Monday, October 14, 2019

ரவுசின் ராத்திரி !

ஆயிரம் பின்னூட்டமிட்ட அதிசய சிகாமணிகளே,

வணக்கம். சமீப வாரங்களில்  தெறிக்கச் செய்து வரும் உங்களது ரவுசுகள் இந்தப் பக்கத்துக்கொரு புத்துணர்வை ஊட்டியுள்ளது நிஜம் ! ஒரே நாளில் மூவாயிரம் / நாலாயிரம் ஹிட்ஸ் என்று நீங்கள் டாப் கியரைப் போடும் வேகத்தைப் பார்த்தால் 4  மில்லியன் ஹிட்ஸ் தொலைவில் இல்லை என்று படுகிறது !! சும்மாவே நான் காலைத் தூக்கி தொண்டைக்குழியினுள் செருகிப் பார்ப்பதில் ஸ்பெஷலிஸ்ட் ; இதில் சமீப நாட்களில் நீங்கள் போட்டுத் தாக்கும் பேட்டை ராப் கச்சேரியின் புண்ணியத்தில் அடுத்த "வாய்க்குள் பாதம் "(பாதாம் இல்லீங்கோ!!) episode ஆரம்பித்திடுமோ என்று பயந்து பயந்து வருது !! எது எப்படியோ - தீபாவளி மலர் & நவம்பரின் இதர இதழ்களின் பணிகளை நிறைவு செய்து விட்டால், நானுமே சித்தே உங்க வாசிப்புக் கச்சேரிகளில் பங்கேற்றுக் கொள்வேன் ! அந்த சனியிரவு என்ன ரகளை செய்துள்ளீர்கள் என்பதைப் பார்த்திட இன்னமும் அவகாசம் கிட்டிடவில்லை ; ஆனால் அத்தகையதொரு 'ரவுசு ராத்திரி' வாய்ப்பு இன்னொருக்கா அமையின் - அடியேனையும் அந்த ஆட்டத்தில் சேர்த்துக்கோங்களேன் !!

Anyways இன்னும் இரண்டே மாதங்களில் ஆண்டு நிறைவுறவுள்ள வேளையில் - இந்த உபபதிவினில் நான் கேட்க நினைக்கும் கேள்விகள் இதோ :

1. நடப்பாண்டில் இன்னும் நீங்கள் படித்திரா நமது புது இதழ்கள் எத்தினி இருக்கும் ?

*Under 5 ....... * Around 10 ........ * ஹி...ஹி..படித்தது கையளவு  !! 

2. இந்தாண்டில் (இதுவரையிலான) ஒரேயொரு இதழை "SIMPLY SUPERB" என்று வர்ணிப்பதாயின் - உங்கள் தேர்வு எதுவாக இருக்குமோ ?  (ஒரேயொரு தேர்வு மாத்திரமே permitted !!)

3 இந்தாண்டின் "TOP 3 மொக்கைப்பீஸ்கள்"  (இதுவரையிலும்) எதுவென்பீர்கள் ? Unbiased thoughts ப்ளீஸ் ?

4 மாதந்தோறும் வீடு தேடி வரும் கூரியர் டப்பிகளை உடைத்து இதழ்களைக் கையில் ஏந்திடும் போது அந்த சந்தோஷம் இன்னமும் தொடர்கிறதா ? 

5 அதிகாலைகளில் மப்ளரைக் காதில் சுற்றிக் கொண்டே, கொட்டாவியை அடக்கிக் கொண்டேனும் வாக்கிங் போகும் கோஷ்டிகளைப் பார்த்திருப்போம் !! வாக்கிங் போவதில் ஒரு சுகமெனில், அந்த அதிகாலையின் அரட்டை ; கலாய்ப்ஸ் சிலருக்கு ஒரு கூடுதல் attraction ! இதே உவமையை இங்கே நம் தளத்துக்குப் பொருத்திப் பார்ப்போமா ? இங்கே நீங்கள் எட்டிப்பார்ப்பது காமிக்ஸ் சார்ந்த அலசல்கள் எனும் வாக்கிங்குக்கோசரமா ? அல்லது போற வழியிலேயே ஒரு கீரை சூப்பையும், ஒரு முட்டைக்கோஸையும் மொசுக்கிக் கொண்டே ஜாலியாய் அடிக்கும்  அரட்டைக்காண்டியா ? காதில் ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு வாக்கிங்கில் மாத்திரமே ஆர்வம் கொண்டிருக்கக்கூடிய நண்பர்களுக்கு - இந்த அரட்டைக்கச்சேரி வாக்கிங் கோஷ்டிகளைக் கண்டாலே கடுப்ஸ் ஆவது இயல்பே ! ஆனாலும் இந்த 'கெக்கேபிக்கே' கோஷ்டி அதுபாட்டுக்கு லூட்டியடிப்பதும் வாடிக்கையே ! உங்களின் பார்வைகள் இதனில் - ப்ளீஸ் ?

Bye for now ! See you around !

P.S : இது தற்சமயம் புதுசாய் வெளியாகியுள்ள ப்ருனோ பிரேசில் 2.0 !! 2 பாக சாகஸத்தின் முதல் பாகமிது! உங்கள் அபிப்பிராயங்கள் பிளீஷ் ?

அப்பாலிக்கா இதுவும்  !! 

328 comments:

  1. Replies
    1. பாலன் சார் நீங்க எப்பொழுதும் இங்கேயே தான் இருக்கிறீர்கள். Confirmed

      Delete
  2. எடிட்டர் சார்.. புது ப்ரூனோ ப்ரேசிலுக்கு அடுத்த வருசம் ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம் சார்.. பழைய பாணி கதைகளே நமக்கு 'ஞே' வாக இருந்தது. இது புதுயுக பாணி என்பதால் நிச்சயம் நம்மை வசீகரிக்க்கூடும் சார்!

    ரிப்போர்ட்டர் ஜானியைப் போல் அல்லாமல், இந்த வெர்ஷன்2.0 விலும் ப்ரூனோ பிரேசிலின் முகவெட்டு மாறாமலிருப்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது!

    அந்த XIII spin-offஐ பார்த்தாலே கண்கள் விரிகிறது!! முடிஞ்சா அதையும் களமிறக்குங்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. // இது புதுயுக பாணி என்பதால் நிச்சயம் நம்மை வசீகரிக்க்கூடும் சார்! //
      வாய்ப்பிருக்கு,வாய்ப்பிருக்கு.......

      Delete
    2. Spin off நஹி///--- அடுத்த சீரியஸ் தொடக்கமா சார்! மேலதிக தகவல்கள் ஏதாவது???

      Delete
  3. ////நண்பர்களுக்கு - இந்த அரட்டைக்கச்சேரி வாக்கிங் கோஷ்டிகளைக் கண்டாலே கடுப்ஸ் ஆவது இயல்பே ! ஆனாலும் இந்த 'கெக்கேபிக்கே' கோஷ்டி அதுபாட்டுக்கு லூட்டியடிப்பதும் வாடிக்கையே ! உங்களின் பார்வைகள் இதனில் - ப்ளீஸ் ////

    நல்ல வாகான தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள் எடிட்டர் சார்! 'கெக்கபிக்கே' கோஷ்டியின் கொட்டத்தை அடக்க நண்பர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு!

    பெருவாரியான நண்பர்களின் கருத்துகளையே தீர்ப்பாக ஏற்றுக்கொண்டு, கெக்கபிக்கே கோஷ்டி இனி அதற்கேற்ப செயல்படும்!

    ReplyDelete
    Replies
    1. சாலையில் எல்லோருக்குமே இடமுண்டு தானே சார் ? அவரவர் பாணி அவரவர்க்கு !

      Delete
  4. கூரியர் பார்சலை கைப்பற்றி அதனை உடைத்து பொக்கிஷங்களை தடவி முகர்ந்து கையிலேந்தி பரவசப்படும் அனுபவம் இருக்கிறதே! அதையெல்லாம் விவரிக்க முடியாது சார். அந்த ஒருநாள் அனுபவத்திற்காக மாதம் முழுதும் காத்திருக்கும் சுகம் இருக்கிறதே அதை உசிலைமணியாரின் பாணியில் கூறுவதானால் ஆஹா..ஓஹோ...பேஷ்...பேஷ்....! அந்த சுகம் ரொம்ப நன்னாயிருக்கு...!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அந்த ஒரு நாளுக்காக தான் மாதம் முழுவதும் காத்து இருக்கிறேன்.

      Delete
  5. ப்ருனோ ப்ரேசில் தாராளமாக வெளியிடலாம் எ எ கருத்து.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ப்ரூனோ பிரேசில் & 13 இரண்டுமே வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு சூப்பர் விரைவிலே கண்ணில் காட்டினால் தன்னியனாவேன் ஐய்யா சாமி 🙏🙏🙏🙏

    ReplyDelete
  8. கொரியர் ஆபிசில் பார்சல் வந்துவிட்டது என போன் வரும்போது தொற்றிக்கொள்ளும் உற்சாகம் பார்சலை கையிலேந்தி பரபரவென்று பிரித்து கண் குளிர ரசித்து படித்து ருசிக்கும்வரை குறையாது என்றாவது குறைந்தால் அன்று நான் உயிரோடு இல்லையென அர்த்தம்

    ReplyDelete
    Replies
    1. நெத்தியடி செந்தில் சத்யா!! நெகிழவைக்கிறது உங்கள் காமிக்ஸ் காதல்!!

      Delete
    2. அருமை செந்தில்💪💪💪💪💪

      எழுத்துக்கு எழுத்து வழி மொழிகிறேன்.

      Delete
    3. நன்றிகள் நண்பர்களே இந்த எழுத்துக்கள் நம் எல்லோர்க்கும் உள்ள எண்ணங்களே

      Delete
  9. படித்திரா இதழ் ஒன்றே ஒன்றுதான் அது நித்திரை மறந்த நியூயார்க்

    ReplyDelete
  10. இந்தாண்டு சூப்பர் பராகுடா தான் அதில் கொஞ்சம் சந்தேகமில்லை அதற்கப்புரம்
    நெருங்கிவருவது பிஸ்டலுக்கு பிரியாவிடை அப்புறம் தூள் கிளப்பியது
    தலைமுறை எதிரி. பழி வாங்கும் பாவை.பாலைவனத்திலொரு கப்பல்.பழி வாங்கும் புயல்.மனதில் உறுதி வேண்டும்.ட்யூராங்கோ.அண்டர்டேக்கர் என பல ஹிட்கள் அமைந்துவிட்டது 👏👏👏👏👏👏

    ReplyDelete
  11. மொக்கை பீஸ் குடிகாரனின் குற்றங்கள்
    சாரி குளிர்கால குற்றங்கள் தனியோருவன் ரொம்ப சுமார் நீரில்லை நிலமில்லையும் அருமையான தொடக்கம் சப்பையான முடக்கம் சாரி முடிவு மற்றபடி இந்தாண்டு நான் படித்தவரை எல்லாமே நன்றாகவே இருந்தது

    ReplyDelete
  12. தளத்தில் குடியிருப்பது எங்களின் காமிக்ஸ் வெறித்தனம் உங்களின் ஹாஸ்ய எழுத்து நடைக்காகவும்

    ReplyDelete
  13. நண்பர்களே
    நல்ல சட்டை போட்டா கழட்டிகிடுவானுங்க
    நல்ல பேண்ட் போட்ட உருவிக்கிடுவானுங்க
    ஆனா நல்ல காமிக்ஸ் வாசிப்பே எவனாலும் அழிக்க முடியாது

    ReplyDelete
  14. Replies
    1. சத்யா உங்களை போல இரவெல்லாம் முழித்து இருக்க என்னால் இயலாது.

