Saturday, November 09, 2019

ஒரு ஆந்தைவிழி அலசல் !

நண்பர்களே,

வணக்கம். லெமூரியா கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட வேளைதனில் இந்தாண்டின் தீபாவளி மலர் வெளியானது போலொரு பிரமை எனக்குள் ! படித்தும், அலசியும் முடித்த பிற்பாடு ஆளாளுக்குக் கொட்டாவி விட்டு நாட்களைக் கடத்துவது புரிகிறது ! So என் பார்வையில் நவம்பர் இதழ்களை அலசினாலென்னவென்று தோன்றியது ! இந்த ஞாயிறு அதற்கென guys !!

To start off - "துரோகமே துணை !!" ஷெல்டனின் இந்த சாகஸத்தின் மெய்யான ஹீரோ கதாசிரியர் வான் ஹாம் தான் என்றமட்டில் எனக்கு no சந்தேகம்ஸ் ! கொடைக்கானலுக்குச்  செல்லும் மலைப்பாதையின் கொண்டைஊசி வளைவுகளைப் போல் கதை நெடுக அள்ளித்தெளித்திருக்கும் ட்விஸ்டுகள் இந்த மனுஷனுக்கு மட்டுமே சாத்தியம் ! 'ஷெல்டனுக்கு மிக்ஸர் சாப்பிடுவதைத் தாண்டி பெருசாய் வேலையில்லை ' என்று நண்பர்களில் சிலர் அபிப்பிராயப்பட்டதைக் கவனிக்க முடிந்திருந்தது ! கதை பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க நாயகர் மிக்ஸர் சாப்பிட்டாலென்ன - குஸ்கா சாப்பிட்டாலென்ன guys ? தம்மாத்துண்டு கதைக்குள் ஒரு லோடு ஆக்ஷனை இறக்கி கதை பின்னுவது ஒரு குப்பனுக்கும், சுப்பனுக்கும், விஜயனுக்கும், சாத்தியமாகிடலாம் ; ஆனால் தீர்க்கமாய் கதையின் பல்வேறு முடிச்சுகளையும் ஒன்றிணைத்து இத்தகையதொரு கதையை உருவாக்குவது சுலபமே அல்ல !! ஷெல்டனின் தொடரில் ஆரம்பத்து promise பின்னாட்களது ஆல்பத்தில் அத்தனை வலுவாய்த் தொடர்ந்திடவில்லை என்பது எனது அபிப்பிராயம் ! அதுவும் சமீபமாய் வெளியான "மரணம் ஒருமுறையே !" ரொம்பவே உப்மா என்பதில் சந்தேகமே இருக்க முடியாது ! So அதன் அடுத்த ஆல்பம் இப்படியொரு தெறிக்கும் த்ரில்லராய் இருப்பது என்னளவிற்காவது செம சர்ப்ரைஸ் ! அப்புறம் தொடரின் அடுத்த ஆல்பம் (நம்பர் 14) அநேகமாய் 2020-ன் இறுதியில் வெளிவரும் சாத்தியங்கள் பிரகாசம் ! And வழக்கமான வான் ஹாம் (கதாசிரியர்) + க்ரிஸ்டியன் டினாயே (ஓவியர்) கூட்டணி தொடர்வதால் all is well என்றே தோன்றுகிறது ! இதோ தயாராகி வரும் அந்த ஆல்பத்தின் டிரெய்லர் !
பின்னே இம்மதத்து ஷெல்டனில் ஒரு இக்ளியூண்டு ரகசியமுள்ளது  - நம்மளவில் ! இதன் மொழியாக்கம் ஓராண்டுக்கு முன்பே நண்பர் ஆதி தாமிராவால் செய்யப்பட்டது ! சமீப நாட்களில் நண்பர் சற்றே பிசி என்பதால் இங்கு எட்டிப்பார்ப்பதில்லை ; but அவர் சார்பில் அவரது பேனாவாவது ஆஜராகியுள்ளமட்டிற்கு மகிழ்ச்சி ! கதை நெடுக ஆளாளுக்கு பக்கம் பக்கமாய் 'பராசக்தி' பட ரேஞ்சுக்கு வசனங்கள் பேசினாலும் - சுவாரஸ்யமான கதை என்பதால் பெருசாய் அயர்ச்சி தோன்றிடவில்லை ! So எனது பார்வையில் "துரோகமே துணை" - "கதைக்கே ஜெயம்" என்ற தீர்ப்போடு "ஹிட்' ரகத்தினில் !! 

கார்ட்டூன் தரப்பில் "காரோட்டி க்ளிப்டன்" மீசையை முறுக்கும் "விடுமுறையில் கொல்" no doubt a pleasant read !! அந்த சித்திர பாணி ; கண்ணுக்கு இதமான கலரிங் பாணி ; மீசைக்காரரின் முகம் அஷ்டகோணலாகும் அழகு என்று ரசிக்க நிறையவே விஷயங்கள் இருப்பது கண்கூடு ! ஆனால் கார்ட்டூன் எனும்போதே ஒரு சிரிப்பு மேளாவை எதிர்பார்க்கும் நமது பாங்குகளை சற்றே மனதில் ஓட்டிப்பார்த்த போது எனக்கு கொஞ்சம் வியர்த்துப் போனதென்னவோ உண்மையே ! ஆனால் அந்த அகதா பாட்டிம்மா கதை நெடுக இருக்கப் போய் மீசைக்காரரின் தலை தப்பியது என்றே எனக்குத் தோன்றியது ! But still துளியும் சேதமின்றி இந்த பிரிட்டிஷ் சார்வாளை அடுத்தாண்டுக்கு promote செய்துள்ள உங்களின் ratings மெய்யான ஆச்சர்யம் தந்தது எனக்கு !! கரடு முரடான நாயகர்களின் 'அவனை உதை ; இவனைக் கொல்லு ; அந்த அப்பத்தாவைக் குத்து !' ரீதியிலான கதைகளுக்கு மத்தியில் க்ளிப்டன் மாதிரியான breezy reads வெயிலின் காட்டத்தைப் போக்க வந்த சாரலாய்த் தோன்றுகிறதோ என்னவோ !! எது எப்படியோ - மீசைக்கார் lives to fight crime another day ! என்னளவில் 2020-ன் சந்தாவில் இருந்த 2 RAC சீட்டுகளுள் ஒன்று confirm ஆகிவிட்டது !  ரிங்கோ பற்றிய தீர்மானத்தை டிசம்பரில் (நல்லவிதமாக) எடுக்க சாத்தியமாயின் - 'உலகத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக - மாற்றமேயின்றி ஓராண்டின் அட்டவணை  நனவானது' போலிருக்கும் !! Fingers crossed !!

வெங்காய வெடிகளும், பிஜிலிகளுமாய் தென்பட்ட 2 இதழ்களோடு கூரியரில் சேர்ந்து பயணித்த "லயன் தீபாவளி மலர்" ஒரு ஆயிரம்வாலாவாய்க் காட்சி தந்ததில் வியப்பில்லை தான் ! நீண்ட நெடுங்காலம் ஆகிவிட்டது தானே - பருமனில் இத்தனை வல்லியதொரு இதழ் வெளியாகி ?  நிஜத்தைச் சொல்வதானால் இதுவே வண்ணத்தில் சாத்தியமாகியிருப்பின் நிஜமான பத்தாயிரம்வாலாவாக உருமாறியிருக்கும் தான் ! ஆனால் பட்ஜெட் ஒருபுறமிருக்க - அந்த 5 கதைகளுள் டெக்சின் சாகசம் மாத்திரமே கலரில் உள்ளது ! So நம்மிடம்  பைக்குள் தயக்கங்களின்றிக் கைவிடும் திறன் இருப்பினுமே - பருப்பு வெந்திராது ! So 'கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு ' என்பதே நம் தாரக மந்திரம் இங்கு ! 

ஆட்டத்தைத் துவக்கும் 'தல' என்னளவில் இங்கொரு மிதவேக ஜாலத்தையே கண்ணில் காட்டியுள்ளார் என்பேன் ! பொதுவாய் பெரியவர் போனெல்லி + சீனியர் ஓவியர் காலெப்பினி கூட்டணியானது எண்ணற்ற blockbuster ஹிட்களை வழங்கியுள்ள ஜோடி ! So நிறைய நேரங்களில் இவர்களிடம் நான்(ம்) எதிர்பார்ப்பது இன்னொரு 'தலைவாங்கிக் குரங்கையோ' ; 'டிராகன் நகரையோ' தான் ! ஆனால் மிருகவதைத் தடைச் சட்ட அமலுக்குப் பின்பாய் பாவமாய்க் காட்சி தரும் நம்மூர் சர்க்கஸ்களை போல சுமாரான ஆக்ஷனோடு நகன்ற கதையில் லேசான நெருடல் எனக்கு  ! இக்கதைத் தேர்வின் போது mormon மக்களிடையே ஒரு எத்தர்  கும்பல் என்ற ரீதியிலேயே எனது புரிதலிருந்து ! Mormons ரொம்பவே மர்மமானதொரு கூட்டம் எனும் போது கதையில் அவர்கள் சார்ந்த twists இருக்கக்கூடுமென்று எதிர்பார்த்திருந்தேன் ! Sadly that wasn't the case ! ஆனால் 'தல' இதுவரையிலும் தலைகாட்டியிரா முற்றிலும் புதிய களத்தில், சர்க்கஸின் பின்புலத்தில், துளித் தொய்வுமின்றி  கதை பயணித்த பாணிக்கு thumbs up ! நான் போடும் மார்க் 6.5 /10.

