Sunday, July 28, 2019

WELCOME All !!

நண்பர்களே,

வணக்கம். புக்குகள் வெளிவருவதற்கு முன்பாய் - "நான் ஓங்கி அடிச்சா ஒண்ணே முக்கா டன் ; வூடு கட்டி அடிச்சா ரெண்டே முக்கா டன் !!"  என்று பன்ச் பேசும் நம் புலவர்களுள் பெரும்பகுதியினர் - புக்குகள் கைக்குக் கிடைத்த பிற்பாடு - கொஞ்ச நாட்களுக்காவது 'தொடர்பு எல்லைக்கு அப்பாலிக்கா' போயிடுவதே வழக்கம் !! ஆனால் surprise ..surprise ...மினியோ மினி டெக்ஸை தாளிப்பதற்காகவேணும் முதல் தினமே இத்தனை comments விழுந்திருப்பதில் ஆச்சர்ய சந்தோஷம் !! And சமீப மாதங்களது சொதப்பலுக்குப் பிற்பாடு ST கூரியர் தீயாய்ப் பணியாற்றியிருப்பது இன்னொரு ஆச்சர்யம் !! 

முன்னமே எப்போதோ நான் குறிப்பிட்டது போல - டெக்ஸ் எனும் ஜாம்பவானுக்கு கதைகள் உருவாக்கிட கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட creative teams அணி அணியாய் பணியாற்றி வருகின்றன ! அந்த  main creative team-களுக்கு சதா நேரமும் புது ஆற்றலாளர்கள் அவசியப்பட்டுக்கொண்டே இருப்பது வாடிக்கை ! So அதற்குப் புரமோஷன் காண விரும்பிடும் புதுப் படைப்பாளிகளின் பரிசோதனைக் களங்களே இந்த Color Tex குட்டிக் கதைப்படலங்கள் ! இங்கு சோபிக்கும் புதியவர்கள் சன்னம் சன்னமாய் அடுத்த லெவல்களை நோக்கிய பயணங்களுக்கு தேர்வாகிறார்கள் ! இப்போதைய "தகிக்கும் மெக்சிகோ" பாணியிலான not so impressive கதைகளின் படைப்பாளிகள் - அடுத்த கட்டத்துக்கு முன்னேறச் சிரமம் கொள்வர் ! So இது amateur-களின் ஆடுகளங்கள் எனும் போது இத்தகைய ப்ளஸ் & மைனஸ் இருப்பது சகஜமே !! லக்கி லூக்கின் சமாச்சாரத்தில் கூட இந்த up & down தரங்களைப் போன மாதம் கண்கூடாய்ப் பார்த்தோமே ? 1971-ல் டாப் படைப்பாளிகளின் கைவண்ணத்தில் உருவான "உத்தம புத்திரன்" பட்டையைக் கிளப்பியிருக்க - அதனோடு கைகோர்த்து வந்த latest ரிலீசான புதுப் படைப்பாளிகளின் கைவண்ணத்திலான "பாரிசில் ஒரு கௌபாய்" ரொம்பவே மித ரகம் !! Masters will be masters & சிஷ்யப் புள்ளைகள் அந்த உச்சங்களைத் தொடும்முன் தண்ணீர் குடித்து விடுகிறார்கள் ! 

"தகிக்கும் நியூ மெக்சிகோ" கதையின் ஒண்ணேகால் வசனங்களை ஆங்கிலத்தில் ஒரு தம்மாத்துண்டு தாளில் பார்த்த நொடியே "அண்ணனுக்கு ஒரு மண்டகப்படி waiting !!!" என்று எனக்குள் அசரீரி ஒலித்தது ! வண்டி வண்டியாய் வேலைகள் குவிந்து கிடக்கும் சூழலில் இதனை தவிர்த்து விட்டு - வேறொரு கதையை உள்நுழைக்க அவகாசமிருந்திருக்கவில்லை !! So மன்னிச்சூ guys !! நீங்கள் வெறும் 16 பக்கங்களைப் பார்த்த கணமே பொங்கியெழுந்து சாத்துவீர்கள் என்பதை உணர்ந்தே - அடுத்த இணைப்பானது 48 பக்க நீளத்தில் இருந்திடுமென்பதையும் கடைசிப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன் ! So அடுத்த அந்த சாகசம் இந்த 'சோகசத்தை' ஈடு செய்யுமென்று நம்புவோமாக !!  

Looking ahead, அடுத்த பதிவுக்கு முன்னே காத்திருப்பது நமது ஈரோட்டுப் புத்தக விழாவும், நமது சந்திப்பும், ஸ்பெஷல் இதழ்களின் ரிலீஸுமே என்பதால் - இதோ அதற்கான வரவேற்பு உங்கள் அனைவருக்கும் !!
எப்போதும் போல இம்முறையும் சீனியர் எடிட்டர் & ஜூனியர் எடிட்டர் + நமது கருணையானந்தம் அவர்களுடன் ஈரோட்டில் வரும் சனி காலை உங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பேன் ! அந்த மாமூலான ரவுண்டு பன்னுமிருக்கும், கொறிக்க சமாச்சாரங்களுமிருக்கும், மதிய (சைவ) உணவுமிருக்கும் என்பதால் - எனது மாமூலான மொக்கைகளைப் பொறுத்துக் கொள்ள நிறையவே காரணங்கள் இருக்கும் என்று சொல்வேன் !! பற்றாக்குறைக்கு சின்னதாயொரு அட்டைப்பட ஓவியக் கண்காட்சியினைஅந்த ஹாலின் ஒரு மூலையில் அமைத்திடும் பொருட்டு கொஞ்சம் பெயிண்டிங்குகளை கொண்டு வரவும் திட்டமுள்ளது !! So எப்போதும் போலவே ஜாலியாய் ஆஜராகிடக் கோருகிறேன் folks - இயன்றால் குடும்பத்தோடே !! அந்த ஒரு காலைப் பொழுதுக்காவது இந்த "பொம்மை புக் குடும்பம்" அடிக்கும் லூட்டிகளை இல்லத்தரசிகளும் கண்டு கழிக்கட்டுமே ?

அன்றைய பொழுதின் நம் பிரதான நோக்கம் - ஸ்பெஷல் இதழ்களின் ரிலீஸ் என்பதால் உங்களின் முன்பதிவுப் பிரதிகளும் டப்பிகளில் அங்கு காத்திருக்கும். அப்புறம் அந்த 2 "சஸ்பென்ஸ் இதழ்களை" உங்கள் கண்ணில் காட்டிய பிற்பாடு, அவற்றையும் அங்கேயே  நீங்கள் வாங்கிட ஏதுவாய் நமது staff ஒருவரை நிலைகொண்டிருக்க  ஏற்பாடு செய்துள்ளேன் ! "ஆ..வாங்கோ சார்...வாங்கோ சார்...இப்டிக்கா உங்க பைக்குள்ளே கை விட்டுப்புட்டு - அப்டிக்கா சாப்பாடு போடறோம் சார் !!" என்று memes போட 'ஆர்வலர்களுக்கு' நாமே நயமாய் மேட்டர் தந்த மாதிரியும் இருக்குமல்லவா ? Anyways அந்த "சஸ்பென்ஸ் இதழ்கள்" என்னவாகயிருக்குமென்று உங்களில் நிறையப் பேர் யூகித்திருக்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பதால் - அதன் பொருட்டு பெரும் பில்டப்பெல்லாம் தரும் உத்தேசமில்லை ! But rest assured that - தயாரிப்புத் தரத்தினில் உங்களை 'அட !!" என்று சொல்ல வைக்கும் பொருட்டு நிறையவே மெனெக்கெட்டுள்ளோம் !! 

புத்தக ரிலீஸ் ; அது சார்ந்த அளவளாவல் என்ற கச்சேரிகள் நிறைவுற்ற பிற்பாடு - இம்முறை நான் ரொம்ப நேரம் மைக்கில் மொக்கை போடுவதாகயில்லை !! "இட்லிக்கு மல்லிச் சட்னி புடிக்குமா ? தேங்காய்ச் சட்னி ரசிக்குமா ?" என்பது வரைக்கும் வாராவாரம் இங்கே போட்டு கும்மி வரும் நிலையில், புதுசாய் நான் பேசிட நேரத்தை விழுங்குவதை விடவும், ஓரிரு தலைப்புகளில் உங்களைப் பேசச் செய்ய உத்தேசித்துள்ளேன் !! புலவர்கள் மட்டும் கானம் பாடும் மூடில் set ஆகிவிட்டால்  ஒரு மினி பட்டிமன்றமாய் போட்டுத் தாக்கி விடலாம் !!  தீர்ப்புச் சொல்லத் தான் இருக்கவே இருக்கிறார்கள் நமது guests of honor !!!  நீங்க ரெடின்னா - ஞானும் ரெடி !! 

