Sunday, August 11, 2019

ஆகஸ்டின் ஒரு அலசல் !

நண்பர்களே,

வணக்கம். பண்டிகையும் வந்தாச்சு… புதுத் துணியும் பள பளன்னு போட்டாச்சு… பட்சணங்களையும் பாரபட்சமேயில்லாமல் பதம் பார்த்தாச்சு… பட்டாசை வெடிச்சாச்சு… புதுப்படத்துக்கும் போயாச்சு… பெருசாய் ஒரு புளிச்ச ஏப்பமும் எடுத்தாச்சு… சித்தே ஜெலுசிலையும் வாய்க்குள் ஊத்தியாச்சு! அடுத்து என்னவோ? வேறென்ன – மாமூலான தினசரி வாழ்க்கை தான்! நான் குறிப்பிடும் ‘பண்டிகை‘ நமது ஈரோட்டு வாசகர் சந்திப்புத் தான் என்பதையோ - புதுத்துணிகளும்; பட்சணங்களுமாய் உணர்த்துவது புது இதழ்களையே என்பதையோ; பட்டாசும், புதுப்படமுமாய் சொல்ல முற்படுவது அன்றைய தினத்தின் நமது ரவுசுகளையே என்பதையோ புரிந்திட மங்குனி ஸ்மர்ஃப்புக்குக் கூடச் சிரமமிராது அல்லவா? So here we are – back to the routine!

ஆனால் இந்த routine குண்டுச்சட்டிக் குருதையோட்டத்தின் மத்தியில் ஒரு not so routine இதழைப் பற்றிப் பேசாது போனால் அது வரலாற்றுப் பிழையாகிப் போகுமில்லையா? So இந்த ஞாயிறின் அலசல் “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” பற்றியே!!

பொதுவாய் கதைத் தேர்வுகளின் போது ஜானர்கள் வெவ்வேறாய் இருப்பினும் – கதைகளை நான் classify செய்திட 3 ரகங்கள் இருப்பதுண்டு! பார்த்த மாத்திரத்திலோ; லேசாய் முன்னோட்டங்களைப் படிக்க முடிகின்ற போதிலோ – WOW!! என்று டாப் கியரைப் போடச் செய்யும் கதைகள் சில இருப்பதுண்டு!

- புரட்சித் தீ... பொடியன் பில்லி... சூப்பர் சர்க்கஸ் போன்ற லக்கி கதைகள்!

- நில்... கவனி... சுடு... தலைவாங்கிக் குரங்கு; பாலைவனத்தில் ஒரு கப்பல் – போன்ற TEX கதைகள்!

- தங்கக் கல்லறை; இரத்தப் படலம் (ஒரிஜினல் சுற்று); லார்கோ போன்ற ஆல்பங்கள்!

இவற்றையெல்லாம் ‘டிக்‘ அடிக்கும் போதே – தேர்தலில் கெலித்த வேட்பாளர்கள் டி.வி.களுக்குப் பேட்டி கொடுக்கக் கையோடு ரெடி பண்ணிக் கொண்டு வந்திருக்கும் நன்றியுரைகளைப் போல ஒன்றை மனசுக்குள்ளேயே நான் ஓட்டிப் பார்த்துக் கொள்ள முடியும்! நிச்சயிக்கப்பட்ட ஹிட்ஸ்!

ரகம் # 2 – ஓ.கே. ரகங்கள்! புரட்டிப் பார்க்கும் போது; நெட்டில் அலசிப் பார்க்கும் போது; சின்னதொரு முன்னோட்டத்தை மட்டும் கோரிப் பெற்றுப் பார்க்கும் போது – ‘இவை தேறிடும்‘ என்ற நம்பிக்கையை உள்ளுக்குள் விதைக்கும் கதைகள் இவை! Of course நடைமுறை சாத்தியம் காணும் சமயங்களில் results வேறு மாதிரியும் அமைந்திடுவதுண்டு தான்! ஆனால் முதற்கட்ட அலசல்களின் போது பெரியதொரு நெருடலை ஏற்படுத்தாக் கதைகளை இந்த இரண்டாவது கேட்டகரியில் அடைத்துப் பார்ப்பேன்!

ரகம் # 3 தான் இருப்பதிலேயே சுவாரஸ்யமானது! ‘என்னமோ இருக்குது... ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட்டாக்கா ரகளையான அனுபவத்தைத் தரவல்லது‘ என்ற நம்பிக்கையை விதைக்கும் புதிரான கதை ரகங்கள் இவை!

- க்ரீன் மேனர்

- பராகுடா

- நிஜங்களின் நிசப்தம்

- ஜேஸன் பிரைஸ்

போன்ற கதைகளை இந்த mysterious பட்டியலில் அடைத்திட்டுப் பார்ப்பேன்! சொதப்பினால் முகரை முழுக்க கொள கொளவென பதம் தப்பிய அல்வா அபிஷேகம் நிச்சயம் என்று தெரிந்தாலுமே – ‘எப்படியாச்சும் இதை முயற்சித்துப் பார்டா கைப்பிள்ளே!‘ என்று உள்ளுக்குள் ஒரு கட்டதுரையின் கூட்டாளி கூவிக் கொண்டேயிருப்பது இந்த ரகக் கதைகளின் ஸ்பெஷாலிட்டி! பணியாற்றுவதிலுமே maximum சவால்களும் ; உற்சாகங்களும் தொற்றிடுவது இந்த ரகம் # 3 கதைகளிலேயே ! சாத்து வாங்கினால் – ‘முட்டுச் சந்து # 118‘ என்று டயரியில் குறித்துக் கொண்டே – சுனா-பானா ஸ்டைலில் மண் ஒட்டிய மீசையைத் தடவிக்கினு ‘in 1985 when I went to frankfurt’ என்று வண்டியை ரிவர்ஸ் கியர் போட்டுத் தப்பிக் கொள்ளலாம் ! அதே நேரம் எடுத்த ரிஸ்க் ஒரு பிரமாத வெற்றியாகிடும் பட்சத்தில் - ‘யெஸ்... யெஸ்... யெஸ்... எனக்கு இதெல்லாம் முன்னமே தெரியும் !‘ என்று காலரைப் பெருமையாய்த் தூக்கி விட்டுக் கொண்டு அடுத்த மூன்று வாரங்களுக்கு ‘நாட்டாமை‘ சரத்குமார் பாணியில் கெத்தாக இப்டிக்கா – அப்டிக்கா வலம் வரலாம்! “பிஸ்டலுக்குப் பிரியாவிடை" without a doubt – இந்த ரகம் # 3-ன் பிரதிநிதியே!

இந்தக் கதையை நான் கண்ணில் கண்டது பற்றி முன்னமே எழுதியது ஞாபகமுள்ளது! So அதே புராணத்துக்கு மறு ஒலிபரப்பு தேவையில்லையே?! 5 ஆண்டு சுமாருக்கு முன்னமே இந்தத் தொடரின் முதல் ஆல்பத்தைப் பார்த்த போது – “The Gentleman who did not like Guns!” என்ற தலைப்பு எனது ஆர்வத்தைக் கிளறியிருந்தது! சும்மா கெத்தாய் பாலைவனத்தின் மத்தியில் அசல் லார்ட் லபக்தாஸ் போலவே தோரணையாய்க் குந்தியபடிக்கு டீ குடித்துக் கொண்டிருந்த கனவானின் அட்டைப்படம் – இது நிச்சயமாய் ஏதோவொரு விதப் parody என்று மனதில் படச் செய்தது! பக்கங்களைப் புரட்டிய போது நிறையவே adults only சித்திரங்கள் ஆங்காங்கே கண்ணில் பட, ‘ஆத்தாடியோவ்!‘ என்றபடிக்கே ஜகா வாங்கி விட்டேன்! தொடர்ந்த ஆண்டுகளில் ஆல்பம் # 2 ; 3 & 4 வரிசையாய் ஏர்-மெயிலில் மெகா சைஸ்களில் வந்திறங்க – பீரோவுக்குள் பகுமானமாய் அவற்றை அமுக்கி விட்டு இந்த ‘முதிர்ரசனை‘ சமாச்சாரம் ஒத்து வராது சாமி என்று நானாய் தீர்ப்புச் சொல்லிக் கொண்டேன்! ஆனால் அவ்வப்போது சபலம் தட்டத்தான் செய்யும் – “maybe இன்னொரு க்ரீன்மேனரை உதாசீனம் செய்கிறோமோ?” என்ற ரீதியில்! நடப்பாண்டின் ஈரோட்டு ஸ்பெஷல்கள் என்று எதைப் போடலாமென்ற கேள்வி எழுந்த போது – மாமூலான heavy weight நாயகர்களை சுற்றிச் சுற்றியே மனம் கும்மியடித்தது! ஒரு ஜாலியான தருணத்துக்கு ஒரு மாஸான நாயகரைக் களமிறக்கி விட்டால் ரிஸ்க்கே லேது! என்று லாஜிக் லிங்கப்பன் எனக்குள் படமெடுக்கத் துவங்கினார்! நிஜத்தைச் சொல்வதானால் டெக்ஸின் ஒரு MAXI (330 பக்க) சாகஸத்தை அதற்கென தயாரும் செய்து விட்டேன்! ஆனால் TEX போலொரு கமர்ஷியல் நாயகரை “முன்பதிவுக்கு மட்டும்“ என்ற ரகத்தில் அடைப்பது செம மொக்கையான தீர்மானமாய்த் தோன்றியது! தவிர, நமது பதிவுப் பக்கங்களையோ; இதழ்களில் நான் எழுதும் ஹாட் லைன்; வெது வெது லைனையெல்லாம் படிக்க நேரமிரா நண்பர்கள் – ஒரு புது டெக்ஸ் வெளியீட்டைப் பார்த்தால் – “இதை ஏன் சந்தாவில் எனக்கு அனுப்பலை?” என்று கண்சிவக்கக் கூடுமென்றும் பட்டது! So ரெகுலர் தடங்களின் நாயகர்களை இந்த ஈரோட்டு exclusives பக்கமாய்த் தலைவைக்க அனுமதிப்பதில்லை என்று லாஜிக் லிங்கப்பனை துணியைப் போட்டு மூடினேன்!

எனது அடுத்த choice “கென்யா” நெடும் தொடரின் தொகுப்பாய்த் தானிருந்தது! அல்லது அந்த “அமெரிக்கா” தொடர்! இவை பற்றி ஏற்கனவே இங்கே எக்கச்சக்கமான அலசல் & வாக்குப்பதிவெல்லாம் நடந்திருக்க சரியான தேர்வுகளாயிருக்குமென்று மனசில் பட்டது! So ஆண்டின் ஆரம்பத்திலேயே அவற்றின் உரிமைகள் கோரி விண்ணப்பித்திருந்தேன்! ஆனால் ஐரோப்பிய வசந்த காலம் முழுக்கவே இங்கே-அங்கே என்று சர்வதேச புத்தக விழாக்கள் ரவுண்டு கட்டுவதால் அந்த நேரங்களில் ரொம்பவே பிஸியாக இருப்பார்கள்! So கிணற்றில் போட்ட கல்லாய் எனது விண்ணப்பம் தூங்கிக் கிடக்க – ‘What next?” என்ற கேள்வி எழுந்தது! மறுக்கா சில பல துயில் பயிலும் தொடர்கள் தூசி தட்டப்பட – ‘The Gentleman who did not like guns” அந்தக் குவியலில் இணைந்து கொண்டது! ஆனால் இந்தவாட்டி அதைப் பரிசீலனை செய்யும் போது – என் உருண்டை விழிகளுக்கு அந்த அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் வேறு மாதிரித் தெரியத் துவங்கியிருந்தன! பராகுடா எனும் ஒரு “திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில்” உலாற்றிய பிற்பாடு இதெல்லாமே எலிமண்டரி ஸ்கூல் சமாச்சாரமாய்த் தோன்றுவது புரிந்தது! அந்த ஒற்றை நெருடலைத் தாண்டி இந்தத் தொகுப்பினில் எனக்குத் தயக்கங்கள் வேறெதுவும் கிடையாதென்பதால் பரபரவென “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” என்று அறிவித்து வைத்தேன்! And என்ன மாதிரியான coincidence அதுவோ தெரியவில்லை - நான் அறிவித்த மறு தினம் "கென்யா" தொடருக்கான காண்டிராக்டும் மின்னஞ்சலில் வந்து சேர்ந்திருந்தது !! முன்வைத்த பிஸ்டலை இனி back அடிக்க வேண்டாமே - என்றபடிக்கே தொடர்ந்திடத் தீர்மானித்தேன் ! 

