Tuesday, September 11, 2018

ஒரு டெக்ஸாஸ் அடைமழை !!

நண்பர்களே,

வணக்கம். கம்பெனி ரூல்ஸ்படி - இதோ உபபதிவு ; மறுபடியுமே "டைனமைட்டை" மையமாக்கி ! இதோ அந்த 507 பக்க மெகா வண்ண சாகசத்தை உட்பக்க டீசர் !! As always - நம்மவர் மஞ்சளில் மினுமினுக்கிறார் !!
இந்தாண்டின் back to back மாதங்களில் இரவுக் கழுகு & டீமை முழுவண்ணத்தில் ரசிக்க சாத்தியமாகியிருப்பது ஒரு அட்டகாசமான தற்செயலென்பேன் ! அது மாத்திரமன்றி - இரு சாகஸங்களிலுமே ரேஞ்சர்களின் முழு அணியும் இடம்பெறுவது highlight !! 

டைனமைட்டின் சாகசம் # 2-ல் டெக்ஸ் & கார்சன் மட்டுமே என்றாலும், முதன் சாகசத்தில் full team in action !!! இதழின் அந்திமப் பகுதியின் பக்கங்களை நிரப்பும் பணிகள் மட்டுமே தற்போதைக்கு எஞ்சி நிற்கின்றன !! அவற்றையும் முடித்த கையோடு black & white பக்கங்களையும், அட்டைப்படத்தையும் அச்சிட்டால் - பைண்டிங் பணிகளே அடுத்து !! 

என்னைப் பொறுத்தவரைக்கும், அடுத்த TEX biggie க்குள்ளே புகுந்தாயிற்று - "காதலும் கடந்து போகும்" தீபாவளி மலர் MAXI Tex சாகஸத்தின் பெயரைச் சொல்லி !! When it rains - it pours .. என்பார்கள் ! டெக்ஸ் எனும் மாரி பொழியத் துவங்கிட்டால் நமக்கெல்லாம் குஷி தானே !! Bye for now all !!

247 comments:

  1. Replies
    1. தொடர்ந்து 2கோல்டா....!!! நடக்கட்டும் வாழ்த்துகள் ஜி💐💐💐💐

      Delete
  2. ///இரு சாகஸங்களிலுமே ரேஞ்சர்களின் முழு அணியும் இடம்பெறுவது highlight !! ////

    அப்பாடா!! இதைத்தான் போன பதிவுலயே உங்ககிட்டே கேட்டுவைக்கணும்னு இருந்தேன்... இப்ப நீங்களே சொல்லிட்டிங்க!!

    கொண்டாட்டத்தின் அளவைப் பன்மடங்காக்கிடும் காரணியல்லவா?!!

    ReplyDelete
    Replies
    1. யெஸ், சைத்தான் சாம்ராஜ்யம் வித் அவுட் கார்சன் சாகசம்.

      Delete
  3. ////When it rains - it pours .. என்பார்கள் ! டெக்ஸ் எனும் மாரி பொழியத் துவங்கிட்டால் நமக்கெல்லாம் குஷி தானே !////

    ஆஹா.. ஆஹா... தல மழ!! கொட்டட்டும்., எவ்வளவு வேணாலும் கொட்டடும்... ஜல்ப்பு புடிச்சாலும் பரவாயில்ல!!

    ReplyDelete
  4. Replies
    1. ரொம்ப நாளைக்கு அப்புறம்

      Delete
  5. வாவ் டெக்ஸ்

    அப்படியே அந்த காலத்து எம்ஜியாரு மாதிரியே இருக்காருபா

    .

    ReplyDelete
  6. ஆனாக்கா கடைசி கீழ்ரைட் சைடு பேனலில் ஜேம்ஸ் பாண்டு மாதிரியும் இருக்காரு

    .

    ReplyDelete
    Replies
    1. தணுஷ் மாதிரி இல்லாமலிருந்தா சரிங்கோ! :)

      Delete
    2. உண்மைதான். சூப்பர் கண்ணு உங்களுக்கு!

      Delete
    3. ///உண்மைதான். சூப்பர் கண்ணு உங்களுக்கு!////

      இதென்ன பிரமாதம்; அவர் கண்களுக்கு ஊடுருவிப் பார்க்கும் திறன் கூட உண்டு!! அதாவது, ஞானக் கண்ணுக்கு!!

      Delete
  7. நான் வாசித்த முதல் டெக்ஸ் இதழ் நிஜமாலுமே எதுன்னு மறந்து போச்சு!!!

    என்னுடைய ஆல் டைம் favorite என்றால் அது பழி வாங்கும் புயல் தான் நிஜமாலுமே கதை புயல்தான்.
    ஒரு ராணுவத்தையே தன்னுடைய புத்திசாதுர்யத்தால் டெக்ஸ் வெல்வதுதான் கதை. ஒரு ஹாலிவுட் மூவி பார்த்த எபெக்ட் Simply superb👌👌👌👌 (மத்தவங்க சொல்றமாதிரி நீதி நேர்மை அதனால் பிடிச்சிருக்கு அப்படி எல்லாம் இல்லீங்க)
    என்ன காரணம்னு எல்லாம் தெரியாது TEX னா பிடிக்கும். I LOVE TEX VERY MUCH,BUT I DON'T NO WHY!!!💗💗

    ReplyDelete
    Replies
    1. குறைவா எழுதினாலும் நிறைவா எழுதி இருக்கிங்க சுசி.

      Delete
    2. வாவ்...பழிவாங்கும் புயல் தான் ஸ்டார்டிங்கா... சேம் பின்ச்.

      ஏன் டெக்ஸ் பிடிக்குதுனா காரணம் சிம்பிள்,

      "நான் தான் டெக்ஸ்" என்ற தெனாவெட்டு ஸ்டைல் தான்.
      எல்லோருக்கும் உள்ளே இருக்கும் இந்த சுய கர்வத்தை வெளிப்படையாக காட்டி, "நீ யாரா இருந்தாலும் கவலை இல்லை, தப்புனா தப்பு இந்தா வாங்கிக்க"--அப்டீனு தர்ற தெனாவெட்டு தைரியம். வெறெந்த ஹீரோவிடமும் இல்லாத தான் என்ற மிடுக்கு. அது இருக்கும் வரை தல டெக்ஸ்னா கெத்து தான். அந்த கெத்து தான் டெக்ஸின் சொத்து!

