Sunday, July 28, 2019

WELCOME All !!

நண்பர்களே,

வணக்கம். புக்குகள் வெளிவருவதற்கு முன்பாய் - "நான் ஓங்கி அடிச்சா ஒண்ணே முக்கா டன் ; வூடு கட்டி அடிச்சா ரெண்டே முக்கா டன் !!"  என்று பன்ச் பேசும் நம் புலவர்களுள் பெரும்பகுதியினர் - புக்குகள் கைக்குக் கிடைத்த பிற்பாடு - கொஞ்ச நாட்களுக்காவது 'தொடர்பு எல்லைக்கு அப்பாலிக்கா' போயிடுவதே வழக்கம் !! ஆனால் surprise ..surprise ...மினியோ மினி டெக்ஸை தாளிப்பதற்காகவேணும் முதல் தினமே இத்தனை comments விழுந்திருப்பதில் ஆச்சர்ய சந்தோஷம் !! And சமீப மாதங்களது சொதப்பலுக்குப் பிற்பாடு ST கூரியர் தீயாய்ப் பணியாற்றியிருப்பது இன்னொரு ஆச்சர்யம் !! 

முன்னமே எப்போதோ நான் குறிப்பிட்டது போல - டெக்ஸ் எனும் ஜாம்பவானுக்கு கதைகள் உருவாக்கிட கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட creative teams அணி அணியாய் பணியாற்றி வருகின்றன ! அந்த  main creative team-களுக்கு சதா நேரமும் புது ஆற்றலாளர்கள் அவசியப்பட்டுக்கொண்டே இருப்பது வாடிக்கை ! So அதற்குப் புரமோஷன் காண விரும்பிடும் புதுப் படைப்பாளிகளின் பரிசோதனைக் களங்களே இந்த Color Tex குட்டிக் கதைப்படலங்கள் ! இங்கு சோபிக்கும் புதியவர்கள் சன்னம் சன்னமாய் அடுத்த லெவல்களை நோக்கிய பயணங்களுக்கு தேர்வாகிறார்கள் ! இப்போதைய "தகிக்கும் மெக்சிகோ" பாணியிலான not so impressive கதைகளின் படைப்பாளிகள் - அடுத்த கட்டத்துக்கு முன்னேறச் சிரமம் கொள்வர் ! So இது amateur-களின் ஆடுகளங்கள் எனும் போது இத்தகைய ப்ளஸ் & மைனஸ் இருப்பது சகஜமே !! லக்கி லூக்கின் சமாச்சாரத்தில் கூட இந்த up & down தரங்களைப் போன மாதம் கண்கூடாய்ப் பார்த்தோமே ? 1971-ல் டாப் படைப்பாளிகளின் கைவண்ணத்தில் உருவான "உத்தம புத்திரன்" பட்டையைக் கிளப்பியிருக்க - அதனோடு கைகோர்த்து வந்த latest ரிலீசான புதுப் படைப்பாளிகளின் கைவண்ணத்திலான "பாரிசில் ஒரு கௌபாய்" ரொம்பவே மித ரகம் !! Masters will be masters & சிஷ்யப் புள்ளைகள் அந்த உச்சங்களைத் தொடும்முன் தண்ணீர் குடித்து விடுகிறார்கள் ! 

"தகிக்கும் நியூ மெக்சிகோ" கதையின் ஒண்ணேகால் வசனங்களை ஆங்கிலத்தில் ஒரு தம்மாத்துண்டு தாளில் பார்த்த நொடியே "அண்ணனுக்கு ஒரு மண்டகப்படி waiting !!!" என்று எனக்குள் அசரீரி ஒலித்தது ! வண்டி வண்டியாய் வேலைகள் குவிந்து கிடக்கும் சூழலில் இதனை தவிர்த்து விட்டு - வேறொரு கதையை உள்நுழைக்க அவகாசமிருந்திருக்கவில்லை !! So மன்னிச்சூ guys !! நீங்கள் வெறும் 16 பக்கங்களைப் பார்த்த கணமே பொங்கியெழுந்து சாத்துவீர்கள் என்பதை உணர்ந்தே - அடுத்த இணைப்பானது 48 பக்க நீளத்தில் இருந்திடுமென்பதையும் கடைசிப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன் ! So அடுத்த அந்த சாகசம் இந்த 'சோகசத்தை' ஈடு செய்யுமென்று நம்புவோமாக !!  

Looking ahead, அடுத்த பதிவுக்கு முன்னே காத்திருப்பது நமது ஈரோட்டுப் புத்தக விழாவும், நமது சந்திப்பும், ஸ்பெஷல் இதழ்களின் ரிலீஸுமே என்பதால் - இதோ அதற்கான வரவேற்பு உங்கள் அனைவருக்கும் !!
எப்போதும் போல இம்முறையும் சீனியர் எடிட்டர் & ஜூனியர் எடிட்டர் + நமது கருணையானந்தம் அவர்களுடன் ஈரோட்டில் வரும் சனி காலை உங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பேன் ! அந்த மாமூலான ரவுண்டு பன்னுமிருக்கும், கொறிக்க சமாச்சாரங்களுமிருக்கும், மதிய (சைவ) உணவுமிருக்கும் என்பதால் - எனது மாமூலான மொக்கைகளைப் பொறுத்துக் கொள்ள நிறையவே காரணங்கள் இருக்கும் என்று சொல்வேன் !! பற்றாக்குறைக்கு சின்னதாயொரு அட்டைப்பட ஓவியக் கண்காட்சியினைஅந்த ஹாலின் ஒரு மூலையில் அமைத்திடும் பொருட்டு கொஞ்சம் பெயிண்டிங்குகளை கொண்டு வரவும் திட்டமுள்ளது !! So எப்போதும் போலவே ஜாலியாய் ஆஜராகிடக் கோருகிறேன் folks - இயன்றால் குடும்பத்தோடே !! அந்த ஒரு காலைப் பொழுதுக்காவது இந்த "பொம்மை புக் குடும்பம்" அடிக்கும் லூட்டிகளை இல்லத்தரசிகளும் கண்டு கழிக்கட்டுமே ?