இந்த இதழின் highlight ஆகியிருக்க வேண்டியதும் ; நிஜத்தில் dimlight-ல் காட்சி தந்ததும் மர்ம மனிதன் மார்டினின் "விசித்திர உலகமிது' சாகசம் தான் என்பதில் எனக்கு சந்தேகமே நஹி ! மரபணு மாற்றம் கண்ட mutants என்ற ரேஞ்சில் காரணம் சொல்லப்பட்டாலும் கொல்கத்தாவில் ஒரு தாடிவாலா - தீபாவளி ராக்கெட்டைப் போல 'சொய்ங்க்க்க்' என்று வானத்தில் பறப்பதும் ; Men in Black வடிவேலு படத்தில் வரும் போண்டா மணி போல மண்ணைக் கவ்வுவதும் ; மார்ட்டினின் காதலுக்காக ஆளாளுக்குப் போட்டி போடுவதும் ; க்ளைமாக்சில் ஐ.நா சபையில் நடக்கும் கூட்டத்திற்கு ஆளாளுக்கு மொய்விருந்துக்குப் போகும் லாவகத்தோடு புகுந்திடுவதும்  ரொம்பவே நெருடியது எனக்கு ! நமது die -hard  மார்ட்டின் ரசிகர்கள் இதனையுமே சிலாகித்துவந்தாலும் - "மெல்லத் திறந்தது கதவு" ; "இனியெல்லாம் மரணமே" ; "கனவின் குழந்தைகள்" போன்ற awe inspiring கதைகளுக்கு முன்னே இது ரொம்பவே பின்தங்கி நிற்பதாய் எனக்குத் தோன்றியது ! மார்ட்டினின் பலமே விஞ்ஞானம் ; மெய்ஞானம் + வரலாறு என்றதொரு வித்தியாசக் கலவையே ! ஆனால் இங்கே Mutants  என்ற ஒற்றை முடிச்சைத் தாண்டி பாக்கி எல்லாமே கமர்ஷியல் சமாச்சாரங்களாய் இருப்பதே நோவின் பின்னணி என்று பட்டது ! 350 + கதைகள் இருக்கும் மார்ட்டினின் தொடரினில் கதைத் தேர்வானது சுலபக்காரியமாய் இருக்கவே மாட்டேன்கிறது என்பதே இங்கு நான் மிரட்சியோடு கால்பதிக்கும் காரணம் ! தவிர இந்த கறுப்புச் சட்டையணிந்து திரியும் MEN IN BLACK கும்பல் மீது மார்ட்டினின் படைப்பாளிகளுக்கு உள்ள அந்த மையல் புரியவும் மாட்டேன்கிறது ! ஆண்டுக்கு இவருக்கான ஸ்லாட்களைக் கூட்டக் கோரி நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை நான் கண்டும், காணாதிருக்கும் பிரதான காரணம் இது போன்ற கதைகள் சார்ந்த மிரட்சியே !! 

தீபாவளி மலரின் பாக்கி 3 கதைகளுமே எனது பார்வையில் அதிர்வேட்டுக்கள் !! CID ராபினின் 'கொலை கொலையாய் முந்திரிக்கா ' போலீஸ் எப்போதுமே ஒரு ஸ்டெப் பின்தங்கியே நிற்பது போல் சித்தரித்தாலும் - யதார்த்தங்களின் பிரதிபலிப்பாகவே நான் பார்த்தேன் ! ஓவரான முடிச்சுகள் நிறைந்த plot என்றில்லாது - தெளிவாய், தட தடவென ஓட்டமெடுக்கும் ரகம் என்பதால் ரொம்பவே சுலபமாய் பக்கங்களைப் புரட்டச் செய்தது - at least என்மட்டில் ! "ஆண்டுக்கொரு ஸ்லாட்" என்ற கோட்டாவுக்கு நியாயம் செய்த சாகசம் ! My rating 7 /10.

போன வருஷம் அட்டவணையை அறிவித்த சமயமே எனக்குள் ஒரு லேசான பர பரப்பை உண்டாக்கிய கதை டைலன் டாக்கின் "சிகப்பு ரோஜாக்கள்" தான் ! இது டைலன் 2.0 என்பது ஒருபக்கமிருக்க - குறிப்பிட்ட இந்தக் கதை ஏகமாய் பாராட்டுகளை இத்தாலிய ரசிகர்களிடம் பெற்றிருந்ததை கவனிக்க முடிந்தது ! So நிச்சயமாய் இங்கே ஆழமான concept ஏதேனும் இருக்குமென்ற நம்பிக்கை எனக்குத் தீவிரமாய் இருந்தது ! And  இந்தக் கதையினில் பணியாற்றும் போதே அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை என்பது புரிந்தது ! என்ன - க்ளைமாக்சில் சன்னமாய் ஒரு ட்விஸ்ட் எனது கைவண்ணம் ! கதையின் நம்பகத்தன்மைக்கு அது சற்றே உதவியது என்று சொல்லலாம் ! டைலனுக்கு ஆண்டுக்கொரு slot ; அல்லது இரண்டு இடங்கள் என்று 2021 முதல் திட்டமிடலாம் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்துள்ள கதையிது ! 8 /10 !

பென்சில் அழகி ஜூலியா சத்தமின்றி இம்முறை சாதித்துக் காட்டியதில் எனக்கு நிறைய சந்தோஷம் + கொஞ்சமாய் வருத்தம் ! இந்தக் கதையினை நிறையவே research செய்த பிற்பாடு தான் தேர்வு செய்தேன் என்றதால் - இங்கே என்ன எதிர்பார்ப்பதென்பதில் எனக்கு அத்தனை குழப்பம் இருந்திடவில்லை ! சொல்லப் போனால் இன்னமுமே வீரியமானதொரு க்ளைமாக்ஸை இங்கு நான் எதிர்பார்த்திருந்தேன் தான் ! ஆனால் கதாசிரியர் முற்றிலும் வேறொரு தினுசில் அங்கொரு ட்விஸ்ட் வைத்து முத்திரை பதித்திருந்தார் ! சந்தோஷக் காரணிகள் இவை என்றாலும், ஜூலியா தொடரினில் எனக்கு சில மெல்லிய நெருடல்கள்  இல்லாதில்லை ! And இந்த ஆல்பத்தில் பணி செய்யும் போது அந்த நெருடல்கள்  highlight ஆகிக் கண்ணில்பட்டன எனக்கு ! அவற்றையெல்லாம் எடிட்டிங்கில் ஏதேதோ செய்து நான் மூடி மறைத்திருந்தாலும் - இதுவரைக்குமான நாம் வெளியிட்டுள்ள 4 ஜூலியா சாகசங்களிலுமே அதுவொரு தொடர்கதையாகி நிற்பது உறுத்துகிறது ! ஜூலியாவின் தோழியாக வரும் அந்தக் கறுப்புப் பெண் கதை நெடுக போடும் மொக்கைகளை ஏனோ கதாசிரியர் தொடர்ந்திடுகிறார் ! ஒவ்வொருமுறையுமே அது நமக்கு நெருடுவதால் எடிட்டிங்கில் தான் கை வைக்க நேர்கிறது ! அப்புறமாய் டிபார்ட்மெண்டில் இன்ஸ்பெக்டராக வரும் அந்த வழுக்கை ஆசாமிக்கு ஜூலியா மீதொரு மையல் ஒவ்வொரு கதையிலும் ஏதேதோ விதங்களில் வெளிப்படும் விதமாய் ; கதைக்குச் சம்பந்தமே இல்லா விதங்களில் தொடர்கதையாகி வருகிறது ! ஏற்கனவே ஆக்ஷன் குறைச்சலான கதையில், தேவையில்லா இத்தகைய side tracks வேகத்தை மேற்கொண்டும் மட்டுப்படுத்துவதால் அங்கேயும் எடிட்டிங் அவசியமாகிடுகிறது ! தவிர கொஞ்சம் தத்துவம் ; கொஞ்சம் கவித்துவம் என்றெல்லாம் கதாசிரியர் நுழைத்திடும் வரிகள் கதைக்கு எவ்விதத்தில் தொடர்புள்ளவை என்று புரிந்து மொழிபெயர்ப்பதற்குள் நாக்கு தொங்கிய விடுகிறது ! "நின்று போன நிமிடங்கள்" நீங்கலாய் பாக்கி 3 ஜூலியா கதைகளிலுமே முழுசுமாய் மொழிபெயர்ப்பில் பிசகின்றிப் பணி செய்துள்ளேனா ? என்ற சந்தேகம் இன்னமும் தொடர்கிறது - simply  becos ஒரிஜினலின் ஸ்கிரிப்ட் அத்தனை complex ! எல்லாவற்றிற்கும் மேலாய் - முந்தைய கதைகளை தொட்டுச் செல்லும் குறிப்புகளோடு ஒவ்வொரு கதையும் நகர்வதால் - நம்மைப் போல நடுவாக்கே வண்டியை விடுவோர்க்கு பேந்தப் பேந்த முழிக்கத் தான் தோன்றுகிறது !! இந்த தீபாவளி மலரின் இதர 4 கதைகளையும் நான்கே நாட்களில் எடிட் செய்திட சாத்தியப்பட்ட எனக்கு ; ஜூலியா விழுங்கிய அவகாசம் ஒரு வாரத்துக்கும் அதிகம் !! ஜூலியா : வாசிக்க சுகமே என்றாலும், மொழிபெயர்பாளருக்கு / எடிட்டருக்கு சிம்ம சொப்பனமே ! But my rating for this : 8 /10 !

இவை எல்லாமே எனது எண்ணங்களே தவிர்த்து ஒரு statement அல்ல guys !! So உங்களின் பார்வைகளோடு எங்கெங்கு ஒத்துப் போகாதிருப்பின், வருத்தம் வேண்டாமே ப்ளீஸ் ! 

