Saturday, July 13, 2019

ஒரு 'சிக்' பதிவு !

நண்பர்களே,

வணக்கம். இங்கே நான் போடும் மொக்கைக்கு சர்வதேச அளவில் எதிர்வினை இருக்குமென்று சத்தியமாய் நான் எதிர்பார்த்திருக்கவில்லை ! லண்டன் டயரி - 1 ; 2 என்று நான் பாட்டுக்கு நீட்டி முழக்கிக் கொண்டே போக - அரையிறுதியில் நியூசிலாந்தைக் கெலித்து - இந்த ஞாயிறு வரைக்கும் இங்கிலாந்தில் தங்கள் டேராவைத் தொடர்ந்திடும் பட்சத்தில் - "லண்டன் டயரி - 3" இங்கே உருவாகிடக் கூடுமென்ற மரண பீதி நமது Men in Blue-வைத்  தாக்கிவிட்டது போலும் !! "நீ ஆணியே பிடுங்க வேண்டாம் ; நாங்க ஊருக்கு திரும்பறோம்  !!" என்றபடிக்கு நம்மவர்கள் மூட்டையைக் கட்டிவிட்டனர் இங்கிலாந்து மண்ணிலிருந்து !! "உலகக்கோப்பை" என்ற 'வட போச்சே' சோகம் ஒருபக்கமெனில் -  "இன்னொரு பயணக்கட்டுரை மொக்கை" என்ற வடையுமே போச்சே 'என்ற சோகமும் சேர்ந்து கொள்கிறது ! எது எப்படியோ - ஒரு தேசமே தோல்வியின் சோகத்தை சிறுகச் சிறுக மறந்து யதார்த்தத்துக்குத் திரும்பத் துவங்கியிருக்கும்  நேரம், மறுக்கா அதையே கிளறிடாது நடையைக் கட்டுவதே சாலச் சிறந்தது என்று தோன்றுகிறது !! இதுவும் கடந்து போகும்...போயாகணும் !!

ஜூலையின் நடுவே நிற்கிறோம்....இன்னமும் மாதத்துவக்கத்தினில் வெளியான இதழ்களின் அலசல்கள் முழுமை பெற்றதாய் எனக்குத் தோன்றவில்லை ! வழக்கமான "வேக வாசிப்புக்காரர்கள்" நீங்கலாய் இதர நண்பர்கள் இன்னமும் படம் பார்க்கும் படலத்தைத் தாண்டியிருக்கவில்லை என்றே ஒரு பீலிங்கு !! காத்திருக்கும் ஈரோட்டுப் புத்தக விழாவின் போது - நடப்பாண்டின் இதழ்கள் சார்ந்த quiz ஒன்றைக் கேட்டு வைத்தால் - சிலபல பகீர் நிஜங்கள் அம்பலமாகிடும் என்று படுகிறது !! கதவுகளை பூட்டிய கையேடு quiz போட்டியினை நடத்தியே தீரணுமோ ? 😎😎

எது எப்படியோ - தேதிகள் ஓட்டமெடுக்க - புதுசுகள் சார்ந்த நம் பணிகளும் வேகமெடுக்க - இதோ ஆகஸ்டின் preview ஆரம்பம் !!  ஈரோட்டு எக்ஸ்பிரஸ் இதழ்கள் + TEX surprise இதழ் + கார்ட்டூன் surprise இதழ் என பணிகள் ஏகமாய்க் காத்துக் கிடக்கின்றன ! பொதுவாய் தொங்கிக்கிடக்கும் உதிரிப் பணிகளைப் பர பரவென செய்து முடிக்க ஞாயிறே எனக்குக் கை கொடுப்பது வாடிக்கை ! ஆனால்    நாளைய பொழுது எங்கள் பள்ளியில் ஒரு get-together + மதுரையில் ஒரு திருமண வீடென்று அட்டவணை காத்திருக்க, இன்றைய ராக்கூத்தில் இயன்றமட்டுக்குப் பணிகளை நிறைவு செய்தாக வேண்டிய கட்டாயம் ! So மாமூலான இழுவைகளின்றி இந்த வரம் crisp updates பாணியே பதிவுக்கு !! 

1. இதோ : ஆகஸ்டின் சந்தா A சார்பிலான ஆக்ஷன் டபுள் ஆல்பத்தின் முதற்பார்வை !! The Undertaker - ஆல்பம் # 3 & 4 ஒன்றிணைந்து ஒரே டபுள் ஆல்பமாய் இம்முறையுமே !! முன் & பின் அட்டைப்படங்களுமே ஒரிஜினல்களே - நமது நோண்டல்கள் துளியுமின்றி !! 
2. And முதல் தடவையாய் கதையின் சாரத்துக்கு ஏற்புடைய தலைப்பா - இல்லையா ? என்றெல்லாம் பாராது - முழுக்க முழுக்கவே கலரிங் பாணியின் மூடுக்கு ஒத்துப் போகும் விதத்தில் தலைப்பை அமைத்துள்ளேன் ! இந்த இரட்டை ஆல்பத்தின் முக்காலே மூன்று வீச சம்பவங்கள் அரங்கேறுவது இருளினில் !! அச்சாகியுள்ள பக்கங்களைப் பார்க்கும் போது ப்ளூ & கருப்பு மசிகள் போட்டுத் தாக்குகின்றன ! மணி ரத்னம் படம் பார்த்த feel !!
3. கதையைப் பொறுத்தவரை ஒரு blockbuster ஆரம்பத்தைப் பின்தொடரும் கதையிது என்பதால் அதே பாணியினை எதிர்பார்க்கத் தோன்றிடும் தான் ! ஆனால் இது அதே பாணியில் இல்லாவிடினும்  - மிரட்டலானதொரு வில்லனோடு பட்டாசாய்ப் பர பறக்கிறது ! அண்டர்டேக்கரின் முதல் ஆல்பத்தினை வாசித்திருக்கா நண்பர்களுக்கு இதன் கதை மாந்தர்களைப் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமிருக்கக்கூடும் ! So முதல் ஆல்பம் வாசித்து பிற்பாடே இதனுள் நுழைதல் நலமென்பேன் !!

4. அண்டர்டேக்கர் தொடரின் அடுத்த ஆல்பம் ஒரு single இதழ் என்று படைப்பாளிகள் சொல்லியிருந்தனர் சில காலம் முன்னே ! ஆனால் அதுவும் ஒரு டபுள் ஆல்பமாய் வரவுள்ளதாம் ! So 2021-ல் நமது அட்டவணையில் வெட்டியான் நாயகர் மீண்டும் ஒரு இடம் பிடித்திருப்பார் ! "வெள்ளைச் செவ்விந்தியன்" என்பது ஆல்பம் # 5 -ன் பெயர் ! 
5. ஈரோடு எக்ஸ்பிரஸ் இதழின் prime ஆல்பமான "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" செம மிரட்டலாய்த் தயாராகி வருகிறது !! இது அழகானதொரு படைப்பென்பது எனக்கு மேலோட்ட வாசிப்பின் போதே புலனானது தான் ; ஆனால் முழுசுமாய்ப் பணிசெய்யும் போதே கதையின் முழு வீச்சும் புரிபடுகிறது !! இப்போவே ரொம்ப பில்டப்  தந்தால் - ஆகஸ்டின் ஆரம்பத்தில் ஒரு பிரேத்யேகப் பதிவுக்கான வடை சுடும் மாவு இப்போவே தீர்ந்து போகும் ஆபத்துள்ளது ! தவிர - "ஓவர் பில்டப் !" என்று நீங்கள் தாண்டிச் செல்லும் வாய்ப்புகளுமுண்டு !! But ஒரு முற்றிலும் புதிய சூழலில் பயணிக்கும்  4 பாகங்கள் கொண்ட இந்த ஆல்பத்தை படித்து முடிக்கும் தருணத்தில் ஒரு நிறைவு உங்களுக்குள் அலையடிக்காவிடின் நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்ளுவேன் ! Fingers crossed !!

6. நெய்வேலி புத்தக விழா இன்றைக்கு நிறைவுறுகிறது ! சில நாட்களுக்கு முன்பாய் நமக்கு அங்கு விருதொன்று வழங்கப்பட்டிருக்க - நம் சார்பில் அண்ணாச்சி ராதாகிருஷ்ணன் அதைப் பெற்றுக்கொண்டார் ! மறுநாள் நாளிதழில் போட்டோவுடன் அது வெளியாகியிருக்க - மனுஷன் இப்போ ஆட்டோகிராப் போட்டுத் தரும் மூடில் ரெடி !! பாருங்களேன் !!
7. புத்தகவிழா caravan அடுத்து கோவைக்கு இடம்பெயர்கிறது ! 19 ஜூலை முதல் கொடிசியா மைதானத்தில் அரங்கேறிடும் !! கோவைவாழ் நண்பர்கள் : please do drop in !!! 

8. அப்புறம் ஈரோட்டுக்கு நமது 2 ஸ்பெஷல் விருந்தினர்களை டெம்போ வைத்துக் கடத்தினால் தான் உண்டு போலும் !! வயசைக் கேட்ட உடனே தெறித்து ஓடிய நண்பர் ஒருபக்கமெனில், பொருளாளர் இன்னொரு பக்கம் கன்னத்தில் மருவோடே க்ளினிக் சென்று வருவதாய்க் கேள்வி !! Operation  கிட்நா ??

9. ஈரோட்டுக்கு நேரில் வருகை தந்து முன்பதிவு செய்த இதழ்களைப் பெற்றுக்கொள்ளவிருக்கும் நண்பர்கள் ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ் ; அல்லது இங்கேயே கூட கைதூக்கிடுங்களேன் ? உங்கள் இதழ்களை கையோடு எடுத்து வருவதில் கடைசி நிமிட குழப்பங்களைத் தவிர்க்க ஆசை !! 

10. புதியதொரு பதிப்பகம் துவங்கியிருக்கும் ஒரு நெடுநாள் நண்பர், "இரத்தக்காட்டேரி" தொடர் ஒன்றினை உருவாக்கியுள்ளார் ! சித்திரங்கள் சூப்பர் என்ற நிலையில் - இந்த பாணிக்கதைக்கு நாம் 'ஜே' போடுவோமா ? என்ற யோசனை என்னுள் ! What say guys ?

சரி...பணிகளைக் கவனிக்க நடையைக் கட்டுகிறேன் !! மீண்டும் சந்திப்போம் ; have a relaxed sunday all !! 

