Saturday, September 29, 2018

கண்களின் கதையிது...!


நண்பர்களே,

உஷார் : நெடும் பதிவு ahead & நெட் தின்னும் பதிவும் கூட !!! 

வணக்கம். ஒரு வசீகரிக்கும் கற்பனைக்கு இன்று வயது 70 ! நிஜத்தைச் சொல்வதானால் நம் வீட்டில் யாருக்கேனும் பிறந்த நாள் என்றால் கூட இத்தனை ஆரவாரமிராது நம்முள் ! ஆனால் எங்கோ ஒரு தூர தேசத்தில், முகமறியா ஒரு மனிதர் உருவாக்கியதொரு காமிக்ஸ் நாயகருக்கு இன்றைக்கு நாமெல்லாம் (at least நம்மில் பெரும்பாலானோர்) வாயெலாம் பல்லாய்த் திரிகிறோமென்பது அந்தக் கற்பனையின் வலிமைக்கொரு testimony ! Hail TEX WILLER & the Bonelli family !! அந்தக் குடும்பத்தின் முனைப்புகள் மட்டும் வேகமெடுத்திருக்காவிடின் இன்றைக்கு நமக்கேது இந்த ரேஞ்சர் அணியின் பரிச்சயம் ?!

இத்தாலியில் கொஞ்ச காலம் முன்பாகவே டெக்ஸின் இந்த மைல்கல் தருண சிலாகிப்புகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டிருக்கிறார்கள் ! இந்த 70 ஆண்டுப் பயணம் சார்ந்த முக்கிய நினைவுகளைத் தாங்கியதொரு கண்காட்சி மிலனில் நடந்து வருகிறது ! ஒரு மொபைல் கண்காட்சியோ இத்தாலியில் தென்கோடியிலிருக்கும் ரோம் நகரத்திலிருந்து – ஒவ்வொரு பெரிய புத்தக ஸ்டோராகப் பார்த்துப் பார்த்துப் பயணித்து வருகிறது – TEX நினைவுகளையும் இதழ்களையும் சுமந்து கொண்டே! தவிர அவர்களது வலைப்பக்கத்தில்; Facebook-ல்; Instagram-ல் என சகல தளங்களிலும் அதகளம் செய்து வருகிறார்கள்! எழுபதுக்கே அந்த ரகளை எனும் போது அடுத்த மேஜர் மைல்கல்லான YEAR 75-க்கு என்னவெலாம் அதிரடிகள் காத்துள்ளனவோ ?! And அவர்கள் அணுகுண்டுகளைக் கொளுத்திப் போடும் வேளையில் நாமும் நம் சத்துக்கேற்றார் போல ஏதாச்சும் சீனி வெடியையாவது தயார் பண்ண வேண்டி வருமன்றோ? So இப்போவே 2023-க்கு துண்டு விரித்து வைக்கணுமோ ? அதுக்கோசரம் தலையை இப்போதே உருட்டத் துவங்கிடணுமோ ? 

Back to the present… THE DYNAMITE SPECIAL !
மொக்கை போடாத ஒரு மொக்கை இதழாக இதை அமைத்திட வேண்டுமே என்ற ஆதங்கம் – 2017-ல் துவக்கம் கண்டு விட்டது – நடப்பாண்டின் அட்டவணையை இறுதி செய்த கணமே ! டெக்ஸின் நீ-ள-மா-ன இந்த சாகஸத்தின் முதல் துளிர் என் மண்டைக்குள் விட்டது 2016-ன் ஏதோவொரு பொழுதில் மிலனின் காமிக்ஸ் மியூசியத்தின் இந்த ஒரிஜினல் இத்தாலிய இதழ்களைப் பார்த்த கணத்தில் தான்! பிரான்கோ-பெல்ஜியப் படைப்பாளிகள் சகலருமே ரொம்பவே சீராய், இத்தனை - இத்தனை பக்கங்களில் ஆல்பங்கள்; இத்தனை ஆல்பங்கள் இணைந்ததே ஒரு மினி தொடர் ; இத்தனை சுற்றுகள் கொண்டதே ஒரு நெடுந்தொடர் – என்ற திட்டமிடலில் பக்காவாக இருப்பார்கள் ! So ஒரு புதுக்கதை பற்றியோ ; தொடரின் சுவாரஸ்ய ஆல்பங்களின் விபரங்கள் பற்றியோ தெரிந்து கொள்வது அத்தனை பெரிய பிரயத்தனமாக இருப்பதில்லை ! ஆனால் போனெல்லியில் ; அதுவும் குறிப்பாய் TEX கதைக்குவியலுள் கதையே வேறு !

- இதழ் 130-ல் துவங்கிடும் கதை அந்த இதழில் ஒரு 10 பக்கங்கள் ஓடும்…

- தொடரும் 131-ல் முழுசுமாய் தடதடக்கும்...

- அப்புறம் 132-ல் ஒரு 19 பக்கத்தில் மங்களம் போட்டிருப்பார்கள் !

So ஒரு கதையின் முழுமையையும் கண்டுபிடிக்கவே நெட்டில் உருட்ட வேண்டி வரும் ! அப்புறம் தான் அந்தக் கதை நமக்கு சுகப்படுமா ; சுமார்ப்படுமா ? என்ற அலசல்களெல்லாம் ! ஆனால் இந்தத் தலைநோவுகளுக்கெலாம் அவசியங்களின்றி – லட்டு மாதிரி ஒரிஜினல் இதழ்களையே புரட்ட முடிந்திடும் போது வேலை சுலபமோ சுலபமாகிடும் தானே ? And அது தான் நேர்ந்தது மிலனில் அந்த ஞாயிறின் மதியம் ! ‘தல‘யை கையைக் கட்டி ‘தர தர‘வென இழுத்துப் போகும் அந்த ராப்பரைப் பார்த்த பொழுதே ஜெர்க் அடித்தது – ‘என்னங்கடா பண்ணுறீங்க?‘ என்று ! புரட்டத் தொடங்கினால் கதை ஓடுது… ஓடுது… சன் டி.வி.யின் மெகாத் தொடர் நீளத்துக்கு! ஒரிஜினலான இந்த சாகஸத்தின் black & white படைப்புகளின் பக்க நீளம் 511 ! மிஞ்சிப் போனால் 330 பக்க MAXI டெக்ஸ் கதைகளே நாம் அது வரைக்கும் முயற்சித்திருந்த மெகா கதைகளெனும் போது – இது மெகாவுக்கு மம்மியான இதழாக அமைந்திடக்கூடுமென்று மனதில் பட்டது ! அந்த நொடியில் TEX 70 பற்றிய ஞானமெல்லாம் இருந்திருக்கவில்லை என்பதால் எனது டயரிக் குறிப்புகளில் இந்தக் கதை பற்றிய விபரங்களைக் குறித்துக் கொள்வதோடு நிறுத்திக் கொண்டேன் ! அன்றைக்கே – அங்கேயே உருட்டிய போது நான் எடுத்த notes-களில் தான் DYNAMITE ஸ்பெஷலின் கதை # 2 கூட இடம்பிடித்திருந்தது ! இந்த b&w சாகஸத்தின் நீளமோ 266 பக்கங்கள் ! So இதுவுமே எனது டயரிக்குள் தஞ்சமானதோடு சரி- அப்போதைக்கு!

ஓராண்டு கழிந்த நிலையில் 2017-ன் மத்தியில் – நடப்பாண்டுக்கான அட்டவணைத் தயாரிப்புக்கான வேளை புலர்ந்திருக்கையில் – “TEX 70” காத்துள்ளது என்ற அறிவிப்பு மாதா கோவில் மணியோசையைப் போல நாலாதிக்குகளிலிருந்தும்  வந்து சேர்ந்திருந்தது ! So ஒரு அதிரடி ஸ்பெஷல் இதழ் வெளியிட வேண்டி வருமென்ற போதே என் டயரிக் குறிப்புகளைத் தான் புரட்டத் தோன்றியது ! 511 பக்க மெ-காாாாா சாகஸம் என் தலைக்குள் ஜிங்கு ஜிங்கென்று ஆடித் தீர்க்க – அதை வெளியிட “டைனமைட்” ஒரு சூப்பரான களமாகிடக்கூடும் என்ற எண்ணம் வலுவாகத் தொடங்கியது ! அது மட்டுமன்றி – இத்தனை பெரிய கதையை ”முழு வண்ணத்தில்” எனத் திட்டமிட்டால், அது இன்னமும் தெறிக்கச் செய்யுமே என்ற வேகமும் சேர்ந்து கொண்டது ! தொடர்ந்த நாட்களில் நெட்டில் இந்த நெடுங்கதை சார்ந்த விமர்சனங்கள்-அலசல்கள் என்று தேடத் துவங்கினேன் ! இத்தாலிய ரசிகர்கள் ஒட்டு மொத்தமாய் 'ஆஹா...ஓஹோ.." என்று சிலாகித்திருப்பதே சகல இடங்களிலும் கண்ணில் பட்டது !   அப்புறமென்ன ? விக்கிரமாதித்த மன்னரின் தாத்தாவே வந்தாலும் தலைக்குள் குடிகொண்டுவிட்டிருந்த வேதாளத்தை இறக்கிட முடியாதென்ற அளவுக்கு இந்தக் கதையோடு ஒன்றிப் போய் விட்டது மனசு ! 

அப்புறமும் “We want more எமோஷனல்!” என்று நீங்கள் கேட்பது போலவே எனக்குள் ஒரு பீலிங்கு! சரி… இன்னொரு taut ஆன black & white கதையையும் வால் சேர்த்து விட வேண்டியது தான் என்று தீர்மானித்தேன் ! எது? எது? எது? என்றபடிக்கே டயரியில் விரல்களை ஓடவிட்ட போது “266” என்ற பக்க நம்பரோடு நின்ற “தெற்கே ஒரு தங்கத் தேட்டை” பக்கமாய் ஹால்ட் அடித்தேன் ! இதுவுமே நெட்டில் செமத்தியாக review களை ஈட்டியிருந்தது இத்தாலிய ரசிகர்களிடம் மாத்திரமென்றில்லாது - பிரெஞ்சு வாசகர்களிடமுமே ! 

511 + 266 = 777 ! என்று ஏதோவொரு கூட்டணிக் கணக்கு தலைக்குள் ஓடிய மறுகணமே – “கண்டேன் மணாளனை; அதாச்சும் மணாளன் நம்பர் 2-ஐ!” என்று குஷியாகி விட்டேன்! (இதில் கொடுமை என்னவென்றால் - black & white கதையினைப் பின்னாளில் வர்ணமூட்டிய வேளையில் ஏதோ காரணத்துக்காக 4 பக்கங்களைக் குறைத்து விட்டனர் !! So வர்ண edition 507 பக்கங்களே !!) 70-வது வருட மலருக்கு ரூ.700 விலையில் 777 பக்க இதழ் என்றால் செமையாகப் பட்டது ! அடுத்த நொடியே – “நைனா… 777 என்பது சாத்தானின் நம்பர் என்பது ஒரு நம்பிக்கை ! So உஷார் !” என்றதொரு குரலும் உள்ளிருந்து கேட்டது ! அட வழக்கம் போல நமது ஹாட்லைன் ; தந்திலைன் ; புறாத்தூதுலைன் என்று எதை எதையாவது எழுதிப் போட்டால் பக்க எண்ணிக்கைகளை ஜாஸ்தியாக்கிடலாமென்ற தைரியம் இருந்ததால் டைனமைட்டின் திட்டமிடல் – சமோசாவுடனும், காபியுடனும் முடியும் பற்பல கூட்டங்களைப் போல என்னுள் இனிதே நிறைவுற்றது ! So பந்தாவாய் 2017-ன் அட்டவணையில் விளம்பரத்தையும் போட்ட கையோடு – மாமூல் பணிகளுக்குள் நுழைந்து விட்டேன்! 

அந்த அட்டவணை விளம்பரத்தில் நாம் பயன்படுத்தியிருந்த அந்த டெக்ஸ் & கார்சன் எதிரெதிர் திசைகளில் துப்பாக்கிகளை முழக்கிக் கொண்டிருக்கும் ஸ்டில் ரொம்பவே impressive ஆக இருப்பதாய்த் தோன்றிட – அன்றைக்கே நமது ஓவியரைக் கூப்பிட்டு, அதையே ஒரு பெயிண்டிங்காகவும் போட்டுத் தரச் சொல்லியிருந்தேன்! அவருமே அதைச் சூட்டோடு சூட்டாய்ப் போட்டுக் கொணர – ”ஆங்… இது டைனமைட்டுக்கு” என்றபடிக்கே பத்திரப்படுத்தி விட்டேன்!
இதற்கிடையே சென்றாண்டின் நமது “Early Bird” பேட்ஜ் தயாரிக்க வேண்டியிருந்த போது அதற்கானதொரு படத்தைத் தேடி நெட்டை உருட்டிய சமயம் இன்னொரு ஸ்டில் சிக்கியது ! டெக்ஸ் நிலவொளியில் நடந்து வர, அவரது தலைக்கு மேலாயொரு இரவுக் கழுகு ! பேட்ஜாக அதைச் செய்யச் சொன்ன சமயமே, 'இதுவுமே கூட டைனமைட்டின் அட்டைக்கு நல்லா வருமே?' என்ற எண்ணம் எழுந்தது! மறுக்கா – ஓவியர் – மறுக்கா இன்னொரு TEX ஓவியம் – மறுக்கா உள்ளே வைத்துப் பத்திரப்படுத்துதல் என்ற routine தொடர்ந்திட – “ஒன்றுக்கு இரண்டாய் ராப்பர் டிசைன்கள் ரெடி; So டைனமைட் இதழின் தயாரிப்பு டைமில் அட்டைப்படம் சார்ந்த பிடுங்கல்கள் எழாது !" என்று தைரியமாகத் திரிந்தேன்!
2018-ம் புலர்ந்து – துவக்க மாதங்களும் தடதடத்து, ஒரு மாதிரியாய் ஏப்ரலில் நிலைகொண்ட போது தான் வயிற்றுக்குள் ஒரு இனம்புரியா பீதி படரத் தொடங்கியது ! பந்தாவாய் “இரத்தப் படலம் தொகுப்பு + டைனமைட் ஸ்பெஷல் – என 2 மெகா இதழ்களுமே ஈரோட்டில் ரிலீஸ்!” என்று நான் அறிவித்திருந்தது எத்தனை பெரிய குடாக்குத்தனம் என்ற புரிதல் கொணர்ந்த பீதி அது ! 852 பக்கங்கள் – மூன்று ஆல்பங்களாய் இரத்தப்படலத்துக்கு ; 778 + பக்கங்கள் டைனமைட்டுக்கு எனும் போது – 1620 மொத்தப் பக்கங்கள் ஆகஸ்டுக்கு அவசியமாகிடும் என்ற கணக்கைப் போட்டுப் பார்க்கப் பார்க்க, வியர்க்கத் தொடங்கியது ! And மாமூலான பணிகளுக்கு இடையே இந்த ஸ்பெஷல் இதழ்களும் இணைத்தடத்தில் travel ஆகிட வேண்டியதிருக்கும் எனும் போது – என் முன்னே எஞ்சியிருந்த 4 மாத அவகாசம் செம துக்கடாவாய்த் தோன்றியது! ”மீசையிலே மண் ஒட்டுமே என்று பார்த்தாக்கா – முகரையே இரத்தக்களரியாகிடும் தம்பீ!” என்று லாஜிக் முன்வைத்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்த இயலவில்லை ! ”ஆங்… ஆகஸ்ட் லட்சியம்; இல்லாங்காட்டி ‘தல‘ பிறந்த நாளுக்கு முன்பாய் நிச்சயம்” என்று டைனமைட்டை அக்டோபருக்கு ஜகா வாங்கியது அதன் பிற்பாடே ! மேற்கொண்டு 2 முழு மாதங்கள் கிடைக்கின்றன என்ற போதே – காற்று வாங்கப் போயிருந்த தைரியமானது வீடு திரும்பியது ! ”முடிச்சுக்கிடலாம்… முடிச்சுக்கிடலாம்!” என்றபடிக்கே நாய் சேகரின் முறைப்போடு ஒரு பஞ்சுமிட்டாய் கோட் போட்டுக் கொண்டு ”இரத்தப் படலத்துக்கும்”; ஈரோட்டுக்கும் தயாராகத் தொடங்கினேன்!

ஆகஸ்டும் புலர்ந்திட… இரத்தப் படலமும் மலர்ந்திட… ஈரோடும் களைகட்டிட – ‘கடவுள் இருக்காரு குமாரு!‘ என்றபடிக்கே ஊர் திரும்பினேன் குஷியாய் ! ஆனால் அப்போதே வேறு மாதிரியான சில பயங்கள் இலவச இணைப்புகளாய் தோளில் தொற்றிக் கொண்டிருந்தன! இரத்தப் படலமும், அதன் making-ம் ஆண்டவன் புண்ணியத்தில் அழகாய் அமைந்து போயிருக்க – தொடரும் ஒவ்வொரு ஸ்பெஷல் இதழுமே இனிமேற்கொண்டு “இ.ப.”வின் அளவுகோல்களோடே எடை போடப்படுமே – அதற்கான தொடர் நியாயங்கள் செய்திட நமக்கு சாத்தியமாகிட வேண்டுமே ?!” என்பது Mr.பயம் # 1 ! அவருக்கு அடுத்தபடியாக நின்ற மிஸ்டர் பயம் # 2 – எனக்குள் குடிபுகுந்திருந்ததொரு சன்னமான flatness ! 

"வீட்டில் விசேஷம் வருது… சொந்தக்காரர்களுக்குச் சொல்லணும்… சமையலுக்கு ஏற்பாடு பண்ணனும்…துணிமணி வாங்கணும்...வர்றவங்களுக்கு தங்குற  ஏற்பாடு செய்யணும்  என்று அலுத்துக்  கொண்டே பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று வந்திருப்போம் ; பரபரவென சில பல மாதங்கள் அலைந்திருப்போம் ! அந்த முக்கிய நாளும் புலர்ந்து, எல்லாமே அமர்களமாய் நடந்தும் விட்டிருக்கும் ! 'இது சரியாக வருமா ? அதை ஞாபகமாய்ச் செய்திருப்போமா ? இதைக் கோட்டை விட்டிருப்போமோ ?' என்றெல்லாம் அடிமனசுக்குள் பதட்டத்தைக் கிளப்பியிருந்த அத்தனை சமாச்சாரங்களுமே - துளிகூட தலைகாட்டாது - எல்லாமே வழுக்கிக் கொண்டே smooth-ஆக ஓடியிருக்க, சந்தோஷமாய் சொந்த-பந்தகளெல்லாம் விடைபெற்ற பிற்பாடு – “ஷப்பா… எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுத்து!” என்றபடிக்கு காலியான வீட்டின் கூடத்தில் அமர்ந்திருப்போம் ! மனதில் ஒரு திருப்தி வியாபித்திருப்பதை உணரும் நொடியிலேயே ஒரு மெலிதான வெறுமையும் கைகோர்த்திருப்பதைப் புரிந்திட முடியும் ! ”அந்த நாள் வந்தும் விட்டது… போயும் விட்டது !” எனும் போது – வீட்டில் தெரியும் வெறுமை, மனதிலும் பிரதிபலிப்பதை உணர முடியும் ! இனி மறுக்கா இப்படியொரு சந்தோஷம் சாத்தியமாகிடுமோ ? என்ற மௌனமான குழந்தைத்தனமான ஏக்கத்தை சொல்லவும் முடியாது ; விழுங்கவும் தெரியாது – மந்தமானதொரு சிரிப்போடு – all is well என்பதாகச் சுற்றி வருவோமல்லவா ? அதே syndrome தான் எனக்குள்ளும் – இரத்தப் படலம் & ஈரோடு என்ற உச்சங்களின் பிற்பாடு ! சத்தியமாய் இரண்டுமே அத்தனை சிறப்பாய் அமைந்தது எங்களது எந்தவொரு பெரிய திட்டமிடலின் காரணத்தினாலுமல்ல ! எல்லாமே தாமாய் அதனதன் இடங்களில் விழுந்து வைக்க, ஒட்டுமொத்தமாய் முன்னே நின்று கொண்டு ‘ரைட்… ரைட்!' என்று குரல் தருவது மட்டுமே எனது பொறுப்பாக இருந்து வந்தது. So எதிர்பாராது கிடைத்த எக்ஸ்ட்ரா சந்தோஷம் சேர்ந்து கொண்ட போது – ”அடுத்த மெகா இதழும் இதே போல அழகானதாய் அமையாது போயின் ஏமாற்றங்களின் பரிமாணம் கூடிப் போய் விடுமே ?” என்ற பயத்தோடு, எனது இனம்புரியா வெறுமையும் சேர்ந்து கொள்ள, டைனமைட்டுக்கு நிரம்பவே starting troubles !

