Sunday, April 21, 2019

ஒரு கடலோரக் கதையிது...!

நண்பர்களே,

வணக்கம். மூன்று நாள் விடுமுறைகளில் பிய்த்துப் பிடுங்கிச் சென்ற 'மொழிபெயர்ப்பு வண்டி'  - தொடர்ந்த பணிநாட்களில் ஜட்கா வண்டியாய் மாறிப் போனது தான் கடந்த வாரத்தின் சேதி !! ஒரேயொரு பாகம் பராகுடா மட்டும் தொங்கி நிற்க - அதனை எழுத 'இந்தா-அந்தா' என்று தேருக்குத் தடிப் போடாத குறை தான் !! And ஒரு மாதிரியாய் வியாழனன்று தேர்தல் தினத்தின் விடுமுறையும் வசமாய  வந்து சேர, 'இதற்கு மேலயும் சால்ஜாப்புச் சொல்லித் திரிந்தால் வேலைக்கு ஆகாது தம்பி !' என்று தோன்றியது ! So மாலையில் போய் விரலில் மையிட்டுக் கொள்ளும் முன்பாய் அன்றைய பகலினை பராகுடாவின் க்ளைமாக்ஸோடு செலவிட்டேன் !! 'சுபம்' போட்ட பிற்பாடு - நெட்டி முறித்த கையோடே - முதல் பாகத்தின் 160+ பக்கங்கள் ; இந்த க்ளைமாக்சின் 168 பக்கங்கள் - ஆக மொத்தம் 330+ பக்கங்களையும் ஒருவாட்டி இலக்கின்றி சும்மா புரட்டிக் கொண்டே போனேன்....! 

ஒரு ரத்தக் களரியான ஆரம்பம் ; அந்த அடிமைத் தீவின் ரகளைகள் ; சிறுகச் சிறுக அறிமுகமாகும் கதை மாந்தர்கள் ; கஷார் வைரம் ;  கேப்டன் பிளாக் டாக் ; ரெட் ஹாக் ; இளம் ராபி....அவனது காதலி மரியா...ஸ்பானிஷ் ராஜவம்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் முதல் பாகத்தின் சமாச்சாரங்களை மறுக்கா அசை போட்டபடிக்கே, இரண்டாம் பாகத்தோடு பொருத்திப் பார்த்த போது மிரட்சியாயிருந்தது !! இத்தனையையும் ஒட்டு மொத்தமாய் துவக்க நாளிலேயே கற்பனையில் உருவகப்படுத்தி ; ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மையினையும் ஓவியருக்குப் புரியச் செய்து ; அதன் பின்பாய் அந்தத் தீவுகள் ; சமுத்திரங்கள் ; கப்பல்கள் ; கொள்ளையர்கள் ; அடிமைகள் ; அவர்களது உடுப்புகள் ; பின்புலங்கள் ; யுத்த களங்கள் ; இத்யாதிகளையும் தீர்க்கமாய் மனதில் வடிவமைத்து - ஒட்டு மொத்தமாய் ஓவியருக்கு mind transfer செய்வதென்று இங்கே கதாசிரியருக்கு இருந்துள்ள பணிகளின் பரிமாணத்தை நினைத்துப் பார்க்கும் போதே கிறுகிறுக்கிறது ! Of course இன்றைக்கு இணைய தளத்தில் ஒவ்வொன்றுக்கும் reference சுலபமாய்க் கிட்டும் தான் ; ஆனால் இங்கு அவசியப்பட்டிருக்கக் கூடிய research ஒரு முனைவர் பட்டத்து ஆராய்ச்சிக்கு கொஞ்சமும் சளைத்ததாயிராது என்பது எனது நம்பிக்கை ! இந்த க்ளைமாக்ஸ் தொகுப்பில் கதை சும்மா ரங்கராட்டினம் போல தலைசுற்றும் வேகத்தில் தெறித்து ஓடுகிறது !! ஒரு கணிசமான பட்ஜெட்டுக்கான ஏற்பாடோடு இந்த பராகுடா saga-வினை தமிழில் திரைப்படமாக்கிட யாரேனும் ஒரு டைரக்டர் மட்டும் முன்வந்தால் - பட்டையைக் கிளப்பும் ஒரு blockbuster நமக்கு உத்திரவாதம் !!

இதோ இந்த கிளைமாக்ஸ் பாகத்தின் அட்டைப்பட முதல்பார்வை :
ஒவ்வொரு அத்தியாயத்துக்குமே ஒரிஜினலாய் இருந்த அட்டைப்படங்கள் 'நான்...நீ...' என்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன - முன்னட்டையின் ஸ்லாட்டுக்கு ! இறுதியாய் இந்தத் தொடரின் நாயகனாய் வலம் வரும் ராபியை முன்னட்டைக்கும் ; கதையின் கிளைமாக்சில் அதகளம் செய்திடும் அவனது தந்தையைப் பின்னட்டைக்கும் தேர்வு செய்வதெனத் தீர்மானித்தேன் ! இரண்டுமே ஒரிஜினல் டிசைன்கள் - இம்மி கூட மாற்றங்களின்றி !! And இதோ - உட்பக்க previews :

இந்த 2 பக்கங்களில் மட்டுமே எத்தனை கேமரா ஆங்கிள்கள் என்று பாருங்களேன் !! ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் நம் மத்தியில் இருப்பின், இவற்றை இன்னமும் அட்டகாசமாய் சிலாகிக்க முடியும் என்பேன் ! நண்பர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் இங்கிருப்பின் - பிரமாதமாயிருக்கும் !! 

இங்கு ஓவியரின் ஆற்றல் பீறிட்டுக் கொண்டு தென்பட்டாலும் - எனது முதல் மாலை கதாசிரியருக்கு இருந்திடும் !! ஏனெனில் இந்த frames ஒவ்வொன்றையும் எவ்விதம் அமைத்திட வேண்டுமென்பதை அவரே நிர்ணயித்திருப்பார் !! பக்கம் # 12-க்கு கதாசிரியர் ஓவியருக்குக் கொடுத்திருக்கக் கூடிய குறிப்புகளை யூகிக்க முயற்சித்தால் இப்படித்தானிருக்கும் என்பேன் :

Frame 1 : மரியா & அவளைக் கைது செய்து கொண்டு செல்லும் 2 காவலர்களும் மைய்யமாய் நிற்கிறார்கள். மேலிருக்கும் மரக் கிளை வளைந்து ; வலுவாய்க் காட்சி தர வேண்டும். உயரமான மரம் என்பதைக் காட்ட மரத்தின் அடிப்பாகமும் ஆகிருதியாய் வரையப்பட்ட வேண்டும் ! பின்னணியிலும் மரங்கள் - இது அடர்ந்த கானகம் என்று சுட்டிக்காட்ட. அத்தனை பேருமே அண்ணாந்து பார்த்து நிற்க வேண்டும் ; அவர்கள் நிற்கும் மய்யம் மட்டும் வெளிச்சமாயிருக்க, சுற்றுப்புறத்தில் ஒரு மாற்று குறைவாய் ஒளி இருந்தால் போதும். பச்சையும் ; மஞ்சளும் கலந்த வர்ணக்  கூட்டணி ! மொத்தத்திற்கு மேலிருந்து கீழ் நோக்கும் top angle !

Frame 2 : நிற்பவர்களுக்குப் பின்னிருந்து இந்த பிரேம் வரையப்பட்ட வேண்டும். முதலாமவன் முன்னணியில் நின்றபடிக்கே பின்னே சட்டென்று திரும்பிப் பார்க்கும் தோரணை ;. Bust profile மட்டுமே ; முகத்தில் சவரம் செய்யாத தோற்றம் ; புகண்களில் திரான பார்வை ; மற்ற இருவரும் முதுகுகளை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மரியா முன்னே இருக்க - அவளது கூந்தல் முதுகு வரைக்கும். அடுத்தவன் அவளுக்கு ஒரு step பின்னே நிற்குமாறு வரையவும். பின்னணியில் மரம் & புத்தர். மஞ்சளும் ; ப்ரவுனும் கலந்த கலரிங்.

