Sunday, March 24, 2019

மாற்றம்..முன்னேற்றம்..குட்டிக்கரணம் !

நண்பர்களே,

வணக்கம். ஏழில்லை… பதினாலு கழுதை வயதானாலுமே சில பாடங்களை மண்டையில் ஏற்றிக் கொள்வது சிரமம் தான் போலும்! “அது தான் தெரிந்த விஷயமாச்சே… புதுசா ஏதாச்சும் சொல்லுப்பா !” என்கிறீர்களா? சரி, இப்போதைய பஞ்சாயத்து எதன் பொருட்டு என்று சொல்லி வைக்கிறேனே…!

அட்டவணையினைத் திட்டமிடும் போதே ஓராண்டின் இதழ்களை முழுவதுமாய் உருவகப்படுத்திடுவது ஓரளவுக்கேணும் அவசியப்படும்! கடந்த ஐந்தாறு வருஷங்களாய் இந்தக் கூத்துக்குப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்ட போதிலும் சில விஷயங்களை hands on செய்து பார்க்கும் போது தான் நிஜமான பரிமாணங்கள் புரிகின்றன!

ஜானதன் கார்ட்லேண்ட்! புது நாயகரின் அட்டைப்படத்தை போன ஞாயிறுக்கு கண்ணி்ல் காட்டிய கையோடு எடிட்டிங் வேலைகளுக்குள் திங்கள் புகுந்திருந்தேன்! இதுவுமே 2018-ல் எழுதப்பட்ட கதையென்பதால் இந்த ஜடாமுடிக்காரரோடு எனது முதல் பரிச்சயம் சில நாட்களுக்கு முன்பே! சிக்கல்களிலா நேர்கோட்டுக் கதைகள்; நமக்கு இப்போது ரொம்பவே பழக்கமாகிப் போய்விட்டுள்ள கௌபாய் பாணி எனும் போது கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பிலும் பெரிதாய் மாற்றங்கள் அவசியப்படவில்லை. Details இன்னும் அழுத்தமாய் இருந்தால் தேவலாம் என்று தோன்றிய இடங்களில் மட்டும் மாற்றியெழுதியபடிக்கே அந்த 100 பக்க இரட்டை ஆல்பத்தை மங்களம் பாடி விட்டேன்! “ஹை… ஜாலி! பாக்கி நிற்பன லக்கி லூக்கின் கார்ட்டூனும், பிரின்ஸின் மறுபதிப்பும் தான்! முன்னதை ஓரிரு நாட்களில் எழுதி முடித்து விடலாம்; பின்னதில் எழுத்துப் பிழைகளை சரிபார்த்தால் போதும்! என்றபடிக்குக் குஷியாகி “குளிர்காலக் குற்றங்களை” அச்சுக்குத் தயார் பண்ணினோம்! காத்திருக்கும் மே & ஜுன் மாத ராப்பர்களோடு ஜானதன் கார்ட்லேண்டையும் அச்சிடுவதாகத் திட்டம் என்பதால் இன்னொரு பக்கம் நமது டிசைனரை முடுக்கிக் கொண்டிருந்தேன். ஏக் தம்மில் அரை டஜன் இதழ்களுக்கான ராப்பரைத் தயார் செய்து அச்சிட்டு விட்டால் 2 மாதங்களுக்கு நோ தலைவலி! என்பதால் சமீப காலங்களில் அதுவே நமது template. So சில தருணங்களில் உட்பக்கங்கள் தயாராகி ராப்பருக்குக் காத்திருப்பதும் உண்டு தான்! இம்முறையும் அது போலொரு வேளையே!

சரி, ராப்பர் தயாராகும் வரைக்கும் காத்திராது பக்கங்களை அச்சிடத் தொடங்கலாமென்னு பணிகள் துவங்கின! முதல் 16 பக்கங்கள் அச்சில் ரெடியாகி என்னை வந்து சேர்ந்த போது தான் “ஆண் பாவம்” பாண்டியராஜனைப் போல விழிக்கத் தொடங்கினேன்! சுருக்கமாய்ச் சொல்வதானால் ஜானதன் கார்ட்லேண்ட்டை அபூர்வ சகோதரர்கள் குள்ள கமல் வேடத்தில் பார்த்தது போலவே தோன்றியது எனக்கு! Compact size – புடலங்காய்; செலவுகளைக் கட்டுக்கள் வைத்திடல்; எதிர்கால இதழ்களுக்கென வெள்ளோட்டம் இத்யாதி… இத்யாதி என்று அதுவரைக்கும் தலைக்குள் லாஜிக் பேசி வந்த குரல் திடீரென்று ஈனஸ்வரத்தில் முக்கிடுவது போல்ப்பட்டது! ஒரிஜினல் ப்ரான்கோ-பெல்ஜிய அளவுகளிலிருந்து நமது ரெகுலர் சைஸுக்கு மாற்றும் போதே அளவுகளில் அடிவிழத் தான் செய்கிறது! ஆனால் இதுவோ அடியல்ல – இடி என்று தோன்றியது! ஒரு புது நாயகரை அறிமுகம் செய்வதே கத்தி மேல் நடக்கும் அனுபவம் மாதிரி! அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அல்லது முதுகில் மத்தளம் கொட்டுவீர்களா? என்பது பெரியதொரு சமாச்சாரம்! இந்த அழகில் புதியவரை குள்ள புக் அவதாரில் களமிறக்கினால் உங்களது கண்கள் எவ்விதம் சிவக்குமோ என்று கற்பனையாய்ப் பார்த்திடும் போதே பேதி எடுக்காத குறை தான்! ஏற்கனவே “மின்னும் மரணத்தை சைஸ் சைஸாக வெளியிட்டு சொதப்பிட்டே” என்று இன்றுவரைக்கும் சாத்துவோரும் உண்டெனும் போது இருபதோ-முப்பதோ ரூபாய்களை ஈட்டிடும் பொருட்டு நான் கார்ட்லேண்டை கொலை செய்தவனாகிடக்கூடும் என்பது உறைத்தது! சின்னச் சின்ன படங்கள்; நிறைய நிறைய ஸ்கிரிப்ட் என்ற அந்தப் பக்க அலங்கோலத்தை அப்படியே தூக்கிக் கடாசிவிட்டு அச்சுப் பணிகளை நிறுத்தச் சொல்லி விட்டேன்! இன்னொரு பக்கமோ ராப்பருக்கான பிராசஸ் பணிகள் நிறைவுற்று – அச்சுக்கான பிளேட்களுடன் மைதீன் ஆஜராகிட கிறுகிறுத்து விட்டது தலை! ‘அதையும் கடாசிடுங்க‘ என்றபடிக்கே – டிசைனர் பொன்னிடமும் சரி, நமது DTP அணியிடமும் சரி இந்த compact சைஸ் விஷப்பரீட்சையே வேணாம்; வழக்கமான ரெகுலர் சைஸிற்கு மாற்றம் செய்யத் துவங்குங்கள் என்றேன்! ‘வெயில் இன்னமும் வேகமெடுக்கும் முன்பாகவே நம்மாளுக்குக் கழறத் தொடங்கி விட்டது டோய்!‘ என்று நினைத்தார்களோ என்னவோ; எதுவும் பேசாது வேலைக்குள் இறங்கிவிட்டார்கள்! Cmpact சைஸுக்கென வசனங்களை சந்துக்குள்ளும் பொந்துக்குள்ளும் நுழைத்திருந்திருந்தவர்கள், மறுக்கா சகலத்தையும் redo செய்திடத் துவங்கியது பஞ்சுமூட்டையை தண்ணீரில் செமையாய் நனைத்து, மேல் வலிக்க வலிக்க சுமப்பது போலான பணி என்பது புரிந்தது! ஆனால் ஏதோவொரு கூமுட்டைக் கணக்கில் நான் போட்ட திட்டம் இந்த மட்டோடே உசிரை வாங்காது விட்டதே என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்! So சனி மாலை வரை இந்த “மறுக்கா பணிகள்” அரங்கேறியதால் அச்சுக்கு ஜடாமுடியார் செல்லவிருப்பது தி்ங்களிலேயே! Of course, பட்ஜெட்டில் உதைக்கிறது தான்- ஆனால் இது நம்பர்கள் மீது கவனமிருக்க வேண்டிய வேளையல்ல என்பதால் அந்த பக்கமாய் சிந்தனைகளை பயணிக்க அனுமதிக்கவேயில்லை!

ஒரு மாதிரியாய் இந்த பஞ்சாயத்து சரியாகிடுமென்ற நம்பிக்கை பிறந்த பிற்பாடு – பிரின்ஸ் மறுபதிப்பிலும், லக்கி லூக் மொழிபெயர்ப்பினுள்ளும் குதித்தேன்! மார்ச் முதல் வாரத்தில் சுமார் 20 பக்கங்களை எழுதி முடித்திருந்தவன் – கார்ட்டூன் தானே... அப்பாலிக்கா பார்த்துக்கலாம்! என்றபடிக்கே லக்கி லூக்கின் பணிகளைத் தள்ளிப் போட்டிருந்தேன்! ஆனால் ஜாலி ஜம்பரின் முதலாளி என்றைக்குமே நமது ஆத்ம நண்பர் தானே – பெரிதாய்ச் சிரமங்களை உருவாக்காது ‘டக் டக்‘கென்று ஒரே நாளில் தயாராகிட கடுவன் பூனை போல உலாற்றறித் திரிந்தவனுக்கு லேசாய் நிம்மதி பிறந்தது! கேப்டன் பிரின்ஸ் கதையையும் சூட்டோடு சூடாய் ஒரு வாசிப்பு விட்ட கையோடு – “கலர் இதழ்களில் எனது பணிகள் முடிஞ்சதுடோய்!” என்று சோம்பல் முறிக்கத் துவங்கினேன்!

எஞ்சியிருப்பது ஜம்போ காமிக்ஸின் சீஸன் 2-க்கு துவக்கம் தந்திடவுள்ள ”கால வேட்டையர்கள்” மாத்திரமே! And இது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே மொழிபெயர்க்கப்பட்டு தயாராக இருந்த ஆல்பம் என்பதால் நம்மவர்கள் ‘மள மள‘வென்று டைப்செட் செய்து மேஜையில் அடுக்கிப் போட்டு விட்டார்கள்! தொடரவிருக்கும் பொழுதுகளில் அதன் எடிட்டிங்குக்கு நேரம் செலவிட்டால் ஏப்ரலில் combo தயாராகியிருக்கும்! ”ஆண்டவா..... இங்கேயும் ஏதாச்சும் பஞ்சாயத்து எழாதிருந்தால் உங்கள் கருணைக்கு காலமெல்லாம் கடமைப்பட்டிருப்பேன்!” என்றபடிக்கு அந்தப் பணிக்குள் புகுந்திட கச்சை கட்டிக் கொண்டிருக்கிறேன்!

என்ன ஒரே நெருடல்  – இந்த “மாற்றம் – முன்னேற்றம் – முட்டைக்கண்ணன்” படலத்தினால் அச்சுப் பணிகள் எல்லாமே கொஞ்சம் தாமதமாகி விட்டுள்ளன! திங்கள் முதல் லக்கி லூக் DTP; பிரின்ஸ் பிராசஸிங் என்று துவக்கி சகலத்தையும் முடித்திட அடுத்த 7 நாட்கள் போதுமாவென்று தெரியவில்லை! May be – just may be இந்த ஒரு முறை ஏப்ரலில் தான் டெஸ்பாட்ச் இருந்திடக் கூடும்!

And before I sign out – இதோ சின்னதாயொரு டீசர்! And சின்னதாயொரு அறிவிப்பு ! 

