Saturday, May 18, 2019

They came...They saw...They left...!

வணக்கம் நண்பர்களே,

தொரை என்ன இங்கிலீசுலாம் பேசுதுன்னு பார்க்கிறீர்களா ? இங்கிலீசு மட்டுமா, கவிதையுமே காத்திருக்கு ஒபெனிங்கிலேயே !! 

வந்து...நின்று..வென்றவர் பலர்..!

வந்து..நின்று..சென்றவர் சிலர் ! 

திடீரென ராகுல் சஹர் ரேஞ்சுக்கு வார்த்தைகளில் ஸ்பின் போடுறானே...விசேஷம் என்னவோ என்ற கேள்வியா ? வேறொன்றுமில்லை - spin-offs ; நின்ற நாயகர்கள் ; நொந்த நாயகர்கள் என்றெல்லாம் சமீபப் பதிவுகளில் அலசிய போதே நமது இரண்டாம் வருகையினில் இதுவரைக்கும் ஆஜராகி, ஏதேதோ காரணங்களின் பொருட்டு ரிவர்ஸ் கியர் போட அவசியமாகிப் போனவர்களைப் பற்றிய நினைப்பு மனதில் நிழலாடியது ! சரி....அது தான் 'ரிஜிட்' என்று கவுண்டர் பாணியில்  கழித்த பிற்பாடு அவர்களை பற்றிய அலசல் ஏனோ ? என்று கேட்கிறீர்களா ? Absence makes the heart grow fonder என்பார்கள் !! கைக்குள்ளும், காலுக்குள்ளும் சுற்றித் திரியும் வரைக்கும்..."ஏய்..உசுர வாங்காம அப்பாலிக்கா போவியா ?" என்று திட்டும் நாமே, கொஞ்ச காலமாய் அந்த உருப்படி கண்ணில்  தென்படாது போகும் சமயம்.."அட...பயல் இருந்தவரைக்கும் கல கலன்னு இருந்துச்சே....இப்போ இடமே வெறிச்சோடிக் கிடக்கே..!" என்று நினைப்பதில்லையா ? அந்த பாணியில், நாம் நேற்றைக்கும், முந்தின நாட்களிலும் துரத்தி விட்ட நாயக / நாயகியரைப் பற்றித் திரும்ப ஒரு அலசலைப் போட்டால் results எவ்விதமிருக்குமோ ? என்ற curiosity தான் ! So இது நம்மளவில் தோற்றோரின் கதையே...!!

Please note : இது சம்பந்தப்பட்ட நாயக / நாயகியரின் தரம் / திறன் மீதானதொரு தீர்ப்பே அல்ல ; தீர்ப்புச் சொல்லும் அளவுக்கு நாம் அப்பாடக்கர்களும் அல்ல ;  உலகளவில் சாதித்திருக்கக்கூடிய நாயகர்கள் நமது ரசனைகளுக்கு செட் ஆகாது போவதாலேயே அவர்கள் சொதப்பல்களாகிடவும் போவதில்லை ! இது சும்மா ஒரு ஜாலியான, நம் பார்வைக் கோணங்களிலொரு அளவீடே !! So "என்னமா நீ இந்த நாயகரை மட்டம் தட்டப்  போச்சு ?!" என்ற கண்சிவத்தலோடு துடைப்பங்களைத் தேடும் ஆர்வமான FB முஸ்தீபுகள் அனாவசியம் ! 

பட்டியலின் முத்லிடத்தைப் பிடிக்கப் போகிறவர் சோடா புட்டிக் கண்ணாடியும், தொள தொள ஓவர்கோட்டும் போட்டபடிக்கே சுற்றி வருமொரு டிடெக்டிவ் ! Yes - டிடெக்டிவ் ஜெரோம் தான் வந்து ; நின்று ; புறப்பட்ட முதல் புண்ணியவான் - post 2012 ! "தற்செயலாய் ஒரு தற்கொலை" black & white-ல் வெளியானதொரு 2 பாக mystery த்ரில்லர் ! சொல்லப் போனால் இது நமது முதல் இன்னிங்சின் இறுதியிலேயே தயார் ஆன கதையே ; but முடங்கிக் கிடந்து, விடியலைப் பார்த்தது ரொம்பவே லேட்டாகத் தான் ! நிஜத்தைச் சொல்வதானால் எனக்கு இந்த ஆல்பம் ரொம்பவே பிடித்திருந்தது ! ஆரவாரமில்லா ஒரு  டிடெக்டிவ் ; தெளிவான, யதார்த்தமான கதையோட்டம் ; clean சித்திரங்கள் என்று பயணித்த இந்தக் களத்தில், கதையின் plot ரொம்பவே முகம் சுளிக்கச் செய்யும் ரகத்திலிருந்ததில் தான் சிக்கலே ! உங்களில் எத்தனை பேருக்கு நினைவில் நின்ற கதையோ நானறியேன் - but ஒரிஜினலின்படி கிளைமாக்சில் முடிச்சவிழும் இரகசியத்தை நான் கொஞ்சம் மாற்றியமைக்காது போயிருந்தால் இன்னமுமே ரொம்பவே பொங்கியிருப்பீர்கள் !! ஆனால் சொந்தத் தாத்தாவே பேத்தியைச் சீரழித்து, கர்ப்பமாக்கியதாய் வந்த sequence தனை நான் வேறு மாதிரியாய் மாற்றியதற்கு "ஒக்குட்டுப்புட்டான் ஒரிஜினலை !" என்று மாலை மரியாதை நல்கிய கையோடு இந்த சாத்வீக டிடெக்டிவ்வையும் ஓரம்கட்டியதே பலனாகியது ! அன்றைக்கு நடந்த மண்டகப்படிகளின் முழு விபரமும் நினைவில்லை (ஒரு சந்திலே...ஒரு பொந்திலே மட்டும் சாத்து வாங்கியிருந்தா ஞாபகமிருக்கும் ; நாம தான் ஒண்ணு பாக்கியில்லாமல் அத்தனைலேயும் வாங்கியிருக்கோம்லே !!) & அன்றைய சாத்துக்கள் justified தானா என்பதுமே நினைவில்லை ! But  முதல் ஓவரிலேயே மனுஷன் அவுட்....ஆனால் நோ-பாலில் என்பது தான் சோகம்  !! 
பட்டியலில் தொடர்ந்த இடங்கள் சில முன்னாட்களது ஜாம்பவான்களுக்கே ! அன்றைக்கு பெரும் பைட்டர்களாய்க் காட்சி தந்தோர் - முழு வண்ணத்தில், நம் இரண்டாம் இன்னிங்சில் தலைகாட்டிய போது, கந்துவட்டிக் கோவிந்தன்களாகிப் போனது கொடுமையே !! "சாக மறந்த சுறா" சும்மா அசத்தலான அட்டைப்படத்தோடு, ரம்யமான சித்திரங்களோடு வெளியான சமயம் "இன்னொரு ஹிட் உறுதி !!" என்று மனம் துள்ளியது ! ஆனால் பொடனியோடு நீங்கள் விட்ட சாத்தில் "கொய்யங்க்க்" என்ற ஓசை மட்டுமே கேட்டது தொடர்ந்த நாட்களுக்கெல்லாம் ! "ப்ருனோ பிரேசில் ....பரணுக்கு...!! ஓவர்..ஓவர்...!" என்றபடிக்கே நடையைக் கட்டினேன் ! So புராதனமெனும் கூக்ளிக்கு சாய்ந்த முதல் விக்கட் வில்லியம் வான்சின் அழகு ஆக்ஷன் ஹீரோ !

அதே பந்து ; அதே மாதிரியொரு விக்கெட் விழுந்தது சாகச வீரர் ரோஜரின் புண்ணியத்திலும் ! மிரட்டலான சித்திரங்கள் ; அதிரடியான களங்கள் என்று ஓப்பனிங் எப்போதுமே செம அமர்க்களமாய் இருந்தாலும், போகப் போக தள்ளாட்டமே என்ற கதை தொடர்கதையாகிட - "அடுத்த ஆப்பரேஷன் ரோஜராருக்கே !!" என்று தீர்மானிக்க நேரிட்டது !! கடைசி கடைசியாய், ஒரு கதையை அறிவித்து விட்டு, உரிமைகளை வாங்கி, மொழிபெயர்ப்பும்  ; டைப்செட்டிங்கும் செய்துவிட்டு, வெளியிட வேண்டியதற்கு 15 நாட்களுக்கு முன்பாய் பேஸ்தடித்து பின்வாங்கியதும் நடந்தது ! கதை அத்தனை சுமார் ! பரணில் உறங்கும் கதைகள் லிஸ்டில் அதுவும் சேர்ந்தது தான் மிச்சம் !! 60 + கதைகள் ; அமர்க்களமான ஆக்ஷன் நாயகர் ; exotic locations என்றெல்லாம் ஏகப்பட்ட ப்ளஸ்கள் இருக்கும் போதிலும், இந்தத் தொடராய்ச் சரியாய் நமக்கு செட் செய்து கொள்ள முடியாது போவதில் வருத்தமே எனக்கு !

மூன்றாவது பந்தும் ஒரு கூக்ளி ; மூன்றாவது விக்கெட்டுமே ஒரு ஜாம்பவானே! ஆனால் அதை உரக்கச்  சொல்ல முனைந்தால் தர்மஅடி தான் விழும் எனக்கு ! இருந்தாலும் நாம் பார்க்காத முட்டுச் சந்துக்களா ? So ஒரு வீரனாய் ; சிரிச்சா மேரியே மூஞ்சை வய்ச்சுக்கினு சொல்லித் தான் பார்க்கிறேனே !! "டைகர்.....இளம் டைகர்...!!" தட்டை மூக்காரின் இள வயது சாகசங்கள் ஒரு சங்கிலித் தொடராய் ஓடி வர, நாம் அவற்றை ஆண்டுக்கு 2 என வெளியிட, ஆரம்பம் அட்டகாசமாய் இருந்தது ! "கான்சாஸ்  கொடூரன்" ; "இருளில் ஒரு இரும்புக் குதிரை" என்றெல்லாம் ஹிட்டடித்தோம் ! ஆனால் தொடர்ந்த ஆல்பங்கள் வறண்டு காட்சி தர, வெகு சீக்கிரமே அயர்ச்சி உட்புகுந்ததை மறுப்பதற்கில்லை ! இந்தத் தொடரின் சீனியர் ஹீரோவின் (கேப்டன் டைகர்) அதிரடிக் கதைகளை எழுதியிருந்த சார்லியே அவர்கள் மரித்திருக்க, புதுப் புது கதாசிரியர்கள் இளம் புலிக்கு கதை சொல்ல முயன்று அத்தனை வெற்றியைப் பெற்றிருக்கவில்லை என்பது bottomline  ! விடாப்பிடியாய் அவர்களும் அந்த வடக்கத்தியர் vs தெற்கத்தியர் உள்நாட்டு யுத்தத்தையே பிடித்துத் தொங்கிட, நம்மிடையே கொட்டாவிகள் விட்டம் வரை விரிந்ததை உணர முடிந்தது ! ஒரு கட்டத்தில் கொரியர் டப்பிக்களைத் திறக்கும் போதே உங்களுக்கெல்லாம் கை நடுங்கிடுமோ ? என்ற பயம் மேலோங்கிட - இளம் புலிக்கு டாட்டா சொல்லி வைத்தோம் ! Oh yes - இங்கே எனது தவறுகள் இல்லாதில்லை தான் !  Maybe தோர்களின் தொகுப்புகள் ; ட்யுராங்கோவின் தொகுப்புகள் போல Young டைகரையும் கையாண்டிருப்பின், results சற்றே தேவலாமாக இருந்திருக்கலாம் என்பதை மறுக்க மாட்டேன் ! But end of the day - தொடரின் கதைவலிமை அத்தனை சுகமில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை ! Therefore கூக்ளி - கூக்ளி தான் !
விக்கெட் # 4 பற்றி எழுதினால் bad bad  words-லே திட்டு வாங்க வேண்டிவரும் என்பது புரிஞ்சூ ! But கடமைன்னு வந்துட்டா இந்த டெலெக்ஸ் பாண்டியன் ஒரு கர்ம வீரன் என்பதால் ஓங்கி அந்தப் பெயரையும் உச்சரித்தே விடுகிறேன் !! இன்னும் சொல்லப் போனால் அதுவொரு பெயரல்ல ; நம்பர் மட்டுமே !! XIII !!! Yes - நமது பெயரில்லா மறதிக்கார இரத்தப் படல நாயகரே !!  முதல் சுற்றில் 18 மறக்கவியலாக் கதைகளின் உபயத்தில் ஒரு அசுர உயரத்தைத் தொட்டு நிற்கும் cult hero ! So அவரது இரண்டாம் சுற்றினை படைப்பாளிகள் அறிவித்த போது நாமெல்லாம் ஆர்ப்பரித்தது நினைவுள்ளது ! ஓவியர் வில்லியம் வான்சுக்கு சற்றும் சளைக்கா சித்திர பாணியும் கண்ணில்பட - சப்புக் கொட்டினோம் காத்திருக்கும் விருந்தை எண்ணி !! ஆனால்...ஆனால்...அது வந்து....well ....I mean ....என்ன சொல்ல வர்றேன்னா....இப்போ பாத்தீங்கன்னா....mayflower...mayflower ன்னு ஒரு கப்பல் ; ஆமா...ஒரேயொரு கப்பல் தான்.....அது வந்து...அதிலே வந்து....ஆங்...எங்கே விட்டேன்...ம்ம்ம்..கப்பல்லே ...லேசா பசிக்கிற மாதிரி இருக்கு....ஒரு வா சாப்டுட்டு வந்து தொடர்றேனே... ? நேராய் அமெரிக்கக் குடியேற்ற நாட்களுக்குப் போய் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து ; சம கால அரசியலோடும் ஐக்கியமாகி,அப்புறம்  யூதர்கள் ; உயர் குலத்தோர் ; இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் track எப்படி எப்படியோ பயணிக்க - இந்த இரண்டாம் சுற்றின் ஆல்பங்களை எடிட் செய்வதற்குள் தலை நிறையவே நரைத்துப் போய்விட்டது ! And துவங்கிய வேகத்திலேயே ஒரு சந்தில் வண்டியை நிறுத்திய கையோடு அதன் புது ஓட்டுநர்களும் இறங்கிக் கொண்டுவிட - ஒரு சிகரம் தொட்ட தொடருக்கு இப்படியொரு sequel தேவையா ? என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை - at least என்னளவிற்கு  !! வான் ஹாம் எனும் அசாத்தியரின் உயரம் என்னவென்பது இப்போது தான் இன்னமும் தூக்கலாய்த் தெரிகிறது என்பேன் ! எத்தனையோ புது சுவாரஸ்ய மார்க்கங்களில் நண்பர் ஜேசனைப் பயணிக்கச் செய்திருக்க வாய்ப்புகள் இருந்த போதிலும், இந்த Mayflower ரூட்டை கதாசிரியர் பிடித்திருக்க நிச்சயமாய் ஏதோ வலுவான காரணங்கள் இருந்திருக்க வேண்டும் தான் ; ஆனால் அதனைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நமக்கில்லாது (at least எனக்கில்லாது ) போனது தான் வருத்தமே !! XIII எனும் அந்தப் புதிர் பிறவியினை இன்னமும் ஒருவாட்டி வான் ஹாம் கையில் எடுத்தால், வண்டி பென்ஸ் ரேஞ்சுக்கு உறுமும் என்பதில் சந்தேகமில்லை ; ஆனால் அது நடைமுறை காணுமா என்பது தான் சிக்கலே !!
தலை காட்டிய வேகத்துக்கே தலை தெறிக்க ஓட நேரிட்ட முதல் வீராங்கனை - "விண்ணில் ஒரு வேங்கை" இதழின் நாயகியே ! அம்மணியின் பெயர் எனக்கு நினைவில்லை ; ஆனால் நீங்கள் வாளி வாளியாய் கழுவிக் கழுவி ஊற்றியது மட்டும் பளிச்சென்று நினைவுள்ளது !! "எவனோ  எங்கேயோ, எப்போதோ போட்ட சண்டையையெல்லாம் இன்னிக்கு இங்கே நாங்க படிச்சு எந்த ஆணியை பிடுங்க போறோம்பு ?" என்று மூஞ்சில் பன்னீர் சோடாவைத் தெளித்துத் தெளித்து அடித்த அழகை இன்றைக்கெல்லாம் சிலாகிக்கலாமே !! அன்றைக்கு மறுபடியும் பிளைட் ஏறின புள்ளை ; மறுக்கா கீழே இறங்கவே இல்லியாம் !! பராகுடா கப்பலானது சமுத்திரமெல்லாம் சுற்றுகிறதெனில், அந்த Spitfire விமானமோ வானமெலாம் வலம் வருகிறதாம் !!