And எப்போதுமே இது போன்ற 300… 400… 500 பக்கங்களது கதைகளெனில் – ‘மொத்தமாய் பார்த்துக்கலாம்‘ என்றே பொழுதை ஓட்டிவிடுவதில் நான் கில்லாடி! நம்மவர்களும் தடதடவென டைப்செட்டிங் பணிகளை 100-100 பக்கங்களாய் முடித்து, என் மேஜையில் அடுக்கித் தள்ள – ரொம்பச் சீக்கிரமே 800 பக்கக் குவியல் என்னை மிரட்டலாகவே முறைக்கத் துவங்கியது ! ஒரு நெடுங்கதையை எடிட் செய்யும் போது – நீண்ட இடைவெளிகள் இருத்தல் என்றைக்குமே சரிப்படாது ! கதாப்பாத்திரங்களுக்குள்ளேயான பேச்சு முறைகள் ; இந்தாளை ‘வாங்க... போங்க‘ என்று குறிப்பிட்டோமா ? ‘வா-போ‘ என்று எழுதியிருந்தோமா ? போன்ற சங்கதிகள்  மறந்து விட்டால் – 'ஏக் தம்'மில் கதை படிக்கும் உங்களுக்குக் கடுப்பாகிப் போகும் ! So தொடர்ச்சி விட்டுப் போகாதிருக்க வேண்டுமெனில், பிட்டத்துக்குக் குளிர பெவிகால் தடவிக் கொண்டாக வேண்டுமென்பது புரிந்தது ! ஆனால் அநியாயத்துக்கு ஆகஸ்டிலும், செப்டம்பரிலும் தான் நமது மற்ற தொழில்களின் நிமித்தம் வேலைகள் சூடுபிடிக்கத் துவங்கின ! உள்ளூரிலும், வெளியூரிலும் சுற்று ; இதர பணிகள் சார்ந்த தேடல்கள் என்று நாட்கள் tight ஆக ஓடிட, “டைனமைட்… டைனமைட்…” என்று துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கைகள் போலான signals மனதில் ஓடிக் கொண்டே இருந்தன!

குட்டி போட்ட பூனை போகுமிடத்துக்கெல்லாம் குட்டிகளையும் கவ்விக் கொண்டே போவது போல, நேரம் கிடைக்கிறதோ – இல்லையோ ; பணியாற்ற முடியுமோ - இல்லையோ ; போகிற ஊருக்கெல்லாம் டைனமைட்டின் பக்கங்களும் என்னோடே பயணமாயின! பெரும்பாலும் இது போன்ற “மொடாங்குப் பணிகளை” வீட்டிலோ – ஆபீஸிலோ வைத்துப் பார்ப்பது தான் தேவலாம் ; On the road இவற்றினுள் புகுவது சுலபமேயல்ல என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும் – ஆர்வக் கோளாறு எங்கே விட்டு வைக்கிறது ?! பெங்களூருக்கும், சென்னைக்கும், சான் பிரான்சிஸ்கோவுக்கும் ‘தல‘ என்னோடு ‘வித்-அவுட்‘ பயணியாகச் சுற்றி வந்தது தான் மிச்சம் ! இனியும் தாமதித்தால் டைனமைட் மூஞ்சோடு தெறித்து விடும் என்ற நிலை எழுந்த போது வரிந்து கட்டிக் கொண்டு ராக்கூத்துக்களைத் துவங்கினேன் ! வழக்கம் போல கூர்க்காவின் விசில் சத்தமே அடுத்த 10 நாட்களுக்குத் தாலாட்டாகிப் போக – 777+ பக்கங்களும் என் மேஜையிலிருந்து மறுக்கா நமது DTP டீமின் தோளில் தொற்றிக் கொண்டன  – திருத்தங்களைச் செய்து ; டமால் – டுமீல்களை இணைத்து ; அச்சுக்குத் தயாராக்கித் தரும் பொருட்டு ! பேப்பர் விலைகள் விண்ணைத் தொடத் துவங்கிய முதல் நாளே, நமது வழக்கமான பேப்பர் சப்ளையரைக் கையைக் காலைப் பிடித்து, பேப்பர் வாங்கிப் போட்டுவிட்டிருந்தபடியால் – சுடச் சுட அச்சும் சுபமாய் முடிந்தது ! And as always ‘தல‘ - மஞ்சள் மையை மட்டும் பாயாசம் குடிப்பது போல உறிஞ்சித் தள்ளியதன் பலனாய் தகதகக்கத் தொடங்கியிருந்தார் ! All is well என்றபடிக்கே – எஞ்சியிருந்த அட்டைப்படப் பணிகள் பக்கமாய் கவனத்தைத் திருப்பினேன் ! கைவசம் ஒன்றல்ல – இரண்டு பெயிண்டிங்குகள் தயார் எனும் போது சும்மா லாத்தலாய் வேலைகள் ஆகிவிடுமென்ற எண்ணத்தில் – உள்ளே துயின்று கொண்டிருந்த 2 படங்களையும் எடுத்து வரச் செய்தேன் !

இரண்டையும் சாவகாசமாய் எடுத்துப் பார்த்தால் – லைட்டாக ‘ஜெர்க்‘ அடித்தது ! டெக்ஸ் & கார்சன் எதிரெதிர் பெயிண்டிங் ஒரிஜினலை அப்பயே ஈயடிச்சான் காப்பியாகப் பிரமாதமாய் அமைந்திருந்த போதிலும் – 2 குறைகள் என் கண்ணுக்கு (தாமதமாய்) தெரிந்தன ! பெயிண்டிங் போடப்பட்டதோ ஓராண்டுக்கு முன்பாக எனும் போது – அப்போதே நமது ஆந்தை விழிகள் கலைக் கண்ணோட்டத்தோடு நோக்கியிருப்பின் – திருத்தங்களைச் சாவகாசமாகச் செய்திருக்க முடிந்திருக்குமே என்று உறைத்தது ! டெக்ஸ் கண்களை இறுக மூடிக் கொண்டு, பட்டாசுச் சத்தத்துக்குப் பயந்து போய் பல்லை இறுக்கிக் கடித்துக் கொண்டு நிற்பது போலப்பட்டது ! அப்புறம் ‘தல‘யின் தலையில் தொப்பியும் நஹி ! இரண்டையுமே அவசரமாய் சரி செய்தாக வேண்டுமே என்று நமது ஓவியரை வரவழைத்து – திருத்தங்கள் குறித்து விளக்கினேன். இப்போதெல்லாமே அவருக்கும் மூப்பின் தாக்கங்கள் தெரியத் துவங்கியிருப்பதால் – இது போன்ற நுணுக்கமான பணிகளைச் செய்திடச் சிரமப்பட்டு வருவதைக் கவனிக்க முடிகிறது ! So கொஞ்சம் தயக்கத்துக்குப் பிற்பாடே - மூடிக் கிடந்த டெக்ஸின் கண்களைத் திறக்கும் முயற்சி துவங்கியது ! முதல் நாளின் பணிகளுக்குப் பின்னே பார்த்தால் – அம்மா கவனிக்காத நேரமாய் அடுப்பங்கரையிலிருந்து தீபாவளிப் பலகாரத்தை ஆட்டையைப் போடும் போது ஒரு திருட்டு முழி முழித்திருப்போமே – அச்சு அசலாய் அதே ஜாடையில் தான் டெக்ஸ் நின்றிருந்தார் ! 'ஊஹும்… இது சரியில்லை; மறுபடியும் திருத்தம் ப்ளீஸ் !' என்று பணிக்க – மறு நாளோ குமரிமுத்துவின் ராஜபார்வையோடு நம்மவர் சுட்டுக் கொண்டிருந்தார் ! ஏற்கனவே அதே நேரத்தில் தான் மாடஸ்டியின் அட்டைப்படப் பஞ்சாயத்தும் இங்கே பதிவில் ஓடிக் கொண்டிருக்க – “ஆத்தாடியோவ்! இந்த அழகில் டெக்ஸை உங்கள் முன்னே நிறுத்தினால் – Ola-வைப் பிடித்து உருட்டுக்கட்டைகளோடு கிளம்பிவிடுவீர்களென்ற பயம் தெறிக்க வைத்தது ! மறுபடியும் திருத்தம் சொன்ன போது ஓவியருக்கே கை உதறத் துவங்கி விட்டது ! சரி, இதற்கு மேலும் பாவப்பட்ட மனுஷனை இம்சிக்க வேண்டாமென்று தோன்ற – எனக்கு நானே சால்ஜாப்பு சொல்லிக் கொண்டேன் ! ”ஆங்… என்னயிருந்தாலும் இந்தப் படத்தை குட்டியாகவேணும் 2018 அட்டவணையில் ஏற்கனவே போட்டு விட்டோம் ! இதையே இப்போது டைனமைட்டின் ராப்பராகவும் போட்டால், ஒரு பழைய feel தான் மேலோங்கும் ! So இந்தப் புளிக்கும் பழம் வேண்டாமே !” என்று நினைத்துக் கொண்டேன்!

பெயிண்டிங் # 2-ஐ கையிலெடுத்துப் பார்த்தால், அதிலுமே லேசாய் டெக்ஸின் கண்கள் இடுங்கிக் கிடப்பது போல் பட்டது ! கன்னங்களும் லேசாய் அதைப்பாய் இருப்பது போலத் தோன்ற – மேலோட்டமாய் மட்டும் அவற்றை சரி செய்யச் சொன்னேன் ! அதைச் செய்தான கையோடு – அட்டைப்படத்துக்கான எழுத்துக்களைப் பதித்து தயாராக்கிப் பார்க்கும் முஸ்தீபுகளில் இறங்கினாம். வழக்கமாய் இது போன்ற ஸ்பெஷல் இதழ்களின் ராப்பர்களை நமது டிசைனர் பொன்னனிடம் ஒப்படைப்பதே வழக்கம் ; ஆனால் இம்முறையோ மனஷன் ஜவ்வாய் இழுத்தடிக்க, உள்ளேயே அடியேனின் மேற்பார்வையில் சிறப்பாய் ஆணிகளைப் பிடுங்கிவிடலாமென தயாரானோம் ! ஆனால் எனக்கும் ; இந்த டிசைனிங் மெருகேற்றல்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இன்னொரு தபா நிரூபணமானது ! ”ஆங்… இங்கே சிவப்பாக்குங்க… அங்கே பச்சையாக்குங்க!” என்று சரமாரியாய் நான் பிராணனை வாங்கிட – பலனாகக் கிட்டிய டிசைன்களைப் பார்க்க எனக்கே சகிக்கவில்லை ! Here's a sample....!
இதற்கே செப்டம்பர் முதல் வாரமாகியிருக்க, உள்ளுக்குள் உடுக்கை அடிக்கத் துவங்கியிருந்தது ! அதற்குள்ளாக பொன்னனும் ஒரு டிசைனை அனுப்பியிருக்க – தேவலாமே?! என்றுபட்டது! அவசரம் அவசரமாய் அதையொரு பிரிண்ட் போட்டுப் பார்த்தால் ‘திரு திரு‘வென முழிக்கத் தான் தோன்றியது ! ராப்பராக்கிப் பார்க்கும் போது ஒரு களையே இல்லாமல் ரொம்பவே மீடியமாய்த் தான் தோன்றியது ! அவசரம் அவசரமாய் பின்னணி கலரை மாற்றிப் பார்ப்போம் ; எழுத்துக்களை அமைக்கும் இடங்களை மாற்றிப் பார்ப்போம் என்று ஏதேதோ செய்தும் பருப்பு வேகக் காணோம் ! இதோ அந்தத் தருணத்து பணிகள் : 


மேலோட்டமாய்ப் பார்க்கையில் இவையெல்லாமே மோசமில்லை என்று தோன்றினாலும், அந்தக் காலத்து போட்டோ ஸ்டூடியோக்களின் வாசல்களில் குடையை ஊன்றிக் கொண்டு தாத்தாக்கள் ஸ்டைலாக இது போல் போஸ் கொடுத்து நிற்கும் படங்களை தொங்க விட்டிருப்பதே எனக்கு நினைவுக்கு வந்தது !! குடைக்குப் பதிலாய் இங்கே ரைபிள் !! பதட்டத்தில் உதறத் தொடங்க – அட… இத்தாலியில் ஓவியர் இருக்கிறாரே – அவரை அவசரமாய் ஒரு custom made ராப்பராத் தயாரிக்கச் சொல்லிக் கேட்போமே ! என்றபடிக்கு அவரை நாடினோம் ! அவர் மின்னல் வேகக்காரர் என்பதால் நாலே நாட்களில் ஒரு டிசைனைத் தயாரித்திடக் கூடியவர் என்ற தெம்பு பிறந்தது. கதையிலிருந்து வரும் அந்த கைதுப் படல சித்திரத்தையும் அட்டையில் incorporate செய்து ராப்பர் உருவாக்குமாறு அவருக்கான reference-களை மெயிலில் அனுப்பினோம்! அவரும் பிரமாதமானதொரு பென்சில் ஸ்கெட்சை மறுதினமே தயாராக்கி விட்டார் ! Here it is !!
“சூப்பரப்பு… சூப்பரப்பு” என்று thumbs up தந்திட – தொடர்ந்த மூன்றாவது நாளில் கலர் செய்து டிசைனையும் அனுப்பி விட்டிருந்தார் ! ஆர்வத்தோடு மின்னஞ்சலைத் திறந்தால் – நவீன பாணியிலான கலரிங் செய்திருப்பதைப் பார்த்துப் பேந்தப் பேந்தத் தான் முழிக்க முடிந்தது! ரொம்பவே அடர் வர்ணங்கள் என்றிருக்க – நிச்சயமாய் இதனை முன்னட்டைக்குப் பயன்படுத்த முடியாதென்றேபட்டது !
தலையைப் பிய்க்காத குறையாக அதனிலும் ஏதேனும் வர்ண மாற்றங்கள் செய்த முடிகிறதா ? என்று முயற்சிக்கத் துவங்கினோம் ! ஆனால் இதில் திருத்தங்களை டிஜிட்டலாக் செய்ய முற்படும் நேரத்திற்கு – புதிதாகவே ஒரு டிசைனைப் போட்டு விடலாமே என்றும் ஞானோதயம் உதிக்க – இம்முறை கொஞ்சம் தெளிவான விபரங்களோடு இத்தாலிய ஓவியருக்கு yet another அவசர டிசைனுக்குக் கோரிக்கை வைத்தோம் ! துளி கூடத் தயங்காது அவர் இம்முறையும் மின்னலாய்ச் செயல்பட்டு ஒரு டிசைனைப் பூர்த்தி செய்து அனுப்பினார் ! தனது முந்தைய டிசைனில் நமக்கு அவ்வளவாய் திருப்தி இல்லை என்பதாலேயே அடித்துப் பிடித்து இன்னொரு படம் கோருகிறோம் என்பதைப் புரிந்து கொண்டாரோ என்னவோ – ‘அவசியமாகும் மாற்றங்களைக் குறித்து மின்னஞ்சலில் விளக்குங்கள்; உடனே செய்து தருகிறேன்‘ என்றும் குறிப்பு அனுப்பியிருந்தார் ! நமக்குத் தான் வாலை மட்டுமேனும் உள்ளே விட்டுப் பார்க்கும் அளவுக்குக் கதவு திறந்திருப்பின் – பரங்கிக்காய் மண்டையையே நுழைத்துப் பார்க்கும் பேராசை உண்டாச்சே ?! “இன்ன-இன்ன திருத்தங்கள் பளீஸ்!” என்று கோரினோம் ! அவையும் ஏக் தம்மில் முடிந்து வந்த பிற்பாடு பிரிண்ட் அவுட் போட்டு மேஜையில் போட்டுக் கொண்டேன். 

அந்தக் காலங்களில் டைரக்டர் / நடிகர் விசு அவர்களின் மூத்த சகோதரர் (பெயர் ராஜாமணி என்று நினைக்கிறேன் ) நாடகங்களிலும், அப்புறமாய் விசு அவர்களின் படங்களிலும் மட்டுமே நடிப்பார். ஆந்தை விழிகள்; கழுத்தை வான்கோழி போல ‘திருக்‘ ‘திருக்‘கென்று திருப்பும் mannerism என்று வலம் வருவார்…! அவரைப் போலவே நானும் கழுத்தை இப்டிக்கா… அப்டிக்கா என்று திருப்போ திருப்பென்று திருப்பி டிசைனின் நிறை / குறைகளைப் பரிசீலிக்க முயன்றேன்! நான் அடிக்கும் கூத்துக்களையெல்லாம் கிட்டேயிருந்து பார்த்து வரும் மைதீன் சிரிப்பை எப்படி அடக்குவானோ தெரியாது – ஆனால் புதுசாய் யாரேனும் அன்றைக்கு என்னைப் பார்த்திருந்தால் புள்ளையாண்டான் மோனாலிசா ரேஞ்சுக்கான பெயிண்டிங்குகளை மதிப்பீடு செய்யும் நிபுணர் போலும் என்று நினைத்திருப்பார்கள்! என் முன்னே அப்போதிருந்த படங்கள் இவையே !! 

எல்லாம் ஓ.கே. ஆனால் வர்ணங்கள் இன்னும் சித்தே வித்தியாசமாய் இருந்தால் தேவலாமோ ? என்ற எண்ணம் தலைதூக்கியது ! விடாதே… பிடி… என்று பொன்னனை மறுபடியும் கதவைத் தட்டி – கலர் மாற்றம் செய்யக் கோரினோம் ! 