ஆடிப் பதினெட்டில் விதைப்பது ஆண்டு முழுக்கவே தொடரும் என்ற நம்பிக்கை மட்டும் நிஜமாயின் - காத்திருக்கும் இந்தப் பதினெட்டின் உற்சாகங்கள், ஒரு அட்டகாச ஆண்டுக்கு விதைநெல்லாய் அமைந்திடுவது உறுதி !! சந்தோஷமாய் சந்திப்போம் ....சந்தோஷங்களை பன்மடங்காக்குவோம் - பெரும் தேவன் மனிடோவின் ஆசிகளுடன் !! All fingers mightily crossed !!! Bye guys - see you around !! 

Quick updates :

ஆகஸ்ட் ரெகுலர் இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் ரெடி !
http://www.lion-muthucomics.com/home/414-june-pack-2019.html 

கோவை புத்தக விழா ஞாயிறோடு (28 ஜூலை) நிறைவுறுகிறது !! Why not drop in folks ?

ஈரோட்டில் நமது ஸ்டால் எண் : 4 !! முதன்முறையாக நுழைவாயிலுக்கு அருகாமையில் நமக்கு குலுக்கலில் இடம்கிட்டியுள்ளது ! ஆண்டவன் அருள் ! 

160 comments:

  1. ரொம்ப நாளைக்கு பிறகு.. 1

    ReplyDelete
  2. நானும் ..! படிச்சுட்டு வாரேன்

    ReplyDelete
  3. பாவம் புதுமாப்பிள்ளைகளுக்குதான் கொஞ்சம் சிரமம் ஆடி18 மாமியார் வீட்ல டிமிக்கி கொடுத்திட்டு வரனும்...😊😊

    ReplyDelete
    Replies
    1. எல்லாரும் 2nd இன்னிங்ஸ் நெருங்குகிற almost சீனியர் சிட்டிசன் அப்டின்னு நெனச்சுகிட்டு இருந்தேன் (என்னை மாதிரி)

      Delete
    2. எத்தனை நாளக்கித்தான் மாப்புள்ள வேஷம் கட்றது....

      Delete
  4. வணக்கம் எங்கள் ஆசானே

    ReplyDelete
  5. //ஈரோட்டில் நமது ஸ்டால் எண் : 4 !! முதன்முறையாக நுழைவாயிலுக்கு அருகாமையில் நமக்கு குலுக்கலில் இடம்கிட்டியுள்ளது ! ஆண்டவன் அருள் ! // Wow. All the best sir!

    ReplyDelete
  6. ஈரோட்டில் விற்பனை சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ஹாய், நான் மறுபடியும்10 எண்றதுக்குள்ளே , வாவ்

    ReplyDelete
  8. இல்லத்தரசிகள் ஏற்கனவே கழிச்சுட்டுத் தான் இருக்காங்க சார். களிக்க வேணும்னாக் கூட்டிட்டு வரலாம்..!

    அப்புறம் 8வது..!

    ReplyDelete
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    🌄🙏.

    ReplyDelete
  10. வணக்கம் ஆசிரியரே மற்றும் நன்பர்களே

    ReplyDelete
  11. Replies
    1. வணக்கங்கள் கண்ணன் ஐயா

      Delete
  12. மேன்மைமிகு ஆசிரியருக்கு வணக்கம் ��. ஈரோடு சிறப்பு இதழ்கள் வெளியீடு விளம்பரம் அருமை.நித்தம் ஒரு யுத்தம் ஓவியம் மெய்யாலுமே அடுத்த லெவல்.சனிக்கிழமை எப்போ வரும் என்று இதயம் ஏங்குகிறதே.

    ReplyDelete
  13. அட்டகாசமான பதிவு சாரே. அந்த அட்டைப்பட ஓவியங்கள் கண்காட்சி அருமையான யோசனை. என்னுடைய முதல் மீட்டிங் எனவே கண்டிப்பாக வருவேன்.குடும்பத்தையும் அழைத்து வர முயற்சிக்கிறேன் சார். அப்புறம் Damocles அட்டகாசம் நண்பர் J சொன்னது போல லார்கோ வின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு கதை. தெறிக்கும் action. ஈரோடு ஸ்பெஷல் இதழ்க ளுக்கு காத்து இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. லார்கோ கதை ஒரு ஹைடெக் தொடர்.

      ஆனால் டெமோக்கிள்ஸ்....??

      Delete
    2. இதுவும் ஹைடெக் தொடர் தானே சார்

      Delete
  14. இந்த மாத இதழ்கள் அனைத்தையும் ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன்.
    ஜானி -9.5/10
    Undertaker-8/10
    Tex- 6/10

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸுக்கு ஆறு மார்க் ரொம்ப அதிகம். 0.6(நூத்துக்கு) தான் நான் கொடுப்பேன்.

      Delete
  15. அட,அதுக்குள்ள இன்னொரு பதிவா....

    ReplyDelete
  16. வணக்கம் ஆசிரியரே, நண்பர்களே...

    ReplyDelete
  17. Undertaker மிகவும் பரபரப்பான கதை கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்கவே இல்லை. தெறிக்கும் action . அதுவும் அந்த வில்லனை பற்றி ஏற்கனவே ஆசிரியரே சொல்லிவிட்டார். ஒரு த்ரில்லர் படம் பார்ப்பது போல எடுத்த வேகம் கதை முடியும் வரை குறையவே இல்லை.தலை முறை எதிரி படித்து பலவருடம் ஆகி விட்டதால் இப்போது படிக்கும் போது புதிய கதையை படிப்பது போலத்தான் இருந்தது. ஜானியை அந்த சக்கரத்தில் கட்டிவைக்கும் கட்சியை தவிர எதுவுமே நினைவில் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் undertaker முந்தைய கதையில் ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்பை இந்த கதை ஈடு செய்யவில்லை என்று தான் சொல்லுவேன். அந்த வகையில் ஏமாற்றமே.

      Delete
  18. சைலன்ஸ் ஆப் த லேம்ப்ஸ்னு ஒரு படம் (3 பார்ட் இருக்கு) அதுல ஹேன்னிபல் லெக்டர்னு ஒரு டாக்டர் வருவாரு. அந்த மாதிரி ஒரு மிக ஆபத்தான, புத்திசாலித்தனமான, சவலான வில்லன். எதிரிகளை உளவியல் ரீதியாகவும், தன்னுடைய மருத்துவ அறிவு மற்றும் இரக்கமற்றதன்மை மூலமாக ப்பூ ஊதித் தள்ளிடற வில்லன். மொரையார்ட்டி மாதிரி.

    இந்த மாதிரி ஒரு கேரக்டரை நாவல்களிலும் படங்களிலும் சித்தரிப்பதை விட காமிக்ஸ்ல சித்தரிப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனா தேர்நதெடுக்கப்பட்ட வார்த்தைகளால் வசனத்தைக் கோர்க்கும் போது அந்த கேரக்டரை எளிதா வாசகர்களிடம் கொண்டு சேத்திடலாம். மொழிபெயர்ப்பாளர் அந்த வேலையை அபாரமாக செய்திருக்கிறார்ங்கறது என்னோட அபிப்ராயம்.

    சவாலான வில்லன்களாக இருந்தால் தான் கதையும் சுவராஸ்யமாக இருக்கும். இல்லைன்னா கதை சப்புன்னு போயிடும். அண்டர்டேக்கரை அண்டர் ட்ராயரோட பல இடங்களில் ஓட விடறாரு வில்லன்.

    கதை க்ரிஸ்ப்பா, க்ரிப்பா, க்ரேசியா இருக்கு. Undertaker வில்லன் ஒரு தண்டர் மேக்கர்.

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. செம்ம ஷெரீஃப் ஜி செம்ம. நான் மறுக்கா ஒரு வாட்டி படிச்சுட்டு வாரேன்.

      Delete
    2. ஓவியம், மேக்கிங், கலரிங் ஆகியவற்றில் இருக்கும் சிறப்புகளையும் ஒரு சின்ன எழுத்துப்பிழையையும் கதையும் மொழிபெயர்ப்பும் மறக்கடித்து விட்டது.

      Delete
  19. சார்,வணக்கம்...
    ஈரோடு புத்தக விழாவில் 04 ஸ்டால் கிடைதமைக்கு என்னுடைய வாழ்த்துகள்...💪🏻
    இந்த முறை நானும்,என் அண்ணனும் அனைவரையும் வரவேற்திட கொஞ்சம் முன்பே ஆஜர் ஆகலாம் என திட்டமிட்டுள்ளோம்...😁😀...
    நீங்க சொன்ன பட்டிமன்றம் ஐடியா சூப்பர்...அதை நடைமுறை படுத்துங்கள் என்று கேட்டுகொள்கிறேன்...