Before I sign out - சில பல சுவாரஸ்ய updates : 

**அண்டர்டேக்கரின் ஆல்பம் # 5 ஒரு வாரத்துக்கு முன்னே பிரெஞ்சில் வெளியாகியுள்ளது ! இரு பாக சாகஸத்தின் முதல் ஆல்பம் இது ! "வெள்ளைச் செவ்விந்தியன்" என்பது தலைப்பு ! கதையினில் ரோஸ் மற்றும் அந்த சீனக் குண்டுமணி மிஸ்ஸிங் போலும் ! மற்றபடிக்கு மிரட்டலான ஆரம்பம் என்று முதல் விமர்சனங்கள் உள்ளன ! 
**அப்புறம் "நிதிகள் பற்றியொரு அறிமுகம்" என்ற தலைப்பில் லார்கோவைக் கொண்டு பங்குச் சந்தைகள் ; பெரும் குழும நிதி பரிவர்த்தனைகள் இத்யாதிகள் பற்றியொரு ஆல்பம் வெளியிட்டுள்ளனர் !! டாகுமெண்டரி ரகத்திலான இந்த ஆல்பத்தை மொழிபெயர்க்க ஆடிட்டர் / நிதி மேலாண்மை நிர்வாகி போல் யாரேனும் நம்மிடையே இருப்பின் இதனைத் தமிழுக்கு கொணர்வது பற்றி யோசிக்கலாம் ! படிக்கவும் நீங்கள் தயாராக இருக்கும் பட்சத்தில் of course !!
**தோர்கலின் புது ஆல்பம் (நம்பர் 37) இந்த வாரம் வெளியாகிறது ! 2006-ல் தொடரின் ஆல்பம் # 29 முதலாய் கதாசிரியர் பொறுப்பிலிருந்து வான் ஹாம் விடைபெற்றிருக்க - அதன் பின்னே வெவ்வேறு கதாசிரியர்கள் திறமைகளைக் காட்டி வருகின்றனர் ! 2020 அட்டவணையில் நாம் திட்டமிட்டுள்ள 5 தோர்கள் கதைகளோடு நாம் தொடரில் 21-ம் நம்பரை எட்டியிருப்போம் ! Maybe தொடரக்கூடிய அடுத்த 2 ஆண்டுகளுக்கு வான் ஹாமின் தோர்கலை நாம் ரசித்திட சாத்தியப்படும் ! அப்புறமாய் புதியவர்கள் !! பார்ப்போமே !!  

**அப்புறம் இரத்தப் படலம் சுற்று # 3 தொடர்ந்திடும் போலும் ! "2132 மீட்டர்கள் " ஆல்பம் 2 நாட்களுக்கு முன்னே பிரெஞ்சில் வெளியாகியுள்ளது ! So இனி அதன் previews வெளிவருவதில் தடைகள் லேது ! பாருங்களேன் : 
**நமது ஆன்லைன் விற்பனைத் தளங்களில்  சிலபல packs - 15% டிஸ்கவுண்டுடன் விற்பனைக்குக் காத்துள்ளன ! ஒரு பார்வை பார்த்திடலாமே guys ? 

** ஒரு புத்தம் புது கௌபாய் சாகசம் ஜம்போ சீசன் # 3-ல் நான்காம் இடத்தைப் பிடித்து விட்டுள்ளது ! வசியம் செய்யும் சித்திரங்களும், மிரட்டும் கதைக்களமும் இந்த one shot ஆல்பத்தை வேறொரு உச்சத்திற்கு இட்டுச் சென்றுள்ளன ! 

** ஜம்போ சீசன் 3-ன் ஸ்லாட் # 5 கூட பூர்த்தியாகிவிட்டது ! ஆனால் அது யாருக்கான இடம் என்பதை கொஞ்ச காலத்துக்கு சஸ்பென்சாகவே வைத்திருக்க உத்தேசம் ! நேரம் வரும் பொழுது அதற்கான காரணமும் புரிய வரும் ! 

** So காலியாயிருப்பது ஸ்லாட் # 6 மாத்திரமே ! இதற்கு கார்ட்டூன் ஜான்ரா ? ஆக்ஷனா ? டிடெக்டிவா ? என்ன மாதிரியான கதை சுகப்படுமென்று நினைக்கிறீர்கள் guys ? சொல்லுங்களேன் - எனது தேடல்களை அதற்கேற்ப அமைத்துக் கொள்கிறேன் !

Bye all ! Have a lovely weekend ! See you around !

286 comments:

  1. சரி! ஹைன்னு வச்சுக்குவோம்!

    ReplyDelete
  2. ஆஹா //**அப்புறம் இரத்தப் படலம் சுற்று # 3 தொடர்ந்திடும் போலும் ! "2132 மீட்டர்கள் " ஆல்பம் 2 நாட்களுக்கு முன்னே பிரெஞ்சில் வெளியாகியுள்ளது//
    போடு வெடிய......����

    ReplyDelete
  3. படிச்சுட்டு வாரேன்....

    ReplyDelete
  4. 10குள்ள. படிச்சுட்டு வாரேன்

    ReplyDelete
  5. தீபாவளி ஸ்பெஷலில் என்னை ரெம்பவே சோதித்தது மர்ம மனிதன் என்பதே கொஞ்சம் கவலையும், வருத்தமும் கலவையாக கலந்த உண்மை.!

    ஆனாலும் அடுத்த மார்டின் கதை எப்போ 'னு தேடுகிறேன் பாருங்கள் அதுதான் மார்டின் ஸ்பெஷாலிட்டி..!

    ReplyDelete
  6. ஆஹா இப்போவே ஆர்வத்தை கிளப்புதே ஜம்போ 5 யாரா இருக்கும்?

    ReplyDelete

  7. */.* So காலியாயிருப்பது ஸ்லாட் # 6 மாத்திரமே ! இதற்கு கார்ட்டூன் ஜான்ரா ? ஆக்ஷனா ? டிடெக்டிவா ? என்ன மாதிரியான கதை சுகப்படுமென்று நினைக்கிறீர்கள் guys ? சொல்லுங்களேன் - எனது தேடல்களை அதற்கேற்ப அமைத்துக் கொள்கிறேன் //

    கார்ட்டூன்

    ReplyDelete
  8. ஜம்போ 6 க்கு கார்ட்டூன் ஆ? Please சார்

    ReplyDelete
  9. ///** ஒரு புத்தம் புது கௌபாய் சாகசம் ஜம்போ சீசன் # 3-ல் நான்காம் இடத்தைப் பிடித்து விட்டுள்ளது///

    குட் நியூஸ்.

    ReplyDelete
  10. போன வருடம் தனி ஒருவன் இந்த வருடம் புது கௌபாய் ஆ ஆஹா ஆஹா. ஜம்போ அட்டகாசம்.

    ReplyDelete
  11. எனது, தேர்வு, டெக்ஸ், யுமா, பேபிஸ்ட்டோ, கதைகளில் ஒன்றை, தேர்வு செய்யுங்கள், சார், உங்களுக்கு,புண்ணியமா, போகும், ப்ளீஸ் சார்

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் டெக்ஸாகவே இருக்கட்டும் நண்பரே ; திடீரென ஸ்பைடர் கதையைப் படித்த பீலிங்கு இங்கே பொருந்தாதே !

      Delete
  12. ///காலியாயிருப்பது ஸ்லாட் # 6 மாத்திரமே ! இதற்கு கார்ட்டூன் ஜான்ரா ? ஆக்ஷனா ? டிடெக்டிவா ? என்ன மாதிரியான கதை சுகப்படுமென்று நினைக்கிறீர்கள்///

    கோடிட்டு காட்டி விட்டீர்கள்.இனி கோடிட்ட இடத்தை நிரப்ப வேண்டியதுதான் பாக்கி.

    'டிடக்டிவ் '

    ReplyDelete
    Replies
    1. இன்றைய மாலை எண்ணிப் பார்க்கணுமே சார் - எந்த ஜானருக்கு என்ன ஆதரவென்று !

      Delete
  13. இரவு வணக்கம் நண்பர்களே ☺️☺️

    ReplyDelete
  14. எதிர், பார்த்ததை விட, தீபாவளி மலர்,சூப்பர்,சார், எங்களது மனம் அறிந்து, நீங்கள், தரும்,கதைகள்,அதுவே, உங்களுக்கு, முதல் வெற்றி,இந்த வெற்றி, தொடர, வாழ்த்துக்கள், சார்,

    ReplyDelete
  15. அனைவருக்கும் வணக்கம். இம்மாத இதழ்கள் அனைத்தும் நிறைவாக இருந்தது. கர்னல் கதை ஆங்காங்கே சிரிப்பை வரவழைத்தது.

    ஷெல்டன் கதையும் அருமை.

    தீபாவளி மலர் கையில் ஏந்தும்போதே ஒரு பரபரப்பு தொற்றியது. அனைத்து கதைகளும் சரவெடி எனலாம். முதல் இடம் ராபினுக்கே கதை செம்ம ஸ்பீட். ஆண்டுக்கு ஒரு ஸ்லாட் தானா இவருக்கு?
    அடுத்து மார்ட்டின் கதை, மார்ட்டின் is back என்று சொல்லலாம்.
    Tex கதை புதிய கதைக்களம் நல்ல டிடெக்ட்டிவ் ஸ்டோரி போல் இருந்தது. ஜூலியா ரொம்ப அழகாக இருந்தார் இக்கதையில் கதையும் அருமை. Dylon dog கதைக்கு குறைவில்லை ஆனால் சித்திரம் சுமார் என்பேன்.

    என் தாழ்மையான கருத்து என்னவென்றால் ஸ்பெஷல் இதழ்கள் போடும்போது கலரில் போடலாமே. தீபாவளி ஸ்பெஷல் கலரில் வந்து இருந்தால் வேற லெவல்ல இருந்திருக்கும். ஒரிஜினல் black and white என்று நீங்கள் கூறியது நினைவு உள்ளது. வருங்காலத்தில் spl இதழ்களை பட்ஜெட் பார்க்காமல் color லேயே போடலாம் sir.