கதை தேர்வான பிற்பாடு அதனை மொழிபெயர்க்க ‘தம்‘ கட்டத் துவங்கிய போது மார்ச்சின் இறுதி புலர்ந்திருந்தது! சரியாக அதே வேளையின் எனது சுகவீனமும் துவக்கம் காண பராகுடா part 2 & தனியொருவன் கதைகளைப் பிசாசு போல உச்ச வேகத்தில் எழுதத் தொடங்கியிருந்தேன்! எந்த நேரத்தில் எந்த ஆஸ்பத்திரியில் படுக்கையில் ஜாகை காத்துள்ளதோ என்று தெரிந்திராத நிலையில் இந்த வேகம் தானாய்த் தொற்றிக் கொண்டது! ஆனால் பராகுடா – இரண்டாம் பாகத்தின் பணி ரொம்பவே intense ஆக அமைந்து போக, மேற்கொண்டொரு 4 பாக பிஸ்டலுக்கு பீப்பீ ஊதிட மனதிலும் உடம்பிலும் ‘தம்‘ இருப்பதாகத் தோன்றவில்லை! அப்போது தான் நமது அமெரிக்க நண்பர் மொழிபெயர்ப்புக்கொரு வாய்ப்பு கோரி மின்னஞ்சல் அனுப்பியிருந்தது! நினைவுக்கு வந்தது! “அட... சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளவொரு பார்ட்டி சிக்கியாச்சு... கூடையைப் போட்டு அமுக்கிடுடா  முட்டைக் கண்ணா!” என்றபடிக்கே ஒரு சுபயோக சுபதினத்தில் தண்ணீர் தெளித்து மாலையும் போட்டு, பொட்டு வைத்து 4 பாகங்களை அவருக்கு pdf-ல் அனுப்பி வைத்தேன்! செம ஆர்வமாய் அவரும் பணிகளைத் தொடங்கச் சம்மதம் சொன்னது மார்ச் 27-ல்!

“ ‘தட தட‘வென்று பாய்ந்திட வேண்டாமே சார்... முதல் 5 பக்கங்களை எழுதியனுப்புங்கள்... பாணி; சொற்பிரயோகம் என எல்லாமே ஓ.கே.யாக இருந்தால் தொடரலாம்!” என்று ப்ரேக் போட்டேன்! தொடர்ந்த 15 நாட்களுக்கு 'சைனீஸ் சித்ரவதையென்றால்' என்னவென்றொரு செயல்முறை விளக்கம் கிடைத்திருக்கும் நண்பருக்கு! அவர் எழுதியனுப்பும் ஸ்கிரிப்டை பிரிண்ட் எடுக்க வேண்டியது; சிகப்பு மசியால் திருத்தங்களை மாங்கு மாங்கென்று போட வேண்டியது; அப்பாலிக்கா அதை ‘போட்டோ எடுத்து வாட்சப்பில் அனுப்ப வேண்டியது என்று செம பிசியாக என் குரங்கு வேலைகளைச் சிறப்பாக நடத்தினேன்! முதல் 13 பக்கங்களை எட்டிப் பிடிப்பதற்குள் ஒரு குட்டி யானை லோடு பேப்பரை நானும்; ஒரு நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி மாணவன் செலவிடக்கூடிய அவகாசத்தை நண்பரும் விழுங்கியிருப்போம்! ரொம்பவே நொட்டை சொல்கிறோமோ? என்று எனக்கே சமயத்துக்குத் தோன்றத் தான் செய்யும்... ஆனால் இந்தக் கதையின் funky ஸ்டைல் சித்திரங்களுக்கும்; கதாப்பாத்திரங்களுக்கும் பொருந்தும் ஒரு பாணியில் துல்லியமாய் விரல் வைக்கத் தவறினால் – கானா பாட்டுக்கு TMS குரல் கொடுத்தது போலாகிடுமே என்ற பயம் எனக்கு ! எப்படியும் இறுதியாய் நான் சகலத்தையும் திருத்தவும், எடிட் செய்யவும் போகிறேன் தான் என்றாலும் – எழுதும் போது இயன்றமட்டிலும் சரியான mould-க்கு நண்பரைத் தயார் செய்து விட்டால் அந்தமட்டுக்கு எனது நோவு குறையுமே என்ற சுயநலத்தில் குடலை உருவோ உருவென்று உருவினேன்! முதல் பாகத்தை ஒரு மாதிரியாய் முடித்து அனுப்பியது ஏப்ரல் 25க்கு என்று எனது inbox சொல்கிறது! தொடர்ந்த பாகங்களும் இதே பாணியில் மேற்கேயும் – கிழக்கேயுமாய் மின்னணு மார்க்கத்தில் பயணிக்க – 4 அத்தியாயங்களும் நிறைவு கண்டது ஜுன் 9-ல்!! பிஸ்டலுக்குப் பிரியாவிடையின் புண்ணியத்தில் – நண்பரின் தூக்கத்துக்கொரு அந்த 2 மாதங்களிலும் பிரியாவிடை தர நேரிட்டிருப்பது சர்வ நிச்சயம் ! Thanks for putting up with all my tortures sir !!

தொடர்ந்த எடிட்டிங் பணிகள் பற்றி ; அத்தனை ‘ஆட்றா ராமா... தாண்ட்றா ராமா‘ குட்டிக்கரணங்களுக்குப் பிற்பாடும், புதுசாய் எக்கச்சக்கப் பட்டி-டிங்கரிங் செய்து வண்டியோட்டிய அனுபவங்களை ஒரு பெருமூச்சுக்குப் பின்னே‘ பதிவினில் தம் கட்டிச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்! So ஒருவழியாய் ஈரோட்டுக்கு 2 வாரங்களுக்கு முன்னமே இதழைக் கையில் ஏந்திய நொடியில் ஒருவித நம்பிக்கை அலையடித்தது – இது நிச்சயமாய் உங்களை disappoint செய்திடாதென்று ! And இதோ – MAXI லயனின் அதிரடிப் பிரவேசத்துத் தருணங்களையும் தாண்டி 'பி.பி.வி.' சோலோவாக இன்றைக்கு ஒளிவட்டத்தைத் தனதாக்கி வருவதை பார்க்கும் போது பெருமையாகவுள்ளது – on two counts : ஒரு அழகான வாசிப்பனுபவத்தை நமது பயணத்தின் ஒரு அங்கமாக்கிட முடிந்தமையில் பெருமிதம் # 1. And இத்தகைய கதைக்களங்களையும் அட்டகாசமாய் வரவேற்கும் வாசக வட்டத்தோடு தோள் உரச முடிவதில் பெருமிதம் # 2!

Digging into the album – கதையின் பன்முகத்தன்மை என்னை ரொம்பவே மிரளச் செய்தது ! And கதைமாந்தர்கள் ஒருத்தர் பாக்கியின்றி நெடுக பட்டாசாய்ப் பொரிவதை ரொம்பவே ரசித்தேன் !!

- பைரனும், ஹோக்கார்டும் ; 'கட்டிளங்காளை' டிம்மும் துவக்கப் பக்கங்களில் கதையைத் துவக்கித் தரும் செம breezy பாணி...

- ‘மார்கோ‘ எனும் மதனமோகன ரூப சுந்தரி அறிமுகமாகும் இடம் முதலாய் கதை அடுத்த கியருக்குள் பயணிப்பது...

- ‘டம்மி பீஸ்‘ என்பதாய் காட்சி தரும் அந்தக் கிழச் செவ்விந்தியக் கதாப்பாத்திரம் – எங்கோ. எப்படியோ படித்ததொரு சமாச்சாரத்தை நினைவூட்டியது! ஆன்டன் செகோவ் எனும் பிரபல ரஷ்ய எழுத்தாளர் - நாடக ஆசிரியர் சொன்னதாம் இது; “கதையின் ஓட்டத்துக்கு உதவிடா எந்தவொரு சமாச்சாரத்தையும் சகித்திடப்படாது! மேஜையிலொரு துப்பாக்கி கிடப்பதாய்ச் சொன்னால் – அந்த ஆயுதமானது இரண்டாவதோ – மூன்றாவதோ அத்தியாயத்தில் வெடித்தாக வேண்டும்! சும்மா கதை முழுவதும் எந்தவொரு பங்கும் எடுத்துக் கொள்ளாத டம்மியாய்த் தொடர்வதை அனுமதிக்கக் கூடாது!”

பி.பி.வி.யின் கதாசிரியருமே இந்தக் கோட்பாட்டின் ரசிகர் போலும்! அறிமுகமாகும் போது பானை செய்யும் மிக்சர் சாப்பிடற பார்ட்டியாய் தென்படும் பெருசை – பின்னே என்னமாய் மையமாக்குகிறார்?? அந்தப் பெருசு பேசும் வசனங்கள்... ப்ளாஷ்பேக்ஸ்... வாவ்!!

- ‘நாங்களும் பரட்டை தான்... எங்க கிட்டேயும் சீப்பு இருக்கில்லே... சீவிட்டு நாங்களும் கலைச்சுக்குவோம்லே என்ற பாணியில் அலப்பரை விடும் கொள்ளையர் தலைவன் மொனோவோ!! அழகியை ஆசைநாயகியாக்கி, பின்னே அல்வாவும் வாங்கிடும் sequence செம விறுவிறு!

- அலட்டிக் கொள்ளா இங்கிலீஷ் கனவானாய் அறிமுகமாகி, அதிரடித் திட்டங்கள் வகுக்கும் ஆக் ஷன் block களில் ரகளை பண்ணி; வக்கீலாய் மதியூகம் காட்டி; அழகான மனையாளின் அமைதியான ஆத்துக்காரராய் வலம் வந்து; உயிர் பயத்தில் நம்மையும் மிரளச் செய்து, இறுதியில் சாணக்கியத்தனங்கள் பல செய்திடும் – பைரன் எனும் அந்தக் கதாப்பாத்திரங்களுக்குத் தான் எத்தனை-எத்தனை layers?

- பைரனோடு சுற்றி வரும் அந்த மலை மாடு!! ஷப்பாடியோவ்... அதுவும் என்னவொரு offbeat பாத்திரப்படைப்பு! கதையின் துவக்கத்தைப் போலவே இறுதியிலும் பைரன் + ஹோகார்ட் இணைந்தே இருப்பதான சம்பவ அமைப்புகளை சிலாகிக்காது போக முடியுமா?

- களம் கனமானாலும், கிச்சுக் கிச்சு மூட்டும் பொருட்டு நுழைக்கப்பட்டிருக்கும் கட்டிளங்காளை.... வன்மேற்கின் வேங்கை – குதிரை லத்தியைக் கொண்டு வேட்டையை நடத்தும் டிம்! செம ஜாலியான... பாசிட்டிவ்வான பாத்திரப்படைப்பல்லவா?

– And அந்தச் சிறுமி லூஸி !!!! அந்தக் குட்டிப் பெண் தான் கதை நெடுக எத்தனை தூரத்துக்குக் கதையை நகர்த்திச் செல்கிறாள்!! கதையின் திசையே மாறிடவும் என்னமாய் உதவிடுகிறாள் ; அறியா வயதிலும் எத்தனை ஆழமான எண்ணங்களை விதைக்க வல்ல வரிகளை உதித்திடுகிறாள் ? An awesome creation !!

- Last but not the least : கதையின் மையமான மார்கோ !! இத்தனை வீரியமானதொரு பெண் கதாப்பாத்திரத்தை நாம் கடைசியாய்ப் பார்த்தது மின்னும் மரணத்தில் தான் அல்லவா ? என்னா ஒரு அழுத்தமான படைப்பு ? Hats off to the author !!

Before I wind up - ஒரு ஜாலியான எண்ணம் தோன்றியது மனதில் !! நெடு நாட்களுக்கு மனதில் தங்கிடப் போகும் இந்தக் கதாப்பாத்திரங்கள் அத்தனையும் வெள்ளித்திரைக்குப் புரமோஷன் கண்டால் - எந்த நடிகர்கள் / நடிகைகள் இந்த role களுக்குப் பொருத்தமாயிருப்பார்களோ ? சும்மா யூகம் செய்து பாருங்களேன் ?

And இதோ - நடப்பு ஜம்போ சீசன் # 2 -ன் இறுதித் தேர்வு (கால வேட்டையாருக்குப் பதிலான இதழ் !!) இதுவும் ஒரு வேட்டைக்களமே - இம்முறையே முழுவண்ணத்தில் !!! முதல் பக்கத்தில் டாப் கியரைத் தொடும் ஆல்பமானது சும்மா தீயாய்ப் பாய்கிறது - அசாத்தியமான சித்திரங்களோடு !!! ZAROFF - அமேசான் கானகத்தில் ஒரு ஜீவ மரண வேட்டையில் !!

Bye folks ...ஆகஸ்டின் அலசல்கள் தொடரட்டுமே ? 
See you around !Have a Super Sunday !!

350 comments:

  1. ஆஹா அதிர்வேட்டுகள் தொடருகிறது

    ReplyDelete
  2. ஆஹா ஜஸ்ட் மிஸ்டு 😜

    ReplyDelete
    Replies
    1. ஹையா..பக்கத்தில் இருந்தும் நான்தான் பர்ஸ்ட் கமெண்ட்

      Delete
  3. சார்
    வானமே எங்கள் வீதியில் எஞ்சிய ஒரு கதை எப்போது வரும்? வெளியிடும் எண்ணமுள்ளதா? இது போன்று முடிவு பெறாத சில கதைகளை ஏதாவது ஒரு வகையில் போட்டு முடித்து விடலாமே? கமான்சே தொடர் உட்பட

    ReplyDelete
    Replies
    1. போட்டும் தள்ளலாம்

      Delete
    2. கமான்...கமான்..கமான்சே!
      கமான்சேவை பினிஷிங் பண்ணலாம்!