    ReplyDelete
  20. //
    ஈரோட்டில் நமது ஸ்டால் எண் : 4 !! முதன்முறையாக நுழைவாயிலுக்கு அருகாமையில் நமக்கு குலுக்கலில் இடம்கிட்டியுள்ளது ! ஆண்டவன் அருள் ! //

    சூப்பர் சூப்பர்

    ReplyDelete
  21. Replies
    1. சிம்பிளா வணக்கத்தோட முடிக்கிறீங்களே.!

      Delete
  22. டியர் எடி,

    நானும் எனக்கான புத்தகத்தை ஈரோட்டில் பெற்றுக்கொள்கிறேன். மறக்காமல் எடுத்து வந்து விடவும் ...

    😍😍😍

    ReplyDelete
  23. ஸ்டால் எண் 4 !

    அருமை! அருமை!

    ReplyDelete
  24. தலைமுறை எதிரி
    முதல் வாசிப்பு ...மறுபதிப்பா இது ? ஜானியின் அத்தனை அம்சங்களும் உள்ள கதை ...வழக்கம்போல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை....

    கதை நடக்கும் காலம் 1977 என்பதாக வருகிறது ..

    உயில் எழுதப்படும்போது எந்த தேசமாயினும் –ப்ரான்சாக- இருந்தாலும் அடிப்படை சட்டங்கள் ஒன்றே ..

    உயில் எழுதும் நபர் உயில் எழுதப்படும்போது

    சுய சித்த சுவாதீனத்துடன் இருக்கவேண்டும்

    எவ்வித மன அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்க கூடாது

    இரு முறையான நபர்கள் அதில் சாட்சி கையெழுத்து போட்டு இருக்க வேண்டும் ..அவர்கள் சட்டத்தால் முறையாக அணுகப்பட முடியப்படவேண்டியவர்களாக இருக்கவேண்டும்

    இதில் எதுவும் எட்மன்ட் பெர்ரன்ட் விவகாரத்தில் ஒத்து போவதாக தெரியவில்லை ...
    இப்படிக்கி வக்கீல் வண்டுமுருகன் :-)

    மற்றபடி கதை ஆஹா ஓஹோ ரகம்தான்

    ReplyDelete
  25. மினி டெக்ஸ் பற்றி உங்களை யாரும் குறை சொல்வதாக தெரியவில்லை சார்..போனெல்லியைத்தான் வறுத்தெடுக்கிறார்கள்...அவர்கள் இக்கதையை வெளியிட்டிருக்க வேண்டியதில்லை என்பதாகத்தான் பேச்சு..வரிசையாக அவர்கள் வெளியிடுவதை நீங்களும் வெளியிட்டாகத்தானே வேண்டும்...

    தவிர அமலா பால் "ஆடை"யளவுக்கு மிக சிறிய கதை (?)என்பதால் எல்லாரும் விரைவில் படித்திருக்க கூடும்..:-)

    ReplyDelete
  26. நான் போன வாரம் ஈரோடு ஸ்பெஷல் காக பணம் கட்டி பிறகு மெயிலும் அனுப்பி விட்டேன்.
    ஆனால் பதில் மெயில் வரவில்லை. ஈரோட்டில் வாங்குவதற்காக பணம் கட்டியுள்ளேன்.

    மறக்காமல் எனது பெட்டியை எடுத்து வந்து விடவும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை எல்லாரையும் சந்தித்து விட்டு செல்லவும். நன்றி.

      Delete
  27. தலைமுறை எதிரி அட்டைப்படம்: தெளிவான ஓவியம் அருமையான, கண்களுக்கு இதமான வண்ண சேர்க்கை, அழகான பின்னனி, தலைப்பை எழுதிய முறை என அனைத்தும் இதனை இந்த ஆண்டின் மிக சிறந்த அட்டைப்படம் என்ற விருதை தட்டிச் செல்ல செய்கிறது.

    ReplyDelete
  28. தலைமுறை எதிரி: புராதன கோட்டையை பார்வையிடும் சுற்றுலா பயணிகளுடன் மனநிலை தவறியது போல் உள்ள எட்மண்டை காப்பாற்ற முயலும் ஜானி என ஆரம்பிக்கும் கதை. எட்மண்ட் தன்னை தலைமுறை எதிரி கொல்லப்போகிறான் எனச் சொல்ல அடுத்த அடுத்த பக்கங்களில் நடக்கும் சம்பவங்கள் அதனை உண்மை என நம்மை நம்ப வைக்கிறது. இறுதியில் (வழக்கம் போல் எதிர்பாராத ஒருவர்) வில்லன் இவன் தான் என ஜானி கண்டுபிடித்து அதற்கான காரணத்தை சொல்லும் போது நம்மை அட என ஆச்சரியப் படுத்துகிறது.

    அழகான தெளிவான ஓவியங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பு கதையை ஒரே மூச்சில் படித்து முடிக்க செய்தது. எனது இல்லத்தரசியும் இந்த கதையின் சஸ்பென்ஸ் காரணமாக படித்து முடித்து விட்டார்.

    ReplyDelete
  29. இந்த முறை நண்பர்களூடன் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு வருகிறேன்.

    அடுத்த வருடம் குடும்பத்துடன் வருகிறேன்.

    ReplyDelete
  30. ஏடிட்டரய்யா

    பணம் அனுப்பீட்டேன்.ஞானும் அவிட ஈரோட்டில் புக்குஸ் வாங்கிக்கிறேன்.

    விஷமிக்காமல் என்ட பங்கு காமிக்ஸ் பெட்டியும் கொண்டு வருமல்லோ என்ட பொன்னு எடிட்டரே....

    J

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் பேரு விஜயனல்லோ. பின்னே நிங்ஙள் எந்தா பொன்னு என்னு பரயு.பேரு மாறிட்டோ?

      Delete
  31. Sir, Undertaker’s villain looks like Avengers’ super villain Thanos in a look of grown Hair
    and beard and coat suited. Cannot forget him for a long period.

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொன்னீர்கள் சார். நானும் இப்போ தான் கவனிக்கிறேன். தனோஸ் போல தான் அந்த வில்லன் இருக்கிறான்.

      Delete
  32. டியர் எடிட்டர்

    Undertaker - இருளின் ராஜ்யத்தில் அமர்க்களமாக இருந்தது. Action, காதல், க்ரோதம், சோகம், நயவஞ்சகம் என்று கலந்து கட்டிய கிராபிக் நாவல். நீரில்லை நிலமில்லை .. நித்திரை மறந்த நியூயார்க் ஆகிய கதைகளின் disappointment - was simply washed away !

    இவ்வருடத்தின் சிறந்த காமிக்ஸ்களில் ஒன்று.

    9.5/10

    லக்கி ஆண்டு மலர் - இரு கதைகளும் சரவெடி காமெடி. நீங்கள் சொல்லும் அளவு பாரிசில் ஒரு கௌபாய் மோசமில்லை. 70ம் ஆண்டின் படைப்பு என்பதால் எல்லா கேரக்டர்களும் வரவேண்டும் என்ற படைப்பாளிகளின் ஆர்வம் தெரிந்தாலும் கதை நன்றாகவே இருந்தது.

    9/10

    தகிக்கும் மெக்ஸிகோ "________" - 10/10 - I simply love this 16 pager - expecting more !!

    ReplyDelete
  33. இந்த ஆண்டின் மிக பெரிய ஆச்சரியம் 28ம் தேதியே ஆகஸ்டுக்கான இதழ்கள் எங்களை வந்தடைந்ததுதான் இருளின் மைந்தர்கள் கதையை கடும் வேலை பளுக்கிடையில் படிக்க ஆரம்பித்துள்ளேன்.Mini tex Diss points me in action.

    ReplyDelete
  34. சார் வணக்கம் , நானும் எனக்கான புத்தகத்தை ஈரோடு பெற்றுக்கொள்கிறேன் booking number ES 198.

    ReplyDelete
  35. தலைமுறை எதிரி:

    தலைமுறை தலைமுறையாக எதிரியொருவன் தன்னைக் கொல்ல பின்தொடர்வதான விநோதமான மனப்பிரமையில் ஆட்பட்ட தொழிலதிபரும்,சரித்திர ஆர்வலரும் & தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான எட்மண்ட் பெர்ராண்ட் பாரீஸ் நகரின் ஒரு புராதன கோட்டையை பார்வையிடும் தருணத்தில் நம்நாயகர் ஜானியை சந்திக்க நேரிடுகிறது...
    அத்தற்செயல் நேர்வில் தவறானதொரு புரிதலால் எட்மண்ட் ஜானியை தாக்க,ஆபத்து சூழலில் டாக்டர் வெளதியர்-மனோதத்துவ நிபுணரால் காப்பாற்றப்படுகிறார் ஜானி...
    எட்மண்டின் விநோதமான மனப்பிரமை சிக்கலை அறிந்தபின் இருவரும் சிக்கலின் மையப்புள்ளியை காண களமிறங்க,
    வெளதியர் தனது மனோதத்துவ பாணியில் ஆய்வை தொடர,ஜானி தன் வழக்கமான பாணியில் புலனாய்வை தொடர,
    மர்ம எதிரியால் ஜானி தாக்கப்பட,
    இடையில் எட்மண்ட் இறக்க நேரிட,
    அடுத்து ஜானிக்கு எட்மண்ட் பெயரில் கடிதங்கள் வர,திடீர் திருப்பமாக பெர்ராண்டின் குடும்ப வக்கீல் அனைவரையும் அழைத்து உயில் ஒன்றை வாசிக்க,
    அது எட்மண்டின் விருப்பபடி எழுதபட்டதாக கூற,

    குற்றம் நடந்தது என்ன???

