Sunday, February 09, 2020

ஒரு மதியமும்...சில உரத்த சிந்தனைகளும்..!

நண்பர்களே,

வணக்கம். அவ்வப்போது இங்கே ஈயோட்ட நேரிடும் போதெல்லாம் சின்னதாய் ஒரு சந்தேகம் தலைதூக்கிக் கொண்டேயிருக்கும் - ஞாயிற்றுக்கிழமைகளின் சுறுசுறுப்புக்கள் என்றேனும் தளத்துக்குத் திரும்பிடுமா ? என்று !! And இதோ இளம் புலியாரின் புண்ணியத்தில் அந்த சுறு + சுறு +ப்பு back with a bang !! 

நிஜத்தைச் சொல்வதானால் இந்தப் பதிவை வியாழன்றே எழுதி, டைப்படிக்கவும் செய்து முடித்து விட்டேன் ! ஆனால் எழுதிய வேகத்தில் Publish பட்டனை அமுக்கத் தயக்கம் நிறையவே ஆட்கொண்டதால் - 2 நாட்கள் மனதில் இந்த இடியாப்பத்தை கையாள என்ன வழியென்று அசை போட்டபடியே தானிருந்தேன் ! Of course - "தீர்பெல்ல்லாம் முதலிலேயே எழுதிப்புட்டு  இங்கே  சும்மாகாச்சும் டிராமா போடுறாண்டோய் !" என்று அன்பொழுகும் கருத்துக்கள் கொண்ட நண்பர்களும் இருப்பர் என்பதை யூகிக்கவும் முடிந்ததுதான் ! ஆனால் ஒவ்வொரு சந்தேக விரல்நீட்டலுக்கும் நெஞ்சைத் திறந்து காட்டிட வேண்டுமெனில் open heart surgery-க்கென டாக்டர் செழியனை கையோடு கூட்டித் திரிய வேண்டுமே ! So ஆனது ஆகட்டும் - உள்ளதை, உள்ளபடிக்கே போட்டுடைப்போம் என்ற தகிரியத்தில் தான் நேற்றிரவு பதிவை பொதுவெளிக்குக் கொணர்ந்தேன் !

And truth to tell - இன்றைய பொழுது எனக்கு நிஜமான surprise தான் - உங்களின் புரிதல்களில் தென்பட்ட முதிர்ச்சிகளின் காரணமாய் ! யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, நான் முன்வைத்த options / முன்வைக்கத் தயங்கிய options என்று எதெதிலிருந்தோ   தேர்வுகளைச் செய்ததுள்ளதில் ரொம்பவே சந்தோஷமே ! To cut a long story short - கீழ்க்கண்ட விஷயங்களில் ஒரு ஒற்றுமையான புரிதலை அவதானிக்க முடிந்துள்ளது :

1 இளம் டைகர் கதைகள் - நாம் பழகியுள்ள சார்லியேவின் படைப்புகளோடு ஒப்பீடாகிடும் போது அடி வாங்கவே செய்கிறது !

2 ஈரோடெனும் உடனடி மைல்களுக்கு இந்த YOUNG TIGER தொகுப்பு சுகப்படாது தான் !

3 அதே நேரம் சந்தா : T : 12 மாதங்களில் 12 சிங்கிள் ஆல்பங்கள் என்ற திட்டமிடலுக்கு அத்தனை ஆர்வம் தெரியக் காணோம் ! 

4 "கையைத் தட்டிப்புட்டு கை கழுவிடலாம் " என்ற Option : C பெற்றுள்ள வாக்குக்கள் ஒற்றை இலக்கமே - இதுவரைக்குமாவது ! So அதனை ஒரு சாக்காக்கிக் கொண்டு கம்பி நீட்டுவதை நான் ரசிச்சில்லா !!

5 So எஞ்சியிருக்கும் Option B தான் இப்போதைக்கு லீடிங்கில் உள்ள வேட்பாளர் எனும் போது அவருக்கே நாமும் பொன்னாடை போர்த்தும் சூழல் எழுந்திடும் என்று கணிக்கலாம் - கரூர்க்காரின் திடீர் formula ஏதேனும் களம் காணாத வரைக்கும் !!

இணையத்துக்கு ; இந்த அளவளாவல்களுக்கு அப்பாற்பட்டு நிற்கும் வாசகர்களுமே ஏற்றுக் கொள்வார்களெனில் - here is what I have in mind guys !! (மார்ச் இதழில் இது குறித்ததொரு வினவல் இருந்திடும் - பரவலான ஒப்புதல் இதற்குக் கிட்டுகிறதா ? என்பதைக் கண்டறிந்திட ! )


இலக்கு : சென்னைப் புத்தக விழா 2021 

அமைப்பு :  12 அத்தியாயங்கள் - 2 வால்யூம்களாய் !!

விலை : உத்தேசமாய் ரூ.1200 + கூரியர் (முன்பதிவுகளுக்கு மட்டும் இந்த விலை ; ரெகுலர் விலை : ரூ.1350)

முன்பதிவு அத்தியாவசியம் : 400 புக்ஸ் 

பிரிண்ட் ரன் : 800 புக்ஸ் 

முன்பதிவுத் துவக்கம் : ஆகஸ்ட்  2020 

பணம் அனுப்பிட : 2 தவணைகள் 

For confirmation : ரூ.600 செப்டெம்பர் 30 க்கு முன்பாய். பாக்கித் தொகை : நவம்பர்'30 க்கு முன்பாய்  

ஏதேனுமொரு படு துரதிர்ஷ்ட நிகழ்வாய் - முன்பதிவில் வேகம் பிடிக்காது போய் ; முன்பதிவு இலக்கை எட்டிப் பிடிக்கத் தவறி விட்டோம் எனும் பட்சத்தில் செப்டம்பர் 30-ல் இந்தத் திட்டமிடலைக் கைவிட்டிடுவோம் ! நீங்கள் அனுப்பியிருக்கக்கூடிய முன்பதிவுத் தொகைகள் திருப்பி அனுப்பப்படும் ; அல்லது 2021-ன் சந்தாவினில் வரவு செய்யப்படும் ! முன்பதிவு செய்யும் பொழுதே இது குறித்து உங்களின் சாய்ஸ் என்னவென்று கேட்டறிந்து, பதிவு செய்து கொள்வோம் ! "இரண்டே மாதங்கள் தானா ?" என்ற கேள்வி ஆட்டோமேட்டிக்காக எழுந்திடும் என்பதும் புரிகிறது ! ஆனால் யதார்த்தம் என்னவென்பதை இதுவரையிலுமான முன்பதிவுகள் புட்டுப் புட்டு வைக்கின்றன :
  • எந்த இதழுக்காக முன்பதிவாய் இருந்தாலுமே, அறிவிப்பு செய்த முதல் 1 மாதத்துக்குள் கிட்டிடும் முன்பதிவுகள் - 60%
  • பாக்கி 25 % அடுத்த சில மாதங்களில் !
  • மீதம் 15 % இதழ் வெளியாகிடும் சமீபத்தில் ; அந்த வாரத்தில் !

So ஒரு புராஜெக்ட் தேறுமா ? தேறாதா ? என்ற கேள்விக்கான விடையறிய இந்த 60 நாள் அவகாசமே தாராளமாய்ப் போதும் ! "இல்லே...இல்லே....நீ வேணும்னே குறைச்சலா நேரம் குடுத்து ; முன்பதிவை சொதப்பலாக்கிட தான் வழி பண்ணுறே ! இது போங்கு !" என்று உஷ்ணம் காட்டிடக்கூடிய நண்பர்களுக்கு எனது பதில் ஒன்றே : அறிவிக்கப்பட்ட பிற்பாடு எந்தவொரு நாயகரது புராஜெக்டாய் இருந்தாலும், அது லயன் - முத்து குழுமத்தின் புராஜெக்டே !! அதன் வெற்றியிலும், தோல்வியிலும் முழு முதல் ஆர்வமும், அக்கறையும் என்னைத் தாண்டி வேறு எவருக்கும் இருத்தல் அசாத்தியம் !  

இந்த முயற்சியினை சுவாரஸ்யமாக்கிடும் பொருட்டு சின்னச் சின்ன எண்ணங்களும் உள்ளுக்குள் :

12 அத்தியாயங்கள் !! Maybe நம்மிடையே எழுத்தாற்றல் உள்ள  12 ரசிகர்களுக்கு, ஆளுக்கொரு பாகத்தை தமிழாக்கம் செய்திடும் வாய்ப்பை  தந்திடலாமா ?! Of course - எல்லாமே எனது இறுதி approval & எடிட்டிங்குக்குப் பின்னே தான் களமிறங்கிடும் ! So மொழியாக்கங்களில் ஏற்ற இறக்கங்கள் பெரிதாய்த் தெரியாது பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு !

அட்டைப்பட டிசைனிங்கையுமே வாசகர்களிடம் ஒப்படைத்தாலென்ன என்ற எண்ணமும் உள்ளுக்குள் ! அதுவும் நடைமுறை காணின் -  இது முழுக்க முழுக்கவே "Made by Fans & Made for Fans" இதழாகிடாதா ? ஏதேதோ முயற்சித்து விட்டோம் - இதையும் விட்டு வைப்பானேன் ? 

"ரைட்டு...பேனா பிடிக்க 12 பேரை எவ்விதம் தேர்வு செய்வதாம் ?" என்ற கேள்வி next ! ஆகஸ்டில் ஈரோட்டில் வாசக சந்திப்பின் போதே இதற்கான தேர்வையும் செய்திட்டால் போச்சு ! இந்த இதழின் ஏதேனுமொரு  அத்தியாயத்தின் ஏதேனும்  6 பக்கங்களையும் ; அவற்றிற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் நிறையவே xerox போட்டு எடுத்து வருகிறேன் ! சந்திப்பை அரை மணி நேரம் முன்னதாகவே ஆரம்பித்துக் கொள்வோம் ; so கூடுதலாய்க் கிடைக்கும் அந்த 30 நிமிஷங்களில் - பேனா பிடிக்க  விரும்பும் நண்பர்களுக்கு இந்த 5 பக்கங்கள் + english script தாட்களை வழங்கிடுவோம் ! அங்கேயே சீனியர் எடிட்டரும், நமது கருணையானந்தம் அவர்களும் தேர்வு செய்யட்டும் - top 12 பேனாக்காரர்களை !! நான் மருவாதையாய் ஓரமாய் நின்று பராக்கு மட்டும் பார்த்துக் கொள்கிறேன் - அங்கேயும் சந்தேகத்தின்   பேரில் சாத்து வாங்கும் படலத்தில் சிக்கிடாதிருக்க ! 

