Saturday, January 12, 2019

ஸலாம் சாம்ராட் !

நண்பர்களே,

வணக்கம். ‘சொர்க்கமே என்றாலும் – அது நம்மூரைப் போல வருமா ?‘ என்ற பாட்டை மண்டைக்குள் ஓடவிட்டு மறுக்கா – மறுக்கா சிலாகிக்கத் தான் தோன்றியது வாரத்தின் முதல் பாதியினில் ! என்னதான் மார்கழி மாதப் பனியென்றாலும் – எங்கள்-கி சிவகாசியில் அது பெரிதாய் மனுஷனை இம்சிப்பதில்லை & வெயில் தலைகாட்டத் துவங்கிய சற்றைக்கெல்லாம் வழக்கமான உடுப்புகளோடு உலா கிளம்பிடலாம் ! ஆனால் பீரோவுக்குள் பதுங்கிக் கிடந்த சிலபல ஸ்வெட்டர்களையும், குரங்குக் குல்லாக்களையும் ஏற்றிக் கொண்டான பின்னேயும் பற்கள் தந்தியடிக்கும் கொடுமையினை வட இந்தியா அறிமுகப்படுத்தித் தந்தது போன ஞாயிறு முதலாய் ! 

பள்ளித் தோழனின் பையனுக்கு ராஜஸ்தானில் திருமணம் ; so ஒரு கும்பலாய்க் கிளம்பினோம் அந்தப் பாலைப் பிரதேசத்துக்கு ! ‘உதய்பூரில் க்ளைமேட் என்னவோ?‘ என்று கூகுளில் தேடிட – அது ஒற்றை இலக்கத்தில் 6 டிகிரி; 7 டிகிரி என்று பதில் தந்த நொடியே புரிந்து போச்சு – மொச்சைக்கொட்டை மூக்கையும், முழியையும் தவிர்த்து பாக்கி சகலத்தையும் உல்லன்களின் பின்னே பதுக்கிட வேண்டி வருமென்று ! ஒட்டகங்களும் சரி, ஊர்க்காரர்களும் சரி – விசேஷ நாட்களுக்கு மாத்திரமே குளிக்கும் அந்த ஊரில் கால் வைத்த போதே ஆளாளுக்கு ‘ப்ரேக்டான்ஸ்‘ ஆடத் துவங்கி விட்டது  – ஸ்வெட்டர்கள் இருந்த போதிலும் ! மொத்தமாய் பஸ்சில் ஏறி – மொத்தமாய் ஒரு சொகுசு விடுதியில் இறங்கி – மொத்தமாய் நெய்யிலும், சர்க்கரையிலும் மூழ்கிக் கிடந்த சாப்பாட்டு ஐட்டங்களை, மொத்தமாய் தொந்திக்குள் தள்ளி விட்டு, மொத்தமாய் குறட்டை விட்ட 3 நாட்களுமே ‘சல்‘லென்று காலத்தில் பின்நோக்கி இட்டுச் சென்று ஸ்கூல் டூர்களை நினைவுபடுத்தின ! 

திரும்பிய திசையெல்லாம் செக்கச் செவேலென்ற ஆடவர்களும், பெண்டிர்களும் ஒரு வட இந்தியத் திருமணத்தின் vibrant கோலாகலத்தைக் கண்முன் நிறுத்திட தத்தம் பாணிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தனர் ! வஞ்சமின்றி வளர்ந்து கிடந்த தொப்பைகளை இறுக்கிப் பிடித்து ஜீன்ஸ்களுக்குள் திணித்த கையோடு, பட்டம் விட்டு ஆடிக் கொண்டிருந்த அங்கிள்கள் ஒரு பக்கமெனில், நமது ‘பச்சோலியை‘ நினைவுபடுத்திய சிலபல முரட்டு ஒட்டகங்கள் மீது சவாரி செய்தபடிக்கே செல்ஃபி எடுக்க முனைந்து கொண்டிருந்த ஆன்ட்டிகள் இன்னொரு பக்கம் ! நடுவாக்கில் மனசளவில் பிரபுதேவாக்களாய் உருமாறிப் போயிருந்த சிலபல பார்ட்டிகள் அந்தக் குளிரிலும் ‘டான்ஸ் ஆடுகிறேன் பேர்வழி‘ என்று இடுப்பை வெட்டி இழுத்துக் கொண்டிருக்க – எனக்கோ பயந்து பயந்து வந்தது ! "யோவ்...எங்கயாச்சும் புடிச்சுக்கிட்டா இந்தக் குளிரில் அப்படியே நின்னுக்கும் ஒய் !!" என்று கத்த வேண்டும் போலிருந்தது !  ஒரு முனிசிபல் பார்க் அளவிலான விசால மைதானத்தின் மத்தியில் திருமணம் அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருக்க, தட்டும், கையுமாய் அவரவருக்கு இஷ்டப்பட்ட பதார்த்தங்களை, யதார்த்தமாய் உள்தள்ளும் வைபவமும் இன்னொரு பக்கம் அதுபாட்டுக்கு இனிதே அரங்கேற – எங்களுக்கோ லைட்டாக சந்தேகம்: “இத்தனையையும் சாப்பிட்ட கையோடு இவர்களுக்கெல்லாம் ஜீரணித்து விடுமா? அல்லது பனிக்கரடிகளைப் போல ஒரு சீஸன் முழுவதுக்கும் அந்த ஆகாரம் உள்ளாற தேங்கியே இருக்குமா?” என்று ! ‘உப்ப்ப்ப்…. அடுத்த ஒரு மாதத்துக்கு சோறும், ரசமும் மட்டுமே போதும்டா சாமி!‘ என்று நினைக்கச் செய்யும் அளவிற்கு ஸ்வீட்களும், பலகாரங்களும், சாப்பாட்டுச் சமாச்சாரங்களும் குவிந்து கிடக்க, ‘இது இனிக்குமா? புளிக்குமா? காரமாகயிருக்குமா?‘ என்ற ரோசனைகளோடே நாங்கள் சுற்றி வந்தோம் ! உடன் படித்த பள்ளித் தோழிகளுமே ஒரு சிறு அணியாகப் புறப்பட்டு வந்திருக்க, ‘96‘ படத்திலான School Reunion தான் நினைவுக்கு வந்தது ! என்ன ஒரே சிக்கல் – மகளிரணியினர் த்ரிஷாக்களைப் போல் காட்சி காட்சி தந்தார்களோ - இல்லையோ, நாங்களெல்லாமே விஜய சேதுபதியின் ஒன்றுவிட்ட பெரியப்பாக்களாய் தென்பட்டது தான் கொடுமை ! ஒரு மாதிரியாய் ராஜஸ்தானுக்கு விடை தந்து விட்டு புதனன்று ஊர் திரும்பிய போது, ‘சுள்‘ளென்று அடித்த வெயிலைப் பார்த்த கணத்தில் ‘ஷப்பா… நமக்கு நம்ம ‘பேட்ட‘ தான் சுகப்படும்டா சாமி !‘ என்றபடிக்கே வேலைகளுக்குள் மூழ்கத் தொடங்கினேன் !

பிப்ரவரியின் இதழ்கள் ரவுண்ட்கட்டி ரெடியாகி, என் மேஜையில் உசரமாய் வீற்றிருக்க கல்யாணவீட்டு புஃபே சாப்பாட்டு ஞாபகத்தில் ‘ஜெரெமயாவில் 6 பக்கம்; ஜானி 2.0-ல் 5 பக்கம்‘ என்று இங்குமங்குமாய் தாவித் திரிந்தாலும் – மண்டை முழுக்கவே 'சிகரத்தின் சாம்ராட்‘ மீதான சிந்தனைகளே ! தோர்கலின் இந்த latest ஆல்பத்தின் மீது இவ்வாரப் பதிவினில் பார்வைகளை ஓடச் செய்வதாகப் ப்ராமிஸ் செய்திருக்க – ‘எங்கே ஆரம்பிப்பது? எங்கே முடிப்பது?‘ என்ற பேய்முழி ! இந்த ஆல்பத்தோடு மல்லுக்கட்ட முனைந்திருப்போரின் reactions கீழ்க்கண்ட மூன்றில் ஏதோவொன்றாய்த் தான் இருந்திருக்க வேண்டும் :

  • ஙே…? ஙே….? ஙே….? இதைப் புரிஞ்சுக்க நமக்கு ஆகாதுப்பா!
  • ஆங்? ஆங்? ஆங்? இது இப்டிக்கா – போயி அப்டிக்கா ரிட்டன் ஆகுதா? இல்லாட்டி அப்டிக்கா போயி அப்டிக்காவே ரிட்டன் ஆகுதா? புரிஞ்ச மேரியுமிருக்கு ; பிரியாத மேரியுமிருக்கே வாத்யாரே !! 
  • போ! போ! போ! ‘தல‘ படத்தையோ, தலைவர் படத்தையோ பார்க்கவே மனுஷனுக்கு நேரமில்லை; இதிலே இந்த வான் ஹாம் மனுஷனோட கட்டி உருள எவனுக்கு தம் கீது? போலாம் ரைட்ஸ் !

நீங்கள் ‘ஙே‘ அணியாகவோ ; ‘போ… போ‘ அணியாகவோ இருக்கும் பட்சத்தில் – மேற்கொண்டு வாசிக்க மெனக்கெடாது, பதிவின் வால்ப்பகுதியிலுள்ள ஃபோட்டோக்களை பார்த்த கையோடு  விடைபெறல் உத்தமம் என்பேன் ! 

மத்தியிலுள்ள ‘ஆங்… ஆங்‘ அணியினரே – உங்களுக்குமே ஒரு caution ! தொடரவுள்ளது நிச்சயமாய் இந்தக் கதையின் அக்கு வேறு – ஆணி வேறான சாராம்ஸமல்ல ! வான் ஹாம் போட்டுள்ள முடிச்சு மேளாவினை அவரே வந்தாலன்றி முழுமையாய் அவிழ்த்தல் சாத்தியமாகாது என்பது எனது அபிப்பிராயம் ! So பதிவினில் நான் எழுதிடவுள்ளது இந்தக் கதையின் முக்கிய துப்புக்களைப் பற்றி; எங்கெங்கெலாம் கவனம் அவசியமென்பது பற்றி & எனது பார்வையினில் என்ன மாதிரியான விஷயங்கள் கேள்விக்குறியாகி நிற்கின்றன என்பது பற்றியுமே ! என்னுள்ளே பதிவாகியுள்ள புரிதல்களை உங்கள் மீது திணித்தது போலிருக்க வேண்டாமே என்ற எண்ணத்தில் தான் ஆல்பத்தினிலேயே அதனை இணைக்க வேண்டாமென்று தீர்மானித்தேன் ! எனது உள்வாங்கல் பிழையாக இருப்பின், மொக்கையான பல்பு வாங்க நேரிடும் என்பது ஒருபக்கமிருக்க - வான் ஹாம் எனும் அசாத்தியரின் முடிச்சுகளை அவரவராய் அவிழ்க்க முனைவதின் த்ரில்லும் இங்கே அவசியமென்று ஜூனியர் எடிட்டர் சொன்னது valid point என்று பட்டது ! So ஒரு பொது விவாதத்தின் பின்னே நம்மிடையே ஒரு புரிதல் ஏற்படின் - சூப்பரென்ற எண்ணத்திலேயே இப்போதைக்கு புலவன் தருமியாய் கேள்விகளை மட்டும் ஆங்காங்கே தெளித்து விடுகிறேன் - of course சிலபல குறியீடுகளோடே !! 

தொடரும் வேளைகளில் அவரவரது பார்வைகளில் கதை பற்றி விவாதித்திடலாம் ! And hopefully there will be light at the end of the discussions ! இந்தக் கதைக்களமும் சரி ; அதன் பின்னணியிலுள்ள சிலபல (நிஜக்) குறிப்புகளும் சரி - கபாலத்தைக் குடையக்கூடியளவிற்கு ஆராய்ச்சியையும், தேடல்களையும் அவசியப்படுத்தக்கூடிய சமாச்சாரங்கள் ! So அவற்றை முழுமையாய் நான் படித்தும், புரிந்தும், பதிவிடுவதென்பது ஒரு அசுர பணி என்பதால், அவற்றை நம் நிஜாரிலாத் தலீவரிடமோ ; பொருளாளரிடமோ ; இன்ன பிற மெனக்கெடல் நிறைந்த நண்பர்களுக்கெனவோ ஒப்படைக்கிறேன் ! இயன்றமட்டுக்கு physics lecture போல் தோற்றம் தந்திடாது - சகஜமாய் எழுத முனைந்துள்ளேன் !! So மேற்கொண்டு நீங்களாய் wikipedia பக்கமாய் ஒதுங்கிடும் பட்சத்தில் - இன்னும் ஆழமாய்ப் புகுந்திடலாம் இந்த ஆல்பத்தினுள் ! 


இஷ்ட தெய்வத்தை வணங்கி கொண்டே உள்ளே புகுகிறேன் - இதன் இறுதியில் சொக்காயோடும், வேஷ்டியோடும் முழுசாய் வெளியேறிட வேண்டுமே !! என்ற வேண்டுதலோடு !! உங்கள் பங்குக்கு நீங்கள் ஒரு பேப்பர் ; ஒரு பென்சில் & ரப்பர் & தோர்கல் புக் - என்று எடுத்துக் கொண்டு ரிலாக்ஸ் செய்யுங்களேன் ? Here goes :

The Begining :

- காலப் பயணம்
- நிகழ் பிரபஞ்சம்
- இணை பிரபஞ்சம்

இவையே கதை நெடுக ரவுண்ட் கட்டும் சமாச்சாரங்கள் ! இவை சகலமுமே மனித கற்பனையின் உச்சங்கள் – (இப்போதைக்காவது) என்பதால், எங்குமே வலுசேர்க்க விஞ்ஞானபூர்வ facts-களை முன்வைத்தல் சாத்தியமாகிடாது ! So அதனை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் ப்ளீஸ் ! Logic has to be at a premium in the fantasy world !

காலப் பயணமென்றால் என்ன ?சதா நேரமும் நாம் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறோம் காலத்தில் ! ஆக இறந்த காலம் to நிகழ் காலம் to எதிர்காலம் என்பதே நமது  பயண திசை ! நாம் பயணிக்கும் வேகத்தைத் துரிதப்படுத்தினால் எதிர்காலத்தினுள் முன்னதாகவே  எட்டிப் பிடிப்போம் ; future-க்குள் போயிருப்போம் என்பதும் ; வேகத்தை மட்டுப்படுத்தினால் ரிவர்ஸில் இறந்த காலத்துக்குள் போயிட சாத்தியமாகும் என்பதுமே இந்தக் கோட்பாட்டின் one-liner என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! 
இணைப் பிரபஞ்சம் (Parallel Universe) அல்லது மாற்று நிஜம் (Alternate reality) என்பது  முழுக்க முழுக்கவே கற்பனையின் எல்லைகளைத் தொட்டு நிற்கும் சங்கதி  ! அதாவது நிகழ்ப்பிரபஞ்சத்தில் அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒத்ததொரு இணைநிஜம் இன்னொரு பிரபஞ்சத்தில் உண்டென்பதே இதன் கோட்பாடு ! ஒரே கதையினை வெவ்வேறு விதங்களில் சொல்லலாம் தானே ? ஒரே ஊருக்கு வெவ்வேறு பாதைகளில் பயணிக்கலாம் தானே ? So ஒரே மாதிரியான நிகழ்வுகள், வெவ்வேறு விதங்களில் இணையுலகுகளில் அரங்கேறிக் கொண்டேயிருக்கும் என்று நம்புவது இங்கே சகஜம். ஆக "காலப் பயணம்" எனும் அசாத்தியத்தைக் கையில் எடுத்திடும் போது - இத்தகைய இணையுலகினுள்ளும், நிகழ் (நிஜ) உலகினுள்ளும் மாற்றி மாற்றி பயணிக்கும் விதமாய் சம்பவங்களை  கதாசிரியர்கள் கையாள்வதுண்டு ! 

"Sideways in Time" என்றதொரு புராதன sci-fi நாவலில் சொல்லப்படும் கோட்பாடு இங்கே நமக்கு சுவாரஸ்யமூட்டக்கூடும் ! பூமியில் ஒரு இடத்தின் இருப்பிடத்தைக் குறிப்பிட latitude (அட்ச ரேகை) & longtitude (தீர்க்க ரேகை) விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம். இந்தக் குறியீடுகள் காலத்துக்கும் பொருந்தும் என்று அந்த நாவலில் சொல்ல முனைகிறார் கதாசிரியர் ! அதாவது அட்ச ரேகையினோடே பயணம் செய்வதென்பது நேர்கோட்டில் கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் பயணம் செய்வது போலானதாம் ! அதே சமயம் நெட்டுவாக்கில் உள்ள தீர்க்க ரேகையினை ஓட்டிப் பயணிக்கும் போது, பிற கால மண்டலங்களை ; பிரபஞ்சங்களைத் தொட்டிட முடியும் என்கிறார் ! 

இந்த இணைப்பிரபஞ்சங்களின் முக்கிய அம்சம் - கால அளவுகள் சார்ந்தது ! So நாம் பழகியுள்ள அதே மாதிரியான  "24 மணி நேரங்களானால் ஒரு நாள் ; 12 மாதங்களொரு ஆண்டு" என்ற நிலைப்படுத்தப்பட்ட அளவுகள் இந்த மாற்று நிஜவுலகினில் நிலவிடும் அவசியங்கள் கிடையாது ! நிஜஉலகினில் ஓராண்டென்பது, அந்த இணையுலகினில் மிகச் சிறியதொரு அவகாசமாகவும் இருந்திடலாம் ! So கதை நெடுக 37 ஆண்டுகளை தோர்கல் & கோ. அசராது நிகழ்த்திடுவதன் சூட்சமம் இது தானோ ?

Point # 2 : கதைநெடுக ஏகப்பட்ட சிற்சிறுக் குறிப்புகள் – சித்திரங்களிலும், வசனங்களிலும், கதையின் ஓட்டத்திலும் வழங்கப்பட்டுள்ளன! அவற்றைத் துல்லியமாய்க் கணித்திட நேரம் எடுத்துக் கொள்ளாவிடின் ஆடிப் போவது உறுதி ! இந்த ஆல்பத்தை மட்டும் வண்ணத்தில் அல்லாது black & white-ல் வெளியிட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் திணறிப் போயிருப்போம் – அந்தச் சித்திரக் குறிப்புகளில் சிலவற்றைக் கவனத்திட! உதாரணம் சொல்கிறேன் பாருங்களேன் !

பக்கம் 93 – ப்ரேம் 2 – மோதிரம் பளீர் பச்சை நிறத்தில்! & ப்ரேம் 7 – அதே மோதிரம் பச்சையில்!
பக்கம் 96 – ப்ரேம் 7 – பச்சை மோதிரம் வல்னாவிடம்!

இவற்றையெல்லாம் வண்ணத்தில் அல்லாது கறுப்பில் மாத்திரமே அச்சிட்டிருந்தால் - மொத்தத்துக்குக் கறேலென்று தோன்றியிருக்கும் ; துல்லியமாய்க் கவனிக்கத் திணறிப்போயிருப்போம் ! 

அதே போல சேக்ஸகார்ட் யாராகயிருப்பினும், அடையாளம் சொல்வது அந்தப் ‘பிங்க்‘ நிற அங்கி தான்! So இங்கே வண்ணத்துக்குமே கதை சொல்லும் பொறுப்பு தரப்பட்டுள்ளது!

தவிர, வசனங்களில் வான் ஹாம் நுழைத்திருக்கும் details அசாத்தியமானவை ! வழக்கமாய் மொழிபெயர்ப்பின் போது ‘trivial” என்று தோன்றிடக்கூடிய சேதிகளை இணைத்துக் கொள்வதில் அவ்வளவாய் மெனக்கெடல் காட்டிடுவதில்லை ! ஆனால் இந்த ஆல்பத்தை முதன் முறையாகப் படித்துக் கிறுகிறுத்துப் போன நொடியிலேயே தீர்க்கமாய்ப் புரிந்தது – வான் ஹாம் அடித்துப் போட்டிருக்ககூடிய ஈயைக் கூட அட்சர சுத்தமாய் நாமும் அடித்திட வேண்டிவருமென்று ! So இந்தக் கதையை மறுபடியும் எழுத எடுத்துக்கொண்ட போது இயன்றமட்டிற்கும் ஒரிஜினலின் பிசகா வார்ப்பாய் அமைத்திட முயற்சித்தேன் – என் புரிதல்களுக்கு உட்பட்ட வரையிலுமாவது ! கதையை நீங்கள் வழக்கமான பாணியில் ‘சர சர‘வென்று வாசித்திருப்பின் நிச்சயமாய் சிலபல மையப் புள்ளிகளை நோக்கிய குறியீடுகளை நீங்கள் தவற விட்டிருக்கக் கூடுமென்பேன்! So ப்ளீஸ் – நிதானமான; கவனமான மறு வாசிப்பு?!

Point # 3: இந்தக் கதையின் மையம் அடங்கியிருப்பது பக்கம் 79-ன் frame # 3-ன் வரிகளில் ! அதனை மீண்டுமொரு தபா வாசித்துத் தான் பாருங்களேன் ! ஜனவரி, பிப்ரவரி, மார்ச் – இத்யாதி என்ற ரீதியில் நமக்குப் பரிச்சயமாகியுள்ள காலம் பற்றிய புரிதல், நேர்கோட்டில், முன்நோக்கியே பயணமாகிறது ! ஆனால் இந்த ‘பையோஸ் சித்தாந்தம்‘ மாறுபடுகிறது ! கால ஓட்டம் என்பது நேர்கோடல்ல; இணை வளையங்களிலானது என்கிறது ! So காலமெனும் ஒற்றை வளையத்திலிருந்து முன்னேவோ – பின்னேவோ தாவுவது சிரமமல்ல என்று வான் ஹாம் நமக்குச் சொல்ல விழைகிறார் ! அவ்விதம் தாவும் ஒரு பாதையானது தான் அந்தத் தீக்கிரையான குடில் ! அந்த ஆற்றல் பெற்ற இலக்கினில் மட்டுமே காலப்பயணம் சாத்தியம் என்பதால் இங்கே காலத்துக்கான வாயில் அந்தக் குடிசை தான் ! கதை நெடுக – ஒவ்வொரு பயணத்தின் போதும் தோர்கலோ; டோர்ரிக்கோ; வல்னாவோ land ஆவது அங்கு தான் எனும் போது அந்தக் குடிலின் முக்கியத்துவம் அசாத்தியமானது!