Frame 3 : நீளவாக்கில் ஒரு full frame ; ஒரு ஆணின் கைமட்டுமே மொச மொசவென்று தெரிய, ஒரு கூரான கத்தி பறந்து போகிறது. கத்தி மினுமினுக்கும் வெள்ளையில்..பின்னணியில் எதுவும் தெளிவாய்த் தெரியக் கூடாது - கத்தி செம வேகமாய் வீசப்பட்டுள்ளதை உணர்த்திடும் பொருட்டு. கைக்கு சமமான ஆங்கிளில் ஷாட் இருக்க வேண்டும்.

Frame 4 : முதலாமவனின் நெஞ்சில் கத்தி செருகி நிற்க ; அவன் கண்மூடி, வேதனையில் சரியத் தொடங்குவதை ஒரு 1/4th frame -ல் காட்டவும். நெஞ்சில் பாய்வதால் அவனது இடதுபுறத்தை focus செய்து வரையவும். இடது கை close up -ல் தெரிய வேண்டும். பின்னணியில் எதுவும் வேண்டாம் ; கவனம் முழுக்க ஓரிடத்தில் குவிய வேண்டும் என்பதற்காக !

Frame 5 : Mini frame : மரியாவின் அழகான முகத்தின் closeup ; கண்கள் திகிலில் விரிய ; வாய் லேசாய்த் திறந்து இருக்க வேண்டும். நெற்றியில் ஒரு சுருள் கேசம் மட்டும் ஸ்டைலாக விழுந்து கிடக்கட்டும்.மினி frame என்பதால் ஒரு கண் மட்டும் வரைந்தால் போதும். திருத்தமான நாசியும், உதடுகளும் தெளிவாய்த் தெரிந்திட வேண்டும். சற்றே low angle ஷாட்.

Frame 6 : Top angle - midway - மேலிருந்து ராபி கையில் நீளமான வாளுடன் குதிக்கிறான் ; அவனுக்கு நேர் மேலிருந்து focus செய்யும் விதமாய் shot அமைக்கவும். கழுத்தில் உள்ள சிகப்பு scarf நீளமாய் பறப்பது போல் வரைந்து ராபி விசையோடு குதிப்பதை உணர்த்தவும். கீழே முன்னணியில் எஞ்சியிருக்கும் காவலன் திகைத்து நிற்க வேண்டும். அவன் கையிலும் கத்தி ; இடுப்பு லெவெலில் ; பார்வையோ மேலே ராபி மீது. அவனுக்குப் பின்னே மரியா நிற்கும் முழு உருவம் ; அண்ணாந்து பார்த்தபடிக்கே ! ஓரத்தில் வீழ்ந்து கிடக்கிறான் செத்துப் போனவன். கால்களில் கனத்த பூட்ஸ் மாட்டியிருக்க, முரட்டு உருவமாய் அவன் தென்பட வேண்டும். சுற்றிலும் மரங்கள் ; நடுவில் மஞ்சளில் தரைப்பகுதி. ராபியின் உடுப்பு முழு கருப்பில்.

Frame 7 : தரையில் கால்பதிக்கும் வேகத்திலேயே ராபி எதிராளியின் கழுத்தைச் சீவுகிறான்.ராபியின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது. தலைமுடியும், சிகப்பு scarf ம் விசையோடு பறந்து நிற்கின்றன. கத்தியில் ரத்தக் கறை இருக்கவேண்டும் ; சீவிய வேகத்தில் கத்தி பிடித்திருக்கும் ராபியின் வலது கை பின்னே நீண்டு தெரிய வேண்டும். கழுத்து சீவப்பட்ட வேகத்தில் கைகள் இரண்டும் பின்தள்ளி இருக்க வேண்டும் எதிராளிக்கு. முழுக்க அவன் முதுகுப் பக்கம் மட்டுமே ! இரத்தம் கொப்பளித்துத் தெறிக்க வேண்டும் வன்முறையின் அழுத்தத்தைக் காட்ட. Full length frame !

ஒரேயொரு பக்கத்தை மட்டும் வரைந்திடவே  கதாசிரியர் தர அவசியப்படும் விவரிப்பு - இது போல் இன்னும் இரு மடங்கு இருக்கக்கூடும் !! அதன் பின்பாய் வசனங்கள் எழுதும் வேலை ஆரம்பிக்கும். அப்புறமாய்  ; வர்ணனைகள் ; அவற்றை house செய்திடும் பலூன்களையும், பெட்டிகளையும் எங்கே பொருத்த வேண்டும் என்ற குறிப்புகள் !! இத்தனையையும் ஒற்றையாளாய் கதாசிரியர் செய்தால் தான் ஓவியரின் பணியே துவங்கிடும் !! So இங்கொரு 338 பக்க சாகசமெனும் போது, கொஞ்சமே கொஞ்சமாய் யோசித்துத் தான் பாருங்களேன் - பின்னணியில் இருந்திருக்கும் உழைப்புகளின் இமாலய பரிமாணத்தை !! இதை மேலோட்டமாய் விவரிப்பதற்கே எனக்கு மூச்சு வாங்குதுடோய் !! அதே கையோடு 'பொம்மை புக்' என்ற முத்திரைகளையுமே இந்த நொடியில் நினைத்துப் பாருங்களேன் !! கெக்கேபிக்கே என்று சிரிக்கத் தான் தோன்றும்  - அந்தப் பொதுவான அபிப்பிராயத்தை நினைத்து !! 
கதாசிரியர் : Jean Dufaux
ஓவியர் : Jeremy
So ஜனவரியில் (நமக்குத்) துவங்கிய முற்றிலும் புதுத் திக்கிலான பயணம், இந்த மே மாதத்தோடு நிறைவுறுகிறது ! 47 ஆண்டுகளில் நாம் பார்த்திரா இந்தக் கடற்கொள்ளையர் பாணியினை நமக்கு அறிமுகம் செய்து தந்துள்ள பராகுடா - நம் வாசிப்புகளுக்கு மேலும் சிலபல கொள்ளையர்களைக் கொண்டு வரும் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்வார்களா ? Million $$$ கேள்வி இப்போதைக்கு !!

And by the way, புண்ணியம் சேர்ப்பது பற்றிய டாபிக்கில் இருக்கும் போது ஒரு அவசர வேண்டுகோள் ப்ளீஸ்  :

சகல இதழ்களின் இறுதிக்கட்ட பணிகளுக்குள்ளும் புதைந்து கிடக்கும் இந்த நொடியில் தான் "ஆஹா...பராகுடா Climax பாகத்துக்கு ஒரு முன்கதைச் சுருக்கம் இருந்தால் தேவலாமே !!" என்ற ஞானோதயம்  பளீரிடுகிறது !! நண்பர்கள் யாருக்கேனும் ஆர்வம் இருப்பின் - "அலைகடலின் அசுரர்கள்" மூன்று பாகங்களிலிருந்து crisp ஆகவொரு 'மு.க.சு.' ரெடி பண்ணித் தர முடிந்தால் கோடிப் புண்ணியம் சேர்ந்திடும் !! நமது புத்தக அளவிற்கு 2 பக்கங்களுக்குள் அடக்கிட வேண்டும் என்பது முக்கியம் ப்ளீஸ் !!  Anyone folks ? In a day or two please ?

புறப்படும் முன்பாய் : போன வாரம் போலவே ஓரிரண்டு கேள்விகள் !! And இஷ்டப்படுவோர் மட்டுமே பதில் சொன்னாலும் போதும் folks ; படித்து விட்டுப் போய்க் கொண்டேயிருப்போரின்  மௌனங்களைக் கலைக்கச் சொல்லி torture செய்வதாய் எடுத்துக்கொள்ள வேண்டாமே - please !  

1 . இன்றைய நமது நாயகர்கள் பட்டியலில் தோர்கலுக்கு எவ்வித இடம் தருவீர்கள் guys ? சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ? ஷைனிங் ஸ்டார் அந்தஸ்து ? பவர் ஸ்டார் அந்தஸ்து !

2 மறுவாசிப்புக்கு தோர்கலை இதுவரையிலும் தேர்வு செய்துள்ளீர்களா ? Yes / No போதுமே !