      Delete
  8. முர்டாக் –ன் சீற்றம்
    சிறையுள்ளே டெக்ஸ்
    இதனை காணுகையில்
    அதிகாரம் படைத்தவனின் வீட்டு கோழி முட்டை குடியானவனின் வீட்டு அம்மிக்கல்லை உடைக்க வல்லது என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது .
    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    சிறையில் இருக்கும்போதும் டெக்ஸ்-ன் சீண்டல்
    முட்டினால் சாயும் முருங்கை மரமல்ல
    வெட்ட வெட்ட வளரும் வேங்கை மரம்
    என யாரோ எழுதியதை படித்தது ஞாபகம் வருகிறது .
    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    கம்பன் ராமாயணம் மட்டுமல்ல
    ஏர் எழுபது என உழவைப் பற்றியும்
    சிலை எழுபது என சோழப் படைத்தளபதி பற்றியும் எழுதினான் .
    அக்கம்பன் வீட்டில் இருந்த செம்புக்கு இருந்த ஞானம் மட்டும் இருந்திருப்பின்
    ஏர் எழுபது ,சிலை எழுபது வரிசையில் டெக்ஸ் எழுபது எழுதியிருக்கலாம் ..ம்....ஹூம்

    ReplyDelete
    Replies
    1. அதனால் என்ன... ராமாயணக் கம்பர் எழுதாததை இந்தக் காமிக்ஸ் கம்பர் எழுதுதட்டுமே?!!

      Delete
    2. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
      காமம் செப்பாது கண்டது மொழிமோ
      பயிலியது கெயிலிய....ஜெயில்ல ...அது ...பெயில்ல...அப்புறம் என்னமோ வருமே .....

      மைண்ட் வாய்ஸ் :
      ம்ம்ம்... நமக்கென்ன வருமோ அதை மட்டும்தான் எழுதணும்.! வீணா புலியப்பாத்து கோடு போட்டுக்கக்கூடாது ..!!:-)

      Delete
    3. // அதனால் என்ன... ராமாயணக் கம்பர் எழுதாததை இந்தக் காமிக்ஸ் கம்பர் எழுதட்டுமே?!! //
      அதே,அதே...

      Delete
    4. டெக்ஸ் 70- சங்கஇலக்கிய வரிசையில் அமர்க்களப்படுத்துங்க பொருளர் ஜி.

      Delete
  9. டெக்ஸ் வாழ்க...



    டெக்ஸ் வாழ்க...


    டெக்ஸ் வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. // டெக்ஸ் வாழ்க...



      டெக்ஸ் வாழ்க...


      டெக்ஸ் வாழ்க...//
      இப்படி வெச்சிக்கலாமே,

      தல டெக்ஸ் வாழ்க...


      தல டெக்ஸ் வாழ்க...


      தல டெக்ஸ் வாழ்க...

      Delete
  10. // அது மாத்திரமன்றி - இரு சாகஸங்களிலுமே ரேஞ்சர்களின் முழு அணியும் இடம்பெறுவது highlight !! //
    அருமை சார்,டெக்ஸ் 70 ஐ காண மிகவும் ஆவலுடன்.

    ReplyDelete
  11. நான் படித்த முதல் டெக்ஸ் சாகசம் தலை வாங்கி குரங்கு. அப்பா முத்து காமிக்ஸ் வாசகர். அதனால் லயன் காமிக்ஸ் முதல் இதழில் இருந்தே நானும் காமிக்ஸ் கடலில் குதித்து விட்டேன். தேங்க்ஸ் டாடி.

    ஆல் டைம் பேவரிட் பழி வாங்கும் புயல் மற்றும் கார்சனின் கடந்த காலம். ப.வா.பு ஒரு நூறு தடவைக்கு மேல் படித்து இருப்பேன்(கருப்பு வெள்ளையில்)

    டெக்ஸ் ஏன் பிடிக்குது. நேர் கோட்டில் செல்லும் கதை. எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்து இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ///ப.வா.பு ஒரு நூறு தடவைக்கு மேல் படித்து இருப்பேன்(கருப்பு வெள்ளையில்)///

      அதே! அதே!!

      Delete
    2. சூப்பர்! சம்திங் தேர் இன் ப.வா.பு.

      Delete
  12. 30ஆம் தேதி Sunday என்பதால் 29ஆம் தேதியன்று டைனமைட் ஸ்பெஷல் எதிர்பார்க்கலாம்?

    ReplyDelete
    Replies
    1. வழக்கமாக வியாழன் அனுப்புவாங்க. வெள்ளி&சனி மேக்ஸிமம் எல்லோருக்கும் கிடைக்கும் படி.
      எனவே வெள்ளியில் எதிர்பார்க்கலாம் ஜி.

      Delete
  13. நான் எந்த டெக்ஸ் கதையை முதலில் படித்தேன் என்பது இன்று சுத்தமாக நினைவிலில்லை! ஆனால் அது எந்த கதையாக இருந்திருந்தாலும், இன்று நான் தீவீர தமிழ் காமிக்ஸ் ரசிகனாக வாழ்வதற்கு அந்த டெக்ஸ் கதையே காரணம் !!

    ReplyDelete
    Replies
    1. // நான் எந்த டெக்ஸ் கதையை முதலில் படித்தேன் என்பது இன்று சுத்தமாக நினைவிலில்லை! //

      நானும் இதே நிலைதான்.

      Delete
  14. சிம்பிளி,

    Tex is Comics
    Comics is Tex!

    அவ்வளதாங்க....!!!!
    கேம் ஓவர்....

    ReplyDelete
  15. My name is Tex!

    வாழ்க்கையில் எப்பவாச்சும் போராட்டம்னா பரவாயில்லை, போராட்டமே வாழ்க்கையாக போனா??

    போராட்டமே வாழ்க்கையாக தொடங்கிய என் பெயர் தான் டெக்ஸ்!

    எல்லா ஹீரோவும் படைக்கப்பட்டு போராடி டாப்பில் வருவாங்க!

    நான் படைக்கப்பட்டதே பெரும் போரால் தாங்க!!!

    ஆம் இரண்டு உலகப்போரும் என் படைப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன!

    ஒரு பெரிய ஹீரோவுக்கு உதவி செய்யும் சின்ன துணை பாத்திரமாத்தாங்க என்னை என் பிரம்மாக்கள் கியான் லூஜி போனெல்லியும் ஆரில்லோ காலப்பினியும் படைத்தாங்க!

    போரட்டத்தில் பிறந்த நான் விடுவனா,
    துவக்க நாளில் இருந்தே எனக்கு நானே சொல்லி கொண்டேன்,

    I am Tex!

    அந்த கர்வம் என்னை வளர்த்துக் கொண்டே இருக்கும். நான் இருக்கும் வரை என் கர்வமும் இருக்கும்.

    என்னுடைய எஜமானனாக படைக்கப்பட்டவனை கருவிலேயே அழித்து விட்டுத்தான் நான் வளர்ந்தேன்.

