறா.. பக்கத்துக்கு பக்கம் அவளுக்கு பில்டப் ஓவரா வேற பண்றானுங்க.. நம்ம ஹீரோ பார்த்தவுடனே அவ மடியில விழுந்துடுறாரு.. ஏன் இப்படி??

    ReplyDelete
    Replies
    1. ஹா....ஹா....!!! லார்கோவுல 8ஏ முக்கா கதை மட்டுமே கணக்கில் வைத்து கொள்ளுங்கள் சந்தோஷ்!

      வழக்கமாக கடைசி பக்கத்தில் அவுழும் முடிச்சுகள் 9ம் கதையில் முக்கால் வாசிலயே அவிழ்ந்திடுது. கடைசில சைமனை கண்ணாலத்துல இருந்து காப்பாற்றி ஏதோ முடிச்சி வெச்சுடறாங்க!
      10வது கதைலாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை! திருஷ்டிப்பொட்டு, இத்தனை பெரிய சீரியஸ்க்கு....!
      ஜஸ்ட்லைக் தட் கடந்து போயிடக்கூடிய கதை...!

      Delete
  41. காமிக்ஸ் படிக்கப்போகும் கடேசித் தலைமுறையினராய் நாமிருக்கப் போவதில்லை. 🚸↗️ மகிழவைக்கும் பதிவு கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  42. 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
    எத்தனை காமிக்ஸ் பார்சல்கள் வரும்போதும் இருந்ததை விட இந்த பார்சலுக்கு சற்றே ஆவலாக காத்து இருந்தேன்.

    லயன் காமிக்ஸ் தளத்தில்
    கவிதை போட்டியில் வென்ற சந்தாவை நம்ம கிட் ஆர்டின் கண்ணன் (எ) KOK அங்கிள்எனக்கு அன்புபரிசாக தந்து இருந்தார். இதற்கான முதல் பார்சல் இன்று கிடைத்தது.

    இந்த மகிழ்ச்சியை உங்களோடு ஷேர் பண்ணிக் கொள்கிறேன் ஃப்ரெண்ட்ஸ்!

    எடிட்டர் சார் ஒவ்வொரு சமயம் சந்தா அறிவுக்கும் போதும் "ஒவ்வொரு முகத்திலும் புன்னகை"--என சொல்வார். அதை நடைமுறை படுத்தி பார்க்கும் காமிக்ஸ் நண்பர்கள் நம் மத்தியில் இருப்பது நமக்கு கிடைத்த வரமே!😍😍😍😍😍

    ராட்ஜா ப்ரான்ஸ்@ கடுமையான போட்டியில் சிறப்பாக நடுவர் பணியாற்றி கூடுதலாக இன்னோரு சந்தா கிஃப்ட் ஆக வழங்கியமைக்கு மிக்க நெகிழ்ச்சியான நன்றிகள்!😍😍😍😍😍

    நடந்து முடிந்த சவாலான இதே போட்டியில் மற்றொரு நடுவாராக களப்பணி ஆற்றிய மஹிக்கும் நெகிழ்ச்சியான நன்றிகள்🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. ஜட்ஜ் இருவருக்கும் எனது நன்றிகள்....

      மகிழ்ச்சியை நானும் பகிர்ந்து கொள்கிறேன் டெக்ஸ்..... ☺️

      Delete
    2. மகிழ்ச்சில ஆசிரியரை மறந்து விட்டோமே...ஙே!

      கடுமையான லாக்டவுன் காலத்தில் மன இறுக்கத்தை உடைத்து நார்மலாக நாட்களை நகர்த்திசெல்ல உற்சாகமான போட்டிகளை தொடர்ந்து நடத்திய எடிட்டர் சாருக்கு அன்பான நன்றிகள் அனைவர் சார்பில்....🙏🙏🙏🙏🙏🙏

      போட்டிகளின் வாயிலாக எடிட்டர் சாரின் கிஃப்ட்கள்& நடுவர்கள் ஒருபடி மேலே சென்று அவர்களும் இயன்ற அளவு பரிசுகளை தந்து நண்பர்களை உறசாகப்படுத்தினார்கள். அந்த மனசுதான் "கடவுள்" நண்பர்களே!

      இதுபோன்ற நிகழ்வுகளை நடத்திகாட்டுவது காமிக்ஸ் உலகில் மட்டுமே இயலும்....!!!

