Wednesday, October 31, 2018

இதழ்கள் 3 ....எதிர்பார்ப்புகள் 300 ..!

நண்பர்களே,

வணக்கம். இம்முறை ஆபீசில் மாமூலான அந்த டெஸ்பாட்ச் தின ரணகளமில்லை ; "DTDC க்கு ஆட்டோ போயிடுச்சா ? ST -லே எப்போ புக்கிங் பண்ணுவாங்களாம் ? Professional ரசீது வாங்கியாச்சா ? அச்சச்சோ....இது ரிஜிஸ்டர் பார்சலாக்கும் ; இதை யாரு கூரியர் கட்டில் வைத்தது ? பாரின் பார்சல் பேக்கிங் ஆச்சா ?" என்று அப்பப்போ வெட்டி ஆபீசராய் நான் சவுண்ட் கொடுக்க முகாந்திரம் இன்றைக்கு இம்மி கூட இருக்கவில்லை !! சில பல நாட்களுக்கு முன்னே தயாராகிக் காத்துக் கிடந்த இதழ்களை நமது அச்சகப் பணியாளர்கள் ஒரு நாள் முன்னதாகவே நீட்டாகப் பேக் செய்து தந்திருக்க, இன்று காலை வரிசையாய் சகலமும் கூரியர்களை நோக்கிப் புறப்பட்டு விட்டன ! So புலர்ந்திடவுள்ள நவம்பரை நம் இதழ்களோடே வரவேற்கத் தயாராகிக் கொள்ளுங்கள் guys !! ஆண்டின் இறுதி stretch-ன் அட்டவணை செம இலகுவாய் இருப்பதன் புண்ணியத்தில் - ஜாலியாய் கையை வீசிக் கொண்டிருக்கிறேன் !!

இம்முறை இதழ்கள் 3 மட்டுமே என்றாலும், என்னுள் இவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் எதிர்பார்ப்புகளைக்  கிளப்பியுள்ளன! 

தீபாவளி மலர் true to form - உங்களின் டெக்ஸ் காதலுக்குத் தீனி போடுமா ? டைகரின் flashback - நாம் தந்துள்ள பில்டப்புக்கு நியாயம் செய்திடுமா ? என்ற ரீதியில், TEX ட்ரிபிள் ஆல்பத்தில் என்னுள் கேள்விகள் ! 

நீலப் பொடியர்களின் சமாச்சாரத்திலோ - கேள்விகளின் பரிமாணமோ வேறொரு விதம் ! SMURFS களுக்கு maybe தற்காலிகமாய்  "சுப மங்களம்" பாடவிருக்கும் இந்த இதழ், திடு திடுப்பென ஏதேனும் மாயம் செய்திடுமா ? உங்களிடையே பரவலாய் ஏதேனும் அதிரடி மனமாற்றங்களைக் கொணர்ந்திடுமா ? என்ற ஏக்கங்கள் உள்ளுக்குள் !!

007-ன் சமாச்சாரத்திலோ முற்றிலும் வேறொரு வித எதிர்பார்ப்பு ! அட்டைப்படம் ; சித்திரங்கள் ; கலரிங் ; பிரின்டிங் என ஜம்போவின் இந்த இதழ் # 3 செம கச்சிதமாய் அமைந்திருப்பதாய் என் கண்களுக்குத் தெரிந்தாலும் -  செம ஸ்ட்ரிக்ட் ஆபீசர்களான உங்களிடம் அதனை ஒப்படைத்த கையோடு - உங்களின் reaction-களை கண்டறிந்திடும் ஆர்வத்தை அடக்க இயலவில்லை ! ஜேம்ஸ் பாண்டின் முற்றிலும் புதுமையான அவதாரை நீங்கள் ரேட் செய்திடல் தானே நமக்குப் பிரதானம் ? So காத்திருப்போம் - உங்களின் முதலாவது ;.இரண்டாவது, மூன்றாவது ரியாக்ஷன்களுக்கு !!

இம்முறை 2019-ன் அட்டவணையை சந்தாதாரர்கள் அத்தனை பேருக்கும் மட்டுமன்றி - ஆன்லைனில் ; உள்ளூர்க் கடைகளில் வாங்கிடக் கூடிய வாசகர்களுக்குமே கிடைக்கும் விதமாய்த் திட்டமிட்டுள்ளோம் ! So இம்மாத SMURFS இதழோடு அட்டவணை 2019-ம் இடம் பிடித்திருக்கும் ! Try not to miss it folks !! 

தீபாவளிக்கு ஒற்றை வாரம் கூடப் பாக்கியில்லை எனும் போது - எங்கள் நகரம் இந்நேரம் தூங்கா நகரமாய் உருமாறியிருக்க வேண்டும் தான் !! ஆனால் உச்ச நீதி மன்றத்தின் பட்டாசு சார்ந்த தீர்ப்புகள் - உற்சாகங்களை சற்றே மட்டுப்படுத்தியுள்ளது போலத் தெரிகிறது ! ஊருக்குள் ; கடை வீதிகளில் ; பஜாரில் இன்னமும் பண்டிகைக்கான அந்த உத்வேகத்தைப் பார்த்திட இயலவில்லை ! But surprise ....surprise ..ஊரைச் சுற்றிலுமுள்ள அத்தனைப் பட்டாசுக் கடைகளிலும் போன வாரயிறுதி முதலாகவே செம கூட்டம் ; செம விற்பனை !! காத்திருக்கும் வாரயிறுதியில், இன்னமும் அமர்க்களமாய் விற்பனையாகிடுமென்ற நம்பிக்கையில் வணிகர்கள் காத்துள்ளனர் !! Fingers crossed !!  

ஒரு புஸ்வானத்தையே ஏழடி தொலைவிலிருந்து கொளுத்த முற்படும் சூரப்புலியான எனக்கு, தனிப்பட்ட முறையில் பட்டாசுகள் மீது மையல் லேது ; ஆனால் இந்தப் பகுதிகளின்  பொருளாதாரமே, இந்தத் துறையைச் சார்ந்திருக்கும் போது - அவற்றின் வெற்றிகளிலும், தோல்விகளிலுமே நகரின் எதிர்காலமும் கலந்துள்ளது ! Crossroads of life for குட்டி ஜப்பான் ! ஆனால் கடந்த சனி & ஞாயிறின் விற்பனைகளை ஒரு வழிகாட்டியாய் எடுத்துக் கொள்வதாயின் - பின்னிப் பெடல் எடுத்து விடுவார்கள் இம்முறையும் !! Bye guys ! See you around !
P.S : இதழ்கள் ஆன்லைனில் லிஸ்ட் ஆகி ரெடியாகக் காத்துள்ளன : http://lioncomics.in/monthly-packs/547-november-2018-pack.html

304 comments:

  1. Replies
    1. 21வது லயன் தீபாவளி மலர் உள்ள பேக்கேஜிங் உடைக்கும் ஆவல் அதிகமாகிட்டே இருக்கு நொடிக்கு நொடி! நீண்ட இரவாக போய் விடுமோ??????

      Delete
    2. நேக்கு ஜேம்ஸ் பாண்டை நோக்க செம ஆவல்..!

      Delete
    3. நேக்கு வேறென்ன,
      காசு பணம் துட்டு, மணி மணி
      மேலதான் ஆவல்!

      Delete
  2. Replies
    1. தீபாவளி டெக்ஸ் தீபாவளி

      Delete
    2. நன்றிகள் சார் ! உங்களுக்கும், நண்பர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

      Delete
    3. No
      This is Tiger தீபாவளி.
      (கொளுத்தி போடுவோம்)

      Delete
  3. Replies
    1. அதிசயமா 7வதுன்னு போட்டா, 6வது நான்..!

      Delete
  4. வணக்கம்.

    ReplyDelete
  5. வாவ்
    வணக்கமுங்கோ சார்
    .

    ReplyDelete
  6. ரொம்பவே current ஆன கேப்ஷன் எனும் போது - எனது வோட்டு யுவகிருஷ்ணாவுக்கே !!! What say judges ?

    @editor! Sure sir..


    கேப்ஷன் போட்டியின் வெற்றியாளறாக நண்பர் யுவகிருஷ்ணா அறிவிக்கப்படுகிறார்!!!!

    வாழ்த்துகள் யுவகிருஷ்ணா! :-)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே...

      Delete
    2. யுவகிருஷ்ணா..வாழ்த்துகள் சார்..!!

      Delete
    3. @ யுவகிருஷ்ணா : LMS புக்கை அலுவலக முகவரிக்கே அனுப்பிடலாமா சார் ?

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. கா:கல்யாணம் ஆகியும் தனியா நீ சுத்தற..கல்யாணம் பண்ண வாய்ப்பே இல்லாம என் வாழ்க்கை போய்டுச்சு..கல்யாணம் நடக்குமானே தெரியாம கிட்டும் ஜாக்கும்..எனக்கென்னமோ ஆம்பளைங்களுக்கு தான் me too இருந்திருக்கணும்

      டெ:அட விடு பெருசு...me tooல மாட்டாம இருக்கமே அது பத்தாதா..யுவிக்கு வாழ்த்த சொல்லிட்டு பொழப்ப பாக்கலாம் வா..வாழ்த்துக்கள் யுவி

      ச:(Me too)

      Delete
    6. வாழ்த்துகள் யுவா சார்..:-)

      Delete
    7. வாழ்த்துக்கள் சார்.!

      Delete
    8. வெற்றி பெற்ற நண்பர் யுவகிருஷ்ணாவுக்கு என் வாழ்த்துகளும்! :)

      Delete
  7. ஆசிரியர் சார்@ புனிதப்பள்ளத்தாக்கு-விலையில்லா டெக்ஸ் மினி உண்டா? இல்லையாங் சார்????

    ReplyDelete
    Replies
    1. வாவ்... அப்படீனா டபுள்ஸ்....

      ஒரு 10தவுசன்ட் வாலா+

      ஒரு லட்சுமி வெடி...!!!

      அடி தூள் கிளப்பும் தீபாவளி 2018.

      Delete
  8. ஆகா வந்துவிட்டது தீபாவளி....

    ReplyDelete
  9. Action special சேர்த்து 4புத்தகம் என நினைத்தேன் வட போச்சே.....

    ReplyDelete
    Replies
    1. அது டிசம்பருக்கு !

      Delete
  10. டைகர் ஜாக்கின் தலைதீபாவளிக்கு வாழ்த்துகள் ..!!

    ReplyDelete
    Replies
    1. காதலும் கடந்து போனதால் டைகர் ஜாக்குக்கு தலை தீபாவளி லேது அண்ணா.

      Delete
  11. மாசு தரும் டர்லைட் ஆலை, ஆயபட்டறை, பாஸ்மார்க் தால் கழிவெல்லா உடலாம் அச்சநாதி தன்றம் .சரி நாளை முதல் நம்ம இதழ்கள்ல வெடிப்பத வேடிக்கை பார்க்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் உங்கள் கவிதைகள் வேற ரேஞ்சுக்குப் பயணிக்கின்றன கோவைக்கார் !!

      இந்த வரிகளுக்குப் பொழிப்புரை தரும் வித்வான்களுக்கு XIII பேட்ஜ் ஒன்று பரிசு !! Any takers ?

      Delete
    2. மாசு உருவாக்ககூடிய ஸ்டர்லைட் ஆலை, சாயப்பட்டறை, உடலை கழிவாக்கும் டாஸ்மாக் : இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பட்டாசு வெடிப்பதை மட்டும்தடை செய்த நீதிமன்றம் நாளை நமது இதழ்கள் பட்டாசாய் வெடிப்பதை வேடிக்கை பார்க்கட்டும்.

      Delete
    3. ஸ்டீல் வந்து பொழிப்புரை கரீக்டான்னு சொல்லிட்டு போயிடுங்க.

      Delete
    4. ஷப்ப்பபா ; ஒன்றல்ல, இரண்டாகவே பேட்ஜ்களை உங்களுக்கு அனுப்பினாலும் தப்பில்லை சார் ! Phew !!

      Delete
    5. மகேந்திரன் @ மிகவும் சரி.

      Delete
    6. அட..என்ன ஷெரீப் நீங்க ..!
      எங்கள் கோவைக் கவிக்கோமான் ஸ்டீலை குறைத்து மதிப்பிட்டு ..கவிதைக்கு நேரடிப்பொருளை தந்துள்ளீர்களே ..!!

      ஏகப்பட்ட உள்ளர்த்தங்களை அடக்கிய அக்கவியை பிரித்து மேய்ந்து பார்ப்போமா ..!

      மாசு தரும் டர்லைட் ஆலை...

      காசு ன்னா குற்றம்னு ஒரு பொருள் உண்டு. அதன்படி மாசுன்னா முற்றம்தானே ..!

      டர் என்கிற ஹிந்தி வார்த்தையின் அர்த்தம் பயம். டர்லைட் என்பது இங்கே மங்கலாக வெளிச்சம் தரும் நைட்லாம்பைக் குறிக்கும்.! அதாவது லைட் மங்கலாக ஒளிர்வதை அது யாருக்கோ பயந்து ஒளிர்வதாக குறிப்பால் கவிஞர் உணர்த்தியிருக்கிறார்.
      ஆலை ன்னா ஆலமரம்னு எடுத்துக்கணும்.

      அதன்படி "ஆலமர நிழலின் காரணமாக மங்கலான வெளிச்சமுள்ள முற்றத்தின் "

      ஆயப்பட்டறை ....
      சரியாக பொருள்கொள்ள வேண்டும் ..!
      ஆயா + பட்டு + அறை ...