    கையில் துப்பாக்கியோடு என் ஆட்டத்தை ஆரம்பித்து 70ஆண்டுகளாக வளர்ந்து கொண்டே வர்றேன்.

    இன்னும் 700ஆண்டுகள் ஆனாலும் வளருவேன். ஏன்னா,

    I am Tex!

    (ட்ரெய்லர் நாங்களும் போடுவம்ல.
    டெக்ஸ் படைப்பின் பின்னணி, வளர்ச்சி, ஆதிக்கம் எல்லாம் இந்த மினி டெக்ஸ் 70தொடரில்---விரைவில்)

    ReplyDelete
    Replies
    1. இத..இதைத்தான் உங்ககிட்ட எதிர்பாத்துட்டு இருந்தோம்.

      Delete
  16. அன்பின் ஆசிரியருக்கு,

    வணக்கம். செப்டம்பர் மாத இதழ்கள் பற்றி.. சைத்தான் சாம்ராஜ்யமும் களவும் கற்று மறவும் நிறையவே அலசப்பட்டு விட்டன. இருவேறு தளங்களில் இயங்கினாலும் இரண்டுமே மனதுக்கு நெருக்கமான ஒன்றாக அமைந்து விட்டன. நான் சொல்ல வந்தது மாடஸ்டியைப் பற்றியே. வெகு சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறீர்கள் இளவரசியை. வசனங்களில் இளமையும் சேட்டையும் கொப்பளிக்கின்றன. மாடஸ்டி கார்வின் இணையைக் கொண்டாடும் இந்த இதழோடு மனம் எளிதில் ஒன்றிக்கொள்கிறது. வருடத்துக்கு ஒரு முறை இதுபோன்ற மாடஸ்டியின் தரமான கதைகள் வருவதில் எந்தத் தவறுமில்லை என்றே நம்புகிறேன். எதிர்பார்க்காத மற்றொரு சங்கதி, ஒரு குரங்கு வேட்டை தந்த மனநிறைவு. இரண்டு கதைகளிலும் வாசிப்பவர்களுக்குச் சின்னதாய் ஒரு சவால் இருக்கிறாது, ஷோம்ஸ் என்ன வேடத்தில் ஒளிந்திருக்கிறார் என்பதை அடையாளம் காண்பது. அது நம்மை கதையோடு எளிதாகப் பயணிக்க வைக்கிறது. ஆக நான்கு இதழ்களுமே அட்டகாசமாக அமைந்திருக்கக்கூடிய ஒரு மாதம். வரும் இதழ்களிலும் குதூகலம் தொடரட்டும். டைனமைட் ஸ்பெஷல் பலத்த அதிர்வுகளை உண்டாக்கட்டும். நன்றி.

    பிரியமுடன்,
    கா.பா

    ReplyDelete
    Replies
    1. ///எதிர்பார்க்காத மற்றொரு சங்கதி, ஒரு குரங்கு வேட்டை தந்த மனநிறைவு///

      +111

      Delete
    2. /*நான் சொல்ல வந்தது மாடஸ்டியைப் பற்றியே. வெகு சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறீர்கள் இளவரசியை. வசனங்களில் இளமையும் சேட்டையும் கொப்பளிக்கின்றன.*/
      கவிஞரே சொல்லிவிட்டார்... ஆசிரியர் நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாக கவிதையாய் எழுதித் தள்ளி வருகிறீர்கள்.
      தலைவி மாலு குட்டியின் கதை ஏதேனும் ஒன்றை வரும் வருட சந்தாவில் சேர்த்து விட்டால், உங்கள் கவித்துவமும் வளரும்...
      இங்ஙனம்
      பின்னட்டை மாடஸ்டி ரசிகர் மன்றம்.

      Delete
    3. ///தலைவி மாலு குட்டியின்///

      ////இங்ஙனம்
      பின்னட்டை மாடஸ்டி ரசிகர் மன்றம்.////

      ஹா ஹா ஹா! :))))

      Delete
    4. மாலதிய மாலுகுட்டின்னா மாடஸ்டிய மாடுகுட்டின்னுதானே சொல்லணும்.(ஏம்ப்பா நான் சரியாத்தானே சொல்லிட்டு இருக்கேன்).

      Delete
    5. ////மாலதிய மாலுகுட்டின்னா மாடஸ்டிய மாடுகுட்டின்னுதானே சொல்லணும்.////

      ஹாஹாஹா சூப்பா்!!

      Delete
    6. ///மாலதிய மாலுகுட்டின்னா மாடஸ்டிய மாடுகுட்டின்னுதானே சொல்லணும்.////

      குட் கொஸ்டின்!

      அதாவது, ஒரிஜினல் ஓவியத்தை அப்படியே அட்டையில போட்டாங்கன்னா அது - மாடஸ்டி - மாடு குட்டி!
      நம்ம ஓவியர் வரைஞ்சதை அட்டையில போட்டாங்கன்னா அது - மாலதி - மாலு குட்டி!

      நேட்டிவிட்டியோட இருக்கறதுனால இப்போல்லாம் மாலு'தான் தூளா தெரியுது!! :)

      Delete
    7. சாரி.தப்பா சொல்லிட்டேன்.வயசுல(நம்மள விட) பெரியவங்களா இருந்தா மாட்டுகுட்டி.சின்னவங்களா இருந்தா கண்ணுகுட்டி(செல்லம்) அப்படின்னு சொல்லனும்.

      Delete
    8. மாலும்மாதான் டாப்...
      சரோஜா சாமான் நிக்காலோ...
      மாலும்மா சாமன் நிக்காலோ....

      Delete
    9. ஆலும்மா டோலும்மா
      உட்டாலக்கடி மாலும்மா.

      Delete
  17. செனா அனா ஜி@& மிதுனர்@ & ஃப்ரெண்ட்ஸ் @

    *சைத்தான் சாம்ராஜ்யம்-
    மாஷை இளமையா இருப்பா!
    விரியன் போட்டுத் தள்ளியுவுடன் கிழவியாயிடுவா!

    *நிசமாவே அந்த மந்திரி மலர்கள் மாதிரி இருக்க வாய்ப்பு இருக்கா?

    *அனகோண்டா படம் பார்ட்-2 லும் இதே மாதிரி ஒரு ஆர்க்கிட் பூவை தேடி போர்னியா போவாங்க. அந்த பூவும் இளமையை காக்கும். உலகம் பூராவும் அப்படி ஒரு தீம் நிலவு கிறது.

    *அறிவியல் பூர்வமாக இதற்கு ஏதும் வாய்ப்பு இருக்கா?

    *தத்துவார்த்த ரீதியாக ஏதேனும் விளக்கம் இருந்தாலும் ஓகே.