    ReplyDelete
    Replies
    1. Simple சார்.... பிராங்கோ-பெல்ஜியக் கதைகள் சகலமும் வண்ணத்தில் உள்ளன ; ஆனால் கதம்ப குண்டுக்கு அனுமதி லேது !

      இத்தாலிய போனெல்லி கதைகளுக்கு கதம்ப குண்டு ஓ.கே. ; ஆனால் இங்கு டெக்ஸ் நீங்கலாய் பாக்கிக் கதைகளுக்கு வண்ணங்கள் லேது !

      Delete
  16. டெக்ஸின் யுமா, பேபிஸ்ட்டோ,வெடி போட்டுட்டேன், நண்பர்களே ஒரு சேர பத்தவையுங்கள், ப்ளீஸ்,

    ReplyDelete
    Replies
    1. மழைக்கு நமத்துப் போன ஊசி வெடிகள் நண்பரே...!

      Delete
  17. நண்பர் ஆதி தாமிராவுக்கு அன்பான வாழ்த்துகள். அப்பப்ப இங்க வந்து கட்டிடம் கட்டிட்டு போங்க.

    ReplyDelete
  18. காமிக்ஸ் காதலர்களுக்கு நள்ளிரவு வணக்கங்கள்...

    ReplyDelete
  19. ./கதைக்கே ஜெயம்" என்ற தீர்ப்போடு "ஹிட்' ரகத்தினில்//

    //என்னளவில் 2020-ன் சந்தாவில் இருந்த 2 RAC சீட்டுகளுள் ஒன்று confirm ஆகிவிட்டது ! //

    //நான் போடும் மார்க் 6.5 /10.//

    //நமது die -hard மார்ட்டின் ரசிகர்கள் இதனையுமே சிலாகித்துவந்தாலும் - "மெல்லத் திறந்தது கதவு" ; "இனியெல்லாம் மரணமே" ; "கனவின் குழந்தைகள்" போன்ற awe inspiring கதைகளுக்கு முன்னே இது ரொம்பவே பின்தங்கி நிற்பதாய் எனக்குத் தோன்றியது..//


    //CID ராபினின் 'கொலை கொலையாய் முந்திரிக்கா ' போலீஸ் எப்போதுமே ஒரு ஸ்டெப் பின்தங்கியே நிற்பது போல் சித்தரித்தாலும் - யதார்த்தங்களின் பிரதிபலிப்பாகவே நான் பார்த்தேன் ! ஓவரான முடிச்சுகள் நிறைந்த plot என்றில்லாது - தெளிவாய், தட தடவென ஓட்டமெடுக்கும் ரகம் என்பதால் ரொம்பவே சுலபமாய் பக்கங்களைப் புரட்டச் செய்தது - at least என்மட்டில் ! "ஆண்டுக்கொரு ஸ்லாட்" என்ற கோட்டாவுக்கு நியாயம் செய்த சாகசம் ! My rating 7 /10.//

    //டைலனுக்கு ஆண்டுக்கொரு slot ; அல்லது இரண்டு இடங்கள் என்று 2021 முதல் திட்டமிடலாம் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்துள்ள கதையிது ! 8 /10 !//


    //ஜூலியா : வாசிக்க சுகமே என்றாலும், மொழிபெயர்பாளருக்கு / எடிட்டருக்கு சிம்ம சொப்பனமே ! But my rating for this : 8 /10 !//


    இன்னிக்கு ரெண்டு தீர்ப்புகள்!!:-))

    ReplyDelete
    Replies
    1. பிரதான தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது ! பிந்தைய தீர்ப்பு பஜ்ஜி சாப்பிட்ட பின்னே கை துடைக்கப் பயன்படக்கூடிய பேப்பர் !!

      Delete
    2. //பிந்தைய தீர்ப்பு பஜ்ஜி சாப்பிட்ட பின்னே கை துடைக்கப் பயன்படக்கூடிய பேப்பர் //

      என்ன சார் இப்டி சொல்லீட்டீங்க!!

      அம்மா சொல்ற ஆரீராரோ அம்மாவுக்கு வேணும்னா வோக்கல் கார்ட்ஸ் எழுப்புற வெறும் சத்தமா இருக்கலாம்..

      குழந்தைக்கு அது தேவ கானம் சார்!!!

      Delete
  20. ஸ்லாட் 6க்கு கடற்கொள்ளையர்கள் கதை தரலாமே?

    ReplyDelete
  21. ஸ்லாட் 6ல் பராகுடா போன்ற கதை ஏதாச்சும் தாருங்கள் சார்?

    ReplyDelete
    Replies
    1. நூறு ரூபாய் பட்ஜெட்டில் பராகுடா ரேன்ஜ் கதைக்கு நான் எங்கே போவது நண்பரே ?

      Delete
  22. ///நிதிகள் பற்றியொரு அறிமுகம்" என்ற தலைப்பில் லார்கோவைக் கொண்டு பங்குச் சந்தைகள் ; பெரும் குழும நிதி பரிவர்த்தனைகள் இத்யாதிகள் பற்றியொரு ஆல்பம் வெளியிட்டுள்ளனர் !! டாகுமெண்டரி ரகத்திலான இந்த ஆல்பத்தை மொழிபெயர்க்க ஆடிட்டர் / நிதி மேலாண்மை நிர்வாகி போல் யாரேனும் நம்மிடையே இருப்பின் இதனைத் தமிழுக்கு கொணர்வது பற்றி யோசிக்கலாம் !///

    மொழிபெயர்ப்பு செய்யும் அளவிற்கு ஆழ்ந்த ஆங்கில அறிவு லேது!

    ஆனால் பங்குச்சந்தை, குழும நிதி மேலாண்மை தொடர்பான நெடிய அனுபவம் உண்டு!

    So ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. இத்துறையில் ஆர்வமில்லாதோருக்கு இது வேப்பங்காயாய்க் கசக்கக் கூடும் என்பது ஒருபக்கமிருக்க, முதலில் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்க ஆள் கிட்ட வேண்டுமே சார் !

      Delete
  23. அந்த அமெரிக்க த்ரில்லரை ஏதாவது ஒரு வகையில் 2020 லேயே போட்டு விடுமாறு வேண்டுகோள். 2020 ன் சூப்பர் ஹிட்டுகளில் ஒன்றாக அது அமையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. இளம் புலியார் பட்ஜெட்டை முழுக்கப் பிடுங்கிக் கொள்கிறாரே சார் !

      Delete
    2. எதாவது சந்து பொந்து கிடைக்காமலா போயிடும் ஸார்

      Delete
  24. ஜம்போ 2ல் இதுவரை 3 புத்தகங்கள் தானே வந்துள்ளது நண்பர்களே?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். லக்கி, டெக்ஸ், தனி ஒருவன் அடுத்த மாதம் ஜேம்ஸ் பாண்ட்.

      Delete
    2. பிப்ரவரியில் # 5 ; மார்ச்சில் # 6 !

      Delete
  25. என்ன மாதிரியான கதை சுகப்படுமென்று நினைக்கிறீர்கள் guys ?

    டிடெக்டிவ் கதைக்கு எனது ஓட்டு

    ReplyDelete
  26. // ஸ்லாட் # 6 மாத்திரமே ! இதற்கு கார்ட்டூன் ஜான்ரா ? ஆக்ஷனா ? டிடெக்டிவா ? //

    கார்ட்டூன். கார்ட்டூன். கார்ட்டூன். கார்ட்டூன். :-)

    ReplyDelete
    Replies
    1. அல்லது கடந்த பதிவில் கூறியுள்ள 4-5 ஒன் shot கதைகளில் ஏதாவது ஒன்றை களமிறக்கலாமே?

      Delete
  27. துரோகமே துணை: அருமையான துப்பறியும் கதை, எதிர்பாராத திருப்பங்கள் திகைக்க வைக்கும் கிளைமாக்ஸ்.

    அதிகப்படியான டயலாக்குகள் அதில் பல நபர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் என குழப்பம் (எனக்கு மட்டுமாவது); மேபிளவர் போல். கதையின் வேகத்தை இந்த வசனங்கள் குறைக்கவில்லை‌ என்பது உண்மை.

    ஆகா வித்தியாசமாக இருக்கிறது எப்படியும் ஷெல்டன் கிளைமாக்ஸில் ஆக்சனில் தூள் கிளப்ப போகிறார் என்றால் நமது போன புஸ்வானமாகியது எனது கணிப்பு.

    அதுவும் திடீரென MI 5 வேறு, கண்டிப்பாக செம ஆக்சன் இருக்குடோய் என்றால் அங்கும் ஒரு LED பல்ப் கிடைத்தது தான் மிச்சம்.

    படித்து முடித்த பின்னர் இந்த கதைக்கு ஷெல்டன் ஏன் என்று மண்டையில் தோன்றிய கேள்விக்கு யாராவது விடை சொன்னால் நன்று.

    ஷெல்டனின் ஆக்சனை எதிர்பார்க்காமல் ரிப் கெர்பி கதை என நினைத்து படித்தால் ரசிக்கலாம்.

    ஷெல்டன்-துப்பறிவாளன்

    ReplyDelete
    Replies
    1. ஹீரோவென்றால் தொம்மு தொம்மென்று குத்திக்கொண்டும்.... பிளாம்-பிளாமென்று சுட்டுக் கொண்டும் திரிய வேண்டுமென்பது மரபில்லை சார் - இன்றைக்காவது ! யதார்த்த நாயகர்கள் ஜேம்ஸ் பாண்ட் பாணிகளில் அதகளங்கள் செய்திருப்பதில்லை ; ராபின் போல சத்தமின்றியே பணியாற்றுவார்கள் ! ஷெல்டன் தொடரில் one of the best இது என்பது பிரெஞ்சிலும் பரவலான அபிப்பிராயம் !

