Tuesday, February 04, 2020

திருப்பூரில் மாயாஜாலம் !!

நண்பர்களே,

வணக்கம். திருப்பூர் புத்தக விழாவில் இன்று !!!

நண்பர் (ஆசிரியர்) சரவணன் இன்றைக்கு அடுத்த பேட்ச் மாணவ / மாணவியரை தன் சக ஆசியரோடு நமது ஸ்டாலுக்கு இட்டு வந்து, அனைவரும் இஷ்டமான காமிக்ஸ் இதழ்களை வாங்கிட ஏற்பாடு செய்திருக்கிறார் ! And கடுமையான பணிகளுக்கு மத்தியில் பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்களும் குழந்தைகளோடு ஸ்டாலுக்கு வந்திருந்தது icing on the cake !! ஆசிரியப் பெருந்தகைகளுக்கு நமது கரம்கூப்பிய நன்றிகள் !! We are truly humbled !!

Folks - பாருங்களேன் நம் துறையின் எதிர்காலத்தை !!! 





239 comments:

  1. Replies
    1. மாணவிகளின் கைகளில் ஆர்ச்சியை பார்க்கையில் அங்கு நானே நிற்பது போல ஒரு உணர்வு. நன்றி ஆசிரியர் சரவணகுமார் அவர்களுக்கு.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. மக்களுக்கான மாமனிதர்கள் சகாயம், உதயச்சந்திரன் போன்ற சான்றோர் வரிசையில் உங்களையும் வைத்து வணங்குகிறேன்.

      Delete
    4. வாழ்த்துகளுக்கு மிகுந்த நன்றிகள் சார்!

      ஆனால் தாங்கள் குறிப்பிட்ட செயற்கரிய செய்த பெரியோருடன் ஒப்பிடும் அளவுக்கு நான் தகுதி உடையவனல்லன். அவர்கள் செய்த அரும் பணிகள் குன்றின் மேலிட்ட விளக்கு.

      இது என்னால் செய்ய இயன்ற கடுகினும் மிகச்சிறு செயலே!

      Delete
    5. உங்களுடன் வருகை புரிந்த தலைமை ஆசிரியை அவர்களை பார்த்தபோது எனக்கு கு.அழகிரிசாமி அவர்கள் எழுதிய "குமாரபுரம் ஸ்டேஷன்" கதை நினைவுக்கு வந்தது. அவருக்கும் வணக்கமும், மரியாதையையும் தெரிவிக்கிறேன்.

      “பட்டிக்காட்டு புள்ளைகளானாலும் படிப்பு நல்ல படிப்பு தான்.வாத்தியாரு அப்படி. அந்த மாதிரி ஒரு தகப்பன் கூட புள்ளைக மேலே பிரியமா இருக்கமாட்டான்னு சொல்றேன்” என்றும் “ நாலுபேருக்கு உபகாரமா இருந்தாதான் படிப்பிலே சேர்த்தி. ஊர்க்காரனை மிரட்டற படிப்பு வேண்டவே வேண்டாம்” என்றும் அந்தக்கதையில் வரும் வரிகள் உங்கள் செயலின் மேன்மையை உணர்த்தும். முழுக்கதையையும் படிக்கையில் சொர்கானுபவம் உறுதி. வாய்ப்பு கிடைத்தால் படிக்கும் படி கேட்டு கொள்கிறேன். நன்றி.

      Delete
    6. Can I get contact no of the organizer to get more details reg fair to attend with school kids

      Delete
  2. இப்படி கமெண்ட் இடுவதற்கு நீண்ட நாள் ஆசை பட்டேன்.

    ReplyDelete
  3. I am extremely delighted that our young generation can also experience the Comics magic :)

    ReplyDelete
    Replies
    1. @ sudhaICTeducation

      yes! book fair will be available till 9th Feb.

      Venue : K.R.C city centre, opp to Diamond theatre, Palladam road, Tiruppur

      Delete
    2. @சிவக்குமார் J

      oops!! thanks for correcting! :)

      Delete
    3. Can I get contact no of the organizer. To get more details and attend book fair with our school students

      Delete
  4. . வாழ்த்துக்களும்,வணக்கங்களும் திரு.சரவணகுமார் அவர்களே.
    இதைப் பார்க்கையில் எனக்கு என் + 2 வகுப்பு ஆசிரியர் திரு ஜெயக்குமார்(டேனிஷ் மிஷன் ஸ்கூல்.திருவண்ணாமலை) அவர்கள். நினைவுக்கு வருகிறார். வாரம் ஒரு பீரியட் மட்டும் பைபிள் வகுப்பு. அவர் அதில் பைபிளுடன் சேர்த்து மெக்கனாஸ் கோல்ட், டேஞ்சர் டயபாலிக்கதைகைளையும் சொல்வார். அதனாலேயே அந்த வகுப்பை யாரும் தவறவிட மாட்டோம். எனது காமிக்ஸ் ஆர்வத்துக்கு அவரும் ஒரு காரணம்.
    நீங்கள் அந்த வரிசையில் வைக்கத்தக்கவர்.

    ReplyDelete
    Replies
    1. எனது ஆசிரியர் என்னிடமிருந்த காமிக்ஸ் அனைத்தையும் பிடுங்கி கொண்டார்.

      Delete
    2. அவர் படிக்கிறதுக்காக இருந்திருக்கும்.

      Delete
    3. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார்!

      ஒவ்வொருவருக்கும் தத்தம் ஆசிரியருடனும் காமிக்ஸ் உடனும் கட்டாயம் ஒரு அனுபவம் இருக்குமென நினைக்கிறேன்.

      Delete
  5. வாவ்...அருமை ..அருமை..

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்..

    காமிக்ஸின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கையிலும் என்பதை மறுக்க முடியாது..

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிகள் சார்!

      Delete
  6. ஆயிரம் சொன்னாலுமே இம்மாதத்தில்
    நான் முதலில் படித்தது
    “ஆர்ச்சியிருக்க பயமேன்” தான்.
    இரண்டாவது படித்தது “தனியே தன்னந்தனியே”
    மூன்றாவது ஒரு துளி துரோகம்

    கடைசியாக மார்ஷல் சைக்கஸ்.

    இதில் முதலிடம் “தனியே தன்னந்தனியே” கதை.
    ஆவிகளின் கதை.
    நிறைய சஸ்பென்ஸ்.
    நிறைய திகில்.
    இதை இரவில் படிக்க வேண்டாம்
    என்று சொல்லும் அளவிற்கு பயங்கரமானது.

    இரண்டாவது “ஒரு துளி துரோகம்”

    வித்தியாசமான கதை.
    உள்நாட்டு போரில் உறவினர் எதிரெதிர் துருவத்தில்.
    அதில் ஒருவரை ஒருவர் காப்பாற்றுதல்,
    காட்டிக்கொடுத்தல்.
    கடைசியில் “ஒரு துரோகியின் முகம் ஏன் முகம் தெரிய வருகிறது?”
    என்பதன் விளக்கம்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு டெக்ஸ்
    டெக்ஸ்
    டெக்ஸ்
    டெக்ஸ்
    டெக்ஸ் மட்டுமே.



    மூன்றாவதாக “மார்ஷல் சைக்கஸ்”

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பதன் விளக்கம் தரும் கதை.

    கடைசியாக “ஆர்ச்சி”
    இதற்கு மதிப்பெண் தருவதற்கு முடியாததால்
    அதிபட்ச மதிப்பெண்.
    கால எந்திரத்தின் உதவியால் கடந்த காலம் சென்று
    ஒரு குற்றவாளியை தப்ப விட்டு விட்டு
    மீண்டும் அவர்களை பிடிக்கும் சாகச கதை.

    ReplyDelete
    Replies
    1. மார்ஷல் 'சைக்ஸ்' சார் ; 'சைக்கஸ்' அல்ல !

      Delete
  7. ஹைய்யா புதுப் பதிவு......

    ReplyDelete
  8. ஒரு துளி துரோகம்...

    பார்சலில் இருந்து ஒரு துளி துரோகத்தை கையில் ஏந்தியதுமே அதன் கனத்த பக்கங்களும்,கனமான எடையும் ஒரு சேர மகிழ்ச்சியை விதைத்தன..டெக்ஸ்ன் இதழை எடுக்கும்பொழுதெல்லாம் எவ்வளவுக்கெவ்வளவு கனம் கூடுகிறதோ அந்த கூதுகலமும் கூடிவிடுகிறது..சரி,சரி அதிகாரியின் பெருமையை பேசினால் ரம்மி போன்ற சிப்பாய்களுக்கு மனதில் ஆரவாரம் கூடினாலும் வெளியில் ஒரு இறுக்கத்தை காண்பிக்கும் சமயமாக அமைந்து விடுவதால் இதழை பற்றி மட்டும் சொல்லி விடலாமே என நினைக்கறேன்...


    முதலில் அட்டைப்படத்திற்கு வழக்கம்போல் ஓர் பூங்கொத்து..💐💐💐

    ஒரு துளி துரோகத்தின் முதல் பக்கத்தை திருப்பி வாசிக்க ஆரம்பித்தது தான் தெரியும்..இவ்வளவு நீநீநீண்ட பக்கங்களையும் ஒரே மூச்சில் படிக்க வைத்து விட்டு தான் கீழே வைத்தேன்.75 சதவீத கதையும் ப்ளாஷ்பேக்காகவே அமைந்து இருப்பினும் அடேங்கப்பா எத்துனை ,எத்துனை திருப்பங்கள் ,தந்திரங்கள்,மோதல்கள் .படபட வென ஆயிரம்வாலா சரவெடி வெடித்த மகிழ்ச்சி .க்ளைமேக்ஸ் திருப்பம் இன்னும் ஒரு திடுக்..இவ்வளவு விறுவிறுப்புடன் இதழை படித்து முடித்தாலும் கதையை படித்து முடித்தவுடன் இறுதியில் டெக்ஸ் நிலவரத்தை கார்ஸனிடம் சொல்லமுடியாத நிலைமையில் தவிக்கும் ஒரு இறுக்கமான மனநிலை போல படித்த எனக்குள்ளமே வியாபிப்பது உண்மை..அற்புதமான ,அட்டகாசமான ,அதகளமான இந்த டெக்ஸின் சாகஸத்திற்கு பலத்த ,பலத்த கைதட்டல்கள்..