253 comments:

  1. Replies
    1. ஹாவ்வ்..!
      (கொட்டாவிங்க)

      Delete
    2. வாழ்த்துக்கள் ஸ்ரீ

      Delete
  2. நாங்களும் வந்துட்டோம்ல.....

    ReplyDelete
  3. //ஒரு 'சிக்' பதிவு !//
    விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்... :)

    //நடப்பாண்டின் இதழ்கள் சார்ந்த quiz ஒன்றைக் கேட்டு வைத்தால் - சிலபல பகீர் நிஜங்கள் அம்பலமாகிடும் என்று படுகிறது//

    முதலில், கடந்த ஆண்டு இதழ்கள் பற்றி...

    'இன்றிரவாவது ஒரு கதையேனும் படித்தே ஆக வேண்டும்' என்ற உறுதியுடன் நிலைப்பேழையைத் துளாவியதில், கடந்த தீபாவளி வெளியீடுகள் கைகளில் சிக்கின...

    ஜேம்ஸ் பாண்டின் 'பனியில் ஒரு பிரளயம்'! இருபத்திச் சொச்ச பக்கங்களைக் கடப்பதற்குள் எழுந்த கொட்டாவிகளை சிரமத்துடன் விழுங்க, அவை பழைய பாண்ட் குறித்த பெருமூச்சுகளாக வெளியேறின. புதிய பாணி குறித்த அவசர முடிவுகளை விழிப்பானதொரு காலை வேளைக்கும், கொட்டாவி பாண்டை உறைக்குள்ளும் தள்ளிவைத்து..

    உடனிருந்த வில்லரை வெளியில் உருவ, பூதம் கிளம்பிய கதையாய் கொலை வெறியுடன் டைகர் ஜாக்! காதலும் கடந்து போகும் - ஒரே மூச்சில் வாசிக்க வைத்தது. அப்படியொரு துடிப்பான, பொழுது போக்கான, பழிவாங்கும் படக்கதை!

    படக்கதை ஏன் பழி வாங்கியது?, பழிவாங்குவது என்றிலிருந்து பொழுது போக்கானது? - போன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும்... கடந்த இரு மாத காலத்தில், பல்வேறு அரைகுறை வாசிப்பு முயற்சிகளினூடே, முழுவதுமாய் படிக்கத் தோன்றிய இரண்டாவது கதை இது; முன்னது, சிங்கத்தின் சிறு வயதில்!

    சில டெக்ஸ் வில்லர் கதைகளுமே, எக்கச்சக்க கதாபாத்திரங்களுடன், பக்கம் பக்கமாய் இலக்கின்றிப் பயணித்து, ஏகத்துக்கும் கடுப்பேற்றுவதுண்டு. டெக்ஸின் வண்ணச் சிறுகதைகள் குறித்து பேசாமல் விடுப்பதே நலம். இருப்பினும், இலகு வாசிப்பு என்று வரும் பொழுது... ம்ம்ம்... டெக்ஸ் டெக்ஸ் தான்! :)

    ReplyDelete
    Replies
    1. குட்!! நீண்டநாட்களுக்குப் பிறகு மினி LIC பில்டிங்!!

      EBFக்கு வரீங்களா கார்த்திக்?

      Delete
    2. // விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்... :) // என்ன ஒரு நகைச்சுவை உணர்வு இப்போ தான் கவனிக்கிறேன். செம்ம கார்த்திக்

      Delete
  4. 10-க்கு உள்ளே வநதுட்டேன் 🤝🏻🤳🏻

    ReplyDelete
  5. அண்டர்டேக்கர் அட்டைப்படம் - மிரட்டலோ மிரட்டல்! பச்சைநிறப் பின்னணியில் அந்த பைன் மரங்களும், பொருத்தமான தலைப்பும் அந்த எழுத்துருவும்.. ப்பா!! செம்ம்ம!!

    ReplyDelete
  6. Undertaker cover super.parvez arshad vaniyambadi.

    ReplyDelete
  7. அண்டர்டேக்கரின் அடுத்த ஆல்பமும் இரட்டை இதழே என்பது குஷியளிக்கும் செய்தி! முடிந்தால் அடுத்தவருட இறுதியிலேயே போட்டுத்தாக்க முயற்சி செய்யுங்கள் எடிட்டர் சார்!!

    ReplyDelete
  8. Erode function i participate JAGADEESWARAN

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜி. மீண்டும் சந்திப்போம்.

      Delete
  9. வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  10. ஈரோடு எக்ஸ்பிரஸ் இதழ்களை ஈரோட்டில் வாங்கிக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் ஈரோட்டில தான் இருப்போம்...

      Delete
    2. நாங்களும் ஈரோட்டில் தான் சார்..

      ( இருப்போம்..)

      Delete
    3. ஈரோடு எக்ஸ்பிரஸ் இதழ்களை சிவகாசி சிங்கத்தின் கைகளால் ஈரோட்டிலேயே பெற்றுக் கொள்வேனென்று உறுதியளிக்கிறேன்!

      Delete
    4. Vijay @ பெரிய சிங்கமா, மகன் சிங்கமா, அல்லது பேரன் சிங்கமா என்று சொன்னால் வசதிப்படும்!

      Delete
    5. மஹிக்கு அடுத்த நபராக நானும் புத்தகத்தை வாங்கிக்கிறேன் சார்

      Delete
    6. நாங்களும் ஈரோட்டில் தான் இருப்போம்...

      Delete
    7. ஈரோடு எக்ஸ்பிரஸ் இதழ்களை சிவகாசி சிங்கத்தின் கைகளால் ஈரோட்டிலேயே பெற்றுக் கொள்வேனென்று உறுதியளிக்கிறேன்!

      Delete
    8. ஈரோடு எக்ஸ்பிரஸ் இதழ்களை சிவகாசி சிங்கத்தின் கைகளால் ஈரோட்டிலேயே பெற்றுக் கொள்வேனென்று உறுதியளிக்கிறேன்!

      Delete
    9. ஈரோடு எக்ஸ்பிரஸ் இதழ்களை சிவகாசி சிங்கத்தின் கைகளால் ஈரோட்டிலேயே பெற்றுக் கொள்வேனென்று உறுதியளிக்கிறேன்!

      Delete
    10. நாங்களும் ஈரோட்டில் தான் சார்..

      ( இருப்போம்..)

      Delete
    11. ஈரோடு எக்ஸ்பிரஸ் இதழ்களை சிவகாசி சிங்கத்தின் கைகளால் ஈரோட்டிலேயே பெற்றுக் கொள்வேனென்று உறுதியளிக்கிறேன்

      Delete
  11. Cry மரு ஒட்டாமல் என்ன சார் செய்வார் அவர். நாம்தான்யெனா. டானா, கினாஓனா, சீனா கானா ஓஉவ்வே என்று போட்டு தாக்கிட்டோமே செனாஅனா பயப்படமாட்டாரா கார்ட்டூன் பார்த்து சாந்தமாயிருவார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா!! ராஜசேகர் ஜீ... ஹாஸ்யமா எழுதற அளவுக்கு தேறிட்டிங்க! மகிழ்ச்சி மகிழ்ச்சி!

      Delete
    2. கரூர் ராஜ சேகரன் @ I hope you are coming to Erode this time also!

      Delete
  12. நெய்வேலியில் நமது பதிப்பகத்துக்கு விருது சந்தோஷமான விஷயம். அண்ணாச்சி ரொம்பவே இதனை ரசித்து இருப்பார்.

    பிஸ்டலுக்கு பிரியாவிடை பில்டப் போதும் சார், ஈரோட்டில் வந்து புத்தகத்தை வாங்கி படித்து விட்டு சொல்லுகிறேன்.

    வயது கேட்டதும் ஓடிய கார்த்திகேயனுக்கு நீங்கள் குத்து மதிப்பாக (அதாவது உங்கள் வயதை விட ஒரு பத்து வயசு குறைவாக :-)) ஒரு வரிசை போட்டு டிக்கெட் எடுக்க. குறிப்பு: அவரு எப்போதும் தனது நண்பர்களுடன் காரில் வருவார்; பேசாமல் பெட்ரோல் செலவுக்கான பணத்தை கொடுத்து விடலாமே :-).

    ஆக அடுத்த வருட சந்தாவில் வரப்போகிற கதை நாயகன் மற்றும் கதையில் பெயர் தெரிந்துவிட்டது, அதான் வெட்டியான் அண்டர்டேக்கர்; நன்றி பெவிக்கால் ராமசாமி சார்.

    ReplyDelete
  13. உள்ளேன் ஐய்யா!.கடைசி பெஞ்சிலிருந்து கரூர் பத்மநாபன்.( கானாவுக்கு கானா கரீக்டா?)

    ReplyDelete
  14. இந்த மாத புத்தகங்களில் நீரில்லை மற்றும் நிலமில்லை கதையை தவிர அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன்; இதில் டாப் லக்கி இரண்டாவது நி.ம.நி.

    நீரில்லை நிலமில்லை: முதல் 15 பக்கங்கள் படித்து விட்டேன், கதையின் உலாவரும் நண்பர்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் மனதில் நிற்கவில்லை, கதையை படிக்க பெரியதாக ஈடுபாடு மனதில் எழவில்லை. வரும் நாட்களில் சில மணிநேரம் ஒதுக்கி படிக்க போகிறேன், அதன் பின்னர் எனது விமர்சனத்தை எழுதுகிறேன். தற்பொதைய நிலவரம் நீ.நி கடைசி இடம்.

    ReplyDelete
  15. அண்டர் டேக்கர் கலக்குகிறது...இரவு நேரமாக இருப்பினும் உட்பக்க சித்திர ப்ரிவ்யூ ஆஸம்...தங்கள் செய்தி மீண்டும் ஒரு முறை முன்பாக இதழ்களை படித்து இருந்தாலும் இதழ் வெளியாகும் அருகாமையில் மீண்டும் ஒரு முறை படிப்பது சிறப்பு என்பதை அறிந்து கொண்டேன்.எனவே அண்டர்டேக்கர் சார் கமான் ..:-)

    ReplyDelete
  16. எனக்கு ஒரு டவுட்டு...

    போன முறை இலவச டெக்ஸ் வண்ண சிறுகதைகளை இணைத்து பாக்கெட் சைஸில் விலைக்கு வந்த்து போல
    அந்த சிறு டெக்ஸ் இதழ்களின் தொகுப்பு விலைக்கு வருகிறதா சார்..?