      Delete
    2. ஆனால் ஷெல்டனை இதுவரை ஆக்சன் ஹீரோவாகவே பார்த்தால் ஏற்பட்ட ஏமாற்றம் மட்டுமே இது.

      Delete
  28. ஜம்போ #6 கார்ட்டூன் வேண்டும் சார்...

    ReplyDelete
  29. Cartoon!Cartoon!Cartoon!Cartoon!Cartoon!Cartoon!Cartoon!Cartoon!Cartoon!Cartoon!

    ReplyDelete
  30. */.* So காலியாயிருப்பது ஸ்லாட் # 6 மாத்திரமே ! இதற்கு கார்ட்டூன் ஜான்ரா ? ஆக்ஷனா ? டிடெக்டிவா ? என்ன மாதிரியான கதை சுகப்படுமென்று நினைக்கிறீர்கள் guys ? சொல்லுங்களேன் - எனது தேடல்களை அதற்கேற்ப அமைத்துக் கொள்கிறேன் //
    ACTION..

    ReplyDelete
    Replies
    1. அதான் நம்ப கார்சன் நபர் இருக்காரே... அவரை விட ஆக்சன் பார்டி தேவையா?

      நம்ப ஜேம்ஸ் பாண்ட் வேற பட்டையகிளப்ப.

      அதனால் உங்கள் பொன்னான வாக்கை கார்ட்டூன் பக்கம் போடுங்க ஜி.

      Delete
    2. கார்சன் நண்பர் இருப்பதாக எடிட்டர் சொல்லவே இல்லையே. பரணி

      Delete
    3. பொதுவாக அடுத்த ஆண்டு சந்தாவில் என‌ எடுத்து கொள்ளுங்கள்.

      Delete
  31. ////பின்னே இம்மதத்து ஷெல்டனில் ஒரு இக்ளியூண்டு ரகசியமுள்ளது - நம்மளவில் ! இதன் மொழியாக்கம் ஓராண்டுக்கு முன்பே நண்பர் ஆதி தாமிராவால் செய்யப்பட்டது ! ////

    கதையில ஏகப்பட்ட ட்விஸ்டுகளைப் படிச்சுட்டு இங்கே வந்தா.. இங்கே இப்படியொரு ட்விஸ்ட்டு!!

    அட்டகாசமாக மொழிபெயர்த்திருக்கும் அருமை நண்பர் ஆதியைப் பாராட்டி ஒரு மரபுக் கவிதை:

    ஆதி!!!
    நீங்க எழுத்தாளர் ஜாதி!!
    உங்க கண்ணிலே கண்டேனொரு ஜோதி!
    உங்க மொத்தத் திறமையிலே இதுவொரு பாதி!
    எப்போ காட்டப்போறீங்க மீதி?
    படிச்ச எங்களுக்கே ஆகிடுச்சே பேதி..?
    எழுதிய நீங்க சட்டையக் கிழிச்சுட்டு நிக்கிற இடம் வீதி?

    (மற்றவை நேரில்) ;)

    ReplyDelete
    Replies
    1. ஓ...இதுதான் மரபு கவிதையா செயலரே..நான் நியூ கவிதன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்..:-)

      Delete
    2. _வந்திருப்பது கவிதையில் பாதி.
      வரப்போகுது அதன் மீதி
      இதுதான் எங்களை'துரத்தும் தலைவிதி'

      Delete
    3. நல்லதொரு கவிதை செயலர் அவர்களே.

      Delete
    4. சும்மாவே இந்தப் பக்கம் ஆளைக் காணோம் ; இதிலே கவிதைலாம்னா மனுஷன் துண்டைக் காணோம் - துணியைக் காணோம்னு ஓட்டமெடுக்கப் போறார் !

      Delete
  32. ///எது எப்படியோ - மீசைக்கார் lives to fight crime another day ! என்னளவில் 2020-ன் சந்தாவில் இருந்த 2 RAC சீட்டுகளுள் ஒன்று confirm ஆகிவிட்டது ! ///

    ஆஹா!! ஆனந்தமான செய்தி!! கர்னல் கிளிப்டனுக்கு ஜே!!!

    ReplyDelete
  33. ////என்ன - க்ளைமாக்சில் சன்னமாய் ஒரு ட்விஸ்ட் எனது கைவண்ணம் ! கதையின் நம்பகத்தன்மைக்கு அது சற்றே உதவியது என்று சொல்லலாம் ! ////

    ஆவ்!!! எடிட்டர் சார்... மேலதிக விபரங்கள் ப்ளீஸ்?!!!

    ReplyDelete
    Replies
    1. குறிச்சுக்கோங்க ; ரிட்டயர்மெண்ட் சமயத்திலே கேட்க வேண்டிய கேள்விகள் பட்டியலில் இதையும் குறிச்சுக்கோங்க !

      Delete
  34. ////டைலனுக்கு ஆண்டுக்கொரு slot ; அல்லது இரண்டு இடங்கள் என்று 2021 முதல் திட்டமிடலாம் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்துள்ள கதையிது !////

    'சிகப்பு ரோஜாக்கள்' போல நல்ல கதையசம்சம் கொண்டதெனில் டைலனுக்கு தாராளமாக இரண்டு ஸ்லாட்டுகள் ஒதுக்கலாம்!

    ReplyDelete
  35. இனிய ஞாயிறு காலை வணக்கம் சார் 🙏🏼

    மற்றும் நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete

  36. இனிய ஞாயிறு காலை வணக்கம் சார் 🙏🏼

    மற்றும் நண்பர்களே 🙏🏼

    ReplyDelete
  37. பின்னே இம்மதத்து ஷெல்டனில் ஒரு இக்ளியூண்டு ரகசியமுள்ளது - நம்மளவில் ! இதன் மொழியாக்கம் ஓராண்டுக்கு முன்பே நண்பர் ஆதி தாமிராவால் செய்யப்பட்டது

    ######

    மனமார்ந்த வாழ்த்துகள் ஆதிதாமிரா சார் ...:-)

    ReplyDelete
  38. அப்புறம் தொடரின் அடுத்த ஆல்பம் (நம்பர் 14) அநேகமாய் 2020-ன் இறுதியில் வெளிவரும் சாத்தியங்கள் பிரகாசம்

    #######

    ஹைய்யா....!

    ReplyDelete
  39. பெரும் குழும நிதி பரிவர்த்தனைகள் இத்யாதிகள் பற்றியொரு ஆல்பம் வெளியிட்டுள்ளனர் !! டாகுமெண்டரி ரகத்திலான இந்த ஆல்பத்தை மொழிபெயர்க்க ஆடிட்டர் / நிதி மேலாண்மை நிர்வாகி போல் யாரேனும் நம்மிடையே இருப்பின் இதனைத் தமிழுக்கு கொணர்வது பற்றி யோசிக்கலாம்


    ######

    இருக்குறார் சார் நம்மிடையே "திருப்பூர் ப்ளுபெர்ரி " என்ற பெயரிலும் நண்பர்களிடம் நிதி அமைச்சர் என்ற பெயரிலும் :-)

    ( நாணயம் விகடனில் இவரின் நிதி சார்ந்த கட்டுரைகளை அடிக்கடி பார்க்கலாம் என்பது பின்குறிப்பு )

    ReplyDelete
    Replies
    1. பிரெஞ்சிலிருந்து யார் மொழிபெயர்ப்பதோ தலீவரே ?

      Delete
    2. இது வேறய்யா சார்..?!

      ஆனா ஏற்கனவே லார்கோ இறுதி வாய்ப்பில் நண்பர்களிடம் கொஞ்சம் இறங்கி விட்டார்..இந்த இதழும் வந்தால் மொத்தமாக சறுக்கி விடுவார் என நினைக்கிறேன் ..எனவே அவ்விதழை இதயத்தில் வைத்து விடலாம் சார்..;-)

      Delete
  40. // So காலியாயிருப்பது ஸ்லாட் # 6 மாத்திரமே ! இதற்கு கார்ட்டூன் ஜான்ரா ? ஆக்ஷனா ? டிடெக்டிவா? //
    எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியே,நல்லதொரு டிடெக்டிவ் வகையறாவாக இருந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி......

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கிறேன் சார் !

      Delete
  41. ** So காலியாயிருப்பது ஸ்லாட் # 6 மாத்திரமே ! இதற்கு கார்ட்டூன் ஜான்ரா ? ஆக்ஷனா ? டிடெக்டிவா

    ######

    கடைசி இரண்டில் எதுவேணாலும்..:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே..இங்கி ..பிங்கி போடாமல் ஏதாச்சும் ஒரு பதிலாகச் சொல்லுங்கள் !

      Delete
    2. அப்டீன்னா டிடெக்டிவ் சார்..:-)

      Delete
  42. இந்த வருட தீபாவளி மலர் அட்டகாசம் சார்! இதுபோலவே வருடந்தோறும் இரண்டு காம்போ இதழ் போடலாம். வாங்குபவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் ஒரு திருப்திகரமான இதழாக அமையும்.

    ReplyDelete
    Replies
    1. பட்ஜெட் இடிக்காவிடின் ரெகுலராகவே இதைத் தொடர்ந்திடலாம் தான் சார் !

      Delete
    2. Then combine all 4-5 books of same month into hardbounds sir - all you have to do is ensure they are from same publishers or distributors :-D

      Delete
    3. // பட்ஜெட் இடிக்காவிடின் ரெகுலராகவே இதைத் தொடர்ந்திடலாம் தான் சார் //

      சார் ப்ளீஸ். ரெகுலராக தொடருங்கள்.

      இந்த வருட தீபாவளி குண்டு புத்தகத்தில் இரண்டு கதைகள் மட்டுமே படித்து முடித்து உள்ளேன்; டெக்ஸ் & டைலன் இரண்டும் ரொம்ப சூப்பர்.