க்ரீன் மேனர் தொடருக்குப் பின்பாய் ஒரு சீரியஸான கதைக்களத்தை கார்ட்டூன் பாணியிலான சித்திரங்களுடன் சொல்லும் கதைகள் / தொடர்கள் வேறு ஏதேனும் கண்ணில் படுகின்றனவா என்று பார்த்துக்கொண்டேயிருப்பது எனக்கொரு வழக்கம் ! 2016-ன் ஏதோவொரு தருணத்தில் - படைப்பாளிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியிருந்த நேரமது !  "இரவே..இருளே கொல்லாதே" & "தேவ இரகசியம் தேடலுக்கல்ல" கதைகளின் வெற்றியினைத் தொடர்ந்து அவற்றில் மேற்கொண்டு 2 பிரதிகளை பந்தாவாய் அவர்கள் கையில் திணித்து விட்டுப் பேசிக்கொண்டிருந்த போது - "அடுத்து என்ன மாதிரியான கதைகளைத் தேடுகிறீர்களோ ?" என்று கேட்டார்கள் ! "ப்ளூபெரி (கேப்டன் டைகர்) போலொரு கௌபாய்த் தொடரையும் ; லக்கி லூக்கைப் போலொரு கார்ட்டூன் தொடரையும் தேடுகிறேன்" என்றேன் ! "அவையெல்லாம் ஒரு யுகத்திற்கு ஒருமுறை துளிர்க்கும் தொடர்களாச்சே ?!" என்றபடிக்கே ஒரு 6 பக்க பிரிண்டவுட்டை என் முன்னே போட்டார் ! அதனில் அவர்கள் வசமிருந்த கௌபாய்த் தொடர்களின் பட்டியலிருந்தது ! அவற்றின் பெரும்பான்மை one shots ; தொடரென்று பயணிக்கும் கதைகள் அவ்வளவாய்க் கண்ணில் படவேயில்லை ! ஆர்வமாய் மேலிருந்து கீழாயும் ; கீழிருந்து மேலாயும் அந்தக் காகிதங்களைப் பரிசீலனை செய்து கொண்டே போனாலும் 'பச்சக்' என்று மனதில் நிற்கும் விதமாய் எதுவும் தட்டுப்படவில்லை ! "சரி...ஊருக்குப் போய் கடுதாசி போடறேன் !" என்றபடிக்குத் தான் நடையைக் கட்ட வேணும் போலும் என்ற சங்கடம் உள்ளுக்குள் உறுத்தியது !! ஏனெனில் அன்றைய தினம் அவர்களது துறையின் உதவியாளர்கள் யாருமே பணியில் இல்லை ! ஆனாலும்  'இத்தினி தொலைவிலிருந்து வந்திருப்பவனுக்கு உருப்படியாய் ஏதாச்சும் செய்தால் தேவலியே !' என்ற எண்ணத்தில் சீனியர் மேனேஜரே எக்கச்சக்கமான ஆல்பங்களை என் முன்னால் குவித்திருந்தார் !! So அத்தனையையும் பராக்குப் பார்த்துவிட்டு, அவர்கள் தந்த காபியையும் வாயில் ஊற்றிக் கொண்டு வெறும் கையை வீசியபடியே விடைபெற கூச்சமாக இருந்தது !! ஆனால் அவரோ "எங்கள் கேட்டலாக்கில் ஒன்று கூடவா உனக்கு ரசிக்கலைடாப்பா ? விட்டேனா பார் !!" என்று அவர்களது சமீபத்துப் படைப்புகளை அங்கே மலை போல் குவித்திட்டார் !! அத்தனையும் ஹார்டகவரில், மிரட்டும் தயாரிப்புத் தரங்களில் மினுமினுக்க அடுத்த ரவுண்ட்  வாய் பார்க்கும் படலம் துவங்கியது ! ஆனால் இம்முறையோ ஒரு கார்ட்டூன் பாணி western கவனத்தைக் கோரியது ! ஆர்வமாய்ப் புரட்டினேன் - அது முற்றுப்பெறுமொரு one shot தொடரா ? - அல்லது கொஞ்ச தூரமெனும் பயணிக்கும் தொடரா ? என்று தெரிந்து கொள்ள ! "தொடரும்" என்று 46 -வது பக்கத்தில் தென்பட, வேகமாய் அது பற்றி விசாரித்தேன் ! 4 பாகங்களில் முற்றுப்பெறவுள்ளதொரு மினி-தொடர் என்று சொன்னவர், கொஞ்சமாய் கதையின் அவுட்லைனையும் சொன்னார் ! அப்போது 2 பாகங்கள் மட்டுமே வெளிவந்திருந்தது என்று ஞாபகம் !! தலைக்குள் லேசாய் பல்பு எரிவது போல் அப்போதே தோன்றிட, தொடரும் பாகங்கள் எப்போது வெளியாகுமென்று விசாரித்தேன்! "சரி...இந்தத் தொடர் முழுமை பெறும் போது நிச்சயமாய்ப் பரிசீலனை செய்திடுவோம் " என்று துண்டை லேசாய் விரித்து வைத்தபடிக்கே விடைபெற்றேன் ! என்னை ஈர்த்தது 2 விஷயங்கள் : முதலாவது அந்த கார்ட்டூன் சித்திர ஸ்டைல் ! இரண்டாவது அந்தக் கதையினில் தென்பட்ட வலு ! படைப்பாளிகள் விரும்பியிருப்பின் அதனை ஒரு சீரியஸ் பாணியிலேயே எடுத்துச் சென்று வெற்றி கண்டிருக்க முடியும் என்று தோன்றியது ! ஆனால் கதையை கொஞ்சம்  இலகுத்தன்மையோடு முன்னெடுத்துச் செல்வதே அவர்களது நோக்கம் என்பது புரிந்த போது - மனதில் "பச்சை மாளிகை" தான் வியாபித்து நின்றது ! ஆனால் அவர்கள் என்னிடம் காட்டிய ஆல்பங்களை முழுசுமாய்ப் புரட்டிய போது சன்னமாயொரு நெருடல் எழாதில்லை தான் ! லேஸ் லேசாய் கதையினில் எட்டிப் பார்த்த அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்கள் கொஞ்சம் பிரேக் போடச் செய்தன ! 'சரி..இன்னும் 2 வருஷங்கள் உள்ளன தானே...அப்போ பார்த்துக்கலாம் !" என்றபடிக்கு அடுத்த பணிகளுக்கும் புகுந்தேன் ! முன்னாட்களைப் போல ஞாபக சக்தியை மட்டுமே நம்பியிருப்பது வேலைக்கு ஆகாது என்ற ஞானம் சில பல ஆண்டுகளுக்கு முன்பே கிட்டிவிட்டதன் காரணத்தால் இது போன்ற புது தேடல்கள் பற்றிய notes களை ஒரு பிரத்யேக டைரியில் குறித்து வைத்திருக்கிறேன் ! And அதனை ஒவ்வொரு நாலு மாதமும் திறந்து புரட்டுவது எனது வாடிக்கை ! சமீபத்தயதொரு புரட்டலின் போது தான் இந்தக் கதை தொங்கலில் நிற்பது நினைவுக்கு வந்திட - அவசரம் அவசமாய் பாக்கி 2 ஆல்பங்களைப் பற்றி விசாரித்தேன் ! சீக்கிரமே அவை இரண்டும் pdf file களாக வந்து சேர - ஒட்டு மொத்தமாய் 4 பாகங்களையும் வைத்துக் கொண்டு விட்டத்தை விரிந்த கண்களோடு நோட்டமிடும் ஆராய்ச்சியைத் தொடங்கினேன் ! "கதை ஓ.கே. ; சித்திர பாணியும் நிச்சயமாய் நமக்கு ரசித்திடும் ; ஆனால் அந்த அடல்ட்ஸ் ஒன்லி ? " என்று ரோசனை ஓடியது !! ஆனால் பரக்குடா தொடருக்கு அப்பாலிக்கா இந்தக் கதையின் சமாச்சாரங்கள் - துளி கூட ஒரு விஷயமாகிடாது என்று புரிந்தது ! தூக்கலாய் விரசமோ ; முகம் சுளிக்கச் செய்யக்கூடிய  சமாச்சாரங்களோ இங்கு லேது & எடிட்டிங்கில் அதனை சுலபமாய் சரிக்கட்டி விடலாமென்று புரிந்தது ! அதன் தொடர்ச்சியாய்  அந்த ஞாயிறு தான் "கார்ட்டூன் பாணியில் ஒரு சீரியஸ் கதை உள்ளதுங்கோ ; அதை போடலாமா ?" என்ற கேள்வியை இங்கே பதிவினில் உங்களிடம் முன்வைத்தேன் ! உங்களது பதில்களும் செம positive ரகத்திலிருக்க - அப்போதே துவக்கினேன் அந்த 4 பாகத் தொடரின்  உரிமைகளை வாங்கிடும் முயற்சிகளை !! So உங்களை  பீஸ்ச்சி சொல்லி நொய்யு..நொய்யென்று அவ்வப்போது நான் நச்சரிப்பதும் not without reason folks !! End of the day - you are  the ones who help me take a call on what you will end up reading !! அந்த தொடரின் உரிமைகளும் சமீபத்தில் நமதாகிட - அதனையே ஈரோடு ஸ்பெஷலின் புக் # 1 ஆக shortlist செய்துள்ளேன் ! இன்னமும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு அடுத்த ஆல்பத்தையும் அறிவித்த கையோடு முன்பதிவுகள் பக்கமாய் பார்வைகளை ஓடச் செய்யலாம் ! "கென்யா வரலியா ? அமெரிக்கா ஊத்திக்கிச்சா ?" என்ற கேள்விகளையும் கொஞ்சமே கொஞ்சமாய் உள்ளடக்கிக் கொள்ளக் கோருகிறேன் guys - simply becos இறுதித் தீர்மானத்திற்கு இன்னமும் ஒரு சில தெளிவுகள் அவசியப்படுகின்றன எனக்கு ! And படைப்பாளிகள் சரமாரியான ஐரோப்பிய book festival சீசனில் பிஸியாகயிருப்பதால் அவர்களிடமிருந்தும் சில தகவல்களுக்காக waiting !! So தற்போதைய நிலவரப்படி ஈரோடு 2019-ன் பயணத்தின் முதல் புள்ளி இது ! தொடரவுள்ள 2 வாரங்களுக்குள் நான் தெளிவு பெற்ற கையோடு உங்களிடம் வருகிறேன் - மேற்கொண்டு தகவல்களோடு !!  

மீண்டும் சந்திப்போம்! Bye for now all !! Have an awesome Sunday!

225 comments:

  1. Replies
    1. எனக்கு என்னமோ விஜய் தான் ஆசிரியரின் பதிவை பப்ளீஸ் செய்கிறார் என நினைக்கிறேன் :-) publish பண்ணிட்டு அடுத்த வினாடி "மீ" ன்னு பின்னூட்டம் அதுவும் முதல் ஆளாக :-) ஈரோட்டில் இது பற்றி பேசிக்கலாம்.

      Delete
    2. க்கும்! ஏற்கனவே அங்கே பலருக்கு வாயி வயிறெல்லாம் எரிஞ்சுகிட்டு கிடக்கு.. இதுல நீங்கவேற..! :)

      Delete
    3. முதல் மூணுக்குள்ள வரணும்னா முதல் கமெண்ட்டுக்கு Reply பண்ணாதான் உண்டு.
      Have a peaceful day.

      Delete
    4. ///EV 4th week too. What a man.//

      what a cat!!னு எழுதியிருந்தா இன்னும் பொருத்தமாயிருக்கும்! :D

      Delete
    5. அப்போ மீ இல்ல.. மியாவ்!!

      Delete
  2. டைனமைட் ஸ்பெசல் படிச்சு முடிச்சாச்சி...

    இந்த இதழ் வந்தப்ப வந்த விமர்சனங்கள் இரண்டு விதமான எக்ஸ்ட்ரீம். சிலர் கடுமையாகவும் பெரும்பான்மை சிறப்பாக இருக்குன்னும் விமர்சித்து இருந்தார்கள்.

    ரசனைகள் என்பது வெவ்வேறு விதம். இதனால் தான் உலகை இறைவன் இவ்வளவு diversed ஆக படைத்துள்ளான். ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்பதால் ஒரு படைப்பும் அதன் படைப்பாளியும் எந்த விதத்திலும் குறைந்து விடப்போவதில்லை. பெரும்பான்மைக்கு பிடித்தது சிலருக்குப் பிடிக்காமல் போனதால் அந்த சிலரின் ரசனையும் குறைபாடு உடையது இல்லை.

    அட்டைப்படம். பச்சைக்கலர் ஜிங்குச்சா, ஹல்க்குன்னு எல்லாம் விமர்சிக்கப்பட்ட அட்டை. போட்டோக்களிலும் தளத்திலும் பாத்தப்ப எனக்கு இந்த அட்டைப்படத்தை சரியாக உணர இயலவில்லை. நேரில் பார்க்க எனக்கு மிகவும் பிடித்தே இருந்தது. குறிப்பாக சேதி சொல்லும் தல யின் கண்கள்.

    புயலுக்கொரு பிரளயம்.

    இந்தக்கதையை பலர் பல விதமா விமர்சித்து விட்டதால் கதையைப் பற்றி நான் பெரிதாக எழுதப் போவதில்லை. என்னுடைய விமர்சனம் நண்பர்கள் ரவி மற்றும் ஜேடர்பாளையம் சரவணக்குமாரின் விமர்சனத்தையே ஒத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை டெக்ஸின் மைல்ஸ்டோன் கதைகளில் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

    தெற்கே ஒரு தங்கத்தேட்டை:

    இது..இதைத்தான் நாம டெக்ஸ் கதைகளல எதிர்பார்க்கிறோம். இந்தக் கதை முதல் கதையின் விமர்சனங்களில் பெரிதாக பேசப்படாமல் போய்விட்டதுன்னு நினைக்கிறேன். இந்தக் கதையும் கலர்ல வந்துருக்கலாம். இது சட்டம் ஒரு சமவெளி மாதிரி யூசுவலான கதையா இல்லாம அருமையான தரமான சம்பவங்களால் கோர்க்கப்பட்ட ஒரு ஹை ஆக்டேன் சேஸ். டெக்ஸ் அன் கோவின் யதார்த்தமான திட்டமிடல்கள், எதிரிகளின் சந்தர்ப்பவாத கூட்டணி, ஓடை, சதுப்பு நிலம் , காடுகள் என கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் ஓவியங்கள் என அன்லிமிடெட் feast. என்னால் பல தடவை மறு வாசிப்புக்குள்ளாகப் போகும் கதை.

    ReplyDelete
    Replies
    1. வாவ் நேத்தைக்கு வெளியான புக்குக்கு இன்னைக்கே விமர்சனம் போட்டுட்டாரு இந்த வெளிநாட்டு ஆபிசர்

      Delete
    2. Absolutely :: தெற்கே ஒரு தங்கத்தேட்டை is a lovely story. Awaiting a color imprint of this in future !

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete

    4. //நேத்தைக்கு வெளியான புக்குக்கு இன்னைக்கே விமர்சனம் போட்டுட்டாரு இந்த வெளிநாட்டு ஆபிசர்//

      என்னைப் பொறுத்தவரை இது feedback loop. அதற்காகவே ஆசிரியர் வரும் தருணங்களில் என்னுடைய பெரும்பான்மை விமர்சனங்களை, லேட்டானாலும் பரவாயில்லைன்னு, போட்டுடறேன். நமக்கு எது பிடிக்குது பிடிக்கலைன்னு சொல்லிட்டா அவருக்கு தேர்வு செய்ய வசதியா இருக்கும்.

      இங்கே உற்சாகமா ஜாலியா இருக்கும் அதே வேளையில் சொல்ல வேண்டியதை நாகரிகமாக பொதுத் தளத்திற்கு உரிய மரியாதையுடன் சொல்லும் போது பதில் உடனடியா கிடைக்கலைன்னாலும் புத்தக வடிவில் கிடைச்சிட்டுத்தான் இருக்கு.

      Delete
    5. //Awaiting a color imprint of this in future !//

      Yes. This one definitely deserves color reprint.