      Delete
    3. கடல்யாழ்9

      அதென்னெங்க +9 😄

      Delete
    4. சேலம் Tex விஜயராகவன்
      ஆஹா போராட்டத்திற்கு சேலத்தின் சிங்கமும் களம் இறங்கியது மகிழ்ச்சியே
      கமான்...சே 😊

      Delete
    5. 9 எண்களின் பெரியது
      அதனால் பெரிய சப்போர்ட் 😃

      Delete
  4. // ZAROFF - அமேசான் கானகத்தில் ஒரு ஜீவ மரண வேட்டையில் !! //
    அடடே,புது வரவா.....

    ReplyDelete
  5. பிஸ்டலுக்கு பிரியாவிடை விற்பனையில் சாதனை படைக்கப் போவது உறுதி! Zaroff எதிர்பார்ப்பில்!

    ReplyDelete
  6. நான்கைந்து மாதமே வரும்டெக்ஸ் தீபாவளின்னு மங்குனி ஸ்மர்ப் மாதிரி நினைச்சுட்டேன் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  7. இந்த மாதமே நான்கைந்து
    மா தமாக்கிருச்சுருச்சு மங்குனி கீ போர் டு

    ReplyDelete
  8. // And அந்தச் சிறுமி லூஸி !!!! அந்தக் குட்டிப் பெண் தான் கதை நெடுக எத்தனை தூரத்துக்குக் கதையை நகர்த்திச் செல்கிறாள்!! கதையின் திசையே மாறிடவும் என்னமாய் உதவிடுகிறாள் ; அறியா வயதிலும் எத்தனை ஆழமான எண்ணங்களை விதைக்க வல்ல வரிகளை உதித்திடுகிறாள் ? An awesome creation !! // எனக்கு மிகப் பிடித்த கதாபாத்திரம். அந்த குழந்தை எப்படி அந்த கதையை திசை திருப்ப பயன்படுகிறது என்பது amazing.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு குழந்தையும் பிடித்தது..வளர்ந்த குழந்தையும் பிடித்தது நண்பரே..

      Delete
  9. சமீப காலங்களில் வந்த வெளியீடுகளில் மனதைத் தொட்ட கதைகளில் பிஸ்டலுக்கு பிரியா விடைக்கு முதலிடம்.. மார்கோவின் அசாத்திய துணிச்சல் மற்றும் கன நேரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப சூழ்ச்சி செய்யும் பாங்கு, சிறுமி லூஸிக்காக கடைசியில் எடுக்கும் முடிவு, தெரிக்கும் வசனங்கள் என பி பி வி ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டது...


    மொழி பெயர்த்த அந்த பெயர் தெரியாத அமெரிக்க மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. Zarorff வருவதில் மிக்க மகிழ்ச்சி சார். ஆனால் நாங்கள் கட்டியது 1000 மட்டும். இப்போது பிளாக் and white கதைக்கு பதிலாக color . Budget எகிற போகிறது சார்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே ரெகுலர் சந்தா budget எகிறிவிட்டது.

      Delete
    2. நீங்கள் ஏற்கனவே அந்த செலவுகளை ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். உங்களுக்கு இன்னும் சிரமமே.

      Delete
  11. அப்படியே அந்த கால வேட்டயரை வெளியிட்டு விட்டால் please. ஏதேனும் ஒரு புத்தக விழாவில். Any chances?

    ReplyDelete
    Replies
    1. நான் கூட கால வேட்டையரை ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

      Delete
  12. எத்தன புக் போட்டாலும் மொத்தமா பணம் வாங்கிடுங்க சார் எதற்கு பணம் கட்டினோம் எதற்கு கட்டலைனு தெரிய மாட்டேங்குது

    ReplyDelete
  13. மனதில் உறுதி வேண்டும்
    ஒரு வித்தியாசமான கதை, தனது மனோதத்துவ முறை படி கடுமையான குற்றவாளிகளை சரி செய்து விட முடியும் என்று நம்பும் ஒரு டாக்டர் இறுதியில் அவரே குற்றவாளிகளை செய்ய ஆரம்பித்தது விடுகிறார். இதனை டால்டன் சகோதரர்கள் மற்றும் லக்கி உடன் சிரிக்கும் படி சொல்லி உள்ளார்கள். பெரிய சைஸ் அருமையாக பிரிண்டிங் அழகான சித்திரங்கள் இந்த கதையை படிக்க தூண்டுகிறது.

    இந்த கதையில் வசனங்கள் இன்னும் சிறப்பாக இருந்தது இருக்கலாம்.

    மொழிபெயர்ப்பில் இன்னும் அதிக கவனம் தேவை, குறிப்பாக ஓலா டாக்டருக்கு, உதாரணத்திற்கு ஒரு டயலாக்கில் 'ஞான்' என ஆரம்பிக்கும் அவர் அதன் பின் வரும் இடத்தில் சாதாரண நடையில் பேசுகிறார்; 'ஞான்' மலையாளத்தில் 'நான்' என்பதை குறிக்கும். அப்படி என்றால் அவர் பேசும் எல்லா வசனங்களும் அதே மொழி நடையில் இருக்க வேண்டும் ஆனால் ஒரு டயலாக்கின் ஆரம்பம் ஒரு நடை பின்பகுதி ஒரு நடை (style) நன்றாக இல்லை படிக்கும் வேகத்தை speed breaker போல் குறைக்கிறது.

    ஆசிரியர் maxi இதழ்களுக்கு புதிய மொழிபெயர்ப்பு என புத்தகத் திருவிழாவில் கூறியதாக ஞாபகம்; எனவே இது போன்ற விஷயங்களை சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    மனதில் உறுதி வேண்டும் சிந்திக்கவும் சிரிக்கவும்.

    ReplyDelete
  14. ஆகஸ்டின் அலசல்:

    1.தலைமுறை எதிரி .. முதல் முறை படித்தேன்.. வழக்கம் போல் ஜானி ஏமாற்ற வில்லை ..ஜானி 2.௦ விட கிளாசிக் ஜானி தான் எனக்கு பிடித்து உள்ளது ..

    2.TEX AND LUCKY REPRINTS ..படித்த கதைகள் தான் .. ஆனால் MAKING செமயாக இருந்திச்சி .. உங்க EFFORT படிக்கும் போது தெரியுது SIR ..

    3.நித்தம் ஒரு யுத்தம் .. செம ACTION கதை.. இந்த மாறி ONE SHOTS அதிகம் TRY பண்ணலாம் சார் ..

    4.தி அண்டர்டேக்கர் .. முதல் கதை விட இது இன்னும் செம.. வில்லன் தான் HIGHLIGHT ..

    5.“பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ... BEST OF THE LOT ..ரொம்ப வித்தியாசமான களம் .. CHARACTERS தான் WEIGHTU கதைக்கு .. செம SIR ..

    YOUNG TIGER AND DIABOLIK அடுத்த வருடம் வருவது மகிழ்ச்சி ..

    TOTALLY U HAVE HIT A "HUGE 6" THIS AUGUST SIR ...

    ReplyDelete
    Replies
    1. மஹி சார் க்கு ஒரு ஸ்பெஷல் hats off பிஸ்டலுக்குப் பிரியாவிடை translate பண்ணினதுக்கு ...

      Delete
    2. சுருக்கமான அழகான விமர்சனம் சார்.:-)

      Delete
  15. தற்போது வாசிப்பில் 'பி.பி.வி'!! இரண்டாம் பாகம் முடிக்கப்போறேன்... ப்பா கதை என்னமா நகருது!!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முழு விமர்சனத்திற்கு ஐயம் வெயிட்டிங் செயலரே..

      Delete
    2. நானும் வெயிட்டிங்.

      Delete
  16. சமீப காலங்களில் வந்த வெளியீடுகளில் மனதைத் தொட்ட கதைகளில் பிஸ்டலுக்கு பிரியா விடைக்கு முதலிடம்.. மார்கோவின் அசாத்திய துணிச்சல் மற்றும் கன நேரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப சூழ்ச்சி செய்யும் பாங்கு, சிறுமி லூஸிக்காக கடைசியில் எடுக்கும் முடிவு, தெரிக்கும் வசனங்கள் என பி பி வி ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டது...


    மொழி பெயர்த்த அந்த பெயர் தெரியாத அமெரிக்க மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்...

    நன்றி: கருவூர் சரண்...

    ReplyDelete
  17. நித்தம் ஒரு யுத்தம்:
    ஒரு பண முதலையை காப்பாற்றும் ஆக்சன் காட்சிகளுடன் உடன் கதை ஆரம்பிக்கிறது; அது டெமக்லீஸ் ஏஜன்சி மற்றும் அதில் பணியாற்றும் நண்பர்களை அறிமுகப்படுத்துகிறது.

    அடுத்து புதிய வேலை கொடுக்கபடுகிறது அவர்களுடைய அணியில் ஒரு புதிய நபர் என ஆரம்பிக்கும் கதை இறுதி பக்கம் வரை புல்லட் ரயில் வேகத்தில் செல்ல திடீரென ஒரு வளைவு எதிர்பார்க்காதது ஆனால் அது இந்த பயணத்தை இன்னமும் ரொம்பவே சுவாரசியமாக மாற்றியது.

    ராஜ் எதற்காக இந்த வேலைக்கு வந்தான் அவர்கள் எப்படி தங்களுடைய வாடிக்கையாளர்களால் நடத்தப்படும் விதம் பற்றி சொல்லிய வசனங்கள் அருமை. எல்லி அவனுக்கு பின்னொரு சரியான சந்தர்பத்தில் பதில் கொடுக்கும் வசனங்கள் சூப்பர். இந்த கதையில் வசனங்கள் இயல்பாக தேவையான இடத்தில் இன்னும் அழுத்தமாக இருந்தது சிறப்பு.

    மிஸஸ். ஹேமில்டன் இந்த ஏஜென்சி ஆரம்பித்த காரணம் மற்றும் அஹ்மத் உடன் நடைபெறும் உரையாடலை மிகவும் ரசித்தேன்.

    எல்லியின் சிறுவயது நினைவுகளை ஆங்காங்கே கதையின் ஓட்டத்துடன் இணைத்து சொன்னது ரசிக்கும் படி இருந்தது.

    எல்லியை ஒருதலையாக காதலிக்கும் ஷான் கதையில் இறுதியில் அவனை அவன் குடும்பத்துடன் இணைக்கும் இடம் சூப்பர்.

    இந்த கதையில் வரும் அனைவருமே முக்கியமானவர்கள், அவர்கள் பற்றி நிறைய சொல்லலாம்.

    நிறைவான கதை.

    குறிப்பு: இதனை தமிழில் படமாக எடுக்கலாம். நயந்தாராவுக்கு எல்லி கதாப்பாத்திரம் நன்றாக பொருந்தும்.

    ReplyDelete
  18. டெமக்லீஸ் அடுத்த கதையை அதி விரைவில் வெளியிடுங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகியின் அக்மார்க் ஆக்சன் அதிரடி. இவர் நமது காமிக்ஸ் மகளிர் அணியை பலப்படுத்த சரியான ஆள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை...ஆனாலும் எங்கள் இளவரசியை மிஞ்ச பல ஆண்டுகள் ஆகலாம் என்பதும் உண்மை..

      ( ஈரோடு சந்திப்பில் இளவரசிக்கு கிடைத்த வரவேற்பை ஆசிரியர் மறந்தும் இருந்து விட வேண்டாம் )

      Delete
    2. இளவரசியின் சில கதைகள் மிகவும் நன்றாக/அட்டகாசமாக இருந்தது ஆனால் மற்றவை சுமார் என்பது எனது எண்ணம்.

      இளவரசி இளவரசிதான். ஏன் என்றால் பல காலங்களுக்கு முன்னர் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த நமக்கு அவர் ஒருவர் தான் கதாநாயகி.

      Delete
    3. ///உண்மை...ஆனாலும் எங்கள் இளவரசியை மிஞ்ச பல ஆண்டுகள் ஆகலாம் என்பதும் உண்மை..///

      தெய்வமே !நீங்க எங்ங்கேயோ போய்ட்டீங்க..!

      Delete
    4. இந்த எல்லிக்கு எத்தனை கதைகள் வெளிவந்துள்ளதோ.!?

      Delete
    5. Jagath@ நாலே நாலு மட்டுமே! இன்னும் ஒரு டபுள் ஆல்பம் வந்தா ஓவர்!

      Delete
  19. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙂

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும்..:-)

      Delete
    2. தலீவரே நலமா இருங்கீங்களா?

      Delete
    3. மிக்க நலம் சகோ..:-)

      Delete
  20. ஞாயிறு காலை வணக்கம் சார்

    மற்றும் நண்பர்களே ����
    .