      அதாவது "ஆயாவின் பட்டுப்புடவைகளை பூட்டிவைத்திருக்கும் அறை "

      பாஸ்மார்க் ...
      இதையும் ஆழ்ந்து கவனித்தல் வேண்டும்.! Mark என்பவர்தான் முகநூல் வாட்ஸ்அப் போன்ற இணையதளங்களின் Boss ..அதாவது "இணையதளத்தை" பார்வையிடுவதாக பொருள் கொளல் வேண்டும்.
      தால் கழிவெல்லா உடலாம் ....
      தால்னா பருப்புன்னு உங்களுக் தெரியும்.! கழிவெல்லா என்றால் கழுவிய வெள்ளம் அதாவது பருப்பு கழுவிய தண்ணீர் என்று பொருள். அதாவது "உடலெங்கும் பருப்பு கழுவிய தண்ணீர் போல வியர்வை " என்று அர்த்தங்கொளல் வேண்டும்.

      அச்சநாதி தன்றம் ....
      அச்ச+நா+திதன்+றம்

      வோடாஃபோனின் முந்தைய பெயர் Hutch .அதைத்தான் கவிஞர் அச்ச என குறிப்பிட்டுள்ளார்.நா என்றால் நான் என்னுடைய எனக் கொள்ளலாம். திதன் என்பது தீன் என்ற ஹிந்தி வார்த்தையின் மருஉ எனக்கொள்ளலாம். றம் என்பது Ram ஐக் குறிக்கும்.! அதாவது அருடைய மொபைல் 3Gb Ram கொண்ட வோடஃபோன் சிம் போடப்பட்டது எனப்பொருள் ..

      சரி ..இப்போது முழுக்கவிதையையும் பார்ப்போம் ..!!

      "ஆலமரநிழல் விழுவதால் மங்கலான வெளிச்சம் கொண்ட முற்றத்தின் அடுத்துள்ள ஆயாவின் பட்டுப்புடவைகள் பாதுகாக்கப்படும் பெட்டக அறையினுள் பருப்பு கழுவிய தண்ணீர் போல உடலெங்கும் வியர்வை வழிந்தோட என்னுடைய 3GB Ram கொண்ட வோடஃபோன் சிம் போடப்பட்ட அலைபேசி வாயிலாக Mark பாஸாக இருக்கும் இணையளத்தின் வழி நான் எழுதுவதென்னவென்றால்...
      நாளை முதல் எம் இதழ்களில் வெடிக்கும் சத்தமானது அனைவரையும் வேடிக்கைப் பார்க்க வைக்கும் "

      இதுவே எங்கள் கோவைக்கவிக்கோ ஸ்டீல்க்ளா அவர்களின் கவிதையின் உள்ளர்த்தமாகும்...!!

      Delete
    7. கண்ணரே...இதுக்கு பேசாம ரெண்டு பாட்டை பாடி எனக்கு அனுப்பி வைச்சுருக்கலாம்.

      Delete
    8. ஹஹஹ....சார் கண்ணனுக்கும் ஏதாவது செஞ்சிடுவமே!
      மஹி ஆசிரியர்தான் பரிசரிவிச்சுட்டாரே
      !

      Delete
    9. கிட் ஆர்ட்டினே புரிந்து மொழிபெயர்க்கும் அளவிற்கு எளிதாக கவிதை படித்த " கவியை " வன்மையாக கண்டிக்கிறோம்.

      Delete
    10. ஹா....ஹா...ஹா...

      கண்ணன் சார்.. செம்ம...!

      Delete
    11. MP சார்.

      க க க போங்கள்.

      புயல் தோற்றது போங்கள்..!

      Delete
    12. ///..சார் கண்ணனுக்கும் ஏதாவது செஞ்சிடுவமே!///

      ங்ஙே...இதுவும் உள்ளர்த்தம் கொண்ட கவிதையா கவிஞரே ..!!

      Delete
    13. இவுகள்ளாம் அப்பவே அப்பிடி..!இப்போ கேக்கவே வேணாம்.

      Delete
    14. ///MP சார்.

      க க க போங்கள்.

      புயல் தோற்றது போங்கள்..!///

      அதே அதே சாா்!!


      அப்புறங்க கிட் கண்ணன்!!!!
      எப்புடி இப்டியெல்லாம்???
      😂😂😂😂😂

      Delete
    15. கண்ணா ரொம்ப பிஸி போல🙂 கலக்கிட்டீங்க.. ஆம்லெட்ட சொன்னேன்

      Delete
    16. உள் +க்+உத்து
      உள்ளுத்து பாத்து தருவார், ,,பதர வோணாம்

      Delete
    17. பதறாமல் உதறாமல் உங்களுக்கு பரிசு ஏற்கணவே தநதுட்டாரே தொலை நோக்கில பார்வை பாத்து,,நல்லா பாருங்க

      Delete
    18. @ஸ்டீல், MP, எடிட்டர், கிட்ஆர்டின்

      ஹா ஹா ஹா!! அட்டகாசம்!! சிரிச்சு மாளலை!! :)))))))

      Delete
    19. //அச்சநாதி தன்றம்//

      இன்று காலையிலிருந்து இந்த வார்த்தை (சொற்றொடர்?) தலைக்குள்ளே உட்கார்ந்துகொண்டு நகரமாட்டேன் என்கிறது. கவிஞரின் கைங்கர்யம் #108

      Delete
  12. // இன்று காலை வரிசையாய் சகலமும் கூரியர்களை நோக்கிப் புறப்பட்டு விட்டன !//
    மகிழ்ச்சி,அருமை.

    ReplyDelete
  13. // ஊருக்குள் ; கடை வீதிகளில் ; பஜாரில் இன்னமும் பண்டிகைக்கான அந்த உத்வேகத்தைப் பார்த்திட இயலவில்லை !//

    மாத கடைசி. எல்லோருக்கும் சம்பளம் போட்ட பின்பு வேகம் எடுக்கும்.

    ReplyDelete
  14. சார் இம்மாதம் இரண்டு டெக்ஸ் வராங்களா ?

    ReplyDelete
    Replies
    1. விலையிலா டெக்ஸையும் சேர்த்துக் கொண்டால் 2 தான் சார் !

      Delete
  15. """" கால தாமதம் """" இந்த வார்த்தைகள் லயன் காமிக்ஸ் அகராதியிலே கிடையாது என்பதை எடிட்டர் சார்வாள் நீருபித்துவிட்டார்.

    அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அட..நீங்க ஏன் சார் ? கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாய்த் தாமதத்தின் மறு பெயராகிக் கிடந்த நமக்கு, இன்னமும் ஒரு மகாமகம் கழிந்திட வேண்டும் - அந்தக் கசப்புகளையெல்லாம் முற்றிலுமாய் மறப்பதற்கு !

      Delete
  16. கடந்த மாதம் டெக்ஸ் வண்ணக்கதை: நேற்றுதான் படித்து முடித்தேன். டெக்ஸின் பஞ்ச் டயலாக் கிடையாது, டமால் டுமீல் சத்தம் கிடையாது, நங் நச் குத்துக் கிடையாது ஆனால் மிகவும் சுவாரசியமாக விறுவிறுப்பாக சென்றது.

    இது போன்ற நீளமான கதைகளில் மேலே சொன்ன கிடையாதுகள் எல்லாம் இருந்திருந்தால் இந்த அளவு சுவாரசியமாக இருக்குமா என்றால் என்னைப் பொறுத்தவரை இருக்காது என்பதே பதில்.

    கதை எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் அதே நேரம் கதையை மூன்று இடங்களில் நடக்கும் விசயங்களை ரசிக்கும்படி கதையை நகர்த்திய விதம் அருமை.

    டெக்ஸ் அமைதியாக இருந்தாலும் ரசிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. //இது போன்ற நீளமான கதைகளில் மேலே சொன்ன கிடையாதுகள் எல்லாம் இருந்திருந்தால் இந்த அளவு சுவாரசியமாக இருக்குமா என்றால் என்னைப் பொறுத்தவரை இருக்காது என்பதே பதில்.

      கதை எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் அதே நேரம் கதையை மூன்று இடங்களில் நடக்கும் விசயங்களை ரசிக்கும்படி கதையை நகர்த்திய விதம் அருமை.

      டெக்ஸ் அமைதியாக இருந்தாலும் ரசிக்கலாம்.//
      டெக்ஸ் அமைதின்னாலும் வில்லனிலிருந்து பிற பாத்திரங்க அதிருதுல்ல

      Delete
  17. ஹேப்பி தீபாவளி வாழ்த்துக்கள், அதான் பொட்டி புறப்பட்டாச்சே so நமக்கு நாளையே தீபாவளி தான்

    ReplyDelete
  18. டீல் ஃப்ளா.... மருமையான தைவிக. பைதட்டுக்கள் கல...

    ReplyDelete
  19. ஹைய்யா...!
    ஒருவழியாக நாளை புது இதழ்கள் வருவதற்க்குள் டைனமைட் ஷ்பெசலை படித்து முடித்துவிட்டேன்.!
    ரெண்டு கதைகளும் அபாரம்...!!

    ReplyDelete
  20. 007 னை எதிர்நோக்கி ஆவலாய்

    ReplyDelete
  21. Hello courier karangala eppo sir kadaiya thorappennga..

    ReplyDelete
  22. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..வீட்டின் அருகிலேயே ,பேருந்து ஏறும் இடத்திலியே எஸ்டி ஸ்வீட் ஸ்டால் இருக்கும் காரணத்தால் இன்று "ஸ்வீட்டை " வாங்கிவிட்டே அலுவலகம் செல்ல இருப்பது இந்த விடிகாலையில் உடலுக்கும் ,மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
  23. Replies
    1. கேப்ஷன் போட்டியில் Me too-ன்னு கார்சன் சொல்றார். அந்த கேப்ஷன் எனக்கு புரியலே.

      Delete
  24. 007 ஜேம்ஸ் பாண்ட் அவர்களை மனமாற வரவேற்கிறேன்

    ReplyDelete
  25. 💐🌸🌷🌹🌻🌺🌺🌻🌹🌷🌸💐
    💗💜💙WELCOME🅾🅾7💙💜💗
    🎵⭐🎵⭐🎵⭐🎵⭐🎵⭐🎵⭐

    ReplyDelete
  26. மழையில் வந்த பட்டாசு பார்சல வாங்கிட்டேன்..ஸ்டேண்டுக்கு போய் வெடிக்கிறேன்

    ReplyDelete
  27. இந்தமுறை தீபாவளி சரவெடி 007 தான்.

    ReplyDelete
    Replies
    1. அணுகுண்டு டெக்ஸ்தான்
      மத்தாப்பு ஸ்மர்ப்தான்
      சங்கு சக்கரம் அட்டவணதான்
      வண்ண வான வெடி மினி டெக்ஸ்தன்

      Delete
  28. பார்சல ஒடச்சாச்சி
    பட்டாச வெடிச்சாச்சி
    சார் எடுத்ததும் கைக்கு கிடைத்தது புத்தாண்டு வருடக்காட்டியே வழுவழு சொரசொரப்பாய்....அபுறம் ஆப்ட்டது அட்டகாச தீவாளி வாழ்த்து....அட இது என்ன இவ்ளோ குண்டா அடுதுத வருட அட்டவணைன்னு பரபரப்பா பாத்தா ஜேம்சுடன் ஒட்டி உறவாடியபடியே பயணித்திருக்கு போலும் !
    ஜேம்ஸ் மின்னட்டை பரவால்ல நம்ம காமிக்சுக்கு, நாவலுக்கான அட்ட போல தெரிது...பின்னட்டை பிரம்மாதம்!
    அட பின்னட்டை சொரசொரப்பாய் அழகா இருக்கே புரட்னா சரிதான் காதலும் கடந்து போகும், மேட் ஃபினிஷ்க்கு பொருத்தமாய் கச்சிதமாய் இதுவர வந்ததிலே முதலிடத்த பிடிக்க, சில நண்பர்கள் பயந்த மாதிரி அல்லாம ஓவியமும் பரவால்ல!
    டெக்ஸ் மினி அட்டைப்படமெல்லாம் தள்ளி நிக்கணும் அப்டி இருக்கு
    ஸமர்ஃப் அட்டையும் அதகளம், உள்ளே தூக்கலான வண்ணங்களும் அதகளம்
    ஜேம்ஸ் ஓவியம் எப்டி இருகுகுமோன்ன அச்சம் இருந்தது...அது தேவையில்லணுணு வெடிக்கிறார் ஓஓ7
    ஆக மொத்தம் ஹேப்பி அண்ணாச்சி

    ReplyDelete
  29. சார் ஜேம்சின் அறிமுகம் அருமை , ஈர்க்கிறது வார்த்தை வரிகள்!
    முதல்பக்கமே அசத்தலாய் விரியுது ,வண்ணமிகு ஓவியங்களுடன் மரண பயமின்றி வேறொன்றும் அவனுக்கு அந்த றெக்கைகளை தந்திருக்க வாய்ப்பில்லைதான் எனும் மயிற்கூச்சரிக்கும் அழகிய வரிகள்,,,,ஒரு சோறு பதம்

    ReplyDelete
  30. 007 _க்காக காத்துக்கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  31. தீபாவளி சர வெடியையும்
    துப்பாக்கி உளவாளியையும்
    பிஜிலி வெடிகளையும் கைப்பற்றியாகி விட்டது ..

    😍😍😍

    ReplyDelete
  32. பார்சல் நானும் வாங்கிட்டேன்..😍😍😍

    ReplyDelete
  33. சார் டைகர் இருவதம் பக்கம் இளமைக்காலத் துவங்குது ஈர்ப்பாய் பறக்குது, ழழழழழழ****,,ஸ்மர்ஃப படிச்சிட்டு கார்சன், கிட்டோட பயணிக்கிறேன்

    ReplyDelete
  34. அடுத்த வருட அட்டவணை பிரம்மாதம், ,,,பின்னிப் பெடலெடுக்குது, ,,விரிவாய் அப்பப்ப,,,அப்பப்பாஆஆஆஆஆ

    ReplyDelete
  35. பார்சலைப் பிரித்தாச்சு....!

