Saturday, June 13, 2020

மீண்டுமொரு 'பச்சக்..பச்சக்'.படலம் !

நண்பர்களே,

வணக்கம். சில தருணங்களில் சந்தோஷிக்க சின்னச் சின்ன விஷயங்களே போதும் என்பதை yet again நிரூபித்த நாளிது !! போன மாதத்தின் பெரும் பகுதிக்கு - 'பார்சல் வந்தில்லா ; கூரியர் சொதப்பிட்டன் ; புக்ஸ் கிட்டில்லா ..!' என்று ஒலித்து வந்த சோகக் குரல்களின் மத்தியில், புக்ஸ் சார்ந்த அலசல்களையும், அபிப்பிராயங்களையும்  கண்ணில் பார்த்திடவே நிரம்ப சிரமப்பட்டது ! ஆனால் இம்முறையோ கூரியர் நிறுவனங்கள் (பெரும்பான்மைக்கு) 'கன்'னாய் செயல்பட்டிருக்க - நீங்க ஹேப்பி & in turn நாங்களும் ஹேப்பி ! 

'ஓராயிரம் புக்ஸ்' என்ற மைல்கல்லைத் தொட இன்னமும் எவ்வளவு இதழ்கள் பாக்கி என்ற கணக்கெல்லாம் தெரியலை ; ஆனால் ஒவ்வொரு புது இதழையும், முதல் புக்கைப் போலவே ரசிக்கும் அந்தப் பாங்கும் சரி ; ரொம்பவே ஆராய்ந்தால் கண்ணில் பிழைகள் தட்டுப்படுமோ  என்ற பயமும் சரி, இன்னமும் கொஞ்சமும் குறையாது தொடர்கின்றன ! So உங்களைப் போலவே  புக்குகளை இப்டிக்கா & அப்டிக்கா புரட்டியபடியே அழகு பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன் ! இது புது இதழ்கள் மீதே spotlight பாய்ந்திட வேண்டிய வேளை என்பதால் வேறெதைப் பற்றியும் எழுதிடத் தோன்றவில்லை ! அதே சமயம் உங்களில் பெரும்பான்மை இன்னமும் புக்ஸைப் புரட்டியே இருக்க மாட்டீர்கள் எனும் பொழுது, இதழ்களைப் பற்றிய பின்னணிகளை உளறி வைத்து உங்களின் வாசிப்புகளுக்கு வெடி வைத்த புண்ணியம் வேண்டாமே என்றும் தோன்றுகிறது ! So இந்த வாரத்தின் பெரும்பான்மைக்கு உங்களின் first thoughts & first opinions கொண்டே வண்டியை ஒட்டிட வேண்டியது தான் !

கதைகளுக்குள் நீங்கள் மூழ்கிடவுள்ள இந்த வேளையினில் - போன வாரத்துப் பதிவினில் கேட்டிருந்த கேள்விக்கான உங்களின் பதில்களைப் பற்றிய அலசலிலும், அதன் நீட்சியாய் இன்னும் சில கேள்விகளையும் மட்டும் கேட்டு வைத்தல் நலமென்று நினைக்கிறேன் ! 

கேள்வி 1 :

சந்தாவினில் எஞ்சிடக்கூடிய 31 இதழ்கள் !! இவற்றை டிசம்பர் 31-க்குள் நிறைவு செய்திடல் நலமா ? அல்லது 2021 -ன் மார்ச் 31 வரைக் கொண்டு செல்வது தேவலாமா ?

மொத்தமாய் (இதுவரையிலும்) 362 ஓட்டுக்கள் பதிவாகியிருக்க - அவற்றின் breakup இதோ : 

*நம்பிக்கையே ஜெயம் ! டிசம்பர் 31-க்குள் நிறைவுறச் செய்யலாம் - 169 votes

*வேகம் சூடு போடும் ; விவேகம் சோறு போடும் ! 
மார்ச் 2021 வரை நீட்டிப்பதே நலம் ! - 120 votes

*எப்படி அமைந்தாலும் எனக்கு ஓகே தானுங்கோ - 73 votes


இவற்றுள் ஒரு சிறு பங்கு டுபுக்கு ஓட்டுக்கள் இருக்க நேர்ந்தாலுமே - பெரும்பான்மையின் எண்ணம் "proceed as normal " என்ற பச்சைக் கொடி ! However சுமார் 35 சதவிகித நண்பர்கள் "go slow" என்ற சிகப்புக் கொடியை ஆட்டியுள்ளனர் எனும் போது அதன் பின்னணியை outright உதாசீனம் செய்வதும் விவேகமாகாது என்பதுமே புரிகிறது ! துளியும் ஸ்திரத்தன்மையின்றி, நம்மைச் சுற்றிய நிலவரங்கள் நித்தமும் மாற்றம் கண்டு வரும் இந்த வேளையினில், ஒரு முக்கிய தீர்மானம் எடுக்கும் முன்னே நிறைய விஷயங்களை கவனத்துக்கு கொண்டு வரவேண்டுமென்பதை கேட்கப்பட்ட கேள்வி # 2-க்கான உங்களின் பதில்கள் உணர்த்தியுள்ளன !

கேள்வி # 2 :

காத்திருக்கும் 4 புது இதழ்களுள் நீங்கள் முதலில் படித்திடப் போவது எந்த இதழை ? 

மொத்த ஓட்டுக்கள் : 207 & அவற்றின் breakup :

*கைதியாய் டெக்ஸ் -  75 votes

*SODA - திசை மாறிய தேவதை - 70 votes

*ஜேம்ஸ் பாண்ட் 007 - விண்ணில் ஒரு வேதாளம் - 33 votes

*போர்முனையில் ஒரு பாலகன் - 29 votes

As always, பெரிதாய் புருவங்களை இங்கு உயர்த்திட முகாந்திரங்கள் இருப்பதாய்த் தோன்றாவிடினும் - என்னளவில் இங்கே 4 முக்கிய செய்திகள் பொதிந்து நிற்பதாய் நான் நினைக்கிறேன் ! 

பாய்ண்ட் # 1சில பல கலாய்ப்போர் சங்கங்கள் அதிகாரியினை அவ்வப்போது வாரிட முனைந்தாலும், அவர்களுக்கு பிம்பிலிகா பிலாக்கி தந்தவராய் மனுஷன் உச்சத்தில் நிற்பதில் நிரம்பவே மகிழ்வு எனக்கு ! நமது தலைமகன் நலமெனில், நாமும் நலமாகத் தழைக்கும் வாய்ப்புகள் பிரகாசம் தானே folks ? So ரேஞ்சரானாலும் சரி, கைதியானாலும் சரி, வாசிப்புத் தரவரிசையினில் என்றைக்கும் நம்மவரே  # 1 என்பது  பதிவாகியுள்ளது ரொம்பவே reassuring !!

பாய்ண்ட் # 2 : ஒரு புது வரவுக்கு ; அட்டவணையினில் இருக்கக்கூடிய surprise factor-க்கு உங்கள் மத்தியில் என்ன மாதிரியான மதிப்புள்ளது என்பதை நேர்படப் பார்க்கக் கிட்டியுள்ள வாய்ப்பும் மகிழ்வூட்டும் படலமே எனக்கு ! இது நாள் வரையிலும் அபிப்பிராயங்களாய் ; அலசல்களாய் உங்களின் எண்ணப் பகிர்வுகளை பார்த்திருப்பேன் தவிர, இது போலானதொரு point blank வோட்டெடுப்பில் பார்த்ததாக ஞாபகமில்லை ! SODA என்ற புது நுழைவுக்கு டெக்ஸுக்குப் போட்டி தரும் வீரியமும், ஆற்றலும் சாத்தியமாகியுள்ளதெனில் - அதற்கு அந்த novelty factor & புதுச்சென்ற மவுசு தானே காரணமாகிடக்கூடும் ? ஒவ்வொரு முறையும், அரைத்த அதே மாவோடு குடித்தனம் பண்ணாது, யாரையேனும் புதுசாய் அட்டவணைக்குள் நான் புகுத்திட குட்டிக் கரணம் அடிப்பதே இத்தகைய ஆர்வங்களை விதைக்கும்  பொருட்டே ! அந்த மட்டிற்கு எனது பல்டிகளுக்கு பலனிருப்பதில் ஹேப்பி !! என்ன - அப்புறமாய் அந்த நாயக / நாயகியர் சோபிக்கிறார்களா ? அல்லது பரணுக்குப் பொட்டலமாகிறார்களா ? என்பது an entirely different story ! 

பாய்ண்ட் # 3 : கார்ட்டூன் ஜானருக்கு  முடிந்த கொடிகளையெல்லாமே  நான் ஆட்டோ ஆட்டென்று ஆட்டிப் பார்த்தாலும், அது கட்டக்கடாசியில் நிற்பது ரொம்பவே சங்கடத்தைத் தந்தாலும் - அதனில் பெரிதாய் ஆச்சர்யமில்லை எனக்கு ! கார்ட்டூன்களில் - லக்கி லூக் & சற்றே அடுத்த லெவெலில் சிக் பில் நீங்கலாய், பாக்கி உருப்படிகளை நம்மில் பெரும்பான்மையினர் கொலு பொம்மைகள் ரேஞ்சுக்கே பாவித்து வருவதில் இரகசியம் தான் ஏது ? இது குறித்து பாட்டம் பாட்டமாய்ப் புலம்பியும் பிரயோஜனம் கிஞ்சித்தும் இல்லை எனும் போது,  ப்ளூ கோட் பட்டாளத்தின் வாசிப்புத் தரவரிசையின் அந்த last place finish பெரிதாய் அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை ! 