அன்றைய பொழுதின் நம் பிரதான நோக்கம் - ஸ்பெஷல் இதழ்களின் ரிலீஸ் என்பதால் உங்களின் முன்பதிவுப் பிரதிகளும் டப்பிகளில் அங்கு காத்திருக்கும். அப்புறம் அந்த 2 "சஸ்பென்ஸ் இதழ்களை" உங்கள் கண்ணில் காட்டிய பிற்பாடு, அவற்றையும் அங்கேயே  நீங்கள் வாங்கிட ஏதுவாய் நமது staff ஒருவரை நிலைகொண்டிருக்க  ஏற்பாடு செய்துள்ளேன் ! "ஆ..வாங்கோ சார்...வாங்கோ சார்...இப்டிக்கா உங்க பைக்குள்ளே கை விட்டுப்புட்டு - அப்டிக்கா சாப்பாடு போடறோம் சார் !!" என்று memes போட 'ஆர்வலர்களுக்கு' நாமே நயமாய் மேட்டர் தந்த மாதிரியும் இருக்குமல்லவா ? Anyways அந்த "சஸ்பென்ஸ் இதழ்கள்" என்னவாகயிருக்குமென்று உங்களில் நிறையப் பேர் யூகித்திருக்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பதால் - அதன் பொருட்டு பெரும் பில்டப்பெல்லாம் தரும் உத்தேசமில்லை ! But rest assured that - தயாரிப்புத் தரத்தினில் உங்களை 'அட !!" என்று சொல்ல வைக்கும் பொருட்டு நிறையவே மெனெக்கெட்டுள்ளோம் !! 

புத்தக ரிலீஸ் ; அது சார்ந்த அளவளாவல் என்ற கச்சேரிகள் நிறைவுற்ற பிற்பாடு - இம்முறை நான் ரொம்ப நேரம் மைக்கில் மொக்கை போடுவதாகயில்லை !! "இட்லிக்கு மல்லிச் சட்னி புடிக்குமா ? தேங்காய்ச் சட்னி ரசிக்குமா ?" என்பது வரைக்கும் வாராவாரம் இங்கே போட்டு கும்மி வரும் நிலையில், புதுசாய் நான் பேசிட நேரத்தை விழுங்குவதை விடவும், ஓரிரு தலைப்புகளில் உங்களைப் பேசச் செய்ய உத்தேசித்துள்ளேன் !! புலவர்கள் மட்டும் கானம் பாடும் மூடில் set ஆகிவிட்டால்  ஒரு மினி பட்டிமன்றமாய் போட்டுத் தாக்கி விடலாம் !!  தீர்ப்புச் சொல்லத் தான் இருக்கவே இருக்கிறார்கள் நமது guests of honor !!!  நீங்க ரெடின்னா - ஞானும் ரெடி !! 

ஆடிப் பதினெட்டில் விதைப்பது ஆண்டு முழுக்கவே தொடரும் என்ற நம்பிக்கை மட்டும் நிஜமாயின் - காத்திருக்கும் இந்தப் பதினெட்டின் உற்சாகங்கள், ஒரு அட்டகாச ஆண்டுக்கு விதைநெல்லாய் அமைந்திடுவது உறுதி !! சந்தோஷமாய் சந்திப்போம் ....சந்தோஷங்களை பன்மடங்காக்குவோம் - பெரும் தேவன் மனிடோவின் ஆசிகளுடன் !! All fingers mightily crossed !!! Bye guys - see you around !! 

Quick updates :

ஆகஸ்ட் ரெகுலர் இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் ரெடி !
http://www.lion-muthucomics.com/home/414-june-pack-2019.html 

கோவை புத்தக விழா ஞாயிறோடு (28 ஜூலை) நிறைவுறுகிறது !! Why not drop in folks ?

ஈரோட்டில் நமது ஸ்டால் எண் : 4 !! முதன்முறையாக நுழைவாயிலுக்கு அருகாமையில் நமக்கு குலுக்கலில் இடம்கிட்டியுள்ளது ! ஆண்டவன் அருள் ! 

Friday, July 26, 2019

ஜூலையில் ஆகஸ்ட் !

நண்பர்களே,

வணக்கம். வாரயிறுதியை விட்டால் உங்களுக்கு அவகாசம் கிடைப்பது குதிரைக் கொம்பென்பதை சமீப மாதங்களில் புரிந்து கொள்ள முடிந்ததன் பலன் : இதோ - ஆகஸ்டின் ரெகுலர் இதழ்கள் இன்றே கூரியரில் கிளம்பிவிட்டன - சனி காலையில் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்ட வேண்டுமென்ற அவாவோடு !! கைக்கு கிடைத்தவுடன் அவற்றை வேக வேகமாய்ப் படிக்கப் போவது சிலரே !! மீதப் பேரோ - அட்டைப்படங்களைப் பார்த்துப் பார்த்து ரசித்து ;  தடவிக் கொடுத்து, மசியின் வாசனையை 'ம்ம்ம்ம்ம்ம்' என்று நுகர்ந்து ரசித்து ; பக்கங்களைப் புரட்டி ; விளம்பரங்களைப் பராக்குப் பார்த்த கையோடு ; சித்திரங்களை "ப்ப்பாஆ' என்று சிலாகித்தபடியே - தலைமாட்டில் புக்குகளை வைத்துவிட்டு  "இன்னிக்கு நைட் வேற வேலையே நஹி ; ஏக் தம்மிலே படிக்கிறோம் !" என்ற சபதமிட்ட பிற்பாடு ஒன்பதரைக்கு பிக் பாசில் லோசியாவைப் பார்த்த கணத்தில் - அவருக்கு  வோட்டு போடும் ஜனநாயகக் கடமைக்குள் புதைந்து போகவுள்ளனர் என்பது தெரிந்திருந்தாலும், வாரயிறுதிகளில் உங்களிடம் புக்குகளை ஒப்படைக்கும் ஜாலியே எங்களுக்கு தனி தான் !! So good luck with the courier tomorrow ! 