    ReplyDelete
  17. //பதிப்பகம் துவங்கியிருக்கும் ஒரு நெடுநாள் நண்பர், "இரத்தக்காட்டேரி" தொடர் ஒன்றினை உருவாக்கியுள்ளார் ! சித்திரங்கள் சூப்பர் என்ற நிலையில் //

    கதையும் சூப்பர் என்றால் முயற்சிக்கலாம்.
    இந்த நண்பர் சிவகாசி நண்பரா?

    ReplyDelete
  18. ஈரோடு எக்ஸ்பிரஸ் இதழ்களை ஈரோட்டில் பெற்றுக் கொள்கிறேன் சார்

    ReplyDelete
  19. ஒரு முற்றிலும் புதிய சூழலில் பயணிக்கும் 4 பாகங்கள் கொண்ட இந்த ஆல்பத்தை படித்து முடிக்கும் தருணத்தில் ஒரு நிறைவு உங்களுக்குள் அலையடிக்காவிடின் நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்ளுவேன் ! Fingers crossed

    #####₹₹


    நானுமே....:-)

    ReplyDelete
    Replies
    1. ஆகஸ்டில் எந்த புத்தகம் முதல் இடம் பிடிக்க போகிறது என்று ஆவலுடன் காத்து இருக்கிறேன்.
      1. Undertaker
      2. நித்தமும் யுத்தம்
      3. பிஸ்டலு க்கு பிரியா விடை
      4. Surprise Tex
      5. Cartoon

      I'm waiting

      Delete
  20. தியதொரு பதிப்பகம் துவங்கியிருக்கும் ஒரு நெடுநாள் நண்பர், "இரத்தக்காட்டேரி" தொடர் ஒன்றினை உருவாக்கியுள்ளார் ! சித்திரங்கள் சூப்பர் என்ற நிலையில் - இந்த பாணிக்கதைக்கு நாம் 'ஜே' போடுவோமா ? என்ற யோசனை என்னுள் !


    #####₹₹₹


    கதை (யும் ) சிறப்பு எனில் நோ ப்ராபளம் சார்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். கதையும் சிறப்பு என்றால்

      Delete
  21. ஈரோடு முன்பதிவு: அருண்குமார் from கரூர், நேரில் ஆஜராவேன்.

    ReplyDelete
  22. 41 வது பதிவு.மேதகு ஆசிரியருக்கு வணக்கம் 🙏. ஈரோடு சிறப்பு இதழ்களை ஈரோட்டில் பெற்றுக் கொள்கிறேன் ஐயா.

    ReplyDelete
  23. தற்போதைய எதிர்பார்ப்புக்குரிய புத்தகங்களில் அண்டர்டேக்கர் தான் முன்னனியில் நிற்கிறார். முதல் கதையிலே பட்டையை கிளப்பியவர். இதிலும் அதே சரவெடி தொடரும் என நினைக்கிறேன். ஈரோடு ஸ்பெஷல் முன்பதிவுக்கு மூன்று புத்தகங்கள் பதிந்துள்ளேன் சார். மூன்றையும் ஈரோட்டிலே வந்து பெற்றுக் கொள்கிறேன். மறக்காமல் கொண்டு வந்திடுங்கள். அதே போல இதுவரை வந்த இரண்டு மினி டெக்ஸ் அடுத்த மாதமும் ஒரு மினிடெக்ஸ் (சந்தா ப்ரீ) வருவதையும் ஒன்றாக ஒரே புத்தகமாக ஈரோட்டுக்கு கொண்டு வந்தால் நிறைய பேர் வாங்க வாய்ப்புண்டு சார்.வாய்ப்பிருந்தால் செயல்படுத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. // இதுவரை வந்த இரண்டு மினி டெக்ஸ் அடுத்த மாதமும் ஒரு மினிடெக்ஸ் (சந்தா ப்ரீ) வருவதையும் ஒன்றாக ஒரே புத்தகமாக ஈரோட்டுக்கு கொண்டு வந்தால் நிறைய பேர் வாங்க வாய்ப்புண்டு சார்.வாய்ப்பிருந்தால் செயல்படுத்துங்கள். //

      good suggestion

      Delete
    2. நம்ம பாண்டி கெஸ்ட் ஆப் ஹானரை கடத்திக்கிட்டு வர்ற பொறுப்பு உங்களோடது கலீல்!

      Delete
    3. Erode VIJAY14 July 2019 at 07:18:00 GMT+5:30
      நம்ம பாண்டி கெஸ்ட் ஆப் ஹானரை கடத்திக்கிட்டு வர்ற பொறுப்பு உங்களோடது கலீல்!

      ம்க்கும்... அவர நாந்தான் கடத்திக்கிட்டு வர்றனும் ஜி !

      Delete
    4. Erode vijay

      சீப் கெஸ்ட் ரொம்ப தீவிரமாக இருக்கிறார் 😜எனக்காக இல்லாவிட்டாலும் அவருக்காக நான் வந்தே ஆகணும் போல. 😂

      Delete
  24. ///ஈரோட்டுப் புத்தக விழாவின் போது - நடப்பாண்டின் இதழ்கள் சார்ந்த quiz ஒன்றைக் கேட்டு வைத்தால் - சிலபல பகீர் நிஜங்கள் அம்பலமாகிடும் என்று படுகிறது !! கதவுகளை பூட்டிய கையேடு quiz போட்டியினை நடத்தியே தீரணுமோ ?///

    சார் கதவைப் பூட்டும் வேலையை நானே செஞ்சுடறேன் சார்! பூட்டிட்டு, கதவுக்கு வெளியே நின்னுக்கறேன்!

    ReplyDelete
    Replies
    1. // சார் கதவைப் பூட்டும் வேலையை நானே செஞ்சுடறேன் சார்! பூட்டிட்டு, கதவுக்கு வெளியே நின்னுக்கறேன்! //

      I will be your assistant for this job Vijay :-)

      Delete
    2. வழிந்து மொழிகிறேன்

      Delete
    3. பூட்டுக்கு இந்த பக்கமா நான் நின்னுக்குறேன் செயலரே..:-(

      Delete
  25. // ///ஈரோட்டுப் புத்தக விழாவின் போது - நடப்பாண்டின் இதழ்கள் சார்ந்த quiz ஒன்றைக் கேட்டு வைத்தால் - சிலபல பகீர் நிஜங்கள் அம்பலமாகிடும் என்று படுகிறது !! கதவுகளை பூட்டிய கையேடு quiz போட்டியினை நடத்தியே தீரணுமோ ?///

    கதாபாத்திரம் பெயர் எல்லாம் மறந்து விட்டது, அதே போல் கதையில் வரும் இடம் பெயர்களும் மறந்து விட்டது. ஆனால் எல்லா கதைகளையும் அந்த மாதமே படித்து விடுவேன், இந்த மாதம் நீரில்லை நிலமில்லை விதிவிலக்கு!

    ReplyDelete
  26. ///ஈரோட்டுக்கு நமது 2 ஸ்பெஷல் விருந்தினர்களை டெம்போ வைத்துக் கடத்தினால் தான் உண்டு போலும் !! வயசைக் கேட்ட உடனே தெறித்து ஓடிய நண்பர் ஒருபக்கமெனில், பொருளாளர் இன்னொரு பக்கம் கன்னத்தில் மருவோடே க்ளினிக் சென்று வருவதாய்க் கேள்வி !! Operation கிட்நா ??
    ///

    டெம்போ வச்சுக் கடத்தி..
    மீட்டிங் ஹாலில் சேரில் கட்டிவைத்து..
    மைக்கில் பேசச் சொல்லி மிரட்டி..
    ரூமுக்குள் தள்ளிப் பூட்டி...

    கெஸ்ட் ஆப் ஹானருங்களை நாம ஹானர் பண்ற விதமே அலாதியானதுதான்!

    'ஆப் ஹானர்'க்கே இந்த நிலைமைன்னா.. 'ஃபுல் ஹானரின்' நிலைமையை நினைச்சுப் பாருங்க.. ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. புல் ஆனர் கிடைச்சவங்களை்நடுவில உக்கார வைச்சு இரண்டு இசைச்சக்கரவர்த்திகள் நாள் முழுக்கப் பாடுவாங்களாம்.

      Delete
    2. 😭😭😭 Excuse me... What is the procedure to get books in my home place...??

      Delete
    3. // கெஸ்ட் ஆப் ஹானருங்களை நாம ஹானர் பண்ற விதமே அலாதியானதுதான் //

      :))) இதுதான் கொஞ்சம் உதறலா இருக்கு. :(

      Delete
    4. அந்த ரெண்டு இம்சை சக்ரவர்த்திகள்ல ஒர்த்தர் தெர்யும்....
      இன்றொருத்தர் கி ஆ க வா.......

      Delete
    5. அவுங்க பாடினா இவருக்கு சுதி இறங்கி விடுமே

      Delete
    6. போன வருஷம் எதிர் ரூம்ல இருந்த எனக்கே தாங்க முடீல ன்னா கெஸ்ட் ஆஃப் அஆனர்ஸ் கதிய நெனச்சா பயம்மா இருக்கு...

      Delete
    7. இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை..!🎵🎵🎵🎶🎶

      Delete
    8. கடுப்பேத்தறீங்க ப்ரண்ட்ஸ்... மைக்கைப் புடுங்கி, மேடையிலேயே 'நின்னுக்கோரி..ஈ..ஈ.. வர்ணம்' பாட்டை KOK, நான், JK மூனுபேரும் பாடிடுவோம்.. அப்புறம் ரத்தக்களரி ஆகிப்புடும்.. சொல்லிட்டேன்!

      Delete
    9. JK யா யாரு அந்த பாகவதரு.

      Delete
    10. மேச்சேரி தாத்தாவோட சாரி தாதாவோட ரைட் ஹேண்டு ...;-)

      Delete
    11. அவுரு மேச்சேரி தாத்தாவோட சாரி தாதாவோட லெப்ட் ஏண்டு ..

      :-)

      Delete
    12. லெப்டா ,ரைட்டா ரைட்டா சொல்லுங்க தலைவரே.!

      Delete
    13. நின்னுக்கோரி வர்ணம் பரவால்லையே. எங்க கண்ணர் சங்கரான்னு சங்கராபரணம் பாட்டை பாட ஆரம்பிச்சா என்ன ஆகும் தெரியுமா?