பாய்ண்ட் # 4இந்தாண்டின் துவக்கத்தில் நாற்பது ரூபாய் விலையினில் இந்த சுலப வாசிப்புத் தடத்தினை (சந்தா D ) உருவாக்கிய போதும் சரி ; அந்நாட்களது ராணி காமிக்ஸின் ஜேம்ஸ் பாண்ட் தொடர் நம்மிடையே மறுவருகை செய்திடவுள்ளதை அறிவித்த போதும் சரி, தொடரும் மாதங்களின் வாசிப்புப் பட்டியலில் இவையே முத்லிடத்தைப் பிடித்து நிற்குமென்ற நினைப்பு என்னுள்ளே கணிசமாகவே இருந்தது ! But surprise ..surprise ...யதார்த்தம் அதுவல்ல என்று இந்த poll காட்டியுள்ளது ! விலைகளோ ; சுலப வாசிப்புகளோ உங்களைப் போன்ற (காமிக்ஸ்) பழம் தின்று கோட்டை போட்ட ஜாம்பவான்களுக்கொரு பொருட்டல்ல ; உங்களின் சுவாரஸ்யங்களை ஒற்றை ராத்திரியில் கைப்பற்றுவதெல்லாம் அத்தனை சுலபமே கிடையாதென்று சொல்லியுள்ளதாய் எனக்குத் தோன்றுகிறது ! ஜேம்ஸ் பாண்டின் இந்த மூன்றாமிடம் நிதர்சனத்தின் நிஜ வெளிப்பாடே எனில்,am truly surprised !! 

At this point of time - இந்தாண்டினில் எஞ்சியிருக்கக்கூடிய இதழ்கள் சார்ந்து  உங்களிடம் கேட்க எனக்கு இன்னமும் கொஞ்சம் கேள்விகள் உள்ளன ! And வாகாய் ஒரு வோட் பூத் நமக்கு ஓசியில் சிக்கியிருக்கும் போது, அதைத் துவைத்துத் தூங்கப் போடாது விட்டு விடுவோமா - என்ன ? So கோச்சுக்காது கொஞ்சம் பதில்கள் ப்ளீஸ் !! இதோ அதே தலத்தில் நாம் எழுப்பியுள்ள 3 வெவ்வேறு polls சார்ந்த லிங்குகள் :  

POLL # 1 : கிராபிக் நாவல்கள் உங்களின் ஆதர்ஷத் தரவரிசையில் தற்சமயம் பிடித்திருக்கும் இடம் எதுவோ folks ?


POLL # 2 : நடப்பாண்டில் ரொம்பவே எதிர்பார்த்திருக்கும் இதழ் ?


POLL # 3 : நடப்பாண்டினில் உங்களின் காமிக்ஸ் கொள்முதலின் பின்னணி எவ்விதம் இருக்குமோ ?


As always உங்களின் எண்ணங்களை அறிந்து கொள்வது எனக்கு ரொம்பவே உதவிடும் என்பதால் மூன்று தனித்தனி பூத்களிலும் 'பச்சக் பச்சக்' என்று 3 ஓட்டுக்களை போட்டு உதவிடக் கோரியபடியே நடையைக் கட்டுகிறேன் ! I repeat - மூன்றே ஓட்டுக்கள் மாத்திரமே ! And உங்களின் வாட்சப் க்ரூப்களிலும் இந்த மூன்று லிங்குகளையும் பகிர்ந்திடவும் கோருகிறேன் !! 

Bye all....see you around ! Have a good weekend ; and please stay healthy & safe !!
கண்ணில்பட்டதொரு XIII Gamebox டப்பியின் அட்டை !


370 comments:

  1. Replies
    1. மொத ஓட்டு போட்டாச்சு..!

      Delete
    2. இங்கேயும் first ; அங்கேயும் first !! பார்டா !!

      Delete
    3. வாழ்த்துக்கள் GP

      Delete
  2. ஆசிரியர் அவர்களுக்கு,
    வணக்கம்.
    பத்து வயதாகும் எனது மகனுக்கு இன்று பிரிவோம் சந்திப்போம் கதையினை சுமார் முப்பது நிமிடங்கள் நேசத்துடன் வாசித்து,முடிவில் நான் கேட்ட கேள்விகள் சிலவற்றிற்கு அவன் விரைவாக பதில் அளித்த விதம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தி விட்டது.
    இந்த கதையை (வாழ்க்கையை)சிறப்பாக மொழிபெயர்த்து தரமான முறையில் வடிவமைத்து எங்களைப் போன்றோரின் பால்யத்தைக் பாதுகாத்து,ரசனைகளை உயர்த்திய உங்களை வாழ்த்தி வணங்குகின்றேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பத்து வயதுக் குழந்தை அந்தக் கதைக்களத்தை உள்வாங்கிடும் ஆற்றலுடன் உள்ளானெனில் நாங்கள் வணங்கிட வேண்டியது உங்களைத் தான் நண்பரே !! இன்றைய உலகினில் தமிழிலான படைப்புகளை ரசித்தும், புரிந்தும் வாசிக்கும் ஆர்வத்தை அவனுள் விதைத்தது உங்களின் சாதனையே !!

      Delete
    2. அந்த கேள்வி -பதிலை வீடியோவாக பதிவிடலாமே சார்.

      Delete
    3. அருமை தனபால் சார். ஜூனியர் க்கு எனது வாழ்த்துக்கள்.

      Delete
    4. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பரே!


      என்னளவில்
      புத்தகம்,வாசிப்பு,ரசனை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் எனது பெற்றோரின் குடும்ப பின்னணியுடன் வளர்ந்த ஒருவனுக்கு காமிக்ஸ் என்ற அற்புதமான உலகத்தை தந்த,தந்து கொண்டிருக்கும் ஆசிரியர் நீங்கள் மட்டுமே போற்றுதலுக்கு, வணக்கத்திற்கு,வணங்குவதற்குரிவர்.
      நன்றிகள்.

      Delete
    5. // பத்து வயதுக் குழந்தை அந்தக் கதைக்களத்தை உள்வாங்கிடும் ஆற்றலுடன் உள்ளானெனில் நாங்கள் வணங்கிட வேண்டியது உங்களைத் தான் நண்பரே !! //

      +1

      ஜூனியர்க்கு எனது வாழ்த்துக்கள் தனபால்.

      Delete
    6. வாழ்த்துக்கள் நண்பரே..:-)

      Delete
  3. அனைவருக்கும் இரவு வணக்கம்.!

    ReplyDelete
  4. ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  5. பதிவின் கடைசியில் இருக்கும் கேம் பாக்ஸ் ன் அட்டைப்படம் ஆர்வத்தை தூண்டுகிறது.

    ReplyDelete
  6. ஓட்டு போட்டாச்சு சார்..

    ReplyDelete
  7. இன்னும் 3 புத்தகங்கள் படிக்க வேண்டி உள்ளது. படித்து விட்டு நாளை வருகிறேன். இந்த polling idea very good

    ReplyDelete
  8. ஜேம்ஸ் பாண்டை நோக்கி... ஆவலுடன்.

    SODA ம் ஆர்வத்தைத் தூண்டுகிறது.கார்டூன் பாணி ஓவியங்களில் சீரியஸான கதை ரொம்பவே ரசிக்கும்.

    ப்ளூகோட்ஸ் எப்போதுமே விருப்ப விசிறிதான்.

    டெக்ஸ் வழக்கம் போல.!

    ReplyDelete
    Replies
    1. // SODA ம் ஆர்வத்தைத் தூண்டுகிறது.கார்டூன் பாணி ஓவியங்களில் சீரியஸான கதை ரொம்பவே ரசிக்கும். // அதுவும் அந்த கடைசி பிளாக் சும்மா சீட்டு நுனிக்கு கொண்டு வந்து விட்டது.....

      Delete
    2. விரல் நகத்தை கடிக்க வச்சிட்டீங்களே.!

      Delete
    3. ///அதுவும் அந்த கடைசி பிளாக் சும்மா சீட்டு நுனிக்கு கொண்டு வந்து விட்டது.....///

      ஏங்க நண்பரே! சீட்ல ஏதாவது பிரச்சனையா??!?

      Delete
    4. இல்லீங்கோ பாஸூ..பின்சீட்டிங்குலதான் பிரச்னை போல. ஏன் குமார். உட்கார்ற எடத்துல கட்டியா? (கிரேசி மோகன் உபயம்)

      Delete
    5. பின்சீட்டோ ; முன்சீட்டோ - SODA ஆல்பத்தைப் படிக்கும் போது பரபரவென்று பக்கங்களை புரட்டி மட்டும் விடாதீர்கள் folks - சித்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஏகப்பட்ட சிறு சமாச்சாரங்களை miss செய்து விட்டீர்களெனில் - கதாசிரியரோடு ஓவியருமே கதை சொல்ல முனைந்திருப்பதை தவற விட்டு விடுவீர்கள் !

      Delete
  9. வாக்கை செலுத்தி ஆகிட்டது!

    ReplyDelete
  10. இளவரசி வாழ்க!
    இளவரசி வாழ்க!

    கார்வினும் வாழ்க!

    இந்த கமெண்ட்டுக்கு
    Reply பண்ற
    அத்தனை பேரும்
    வாழ்க! வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. இளவரசி வாழ்க!
      இளவரசி வாழ்க!

      Delete
  11. ஹைய்யா!!! புக்கு வந்திடுச்சேய்.. DTDC வாழ்க! ஆத்தாவுக்கு அளவுகடந்த நன்றிகள் பல!

    ReplyDelete
    Replies
    1. ஆத்தாவோட கருணைக்கு நேரங்காலம் தெரியாதுதான்.ஆனால் இந்த DTDC காரவுக நைட்லேயும் டெலிவரி கொடுக்கிற அளவுக்கு போய்ட்டாங்களா.?

      Delete
    2. @GP

      நியாயமான சந்தேகம் தான்!

      ஆத்தா பகலில் டெலிவரி கொடுத்த டப்பியை, எங்க வீட்டுக்கார ஆத்தா இரவில் ( வேலைமுடிந்து வீடுதிரும்பிய) என்னிடம் ஒப்படைத்தார்கள்!!
      அதுகொண்டு ஞான் ராவிலே கூக்குரல் எழுப்பியதாக்கும்!!