- உடைந்து போன உத்திரம் <---> உடையா உத்திரம்

- தீக்கிரைச் சுவடுகள் <---> தீக்கிரை அடையாளமிலாத் தோற்றம்

- தோர்கல் ஏற்படுத்தும் கீறல்  <---> கீறல் இல்லா சுவர்

மேற்படி 3 பாய்ண்ட்களுமே காட்டப்பட்டிருக்கும் விதங்களுக்கேற்ப கதை பயணிப்பது சமகாலப் பிரபஞ்சத்திலா ? மாற்றம் கண்ட பிரபஞ்சத்திலா? என்பதை நாம் புரிந்து கொள்வோமென்று வான் ஹாம் எதிர்பார்க்கிறார்! (ஆனாலும் மனுஷனுக்கு வாசகர்கள் மீது அசாத்திய நம்பிக்கை தான்!!!)

Point # 4: கதையில் காட்டப்பட்டிருக்கும் பருவகாலங்களுமே இங்கே நிறைய முக்கியத்துவம் உண்டென்று தோன்றுகிறது ! பனியில் ஆரம்பிக்கும் பயணம் – கோடை காலத்தினில் சென்று land ஆவதை பக்கம் 62-ல் பார்த்திடுகிறோம்! அது எவ்விதம் சாத்தியமென்ற முடிச்சுக்கு point # 1-ல் நான் எழுதியிருந்த கால அளவீடு சமாச்சாரமும், நண்பர் செனா. அனா முன்வைத்திருக்கும் விளக்கமும் பொருந்தும் ! நேர்கோட்டுக் காலப் பயணம் நடைமுறையிலுள்ள சமகாலப் பிரபஞ்சத்தில் – ஒரு நாளென்பது 24 மணி நேரங்கள் அடங்கியது ; 12 மாதங்களென்பது ஓராண்டின் நீளம் ! ஆனால் தடாக அலைகளைப் போல இணை வட்டங்களில் சுற்றிச் சுற்றி நெளியும் காலவோட்டம் நடைமுறையில் இருக்கக்கூடிய இணைப் பிரபஞ்சங்களிலுமே அதே 24 hours to the day ; 12 months to the year என்ற அளவீடுகளும் நிலவிட வேண்டுமென்ற கட்டாயங்களில்லை ! பனிக்காலத்தில் புறப்படுவோர் பச்சை பசேலென்ற கோடையினில் சென்று இறங்குவதும் சரி ; பக்கம் 65-ல் இளவயது வல்னாவுக்கும், தோர்கலுக்குமிடையே நடைபெறும் சம்பாஷணைகளில் தெறிக்கும் கால அளவீட்டு முரண்பாடுகளும் சரி ; நமக்கு ஏதேனும் உணர்த்திடும் பொருட்டு வான் ஹாம் அமைத்துள்ள சமாச்சாரங்களா? "பத்தாண்டுகளுக்கு முன்னே நிகழ்ந்ததென்று" இளம் வல்நா குறிப்பிடும் நிகழ்வுகள் - தோர்கலின்  கால அளவீட்டின்படி 20 ஆண்டுச் சமாச்சாரமாய்த் தோன்றிடுவதன் பின்னணி என்னவாகியிருக்கும் ? உங்களது சிந்திக்கும் குல்லாக்களை அணிந்து கொண்டு பதில் தரலாமே folks? பனியில் புறப்பட்டு - வெயிலில் தரையிறங்குவதெனில் - அது முழுமையான 37 ஆண்டுகளின் பயணமாய் இருக்க முடியாதே ? Brilliant reasoning from our good doctor ! இதற்கு வேறு மாதிரியான விளக்கம் சாத்தியப்படின் - கேட்க ஆவலாய்க் காத்திருப்பேன் ! 

Point # 5: Point to Point பஸ் போல – 37 ஆண்டுகள் முன்னே ; பின்னே; அப்புறமாய் 37 ஆண்டுகள் + ஆறு மாதங்கள் பின்னே ; 37 ஆண்டுகள் + சில மணி நேரங்கள் முன்னே என்று, கதை மாந்தர்களை கால இயந்திரத்தினில் செம சுற்று சுற்ற விட்டிருக்கிறார் வான் ஹாம் ! அந்தப் பயணங்களின் ஒவ்வொன்றையும் தான் பார்ப்போமே ?
  • Journey # 1 – துவக்கப் புள்ளி – நிகழ்காலப் பிரபஞ்சம் : 

- குதிரையோடு பனிமலையில் தோர்கல் நடைபோடுகிறார்.

- அதே வேளையில் பனியில் சறுக்கி தப்ப முயற்சிக்கிறது ஒரு உருவம்.

- ஒரு பிங்க் அங்கியணிந்த சேக்ஸபார்ட் எக்காளத்தை ஊதி பனிச்சரிவை உருவாக்க – அதனில் சிக்கி மடிகிறான் அவன் ! அவனது கையில் மோதிரம் நஹி ! பார்க்க பக்கம் 59 ; frame # 7.

- யாரிடமும் இந்த phase–ல் மாய மோதிரமில்லை என்ற யூகத்தில் இது நிகழ் பிரபஞ்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா ? அல்லது இங்குமே ஒரு முடிச்சு உள்ளதா ?

- ஆக இங்கே எழும் கே்விகள் கீழ்க்கண்டவாறு :

1. இந்த பிங்க் அங்கி சேக்ஸபார்ட் யாரோ?
2. பனியில் புதைந்து போன ஆசாமி யாரோ?

- தொடர்ந்து நடைபோடும் தோர்கல் ஒரு குடிலினில் இளம் டோரிக் பதுங்கிக் கிடப்பதைக் காண்கிறார்.

- 5 நாட்களுக்கு முன்பாய் கொடூரன் சேக்ஸகார்டிடமிருந்து தப்பி வந்ததாய்ச் சொல்கிறான் ! அவன் நிஜத்தில் சேக்ஸகார்ட்டைப் பார்த்தது கூடக் கிடையாது ! 

- குடிலின் வெகு அருகே ஒரு அசுர பனிச்சரிவு நேர்ந்திருக்க, அது பற்றித் துளியும் தெரிந்திரா விதத்தில் இளம் டோர்ரிக் அந்தக் குடிசையினுள் பதுங்கிக் கிடப்பதற்கும் ஏதேனும் குறியீடு உண்டா? அல்லது காலப்பயணத்தின் வாயிலுக்குள் தோர்கல் கால்பதித்த நொடியே ஒரு  சின்னம்சிறு நிகர் பிரபஞ்சத்தினுள் பயணிக்க இட்டுச் சென்றுள்ளாரா வான் ஹாம் ? நிதானமாய் யோசியுங்களேன் guys !

இந்த phase–ல் கவனிக்க வேண்டியன :

- தீக்கிரையான தடங்களுடன் குடில் உள்ளது. (பார்க்க பக்கம் 56-ன் சித்திரங்கள்)
- உத்திரமும் பலப்படுத்தப்படாது உள்ளது !

Journey # 2 : ரிவர்ஸில் 37 ஆண்டுகள் – அதாவது இறந் காலத்தினுள்

-மாய மோதிரம் தோர்கலின் பாக்கெட்டில் உள்ளது. குதிரை மிரண்டு போய் உதைய – பின்நோக்கிய பயணம் ஸ்டார்ட் !

-அதே மலைப் பிராந்தியம் ; ஆனால் இம்முறையோ கோடை காலம் ;  பச்சைப் போர்வையோடு !

- ஒரு கைக்குழந்தையாய் சொந்த மண்ணிலிருந்து தாத்தாவால் தூக்கி வரப்பட்டதாகவும் ; கடந்த 10 ஆண்டுகளாய் அந்தப் பிராந்தியத்தில் தாத்தா கட்டிய குடிலில் வசிப்பதாய் இளம் பெண் வல்னா சொல்கிறாள். அப்படியானால் அவளது வயது something around 11-12 என்று தானே இருந்திட வேண்டும் ? ஆனால் வல்நாவோ வாலைக்குமரியாய்க்   காட்சி தருவது எவ்விதமோ ?  

- கண்டவுடன் காதல் – கிட்டத்தட்ட அதே வயதான டோர்ரிக்குக்கு ! அவளோடே வாழ்ந்து விடும் ஆர்வம் அவனிடம் ததும்புகிறது !

- நடப்பது எதுவும் புரியாதவராய் தோர்கல் குடிலின் ஒரு மூலையில் அமர்ந்து தலையைப் பிய்க்கும் கணத்தில், இன்னொரு காலப் பயணம் துவங்கிடுகிறது! இந்தத் தருணத்தில் பக்கம் 66-ன் frames # 4; 7 & 8-ஐ சற்றே பாருங்களேன்?! சுவற்றில் வரையப்பட்டிருக்கும் சிலபல புதிரான சித்திரங்களுக்கு இங்கே அவசியம் ஏதேனும் இருக்குமோ ? Or am I just seeing pink elephants ? 👻👻

- இந்த phase–ல் கவனிக்க வேண்டிய சமாச்சாரங்கள் :

1. குடில் புதிதாய்க் காட்சி தருகிறது – தீச்சேத அடையாளங்களின்றி !
2. சுவர்கள் கீறல்களின்றிப் பத்திரமாக உள்ளன. தோர்கல் தான் ஒரு அடையாளத்தைப் போட்டு வைக்கிறார் !

- திடுமென தோர்கல் காலத்தில் மீண்டும் பயணமாகியிருக்க – டோர்ரிக்கோ பின்தங்கி விட்டிருக்கிறான் ! ஆக இறந்த காலத்தில் ஒரு மாற்றம் செய்விக்கப்படுகிறது ! எதிர்காலத்துப் பிரஜை டோர்ரிக் இறந்த காலத்திலேயே தங்கிவிடத் தீர்மானிப்பதால் சங்கிலிக் கோர்வையாய் மாற்றங்கள் நிகழ்ந்திடலாம் தானே ? An altered past must trigger an altered future ! சரி தானா? அவ்விதம் மாற்றம் காணும் பிரபஞ்சமானது நிகழ்ப்பிரபஞ்சமாகாது ! அதுவும் ஓ.கே. தானா ? 

Journey # 3: முன்னோக்கி 37 ஆண்டுகள் + கொஞ்ச நேரம் :

- மறுக்கா அதே குடிலினில் தோர்கல் மட்டும் பிரசன்னமாகிறார் ! ஆனால் டோர்ரிக்கும் இல்லை ; அவரது கத்தியும், குதிரையுமில்லை ; உத்திரக்கட்டையும் உடையாது உள்ளது. ! So இது மாற்றம் கண்டுள்ளதொரு பிரபஞ்சம் என்றாகிறது !

ஆக பக்கம் 61-ல் நடந்த சமாச்சாரங்கள் எதுவும் இந்த மாற்றம் கண்டுள்ள பிரபஞ்சத்தில் அரங்கேறியிருக்கவில்லையோ?

- பனிக்கட்டைகளோடு தோர்கல் தடுமாறிக் கிளம்பும் போது வீரர்கள் அவரை மடக்கி, இட்டுச் செல்கின்றனர் - சேக்சகார்டிடம்.

- இங்கே மீண்டுமொரு தபா பனிச்சரிவின் சிக்கிப் புதையுண்டு போனவனின் கையைக் காட்ட வான் ஹாம் தீர்மானித்ததன் பின்னணி என்னைவாகயிருக்கும்? பார்க்க பக்கம் 69 - frame 6.

- அதே போல தோர்கலைச் சிறைபிடித்துச் செல்லும் சிப்பாய்கள் – புதையுண்டு கிடப்பது “ஆறு தினங்களுக்கு முன் தப்பிச் சென்ற” அடிமையின் உடலாகத் தானிருக்குமென்று" குறிப்பிடுவதை பக்கம் 70-ல் frame # 4-ல் கவனியுங்களேன் ?! Is there a reason for this detail to be here?

- Journey # 1-ல் புதைந்து கிடக்கும் நபரும், Journey # 3-ல் புதைந்து கிடக்கும் நபரும் ஒரே ஆசாமி தானா ? 

- மீண்டும் அதே குடிலுக்கு தோர்கல் இட்டுச் செல்லப்பட அங்கே நிற்பதோ பிங்க் அங்கியில் கிங்கரனைப் போலான சேக்ஸகார்ட் ! தானே டோரிக்கின் வயோதிக அவதார் என்றும் ; வல்னாவை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இழந்த சோகத்தில் வெறியனாகியவன் – சேக்ஸகார்ட்டாகவே மாறிவிட்டிருப்பதைச் சொல்கிறான்!

- ஆக மாற்றம் கண்டுள்ளதொரு பிரபஞ்சத்தில் ஒரிஜினல் சேக்ஸகார்டின் இடத்தில் இருப்பது வெறியன் (கிழ) டோர்ரிக் தான்!

- ஆனால் வல்னா மீது அவனுக்குத் தணியா காதல் தொடர்கிறது ! குதிரைத் திருடர்களின் கையில் செத்துப் போனவளைச் சாக விடாது ; அந்தப் போக்கிரிகள் தாக்கும் தருணத்துக்கு முன்பாய் அங்கே ஆஜராகி அவளைத் தன்னோடு அழைத்து வரும்படி மிரட்டுகிறான் !

- நிகழ் பிரபஞ்சத்தில், தோர்கலின் மனைவியும், பிள்ளையும் காத்திருப்பது சேக்ஸகார்டுக்குத் தெரிந்துள்ளதால் – அந்தக் கிங்கரனே டோர்ரிக்கின் கிழட்டு அவதார்  என்பது ஊர்ஜிதமாகிறது! ஆக பக்கம் 73-ல் frame # 2-ன் வசனம் மெய்யாகிறது!

இந்த காலகட்டத்தில் கவனித்திட வேண்டியவை:

-யாருமே பார்த்திரா அந்த (ஒரிஜினல்) சேக்ஸகார்ட் இப்போது இல்லாமலே போய்விட்டான் !

- 37 ஆண்டுகளுக்கு முன்னே தோர்கல் அந்தக் குடிலின் சுவற்றில் போட்டு வைத்த கீறல் அப்படியே உள்ளது !

Journey # 4: இறந்த காலத்தினுள் 37 ½ ஆண்டுகள் பின்னே பயணம்!

- கிழ (டோர்ரிக்) சேக்ஸகார்டோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அவனது மிரட்டலைக் கேட்டு தோர்கல் உணர்ச்சிவசப்படும் தருணத்தில், காலப்பயணம் trigger ஆகிறது ; வல்னாவைக் கொல்ல போக்கிரிகள் சூழ்ந்து நிற்கும் போது அங்கு கச்சிதமாய்ப் பிரசன்னமாகிறார் ! அதே குளிர்கால சங்கிராந்தியின் மூன்றாம் நாள் அது !

- அந்தத் திருட்டுக் கும்பலைத் தோர்கல் துரத்தியடிக்க வல்னா மடிந்திடவில்லை ; பத்திரமாக இருக்கிறாள் !

- தனது பயண நோக்கத்தை இளம் டோரிக் & வல்னா ஜோடியிடம் தோர்கல் விளக்குகிறார். பின்நாட்களில் சக்தி வாய்ந்த சேக்ஸகார்டாக டோர்ரிக் உருமாறவுள்ள விஷயத்தையும், வல்னாவைப் பத்திரமாய் எதிர்காலத்திற்குள் கடத்திக் கொண்டு செல்ல அவன் கட்டளையிட்டிருப்பதையும் விரிவாகச் சொல்கிறார்!

- பேராசை பீடிக்க, இளம் டோர்ரிக்குமே வல்னாவை 37 ஆண்டுகள் முன்நோக்கிக் கூட்டிச் சென்று சேக்ஸகார்ட் டோர்ரிக்கிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துகிறான் ! ஆடு-மாடுகளை மேய்த்தபடிக்கே வாழ்க்கையை ஓட்டுவதற்குப் பதிலாக – சக்திவாய்ந்த சிகரங்களின் சாம்ராட்டாக எதிர்காலத்தில் தலையெடுப்பதே அவனது விருப்பமாக உள்ளது ! Of course - that will be an altered universe !

- மோதிரமோ இப்போது இருப்பது வல்னா வசம் ! தோர்கலை அவள் ஆரத் தழுவி, உணர்ச்சிப் பெருக்கோடே முத்தமிடும் தருணம், time travel துவங்குகிறது!

Journey # 5 : 37 ஆண்டுகள் முன்னே :

- தோர்கலோடு சேர்ந்து வல்னாவும் நிகழ்காலத்திற்குள் புகுந்து விட்டாள் !

- ஆக போக்கிரிகள் தாக்கவில்லை; குடிசையும் தீக்கிரையாகவில்லை; வல்னாவும் உயிரோடே உள்ளாள் !

- ஆனால் Journey # 4-ன் போது தோர்கல் விவரித்த விபரங்களை மனதில் இருத்திக் கொண்ட இளம் டோர்ரிக், வல்னாவின் சாவுக்குப் பழி தீர்க்கும் முகாந்திரம் இல்லாத போதிலுமே சேக்ஸகார்ட்டாகவே உருமாறிடுகிறான் ! தோர்கலும் இளம் வல்னாவும் பிரசன்னமாகும் தேதியினில் அவர்களுக்காகக் காத்திருக்கிறான் ! ஆனால் இவனொரு மாற்றம் கண்டுள்ள பிரபஞ்சத்த்தின் டோர்ரிக் சேக்ஸகார்ட் !!! அதாவது டோர்ரிக் சேக்ஸகார்ட் 2.0 !!!

- தோர்கல் கைதியாகிட, வல்னாவோ டோர்ரிக்கின் கிழ சேக்ஸகார்ட் அவதாரைக் கண்டு வெருண்டு பனியினுள் ஓட்டமெடுக்கிறாள் ! விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் ! அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே !

Journey # 6 : (37 ஆண்டுகள் பின்னே) :

- கிழ சேக்ஸகார்ட் டோர்ரிக் 2.0 & வல்னா குடிலில் பிரசன்னமாகும் போது இள வயது டோர்ரிக் அவர்களை மிரட்சியோடு எதிர்கொள்கிறான் !

- “37 ஆண்டுகளுக்குப் பின்னே – இப்படித் தான் ஆக வேண்டுமா உனக்கு?” என்று வல்னா கேட்க – பதட்டத்தில் இள டோர்ரிக் – கிழ டோர்ரிக்கை சுட்டு வீழ்த்துகிறான்! ஆக இறந்த காலத்தின் கையில் – மாற்றம் கண்டுள்ள எதிர்காலம் மரணிக்கிறது ! பாம்பு தனது சொந்த வாலையே விழுங்கப் பார்க்கிறது !!

- இதற்கு மத்தியில் Journey # 5-ல் கைதியாகக் கிடக்கும் தோர்கல் தப்பியோடுகிறார். குடிலின் வரம்பைத் தாண்டிப் போய் விடுபவரை சிப்பாய்கள் துரத்தி வந்து பள்ளத்தாக்கில் விழுந்து செத்துப் போகிறார்கள்! தோர்கல் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே பனியில் தப்பி நடந்து செல்கிறார்!

- Back to பயணம் # 6 – செய்வதறியாது திகைத்து நிற்கும் இள டோரிக் வல்னாவிடமிருந்து மாய மோதிரத்தைப் பிடுங்கிக் கொண்டு – பின்நோக்கிச் செல்லத் தீர்மானிக்கிறான்.

- சகலத்துக்கும் காரணமான தோர்கலை இறந்த காலத்திலேயே தீர்த்துக் கட்டி விட்டால் எல்லாப் பிரச்சனைகளுக்குமே முற்றுப்புள்ளி வைத்து விடலாமென்ற திட்டத்தோடு 37 ஆண்டுகளும் சில மணி நேரங்களும் முந்தை காலத்திற்குப் பயணிக்கிறான்!

Journey # 7 – 37 years & a bit into the past :

- எல்லாம் துவக்கம் கண்ட பனிமலையில் இளம் டோர்ரிக் மோதிரத்தோடு பிரசன்னமாகி்ட – தோர்கல் தன் குதிரையோடு அங்கே ஆஜராகிடுவதற்கு முன்பாய் அவரை வீழ்த்திடும் நோக்கோடு தயாராகிறான்.

- இப்போது குடிசை தீக்கிரையான வடுக்களோடே உள்ளது ; தோர்கல் போட்டு வைத்த கீறலும் இல்லை !

- மீண்டுமே ஒரு பிங்க் அங்கி உருவ சேக்ஸகார்ட் எக்காளத்தை ஊத – அது ஒரு பெரும் பனிச்சரிவை ஏற்படுத்தி – தப்பியோட யத்தனிக்கும் டோர்ரிக்கைப் புதைத்து விடுகிறது! இம்முறையோ புதையுண்ட சடலத்தின் விரலில் அந்தப் பச்சை மோதிரம் உள்ளது ! பார்க்க பக்கம் 93; frame # 7.

- இம்முறை சேக்ஸகார்ட் அவதாரை எடுத்திருப்பதோ வல்னா ! 37 ஆண்டுகளை சேக்ஸகார்ட் வல்னாவாக வாழ்ந்து – சரியான தருணத்தில் டோர்ரிக்கைப் பழிவாங்குகிறாள்!

Cut to Journey # 5 : கைகள் கட்டப்பட்ட நிலையில் கைதியாய் ஒரு நிகர் பிரபஞ்சத்தில் நடந்து போகும் தோர்கல் – ஒரு கூரான பாறையில் தனது கட்டுக்களை உரசி அறுத்து விடுகிறார். பார்க்க பக்கம் 94 – frame 1 & 3.

- யோசித்தபடிக்கே தோர்கல் நடைபோடும் போது – அந்தக் குடில் பற்றி எரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார் !