      Delete
    6. அருமையான விமர்சனம் மகி ஜி

      Delete
    7. ///இங்கே உற்சாகமா ஜாலியா இருக்கும் அதே வேளையில் சொல்ல வேண்டியதை நாகரிகமாக பொதுத் தளத்திற்கு உரிய மரியாதையுடன் சொல்லும் போது பதில் உடனடியா கிடைக்கலைன்னாலும் புத்தக வடிவில் கிடைச்சிட்டுத்தான் இருக்கு.///

      செம போயிண்ட்!

      Delete
    8. மஹி நல்ல விமர்சனம்.

      Delete
    9. // என்னைப் பொறுத்தவரை இது feedback loop. அதற்காகவே ஆசிரியர் வரும் தருணங்களில் என்னுடைய பெரும்பான்மை விமர்சனங்களை, லேட்டானாலும் பரவாயில்லைன்னு, போட்டுடறேன். நமக்கு எது பிடிக்குது பிடிக்கலைன்னு சொல்லிட்டா அவருக்கு தேர்வு செய்ய வசதியா இருக்கும். //

      உண்மை மகேந்திரன். ஆசிரியருக்கு மட்டும் அல்ல சில நண்பர்கள் விமர்சனங்களை படித்த பிறகு வாங்குவதுன்டு. எனவே இதை தொடருங்கள்.

      Delete
    10. // பெரும்பான்மைக்கு பிடித்தது சிலருக்குப் பிடிக்காமல் போனதால் அந்த சிலரின் ரசனையும் குறைபாடு உடையது இல்லை. // well said sheriff ji

      Delete
    11. நன்றி குமார். ஜி எல்லாம் வேணாம். அதெல்லாம வயசான தலீவருக்கும் மற்றும் செயலாளருக்கும் மட்டுமே போட வேண்டியது. 😜

      Delete
  3. பிஸ்டலுக்கு பிரியாவிடை..

    வர்ரே வாஹ்...!!

    ReplyDelete
    Replies
    1. அங்கே ஓரமா நிக்குற அக்காதான் பிரியாங்களா சார்?அப்போ விடை?.....

      Delete
    2. ///அங்கே ஓரமா நிக்குற அக்காதான் பிரியாங்களா சார்?அப்போ விடை?.....///

      நாமதான் தேடி கண்டுபிடிச்சிக்கணும் சார்....:-)

      Delete
    3. ///அங்கே ஓரமா நிக்குற அக்காதான் பிரியாங்களா சார்?அப்போ விடை?.....///

      அவங்க பேரு பிரியாங்கிறதுதான் விடை..!

      Delete
    4. Gp and padmanaban sir செம்ம செம்ம என்ன டைமிங் 😙😂

      Delete
  4. ஜனாதனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஈரோடு ஸ்பெஷல் ஏதவது குண்டு புக் உண்டா ?

    ReplyDelete
  5. 'பிஸ்டலுக்கு பிரியா விடை' - அட்ராசக்கை அட்ராசக்கை!

    ReplyDelete
  6. ஜானதான் கார்ட்லேண்டை ரெகுலர் சைஸுக்கு மாற்றியது நல்ல முடிவு சார்.!

    ReplyDelete
  7. Dear Editor,

    Good choice for the Erode book festival. God willing, this time, I would travel to meet you folks. Please make the other choice, one of the popular hero's - a combo of our superstar heroes if you can.

    ReplyDelete
  8. இக்கதையின் முதல் இரண்டு பாகமும் சில வருடங்கள் முன்பு படித்த ஞாபகம். ஒரு ஜெகஜால கில்லாடி லேடி பற்றிய கதை தானே சார்?

    ஆங்கில பெயர் ஞாபகம் இல்லை. சற்றே அடல்ட் சமாச்சாரம் வரும் நீங்கள் கத்திரி போட முடியும் என்றே நினைக்கிறேன்.

    எனக்கு பிடித்திருந்தது. ஹிட் அடிக்கும். கடைசி 2 பாகம் படிக்க ஆவலுடன்.

    ReplyDelete
    Replies
    1. Can you let me know the name of the original please ? (Slurp !! He He !) ..

      Delete
  9. .. and sir .. any update regarding more cartoon books? :-)

    ReplyDelete
  10. ஆசிரியர் அவர்களுக்கு, ,,,
    ஈரோட்டில் அமெரிக்காவோ,ஆப்பிரிக்கோ என்ன வேண்டுமானாலும் தாருங்கள் ..ஆனால் எங்களுக்கு தலயின் ஒரு கலர் புக்காவது வேண்டும். இந்த வருட கோட்டாவில் புது கலர் டெக்ஸே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். (மறுபதிப்பு, colour tex போன்றவற்றை கணக்கில் கொள்ள வேண்டாமே..ப்ளீஸ் ).இல்லையென்றால் மெபிஸ்டோவின் 500 பக்க கதையை கொடுக்கவும்..எது எப்படியோ ஈரோட்டிற்கு நம்ம தலயோடு தான் வர வேண்டும். .இது அன்புக் கட்டளை.

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்.

      Delete
    2. சூப்பர் ஜீ, நாங்களும் அந்த 500 வண்ணப் பக்கங்கள் கொண்ட மெபிஸ்டோ கதையை தான் எதிர்பார்க்கிறோம். எடி ஜீ , நீங்கள் அந்த கதையை போடுவீர்களா??

      Delete
    3. சூப்பர் ஜீ, நாங்களும் அந்த 500 வண்ணப் பக்கங்கள் கொண்ட மெபிஸ்டோ கதையை தான் எதிர்பார்க்கிறோம். எடி ஜீ , நீங்கள் அந்த கதையை போடுவீர்களா?

      Delete
  11. ஜானதன் சைஸ் மாற்றியது சிறிது வருத்தம் தான்.(இந்த சைஸில் பார்க்க ஆவல் கொண்டு இருந்தேன்...இது மட்டும் ஓகே ஆகியிருந்தால் .(ஒரு சில கதைகளை தவிர்த்து) கார்ட்டுனையும் இந்த சைஸில் ரசிக்க ஆசை கொண்டு இருந்தேன்.ஏனோ எனக்கு டெக்ஸ் சைஸ் ரொம்ப பிடித்து இருக்கிறது.

    ReplyDelete
  12. கதை எப்படி இருக்குமோ தெரியாது..ஆனால் உங்களின் ஒவ்வொரு விளம்பரத்தை பார்த்தவுடன் எப்போது படிப்போம் என்று ஏங்க வைத்து விடுகிறீர்கள்..அந்த வரிசையில் பிஸ்டலுக்கு பிரியா விடையும் அடங்கும்....வெகு ஆவலுடன்..அதைவிட வேறு என்னன்ன ஸ்பெஷல் உள்ளது என்பதை அறிந்து கொள்ள துடிக்கிறது மனது....

    ReplyDelete
  13. விடுமுறை நாள் வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. இதே முடிவை தோர்கல் hardcover அட்டை விஷயத்திலும் எடுத்திருக்கலாம்.

      Delete
  14. பிஸ்டலுக்கு பிரியா விடை.

    இந்தக்கதை தமிழ்ல எப்ப வரும்னு காத்துக் கிடந்தேன். டைட்டிலே பட்டயக் கிளப்புது.

    ஜானதன் கார்லண்ட் இதழின் அளவு விசயத்தில் எடுத்த முடிவு சரியே. ஆனால் உங்களுக்கு சந்தாதாரர்களுக்கு அதே விலையில் இதழை தரும் போது ஏற்படும் இழப்பு வருத்தமான விசயமே. நீங்கள்எவ்வளவு நகைச்சுவை கலந்து சொன்னாலும் வருத்தமே.

    இனிமேல் விலைக்கட்டுபாட்டின் பொருட்டு அளவு குறைப்பு கருப்பு வெள்ளையில் வெளியிடுதல் வேண்டாம் சார். பட்ஜெட் காரணமாக புத்தகம் ஒன்றிரண்டு குறைந்தால் கூட ஓகே. ( உண்மையச் சொல்லனும்னா அதுவும் ஓகே இல்லை. 😉).

    ReplyDelete
    Replies
    1. பிஸ்டலுக்கு பிரியா விடை.

      இந்தக்கதை தமிழ்ல எப்ப வரும்னு காத்துக் கிடந்தேன். டைட்டிலே பட்டயக் கிளப்புது. சந்தோசம்!

      Delete
  15. டைனமைட் ஸ்பெஷல், காலனின் கானகம்,சாத்தானின் சீடர்கள்,காதலும் கடந்து போகும், பாலை வனத்தில் ஒரு கப்பல்இவை எல்லாம் கலீல் to கேரளா..கேரளா to சவூதி என 4நாட்களுக்கு முன்பு என்னிடம் வந்த புத்தகம். ..3 நாட்களில் அனைத்தையும் வேலைகளுக்கும்,internet க்கு நடுவில் படித்து முடித்துவிட்டு மீண்டும் புயலுக்கொரு பிரயத்தில் 100 பக்கங்கள் வரை படித்து உள்ளேன்....
    மாதம் ஒரு டெக்ஸ் போர் அடித்து விடும் என்று சொல்லும் நண்பர்கள் இடையே தினமும் டெக்ஸ் புக் வராதா என்று ஏங்குகிறது...ஒரு கதையை படித்து முடித்தவுடன் அடுத்த கதையில் தலயின் அதிர்வெட்டு என்னவாக இருக்கும் என்று ஆவல் எகிறி அடிக்கிறது..(டெக்ஸை பிடிக்காதவர்களுக்கு இது கொஞ்சம் அதிகமான புகழ்ச்சியாக தோன்றலாம்..என்ன செய்ய காலத்தின் கட்டாயம் டெக்ஸின் கதை...நண்பர் விஜய ராகவன் சொன்னது போல்
    Tex is comics
    comics is Tex
    அவ்வளதாங்க ...கேம் ஓவரில்லீங்க..தொடரும்..

    ReplyDelete
    Replies
    1. உங்களோட பைனல் டச் நல்லாவே இருக்கு

      Delete
    2. ஈரோட்டில் டெக்ஸ் இருந்த்தால் யாவாரத்துக்கு நல்லாயிருக்கும்.
      பிஸ்டலுக்கு பிரியாவிடை தலைப்பு சுகப்படவில்லை. யார் அந்த ப்ரியா?

      Delete
  16. டெக்ஸ் இல்லாத ஈரோட்டில் நமக்கு வேலையில்லை.

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லுங்க அழுத்தமாக 👍👍👍👍

      Delete
  17. இதழ் 2 ஆவது டெக்ஸ் இருக்க வேண்டும். ஆண்டவா?

    ReplyDelete
  18. உங்களிடமிருந்து போக்கிரி டெக்ஸ் பற்றிய அறிவிப்பு வருமென்று காத்திருப்பேன் சார்.

    ReplyDelete
  19. ஏற்கனவே 16 பக்கங்கள் அச்சுப்பணிகள் நிறைவடைந்த நிலையில், அவற்றையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு நீங்கள் 'ஜனாதன் கார்ட்லேண்ட்'ன் அளவை மாற்றியமைக்க முடிவெடுத்துருப்பது வருத்தம் கலந்த மகிழ்ச்சியளிக்கிறது சார்! உங்களுக்குத்தான் எவ்வளவு சிரமம், பண விரயம், உழைப்பு விரயம், நேர விரயம்!!

    எழுந்து நின்று மெளனமாய் கைதட்டுவதைத் தாண்டி நாங்கள் வேறென்ன செய்யக்கூடும்?!!

    ReplyDelete
  20. அருமையான பதிவு சார்.. பிஸ்டலுக்குப் பிரியாவிடை...ஆஹா...தலைப்பிடுவதில் நீங்க ஒரு லெஜண்ட்.. ஜோனதன் கார்ட்லேண்டுக்காக இத்தனை சிரத்தை எடுத்திருப்பது தங்களின் ஆர்வத்தையும் இரசிகர்கள் மீதான அக்கறையையும் தெளிவாக காண்பிக்கிறது.. ஒன் ஷாட்டாக நான்கு கதையையும் தருவது பெரிய கிப்ட் சார்.. ஒரேயொரு கேள்வி இந்த ஈரோடு ஸ்பெஷல் இன்னும் நீளுமா இவை அனைத்துக்கும் தனித்தனியே பணம் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டுமா? எனில் வரும் ஈரோடு புக் பேர் 2019 க்கு எத்தனை ஸ்பெஷல்கள் வரலாம்? வாசகர்களின் சிந்தனையை படித்து இந்த பிஸ்டலுக்குப் பிரியாவிடையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். மாபெரும் வெற்றியடைய செய்வது இனி வாசகர் பொறுப்பு..

    ReplyDelete
  21. பிஸ்டல் படலம் அந்த படலம் இந்த படலம் என பெயர் வைக்காமல் பிஸ்டலுக்கு பிரியாவிடை என்ற தலைப்பு வித்தியாசமாகவும் ஒரு அதிரிபுதிரியான ஆக்ஷன் கதையாகவும் நினைக்க தோன்றுகிறது.

    ReplyDelete
  22. வந்தாச்சி.🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  23. // So சனி மாலை வரை இந்த “மறுக்கா பணிகள்” அரங்கேறியதால் அச்சுக்கு ஜடாமுடியார் செல்லவிருப்பது தி்ங்களிலேயே! Of course, பட்ஜெட்டில் உதைக்கிறது தான்- ஆனால் இது நம்பர்கள் மீது கவனமிருக்க வேண்டிய வேளையல்ல என்பதால் அந்த பக்கமாய் சிந்தனைகளை பயணிக்க அனுமதிக்கவேயில்லை! //

    உங்களது காமிக்ஸ் மீதான காதல்
    திகைப்படைய செய்கிறது சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  24. // திங்கள் முதல் லக்கி லூக் DTP; பிரின்ஸ் பிராசஸிங் என்று துவக்கி சகலத்தையும் முடித்திட அடுத்த 7 நாட்கள் போதுமாவென்று தெரியவில்லை! May be – just may be இந்த ஒரு முறை ஏப்ரலில் தான் டெஸ்பாட்ச் இருந்திடக் கூடும்! //

    ஒன்றிரண்டு நாட்கள் தாமதம்
    பரவாயில்லை சார்
    அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம் 🙏🏼

    எங்களுக்காக எவ்வளோ இழப்புகளை தாங்கியிருக்கீங்க 🙏🏼
    இத நாங்க தாங்கிக்க மாட்டோமா என்ன 🤷🏻‍♂️
    .