இம்முறை சிக்கனமாய் இரண்டே ரெகுலர் இதழ்கள் + ஒரு குட்டி color TEX இணைப்பு என்பதால் கூரியர் டப்பிகள் - தலீவரின் தேகத்தைப் போலவே ஒடிசலாய் இருப்பதைத் தவிர்க்க இயலவில்லை ! இதனை ஈடு செய்யும் விதமாய் ஈரோட்டின் ஸ்பெஷல் இதழ்கள் அடுத்த வாரயிறுதியினில் உங்களைத் தேடிக்  கிளம்பும் சமயம் - செயலாளரின் புஷ்டியோடு இருந்திடுமென்பது உறுதி !! So ஒரு வாரத்தை மட்டும் வெட்டியானோடும், நம் இடியாப்பப் பார்ட்டியோடும் செலவிட்டு விட்டால் - ஆகஸ்டின் மிச்சப் பொழுதை செமத்தியாய் நகற்ற - நிறையவே சரக்கிருக்கும் ! Happy Reading folks !! (டப்பிக்குள் காத்திருப்பது அண்டர்டேக்கர் எனும் போது - இந்த வாழ்த்து கொஞ்சம் குடாக்குத்தனமாய்த் தோன்றக் கூடுமோ ?! )

கோவையில் நடந்து வரும் புத்தக விழாவினில், நமது ஸ்டாலில் புது இதழ்கள் இரண்டும் நாளை கிடைக்கும் என்பது கொசுறுச் சேதி ! அப்புறம் சனி & ஞாயிறோடு - புத்தக விழாவும் நிறைவுறுகிறது என்பதால் - இது வரையிலும் அந்தப் பக்கம் சென்றிரா கோவை மாவட்டத்து நண்பர்கள் ஒரு விசிட் அடிக்கலாமே ப்ளீஸ் ? 

Online listing நாளை காலையில் செய்யப்படும் ! Bye for now folks !!

Saturday, July 20, 2019

ஒரு பெருமூச்சின் பின்னே...!

நண்பர்களே,

வணக்கம். வயசாவதை உணர்ந்து கொள்ள 10 சுலப வழிகளை பெரும் தேவன் மனிடோ நமக்கு அருளியிருக்கிறாரென்பேன்  :

1 .பகலில், பங்குனி வெயிலின் வெளிச்சத்தில் கூட பசுமாடு மொச மொசன்னு தெரிய ஆரம்பிக்கும் !!

2 .காலுக்குள் நூறு ஓவா நோட்டு கிடந்தாலும் குனிந்து அதையெடுக்க யாராச்சும் ஆள் சிக்குறாங்களான்னு பாக்கச் சொல்லி குறுக்கும் ; முட்டிங்காலும் யோசனை சொல்லும் !

3 .பஸ்ஸிலே, ரயிலிலே...டீனேஜ் பொண்ணுங்க கூட தயங்காம கிட்டக்க குந்த ஆரம்பிச்சா - 'அய்யகோ....லோகத்தின் கண்ணிலே நீ இனி அங்கிள் கூட நஹி....!! தாத்தா.....தாத்தா..... !!!" என்று தலைக்குள் stereo சவுண்ட் ஒடத் தொடங்கும் !!

4 .ஆமைவடையைப் பார்க்குறச்சே கூட கடிச்சுச் சாப்பிடும் முன்பாய்  ஒண்ணுக்கு ரெண்டு வாட்டி இந்தக் கடைவாய்க்கும், அந்தக் கடைவாய்க்குமாய் ஷிப்ட்டிங் செய்து "பல் டெஸ்டிங்..பல் டெஸ்டிங்..' படலம் நடந்திடும் !!

5 .இப்போல்லாம் எடுக்கிறே selfie க்கள் Faceapp இல்லாமலே 'ஒரு மார்க்கமா' தெரியத் தொடங்கினாக்கா - "சுத்தம் !! கிழிஞ்சது கிருஷ்ணகிரி !!"

6 .அத்திவரதரை சேவிக்க அலையடிக்கும் கூட்டங்களை வீட்டுக் கூடத்திலிருந்து டி-வி-யிலே பார்க்குறச்சேயே மூச்சு வாங்குச்சுன்னா - ஸ்ஸ்ஸ்ஸ் !!!

7 .லிப்ட் இல்லாத அபார்ட்மெண்டில் மூணாவது மாடியிலே வீட்ட வாங்கியிருக்கும் நண்பன், "வீட்லே ஆள் இல்லேடா மாப்பிளை...பிரீயா இருந்தா வாரியா ?" ன்னு கேட்குறச்சே கொலை காண்டு தலைக்குள் எழுந்தால் - டவுட்டே வேணாம்ஜி !

8 .சூப்பர்மார்க்கெட்டுக் போனாக்கா  மண்டைக்கு சாயம் அடிக்கிற கருப்பு பெயிண்ட் குமிச்சு கிடக்குறே செக்ஷன நோக்கி அதுபாட்டுக்கு கால் போகுதா ? யோசிக்கத் தேவையே லேதுங்கோ !! 

9 .மூக்குக் கண்ணாடியை மாட்டின அப்பாலிக்காவும் - "மாயாவி கராத்தே வெட்டு வெட்டினார் !" என்பதை - "மாயாவி காரட்டை வெட்டு வெட்டுன்னு வெட்டினார் !" என்று படிக்க முடிஞ்சாக்கா - சாரி பாஸ் !!

10 .மாமூலாய் ஊதித் தள்ளுற எடிட்டிங்க்லாம் இப்போ 'தஸ்ஸு-புஸ்ஸுன்னு' மூச்சு வாங்கச் செய்யுதுன்னா - confirmed சாரே !! ரெண்டே நாளிலே கண்ணை மூடிக்கினு தயார் பண்ணுறே புக்குக்கே இப்போ 10 நாள் ஜவ்விழுத்தாககா - 'காலம்  செய்த கோலமடி ; கடவுள் செய்த குற்றமடி!!"! 