அன்றிரவு வீட்டுக்குப் போனால் தூக்கமே பிடிக்கவில்லை! தேதி 18 ஆகியிருந்தது ! உட்பக்க அச்சு முடிந்து ; பைண்டிங்கில் ராப்பருக்காக வெயிட்டிங் என்ற நினைப்பு குடைந்து எடுத்தது. நடுராத்திரியில் – ‘ஊஹும்… கலர் மாற்றத்திலும் முழுசாய் திருப்தி ஏற்படாது போனால் – அவசர மாற்றத்துக்கென என்ன செய்வது ?‘ என்ற பயம் தொற்றிக் கொண்டது ! அப்போது தான் டெக்ஸின் தீபாவளி மலருக்கென போட்டிருந்த 2 டிசைன்களுள் ஒன்று நினைவுக்கு வந்தது ! அதில் ஒரு கோடியில் டைகர் ஜாக் செம காண்டாக போஸ் கொடுத்துக் கொண்டிருப்பார் கையிலாரு கத்தியோடு ! அந்த டிசைனை எடுத்துக் கொண்டு; டைகருக்குக் கல்தா தந்து விடலாமென்று ராவில் மகாசிந்தனை எழ – காலையில் முதல் வேலையாக அதை ஸ்கேன் செய்து "டைனமைட்டின் ராப்பர் இது தான் !" என்று சொல்லி வைத்தேன் ! நல்ல நாளைக்கே நமக்கு மறையில் இறுக்கம் கம்மி என்பது தெரிந்தவர்களே நம்மாட்கள் என்பதால் – சத்தமேயின்றி அந்த டிசைனையும் பிராசஸ் செய்தார்கள் ! மாலையப்பனின் அந்த டிசைனுமே Tex-ன் ஒரிஜினல் கவரின் வார்ப்பு என்பதால் ஈயடிச்சான் காப்பியாகவே அமைந்திருந்தது – முகத்தில் மட்டும் லேசான தேஜஸ் குறைந்து ! அதையே முறைத்துப் பார்த்தவனுக்கு ‘பளிச்‘சென்று இத்தாலிய ஓவியரின் முதல் டிசைனின் முகமும் அதே ஆங்கிளில் இருப்பது நினைவுக்கு வந்தது ! So “மாப்பிள்ளை இவர் தான்; ஆனாக்கா அவர் போட்டிருக்கும் சட்டை அவரோடது இல்லை” என்ற கதையாக – இத்தாலிய மண்டையை இந்திய ஓவிய உடலோடு இணைக்கும் ராஜதந்திரத்தைச் செய்து முடித்தோம் ! அப்புறம் அதிலும் டைனமைட் எழுத்துக்களைக் கோர்த்து சின்னச் சின்ன நகாசு வேலைகளை டிசைனர் பொன்னனைக் கொண்டு செய்து முடித்த போது தேதி செப்டம்பர் 21 ! இதோ - அந்த முயற்சியின் பலன்கள் !! முதல் படம் - நம் ஓவியரின் TEX முகத்தோடு ! தொடரும் படம் - இரவல் முகத்தோடு ! 

அதற்கிடையே செம குளிர்ச்சியாய் ஒரு பிஸ்தா பச்சையோடு பொன்னன் அந்த இரண்டாவது இத்தாலிய ராப்பரையும் மெருகூட்டியிருக்க - நானோ ‘சேது‘ சீயான விக்ரம் பாணியில் தானிருந்தேன்! “ஆங்… இத்தாலிலே மாலையப்பன்; டெக்ஸ் கூட பொன்னன் ; ‘தல‘யோட தலையை காணோம் ? பச்சை தான் எனக்குப் புடிச்ச கலரு” என்று என்னென்னவோ கலவைகள் தலைக்குள் சடுகுடு ஆடின ! இறுதியாக 2 டிசைன்களையுமே பிரிண்ட் போட்டு “மேஜையில் வைத்து ஒப்பிட்ட போது தான் சன்னம் சன்னமாய் பிராணன் திரும்பியது!
இரண்டில் ஒன்று நிச்சயம் தேறிவிடுமென்ற நம்பிக்கை எழுந்த சமயம் தேதியோ Sept 22 ! 'பளிச்' பச்சையில் டெக்ஸ் மந்தகாசமாய் புன்னகைக்கும் ராப்பரா ? அடர் சிகப்பில் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு நிற்கும் ராப்பரா ? என்ற கேள்வி மட்டுமே முன்நின்றது ! 

பச்சையில் டெக்ஸின் கண்களைப் பார்க்கப் பார்க்க, ஓவியரின் ஆற்றலைக் கண்டு வியக்காதிருக்க முடியவில்லை எனக்கு ! வழக்கமான அடிதடி பாணி டிசைனல்ல என்பது புரிந்தது ; “டைனமைட்“ என்ற அதிர்வேட்டுப் பெயருக்கு ‘தல‘யின் soft still சுகப்படுமா ? என்ற கேள்வியும் இருந்தது தான் ! நீங்களுமே இதை எவ்விதம் எடுத்துக் கொள்வீர்களென்ற பயமும் இருந்தது ! ஆனால் – ஆண்டு # 70 என்னுமொரு முக்கிய தருணத்தில் THE BIG MAN மட்டுமே ஒளிவட்டத்தில் பிரதானமாய் இருந்திட வேண்டுமென்று எனக்குள்பட்டது ! தவிர இதுவரையிலும் நாம் முயற்சித்தே இராத இந்த வர்ணக் கலவையையும் ; டெக்ஸின் வசீகரம் செய்யும் அந்தக் கண்களையும் பார்க்க எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது ! Truth to tell – இது வரையிலும் எந்தவொரு ராப்பரிலும் டெக்ஸை நாம் இத்தனை உயிரோட்டத்தோடு சித்தரித்ததில்லை எனும் போது – இந்த மெகா இதழில் அகஸ்மாத்தாய் கிட்டியிருந்த வாய்ப்பை நழுவ விட மனது ஒப்பவில்லை ! Come what may - சாத்துக்களோ ; ஏச்சுக்களோ – இந்த டெக்ஸ் வசீகரத்துக்காக வாங்கிக் கொள்ளலாமென்று தீர்மானித்த போது தேதி செப்டம்பர் 23 ! 

பார்சல்களை உங்கள் கைகளில் ஒப்படைக்க நான்கே நாட்கள் பாக்கி என்ற போது – தொடர்ந்த அத்தனை பணிகளுமே மின்னலை நாணம் கொள்ளச் செய்யும் வேகத்தில் அரங்கேறின ! பிராசஸிங்… பிரிண்டிங்… நகாசு வேலைகள்… பைண்டிங் என அத்தனையும் அடுத்த நாலே நாட்களில் தயாராகிட – பேக்கிங் செய்யத் தயாராகயிருந்தார்கள் நம்மாட்கள்!

உப்ப்ப்…Just miss !! என்ற பெருமூச்சோடு மதியம் வீட்டுக்குக் கிளம்பத் தயாரான போது தான் “ஸ்வீட் எடு… கொண்டாடு” என்று உதித்தது மண்டைக்குள் ! "இஷ்டாப்… டப்பாக்களை அடைத்து விடாதீர்கள்… ஒரு சாக்லெட் வைத்தாக வேண்டும் !" என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன். இப்போதெல்லாம் நான் வேட்டியோடு ஆபீஸுக்கு வந்து சேர்ந்து, அதை மடித்துக் கட்டிக் கொண்டு ஒரு குத்தைப் போட்டாலுமே நம்மாட்கள் புருவங்களைக் கூட உயர்த்தப் போவதில்லை! அந்தளவுக்கு அவர்கள் அத்தனை பேருக்குமே எனது குரங்குக் கூத்துக்கள் பரிச்சயமாகிப் போய் விட்டன ! So அவசரம் அவசரமாய் ஒரு சாக்லெட் டப்பாவை வாங்கி வந்து, அவற்றையும் உள்ளே சேர்த்து பேக் செய்யத் தொடங்கினார்கள் ! வீட்டுக்குப் போய் சோற்றில் கைவைத்த நொடியே தலைக்குள் இன்னொரு பீதி அலாரம் அடித்தது ! குண்டு புக்… செம கனம்… சாக்லெட்டை நசுக்கித் தொலைத்து விட்டால் - புக் சகலமும் சாக்லெட் கோட்டிங் போட்டது போலாகி விட்டால், அதைச் சுத்தம் செய்ய சர்ஃப் தேவைப்படுமோ இல்லையோ – என்னைக் குமுறியெடுக்க வண்டி வண்டியாய் சர்ஃப் / ஏரியல் தேவைப்படுமென்று புரிந்தது ! மறுநொடியே ஆபீஸுக்கு ஓடிப் போய் – 'ஒரு கண்ணாடிக் கவருக்குள்ளே சாக்லெட் & card-ஐ வைத்த பிற்பாடு, அப்புறமாய் பேக்கிங் பண்ணுங்க ; சாக்லெட் நசுங்கி பிதுங்கினாலும் கவருக்குள்ளேயே கிடக்கட்டும் ! என்ற மறுகணமே கச்சிதமாய் அந்த சைஸுக்கான பாலிதீன் கவரைப் பிடித்துக் கொணர்ந்தான் மைதீன் ! அதன் பின்னே நடந்ததெல்லாம் தான் உங்களுக்குத் தெரியுமே !!

So thus ends the tale of a cover !! இந்த தபா ராப்பரை உங்கள் கண்ணில் காட்டாதே டகுல்பாஜி வேலைகளோடு நாட்களை நகர்த்தியதன் பின்னணியும் இதுவே ! அது மாத்திரமன்றி – புக்கின் கம்பீரத்தோடு இந்த டிசைன் இணைந்தே உங்களை எட்டிப் பிடித்தால் தேவலாம் என்றும் நினைத்தேன் ! இந்த பாணி ராப்பரில் உங்களுள் நூற்றுக்கு நூறு ஏற்பு இருக்குமென்ற கற்பனையில் நான் மிதந்திடவில்லை ! நிச்சயமாய் ‘ஙே‘ என்ற குரல்களும் இருந்திடத்தான் செய்யுமென்று யூகித்ததால் – முன்கூட்டியே ராப்பரை மட்டுமே இங்கே களமிறக்குவது உசிதமென்று நினைக்கவில்லை ! 

இப்போதும் – “இத்தனை கூத்தடிச்சு இதைத் தான் தயார் பண்ணினாயாக்கும்?” என்ற சில பல நண்பர்கள் அபிப்ராயப்படப் போவது உறுதி ! "இதுக்குப் பதிலா - அது தேவலாம் ; அதுக்குப் பதிலா மூணாவது பரவால்லே !!" என்ற அபிப்பிராயங்களும் இருக்கக்கூடுமென்றும் புரிகிறது ! ஆனால் அந்தக் கண்களின் வசீகரம் won the day for me என்பதே bottomline !! இந்த உருவாக்கத்தின் பின்னணியை ; இதனை நான் பிடிவாதமாய்த் தேர்வு செய்ததன் காரணத்தையும் சொல்லி விட்டால், என்னளவுக்கு இலகுவாய் உணருவேன் என்பாலேயே இந்த ஒப்பித்தல் படலம் ! தவிர, அந்த முகத்தையும், கண்களையும் தொடர்ந்து பார்த்திடுவோர் லயித்திடாது போக மாட்டார்களென்ற நம்பிக்கையும் என்னுள் ! அந்த எண்ணத்தோடே புறப்படுகிறேன் guys ! மதியிலா மந்திரியாரும், ஜெரெமியாவும் காத்துள்ளனர் எனது வாரயிறுதியை  சுவாரஸ்யமாக்கிட ! 

A small note too before I sign off : இந்த நெடும் பதிவு நிச்சயமாயொரு பீப்பீ smurf-ன் பீற்றல் படலம் அல்ல ! In fact - இத்தனை காலம் குப்பை கொட்டியும் ஒரு முக்கிய இதழின் ராப்பருக்கு இத்தனை அல்லலா ? என்ற கேள்வி எழும் போது நானொரு பேக்கு போல் காட்சி தருவேனென்பதும் புரிகிறது ! But ஒவ்வொரு மாதமும் நாம் அடிக்கும் கூத்துக்களை நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதாலேயே இந்த behind the scenes story ! 

Bye all! அக்டோபர் இதழ்களை தொடர்ந்து அலசிடுங்களேன் ப்ளீஸ் ! And HAPPY BIRTHDAY TEX ! We love you !

P.S : ஆன்லைனில் அக்டோபர் இதழ்களுக்கு ஆர்டர் செய்திட இங்கே க்ளிக் ப்ளீஸ்http://lioncomics.in/monthly-packs/539-october-2018-pack.html

352 comments:

  1. 3வது.... படிச்சிட்டு வர்றேன்...!

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா மூன்றாவது படிக்கிறீங்க

      Delete
    2. ஆமாமா, டெக்ஸ் ஸ்கூல் ஆப் டெக்ஸ்னாலஜி....
      மூணாப்பு படிக்கிறாரு....

      Delete
  2. முதல் பார்வை ஏற்படுத்தும் தாக்கத்தை பொருத்து தான் வாசிப்பின் போது மேலோங்கும் மன நிலை பிரதிபலிக்கும்.
    (என் விஷயத்தில் மட்டும்)
    புது இதழ்களின் வடிவமைப்புகளை ஆறஅமர ரசித்துவிட்ட பின்னர் வாசிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பவன் நான்.
    அந்த விதத்தில் அனேக இதழ்களில் என் முதல் பார்வை பதிந்தவுடன் அற்புதம்,அருமை என்று மனதில் தோன்றுவதை இங்கே பதிந்துவிடுவேன்.

    ஆனால் இம்முறை டைனமைட் &கோ இதழ்களை பார்த்தவுடன், முன்னர் என்னால் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இந்த இதழ்களின் தரத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான பொருள்/பாராட்டு தராது என்று நினைக்க வைத்துவிட்டது.

    HATS OFF SIR.

    அப்புறம்...டைனமைட் ஸ்பெஷல் என்கிற பெயருக்கேற்ப அதள கதை அமைந்துவிட்டதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

    icing on the cake.




    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

      Delete
    2. ஏ.. ஏ.. ஏ.. இந்த பாட்ஷா ஒரூ தடவே சொன்னா... நூறு தடவே சொன்னா மாத்ரி... :)

      Delete
  3. This week once again iam in second place

    ReplyDelete
  4. ஆத்தாடி

    எம்மாம் பெரிய பதிவு

    படிச்சிட்டு அப்பாலிக்கா ஒஸ்தானு _/|\_
    .

    ReplyDelete
  5. வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே..

    ReplyDelete
  6. Dear Editor,

    /* “இத்தனை கூத்தடிச்சு இதைத் தான் தயார் பண்ணினாயாக்கும்?” */

    நான்தான் சார் முதலில் :-) இப்போ வந்திருக்கும் அட்டையில் மல்யுத்த வீரரும் முன்னாள் அனுமார் நடிகருமான தாரா சிங் என்ன சார் பண்றார் ? ;-) :-p

    மேலே உள்ள அட்டைகளில் 3 மற்றும் 4 நன்றாய்ப் பொருந்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. ///இப்போ வந்திருக்கும் அட்டையில் மல்யுத்த வீரரும் முன்னாள் அனுமார் நடிகருமான தாரா சிங் என்ன சார் பண்றார் ? //

      ஹா ஹா!! எனக்கும் லைட்டா அப்படித் தோணியது தான்! :) ;)

      Delete
  7. வந்து விட்டேன்!!!

    ReplyDelete
  8. இரவுக் கழுகுகளுக்கு இரவு வணக்கங்கள்.

    ReplyDelete
  9. இம்மாத இதழ்கள் பற்றி :

    CID ராபின் excellent ! Racy , short .. வ்ரூம் .. வ்ரூம்னு காரை நகர்த்திக்கொண்டு .. loved it !

    Clifton - நன்றாய் இருந்தது. வருடம் ஒரு ஸ்லாட் தரலாம் - ஆனால் cinebook கதைகளைப் படித்து பாருங்கள் - சிலது நமக்கு சரியா வராது - காமெடி கம்மி. அவற்றை விட்டு விடலாம்.

    TEX 70 (700): இரண்டாம் கதை அட்டகாசம். தங்கத் தேட்டை தான்.

    முதல் கதை dragathon .. இதற்கு பதிலாக fans இரண்டு ரெகுலர் கதைகளை படித்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படாமலில்லை - may be due to the length of the story.

    வாங்கிய மூன்று இதழ்களையும் ஒரே நாளில் முடித்து விட்டு விட்டத்தைப் பார்த்துக்கொண்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜானி என்ன பாவம் பண்ணினார். அவரை விட்டு விட்டு நீங்கள் விட்டத்தை பார்ப்பது நியாயமா?

      Delete
  10. ரெண்டு வாரமா போன் வேலை செய்யாததால சரியானபடிக்கு என்ட்ரி ஆக முடியல....


    இதனால ஏற்ப்பட்ட பின் விளைவு என்னன்னா...,

    1, மாடஸ்தீ பத்தியும் ட்ரெண்ட் பத்தியும் மனசார பேச முடியல ..
    2, 500 பதிவைத் தொட்டு, நம்ம நெஞ்சைத் தொட்ட எடிட்டருக்கு ஒரு வாழ்த்து சொல்ல முடியல..(வாழ்த்துக்கள் சார்...)
    3.கென்யாவுக்கு ஓட்டு போட முடியல..
    4, நேத்து கைக்கு புத்தகங்கள் கிடைச்சும் இது வரைக்கும் வெளிக்காட்ட முடியல.
    5, 70வது பிறந்தநாள் கொண்டாடுற டெக்ஸுக்கும், இன்னைக்கு பிறந்தநாள் பிறந்தநாள் கொண்டாடுற ஈ.வியாருக்கும் காங்கிராட்ஸ் சொல்ல முடியல...!

    இதனால ஒரு நல்ல விசயமும் நடந்துள்ளது. அது என்னான்ன 'இரத்தப் படலம் மற்றும் புலன் விசாரணையை படிச்சி முடிச்சிட்டேன்...!

    ReplyDelete
    Replies
    1. ///கென்யாவுக்கு ஓட்டு போட முடியல///

      ஓட்டு போட வேண்டியவுக எல்லாம்
      ஏதோ சில காரணத்தால, போடாம போனதால வெற்றி அமொிக்காவுக்கு போயிட்டு!!
      அதனால எடிட்டா் சாா் ஜம்போல மொத புக்கா கென்யாவ வெளியிட்டுட்டு, அப்புறமா அமொிக்காவுக்கு முன்பதிவு வரும்வரை காத்திருந்து வெளியிடுங்க!!!

      Delete
    2. நானும் ஈபவ நேத்துதான் முடிச்சேன் ....பல இடங்க நேத்துதான் படிச்ச மாதிரி இருந்தது ....புதயல நாயகன் இழந்தாலும் மீண்டுமு மீண்டும் படிக்கயிலே புதயல் ஏதாவது அகப்பட்டுக் கொண்டே இருப்பது ஓவியம் மற்றும் கதையின் சிறப்பு !