3 .தோர்கல் தொடரானது உங்களுக்கு ரசிப்பின் - ஒற்றை வரியில் அதன் காரணத்தைச் சொல்ல முயற்சிக்கலாமா ப்ளீஸ் ? I repeat : In a single crisp line pls ?

"பிடிக்கவில்லை" என்ற அணியில் நீங்கள் இருப்பின் - "பிடிக்கலீங்கோ !" என்று மட்டுமே குறிப்பிட்டாலும் போதும் !
2020-ன் அட்டவணை கிட்டத்தட்ட முழுமை கண்டு வருகிறதெனும் போது - தொடரும் வாரங்களிலும்  இதுபோல் ஓரிரு கேள்விகளைக் கேட்டு வைப்பேன் ; இயன்றோர் பதிலளியுங்களேன் ப்ளீஸ் !! 

புறப்படும் முன்பாய் - இதோவொரு கொசுறுச் சேதி !! THE UNDERTAKER தொடரின் ஆல்பம் # 5 ஒரு one shot ஆக இருந்திடும் என்று 2017-ல் நமக்குச் சொல்லியிருந்தார்கள் ! இதோ - தற்போது நிறைவுற்றிருக்கும் அந்த ஆல்பத்தின் அட்டைப்பட முதல்பார்வை !! வெட்டியானின் ரகளைகள் முடிந்த பாடில்லை டோய் !

Bye folks !! See you around !! Have a lovely weekend !

P.S : @ செந்தில் சத்யா : நலம் பெற்ற  இல்லத்தரசியின் பிறந்தநாளை பற்றி நீங்கள் எழுதியிருந்ததை இன்றைக்குத் தான் படிக்க முடிந்தது சத்யா !! சகோதரிக்கு எனது (தாமதமான)வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !! இனி சந்தோஷம் மட்டுமே உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டட்டும் !! God be with you !!!

277 comments:

  1. Replies
    1. தி(இ)ருமண நாள் வாழ்த்துக்கள் ப்ரோ ..

      Delete
    2. திருமண நாள் வாழ்த்துக்கள் சத்யா

      Delete
    3. திருமண நாள் வாழ்த்துக்கள் சத்யா

      Delete
    4. திருமண நாள் வாழ்த்துக்கள் சத்யா

      Delete
  2. வந்திட்டேன் சார்

    படிச்சிட்டு வர்றேன் சார் 🙏🏼
    .

    ReplyDelete
  3. ஆசிரியரே விளக்கத்திற்க்கு மன்னிக்கவும் ஏப்ரல் 19 எங்களது திருமண நாள் என் மனைவியின் பிறந்தநாள் அக்டோபர் 2
    வாழ்த்தியமைக்கு நன்றி ஆசிரியரே 🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. மேலுள்ள வாழ்த்துக்களை பிறந்த நாளுக்கு அட்வான்ஸாய் வைத்துக் கொள்ளுங்கள் சத்யா ; திருமண நாள் வாழ்த்துக்கள் உங்களிருவருக்கும் !!

      Delete
  4. ஹி ஹி ஹி... இந்த வாரம் நானும் 10க்கு உள்ளே

    ReplyDelete
  5. ///1 . இன்றைய நமது நாயகர்கள் பட்டியலில் தோர்கலுக்கு எவ்வித இடம் தருவீர்கள் guys ? சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ? ஷைனிங் ஸ்டார் அந்தஸ்து ? பவர் ஸ்டார் அந்தஸ்து !///

    மதிப்பிற்குரிய 'ஷைனிங் ஸ்டார்' தோர்கல் அவர்களே...

    /// மறுவாசிப்புக்கு தோர்கலை இதுவரையிலும் தேர்வு செய்துள்ளீர்களா ? Yes / No போதுமே!///

    No (நேரமில்லீங்)

    ///3 .தோர்கல் தொடரானது உங்களுக்கு ரசிப்பின் - ஒற்றை வரியில் அதன் காரணத்தைச் சொல்ல முயற்சிக்கலாமா ப்ளீஸ் ? I repeat : In a single crisp line pls ?///

    பூச்சுற்றல் தான் என்றாலும், காதுகளுக்கு லோக்கல் அனஸ்தீசியா கொடுத்துவிட்டு சுற்றுவதால்!

    (இன்னும் ஒரு ஏழெட்டு கேள்விகள் கேட்டிருக்கலாம்.. ஐயா இப்ப எக்ஸாம் மூடுல இருக்காராக்கும்!)

    ReplyDelete
    Replies
    1. //இன்னும் ஒரு ஏழெட்டு கேள்விகள் கேட்டிருக்கலாம்..//

      தலீவர் பதுங்கு குழிக்குள்ளாற செட்டில் ஆகிட்டதால உசுப்பி விட்டு உதை வாங்குறதை வேடிக்கை பாக்க நாங்க தான் சிக்குனோமா ? அஸ்கு..பிஸ்க்கு.....!!

      Delete
    2. எனது கருத்தும் இதுவே!!!

      Delete
  6. தோர்கல் -
    1. காமிக்ஸ் சூப்பர் ஸ்டார்
    2. Yes
    3. கற்பனை பண்ணி பார்க்க முடியாத உலகத்தில் ஒரு family gentle man

    ReplyDelete
    Replies
    1. //கற்பனை பண்ணி பார்க்க முடியாத உலகத்தில் ஒரு family gentle man//

      அட !!

      Delete
    2. ///கற்பனை பண்ணி பார்க்க முடியாத உலகத்தில் ஒரு family gentle man///

      சரி அங்கேயாவது ஒரு ஜென்ட்டில் மேன் இருந்துவிட்டுப்போகட்டுமே!

      Delete
    3. பெங்களூர் பக்கம் கூட‌ ஒரு ஜென்டில்மேன் இருக்கிறாராம்... :)

      Delete
    4. அவர் பூரிக்கட்டையின் கவனிப்புகளால் 'ஜென்டில் மேன்' ஆக்கப்பட்டவராமே..?!!

      Delete
    5. சே சே.. அப்படி எல்லாம் இல்லை...


      உலக்கை என ஊருக்குள்பேசிக்கிறாங்க :-)

      Delete
    6. பரணி அருமையாக சொன்னீங்க. Point 3

      Delete
    7. Every successful man behind a woman

      Delete
    8. Sorry.மாத்தி சொல்லிட்டேன்.every gentle man(!) behind a woman.

      Delete
    9. ஜென்டில்மேன் ஆக பூரிக்கட்டை
      ஜென்டில்மேன் 2.0 ஆக உலக்கை

      Delete
    10. பத்மநாபன் @ மாற்றி சொல்லலாம். ஆனால் அடிவாங்குபவர் மாறமாட்டார்.

      Delete
    11. இந்த தோனி இருக்கார்ல . அவரு ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பார்ல. அத கரெக்டா - பூரிகட்டைல - பூமராங் பாணியில்- பின்பக்கமா பாக்காம -எறிஞ்சா நம்ம பாவப்பட்ட கபாலம் ஸ்ட்ராங்கா வாங்கும் பாருங்க.சும்மா சொல்லப்டாது.அதுவும் காலங்காத்தால பல்லு வெளக்குறப்ப.சகதர்மிணி மூடுக்கு தகுந்தாப்ல நாயத்துகெழம விடியும்.......

      Delete
    12. ஆண்களோட கபாலத்துக்கும், பூரிக்கட்டைக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருக்கும் போல..!

      Delete
    13. Excuse me jentleman.today is Sunday. பொழுது விடிஞ்சாச்சா?

      Delete
    14. பத்மநாபன் @ நேற்று வாங்கின அடியில் மயக்கம் தெளிந்து இன்று தான் எழுந்திருச்சீங்க போல் தெரிகிறது 😁

      Delete
    15. என்ன ஒரு சந்தோஷமய்யா உங்களுக்கு . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் போல.

      Delete
  7. Thorgal:

    1) Is a Shining Star (TEX is the superstar !!!)
    2) All tamil reads - page by page, word by word - are a re-read for me. Have covered the full set in English so far.
    3) Thorgal is Fantasy, Adventure and Imagination in right proportions. Result is a blockbuster winner !!