    இந்த இடியாப்பச் சிக்கலில் இறுதியில் அந்த மர்ம எதிரியின் முகமூடியை சாமர்த்தியமாக ஜானி களைய....

    முடிவு சுபம்.....
    மறுபதிப்பு என்பதாலோ என்னவோ வர்ணங்கள் ஆங்காங்கே சற்று தூக்கலாகவே தெரிகின்றன, பழைய படம் பார்க்கும் உணர்வு...
    முதல் வாசிப்பு ஆனாலும் எதிர்பார்ப்பை முழுமைடைய செய்தது....
    வழக்கமான சோடை போகாத ஜானி...

    சிறு குறைகளாக தோன்றியவை:

    1.ஒவ்வொரு பேனலிலும் ஜானியின் ஹேர்ஸ்டைல் ஒவ்வொரு மாதிரி தெரிவது போல் தோன்றுவது...
    2.மர்ம எதிரியை சந்திக்க எட்மண்ட் ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல,அங்கு வெளதியர் கொடுக்கும் தகவலால் வரும் ஜானி தாக்கப்பட சம்பவம் முடிந்தபின் "மேடம் உங்களை கையோடு கூட்டி வரச் சொன்னார்கள் என்று" டிரைவர் வந்து நிற்பது கொஞ்சம் லாஜிக் ஓட்டையாக தெரிந்தது...

    வழக்கமா சொல்றதுதான் அடுத்த வருஷமாவது (2020) பழைய திகிலில் இருந்து இரண்டு சிறப்பான கதைகளை எடுத்து (இரத்த அம்பு,இரத்தக் காட்டேரி மர்மம் இப்படி ஏதாவது) ஜானி ஸ்பெஷல் வெளியிடுமாறு ஏக்கத்துடன் கோரிக்கை வைக்கப்படுகிறது.
    அது ஹார்ட் பைண்ட் இல்லாமல் சாதா அட்டையாக இருந்தால் கூட போதும்...

    அவரு வந்தா மட்டும் போதும்.....

    எமது ரேட்டிங்-9/10.

    ReplyDelete
  36. // ஈரோட்டில் நமது ஸ்டால் எண் : 4 !! //
    மகிழ்ச்சி,அருமை,அருமை.
    🙏🙏🙏🎉🎉🎊🎊

    ReplyDelete
  37. இரு தினங்களுக்கு முன் 2016 ல் வெளிவந்த தீபாவளி மலர் சர்வமும் நானே இதழை மீண்டும் மீள்வாசிப்பில் ஆழ்த்த நேரிட்டது...
    அடா,அடா...... என்ன மாதிரியான மாஸ் மசலா களம்,அதிலும் வசனங்கள், சும்மா பிச்சி,பிச்சி...
    கதையின் தொடக்கத்தில் டெக்ஸ்,கார்சன்,டைகர்,கிட் என நால்வரின் என்ட்ரியும் செம மாஸ்,
    பாலைவனப் பரப்பில் தொடங்கும் கதைக்களம் கடற்பரப்பில் முடிவது அசத்தல்...
    400 பக்க சாகஸம் கொஞ்சம் கூட பிசிறடிக்காமல் பயணித்தது...
    இதுபோல அசத்தலான கதை மீண்டும் எப்போது அமையுமோ???!!!

    ReplyDelete
  38. இன்றைக்கு eride Expressகு பணம் செலுத்தினால் ஈரோட்டில் பெற்று கொள்ள முடியுமா...?

    ReplyDelete
  39. நான் ஈரோட்டில் புத்தகங்களை பெற்றுக் கொள்கிறேன்....

    Erode express booking number ES60

    Dr. AKK Raja, கரூர்

    ReplyDelete
  40. ஹலோ
    வீட்டுக்கு வந்தா மெலிசா லயன் கடை பார்சல். என்னடா சுவிகில மாதிரி பாதிய தின்னுட்டங்களா இல்ல "ஒரே நாடு ஒரே புக்" குனு கொறச்சி அனுப்பிட்டாங்களானு திறந்தா ரெண்டு புக்கு இருந்தது. அப்புறம் ஏதோ கீழ விழுந்தது. என்னடானா டெக்ஸ் புக்காம். கல்யாண விருந்துக்கு போகும்போது வீட்டிலே லைட்டா சாப்பிட்டிட்டு போற மாதிரி டெக்ஸ் மினி புக்குனு வச்சிக்கலாமா இல்ல மின் மினினு இல்ல டெக்ஸ் பேப்பர்னே வச்சிக்கலாம். பக்கத்த புரட்ட புரட்ட வெடிக்காத லட்சுமி வெடி மாதிரி. வசனத்துல டெக்ஸ் திருக்குறள் இது.

    அண்டர்டேக்கரில் அதகளம் வில்லனே. ஹீரோவையெல்லாம் ஓரமா உட்கார்ந்து மிச்சர் சாப்பிட வைக்கும் ஆர்ப்பாட்டமான வில்லன். மக்கள் வலியில் கத்துவதை கேட்டு ஆனந்தத்தில் லயிப்பது எல்லாம் வேற லெவல். படங்கள் அருமை.

    ஜானி எப்போதும் போல. ஜானியின் அனைத்து அம்சங்களுடன் கூடிய கதை. சின்ன குழப்பங்களுடன் முடியும் வகை. நம்மளோட என்ன ஓட்டத்தை விட ஜானியின் ஓட்டம் அதிகமாயிருக்கும்.அடி வாங்கியே பெரியாளகுற ஹீரோ.
    ஈரோடு ஸ்பெஷலை எதிர்பார்த்து..

    ReplyDelete
    Replies
    1. // டெக்ஸ் மினி புக்குனு வச்சிக்கலாமா இல்ல மின் மினினு இல்ல டெக்ஸ் பேப்பர்னே வச்சிக்கலாம். பக்கத்த புரட்ட புரட்ட வெடிக்காத லட்சுமி வெடி மாதிரி. // சரியாக சொன்னீங்க ஜி

      Delete
  41. தலைமுறை எதிரி
    முதல் முறை வாசிப்பு.. அக்மார்க் ஜானி கதை.. அட்டைபடத்தில் ஆரம்பிக்கிறது அட்டகாசம்.. கதை பயங்கர விறுவிறுப்பு.. முழுக் கதையையும் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை.. சூப்பர்
    என்னுடைய ரேட்டிங் 9.5/10
    கஷ்டப்பட்டு ஓட்டு போட்டது வீணா போகலை..

    ReplyDelete
    Replies
    1. உங்களது மதிப்பெண் என்னுடைய மதிப்பெண் உடன் ஒத்து போகிறது. ஜானி எப்போதுமே ஏமாற்றம் அளிப்பது இல்லை.

      Delete
    2. ரம்மி @ கஷ்டப்பட்டு ஓட்டு :-)

      Delete
    3. நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர்.
      இந்த ஆவணப்படுகலகங்களை விளைவித்தவர்களை காமிக்ஸ் கழகம் வன்முறைத் தடுப்புச் சட்டம் சார்பில் பத்து ரவுண்டு பன்களை ஒரே நேரத்தில் டீ இல்லாமல் நின்றே தின்று தீர்க்க வேண்டுமாய் உத்தரவிடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.அத்துடன் பத்து டெக்ஸ் "தகிக்கும் ‌நீயா மெச்சிக்கோ"இதழ்களை!???? EBF ஸ்டால் எண் 4 ல் நின்று இலவசமாகவாவது யாருக்காச்சும் விற்றுத் தர வேண்டும்.

      இப்படிக்கு
      வக்கீல் வண்டு முருகன்.

      Delete
  42. I'm not coming to Erode, How to get the Erode surprise books ? when will the online booking open?

    ReplyDelete
  43. 2016 ஈபுவி தான் நான் முதல் முறையாக கலந்து கொண்ட புத்தக விழா.ஈரோட்டில் இத்தாலி ரிலீசானது. பல நண்பரகள் எனக்கு அறிமுகமானது இந்த விழாவில்தான். நண்பர்கள் நெருக்கமாகி குடும்ப நண்பர்களானதும் காமிக்ஸ் உலகில் மட்டுமே நடக்கும். ஆசிரியரை முதன்முதலில் சந்தித்தும் இந்த விழாவில் தான்.