      Delete
    3. மிதுன் ஆசிரியர் அவசரமா அறிவிச்சதால ரெண்டுமே வேணும்....ஆசிரியருக்கும் ஒரு சந்தோச Punishment தந்த மேதிரி இருக்குமே

      Delete
  11. Dear Editor,

    சொல்ல மறந்த கதை :
    Tex யார் ஆர்டர் பண்ணினாலும் ஒரு கார்டு மற்றும் சாக்லேட் வைத்து அனுப்பி விடுங்களேன். 700 என்பது ஒரு trackன் சந்தா அல்லவா ஏறக்குறைய. Tex ரசிகர்கள் அனைவரும் இன்புறுவர். I ordered two Tex and expected two cards and two choclolates :-) :-) That Kid in us !!

    ReplyDelete
    Replies
    1. ஆமாமா. அடுத்த மாத தீபாவளி ஸ்பெசல் வந்த பின்னாடி டைனமைட்டையும் தீபாவளி ஸ்பெசலையும் தனியாக ஆர்டர் பண்ணி பெற்றுக் கொள்ளலாம்னு இருக்கேன். சாக்லேட் மற்றும் அந்த டப்பா எல்லாம் வந்தாகனும்.

      Delete
    2. யாரு வாங்கினாலும், எப்போ வாங்கினாலும், சாக்லெட் எக்ஸ்பைாியே ஆனாலும்...

      Delete
    3. ராகவன் படிக்க படிக்க எனக்கும் இதே எண்ணம் ஓடியது ....அதை படித்தும் பாருக்கிறேன் உங்க எழுத்தின் வடிவில் ...அருமை! ஆசிரியரும் இதே எண்ணத்தில் இருக்கலாம்! ?

      Delete
  12. ஆசிரியர் சார்@

    அட்டை படக் கூத்துகள் பலே!
    அட்டை கையிலே இருந்தா தானே காட்ட- என தாங்கள் நினைத்து இருப்பீர்கள் எங்கள் கேள்விகளை பார்த்து...!!!!


    ReplyDelete
  13. கதைகளின் கதை செம....!!!!

    இன்னும் அந்த டகுரியில இருக்கும் டெக்ஸ் டைனமைட்டுகள் எத்தனையோ!!!!

    ReplyDelete
  14. இரவு வணக்கம் அனைவருக்கும்

    ReplyDelete
  15. 🎈🎂🎇🎊💐💞🎶💖💖🎶💞💐🎊🎇🎂🎈

    70ஆண்டு நாயகன் டெக்ஸ் வில்லருக்கு இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...!!!!
    💐💐💐💐💐💐💐🎈🎈🎈🎈🎈🎈
    🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

    75...

    100..

    1000..

    10000..

    100000..

    .......

    .........

    என எப்போதும் "டைனமைட்" நாயகன் செலிபரேட் செய்ய புனித மனிடோ தேவன் அருள்பாலிக்கட்டும்
    🎇🎇🎇🎇🎇🎇
    🎊🎊🎊🎊🎊🎊
    🎉🎉🎉🎉🎉🎉
    🎆🎆🎆🎆🎆🎆
    💞💞💞💞💞💞
    🎂🎂🎂🎂🎂🎂
    🎈🎈🎈🎈🎈🎈
    🎶🎶🎶🎶🎶🎶
    🎵🎵🎵🎵🎵🎵

    ReplyDelete
    Replies
    1. அத பாக்க பல ஜென்மங்கள செந்தூர் முருகன் அருளட்டும் அதே ஜென்மங்களுடன்

      Delete
  16. அன்பின் ஆசிரியருக்கு

    டைனமைட் ஸ்பெஷல் அட்டைப்படம் எப்படி இருக்குமோ என்று செப்டம்பர் மாதம் முழுவதும் பயம் இருந்து கொண்டே இருந்தது.அதே மாதத்தில் இந்த அட்டை படத்துக்காக எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் பதிவு உணர்த்துகின்றன.டெக்ஸ் அட்டையும் Realy super sir. Thank you so much sir. புத்தக வடிவமைப்பும் நன்றாக உள்ளது.

    பணி நிமித்தமாக இன்னும் படிக்கவில்லை. படித்த பின் விமர்சனம்.

    ReplyDelete
  17. அடேங்கப்பா, இந்த அட்டைப்பட ஓவியத்திற்கு இவ்வளவு அதகளமா?! உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் எடிட்டர் சார்

    ReplyDelete
  18. காமிக்ஸ் உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் டெக்ஸ் வில்லருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாள்தோறும் எதிரியின் மூக்கினை உடைக்கும் பஞ்ச் உடன் கம்பீரமாக வாழ வாழ்த்துகிறேன்
    🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
    👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  19. அட்டைபடத்திற்கு உழைத்த உழைப்பு வீண் போகவில்லை.

    ReplyDelete
  20. Hi guys happy dynamite SPL wk end.l love u all.

    ReplyDelete
  21. அத்தனை அட்டைப்படங்களும் அள்ளுகின்றது சார்.
    எனக்கு பச்சைக்கு பதில் natural கலரில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தான் சென்ற பதிவில் என் கருத்தை கூறி இருந்தேன்.. ஒரு முறையாவது ஒரிஜினல் போல subtle ஆக ஒரு அட்டை படம் பார்க்க வேண்டும் சார்

    ReplyDelete
  22. மஞ்சள் சட்டை மாவீரர், காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டார், தல- டெக்ஸ் வில்லருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    🎂🎁💐🌹🎊🎆🎷🎉🍰🎈

    ReplyDelete
  23. டெக்ஸ் அட்டையில் புதுமையாக ஜொலிக்கிறார். நேரில் பார்க்க இன்னும் 15-20 நாட்களாகிவிடும்... ஹும்.

    ReplyDelete
  24. Replies
    1. தலை பிறந்தநாளுக்கு சுவரஷ்யமான, சிரிக்க வைக்கும் பதிவு. மெருகேறிய எழுத்துகள் . எனக்கும் அட்டய பாத்ததுமே அந்த பர்வைதான் ஈர்த்தது பிறகு அந்தக் கழுகு ! ஆனா அந்த பச்சை நிறம் மைனசாகத்தான் தோன்றியது. சும்மா வண்ணத்துல தகதகக்க வைத்திருக்கலாமே என்ற எண்ணமும் இழையோடியது! இங்கே நீங்க காட்டிய அட்டைப்படங்கள பாத்ததுத் திகைத்தேன், நீல வானப் பிண்ணணியில் பட்டய கிளப்பும் இத விடாம போய்ட்டாரே என்ற ஏக்கமும், பரிதாபமுமாய் தொடர்ந்தேன்...
      //ராப்பராக்கிப் பார்க்கும் போது ஒரு களையே இல்லாமல் ரொம்பவே மீடியமாய்த் தான் தோன்றியது ! //சரி ஏதோ சரியல்ல போல என உங்க எழுத்தின் சுவாரஷ்யத்தோடே கடந்தேன் ....அந்த இரண்டாம் சிவப்பு அட்டயும் பட்டய கிளப்ப , அதுக்கு கீழ பாத்தா டெக்ச கட்டியிழுத்து வரும் அந்த பபச்சை அட்டையில் ,Tex எனும் அந்த சிவப்பு எழுத்துமே கொஞ்சம் ஈர்ப்பை ஏற்றியிருக்கலாம் எனப்பட்டது , ஒருவேள இதான் மிஸ்ஸங் உணர்வ ஏற்படுத்தியதோ எனத் தெரியல! நாளை காலை நானும் உங்கஸ்டைல்ல அட்டய பாத்து ஏற்படும் உணர்வை நிச்சயம் பகிர்வேன்!
      கதைய மேலோட்டமா படிச்சதுல நாம தேடற தலை இருப்பாரன்னு பாக்கவே சுவாரஷ்யத்ல முப்பது பக்கங்கள கடந்து விட்டேன்! கடைக்காரன சொல்லிப் பாருங்ற தலையும் , ஷெரிப்ப கைய எடுங்ற தலையும் ஆஹா எவ்ளோ தரம் இந்த சீன்க வந்தாலும் இரத்த ஓட்டத்த துரிதப்படுத்தி, சந்தோசத்த கொணரத் தவறலை, நச்!

      Delete
    2. கத நிச்சயமா நச் என்பது புரிகிறது ....எழுவதாண்ட கொண்டாட சரியான கதயை தேர்ந்தெடுத்தள்ளீர்கள் , கொண்டாட்டம் தொடரட்டும்

      Delete
  25. ஹஹஹா....சார் ஈவிக்கு வேலையில்லாம பண்ணிட்டீங்க...அதே சமயம் நீங்க படும் பாடும் புரிது? //டெக்ஸ் கண்களை இறுக மூடிக் கொண்டு, பட்டாசுச் சத்தத்துக்குப் பயந்து போய் பல்லை இறுக்கிக் கடித்துக் கொண்டு நிற்பது போலப்பட்டது ! அப்புறம் ‘தல‘யின் தலையில் தொப்பியும் நஹி ! இரண்டையுமே அவசரமாய் சரி செய்தாக வேண்டுமே என்று நமது ஓவியரை வரவழைத்து – திருத்தங்கள் குறித்து விளக்கினேன். இப்போதெல்லாமே அவருக்கும் மூப்பின் தாக்கங்கள் தெரியத் துவங்கியிருப்பதால் – இது போன்ற நுணுக்கமான பணிகளைச் செய்திடச் சிரமப்பட்டு வருவதைக் கவனிக்க முடிகிறது ! So கொஞ்சம் தயக்கத்துக்குப் பிற்பாடே - மூடிக் கிடந்த டெக்ஸின் கண்களைத் திறக்கும் முயற்சி துவங்கியது ! முதல் நாளின் பணிகளுக்குப் பின்னே பார்த்தால் – அம்மா கவனிக்காத நேரமாய் அடுப்பங்கரையிலிருந்து தீபாவளிப் பலகாரத்தை ஆட்டையைப் போடும் போது ஒரு திருட்டு முழி முழித்திருப்போமே – அச்சு அசலாய் அதே ஜாடையில் தான் டெக்ஸ் நின்றிருந்தார் ! 'ஊஹும்… இது சரியில்லை; மறுபடியும் திருத்தம் ப்ளீஸ் !' என்று பணிக்க – மறு நாளோ குமரிமுத்துவின் ராஜபார்வையோடு நம்மவர் சுட்டுக் கொண்டிருந்தார் ! //
    உங்க இரவுமே கலகலப்புக்கு பஞ்சமில்லை போலும் //அந்த டிசைனை எடுத்துக் கொண்டு; டைகருக்குக் கல்தா தந்து விடலாமென்று ராவில் மகாசிந்தனை எழ – காலையில் முதல் வேலையாக அதை ஸ்கேன் செய்து "டைனமைட்டின் ராப்பர் இது தான் !" என்று சொல்லி வைத்தேன் ! //
    ஹஹஹா ...சார் இதப் படிச்சதும் நானும் ஒரு நாள் ஒங்க பின்னாடி நின்னு ரசிக்கணும்/சிரிக்கணும்ங்ற ஆசை கூடுவது நிஜம்//அந்தக் காலங்களில் டைரக்டர் / நடிகர் விசு அவர்களின் மூத்த சகோதரர் (பெயர் ராஜாமணி என்று நினைக்கிறேன் ) நாடகங்களிலும், அப்புறமாய் விசு அவர்களின் படங்களிலும் மட்டுமே நடிப்பார். ஆந்தை விழிகள்; கழுத்தை வான்கோழி போல ‘திருக்‘ ‘திருக்‘கென்று திருப்பும் mannerism என்று வலம் வருவார்…! அவரைப் போலவே நானும் கழுத்தை இப்டிக்கா… அப்டிக்கா என்று திருப்போ திருப்பென்று திருப்பி டிசைனின் நிறை / குறைகளைப் பரிசீலிக்க முயன்றேன்! நான் அடிக்கும் கூத்துக்களையெல்லாம் கிட்டேயிருந்து பார்த்து வரும் மைதீன் சிரிப்பை எப்படி அடக்குவானோ தெரியாது – ஆனால் புதுசாய் யாரேனும் அன்றைக்கு என்னைப் பார்த்திருந்தால் புள்ளையாண்டான் மோனாலிசா ரேஞ்சுக்கான பெயிண்டிங்குகளை மதிப்பீடு செய்யும் நிபுணர் போலும் என்று நினைத்திருப்பார்கள்!//
    //இப்போதும் – “இத்தனை கூத்தடிச்சு இதைத் தான் தயார் பண்ணினாயாக்கும்?” என்ற சில பல நண்பர்கள் அபிப்ராயப்படப் போவது உறுதி ! "இதுக்குப் பதிலா - அது தேவலாம் ; அதுக்குப் பதிலா மூணாவது பரவால்லே !!" என்ற அபிப்பிராயங்களும் இருக்கக்கூடுமென்றும் புரிகிறது//
    எது எப்டியோ, அதான் சார் நீங்க....
    இப்போதும் // உப்ப்ப்…Just miss !! என்ற பெருமூச்சோடு மதியம் வீட்டுக்குக் கிளம்பத் தயாரான போது தான் “ஸ்வீட் எடு… கொண்டாடு” என்று உதித்தது மண்டைக்குள் ! "இஷ்டாப்… டப்பாக்களை அடைத்து விடாதீர்கள்… ஒரு சாக்லெட் வைத்தாக வேண்டும் !" என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன். வீட்டுக்குப் போய் சோற்றில் கைவைத்த நொடியே தலைக்குள் இன்னொரு பீதி அலாரம் அடித்தது ! குண்டு புக்… செம கனம்… சாக்லெட்டை நசுக்கித் தொலைத்து விட்டால் - புக் சகலமும் சாக்லெட் கோட்டிங் போட்டது போலாகி விட்டால் 'ஒரு கண்ணாடிக் கவருக்குள்ளே சாக்லெட் & card-ஐ வைத்த பிற்பாடு, அப்புறமாய் பேக்கிங் பண்ணுங்க ; சாக்லெட் நசுங்கி பிதுங்கினாலும் கவருக்குள்ளேயே கிடக்கட்டும் !//

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ஏதோ பெருசா எழுதியுள்ளார் என பார்த்தால், எல்லாமே காப்பி பேஸ்ட் 😂

      Delete
    2. 🤣🤣🤣 ஆசிரியர் பதிவோட ஹைலைட்டெல்லாம் போட்டுருக்காருங்க. பைக் ஓட்டற ஸ்பீடுல டைப் பண்றாருங்க.

      Delete
  26. அட்டை படத்தை உருவாக்க அடிக்கும் கூத்துகளும் அதை சொல்லும் விதமும் அட்டைப்படத்தை விட கவர்ந்து விடுகிறது. வெறும் ஓவியத்தை மட்டும் பார்ததால் என்னைக் கடைசிக்கு முந்திய ஓவியமே அதிகமாக கவர்கிறது.

    ReplyDelete
  27. ///அட்டை படத்தை உருவாக்க அடிக்கும் கூத்துகளும் அதை சொல்லும் விதமும் அட்டைப்படத்தை விட கவர்ந்து விடுகிறது. ///

    +8888

    ReplyDelete
  28. தங்களது பதிவுகளில் நான் மிகவும் ரசித்து படித்த பதிவு இதுவே.இந்த படங்களை வெளியிட்டு அதன் பின்பு தாங்கள் இங்கு வாங்க கூடிய சாத்துகளை நினைத்து பார்த்தேன். நல்ல வேளை தப்பித்தீர்கள்.

    ReplyDelete
  29. Replies
    1. போன ஜென்மத்துல 'எல்-ம்யூர்டோ'வா இருந்திருப்பீங்களோ?!!

      Delete
    2. கணேஷ் @ ஒரு சந்தோஷ தருணத்தை கொண்டாடும் வேலையில் உண்மையான காமிக்ஸ் ரசிகராக இருந்தால் இது போன்று பின்னூட்டம் இட வேண்டாமே. Please.

      Delete
    3. ஐ லவ் டெக்ஸ்....


      ஐ லவ் டெக்ஸ்...


      ஐ லவ் டெக்ஸ்...

      Delete
    4. அன்ட் ஐ லவ் டைகரும் தாங்கோ...

      ஏன்னா டைகரும் ஒரு சித்திர நாயகரே எனது சொத்தை அடாவடியாக பிரித்து கேட்கும் பங்காளி அல்ல என்பதை நான் உணர்ந்தே உள்ளேன்...:-)

      Delete
    5. // உண்மையான காமிக்ஸ் ரசிகராக இருந்தால் இது போன்று பின்னூட்டம் இட வேண்டாமே. Please. //
      நச்.
      +1111111

      Delete
    6. கனேஷ் ஜி அதை டெக்சை வெறுப்பவர்கள் பிளாக்கில் சொன்னால் உங்களுக்கு நிறைய + + கிடைக்கும்.

      Delete
    7. Parani அவர் முந்தா நாளே இதை விட தெளிவா போட்டிட்டார்

      நான் அதற்க்கு I L ❤ VE TEX WILLER என்று பதில் சொன்னதும் அவர் கமண்டை டெலிட் செய்துவிட்டார்

      இவர் என்னமாதிரியான ரகமோ தெரியலை 😉

      Delete
    8. சம்பத் @ நானும் அதனை கவனித்தேன்.

      Delete
    9. சம்பத் ஜி.....ஒரு ஒருவேளை சுற்றி இருக்கும் நண்பர்களின் சந்தோசத்தை பார்த்து பயங்கரமா சந்தோசப்படும் நல்ல மனது கொண்ட(வர்)ரகம் போல.....

      Delete
  30. ///“ஷப்பா… எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுத்து!” என்றபடிக்கு காலியான வீட்டின் கூடத்தில் அமர்ந்திருப்போம் ! மனதில் ஒரு திருப்தி வியாபித்திருப்பதை உணரும் நொடியிலேயே ஒரு மெலிதான வெறுமையும் கைகோர்த்திருப்பதைப் புரிந்திட முடியும் ! ”அந்த நாள் வந்தும் விட்டது… போயும் விட்டது !” எனும் போது – வீட்டில் தெரியும் வெறுமை, மனதிலும் பிரதிபலிப்பதை உணர முடியும் ! இனி மறுக்கா இப்படியொரு சந்தோஷம் சாத்தியமாகிடுமோ ? என்ற மௌனமான குழந்தைத்தனமான ஏக்கத்தை சொல்லவும் முடியாது ; ///

    நாங்களும் இதை ஒவ்வொரு நண்பர்கள் கூட்டத்திலும் இணைந்து பேசி திரும்பும்போது அனுபவித்து வருகிறோம்..
    இதற்காகவே அடுத்த கூட்டம் எப்போது என கேட்டு மறுபடியும் காத்திருப்போம்..
    காத்திருப்பதும் சுகம்தானே...

    ReplyDelete
  31. You should move your blogs to medium.com from blogger

    1.Medium is extremely simple and it has its own ios, android apps.so user can view blogs by using apps.

    2. It can be integrated within website.

    Few samples.

    https://medium.freecodecamp.org

    Existing medium users also view your blog

    Just give a try.

    ReplyDelete
    Replies
    1. அடடே! இப்படியொன்னு இருக்கா?!!

      Delete
    2. Try பண்ணீட்டீங்களா ஈவி

      Delete
    3. இங்குள்ள குவியலையுமே அங்கே migrate செய்திட சாத்தியப்படுமா சார் ?

      Delete
  32. உலகநாதன் சார்.. பெவிகால் சரியா ஒட்டல போல.. ஜெரிமியா எப்போ சார்?..