அப்புறம் கெக்கே பிக்கே வென தரையில் உருண்டு சிரித்து மானத்தை ஏலமிட மாட்டீர்கள்  என்ற உத்திரவாதம் தந்தீர்களெனில் ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன் - காதுகளைக் கொண்டு வாருங்கள் கிட்டே !! இந்த பெண் பைலட் கதைக்கு உரிமைகளை வாங்கிய சமயம் எக்கச்சக்கக் கனவுகள் எனக்குள் - இது பின்னிப் பெடலெடுக்கப் போகும் தொடராய் அமைந்திடுமென்று  !! அந்நேரம் தான் THE KING SPECIAL என்ற பெயரில் ஒரு TEX ஸ்பெஷல் இதழ் வெளியிட்டிருந்தோம் ! அதே பாணியில் "THE QUEEN SPECIAL" என்ற நாமகரணத்தோடு - "லேடி pilot + மாடஸ்டி + ஜூலியா" என்ற முக்கூட்டணியைக் களமிறக்க உள்ளுக்குள் ஒரு மஹா சிந்தனை உருப்பெற்றிருந்தது !! பின்னே எப்படியோ அதை மறந்து விட்டேன் ! எந்தச் சாமி புண்ணியமோ - நீங்களும் தப்பித்தீர்கள் ; நானும் தப்பித்தேன் !! யப்பா !!! சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழை விடவும் பெரிய கார்ட்டூனாகிப் போயிருக்கும்டா சாமி !! Just miss !!! But இதோ - 2014 முதலாய் ஒரு பெரும் தொகையைத் தன்னுள் அடக்கிக் கொண்டு பீரோவினில் அடங்கிக் கிடக்கும் இந்தத் தொடரின் பாக்கி இதழ்கள் !! ரொம்பவே காஸ்ட்லியான புத்திக் கொள்முதல் தான் !!
சாத்துப் பட்டியலில் அடுத்த இடமோ - ஒரு இத்தாலிய cult நாயகருக்கு ! "Danger டயபாலிக்" என்றால் இத்தாலியில் ஷாரூக் கான் ; ரன்வீர் கபூர் ரேஞ்சுக்குப் பிரபல்யம் ! அவரது விளம்பரத்தைப் பார்த்த நொடியே ஒரு 50 இதழ்களை இத்தாலிக்குப் பார்சல் செய்து விடலாம் ; ரசிகர் மன்றத்தினர் வரிசையில் நின்று பணம் அனுப்பிடுவார்கள் ! நாமும் பெரும் எதிர்பார்ப்புகளோடே இவரைக் களமிறக்க, முதலில் "அட..." என்ற நீங்கள் அடுத்து "அடேய் !!" என்று கூக்குரலிடத் துவங்கிய சமயம் டர்ராகிப் போயிற்று எனக்கு ! 2014 என்று ஞாபகம் ; ஆண்டின் இறுதியில் review கோரியிருந்தேன் நாயக / நாயகியரைப் பற்றி ! "சும்மா கிழி..கிழி..கிழி" என்று இந்த முகமூடிக்காரரை போட்டுப் புரட்டோ புரட்டென்று வதம் செய்து விட்டீர்கள் ! "நாளைக்குச் சாகப் போற கிழவியை கூட கொலை பன்றானே !!" என்று இந்த anti hero-வைப் பப்படமாக்கியிருந்தீர்கள் ! நிறைய நாயகர்களை வெளுத்து வெள்ளாவிக்குப் போட்டிருக்கிறீர்கள் தான் ; ஆனால் இந்த ரேஞ்சுக்கு நீங்கள்   பொங்கி நான் பார்த்தது அண்ணன் DD கேசில் தான் !!  மேற்கொண்டு ஒரு 4 இதழ்களுக்கு உரிமைகளை வாங்கிட எண்ணியிருந்தவன் சத்தமின்றி வாலைச் சுருட்டிக் கொண்டதே மிச்சம் ! Truly sad !!
அடுத்த பூரண கும்ப மரியாதை அரங்கேறியது இன்னொரு இத்தாலியருக்கே !! திருவாளர் மேஜிக் விண்ட்  ! "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" அழகான ஆரம்பமாகிட, "உயரே ஒரு ஒற்றைக் கழுகு" fantasy ஜானருக்கு வழிகாட்ட - "நீங்க தக தக ன்னு எம்.ஜி.ஆர் போலவே இருக்கீங்க தம்பி!" என்று மே.வி.யிடம் உற்சாகத்தில் சொல்ல நினைத்தேன் நான் ! ஆனால் தொடர்ந்த இதழ்களையும் சரி,இந்த ஜடாமுடிக்காரரையும் சரி - "நீ அதுக்கு சரிப்பட்டு மாட்டே...நீ சுகப்பட மாட்டே !!" என்று நீங்கள் கட்டம் கட்டிட , கீழ்வானத்தை வெறித்துப் பார்த்தபடிக்கே  "போனால் போகட்டும் போடா !!" என்று பாடிக் கொண்டே போகத் தான் தோன்றியது ! இன்றைக்கும் எனக்குள் ஒரு குறு குறுப்பு ஓடுவதுண்டு தான் ; maybe  இவரை black & white-ல் சிம்பிளாக வலம் வரச் செய்தால் எவ்விதமிருக்குமென்று !! 130 + கதைகள் உள்ளதொரு தொடரானது அத்தனை மத்திமமாகவா இருந்திடப் போகிறது ?
Next in the list : ஹெர்மனின் western நாயகர் !! நெடும் கயிறு வழங்கப்பட்ட பிற்பாடும் வண்டி ஸ்டார்ட் எடுக்காது நொண்டிக் கொண்டேயிருக்க,  பொறுமையிழந்து நாம் கை கழுவ முனைந்தது கமான்சே தொடரை !! When it started off - என்னுள் ஏகப்பட்ட கனவுகள் - கேப்டன் டைகர் ரேஞ்சுக்கு இந்தப் புள்ளையாண்டானும் வன்மேற்கில் சூறாவளியாய் சுற்றி வருவாரென்று ! "யுத்தம் உண்டு எதிரி இல்லை" இதழ் சும்மா பட்டாசாய்ப் பொரிய, செம குஷி எனக்கு !! ஆனால் சிறுகச் சிறுக வேகம் கூடும் ; கதைகளில் வீரியம் எகிறுமென்று உங்களைப் போலவே நானும் காத்திருக்க, எகிறியதோ நமது பொறுமைகளின் தெர்மாமீட்டர் தான் ! அசாத்திய ஓவிய பாணி ; அடித்துத் தூக்கும் அடர் வர்ணங்கள் ; ஆனால் வெகு யதார்த்த ; மிகையிலாக் கதைக்களங்களே இந்தத் தொடரின் ஒட்டு மொத்த template என்பது புரிந்த போது - "போட்றா ரிவர்ஸ் கியரை !" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் ! குறை என்று சொல்ல ஏதுமிலா தொடரே ; அதே சமயம் நிறையென்று சிலாகிக்கவும் நிறைய இல்லாதது தான் நெருடலே !!

இன்னொரு ஹெர்மன் படைப்பு ; இன்னொரு ரிவர்ஸ் கியர் தருணமும் நமக்குப் பரிச்சயமே ; but still அது தற்போதைக்கு நம்மிடையே லைவ்வாக  உள்ள தொடர் என்பதால் no comments !!

"ஆனாலும் இந்த சொடலைமுத்து ரொம்ப strict-பா" moment புலர்ந்தது நமது மதிமுக (சேர்த்தே படிக்கணும் ; தேர்தல் நேரமும் அதுவுமுமாய் ம-தி-மு-க என்று படித்து குழப்பிக்கப்படாது !!) அழகியின் சமாச்சாரத்தில் தான் ! வான் ஹாம் எனும் கதாசிரிய ஜாம்பவான் ; LADY S எனும் அட்டகாச ஹீரோயின் ; வெகு நவீன கதைக்களங்கள் ; மிரட்டும் ஓவியங்கள் ; குளிரூட்டும் வர்ணங்கள் என்றதொரு formula - வெற்றிக்கு இருநூறு சதவிகிதம் உத்திரவாதம் என்றே சொல்வேன் - நூற்றுக்குத் தொண்ணூறுவாட்டி !! ஆனால் நடந்ததென்னவோ வேறு மாதிரி ! "விடை கொடு ஷானியா" என்று அமர்க்களமாய் தலைகாட்டிய LADY S அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நம் மனங்களை ஆட்சி செய்யப் போகிறாரென்ற எண்ணத்தில் நான் ஜாலியாக இருந்தேன் ! ஆனால் முதல் ஆல்பத்துக்கு அப்பாலிக்கா அம்மணியின் கதைகளும், அவரது கதாப்பாத்திரம் எடுத்திட்ட மாற்றங்களும், நம்மை அத்தனை ரசிக்கச் செய்யாது போக - இந்தப் பத்தியின் முதல் வரி நடைமுறை கண்டது ! "மதிமுக அழகியானாலும் சரி ; அண்டர்வேரை மாத்திரமே போட்டுக் கொண்டு கூரைகளில் பயணிக்கும் சொப்பன சுந்தரியாக இருந்தாலும் சரி - கதை சுகப்படாட்டி சட்னி சட்னி தான் ; டாட்டா....bye bye தான் !!" என்று படு தீவிரமாய் நின்று விட்டீர்கள் !! Gone with the wind...!
கிட்டத்தட்ட இதே நிலவரம் தான் பென்சில் இடையழகி ஜூலியா விஷயத்திலுமே ! "என்னலே....  பாப் வய்ச்ச இந்தக் கொத்தவரங்காய்ப் பிள்ளை சண்டையே போட மாட்டேன்கி..? நெதம் பேசியே கொல்லுதே ?" என்றபடிக்கு அந்த கிரிமினாலஜிஸ்டை நீங்கள் கடைந்து எடுக்க, நான் தான் "அய்யா..தர்மவான்களே....ஒரு ஓரமா அம்மணி இருந்திட்டுப் போகட்டுக்குங்கண்ணா !" என்று கூத்தாடி இடம் போட்டு வருகிறேன் ! ஆனி முடிஞ்சு ஆவணி துவங்குறச்சே, இந்தாண்டாவது பொண்ணு டாப்பா வந்ததோ - நான் தப்பித்தேன் ! இல்லாங்காட்டி நடு மண்டையில் ஒரு முட்டை பரோட்டா போடப்படுவது நிச்சயம் !!
சீரியஸ் நாயக நாயகியரை கட்டம் கட்டிய பட்டியலைத் தொடர்வது சிரிப்பு நாயகர்களின் கல்தா பட்டியல் ! எனது அவ்வப்போதைய புலம்பல்களின் புண்ணியத்தில் - அவர்களை எல்லாம் நாம் அடிக்கடி நினைவு கூர்ந்திடுகிறோம் தான் ! Anyways - வரலாறு முக்கியம் என்பதால் இங்கே பதிவிட்டு விடுகிறேனே :

  • SMURFS 
  • சுட்டிப் புயல் பென்னி
  • ரின்டின் கேன்
  • லியனார்டோ தாத்தா 

இவர்களை ஓரம்கட்ட நேர்ந்த சூழல்கள் பற்றி நிறையவே பேசி விட்டதால் no more மறுக்கா ஒலிபரப்பு !!

இந்தப் பட்டியலில் இருந்திட வேண்டிய இன்னொரு பெயர் "ஸ்டீல்பாடி  ஷெர்லாக்" !! பக்க நிரப்பிகளாய் வந்த இந்த ஷெர்லாக் ஹோம்ஸின் பகடி - எனது ஆதர்ஷ கார்ட்டூன்களுள் ஒன்று ! அந்தக் கோக்கு மாக்கான ஓவியங்கள் ; டாக்டர் வாட்சன் ; இன்ஸ்பெக்டர் லெஸ்டிரேட் ஆகியோருக்கு தரப்பட்டிருக்கும் பாத்திரங்கள் என எல்லாமே செம ரவுசு ! And இவருக்குப் பேனா பிடித்த ஒவ்வொருமுறையும் உற்சாகம் பீறிடும் உள்ளுக்குள் ! Sadly உங்களுக்குப் பிடிக்கக் காணோம் !! So தோற்றோர் பட்டியலில் உழல்கிறார் இந்தச் சிரிப்பு டிடெக்டிவ் !
இவர்கள் போக, விளிம்பு நிலையில் ஊசலாடும் மாடஸ்டி பிளைசி ; ஜில் ஜோர்டன் ; டைலன் டாக் ; மதியிலா மந்திரி போன்ற நாயகர்களும் உண்டு தான் danger zone-ல் !! ரசனைகளின் ஓட்டம்  காட்டாற்று வெள்ளம் போல ; எந்தவொரு தடுப்பையும் சட்டை செய்யாது ஓடியே தீரும் போலும் !! So அதுவே உலக நியதி எனும் போது பொம்மை புக்குகளின் நாயகர்களெல்லாம் விதிவிலக்காகிட முடியுமா - என்ன ?

Before I sign off, இரண்டே கேள்விகள் மாத்திரமே !

1.மேலுள்ள பட்டியலின் 'ரிஜிட்' நாயக /நாயகியரின் கல்தா குறித்து உங்கள் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ?

2 .ஒரேயொரு நாயகரையோ, நாயகியையோ மறுபடியும் வண்டியில் ஏற்றுக் கொள்ளும் உரிமை உங்களிடமிருப்பின், யாருக்கு இடம் தருவீர்களோ ? Who do you feel deserves another go ?

கிளம்பும் முன்பாய், முட்டுச்சந்து முன்னூறு கண்ட மூத்த புலவர் முத்துவிசயனாரின்  பொன்வரிகள், மீண்டும் உங்கள் நினைவூட்டலுக்கு :

வந்து...நின்று..வென்றவர் பலர்..!

வந்து..நின்று..சென்றவர் சிலர்... ! 

நின்றவரெல்லாம் வென்றவரல்லர்....

சென்றவரெல்லாம்  தோற்றவருமல்லர் !! 

ஏ..டமுக்கு...ஏ அஜிக்கு...!! ஏ..அஜிக்கு..ஏ டுபுக்கு !!

Bye all ! See you around..! Have a fab weekend !!