ஒட்டு மொத்தமாய் மறை கழன்று போன முயற்சியாகவும் இது தென்படலாம் ; அல்லது, அதகள சுவாரஸ்யத்துக்கு அடிக்கோலிடும் முயற்சியாகவும் இது தெரிந்திடலாம் ! Honestly I dont have the faintest clue which way this will sound to each one of you !! 

ஒருக்கால் "ஆளாளுக்கு எழுதுவதென்பதெல்லாம் விஷப் பரீட்சை ; வேண்டவே வேண்டாம் ! என்று  பெரும்பான்மைக் குரல்கள் ஒலிக்கும் பட்சத்தில், அட்டைப்பட டிசைனிங் பொறுப்பை மட்டும் உங்களிடம் ஒப்படைத்து விட்டு, பேனாப் படலங்களை எங்களதாகவே வைத்துக் கொள்வோம் ! 

இவை  ஒட்டு மொத்தமாகவே ஒரு மதியத்தின் உரத்த சிந்தனைகளன்றி வேறெதுவுமில்லை ; so உங்களின் reactions எதுவாய் இருப்பினும் let's keep them from extremes please !!

 இதோ - என்ன எதிர்பார்ப்பதென்றே தெரியாது இன்னொரு பதிவைக் களமிறக்கிவிட்டுப் பேந்தப் பேந்த முழித்து நிற்கிறேன் ஒற்றை நாளில் - இரண்டாவது தபாவாய் ! பார்த்துச் செய்யுங்கோ சார்ஸ் !! Bye for now ! 
பி.கு. : "வேண்டாமே - இந்த முயற்சியே !" என்று எண்ணிடும் நண்பர்கட்கு : உங்களின் சிந்தைகள் எனக்கும் புரிகின்றன தான் ! ஆனால் தேரை  லேசாய், அசைத்து, இழுக்க முற்பட்டதே நான் தான் எனும் போது - ஆளும் பேருமாய்ச் சேர்ந்து தேரை இழுத்து எல்லை கொணர்ந்து சேர்க்க  முடிகிறதாவென்று பார்ப்போமே - ப்ளீஸ் ? இல்லை - இது நம் சக்திக்கு அப்பாற்பட்டதென்று ஒட்டு மொத்தமாய் நாம் உணர்ந்திடும் தருணம் துரதிர்ஷ்டவசமாய்ப் புலர்ந்தால், வடத்தை அப்போது கீழே போட்டு விட்டுப் போவோமே ? அன்றைக்குமே எதும் இழந்திருக்க மாட்டோம் - முயற்சி செய்தோம் என்ற திருப்தி கிட்டியிருக்கும் வரையிலும் !! So நீங்களும் சேர்ந்தே வாங்களேன் - வடம் பிடிக்க !! 

244 comments:

  1. அடடே,அதுக்குள்ள புதுப் பதிவா?
    மகிழ்ச்சி.......

    ReplyDelete
  2. இனிமேல் ஞாயிறுன்னா ரெண்டு!

    ReplyDelete
  3. அருமை சார்,
    அப்படியே ஈ.பு.வி இதழ்களையும் அறிவித்து இருந்தால் இன்னும் சூப்பர்!

    ReplyDelete
  4. டைகர் சும்மா தெறிக்கவிட்டிருக்காரு, ரெண்டாவது பதிவு ஞாயிறுக்கே!!

    ReplyDelete
    Replies
    1. எங்க தளபதி என்றால் சும்மாவா

      Delete
  5. பேச்சுன்னா இது பேச்சு....

    அருமை எடிட்டர் சார்.

    ReplyDelete
  6. வாசகர்களால், வாசகர்களுக்கு...நல்ல விஷயமே!!!

    மொழிபெயர்ப்பு ,டிசைனிங் இரண்டிலும் வாசகர்கள் கலக்க அனுமதிக்கலாம்..

    திறமைகள் வெளிப்படட்டும்!!!

    எல்லாமே எடிட்டர் அவர்களின் மேற்பார்வையில் என்பதால் தயக்கங்கள் தேவையில்லை...

    தூரிகைகள் துயிலெழும்பட்டும்

    எழுதுகோல்கள் எக்காளமிடட்டும்..!!!

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு வர்றீங்கல்லே.. உங்களுக்கு மட்டும் 4 பாக மொழிபெயர்ப்பு..

      Delete
    2. முழி பெயர்ப்பு.

      Delete
    3. ///தூரிகைகள் துயிலெழும்பட்டும்

      எழுதுகோல்கள் எக்காளமிடட்டும்..///

      அப்படியே முன்பதிவுகளும் முழுவீச்சில் வேகமெடுக்கட்டும்.

      Reply

      Delete
    4. // வாசகர்களால், வாசகர்களுக்கு...நல்ல விஷயமே!!! //
      +1000

      Delete
  7. // So நீங்களும் சேர்ந்தே வாங்களேன் - வடம் பிடிக்க !! //
    கண்டிப்பாக சார்.........

    ReplyDelete
  8. // so உங்களின் reactions எதுவாய் இருப்பினும் let's keep them from extremes please !! // என்னைப் பொறுத்த அளவில் இதில் பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை தான்,எமது ஆதரவு உங்களுக்கு உண்டு,அதேநேரத்தில் இதழ் வெளிவந்து ஹிட்டடித்தால் மகிழ்ச்சியே......

    ReplyDelete
  9. 6 பக்கங்கள் - அரை மணி நேரம் - ஆன்லைன் மொழிபெயர்ப்பு எக்ஸாம் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத சமாச்சாரங்கள் எடிட்டர் சார்! மொழிபெயர்ப்பவர்க்கு குறைந்தபட்சம் - தனிமை தேவைப்படும் என்பதோடு, தேவையில்லாத நேர விரையமும் (எதிர்பார்ப்பதை விட) கணிசமாகவே ஏற்படும்!!

    முன்பு இங்கே நடத்தப்பட்ட மொழிபெயர்ப்பு போட்டிகளைப் போல விருப்பமுள்ளவர்களுக்கு கொரியரில்ஒ/ஈமெயிலில் அனுப்பி/பெற்றுக் கொள்வதே சரியாக இருந்திடும் எ.எ.க!

    ReplyDelete
    Replies
    1. தவிர, மொழிபெயர்க்கும் ஆர்வமுள்ள -ஆனால், EBFக்கு வர இயலாத மற்ற நண்பர்களையும் இது ஏமாற்றத்தில் ஆழ்த்திவிடும்!

      Delete
    2. செயலரின் கூற்றை வழிமொழிகிறேன்..:-)

      Delete
    3. // முன்பு இங்கே நடத்தப்பட்ட மொழிபெயர்ப்பு போட்டிகளைப் போல விருப்பமுள்ளவர்களுக்கு கொரியரில்ஒ/ஈமெயிலில் அனுப்பி/பெற்றுக் கொள்வதே சரியாக இருந்திடும் எ.எ.க! // எனது கருத்தும் கூட

      Delete
  10. // நான் மருவாதையாய் ஓரமாய் நின்று பராக்கு மட்டும் பார்த்துக் கொள்கிறேன் - அங்கேயும் சந்தேகத்தின் பேரில் சாத்து வாங்கும் படலத்தில் சிக்கிடாதிருக்க ! //
    சார் உங்களை நம்பவேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் கண்டிப்பாக நம்புவார்கள்,நம்பக் கூடாது குறை மட்டுமே சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன செய்தாலும் நம்ப வைக்க இயலாது,நீங்கள் நீங்களாய் இருங்கள் சார்.....
    இந்த அளவுக்கு இறங்கி வரவோ,விளக்கம் சொல்லவோ தேவையே இல்லை சார்.....
    போற்றுவோர் போற்ற,தூற்றுவோர் தூற்ற தங்கள் பணி எப்போதும் சிறக்கட்டும் சார்.......

    ReplyDelete
    Replies
    1. அமைச்சர் ரவி அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்..:-)

      Delete
    2. சரியாக சொன்னீர்கள் ரவி அண்ணா

      Delete
  11. ஊர்கூடி தேரிழுக்கலாம் சார்.எந்த ஆட்சேபனையும் இல்லை.

    ReplyDelete
  12. // 12 அத்தியாயங்கள் !! Maybe நம்மிடையே எழுத்தாற்றல் உள்ள 12 ரசிகர்களுக்கு, ஆளுக்கொரு பாகத்தை தமிழாக்கம் செய்திடும் வாய்ப்பை தந்திடலாமா ?! //
    இது வித்தியாசமான நல்ல முயற்சி,அதேநேரத்தில் ஈ.வி சொன்னது போல உடனடி ரிசல்ட்டை எதிர்பார்ப்பது சரியாக இருக்குமா என்று சொல்ல முடியவில்லை?

    ReplyDelete
  13. தூரிகைகள் துயிலெழும்பட்டும்

    எழுதுகோல்கள் எக்காளமிடட்டும்..!!!👌👌👌👌👌

    ReplyDelete
  14. வெட்டு ✂️ ஒன்று ☝️ துண்டு ரெண்டு.
    முடிவு உங்களது.