      Delete
  15. 1. ஆகஸ்ட் முடிய வந்த இதழ்கள் அனைத்தும் படிச்சாச்சு. செப்டம்பருக்கு பிறகு வந்த இதழ்கள் எதுவும் கையில் இல்லாததால் படிக்கவில்லை.

    2. பராகுடா.

    3. ஜானதன். மீதி எல்லாமே என்னால் படிக்க முடிந்தது. இரண்டு கிராபிக் நாவல்கள் சிறந்தவையாக இருந்தாலும் படித்து முடித்த பின் மனதில நிரம்பிய வெறுமையால்/சோகத்தால் அந்த மாதிரி கதைகள் எனக்கு பிடிப்பதில்லை. வாழ்வில் பிடிப்பையும் உற்சாகத்தையும் ஊட்டும் கதைகளே நமது இதழ்களில் வர வேண்டுமெண்டுமென்பது எனது அவா.
    4. யெஸ். பேக்கிங் தரத்தில் நாம் வெகு முன்னேற்றம் அடைந்து விட்டோம் என்பதை மறுக்கா சொல்லிக் கொள்கிறேன்.
    5. நானெல்லாம் அரட்டை பார்ட்டியாக்கும். நேரமிருக்கும் போதெல்லாம் கமெண்ட் செக்சனுக்கு வருவதே அரட்டையடிக்கத்தான். இங்கே தற்போது இருக்கும் பாசக்கார பசங்களின்நட்பு வட்டாரமும் அதன் அரவணைப்பும் தரும் உற்சாகம் அளவிட முடியாத்து.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாய்ண்ட் no.5 அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

      Delete
    2. //பேக்கிங் தரத்தில் நாம் வெகு முன்னேற்றம் அடைந்து விட்டோம் என்பதை மறுக்கா சொல்லிக் கொள்கிறேன். //

      பேக்கிங்கா ? பிரின்டிங்கா சார் ?

      Delete
    3. அந்தக் கேள்வி பேக்கிங் பிரிப்பதன் போது ஏற்படும் உற்சாகத்தை பற்றி கேட்டிருந்ததால் அப்போது சொன்னது பேக்கிங் பற்றிங்க சார்.

      ப்ரிண்டிங்்மற்றும் மேக்கிங் தரம் பற்றி ஒவ்வொரு கதையை பற்றி விமர்சனம் ெழுதும் போதும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் பேக்கிங் பற்றி அப்படி அல்லாததால் அதைக் குறிப்பிட்டேன்.

      Delete
  16. 1. 10, 2. Vanjam marapadhillai ...... .Bruno Brazil please immediately. (Very sad he was unjustly given low marks)

    ReplyDelete
  17. 1.இந்தாண்டு வெளிவந்ததில் படிக்காதவை....
    1.தலைமுறை எதிரி,2.ஜனாதன் கர்ட்லேன்ட்,3.தனியொருவன்,4.பழிவாங்கும் பாவை
    2.சிகரங்களின் சாம்ராட்‌.....(சிம்ப்ளி சூப்பர்).
    3. உலகமகா மொக்கைபீஸ்ஸாக தோன்றுவது "நித்திரை மறந்த நியூயார்க்".
    இதெல்லாம் இரசிக்க உண்மையாக இரசனைகளில் முதிர்ந்திருக்க வேண்டும்.
    டாப் 10 வரைக்கும் கூட பட்டியல் போடலாம்.அடுத்தவர்களுடைய அர்பணிப்பான உழைப்பை அவமதிக்கும் நோக்கம் இல்லை.
    4. குரியர் டப்பாவும் சிலபல பொழுதுகளில் நம் முகவரியை அடைய தேடிவந்ததுண்டு.
    அத்தருணங்கள் உண்மையாக பரவசமானதே. சந்தாதாரராக காமிக்ஸ்ல்
    இணைந்திருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
    5.தளத்தை பார்வையிடுவது காமிக்ஸ் மீண்டும் வாங்கத் தொடங்கியதிலிருந்து நடைமுறையில் உள்ளது.
    ஒருசில நேரங்களில் மொக்கையாக பதிவிடவும் வாய்ப்பாக அமைகிறது.
    காமிக்ஸ் மீது உள்ள நேசம்,மற்ற காமிக்ஸ் வாசகர்கள் மீதும் பரவுவது இயல்புதானே.
    Tex Kid என்ற பெயரில் ஒரு நண்பர் பதிவிடுவார்.அவருடைய பதிவுகளையே வாசிக்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை.
    சமூக வலைதளத்தில் ஏற்படும் தொடர்புகளில் பெரிதாக ஆர்வம் இல்லை.ஆனால் இங்கு வருகை புரியும் அனைவரும் காமிக்ஸை ஆராதிக்கும் அணியினர் என்ற வகையில் மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. //சமூக வலைதளத்தில் ஏற்படும் தொடர்புகளில் பெரிதாக ஆர்வம் இல்லை.ஆனால் இங்கு வருகை புரியும் அனைவரும் காமிக்ஸை ஆராதிக்கும் அணியினர் என்ற வகையில் மகிழ்ச்சியாக உள்ளது.//

      +1

      Delete
    2. // காமிக்ஸ் மீது உள்ள நேசம்,மற்ற காமிக்ஸ் வாசகர்கள் மீதும் பரவுவது இயல்புதானே. // இது நூறு சதவீதம் உண்மை.

      Delete
  18. 1. Only one, மாக் & ஜாக், எங்கே ஓடி ஒளிந்தார்கள் என்று தெரியவில்லை. பொங்கலுக்கு வீடு சுத்தம் செய்யும்போது சிக்காமலா போய்விடுவார்கள். (கார்ட்டூன் நிறைய வேண்டும் சார்)

    2. பாராகுடா 1 - அலைகடல் அசுரர்கள்

    3. ஜனாதன் (டாக்குமெண்டரி), சாத்தானின் சீடர்கள் (புளிச்ச மோர்), நித்திரை மறந்த நியூயார்க் (சிறப்பான சித்திரங்கள், ஆனால் இதுவரை படித்தவை அனைத்தும் கனவு/கற்பனை என்று படித்தவர்களை லூசாக்கும் கதை)

    4. பார்சல் அனேகமுறை 2 நாள் தாமதமாகவே கையில் கிடைக்கும். பார்சலை கையில் பெற்றவுடன் சம்பள பணம் கிரடிட்டட் குறுஞ்செய்தியை பார்த்த அளவுக்கு மகிழ்ச்சி.

    5. காமிக்ஸ் பற்றி அலசி ஆராய்வதே முக்கிய குறிக்கோள், to get a different view of the story. தமிழில் உரையாட இதைவிட வேறு வாய்ப்பு எனக்கில்லை. மற்றவை அனைத்தும் போனஸ்ஸே

    ReplyDelete
    Replies
    1. //தமிழில் உரையாட இதைவிட வேறு வாய்ப்பு எனக்கில்லை.//

      அழகான பாய்ண்ட் சார் !

      Delete
    2. ஜாக்மாக் தேடிப் படிங்க, ,,விழுந்து சிரிக்காட்டி என்ன ஏன்னு கேளுங்க

      Delete
  19. 1. உங்கள் கேள்வி தவறு எடிட்டர் சார் எல்லா இதழ்களையும் குறைந்தது 2 அல்லது 3 முறை படித்து இருக்கிறேன். 0 படிக்காமல் இருக்கும் புத்தகங்கள்.

    ReplyDelete
  20. // இது தற்சமயம் புதுசாய் வெளியாகியுள்ள ப்ருனோ பிரேசில் 2.0 //
    நம்ம ப்ரின்ஸ் இதழுக்கு பதிலாக கூட இதை முயற்சித்து பார்க்கலாம் சார்.......

    ReplyDelete
  21. 2. உத்தம புத்திரன்.
    3.டாப் மொக்கை பீஸ்கள்
    சாத்தானின் சீடர்கள், நீரில்லை நிலமில்லை

    ReplyDelete
  22. 4. சிறு வயதில் காமிக்ஸ் ஐ கடையில் பார்க்கும் போது என்ன சந்தோசம் இருந்ததோ அதில் இம்மி அளவு கூட இப்போதும் குறைய வில்லை.

    ReplyDelete
  23. 5. நானும் இந்த கெக் கே பிக் கே கோஸ்டியில் ஒருவனே. காமிக்ஸ் பற்றி அரட்டை அடிக்க இது மட்டுமே எனக்கு இடம். இங்கு நான் பெற்ற நண்பர்கள் எல்லாருமே ஒரு வரம். நண்பர் கிரி மேலே சொன்னது போல தமிழில் உரையாட எழுத இதுவே அருமையான தளம்.

    ReplyDelete
  24. புருனோ பிரேசில் 2.0 ஆர்ட் சும்மா அசத்துதே அப்படியே 2020 இல் வெளியிட வாய்ப்பு உள்ளதா சார். Two thumbs up for it

    ReplyDelete
    Replies
    1. What about William Vance in old mudhalai pattalam series sir

      Delete
    2. சார் வான் ஸ் எல்லாம் வேற லெவல் எனக்கும் பழைய முதலை பட்டாளம் பிடித்தே இருந்தது ஆனால் பல நண்பர்களுக்கு பிடிக்க வில்லை

      Delete
    3. சார். கதையில் வலுவின்றிப் போகும் தருணங்களில் வான்சோ ; வேறு யாரோ தான் என்ன சாதிக்க முடியும் ?

      Delete
  25. // அந்த சனியிரவு என்ன ரகளை செய்துள்ளீர்கள் என்பதைப் பார்த்திட இன்னமும் அவகாசம் கிட்டிடவில்லை ; ஆனால் அத்தகையதொரு 'ரவுசு ராத்திரி' வாய்ப்பு இன்னொருக்கா அமையின் - அடியேனையும் அந்த ஆட்டத்தில் சேர்த்துக்கோங்களேன் !! // உங்களுக்காக காத்து இருந்த போது நடந்தது தான் அந்த ரவுசு ராத்திரி சார். ஒரு சிலர் எல்லாம் அந்த சனி இரவு தூங்கவே இல்லை. நீங்கள் வந்தால் வேற லெவல் க்கு போய் விடும் சார்.