328 comments:

  1. Replies
    1. Me third..hee hee hee i like மேஜிக் விண்ட்..கருப்பு வெள்ளையில் தொடர வைக்கலாம்.. டைகர் செகண்ட் ஆப்ஷன். கொத்தாய்ப் போட்டு முடிக்கலாம்...Xiii ஸ்பின் ஆப் கதைகளை அவ்வப்போது தொட்டுக்கலாமே...

      Delete
    2. Except spinoff மற்ற இரண்டுக்கும் ok.

      Delete
  2. மறுமுறை வாய்ப்பு கொடுக்கலாமெனில் என் பங்கு வோட்டு இவர்களுக்கே

    LADY S
    Spitfire
    லியனார்டோ தாத்தா


    ReplyDelete
  3. டயபாலிக்... மேஜிக் விண்ட் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு தரலாம் சார்...!

    ReplyDelete
  4. We shd give a second chance to julia and majic wind

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 1.லேடி-S, வான் ஹாமேயின் பேனா என்ன மாயாஜாலம் செய்யக் காத்துள்ளதோ... மேலும் இப்போதுதான் கதை 'mountain flowers' என்னும் மையத்திற்கு நகர்ந்துள்ளது. அடுத்தடுத்த பாகங்களில் நிச்சயம் சுறுசுறுப்படைந்து விடுமென நம்பலாம்.

      2. டயபாலிக் - நல்லது செய்யும் ஹீரோவையே எத்தனை நாள்தான் ரசிப்பது... மாற்று ரசனைக்கு சரியான தீனி...

      3.கார்ட்டூன் பற்றிய கேள்விகளே வேண்டாம், All pass...

      Delete
  6. Jill jordan போதும்டா சாமி..

    ReplyDelete
  7. மதிமந்திரி மற்றும் மாடஸ்டிக்கு மட்டும் தான் எனது ஓட்டு.
    கார்ட்டூன்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நம்மள (மந்திரி ஸார்)மறந்துடாதீக....

      Delete
  8. மறுக்கா ஒரேயொரு வாய்ப்புனா

    அது

    "ஸ்மர்ப்ஸ்"க்கு மட்டும் தான் !

    ரெண்டாவது வாய்ப்பிருந்தா அது

    மச்சக்கன்னி "Lady S" க்கு!!

    ReplyDelete
    Replies
    1. 3. மதியில்லா மந்திரிக்கு

      Delete
    2. // மச்சக்கன்னி "Lady S" //
      இந்த அம்மையாருக்கு கொடுத்த வாய்ப்புகளில் "கதையில்" இவர் சாதித்து கொஞ்சமே.

      இவர் இடத்தில் ரின் டின் கேன் வருவது நன்றாக இருக்கும்.

      Delete
  9. Edi sir,
    சமிப நாட்களாக நம் காமிக்ஸில் 18+ சித்திரங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. Baracuda போன்ற கதைகளுக்கு இது சரி ஆனால் Durango ku இத்துணை detailed Frames தேவையா..இவ்வாறான விஷயங்கள் இலை மறையாக காட்டினாலே புரியும் என்பது என் கருத்து ...தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  10. ஹா...ஹா...ஹா..!

    ஹாஸ்யமான எழுத்துகளும் , வர்ணனைகளும் செம.!

    ReplyDelete
  11. எங்கள் ஓட்டு XIIIஜேசனுக்கே.

    ReplyDelete
  12. This is one of the hilarious posts you have ever posted sir. ROFL 😂

    ReplyDelete
  13. ##ஒரேயொரு நாயகரையோ, நாயகியையோ மறுபடியும் வண்டியில் ஏற்றுக் கொள்ளும் உரிமை உங்களிடமிருப்பின், யாருக்கு இடம் தருவீர்களோ ?###


    டேஞ்சர் டயபாலிக் & xiii

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. XIII

    அடுத்து டைகர் கதைகளை பிரித்து போடாமல் சேர்த்து போடலாம்

    அதுவும் இல்லாட்டி மாடஸ்டி.....

    ReplyDelete
  16. விஜயன் சார், ஒரே சிரிப்புதான் படிக்கும் போதுதான். அதுவும் queen special செம.

    முக்கியமாக நாம் எதற்காக அடி வாங்கினோம் என்பதை அடி வாங்கியதை ஞாபகம் வைத்தது சூப்பர். நான் கூட அப்படித்தான்:-)

    லேடிS முதல் கதை ஆகா என்று இருந்தது அதன் பின்னர் "ஏ"ன் என்று மாறிவிட்டது. அதுவும் ஒரு கதையில் டிவியில் நடு இரவு ஓடும் படத்திற்கு எழுதிய வசனங்கள் கொடுமை.

    மேஜிக் விண்ட் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது, ஆனால் முதல் இரண்டு கதைகளுக்கு பிறகு வந்தவை பூ சுற்றல்; அதிலிருந்து அவரை எனக்கு பிடிக்கவில்லை.

    ஜீலியாவின் அனைத்து கதைகளும் எனக்கு பிடித்து இருந்தது, அதில் நின்று போன நிமிடங்கள் மற்றும் நள்ளிரவில் காலன் வருவான்? எனக்கு மிகவும் பிடித்தது. இவர் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு முறையாவது வர வேண்டும்.

    தற்செயலாக ஒரு தற்கொலை புத்தகம் என்னிடம் உள்ளது ஆனால் படித்த ஞாபகம் இல்லை.

    டைகர் - மார்ஷல் டைகரை மிகுந்த எதிர்பார்ப்புடன் படித்தேன் ஆனால் அந்த அளவு மனதில் இடம் பிடிக்க வில்லை; அதே போல் இரண்டு வருடங்களுக்கு முன் வந்த டைகரின் (ஒரே நேரத்தில் வண்ணத்தில் மற்றும் கருப்பு வெள்ளையில் வந்த கதையும் சுமார்).

    ReplyDelete
  17. வதம் செய்ய விரும்பு - இளவயதில் தவறான வழியில் பெண்ணை பழக்கிய பெற்றார் பிற்காலத்தில் தனது தவறை உணர்ந்து மகளின் எதிர்காலம் நன்றாக இருக்க செய்த ஒரு விஷயம் என்ன அதனை தொடர்ந்து நடப்பது என்ன? டியூரங்கோ இந்த கதையில் எப்படி உள்ளே நுழைகிறார்? விறுவிறுப்பான ஆக்சன் கதை. இந்த கதையில் வில்லியும் ஒரு பெண், ஆண்களுக்கு தானும் சளைத்தவள் இல்லை என்று தனது வில்லத்தனில் நிருபித்து விட்டார்.

    டியூரங்கோ ஒரு துப்பாக்கி காதலன் அதற்காக அவன் எடுக்கும் ரிஸ்க் செம; நமது மற்ற குதிரை நாயகர்கள் கூட இதுபோல் தங்களின் துப்பாக்கியை காதலித்து இல்லை.

    இந்த புத்தகத்தில் மூன்றாம் கதை ஒரு தன் உயிரைக் காப்பாற்றிய செவ்விந்தியனுக்கு உதவி செய்யும் கதை. கதை சொன்ன விதம் மற்றும் வசனங்கள் மற்றும் அந்த செவ்விந்தியனின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

    டியூரங்கோ தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி கொடி நாட்டி விட்டார்.

    ReplyDelete
  18. எடிட்டர் சார்.
    இந்த பதிவு இரண்டாம் பாகம் வருமா?
    அதில் கறுப்புக்கிழவி.
    ரிப்கர்பி.
    மாண்ட்ரேக்.
    மற்றவர்களையும் மறுபரிசீலனை செய்ய முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. கறூப்புக்கிழவி கலரில்..வொய் நாட்...?!

      Delete
    2. கருப்பு கிழவி க்கு +1111

      Delete
  19. ஜூலியா ஜெரோம்
    லேடி எஸ் ஆகியோர் ஓகே.

    ReplyDelete
  20. கமான்சே இந்த தொடரில் வந்த அனைத்து கதைகளும் எனக்கு பிடித்து இருந்தது. இந்த தொடரில் எல்லா கதைகளிலும் முதல் இரண்டு பக்கங்கள் மெதுவாக செல்லும், அதன் பின்னர் ராக்கெட் வேகத்தில் சென்று முடியும்; இந்த கதையில் வசனங்கள் மற்றும் சித்திரங்களை மிகவும் ரசித்தேன். இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது எனக்கு மிகவும் வருத்தமே. என்றாவது இந்த தொடரின் மீதித் கதைகளை ஒரு குண்டு புத்தகமாக போட்டால் முதல் ஆளாக வாங்க நான் நிற்பேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா நானும் வாங்குவேன்.அதிலும் ஓநாய் கணவாய். மறுபதிப்பில் வண்ணத்தில் எதிர்பார்க்கிறேன்..

      Delete
  21. மறுவாய்ப்பென்றால் ஜேசன் & மாடஸ்டிக்கே

    ReplyDelete
  22. நெடுங்கால கனவு மறுவாய்ப்பு நாயகர்கள்
    ஆர்ச்சி
    இரட்டை வேட்டையர்கள்

    ReplyDelete
  23. ஜூலியா வரலாம் ....

    நி.போ.நி..நல்ல கதைதான்

    ந.கா.வருவான் ..நல்ல கதையே..

    கைவசம் இருக்கும் ஒரே கிரிமினாலஜிஸ்ட் என்றவகையில் ஜூலியாவுக்கு என் ஓட்டு..

    ReplyDelete
  24. மறு வாய்ப்பு :

    இளம் டைகர் & பென்னி

    ReplyDelete
  25. 1)lady s;
    2)young tigers 4 album combined
    3)dylon dag( min 2 albums
    4)magic wind same as atleat 3 albums in single stroke
    5)come check (3-4 albums )

    ReplyDelete
  26. Sir,

    Young Blueberry may still click as a collected edition. You may test feelers later some time.

    ReplyDelete
  27. Second chance for Bruno Brazil. But strictly in B&W and Tex or Classic Reprint size only.

    Pls don't kill Modesty or Gil Jourdan.

    iznogoud and Dylan can (should) be let go...

    ReplyDelete
  28. // ...ஒரேயொரு நாயகரையோ, நாயகியையோ மறுபடியும் வண்டியில் ஏற்றுக் கொள்ளும் உரிமை உங்களிடமிருப்பின், யாருக்கு இடம் தருவீர்களோ ? Who do you feel deserves another go ? ...//

    எனது ஓட்டு,

    1) கமான்சே
    2) மேஜிக் வின்ட்
    3) டேஞ்சர் டயபாலிக்

    ReplyDelete
  29. மறுபடியும் ஒரு வாய்ப்பு அப்படின்னா...

    இளம் ப்ளுபெர்ரி ப்ளாக்பஸ்டர் கலெக்‌ஷன். அதுக்கு மட்டும் தான்.

    ReplyDelete
  30. டியர் எடிட்டர்

    நம் மறுவாராவிற்குப் பின் எவ்வளவு rejects ! ஷப்பாரா !! இதனில் பாதிக்கும் மேல் நன்றாகவே இருந்தன. எப்படித்தான் சமாளிக்கிறீர்களோ நீங்கள். நீங்கள் எழுதியுள்ள பட்டியலில் எனக்கு பிடித்தவை :

    Diabolik
    Magic Wind
    ஜூலியா
    SMURFS
    பென்னி
    லியோனார்டோ

    ReplyDelete
  31. We can give one more chance to DANGER DIABOLIC.

    ReplyDelete
  32. சார்,
    டயபாலிக் / லேடி எஸ் - வாய்ப்பு தரலாம்

    ReplyDelete
  33. பென்னி அப்படி ஒன்றும் சாத்து வாங்கிய மாதிரி எனக்கு ஞாபகமில்லை. நன்றாக உள்ளது என்ற ரேஞ்சில் தான் விமர்சனங்கள் வந்ததாக நமக்கு நினைவு..

    ReplyDelete
  34. டியர் எடி,

    கல்தா கொடுக்கபட்ட கதை வரிசைகளுக்கு நானும் ஒத்துபோகிறேன்... இந்த கதைதொடர்களை பலவற்றை ஆங்கிலத்தில் படித்தபோதே, அதில் கதை வலு குறைவு என்று தோன்றியது... தமிழில் சோடை போகாது எதிர்பார்த்ததே.

    ஐரோப்பா காமிக்ஸ் ரசிகர்களின் ரசனை, காமிக்ஸிலும் ஓவியங்களை தேடும் பாங்கு, அவற்றில் கதை அவர்களுக்கு இரண்டாம் பட்சம். அவர்களின் வெகுஜன வாசிப்பிற்கும், நமது ரசனைக்கும் ஆறு வித்தியாசங்களாவது கண்டுபிடிக்கலாம்.

    மறுவருகை நாயர்கள்களில் எனது தேர்வு ஜில் ஜோர்டானே... அவரின் அலட்டல் இல்லாத டிடெக்டிவ் பாணி மற்றும் கண்ணாடி, ரிப் கிர்பியை ஞாபகபடுத்துகிறது... பராகுடாவிற்கு பின்பு என்ற காலத்தில் இவர் கதைகள் நமக்கு பிடிக்கும் என்றே தோன்றுகிறது.

    இரண்டாவது வாய்ப்பு உண்டென்றால், ஜூலியாவை வும் சேர்த்து கொள்ளலாம். கிரிமினாலாஜிஸ்ட் கதை வெரைட்டி நமக்கு தேவை.

    மூன்றாவது தேர்வு, இளம் டைகர். டூராங்கோ முடியும் போது நீங்கள் கூறியபடி தொகுப்புகளில் அது கண்டிப்பாக ஜெயிக்கும் என்று நம்பலாம்.

    ReplyDelete
  35. டியர் எடி..நகைச்சுவையாக வந்து நின்று ஓடிய நாயக நாயகியரின் பட்டியலை கேலி கிண்டல் தந்து சிறப்பாக வரிசைப்படுத்தி வலியையும் இனிப்பு தடவி வழக்கம்போல் கொடுத்துள்ளீர்கள்..டைகர் தொகுப்புகள் நன்றாக அமையும்.. தவிர்க்காமல் தளபதிக்குரிய அனைத்து கதைகளையும் வெளியிட்டு முடித்து வையுங்களேன். மற்றபடி நமது இரசனைகளை அவ்வப்போது அலசி ஆராய்ந்து அதிலேயே மூழ்கி மடைமாற்றம் செய்து சிறப்பான கதைகளாக தர தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இரசித்துக் கொண்டே ஆதரிக்கிறோம்..

    ReplyDelete
  36. சார், Listல் மேஜிக் விண்ட் மோசமில்லை என்றாலும் கழிந்தவைகள் கழிந்ததாகவே இருக்கட்டுமே. புதிதாக முயற்சிக்கலாமே. ( Lady S, Julia- mention பண்ணி பயங்காட்டாதிங்க :-) )

    போக்கிரி டெக்ஸ் கதைகள் hit அடித்துள்ளன. அவைகளை சீக்கிரம் கொண்டு வரலாமே.

    ReplyDelete
  37. ///ஒரேயொரு நாயகரையோ, நாயகியையோ மறுபடியும் வண்டியில் ஏற்றுக் கொள்ளும் உரிமை உங்களிடமிருப்பின், யாருக்கு இடம் தருவீர்களோ ? Who do you feel deserves another go ?
    ///

    ஸ்மர்ஃப்ஸ் / ஜூலியா

    ReplyDelete

  38. இந்தி தலைப்பை பாத்தவுன ஒரு நிமிஷம் பயத்து போயிட்டேன்...கீழே பதிவை பாத்தவுன தான் நிம்மதி ஆச்சு..

