Saturday, January 25, 2020

ஒரு திருவிழாவின் கதை..!

நண்பர்களே,

வணக்கம்.  பிப்ரவரி இதழ்களின் டெஸ்பாட்ச் நாலோ - ஐந்தோ நாட்களில் காத்திருப்பதால் நம்மள் கி கவனம் முழுசும் அப்பக்கமாய்த் திரும்பியாச்சு ! So சில பல கீ-போர்டுகளில் F5 key-களைத் தேய்த்துப் பொழுது போக்கும் நண்பர்களை ignore mode-ல் போட்டு விட்டு இறுதிக்கட்டப் பணிகளுக்குள் குதித்தால் நலமென்று நினைத்தேன்   !! And in any case - அவர்களுக்கே இந்த Refresh பொத்தானை அமுக்கிடும் ஆட்டம் போர் அடித்து விட்டதோ - என்னவோ டாட்டா சொல்லிக் கிளம்பிவிட்டார்கள் ! 

பிப்ரவரியின் நான்கு இதழ்களுள் இன்னமும் கண்ணில் காட்டியிரா ஒரே இதழ் - 'தல' டெக்ஸ் வில்லரின் "ஒரு துளி துரோகம்" மாத்திரமே ! And without much ado - இதோ நடப்பாண்டின் முதல் புது டெக்ஸ் சாகஸத்தின் அட்டைப்பட முதற்பார்வை ! 
ஒரிஜினல் டிசைன்...துளியும் மாற்றங்களின்றி...so டெக்ஸும் சரி, கார்சனும் சரி....செம மிடுக்காய்க் காட்சி தருவதாய் எனக்குத் தோன்றியது ! And கதையைப் பற்றிச் சொல்வதானால் ஒற்றை வார்த்தை போதுமென்பேன் : "தீ" !!! நம்மிடையே சில பல நண்பர்களுக்கு கார்சனின் நண்பர் மீதொரு கடுப்ஸ் உண்டென்பதில் இரகசியங்கள் ஏது ? And அவர்களின் முக்கிய குறைபாடே - ஒரு டெக்ஸ் சாகசத்துக்கும் , மறு சாகசத்துக்கும் இடையிலான வேறுபாடு பூஜ்யத்துக்கு மிக அருகில் என்பதே ! ஆனால் Claudio Nizzi-ன் இந்த ஆல்பத்தைப் படித்த பிற்பாடு நண்பர்கள் தம் அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள அவசரமாய் முனைந்திட வேண்டிவரலாம் !! ஒற்றை வரியிலான கருவே ஆனாலும் செம வித்தியாசமான கதைக்களத்தோடு  ஓட்டமெடுக்கும் இந்த சாகசத்தினில் முதல் பக்கத்தில் பிடிக்கும் சூடு - சும்மா தெறிக்கத் தெறிக்க "சுபம்" வரையிலும் தொடர்கிறது ! தொய்வென்ற பேச்சுக்கே இடமின்றி 264 பக்கங்களுக்கும் high octane thrills தந்துள்ளார் கதாசிரியர் நிஸ்ஸி ! And இம்முறை கதையின் ஓட்டமே மையமாய் கவனங்களைக் கோரிடுவதால், மாமூலான பன்ச் டயலாக்குகளின் பொருட்டு எனக்குப் பெரிதாய் வேலைகளில்லை ! சும்மா ஜாலியாய்ப் பேனாவை ஏந்திப் பிடித்தாலே கதையின் ஓட்டம் நம்மை இழுத்துச் செல்கிறது ! So "ஆபீசரின் அடாவடிகள்" ; "சலூனில் சிதறிய சில்லுமூக்கு" என்று விமர்சனம் எழுதிடும் நண்பர்கள் கூட இம்மாதம் தோளில் மஞ்சள் சால்வைகளோடு "ஆபீசரின் அற்புதங்கள்" ; "கார்சனின் நண்பருக்கு மரியாதை" என்று அலசல்கள் எழுதிட  நேரிடலாம் என்பேன் ! டெக்சின் modern day classics களுள் ஒன்றாய் "ஒரு துளி துரோகம்" அமைந்திடாது போனால் வியப்பே மேலோங்கும் என்னுள் ! இதோ உட்பக்க டிரெய்லர் : 

Moving on - ஜனவரியின் highlight ஆக எப்போதுமே அமைந்து விடும் சென்னைப் புத்தக விழாவினைப் பற்றி !! துவக்கம் தெறிக்கும் பட்டாசாய் நமக்கு அமைந்த போதிலும் ,பொங்கலின் தொடர் விடுமுறைகளின் சமயத்தினில்  முதல் வாரத்தின் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை ! So கிட்டத்தட்ட சென்றாண்டின் target-ஐத் தான் இம்முறையும் தொட சாத்தியப்பட்டது என்றாலும் - இம்முறை நமக்குக் கிட்டியுள்ள footfalls , வரும் காலங்களுக்கு  நிச்சயமாய் உபயோகமாய் இருக்குமென்ற நம்பிக்கை துளிர் விடுகிறது ! And ஜூனியர் எடிட்டர் ஏற்பாடு செய்து தந்திருக்கும் புது software-ன் உபயத்தால் இம்முறை எந்தெந்த இதழ்கள், என்ன மாதிரி விற்பனை கண்டுள்ளன என்பதை நொடியில் தெரிந்து கொள்ள முடிந்துள்ளது ! ஆண்டின் மிகப் பெரிய புத்தக மேளா தந்திடும் விற்பனை சார்ந்த pointers நமக்கு நிச்சயமாய் பலன் தருவன என்பதில் no doubts whatsoever ! And இதோ அவற்றுள் சில சுவாரஸ்யத் துளிகள் : 

The Big Story !!

இந்தப் புத்தக விழாவின்  big story இரும்புக்கை மாயாவியின் விற்பனையின் புத்துணர்ச்சிகளோ ; 'தல' டெக்சின் smooth sailing களோ அல்லவே அல்ல !! மாறாக இரண்டு பூஜ்யங்களை தன் பெயரோடு கொண்டிருக்கும் ஒரு உளவாளி செய்துள்ள விற்பனை அதகளமே இம்முறையின் பேசுபொருள் ! And no prizes for guessing who that is !!  இந்தச் சென்னை விழாவினில் விற்பனை சார்ந்ததொரு ஓட்டப் பந்தயம் நிகழ்த்தியிருப்பின், பாக்கிப் பேரெல்லாம் கூடுவாஞ்சேரியில் ஓடிக் கொண்டிருக்கும் நேரத்துக்கு, கோப்பையைத் தூக்கிக் கொண்டு செங்கல்பட்டில் போய் நிலைகொண்டிருப்பார் ஜேம்ஸ் பாண்ட் 007 !! குறைந்த விலையிலான "பட்டாம்பூச்சிப் படலம்" மாத்திரமின்றி, வண்ணத்திலான JB 007-ம் மாஸ் காட்டியுள்ளனர் சென்னையில் !!  இங்கே குறிப்பிடும்படியான இன்னொரு விஷயமும் கண்ணில்பட்டதாய்த் தோன்றியது :

Early days yet ; ஆனால் வாங்கும் திறனுக்குப் பஞ்சமிலா பெருநகரிலேயே இந்த ரூ.40 தடத்தின் இதழானது வாஞ்சையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், தொடரக்கூடிய Tier 2 நகர்களின் புத்தக விழா விற்பனைகளுக்கு இந்தச் சொற்ப விலை track ரொம்பவே பிரயோஜனமாகிடக்கூடும் என்றொரு gut feel ! காலவோட்டத்தில் அந்த வரிசையில் ஒரு டஜனுக்கு மேற்பட்ட இதழ்கள் நம் வசமிருக்கும் பட்சங்களில், மாமூலாய் விலைகளை பார்த்து மிரண்டிடும் இள வயது வாசகர்களை தைரியமாய் இவற்றின் பக்கமாய்த் திருப்பி விட இயலும் ! So ஜேம்ஸ் பாண்டின் புண்ணியத்தில் ஒரு ஆரோக்கியமான side track உருவாகிடும் வாய்ப்புகள் பிரகாசமாய்க் கண்ணில்படுகின்றன !

The Next Big Story :


"உண்டான காண்டு யாவும் தன்னாலே ஆறிப் போகும் மாயம்   என்ன  ? மாயாவி...மாயாவி...?..மாயாவி ...?"

"எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது...!!"

"உந்தன் புக்கை ரேக்கில் பார்க்கும் போது வந்த அழுகை நின்றது..!!"

"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல.....

அதையும் தாண்டிப் புனிதமானது...!"

குணா கமலஹாசன் போல நான் பாதி மறையோடு - "கி.நா. ; வோ.நா ; அக்கன்னா" என்று பெனாத்தித் திரிய - புத்தக விழாவிற்கு வருகை தரும் மூத்த வாசகர்களோ - 'அது கிடக்கு அரைலூசு' என்றபடியே மாயாவிகாருவை மார்போடு அணைத்துக் கொண்டதே இந்தாண்டின் highlight # 2 ! இடையே 2 ஆண்டுகளாய் இந்த மாயாவி மேனியா ரொம்பவே அடங்கி இருந்திருக்க - நடப்பாண்டில் பெரிதாய் மாயாவியின் பொருட்டு நாங்கள் திட்டமிட்டிருக்கவில்லை ! கடந்தாண்டின் விற்பனை எண்ணிக்கையை அனுசரித்து 50 பிரதிகள் மட்டுமே பேக் செய்திருந்தோம் - ஒவ்வொரு மாயாவி டைட்டிலிலும் ! ஆனால் இம்முறை பொங்கோ பொங்கென்று பொங்கித் தீர்த்த மூத்த வாசகர்கள் பிரித்து மேய்ந்து விட்டார்கள் ! And வெண்பொங்கலோடு போணியாகும் மெதுவடையைப்  போல, மாயாவி மாமாவோடு ஸ்பைடர் அண்ணாச்சி ; லாரன்ஸ் அப்புச்சி & ஜானி நீரோ சித்தப்பும் கைகோர்த்துக் கொள்ள - ஓரளவிற்கு இந்த golden oldies சார்ந்த ஸ்டாக் குறைந்துள்ளது ! Of course - மாயாவியின் விற்பனை நான்குக்கு - ஒன்று என்று வேறொரு லெவலில் இருந்தாலும், கடைசி 2 ஆண்டுகளாய்ச் சீந்த ஆளின்றித் தவித்த ஸ்பைடரும், ஜானி நீரோவும் இம்முறை கொஞ்சமேனும் நம் கிட்டங்கியிலிருந்து குடிமாறியிருப்பதில் ஹேப்பி ! And yes - இன்னமும் கணிசமான ஸ்டாக் உண்டு - மாயாவி நீங்கலான இதர Fleetway மறுபதிப்புகளில் ! இதே உத்வேகம் தொடர்ந்து, அந்த ஸ்டாக் கரைய பெரும் தேவன் மனிடோ அருள் புரிவாராக !