    ReplyDelete
    Replies
    1. போட்டோ எடுத்து பிரேம் போட்டு மாட்டீட்டீங்கனா இளம போகவே போகாதுல்ல!! 😁😁😁

      Delete
    2. அனகோண்டா, டைனோசா், அபோகலிப்டா எல்லாம் கலந்து கலவை "சைசா"

      Delete
    3. ///சைத்தான் சாம்ராஜ்யம்-
      மாஷை இளமையா இருப்பா!
      விரியன் போட்டுத் தள்ளியுவுடன் கிழவியாயிடுவா!///

      விரியன் தீண்டுவது உண்மையேயெனினும், மேலிருந்து கீழே விழுந்து மண்டையை உடைத்துக்கொள்வதாலேயே மா-ஷைக்கு மரணம் சம்பவிப்பதாக ஞாபகம்!

      மரணம் எவ்வகையில் நேரிடினும் அவள் தன் ஒரிஜினல் (கிழவி) தோற்றத்துக்குத் திரும்பிவிடுவாள் என்பதே லாஜிக்(!!?) ;)

      Delete
    4. செயலர்@ இன்னும் கலரில் படிக்கலயா??? கர்ர்ர்ர்...!

      டெக்ஸ் & கோவை, கல்லை தலையில் போட்டு கொல்ல கல்லை தூக்குவா, கல்லுக்கு அடியில் உள்ள விரியனை ஆங்காரத்தில் கவனிக்க மாட்டா!

      வினை விதைக்க முயலுபவள் பலியாவா பாம்பிடம். கல்லு அவளுக்கு முன்பே விழுந்துடுது.

      பரிதாபமாக இருக்கும், ஒரு நொடி....!!!

      நல்ல கற்பனை அந்த உருவ மாற்றம்.

      தோர்கல்லயும் அப்படி ஒரு சீன் வரும். மொத பார்டில்....!!!

      Delete
    5. // நிசமாவே அந்த மந்திரி மலர்கள் மாதிரி இருக்க வாய்ப்பு இருக்கா? //
      மலர்கள் இருக்கலாம் என்பது பொதுவான ஒரு நம்பிக்கை,ஆனால் நீங்க சொல்ற மாதிரி மந்திரி மலர்கள்,மன்னர் மலர்கள் எல்லாம் இருக்கான்னு தெரியல.

      Delete
    6. ரவி@ ஹா....ஹா..! செல்லினத்தின் ஆட்டோ கரெக்ட் தான் மந்திரி மலர்.

      மந்திர மலர் இருக்க வாய்ப்பு இருக்கா????

      Delete
    7. /////*நிசமாவே அந்த மந்திர மலர்கள் மாதிரி இருக்க வாய்ப்பு இருக்கா?/////

      இல்லை ....

      //////*அனகோண்டா படம் பார்ட்-2 லும் இதே மாதிரி ஒரு ஆர்க்கிட் பூவை தேடி போர்னியா போவாங்க. அந்த பூவும் இளமையை காக்கும். உலகம் பூராவும் அப்படி ஒரு தீம் நிலவு கிறது.

      *அறிவியல் பூர்வமாக இதற்கு ஏதும் வாய்ப்பு இருக்கா? ///////


      இல்லை ......

      ////*தத்துவார்த்த ரீதியாக ஏதேனும் விளக்கம் இருந்தாலும் ஓகே.////



      ஒரு பெண்ணை ___அவள் எவ்வயதாயிருப்பினும் ___ இளமையாக உணரவைக்க அவள் நேசிக்கும் ஆண்மகனின் அவள் மீதான மயக்கம் கொண்ட பார்வையும் ,அவன் தரும் மல்லிகைப்பூவோ முல்லையோ ரோஜாவோ போதும்..மந்திர மலர்கள் எல்லாம் தேவையில்லை .


      சமீபத்திய லார்கோவில் பென்னி கூட உதாரணம்தான் ... ,

      Delete
    8. ////ஒரு பெண்ணை ___அவள் எவ்வயதாயிருப்பினும் ___ இளமையாக உணரவைக்க அவள் நேசிக்கும் ஆண்மகனின் அவள் மீதான மயக்கம் கொண்ட பார்வையும் ,அவன் தரும் மல்லிகைப்பூவோ முல்லையோ ரோஜாவோ போதும்..மந்திர மலர்கள் எல்லாம் தேவையில்லை .


      சமீபத்திய லார்கோவில் பென்னி கூட உதாரணம்தான் ////


      ப்பா!! எழுத்துக்களில் என்னாவொரு ரொமான்ஸ்!!! நீங்க எழுதப்போகும் முதல் நாவல் இப்படியாப்பட்ட ரொமான்ஸா இருக்கணும்னு கேட்டுக்கறேன்!

      Delete
    9. சாருக்கு ஒரு கட்டு கர்சீப் பார்சேல்.!!!!...

      Delete
    10. // செல்லினத்தின் ஆட்டோ கரெக்ட் தான் மந்திரி மலர். //
      ஹிஹி,சும்மா.

      Delete
    11. பொருளர் ஜி@ ஆஹா...!!!

      அந்த கொங்குதேர்.... பாடலைகேட்ட ஷெண்பக பாண்டியன் முகம் போலவே நானும் முகம் மலர்கிறேன்.

      என் ஐயப்பாட்டை் நீக்கிய ஆழ்ந்த வாழ்வியல் கருத்துக்கள்; தேங்யூ ஜி.

      Delete
    12. மந்திர மலர் இருக்க வாய்ப்பு இருக்கா????
      தத்துவ ரீதியாக,
      பொதுவாக மனித மனம் எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைந்தது,அந்த மனம் இயங்க ஏதாவது ஒரு தீனியை நாம் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்,அந்த அடிப்படையில் மந்திர தந்திரங்கள்,பேய் பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் போன்ற செய்திகளின்பால் மனம் ஈர்ப்படையவே செய்யும்,அதை கேட்பதில் மனதிற்கு ஒரு இன்பம்,பகுத்தறிவு ரீதியாக இதற்கு வாய்ப்பு உள்ளதா என்று யோசிக்காது,ஏனெனில் பகுத்தறிவு தர்க்கம் செய்யும்,ஆதாரம் கேட்கும்,ஆனால் மனம் ஆதாரங்களை நம்பாது,

      கொல்லிமலையில் ஒரு அபூர்வ மலர் உண்டு அது சித்தர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியுமாம்,சாதாரண மனிதர்களுக்கு புலப்படதாம்,அதுவும் பிறருக்கு தீங்கு செய்யும் கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்கள் அதனருகில் சென்றாலே அது தன்னை உள்ளிழுத்துக் கொள்ளுமாம்
      என்று என் தாய்மாமா ஒருவர் என்னிடம் கூறிய செய்தி இது,
      அவர் மெத்த படித்தவர்,ஒரு குறிப்பிட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்,அரசுத் துறையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதைக் கேட்கும் போது இது சாத்தியமா என்று நான் கேட்கவில்லை, இப்படி கூட விசித்திரமான விஷயங்கள் உண்டா என்று வியந்ததுண்டு.