    டெக்ஸின் அந்த நீக்ரோ நண்பனும் சரி ,ஜான் மற்றும் ஷெல்லியும் சரி சிறிது நாட்களுக்கு மனதில் விட்டு நீங்க மாட்டார்கள் என்பது தெளிவுற தெரிகிறது..

    ஓர் இரண்டு மணி நேரத்தை இந்த வன்மேற்கு உலகில் டெக்ஸ் உடன் பயணித்த இந்த ஒரு துளி துரோகத்திற்கு பரிசாக ஒரு கோப்பை நிறைய மதிப்பெண்களை வழங்கினாலும் அது இந்த இதழுக்கு குறைவானதே...


    மீண்டும் ,மீண்டும் வாசிக்க போகும் மற்றொரு டெக்ஸ் இதழ் தான் ஒரு துளி துரோகம்..


    👌🏻👌🏻👌🏻💐💐💐

    ReplyDelete
    Replies
    1. ஷப்பாடி .அதிகாரியின் கதைக்கு கொஞ்சமாச்சும் ஒளிவட்டம் கிடைக்கிறதே !

      Delete
    2. தல யின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல்
      இன்னும் கொஞ்சம் டமால் டுமீல் குறைச்சிருக்கலாம்
      பிரிண்ட் தரத்தை அதிகப்படுத்திருக்கலாம்

      Delete
    3. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது..தங்களின் விமர்சனத்தினால் விற்பனையிலும் சரி ...கதையிலும் சரி மைல் கல்லாக மாறும் என்ற நம்பிக்கை வந்து விட்டது...🙏🙏🙏💐💐💐🙏🙏🙏

      Delete
  9. வாழ்த்துகள் 💓💓💜💜

    ReplyDelete
  10. ஒரு மறுபதிப்பு விமர்சனம்..


    தனியே தன்னந்தனியே....


    முதலில் அட்டைப்படத்திற்கும் ,உள்ளே சித்திரங்களுக்கும் பலத்த கைதட்டல்கள்..இங்கே பதிவில் இந்த இதழின் அட்டைப்படத்தை பார்க்கும்பொழுது முன்வந்த இதழின் அட்டைப்படத்தை போலவே தோற்றம் தந்து இருந்தாலும் நேரில் அதுவேறு ,இதுவேறு என்பது நன்கு புலனாகிறது என்பதோடு அட்டைப்பட சிறுமியின் தோற்றமே முன்பார்த்து நிற்கும் சிறுமியா ,அல்லது பின்நிற்கும் சிறுமியா என்பதே தெரியாதவாறு ஒரு திடுக் அனுபவத்தை தருகிறது. இதுவரை காமிக்ஸ் சித்திரங்களில் நேரில் புகைப்படம் போல் சித்திரங்களை வண்ண இதழ்களில் கண்டதுண்டு தான்.ஆனால் முதல் முறையாக கறுப்பு வெள்ளை சித்திரங்களில் இவ்வளவு தெளிவான நேர்க்கோட்டு சித்திரங்களோடும் ,புகைப்படங்களோ என பல இடங்களில் சந்தேகப்படும் சித்திரங்களோடும் ஆச்சர்யபடுத்தி விட்டது..இரவில் வாகனங்களின் பயண சித்திரம்..,பனி படர்ந்த இடங்களும்,பனி படர்ந்த இறந்த பெண்மணியின் உருவமும் அதை விட அந்த முகமில்லா சிறுமியின் அந்த முதல் இடம்...அப்பப்பா பயங்கரம்..இதுவரை எந்த சித்திர இதழ்களையும் படித்தோ ,அல்லது சித்திரங்களை கண்டோ இதுவரை பயந்து போனதில்லை..ஆனால் இந்த கதையின் களமும் ,பயணமும் அந்த முகமில்லா உருவத்தை கண்டதும் ஒரு " திடுக்குடன் " அச்சமுடன் புத்தகத்தில் இருந்து பார்வையை விலக்கியது இதுவே முதல் தடவை அதுவும் மதிய நேரத்தில் படிக்கும் பொழுதே இரவில் எனில்....!?

    கதையை பற்றி சொல்வது எனில்..

    ஒரு வரியில் சொல்வது ஒரு திரைப்படத்தில் பேயை கண்டாலே அச்சம் போய் சிரிப்பு வரும் இக்காலத்தில் ஒரு புத்தகத்தில் "ஒரிஜினல் " பேய்ப்படத்தை பார்த்து ஓரு திடுக் அனுபவத்தை முதல் முறையாக வழங்கியது இந்த தனியே தன்னந்தனியே...

    இப்பொழுது எல்லாம் லயன் கிராபிக் நாவல்கள் பலவித அனுபவங்களை பல்வேறு விதமான அனுபவங்களை வழங்கி வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை..இந்த மாதம் தந்த அனுபவமோ இன்னும் ஓர் திடுக்சிறப்பு..


    தனியே தன்னந்தனியே ..காமிக்ஸில் ஒரு காஞ்சனா...:-)

    ReplyDelete
  11. சார், இவர்களுக்காகவாவது நமது 'மினி லயன்', 'ஜூ.லயன்' இல் வெளியான கதைகளை மீள் பதிப்பு செய்வது பற்றி சிந்தியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே இங்கே நாம் அலசிய தலைப்பு தானே சார் ; தொண்ணூறு சதவிகிதக் கதைகளுக்கு டிஜிட்டல் கோப்புகள் இல்லை ; டிஸ்னி போன்ற சில ஆக்கங்கள் நாம் எட்டித் தொடும் உசரத்திலும் இல்லை ! நடைமுறை சாத்தியங்கள் ரொம்ப ரொம்ப குறைவு !

      Delete
    2. யதார்த்தம் இடித்தாலும், வழிகள் இல்லாதிருக்காதுதானே சார்? நமது மறுபதிப்புகள் எல்லாமே வெளியீட்டளர்களிடம் டிஜிட்டல் கோப்புகள் இருந்தவையல்லவே? ஒரு மறுபதிப்புக்காக நல்ல நிலையிலுள்ள புத்தகமொன்றை வாசகர்களிடமே நீங்கள் கோரியது ஞாபகமுள்ளது.

      டிஜிட்டல் வரமுதலான காலத்தில் எத்தனை சாகசங்கள் செய்திருந்திருப்பீர்கள்?
      மனமுண்டானால் மார்க்கபந்து! :-)

      Delete
    3. இது நான் மனது வைக்கும் சமாச்சாரம் மட்டுமல்லவே ; படைப்பாளிகளின் சம்மதம் சார்ந்த விஷயம் ! அவர்கள் உதட்டைப் பிதுக்கி ஏக காலமாகி விட்டது !

      And படைப்பாளிகளின் எண்ணவோட்டங்கள் ஒட்டுமொத்தமாய் ஒரே பாணியில் இருப்பதில்லை ! சுமாரான தரங்களில் தம் படைப்புகள் வெளி வருவதை பெரும்பான்மையினர் ரசிக்கத் தயாரில்லை !

      Delete
    4. இங்கே ஏதாவது பொறுக்கிட முடிந்தால்......
      https://www.bbc.com/news/uk-england-oxfordshire-45645553

      Delete
    5. ஆர்ச்சி புக்கின் பின்னட்டையைப் பாருங்களேன் சார் ! இதெல்லாம் ரொம்பவே பழைய நியூஸ் என்பது புரியும் !

      Delete
    6. செய்தி பழசுதான் சார். நீங்கள் ஏற்கனவே 2000AD தொடர்களை வெளியிட ஆரம்பிச்சிட்டீங்களே... அதான் ஒரு கோரிக்கையாக....

      Delete
  12. அந்த பேக்டிராப்பில் மங்கலாக தெரிவது அடியேனும் தான்.

    ReplyDelete
  13. நன்றி மற்றும் வாழ்த்துகள் நண்பர் சரவணக்குமார் அவர்களே.

    ReplyDelete
  14. மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்... நன்றிகள் பல.‌ தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே!
      இதை சேவையாக எண்ணவில்லை, கடமையாக கருதுகிறேன். நிச்சயம் இப்பணி தொடரும்!

      Delete
  15. ***** அந்தியின் ஒரு அத்தியாயம் ******

    ஏற்கனவே மிதுன், PfB உள்ளிட்ட நண்பர்கள் சிலாகித்திருந்ததை 100% வழிமொழிகிறேன்!

    மார்ஷல் சைக்ஸ் - இந்த ஒரே ஒரு கதையின் மூலமாகவே நமக்கு அறிமுகம் என்றாலும் மனதில் நின்று விட்டார் - அழுத்தமாக!

    வெறிநாய்களை வேட்டையாடும் வழக்கமான கெளபாய் கதைதான் என்றாலும், கதையை சொல்லிய விதத்தில் - நகர்த்திய விதத்தில் வித்தியாசத்தைக் காட்டி - ஒரு தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்கியிருக்கிறார்கள்!!