    ReplyDelete
    Replies
    1. //நீங்கள் வந்தால் வேற லெவல் க்கு போய் விடும் சார்//
      உண்மையே, அதுவும் விஜயன் சார் நமது பின்னூட்டத்திற்கு ‌‌‌ரிப்ளை செய்துவிட்டால் , வீட்டுபாடத்திற்கு வாத்தியாரிடம் good வாங்கிய ஒரு பீல் :)

      Delete
    2. அருமையான உதாரணம். நம்முடைய ஒரு கமெண்ட் க்காவது ரிப்ளை செய்து இருக்கிறாரா என்று ஒவ்வொரு முறையும் பார்த்து கொண்டே இருப்பேன்.

      Delete
    3. //அதுவும் விஜயன் சார் நமது பின்னூட்டத்திற்கு ‌‌‌ரிப்ளை செய்துவிட்டால் , வீட்டுபாடத்திற்கு வாத்தியாரிடம் good வாங்கிய ஒரு பீல் :)//

      சார்.சார். நானெல்லாம் அத்தனை ஒர்த் இல்லா ! ஜாலியாய் பணிசெய்து உங்கள் நாட்களை ஜாலியாய்த் தொடரச் செய்ய நினைக்கும் ஒரு சாமான்யனே !

      Delete
    4. The power of the comman man ;)
      உன்னை போல் ஒருவன் படம் பார்த்ததில்லயா சார்.

      Delete
  26. பரூனோ பிரேசில் 2.0 - வரட்டும்.
    XIII- மூன்றாம் சுற்று கண்டிப்பாக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. 13 எனும் மந்திர எண்ணுக்கு ஆதரவு கூடி கொண்டே போவதால் அடுத்தாண்டுக்கு ஒரு ஸ்லாட் கட்டாயம் வேண்டும் சார்

      Delete
  27. 1. இளமையில் கொல் மட்டுமே. ஒரு தொடர் தனி இதழாக வரும்போது படிக்க தோன்றுவதில்லை சார், பராகுடாவும் இப்படித்தான், இரண்டு புத்தகங்களும் கையில் கிடைத்த பின்னரே படித்தேன்.

    ReplyDelete

  28. 2. சந்தேகமே இல்லாமல் பி.பி.வி. தான், பராகுடா, சிகரங்களின் சாம்ராட், டியுராங்கோ, அன்டர்டேக்கர் நெருக்கமாகத் தொடர்கின்றன.

    ReplyDelete
  29. ////
    1. நடப்பாண்டில் இன்னும் நீங்கள் படித்திரா நமது புது இதழ்கள் எத்தினி இருக்கும் ?
    ////

    around 10! (வாழ்க்கையில் முதல்தபாவாக!)

    படிக்காமல் விட்டதற்கு அதிக வேலைப்பளு, குடும்பப் பளு மற்றும் உடற்பளுவே காரணமேமன்றி, ஆர்வக்குறைபாடு அல்ல!

    ///இந்தாண்டில் (இதுவரையிலான) ஒரேயொரு இதழை "SIMPLY SUPERB" என்று வர்ணிப்பதாயின் - உங்கள் தேர்வு எதுவாக இருக்குமோ ? (ஒரேயொரு தேர்வு மாத்திரமே permitted !!)///

    மன்னிக்கவும்! ரொம்ப நேரம் யோசித்தும் ஒரே ஒரு இதழைத் தேர்வு செய்வதில் மனசாட்சி மக்கர் செய்கிறது!
    ஆகவே,
    பிஸ்டலுக்கு பிரியாவிடை, சிங்கத்தின் சிறுவயதில், உத்தமபுத்திரன், சிகரங்களின் சாம்ராட், இருளின் ராஜ்ஜியத்தில், பராகுடா, லக்கியை சுட்டது யார், வஞ்சம் மறப்பதில்லை...


    ///
    3 இந்தாண்டின் "TOP 3 மொக்கைப்பீஸ்கள்" (இதுவரையிலும்) எதுவென்பீர்கள் ? ///

    1. லோன் ரேஞ்சர்
    2. ஜானதன் கார்ட்லேண்டு
    3. சாத்தானின் சீடர்கள்
    (எல்லா இதழ்களையும் படித்திருந்தால் 3வது இடத்தில் மட்டும் மாற்றம் இருந்திருக்கக்கூடும்!)

    ReplyDelete
    Replies
    1. ரவுண்டு பன்னு கேக்காம இருந்து பாருங்க ஈவி

      Delete
    2. ரவுண்டு பன்னு கேக்காம இருந்து பாருங்க ஈவி

      Delete
  30. 3.குளிர்கால குற்றங்கள், சாத்தானின் சீடர்கள் இரண்டும் ரொம்பவே சுமார். நித்திரை மறந்த நியூயார்க், நீரில்லை நிஜமில்லை எனக்கு பிடித்தே இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. //நித்திரை மறந்த நியூயார்க், நீரில்லை நிஜமில்லை எனக்கு பிடித்தே இருந்தது.//

      ரசனை வானவில்லுக்குத் தான் எத்தனை பரிமாணங்கள் ?

      Delete
    2. எனக்கும் தாத்தாவும் நீரில்லை நிலமில்லயும் சாத்தானின் சீடர்களும் சூப்பரோ சூப்பரே

      Delete
  31. 4. அதிலென்ன சந்தேகம் சார், அவ்வப்போது சர்பிரைசாக ரவுண்டு பன்னும் இருந்தால் சந்தோஷத்தை இரட்டிப்பாக அதிகரிக்கச் செய்யலாம்... ஹி...ஹி...

    ReplyDelete
  32. 5. ஏதோ சொல்ல வர்ரீங்கன்னு தெரியுது...
    வாக்கிங் தான் பிரதானமே சார்... ஆனால் சூப்பும், சுண்டலும் நண்பர்களின் அரட்டையும் இல்லாட்டி வாக்கிங் சுவாரஸ்யமா இருக்குமா சார்...

    கடுப்பாகும் பார்ட்டிகளை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே கச்சேரியை களைகட்டச் செய்தால் அதில் அவர்களும் சேர்ந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

    அடேங்கப்பா எதைக் கொண்டுவந்து எங்கே கோர்க்கறீங்க... பென்டாஸ்டிக்!

    ReplyDelete
    Replies
    1. இதில் என்னவென்றால் நானும் அந்த கடுப்பாகும் பார்ட்டி களில் ஒருவராக தான் இருந்தேன். அப்படியே இந்த கெக் கே பிக் கே குழுவில் ஐக்கியம் ஆகி விட்டேன் காலப்போக்கில்

      Delete
    2. பார்வைகளின் இரு பக்கங்கள் சார் !

      Delete
    3. //அடேங்கப்பா எதைக் கொண்டுவந்து எங்கே கோர்க்கறீங்க//

      அட மண்டையில் உதித்த முதல் உவமை சார் !

      Delete
  33. நடப்பாண்டில் இன்னும் நீங்கள் படித்திரா நமது புது இதழ்கள் எத்தினி இருக்கும் ?

    #####

    சாரி சார்...எதுவும் இல்லை...எனவே அடுத்த வருடம் ஏதாவது பாத்து பண்ணுங்க...:-)

    ReplyDelete
    Replies
    1. இது அர்த்தம் வேற மாதிரி இருக்கு ..இந்த பதிவின் கருத்து படிக்க இதழ்கள் பற்றவில்லை..எனவே நேரம் கிடைக்காத வாறு இதழ்களை அதிகரியுங்கள் என்பது இதன் மையப்பொருள்..:-)

      Delete
  34. இந்தாண்டில் (இதுவரையிலான) ஒரேயொரு இதழை "SIMPLY SUPERB" என்று வர்ணிப்பதாயின் - உங்கள் தேர்வு எதுவாக இருக்குமோ ? (ஒரேயொரு தேர்வு மாத்திரமே permitted !!)

    #####

    பராகுடா வை சொல்றதா ...பிஸ்டலுக்கு பிரியா விடையை சொல்வதா ,பாலைவனத்தில் ஒரு கப்பல் சொல்வதா இல்லை இன்னும் ...ம்ஹீம் ரொம்ப கஷ்டமான வினா சார்..

    சாரி...:-)

    ReplyDelete
  35. ரெண்டுமே சூப்பர்,,,,ப்ரூனோ வண்ணத்ல டாலடிக்க இப ஒரு பக்கத்தக் காட்டிருக்கலாம்,,,,ரெண்டும் எதிர்பார்ப்ப தூண்டுது,,,,இடமுண்டு அடுத்த வருடம்னு பட்சி சொல்வது நிசமா

    ReplyDelete
    Replies
    1. Claw உங்கள் ஆர்வம் பார்த்து எடிட்டர் புத்தகங்கள் வெளியிட்டால் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 150 - 200 புத்தகங்கள் வெளியிட வேண்டும். ஹிஹிஹி

      Delete
    2. பட்சி இப்படியே சொல்லிட்டே போச்சு என்றால் பட்சி பிரியாணி ரெடி பண்ணிடுவேன்.

      Delete
    3. ///பட்சி இப்படியே சொல்லிட்டே போச்சு என்றால் பட்சி பிரியாணி ரெடி பண்ணிடுவேன்.///

      உங்களுக்கு காக்கா பிரியாணின்னா ரொம்பப் பிடிக்குமா KS?!! ;)

      Delete
    4. //Claw உங்கள் ஆர்வம் பார்த்து எடிட்டர் புத்தகங்கள் வெளியிட்டால் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 150 - 200 புத்தகங்கள் வெளியிட வேண்டும்//

      மிச்சம் ??

      Delete
    5. ஏது,,,,சார் அதிகமா ஒரு ஸ்பைடர் XIiiஸ்பின், ,,வித்யாசமான களங்கள் கடல் சார்ந்த, வான் சார்ந்த, ப்ரம்மிடுகள் புதயல்கள் பெர்முடா போல அதிசயங்கள் கிரேக்க சாம்ராஜ்யங்கள் ,ஆதி காலங்கள் பண்டய நாகரிகங்கள் ,விலங்குகள் ,பறவைகள் கொண்ட களங்கள் ,மாயா ஜலங்கள் ,ராஜா ராணிக்கள், கலர்மாயாவிக்கள் எவ்ளோ கூட்டிக் கழித்தாலுமே பத்த தாண்டலயே,,,,அபாண்டம்,,,பட்சி பறக்காதுப்பா தலைக்கு மேல

      Delete
    6. கலக்கறீங்க ஸ்டீல்!!
      இது அத்தனையும் எனக்கும் பிடிக்கும்! கூடவே, 'கசமுசா' காட்சிகள் இல்லாத ('இச் இச் உம்ம்மா' மட்டும் ஓகே) மனதைவருடும் மெல்லிய காதல் கி.நா'க்களும்!

      Delete
    7. ஸ்டீல். உங்க கனவு 2020 அட்டவணை போடுங்க. எப்படி இருக்குன்னு பாத்துடலாம்.