    ReplyDelete
  15. ///இது முழுக்க முழுக்கவே "Made by Fans & Made for Fans" இதழாகிடாதா ///
    ///
    அட்டைப்பட டிசைனிங்கையுமே வாசகர்களிடம் ஒப்படைத்தாலென்ன என்ற எண்ணமும் உள்ளுக்குள் ///


    சார்.. நீங்க எந்தெந்த தொடர்களெல்லாம் நமது லயன்-முத்துவில் வர வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறீர்களோ அதை உடனே 'Fan made comics - not for sale'னு அட்டையில் பிரின்ட் செய்து, மொழிபெயர்ப்பு செய்து, விடிய விடிய வேலை செய்து PDF வடிவில் சமூகவலைத் தளங்களில் உலவிவிட்டு, காமிக்ஸ் நற்பணியாற்றும் ஒரு கூட்டமும் நம்மிடையை இருக்கத்தான் செய்கிறது!! (இதெல்லாம் நீங்கள் அறியாததல்ல தான்!)

    நீங்க இளம் டைகரையும் 'முடியாது'ன்னு ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா போதும் - ஒரே மாசத்துல எல்லா மொழிபெயர்ப்பையும் முடிச்சு - நண்பர்கள் யாருடைய பிறந்தநாளுக்காவது டெடிகேட் செஞ்சுடுவாங்க!! :)

    நீதி : "முடியும்-முடியாது" என்ற உங்களது வார்த்தைகள் பலராலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன!

    ReplyDelete
  16. ஒரு துளி துரோகம் மிகவும் நன்றாக உள்ளது சார்.
    சூப்பர்.
    மீள் வாசிப்பிற்கு உகந்த கதை.

    ReplyDelete
  17. இரண்டே மாத கால அவகாசத்திற்குள்/கெடுவுக்குள் 400 முன்பதிவுகள்!!

    இளம் டைகர் தன் கதையில் சந்திக்கும் சவாலை விட மிகக் கடினமான சவாலாயிற்றே இது?!!

    சவாலில் ஜெயித்து வெற்றி வாகை சூடுவாரா இளம் டைகர்?!!

    பார்ப்போம்!!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உங்களை போலவே எனக்கும் டைகர் முன்பதிவு நானுறை தொடக்கூடாது என்று விரும்புகிறேன் ஈ.வி.!!!

      நோக்கம் வேறு வேறாக இருந்தாலும் இரண்டு பேரின் விருப்பம் ஒன்று தான்.

      Delete
    3. @ Ganesh kumar 2635

      நண்பரே.. உங்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்! நான் அடுத்து எழுதவிருக்கும் வாக்கியங்கள் எடிட்டரின் குட்-புக்கில் இடம்பெறுவதற்காக அல்ல; ஏனெனில் அதில் ஏற்கனவே இடம்பிடித்துவிட்டேன்! புதிதாக மெனக்கெட ஒன்றுமில்லை!

      யங் டைகர் முன்பதிவு நானூறைத் தொடக்கூடாது என்று கனவிலும் நினைக்க மாட்டேன். காரணம்: எடிட்டர் - நான் மதிக்கும் மிகச்சில நண்பர்களுள் முதன்மையானவர். என் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, அவர் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் வெற்றியிலேயே முடியவேண்டும் என்று எப்போதும் நினைக்கிறேன். அந்த வெற்றி இலக்கை அடைய ராமருக்கு அணில் செய்த உதவிபோல் என்னாலானதைச் செய்வேன். ஒருவேளை என்னால் எதுவும் செய்ய முடியாவிட்டாலும், வெற்றிக்காக வேண்டிக்கொள்ளவாவது செய்வேன்!

      இதுதான் ஈ.வி - நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்!

      Delete
    4. @ GaneshKumar2635
      //உங்களைப்போலவே எனக்கும் டைகர் முன்பதிவு நானுறை தொடக்கூடாது என்று விரும்புகிறேன்//
      ஒரு காமிக்ஸ் ரசிகராக, உங்களிடம் இருந்து இப்படி ஒரு கமெண்ட் வருவது. வருத்தமே.
      ஒரு காமிக்ஸ் வெளியீடு வென்றால் அது தரும் உற்சாகத்தில் மேலும் பல புதுவரவுகள் வாசலுக்கு வரும். அதுவே தோல்வி என்றால் நஷ்டப்படுவது நிச்சயம் ஆசிரியர் மட்டுமே. நாம் அல்ல. எனவே எந்த ஒரு வெளியிடும் வெற்றி பெற விரும்புவோம். Positive thinkings goes to reach the goal.

      Delete
    5. /// ஒருவேளை என்னால் எதுவும் செய்ய முடியாவிட்டாலும், வெற்றிக்காக வேண்டிக்கொள்ளவாவது செய்வேன்!///
      Hats off EV.

      Delete
    6. EV எப்பவும் போல டச் பன்னிட்டீங்க...உங்க ஈடுபாடு சான்சே இல்ல....
      கணேஷ் நல்லதே நடக்கும்...
      காத்திருப்போம் எது சிறந்ததோ அது இரு மாதங்களில் சிறப்பாக

      Delete
    7. ராமருக்கு அணில் செய்த உதவிபோல் என்னாலானதைச் செய்வேன். ஒருவேளை என்னால் எதுவும் செய்ய முடியாவிட்டாலும், வெற்றிக்காக வேண்டிக்கொள்ளவாவது செய்வேன்!//

      இது தான் ஈவி. இந்த ஈவியைத்தான் எனக்குத் தெரியும்.

      Delete
    8. இதுதான் செயலர்..இந்த செயலரைத்தான் எனக்கு தெரியும்

      Delete
    9. அருமையான வார்த்தைகள் ஈ.வி......

      Delete
  18. படிச்சுட்டு வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா படிக்கிறிங்க சரோ......

      Delete
    2. படிச்சுட்டு மூர்ச்சையாகி இப்பதான் எழுந்தேன்..

      இதப்பத்தி நா சொல்ல எதுவுமில்லை.. ஏன்னா ஈரோட்டு திருவிழாவிற்கு என்ன புக்குன்னு இன்னும் சொல்லை..

      Delete
  19. ரணகளமோ, அதகளமோ.. டைகர் பேரைச் சொன்னாலே ச்சும்மா அதிருதில்ல..

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் பத்து சார்

      Delete
    2. Padmanaban
      ரணகளமோ, அதகளமோ டைகர் பேரைச் சொன்னா சொன்னாலே ச்சும்மா ஒதுருதில்ல...

      சார் புத்தகம் வந்தால் பலபேருக்கு ஒதுராம இருந்தா சந்தோஷம் தான் 😳

      Delete
  20. எடிட்டர் சார்,
    Option B அருமை!!!
    அப்படியே கொஞ்சம் இந்த 2 வால்யூம்கள் என்பதை ஒரே வால்யூமாக குடுத்தால் நன்றாக இருக்கும்.
    (2 வால்யூமாக வந்தாலும் என் கணக்கு 2 செட்)

    ReplyDelete
  21. சார் இரண்டு பாகம் வேண்டாம்





    ஒரே பாகமாய்

    ReplyDelete
  22. சந்தா T OPTION S BETTER SIR .. ஏன் இரண்டு மாதம் WAIT பண்ணி முன்பதிவு செய்து குழம்பி கொண்டு?? .. மாதம் ஓன்று விட்டு TIGERஐ நிறைவு செய்து விடுவோமே சார் ..

    //Maybe நம்மிடையே எழுத்தாற்றல் உள்ள 12 ரசிகர்களுக்கு, ஆளுக்கொரு பாகத்தை தமிழாக்கம் செய்திடும் வாய்ப்பை தந்திடலாமா ?

    அட்டைப்பட டிசைனிங்கையுமே வாசகர்களிடம் ஒப்படைத்தாலென்ன என்ற எண்ணமும் உள்ளுக்குள் ! அதுவும் நடைமுறை காணின் - இது முழுக்க முழுக்கவே "Made by Fans & Made for Fans" இதழாகிடாதா ?//

    ட்ரை பண்ணலாம் சார் ..

    ReplyDelete
  23. option B. அறிவித்ததில் மிகவும் மகிழ்ச்சி. சென்னை புக் ஃபேர் 2021க்கு என முடிவு செய்ததும் சரியானதே. எப்பவுமே ஒத்த வெடிய விட சரெவெடிக்கு சவுண்டு அதிகம். சிவகாசிக்கார் உங்களுக்கு தெரியாததா?

    ReplyDelete
    Replies
    1. // எப்பவுமே ஒத்த வெடிய விட சரெவெடிக்கு சவுண்டு அதிகம் // திருவாசகம்

      Delete
    2. 'ஒரே ஒரு அணுகுண்டுக்கு' முன்னால் எல்லா சரவெடியும் வெறும் 'பொட்டுவெடி'தான்!!!

      Delete
    3. ஏற்கனவே நம்,
      விற்பனை வித்தகர்!!!
      முப்படைகளின் தளபதி!!!
      கட்டிளம் காளை!!!
      பொன்னியின் செல்வன்!!!
      அருமை அண்ணன் K. V. GANESH அவர்கள்
      'Xiii ஒரே அணுகுண்டா வேணும்முன்னு'
      நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருக்கார்!!!!!!

      நம்ம டைகருக்கு பெரியவங்க(வயசானவங்க???) நீங்க ஏதாவது பாத்து பண்ணுங்க.

      Delete
  24. எடிட்டர் ஐயா நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி. கென்யா போட்டால் மகிழ்ச்சி. டைகர் சுமாரான கதைகள் என்றால் வேண்டாம். ஏனெனில் அவரை நான் வேற லெவலில் எண்ணியுள்ளேன். பிபிவி யை விட தெறிக்க விடக்கூடிய புத்தகமாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  25. பதிவிற்கு நன்றி சார்..

    முடிவிற்கும் நன்றி சார்..


    :-)

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. "Made by Fans & Made for Fans"

    I am sorry sir. Not like this idea.

    ReplyDelete
  28. அதென்னமோ தெரியல. இப்பல்லாம் சிங்கிள் ஆல்பத்தை விட 3 பாக, 4 பாக. அதை விட அதிகமான பாகங்கள் கொண்ட ஹார்டு பவுண்டு கதைகள் ஆர்வத்தை அதிகமாக்குகின்றன. படிப்பதையும், சுவாரஸ்யமாக்குகின்றன. (பர்ஸ் பணால் என்பதையும் மீறி )

    ReplyDelete
    Replies
    1. அதுக்குப் பின்னாடி உளவியல் ரீதியான காரணங்கள் சில உண்டு!
      வீட்டம்மாக்கள் நகைக்கடையிலும், துணிக்கடையில் நம் பர்ஸுக்கு சரமாரி வேட்டு வைக்கும்போதெல்லாம், இதே போல நமக்கே நமக்காக பர்ஸை பணால் ஆக்கிடும் ஒரு தருணத்திற்காக நம் மனம் ஏங்கிக் கிடக்கும்!!