    ஜேம்ஸ் பாண்ட், டெக்ஸ் வில்லர் மற்றும் ஸ்மர்ப் புடன் இன்னொரு புத்தகமும் கலந்துள்ளது .

    பதினெட்டு பக்கங்கள் கொண்ட A4சைஸில் முழுதும் வண்ணத்துடன் 'அடடே 'என ஈர்த்தது அந்தப் புத்தகம்.

    முன்னட்டையில் டெக்ஸும், லக்கியும் என அட்டகாசமாக அமைந்த அந்தப் புத்தகம்...

    "2019ன் காமிக்ஸ் அட்டவணை "

    எதிர்பாத்த அட்டவணை என்றாலும் எதிர்பாராத விதத்தில் அதை நேர்த்தியாக வடிவமைத்த ஆசிரியருக்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete
    Replies
    1. அத்துடன் ரெண்டு பாக்கெட் காலெண்டர் அட்டை, ரெண்டு தீபாவளி வாழ்த்து அட்டை ,ரெண்டு சந்தா கூப்பன் என சரமாரியாக உள்ளது.

      அதென்ன எல்லாத்துலேயும் ரெண்டு ,ரெண்டுனு நீங்க கேக்கிறது எனக்கு கேக்குது.அதாவது மெய்ன் சந்தாவுக்கு ஒண்ணு, ஜம்போவுக்கு ஒண்ணு .

      எல்லாருக்கும்எல்லாம் கிடைக்கணும்னு நினைக்கிற ஆசிரியரோட மனசு அப்படி.

      Delete
    2. ஏனய்யா GP அது பாக்கெட் காலண்டர் அட்டையா?? இம்புட்டு பெரிசாவா பாக்கெட் வெச்சி இருக்கீங்க!ஹா...ஹா...!

      Delete
    3. அது ஒரு குறியீடு சார். நீங்க சரியா கவனிக்கலை.

      இதயம் இருக்கிற இடத்தில பாக்கெட் இருந்தாலும், பாக்கெட் இருக்கிற இடத்திலெல்லாம் இதயம் இருக்கிறதில்லை.அப்படி இதயமும் பாக்கெட்டும் இணைஞ்ச இடத்திலதான் மனசுங்கிற அற்புதப் பொருள் இருக்கும்.அந்த மனசுக்கு பிடித்த காலெண்டர் அப்டிங்கிறதுதான் அதன் பொருள்.

      😉😉😉😉😉

      Delete
    4. ஆஹான்...!!!

      அப்படியே அந்த வாழ்த்து அட்டை,
      கூப்பன், எல்லாம்...........!

      Delete
  36. பார்சல் வர்றதுக்கு முன்னால, முதல்ல ஜேம்ஸ் பாண்ட் கதையைத்தான் படிப்பேன்னு கங்கணம் கட்டினேன்.ஏன்னா பாண்ட் மேல அப்படியொரு ப்ரியம்..!

    ஆனால் ,
    முதல் புரட்டல்ல வித்தியாசமான பாணியில ,திக்குமுக்காட வைக்கும் வண்ணத்திலே, திகிலூட்டி திணறச் செய்யும் ஆக்சனையும் ,டயலாக் இல்லாமல் ஏகப்பட்ட பக்கங்கள் மௌனமாக தெறிக்க , இதற்கு சற்று பொறுமையாகப் படித்தால் தான் மொத்தக் கதையையும் உள்வாங்கி உள்நீச்சலடிக்க முடியும் எனத் தெரிவதால் சத்தியத்தை கேன்சல் பண்ணிபுட்டேன்.

    அடுத்து டெக்ஸுன் 'தீபாவளி மலர் '.இதை நான் தீபாவளி அன்னைக்கேதான் படிப்பேனு வாக்கு கொடுத்திட்டதால தீபாவளிக்காக வெய்டிங்..!
    புத்தகத்தின் பருமனிலும் ,அட்டைப்பபட டிசைனிலும் நார்மலான சைஸ் கூட எடுப்பாக தெரிய கொஞ்சம் சபலம் ஏற்படுகிறது.இருந்தாலும் தீபாவளிதான் தீபாவளிக்குதான் ..!

    அடுத்து இருப்பது ஸ்மர்ப்...அதனால நான் ஸ்மர்ப்வில்லாவுக்கு ஒரு டூர் போயிட்டு வர்றேன்..!

    ReplyDelete
  37. டியர் எடி,
    இவ்வளவு நாளாக இந்த விஷயத்தை பற்றி நான் உங்களிடம் கேட்டதில்லை ..

    நவம்பர் மாதம் வரும் புத்தகத்திற்க்கு ஜனவரி மாதமே சந்தா கட்டுகிறோம் .. அப்படி சந்தாவில் வரும் புத்தகங்களை ஆவலோடு எடுத்து படிக்கையில் பக்கங்களை கடக்கையில் இரண்டு மூன்று பக்கங்கள் கிழிந்து பாதி பக்கம் இல்லாமல் இருப்பதை பார்த்து மனசுக்குள் ஒரு வலி ..
    ( போன வருடம் இதே மாதம்டிராகன் நகரம் புத்தகத்திலும் அட்டை உடைந்து முதுகு பிரிந்து வந்தது )
    ஒரு சந்தா
    செலுத்தும் வாசகனுக்கு இது போலத்தான் புத்தகம் அனுப்புவீர்களா ?
    உங்கள் ஆட்கள் கிழிந்த பேப்பர்களை கொண்டு தான் புத்தகம் தயாரிக்கிறார்களா ?
    அதை யாரும் செக் பண்ணுவதில்லையா ? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மனதினுள் .. கடையில் வாங்கினால் திருப்பி கொடுத்து விட்டு மாற்றிக் கொண்டு விடலாம் .. இப்போது இதை நான் மறுபடியூம் உங்களுக்கு அனுப்பி அதை நீங்கள் எனக்கு திருப்பி அனுப்பி உங்களுக்கூம் எனக்கும் வீண் இரட்டை செலவுகள் தானே ?

    ஏகப்பட்ட வேலைகளுக்கு நடுவிலும்
    ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்த என்னை தர்ம சங்கடத்துக்கு ஆழ்த்தி விட்டு விட்டீர்கள்

    ;(

    ReplyDelete
  38. ஹைய்யா புக்கு வந்திடுச்சு!

    ஆத்தா இருக்கச்சே நான் எதுக்கு கவலைப் படணும்றேன்?!!

    ReplyDelete
  39. டைகர் ன்
    காதலும் கடந்து போகும்

    படித்து முடித்தாகி விட்டது

    சரியாக 1 மணி 18 நிமிடங்கள்

    கதை : சூப்பர்ப் 😍😍😍

    ReplyDelete
  40. டொர்ர்ரர்ர......டூஊஊஊஊஊஸ்ஸ்ஸ்.....சேலம் பார்சல் ஏற்றி வந்த லாரி , சேலம் ஹப்புக்கு வெகு தொலைவில் பங்சர் ஆகி நின்னு போச்சு!!!

    காலையில் இருந்து கொரியர் ஆபீஸ்ல ஒரு 2மணி்நேரம் காத்திருந்து வீண் ஆனது. பார்சல் லாரி வந்தா போன் பண்ணுதன் சார்ன பதிலை வாங்கிட்டு, ஏற்கெனவே வைரல் பீவர்ல நொந்திருந்த உடம்போடு இப்போ மனசும் டவுன் ஆகி கடைக்கு வந்து சேர்ந்தேன்.

    அட்லீஸ்ட் கடையில் ஓரளவுக்கு கூட்டம், மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியது.
    திடீர்னு 12மணிக்காட்டம் ஒரு பார்சல் வந்தது. லயன் பார்சல் மாதிரி இல்லையே என பார்த்தா, மரியாதைக்குரிய கோவை சுரேஷ் சந்த் அய்யாவிடம் இருந்து வந்திருக்கு. தீபாவளி இனிப்பு+ ஆர்ப்பாட்டமான டெக்ஸ் வாழ்த்து அட்டை.

    அட்றா சக்கைனு உற்சாகம் கொண்ட மனசு, சிவகாசி ராக்கெட் ஆக பறக்க ஆரம்பித்தது.

    https://m.facebook.com/story.php?story_fbid=127960338185085&id=100029133592548&anchor_composer=false&ref=bookmarks
    இந்த லிங்கில் வாழ்த்து அட்டையில் டெக்ஸை கம்பீரமாக காணலாம். இனிப்பு பார்த்து கண்ணு வைக்கப்படாது,ஆம்மா...!!!

    உற்சாகம் ஆன மனசோடு மறுடி ஒரு 35கால் பண்ணா, கடேசியில் "சார் ,வேன் வந்துட்டது , 2 மணிக்கு வந்துடுங்க" என்ற பதில்.
    சரினு 2மணிக்கு போனா அப்பத்தான் மூட்டை வந்து பிரித்து கொண்டு இருக்காங்க. ஒருவழியாக பார்சலை வாங்கிட்டு லஞ்க்கு போயாச்சு. வந்து புத்தகங்கள் பற்றி!!!!

    ReplyDelete
  41. #காதலும்_கடந்து_போகும்

    அதிர்வேட்டுக்களுக்கு பஞ்சமில்லா கதை . சூப்பர்ப் ஸ்டோரி

    இம்மாத புத்தகங்களை பெறும் நண்பர்கள் முதலில் இக்கதையை தேர்வு செய்து படியுங்கள் .. இல்லையேல் எடிட்டரின் #தீபாவளி பரிசை மிஸ் செய்தவர்களாகிப் போய்விடுவீர்கள்

    ஆரம்ப பக்கத்தில் தொடரும் 10000 வாலா சரவெடி 284 பக்கத்தில் நாம் எதிர்பாத்திருக்கவே முடியாத ஒரு திருப்பத்துடன் நின்று

    மறுபடியும்
    வேகமெடுக்கிறது

    டைகரின் இளவயது சாகசங்களில்
    டெக்ஸ்ஸை & டைகரை விரும்பும் ரசிகர்களுக்கு இக்கதை பூர்த்தி செய்யும் விதமாய் அமைந்திருக்கிறது

    உண்மையிலேயே இந்த தீபாவளி ரசிகர்களுக்கு செமத்தியான தீபாவளியாய் 💣🔫💣🔫 இருக்கப்போகிறது

    2016 போன்றே தீபாவளிக்கு
    இக்கதையை தேர்வு செய்த எடிட்டருக்கு ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ் 🙏 🙏 🙏

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ.. ! தீபாவளிக்குதான் நான் படிப்பேன்ங்கிற சபதம் அவ்ளோதானா?

      Delete
    2. வருத்தத்தை பதிவு செய்த கையோடு புத்தக விமர்சனம்.great sir.சங்கடங்களும் கடந்து போகும்.

      Delete
    3. வருத்தத்தை பதிவு செய்த கையோடு புத்தக விமர்சனம்.great sampath.
      Good review.

      Delete
  42. மழை ஈரத்துக்கு நமத்து போய்விடும் பட்டாசுகளை வெடிப்பது அப்பலாம் பெரிய சவால். ஒரு பழைய பாய் விரித்து வெய்யில் படும் இடமா வைத்து பக்கத்திலயே அமர்ந்து இருக்கனும். இல்லீனா மறுபடி மழை யில் நனைஞ்சிடும்...

    அந்த அனுபவம், இம்மாத நமத்து போன பாக்ஸ் பிரிக்கையில் நினைவுக்கு வந்தது. பாக்ஸ் தான் நம..நம...உள்ளே சரக்கு சர..சர..சிவகாசி டைனமைட் முறுக்கு!

    மொதல்ல பார்த்தது தீபாவளிமலர், பார்த்த உடனடியாக நினைவுக்கு வந்தது 2013தீபாவளி மலர். அதுபோல ஒரு சிம்பிள் அட்டை. கணமான இதழ். அதே பளீரிடும் வெண்மை. அதைவிட பெட்டரான பைண்டிங். ஒரே வருடத்தில் தல 2ம் முறையாக சிவப்பு சட்டையில் மின்ன....!! நேர்த்தியான வடிவமைப்பு.

    கச கச வென நகாசு வேலைகளாக பார்த்து பார்த்து இருந்த கண்களுக்கு அந்த அல்ட்ரா மாடர்ன் லுக் அருமையான ஒன்றாக இருக்கு.

    டாப்புல லயன் லோகோ-Tex-போனெல்லி லோகோ என ஸ்டன்னிங் கலவை...

    """" தீபாவளிமலர் 2018" """""

    பார்க்க பாக்க பரவசம் அடைகிறது உள்ளம். ஆண்டுக்கு ஒரு முறைனாலும் தீபாவளிமலர் என்ற வார்த்தை கொணரும் பரவச குதூகலமே வேறு லெவல் தான்.

    மொத மொதல்ல கடையில் வாங்கிய தீபாவளிமலர் நள்ளிரவு வேட்டையில் கிடைத்த அதே குதூகலம் இன்னமும் அதிக வீச்சில்.....! 22ஆண்டுகள் என்பதே வெறும் நம்பர் தான் இதுபோன்ற சந்தர்ப்பங்களில்....!!!!

    புத்தகத்தின் முதுகில் சிதறும் வாணவேடிக்கை, பின்அட்டை எல்லாம் சிறப்பு சேர்க்கிறது.