    ReplyDelete
  25. // So உங்களை பீஸ்ச்சி சொல்லி நொய்யு..நொய்யென்று அவ்வப்போது நான் நச்சரிப்பதும் not without reason folks !! End of the day - you are the ones who help me take a call on what you will end up reading !! //

    புரிகிறது சார்
    .

    ReplyDelete
  26. ஈரோடு ஸ்பெஷல் 1 செம்ம ஹிட் அடிக்க போகிறது . அருமையான தலைப்பு sir. அமெரிக்கா கென்யா எல்லாம் உங்களது விருப்பம் sir. நீங்கள் எங்களுக்கு எப்போதும் சிறந்ததாக தர விரும்பி அதற்காக மிகவும் கஷ்ட படு கின்றீர் . உங்களது அடுத்த அறிவிப்புகள் வேண்டும். I'm waiting.

    ReplyDelete
  27. சார் பிபிவி தூள் கிளப்புது டீசர்....
    ்ஈரோட்டுக்காக. ஈ...ரோட்டில் காத்திருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. நானும் பரணி. நான் இரண்டாவது அறிவிப்பு காக காத்து இருக்கிறேன். Next week announcement then pre booking . Exciting days are ahead.

      Delete
  28. நண்பர்களே,

    புதியதாக ஒரு youtube சேனல் ஆரம்பித்துள்ளேன். பல விஷயங்களுடன் காமிக்ஸ் அறிமுகங்களும் செய்கிறேன்.

    இது வரை இரண்டு காமிக்ஸ் அறிமுகங்கள் செய்துள்ளேன். பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறுங்கள் pls.

    ஹர்லாக் : https://youtu.be/OwMiU84veYY

    ஜேம்ஸ் பாண்ட் : https://youtu.be/rlHOIQDvGpA

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அருமை கிருஷ். பார்த்து விட்டு விமர்சனம் செய்கிறேன். Good job

      Delete
    2. Good one. Even I was thinking about this for quite sometime but not able to do because of time constraints. Glad you have started.

      Keep doing.

      Delete
    3. @Krish Talks

      கலக்கிட்டீங்க கிருஷ்ணா! ஒரு சில வீடியோக்களைப் பார்த்தேன்! ரொம்பவே ஆச்சரியப்பட்டேன்!

      அவசியமான தகவல்களை அள்ளித் தெளித்து, ஒரு தேர்ந்த professional போல செயல்பட்டிருக்கிறீர்கள்! கேமராவை ஓடவிட்டு அதன் முன்பு நின்று சரளமாகப் பேசுவது எல்லோர்க்கும் வாய்த்திடாது ( நானெல்லாம் ரெண்டு வரிக்குமேல் பெப்பப்பே நான்!) ரொம்பப் பெருமையாக இருக்கிறது! உங்களது இந்த முயற்சி நம் காமிக்ஸுக்கு நிச்சயம் நல்லது செய்யும்!
      உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்! வாழ்த்துகள்!

      Delete
  29. மறுபடியும் ஒரு சந்தாவா? மேலும் இரண்டு சந்தா waitinga? நான் இன்னும் jumbo 2 கே சந்தா கட்டலையே.....
    போற போக்க பாத்தா ஏதாவது சொத்த வித்து தான் சந்தா கட்டணும்போல இருக்கே..... வீட்டுல தெரிஞ்சா எத்தனை பேர் அடிவாங்க போராங்களோ ......

    Main சந்தா 5000, jumbo க்கு 1000. Special க்கு 1200.... முடியல ..... சீக்கிரமே காமிக்ஸை மறக்க வேண்டியது தான்.....

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு ஸ்பெஷல் சந்தையில் அடக்கம் என நினைக்கிறேன்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. விருப்பப்பட்டவர்கள் வாங்கலாம் என்ற முறையில் உருவாக்கப்பட்ட ஈரோடு புத்தகத் திருவிழா ஸ்பெஷல் என நினைக்கிறேன்.

      கடந்த வருடத்திற்கு முந்தைய வருடத்தில் கர்னல் ஆமோஸ் புத்தகத் திருவிழா ஸ்பெஷல் ஆக வந்த ஞாபகம்.

      Delete
    4. ///சீக்கிரமே காமிக்ஸை மறக்க வேண்டியது தான்.....///

      அப்படியெல்லாம் சுளுவுல விட்டுட்டுப் போயிட முடியாதுங்க நண்பரே! நம்ம காமிக்ஸ் காதல் அப்படி!
      சற்றே அதிகப்படியான இந்தக் காதல்தான் இத்தனை வசவுகளையும் தாங்கிக்கொண்டு இத்தனை காலமும் நிலைத்திருக்க சாத்தியமாகியிருக்கிறது - ஒரு சிவகாசி மைந்தருக்கு!

      Delete
    5. ///அப்படியெல்லாம் சுளுவுல விட்டுட்டுப் போயிட முடியாதுங்க நண்பரே! நம்ம காமிக்ஸ் காதல் அப்படி!
      சற்றே அதிகப்படியான இந்தக் காதல்தான் இத்தனை வசவுகளையும் தாங்கிக்கொண்டு இத்தனை காலமும் நிலைத்திருக்க சாத்தியமாகியிருக்கிறது - ஒரு சிவகாசி மைந்தருக்கு!///

      உண்மை. .!!

      Delete
    6. ///அப்படியெல்லாம் சுளுவுல விட்டுட்டுப் போயிட முடியாதுங்க நண்பரே! நம்ம காமிக்ஸ் காதல் அப்படி!
      சற்றே அதிகப்படியான இந்தக் காதல்தான் இத்தனை வசவுகளையும் தாங்கிக்கொண்டு இத்தனை காலமும் நிலைத்திருக்க சாத்தியமாகியிருக்கிறது - ஒரு சிவகாசி மைந்தருக்கு!///

      இதுதான் உண்மை.

      Delete
    7. ///அப்படியெல்லாம் சுளுவுல விட்டுட்டுப் போயிட முடியாதுங்க நண்பரே! நம்ம காமிக்ஸ் காதல் அப்படி!
      சற்றே அதிகப்படியான இந்தக் காதல்தான் இத்தனை வசவுகளையும் தாங்கிக்கொண்டு இத்தனை காலமும் நிலைத்திருக்க சாத்தியமாகியிருக்கிறது - ஒரு சிவகாசி மைந்தருக்கு!///

      உண்மையோ உண்மை. .!!!!

      Delete
    8. ///அப்படியெல்லாம் சுளுவுல விட்டுட்டுப் போயிட முடியாதுங்க நண்பரே! நம்ம காமிக்ஸ் காதல் அப்படி!
      சற்றே அதிகப்படியான இந்தக் காதல்தான் இத்தனை வசவுகளையும் தாங்கிக்கொண்டு இத்தனை காலமும் நிலைத்திருக்க சாத்தியமாகியிருக்கிறது - ஒரு சிவகாசி மைந்தருக்கு!///

      உண்மையோ உண்மை. .!!

      Delete
    9. காமிக்சை மறப்பது உயிருள்ளவரை முடியாது

      Delete
    10. Yes how to balance... million dollar question. Sometimes I choose certain books to buy leaving the rest which I search for after a few months when I get money....and again leaving some issues of that month ....this goes on forvever

      Delete
  30. ஜானதன் கார்ட்லேண்ட்! புத்தக சைஸ் மாற்றத்தை செய்தது நல்ல முடிவு. (பல பல மண்டகப்படிகளின் உபயம் என நினைக்கிறேன்) :-)

    ReplyDelete
  31. மேலே உள்ள போஸ்டை பிறகு படிக்கிறேன். கொஞ்ச நாட்களாக என் மனதில் தோன்றியதை சொல்கிறேன்.

    1. 200 கமெண்டுகளுக்கு மேல் தான், நாங்கள் பிளாக் பக்கம் வர நேர்ந்தால், கமென்ட் செய்ய இயலவில்லை. தயவு செய்து பிளாகை வேறு வலை தளத்திற்கு கொண்டு செல்லலாமே.

    2. feedback தா, feedback தா என கேட்காமல், ஒரு ஈமெயிலோ வாட்சப் மெசெஜோ போடலாமே? எங்களை பெர்சனலாக கேட்டதாக இருக்கும். நிறைய பேர் பதிலளிப்பர்

    3. monthly newsletter அனுப்பலாமே. மெயிலிலும். வாட்சப்பிலும். அனைத்து subscriber mail and mobile number உங்களிடம் உள்ளது.

    4. ரெகுலர் சந்தாதாரருக்கு டிசம்பரில் போன் செய்யலாமே. அடுத்த வருஷம் இதே சந்தா தானே சார் எனக்கேட்டால் உடனே subscribe செய்வோம்.

    5. உங்களின் இந்த மாத புக் கொரியரில் அனுப்பி வைக்கப்பட்டது எனும் மெசேஜ். இதெற்கெல்லாம் software ரொம்ப சீப்.

    6. குறுஞ்செய்தியில் எங்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.

    7. சந்தாவில் வராத காமிக்ஸ்- சந்தாதாரர்களுக்கு வாட்சப் அனுப்பலாம். broadcast listல் புதிய ஆட்களை சேர்த்துக் கொண்டே போக வேண்டியது தான். ஐந்து நிமிட வேலை. whatsapp business account இருந்தால் தேவலை. ஆரம்பத்தில் நிறைய கேள்விகள் வரும். பின்னர் வராது.

    8. நம்ம ஈரோடு விஜயை ஒரு யூடியூப் சேனல் ஓபன் பண்ணி, மாதா மாதம் இதழ்களை பற்றி பேச வைக்கலாம்

    9. கருத்தே கேட்க வேண்டாம். உங்களுக்கு பிடித்ததை வெளியிடுங்கள். எங்களுக்கும் பிடித்திருக்கிறது. வேண்டுமானால் புத்தக விழாவில் கருத்து நேரடியாக கேட்கலாம்.

    10. எல்லோரும் பிளாக் பார்ப்பதில்லை. ஞாபகம் இருக்கட்டும்.

    11. ஒருவர் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தால், நீங்கள் "ஒகே" என ஒரு வார்த்தையாவது சொல்லலாமே. பிளாக் படித்து, மரியாதை தந்து, நேரம் ஒதுக்கி கருத்து சொல்பவருக்கு பதில் சொன்னால் இன்னும் encourage ஆவார்.

    ReplyDelete
    Replies
    1. //கருத்தே கேட்க வேண்டாம். உங்களுக்கு பிடித்ததை வெளியிடுங்கள். எங்களுக்கும் பிடித்திருக்கிறது. வேண்டுமானால் புத்தக விழாவில் கருத்து நேரடியாக கேட்கலாம்.// அருமை மிக எளிதான கருத்து.

      Delete
    2. Dr. Hariharan @

      ஆரோக்கியமான யோசனைகள் சார். .. பாராட்டுகள் .!

      இப்படி கருத்துகளை வெளியிடுவதே அனைவருக்கும் மகிழ்ஞ்சியை தரும்... நன்றி ..!

      Delete
    3. இதைத்தான் ஆசிரியரும் கேட்கிறார்.
      ஆரோக்கியமான சிந்தனைகளுக்கு 'லோடு மோர் 'ஒரு ப்ரச்சனையாகத் தெரியாது என்றே நம்புகிறேன்.

      Delete
    4. 1 இப்போதெல்லாம் 200 பின்னூட்டங்கள் கிட்டுவதே லெமூரியா கண்டம் போலாகி விட்டது சார் ! So பின்னூட்டமிட சிரமம் இருக்கக்கூடாது ! And டிஸ்கஸ் தளத்துக்கு ஒருமுறை முழுசாய் மாறிவிட்டு, நண்பர்களின் கோரிக்கைக்கு ஏற்பவே ரிவர்ஸ் அடித்தோம் !

      2 மூன்று ஆண்டுகளுக்கு முன்பாய் ,ஒரு மூன்று நாளைக்கு பிஸியாய் டிசைன் செய்து ஒரு மூவாயிரம் ரூபாய் செலவழித்து அதனை அச்சிட்டு, மொத்தத்தையும் சந்தாதாரர்களுக்கு அந்தாண்டின் இதழ்களை review செய்திடும் படிவமாய் அனுப்பியிருந்தது நினைவிருக்கலாம் ! பதில் போட ஏதுவாய் அதனோடே ஒரு விலாசமிட்ட கவர் - அதுவும் தபால்தலை ஒட்டியே இணைத்திருந்தோம் ! அனுப்பியது 550 பேருக்கு ; எங்களைத் தேடித் திரும்ப வந்தது 5 கவர்கள் கூட நஹி ! நான் யாரை நோவதோ அது போன்றதொரு சூழலில் ? இன்றைய ஓட்டத்தில் யாருக்கும் நேரமில்லை என்பது தான் சிக்கலே என்பது புரிகிறது சார் ; ஆனால் that is also precisely why இந்தப் பதிவுப் பக்கங்களில் உங்கள் எண்ணங்களை ஒற்றை வரையிலோ ; ஒற்றைப் பத்தியிலோ வெளிப்படுத்துவது சுலப alternative என்ற எண்ணத்தில் கோரிவருகிறேன் !!

      3 மாதம்தோறும் 1400 மின்னஞ்சல்கள் Mailchimp-ல் அனுப்புகிறோம் நமது இதழ்களை பற்றிய தகவல்களோடு ! அவற்றில் பட்டுவாடா ஆகியும் திறக்கப்படுவது ஐம்பதுக்கும் குறைவான மின்னஞ்சல்களே ! பாக்கி எல்லாமே Spam / Trash க்குத் தான் பயணிக்கின்றன !

      4 ஆண்டின் இறுதியிலும், ஜனவரியிலும் மட்டும் நம்மவர்கள் கிட்டத்தட்ட தினமும் 50 போன்கால்கள் செய்திருக்கின்றனர் சந்தாப் புதுப்பித்தல்களின் பொருட்டு !! இரண்டாம் தடவை போன் செய்தால் கண்சிவப்பவர்களே அநேகம் !