      வாகான தருணம் அமைந்திடும்போது நாமும் மகிழ்ச்சியுடன் பர்ஸை பணால் செய்கிறோம்! ;)

      Delete
    2. உண்மைதான் ஈ.வி.புத்தகங்கள் வாங்கும் போதும் சரி, அந்த கெட்டி அட்டையை பிரித்து பக்கங்களை புரட்டும் போதும் சரி. அந்த மகிழ்ச்சியான தருணங்களில் அதற்கு நாம் செலவிடும் தொகை ஒரு பொருட்டாகவே தென்படுவதில்லை.
      ( இதைத்தான் புரட்சித் தலைவர் அன்றே பாடிவைத்தார்." புத்தம் புதிய புத்தகமே, உன்னை புரட்டிப்பார்க்கும் புலவன் நான்" என்று)

      Delete
    3. // அதென்னமோ தெரியல. இப்பல்லாம் சிங்கிள் ஆல்பத்தை விட 3 பாக, 4 பாக. அதை விட அதிகமான பாகங்கள் கொண்ட ஹார்டு பவுண்டு கதைகள் ஆர்வத்தை அதிகமாக்குகின்றன. படிப்பதையும், சுவாரஸ்யமாக்குகின்றன. // உண்மைதான் சார்

      Delete
    4. ///( இதைத்தான் புரட்சித் தலைவர் அன்றே பாடிவைத்தார்." புத்தம் புதிய புத்தகமே, உன்னை புரட்டிப்பார்க்கும் புலவன் நான்" என்று)///

      ஹா ஹா ஹா!! செம்ம!! :)))))

      Delete
    5. நம்ம புரட்ச்சித்தலைவர் MGR கூட 'ஒரே குண்டு புக்கு' பத்தி நிறைய்ய பாட்டு பாடி இருக்கார்!!!
      ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தெய்வம் என்று போற்றுவோம்.......
      ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையா சொன்ன ஒத்துக்கணும்......
      ஒரு தாய் மக்கள் நாம் என்போம்......

      இதுமட்டுமா??? இன்னும் இருக்கு!!!
      ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ணை சாய்க்குறா........
      ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து போகும்போது.......
      ஒரு வருடம் காத்திருந்தால் கையில் ஒரு பாப்பா.......

      அட இவ்வளவு என்ன?
      நம்ம புரட்ச்சித்தலைவரோட அதிரி புதிரி ஹிட் படத்தோட பேரு கூட
      "ஆயிரத்தில் ஒருவன்".

      புரட்ச்சித்தலைவரின் ஆதரவு பெற்ற புக்கு "ஒரே குண்டு புக்கு" என்பதற்கு இதை விட வேறு சான்று என்ன வேண்டும்?

      Delete
  29. Dear Editor,

    My preference and answer in order.

    1. A - NO
    2. C - YES
    3. B - YES

    Thanks
    Rama

    ReplyDelete
  30. 2021 செபுவியில் வெளிவரவிருக்கும் டவுசர்பாண்டியை வாழ்த்தி வரவேற்கிறோம்

    இப்படிக்கு
    அதிகாரியின் அடிபொடி.


    12 by 12 வாசகர்கள் ஒரு வித்யாசமான நல்ல முயற்சி.
    முயற்சி செய்து பார்க்கலாம். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லுங்க ஷெரீஃப்

      Delete
  31. 'டைகர் ஸ்பெஷல்'option B, சதாப்தியின் வேகத்துக்கு வழிவிட்டு. 'இளம் டெக்ஸ் ஒரே தொகுப்பு சந்தா Bல்' என்னும் டெக்ஸ் எக்ஸ்பிரஸ் ஒதுங்கி நிக்கிறமாதிரி ஒரு பீலிங்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பெளலர் பெவிலியன் என்டு வரைக்கும் நடந்துபோவது - அங்கேர்ந்து புயல் வேகத்தில் ஓடிவந்து விக்கெட்டை தகர்க்கத்தான்!

      Delete
    2. நான் மிகவும் எதிர்பார்க்கும் மற்றும் ஒரு இதழ் யங் டெக்ஸ்.

      Delete
    3. உண்மை, டைகருக்கு பதிலாக யங் டெக்ஸ் மெகா இதழ் வெளியிட்டால் முன் பதிவு பற்றிய கவலையே வேண்டாம், நேரடியாக 1000 பிரிண்ட் தான். காற்றுக்கு ஏது வேலி ஒரு தரமான சம்பவம்.

      Delete
  32. நேத்திக்கு நைட்லேர்ந்து இன்னிக்குப் பகல் வரைக்கும் இங்கே நடந்தேறிய களேபரங்களையெல்லாம் ஒரு ரப்பர் வச்சு அழிச்சுட்டு 'நேற்று இல்லாத மாற்றம் என்னது'ன்று சிம்ப்பிளா யோசிச்சுப் பார்த்தோம்னா...

    ஆகஸ்டுல வரயிருந்த யங்டைகர் ஜனவரிக்கு தள்ளிப்போயிருக்கு! ஈரோட்டு விழாவை சிறப்பிக்க ஒன்றிரண்டு ஸ்பெஷல் வரப்போகுது!

    அம்புட்டுதேங்!

    ReplyDelete
    Replies
    1. அம்புட்டுதேங்கில்ல....அம்புட்டுந்தேன்....வாசக அன்பு பட்டுந்தேன்...அம்பு பாய்ந்துந்தேன்...தேன்...தேன்

      Delete
    2. ஆகஸ்டுல வரயிருந்த யங்டைகர் ////ஜனவரிக்கு தள்ளிப்போயிருக்கு! ஈரோட்டு விழாவை சிறப்பிக்க ஒன்றிரண்டு ஸ்பெஷல் வரப்போகுது!//

      சிம்பிளா பிரச்சினைய முடிவுக்கு கொண்டுவந்தாச்சு க்ரேட் EV

      Delete
  33. ப்ளூபெர்ரியும் பிளவுற்ற பானையும்


    மலை மேல் ஒரு சிறுவீடு..

    அவ்வீட்டின் எஜமானி ஒரு கடின உழைப்பாளி..

    மலைக்கு கீழே நதி ஒன்று ஓடுகிறது..

    தினமும் அவள் மலைவீட்டில் இருந்து கீழ் இறங்கி நதியிலிருந்து நீர் எடுத்து மேலே செல்வாள்..

    காவடி போல் ஒரு கழியில் இருபுறமும் மண்பானைகளை கட்டி தன் தோளில் கழியை சுமந்து நீரை பானைகளில் எடுத்து செல்வாள்..

    இரு பானைகளுக்கு இடையே சிறு மண்கலயங்களிலும் நீரெடுத்து கழியில் அவற்றை கட்டிவிடுவாள்..

    ஆரம்பத்தில் இருபானைகளும் நல்ல நிலைமையில்தான் இருந்தன...


    சில காலம் கழித்து ஒரு பானையில் நடுவில் விரிசல் விட்டுவிட்டது...

    எனவே எஜமானி நீரெடுத்து மேலே செல்கையில் விரிசல் வழியாக நீர் கசிந்து வழி நெடுக சிந்திக் கொண்டே செல்லும்...

    மேலே வீட்டை எஜமானி அடைகையில் பாதி பானை நீர்தான் இருக்கும்.

    ஆனால் எஜமானி பானையை விட்டுவிட வில்லை..

    சில காலம் கழித்து எஜமானி நதியில் நீர் எடுக்கையில் விரிசல் விழுந்த பானை விசனத்துடன் வினவியது..

    நான் குறைபாடுடன் இருக்கிறேன்..உனக்கு அதிகம் சிரமம் கொடுக்கிறேன். அல்லவா?

    எஜமானி புன்சிரிப்புடன்
    ''உன் கண்களை நன்றாக திறந்து பார் "

    என்றாள்.

    எஜமானி மேலே நடக்கையில் பானை விழிகளை விசாலமாக்கி பார்த்தது..

    நீர் சிந்திய வழியெங்கும் நதிக்கரை துவங்கி வீடுவரை விரிசல் உள்ள பானை இருக்கும் பக்கம் அழகிய பூச்செடிகள் பூத்திருந்தன..

    குறைகளுடன் இருப்பினும் உன் தகுதி குறையவில்லை அல்லவா ? என்றாள் எஜமானி..

    மேலும் அவள் சொன்னாள்!!

    சிவகாசியில் என்னைப் போலவே ஒருவர் இருக்கிறார்..

    டெக்ஸ் ,டைகர் என இரு பானைகளையும் இன்னும் பிற கதாபாத்திர கலயங்களையும் சுமந்து சித்திரக்கதை நீரளிக்கிறார்..

    டைகர் பானையில் உன்னை போலவே விரிசல் விழுந்திருக்கிறது...

    ஆனாலும் பல ரசிகர்களின் மனங்களில் பூப்பூக்க வைக்க விரிசல் இருப்பினும் வழியுண்டு என நம்புகிறார்..

    அப்பெண் சொல்வதில்தான் எத்தனை உண்மை??

    அதனாலேயே என்னவோ யங் டைகருக்கான முதல் சந்தாவை -1500ஐ கட்டிவிட்டேன்..

    இதனை சந்தாவுக்கு மாற்ற வேண்டிய அவசியமே இராது என மனப்பூர்வமாக நம்புகிறேன்..

    விரிசல் இருப்பினும் எஜமானி அம்மா தன் பானைமீது கொண்டுள்ள நம்பிக்கை மாறவில்லையாதலால் நான் மட்டும் பல மனங்களில் பூப்பூக்க வைக்க முடியும் என்ற எண்ணத்தின் மேல் ஏன் அவநம்பிக்கை வைக்க வேண்டும்????