    படீச்சுட்டு வரேன் சார்...:-)

    ReplyDelete
  39. நாயகர்களில் டயபாலிக் க்கு மீண்டுமொறு வாய்ப்பு தரலாம்! இந்த ஆண்டி ஹீரோவுக்கு ரசிகர்கள் அதிகமே! ஒரு கதையிலே கிழவிய கொன்னதற்காக ஓரம் கட்டியது டூமச் சார். விற்பனையில் சாதிக்கவில்லை என்று ஓரம் கட்டியிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருக்கலாம். அடுத்து இரத்தப்படலம் ஸ்பின் ஆப் கதைகளுக்கும் வாய்ப்பு தரலாம். பெண் நாயகி என்றால் இடையழகி ஜூலியாதான். அதுவும் அந்த நின்று போன நிமிடங்கள் போன்று கதையாக பார்த்து தேர்வு செய்து களம் இறக்கிப் பார்க்கலாம். கடைசியாக கமான்சே வை ஜம்போவில் மூன்று மூன்று கதையாக போட்டு முடித்து விடலாம். லிமிடெட் எடிஷன் என்பதால் நிறைய ஸ்டாக்கும் தங்காது!

    ReplyDelete
    Replies
    1. கரீக்ட்...நம்மோட ஒத்து போறார்

      Delete
    2. டயபாலிக்..+12345678910

      Delete
  40. பதீவை படிக்க படிக்க ..

    சிரிப்போ ...சிரிப்பு...:-))

    ReplyDelete
  41. தோற்று போனவர்கள் மீண்டு (ம்) வருகை வந்தால் வெற்றி பெறுவாரோ என நான் நினைப்பது..


    கறுப்பு வெள்ளை மேஜிக் விண்ட்..

    பென்னி...

    ReplyDelete
  42. ஆனா மாடஸ்தியை இந்த லிஸ்ட்ல ( பதிவில்) கொண்டு வர வேண்டாமே...

    பெண்ணுரிமைக்காக போராடும் எங்கள் குல விளக்கு மாடஸ்தியின் துணிச்சல் நாம் கழித்து கட்டிய அனைத்து ஆண் நாயகர்களுக்கும் ஒட்டுமொத்தமாக ஈடாவார்..:-)

    ( இதற்கு ஷெரீப்..கிட்ஆர்ட்டின் ஆகியோரின் பதில்களை கண்டிப்பாக



    எதிர்பார்க்க வில்லை என்பதை தெரிவித்து கொண்டு ...:-)

    ReplyDelete
    Replies
    1. நமது ஆசிரியரும் ஒரு மாடஸ்தி ரசிகர்மன்ற தலைவர் என்பதையும் நினைவூட்ட கடமைபட்டுள்ளேன்.

      Delete
    2. சூப்பர் தல.. வேண்டும்.. வேண்டும்.. மாடஸ்டி மறு வரவு வேண்டும்..

      Delete
    3. கவலைப்படாதீங்க தல. பூட்ட கேசுக்கெல்லாம் (மாடஸ்டி) பதில் சொல்லி நேரத்தை நாங்க வீண்டிப்பதில்லை.

      Delete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. எனது தேர்வு
    1.Benny and 2.Gil Jourdan
    இக்கதைகள் எனது குழந்தைகளுடன் படிப்பதற்கு மிகவும் நன்றாக இருத்தது - I Miss them
    3.Magic wind - The Art and story were different to what we see in Tex.

    ReplyDelete
  45. ஜில் ஜோர்டன்!
    முடியுமானால் டேஞ்சர் டயபாலிக்!!

    ReplyDelete
  46. இந்த வாரப் பதிவும் குறிப்பாக உங்களின் கடைசி கவிதை வரிகள், கலக்கல் ரகம்..

    மறுபடியும் ஒரு வாய்ப்புன்னா..

    யங் ப்ளூபெர்ரி (or)
    மாடஸ்டி (or)
    ஜுலியா (or)
    லேடி S (or)
    மேஜிக் விண்ட் (or)
    எதாவது ஒண்ணு..

    ReplyDelete
  47. மேஜிக் விண்ட் கதைகளை கருப்பு வெள்ளையில் முயற்சிக்கலாம் இரண்டாவது சுற்றில் சாதிக்க வாய்புண்டு!

    ReplyDelete
  48. Editor sir Vaanam engal veethi story is concluded or not?😍😎🤔🤔

    ReplyDelete
  49. மறுதேர்வுக்கு தகுதியானவர்கள் என் சிறு அறிவுக்கு எட்டிய வரையில்...

    1. டயபாலிக்
    2. ஜூலியா
    3. மேஜிக் விண்ட் - ப்ளாக் அண்ட் வொயிட்

    ReplyDelete
    Replies
    1. @p.karthikeyan
      #welcome To Diabolik ரசிகர் மன்றம்...

      Delete
  50. / ...ஒரேயொரு நாயகரையோ, நாயகியையோ மறுபடியும் வண்டியில் ஏற்றுக் கொள்ளும் உரிமை உங்களிடமிருப்பின், யாருக்கு இடம் தருவீர்களோ ? Who do you feel deserves another go ? ...//

    கமான்சே வேண்டும்.

    கார்டூன் கதைகள் அனைத்தும் வேண்டும். எனது வரிசை
    1. ரின் டின் கேன்
    2. ஸ்மர்ப்
    3. தாத்தா

    ReplyDelete
    Replies
    1. ஜீலியா இந்த வருடம் வருவது போல் வருடம் தவறாமல் வர வேண்டும்.

      Delete
  51. //ஒரேயொரு நாயகரையோ, நாயகியையோ மறுபடியும் வண்டியில் ஏற்றுக் கொள்ளும் உரிமை உங்களிடமிருப்பின், யாருக்கு இடம் தருவீர்களோ ? Who do you feel deserves another go ?//

    1. Danger Diabolik..

    2.Comanche .. ஒரு பெரிய ஆல்பம் ஆக போட்டு மிச்சம் உள்ள கதைகளை முடித்து விடலாம் சார் ..

    3.Young Tiger .. Same .. ஒரு பெரிய ஆல்பம் ஆக போட்டு மிச்சம் உள்ள கதைகளை முடித்து விடலாம் சார் .. Like thorgal , Durango ..

    4.Magic Wind .. ரெண்டு கதைகள் B&W ஒரே புக் ஆக போடலாம் சார் ..

    5.சுட்டிப் புயல் பென்னி ..

    ReplyDelete
  52. ***** பராகுடா - இரத்த வைரம் ******

    சிலபல மாதங்களுக்கு முன்னே பராகுடா புக் #1 வெளியாகி அதைப் படிக்கும்போது நிறைய சமாச்சாரங்களில் அதுவொரு வித்தியாசமான பிரம்மிப்பை ஏற்படுத்தியிருந்தது! கதாசிரியரின் இந்த வித்தியாசமான பாணி மீதமுள்ள பாகங்களையும் சுவாரஸ்மாக்கிடுமா அல்லது 'ஜேஸன் ப்ரைஸின்' இறுதிப் பாகம் போல கொஞ்சம் சொதப்பிடுமா என்ற பயம் கொஞ்சூண்டு இருந்தது!

    ஆனால் அந்தப் பயங்களையெல்லாம் பணால் செய்துவிட்டு, பிரம்மிப்பின் உச்சத்திற்கே நம்மை அழைத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது இந்த இறுதிப் பாகங்களைத் தாங்கிவரும் புக் #2 !!

    யூகிக்க முடியாத தடாலடித் திருப்பங்களோடு மூச்சிறைக்க கதை சொல்லியிருப்பது கதாசிரியரின் பாணி என்றால், அவரது கற்பனைக்கு உயிரூட்டி காட்சிகளை நம் கண்முன்னே நிறுத்தியிருப்பதில் கதாசிரியரை ஒருபடி பின்னுக்குத் தள்ளி விடுகிறார் ஓவியர் ஜெரெமி! குறிப்பாக, அந்தக் கலரிங் பாணி - ப்பா அசாத்தியமான மிரட்டல்!! அந்த வில்லங்கத் தீவான ப்யூர்டோ-பிளாங்கோவின் மூலை முடுக்கெல்லாம் நமக்கும் அத்துப்படி எனும்படியாகச் செய்திருப்பதற்கும் ஓவியரின் அசாத்திய திறமையே காரணம்!! பராகுடா கப்பலைக் காட்சிபடுத்தியிருக்கும் ஒவ்வொரு ஃபிரேமுமே நம்மை மிரட்டுகிறது! குறிப்பாக 63ம் பக்கத்தில் அத்தியாயத் தொடக்கத்தில் வரையப்பட்டுள்ள அந்த முழு பக்க ஓவியம் - மூரி இனத்தவரின் சூன்யகாரன் பெனிலாவின் மிரட்டலான போஸ் - அப்பாடிக்கப்பாடியோவ்... மிரட்டலோ மிரட்டல்!!! (இதையே கூட அட்டைப் படமாகக் கொண்டு வந்திருக்கலாமோ என பல முறை நினைக்கத் தோன்றியது)
    நான்கைந்து பக்கங்கள் ஒரு காட்சியை விவரித்து மூழ்கச் செய்துவிட்டு திடீரென வெறோரு காட்சிக்கு இட்டுச் செல்வதும், முந்தைய காட்சியின் வசனத் தொடர்ச்சியையே பிந்தைய காட்சியின் விவரிப்பு வார்த்தைகளாய் பயன்படுத்தியிருப்பதும் - கதை சொல்லும் பாணிக்கு புதுசு!! என்னவொரு வித்தியாசமான ட்ரான்சிஷன் டெக்னிக்!!!

    கதையில் நல்லவர் என்று யாருமே இல்லாதது மற்றொரு ஆச்சரியம்! துளியூண்டு நல்லவர்களாகத் தெரிபவர்களுக்கும் அல்பாயுசே!! கதையில் நாயகனாக வலம் வரும் ராபியும் கூட கடைந்தெடுத்த அயோக்கியனே!! பஞ்ச் டயலாக் சகிதம் ஹீரோயிஸத்தில் ஊறிப் பழகிய நமக்கு, இப்படி நல்லவர்கள் என்று யாருமே இல்லாமலேயே 6 பாகக் கதையைச் சொல்லி பிரம்மிக்கச் செய்திருப்பதும் படைப்பாளிகளின் அசாத்திய திறமையே!!

    பராகுடா - நம் காமிக்ஸ் பயணத்தில் ஒரு குறிப்பிடத் தகுந்த மைல்கல் இதழ்!

    என்னுடைய ரேட்டிங் - 10/10


    ReplyDelete
    Replies
    1. ///பராகுடா - நம் காமிக்ஸ் பயணத்தில் ஒரு குறிப்பிடத் தகுந்த மைல்கல் இதழ்///

      நிச்சயமாக!

      இதுபோன்ற சிறப்பிதழ்களை
      6 பாகமும் சேர்த்து ஹார்டு கவர் பைண்டிங்கில் வெளியிட்டிருக்லாம்!

      Delete
  53. டயபாலிக் ஆதரவு இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

    டயபாலிக் முதல் காமிக்ஸ் எனக்கு மிகவும் பிடித்தது இருந்தது. 10 முறையாவது திரும்ப திரும்ப வாசித்து இருப்பேன்.

    ஆனால் இரண்டாவது காமிக்ஸ் படித்த போது "என்ன இது" என்று தோன்றியது.

    கனவனை கொன்று அவன் மனைவியை இருபது வருடம் கொடுமை படுத்தும் ஹிரோ வை "anti-hero" என்று எவ்வாறு வகைபடுத்த முடியும்.

    ஒரே கிழவியை கொன்றதால் டயபாலிக் நிராகரிக்கலாமா? என்று கேட்கும் நியாயம் இருக்கிறது.

    வரும் தொடர்களில் கிழவியை கொல்ல மாட்டார் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் கிடையாது என்கிறபோது எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும்.

    ஒரு ஹிரோ திருடனாக கூட இருக்கலாம், ஆனால் கொடுர மனம் படைத்த கொலைகாரனாக இருக்க கூடாது என்பது என் எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. @Ganesh kumar


      இந்த தொடர்ரில் உள்ள 300+ கதைகளிலும் கழவியை கொல்லவ போகிறார்...




      அப்போ அப்போ தல_தளபதி பஞங்களே flop ஆவது உண்டு தானே...

      Delete
    2. பார்ப்போம். ஆனால் நீ சொல்ற மாதிரி இருக்க வாய்புகள் குறைவு.

      Delete
    3. @ganesh kumar
      அண்ணா நீங்க சொல்லுரத பாத்த நீங்க ஒரு வய்ப்பு கொடுக்களாம் அப்படி தானே...😉😍😍😍

      Delete
    4. அகில் எனக்கும் டயபாலிக் பிடித்த காமிக்ஸ்தான்.
      காதையோட்டம்(திரைகதை) சொல்லபட்ட விதமும் அருமையாக இருக்கும்.

      டாயபாலிக் முதல் காமிக்ஸ் போல் வரும்பட்சத்தில் , நான் ரொம்பவே விரும்பி பல முறை படிப்பேன்.

      Delete
    5. // ஒரு ஹிரோ திருடனாக கூட இருக்கலாம், ஆனால் கொடுர மனம் படைத்த கொலைகாரனாக இருக்க கூடாது என்பது என் எண்ணம். //

      Excellent point. Well said. I too echo the same. NO Diabolic.

      Delete
  54. மருதேர்வுகள்...
    1)டயபாலிக்...
    2)மேஜிக் விண்ட்
    3)ரோஜர்
    4)லேடி S
    5)பென்னி



    Reason...
    1)டயபாலிக்...
    இத்தாலியை ஒரு கலக்கு கல்கியவரை ஒரு ஆல்பதின் வாயிலாக ஒதுக்குவது முறை இல்லை...
    300+ தலைபுகளை உள்ளது...
    நல்ல கதைகளை தேர்வு செய்து வெளியினலாமே...
    2)மேஜிக் விண்ட்
    மேலே சொன்ன வறிகள் தான் இவருக்கும்...+ இது ஒரு தொடர் சங்கிளியை போல் செல்லும் கதை பாதில் leave கொடுத்து அனுப்புவது சரி இல்லை...
    3)தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை...
    4)லேடி S
    ஒரே காரணம் வான் ஹெமே கதை ஆசிரியர்...
    +நல்ல ஓவியங்கள்...
    +தெலிவான கதை ஓட்டம்...
    5)பென்னி
    முக்கிய காரணம் இது குழந்தைகளை கவர குடியது
    #நாம் மட்டுமே இந்ந சித்திரகதைகளுக்கு வாசகர் ஆக இருந்தால் போதுமா அடுத்த தலைமுறையும் மாற வேண்டாமா அதற்கு நல்ல குழந்தை தனமான கதைகள் அவசியம்...இது பர்க்க கலர்புல்லாக இருப்பதால் பார்பவரை படிக்க தூண்டும்
    Example-என அண்ணண் செல்வா தான்
    அவன் முதன் முதலாக படித்தது பென்னி தான்...😎

    ReplyDelete
  55. ஜெரோம் - படித்ததில்லை, தெரியாது

    ரோஜர் - படு போர்,

    புருனோ பிரேசில் - அப்பவே சுமார் தான், இப்ப போர்

    இளம் Tiger - மண்டை காய்ச்சல். போர்

    XIII 2 .௦, ரொம்ப நல்லா தானே இருக்கு, ஆக்ஷன், சித்திரங்கள் செம. அப்புறம் எப்படி இப்படி சொல்லறீங்க? நான் அதுடைய அடுத்த பாகங்களுக்காக வைட்டிங்.