    வசனங்களும், ஓவியங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு சுவாரஸ்யமாய் கதையை நகர்த்துகின்றன!

    கதையின் ஆரம்பத்தில் "அட்ராசக்கை!! டெக்ஸ்-கார்சன் மாதிரியே இந்த சைக்ஸ்-ஓ'மால்லி ஜோடியும் இனி பலப்பல கதைகளில் இணைந்து கலக்கப்போகிறது டோய்" என்று குதூகலித்திருந்தேன்... ஹூம்!!

    க்ளைமாக்ஸ் - மனதில் ஆழப்பதித்த மென்சோகம்!

    'அந்தியின் ஒரு அத்தியாயம்' என்பதற்கான முழு அர்த்தத்தையும் க்ளைமாக்ஸில் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது! சபாஷ் எடிட்டர் சார் - இக்கதைத் தேர்வுக்கும், மிகப் பொருத்தமான தலைப்புக்கும், பிரம்மிக்கச் செய்யும் வசனப் பிரயோகங்களுக்கும்!! மனது நிறைவாய் உணர்கிறது!!

    ஜம்போ'வின் மணிமகுடத்தில் மீண்டும் ஒரு மாணிக்கக் கல்!!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete
    Replies
    1. //அந்தியின் ஒரு அத்தியாயம்' என்பதற்கான முழு அர்த்தத்தையும் க்ளைமாக்ஸில் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது!//

      'அந்தியில்' என்றில்லாது 'அந்தியின்' என்றிருப்பதன் பின்னணி ஓ.கே தானே சார் ?

      Delete
    2. ///
      'அந்தியில்' என்றில்லாது 'அந்தியின்' என்றிருப்பதன் பின்னணி ஓ.கே தானே சார் ?
      ///

      மிக மிகப் பொருத்தம் எடிட்டர் சார்! என் குழப்பம் தீர்ந்தது!! 'புத்தகம் கையில் கிடைக்கும்வரை பொறுமை புலவர்களே'ன்னு நீங்க அன்னிக்கு சொன்னப்பவே புரிஞ்சுக்கிட்டேன் - இதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு!!

      நேர்த்தியான ஒரு வாசிப்பு அனுபவத்தை அளித்தமைக்கு நன்றிகள் எடிட்டர் சார்!

      Delete
    3. ஜம்போ சீசன் 3-ல் இன்னொரு வித்தியாசமான கௌபாய் ஒன் ஷாட் காத்துள்ளது ! "பிரிவோம்.. சந்திப்போம் !"

      Delete
    4. ///ஜம்போ சீசன் 3-ல் இன்னொரு வித்தியாசமான கௌபாய் ஒன் ஷாட் காத்துள்ளது ! "பிரிவோம்.. சந்திப்போம் !"///

      சூப்பர் சூப்பர்!!
      "படிப்போம்.. பரவசமடைவோம்!"

      Delete
    5. // ஜம்போ சீசன் 3-ல் இன்னொரு வித்தியாசமான கௌபாய் ஒன் ஷாட் காத்துள்ளது ! "பிரிவோம்.. சந்திப்போம் !" // ஏப்ரல் மாதத்தில் வரும் புத்தகத்திற்கு இப்போது இருந்தே காத்திருப்போம்.

      Delete
  16. ///
    Folks - பாருங்களேன் நம் துறையின் எதிர்காலத்தை !!!
    ///

    அருமை அருமை! இத்தனை குழந்தைகளின் கைகளிலும் காமிக்ஸைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி!! 🤩🤩🤩👌👌
    நண்பர் சரவணகுமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர் குழுவுக்கும், அழகாய் தொகுத்து வழங்கிவரும் சகோ சிவாவிற்கும் என் வாழ்த்துகளும், நன்றிகளும்!💐💐💐🤝🤝

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே!

      நண்பர் சிவாவின் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றிகள்!

      Delete
  17. வாழ்த்துகளும் நன்றிகளும் சரவணக்குமார் சார்..

    ReplyDelete
  18. ஒவ்வொரு புத்தக விழாக்களிலுமே ஏதாவது ஒன்றிரண்டு தீவிர காமிக்ஸ் வாசகர்கள் புதிதாக காமிக்ஸ் வாசகர்களை உருவாக்க, கதை மற்றும் சித்திரத் தரங்களை எடுத்துக் கூறி படாதபாடு பட்டுவருகின்றனர். இவர்களைப் போன்றவர்களால்தான் இந்த சிறு காமிக்ஸ் வட்டம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. நன்றி சரவணகுமார் சார்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் சார்! காமிக்சை அறிமுகப்படுத்த வேண்டியது மட்டுமே நமது பணி, அதன்பின் அதுவே அவர்களை ஆட்கொண்டுவிடும்.

      Delete
    2. உண்மை வீரபாண்டியன்.

      Delete
  19. 1.ஒரு துளி துரோகம் ..

    "வல்லவர்கள் வீழ்வதில்லை" பிறகு TEX underplay பண்ணிருக்கும் கதை .. "இளமையில் கொல்" ஐ அங்கங்கே ஞாபகப்படுத்தியது .. ஆக்சன் கம்மி என்றாலும் விறுவிறுப்புக்கு குறைவில்லை ..TEX ஐ சராசரி ஆளாக காண்பித்து தல யும் பல்பு வாங்குவார் என எதார்த்தமாக உள்ளது ..

    Rating : 9/10 ..

    ReplyDelete
    Replies
    1. பல்பு வாங்கியும் அதிகாரி அசத்துகிறாரே !

      Delete
    2. அசத்துவதே பல்பு வாங்குவதில் தானே...

      Delete
    3. எங்கேடா ...ஸ்லீப்பர் செல்லைக் காணோமேன்னு பார்த்தேன் !

      Delete
  20. "அந்தியின் ஒரு அத்தியாயம்"
    இந்த மாதத்தின் ஆகச் சிறந்த இதழும் கூட, என்னளவில்...
    நமது ஆசிரியரின் வசனங்கள் இதழின் இறுதி கட்டங்களில், ஊறல் போல வாழ்க்கையின் கசப்பும்,இனிப்பும் கலந்த நிலையை படம்பிடித்து காட்டியது.

    அவரது குறிப்பிட்ட ஒரு பத்தியினை படித்த பாதிப்பில் எனை எழுதத் தூண்டி, எழுதியும் முடித்த ஓர் கவிதை...
    கருத்து கடன் வாங்கி வந்ததால் ஒரு கடன்காரக் கவிதை...
    பத்தியினை நீங்களே தேடிக், கொள்ளுங்கள் உங்களுக்காகவ..

    "வாழ்க்கை"
    ஒரு புதிரான புத்தகம்.
    புதையில் தள்ளும் பகுதிகளும்,
    அணைத்துக் கொஞ்சும் அத்தியாயங்களுமாய் கட்டமைந்தது...
    களிப்போடு கடந்துவந்த சில பக்கங்களை, மீண்டும் ஒருமுறை தீண்டிட
    முயல்கிறேன், முடிவின்றி....
    இயலவில்லை இன்னும்.

    என் மரணத்தின் நிழல்
    படிந்தேறும் அக்கணத்தில்
    உலவிட முடியலாம்,
    அப்பக்கங்களின் பக்கத்தில்....

    ReplyDelete
    Replies
    1. வாவ்!! செம்ம!!💐💐💐

      Delete
    2. Page 74 ! அந்த வரிகளை எழுதும் போது கொஞ்சம் ஓவர் டிராமா வசன நெடியடித்தது போலிருந்தது எனக்கு ! என்றேனும் இந்த இதழை மறுபதிப்பு செய்ய நேரிட்டால் உங்களின் கவிதையை கடன் வாங்கிக் கொள்கிறேன் சார் !

      Delete
    3. அது கடன் அல்ல ஆசிரியரே..
      நான் தங்களுக்கு தர வேண்டிய வட்டி...
      அந்த பக்கங்களை புரட்டி விட்டு, வசனங்களை சுவாசித்த பின்,எனது மாலை நேர வகுப்புகளுக்கு விடுப்பு விட்டு, என் செல்ல மகளுடன் செலவிட்டேன்...
      அந்த நன்றிக்கடனிற்கான வட்டியாய் எடுத்துக் கொள்ள வேண்டும் 🙏

      Delete
    4. ///என்றேனும் இந்த இதழை மறுபதிப்பு செய்ய நேரிட்டால் உங்களின் கவிதையை கடன் வாங்கிக் கொள்கிறேன் சார் !///

      எவ்வித ஈகோவுமின்றி 'கடன்வாங்கிக்கொள்கிறேன்' என்று சொல்லும் உங்கள் நல்ல மனம் வாழ்க சார்!!

      மேலே நண்பரின் கவிதை நடையை இங்கே இத்தளத்தில் படிக்கவேண்டுமானால் ஆஹா என்றிருக்கலாம்.. ஆனால், புத்தகத்தில் படிக்கும்போது கவிதையைவிட வசனங்களே அவ்விடத்தின் சூழலை அழகாக எடுத்துச் சொல்ல உகந்ததென்பது என் கருத்து!

      நோ நீடு ஃபார் கடன்வாங்கிங்!

      Delete
    5. ////அந்த பக்கங்களை புரட்டி விட்டு, வசனங்களை சுவாசித்த பின்,எனது மாலை நேர வகுப்புகளுக்கு விடுப்பு விட்டு, என் செல்ல மகளுடன் செலவிட்டேன்...////

      சூப்பர்!!