      Delete
  36. 3 இந்தாண்டின் "TOP 3 மொக்கைப்பீஸ்கள்" (இதுவரையிலும்) எதுவென்பீர்கள் ? Unbiased thoughts ப்ளீஸ் ?

    ######

    குளிர்கால குற்றங்கள்..( ஒரேடியா குளிர வச்சுருச்சு )

    நீரில்லை நிலமில்லை...( கதையும்)


    வஞ்சங்கள் மறப்பதில்லை...( மறக்க தான் நினைக்கிறேன்..)

    ReplyDelete
  37. மாதந்தோறும் வீடு தேடி வரும் கூரியர் டப்பிகளை உடைத்து இதழ்களைக் கையில் ஏந்திடும் போது அந்த சந்தோஷம் இன்னமும் தொடர்கிறதா ?

    #####

    கொரியர் போன் வந்தாலே கூதுகலம் எனும் போது பார்சல் கைக்கு கிடைக்கும் பொழுது சொல்லவும் வேண்டுமா சார்..:-)

    ReplyDelete
  38. அரட்டைக்கச்சேரி வாக்கிங் கோஷ்டிகளைக் கண்டாலே கடுப்ஸ் ஆவது இயல்பே ! ஆனாலும் இந்த 'கெக்கேபிக்கே' கோஷ்டி அதுபாட்டுக்கு லூட்டியடிப்பதும் வாடிக்கையே ! உங்களின் பார்வைகள் இதனில் - ப்ளீஸ் ?

    ######

    இப்பொழுது எல்லாம் சிரிப்பையும் ,மகிழ்ச்சியையும் தேடி கண்டுபிடிக்க வேண்டுகிறது சார்..அதை எல்லாம் இங்கே வரும் பொழுது பன்மடங்காக கிடைக்கிறது ..அதுவும் ,செயலரின் பதிவுகள் எல்லாம் மனதில் சஞ்சலங்களோ ,கவலைகளோ ,வருத்தத்திலோ இருக்கும் பொழுது கூட அதனை எல்லாம் மறக்கடித்து விட்டு மனதை அப்படியே லேசாக்கி விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..

    மேலும் இது போல அரட்டை கச்சேரிகள் மூலம் தான் புத்தகவிழா போன்ற சமயங்களில் நேரில் பார்க்காத நண்பர்களை முதல் முறையாக பார்க்கும் பொழுது கூட எந்தவித தொலைவும் அல்லாமல் அனைவரிடமும் அனைவரும் நெருங்கி பழக முடிகிறது .

    எனவே அரட்டை நல்லதே...:-)

    ReplyDelete
    Replies
    1. நன்னி தலீவரே நன்னி!! _/\_

      Delete
    2. //அதுவும் ,செயலரின் பதிவுகள் எல்லாம் மனதில் சஞ்சலங்களோ ,கவலைகளோ ,வருத்தத்திலோ இருக்கும் பொழுது கூட அதனை எல்லாம் மறக்கடித்து விட்டு மனதை அப்படியே லேசாக்கி விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..//

      That "அவர் வாசிக்க ; இவர் டான்ஸ் ஆட - தில்லானா மோகனாம்பாள் பாத்த மேரியே இருக்கு moment !!

      Delete
  39. 1. நடப்பாண்டில் இன்னும் நீங்கள் படித்திரா நமது புது இதழ்கள் எத்தினி இருக்கும் ?

    இரண்டு மாதங்கள் அலுவலகப் பயிற்சி நிமித்தம் (ஏப்ரல்,மே) இருந்ததாலும்,ஜுனில் பள்ளிப்பணி பளுவாலும் கொஞ்சம் இதழ்கள் தேங்கியது உண்மையே.எனினும்,பிறகு கிடைத்த வாய்ப்புகளில் எல்லா இதழ்களையும் படித்து முடித்தாயிற்று,தற்போது வரை எந்த இதழ்களும் நிலுவையில் இல்லை......

    ReplyDelete
  40. Simply superb.ஒரு இதழ் மட்டுமா... ம். ம்.. ஆங்.. பிஸ்டலுதகு பிரியாவிடை ( கொடுக்க முடியாத) பராகுடா.
    அப்புறம் மொக்கை பீஸ்ங்களா..ஜானதன் தாத்தா.நீரில்லை நிலமில்லை.

    ReplyDelete
    Replies
    1. தாத்தா ஏகத்துக்கும் பல்ப் வாங்குறாரே ?

      Delete
  41. // 2. இந்தாண்டில் (இதுவரையிலான) ஒரேயொரு இதழை "SIMPLY SUPERB" என்று வர்ணிப்பதாயின் - உங்கள் தேர்வு எதுவாக இருக்குமோ ? (ஒரேயொரு தேர்வு மாத்திரமே permitted !!) //
    ஈ.வி கருத்தையே இதில் வழிமொழிகிறேன் சார்,ஒரேயொரு இதழ்கள் எல்லாம் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை சார்,
    பிஸ்டலுக்கு பிரியாவிடை, சிங்கத்தின் சிறுவயதில், உத்தமபுத்திரன், சிகரங்களின் சாம்ராட், இருளின் ராஜ்ஜியத்தில், பராகுடா 1 & 2,வதம் செய்ய விரும்பு - ட்யுராங்கோ,ஒரு ஷெரீப்பின் சாஸனம்,நித்திரை மறந்த நியூயார்க்,நித்தம் ஒரு யுத்தம்,ஒரு ரெளத்திர ரேஞ்சர்,கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு,புதைந்து போன புதையல்.........
    மேற்கூறியவைகள் மீள் வாசிப்புக்கு தாரளமாக உகந்தவை,அதே நேரத்தில் மனதிற்கு பிடித்தவையும் கூட.......

    ReplyDelete
  42. ஜானி 2.0 வை போல ப்ரூனோ 2.0 அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் சார்..வெற்றி ,தோல்வியை பொறுத்து தொடர செய்யலாம் என்பது எனது கருத்து..:-)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ஆசிரியரே ப்ரூனோ பிரேசிலின் அணி வலுத்துக்கொண்டே போகிறது கொஞ்சம் கடைக்கண் பார்வையை ப்ரூனோ மேல் வீசுங்கள்

      Delete
  43. // 3 இந்தாண்டின் "TOP 3 மொக்கைப்பீஸ்கள்" (இதுவரையிலும்) எதுவென்பீர்கள் ? Unbiased thoughts ப்ளீஸ் ? //
    1.ஜெரெமயா பாகம்-2,
    2.மரண வைரங்கள்,
    3.குளிர்காலக் குற்றங்கள்......
    இவை மொக்கைகளாக எனக்குத் தோன்றியதற்கு முக்கியக் காரணம் கதையில் வலு இல்லாமை,கதைக் களத்தில் எந்த ஈர்ப்பும் தோன்றாமை.........

    ReplyDelete
  44. ப்ரூனோ கண்டிப்பாக முயற்சிக்கலாம் சார்.

    படிகாதவை கொஞ்சம் கனிசமே .. மகளின் விளையாட்டு கூட்டாளி ஆனது முக்கிய காரணம் 😀.

    எப்படியோ தல சாகசங்கள் அனைத்தும் படித்தாயிற்று அடுத்து பாண்ட் மற்றும் சில. மீத புத்தகங்களையும் படிக்க கிடைக்கும் நேரத்திற்கு காத்திருக்கிறேன்.

    தளத்திற்கு பெரும்பாலும் வருவது ஞாயிறு காலை மட்டும் தான்.. ஆனால் இங்கு கூத்தடிக்கும் நண்பர்களுடன் சேர முடியாதது வருத்தமே. ஆனால் தளத்தை மிகுந்த ஆக்டிவாக மிகுந்த மகிழ்ச்சியே.

    நீங்கள் பதிவு போட்டு அடுத்த நாள் மாலை வீடு திரும்பி அந்த கொரியரை பார்த்த உடன் வரும் சந்தோசம் மட்டும் என்று குறைவதில்லை. பிரித்து அவைகளை கைகளில் ஏந்தி ஒரு புரட்டு புரட்டி விட்டு வைத்துவிடுவேண்.

    ReplyDelete
    Replies
    1. * ஆனால் தளத்தை மிகுந்த ஆக்டிவாக அவர்கள் வைத்திருப்பத்தில் மிகுந்த மகிழ்ச்சியே.

      Delete
    2. //படிகாதவை கொஞ்சம் கனிசமே .. மகளின் விளையாட்டு கூட்டாளி ஆனது முக்கிய காரணம் 😀.//

      முற்றிலும் சரியே நண்பரே ! புள்ளைகளே பிரதானம் - எல்லாக் காலகட்டங்களிலும் !

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. மகளின் விளையாட்டு கூட்டாளி ஆனது முக்கிய காரணம் 😀.//

      சில வருசத்துல ஹோம் வோர்க் சொல்லிக் குடுக்க உக்காருவீங்க கிருஷ்ணா. அப்ப இன்னும் பயங்கர கூத்திருக்கு. 🤣🤣🤣. எனக்கெல்லாம் பெண்டு கழண்டுடுது.

      Delete
  45. // 4 மாதந்தோறும் வீடு தேடி வரும் கூரியர் டப்பிகளை உடைத்து இதழ்களைக் கையில் ஏந்திடும் போது அந்த சந்தோஷம் இன்னமும் தொடர்கிறதா ? //
    இதழ்கள் கிடைக்கப் போகும் முதல்நாளே அதைப் பற்றிய சிந்தனைகள் பலவாறு ஓடிடும் சார்,பணி பளுக்களுக்கு இடையே சரியான நேரத்தில் இதழ்களை எப்படி கைப்பற்றுவது என,தற்போதைய நிலையில் இங்கே எஸ்.டி கொரியர் தேடி எல்லாம் வருவது அரிது,நான்தான் அதை தேடிப் போக வேண்டும்.
    நெடுஞ்சாலை பரபரப்பில் அங்கேயே பிரித்து பார்க்க இயலா விடினும்,பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பெட்டியை பிரிப்பதே ஒரு அலாதியான அனுபவம்தான் சார்....
    பெட்டி பிரிக்கும் படலம் என்று இதற்கு ஒரு தலைப்புக் கூட வைக்கலாம்,
    1.பெட்டிகளை பிரித்தவுடன் முதலில் அட்டைப்பட தரிசனம்.
    2.அடுத்து அட்டைப்படங்கள் சிறப்பாக அமைந்திருப்பின் முன்னும்,பின்னுமாய் ஒரு நோட்டம்.
    3.பின்னர் அடுத்த மாத இதழ்களின் வெளியீடு பற்றிய முன்னோட்டங்களைப் பற்றிய ஒரு சிறப்பு பார்வை.
    4.அங்கே இருந்து பார்வையை ஒருவழியாக நகர்த்தி,வாசகர் ஹாட்லைன் வாசிப்பு.
    5.இதை எல்லாம் முடித்தப் பின்னர் தான் இதழ்கள் வாசிப்பு,எந்த இதழ் முதலில் என அது அப்போதைய மனநிலையைப் பொறுத்து.
    6.அடுத்து இதழ் விவரங்களை பற்றி பதிவு செய்தல்,இதழ் பற்றிய விமர்சனங்கள்,படித்த இதழ்களை பத்திரமாக அட்டையிடுதல்,அடெயப்பா நினைச்சி பார்த்தா எவ்வளவு பணிகள்.......
    இதை எல்லாம் செய்வதே மகிழ்ச்சியான பணிதானே,எந்தவொரு சங்கடமோ,முகசுழிப்போ இல்லாமல் இவற்றைச் செய்வதே ஒரு மனமகிழ்வான பணி.....இதுபோன்ற செய்வதற்கு அலாதியான,இதயத்திற்கு நிறைவை அளிக்கும் செயல்களே நம்மை உயிர்ப்போடு வைத்திருப்பதாக அவ்வப்போது தோன்றுவதுண்டு சார்.......