    ReplyDelete
    Replies
    1. போன பதிவிலேயே போட்டிருந்தேனே - கவனிக்கலியா ? Feb '19

      Delete
  33. புயலுக்கு ஒரு பிரளயம்' படித்து முடித்த போது தோன்றிய ஒரே சந்தேகம் இது 500 பக்க கதை தானா. அப்படி ஒரு வேகம் கதையில். 500 பக்கம் படித்து முடித்தது தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. அப்படியா. இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.

      Delete
    2. Yes g I have crossed 200 pages jet speed ....vintage ...

      Delete
    3. ஒரு டவுட்டு. Vintage பக்கத்துல வெச்சுகிட்டு வீட்டுல படிக்க முடியுமா...

      Delete
  34. இதோடு ஏகப்பட்ட அட, அடடே! ஆயிருச்சு! நம்ம சீனியா் எப்பவுமே என்ன சொல்லுவாா்னா.....

    ReplyDelete
  35. வணக்கம் எடிட்டர் சார்
    விசு அவர்களின் சகோதரர் ராஜாமணி சில திரைப்படங்களை இயக்கியதோடு சரி.
    நீங்கள் சொல்பவர் இன்னொரு சகோதரரான கிருஷ்ணமூர்த்தி என்கிற 'கிஷ்மு' என்பவர்.இவர் விசு படங்களில் நடித்தவர்.இவரைத்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்களென நினைக்கிறேன்.

    ReplyDelete
  36. டெக்ஸாதிகாரம்

    1. முகவாய்பெயா்வதும் பல்பல உதிா்வதும் - தீயோா்
    தலையை கண்டதின் பயனே.

    2. பயனெதிா்பாரா மனமெது வென்றால் - டெக்ஸாஸ்
    நகரே தலையென் றுரைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. 3. உறைக்குள் உள்ள குழலதுபாடும் - ராகந்தனிலே
      கலங்கிடுமன்றோ பகையோா் மனமே!

      Delete
    2. நட்பெனில் நாணிடும் நிலவும் வானமுமே போல கார்சனும் டெக்சுமே

      Delete
    3. ஹா ஹா!! அருமை அருமை கவிஞர்களே!! இதை கொஞ்ச நாள் முன்பே எழுதியிருந்தீர்களானால் 'டைனமைட் ஸ்பெஷலில்' இடம்பிடித்திருக்குமே?

      Delete
    4. அதிலும் காமிக்ஸ் புலவங்கேன்னா சும்மாவா........

      பிச்சி உதறிட மாட்டாங்கே......

      Delete
  37. அட்டைப் படத்திற்காக நீங்கள் அடித்த பல்டிகள் வீண்போகவில்லை சார்! அற்புதமாக வந்திருக்கிறது!
    உங்களின் மெனக்கெடல்களை பற்றிய இந்த விவரிப்புகள் உங்கள் மீதான மரியாதையை இன்னும் இன்னும் அதிகரிக்கின்றன! உங்கள் உழைப்பிற்கும், காமிக்ஸ் காதலுக்கும் மூனு லட்சத்தி முப்பத்தி நாலாவது தடவையாக தலைவணங்குகிறோம் சார்! வாழ்க உங்கள் காமிக்ஸ் காதல்!

    டெக்ஸ்-70 இதழுக்காக உழைத்த அனைவருக்கும் நம் வாழ்த்துகளும் வணக்கங்களும்! _/\_

    ReplyDelete
  38. மரணம் சொல்ல வந்தேன்:
    அமைதியான ஒரு கிராமம்,அதில் ஸ்வின் கானகப் பகுதியில் தொடங்குகிறது கதை,இயற்கையை இரசித்துக் கொண்டிருக்கும் நாயகி காரென் விஸ்ஸர் மீது மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கி தாக்குதல் தொடுக்கப்படுகிறது,தற்செயலாய் அங்கு வரும் ஜானி காரெனை காப்பாற்றுகிறார்.
    விசாரணைக்கு வரும் கமிஷனர் ப்ரெபாண்ட் ஜானி அக்கிராமத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர் லாரா ஹெம்ஸ் அழைப்பை ஏற்று முன்பே நடந்த டாக்டர் லாரெண்ட் டுப்ரெட்டின் மர்மமான மரணத்தைப் பற்றி புலனாய்வு செய்ய வந்துள்ளதை அறிந்து கொள்கிறார்,
    இதற்கிடையே ஜானி காப்பாற்றிய காரென் தன்னைக் கொல்ல முயன்றது ஜானிதான் என்ற திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்துகிறார்,
    இதனிடையே அக்கிராமத்தின் போஸ்ட்மேன் லோயிஸும் கொல்லப்படுகிறார்.
    மேலும் தாக்குதல் நடக்கும் நபர்களின் சுண்டுவிரல்கள் மர்மநபரால் கடித்து அடையாளமிடப்படுகிறது,
    கிராமத்தில் உலவும் பழைமை சிந்தனை கொண்ட மருத்துவச்சி என்று அழைக்கப்படும் கொர்னீலியஸ் எனும் மூதாட்டியின் செயல்களும், காரென் மீதான ஹிப்னாட்டிச முயற்சிகளும் பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.
    காரெனின் சகோதரன் பியட்டரின் உணச்சிவசப்பட்ட செயல்களும் அவன் மீது சந்தேகத்தை கிளப்ப,
    முதலில் கொலை செய்யப்பட்ட டாக்டர் டுப்ரெட்டின் முன்னாள் மனைவி மேடம் ஹெர்டாக்கிடமும் விசாரணை தொடர,
    டாக்டர் டுப்ரெட்டின் மருமகன் மோட்டார் வண்டி சாகசப் பிரியர் டிடியரின் செயல்பாடுகளும் புதிராய் விளங்க,
    ஜானியின் தோழி லாரா ஹெம்ஸின் நடவடிக்கைகளும் விசித்தரமாய் அமைய,
    ஹிப்னாட்டிச முறையால் ஆவிகளின் மீடியேட்டராய் திகழும் காரெனின் நடவடிக்கைகளும்,பேச்சும் புதிராய் அமைய,
    இந்த இடியாப்பச் சிக்கலில்
    ஜானி தன் புலனாய்வு மூலம் உண்மையான குற்றவாளியை கண்டறிந்தாரா என்பதை இறுதியில் காணலாம்.
    அருமையான அட்டைப்படம்,அற்புதமான சித்திரங்கள்,இரசிக்கும்படியான வர்ணக் கலவைகள்,சுவாரஸ்யமான, வாசிப்போரை யோசிக்க வைக்கும் கதைக்களம்,மொத்தத்தில் ஜானி நிறைவு,
    எனது ரேட்டிங்-10/10.

    ReplyDelete
    Replies
    1. சந்தேகங்கள் சில,

      1.லாரா ஹெம்ஸ் வீட்டில் ஜானி ஆராய்ச்சியில் இருக்கும் போது அந்த அறையில் புகை பரவுகிறது, கடுமையான கேஸ் நெடி என ஜானி கூறிக் கொண்டே மயக்கமடைகிறார்,பின்னர் கமிஷனர் ப்ரெபாண்ட் வந்து ஜன்னலை உடைத்து ஜானியை காப்பாற்றி வெளியேற்ற கதவு பூட்டின் மீது துப்பாக்கியை பிரயோகிக்கிறார்,அந்த அறையில் கேஸ் இருப்பின் கமிஷனர் துப்பாக்கியை பிரயோகித்ததும் அந்த அறையே வெடிக்கும் அபாயமுண்டே,ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லையே?????
      2. அதே லாரா ஹெம்ஸ் 47 ஆம் பக்கத்தில் கொர்னீலியஸ் தன்னை ஹிப்னாடிசம் செய்து அறையில் சயனைடு குப்பியை வீசச் சொன்னதாக ஜானியிடம் கூறுகிறாள், உண்மையில் ஜானியின் அறையில் வீசப்பட்டது சயனைடு குப்பியா? இல்லை கேஸ் நெடியா?
      சயனைடு குப்பி எனில் கடுமையான விஷமாயிற்றே ஜானிக்கு மரணம் சம்பவிக்க வாய்ப்பு உண்டே?!!
      3.போஸ்ட்மேன் லேயிஸை கொன்றதை "கொல்லப்பட்ட மூன்றாவது தூதன்" என்று ஜானி லாராவிடம் கூறுகிறார்,உண்மையில் லேயிஸ் "கொல்லப்பட்ட இரண்டாவது தூதன்" என்றுதானே சொல்ல வேண்டும்,
      ஏனெனில் இரண்டாவது கொலை முயற்சி "காரென் விஸ்ஸர்" மீதுதானே ஆனால் அது தோல்வுயுற்று காரென் பிழைத்துக் கொள்கிறாளே???

      Delete
    2. சந்தேகங்கள் : REDIRECT to ரிப்போர்ட்டர் ஜானி விசிறிகள் !! ப்ளீஷ் ஹெல்பு !

      Delete
    3. ////3.போஸ்ட்மேன் லேயிஸை கொன்றதை "கொல்லப்பட்ட மூன்றாவது தூதன்" என்று ஜானி லாராவிடம் கூறுகிறார்,உண்மையில் லேயிஸ் "கொல்லப்பட்ட இரண்டாவது தூதன்" என்றுதானே சொல்ல வேண்டும்,
      ஏனெனில் இரண்டாவது கொலை முயற்சி "காரென் விஸ்ஸர்" மீதுதானே ஆனால் அது தோல்வுயுற்று காரென் பிழைத்துக் கொள்கிறாளே???///
      இது தவறுதான் ...

      ////2. அதே லாரா ஹெம்ஸ் 47 ஆம் பக்கத்தில் கொர்னீலியஸ் தன்னை ஹிப்னாடிசம் செய்து அறையில் சயனைடு குப்பியை வீசச் சொன்னதாக ஜானியிடம் கூறுகிறாள், உண்மையில் ஜானியின் அறையில் வீசப்பட்டது சயனைடு குப்பியா? இல்லை கேஸ் நெடியா?
      சயனைடு குப்பி எனில் கடுமையான விஷமாயிற்றே ஜானிக்கு மரணம் சம்பவிக்க வாய்ப்பு உண்டே?!!//
      வீசப்பட்டது ஹைட்ரஜன் சயனைடு குப்பிதான் ..78 டிகிரி பாரன்ஹீட் வரை திரவநிலையில் இருக்கும் இது அதற்கு மேல் உள்ள வெப்பநிலையில் வாயு நிலைக்கு மாறிவிடும் .... நிறமற்றது ...( கதையில் நாம் உணர புகை போல் சித்தரிக்கப்பட்டுள்ளது )
      பழைய ஷூ –வில் இருந்து வரும் நெடியுடையது ...
      பொட்டாசியம் ,சோடியம் சயனைடுகள் படிக (கிறிஸ்டல் ) நிலையில் இருப்பவை ...
      நாஜிக்கள் யூதர்களை கொல்ல உபயோகப்படுத்தியது ஹைட்ரஜன் சயனைடுதான் ..
      அமெரிக்க மாகாணங்கள் சிலவற்றில் மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளை கொல்ல இது இன்னமும் உபயோகப்படுத்தப்படுகிறது .
      மூடப்பட்ட ஒரு இடத்தில் இது அபாயகரமானதுதான் ...

      ///ஜானிக்கு மரணம் சம்பவிக்க வாய்ப்பு உண்டே?!!/////
      ப்ரெபாண்ட் அங்கு விரைவாக வந்திருக்காவிடில் அதுதான் நடந்து இருக்கும் ..
      HCN (ஹைட்ரஜன் சயனைடு) வாயுவின் விளைவுகள் காற்றில் உள்ள அதன் செறிவை பொறுத்தது ...
      செறிவு (mg/m3) பாதிப்பு

      300 உடனடி மரணம்

      200 1௦ நிமிடங்களில் மரணம்
      150 30 நிமிடங்களில் மரணம்

      120-150 30-60 நிமிடங்களில் மரணம்

      50-60 இருபது நிமிடங்கள் வரை எக்ஸ்போசர் இருக்குமாயின் ஒரு மணி நேரம் வரை பாதிப்பின்றி இருக்கலாம்

      20-40 மிதமான பாதிப்பு பலமணி நேரம் வரை இருக்கும்

      ஒரு முறையான ரசாயன அறிவற்ற கிழவி தயாரித்தது என்பதால் வீசப்பட்ட குப்பியில் இருந்த HCN செறிவு குறைவாக இருந்திருக்க வேண்டும் ..எனவே உடனடி மரணத்தில் இருந்து ஜானி தப்பியிருக்க கூடும் ..

      // கேஸ் இருப்பின் கமிஷனர் துப்பாக்கியை பிரயோகித்ததும் அந்த அறையே வெடிக்கும் அபாயமுண்டே//
      HCN வாயுவும் INFLAMMABLE தான் ..

      ஆனால் ஒரு அறையின் மொத்த வளிமண்டல அழுத்தத்தில் இதன் பங்கு 40 % இருக்குமாயின் உடனே வெடிக்கும்
      5.6 % -க்கும் கீழே இருப்பின் வெடிக்காது ..
      இடைப்பட்ட நிலைகள் வெடிநிலையை தூண்டக்கூடிய பொருளை பொறுத்து அமையும்
      கதையில் துப்பாக்கி எழுப்பும் பொறி அல்லது வெப்பம் வெடிநிலையை தூண்டக்கூடிய அளவு இல்லை என யூகிக்கலாம் .
      ஜன்னல் கதவை ப்ரெபாண்ட் உடைத்து விட்டது HCN வாயுவின் அழுத்தம் குறைய காரணமாய் இருக்கலாம் .
      AN EDUCATED GUESS

      Delete
  39. தெய்வம் நின்று கொல்லும்:
    சினிமா தயாரிப்பாளர்களுக்கு பண உதவி செய்யும் பண முதலைகளும்,நண்பர்களுமான
    ப்ராங்க் ஹால்ட்ரிக்,
    பானிஸ்டர்,
    டார்பெட்
    போன்றோர் நவஹோ செவ்விந்திய அம்பு எய்யப்பட்டு கொடுரமாகக் கொல்லப்படுகிறார்கள்,
    கொல்லப்பட்ட நபர்களின் நான்காம் கூட்டாளியாக கருதப்படும் ஷம்மி ஷெப்பர்ட் எனப்படும் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் தலைமறைவாகிறார், பத்திரிக்கைகள் இச்சம்பவங்களுக்கு ஜெரோனிமா படலம் என்று பெயர் சூட்டி விறுவிறுப்பைக் கூட்ட இந்த தொடர் கொலைகளை துப்பறிய வருகிறார் ராபின்,
    இடையில் தலைமறைவான ஷெப்பர்ட் கொடுக்கும் தகவலால் குற்றவாளியை நெருங்கவும்,கொலைக்கான மையப் புள்ளியை தெரிந்து கொள்ளவும் ராபினுக்கு வாய்ப்பு கிட்டுகிறது.தகவல் கொடுத்த ஷெப்பர்டின் நிலை என்ன? ஷெப்பர்ட் நல்லவனா? கெட்டவனா?
    என்று சிறு டுவிஸ்ட் மூலம் அறிய முடிகிறது.
    இறுதியாக குற்றவாளியின் வாதத்தை கேட்கும்போது நமக்கு பரிதாபமும்,வருத்தமும் மேலிடுகிறது.

    அட்டைப்படம் நிறைவு,
    சித்திரங்கள் ஆவரேஜ் ரகம் தான் எனினும் அக்குறையை வேகமாய் செல்லும் கதைக்களம் மறக்கடிக்கிறது,குழப்பமில்லாத, அளவான திருப்பங்களுடன் கதை இரசிக்கும் வகையில் உள்ளது.
    தெய்வம் நின்று கொல்லும்,
    பரபர,விறுவிறு,சுறுசுறு திரில்லர்.
    எனது ரேட்டிங் - 9.5/10.

    ReplyDelete
  40. கர்னல் க்ளிப்டன்:
    1.யார் அந்த மிஸ்டர்-X
    ஐயோ சாமி வளாகம்,
    சும்மா இருக்க மாட்டானோ இந்த முட்டைக்கோஸ் மூக்கன்?

    2.திருடர் கூடம்-
    டுப்பா கூர் மாளிகை,
    மில்க்‌ஷெய்க் பிரபு.

    3.காரைக் காணோம்-
    5 மணியா ஆனா சூடா ஒரு கப் குடிக்கனும்,அதான் பிரிட்டிஷ் சம்பிரதாயம்.

    ஹிஹிஹி,கர்னல் கலக்கறார்,
    வாசிக்க திருப்தி,இரசிக்க வைக்கும் காமெடிகள், க்ளிப்டன் ஓகேதான் சார்.
    என்னுடைய ரேட்டிங்-9/10.

    ReplyDelete
  41. எல்லாம் சரிங்க எடிட்டர் சார்... நீங்க இங்கே இறுதியா காட்டியிருப்பது டெக்ஸை கைது பண்ணி இழுத்துச் செல்லும் அட்டைப்படம்! ஆனா எங்களுக்கு வந்திருப்பது 'நிழலுருவங்களாய் கெளபாய்ஸ் அணிவகுத்து முன்னேறும்' அட்டைப்படம்!

    இன்னும் எதையாவது சொல்லாம விட்டுட்டீங்களோன்னு ஒரு டவுட்டு வருதுங்களே...?!!

    ReplyDelete
    Replies
    1. அநேகமா தீபாவளி மலர் டைகர மட்டும் கெத்தா முன்னட்டைல வண்ணமயமா நதியோரத்ல , நீலவான பின்னணில காடுகள் சூழ பச்சை வனத்துல டெக்ஸ் @ coமரத்துக்கு பின்னால மறைஞ்சு பாக்றாப்ல இத்தாலி ஓவியர் வரஞ்சு தந்தத சொல்லாம வுட்டுட்டார்...நா கூட கழுகு பறப்பத சொல்லாம வுட்டுட்டனே

      Delete
    2. // இன்னும் எதையாவது சொல்லாம விட்டுட்டீங்களோன்னு ஒரு டவுட்டு வருதுங்களே...?!!//

      நல்ல கண்டுபிடிப்பு. ஆசிரியர் சார் இதன் பிண்ணனியையும் சொல்லி விடுங்களேன்.

      Delete
    3. தலய தர தர வென இழுத்துப் போகும் சீனை முன்னட்டையில் வைக்க மனசு கேக்கலை ! So அங்கே மட்டும் மாற்றம் !

      Delete
  42. ரவி எல்லாத்தயும் முடிச்சாச்...நா எத மொதன்னு தெணறுறேன்...சரி ராபின படிப்பம்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் டெக்ஸ் இருக்கு ஸ்டீல்,இனி தான் படிக்கனும்,இன்றைய நாள் தலைக்கானது.
      நீங்க முதல்ல படிக்கறதா இருந்தா ஜானி ட்ரை பண்ணுங்க,அசத்தலா இருக்கு.

      Delete
    2. டெக்ஸுடன் மின்னலாயு பயணஅக்குது பக்கங்கள் ரவி, ,,என்பதுகளுக்குள் நுழைந்து விடுடேனோ,,,அன்று டிராகன் நகரம் படித்த ஃபீலிங் இன்றும்

      Delete
  43. விஜயன் சார், அட்டைப்படக் கூத்துக்களை கோர்வையாக ரசிக்கும் படி எழுதி உள்ளீர்கள். மிகவும் நன்றாக இருந்தது.