    ReplyDelete
    Replies
    1. // Have covered the full set in English so far.//

      Phew !!

      Delete
  8. தோர்கலை fantasy நாயகன் என‌ சொல்லலாம்.

    இவரை ஏன் பிடிக்கிறது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அன்பான குடும்பம், பாஸிட்டிவாக நினைக்கும் குடும்பம், அன்பு மழை பொழியும் குடும்பம், பாஸிட்டிவான முடிவு..... இப்படி பல பல

    ReplyDelete
    Replies
    1. உண்மை எவ்வளவோ பிரச்சினைகள் வந்தாலும் ஒருவர் மீது ஒருவர் வைத்து இருக்கும் நம்பிக்கை மற்றும் காதல் சிறிதும் மாறாதது. ஜோலனுக்கு தேவை இல்லை என்றால் சண்டையிட கூடாது என்று அறிவுறுத்துவது என பல பல

      Delete
  9. அப்படி என்றால் அடுத்த வருடம் தோர்கல் இரண்டு குண்டு புத்தகங்களாக வர போகிற மாதிரி தெரியுது ..... :-)

    ReplyDelete
  10. பராகுடா சித்திரங்கள் வரைய ஓவியருக்கு கொடுத்த instructions இப்படி கூட இருக்கலாம் என்ற உங்களின் கற்பனை அருமை.

    பாராகுடா க்ளைமாக்ஸ் ஆர்வத்தை கிளப்புகிறது.

    ReplyDelete
  11. பராகுடா அட்டைப்படம் - ஆத்தாடிக்காத்தாடிக்காத்தாடியோவ்!!!!

    ReplyDelete
  12. அந்த வெட்டியான் கதை இந்த வருடமும் கிராப்பிக் சந்தாவில் உண்டா.. உண்டு என்பது போல் பார்த்த ஞாபகம். நாளைக்கு மீண்டும் ஒரு முறை காமிக்ஸ் 2019 அட்டவணையை பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இம்முறை கிராஃபிக் சந்தாவில் இருந்து சந்தா A விற்கு promotion பரணி

      Delete
  13. ///பக்கம் # 12-க்கு கதாசிரியர் ஓவியருக்குக் கொடுத்திருக்கக் கூடிய குறிப்புகளை யூகிக்க முயற்சித்தால் இப்படித்தானிருக்கும் என்பேன் :///

    ஆங்! அதே தான் எடிட்டர் சார்.. அதே தான்! பக்க்க்கத்துல வந்துட்டீங்க! :)

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டு பக்கம் ஆகஸ்டில் தான் நம்ப ஆசிரியர் வருவார். ரொம்ப அவசரபடாதீங்க :-)

      Delete
    2. மரத்தடி மீட்டிங்ல அவருகிட்ட சத்தியம் வாங்கிடலாம்றீங்களா? ;)

      Delete
    3. வாங்கலாம்... ஆமாம் எதுக்கு 🤔

      Delete
    4. ஹிஹி! ஈரோட்டு வாங்க சொல்றேன்!

      Delete
    5. வந்துருவோம்.... அங்கு வராமல் எங்க போகப் போகிறேன். முதுகில் தலையணையை நன்றாக கட்டிக்கொண்டு வருகிறேன் :-)

      Delete
  14. // ஒரேயொரு பக்கத்தை மட்டும் வரைந்திடவே கதாசிரியர் தர அவசியப்படும் விவரிப்பு //

    வாய்ஸ் ரெக்கார்ட் செய்து கொடுத்து இருப்பாரோ?

    ReplyDelete
    Replies
    1. ஊஹூம்...பக்காவாக ஒரு தலையணை சைசுக்கு முழுவதையும் டைப் செய்து தருவார்கள் ! நான் இங்கே எழுதியிருப்பதெல்லாம் ஜுஜுப்பி ; அவர்களது ஒரிஜினல் scripts சிலவற்றைப் புரட்டியிருக்கிறேன் - வானத்தில் தெரியும் மேகங்கள் கூட என்ன மாதிரி இருக்க வேண்டும் ; எந்தக் கோணத்தில் தென்பட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிக்கப்பட்டு இருந்தது !! மிரண்டு போய் விடுவோம் - படைப்பாளிகள் செய்திடும் பின்னணிப் பணிகளைப் பார்த்தால் !!

      TEX ரூம் என்றே ஒரு அறையில் - ஒரு பக்காவான டீமே அமர்ந்து டெக்ஸ் கதைக்கு தேவைப்படக்கூடிய ஆராய்ச்சிகளை செய்வதைப் பார்த்தால் நாக்கு மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொள்ளும் நமக்கு !! முற்றிலும் வேறொரு லெவல் !!

      Delete
    2. புரிந்து கொண்டேன்.நன்றி.
      உண்மையில் கதாசிரியர்தான் காமிக்ஸின் அச்சாணி.

      Delete
  15. Dear Editor,

    Please make the June comics available by 30th. If you can post by 29th most of us would get it by 30th. Since May 1st Wednesday is a holiday - it would be good to finish and discuss the following weekend.

    PS: Again a month without cartoons :-( Can something be done ?

    ReplyDelete
    Replies
    1. ஏப்ரல் or June raghavan?

      Delete
    2. MAY Books....!

      மே முதல் தேதிக்கு முன்பாகவே புக்குகள் உங்கள் கைகளில் கிடைக்க இயன்ற அத்தனையும் செய்வோம் சார் !!

      Delete
  16. // "அலைகடலின் அசுரர்கள்" மூன்று பாகங்களிலிருந்து crisp ஆகவொரு 'மு.க.சு.' ரெடி பண்ணித் தர முடிந்தால் கோடிப் புண்ணியம் சேர்ந்திடும் !! நமது புத்தக அளவிற்கு 2 பக்கங்களுக்குள் அடக்கிட வேண்டும் //

    நம்ப நண்பர்கள் ஒரு பக்கத்திலேயே அடக்கி விடுவார்கள் சார்.

    ஏன்றைக்குள் (last date for submission) அனுப்ப வேண்டும் என நீங்கள் குறிப்பிட்டால் நலம். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  17. விஜயன் சார், ஈரோடு புத்தகத் திருவிழா ஸ்பெஷல் புத்தகங்கள் இரண்டா ? மூன்றாம்? அதில் ஒன்று கார்டூன் ஸ்பெஷலாக இருந்தால் நன்றாக இருக்கும். ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. 2 சார் !

      And "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" கார்ட்டூன் பாணியே ; நிறைய light moments நிறைந்தது தான் ! ஆனால் அழுத்தமான கதையோடு !

      Delete
    2. இரண்டாவது கென்யா?

      Delete
  18. தோர்கல் ஓகே..என்னை பொரத்த வரை இன்னுமொரு சூப்பர் ஸ்டார்..3,4 ஆல்பங்களாக சேர்ந்து ஒரே இதழில் வர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. // 3,4 ஆல்பங்களாக சேர்ந்து ஒரே இதழில் வர வேண்டும் //

      கண்டிப்பாக. +1

      Delete
  19. Dear Vijay an sir,
    1.Thorgal is SUPERSTAR ( Not at 1st story but NOW)
    2.I HAVE re read all. Our thorgal (first to last continuously 3 times)
    3.Thorgal = FANTASTY+ADVENTURE+FUN+ FAMILY Last but not Least VALUEABLE LIFE LESSONS TOO.

    ReplyDelete
    Replies
    1. // VALUEABLE LIFE LESSONS TOO //

      Well said.
      +1

      Delete
    2. THANK YOU FRIENDS! & Vijayan Sir! i would very much love to complete this journey with Thorgal & his Family! I Hope we ALL!

      Delete
  20. தோர்கல்:-
    1. ஷைனிங் ஸ்டார்
    2. ஆம் (எப்போதாவது - நேரமின்மை காரணமாக)
    3. Visual treat like as a fantasy thriller movies

    ReplyDelete
  21. போன பதிவுக்கு பதில் - லக்கி லூக் வெறும் படம் மட்டும் (கதையே இல்லையென்றாலும்) இருந்தாலும் ரசிப்பேன். பிரஞ்ச், ஜெர்மன் மொழியில்கூட லக்கி லூக் கதைகள் வைத்துள்ளேன். அனைத்துலக்கி லூக் கதைகளையும் தமிழில் வெளியிடுங்கள்.