ஆங்....கடாசியா சொல்ல வந்த ஒற்றை விஷயத்தை ஓபன் பண்றதுக்கோசரம் எவ்ளோ பில்டப்பு ??? ஆனா தலைகீழா நின்னுக்கிட்டே சிரசாசன SMS அனுப்புற நமக்குலாம் பில்டப் இல்லாட்டி பிழைப்பே லேதுவாச்சே ? விஷயம் இது தான் guys !! ஆண்டின் அட்டவணையை எத்தனை spaced out ஆகத் திட்டமிட்டாலும் சரி - அதன் முன்பாதியில் தான் முக்கிய இதழ்கள் சகலமும் குந்திவிடுகின்றன ! தோர்கல் ஸ்பெஷலா ? - சென்னை புத்தக விழா நேரத்துக்கு ; ட்யுரங்கோவா ? - கோடை மலருக்கு ; லக்கி ஸ்பெஷலா ? ஆண்டுமலருக்கு ; ஜம்போவின் டாப் இதழ்களா ? சுற்றின் துவக்கத் தருணங்களுக்கு...! என்று ஒருவித வேகத்தில் ஆண்டின் முதல் பாதியின் அட்டவணைக்குள் முக்கிய இதழ்களின் பெரும்பான்மை அடைக்கலம் கண்டுவிடுகின்றன ! பற்றாக்குறைக்கு ஆகஸ்டில் ஈரோடு நமக்கொரு ஸ்பெஷல் பொழுதாகி நின்றிட, அதற்குமே  மிச்சம் மீதமுள்ள தம்மெல்லாம் திரட்டி - எதையாச்சும் வடையாக்கிச் சுட்டு வைப்பது வாடிக்கை என்றாகி விடுகிறது !! So ஜனவரியில் ஆரம்பிக்கும் ஒரு அரூப ரயிலானது நம்மைப் பொறுத்தவரைக்கும் ஆண்டின் முதல் 8 மாதங்களில் பயணிப்பதொரு மெகா தூரத்தை !!  ஆக பயணம் துவங்கும் போது இறுகப் பிடித்துக் கொண்டே, தம் கட்டியபடிக்குக் காட்டத் துவங்கும் முனைப்பானது - intensity-ல் கூடிக் கொண்டே செல்வதும் வாடிக்கை என்றாகிடும் நிலையில் - எல்லைக்கோடு கண்ணில் தட்டுப்படும் தருணத்தில் இப்போதெல்லாம் வாங்கும் மூச்சு, சொல்லி மாள்வதில்லை !! அதைச் சொல்வதற்கே மூச்சிரைக்க முனைந்து வருகிறேன் இப்போது !!

No different this 2019 too !! 

பராகுடா - டிக் 
தி Lone ரேஞ்சர் - டிக் 
தோர்கல் - டிக்
ட்யுரங்கோ-டிக் 
ஆண்டு மலர் - டிக்
லயன் கிராபிக் நாவல் - tight ஆன கதைப்பணிகள் - டிக் 

என்றபடிக்கே சீறிச் சென்ற வண்டி - தி ஈரோடு எக்ஸ்பிரஸ் பணியினுள்ளும் அதே முனைப்போடு புகுந்தது !! மெகா புக்கான "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" நமது இக்ளியூண்டு மொழிபெயர்ப்பு டீமின் ஒரு புதுவரவின் சகாயத்தோடு துவக்கம் கண்டிருக்க - அதனை டைப்செட்டிங் செய்யும் முன்பாகவே எடிட் செய்துவிட இம்முறை தீர்மானித்தேன் !  நான் எழுதியிரா இதர ஸ்கிரிப்ட் சகலத்தையும் வழக்கமாய் முதலில் டைப்செட்டிங் செய்திடச் சொல்லிவிடுவேன்! மொத்தமாய் முடிந்த நிலையில் என் மேஜைக்கு அவை வந்த பிற்பாடு - அவற்றோடு மல்லுக்கட்டும் படலம் ஆரம்பமாகிடும் !! சிகப்பு மசிப் பேனாவால் நான் எடிட் செய்யும் முதல் படிவத்தைப் பார்த்தால் - சீஸனின் உச்சத்தின்போது குற்றாலத்தில் உள்ள கசாப்புக்கடைகளின் இரத்தக் களரி நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே இயலாது !! முழுசுமாய் மாற்றியெழுத வேண்டிய பகுதிகள் ; பிழை திருத்தங்கள் ; எடிட்டிங் - என்று ரக ரகமாயிருக்கும் அங்கே நான் கிறுக்கி வைத்திருக்கும் corrections !! அத்தனையும் பொறுமையாய் நம்மவர்கள் திருந்தங்களாய்ப் போட்டுத் தந்து, அதை மறுக்கா என்னிடம் ஒப்படைப்பது நடைமுறை ! அதனை மறுவாசிப்புப் போடும் போதே மேற்கொண்டும் சில மாற்றங்களை நடையில் செய்த பிற்பாடு - இரண்டாம் படிவம் ரெடியாகி, proof reading செய்திடும் பெண்ணிடம் போகும் !! ஆனால் இந்தவாட்டி கதையின் நீளமும் ஜாஸ்தி ; பேனா பிடித்திருப்பவரும் புச்சு ; நமக்கும் இளமை ஊஞ்சல்லே ஏறி ஆடோ, ஆடென்று ஆடி வருவதால் - நனைத்துச் சமைப்பதை சற்றே குறைக்கத் தீர்மானித்தேன் ! So செய்திட வேண்டிய major திருத்தங்களையெல்லாமே ஸ்கிரிப்டில் செய்திட இம்முறை முனைந்தேன் !!