      நட்பே காமிக்ஸ்.....!!!!!

      இந்த நெகிழ்ச்சியான சமயத்தில்...

      கிரிக்கெட்டு, சினிமானு வேறு பக்கம் உளற்றி கொண்டு இருந்த என்னையும் என் 14வது வயசுல காமிக்ஸ் பக்கம் திருப்பிய என் பள்ளித் தோழர்கள்
      ராஜா & வெள்ளிவேல்,

      காமிக்ஸ் உலகில் தேடலின் போது அதுவரை நான் படிக்காத புத்தகங்களை வாரி வழங்கிய சீனியர் நண்பர்கள் & ஒவ்வொரு ஹீரோ பற்றிய தகவல்களை எனக்கு பொறுமையாக சொல்லித் தந்து என்னை காமிக்ஸ் உலகில் முழுமையாக தள்ளிய சேலம் அன்னதானப்பட்டி சிவா அவர்கள்,

      டெக்ஸின் தேடலின் போது டெக்ஸின் கதை வந்த இதழ்களை வாரி வழங்கிய அன்பு நெஞ்சங்கள்,

      இரத்தப்படல சேகரிப்பில் கிடைத்தற்கரிய பாகம்1ஐ அன்புபரிசாக 1997-98களில் வழங்கிய நண்பர் கலீல் அவர்கள்,

      பல டெக்ஸ் வில்லர் கதைகள் அட்டை இல்லாமலே கிடைத்து இருந்தது என் கலக்சனில்; அவற்றை எடுத்துக்கொண்டு அட்டையுடன் வழங்கி என்னை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய சேலம் அரசு ஓட்டுனர் நண்பர் குமார் அவர்கள்,

      2012 முதலே என்னையும் விழாக்களில் உற்சாகமாக பழகும் காமிக்ஸ் சொந்தங்கள்,

      மணிக்கணக்கில் என்னோடு காமிக்ஸ் பேசி, என்னையும் காமிக்ஸ் பற்றி எழுதி வைத்த மரியாதைக்குரிய மூத்த நண்பர் ஈரோடு ஸ்டாலின் அவர்கள்,

      என் டெக்ஸ் கலக்சன் கம்ப்ளீட் ஆக "மாய எதிரி" இதழை அன்புபரிசாக வழங்கிய சித்தர் சிபி அவர்கள்,

      சந்தா கட்ட இயலாது போன வருடங்களில் சந்தாவை அன்புபரிசாக வழங்கிய அன்பான தோழமை மஹி,

      டெக்ஸின் ஆங்கில இதழை ஈரோடு விழாவில் அன்புபரிசாக தந்து திக்குமுக்காட வைத்த பொருளர் ஜி அவர்கள்,

      தன்னோட டெக்ஸ் போஸ்டரை எனக்கு அனுப்பி இன்ப அதிர்ச்சி அளித்த நண்பர் GP அவர்கள்,

      2012 முதல் ஒரு குழுவாக நான் எத்தனை "தொந்தரவு" கொடுத்தாலும் அவற்றை பொறுத்துக்கொண்டு என்னை அரவணைத்துப்போகும் என் நண்பர்கள்.....,

      இது எல்லாவற்றையும் இணைக்கும் உறவு பாலமாக விளங்கும் அன்பின் எடிட்டர் சார் அவர்கள்,

      மற்றும் இந்த காமிக்ஸ் பயணத்தில் இங்கே குறிப்பிட மறந்துபோன எல்லா அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் "நன்றி" சொல்ல மனசு துடிக்கிறது. இத்தனை நெருக்கமான நண்பர்களுக்கு நன்றி சொல்வது சற்றே அந்நியமாக போய் விடும் என்பதால்.....

      .....மகிழ்ச்சி.....!

      எந்நாளும் வாழ்க இந்த காமிக்ஸ் நேசம்!


      Delete
    3. வாழ்த்துக்கள் விஜய் அண்ணா.
      /// நம்ம கிட் ஆர்டின் கண்ணன் (எ) KOK அங்கிள்எனக்கு அன்புபரிசாக தந்து இருந்தார்.///
      என்னது அங்கிளா? இந்த விஷயம் அவருக்கு தெரியுமா? தங்க கல்லறை வந்த போது தத்தி, தவழ்ந்து படித்ததாக சொன்னார் 🤔

      Delete
    4. தேங்யூ சகோ!