    தோர்கல் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. // லக்கி லூக் வெறும் படம் மட்டும் (கதையே இல்லையென்றாலும்) இருந்தாலும் ரசிப்பேன். //

      சூப்பர். செமையா சொன்னீங்க.

      Delete
    2. தோர்கல் தொடருட்டும்..


      தொடருட்டும்...:-)

      Delete
    3. //லக்கி லூக் வெறும் படம் மட்டும் (கதையே இல்லையென்றாலும்) இருந்தாலும் ரசிப்பேன்.//

      இது பேச்சு !!

      Delete

  22. 1. என்னைப் பொறுத்தவரை தோர்கல் சூப்பர்ஸ்டார். #1டைகர் 2. XIII 3. தோர்கல். அப்புறந்தான் மத்த ஹீரோவெல்லாம்.
    2. தோர்கலின் கதைகளும் மறுவாசிப்புக்கு தகுந்தவைதான். அனைத்து கதைகளும் 2 அல்லது 3 தடவை வாசித்திருக்கிறேன்.
    3. தோர்கல் அடக்கம், அன்பு, நேர்மை, மற்றும் தற்காப்புக்கும் உணவுக்கும் மட்டுமே அஹிம்சை. பர்பக்ட் ஹீரோ. எல்லா வெரைட்டியும் கொண்ட பர்பக்ட் பேண்டசி அட்வெஞ்சர்.

    ReplyDelete
    Replies
    1. ///என்னைப் பொறுத்தவரை தோர்கல் சூப்பர்ஸ்டார். #1டைகர் 2. XIII 3. தோர்கல். அப்புறந்தான் மத்த ஹீரோவெல்லாம். ///

      லிஸ்ட்டுல 'டெக்ஸ்'ன்ற கதாபாத்திரத்தையே காணோமே...

      Delete
    2. ஷெரீஃப் சூப்பர் சூப்பர்.

      Delete
    3. அஞ்சாவது இடம் டெக்ஸுக்கு.

      Delete
    4. ///லிஸ்ட்டுல 'டெக்ஸ்'ன்ற கதாபாத்திரத்தையே காணோமே...///

      கையைக்கட்டி நிக்கச்சொன்னா காட்டுவெள்ளம் நிக்காது..

      காட்டுப்புலியை கூட்டில் அடைக்க முடியாது...

      ஒண்ணு ரெண்டுன்னு வரிசையில் நிற்க வைக்க டெக்ஸ் லில்லர் சராசரி ஹீரோவா என்ன..! ?

      Delete
    5. ஒண்ணாம் நெம்பர்...ரெண்டாம் நெம்பர் எல்லாம் பாப்பா விளையாட்டு...


      இந்த டெக்ஸ்...


      ஒன்லி ஒன்



      சூப்ப்ப்ப்பர் ஒன்...

      Delete
    6. ////இந்த டெக்ஸ்...


      ஒன்லி ஒன்



      சூப்ப்ப்ப்பர் ஒன்...//////

      அப்படியா......🤔🤔🤔

      Delete
    7. @கண்ணர், தலைவர்
      பிடிச்ச ஹீரோக்களோட லிஸ்ட் ஆளாளுக்கு வேறுபடும். விற்பனைல பல வருடங்களா டெக்ஸோட இடம் #1 ங்கிறதுல மாற்றுக்கருத்தில்லை. என்னோட டாப் 5 ஹீரோக்களில் டெக்ஸுக்கு அஞ்சாவது இடந்தேன். 4 வது லக்கி லூக். தலீவர் வந்து மிரட்டினாலும் சரி. மேச்சேரி மங்கூஸ் வந்து மிரட்டினாலும் சரி. டொகஸுக்கு அஞ்சாவது இடந்தான்.

      Delete
    8. @MP

      சமீபத்துல கணேஷ்குமார்ட்ட எதனாச்சும் ஃபோன்ல பேசுனீங்களா?
      இல்ல கேட்டேன்!

      Delete
    9. ஷெரீப். .!

      என்னோட டாப் லிஸ்ட்டுலயும்

      லக்கி லூக்
      கிட் ஆர்டின்
      XIII

      அப்புறந்தான் டைகர் ,டெக்ஸ் எல்லாம் வருவாங்க.!

      இருந்தாலும் பாருங்க.. டெக்ஸ் வில்லருக்கு ஒரு அவமானம் என்னன்னா.. இந்தமாதிரி வரிசையில நிக்கச் சொல்றதுதான்...!

      டெக்ஸ் வில்லரெல்லாம் நம்பரில் அடங்குற வரிப்புலி இல்லீங்க.. நம்பர்களையே அடக்கி ஆளுற பிடறி சிலுப்பும் சிங்கமுங்க..!

      Delete
    10. //சமீபத்துல கணேஷ்குமார்ட்ட எதனாச்சும் ஃபோன்ல பேசுனீங்களா? //
      🤣🤣🤣்இன்னும் இல்லை.

      Delete
    11. டெக்ஸ் வில்லருக்கு ஒரு அவமானம் என்னன்னா.. இந்தமாதிரி வரிசையில நிக்கச் சொல்றதுதான்...!//

      வேணும்னா சேர்போட்டு உக்கார சொல்லிடுவமா?

      Delete
    12. ஏம்பா தோர்கல் பற்றி பேசும் போது டெக்ஸை கூப்பிட்டு வந்து நீங்கள் அவரை அசிங்கப் படுத்துறீங்க :-) வடிவேலின் குருநாதா காமெடி தான் ஏனோ ஞாபகம் வருகிறது. :-)

      Delete
    13. /// வேணும்னா சேர்போட்டு உக்கார சொல்லிடுவமா?///
      பஞ்சு மெத்தையே போட்டு குடுத்தரலாம்.. பாவம் இப்பவே வயசு எழுவதோ என்பதோன்னு பேசிக்கிறாங்க..

      Delete
    14. அப்டீயா...


      அப்டீயே...


      #####


      வெளிநாட் மாப்பிள்ளைக்கு அவ்ளோ தைரியம் வந்துருச்சா...ஈரோட்ல இருக்கு..

      #######

      எழுபது வயசுலியும் என்ன இளமை...துள்ளல்...துடிப்பு...

      அ...ஆனா...

      வேண்டாம் விடுங்க..

      Delete
    15. எச்யூஸ் மீ ! வாட் இஸ் தி ப்ரொசீஜர் டு சேஞ் தி டாப் லிஸ்ட்ஸ் ?

      Delete
    16. ஃபன்னீ கைஸ்..! !:-)///
      🤣🤣🤣. கலாய்க்காம சொல்லலனும்னா நீங்க சொல்ல வருவது புரிது.

      டெக்ஸ் கதைகளோட பலமும் பலவீனமுமே அதுதான். எந்த வித மூடு செட்டிங் இடம் பொருள் சூழ்நிலை ஏதும் தேவையில்லாம டெக்ஸ் கதைகளை ரசிக்கலாம். அதனால மறுவாசிப்புகளுக்கும் முதல் வாசிப்புகளுக்கும் அதிக இலக்காவது டெக்ஸ் கதைகளே.

      இட்லி, சாம்பார் சாதம் மாதிரி staple food. இதெல்லாம் பிடிக்கும் ஆனா லிஸ்ட் போட்டா முதலில் வராது. முதலில் பிரியாணி தான் வரும். ஆனா அதை டெய்லி சாப்பிட முடியாது. ஆனா சாப்படனுங்கற ஆசை மனசுல இருந்துட்டே இருக்கும்.

      Delete
    17. மகேந்திரன் @ நேற்று ஏதாவது விசு படம் பார்த்தீர்களா?

      Delete
    18. இல்லை பரணி. கேம் ஆப் த்ரோன்ஸ் தான் பாத்துட்டு இருக்கேன்.

      Delete
  23. 1. சூப்பர் ஸ்டார்
    2. ஆம். நான் பல முறை மீள் வாசிப்பு
    செய்துள்ளேன்.
    3. மனிதனின் கற்பனைக்கு எல்லை இல்லை என்பதை உணர்த்தும் தொடர்.