And yes - 'என் கடன் மாயாவியை வாங்கி வீடு அலமாரியில் அடுக்கி வைப்பதே !" என்ற முனைப்பிலான வாசகர்கள் இதர contemporary இதழ்களை ஏறெடுத்துப் பார்க்கவும் தயாரில்லை என்பதில் இம்முறையும் மாற்றங்கள் நஹி !!

The Next Big Thing !!

இந்தாண்டின் விற்பனைகளுள் கவனிக்கத்தக்கதொரு இடத்தை வாரிச் சுருட்டியிருப்பவர்கள் நமது அலைகடலின் அசுரர்கள் !! பராகுடாவின் 2 ஆல்பங்களும் ரொம்பவே impressive விற்பனை கண்டுள்ளன எனும் போது - புதுயுக வாசகர்களின் வருகையும் உற்சாகமூட்டும் விதமாய் இருந்திருப்பது புரிகிறது !! பொதுவாய் இந்தக் கோர மூஞ்சிக்காரன்களை அட்டைப்படத்தில் போட்டு வைத்தால் - புத்தக விழாவின் casual readers "ஐயே...." என்று ஒதுங்கிடுவது வாடிக்கை !  ஆனால் இம்முறை பராகுடா சாதித்திருப்பதை மாற்றங்களின் முன்னோடியாய்ப் பார்த்திடத் தோன்றுகிறது !

The Ho..ho..ho..story !!

நெஞ்சைக் குளிர்விக்கும் சேதி இது - அட் லீஸ்ட் எனக்கும், கார்ட்டூன் ரசிகர்களுக்குமாவது !! இந்தாண்டின் overall performance -ஐப் பார்த்திடும் போது கார்ட்டூன் இதழ்களின் செயல்பாடு ரொம்பவே முன்னேறியுள்ளது தெரிகிறது ! எப்போதுமே புத்தக விழாக்களில் கார்ட்டூன்கள் சோடை போனதில்லை தான் ; ஆனால் இம்முறை pretty improved show !! தெறிக்க விட்டு அதனில் முன்னணியில் இருப்பவர் நம்ம லக்கி லூக் தான் ! மாயாவி எவ்விதமோ ; டெக்ஸ் எவ்விதமோ ; ஜேம்ஸ் பாண்ட் 007 எவ்விதமோ - அவ்விதமே இந்த ஒல்லிக்குச்சி கௌபாயும் தனது ஜானரில் இதர ஆசாமிகளை விட எக்குத்தப்பான முன்னணியில் நிற்கிறார் !

அப்புறம் இன்னொரு சந்தோஷச் சேதி - பென்னி சூப்பராய் விற்றிருப்பது ! Of course இதன் பின்னணியில் நமது ஸ்டாலில் விற்பனைக்கு ஒத்தாசை செய்திட முன்வந்திருந்த நம் நண்பர்களின் கைவண்ணம் தெரிவதாய் நான் நினைத்தேன் ! எது எப்படியோ - சுட்டிப் புயல் இம்முறை சுறுசுறுப்புப் புயல் !


அப்புறம் Smurfs ; ப்ளூ கோட் பட்டாளம் ; க்ளிப்டன் ; சிக் பில்  வரிசைகளுமே சோம்பிக் கிடக்காது ரவுசு செய்திருப்பதையும் ; ஹெர்லாக் ஷோம்ஸ் & மேக் & ஜாக் தொடர்கள் - புருவங்களை உயர்த்திடும் விற்பனைகளை நிகழ்த்தி இருப்பதையும் பார்க்க முடிந்துள்ளது ! இதில் விடுபட்டு நிற்பது நம் மதியில்லா மந்திரியார் மாத்திரமே ! அட..லியனார்டோ தாத்தா விற்ற அளவிற்கு கூட மந்திரியார் போணியாகக் காணோம் !

The Surprise Package :

மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி ; அப்புச்சி என்று இந்தாண்டினில் ரிவர்ஸ் கியரை சித்தே பலமாகவே அமுக்கி விட்டோமோ ? என்ற பீலிங்கு நம்மிடையே எழுந்திருப்பின் - அதனை சரி செய்யும் விதமாய் அமையவுள்ளது - தொடர்ந்திடும் stat :


இந்தாண்டின் புத்தக விழா விற்பனையில் மாயாவி ; டெக்ஸ் & லக்கி லூக் வரிசைகளுக்கு  அடுத்தபடியாக விற்பனையில் சாதித்துள்ள தொடர்  எது தெரியுமோ ? Surprise ...surprise ....கிராபிக் நாவல்களே ! பராகுடாவில் துவங்கி, கதை சொல்லும் கானகம் ; கனவுகளின் கதையிது ; தேவ ரகசியம் தேடலுக்கல்ல ; சிப்பாயின் சுவடுகள் (!!) என்று நிறையவே கி.நா. titles அழகான விற்பனை கண்டுள்ளன ! இவற்றுள் ஒரு சில 25 % டிஸ்கவுன்ட்டில் நாம் வழங்கிய இதழ்கள் என்ற முறையில் சாதித்திருக்கலாம் தான்; ஆனால் in general எல்லா கிராபிக் நாவல்களுமே அதிரடி காட்டியிருக்கும் நிலையில் - ஒரு "கி.நா.ஸ்பெஷல் "போடும் நாள் தொலைவில் இல்லியோ ? என்று யோசிக்கத் தோன்றுகிறது !! Winds of change ?

The Sad Story !!

சந்தோஷம் வரும் முன்னே...சங்கடம் வரும் பின்னே....!!

நல்ல செய்திகளை சொன்ன கையேடு இதனைச் சொல்ல கொஞ்சம் தயக்கமாகவே உள்ளது ; ஆனால் கசப்பையும் விழுங்கத் தான் வேண்டுமே ? கொஞ்ச காலமாகவே தொடர்ந்திடும் சமாச்சாரம் தான் - ஆனால் இம்முறை கொஞ்சம் அழுத்தமாகவே தலைதூக்கியுள்ளது, இந்தாண்டின் சென்னை விழா விற்பனைகளில் ! ஜாம்பவான் கதாசிரியரான வான் ஹாமின் லார்கோ வின்ச் தொடரும் சரி ; வெய்ன் ஷெல்டன் தொடரும் சரி ; LADY S தொடரும் சரி - படு சுமாரான விற்பனை கண்டுள்ளன ! ஷெல்டனின் ஆல்பங்கள் in particular படு சொதப்பல் !! சத்தியமாய் ஏனென்று புரியவில்லை ! மண்டை நரைத்த மீசைக்காரர்களை ஹீரோக்களாய் ஏற்றுக் கொள்ளப் பிடிக்கலியோ - என்னவோ என்று குடாக்குத்தனமாய்த் தான் யோசிக்கத் தோன்றுகிறது !! ஆனால் அப்படிப் பார்த்தால் -  கண்ணுக்கு குளிர்ச்சியான LADY S அட்டைப்படத்தில் தலைகாட்டும்  இதழ்களும் தடுமாறத் தான் செய்துள்ளன ! Tough !!!

The எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போயிருக்கார் story :


ஆளோடு ஆளாய் அழகாய்த் தயாராகி, பயணத்தின் போது ஜன்னல் சீட்டைப் பிடித்து ; பட்டணம் போயான பின்னே சமர்த்தாக ரேக்குகளில் குந்தி பராக்குப் பார்த்துவிட்டு ; ஊருக்கு நல்ல பிள்ளைகளாய்த் திரும்பிய தொடர்கள் சில இம்முறையும் உண்டு ! இதோ அவற்றின் பட்டியல் :

டைலன் டாக்

XIII இரத்தப் படலம் 

ஜில் ஜோர்டன்

புருனோ பிரேசில் 

சாகச வீரர் ரோஜர்

கேப்டன் டைகர்  (regular titles ; not the Specials)

மேற்படித் தொடர்களின் சகலத்திலும் இன்னமும் கணிசமான கையிருப்பு இருக்கும் நிலையில் - அரை டஜன் பெண்பிள்ளைகளைப் பெற்ற வயதான தோப்பனாரின் கவலை உள்ளுக்குள் குடிகொள்கிறது !! "இதுகளை என்னிக்குக் கரைசேர்க்கப் போறேனோ ?" என்று டிராமாவில் வரும் அந்தக் காலத்து டாடியைப் போல கண்ணீர் சிந்தத் தோன்றுகிறது !!  பூஹு...!!!

The நான் வளர்கிறேனே மம்மி story :

இதுவரையிலும் தத்தித் தத்தி நடை போட்டுக்கொண்டிருந்த சில தொடர்கள் இம்முறை சித்தே வேக நடை போடப் பயின்றிருப்பது இந்தாண்டின் சந்தோஷங்களுள் இன்னொன்று !! அந்த லிஸ்டில் முதலிடத்தில் நிற்பது கமான்சே !! வழக்கமாய் ரெண்டு புக்...மூணு புக் என்று விற்றிடும் சமாச்சாரமானது இம்முறை இருபது ; முப்பதென்று விற்றுள்ளது ! Maybe இதன் பின்னணியில் அந்த 25% தள்ளுபடி ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம் தான் ; ஆனால் விற்ற மட்டிலும் சந்தோஷம் என்றுள்ளேன் ! திங்கட்கிழமை முதல் நமது ஆன்லைன் விற்பனைகளிலும் இத்தொடருக்கு 25% டிஸ்கவுண்ட் இருந்திடும் - along with a few more titles !!

இந்தாண்டின் அடுத்த வேக நடை பயின்ற பார்ட்டி - ஒற்றைக்கை பவுன்சர் தான் ! வழக்கமாய் இவருக்கும் புத்தக விழாக்களுக்கும் ஏழாம் பொருத்தமே ! ஆனால் இம்முறை - 25% off ஸ்டிக்கரின் புண்ணியத்தில் இவரும் brisk ஆக விற்றுள்ளார் !! ஜெய் ஸ்டிக்கர்பலி !!