    ReplyDelete
    Replies
    1. பதில் வணக்கம் சித்தரே..:-)

      Delete
    2. தலைவரே இனிமே சித்தர்கள் கையில் ஓலைச்சுவடிகள் கட்டுக்குப் பதில் பி.பி.வி. தான் இருக்கும் போலயே!

      Delete
  21. ////டெக்ஸின் ஒரு MAXI (330 பக்க) சாகஸத்தை அதற்கென தயாரும் செய்து விட்டேன்! ஆனால் TEX போலொரு கமர்ஷியல் நாயகரை “முன்பதிவுக்கு மட்டும்“ என்ற ரகத்தில் அடைப்பது செம மொக்கையான தீர்மானமாய்த் தோன்றியது!////.----அட டா! வடை போச்சே! அள்ளியிருக்குமே!

    முன்பதிவுக்குனு டெக்ஸை அறிவிச்சா புஸ்ஸ்ஸ்ஸ்னு போயிடும்னு உலவிட்டு இருக்கும் ஒரு வதந்தியை தட்டி தள்ளியிருப்போமே!

    அடுத்த ஆண்டு அறிவிப்பில் இந்த 330பக்க மேக்ஸி இருக்கு தானே சார்!

    ReplyDelete
  22. சொன்ன மாதிரியே பி பி விக்கு தனி பதிவா போட்டு அசத்துறீங்க சார்

    எம்மாம் பெரிய பதிவு

    எவ்வளோ விபரங்கள்

    படிச்சிட்டு அப்பாலிக்கா வர்றேன் சார் 🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. பதிவை மட்டுமல்ல இதழையும் படித்துவிட்டு தங்கள் கருத்துகளை பகிருமாறு அன்புடன் கேட்டு கொள்வது உங்கள் நண்பன்..:-)

      Delete
    2. சாப்பாட்டத்தான் அள்ளி வப்பாருன்னு பாத்தா பிபிவி யப்பத்தி அள்ளி வைச்சிடுவாரோ

      Delete
  23. முதன்முறையாக ( தானா ?) ஆசிரியரின் விமர்சனத்தையே பெற்ற இதழ் பிஸ்டலிக்கு பிரியா விடை இதழாக தான் இருக்கும்..

    உங்கள் பதிவை படித்ததும் மீண்டும் ஒரு முறை இதழை படிக்க சொல்கிறது சார் மனது..

    உண்மையிலேயே அட்ட அட்ட அட்டகாசமான படைப்பு பிஸ்டலுக்கு ஒரு பிரியாவிடை..

    கவர்ச்சி சமாச்சாரம் என்றெல்லாம் மனதில்கொண்டு நிறுத்தி வைக்காமல் இதழை வெளியிட்டமைக்கும் ,மொழிபெயர்ப்பில் கலக்கிய அமெரிக்க மாப்பிள்ளைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. உள்ளேன் ஐயா..!

    பிஸ்டலுக்கு பிரியாவிடை நல்ல வவேற்ப்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.!

    ஞான் இன்னும் வாஷிக்கத் தொடங்கலை..!

    டாக்டர் யுபெர் ஓலா மாத்திரம் முடித்துள்ளேன்..!

    ReplyDelete
    Replies
    1. நீங்க வளரணும் கிட் சார்..:-)

      Delete
    2. Kid ,,,Kidஆத்தான் இருக்கணும் தலீவரே..!

      Delete
    3. நீங்க வளரனும் ஆர்ட்டின் சார்..:-)

      Delete
    4. தாரை பரணி @ அவருக்கு எந்த பக்கம் வளரனும் என்று சொல்லி விடுங்கள்.:-)

      Delete
    5. பாவம் தாடிவாலா உட்ருங்கப்பு...

      Delete
  25. சார்..இந்த மாதம் கை நிறைய புத்தகங்களை அள்ளி வழங்கியுள்ளீர்கள் ..உண்மை..

    அதே சமயம் அனைத்து இதழ்களையும் படித்து விட்டு அடுத்த மாத இதழுக்காக மோட்டு வளையத்தை நோக்கி..

    பிஸ்டலுக்கு பிரியா விடை கண்டிப்பாக மறுவாசிப்பு உண்டு தான் போல..

    ( சிலபல பதிவுகளுக்கு முன் தாங்கள் கேட்ட வினாவிற்கு இது பதிலாக கூட எடுத்து கொள்ளலாம்.)

    ReplyDelete
  26. /// முதல் பக்கத்தில் டாப் கியரைத் தொடும் ஆல்பமானது சும்மா தீயாய்ப் பாய்கிறது - அசாத்தியமான சித்திரங்களோடு !!! ZAROFF - அமேசான் கானகத்தில் ஒரு ஜீவ மரண வேட்டையில் !!///

    மெர்சலாக்கீது சார்..!!

    ReplyDelete
  27. இம் மாதம் மன நிறைவு தந்த மாதம்

    ReplyDelete
  28. நான் காமிக்ஸ் பார்சலை கையில் வாங்கிய அடுத்த நிமிஷமே என்னோடு வந்த சில அந்நிய ஷக்திகள் அதை தூக்கி கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் படித்து முடித்ததும்தான் நான் படிக்க முடியும். அதனால் எடிட்டர் விமர்சனத்தை நான் படிக்கவில்லை. நான் இப்போதான் தோற்கல் படிச்சிக்கிட்டு இருக்கேன். கடைசியா கடவுளரின் தேசம் மட்டு பாக்கி இருக்கு.. முதல் 2 பாகம் கொஞ்சசம் சுமாறாய் தெரிந்தது. அதற்கடுத்த பாகங்களை அதனாலேயே படிக்காமல் இருந்தேன். நண்பர்கள் டைம் டிராவல் அது இதுன்னு என்னென்னவோ சொல்கிறார்களே என அடுத்தடுத்த பாகங்களை படிக்க தொடங்கினேன். எல்லாமே தாறுமாறாக இருந்தது. முக்கியமாக "கனவு மெய்ப்பட வேண்டும்" . ஷைனிங் மாதிரியான ஒரு த்ரில்லர் படத்தை பார்த்த உணர்வை தந்தது. வான் ஹாமே ஜித்தன். அவருடைய ஒன் ஷாட் கதைகளை போட சொல்லி நண்பர்கள் கேட்டு வருவதாக கேள்விப்பட்டேன். அந்த சங்கத்தில் நானும் இணைந்து கொள்ளலாம் என இருக்கிறேன். வான் ஹாமே ரசிகர் மன்ற தலைவர் யாராவது இருந்தால் அட் மீ..

    ReplyDelete
  29. சிறப்பான பதிவு. நிறைய நம்பிக்கைகளை
    விதைத்து வருகிறீர்கள்..

    ReplyDelete
  30. /// என் உருண்டை விழிகளுக்கு அந்த அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் வேறு மாதிரித் தெரியத் துவங்கியிருந்தன! பராகுடா எனும் ஒரு “திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில்” உலாற்றிய பிற்பாடு இதெல்லாமே எலிமண்டரி ஸ்கூல் சமாச்சாரமாய்த் தோன்றுவது புரிந்தது///---ஹா...ஹா..!!
    உங்களுக்கு அப்படி தோணியது அந்த புனித மனிடோவின் வழிகாட்டுதலே!

    பானை கிழவன் ஜாக் சொல்றாரு நவஹோக்களுக்கு மனிடோமேல் நம்பிக்கை இல்லையாமே!!!--ஆனா லயன் வாசகர்களுக்கு பூரண நம்பிக்கை இருக்கு எடிட்டர் சார்!

    இனிமே இதுமாதிரி திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் கண்ணில் பட்டால் மறுகனமே மனிடோவை மனசில் நினைச்சுக்கோங்க யுவர் ஆனர்!ஹி...ஹி...!

    ReplyDelete
  31. லக்கி லூக் & டால்டன்
    செம்ம
    ஆவ்ரெல்தான் கலக்கல்
    ரின்டீன் அதற்கு மேல்
    காமடி கலக்கல்ஸ்
    மாற்றம் கொண்டு வர வந்த டாக்டரை மாற்றி விடும் ஜோ
    சிரித்து சிரித்து மிடீலே
    9/10

    ReplyDelete
  32. //////
    மொழி பெயர்த்த அந்த பெயர் தெரியாத அமெரிக்க மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்...///----என்னுடைய வாழ்த்துக்களும்!!!

    அடுத்து ஒரு டெக்ஸ் கதையை அமெரிக்க மாப்பிள்ளை மொழி பெயர்க்க வேண்டுமாய் வேண்டி விரும்பு கேட்டு கொள்கிறோம்!!!!

    ReplyDelete
  33. மேக்ஸி லயன் பேப்பர் தரம் சூப்பர்

    ReplyDelete
  34. ///And இத்தகைய கதைக்களங்களையும் அட்டகாசமாய் வரவேற்கும் வாசக வட்டத்தோடு தோள் உரச முடிவதில் பெருமிதம் # 2!///-----இது...இது..இதுபோன்ற கதைகளைத்தான் கேட்கிறோம் எடிட்டர் சார்! இந்த ரீதியில் உள்ள ஒன்ஷாட் கதைகளை தொடர்ந்து வெளயிடுங்கள்!

    ReplyDelete
  35. /// ‘மார்கோ‘ எனும் மதனமோகன ரூப சுந்தரி அறிமுகமாகும் இடம் முதலாய் கதை அடுத்த கியருக்குள் பயணிப்பது.////----யெஸ்ஸூ!! சிகுவாகுவா சில்க்தான் பெரிய பிஸ்தானு இருந்தது; மார்கோ அவளையே தூக்கி சாப்பிட்டா...!!!!

    இத்தனை தடவைலாம் சில்க் கூட்டணி மாறியதில்லை சாமி!

    பைரோனு,
    ஹோகார்டு,
    மோனோவோ,
    டிம்மு,
    ஜாக்கு,
    எத்தனை பேரு...!!!
    பாவப்பட்ட டிம்முக்கு "அந்த" லக் மட்டும் அடிக்கலை!

    ட்ரொவர், டைகர், ஸ்டாண்டன்,லோபெஸ் என சில்க்கும் மார்கோவுக்கு டஃப் பைட் கொடுத்தாலும் கூட மார்கோ மார்கோ தான்!!!!

    ReplyDelete
  36. //இதோ - நடப்பு ஜம்போ சீசன் # 2 -ன் இறுதித் தேர்வு (கால வேட்டையாருக்குப் பதிலான இதழ் !!) இதுவும் ஒரு வேட்டைக்களமே - இம்முறையே முழுவண்ணத்தில் !!! முதல் பக்கத்தில் டாப் கியரைத் தொடும் ஆல்பமானது சும்மா தீயாய்ப் பாய்கிறது - அசாத்தியமான சித்திரங்களோடு !!! ZAROFF - அமேசான் கானகத்தில் ஒரு ஜீவ மரண வேட்டையில் !!//
    Very eagerly waiting!!!!!!

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எக்ஸ் டிவியா?!! அப்படியொரு டிவி இருப்பது இத்தனை நாளும் தெரியாமப் போச்சே...
      ம்.. சிங்கிள் எக்ஸ் தானா?

      Delete
    2. . பதிவுகள் தடம் மாறிப் போகும் அபாயம் இருப்பதால் எனது கமெண்ட் withdrawn.

      Delete
    3. . பதிவுகள் தடம் மாறிப் போகும் அபாயம் இருப்பதால் எனது கமெண்ட் withdrawn.

      Delete
  38. நண்பர்களே...

    2021ல் முத்து காமிக்ஸின் 50 ஆண்டுகால நீண்ட நெடும்பயணத்தின் பொன்விழா ஆண்டு வரயிருக்கிறது!!

    காமிக்ஸ் வாசகர்களின் எண்ணிக்கையில் தரைதட்டி நிற்கும் தமிழ்நாட்டில் இதுவொரு சாதாரணச் சாதனையல்ல!இப்போதிருந்தே ஒரு பிரம்மாண்ட விழாவிற்கு திட்டமிடுவோம்! 'இதுவரை கண்டதில்லை - இப்படியொரு காமிக்ஸ் திருவிழா' என்று இந்தியப் பத்திரிக்கை உலகமே வியக்கும்படி இவ்விழா இருந்திட வேண்டும்!!

    கொண்டாட்டத்திற்குத் தயாராகிடுவோமா?

    ReplyDelete
    Replies
    1. நான் எப்போதே ரெடி. புதிய DSLR காமிராவுடன் தயார்.

      Delete
    2. இப்போதிருந்தே இதுக்கு ப்ளான் பண்ணிடலாம்.

      Delete
    3. பக்கோ....பக்கோ....பக்கோ

      Delete
    4. நான் செந்தில் மாதிரி இலையை மடக்கி ரெடியா வச்சுருக்கேன்.

      Delete
    5. நான் செந்தில் மாதிரி இலையை மடக்கி ரெடியா வச்சுருக்கேன்.

      Delete
    6. 2022-ல் தானே ஈ. வி. சார்!?
      (இந்த ஆண்டின் சிகரங்களின் சாம்ராட் 47-வது ஆண்டு மலர்.)

      Delete
    7. இந்த விழா கண்டிப்பாக சிவகாசியில் கொண்டாடுவோம்.