- குதிரைத் திருடர்கள் வல்னாவை தீர்த்துக்கட்டியதொரு பிரபஞ்சத்தில் குடிசைக்கு தீயிட்டது அவன்களே. ஆனால் மாற்றம் கண்டிருக்கும் இந்த இணைப் பிரபஞ்சத்தில் குடிசை எரிகிறது தான் ; ஆனால் அதற்குத் தீயிடுவதோ சேக்ஸகார்ட் வல்னாவின் ஆட்கள் ! ஆக எக்காளம் ஊதப்படுவதோ; பனிச்சரிவு நிகழ்வதோ ; குடிசை தீக்கிரையாவதோ மாற்றங்களின்றி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நடைபெற்றே தீருகின்றன! ஆனால் அவற்றின் சூத்ரதாரிகளும், பலிகடாக்களும் காலவட்டத்துக்கு ஏற்ப மாறிடுகின்றனர் !

- சடலமாய்க் கிடக்கும் இளம் டோர்ரிக்கை சிப்பாய்கள் இழுத்துச் செல்கின்றனா ! கவனமாகப் பாருங்கள் – இந்த நிகழ்வின் சமயம் மாய மோதிரம் டோர்ரிக்கின் வசமில்லை ! சேக்ஸகார்ட்டாகத் தலையெடுத்திருக்கும் (முதிர்) வல்னாவின் விரல்களையே அலங்கரிக்கிறது. பார்க்க பக்கம் 96 – frame 7 !!

- ஆக தோர்கலைக் காப்பாற்றும் பொருட்டு – மோதிரம் தன்னிடமிருந்த காலகட்டத்திலிருந்து 37 வருடங்கள் சேக்ஸகார்ட் வல்னாவாக வாழ்ந்து டோரிக்கைப் பழிவாங்கும் பொருட்டு அந்த மலை முகட்டில் காத்திருந்து எக்காளத்தை முழங்கினாளென்று யூகித்திட வேண்டுமா ?

- வரலாற்றில் செய்விக்கப்படும் மாற்றங்கள் எதிர்கால சம்பவங்களினில் எதிரொலித்தே தீரும் ! அதே போல – எதிர்காலத்தினுள் புகுந்து விளைவிக்கும் மாற்றங்கள் இறந்த காலத்திலும் தாக்கத்தை உண்டாக்கும் என்று சொல்ல முனைவது தானா கதாசிரியரின் நோக்கம்? 

க்ளைமேக்ஸ்:

-இணையுலகில் குதிரையோ, வில்லோ, அம்போ இல்லாத தோர்கலுக்கு அவற்றையெல்லாம் வல்னாவே அனுப்பிடுகிறாள் ! எல்லாவற்றிற்கும் மூல காரணமான அந்தக் குடிலையும் எரிக்கச் செய்து விடுகிறாள்!

-இனி இணையுலகமும், நிஜ உலகமும் ஒன்றிடுமென்ற நம்பிக்கையோடு தோர்கலுக்கு மௌனமாய் விடை தருகிறாள் ! ஆக கதை துவங்கும் போது நடந்தேறும் நிகழ்வுகளும்; க்ளைமேக்ஸின் நிகழ்வுகளும் ஒரே மாதிரியானவைகளே ! கதையின் துவக்கமே க்ளைமேக்ஸ்…. க்ளைமேக்ஸே துவக்கமும் ! "ஒரோபோரோஸ்" என்பது எகிப்திய புராணங்களினொரு நம்பிக்கை ! "தன் வாலையே விழுங்க எண்ணுமொரு சர்ப்பம் ;அல்லது டிராகன் " என்பது இதன் அர்த்தம் ! முதன்முதலாய் இதனை உலகம் கண்டது 14-ம் நூற்றாண்டினில் எகிப்திய மன்னர் டுடங்காமுன்னின் சவப்பெட்டியினில் ! வாலையே வாய் தின்னுவதென்பது இயற்கையின் முழுச் சுற்றைக் குறிக்கும் குறியீடு ! ஆரம்பமே முடிவே ; முடிவே ஆரம்பம் என்பது போல !! 
By no means – இது சரியான புரிதல் என்றோ ; விடைகளைக் கண்டு விட்டேன் என்றோ நான் கோரிடப் போவதே கிடையாது ! ஆங்காங்கே சிதறிக் கிடக்கக்கூடிய கேள்விகளை உங்கள் சார்பில் தொகுத்து, சில பல குறியீடுகளின் பக்கமாய்க் கவனங்களை highlight செய்திடவும் மாத்திரமே முனைந்துள்ளேன் ! ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் open ends-களை அவரவர் புரிதலுக்கேற்ப நிரப்பிப் கொள்ளலாமெனும் போது நிச்சயமாய், ஒவ்வொரு கட்டத்திலும் இன்னொரு விளக்கமும் சாத்தியமாகிடலாம் ! முதற்புள்ளியில் எக்காளத்தை ஊதுவதே வல்நாவாக ஏனிருக்கக் கூடாதென்ற கோணத்திலும் யோசிக்கத் தான் செய்வோமா ? அட...கிழியாத சட்டைகள் ஏது சிண்டைப் பிய்க்கும் வேளைகளில் ?

Parallel Universes சாத்தியமாகிடும் போது - parallel சிந்தனைகளுமே ; parallel கதைசொல்லலுமே சாத்தியமாகாதா ? இந்த வரியினை மறுக்கா வாசித்த கையோடு மீண்டுமொருமுறை இந்த சிகரத்தினில் ஏறிடத் தான் முனைந்து பாருங்களேன் folks ? 

எது எப்படியோ – காலமென்பது கடவுளர்களின் கரங்களில் தங்கியிருப்பதே உத்தமம் என்பதை நானும் பலமாய் அங்கீகரித்து விட்டுக் கிளம்புகிறேன் - அடுத்த தலைப்பினுள் !!

CHENNAI BOOKFAIR PHOTOS & OTHER UPDATES LATER TONIGHT ! மிடிலே இப்போதைக்கு !! 

Bye now all ! See you around !! 

176 comments:

  1. நண்பர்கள் J ; செனா அனா ; ஸ்ரீராம் & others : சிரமம் பாராது உங்களின் விளக்கங்களை இங்கே கொணர்ந்திட முயற்சித்திடுங்களேன் - ப்ளீஸ் !

    ReplyDelete
  2. மொதல்லருந்தா மறுபடியுமா

    ReplyDelete
    Replies
    1. மொதல்ல படிச்சிட்டு வர்றேன் நக்கீரரோட பதிவு பக்கத்தை.

      Delete
  3. யம்மாம் பெரிய மாத்திரை..

    ReplyDelete
  4. No-10
    நம்பர் போட்டுட்டு ஒடிடனும்

    ReplyDelete
  5. சார், நாவல் அத்தியாயங்கள் போல அனாயசமாக எழுதியிருக்கிறீர்கள். நீண்ட இடைவெளிக்குப்பிறகு நீ...ண்டதொரு பதிவு!!

    ReplyDelete
  6. Replies
    1. பிழைக்கத் தெரிஞ்ச பிள்ளை! :)

      Delete
    2. ஒரு வாரத்துக்கு அனைவருக்கும் அட்வான்ஸ் குட்நைட்..:-))

      Delete
    3. YMCA லயன் காமிக்ஸ் ஸ்டால் வாசலில் இருந்து கீழ்பாக்கத்துக்கு ஸ்பெஷல் பஸ் விட்டு இருக்காங்களாம்.தோர்கல் ஸ்பெஷல் அப்பிடின்னு . board போட்டிருக்காம்.

      Delete
  7. Iniya Pongal valthugal anaivarkum.

    ReplyDelete
  8. காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் விடுமுறை பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..

    ReplyDelete

  9. j12 January 2019 at 15:26:00 GMT+5:30
    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    சிகரங்களின் சாம்ராட் - சீக்ரெட்களின் அலசல்

    1) ஓரிஸால்கம் என்ற உலோகத்தால் செய்யப்பட்ட ஓரோபோரஸ் (பாம்பு ) மோதிரம்,கைவசம் வைத்திருந்து அட்லாண்டிஸ் கண்டத்தில் இருக்கும் அந்த குடிசையில் இருந்தால் தான் காலப்பயணம் எனப்படும் parallel universeக்கு போக வர நுழைவு வாயில் என்பது இக்கதையில் நிதர்சனமாக சொல்லப்பட்டுள்ளது .

    2) வேறு இடத்தில் காலப்பயணம் சாத்தியமில்லை. வல்னாவின் தாத்தா இறுதியாக (விடுவிக்கப்பட்டபின் )வந்தடைந்த இடம் அந்த குடிசையில்.

    3)முதற்படியாக காலப்பயணம் செய்ததால் மட்டுமே அவரால் வல்னாவைத்தேடி கருப்புமுடி இளைஞன் வருவான் என்று சொல்ல முடிந்தது.

    4) மோதிரம் கிடைக்கப் பெற்ற தோர்கல் எதிர்காலம் சென்று கிழட்டு சேக்ஸ கார்டை சந்திக்கிறான்.

    5) மோதிரம் கைவசமானதால் பனிக்காலக்குடிசையிலிருந்து வெளியேறி புல்வெளிகள் பரப்பில் 'ஙேங்ஙேங்ஙேஏஏஏஏ' என்று முழி பிதுங்குகிறான்.ஏனென்றால் மோதிரம் என்ற காலப்பயண வாகனம் அவன் அறிந்திராத ஒன்று.

    6) கடந்த கால இளம் வல்னாவின் மேலுள்ள மையலால் அவளை அன்றிருந்த மாதிரியே இக்காலத்திற்கு கடத்தி வர தோர்கலை மிரட்டுகிறான் (பணயம்- ஆரிசியாவும் மகனும் ). இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அப்போது மோதிரத்தின் காலப்பயண மகிமை பற்றி கிழட்டு டோரிக் அறியவில்லை.

    7)மனைவி மகனை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கும் தோர்கல் கடந்த காலம் செல்ல வேண்டிய நெருக்கடி .அவன் போகும் போது இளம் டோரிக் மற்றும் வல்னாவை கொல்ல கத்தி ஓங்கும் பாதகனிடமிருந்து அம்பு எய்து வல்னாவை மரணத்திலிருந்து மீட்டு காலக்கட்டத்தை மாற்றுகிறான். ( நிகழ்கால தோர்கலிடம் அம்பு வில் மட்டுமே உள்ளதே தவிர கத்தியில் லை).


    Reply
    Replies
    Reply

    j12 January 2019 at 15:41:00 GMT+5:30
    8) இங்கு தான் சென்ற கால டோரிக் , வல்னா மற்றும் தற்கால தோர்கல் உட்கார்ந்து பேசும் பொழுது வல்னா மோதிரத்தின் ரகசியத்தை அகஸ்மத்தாய் வெளியிடுகிறாள். அந்த மோதிரத்தை தோர்கலிடமிருந்து பெற்று அணிந்து கொள்ளும் வல்னாவுக்கு காலத்தை மாற்றும் வல்லமை கை வசமாகிறது.


    j12 January 2019 at 16:55:00 GMT+5:30
    9) ஆனால் சேக்ஸ கார்ட் கிழட்டு டோரிக், பணம் பதவி படை அதிகாரம் தங்கம் - இதற்கு ஆசை வெறி கொண்டு தோர்கலை கொல்ல முனைகிறான். தன்னுயிரை - இறந்த காலத்தை மாற்றி மீண்டும் மீட்டுத்தந்த தோர்கலை காப்பாற்ற உடனே காலத்தை மாற்றிவிட தீர்மானம் கொள்கிறாள் வல்னா.

    10) அதன்படி நடப்பதே மீதிக்கதை.
    இளம் டோரிக் - கிழட்டு கோரிக்கைக் நிதானம் தவறி கொன்று விடுகிறான்.
    ஆக இளம் டோரிக்கால் சிகரங்களின் சாம்ராட் பதவி ஏற்க முடியாது.

    எனவே இளம் டோரிக் பனிச்சரிவில் உயிரிழக்கும் எதிர்காலத்தை ஏற்படுத்தி சேக்ஸகார்ட் என்ற எதிர்கால கேரக்டரை ஏற்றுக்கொள்கிறாள்.
    எதிர்காலம் தகவமைக்கப்பட்டதால் கிழட்டு டோரிக் இன்னார் தான் என்று இந்நாள் படைகளுக்கு தெரியாது என்பதோடு தோர்கலும் எதிர்காலத்தில் காப்பாற்றப்பட்டு விடும் நோக்கம்.

    ஆக அட்லாண்டிஸ் குடிசையை தீக்கிரையாக்கி காலப்பயண இடத்தை தகர்க்கிறாள்.

    தோழர்கள் தன்வழியே தொடர்கிறான்.


    j12 January 2019 at 17:15:00 GMT+5:30
    இளம் டோரிக் வலுக்கட்டாயமாக பாம்பு மோதிரத்தை வல்னாவிடமிருந்து பிடுங்கி தோர்கலின் எதிர்காலப் பயணப்பாதையில் காத்திருக்கிறான்.

    ஆனால் இப்படியெல்லாம் நடக்க முன்கூட்டியே காலத்தை வடிவமைத்த வல்னா திட்டமிட்டு விடுகிறாள்.
    எப்படி ?

    கொம்பு ஊதுவது கிழ வல்னா தான்.
    எதற்கு?

    இளம் டோரிக் பனிச்சரிவில் சிக்கி இறப்பதற்கு.

    தோர்கலை காப்பாற்றி ( கடந்த காலத்தில் இறந்து விட்ட தன்னை உயிர்ப்பித்து) நன்றிக்கடன் தீர்ப்பது.

    ஆக இதெல்லாம் முன்கூட்டியே எதிர்காலத்தை மாற்றாமல் சாத்தியமில்லை.


    ReplyDelete
    Replies
    1. j12 January 2019 at 17:55:00 GMT+5:30
      கதையில் இரண்டாம் பக்கத்தில் எக்காளம் கொம்பு ஊதுவது கிழட்டுவல்னா தான்

      Delete
    2. j12 January 2019 at 17:24:00 GMT+5:30
      வெரி பிம்பிள்

      இளம்வல்னா கிழட்டுசேக்ஸகார்ட் ஆக முடியாது.

      ஆகவே எதிர்காலத்தையே முற்றிலும் மாற்றிக் கொண்டு 37 வயது முதுமை கொள்கிறாள்.
      சேக்ஸ கார்ட் என்ற (இறந்துவிட்ட)வெற்றிடத்தை நிரப்ப தானே அந்த இடத்தை நிரப்புகிறாள்.

      இப்பொழுது நடந்த அனைத்தும் அறிந்த ஒரே நபர் வல்னா மட்டுமே.


      j12 January 2019 at 17:33:00 GMT+5:30
      பாம்பு மோதிரம் கைவசம் இருக்கும் போதே - வல்னா இதை தீர்மானித்து விட்டு எதிர்காலத்தில் நடப்பதை ( மோதிரத்தை டோரிக் கைப்பற்றுவது முதற்கொண்டு) முதலிலேயே தீர்மானித்து தோர்கலை முத்தமிடுகிறாள்.

      Delete
  10. j12 January 2019 at 18:47:00 GMT+5:30
    வல்னாவிற்கு மோதிரம் கையில் இருக்கும் போதே தோர்கலை -டோரிக்கின் மரண பேராசையிலிருந்து காப்பாற்றத் திடீடமிடுவதே அந்த யுக்தி.


    j12 January 2019 at 18:57:00 GMT+5:30
    காலம் என்பது ஆண்டவனின் கட்டுப்பாட்டில் இருப்பது உத்தமம் என்பது கிழட்டு வல்னாவின் வாக்கு.அதைத்தான் கெய்ரோய்ட் வல்னா சொன்னதாக சொல்கிறார்.


    j12 January 2019 at 18:37:00 GMT+5:30
    பக்கம் 1 - சேக்ஸகார்டிடமிருந்து தப்பி வரும் அடிமை டோரிக்

    பக்கம் 2 - தோர்கலை கொல்ல வந்து வல்னாவின் எக்காளம் ஏற்படுத்திய பனிச்சரிவில் தப்பிக்க எத்தனிக்கும் இளம் டோரிக்.பக்கம் 53ம் பக்கம் 93 மற்றும் பாருங்கள் புரியும்.


    குடிசைக்குள் கடந்தகாலம்
    வெளியே எதிர்காலம்

    வல்னாவின் எதிர்காலப் (பயணத்தில்) திட்டமிடல்

    வல்னாவின் தாத்தா எதிர்காலப் பயணம் செய்த முதல் நபர்.

    மோதிரம் எதிர்காலத்திற்கு சென்றது வல்னா தாத்தாவின் எதிர்காலப் பிளானிங்.

    முதலில் நாம் பார்ப்பது டோரிக் கிழவனாகி விட்ட சேக்ஸ கார்ட்.
    இறுதியில் பார்ப்பது சேக்ஸகார்ட்டாகிவிட்ட கிழட்டு வல்னா.

    இப்பொழுது கதை புரிந்திருக்குமே நண்பர்களே....

    j

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார்

      அல்லாத்தையும் copy paste பண்ணீட்டேன்

      Delete
    2. ஒன்று வல்னாவே அனைத்தையும் ஆரம்பித்து முடித்துமிருக்கலாம்....


      அல்லது இன்னொரு கோணம் உள்ளது.
      எடிட்டர்சார்
      இப்படியூம் இருக்கலாமே.


      வல்னாவை சிறு குழந்தையாக தூக்கி வந்து வளர்த்த அவளது தாத்தா தான் அனைத்திற்கும் சூத்ரதாரி.

      காலப்பயணம் பற்றி அறிந்தவர்.
      பாம்பு மோதிரம் அமைத்தவர்.
      வல்னாவின் மேல் கொண்ட அதீத பாசத்தால் அவளது எதிர்காலத்தையே மாற்றி அமைத்திட வாய்ப்புள்ளதல் லவா.
      பக்கம் 79 கடைசி இரண்டு பேனல்கள் பார்க்க.

      மோதிரத்தை எதிர்காலத்திற்கு அனுப்பி விட்டதாக கூறுவது.

      மற்றும் கருப்பு முடி இளைஞன் அதை திரும்ப கொண்டு வந்து தருவான் என்று கூறுவது.

      Delete
    3. அட்லாண்டிஸ் கண்டத்தின் ரகசியமான காலப் பயண இலக்கை கண்டு பிடித்து அங்கே குடிசை போட்டு வல்னாவை அங்கே வளர்த்ததும் அவளது தாத்தா தான்.
      ஆகவே தாத்தா தி கிரேட் என்றாகி விடுகிறதே.

      Delete
  11. இணை பிரபஞ்சத்திலேர்ந்து இப்பதான் நிகழ்காலத்திற்கு வந்துள்ளேன்.

    படிச்ச பிறகு நிகழ்காலத்திலேயே இருக்கலாமா? வேறொரு காலத்திற்கு ஷிப்ட் ஆகலாமானு முடிவு பண்ணிக்கலாம்.

    ReplyDelete
  12. எனக்கு புலப்பட்ட விதத்தில் எந்த வித முன் தயாரிப்பும் இன்றி கதையை அணுக முயற்சிக்கிறேன். மொத்த பதிவுகளையும் இடும் வரை பொறுமை காக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சிகரங்களில் சாம்ராட்.

      தோர்கலின் சமகாலம்.

      அத்தியாயம் 1.

      தோர்கல் தன்னுடைய சமகாலத்தில் டோரிக்குடன் பின்னோக்கி பயணிக்கிறான்.

      அத்தியாயம் 2.

      வல்னாவின் சமகாலத்தில் டோரிக்கும்,தோர்கலும் எதிர்காலத்தில் முன்னிருந்து வந்தவர்கள்.டோரிக் வல்னாவின் மீது கண்டதும் காதல் கொள்கிறான்.
      தோர்கல் தான் காண்பது மாயை இல்லை என்பதை உறுதிப்படுத்த அங்குள்ள தூணில் கீறல் ஏற்படுத்துகிறார்.
      வல்னாவின் தாத்தா இறக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன் கூறியது போல் எதிர்காலத்திலிருந்து தன்னை அழைத்துப் போக வரும் தோர்கல் மீது வல்னாவிற்கு காதல் ஏற்படுகிறது.

      அத்தியாயம் 3.

      வல்னாவின் சம காலத்தில் இருந்த தோர்கல் மறைந்து சேக்ஸகார்ட்டை சந்திக்கிறான்.

      அங்கு சேக்ஸகார்டாக வாழ்ந்து வரும் கிழம் டோரிக் என்பதை அறிகிறான்.தோர்கலும்,டோரிக்கும் தங்களுடைய சமகாலத்தில் இருந்து பின்னோக்கி பயணித்து வல்னாவை சந்தித்த பின் தோர்கல் மறைந்து விட்டான்.ஆனால் அங்கிருந்த வல்னாவும்,டோரிக்கும் ஆறு மாதங்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். அதுவே இதுவரையிலும் அடிமையாக வாழ்ந்த டோரிக்கின் வாழ்வில் வசந்தம் காலம்.

      ஆனால் ஆடுகளை திருட வருபவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி வல்னா இறந்து விட,வெறுப்பு வெ,குரோதமும கொண்ட கொடூர விலங்காக (சேக்ஸகார்ட் அவதாரமாக) மாறிய உண்மையை கூறுகிறான்.அங்கும் தூணில் உள்ள தன்னுடைய கீறல் மூலமாகவும்,இரு விரல்கள் இழந்த சேக்ஸகார்ட்டின் கையை பார்த்தும் இந்த உண்மையை தோர்கல் உணர்ந்து கொள்கிறான்.

      சேக்ஸகார்ட் தன்னுடைய கடந்த காலத்துக்கு சென்று வல்னா இறக்கும் அந்த நிகழ்வை மாற்றி அமைக்க மிரட்டி பணிய வைக்கிறான்.தன்னுடைய கடந்த காலத்தில் இறந்து போன வல்னாவை காப்பாற்றி (அந்த நிகழ்வை மாற்றி) தன்னிடம் வல்னாவை கொண்டு வந்து சேர்ப்பிக்குமாறு தோர்கலை பணிய வைக்கிறான்.
      அத்தியாயம் 4.