      Delete
    14. @J
      //JK யா யாரு அந்த பாகவதரு.//

      இந்த தடவை ஈரோடு வாங்க...பாட்டைக் கேளுங்க...

      Delete
  27. எடிட்டர் ஐயா நானும் முன்பதிவு இதழ்களை ஈரோட்டில் பெற்று கொள்கிறேன்.

    ReplyDelete
  28. //அண்டர்டேக்கரின் முதல் ஆல்பத்தினை வாசித்திருக்கா நண்பர்களுக்கு இதன் கதை மாந்தர்களைப் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமிருக்கக்கூடும் ! So முதல் ஆல்பம் வாசித்து பிற்பாடே இதனுள் நுழைதல் நலமென்பேன் !!// ஏற்கனவே மறு மறு வாசிப்பை தொடங்கி விட்டேன்.

    ReplyDelete
  29. ###ஈரோட்டுக்கு நேரில் வருகை தந்து முன்பதிவு செய்த இதழ்களைப் பெற்றுக்கொள்ளவிருக்கும் நண்பர்கள் ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ் ; அல்லது இங்கேயே கூட கைதூக்கிடுங்களேன் ? உங்கள் இதழ்களை கையோடு எடுத்து வருவதில் கடைசி நிமிட குழப்பங்களைத் தவிர்க்க ஆசை !!
    #####
    நான் ஈரோட்டில் வாங்கிக் கொள்கிறேன் சார்.

    ReplyDelete
  30. // ஈரோட்டுக்கு நேரில் வருகை தந்து முன்பதிவு செய்த இதழ்களைப் பெற்றுக்கொள்ளவிருக்கும் நண்பர்கள் ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ் ; //
    அனுப்பிடலாம் சார்....

    ReplyDelete
  31. // . ஈரோடு எக்ஸ்பிரஸ் இதழின் prime ஆல்பமான "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" செம மிரட்டலாய்த் தயாராகி வருகிறது !! இது அழகானதொரு படைப்பென்பது எனக்கு மேலோட்ட வாசிப்பின் போதே புலனானது. //

    ஆவலுடன் வெயிட்டிங் சார்

    ஞாயிறு காலை வணக்கம் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  32. // ஈரோட்டுக்கு நமது 2 ஸ்பெஷல் விருந்தினர்களை டெம்போ வைத்துக் கடத்தினால் தான் உண்டு போலும் //

    உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாமே சார். எப்படியாச்சும் பொடிநடையா நடந்தோ, இல்ல சைக்கிளை மிதிச்சோ வந்து சேர்ந்திரேன் சார். தவிர எனக்கு பஸ் ரொம்பவே அலர்ஜி. பஸ் படியில கால் வச்சோனோ இல்லையோ, அடி வயிற்றிலிருந்து லொடக்னு வர ஆரம்பிச்சிரும் (இப்போ கொஞ்சம் தேவலாம்). ரயிலில் உங்கள் ஸ்பான்சரில் வரலாம் என்றால், இரண்டு வேலை நாட்கள் கபளிகரம் பன்னிடும். ஆபிஸில் நான் HR Dept. என்பதால் நிறைய முன்னேற்பாடுகள் செய்யவேண்டிவரும். இதனாலேயே காரில் ஊர் சுற்றி பழகியாச்சு. எனக்காக எந்த சிரமமும் உங்களுக்கு வேண்டாமே சார். எப்படியும் ஈரோட்டுக்கு ஆஜர் ஆகிடுவது எனது பொறுப்பு சார்.

    ReplyDelete
  33. ஈரோடு எக்ஸ்பிரஸில் இடம் கிடைக்குமா என்று தெரிலை..............
    நண்பேன்டாக்கள.....பாக்க முடியுமா ஆகெஸ்டு ஒண்ணு ரெண்டுல முடூவு பண்ணணும்...
    J

    ReplyDelete
    Replies
    1. அப்டி என்ன ரிப்ளை போட்டீரு எம்ஜியார் ஐயா....அஞ்சு தடவ....

      Delete
    2. நான் ஒரு ரிப்ளை தான் போட்டேன். அது அஞ்சுவாட்டி பதிவாகிட்டது.அதான் டெலிட் ஆல் கொடுத்துட்டேன்.

      Delete
    3. Something error. பதிவு திரும்ப ரிப்பீட் ஆகுது.checking in.

      Delete
    4. Something error. பதிவு திரும்ப ரிப்பீட் ஆகுது.checking in.

      Delete
  34. HR
    பேப்பே பே பே பே பேப்பர
    போட்டுருங்க சார்...

    ReplyDelete
  35. அந்த டாக்புல்டர் சாரி டாக்டர். எந்த ஊருங்க ......

    கடத்துர ப்ளான்ல நாங்கள் லாம் கெட்டி சட்னி கோஷ்டி....

    போன வருஷம் ஈடிட்டரையே கிட்நா பண்ண கி நா ரேஞ்ஜுல ப்ளான் பண்ணுனமாக்கும்...

    ReplyDelete
  36. N.சண்முகம்,திருச்செங்கோடு.
    "THE ERODE EXPRESS"
    சிறப்பு இதழ்களை, ஈரோட்டில் பெற்றுக்கொள்கிறேன் சார்...

    ReplyDelete
  37. நீ..நி..... naratory box இல்லாத காரணத்தினால்.....மீண்டும்....புத்தகத்தை....ரிவேர்ஸ் இல் புரட்ட வேண்டி உள்ளது.......படத்தை மட்டுமே பார்க்க வேண்டியுள்ளது




    அதே டெக்ஸ் கதையில்..
    கார்சன் வந்தார்....
    கோட்டைக்கு வெளியில்....
    அப்போது வேறு ஒரு இடத்தில்.....
    முன்பு....
    சலூனில்....
    நவஜோ கூடத்தில்..
    அதே சமயம்....

    என்று படிக்க...புரிய எதுவாக இருக்கும்....


    கதை களம்... எத்தனை ஆழமானதாக இருந்தாலும்....எளிதாக புரிய வைக்க வேண்டியது...ஆசிரியர் கடமை....எங்களுக்கு...நேர மிச்சம்....


    க்ராபிக் நாவல் பாணி என்றாலும்....இந்த காரணத்தினாலேயே....இவைகளை மீண்டும் படிக்க தோன்றுவதில்லை....


    காமிக் ஆசானுக்கு புரியனுமே.....ஹூம்.....

    ReplyDelete
    Replies
    1. /////இந்த மாத புத்தகங்களில் நீரில்லை மற்றும் நிலமில்லை கதையை தவிர அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன்; இதில் டாப் லக்கி இரண்டாவது நி.ம.நி.

      நீரில்லை நிலமில்லை: முதல் 15 பக்கங்கள் படித்து விட்டேன், கதையின் உலாவரும் நண்பர்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் மனதில் நிற்கவில்லை, கதையை படிக்க பெரியதாக ஈடுபாடு மனதில் எழவில்லை. வரும் நாட்களில் சில மணிநேரம் ஒதுக்கி படிக்க போகிறேன், அதன் பின்னர் எனது விமர்சனத்தை எழுதுகிறேன். தற்பொதைய நிலவரம் நீ.நி கடைசி இடம்.///////......



      இதையும் பாருங்க ஆசான்....

      Delete
  38. // ஈரோட்டுக்கு நேரில் வருகை தந்து முன்பதிவு செய்த இதழ்களைப் பெற்றுக்கொள்ளவிருக்கும் நண்பர்கள் ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ் ; அல்லது இங்கேயே கூட கைதூக்கிடுங்களேன் ? உங்கள் இதழ்களை கையோடு எடுத்து வருவதில் கடைசி நிமிட குழப்பங்களைத் தவிர்க்க ஆசை //

    எனக்கு ஒரு டவுட் சார். ஈரோட்டில் நேரடியாக பெற்றுக்கொள்ள ரூ.540/- என்று அறிவித்து விட்டீர்கள். அப்படியென்றால் யாரெல்லாம் ரூ.540/- முன்பதிவு செய்துள்ளார்களோ அவர்கள் ஈரோட்டில் நேரடியாக பெற்றுக்கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?! அதனை மட்டும் பிரித்து எடுத்து வந்துடலாமே? இதில் குழப்பம் ஏற்ப்பட வாய்ப்பில்லையே?!

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு நல்ல்ல கேள்வி.!

      Delete
  39. Good morning friends. Parvez arshad vaniyambadi.

    ReplyDelete
  40. Sir please inform the rate of surprise books tex and cartoon🤔🤔

    ReplyDelete
  41. ஆசிரியர் அவர்களே ஈரோடு சிறப்பு புத்தகங்களை ஈரோட்டில் பெற்று கொள்கிறேன். பதிவு பெயர்: R.P. அழகி சினேகா- சேலம்

    ReplyDelete
  42. நானும் சிறப்பு புட்டுக்களை ஈ ஓட்டிட்டே வாங்கிகிகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ரின் டின் கேன் @ ஆசிரியர் எப்படி அது நீங்கதான் என்று உங்கள் புத்தகத்தை எடுத்து வருவார் ? உங்களின் சந்தா பெயரை குறிப்பிட்டால் நலம் :-)

      Delete
    2. அதுக்கு தனியா மயில் அனுப்பி இருக்கேன்

      Delete
  43. நான் இன்னும் பணம் கட்டவில்லை. நாளை கட்டி விடுவேன்.

    நான் ஈரோட்டில் பெற்று கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Super Ganesh I'm waiting to see you in erode

      Delete
    2. சந்திப்போம் குமார்.

      Delete
    3. @கணேஸ்.

      இந்தத் தடவை வேண்டாத டெக்ஸ் புக்கெல்லாம் எடுத்துட்டு வந்துடுங்க. நம்ம டீல் நினைவிருக்கு தானே.

      Delete
  44. "Tex, says Vijayan, is one of his most favourite comic book characters. Tex was introduced in Tamil by Lion Comics around 1985. “He is still one of our flagship characters. He’s a lot like our Rajinikanth character and there’s no age restriction to get to it,” he adds with evident affection."


    Sir, Chandramuki is a massive hit movie to Rajini. It is not a typical superstar film. So why do you hesitate to publish the adventure of Tex vs Mefisto worrying that this story will spoil the image of Night Hawk?

    ReplyDelete

  45. லயன் காமிக்ஸ் 35ம் ஆண்டுமலர்...!!!!!