      Delete
  43. கார்ட்டூன் லியனார்டோதாத்தா ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. லியனார்டோவின் தாத்தாவே வந்தாலும் குட்டிக் கதைகளைக் கொண்டு இங்கே பப்பு வேகாதே சார் ! என்ன செய்யச் சொல்றீங்க ?

      Delete
  44. // பின்னே இம்மதத்து ஷெல்டனில் ஒரு இக்ளியூண்டு ரகசியமுள்ளது - நம்மளவில் ! இதன் மொழியாக்கம் ஓராண்டுக்கு முன்பே நண்பர் ஆதி தாமிராவால் செய்யப்பட்டது
    //

    மனமார்ந்த வாழ்த்துகள் ஆதிதாமிரா.

    ReplyDelete
  45. இனிய காலை வணக்கங்கள்😃

    ReplyDelete
  46. 1.ஷெல்டனின் "துரோகமே துணை" -9/10
    2.டைலன் "சிகப்பு ரோஜாக்கள்"- 8.5/10
    3. ஜூலியா "ஒரு வீட்டின் கதை "-8/10
    4.CID ராபினின் 'கொலை கொலையாய் முந்திரிக்கா '-8/10
    5.க்ளிப்டன் "விடுமுறையில் கொல்" -8/10
    6.'தல' and மர்ம மனிதன் மார்டின் -7.5/10

    "நிதிகள் பற்றியொரு அறிமுகம்" - try பண்ணலாம் சார்.. Largo கதைகள் மூலமாக business management பற்றி நெறய கற்று கொண்டேன் ..
    "So காலியாயிருப்பது ஸ்லாட் # 6 மாத்திரமே ! இதற்கு கார்ட்டூன் ஜான்ரா ? ஆக்ஷனா ? டிடெக்டிவா ?"
    ACTION OR DETECTIVE ..

    ReplyDelete
    Replies
    1. //.'தல' and மர்ம மனிதன் மார்டின் -7.5/10 //

      Fair !!

      Delete
  47. கர்னல் க்ளிப்டன் 9/10
    ஷெல்டன் 9.5/10
    தீபாவளி மலர் 10/10

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரி மார்க் போட Neet தேர்வு ஆசிரியர்களுக்கும் மனசிருந்தால் - ஏஏ அப்பா ; எத்தனை கனவுகள் நனவாகிடும் ரம்யா !!

      Delete

    2. //உங்களை மாதிரி மார்க் போட Neet தேர்வு ஆசிரியர்களுக்கும் மனசிருந்தால் - ஏஏ அப்பா//

      சார்! அத நீங்க சொல்லப்படாது!!! நாத்தனார் இலைக்கு வீட்டுக்காரம்மா விடற நெய் அளவுக்கு டெக்ஸூக்கு வெறும் 6.5/10..

      மத்திய அரசு அடிப்படை சம்பளம் மாதிரி டெக்ஸூக்கு அடிப்படை மார்க்கே எப்பவும் 7/10 தான்..:-)

      Delete
  48. ஸ்லாட் 6
    கார்ட்டூன் ☺

    ReplyDelete
  49. 2132 பட்டையை கிளப்பு கிறதே .
    2021 க்கு ஷெல்டன் மற்றும் undertaker திரும்ப வர வாய்ப்புகள் அதிகம். இரண்டு டிரெய்லர் அருமை.

    ReplyDelete
  50. //
    **அண்டர்டேக்கரின் ஆல்பம் # 5 ஒரு வாரத்துக்கு முன்னே பிரெஞ்சில் வெளியாகியுள்ளது ! இரு பாக சாகஸத்தின் முதல் ஆல்பம் இது ! "வெள்ளைச் செவ்விந்தியன்" என்பது தலைப்பு ! கதையினில் ரோஸ் மற்றும் அந்த சீனக் குண்டுமணி மிஸ்ஸிங் போலும் ! மற்றபடிக்கு மிரட்டலான ஆரம்பம் என்று முதல் விமர்சனங்கள் உள்ளன ! //

    இது நல்ல விஷயம். அடுத்த வருடம்மே கண்ணில் காண்பித்து கைகளில் தவழ விடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. பாதிக் கதையைப் படித்து விட்டு ; மீதத்துக்கென அடுத்த ஒன்றோ, இரண்டோ ஆண்டுகளுக்குத் தொங்கலில் இருந்திடத் தயாரென்றால் நானும் தயார் சார் ! இது முதல் பாகம் மட்டுமே !

      Delete
    2. வேண்டாம் வேண்டாம் இரண்டும் சேர்ந்து ஒன்றாகவே வரட்டும்.

      Delete
    3. இரு பாகமும் சேர்ந்தே வரட்டும். காத்திருக்க தயார்.

      Delete
  51. நீங்கள் சொன்னது போல நவம்பர் இதழ்களை படித்து முடித்து ஒரு மாமாங்கம் ஆனது போல உள்ளது.
    டிசம்பர் இதழ்களை முன்னே அனுப்ப ஏதேனும் திட்டம் உள்ளதா?
    படிப்பதற்கு ஏதேனும் புத்தகங்கள் உள்ளதா என Amazon மற்றும் Flipkart is il தேடி கொண்டு இருக்கிறேன். என்னதான் அதிக விலை கொடுத்து ஆங்கில காமிக்ஸ் வாங்கி படித்தாலும் நமது லயன் முத்து படிப்பது போல இருப்பது இல்லை. இந்த கதைகளில் இருக்கும் உயிர்ப்பு அதில் இருப்பது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. டிசம்பர் இதழ்களெல்லாம் கிட்டத்தட்ட தயார் தான் ; ஆனால் முன்கூட்டியே அனுப்பிடுவது கடைகளின் விற்பனைக்கு உதவிடாது என்பதால் நவம்பரின் கடைசித் தேதிக்கு தான் உங்களை எட்டிடும் !

      Delete
    2. நீங்கள் சொல்வது சரி தான் சார். அதுவரை பி பி வி மாதிரி ஏதாவது படித்து கொள்கிறேன்.

      Delete
  52. ///காலியாயிருப்பது ஸ்லாட் # 6 மாத்திரமே ! இதற்கு கார்ட்டூன் ஜான்ரா ? ஆக்ஷனா ? டிடெக்டிவா ? என்ன மாதிரியான கதை சுகப்படுமென்று நினைக்கிறீர்கள் guys ?///

    சார்.. ஒரு கார்ட்டூன் ஜானரிலேயே டிடெக்டிவ் கதையாப் பார்த்துப் போட்டுட்டீங்கன்னா அதிலேயே ஆக்ஷனும் வந்துடுமில்லையா?!! ஹிஹி!! உதாரணத்துக்கு ஜில் ஜோர்டன்!

    ReplyDelete
    Replies
    1. போட்டுப்புடலாம் தான் ; ஆனால் "ஜில்' என்று கேட்ட உடனேயே மக்களும் ஆக்ஷனில் இறங்கிப்புடுறாங்களே...!! பரால்லியா ?

      Delete
    2. Jil Jordan double OK for the slot sir - Jerome also !

      Delete
  53. ஸார் டெக்ஸின் சர்க்ஸ் சாகசம் அசத்தலான கதை... பட்டய kilappiyathu... 10/10
    ஷெல்டனுமே மூச்சிரைக்கும் வேகம்... என்னைப்பொறுத்தவரை பலூன் முழுக்க வசனம் நிறைந்தால் கூடுதல் santhosam... நண்பர் அதி தெறிக்க விட்டுள்ளார்... அவருக்கும் தங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.... கதை அற்புதமாக விரைவாக கேள்விகளும் பதில்களுமாய் தொய்வின்றி arputham... 10க்கு 10.... நான் படித்த டைலனும் சேர்த்து தீபாவளி மலர் 30/30.. .மீதம் padiththapin... அந்தக்கால கொடைமலரை படித்தது போல ennam.... அதே சந்தோசம் இதழ்கள் வடிவமைப்பிலும்....

    ஸ்டீல் கிளா

    ReplyDelete
  54. மீண்டும் ஷெல்டன் வான் மூலம் என்பது கூடுதல் சந்தோசம்.... வான் தரம் கதையும் மழையும் அற்புதம்தான்.... இ ப மூன்றாம் சுற்று thool...தோர்கள் இன்னும் 29 வரை என்பது மகிழ்ச்சி... அதுக்குள்ளே சிறந்த புது வரவுகளை பிடிங்க.... லார்கோ தூள் கிளப்ப போவது nichayam.... நண்பர்கள் finansai கரைத்து குடித்தவர்கள் கை கொடுங்கள் seekkiram... அந்த ஆறாவது இடத்தில் வந்தால் santhosaசந்தோசம் ... அல்லது அது ஸ்பைடராய் இருந்தாலும் கூடுதல் சந்தோசமே... ஆறாவது கார்டூனோ... டீடாக்ட்டிவோ... ஆக்ஷனோ... எதனாலும் விறுவிறுன்னு போன சூப்பர்.... சூப்பர் ஹீரோன்னாலும் சூப்பரோ சூப்பர்

    திருச்செந்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா

    ReplyDelete
  55. விஜயன் சார், ஜம்போவில் டெக்ஸின் சிங்கத்தின் சிறுவயதில் உண்டா?

    ReplyDelete
  56. விஜயன் சார், கடந்த இரண்டு ஜம்போவில் வந்த டெக்ஸ் தொடரும் அடுத்த வருடம் சந்தா Dயில் வரவுள்ள இளவயது டெக்ஸூம் ஒன்றா அல்லது இரண்டும் வேறு தொடர்களா?

    ReplyDelete
  57. சிகப்பு ரோஜாக்கள்:
    1. கொலைகாரன் கொன்ற பிணங்களை என்ன செய்தான்?