      Delete
    6. /// அந்த பக்கங்களை புரட்டி விட்டு, வசனங்களை சுவாசித்த பின்,எனது மாலை நேர வகுப்புகளுக்கு விடுப்பு விட்டு, என் செல்ல மகளுடன் செலவிட்டேன்...///

      அருமை..!!

      Delete
    7. நவநீதன் அருமையான கவிதை. அழகு மிக அழகு. வரவர வசனங்களில் வேறு தளத்துக்கு சென்று விட்டீர்கள் ஆசிரியரே. சும்மா பிரிச்சு மேய்ந்து விட்டீர்கள்.

      Delete
    8. Semma severe love failure feelings polavum irukke nanbare... Fits both perfectly 😁😁😁

      Delete
    9. சூப்பர் 👌👌👌

      Delete
  21. நண்பர் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.. ்்்்்

    ReplyDelete
  22. Happy to see our comic books in the hands of next generation. Thank you Mr.Saravanan for introducing our books to 2K kids.

    ReplyDelete
  23. சில குழந்தைகள் கையில் ஆர்ச்சி புக். பலர் பென்னி,மந்திரி,ஸ்மர்ப்ஸ் வைத்து உள்ளனர். புத்தகங்கள் தேர்வினை அவர்கள் விலை தவிர எவ்வாறு செய்தனர் என தெரிய ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே வகுப்பறையின் வாசிப்பு முனையில் (reading corner) அவர்களுக்கு லக்கி லூக் முதல் மந்திரி வரை அனைவரும் அறிமுகமாகி இருந்ததால் தத்தம் விருப்ப நாயகர்களை தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு சிரமமிருந்ததாக தெரியவில்லை.
      பென்னியும் ஸ்மர்ப்பும் எப்போதும் அவர்களுக்கு மிகவும் பிடித்தவை தான்.

      ஆர்ச்சியை பொருத்தவரையில் அட்டைப்பட ஈர்ப்பு தான் காரணம் என நினைக்கிறேன்.

      Delete
    2. ஏனெனில் ஆர்ச்சியை அதற்கு முன் அவர்கள் பார்த்தது கூட இல்லை.

      Delete
    3. வாவ் ஏற்கனவே அறிமுகமான ஹுரோக்களா???? 😲😲😲. சார் கலக்கீட்டீங்க 🙏🙏🙏... Great work sir...

      Delete
  24. தற்போதைய கால கட்டத்தில் டைம் பாஸ் செய்ய குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினருக்கு smart phone ஐ விட காமிக்ஸ் is definitely a safe BET😔😔

    ReplyDelete
  25. ஆசிரியர் சரவணகுமாரிற்கும் சக ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. உங்களை போன்றவர்களினால் காமிக்‌ஷ் அடுத்த தலைமுறைக்கும் ஊடுகடத்தப்பட்டு வாழ்கின்றது .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் நண்பரே!
      தலைமுறை பல கடந்து வாழும் காமிக்ஸ் ஒரு சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி.

      Delete
  26. நண்பர் சரவணக்குமார் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றியும். இதற்கு ஒரு ஸ்பெஷல் பதிவு போட்ட நமது எடிட்டர் க்கு ஒரு பூங்கொத்து.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே!

      ஆசிரியரின் ஸ்பெஷல் பதிவு தரும் அபரிமிதமான ஊக்கம் இன்னும் பல செயல்களில் ஈடுபட நம்மை தூண்டுவதாக உள்ளது.

      Delete
  27. ஆஹா! தனியாக ஒரு பதிவினையே இட்டு அதன் மூலம் தங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்ததன் மூலம் எம் மாணாக்கர்களையும் எம்மையும் பெருமைப் படுத்தி விட்டீர்கள் சார்!
    மிக்க நன்றி!

    தமிழ் காமிக்ஸ் உயிர்த்திருக்க நீரூற்றும் தங்களிடமிருந்து இத்தகைய பாராட்டு பெற்றதை வாழ்நாள் பெருமையாக நினைக்கிறேன். மாணவர்கள் அனைவர் சார்பிலும் மிகுந்த நன்றிகள்!

    தங்களின் இந்த பதிவு எங்கள் செயல்பாடுகளுக்கு புது உத்வேகத்தை அளித்து மென்மேலும் சிறப்பாக செயல்பட தூண்டுதலாக இருக்கும் என்பது திண்ணம்.

    அனைத்து இதழ்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கியமைக்கு மாணவர்கள் அனைவரின் சார்பாகவும் மீண்டும் ஒருமுறை நன்றிகள் சார்.

    வாழ்த்துகளை தெரிவித்து தம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. // தமிழ் காமிக்ஸ் உயிர்த்திருக்க நீரூற்றும் தங்களிடமிருந்து இத்தகைய பாராட்டு பெற்றதை வாழ்நாள் பெருமையாக நினைக்கிறேன். // உண்மை

      Delete
  28. ஒரு ஆசிரியர் பல மில்லியன் புத்தகங்களுக்கு சமமானவர் என்பது சரவண்குமார் அவர்களிடமிருந்து புலனாகிறது.
    வாழ்த்துகள் ஆசிரியர்களே! ( நம்ம எடிட்டரும் ஆசிரியர் தானே)

    ReplyDelete
    Replies
    1. ஒரு காமிக்ஸ் மில்லியன் ஆசிரியர்களுக்கு சமம் என்பது இதன் மறுதலை.
      மிக்க நன்றி நண்பரே!

      Delete
  29. நண்பர் சரவணகுமாருக்கு வாழ்த்துக்களும் நன்றியும் ஆர்ச்சியை குழந்தைகள் கையில் கானும்போது தோன்றும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளில்லை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே!
      ஆர்ச்சியை இதற்கு முன் அவர்கள் பார்த்தது கூட இல்லை.
      இருந்தும் அவர்களுக்கு பிடித்துள்ளது, இத்தனைக்கும் இது வண்ண புத்தகம் கூட இல்லை. அட்டைப்பட ஈர்ப்பு என நினைக்கிறேன். ஆர்ச்சி rocks!

      Delete

  30. நண்பர் திருப்பூர் பிரபாகரின் உதவியால் செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான இதழ்கள் நேற்று வந்து சேர்ந்தன. ட்யூராங்கோவின்அரக்கர் பூமியில் இருக்கிறேன்.

    ReplyDelete
  31. தனியே தன்னந்தனியே : வெண் மேகமே வெண் மேகமே கேளடி என் கதையை! ஜல் ஜல் ஜல் ...ஊஊஊஊ!

    முதுகு தண்டு சில்லேன ஆனது கதையை படித்து முடித்த உடன் :-)

    ReplyDelete
    Replies
    1. ///முதுகு தண்டு சில்லேன ஆனது கதையை படித்து முடித்த உடன்///

      ஃப்ரிட்ஜுக்குள்ளே உட்கார்ந்து படிச்சீங்களா?!! :D

      Delete
  32. ட்யுராங்கோ எக்ஸ்பிரஸ்

    மொத்தம் 2 கதைகள் மூன்று ஆல்பங்களாக. அட்டகாசமா ஓவியங்கள், துடிப்பான கதை, கச்சிதமான தயாரிப்பு தரத்தில் சிறப்பா வந்துருக்கு.

    இரண்டுமே சிம்பிளான நேர்கோட்டு கதைகள். ஆனாலும் சொல்லிய விதம், நல்லவன் ஜெயிக்கறதுன்னு வந்திருக்கும் பாசிட்டிவான பீல்குட் கதை.

    எனக்கு நெம்ப நெம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இனி ஒரே கபி கபி தான் போலே...

      Delete
    2. வாங்க வாங்க ஷெரீஃப் உங்க ரிவ்யூ எல்லாம் படிக்க நெம்ப ஆர்வங்கா உண்டானு.

      Delete
    3. இன்னும் ஒரு வாரம் நிறுத்தி வைப்போம் குமார். இந்த மாதக் கதைகளுக்கு விமர்சனம் ஓரளவு முடிந்து விடும். பிறகு தொடர்கிறேன்.

      Delete
  33. 3. தனியே தன்னந்தனியே!!!! (3.5/5)

    ரூட் 50 சாலையில், புல்லியன் வளைவில் தொடர்ந்து நடக்கும் விபரீதங்களுக்குக் காரணம் என்ன என்பதை புலனாய்வதே இந்த ஆவி கதை. காதல், பாசம் எல்லாம் கலந்த கலவை இது. பல இடங்களில் நமது யூகிப்புக்கே விட்டு விட்டார் கதாசிரியர் (மூளைக்கு வேலை) . நான் பக்கங்களை முன்னும் பின்னும் புரட்டி பொருத்திக் கொண்டேன். உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் அருமையான சித்திரங்கள் இந்த கதையின் ப்ளஸ் பாயிண்ட். எப்பவும் டமால் டுமீல்னு படிச்சிட்டு, எப்பவாவது இந்த மாதிரி கதைகளைப் படிப்பதும் மாறுபட்ட அனுபவமே!

    ReplyDelete
    Replies
    1. நச் ரிவியூ!!
      மார்க் தான் கொஞ்சம் கம்மி ( ஸ்ட்ரிக்டு ஆபீஸர் போல!)

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. ஆர்ச்சி இருக்க பயமேன்...

    போன மாதம் போலவே இந்த மாதமும் இந்த நாற்பது ரூபாய் லயன் அட்டைப்படம் ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    போன மாதம் போலவே புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தவுடன் ஒரு வித பழைய துள்ளலை ஏற்படுத்தியது.

    போன மாதம் போலவே பழைய 007 ஐ மீண்டும் புது நண்பனாக பார்ப்பது போல் ஆர்ச்சி மட்டுமல்ல தாம்சன் ,விக்டரை பார்த்து கூட மனது கூதுகலமடைந்தது.