      Delete
  12. காமிக்ஸ் கடமைய ஆத்தோ ஆத்து ஆத்தியாச்சு.

    ReplyDelete
  13. இன்னும் புக் வர்லயே ....!
    மகிழ்சியான செய்தி எங்க தல XIII
    விளம்பரமே கலைகட்டுதே.... இரண்டும் ஒரே மாதத்திலா சார்....?

    ReplyDelete
    Replies
    1. @ Palanivel Arumugam

      அப்படியே XIII MYSTERY
      Judith Warner கதையையும் கேளுங்கள். அதற்கு காரணம் ரெண்டு 1.வாத்தியார் J. வான் ஹாம்-மின் கதை & ஓவியர் GRENSON  சித்திரங்கள். அதுக்கும் மேல ஒரு ஸ்பெஷல் காரணமுண்டு. அது XIII MYSTERY வரிசையில் இது XIII-வது வெளியீடு.

      MH MOHIDEEN

      Delete
    2. அட...அட..அட...ஜூடித் வார்னர் கதையில் தான் எத்தினி ஆழம் ; எத்தினி நெளிவு சுளிவு ! ஒரிஜினல் புக்கைப் பார்த்த போது புல்லரித்துப் போயிடுத்து சார் ! 2050 வாக்கில் போட்டுப்புடலாம் !

      Delete
    3. 2050ல வாக்கிங் போகிற ஸ்டேஜ் கூட தாண்டிடுமே.

      Delete
  14. ஜனநாயக கடமையையும் ஆற்றியாச்சு....

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வழக்கத்தை விட இந்த முறை இரத்தப் படலம் - 2132 மீட்டர் ஆர்வமுடன் எதிர் பார்க்கிறேன்! அதுக்கு முக்கிய காரணம் ஆசிரியர் இந்த முறை கண்களில் இதுவரை காட்டிய இந்த கதையின் வண்ண பக்கங்கள், ஓவியங்கள் வித்தியாசமாக ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கிறது!

      Delete
    2. நம்ம ஆசிரியரோட எழுத்துநடையில் டைப் செய்யப்பட்ட உட்பக்க டீசருக்காவும் அட்டைப்பத்தையும் பாக்க ஐயாம் வெய்டிங் நண்பரே....

      Delete
    3. ///2132 மீட்டர் ஆர்வமுடன்///

      ஆர்வம் ரொம்ப தூரமா தெரியுதே!?

      Delete
    4. No..no..gentlemen. nearly just 2132 MTRs only.

      Delete

  16. பெட்டி வந்துடிச்சி ..!

    ப்ளூ கோட்: ஆரம்பத்து இதழ் முதல் இதோ இப்போது கைகளில் தவழும் இந்த இதழ் வரையிலும் உள்ள சிறப்பு என்னவென்றால், டாலடிக்கும் அந்த வண்ண கலவைதான். அப்படியே கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். இதுவும் விதிவிலக்கல்ல... So வாசிப்பில் முதலிடம் இந்த ப்ளூ கோட் தான்.

    சோடா: டிடெக்ட்டிவ் ஹீரோ பஞ்சத்தை போக்கை வந்திருக்கும் detective cum action hero.. முதல் பார்வையில் தேறிடுவாருன்னுதான் தோணுது. புக்கை எடுத்ததும் கையில் சிக்கியது பின் பக்க ஸ்டிக்கர் என்றால் முன் பக்க ஸ்டிக்கர் கண்ணில் மாட்டுது. அட்டைப்படம் பார்மேட் அட்டகாசம். தொடர்ந்திடும் அனைத்து ராப்பரும் இதே வெள்ளை பின்னணியில் வரயிருப்பது சிறப்பு. அது சரி, ராப்பரில் துப்பாக்கி பிடித்திருக்கும் சோடாவின் இடது விரல்களை கவனித்தீர்களா ...?

    டெக்ஸ்: T vs P, லெட்டெரியின் டீசென்ட்டான ஓவியம். போன முறையே டெக்ஸ்க்கு அல்வா கொடுத்து ஓடிப் போன Mr. P இந்த முறை என்ன கொடுக்க போகிறாரோ.?

    007: இந்த பாண்ட் என் favorite கிடையாது! படித்தால் படிக்கலாம், இல்லையென்றால் இல்லை. ஆனால் அட்டைப்படம் மேக்கிங் சூப்பர். ஓவியை வரைந்திருக்கும் பாண்ட்யின் தலை முடியின் அந்த பஃப் ஸ்டைல், ஆஹா ரசனை. சின்ன வயதில் நான் கூட இப்படித்தான் பஃப் வைத்துக் இருந்தேனாக்கும்.

    MH MOHIDEEN

    ReplyDelete
    Replies
    1. ///ஆரம்பத்து இதழ் முதல் இதோ இப்போது கைகளில் தவழும் இந்த இதழ் வரையிலும் உள்ள சிறப்பு என்னவென்றால், டாலடிக்கும் அந்த வண்ண கலவைதான்.///

      +1 கார்ட்டூன்க்கு ஜே!

      Delete
    2. எல்லாக் கதைகளையும் படிச்சுட்டு விமர்சனம்தான் எழுதியிருக்கீங்களோன்னு நினைச்சு நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்!

      Delete
    3. @ MH MOHIDEEN : அனுப்பிய மறுதினமே கூரியர்கள் உங்களை எட்டிடுவது உங்களுக்கு எத்தனை மகிழ்வைத் தருகிறதோ, அதே மகிழ்வே எனக்கு சூட்டோடு சூடாய் முதற்பார்வைகளைப் பற்றி அறிந்திட இயல்வதும் ! நன்றிகள் சார் !

      Delete
    4. //ஓவியை வரைந்திருக்கும் பாண்ட்யின் தலை முடியின் அந்த பஃப் ஸ்டைல், ஆஹா ரசனை. சின்ன வயதில் நான் கூட இப்படித்தான் பஃப் வைத்துக் இருந்தேனாக்கும்.//

      ஷேம் பிளட் !

      Delete
    5. நான் கூட கடந்த மூன்று மாதங்களாக முடி வெட்டாததால் பம்பை தலையுடன் சுற்றி வருகிறேன் :-) இதற்கு வீட்டில் கரடி மாதிரி முகம் இருக்கிறது என நேற்று கமெண்ட் வேறு compliment ஆக கிடைத்தது :-)

      Delete
  17. வாக்கெடுப்பில் எங்க தல அதிகாரிக்கு டஃப் கொடுப்பது உற்சாகத்தை தூண்டுகிறது..

    ReplyDelete
    Replies
    1. உங்க தெருவிலேயும், சென்னை அசோக் பில்லர் ஏரியாவிலேயும் காலங்கார்த்தாலேயே யாரோ பக்கத்து வூட்டு செல்போன்களை இரவல் வாங்கி, அவசரம் அவசரமாய் ஏதோ பொத்தான்களை அமுக்கி வருவதாய்க் கேள்விப்பட்டேனே பழனி ? என்ன மேட்டர்னு விசாரிச்சுப் பாருங்களேன் ?

      Delete
    2. 20 ஓவா டோக்கன் நிறைய
      வினியோகம் செய்து இருக்கிறேன்
      சார்.2132 மீட்டர் மற்றும் சதியின் மதி
      இரண்டையும் ஆகஸ்டில் ஒன்றாக
      வெளியிட வேண்டும் என்ற
      கோரிக்கையை XIII சங்கத்தின்
      சார்பாக வைக்கிறேன்.

      Delete
    3. 3 /97 சார் - spin off க்கு ! ரொம்பவே சூதானமாய்க் களமிறக்க வேண்டும் இந்த இதழை !

      Delete
    4. அது ஒண்ணுமில்லை சார் போன் ஏதோ ரிப்பேர்னு சொன்னாங்க அதான் சரி பண்ணி கொடுத்தேன்....

      Delete
    5. ஒரே ஓட்டு ஒரே ஹூரோ இரண்டு
      புக் என்பதால் வந்த குழப்பமே சார்....

      //3 /97 சார் - spin off க்கு ! ரொம்பவே சூதானமாய்க் களமிறக்க வேண்டும் இந்த இதழை !//

      Delete

    6. //20 ஓவா டோக்கன் நிறைய
      வினியோகம் செய்து இருக்கிறேன்
      சார்.2132 மீட்டர் மற்றும் சதியின் மதி
      இரண்டையும் ஆகஸ்டில் ஒன்றாக
      வெளியிட வேண்டும் என்ற
      கோரிக்கையை XIII சங்கத்தின்
      சார்பாக வைக்கிறேன்.// அண்ணன் எவ்வழியோ
      நானும் அவ்வழியே.....

      Delete
  18. நோட்டு வாங்காமல் ஓட்டு போட்டாச்சு.

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு 1 குயர் நோட்டு தான் வழங்க முடியும் கம்பெனிக்கு !! ஹி...ஹி..!

      Delete
  19. கொஞ்சம் too early தான். இருந்தாலும் நாமளும் சில கேள்விகளை போட்டு வைப்போம்.

    அடுத்த வருடம் கொஞ்சம்ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதால் சந்தா இதழ்களுக்கான எண்ணிக்கையை குறைத்து முன்பதிவுக்கான இதழ்களை அதிகப்படுத்துவது நலமோ?

    ஜனவரியில் அரை டவுசர் வருவாரான்னு தெர்லயே? ஏன்னா ஜனவரி செ. பு. வி யில் வர வேண்டியவர். ஒரு வேளை ஆகஸ்டில் வருவாரோ? இல்லன்னா 2022 ஜனவரி? 2023 தலயோட 75 வது வருடம். அதனால 2022 லேயாவது டவுசர் புக்கை குடுத்துட்டா 2023 முழுக்க தலய கொண்டாடிக்கலாமே?

    கென்யா, ஒ. நொ. ஒ. தோ, லிஸ்ட் ரூட் 66ன்னு ஏகப்பட்ட விருந்துகள் எப்போ வரும்? சொக்கா..இந்த புக்கெல்லாம் எப்போ படிக்கறது? தலீவருக்கு வேற வயசாயிட்டே போகுதே.