    மற்றொரு தித்திக்கும் தீபாவளியை அளித்தமைக்கு ஆசிரியர் சாருக்கு மனமார்ந்த நன்றிகள் & வாழ்த்துகள்💐💐💐💐💐💐

    ReplyDelete
  43. Maxi tex என்றதும் தலையில்லா போராளி சைஸ் எதிர்பார்த்தேன். கடைசியில் ஏமாற்றம்.இருந்தாலும் ஓகே.

    ReplyDelete
  44. தீபாவளிமலர் ரசித்துட்டு அடுத்து காதல் மன்னன் 007ஐ கையில் எடுத்தேன். 140பெரிய பக்கங்களில் கணிசமாக கனந்து,2ம் குண்டு புக்காகத் திகழ்கிறது.

    அட்டைபடம் ஒரிஜினல் எனும்போது நாம அங்கே கருத்து சொல்ல முகாந்திரம் ஏது!

    உள்பக்க கலரிங் செம. பக்கத்துக்கு பக்கம் சேஞ்சிங். அதிலும் அந்த இன்ஃப்ரா ரெட் கலர் சாத்தி எடுக்குது.

    ஓவியங்கள், ஆக்சன், பாடிலேங்வேஜ் எல்லாம் பார்க்கையில் அசாத்திய விருந்து வெயிட்டிங் என தெரிகிறது.

    ஒரு..ஒரு..சந்தேகம் 134பக்கங்களில் ஒரு லவ் சீனையும் காணோம். நிசமாவே இது நம்மாள் தானா???

    அந்த "அழகிவேட்டை"யை-- படிப்பதற்குள் எத்தனை சிரம பட்டேன்னு எனக்கு தான தெரியும். இவரு சைவ 007ஆ????

    ReplyDelete
    Replies
    1. இவரு டேனியல் க்ரைக் டைப் போல...

      Delete
    2. நாமெல்லாம் மூரு, கேனரி, பிராஸ்னன் பார்த்து வளர்ந்தம்ல...

      ஊர்சலாவுக்கொசரம் அந்த டாக்டர் நோ சீ.டி.யே கீரல் ஆகி நின்ட்டு போற வரை பார்த்தோம்...ம்ம்ம்ம...

      Delete
    3. அந்த சிச்சுவேசனை நாவல்ல படிக்கிறப்பவே பாதி பேரு மெர்சலாகி, ஹீரோயின் மேல மெண்டலாயிட்டாங்க.

      வெள்ளித்திரையில பாக்கிறப்ப அத்தோட விளைவை சொல்ல வேண்டுமா என்ன ?

      Delete
  45. இத்தாலி மெகா ஸ்டாரும், இங்கிலாந்து சூப்பர் ஸ்டாரும் பலப்பரீட்சை செய்யும் களத்தில் பொடியன்களும் இருக்காங்க.

    கடேசி வாய்ப்பு செம டஃப்பான வாய்ப்பா போச்சுது, எத்தனை சாதிப்பாங்கனு பார்த்து விடலாம்.

    சத்தமில்லாமல் கலக்குது சந்தா அட்டவணை புக்லெட் தான். இந்த ஸைசில் வரும்னு எதிர் பார்க்கவே இல்லை. சூப்பர் சார்👏👏👏👏

    வாழ்த்து அட்டையை தீபாவளி அன்று எடுத்து பார்த்து கொள்கிறேன்.


    தீபாவளின்னா மொதல்ல பிஜிலிதான்.
    சோ, புனித பள்ளத்தாக்கில் போய் குதிப்போம்.

    அப்புறம் பாம்பு மாத்திரை ஸ்மர்ஃப் களை கொளுத்திட்டு,

    டெக்ஸ் சரவெடி வெடிப்போம்.

    வாணவேடிக்கை 007- கடேசியில் கொளுத்தி மகிழ்வோம்....!!!

    ReplyDelete
  46. காதலும் கடந்து போகும்... சிம்பிளி சூப்பர்ப்... அட்டகாசமான தீபாவளி விருந்து.. சிறிதும் தொய்வில்லாமல் காதல், ஆக்சன், சென்டிமென்ட் என காக்டெயில் சரக்கு.. சும்மா ஜிவ்வுன்னு இருக்கு. ஆசிரியர் பாணியில் சொல்வதானால்..தீபாவளி மலருக்கு முற்றிலும் நியாயம் செய்யும் கதை... வருங்காலத்தில் எப்போதாவது வண்ண மறுபதிப்புக்கு ஒர்த்தான கதை..

    ReplyDelete
    Replies
    1. //வருங்காலத்தில் எப்போதாவது வண்ண மறுபதிப்புக்கு ஒர்த்தான கதை.//

      ஹை...இப்படியும் ஒரு சமாச்சாரம் இருக்குதோ ?

      Delete
  47. இம்மாத இதழ்கள் வந்தடைந்தன.

    ReplyDelete
  48. ஆசிரியர் சார்! ஒரே தலைப்பில் இரண்டு கதைகளா? அடுத்த ஜேம்ஸ் பாண்ட் கதையின் தலைப்பு "ஒரு நிழல் நிஜமாகிறது." இதே பெயரில் லார்கோவின் கதை ஒன்று உள்ளதே. வரவிருக்கும் புதிய கதைகளுக்கு பழைய காமிக்ஸ் கதைகளின் பெயர்களை சூட்டிவிடுகிறீர்களே! ஏற்கனவே "பழி வாங்கும் புயல்" என்று டெக்ஸ் வில்லரின் கதையொன்றும், மாடஸ்தியின் கதையொன்றும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்ல சார் விடுங்க .. இப்போதான் பெயர்கள் ஓரளவு டேபிள்ல வெச்சு பாக்குற மாதிரி இருக்கு. இப்படீல்லாம் சொன்னிங்கன்னா எடிட்டர் "சாத்தானுக்கு சவால்" ,"சாவுக்கு ஒரு சங்கு" அப்டீன்னு கெளம்பிடுவாரு .. No ! :-)

      Delete
    2. ///சாவுக்கு ஒரு சங்கு" ///

      ஆஹா!! அருமை!!

      நோட் பண்ணுங்க எடிட்டர் சார்!:)

      Delete
    3. அடடே....அடேடேடே...! 2 டெக்ஸ் தலைப்புகள் அல்வாவாட்டம் ரெடியாக இருக்கின்றனவே !!

      Delete
  49. Hello friends,

    எல்லோருக்கும் இந்த தடவ தல தீவாளின்னா எனக்கு தீவாளி cube என்று சொல்லலாம். மறுபதிப்பு வேண்டும் என்பதற்காக ஆசிரியரிடம் பூத வேட்டை கிடைக்கவில்லை என சொல்ல, அன்பு நண்பர் சேலம் டெக்ஸ் விஜயராகவன் அவரகள்"யாமிருக்க பயமேன்" என சொன்னதோடு மட்டுமல்லாமல் "இவைகள் என்னிடமிருக்கும் எக்ஸ்ட்ரா டெக்ஸ் புக்ஸ். உங்களுக்கு எவை வேண்டும் என கேட்டு டெக்சின் பூத வேட்டை மற்றும் டெக்சின் தீவாளி மலர் 2013 ஐயும் சேர்த்து அனுப்பி விட்டார். இன்று வீட்டுக்கு வந்தால் ரெண்டு பார்சல். ஒன்று சிவகாசி லைன் மற்றொன்று சேலம் லயனிடமிருந்து. Open பண்ணினா மூன்று டெக்ஸ் புக்ஸ். ஒரு டெக்ஸ் புக்க பார்த்தாலே எனக்கெல்லாம் BP எகுறும். இங்க மூன்று. This is the best and awesome Diwali, I ever had. All Credit goes to Salem Tex Vijayaraghavan.
    எனது professionல் வித விதமான சுயநலமான மனிதர்களை சந்தித்து வரும் எனக்கு நம்முடைய காமிக்ஸ் உலக நண்பர்களை பார்க்க, Smurf உலகம் போல ஒரு புதிய உலகில் நுழைந்தது போல் உள்ளது. இன்னும் அருமையான, தங்கமான மனிதர்கள் இருக்கின்றனர் என்பதற்கு விஜயராகவன் ஒரு சான்று. சொல்ல வார்த்தையில்லை நண்பரே. நானும் சேலம் என்பதால் உங்களை கண்டிப்பாய் பார்க்கிறேன். இது போன்ற நல்ல உள்ளங்களை இணைப்பதே நமது காமிக்சின் தலையாய சாதனை என இப்போது புரிகிறது.
    தொடரட்டும் இந்த காமிக்ஸ் உலக நட்புக்கள்.
    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்சாய் தீபாவளி வித் ட்ரிப்ளெட் டெக்ஸ் நண்பரே💐💐💐💐💐

      இங்கே இன்னும் தங்கத்தை விட உயர்ந்த நவரத்தினங்கள் பல குவித்து உள்ளன.

      எனக்கு கம்பேக்கிற்கு பின்னாடி உள்ள டபுள்ஸ் தர தானே மனசு இருக்கு. நாமெல்லாம் புட்டி பால் குடிச்ச காலத்தில் வந்த, பல அறிய நினைக்கவே இயலா புத்தகங்களை வாரி வழங்கிய நண்பர்கள் உள்ள ஸ்மர்ஃப் வில்லாதான் இது.

      Delete
    2. கேட்க சந்தோஷமாக உள்ளது அசோக் குமார் மற்றும் விஜயராகவன். தொடரட்டும்.

      Delete
    3. ஈத்துவக்கும் இன்பம் கிடைக்கப்பெற்ற டெக்ஸ் விஜய்க்கும், டீவாளி ட்ரிப்பிள் டமாக்கா இன்பம் கிடைக்கப்பெற்ற நண்பர் அசோக் குமாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!

      இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!!

      Delete
    4. //நல்ல உள்ளங்களை இணைப்பதே நமது காமிக்சின் தலையாய சாதனை என இப்போது புரிகிறது//

      Exactly sir !!

      சீனியரோ ; விஜயன்களோ வரலாம்...போகலாம்....!! லார்கோக்கள் ; XIII கள் ; டைகர்கள் ; டெக்ஸ்கள் கூட வரலாம்..காலவோட்டத்தின் போக்கில் ஞாபகப் பேழைக்குள் புதைந்தும் போகலாம் ! ஆனால் நிலைத்து நிற்கப் போவது இந்த நட்புக்கள் மாத்திரமே !!

      Delete
  50. இன்னும் Chennai'க்கு டெலிவரி ஆகவில்லை. நாளை மதியமே ஊருக்கு கிளம்புவதால், 007க்கான காத்திருப்பு மேலும் 1வாரம்...:(

    ReplyDelete
    Replies
    1. சென்னைக்கு நேற்று மதியமே வந்துவிட்டது. S T கூரியர் ஒரு தண்டம் - சென்னையில். எனவே உங்களுக்கு தாமதமாகி இருக்கலாம்.

      Delete
    2. கொளத்தூர், சென்னையில் நேற்று மதியமே எனக்குடெலிவெரியும் ஆகி விட்டதே. இதுவும் கடவுள் கொடுத்த வரம் தானோ !

      Delete
  51. முதல் பார்வையில்....


    ஒரு காமிக்ஸ் அட்டவணை ..இந்த முறை பெரிய அளவில் அட்டகாசமான அட்டைப்படத்தில் இதுவே ஒரு காமிக்ஸ் இதழ் போல மகிழ்ச்சி அளித்தது உண்மை.அடுத்த வருட டீசர்கள் அனைத்தும் பார்த்தவுடனே பற்றி கொள்ளும் அட்டகாச தேர்வு என்பதும் உண்மை.

    டெக்ஸ் காதலும் கடந்து போகும் தீபாவளி மலர் குண்டாக கைகளில் தவழும் போதே இனம் புரியா கூதுகலம் .அட்டைப்படமோ இணையத்தில் பார்த்ததை விட இதழில் அட்டைப்படத்தில் இன்னும் அட்டகாசமாய் மிளிர்கிறது முன்பின் இரு அட்டைப்படமும்.உட்பக்க சித்திரங்கள் டெக்ஸின் வெற்றியை முன்கூட்டியே சொல்கிறதோ என தோன்றுகிறது.

    சமர்ப் காசு பணம் துட்டு அட்டைப்படம் சிம்பிள் ப்ளஸ் சூப்பர் .என்னை பொறுத்த வரை நீல பொடியர்கள் சில கதைகள் ஓகே ..சில கதைகள் ஓ .இந்த சாகஸத்தில் எந்த எண்ணத்தை விதைக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    007 ஜேம்ஸ்பாண்ட்...இணையத்தில் அட்டைப்படம் வித்தியாசமாக இருந்ததை உணரமுடிந்தது.இந்த இதழையும் நேரில் பார்த்தவுடன் அந்த வித்தியாசத்தை முழுதாக உணரமுடிந்தது.ஒரு ஆங்கில நாவல் இதழை போல அட்டகாசமாய் அமைந்து உள்ளது எனில் இதழின் கனத்தை கண்டதும் இன்னும் மகிழ்ச்சி.கதையின் ஓவியங்கள் மிக நவீன அட்டகாச பாணியில் அமைந்து இருந்தாலும் 007 ன் முகமும் ,ஓவிய பாணியும் ஒரு அந்நியதன்மையை தான் ஏற்படுத்துகிறது என்றாலும் கதையில் பழைய பாணியில் 007 நெருக்கமாவாரா என்பதை அறிய மிக மிக ஆவலுடன் கொண்டு காத்து கொண்டு இருக்கிறேன்.

    இலவச இணைப்பாக வந்த புனித பள்ளதாக்கில் முதலில் நுழைந்து பார்த்து விட்டே மற்ற இடங்களில் நுழைய வேண்டும் இன்றும் ,நாளையும்.

    இனி படித்து விட்டு...