கதை எனக்கு ரொம்பவே பிடித்தமானதொன்று என்பதோடு - ஒருவித free flowing பாணியில் சித்திரங்களும் இருப்பதால் சுறுசுறுப்பாய்ப் புகுந்தேன் பணிகளுக்குள் !! And இது இலக்கண சுத்தத் தமிழுடனான பயணமாக இருந்திடப் போவதில்லை என்பதை முதலிலேயே தீர்மானித்திருந்ததால் - கூடுதல் ஜாலியாகிவிட்டது !! ஏகப்பட்ட நாட்களுக்கு முன்பாகவே பணிகளைத் துவக்கி விட்டதன் புண்ணியத்தில் - சாம்பிள்... அதனில் திருத்தங்கள்.... இன்னொரு சாம்பிள் ...அதில் இன்னொரு வண்டித் திருத்தங்கள்....அப்பாலிக்கா இன்னுமொரு சாம்பிள்...அதுக்கப்பாலிக்கா இன்னமுமேயொரு வண்டித் திருத்தங்கள் என புது மொழிபெயர்ப்பாளரின் சிறுகுடல் ; பெருங்குடல் ; மத்திம குடல் ; முக்கிலேயுள்ள குடல் - என்று சகலத்தையும் உருவி, அலசிப் பார்க்க நேரமிருந்தது எனக்கு ! மனசுக்குள் எழுந்திருக்கக்கூடிய *@(%~**" ரீதியிலான நல்வாழ்த்துக்களையெல்லாம் விழுங்கிக்கொண்டே மனுஷனும் திருத்தம் ..திருத்தம் என்று போட்டனுப்பிய umpteenth நகலை கையில் வைத்துக் கொண்டே பணிகளை ஆரம்பித்தேன் !! இங்கொரு விளம்பர இடைச்செருகல் guys : நூற்றி மூணு தபா இதைச் சொல்லியிருப்பேன் தான் - இருந்தாலும் நூற்றி நாலாவது வாட்டியும் ஒப்பித்து விடுகிறேனே !! டிங் -டிங் -டிடிங்.....நமது வாசிப்புகளில் இதுவொரு landmark இதழாக அமையாது போயின் நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்வேன் !! வெகு சொற்ப இதழ்களே அவற்றுள் பணியாற்றும் போது ஒரு சந்தோஷத்தைத் தாண்டி, ஒரு திருப்தியையும் தரும் சக்தி கொண்டிருந்திடும் ! This I would say is one such album !!! So இன்றே முன்பதிவு செய்திடத் தவறாதீர்கள் !! பணம் அனுப்ப வேண்டிய முகவரி : blah blah blah .....!! எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது !!டிங்..டிங்..டிடிங்...!!! 

வெல்கம் after தி ஷார்ட் கமர்ஷியல் பிரேக் !!

நான்கு அத்தியாயங்கள் கொண்ட சாகசம் - "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" !! "So மூச்சு விட அப்பப்போ...அங்கங்கே பிரேக் எடுத்துக்கிறோம் ; அத்தியாயம், அத்தியாயமா திருத்தங்களை போட்டு கழட்டுறோம்.. ; நாலே நாளிலே வேலையை முடிக்கிறோம் !!" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு வேலைக்குப் பிள்ளையார் சுழி போட்டேன் !! முதல் பாகம்..... திருத்தங்கள்... மறுதிருத்தங்கள் என சகல ஸ்பூன்லிங் ஆட்டங்களும் நடைபெற்றிருந்தது இதனிலேயே என்பதால் சர்ரென்று ஒரு மாதிரி வழுக்கிக் கொண்டு ஓடி விட்டது !! 'அட்றா சக்கை..அட்றா சக்கை' என்றபடிக்கே மறுநாளைக்கு மறு அத்தியாயத்தினுள் புகுந்தால் - கதைக்களத்திலும் சற்றே சீரியஸ்த்தன்மை ஏறியிருந்தது ; எழுத்துக்களிலுமே சற்றே up & down  பாணி தென்பட்டது ! எழுதுவதில் மிகப்பெரிய சவாலே அதன் சுமாரான நாட்களை சமாளிப்பது தான் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன் ! ஜாலியானதொரு  நாளைக்கு பேனாவைத் தூக்கிக் கொண்டு அமர்ந்தால் - வரிகள் சும்மா "வாம்மா..மின்னல்...!" ரேஞ்சுக்கு சீறிக்கொண்டு பாய்ந்திடும் ! ஒவ்வொரு முக்கிய இடத்திலும் மும்மூன்று தெறிக்கும் டயலாக்குகளைக் கூட ரெடி பண்ணிடும் விதமாய் தலைக்குள் உதிக்கும் அத்தனையுமே classy வரிகளாய் அமைந்திடும் ! இன்னொரு மித நாளுக்கு அதே பேனாவைத் தூக்கிக் கொண்டு, அதே கதையின் மிச்சப் பக்கங்களையும் தூக்கிக்கொண்டு அதே மேஜையில் பிட்டத்தை அமர்த்தினால் - 'ஏக் காவ் மே ....ஏக் கிசான் ரகுத்தாத்தா !!" ரேஞ்சுக்குக் கூட வரிகள் வந்து சேராது !! முக்கு முக்கென்று முக்கினாலும், "பாலிருக்கி....பழமிருக்கி.....ஓஓஓஓஓ.." என்று தான் சங்கீதம் தேறும் !! ஆனால் முதல் நாளையும் ரசித்து ; இரண்டாம் நாளையும் சகித்து -  நெருடல் கண்ணில்படா ஒரு output-ஐ உருவாக்குவதே ஒட்டுமொத்த பணியின் பாங்கு என்பதை நாட்களின் ஓட்டமே கற்றுத் தந்துள்ளது ! சுமார் 170+ பக்கங்களெனும் போது அதனுள் குறைந்த பட்சம் 30 பணிநாட்கள் இருந்திருக்கக்கூடும் !! அவற்றுள் பாதி "வாம்மா மின்னல்" ; மீதி..."பாலிருக்கி..." என்றிருப்பது இயல்பு தானே ?