பட்டியலின் இடம் # 3 - நமது இளவரசியாருக்கே !! சொற்ப விலையில் இருந்தாலுமே பொதுவாய் இவரது இதழ்கள் அவ்வளவாய் விற்பதில்லையே ? என்பது எனது ஆதங்கங்களுள் ஒன்றாக இருந்து வந்தது ! ஆனால் இம்முறை இளவரசி சோம்பலைக் களைந்திருப்பதில் ஹேப்பி !! இங்குமே ஸ்டிக்கரின் மகிமையா ? என்று சொல்லத் தெரியலை தான் ! ஆனால் புண்ணியத்துக்குக் கறக்கும் மாட்டைப் பல்லை பிடித்துப் பார்ப்பானேன் ?

THE STORY !!!

எந்தவொரு "விழாக் கதையும்" - 'தல' புராணமின்றி இருக்கத் தான் முடியுமா - என்ன ? இம்முறையும் no different !! 'லாலே லா லல்லி லா லா..." என்று பின்னணியில் வாசித்தபடியே பில் போடும் வேலை மாத்திரமே நமக்கிருக்க, டெக்ஸ் & கோ. விற்பனைக்கான சகல வேலைகளையும் தாமாகவே செய்து கொண்டனர் !!  Color டெக்ஸ் ; black & white டெக்ஸ் ; (கார்த்திக் சொன்னது போல) கோ-ஆப் டெக்ஸ் என சகல டெக்ஸ்களும் ஒரே சீரில் விற்றுள்ளன ! அதிலும் கலரில் இருந்த 'தல' இதழ்கள் எல்லாமே blockbusters !! ஆபீசர் அடாவடிக்காரராய் இருந்தாலும், நம்மை அரவணைத்து வழிநடத்தும் அன்பர் என்பதை மறுக்கவோ / மறைக்கவோ வழிகள் லேது !!

And some brief snippets :

*பாக்கெட் சைசிலான ஸ்பைடரின் இதழ் அதகள விற்பனை இம்முறை !!

*MAXI லயனின் இதழ்கள் அனைத்துமே decent sales !! அதிலும் "மனதில் உறுதி வேண்டும்" ஓஹோ ரகம் !

*இம்முறை 2019-ன் ஒட்டு மொத்த இதழ்கள் கொண்டதொரு pack தயார் செய்து கொண்டு வந்திருந்தோம் - ஆறாயிரம் ரூபாய் சுமாருக்கு !! அந்த packs 7 விற்றுள்ளதில் அடியேன் ரெம்போ ஹேப்பி - ஐடியா என்னது எனும் பொருட்டு !!

*டைனமைட் ஸ்பெஷல் - சுத்தமாய்த் துடைத்தாயிற்று !!

*"யாவரும் நலம்" என்றபடிக்கே நார்மலான விற்பனை கண்டுள்ள நாயகர்கள் :

ரிப்போர்ட்டர் ஜானி

தோர்கல்

மர்ம மனிதன் மார்ட்டின்

கேப்டன் பிரின்ஸ்

ட்ரெண்ட் 

தோர்கலின் துவக்க இதழ்கள் ரொம்பவே தடுமாறி வருவது மட்டும் கவலை தரும் விஷயம் !!


*சத்தமின்றி வந்து, மொத்து பல தந்து, இந்தாண்டுமே ஒரு crackerjack துவக்கம் தந்துள்ளார் ட்யுராங்கோ !! விற்பனையில் மனுஷன் கில்லிங்கோ !!

Thus ends my roundup of the Chennai Fair !!

இதோ, அடுத்த சில நாட்களில் சட்டி, பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு நமது காமிக்ஸ் கேரவன் திருப்பூர் நோக்கிப் பயணமாகிறது !! ஜனவரி 30 to  பிப்ரவரி 9 வரையிலும் அங்கே கடைவிரித்துக் காத்திருப்போம் !! Welcome folks !!

"தனியே...தன்னந்தனியே"வின் எடிட்டிங் மட்டும் பாக்கி நிற்பதால் இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் ! You have a lovely weekend all !! Bye for now !!

P.S : இன்னமுமே நமது 2020-ன் சந்தா எக்ஸ்பிரஸில், நண்பர்களின் ஒரு பகுதி இணைந்திடாது இருப்பது சங்கடமாய் உள்ளது ! இன்றைய சூழல்களில் பொருளாதார நெருக்கடிகள் அனைவருக்குமே பொதுவுடைமை என்றான பின்னே, (காமிக்ஸ்) வாசிப்புக்கென ஒரு கணிசமான தொகையினைச் செலவிடுவது சுலபமல்ல என்று புரிகிறது ! எனினும் வருஷங்களாய் கரம்கோர்த்து வந்தோரை இம்முறை மிஸ் செய்வது ஒரு நெருடும் விஷயமாய் இருப்பதால் - சந்தாத் தொகைகளை 3 தவணைகளில் செலுத்தும் சலுகையினை பிரத்யேகமாய் அறிவிக்க நினைக்கிறேன் ! 'ஏக் தம்'மில் பணம் செலுத்தச் சிரமம் காணும் பாக்கி நண்பர்கள் இப்போது ; மே & ஆகஸ்டில் - என 3 தவணைகளில் பணம் செலுத்திடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் ! Hope to see you onboard too folks !!


Before I sign out here's another interesting comics trivia : (நன்றி : நண்பர் ரஃபிக் ராஜா )

டியர் எடி, 

உங்கள் பார்வைக்கு, இதை பற்றிய ஒரு பதிவை கண்டிப்பாக இட வேண்டும்... நம்ம லக்கிலூக் இருக்காரே :)


கலா ரசிகர்கள்.... நம்ம ப்ரெஞ்சுக்காரங்க ! 2020ம் ஆண்டினை கிராபிக் நாவல் ஆண்டாக அறிவிச்சிருக்காங்கன பாருங்களேன் !




பேசாமல் பிரான்சில் கொஞ்ச காலம் ; இத்தாலியில் மீதிக் காலம் என்று குப்பை கொட்டும் தீர்மானத்தோடு புறப்படுவோமா guys ? யார்லாம் வர்றீங்க ? 

270 comments:

  1. என்னடா பண்ணுறது என மண்டைய பிச்சிக்கிட்டு இருந்தேன் நல்லவேளை உங்கள் பதிவு வந்தது; என் மண்டை தப்பியது :-)

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு......

    ReplyDelete
  3. கார்சனின் நண்பர் என்ற அடை மொழி அடியேனின் உபயம்....

    ReplyDelete
    Replies
    1. இக்கதய படிச்சு நீங்க துள்ளிக் குதித்து மறுக்க படிக்கப் போவது டெக்சின் உபயம்

      Delete
  4. விஜயன் சார், நமது காமிக்ஸ் விற்பனை புத்தகத் திருவிழாவில் நன்றாக உள்ளது அதுவும் இதுவரை பின்சீட்டில் உள்ள நாயகர்களும் இடம் பெயர ஆரம்பித்து சந்தோஷமாக உள்ளது.

    ReplyDelete
  5. ஆபீசரின் அடாவடிகள்" ; "சலூனில் சிதறிய சில்லுமூக்கு" என்று விமர்சனம் எழுதிடும் நண்பர்கள் கூட இம்மாதம் தோளில் மஞ்சள் சால்வைகளோடு "ஆபீசரின் அற்புதங்கள்" ; "கார்சனின் நண்பருக்கு மரியாதை" என்று அலசல்கள் எழுதிட நேரிடலாம் என்பேன் ! /// வாய்ப்பில்லை ராஜா...ஹூஹூஹூ...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வாய்பில்லை. சந்தாவில் "B" ஐ கட்டவே இல்லையே, காமிக்ஸை படிச்சதானே பாரட்ட முடியும்?.

      Delete
    2. ரெண்டு நண்பர்களும் ரொம்ப தெளிவாக இருக்கிறாங்க :-)

      Delete
    3. @Ganesh kumar 2635 : தெய்வமே, ஏன் இப்ப டீ டீ டீ டீ

      Delete
    4. ரம்மி சிவப்பு துண்டு போட்டுட்டு படிங்க தானாகவே மஞ்சலாகும்..ஆகாட்டி கேளுங்க... .கனிய ருசிக்காத கணேசனுக்கு வேப்பங்காயாவது ருசிக்கட்டும்

      Delete
  6. கார்சனின் நண்பர், அதிகாரியின் அடாவடி, துஷ்பிரயோக ரேஞ்சர் இதெல்லாம் ஆசிரியருக்கே விட்டு கொடுக்க முடியாத அடைமொழிகள்,

    ReplyDelete
    Replies
    1. இம்மாத இதழ் வரட்டும் பாருங்களேன் சாமீ !

      Delete
    2. // ஆசிரியருக்கே விட்டு கொடுக்க முடியாத அடைமொழிகள், //
      ரொம்பத்தான் பண்ணாதய்யா ரம்மி.....

      Delete
  7. // சந்தாத் தொகைகளை 3 தவணைகளில் செலுத்தும் சலுகையினை பிரத்யேகமாய் அறிவிக்க நினைக்கிறேன் ! //

    அருமையான முடிவு. பல நண்பர்களுக்கு சந்தோஷம் தரும் விஷயம் இது.

    ReplyDelete
    Replies
    1. நல்ல திட்டம். சந்தாவில் இணையாத நண்பர்கள் இணையலாமே.

      Delete
    2. இந்த 3 தவணை சிஸ்டத்தை வரும் ஆண்டுகளுக்கும் தொடரலாம். மொத்தமாக செலுத்த இயலாத நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

      Delete
  8. // சந்தாத் தொகைகளை 3 தவணைகளில் செலுத்தும் சலுகையினை பிரத்யேகமாய் அறிவிக்க நினைக்கிறேன் //
    பல நண்பர்களுக்கு இது நல்ல வாய்ப்பு,பயன்படுத்தி பலன் பெறுவார்கள்....

    ReplyDelete
  9. // டைனமைட் ஸ்பெஷல் - சுத்தமாய்த் துடைத்தாயிற்று !! //
    டைனமைட் விற்பனை டைனமைட்டாக வெடித்ததில் மகிழ்ச்சி.....