    லேடி Spitfire - எனக்கு பிடித்து இருந்தது.

    சரி, மறு வரவிற்கு ஏற்ற நாயகர்கள்

    1 டேஞ்சர் டையபாலிக் - அந்த contravesial கிழவி கொன்ன கதை நான் படித்தது இல்லை. பட் நான் படித்த ஒவ்வொரு கதையும் செம சூப்பர் . வித்தியாசமான grey tone சித்திரங்கள். விறு விருப்புக்கு பஞ்சம் இல்லை, சஸ்பென்ஸ். இது ஏதோ ஒரு புத்தகத்தை பார்த்து புறக்கணித்து விட்டார்களோ நம் மக்கள் ??

    2 டயலன் டாக் - படித்த அத்தனை கதையும் சூப்பர்.

    3 லேடி ஸ் - லேடி ஸ் க்கு YES

    கார்ட்டூன்

    எனக்கு இதில் 2 திரும்ப வந்தா நல்லா இருக்கும்

    1 பென்னி
    2 லியோனார்டோ

    ReplyDelete
  56. Spitfyre
    Julia
    Lady S
    Comanche
    இந்த வரிசை நன்று...
    33% இட ஒதுக்கீடு மகளிரணிக்கு தர தவறியதை மூதறிஞர் முத்து விசயனார் எங்ஙனம் ஈடு செய்ய போகிறார்?
    தங்கத் தலைவி, மாதர் குல மாணிக்கம் மாடஸ்தியை வேறு விளிம்பு நிலையில் வைத்து உள்ளார்.
    7 முதல் 77 வயதுடைய ஆண்களுக்கு மட்டுமாய் தமிழ் காமிக்ஸ் நடை போடுவது நன்றல்ல....
    பராகுடாவில் வரும் நாயகிகள் மட்டுமே போதாது.
    Wasp
    Scarlet witch
    Black widow
    Wonder woman
    Captain Marvel
    Jean grey
    Shuri
    So many more female super heroes are there, equally to Male super heroes...
    நாம் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது.
    வரும் காலத்தில் யாரேனும் ஆராய்ச்சி மானவர்கள், தமிழ் காமிக்ஸ் பற்றி ஆராய்ந்து அறிக்கை தரும் போது,இதை ஒரு குறையாக கூறிட வாய்ப்பு தரக்கூடாது. வரலாறு மிகவும் முக்கியம். 'சிங்கத்தின் கிழ போல்டு வயதில்' என தங்கள் ஹிஸ்டிடியை எந்த ஒரு மனத்தாங்கலுமின்றி எழுத இது உதவும்.
    எனவே, Queen special a.k.a ராணிகளின் ராஜ்ஜியம், a.k.a நாயகிகள் நாட்டியம், ஈரோடு புக் ஃபேர் surprise....

    ReplyDelete
  57. எடிட்டர் சார் ...
    ஒரு வருடத்திற்கு என்று கதாநாயகர்களை வரிசை படுத்துவதை காட்டிலும் அவர்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக் (class 1,2,...) கொள்ளலாம்.
    1.ஒரே வருடத்தில் பல முறை (tex)
    2.வருடத்திற்கு இரண்டு/மூன்று முறை (lucky luke, Martin)
    3.வருடத்திற்கு ஒருமுறை (wayne shelton, ட்ரெண்ட்)
    4. வருடத்திற்கு ஒருமுறை தொகுப்பாக மட்டும் (durango, தோர்கல்)
    5.இரண்டு வருடத்திற்கு ஒரு முறை (slow pickup heros)
    6. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தொகுப்பாக(Tiger)
    7. லிமிடேட் எடிசன் (முன்பதிவு நாயகர்கள்)
    8. புக் ஃபேர் ஸ்பெஷல் எடிசன் (குண்டு புக்)

    இப்படி வகைப் படுத்திக் கொண்டால் எல்லா நாயகர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பும் கிடைக்கும். அனைத்து வித ரசனைகளும் பூர்த்தி செய்யப்படும். எந்த தொடரையும் கைவிட வேண்டிய அவசியமில்லை.

    ஒவ்வொரு வருடமும் ஒரே விதமான நாயகர்களுடன் தொடராமல் ஒரு shuffled காம்பினேஷன் கிடைத்தது போலவும் இருக்கும்.

    நாயகர்களின் performance க்கு ஏற்ப இந்த லிஸ்டில் promotion அல்லது depromotion வழங்கலாம்.

    ReplyDelete
  58. 1.டைஞ்சேர் டியபோலீக்....
    2.ஜூலியா....(ரொம்ப உறவடாமல் உள்ள கதைகள்....முகம் சுளிக்காமல்..)


    ரெண்டு பேர் மட்டும் தான் கேட்டாரு....

    ReplyDelete
  59. மகளிர் special போட்டால் சிறப்பு....ஹி ஹி ஈரோட்டில்.....

    ReplyDelete
  60. வாய்ப்புகளை தேடி அலையாமல், அந்த வாய்ப்புகள் தன் வீட்டு கதவைத் தட்டும்படியான தன்னம்பிக்கையும் ,தைரியமும் கொண்டவர் எங்கள் இளவரசி என்பது வெளிப்படையான உண்மை.

    அப்பேர்பட்ட புகழை உடையவரை ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பது தேவையில்லை.ஏனென்றால் அவர் தானாகவே முன்வரிசைக்கு முன்னேறும் சாகஸம் தெரிந்தவர்.

    இவ்வளவு சரித்திரப் புகழ் வாய்ந்தவரை பரிகாசம் பகடி செய்து ,உள்ளுக்குள் இன்புறும் உள்நாடு ,வெளிநாட்டுச் சதி பிரச்சாரத்தில் நாங்கள் சிக்கமாட்டோம்.

    ஏனென்றால்...

    இது தானா சேர்ந்த கூட்டம்..!
    ☺☺☺☺☺

    ReplyDelete
    Replies
    1. இளவரசி....வாழ்க

      இப்படிக்கு.....ANTI LADY S'ian

      Delete
    2. அது... 👍👍👍

      இளவரசி....வாழ்க.. வாழ்க..

      Delete
  61. ஒரேயொரு நாயகரையோ, நாயகியையோ மறுபடியும் வண்டியில் ஏற்றுக் கொள்ளும் உரிமை உங்களிடமிருப்பின், யாருக்கு இடம் தருவீர்களோ ?

    XIII

    ReplyDelete
  62. நம்முடைய மனிதர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையின் இனிமைகளை தொலைக்க விரும்புகிறார்கள் என்பதற்கும் யதார்த்தத்தை மறுக்கிறார்கள் என்பதற்கும் இயல்பான வாழ்வை மறந்துபோகிறார்கள் என்பதற்கும் - நம் சிறிய வாசக வட்டம் மறுக்கும் சில கதைகளையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். டிடெக்டிவ் ஜெரோமின் மெதுவான கதையோட்டம் பலருக்கும் ரசிக்காமல் போனது, கார்ட்டுன்களில் லக்கியை மட்டுமே கொண்டாட விரும்புகிறோம், வில்லன் என்றால் டயபாலிக் போல அதீத ஆற்றலோடு ஈவிரக்கமின்றியுமிருப்பான் என்பதை ஏற்க மறுக்கிறோம். ஆனால், உலகளாவிய ரீதியில் இப்படி கிணற்றுக்குள் தவளைகளாகக் கிடக்கும் வட்டங்கள் இல்லாமல் அது பரந்து விரிந்து கிடப்பதைப் பார்க்க பொறாமையேற்படுகிறது. அவர்களிடமிருந்துதான் அயர்ன்மேன், ஸ்பைடர்மேன் போன்ற நம்பக் கடினமான சூப்பர் ஹீரோக்களும் தானோஸ் போன்ற கொடூர வில்லன்களும் உருவாக்கப்படுவதற்கான தைரியம் படைப்பாளிகளுக்குக் கிடைக்கிறது.

    முதலில் வாசகர்கள் தாங்கள் வாசகர்கள் என்பதையும் படைப்பாளிகள் அல்ல என்பதையும் உணரவேண்டும். பொறுமையோடு கதைகளையும் கதை மாந்தர்களையும் அணுகப் பழகவேண்டும். இரண்டு பக்கங்களை வாசித்தேன், அதன் பின்னர் நகர முடியவில்லை என்பது இங்கே அடிக்கடி பார்க்கும் பின்னூட்டமாக இருக்கிறது. அது என்ன இரண்டு பக்கங்களை மட்டும்? முழுமையாகப் படியுங்கள், பின்னர் உங்கள் விமர்சனங்களை அக்குவேறு ஆணி வேறாகப் பதிவிடுங்கள். பலர், தாங்கள் கதைகளைப் படிக்காமலேயே மற்றவர் பதிவுகளைப் பார்த்துவிட்டு, இவர் சொல்லிவிட்டார் ஆகவே அப்படித்தானிருக்கும் என்ற எண்ணத்தில் தங்கள் பின்னூட்டங்களை இடுகிறார்கள். பின்னூட்டமிடும் உரிமை மறுக்க இயலாதது. அதேபோல, படைப்புகளோடு ஒன்றி, அவற்றின் காலவோட்டத்தை உணர்ந்து படிக்கும்போதே ஒவ்வொரு கதையினதும் உயிர்நாடியை அறியமுடியும்.

    அதற்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை பொறுமையாகத் தயார்ப்படுத்தவேண்டும். பதின்ம வயதில் ரசித்த பல கதைகளை இன்று இரசிக்க முடியவில்லையே என்று நாம் எரிச்சல்பட்டு எழுதுகிறோம். நமக்குள் இருக்கும் அந்தக் குழந்தையை துயில் எழுப்ப முடியாத நமது இயலாமையின் வெளிப்பாடே அது. இன்று பலரும் சிலாகிக்கும் பராகுடாவை சகிக்கவே முடியவில்லை - என்று சொல்லக்கூடிய பலரும் இங்கே இருக்கக்கூடும் என்பதையும் ஆனால், பெரும்பாலன விமர்சனங்கள் பாராட்டுபவையாக இருப்பதால் அவர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தாமல் ஒன்றில் மௌனமாக அல்லது ஊரோடு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உன்னிப்பாக அவதானித்தால் புரிந்திடலாம்.

    மாறவேண்டியது எடிட்டர் அல்ல. அவர் ஒவ்வொரு கதையோடு பணிபுரியும்போதும் அந்தந்தக் கதைக்கேற்ப தன்னை மாற்றிடும் ஆற்றலுள்ளவராகத் தெரிகிறார். அதனால்தான் பல கதைகளை நம்பிக்கையோடு நமக்கு தருகிறார். இங்கே அவை சடுதியாக நிராகரிக்கப்படும்போது காரணங்கள் புரியாமல் திகைக்கிறார். அதனால்தான் விமர்சியுங்கள் என்று ஒவ்வொரு மாதமும் பதிவில் கெஞ்சுகிறார். 'பகடி' செய்தல் என்பதை ஏற்கும் மனநிலை நம்மில் பலருக்கு மறந்தேபோய்விட்டது. அதனால்தான் லக்கிலூக், ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற பாத்திரங்கள் பகடி செய்யப்படும்போது அலறியடித்து ஓடுகிறோம். ஆனால், எங்களது பேஃஸ்புக்ஈ வாட்ஸப் களில் நாம் பகிர்பவை யெல்லாமே பகடிகளாகவே இருக்கின்றன. நமக்குப் பிடிக்காதவரை பகடி, கிண்டல் செய்யும்போது ஏற்றிடும் மனவியல்பை ஏன், பிடித்தவரை அவ்வாறு கிண்டல் செய்யும்போதும் தக்கவைத்திட முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வில்லன் என்றால் டயபாலிக் போல அதீத ஆற்றலோடு ஈவிரக்கமின்றியுமிருப்பான் என்பதை ஏற்க மறுக்கிறோம். ஆனால், உலகளாவிய ரீதியில் இப்படி கிணற்றுக்குள் தவளைகளாகக் கிடக்கும் வட்டங்கள் இல்லாமல் அது பரந்து விரிந்து கிடப்பதைப் பார்க்க பொறாமையேற்படுகிறது.////
      சூப்பர் அண்ணா மாஸ் ஆ சொண்ணிங்க

      Delete
    2. கைதட்டல்கள் பற்பல...

      Delete
    3. முதலில் வாசகர்கள் தாங்கள் வாசகர்கள் என்பதையும் படைப்பாளிகள் அல்ல என்பதையும் உணரவேண்டும். பொறுமையோடு கதைகளையும் கதை மாந்தர்களையும் அணுகப் பழகவேண்டும்.\\\\

      ரொம்பவும் தவறான கருத்து. காமிக்ஸ் என்பது பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட விஷயம். பெரும்பாலான மக்கள் ரசனையை ஊடுருவி, அவர்களின் எண்ணம் அறிந்து உருவாக்க வேண்டியது படைப்பாளிகளின் கடமை.

      கொஞ்சம் லோக்கலா சொல்லனும்னா " காசு குடுத்து காமிக்ஸ் வாங்கரதோட, உன் மனதையும் புரிஞ்சுகனுமா". என்று சொல்றதோடு மட்டும் இல்லாமல், "நீ ஒரு ஆனி பிஸ்னஸ்" பன்ன வேண்டாம் கடையை சாத்திகிட்டு போய்கிட்டே இருப்பாங்க.

      உங்களுக்கு ஒன்று தெரியுமா பொடியன்?. எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் BFA(Batclor of Fine arts) ஒருவர் கூட காமிக்ஸ் வாசகர்கள் கிடையாது. அவர்களால் இரண்டு பக்கம் கூட காமிக்ஸ் படிக்க முடியாது.

      அவர்களிடம் போய் creativie industry இருக்கும் நீங்கள் ஏன் காமிக்ஸ் படிப்பதில்லை என்று கேள்வி கேட்க முடியாது. "என் இஷ்டம், ஊ வேலைய பார்த்துகிட்டு போ" முஞ்சில அடிச்சா மாதிரி சொல்லிட்டு போய்கிட்டே இருப்பாங்க.

      இதுதான் எதார்த்தம்.

      வாசகர்கள் மாற வேண்டும் என்று படைப்பாளிகள் நினைக்க கூடவே கூடாது.

      வேண்டுமானால் வாசகர்கள் ரசனை மாறும் வரை படைபாளிகள் காத்து இருக்கலாம்.

      Delete
    4. ஒருநாளும் உண்மையான படைப்பாளிகள் மாறுவதில்லை! அப்படி மாறுகிறார்கள் என்றால் அவர்கள் வியாபாரிகள்; படைப்பாளிகள் அல்ல!

      வாகசர்கள் தான் தங்களது ரசனையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!

      Delete
    5. நண்பரே பொடியன்,
      அருமை 👏👏👏

      + 111

      Delete
    6. ///வியாபாரிகள்; படைப்பாளிகள் அல்ல!///.
      வியாபாரியாய் இருப்பது ஒன்றும் குற்றம் கிடையாதே.

      வியாபார நோக்குடன் காமிக்ஸ் தயாரிப்பது ஒன்றும் எளிதான காரியம் கிடையாது. அதற்கும் நிறைய creativity தேவை.