So வழுக்கிக் கொண்டு முதல் பாகத்தினுள் ஓட்டமெடுத்தவன்,  பாகம் இரண்டினுள் - கனத்த மழைக்குள் பேண்ட்டை மடித்துக் கொண்டு நிதானமாய் நடந்து பார்க்கும் பாணியைக் கடைபிடித்தேன் !! தத்தா..புத்தா...வென்று ஒரு மாதிரியாய் அத்தியாயம் இரண்டுக்கு டாடா சொல்ல முடிந்த போது 5 நாட்கள் ஓடியிருந்தன !! And Part 3-க்குள் என்ட்ரி கொடுக்கும் போது கதையும் அடுத்த லெவலைத் தொட்டு நிற்க - சைக்கிளைத் தள்ளிக்கொண்டே மழைநீர் ஓடும் சாலையில் நடைபோடுபவனைப் போல நி-தா-ன-மே தாரக மந்திரமாகியிருந்தது !! ஒரு வாரம் இதற்குள் ஓடியிருக்க - "அண்ணாச்சி...டைப்செட்டிங்குக்கு வேலையில்லை...!" என்று நம்மவர்களின் முணுமுணுப்பு காதில் விழுந்தது !! கிளைமாக்ஸ் பாகம் - பக்க எண்ணிக்கையும் சற்றே ஜாஸ்தி & கதையோட்டத்தின் ஜீவநாடியுமே அது தான் என்பதால் - இன்னொரு வாரம் ஓடினாலும் பரவாயில்லை, no compromises என்றபடிக்கே 'தல'யின் இப்போதைய பேட்டிங் வேகத்திலேயே நானும் வண்டியை ஓட்டினேன் !! 'தல'யின் இப்போதைய வேகத்தைப் பார்த்து காதிலிருந்து புகை விடும் நம்மவர்களை போலவே - நம்மாட்களும் எரிச்சல்பட்டிருப்பது உறுதி ; ஆனால் 'தல'கிட்டே வாய் திறக்க முடியா செலெக்டர்ஸ் போல அவர்களும் மௌனமாயிருக்க - ஜவ்வாய் இழுத்து விட்டேன் பணியினை !! நடுவாக்கில் ஊர் சுற்றும் வேலையும் சேர்ந்து கொண்ட போது  - பொறுப்பு பரமானந்தமாய் கதையையும் கையோடு தூக்கிச் சுமந்தேன் ! அதுவும் 'தேமே' என்று அமெரிக்காவைச் சுற்றிப்பார்த்த கையோடு பத்திரமாய் வீடும் திரும்பியது !! அதன் பின்பாய் அரக்க பரக்க வேலைக்குள் தலை நுழைக்க - மாற்றி எழுதும் வேலைகளை ஜரூராய்ப் பார்த்திட நமது உலகக்கோப்பைத் தோல்வி ரொம்பவே கைகொடுத்தது !! அது வரைக்கும் கிரிக்கெட் எனது நேரத்தை ஓரளவுக்கு விழுங்கி வந்தது ! ஆனால் நம்மாட்கள் சாத்து வாங்கத் துவங்கிய முதல் கணத்தில் வேலைக்குள் ஒரு வேகம் எடுத்துச்சு பாருங்க....."சுபம்" போடும் எல்லைக்கோட்டில் தான் நின்னுச்சு !! But பாகம் 4 -ன் மாற்றியெழுதும் படலம்  ; எடிட்டிங் என ஒட்டு மொத்தமாய் 3 வாரங்களை நான் கபளீகரம் செய்தது தான் சிக்கலே !!

ரைட்டு....புக் # 2 பக்கமா வண்டியை விடலாமே ? என்று எண்ணினால் - இடையே TEX சஸ்பென்ஸ் இதழும், கார்டூனின் சஸ்பென்ஸ் ஆல்பமும் கை தூக்கி நிற்பது புரிந்தது !! ஹை...ஜாலி...ஜாலி....என்றபடிக்கே அவற்றுள் குதித்தால் - "தம்பி... எதுவும் லேசில்லே.....மேல் வலிக்காம... வளைக்காம.... நோன்புக்கஞ்சிலாம்  குடிச்சிட்டு போமுடியாது...!! ஸ்பெஷல் இதழ்னா சும்மாவா ? பெண்டு கழட்ட தான் செய்யும் !!" என்று எங்கோவொரு அசரீரி கேட்டது !! அதுதான் மூப்பின் குரலென்பதை ஒரு டஜன் ஜண்டுபாம் வாங்க அவசியப்பட்ட போது தான் புரிந்து கொள்ள முடிந்தது !!! "ரைட்டு...உப்..உப்... ரெண்டாது புக்கும் ரெடி !! விடாதே.... புடி.... ஆங்... அக்காங்.... மூணாவது புக்கும் ரெடி....உப்...உப்..உப்..!!" என்றபடிக்கே நாள்காட்டியைப் பார்த்தால் ஜூலை 15 என்றது !!!

'செத்தேண்டா சாமி !!" என்றபடிக்கே ஈரோட்டின் புக் # 4 பக்கமாய்க் கவனத்தைத் திருப்பினால் - "நித்தமொரு யுத்தம்" ஒரு நேர்கோட்டுக் கதையோடு விறைப்பாய் நிற்பது புலனானது ! இதுவுமே புது எழுத்தாளரின் கைவண்ணமே என்பதால் - இக்கட என்ன எதிர்பார்ப்பதென்று தெரிந்திருக்கவில்லை எனக்கு ! இரண்டே அத்தியாயங்கள் - and CINEBOOK புண்ணியத்தில் இரண்டுமே   ஆங்கிலத்தில் வாசிக்க சாத்தியப்பட்டதால் கொஞ்சம் நிம்மதி எனக்கு ! And உளுந்தூர்பேட்டைக்குப் போக துபாய் வரையிலும் வண்டியை விடும் அவசியங்கள் இலா சுலபமான கதைக்களம் என்பது கூடுதலாய் குஷிப்படுத்தியது !! But பணிக்குள் புகுந்த போது no cakewalks தம்பி !! என்று புரிந்தது !! "பி.பி.வி." கதையின் பணிக்குத் தந்திருந்த அதே அளவு அவகாசம் இம்முறை "நி.ஓ.யு"கதைக்குத் தந்திட சாத்தியமாகவில்லை என்பதால்  ஸ்கிரிப்ட் ஆங்காங்கே raw-வாக இருப்பது புரிந்தது ! இங்கும் மூச்சு விட நிறைய அவகாசம் ; இங்கும் சிறுகுடல்... பெருங்குடல் ஆய்வுகளுக்குப் பொறுமை என்று எனக்கு இயன்றிருப்பின், output நிச்சயம் இதைவிட உயர்தரத்தில் இருந்திருக்குமென்பது புரிந்தது !! ஆனால் நமக்குத் தான் காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டு ஒயிலாட்டம் ஆடுவதில் செம இஷ்டமாச்சே !!! To cut a long story short - 'தம்' கட்டி இரு பாகங்களையும் இன்று காலையில் தான் முடித்து நம்மவர்களிடம் ஒப்படைத்தேன் - ஒரு ராட்சஸப் பெருமூச்சோடு !!!