    ReplyDelete
    Replies
    1. ///அதனாலேயே என்னவோ யங் டைகருக்கான முதல் சந்தாவை -1500ஐ கட்டிவிட்டேன்..

      இதனை சந்தாவுக்கு மாற்ற வேண்டிய அவசியமே இராது என மனப்பூர்வமாக நம்புகிறேன்..
      ///

      இது இது இது.. செனா அனா!

      Delete
    2. எனதவநம்பிக்கையும் களைந்து விட்டேன்...டைகரா லயனா என எழுதினேன்...டைகரே டாப்பாகட்டும்...அதனால லயனுமே டாப்தான

      Delete
    3. அருமையான உவமானம் செனா அனா..!

      Delete
    4. டாக்டர் சார். அருமை கண்டிப்பாக இதனை சந்தாவிற்கு மற்றும் அவசியமே இருக்காது.

      Delete
    5. செனா அனா சொல்ற குட்டிக் கதையெல்லாம் இரவு மகளுக்கு சொல்ல உபயோகப்படுதுங்கறது கூடுதல் ப்ளஸ்.

      Delete
    6. அருமை செனா அனா ஜீ..( தமிழில்)..:-)

      Delete
    7. நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்.......

      Delete
  34. லயன் என்றுமே டாப்தான்.. டைகர டாப்டக்கராக்க வேண்டும்....முன்பதிவை சற்று முன்னமே ஆரப்பிக்கலாம் சார்...

    ReplyDelete
  35. ஒரே தொகுப்பு முன்பதிவை வேகமெடுக்க உதவும் சார்...

    ReplyDelete
  36. நமது லயன் முத்து காமிக்ஸின் சிறப்பம்சமே மொழிபெயர்ப்பு தான் அதை 12 பேர்கிட்ட கொடுத்து கொத்து பரோட்டா போட வேண்டாம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து சார், அவசியப்பட்டால் யாராவது ஒரு நபரிடம் விருப்பமுள்ளவர்களிடம் வேண்டுமானால் மொழிபெயர்ப்பு பணியை ஒப்படியுங்கள்! இன்னும் 10 மாத அவகாசம் இருப்பதால் பொறுமையாக பண்ண அவர்களுக்கும் நேரமிருக்கும்! அப்படியில்லையென்றால் நீங்களே (இன்னும் கொஞ்சம் தாமாதமானால் கூட பரவாயில்லை)பண்ண முயற்சியுங்கள்! அதே போல அட்டைப்பட டிஸைன் நம்மாட்களில் (வாசகர்களிடம்) கொடுப்பதில் தப்பேதுமில்லை அவர்கள் ஏற்கனவே செய்த அட்டைப்படங்கள் நன்றாகவே இருந்தன! (உதாரம்: பயங்கரப்புயல், ஓநாய் மனிதன், டயபாலிக், சதிகாரர் சங்கம்) டைகர் கதைக்கு மட்டுமில்லாமல் இன்னும் சிலபல கதைகளுக்கும் வாசகர்களின் முயற்சிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்! குறிப்பாக டெக்ஸ் கதைக்கும் பயன்படுத்தினால் இன்னும் மெருகு கூடும். மற்ற கதைகளுக்கும் அட்டைப்படமும் வித்தியாசமான கோணத்தில் நம் காமிக்ஸ்களுக்குமேலும் சிறப்பு சேர்க்க வாய்ப்புள்ளது!

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்...

      Delete
    2. நன்றி நண்பர்களே 😊

      Delete

    3. //நமது லயன் முத்து காமிக்ஸின் சிறப்பம்சமே மொழிபெயர்ப்பு தான் அதை 12 பேர்கிட்ட கொடுத்து கொத்து பரோட்டா போட வேண்டாம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து சார், அவசியப்பட்டால் யாராவது ஒரு நபரிடம் விருப்பமுள்ளவர்களிடம் வேண்டுமானால் மொழிபெயர்ப்பு பணியை ஒப்படியுங்கள்//

      புலன்விசாரணை -யின் கட்டுரை பகுதி தோழர் காபா,கார்ட்டூன் பகுதி நண்பர் j என ஒரே இதழை இருவர் மொழிபெயர்த்த முன்னுதாரணம் இருக்கத்தான் செய்கிறது... நண்பரே கலீல்..

      தோழர் காபாவின் சொல்லாட்சியும் நண்பர் ஜேவின் நடையழகும் இணைந்தபோது நெருடல் ஏதும் தோன்றவில்லையே!!!!!

      பிபிவியின் அட்டகாசமான ஷெரீஃப்பின் வழக்குசொல்லாடல் மிக்க மொழிபெயர்ப்பு

      மேச்சேரி கண்ணனின் கார்ட்டூன்கள்,ஜூலியா மொழிபெயரப்பு

      எடிட்டர் சொன்னபிறகே நமக்கு தெரிந்த ஆதி தாமிராவின் டெக்ஸ் கதையொன்றின் மொழிபெயர்ப்பு

      தாமதம் என்பதால் வாய்ப்பை நழுவவிடினும்

      நண்பர் கணேஷ் அவர்களின் புவி மொழிபெயர்ப்பு முயற்சி...

      இன்னும் தங்களை வெளிப்படுத்தி கொள்ள விரும்பாதோரும் இருக்கலாம்..

      மிகப் பெரும் கதைத் தொடர் ஒன்றை ஒருவரே மொழிபெயர்ப்பு செய்வது - தொழில்முறை - அல்லாதோர் என்பதால் சுகமானதோர் சுமையாக மாறக்கூடும்..

      எடிட்டர் மேற்பார்வை என்பதால் யாதொரு கவலையும் கொள்ள தேவையில்லை என்பது என் எண்ணம்..

      அனைவரின் கைவண்ணத்தையும் நெருடலின்றி

      ஒருங்கிணைக்க அவரால் இயலும் என்பது வெள்ளிடை வெளிச்சம்..


      Delete
    4. ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நபர் மொழிபெயர்க்கும் போது சில சமயம் கதையின் சாரம்சம் மாறவும் வாய்ப்புள்ளது நண்பரே! எடிட்டர் பிழைத்திருத்தம் வேண்டுமானால் செய்யலாம் கதையின் போக்கை மாற்ற முடியாதல்லவா? ஒரு படத்துல கவுண்டர்ட்ட செந்தில் எல்லா ஸ்வீட்லயும் 100 கேட்டு அதையெல்லாம் பிசைய சொல்லி அதிலிருந்து 100 கிராம் கேட்பாப்புல! அந்த மாதிரி கதையாக இளம் டைகர் மாறிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பரிட்சாத்த முயற்சி வேண்டாமென்கிறேன்!

      Delete
    5. ///ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நபர் மொழிபெயர்க்கும் போது சில சமயம் கதையின் சாரம்சம் மாறவும் வாய்ப்புள்ளது நண்பரே! எடிட்டர் பிழைத்திருத்தம் வேண்டுமானால் செய்யலாம் கதையின் போக்கை மாற்ற முடியாதல்லவா? //

      பாயிண்ட்!!

      //ஒரு படத்துல கவுண்டர்ட்ட செந்தில் எல்லா ஸ்வீட்லயும் 100 கேட்டு அதையெல்லாம் பிசைய சொல்லி அதிலிருந்து 100 கிராம் கேட்பாப்புல! //

      ஹா..ஹா..ஹா!!!

      எங்க வீட்ல தீபாவளிக்கு புது பட்சணம்னு நான் கேக்காமலே இது மாதிரிசெஞ்சு வச்சு

      சாப்பிட சொல்லுவாங்க!! :-)

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. //ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நபர் மொழிபெயர்க்கும் போது சில சமயம் கதையின் சாரம்சம் மாறவும் வாய்ப்புள்ளது நண்பரே! எடிட்டர் பிழைத்திருத்தம் வேண்டுமானால் செய்யலாம் கதையின் போக்கை மாற்ற முடியாதல்லவா? //

      +1

      12 பாகங்கள் கொண்ட கதையை 1-2 (தலைக்கு 6 கதைகள் வீதம்) நண்பர்கள் மட்டும் பண்ணட்டும்! 12 பேர் 12 கதைகள் என்ற விஷப்பரீச்சை வேண்டாம் சார்!

      Delete
    8. சரியான உதாரணம்
      நண்பர்களின் பங்களிப்பு இருக்கட்டும்

      Delete
  37. எல்லாம் சரி ஈரோட்டுக்கு யுமா உண்டுதானே சார்...???

    ReplyDelete
  38. டைகர்..கெளபாய் களின் சக்கரவர்த்தி ஒரு சமயம் ...ஆனால் இன்றோ அவரின் நிலையை அறியும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. ..இருக்கும் ஒரு கதையையும் பிரிக்காமல் முழு தொகுப்பாக வெளியிடுவது மிக சிறப்பான தீர்மானம்...தமிழில் காமிக்ஸ் வருவதே வரமாக நினைக்கும் என் போன்றோர்க்கு டைகர் போன்ற சகாப்தத்தை தூக்கி பரணில் போடாமல் எப்பாடு பட்டாவது எங்கள் கரங்களில் அந்த இதழை தவழ விடுங்கள்...இதன் முன்பதிவை ஆகஸ்டில் தொடங்கினால் நல்லது.800 புக் தான் உங்கள் ப்ரிண்ட் ரன் என்றால் எள்ளளவும் ஐயமில்லை இந்த இதழ் வருவதை தடுப்பார் யாருமில்லை(இரத்தப் படலம் கலர் புக் ஒன்றே போதும் சான்றுக்கு..இன்று அந்த புக்கிற்கு உள்ள டிமாண்ட் ..அப்படி உள்ளது..ஆதலால் மீண்டும் அந்த தப்பை நம்ம வாசகர்கள் செய்ய மாட்டார்கள்....உறுதியாக டைகர் நம் கைகளில் தவழுவது உறுதி....
    அடுத்த ஜனவரி வரை நீட்டாமல் தீபாவளி மலராக வெளியிட முடியுமா....