    போன மாதம் போலவே இதே தரத்தில் ஆர்ச்சியின் அடுத்த வெளியீடு விளம்பரம் போல் அடுத்த மாடஸ்தியின் விளம்பரம் ஆவலை கிளப்பியது.

    போனமாதம் போலவே பொடி எழுத்துக்கள் கொஞ்சம் சிரம்ப்படுத்தியது போல் இந்த மாதமும் சிரமப்படுத்தியது.


    இறுதியாக


    *வெல்கம் ஆர்ச்சி*


    🤖🤖🌹🌹

    ReplyDelete
    Replies
    1. //போனமாதம் போலவே பொடி எழுத்துக்கள் கொஞ்சம் சிரம்ப்படுத்தியது போல் இந்த மாதமும் சிரமப்படுத்தியது.//

      இன்னும் குழந்தைப் பையன்னு சொல்லிட்டுத் திரிஞ்சா எப்படி. சாளேஸ்வரம் காட்டி குடுத்துடுச்சே. கண்ணாடி போடுங்க தல.

      Delete
    2. நான் சின்ன பையன்ங்கிறனாலத்தான் சின்ன எழுத்து சிரம்படுத்துகிறது மிஸ்டர் ஷெரீப் சார்..:-)

      Delete
    3. நம்பற மாதிரி ஏதாவது சொல்லுங்க தலீவரே.

      Delete
    4. நீங்க தலைவரோட சின்னவர்! இத நம்புறீங்களா ?

      Delete
    5. நீங்க தலைவரோட சின்னவர்! இத நம்புறீங்களா ?// நீங்களும் பரணி அவரும் பரணி. ஆனா நீங்க மட்டுந்தான் உண்மை பேசறீங்க. அதனால நம்பறேன்.

      Delete
    6. பழசை மறவா பாசத்தலைவர். இயல்பான விமர்சனம் தலைவரே!

      Delete
  36. நண்பர் சரவணக்குமாருக்கு வாழ்த்துக்கள் சிறப்பான சேவை

    ReplyDelete
  37. ***** ஒரு துளி துரோகம் *****

    முதல் பக்கத்தில் ஒரு ரயிலில் ஆரம்பிக்கும் கதை, அந்த ரயிலைப் போலவே ஆரம்பப் பக்கங்களில் மெதுவாகத் தடதடத்து நகர்ந்து, பிறகு 260+ பக்கங்களுக்கும் ஒரு புல்லட் ரயிலைப் போல சீறிப் பாய்ந்து பயணித்து நம் கவனத்தை சிதறவிடாமல் பக்கங்களைப் புரட்ட வைக்கிறது!

    அமெரிக்க உள்நாட்டுப் போரோடு தொடர்புடைய ஒரு கதையை இத்தனை சுவாரஸ்யத்தோடு துளியும் தொய்வின்றிச் சொன்ன கதாசிரியர் கிளாடியோ நிஸ்ஸிக்கு ஒரு முறை எழுந்து நின்று கைதட்டலாம்! ஓவியர் Ticciயும் தன் பங்குப் பணியை செவ்வனே செய்திருக்கிறார்!

    கதை முழுக்கவே டெக்ஸ் வியாபித்திருந்தாலும் அதிக அலட்டல்களின்றி, இக்கட்டுகளில் வலியச் சென்று மாட்டிக்கொண்டு தன்னைத்தானே நொந்துகொள்ளும் ஒரு இயல்பான மனிதராகக் கவர்கிறார்!
    தாத்தா கார்ஸனுக்கு கதை கேட்கும் வேலை மட்டுமே! எனினும் அந்தக் குறையே தெரியாதபடிக்கு கதை நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது!

    'ஒரு துளி துரோகம்' என்ற தலைப்பும் மிகமிகப் பொருத்தமானதே என்பது இறுதிப்பக்கங்களைப் படிக்கும்போது உணரமுடிகிறது!

    காட்டுத்தீ போல நகரும் கதையோடு, யூகிக்க முடியாத பல திருப்பங்களும் அமைந்துவிட்டால் ஒரு மூச்சிறைக்கும் வாசிப்பு அனுபவம் கியாரண்டி எனபதை உறுதிப்படுத்துகிறது இந்தக் கதை!

    'அதிகாரி'யின் சூப்பர்-ஹிட் இதழ்களில் ஒன்றாக, பல முறை மறுவாசிப்புக்கு ஆளாக நேரிடும் கதையாக இதுவும் நிலைத்திருக்கும்!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete
    Replies
    1. முதன்முறையாக டெக்ஸின் இதழிற்கு முழு மதிப்பெண்ணை வழங்கியதில் இதன் வெற்றியை உணரமுடிகிறது செயலரே..

      நன்று ..

      Delete
    2. //தாத்தா கார்ஸனுக்கு//

      முரட்டு சிங்கிளா ? தாத்தாவா ? எது நெசம்னு எனக்கு உண்மை தெரிஞ்சாகணுமே !!

      Delete
  38. கலக்கிட்டீங்க.... வாழ்த்துகள் ஆசிரியரே

    ReplyDelete
  39. அந்தியின் ஓர் அத்தியாயம்..

    விறுவிறுப்பான மேலும் ஓர் கெளபாய் அறிமுகம்..பழிவாங்கும் தேடலே என்ற வழக்கமான கதை என்றாலும் சுவாரஸ்யமாக சென்றது கதை ..அதே சமயம் முடிவில் படித்து முடித்தவுடன் முடிவு கிராபிக்நாவல் போல கொஞ்சம் குழப்பத்தை திணித்தது உண்மை.அது காலகட்டங்களை குறிப்பிடாமல் இருந்த்தாலா ..அல்லது இயல்பான வசனங்கள் மட்டும் இருந்த்தாலா என தெரியவில்லை..பின் கடைசி மூன்று பக்கங்களை மீண்டும் பொறுமையாக படித்து முடித்தவுடன் முடிவும் புரிபட முடிந்தது தலைப்பையும் புரிபட முடிந்தது..


    இந்த இறுதி குழப்பம் எனக்கு ஏற்படாமல் இருந்திருந்தால் என்னை பொறுத்தவரை "வெகு சூப்பர் " இதழ் இது ..எனக்கு க்ளைமேக்ஸில் கொஞ்சம் திணறடித்த காரணத்தால் "சூப்பர் இதழாக" மட்டும் பிரகடனபடுத்துகிறேன்..


    இனி பிப்ரவரியில் மார்ச்சை காண ஆவலுடன் மீண்டும் வெயிட்டிங்.:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே....குழப்பம் வாத்தியாருக்கு ; சிலபஸ் அவருக்கு சித்தே உதைக்குதாம் ! ஆனாக்கா சரியான பதில் எழுதியிருக்கும் மாணவனோட பேப்பருக்கு மதிப்பெண் குறைச்சிடறாராம் !!

      என்ன செய்யலாம் சொல்லுங்கோ ?

      Delete
    2. அதனால தான் சர் அவரு வாத்தியாரா இல்லாம தலீவரா இருக்கரு. தலீவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை தொண்டர்களுக்குத்தானே.

      Delete
    3. ஆசிரியர் சார் மற்றும் ஷெரீப்.....####


      ஹீஹீஹீ

      Delete
    4. ////அதே சமயம் முடிவில் படித்து முடித்தவுடன் முடிவு கிராபிக்நாவல் போல கொஞ்சம் குழப்பத்தை திணித்தது உண்மை///

      தலீவரே.. சிறுவனின் தாயைக் கொன்றவர்களை பழிதீர்த்தவுடனேயே கதையை முடித்திருக்கலாம் என்றுதான் நான் கூட ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.. ஆனால் கதை இத்தனை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த அந்த இறுதிப் பக்கங்களே இன்றியமையாதவை என்பதை பிற்பாடுதான் தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொண்டேன்! உண்மையில், படைப்பாளிகளின் சிந்தானாசக்தி முழுவீச்சில் வெளிப்படுவதும் அந்தப் பிந்தைய பக்கங்களிலேயே!!

      மேகத்திரை விலகி, நிலவு தன் கதிர்களை பரப்பிய அந்த நிகழ்வு ஒரேயொரு ஒற்றை நொடிக்கு முன்பாக நிகழ்ந்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் மனதை அழுத்திய பக்கங்களவை!!

      Delete
    5. அருமை செயலரே..உண்மையே..ஆனாலும் ஒரு கமர்ஷியல் கதையில் உடனடியாக எனக்கு புரியாமல் போன காரணமே எனது வருத்தம்..( என.மேல்..)

      Delete
    6. தலீவரே.. உங்கள் புரிதலில் தவறில்லை! அந்தப் பழிவாங்கும் படலம் முடியும் வரை ஒரு சாதா காமிக்ஸ் போல நேர்கோட்டில் பயணிக்கும் கதை - அதன்பிறகு கொஞ்சம் கி.நா பாணிக்குத் தாவிவிடுவதும் இக்கதையின் சிறப்புகளில் ஒன்றாகக் கருதுகிறேன்!

      டிக்கெட் கெளண்டர் நெரிசலில் சிக்கிக் கிழிந்த சட்டையோடு ரஜினி படம் பார்க்க ஓட்டமாய் தியேட்டருக்குள் நுழைவீர்கள்.. உள்ளே நுழைந்ததுமே அந்த அரையிருட்டு கண்களுக்குப் பழகும்வரை தட்டுத்தடுமாறி மெதுவாகதானே நடப்பீர்கள்..? அப்படி மெதுவாய் பக்கங்களைப் புரட்டி மனதைப் பழக்கும் இடந்தான் அந்தக் கடைசிப் பக்கங்கள்!!