      சேக்ஸகார்ட்டின் கடந்த காலத்தில் நுழைந்து வல்னாவை காப்பாற்றி; டோரிக் காலத்தில் கொடூரமான சேக்ஸகார்ட்டாக மாறும் வாய்ப்பை ஒட்டு மொத்தமாக தடுத்து விடுகிறார். இப்பொழுது நோய்களின் சம காலத்தில் சேக்ஸகார்ட் உருவாகும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. காலத்தின் நிகழ்வை யார் மாற்றியமைத்தாலும் அது தனெக்கென புதிதாக ஓர் வழியை உருவாக்கி கொள்ளும்.இந்த நிகழ்வு இவ்விதம் நிகழ்ந்தால் தோர்கலின் சமகாலத்தில் வேறு யாரோ ஒருவரை சேக்ஸகார்ட்டாக இயற்கை உருவாக்கும்.அந்த பனிச் சரிவில் யாரோ ஒருவர் உயிரிழந்தே ஆக வேண்டும்.இது இயற்கையின் நியமனத்தில் நிகழ்தே ஆக வேண்டிய எழுதப்பட்ட விதி.
      தோர்கல் தான் மீண்டும் திரும்ப நேர்ந்த காரணத்தை கூறுகிறார்.டோரிக்கின் குறுக்கு புத்தி மீண்டும் சலனப்படுகிறது.அதிகாரம் பொருந்திய சேகஸகார்ட்டாக வாழ ஆசைப்படுகிறான்.இங்கு ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் வேறுவிதமாக தீர்வு காண முடியும்.இருந்தும் டோரிக்கின் பேராசையால் மிரட்டப்பட்டு வல்னாவை சேக்ஸகார்ட்டிடம் கொண்டு வந்து சேர்க்கிறார் தோன்றல்.

      --தொடரும் --









      Delete
    2. அத்தியாயம் 5.

      வல்னாவின் சமகாலத்தில் இருந்து முன்னோக்கி பயணித்து சேக்ஸகார்ட் வாழும் பூமியில் தோர்கலும் வல்னாவும் நுழைகிறார்கள்.அங்கு தோன்றல் சிறை பிடிக்க படுகிறான்.வல்னா கிழவனாக விகாரமாக மாறி இருக்கும் சேக்ஸகர்டை அழைத்து கொண்டு டோரிக் முன் நிறுத்துகிறாள்.டோரிக் குழப்பத்தில் சேக்ஸகர்டை கொன்று விட,இப்பொழுது தோர்கல் இருக்கும் காலத்தில் இயற்கை வேறு யாரோ ஒருவரை சேக்ஸகார்ட்டாக உருவாக்கியிருக்கும்.தோர்கல் எந்த வித ஆபத்தும் இன்றி பயணித்துக் கொண்டிருப்பான்.அல்லது வேறு ஏதோவொரு காரணத்துக்காக ,வேறு ஏதோவொரு சேக்ஸகார்ட்டால் சிறைபிடிக்கப்பட்ட தன் மனைவி,குழந்தைகளை மீட்க போராடிக்கொண்டிருப்பான் இந்த பிரபஞ்ச போராளி.
      ஆனால் 86 ம் பக்கம் கடைசி பேனலில் வல்னாவின் வசனத்தை கவனிக்கும் போது அங்கும் டோரிக்கின் மரணம் நிகழ்வது ஏற்கனவே காலத்தில் எழுதப்பட்ட விதி என்பதை உணரலாம்.அதே சமயம் தோர்கல் வாழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் பனி சரிவு ஏற்பட்டு ஏதோவொரு அபலையின் உயிரும் கட்டாயம் பிரியும் இது நிச்சயிக்கப்பட்ட இயற்கையின் நியமனம்.
      டோரிக், வல்னாவின் உரையாடல் (89 ம் பக்கம்) மூலம் டோரிக்கிற்கு அங்கு ஏதோ ஒரு அபாயம் உருவாகியுள்ளதை உணரலாம்.அப்படி ஆபத்து ஏற்படாது என்பதை உணராமல் இருந்தால் அங்கேயே வல்னாவோடு வாழ்ந்து விடுவான்.டோரிக்கிற்கு வரும் கேடு வல்னாவால் முன்கூட்டியே அறிந்ததால் தோர்கலை பழி தீர்க்க தோர்கல் வாழும் காலத்துக்குள் நுழைகிறான்.தோர்கலை கொன்றொழிக்க காத்திருக்கும் டோரிக் பனிச் சரிவில் சிக்கி உயிரிழக்கிறான்.அப்போதும் மரணம் மட்டுமே மாற்றம் காணத விதியாக தொடர்கிறது.டோரிக் இப்பொழுது இங்கு வராவிடில் தோர்கலின் காலத்தில் பனி சரிவில் சிக்கி யாராவது இறந்திருப்பர்.அப்போது அந்த சடலத்தின் கைகளில் மோதிரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.ஆனால் வல்னாவின் காலத்தில் வாழ்ந்து வரும் டோரிக்கும் எந்த விதத்திலாவது மரணத்தை சந்திக்க நேரிடும்.தோர்கலுடைய காலத்துக்குள் தப்பி வந்ததால் டோனிக்கு பனிசரிவில் சிக்கி இறந்து விடுகிறான்.கைகளில் மோதிரம் உள்ளது.



      கதையினுடைய கடைசி அத்தியாயத்துக்குள்(க்ளைமேக்ஸ்) நுழைவதற்கு முன் கற்பனையின் உச்சம் தொட்ட படைப்பின் புதிரான சிலவற்றை அணுகலாம்.


      ---தொடரும்---

      Delete
    3. சிகரங்களில் சாம்ராட்.



      ஒட்டுமொத்தமாக
      காலத்தை மாற்றியமைக்கும் முயற்சிக்கு தொடக்கம் தந்தது வல்னாவினுடைய தாத்தா.வல்னாவும், அவளுடைய தாத்தாவும் தோர்களுக்கு இறந்த காலத்தில் வாழ்ந்து வருபவர்கள் (இதை வேறொரு இணை பிரபஞ்சம் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி திரு செனா அனா மற்றும் எடிட்டர் அவர்களுக்கு).

      தன் அந்திம காலத்தை உணர்ந்த மகா பெரியவர் தன் பேத்தி மீது கொண்ட அதீத அன்பால் வல்னாவை பாதுகாக்கும் பொருட்டு ஒரு தலைசிறந்த ஆண்மகனிடம் கைசேர்க்க நினைக்கிறார். அது தனக்கும் எதிர்காலத்தில் வாழும் தோர்கல்தான் என்பதை உணர்ந்து,தோர்கல் அட்லாண்டிஸ் கண்டத்தை வந்தடையும் நாளில் காலவாகனம் எனும் ஓரோபோரஸை எதிர்காலத்துக்கு அனுப்புகிறார்.சம காலத்தில் டோரிக்கும்,தோர்கலும் அந்த குடிசைக்குள் நுழையும்போது அந்த மோதிரம் தோர்கலுடைய
      கண்களுக்கு மட்டுமே புலப்படும்.அதில் அவன் மட்டுமே பயணித்து வல்னாவின் இடத்தை அடைய முடியும்.ஆனால் அங்குதான் விதி என்ற மாற்றவே இயலாத இயற்கை வேறொன்றை திட்டமிடுகிறது.அந்த குடிசையின் உத்திரம் சரிகிறது.டோரிக் தோர்கலை கீழே தள்ளிவிட்டு,தரையில் விழுந்து பாதுகாத்துக் கொள்கிறான்.ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள தரையில் விழுந்து விடுவதுதான் மிகச் சாதுர்யமான வழிமுறை. பல மாண்புமிகு பெரியோர்கள் தங்களுடைய தலைவரின் பாதங்களில் விழுந்து வணங்குவதன் அடிப்படை உளவியல் உண்மை இதுதான்.தன்னை பாதுகாக்க வேண்டும் என்றுதான்.
      அந்த அதிர்ச்சியில் தோர்கல் கண்களை மூடுகிறான்.காலப் பயணம் நிகழ்கிறது,ஆனால் தோர்கலின் மீது விழுந்து கிடந்ததால் டோரிக்கும் தேவையற்ற விதத்தில் அதில் சேர்ந்து கொள்கிறான். கண்களை மூடி மனதை வெறுமை அடைய வைத்தால் மட்டுமே கால பயணம் சாத்தியம்.தோர்கல் கண்களை மூடும் போது மட்டுமே கால பயணம் நிகழ்வதை கதையோட்டத்தில் பல இடங்களில் காணலாம்.இது வல்னாவுக்கு அவளுடைய தாத்தாவின் மூலம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும்.இந்த அரிய உண்மை வல்னாவோடு,டோரிக் ஆறு மாத காலம் வாழ நேரிடும் போது அவளால் டோரிக்கிற்கும் தெரிந்து விடுகிறது.வல்னாவினுடைய தாத்தா நினைத்தது தோர்கல் வரவேண்டும் என்று.ஆனால் விதி தோர்கலோடு,டோரிக்கையும் இணைத்து விட்டு தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.அதே போல் காலப்பயணம் பகலில் மட்டுமே ஏற்படுவதையும் கதை நெடுக உணர முடியும்.

      நிகழ்கால பிரபஞ்சம்,இறந்த,எதிர்கால பிரபஞ்சங்களுக்குள் பயணித்தாலும் மாற்றம் இல்லாமல் நிகழ வேண்டிய இயற்கையின் பொது விதிகள் சிலது.


      1.பனிச் சரிவு உறுதியாக ஏற்படும்.

      2.அந்த பனிச் சரிவில் ஏதேனும் ஓர் அபலையின் உயிர் பறிக்கப்படும்.

      3.அந்த குடில் எந்த வகையிலாவது அழிக்கப்படும்.

      4.டோரிக்கின் மரணமும் தவிர்க்க முடியாதது.
      இது இயற்கை விதியில் மாறாது .காலத்தில் பயணித்து ஒன்றை மாற்ற முற்பட்டால் வேறொரு வகையான விபரீதமான போக்கில் இயற்கை தன்னை தகவமைத்துக் கொள்ளும்.

      மேலும் உள்ளது பொறுமையாக இருங்கள்.


      ---தொடரும்---

      Delete
    4. சிகரங்களின் சாம்ராட்.


      வல்னாவினுடைய தாத்தாவுக்கு(அவருடைய நிகழ் காலத்திலிருந்து(அல்லது நிகழ் பிரபஞ்சத்திலிருந்து) தோர்கலின் எதிர்காலத்துக்கு ஓரோபோரஸை அனுப்ப எப்படி சாத்தியப்பட்டது.

      தன்னுடைய இறுதிக்கட்டத்தை நெருங்கிய அந்த முதியவர் ஓரோபோரஸை பயன்படுத்தி தோர்கல் வாழும் பிரபஞ்சத்தில் நுழைகிறார்.தோர்கல் அட்லாண்டிஸை வந்தடையும் சமயத்துக்கு முன்பு அங்கு அந்த மோதிரத்தை வைத்து விடுகிறார். பிறகு இன்னொரு மோதிரத்தை பயன்படுத்தி (ஓரோபோரஸ் கால வாகனம்) தன்னுடைய நிகழ்காலத்துக்கு மீண்டும் திரும்பி வருகிறார்.நடந்தனவற்றையும்,இனிமேல் நடப்பனவற்றையும் தன் அன்பு பேத்தியின் மரணப்படுக்கையில் கூறுகிறார்.ஆனால் இவை அனைத்துமே முதுமையின் இருப்பு கொள்ள இயலாத சிந்தனைகளின் தடுமாற்றமாக வல்னா எடுத்துக் கொள்கிறாள்.

      தோர்கலும்,டோரிக்கும் எதிர்காலத்தில் இருந்து தன்னுடைய நிகழ்காலத்துக்குள் நுழையும்போது மெதுவாக இதன் உண்மை புரிய தொடங்குகிறது.




      இறுதி அத்தியாயம்(க்ளைமேக்ஸ்)


      கிழ சேஸக்கர்ட்டாக உரு மாறிவிட்ட டோரிக்கை அழைத்து வந்து தன்னுடைய நிகழ் பிரபஞ்சத்தில் வாழ்ந்து வரும் டோரிக்கின் முன்பாக வல்னா நிறுத்துகிறார்.தோர்களும்,வல்னாவும் இணைந்து ஏதோ தனக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக நினைத்து சேஸகர்ட்டை கொல்கிறான்.இறுதியில் விரல்களை பார்த்து உண்மையை உணர்கிறான் டோரிக் .அங்கு இருப்பது உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தோர்களின் எதிர்காலத்துக்கு பயணித்து;இவை அனைத்துக்கும் தொடக்கம் தந்த தோர்கலை பழிவாங்க காத்திருக்கிறான்.ஆனால் இதன் ஒட்டுமொத்த சூத்திரதாரி வல்னாவினுடைய தாத்தா.அவர் தோர்கலை தன்னுடைய நிகழ் காலத்துக்குள் அழைத்துவர நினைகத்து செயல் திட்டம் வகுத்து வைக்க;விதி வேறொரு விதமாக டோரிக்கையும் உடன் இணைந்து விடுகிறது.

      டோரிக் வல்னாவின் மீது காதல் கொள்ள,வல்னாவோ தோன்றல் மீது நேசம் வைக்கிறாள்.இந்த காவியத்தில் உள்ள அசாத்தியமான முக்கோண காதல் கதையை பல இடங்களிலும் மிளிரும் விதமாக வான்ஹாம் கையாண்டிருப்பார்.
      இப்பொழுது தோர்கலுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும்.அதற்கான யுக்தி ஒன்றை சிந்திக்க வேண்டும்.வல்னா தன்னுடைய தாத்தா பயன்படுத்திய இரண்டாவது ஓரோபோரைஸை பயன்படுத்தி தோர்கலின் எதிர்காலத்துக்குள் நுழைகிறாள்.சேஸக்கார்ட்டாக அவதானித்து எக்காளத்தை முழக்கம் செய்து,பனி சரிவை ஏற்படுத்தி கோரிக்கை காத்திருந்து பழி வாங்குகிறாள்.


      இந்த விதமாகத்தான் வழக்கமான கதாசிரியர்கள் கதையை நிறைவு செய்வார்கள். ஆனால் இது வான் ஹம் உடைய உச்சம்.அவர் இதை அணுகிய விதம் பிரமிப்பாக திருப்பம் உடையது.
      --- தொடரும்---





      Delete
    5. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
      சிகரங்களின் சாம்ராட்.


      தன்னுடைய தாத்தா பயன்படுத்திய இரண்டாவது காலவாகனத்தை வல்னா பயன்படுத்துகிறாள். அதில் பயணித்து தோர்கலின் எதிர்காலத்தில் வாழும் டோரிக் பாலகனாக இருக்கும் காலகட்டத்துக்கு சென்று சிகரங்களின் மன்னனாக உருமாறி பத்து வயது சிறுவனான கோரிக்கை அடிமைப்படுத்துகிறாள்.சமையல் கட்டில் எடுபிடியாக,உலைக்களத்தில் சிற்றாளாக பணியமர்த்த படுகிறான்.

      பின்னர் தப்பிச் செல்லும் டோரிக் தோர்கலோடு காலத்தில் முன்,பின்னாக பயணித்து,தன்னுடைய இரு விரல்களையும் இழந்து,வல்னாவினுடைய மோதிரத்தை ,அணிந்து கொண்டு பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறான்.சேக்ஸகர்ட்டாக உருமாறி விட்ட வல்னா பனிச் சரிவை ஏற்படுத்தி வஞ்சம் தீர்த்துக் கொள்கிறாள்.
      தன்னுடைய தாத்தா வினால் ஏற்படுத்தப்பட்ட குளறுபடியான கால வட்டத்தை வல்னா நிறைவு செய்கிறாள்.தோர்கல் தன்னுடைய கடந்த காலத்தில் தவற விட்ட உடைமைகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு;தன்னிடமிருந்து கடந்த காலத்தில் டோரிக் அபகரித்து வந்த ஓரோபோரஸை மீட்டுக் கொள்கிறாள்.இப்பொழுது தன் தாத்தாவின் உண்மையான இரண்டு ஓரோபோரஸ் கால வாகனமும் பேத்தி வல்னாவிடம் வந்து விட்டது.

      கதை முடிந்தது போல் இருந்தாலும் படைப்பாளி(தெய்வ பிறவி) இதை நிறைவு செய்யவே இல்லை.
      இரண்டு டோரிக்கு மட்டுமே இறந்திருக்கிறார்கள்.இன்னொரு டோரிக்கும் கதை பயணத்தில் உண்டு.அவனும் மரணிக்கும் விதமாக கதை பயணிக்கும்.இயற்கையின் விதியும் அதுதான்.



      ஆனால் க்ரிஸ் ஆப் வால்நா வுக்கு இளமை பறிபோனதற்கு இந்த கதைத் தொடரிலேயே வழித்தடம் உள்ளது. அதைப்பற்றி இன்னொரு நாளில் தொடர்வோம்.65 ம் பக்கத்தில் உள்ள கால வேறுபாடுகளுக்கான வழியையும், அந்த கதைத்தடத்துக்கான வழியும் ஒன்று என்பதோடு இப்போதைக்கு நிறைவு செய்வோம்.விரைவில் மீண்டும் சந்திப்போம்.

      அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

      Delete
    6. ஆவ்!!
      வல்னாவின் தாத்தா இரண்டு ஓரோபோரஸ் மோதிரங்களை வைத்திருந்தாரா?!!!!

      Delete

    7. டோரிக் வல்னாவினுடைய கரங்களில் இருந்து அந்த மோதிரத்தை பறித்து வந்தபின்;வல்னா கடந்த காலத்தில் இருந்து தோர்களின் எதிர்காலத்துக்குள் நுழைய அது ஒன்றே சாத்தியமான வழி.
      இரண்டாவது வல்நாவினுடைய தாத்தா ஓரோபோரஸை எதிர்காலத்துக்கு அனுப்பி வைப்பதற்கும் நம்பத்தகுந்த வழிமுறை அதுவொன்றுதான்.

      Delete
    8. ////ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள தரையில் விழுந்து விடுவதுதான் மிகச் சாதுர்யமான வழிமுறை. பல மாண்புமிகு பெரியோர்கள் தங்களுடைய தலைவரின் பாதங்களில் விழுந்து வணங்குவதன் அடிப்படை உளவியல் உண்மை இதுதான்.தன்னை பாதுகாக்க வேண்டும் என்றுதான்.////

      ஹா ஹா!! உளவியல் ரீதியிலான விளக்கம்!!
      ப்ளூகோட்ஸ் பட்டாளத்தில் ஸ்கூபி அடிக்கடி குதிரையிலிருந்து தரையில் விழுவது ஞாபகத்துக்கு வருகிறது!!

      இனி ஆபீஸிலிருந்து வந்து வீட்டிற்குள் நுழையும்போது கூட, தரையோடு தரையாக ஊர்ந்து செல்லத் திட்டமிட்டிருக்கிறேன்! :)

      Delete
    9. சிகரங்களில் சாம்ராட்.



      கதையோடு தொடர்புடைய கூடுதலான தகவல் ஒன்றையும் சுட்டிக்காட்ட விழைகிறேன்.


      வல்னாவினுடைய தாத்தா நமக்கு அந்நியப்பட்ட மனிதரல்ல.இதே கதைத் தொடரில் வரும் ""முதல் பனி"",ஹோல்ம் கங்கா கதைகளில் இடம் பெற்ற மகாப் பெரியவர் ஹரல்ப் தான் அது.பார்க்க பக்கம் (23 மற்றும் 29)அந்த கதைகளில் அவருடைய பங்களிப்பு ஏற்கனவே இடம் பெற்றுள்ளது.இளம் தோர்கலை பனியிலிருந்து மீட்டு வரும்போது உடன் வரும் வழிப்போக்கன் வல்னாவினுடைய தாத்தா தான்.

      இவர் எந்தவிதத்தில் சிகரங்களின் சாம்ராட்டில் இணைக்கப்பட்டிருக்க முடியும் என்பதையும் இனி வரும் பதிவுகளில் விளக்குகிறேன்.அந்த பனிமலையில் பல மர்மங்களும்,புதிர்களும் உள்ளது.

      Delete
  13. ஆனால் முதல் காலப்பயணம் எதனால் நடந்தது என்பதற்கான விளக்கம் நீங்கள் கொடுக்க வில்லையே?

    ReplyDelete
  14. என்ன?
    என்ன?
    புரிஞ்சுதா ?
    ம் ..
    மட்டை க்கு ரெண்டு கீத்தா ..தேங்காயைப்போட்டு உடைச்சி மாதிரி ..
    அப்படிதான் எதிர்பார்த்தேன் ..ஆனா..
    13ம் தேதி..?
    12ம் தேதியே ..
    அப்புறம் என்ன ..சந்தோசம்தானே ?
    ஒரு விதத்திலே ..
    எந்த விதத்திலே
    இந்த மாசம் ஹேர்கட் பண்ற செலவு மிச்சம் .

    ReplyDelete
    Replies
    1. ////இந்த மாசம் ஹேர்கட் பண்ற செலவு மிச்சம் .////
      ஹாஹா!!

      இதேமாதிரி மாசம் ஒரு புக்கு வந்தா காலத்துக்கும் சலூன்கடை பக்கமே போக வேண்டியதிருக்காது - பல ஆயிரம் பணம் மிச்சம்!!

      ஆனால் ஒவ்வொரு மாதமும் தளத்தில் கதையை விவாதித்து சட்டைகளைக் கிழித்துக்கொள்ள நேர்ந்தால், சட்டை வாங்கும் செலவு பல ஆயிரங்கள் அதிகரிக்குமே?!

      Delete
    2. விவாதங்கள் பண்னும்போது பழைய நைந்து போன சட்டையோட வந்து கலந்துகிட்டா விவாதம் பன்னுன மாதிரியும் இருக்கும் சட்டை கிழிஞ்ச மாதிரியும் இருக்கும் சட்டை போச்சேன்னு வருத்தப்படவும் வேணாம் சரியா செயலாளரே

      Delete
  15. Journey # 1-ல் புதைந்து கிடக்கும் நபரும், Journey # 3-ல் புதைந்து கிடக்கும் நபரும் ஒரே ஆசாமி தானா ? ///
    அது ஏதோ ஒரு முகம் தெரியாத ஆசாமி என்று வைத்து கொண்டால் மட்டுமே கதையோட்டம் சரியாக இருக்கும்.