    ReplyDelete
    Replies
    1. 2018 செப்டெம்பரில் வெளிவந்த இதழ் என்று ஞாபகம் சார் ! ஒன்றேகால் ஆண்டில் காலியாவது செம சாதனை தான் !

      Delete
    2. @ரம்மி...டைனமைட் வெடிச்சதாவது கேட்டுச்சா..

      Delete
    3. மகேந்திரன் @ ஹலோ ஹலோ சிக்னல் சரியாக இல்லை அதனால் நீங்கள் பேசுறது எதுவும் கேட்கவில்லை என ரம்மி சொல்ல போறார் :-)

      இல்ல என்கிட்ட போனே இல்லைங்க போறார் :-)

      Delete
    4. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு
      வணக்கம்.
      விற்பனையில் சுணக்கம் என்று
      பொத்தாம்பொதுவாக
      XIII இரத்தபடலம் என்று
      குறிப்பிட வேண்டாம்.
      அது இரண்டாம் சுற்றுகதைகள்
      என்று தெளிவாக போடலாம்.
      விற்பனையில் மந்தம் என்று
      கருதியும் அதற்கு 25% டிஸ்கவுண்ட்
      அறிவிக்க மறந்தது ஏனோ.
      வெளியாகி 15 மாதம் கழித்து
      காலலியான டைனமைட்டுக்கே
      இந்த மகிழ்ச்சி என்றால்
      வெளியான ஒருமாதத்துக்குள்ளாக
      விற்பனையில் எவரும் சாதிக்காத
      உயரத்தை எட்டிய 1முதல்18 பாகம்
      உள்ளடக்கிய இரத்தபடலம்
      இனி எவராலும் தகர்க்க முடியாத
      சாதனைக்கு சொந்தக்காரர் நமது
      அன்புக்குரிய XIII ஜேஸன் மக்லேன்
      என்பதை தற்போது தெரிவித்து
      கொள்கிறேன்.

      Delete
    5. கையை குடுங்க KVG

      Delete
    6. // ஒருமாதத்துக்குள்ளாக
      விற்பனையில் எவரும் சாதிக்காத
      உயரத்தை எட்டிய 1முதல்18 பாகம்
      உள்ளடக்கிய இரத்தபடலம்
      இனி எவராலும் தகர்க்க முடியாத
      சாதனைக்கு சொந்தக்காரர் நமது
      அன்புக்குரிய XIII ஜேஸன் மக்லேன்
      என்பதை தற்போது தெரிவித்து
      கொள்கிறேன். //

      உண்மை.
      +1

      Delete
    7. ரம்மி அடுத்த டெக்சும் படித்ததும் கணேசோட சரண்டராவார் இப்படை மூன்னேன்னு பட்சி பறக்குது கோயமுத்தூரூ மூலையிலே...

      Delete
    8. அது அளவுல கம்மிதானே கணேஷ்....ஆனாலும் அதே அளவு ஸ்பின்னுக்கும் முன் பதிவு வந்தா சந்தோசமே

      Delete
    9. இரத்தப் படலம் வண்ண தொகுப்பின் பிரிண்ட்ரன் என்னவோ - அதன் இருமடங்குக்கும் ஜாஸ்தி டைனமைட் ஸ்பெஷலின் பிரிண்ட்ரன் ! XIII ஓடியது 50 மீட்டர் பந்தயத்தில் ! டெக்ஸ் ஓடியுள்ளது 130 மீட்டர் பந்தயத்தில் சார் !

      And ஸ்டிக்கர் ஓட்ட மறந்து போனதை திருப்பூர் துவக்கம் பாக்கி அத்தனை புத்தக விழாக்களிலும் நிவர்த்தி செய்திடுவோம் !

      Delete
    10. Of course - XIII சாதனைகளை நிச்சயமாய் யாரும் மறுக்கப் போவதில்லை ! ஆனால் அவரது விற்பனை வேகத்தையுமே ; டெக்சின் வேகத்தையுமே கூட முறியடித்த இதழ்கள் இரண்டு உள்ளன ! முதலாவது நிஜங்களின் நிசப்தம் & இரண்டாவது மார்டினின் 'மெல்லத் திறந்தது கதவு' இரண்டுமே ரெகுலர் பிரின்டரன்னில் விற்றுத் தீர்ந்தவை !

      Delete
    11. ///டெக்சின் வேகத்தையுமே கூட முறியடித்த இதழ்கள் இரண்டு உள்ளன ! முதலாவது நிஜங்களின் நிசப்தம் & இரண்டாவது மார்டினின் 'மெல்லத் திறந்தது கதவு' இரண்டுமே ரெகுலர் பிரின்டரன்னில் விற்றுத் தீர்ந்தவை !///

      மாடஸ்டியின் 'கழுகுமலைக் கோட்டை' வண்ணப்பதிப்பும் கூட இந்த லிஸ்ட்டில் சேரும்தானே சார்?

      Delete
    12. //Of course - XIII சாதனைகளை நிச்சயமாய் யாரும் மறுக்கப் போவதில்லை ! ஆனால் அவரது விற்பனை வேகத்தையுமே ; டெக்சின் வேகத்தையுமே கூட முறியடித்த இதழ்கள் இரண்டு உள்ளன ! முதலாவது நிஜங்களின் நிசப்தம் & இரண்டாவது மார்டினின் 'மெல்லத் திறந்தது கதவு' இரண்டுமே ரெகுலர் பிரின்டரன்னில் விற்றுத் தீர்ந்தவை !//

      நல்ல சேதி... நல்ல சேதி

      Delete
    13. // XIII ஓடியது 50 மீட்டர் பந்தயத்தில் ! டெக்ஸ் ஓடியுள்ளது 130 மீட்டர் பந்தயத்தில் சார் //
      டெக்ஸ் புக்கை விட 3 மடங்கு விலையுடையதாக இருந்த போதிலும் ஜெயித்த இதழ் சார் இது எனவே இது 150 மீட்டர் ஓட்டம் என கணக்கில் கொள்க...சார் அப்புறம் அந்த 2132 மீட்டர் வேற இருக்கு..

      Delete
    14. வேண்டுமானால் ஒரு 400 முன்பதிவுக்கு மட்டும் இரத்தப்படலம் கலர் மறுபதிப்பு என ஒரு ஓட்டெடுப்பு நடத்தலாமே சார்....நண்பர்கள் ஆசிரியரிடம் கேட்டுவைக்கலாமே....கேட்டதைக்கொடுப்பவர் நம்ம ஆசிரியர் என்ற நம்பிக்கையில்
      XIII பழனிவேல்..

      Delete
    15. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு
      வணக்கம்.
      XIII கலர் இரத்தபடலம் குறைவான
      பிரதிகள் அச்சடிக்கப்பட்டது உண்மை.
      அதேசமயம் அதன் அதிகவிலையையும்
      கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
      இதுபோன்ற விலையில் லயன்&முத்து
      காமிக்ஸ் வந்ததில்லை. 2675 என்ற விலை எட்டிப்பிடிக்க முடியாத சிகரம்.
      ஜேஸன் ஓடியது 50மீட்டர் இல்லை.
      ஆனால் ஓடப்போவது 2132 மீட்டர்.
      இபவின் கால் பங்கு விலையில்
      அதாவது 700/-ஒன்றும் அதிக
      தொகையில்லை.ஆனால் விற்க
      எடுத்துக்கொண்ட காலம் அதிகமே.
      நிநி,மெதிக போன்றவற்றை
      இரத்தப்படலத்துடன் ஒப்பிட்டு அதை
      அசிங்கப்படுத்த. வேண்டாம்.
      உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி
      பருந்தாகாது.இன்றும் இரத்தபடலம்
      முழு தொகுதி ஒரே பைண்டிங்கில்
      என்று அறிவித்தாலும் 500 பிரதி
      விற்பனைக்கு உறுதியளிக்க முடியும்.
      நாங்கள் தயார். நீங்கள் தயாரா???

      Delete
  10. வாவ்...இம்மாம் பெரிய இனிப்பு மாத்திரையா ..

    அருந்தி விட்டு உடனே வருகிறேன் சார்..:-)

    ReplyDelete
    Replies
    1. கண்ணே... கண்ணே... தூங்குறே டைம் ஆச்சே தலீவரே !

      Delete
    2. நீங்க தான் தூங்கறதுக்கு முன்னாடி முட்டாய்யை கண்ணு முன்னாடி தொங்க விட்டிட்டீகளே சார்..:-)

      Delete
  11. // தொய்வென்ற பேச்சுக்கே இடமின்றி 264 பக்கங்களுக்கும் high octane thrills தந்துள்ளார் கதாசிரியர் நிஸ்ஸி ! //
    மிக்க ஆவலுடன் ஒரு காத்திருப்பு....

    ReplyDelete
    Replies
    1. அது என்னவோ தெரியவில்லை நானும் வெயிட்டிங்

      Delete
  12. டெக்ஸின் அட்டைப்படம்.

    ச்சும்மா பளபளவென இருட்டும், வெளிச்சமும் கலந்துகட்டி, ஜொலிஜொலினு ஜொலிக்குது..!

    ஏம்பா..! துப்பாக்கி புடிச்சிருக்கிறவரே..!ஏன் கார்சனையும் கொஞ்சம் குறி பார்த்தா குறைஞ்சா போயிடும்? மனுசன் எவ்ளோ ஃபீல் பண்றாரு பாருங்க..!

    ReplyDelete
    Replies
    1. அதான் இருளில் மைந்தர்கள்ல ஃபீல் பன்னி நட்பின் இலக்கணமா கார்சன் கதறுவாரே

      Delete
  13. ///ஜேம்ஸ் பாண்ட் 007 !! குறைந்த விலையிலான "பட்டாம்பூச்சிப் படலம்" மாத்திரமின்றி, வண்ணத்திலான JB 007-ம் மாஸ் காட்டியுள்ளனர் சென்னையில் !!///

    தூள் கிளப்புங்க பாஸ்..!

    ReplyDelete
  14. ஒரு துளி துரோகம் அட்டைப்படம் செம அசத்தலாக அமைந்து உள்ளது சார்..டெக்ஸ் ,கார்சன் உருவங்கள் நிஜம் போல செம மாஷாக அமைந்துள்ஏது..

    இதழை விரைவில் காண இப்பொழுதே ஏக்கம் பீறிடுகிறது..