      Delete
    7. // தலீவரே.. உங்கள் புரிதலில் தவறில்லை! அந்தப் பழிவாங்கும் படலம் முடியும் வரை ஒரு சாதா காமிக்ஸ் போல நேர்கோட்டில் பயணிக்கும் கதை - அதன்பிறகு கொஞ்சம் கி.நா பாணிக்குத் தாவிவிடுவதும் இக்கதையின் சிறப்புகளில் ஒன்றாகக் கருதுகிறேன்! //

      +1

      Delete
  40. படிச்சு முடிச்சவுடனே புத்தகத்தை பதுக்கவேண்டிய இடத்துல பதுக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்க விசிலடிச்சுக்கிட்டே கிளம்பிட்டோம்னா.. நாம படிச்சது - சாதா காமிக்ஸ்!

    படிச்சுப் பத்து நிமிஷம் ஆகியும் இடத்தைவிட்டு அசையாமப் பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்திட்டு இருந்தோம்னா.. நாம படிச்சது - கி.நா!

    சரி.. எதுக்கு இந்த விளக்கம்னு கேட்கறீங்க - அதானே?

    தோணிச்சு!

    எப்பவாவதுதான் இந்தமாதிரியெல்லாம் தோணும்! மறந்துபோறதுக்குள்ள இங்கே வந்து கொட்டிட்டோம்னா நிம்மதியா தூங்கப்போகலாம் பாருங்க?!! ஹிஹி!!

    ReplyDelete
    Replies
    1. // படிச்சுப் பத்து நிமிஷம் ஆகியும் இடத்தைவிட்டு அசையாமப் பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்திட்டு இருந்தோம்னா.. நாம படிச்சது - கி.நா!// உண்மை உண்மை நூறு சதவீதம் உண்மை.

      Delete
    2. அருமை
      அருமையான பதிவு

      Delete
    3. அதுக்கு அப்புறம் வீட்டுக்காரவுக வந்து மொபைல பிடுங்கிவச்சுட்டு, நமக்கு தண்ணி தெளிச்சு வேப்பில அடிச்சா, நாம படிச்சது ஈவியோட கமெண்ட்டு.

      Delete
    4. ஹிஹிஹி!

      அதுக்கப்புறம் சுவத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு கெக்கபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டிருந்தோம்னா - நாம படிச்சது பத்து சாரோட கமெண்ட்டு! :))

      Delete
  41. அப்போ தெளிஞ்சுடுத்து..

    ReplyDelete
  42. 1951-ல் கோரமான கார் விபத்து நடக்கிறது.

    அதில் அனைவரும் வெவ்வேறு விதமாக பலியாகிறார்கள்.
    ஒரு சிறுமி மரத்தின் முறிந்த கிளையின் கூர் முனையில் முகம் குத்தி இறக்கிறார்.

    65 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்மணி பெயர் கெர்ரி மற்றும் அவர்தம் குழந்தை பால் ஆகியோர் அதேபகுதியில் மீண்டும் விபத்துக்குள் ஆகின்றார்கள்.

    அதில் கெர்ரி இறக்கிறார்.
    ஆனால் இறந்த சிறுமியின் ஆவி சிறுவன் பாலை காப்பாற்றுகிறது.
    இவ்விபரம் எவருக்கும் தெரியாமல் காணாமல் போனதாக எல்லோரும் நினைக்கின்றனர்.



    இறந்த சிறுமியின் ஆவியை
    1. மிஸ்டி
    2. மிஸ்டியின் தாயார்
    3. இறந்த கெர்ரியின் அத்தை (கனவில்)
    ஆகியோர் பார்க்கின்றனர்.

    இறந்த கெர்ரியின் ஆவியை டெபோரா ஹோஸ்ட் பார்க்கிறார்.


    அவ்விபத்தை ஷெரிப் ஒருவர் துப்பறிகிறார்.


    அந்த புலனாய்வில் ஷெரிப் பின் வாழ்வில் சந்திக்கும்
    1. மனிதர்கள்
    2. ஷெரிஃபின் சொந்த கதை
    3. ஷெரிஃபின் சோக கதை
    4. ஷெரிஃபின் காதல் கதை
    5. ஷெரிஃபின் சக ஊழியரின் கதை
    6. இன்னுமொரு மரணம் / விபத்து
    ஆகியவை வருகின்றன.

    கனவுகளின் காரணங்களையும் / விபத்தின் காரணத்தையும் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார்.


    இந்த கதையின் சிறப்பு என்னவென்றால்
    விளக்கங்கள் குறைவாகவே அல்லது இல்லாமலே இருக்கும்.
    பல இடங்களில் நமது யூகிப்புக்கே விட்டு விட்டார் கதாசிரியர் (மூளைக்கு வேலை)
    ஒரு திரைப்படத்தில் பேயை கண்டாலே அச்சம் போய் சிரிப்பு வரும்.
    இக்காலத்தில் ஒரு புத்தகத்தில் "ஒரிஜினல் " பேய்ப்படத்தை பார்த்து ஓரு திடுக் அனுபவத்தை முதல் முறையாக வழங்கியது இந்த தனியே தன்னந்தனியே
    படங்கள் அற்புதமாக இருக்கும் .

    சித்திரக்கதை என்னும் பேருக்கேற்ப

    சித்திரத்தின் தரம் உச்சத்தில் இருக்கும்.

    வெறும் எழுத்துக்களையே படிக்கும் சித்திரக்கதை நேயர்களுக்கு இது ஒரு ஐந்தாகிளாஸ் பப்ளிக் எக்ஸாம் போன்றது.

    சரியாக படித்து பார்க்கவில்லை என்றாலும்
    சரியாக பார்த்து படிக்கவில்லை என்றாலும் பெயில் தான்.




    இந்த கதையில் புரியாத பகுதிகள்:

    1. ஹோல்ஸ்மேனை ஒரு சிலந்திதான் கொல்கிறது. ஆனால் அவர் வீட்டில் அத்தனை சிலந்திகள் வளர்க்க வேண்டிய அவசியம் என்ன?

    2. கெர்ரி கார் விபத்திற்கு சிலந்தி தான் காரணமாக அமைந்தது.ஏன்? அவருக்கும் , சிலந்திக்கும் என்ன தொடர்பு?

    3. சிலந்தி கதை புரியவில்லை. இரண்டு முறை விபத்துகள் நடபதற்கும் சிலந்தி யே காரணமாக இருக்கிறது. ஏன்?

    இவற்றிற்கு விளக்கம் தேவை

    ReplyDelete
    Replies
    1. தன் குடும்பமே நிர்மூலமாகிட காரணமாகிப் போன சிலந்திகள் மீது ஹோல்ஸ்மானுக்கு எழுந்திருக்கக்கூடிய தாளா வெறுப்பின் காரணமாய் அவற்றை தனது தோட்டத்து அறையில் ஜாடிகளில் போட்டு வைத்து வதைத்திருக்கக் கூடுமோ ?

      And கெர்ரியின் விபத்துக்கு சிலந்தி தான் காரணமென்று எங்கேயும் சொல்லியிருப்பதாய் எனக்குத் தெரியலியே சார் ! மூன்று வெவ்வேறு பக்கங்களில் தலைகாட்டும் அந்தச் சிலந்தி முதன்முதலில் நடந்த அந்த விபத்தின் காட்சியமைப்பே - flashback போல திரும்பத் திரும்ப கதாசிரியர் காட்டியுள்ளார் என்பதே எனது புரிதல் !

      Delete
    2. ////தன் குடும்பமே நிர்மூலமாகிட காரணமாகிப் போன சிலந்திகள் மீது ஹோல்ஸ்மானுக்கு எழுந்திருக்கக்கூடிய தாளா வெறுப்பின் காரணமாய் அவற்றை தனது தோட்டத்து அறையில் ஜாடிகளில் போட்டு வைத்து வதைத்திருக்கக் கூடுமோ ?///

      எனக்கென்னமோ தன் மனைவி சாகக் காரணமான அந்தப் பூச்சிகளை அவன் பிரியத்தோடும் நன்றியுணர்வோடும் வளர்த்திருப்பானோன்னு தோணுது!!

      Delete
    3. நேக்கும் அப்படித்தான் தோணுது.சிலந்தியை காருக்குள் விட்டதே அவரோட மாஸ்டர் ப்ளானோனு ஒரு டவுட்.

      Delete
  43. இதே சந்தேகம் எனக்கும்.. மேலும் கெர்ரியின் ஆவி நடுரோட்டில் ஆடையின்றி படுத்திருந்தது ஏன்?
    16ம் நம்பர்க்கான புதிரின் விடை Super.

    ReplyDelete
    Replies
    1. படுப்பது நடுரோட்டில் என்பதால் உடை அழுக்காகிவிடக் கூடாதே என்ற நல்லெண்ணம் காரணமாய் இருக்கக்கூடும்! :D

      Delete
    2. கெர்ரியின் ஆவி நிர்வாணமாக படுத்திருந்ததும் சிறுவன் பாலின் ஆடைகள் கழற்றப்பட்டு இருந்ததுற்கும் எதேனும் தொடர்பு இருக்குமா ?

      Delete
    3. ///16ம் நம்பர்க்கான புதிரின் விடை Super.///

      நான் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் எதிர் பார்த்தேன்!