    *இம்மாத காமிக்ஸ் கோட்டாவில் சிறப்பிதழ் என்றவுடன் செலக்ட் ஆன இதழ் இது.

    *லயன் ஆண்டுமலர்களில் LMSக்கு அடுத்தபடியாக 2வது இடம் பிடிக்கிறது இதன் அட்டைப்படம்.

    ####உத்தம புத்திரன்####

    *ஆண்டாண்டு காலமாக வரும் லக்கியின் டெம்ளேட்டில் மற்றொரு சிரிப்பு வெடி. கதைக்களமே நையாண்டி என்பதால் நகைச்சுவை எளிதாக பீறிடுகிறது.

    *இந்த கதையில் பக்கத்துக்கு பக்கம், பிரேமுக்கு பிரேம் சிரிப்பு வர்லனாதான் ஆச்சர்யம். எத்தனை பேனல்கள் சிரிக்க வைக்கல என்ற போட்டியை வேணா வைத்து பார்க்கலாம்.

    *உத்தம் புத்திரனை எழுதும்போது வன்மேற்கின் அத்தனை விசயங்களையும் பகடி செய்யும் மூடில் மோரீஸ் இருந்திருப்பார் போல! டெக்ஸை கிண்டல் செய்திருப்பதற்கு ஒரு கர்ர்ரர்!

    *பூம்பூம் படலம், சூப்பர் சர்க்கஸ், அதிரடிப் பொடியன், பயங்கர பொடியன், புரட்சி தீ, தரைக்கடியில் தங்கம்.... போன்ற லக்கியின் ஆல்டைம் டாப்10ல் ஜஸ்ட் லைக் தட் இடம் பிடிக்கிறது.


    ####பாரிஸில் ஒரு கெளபாய்####

    *இது தான் ரொம்ப நிறைவை தந்த கதை.

    *கொஞ்சம் பிசகினாலும் வரலாற்று சம்பவங்களை விவரிக்கும் டாக்குமெண்டரி ஆகிடக்கூடும் என்ற கதைகளன் நேர்த்தியாக கையாளப்பட்டு இருந்தது.

    *டால்டன்ஸ்கள்ல இருந்து நியூயார்க் போய், பாரீஸ்க்கு பயணித்து ஜாலியான ஊர் சுற்றும் படலம். நகைச்சுவை தெறிக்க வுடலனாலும் தேவையான அளவு கொண்டு வந்துட்டதே இதன் வெற்றி.

    *பிரெஞ்சு பழக்க வழக்கங்களை சின்ன சின்ன விசயங்களில் வியக்க வைக்கும் அளவு சொல்லப்பட்டுள்ளது வெகுவாக கவர்கிறது.

    *களைமாக்ஸ் மட்டும் சட்டுனு முடிஞ்சிடுது. சிரிக்க வியக்க பாரீஸ் போகும் லக்கி உத்திரவாதம்.


    ####2கதைகளிலும் இயல்பான பேச்சு நடை கையாளப்பட்டு இருந்தது ரொம்பவே நன்றாக இருந்தது.

    ####ஜாலி ஜம்பர் பேசும் வசனங்கள் ஹைலைட். பாராட்டு வாங்குறதுக்கு அது துடிக்கும் துடிப்பு செம. பாராட்டு கிட்டியதும் அதன் பாவனை நச்.

    ####ஒரே ஒரு விசயம் மட்டும் தவிர்த்து இருக்கலாம். மாணவர்கள், சிறார்கள் அதிகப்படியாக லக்கியின் புக் வாங்கும் இன்றைய சூழலில், "கஸ்மாலம்" & "நாதாரி"---போன்ற பதங்களை கட்டிங் செய்து இருக்கனும். பிள்ளைகளுக்கு இதைப்போன்ற பதங்கள் உள்ள புக்கை வாங்கித்தர தயக்கம் வரலாம். எல்லா லக்கி புக்லயும் இப்படி ஓரிரு வார்த்தை இருக்குமோ என நினைத்து விட்டால், சிக்கல். அடுத்த வெளியீடுகளில் இதை தவிர்க்கவே இங்கே இதை குறிப்பிடுகிறேன்.

    ####மொத்தத்தில் லயன் ஆண்டு மலர் முழு நிறைவான இதழ்.
    ஒவ்வொரு மாதமும் ஒரு கார்டூன் இருக்காதோ என்ற நினைப்பு வரத்தான் செய்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
    டெக்ஸ் இல்லா மாதங்களில் லக்கி இருந்தா சிறப்பு என்பது என் எண்ணம் மட்டுமே.


    ReplyDelete
    Replies
    1. // *பூம்பூம் படலம், சூப்பர் சர்க்கஸ், அதிரடிப் பொடியன், பயங்கர பொடியன், புரட்சி தீ, தரைக்கடியில் தங்கம்.... போன்ற லக்கியின் ஆல்டைம் டாப்10ல் ஜஸ்ட் லைக் தட் இடம் பிடிக்கிறது. // கண்டிப்பாக இடம் பிடிக்கிறது.

      Delete
    2. // இது தான் ரொம்ப நிறைவை தந்த கதை. // எனக்கும் நிறைவை தந்தது. ஓவியங்கள் அருமை. பாரிசில் ஒரு கௌ பாய் லக்கி லூக் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை ஐயமற நிரூபித்தது.

      Delete
    3. // *ஆண்டாண்டு காலமாக வரும் லக்கியின் டெம்ளேட்டில் மற்றொரு சிரிப்பு வெடி. கதைக்களமே நையாண்டி என்பதால் நகைச்சுவை எளிதாக பீறிடுகிறது. // ஆண்டாண்டு காலமாக வரும் டெக்ஸ் டெம்ப்ளேட் ஐ ரசிக்கும் நீங்கள் லக்கி க்கு இப்படி கூறுவது 🤔

      Delete
    4. இரு கதைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிகாட்ட "டெம்ப்ளேட்" என்ற வார்த்தை!

      பாரிஸில் லக்கி-நார்மலான கதையோட்டம் அல்லவே!-அட்லீஸ்ட் என் பார்வையில்....

      Delete
  46. நித்திரை மறந்த நியூயார்க்.

    சத்தியமா இப்படி ஒரு க்ளைமாக்ஸ் ஸேட முடியும்ன்னு எதிர்பார்க்கல.

    உண்மையில் கதை என்ன இப்படி இருக்கு, கோர்வையாக இல்லையே என்று நினைத்தேன்.

    ஆரம்பத்தில் தியேட்டரில் வரும் சைக்கோ கொலைகாரன் என்ன ஆனான்?. குதிரை ரேஸ்கோர்ஸில் ஏன் பைக் ரேஸ் நடக்கிறது?. ஒரு புத்தகம் புல்லட்டை எப்படி தடுக்கும்?.ஆனாலும் ஏதோ சரியாக இருப்பது போன்று தோன்றியது.



    லுஸூதனமான காமிக்ஸூ இருக்கேன்னு நினைச்சேன். ஆனால் அந்த லுஸூதனம்தான் கதையே என்று முடிந்தபோது. எழுந்து நின்று கை தட்டும் படலம். அருமை.

    ஹிரோவோடு ஒன்றாக இருக்கும் தாத்தா ஏதோ விதத்தில் கதைக்கு முக்கியமாக இருப்பார் என்று நினைத்தேன்.

    நான் நினைத்தது சரி என்றாலும், நினைத்தது மாதிரி முடியவில்லை.

    கி.நா வில் அழுத்தமான வசனங்கள் இருக்கும். இதிலும் அழுத்தமான வசனங்கள் நிறைவே உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. //
      ஹிரோவோடு ஒன்றாக இருக்கும் தாத்தா ஏதோ விதத்தில் கதைக்கு முக்கியமாக இருப்பார் என்று நினைத்தேன். // நான் அவர் தான் வில்லன் என்று நினைத்தேன்.

      Delete
    2. // இதிலும் அழுத்தமான வசனங்கள் நிறைவே உள்ளது //
      வசனங்களில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளனர்,செதுக்கப்பட்ட வார்த்தைகள் போல,கூர் தீட்டப்பட்ட கத்தி போல...
      அழுத்தம் + ஆழம்....

      Delete
  47. நித்திரை மறந்த நியூயார்க்.

    எங்கும் வியாபித்து இருக்கும் இருட்டு ம் மழையும் நாலாபக்கமல்ல நாற்பது பக்கத்திற்கும் மேலாகவே துணைக்கு வருகிறது.


    எழுத்தாளர் & ஹீரோ என்று நம்பப் படுகிற ஜேக் ரஸ்ஸல் அறைத் தோழன் என்று நம்பப்படும் பெருசுவுடன் காலம் தள்ளுகிறார். தலையில் பாய்ந்த தோட்டா தனது கடந்த கால நினைவுகளைத் அழித்திருந்தாலும் தன் காதலியின் நினைவை மட்டும் பத்திரப்படுத்தியது விதிதான்! டாக்டர் என்று நம்பப்படுபவரிடம் மனோத்துவ சிகிச்சை பெற்றாலும், பலனின்றி விரக்தியில், நான் யார் ' என்ற கேள்விக்குறியோடு வாழ்கிறார்.

    போகுமிடமெல்லாம் பின்தொடரும் லோக்கல் பொறுக்கிகள் என்று நம்பப்பட்ட இருவர், ஏதோ ஒரு 'சரக்கை க் 'கேட்டு சாவடி அடித்து சித்ரவதை செய்து துன்புறுத்துகின்றனர்.ஏதோவகையான கடத்தலில் தானும் சம்பந்தம்பட்டதாக நம்புகிறார்.
    தாகசாந்தி செய்யுமிடத்தில் தன் நினைவில் மட்டுமே நின்ற காதலியை நேரில் பார்த்து பின்தொடர்கிறார்.அவள் நேரே குதிரைப் பந்தயம் நடக்கும் மைதானத்திற்குச் செல்ல, நம்மவர் அவளை நெருங்க,அங்கே டாக்டர் திடும்மென தோன்றுகிறார்.ஹீரோவைப் பின்தொடர்ந்த பொறுக்கியும் வந்து சேர,

    காதலி என்று நம்பப்பட்டவர் டாக்டரின் மனைவியாக,
    டாக்டர் என்று நம்பப்பட்டவர் வில்லனாக,
    குதிரை ரேஸ் என்று நம்பப்பட்டது பைக் ரேஸாக,
    பொறுக்கி என்று நம்பப்பட்டவர் போலீசாக.,
    சடுதியில் ஏற்படும் மாற்றத்தில் கண்கள் திடுக்கிட்டு ஆச்சரியத்தில் விரிந்தன.
    இப்படி ஏகப்பட்ட நம்பிக்கைகளை விதைத்து,
    பெருசு என்று நம்பப்பட்டவர் யார்?
    ஹீரோ என்று நம்பப்பட்டவர் யார்?
    என்று விளக்கும் க்ளைமாக்ஸ் அத்தனையும் சுக்குநூறாக மாற்றியமைக்க, மேற்க்கொண்டு நடக்கும் திருப்புமுனைகள் எக்கச்சக்க சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. மிக மிக சுவாரசியமாக இருந்தது

      Delete
    2. GP நல்ல விமர்சனம்....