    ம்..மறந்து விட்டேனே

    தங்களுக்கும் ,தங்கள் குடும்பத்தினருக்கும்,தங்கள் பணியாளர்களுக்கும் எங்களது அட்டகாசமான ,ஆரவாரமான ,அசத்தலான ,அமர்களமான ,தீபாவளி வாழ்த்துகளும் முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறோம் சார்.

    ReplyDelete
    Replies
    1. //007 ன் முகமும் ,ஓவிய பாணியும் ஒரு அந்நியதன்மையை தான் ஏற்படுத்துகிறது என்றாலும் கதையில் பழைய பாணியில் 007 நெருக்கமாவாரா என்பதை அறிய மிக மிக ஆவலுடன் கொண்டு காத்து கொண்டு இருக்கிறேன். //

      Make no mistake தலீவரே ...இவர் நீங்கள் இதற்கு முன் பார்த்தும், படித்தும் இருக்கக்கூடிய ஜேம்ஸ் பாண்டி அல்ல !! இவர் Bond 2 .0 !

      நிறைய தொடர்கள் நம்மிடையே சற்றே குளறுபடியான வரவேற்பினைப் பெறுவதற்குக் காரணமே - நம்மை அறியாது நமக்குள் நாம் வளர்த்து வைத்திருக்கும் அந்த "நல்ல பாணி" சித்திரங்கள் மீதான மையலே ! ஓவியர் வில்லியம் வான்சின் சித்திரங்கள் இதற்கொரு prime உதாரணம் !

      அவரது பாணியிலான சித்திரங்களில், நமது உடைந்த மூக்கார் கூட மன்மதனாட்டம் தெரிவது இயல்பு !! ஏதேனும் ஒரு சூழலில், வான்சின் சித்திரங்களுடனான மார்ஷல் டைகர் கதைகளை நாம் முதலாவதாக வெளியிட்டு விட்டு ,அதற்கப்புறமாய் ஓவியர் ஜிரொ படங்கள் போட்ட மெயின் தொடரின் பக்கமாய்ப் போயிருப்பின் - அங்கே நாம் மலைத்து நின்றிருக்க வாய்ப்பிருந்திருக்கும் !! நல்ல காலம் - அது போல் எதுவும் நிகழவில்லை !

      புதிதாய் ஒரு தொடருக்குள் / கதைக்குள் புகும் போது, இயன்றமட்டிலும் முன்தீர்மானிக்கப்பட்ட சிலபல எதிர்பார்ப்புகளையும் ; அபிப்பிராயங்களையும் சேர்த்தே எடுத்துப் போகாதிருப்பது நலமென்பேன் ! படிக்கும் போது பிழைகளோ ; குறைகளோ, தென்படின் அந்நேரம் அவற்றைத் தலைக்குள் பதிவிட்டுக் கொள்ளலாம் தானே சார் ?

      Delete
    2. தாங்கள் சொல்வது உண்மையே சார்..;-)

      ஆனாலும் ஜேம்ஸ்பாண்டோ ..ரிப்போர்ட்டர் ஜானியோ 2.0 பாணி எனும் பொழுது கூட மனது என்னவோ அந்த பழைய பாணியிலேயே நின்றுவிடுகிறது.அதனால் என்னவோ ஜானி 2.0 பாணி சித்திரம் எனும் போதே கொஞ்சம் ஏமாற்றம் போலவே தோன்றுகிறது.டெக்ஸின் பழைய தீபாவளீ மலர் கூட அதனால் தான் முழு வெற்றியை பெற வில்லையோ என்ற எண்ணமும் வருவது உண்டு.
      இந்த பாணி முறைகள் கண்டிப்பாக வேறுபாணியில் தான் என்றும் ,பழைய நாயகரை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் மனம் முழுமையாக உணர்ந்தாலும் நாயகர்களின் பெயரை கேட்டவுடன் மனம் தன்னால் அந்த அறிந்த பழைய பாணியிலேயே நின்றுவிடுகிறது.

      பேசாமல் இந்த 2.0 நாயகர்களுக்கு எல்லாம் ஒரு புதுப்பெயரை சூட்டி கொண்டு வந்து விட்டால் பழைய நாயகர்களை விட உயரத்தீல் நிற்பார்கள் போல படுகிறது..:-)

      Delete
  52. புத்தகங்கள் - முதல் பார்வை:

    * தீபாவளி மலர் - புத்தகத்தின் வடிவமைப்பு அருமை - குண்ண்டு புக்குக்கு அந்த மேட் ஃபினிசிங் அட்டை கூடுதல் அழகும், கம்பீரமும் சேர்க்கிறது!
    ஆனால், புத்தகத்தின் சைஸும், வடிவமைப்பும் ஏற்படுத்திடும் குதூகலத்தை ஏனோ அட்டைப்பட ஓவியம் ஏற்படுத்திடவில்லை! ஒரு 'தீபாவளி மலர்'க்கான அட்டைப்படமாய் அமையவில்லை! டெக்ஸின் முகம் அவரது உடல் அளவைக்காட்டிலும் சற்றே சிறியதாக இருப்பது லேசான உறுத்தல்! ஃப்ரேம் போட்டிருப்பதும் ஒரு மைனஸ் தான்!

    * 007 - யப்பா!! என்னவொரு அட்டைப்படம்... என்னவொரு வடிவமைப்பு... என்னவொரு கலரிங் பாணி!!! மிரட்டலாய், அசத்தலாய் இருக்கிறது! நிச்சயம் இது 'வேற லெவல்' - நம் காமிக்ஸ் பயணத்தின் அடுத்த (அட்வான்ஸ்டு) லெவல்!! உடனே படிக்கும் ஆவலைக் கிளப்புகிறது!

    ஸ்மர்ஃப்ஸ் - விடைபெறப்போகும் விரலளவு ஜீவராசிகள் - வழக்கமான, அதே அழகான அட்டைப்படம் + சித்திரங்களுடன் - செமயாய்!!

    காமிக்ஸ் அட்டவணை - பெரிய சைஸில் அசத்தலாக,வண்ணமயமாக கவனம் ஈர்க்கிறது!! சூஊஊஊப்பர்!!

    தீபாவளி வாழ்த்து அட்டைக்கும், க்யூட்டான கலர் டெக்ஸ் விலையிலா இணைப்புக்கும் நன்றி எடிட்டர் சார்!

    ReplyDelete
  53. டியர் எடிட்டர்

    ஹி .. ஹி ..

    முந்தைய (மறுவரவுக்குப் பின்னான) நமது காமிக்ஸ் catalogsஐயும் ஏ4 சைஸ்ல மாத்தி அச்சடிச்சி ஆண்டு மலரோடு அனுப்புங்கோ ப்ளீஸ் .. ஒரு அழகான கலெக்டர் item / ஆல்பம் அல்லவா இது ..

    மக்களே ஆதரவு நல்குவீர் ..!!

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா... ராக்ஜி! ராக்ஸ் 🎸 🎸 🎸

      என் கடையில் எப்பவும் இருக்கும் ஒரு பையில் அந்த குட்டி கேட்லாக்ஸ் 6ம் இருக்கு, இந்த ஜம்போவோடு எழுவரானார்கள். அவ்வப்போது அதை புரட்டி பார்த்தா ஒரு சிலிர்ப்பு ஓடும்!

      Delete
    2. ஒரு ரகசியத்தைச் (???) சொல்லவா நண்பர்களே ? இந்தாண்டின் அட்டவணையை ஒரு tabloid நியூஸ் பேப்பர் பாணியில் அச்சிட்டுத் தருவதே எனது முதல் எண்ணமாக இருந்தது ! ஆனால் பின்னடிக்காது, நியூஸ்பேப்பர் போல லூஸாகத் தரப்படும் பட்சத்தில் - பத்திரப்படுத்தச் சிரமமாகிடும் என்று தோன்றியதால் - இந்த A 4 சைசில் freeze ஆனேன் ! Glad everybody seems to like it !

      Delete
  54. வணக்கம் ஆசிரியரே,நண்பர்களே
    அனைவரருக்கும் அட்வான்ஸ் தீபாவளி
    வாழ்த்துக்கள்.
    இன்னும் டீ வரலை.சோகம்.

    ReplyDelete
  55. டியர் எடிட்டர்,

    First look : ஜேம்ஸ் பாண்ட் கண்ணைப் பறிக்கும் அபாரம். இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை. அடுத்த பார்சலுக்காக waiting.

    நான் புரட்டி பார்த்து, சலித்து பார்த்து - ஒண்ணே ஒண்ணு தான் மிஸ்ஸிங் - ஜேம்ஸ் பாண்டு நண்பிகளுடன் கேம்ஸ் விளையாடுவது மிஸ்ஸாவுதே ? :-( ;-)

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் பழைய ஸ்டைல் சார்.அதே பாணியில் பாண்ட் குலாவியிருந்தால் பத்தோடு பதினொன்றாகவே தெரிவார்.

      படித்துப் பாருங்கள்..

      புது ஜானர்
      புது பாண்ட்
      புது ஸ்டைல்

      நிச்சயம் கவர்ந்திடும்..!

      Delete
    2. ஹி...ஹி....பெர்லின் ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்குள் போகும் அந்த கார் பின்சீட் sequence-ஐ மட்டும் ஊறுகாயாய்த் தொட்டுக்கொள்ள வேண்டியது தான் !

      Delete
  56. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  57. புனிதப் பள்ளத்தாக்கு...

    Old Turkey bazzaard....

    Old Turkey bazzaard....

    Flying..... Flying high... Flying..

    Flying....

    Flying...

    Old Turkey bazzaard....

    Gold...

    Gold...

    Gold...

    Gold...


    என பல நூறாயிரம் தடவை பார்த்து ரசித்த கழுகு பறக்கும் பள்ளத்தாக்கை மீண்டும் கண்முன்னே விரிய வைத்து விடுகிறது.

    ஒற்றைக் குதிரையில் விரையும் டெக்ஸ் மெக்கன்னாவாகவே தோன்றுகிறார்.

    செவ்விந்திய மதநம்பிக்கை டெக்ஸை காப்பாற்றும் இடம் ட்விஸ்ட்...!

    டெக்ஸ்க்கு ஒவ்வொரு தடவையும் கிடைக்கும் அதிர்ஷ்டம் இந்த பள்ளத்தாக்கு, ப்ளாக்வின்ட்டே என்ற ரகசியம் வெளியாகிறது.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ்ஜி,

      அதிலும் டெக்ஸின் தோளில் பாய்ந்த தோட்டாவை கழுகு வந்து தன் நகத்தால் எடுப்பதெல்லாம் speechless . (2.0 நினைவிற்கு வர தவறவில்லை)

      Delete
    2. இந்தச் சிறுகதைகளின் கருக்கள் எல்லாமே சற்றே offbeat ரகங்கள் ; வழமையான டெக்ஸ் template களோடு ஒத்துப் போக வேண்டுமென்ற கெடுபிடிகளை இங்கே போனெல்லி விதிப்பதில்லை ! So ஒவ்வொரு சிறுகதையும், ஒவ்வொரு பாணியில்...!

      Delete
  58. நண்பர்களே..!

    டேனியல் க்ரைக்கை மனதில் கொண்டு 007 கதையில் நுழையுங்கள். இரத்த பொரியலோடு (களரி) மெகா மீல்ஸ் காத்துள்ளது.

    அனைவரும் படித்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவென்பதால், பின்னொரு நாளில் பத்தி பத்தியாக எழுத உத்தேசித்துள்ளேன்.

    WELCOME BACK Mr.JAMES BOND.

    ReplyDelete
    Replies
    1. படிச்சாச்சா சார் அதற்குள் ? (படம் பாத்தாச்சா என்று கேட்டிருக்கணுமோ ?)

      Delete
    2. ///(படம் பாத்தாச்சா என்று கேட்டிருக்கணுமோ ?)///

      சத்தியமான வார்த்தை சார்.

      Delete
  59. முதல் பார்வையில்:

    1. டெஸ்சை மேக்ஸி சைசில், அதுவும் தீபாவளி மலராக பார்ப்பதே ஒரு குதூகலம் தான். டெக்ஸ் இதழில் ஹாட் லைனை எதிர்பார்க்கவில்லை. உள்ளே டிக்சியின் ஓவியங்கள் பார்க்க சற்று சுமாராகத்தான் தெரிகிறது. May be கதையுடன் ஓன்றும் போது எப்படியென்றுப் பார்க்கலாம்.

    2. புனித பள்ளத்தாக்கு படிச்சாச்சு.. செவ்விந்திய தாத்தா, டெக்ஸ் பூர்வ ஜென்ம பந்தம், 4 போக்கிரிகளுக்கு டெக்ஸ்சால் சமாதி, கொஞ்சம் அனுமாஷ்யம். ஓகே ரகம். (கதையாசிரியர், ஓவியரின் பேர்களை போடலையோ?)

    3.007 - இந்த இதழ் நிச்சயமாக ஒரு வித புது அனுபவம்தான். பெரிய, பெரிய பலூனில் வசனங்கள் கிடையாது, வசனங்கள் இல்லாமல் ஒரு முழுப் பக்கத்தை ஆக்கிரமிக்கும் பல பக்கங்கள் என வித்தியாசங்கள். நாம் வழக்கமாக பார்க்கும் பக்கத்திற்கு 6/8/12 பேனல் அல்லாமல், கதையின் போக்கிற்கு ஏற்றாற் போல் ஒரு பக்கத்திற்கும் விரியும் சித்திரங்கள். இந்த பாணி நம்மைப் பொறுத்தவரை புதிய பரிமாணம். இந்த பாணியை DC Comics-ல் சர்வ சாதாரணம். (பேட்மேன் ).போன்றவை). இது எந்தளவிற்கு வசீகரிக்கும் என்பது கதையைப் படிக்கும் போது புலப்படுமோ..?