      ஏழு கடல் தாண்டி,ஏழு மலைகள் தாண்டி ஒரு குகை இருக்கிறது,அங்கிருக்கும் கூட்டில் இந்த மந்திரவாதியின் உயிர் இருக்கிறது என்று படித்தாலோ,கேட்டாலோ ஏதாவது ஒரு வகையில் நமக்கு ஈர்ப்போ,ஆர்வமோ ஏற்படுகிறது,இங்கே இது சாத்தியமா என பகுத்தாய பெரும்பாலனோர் விரும்புவதில்லை.

      இறப்பில்லாமல் மனிதன் நீண்ட காலம் வாழ்வது எப்படி, மனித வாழ்வை நீட்டிக்க செய்யும் மூலிகைகள் உள்ளதாமே,சஞ்சீவி வேருக்கு கூட அப்படி ஒரு தன்மை உண்டாமே,என ஒரு சாரார் விவாதித்துக் கொண்டும்,பேசிக் கொண்டும்,ஆராய்ந்து கொண்டும்தான் உள்ளனர்,
      என்னைக் கேட்டால் இந்த கேள்வி பதில் இல்லாதது என்பேன்,
      அறிவியல் ரீதியாக பார்ப்பின் அதற்கு நிரூபணங்கள்,சான்றுகள் தேவை.
      தத்துவ ரீதியாக பார்ப்பின் நாளை எதுவும் நடக்கலாம்,அதை யார் அறிவார்.
      உண்மைகளை அறிவியல் முலாம் பூசியோ,தத்துவ முலாம் பூசியோ காட்ட முடியாது, அது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.
      மன திருப்திக்காக வேண்டி நாம் விவாதித்துக் கொண்டே இருக்கலாம்,
      அது மனதின் இருப்புக்கு (நுட்பமான அகந்தைக்கு) தீனி போட்டுக் கொண்டிருக்கும்.
      யார் கண்டார்கள் உங்களின் கேள்வி கூட அதன் வெளிப்பாடாக இருக்கலாம்,எனது பதில் கூட அதன் வெளிப்பாடாக இருக்கலாம்.
      -மேற்கூறியவை எனது தனிப்பட்ட கருத்துகளே,ஒப்பீட்டளவில் பொருத்தமான பதிலா என்று தெரியவில்லை, மனதில் பட்டதை சொன்னேன் அவ்வளவே.

      Delete
    13. ரவி@ சிந்திக்க வைக்கும் பதில்கள். நன்றிகள், தெளிவான நீண்ட தீர்க்கமான கருத்துக்களுக்கு!

      என்னுடைய கேள்விக்கு ஒரு சின்ன அடிப்படை இருக்கிறது.

      சென்ற டிசம்பரில் ட்ராகன் நகர பிரச்சினை காரணமாக 3மாதங்கள் காமிக்ஸ் உலகை விட்டு சற்றே ஒதுங்கி இருந்தேன்.

      அப்போது நம்ம மூத்த நண்பர் S.V.V. சில புத்தகங்களை படிக்க தந்து இருந்தார். அவற்றில் ஒன்று சிவா-முத்தொகுதி.

      மெலூஹாவின் அமரர்கள்,
      நாகர்களின் ரகசியம்,
      வாயுபுத்திரர் வாக்கு.

      அற்புதமான அனுபவம். இரண்டு முறை வாசித்தேன்.

      அதன் அடிப்படை சோமரஸம். நாம் கதைகளில் பலநூறுமுறை கேட்ட சோமபானம்.

      சோமரஸம் அருந்தும் மெலூஹர்கள் இளமையாக நீண்ட ஆயுளுடன் இருக்கிறார்கள.

      நம் உடற்கூறின் நுண்ணிய பகுப்பில் அனுக்கள் பிளவுபட்டு கொண்டே இருக்கும். பிளவுபடும் புதிய அனுக்கள் இளமைக்கு காரணம். முதுமையில் அனுக்கள் பிளவு குறைவாக இருக்கிறது. தோளின் சுருக்கங்கள், உடல்நலகுறைபாடு, உள்அவையங்கள் செயல்பாடு மங்கி இறப்பு.

      சோமரஸம் என்ன செய்கிறது! முதுமையில் குறையும் அனுபிளவை நிவரத்தி செய்கிறது. அனுபிளவை துரிதிபடுத்தி இளமையையும், ஆயுளையும் நீட்டிக்கச செய்கிறது.

      இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இருக்கலாம்.

      சோமரஸத்தின் செயல்பாடும், மாஷையின் மந்திர மலர்களின் செயல்பாடும் ஒத்திருக்கிறது.

      மந்திர மலர்களின் மகத்துவத்தில் மாஷையும் இளமையாக ஜொலிக்கிறாள்.

      உலகம் பூராவும் இப்படி சிந்தனைகள் எழுகிறது எனில் அதற்கு ஏதாவது காரணம் இருக்க முடியும் தானே???

      நேற்றைய கற்பனைகளே இன்றைய பல அறிவியல் சாதனங்களாக காண்கிறோம்.

      அப்படி மந்திர மலர்களோ, சோமரஸமோ என்றாவது நடைமுறை சாத்தியம் காணும் வாய்ப்பு இருக்குமானால்......?????

      Delete
    14. ரவி அருமை....நம் மனம் விரும்புவதை, அதாவது நாளை நடக்கலாம் எனும் எண்ணத்தின் சந்தோசத்துக்கு இணையே கிடையாது !// மன திருப்திக்காக வேண்டி நாம் விவாதித்துக் கொண்டே இருக்கலாம்,
      அது மனதின் இருப்புக்கு (****நுட்பமான அகந்தைக்கு****) தீனி போட்டுக் கொண்டிருக்கும்.
      //தனியொருவன் கூறியதில் நமக்கு அநுத தீங்கு நேர்ந்தால் என யோசிக்க சொன்னாலும், இக்கதையின் நாயகனின் குண இயல்புகள் இதப்போல மேஜிக்தான், ,,,களவும் கற்று மற

      Delete
    15. ///உண்மைகளை அறிவியல் முலாம் பூசியோ,தத்துவ முலாம் பூசியோ காட்ட முடியாது, அது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது///

      அருமை!! மிகச்சாி!!

      Delete
    16. @ அறிவரசு & TVR

      பட்டையக் கிளப்புறீங்க நண்பர்களே!