      Delete
    3. 2020 லும் இதே போன்ற அற்புதமான களங்களை ஆசிரியர் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்....

      Delete
    4. அடுத்த வருடத்தில் இருந்து கிராஃபிக் நாவல்களை 6 இல் இருந்து ஒரு 9 அல்லது 12 ஆக மற்ற ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?

      Delete
    5. இரசிக்கும் விதமாக எழுதியுள்ளீர்கள்.

      Delete
    6. சூப்பர். புத்தகத் திருவிழாவில் இந்த கதையை மைக் பிடித்து எல்லோருக்கும் நீங்கள் தான் சொல்லனும்.

      Delete
    7. ///காதலி என்று நம்பப்பட்டவர் டாக்டரின் மனைவியாக,
      டாக்டர் என்று நம்பப்பட்டவர் வில்லனாக,
      குதிரை ரேஸ் என்று நம்பப்பட்டது பைக் ரேஸாக,
      பொறுக்கி என்று நம்பப்பட்டவர் போலீசாக.,
      சடுதியில் ஏற்படும் மாற்றத்தில் கண்கள் திடுக்கிட்டு ஆச்சரியத்தில் விரிந்தன.///

      வாவ்!!! அருமையா எழுதியிருக்கீங்க GP! ஆச்சரியப்படுத்தும் எழுத்துத் திறமை!! தொடர்ந்து கலக்குங்க!

      Delete
  48. நான் சிங்கங்களின் தலமையில், சிவகாசியில்,
    அங்கு பணிபுரியும் ஒருவரின் கரங்களில் பெற்று கொள்ள
    எண்ணுகிறேன்.
    நான் ஒவ்வொரு முறையும்
    புத்தகங்களை வாங்க
    சிவகாசி செல்லும் போது
    அவர்களிடமே பெற்றிருக்கிறேன்.
    இந்த முறையும் அதையே நாடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களது பெயர் அருமையாக உள்ளது.

      Delete
    2. புன்னகை ஒளிர் @ ஆசிரியர் எப்படி அது நீங்கதான் என்று உங்கள் புத்தகத்தை எடுத்து வருவார் ? உங்களின் சந்தா பெயரை குறிப்பிட்டால் நலம்

      Delete
  49. // ஈரோட்டுக்கு நமது 2 ஸ்பெஷல் விருந்தினர்களை டெம்போ வைத்துக் கடத்தினால் தான் உண்டு போலும் //


    டெம்போக்கு எதுக்கு சார் வீணா செலவு பண்ணிகிட்டு ?அந்த பெஸ்ட் ஆஃப் ஹானர்ஸுக்கு மட்டும் கேள்வித்தாள் கிடையாதுனு சொல்லிப் பாருங்களேன்.

    ReplyDelete
  50. // The Undertaker - ஆல்பம் # 3 & 4 ஒன்றிணைந்து ஒரே டபுள் ஆல்பமாய் இம்முறையுமே //
    ஆவலுடன்.....

    ReplyDelete
  51. // கதவுகளை பூட்டிய கையேடு quiz போட்டியினை நடத்தியே தீரணுமோ ? //
    படிச்சிட்டு விமர்சனம் போட்டவங்களுக்கு எல்லாம் போட்டியில் இருந்து விதிவிலக்காமே,உண்மையா சார்.....ஹி,ஹி,ஹி....

    ReplyDelete
    Replies
    1. இது அருமையான கருத்து நானும் இதை வழிமொழிகிறேன்.

      Delete
  52. Editor sir அந்த கால வேட்டை யர் கோவை புத்தக விழாவில் please 🙏

    ReplyDelete
  53. hellow kumar , how can you buy it when you are in salem?

    ReplyDelete
    Replies
    1. No sir my native is Salem. From 2014 I'm working in covai. So if by any chance we get the book in covai I'll buy it in covai book fair.

      Delete
    2. Very Good. I am working in Gandhipuram. So we can meet at book fair.

      Delete
    3. What about 11am on 21st. I'm working in இரத்தினபுரி.

      Delete
    4. ok. done. I am there on that time. we three meet there.

      Delete
    5. சந்திப்பு இனிமையானதாக அமைய என் வாழ்த்துகள்!

      Delete
    6. Thank you Very much for your greetings, my friend.

      Delete
  54. I am coming to erode to collect books.

    Thirunavukkarasu,Valkukkupparai, Coimbatore.

    ReplyDelete
  55. Me to Coimbatore, tell me the time. Let us meet on coming Sunday.

    ReplyDelete
  56. Will collect the books in erode.

    Prakash, Bengalore.

    ReplyDelete
  57. ஆசிரியருக்கு ஒரு வேண்டுக்கோள்....
    இந்தியா உலக கோப்பை வென்றால் சிறப்பு வெளியீடு உண்டு என்று சொன்னீர்கள்...அது தான் இல்லாமல் போய் விட்டதே😭😭😭😭😭😭..
    அரையிறுதி வரை சென்றதற்காக ஒரு சின்ன சிறப்பு இதழ் தரக்கூடாதா....

    ReplyDelete
  58. லயன் 35 வது ஆண்டு மலர்.

    நினைவுகூரத்தக்கவொரு தருணத்துக்கான கதைத்தேர்வு.இரண்டு கதைகளுமே மிகவும் இரசிக்க முடிந்தது.
    லக்கிலூக் அனைவருக்கும் பிடித்த கௌபாய்.இந்த இதழில் இடம்பிடித்த கதைகள் குறுகிய காலத்தில் அதிக முறை மறுவாசிப்புக்கு உள்ளானதாக இருந்தது.( மூனாவது தபாவா ஓடிக்னு கீது).
    உத்தம புத்திரன் முன்பே வாசித்த நினைவு இல்லை.வசனங்கள் அனைத்துமே சமகாலத்துக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.சிரிப்பு கதைகளில் ஆசிரியர் அசரடிக்கிறார்."லேட்டஸ்ட்டா அமேசான்ல குதிரை சாக்ஸ்னு ஒரு ஐட்டம் வந்திருக்கலாம் பாஸ் ஒரு ஜோடி ஆர்டர் போடலாமா? .............(வேற லெவல்ங்க எடிட்டர் ஸாப்..)

    லக்கி லூக் எப்பொழுதுமே கடமை தவறாத நீதிக்காவலனாகத்தான் பாத்திரப்படைப்பு மிளிரும்.ஏனைய கதாப்பாத்திரங்கள்தான் நகைச்சுவையாக அமைக்கப்படும் அல்லது காட்சிகள் நகைச்சுவையாக நகர்த்தப்படும்.ஆனால் லக்கி லூக் எப்பொழும் சூப்பர் ஹீரோதான்.

    பல இடங்களில் பலவிதமான சிரிப்புகளுக்கு உத்தரவாதமான இதழ்.படிக்க பாதுகாக்க இன்னுமமொரு பொக்கிசம்.
    பாரிசில் ஒரு கௌபாய் டால்டன் சகோதரர்களோடு ஆரம்பிக்கும் கதையில் உலகம் சுற்றும் வாலிபனாக லக்கி.
    கதையில் அடிநாதமாக இழையோடும் சர்வதேச அரசியலும் அதை கதையில் மறைமுகமாக நகைச்சுவையோடு கையாளப்பட்ட நேர்த்தியும் புது அவதாரில் வங்கியை முதன்மைபடுத்துகிறது.
    மோரிஸ் கோசினியின் கூட்டணியில் அரசியல் கலந்திருக்காது.ஆனால் புது படைப்பாளிகளிடம் கதையின் மையகருவே அரசியலும் அதை சிரத்தையோடு இயன்றவரையில் நகைச்சுவையாக வழங்குவதுமாக உள்ளது.லூட்டி வித் விக்கிக்குப் பிறகு பாரிசில் ஒரு கௌபாய் மூலம் லக்கி லூக் புது அவதாரம் மிகச் சிறப்பாக உள்ளதாக தோன்றுகிறது.
    படைப்பாளிகளுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை;நீரில்லை... நிலமில்லை... ஆல்பத்திலும் பங்காற்றியவர்களை அடையாளப்படுத்தவில்லை.இதை மறந்தும் தவிர்க்காமல் இருக்கலாம்.




    ReplyDelete
  59. புத்தகங்களை ஈரோட்டில் பெற்றுக் கொள்கிறேன்.

    1) Jagadeeswaran, Arantangi.

    2) Parthipan(Jagadeeswaran), Arantangi.

    ReplyDelete
  60. உஸ் ..அப்பாடா !!! வரவேற்புகள் ,திருமணங்கள் , என அலைந்து திரிந்ததில் காலி ப்ளவர் பக்கோடா ,கேரட் அல்வா , உளுத்தம்பருப்பு பாயாசம் இத்தியாதிகள் பற்றி நான்கு பக்க கட்டுரை எளிதாக எழுதிவிடலாம் ..
    ஆனால் காமிக்ஸ் தளத்தில் அவை பற்றி எழுதுவது உசிதமாகாது என்பதால் இதோ நித்திரை மறந்த நியூயார்க் ..
    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    சித்திரையில் வந்த சின்னா !!!!!

    பீர் அடித்து விட்டு வீட்டுக்கு போனால் பெண்டாட்டியிடம் மாட்டி கொள்ளாமல் தப்பிப்பது எப்படி ? என்கிற தமிழக மத்திய வர்க்க கணவன்மார்களுக்கு இன்றியமையாத கட்டுரையை படிக்கையில்தான் கதவை திறந்து உள்ளே வந்தான் சின்னா ...