    ReplyDelete
  15. விஜயன் சார், இந்த 25% தள்ளுபடி ஐடியாவை இந்த வருடம் நடைபெற உள்ள அனைத்து புத்தகத் திருவிழாகளிலும் செயல்படுத்த உள்ளீர்களா? செயல்படுத்தினால் பல நாயகர்கள் நமது குடோனில் இருந்து வெளியேறும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. இ.கை மாயாவி..!

    சக்கை போடு போடு ராஜா..!
    உன் காட்டூல மழை பெய்யுது..!
    :-)

    ReplyDelete
  17. ///அவ்விதமே இந்த ஒல்லிக்குச்சி கௌபாயும் தனது ஜானரில் இதர ஆசாமிகளை விட எக்குத்தப்பான முன்னணியில் நிற்கிறார் !///

    ஒல்லிக்குச்சி உடம்புக்காரன்..!
    ஒட்டிக்கிட்டா உடும்புக்காரன்..!

    ReplyDelete

  18. ///அப்புறம் இன்னொரு சந்தோஷச் சேதி - பென்னி சூப்பராய் விற்றிருப்பது///

    ஐயாம் எ லிட்டில் ஸ்டார்..!
    ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்..!

    ReplyDelete
    Replies
    1. பென்னி எனக்கும் பிடித்த நாயகனே...இந்த பொடியனை வரவேற்கும் முதல் நபராக நான் முன்னே ...:-)

      Delete
    2. அதாவது பொடியனை வரவேற்கும் பொடியர்?

      Delete
    3. பென்னி க்கு +100

      Delete
    4. பாத்துக்க குட்டிப் பையன்
      லயனோட சுட்டிப் பையன்

      Delete
  19. So ஜேம்ஸ் பாண்டின் புண்ணியத்தில் ஒரு ஆரோக்கியமான side track உருவாகிடும் வாய்ப்புகள் பிரகாசமாய்க் கண்ணில்படுகின்றன

    ######

    இது உடனடியாக பலிக்க வேண்டும் சார்.நாற்பது ரூபாயில் அசத்தலாக அமைந்த இதழாக 007 ஆரம்பித்து வைத்து விட்டார்..இது எப்பொழுதும் தொடர வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. 007 எப்போதுமே எவர் கிரீன் ஹீரோ தான்.

      Delete
    2. //007 எப்போதுமே எவர் கிரீன் ஹீரோ தான்.//
      +1

      Delete
    3. //ஜேம்ஸ் பாண்டின் புண்ணியத்தில் ஒரு ஆரோக்கியமான side track உருவாகிடும் வாய்ப்புகள் பிரகாசமாய்க் கண்ணில்படுகின்றன//

      இதுதான்யா 007 உடைய பவரு... இவர் புண்ணியத்தில் 40 ரூவா ட்ராக்கில், பல ஆதர்ஷ ஹீரோக்களையும் தரிசிக்க முடிகிறது...

      நீர் ரட்சகரய்யா ஜேம்ஸ் பாண்டு❤❤❤💕💕💕

      Delete
  20. .///.லியனார்டோ தாத்தா விற்ற அளவிற்கு கூட மந்திரியார் போணியாகக் காணோம் !///

    நம்பமுடியவில்லை..
    இல்லை..!
    ல்லை..!
    லை..!

    ReplyDelete
  21. இரும்புக்கை மாயாவி ..

    இன்னும் மறுபதிப்பு காணா இதழ்கள் மறுபதிப்பு ஆகும் பொழுது டெக்ஸ்க்கே சவால்விடுவாரோ..


    பார்த்து விடலாம்...!

    ReplyDelete
    Replies
    1. அப்படியே லக்கிக்கும் வாழ்த்துக்கள்..:-)

      Delete
    2. கொரில்லாக்காரங்க சாம்ராஜ்யம் மேக்கர் பாக்கட் சைசு ஸ்பைடர் போல வரட்டும் பாருங்க

      Delete

  22. ///டைலன் டாக்

    XIII இரத்தப் படலம்

    ஜில் ஜோர்டன்

    புருனோ பிரேசில்

    சாகச வீரர் ரோஜர்

    கேப்டன் டைகர் (regular titles ; not the Specials)///

    வந்தது தெரியும்.
    விற்பது எங்கே.?
    வாசல் நமக்கே தெரியலையே..!

    ReplyDelete
    Replies
    1. புருனோ பிரேசில், ரோஜர் ok. ஜில் ஜோர்டன் தனி கதையாக வந்ததா என்ன? எந்த கதை என்று ஞாபகம் இல்லை.

      Delete
    2. கடிதமும், கருப்பு ஓநாயும்.

      Delete
    3. + காவியில் ஒரு ஆவி

      Delete
    4. + துணைக்கு வந்த தொல்லை.!

      Delete
    5. நமக்கும் மேலே ரசிகனடா
      அவன் நாலும் தெரிந்த கலைஞனடா

      Delete
  23. ///கதாசிரியரான வான் ஹாமின் லார்கோ வின்ச் தொடரும் சரி ; வெய்ன் ஷெல்டன் தொடரும் சரி ; LADY S தொடரும் சரி - படு சுமாரான விற்பனை கண்டுள்ளன !///


    என்னை எடுத்து..,
    தன்னைக் கொடுத்து..,
    போனவன்..,போனான்டி..!

    ReplyDelete
    Replies
    1. அவன் ஆர்ச்சியோடு வந்தாலும் வருவான்டி
      சந்தால பந்தாவா தருவாண்டி

      Delete
  24. திருப்பூர் புத்தக காட்சி சென்னையை போல் கலக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  25. ///! ஆனால் இம்முறை இளவரசி சோம்பலைக் களைந்திருப்பதில் ஹேப்பி !!///

    உடல் மண்ணுக்கு..!
    உயிர் மாடஸ்டிக்கு..!
    இதை,
    உரக்கச் சொல்வோம் உலகுக்கு..!

    ReplyDelete
    Replies
    1. GP semma form la இருக்கீங்க.

      Delete
    2. அவுங்க சோம்பலை கலைப்பதை படமாக பேnட்டால் We are happy.

      Delete
  26. சார் உங்கள் கருணையை ஆன்லயனில் வாங்கி மகிழும் நண்பர்களுக்கும் அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    (ஹீ ஹீ பக்கத்து இலைக்கு பாயசம் தான் சார்).

    ReplyDelete
  27. புத்தகத் திருவிழா விற்பனை குறித்த புள்ளி விவரங்கள் மகிழ்ச்சியளிக்கின்றன!

    ReplyDelete

  28. ///Color டெக்ஸ் ; black & white டெக்ஸ் ; (கார்த்திக் சொன்னது போல) கோ-ஆப் டெக்ஸ் என சகல டெக்ஸ்களும் ஒரே சீரில் விற்றுள்ளன ! அதிலும் கலரில் இருந்த 'தல' இதழ்கள் எல்லாமே blockbusters !! ///

    சூரைத் தேங்காய் அட்றா, அட்றா..!
    சூரியனைப் புடிடா புடிடா..!

    ReplyDelete
    Replies
    1. என்னோட ராசி நல்ல ராசி ..எப்பவுமே பெரியவங்க ஆசி..:-)

      Delete
    2. அப்படிதான்..!

      ச்சும்மா கிழி..!

      Delete
    3. டெக்சும மவன் ராசி
      இத்தாலி முழுக்க பேசி
      கெட்டி மேளம் கொட்டி வாசி

      Delete
  29. ஷெல்டன் ,லேடி எஸ்..

    ####₹


    சின்ன வயசுல நான் காமிக்ஸை தேர்ந்தெடுத்து வாங்கும் சமயம் அமைந்து பொழுது ( பழைய புத்தக கடைகளில் பாதிவிலையில் கூட ) அட்டைப்படத்தில் மாடஸ்தி இருந்தால் தள்ளி வைத்து விடுவேன்..காரணம் பொம்பளை படம் புக்கா இருக்கு சண்டைஎல்லாம் இருக்காது .குடும்ப கதை போல இருக்கும் என ஒரு எண்ணம் அப்பொழுது எல்லாம்..

    அது மாதிரி ஷெல்டனுக்கு வயசாயிறுச்சு ,லேடிக்கு பாப் கட்டிங் நல்லாலை ன்னு கூந்தல் ராசியோ என்னவோ..ஷெல்டனுக்கு டை அடிச்சு ,லேடி எஸ்க்கு சவுரி வச்சு பூ வச்சா சரியா போகுமான்னு தெரில..:-(

    ReplyDelete
    Replies
    1. ///அது மாதிரி ஷெல்டனுக்கு வயசாயிறுச்சு, லேடிக்கு பாப் கட்டிங் நல்லாலை ன்னு கூந்தல் ராசியோ என்னவோ..ஷெல்டனுக்கு டை அடிச்சு ,லேடி எஸ்க்கு சவுரி வச்சு பூ வச்சா சரியா போகுமான்னு தெரில..:-( ///

      விட்டா, ரெண்டுபேருக்கும் கல்யாணமே பண்ணி வெச்சுடுவீங்க போல இருக்கே, தலிவரே...🤣🤣

      Delete
    2. என்ன நடக்குது இங்கே... பந்தி எங்கப்பா?

      Delete
    3. தலைவரே எல்லாஞ் சரி....நம்ம அலைவரிசைல ஷெல்டன் மட்டும் மாறுபட்டது...இந்த வயதுல மாடஸ்டிக்கு ஜே

      Delete
  30. ஒரு துளி துரோகம் அட்டைப்படத்தில் ஓவியர் கொஞ்சம் மெனக்கெட்டு உள்ளார்; இரவின் விளக்கு வெளிச்சத்தில் துப்பாக்கியுடன் பேசிக்கொண்டு இருக்கும் டெக்ஸ் மற்றும் கார்சனின் நிழல் அதுவும் அவர்களின் தொப்பியின் நிழலை கூட அருமையாக வரைந்துள்ளார்.

    ReplyDelete
  31. சந்தாதாரர் ஆகிறதுக்கு சலுகை கொடுப்v தை விட சந்தாதாரர்களுக்கு சலுகையை அள்ளி வழங்கலாம்

    ReplyDelete
  32. எடிட்டர் ஆரம்பிச்சு வச்சிட்டார்.கமெண்ட் டைப் செஞ்சா பாட்டு பாட்டாகவே வருது.:-)

    ReplyDelete
  33. ///சத்தமின்றி வந்து, மொத்து பல தந்து, இந்தாண்டுமே ஒரு crackerjack துவக்கம் தந்துள்ளார் ட்யுராங்கோ///

    துப்பாக்கி சத்தத்தில் -என்றும்
    சத்தியங்கள் சாகாது..!