    இப்போது தளத்தில் புதிதாக களம் கட்டி இருக்கும் நண்பர் சேலம்குமார், போன தடவை ஈபுவி வந்தும் விழாவிற்கு வராத கணேஸ்குமார் , நமது தளத்தின் சுஜாதா செனா அனா என பலரை முதன்முதலில் சந்திக்கப் போவது பயங்கர எக்ஸைட்மென்டா இருக்கு.

    ஆகஸ்ட் 3 ஏன் சீக்கிரமா வரமாட்டேங்குது?

    ReplyDelete
    Replies
    1. ஆகஸ்ட் 3 மெதுவாக நிதானமாக வருவதற்கும் ஆனால் ஆகஸ்ட் 3 விரைவாக கழிவதற்கும் ஐன்ஸ்டைன், ஓராபோரா மற்றும் இணை பிரபஞ்ச காரணங்கள் இருக்குமோ 🤔

      Delete
    2. ஆஹா நன்றி ஷெரீஃப் ஜி. ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு ஒன்றும் நான் பெரிய ஆள் அல்ல. உங்களை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நானும் சென அனா வை சந்திக்க மிக ஆர்வமாக இருக்கிறேன்.

      Delete
    3. நானும் ஒரு முறை மீட்டிங் நடந்தபோது ஹோட்டல் வாசல் வரை வந்து விட்டு சங்கோஜபட்டு நண்பர்களை sandhikkamal திரும்பி சென்றேன். 2016 a இல்லை 2017 a என்று நியபாகம் இல்லை

      Delete
    4. // ஆகஸ்ட் 3 மெதுவாக நிதானமாக வருவதற்கும் ஆனால் ஆகஸ்ட் 3 விரைவாக கழிவதற்கும் ஐன்ஸ்டைன், ஓராபோரா மற்றும் இணை பிரபஞ்ச காரணங்கள் இருக்குமோ 🤔 // ஹிஹிஹி செம்ம ஜி செம்ம செம்ம

      Delete
  44. இருளின் ராஜ்யத்தில்:

    தனக்கும்,தன்னை சார்ந்தவர்களுக்கும் உடல்ரீதியான பல்வேறு கொடுமைகளை இழைக்கும் ஒரு சைக்கோ டாக்டரை கொல்ல வாய்ப்பு கிட்டியும் கொல்ல முடியாத துரதிர்ஷ்டம் யாருக்கேனும் அமையுமா?
    நம் நாயகருக்கு அமைகிறது...
    எல்லா பொழுதுகளிலும் விஷமச் சிரிப்புடனும் உலா வருபவன்,மற்றவரை பேசியே வசியம் செய்யும் வித்தகன்,ஜால வார்த்தைகளில் வித்தகன்,தோற்றத்தில் ஆகிருதியானவன்,மருத்துவத்தின் வித்தைகளை கைக்குள் வைத்திருப்பவன்,யாருக்கு நல்லவன்,யாருக்கு கெட்டவன் என்ற புதிருடன் இருப்பவன்,பலரால் அரக்கன் என்று அழைக்கப்படுபவன்,தன் செயல் ஒவ்வொன்றிற்கும் திறமையான தர்க்கங்களை வைத்திருப்பவன்,சட்டர்கேம்ப் அரக்கன் என்று அழைக்கப்படுபவன்,க்விண்ட் என்ற பெயருடன் ஊர்,ஊராய் திரியும் மருத்துவன்.....
    ப்பா..... எத்தனை அடைமொழிகள் ஒருவனுக்கு,அசாத்தியமான ஒரு வில்லன் க்விண்ட்....
    "குணப்படுத்துகிற தயாளனா?
    இல்லை, ஈவிரக்கமில்லாத கொலைகாரனா"

    தன் மருத்துவ திறமைகளையே தமக்கான தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்துவது செமையான உத்தி...
    செல்லும் இடத்தில் எல்லாம் பிரச்சினைகளையும் உண்டு செய்வது,பின் அதையே தனக்கு சாதகமாக திசை மாற்றுவது...
    அப்பப்பா......
    வெட்டியான் க்ரோ பெரும் போராட்டத்திற்குப் பின் க்விண்டை கொல்ல வாய்ப்பு கிடைக்கும் இறுதி சந்தர்ப்பத்திலும் தவறிப்போவது ஒன்றை உறுதிப்படுத்துகிறது,அடுத்து வரும் பாகங்களிலும் க்விண்டின் அட்டகாசம் தொடரும்.......

    ரோஸ் கதாபாத்திரமும் மனவுறுதியில் தான் சளைத்தவள் இல்லை என்றே அமைக்கப்பட்டிருக்கிறது,எனினும் கானகத்தில் க்விண்ட் உறங்கும் சந்தர்ப்பத்தில் அவனை கொல்ல வாய்ப்பு கிட்டியும் தடுமாறும் மனப்போராட்டமும்,உறங்கும் நேரத்திலும் க்விண்டின் விஷமப் புன்னகையும்...அடடே......செம....

    வெட்டியான் தன் முதல்பாகத்தைப் போலவே இதிலும் அழுத்தமான முத்திரையை பதித்து விட்டார்...

    கதைக்களம் நிறையவே இருளில் நடப்பதால் இருண்ட கானகத்தில் பயணிப்பதான உணர்வு......

    இருளின் ராஜ்யத்தில் அட்டகாசமான ஒரு சாகஸம்....

    வெட்டியானின் அடுத்த சாகஸத்துக்காக வெயிட்டிங்....

    2020 ல் ஏதேனும் உண்டா சார்....

    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம் ரவுடிண்ணா...

      Delete
  45. சென்ற ஆண்டு புத்தக திருவிழாவிற்கு வீட்டில் அனுமதி வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..
    புத்தக விழாவிற்கு செல்ல கூடாது அல்லது என் இளைய மகளை எடுத்து செல்ல வேண்டும் என்று எனது வீட்டில் நிபந்தனை விதிக்கவும் சரி இளையவள்தானே சிறிது நேரம் விளையாடிவிட்டு அயர்ச்சியில் உறங்கி விடுவாள் என்றென்னி இளைவளை தூக்கி வந்திருந்தது மிகப்பெரிய தவறு என நிரூபித்தாள் எனது வாண்டு..
    ஹோட்டலுக்கு மேலே செல்லவும் கீழே இறங்கவும் என என்னை பாடாய் படுத்தி எடுத்து விட்டாள்..
    ஜயா சவுந்திரபாண்டியன் கையில் இரத்த படலம் கலர் புத்தகங்கள் வாங்க மட்டும்தான் முடிந்தது வாட்சப்பில் உரையாடிய சகோதரர்களை நேரில் சந்தித்து உரையாடமலே திரும்பி வந்திருந்தேன்..
    சரி இந்தாண்டு அனைவரையும் சந்தித்து உரையாடலாம் என்றிருக்கையில் ஆடி 18 வடிவில் வந்திருக்கிறது வில்லங்கம்..
    நீங்க இப்படியே ஈரோடு போங்க நாங்க அப்படியே எங்கம்மா வீட்டுக்கு போயிடறோம் என பிளாக் மெயில் பன்றாங்க..
    இந்த ஆடி நோன்பு பிரச்சினை எல்லாம் மற்ற நண்பர்களுக்கு இல்லையா ??
    இருந்தா அத எப்படி சமாளிச்சீங்கன்னு (சமாளிக்கிறதுன்னு)சொன்னீங்கன்னா ரொம்ப உபயோகமா இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. ///நீங்க இப்படியே ஈரோடு போங்க நாங்க அப்படியே எங்கம்மா வீட்டுக்கு போயிடறோம் என பிளாக் மெயில் பன்றாங்க..
      இந்த ஆடி நோன்பு பிரச்சினை எல்லாம் மற்ற நண்பர்களுக்கு இல்லையா ??
      இருந்தா அத எப்படி சமாளிச்சீங்கன்னு (சமாளிக்கிறதுன்னு)சொன்னீங்கன்னா ரொம்ப உபயோகமா இருக்கும்..///


      நாங்க சரின்னு சொல்லிட்டோம்.. சோ சிம்பிள்.. !:-)

      Delete
    2. மறுபடி திங்கட்கிழமையே போய் ஹிஹி..ன்னு அசடு வழிய நிப்போம்கிறது வேற விசயம்.. !

      Delete
    3. அது எதுக்கு நிக்கணும்னேன்.

      சாஷ்டாங்கமா குப்பற விழுந்து எந்திரிச்சி ......

      Delete
    4. இல்லாங்காட்டி இருக்கவே இருக்கு....