    ReplyDelete
    Replies
    1. 👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼💐💐💐

      Delete
    2. அப்டியே நானும்,,,அருமயாச் சொன்னீர்கள்

      Delete
    3. வாவ்!! அருமையாச் சொன்னீங்க ரவி அவர்களே!! :)

      Delete
    4. மூச்சிரைக்கிறது சார் !

      Delete
    5. ரவி அண்ணா வரவர அட்டகாசமாக எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். அடி தூள்

      Delete
  46. 1. Under 5 - குறிப்பா சொல்லனும்ன்னா இந்த மாதத்தில் ஒன்று பெண்டிங் உள்ளது..

    2. சந்தேகமே இல்லாமல் பிஸ்டலுக்கு பிரியா விடை & பராகுடா.. ஒன்று வறண்ட வன்மேற்கிலும் மற்றது கடலிலும்..

    3. உண்மையா சொல்லனும்னா இப்போதைக்கு ஞாபகம் இல்லை..

    4. அந்த பரபரப்புக்கு பஞ்சமுல்லை.. அந்த கணங்களில் மனைவியும் பிள்ளைகளும் பார்த்து ரசிப்பதுண்டு..!!

    5. முதல் காரணம் உங்களின் பதிவுக்கு ரசிகர்கள்.. காமிக்ஸ் சார்ந்த அலசல்கள் மற்றும் காமிக்ஸ் குடும்ப சொந்தங்களின் அரட்டைகள்..

    ReplyDelete
    Replies
    1. //அந்த கணங்களில் மனைவியும் பிள்ளைகளும் பார்த்து ரசிப்பதுண்டு..!!//

      Awesome !!

      Delete
  47. // ஆனாலும் இந்த 'கெக்கேபிக்கே' கோஷ்டி அதுபாட்டுக்கு லூட்டியடிப்பதும் வாடிக்கையே ! உங்களின் பார்வைகள் இதனில் - ப்ளீஸ் ? //
    அரட்டை நல்ல விஷயம்தானே,ஒன்றும் பிரச்சனை இல்லை சார்,
    சிறு குறை என்னவெனில் பதிவின் எண்ணிக்கையை கூட்ட வெறும் எண்களை மட்டுமே பதிவிடுவதை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்,அவை சில நேரங்களில் ஒருவித அயற்சியை கொண்டுவந்து விடுகிறது....
    பணி பளுக்களுக்கு இடையே இங்கே வருவதே ஒரு மகிழ்ச்சிக்காகவும்,நண்பர்களிடம் பேசவும்தானே,அதனால் விவாதங்கள் முடிந்தவரை அர்த்தப் பூர்வமாகவும்,செறிவுடனும்,ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று தோன்றும்....
    அதே நேரத்தில் ஜாலியான அரட்டையும் நல்லதே.......

    ReplyDelete
    Replies
    1. ஞான் முட்டைக்கோஸ் அடிச்சில்லா -பச்சே கோஷ்டியில் வாக்கிங் போற அணியே ! தூக்கம் போட்டு தாக்கினாலும் அங்கே நண்பர் குழு காத்திருக்குமே என்ற நினைப்பில் போர்வையைக் கடாசத் தோன்றும் !

      Delete
    2. ரவி அண்ணா அருமையாக சொன்னீர்கள். இனிமேல் நம்பர் போட்டு பதிவு எண்ணிக்கையை கூட்ட மாட்டேன்.

      Delete
    3. // ரவி அண்ணா அருமையாக சொன்னீர்கள். இனிமேல் நம்பர் போட்டு பதிவு எண்ணிக்கையை கூட்ட மாட்டேன். //

      மூன்று பதிவுகளுக்கு முன்னர் இதே போல் தான் என்னிடம் சொன்னீங்க குமார் :-)

      Delete
    4. பரணி அதற்கு பிறகு நான் நல்லவனாக மாறி விட்டேனே நீங்கள் கவனிக்க வில்லையா

      Delete
  48. பத்து பதினைந்தஉ மீந்திருக்கும்
    பராகுடா
    மொக்கனா இல்ல ப்ளூகோட் சுமார்
    சந்தோசம் சிறப்பிதழ்கள கண்டா எகிறுது,சாதாவ கண்டா சோதாவாயிறுது,எது எப்டியிருந்தாலும் புத்தகங்கள கைப்பற்றும் ஆர்வம் தொடருது

    சந்தோசமே,,,காமிக்ஸ் சார்ந்து வருகையில் கூடுதல் சந்தோசம்

    ப்ரூனோ சாக மறந்த சுறா போல இல்லாட்டி சந்தோசம் அள்ளுது அள்ளித் தெளித்த வண்ணங்கள் சித்திரங்களில்

    பிரத்யோகமா இன்னோர் பதில் நடனமாடும் கொரில்லாக்கள படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரித்தது ஆச்சரியம் ஆர்டினின் ஆயுதத்திற்கு பிறகு

    இங்கே நீங்க காட்டிய பதிமூன ஈரோட்டுத் திருவிழாலயே ரசிச்சதால ஆச்சரியப்பட ஏதுமில்ல, ,,,ஆச்சரியப் படுத்தனும்னா அடுத்தமாதமே வெளியிடுவ்க
    அப்பறம் ஆயிரம் பதிவு சிறப்பிதழ அடுத்த மாதம் இதழ்கள் குறைவதால் சர்ப்ரைசா தந்தா மறுக்க மாட்டோம்னு ஆணித்தரமா சொல்லக் கடமைப்பட்டுள்ளேனுங்க.

    ReplyDelete
  49. 2132... இந்த எண்களிலேேயே XIII வந்து விட்டார். அப்புறம் என்னங்க. 2132 மீட்டர் உசரத்துல இருக்கிற வரை நம்ம தளத்துக்கு சீக்கிரமா இறக்கி விடுங்க.

    ReplyDelete
    Replies
    1. அத்தினி உசரத்திலிருக்கும் மனுஷனுக்கு அங்கே என்ன ஜோலி காத்துள்ளதோ சார் ?

      Delete
    2. 2132 மீட்டர் தொலைவில் இருக்கும் டார்கெட் அடிச்சா ஜேனட்டு எதோ தருமாம்!😍😍😍ஹி...ஹி...!

      Delete
  50. Replies
    1. வெல்கம்பேக் PfB!! வீடு ஷிஃப்டிங் படலம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?

      Delete
    2. 1. நடப்பாண்டில் இன்னும் நீங்கள் படித்திரா நமது புது இதழ்கள் எத்தினி இருக்கும் ?

      எல்லா புத்தகங்களையும் படித்து விட்டேன்

      2. இந்தாண்டில் (இதுவரையிலான) ஒரேயொரு இதழை "SIMPLY SUPERB" என்று வர்ணிப்பதாயின் - உங்கள் தேர்வு எதுவாக இருக்குமோ ? (ஒரேயொரு தேர்வு மாத்திரமே permitted !!)

      தோர்கல்

      3 இந்தாண்டின் "TOP 3 மொக்கைப்பீஸ்கள்" (இதுவரையிலும்) எதுவென்பீர்கள் ? Unbiased thoughts ப்ளீஸ் ?

      நீரில்லை நிலமில்லை
      ஜான் கார்ட்லண்ட் கதை
      ஜானி 2.0
      மரண வைரங்கள்


      4 மாதந்தோறும் வீடு தேடி வரும் கூரியர் டப்பிகளை உடைத்து இதழ்களைக் கையில் ஏந்திடும் போது அந்த சந்தோஷம் இன்னமும் தொடர்கிறதா ?

      கண்டிப்பாக! உடனே படிக்க முடியவில்லை என்றாலும் டப்பாவை திறந்து புத்தகங்களை மேலோட்டமாக பார்த்து விடுவேன்! எனது குழந்தைகளும் ஆர்வமுடன் பார்ப்பார்கள்.

      5 அதிகாலைகளில் மப்ளரைக் காதில் சுற்றிக் கொண்டே, கொட்டாவியை அடக்கிக் கொண்டேனும் வாக்கிங் போகும் கோஷ்டிகளைப் பார்த்திருப்போம் !! வாக்கிங் போவதில் ஒரு சுகமெனில், அந்த அதிகாலையின் அரட்டை ; கலாய்ப்ஸ் சிலருக்கு ஒரு கூடுதல் attraction ! இதே உவமையை இங்கே நம் தளத்துக்குப் பொருத்திப் பார்ப்போமா ? இங்கே நீங்கள் எட்டிப்பார்ப்பது காமிக்ஸ் சார்ந்த அலசல்கள் எனும் வாக்கிங்குக்கோசரமா ? அல்லது போற வழியிலேயே ஒரு கீரை சூப்பையும், ஒரு முட்டைக்கோஸையும் மொசுக்கிக் கொண்டே ஜாலியாய் அடிக்கும் அரட்டைக்காண்டியா ? காதில் ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு வாக்கிங்கில் மாத்திரமே ஆர்வம் கொண்டிருக்கக்கூடிய நண்பர்களுக்கு - இந்த அரட்டைக்கச்சேரி வாக்கிங் கோஷ்டிகளைக் கண்டாலே கடுப்ஸ் ஆவது இயல்பே ! ஆனாலும் இந்த 'கெக்கேபிக்கே' கோஷ்டி அதுபாட்டுக்கு லூட்டியடிப்பதும் வாடிக்கையே ! உங்களின் பார்வைகள் இதனில் - ப்ளீஸ் ?

      நான் எட்டிப்பார்ப்பது காமிக்ஸ் சார்ந்த அலசல்கள் எனும் வாக்கிங்குக்கோசரமா! சில நேரம் மட்டும் இங்கு நடக்கும் அரட்டைக்கச்சேரியை ரசிப்பதுண்டு!