    ReplyDelete
  34. விஜயன் சார், இந்த பதிவில் உள்ள ஆர்ச்சி விளம்பரத்தை பார்த்தால் லாயல் பாயிண்டுக்கு நீங்கள் வேற முடிவு எடுத்தது போல் தெரிகிறது. :-)

    ஆர்ச்சி இந்த வருட சந்தா செலுத்துபவர்களுக்கு என்றால் எல்லா வகையான சந்தா combinationக்கும் உண்டா அல்லது குறிப்பிட்ட சந்தா combinationகளுக்கு மட்டுமா என்று விவரமாகச் சொன்னால், பின்னாளில் தேவையில்லாமல் வரும் குழப்பங்களை தவிர்க்க இயலும்.

    ReplyDelete
    Replies
    1. சார். இந்த வருட லாயல் பாயிண்டுக்குதான் ஆர்ச்சி.

      Delete
    2. கோவிந்தராஜ் @ நீங்கள் சொல்வது போல் இங்கே உள்ள விளம்பரத்தில் தெளிவாக இல்லை என்பதே எனது கவலை.

      Delete
    3. 2020 க்கான சந்தாதாரர்கென தெளிவாகவே சுட்டிகாட்டப்பட்டுள்ளதே சார்.

      Delete
    4. எல போன பதிவ்ல தெளிவா சொல்லிட்டாரேல....லாயல்டி பாய்ண்ட்னா இன்னான்னு தெரியாதவியலுக்கும் தெரியுமேல இந்த விளம்பரம் என்ன சொல்லுதுன்னு அதுக்காகதான் இப்டில...

      Delete
  35. இந்தப் பதிவு ஒருசேர மகிழ்ச்சியையும்,துக்கத்தையும் அளித்தது சார்....
    எப்போதும் எதிர்முனைகள் தவிர்க்க இயலாதது போல......

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம். அருமையான பதிவு.

      Delete
    2. தூக்கத்தைத் தராத வரைக்கும் க்ஷேமம் சார் !

      Delete
    3. உங்கள் பதிவுக்காக காத்து இருக்கும் கூட்டம் சார் இது. பதிவுக்காக விடிய விடிய விழித்து இருந்த நாட்கள் ஒன்றா இரண்டா.

      Delete
    4. ஆ..வூ.. ன்னா மஞ்சக் கொடியெப் பிடிச்சிக்கிட்டே ஆரவாரமா கூட்டங்
      கூட்டமா கிளம்பிடறாங்க !

      Delete
  36. // ஆனால் இம்முறை பராகுடா சாதித்திருப்பதை மாற்றங்களின் முன்னோடியாய்ப் பார்த்திடத் தோன்றுகிறது ! // இதையெல்லாம் நோட் பண்ணி புதுசா ஏதாவது கிராஃபிக் நாவல் போடுங்க சார் இந்த வருடம்.

    ReplyDelete
  37. 25% தள்ளுபடி பயன் படுவது மகிழ்ச்சியே

    ReplyDelete
  38. // இந்தாண்டின் overall performance -ஐப் பார்த்திடும் போது கார்ட்டூன் இதழ்களின் செயல்பாடு ரொம்பவே முன்னேறியுள்ளது //

    உள்ளபடியே மிகவும் மகிழ்ச்சியான செய்தி...

    இந்த நிலை தொடர்ந்தால் 2021ல் கார்ட்டூன்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர வாய்ப்புள்ளது.

    பென்னி, ஸ்மர்ப் மீது 25% தள்ளுபடி உண்டா?

    ReplyDelete
  39. கடைசில என்னையும் சந்தா கட்ட வச்சிடுவிங்க போல சார்....//ஆர்ச்சி கலர்புக்//

    ReplyDelete
  40. ஆர்ச்சி புதிய கதைகள் மாதம் ஒன்று வருவதாக இருந்தால் அதற்கு தனி சந்தா கட்ட தயார்.

    ReplyDelete
  41. சார் மீண்டு/ம் ஓரட்டாகாச பதிவு ஜேம்ஸ் குறித்தெழுதியதில்...டெக்ஸ் கதை இம்மாதம் கார்சனின் கடந்த காலத்த விஞ்சும் போலுள்ளதே.... எனக்குத் தெரிந்து கோவை நண்பர்களில் மூவர் டெக்சு மட்டுமே வாங்கிப் படிக்க விரும்புவர் அதில் ஒருவர் கூடுதலாய் லக்கிய படிப்பார்....அட்டகாசமான வியட்நாமிய கதை விற்றது சந்தோசம்...அது 25 ! தள்ளுபடி தங்கள் லாபத்தில் கை வைத்தாலும் கிட்டங்கி காலியாகும் தங்கள் பெருமூச்சு கண்டு சந்தோசம்....லார்கோ விற்பனை காணாத காரணம் விளம்பரமன்றி ஏதுமில்லை ஆகையால உள்ளே நுழைவோர் கையில் என் பெயர் லார்கோவ விற்பனையில் ஈடுபடுவோர் அவர் அருமை பெருமைய கூறி திணிக்கச் சொல்லுங்க தானே விற்பனைய லார்கோவே பாத்துக்குவாரே...இல்லாட்டி கண்ணைக் கவரும் விளம்பர போஸ்டர் இதன் அருமை பெருமை கூறிய படி நின்றால் நல்லாருக்குமேன்னு....ஆர்ச்சி விளம்பரம் அட்டகாசம்...பாய்ண்ட்ச இழக்க விருப்பமே இல்ல...ஆனா ஆர்ச்சிக்கு ஜே போட வைத்ததால் செலவழிக்கிறேன்....ஜேம்சின் புத்துணர்ச்சிய ஆர்ச்சியும் தர செந்தூரான் அருள வேண்டுகிறேன்....ஸ்பைடர் கொலைப்படையயும் வேகமா விடுங்க சூட்டோடு சூடாக... ஸ்மர்ஃப்ஸ் ஸ்பைடர் சந்தோசம்...நம்ம பரகுடா பட்டய கிளப்பியதால நீங்க ஏற்கனவே சொன்ன கடற் கொள்ளயர முடுக்கி விடலாமே...நல்லா விற்கும் கெட்டபயக சார்....xiiiமிஸ்டரிய ஸ்பெஷல் மட்டும் கிராமிய விலை தொகுப்பு இப போல முன்பதிவுக்கு தரலாம்...ஆர்ச்சி ஸ்பைடர் மாயாவி லாரன்ஸ் ஜேம்ஸ் என்பதுகளின் அதிரடி மீண்டும் அருமை....அந்த கலர் மாயாவி கொரில்லாக்கார சாம்ராஜ்யத்தின சத்தமில்லாமல் திருப்பூர்ல ரிலீஸ் செய்வதா பட்சி பறந்தவாரே பரைந்த சேதி உண்மைதானா...குறிப்பு...பாக்கட் சைஸ் ஸ்பைடர் பட்டய கிளப்பினாலும் கொலைப்படை பெரிய சைசுல வந்தா கூடுதல் கவனிப்பிருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. //கொலைப்படையயும் வேகமா விடுங்க சூட்டோடு சூடாக...//

      கூடவே "பாக்கெட் சைஸில்" என ஒரு வார்த்தையை சேர்த்துடுங்க நண்பரே....

      Delete
    2. இல்லை நண்பரே எம்மாற்றமுமின்றி இந்த ஓரிதழ் மட்டும் பழமய மீட்கும் வண்ணம் வரட்டும்...பிற இதழ்கள வேணுங்ற சைசுல பார்த்துக் கொள்ளட்டும்

      Delete
    3. //xiiiமிஸ்டரிய ஸ்பெஷல் மட்டும் கிராமிய விலை தொகுப்பு இப போல முன்பதிவுக்கு தரலாம்...//xiiiமிஸ்டரிய ஸ்பெஷல் மட்டும் பிரீமிய விலை தொகுப்பு இப போல முன்பதிவுக்கு தரலாம்...

      Delete
    4. ஏ பாருப்பா சூப்பர் மக்கா....

      Delete
    5. தயாராகுக... போராடுக...திரட்டுக...வெல்லட்டுமிப்படை

      Delete
    6. நான் அப்புறமா பரணி கிட்டே பொழிப்புரை கெட்டப் புரிஞ்சுக்குறேன் ஸ்டீல் !

      Delete
    7. பரமனின் விளையாட்டுக்களில் இதுவுமொன்றா.... திருவிளையாடல்

      Delete
  42. நல்ல தரமான பதிவு. காமிக்ஸின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை உணர்கிறேன்... நன்றி நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

    //வான் ஹாமின் லார்கோ வின்ச் தொடரும் சரி ; வெய்ன் ஷெல்டன் தொடரும் சரி ; LADY S

    ப்ளஸ் கேப்டன் டேகர் கதைகள்//

    மேற்கண்ட ஹூரோக்கள், கதைத்தொடர்களை பொறுத்த வரையில் விற்பனை சுணக்கம் கண்டிருப்பது வருத்தம் தரும் விஷயமே. இந்த கதைத்தொடர்களின் வீரியங்களை உணராமல், கடந்து செல்லும் ரயில் நிலையங்களாக பார்வையிடுவதே இதற்கான காரணமாக இருக்கலாம். லார்கோ வின்ச், ஷெல்டனின் சமகால ஓட்டம் வெளியே தெரியாத காரணத்தாலேயே இப்படி நடந்திருக்கக் கூடும். திரைப்படங்களாகவும், தொலைக்காட்சி தொடர்களாகவும் வந்த கேப்டன் டைகருக்கும் இது பொருந்தும்.

    விளம்பரங்கள், கதைச்சுருக்கங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்களுடன் தொடர்பு படுத்துதல் ஆகியவற்றை வீரியமாக தொடங்கினால் மாற்றம், முன்னேற்றமாகலாம்.

    007க்கு விளம்பரம் தேவையில்லை, ஏனென்றால் அவருடைய பப்ளிசிட்டி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் கேப்டன் டைகர், ஷெல்டன், லார்கோக்களுக்கு இன்னமும் பப்ளிசிட்டி கிடைத்தால் ஜெயம் கிட்டலாம் என்பதே சுருக்கம்...