    ReplyDelete
    Replies
    1. சார்,
      கொரோனா "கென்யா" லயும் பரவிட்டு இருக்கிறதால, இப்போதைக்கு வராது!

      Delete
    2. யாரு ...தலீவரா...

      அவுரு படிக்காட்டி என்ன...

      கெட்டி சட்னியும் இட்லியும் காட்டீட்டா லெட்டரு போட்ருவாருல்ல...

      Delete
    3. பக்கத்து இலைக்கு பாயாசம் அமெரிக்காவிலேயும் கேப்பாங்க போல...:-)

      Delete
    4. ////கென்யா, ஒ. நொ. ஒ. தோ, லிஸ்ட் ரூட் 66ன்னு ஏகப்பட்ட விருந்துகள் எப்போ வரும்? சொக்கா..இந்த புக்கெல்லாம் எப்போ படிக்கறது? தலீவருக்கு வேற வயசாயிட்டே போகுதே.///

      +111

      'எப்போ வரும்?' என்ற நினைவுதான் அடுத்தடுத்த வருடங்களை நகற்றிச் செல்ல நமக்கு உதவியாய் இருக்கப்போகிறது!

      Delete
    5. //2023 தலயோட 75 வது வருடம். அதனால 2022 லேயாவது டவுசர் புக்கை குடுத்துட்டா 2023 முழுக்க தலய கொண்டாடிக்கலாமே?//

      என்ன ஒரு தொலைநோக்குப் பார்வை சார் !!

      But அண்ணன் கொரோனாவின் தாண்டவ பூமியில் தற்சமயமாய் மூக்குக்கு கீழேயிருக்கும் மீசையைத் தாண்டி பார்வைகளை ஓடச் செய்வது சிரமமாய் உள்ளது ! So முதலில் இந்தாண்டை முழுசாய்க் கரைசேர்த்த பிற்பாடாய் மற்ற கச்சேரிகளைத் திட்டமிட எண்ணியுள்ளேன் !

      Delete
    6. // தலீவருக்கு வேற வயசாயிட்டே போகுதே. //
      தலைவரே நோட் த பாயிண்ட்,ஷெரீப்பை கவனிங்க....

      Delete
    7. //மீசையைத் தாண்டி பார்வைகளை ஓடச் செய்வது சிரமமாய் உள்ளது //

      ஹி...ஹி... இந்த பிரச்னைக்குத்தான் நான்
      மீசையே வைக்கிறதில்லை.

      Delete
    8. // கென்யா, ஒ. நொ. ஒ. தோ, லிஸ்ட் ரூட் 66ன்னு ஏகப்பட்ட விருந்துகள் எப்போ வரும்? சொக்கா..இந்த புக்கெல்லாம் எப்போ படிக்கறது? தலீவருக்கு வேற வயசாயிட்டே போகுதே. // தலீவருக்கு வயசகிட்டே போகுதோ இல்லையோ எனக்கு வயசகுது.... அடுத்த வருடம் போட்டு விடுங்க சார்.


      மாதம் மூன்று நான்கு புத்தகங்களுக்கு பதில் ஒன்றோ இரண்டு புத்தகங்கள் போதும் அடுத்த வருடம்...

      Delete
  20. இளம் டெக்ஸ் தொகுப்பாக வருவது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. எதிர்பார்க்கும் புத்தக பட்டியலில் அது இல்லை. இருந்திருந்தா அதுக்குத்தான் என் ஓட்டு. அதில்லாததால் போனாப்போகுதுன்னு தீபாவளி வித் டெக்ஸுக்கு போட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ///போனாப்போகுதுன்னு தீபாவளி வித் டெக்ஸுக்கு போட்டேன்.///

      எத்தனை போனாப்போகுதுன்னு தெரியலையே!

      Delete
    2. எதிர்பார்ப்பும் அதே அதிகாரி தான்...

      வாழ்த்துக்கள் ஷெரீப்...:-)

      Delete
  21. ஏது போகப்போக வாரத்துக்கு மூணு தபா ஓட்டு போடச் சொல்லுவீங்க போலிருக்கே!

    ஓட்டுன்னு வந்தாவே நாங்கலாம் ஸ்ட்ரிட்டு தான்!

    இந்த கைல துட்டு! அந்த கைல ஓட்டு!

    ReplyDelete
    Replies
    1. வாழ்க திருமங்கலம் !
      வாழ்க RK நகர் !
      வாழ்க பிளைசி பாபு !

      Delete
    2. வாழ்க மிதுனன் !
      வாழ்க நிஜங்களின் நிசப்தம் !

      Delete
  22. Replies
    1. நோட்டோ காசோ அல்லது அக்கவுண்ட்ல அனுப்பினாலும் ஓகே தான்!!

      Delete
    2. வூட்டுக்கே வந்து வாங்கிக்கவுமே ரெடி !!

      Delete
  23. போன முறை ஓட்டெடுப்பில் டெக்ஸ் தீவிர ரசிகர்கள் கூட முதன் முறையான அறிமுகமான சோடாவிற்கு ஓட்டு போட்டதே உண்மை..( நான் ,அறிவரசு ரவி உதாரணம் ) அப்படியும் தல தாண்டவமாடிட்டாரு...நாங்களும் தலக்கே ஓட்டு போட்டிருந்தா இன்னும் எங்கேயோ போயிருப்பாரு போல ....:-)


    ( ஓர் பின்குறிப்பு சார்..)

    ஓட்டெடுப்பில் எது பெரும்பான்மை பெரும்பான்மை பெறுகிறதோ அதன்படியே செயல்படுத்தினால் இனிவரும் ஓட்டெடுப்பில் மக்கள் தவறாமல் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவார்கள் சார்..)

    ReplyDelete
    Replies
    1. // நாங்களும் தலக்கே ஓட்டு போட்டிருந்தா இன்னும் எங்கேயோ போயிருப்பாரு போல ....:-) //
      அதே,அதே....

      // ஓட்டெடுப்பில் எது பெரும்பான்மை பெரும்பான்மை பெறுகிறதோ அதன்படியே செயல்படுத்தினால் இனிவரும் ஓட்டெடுப்பில் மக்கள் தவறாமல் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவார்கள் சார்..) //
      தலைவரின் கருத்தே எனதும்...

      Delete
  24. அதிகாலையிலே எழுந்து வேண்டி எனது ஜனநாயக கடமையை செவ்வென செய்துவிட்டேன்...:-)

    ReplyDelete
    Replies
    1. அதிகாலைக் கடமையை ஜனநாயக முறைப்படி நிறைவேற்றுனீர்களா ? இல்லாங்காட்டி ஜனநாயகக் கடமையை அதிகாலையில் நிறைவேற்றுனீர்களா தலீவரே ? லைட்டா குயப்பமா கீது !

      Delete
  25. //உங்களின் வாட்சப் க்ரூப்களிலும் இந்த மூன்று லிங்குகளையும் பகிர்ந்திடவும் கோருகிறேன்//

    இதனை நீங்கள் சொல்லவும் வேண்டுமா இது எங்கள் கடைமையாயிற்றே

    ReplyDelete
    Replies
    1. சத்யா இருக்க பயமேன் !

      Delete
  26. ஒட்டு போட்டாச்சுங்கோ..

    ReplyDelete
  27. Replies
    1. சனநாயகக் கடமையை ஆத்தியாச்சி..!:-)

      Delete
    2. சட்டசபைக்கு ; நாடாளுமன்றத்துக்கு ; ராஜ்ய சபாவுக்கு என அல்லாத்திலேயுமே ஆத்தியாச்சா சார் ?

      Delete
    3. அதெல்லாம் ஆத்தியாச்சி சார்,ஆனாக்கா எதுவும் உள்ளடி பண்ண முடியலைன்னு நினைக்கும் போது இது சரியான தேர்தலா? சரியான ஓட்டெடுப்பான்னு டவுட்டா கீது,ஹி,ஹி....

      Delete
  28. ஓட்டுக்களை போட்டாச்சு. முதல்முறையாக மறுநாளே st courier டெலிவரி பண்ணிட்டாங்க.. ஆச்சர்ய அதிர்ச்சி!

    கிராஃபிக் நாவல்களுகலகான ஆதரவுத்தளம் விரிவடைவது சிறப்பு! Sci Fi வகையறாக்களுக்கும் எடிட்டர் அவர்கள் மனது வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
    அல்டபரான் சீரிஸிலிருந்து ஆரம்பிக்கலாம் சார்!!

    ReplyDelete
    Replies
    1. //கிராஃபிக் நாவல்களுகலகான ஆதரவுத்தளம் விரிவடைவது சிறப்பு!//

      +111

      உங்களின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்ள நமது தளம் உதவி வந்தது தான் ; மறுப்பதற்கில்லை ! ஆனால் அங்கே 2 மைனஸ்கள் இருக்கத்தான் செய்தன ! முதலாவதாக - Blog பக்கம் வராதோர் / வரப் பிரியப்படாதோர் தரப்புக்குரல்கள் பதிவாகிட வாய்ப்பின்றிப் போனது ! இரண்டாவதாக - விமர்சனங்களுக்கும், வீண் விவாதங்களுக்கும் அஞ்சுவோர் பொது விமர்சனங்களோடு ஒத்துப் போவதோ , அல்லது மௌனம் காப்பதோ தேவலாமென்று நினைத்திட வாய்ப்புகள் உண்டு !

      ஆனால் அனாமதேயமாய், அதே சமயம் அனைவருமே தம் எண்ணங்களை பதிவிட ஒரு வாய்ப்புக்கு கிட்டியிருப்பது - truly a blessing !!

      And yes sir - கிராபிக் நாவல்களுக்கான (இதுவரையிலான) ஆதரவு ரொம்பவே பூரிக்கச் செய்கிறது !! பார்க்கலாமே தொடரும் நாட்களிலும் இதே வோட்டிங் trend தொடர்கிறதா ? என்று !