      ஒரு லாரி நல்லதண்ணி ஆடி சீதனமாக கேளுங்க...
      மாம்ஸ் ஆன்னு நெஞ்ச பிடிச்சிகிட்டு உக்காந்துடுவாரு....
      நான் என்னத்த கேட்டேன்...நகைய கேட்டனா... இல்ல பணம் கேட்டனா....உங்கப்பேன்ட நீ நல்லா குளிக்கணும்...நல்லதண்ணிய குடிக்கணும் தான் கேட்டேன்னு...பிலாக்கணம் வைக்கோணும்....அவங்க யாரும் பதில் சொல்றதுக்கு முன்னாடி ,"இதுக்குத்தான் நான் வரமாட்டேன்னு சொன்னேன் நீயும் போக வேணாம்னேன்...எதுக்கு ஒங்கப்பாவ கஷ்டப்படுத்தணும்" கேட்டியாம்மா...


      அப்டீன்னு தங்கப்பதக்கம் சிவாஜி ரேஞ்சுக்கு ஓவராக்ட் பண்ணீட்டு கோவிச்சுட்டு ஈரோடு ஓடியாந்துரணும்....

      இது டொமஸ்டிக் அப்யூஷ்ல வராது..வரதட்சிண புகாரும் தர முடியாது...

      Delete
    5. சிவா @ கடந்த முறை இதனை நீங்கள் குழந்தையை பார்த்து கொண்ட விதம் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அதுவும் சுட்டி குழந்தை ஒரு வினாடி ஒரு இடத்தில் நிற்காமல் அவள் செய்த கலாட்டா மறக்க முடியாது. இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு காமிக்ஸ் நண்பர்களை காண வந்த உங்களின் காமிக்ஸ் காதலுக்கு hats off.

      Delete
    6. @சிவா

      உண்மை, இந்த முறை சரியாக ஆடி 18 பண்டிகை அன்றே நமது மீட்டிங்கும் வருகிறது. வேறு வழி எதுவும் இல்லை, காலையில் (முடிந்தளவு) நேரத்திலேயே ஆடிப் பண்டிகையை கொண்டாடி விட்டு ஈரோட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்.

      மீண்டும் இதே போல சனிக்கிழமை யில் ஆடி 18 பண்டிகை வர 6 வருடம் ஆகும், எனவே அடுத்த 6 வருடத்துக்கு பிரச்சினை இல்லை, இந்த ஒரு வருடம் மட்டும்தான் அப்படின்னு சொல்லி அனுமதி வாங்கிடுங்க....

      Delete
    7. ///நீங்க இப்படியே ஈரோடு போங்க நாங்க அப்படியே எங்கம்மா வீட்டுக்கு போயிடறோம் என பிளாக் மெயில் பன்றாங்க..///

      உங்களுக்குப் பிடிச்ச இடத்துக்கு நீங்க போறேன்றீங்க, அவங்களுக்குப் பிடிச்ச இடத்துக்கு அவங்க போறேன்றாங்க.. இதிலென்ன பிரச்சினை! பரஸ்பரம் bye சொல்லிட வேண்டியதுதானே?!! ;)

      Delete
    8. நன்றி பரணி அண்ணா 💗💗💗
      &
      நன்றி நாகராஜ் அண்ணா 💗💗💗



      கண்ணன் & விஜய்
      அண்ணா
      ஆக மொத்தம் ரெண்டு பேரும் நான் ஈரோட்டுக்கு வர வழி சொல்ற மாதிரி தெரியல..
      குடும்பத்துல குண்டு வைக்க சொல்றீங்க..
      என்னா ஒரு வில்லத்தனம்..😜😜

      கடைசியில் J அண்ணா வோட இந்த யோசனைதான் கைகொடுக்கும் போலிருக்கு ..

      ***அது எதுக்கு நிக்கணும்னேன்.

      சாஷ்டாங்கமா குப்பற விழுந்து எந்திரிச்சி ......***

      Delete
    9. // கண்ணன் & விஜய்
      அண்ணா
      ஆக மொத்தம் ரெண்டு பேரும் நான் ஈரோட்டுக்கு வர வழி சொல்ற மாதிரி தெரியல..
      குடும்பத்துல குண்டு வைக்க சொல்றீங்க..
      என்னா ஒரு வில்லத்தனம்..���� // நான் சொல்ல வந்த point a note pannitinga

      Delete
    10. நாங்கள் லாம் யாரு.....

      Delete
    11. ஈ வி பரஸ்பரம் bye சொல்லீட்டா போச்சா....

      சீட்டு வெளாட்றதே ரெண்டு பேரு.
      ரெண்டு பேரும் ஸ்கூட் சொல்லீட்டா....

      Delete
    12. ஒண்ணுமில்லை சிவா அப்படியே மூஞ்சிய பாவமா வச்சிக்கிட்டே ஒரு இரண்டுநாள் சுத்தனும் சரியா சாப்பிடக்கூடாது ஏன் என்னானு கேட்டா ஒண்ணுமில்லைனு சொல்லனும் ரொம்ப கேட்டதுக்கப்புரம் இல்லம்மா எல்லாரையும் ஒரே நாள்ல பாக்கரது சாதாரணமானதுல்ல என்னபண்றது இந்தவாட்டி முடியலனு சோகமாதிரிஞ்சா போதும் போய்தொலைணு சொல்லிருவாங்க.....

      Delete
  46. இந்த மாச டெக்ஸ் வில்லரை..
    மினி டெக்ஸ்னு சொல்றதைவிட மின்மினி டெக்ஸ்னு சொல்லலாம் .!
    பதினாறே பக்கங்கள்ல முடிஞ்சாலும்.. அந்த எட்டு வயசு மேரி ஆனின் குதிரை பொம்மையையும் நெருப்பில் போட்டு மேரி தேடுவாள் அவளிடம் போ என்று டெக்ஸ் சொல்வது டச்சிங்காக இருந்தது.!

    தகிக்கும் நியூமெக்ஸிகோ.. டேக்ஆஃப் ஆகறதுக்குள்ள லேன்டிங் ஆன ஒரு ஃபீலிங்...!

    ReplyDelete
    Replies
    1. அதான் சொன்னேன்ல...

      தகிக்கும் நீயா மெச்சிக்கோ...

      Delete
  47. ஸ்டால் நம்பர் 4....


    அப்ப மீட்டிங் வாசல்லயே....தானா

    மரத்தடியில கெடயாதா....

    ReplyDelete
  48. For Lion comics rani comics or other any comics magazine like ambulimama mayavi james bond or many more you want contact me whatsapp 7870475981

    ReplyDelete
  49. 100 வரவர 100 வரதுக்கே என்னென்னவோ பண்ண வேண்டி இருக்கே. சத்திய சோதனை

    ReplyDelete
    Replies
    1. நண்பர்பளில் பலரும் வீட்டம்மாவிடம் (கையில் காலில் விழுந்து) பர்மிஷன் வாங்குவதில் பிஸின்னு தோனுது!

      Delete
  50. மேல யாரோ பேருக்கேத்த வேலைய பண்றாப்டி...

    ReplyDelete
    Replies
    1. ///மேல யாரோ பேருக்கேத்த வேலைய பண்றாப்டி... ///

      ஹா ஹா ஹா!! :)))))

      Delete
  51. ஒரே ஒரு தலீவரிடமிருந்து..


    அண்டர்டேக்கர் :

    அருமையான விறுவிறுப்பான கதை. அட்டைபப்படமும் அருமை.! சித்திரங்கள் படு அட்டகாசமாக இருந்தன.! வில்லன் பயங்கரமான ஆளாக இருக்கிறார்.! கதை சுவாரஸ்யமாக இருந்ததற்கு வில்லனும் முக்கிய காரணம். அண்டரடேக்கர் மனதை கொள்ளைகொண்டுவிட்டார்.!

    தலைமுறை எதிரி:

    முதலில் அட்டைப்படத்திற்கு வாழ்த்துகள் சார்.! பழைய அட்டைப்படத்தையே மெருகேற்றி புதுபாணியில் கொடுத்திருப்பது அருமை. கதையைப் பற்றி சொல்லவேண்டியதே இல்லை.! வழக்கமான இடியாப்ப ஷ்பெசல் ஜானி இதிலும் சோடைபோகவில்லை. சித்திரங்கள் அபாரம்.!
    ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்.. இதேபோல் திகிலில் வெளியான அனைத்து ஜானி கதைகளையும் அதே அட்டைப்படத்தோடு ஒவ்வொன்றாக மறுபதிப்பு செய்யுங்கள் சார்.!.

    (என்னுடைய குறிப்பு - சத்தியமாக தலீவரை மிரட்டி இப்படி ஸ்டேட்மென்ட் வாங்கவில்லை. அவராகவே சுயமாக சிந்தித்து முழுமனதோடுதான் இதைச் சொன்னார்)


    மினி டெக்ஸ்.:

    வீட்டம்மா டீ போட்டு கொண்டுவந்தாங்க.! டீ சூடா இருக்கு, ஆத்திக்குடும்மான்னு சொல்லிட்டு கதையை படிக்கத் தொடங்கினேன். டீயை ஆத்தித் தருவதற்குள் கதை முடிந்துவிட்டது.! டெக்ஸ் கதைகளில் இவ்வளவு சிறிய கதையைப் படிப்பது இதுவே முதல்முறை.! கதையின் நீளம் மட்டுமே குறை.!