    நனறிகள்

    ReplyDelete
    Replies
    1. லார்கோ சுமார் 15 கதைகள் என்பதும் கூடுதல் சுமையா நினைக்கலாம்....என் பெயர் லார்கோ படிக்கச் சொல்லி விற்றாலே வாங்கிய பாதி பேரை அல்லது கால்வாசியயாவது வாங்க வைத்து விட மாட்டாரா வான் ஹ்ம்ம்...ஷெல்டனின் முதல் கதையும் மறுபதிப்பிடனும்....

      Delete
    2. நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை

      Delete
    3. செனா அனா சார். லார்கோ கதைகளுக்கு ரிவ்யூஸ் போடுங்க. திருப்பூர் புக் ஃபேர்.மற்றும் ஆன்லைன் விற்பனை கண்டிப்பாக சூடுபிடிக்கும்.

      Delete
    4. ஒங்களுக்கு தெரியாத சட்டமில்லை....எதெதுக்கு எந்த சட்டமோ அதப் போடுங்க செனா

      Delete
    5. பிப்ரவரி முதல் ஒவ்வொரு மாதத்திலும், இங்கே நம் வலைப்பக்கத்தில் ஸ்லோவான மூன்றாம் வாரத்தில், லார்கோ / ஷெல்டன் / கமான்சே போன்ற தொடர்களிலிருந்து ஆரம்ப இதழ்களை review செய்திடும் படலங்களைத் துவங்கிட நினைத்துள்ளேன் ! பார்க்கலாமே....!

      Delete
    6. ////செனா அனா சார். லார்கோ கதைகளுக்கு ரிவ்யூஸ் போடுங்க. திருப்பூர் புக் ஃபேர்.மற்றும் ஆன்லைன் விற்பனை கண்டிப்பாக சூடுபிடிக்கும்.///

      ஆஹா!! சூப்பர்!!
      சங்க இலக்கியங்களிலும், புராணங்களிலும் கூட நிச்சயமா லார்கோவைப் பற்றி ஏதாவது இருக்கும்! செனாஅனா தவிர வேறு யாருண்டு - நமக்கு அதையெல்லாம் எடுத்துச் சொல்ல?!! :)

      Delete
  43. // ஒரு "கி.நா.ஸ்பெஷல் "போடும் நாள் தொலைவில் இல்லியோ ? என்று யோசிக்கத் தோன்றுகிறது !! Winds of change //
    போட்டு விடுங்கள் சார். மே ஜூன் மாதத்தில் போட்டால் ஆகஸ்ட் மாதத்தில் ஈரோட்டில் அமோக வரவேற்பு கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அத்தனை தொலைவில் இல்லை ; அதே சமயம் அத்தனை நெருக்கத்திலும் இல்லை நண்பரே !

      Delete
    2. அதே போல 'தொபுக்கடீர்' என்று ஒரு புது திட்டமிடலை ; அதுவும் கிராபிக் நாவல் சார்ந்ததாய் இருக்கும் போது அத்தனை சுலபமாய்ப் போட்டுத் தாக்கிடல் அசாத்தியம் சார் ! இத்தகைய இதழ்களின் பின்னே குறைந்த பட்சம் 6 மாதங்களது யோசனைகள், திட்டமிடல்கள் , பணிகள் என்று பதுங்கியுள்ளன !

      Delete
    3. புரிகிறது சார் நாளுக்கு நாள் உங்களது பணிச்சுமை அதிகரிக்கிறது குறைவதற்கு பதில். நாங்கள் எந்த ஒரு ஸ்பெஷல் வெளியீடு கேட்டாலும் அதற்கு பின் உங்களுடைய கடின உழைப்பு உண்டு. இந்த வருடம் ஏற்கனவே கழுத்தை பிடிக்கும் அளவிற்கு உங்களுக்கு வேலை உண்டு என்பது எங்களுக்கு தெரியும். எனவே காத்து இருக்க தயார்.

      Delete
  44. /// ; ஹெர்லாக் ஷோம்ஸ் & மேக் & ஜாக் தொடர்கள் - புருவங்களை உயர்த்திடும் விற்பனைகளை நிகழ்த்தி இருப்பதையும் பார்க்க முடிந்துள்ளது ! இதில் விடுபட்டு நிற்பது நம் மதியில்லா மந்திரியார் மாத்திரமே ///

    மந்திரியாரின் பெருமைகள் ஆண்டாண்டு கால காமிக்ஸ் ரசிகர்களாகிய நாம் மட்டுமே அறிந்த ஒன்று! புத்தகத் திருவிழாவிற்கு வரும் பொதுஜனம் நமது புத்தகத்தைங்களை புரட்டிப்பார்க்கும்போது, உள்ளே இருக்கும் ஓவிய & கலரிங் பாணியின் தரத்தையே முதலில் மதிப்பீடு செய்யும்! அட்டைப்பட ஓவியமும், தலைப்பும்கூட அவர்களின் தேர்வு செய்யும் காரணிகளில் உண்டு!
    அந்தவகையில் அட்டைப்பட ஓவியமும், உள்ளிருக்கும் கீச்சலான ஓவிய பாணியும் மதியில்லா மந்திரியை பின்னுக்குத் தள்ளுவதாக என்னுடைய அபிப்ராயம்!!

    ReplyDelete
    Replies
    1. ஈவி மந்திரியின் ஓவியமே நம்மள அரேபியா பாக்தாத்துக்கு கொண்டு செல்லுமே....ஓவியம்தா அக்கதைக்கே அச்சாணி

      Delete
    2. நான் சொல்லியிருப்பது ஒரு பொதுஜனத்தின் பார்வையிலிருந்துங்க ஸ்டீல்!

      Delete
    3. ஈவி எந்த செய்தியும் கண்கள கட்டிப் போடும் திறன் இந்த வண்ணத்துக்கும் ஓவியத்துக்கும் உண்டுன்னு நம்புகிறேன்...கதை ஈர்க்கலயோ

      Delete
    4. வாங்குன பின்னே தானே கதை ஈர்த்திடக்கூடும் ஸ்டீல் ? அதற்கு முந்தைய நிலையிலேயே மந்திரியார் அடி வாங்கிடுகிறாரே ?

      Delete
    5. அப்ப அந்த வண்ணமய அட்டகாச ஓவியத்தில் ஈர்ப்பில்லைன்னு நீங்களும் நினைக்கிறீர்களா ஆசிரியரே...

      Delete
  45. //// மாயாவி ; டெக்ஸ் & லக்கி லூக் வரிசைகளுக்கு அடுத்தபடியாக விற்பனையில் சாதித்துள்ள தொடர் எது தெரியுமோ ? Surprise ...surprise ....கிராபிக் நாவல்களே///

    குவிந்துகிடக்கும் ராஜேஸ்குமார், சுபா நாவல்களினூடே பாலகுமாரனின் நாவல்களைத் தேடிப்பிடித்து படிப்போர் ஒரு ரகம் உண்டு! அதைப்போலவே, நம் வழக்கமான ணங்-கும்-சத், கெக்கபிக்கேக்களின் நடுவே அழுத்தமான கதைக்களனைக் கொண்ட கி.நா'களை தேடிப் பிடிக்கிறார்கள் போலும்!! 'லயன் கிராபிக் நாவல்' என்ற அடையாளம் தாங்கிய புத்தகங்களை வாங்குவோர்கள் தாம் 'காமிக்ஸ்' என்ற சிறுபிள்ளை ரேஞ்சிலிருந்து அடுத்தகட்டத்திற்குத் தாவிவிட்டதாக மனதளவில் நினைத்துக்கொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்!

    எது எப்படியோ (எதிர்பார்த்தபடியே) கி.நா'க்கள் பொதுமக்களிடையே வரவேற்புப் பெற்றுவருவது மகிழ்ச்சி!!

    கி.நா'க்களே காமிக்ஸ் உலகை ஆளும் காலம் விரைவில் வரும்!

    ReplyDelete
  46. தோர்களின் முன் கதை அந்த ரம்மியமான உலகங்களுக்குள் நுழைய நண்பர்கள் பாசிட்டிவா உணராததும் எழுதாதும் முக்கிய காரணமே...அதன் அருமை உணர மீண்டும் படித்து எழுதுங்கள்...கடந்த மாதம் படிக்காத கடைசி இரு இதழ்களுடன் ஒட்டு மொத்தமாய் கதையும் படித்ததில் கிடைத்த உணர்வு வார்த்தைகளில் வடிக்க ஏலாது....மாயாஜாலமும் விஞ்ஞானமும் போட்டி போட....இறந்த காலமும் எதிர்காலமும் கை கோர்க்கும் தேடும் தொடுவானத்தின் மைய ஈர்ப்பு புள்ளிதான் தேர்கள் என்பத ஒட்டு மொத்தமாய் படிச்சி பாத்தா புரியும் நண்பர்களே....மீண்டுமொருமூறை மொத்தமாய் சு/வாசிச்சுதான் பாருங்க மூச்சு விட மறந்துடாம

    ReplyDelete
    Replies
    1. மூச்சு விடவும் மறந்திட வேண்டாம்....தோர்கலுக்குத் 'துணைக்கால்' போடவும் மறந்திட வேண்டாமே ஸ்டீல் ?

      Delete
    2. சார் கடவுள சுமந்து செல்லும் தேர்கள் போல நம்ம சந்தோசத்த சுமந்து செல்வதாலும் ....எல்லாரும் கூடி இழுத்தாதான் நகரும்கிறதாலும்...நாம இழுக்கறதால கால் தேவைங்றதாலும் தேர்கள்னும் சொல்லலாம்😁😂😇

      Delete
  47. சென்னையில் நான் ஸ்டாலில் இருந்த அரைநாளில் விற்பனையில் பட்டையை கிளப்பிய மூவர் 007& மாயாவி & டெக்ஸ்
    இம்முறை மறுபதிப்புகளும் களை கட்டியது விஷ்வநாதன் என்கிற மூத்த வாசகர் மறுபதிப்புகள் அனைத்திலும் தலா இரண்டு வாங்கினார் 007 களம் இறங்கியிருப்பது அவருக்கு மட்டற்ற மகிழ்சியையும் ஆர்ச்சியின் மறுவரவு இன்ப அதிர்ச்சி கொடுத்திருப்பதாக தெரிவித்தார்

    ReplyDelete
  48. இரத்தக் கோட்டை போன்ற டைகர் கதைகளுக்கும் 25%தள்ளுபடி கிடைக்குமா சார்?