      Delete
  29. ///POLL # 2 : நடப்பாண்டில் ரொம்பவே எதிர்பார்த்திருக்கும் இதழ் ?
    ///

    தோர்கல்!

    ஒரு சில மணி நேரங்களுக்காவது, மிரட்டும் ஒரு மாய உலகில் சஞ்சரித்துவிட்டுத் திரும்புவதான பிரம்மையை எதிர்நோக்குகிறது உள்மனசு! வான் ஹாமின் கதை சொல்லும் நேர்த்தியும், இதமான வண்ணங்களில் அபாரமான சித்திரங்களும் அதை எளிதாய் சாத்தியப்படுத்திவிடவல்லவையாய் இருக்கும்போது, வாசிப்பு அனுபவத்தில் குறையேது?!!

    என் அடுத்த எதிர்பார்ப்பே 'தீபாவளி வித் தல'! குண்ண்ண்ண்டாய்!!

    ReplyDelete
    Replies
    1. 'தல' தீபாவளி மலர் அதகளம் செய்யக்காத்துள்ளது - 2 கதைகளுமே பட்டாசு !

      Delete
    2. // தோர்கல்! // எனக்கும் இந்த வருடம் தொடங்கிய முதலே நான் எதிர் பார்க்கும் இதழ்களில் இதுவே நம்பர் ஒன்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. விஜய் @ எனது எதிர்பார்ப்பும் இதுவே.

      கடந்த பின்னூட்டத்தில் விஜய் என நான் டைப் செய்தது ஆட்டோ கரெக்ஷனில் விஜயன் என வந்ததை இப்போது தான் கவனித்தேன். மன்னிக்கவும்.

      Delete
    5. ////கடந்த பின்னூட்டத்தில் விஜய் என நான் டைப் செய்தது ஆட்டோ கரெக்ஷனில் விஜயன் என வந்ததை ///

      அப்படீன்னா இங்கே பலரும் எனக்குத்தான் பின்னூட்டம் போட்டுக்கிட்டிருக்காங்களோ என்னமோ?!! எடிட்டர்தான் தப்பா புரிஞ்சுகிட்டு எல்லாருக்கும் மாங்குமாங்குன்னு ரிப்ளை போட்டுக்கிட்டிருக்கார்.. ஹிஹி!!

      Delete
    6. ஐ ஆம் வெயிட்டிங்..அப்போ தீவாளி பலகாரமே பாயாசம் தானா??

      Delete
  30. ஞாயிறு காலை வணக்கம் சார்🙏🏼

    மற்றும் நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  31. காமிக்ஸ் ஜனநாயக கடமையாற்றியாகி விட்டது! நேற்றே சந்தா புத்தகங்களையும் கைப்பற்றியாகி விட்டது! காமிக்ஸ் ஓட்டெடடுப்பில் ஜேஸன் இரண்டாமிடத்தில் இருப்பது மகிழ்ச்சியே! இந்த மாதம் முதலில் படிக்கப் போவது தலையின் சாகஸத்தையே அட்டைப்படமும் அந்த வெண்மை நிற பேப்பரும் சுண்டி இழுக்கிறார்

    ReplyDelete
    Replies
    1. // ஓட்டெடடுப்பில் ஜேஸன் இரண்டாமிடத்தில் இருப்பது மகிழ்ச்சியே!//

      அட...அப்டியா சார் - நான் பார்த்தப்போ அதிகாரி & ஆரிசியா ஆத்துக்காரர் தான் லீடிங்கில் இருந்தனர் ! தோ - போய்ப் பார்த்திடறேன் !

      Delete
    2. சார்...வேணாம் எந்த பட்டன அமுத்தினாலும் ஜேஸனுக்கே விழுமாறு பண்ணிவிடுவோம்....

      Delete
    3. அதிகாரிக்கு அடுத்து ஜேஸன் (Xiii) 33 ஓட்டு தோர்கல் (24) லக்கிலுக் (12)சார் 😄

      Delete
    4. ஜேசனுக்கு எப்பவும் ஆதரவு தருபவர்கள் எப்பவும் உண்டு சார்...

      Delete
  32. விஜயன் சார், தரவரிசையில் எனக்கு மிகவும் பிடித்தது கி. நாவல்கள் தான். இந்த வருடம் வரவிருக்கும் பிரளயம் என்ற கி. நாவலை எதிர்பார்க்கிறேன். இலங்கைக்கு எப்போது புத்தகங்கள் வருமோ தெரியவில்லை சார்... 😭வந்தால் தான் கொள்வனவு.

    ReplyDelete
    Replies
    1. தற்போதைக்கு புறாக்களின் கால்களில் பார்சல்களைக் கட்டி விட்டால் தான் உண்டு நண்பரே !

      Delete
    2. // தரவரிசையில் எனக்கு மிகவும் பிடித்தது கி. நாவல்கள் தான். // எனக்கும்

      Delete
  33. ஓட்டு பட்டன்களை பலமா அழுத்திப்புட்டு நேரா இங்கே Exit Poll ரிஸல்ட் பார்க்க ஓடோடி வந்திருக்கிறேன்.

    எனக்கு ஒரே ஒரு விருப்பம்தான். அது, ஓட்டெடுப்பு முடிவு எதுவாக இருந்தாலும், எடிட்டரின் முடிவும் அதுவாகத்தான் இருக்கவேண்டும் என்பதே. அதுதான் ஜனநாயகமும் கூட. யாரும் என்மேல் கோபப்படவேண்டாம். இது எனது கருத்து மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணும் கவலையில்லை சார் ; வோட்டெடுப்பின் தீர்மானங்களை அப்டியே செயல்படுத்தணுமா - இல்லையான்னு ஒரு poll வைச்சுட்டா போச்சு !! அந்த strawpoll காரங்க செத்தானுங்க !

      Delete
    2. ஹாஹாஹா... ஒன்னும் பிரச்சினை இல்லிங்க சார். அதுக்கும் ஓட்டு போட்டுட்டு இதே கருத்ததான் சொல்லுவோம். ஏன்னா நாங்க தமிழ்நாட்டுகாரவுங்க. எங்களுக்கு ஜனநாயகம்தான் முக்கியமாக்கும். :))

      Delete
  34. @ ALL : SODA ஆல்பத்தைப் படிக்கும் போது பரபரவென்று பக்கங்களை புரட்டி மட்டும் விடாதீர்கள் folks - சித்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஏகப்பட்ட சிறு சமாச்சாரங்களை miss செய்து விட்டீர்களெனில் - கதாசிரியரோடு ஓவியருமே கதை சொல்ல முனைந்திருப்பதை தவற விட்டு விடுவீர்கள் !

    ReplyDelete
    Replies
    1. அடடே அப்படியா சேதி....

      Delete
    2. நானும் எனது விமர்சனத்தை கீழே பதிவிட்டு இருக்கிறேன்.

      Delete
  35. வருகிறது விளம்பரங்கள் அனைத்தும் அடுத்த கூரியர் எப்போ வரும்னு நினைக்க வைக்குது!
    ஜேம்ஸ் பாண்ட் அட்டைப்படம் சூப்பர்!
    ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் முதல் படம் DR.NO comics வடிவில்! I love to read it!( எவ்ளோ தூரம் படத்துடன் ஒத்து போகிறது என்று பாக்கலாம்)
    அடுத்த வெளியீடு - பொன் தேடிய பயணம்! இதில் கரடி விரட்டுவது நமது ஜென்டில்மேன் கதையில் வரும் ஜுஜிலிப்பவை தானே?

    ReplyDelete
  36. சனநாயக கடமையை ஆற்றியாச்சு

    ReplyDelete
  37. ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்த்தது போல இருந்தது சோடா படித்தது. இன்னும் சரியாக சொல்வது என்றால் ஒரு பரபரப்பான detective series போல.
    நிறைய விஷயங்களை படம் பார்த்து கவனிக்க வேண்டும். என்னை போல பற பற என்று படிப்பவர்கள் நிறைய விஷயங்களை கவனிக்காமல் விட்டு விட வாய்ப்பு உள்ளது.
    அந்த ஓவிய ஸ்டைல் அருமை.

    Soda is here to stay. Good choice Editor சார்.

    9/10

    ஒரு மார்க் குறைக்க காரணம் கதை சரியாக இன்னும் சிங்க் ஆகவில்லை. மீண்டும் ஒன்று இரண்டு முறை படிக்க வேண்டும்.

    போன பதிவில் எனது விமர்சனம்.

    ReplyDelete
  38. எனது வோட்டும் பதிவிடப் பட்டது...

    ReplyDelete
  39. 2132,சதியின் மதி இரண்டும் ஒரேமாத்தில்தயவு செய்து வெளியிடுங்கள். ப்ளீஸ். காலம் காலமாய் மனதில் நிற்கும் ஒரு இனியநினைவாய் இருக்கும். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ஆதரவுக்கு நன்றி

      Delete
    2. ஆமா சார் ஆகஸ்டுக்கும் XIII எப்பவும் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகும்...