    அதே போல் உங்கள் ஞாபக சக்தி, கடந்த ஒரு வருடமாக இந்த சிறப்பிதழ் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் எழுதியது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. திரும்பின பக்கமெல்லாம் Alzheimer 's ; Parkinson 's ; Dementia என்ற ஞாபக மறதி நோய்கள் பற்றிய செய்திகளாய் வருகின்றன சார் !! அதில் சிக்காதிருக்க, நிறைய எழுதுவது, வாசிப்பது என்பனவெல்லாம் உதவிடுமாம் !! அதுக்காகவாச்சும் பத்தி பத்தியாய் எழுதணும் போலும் !

      Delete
  44. இருந்தாலும் மனசு கேக்கல....தல கொண்டாட்டத்ல நானும் பங்கேற்கணும் நண்பர்களின் விவாதங்கள்லங்றதல டைனமைட்டை தூக்கிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. பார்த்துல்ல கவனமாக வெடிக்கனும் சாரி படிக்கனும் மக்கா.

      Delete
  45. சார்...,
    அட்டைபடங்களை ஒரு அனிவகுப்பாய் காட்டி இருப்பது அருமை...
    Happy birthday tex willer

    ReplyDelete
  46. ஹாப்பி பர்த்து டே தல!!

    தல... உங்க 'டெக்ஸ்-100' பிறந்தநாளை 'ஈவி-70'யாக நான் இத்தாலிக்கு வந்து கொண்டாடுவேனுங்க தல.. இது புனித மனிடோ மேல சத்தியம்!

    (ஒன்னும் கவலைப்படாதீங்க தல... கணேஷ்குமாரும் கண்டிப்பா வருவாரு!)

    ReplyDelete
    Replies
    1. // இது புனித மனிடோ மேல சத்தியம்! //
      பார்த்து ஈ.வி புனித மனிடோவுக்கும் கூழ் பெண்டிங் ஆகிட போவுது.

      Delete
    2. தலைக்கு பரத்டே கிப்ட் சிவகாசி வட்ட பன்னு ரொட்டி குடுத்தாச்சா

      Delete
  47. எனக்கு டெக்ஸ் 70 அட்டைப்படம் செம கலக்கலாக தோன்றுகிறது மற்ற அட்டை படங்களை விட ...எந்த ஆக்‌ஷனும் இல்லாமல் குளோசப்பில் டெக்ஸ் புன்சிரிப்புடன் இருக்கும் புன்னகை தோற்றம் க்யூட்..


    ராபின் தெய்வம் நின்று கொல்லும் முடித்தாயிற்று.குழப்பமில்லா நேர்கோட்டு கதை ஆனால் விறுவிறுப்புடன் செல்லும் பாணி தான் சிஐடி ராபின் பாணி.இதுவும் அவ்வாறே .ரிப்போர்ட்டர் ஜானி கதைகளில் கடைசி இரு பக்கங்களில் தான் வில்லனை அறியமுடியும்.ராபின் கதைகளில் பாதி கதையோட்டத்திலியே கண்டுபிடித்து விடலாம் என்பதை தவிர இருவருமே விறுவிறுப்பான பாணி கதை நாயகர்கள்.கண்டிப்பாக ராபினுக்கு வருடம் ஒரு வாய்ப்பு தரலாம் சார்.


    இன்று முழுதாக டெக்ஸ் உடன் பயணிக்க உள்ளேன்.அப்புறம் தான் ஜானி ,கர்னல் எல்லாம்..

    ReplyDelete
  48. 09:46:00 GMT+5:30
    C.I.D Robin in "தெய்வம் நின்று கொல்லும்" மிக மிக நேர்த்தியான கதை.
    தலைப்பின் எழுத்துரு அருமை. 'தெ'வில் கோபுரமும், 'ய்' 'ம்' இல் நின்று எரியும் விளக்குகள் ஆகட்டும், 'று'வே தன் கரத்தில் கத்தியைக் கொண்டு எழுதி முடிக்கும் அழகாகட்டும், சிந்தனையாக்கத்திற்க்கு, ஒரு சல்யூட்.
    கதையில் வரும் பாத்திரங்களின் மன அழுக்குகளை அப்படியே நாம் உணரச் செய்வதால், மரணங்கள் நமக்கு இனிக்கிறது. தினசரிகளில் வரும் செய்திகளை படித்து, படித்து இந்த கதையைப் படித்த பின் நவஹோ அம்புகள் பல டஜன்கள் பார்சல் சொல்ல தோன்றுகிறது.
    10/10.

    ReplyDelete
    Replies
    1. அனைத்தையும் நன்றாக கவனித்து இருக்கிறீர்கள்.

      Delete
    2. அந்த எழுத்துருவில் தென்படும் ஜாலங்கள் எல்லாமே நம் ஓவியரின் கைங்கர்யம் சார் ! "ஓ.கே." ; "not ஓ.கே." என்பதோடு எனது வேலை ஓவர் !!

      Delete
  49. யார் அந்த மிஸ்டர் X?
    3 in 1 treat.
    மூன்று கதைகளிலும் நகைச்சுவையை விட விஞ்சி நிற்பது துப்புகள் துலக்கும் வல்லமை.
    தான் வெறும் சிரிப்பு போலீஸ் மட்டும் அல்ல என கேரட் மீசைக்காரர் உரத்து கூறுகிறார். கடைசி இரண்டு கதைகளும் முதல் கதையைக் காட்டிலும் அருமை.
    கண்டிப்பாக இவருக்கு ஒரு ஸ்லாட் தரலாம்.
    லியனார்டோ இல்லை என்றானபின், சற்றே சிந்தித்து சிரிக்க வைக்கும் க்ளிப்டன் தொடரலாம்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விமர்சனம்

      Delete
    2. //லியனார்டோ இல்லை என்றானபின், சற்றே சிந்தித்து சிரிக்க வைக்கும் க்ளிப்டன் தொடரலாம்.//

      ஓவியர் ஒருவரே - இரு தொடர்களுக்கும் !!

      Delete
  50. பரபரப்புக்கு பஞ்சமின்றி புரளுது பக்கங்கள்

    ReplyDelete
  51. ஒரு அட்டைப் படக் கதை!
    படிக்கும் போதே கண்ணக் கட்டுதே! மூச்சு முட்டுதே!
    பொம்மை புத்தகம், காமிக்ஸை இன்னுமா படிக்கிறாய் என்று நக்கலடிப்பவர்களை இந்தப் பதிவை படிக்கவைத்து டெக்ஸ் டைனமைட் ஸ்பெஷலால் அவர்கள் தலையில் ஒரு போடு போடத் தோன்றுகிறது.
    உங்கள் கீழ் பணிபுரிபவர்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. இந்த களேபரத்தையெல்லாம் கண்ணால் பார்த்தால் காமிக்ஸ் மீதுள்ள எங்கள் ஈடுபாடு நிச்சயம் அதிகமாகும். அதனை உங்களது பதிவு ஈடு செய்கிறது.
    இந்த நீ...ளமான பதிவுக்கென எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்பதும் வியப்பாய் இருக்கிறது.
    ஆனால்
    உழைப்பு வீணாகவில்லை.இதுவரை டெக்ஸை இவ்வளவு கலக்கலாக சந்தித்தில்லை. இதற்கப்புறம் வரப்போகும் டெக்ஸ் அட்டைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பு இன்னும் கூடத்தான் போகிறது. அதனால் பார்த்து பண்ணுங்கள் எடிட்டர் சார்.

    ReplyDelete
    Replies
    1. இன்றும் என்றும் பலர் முன்னிலையில் பஸ்ஸிலும் ஹோட்டலிலும் படிப்பது காமிக்ஸே.....

      Delete
    2. //டெக்ஸ் டைனமைட் ஸ்பெஷலால் அவர்கள் தலையில் ஒரு போடு போடத் தோன்றுகிறது.//

      சார்..."assault & battery " என்று கேஸ் போட்டு விடப் போகிறார்கள் - ஜாக்கிரதை !

      Delete
  52. Your passion towards comics is simply AWESOME vijayan sir
    best wishes
    HAPPY BIRTHDAY TEX😀

    ReplyDelete
  53. தல டெக்ஸுக்கு 70 சரி...

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்


    கார்சனுக்கு . .....

    ReplyDelete
    Replies
    1. இந்த அட்டைபட கொடுமைகளை படித்து சிரித்து சிரித்து மனம் புண்ணாகிப் போச்சு...

      Delete
    2. காலங்காத்தால சிரிச்சிட்டிருந்தேனா

      மாடி வீட்டு மாமா வாக்கிங் போக கெளம்பினவரு , நாயத்து கெழமயாச்சுன்னா இவனோட ரவுசு தாங்காதுன்னுட்டு போறாரு....

      Delete
    3. பொரட்டாசி மாசமா தப்பிச்சேன்
      இல்லாங்காட்டி போயி கறி எடுத்துட்டு வந்து சிரிங்கன்னுட்டு சகதர்மிணி மொறச்சு பாத்து........

      Delete
    4. ஆனா சார்
      எங்களுக்கு சாக்லேட் குடுக்க சாப்பிடாம எந்திரிச்சி ஓடீன உங்களுக்கு ----- வூட்டுக்காரம்மா என்ன
      சாக்லேட் குடுத்தாங்கன்னு தெரியணுமே.....

      Delete
    5. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா....
      உங்களுக்கும் சிவகாசி ஆபிஸுக்கும்...

      சிரமங்கள் வீண் போவதில்லை...

      இந்த சின்ன வட்டத்திற்கு உங்களின் பெரிய உழைப்பு.....

      என் கண்களின் ஆனந்த பரவசங்களும்
      ஆனந்த புன்னகைகளும் ஸ்சமர்ப்பணம்

      Delete
    6. கண்களின் கதையிதல்லவா

      Delete
    7. டைரக்டர் விசு சகோ பேரு கிஷ்மு....

      Delete
    8. ///இந்த அட்டைபட கொடுமைகளை படித்து சிரித்து சிரித்து மனம் புண்ணாகிப் போச்சு...///

      சிரித்து சிரித்து மனசு லேசாகித்தானே போகும்..

      Delete
    9. //எங்களுக்கு சாக்லேட் குடுக்க சாப்பிடாம எந்திரிச்சி ஓடீன உங்களுக்கு ----- வூட்டுக்காரம்மா என்ன
      சாக்லேட் குடுத்தாங்கன்னு தெரியணுமே.....//

      500 சாக்லெட் வாங்கும் போது கொசுறுகளும் தருவாங்களே சார் - அது போதாதா நம்ம தலை தப்பிக்க ?

      Delete
    10. குடுத்துட்டாங்ஙங்கங்க.....
      சாக்கு.......லேட்......

      Delete
  54. மரணம் சொல்ல வந்தேன்!
    அட்டகாசமானதொரு, அக்மார்க் ஜானி த்ரில்லர்.
    ஜானி ஸ்பெஷல் ஒன்றை எடிட்டரிடம் கேட்டால் என்ன என சிந்திக்க வைக்கிறது.
    காரென், பியட்டர், லாரா, டிடியர், கொர்னீலியஸ் என பல கதாபாத்திரங்களை சந்தேகத்தின் பிடியில் சிக்க வைத்து,சுலபமாக கடைசி இரண்டு பக்கங்களில் அனைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்ட விதம் பலே!
    10/10....

    ReplyDelete
    Replies
    1. "இரண்டே பக்கங்களில் எல்லாத்துக்குமே விடை" என்ற அந்த template ஐ மட்டும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால், என் பாடு கொஞ்சம் சுலபமாகிடும் !!

      Delete
  55. // ஜானி ஸ்பெஷல் ஒன்றை எடிட்டரிடம் கேட்டால் என்ன என சிந்திக்க வைக்கிறது. //
    ரொம நாளா அதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம் சார்,எடிட்டர்தான் மனது வைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஓவர் கிறுகிறுப்பு உடம்புக்கு ஆகாதே சார் !

      Delete


  56. ஜானி.... 9.9/10

    ராபின் 9/10

    க்ளிப்டன் 8/10


    எனக்கு வர வர இந்த matt printed அட்டைகளை பிடிக்கவில்லை...

    அந்த பிரகாசமான வண்ணங்களின் அழகை.. Matt style மட்டுப்படுத்துவதாக எண்ணுகின்றேன்...

    இது எனது கருத்து மட்டுமே...

    ReplyDelete
  57. டெக்ஸ் அட்டைப்பட படலம் செம விறுவிறுப்பாகவும் ஜாலியாகவும் இருந்தது.

    செப்டம்பர் அண்ட் அக்டோபர் புக்ஸ் நான் எப்போது கோவை விஜயம் செய்வேனோ அப்போது தான் அள்ளி கொண்டு வர முடியும்.

    அது வரை என் அலமாரியில் இருக்கும் 17 புது பூக்கும் 6 பழைய பூக்கும் என் நேரத்தை இழுத்து கொள்ளும்.

    புதியது:
    -------
    ஒரு வாரம் முன்பு தான் XIII முடித்து இருக்க, இந்த version 2 XIII கையில் எடுத்தேன்.

    XIII தொடரும் ஒரு தேடல் - XIII ஐ மீண்டும் வேறு ஒரு அதிகார வர்த்தகத்திலுருக்கும் குழு XIII மனதில் என்ன எல்லாம் இருக்கும் என்று அறிவதற்காக வேட்டையாடுகிறது. இந்த சீசன் 2 முதல் 19 பாகங்களிற்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. புதிய ஓவியங்களும் முன்பு இருந்ததைவிட அருமை. தொடரும் கதைகளை சீக்கிரம் படிக்க தூண்டி இருக்கிறது இந்த சீசன் 2.

    ReplyDelete
    Replies
    1. //புதிய ஓவியங்களும் முன்பு இருந்ததைவிட அருமை//

      அதற்கு ஈடாய் இருந்தன என்று சொல்லலாம் !

      Delete
  58. எடிட்டர் ஐயா,
    இம்மாத பிரதிகள் வந்தடைந்த போது டெக்ஸ்ன் 'டைனமைட்'புக்கின் எடையைப்பார்த்து ஆஹா இதை பொங்களுக்குள் படித்துவிட முடியுமா என்று கணக்கு போட்டேன்.எதற்க்கும் சில பக்கங்கள் புரட்டலாம் என்று முதல் பக்கம் பார்த்தேன் படிக்கலாம் போல் தோன்றியது படிக்க ஆரம்பித்தவுடன் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது முழுவதும் படித்துவிட்டுதான் வைத்தேன். சற்றும் தொய்வில்லாமல் 508 பக்கம் நகர்த்தி செல்கிறார் போனெல்லி. அவருக்கு ஒரு சல்யூட்.
    கதையில் கடைசியில் மிரா,பார்க்கர்,உள்பட அனைவரையும் கடுமையாக டெக்ஸ் தண்டிப்பார் என யூகித்தேன் ஆனால் நடந்ததே வேறு எதிர்பாரா திருப்பம் அருமை.
    தெற்க்கே ஒரு தங்கதேட்டை வழக்கானமான கதையாக இருந்தாலும் சதுப்பு நிலத்தில் பயணிக்கும்போது அருமையாகவும் பிரமிப்பாகவும் செல்கிறது.
    நான் முதன்முறையாக டெக்ஸ் புக்கை முதலாவதாக படித்துள்ளேன் (மாதத்தின்).அதுவும் 508 பக்கங்கள் .சூப்பர் எடி ஸார். இது போன்ற தரமான டெக்ஸ் கதைகளை தேர்ந்தேடுத்து வெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான பின்னூட்டம் ஜி.

      Delete
    2. //தெற்க்கே ஒரு தங்கதேட்டை வழக்கானமான கதையாக இருந்தாலும் சதுப்பு நிலத்தில் பயணிக்கும்போது அருமையாகவும் பிரமிப்பாகவும் செல்கிறது.//

      எனக்குமே அந்த சதுப்பு நிலத்துக்குள் புகுந்த பிற்பாடு கதை செம வேகம் பிடித்தது போல் தோன்றியது சார் !

      Delete
    3. + 1 .. Jet speed post marsh lands entry ..

      Delete
  59. புது மாதிரியான அட்டை படங்கள் மனதை கவருகிறது
    யார் அந்த MR X அந்த மினி லயனில் வந்த காமெடி கர்னல் ரி பிரிண்ட் என்று நினைக்கிறன், நீங்கள் எங்கேயும் குறிப்பிட்டதாக நியாபகம் இல்லை.
    டெக்ஸ் 77 இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம், அட்டை படம் பச்சை கலரில் ஹ்ம்ம், ஒன்றும் சொல்வதற்கு இல்லை, ஹானஸ்டலி புத்தகத்தை கையில் ஏந்தும் போது 700 ரூபாய்க்கு ஏற்றதாக படவில்லை. இவோலோ டயம் இருந்தும் எதோ மிஸ்ஸிங்.sorry to say this, My thumbs down for Tex 77 and the rating is 5/10.

    ReplyDelete
    Replies
    1. அபிப்பிராயம் சொல்ல சாரியெல்லாம் சொல்வானேன் ? பிடித்தவர்கள் பாராட்டுக்களையும் ; பிடிக்காத பட்சத்தில் thumbs down தருவதும் இயல்பு தானே சார் ?

      ரசனை சார்ந்த உங்களது எண்ணங்களில் நான் முரண்பட மாட்டேன் ; ஆனால் விலை சார்ந்த உங்களது சிந்தனையில் nopes ! எனது மார்க்கெட்டின் விஸ்தீரணமென்ன ? costing என்னவென்று தெரியாத நிலையில் அது சார்ந்த passing comment என்னளவிற்கு ஏற்புடையதல்ல !

      Delete
    2. Sir just compare this book with any international comics of this quality .....surely you will find lioncomics much cheaper.

      Delete
    3. விலைக்கு இன்டர்நேசனல் காமிக்ஸ் கூட ஏன் கம்பேர் பண்ணனும். தமிழிலே வந்து தற்போது விற்பனையில் உள்ள காமிக்ஸ்கள் லயனை விட 2 அல்லது 3 மடங்கு விலை அதிகமாக உள்ளது. இணையத்தில் தேடினாலே விலை தெரிந்து விடும்.

      Delete
    4. ///. தமிழிலே வந்து தற்போது விற்பனையில் உள்ள காமிக்ஸ்கள் லயனை விட 2 அல்லது 3 மடங்கு விலை அதிகமாக உள்ளது. இணையத்தில் தேடினாலே விலை தெரிந்து விடும்.///


      ஒரு அதிமேதாவியின் (அப்படி
      நினைத்துக்கொண்டிருக்கும்) மைண்ட் வாய்ஸ் :

      அதெல்லாம் எங்களுக்கு தெரியாது ...வார்டன்னா அடிப்போம் அம்புட்டுதான்...!

      அப்புறம் நாங்கல்லாம் எப்படி பெரிய ஆளா ஃபார்ம் ஆகிறதாம்...!!

      Delete
    5. மேலுள்ள கமெண்ட் இங்கே பதிவிட்டிருக்கும் நண்பரை குறிப்பதல்ல ..!!