    ReplyDelete
  49. Pattu special .Mangal mukame varuka karur raja sekaran

    ReplyDelete
  50. ////ஜாம்பவான் கதாசிரியரான வான் ஹாமின் லார்கோ வின்ச் தொடரும் சரி ; வெய்ன் ஷெல்டன் தொடரும் சரி ; LADY S தொடரும் சரி - படு சுமாரான விற்பனை கண்டுள்ளன ! ஷெல்டனின் ஆல்பங்கள் in particular படு சொதப்பல் !!////

    காரணங்களாய் நான் யூகிப்பவை:

    * பொது ஜனத்திற்கு வான் ஹாம் பற்றியோ அவரது கதை சொல்லும் திறன் பற்றியோ அறிந்திருக்க வாய்ப்பில்லை!

    * மேற்கூறிய காரணங்களே லார்கோ, ஷெல்டன், லேடி-S ஆகிய நாமகரணங்களும் பொருந்தும்

    * மேற்கூறியவர்களின் கதைகள் எல்லாமே சககாலத்தில் நிகழ்பவை - பெரும்பாலும் நகர வாழ்க்கை பற்றியதே! (ச்சும்மா ஒருமுறை புரட்டினாலே உள்ளிருக்கும் ஓவியங்களைக் கொண்டு இவற்றை கணித்துவிடமுடியும்). ஏற்கனவே நகர வாழ்க்கையால் அலுத்துப்போயிருக்கும் மக்களுக்கு இவை ஈர்ப்பின்றிப்போக வாய்ப்பிருக்கிறது!

    * சமகால கதைகள் என்றாலே 'அப்படியாப்பட்ட' காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது என்று பொதுஜனம் யூகிக்கிறது! முதல் புரட்டலில் கண்ணில்படும் நவநாகரீக உடைகளும், திடீரென்று உடைகள் காணாமல் போவதும் - அவர்களது யூகத்தை உறுதி செய்திட, புத்தகம் எடுக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் அவசரஅவசரமாக வைக்கப்படுகிறது!

    ReplyDelete
    Replies
    1. "ஆனால், 007ன் கதைகள் கூட சமகாலத்திய, நகர வாழ்க்கை தொடர்பான கதைகள் தானே.. அதிலும்கூட 'அப்படியாப்பட்ட' காட்சிகள் உண்டே? இருந்தாலும் விற்பனையில் சாதிக்கிறதே?" என்று நமக்குள் கேள்வியெழுந்தால் அதற்கான பதில் - "மை நேம் ஈஸ் பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட்"

      Delete
    2. பிரிண்ட் ரன்னை குறைத்து விலையை ஏற்றலாம். மேக்ஸி சைஸ், பெரிய சைஸ் தேவையில்லை. எல்லாவற்றையும் டெக்ஸ் புக் சைஸிற்கு மாற்றி, பக்கத்திற்கு 6 கட்டங்கள் என்று போடலாம். விலையை 20% ஏற்றி இன்னும் தரமான புத்தகங்களாக தரலாம். பொதுவாக இராணி காமிக்ஸ் சைஸில் போடுவது பெட்டர் என நினைக்கிறேன்.

      Delete
  51. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. சென்னை புத்தக விழாவில் 'அம்புலிமாமா கிடைக்குமா?' என்று கேட்டுவந்தவர்களும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் உண்டு!!

    அடுத்து நான் உச்சரிக்கப்போகும் பெயர் புத்தகத் திருவிழாக்களில் அடிக்கடி விசாரிக்கப்படுவர் தான் எனினும், இம்முறை கொஞ்சம் தூக்கலாகவே விசாரிக்கப்பட்டதும் ஆச்சரியமே! அவர்..

    'வேதாள மாயாத்மா' என்றழைக்கபடும் PHANTOM!!

    ReplyDelete
  52. சார் ஆர்ச்சியோட இவ்விளம்பரம் கிடைக்குமா

    ReplyDelete

  53. //*பாக்கெட் சைசிலான ஸ்பைடரின் இதழ் அதகள விற்பனை இம்முறை ///

    நான் 5 காப்பி வாங்கி இருக்கேன் . புக் சைஸ் , கிளாரிட்டி, கதை எல்லாம் சூப்பர்.

    முடியும் பட்சத்தில் மறுபதிப்புகளை பாக்கெட் சைஸை விட கொஞ்சம் பெரிய சைஸில் பைண்டிங்குடன் போடவும். விலையும் குறைவாக அருமையாக இருக்கும். 3 அல்லது 4 கதைகளை சேர்த்து ஸ்பெஷல் மறுபதிப்புகளாக போடாலாம்.

    ReplyDelete
  54. 8 கோடி மக்கள்தொகை கொண்ட நம் மாநிலத்தில் 4000 காப்பிகள்‌ பிரிண்ட் அடிக்கப்பட்ட நல்ல தரமான தமிழ் காமிக்ஸை வாங்குவதற்கு பர்ஸை திறக்க மறுக்கிறார்கள் என்பது ஒரு வேதனையான விஷயமே.

    ReplyDelete
    Replies
    1. உண்மை இன்னும் பலருக்கு காமிக்ஸ் என்பது சிறுவர் படிக்கும் பொம்மை புத்தகமே.

      Delete
  55. இந்த வருடம் ரெகுலர் சந்தா வில் 46 இதழ்கள். ஜம்போ வில் 6 என்று வைத்து கொண்டாலும் மொத்தம் -52 இதழ்கள். இது மட்டும் இன்றி ஆகஸ்ட் மாதத்தில் கேப்டன் டைகர் ஸ்பெஷல். பற்றா குறைக்கு கொரில்லா சாம்ராஜ்யம் கலரில், சந்தா நண்பர்களுக்கு கலர் ஆர்ச்சி, ஸ்டீல் கேட்ட கொலைபடை இது மட்டும் இன்றி விலை இல்லா டெக்ஸ் -4. மொத்தம் 60 இதழ்கள் எனக்கு தெரிந்து எந்த வருடத்தை விடவும் இது மிக மிக அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. போதாக்குறைக்கு (இயல்பாகவே வரப்போகும்) 'நாலு மில்லியன் ஸ்பெஷல்'! ஹிஹி!!

      Delete
    2. அப்போ நீங்க அந்த நாலு மில்லியன் ஸ்பெஷல் ஐ விடுவதாக இல்லை?

      Delete
    3. அடுத்த மாதமே அஞ்சு மில்லியன் வரப் போவுதாமே

      Delete
  56. வேண்டுமானால் ஒரு 400 முன்பதிவுக்கு மட்டும் இரத்தப்படலம் கலர் மறுபதிப்பு என ஒரு ஓட்டெடுப்பு நடத்தலாமே சார்....நண்பர்கள் ஆசிரியரிடம் கேட்டுவைக்கலாமே....கேட்டதைக்கொடுப்பவர் நம்ம ஆசிரியர் என்ற நம்பிக்கையில்
    XIII பழனிவேல்..

    ReplyDelete
  57. இன்றும் அந்த இதழை வாங்க தவறவிட்ட நண்பர்களின் ஏக்கங்களை கேட்டதனாலும் புத்தகதிருவிழாவில் வரும் நண்பர்கள் கேட்டதினாலும் ஒரு கோரிக்கை சார்..இரத்தப்படலம் கலர் எடிஷன் ஒரு குறிப்பிட்ட முன்பதிவுக்கு பின் வெளிவர சாத்தியமா....வாங்குவதற்க்கு நண்பர்கள் முன்வந்தால்....உங்களது அறிவிப்பிற்க்காக
    XIII பழனிவேல்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ////இன்றும் அந்த இதழை வாங்க தவறவிட்ட நண்பர்களின் ஏக்கங்களை கேட்டதனாலும் புத்தகதிருவிழாவில் வரும் நண்பர்கள் கேட்டதினாலும் ஒரு கோரிக்கை சார்..///

      உண்மை!! இந்தமுறை CBFக்கு வந்திருந்த சில நண்பர்களும்கூட தாங்கள் வாங்கத் தவறிவிட்டதை அழாதகுறையாகச் சொல்லிப் புலம்பினர்!

      Delete
  58. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு
    வணக்கம்.
    XIII கலர் இரத்தபடலம் குறைவான
    பிரதிகள் அச்சடிக்கப்பட்டது உண்மை.
    அதேசமயம் அதன் அதிகவிலையையும்
    கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    இதுபோன்ற விலையில் லயன்&முத்து
    காமிக்ஸ் வந்ததில்லை. 2675 என்ற விலை எட்டிப்பிடிக்க முடியாத சிகரம்.
    ஜேஸன் ஓடியது 50மீட்டர் இல்லை.
    ஆனால் ஓடப்போவது 2132 மீட்டர்.
    இபவின் கால் பங்கு விலையில்
    அதாவது 700/-ஒன்றும் அதிக
    தொகையில்லை.ஆனால் விற்க
    எடுத்துக்கொண்ட காலம் அதிகமே.
    நிநி,மெதிக போன்றவற்றை
    இரத்தப்படலத்துடன் ஒப்பிட்டு அதை
    அசிங்கப்படுத்த. வேண்டாம்.
    உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி
    பருந்தாகாது.இன்றும் இரத்தபடலம்
    முழு தொகுதி ஒரே பைண்டிங்கில்
    என்று அறிவித்தாலும் 500 பிரதி
    விற்பனைக்கு உறுதியளிக்க முடியும்.
    நாங்கள் தயார். நீங்கள் தயாரா???

    ReplyDelete
    Replies
    1. 'இரத்தப் படலம்' இப்போதும் புத்தகத் திருவிழாக்களில் அதிகம் விசாரிக்கப்படும் ஒரு புத்தகமே!! மீண்டும் ஒரு வண்ண மறுபதிப்பு சாத்தியமென்றால் CBF போன்ற பெரிய விழாக்களில் நிச்சயம் கணிசமான விற்பனையை காணும்!

      500 பிரதிகள் வெளியாகுமானால் ஒரு வருட காலத்தில் மொத்தமும் காலியாகிட வாய்ப்பிருக்கிறதென்பது என் கணிப்பு! ஒரு மாற்றத்திற்கு 18 பாகங்களையும் ஒரே புத்தகமாகப் போடலாம்.. ஏற்கனவே வைத்திருப்பவர்களில் சிலரும் கூட இந்த 'ஒரே குண்டு புக்கு'க்காக இன்னொரு பிரதி வாங்க வாய்ப்புண்டு!!

      Delete