      Delete
    4. சிறுவன் உடைகளின்றி பின் சீட்டில் கிடக்க, காரின் முன்புற சீட்டில் அவனது உடைகள் அழகாக மடித்து வைக்கப் பட்டிருக்கும்! இக்கதையில் விவரிக்கப்படாத புதிர்களில் அதுவும் ஒன்று!

      என் யூகம் : இருப்பது ஒரே உடை என்பதால் கழற்றி லாண்டரிக்குப் போட்டிருப்பார்கள்! லாண்டரியிலிருந்து உடைகள் திரும்ப வந்திருக்காத வேளையில் ரோட்டில் படுத்துக் கிடக்கவேண்டிய நிலை அந்த அம்மா பேய்க்கு!
      அதன்பிறகு அடுத்தநாளில் லாண்டரிக்குப் போன உடைகள் திரும்பிவர, அம்மா பேய் முதலில் உடைகளை அணிந்துகொண்டு அந்தச் சிறுவனுக்கு அணிவிக்கவிருந்த நேரம் பார்த்து கரெக்ட்டாய் போலீஸ் வந்து சேர்ந்திருப்பார்கள்! :)

      Delete
    5. அட...இப்படி யோசித்துப் பாருங்களேன்...! விபத்துக்குள்ளான காரில் இருக்கும் குட்டிப் பையனுக்கு ரொம்பவே தாகம் என்ற நிலையில்,முகமற்ற அந்த அமானுஷ்ய உருவம் பருக தண்ணீரை வாயில் ஊற்றி விடுகிறது ! அப்போது பையன் துணிகளோடே இருக்கிறான் தான் என்பது தெரிகிறது ! Maybe தண்ணீர் புகட்டும் வேளையில் பையனின் துணியிலும் சிந்தி ஈரமாகியிருக்கக்கூடும் தானே ? இரவில் ; குளிரில் ஈரத் துணியோடு பையன்அவஸ்தைப்பட வேண்டாமே என்ற நினைப்பில் அமானுஷ்ய பாப்பா உடுப்புகளை உருவி முன்சீட்டில் போட்டு வைத்திருக்கலாமோ ?

      And செல்லப் பிள்ளை நிர்வாணமாய் ; உயிருக்குப் போராடிக் கொண்டு காரினுள் கிடப்பதை அந்தப் பாதையில் பயணிப்போருக்கு தெரிவிக்கும் பொருட்டு கெர்ரியின் உருவமும் சாலையோரத்தில் துணியின்றி பிரசன்னமாகி இருக்கக்கூடுமோ ?

      Delete
    6. ///And செல்லப் பிள்ளை நிர்வாணமாய் ; உயிருக்குப் போராடிக் கொண்டு காரினுள் கிடப்பதை அந்தப் பாதையில் பயணிப்போருக்கு தெரிவிக்கும் பொருட்டு கெர்ரியின் உருவமும் சாலையோரத்தில் துணியின்றி பிரசன்னமாகி இருக்கக்கூடுமோ ?///

      சார்.. குட் போயிண்ட்!! மகன் துணியின்றி கிடப்பதை மற்றவர்களுக்கு உணர்த்தவே அந்தத் தாய்ப் பேயும் துணியின்றி ரோட்டில் கிடந்திருந்திருக்கலாம்தான்! agreed!

      Delete
    7. ///இரவில் ; குளிரில் ஈரத் துணியோடு பையன்அவஸ்தைப்பட வேண்டாமே என்ற நினைப்பில் அமானுஷ்ய பாப்பா உடுப்புகளை உருவி முன்சீட்டில் போட்டு வைத்திருக்கலாமோ ?///

      ட்ரெஸ்ஸோடு இருந்தாலே குளிர் தாங்காது எனும் போது, ட்ரஸ் இல்லாமல் குளிரை தாக்குபிடிக்க முடியுமா என்ன?

      Delete
    8. இப்படி யோசிச்சுப் பாருங்களேன்..

      எந்தவொரு பேய்க்கும் ஒரு வீக் பாயிண்ட் இருக்கும்.எதாவது அலர்ஜி இருக்கும்.இந்த பேய்க்கு ட்ரஸ் அலர்ஜி போலிருக்கு:-)

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. இப்புடி ஆளாளுக்கு பேய்த்தனமா யோசிச்சுக்கிட்டு இருக்கோமே? (பேயா யோசிக்கணும் குமாரு |

      Delete
  44. அந்த அம்மா எவ்வளவு பொறுப்பு பாருங்க விஜய். பேயானதுக்கு பிறகும் பையனோட dress ஐ நீட்டா மடிச்சி வச்சிருக்காங்க.

    ReplyDelete
    Replies
    1. பின்னே? 'பேய் என்றாலும் தாய்' இல்லீங்களா!!

      Delete
  45. Replies
    1. நமது காமிக்ஸ் குறித்த பதிவு என்பதால்.

      Delete
    2. குட்!! காமிக்ஸ் வாசிப்புப் பற்றி நான்கு வரிகள் எழுதியிருக்கிறார்!

      Delete
    3. நான்கு வரிகள் எழுதியிருக்கிறார்.
      அதை நன்கு எழுதியிருக்கிறார்.:-)

      Delete
  46. ///2. கெர்ரி கார் விபத்திற்கு சிலந்தி தான் காரணமாக அமைந்தது.ஏன்? அவருக்கும் , சிலந்திக்கும் என்ன தொடர்பு?///

    பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் கெர்ரி கார் ஓட்டும்போது தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறுகிறார்.

    ReplyDelete
  47. ஆசிரியரின் இரு கருத்துக்களும் அற்புதமாக ஒத்துப்போகிறது.
    1. முதல் கருத்து கெர்ரியின் மரணத்திற்கு தூக்கமே காரணம் சிலந்தி அல்ல. பார்க்க பக்கம் 94 மேலே வலதுபுறம் உள்ள பேனல்.

    2. இரண்டாவது கருத்து. தண்ணீர் வழிந்து சட்டை நனைவதை பக்கம் 61 கீழ் வரிசையில் உள்ள பேனலில் பார்க்கலாம்.


    ஆசிரியரின் ஆர்வம்
    காமிக்ஸ் மீதான காதல்
    காமிக்ஸ்ஸை புரிந்து கொள்ளும் ஆற்றல்

    அனைத்தும் இங்கு வெளிப்பட்டுள்ளது.

    அவருக்கு ஒரு இனிய வணக்கங்கள்.

    ReplyDelete
  48. எப்படியோ அந்த பேயும்-சேயும் ஏன் பப்பிஷேமாக இருந்தார்கள் என்பதற்கு ஓரளவு விடை கிடைத்துவிட்டது!

    இன்னும் சில டவுட்ஸ்: தீர்த்து வைப்போருக்கு கடந்த ஆகஸ்டில் தயாரிக்கப்பட்ட 'ரவுண்டு வர்க்கி' பரிசாக அளிக்கப்படும்!

    * ஹோல்ஸ்மேனின் குடும்பமே விபத்தில் பலியாகிறது - ஹோல்ஸ்மேனைத் தவிர! கதையில் காட்டப்படும் 'பேய் சிறுமி' ஹோல்ஸ்மேனின் மகள் என்றால், அவரது மனைவிப் பேய் என்னவானது?!! சிலந்திகளுக்குப் பயந்து காட்டை விட்டே ஓடிவிட்டதோ என்னமோ?!!

    * பேய்களுக்கு திரவப் பொருளை கையாளமுடிகிறது (சிறுவனுக்கு தண்ணீர் தரும் தாய் பேய்); திடப்பொருளைக் கையாளமுடிகிறது (சிறுவனின் ஷூவை ரோட்டுக்கு எடுத்துப் போகும் சிறுமிப் பேய்).. அப்படியிருக்க ஒரு பேப்பரிலோ, மரப்பட்டையிலோ (வழக்கம்போல ரத்தத்தால்) அந்த சிறுவனின் நிலைமை குறித்து எழுதி மலைப்பாதையில் பயணிப்போரின் கண்ணில் படும்படி ஏற்பாடு செய்திருந்தால் அந்தச் சிறுவனை இன்னும் சுளுவாகக் காப்பாற்றியிருக்கலாமே? அதைவிடுத்து, ரோட்டின் குறுக்கே அப்படிஇப்படி கேட்-வாக் போவதும், நடுரோட்டில் பப்பிஷேமாய் படுத்துக் கிடப்பதுமாய் - கர்மம் கர்மம்.. பேய்கள் எல்லாமே பேக்குகளாய்த்தான் இருக்கும் போலிருக்கு!!

    ReplyDelete
    Replies
    1. மனைவி என்பதே பேயின் மறுஉருவம்தானே.!அதனால்தான்ஏற்கனவே பேயாக உள்ள ஒரு பெண், உண்மையிலேயே பேயாக மாறிய பின்னே, அவை ஒன்றையொன்று நீக்கிக் கொண்டு காணாமல் போய்விடுகிறது.

      Delete
    2. ///மனைவி என்பதே பேயின் மறுஉருவம்தானே.///

      உஷ்ஷ்ஷ்.. உண்மையான பேய்கள் இதைக் கேள்விப்பட்டா ரொம்ப வருத்தப்படும் பாவம்!

      Delete
    3. பேய்கள் உறங்கும் நேரமிது.

      Delete
    4. ///அவை ஒன்றையொன்று நீக்கிக் கொண்டு காணாமல் போய்விடுகிறது.///

      'ஒன்றையொன்று சமன் செய்துகொண்டு'னு எழுதியிருக்கப்படாதா?
      ஒருநிமிஷம் ஆடிப்போய்டேன்! :D

      Delete
    5. இங்கிலீஷ் பேய் எல்லாம் அப்படித்தான் இருக்கும். தமிழ் பேய்தான் நீங்க யோசிச்ச மாதிரி யோசிக்கும்.