    ReplyDelete
  24. Barracuda அருமை . முதல் பாகத்தின் ஓவியங்களில் இருந்தே இன்னும் மீள வில்லை . அதுவும் அந்த coloring அடுத்த level . மே மாதத்தில் முதலில் barracuda தான். எடிட்டர் சொன்னது போல ஒரு திரைப்படம் எடுப்பது போல comics எழுதுவதும் வரைவதும் மிகவும் கடினமே . என்னை போன்ற சாதாரண வாசகனுக்கு புரியும் வகையில் அருமையாக விளக்கி உள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு படைப்பின் பின்னணியிலும் ஏகமாய் வியர்வைகளுண்டு சார் - அது கதையோ ; கட்டுரையோ ; சினிமாவோ ; டிராமாவோ ; காமிக்ஸோ - எதுவாயிருப்பினும் ! துரதிர்ஷ்டவசமாக இங்கு காமிக்சின் மீது பெரிதாயொரு அபிமானம் நிலவுவதில்லை எனும் போது - அதன் படைப்பாளிகளின் ஆற்றல்களை showcase செய்திடுவது அரிதாகவே உள்ளது ! இது ஏதோ - நம்வட்டத்துக்குள்ளாவது சிலாகித்துக் கொள்ளும் பொருட்டு எழுதியது !

      Delete
  25. எல்லாவற்றிக்கும் ஒரே பதில் தோர்கால்நன்றாகஇருக்கிறது.

    ReplyDelete
  26. இம்மாத வெளியீடான தனியொருவன் 5 புத்தகங்கள் தேவைப்படுகிறது. டிஸ்கவுண்ட் செய்து தரஇயலுமா?

    ReplyDelete
    Replies
    1. முகவர்கள் யாரிடமாச்சும் அதை வாங்கிட முடிந்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள் சார் ! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? அருகாமையில் நம் முகவர் இருப்பின், அவர்களிடம் சொல்லி டிஸ்கவுண்ட் தர ஏற்பாடு செய்கிறேன் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  27. நன்றி ஆசிரியரே.மேமாத இதழ்களின் அறிவிப்பு எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு இந்த பதிவு உற்சாகமூட்டுகிறது.டுயூராங்கோ மற்றும் தனியொருவன் பற்றிய பதிவு இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. //தனியொருவன் பற்றிய பதிவு இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது//

      போன வாரப் பதிவைப் பாக்கலீயோ ?

      Delete
  28. என்னை பொறுத்தவரை தோர்கல் பவர்ஸ்டார்.

    ReplyDelete
    Replies
    1. He...he..ஆனாலும் உங்க நேர்மை ரொம்பப் புடிச்சிருக்கு நண்பரே !

      Delete
  29. தோர்ககல் சூப்பர் ஸ்டார்..
    ஆரிசியா சைனிங்ஸ்டார்..


    ReplyDelete
  30. தோர்கலின் மூன்றாவது ஆல்பம் வெளியானதற்கு பிறகு மறுவாசிப்பு (அனைத்து ஆல்பங்களையும்) செய்துள்ளேன்..!


    தோர்கல் பிடித்துப்போக காரணம் நம்முடைய கற்பனைக்கெட்டாத வான்ஹாமே அவர்களின் கற்பனாசக்தியே..!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கண்ணா. மிகச் சரி

      Delete
  31. 1. Shining star
    2. இல்லை ஆங்கிலத்தில் ஏற்கனவே படித்ததால்
    3. லெப்ட் ல கீர் போட்டு ரைட்ல போகின்ற கதை போக்கு தான் அதன் பிளஸ் மற்றும் மைனஸ்

    ReplyDelete
  32. பராகுடா முன்பாக இதழ்களை நேற்று இரவு தான் எடுத்து என் அருகிலியே வைத்து கொண்டேன்.இது போன்ற தொடர் இதழ்கள் வரும்பொழுது சமீப இதழாகவே இருப்பினும் மீண்டும் முன்பாக இதழை படித்து விட்டு உடனடியாக அடுத்த இதழை படிக்கும் பொழுது அந்த கற்பனை உலகத்திற்குள் முழுவதுமாக உள்செல்ல முடிவதால் எப்பொழுதுமே இந்த வழிமுறை தான் சார்..

    பராகுடாவின் அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் வெயிட்டிங்...முன்பாக இதழுடன்...

    ReplyDelete
  33. தோர்கல்...ஷைனிங் ஸ்டார் ..

    ( வானில் எத்துனை நட்சிரங்கள் மின்னினாலும் சூப்பர் ஸ்டார் ஒன்று தான் சார்..)


    மறுவாசிப்பு ..நோ..

    ( அதே சமயம் முன்னர் வந்த கதைகள் அடுத்த இதழின் தொடர்ச்சி என அறிய நேர்ந்தால் மறுவாசிப்பு கண்டிப்பாக உண்டு..)


    தோர்கல் பிடிச்சுருக்கு சார் காரணம்

    "கதை நல்லா இருக்கு.."

    ReplyDelete
    Replies
    1. //தோர்கல் பிடிச்சுருக்கு சார் காரணம்

      "கதை நல்லா இருக்கு.."//

      ஒரு வாசகம் - திருவாசகம் தலீவரே !!

      Delete
  34. அதே கையோடு 'பொம்மை புக்' என்ற முத்திரைகளையுமே இந்த நொடியில் நினைத்துப் பாருங்களேன்

    ######

    அது வேணா உண்ம தான் சார்...இப்பொழுதும் நான் படிக்கும் பொழுது எட்டி பார்க்கும் சிலர் காமிக்ஸ் இந்த அளவிற்கு வந்துள்ளதா என்று வியப்போரும் உண்டு..இன்னும் பொம்மை புக்கை வினலையா என்போரும் உண்டு..

    பின்னோருக்கு இப்பொழுது எல்லாம் பதில் சொல்ல முற்படுவதே இல்லை..புன்னகையுடன் தாண்டி சென்று விடுவதே என மன நலனுக்கு உகந்த தாக பட்டு விடுகிறது..:-)

    ReplyDelete
  35. *பொம்மை புக்கை விடலையா*

    ReplyDelete
  36. வந்தாச்சி...🙏🙏🙏🙏🙏

    ReplyDelete

  37. 1. என்னைப் பொறுத்தவரை தோர்கல் சூப்பர்ஸ்டார். #1டைகர் 2. டெக்‌ஸ் 3. தோர்கல். அப்புறந்தான் மத்த ஹீரோவெல்லாம்.

    2. Yes... தோர்கலின் கதைகளும் மறுவாசிப்புக்கு தகுந்தவைதான்.

    3. தோர்கல் அடக்கம், அன்பு, நேர்மை, மற்றும் தற்காப்புக்கும் உணவுக்கும் மட்டுமே அஹிம்சை. பர்பக்ட் ஹீரோ. எல்லா வெரைட்டியும் கொண்ட பர்பக்ட் பேண்டசி அட்வெஞ்சர்

    ReplyDelete
    Replies
    1. Copy & paste எல்லாம் சரி. மகேந்திரன்கிட்ட உரிய permission வாங்கிட்டிங்களா?

      Delete
    2. நல்லா பாருங்க ... காப்பி பேஸ்ட்னா அந்த வாக்கியங்கள் அப்படியே இருக்கனும். இதில் 3 வித்தியாசங்கள் இருக்கே :)

      Delete
    3. காப்பி & பேஸ்ட்..!

      Delete
    4. ஆறு வித்தியாசம் தெரியுது :-)

      Delete
    5. வயாசானா எல்லாம் இரண்டா தெரியுமோ .....