    ReplyDelete
  16. சிகரங்களின் சாம்ராட் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது என்பதை மிக தெளிவுடன் சொல்லி கொண்டு

    விடை பெறுவது

    பரணிதரன் ..:-)

    ReplyDelete
    Replies
    1. யாராச்சும் தலீவரை புடிச்சு அந்த சேரோடு கட்டி வையுங்களேன் ?

      Delete
    2. பொங்கல் ெகாண்டாட வேண்டியவங்கள பாயை பிராண்டவச்சுட்டீங்களே. Uத்த வெச்சுட்டியே பரட்ட.

      Delete
  17. சிகரங்களின் சாம்ராட்

    இது எனக்கு கதை புரிந்த வரையில் ஓவியங்களோ ,குறிப்புகளோ இல்லாத கதை சுருக்கம்..


    எதிர்கால வல்னாவிற்க்கு தெரிகிறது தோர்கல் காப்பாற்ற படவேண்டும் என்று..
    அதற்கான முதல் தொடக்கமாக டோரிக் தப்பிச்சென்று தோர்கலை சந்திக்கிறான் ,
    அடுத்ததாக நிகழ்கால தோர்கல் எதிர்கால சேக்ஸ்கார்டை சந்திக்கிறான்,
    எதிர்கால சேக்ஸ்கார்டின் நோக்கம் இறந்தகால வல்னாவை காப்பாற்றுவது மட்டும்தான்,
    இப்போது இறந்தகாலத்திற்க்கு வரும் தோர்கல் கொள்ளையர்களிடமிருந்து வல்னாவை காப்பாற்றி விடுகிறார்,
    தோர்கலால் காப்பாற்றபட்ட வல்னா எதிர்கால டோரிக்கான சேக்ஸ்கார்டை சந்திக்கிறாள் டோரிக்கின் எதிர்கால சேக்ஸ்கார்டை கண்டு வெறுக்கிறாள்,
    அவன் கண்டறிந்த வழிமுறையிலேயே எதிர்கால சேக்ஸ்கார்டை நிகழ்கால டோரிக்கை சந்திக்க வைத்து அவன் கையாலயே அவனுடைய எதிர்கால சேக்ஸ்கார்டை கொல்ல வைக்கிறாள்,
    இப்போது எதிர்கால சேக்ஸ்கார்ட் இறந்துவிட்டதால் நிகழ்கால டோரிக்கை பனிச்சரிவு நிகழ்த்தி கொன்று விடுகிறாள் ...
    கடைசியில் இது அனைத்திற்க்கும் காரணமான வீட்டையும் எரித்து விடுகிறாள்..
    நடந்த சம்பவங்கள் அனைத்தும் எதிர்கால சேக்ஸ்கார்டாகிய வல்னாவால் நடந்ததால் நிகழ்கால தோர்கலுக்கு பனிச்சரிவில் சிக்காமலும் அதற்கடுத்து வரும் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் அவருடைய மனைவி குழந்தையை காண செல்கிறான்..

    ReplyDelete
  18. Replies
    1. முடியலையா??
      அப்ப இருங்க வேற ஒரு கோணத்தில ரோசனை பன்னி சொல்றேன்..🤣🤣🤣

      Delete
    2. ///முடியலையா??
      அப்ப இருங்க வேற ஒரு கோணத்தில ரோசனை பன்னி சொல்றேன்..🤣🤣🤣////

      :)))))))

      Delete
  19. வல்னாவும் கடவுளர்களின் தேசத்தின் ஆள் அப்பிடுன்னு வெச்சுகிட்டா அடுத்து வர்ற கதைகளுக்கு இன்னொரு பிளாட் கிடைச்சிறாது??

    ReplyDelete
  20. // நடுவாக்கில் மனசளவில் பிரபுதேவாக்களாய் உருமாறிப் போயிருந்த சிலபல பார்ட்டிகள் அந்தக் குளிரிலும் ‘டான்ஸ் ஆடுகிறேன் பேர்வழி‘ என்று இடுப்பை வெட்டி இழுத்துக் கொண்டிருக்க – எனக்கோ பயந்து பயந்து வந்தது //

    உங்களை டான்ஸ் ஆடச் சொல்லவில்லை என்று சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள் சார்.

    ReplyDelete
  21. விஜயன் சார், இந்த கதையை படிக்க ஆரம்பிக்கவில்லை. மற்ற இரண்டு கதைகளையும் படித்து விட்டேன். சாத்தானின் சீடர்களை விட பராகுடா என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
    இந்த வாரம் தோர்கல் கதையின் அலசல் நடப்பதால் எனது விமர்சனங்களை அடுத்த வாரம் எழுதுகிறேன்.

    தோர்கல் கதையை படிக்காததால் உங்கள் பதிவின் முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு paragraph மட்டும் படித்து விட்டு மற்றவற்றை skip செய்து விட்டேன். Sorry.

    ReplyDelete
    Replies
    1. இப்பத்தான் தோய்ச்சி தொங்க விட்டிருக்காரு. இனிமே தான் அலசுவாங்களாம்

      Delete
    2. நல்லா சோப்பு போகிறவரை அலசச் சொல்லுங்க :-)

      Delete
  22. நான் அறிந்த வரையில் ஒரு காமிக்ஸ்க்கு இவ்வளவு நீண்ட ஆராய்ச்சி நடத்தி இருப்பது இந்த கதைக்குத் தான் என நினைக்கிறேன். A good job

    ReplyDelete
  23. ஆவ்..! Sriram!!!!!!

    விடிய விடியத் தூங்கவேயில்லையா நீங்க?!!!

    உங்கள் ஆர்வத்தையும், உழைப்பையும் பாராட்டுகிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. @ ஈவி

      வான் ஹாம் அவர்களை எண்ணி பிரமித்து கிடக்கிறேன்.

      Delete
    2. நான் வான் ஹாம் அவர்களின் கதையைப் படித்துக் குழம்பிக் கிடக்கிறேன்.

      Delete
  24. அதிர்ச்சி, குழப்பம், பயம், காமம், கோபம் - ஆகியவற்றில் ஏதாவதொன்றுதான் ஓரோபோரஸ் மோதிரத்தை இயங்கவைக்கும் காரணியாகச் செயல்பட்டு ஒவ்வொரு முறையும் காலப்பயணத்தை சாத்தியமாக்குகிறதென்பது தெளிவாகிறது!

    இதை எடிட்டர் தன் பதிவில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்!!

    ///தோர்கலை அவள் ஆரத் தழுவி, உணர்ச்சிப் பெருக்கோடே முத்தமிடும் தருணம், time travel துவங்குகிறது!///

    ////தோர்கல் கைதியாகிட, வல்னாவோ டோர்ரிக்கின் கிழ சேக்ஸகார்ட் அவதாரைக் கண்டு வெருண்டு பனியினுள் ஓட்டமெடுக்கிறாள் ! விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் ! அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே !////

    பின்றீங்க எடிட்டர் சார்!!

    ReplyDelete
    Replies
    1. //அதிர்ச்சி, குழப்பம், பயம், காமம், கோபம் - ஆகியவற்றில் ஏதாவதொன்றுதான் ஓரோபோரஸ் மோதிரத்தை இயங்கவைக்கும் காரணியாகச் செயல்பட்டு ஒவ்வொரு முறையும் காலப்பயணத்தை சாத்தியமாக்குகிறதென்பது தெளிவாகிறது//

      தோர்கலுக்கு மட்டுமே இது பொருந்தும்..

      டோரிக்கும் வல்னாவும் குறிப்பிட்ட காலத்தினை நோக்கி விரும்பியே பயணிக்கின்றனர்..

      Delete
    2. //தோர்கல் கைதியாகிட, வல்னாவோ டோர்ரிக்கின் கிழ சேக்ஸகார்ட் அவதாரைக் கண்டு வெருண்டு பனியினுள் ஓட்டமெடுக்கிறாள் ! விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் ! அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே !//////

      தவறு! வயதான சேக்ஸகார்ட்டை அறை வாங்கிய டோரிக்கிடம் காட்டி சேக்ஸகார்ட் டாக மாற விரும்பும் டோரிக்கின் மனதை மாற்ற எண்ணுவதே வல்னாவின் விருப்பம்.

      குடிசையை விட்டு அவள் விலகி ஓடுவது சேக்ஸகார்ட் டோரிக் 2 வை குடிசையை விட்டு வெளியே வரச் செய்து அவனை மீண்டும் அறை வாங்கிய இள டோரிக்கிடம் காட்டி இந்த அரக்க உருவம் தேவையா என கேட்பதற்கே...

      இது அவள் விரும்பி செய்யும் செயல் ..

      தோர்கலுக்கு நேர்வது போல் உணர்வுகளால் நிகழ்வது போல் அல்ல..

      Delete
    3. @ செனாஅனா

      மேற்காணும் எனது பின்னூட்டத்தில் 'தெளிவாகிறது' என்பதை 'தெளிவாகவே இல்லை' எனவும், 'பின்றீங்க' என்பதை 'குழப்புறீங்க' எனவும் மாற்றிப் படிக்கவும்!

      Delete
  25. உங்கள் கருத்திற்கு மாறுபடுகிறேன் SriRam.

    ஓரே மோதிரம் மட்டுமே உள்ளது.
    ஏற்கனவே வல்னாவின் தாத்தா திட்டமிட்டபடி தான் எதிர்காலத்தில் நடக்கவேண்டிய இறந்தகாலம் ஆரம்பமாகிறது.

    அதாவது தோர்கல் காலப்பயண குடிசைக்குள் நுழைந்தது (வெளியே பனிச்சரிவில் செத்துவிட்ட டோரிக்கை) முதல் காலப் பயணம் ஆரம்பமாகிவிடுகிறதால் உள்ளே சந்திப்பது டோரிக்கின் இறந்தகாலத்தை தான்.
    " காத்திருந்து பழி வாங்க நானுமே கற்றுக்கொண்டு விட்டேன் டோரிக்" என்று கூறி கதையே ஆரம்பத்திலேயே முடித்து விடுகிறாள். பனிச்சரிவில் புதையுண்ட டோரிக்கின் கையிலிருந்து மோதிரத்தை எடுப்பது பெரிய கஷ்டமா என்ன...


    அத்தோடு 97 ம் பக்கத்தில் உள்ள வசனங்கள் கதையை தெளிவு படுத்தும் .


    எல்லாமே காலப் பயண ஃபிளாஷ் பேக்

    ReplyDelete
    Replies
    1. மாறுபட்ட கருத்துகளும் இருக்கும் என்பதில் ஒளிவு,மறைவு ஏதுமில்லை.

      கதை வெகு எளிதில் புலப்படாத விதமாக இருப்பதற்கு வாசகர்களாகிய நாம் காரணம் அல்ல.
      அத்தகய கதையுக்தியை வான் ஹாம் கையாண்டுள்ளதே காரணம்.
      ஒவ்வொரு கதைத் தொடரிலுமே ஷான் ஏதாவதொரு புது வகையான கதை தொழில் நுட்பத்தை படைப்புலகிற்கு வழங்குவது வாடிக்கையான வழிமுறைகளின் பிரதான அம்சம்.
      அதன் பிறகே சினிமாவிலோ,நாவல்களிலோ,இன்னும் பிற படைப்புகளிலோ அதன் தாக்கம் ஏனையோரால் பிரதிபலிக்கப்படும்.

      இந்த வகையான கதையுக்தியை உணராமல் இவ்வகைப் படைப்புகளை மிக நெருக்கமாக உணர முடியாது.
      அதனால் தான் கதையை அத்தியாயங்களாக வகைப்படுத்தி மிக எளிதாக பதிவிட்டுள்ளேன்.
      முதல் முறை வாசித்த போதும் , இரண்டாம் முறை வாசித்த போதும் கதைகுறித்த புரிதலில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.ஆனால் விடை தெரியாத வினாக்கள் மட்டுமே கேள்விக்கணைகளால் வதைத்தது.அந்த புதிர்களின் பதில்களும் விளங்கிய பின்புதான் இந்த முயற்சியில் பங்கெடுத்துள்ளேன்.

      ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அபிப்ராயங்களும் ஒவ்வொன்றாய் இருப்பதில் வியப்பில்லை.என்னுடைய பார்வைக்கோணம் குறித்த தெளிவு நான் மட்டுமே உணர முடியும்.கதையில் மேலும் பல புதிர்களை புதைத்து வைத்து விட்டு எங்கோ ஒருவர் தனக்குள் ஏகாந்தமாக சிரித்துக் கொண்டு இருப்பதை யார்தான் அறிய முடியும்.உங்களுடைய கருத்தியலில் நீங்கள் உறுதிப்பாட்டோடு இருந்தால் மட்டுமே போதும்.

      Delete
    2. ///கதையில் மேலும் பல புதிர்களை புதைத்து வைத்து விட்டு எங்கோ ஒருவர் தனக்குள் ஏகாந்தமாக சிரித்துக் கொண்டு இருப்பதை யார்தான் அறிய முடியும்///

      செம & உண்ம!

      Delete
  26. ****** சாத்தானின் சீடர்கள் ******

    அட்டைப்படம் : 8/10
    கதை : 7/10
    சித்திரங்கள் : 8/10

    112 பக்கங்களில் முடிக்க வேண்டிய கதையை 224 பக்கங்களுக்கு இழுத்திருக்கிறார்கள்!
    முகமூடியை மாட்டிக்கொண்டு வந்து பயமுறுத்த முயற்சித்திருந்தாலும், டெக்ஸுக்கு ஈடுகொடுக்கமுடியாத சோப்ளாங்கி/பயந்தாகுள்ளி வில்லன்கள்!

    டெக்ஸ் ரசிகர்களுக்கு - பட்டாசு!
    கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு - டமாசு!

    ReplyDelete
    Replies
    1. மிகமிக நேர்மையான விமர்சனம் விஜய்.டெக்ஸ் கதை என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு பாராட்டாமல் நியாயமான மார்க் போட்டதற்கு பாராட்டுக்கள்.

      Delete
    2. பாராட்டுக்கு நன்றிகள் பல VV சார்! _/\_

      Delete
  27. இப்பதிவில் 'காலம்' என்ற வார்த்தை இதுவரை 195 முறை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது!

    வல்னா - 116
    டோரிக் - 73
    தோர்கல் -56

    ReplyDelete
  28. நண்பர்கள் மற்றும் எடிட்டரின் கனிவான கவனத்திற்கு !!

    குடிசை இருக்குமிடம் மகத்துவமானது ..
    ஆனால் ஓரோபோராஸ் மோதிரம் மட்டுமே அக்குடிசையை கால மாற்றத்துக்கு உள்ளாக்க முடியும் ..
    அது இருக்கும்போது குடிசையில் ஒரு நாளுக்கு 12 மணி நேரங்கள் என கணக்கிட்டு பாருங்களேன் ..
    வல்னாவின் கைக்குழந்தையாக இருக்கும்போது வந்தவள் .சுமார் .இருபது வயது பெண் பத்தாண்டுகள் வசிக்கிறோம் ...என்றால் அவள் தாத்தாவுடன் மோதிரம் இருக்கையில் ஓராண்டுக்கு இரு ஆண்டுகள் எனப் பொருள் ..
    தோர்கல் ,மற்றும் டோரிக் முதலில் நுழைந்தவுடன் ஒரு நாளுக்கு 12 மணி நேரம் என்றாகிறது ...எனவே அவர்கள் தனது அடுத்த நாளில் நுழைகின்றனர்
    முன்னர் நான் சொன்ன 48 மணி நேர கணக்கின்படி அவர்கள் 74 நாட்கள் பயணித்து இருக்கவேண்டும் ..அது தவறு ...
    ஒரு நாளுக்கு 12 மணி நேரங்கள் என்றால் சம்பவங்கள் விளக்கமுடியும் ..
    பருவ மாற்றங்கள் இதன் மூலம் விளக்கமுடியும் ..
    தோர்கல் அங்கிருந்து வந்தவுடன் டோரிக்குடன் வல்னா வாழும் ஆறு மாதங்களும் ,தாத்தா இறந்தபின் வல்னா தனியாக வாழும் ஒரு மாதமும் அக்குடிசையில் ஒரு நாளுக்கு 24 மணி நேரமே ...( மோதிரம் இல்லாததால் )

    ReplyDelete
    Replies
    1. யுரேகா..!! குடிசையில் மோதிரம் இருக்கும்போது ஒருநாளுக்கு 12 மணி நேரங்கள் எனில் கதையின் ஒவ்வொரு பக்கத்தையும் மிக துல்லியமாக விளக்கமுடியும்...அக்குயுரேட்லி..முரண்கள் ஏதுமின்றி.....

      Delete
    2. ///யுரேகா..!! குடிசையில் மோதிரம் இருக்கும்போது ஒருநாளுக்கு 12 மணி நேரங்கள் எனில் கதையின் ஒவ்வொரு பக்கத்தையும் மிக துல்லியமாக விளக்கமுடியும்...அக்குயுரேட்லி..முரண்கள் ஏதுமின்றி.....///

      வாவ்!! சூப்பர்!!

      Delete
  29. சிகரங்களின் சாம்ராட்டிலிருந்து நேராய் ஜெரெமியாவோடு பயணம் எனக்கு !! ஆத்தாடி...!!

    அப்புறமா இன்னொரு கொசுறுத் தகவலுமே :

    தோர்கல் தொடரின் ஆல்பம் # 21 -ல் காலப்பயணங்கள் தொடர்கின்றன - ஜோலனுடன் !! உஷார் !!

    ReplyDelete
    Replies
    1. விஜயன் சார், சென்னை புத்தகத் திருவிழா அப்டேட்ஸ் ப்ளீஸ்?

      Delete
    2. //தோர்கல் தொடரின் ஆல்பம் # 21 -ல் காலப்பயணங்கள் தொடர்கின்றன - ஜோலனுடன் !! உஷார் !!//

      Another mindtwister ? Warmly welcome.

      Delete
    3. 21 ல் ஓவியங்கள் வேற லெவல்.

      Delete
    4. ////தோர்கல் தொடரின் ஆல்பம் # 21 -ல் காலப்பயணங்கள் தொடர்கின்றன - ஜோலனுடன் !! உஷார் !!////

      சார் உங்களுக்குத் தெரிஞ்ச ட்யூசன் சென்ட்டர்ல யாராவது தோர்கலுக்கு ட்யூசன் எடுத்தா கொஞ்சம் சொல்லுங்களேன்?
      நீங்களே எடுத்தாலும் சரிதான்! தேங்கா, பூ, பழம் சகிதம் தட்டுல ஆயிரம் ரூவா பணமும் வச்சு உங்க கால்ல வுழுந்து கும்பிட்டுட்டு உடனே ஜாய்ன் பண்ணிக்கறேன்!

      Delete
    5. விஜயன் சார் . தரமான விக்'குகள் எங்கே கிடைக்கும் ???

      Delete
  30. ஐயா தெய்வங்களே, காமிக்ஸ் கடவுள்களே,

    விமர்சனம் எழுதியுள்ள அனைவருக்கும் நன்றிகள், வாழத்துக்கள். நீங்கள் எழுதியுள்ள இந்த விமர்சனங்களையெல்லாம் படித்து முடித்துவிட்டு கதைக்குள் நான் போனால் எப்படி இருக்குமென்று கொஞ்சம் யோசியுங்கள். ஏனென்றால், புத்தகம் எனக்கு இன்னமும் கிடைத்தபாடில்லை. வழக்கமாக 5 நாட்களில் கிடைக்கும் புத்தகம், இந்த முறை டெல்லி, நாக்பூர் என்று சுற்றிவிட்டு நேற்று மாலை தான் நான் இருக்கும் சந்திரபூர் போஸ்ட் ஆபிஸ் வந்துள்ளது. இன்று விடுமுறை என்பதால், நாளை என் கைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறேன்.

    ஏதோ தோர்கல் டவுன்பஸ்ஸுலயும், மெட்ரோ டிரெயின்லயும் போய்ட்டு, கூட்ஸ் ஷேர் ஆட்டோவில் திரும்ப வருவது போல காலப்பயணத்தை உண்டு இல்லையென்று செய்திருப்பது மட்டும் நன்றாக புரிகிறது. ஞாயிற்றுக்கிழமையில் மனுசன யோசிக்க வெச்சுட்டீங்க நீங்கள் எல்லாரும்.

    நன்றிகள், வாழத்துக்கள்..

    ReplyDelete
  31. ஒரே ஒரு கேள்வி ..எல்லா டைம்மெஷின் கதைகளிலும்டைம் மெஷினில் நாம் விரும்பிய காலம் செல்ல பட்டன்ஸ் இருக்கும்.இந்த மோதிரம் ஒரு டைம்மெஷின் என்று வைத்து கொண்டாலும் குடிசையில் அதை முதன் முதலாக யார் எடுக்கின்றார்களோ அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ 37 வருடங்கள் பின்னோக்கி அவர்களை அழைத்துக்கொண்டு செல்வது போல் வடிவமைக்க பட்டுள்ளதா?அந்த மோதிரத்திற்கு உயிர் இருக்கிறதா என்ன?அதே போல் தோர்கலை அவன் நினைக்காத போதே கள்வர் கூட்டத்தை அழித்துவல்னா வைக்காப்பற்ற இழுத்து போவதை மறந்து விடக்கூடாது.ஆகவே லாஜிக் பார்த்தால் கதையை ரசிக்க முடியாது என்பதே என்னுடைய கருத்து .

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக எழுப்பப்பட்ட கச்சிதமான கேள்வி.இதற்கு ஆமாம் என்பதுதான் பதிலாக இருக்கும்.பகலில் மட்டுமே கால பயணம் கதையில் நிகழ்வதை கவனித்தால் தோர்கல் முதன்முதலாக மோதிரத்தை எடுக்கும் போது மாலை நேரம்.வல்னாவின் தாத்தா ஓரோபோரஸை எதிர்காலத்துக்கு அனுப்பி விட்டதாக சொல்வதை கவனித்தால் ஓரோபோரஸை இயக்க ஏதோவொரு தொலைதூர இயங்கு விசை மூலம் அந்த கால வாகனத்தை இயக்க முடியும் என்பதும் புரிகிறது.அவ்விதம் இருந்தால் இரண்டு ஓரோபோரஸ் இருப்பதான என்னுடைய கூற்று சுங்கத் நூறாக உடைந்து விடுகிறது.