    ReplyDelete
  39. புத்தகம் ஓகே, மற்றதெல்லாம் வேணாமே விழ பரிட்சை

    ReplyDelete
  40. இளம் டைகர் இரண்டு பாகங்களாக முன்பதிவுத் திட்டத்தின் கீழ்வருவதை இரு கரம் கூப்பி வரவேற்கின்றேன்.இரண்டு மாதத்தில் 400 என்ன 800முன்பதிவுகள் வரவேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.



    ஈரோட்டுப் ஸ்பெஷல் இதழுக்கு எந்தக் கதைகளைத் தேர்வு செய்துள்ளிர்கள் சார்?

    ReplyDelete
  41. Extremely sorry friends. Commented in a wrong place.

    ReplyDelete
  42. இளம் டைகர் கதைகளை சற்று தாமதமாகவேனும் வெளியிடுவோம் என்ற ஆசிரியரின் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறேன். குறிப்பிட்டபடி சென்னை புத்தக திருவிழாவை டைகர் சிறப்பித்தால் மகிழ்ச்சி😁.

    என்னுடைய சந்தா இன்றே அனுப்பப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி 🙏🏼

    ReplyDelete
  43. Option B ஐ தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.
    EBF இற்கு கென்யா & ARS Magna.
    4 million special ஆக ஏதாவது குண்டு புக் ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. எனது விருப்பமும் option B தான் சகோ....

      Delete
  44. ஈரோட்டுக்கு கலரே வேணாம்.கறுப்பு வெள்ளையில் 1000 பக்கத்தில் ஒரு கதம்மப ஸ்பெஷல் வெளியிட்டால்...அடட...அடடடடா...
    டெக்ஸின் அதிக பக்கம் உடைய கதையை வெளியிட முயற்சி செய்யலாமே...(டெக்ஸின் குண்டு புக் எப்போதுமே ஒரு ஸ்பெஷல் தான் 💐💐💐💐💐)

    ReplyDelete
  45. இளம் டைகர்: முன்பதிவுக்கு பணம் Rs.1350 அனுப்பி விட்டேன். ஆட்டத்தை இந்த பரணி ஆரம்பித்து விட்டான் :-)

    ReplyDelete
    Replies
    1. இதை எடிட்டர் தான் முடித்து வைக்கனும்.

      வெற்றி பெற வைப்பது நமது அனைவரின் கடமை தோழர்களே.

      Delete
    2. செனாஅனாஜி 1500 அனுப்பி ஆட்டத்தை முதலில் துவக்கி விட்டார். நீங்கள் இரண்டாவது. நான் விரைவில்.

      Delete
    3. சூப்பர் பத்மநாபன் :-)

      Delete
  46. டியர் எடி,
    யங் டைகர் மற்றும் யங் டெக்ஸ் இரண்டையும் ஒரே சமயத்தில் வெளியிடவும்.
    எவ்வளவோ பண்ணிடீங்க இதை பண்ண மாட்டீங்களா?

    ReplyDelete
    Replies
    1. அதானே...👌🏼👌🏼🤷🏻‍♂️🤷🏻‍♂️

      Delete
    2. தல தளபதி - பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சந்தானம் காமெடி ஏனோ ஞாபகம் வருகிறது :-)

      Delete
  47. யங் டைகர் - option B சூப்பரான முடுவு. என்னைப் பொறுத்த வரையில் யங் டைகர் spl . வெளியிடுவதற்கான 3 காரணங்கள்:
    1. டைகர்
    2. டைகர்
    3. டைகர் (ஹா ஹா Joking Apart)

    1. டைகர்
    2. ஓவியர் பிளாங்க் டூமாண்ட்-ன் அட்டகாசமான சித்திரங்கள்.
    3. கதை, அதை விடுங்க...(ஆராய்ந்ததில் இது ஒரு அமெரிக்க உள்நாட்டு போர் சம்பந்தப்பட்ட கதையாக தெரிகிறது. அந்த வரலாற்றையும் என்னவென்றுதான் பார்ப்போமே....!)

    போன வருஷம் பிஸ்டலுக்கு பிரியாவிடை
    அடுத்த வருஷம் டைகருக்கு பிரியாவிடை
    Last Man Standing - Let’s hope (Unless 400 Pre-booking has fallen)

    ReplyDelete
  48. I vote for Black and white option with less price. Even the option is not listed and its impossible at the moment.

    ReplyDelete
  49. //போன வருஷம் பிஸ்டலுக்கு பிரியாவிடை
    அடுத்த வருஷம் டைகருக்கு பிரியாவிடை//

    அருமையான வாசகம் நண்பரே...நண்பருக்கு சிறப்பான
    கௌரவமான முறையில் விடைகொடுப்போம் நண்பர்களே.....

    ReplyDelete
  50. சார், அட்லாண்டாவில் ஆக்ரோஷத்தில் வந்த வில்லன் குவான்ட்ரில் (வில்லனின் பெயர் இதுதான் என்று நினைக்கிறேன்) எப்படி பிடிபடுகிறான் என்பதை அறிய ஆவலாய் உள்ளேன். இரும்பு கை எத்தனின் முடிவு எனக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது. இவனாவது டைகர் கையால் முடிவை தழுவுவான் என்று எதிர்பார்க்கிறேன். அதை அறியும் வாய்ப்பு அமையும் என்று எண்ணுகிறேன்.

    எனது விருப்பம் கென்யாவும் , புதையல் வேட்டை சம்பந்தப்பட்ட கதையும் தான் சார்.

    ReplyDelete
    Replies
    1. டைகர் கதைகள்னாலே வில்லனுங்க பயங்கரமா சீனைப் போடுவானுங்க, கடைசில வேற எவனாவது வந்து வில்லனைப் பொட்டுன்னு போட்டுறுவானுங்க.

      Delete
    2. குவான்ட்ரில் கொல்லப்பட்டு, அவனது இரும்புக்கையும் செவ்விந்திய தலைவனால் (பெயர் நினைவில்லை) எடுத்துவரப்பட்டு விடுகிறதே. இரத்தத்தடம் கதையில் என நினைவு.

      Delete
    3. குவான்ட்ரில் இருப்பது மரணநகரம் மிசௌரியில் சார்.இரத்தத் தடத்தில் இருப்பவன் ஸ்டீல் ஃபிங்கர்.

      அட்லாண்டாவில் ஆக்ரோசத்தில் இருப்பது போமென்.

      Delete
    4. அட்லாண்டாவில் ஆக்ரோசத்தில் வில்லன் போமென் தப்பிக்கும்போது, டக் 'கென ரைபிளில் டைகர் குறிபார்ப்பார்.தோட்டா இல்லாமல் ரைபிள் பல்லைக் காட்ட, பல்பு வாங்கும் டைகரைப் பார்த்தால் பாவமாக இருக்கும்..!

      எப்படி இருந்த மனுசன்.?

      Delete
    5. அந்த செவ்விந்தியனின் பெயர் சிட்டிங் புல் Sir. இரும்பு கை எத்தனான ஜெத்ரோவின் இரும்பு கைதான் அவர் கழுத்தில் மாலையாக இருக்கும்.

      அட. உண்மை போலத்தான் தெரிகிறது. ரத்த கோட்டையில் மட்டும் தான் வில்லன் ஒற்றை கண் குரானாவை கொல்கிறார். தங்க கல்லறையில் கோலே’ வையும், மின்னும் மரணத்தில் ஏஞ்சல் ஃபேசை மட்டும் கொல்கிறார். மற்றபடி பெரிய வில்லன்கள் பிறரால் தான் கொல்லப்படுகிறார்கள் அல்லது சிறை பிடிக்க படுகிறார்கள். போமெனும் ஒரு பெண்ணால் தான் கொல்லப்படுகிறான்.

      ஜி!, குவான்ட்ரில் “கான்சாஸ் கொடூரனி”ல் மீண்டும் தோன்றி, சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தன்னையும் தன் கும்பலையும் தப்பிக்க வழி காட்டும் ஒரு தங்கவேட்டையனை கொன்றுவிடுவதோடு , ஒரு ஊரையே அழித்து விடுவான். டைகரையும் கொல்ல கூட்டமாக துரத்தும் போது அவனின் காதலி டைகரை காப்பாற்றி விடுவாள். அத்துடன் அந்த படலம் முடிந்து விடும். இனி அதன் தொடர்ச்சியை அதாவது ,குவான்ட்ரிலின் முடிவை வெளிப்படுத்தும் படலம் “ஆர்கன்சா அசுரன்’’ என்ற பெயரில் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன்.

      ஸ்பைடரின் ரசிகர்களான நம்மால் கண்டிப்பாக 99% கதைகளை ரசிக்க முடியும், steel.

      நான் உணர்ந்த வரை, டைகரை நம் தோழனாக கருதி எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். டெக்ஸ் வில்லரை குருவாக கருதி , எதை பேசுவதென்றாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து தான் பேச வேண்டும் . இல்லையேல் பல், பகடு கழன்று விடும். இருவரின் கதைகளையும் படிக்க உண்மையில் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும்.

      Delete
    6. உண்மைதான் நண்பரே...இருவரும் இணையற்றவர்கள் மட்டுமன்றி நம்ம காமிக்சின் உயிர்நாடிகள்...நண்பர்கள் அவர்கள் பேர வச்சி அடிப்பதெல்லாம் லுல்லலாயே

      Delete
  51. எடிட்டர் சார்,
    Option B 👍

    ReplyDelete
  52. Replies
    1. அந்த இன்னொரு ஷு தான் அட்டைப்படத்துல இருக்குங்க.:-)

      Delete
    2. அப்போ ஒண்ணுதானா?

      Delete
    3. பயலுக்கு Paragon செப்பல் போதாது?

      Delete
    4. இவ்ளோ நேரம் இந்த சூ பத்தித்தான் பேசிக்கிட்டு இருந்தியளோ?. அட தேவுடா..

      Delete
    5. ஏங்க., பேய்க்கு கால் இருக்காதுல்ல
      இந்த பேய்க்கு கால் இருக்குங்கிறதுக்காக போய் னு சொல்லமுடியுமா?