      Delete



    17. The basis behind this theory is that segments of DNA that occur at the end of chromosomes, called telomeres, determine the maximum lifespan of a cell. Telomeres are pieces of "junk" DNA at the end of chromosomes which become shorter every time a cell divides. These telomeres become shorter and shorter and eventually, the cells cannot divide without losing important pieces of DNA.

      ///நம் உடற்கூறின் நுண்ணிய பகுப்பில் அனுக்கள் பிளவுபட்டு கொண்டே இருக்கும். பிளவுபடும் புதிய அனுக்கள் இளமைக்கு காரணம். முதுமையில் அனுக்கள் பிளவு குறைவாக இருக்கிறது. தோளின் சுருக்கங்கள், உடல்நலகுறைபாடு, உள்அவையங்கள் செயல்பாடு மங்கி இறப்பு.

      சோமரஸம் என்ன செய்கிறது! முதுமையில் குறையும் அனுபிளவை நிவரத்தி செய்கிறது. அனுபிளவை துரிதிபடுத்தி இளமையையும், ஆயுளையும் நீட்டிக்கச செய்கிறது.

      இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இருக்கலாம். ////

      டெக்ஸ் ! மேலே ஆங்கிலத்தில் உள்ளதன் சாராம்சம்தான் கீழே நீங்கள் குறிப்பிடப்பட்டிருப்பது ..
      அறிவியல் சாயம் அல்ல இன்னும் ஆழமாக ஜெனட்டிக் சாயம் பூசி வந்துள்ளது ....
      கரு உற்பத்தியாகும்போதே ஜீன் லெவலில் முதுமை தீர்மானிக்கப்படுகிறது ...
      அது முதல் செல் பகுப்பில் ஊர்ஜிதம் செய்யப்பட்டுவிடும் ...
      ஓர் உயிர்வகையின் இளமை ,வாழ்நாள் மாறாதது ...
      யானைக்கு எழுபது ஆண்டுகள்
      மனிதனுக்கு எண்பது ஆண்டுகள்
      போன்று ஒவ்வொரு ஜீவராசிக்கும் இது பொருந்தும்..
      முதுமைக்கான ஜீன்களை மேனிப்புலேட் செய்யுமளவு விஞ்ஞானம் வளரவில்லை ..
      இப்போதைக்கு அது சாத்தியமில்லை ...
      மரபியல் என்றல்ல ஒரு ஜீவராசியின் முதுமையும் மரணமும் அவ்வகையின் பரிணாம வளர்ச்சிக்கு மிக அவசியமானது என்பதால் மார்க்கண்டேயர்களை புராணத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் ..

      கொஞ்சம் யோசித்து பார்த்தால் அந்தந்த வயதுக்குரிய ஆரோக்கியமும் தேடல் உள்ள மனசும் இருந்தாலே அது இளமைதான் ....


      Delete
    18. // அப்படி மந்திர மலர்களோ, சோமரஸமோ என்றாவது நடைமுறை சாத்தியம் காணும் வாய்ப்பு இருக்குமானால்......????? //
      அப்படி இல்லாமல் இருப்பதே நலம்,மனிதனின் பேராசைக்கு அளவுதான் ஏது?
      ரசவாத வித்தையை கற்றறிந்தவர்கள் என்று அறியப்படும் சித்தர்களே அந்த வித்தையை பயன்படுத்தியதாக தெரியவில்லை.
      என்னைப் பொறுத்தவரை இயற்கையின் விதிகளை அதன் இயல்போடு ஏற்பதே சிறப்பு.

      Delete
    19. // கொஞ்சம் யோசித்து பார்த்தால் அந்தந்த வயதுக்குரிய ஆரோக்கியமும் தேடல் உள்ள மனசும் இருந்தாலே அது இளமைதான் .... //
      சரியான பாயிண்ட்.

      Delete
    20. ரவி & மாம்ஸ் ...

      சூப்பர்.....!!

      Delete
    21. பொருளர் ஜி@
      //கரு உற்பத்தியாகும்போதே ஜீன் லெவலில் முதுமை தீர்மானிக்கப்படுகிறது ...
      அது முதல் செல் பகுப்பில் ஊர்ஜிதம் செய்யப்பட்டுவிடும் ...
      ஓர் உயிர்வகையின் இளமை ,வாழ்நாள் மாறாதது ...//---அருமையான விளக்கம்👏👏👏👏

      இதை எல்லோரும் புரிந்து கொண்டா உலகமே அன்பு மயமாகிடும்.ஹூம் பெருமூச்சுதான் விடமுடியுது.

      ///கொஞ்சம் யோசித்து பார்த்தால் அந்தந்த வயதுக்குரிய ஆரோக்கியமும் தேடல் உள்ள மனசும் இருந்தாலே அது இளமைதான் ....///

      ---சிறப்பான கருத்து. அந்தந்த வயதின் ஆரோக்கியம் கிட்டினாலே வாழ்க்கை , பூலோகித்திலேயே சொர்க்கம் தான்.

      Delete
    22. //யானைக்கு எழுபது ஆண்டுகள்
      மனிதனுக்கு எண்பது ஆண்டுகள்
      போன்று ஒவ்வொரு ஜீவராசிக்கும் இது பொருந்தும்..///---

      தேவர்களுக்கு இது 200ஆண்டுகள் போல; அவர்கள் மட்டும் என்ன ஸ்பெசல்????

      Delete
    23. //முதுமைக்கான ஜீன்களை மேனிப்புலேட் செய்யுமளவு விஞ்ஞானம் வளரவில்லை ..
      இப்போதைக்கு அது சாத்தியமில்லை ...//

      முதுமைக்கான ஜீன்கள் கண்டறியப்பட்டதாக படித்திருக்கிறேன்.. சரியாக நினைவில்லை.. அதை பற்றி அதிக செய்திகள் வெளிவரவில்லை.. அவற்றை வெளியிடுவதால் ஏற்படும் சமுக மாற்றங்களுக்காக அதை ஆராய்ச்சி நிலையிலேயே நிறுத்தப்பட்டு இருக்கலாம்..