    சின்னா இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சித்திரை ஆரம்ப நாட்களில் நாலாவது போர்ஷனுக்கு குடிவந்தவன் ....இருவருமே தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் என்பதை தெரிந்தவுடன் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரும் பிஜேபியும் போல பச்சக் என்று ஒட்டி கொண்டோம் ..
    உள்ளே நுழைந்த சின்னா என் டேபிளின் மேலே அமர்ந்தான்..

    ‘’என்ன சின்னா ? கிளம்பியாச்சா ? என்றேன் .
    ‘’ஆதி மஞ்சரியை கிளப்பிட்டிருக்கா’’ என்றான் சின்னா .
    ஆதிரை சின்னாவின் துணைவி . மஞ்சரி அவன் மகள் ..பிரசன்னா அவனது பையன் .
    சின்னாவின் குடும்பம் விசித்திரமானது ....என்வரையிலாவது ..
    சனிக்கிழமை மாலையானால் குடும்பமே வெளியே கிளம்பிவிடும் ..கோயில் ,பீச் என அதிகம் செலவில்லாத இடங்கள்தாம் ..
    ஞாயிறு காலை சாப்பிட்டுவிட்டு சாப்பாடு மூட்டை கட்டி கொண்டு பார்க் கிளம்பிவிடுவார்கள் ..புஸ்தக மூட்டையும்தான் ..
    பெரும்பாலும் காமிக்ஸ் புக்ஸ்தான் ..
    அதுவும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியபோது ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் டெக்ஸ் ஐந்துகதைகள் உள்ள தொகுப்பை எடிட்டர் வெளியிட ஆரம்பித்தவுடன் சின்னா பாடு கொண்டாட்டம்தான் ..ரெகுலர் டெக்ஸ் தனி ....
    ஆதிரை ஆரம்பத்தில் எல்லா கதைகளும் படித்தாலும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஏழாயிரத்தை தாண்டியபோது எடிட்டர் மென்மையான ரொமான்ஸ் காமிக்ஸ் கதைகளை வெளியிட ஆரம்பிக்க அவளின் ஆர்வம் அதிகமாயிற்று ...( இந்த இதழ்களை பிரசன்னா ,மஞ்சரி கண்களில் படாமல் இருக்க ஆதிரை ,சின்னா கையாளும் வழிமுறைகள் ஷெர்லாக் ஹோம்ஸை கூட மூச்சிரைக்க வைக்கும் ) வன்முறையை விட இயல்பான மனித உணர்வுகளுக்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்லவா ?
    ஆதிரையின் ஆர்வம் கட்டுகடங்காமல் போனது சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை தாண்டியபோது எடிட்டர் மாதம் ஒரு முறை அஸ்டேரிக்ஸ் வருடம் இருமுறை டின் டின் முழு கதைகள் என அறிவித்தபோதுதான் ...
    சந்தாதாரர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியபோது எடிட்டர் சிறப்பு பீடியாட்ரிக் சந்தா அறிவித்து ஸ்ம்ர்ப்ஸ் , குட்டி பென்னி , லியனார்டோ .இன்னும் பல புதிய சிறார் இதழ்களை வெளியிட்டபோது மஞ்சரி,பிரசன்னாவின் கால்கள் தரையில் பாவவில்லை ..
    காலை முதல் மாலை வரை காமிக்ஸ் வாசிப்பு ,இடையிடையே சிறு விளையாட்டு ,கொஞ்சம் கோன் ஐஸ் , பர்பி சில என மாலை குடும்பம் வீடு வந்து சேரும் ...

    இதோ இன்று ஞாயிறு அல்லவா ? குடும்பம் கிளம்பியாச்சு ..

    ‘’அப்பா ! கிளம்பிட்டோம் ...அம்மா கூப்பிடுறாங்க! ‘’ மஞ்சரியின் குரல் காரிடாரில் கேட்டது ..
    ‘சரி ! வர்றேன்’’ என்றபடி நியூசிலாந்து ஓபனிங் ஸ்பெல்லில் பெவிலியன் நோக்கி திரும்பி வந்த இந்தியன் தொடக்க வரிசை ஆட்டக்காரர்கள் போல விருட்டென சென்றான் சின்னா ..

    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    பதிவர் பற்றிய விளக்க பின்னுரை

    இருண்டதோர் வாழ்வு வாழும் ,தனிமையும் வெறுமையும் வாட்டும் ஒரு சிறந்த எழுத்தாளர்தான் கற்பனை கதாபாத்திரங்களினை ரஸ்ஸல் போன்ற உருவெளி பிம்ப மாயைகளாக உருவாக்க வேண்டும் என்பதில்லை ...

    ஒரு சாமான்ய காமிக்ஸ் ரசிகனும் பாசிடிவ் வைப்ஸ் நிரம்பிய சின்னாவின் குடும்பம் போன்ற உருவெளி பிம்ப மாயைகளாக உருவாக்கலாம் . :-)
    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    நி ம நி சித்திர வார்ப்பு ,கதை சொன்ன பாணியில் தனித்து தெரிகிறது

    ReplyDelete
  61. ///வயசைக் கேட்ட உடனே தெறித்து ஓடிய நண்பர் ஒருபக்கமெனில், பொருளாளர் இன்னொரு பக்கம் கன்னத்தில் மருவோடே க்ளினிக் சென்று வருவதாய்க் கேள்வி !! Operation கிட்நா ??///
    :-))
    lioncomics@yahoo.com –க்கு ஜிமெயில் அனுப்பியிருக்கிறேன் ..சார் !!

    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா ஒருவழியா இரண்டு சீப் கெஸ்ட் வருவதும் உறுதியாகி விட்டது!
      சீப் கெஸ்ட் உங்களுக்கு ஒரு advantage என்ன என்றால் நீங்கள் சீப் கெஸ்ட் என்பதால் quiz ப்ரோக்ராம்மில் இருந்து தப்பித்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் ! :-)

      Delete
    2. @ PfB

      அந்த மெயிலில் என்னென்ன சாக்கு போக்கு இருக்கோ?!! ரொம்ப சந்தோசப்பட்டுக்கிடாதீங்க!!

      Delete
    3. @ ஈவி..!! Sent you gmail too!!!

      Delete
    4. @ செனாஅனா

      ஏதாவது சாக்குபோக்கு தான் இருக்கும்னு நினைச்சு மெயிலை ஓபன் பண்ணினேன்.. உள்ளே இருந்ததோ சாக்கு நிறைய பூக்கள்!!

      மகிழ்ச்சி மகிழ்ச்சி! :)

      @ PfB

      ஒரு க்ளூ தரேன் : ஆகஸ்ட் 3ம் தேதி நாம ஒரு மெடிக்கல் கேம்ப் நடத்தணும்னு நினைச்சோம்னா.. ரொம்ப சுளுவா நடத்தி முடிச்சிடலாம்!! ஹிஹி!! :)

      Delete
    5. ஏன், டாக்டர் நர்ஸ்கள் புடைசூழ வருகிறாரா? ஹி...ஹி..

      Delete
    6. விஜய் @ அப்ப பல டாக்டர்கள் வருகிறார்கள் என சொல்லுங்கள்

      Delete
    7. சிவகாசி டாக்டர் ,அப்பறமா இன்னொரு டாக்டரு ,வேற யாரு இருக்கா...

      நாம தான் கம்பவுண்டர் ஆச்சே.....

      Delete
    8. ஒருவேளை மல்டி ஸ்பெஷாலிட்டி ஈரோடு ஃபுக் பேரோ......

      Delete
    9. ஈரோடு மெடூக்கல் கேம்ப்பு:

      நாள்: ஆ'கெஸ்ட்டு'3ந் தேதி...
      நேரம்: காலை 10 மணிக்கி ஆரம்பம்.
      மக்கா நாளு காலை 6 மணி
      வரை

      கடவுள் வாழ்த்து: KOK ( முத்தைத்தரு ஊத்தி திருநகை முத்த குருபரன் என ஊதும்)

      வரவேற்புரை: ஈரோட்டு பாகவதர் , பாத்ரும் SPB - TMSகுரலில் கலக்கும் (why this கொலவெறி பாடல்)

      வாழ்த்துரை: தலீவர் ( கந்தர்வ கான புயல் எட்டுக்கட்டை வேந்தன் TR மகாலிங்கம் குரலில் மிரட்டும்) இம்சை தமிழ் நீ செய்த பெருஞ் சோதனை....

      ஏற்புரை: ஷெரீப் என்ற பேரிக்கா மாப்ள - பாடல் (எஜமான் காலடிய வாரிவிட்டு நெத்தியில குட்டு வப்போம்)

      தொடர் உரை: ரம்மி ( அடங் கொப்பம் மவனே ஙகொப்பம் மவனே டண்டணக்கர சக்கர டண்டணக்கர...)

      சோதனை உரை: PFB ( ஒருநாள் போதுமா சாயங்காலம் கொங்கு புரோட்டா போதுமா.சால்னாவா. குருமாவா. நான் சாப்ட ஒருநாள் போதுமா)

      நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் காமிக்ஸ் அன்பர்கள் சீட்பெல்ட்டால் கட்டி ரவுண்டு பன் வாயில் பதில் சொல்லமுடியாமல் திணிக்கப்படும்.

      லீ ஜார்டன் அண்டர்கிரவுண்டு ஹாலின் கதவுகள் பூட்டி செயலாளர் காவல் நின்று பாடிக் தள்ளுவார்.

      மதிய சாப்பாடு உண்டு.
      அனுமதி இலவசம்...

      திக்பிரமை பிடித்து -நித்திரை மறந்த நியூயார்க் படித்த - காமிக்ஸ் ஞானவான்கள் நியாயமாக விக்கித்துப் போய் கேட்கும் குடிதண்ணீரைக்கூட மாட்டு ஊசியால் குத்தி drips ஏற்றுவார்கள்.சீப்கெஸ்ட் டெரராக சிரிப்புவெடிகளால் குத்தித் தள்ளுவார்.

      ஒருபய தப்பிக்க முடியாதபடிக்கு ஏடிட்டர் பேர் எழுதி அல்லாரு கழுத்திலும் தூக்குகயறு மாட்டுவாரு..

      மந்திரிச்சி விட்ட கோழியாட்டம் அல்லாரும் கழுத்தறுபட்டு கெடக்குறப்ப ....