      ///என்னது அங்கிளா? இந்த விஷயம் அவருக்கு தெரியுமா?///

      ம்...தளம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் இருந்தே இங்கே எழுதும் நண்பர்களின் ஸ்டைலை வைத்து அவர்களின் இயல்பை கணித்து அவர்களோடு பழகி வருகிறேன் சகோ! 99% சரியாகவே கணிப்பு போய் இருக்கு!

      2014ல "மாடர்ன் மங்கூஸ்"---என்ற பெயரில் ஒருவர் காமெடி ஸ்டைலில் அசத்தலாக எழுதி வந்தார். ஒரு ஞாயிறு பதிவுல மாலை வரை அவர் காணல. அப்போது தான் , " நம்ம மாம்ஸ் ஒருவர் மங்கூஸ்னு துடிப்பாக எழுதி வருவார் இன்னிக்கு இன்னும் காணலயே???"""---என எழுதி இருந்தேன்.

      மாலைல வந்தவர், "தான் விருந்துக்குப் போய் வந்தது காரணமாக இங்கே வர முடில மாமா"--என பதில் போட்டார்.

      முகம் பார்த்திராத நாட்களிலேயே தள பரீச்சயம் கொண்டே அங்கிள் ஆக அழைத்த போதே ஏற்று கொண்டு 6வருசம் ஆச்சுது!

      Delete
    5. ரைட்டு, ரைட். ஒரு clarity காக தான். மாமா-மச்சி-பேபிகார்ன் ரகளை.

      Delete
  43. 'பிரிவோம் சந்திப்போம்' கதை குறித்த ஒரு வீடியோ பதிவை தனது 'அலமாரி' யூட்யூப் சேனலில் - அருமையான பின்னணி இசை சகிதம் - தன் வசீகரிக்கும் குரலில் வடித்திருக்கிறார் - நம் நண்பர் ஈரோடு ஸ்டாலின்!! அதைக் காண "இங்கே க்ளிக்குங்க பாஸூ"

    ReplyDelete
  44. 2:00pm Thursday நிலவரப்படி....
    ஓட்டு எண்ணிக்கை,

    பதிவானவை:329

    எதுவாயினும் ஓகே:66

    டிசம்பர் 31: 152

    மார்ச் 31:111

    டிசம்பர் லீடிங் பிடிக்க முடியாத அளவு சென்று விட்டது.....!!!

    நண்பர்கள் முடிவு தெரிஞ்சிட்டது!

    ஓவர் டூ ஆசிரியர் சார்!

    ReplyDelete
  45. 9வது வகுப்புல ஆங்கில பாடத்தில் Nanditaile பகுதில ஒரு கதை வரும்.(1988 டூ 1992வாக்கில் 9வது படித்தவங்க இதை படித்து இருப்பாங்க)
    ஒரு 3வதா 4வதோ படிக்கும் பையன் தினம் ஸ்கூல் விட்டதும் அவனோட ப்ரெண்டும் நடந்து வீட்டுக்குப் போவானுங்க!

    வழில பேச்சுல அந்த பையன் அவுங்க அம்மா பற்றியே பேசுவான். அவுனுக்கு தினம் ஒரு வெரைட்டி ரைஸ் செய்து வைத்து இருக்கும் அவுங்க அம்மா; இன்னிக்கு புதன்கிழமை லெமன் ரைஸ் செய்து வைத்து இருக்கும்!

    சாப்பிட்டு முடித்தவுடன் ஹோம்ஓர்க் சொல்லித்தரும்;
    ஞாயிறு வந்தா கடைக்கு போய் பிடித்த சாக்லேட்டுகள் வாங்கித்தரும்.

    -----இப்படி பலதும் சொல்லிட்டே வருவான். அவுன் ப்ரெண்டு,கேட்டுகொண்டே வருவான். இவனோட வீட்டுக்கு பிரிந்து போகும் ஒற்றையடி பாதை வந்துட்டதை சொல்லி "பைபை";சொல்லுவான்.