      Delete
    24. //கொஞ்சம் யோசித்து பார்த்தால் அந்தந்த வயதுக்குரிய ஆரோக்கியமும் தேடல் உள்ள மனசும் இருந்தாலே அது இளமைதான் ....//செம செனா

      Delete
  18. நான் முதலில் படித்த டெக்ஸ் தலைவாங்கி குரங்கு.....இக்கதை வரும் முன் நீங்க கொடுத்த விளம்பரங்கள் இப்பயும் மறக்காது! இவர்தான் டெக்ஸ் வில்லர் ,கார்சன் , கிட் வில்லர் டைகர் என ஒரு அறிமுகப் படல பக்கமே டெக்ச காணும் ஆவல ஸ்பைடர், ஆர்ச்சி போல ஏற்றியிருந்த சமயம்....மதிய உணவு இடைவேளை போது பீளமேடு ரோட்டுக் கடைக்கு போய் படித்தபடி வருகையில் பள்ளியே அமைதி...அடடா நேரம் கடந்து விட்டதா என நடுங்கியபடி நிழைந்தது நினைவில் , என்ன நடந்ததென நினைவில் இல்லை. இப்படி ஒரு கதை வருமா என பொங்கிய சந்தோசமும், தலைவாங்கி வருகையில் ஒரு திகிலுமாய் அடடா,,,,டெக்ஸ் எனும் ஒருகால் கூட லயன முக்காலியாய் மாற, பின்னர் இரு கால்களை இழந்த பின்னும் ஒற்றைக் காலால் தாங்கியது டெக்ஸ்தான .
    பிடித்த கதை அதிகம், மனதோடு உறவாடும் கதை , எத்தனை முறை படித்தேன் , எப்போதாவது ஒரு ஏதோ பக்கததை புரட்டி படித்தால் அப்பக்கத்தில் அப்பாவி தலைவன் கிளமண்ஸுக்கும் இடம் நிச்சயம்! அதும் கார்சனின் நண்பன் என்பதும் மகிழ்ச்சி! காதல், இழப்பு , நட்பு, சூழ்ச்சி, இவனும் அப்பாவியோ என வாழும் கும்பலோடு நானும் .உனக்கு தெரியதா நட்புக்காக எதயும் செய்வேன் என பேசும் அப்பாவி தலைவனும், நீ பொய் பேசுவதில் கெட்டிக்காரி லினா என கார்சனும், இப்பவும் வலிக்கிற மாதிரி உங்க பேச்சில் தெரிதே என லினாவும் , வலித்தது என கார்சனும், அப்பாவிகள்தான் வந்துட்டாங்களோ என பயந்ததை கூறும் கிட்டும் ....கார்சனிடம் இது குறித்து பேசி வாங்கி கட்டிக்காதன்னு டெக்ஸும், சீட்டுக்கட்டு லாவலும் எதைச் சொல்ல எதை விட இதற்கிணையா எதயுக் காட்ட முடியாதே! I love so muchகார்சனின் கடந்த காலம். இப, மிம, காக சிங்ககுட்டிகள் என்றுமே எனக்கு .இம்மூன்றும், நேரமும் இருந்தால் மாற்றி மாற்றி அலுக்காமல் சாகும் வரை படிக்க இயலும் என்னால்

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் மேல காதல் , ஒரே காரணம் புத்தகத்த புரட்டும் போதே மனம் தேடுமே...அதாங்க எங்க சொல்லு பாக்கலாம்னு முகர பேக்க தயாராகுமே ஒரு கை அதான் காரணம்

      Delete
    2. சார் டைனமைட்டை விட நா தேடுவது காதலும் கடந்து போகும் தான்,,,,அதும் டைகரின் கடந்த காலம்,,,,,மெகா சைசில்....எப்படி வருமோ!...ஏதாவது ஓரிதழ அழிச்சி வண்ணத்துலயும், மொத மொதயா ஹார்டு பௌண்டுல இராட்சத இதழா வருமோ என ஏங்குதே மனம்,,,தினம் தினம்

      Delete
  19. முதல் டெக்ஸ் எதுவென்று ஞாபகம் இல்லை. ஆனால் டெக்ஸின் அனைத்து கதைகளையும் அது மொக்கையாக இருந்தாலும் படிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டிய இதழ் மரண முள். இன்னும் ஊமத்தங்காயை பார்த்தாலோ இல்லை மெலிந்த நாயைப் பார்த்தாலோ அந்த கதை ஞாபகம் வந்து விடும். அந்தக் கதை அளவுக்கு எந்த கதையும் என்னை சிலிர்க்க வைக்கவில்லை என்றாலும் எல்லாத்தையும் பிடிக்கும் என்று சொல்வதே சரியாகும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் அப்டீனா பெட்ல ஏதாவது முள்ளுருண்டை இருக்கானு செக்கிங் பண்ணி பார்த்து இருப்பீங்களே!

      ஏன்னா நானும் கொஞ்சம் நாள் அப்படி பயந்து பயந்து தேடினேன். அதும் கரண்ட் கட் ஆகிட்டாத்தான் அந்த உருண்டை முள் ஞாபகம் வரும்.ஹி...ஹி...!!!

      Delete
  20. போனெல்லி எப்ப இருந்து மினி டெக்ஸ் விட ஆரம்பிச்சாங்க? டெக்ஸ் 70க்காக இந்த வருடம் தான் என்றால் அது்அடுத்த வருடமும் தொடருமா?

    ReplyDelete
    Replies
    1. போனெல்லி தளத்தில் அந்த மினி பற்றிய தகவல்கள் கிடைக்கல ஜி.

      ஆசிரியர் சார் தெரிவித்தால் தான் உண்டு!

      Delete
  21. இப்பொழுது தான் புலன் விசாரணை படித்தேன்... Hats off to கார்த்திகை பண்டியன் & ஜனார்த்தனன்...
    நன்றி விஜயன் சார்..

    சில இடங்களில் மட்டும் வார்த்தை கள்...
    அந்தரத்தில் தொங்கின..

    ReplyDelete
  22. டெக்ஸ் னாலே உற்சாகம் தானே...
    Waiting

    ReplyDelete
  23. ஒரு வழியா ஜெயில் வாசம் கிடைச்சுடுச்சு

    சுக்காவும் பீன்சும் கொடுத்தா சரி 😊

    ReplyDelete
  24. அன்பின் ஆசிரியருக்கு,
    தற்போது 2019 அட்டவணையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பீர்கள், அதற்கு முன் அடியேன் சொல்வதை கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள்.

    கடந்த இரண்டு பதிவுகளுக்கு முன்பு நண்பர் திரு.டெக்ஸ் விஜயராகவன் அவர்கள் பிரகாஷ் பப்ளிஷர் நிறுவனத்தின் ஆயிரமாவது வெளியீடு 2019ல் வர வாய்ப்புள்ளதாக எழுதியிருந்தார்(அந்த பட்டியலை சிரமப்பட்டு தயாரித்த டெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கு நன்றி)
    அது பற்றிய விவாதங்கள் நடந்து முடிந்துவிட்டன. அது பற்றிய என்னுடைய கருத்தையும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

    மூத்த ஆசிரியர் திரு.சௌந்திர பாண்டியன் அவர்கள் 1972ம் ஆண்டு முத்து காமிக்ஸ் என்ற விதையை விதைத்து அதற்கு தண்ணீர் ஊற்றி பக்குவமாக வளர்த்து வந்தார், அது செடியாகி மரமாகும் தருவாயில் அதனை பராமரிக்கும் பொருப்பு ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கு வந்தது, அவரது பராமரிப்பில் லயன், மினிலயன், திகில், ஷன்ஷைன் லைப்ரரி, ஜம்போ என பல கிளைகளாக வளர்ந்து இன்று என் போன்ற பலருக்கும் நல்ல கனி தரும் மரமாகும், இளைப்பாறுதல் தரும் மரமாகவும் இருக்கிறது.