      மிக அழகான கேள்வியை முன் வைத்து வேறொரு பரிணாமத்தை உணர்த்திய தங்களுக்கு மிகுந்த நன்றி.

      Delete


  32. சிகரங்களின் சாம்ராட்.



    வல்னா தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து தோர்கலுடைய எதிர்காலத்தில் நுழையிம் போது ஏற்படும் வயதான தோற்றத்திற்கான காரணங்களை பின்வரும் விதத்தில் விளங்கிக் கொள்ளலாம்.



    வல்நாவினுடைய தாத்தா ஹெல்ப்.இதே கதைத் தொடரில் "" முதல் பனி"" ஹோல்ம் கங்கா கதைகளில் பங்கெடுத்த முதியவர்.
    அவருடைய வயது தோராயமாக அறுபதாக இருக்கும்.தோர்கலுக்கு வயது பத்தென்று கணித்து கொள்ளலாம்.

    வடதிசை வைகிங்களின் தலைவரான மாண்புமிகு லெப் ஹரால்ட்ன் தோர்கலை தத்தெடுத்து வளர்க்கிறார்.அப்பொழுது ஹரல்ப்பின் வயது உத்தேசமாக ஐம்பது என்பதாக கவனத்தில் வைத்துக் கொள்வோம். தாத்தாவின் பராமரிப்பில் வளரும் பெற்றோரை இழந்த வல்னாவுக்கு வயது பதினாறாக இருக்க வேண்டும்.



    ஹைரெல்புக்கு தோர்கலுடைய பிறப்பின் இரகசியம் முற்றிலும் தெரிய வருகிறது. அதாவது வேறு கிரகத்தில் இருந்து வந்துள்ள மானிடன் என்பதாகவும். அவனை மணந்து கொண்டு ,தோர்கல் மூலமாக பிறக்கும் முதல் ஆண் குழந்தை இந்த பூமியின் அதிபதியாக,ஒட்டுமொத்த கிரகத்தையும் கட்டி ஆளும் மகாச் சக்கரவர்த்தியாக உருப்பெருவான் என்பது உட்பட தோர்கலுடைய அனைத்து இரகசியங்களையும் இந்த மகாப் பெரியவர் உணர்ந்துள்ளார்.இந்த உண்மைகளை வல்னாவிடமும் சொல்கிறார்

    அவருக்குள் சிறு சலனம் ஏற்படுகிறது.தோர்கலை தன் பேத்தி வல்னாவுக்கு மணமுடித்து அவள் மூலமாக பிறக்கும் தன் சந்ததிகள் இந்த பூமியை கட்டி ஆளும் வேண்டும் என்ற சலனம் பேராசையாக உருமாறுகிறது.இதில் வல்னாவுக்கும் உடன்பாடு ஏற்படுகிறது.

    அதே நேரத்தில் காலப்பயணம் மேற்கொள்ளும் இலக்கான அட்லாண்டிஸ் என்ற கண்டத்தில் உள்ள பாதையை அறிந்து வைத்துள்ளார்.
    இப்பொழுது தோர்கலுக்கு ஒரு வயது எனில் வல்னாவுக்கு பதினாறு வயது.அவளுடைய தாத்தாவுக்கு நாற்பதாக இருக்கும்.
    தோர்கலுக்கு பத்து வயதாக இருக்கும் போது வல்னாவின் வயது இருபத்தாறு..ஹரெள்ப்பின் வயது ஐம்பது. எந்த விதத்திலும் தோர்கலோடு வயதில் பொருந்தி போகாத வல்னா அவன் மூலம் கருத்தடைவது சாத்தியம் இல்லை.
    இங்குதான் ஹரல்ப்பின் விபரீதமாக சிந்தித்து ஓரோபோரஸை பயன்படுத்தி வல்னாவின் குழந்தை பருவத்துக்கு பயணிக்கிறார்.
    முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் தோர்கலின் பத்து வயது வரை அவர் தோர்கலின் சமகால நிலத்தில் இருப்பதை.
    வல்னாவின் குழந்தை பருவத்துக்கு வந்த ஹரல்ப்பிற்கு வல்னா குழந்தையாக இருந்த போது தனக்கு என்ன வயதோ அதை அடைகிறார். வல்னாவை மணமுடிக்கும் பருவம் வரை வளர்க்கிறார்.
    வல்னா தன்னுடைய வளர்ப்பின் பின்னனி குறித்து தெளிவான புரிதலோடு வளர்கிறாள்.
    தோர்கலுடைய சமகாலத்தில் அவன் வளர்ந்து வாலிபன் ஆகும் போது திரும்பவும் ஓரோபோரஸை பயன்படுத்தி தோர்கலுடைய நிகழ் பிரபஞ்சத்துக்கு பயணிப்பது அவர்களுடைய எதிர்கால கனவு.
    ஆனால் வல்னாவோ,ஹரல்போ காலப்பயணம் மேற்கொண்டு எதிர்காலத்தில் நுழையும்போது ;அவர்கள் அங்கு என்ன வயதில் வாழ்வார்களோ அந்த வயதை எட்டிவிடும் அபாயம் உள்ளது.
    இதற்கான தீர்வு தோர்கலோடு இணைந்து பயணித்தால் வயது மாற்றம் ஏற்படாது.சிகரங்களின் சாம்ராட்டில் தோர்கலுடன் காலப்பயணம் செய்யும்போது வல்னா வாழைக்குமரியாக பயணிப்பதன் மர்மம் அதுதான். பார்க்க பக்கம் 81 ல் தோர்கலை முத்தமிடுவது அதனால்தான்.61 ம் பக்கமும் தோர்கலோடு இணைந்து பயணிப்பதாலேயே டோரிக் கைக்குழந்தையாக மாறவில்லை.தோர்கல் ஓரோபோரைஸை பயன்படுத்தி எந்த காலத்துக்குள் நுழைந்தாலும் அவனுடைய வயதில் எந்த மாற்றமும் ஏற்படாது.71 ம் பக்கம் கிழ சோஸர்ட் வல்னாவின் மூலம் இந்த இரகசியங்களை அறிந்து கொண்டு தோர்கலை மட்டும் அனுப்பி வல்னாவை அழைத்து வரச் சொல்லி மிரட்டுவது அதனால்தான். ஒன்று தோர்கலோடு அவள் பயணித்து வந்தால் மட்டுமே இளமையாக இருப்பாள்.இரண்டு சோசர்ட் தோர்கலின் மோதிரத்தை பயன்படுத்தி சென்றால் அவன் இருக்கும் அதிகாரம் மிக்க அந்த இடத்தில் இயற்கை வேறோரு வரை உருவாக்கி விடும்.சோசர்ட் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயற்சிக்கிறான்.
    எனவே தோர்கல் அட்லாண்டிஸ் வரும்போது அங்கு ஓரோபோரஸை கொண்டு வந்து வல்னா சேர்கிறாள்.பின்பு இன்னொரு மோதிரத்தை பயன்படுத்தி திரும்ப சென்று விடுகிறாள்.வல்னா கதை நெடுகிலும் மெய்யும்,பொய்யும் கலந்தே தோர்கலோடு உரையாடுகிறார்.ஆனால் அனைத்து இரகசியங்களும் அவள் ஏற்கனவே அறிந்தவள் தான்.

    ReplyDelete
  33. சிகரங்களில் சாம்ராட்.




    வல்னா தோர்க்கலோடு பயணித்து அவனுடைய சமகாலத்தில் அவனோடு சேர்ந்து வாழ்ந்து ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்த விரும்புகிறாள்.அந்த குழந்தை மூலமாக பூமியின் ஏகபோக அதிகாரத்தையும் அடையும் பேராசை.அதனால்தான் டோரிக்கோடு ஆறு மாதங்கள் வாழ்ந்தும் அவள் கருவுறே இல்லை.


    வல்னாவும் அவளுடைய தாத்தாவும் காலத்தில் குளறுபடி செய்துவிட; இயற்கை ஆரிசியாவையும்,நோய்களையும் இணைத்து ஜோலனை உருவாக்கி விடுகிறது.
    தோர்கலுடைய சம காலத்தில் வல்னா நுழையும் போது அவளுடைய இளமை பறிபோகிறது. வல்னா இழக்கும் இளமையை அவளுடைய தாத்தா வாழ்ந்து விட்டு இறந்து விடுகிறார்.காலம் கடவுளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுதான் உத்தமமானது. நாம் ஒன்றை மாற்ற நினைத்தால் இயற்கை தானாக வேறொன்றில் தன்னை புதுப்பித்துக் கொள்ளும்.

    ReplyDelete
    Replies
    1. Sri Ram sir it's just great work great work. U tried to explain everything and editor Sir thanks a lot for this story awesome awesome.

      Delete
    2. @ Kumar Salem.

      மகிழ்ச்சி , மற்றும் நன்றியும் சார்.


      கதையில் தோர்கலின் சம காலத்துக்கும், கடந்த காலத்துக்குமான கால வட்டம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
      பக்கம் 71 ல் தோர்கல் சந்திக்கக் கூடிய சேஸகார்டை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.
      சிறைபிடிக்கப்பட்ட தன் மனைவி, மற்றும் குழந்தைகளை மீட்க தோன்றல் போராடியே தீர வேண்டும்.
      டோரிக் கதாபாத்திரமும் அவ்விதமே உருவாக்கப்பட்டிருக்கும்.தோர்கலின் சம காலத்தில் வாழ்ந்த டோரிக் எதிர்பாரத விதமாக தோர்கலோடு கடந்த காலத்துக்குள் நுழைந்து;தன் சம காலத்துக்கு அல்லது தோர்கலுடைய சம காலத்துக்கு திரும்போதே பனிச்சரிவில் இனிப்பாக கதாசிரியர் படைத்துள்ளார்.
      வல்னாவும்,அவளுடைய தாத்தாவும் காலத்தில் ஏற்படுத்திய குளறுபடிகள் மட்டுமே தீர்க்கப்பட்டு ஒரு காலகட்டம் நிறைவு செய்யப்படுகிறது.

      ஆனால் டோரிக்கையும்,சேஸக்கர்ட்டையும் தோர்கல் தன்னுடைய எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி வரலாம்.
      வல்னாவும் முதுமையான தோற்றத்தில் தன்னுடைய அல்லது தோர்கலின் சம காலத்தில் நுழைந்து விட்டபடியால் இனிதான் ஆட்டமே அனல் பறக்க போகிறது.
      இந்த கதாப்பாத்திரங்களை துருப்பு சீட்டாக பயன்படுத்தி தோர்கலின் சம காலத்துக்கும்,எதிர்காலத்துக்குமான கால வட்டத்தை எப்படி வான் ஹம் முழுமைப் படுத்த போகிறார் என்பதுதான் என்னுடைய தவிப்பாக உள்ளது.


      அன்புள்ள எடிட்டர் சமூகத்துக்கு ஒட்டுமொத்த காமிக்ஸ் இரசிகர்கள் சார்பாகவும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

      தோர்கலுடைய அடுத்தடுத்த பாகங்களையும் விரைவில் கண்ணில் காட்டிவிடுங்கள் சார்.

      Delete
    3. இவற்றை இத்தனை மெனக்கெட்டு பதிவிட வேண்டிய அவசியம் அதனால்தான் ஏற்படுகிறது.

      எதிர்காலத்தில் டோரிக்கையும்,சேஸகர்ட்டையும் மற்றொரு சாகசத்தில் தோர்கல் மீண்டும் சந்திக்கும்போது, அன்பிற்குரிய நமது நண்பர்கள் மேலும் குழப்பம் அடைந்து விட கூடாது.

      Delete
    4. தோர்கலுடைய எதிர்கால கதையிலும் டோரிக்தான் சேசகர்ட்டை அம்பெய்து கொல்ல வேண்டியது நேரிடலாம்.அந்த காலகட்டத்தில் சேசகர்ட்டும்,டோரிக்கும் தந்தை,மகன் என்பதுபோல் கதா பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.டோரிக்கின் மரணத்துக்கு தோர்கலே காரணமாக இருப்பான்.அதை உணர்ந்ததால் தான் வல்னாவிடமிருந்து மோதிரத்தை அபகரித்து கொண்டு தோர்கலை கொல்ல விழைகிறான். 86 ம் பக்கம் வல்னாவுக்கும் டோரிக்குக்கும் இறுதி பேனல்களில் நடைபெறும் உரையாடல் இதை முழுமையாக உணர்த்தும்.இந்த காட்சியை எதிர்கால கதையில் எடுத்தாளப்பட்டு கதையோடு மீண்டும் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.

      Delete
    5. SriRam@.. With due respect..கதை சொல்ல வரும் விஷயங்களை விட்டு மிகவும் விலகுகிறீர்கள்..

      இக்கதை நுட்பமான விஷயங்களை உள்ளடக்கியது..ஹேஷ்யங்கள் கதைப்போக்குக்கு ஒட்டிய வகையில் இருப்பது நலன்..கதையை விட்டு அதிகம் விலகாமல் இருப்பது நலன்..

      ஜஸ்ட் எ ஸஜஸன்..நோ அபன்ஸ் ..

      Delete
  34. நான் இதுவரையிலும் தோர்கல் கதைகளை படித்ததில்லை. உங்கள் அலசல்களை பார்த்த பிறகு இந்த பொங்கல் விடுமுறை எனக்கு தோர்கல் உடன்தான். யாராவது தோர்கல் புத்தகங்களை வரிசையாக பதிவிட கோருகிறேன்

    ReplyDelete
  35. NOW ON YouTube : https://youtu.be/i-52do5bglo

    ReplyDelete
    Replies
    1. வீடியோ பார்த்தேன்!! வார்த்தைகள் நேர்த்தியாய், தேவையான முக்கியத் தகவல்களுடனான ஸ்லைடுகளால் அமைக்கப்பட்டிருக்கிறது! குறிப்பாய் "அப்புறம்.. அப்புறம்... நமது தமிழிலும்!"

      Delete
  36. எடிட்டர் சார்

    நீங்கள் நினைத்தது போல் கச்சேரி களை கட்டவில்லையே.

    ReplyDelete
    Replies
    1. போகி, பொங்கல் மற்றும் பேட்ட பிசியில் இருப்பாங்க நண்பர்கள்.

      Delete
    2. ஜார்கண்ட் ரயிலுக்கு எற்கனவே டிக்கெட் போட்டிருப்பார்கள் என்று 2 நாட்களுக்கு முன்னேயே சேதி வந்திடுச்சே சார் !

      Delete
    3. அதுவும் அப்பிடின்னு அளப்பரைய பாக்க முடியலயே.ஆளு தான் மேக்கப்ல
      யங்கா தெரியிறாப்டி.தியேட்டரே சைவண்டா இருக்கு.....

      Delete
  37. இந்தப் பதிவின் ஆரம்பத்தில் ராஜஸ்தான் ரவுசுகளை உணவு வகைகளை வாயூற படித்து விட்டு தோர்கல் அலப்பறைகளை படித்தும் விட்டேன். புத்தகம் கைக்கு வந்த பிறகு மறுபடி படிக்க ஏதுவாக புக் மார்க்கும் பண்ணி வைச்சாச்சு.

    ReplyDelete
  38. இந்தக் கதையை பொறுத்தவரை நானும் தலைவர் கட்சி .. நான் படித்தது எனக்கு புரிஞ்சிடிச்சி .. அதுதான் கதை என்று சந்தோசப்பட்டுக்கொண்டு .. எஸ்கேப் .. :-D :-D :-D மற்ற படிக்கு எல்லாரின் விளக்கங்களையும் மேய்ந்து கொண்டுதான் இருக்கேன் :-)

    எடிட்டர் சார் அப்புறம் என் போன்ற "அறிவுசார் இயக்கம்" சாராதவனுக்கு கொஞ்சம் போட்டோ ஸ்டில்ஸ், வருகிறது updates, சந்தா நம்பர் updates என்று அள்ளித்தெளித்தால் சுகம் !

    ReplyDelete
    Replies
    1. ஒத்தையடி பாதையில் தனியா போய்ட்டு இருக்கேன்னு நினைச்சேன்.நல்ல வேளை ராகவன் சார் இருக்காரு...:-)

      Delete
    2. பொங்கல் பதிவு செவ்வாய்க் காலையிலே உண்டல்லோ சார் ? அதிலே ஆல் ஜனரஞ்சகம் என்று போட்டுத் தாக்கிடலாம் !!

      Delete
    3. நானும் இருக்கேன் தல... ஆனா.. ஆனா எங்க இருக்கேன்னுதான் தெரில..

      Delete
  39. பராகுடா பக்கமும் கொஞ்சம் பார்வைகளைத் திருப்பலாமே நண்பர்களே?!!!

    ReplyDelete
    Replies
    1. தோர்கல் புக்க படிச்சதுக்கு அப்புறம் எந்த புக்க பார்த்தாலும் பயந்து பயந்து வருது.. 😔 😔

      Delete
    2. நிநி அளவுக்கு எல்லாம் இல்லை கரூராரே..:-)

      கதை நல்லாருக்கு..:-))

      Delete
  40. Sri Ram @ கதையை பிரிச்சு மேஞ்சி காயப்போட்டு விட்டீர்கள். சூப்பர்.

    ReplyDelete
  41. Sri Ram @ கதையை பிரிச்சு மேஞ்சி காயப்போட்டு விட்டீர்கள். சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. @ நன்றி பரணி @ உங்களுடைய நண்பரும் கோவை கவிஞர் ஸ்டீல் அவர்களின் மேலான நலன் குறித்து விசாரித்ததாகவும் சொல்லவும்.

      Delete
    2. அவர் நலம். அவர் கோவையில் இருந்து இப்போது திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.

      Delete
  42. 2019 ன் மிகச்சிறந்த படைப்பபு "பராகுடா" என்பதில் சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  43. பாராகுடா அருமை. ஹார்ட் பவுண்ட் மிஸ்ஸிங் பயங்கர வருத்தம்.

    தோர்கல் குழப்பம், ஆனால் பொறுமையாக படித்தால் தான் கதை புரியும்.

    இந்த மாதிரி தோர்கல் கதைகள் போடுவதற்கு பதிலாக டெக்ஸின் மெபிஸ்டோ, யுமா கதைகளை முழுவதுமாக ஹார்ட் பவுண்டில் போடலாம். மனது வையுங்கள் எடி சார்வாள் .

    வி. சுந்தரவரதன்
    சின்ன காஞ்சிபுரம்.

    ReplyDelete
  44. ///ஒரே ஒரு கேள்வி ..எல்லா டைம்மெஷின் கதைகளிலும்டைம் மெஷினில் நாம் விரும்பிய காலம் செல்ல பட்டன்ஸ் இருக்கும்.இந்த மோதிரம் ஒரு டைம்மெஷின் என்று வைத்து கொண்டாலும் குடிசையில் அதை முதன் முதலாக யார் எடுக்கின்றார்களோ அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ 37 வருடங்கள் பின்னோக்கி அவர்களை அழைத்துக்கொண்டு செல்வது போல் வடிவமைக்க பட்டுள்ளதா?அந்த மோதிரத்திற்கு உயிர் இருக்கிறதா என்ன?அதே போல் தோர்கலை அவன் நினைக்காத போதே கள்வர் கூட்டத்தை அழித்துவல்னா வைக்காப்பற்ற இழுத்து போவதை மறந்து விடக்கூடாது.ஆகவே லாஜிக் பார்த்தால் கதையை ரசிக்க முடியாது என்பதே என்னுடைய கருத்து .///
    கதையை எழுதியது வான் ஹாம்மே என்பதால் மேற்கூறப்பட்ட கருத்தில் கவனம் தேவை வெட்டுக்கிளி வீரையன் சார் ..:)
    தோர்கல் விரும்பி அந்த மூன்று கால பயணங்களை செய்யவில்லை ... செய்யவில்லை ....
    தோர்கலின் உணர்வுகளோ ,அவன் கண்ணை மூடுவதோ ஓரோபோரஸ் மோதிரத்தை கட்டுப்படுத்தாது ..
    ஒரு சக்தி மட்டுமே அதை செய்யமுடியும் ..
    ஒரோபோராஸ் மோதிரம் ஒரே சமயத்தில் காலமுரணை சந்திக்கும்போதுதான் நடக்கும் ..
    குடிசையின் உள்ளே மோதிரம் வந்தவுடன் பன்னிரண்டு மணியாக ஒரு நாள் மாறிவிடுகிறது ..
    வயதான வல்னா கதையின் இறுதியில் தோர்கலை கண்டவுடன் ஆட்டுப்பட்டியில் உள்ள குதிரையினை ஆட்கள் மூலம் வெளியேற்றுகிறாள்
    அதாவது அப்போது மோதிரத்தின் மூலம் காலம் மாற்றப்பட்ட குடிசையின் ஆட்டுப்பட்டியில் தோர்கலும் டோரிக்கும் இருக்க தோர்கலின் நிகழ் பிரபஞ்ச காலத்தில் இருக்கும் வயதான வல்னா இருக்க ஒரேகாலத்தில் நிகழும் இந்த முரணால் இதே மாதிரி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த மோதிரம் முயல்கிறது .
    மோதிரம் பின்னோக்கி பயணிக்கும் இச்செயலால் மட்டுமே வல்னா குடிசைக்கு வெளியே இருக்க குதிரை வெளியே ஓட ஆட்டுப்பட்டியில் தோர்களும் டோரிக்குமிருக்கும் நிலையில் சூழ்நிலை இருக்கிறது ..