      Delete
  53. Appadiye remaining 9 titles (as already published)list only+young tiger details add ponnunga sir

    ReplyDelete
  54. ஹைய்யா!! யங் டைகர் முன்பதிவுக்கு பெயர் வெரிஃபிக்கேஷன் அழைப்பு லயன் ஆபிஸிலிருந்து வந்துச்சி!!

    ஓரளவு அஃபிஸியலா முன் பதிவு ஆரம்பிச்சாச்சு போல!! ஹூர்ர்ரே!!!!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்னும் அழைப்பு எதுவும் வரலை!

      எதுக்கும் பணம் அனுப்பிப் பார்க்கறேன்! ;)

      Delete
  55. ஒரு வழியாக சந்தா இரயிலில் நானும் தொற்றிக்கொண்டேன்..
    வர்ஷாபழனிவேல் என எனது மகளின் பெயரில் கார்ட்டூன் எல்லாம் அவளுக்கு மீதி எனக்கு....😊😊

    ReplyDelete
    Replies
    1. வார்ரே வாஹ்!!! க்ளாப்...க்ளாப்..க்ளாப்

      Delete
    2. ☺️☺️ நன்றி நண்பரே....ஏஜெண்டயே சந்தா கட்டவச்சிட்டாரே நம்ம ஆசிரியர்... ஊர் கூடி தேர் இழுப்போம்..நண்பர்களே....

      Delete
    3. வர்ஷா குட்டிக்கு என் வாழ்த்துகள் பழனிவேல்!

      Delete
    4. சூப்பர் பழனி. வாழ்த்துக்கள்.

      Delete
    5. நன்றி EV, Parani அவர்களே...! parani க்கும் palani க்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம்....

      Delete
  56. என்னமோ போட மாதவா,நல்லது நடந்தா சரி.

    ReplyDelete
  57. அந்தியின் ஒரு அத்தியாயம்!!!

    (காமிக்ஸ் ) கழனியில்

    எதிர்பார்ப்பு உரம் அதிகமானதால்

    ஏமாற்றம் விளைச்சல் அமோகம்

    ( செண்பக ஜெகதீசன்- நன்றி)

    6.5/10

    ReplyDelete
    Replies
    1. அட... சுருக்கமான பட் நச் விமர்சனம்.

      Delete
    2. +1.
      ஹி..ஹி

      இது பத்தி இன்னொரு நாளைக்கு எழுதுகிறேன்.

      Delete
  58. இப்போது தான் உங்கள் பதிவுகள் பார்த்தேன் உங்கள் முடிவுகள் சரி

    ReplyDelete
  59. ***** ஆர்ச்சி இருக்க பயமேன் *****

    பயம்லாம் இல்லை! ஆரம்பத்தில் லைட்டா ஒரு குலைநடுக்கம் வருவதென்னவோ உண்மை தான்.. ஆனால், பக்கங்களைப் புரட்டப் புரட்ட அது குறைந்துவிடுகிறது!

    எசகுபிசகாக எதையாவது செய்துவிட்டு அதை சரிசெய்வது.. மறுபடியும் எசகுபிசகு.. மறுபடியும் சரிசெய்வது.. நடுநடுவே வழக்கம்போல சுயதம்பட்டம் அடித்துக்கொள்வது - கதை நெடுக இதுதான் ஆர்ச்சியின் வேலை!

    'கதவை மூடிவிட்டு ஆர்ச்சியின் பின்னால் வாருங்கள்.. ஆர்ச்சி சொன்னா ஆண்டவன் சொன்னா மாதிரி' என்று முதல் பக்கத்திலேயே கிச்சுகிச்சு வசனங்கள்! எடிட்டர் நினைத்திருத்தால் கதைநெடுக இதுபோல வசனங்களால் இன்னும் நிறையவே ஸ்கோர் செய்திருக்க முடியும் தான்.. ஆனால் 'ஆர்ச்சியின் ஒரிஜினாலிட்டியை சீர்குலைத்து விட்டீர்களே' என்ற (நம் பழைமை விரும்பி நண்பர்களின்) சாபத்திற்கு ஆளாக வேண்டாமே என்று நினைத்தாரோ என்னவோ அளவாய், அடக்கியே வாசித்திருக்கிறார்!

    அடர்த்தியான பழைய கால சித்திரங்களும், சற்றே அளவில் குறைந்த எழுத்துருக்களும் குறைகளாம்!

    40 ரூபாய்க்கு புத்தகத்தை வாங்கி தனியாக ஒருமுறை படித்த பின்பு, குழந்தைகளுக்கும் ஒருமுறை படித்துக்காட்டினால் 4000 ரூபாய் மதிப்பிலான சந்தோசங்களை அளிக்கிறான் இந்த ஆர்ச்சி!!

    வண்ணத்தில் வரயிருக்கும் ஆர்ச்சிக்காக வெயிட்டிங்!

    என்னுடைய மதிப்பெண்கள் : 10/10
    (அதாவது, ஆர்ச்சியை முழுமையாகப் படித்து முடித்ததற்காக எனக்கு நானே போட்டுக்கொண்ட மதிப்பெண்கள் இவை! ஹிஹி!)

    ReplyDelete
    Replies
    1. மார்க் போடுறதுல புது ட்ரெண்டையே உருவாக்கிட்டீங்க..!

      Delete
    2. ஆனாலும் உங்களுக்கு மனத்திடம்தான் ஈ.வி.......

      Delete
  60. தனியே தன்னந்தனியே,
    புல்லியன் வளைவு.....
    இன்னும் கொஞ்சம் திடுக்கிடும் திருப்பத்தையும்,விறுவிறுப்பையும் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.....
    எமது ரேட்டிங்-8/10.....

    ReplyDelete
    Replies
    1. ///இன்னும் கொஞ்சம் திடுக்கிடும் திருப்பத்தையும்,///

      ஏற்கனவே அந்தத் திருப்பத்தில் போற வர்றவங்கள்லாம் பேய்களைப் பார்த்துத் திடுக்கிட்டறாங்களே.. அது போதாதா? :)

      Delete
  61. அந்தியின் ஒரு அத்தியாயம்!
    செல்லும் பாதையெங்கும் மரணத்தை கொடூரமாய் விதைத்து விட்டு போகும் க்ளேட்டன் கும்பலை வேட்டையாட கிளம்புகிறார் வேட்டை நாயகர் சென்டன்ஸ் சைக்ஸ்.....
    இனி இழக்க ஏதுமில்லை எனும் நிலையில் மரணத்தை துச்சமாய் கொண்டு வேட்டையை கொண்டாடி ஏற்கும் சைக்ஸ் & நட்புக்காக உதவிக் கரம் நீட்டும் ஓ மால்லி கூட்டணிக்கும்,க்ளேட்டன் கும்பலுக்கும் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமாய் கதை பயணிக்கிறது.....
    சைக்ஸின் மீதான ஈர்ப்பால் சாகஸம் புரிய விரும்பும் குட்டிப் பையன் ஜிம் ஸ்டாரெட் நாயகருடன் பயணிக்க ஆட்டத்தில் வென்றவர் யார்??????

    கிளைமேக்ஸ் எதிர்பாராத திருப்புமுனை,எனினும் இதுவாக இருக்கலாம் என்று கணிக்க முடிந்தது......
    ஓவிய பாணிகள் சிறப்பு.....

    ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தால்தான் மரணம் என்பது சைக்ஸுக்கு பொருந்தும்போது,அது ஜிம்முக்கும் பொருந்துமே????

    வசனங்கள் கதைக்கு கொஞ்சம் கூடுதல் பலம்,
    "வெள்ளைத் திமிங்கிலம் கடலின் ஆழத்திற்கு இழுத்துச் சென்றதைப் போல"....

    " நமக்கு மட்டும் காலச் சக்கரம் சுழலாமல் அப்படியே நிற்கும்படிச் செய்துவிட முடியுமா டார்லிங்?"....

    "காலமும்,காலனும் நம்மை மட்டும் மறந்து ஒதுக்கி விட்டு,அந்த சந்தோஷ அத்தியாத்திலேயே என்றென்றும் சுற்றித் திரியும் வரம் கிடைக்குமா?!".....

    -கதையின் ஓட்டத்தில் ஏதோ ஒன்று தவறுவதான எண்ணத்தை ஏனோ தவிர்க்க இயலவில்லை.....
    -பிழை திருத்தங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.....

    எனது ரேட்டிங்-8.5/10.

    ReplyDelete
    Replies
    1. ///கதையின் ஓட்டத்தில் ஏதோ ஒன்று தவறுவதான எண்ணத்தை ஏனோ தவிர்க்க இயலவில்லை.....///

      கதையின் இறுதிக்கட்டத்தில் கொஞ்சம் கி.நா பாணி உபயோகப்படுத்தப்பட்டிருப்பதால் இப்படியான எண்ணம் எழுந்திருக்கக்கூடும்!

      விமர்சனம் - செம!! மார்க்கு - கம்மி! :)

      Delete
  62. "40 ரூபாய்க்கு புத்தகத்தை வாங்கி தனியாக ஒருமுறை படித்த பின்பு, குழந்தைகளுக்கும் ஒருமுறை படித்துக்காட்டினால் 4000 ரூபாய் மதிப்பிலான சந்தோசங்களை அளிக்கிறான் இந்த ஆர்ச்சி!!"

    இது தான்! இதுவேதான். பொன் எழுத்துக்களால் பதிக்கவேண்டிய வரிகள் E.V.

    இது தான்! இதுவேதான். பொன் எழுத்துக்களால் பதிக்கவேண்டிய வரிகள் E.V.

    அணில் அண்ணா என்று ஒருவர் வீரபிரதாபன், பாலசிம்மன் என்ற வீரர்களை வைத்து எழுதிய மாயாஜாலக்கதைகள் , புலிக்கோட்டை மந்திரவாதி, பாதாள பைரவி போன்றவையெல்லாம் இன்று மாயமாய் உருமாறி ஹாரி பாட்டர் கதைகளாக உருபெற்றுவிட்டன. கோவையில் ஹாரி பாட்டரின் ஒரு பாகம் வெளியாகும் போது குழந்தைகள் கடை முன் வரிசை கட்டி நின்றனர் .