அந்தப் பெருமூச்சின் காரணம் - இன்று காலையில் நான் நிறைவு செய்த ஈரோட்டின் ஸ்பெஷல் இதழ்களின் சுப மங்களத்தின் பொருட்டு மாத்திரமல்ல - effective ஆக நடப்பாண்டின் உச்ச இதழ்களின் 90 சதவிகிதத்தை நிறைவு செய்த நிம்மதியின் பொருட்டுமே !! Oh yes - இன்னமும் 600 + பக்கங்களில் "தீபாவளி மலர்" காத்துள்ளது தான் - but அதன் தடிமனான பணிகளெல்லாம் முக்கால்வாசி முடிந்திருக்கும் நிலையில் - அதன் பொருட்டு தூக்கத்தைத் தொலைக்க முகாந்திரமிராது என்பது உறுதி !! So ஜனவரியில் கரி அள்ளித் தட்டி, பாய்லரை பொருத்தி...எஞ்சினை சிறுகச் சிறுகச் சூடாக்கி....koooo....kooo என்றபடிக்கே கிளம்பிய எஞ்சினுக்கு  இனி ஈரோட்டில் உங்களை சந்தித்த கையோடு - அடுத்த ஒரு மாசத்துக்காவது மல்லாக்கப் படுத்து விட்டத்தை முறைக்கும் அதிமுக்கிய பணியே காத்துள்ளது !! 2020-ன் அட்டவணையும் almost ready ; சிகப்புச் சட்டைக்காரர் Trent-ன் நடப்பாண்டு performance-ஐப் பார்த்து அவரது ஸ்லாட்டைத் தீர்மானிப்பதே எஞ்சியிருக்கும் வேலை என்பதால் - அந்த ஜண்டு பாமை ஒரு குண்டாவுக்குள் பிதுக்கிய கையோடு அதற்குள் நானும் குதித்து விடலாம் என்றிருக்கிறேன் !! ஆத்தாடியோவ்....திரும்பின பக்கம்லாம் வலிக்குதுடோய் !!

Before I sign out - here you go !! ஆகஸ்டில் வரக்காத்துள்ள ஜானியின் வண்ண மறுபதிப்பு !! இத்தனை ஆண்டுகளாகியும், இதன் ஒரிஜினல் அட்டைப்பட டிசைன் நம்மிடம் பத்திரமாயிருக்க - அதனையே முன்னட்டைக்கு உபயோகப்படுத்தியுள்ளோம் !! பாருங்களேன் - இன்னமும் மிளிரும் அந்த வர்ணங்களின் வீரியத்தை !!
And உட்பக்கங்களுமே கலரில் சும்மா ஜெகஜோதியாய் மின்னுகின்றன !! எனக்கு சுத்தமாய் மறந்து போயிருந்தது இதன் கதைக்களம் ! உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கக்கூடுமோ - அவர்களுக்கெல்லாம் நண்பர் 'ஜெ' கிட்டே சொல்லி extra tough ஆக ஈரோட்டுக்கோசரம் கொஸ்டின் பேப்பர் தயார் செய்யச் சொல்ல ஆசை !!

அப்புறம் கோவையில் நேற்றுத் துவங்கிய புத்தக விழாவினில் நமக்கு அழகான துவக்கம் என்பதை உங்களிடம் பகிர்ந்திட ஆசை  ! நெய்வேலியில் நம் விற்பனை நிலவரம் அத்தனை சுகமில்லை என்ற சூழலில் - கோவை ஆரம்பமே செம !! இதே பாங்கு தொடர்ந்திட மனிடோ அருள் புரிந்தால் தலை தப்பிடும் !!!! Folks ..please do drop in !!!
And இதோ - ஈரோட்டில் புக் பெற்றுக் கொள்ளப் பதிவு செய்துள்ளோரின் பட்டியல் - 2 நாட்களுக்கு முன்பு வரையிலும் ! கொஞ்சம் சரி பார்த்துச் சொல்லுங்களேன் ப்ளீஸ் guys ?