      Delete
    6. சரியாக copy paste பண்ணப் பழகுங்கள் ஜி. அதை விட்டு விட்டு .. :-)

      Delete
    7. ஃப்ரூ காபி குடிப்பதன் விளைவு என நினைக்கிறேன் :-)

      Delete
  38. ஈஸ்டர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  39. 1. // இன்றைய நமது நாயகர்கள் பட்டியலில் தோர்கலுக்கு எவ்வித இடம் தருவீர்கள் guys ? சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ? ஷைனிங் ஸ்டார் அந்தஸ்து ? பவர் ஸ்டார் அந்தஸ்து !//

    ஷைனிங் ஸ்டார் அந்தஸ்து

    2. மறுவாசிப்புக்கு தோர்கலை இதுவரையிலும் தேர்வு செய்துள்ளீர்களா
    \ நோ ( கதை குறித்து விவாதிக்க எந்தவொரு புஸ்தகத்தினையும் அடிக்கடி விவாத சமயத்தில் புரட்டுவது நடக்கும்.) சலாம் சாம்ராட் புரிந்துகொள்ள முயற்சி செய்து பலமுறை படித்தது விதிவிலக்கு ..ஆனால் இது மறுவாசிப்பில் வராது ..

    ReplyDelete
    Replies
    1. 3 தோர்கல் தொடரானது உங்களுக்கு ரசிப்பின் - ஒற்றை வரியில் அதன் காரணத்தைச் சொல்ல முயற்சிக்கலாமா ப்ளீஸ் ?
      வான் ஹாம்மே என்ற நூலில் தொங்கும் பேமிலி வேல்யூஸ் என்ற மாயமோதிரம்

      Delete
    2. ///( கதை குறித்து விவாதிக்க எந்தவொரு புஸ்தகத்தினையும் அடிக்கடி விவாத சமயத்தில் புரட்டுவது நடக்கும்.) சலாம் சாம்ராட் புரிந்துகொள்ள முயற்சி செய்து பலமுறை படித்தது விதிவிலக்கு ..ஆனால் இது மறுவாசிப்பில் வராது///

      மீ... டூ...

      Delete
    3. @ Selvam abirami : யகாரி போய் ஜெரி வந்துட்டு போலிருக்கே சார் !!

      Delete
    4. நீங்க பிளாக் செட்டிங்ஸ் மாற்றியபோது பழைய இமேஜ் - ஐ தளம் அனுமதிக்கவில்லை சார் !!! அவசரத்துக்கு கையில் கிடைத்ததை போட்டு விட்டேன் ..தோ மறுபடியும் !!! :)

      Delete
  40. தோர்கல் சூப்பர் ஸ்டார் தான. மறுவாசிப்புக்கு நேரம் இல்லை சார்

    ReplyDelete
  41. போதும் என்ற மனமே போதும் என்று நினைக்கும் தோர்களின் உயர்ந்த எண்ணம்.

    தோர்கல் ஸ்டார்களையே தன் வசபடுத்தும் "black hole".

    நிறைய முறை தோர்களை மறுவாசிப்பு செய்கிறேன் மற்றும் செய்ய போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //தோர்கல் ஸ்டார்களையே தன் வசபடுத்தும் "black hole".//

      அடடே !! இது புதுசா இருக்கே !!

      Delete
  42. Senthil Sathya sir happy wedding anniversary.💐💐🎂🎂

    ReplyDelete
  43. லக்கி லூக் கதைகள் அனைத்தும் பலமுறை மறுவாசிப்பு மற்றும் மறுபார்வைக்கு (frame by frame ஆக ரசிக்க வேண்டும்ல) உள்ளாவது வாடிக்கை!

    இதைத் தவிர்த்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜாலியாக படிக்கும், படிக்க நினைக்கும் ஒரே இதழ் டைக்ரின் "இரத்தக் கோட்டை" மட்டுமே!!

    இது போக நி.நி. பலமுறை மறுவாசிப்பிற்கு உள்ளாகிறது! உள்ளாகவும் போகிறது!!!

    ReplyDelete
  44. எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க.... :-)

    ReplyDelete
    Replies
    1. மேட்டுப்பகுதிக்குத்தானே ஓடனும்🤔

      Delete
    2. மேச்சேரிக்கு கூட ஓடலாம்....

      Delete
    3. //நி.நி. பலமுறை மறுவாசிப்பிற்கு உள்ளாகிறது! உள்ளாகவும் போகிறது!!!//

      நண்பர்களைத் தெறிக்க விடறீங்க சார் !!

      :-)

      Delete
    4. பிடி ஓட்டம் 🏃🏃🏃🏃🏃🏃

      Delete
  45. //
    இதைத் தவிர்த்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜாலியாக படிக்கும், படிக்க நினைக்கும் ஒரே இதழ் டைக்ரின் "இரத்தக் கோட்டை" மட்டுமே//

    +100000000

    ReplyDelete
  46. திருமண நாள் வாழ்த்துக்கள் சத்யா...

    ReplyDelete
  47. தோர்கல் சந்தேகமில்லாமல் ஒரு சூப்பர் ஸ்டார்தான்.

    எப்போது வாசித்தாலும் சலிப்பே ஆகாத கதை வரிசை.

    இனி பேன்டசி ரக கதைகளுக்கு தோர்கலை ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. //இனி பேன்டசி ரக கதைகளுக்கு தோர்கலை ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க முடியாது.//

      Very True !

      Delete
  48. 1 Super
    2 Yes
    3 Love to see n imagine life of people of prior centuries .. that to in a diffrtent plot...style..fantasy..artwork...
    May avoid one shots as collective 3 gives a great satisfaction and really it mesmorise ..

    ReplyDelete
  49. பரா குடா சித்திரங்கள் அருமை..அதை கருடப் பார்வையில் அலசி இருப்பது அருமையிலும் அருமை..வெட்டியானின் புதுக்கதை பற்றிய செய்தி இனிமை.வெட்டியானின் ரகளைகள் 2019 லேயே வரவிருப்பது இனிமையிலும் இனிமை .தோர்கல் நல்லதொரு கதைத்தொடர்.ஆரம்பத்தில் எரிச்சலை கிளப்பியது என்றாலும் அடுத்தடுத்து வெற்றிக்கொடி நாட்டியது உண்மை. மறு வாசிப்புக்கு சிலபல கதைகள் தோர்கலி லும் உண்டு.ஷைனிங் ஸ்டார் தோர்கல் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. //நல்லதொரு கதைத்தொடர்.ஆரம்பத்தில் எரிச்சலை கிளப்பியது//

      உங்களுக்குத் தான் என்றில்லை சார் ; துவக்க நாட்களில் நம்மவர்களில் பெரும்பான்மைக்கு ஏகமாய் complaints இருந்தன - தோர்கல் தொடர் மீது ! Phew !!

      Delete
  50. Will you come to Erode or Chennai Book Fair? I have a copy and I am not a comocs IAS. But it will take a few weeks for me to search and keep it aside for you.

    ReplyDelete
  51. Fantasy genre ன் இன் super star Thorgal தான். ஐயத்திற்கு இடமின்றி.....

    Repeated reading உண்டா என்றால்....உண்டு.
    குறிப்பாக எங்கள் வீட்டில் பெண்களுக்கு மிகவும் பிடித்த கதை வரிசை தோர்கல்தான்.
    Family values உடன் இயற்பியல் தத்துவங்கள் களையும், time travel ஐயும் புராதன Vikings culture ஐயும், அண்டவெளி வீரனான (universal soldier என்று அழைக்கலாமா.....!!!!??) Thorgal இணைத்து படைத்த van hamme நம்மை பிரமிக்கவைக்கிறார்.

    Fantasy
    Action adventure story

    ReplyDelete
    Replies
    1. //எங்கள் வீட்டில் பெண்களுக்கு மிகவும் பிடித்த கதை வரிசை தோர்கல்தான்.//

      Oh wow !

      Delete
    2. எங்க வீட்டு பெண்களுக்கு பிடித்தது தோச கல் மற்றும் தோய்க்கிற கல் வூட்டுக்காரரை புரட்டி, தோய்ச்சு எடுக்கலnமே.