      Delete
  40. சார் முதல் கேள்விக்கு பதில் கிநா சூப்பர்... ஆனா பிற கதைகள் அரச்ச மாவு என்'பதில் உடன்பாடு லேது. பதிமூன்று, கெளபாய், தோர்கள், டெக்ஸ் கள், லார்கோ க்கள், ஷெல் டன்கள் எவ்ளோ வந்தாலும் போதாது... ஆச தீராது

    ReplyDelete
    Replies
    1. இதுவரை எதிர்பார்க்க அத்தனை இதழும் எதிர்பார்ப்பு கூட்டியதுல டாப் படுத்த மாதமே... கி௩்கோப்ரா லாரன்ஸ், வித்தியாசமான இருவவண்ண நெப்போலியன், பௌண்டுலக்கி, இளம் டெக்ஸ், இத விட வேறென்ன வேணுமோ... பின்னிப்பெடலெடுக்குது... இம்மாத அட்டைகள் டாப் டெக்ஸ் கைதியாக
      ... ஸ்டீல்க்ளா

      Delete
    2. இப்படி டைப் செய்ய கூடிய ஒரே ஆள் நீங்கள் தான் என்று எல்லாருக்குமே தெரியுமே

      Delete
  41. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம். தல (பக்கம்)சிறுத்தாலும் காரம் குறையவில்லை.என்ன ஒரு சேசிங்.ஒரு புத்திசாலி வில்லனை டெக்ஸ் கையாளும் நேர்த்தி அற்புதம்.டெக்ஸ் கூட ஏமாறும் அளவுக்கு சாமர்த்தியம் உள்ள ஒரு எதிரி இருப்பது கதையின் பலம். பர பரவென நகரும் கதை , அடுத்தது என்ன எனும் எதிர்பார்ப்பு...மதிப்பெண் 10/10

    ReplyDelete
  42. SODA - திரில்லிங்கும் - சென்டிமெண்ட்டும் கலந்து - தமிழ் நாவல் படித்தது போல் - இருந்தது.
    CI D - ராபினும் - ஜில் ஜோர்டனும் கலந்தது போல் இருந்தது.
    எங்கே, நகைச்சுவை கதையாக மாறி விடுமோ - என்ற பயத்துடனே படித்தேன்.
    நல்ல வேளே - அந்த " வடிவுடன் வயோதிகர்கள்" - என்ற டைட்டிலைத் தவிர
    ஒவ்வொரு பக்கமும் சீரியஸான திரைக்கதை அமைப்புதான் புலப்பட்டது.
    அனைவருக்கும்' பிடித்து விட்டால் கலரில் ஒரு "டிடெக்டிவ் "கதை வரிசை கிடைத்து போல் ஆகும் - அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார். ..ii

    ReplyDelete
    Replies
    1. நல்லது சோடா விற்கு இது வரை 3 ஓட்டுகள். மூன்றுமே ஆதரவாக

      Delete
  43. ப்ளூ கோட்ஸ், பாண்ட் இரண்டுமே அருமை.

    9/10, 9/10

    போன மாத கார்ட்டூன் இல்லாத குறையை நிவர்த்தி செய்து விட்டது.


    பாண்ட் எப்போதும் போல distinction.

    டெக்ஸ் கதையில் ஒரு லாஜிக் ஒட்டை எல்லாரும் படித்து முடித்த பிறகு எனது கேள்வி......

    இந்த மாதம் சும்மா சிக்ஸர்

    Well-done Editor சார்.

    ReplyDelete
  44. இம்மாத டெக்ஸ்

    பரபரப்பான கதையே .. இதில் யார் ஹீரோ என்று பார்த்தால் அது வில்லன் ப்ராடியெஸ் தான்.

    டெக்ஸ் க்கே ஒருத்தன் 💦 காட்டி அவரையும் அவர் டீமையும் கண்ட படி லோ லோன்னு அலைய விட்டும்கடைசியில் பொடி நடையாக நடக்க விட்டு சூப்பர் செம்ம வில்லன்ய்யா அவன் .. 😱😱
    😳😳
    ப்ராடியெஸ்ஸை பற்றி இக்கதையில் பெரிதாக எங்கும் சொல்லப்பட வில்லை என்றாலும் நிச்சயமாக அவன்தான் இக்கதையின் முழுமையான ஹீரோ .. ❤❤❤
    கடைசியில் அவன் தடுமாறி தண்ணீர்க்குள் விழுந்து தப்பித்து கொள்கிறான் ..
    அடுத்த கதை வரும்போது அவன் எப்படி தப்பித்தான் என்பது புரியாத புதிராய் இருக்கிறது என டெக்ஸ் கார்ஸனிடம் கூறுவார் பார்ங்களேன் .. 😃😃

    டியர் எடி உங்களுக்கு ஒரு கேள்வி :
    கடந்த இதழிலும் இந்த இதழிலும் கார்ஸன் ஏன் டெக்ஸை பார்த்து *** டெவில் *** ( PAGE NO 96 ) என்று கூறுகிறார் ?? விளக்கம் கொடுங்களேன் ப்ளீஸ் ...

    மார்க் 1❤❤ / 1❤❤

    ( இதில் ப்ராடியெஸ்ஸின் சாமார்த்தியத்திற்க்கு 90 மார்க் )

    ( ப்ராடியஸ் இதற்க்கு முன் எந்த கதையில் வந்திருக்கிறான் ?? )

    ReplyDelete
    Replies
    1. மறு வாசிப்புகளுக்கு ஏற்ற கதை
      💜💜💜 ....

      Delete
    2. ஓரிஜினலான இத்தாலிய ஸ்கிரிப்ட்டில் நம்ம வெள்ளிமுடியார் அதிகாரியை அடிக்கடி விளிப்பது 'டெவில்' என்றே ! தமிழாக்கத்தில் வேறு மாதிரியாய் அதனை மாற்றம் செய்வேன் ! ஒரு சேஞ்சுக்கு அப்படியே இருக்கட்டுமே என்று நினைத்ததன் பலனே அந்தத் 96 ம் பக்கத்துச் சமாச்சாரம் சம்பத் !

      Delete
    3. "பச்சோந்திப் பகைவன்" - போன வருஷத்து புக் !

      Delete
    4. /// ஒரு சேஞ்சுக்கு அப்படியே இருக்கட்டுமே என்று நினைத்ததன் பலனே அந்தத் 96 ம் பக்கத்துச் சமாச்சாரம் சம்பத் ! ///

      👌👍

      Delete
    5. நல்ல விமர்சனம்.

      Delete
  45. அன்பார்ந்த நண்பர்களே!

    இம்மாதத்தில் வந்த நான்கு கதைகளையும் படித்து முடித்துவிட்டேன்.
    படித்த வரிசை
    முதலாவதாக கைதியாய் டெக்ஸ்ட்
    இரண்டாவதாக சோடா
    மூன்றாவதாக ஜேம்ஸ் பாண்ட்
    நான்காவதாக ப்ளூ கோட்.

    ஆனால் இம்மாதம் மனம் கவர்ந்த வரிசை முதலில் சோடா திசை மாறிய தேவதை.
    கதை

    ஒரு துப்பறிவாளர் ஒரு பெரிய கடத்தல் திமிங்கலத்தை பிடித்து சிறையில் அடைக்கிறார். அதற்கு பழிவாங்கும் விதமாக அந்தத் திமிங்கலம் துப்பறிவாளரின் தாயை கொன்றால் பரிசு உண்டென்று விளம்பரத்தை கொடுக்கிறார். அதனால் அந்த துப்பறிவாளரின் தாயை கொல்ல பலர் பல திசைகளில் பல வண்ணங்களில் வருகிறார்கள்.
    அவர்களை முறியடிப்பது துப்பறிவாளன் வேலை.
    இந்தக் கதையினை நண்பர்களே தயவு செய்து கதையை படித்துக் கொண்டே கடந்து விடாதீர்கள்!!

    ஒவ்வொரு பிரேமையும் நன்கு உன்னிப்பாக கவனித்து படியுங்கள்.

    பிஸ்டலுக்கு பிரியாவிடை போலவே இதுவும் கார்ட்டுன் வடிவத்தில் இருக்கும் கலக்கல் கதை.

    டிடெக்டிவ் ஜெரோம் கதை போல
    ஒரு XIII போல
    ஒரு லார்கோ வின்ச் போல
    சித்திரங்களின் மூலமே கதை சொல்லப்பட்டிருக்கும் புதுமையான கதை.
    படித்து முடித்தபின் உங்களுக்கே தெரியும் இம்மாத நான்கு புத்தகங்களில் முதலாவதாக உங்களைக் கவர்ந்தது இது என்று.


    இரண்டாவதாக டெக்ஸ் வில்லர் இன் கைதியாய் டெக்ஸ்.

    முதல் இருபது பக்கங்களை படிக்கும் வரை ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சியாக இருக்கும்.

    ஏதோ பெரிய திட்டமிடல் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.
    ஏனென்றால் முதலில் கொள்ளை பொருள்சேதம் மட்டுமே நிகழும் கொலை ஏதும் நிகழாது.
    பிறகுதான் அது ஒரு துரோகம் என்று தெரியவரும்.
    எதிரி பல்வேறு சூழ்ச்சிகளை புரிவதும் அதனை டெக்ஸ்வில்லர் அண்ட் கோ முறியடிப்பதுமான அற்புதமான சாகசக் கதை.

    மூன்றாவதாக ப்ளூ கோட் பட்டாளம் போர் முனையில் ஒரு பாலகன்.

    இம்முறை அதிகபட்ச நகைச்சுவைக்கு உத்தரவாதம் அளிக்கும் கதை.
    ஸ்கூபியின் குதிரை செய்யும் சாகசம்
    சிரிக்க வைக்கும் ஒவ்வொருவரையும்....


    நான்காவதாக ஜேம்ஸ் பாண்ட் விண்ணில் ஒரு வேதாளம்.

    விமானத்தைக் கடத்தி பயண தொகை கோரும் சதிகளை முறியடித்து ஜேம்ஸ்பாண்ட் வெற்றி வாகை சூடும் சாகசம்..

    ReplyDelete
    Replies
    1. ஒரே கமெண்ட்டில் மொத்த இதழ்களுக்குமான விமர்சனத்தைப் போட்டுத்தாக்கி அசத்தியிருக்கிறீர்கள் @செந்தில் நாதன்!! அருமை அருமை!!

      Delete
    2. நிஜமான மதிப்பெண்களுடன் ஒரு விமர்சனம் எனக்கு நெம்போ பிடிச்சு இருக்கு....

      Delete
    3. சோடா இதுவரைக்கும் ஜிவ்வென்று ஸ்கோர் செய்திருப்பது மகிழ்வூட்டுகிறது !

      Delete
    4. நல்ல விமர்சனம் நண்பரே.