    விரைவில் சந்திப்போம்.

    இப்படிக்கு

    பதுங்குக்குழியை ஆழப்படுத்தி விரைவில் மெக்ஸிகோவில் வெளியே வரப்போகும்..

    உங்கள் தலீவர்.

    ReplyDelete
    Replies
    1. ///வீட்டம்மா டீ போட்டு கொண்டுவந்தாங்க.! டீ சூடா இருக்கு, ஆத்திக்குடும்மான்னு சொல்லிட்டு கதையை படிக்கத் தொடங்கினேன். டீயை ஆத்தித் தருவதற்குள் கதை முடிந்துவிட்டது.!///

      ஹா ஹா! செம தலீவரே! :)))


      ///பதுங்குக்குழியை ஆழப்படுத்தி விரைவில் மெக்ஸிகோவில் வெளியே வரப்போகும்///

      வழிதவறி லெஃப்டுல போய்டாதீங்க.. அங்க பஸிபிக் கடல் தான் இருக்கு! நீந்தி வெளியே வரதுக்குல்ல சுறா மீனுக்கு ஸ்நாக்ஸ் ஆகிடுவீங்க!

      Delete
    2. தலீவரே... நம்பற மாதிரியா இருக்கு ? ஆத்துகாரம்மா டீ போட்டுத் தர்றதே பெரிய விஷயம் ; இதிலே நீங்க கெம்பீரமா கால் மேலே கால் போட்டுண்டு , புக் படிச்சிட்டே , ஆத்தி வேற கொடுக்க சொன்னா - அன்னிக்கி உங்களுக்கு சுடுநீர் ஸ்னானம் உறுதின்னு சொல்லலாமே ?

      Delete
    3. எனக்கென்னவோ ஆத்துக்காரம்மா ஆத்திக்கொடுக்கறதெல்லாம் நம்ம தலீவர் பதுங்குகுழிக்குள் ஆழ்நிலை தியானத்தில் இருந்தபோது (கொர்ர்ர்) மனத்திரையில் விரிந்த காட்சியா இருக்கும்னு தோனுது! இது ஒருவகையான ஏக்கம்! :)

      Delete
    4. ஆக்சுவலீ வாட் ஹேப்பன்டுன்னா சார்...


      தலீவர்தான் டீ போட்டு, வீட்டம்மா சூடா இருக்குன்னு சொல்லவும், ஆத்திக்கிட்டே கதையை படிச்சி முடிச்சிட்டாராம்.!

      நாந்தான்., வேணாம் தலீவரே நம்ம சங்கத்துக்கு ஒரே தலீவர் நீங்கதான்.. நீங்களாச்சும் தெகிரியமான குடும்பத்தலீவர்னு பந்தாவா காட்டணும்னு சொல்லி மாத்தி எழுதினேன்..!

      ஆனா... எப்புடித்தான் கண்டுபிடிக்கிறாங்களோன்ற கதையாயிடுச்சி..!

      சாரி தலீவரே.. நம்ம பப்பு வேகலை.!

      Delete
  52. ஈரோடு ஸ்பெசல் மத்தரெண்டு புக்கும் எப்படி இருக்கும் குண்டா ஒல்லியா...?

    ReplyDelete
  53. 1.அன்டர்டேக்கர்
    2.ரிப்னிபோர்ட்டர் ஜானி
    3.பிஸ்டலுக்கு பிரியாவிடை
    4.நித்தம் ஒரு யுத்தம்
    5.டெக்ஸ்
    6.கார்ட்டூன்
    7.....?
    8.மினி டெக்ஸ்
    அருமையான மாதம் இது அல்லவா நண்பர்களே....

    ReplyDelete
    Replies
    1. பழனி சார் அது என்ன 7 நம்ம லிஸ்ட் லயே இல்லயே 🤔

      Delete
  54. ஆசிரியரை 2 வாரங்களாக blog பக்கம் பார்க்கவே முடியலையே.

    ReplyDelete
    Replies
    1. EBF முஸ்தீபுகளில் பிஸியாக இருப்பார்...

      Delete
    2. இக்கட 2020 அட்டவணை பிரிண்டிங்குக்கு உண்டான ஏற்பாடுகளில் தான் பிஷி !இன்னும் சரியாகச் சொல்வதானால் 'இது ரத்த பூமி! ' ; ' கண்டவுடன் கண்டெம்ன் பண்ணவும் " என்ற ரீதியில் பேர் சூட்டிக்கினு இருக்கேன் !

      ஈரோட்டுக்கு புக்ஸ்லாம் ஒரு வாரம் முன்கூட்டியே ரெடியாகிட்டதாலே கால் ஆட்டிட்டே !

      Delete
    3. அப்ப ஈ.பு.வி யில் 2020 அட்டவணையும் உண்டா???!!!😍😍😍😍 ஹைய்யா....

      Delete
    4. ஆசிரியர் ஐயா தயவு செய்து அந்த அட்டவணையை ஈரோட்டில் எங்களிடம் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
    5. எனக்கென்னவோ அடுத்த வருட கதை டைட்டில்ஸ் எல்லாம் காமெடியா இருக்கப்போவுதுன்னு தோனுது!
      இதோ ஒரு கெளபாய் கதைக்கான டைட்டில் : "யப்பா சுடலை.. உன் துப்பாக்கி சுடலை"

      Delete
    6. செம்ம தலைப்பு EV

      Delete
    7. ஹா! ஹா! ஹா!

      அதன் ரெண்டாம் பாகத் தலைப்பு

      சுப்பா! சுகப்படலே..உன் ரவை அவன்மேல படலே..


      Delete
    8. 'தம்பி டீ இன்னம் வரலே" போன்ற கவித்துவமான தலைப்புகளின் பரிசீலனை ஓடிக் கொண்டிருப்பதோடு - ட்ரெண்ட் ; ப்ளூகோட்ஸ் போன்றோரின் நடப்பாண்டின் செயல்பாடுகளை அவதானித்து அவர்கட்கான 2020 ஸ்லாட்ஸ் எவ்விதமென்று தீர்மானிக்கவும் வேண்டியுள்ளதால் ஈரோட்டில் அட்டவணை என்பது சாத்தியமாகாது guys !

      தவிர, முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள் இரண்டுள்ளன என்னிடம் ! ஈரோட்டில் அவற்றிற்கு விடை காண முயல்வதுமே அட்டவணை இறுதிப்படுத்தலின் ஒரு அங்கமாகிடும் ! So the ball's in your court for now !

      அப்புறம்...

      ஈரோடு. சென்னை. ஸ்பெஷல் புக்ஸ் இத்யாதி என்பனவெல்லாம் ஒரு பயணத்தின் வழித்தடங்கள் மட்டுமே - நம்மைப் பொறுத்த வரைக்கும் ! ஒரு பணி நிறைவுறும் போதே இன்னொன்று துவங்கியிருக்கும் !

      Delete
    9. செல்வம் அபிராமி சார் அட்டகாசம் சிரிச்சே செத்துட்டேன்

      Delete
    10. ///சுப்பா! சுகப்படலே..உன் ரவை அவன்மேல படலே..///

      ஹா ஹா ஹா!! :))))))) செம்ம்ம!! :))))))

      Delete
    11. ///சிரிச்சே செத்துட்டேன்///

      விளையாட்டுக்கூட அப்படியெல்லாம் சொல்லாதீங்க குமார்!
      உங்க பழைய காமிக்ஸ் கலெக்ஷனையெல்லாம் நீங்க பத்திரமா எங்கிட்டே சேர்ப்பிக்கிறவரைக்கும் உங்களுக்கு அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது! :P

      Delete
    12. EV நீங்க நினைக்கும் அளவுக்கு எல்லாம் என்னிடம் பழைய காமிக்ஸ் கிடையாது. செம்ம EV

      Delete
  55. நண்பர்களே,

    நமது ஈரோடு காமிக்ஸ் திருவிழா சமயத்தில் ஒவ்வொரு வருடமும் தொடங்கப்பட்டு, நண்பர்களுக்கு காமிக்ஸ் விழா நிகழ்வுகள் மற்றும் ஈரோடு புத்தகத் திருவிழா நிகழ்வுகளை உடனுக்குடன் பகிர்ந்துவரும் whatsapp group இதோ மீண்டும்!

    க்ரூப்பில் இணைய விருப்பமுள்ளவர்கள் "இங்கே க்ளிக்குங்க பாஸு" என்று அன்போடு அழைக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. Link revoked ; you could not join- ன்னு வருது ஈவி..நிறைய பேருக்கு இந்த ப்ரச்சினை வரும்னு தோணுது...