      நீங்கள் கூறுவது போல் நடக்க வேண்டுமால் comercial என்று இடத்தில் இருக்கும் காமிக்ஸை, பொதுசேவை என்ற இடத்தில் மாற்ற வேண்டும். பராவாயில்லையா!!!!.

      Delete
    7. @ MITHUNAN : சார்..படைப்பின் நோக்கம் படைப்பை உருவாக்கிய ஆத்ம திருப்தியாக மட்டுமே இருப்பின், வெற்றி-தோல்வி என்ற அளவீடுகளை படைப்பாளிகள் சட்டை செய்திடத் தேவை இராது தான் ! மோனா லிசாவை வரைந்த லியனார்டோ டா வின்சி - பின்வரும் தலைமுறைகளெல்லாம் இத்தனை கொண்டாடப் போகிறார்களென்று தெரிந்திருக்கவா போகிறார் ?

      ஆனால் படைப்பின் நோக்கம் வணிகம் என்றிருக்கும் போது - ரசிகர்களின் மனோநிலைக்கு sync ஆகிடுவதும் முக்கியமன்றோ ? வணிகக் கட்டுப்பாடுகளுக்கும் ; படைப்பாளியின் கற்பனை ஊற்றுகளுக்கும் மத்தியில் ஒரு fine balance இருத்தல் அவசியம் சார் - நமது பொம்மை புக் உலகிலாவது !

      Delete
    8. ///வணிகக் கட்டுப்பாடுகளுக்கும் ; படைப்பாளியின் கற்பனை ஊற்றுகளுக்கும் மத்தியில் ஒரு fine balance இருத்தல் அவசியம்///

      நியாயமான கருத்து 👏👏👏

      Delete
    9. ///நீங்கள் கூறுவது போல் நடக்க வேண்டுமால் comercial என்று இடத்தில் இருக்கும் காமிக்ஸை, பொதுசேவை என்ற இடத்தில் மாற்ற வேண்டும். பராவாயில்லையா!!!!.///

      நண்பரே,
      காமிக்ஸ் commercial என்பது உங்கள் பார்வை!

      காமிக்ஸ் என்பது மனித குலத்தை உயர்த்தி காட்டும் ஒரு அற்புதக் கலை என்பது என் எண்ணம்!

      எந்தவித ஒலியையும் எழுப்பாமல் தன் எண்ணத்தை, தன் சக இன மனிதனுக்கு, வெறும் எழுத்துக்களையும், சித்திரங்களையும் வைத்தே கொண்டு செல்வது என்பதே மீளா பிரமிப்பு தானே!

      அதன் அதிநவீன ரூபம்தானே இன்று நம் கைகளில் தவழும் காமிக்ஸ்!

      எல்லா மனிதர்களும் ஏதேனும் ஒரு கலையில் நாட்டம் கொண்டிருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்!

      வாழ்க்கையில் நல்ல பொழுதுபோக்குகளுக்கு நேரம் கொடுக்காததால் தான் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன!

      அந்த வகையில் காமிக்ஸ் உள்பட அனைத்து பொழுதுபோக்குகளுமே ஒரு அத்தியாவசிய தேவை என்றே சொல்வேன்!!

      Delete
    10. நமது ஆசிரியரும் ஒரு விற்பனை பிரதிநிதி என்பதை இங்கு நினைவு படுத்துகிறேன்.
      Comercial வெற்றி என்ற ஒற்றை விஷயத்திற்காக, அரைத்த மாவையே அரைக்கும் டெக்ஸ் வருடம் 12 முறை வருகிறார்.

      Delete
    11. @ MITHUNAN : சார்..."அத்தியாவசியங்கள்" பட்டியலில் காமிக்ஸ் இடம்பிடிக்கும் பட்சத்தில் ஏழேகால் கோடி ஜனம் வசிக்கும் தமிழகத்தில் ஆயிரத்து சொச்சம் பிரிண்ட் ரன்னோடு நாம் மொக்கை போட்டுக் கொண்டு நிற்போமா - என்ன ? அல்லது இன்னபிற பெரு நிறுவனங்கள் இதனுள் புகுந்திடாது தான் இருப்பார்களா ? இன்றைய துரித உலகில் கலைக்கு துக்ளியூண்டே இடமுள்ளது சார் !

      Delete
    12. @ Ganesh kumar 2635 //Comercial வெற்றி என்ற ஒற்றை விஷயத்திற்காக, அரைத்த மாவையே அரைக்கும் டெக்ஸ் வருடம் 12 முறை வருகிறார்.//\

      மாவை மறுக்கா மறுக்கா கிரைண்டரில் போட்டு எடுத்தலே commercial வெற்றிக்கான recipe எனில் அதனை எல்லோருமே தான் பின்பற்றிடலாமே சார் ? டெக்சின் வெற்றிக்கான காரணங்களை லோகமும் அறியும் ; நாமும் அறிவோம் ; மறுக்க எண்ணிடும் நீங்களும் அறிவீர்கள் !

      Delete
  63. ஒட்டுமொத்தமாக இவையெல்லாமே கற்பனைக்கான களங்கள்தான் என்னும்போது அவற்றை கற்பனைகளாகவே ஏற்கவேண்டும் என்ற உண்மை ஏன் உணரப்படுவதேயில்லை? டெக்ஸ் வில்லர் காயம்பட்டார் என்று கதை சென்றால், ஐயய்யோ நம்ம ஈரோ எப்படி காயப்படலாம்? என்று பதறுவதா? இப்படியான கதைகளை போடாதீர்கள் என்பதா? டுமீல் டுமீல் அடிதடி கதைகள் தான் அந்த கதாநாயகனிடமிருந்து வேண்டுமா? எங்களது வாழ்வில் எத்தனைவிதமான சம்பவங்களை தினசரி கடக்கிறோம்? எல்லாவற்றிலுமே அன்பும் பாசமும் நேசமும் இரக்கமும் குதூகலமுமா இருக்கிறது? இழப்புகள், வலிகள், குத்துகள், வெட்டுகள், கொடுமைகள் என்று எத்தனை எத்தனை? அப்போ நமது கதாநாயகர்களுக்கும் அப்படித்தானே சம்பவங்கள் இருக்கவேண்டும்? காலை எழுந்தவுடன் பத்துப்பேருடன் டுமீல் டுமீல், பல்துலக்கியவுடன் சலூனில் தடுவிடுபோடி, சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் என்று தூங்கும் வரை துப்பாக்கிகள் துடிக்குமா? எல்லாவித உணர்வுகளும் சம்பவங்களும் கலந்ததுதானே வாழ்க்கை?

    அப்போ, நாம் வாசிக்கவேண்டிய கதைகளும் அப்படித்தானே இருக்கவேண்டும்?

    நாம் ஏதோவொரு மாயச் சட்டையைப் போட்டிருப்பதுபோல எண்ணிக்கொண்டு ஆசிரியரை பணயக் கைதிபோல நடத்த முற்படுகிறோம். நமது குழந்தைகள் வளர்ந்து அவர்கள் இந்தக் கதைகளைப் படித்து நமது பிடறியில் நாலு சாத்து சாத்துவதுபோல - இதென்ன இதெல்லாம் ஒரே மாதிரி கதையாவே இருக்கே? ஏதாவது வித்தியாசமா வர்றதில்லையா? எங்களுடைய லைஃப்ல நடக்கிறமாதிரி, இயல்பா? என்று கேட்பார்கள். அப்போது நாம் எந்தச் சட்டையையும் அணியவில்லை அப்படியே 'தெமே'ன்றுதான் நிற்கிறோம் என்கிற யதார்த்தம் நமக்குப் புரியலாம்!

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிவு.👋👋👋👋.


      நமது குழந்தைகள் வளர்ந்து அவர்கள் இந்தக் கதைகளைப் படித்து நமது பிடறியில் நாலு சாத்து சாத்துவதுபோல - இதென்ன இதெல்லாம் ஒரே மாதிரி கதையாவே இருக்கே? ஏதாவது வித்தியாசமா வர்றதில்லையா? எங்களுடைய லைஃப்ல நடக்கிறமாதிரி, இயல்பா? என்று கேட்பார்கள். \\\.

      இது எதிர்காலத்தில் கண்டிப்பாக நடக்கும்.


      Delete
    2. @ Podiyan : அழகான...ஆழமான ..ஆத்மார்த்தமான காமிக்ஸ் நேசத்தின் பலனான பதிவு சார் !

      சின்னதாயொரு கதை :

      வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஓவியர் வான் கோ (Van Gogh) வரைந்ததொரு ஓவியத்திற்கு The Starry Nights என்று பெயர்....! அவரது தலைசிறந்த படைப்புகளுள் இதை உச்சத்தில் சொல்வார்கள் ! ஒரு பிரெஞ்சு கிராமத்தின் மேல் மின்னிடுமொரு நட்சத்திர இரவினை தனது பாணியில் தீட்டியிருப்பார் ! இந்த ஓவியத்துக்கு ஒவ்வொரு கலாரசிகரும் ஒவ்வொரு விதமான அர்த்தத்தைச் சொல்லுவதுண்டு ! ஆனால் இந்த ஓவியத்தின் நிஜப் பின்னணி என்ன தெரியுமா ? 1890 சமீபமான ஒரு பொழுதில் ஓவியருக்கு மன நிலை சரியிலாது போய் விட, மனுஷன் தன் காதையே சிதைக்கும் அளவிற்குப் போய் விட ஒரு மனநோயாளிகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் ! அங்கே தனது அறையிலிருந்து வானத்தை வெறித்துப் பார்க்கும் போது அவர் கண்ட காட்சியானது அவர் மனதில் அப்படியே பதிந்து விட்டதாம் ! காப்பகத்தில் சித்திரம் தீட்ட எதுவுமே கிடையாதெனும் போது, பின்னாளில் அவர் கொஞ்சம் தேறி, வீடு திரும்பிய பிற்பாடு, நினைவிலிருந்து வரைந்ததே அண்டம் போற்றும் THE STARRY NIGHTS !

      அதன் இன்றைய மதிப்பீடு எவ்வளவு தெரியுமா சார் ? தோரயமாய் 100 மில்லியன் டாலர்கள் ; அதாவது 700 கோடி ரூபாய் இந்திய பணத்துக்கு !

      So ஒரு பித்துப் பிடித்த மனதில் பதிந்ததொரு நிழலுருவத்தை உலகம் இன்று கொண்டாடுகிறது ! இந்த ஓவியத்தை ஒரு உயர்தர அருங்காட்சியகத்தில் எக்கச்சக்கப் பாதுகாப்புப் பின்னணியில் பார்க்க நேரிட்டால் நாமும் வாய் பிளந்து ரசிப்போமோ என்னவோ ?! ஆனால் அதே ஓவியத்தை அடையாளம் தெரியாது, பாரிஸ் நகரின் வாரயிறுதி தெருச்சந்தைகளில் பார்க்க நேரிட்டால் ஐந்தாயிரத்துக்குக் கேட்கவே நாம் யோசிப்போம் !

      நமது காமிக்ஸ் கதைகளின் ரசனைகளும் கூட இதே பாணியில் தான் ! "எல்லாமே ஒரு ரசனையான படைப்பு" என்ற நேசத்தோடு ஒவ்வொரு கதையையும் அணுகிடும் சமயம், அவற்றின் பின்னணியில் நிற்கும் கற்பனைகளும், உழைப்பும் நமக்கு மலைப்பைத் தரும் ! அதே நேரம் casual ஆக அணுக நினைக்கும் வாசகர்கட்கு அவர்களது taste-க்கான சமாச்சாரங்கள் தென்படாது போயின் "ஐயே" என்ற முகச்சுளிப்பே பலனாகிடும் !! இங்கு இரு தரப்புமே அவரவர் நிலைப்பாடுகளில் சரியானவர்களே !!

      So காட்சிப் பொருள் ஒன்றேயாயினும் - காண்போரிடம் வெவ்வேறு வித எதிர்வினைகளை உருவாக்குவதே கலையின் நியதி அல்லவா sir ! வான் கோவானாலும் சரி ; வான் ஹாமாக இருந்தாலும் சரி !

      Delete
    3. கரீட்டு...


      டெக்ஸ் கதைகள் எல்லாமே ரிபீட்டு....
      அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைக்கிறோம் என்பதை நம் நண்பர்கள் மனதார ஏற்றுக் கொண்டாலே மேற்சொன்ன நாயக நாயகியர் ஏற்றுக்கொள்ள ப் படும் நிலை வளரும்....

      நன்றாக கவனியுங்கள்.நிலை வரும் என்று நான் கூறவில்லை...

      Delete
    4. @ PODIYAN : மாற்றங்கள் நிகழும் வேகம் மெதுவாயிருக்கலாம் நண்பரே ; ஆனால் மாற்றங்கள் நிகழாதில்லை தான் !

      ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாய் "முடிவிலா மூடுபனி" ; "நிஜங்களின் நிசப்தம்" ; "பராகுடா " போன்ற ஆக்கங்களெல்லாம் நமது வரிசையில் இடம்பிடித்திடுமென்று யாரேனும் என்னிடம் சொல்லியிருப்பின், நிச்சயமாய் கெக்கே பிக்கே என்று சிரித்திருப்பேன் ! ஆனால் இன்றோ- "இந்த வரிசையில் இந்த வருஷத்துக்கான கதைகள் இவ்வளவு தானா ?" என்று வாசகர்களின் ஒரு கணிசமான எண்ணிக்கையினர் கேட்பதைப் பார்க்கத் தானே செய்கிறோம் ! சிறுகச் சிறுகவே யதார்த்த விதைகளை விதைத்திட இயலும் சார் !

      Delete
  64. // ஒரேயொரு நாயகரையோ, நாயகியையோ மறுபடியும் வண்டியில் ஏற்றுக் கொள்ளும் உரிமை உங்களிடமிருப்பின், யாருக்கு இடம் தருவீர்களோ ? //
    பென்னி அல்லது ஜூலியா.

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணே ஒண்ணு...வாக்குச் சீட்டும்,,தேர்வும் ஒண்ணே ஒண்ணு sir !

      Delete
    2. அம்மையார் தான் லிஸ்ட்டில் ஏற்கனவே உள்ளாரே சார் !

      Delete
  65. // மேலுள்ள பட்டியலின் 'ரிஜிட்' நாயக /நாயகியரின் கல்தா குறித்து உங்கள் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ? //
    சிலருக்கு காலத்தின் கட்டாயம்,
    பலருக்கு விதி வலியது,ஞான் எந்து செய்யும்....

    ReplyDelete
  66. All Heroes and Heroines above said are in(once or now) my favorite list except Lady Spitfire (Story). So it is easy for me that selecting all but one of them to continue instead of rejecting ,and she is Spitfire, Sir.
    And I welcome any of the rest.

    ReplyDelete
    Replies
    1. அட..ஒரு தேர்வைச் சொல்லச் சொன்னால் ஒரு ரிஜிட்டை மட்டும் எதுவென்று சொல்லி விட்டீர்களே !!

      Delete
    2. O.k. Sir. As Julia Will come this Diwali, My option is Magic Wind Sir.

      Delete
    3. Editor Sir, one Diabolik story parcel…..Sorry, Cancel.
      ( Really Just for fun)

      Delete
  67. எப்ப பார்த்தாலும் தங்க தலைவனை வம்புக்கிழுக்கிறதே இந்த கட்டதொரைக்கு வேலையா போச்சி.. கைப்புள்ள சைக்கிளை எடுத்த தான் சரிப்பட்டு வரும் போல இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. அதானே பாத்தேன்..இத்தினி நேரமா த.த.வின் .சிஷ்யப்புள்ளையைக் காணோமேன்னு !