      Delete
  46. சம்முவத்துக்கு பொஸ்தவம் வந்திருச்சுன்னு தபால் ஆபீசிலிருந்து கூப்புட்டாங்க.. ஆனா சம்முவம் நாளானைக்கு தா அங்க போக முடியும்.. அதுனாலே பாயசம் வேணும்னா ஒரு ரெண்டு மூனு நாளு ஆகுங்க.. அது வரைக்கும் கொஞ்சம் சமாளிச்சுக்கங்க..

    ReplyDelete
  47. அப்புறம் சம்முவம் உன்னும் ஓட்டு போடலைங்..

    ReplyDelete
    Replies
    1. தேனுங்? சம்முவத்துக்கு கோட்டரும் கோழி பிரியாணியும் வந்தாத்தான் ஓட்டுப் போடுவாருங்களாக்கும்?!!

      Delete
    2. இல்லீங். சம்முவத்துக்கு கை நடுங்குதுங்களாம்.

      Delete
    3. ரம்மி @ உங்கள் ஓட்டு அதிகாரிக்கு தான் என்று இந்த தமிழ் காமிக்ஸ் உலகம் அறியும். :-)

      Delete
  48. ஓட்டு போட்டாச்சு. கள்ள ஓட்டு போட முடியுமா??


    மெபிஸ்டோ டுமா கதைகளை போடலாமான்னு ஒரு poll வெச்சு பார்த்துடுங்களேன. ஆதரவு இருந்தால் போடலாமே.

    ReplyDelete
    Replies
    1. அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்கள் மொபைல் அல்லது laptopப்பை வாங்கி உங்களுக்கு பிடித்ததை பார்த்து ஓட்டை போடுங்கள் :-)

      Delete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. எடிட்டர் சார்..

    சனநாயக கடமையை செய்தாகிவிட்டது.. இந்த மாதத்து புக்குகள் நாக்பூரை தாண்டி வந்து கொண்டிருக்கும்..

    புக்குகள் தற்போது இல்லை என்பதால் அண்ணாச்சிக்கு ஒரு வேண்டுகோள் படலம் (பார்ட் ஒன்று).

    சார் நீங்கள் பத்து வருடம் காத்திருக்க சொன்னதால் அந்தர்பல்டி யோகாசனம்லாம் செஞ்சு மனசை பதிமூனு அண்ணாச்சி பக்கம் போக விடாம கட்டுக்கோப்பாக வைத்திருந்தோம்...

    ஆனால் நம்ம பதிவுகளில் வரும் 13, பதிமூனு,2132 னு விஷயங்களை பார்க்கும் போது எங்களின் மனசு கட்டதுரையை பாத்த கைப்புள்ள மாதிரி ஆயிடுது (அதான் அண்ணனின் பேமஸ் டயலாக் வேணாம், வலிக்கிது, ம்ம்ம்ம அழுதுருவேன்). இப்படி இருக்கும் போது இந்தவாரம் XIII கேம் பேஜ் பாத்த பிறகு இரத்தக்கண்ணீர் வருவதை தவிர்க்க இயலவில்லை.

    அதனால கலர் இரத்தப்படலம் வர்துக்கு பத்து வருடம் காத்திருக்கும் எங்களைப் போன்ற வாசக சிகாமணிகளுக்காக இரத்தப்படலம் கருப்பு வெள்ளை புக்கை சீக்கிரமாக வெளியிட வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இதன்மூலம் ஸ்பின் ஆப் புக்குகளையே படித்து சிலாகித்து வரும் எங்களுக்கு, இரத்தப்படலம் கதையில் அவர்களின் பங்கு மற்றும் சாதனைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும் பிற நண்பர்கள் இரத்தப்படலம் கதையினை சிலகிக்கும் எழுதும் போது வெறும் ஆமஞ்சாமி போடாமல் இருப்போம்

    எங்களின் வேண்டுகோள் நிறைவேறும் பட்சத்தில் எங்களின் சங்கத்தை கலைத்து இரத்தப்படலம் படித்தவர் சங்கத்தோடு உடனடியாக இணைத்துக்கொள்வோம் என உறுதியளிக்ககறோம்.


    முன்கூட்டிய நன்றிகள்
    (ஹி.. ஹி.ஹி..Thanks in Advance)

    இப்படிக்கு,
    இரத்தப்படலம் புக் கிடைக்காதோர் சங்கம்.
    பதிவு எண் - பதிந்தவுடன் சொல்லுறோம்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் இங்குள்ள நண்பர்களிடம் பீரோக்களில் உறங்கி கொண்டிருக்கும் இரத்தப் படலம் புக்ஸ் இல்லாது போகாது சார் ! முயற்சித்துப் பாருங்கள் - உறுதியாய்க் கிடைக்கும் !

      Delete
    2. இரத்த படலம் படிக்க வேண்டும் என்றால் என்னிடம் உள்ள புத்தகத்தை தருகிறேன், படித்து விட்டு திரும்ப கொடுங்கள் சரவணன்.

      Delete
  51. சோடா பற்றிய எனது ஆதரவு விமர்சனத்தை நேற்றே பதிவு பண்ணிவிட்டேன். படித்தநண்பர்கள் கருத்து கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  52. விண்ணில் ஒரு வேதாளம்!

    பாண்ட் பாண்ட் தான்!

    அமர்க்களம்! சூப்பர்!!

    காசுக்கேத்த பனியாரம்

    8.5/10

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லுங்க மிதுன்...

      Delete
    2. // காசுக்கேத்த பனியாரம் // கொடுத்த காசை விட அதிகமாகவே திரும்ப கிடைக்கிறது ஒவ்வொரு முறையும்

      Delete
  53. "SODA" Solomon David ஒரு அமர்க்களமான அறிமுகம்! கிரீன் மானர் ஸ்டைல் சித்திரங்கள்! சீரியஸ் ஆன கதை!

    முதல் 10 பக்கத்திலேயே அதிரடி அசத்தல் இது என தெரிகிறது?

    சோடா SODA சாதாரண கோலி சோடா இல்லை, கில்லி சோடா தான்!

    (நாம் இந்த கதையின் ஒரிஜினல் வரிசை படி தானே தொடங்கி இருக்கிறோம்?)

    ReplyDelete
    Replies
    1. ஒரிஜினலான முதல் கதையை இங்கு நானும் முதல் கதையாக்கி இருப்பின் உங்களின் ரியாக்ஷன்ஸ் முற்றிலும் வேறு மாதிரி இருந்திருக்கும் சார் ! Rest assured !

      Delete
  54. ஒரு சிறிய பதிவு.

    கைதியாய் டெக்ஸ் அட்டை படம் சூப்பர்.

    போன மாதம் ஒரு நாள் நண்பர் ஒருவரின் வீட்டிற்க்கு சென்றேன் அப்போது அவர் டைகர் மற்றும் டெக்ஸ் ஓவியங்களை வரைந்து வைத்து இருந்தார். அவர் வரைந்த டெக்ஸ் ஓவியம் அல்மோஸ்ட் நமது கைதியாய் டெக்ஸ் புத்தகத்தில் வந்தது போலவே இருந்தது. நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  55. ஒட்டு போட்டாச்சு. நான் படிக்க இருக்கும் வரிசை கைதியாக அதிகாரி,ஜேம்ஸ் பாண்ட்,soda blue coat

    ReplyDelete
  56. தோர்கல் புத்தகங்கள் என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால், தோர்கல் பற்றி அறிந்து கொள்ள வேண்டி சில கேள்விகள் நண்பர்களே,

    1. தற்போது ஆன்லைனில் 8 புத்தகங்கள் கிடைகிறது. இவை தவிரவும் புத்தகங்கள் வந்துள்ளதா?

    2. Wikipedia தகவலின் படி இதுவரை 35 கதைகள், 27 புத்தகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. நமது தமிழ் காமிக்ஸில் இப்போது கிடைக்கும் இந்த எட்டு புத்தகங்கள் ஒரிஜினல் வரிசையில் எவ்வளவு கதைகளை cover செய்கிறது?

    நன்றி நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வாடஸ்ஆப் நம்பர் ப்ளீஸ் 9789214198 எனது நம்பர்...

      Delete
    2. நன்றி பரணி சார்...

      நண்பரே எனது வாட்ஸப் நம்பர் 9560687174.

      நன்றிகள்.

      Delete
    3. //1. தற்போது ஆன்லைனில் 8 புத்தகங்கள் கிடைகிறது. இவை தவிரவும் புத்தகங்கள் வந்துள்ளதா?//

      நம்மிடம் உள்ளனவா ? என்பதே உங்கள் கேள்வியெனில் - No sir ; ஆன்லைன் ஸ்டோரில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளவையே கையிருப்புகள் ! And இதுவரை நாம் வெளியிட்டுள்ள எல்லா தோர்கல் புக்ஸும் stock-ல் உள்ளதாய்த் தான் ஞாபகம் !

      2.//இந்த எட்டு புத்தகங்கள் ஒரிஜினல் வரிசையில் எவ்வளவு கதைகளை cover செய்கிறது?//

      கதை # 16 வரை முடித்து நிற்கிறோம் ! அறிவிக்கப்பட்டுள்ள "அழகிய அகதி" கதைகள் 17 to 21 வரையிலும் !

      Delete
  57. இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பர் ரவிகண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.வாழ்வில் எப்போதும் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிட்! வாழ்த்த வயதுண்டு.. அதனால் வாழ்த்துகிறேன்! 🎂🎂🍫🍫🍧🍧🍨🍨🍦🍦🍬🍬🍭🍭

      Delete
    2. குனா நாவன்னாவின் அருமை சிஷ்யர் நனா நாவன்னாவுக்கு( நகைச்சுவை நாயகனுங்கோ) பொறந்தநாள் வாழ்த்துகள்ங்கோ!!!

      Delete
    3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
      கண்ணன்.

      Delete
    4. 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
      பாசத்தின் புகழிடம்,
      பண்பின் உறைவிடம்,
      நேசத்தின் பிறப்பிடம்,
      இன்சொல்லின் நிறைகுடம்,
      நகைச்சுவையின் நேர்முகம்,
      அன்பிற்கும்...
      பாசத்திற்கும்...
      உரிய இனிய நண்பர்...
      அன்பு மாம்ஸ்...
      KOKக்கு
      பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
      💐💐💐💐💐💐💐💐💐💐
      🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

      Delete
    5. உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே !

      Delete
  58. சோடா அடுத்த இதழ் எப்போதுங்க ஸார்.
    2021 ல் அவருக்கு இரண்டு ஸ்லாட் உறுதி பண்ணீருங்க ப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. சோடாவில் கேஸ் இருக்கான்னு உறுதியானவுடன் அடுத்த இதழ்.....

      Delete
  59. இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பர் ரவிகண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.வாழ்வில் எப்போதும் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்.
    💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  60. மார்கண்டேயன் பழகுவதற்க்கு இனிய நண்பன் புண்ணகை மன்னன் நகைச்சுவை செல்வன் எங்கள் கண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

    ReplyDelete
  61. //அதனால கலர் இரத்தப்படலம் வர்துக்கு பத்து வருடம் காத்திருக்கும் எங்களைப் போன்ற வாசக சிகாமணிகளுக்காக இரத்தப்படலம் கருப்பு வெள்ளை புக்கை சீக்கிரமாக வெளியிட வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.//

    நீங்க மனசு வச்சா கருப்பு வெள்ளையில் தரமான வெள்ளைத்தாளில் இப்போதைய தரத்தில் சிக்கனமான விலையில் தக்க தருணத்தில் ஒரு முன்பதிவு ஆரம்பித்து வெளியிடலாம் சார்....வேணுமினா இதுக்கு ஒரு ஓட்டெடுப்பு வச்சுபாருங்களேன் சார் என்னதான் ஆவுதுன்ணு பாப்போமே....!!

    ReplyDelete
  62. கலர் அதிக தொகை என நீங்கள் கூறி வருவதால் கருப்பு வெள்ளை சிக்கனம் என கருதுகிறேன். கலர் இதழ் கிடைக்காதவர்களுக்கு கடைசியில் கருப்பு வெள்ளைபுக்காவது கிடைக்குமே சார்...உடனே கேட்கவில்லை நிலமை சீரானதும் ஒரு தோதுவான நேரத்தில் XIII காதலர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சார்...நல்லமுடிவா சொல்லுங்க சார் பொருமையா..

    ReplyDelete
    Replies
    1. இரத்த படலம் முழு தொடரை மறுபதிப்பு செய்வதாக இருந்தால் அதனை வண்ணத்தில் வெளியிடுவதே நன்றாக இருக்கும். வண்ணத்தில் படிக்க மிகச்சிறந்த கதை.

      Delete
    2. ஆசிரியர் தயங்குவது விலையும் ஒரு காரணம் நண்பரே...கருப்புவெள்ளை எனில் விலையும் குறையும் இல்லாதவர்களுக்கு கவெ புக்காவது கிடைக்கும் நண்பரே...

      Delete
    3. நண்பர்களே,

      ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு ஒருவாட்டி அதே ஆலமரத்தடியில் ; அதே ஜமுக்காளத்தோடு ; அதே பஞ்சாயத்து நடப்பது நமக்குத் புதிதல்ல ! என்ன ஒரே வித்தியாசம் - பஞ்சாயத்துக்குப் பஞ்சாயத்து - நாட்டாமைக்கு கேசம் குறைந்து கொண்டே இருக்கும் ! அதன் latest episode இன்றைக்கு !!

      அறிவித்ததை முழுசாய் வெளியிட்டு ; அடுத்த வருஷத்துக்கு முழுசாய்த் திட்டமிட்டு ; அதனை முழுசாய்ச் செயல்படுத்திடச் சாத்தியப்பட்டாலே தம்புரான் புண்ணியம் என்ற இன்றைய நிலையில், ஏதோ ஒரு யுகத்தில் சுட்டு முடித்து, என்றைக்கோ செரிமானமும் ஆகிப் போன ஒரு தோசையை, மறுக்கா மாவாக்கி ; மறுக்கா புதுசா, பிசிறின்றி ஊத்தி, மறுக்கா ஒரு போர்டை மாட்டி, கடையும் போட்டு, மறுக்கா நான் போணியும் பண்ணுவது தான் முன்னே செல்லும் பாதையெனில் - ஐயோ தெய்வமே....இருக்கும் இடத்திலேயே நான் இருந்துவிட்டுப் போகிறேனே !

      "இல்லே இல்லே.. இந்தவாட்டியும் அப்புடிச் சொல்லப்படாது ; இக்கட கையில் கொஞ்சம் பணம் இருக்குதுங்கோ ; அதைச் செலவிட்ட தீரணும் ; ஆகையால் அடைந்தால் மறதிக்கார மஹாதேவியே தானுங்கோ !" என்ற நிலைப்பாட்டில் நீங்கள் பிடிவாதமாய் உள்ளீர்கள் எனில், சில்லறையை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு கிரைண்டரை போட வேண்டியது தான் - இன்னொரு மாவாட்டலுக்குத் தயாராகிட !

      கலரில் ; குறைந்த பட்சமாய் 300 புக்ஸ் முன்பதிவு என்றாலே, விலை மூவாயிரத்து சொச்சம் வந்து நிற்கும் ! "பரால்லே..... கோட்டைச்சாமியின் சிஷ்யர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாகாது !" என்றீர்களெனில் - அப்புறம் நான் சொல்லிடத் தான் என்ன இருக்கப் போகிறது - அதே பணத்தைக் கொண்டு 2021-ன் முழுச் சந்தாவுக்கும், அழகாய் ஒரு 35 - 40 புது புக்குகளை தர சாத்தியமாகிடுமே என்பதை நினைவூட்டுவதைத் தாண்டி ?

      "இல்லே...black & white தொகுப்பு போதும் !" என்பதே அடுத்த ; இப்போதைக்கான ; சிக்கன நிலைப்பாடாக இருக்குமெனில் - "இந்தக் கூத்துக்கு நான் வரவே இல்லீங்கோ !!" என்பதே எனது பதிலாக இருந்திடும் ! எண்ணி சரியாய் இன்னொரு 20 மாதங்களுக்குப் பின்னே "அதே தோசையை இன்னும் ஒரே ஒருக்கா கலரில் சுட்டுப்புடலாம் !" என்ற பஞ்சாயத்து மறுக்கா நடக்கப் போவது உறுதி ! So போகாத அந்த ஊருக்கு வழி தேட எனக்கு வயதும் இல்லை ; சக்தியும் இல்லை !

      End of the day - இத்தனை பணம் செலவிட்டு படித்ததையே மறுக்கா படிப்பதிலும் ஒரு சுகம் இராது போகாதென்று நீங்கள் தீர்மானித்தீர்களெனில் - ரைட்டு ; கல்லாப் பொட்டியைத் திறந்து வைச்சிடலாம் !

      Delete
  63. எங்க அருமை கிட் மாமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....💐💐💐

    ReplyDelete
    Replies
    1. முன் பதிவு ஆரம்பிச்சா என் பெயரை
      முதலில் போட்டு ஒரு 13 புத்தகம்
      ரிசர்வ் பண்ணிடுங்க.

      Delete
    2. கிட் மாமாவுக்கும் முன்பதிவா ? ஹை !

      Delete
  64. நண்பர் கண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ........

    ReplyDelete
  65. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரவி கண்ணன் ...


    நேற்று போல் இன்றும் வாழ்க...இன்று போல் என்றும் வாழ்க...



    💐💐💐💐💐

    ReplyDelete
  66. எனக்கு நேட்டு கிடைச்சாச்சு... புஸ்தகம் வந்தாச்ச.. செம்ம டைமிங். நேற்று முழுவதும் தலைவலி உபாதை. இன்று fresh but பத்து மணிக்கு மேல் சாவகாசமாக எழுந்து தேனீர் குடிக்கும் போதே புக் வந்திடுச்சு. ஜாலி 😄

    ReplyDelete
  67. தக்களுண்டு,சின்னப் பையன் கிட் ஆர்டின் கண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்களும் ஜுன் மாதம் தானா? நின்னோடு நண்பர்கள் இருவரானோம்.

    ReplyDelete
  68. என்ன கொடுமை சார்...



    இன்றும் எனக்கு பார்சல் வரவில்லை....:-(

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் எஸ்டி போனமாசம் உன்னை அப்படி புகழ்ந்தேனே...அதுக்கு இப்படி ஆப்பு வச்சுட்டீயோ...ஒரு வேளை ஆத்தா தாரை புக்கை தான் ஈரோட்டுக்கு கொண்டு போயிருச்சா..


      என்னமோ போங்க ஆத்தா...:-(

      Delete
  69. //End of the day - இத்தனை பணம் செலவிட்டு படித்ததையே மறுக்கா படிப்பதிலும் ஒரு சுகம் இராது போகாதென்று நீங்கள் தீர்மானித்தீர்களெனில் - ரைட்டு ; கல்லாப் பொட்டியைத் திறந்து வைச்சிடலாம் !//

    வாவ் அருமை சார் புனித மானிடோ கண்ணைத்திறந்துவிட்டார்....
    இனி பந்து நமது பக்கம் நண்பர்களே ஆசிரியர் முன்பதிவை ஆரம்பித்தவுடன் தெறிக்கவிட தயாராகுங்கள்....

    ReplyDelete
  70. "இல்லே...black & white தொகுப்பு போதும் !" என்பதே அடுத்த ; இப்போதைக்கான ; சிக்கன நிலைப்பாடாக இருக்குமெனில் - "இந்தக் கூத்துக்கு நான் வரவே இல்லீங்கோ !!" என்பதே எனது பதிலாக இருந்திடும் !//

    மிக்க நன்றி சார் தங்களது தெளிவான உறுதியான பதிலுக்கு...இதே போல் நல்லதொரு முடிவை முன்பதிவிற்க்கு ஏற்பாடு செய்யுங்கள் சார்...நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் (றோம்) சார்...

    ReplyDelete