    2. தொட்டியில் ரோஜாக்களை வளர்ப்பது ஏன்?

    3. எமிலி ரேயின் தந்தை இளம் பெண்களை கொல்வது ஏன்?

    4. எமிலி ரேயின் தந்தையின் காரில் துணி போல் எமிலி கண்டு எடுப்பது என்ன?

    ReplyDelete
    Replies
    1. நேற்று காலையில் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இவைகளை கூர்ந்து கவனித்து மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும்.

      Delete
    2. நிதானமாக கூர்ந்து கவனித்துப் படியுங்கள் PfB! அட்டகாசமான படைப்பு இது! கொலையாளி யார் என்று நாம் கணிக்க ஓவியரே ஓரிரு இடங்களில் நுட்பமான க்ளூ கொடுத்திருப்பார்! டைலன் டாக் கதை வரிசையில் ஆகச் சிறந்த படைப்பு இது! உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டதும் கூட!!

      Delete
    3. கொலையாளி யார் என்பதை கதையில் எமிலி தனது தந்தையுடன் பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டதை விவரிக்கும் போது இவர்தான் என ஓரளவு ஊகித்து விட்டேன் :-) ஆனால் மற்ற சில விஷயங்கள் மீண்டும் ஒருமுறை படித்து தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் விஜய்.

      Delete
  58. சார் - ஒரு கலீபா கதை போட்டு விட்டால் என்ன ? - slot 6

    ReplyDelete
    Replies
    1. ரெகுலர் சந்தாவில் ரிஜெக்ட் ஆனவரை ஜம்போவில் இணைப்பது அத்தனை பொருத்தமாய் இராதே சார் !

      Delete
    2. If I remember correctly, the last Iznogoud that you released was a super hit! அப்புறம் ஏன் சார் ரிஜெக்ட் ?

      Delete
  59. சார் 
    முதலிரண்டு நாட்கள் சந்தா செலுத்தியவரையும் சேர்த்து இன்னும் 2020 சந்தா நம்பர்கள் வந்து சேரவில்லை சார் ... கொஞ்சம் பார்க்கச் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்டெல்லா திரும்பவும் வேலைக்கு வந்தாச்சு சார் ; நாளை முதல் streamline செய்திடுவோம் !

      Delete
    2. ///ஸ்டெல்லா திரும்பவும் வேலைக்கு வந்தாச்சு சார் ; நாளை முதல் streamline செய்திடுவோம் !///

      நல்ல செய்தி! ஒரு அனுபவம் மிக்க ஆள் மீண்டும் பணிக்குத் திரும்பியிருப்பதில் மகிழ்ச்சி!

      Delete
    3. //ஸ்டெல்லா திரும்பவும் வேலைக்கு வந்தாச்சு சார் ; நாளை முதல் streamline செய்திடுவோம் !//

      சூப்பர்

      Delete
  60. அப்புறம் "நிதிகள் பற்றியொரு அறிமுகம்" என்ற தலைப்பில் லார்கோவைக் கொண்டு பங்குச் சந்தைகள் ; பெரும் குழும நிதி பரிவர்த்தனைகள் இத்யாதிகள் பற்றியொரு ஆல்பம் வெளியிட்டுள்ளனர் !! டாகுமெண்டரி ரகத்திலான இந்த ஆல்பத்தை மொழிபெயர்க்க ஆடிட்டர் / நிதி மேலாண்மை நிர்வாகி போல் யாரேனும் நம்மிடையே இருப்பின் இதனைத் தமிழுக்கு கொணர்வது பற்றி யோசிக்கலாம் ! படிக்கவும் நீங்கள் தயாராக இருக்கும் பட்சத்தில் of course !!\\\

    எனக்கு இரண்டு வருடம் finance பிரிவில் வேலை செய்த அனுபவம் உள்ளது.

    பங்கு சந்தை பற்றி ஓரளவு தெரியும்.

    (போன வாரம் தான் பங்கு சந்தை பற்றிய புத்தம் ஒன்றை படித்து என்னுடைய கருத்தை கூறினேன்.இனிதான் அந்த புத்தகம் வெளிவரபோகிறது.)

    மேற்கூறிய லார்கோ காமிஸ்ஸை மொழிபெயர்ப்பு செய்ய நான் விருப்பம் படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என்ன புக் நண்பரே!!

      Delete
    2. எளிய சாதாரண கடை ஆரம்பித்து அது பங்கு சந்தையில் மூலம் எவ்வாறு முன்னேற்றம் அடைகிறது. அந்த கடையில் நாம் முதலிடு செய்தால் பணம் எப்படி பெருகும் என்று எளிய முறையில் பங்கு சந்தை பற்றி விளக்கம் கொடுக்க பட்டு இருக்கும்.

      புத்தகத்தை பற்றி முக்கிய தகவல்களை யாரிடமும் கூற வேண்டாம் என்று எழுதி யவர் கேட்டு கொண்டதால் இதற்கு மேல் என்னால் கூற முடியாது.

      Delete
    3. கணேஷ் அந்த புத்தகத்தின் பெயரை கேட்கிறார் மிதுன்

      Delete
  61. தீபாவளி மலரில் எனக்கு மிகவும் பிடித்தது ஜூலியா தான்.

    "பௌர்ணமியில் காலன் வருவான்" படித்த பிறகு ஜூலியா பாரத்தாலே ஜுரம் வந்த எனக்கு தீபாவளி மலர் ஜூலியா ரொம்பவும் என்னை மாற்றி விட்டது. அடுத்த ஜூலியாவுக்காக நான் வெயிடீங்.

    ஜூலியா பற்றி ஆசிரியர் கூறிய கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. எனக்கு எங்கேயும் நெருடல் ஏற்படவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அதன் காரணமே நெருடல்கள் சகலத்தையும் எடிட் செய்ததால் சார் !

      Delete
    2. பௌர்ணமியில் காலன் வருவான் நான் மிகவும் விரும்பி படித்த கதை.

      நின்று போன நிமிடங்கள் டாப் கிளாஸ் கதை.

      ஜூலியாவின் அறிமுக கதை (பெயர் மறந்து விட்டது) அதுவும் எனக்கு பிடித்தே இருந்தது.

      Delete
    3. நாங்கள் படிப்பது நீங்கள் எடிட் செய்த கதையை தான். எனவே எங்கள் அளவில் நெருடல்கள் ஏதும் இல்லை. நீங்கள் சொல்வது புரிகிறது.

      Delete
    4. //ஜூலியாவின் அறிமுக கதை (பெயர் மறந்து விட்டது) அதுவும் எனக்கு பிடித்தே இருந்தது//

      அது LMS ல் வந்தது.விண்ணில் ஒரு விபரீதம் 'னு நினைக்கிறேன்.

      Delete
    5. // விண்ணில் ஒரு விபரீதம் //
      Yes JI!

      Delete
  62. சார் நான்கு மூன்று ஐந்து பாக கவ்பாய் கதைகளை எப்போது வெளியீடடுவிர்கள்

    ReplyDelete
  63. சார் அந்த 1450 கவ்பாய் கதைய முத்து காமிக்ஸ் இன் 50 ஆண்டு மலர் ஆக வெளியீடுவிர்கள் தானே

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம் 50 ஆவது ஆண்டு மலருக்கு மிகபொருத்தமாக இருக்கும். தமிழ் நாட்டில் 50 ஆண்டுகளாக காமிக்ஸ் வெளியிடுவது மிகப்பெரிய சாதனை அதற்கான பரிசும் மிகப்பெரிய தாக தானே இருக்க வேண்டும். அதனால் பட்ஜெட் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு இதை செய்யலாம் சார்.

      Delete
    2. பட்ஜெட் பிரச்சினை என்றால் நம்ப குமார் வேலை பார்க்கும் பேங்கில் லோன் வாங்கி கொள்ளலாம் சார் :-)

      Delete
    3. வாங்கி கொள்ளலாம் பரணி. ஏற்கனவே காமிக்ஸ் படிப்பது மிகவும் காஸ்ட்லி ஆன விசயம் என்பது போல ஒரு வதந்தி உலவுகிறது.

      Delete
    4. ஆமா அந்த கதை குறித்து ஆசிரியர் எதுமே கூற மறுக்கிறாரே

      Delete
    5. /* காமிக்ஸ் படிப்பது மிகவும் காஸ்ட்லி ஆன விசயம் என்பது போல ஒரு வதந்தி உலவுகிறது */

      வதந்தி அல்ல நண்பரே - அது உண்மையே - காமிக்ஸ் ஒரு costly சமாச்சாரம்தான் - இதனை எடிட்டர் கூட ஒப்புக்கொள்வார் .. தமிழ் நாட்டில் வெளியாகும் மற்ற பத்திரிகைகளைக் காட்டிலும் காமிக்ஸ் விலையதிக விஷயமே - the fact is we like it so we buy it and enjoy it.

      Delete
    6. /* காமிக்ஸ் படிப்பது மிகவும் காஸ்ட்லி ஆன விசயம் என்பது போல ஒரு வதந்தி உலவுகிறது */

      மல்டி பிளக்ஸ்ல ஒரு படத்துக்கு சிங்கிளா போன 300+, பேமலியா 1500+!!
      அதவிட காமிக்ஸ் காஸ்ட்லியா என்ன???

      Delete
    7. சுமார் 500 பக்கம் கொண்ட ஒரு புக் 500 ரூபாய் என்றால் 1 பக்கம் 1 ரூபாய் என்றாகிறது!!

      பேப்பர், மை, அச்சுகூலி, அட்டகாசமான தரத்தில் பைண்டிங் இவற்றிற்கே 500 ரூபாய் தரலாம்!