      Delete
  68. டயாபாலிக்

    டயாபாலிக்

    டயாபாலிக். ஆமா சொல்லிட்டேஞ்சாமி....

    ReplyDelete
  69. Lady S பொறுத்தவரையில் அவரை கதையின் நாயகியாக எதிர் பார்க்கவே கூடாது. அவரிடமிருந்து மாடஸ்தி போல ஆக்சனையோ அல்லது ஜூலியா போல டிடெக்டிவ் approachயோ எதிர்பார்க்கக்கூடாது. Wan hamme தான் கதாநாயகர், லேடி S ஒரு கதாபாத்திரம் அவ்வளவே!
    Simple.

    ReplyDelete
    Replies
    1. //Wan hamme தான் கதாநாயகர், லேடி S ஒரு கதாபாத்திரம் அவ்வளவே!//

      :-))

      Delete
  70. Replies
    1. + பல ஒன்னுகள்

      Delete
    2. அய்யய்யோ
      + பல ஒன்னுகள்
      போட்டது "ஸ்மர்ப்பும்"க்கு!!

      Delete
  71. Second Innings :மதியில்லா மந்திரி, LADY S...

    ReplyDelete
  72. கிழவியை கொன்றால் என்ன....

    நாமெல்லாம் புத்தரின் சுயத்தையா படித்துக் கொண்டுள்ளோம்...

    எல்லாமே கொலைக்களங்கள்....
    பரகுடா பர்சனலாக பிடிக்கவிவ்லை...
    வன்முறைக் கொலைகளின் ஓவர்டோஸ்...ஆனால் கடந்த இருபது ஆண்டுகளின் திரைப்படங்களை பாருங்கள். நிதர்சனம் புரிபடும்.

    வன்சொற்கள் பஞ்ச்டயலாக்குகளாக களமிறக்கப்பட்டு இயல்புகள் இல்லாமை ஆக்கப்படுகின்றன...

    "கொல காண்டுல இருக்கேன்" னு உறுமும் பிரபல நடிகரின் குரலும் ஜஸ்ட் லைக் தேட் "தந்திரம் ராஜதந்திரம்" னு மற்ற பிரபலத்தை சுடுகின்ற போதும் உங்கள் மனம் கனக்கிறதா...இல்லையே..வில்லன்களை குஷிப்படுத்தவா மேலே பறக்கும் பறவையை டெக்ஸ் சுட்டுக் கொல்கிறார்...தன்சுடும் திறமையை பறை சாற்றுவதற்க்கும் ஒழுங்கு மரியாதையா ஒத்து என்று மிரட்டுவதற்கும் மட்டுமே...இதை ஏற்றுக் கொ(ல்)ள்ளும் வாசகர்கள் தான் டயாபாலிக் ஒரு கிழவியைக் கொன்றால் டயர்டாவது விந்தை.

    ReplyDelete
    Replies

    1. கொன்றால் டயர்டாவது விந்தை.
      \\\\\\

      ந்தையோ, நொந்தையோ எனக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை தான். J விற்காக என்னுடைய ரசனையை நான் மாற்றி கொள்ளமாட்டேன்.

      Delete
    2. அது உங்கள் சிந்தை...

      Delete
    3. டயபாலிக் மந்திரிவாதி மாதிரி நிமிடத்துக்கு நிமிடம் முகத்தை மாத்திக்குவாரம்.(இதுக்கு நிமிடத்துக்கு 2200 தடவை சுடும் டெக்ஸ் எவ்வளவோ பரவாயில்லை).
      எப்பையாவது மாட்டிக்கும் நிலைமை வந்தால், பக்கத்தில் இருப்பவனை கொன்று விட்டு, பக்கத்தில் இருப்பவரை கொன்று விட்டு டயபாலிக் அவர் மாதிரி உருமாறி தப்பிவிடுவாராம்.(நம்ம ராமநாராயனனே தேவலாம் போல இருக்கே). இதுல டயபாலிக் திறமை என்ன இருக்கிறது. ரசிக்கும்படி தான் என்ன இருக்கிறது.
      முகத்தை மாற்றம் செய்யும் செப்பிடு வித்தையை இவர் கண்டு பிடித்தாரா என்றால், அதுவும் இல்லை.
      இன்னொருத்தனை கொன்று விட்டு, அந்த மாயாஞால வித்தையை இவர் திருடிக்குவாராம். அப்பாவி
      கிழவியை கொல்லறதால கோபம் வரலை. அப்பாவி கிழவியை கொல்றதுல என்ன கஷ்டம் இருக்கு, அதுல என்ன வீரம் இருக்கு?.

      கதையில் டயபாலிக் முகத்தை மாட்டும் தான் மாற்றம் செய்ய முடியும் என்று சொல்லபட்டது.
      ஆனால் பணத்திற்காக அப்பாவி குண்டு மேனஜரை கொல்லும் போது, டயபாலிக் உருவமே குண்டாக மாறி விடும். இந்த வித்தையை எதுல சேக்கறதுன்னே தெரியலை.
      அதுமாதிரி தான், அப்பாவி ஒருவரின் சொத்துக்களை அபகரிக்க அவரை கொன்று விட்ட பிறகு ஆறடி இருக்கும் டயபாலிக் எட்டுஅடிக்கு உயரமாகி விடுவார். மாயாஜாத்துல தோர்கலையே டயபாலிக் மூந்தி விடுவார் போல இருக்கே.


      மேலே சொன்னது போலவும் விமர்சனம் வைக்க முடியும் J.

      Delete
    4. I think you are getting too emotional :-) Diabolik is just an imaginative story and per comments here there are significant supporters for that (which includes me). If it comes I will buy and read - if it does not I won't bother. What is the need to be so emotional?

      Diabolik is not an MGR type Hero - he is an out and out diabolical villain as the name indicates. Compared to the violence in Barracuda, Bouncer etc (all of which I like) there is nothing more violent in Diabolik !

      There is no need to riddle Editor or other fellow readers by getting so emotional.

      Delete
    5. பராகுடா வையும், டயபாலிக்கையும் ஒன்றாக பார்க்க முடியாது.
      அதன் காரணத்தை விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

      Delete
    6. Why? They are just comics - albeit different genres. And the heroes of Barracuda are more villainy than Diabolik. Manamiruthaal maargabandhu !

      Delete
    7. ஏன் விட்டலாச்சாரியா படத்தில் வரும் கூடு விட்டு கூடு பாயும் சீன்களில் நட்சத்திரங்கள் பாய்ந்து ஸ்லோ மோஷனில் செல்லுமே...டெக்ஸ் கதைகளில் ஒரு தோட்டாகூட மனுஷன் மேல் படுவதில்லையே...யாரோ இந்த தளத்தில் கூறினார்கள்.டெக்ஸ் சுடும் பாதையில் குறுக்கே விழுந்து அநியாயமாக உயிர்விடுபவர்களே அதிகம்.நேருக்கு நேர் மோதலில் கூட இது சாத்தியப்படும் நிலையில்லை. ஐந்து பேர் எதிரே நின்று சுட்டால் கூட குறி தப்பாமல் ராங் டைரக்ஷனில் சுட்டுவிட்டு சாவார்கள்....நாமும் ராங் மைண்ட்செட்டில் படிப்பதில்லை யா....

      நான் கூறவந்தது டெக்ஸ் கதையை கதையாகவே கருதும் வாசகர்களாகிய நாம் டயாபாலிக் என்ற ஆன்டிஹீரோ கொலையாளியை அந்த கதாசிரியரின் படைப்பாக்கத்திலேயே ரசிப்பதில்லை...

      கிழவியோ குமரியோ....
      அதே டயாபாலிக் இன்னொருவரின் காதலியை மணக்க நேர்ந்த போது நடந்ததென்ன....கதாசிரியரின் கற்பனை ஏற்புடையதாகத்தானே இருந்தது..‌

      சார்பு பேதங்கற்ற காமிக்ஸ் ஏற்பு வேண்டும்....
      அது டெக்ஸோ டயாபாலிக்கோ ஸ்மர்ப்ஸ்ஸோ லேடிக்களோ ஆன்டெரரோ மாயாவியோ வெட்டியானோ பதிமூணோ நரைகிருதாவோ புளூஜீன்ஸோ குதிரைப்படை சார்ஜ்ஜ்ஜ் களோ இருந்துவிட்டு போகட்டும்....

      மனதார காமிக்ஸ் குழந்தை களாகவே இருக்கவேண்டும்....

      Delete
    8. கொலையாளியை ரசித்துதான் ஆக வேண்டும் என்ற அவசியமும் இல்லையே.

      Delete
    9. ///மனதார காமிக்ஸ் குழந்தை களாகவே இருக்கவேண்டும்....///

      குழந்தைகளுக்கு வயசாகி ரொம்ப நாளச்சு...

      Delete
    10. ///Why? They are just comics - albeit different genres. ///

      நான் காரணம் எழுதிய பிறகு விவாதம் தொடரும் என்று நினைக்கிறேன்.

      Delete
    11. அந்த 2015 (or 2014 ?) டிசம்பரிலும் டயபாலிக்குக்கு இதே போலான Surf Excel சலவை கிட்டியதாய்த் தான் ஞாபகம் !

      Delete
    12. வயசான குழந்தைகளுக்கு டெக்ஸாக இருந்தாலும் டயாபாலிக்காக இருந்தாலும் ஜூலியாகவாக இரூந்தாலும் ஏற்றுக்கொள்பவர்களாகவே நிலைப் பாடு கொள்ளும் மன நிறைவு உண்டு சார்...

      Delete
  73. // 4 பற்றி எழுதினால் bad bad words-லே திட்டு வாங்க வேண்டிவரும் என்பது புரிஞ்சூ ! But கடமைன்னு வந்துட்டா இந்த டெலெக்ஸ் பாண்டியன் ஒரு கர்ம வீரன் என்பதால் ஓங்கி அந்தப் பெயரையும் உச்சரித்தே விடுகிறேன்
    //

    // மூன்றாவது விக்கெட்டுமே ஒரு ஜாம்பவானே! ஆனால் அதை உரக்கச் சொல்ல முனைந்தால் தர்மஅடி தான் விழும் எனக்கு ! இருந்தாலும் நாம் பார்க்காத முட்டுச் சந்துக்களா ? So ஒரு வீரனாய் ; சிரிச்சா மேரியே மூஞ்சை வய்ச்சுக்கினு சொல்லித் தான் பார்க்கிறேனே //

    ஒவ்வொரு விக்கெட் பற்றி எழுதியது செமயாக ரசித்து சிந்திக்கும் படி இருந்தது. அதேநேரம் நீங்கள் இதனை சிரிப்பாக எழுதி இருந்தாலும் அதன் பின்னர் உள்ள உங்களின் வலியை புரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. சார்...வலியிலா வழிகள் ஏது வாழ்க்கையில் ? பழகப் பழக முட்டுச் சந்துகளும் போதி மரங்களாகிடும் !

      Delete
  74. தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்...

    தான் முதல் போட்டு வாங்கி பீரோவில் வைத்தால் தான் தெரியும் பணமும் மனதின் ரணவலியும்...

    இதில் எடிட்டரின் நிலைபாடு ஏற்புடையது அல்ல.
    முதல் போட்டு படமெடுக்கும் தயாரிப்பாளர் ரசிகர்களிடம் கருத்து கேட்கிறாரா...
    முதல் போட்டு எம்எல்ஏ மற்றும் எம்பி யாகி விடும் அரசியல்வியாதிகள் மக்கள் அபிப்பிராயத்தையா கோருகிறார்கள்.
    பணத்தை முடக்கி டாக்டர் சீட்டு வாங்கும் (டாக்டர்களின் வாரிசு டாக்டர்கள்) கொலையாளிகள் மக்கள் மற்றும் நோயாளிகளுக்கு
    கைராசிக்கார்களா..
    படிப்பறிவற்ற தற்குறி கல்விக்கரசர்கள்
    ராமானுஜங்களையும் சர்சீவி ராமன்களையுமா படைக்கிறார்கள்...

    ராமா ....ராமா...

    விஜயனை இதில் வில்லனாகவே பார்க்க வேண்டியுள்ளது...வில்லாளியாக பார்க்க இயலவில்லை..இயல்பாகவும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. //முதல் போட்டு படமெடுக்கும் தயாரிப்பாளர் ரசிகர்களிடம் கருத்து கேட்கிறாரா.?//

      சார்...7 .25 கோடி பேரை எட்டிப் பிடிக்கும் சாத்தியம் கொண்டதொரு களத்தில் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் முயற்சியில் ஈடுபடும் போது, அவருக்கான வாய்ப்புச் சாளரங்களும் வெகு விசாலம் ; அவர் கருத்துக் கேட்பதெனில் எட்டிப் பிடிக்க வேண்டிய ஜனமும் பெருவாரி ! So அவருக்கு நம் பாணி நடைமுறை சாத்தியமாகாது !

      ஆனால் நாமோ வெறும் ஆயிரத்துச் சொச்சம் வாசகர்களோடு உறவாடும் களத்தில் உள்ளோம் & அதனில் கருத்துக் சொல்ல முனைவோர் வெறும் 10 சதவிகிதம் கூட தேற மாட்டார்கள் ! So நமக்கான வெகுஜன வாய்ப்புகள் வெகு குறைவே ; ஆனால் அபிப்பிராயம் கேட்கும் வழித்தடங்களில் சிக்கல்கள் குறைச்சலே ! So எடுத்தேன்-கவிழ்த்தேன் என்றில்லாது இயன்ற இடங்களில் உங்கள் ரசனைகளுக்கு(ம்) மதிப்பளிக்க இங்கே முயல்கிறேன் !

      End of the day -இந்தச் சிறு புள்ளி விபரத்தைப் பரிசீலியுங்களேன்: ஆண்டொன்றுக்கு கோலிவுட் தயாரிப்பது சுமார் 150 படங்கள்; அவற்றுள் ஹிட்டடிப்பது maybe 10 அல்லது 12 படங்கள் !

      நம் பக்கமோ ஆண்டொன்றுக்கு வெளியாவது சுமார் 50 இதழ்கள் & அவற்றுள் failure என்பது maybe ஐந்தோ-ஆறோ !

      ஆக முன்னதில் வெற்றி சதவிகிதம் 10 ; நமக்கோ தோல்வியின் சதவிகிதம் 10 !!

      இப்போது சொல்லுங்களேன் சார் - நம் பாணியினை நான் உடும்பாய்ப் பிடித்துத் தொடர்வது logic பிழையா ?

      Delete
    2. ஏன் மினிமம் கேரண்டி மெத்தட் உள்ளதே....

      Delete
  75. போக்கிரி டெக்ஸ் வேண்டுமா வேண்டாமா?
    என கேட்டு பாருங்கள் சார்.
    பழசு பழசு தான் அது நினைவுகளில் தேங்கி இருக்க வேண்டும்.
    அதை நிஜமாக்க முடியாது.
    இயல்பான கதை எதற்கு அதுதான் நிஜத்தில் அப்படி தானே இருக்கிறோம்.
    டெக்ஸ் வில்லர் மாதிரி துப்பாக்கி எடுத்து சுடமுடியுமா? நிஜத்தில்.
    காமிக்ஸ் என்பது அவரவர் ரசனை. சின்ன வயதில் ரசித்த கார்டூன் இப்போது ரசிக்க முடியவில்லை. ஆனால் சின்ன வயதில் பார்த்த டாம் அன் ஜெர்ரி இப்போதும் ரசிக்க முடிகிறது. எதனால்?
    ஆதலால் எடிட்டர் என்ன செலக்ட் செய்ராரோ அத படிக்கலாம் அல்லது கடந்து போய்விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. //போக்கிரி டெக்ஸ் வேண்டுமா வேண்டாமா? என கேட்டு பாருங்கள் சார்.//

      ஹை....ஒரு உப பதிவுக்கு மேட்டர் ரெடியோ ?