    கதையின் கடைசியில் தோர்கல் இறந்து கிடக்கும் டோரிக்கின் கை தெரியும் சூழலில் இருக்க தோர்கல் கடந்தகாலத்தில் அதே நேரத்தில் உயிருள்ள டோரிக் அருகில் இருக்கும் நிலையில் இருக்கும் சூழ்நிலை வர மோதிரம் பிந்தைய டோரிக் உயிருடன் இருக்கும் ஆனால் புதையுண்ட கை வெளியே தெரியும் காலகட்டத்தில் தோர்கலை கொண்டுபோய் சேர்க்கிறது ....

    கதையின் இறுதியில் தோர்கலின் கத்தி அவன் கைக்கு வல்னாவின் ஆட்களால் கொண்டு வரப்படும்போது என்றாலும் சரி அந்த குடிசை எரிவதை தோர்கல் நிகழ் பிரபஞ்சத்தில் பார்க்கவில்லை என்பதை சரி செய்யும்வண்ணம் குடிசை எரிவதை தடுக்கப்பட்ட நிலையில் தோர்கல்
    அங்கு மோதிரத்தால் அனுப்பப்படுகிறான் ...
    வயதான வல்னா தோர்கலின் நிகழ்கால பிரபஞ்ச நேரத்தில் செய்யும் செயல்களையும் காலம் மாற்றப்பட்ட தோர்கல் மற்றும் டோரிக் அனுபவிக்கும் செயல்களையும் குடிசையும் மோதிரமும் ஏக காலத்தில் சந்திக்கையில் முரணை தவிர்க்க மோதிரமும் குடிசையும் சேர்ந்து செய்யும் செயல்களின் விளைவே தோர்களின் மூன்று தனித்த கால பயணங்களும் ..

    தோர்கல் வல்னாவுடன் சேர்ந்து பயணிப்பது முத்தமிட்டோ கண்மூடுவதால் அல்ல ...
    வல்னா விரும்புவதால் ..அப்போது வல்னா மோதிரம் அணிந்துள்ளாள்..
    கிழ சேக்ஸகார்ட்-டை காண்பித்தால் இளவயது டோரிக் மனம் மாறுவான் என்பது அவள் எண்ணம் ...

    முக்கிய விஷயம்
    கதையின் முதலில் தோர்கல் வரும் நேரம் பின்மாலை பொழுது .அந்தி நேரம்....
    கதையின் வயதான வல்னாவின் ஆட்களை சந்திக்கும் நேரம் உச்சிபொழுது.

    பனி பொழிவு நின்றுவிட்டது என கதையின் ஆரம்பத்தில் சொல்லும்போது பின்மாலை பொழுது ..
    அதே வார்த்தையை கதையின் இறுதியின் சூரியன் வந்துவிட்டான் என சொல்லும்போது மிக நேராக அண்ணாந்து பார்க்கிறான் ..சூரியன் தெரிகிறான் ..
    லாஜிக் இல்லா கதை இல்லை வெ வீ சார் !!!!

    ReplyDelete
    Replies
    1. தோர்கல் வல்னாவின் ஆட்களிடம் டோரிக் சேக்ஸகார்ட் 1-ன் ஆட்கள் ஏறுவந்த அதே குதிரைகளில்தானே ஏறி வந்துள்ளீர்கள் என கேட்குமளவுக்கு மோதிரம் ஒத்த சூழ்நிலையில் தோர்கலை கொண்டு சேர்க்கிறது..

      Delete
    2. வயதான வல்னா ஏற்படுத்தும் மாற்றங்கள் தோர்கலின் காலப்பயணத்தை குடிசையை பொறுத்தவரை அவன் முன்னும் பின்னும் பயணித்ததற்கு தகுந்தால்போல் முன்னும் பின்னுமாக அமைகிறது ...
      தோர்கல் வல்னாவை காப்பாற்றும் சமயம் டோரிக் வசம் உள்ள தோர்கலின் கத்தி தனித்து காண்பிக்கப்படுவதை காணலாம்
      குடிசை எரியும்போதும் அக்கத்தி காண்பிக்கப்படுவது வாசகருக்கு நினைவூட்டவே ..

      Delete
    3. மிக மிக கவனமாக உற்று நோக்கினால் தோர்கல் இரண்டாவது தனித்த பயணம் வரும்போது குதிரை இல்லாத உத்தரம் சரி செய்யப்பட்ட ஆட்டுபட்டிக்கு வருவதை நோக்கலாம் ...
      அதாவது சம்பவங்கள் எதிர்காலத்தில் வயதான வல்னா செய்யும் செயல்களின் விளைவுகளும் இறந்த காலத்தில் டோரிக் செய்த மாற்றங்களும் ஒருங்கே பிரதிபலிப்பதை காணலாம் ..
      வல்னா செய்த மாற்றங்கள் பின்னிருந்து முன்னாக நிகழ்வதையும் காணலாம்

      Delete
    4. Selvam abirami Sir. Unbelievable I've not at all noticed all this till u explained. Semma Thalaivare Semma. Uffff still a long way to grow for me in reading comics it seems. This blog has so many talented persons each one is so unique I'm just awestruck.

      Delete
  45. செனா அனா அவர்கள்,
    Sri Ram அவர்கள்,
    J அவர்கள் ,
    வெட்டுக்கிளியார் அவர்கள் மற்றும்
    எடிட்டர் அவர்களின் மற்றும் ஏனையோரின் விளக்கங்களும் ,பொழிப்புரைகளும் ,சந்தேகங்களும் ,அதை நிவர்த்தி செய்த விதமும், பலப்பல சாத்தியங்களை எடுத்தாழும் தன்மையும் இந்த வருடப் பொங்கலை 'தோர்கல் பொங்கலாக 'மாற்றிவிட்டது.

    ReplyDelete
  46. ஓரோபோரரஸ் மோதிரத்தின் சக்தி

    இது ஒரு ககனமணி .

    சித்தாந்தங்களில் அறுதியிட்டு கூறப்பட்டுள்ள இந்த அபூர்வ உலோகக் கலவை காலத்தை மாற்றும் வல்லமை கொண்டது.

    நினைத்தவுடன் நினைத்ததை முடிக்கும்.

    உலோகங்களை தங்கமாக்கும் பரிசவேதி.

    தத்துவஞானக்கல்.

    இது நடத்தும் காலபரிமாண மாற்றங்களைத் தான் இந்த கதையில் பார்க்கிறோம்.

    ReplyDelete
  47. கதையின் துவக்கத்தில் வருவது யார் யார் ???
    துவக்கத்தில் வரும் சேக்ஸகார்ட் யார் ,வல்னாவா ? அல்லது வேறு யாரோவா ? துவக்கத்தில் வரும் உருவங்கள் ஒன்றா ? இரண்டா ?
    இந்த கேள்விகளை எழுப்புமுன்னர்
    ஓரோபோராஸ் –ன் துவக்கமும் முடிவுமற்ற மாயச்சுழலில் வாசகர்களை சிக்க வைக்க வான் ஹாமே முயற்சி செய்திருப்பதை புரிந்துகொள்ள முயன்றால் மட்டுமே நன்மை பயக்கும் ..
    தோர்கலின் நடப்பு பிரபஞ்ச நேரம் எங்கே துவங்கி எங்கே முடிகிறது என்பதை ஆராய்வதை விட ஓரோபோராஸ் தத்துவம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொண்டோம் என்ற சேதியை வான் ஹாமே –வுக்கு அனுப்பினால் மட்டுமே அவர் முகத்தில் புன்னகை விரியும்
    வாசகர் ,கதாசிரியர் இருவருக்குமே வெற்றி என்ற நிலை இதுவே.

    ReplyDelete
  48. ஆர்ப்பரித்து எழும் கால இணைய பிரபஞ்ச வளையங்களில் மறுபடி மறுபடி
    சம்பவங்கள் திரும்ப திரும்ப நிகழ்வது ஓரோபோராஸ் தத்துவம் இந்த வட்டங்கள் மூலம் சொல்லவரும் சேதியை உணர முடிந்தால் போதுமானது

    ReplyDelete
  49. கதையில் வரும் மூன்றாம் நாள் சங்கராந்தி என்பது வல்னாவின் இறப்பு மற்றும் பிறப்பு பற்றியது
    நடைமுறையில் கிறிஸ்துமஸை ஒட்டியது
    குளிர்கால சங்கராந்தி துவங்கும் நாள் டிசம்பர் 22..மூன்றாம் நாள் என்பது கிறிஸ்துமஸ் ஆகும் ..
    வைகிங் காலகட்டத்தில் Yule என அழைக்கப்பட்டது ..
    Yule என்பது ஓடினின் பல பெயர்களில் ஒன்று ..
    இது பிறப்பு –இறப்பு – மீள்பிறப்பு சார்ந்த தெய்வங்களை கொண்டாடும் நாள்
    சூரியன் தனது இடப்பெயர்ச்சியை திருப்பி கொள்ளும் நாள் ..புதிய சூரியனாக மாறும் நாள் ..
    ரோமானிய வகையில் மகர ராசி சனியின் வீட்டில் பிரவேசிக்கும் நாள் ..
    இது சூரியன் மிக பிரகாசத்துடன் மீண்டு வரும் நாள் .
    Winter solstice என டைப் செய்தால் பல பல தகவல்கள் கிடைக்கும்

    நமக்கு வல்னா இறந்து பிறந்த நாள் ..

    ReplyDelete
    Replies
    1. உத்தரம் விழுவது, தோர்கல் கண்ணை மூடுவது , போன்றவை மேஜிக் செய்பவர்கள் அழகிய பெண்ணை முன் நிறுத்தி நம் கவனத்தை திசை திருப்பும் செயலாகும் ..

      தோர்கலின் முதல் காலப்பயணத்தை அசை போடுங்கள்
      ஒரே நேரத்தில் குதிரை ஆட்டு பட்டியின் உள்ளே இருக்கிறது
      அதே சமயம் வெளிக்கொணரவும் படுகிறது
      இதற்கான மோதிரத்தின் எதிர்வினையே கதை ?
      இது கதையின் துவக்கமா ? முடிவா ?
      கதையின் இறுதியில்
      வயதான வல்னா குடிசையின் வெளியே
      டோரிக் ,தோர்கல் உள்ளே
      குதிரை வெளியேற்றப்படும் தருணம் ..

      அடுத்த காட்சி

      அழகிய புல்வெளி ..பாய்ந்தோடும் குதிரை
      இள வயது வல்னா வெளியே
      ஆட்டுப்பட்டியில் இருந்து வெளியேறும் டோரிக் ,மற்றும் தோர்கல்..
      கதையின் மாயச்சுழல் இப்படித்தான் துவங்குகிறது ?
      எது முதலில் துவங்கியது ?
      விடை மிகவும் கடினம்....
      வாழ்க ஓரோபோராஸ் தத்துவம் ,,

      Delete
    2. ப்பா!!! எவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க!!!!

      Delete
    3. ///
      நமக்கு வல்னா இறந்து பிறந்த நாள் .. ///

      இனிய இறந்து பிறந்தநாள் வாழ்த்துகள் வல்னா!

      Delete
    4. ஹா..ஹா..ஹா..

      ஓரோபோரஸ் மோதிரம் கைவசம் இருந்தா கேக் கூட அனுப்பலாம்..:)

      அப்புறம் மாட்டுப்பொங்கல் அன்னைக்கு மாடு மிரண்டு கொட்டாரத்தோட சுவத்தை
      உதைச்சிட்டு வெளியே ஓடினா பின்னாலேயே ஓடி வல்னா மாதிரி பொண்ணு இருக்கான்னு பாக்காதீங்க ..:-)

      நம்மகிட்டே இருக்கறது மச்சின மோதிரம் இல்லாட்டி தலைதீபாவளி மோதிரம்..( ரெண்டுல ஒண்ணு அடகுல இருக்கும்)

      மாடு மிரண்டு ஓடினது நாம அன்னிக்கு பண்ற இம்சையால இருக்கும்..:)

      Delete
    5. அன்புள்ள திரு செல்வம் அபிராமி சார்
      காலப் பயணம்
      - நிகழ் பிரபஞ்சம்
      - இணை பிரபஞ்சம்

      இவையே கதை நெடுக ரவுண்ட் கட்டும் சமாச்சாரங்கள் ! இவை சகலமுமே மனித கற்பனையின் உச்சங்கள் – (இப்போதைக்காவது) என்பதால், எங்குமே வலுசேர்க்க விஞ்ஞானபூர்வ facts-களை முன்வைத்தல் சாத்தியமாகிடாது ! So அதனை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் ப்ளீஸ் ! Logic has to be at a premium in the fantasy world ! இது நமது எடிட்டர் சொன்ன வார்த்தைகள் .fantasyworld ல் லாஜிக் ஐ எதிர்பார்க்காதீர்கள் என்பதுதானே இதன் அர்த்தம்.போதும் என்று நினைக்கிறேன் .உங்கள் அளவு கடந்த உழைப்புக்கு தலை வணங்குகிறேன் நன்றி .

      Delete
    6. @ வெ வீ சார்! உங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் எனது எழுத்துக்கள் அமைந்து இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்..

      தோர்கலின் தனித்த காலப்பயணங்கள் லாஜிக் வரையறைக்கு உட்பட்டவை என சொல்ல முனைவதே என் விருப்பம்..

      ஃபேண்டஸி கதையென்றாலும் அதிலும் நிதர்சன வரையறைகள் இருக்கமுடியும் என கூற முனைந்தேன்..

      இது சரியெனவும் சொல்லவில்லை...எனது பார்வை விமர்சனத்துக்கு உட்பட்டதே...

      உங்கள் மனதில் ஏதேனும் வருத்தம் தோன்றியிருப்பின் மறுபடியும் மன்னிக்க வேண்டுகிறேன்..

      Delete
  50. ஜார்க்கண்ட்டுக்கு டிக்கெட் கிடைக்காததால் தற்போது சிலுக்குவார்பட்டியில் தஞ்சம்..!

    ReplyDelete
    Replies
    1. சிலுக்குவார்பட்டி சிலுக்கிடம்?!

      Delete
    2. உங்க சிஷ்ய புள்ளையா இவ்வளோ பொது வெளியில் காட்டிக் குடுக்கிறீகளே ஈ.வி.
      பப்ளிக்...பப்ளிக்....

      Delete
  51. அடேங்கப்பா உழைப்புகள் ,அற்புதமான கற்பனை சிறகுகள் ..ஆசிரியர் பதிவில் இருந்து நண்பர்களின் தோர்கல் பதிவு வரை பலத்த பலத்த கை தட்டல்கள் அனைவருக்கும்...


    ஓர் சிறிய சந்தேகம் மட்டுமே..

    தோர்கல் சாகஸமே ஒரு பேண்டசி கதைகளம் தானே..நாயகனே கற்பனையை மீறிய சாகஸநாயகனே எனும் போது தோர்கல் சாகஸத்தில் "லாஜீக் " "காரணங்கள் " "நோக்கங்கள் " அனைத்துமே அளவுக்கு மீறிய கற்பனைகள் தானே..ஒரு தேவதையின் கதை கூட நம்ப முடியாத கற்பனை தானே..
    ஆனால் இந்த சிகரங்களின் சாம்ராட் இதழில் மட்டும் இந்த அளவிற்கு வாசகர்களை "உழைத்து அறிய வேண்டும் கதை கருவை " என்று கதை ஆசிரியர் கொண்டு வந்த்தன் காரணம் என்னவோ தெரியவில்லை..

    கதை நி நி போல பாதியில் படிக்க முடியாமல் போகவில்லை.முடித்தவுடன் என்னடா கதை இது என சலிப்பு தட்ட வைக்க வில்லை..

    இத்துனை இத்துனை ஆராய்ச்சிகள் செய்யாமலே கதை நம்மை ஒரு புது உலகிற்குள் கொண்டு சென்றது உண்மை.

    என்னை பொறுத்தவரை எனக்கு இதுவே போதுமானது போலும்.:-))

    இதற்கே நான் கதை ஆசிரியருக்கு ஆளுயர மாலை அணிவிக்கிறேன்.:-)

    ReplyDelete
  52. எங்களுக்கு முழுதாக/அரைவாசியாவது/கால்வாசியாவது புரிந்ததோ, இல்லையோ எடிட்டர் சமூகமும், நண்பர்கள் செனாஅனா, sriram, J ஆகியோரது தேடல்களும், ஆராய்ச்சிகளும், விளக்கங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன! வான் ஹாம் போட்டிருக்கும் முடிச்சுகளை நீங்களெல்லாம் அவிழ்த்திருக்கிறீர்களோ இல்லையோ - அதை அவிழ்க்க நீங்கள் கொண்ட முயற்சிகளே அசாத்தியமானவை!! இதற்கென நீங்கள் செலவிட்ட நேரமும், உழைப்பும், நீங்கள் புரிந்துகொண்டதை இங்கே விளக்க முயன்ற ஆர்வமும் போற்றலுக்குரியவை!!

    நன்றி நண்பர்களே! _/\_

    (நன்றி சொல்லிவிட்டதால் 'இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்' என்று அர்த்தமாகிடாது! உங்ககிட்டேர்ந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.. இன்னும்.. இன்னும்..) :)

    ReplyDelete
    Replies
    1. Well said Vijay ji. These views itself made the day for us. No doubt

      Delete
  53. @செனாஅனா

    பனியில் புதையுண்ட அந்த இடக்கை - வலக்கை குறித்து ஏதேனும் துப்புக் கிடைத்தா?

    ReplyDelete
    Replies
    1. கதையின் ஜீவநாடி என்னவென்று தெரியாத நிலையில் விளைந்த குழம்பிய சிந்தனைகளின் வெளிப்பாடு அது ஈவி !!!

      தோர்கலின் இரண்டாவது தனித்த பயணத்துக்கு காரணத்தை சுட்டிக்காட்ட இரண்டாவது புதையுண்ட கை உதவியது ..

      அது தவிர வலக்கை ,உலக்கை ,இடக்கை எதற்கும் முக்கியத்துவம் இல்லை .

      படங்கள் வழிகாட்டுகின்றன ..

      வரிகள் நெறிப்படுத்துகின்றன ..

      ஆனால் கதையின் உள்ளர்த்தம் இவற்றுக்கு அடியில் புதைந்து கிடக்கின்றது .

      அந்த கைகள் யாருக்கு சொந்தம் என்பது கூட -டோரிக் தவிர -முக்கியத்துவம் அற்றது ஈவி ..

      குழப்பங்கள் நீங்கி தெளிவான மனநிலை உள்ளது

      Delete
    2. மூன்றுமே ஒரே கை தான்!

      முதலாவதும், இரண்டாவதும் உள்ளங்கை பக்கத்தையும்,

      மூன்றாவது கையின் வெளிப்பக்கத்தையும் காட்சிப் படுத்துகின்றன!!

      அவ்வளவு தான்!!

      வலது, இடதெல்லாம் இல்லை!

      Delete
    3. மூன்றும் ஒரே கை இல்லீங்க.

      முதலிரண்டு கைகளிலும் சட்டை? நுனி தெளிவாகவே இருக்க.., ககடைசியில் மோதிரத்துடன் காணப்படும் கை வெறுமையாக இருக்கிறது..!

      Delete
    4. @ GP,மிதுன் ..தோர்கலின் முதல் மூன்று தனித்த காலப் பயணம் ஏன் நிகழ்ந்தது என்பதில் கதையின் மொத்த முடிச்சும் அவிழ்கிறது..

      மோதிரம் குடிசையின் காலத்தை மாற்றுகிறது..

      With these facts சிகரங்களின் சாம்ராட் can be broken page by page..

      இது முடிவும் துவக்கமும் இனம் பிரித்தறிய முடியாத கதை..

      Delete
    5. முதல் கையானது இருட்டில் இருப்பதால் மோதிரம் தொியாது!

      2வது கையில் மோதிரம் அணிந்திருந்தாலும், நம் பாா்வைக்கு தொியாதது போலவே வரையப் பட்டிருக்கிறது!

      3ல் கையின் வெளிப்புறத்தை, வெளிச்சத்தில் காட்டும் போது மோதிரம் பளிச்சென தொிகிறது!

      மற்றபடி மூன்றும் ஒரே கை தான்! நம்மை குழப்பவே இவை "கை"யாளப் பட்டிருக்கின்றன என்பதே என் எண்ணம்!!

      Delete
    6. எடிட்டரின் பொங்கல் பதிவு ரெடி நண்பர்களே! :)

      Delete
  54. நானும் கலந்துக் கொள்கிறேன்.

    அதாவது டோரிக்கை க்ளைமாக்ஸில் வால்னா , பனிச்சரிவை உண்டாக்கி கொன்றது ஏனென்று தெரியுமா ?

    தோர்கலைக் கொல்ல வல்னாவிடமிருந்து மோதிரத்தைப் பறித்த டோரிக் காலத்தைக் கடந்து சென்று தோர்கலை எதிர்பார்த்து காத்திருக்கும் போது, தற்செயலாக பாட்டி வல்னாவை பார்த்து அதிர்கிறான்.
    ஆறு மாத காலம் இள வல்னாவுடன் குடும்பம் நடத்திய டோரிக்'கு எதிர்காலத்தில் வல்னா இப்படித்தான் இருப்பாள் என்ற எண்ணமே பக் 'கென்றது.

    தோர்கலைக் கொல்வதை விட பாட்டியுடன் வாழ வேண்டுமே என்ற எண்ண அலைகளே டோரிக் மனதில் வியாபித்திருக்க வேண்டும்.

    இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க சட்டுபுட்டு இடத்தைக் காலி பண்ணிட்டு, குடிசைக்கு பக்கத்துலபோனா டக் 'னு காலத்துல எஸ்கேப் ஆகிடலாம் என்று, சட்டென்று திரும்பி பனியில் சறுக்குகிறான்.

    முக்காலத்தையும் உணர்ந்த பாட்டி வல்னா ,டோரிக்கின் கபடநாடக வேஷத்தை உணரவா முடியாது?

    விளைவு ?
    தன்னைக் கைக்கழுவிய டோரிக்கை
    எக்காளத்தை முழக்கி ஒரேடியாக தலைமுழுகினாள்.