      Delete
    3. விஜய்,
      வீடு மாற்றிவிட்டேன்! அருமையான கிராமம், இயல்பான மக்கள், அமைதியான சூழல், இயற்கையை ரசிக்க அழகான இடம்! குழந்தைகள் மிகவும் விரும்புகிறார்கள்! குழந்தைகள் பள்ளிக்கூடம் 5 நிமிட நடை தொலைவில்! ஆபீஸ் சற்று தூரம், போக 1 மணி திரும்பி வர 1 மணி நேரம்!

      Delete
    4. சூப்பர்!! மகிழ்ச்சி PfB! :)

      Delete
    5. வாங்க பரணி சகோதரரே கிராமத்து வாழ்க்கை சொர்க்கம் நான் என்னுடைய சிறுவயதிலேயே இழந்துவிட்டேன் நீங்கள் அந்த சொர்க்கத்தை அனுபவிக்க வாழ்த்துக்கள்

      Delete
    6. அவர்கள் பள்ளிக்கூடம் அருகில் என்பது ஒரு காரணம் என்றால், நாம் அனுபவித்ததை எங்கள் குழந்தைகளும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஒரு காரணம்!

      Delete
    7. வணக்கம் பரணி சார் .நலமா. ஆயிரத்தில் ஒருவன்ல நீங்க இல்லாமே போயிட்டீங்களே.

      Delete
    8. பத்மநாபன் @ நலம்! நன்றி!
      உங்களுடனே நான் இருக்கும் போது நான் தனியாக ஒரு கமெண்ட் போட தேவையில்லை நண்பரே!

      தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்! முக்கியமாக அந்த 100,200,.... 1000 கவனித்தேன்! ஏனோ அன்று கமெண்ட் போட விரும்பவில்லை!

      Delete
  51. 3. இந்தாண்டின் "TOP 3 மொக்கைப்பீஸ்கள்" (இதுவரையிலும்) எதுவென்பீர்கள் ? Unbiased thoughts ப்ளீஸ் ?

    மொக்கை எண் 4.மரண வைரங்கள்

    ReplyDelete
    Replies
    1. அந்நாட்களில் நாம் சிலாகித்த இதழ்களுள் ஒன்று சார் ! :-)

      Delete
    2. இருக்கலாம் ஆனால் செம மொக்கை! ப்ரின்சுக்கு வேலையே இல்லை!

      Delete
    3. ப்ரின்ஸின் மற்ற மறுபதிப்பு கதைகளை ரசித்தேன் ஆனால் இந்த கதை முடியலை ரகம்! இதற்கு மும்மூர்த்திகளின் மறுபதிப்பு காணாத கதை எதையாவது எங்களுக்கு கொடுத்து இருக்கலாம் சார்!

      Delete
    4. ப்ரின்ஸ் கதைகள் அனைத்துமே ஏற்கனவே படித்த கதைகள்தான்.

      ஆனால் சேகரிப்புக்காக இந்த தொடரில் உள்ள மற்ற கதைகளையும் முழுவீச்சில் வெளியிட்டு நிறைவு செய்து விடலாம்.

      Delete
  52. Top 3

    1.சிகரங்களின் சாம்ராட்.
    2.பி.பிரியா விடை.
    3.பாராகுடா.

    ReplyDelete
  53. புதைத்து போன புதையல்:
    வெவ்வேறு திசைகளில் மூன்று கோஷ்டிகள் பணப் புதையலை தேடுகிறார்கள், இறுதியில் வெற்றி பெறுகிறார்கள் என்பதை குழந்தைகள் கூட கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடுவார்கள்! ஆனால் மெக்ஸிகன் கொள்ளையர்கள், ஒரு பண வெறி பிடித்த தலைவன், கொள்ளைக்கார கணவனுக்காக எதையும் செய்ய துணிந்த மனைவி என்ற வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதை களத்தை கொடுத்து ரசிக்கும் படி கொடுத்த கதாசிரியருக்கு பாராட்டுக்கள்.

    ஆனால் இந்த கதையில் டெக்ஸ் எதற்கு? என்னை பொறுத்தவரை இந்தக்கதையில் டெக்ஸ்க்கு கெஸ்ட் ரோல் தான் என்பேன்!

    ReplyDelete
  54. 2132 மீட்டர் 2020இல் முயற்சிக்கலாமே! அட்டைபடம் மற்றும் கதையின் தலைப்பு வித்தியாசமாக உள்ளது என்பதே முக்கிய காரணம்! ஆனால் நான் ஸ்பின் ஆப் கதைகளுக்கு ரசிகன் எல்லாம் கிடையாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்!

    ப்ருனோ பிரேசில் 2.0 அட்டைப்படம் டீசெர் பக்கங்கள் மற்றும் ஓவியங்கள் அருமையாக உள்ளது, கதையும் .நன்றாக இருந்தால் 2020 அல்லது 2021 மீண்டும் ஒருமுறை மட்டும் முயற்சி செய்து பார்க்கலாம்

    ReplyDelete
    Replies
    1. இருக்கறோம்ல மக்கா :-)

      Delete
    2. பரணி வந்து விட்டீர்களா

      Delete
    3. குமார் @ இங்கு தான் இருந்தேன் மௌனமாக! :-)

      Delete
  55. விஜயன் சார், மார்ட்டினின் நரகத்திற்கு நேர்பாதை கதை எப்போது? ஆர்வமுடன் காத்துகொண்டு
    இருக்கிறேன்!

    அதேபோல் புதிய கதாநாயகர் ரிங்கோவின் ஒரு தங்க தடம் கதை எப்போது? இவருக்கு மொத்தம் எத்தனை கதைகள் உள்ளது ? ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் உள்ளது என்றால் 2020 அட்டவணை வெளிஈடுவதற்கு முன் இவரை காண்பித்தால் இவர் அடுத்த வருட ரயிலில் ஏற இடம் கொடுக்கலாமா வேண்டாமா என முடிவு செய்ய உங்களுக்கு வசதியாக இருக்கும் :-)

    ReplyDelete
    Replies
    1. அதற்கு அவகாசமில்லையே சார் ; ரிங்கோ முதற்பாகம் டிசம்பரில் ! அதன் performance பார்த்துவிட்டு தீர்மானிக்க இயலாது தான் !

      Delete
    2. அப்ப அடுத்த வருடம் அட்டவணையில் இவர் இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாமா சார் ?

      மார்ட்டினின் நரகத்திற்கு நேர்பாதை கதை எப்போது?

      Delete
    3. என்னுடைய கேள்விக்கு பதில் வரும் வரை விடாமல் கேள்வி கேட்டு கொண்டே இருப்பேன். அப்படி தானே பரணி

      Delete
    4. அப்படி இல்லை குமார்! பதில் சொல்வது அவரின் விருப்பம் அதனைவிட அவரின் நேரம் மிகவும் முக்கியம் !

      ஏதோ மீண்டும் கேட்ட வேண்டும் என தோன்றியது!

      Delete
    5. மார்ட்டினின் நரகத்துக்கு நேர் பாதை கதைக்கு பதிலாக நியூட்டனின் புது உலகம் கொடுத்துவிட்டதாக ஒரு முறை பதிலளித்திருந்தார். அந்தக்கதை அனேகமாக 2020 அட்டவணையில் இடம் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

      Delete
    6. நியூட்டனின் புது உலகம் வந்தது. அது போன வருடம் வந்தது என நினைத்து கொண்டு இருந்தேன். அந்த கதை சுமார் தான்.

      ஆனால் நரகத்துக்கு நேர் பாதை கதைக்கு பதிலாக நியூட்டனின் புது உலகம் என்பது தவறான கருத்து என்பது எனது அபிப்பிராயம். ஆசிரியர் இதனை தெளிவு படுத்தினால் நன்று.

      Delete
  56. 007 க்கு போட்டியாக உருவாக்கப்பட்டவர் ப்ரூனோ 007 திரும்ப வந்துவிட்டபோது ப்ரூனோவும் திரும்ப வருவதுதானே நியாயம் சார்

    ReplyDelete
  57. XIII அவ்வளவு உயரத்தில் ஏறிபோவதே அலையடிக்கிறது.

    கதையின் தலைப்பும் வித்யாசமாக மாறுபாட்டுடன் அமைந்துள்ளது இந்த ஆல்பத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
    ஓவியரும்,கதாசிரியரும் புதியவர்கள் போல் உள்ளது‌.கதையை ஒருமுறை வாசித்துவிட்டு ,ஓரளவு தேறும் போல் இருந்தால் அடுத்த ஆண்டு அட்டவணையில் இணைத்து விடலாம்.
    வான்ஹாமின் ஒன்ஷாட் ஆல்பம் ஒன்றை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
    தோர்கல்,வெட்டியான்,லக்கி,சிக்பில்,க்ராபிக் நாவல்கள்,மறுபதிப்பு என அடுத்த ஆண்டு அட்டவணைக்காகத்தான் காத்திருக்கிறோம் ஆசானே.
    இன்னும் ஒரே வாரம்.

    ReplyDelete
  58. 1. நடப்பாண்டில் இன்னும் நீங்கள் படித்திரா நமது புது இதழ்கள் எத்தினி இருக்கும் ?

    அது இருக்கும் ஒரு 5.

    2. இந்தாண்டில் (இதுவரையிலான) ஒரேயொரு இதழை "SIMPLY SUPERB" என்று வர்ணிப்பதாயின் - உங்கள் தேர்வு எதுவாக இருக்குமோ ? (ஒரேயொரு தேர்வு மாத்திரமே permitted !!)

    பராகுடா

    3 இந்தாண்டின் "TOP 3 மொக்கைப்பீஸ்கள்" (இதுவரையிலும்) எதுவென்பீர்கள் ? Unbiased thoughts ப்ளீஸ் ?

    குளிர்கால குற்றங்கள், தனி ஒருவன் மற்றும் நித்திரை மறந்த நியூயார்க்

    4 மாதந்தோறும் வீடு தேடி வரும் கூரியர் டப்பிகளை உடைத்து இதழ்களைக் கையில் ஏந்திடும் போது அந்த சந்தோஷம் இன்னமும் தொடர்கிறதா ?

    இந்த கேள்வி தங்களுக்கே விசித்திரமாக இல்லை. (ஆயிரத்தில் ஒருவன் MGR ஸ்டைலில் படிக்கவும்)

    5 அதிகாலைகளில் மப்ளரைக் காதில் சுற்றிக் கொண்டே, கொட்டாவியை அடக்கிக் கொண்டேனும் வாக்கிங் போகும் கோஷ்டிகளைப் பார்த்திருப்போம் !! வாக்கிங் போவதில் ஒரு சுகமெனில், அந்த அதிகாலையின் அரட்டை ; கலாய்ப்ஸ் சிலருக்கு ஒரு கூடுதல் attraction ! இதே உவமையை இங்கே நம் தளத்துக்குப் பொருத்திப் பார்ப்போமா ? இங்கே நீங்கள் எட்டிப்பார்ப்பது காமிக்ஸ் சார்ந்த அலசல்கள் எனும் வாக்கிங்குக்கோசரமா ? அல்லது போற வழியிலேயே ஒரு கீரை சூப்பையும், ஒரு முட்டைக்கோஸையும் மொசுக்கிக் கொண்டே ஜாலியாய் அடிக்கும் அரட்டைக்காண்டியா ? காதில் ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு வாக்கிங்கில் மாத்திரமே ஆர்வம் கொண்டிருக்கக்கூடிய நண்பர்களுக்கு - இந்த அரட்டைக்கச்சேரி வாக்கிங் கோஷ்டிகளைக் கண்டாலே கடுப்ஸ் ஆவது இயல்பே ! ஆனாலும் இந்த 'கெக்கேபிக்கே' கோஷ்டி அதுபாட்டுக்கு லூட்டியடிப்பதும் வாடிக்கையே ! உங்களின் பார்வைகள் இதனில் - ப்ளீஸ் ?