    இவன் "பைபை" சொல்லுவதற்குப் பதில் முகத்தை கையால் பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுவான். அவன் ப்ரெண்டு இவன் தோளைத்தொட, விசும்பிக்கொண்டே சொல்வான்....,

    "எங்கம்மா போன வாரம் இறந்து போயிட்டாங்க; கேன்சர்னு சொல்றாங்க, ஒன்றும் புரில. எங்க மாமா வீட்டில் தான் தங்கி இருக்கேன்"

    ******
    க்ளாஸ் டீச்சர் சொல்லி முடிக்கும் போது விசும்புவது அவன் மட்டுமல்ல......!!!!!

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிட்டது. அன்னிக்கு ஸ்கூல் பாடத்தின் வாயிலாக அடைந்த அதிர்வு இன்னிக்கு மீண்டும் காமிக்ஸ் வாயிலாக....,

      "கண்ணான கண்ணே...."

      Delete
    2. "கண்ணானா கண்ணே
      கண்ணானா கண்ணே
      என் மீது சாய வா
      புண்னான நெஞ்சை
      பொன்னான கையால்
      பூ போல நீவ வா

      நான் காத்து நின்றேன்
      காலங்கள் தோறும்
      என் ஏக்கம் தீருமா....."

      -----இந்த பாட்டு கேக்குல்போது சாதாரணமாக தோணித்து!

      ஆனாக்கா இந்த குட்டிப்பாப்பா கிளாரவை
      "கண்ணான கண்ணே"---வுல பார்த்த பின் ஆயிரம் மடங்கு வீரியத்துடன் முகத்தில் அறைகிறது.

      எத்தனை காலம் காத்து நின்றாலும் கிளாராவின் ஏக்கம் தீரப்போவது இல்லை!
      கிளாரா மட்டுமல்ல கூடவே விக்கித்துப் போகும் நாமுமே...!!!!

      உசுரை அப்படியே கையை விட்டு பிடுங்கி எடுத்துடும் உணர்வு...!

      ஈவி, KS, KOK, ATR.....& பலர் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
      அது இப்ப இன்னும் நல்லாவே புரிந்து கொள்ள முடிகிறது!

      "கண்ணான கண்ணே..."

      சின்ன பாப்பாக்களுக்கான கதை அல்ல!
      சின்ன பாப்பா வாயிலாக நம்மை கலங்க வைப்பதே இதன் கரு!

      சின்னவங்களுக்கு இறப்பின் முழு பின் விளைவும் தெரியாத காரணமாக கதையை எளிதாக கடந்துட முடியும்.

      பெரியவங்களுக்கு......?????

      Delete
    3. சரியான விமர்சனம் டெக்ஸ் உங்களாலும் உணர முடிந்தது. இன்னும் பரணி , ஸ்டீல், ஷெரீஃப் செல்வம் அபிராமி போன்றோர் செய்யும் விமர்சனத்துக்கு வெயிட்டிங்....

      Delete
    4. பரணி, ஸ்டீல்- இருவரும் நம்மை போன்ற அலுமினியம் வயர்களே! எளிதாக மின்சாரம் கடத்தி வெப்பம் அடைந்துவிடும் எளிதிற்கடத்தி போன்றவர்கள்! ஆல்மோஸ்ட் நம்மதை ஒட்டியே இவர்களது விமர்சனங்கள் இருக்கும்!

      ஷெரீப் & செனா அனா--- இருவரும் கண்ணாடி இழைகள் போன்றவர்கள்; அரிதாகவே மின்சாரத்தை கடத்தி மிக மிக லேசாக வெப்பமடையும் அரிதிற் கடத்திகள். இந்த இருவரது விமர்சனங்கள் வித்தியாசமான கோணத்தில் அமையும்!

      பணிச்சுமை முடிந்த பின்னர் செனா அனா வின் விமர்சனம் கிடைக்கும்!

      ஏர்மெயில் ஓப்பன் ஆகி ஷெரீப் கையில் புத்தகம் கிடைக்க இன்னும் கொஞ்சம் நாம காத்து இருக்கனும்!

      வெயிட்டிங் பண்ணுவோம்; இரண்டும் ஒரத்திஃபுல் ஆன வெயிட்டிங்!!!!

      Delete
    5. இந்த வாரம் இரண்டு மாத புத்தகங்கள் சேர்ந்து வரும். வந்த பின்னர் படித்து என விமர்சனத்தை எழுதுகிறேன்.

      ஆனால் உங்கள் விமர்சனம் மிகவும் அருமை விஜயராகவன்.