      5 மாதம்தோறும் புக்ஸ் டெஸ்பாட்ச்-க்கு SMS அனுப்பி வந்தோம் தான் ; பெரும்பான்மை நபர்கள் DND ரெஜிஸ்ட்ரி-ல் பதிவாகியுள்ளதால் தொடரவில்லை !

      6 ரொம்ப காலமாகவே இதனைச் செய்திட எனக்கும் ஆசை தான் சார் ; ஆனால் ஆட்பலம் போதாது அதனை செயல்படுத்திட ! நிச்சயமாய் 2020 -ல் இதனை முயற்சிப்போம் !

      7 ஒரு வாட்சப் குழுமத்தை நிர்வகிக்கும் திறன் நம்மவர்களிடம் நிச்சயம் கிடையாது ! ஒரே மாதத்தில் தீர்வுகளை விடப் பிரச்சனைகளையே அதிகமாய் கொணர்ந்திருப்பர் !

      இங்கே ஒரு சிறு விஷயத்தையும் பகிர்ந்திட விழைகிறேன் : சில தருணங்களில் போனில் பேசும் நண்பர்கள் ரொம்பவே கோப முகம் காட்டி வருகிறார்கள் front offce பெண்களிடம் ! உதாரணத்திற்கு சென்றாண்டின் சந்தாவில் ஜூலை புக் ஒன்று எனக்கு வரவில்லை என்று இந்த ஜனவரி இறுதியில் ஒரு மூத்த வாசகர் புகார் செய்திருக்கிறார் ! And அது நம்மிடம் ஸ்டாக் இல்லாத "மெல்லத் திறந்தது கதவு " ! "நீ-என்ன பண்ணுவியோ -ஏது பண்ணுவியோ எனக்கு அந்த புக் இன்னிக்கே வேணும் !" என்று தாண்டவமாடினால் அவர்கள் தான் என்ன செய்வார்கள் ? வாரம் இரு முறை என்று கடந்த ஒன்றரை மாதமாய் அவரது ரௌத்திரம் தொடர்கிறது !! அப்போதைய பணியாட்களும் தற்போது யாரும் வேளையில் இல்லை நம்மிடம் ; இந்தப் புதுப் பெண்கள் போன் அடித்தாலே அலறாத குறை தான் ! Please people : சாத்தியமிலா கோரிக்கைகளுக்கும் இத்தனை கோபம் கொண்டால் அவர்கள் தான் என்ன செய்வார்கள் ?

      8 ஈரோடு விஜய் செய்திட நீங்கள் கோரும் பணியினை நண்பர் கிருஷ்ணா ஏற்கனவே செயல்படுத்தத் துவங்கிவிட்டார் ! அட..நாமும் மாதமொரு Youtube வீடியோ வெளியீட்டுக்கு கொண்டு தானே இருக்கிறோம் !

      9 என் மீதான நம்பிக்கைக்கு நன்றிகள் ; ஆனாலும் எனக்கே அந்த நம்பிக்கை கிடையாது என்பதே பிரச்னை !

      உங்கள் குரல்கள் தொடர்ச்சியாய் ஒலித்திராவிடின் TEX ஒரு மாதாந்திர அனுபவமாய் மாறியிருக்க நிச்சயமாய் எனக்கு தைரியம் வந்திராது !

      உங்கள் அபிப்பிராயங்கள் எனக்கு ரெகுலராய்க் கிட்டியிராவிடின் "சிப்பாயின் சுவடுகளில்" தான் நாம் வெளியிட்ட இறுதி கிராபிக் நாவலாய் இருந்திருக்கும் !

      உங்கள் மாற்றம் கண்டு வரும் ரசனைகளின் வெளிப்பாடுகள் என்னை எட்டிப்பிடிக்கத் தாமதமாயிருப்பின் - ஜேசன் ப்ரைஸ் இன்னமும் ஒரு விளம்பரமாகவே தொடர்ந்திருக்கும் ; பராகுடா ; புதுயுக JAMES BOND ; நிஜங்களின் நிசப்தம் etc நமக்கு தூரத்துப் பெயர்களாய் மாத்திரமே நின்றிருக்கும் !

      Of course - இங்கு ஒலிக்கும் குரல்கள் மாத்திரமே ஒட்டுமொத்த வாசகர்களின் குரல் ஆகாது தான் ! ஆனால் ஆலையிலா ஊரில் சாத்தியப்படும் இனிப்புகளைத் தானே சார் சர்க்கரையாய்க் கொண்டாட வேண்டும் ?

      Agreed - இது மாறிவரும் உலகு ; ரசனைகளில் , தேடல்களில், நம் அனைவருக்குமே இங்கே எல்லாமே fast forward தான் ! ஆனால் இன்னமுமே பீச்சில் கடலலைகளில் கால்நனைப்பதன் ரம்யத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம் ! நேரம் கிட்டும் போது கால் நனைக்க நினைப்போர் நனைத்து விட்டுப் போகட்டுமே சார் ! அதற்கேனும் இந்தப் பதிவும், அவ்வப்போதைய எண்ணக்கோரல்களும் பயன்பட்டுக் கிடக்கட்டுமே !

      Delete
    5. தெளிவான பதில்கள். நன்றிகள் பல.

      Delete
    6. எடிட்டர் சார்!

      மேற்கண்ட உங்களது பதிலில் தெளிவும், அனுபவமும் மிளிர்கிறது! மிக அருமையான பதில்!

      Delete
    7. ஜம்போ கடைசி இரண்டு இதழ்களும் வரவில்லை நான் போனில் சொன்னவுடன் அனுப்பி வைத்தார்கள்

      Delete
    8. Dr. sir இன்னும் ஏதேனும் பாக்கியிருக்கிறதா?

      Delete
    9. நல்ல கேள்விகள்...


      தெளிவான பதில்கள்...


      பழைய இதழ்களில் " வாசகர் ஹாட் லைன் " கேள்வி பதில் படித்த திருப்தி...:-)

      Delete
    10. //இன்னமுமே பீச்சில் கடலலைகளில் கால்நனைப்பதன் ரம்யத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம் ! நேரம் கிட்டும் போது கால் நனைக்க நினைப்போர் நனைத்து விட்டுப் போகட்டுமே சார் ! அதற்கேனும் இந்தப் பதிவும், அவ்வப்போதைய எண்ணக்கோரல்களும் பயன்பட்டுக் கிடக்கட்டுமே !//

      இந்த வரிகள் எனக்கு மிகப் பிடிச்சிருக்கு. அருமை்சார்...

      மற்ற பதில்களும் தெளிவான விளக்கத்தை தந்துள்ளன.

      Delete
  32. புத்தகங்கள் தயாரிப்பில் சொதப்பிவிடக்கூடாது என நீங்கள் காட்டும் அக்கறைக்கு நன்றிகள் சார் அதே நேரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்க்கு வருந்துகிறேன் சார்

    ReplyDelete
  33. ஹலோ ESS SIR,
    தேவையற்ற சில அநாவசியமான செலவுகளை தவிர்த்தால் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்குவது சாத்தியமே. பணத்தேவை ஏற்பட்டால் படித்த புத்தகங்களை தள்ளுபடி விலையில் விற்றுவிடலாம். கவலையை வேண்டாம் சகோ.

    ReplyDelete
    Replies
    1. // தேவையற்ற சில அநாவசியமான செலவுகளை தவிர்த்தால் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்குவது சாத்தியமே //

      +1999999

      Delete
    2. Comics அவசியமான ஒன்றா? நண்பரே, ஆசிரியர் வெளியிடும் எல்லாவற்றையும் இன்றளவும் வாங்கி வருகிறேன். ஆனால் அது எல்லை மீறுவதையும் கவனிக்காமல் இல்லை... தின்னத்தின்ன தேனும் திகட்டும்....

      ஒவ்வொரு ரசிகரும் மாதம் 700 ருபாய் காமிக்ஸ்காக செலவு செய்ய முடியுமா? இல்லை விருப்பப்பட்ட புத்தகங்களை மட்டும் வாங்கிக்கலாம் என ஒதுங்கிவிட முடியுமா? எல்லோரும் எப்படியாவது கஷ்டப்பட்டாவது வாங்கத்தான் போகிறோம்...
      தம்முடைய கஷ்டங்களை எடிட்டர் நம்முடன் பகிர்வது போல நம்முடைய கஷ்டங்களையும் எடிட்டர் ஒரு வியாபாரியாக இல்லாமல் சக வாசகராக பார்க்கவேண்டும்.....
      இதை இங்கே பதிவிடுவது யாரையும் புண்படுத்த அல்ல, என்னை போன்ற வாசகர்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்றே....

      Delete
    3. ESS நண்பரே :

      நடப்பாண்டு சந்தா நிலவரம் தெரியுமா நண்பரே? ரெகுலர் சந்தாவை விட ஜம்போ 2 சந்தா அதிகம் என்று எடிட்டர் கூறியிருந்தார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் காமிக்ஸ் காதலர்கள் பலர் அதிக புத்தகங்களை விட - less numbers, நல்ல packaging, வித்யாசமான கதைகளை விரும்புகிறார்கள்.

      நமக்கிருக்கும் பொருளாதார வசதிக்கேற்ப வேண்டியதை வாங்கிக்கொள்ளலாம் - மற்றவற்றை நிராகரித்து விடலாம் - அவ்வளவுதானே - keep it simple !

      Delete
    4. // நமக்கிருக்கும் பொருளாதார வசதிக்கேற்ப வேண்டியதை வாங்கிக்கொள்ளலாம் - மற்றவற்றை நிராகரித்து விடலாம் - அவ்வளவுதானே - keep it simple ! //

      +1 well said

      Delete
    5. @ ESS : நிறைய முறை அலசிவிட்ட தலைப்பு தான் சார் ; so மறுக்கா-மறுக்கா அதனுள் புகுவது போர் அடிக்கக்கூடும் ! But still..

      உங்களுக்கு மாதம் ரூ.700 செலவு வைக்க தயாராவதெனில் இங்கே அதே தொகை x 1000 மடங்குக்கு நான் தயாராகிக்கொள்ள வேண்டும் ! நம்பினாலும், நம்பாது போனாலும் இது தான் நிதரிசனம் ! So எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே செல்வது வியாபாரி விஜயனுக்கு எந்தவிதத்திலும் சுலபமல்ல ; ஆசையுமல்ல !இருக்கும் வாசகச் சிறுவட்டத்தின் எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் உயிரோட்டத்துடன் தக்க வைக்கச் செய்யும் கூத்துக்களே இவை சகலமும் !

      And "வெளியான அப்போதே ; அந்த மாசமே வாங்காட்டி கிடைக்காது" என்ற நிலை இதுவரையிலும் "இரத்தப் படலம்" வண்ணத்தொகுப்பினைத் தாண்டி வேறெந்த இதழுக்கு எழுந்துள்ளது ? 4 வருஷம் கழித்தும் "மின்னும் மரணம்" இதழினை அதே விலைக்கு வாங்க முடிந்ததுஅறிந்த சமாச்சாரம் தானே ? இன்னமும் 2013 -ன் இதழ்களையும் குட்டியைத் தூக்கித் திரியும் குரங்கைப் போல சுமந்து கொண்டு தானே இருக்கிறோம் ?

      ஐம்பதாவது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் க்ளெநாட் எனும் பிரான்க்கோ-பெல்ஜிய பதிப்பகத்திடம் உள்ள டைட்டில்கள் : 8000 + ; நாற்பத்தியேழாம் ஆண்டில் பயணிக்கும் நமது கேட்லாக்கில் அதனில் பத்தில் ஒரு பங்கைத் தொடவே தடுமாறித் தானே நிற்கிறோம் ? Of course - அவர்களது வசதி-வாய்ப்புகளுக்கும், நமது பொருளாதாரத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது தான் ; இருப்பினும் 8000+ என்பது எத்தனை அசாத்திய நம்பர் ?!!

      வாசிப்பென்பது என்னோடோ-உங்களோடோ காணாது போய்விடப் போவதில்லை சார் ; moreso timeless stuff like comics !! என்றைக்கும், எப்போதும் வாசிக்கக்கூடியவை என்ற விதத்தில் எனக்குப் பணியாற்றச் சத்துள்ள வரைக்கும் இயன்றதைச் செய்துவிட்டுப் போகிறேனே - இன்றில்லாவிடினும், நாளையோ, அதன் மறுநாளோ உங்களுக்குச் சிரமம் இல்லாத தருணங்களில் அவற்றை வாங்கிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு !

      Delete
    6. ///சத்துள்ள வரைக்கும் இயன்றதைச் செய்துவிட்டுப் போகிறேனே - இன்றில்லாவிடினும், நாளையோ, அதன் மறுநாளோ உங்களுக்குச் சிரமம் இல்லாத தருணங்களில் அவற்றை வாங்கிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு !///

      👍👍👍👏👏👏👌👌👌

      Delete
    7. ///சத்துள்ள வரைக்கும் இயன்றதைச் செய்துவிட்டுப் போகிறேனே - இன்றில்லாவிடினும், நாளையோ, அதன் மறுநாளோ உங்களுக்குச் சிரமம் இல்லாத தருணங்களில் அவற்றை வாங்கிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு !///

      👍👍👍👏👏👏👌👌👌

      Delete
    8. // ன்றைக்கும், எப்போதும் வாசிக்கக்கூடியவை என்ற விதத்தில் எனக்குப் பணியாற்றச் சத்துள்ள வரைக்கும் இயன்றதைச் செய்துவிட்டுப் போகிறேனே - இன்றில்லாவிடினும், நாளையோ, அதன் மறுநாளோ உங்களுக்குச் சிரமம் இல்லாத தருணங்களில் அவற்றை வாங்கிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு ! //

      Well Said!

      Delete
    9. மிக மிக அருமையாக சொன்னீர்கள்..பாராட்டுகள் ஆசிரியரே....வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் ஏசும். சுல மனித மனங்கள் அப்படி தான்...