    ReplyDelete
    Replies
    1. ///கோவையில் ஹாரி பாட்டரின் ஒரு பாகம் வெளியாகும் போது குழந்தைகள் கடை முன் வரிசை கட்டி நின்றனர் .///

      விழிகளை விரிய வைத்திடும் சங்கதி!!

      என்றாவது ஒருநாள் நம் லயன்-முத்துக்காகவும் குழந்தைகள் வரிசை கட்டி நிற்பதைப் பார்த்திடப் பேராவல்!!

      Delete
    2. Speaking of lines....நாம் கேப்டன் டைகர் கதைகளுக்குள் தலை நுழைத்திருக்கா நாட்கள் அவை ! "ஐயே...இது என்ன பரட்டை மண்டையும், கொச கொச தாடியுமுடனான ஹீரோ ?!!" என்று அப்போது ஓரம்கட்டியிருந்தேன் தளபதியை !!

      "என் பெயர் டைகர்" முதல் பாகத்தின் வெளியீட்டினைத் தொடர்ந்து பாரிஸின் மைய வீதியில் இருக்குமொரு மெகா புக் ஷாப்பில் வாசகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுத் தர (அமரர்) ஜிரௌ அவர்கள் வந்திருந்தார் ! நானும் அன்றைக்கு அந்தக் கடையில் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன் ! சூதாட்ட மேஜையில் குந்தியபடிக்கே பிஸ்டலை நீட்டும் அந்த டைகரின் அட்டைப்படம் நினைவுள்ளதா ? அந்த ஆல்பத்தை கண்ணில் தெரியும் இடமெல்லாம் ; அட - படிகளில் கூட வரிசை கட்டி அடுக்கியிருந்தார்கள் ! And ஜனம் பொறுமையாய் லைனாக நின்று கொண்டிருந்தார்கள், கையில் ஆளுக்கொரு டைகர் ஆல்பத்தோடு !

      அன்றைக்கு மட்டும் எனக்குக் கொஞ்சமேனும் அறிவிருந்திருக்கும் பட்சத்தில், நானும் அந்த வரிசையில் நின்று அமரர் ஜிரௌவுடன் கை குலுக்கியிருப்பேன் !! பின்னாட்களில் பாரிசில் அந்த வீதியில் நடக்கும் போதெல்லாம், கடையின் வாசல் வரை நின்ற அந்த ஜனதிரளும், நான் தவற விட்ட வாய்ப்பும் நான் எனக்குள் அலையடிக்கும் !

      Delete
    3. அட இன்னுமொரு ஆட்டோகிராப் :-)

      Delete
    4. அட்டகாசமான ஃபிளாஷ் பேக் சார்

      Delete
    5. ///அன்றைக்கு மட்டும் எனக்குக் கொஞ்சமேனும் அறிவிருந்திருக்கும் பட்சத்தில், நானும் அந்த வரிசையில் நின்று அமரர் ஜிரௌவுடன் கை குலுக்கியிருப்பேன் ///

      அடுத்தமுறை பாரிஸ் போகும்போது அங்கே புல்லியன் வளைவுனு ஏதாச்சும் இருந்தா வண்டியை சித்தே நிறுத்தி அமரர் ஜிரெளவின் ஆவியுடனாவது கைகுலுக்கிட்டு வாங்க சார்!

      Delete
    6. ///அடுத்தமுறை பாரிஸ் போகும்போது அங்கே புல்லியன் வளைவுனு ஏதாச்சும் இருந்தா வண்டியை சித்தே நிறுத்தி அமரர் ஜிரெளவின் ஆவியுடனாவது கைகுலுக்கிட்டு வாங்க சார்!///

      Super 🤓🤓🤓

      Delete

    7. அடுத்தமுறை பாரிஸ் போகும்போது அங்கே //புல்லியன் வளைவுனு ஏதாச்சும் இருந்தா வண்டியை சித்தே நிறுத்தி அமரர் ஜிரெளவின் ஆவியுடனாவது கைகுலுக்கிட்டு வாங்க சார்!//

      ஈவிக்கு "கெர்ரி" யோட ஆவி மாதிரி இருந்தாலே போதும்;-)

      Delete
    8. ////ஈவிக்கு "கெர்ரி" யோட ஆவி மாதிரி இருந்தாலே போதும் ///

      ஹிஹி! அப்படிக்கிப்படி கெர்ரியை 'அப்படியாப்பட்ட' கோலத்தில் சந்திக்க நேர்ந்தால், 'ஆவிக்கு ஆடை தந்த ஈவி'ன்ற எழுத்துக்களோட பாரிஸ் பஸ்ஸ்டாண்டு பக்கத்துலயே எனக்கொரு சிலை வைக்கவும் இக்கிளியூண்டு வாய்ப்பிருக்கத்தான் செய்யுது!

      Delete
    9. Sir, எனக்கும் சில நினைவுகள் உள்ளன.

      கேப்டன் டைகரின் "மின்னும் மரணம்" 98’ல் வெளிவந்த போது அதை படிக்க வெறிகொண்டு காத்திருந்த வாசகர்களில் நானும் ஒருவன். ஒருநாள் பொறுக்கமுடியாமல் நமது அலுவலகத்திற்கு பண்ணி கேட்டபோது , கோவை முகவரின் போன் நம்பரை கொடுத்தார்கள். பூமார்க்கெட் அருகில் இருந்த அவரின் அலுவலகத்திற்கு பறந்தோடி சென்று மின்னும் மரணத்தை கைப்பற்றினேன். கூடவே ஒரு டைகரின் போஸ்டரும் கொடுத்தார்.

      “கோயம்புத்தூரில் முதல் ஆளாக நீங்கதான் வாங்கறீங்க“ என்று அவர் சொன்னபோது சொன்னபோது வெறுமனே "ஹி ஹி " என்று மட்டும் சிரிக்கமுடிந்தது. உடனே வீட்டுக்கு போய் படிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே மனமெங்கும் வியாபித்திருந்தது. அவரின் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து, புத்தகத்தை புரட்டியபடி 10 அடி தூரம் கூட நடந்திருக்க வில்லை. தெருவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன்(12 வயது இருக்கும். அப்போது என் வயது 24.) வேகமாக என்னிடம் வந்து அண்ணா , புக் வந்துருச்சா என்று சிரித்தபடியே கேட்டான். “இன்னைக்கு தான் வந்துச்சாம்“ என்று அவனிடம் போஸ்டரை காட்டி மகிழ்ந்து விட்டு வீட்டுக்கு போனேன்.

      சிலவருடங்கள் கழித்து,6 ரூபாய் விலையில் வெளிவர இருந்த "திசை திரும்பிய தோட்டா" வை வாங்க நான் சிவகாசிக்கே கிளம்பி விட்டேன்.( ஏனெனில் அதை மின்னும் மரணத்தின் க்ளைமாக்ஸ் பாகம் என்று நினைத்து விட்டேன்.) காலையில் கிளம்பி சிவகாசி வந்து வாங்கி விட்டு திரும்ப இரவுக்குள் கோவை திரும்பி விடலாம் என்று நினைத்திருந்த என்னை நண்பர் ஒருவர்தான் “சிவகாசிக்கு போவதற்கே ஒரு நாளாகும்” என்று சொல்லி தடுத்து விட்டார்.

      பின்னர் ரத்தப்படலம் JUMBO SPECIAL வெளி வந்த போது தான், இரவே ஆம்னி பஸ் சில் டிக்கெட் புக் செய்து, கிளம்பி அதிகாலை சிவகாசி வந்து 2 COPY வாங்கி விட்டு திரும்பினேன். உங்களைப்பற்றி (“ஓனர்‘லாம் எப்ப வருவாரு ?” என்று) கேட்டபோது “பத்தரை மணிக்கு வருவார்” என்றார்கள். உங்களை சந்திக்க ஏனோ கொஞ்சம் தயக்கமாயும், பயமாகவும் இருந்தது. திரும்பி விட்டேன். Sorry Sir. இப்போதாய் இருந்திருந்தால், அந்த புத்தகத்தில் ஒரு ஆட்டோகிராப் வாங்கி வந்திருப்பேன்.

      பரணி!! பாராட்டுக்கு மிக்க நன்றி.


      Delete
    10. @R.GIRI NARAYANAN

      வாவ்!! ரொம்ப அருமையா எழுதறீங்க நண்பர்!! ரசித்துப் படிக்க வைக்குது உங்க அனுபவங்கள்!

      ////உங்களை சந்திக்க ஏனோ கொஞ்சம் தயக்கமாயும், பயமாகவும் இருந்தது. திரும்பி விட்டேன்.////

      'ஒரு கருப்புக் கண்ணாடிய போட்டுக்கோங்க சார்'னு நானும் பலமுறை எடிட்டர்ட்ட சொல்லிட்டேன்.. கேட்கமாட்டேன்றார்!! :D

      Delete
  63. Replies
    1. நமது காமிக்ஸ் அலுவலகத்தில் இருந்து எனக்கு வெங்கலப்பதக்கம் கொடுத்து இருப்பதை இன்று மின் அஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தனர். :-)

      அதான்பா இளம் டைகர் முன்பதிவு எண் 3; செல்வம் அபிராமிக்கு தங்கப்பதக்கம் என நினைக்கிறேன், வாழ்த்துக்கள். வெள்ளிப் பதக்கம் யாருக்கப்பா? அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

      Delete
    2. வெங்கலப் பதக்கத்திற்கு வாழ்த்துகள் PfB!

      முன்பதிவு நம்பர்-13ஐ பெறப்போவது ஒரு ரத்தப்படல வெறியராக இருப்பாரா என்பதே இன்றைய 1300 ரூவாய் கேள்வி!!

      Delete
    3. அது பழனி அல்லது சென்னை கணேஷாக இருக்கலாம்.

      Delete
  64. Sir

    Why don't start bookings right away, by offering something, so that to hit targets in advance?

    ReplyDelete
  65. ஒரு துளி துரோகம்

    பல குடங்கள் அமிழ்தம்

    ReplyDelete
    Replies
    1. யே..யப்பா!! எவ்ளோஓஓ பெரிய்ய விமர்சனம்!!

      Delete