      Delete
    2. புது லிங்க் கொடுத்துடுங்களேன்..

      Delete
    3. செனாஅனா

      பழைய லிங்க்கில் அந்தப் பிரச்சினை வந்ததாலதான் மேலே அந்தக் கமெண்ட்டை நீக்கிட்டு, புதூ லிங்க் கொடுத்தேன்! இதிலுமா அப்படி வருது?!!

      Delete
    4. இல்ல ஈவி ! இதுல வர்ல.. வொர்க்கிங் ..

      Delete
    5. ஹிஹி! அதானே பார்த்தேன்..! அந்த லிங்க்கைப் பார்த்து ஒரு மொறை மொறச்சேன்.. உடனே சரியாயிடுச்சு!

      Delete
    6. நன்றி EV. இன்னும் இரண்டே நாட்கள் wow. தூங்கும் போது கூட ஈரோடு book fair kanqvugal தான் வருகின்றது

      Delete
    7. @Kumar Salem

      எனக்கும் book fair கனவுகள் தான் - சிவகாசி ரவுண்டு பன்னை காப்பில தொட்டு கீர்த்தி சுரேஷ் எனக்கு ஊட்டிவிடறமாதிரி!

      Delete
    8. EV இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

      Delete
    9. ஊட்டுக்காகாரம்மா உட்டாங்ககன்னா ஊட்டிக்கு அப்பால உடற மாதிரி இருக்கும். பாத்து.

      Delete
  56. One doubt for the new books(tex & cartoon) release in erode bf,how much have to pay so that it will come along with already booked EBF books..
    May be this reduce double courier charges..and two times book will be sent

    ReplyDelete
  57. கீர்த்தி சுரேஷா

    அவ எத்தன பேருக்குத் தான் ஊஊஊட்டுவா....

    எனக்கு இப்பத்தான் முந்தானையால வாய தொடச்சு வுட்டுட்டு போனா....

    எல்லாரும் இப்பிடி patient களா இருந்தா என்ன பண்றதுன்னுட்டு ரெமோவ கூட்டீட்டு வரேன்னுட்டு போய்ட்டா...

    ReplyDelete
  58. பொன்னை வைத்த இடத்தினிலே
    பூவை வைத்து பார்ப்பதற்கு
    உம்மை அன்றி யாரும் உண்டோ
    இன்னும் ஒரு சொந்தம் உண்டோ
    அதன் பேர் பாசமன்றோ

    ReplyDelete
  59. எடிட்டர் சார்

    நம்ம காமிக்ஸ்க்கு பேரு வெக்கிறதுக்கு ஒரு ரெடி reckoner இதோ. A B C என்று சேர்த்து இலக்கண சுத்தமாக மாற்றவும் :-)

    A
    மஞ்சள்
    பச்சை
    மஞ்சள்
    நீல(ப்/க் )
    சிகப்பு
    இரத்த(க்/ப்)
    கன்சாஸ்/நியூயார்க்/இல்லேன்னா இன்னொரு ஊர் பேரு
    இரவு/பகல்/இருட்டு
    பழி(வாங்கும்)
    துரத்தும்


    இரண்டாம் வார்த்தை :

    B
    காட்டேரி
    பிணம்
    கார்/குதிரை/படகு/விமானம்
    பாவை
    கண் (மற்றும் உடலின் பல பாகங்கள்)
    பூ

    மூன்றாம் வார்த்தை:

    C
    படலம்
    மர்மம்
    சூனியம்
    கதை

    216 தலைப்புகள் பண்ணலாம் சார் - நாலு வருஷ சரக்கு ரெடி :-)

    ReplyDelete
    Replies
    1. B வரிசையில் பேய் பூதம் பிசாசு வுட்டுப்போச்சு .. அதையும் சேந்தீங்கன்னா 360 தலைப்புக்கள் ... 7 வருஷம் வண்டி ஓட்டலாம் :-)

      Delete
    2. ராகவன் செம்ம semma. Sirichu mudiala saami

      Delete
    3. ஹா ஹா!! ராக் ஜி.. யூ ஆர் ராக்கிங் ஜி! :))))

      Delete
  60. நண்பர்களே!

    மேற்கண்ட வாட்ஸ்அப் குரூப்புடன் சேர்த்து, ஈரோடு புத்தக/காமிக்ஸ் திருவிழா குறித்த நிகழ்வுகள், வீடியோ மற்றும் புகைப்படங்களை ஈரோடு ஸ்டாலின் அவர்களின் வலைப்பூவிலும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்!
    அறிமுகப் படலத்திற்கு இங்கே க்ளிக்குங்க பாஸு

    ReplyDelete
    Replies
    1. வாட்ஸ்அப், பிலாக் - ரெடி.

      இன்னும் இந்த டிக்டாக், ஸ்மியூல் எல்லாம் குறையுதே ஈ.வி.???😁😁😁

      Delete
    2. @ஹசன்

      ஹிஹி!அடுத்த வருசம்! :)

      Delete
  61. நீரில்லை நிலமில்லை: தீவில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்கிறார்கள்; அவர்களுக்குள் ஒரு மர்மம் அதை வெளியே சொல்லாமல் இருக்க அவர்களுக்குள் சண்டை; அதே இடத்தில் பல வருடங்கள் வாழும் இருவர் அவர்கள் யார்? அழகான சஸ்பென்ஸ். ஆனால் இதனை சொல்லிய விதம் வழ வழ கோழ கோழா; படித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. இந்த கதைக்கு இத்தனை பக்கங்கள் என்பதை முதலில் முடிவு செய்து பக்கங்களை வீணடித்து விட்டார் கதாசிரியர்.

    பணக்கார நண்பர்கள் தங்களுக்கு பொழுது போகவில்லை என ஆரம்பிக்கும் விளையாட்டு "மனதில் மிருகம் வேண்டும்" என்ற கதையை நினைவுபடுத்தியது.

    குறைந்த பக்கங்களில் இதனை இன்னும் விறுவிறுப்பாக சொல்லி இருந்தால் நீருண்டு நிலமுண்டு என கொண்டாடி இருக்கலாம். :(

    அடுத்த வருடம் இது போன்ற கதைகளை வெளியீடுவதற்கு பதில் இரண்டு கார்ட்டூன் அல்லது நமது டைகரின் இளவயது அதுவும் இல்லை என்றால் டெக்ஸ் கதையை வெளியிட்டாளாம் என்பது எனது எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. Well said. That story goes goes goes goes and goes. And the murders also not explained well. It suddenly happens. Mokka story. Build ups are big.

      Delete
    2. ஆமாம் சார்!இதுங்களுக்கு கமான்சே எவ்வளவோ பரவாயில்லை!

      Delete
  62. கொண்டாடி மகிழ்ந்திட..
    குதூகலித்திட..
    கும்மாளம் போட்டிட..
    கொள் என்று சிரித்திட..
    கம்பனாய் கவி பாடிட..
    கம்பு சுழற்றிட..
    கோரஸாய் ஆர்ப்பரிக்க..
    கொஞ்சிப் பேசிட..
    கேள்விகள் எழுப்பிட..
    கொலைவெறி தணித்திட..
    குடும்பத்தை மறந்திருக்க..

    காமிக்ஸ் திருவிழா!

    நாளை இதே நேரத்தில்!!

    வருடத்தில் ஒரு முறை வாய்ப்பு!!

    நழுவவிடாதீர்கள்!! :)

    ReplyDelete
    Replies
    1. குடும்பத்தை மறந்திருக்க...நோ.! அய்யோவ்.சாமியோவ்..

      குடும்ப கவலைகளை மறந்திருக்க..யெஸ் :-)

      Delete
  63. தகிக்கும் நியூ மெக்ஸிகோ.

    முடியல, சாமி.

    ReplyDelete
  64. "Nithirai marantha newyork" sema aruvai. Please don't issue this kind of stories. Very Boring, Even we can't find who is villain and who is hero in this story. All faces are remain same. Very very irritating story. Hero sema dummy face got kicked his ass all the time, and thought he is the big one, trying to figure something big. Other graphic novels are massive. Fantastic story lines, like Mudivilla moodupani, kanavu. I couldn't getup until I finished Mudivilla moodupani. But "nithirai" mudiyala.Please select the stories very carefully

    ReplyDelete
  65. கொண்டாட்டம் - இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பம்!!

    ReplyDelete
  66. ஈரோடு2019...

    சஸ்பென்ஸ் டெக்ஸ் -பழி வாங்கும் பாவை!---மேக்ஸி சைஸ்...கலர்.

    லக்கி லூக்-மனதில் உறுதி வேண்டும்!

    ரிலீஸ் செய்யப்பட்டுவிட்டத!

    ReplyDelete
  67. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!! :)

    ReplyDelete