      Delete
    8. @ Jagath kumar

      1971ல் முத்து காமிக்ஸ் தொடங்கப்பட்டது என்றால் 2021ல் 50வது ஆண்டு துவங்குகிறது! 2022ல் 50 ஆண்டுகள் நிறைவுறுகிறது!

      எதைக் கொண்டாடுவது என்பதை நாம்தான் (பெரியவர்களுடன் கலந்துபேசி) முடிவு செய்ய வேண்டும்!!

      என்னைக்கேட்டால் 2021 உகந்ததென்பேன்!!

      Delete
    9. நீங்கள் சொல்வது சரியே ஈ.வி.சார்!

      ஆனால் எனக்கு, கொண்டாட்டம் ஜனவரி 2021'லா, ஜனவரி 2022'லா என்று தான் புரியவில்லை.

      2021 ஜனவரியில் 50-வது ஆண்டு மலர் வெளிவந்தால் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. ஆனால், இதை கவனியுங்கள்:
      2019 ஜனவரியின் சிகரங்களின் சாம்ராட் 47-வது ஆண்டு மலர்.
      2020 ஜனவரிக்கு 48-வது ஆண்டு மலர்.
      2021 ஜனவரிக்கு 49-வது ஆண்டு மலர்.
      அப்படியிருக்க, 50-வது ஆண்டு மலர் 2022 ஜனவரிக்கு வெளிவருமே என்று தான் கேட்டேன்.

      Delete
    10. முத்து காமிக்ஸ் ஆரம்பிச்சது 1971ல் என்றால் 1981ல் 10ஆண்டு முடிஞ்சிடுது!

      2011ல் 40ஆண்டு முடிஞ்சிடுது.

      2013ஜனவரியில் வந்த நெவர் பிபோர் ஸ்பெசல் 42வது முத்து ஆண்டுமலர் என இருந்து இருக்க வேணும். அப்படியே பார்த்தம்னா சிகரங்களின் சாம்ராட் 48வது ஆண்டுமலர் என இருந்து இருக்கனும். டெக்னிக்கல் மிஸ்டேக்! இந்த ஆராய்ச்சி முன்பே பண்ணி இருந்தா சரிப்படுத்தி இருக்கலாம்! எனவே வரும் ஜனவரியில் 49வது முத்து ஆண்டுமலர் என போட்டு விடுங்க எடிட்டர் சார். 2021 ஜனவரியில் 50ஆண்டுகள் முடிஞ்சிடுது! 50வது ஆண்டுமலர் கொண்டாட்டம் 2021ஜனவரியில் என்பது சரிதான்!

      எடிட்டர் சார் வந்து தெளிவாக உறுதிப்படுத்திட்டா ஓகே!

      Delete
    11. டெக்ஸ் விஜய்
      முத்து காமிக்ஸ் ஆரம்பித்தது 1972ல்.

      Delete
    12. ஆனா, விக்கிபீடியா உள்ளிட்ட எல்லா இணையதளங்களிலும் 1971னு தானே இருக்கு!

      இதோ விக்கியைப் பாருங்களேன் :

      ///The first issue of Muthu comics was published in 1971 as a monthly (128 pages, INR 0.90). It featured The Steel Claw (இரும்புக்கை மாயாவி in Tamil). Although there had been a few comics publishers in Tamil from the early 60s, the entry of Muthu Comics marks the beginning of the Golden Age of Tamil Comics. Muthu comics enjoyed a warm welcome from the Tamil audience and with M.Soundrapandian, continued to grow steadily over the years.///

      Delete
    13. ATR sir@ வணக்கம். தங்களது தகவல் சரியானதே! நன்றிகள்!

      இப்போது தான் இதை உறுதிப்படுத்திக் கொண்டேன்!

      மேலே உள்ள என் பதிவை வாபஸ் வாங்கி கொள்கிறேன்!

      திருத்தப்பட்ட கமெண்ட்..!!

      முத்து காமிக்ஸ் ஆரம்பிச்சது 1972!

      2012ல் அதற்கு 40ஆண்டு பூர்த்தியாகிறது. 2012ல் இதை கொண்டாட NBS அப்போது அறிவிக்கப்பட்டு 2013 ஜனவரியில் வெளியானது.

      2022ல் தான் 50ஆண்டு பூர்த்தியாகிறது. 2022ல் கொண்டாடுவதே சரியானது!

      Delete
    14. அது தவறான தகவல் விஜய்.
      முதல் இதழ் "இரும்புக்கை மாயாவி" வெளியானது ஏப்ரல் 1972 ல்.

      Delete
    15. மேலே உள்ள பதிவு ஈ.வி. அவர்களுக்கு.
      டெக்ஸ் விஜய் நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்.

      Delete
    16. ATR sir@ அனைவருக்கும் உரியதே! நாம் எல்லோரும் அறிய வேண்டிய தகவல்களே!

      காமிக்ஸ் நண்பர்கள் எல்லோரும் அந்த விக்கி தகவல்கள் பார்த்துட்டு தவறாக முடிவு செய்துட்டோம். முதலிலேயே தங்களை போன்ற சீனியர் நண்பர்களிடம் கேட்டு இருக்க வேணும்!

      Delete
    17. கொண்டாத்திற்கு தயாராக அவகாசம் அதிமாக உள்ளது ☺☺☺
      அப்போ இன்னும் சிறப்பாக செய்து விடலாம் 😃😃😃😃😃

      Delete
    18. டெக்ஸ் விஜய்
      நானெல்லாம் நம்ம டயபாலிக் அகில் வரிசை என்று நினைத்திருக்கிறேன்.என்னைப் போய் சீனியர் லிஸ்டில் சேர்த்துவிட்டீர்களே!

      Delete
    19. கொண்டாட்டாமாய் கொண்டாடலாம் எப்பொழுதெனினும்..:-)

      Delete
  39. எந்த அளவுக்கு வில்லனுக்கு கனமான கதாபாத்திரம் இருக்கோ அந்த அளவுக்கு ஹீரோவுக்கு ஒளிவட்டம் அதிகமாக இருக்கும்... இருளின் ராஜ்ஜியம் செம..

    ReplyDelete
  40. ஜம்போவில் கால வேட்டையருக்கு பதில் ZAROFF வருவது சூப்பர். ஆமாம் இந்த ZAROFF பற்றி யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்; தமிழ் காமிக்ஸ் தவிர வேறு மொழி காமிக்ஸ் படிக்காத இந்த காமிக்ஸ் ரசிகனின் வேண்டுகோள்.

    கால வேட்டையரை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியிட முடியுமா (படிக்க நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்தால்) ?

    ReplyDelete
    Replies
    1. அபபோ கென்யா அடுத்த வருஷம் கன்பார்மா

      Delete
    2. பரணி@ இந்த Zaroff 88பக்க ஒன்ஷாட்!

      டெரர் ஆன கதை! சும்மா மெரட்டுது கதைக்களம்!
      கதை சுருக்கம் மாஸாக இருக்குது! சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிடும்.


      Delete
    3. 😃 அமேசான் காட்டில் ஒரு காமிக்ஸ் தொடர் என்றால் குதூகலமாக உள்ளது. டெக்ஸின் கொடூரவனத்தில் டெக்ஸ் கதை நினைவுக்கு வருகிறது.

      Delete
    4. // ஜம்போவில் கால வேட்டையருக்கு பதில் ZAROFF வருவது சூப்பர். ஆமாம் இந்த ZAROFF பற்றி யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்; தமிழ் காமிக்ஸ் தவிர வேறு மொழி காமிக்ஸ் படிக்காத இந்த காமிக்ஸ் ரசிகனின் வேண்டுகோள்.

      கால வேட்டையரை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியிட முடியுமா (படிக்க நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்தால்) ? // பரணி சூப்பர் யா நான் கேட்க நினைப்பதெல்லாம் நீங்கள் கேட்கிறீர்கள்

      Delete
  41. ஆர்லிங்டன்னுக்கும் கார்ஷனுக்கும் ஆறு வித்தியாசம் தான் போல...என்னடா கார்சன் வில்லத்தனம் பண்ணுறாறேன்னு சந்தேகம் வந்துடுச்சு...
    எப்படியோ வில்லனை பழிவாங்கியாச்சு பாவை...

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா நம்ப நம்பர் பார்ட்டி இப்ப நம்பரை தவிர கமெண்ட் போடும் அளவுக்கு தேறிவிட்டார். சூப்பர் டெக்ஸ் கிட். தொடர்ந்து பதிவிடுங்கள் நம்பரைத்தவிர :-)

      Delete
    2. ஆறு வித்யாசமெல்லாம் இல்ல.ஒண்ணே ஒண்ணுதான். யுனிபார்ம் போட்டா அது கர்னல்.இல்லைனா அது கார்சன்.

      Delete
    3. ஒரு விதத்தில் ரெண்டு பேரும் ஒண்ணுதான்!

      நிஜ கார்சன், அர்லிங்டனை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர். அவரைப் பற்றி அறிந்து கொண்டா தாங்கி கொள்ளவே முடியாது!

      Delete
  42. கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் களப்பணியாற்றிய நமது காமிக்ஸ் நண்பர்கள் ரம்யா மற்றும் ஸ்டீல்க்ளா என்ற பொன்ராஜ்க்கு நன்றி. நன்றி.நன்றி. உங்கள் சேவை மகத்தானது.

    ReplyDelete
  43. ஈரோடு புத்தகத் திருவிழாவில் களப்பணியாற்றி வரும் நண்பர் கோவிந்தராஜன் அவர்களுக்கு நன்றி. உங்கள் சேவை பாராட்டுக்குரியது. நமது ஸ்டால் விற்பனை நிலவரம் மற்றும் தினமும் வந்து செல்லும் காமிக்ஸ் வாடிக்கையாளர்கள் பற்றி நீங்கள் தரும் விபரக்குறிப்பு அருமை. தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் பங்களிப்பு.

    ReplyDelete
    Replies
    1. கோவிந்தராஜன் (a) Govindaraj Perumal

      Delete
    2. சகோதரர் கோவிந்தராஜ் மிக அருமை👏👏👏

      Delete
    3. GP well done sir. அவரிடம் பேசிய சிறிது நேரத்திலேயே அவரின் காமிக்ஸ் நேசிப்பு தெரிந்தது. ஒவ்வொரு frame ayum எப்படி இருக்கிறது என்று அவர் விளக்கிய போது அப்படியே அசந்து போய் நின்று விட்டேன்.

      Delete
  44. சார் அமேசான் காடுகள் ..நதிகள்....கொலராடோ ...நைல் நதி ...கரீபியன் கடல்...பெர்முடா முக்கோணம்...எகிப்திய மம்மிகள் நாகரிகங்கள் ...கேள்விபட்ட நாட்கொண்டு புத்துணர்வு ஈட்டிய விடயஙகள்....கரீபியன பாத்தேன் ...கலஙேகர விளக்கமும் பாத்தேன்...அமேசான இன்னும் பாக்கலியே ...குரல் கேட்டதோ இல்லியோ...அமேசான் அருமை...முடிஞ்சா அடுத்த மாசமே ..ஜாலியா ஊத்ற மழைல காட்ல நனய ஆசை...ஈவி கேட்டத போல...தம்பி ...இது நம்ம பயணத்ல ௐரு மயில் கல்லுல்ல...அதால முதல் கதய அப்டியே விளம்பரம்...முன்னுரை மாத்தாம...சில சிறப்பிதழ்களே உள்ளன ...கலர் மாயாவி ...பெரிய சைசுன்னு. ..அத நினைவு கூறவும்....சில புதிய அதிரடிவலும் வரட்டுமே...அதுல முடிஞ்சாக்கா ஆஸ்ட்ரிக்ஸ் மேக்சில வரணும்

    ReplyDelete
  45. பிஸ்டலுக்கு பிரியா விடை புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு இன்னும் படிக்காமல் இருக்கிறேன்.

    அந்த பெரிய கதையை பார்த்ததும், அதை படித்து முடிக்கும் வரை வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் படிக்க வேண்டும் என்று ஆசை. அதனால், அதை படிப்பதற்காக, வேறு ஒரு காரணம் சொல்லி நான் கேட்ட லீவு நாளை, நாளை மறுநாள் என தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

    இந்த நேரம் பார்த்து, இங்கே Blog'கில், Facebook'கில் என எங்கே பார்த்தாலும் "பிஸ்டலுக்கு பிரியா விடை"யின் கருத்துக்கள், மழையாக பொழிந்துக் கொண்டே இருப்பதால், எனது ஆசை மேலும் மேலும் கூடிக் கொண்டே போகிறது.

    ReplyDelete
  46. பழிவாங்கும் பாவை: மறுபதிப்பாக வந்திருக்கும் இந்த கதையை அப்போதே நானும் படித்திருந்தால், எனக்கும் பிடித்துப் போயிருக்கும். இப்போது இது மறுபதிப்பாக வந்ததற்காக சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், இப்போது தான் முதன்முறையாக இந்த கதையை படிக்கிறேன். படிக்காத ஒரு கதையைத் தான் படிக்கிறேன் என்றாலும், தெரிந்த கதையை படிப்பது போலவே ஒரு உணர்வு.