    4. ஸ்மார்ப் : இதுவரையில் ஒரு கதை கூட படிச்சதில்ல. கடைசி வாய்ப்பு என்பதால் இறங்கலாம் என்று முடிவு பண்ணிட்டேன். அதுவும் பொடி பாஷை இல்லாதது ஒரு ஆறுதல்.

    5. 2019 அட்டவணை - இந்த சைஸ் அட்டகாசம், ஒவ்வொராண்டும் இதே சைஸ் ப்ளீஸ். பதிவில் வந்ததை ஒரு pamphlet - டா கொடுத்திருந்தால், நம் பதிவை படித்தறியாதவர்கள் தெரிந்துக் கொள்ள ஏதுவாகயிருக்கும். (why Hero / stories in & out)

    ReplyDelete
    Replies
    1. //பதிவில் வந்ததை ஒரு pamphlet - டா கொடுத்திருந்தால், நம் பதிவை படித்தறியாதவர்கள் தெரிந்துக் கொள்ள ஏதுவாகயிருக்கும். (why Hero / stories in & out)//

      சார்....எதைக் கொடுத்து என்ன புண்ணியம் - smurfs இதழினை முக்கால்வாசிப் பேர் புரட்டவே தயங்கும் போது ??! (இம்மாத smurfs இதழின் நடுப்பக்கத்தோடு catalogue-ஐ முழுமையாய்ப் பின் பண்ணியே தந்துள்ளோம் - சந்தாவில் அல்லாத அத்தனை வாசகர்களின் பொருட்டும் !!)

      Delete
    2. எங்கள் வீட்டில் கதை உல்ட்டா ! அனைவரும் smurfs காதலர்கள் - முதலில் நான், பின்னர் மனைவி, பின்னர் மகளுக்கு கதை சொல்ல வேண்டும் - இப்போ recent-ஆ கார்ட்டூன் என்பதால் என் அம்மாவும் ஒரு ரவுண்ட் படிப்பார். அப்புறம் அலுவலக நண்பர்கள் இருவர். So smurfs வந்தால் ஒரு சிறு போட்டியே நடக்கும்.

      Delete
  60. ஸமர்ப் ன் காசு பணம் துட்டு


    படித்து முடித்தவுடன் அல்ல படிக்க படிக்கவே தோன்றிய எண்ணம் ஓகேவும் அல்ல ஓ....வும் அல்ல ..

    தோன்றிய எண்ணம்

    "ஓஹோ.."

    சூப்பர்....இதுவரை வந்த ஸமர்ப் கதைகளில் பிடித்த கதைகள் கூட கொஞ்சம் அந்நியமாய் தோன்றியது உண்மை .காரணம் அந்த பொடி பாஷையா ,அந்த குள்ள விசித்திர உலகமா என்பது எல்லாம் தெரியவில்லை.ஆனால் இந்த முறை இரு பக்கங்களிலேயே அந்த குள்ள நண்பர்களின் உலகில் நுழைந்து விட்டேன்.அட்டகாசமான கதைகளம் ,அழகான மொழிபெயர்ப்பு ,அம்சமான அச்சுதரத்தில் அழகான ஓவியங்கள் என எப்பொழுதும் போல் அல்லாமல் மற்ற நாயகர்களுடன் கலந்து உலாவுவது போல் இந்த முறை இந்த குள்ள உலகிலும் அழகாய் உள் நுழைய வைத்த காரணம் என்னவோ சரியாக தெரியவில்லை.

    பணம் என்று ஒன்று இல்லாத பொழுது இருந்த மகிழ்ச்சியும் ,ஆனந்தமும் பணம் வந்தவுடன் எப்படி எல்லாம் மாறிவிடுகிறது.குள்ள உலகில் அப்படி எனும் பொழுது நமது உலகில் குறைவான பணமும் ,வசதியும் இருந்த பொழுது கிடைத்த அந்த திருப்தியும் ,மகிழ்ச்சியும் அதைவிட சில மடங்கே இப்பொழுது அதிகமாக காணப்படினும் அந்த ஆனந்தமும் ,மகிழ்ச்சியும் முன்பைவிட குறைந்தே காணப்படுகிறது எனபதையும் தன்னால் மனம் உணர செய்கிறது.

    ஸமர்பை கண்டு பயந்த நண்பர்கள் குழுவில் நானும் ஒருவனே என்ற முறையில் பயப்படமால் இந்த முறை இந்த குள்ள உலகில் நுழைந்து பார்த்தால் பயந்த நண்பர்களும் கட்டி அணைப்பார்கள் என்பது உறுதி .

    "காசு பணம் துட்டு

    -

    100% அசல் தங்கம்.

    ReplyDelete
    Replies
    1. //இந்த முறை இந்த குள்ள உலகிலும் அழகாய் உள் நுழைய வைத்த காரணம் என்னவோ சரியாக தெரியவில்லை//

      தலீவரே....டாடா காட்டப் போகும் இதழிது என்ற தகிரியமாக இருக்குமோ - அந்தக் காரணம் ?!

      Delete
    2. :-)))

      கண்டிப்பாக அல்ல சார்..உண்மையில் இந்த முறை படித்தவுடன் அடுத்த ஸமர்ப் இதழை காண மனம் எதிர்பார்க்கிறது..:-)

      Delete
  61. ஒரே ஒரு சிறு குறை என்னவெனில் ..

    அதுவும் இதழின்குறைபாடு என்று சொல்வதை விட பார்வையின் குறைபாடும் தான் எனவும் சொல்லலாம்.

    வசனநடைகளில் அடர்த்தியான சிவப்பு வண்ண பிண்ணனியில் அமைந்த வரிகளை கூர்ந்து கூர்ந்து நோக்கியும் சரியாக படிக்க முடியாமல் போவது எனக்கு மட்டும் தானா என தெரியவில்லை.:-(

    ReplyDelete
  62. எப்போதும் தல டெக்ஸ் கதையை முடித்துவிட்டு அடுத்த கதை இதுதான் எனது ரெகுலர் காமிக்ஸ் படிக்கும் பழக்கம் ஆனால் இம்முறை 007 இருப்பதால்
    முதலில் 007 படித்தேன்.....

    ஏற்கனவே ஆங்கிலத்தில் வாசித்தாலும் தாய் மொழி தமிழிலில் காமிக்ஸ் வாசிப்பது அலாதி பிரியம் எனக்கு....

    ""புதிய பாண்ட் கதை ஹைடெக் கதகளி""

    எடிட்டரின் அசத்தலான மொழியாக்கம், வழக்கமான பாணி சித்திரம் தவிர்த்து காமிக்ஸ் விருந்தாக பக்கத்திற்கு பக்கம் காட்சி வழியே விரிகிறது.

    டேனியல் க்ரேக் நடித்த 007 படம் பார்த்த திருப்தி.....
    Dr.No, Golden eye , spectre போன்ற படங்கள் நினைவிற்கு வந்துபோகும் அசல் பாண்ட் பட சித்தரிப்பு வாசிக்கும் போது ஏற்படும்போது கூடுதலாக கவனம் பெறுகிறது ஓவியரின் தூரிகை....

    கண்டிப்பாக வேற மாதிரி பாண்ட் காமிக்ஸ் இது....
    (நாயகிகளுடன் அடிக்கும் லூட்டி மிஸ்ஸிங் )

    💋யாழிசை செல்வா 💋
    02/11/2018

    ReplyDelete
  63. James Bond.. ஹும்.. இருக்கு ஆனா இல்ல :-) & :-(

    ReplyDelete
    Replies
    1. துப்பாக்கி இருக்கு...


      டுமீல் இல்லை...:-)

      Delete
  64. காசு...பணம்... துட்டு!

    ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெதுவாக ஆரம்பித்தது கதை. பணத்தைப் படைத்தவுடன் எத்தனை எத்தனை சிக்கல்கள்.

    நடைமுறை சிக்கல்கள் ஒவ்வொன்றும் பளிச் பளச் என உரைக்கின்றன.

    மனுசங்களுக்கு நல்லதா இருக்கும் பணம்(???????) பொடியங்களுக்கும் நல்லதா இருக்கும்னு நினைக்கிறது புத்திசாலித்தனம் இல்லைனு--- அழகா சீனியர் புரிய வைக்கும் காட்சி பிரமாதம் சார்.

    """""பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்
    பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
    எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
    எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான்""""-----என்ற அய்யா கண்ணதாசன் அவர்களின் கேள்விதான் முகத்தில் அறைகிறது.

    மற்ற சமயங்களை விட இம்முறை பலமான விசயங்களை பேசுகிறது,
    காசு...பணம்..துட்டு!

    பல இடங்களில் நகைச்சுவை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது சார். வசனத்திற்கு மீண்டும் வாழ்த்துகள் சார்.



    ReplyDelete
    Replies
    1. பக்கம் 6- லத்தீன் பாசைக்கு அர்த்தம் தெரியாது விழிக்கும் "ஜீனியஸ்" ஸ்மர்ஃப் அங்கே மட்டுமா இருக்கான்????

      பக்கம் 11- முந்திரி கடைக்காரன் பொம்பளைங்கள்ட்ட மாட்டி மாத்து வாங்குவது....

      பக்கங்கள் 12,13,14ல் பணத்தை செய்வதற்கு பொடியன் படும் அவஸ்த்தைகள்

      பக்கம் 32ல் லஞ்சத்தை உட்புகுத்தும் காட்சி

      பக்கம் 35ன் மரப்பாலக் காட்சி
      .....என சிந்திக்க, சிரிக்க நிறைய அம்சங்கள் உள்ளன.

      கடேசி வாய்ப்பில் நல்ல டீஸன்ட்டா ஸ்கோர் பண்ணி போட்டாங்க ஸ்மர்ஃப்ஸ்...!!!

      இதோட ரிசல்ட் ஆகஸ்ட்2019 சர்ப்ரைஸ் பேக்கேஜிங்ல ஒரு
      கார்டூன் ஸ்பெசல் வர ஸ்லாட் கிடைக்கச் செய்யுமா? அல்லது

      "2020ல் மீண்டும் பொடியர்கள்"--- என ஆசிரியர் சார் ஒரு பதிவை அடுத்த சந்தா சமயத்தில் எழுத வைக்குமா என்பதே இப்போதைய கேள்வி?????

      Delete
    2. அட..நீங்க ஏன் சார் சோகத்தைக் கிளப்புறீங்க ? நேற்றும், இன்றும் வந்துள்ள ஆன்லைன் ஆர்டர்களை 5 நிமிடங்களுக்கு முன்பாய்த் தான் கவனித்தேன் ......! ஜேம்ஸ் பாண்ட் & TEX இரு இதழ்களும் on fire ! செம - செம விறுவிறுப்பு ஆர்டர்களில் ! ஆனால்...ஆனால்... இதுவரைக்கும் நீலப் பொடியர்களை வாங்க முற்பட்டுள்ளோரை ஒற்றைக் கையின் விரல்களில் எண்ணியது போக விரல்கள் மிச்சமுள்ளன !! Phew !

      Delete
    3. அடக் கடவுளே!

      ரெலகேசன் தவிர்க்க முடியாத ஒன்றாகிட்டதை வேறு வழியில்லை என்பதால் ஏற்றுக் கொள்கிறேன் சார்.

      10வருடத்தில் நான் என்னுடைய கடையில் வாங்கிட்டு விற்க முடியாம திருப்பி தந்த ஐட்டங்கள் ஓரிரண்டு தான் இருக்கும் சார். ரீபேக் பண்ணும்போது ஒரு மெல்லிய சோகம் பரவும்.அது ஒரு ஜடப்பொருள் என்றபோதிலும்...!!!!

      தங்களது வார்த்தைகள் சொல்லும் வலியை உணர முடிகிறது சார்.

      Delete
  65. நாமல்லாம் கேள்வி கேட்டாலோ. பதிவிட்டாலோ

    எடிட்டர் விஜயன் கண்டுக்கவே மாட்டார்ன்னு சொல்றவங்க வார்த்தை
    எவ்வளவு நிஜமானதென்று இன்று எனக்கு நன்றாகவே புரிகிறது ..

    ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்து பக்கங்களில் பாதியை காணாமல் மன வேதனையோடு கேள்வி கேட்டிருக்கிறேன் அதை இப்படி கண்டும் காணாமல் போவதேன் விஜயன் சார் .. ஆறுதலாககூட எதுவும் சொல்லத்தோன்றவில்லையா ?? அப்புறம் இங்கு வந்து பதிவிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை..

    மௌன வாசகர்கள் வந்து பேசுங்க நிறை குறைகளை சொல்லுங்கன்னு சொல்றீங்க ஆனா அது பேச்சளவில் மட்டூம்தான் என்பது புரிகிறது ..

    மிகுந்த வருத்தத்துடன் .. :( 😏😏😔

    ReplyDelete
    Replies
    1. நண்பரே....ரொம்ப காலம் முன்பாகவே சொல்லிவிட்டேன் - நான் ஆஞ்சநேயரும் அல்ல ; open heart surgery தெரிந்த டாக்டர் செரியனும் அல்லவென்று ! So ஒவ்வொரு தபாவும் 'நான் யார் ? என் நோக்கங்களும், அவாக்களுமென்ன ? என்பதில் நேரக் கூடிய சந்தேகங்களுக்கு , விளக்கம் சொல்கிறேன் பேர்வழியென நெஞ்சைத் திறந்து காட்டுவதென்பது சத்தியமாய் இயலாக் காரியம் ! தவிர, வயசும் ஏறிக் கொண்டே போகிறதல்லவா - அதற்கான வலுவும் இப்போதெல்லாம் இருப்பதில்லை ! தவிர, தீர்ப்பை எழுதிவிட்டு அப்புறமாகத் தான் வழக்கையே தொடுப்பதென்றான பிற்பாடு - நான் கறுப்புக் கோட்டை மாட்டிக் கொண்டு விளக்கங்களை சொல்லிட முற்படுவானேன் ?