      Delete
    10. ///சத்துள்ள வரைக்கும் இயன்றதைச் செய்துவிட்டுப் போகிறேனே - இன்றில்லாவிடினும், நாளையோ, அதன் மறுநாளோ உங்களுக்குச் சிரமம் இல்லாத தருணங்களில் அவற்றை வாங்கிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு !///

      Delete
    11. எங்கள் ஆதரவு என்றும் உண்டு சார்...

      Delete
    12. நிதர்சனமான பதில்கள். வசதிப்படும் போது வாங்கிக் கொள்ளலாம். அச்சடிக்கப்பட்ட புத்தகத்தின் விலையும் வருட வருடம் பெட்ரோல் போல் ஏறப்போவதில்லை. இன்றே படிக்காவிடில் இழப்பதற்கு இது பெரிய அத்யாவசியப் பொருளும் இல்லை. பெரும்பான்மை வாசகர்களுக்கு இது தெரியும். எங்கள் ஆதரவு என்றும் தொடரும்.

      Delete
  34. //அதனில் அவர்கள் வசமிருந்த கௌபாய்த் தொடர்களின் பட்டியலிருந்தது ! அவற்றின் பெரும்பான்மை one shots ; தொடரென்று பயணிக்கும் கதைகள் அவ்வளவாய்க் கண்ணில் படவேயில்லை ! //சார் ௐன் சாட் கதைகளில் கொரியர்காரர் தன் தண்டனை காகிதத்த தானே கொண்டு செல்வாரே அதப் போல மனமுருக்கும் கதைகள் இருந்தா தேடலாமே

    ReplyDelete
    Replies
    1. நம்மவர்களுக்கு ரொம்பவும் உருகுவதெல்லாம் ஒத்து வராதே சார் ; அளவாய் ஒரு ஓரமாய் உருகல்களை வைத்துக் கொள்வோமே !

      Delete
  35. லார்கோவிற்க்கு இப்போதைய மாற்று ஜேம்ஸ் பான்ட் தான்.. அட்டகாசமான கதை களங்கள், மிரட்டும் சித்திரங்கள், தெறிக்கும் ஆக்சன், ஆனா ஜேம்சுக்கு உன்டான அந்த ரொமான்ஸ் மட்டும் இன்னும் பிக்கப் ஆகலை..

    ReplyDelete
    Replies
    1. அந்த ரொமான்ஸ் இல்லாததால் தான் கதை தடதடவென ஓடுகிறது. எனவே இது போன்ற ஜேம்ஸ் பாண்ட் கதைகள் தொடர்ந்து வரட்டும்.

      Delete
    2. என்னமோ தெரியல ,அந்த கதாசிரியருக்கும் ஓவியருக்கும் பொண்ணுங்க மேலே கடுப்பு இருக்கும் போல.

      மொத்தம் மூணே பொண்ணுங்கதான்..!

      அதுல ஹீரோயின் என்று நம்பப்படுபவர், டோரா ஸ்டைல் முடியுடன் பச்சப் புள்ளையாட்டமே இருக்காரு.

      இன்னொருத்தர் ,நட்புக்காக ரெண்டு சீனில் தலைகாட்டும் கம்யுட்டர் வல்லுநர்.அவரு ஒருபக்கத் தலையில், முன்பகுதியை மட்டும் ட்ரிம் செய்து,கொஞ்ம் டெரராகவே வருகிறார்.அதிலும் அவர் சிரிக்கும் இடம் 'ப்ப்பா பேய் மாரி இருக்கு 'எபெக்ட்.

      மூணாவதா வர்ற MI5 லேடி.எனக்கென்னமோ அவுங்க 'லவ் பார் 'ரோட ஆயுட்கால உறுப்பினரோனு தோணுது.

      Delete
    3. இவுங்களுக்கு லார் கோ கூLவே வர்ற பென்னி விங்கிள் அக்காவே (ஆன்ட்டி?) தேவைலை போல.

      Delete
    4. //மூணாவதா வர்ற MI5 லேடி.எனக்கென்னமோ அவுங்க 'லவ் பார் 'ரோட ஆயுட்கால உறுப்பினரோனு தோணுது.//

      ஹி...ஹி..ஹி..!!

      Delete
  36. #இன்றுவரைக்கும் சாத்துவோரும் உண்டெனும் போது இருபதோ-முப்பதோ ரூபாய்களை ஈட்டிடும் பொருட்டு நான் கார்ட்லேண்டை கொலை செய்தவனாகிடக்கூடும் என்பது உறைத்தது!#
    இதே முடிவினை ரிங்கோவிலும் எதிர்பார்க்கிறேன் சார்!
    அப்புறம் இந்த காம்பேக்ட் சைஸ் எல்லாம் கார்ட்டூன் கதைகளுக்கு வேண்டுமானால் பொருந்தும் என்பது எனது கருத்து!

    ReplyDelete
  37. புதியது

    காலனின் கானகம் - அட்டகாசமான சித்திரங்கள், தெளிவான நேர்கோட்டு கதை, எக்கச்சக்க டமால் டுமீல், மொத்தத்தில் கலக்கல்

    தி ஆக்ஷன் ஸ்பெஷல்

    1. ஒற்றை கண் ஜாக் - ஜாக்கிற்கு எப்படி ஒற்றை கண் ஆனது என்று ஆரம்பிக்கும் கதை, சின்ன சின்ன கதைகள், எதுவும் சோடை போகவில்லை
    2 இயந்திரன் - மின்னல் மனிதன் என்று வந்த கதை என்று நினைக்கிறேன், முதல் இரண்டு கதைகள் ஏற்கனவே வந்தவை, மற்றவை புதியது
    3. 13து தளம் - மிகவும் ஏமாற்றம் அளித்தது, அத்தனையும் புது கதைகள் என்று எண்ணி இருந்தேன், 2 கதைகள் தவிர அனைத்தும் ஏற்கனவே வந்தவை.
    4. ரப்பர் மண்டையன் ரிக்கி - சின்ன வயதில் நன்றாக ரசித்தேன், இப்பொழுது சுத்தமாக பிடிக்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. //ரப்பர் மண்டையன் ரிக்கி - சின்ன வயதில் நன்றாக ரசித்தேன், இப்பொழுது சுத்தமாக பிடிக்கவில்லை//

      காலத்தின் ஓட்டம் !!

      Delete
  38. இன்று காலையில் தான் "முடிவில்லா மூடுபனி" படித்து முடித்தேன். climax பக்கங்களில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளது. கதையை நன்கு அலசிய நண்பர்கள் mobile நம்பரை இங்கே பகிர்ந்தால் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உங்க சந்தேகங்களை இங்கேயே கேக்கலாமே சார்.

      Delete
  39. கார்ட்லேன்ட் ஒரிஜினல் சைஸில் வருவது மிக்க மகிழ்ச்சி. இனி வரும் காலங்களில் இது போன்ற சைஸ் குறைப்பு முயற்சிகள் வேண்டாம் சார். இவ்வருட சந்தாவில் இடம் பெற்றுள்ள மீதி இரண்டு compact size கதைகளையும் ரெகுலர் size க்கு மாற்றிவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மாற்றியாச்சு சார் !

      Delete
  40. முடிவில்லா மூடுபனி:

    1. தனது மனைவியை கொன்றவனை எப்படி கண்டுபிடித்தார்?

    2. போலீஸார் எப்படி உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தார்கள் அதனை ஏன் நமது நாயகரிடன் சொல்லாமல் விட்டார்கள்? அவரை ஏன் அவசர அவசரமாக வேலையை விட்டு நீக்க காரணம் என்ன?

    3. கடிதம் அவர் வீட்டில் இருபது வருடம் இருப்பின், எவ்வாறு அது தெரியாமல் போனது. Climax' ல் மட்டும் அகப்பட்டது எவ்விதம்.

    பரணி சாரோடு சேர்த்து எனது கேள்விகளும் இதுவே. விடை தருவோர் யாரோ.

    ReplyDelete
    Replies
    1. ****'முடிவிலா மூடுபனி' கதையை இதுவரை படிக்காதவர்கள் இந்தப் பின்னூட்டத்தை மேற்கொண்டு தொடரவேண்டாமே ப்ளீஸ் ****

      ////1. தனது மனைவியை கொன்றவனை எப்படி கண்டுபிடித்தார்? ///

      அந்தப் போலீஸ்கார் கடைசிவரை எதையுமே கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை! ஒரு போலீஸுக்கே உரிய சந்தேகப்படும் புத்தியோ, புலனாய்வு புத்தியோ அவரிடம் இல்லை! முரட்டுத்தனமான சில்லறைத் திருடனை தன் மனைவியைக் கொன்றவனாகவும், சாந்தமான முகத்தையுடையவனை (சைக்கோ கொலைகாரன்) நல்லவனென்றும் நம்புகிறார் அந்த வெள்ளந்திப் போலீஸ்!
      தன் மனைவியைக் கொன்றவனாக குற்றம் சாட்டப்பட்டவனை அவன் முரட்டுத்தனமானவன் என்ற காரணத்துக்காகவே - ஆத்திரம் மேலோங்க - கொன்று பழிதீர்க்கிறார் - அவ்வளவே!

      ////2. போலீஸார் எப்படி உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தார்கள் அதனை ஏன் நமது நாயகரிடன் சொல்லாமல் விட்டார்கள்? அவரை ஏன் அவசர அவசரமாக வேலையை விட்டு நீக்க காரணம் என்ன?///

      உண்மையான குற்றவாளியை போலீஸார் எப்படிக் கண்டுபிடித்தார் என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை! அப்படி விளக்கிச் சொல்லியிருந்தால் இந்தக் கதைக்கு ஒரு அர்த்தமில்லாமல் பாதியிலேயே முடிந்திருக்கும்!
      ஏற்கடவே ஊர்ஜிதம் செய்யப்பட்டுவிட்ட ஒரு கேஸை, தன் தவறான கணிப்பின் காரணமாகத் தேவையின்றி திசைதிருப்பியதால் போலீஸ் உயர்அதிகாரியின் கடுப்புகளுக்கு ஆளாகித் தன் வேலையை இழக்கிறார் நம்ம வெள்ளந்தி போலீஸ்!

      ///3. கடிதம் அவர் வீட்டில் இருபது வருடம் இருப்பின், எவ்வாறு அது தெரியாமல் போனது. Climax' ல் மட்டும் அகப்பட்டது எவ்விதம்.///

      மனைவியை இழந்து, தன் போலீஸ் வேலையை இழந்து - தன் அபிமானத்துக்குரிய ஒரு இளம் பெண்ணின் கொலைக்கான காரணத்தைக் ஊர்முழுக்க அலைந்து திரிந்து 18 வருடங்களாக தேடியலைந்த ஒரு ஆசாமிக்கு தன் வீட்டு அலமாரியிலேயே அவனது தேடலுக்கான விடை ஒளிந்திருந்ததை இத்தனை வருடங்களாகக் கண்டுபிடிக்க முடியாமல் போன - விதி எழுதிய சம்பவம் தானே - இந்தக் கதை சொல்லவரும் சேதியே?!

      நண்பர் ஒருவர் (GP?) ஏற்கனவே இங்கு மிக அழகாக இந்தக் கதையின் சாராம்சத்தை ஒற்றை வரியில் சொல்லியிருந்தார்! 'சரியாக நடந்து முடிந்த ஒன்றை தவறானதாக எண்ணி வாழ்க்கையை ஓட்டிய ஒரு போலீஸ்காரனின் கதை'

      எவ்வளவு அருமையா புரிதல்!!

      பி.கு : மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!

      Delete
    2. ///சரியாக நடந்து முடிந்த ஒன்றை தவறானதாக எண்ணி வாழ்க்கையை ஓட்டிய ஒரு போலீஸ்காரனின் கதை'///

      இது நண்பர் கணேஷ்குமாரின் வரிகள்.!

      Delete
    3. ///இது நண்பர் கணேஷ்குமாரின் வரிகள்.!///

      தகவலுக்கு நன்றி GP! _/\_

      Delete
    4. //1. தனது மனைவியை கொன்றவனை எப்படி கண்டுபிடித்தார்? ///

      பக்கம் 23-ல் ஜெப்ரைனும் பிளாண்டைனும் உரையாடும்போது பிளாண்டைன் கழுத்தில் தொங்கும் டாலர் பக்கம் 74-ல் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதாக ஜோடனை செய்யப்படும் திருடனின் கழுத்தில் ஊசலாடுகிறது ..
      அந்த டாலர் பிளாண்டைனை கொலை செய்தபின் அந்நபர் திருடியது என சிலோஸ்( கதை சொல்லும் நபர் ) கருதி அவனை சிறையில் இருக்கும்போது கொலை செய்கிறான் ....
      இதில் இருந்து வரும் யூகங்கள்
      1.பிளாண்டைனை கொலை செய்தது கொலையுண்ட அந்த நபராக இல்லாமல் இருக்கலாம் ...ஏனெனில் கொலை செய்து திருடிய நகையை பட்டவர்த்தனமாக நெஞ்சில் ஆட்டி கொண்டு அலைவது –அதுவும் அதே ஊரில் – முட்டாள்தனம் .
      கொலையுண்ட நபர் மூர்க்கனாய் இருக்கலாம் ...அந்த அளவு மூடனாய் இருக்க வாய்ப்பில்லை ..
      கொலையுண்ட பிளாண்டைனிடம் இருந்து திருடிய மூர்க்கர் கும்பலிடம் இருந்து சிலோஸ் மூலம் கொலையுண்ட நபர் மறுபடியும் திருடி இருக்கலாம் ..
      அல்லது அக்கும்பல் சாமார்த்தியமாகவோ அல்லது சிலுவை என்பதால் சர்ச் காணிக்கை பெட்டியில் அந்த டாலரை போட்டு இருக்கலாம் ..
      காணிக்கை பெட்டியில் இருந்து சிலோஸ் மூலம் கொலையுண்ட நபர் திருடும்போது அதன் மூலம் பற்றி அறியாது கழுத்தில் அணிந்து இருக்க கூடும் ..
      பக்கம் 111 –ல் இச்சிலுவை டாலர் எரிக்கப்படுகிறது ...
      அடுத்த கேள்விக்கான பதில் தொடரும் ..