    ReplyDelete
  47. மீதமிருக்கும் நான்கு மாதங்களும் ஷெல்டன் மாடஸ்டி புண்ணியத்தில் கலர்புல்லாக இருக்கப்போவதை நினைத்தால் மனம் ரெக்கை கட்டிப் பறக்கிறது கரூர் ராஜசேகரன்

    ReplyDelete
  48. மனதில் உறுதி வேண்டும்: இந்த கதையை நான் முதன்முதலாக படித்தப்போது எனக்கு 20 வயது இருக்கும். ஏதோ ஒரு புத்தகத்தில் இரண்டாவது கதையாக பச்சை+கருப்பு+வெள்ளை என மூவர்ணங்களில் வந்திருந்தது. இதை விட அட்டகாசமான ஒரு காமெடி கதையை அதுவரை நான் படித்ததில்லை. நிறைய முறைகள் படித்தேன். 30 தடவையா, 40 தடவையா தெரியாது. ஒவ்வோரு முறை படிக்கும் போதும் நூறு முறை சிரிப்பு வந்துவிடும். (என்னை யாரும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் கொண்டு போய் தள்ளாத குறைதான்) அவ்வளவு பிடித்துப் போன கதை இது. 2015 முதலாகவே ஒவ்வொரு வருடமும் இந்த கதையை மறுபதிப்பில் கேட்டுக் கொண்டிருந்தேன். இதோ! வந்துவிட்டது. ஆனால், ஏனோ எனக்கு இப்போது அந்த பழைய புத்தகம் தான் வேண்டும் என்று தோன்றுகிறது. எங்கேயாவது விற்பனையில் கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் போல ஆசையாக இருக்கிறது. மேக்ஸிமம் சைஸில் வந்துள்ள லக்கியின் இந்த கதையை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. பிரமிக்க வைக்கும் இந்த பிரம்மாண்டமான சைஸ், action கதைகளை படிப்பதற்கு சுவாரசியமாய் இருக்குமே தவிர, காமெடி கதைகளுக்கு இந்த சைஸ் சுகப்படாது.

    ReplyDelete
  49. எடிட்டர் சார்! ஆகஸ்டில் வெளிவந்த அண்டர்டேக்கர்,தலைமுறை எதிரி இரண்டும் சூப்பர்! ஈரோடு ஸ்பெசலில் ’’பிஸ்டலுக்கு பிரியாவிடை’’ வேற லெவல்! ’’நித்தம் ஒரு யுத்தம்’’ சுமார் ரகம்! நான் பிளாக்கில் எப்பொழுதும் மௌன பார்வையாளனாகவே இருந்திடுவதுண்டு! மேக்சி டெக்ஸ் மற்றும் மேக்சி லக்கியை அரங்கில் நீங்கள் எடுத்துக்காட்டியதும் கை தட்டி ஆரவாரித்த கூட்டத்தில் நானும் ஒருவன்.ஏனெனில் இரண்டுமே இப்போது என்னிடம் இல்லை. அங்கேயே இரண்டினையும் வாங்கிக்கொண்டேன். அண்டர்டேக்கர், பிஸ்டலுக்கு பிரியாவிடை,நித்தம் ஒரு யுத்தம் படித்த பின் மேக்சி லக்கியை வாசிக்க ஆரம்பிக்க நான்கு பக்கங்களுக்கு மேல் தாண்ட இயலவில்லை. அந்த ப்ரொபஸருக்கு தாங்கள் வைத்துள்ள பெயர் ’’டுபுக்கு டுபாய்’’! இப்படியெல்லாமா பெயர் இருக்கும். இணையத்தில் தேடியதில் ப்ரெஞ்சில் ப்ரொபசர் ஆப்பிள் வாட்டர் என்றும், சினிபுக் ஆங்கிலத்தில் ப்ரொபசர் ஆப்பிள் ஜாக் என்றும் உள்ளது! மனதில் உறுதி வேண்டும் சிறுவயதில் படித்தது! அதில் அந்த ப்ரொபஸருக்கு டுபுக்கு டுபாய் என்றுதான் இருந்ததா? அல்லது வழக்கமாக நீங்கள் குறிப்பிடுவது போல் இது எக்ஸ்ட்ரா நம்பரா? தற்போது கார்டூன் கதைகளை வாங்க விரும்பாததற்கு தங்களின் மொழியாக்கம் கார்டூன் கதைகளை பொருத்த வரையில் இயல்பாக இல்லாததே காரணம். தங்களின் வாசகர்களில் பெரும்பாலோனோர் என்னை போன்ற வயது முதிர்ந்த வாசகர்களே! மேலும் தாங்கள் வெளியிட்டு வரும் பெரும்பாலான கதைகளின் ஆங்கில பிடிஎஃப், சிபிஆர் ஃபைல்கள் இணையத்தில் தாராளமாக கிடைக்கிறது. எனவே மொழியாக்கத்தை பொறுத்த வரை மூலக்கதையில் உள்ளவாறு பெயர்களை வைக்கவும். அப்புறம் நமது தமிழ்நாட்டில் உள்ள எந்த ஸ்லாங் வேண்டுமானாலும் கையாளுங்கள். சார்வாள் என்பது போன்ற அய்யர்வாள் பாஷை, ஞான் என்பது போன்ற அய்யங்கார் பாஷை, ப்ரோ, சகோ போன்ற தற்கால பாஷை ஆகியவற்றை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள்!

    ReplyDelete
  50. ப்ரோ, சகோ போன்ற தற்கால பாஷை லார்கோ,வேய்ன் ஷெல்டன்,டெமாக்லீஸ் போன்ற தற்கால கதைகளுக்க்கு பொருந்தும்.வைல்ட் வெஸ்ட், பான்டசி கதைகளில் கையாள்வது பொருத்தமில்லாமல் உள்ளது.

    ReplyDelete
  51. சார் ஜானதனுக்கு இன்னொரு வாய்பு கொடுங்கள் பிண்டர் பாலன்டையனின் யானை கல்லறைக்கு வாய்பு கொடுங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. சார் பிஸ்டலுக்கு பிரியாவிடை அருமை ஒன்ஷாட் கவ்பாய் கதைகள் இருந்தாவெளியீடுங்கள்

      Delete
  52. பூபதி சார்
    மூலக்கதையில் உள்ள பெயர்களையே சூட்ட வேண்டுமென்றால் நமக்கெல்லாம் இரும்புக்கை மாயாவி என்ற நாயகருக்கு பதில் லூயிஸ் க்ராண்டேல் என்கிற மனதில் ஒட்டாத பெயருடைய நாயகரைத்தானே அறிய முடிந்திருக்கும். அன்றும் இன்றும் என்றும் அழியா புகழுடன் விளங்கும் மாயாவியின் புகழுக்கு காரணம் சீனியர் செய்த பெயர் மாற்றமும் ஒரு காரணமல்லவா?
    பஸ் ஸாயர் என்கிற பெயர் சார்லியாக மாற்றம் கண்டதால்தானே இன்றும் நினைவில் எளிதாக நிற்கிறது. ப்ளூபெர்ரியைவிட டைகர் என்கிற பெயர் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறதே. மேலும் எல்லா நாயகர்களின் பெயரையும் மாற்றம் செய்வதில்லையே. தேவைப்படும் சமயம் மட்டுமே இந்த பெயர் மாற்றம் நடைபெறுகிறது.
    உங்களது கருத்துக்கு எதிர் கருத்தாக இதனை பதிவிட்டதாக எண்ண வேண்டாம்.
    "கறை நல்லது என்பது போல சில நேரங்களில் பெயர் மாற்றமும் நல்லதே"
    //"டுபுக்கு டுபாய்"! இப்படியெல்லாமா பெயர் இருக்கும்.//
    நாய் சேகர், வெட்டுப்புலி,சால்ட்டு கோட்டா சிலுவை,படித்துறை பாண்டி என்று நம்மூர் சினிமாக்களில் பெயர் வைப்பதில்லையா?
    அதுபோல "டுபுக்கு டுபாய்!" உரக்க சொல்லிப்பாருங்களேன். உங்கள் உதட்டில் புன்னகை மலர வைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சார்!நீங்களும் ஆசிரியரை உசுப்பேத்தி விடாதீர்கள்!நீங்கள் குறிப்பிடுவதெல்லாம் இணையம் வருவதற்கு முந்தைய காலத்தில் நடந்தது!

      Delete
    2. "டுபுக்கு டுபோய்" வாவ்! ரொம்ப அழகான பெயர். 😂

      Delete
    3. குழந்தகள் பழிப்பு காட்ட "ஆங்!அஸ்கு புஸ்கு!"என்பார்கள்.இதையே சற்று மாற்றி ஒரு பழைய சினிமாவில் சுருளி ராஜன் அவர்கள் "ஆங்!லொட்டு லொசுக்கு" என காமெடி பண்ணியிருப்பார்!இந்த மாதிரி வார்த்தைகளை கேரக்டர்களுக்கு பெயர்களாக வைத்தால்...வாவ்!🤪

      Delete
  53. மே மாதம் வந்த இதழ்களில் பராகுடா வரை இந்த வருடத்து வெளியீடுகளை படித்து இருந்தேன், அம்மாதமே இரண்டு பென்டிங்.ஈரோடு வரை சேர்த்தால் படிக்காத கதைகளை கணக்கிட்டால் மொத்தம் 15. இதோ 15ல் பிஸ்டலுக்கு பிரியாவிடை படித்து முடித்தாயிற்று மழை நாள் விடுமுறை உபாயத்தில். ஆசிரியர் மேலே குறிப்பிட்டது போல், இன்னும் பரீட்சயமாய் சொல்வதானால், கமல் சார் திரைக்கதை எழுதிய படம் பார்ப்பது போல் இருந்தது.
    மொத்த ஆல்பத்திலும் கதைக்கு தேவையில்லாத சமாச்சாரங்கள் ஒரு துளி கூட சேர்க்கப்படவில்லை. ஒவ்வொரு frame மும், கதாப்பாத்திரமும், ஏன் உயிரில்லா பொருள்களுக்கும் கதையில் பங்குள்ளது. பானை செய்வது, அதில் சித்திரம் வரைவது, உடைந்த பானையை ஒட்டுவது, சிறுமிக்கு பரிசாக கொடுக்கப்பட்ட முகக் கண்ணாடி, அதனால் ஏற்படும் விளைவு, ஜாக்குடைய
    முதளாளி, அவரின் photo studio, அதன் பின்னனி, சிலந்தி பாறை, அது கொடுக்கும் விடை என்று அடுக்கிகொண்டே போகலாம் கதையில் உள்ள மெல்லிய தொடர்புகளை. நிறைய characterகள் இருந்தாலும் எனக்கு பிடித்தவர், குறைவாக பேசினாலும் அதிரடியான Mr.சண்ண்ட்ட்டாள்ளி.

    இவ்வருட கதைகளில் உச்சத்தை தொட தகுதியான இதழ்தான், ஆனால் பராகுடா வேற level சார், இதுவறை படித்ததில் இந்த வருடத்தின் top3

    1. பராகுடா
    2. பிஸ்டலுக்கு பிரியாவிடை
    3. சிகரங்களின் சாம்ராட்

    ReplyDelete
  54. நானும் கூட ஆசிரியரிடம் ஒரு தவறை சுட்டிக் காட்டலாமா என நினைப்பேன். அதாவது, தங்க பொக்கிஷம் சம்பந்தப்படும் காமிக்ஸ் கதைகளில் 'விலைமதிப்பற்ற' என்ற வார்த்தை தவறான பொருளோடு வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வார்த்தை காமிக்ஸில் மட்டுமல்ல, எல்லா புத்தகங்களிலும், சினிமாக்களிலும், டிவியிலும், மக்கள் மத்தியிலும் தவறாக தான் சித்தரிக்கப் படுத்தப்படுகிறது. அதனால் அதைப் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.
    அந்த வார்த்தைக்கு அர்த்தம்
    விலை+மதிப்பு+அற்றது. விலை மதிப்பே இல்லாத பொருள் என்று அர்த்தம். நான் பள்ளியில் படிக்கும் போது Very costly என்ற வார்த்தைக்கு விலையுயர்ந்த, விலை மதிக்க முடியாத என்று தான் அர்த்தம் இருந்தது. காலப் போக்கில் மக்களின் வசதிக்கேற்ப அந்த வார்த்தை இப்படி ஆகியிருக்கும் என நான் நினைத்துக் கொள்வேன். ஏன்..!? Google translate-டில் கூட 'விலைமதிப்பற்றது' என்ற வார்த்தைக்கு Precious என்று தான் பொருள் காட்டுகிறது. Google translate'டாக இருந்தாலும் அதில் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளை update செய்த ஒரு மனிதனின் தவறுதானே அது.