      புத்தகத்தில் பிழையிருப்பின் அதனை நிவர்த்திக்க வேண்டிய பொறுப்பு என்னதே ; அதனை ஒரு போதும் தட்டிக் கழிக்கப் போவதுமில்லை - தர்க்கம் செய்திடப் போவதுமில்லை ! அது நவம்பரில் சந்தா கட்டியோராக இருந்தாலும் சரி ; நேற்றைக்கு சாயந்திரம் பணம் தந்தவராக இருந்தாலும் சரி - பிழையினை சரி செய்திடும் எனது பொறுப்பில் எவ்வித மாற்றமும் இருந்திடப் போவதில்லை ! ஆனால் வருத்தத்தை ஆழமாய்ப் பதிவிடும் உத்வேகத்தில், டேமேஜ் இருந்தது எந்தப் புத்தகத்தில் என்பதைக் கூடக் குறிப்பிட உங்களுக்குத் தோன்றவில்லை எனும் போது - அங்கே பிரதானப்பட்டு தெரிவது - "ஒரு வருஷத்துக்கு முன்னேயே கை நீட்டிக் காசை வாங்கிப்புட்டு என்னத்தே கிழிக்கிறியாம் ?" என்ற உங்கள் கேள்வி மட்டும் தானன்றோ ? அதற்கு நான் சொல்லக் கூடிய விளக்கமோ, பதிலோ மருந்தாகிட தான் முடியுமா ? அல்லது உங்கள் கோபம் தணிந்திட சற்றே அவகாசம் தராது, சுடச் சுட நான் சொல்லும் சமாதானம் எடுபடத் தான் செய்யுமா ?

      ஒவ்வொரு ஆண்டும் நான் யாசிக்கிறேன் தான் நண்பரே !! உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முறையும் கையேந்தி யாசிக்கத் தான் செய்கிறேன் சந்தாக்களை செலுத்தக் கோரி ! ஆனால் அதனை ஒரு நாளும் நான் கௌரவக் குறைவாய்ப் பார்த்திடுவதில்லை - simply becos எனது யாசிப்போடு, உங்களின் வாசிப்புகளும் கலந்திருப்பதால் !

      "காசு...பணம்..துட்டு.." இந்த பூமியைச் சுழலச் செய்யும் இன்றியமையா ஒன்றே - இம்மாத smurfs கதையானது சுட்டிக் காட்டுவது போல ! ஆனால் அதையும் தாண்டிச் சில விலைமதிப்பற்ற சமாச்சாரங்களும் உண்டென்பதையும் அதே ஆல்பம் நமக்குச் சொல்கிறதே ! அதனையே எனக்கு ஆறுதலாக எடுத்துக் கொண்ட கையோடு, பிழைக்கோசரம் எனது மன்னிப்புகளை உங்களுக்கு ஆறுதலாகவும் சொல்லிய கையோடு - மும்பையின் ஒரு கோடியிலிருக்கும் நான் அதிகாலை விமானதை பிடிக்கும் பொருட்டு தூங்கக் கிளம்புகிறேன் ! அப்புறம் நாளைய தினம் இம்மாத இதழ்கள் மூன்றையுமே மாற்றாக அனுப்பப் சொல்லியிருக்கிறேன் ! Of course பிழையான பிரதியைத் திருப்பி அனுப்பும் சிரமம் நிச்சயம் அனாவசியம் !

      Delete
    2. /// ஆனால் வருத்தத்தை ஆழமாய்ப் பதிவிடும் உத்வேகத்தில், டேமேஜ் இருந்தது எந்தப் புத்தகத்தில் என்பதைக் கூடக் குறிப்பிட உங்களுக்குத் தோன்றவில்லை எனும் போது - அங்கே பிரதானப்பட்டு தெரிவது - "ஒரு வருஷத்துக்கு முன்னேயே கை நீட்டிக் காசை வாங்கிப்புட்டு என்னத்தே கிழிக்கிறியாம் ?" என்ற உங்கள் கேள்வி மட்டும் தானன்றோ ? அதற்கு நான் சொல்லக் கூடிய விளக்கமோ, பதிலோ மருந்தாகிட தான் முடியுமா ? அல்லது உங்கள் கோபம் தணிந்திட சற்றே அவகாசம் தராது, சுடச் சுட நான் சொல்லும் சமாதானம் எடுபடத் தான் செய்யுமா ? ///

      நீங்கள் தான் சார் சரியாக கவனிக்க வில்லை நான் எந்த புத்தகத்தை சொன்னேனென்று (இதில் என்டைனுய கமண்ட் மூன்றே மூன்றுகள்தான்) ஒரு வருஷத்துக்கு முன்னயே /
      கிழிக்கிறாயாம் இதெல்லாம் பெரிய வார்த்தைகள் சார் நான் சொல்ல வந்தது என்னவென்று புரிந்து கொள்ளாமல் இதுதான் நான் சொல்லீயிருப்பேன் என்று முடிவு செய்த உங்களிடம் நான் வாதாட தயாரில்லை .. அவகாசம்?!!!! நான் கேட்டது நேற்று நீங்கள் பதிலலித்தது இன்று இடையில் உள்ள 24 மணிநேரங்களும் நான் கோபமாகவே இருந்திருப்பேன் என்று நினைத்தது நீங்கள்தான் நான் அல்ல .. நான் சொன்னது / சொல்லவந்தது என்னவென்று புரிந்து கொள்ளாமல் பொத்தம் பொதுவாய் புரிந்து கொண்டது நீங்கள்தான் .. காசு பணம் துட்டு என்பதை தாண்டி உள்ள சிலதை அறிந்ததினால்தான் நான் உங்களிடம் நேரடியாகவே கேட்டேன். அதை நீங்கள் புரிந்து கொள்ளாதது உங்களுடைய தவறேயாகும் ..

      எனக்கு உங்களுடைய அந்த மூன்று புத்தகங்கள் எனக்கு வேண்டாம் ..

      ஒரு ரசிகனின் பார்வை கோணத்தை புரிந்து கொள்ளாமல்
      செய்யும் பிரதி உபகாரம் எனக்கு வேண்டாம் விஜயன் சார் .. உங்க புத்தகத்தை நீங்களே வச்சுக்கங்க ..

      ஏன் சம்பத் என்னாச்சு என்று ஒற்றை வார்த்தையை நீங்கள் கேட்டிருந்தாலும் நான் அடடே நம்ம எடிட்டரை காயபடுத்திட்டமோ என்று நினைத்து வருத்தப்பட்டிருப்பேன் ..

      இப்ப நீங்க சொன்னதுதான் நிதர்சனம் .. இதுதான் நீங்க ..

      ஹேப்பி தீபாவளி சார்

      இனி என் பதிவுகள் உங்க வலைதளத்தில் வராது

      மிக்க நன்றிகள்

      Delete
    3. நாளை அந்த புத்தகங்கள் வந்தாலும் நான் வாங்கிக் கொளௌள மாட்டேன். அதனால் எனக்கு கொரீயரை அனுப்பி பணம் செலவு செய்ய வேண்டாம் ..

      அதே நேரம் நான் போட்ட முதர் கமண்டிற்க்கு அடூத்த 3வது கமண்டை பாருங்க .. அந்த நிமிட வருத்தத்தை மறந்து புறந்தள்ளிவிட்டு நான் படித்த கதையின் விமர்சனத்தை பதிந்துள்ளேன். இதுதான் நான் ..



      ..

      Delete
    4. நான் என்பது , ஏது செருப்பால அடிச்சு சோறு போடுவதா...கிழிந்த புத்தகங்கள் மாற்று வாங்கியவர்கள் இல்லையா...எடுத்ததும் கட்டமா எழுதுனா ஆசிரியருக்கும் கோமம் வரக்கூடாதா! நல்லா படிங்க உங்க கமண்ட நண்பரே! பிழைகள் என்பது யதார்த்தம் !உங்க தொழில்ல இது வரை நீங்க ஒரு பிழை கூட செய்யாம வண்டி ஓடியிருந்தா, நீங்க ஆசிரியர காட்டமா கேட்டத ஏற்றுக்கொண்டு தளத்த புறக்கணிக்க நானும் தயார்! நான், நான்கிறிங்களே அத முன்னிலைப்படுத்துவத மறந்துட்டு சநுதோசமா வாழப் பாருங்க! பிறர சந்தோசப் படுத்துன அது நமக்கும்தா ,,,,வருத்தபடுத்த முயற்சித்தாலோ அதுவுந்தேன் !
      சம்பத் உங்க கதை குறித்த விமர்சனம் அருமை !நானும் பாராட்டிட்டேன் !

      Delete
    5. சம்பத் சும்மா ஒரு தடவ காசு பணம் கதய படிங்க...கொண்டாட வேண்டிய மனத வையாம எப்படி சந்தோசத்த இழக்குறோம்னு சொல்லிருப்பீங்க !காசு மட்டுமே உலகமல்ல நண்பரே! அந்த காசு எனும் சாத்தானாலதான் நடத்த முடியும்கிறதாலதான் ஆசிரியர் உங்கள போன்ற நண்பர்பளிடம் பிச்சை எடுக்க வேண்டி இருக்கு !என்ன செய்ய உலகம் அப்டிதான் !நிதனமா யோசிங்க புத்தகம் தர்ற சநுதோசத்தாலதான் இப்டி நீங்களும் நானும் பேச வேண்டியிருக்கு, அத வெளியிடத்தான் ஆசிரியரும் பிச்சை புகினும் கற்கை நன்றேன்னு பிச்சை எடுக்க வேண்டி இருக்கு! உலகம் கலைகளின் சுரங்கமன்றோ!

      Delete
    6. சார் புத்தகம் டேமேஜ்னா, அதுக்கு கீழ ஆசிரியரின் பதில் இதுவாத்தானிருக்கும், அனுப்புங்க, மாற்றுபிரதி திரும்ப வரூம் ! சரிதானே!?

      Delete
    7. டெக்ஸ் சம்பத் செய்த திருவிளையாடல்கள் பூமாரங் போல் திருப்ப தாக்குகிறது. நாம் யாருக்கு என்ன செய்கிறமோ அது நமக்கு திருப்பி வரும். எடிட்டர் எல்லா புத்தகங்களையும் சரி பார்க்க முடியாது. புத்தகம் பக்கங்கள் இல்லை, டேமைஜ் ஆகி விட்டது என்று போனில் சொன்னாலே போதும்.அதிகபட்சம் மூன்று நாட்களில் ரிபிளேஸ்மென்ட் புத்தகம் கண்டிப்பாக வரும். ஓவராக வார்த்தைகளை விட்டால் அதை கோணிப் பையால் கூட அள்ள முடியாது.ஆகவே பொறுமை அவசியம் வார்த்தைகளை விடும் போது.

      ஐ.வி.சுந்தரவரதன்
      சின்ன காஞ்சிபுரம்.

      Delete
  66. எடிட்டா் சாா்!

    எனக்கு ஜேம்ஸ்பாண்ட் ஜம்போ புக் மட்டும் வரலைங்க சாா்!

    அது தனி சந்தா, தனித்தனியா அனுப்பிட்டோம்னு சொன்னாங்க. ஆனா இன்னும் புக் வரலைங்க சாா்! கூாியாிலும் விசாரிச்சுட்டேன்!!

    தீபாவளிக்கு முன்பாக கிடைக்க ஆவண செய்யுங்கள் சாா்!

    ReplyDelete
  67. சாழ் இது வழை படித்ததிலை மிக பிடித்த கதை காசு பணம், துட்டுதான் !எப்படி பணம் உருவாகி மக்கள் மத்தில பரவி இருக்கும்னு காட்டுது! பணம் குறித்து சிந்திக்க வைக்கும் கதை! கம்யூனிசத்த போதிக்க ஏற்றத்தாழ்வுகள போக்க பணத்த ஒழிச்சாலே போதும்னு சொல்லிய கதை !

    ReplyDelete
  68. சார் புத்தகம் டேமேஜ்னா, அதுக்கு கீழ ஆசிரியரின் பதில் இதுவாத்தானிருக்கும், அனுப்புங்க, மாற்றுபிரதி திரும்ம வரூம் ! சரிதானே!?

    ReplyDelete
  69. ***** புனிதப் பள்ளத்தாக்கு *****

    மூச்சிரைக்கும் வாசிப்பு அனுபவத்தை வழங்கிடுவது முழுநீளக் கதைகளென்றால், மனதில் ஒரு தாக்கத்தை விதைத்துவிட்டு... 30 பக்கங்களில் தன் பணியைச் செவ்வனே முடித்துக்கொண்டுவிடுவது இந்த கலர் டெக்ஸ் கதைகளின் சிறப்பு!!

    ஆர்கிட் மலர்களை உள்ளங்கையில் ஏந்தி பார்ப்பதைப்போன்ற இந்த அனுபவம் - சந்தாதாரர்களுக்கான மிக அழகான பரிசு!

    அடுத்த வருடமும் இதே பரிசுகளைத் தொடர்வதற்கு நன்றிகள் பல எடிட்டர் சார்!! _/\_

    ReplyDelete
  70. Diwali books : Tex Willer - As usual. Rocking. Flash back ல் கதை சொல்லும் பாணி நாம் பழகியதே. First half ல் tiger தூள் கிளப்பினாலும், Second half ல் நம்ம தல takes over. டைகரை சூறாவளியாய் சித்தரித்தது அருமை. எது எப்படியோ டெக்ஸ் குரூப்பில் யாருக்கும் கல்யாணம் பண்ணி வைக்காம எல்லாத்தையும் மொட்ட பயனுங்களாகவே உட்ருக்காங்க.