      நன்றியுரை: நம்ப டீம் மொத்தமும் (சோதனை மேல் சோதனை போதுமாஆடா சாமி )

      Delete
    10. // ஏன், டாக்டர் நர்ஸ்கள் புடைசூழ வருகிறாரா? ஹி...ஹி..//
      நண்பர்கள் படைசூழ வருவார்கள்...

      // விஜய் @ அப்ப பல டாக்டர்கள் வருகிறார்கள் என சொல்லுங்கள் //
      பல டாக்டர்கள் என்ன பல் டாக்டர் கூட வரலாம்...

      Delete
  62. டியர் எடி,

    வெட்டியான் முன்னோட்டம், எதிர்பார்ப்புகளை எகிற செய்கிறது... அதற்கு முன்பு இம்மாத இதழ்களில் ரெண்டையாவது முழுவதும் படித்து கருத்திட முயல்கிறேன்.

    ஈரோடு சர்பரைஸ் இதழ்கள் இரண்டிற்கான விலையை மட்டும் அறிவித்து விட்டீர்கள் என்றால், முன்பதிவு பணம் அனுப்ப இலகுவாக இருக்கும். இம்முறை, தபாலிலேயே பெற்றுக்கொள்ள எண்ணம் ஆகவே.

    ReplyDelete
  63. ஆங்கிலத்திலேயே டெரராக மிரட்டும் கதை..தமிழில் நிச்சயம் மிரட்டல் வெற்றியடையுமெனில் அது அண்டர்டேக்கரே...சஸ்பென்ஸ் இதழ்களின் மீதான ஆர்வமும் பன்மடங்கு பெருகுகிறது. இரத்தக்காட்டேரியை முயற்சிக்கலாம்..ஒரு கடி கடித்து வைத்தால் தப்பில்லை..ஈரோடு திருவிழாவை சிறப்பிக்கவிருக்கும் அனைவருக்கும் நறுக்..நறுக்...வாழ்த்துக்களய்யா..ஹீஹீஹீ..கலரில் கிழவி கனவாக வந்து தொலைச்சிட்டிருக்கு..வடை..போண்டா..பஜ்ஜி...பை பை..

    ReplyDelete
  64. இரத்த காட்டேரி கண்டிப்பாக முயற்சிக்கவும். அடுத்த வாரம் blog -ல் ஒரு சில பக்கங்களை வெளியிடலாமே?

    ReplyDelete
  65. புத்தகங்களை ஈரோட்டில் பெற்றுக் கொள்கிறேன்.


    G. சக்திவேல், ஈரோடு.
    (முன் பதிவு பட்டியல் வரிசை எண். 32)

    ReplyDelete


  66. ராமு : "என்னாச்சு? ஏன் அந்த எடிட்டரின் முகம் அப்படி வெலவெலத்துப் போயிருக்காம்?!"

    சோமு : "ஓ அதுவா...?!! 'என்னுடைய இதழ்களை மொத்தமாய் ஈரோட்டு விழாவில் உங்கள் கையால் பெற்றுக் கொள்கிறேன்'னு எழுதறதுக்குப் பதிலா யாரோ ஒரு வாசகர் தவறுதலா 'என்னுடைய கைகளில் முத்தமாய் ஈரோட்டு விழாவில் உங்கள் இதழ்களால் பெற்றுக் கொள்கிறேன்'னு ஈமெயில் அனுப்பியிருக்காராம்!

    ReplyDelete
    Replies
    1. ///EV office laye sirichuten ///

      நேச்சுரலி! நாமதான் வீட்டுல சிரிக்கறதே இல்லையே!! ;)

      Delete
    2. ஆம்பள சிரிச்சா போச்சு
      கிடைச்ச சாப்பாடும் போச்சு

      பெண்ணே உனக்கென்ன ஆச்சு
      நெருப்பா கொதிக்குது பேச்சு

      Delete
    3. // ஆம்பள சிரிச்சா போச்சு
      கிடைச்ச சாப்பாடும் போச்சு //

      செம

      Delete
  67. சார் ஈரோடு எக்ஸ்பிரஸ் இதழுக்கு ஆன்லைனில் பணம் கட்டினேன். எனக்கு முன்பதிவு எண் எதுவும் வழங்கப்படவில்லை. ஈரோட்டில் எப்படி புத்தகத்தை பெற்று கொள்வது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்..

    ReplyDelete
    Replies
    1. சனிக்கிழமை காலை வாசக சந்திப்பின் பொது பெற்றுக் கொள்ள வேண்டும் நண்பரே ! ஸ்டாலில் இதனை collect செய்து கொள்ளும் ஏற்பாடுகள் இராது என்பதை நினைவூட்டுகிறேன் !

      Delete
  68. சார் நானும் ஈரோடு வருகிறேன் எனவே எனது புத்தகங்களையும் எடுத்து வாருங்கள்.

    ReplyDelete
  69. சார் ஈரோடு எக்ஸ்பிரஸ் சந்தா கட்டியுள்ளேன் ஈரோடுக்கு எடுத்துவாருங்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் சந்தா பெயர் மற்றும் முகவரியை ஆசிரியருக்கு தெரிவித்தல் நலம் நண்பரே!

      Delete
    2. எந்தப் பெயரில்..என்றைக்கு -புக்கிங் செய்தீர்கள் ?என்று விபரங்கள் தேவை நண்பரே !

      Delete
  70. சார்! ஈரோடு எக்ஸ்பிரஸ் புத்தகங்களை ஈரோட்டில் பெற்றுக் கொள்கிறேன்.


    எம்.பூபதி,மேட்டூர்.
    (முன் பதிவு பட்டியல் வரிசை எண். 66)

    ReplyDelete
  71. Model question paper

    1) மாக்கிலிங் கோட்டை எந்த கதையில் வருகிறது?
    கோட்டை தளபதி பெயர்____________
    2) வல்லவர்கள் வீழ்வதில்லை புரட்சிப்படை எந்த தேசத்தைச் சேர்ந்தது? அதே படை XIIIன் கதையில் எந்தபாகத்தில் வருகிறது.
    ?
    3) குழிப் பெருச்சாளி என்ற வில்லன் , இரும்புக்கை மாயாவியுடன் போதும் சாகசம் ______________________
    4) டெக்ஸ் வில்லனின் இயற்பெயர் என்ன? வில்லனின் தாய் தந்தை பெயர்கள் ________________&________________
    5) பொம்மைகளின் பேரரசன் என்ற வில்லனுடன் ஸ்பைடரின் மயிர்கூச்செரியும் சாகசம் பெயர் ________________.
    வில்லன் எந்த கண்டத்திலிருந்து துயிலெழுந்து வந்ததாக கூறுவார்?
    அ) அண்டார்டிகா கண்டம்
    ஆ) லெமூரியா கண்டம்
    இ) அட்லாண்டிஸ் கண்டம்
    ஈ) மேற்சொன்ன ஏதுமில்லை.
    6) மாண்ட்ரேக்&லொதார் வசிக்கும் கோட்டையின் பெயர் ______________ அவரது சமையல்காரர் பெயர் ___________
    7)த ஸ்பை ஹூ லவ்ட் மீ - ஜேம்ஸ்பாண்ட் படம் _________________ காமிக்ஸ் கதை தழுவல்....
    8)லக்கிலூக்கின் ,தனிமையே என் துணைவன் பாடல் முழுமையாக இடம் பிடித்த கதை __________________
    9)டெக்ஸ் வில்லர் மேல் காதல் கொள்ளும் ஒரு விதவை இறுதியில் கணவனின் சகோதரருடன் செல்லும் கதை எது?
    10)துப்பறியும் வீரர் சார்லி கயிற்றின் மேல் நடந்து ஒருவரை மீட்கும் சாகசம் எது?

    ReplyDelete
  72. தனியொருவன் *The Lone Ranger

    அருமை, அடுத்த பாகத்தை விரைவில் எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  73. முன்பதிவு எண். ES228. ஈரோட்டில் பெற்றுக் கொள்கிறேன் sir.

    ReplyDelete
  74. 1)லக்கிலூக்கின் குதிரை பெயர் ஜாலி ஜம்பர்.
    அதே போல் கிட்ஆர்ட்டினின் குதிரை பெயர் _____________________
    2) மர்ம மனிதர் மார்டினின் சக மாணவர் எதிரியாகிவிடுவார்.அவரது பெயர்_____________.
    3)ரிப் கிர்பியின் காதலி பெயர்__________
    4)புளூ ஜீன்ஸ் பில்லீனர் லார்கோவின் பால்ய பெயர் என்ன? அவர் எந்த தேசத்தவர்?
    5) கேப்டன் டைகரின் புயல் தேடிய புதையலில் , விகோவின் தங்கம் மற்றும் கரன்சியை கைப்பற்றிய உடன் அவர் துப்பாக்கியால் கொல்லும் நபர் யார்? அதே கதையில் தன்னைத்தானே சுட்டு இறக்கும் நபர் யார்?
    6) ஜானி நீரோ வின் கவர்ச்சியான உதவியாளர்______________. தொழிலதிபர் ஆகிவிட்டாலும் ஜானி யாருடைய சொல்லுக்காக துப்பறிய ஒத்துக்கொள்வார்?
    7)ஷெரீப் டாக்புல் மற்றும் கிட் ஆர்ட்டின் ஒரு மகாராஜாவிற்காக பணத்தை காப்பாற்றிக் தரும் சாகசத்தில் கிட்ஆர்ட்டின் பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய உயிருள்ள பரிசு எது?
    8)சிகப்புக் தலை மர்மம் என்ன கதையில், பெர்ரிமேஸன், வில்லன்கள் எதற்காக அப்படி சிகப்புக் தலை வேண்டும் என்றுநா என்று இறுதியாக கண்டு பிடித்தார்?

    ReplyDelete
    Replies
    1. 9)தங்க கல்லறை கதையில் தங்கத் தோட்டாவை உபயோகிக்கும் மனிதர் யார்?
      10) கமான்சே கதை வரிசைகளின் கதாசிரியர் யார்? ஓவியர் பெயர் என்ன?

      Delete
    2. அச்சச்சோ...இதை பொதுவில் களமிறக்கி விட்டீர்களே சார்...?!! சத்தமிலாது எனக்கு அனுப்பியிருந்தால் 150 பிரிண்ட் போட்டு ஈரோட்டு எடுத்தாந்து ஒரு வழி பண்ணியிருக்கலாமே ?

      Delete