    ReplyDelete
  55. சார் முத்து ஐய்பதாவுது ஆண்டு மலர் அந்த 1450 பக்க கவ்பாய் கதைய வெளியிங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐம்பதாவது ஆண்டு மலருக்கு இன்னும் முழுசா ரெண்டரை வருஷம் இருக்கு. அதுக்குள்ள ஏன் சார் ஆசிரியரை டிஸ்டர்ப் பண்றிங்க. இந்த ரெண்டரை வருத்துல அவருக்கு பத்தோ, பதினஞ்சோ குண்டு புக்குகள் வெளியிட வேண்டி வந்தாலும் வரலாமே.

      Delete
  56. இன்று ஈரோடு புத்தகத் திருவிழாவில்
    நமது ஸ்டாலில் களப்பணியாற்றி கொண்டிருக்கும் பிரபாகர், மாரிமுத்து, அறிவரசு மற்றும் விஜய் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் காமிக்ஸ் காதல் பாராட்டுக்குரியது.

      Delete
    2. உண்மையாகவே பாராட்டுக்கு உரியது.

      Delete
    3. சகோதரர்களுக்கு பாராட்டுகள்

      Delete
  57. சார்! அடுத்த வருடம் Maxi லயனில், டெக்ஸ் வில்லரின் மறுபதிப்பாக 'மரண முள்'ளை வெளியிடுங்கள் சார். தண்ணீருக்கு பதிலாக ரத்தத்தை வேர் மூலமாக உறிஞ்சி வளரும் அந்த செடிகள் Maxi size'சில் அட்டகாசமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கனவும் பெரிசா வருமே...!!! பயந்து பயந்து வருமே!

      அந்த கதைய படிச்சிட்டு கொஞ்சம் நாளு எந்த செடியை பார்த்தாலும் ஒரு பய அலை ட்ராவல் ஆகும்! உள்ளங்காளில் கூசும்.

      Delete
    2. இது எல்லாம் நமது maxi எடிட்டர் விக்ரம் அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.

      மரணமுள் கதைக்கு சாரி.

      Delete
  58. ஈரோடு புத்தகத் திருவிழாவில் அன்பை பொழிந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    காரப்பொறி கொடுத்த சுஸி மற்றும் கலர் பென்சில் கொடுத்த கணேஷ் அவர்களுக்கு நன்றி.

    ஆங்கில வேதாளன் புத்தகம் ஒன்றை பரிசாக கொடுத்த செந்தில் சத்யாவிற்கு நன்றி.

    ஜனாவிற்கு ஒரு நன்றி.

    ReplyDelete
  59. பல வருட முயற்சிக்கு பின்னர் எனது நண்பர்கள் குழுவில் ஒருவரை இன்று நமது காமிக்ஸின் சந்தா (A+B+C+D) குடும்பத்தில் இணைந்து விட்டேன். அவர் தற்சமயம் திருப்பூர் TMB பேக்கில் மானஜராக உள்ளார்.

    ReplyDelete
  60. பெங்களூரில் நண்பர்களுடன் தங்கி இருந்த ஆரம்ப நாட்களில் நான் காமிக்ஸ் படிப்பதை கிண்டல் செய்து ரசிப்பார்கள். இன்றுவரை அவர்களுக்கு காமிக்ஸ் குழந்தைகள் சமாச்சாரம், எனவே இரண்டு நாட்களுக்கு முன்னர் எனது நண்பர்களில் ஒருவருக்கு இந்த வருடம் இதுவரை வந்த சிறந்த கதைகள் (ஈரோடு ஸ்பெஷல் முதற்கொண்டு) 8ஐ ஆன்லைனில் ஆர்டர் பண்ணிவிட்டேன். படித்து விட்டு பிடிக்க வில்லை என்றால் எனக்கு திருப்பி அனுப்பிவிடு என்று சொல்லி இருக்கிறேன். பார்கலாம் என்ன நடக்கும் என்று.

    ReplyDelete
    Replies
    1. நல்ல விஷயம் சகோதரரே😃😃😃

      Delete
  61. தலைமுறை எதிரி :
    அட்டகாசமான அக்மார்க் ஜானி த்ரில்லர்.!
    ஜானியின் கிளாசிக் கதைகள் என்றுமே டாப்தான்.! மறுஜென்ம நம்பிக்கை , மனோதத்துவம் ,ஹிப்னாடிசம் எல்லாவற்றையும் கலந்துகட்டி கலக்கியிருக்கிறார்கள்.! இறந்தவனிடமிருந்து அடுத்தடுத்து கடிதங்கள் வருவது, நான்கைந்து ஜென்மங்களாக தொடர்ந்து பிறந்துவந்து பழிவாங்குவது போன்ற அமானுஷ்ய சங்கதிகளை நம்பும்படியே கொண்டுபோய் லாஜிக்கலாக முடித்திருக்கும் விதம்.. சபாஷ்.!
    யார்யாரையோ கொலையாளி என்று யூகித்து லைத்திருந்தேன்.! க்ளைமாக்ஸில் இவர்தான் கொலையாளி எனத் தெரியவந்தபோது.. அடடே இந்தக் கோணத்தில யோசிக்கத் தோன்றவே இல்லையே என்று ஆச்சர்யப்பட்டுப் போனேன்.!
    ஜானி கதைகளில் சித்திரங்கள் அழகு என்பதும் சீனியில் இனிப்பு இருக்கிறது என்பதும் ஒன்றுதான்.! கலரிங் அருமையாக வந்திருக்கிறது.!

    தலைமுறை எதிரி - ரிப்போர்ட்டர் ஜானி

    எடிட்டர் சார்.!
    இதே மாதிரி ஆரம்பகால (திகிலில் வெளியான) ஜானி கதைகளை ஒவ்வொன்றாக மறுபதிப்பு செய்தீர்கள் என்றால் இவ்வையகம் உங்களை வாழ்த்தும் சார்.!
    அடுத்த சாய்ஸ் - இரத்தக் காட்டேரி மர்மம்.!

    ReplyDelete
    Replies
    1. // அடுத்த சாய்ஸ் - இரத்தக் காட்டேரி மர்மம்.! //

      +123456789

      அதுவும் ஒரிஜினல் அட்டையுடன் வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி

      Delete
  62. நித்தம் ஒரு யுத்தம்" முடித்துவிட்டேன். பிரமாதமான கதை. மிக்க நிறைவாக இருந்தது. ஆனால், கடைசி ஃப்ளாஷ்பேக் மட்டும் புரியவில்லை. வேறொருவனுக்கு பிறந்த மகளிடம் அந்த தாய், அவளுடைய தகப்பனாக இன்னொருவனை ஏன் சுட்டி காட்டுகிறாள்? ஹோட்டல் அறையில் தனக்கு நேர்ந்த கற்பழிப்பு அவமானத்தை கண்ணியமாக மூடி மறைக்க அந்த பொய் எவ்வாறு உதவ முடியும்?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு புரிந்த வகையில் நண்பரே....


      அவள் பகட்டான வாழ்விற்கு ஆசைப்படுபவள் ,அந்த கோடீஸ்வரன் மீது பிரேமையும் கொண்டவள்.அவனிடம் பணிபுரிபவனிடம் தன்னை இழந்தவள் அதற்கு காரணமானவனக அந்த கோடீஸ்வரனை கை நீட்டுவதன் அவனின் பணபுலத்தாலும் ,அதிகார பலத்தாலும் தான் தான் மோசம் போனவளாக மகளிடம் சித்தரிப்பதன் மூலம் தனது மதிப்பை அவளிடம் குறைத்து விடாமல் பார்த்து கொள்கிறாள்.


      Delete
    2. மேலும் இதனை காரணமாக கொண்டு தனது வாரிசை அந்த கோடீஸ்வரனின் வாரீசாக அவளிடம் சொல்வதன் மூலம் தன்னால் முடியாத அந்த பகட்டான வாழ்விற்கு அவளாவது இதன் மூலம் அனுபவிக்கட்டும் என்ற காரணமாகவும் இந்த பொய்யை எடுத்துரைக்கிறாள்.


      ( இது எனது அனுமானமே ..அல்லாமல் சரியான விளக்கம் வேறு இருந்தால் நண்பர்கள் எடுத்துரைக்கலாம்.)

      Delete
    3. மரபணு பரிசோதனைகள் இருக்கும்போது அந்த பகட்டான வாழ்வை மகள் எப்படி அனுபவிக்க முடியும் சார்?

      Delete
    4. நீங்கள் சொன்னது சரி தான் தலைவரே. நானும் அவ்வாறே புரிந்து கொண்டேன்.

      Delete
  63. மார்கோ பலதரப்பினரின் பார்வையில் ....!!!!!

    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    தமிழ் ஆர்வலர்கள் பார்வையில் ..

    மார்கோ கதாபாத்திரம் நமக்கு மிகவும் அறிமுகமான ‘’ வசந்தசேனாவை ‘’ நினைவூட்டவில்லை ?

    என்னப்பா நீ ? ஒரு திரைப்பட பாத்திரத்தோடு ஒப்பிடுகிறாய் ?
    அல்ல ..அல்ல !! மனோகரா நாடக செம்மல் பம்மல் கே சம்பந்த முதலியார் எழுதிய கதை ....திரை வடிவம் ,வசனம் மாத்திரம் நமது முத்தமிழ் அறிஞர் மு.க...நடிப்பிசை புலவர் கே ஆர் ராமசாமி மனோகரா கதாபாத்திரத்தில் நாடகத்தில் நடித்தார்..

    ம்ம்ம்......

    என்னப்பா ம் கொட்டுகிறாய் ? வசந்தசேனா முதலில் மணாளனுக்கு விஷமிட்டு கொல்ல முயன்றாள்...
    பின் மன்னன் புருஷோத்தமனை மயக்கினாள்
    புருஷோத்தமன் தன் மகனுக்கு மகுடம் சூட்ட மறுத்தவுடன்
    பின் உக்ரசேனனை தன் வசிய வலையில் வீழ்த்தினாள்...

    அது சரிதான் ! ஆனால் இங்கு பிரியாவிடையில் ???

    ReplyDelete
    Replies
    1. விசித்திரம்தான் !! கொட்டும் தேள் ஒன்று தன் கொடுக்கை உதறியது
      கடிக்கும் நாகம் ஒன்று தன் விஷப்பல்லை வீசி எறிந்து விட்டது..
      பேரழகு பெண் பூனை சைவமாய் மாறிவிட்டது ......
      உயிர் வாழ தேவையான அளவு அது தன் உருவத்தை பயன்படுத்தும் ..
      பிறிதோர் வசந்தசேனா வாக அவள் மாறிவிட்டாள்....


      பிறிதோர் வசந்தசேனா????


      தமிழில் கதிரேசன் செட்டியாரால் சம்ஸ்க்ருத மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளால் நாடகமாக்கப்பட்ட ‘’ சிறு களிமண் வண்டி என்னும் பொருள் வரும் மிருச்ச கடிகம் கதையில் வரும் வசந்தசேனா...

      கணிகையர் குலத்தில் பிறப்பினும் நல்லுள்ளம் கொண்டவள்...ஆயினும் குலமகள் தூதையின் கணவனை –சாருதத்தனை – தன்வசம் இழுத்தபடியால் அவள் பேரிலும் களங்கம் உண்டு ...

      அதாவது நமது மார்கோ .....?

      அட ! ராணித்தேனி பணித்தேனியாக மாற ஒப்புகொண்டது ..நடக்கும் விஷயமா இது ????
      //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


      Delete
    2. ஒரு பைபிளிக்கல் ஸ்காலரின் ( bibilical scholar ) பார்வையில் மார்கோ

      பழைய விவிலியம் --நீதிமான்கள் 16 ..( old testament --judges 16)
      மிகவும் உடல் வலிமை மிக்க இஸ்ரவேலிய சாம்சனை டெலிலா என்னும் பிலஸ்திய பேரழகு பதுமை வீழ்த்தியதை சொல்லும் கதை இதில்தான் உள்ளது ...சாம்சன் தன் வலுவிழந்து சிறைப்படும் கதை

      SAMSON AND DELILAH

      மிகவும் உடல்வலிமை மிக்க நமது நட் ஹோகர்ட்டுக்கும் மார்கோவுக்கும் உள்ள உறவு இதைப் போலவே உள்ளது ..

      நட் ஹோகர்ட்டுக்கு நான்கு வார்த்தைகளுக்கு மேல் –அவற்றையும் ஒழுங்காக –பேச முடியாத புரோக்காஸ் அபேசியா ..( BROCA ‘S APHASIA)

      இக்கதாபாத்திர சித்தரிப்பை விவரிக்க முயன்றால் நமக்கோ குளோபல் அபேசியா.....( GLOBAL APHASIA) அதாவது ஸ்பீச்லெஸ்...

      //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////




      Delete
    3. ஒரு தாவரவியல் மாணவனின் பார்வையில் மார்கோ

      வனப்புமிகு மார்கோவின் மனமாற்றமும்
      வண்ணத்து பூச்சியின் வளர்உருமாற்றமும்

      முட்டைகள்
      கொழகொழவென்று மியுக்கஸ் உடன் அருவெறுப்பு அளிப்பவை

      லார்வா உயிர்வாழ உண்பதற்கே பொழுதை செலவிடும் நிலை ..அனைத்தையும் தின்று தீர்க்கும் ...ஒரு புழுவினை யார் விரும்புவார்?
      நான்கு முறை சட்டை உரிக்கும்....( MOULTING)
      பியுப்பா
      பார்க்க சகிக்காது ....சட்டையை உரிக்கும் ஒரு முக்கிய நிலை உண்டு

      பட்டாம்பூச்சி
      மோட்ல்டிங் நடந்தவுடன் அழகிய வண்ண இறக்கைகள் விரித்து பட்டாம்பூச்சி வருமென்று யாருக்கு தெரியும் ?