    இந்த மாத surprise entry is Bond... James ..Bond. புதிய ஜேம்ஸ் பாண்ட் அதகளம். எதிர்பார்க்கவே இல்ல. ராணி காமிக்ஸ் பாண்டை பார்த்திருந்த எங்களுக்கு இது வேறு லெவல். Single கதையில் ஒரு total film-ன் கதையை கொண்டு வந்தது அட்டகாசம். ஆரம்பத்தில் ஒரு சின்ன action block. அப்புறம் title card. Then பாண்ட் Boss ன் சந்திப்பு. இடையில் மனிபென்னியுடன் ஒரு ஜாலி. அப்புறம் மெயின் ஸ்டோரி. ஆங்காங்கே கேலி, கிண்டல். ஊடலாடும் நகைச்சுவை. இது ஒரு complete James Bond film. வலுவான கதைக்கு தத்ரூபமான ஓவியங்கள் சேரும் போது, கதை மேலும் வலுவடைகிறது. டெக்சின் கதைக்கு போட்டி போடக் கூடிய கதை (வெவ்வெறு தளம் என்றாலும்). மொத்தத்தில் Bond re-enters with a bang. Full marks.
    2018 ன் சந்தா இந்த ரெண்டு கதைகளுக்கு மட்டுமே தகும். இது வரை வந்தவை எல்லாம் இலவச இணைப்புகளே.
    ஸ்மூரஃ...இன்னும் படிக்கவில்லை. இந்த ரெண்டையும் இன்னும் ஒரு முறை படித்து விட்டு பார்க்கலாம்.
    தயவு செய்து தீபாவளியன்று ரெண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கவும். மாசுபடுதலை காப்போம். தீவாளிக்கு மொத நாளும், அடுத்த நாளும் 24 மணி நேரம் வெடிக்கவும்.
    Again Heartiest Diwali Wishes to all..

    ReplyDelete
  71. ஜும்போ காமிக்ஸ் இதுவரை எத்தனை இதழ்கள் வெளிவந்திருக்கின்றன?

    ReplyDelete
  72. Subscribed for 2019 issues on November 1st yet order no not yet allotted. Email also sent. Please look into the matter sir!

    ReplyDelete
    Replies
    1. It takes 3-4 days. Please wait. Personal experience.

      Delete
  73. அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  74. புதிய பதிவு உண்டா?

    ReplyDelete
  75. அருமையாக வெளிவந்துள்ள காசு .. பணம் .. துட்டு .. போன்ற smurfs கதைகளை தமிழ் காமிக்ஸ் உலகில் ஏன் ரசிக்க மறுக்கிறோம்? வரவேற்பில்லாமல் போவது எதனால்? tex, ஜேம்ஸ் பாண்ட் என்று எப்போதும் துப்பாக்கி சுட்டுக்கொண்டே இருக்கும் கதைகளும், கொலை, கொள்ளை - துப்பறிதல், போன்ற monotonous தடங்களை மட்டும் ஏன் வரவேற்கிறோம்? அதோடு psycho கதைகளும் ரசிக்கிறோம் ! கடந்த 30-40 ஆண்டுகளில் நகைச்சுவை ரசனைகளிலிருந்து விலகி விட்டோமா? அந்த genre கூட லக்கி லூக் 'குருத மேல டுப்பாகி' சுட்டுக்கொண்டு வந்தால் தான் அதிகம் விற்பனை ஆவது ஏன்?

    யகாரி, மர்ஸுபுலாமி போன்ற அருமையான காமிக்ஸ் வரிசைகள் கார்ட்டூன்களில் காத்துக் கிடைக்க இங்கே அவற்றினை கொள்வாரில்லை என்பது மிகப்பெரிய சோகம். இதனில் லியோனார்டோ, பென்னி போன்றவைகளும் அடக்கம். நமது வாசிப்புக்களில் சிறிதளவேனும் ஒரு கனவுலகில் சஞ்சரித்து வர நாமே நமக்கேன் தடை போட்டுக்கொள்கிறோம்?

    ReplyDelete
    Replies
    1. இதன் ஆணிவேரிருப்பது 1972 -ல் ஒரு குறிப்பிட்ட template ல் உருவான காமிக்ஸ் ரசனைகளில் என்பேன் !!

      முழுநீள ஆக்ஷன் த்ரில்லர்..
      Clean சித்திரங்கள் ..
      சீக்ரெட் ஏஜெண்ட் / உளவாளி / டிடெக்டிவ் கதை பாணிகள் ..
      நேர்கோட்டுக் கதைகள் ..

      தொடர்ச்சியாய் முத்து காமிக்சில் வெளியான கதைகளின் சகலத்துக்கும் இடையே மேற்படி ஒற்றுமைகள் தவறாது இருந்திருக்கும் ! So ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளாய் இந்த பாணிகளுக்கே நாம் பழகியிருக்க - நம்மை அறியாமலேயே 'காமிக்ஸ் என்றால் ஆக்ஷனே பிரதானம்' என்பது போலானதொரு கல்வெட்டு நமக்குள் பதிந்து விட்டிருக்க வேண்டும் ! So பின்னாட்களில் இந்த இலகு ரக கார்டூன்களையும் ; ஆக்ஷனுக்கு முக்கியத்துவமிலாக் கதைகளையும் ரசித்திட திண்டாடுவது இதனால் தான் என்றொரு எண்ணம் என்னுள் !

      Delete
    2. நமது வாசிப்புக்களில் சிறிதளவேனும் ஒரு கனவுலகில் சஞ்சரித்து வர நாமே நமக்கேன் தடை போட்டுக்கொள்கிறோம்?//

      இதையேத்தான் அன்னிக்கு கா. பா. வும் சொன்னார். ஆனா வேற கதைகளை குறிப்பிட்டு அவற்றை படிக்க மறுக்க வேண்டாமேன்னு கேட்டிருந்தார். மறுக்க
      ரசனைகளின் மாறுபாடு மற்றும் எதிர்பார்ப்புகளின் வேறுபாடு மட்டுமே காரணம்.

      எனக்கு மேஜிக்விண்ட், டயபாலிக், ஜூலியா, மாடஸ்டியெல்லாம் படிக்க அவ்வளவா பிடிப்பதில்லை. ஆனா இந்தக்கதைகளை ரசிப்பதற்கும் நிறைய பேர் இருக்காங்க. எனக்கு பிடித்த பென்னி மந்திரியெல்லாம் நிறய பேருக்குப் பிடிக்கல.

      இந்த மாதிரி கதைகளுக்கெல்லாம் ஒரே வழி லிமிடெட் எடிசன் இல்லன்னா கூட்டுறவு மாதிரி எந்தக்கதை வந்தாலும் வாங்க வாசகர்ரெடியா இருக்கனும். இரண்டாவது ஆப்சனுக்கு நிறய பேர் ரெடியில்லை என்பதே உண்மை.

      Delete
    3. ராகவன் +1
      எடிட்டர் +1
      MP +1

      Delete
  76. @ ALL : வாரயிறுதி ; தீபாவளிக்கு ஊருக்குத் திரும்பும் பர பரப்புகள் ; ஊரில் இருப்போருக்கு வீட்டாரோடு ஷாப்பிங் செல்லும் உற்சாகங்கள் - என இந்த சனி & ஞாயிறு நம்மில் பெரும்பான்மையினருக்கு செம பிஸியானதாக இருந்திடுவது நிச்சயம் ! தவிர, ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பதிவிலும் நிறைய பேர் absent எனும் போது இந்த ஒற்றை ஞாயிறுக்கு புதுசாய்ப் பதிவு என்று இழுத்துப் போட்டுக் கொள்ளாது - நானுமே பண்டிகையின் flavor -ல் லேசாய்த் திளைத்துக் கொள்கிறேனே guys ? தீபாவளியன்று சந்திப்போம் !

    அது வரையிலும் எங்களது இந்த YouTube வீடியோ உங்கள் ரசனைகளை ஏற்ப உள்ளதா என்று பார்த்திடலாமே : https://youtu.be/Ql0ci2anSk8

    ReplyDelete
    Replies
    1. தீபாவளிக்கு அதிர்வெடி கதைகள் ஏதாவத பாத்தத பகிருங்கள் வாய்ப்பிருப்பின்

      Delete
    2. போனா போவுதுன்னு விடறோம்... இந்த ஒரு ஞாயிறு மட்டும் பிழைச்சுப் போங்க எடிட்டர் சார்!!

      ஆனா இதே மாதிரி சலுகைய எங்ககிட்டே அடிக்கடி எதிர்பார்க்காதீங்க - நாங்கள்லாம் ரொம்ப கறார் பேர்வழிகளாக்கும்!

      Delete
  77. சின்னவருக்கு தல தீபாவளி வாழ்த்துகள்..

    ReplyDelete
  78. (விரலளவு மனிதர்கள் கடலளவு சேதி சொல்லும்) ****** காசு... பணம்... துட்டு... *****

    மனித சமுதாயத்தின் மனநிம்மதியை, சந்தோசத்தை காசு-பணம் எப்படியெல்லாம் சிதைத்து வைத்திருக்கிறது என்பதை இந்தக் குட்டியூண்டு மனிதர்களைக் கொண்டு ரசிக்க வைத்து, சிரிக்க வைத்து, பகடி செய்து பாடம் நடத்தியிருக்கும் படைப்பாளிகளுக்கு எழுந்து நின்று கைதட்டலாம்!!

    அடுத்த கைதட்டல் - நம் மொழிபெயர்ப்பாளருக்கு (எடிட்டர்?!!)! இயல்பான பேச்சுத் தமிழில், ரசிக்க வைத்திடும் குறும்பான வசனங்களுக்காகவும், குபீர் சிரிப்பு வார்த்தைப் பிரயோகங்களுக்காகவும்!!

    பொடி பாஷை மிக மிகக் குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது! ஆனால் இதுவே சரியான அளவீடு என்பது ரொம்பவே லேட்டாகத்தான் உரைக்கிறது!

    கதையைப் படித்து முடிக்கும்போது நம்மிடமிருக்கும் (தக்கணூண்டு) பணத்தையெல்லாம் எங்கேயாவது கடாசிவிட்டு காட்டுக்குள் ஓடிவிடலாமா என்ற எண்ணம் தோன்றுவது உண்மை!!

    என்னுடைய ரேட்டிங் : 10/10


    ReplyDelete
    Replies
    1. பின்னட்டையில் குட்டியாய் கதையை விவரித்திருக்கும் விதமும், "அந்த 1% நான்தான்" என்று கதறியழும் ஸ்மர்ஃப் படமும் - ஹா ஹா செம!

      Delete
  79. ஜேம்ஸ் பாண்ட்...!

    வழக்கம் போல மடிப்பு கலையாத கோட்.
    வழக்கம் போல சிறு சிறு கேட்ஜெட் அதிரடிகள்.
    வழக்கம் போல சுற்றி வரும் அழகிகள்.
    என,
    பழகிய கண்களுக்கு ரத்த சகதியில் புரண்டெழுந்த ஜேம்ஸ் பாண்டை 'காஸினோ ராயலில் ' பார்த்த போது ஒரு 'திடுக் ' எபெக்ட் எழுந்ததல்லவா?

    அதே போன்ற உணர்வுதான் புதிய 007 கதையில் ஏற்பட்டது. ஜேம்ஸ் பாண்ட் பற்றிய பொதுபிம்பம், அபிப்ராயத்தை எப்படி டேனியல் க்ரைக் உடைத்து பரணில் போட்டாரோ? அதே திருவிளையாடல்தான் மேற்படி கதையிலும் நிகழ்ந்தது. அதை நைசாக 37ம் பக்கத்திலும் ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார்

    அதைவிட ஆச்சரியம் நவீன யுக கதையாக இருந்தாலுமே, எந்தவொரு எலக்ட்ரானிக் சாதனத்தையும் துணைக்ககழைக்காமல், தன் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களே தனக்குதவி பாலிஸியுடன், களமிருங்குகிறார் பாண்ட்.
    ,
    கதையின் ஓரிடத்தில் , ஜேம்ஸின் பிரியத்துக்குரிய பிஸ்டல் (அட.. நல்லாருக்கே) அல்லது துப்பாக்கிக்கு புது வரவான தோட்டா தரப்படுகிறது. அது சதையைத் தொட்டு, ஊடுருவி கிழித்தெறிந்து வெளியேறும் போது ஆச்சரியமாகவும் கொஞ்சம் அச்சமாகவுமே உள்ளது..! வேறென்ன விஷேசம் என்றால்
    சிலஇடங்களில் தோட்டாவே பாண்ட் ஐ விட கூடுதலாக வேலை செய்கிறது.
    பாண்ட் நல்லாவே அடி வாங்குகிறார்.முட்டி மோதியே, (நிஜமாகவே) கொஞ்சம் கஷ்டப்பட்டே ஜெயிக்கிறார். காரில் வில்லியுடன் போராடும் காட்சி, ஆய்வுக்கூடத்தில் வில்லனுடனான மயிர்கூச்செறியும் சண்டைக் காட்சி, நகத்தை வேரோடு கடிக்கும்படி செய்தது.

    மரியாதைக்குரிய Mம், வணக்கத்திற்குரிய மணிப்பெண்ணும் கூடுதலாக கவனம் ஈர்க்கின்றனர்.

    உணர்ச்சிகளற்ற வில்லன், வழக்கம் போலொரு வில்லியும் மேற்கொண்டு பக்கங்களை இரத்தச் சிவப்பாக்குகிறார்கள்.

    அப்பப்பா... என்ன ஒரு வேகமான ஆக்சன்...!

    Awesome..!

    ReplyDelete