      1 பக்கத்திற்கு குறைந்த பட்சம் 6 பிரேம்கள் வீதம் வரையப்பட்ட அற்புதமான ஓவியங்களும், அதனோடு வரும் கதையும் முற்றிலும் இலவசம்!!!

      Delete
    8. Mithunan, as a book all comics have become expensive. Tamil comics is costly in TN and English comics are costly in Europe and US. Like I said, we love Comics more than movies - so we find reasons to justify purchasing it - that does not mean it is less costly. It is costly !!

      Is it worth the cost - YES ! But is it costly ? - YES too ! Both are different.

      Delete
    9. /* 1 பக்கத்திற்கு குறைந்த பட்சம் 6 பிரேம்கள் வீதம் வரையப்பட்ட அற்புதமான ஓவியங்களும், அதனோடு வரும் கதையும் முற்றிலும் இலவசம்!!! */

      This is true only for Comics Lovers like us - show the Diwali Special to your family and ask if it is worth the money and see the reply :-) Someone in your family will justify that Bigil is better spent :-) That is personal choice - it does not make it less costly.

      Delete
  64. Sir detective story🤔🤔🤔🤔🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🙁🤨🙁

    ReplyDelete
  65. ஸ்லாட் 6:

    டிடெக்டிவ் ....

    ReplyDelete
  66. 'சிகப்பு ரோஜாக்கள்' கதையில் மிகவும் நான் ரசித்த - இயல்பானதொரு சீன் :

    கொலையாளியின் வீட்டை நோட்டம் விடுவதற்காக தனது காரை இரண்டு தெருக்கள் தள்ளி நிறுத்திவிட்டுச் சென்றிருப்பான் டைலன்டாக்.. திரும்பி வந்து பார்க்கும்போது காரின் சக்கரங்கள் இருக்காது! லோக்கல் போக்கிரிகளால் அவை திருடப்பட்டிருக்கும்! "கொஞ்சம் பணம் கொடுத்தால் மின்னல் வேகத்தில் டயர்களை பொருத்தித் தந்துவிடுகிறோம்" என்று டயரைத் திருடிய போக்கிகளே டைலனிடம் பேரம் பேசுவார்கள்! மறுவார்த்தையின்றி பணத்தைக் கொடுத்து டயர்களைப் பெற்றுக்கொள்வான் DD!

    மீண்டும் அதே இடத்திற்கு பிரிதொரு சமயத்தில் வந்து காரை நிறுத்த நேரும்போது DDயே அந்தப் போக்கிரிகளை அணுகி "இந்தக் காரை நீங்கள் எதுவும் செய்யாமலிருக்க நான் எவ்வளவு பணம் தரவேண்டியிருக்கும்?" என்று இயல்பாகக் கேட்பான்!
    அதற்கு அந்த போக்கிரிகளின் பதில் "இந்தமுறை முற்றிலும் இலவசம்! இந்தக் காரை நீ வைத்திருக்கும் இலட்சணத்தைப் பார்த்தால் நீ ஒன்றும் தங்கத்தில் புரளுகிற சீமானில்லை என்று தெரிகிறது! டேக் கேர் பிரதர்" என்று சொல்லிவிட்டு நடையைக்கட்டுவார்கள்!

    என்னவொரு இயல்பான, ரசிக்க வைத்திடும் காட்சி & வசனங்கள்!!! ஆஸம்!!!

    ReplyDelete
    Replies
    1. வெகுசில கதைகளே படித்தமுடித்து ஓரிரு நாட்களுக்குப் பிறகும் தொடர்ந்து மனதை ஆக்கிரமித்திருக்கும்.. அந்த வரிசையில் இப்போது எனக்கு இந்த 'சிகப்பு ரோஜாக்கள்'!

      Delete
    2. எனக்கு இந்த கதை மற்றும் ஜூலியா இரண்டும் படித்த தாக்கம் இன்னும் இருக்கிறது. தீபாவளி மலரின் ஹிட் இது இரண்டு தான்.

      Delete
    3. //இந்தமுறை முற்றிலும் இலவசம்! இந்தக் காரை நீ வைத்திருக்கும் இலட்சணத்தைப் பார்த்தால் நீ ஒன்றும் தங்கத்தில் புரளுகிற சீமானில்லை என்று தெரிகிறது! டேக் கேர் பிரதர்" என்று சொல்லிவிட்டு நடையைக்கட்டுவார்கள்!//

      👏👏👏

      Delete
    4. எனக்கு அந்த sequence படிக்கும் போது நமது ஆசிரியர் பையை திருடிய கிழவிகளின் ஞாபகம் தான் வந்து போனது :-)

      Delete
  67. #### So காலியாயிருப்பது ஸ்லாட் # 6 மாத்திரமே ! இதற்கு கார்ட்டூன் ஜான்ரா ? ஆக்ஷனா ? டிடெக்டிவா ? என்ன மாதிரியான கதை சுகப்படுமென்று நினைக்கிறீர்கள் guys ? ####


    ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி ஒரு டிடெக்டிவ் ஸ்டோரி ப்ளீஸ் சார்.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லையே.!டிடக்டிவ் ஜானருக்கு நல்லாவே ஓட்டு விழுது.

      Delete
  68. Edi sir please allot the jumbo slot for detective
    🧐🧐🧐🧐🧐🧐🙄🙄

    ReplyDelete
  69. ஸ்லாட் 6 நம்மிடம் வராமல் இருக்கும் காரிகன் ரிப்கெர்பி DC (detective combo) ஒண்ணு போட்டர்ல்லாம் சார்.

    ReplyDelete
  70. ஸார் எப்படியாவது அந்த லார்கோ தொழில் சம்பந்த டாக்குமெண்ட்ரிய பிரெஞ்சலிருந்து மொழி பெயர்த்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்தால் சந்தோசம்.... நிச்சயம் கி நா போல இதும் தேவையான muyarchi... நமது அடுத்த மைல் கல்லாய் irukkum... நன்றி கள்

    ReplyDelete
  71. ஜம்போ-ஸ்லாட் 6 க்கு, ஏதேனும் சுவாரஸ்யமான adventure கதை(காடு, புதையல் சம்பந்தமான) இருந்தால் try பண்ணலாம் sir...☺👍

    ReplyDelete
  72. தலைவர்: (அரைகுறை அ. கொ. தி. க. கோவை கிளை): We have a situation. வரும் வருடம் நிறைய டெக்ஸ்கதைகளும், இன்னும் நிறைய அதிரிபுதிரியான கதைகளும் வரவுள்ளன. அதுவும் 40 ரூபாய்க்கும் லயன் வர போகிறது. வயிறு எரிகிறது.

    உறுப்பினர்: அதுக்கு நாம என்ன செய்றது?

    தலைவர்: இதனை சும்மா விட்டுவிடக்கூடாது.

    உறுப்பினர்: ஏதாவது ரோசனை இருக்குதா, எசமான்?

    தலைவர்: நம்மிடம் உள்ள காமிக்ஸ்களை PDFஆக எடுத்து அவற்றை கேட்பவர்கெல்லாம் தானம் செய்வதாக அறிவித்து விட்டால் நாம் எவ்வளவு பெரிய வில்லன்கள் என்பதை அறிந்து Code Name ‘V’ க்கு டென்ஷன் ஏற்படும். ஹைய்யா!! ஜாலி, ஜாலி!!! Go, go, go, go,சலோ, சலோ.

    (பின்குறிப்பு: Sir, புதுவருட அட்டவணைக்கு எனது வரவேற்பு. எனினும் ஸ்பைடர், ஆர்ச்சி இடம் பெறாதது கொஞ்சம் வலி தான். பரவாயில்லை சார். No problem. I will have been waiting.)

    ReplyDelete
  73. 50 வது ஆண்டு கொண்டாட உள்ளோமல்லவா....

    இத்தனை ஆணாடுகளாக சளைக்கா காதலோடு காமிக்ஸுடன் அந்நியோன்யமாக வாழ்ந்து நமக்கெல்லாம் எடுத்துக் காட்டாக விளங்கும் திரு.விஜயன் அவர்களுக்கு

    என்ன பரிசை கைமாறாக வழங்குவோம் நண்பர்களே....

    அலசுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்.
      என்ன செய்யலாம்?
      சிவகாசியில் நம் வாசகர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பாராட்டுவிழா நடத்தினால் என்ன?

      Delete
    2. கண்டிப்பாக நடத்தலாம். மிகப்பெரிய பாராட்டு விழா. சிறு வயதில் இருந்தே நம்முடைய வாழ்வில் இரண்டற கலந்து விட்ட காமிக்ஸ் ஆசானுக்கு நமது சிறிய நன்றியாக.

      Delete
    3. கடந்த வருடம் இதனை பற்றி இங்கு விவாதிக்கபட்டது. மதுரை என்பது அனைவரும் வந்து செல்வதற்கு எளிதாக இருக்கும் என்பது நண்பர்களின் அபிப்பிராயம். எனவே மதுரையில் நடத்தலாம் என ஒரு ஐடியா உள்ளது.

      எனக்கு ஆசிரியரின் ஊரில் நடந்த விருப்பம்.

      பெரும்பாலான நண்பர்களின் முடிவு எதுவோ அது எனக்கு சம்மதம்.

      Delete
  74. //
    "நிதிகள் பற்றியொரு அறிமுகம்" என்ற தலைப்பில் லார்கோவைக் கொண்டு பங்குச் சந்தைகள் ; பெரும் குழும நிதி பரிவர்த்தனைகள் இத்யாதிகள் பற்றியொரு ஆல்பம் வெளியிட்டுள்ளனர் !! டாகுமெண்டரி ரகத்திலான இந்த ஆல்பம் //

    டாக்குமெண்டரி போல் என தெரிந்த பிறகு இந்த கதை தமிழில் வேண்டாமே என்பதே எனது தாழ்மையான கருத்து.

    ReplyDelete