    பி.கு
    இது போன்ற வித்தியாசமான சிந்தனைகள் வரவேற்க்கப்படுகின்றன..!😉😉😉😉

    ReplyDelete
    Replies
    1. ////அதாவது டோரிக்கை க்ளைமாக்ஸில் வால்னா , பனிச்சரிவை உண்டாக்கி கொன்றது ஏனென்று தெரியுமா ?
      ////

      டோரிக்கும் வல்னாவும் ஆறுமாத காலம் குடும்பம் நடத்தியிருக்கிறார்கள்! அந்த ஆறுமாதத்தின் முதல் நாளில் வல்னா டோரிக்கிற்கு ஆடு மேய்க்கக் கற்றுக்கொடுக்கவே, அது அவனுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது! தொடர்ந்துவந்த நாட்களில் ஆடுமேய்ப்பதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறான் - இரவும் பகலுமாக!

      அப்புறம் வல்னா அவனைக் கொல்லாம என்ன பண்ணுவா?!!

      Delete
    2. ஒரு நாள் டோரிக்கிடம் வல்னா "நீ இப்படி ஆடு மேய்ச்சுக்கிட்டே இருந்தா அப்புறம் என் வயித்துல எப்பத்தான் ஒரு புழு-பூச்சின்னு உண்டாகறதாம்?" என்று சூசகமாகக் கேட்டிருக்கிறாள்!
      அதற்கு டோரிக் "இந்தா, இனிப்பான இந்தப் பழங்களைச் சாப்பிடு.. சீக்கிரமே புழு-பூச்சி உண்டாகிடும்"னு சொன்னானாம்!

      டோரிக்கின் மேல் கொலை வெறி ஏற்பட வல்னாவுக்கு இதுவே ஆரம்பப் புள்ளியாக அமைந்ததென்று வரலாற்றில் கூறப்பட்டிருக்கிறது!

      Delete
  55. இதோ இப்ப இப்ப கிளம்பியாச்சு..... மொத தபா ஆசிரியர் ஜார்கண்ட் பக்கமா போக சொன்ன போதே அதனுடைய உள்ளர்த்தம் புரில. ஆனால் அது ஒரு முன்னெச்சரிக்கைகான குறியீடுனு இப்ப தெளிவாயிடுத்து.

    ReplyDelete
    Replies
    1. சார்...உங்களுக்கு எந்த பெர்த் ? நான் அப்பரில் இருக்கிறேன்...!!

      Delete
    2. அவர் உங்க பெர்த்துக்கு ஆப்போசிட் பெர்த்! நான் சைடு அப்பர்ல இருக்கேன்!
      அப்புறம் வனதேவதை வல்னா அந்த டோரிக்கண்ணன் டோரிக்கைப் பார்த்து....

      Delete
  56. சிகரங்களின் சாம்ராட்!!

    முதல் பக்கத்தில் (52) தொடங்கி, பக்கம்59ல் உறங்கச் செல்வது வரை ஒரு பகுதியும், அதன் தொடா்ச்சியானது,

    பக்கம் 66ல் கடைசி பிரேமில், கண் விழுத்துக் கொண்ட பிறகு, நடந்ததெல்லாம் கனவு என்றுணா்ந்து, டோாிக்கை தேடிச் செல்வதும், அதே பக்கம் கடைசி பிரேமில், கனவில் வந்த சிதலமடைந்திருந்த தாழ்வாரம் பழுதில்லாமல் இருப்பதைப் பாா்த்து ஆச்சா்யப் படுவதோடும் முடிகிறது!

    தொடா்ந்து வெளியே நடந்து வரும் தோா்கல் பக்கம் 94 பிரேமில் இருந்து, சூாிய வெளிச்சத்தைப் பாா்த்து சந்தோசப் படுவதில் தொடங்கி இறுதிப் பக்கம் இருப்பது வரை தான் நிஜக்கதையோ?

    காலப் பயணம் முதலான சங்கதியெல்லாம் கதை படிப்பவரை குழப்பத்தில், ஆழ்த்த, கதாசிாியா் கையாளும் யுக்தியோ? என்றே எனக்குத் தோன்றுகிறது!!

    எப்படியோ ஒரு அற்புதமான வாசிப்பானுபவம் கிடைத்துள்ளது!

    சிகரங்களின் சாம்ராட் 100 / 100

    ReplyDelete
  57. தை பிறந்தால் வழி பிறக்கும்..

    காமிக்ஸ் சுவாசிப்போர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!!

    ReplyDelete
  58. முன்பே சொன்னது தான்.

    இந்த ஓரோபோரஸ் என்ற பெயர் கொண்ட உலோகப் பொருள் மோதிரமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

    வளையலாக இருக்கலாம்
    அல்லது மூடிய செயினாக இருக்கலாம்.


    விஷயம் வடிவத்தில் இல்லை.
    அதன் அணுவடிவமைப்பு மட்டுமே முக்கியம்.

    Infinity - முதலும் முடிவும் அற்றது.
    ஒன்று பொருண்மை
    மற்றது சக்தி

    மோதிரம் போன்ற வடிவம் கொண்ட அந்த ஓரிஸால்கம் என்ற உலோகங்களின் கலவையானது வெளிப்படுத்தும் அபரிமித சக்தி அலைகள் அடுக்கடுக்காக வட்டங்களின் வடிவில் சீராக போய்க் கொண்டிருக்கும்.
    காந்தம் வெளிப்படுத்தும் சக்தி காந்த அலைகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

    அது கண்ணுக்குத்தெரியாத சக்தி.

    பூமிக்கும் அந்த சக்தி உண்டு.

    அப்படியென்றால் பிரபஞ்சத்தின் சக்தி எவ்வளவு பவர்ஃபுல் .
    இதெல்லாமே சரிதான்.

    இந்த சக்தி அலைகளை இயக்கும் கிரியா ஊக்கி எது தெரியுமா.

    ஓம் என்ற பிரபஞ்சத்தின் ப்ரணவ ஓசை தான் அந்த கிரியா ஊக்கி.

    இப்ப சிகரங்களின் சாம்ராட்ல வல்னா ஊதும் எக்காளம் - ஓங்கார ஓசை தான்.
    அதுவே கதையின் ஆரம்பமான முடிவு.


    j







    ReplyDelete
    Replies
    1. பொங்குக பொங்கல்.

      வாழ்த்துக்கள் நண்பர்களே.

      Delete
    2. ஃபேன்டஸிலேர்ந்து திரும்பி இப்போ கதை ஆன்மீகத்தின் பக்கம் திரும்புறாப்ல இருக்கே!!

      எது எப்படியோ; படிக்க சுவையான தகவல்கள்!!

      Delete
  59. சாத்தானின் சீடர்கள்.:

    பரபரப்பாய் ஆரம்பித்து இடையில் சற்று மெதுவாய் ஊர்ந்து பின்னர் கொஞ்சமாய் வேகமெடுத்து இறுதியில் சுபமாய் முடிந்திருக்கிறது.!

    டெக்ஸ் கார்சன் கூட்டணியுடன் பயணிப்பதே பேரானந்தம் என்பதால் கதையில் இருந்த தொய்வு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.!
    ரேஞ்சர்கள் இருவரும் தங்களுக்குள் பரஸ்பரம் வாரிக்கொண்டு நையாண்டியாய் பேசிக்கொள்ளும் வசனங்கள் ரசிக்கவைத்தன.!
    இப்படியெல்லாமா மூடநம்பிக்கைகளோடு இருப்பார்கள் .. அதுவும் ஒரு கிராமமே..? என்று படிக்கும்போது வாசகர்களின் மனதில் எழும் கேள்விக்கான பதிலை கதைமுடிந்த அடுத்தப் பக்கத்தில் சொல்லியிருப்பது சிறப்பு.!

    குறைகள் என்று பார்த்தால்...

    வில்லன்கள் அனைவருமே சற்று தொங்கலாய் இருப்பது..
    இருள் தேவனைப் பற்றிய பின்னனி விளக்கமும், அத்தேவனை அவர்கள் பின்பற்றுவதற்கான அழுத்தமான காரணங்களும், பெரிதாய் கதையில் சொல்லப்படாதது ..
    வன்மேற்கின் சுண்டு சுள்ளானெல்லாம் துப்பாக்கியோடு திரிகையில் வில்லன் கும்பல் மட்டும் கத்தியை வைத்து க்ளைமாக்ஸ் சண்டை போடுவது ..

    இக்குறைகளைத் தாண்டியும் கதையை படிக்கும்போது மற்ற டெக்ஸ் கதைகளைப்போலவே சுகானுபவம் கிட்டத்தவறவில்லை ..!

    சாத்தானின் சீடர்கள் - டெர்ரர் பாய்ஸ்

    ரேட்டிங் 8/10

    ReplyDelete
    Replies
    1. பெரியவர் போனெல்லி ஏதோவொரு சாவகாச நாளில், ஜாலியாய் எழுதிய கதையாக இது இருந்திருக்க வேண்டும் ! இன்னும் கொஞ்சம் மெருகேற்ற அவர் முனைந்திருந்தால் - அந்நாட்களது ஜெய்ஷ்ங்கரின் "துணிவே துணை" படம் போலொரு decent கதைக்களத்தை இங்கேயே உருவாக்கியிருக்க முடியும் என்று படுகிறது !!

      அது சரி..."து.து" பார்த்தவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனரோ ?

      Delete
    2. ///அது சரி..."து.து" பார்த்தவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனரோ ?///

      மீ சார்!!

      டவுசர் போட்டிருந்த காலகட்டத்தில் தூர்தர்ஷனில் பார்த்திருக்கேன்! கதை ஞாபகம் இல்லேனாலும், இறுக்கமான முகத்தோட நம்ம ஜெய்சங்கர் சவப்பெட்டி ஒன்னை முதுகில் கட்டி இழுத்துக்கிட்டே வீதி வீதியா நடந்துக்கிட்டிருப்பாரு! அந்நாட்களில் பீதியுடன் பார்த்த படம் - இப்போ பார்த்தா கெக்கபிக்கேன்னு சிரிச்சு வைப்பேனோ என்னமோ!!

      Delete
    3. துணிவே துணை நான் நாலைந்துமுறை பார்த்திருக்கிறேன் சார்.!
      லாஜிக் வீசம் என்ன விலைன்னு கேப்பாங்கன்னாலும் செம்ம ஜாலியான படம்.! நம்ம சாத்தனின் சீடர்கள்ல வர்ர மாதிரியே அந்தப் படத்திலும் ஒரு கிராமமே கொள்ளைக்கும்பலா இருக்கும்.! வெளியே தெரியாம தலைமை பொறுப்புல ஒரு ஆன்ட்டி (ராஜசுலோச்சனா.??) இருப்பாங்க.!
      அந்த கிராமத்தைச்சுத்தி ஒருபக்கம் கடல், அடுத்தபக்கம் பாலைவனம், இன்னொருபக்கம் அடர்ந்த காடு, மறுபக்கம் பெரிய மலைத்தொடர்னு இருக்கும்.!
      இதுவரைக்கும் அப்படி ஒரு கிராமத்தை எப்படியாச்சும் நேருல பாத்திடணும்னு தேடிஈஈஈஈஈக்கிட்டே இருக்கேன்.!
      சவப்பெட்டி செய்யும் அசோகன் மாப்ளே ன்னு இழுத்து இழுத்து பேசுவது, ஜெய்சங்கர் போடும் மாறுவேசங்கள், அந்த காலத்தைய செட்டிங்ஸ் (C G இல்லாத காலம்) அப்புறம் ..அப்புறம் ஹீரோயின் வில்லின்னு அட்டகாசமான விசயங்கள் நிறையவே உண்டு.!

      சாத்தானின் சீடர்கள் கதை துணிவே துணை படத்தோடு பலவிதங்களில் ஒத்துப்போகிறது..!

      Delete
    4. ///இறுக்கமான முகத்தோட நம்ம ஜெய்சங்கர் சவப்பெட்டி ஒன்னை முதுகில் கட்டி இழுத்துக்கிட்டே வீதி வீதியா நடந்துக்கிட்டிருப்பாரு! ///

      குருநாயரே ...

      அது பெரிய கதை.!
      போலிசுகாரரான ஜெய், வில்லன் கோஷ்டியில் ஊடுருவனும்னு, தயாள்ங்குற டெர்ரர் மர்டரரா மாறுவேசம் போட்டுக்கிட்டு (வேறென்ன ஜிகினா விக்கும், அங்கங்கே பாக்கெட் காலரெல்லாம் வெச்ச சட்டையும்) போலிஸ்காரரான ஜெய்யை கொன்னுட்டதா காட்றதுக்காக ஒரு அநாதை டெட்பாடிக்கு ஜெய் வேசத்தைப் போட்டு ஏமாத்தி, சவப்பெட்டியில போட்டு இழுத்துக்கிட்டு அந்த ஊருக்குள்ள போவாரு.!
      அதுக்கு முன்னாடியோ பின்னாடியோ சரியா ஞாபகமால்லை .. தயாளா வேசம் போட்ட ஜெய்சங்கரும்,போலிஸ் ஜெய்சங்கரா வேசம் போட்ட இன்னொரு ஆசாமியும் ஒரு ஒற்றைக்கு ஒற்றை துப்பாக்கி மோதல் நடத்துவாங்க பாருங்க ..பாட்டெல்லாம் பாடி சவால் விட்டு ...அடடா அடடா...!

      Delete
    5. @ KOK

      ப்பா!! என்னாவொரு ஞாபக ஷக்தி - 'தயாள்'ன்ற பேரையெல்லாம் கூட ஞாபகம் வச்சிருக்கீங்களே!!!

      நேரம் கிடைக்கும்போது அந்தப் படத்தை மறுக்கா ஒருதபா பார்க்க முயற்சிக்கிறேன்!

      Delete
    6. ///அந்நாட்களில் பீதியுடன் பார்த்த படம் - இப்போ பார்த்தா கெக்கபிக்கேன்னு சிரிச்சு வைப்பேனோ என்னமோ!!///

      படம் ஆரம்பத்தில் பேயெல்லாம் வந்து ஆகாயத்தில் தொட்டில்கட்டின்னு பாட்டு பாடும்.! அந்த ஊர் ரயில்வே ஷ்டேசனே பேய் மாளிகை மாதிரிதான் இருக்கும்.! ரயிலில் போகும்போது ஒரு மொட்டையுடன் ஜெய் மோதுவார்.! ஸ்டேசனில் இறங்கி ஸ்டேசன் மாஸ்டர் ரூமுக்குப்போனா அங்கே அந்த மோட்டையோட போட்டோ மாட்டியிருக்கும்.! அவன் செத்து ஒருவருசம் ஆச்சின்னு ஸ்டேசன் மாஸ்டர் சொல்வாரு.! வெளியே போய்ட்டு உள்ளே வந்தா போட்டோவும் இருக்காது அந்த SMம் இருக்கமாட்டார்.! வேறோருத்தர் வந்து நான்தான் ஸ்டேசன் மாஸ்டர்னு சொல்வார்.!
      நல்ல படம் ..இப்போகூட பார்க்கலாம் ..பாருங்க.! செம்ம ஜாலியா இருக்கும்.!

      Delete
    7. யெஸ்!! இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வர்து! குறிப்பா அந்தப் பாட்டு "ஆகாயத்தில் தொட்டில் கட்டி கண்ணா உன்னைக் கண்டால்"னு ஒரு பேயம்மா பாடுவாங்க!!

      Delete
    8. நம்ம இரும்புக்கை மாயாவியையே தூக்கி சாப்பிடுறாமாதிரி ஜெய்சங்கரோட இன்னொரு படம் இருக்கு ..."கன்னித்தீவு " .

      மின்சாரம் தேவையில்லை ..மருந்து சாப்பிட்டு மாயமா மறைஞ்சிடுவாரு.! அந்தத் திறமையை வெச்சி யாருமே போகமுடியாத போகவிரும்பாத கன்னித்திவுக்குள்ள போய் குற்றவாளிகளை பிடிப்பாரு.!

      நேரம் கிடைச்சா அதையும் பாருங்க.! நாம எதிர்பாக்குற எல்லா அம்சங்களும் உண்டு குருநாயரே..!

      Delete
    9. ///நாம எதிர்பாக்குற எல்லா அம்சங்களும் உண்டு குருநாயரே..!///

      அப்படிப்போடுங்க!!

      உங்கிட்டேர்ந்து தெரிஞ்சுக்கவேண்டியது நிறைய இருக்கும்போலிருக்கே!!! பேசாம கொஞ்சநாளைக்கு நீங்களே குருநாயரா இருங்களேன்?

      Delete
    10. வனரேஞ்சர் ஜோ வின் சாகசமான சிறுத்தைகள் சாம்ராஜ்யம் நினைவிருக்கிறதா? அதில் வரும் சில சம்பவங்கள் போலவே கன்னித்தீவு படத்திலும் இருக்கும்.!
      மைக் மூலமாக பேசி கடவுள் பேசுவதாக காட்டுவாசிகளை நம்ப வைப்பார்களே ..அந்த சம்பவம்.!

      Delete
    11. /// பேசாம கொஞ்சநாளைக்கு நீங்களே குருநாயரா இருங்களேன்?///

      நோ வே ..!

      நீங்க ஒரே ஒரு காமா பயில்வான் .. நான் உங்களோட ஒரே ஒரு சிஷ்யன் சோமா பயில்வான்.!

      கடேசி வரைக்கும் மாறாது..!:-)

      Delete
    12. ஹா ஹா ஹா!!

      (அப்பாடா!! 'குருநாயர்' பதவி தப்பிச்சது! )

      Delete
  60. "இணைப்பிரபஞ்சம்.....துணைப்பிரபஞ்சம் ...பக்கத்துவீட்டுப் பிரபஞ்சம்" என கால சஞ்சாரம் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருக்க, "எக்ஸ்ட்ரா நம்பர் கேட்டேனா ? நான் எக்ஸ்டரா நம்பர் கேட்டேனா ?" என்று இதர வாசகர்கள் மௌனமாய் குரல் கொடுக்க நினைப்பது போலவே எனக்கொரு பீலிங்கு !!

    So ஜாலியாய் ஒரு பொங்கல் பதிவோடு சீக்கிரமே சந்திக்கிறேன் guys !!

    ReplyDelete
    Replies
    1. காத்திருக்கிறோம் சார்.....

      Delete
  61. வான் ஹாம் அவா்களுக்கு பிரபஞ்சம், இணை பிரபஞ்சம், விஞ்ஞானம், தத்துவாா்த்தம் போன்ற விஷயங்களில் எல்லாம் பொிய பற்றுதலைக் கொண்டெல்லாம் இக்கதையை அமைத்ததாக தொியவில்லை!

    மாறாக கதையை பிரம்மாண்டப் படுத்த கற்பனையின் உச்சத்திற்கே சென்று, கூடவே பல இடியாப்பச் சிக்கல்களையும் வைத்து மிரட்டியிருக்கிறாா்!!

    ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்றோரே தங்களது கட்டுரைகளில் காலப் பயணம் என்பதை ஒரு கற்பனையாக மட்டுமே எண்ண முடியுமே அன்றி, நடைமுறை சாத்தியமற்ற சங்கதிகள் தான் அவை, என பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறாா்கள்! ஆனாலும் யாருக்கும் இன்றுவரை காலப் பயணம் குறித்த ஆா்வம் குறையவில்லை!

    ஒருவகையில் காலப் பயணமும், ஜோதிடமும் ஒன்று தான்! நம் இறந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள காலப்பயணமும், எதிா்கால ஆசைகளை பூா்த்தி செய்ய ஜோதிடமும் மனிதா்க்கு அவசியமாகிறது! எனவே தான் நடவாத ஒன்றின்மேல் பேராசை கொள்கிறோம்!!

    ஆனால் விஞ்ஞானிகள் அணுகும் காலப்பயண நோக்கம் என்பதே வேறு!!

    இங்கே நாம் சிவ-சக்தி என்கிறோம்!
    மேற்கே விஞ்ஞானிகள் பிளஸ் மைனஸ் (+-) என்கிறாா்கள்!!
    ஜப்பானில் ஜென் யின்-யாங் என்கிறாா்கள்!

    நுட்பமாக ஆராய்ந்தால், ஆண்-பெண், இரவு-பகல், யின்-யாங் போன்ற இரட்டைச் சங்கதிகள் எல்லாம் ஏக காலத்தில் உலகம் முழுவதும் இருந்தே வந்திருந்திருக்கின்றன! இவற்றிற்கு எந்தவொரு நாடோ, இனமோ உாிமை கொண்டாட முடியாது!

    காலப் பயணம் என்னும் போது இதை எல்லாம் பேச வேண்டியிருக்கிறது!!

    என்னளவில், இக்கதையில் வரும் காலப் பயணம், இணைப் பிரபஞ்சம் போன்றவை குறித்த தனது பாா்வையை வான் ஹாம் "தோா்கலின் கனவுக் காட்சிகளின்" மூலம் வெளிப்படுத்தியிருக்கிறாா் என்பதே என் எண்ணம்!

    கதை எண் 1 : ஒரு தேவதையின் கதை
    பக்கம் எண் : 47ல் முதல் 3 பிரேம்கள்

    அந்த 3 பிரேமின் வசனங்கள்
    எதிா்வரும் கதைக்கான, தோா்கல் கனவு மற்றும் நிஜம் தொடா்பான சங்கதிகளின் முன்னோட்டமாகவே எனக்கு தோன்றுகிறது!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மிதுன்!! ரொம்ப நாளுக்கப்புறம் உங்க ஆராய்ச்சிக் கட்டுரைய படிக்கிறப்ப சந்தோசமா இருக்கு!! ஆனா கொஞ்சம் லேட் நீங்க! கடையை இழுத்து மூடற நேரம் இது (அதாவது, புதுப் பதிவு வரப்போகுது!)

      Delete
  62. காணாமல் போன கடல் reprint புத்தகத்துக்காக வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன் ...மீண்டும் ஒருமுறை சிறுவயத்துக்கு கூட்டிச்செல்லும்..இந்த புத்தகம் படிக்கும்போது எனது தந்தை புத்தகத்தை அடுப்பில் போட்டுவிட்டார் மறுபடியும் இந்த புத்தகத்தை பல பழைய மார்க்கெட்களில் தேடி கிடைக்கவில்லை கடைசில அப்படியே விட்டுவிட்டேன் மீண்டும் ஒரு முறை ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்...

    ReplyDelete