    காமிக்ஸ் பற்றி பேசினாலே சந்தோசம் தான் சார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை காமிக்ஸ் பற்றி நினைத்தாலோ பேசினாலோ எப்போதுமே சந்தோசமே

      Delete
  59. விஜயன் சார்,

    அடுத்த வருடம் அட்டவணையில் தனியொருவன் உண்டா! இவரின் இந்த வருட விற்பனை சோடை போகவில்லை என்றால் இவரின் மீதம் உள்ள கதைகளை அடுத்த வருடமே முழுவதும் போட்டு முடித்து விடுங்கள்! நான் இவரின் கதையை மிகவும் ரசித்தேன் முதல் இரண்டு கதைகள் மெதுவாக சென்றாலும் அடுத்த கதைகள் எல்லாம் எல்லாம் ஜெட் வேகத்தில் சென்றது உண்மை!

    ReplyDelete
    Replies
    1. அதே அதே அதுவும் அந்த ஓவியங்கள் எல்லாம் அட்டகாசம். அடுத்த வருடமும் கண்டிப்பாக உண்டு என்பது என்னுடைய கணிப்பு

      Delete
    2. ஜேம்ஸ் பாண்ட், தனியொருவன் இரண்டுமே சித்திரத் தரத்தில் அற்புதம்.

      Delete
  60. ஆசிரியரின் கடைக்கண் நம்ம XIII மேல் ஆஹா அருமை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்..ப்ரூனோ கேள்வியே வேண்டாம் சார் நிச்சயமா போடலாம்....

    ReplyDelete
  61. 2020 அட்டவணைக்கான counting start இன்னும் 9 நாள் மட்டுமே....

    ReplyDelete
  62. 1) படிக்காத இதழ் என்று எதுவுமே இல்லை (எத்தனை புக் வந்தாலும் அதிகபட்சம் ஒரு வாரம் தான்)

    2)தோர்கல் (சிகரங்களின் சாம்ராட்)

    3) Nill

    4)கொரியர் அனுப்பியாச்சுன்னு நீங்க அறிவிச்ச பின்னாடி எப்போ விடியும்ன்னுதான் இருக்கும்.

    5) அரட்டை நல்லதுதான்..
    முதல் பத்துக்குள்ள வந்த மகிழ்ச்சிக்கு நம்பர் போட்டா தப்பில்ல..
    ஆனால்
    உப பதிவுக்காக நம்பர் போடறத தவிர்க்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களின் கமெண்ட் படித்த பின்தான் ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது::


      குளிர்கால குற்றங்கள் ரொம்ப சோதிச்சார் அதற்கு காரணம் கதை ஒரு தெளிவில்லாமல் அமைந்ததே.

      Delete
  63. ######இது தற்சமயம் புதுசாய் வெளியாகியுள்ள ப்ருனோ பிரேசில் 2.0 !! 2 பாக சாகஸத்தின் முதல் பாகமிது! உங்கள் அபிப்பிராயங்கள் பிளீஷ் ?



    அப்பாலிக்கா இதுவும் !! #######

    டபுள் தம்ஸ் அப் சார்..

    ReplyDelete
  64. 1.படிக்காத இதழா???? அப்டீனா???
    பத்தலயே..!!!

    2.டாப்ஸ்:பராகுடா; பி.பி.வி; சி.சா.;

    3.ப்ளாப்ஸ்:குளிர்கால குற்றங்கள்; தனியொருவன்; ஜெரமையா

    4.புக் அனுப்பியாச்சிங்கிற பதிவு தான் மாதத்தின் சிறந்த பதிவு; புத்தக பாக்ஸை உடைக்கும் போது மெல்லிய சிலர்ப்பான ஜெர்க் ஓடும். அது ஓடும் வரை நம்ம மூச்சும் ஓடும்!

    5.அதுவந்தே;இதுவுந்தே!(உபயம்:தாங்கள் தான்) இன்னிக்கி பலரும் வாயே திறக்க மாட்டாறாங்க! திறந்தாலும் சாப்பிட மட்டுமே; இருக்கும் சொற்ப நேரத்தில் கவலை மறந்து சிரிக்க செய்வது கெக்கேபிக்கே தான்; அதுபாட்டுக்கு ஒரு தடத்தில் ஓடட்டும் சார்; அந்த ட்ரெயின்லயும் சில நாள் பயணிக்க வேண்டிது நல்லது!

    ReplyDelete
  65. ///// அந்த சனியிரவு என்ன ரகளை செய்துள்ளீர்கள் என்பதைப் பார்த்திட இன்னமும் அவகாசம் கிட்டிடவில்லை ; ஆனால் அத்தகையதொரு 'ரவுசு ராத்திரி' வாய்ப்பு இன்னொருக்கா அமையின் - அடியேனையும் அந்த ஆட்டத்தில் சேர்த்துக்கோங்களேன்///----

    ஹா...ஹா... பார்க்கத்தானே போறீங்க!

    500,600,...777,888னு வரும்போது யார் அதை அடிப்பது என்பதே செம சுவாரசியமான ஒன்று! ஒரே நொடியில் 10கமெண்ட்கள் விழும். கவுண்ட் பேக் செய்ய கூட விடாம மறுபடி அடுத்த டார்கெட் ஓடுவாங்க!
    ஒரு மாதிரி சுவாரசியமான ஆட்டமாத்தான் போச்சுங் சார்!

    நடு நடுவே தூங்கி எழுந்து வந்து மைல்கல் ட்ரை பண்ணவங்களும் உண்டு!

    சார்ஜ் தீர்ந்து போயி...மறுபடி வந்து.... ஒரே கூத்து! ஒரு மாசத்துக்கான "வாழ்த்து" ஒரே இரவுல வேற...😎

    ReplyDelete
    Replies
    1. // நடு நடுவே தூங்கி எழுந்து வந்து மைல்கல் ட்ரை பண்ணவங்களும் உண்டு! // நீங்க என்னை தானே சொன்னிங்க

      Delete
    2. குமாரின் பங்கு அளப்பரியது கிடைத்த நேரத்திலெல்லாம் சிக்சர் அடித்தார்

      Delete
  66. ///மாதந்தோறும் வீடு தேடி வரும் கூரியர் டப்பிகளை உடைத்து இதழ்களைக் கையில் ஏந்திடும் போது அந்த சந்தோஷம் இன்னமும் தொடர்கிறதா ? ///

    வீட்டிலே ஒரு நாடகம் நடப்பது வாடிக்கை!!
    நான் ஆபீஸ் முடிந்து வரும்போது மாரியாத்தாவின் தயவால் வீடுவந்து சேர்ந்த கொரியர் டப்பியை என் கண்ணில் படாதவாறு மறைத்துவிடுவார் - என் வீட்டு காளியாத்தா! வீடு நுழைந்ததுமே குழந்தைகளைக் கொஞ்சிக்கொண்டே ஓரக்கண்ணில் அலமாரி, டேபிள்களை ஸ்கேன் பண்ணுவேன்! சுலபமாகக் கண்ணில் சிக்காத இடத்தில் டப்பி வைக்கப்பட்டிருக்கும்!! கடுப்புகளை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் கிச்சனில் பிஸியாக இருக்கும் வீட்டம்மாவிடம் 'வீட்டுக்குத் தேவையானது ஏதாவது வாங்கிட்டு வர வேண்டியிருக்கா கண்ணு?' என்று பொறுப்பான குடும்பத்தலைவனாய் கேட்பேன்! பதில் பெரும்பாலும் 'எதுவும் வேணாம்' என்பதாகத்தான் இருந்திடும்!! 'அப்புறம்.. ஏதாவது தகவலுண்டா?' என்பேன். 'எதுவுமில்லியே' என்பார்கள் - ஒரு புன்முறுவலுடன்! (மனதுக்குள் கன்னாபின்னாவென்று திட்டியபடியே, மான ரோஷத்தையெல்லாம் கொஞ்சமாய் தூக்கிப்போட்டுவிட்டு) 'இன்னிக்கு புக்கு வந்திருக்கணுமே?' என்பேன்! பதில் எதுவும் வராது.. இன்னும் சற்று அழுத்தமான புன்முறுவலோடு பாத்திரங்களை உருட்டுவதிலேயே கவனமாக இருப்பார்கள்! அந்த நிமிஷத்தில் டெக்ஸ் வில்லர் ஞாபகத்துக்கு வருவார்.. கை முஷ்டி முறுக்கேறும்!! ஆனால் பின்விளைவுகள் மனக்கண்ணில் தோன்றிய அடுத்த நொடியே டெக்ஸ்வில்லர் கிட்ஆர்டினாக மார்ஃப் ஆகிவிடுவார்.. முஷ்டி மட்டுமின்றி மொத்த உடலுமே தளர்ந்துபோய் விடும்!!

    என் அவஸ்தையை அவ்வப்போது ஓரக்கண்ணால் ரசிக்கும் காளியாத்தா.. ஒரு சில நிமிடங்களுக்குப் பின் வீட்டின் வேறு அறைக்குச் சென்று கொரியர் டப்பியோடு திரும்புவார்கள்! டப்பியை பார்த்த மறுகணமே மனசு பப்பியாக மாறி குதியாட்டம் போடும்! ஆனால் ஒரு மனிதன் தேர்ந்த நடிகனாகிப் போவது திருமணத்திற்குப் பின்புதானே? ஆகவே குதியாட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாத ஒரு இறுக்கமான முகமே அப்போது எனக்கு இருந்திடும்! 'ஓ.. வந்திடுச்சா?' என்று சாதாரணமாகக் கேட்டபடிக்கே அதை கையில் வாங்கி, அடுத்த நொடியே எதன்மீதாவது வைத்துவிட்டு 'கை கால் முகம் அலம்பிட்டு வந்துடறேன்' என்றபடிக்கே நிதானமாய் உடைமாற்றி, டவலை எடுத்துக்கொண்டு 'தேரே மேரே பீச்சு மே' என்று பாடியபடிக்கே பாத்ரூமிற்குள் நுழைவேன்!!