      Delete
    4. மார்கோ

      முட்டை
      கட்டிய கணவனை காசுக்காக கழற்றிவிட்டு ஹோகர்ட்-டுடன் கைகோர்ப்பது

      லார்வா ....
      .பலமுறை சட்டையை உரித்த நிலை ...மொனாலா க்ரூஸ் –உடன் கை கால் எல்லாம் கோர்ப்பது ..அவனையும் குப்புற தள்ளுவது
      கணவன் ,ஹோகர்ட் இருவரையும் கொல்ல எண்ணுவது

      பியூபா
      ..டிம் ,ஜாக் இருவரையும் கழற்றிவிடுவது ,கைப்பை போதும் ,லூசி வேண்டாம் என சொல்வது
      பட்டாம்பூச்சி
      பத்திரங்கள் உள்ள கைப்பையை வீசி எறிந்துவிட்டு லூசியை அழைத்து செல்வது

      மார்கோவின் மெட்டமார்போசிஸ்
      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    5. ஒரு லிட்டரரி ஸ்காலரின் பார்வையில்

      MARGO எனும் சொல்லுக்கு லத்தீன் மொழியில் வெளிப்புறம் என்பது அர்த்தம்
      இதில் இருந்தே MARGIN என்ற சொல் வந்தது ....
      மார்கோ –வின் வெளி நடவடிக்கைகள் ஒழுங்கற்ற சிப்பி போல ..மனம் விரும்பாது ..

      MARGO(T) எனும் பிரஞ்சு சொல் முத்து எனப் பொருள் தரும் ..

      வெளிப்புறம் ஆரம்பத்தில் அலங்கோலமாக இருப்பினும் இறுதியில் முத்து ஆக மாறும் மார்கோ ..
      //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    6. @ செனா அனா!!!!!!!!!!!!!!!!!

      ஒரு கதையைப் பற்றியோ, கதாபாத்திரம் பற்றியோ ஒரு சாதாரண மனிதால் சிந்திக்கமுடியாத கோணத்தில் இருக்கிறது உங்கள் எண்ணங்களும், எழுத்துக்களும்!!

      எனக்கென்னமோ நீங்க ஒரு ஏலியனா இருக்குமோன்னு டவுட் வருது!! இருந்துட்டுப்போங்க - தப்பில்லை! எனக்கு நீங்க வந்த விண்கலத்துல இந்த பூமியை ஒரு ரவுண்டு வரணும் அவ்வளவுதான்! பதிலுக்கு என்னோட அறிவை நீங்க உறிஞ்சிக்கிடலாம் (ஹிஹி.. இருந்தாத்தானே!!)

      Delete
    7. பொருளர் ஜி! வித்தியாசமான ஆங்கிளில் என்ன பிடிப்பீங்க என பார்த்து கொண்டே இருந்தேன்!

      வசந்தசேனையில் ஆரம்பித்து முத்துவில் கொண்டு வந்து முடித்து விட்டீர்கள்! லார்வா தான் அட்டகாசம்!

      கதையில் இருக்கும் வரலாற்று பின்னணியையும் மூழ்கடித்து மார்கோ அனைவரையும் ஆக்ரமித்து விட்டாள்!

      டயலாக்குகள் கதையின் வசீகரத்தை ஒரு மிடறு அதிகப்படுத்துகிறது!

      Delete
    8. @ ஈவி ..//எனக்கென்னமோ நீங்க ஒரு ஏலியனா இருக்குமோன்னு டவுட் வருது!!//

      எழுதுறது எப்படியோ ...என்னோட உருவத்தை பாத்துதான் அப்படி சொல்றீங்களோ அப்டின்னு ஒரு பிரமை ..:-)

      @ டெக்ஸ் விஜய் ..//லார்வா தான் அட்டகாசம்!// அது தாவரவியல் மாணவன் இல்ல ..விலங்கியல் மாணவன் -ன்னு திருத்துவீங்கன்னு எதிர்பார்த்தேன்..

      ///கதையில் இருக்கும் வரலாற்று பின்னணியையும் மூழ்கடித்து //

      ஜேம்ஸ் மேடிசன் ,செவ்விந்திய ரிசர்வேசன் பற்றி எல்லாம் மறக்கடிக்கும் வல்லமை மார்கோவுக்கு இருப்பது உண்மைதான் ...மார்கோவின் ஆயதங்கள் அப்படி ..:-)

      Delete
    9. ஆஹா!!! நாங்க விளிப்போடு பதிவை படிக்கிறோமானு டெஸ்ட் வேறயா!!!!

      நான் +2படிக்கும் "போது உயிரியல்" னு ஒன்றாகத்தான் இருந்துச்சிங் ஜி! இப்பதான் பிரிச்சிட்டாங்க போல!(சமாளிஃபிகேசன் தான்.... ஹி...ஹி...)

      Delete
    10. யப்பப்பா என்ன ஒரு விமர்சனம். திறந்த வாயாயை மூடவில்லை நான். செல்வம் அபிராமி சார். EV சொன்னது தான் u don't belong in this Earth u belong in some other planet. எழுந்து நின்று கை தட்டும் படங்கள் 1000. Bravo

      Delete
    11. செனா அனா...!!!!!!!


      சகல கலா வல்லவரே..!!

      Delete
  64. சார் 2020 கேட்லாக்கை எப்போது வெளியிடுவிர்கள்

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் கேட்டோம் எடிட்டர் November என்று சொல்லி இருக்கிறார். குறைந்தது October il ஆவது வெளியிட வேண்டும்.

      Delete

  65. பிஸ்டலுக்கு பிரியா விடை....!!!

    *நம்ம அமெரிக்க மாப்பிள்ளை கைவண்ணத்தில் வர்ணனைகள் வெகு பிரமாதம்.

    @டயலாக்குகள் எடிட்டர் சார் விவரித்து உள்ளபடி ஸ்டன்னிங்! நம்ம கூடவே இருக்கும் நண்பர், எப்படி எழுதினா நமக்கு பிடிக்குமோ அப்படியே எழுதியிருக்கார்.

    @புலன் விசாரணை மொழி பெயர்ப்பாளர்கள் மரியாதைக்குரிய நண்பர் J ji& அருமை நண்பர் கா.பா. இருவருக்கும் சென்றாண்டு ஈரோடு விழாவில் ஸ்டேண்டிங் ஓவியேசன் தந்து கெளரவித்தோம். அதபோல ஒரு தொடர் கைதட்டலை இதற்கும் அளிக்கிறேன்!

    *நிறைய இடங்களில் வாவ் சொல்ல வைத்தன டயலாக்குகள்; டைமிங் ஆஃப் டயலாக்குகள் ஆல்சோ எக்ஸலன்ட் மேட்சிங்! சிலவற்றையாவது குறிப்பிடலனா மார்கோ மன்னிக்க மாட்டா...!!!!

    #பக்கம் 9ல் செத்துப்போன போக்கிரி ரோட்ரிக்ஸ்ஸை குறிப்பிட்டு, "இத்தினியூண்டு ஈயத் தோட்டாவை வயித்திலே வாங்கிப்புட்டு பாலைவனத்திலே ரெண்டு மணி நேரம் பயணம் பண்ணச் சொன்னால் கம்பி நீட்டிடறது! கலி முத்திப் போச்சு"

    #பக்கம் 15 மார்கோவின் கையை பிடிச்சிட்டு மொனோலோ, "கட்டுக்கட்டா பணமும் வேணும்!
    உன்னைப் போல கட்டான செனோரிட்டாக்களும் வேணும்!"
    & தொடரும் அவனோட காதல் மொழி,
    "காரத்தை விட உன்னோட மயக்கம் விழிகள் தான் என்னை அதிகமாகச் சூடேத்துது செனோரிட்டா"

    #பக்கம் 26ல் பைரோனின் விவரிப்பு, "கடலில் விழுந்தாக் கூட தப்பிடலாம்! அவளின் கண்களில் விழுந்துட்டா தப்பவே முடியாது"

    #பக்கம் 50 மார்கோ vs பைரோன்,
    "ஏன் உயிர் மேல ஆசை விட்டுப் போச்சா?
    உன் துப்பாக்கியில் தோட்டா இருந்திருந்தால் என் கதையை எப்போதோ முடிச்சிருப்பியே டார்லிங்"
    (மார்கோவின் துப்பாக்கியில் தோட்டா இருந்து இருந்தா கணவன் என்றாலும் தன்னை காலி பண்ணியிருப்பானு தெரிஞ்சும் "டார்லிங்" னு சொல்றான், பைரோன். ஹூம், ஆண்கள் ஆண்கள் தான்! )

    #பக்கம் 57, "ஒண்ணோ ரெண்டோ லிட்டர் ரத்தம் ஓடிப் போச்சுங்கிறதுக்காக மிஸ்டர் ஹோகார்ட் கடவுள் கிட்டயோ, சாத்தான்கிட்டயோப் போய் விடமாட்டார் என்று சொன்னேனில்லையா டாக்டர்?"

    #பக்கம் 61 டாக்டர், "நனைந்து போன சொத்துப்பத்திரம் பிழைப்பிக்கு உதவிடுது! நமத்துப் போன தோட்டா உயிர் பிழைக்கவே உதவுது!"

    #பக்கம் 83-84ன் மார்கோvsஜாக்கின் உரையாடல் முழுதும்!

    #பக்கம் 97 ஜாக் vs மார்கோ,
    "ஆத்தி! உன் புருசனையே கொலை செய்யச் சொன்னியா?

    சேச்சே... அந்த யோசனை அவனுக்கே உதிக்க வெச்சேன்".

    #பக்கம் 98 மார்கோ vs ஜாக்,
    "அவன் அயோக்கியன்! நேர்மையில்லாதவன்!

    ஹ்ம்...நேர்மையைப் பற்றி நீ சொல்லி நான் கேட்கணும்ங்கிறது என் தலையெழுத்து!"

    #பக்கம் 99 ஜாக் vs மார்கோ,
    "தப்பா நினைக்காதே மிஸ் க்ரீன்! ஆனாக்கா நான் சந்திச்சதிலேயே கேவலமான; ஈனத்தனமான பிறவி நீதான்! நல்ல காலம் என்னோட விடலைப் பருவத்தில் உன்னை சந்திக்கலை!

    இதில் தவறா நினைச்சுக்க ஓன்றுமில்லை! இதுக்கெலாம் நான் வெட்கப்படுறதும் இல்லை!"

    "புளுகுறேன்னு நினைக்கிறியா?சத்தியமாக உண்மைதான் பேசறேன்!

    உனக்கும் உண்மைக்கும் கடுகளவும் சம்பந்தமில்லை! பேசாமல் உறங்கு!

    நான் இந்தப் பாறையில் தான் தூங்கனுமா?

    முழிச்சும் இருக்கலாம்! உன் இஷ்டம்!""".


    #பக்கம் 105 டிம்vsஜாக்,
    " ஹா...ஹா...ஹா...என் டார்லிங் செம சாமார்த்தியசாலி!

    பிறக்கும் போதே நீ இவ்ளோ பெரிய முட்டாளகத் தான் பிறந்தியா?".

    ----இன்னும் இன்னும் கதை நெடுகிலும் சொல்லிக் கொண்ட போகலாம்....

    பல இடங்களில் கதையோட்டமா? வர்ணனயா? எது முந்தி என ஒன்றோடொன்று
    போட்டி போடுகின்றன!

    மார்கோவின் தனி முத்திரை பதித்த டயலாக்.....

    """"" அப்புறம் ஆண்கள் எப்போதும் ஆண்களாகவே இருப்பதும்...!!!"""""


    ReplyDelete
  66. Dear Editor,

    அனைத்து புத்தகங்களும் படிக்கப்பட்டு விட்டன. எனவே இன்னும் இரண்டு MAXI அவசரகதியில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    பாதி மாசம் கூட ஆகல்லே ஆனா போரடிக்கறது !

    ReplyDelete
  67. Sir,
    பைரன் – Willem Dafoe
    ஹோகார்ட் - Arnold Schwarzenegger
    கிழச் செவ்விந்தியக் கதாப்பாத்திரம் - Johnny Depp
    கொள்ளையர் தலைவன் - Danny Trejo
    டிம் – Jim Carrey
    மார்கோ - Penelope Cruz
    That’s all sir.

    ReplyDelete
    Replies
    1. Giri@ 1974ல பிறந்தது மார்கோவா..ஙே...ஙே...!! ஏங்க என்னைய விட 2வயசு மூத்தவ...! நல்லா இன்னொருக்கா பார்த்துட்டு சொல்லுங்க...!!!

      Delete