ES2

540
MR.S.BALASUBRAMANIAN
BANGALORE-560066
CELL NO:099005-15000
ES4

540
MR.V.KUMAR
SALEM-636008
CELL NO:94431-44007
ES7

540
DR.BALA SUBRAMANIYAN
SIVAKASI
ES8

540
MR.SENTHIL KUMAR.R
TRICHY-620001
CELL NO:88074-51299


ES12

540


MR. MITHUN CHAKRAVARTHI
ERODE
CELL: 99408 61655
ES16

540
MR. CHEZHIAN BABU.S
CHENNAI-600094
CELL:94449-53552


ES21

540
MR. ARUN KUMAR
STATE BANK OF INDIA
KARUR
CELL: 99764-12543


ES22

540
MR.SHANMUGAM
THIRUCHENGODE-637211
CELL NO:98427-45531


ES32

540
MR. G. SAKTHIVEL,
ERODE - 638 002.
CELL : 95784-02580
95247 33700


ES47

540
MR. S.VENKATESWARAN
LIG 51,13TH CROSS STREET, 
CHENNAI- 600037
CELL:9444479845
ES49

540
MR. THIRUMAVALAVAN
DTDC THIRUPPUVANAI BRANCH
PONDICHERRY-605102
CELL:9159819018
ES50

540
MR. P.K.SELVAKUMARAN
4/64A PALAKKARAI POST
ERODE-638057
CELL:9442639225


ES66

540
BOOPATHI M
LDC-9,MMC QUARTERS
METTUR 636401
CELL: 8056287782
ES73

540
MR. KARTHIGAI PANDIAN
KOVAIPUDUR,
COIMBATORE - 641042
CELL:9842171138


ES75

540
MR. SELVAKUMARAN
AMBIKAPATHY
CHENNAI 603 103
CELL: 9941872856
ES76

540
MR.ANBAZHAGAN.R
GOBICHETTIPALAYAM-638452
CELL NO:94423-51413
ES80

540


MR. N.KUMAR,
TIRUPPUR - 641602
CELL; 9655555556
ES98

540
MR. SENTHIL MADHESH
COIMBATORE-641016
CELL:99944 96369
ES99

540
MR. S.MANASA & YAZHINI
TIRUPUR-641652
CELL:80155-09994 /
80155-09995
ES102

540
MR. P.PRAKASH
LINGARAJAPURAM
BANGALORE
CELL:9994394453


ES103

540
MR.A.RAJA SEKAR
THANTHONIMALAI
KARUR-639005
CELL:9597876650
ES114

540
MR. RAMESH.R
STATION MASTER
DHARMAPURI-TK
CELL:98941-25858


ES124

540


AUDITOR K.RAJA
PALLIPALAYAM - 638006
9976541077
ES143

540
MR. SARAVANA KUMAR RANGASAMY
PALLADAM-641664
CELL:8344440600
ES151

540
MR.GIRIDHARA SUDHARSHAN.T
CHENNAI 603103
CELL:9840735410
ES163

540
MR.G.JAGADEESWARAN
ARANTHANGI-614616
CELL:9443259244


ES177

540
MR. M.RAVI KANNAN
SALEM-636451
CELL:9626528528/9787222717
ES178

540
MR. D.RAVI
SALEM-636201
CELL:9042006180


ES179

540
HASSAN MOUGAMED
ES180

540
MR. K.BHARANITHARAN
SALEM-636502
CELL:9942759238


ES181

540
MR. P.VIJAY SEKAR
SALEM-636007
CELL:9442225050
ES182

540
MS.SAHANA MAHENDRAN
TIRUPPUR-641606
CELL:8680863777


ES183

540
MR. P.MAHENDRAN
COIMBATORE-641009
CELL:9600836224
ES184

540
MR. P.MAHENDRAN
COIMBATORE-641009
CELL:9600836224
ES185


540
MR. S.KIRUBAKARAN
(YUVA KANNAN)
SALEM-636007
CELL:9942677088


ES186

540
MR. NAGARAJAN SANTHAN
TIRUPUR-641602
CELL:9994773647
ES187

540
MR. P.SARAVANAN
  • KARUR - 639006,
CELL:9894934854
ES188

540
MR. A.SHALLUM FERNANDAS
KANIYAKUMARI-629166
CELL:9787402305


ES189

540
MR. L.SUSEENDRA KUMAR
SALEM-636007
CELL:7358116652
ES190

540
MS.NIKETHA SHALINI
TIRUPPUR-641606
CELL:8680863777


ES191

540
T. PRABAKAR
SALEM
CELL:8680863777


ES192

540
MR. T.JAYAKUMAR
SALEM-636451
CELL:9865111125
ES193

540
Dr. SHANMUGA SUNDARAM. MDS
SALEM-636501
CELL:9865370153
ES194

540
MR. C.RAJA(POSTAL)
MAYILADUTHURAI VIA-609309
CELL:9443683832


ES195

540
MR. P.RAMESH
TIRUPUR-641604
CELL:7871922299
ES196

540
MR. V.SOMA SUNDARAM
ERODE – 638 006
CELL: 97912 62661


ES197


540
BHARATHI NANDHISWARAN
ERODE
ES198


540
MR. C.BASKARAN DTDC
SRI SHIVA SAKTHI ROADLINES,
BANGALORE-560022
CELL:09448043406


ES200

540
Mr. PRABHU PALANIAPPAN
COIMBATORE - 641006
9900262905
ES206

540
MR.R.SARAVANAN STC
BLOCK RESOURCE TEACHERS
EDUCATOR
ERODE DT-638051
CELL-9788207335



ES207

540
MR.R.SARAVANAN
BLOCK RESOURCE TEACHERS
EDUCATOR
ERODE DT-638051
CELL-9788207335
ES209

540
Mr. P.GOVINDARAJ
KRUNGALPALAYAM
ERODE 638003
9965705372


ES219

540
MR. THIRUNAVUKKARASU R
VALLUKKUPARAI
COIMBATORE
CELL: 9566524783
ES228

540
R. VEERA PANDIAN
BALA CONSULTANTS
627002 PALAYAMKOTTAI
9025592679


ES116

540
MR. K.SUBRAMANIAN
DHARMAPURI-636305
CELL: 9487037611
7200394456
ES239

540
Mr. S.DAKSHINA MURTHY
30 THIRUMANJANA VEETHY,
THIRUVARUR-610002,
CELL: 94862-84360


ES240

540
Mr. GOKUL. C


ES243

540
Mr. P.KARTHIKEYAN,
PLOT NO: 1,
THIRIVENI NAGAR EXTN.,
V.MANAVELI,
VILLIANUR COMMUNE,
PONDICHERRY – 605 110
CELL NO: 9994480031
ES244

540
Mr. PRASANTH KARTHICK
NO: 8 , MADHA KOVIL STREET,
MANNARGUDI – 614001
CELL NO: 7845542833
ES245


540
R. RAMYAASHRE,
INTERNATION EVALUTION PVT. LTD.,
MODULE NO: 002/2,
GROUND FLOOR,
TIDELAND PARK LTD.,
ELCOSEZ,
COIMBATORE – 641 014
CELL NO: 9489988445
ES246

540
Mr.M.JEYARAMAN
1/83, NAVITHAN KADU,
PERANTHAGAMPO,
VELAGOUNDANPATTI VIA,
PARAMATHI VELUR TK,
NAMAKKAL DISTRICT – 637 212
CELL NO: 9600813880




















































































































































Bye all...see you around !! Have a cool weekend !! 
P.S : Faceapp சேலஞ் போல - ஒரு Facequiz சேலஞ் என்று ஜாலியாய் வைத்துக் கொள்வோமே....? பதிவின் ஆரம்பத்தில் நான் எழுதியுள்ள "மூப்பின் 10 கட்டளைகளுள்" கடாசி ஐட்டம் நீங்கலாய் - பாக்கி ஒன்பதில்  எத்தனை ஆளாளுக்குப் பொருந்துதென்று பார்த்துச் சொல்லலாமே ? நிங்களுக்கும் பகலில் பசு மாடு மொச மொசன்னு தெரியுதா ? - மைனஸ் 1 பாய்ண்ட் என்று வைத்துக் கொள்ளுங்கள் ! மொத்தமாய் மைனஸ் எத்தனை உங்கள் ஸ்கோர் ? என்று கணக்கிட்டுப் பார்த்துச் சொல்றியளா அண்ணாச்சிஸ் ?