      Delete
  76. போக்கிரி டெக்ஸ் எப்ப வரும் சார்?
    அடுத்த பதிவுல அதை எதிர்பார்க்கிறோம் சார்.

    ReplyDelete
  77. டெக்ஸ் கதைகள் எல்லாமே ரிபீட்டு....
    அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைக்கிறோம் என்பதை நம் நண்பர்கள் மனதார ஏற்றுக் கொண்டாலே மேற்சொன்ன நாயக நாயகியர் ஏற்றுக்கொள்ள ப் படும் நிலை வளரும்....




    -1

    ReplyDelete
  78. ஒரு ஓட்டுங்கிறதால் என்னுடையது ஜூலியாவுக்கே. (இந்த பொண்ணுகிட்டே எதோ ஒண்ணு இருக்கு பாஸ்) .

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டில் உங்களுக்கு ஒரு ரவுண்ட் பன் எக்ஸ்டராவா தர்றேன் சார் !!

      Delete
  79. டியர் எடிட்டர்

    சென்னை புத்தக விழாவை முன்னிட்டு ஒரு DIABOLIC ரிலீஸ் பண்ணுங்கள் சார். இத்தாலிய திரைநாயகர் மறுபடியும் நமது காமிக்ஸில் என்ற வாசகத்தோடு. ரெண்டு வருஷம் முன்னாடி வந்த ஒரு கிராபிக் நாவல் - பெயரே மறந்து விட்டது - எல்லாரும் அட்டையை மட்டும் பார்த்து வாங்கிப் போனதால் அங்கேயே விற்று தீர்ந்து விட்டது. [சத்தியமா அந்த கொடுமையான கிராபிக் நாவல் ஏன் வெளியிட...சரி வேணாம் அந்த விளையாட்டுக்கு நான் வரலே ;-) ]

    ஆனா நாஞ்சொல்லவர்றது என்னன்னா அந்த @#@#*@#லே நல்லா வித்து போச்சு - diabolik சென்னையில் முன் மேஜையில் வைத்து promote செய்தால் விற்பது எளிது - பிளஸ் இங்கே இவ்வளவு பெயரின் ஆதரவு உள்ளது. One try at Chennai please !!?

    ReplyDelete
    Replies
    1. அந்த நல்லா வித்த @#@#*@# நாவலின் நிஜத்த நானும் நிசப்தமாக் கூட சொல்லலை சார் ; அது வந்து கும்மிடிப்பூண்டி பக்கமா நடந்த கதைன்னு வய்ச்சுக்குவோம் !

      இப்போ இத்தாலிய கறுப்பு மூடாக்குக்காரரை மறுபடியும் கொண்டு வர்றதிலே no சிக்கல்ஸ் ; ஆனால் ஒரேயொரு ஆல்பம் எனும் concept தான் பிரச்னையே ! இத்தனை நெடிய ; வலிய ; பாரம்பரியம் கொண்ட தொடரினில் ஒன்றே ஒன்றை மட்டும் ஆண்டுதோறும் போட்டுக் கொள்ளட்டுமா ? என்று கேட்பதே அவர்களை சங்கடப்படுத்திடும் சார் ! வருஷத்துக்கு மினிமம் 3 என்றால் முயற்சிக்க வாய்ப்புண்டு ; ஆனால் நம்மவர்கள் அதற்கு உடன்படணுமே..?

      Delete
    2. My dear Raghavan sir

      Diabolic count excels.....
      Have you seen it?

      Delete
    3. Raghavan - Anterror's smily is not available to post....ஹி ..ஹி .

      Delete
    4. @ Editor, you may want to bundle it then as a part of Italian combo every year once AND a chennai release - making it 2 at least.

      Delete
  80. டிடக்டிவ் ராபின் கதைகள் என்னாச்சு ஆரம்பத்தில் நல்ல கதைகள் வந்தன,ராபினின் பழைய கதை வரிசையில் தேடினால் என்ன? ஒருடிடக்டிவ் நாயகரையாவது கொண்டு வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. சட்டி...அகப்பை...என்ற முதுமொழியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் சார் ! ராபின் தொடரின் கதைகள் எப்போதுமே worldbeaters -களாக இருந்ததில்லை ! Decent ones...

      Delete
  81. ஜூலியா

    எதார்த்தமான கிரிமினாலஜிஸ்ட்....
    ஆர்பாட்டம் இருக்காது..

    பென்சில் இடையழகி...நடுவே ஒரு புற அழகான வில்லனிடம் இப்புறா ஏமாந்தது (ஆழமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவராக சித்தரிக்கப்பட்ட இவரை) சற்று தள்ளி நிறுத்திவிட்டது....

    ஆனால் கார்டன் ஏர் விமான கடத்தலிலும் , தற்கொலைப் பிரதாபனிடமும் இவரது அப்ரோச் பிரமாண்டமே(பென்சில் சைசில் இல்லை)

    வித்தியாசமான கதைக்களங்களை இவரது சாகசங்களில் பார்க்க முடியலாம்...



    ReplyDelete
    Replies
    1. நடப்பாண்டுமே ஒரு மாறுபட்ட theme ஜூலியாவுக்கு !!

      Delete
    2. ஆல்வேய்ஸ் வெல்கம் த பென்சில்வெய்ஸ்ட் கேர்ல்....

      Delete
  82. எல்லாம் ஓகே.. அடுத்த மாசம் வர்ற தங்க தலைவன் ஒரு பாகம் மட்டும் தானா?? இல்லை..

    ReplyDelete
    Replies
    1. அட்டவணை அறிவிப்பு எவ்விதமோ...நடைமுறை செயலாக்கமும் அவ்விதமே !

      Delete
    2. அந்த ஒரு பாகத்தையே ஒரு மாசத்துக்கு படிக்கலாம் ரம்மி ..நோ்ப்ராபளம்..:-)

      Delete
  83. பராகுடா vs டயபாலிக் vs bouncer.

    ரசனையை என்ற விஷயத்தில் இரண்டும் ஒன்று தான்.

    ஆனால் சூழ்நிலை இரண்டுக்கும் வெவ்வேறு.

    முதலவது பாரகுடாவில் திருட்டு என்பது தொழில் கிடையாது. அது வாழ்வியல்.

    அந்த காலகட்டத்தில் அனைத்து மனிதர்களும் முதிர்ச்சி அடையாத விலங்குகள் தான்.

    கடற்கொள்ளைபர்கள் கொள்ளை அடிப்பார்கள். பின்னர் ஜலியாக செலவு செய்வார்கள். பணம் தீர்ந்த பின்னர் மறுபடியும் கொள்ளை அடிப்பார்கள்.(சேமித்து வைக்கும் பழக்கம் அவர்களுக்கு கிடையாது).

    பாரகுடாவில் ஸ்பெயின் நாட்டு மன்னன் மற்றும் அவனுடைய படைகளும் நாகரிக திருடர்கள். ஸ்பெயின் படைகள் அஸ்டெக் இனத்தை அழித்து உலக வரலாறு.

    அந்த காலகட்டத்தில் நீதி நேர்மை என்ற பெயருக்கு யாருக்கும் அர்த்தம் தெரியாது.

    ஆனால் டயபாலிக்குக்கு திருட்டு மற்றும் கொலை என்பது தொழில். அவன் குழுவாக செயல் படவில்லை. அவன் கொள்ளையடித்ததை சேமித்து வைப்பன்.அவனுக்கும் அவன் காதலிக்கும் தவிர வேறு யாருக்கும் பலன் கிடையாது.

    இரண்டாவது உலக போருக்கு பின்பு உண்மையான சட்ட திட்டம் வகுக்கபட்டு மக்கள் அனைவரும் சமம் என்று ஒத்துகொள்ளபட்டது. என்னால் கொலையை தொழிலாக செய்ய ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    பௌன்ஸர் காமிக்ஸ் கதையும் மனித ஓணன்கள் செவ்விந்தியர்களை வேட்டையாடிய உண்மை நீகழ்வு. பௌன்ஸர் கதை வரும் செவ்விந்தியர்கள் வெள்ளையர்களை எதிர்க முடியாமல் இறந்து போனார்கள் , தவிர டெக்ஸ் வில்லர் மாதிரி அவர்களை காப்பாற்ற யாரும் வரவில்லை என்பது தான் எதார்த்த வரலாறு. பௌன்ஸரை டயபாலிக்கேடு ஒப்பிடுவதே பாவம்.

    பராகுடா ஒரு பேன்டஸி காமிக்ஸ். கஷர் வைரம் என்ற ஒன்று கிடையாது.

    டயபாலிக் கதைப்படி உண்மையாக டயபாலிக் திருடுவது மற்றும் கொல்வது தான் கதை களம்.

    பௌன்ஸர் மனிதர்களின் இருண்ட வரலாற்றை கதை களமாக கொண்டது.

    ஆபாசம் அதிகமாக இருக்கும் பராகுடா மற்றும் பௌன்ஸர் வரும்போது, டயபாலிக் வரலாமே என்ற கேள்வி எவ்வளவு நியாயம் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை.

    ஆபாசம் வன்முறை மட்டுமே பராகுடா மற்றும் பௌன்ஸர் வெற்றியடைய காரணம் என்று நான் நினைக்கவில்லை.

    அப்படியே ஆபாசம் மற்றும் வன்முறை தவறு எனும் பட்சத்தில் அவை தடை செய்யபட வேண்டுமே தவிர, அவற்றை காரணம் காட்டி எப்படி டயபாலிக் வரவைக்க முடியும். இந்த தப்பை காரணம் காட்டி இன்னொரு தப்பை செய்யலாமா?.

    நீங்கள் கதையில் வரும் ஆபாசம் பற்றி ஆராய்ச்சி செய்கிறிர்கள். நான் கதையை ஆராய்ச்சி செய்கிறேன்.

    கற்பனை கதைதானே என்று எல்லாவற்றையும் ரசிக்க முடியாது.

    கற்பனை கதை என்பதற்காக டெக்ஸ் வெறும் கையை துப்பாக்கி போல் காமித்து சுட்டால் ஒத்து கொள்வோமா?.

    துப்பாக்கி எங்கே என்ற நமது கேள்விக்கு "கற்பனை காமிக்ஸ் தானே!!!. துப்பாக்கி இருப்பதாக நீங்களே கற்பனை பன்னிகோங்க" என்று டெக்ஸ் படைபாளிகள் சொன்னால் நாம் ஏற்று கொள்வோமா?.

    கற்பனை எல்லையில்லாதது தான், ஆனால் எல்லை இல்லாத விஷயத்திலும் சில நிபந்தனை உண்டு.

    புதுமை என்ற பெயரில் டயபாலிக் போன்ற கொடூர வில்லன்களை ஏற்றுக்கொள்வதை விட, நான் பழைய பஞ்சாங்கம் மாகவே இருந்துட்டு போறேன்.

    ReplyDelete
    Replies
    1. /* நீங்கள் கதையில் வரும் ஆபாசம் பற்றி ஆராய்ச்சி செய்கிறிர்கள். நான் கதையை ஆராய்ச்சி செய்கிறேன். */

      No - I meant violence not explicitness - they rank differently!

      Italy also is a place renowned for Mafia - including the ones that rule territories far from Italy (Strictly non-political comment :-)) - that way Diabolik's actions ain't out of place for a comic reader like me.

      Is Diabolic a venerable hero? - NEVER !
      Is Diabolic an enjoyable series? - YES (for me and many others here)

      Delete
  84. //வருஷத்துக்கு மினிமம் 3 என்றால் முயற்சிக்க வாய்ப்புண்டு ; ஆனால் நம்மவர்கள் அதற்கு உடன்படணுமே..?//

    டேஞ்சர் டயபாலிக்கிற்கு வருஷம் ஒரு ஸ்லாட் கொடுக்கலாம் சார்... மூன்று எல்லாம் ரொம்ப அதிகம். ஒருவேளை வருஷம் நூறு புக் வெளிவந்தால் மூன்று ஸ்லாட் கொடுக்கலாம்..

    ReplyDelete
  85. டெக்ஸ்வில்லரின் சில ட்ரிபிள் ஆல்பம் கதைகளைக் காட்டிலும் இந்த 32 பக்க சிறுகதைகள் வீரியமாக உள்ளது சார். ரெகுலர் டெக்ஸ் சந்தாவில் சில one shot க்கு பதிலாக இந்த மாதிரி சிறுகதைத் தொகுப்பை கொடுத்தால் என்ன..?

    ReplyDelete
  86. 32 பக்க சிறுகதை தொகுப்பு சைஸ் கைக்கு அடக்கமாக சிக்கென்று உள்ளது. கலரில் வேறு... விலையும் குறைவு... ஆண்டுக்கு மூன்று tex regular புத்தகங்கள் இந்த சைசில் முயற்சிக்கலாமே?

    ReplyDelete
  87. Magic wind மற்றும் Lady S வேண்டும் அடுத்த சுற்றுக்கு

    ReplyDelete
  88. மறுஜென்மம் கொடுக்கலாம்
    1)டயபாலிக்
    2)மேஜிக் விண்ட் - வாய்ப்பு கொடுங்கள் சார், இவருடைய பாணி நன்றாகவே இருந்தது
    3)ரோஜர் - நடக்கும் சிலை மர்மம் போன்ற கதைகள் மட்டும்
    4)லேடி S - வாய்ப்பு கொடுங்கள் பளீஸ்
    5)கேப்டன் டைகர் (வந்தா மட்டும் போதும்)
    6) XIII - நல்லாதானே இருந்தது

    ReplyDelete
    Replies
    1. டயபாலிக் நான் படித்த போது சுவாரசியமாக இருந்ததை மறுப்பதற்கில்லை. மீண்டும் வாய்ப்பு தரப்பட வேண்டியவர்களில் முதலிடம் இவருக்கே

      Delete
  89. எடிட்டர் சார், சந்தாவில் வரும் இதழ்களின் எண்ணிக்கை 48 என மாற்றுவதாக இருந்தால் மட்டுமே இந்த பழைய கைகழுவிய பார்ட்டிகளை எல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். கார்ட்டூன் கதைகளை தவிரமற்ற கதைமாந்தர்கள் கைகழுவியது எனக்கு OK. டயபாலிக் கதை என்னால் சுத்தமா படிக்கவே முடியலை. எதிர் மறை நாயகன் என்பதற்காக அல்ல. கதை விறுவிறுப்பாக இல்லை. அவ்வளவே. ஜூலியா, மேஜிக் விண்ட் கதைகளும் அதே கதை தான். இப்ப குறைந்த எண்ணிக்கையில் மத்தவங்க கதையை அதிகரித்தால் மொக்கையின் சதவீதம் அதிகமாகிவிடுமோ என்ற அச்சமே.

    ReplyDelete
  90. மறு வாய்ப்பு என்று வரும் போது என்னுடைய விருப்பம்
    1) இளம் டைகர்
    2) ப்ளு கோட்ஸ்
    3) கமான்ச்சே

    ReplyDelete
  91. மறுவாய்ப்பு நாயகருக்கான எனது ஓட்டு - பென்னிக்கு

    ReplyDelete