      Delete
    3. ////எங்க வீட்டு பெண்களுக்கு பிடித்தது தோச கல் மற்றும் தோய்க்கிற கல் வூட்டுக்காரரை புரட்டி, தோய்ச்சு எடுக்கலnமே.////

      ஹா ஹா ஹா!! செம நக்கல்!! :))))

      Delete
    4. பிக்கல்- பிடுங்கல்- நடுங்கல்( நம்ப ரகசியம் னு நெனைச்சிக்கிட்றது ) ஹி ஹி

      Delete
  52. ///1 . இன்றைய நமது நாயகர்கள் பட்டியலில் தோர்கலுக்கு எவ்வித இடம் தருவீர்கள் guys ? சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ? ஷைனிங் ஸ்டார் அந்தஸ்து ? பவர் ஸ்டார் அந்தஸ்து !///

    இப்போதைக்கு சூப்பர் ஸ்டார் இல்லை எனினும் விரைவில் அதற்கான தகுதி தோர்கலுக்கு வந்துவிடும் என்றே தோன்றுகிறது....

    /// மறுவாசிப்புக்கு தோர்கலை இதுவரையிலும் தேர்வு செய்துள்ளீர்களா ? Yes / No போதுமே!///

    ஆம்.

    ///3 .தோர்கல் தொடரானது உங்களுக்கு ரசிப்பின் - ஒற்றை வரியில் அதன் காரணத்தைச் சொல்ல முயற்சிக்கலாமா ப்ளீஸ் ? I repeat : In a single crisp line pls ?///
    ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு,அது மாயங்கள் நிறைந்த உலகின் நாயகனாய் இருப்பதாலும் இருக்கலாம்.

    ReplyDelete
  53. தோர்கல்,

    1. Super Star
    2. கடந்த 7 வருடங்களாக மறுவாசிப்புக்கு அவகாசம் இல்லை.
    3. கதைக்களம், தோர்கலின் நேர்மை, சித்திரம் & கலரிங்.

    ReplyDelete
  54. தோர்கல், என்னை பொருத்த வரை, சமீபத்திய வரவுகளில் ஒரு சூப்பர் ஸ்டார். ஆங்கிலத்தில் பல முறை மறு வாசிப்பு செய்துவிட்டபடியால், தமிழில் முதலில் படித்திருந்தால் அதையே செய்திருப்பேன்.

    மாயாஜாலம், விண்வெளி சாகஸம், சூப்பர்ஹீரோயிஸம், அறிவியல், அமானுஷ்யம், வைகிங் வாழ்க்கைமுறை, இப்படி ஒரு பிரம்மாண்ட கதையோட்டம் எந்த தொடரிலும் இல்லை.... One of Jean Van Hammes' Finest !

    ReplyDelete
  55. தோர்கல்

    1) ஸ்டார்லாம் கிடையாது.(அதுக்கு டெக்ஸ் டைகரு லக்கிலூக் டாக்புல்-ஆர்டினர் னு ஏகப்பட்ட பேர் இருக்காங்க)

    2)
    ஒரு வாசிப்பே திருவாசிப்பு.திரும்பவும் வாசிப்பா.ஙே!!!!

    3)ரசிக்கிறேன்.(ஜனரஞ்சகமா-இல்லை)

    ReplyDelete
    Replies
    1. எனது விமர்சனமும் அதுவே.

      Delete
    2. // ஸ்டார்லாம் கிடையாது.(அதுக்கு டெக்ஸ் டைகரு லக்கிலூக் டாக்புல்-ஆர்டினர் னு ஏகப்பட்ட பேர் இருக்காங்க) //

      ஆமாம். இவங்க எல்லாம் ரேஞ்சர் மற்றும் ஷெரிப் என்ற உத்யோகத்தில் இருப்பதால் அவங்க கம்பெனி ஸ்டார் பேட்ச் கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டேன் :-)

      Delete
  56. "குளிர்கால குற்றங்கள்"
    மன்னிக்கவும். இந்த புது வரவை என்னால் ரசிக்க முடியவில்லை.

    ஓவியங்கள் அருமை என்றாலும், கதை ரொம்பவும் சோதித்து விட்டது.

    மறுவாய்ப்பு தரவேண்டாம் என்பது எனது கோரிக்கை.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள். நன்றி. தொடருங்கள்.

      Delete
  57. சமீப காலங்களில் அட்டை படங்கள் அழககாக இருக்கின்றன. கதை தலைப்புகளை நமது ஓவியரை கொண்டே வரைவதை கண்டிப்பாக தொடரவேண்டும். தலைப்புகள் கதைக்கும் அட்டை படத்திற்கும் அற்புதமாக பொருந்தும்படி வரைகிறார்.

    தோர்கலின் கதைகள் அனைத்துமே அற்புதமான படைப்புகள்!

    ReplyDelete
    Replies
    1. ////கதை தலைப்புகளை நமது ஓவியரை கொண்டே வரைவதை கண்டிப்பாக தொடரவேண்டும்.////

      Yes

      Delete
  58. Editor Sir you have given previews for two books in the past two weeks .I hope you are planning a preview for Durango in the coming week. Thank you

    ReplyDelete
  59. பொடியன், கவித் ஜீவ், பிரஸ்ஸினா மற்றும் இலங்கை நண்பர்களே @ உங்கள் நாட்டில் இன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மனதை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அனைத்தும் விரைவில் சரியாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.
      இழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் செய்திகளை அறிந்திருப்பீர்கள். சமூகவலைத் தளங்கள் முடங்கியிருப்பதால் எல்லா நண்பர்களையும் தொடர்புகொள்ள இயலவில்லை. இரு தினங்களுக்குள் நிலைமை சீராகிவிடும் என்று நம்புகிறோம். அப்பாவி மக்களைக் குறிவைத்தான இந்தத் தாக்குதல்களை யார் நடத்தியிருந்தாலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

      Delete
    2. ஆமாம். உண்மை. கண்டிப்பாக.
      சந்தோஷம் நீங்கள் நலமாக இருப்பது குறித்து.கவனமாக இருங்கள்.

      Delete
  60. நமது இலங்கைவாழ் நண்பர்கள் அனைவரும் நலமுடனும் ,பாதுகாப்புடனும் இருக்க இறைவனை மனமாற வேண்டுகிறேன்.....

    ReplyDelete
  61. 1. தோர்கல் ஒரு சுப்பர்ஸடார்
    2. No, Not yet
    3. ஒவ்வொன்றும் புதுசு, எல்லா genre கதைகளும் கொண்ட தொகுப்பு

    ReplyDelete
  62. THANK YOU FRIENDS! & Vijayan Sir! i would very much love to complete this journey with Thorgal & his Family! I Hope we ALL!

    ReplyDelete
  63. ஒரு வழியா ப்ரொபைல் போட்டோ செட் பண்ணிஆச்சு.

    ReplyDelete
  64. 200 (ராகவன்ஜி மன்னிப்பாராக)

    ReplyDelete
  65. சார் கோடைக்கு குளிர்ச்சியாய் ....கோடை மலருக்கு நீராய் ஊற்றெடுக்கும் அட்டைப் படம் அட்டகாசம்....இரண்டு இதழ்களயும் அதாவது பரகீடாவின் முழுக்கதையும் ௐரே மூச்சில் படிக்க துடிக்கிறேன் இந்த பக்கங்களை கண்டு...சிறு வயதில் இக்கதை கிடைத்திருத்தால்...ம்ஹூம்....ஸ்ஸஸ்ஸ்...சார் கடல் கதைகள் தொடரட்டும்...குதிரை போலவே...வான் கதைகளும் இடம் பெறட்டும் வாய்ப்பிருப்பின்

    ReplyDelete
  66. கடலோடிகளின் வான்ஸூம் வரட்டும்...சாத்தானின் சீடர்கள் படித்தேன்...ௐரு ஊரே வில்லன்களாய் திடுக்கிடும் கதை அருமை...

    ReplyDelete
  67. சார் தோர்கள் சூப்பர் ஸ்டார்களுக்கு மேல...கடவுளுக்கு அருகே

    ReplyDelete
  68. ஆசிரியரின் பதிவுகளில் வாசகர்கள் என்ன கமெண்ட் போடுகிறார்கள் என்று கூட பார்க்காமலும் & அப்படி கமெண்ட்ஸ் போடுபவர்களை , "முகநூலில் கழிசடைகள்" கூறும் நீங்கள் நடுநிலை வகிக்கிறீர்கள் என்று கூறுவது நகைப்பிற்க்கு உரியது நண்பரே....

    ReplyDelete