      இந்த கதைக்கு அனைத்து நண்பர்களும் கொடுக்கும் வரவேற்பு சூப்பர். மற்றும் பல நண்பர்களின் விமர்சனம் அருமை.

      Delete
  46. 10 ந் தேதி னு சொன்னீகளே

    ReplyDelete
    Replies
    1. கடந்த பதிவில் புத்தகங்கள் அனுப்பும் தேதியை 12ம் தேதிக்கு ஆசிரியர் மாற்றி விட்டார் அனு.

      Delete
  47. சென்னை நண்பர்கள் அனைவரும் கவனமாக இருங்கள். நாளுக்கு நாள் கொரோனாவின் ஆட்டம் ஜாஸ்தியாகி வருகிறது.

    தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிருங்கள். முடிந்த அளவு அத்தியாவசியமான உணவு மற்றும் மருத்துவ பொருட்களை இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு வாங்கி சேகரித்து வைத்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வெளியே செல்லாமல்தான் இருக்கிறோம் கிட்டதட்ட ஜெயில்ல இருக்குற மாதிரிதான் இருக்குறோம் ஜீன் 30 ந்தேதிக்கு மேல்தான் நிலவரம் தெரியும் உங்களின் அன்புக்கு நன்றி சகோதரரே

      Delete
    2. நன்றி பரணி சார். நாங்க வெளியே போய் ஒரு மாமாங்கம் ஆகி விட்டது. மார்ச் மாதம் முதல் Immunity booster எடுத்து கொண்டு தான் இருக்கோம்.நிசப்தம் குடி இருந்த தெருக்களில் பழையபடி டிராஃபிக் வந்துவிட்டது. நம் நிலைமை தான் மாறவில்லை.

      Delete
    3. கொரோனா நமக்கு தளர்வு கொடுக்கவில்லை என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ளவது நலம்!

      Delete
  48. Sir, i think there is no need to pessimistic because in this situation, common people's have very few opportunities for entertainment, movies and books are leading entertainment items, so what should we do in this situation?

    Our friends who are experts in social media like Facebook and whatsapp may write good articles about world comics with lion comics online link because we are monopoly in tamil comics industry now,

    So i think we can use this as a good chance to create some new readers and create awareness about the beauty of comics to tamil readers,

    Thank you

    ReplyDelete
    Replies
    1. // i think we can use this as a good chance to create some new readers and create awareness about the beauty of comics to tamil readers //

      Positive thought! really appreciated!

      Delete
    2. Super ganesh a very optimistic thought

      Delete
    3. Positive thought! really appreciated!

      Delete
  49. நமது அலுவலகத்தில் புத்தகங்களை டப்பாவுக்குள் அடைக்கும் படலம் நடந்து கொண்டு இருக்கும் நேரம் இது!

    ReplyDelete
    Replies
    1. அப்படியே நம்புவோமாக.
      https://lion-muthucomics.com/en/ is down.

      Delete
    2. Shifting to a better server... the other one is up & running !

      Delete
    3. Books despatch today or tomorrow sir????

      Delete
    4. Thanks for the heads-up, Placed order from lioncomics.in
      Site is loading quite slowly.

      Delete
    5. சூப்பர் அனு. மீ டூ வெயிட்டிங். நாளை கிடைக்குமா இல்லை திங்கள் கிடைக்குமா என்பதே இப்போதைய கேள்வி.

      Delete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. The results after 353 persons voted:
    நம்பிக்கையே ஜெயம் ! டிசம்பர் 31 க்குள் நிறைவுறச் செய்யலாம் !46.46% (164 votes)

    ReplyDelete
  52. June 2020 Pack ஆன்லைன் லிஸ்ட்ல இருக்கு. அப்படினா இன்றைக்கு சந்தாதாரர்களுக்கு டெஸ்பாட்ச் பண்ணிட்டாங்க... :)

    http://lioncomics.in

    ReplyDelete
  53. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  54. Nice idea sir. Keep the poll open for 1 month

    i experienced opening lioncomics blog for last one month. i tried in various ways. did not open. for regular user like me, keep all polls open for 1 month

    ReplyDelete
  55. For any types of tamil english or hindi comics magazine like rani lion muthu tamil indrajaal Dc marval ack ambulimama tulsi manoj diamond or any types of comics magazine once contact whatsapp 7870475981

    ReplyDelete