      Delete
    6. ///மனைவி என்பதே பேயின் மறுஉருவம்தானே.///

      உஷ்ஷ்ஷ்.. உண்மையான பேய்கள் இதைக் கேள்விப்பட்டா ரொம்ப வருத்தப்படும் பாவம்!//

      மனைவிகள் (ஹி.. ஹி..) இதை கேள்விப்பட்டா அப்புறம் நாம தான் வருத்தப்படணும். ( ஏண்டா சொன்னோம்னு )

      Delete
  49. 1951ன் கோடைப்பகுதியில், புல்லியன் வளைவில் விபத்திற்க்குள்ளாகிறது ஹோல்ஸ் மேனின் கார். மனைவி அங்கேயே மரணமடைய, மகள் அகால மரணமடைகிறாள்.

    பிறகு 1951 ன் பிற்பகுதியில் மிஸ்டியின் கண்களுக்கு ஆவியாக (மகள்) தட்டுப்படுகிறாள்.

    கதை திடும்மென 65 வருடங்களைத் தாண்டி வருகிறது.இடைப்பட்ட வருடங்களில் புல்லியன் சம்பவங்கள் நடக்கவில்லையா? இல்லை மறைமுகமாக ஏதேனும் சொல்லப்படுகிறதா?

    விளக்கம் ப்ளீஸ்.!

    ReplyDelete
    Replies
    1. ஆமா.. அதானே? அதென்ன 65 வருடம்?

      அதேபோல கதையின் கடைசி முடிச்சான '16'க்கு பதிலாக '13'ன்னு வச்சிருக்கலாம்! அமெரிக்கர்களுக்கு சுத்தமாப் பிடிக்காத - ராசியில்லாத நம்பர் '13' என்பதால் இந்தமாதிரியான அசம்பாவிதங்களுக்கும் சரியா பொருந்திப்போயிருக்கும்! (அமெரிக்கர்களுக்குப் பிடிக்காத '13' நம்ம காமிக்ஸ் கண்மணிகளுக்கு மட்டும் எம்புட்டு பிடிச்சுப்போச்சு பாத்தீங்களா? '13'ன்னாலே உசுரா கெடக்கறாங்க!!)

      Delete
  50. Replies
    1. 1951 க்குப் பின்னே நிறைய பேர் அப்படியொரு ஆவியை பார்த்ததாக வருவது உண்மைதான்.

      கெர்ரி 'யின் விபத்தை மேற்கொண்டு ஒண்றிரண்டு வருடங்களில் நடப்பதாக கதையை முடித்தாலும் பாதகம் இராது என்றே நினைக்கிறேன்.

      ஆனால் ஏன் 65 வருட இடைவெளி?

      Delete
    2. ///ஆனால் ஏன் 65 வருட இடைவெளி?///

      இதுல காமெடி என்னன்னா.. 65 வருஷமா நடுகாட்டுக்குள் தனியா உட்கார்ந்துகிட்டு சிலந்திகள் பற்றி - தன் குடும்பமே அழிந்துபோகக் காரணமான சிலந்திகள் பற்றி - ஆராய்ச்சி பண்ணும் ஒருத்தன் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம அதுங்ககிட்டயே கடி வாங்கிச் சாகிறான்! அப்புறம் இத்தனை வருஷம் ஆராய்ச்சி பண்ணி என்னத்த கிழிச்சானாம்?

      பேசாம நீயும் அப்பவே செத்துருக்கலாம்யா ஹோல்ஸ்மேன்!

      Delete
  51. Replies
    1. அடடா!! புக்கு இப்ப என் கையில் இல்லாமப் போச்சே!!!

      Delete
  52. ஒரேயடியாக பேய் பற்றி சிந்திக்காமல்
    16-19,
    97-99,
    117-118,
    121-122

    ஆகிய பக்கங்களில் என்ன புதைந்து உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அந்த பக்கங்களில் ஷெரீப்புக்கும் டமாரா வுக்கும் இடையேயான மென்மையான நேசம்தானே காட்டப்பட்டுள்ளது.

      Delete
    2. எல்லா முடிச்சுகளுக்கும் கதையின் மையப் புள்ளியோடு சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை சார் ! ஒரு சிறு அமெரிக்க நகரம் ; அங்கே நிலவிடும் மெதுவான வாழ்க்கை முறை ; இயல்பான மனிதர்கள் என்பதை நிறுவிடவே உப கதாப்பாத்திரங்கள் இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது !

      ஷெரீபின் தயார் சுகவீனமாய் இருப்பதோ ; அவர் மரித்துப் போவதோ ; ஷெரீப்பின் காதலோ சூழலை ; மனிதர்களின் குணங்களை சித்தரிக்குமொரு யுக்தி என்றே எனக்குத் தோன்றியது ! So இங்கே ஒவ்வொரு கேள்விக்கும் கச்சிதமான விடை இருக்குமென்று நான் நினைக்கவில்லை - at least இதனுள் நான் செலவிட்ட நேரத்தில் எனக்குப் புரிந்த வரைக்கும் !

      Delete
  53. எடிட்டர் சார்...

    ஒரு உண்மையச் சொல்லுங்க! ராத்திரி நேரத்தில் இந்த 'தனியே தன்னந்தனியே'வில் பணியாற்றும்போது கொஞ்சமாவது பயந்துக்கிட்டீங்களா இல்லையா?

    உண்மை ப்ளீஸ்?

    ReplyDelete
    Replies
    1. பயந்தேன் தான் .....

      பணியை காலத்துக்குள் முடித்திட முடியுமா என்று !!

      புதுக் கதை பாணி ; புதுப் பதிப்பகக் (GLENAT ) கைகோர்ப்பு - எனும் போது உங்களின் மதிப்பீடுகள் எவ்விதமிருக்குமோ என்று பயந்தேன் !

      Delete
    2. ஹிஹி!! பேய்களைவிட, நீங்க எங்களைப் பார்த்தாத்தான் அதிகம் பயப்படுறீங்கன்னு புரியுது!

      Delete
  54. ok. பேய்ஸ். Sorry. guys.goodnight. See you.

    ReplyDelete
  55. சார்.. கருப்புக் கிழவிகள் கதையை மட்டுமாவது மறுபதிப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க சார்! எல்லாத்தையும் தொகுத்து ஒரே குண்டு புத்தகமா!!

    பேய்த்தனமா அட்வைஸ் பண்றதுல கருப்புக் கிழவியை அடிச்சுக்க ஆளே கிடையாது!

    ReplyDelete
    Replies
    1. நிறைய மித கதைகள் ; கொஞ்சம் சூப்பர் கதைகள் என்பதே கறுப்புக் கிழவியின் யதார்த்தம் ! அன்றைக்கு மிதங்களை வடிகட்டி விட்டு சூப்பர்களை மட்டுமே வெளியிட அனுமதித்தார்கள் ! இன்றைக்கு அந்த luxury சாத்தியம் நஹி ! So கறுப்புக் கிழவியையும் சரி...பருப்புக் கிழவியையும் சரி - சேர்த்தே ரசித்தாலொழிய முயற்சிப்பதில்லை பிரயோஜனம் இராது சார் !

      Delete
  56. சிறுவன் பால் லுடைய ஒரு ஷு மட்டும்தான் கிடைத்தது. இன்னொன்று எங்கே எனத் தெரியவில்லை ' என ஷெரீப் பக்கம் 98ல் கூறுவார்.

    அந்த இன்னொன்று எங்கேயென நான் கண்டுபிடிச்சிட்டேன்.

    நல்லாப் பாருங்க. அட்டைப்படத்துல அந்த சிறுமிபேய் வச்சிட்டிருக்கு.

    எல்லா இடத்திலேயும் தேடின ஷெரிப்.முன்னாடி இருக்கிற அட்டைப்படத்தை பார்க்காம விட்டுட்டாரு.:-)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி! G.P நீங்க ஏன் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கக்கூடாது.. நம்ம டைலன்டாக் மாதிரியே? :)

      Delete
    2. "அந்த இன்னொன்னு தான் இது"ன்னு சாதிக்காத வரைக்கும் க்ஷேமம் GP சார் !!

      Delete
  57. கதை முழுசாய்ப் புரிஞ்சதோ - இல்லியோ ; ஒன்று மட்டும் தெளிவாய்ப் தெரிகிறது ....

    ஹாரர் ஜானருக்கொரு வெற்றிடம் உள்ளது நம் மத்தியில் !! முறையான ; தெளிவான கதைகள் கிட்டின், அமானுஷ்யங்களை ஆவலாய் ரசிப்போம் போலும் !!

    ReplyDelete
    Replies
    1. எது எப்படியோ - சட்டித் தலையனின் மறுவருகையைக் கூட ; 'தல'யின் தலைசிறந்ததொரு சாகசத்தைக் கூடப் பின்னுக்குத் தள்ளியிருப்பது இம்மாத லயன் கிராபிக் நாவலின் சாதனையே என்பேன் !! Not bad I guess !!

      Delete
  58. இன்றைய அலசல்கள் அருமை வாங்கி படிக்காமல் வைத்திருப்பவர்கள் ஆர்வமுடன் படிப்பார்கள் வாங்காதவர்கள் வாங்க துடிப்பார்கள் (எப்புடி)

    ReplyDelete
  59. பேயின் மறு உருவம் மனைவியா இல்லை மனைவிகள் கனவன்மார்களை படுத்தும் கொடுமையை பார்த்தால் பேயும் பாய் சொல்லி பறந்துவிடும்

    ReplyDelete