      Delete
  60. புயலுக்கொரு பிரளயம்:-

    *கிரிக்கெட்ல 3வெரைட்டி இருக்கும்.
    T20-பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பால்1ல் இருந்தே பறக்கும். குறுகிய நேரத்தில் பரபரப்பான த்ரில்லை கிளப்பும்.

    *ODI என்ற ஒருநாள் ஆட்டங்கள் 100ஓவர்களில் நாள் முழுக்க ஆக்சன், பரபரப்பு, இறுதிகட்ட விறுவிறுப்பான என்டிங் என பார்ப்பவரை கட்டிப்போடும்,கடேசி ஒரு மணிநேரம்.

    *Test மேட்ச் என்ற ரியல் கிரிக்கெட் 5நாட்கள் நடக்கும். ஆரம்பத்தில் அசாத்திய பொறுமையோடு தொடங்கும். வீரர்களின் டெம்பரமென்ட்க்கு கடும் சவால். முழுதிறனையும் காட்டினால் தான் இதில் சோபிக்க இயலும். பாய்ஸ்களையும் மென்ஸ்ஸையும் வேறுபடுத்தி காட்டுவது இது. கடேசி நாளில் களத்தில் நிற்பது கத்திமேல் நடப்பது போல.

    *டெக்ஸ் 70 டைனமைட் ஸ்பெசல் முதல் சாகசமான,புயலுக்கொரு பிரளயத்திலும் அந்த கத்திமேல் நடக்கும் கலையை தேர்ந்த ஆட்டக்காரனின் திறனோடு வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    *டெக்ஸின் பல சாகசங்களில் முதல் பக்கத்திலேயே வில்லன் யார்னு சொல்லிட்டு கதையை சுவாரஸ்யமாக நகர்த்துவார்கள்.
    அரிதாக வில்லனை பின்னணியில் மட்டுமே காட்டும் கதையம்சத்தோடு கதை நகர்த்தப்படுகிறது.

    *புயலுக்கொரு பிரளயம் - பெயரே கதையை விளக்கும் வகையில் பொருந்தமாக வைத்துள்ளார் எடிட்டர் சார். வழக்கமாக புயல் மாதிரி தெறிக்கும் டெக்ஸையே பதம் பார்க்கும் பிரளயமாக அவரைச் சுற்றி வலை பின்னப்படுகிறது.

    *மெக்கன்னஸ் கோல்டுல ஜொலிக்கும் தங்கச் சுரங்கம் போல நவஹோ பிராந்தியத்திலும் ஒரு தங்க குவியல் புதைந்துள்ளது. அதை அபகரிக்கும் வஞ்சக திட்டத்துடன் களம் இறங்குகிறான் வாஷிங்டன் வரை செல்வாக்குள்ள மேல்மட்ட பிரமுகர் ஒருவன்.

    *டெக்ஸை வீழ்த்த , ப்ளாக்ஸ்டாஃப் பிரமுகர் தேர்ந்தெடுப்பது மயக்கும் அழகு ஆரணங்கு மிரா சலோனா.
    நவஹோக்களுக்கு விஸ்கி விற்ற குற்றத்திற்காக டெக்ஸால் அடித்து விரட்டப்பட்ட கெல்லி வில்ஸை பகடையாக பயன்படுத்தி வலையை விரிக்கிறது பெண்நாகம் மிரா.

    *கால்லப் நகரில் உள்ள பார்கோ வங்கியில் தங்கத்தை சேமிக்க வரும் டெக்ஸ், கெல்லியின் சலூனுக்கு சென்று பலரின் முன்னிலையில் அவனை எச்சரிக்கை செய்கிறார். மிராவின் வலையில் வீழும் டெக்ஸை அடித்து வீழ்த்திட்டு, கெல்லியை கொலைசெய்கிறான் மிராவின் கூட்டாளி ஹெபர். கொலைப்பழியை டெக்ஸ் மேல் சுமத்துகிறாள் மிரா. தூக்கு நிச்சயம் என மிராவின் பாஸ் எதிர் பார்க்க, மாறாக 20ஆண்டு சிறைவாசத்தோடு டெக்ஸின் தலை தப்புகிறது.

    *விடுவானா ப்ளாக்ஸ்டாஃப் மர்மன்; சிறை வார்டன் மர்டாக்கை கைக்குள் போட்டு கொண்டு டெக்ஸின் கதை முடிக்க திட்டம் தீட்டுகிறான். தங்கத்தை அள்ள தடையாக இருக்கும் நவஹோக்களை விரட்ட, தன் அல்லக்கை லைமனை செவ்விந்திய ஏஜென்ட ஆக நியமிக்கிறான், தன் மேல்மட்ட செல்வாக்கை பயன்படுத்தி.

    *கார்சனின் மதியூகம், டெக்ஸை தப்பிவிக்க க்ளெம் என்ற போக்கிரியை நாடுகிறது. மர்மாக்கிற்கு சிறையில் இருந்து தப்பும் கைதிகளை "மீட்டு"த்தரும் போக்கிரிதான் க்ளெம்.

    *இதற்கிடையே நவஹோ பிரதேசத்தை அல்லோலகப் படுத்துகிறான் லைமன், தன் மட்டரக குள்ளிநரி குயுக்திகளினால்.

    *டெக்ஸை உடனடியாக போட்டுத்தள்ளியே தீருவது என்ற ப்ளாக்ஸ்டாஃப் ஆசாமியின் ஆணையை நிறைவேற்ற மர்டாக்கை தூண்டுகிறான், மர்ம ஆசாமியின் வலதுகை ரெட்வுட்.

    *இரு எத்தர்கள்,க்ளெம்மும், மர்டாக்கும் ஒரவரையொருவர் ஏமாற்றி சுயலாபம் பார்க்க நினைக்கின்றனர்..........!!!!
    ...............

    ReplyDelete
    Replies
    1. மோர் குழம்பும் சுட்ட அப்பளமும் ரெடி சாப்பிட்டு வந்து தொடருகிறேன்...!!

      Delete
    2. அடடா....புரட்டாசியின் மகிமையே மகிமை தான் !

      Delete
    3. டெவி ஆளக்காணோமேன்னு பாத்தேன்...
      எடிட்டரையும் ஆட்டத்துல சேத்தாச்சா

      Delete
    4. ஐம்பதைத் தாண்டியவர்களுக்கு வருஷம் முழுக்கவே புரட்டாசியாய் இருத்தல் தேவலாமாம் சார் ! So சந்தோஷமாய் அந்த கியூவில் !!

      Delete

    5. ...........

      *மர்டாக்கை சந்தித்து விட்டுவரும் ரெட்வுட்டை கார்சன் மடக்கி, க்ளெம்மின் உதவியோடு கடத்தி செல்கிறார். க்ளெமின் செவ்விந்திய சகாக்கள் மொஹேவ்க்கள், தங்களது ஸ்டைலில் ரெட்வுட்டுக்கு "விருந்து" உபசரிக்க, ப்ளாக்ஸ்டாஃப் ஆசாமியின் திட்டத்தை ஆதி முதல் அந்தம் வரை கார்சனிடம் கக்குகிறான். சக கைதியின் எச்சரிக்கையை அடுத்து, உசாராக டெக்ஸ் தப்பிச் செல்கிறார். மர்டாக் தன் காவலர்களை, டெக்ஸ் & கார்சனை சுட்டுத் தள்ள பணிக்கிறான்.

      *மொஹேவ் செவ்விந்தியர்கள், மர்டோக்கின் ஆட்களோடு மோதி டெக்ஸை மீட்க, தப்பிக்க பார்க்கும் ரெட்வுட்டை இரு மொஹேவ்க்கள் போட்டுத் தள்ளுகின்றனர்.

      *மொஹேவ்களும் இடத்தை காலிசெய்ய அனைவரும் தப்பிசெல்கின்றனர். நவஹோக்களுடன் பின்வாங்கிச் செல்லும் கிட்டுக்கு, டெக்ஸ் தப்பியதை புகை சமிஞ்சை செய்கிறார்கள் மொஹேவ்ஸ்.

      *கிட்&ஜாக் விரைந்து டெக்ஸை சந்தித்து ப்ளாக்ஸ்டாஃப் ஆசாமியை மடக்க திட்டம் தீட்டுகின்றனர். இதற்கிடையே டெக்ஸ் தப்பியதையும், ரெட்வுட் இறப்பும் அறிந்த மர்மன் மற்றொரு கொலையாளி ஃபாஸ்டரை ஏவி ஹெபர்& மிரா கணக்கை முடிக்க சொல்கிறான்.

      *ஃபாஸ்டர், ஹெபர்& மிராவை கொன்றானா?

      *மிராவின் கையில் உள்ள ப்ளாக்ஸ்டாஃப் ஆசாமிக்கு எதிரான ஆயுதம் என்ன?

      *பிங்கர்டன் உதவியை நாடிய டெக்ஸின் கதி என்ன? தன் மீதான கொலைபலியை எப்படி முறியடித்தார்?

      *லைமன்&வாஷிங்டன் பிரமுகர்கள் என்ன ஆனார்கள்?

      *ப்ளாக்ஸ்டாஃப் ஆசாமியின் முகமூடியை டெக்ஸ் கிழித்தாரா?

      ###பரபரப்பான க்ளைமாக்ஸின் இறுதி அத்தியாங்களில் இன்றே காண, டெக்ஸ்70 டைனமைட் ஸ்பெசல்-"புயலுக்கொரு பிரளயம் " படியுங்கள்.


      Delete
    6. உங்க விமர்சனத்தைத் தான் எதிர்பாத்து காத்துகிட்டிருந்தேன். மோர்குழம்பு சுட்ட அப்பளத்துக்கே ரசிச்சு எழுதுருக்கீங்க. வறுத்த கறி யோட இருந்திருந்தா இன்னும் எப்படி எழுதி இருப்பீங்கன்னு யோசிக்கறேன். 😜

      Delete
  61. Why editor sir add magnificent seven film photo in front wrapper ......

    ReplyDelete
  62. Dear Editor,

    Please let me know the next month list :

    1) Tex - Tiger Jack love story
    2) Iznogoud
    3) James Bond (Jumbo)

    Any 4th title ?

    ReplyDelete
    Replies
    1. Nopes sir ; எஞ்சியுள்ள கதைகள் குறைவே என்பதால் நவம்பரில் (ஜம்போவை சேர்த்தே ) 3 தான் !

      டிசம்பரிலும் ஒரு ஜம்போ உண்டு ; so அந்த மாதம் 3 +1 = மொத்தம் 4 !

      Delete
    2. அப்புறம் அந்த "எல்லோருக்கும் சாக்லெட்" விஷயம் நிச்சயம் சரியே சார் ; நாளையே அமல்படுத்திடலாம் !

      Delete
    3. Thanks - apdiyE Deepavalikku "Ellarukkum Round Bun" :-) :-) :-)

      Delete
  63. சார் 2019 அட்டவணை - ஓட்ட வாய் உலகநாதனா இல்லை பெவிகால் பெரியசாமியா. ஏதாவது சொல்லுங்க சார்

    ReplyDelete
    Replies
    1. அக்டோபர் மத்தியில் அட்டவணை என போன பதிவில் போட்டு உள்ளார் நண்பரே!

      Delete
    2. நவம்பர் இதழ்களோடு தானே எப்போதுமே அட்டவணை நண்பரே ? So அதற்கு கொஞ்சம் முன்பாய் இங்கே எதிர்பார்த்திடலாம் !!

      Delete
  64. What a great pack this month. All the books are amazing just started the Tex first story.

    Thanks editor & team for great work :)

    ReplyDelete
  65. Tex Dynamite special 😍😍😍😍😍😍😍
    "புயலுக்கொரு பிரளயம்"- ஊழிக்காலம்- உலகத்தில் பாவங்கள் உச்சத்தை அடைகையில், இறைவன் பெரும் புயல்களை அனுப்பி, நாமறிந்த இந்த உலகம் மொத்தமுமாய் அழித்தொழித்து,புது யுகத்தை தொடங்கி வைப்பாராம்.
    இந்நிகழ்வை பிரளயம் என்றும் கூறியுள்ளார்.
    பாவங்களை அழித்தொழிக்க வல்ல அப்புயல்களுக்கே ஆபத்து வருமோ?!?!
    வன்மேற்க்கில் பல பாவிகளை அழித்து வரும் "டெக்ஸ்" புயலை அழிக்க வல்லதொரு சதித்திட்டம்; அந்த பிரளயத்தை எதிர்கொண்டு வெல்லும் விதம் அத்தனை அட்டகாசம். டெக்ஸ் கதையின் வழக்கமான டெம்ளேட்/ சாயை இன்றி புதிதான, கனமான கதைக்களம்.
    டெக்ஸின் மாபெரும் வெற்றிக்கான இரகசியம், அவரை தாங்கி பிடிக்கும் அவரின் படைபலமே.
    டைகர் ஜாக், கார்சன், கிட், உறுதியான நவஜோஸ் மற்றும் மனிதநேயம் மிக்க இராணுவ அதிகாரிகள்....
    வழக்கமான தட தடக்கும் இரயில் பயணமன்று.
    திருப்பங்கள் நிறைந்த ஓர் ஓடப்பயணம்...

    ReplyDelete
    Replies
    1. அழகான ; நிதானமான விமர்சனம் !

      Delete
  66. இனி புத்தகப்படலம் ...

    பார்சலின் கனம் மீண்டும் இரத்தப்படலத்தையே ஞாபகப் படுத்தியது.

    எவர்க்ரீன் ஹீரோவுக்கு அந்த க்ரீன் பின்னணி எடுப்பாகவே உள்ளது. வழக்கமான டமால் டுமீல் பாணியிலிருந்து விடுபட்டு சாந்த சொரூபமான காந்த விழிகளுடன், க்ளோஸ் அப் 'பில் வில்லரின் போஸ் ரொம்பவே நேர்த்தியாக உள்ளது.

    வழக்கம் போல சின்னச் சின்ன நாகாசு வேலைகள் ராப்பரை விட்டு கண்ணை விலக்க விடாமல் பார்த்துக் கொள்கின்றன.

    அடடே..!! ஜானியின் ராப்பர் இரண்டாமிடத்தில். பத்தோடு பதினொன்றாகவே அமையும் அட்டையானது இம்முறை பளிச் 'சென கண்ணுக்கு விருந்தானது ஆச்சரியம்.

    கர்னலும், ராபினும் ஓ.கே ரக ராப்பரில் ராகம் பாடுகிறார்கள்...!

    ReplyDelete
    Replies
    1. //எவர்க்ரீன் ஹீரோவுக்கு அந்த க்ரீன் பின்னணி எடுப்பாகவே உள்ளது//

      அட....ஆமாம்லே ?!!

      Delete
  67. Det.Robin கதை ஓகே ரகம்.....சில இடங்களில் விறுவிறுப்பானதாக நகருகிறது..சில இடங்களில். Slow ஆக நகர்கிறது..good story...

    ReplyDelete
  68. Ric hotchet கதை வரலாற்றில் இடைக்கால நிகழ்வுகள், மக்களின் நம்பிக்கை மற்றும் சூனியக்காரிகளுடனான ஒரு medieval age ன்
    Cultஐ நினைவூட்டுகின்றது.....

    ReplyDelete
    Replies
    1. இம்முறை கொஞ்சம் வித்தியாசமான கதை மாந்தர்கள் தான் !

      Delete
  69. அட்டைய பாத்து நான் குஷி...Chocolate பார்த்து என் பொண்ணு குஷி.Tex க்கு Birthday wishes சொல்லி 50/50 ய ரெண்டு பேரும் முடிச்சாச்சு.

    Thx a ton edi sir.

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பக்கம் யாவரும் குஷியென்பதில் இங்கே நாங்களுமே !!

      Delete
  70. புயலொருக்கொரு பிரளயம்:

    ஆச்சர்யம் 515 பக்கங்கள் போனதே தெரியவில்லை, இவ்வளவு அதிக பக்கங்களில் டெக்ஸின் சாகஸத்தை போரடிக்காமல் நகர்த்திச் செல்வதே பெரிய வெற்றிதான்,
    மிகுந்த சிக்கல் மிகுந்த வலைப்பின்னலில் சாதுர்யமாகவும்,மிகுந்த பொறுமையான திட்டமிடலுடனும் டெக்ஸ் வெளியே வருவது மிக அழகு,டெக்ஸை சிறையில் வைத்துக் கொண்டே இவ்வளவு விறுவிறுப்பாக கதையை நகர்த்தியது இன்னும் சிறப்பு,இந்தக் கதையைப் படிப்பவர்கள் டெக்ஸின் சாகசங்கள் ஒரே டெம்ளேட்டில் உள்ளன என்ற வாதத்தை கண்டிப்பாக மறுப்பார்கள்,என்னைப் பொறுத்தவரை இனி டெக்ஸின் முக்கிய டாப் சாகஸங்களில் இதுவும் ஒன்று.
    முக்கிய வில்லனின் பாத்திரத்தை கிளைமேக்ஸ் வரை காட்டாமல் கொண்டு சென்றதும்,கிளை வில்லப் பாத்திரங்களின் வழியேவும் கதையின் பெரும்பகுதி நகர்வது இன்னும் சுவராஸ்யம்.
    நவஹோக்களை காப்பாற்ற கிட் வில்லர் எடுக்கும் முயற்சிகள் பழி வாங்கும் புயலை நினைவுபடுத்தினாலும் சிறப்பாகவே உள்ளது,ஓவர் ஆக்‌ஷன்கள் இல்லை எனினும் கதை நெடுக பேசப்படும் செறிவுமிக்க,கீர்த்திமிக்க வசனங்களும்,ஒவ்வொருவரின் திட்டமிடல்களும்,கதையின் போக்கில் வரும் திடீர் திருப்பங்களும் கதையோட்டத்தை அபாரமாக முன்னெடுத்துச் சென்றுள்ளன.
    கதை நெடுக டெக்ஸிற்கு வரும் சிக்கல்கள் நம்மை சற்று அசைத்துப் பார்க்கத்தான் செய்கின்றன.
    கதையின் முடிவு கூட வழக்கமான டெக்ஸின் "கும்,நங்,சத்" தில் இருந்து மாறுபட்டுதான் உள்ளது.
    டெக்ஸாகவே இருந்தாலும் சில நேரங்களில் "சத்ரியனா இருப்பதை விட சாணக்கியனா இரு" ப்பதே சரி என்றுதான் தோன்றியது.
    டெக்ஸ் 70 ற்கு ஏற்ற இதழ்தான் இது.
    அபாரமான ஒரு டெக்ஸ் சாகஸத்தை அளித்ததற்கு நன்றிகள் பல சார்.
    என்னுடைய ரேட்டிங்-10/10.

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸாகவே இருந்தாலும் சில நேரங்களில் "சத்ரியனா இருப்பதை விட சாணக்கியனா இரு" ப்பதே சரி //

      ஆக்ஷன் ஒரு மிடறு குறைவெனினும் - இந்த நெடும் சாகசத்தை அங்கே இத்தாலியில் - TEX Essentials பட்டியலில் அநேகமாய் அனைத்து ரசிகர்களுமே இணைத்துள்ளனர் சார் !! ஏனென்று இப்போது புரிகிறது !