      Delete
    5. ///3. கடிதம் அவர் வீட்டில் இருபது வருடம் இருப்பின், எவ்வாறு அது தெரியாமல் போனது. Climax' ல் மட்டும் அகப்பட்டது எவ்விதம்.///
      காரணம் கதையில் சொல்லப்பட்டு இருக்கிறது ....எனினும் முக்கியம் அதுவல்ல ...
      சிலோஸ் –க்கு மூத்த அதிகாரிகள் பலர் இருக்க அவருக்கு எப்படி கடிதம் வந்திருக்க கூடும் என்பதே ....
      அப்படி வந்து இருந்தாலும் அலுவலக முகவரிக்கே வந்து இருக்க கூடும் .
      லாஜிக் மீறல் ?????

      Delete
    6. ///2. போலீஸார் எப்படி உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தார்கள் அதனை ஏன் நமது நாயகரிடன் சொல்லாமல் விட்டார்கள்? அவரை ஏன் அவசர அவசரமாக வேலையை விட்டு நீக்க காரணம் என்ன?///
      ஈவி சரியாக சொல்லி இருக்கிறார் ..
      இதை புரிந்து கொள்ள சிலோசின் பார்வையிலேயே இக்கதை நகர்த்தப படுகிறது என்பதை நாம் உணர வேண்டும் ....
      சிலோஸ் காவல் துறைக்கு உரித்தான உள்ளுணர்வோ , திறமையோ ,ஒரு விஷயத்தை பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து முடிவெடுக்கும் இயல்போ இல்லாத ஒரு நபர் ...
      உணர்வு பூர்வமாக முடிவெடுப்பவர் ...
      ப்ரோஸ்ஸார்ட் மேல் ஜெப்ரைன் கொலை விவகாரத்தில் –biased – ஆக ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டவர் ..
      எல்லாவற்றுக்கும் மேலாக
      காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நபரை –அவன் ஒருவேளை திருடனாக மட்டுமே இருந்து கொலையாளியாக இல்லாமல் இருந்து இருந்திருக்கலாம் – கொலை செய்தது

      கொலை செய்த தவறை ஒப்புக்கொண்டு அதற்கான தண்டனையை அனுபவிக்க திறம் இல்லாத கோழை ...

      Delete
    7. கழுத்தில் தொங்கும் டாலர் -
      கதையை படிக்கும் போது இதனை கவனித்தேன் ஆனால் அதனை நீங்கள் சொல்வது போல் எனது டீயூப் லைட் மூளை லிங் செய்யவில்லை :-) நன்றி.

      Delete
    8. KiD ஆர்டின் KannaN3 March 2019 at 10:54:00 GMT+5:30
      முடிவில்லா மூடுபனி :

      நாம் கடந்துவந்திட்ட வாழ்க்கையில் .. ஒரு தவறான காரியத்திற்கு துணை போய்விட்டோமே .. அதைத் தடுக்கமுடியாமால் போய்விட்டதே என்ற ஆறாத மனத்துயரும் ...

      அதே போல ஒரு சரியான காரியத்தை.. சரியான பழிவாங்கலை .. சரியான நேரத்தில் செய்துவிட்டோமே என்ற ஆத்ம திருப்தியும்...

      ஒருங்கே கொண்ட மனநிலையுடன் நீண்ட காலம் வாழ்ந்தபின்னர் ..ஒரு நாள் ....

      நாம் சரியாக செய்துவிட்டதாக நினைத்து ஆத்ம திருப்தியடைந்த காரியம் தவறாக நடந்துவிட்ட ஒன்று என்றும் ...

      நாம் தவறுக்கு துணை போய்விட்டோமே ..நம்மால் தடுக்கமுடியாமல் போய்விட்டதே என்று இத்தனை நாட்களும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த காரியம் மிகச்சரியாக நடந்துவிட்ட ஒன்று என்றும் பதினெட்டு வருடங்கள் கழித்து அறிய நேர்ந்தால் எப்படியிருக்கும் ...!??!

      (க்கும்....இதுக்கு நாங்க அந்த கிநாவையே படிச்சித் தெரிஞ்சிக்கிறோம்னு நீங்க சொல்றது கேக்குது பாஸு)

      HB பென்சிலை மட்டுமே உபயோகப்படுத்தி வரைந்திருப்பார்களோ என்று நினைக்கத்தூண்டும் வண்ணம் அமைந்திருக்கும் சித்திரங்கள் ..வசீகரிக்கின்றன.!
      கோட்டோவியங்களில் அந்த இளம்பெண்ணை பார்த்த பிறகு , அடப்பாவிகளா.. இந்தப்பெண்ணை ஏண்டா கொன்னீங்கன்னு நமக்கே ஆத்திரம் வரும்..!
      கதைப்போக்கில் ஒருவரை குற்றவாளியாக நினைக்கத் தோன்றினாலும் ..என்னுடைய சந்தேகம் அந்த ஒருவர் மேல் விழவேயில்லை ..! க்ளைமாக்ஸ் படித்ததும் ..ஹிஹி..எனக்கு நானே சபாஷ் சொல்லிக்கொண்டேன்.!

      முடிவிலா மூடுபனி : விலகியதுதான் விபரீதம்

      ரேட்டிங் 10/10


      ///////


      ஏப்ரல் 3ஆம் தேதி காலை 10:54க்கே யாரோ இதை சொல்லியிருக்காங்க போல..!!!:-)

      Delete
    9. கதையின் இன்னொரு முக்கிய சாரம்சம் என்னவெனில்....

      இதுகாறும் மனஅழுத்தத்தோடும் வருத்தத்தோடும் வாழ்ந்துவந்த அந்த போலீஸ்காரருக்கு, உண்மை தெரிந்தபின்னரும் நிம்மதி கிட்டாது.. மீண்டும் முன்னைவிட அதிக மனவேதனையுடனே மிச்ச வாழ்நாள்களை கழித்தாக வேண்டிய நிலை ..! ஆனால் அதற்கான காரணங்கள்தான் நேர்எதிர்...சிம்பிள்..!

      Delete
    10. இளம் வயது கைக்கிளையில் (ஒரு தலை காமம் ) –இரு பாலினத்தவரும் ஒரே அகவையில் இருக்கும்பட்சம்- பெண் கிட்டாவிடில் அவளை கொலை செய்யும் எண்ணம் ராட்சஸ எண்ணம் சிலபேருக்கு வரலாம் ..
      ஆனால் பெருந்திணையில் ( இளைய வயது பெண்ணை முதிய வயது ஆண் காதலிப்பது & vice versa) இது பொருந்தாது....
      ப்ரோஸ்ஸார்ட் ஜெப்ரைன் மேல் கொள்வது வெறும் மோகமல்ல ..அவளை மனைவியாக அடைய விரும்புகிறார் ..
      தனது தனிமை குறித்து தன்னிரக்கமும் இளம் வயது பெண்ணை மணமுடிக்க விரும்புவது குறித்து குற்ற உணர்ச்சியும் அவர் மனதை வியாபித்து இருக்க கூடும் ...
      இத்தகைய நபர்கள் கொலை செய்ய முயல்வது நடைமுறையில் ஒவ்வாத காரியம் ..ஜெப்ரைன் மறுத்து இருப்பின் கூட அதை அவர் மனம் ஒப்புக்கொண்டிருக்கும் ...முதிய வயதில் -விரும்பாத இளம்பெண்ணை- மணம் முடிப்பது என்பது அடுத்தவர் படிக்க நாம் புத்தகம் வாங்குவது போலானது என்பதை அவர் உள்ளம் ஏற்கனவே உணர்ந்திருக்க கூடும்
      சிலோசின் பார்வையிலேயே கூட ப்ரோஸ்ஸார்ட் மேல் நமக்கு சந்தேகம் எழும்வண்ணம் அவரது பாத்திர படைப்பு அமையவில்லை ..
      ஒருவகையில் இது கதாசிரியரின் தோல்வி எனவே சொல்லவேண்டும்

      Delete
    11. @ செனா அனா

      பின்னிப் பெடலெடுத்துட்டீங்க போங்க! நீர் புலவர்!

      ///முதிய வயதில் -விரும்பாத இளம்பெண்ணை- மணம் முடிப்பது என்பது அடுத்தவர் படிக்க நாம் புத்தகம் வாங்குவது போலானது ///

      ஹா ஹா ஹா!! என்னாவொரு உவமானம்! :)))

      Delete
    12. பின்னிப் பெடலெடுத்துட்டீங்க போங்க! நீர் புலவர்!

      ///முதிய வயதில் -விரும்பாத இளம்பெண்ணை- மணம் முடிப்பது என்பது அடுத்தவர் படிக்க நாம் புத்தகம் வாங்குவது போலானது ///

      ஹா ஹா ஹா!! என்னாவொரு உவமானம்! :)))


      தருமி புலவர்னு சொல்லுங்க...இந்த உவமானம் மண்டபத்துல ஏற்கனவே யாரோ சொன்னது...:-)

      Delete
    13. அந்த சிறுநகரச் சூழலிலும் இன்னும் கொஞ்ச கதாப்பாத்திரங்களை உலவ விட்டு, ஏற்கனவே இருந்தோருக்கு இன்னும் சற்றே முகாந்திரங்களை உருவாக்கி கதைக்கு இன்னுமே கொஞ்சம் flavour சேர்த்திருக்கலாம் என்பது எனது எண்ணமும் ! ஆனால் கதாசிரியர் இங்கே focus செய்ய நினைத்தது 2 தனிமைகளின் வெறுமைகளையும், அவை கொணரும் தடுமாற்றங்களையும் என்பதால் ஒரு whodunit ரகமாய் இந்தக் கதை மாறிப் போவதில் அவர் நாட்டம் காட்டவில்லையே - என்னமோ !

      Delete
    14. //ஏப்ரல் 3ஆம் தேதி காலை 10:54க்கே யாரோ இதை சொல்லியிருக்காங்க போல..!!!:-)//

      அட..கல்வெட்டில் நேரத்தையும் செதுக்கிச் சென்றிருப்பார் போலிருக்கிறதே அந்த விமர்சகர் !!

      Delete
    15. ///கதாசிரியர் இங்கே focus செய்ய நினைத்தது 2 தனிமைகளின் வெறுமைகளையும், அவை கொணரும் தடுமாற்றங்களையும் என்பதால் ///

      என்னுடைய சிந்தனையும் இதுதான் சார்.

      'இளமையில் வறுமை கொடிது 'என்பது பழமொழி.

      'முதுமையில் தனிமை மிகவும் கொடிது' இது புதுமொழி.?

      Delete
    16. ///இளமையில் வறுமை கொடிது 'என்பது பழமொழி.

      'முதுமையில் தனிமை மிகவும் கொடிது' இது புதுமொழி.?///

      அதனாலதான் முதுமையில் 'கூட்டமாக' இருக்க பலத்த முயற்சியெடுத்து வருகிறீர்களா GP? :P

      Delete
    17. ///அதனாலதான் முதுமையில் 'கூட்டமாக' இருக்க பலத்த முயற்சியெடுத்து வருகிறீர்களா ///

      பப்ளிக்..!
      பப்ளிக்..

      Delete
  41. அடிக்கப்பட்ட ரெண்டும் சைஸ் புக்கும் வெளியிடுங்கள் புட்சத வாங்கிக்கிறோம்.....இல்லன்னா வேணாம் .....

    Waste பண்ண வேண்டாம்.....

    ReplyDelete
    Replies
    1. 16 பக்கங்களோடு மங்களம் கண்டது compact சைஸ் !!

      Delete
  42. பதிவோட தலைப்பு... ( தப்பு.. தப்பு...) ஒரு வேளை எலக்சன் டைம் என்பதால் ஒரு ரைமிங் ஆக இருக்குமோ?

    ReplyDelete
  43. அதிரடி ஆக்‌ஷன் கதையை வெளியிடுங்கள் ஐயா.நாவல் கதை எல்லாம் கிராபிக் நாவலில் வெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கிராபிக் நாவல்கள் சந்தா E தடத்தில் தானே சார் வருகின்றன ?

      Delete
  44. **** தாரைத் தலீவரிடமிருந்து ஒரு மனம் திறந்த அறிக்கை ******

    இணைய விடுமுறையின் காரணமாக செயலரின் மூலம் ஒரு தகவல் தொடர்பு :


    நான்கு நாட்களுக்கு முன் ஹோலி பண்டிகை .கம்பெனி விடுமுறை ஆனால் அலுவலகத்தில் இருக்க வேண்டிய கடமை.அதே சமயம் அன்று எந்த பணிகளும் இல்லை என்பதோடு அன்று முழுவதும் ஆராவாரமில்லா ,அமைதியான சூழல் வாய்ப்பது என்பது வருடம் தோறும் நடைபெறும் நிகழ்வு என்பதால் முதல்நாள் ஒரு யோசனை.வழக்கம் போல டெக்ஸ் கதைகள் அல்லது மாத ஆரம்பம் எனில் புது இதழ்களை படிப்பது வழக்கம்...இந்த முறை அனைத்து இதழ்களும் படித்து விட்டது தான் .இந்த முறை ஒரு பலத்த எண்ணம் ...நமது நிறுவன வெளியீடுகளில் எந்த இதழையும் படிக்காமல் விட்டதில்லை...படித்து முடித்து சிறிது கதை பிடிக்காமல் போன அனுபவங்கள் சிலமுறை உண்டே தவிர பாதி பக்கங்களில் படிக்காமலே தலைதெறிக்க ஓடி அப்படியே பத்திரபடுத்திய ஒரே இதழ் நிசப்தகளின் நிஜம் என்பது மறுக்க முடியாத உண்மை.என்னை போல சிலர் இருப்பினும் பாராட்டிய பலர் மிக மிக ரசித்து சிலாகித்ததை அறிந்து உள்ளதே ..எனவே இந்த முறை இந்த எந்த குறுக்கீடும் இல்லாத அமைதியான முழுநாளில் கதை பிடித்திருக்கோ இல்லையோ படிக்காத இதழ் என்று ஒன்று வைத்திருக்க கூடாது என முடிவெடுத்தேன். எனவே இந்த முறை நி நியை நானா நீயா என பார்த்து விடலாம் என அன்று அந்த இதழை தேர்ந்தெடுத்தேன்.ஏற்கனவே வந்த புதிதில் கஷ்டப்பட்டு ,கடின ப்பட்டு நூறு பக்கங்கள் வரை சென்று இருந்தாலும் மீண்டும் இப்பொழுது ஆரம்பத்தில் இருந்தே தொடர்வோம் என முடிவுசெய்து கொண்டு நிநியில் புகுந்தேன்.