    பாத்ரூம் கதவைத் தாழிட்டதுமே எந்த டெஸிபலில் கத்தினால் சத்தம் வெளியே கேட்காதோ அந்த அளவீடுகளில் கூக்குரல் எழுப்பி 'ஐ..ஹை ஐ..ஹை' என்று தொப்பை குலுங்க ஒரு குதியாட்டம் போட்டுவிட்டு, அரைகுறையாக முகத்தை அலம்பி வெளியே வந்து "சாப்பாடு ரெடியா.. பசிக்குது" என்பேன்! 'இன்னிக்கு ஆபீஸுல செம வேலைப்பா.. படுத்தராய்ங்க' என்று ஏதாவது சும்மாக்காச்சும் பேச்சுக்கொடுத்தபடியே கொரியர் டப்பியை அங்கிருந்து லவட்டிக்கொண்டு அடுத்த அறைக்குள் நுழைந்து வெறிபிடித்தமாதிரி அன்பாக்ஸ் செய்திடுவேன்!! (ஏனோ பேக்கிங் டேப்களைக் கிழிக்கும்போது கொஞ்சம் வெறி பிடித்த உணர்வு தோன்றிடுவது வாடிக்கை - ஒவ்வொரு முறையும்). அலங்கோலமாக்கப்பட்ட அட்டைப் பெட்டியிலிருந்து அழகான, வண்ண மயமான புத்தகங்களை மைவாசத்தோடு உருவியெடுக்கும்போது மனசு மறுபடியும் குத்தாட்டத்தை ஆரம்பித்துவிடும்! அந்த குஷியை விளக்கிட சத்தியமாய் வார்த்தைகள் லேது சாரே!

    சாப்பிட அமரும்போது கூடவே எல்லாப் புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஆற அமர ரசித்தபடிக்கே சாப்பிடுவதில் அப்படியொரு அலாதி சுகம்!! அந்த சுகத்தை அனுபவிப்பதற்காகவே சாப்பிடும் நேரத்தை இரு மடங்காக்கிக் கொள்வேன்.. சாப்பிடும் அளவையும் மும்மடங்காக்கிக் கொள்வேன்.. ஹிஹி!
    இப்படியாக நான் ரசிப்பதையும், புசிப்பதையும் என் வீட்டம்மா எப்படி பார்க்கிறார்கள்.. என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. ஏனென்றால் நான் அந்தப் பக்கம் திரும்பியதே இல்லை!

    கொரியர் டப்பியின் மீது வன்முறை காட்டி, உள்ளிருந்து உருவியெடுக்கும்போது வந்து விழும் புத்தகங்கள் தடிமனாய் இருந்திட்டால், உண்டாகிடும் குஷியின் அளவும் கூடுதலே!! அதுவே 'தீபாவளி மலர்' போன்ற குண்டூஸாய் இருந்துவிட்டால் குஷியின் மீட்டர் அளவு ஒரேடியாய் எகிறியடிக்கும்! ஆனால் அதுவே ஒல்லிபிச்சான்களாய் இருந்துவிட்டால் குஷியின் அளவிலும் கொஞ்சமாய் மாற்றம் இருந்திடும்!

    குஷியின் அளவுகளில் மாற்றம் இருந்திடுமே தவிர, குஷியில் என்றென்றுமே மாற்றம் இருந்திடாது! நான்கு வயதில் தொடங்கிய இந்த குஷி நாற்பதுகளிலும் குறைவின்றித் தொடர்ந்திடுவதே ஒரு விளக்கமுடியாத விந்தைதானே?!! :)

    ReplyDelete
    Replies
    1. // சாப்பிட அமரும்போது கூடவே எல்லாப் புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஆற அமர ரசித்தபடிக்கே சாப்பிடுவதில் அப்படியொரு அலாதி சுகம்!! அந்த சுகத்தை அனுபவிப்பதற்காகவே சாப்பிடும் நேரத்தை இரு மடங்காக்கிக் கொள்வேன்.. சாப்பிடும் அளவையும் மும்மடங்காக்கிக் கொள்வேன்.. //

      இங்கு அர்ச்சனைகளுக்கு அளவில்லை! எனவே நோ! குடும்பம் first, அவர்களாக பார்த்து நேரம் கொடுக்கும் போது படித்து கொள்வது!

      Delete
    2. Super Sir It is a wonderful experience and your words expressed our feelings.

      But in my case, my son who is 5+ collect the book from postman and wait for my arrival from office. Me and My son jointly open the cover and enjoy the moment together. My son not yet started reading but he maintains the books in almirah and every weekend he take out any book and enjoy the pictures.
      Since he showed interest in Tamil Comics, Now i am confidence enough that he will learn tamil for reading them. Because my father did the same to me.

      Reading Tamil Comics is a wonderful experience and it has given me many things in addition to stories. It is a emotional experience and way to forget the age.

      Thanks Sir

      Delete
    3. நாம் உணரும் ஒரு உணர்வை நமது எழுத்துக்களில் வெளிப்படுத்தி அதனை படிக்கும் மற்றவர்களும் உணரசெய்வது எல்லாம் அருமை. EV அட்டகாசம் யா. நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையை யும் ரசித்து படித்தேன். Loved it

      Delete
    4. ///Since he showed interest in Tamil Comics, Now i am confidence enough that he will learn tamil for reading them. Because my father did the same to me.///

      wow.. great!!

      ///Reading Tamil Comics is a wonderful experience and it has given me many things in addition to stories. ///

      உண்மை உண்மை!!

      Delete
    5. நன்றிகள் SS & KS! :)

      Delete
    6. . நம்ம கதையே வேற லெவல் .. பொண்ணு கல்யாணமாகி அமெரிக்காவில் .பையன் பெங்களூரில MNC ல என்ஜினியர். வீட்டுல அம்மிணி சிந்து பைரவி சுலக்க்ஷணா . காமிக்ஸனா கிலோ... ரகம்.So.ஏக் தின்கா சுல்தான்.

      Delete
  67. ப்ரூனே 2.0 &
    XIII வரும் ஆண்டிலேயே வோ

    Top 3
    பராகுடா
    பிபி வி
    நி ம நி

    Top Lost
    சாத்தnனின் சீடர்கள்
    குளிர்கால குற்றங்கள்
    நீரில்லை நிலமில்லை

    Request
    மாதம் ஒரு ஹி ஹி ஹி (கார்ட்டூன்)

    ReplyDelete
  68. அடுத்த ஆயிரம் ரூவா ரெடியா?

    ReplyDelete
  69. விஜயன் சார்,

    அடுத்த மாத (நவம்பர்) புத்தகங்கள் மூன்று
    1. தீபாவளி ஸ்பெஷல்
    2. துரோகமே துணை (ஷெல்டன்)
    3. விடுமுறையில் கொல் (கர்னெல் கிளிப்டன்)

    2019 அட்டவணையில் இன்னும் வர வேண்டிய கதைகள்.
    நரகத்திற்கு நேர் பாதை (மார்ட்டின்), நியூட்டனின் புதிய உலகம் இதற்கு மாற்று என்றால் இன்னும் நான்கு கதைகள் வரவுள்ளன! அப்படியென்றால் டிசம்பர் மதம் நான்கு புத்தகங்களா விஜயன் சார், அதில் இரண்டு கிராபிக் நாவல் இரண்டு கௌபாய் கதைகள்?

    சூது கொல்லும் (டெக்ஸ்)
    தங்க தடம் (ரிங்கோ)
    பிரளயம் (கிராபிக் நாவல்)
    கதை சொல்லும் கானகம் (கிராபிக் நாவல்)

    ReplyDelete
    Replies
    1. பராகுடா1நல்லா இருக்க 2ம் பாகம் இந்தாண்டே வேணும்னு நிறைய ரசிகர்கள் கேட்கவும் அறிவிப்பு செய்யப்பட்ட பிரளயத்துக்கு பதிலாக பராகுடா 2 வந்தது பரணி!

      பிரளயம் அடுத்த ஆண்டு வரலாம்!

      Delete
    2. அப்ப இந்த மூன்று கதைகள் தான் இந்த வருடத்தின் கடைசி மாதத்திற்க்கு

      சூது கொல்லும் (டெக்ஸ்)
      தங்க தடம் (ரிங்கோ)
      கதை சொல்லும் கானகம் (கிராபிக் நாவல்)
      +
      டெக்ஸ் மினி ?

      Delete
    3. யெஸ்ஸூ!!! டெக்ஸ் மினி கொஞ்சம் பெரியது போல!

      ஜம்போ 2ல் இருந்து ஏதாவது வரக்கூடும்! சைக்கஸ்-என் கணிப்பு!

      Delete
  70. ந்யூஸ் அலர்ட்: ''2019 அட்டவணையில் தீவிர தேடுதல் நடத்திய மர்ம நபர் ஒருவர், மறந்துபோய் அந்த பழைய 2018 ஆமாண்டு பதிவிலேயே கமெண்டிவிட்டார். பின்னர் அதை அழித்துவிட்டு எதுவும் நடக்காத மாதிரி புதிய பதிவுப்பக்கமாக நடையைக் கட்டிவிட்டார்!'' :-P

    ReplyDelete
    Replies
    1. யாருப்பா அது :-) விஜயன் சார் ஒரு ரவுண்டு பண்ணு ரெடி பண்ணிடுங்க! சரியாக கண்டு பிடித்து சொல்லுறவங்ககளுக்கு கொடுக்க :-)

      Delete
    2. பரணி பிரம் பெங்களூரு நீங்கதான் தலைவரே. எனக்கு ரவுண்டு பன் உண்டுதானே.

      Delete
  71. 1. அனைத்தையுமே படித்து விட்டேன். வஞ்சம் மறப்பதில்லை TRAILER பார்த்துவிட்டு அதை தவிர்த்து விடலாம் என்று இருந்தேன். நண்பர் ஒருவர் இரண்டு SET ORDER செய்து விட்டேன் என்று என்னிடம் 1 FULL SET கொடுத்து விட்டார். அதனால் தான் அதை படித்து விமர்சனம் பண்ண முடிந்தது. இல்லாவிட்டால் இந்த வருடம் நான் தவிர்த்த ஒரே COMICS அதுவாக தான் இருக்கும்.
    2. தனிஒருவன் சார்.
    3. நீரில்லை நிஜமில்லை, வஞ்சம் மறப்பதில்லை.
    4. LION COMICS, MUTHU COMICS என்ற Banner இல் Comics courier மூலமாகவோ or கடைகளிலோ எங்கு வாங்கினாலும் மகிழ்ச்சி கூடி கொண்டுதான் போகிறது.
    5. பெரும்பாலோனோர் கமெண்ட்கள் படிக்கையில் மகிழ்ச்சிதான் sir. தன்னுடைய ரசனை தான் சிறந்தது என்று நினைத்துக்கொண்டு மற்றவர் ரசனையை மொக்கை என்று சொல்லும் சில பொக்கைகளால் மட்டும் கொஞ்சம் Tension sir. Nothing to do. A few are there.

    ReplyDelete