      Delete
  71. டெக்ஸ் 70 @ தி டைனமட் ஸ்பெஷல் @ புயலுக்கொரு பிரளயம்....


    இப்படியொரு கனமான இதழை கைகளில் ஏந்தமுடியாமல் ஏந்தியவாறே...மிக மிக நீண்ட நேரத்திற்கு அதுவும் ஒரு வன்மேற்கு கதைக்குள் ,அதுவும் டெக்ஸ் என்ற சூறாவளி நாயகரோடு பயணிப்பது எத்தைகைய இன்ப பயணம் என்பது இன்றைய பயணத்தில் கண்கூடாக அறியமுடிந்தது.இன்று காலை பதினொரு மணி அளவில் அரிசோனா ப்ளாக்ஸ்டாப் நகரில் மையப்பகுதியில் ஆடம்பரமாய் அமைந்த அந்த அலுவலகத்தில் நுழைந்த நான் சரியாக நான்கரை மணிக்கு அதே அரிசோனா ப்ளாக்ஸ்டாப் நகரில் மையப் பகுதியில் இருந்த ஆடம்பர அலுவலகத்தில் இருந்து வெளியே வருவதற்குள் நடந்த சம்பவங்கள் ,திட்டங்கள் ,கைதுகள் ,சூழ்ச்சிகள் ,தப்பிக்கும் படலங்கள் என எத்துனை எத்துனை அனுபவங்கள் .

    அடேங்கப்பா ... எடுத்த இதழை கீழே வைக்க முடியவில்லை முடிக்கும் வரை.மிக நீண்ட கதைகளில் சில கதாபாத்திரங களோ ,சம்பவங்களோ படிக்கும் பொழுது தேவையில்லாமல் நுழைத்தது போல இருக்கும்.ஆனால் டெக்ஸ்ன் இந்த ஐநூறு ப்ளஸ் பக்கங்களில் எந்த கதாபாத்திரங்களும் ,சம்பவங்களும் படித்து முடித்த பின்னர் கூட அப்படி ஒரு நினைவை ஏற்படுத்த வில்லை என்பதே இந்த கதையின் வெற்றியை பறைசாற்றி கொண்டு விடுகிறது சிறை கைதிகள் உட்பட ..அதிலும் சில நூறு பக்கங்களுக்கு டெக்ஸ் இல்லாமலே கதை பரபர வென பறக்கிறது எனில் சொல்லவா வேண்டும்.டெக்ஸ் இல்லாத இடத்தில் நவஜோ தோழர்களுக்கு மட்டுமல்ல நமக்குமே டெக்ஸ் இருக்கும் துடிப்பை அவர் மகன் கிட் காட்டி விடுகிறார்.இந்த கதையின் மைய கருத்தும் ,சில பல வசனங்களும் இன்றைய சில நிகழ்வுகளையும் ,குறிப்பாக சேலம் மாவட்ட நண்பர்களுக்கு நன்கு உணரப்படும் சில நிகழ்வுகளையும் ,இன்றைய சில அரசியல் நிகழ்வுகளையும் அப்பட்டமாய் படம் பிடித்து காட்டுகிறது எனில் மிகையல்ல.

    பதவியும் ,பணமும் இருந்தால் எந்த வகை தவறிலும் ஈடுபடலாம் ..சட்டத்தின் ஓட்டையில் இருந்து தப்பிக்கலாம் ,எளியவர்களாக இருப்பின் எப்படி வேண்டுமானாலும் ,எத்துனை பேர் துரத்தி துரத்தி அடிக்கலாம்..,பொய்யான குற்றசாட்டை சுமத்தி சிறையில் அடைக்கலாம் என இக்கால நிகழ்வை அன்றே அதுவும் வன்மேற்கு உலகில் அட்சுரசுத்தமாய் படைத்துள்ளார்கள் எனில் எங்கும் ,எப்பொழுதும் அதிகார வர்க்கத்தின் ஆட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது தெள்ள தெளிவாக உணர்த்துகிறது .

    ஒரு முழுநீள படத்தை பார்த்த திருப்தி இந்த முதல் கதையிலேயே .அடுத்த கதைக்குள் நுழைய ஆசைதான்.ஆனால் ஒரு சுமாரன படத்தையோ ,மொக்கையான படத்தையோ பார்க்க நேர்ந்தால் அடுத்த படத்தில் உடனடியாக நுழையலாம்.ஆனால் ஒரு அட்டகாசமான திரைப்படத்தை பார்த்து முடித்தால் அதே படத்தை கூட மீண்டும் பார்க்க தோன்றுமே ஒழிய வேறு படத்தை பார்க்க தோன்றாது .அது போலத்தான் இந்த "புயலுக்கொரு பிரளயம் " அடுத்த டெக்ஸ் சாகஸத்திற்குள் நுழைய ஆசைப்பட்டாலும் இன்று காலை முதல் இப்பொழுது இந்த நிமிடம் முதல் இந்த பிரளயத்தில் சிக்கி மீண்ட அனுபவம் அடுத்த களத்தில் உடனடியாக நுழைய செய்யாது .இந்த திருப்தியே போதுமானது இந்த டைனமட் ஸ்பெஷலுக்கு.


    டெக்ஸ் பிறந்த நாளில் டெக்ஸ் குடும்பத்துடனே இன்றைய நாள் முழுதும் கழிந்ததே அந்த சிறப்பே போதுமானது .டெக்ஸ் 70 க்கு சரியான தேர்வு "புயலுக்கொரு பிரளயம் "

    டெக்ஸ் 70 = 5 ஸ்டார்

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸ் பிறந்த நாளில் டெக்ஸ் குடும்பத்துடனே இன்றைய நாள் முழுதும் கழிந்ததே அந்த சிறப்பே போதுமானது//

      பார்டா !!

      Delete
  72. Dear Editor,

    Everyday I wait for my ARAMEX parcel and it seems like an eternity :( :)

    Thanks,
    Ramesh from Muscat

    ReplyDelete
  73. சார் ஒன்பதரைக்கு மேல் உண்ணாமல்(சாப்பிட்ட படியே படித்ததால), உறங்காமல்(ஒரு மணி நேர குட்டித் தூக்கம்) படிக்க ஆரம்பித்தேன் , உங்க உழைப்புக்காக...ஆனா புத்தகத்த இறக்கவே இல்லை, நத்பலையா படுத்தபடி வவுத்ல வச்சி படிச்சதால கை வலிக்கல! ஒக்காந்தே படிச்சிருந்தாலும் வலிச்சிருக்காதுன்னே நினைக்கிறேன் தல,இளவரசனின் ஆட்டம் காரணமாய்!
    அற்புதமான உணர்வு, டீனேஜ் காலத்திற்குள் நுழைந்த உணர்வு! அட்டகாசத்த சிறிது நேரத்தில் விவரிக்கிறேன் !எழுவதாண்டு கொண்டாட்டத்த கொண்டாட இத விட சிறப்பான கதைய காட்ட முடியாது !

    ReplyDelete
  74. புயலுக்கொரு பிரளயம்....ஹைலைட்ஸ்!

    *கிரிக்கெட் ஸ்டைல்ல ஆரம்பித்த விமர்சனத்தை அதே ஸ்டைல்ல நிறைவு செய்வோம். இன்றைய டெக்ஸ் 70 கதை1புயலுக்கொரு பிரளயத்தின் பிரசன்டேசன் பார்ட்டிக்கு தலைமை நம்ம அன்பின் ஆசிரியர் சார். முன்னிலை நம்ம மூத்த நண்பர்கள் ATR sir& J ji.

    *சிறப்பு விருந்தினர்கள் தலீவர், செயலர், பொருளர் ஜி, மஹிஜி, கரூரார்.

    *தமிழ் டெக்ஸ் கதைகளில் மிக நீஈஈஈஈண்ட சாகசம் இதுவே,507பக்கங்கள். முந்தைய நீள சாகசம் டைனோசரின் பாதையில்.

    *ப்ளாக்ஸ்டாஃப் போஸ்ட் ஆபீஸ்ல ஆரம்பித்த கதை, அங்கேயே முடிகிறது.

    *வில்லன் பார்க்கர் என்பதே கடேசி பக்கங்களில் தான் தெரிகிறது.

    *கதையின் மிக முக்கிய அம்சம் டெக்ஸ் ஒரு குண்டு கூட சுடுவதில்லை. பர்ஸ்ட் டைம் இதை பார்க்கிறோம்.

    *எத்தன்கள் எத்தனை???

    ###சயநல பேராசை பிசாசு பிக்பாஸ் பார்க்கர்னா அவனைவிட சுயநலத்தில் எத்தன் யாருனு நிறைய பேர் போட்டி போடுறாங்க!

    ###மிரா சலோனா....

    *மாஷைக்கு பிறகு அவளைப்போல ஒரு வில்லியை காணவே முடியாதுனு நினைத்த நேரத்தில் அவளைத் தூக்கி சாப்பிடும் அசாத்திய வில்லிதான் மிரா சலோனா.

    *கெல்லியை வைத்து அழகாக தன் விலையில் டெக்ஸை விழ வைக்கும் காட்சி, தன் நடிப்பால் ஷெரீஃப்பையே நம்ப வைத்தது. ஆடம்பர சூதாட்ட விடுதியில் ஆணவமாக ஆட்டம் போடுவது. ப்ளாக்ஸ்டாஃப் மர்ம ஆசாமிக்கு எதிராக தன் வக்கீலிடம் தந்த வாக்குமூலத்தை வைத்து பிக்பாஸையே மிரட்டுவது.

    *டெக்ஸ் தப்பியது அறிந்தவுடன் தனக்கு ஆபத்து என சிந்தித்து, பார்க்கரை எப்படி மிரட்டுவது என சிந்திப்பது. க்ளே ஹெபர் ஜூட் விட்டுட்டான்னு தெரிந்தவுடன் கெத்தாக பாஸையே எச்சரிப்பது.
    அடேயப்பா டெரர் ஆன டெக்ஸ் வில்லிகள்ல மாஷை, சட்டம் அறிந்திரா சமவெளி வில்லி, குட்டி டெக்ஸ் 1ன் விசவில்லி இவுங்கள்ல அசால்டாக டாப் வில்லியாக செலக்ட் ஆகுறா.

    *ஒரே வார்த்தைல சொன்னா லேடி லக்னர் தான் மிரா. மிராவை தோற்கடிக்கும் வஞ்சகினா நாம் இதுவரை பார்க்காத வில்லி தான். அவ, மெபிஸ்டோவோட சகோதரி லிலித் தான். மெபிஸ்டோவோடு சேர்ந்து சதிவலை பின்னி, டெக்ஸை அரசாங்கம் தேடும் குற்றவாளியாக ஆக்குவது, மெக்ஸிகோ வரை டெக்ஸை அலைக்கழிப்பது என பயங்கர வில்லிதான் அவளும். அந்த கதை வரும் வரை மிராவே டாப் வில்லி.

    #வார்டன் மர்டோக்- பண்ணை ஒன்றை வாங்க சுயநலமாக சம்பாதிப்பது. கைதிகளை விதவிதமாக சித்திரக்கதை செய்வதில் பலே கில்லாடி. முக்கியமாக அந்த "விதவை". அம்மாடியோவ் டெக்ஸே செயல் இழந்து போகிறார்.

    #க்ளெம்- தப்பியோடும் கைதிகளை சடலமாக மீட்டு வரும் போக்கிரி. டெக்ஸை பயன்படுத்தி செமத்தியாக தேட்டை போடுகிறான். மர்டோக்கும் க்ளமும் ஒருவரையொருவர் கவிழ்க்க பார்க்கும் இடம் செம காட்சியமைப்பு.

    #ஃபாஸ்டர்- பாஸின் வலதுகை ரெட்வுட் இறந்தவுடன் அந்த இடத்தை பிடிக்கும் இவனும் பலே போக்கிரிதான். க்ளேவை போட்டுத் தள்ளுவது. மிராவின் வாக்குமூல டாக்குமென்ட்களை கொண்டு பிக்பாஸையே மிரட்ட திட்டமிடுவது. தனக்காக மிராவின் பெட்டகத்தை உடைக்கும் போக்கிரிகளை போட்டுத் தள்ளுவது! அடேயப்பா இவனிடமும் கொஞ்சம் சாக்கிரதையாகத்தான் இருக்கனும்.

    ###லைமேன்- நவஹோ ஏஜென்ட் ஆக நியமனம் பெறும் இவனும் ஒரு எத்தன் தான். குள்ளநரி மூளை கொண்டு நவஹோக்களையே ஓட வைக்கிறான். கால்நடைகளை திருடி அந்த குற்றத்தை நவஹோக்கள் மேல் போடுவது. கிட்டை வெறிகொள்ளச் செய்து அதை தனக்கு சாதகமாக ரிப்போர்ட்ஸ் செய்து, ராணுவத்தை ஏவுவது.

    ***எத்தனை டெரர் பாய்ஸ் கதை முழுதும். கார்சனின் கடந்த காலத்திற்கு பிறகு இத்தனை எத்தர்கள் ஒரே கதையில் இடம்பெறுவது இம்முறை தான்.

    *பூன், வாகோடோலன், ரோஜா லாவல், லேரி உள்ளிட்ட அப்பாவிகள்& ரே-இவனுக டெரர் பாய்ஸ்ஸா? அல்லது பார்க்கர், மிரா, மரடோக், க்ளெம், ஃபாஸ்டர்& லைமேன் உள்ளிட்ட ப்ளாக்ஸ்டாஃப் அணியா??? என்றால் சுவாரஸயமான போட்டிதான். ஆனா சொற்ப வித்தியாத்தில் அப்பாவிகள் முந்துகின்றனர்.....

    ###டீ ரெடியாம், குடிச்சிட்டு வந்துடுறேன்.

    ReplyDelete
  75. சார் நேற்றிரவே முப்பது பக்கங்கள புரட்டிட்டேன் ,எப்பவும் டெக்ஸ் வரும் வரையோ, நேரமிருந்தால் யாராவது முகரையை பெயர்க்கும் வரையோ படித்து லிட்டு வைப்பது வழக்கமாகையால் இருபத்தைந்து பக்கங்கள விரைவாய் கடந்தத போல விபுவிறுப்பு! காலையில் முதலிலிருந்தே படிக்கத் துவங்கினேன். எதிராளி முகத்தை காட்டாததும் , அந்த உடையும், இரயிலில் பயணித்ததும் அந்த பேங்கரை கார்சனிடம் பணத்தை தருவாரே அவரை சந்தேகிக்க வைக்க பக்கங்கள புரட்டுனா அப்படியல்ல!வழக்கமான டெக்ஸ் அல்லதான்! அந்த வஞ்சகி மிரா, கூட்டாளி இருவரும் டெக்ச மாட்டி விடும் போது முபரையே பெயர்க்கும் எண்ணம் வலுப்பெற, கடைசியில் இருவருமே நம்பிக்கையாமவர்கள் கனும் எண்ணம் வந்து விட்டதால் அவர்கள் தப்பியது வில்லரிடமிருந்து மட்டுமல்ல?
    மர்டாக்கை வா என அழைக்கும் டெக்சிடம் நழுவும் போது அடடா தப்பிச்சிட்டானே என தோன்றிய எண்ணம், பின்னர் அவன் பல்லை பெயர்த்தும் சரியா கவனிக்கலையே எனும் கோபம் கதாசிரியரின் மேல்! கார்சன் நண்பனுக்கக தவிக்கும் இடங்களும் , மேசும் வசணங்களும் மனதில் ஒட்டிக் கொண்டால் , ஆச்சரியமான விசயம் வில்லரின் மகன் வழிநடத்துவது , வில்லரைப் போலவே பேசு பாக்கலாம் என தாக்கியது , உண்மையை சொல்லுங்ள் இங்கே சிறப்பா/இயல்பா கதைய மொழி பெயழ்த்ததன் காரணம் குட்டி வில்லர் விக்ரமை மனதில் கொண்டுதானே ?தந்தையின் பதறல்கள் கதைகளில் ஆங்காங்கே தென்பட்டதன் தவிப்பு உணர்வானது ! கதை முதலில் துப்பாக்கி வெடிக்களன்னாலும் விரியன்கள் கதைமுழுக்க தென்பட பதைபதைப்பாய் பக்கங்கள் போக நீண்ட நேரப் பயணமாய் தெரியவில்லை! கதாபத்திரங்கள் ஒவ்வொன்றும் டைனமைட்தான், ஷெரீஃப்,மிரா, ஃப்ரெட், கெல்லி,ஹெபர் என முதலணி பின்னர் மர்டாக் என டெக்சுடனும், லக்கி ,க்ளெம் ,விக்டோரியா என கார்சனுடனும், கிட்டுடன் லேரி, படையினரும் சுவரஷ்யமாய் கதையை நகர்த்துகிறார்கள். அதிலும் முதல் கட்டம் முழுவதும் தன் கோபத்தை இயலாமல் கட்டுபடுத்திய பரிதாப டெக்சும், இடையே நண்பனை காக்க துடிப்போடு கவலை படிந்த முகத்தோட பயணிக்கும் கார்சனும், இவ்வளவு நடந்தும் படையை திறம்பட நடத்தும் கிட்டுத் போதாதா கதையின் பக்கங்கள தொய்வின்றி நகர்த்திச்செல்ல என கேட்க வைக்கத் தவறவில்லை!

    ReplyDelete
    Replies
    1. அட ரேஞ்சர்கள் தலமையே களமிறங்கியிருக்கிறார்களே நம்ம டெக்ச காக்க, ,எழுவதாமாண்ட சிறப்பிக்க இத விட ஏதும் வாய்க்காதே ! நம்ம தூத்துக்குடி நிலவரத்த கண்ணுல காட்டுவது ஆச்சரியம்! பணபலமும், அதிகாரபலமும் கொண்ட முதலாளிகள் மக்கள் உயிர துச்சமென நினைப்பதும், வாழிடங்கள கவலையின்றி அழிப்பதும் , நீதியின் மேல் நம்பிக்கை அற்றுப்போனதும் வெறுப்பாய் உணர்ந்தால் நல்லவர்களும் இருப்பார்களோ என பாசிட்டிவாக நினைக்க வைக்குது அதிகாரிகளின் நுழைவுகளும், நிஜத்திலும் அப்படி இருந்தா நல்லாருக்குமே என ஏங்க வைக்க தவறலை! நியாயம் கதைகளில் மட்டுமாவது வாழுதே ! நீதி பிழைத்ததே! பூர்வீகக்குடிகள் மீண்டும் அவ்விடத்திலே அமர்ந்தார்களே எனும் மன நிறைவை தரத்தயங்கலை டைனமைட் ! நீதி வெடித்து கிளம்பியதில் சரியான தலைப்பே நம்ம ஸ்பெசலுக்கு!நாள் பொழுதை நிறைவாய் களிக்க உதவியதற்கு நன்றிகள்! நாளை பொழுது இக்கதை தந்த பலத்ததால் சிறப்பாய் விடியும், உங்களுக்குமே, நன்றிகள் சார்!

      Delete
  76. இத்தாலி கொண்டாட்ங்கள் பற்றி ஏதாவது தகவல்கள்??

    ReplyDelete
    Replies
    1. அந்த மெபிஸ்டோ 500பக்க கதை வர வாய்ப்பென பட்சி கூவுதே

      Delete