    இந்த முறை காலை பத்து மணி அளவில் தொடர்ந்த அந்த கிராமத்து உலகில் ,ப்ரோடெக் தனது பணிகளை ( அறிக்கைகளை !?) முடித்து இறுதியில் அந்த கிராமத்தில் இருந்து விலகி போகும் முடிவு வரை எந்த ஓசையின் குறுக்கீடும் இல்லாமல் படித்து முடித்த பொழுது நேரம் மதியம் ஒன்று முப்பது என்பதை தெரிவித்து கொள்ளும் ஆசையை விட படித்து முடித்தவுடன்
    மனதில் எழுந்த அந்த வெறுமையான எண்ணத்தை தாண்டி

    "கதை நல்லாதாம்பா இருக்கு "

    என்ற எண்ணம் எழுந்ததை தெரிவிக்க வேண்டும் என்ற ஆசையே உடனடியாக மனதில் ஏற்பட்டது.

    அப்பாடா இனி வாங்கி படிக்காமல் அடுக்கி வைத்த ஒரே இதழ் இனி கிடையாது என்பதும் மனதில் ஒரு நிம்மதியை ஏற்படுத்தியது.


    இனைய விடுமுறையின் காரணமாக செயலரின் மூலம் பகிர்ந்து கொள்வது ..



    கே.பரணிதரன்..,தாரை.

    ReplyDelete
    Replies
    1. /// படித்து முடித்தவுடன்
      மனதில் எழுந்த அந்த வெறுமையான எண்ணத்தை தாண்டி

      "கதை நல்லாதாம்பா இருக்கு "

      என்ற எண்ணம் எழுந்ததை ///

      சபாஷ் தலீவரே.. நீங்க வளர்ந்துட்டீங்க..!!

      Delete
    2. மாற்றம்..முன்னேற்றம்..!.

      Delete
    3. தல இந்த தொண்டனை தனியே நிக்க வைச்சுட்டு நீங்க மட்டும் முன்னேறிட்டீங்களே😫😫😫😫. என்னால 10 பக்கத்தையே தாண்ட முடில.

      Delete
    4. தேர்தல் நேரம் நெருங்கிய உடனேயே செயலாளரை விட்டு விமர்சனமும் வெளியிடுகிறாரே - இது தான் ஒரு அக்மார்க் தலீவரின் கெத்து...!!

      Delete
  45. editor sir when d tex special books will b despatched?

    ReplyDelete
    Replies
    1. Tex ஸ்பெஷல் புக்கா ? Color TEX -2 பற்றிக் கேட்கிறீர்களா ?

      Delete
  46. editor sir shall v hv to pay separately for dis erode edition?

    ReplyDelete
  47. கடந்த சில வருடங்களில் சில மாதங்கள் புத்தகங்கள் கிளம்பிய உடன் SMS தகவல் வந்தது. அதன் பின்னர் வரவில்லை காரணம் தெரியவில்லை. ஆசிரியர் இது பற்றி நேரம் கிடைக்கும் போது சொன்னால் சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய நம்பர்கள் DND Registryல் பதிவாகியுள்ளன சார்...அதனால் தான் !

      Delete
  48. விளக்கம் அளித்த நண்பர் ஈரோடு விஜய்க்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  49. "ட்ஜெட்டில் உதைக்கிறது தான்- ஆனால் இது நம்பர்கள் மீது கவனமிருக்க வேண்டிய வேளையல்ல என்பதால் அந்த பக்கமாய் சிந்தனைகளை பயணிக்க அனுமதிக்கவேயில்லை"

    டியர் எடி, நீங்கள் கண்டிப்பாக உங்கள் முடிவை மாற்றுவீர்கள் என்று உள்ளூர ஒரு பட்சி சொன்னது, சரியாக போயிற்று. Thanks a Ton.

    சகாய விலை 10 ரூபாய் இதழ்கள் விட்டு வெகு தொலைவு பயணம் செய்துவிட்டோம்... தரத்தில், விலை கட்டுக்குள் என்ற முறையில், எந்தவித சமரசங்களும் இன்றி எப்போதும் தொடர்வோமாக !

    ReplyDelete
    Replies
    1. அவ்வப்போது எட்டிப் பார்த்து வந்த வேதாளம் இந்த Compact சைஸ் சார்ந்ததே சார் ; அதை ஒருமுறை கண்ணில் பார்த்து, கடாசவும் செய்துவிட்டதால் புதுசாய் முருங்கை மரம் தேடத் தோன்றாது என்று நம்புவோம் !

      Delete
    2. Sir you may want to request all subscribers to send 100 rupees each for the size upgrade of three books?

      Delete
    3. Nopes sir ; நன்றாக இராது & இது நமது பிழையே எனும் போது அதன் பொருட்டு வாசகர்களிடம் துண்டு விரிப்பது முறையாக இராது !!

      Delete



  50. பில்டலுக்கு பிரியாவிடை தலைப்பு அருமை.

    ஈரோடு புத்தகத் திருவிழா ஸ்பெஷல் புத்தகம் முன்பதிவு செய்யவர்களுக்கு மட்டும் ரூபாய் 360 சூப்பர். மற்ற கதைகளையும் சொன்ன உடன் முன்பதிவு செய்ய தயாராக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் மீத அறிவிப்பு வந்தவுடன் மொத்தமா ஆர்டர் பண்ணிடலாம்னு இருக்கேன்.

      Delete
  51. ஆசிரியரை இந்த வாரம் காணோமே...🤔

    ReplyDelete
    Replies
    1. மாதத்தின் கடைசி வாரமில்லையா சார் ....பணிகளுக்குள் கிடக்கிறேன் !

      தவிர நேற்றைக்கு பராகுடா PART 2 மொழிபெயர்ப்பினுள் புகுந்தவன் ஒரு flow-ல் அங்கேயே டேரா போட்டு விட்டேன் !

      Delete
    2. ///தவிர நேற்றைக்கு பராகுடா PART 2 மொழிபெயர்ப்பினுள் புகுந்தவன் ஒரு flow-ல் அங்கேயே டேரா போட்டு விட்டேன் !///

      சார் நீங்க சொன்ன 'flow' கடைவாயோரத்திலிருந்து பிரவாகமெடுப்பதைப் பற்றியல்ல தானே? :p

      Delete
  52. எடிட்டர் சார் மேலே அப்பிலே கொஞ்சம் போங்க நாங்களும் சில கேள்விகள் உங்களிடம் கேட்டிருக்கிரோம்.

    ReplyDelete
  53. ஜம்போ 2:

    தயாரிப்புத் தரம் பிரமாதம். அட்டைப்படம் அருமை. புக்கை கையில ஏந்தும் போதே ஒரு அருமையான பீலிங்.

    ஒரு குரங்கு சேட்டை:

    கதை சுமார் ரகம். சுமார்கதையை வசனங்கள் தான் காப்பாத்துது. சில இடங்களில் நன்றாக சிரிக்கலாம். 6.5/10

    மேற்கில் ஒரு மேதாவி:

    மொத கதைல விட்டதை ரெண்டாவது கதைல பிடிச்சுட்டாங்க. கதையும் வேகமாக நகர்கிறது. பல இடங்களில் நன்றாக சிரிக்கவும் முடியுது. கமலின காமெடி படங்கள் மெதுவாக ஆரம்பித்து முடிவை நோக்கி நகர நகர சிரிப்பு வெடி கூடிக் கொண்டே போகும். அதே மாதிரியான கதை மற்றும் வசன அமைப்பு. நல்ல டைம் பாஸ். 8.5/10.

    ReplyDelete
  54. வருடத்திற்கு கிட்டத்தட்ட 10000-ஐ புத்தகங்களுக்காக செலவழிப்பது அனைத்தது வாசகர்களுக்கும் சாத்தியப்படாத ஒன்று. just information

    ReplyDelete
  55. My comment on Previous post ://compact சைஸில் புத்தகங்கள் வரும்போது சில சமயங்களில் வசனங்களின் நீளம் கருதி எழுத்துகள் சிறிதாகிவிடுகின்றன. அப்படி எழுத்துகளை சிறிதாக்காமல், எடிட்டிங்கில் வசனங்களை சுருக்கிட முடிந்தால் வாசிப்பதற்கு சிரமம் இராது.//

    தலை தப்பியது - உங்களுக்கும் எங்களுக்குமே!

    ReplyDelete
  56. பிஸ்டலுக்கு ப்ரியா விடை...


    தலைப்பு அழகு சார்...:-)

    ReplyDelete
  57. ESS சார் & Dr. ஹரிகரன் சார்,
    நன்றிகள் ii . ஆசிரியரை நிறைய விளக்கங்கள் சொல்ல வைத்திருக்கிறீர்கள்.
    Compact size சொதப்பியதில் எனக்கும் நிறைய வருத்தமே i?.
    என்ன சில காட்டுன் தொடர் களை இந்த சைஸின் மூலம் ரசிக்க வைக்க முடியும் என்று நம்பினேன்.

    ReplyDelete
    Replies
    1. Compact size ஐ நானுமே ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

      Delete
  58. *********//கதாசிரியர் இங்கே focus செய்ய நினைத்தது 2 தனிமைகளின் வெறுமைகளையும், அவை கொணரும் தடுமாற்றங்களையும் என்பதால் ///

    என்னுடைய சிந்தனையும் இதுதான் சார்.

    'இளமையில் வறுமை கொடிது 'என்பது பழமொழி.

    'முதுமையில் தனிமை மிகவும் கொடிது' இது புதுமொழி.?///********

    எடிட்டர் மற்றும் கோவிந்த பெருமாள் இருவருக்கும் ஒருவேளை ‘’ இவர் ‘ பதில் அளிக்க முற்பட்டால் ????
    யார் என கண்டுபிடிக்க முடியுமா ???
    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    முக்காலமும் இனிக்கும் முத்தமிழை முதல் ,இடை .கடைச்சங்கம் என காத்ததுபோல் சித்திரகதை உலகை நேற்று இன்று நாளை என காத்து நிற்க முயலும் மாட்சி மிக்க மதுரையம்பதி அருகே நிலைகொண்டிருக்கும் சௌந்தரபாண்டியனார்,விசயனார் ,விக்கிரம அரவிந்தர் மூவருக்கும் மற்றும் சித்திர கதை உடன்பிறப்புகளுக்கும் வணக்கம் !!!!

    முடிவிலா மூடுபனி..
    மூடுபனி என்றவுடன் தமிழகத்தின் மார்கழி மாதம் நினைவுக்கு வருகிறது ..
    ஆண்டாள் திருப்பாவையும் நினைவுக்கு வருகிறது ..
    பகுத்தறிவு பாசறையில் பயின்றவன் ஆண்டாள் பற்றி பேசுகிறானே என எண்ண வேண்டாம்
    ஆண்டாளின் பக்தியை யாம் கருத்தில் கொள்ளுவதில்லை
    ஆண்டாள் தமிழை யாம் தள்ளுவதில்லை

    கம்பனின் கருத்திலே எமக்கு வம்புண்டு
    கம்பன் தமிழை தள்ள எத்தமிழனுக்கு தெம்புண்டு?

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என எமது அண்ணல் பேச்சை கேட்டல்லவோ வளர்ந்தோம் ?

    ReplyDelete
    Replies
    1. முடிவிலா மூடுபனியில் இருவித தனிமை பற்றி ஆசிரியர் குறிப்பிட்டார்
      மணமுடிக்காதவனின் முதுமை தனிமை
      மனையிழந்தவனின் மற்றுமோர் தனிமை
      ஒரே கதையில் இரு துருவங்கள் .......
      உண்டிக்கு வழியில்லா நேரத்தில் புகை
      வண்டியில் எம்மோடு பயணித்த ஓர்
      வண்டெனவே தமிழ்த்தேனை வாய்ப்புறம் அருந்தி
      ஊர்ப்புறம் தந்த நண்பர் கண்ணதாசனின் இப்பாடல் போலவே ..
      (தாலாட்டும் திருப்பள்ளியெழுச்சியும் ஒரே கவிதையில் )
      https://youtu.be/cuP2jzhmnh4

      ப்ரோஸ்ஸார்ட்-ன் தனிமை குறித்து ஆராய புகுவோமாயின் அது அவரே ஏற்படுத்தி கொண்டது ...
      அவர் அறுபதுக்கு மேற்பட்ட வயதில் மணம் செய்து கொள்ள எண்ணியது தவறல்ல.....ஒரு பேரிளம்பெண்ணை மணமுடிக்க எண்ணியிருக்கலாம் ..பேத்தி வயது பெண்மேல் மோகம் கொள்வது தவறு...
      அவ்வளவு ஏன் ?? தமிழக சரித்திரத்தில் சற்றொப்ப சில பதின்ம ஆண்டுகளுக்கு முன் இது போல் துயர சம்பவம் நிகழவில்லையா ???
      முன்னோக்கிய சிந்தனையின் கொடியூன்றி,பகுத்தறிவு செடியூன்றி சென்றவர் தடியூன்றி செல்லும் வயதில் மடந்தை ஒருத்தியை மணமுடித்தபோது அதனை தடுத்த நிறுத்த முயன்று முடியாது தாய் வீட்டை விட்டு விலகி வந்தவர் அல்லவா எம் அண்ணல் ?

      Delete