    எங்களது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் இந்த காமிக்ஸ் எனும் மரத்தின் நிழலில்தான் இளைப்பாறிக் கொள்கிறோம்.

    அனைத்து புத்தக விழாவிலும் நண்பர்கள் பலர் குடும்பத்துடன் வந்து காமிக்ஸ் நேசத்தை வெளிப்படுத்துகிறார்கள்.அந்த அளவுக்கு இந்த நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறீர்கள்.

    எதற்கெல்லாமோ சிறப்பு இதழ்கள் வெளியிட்டுள்ள தாங்கள் ஆயிரமாவது இதழ் என்ற மைல்கல்லை எட்டும்போது ஏன் யோசிக்க வேண்டும்.

    இந்த இதழை தாங்கள் வெளியிட்டால் அது மூத்த ஆசிரியர் திரு.சௌந்திர பாண்டியன் அவர்களை கௌரவப்படுத்துவதாக அமையும்.

    இந்த இதழை ஆயிரம் பக்கங்கள் வெளியிட்டால் தானே சிரமம்.அதற்கு பதில் ஆயிரம் ரூபாய்க்கு வெளியிடலாமே.

    என் மனதில் பட்டதை எழுதியிருக்கிறேன்.
    தவறாக இருந்தால் வருந்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. // இந்த இதழை தாங்கள் வெளியிட்டால் அது மூத்த ஆசிரியர் திரு.சௌந்திர பாண்டியன் அவர்களை கௌரவப்படுத்துவதாக அமையும். //
      நல்ல பாயிண்ட்.

      // இந்த இதழை ஆயிரம் பக்கங்கள் வெளியிட்டால் தானே சிரமம்.அதற்கு பதில் ஆயிரம் ரூபாய்க்கு வெளியிடலாமே. //
      இதுவும் நல்ல யோசனையே,ஆசிரியர் மனதில் என்ன உள்ளதோ????!!!

      Delete
    2. ///எங்களது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் இந்த காமிக்ஸ் எனும் மரத்தின் நிழலில்தான் இளைப்பாறிக் கொள்கிறோம்////
      ---அற்புதமான கருத்துக்கள் நண்பரே! காமிக்ஸ் எனும் நிழல் இல்லையெனில் நமக்கெலாம் இளைப்பாற இடம் தான் ஏது!!!

      Delete
    3. //எதற்கெல்லாமோ சிறப்பு இதழ்கள் வெளியிட்டுள்ள தாங்கள் ஆயிரமாவது இதழ் என்ற மைல்கல்லை எட்டும்போது ஏன் யோசிக்க வேண்டும்.//

      நிரம்ப யோசிக்காமல், அடுத்த வருடம் ஒரு சிறப்பு வெளியீடு அறிவியுங்கள் சார். அது ஒரு "NEVER BEFORE SPECIAL" ஆக அமைந்தால் மிகவும் மகிழ்வோம் சார்.

      Delete
    4. ஆயிரமாவது இதழ் இது வர வந்ததை மிஞ்சுமளவு பக்க எண்ணிக்கை, ஒடிவமைப்பு என தூளு கிளப்ப வாழ்த்துகள் ஆசிரியரே!

      Delete
    5. IN 1972 Mr.MULLAI THANGARAASAN WAS EDIOR OF MUTHU COMICS.IN THAT TIME PRICE OF EACH ISSUE NINTY PAISE ONLY.FROM THE BEGINING EVERY ISSUE CAME THE PERIOD OF EVERY TWO MONTHS.THANGA MEEN POCKET NOVEL WAS FREE GIFT FOR IMAYAHIL MAYAAVI.NADUNISI KALVAN CAME WITH FREE GIFT OF MAYAAVI'S FULL SIZE MONTHLY CALENDER.

      Delete
  25. Dynamite special சந்தாவில் வருகின்ற இதழா அல்லது இதற்கென தனியாக புக் செய்ய வேண்டுமா...
    .

    ReplyDelete
    Replies
    1. சந்தாவில் தான் வரும்.

      Delete
  26. *டெக்ஸ் வில்லர்*



    டெக்ஸ் வில்லர் கதைகளில் முதலில் படித்த சாகஸம் எது என்று நினைவுபடுத்தி பார்க்கிறேன்.ம்ஹீம்..ஏதாவது பத்து கதை வந்தா அதில் ஏழு கதை மனசுக்கு பிடிச்சு இருந்தா முதல் சாகஸம் நினைவு இருக்கும்.ஆனால் நூறு சாகஸம் படைத்தாலும் 100 சதவீதமும் பிடித்தவனுக்கு நினைவு படுத்துதல் சிரமம் தான்.தலைவாங்கி குரங்கு இதழை படிக்கும் போது செம என தோன்றிய நிலைப்பாடு ட்ராகன் நகரம்..,பழிவாங்கும் பாவை ,கழுகு வேட்டை ,இரத்த வெறியர்கள் ,சர்வமும் நானே என்று தொடர்ந்து கொண்டே இருக்கும் " செம மாஸ் "இன்னமும் குறையாமல் இடைவிடாமல் வருடகணக்கில் பயணம் செய்து வரும் பொழுது இந்த நிறுத்ததிலா பயணம் ஆரம்பமானது என்பதும் நினைவில்லை இந்த வழிநிறுத்தம் தான் சிறந்த நிறுத்தம் எனவும் சொல்ல முடியவில்லை.


    சரி....டெக்ஸ் வில்லர் என்ற நாயகரை இவ்வளவு பிடித்து போனதற்கு காரணம் தான் என்ன ? யோசித்து பார்க்கிறேன்.ஒரு நாள் பேருந்து பயணத்தில் ஒரு குடிகார பயணி பலருக்கு தொல்லை படுத்தும் செயலை செய்து வந்தால் ஓங்கி மூக்கை பெயர்த்து பேருந்தில் இருந்து எட்டி உதைத்து இறக்க வேண்டும் என துடிக்கும்..ஆனால் மனது துடிப்பதை செயல் படுத்தினால் அடுத்து என்ன நிகழும் என்ற அச்ச உணர்வும் ,நான் நினைத்தற்கு மாறாக விளைவு ஏற்பட்டால் என்ன ஆகும் என்ற தயக்கமும் வேடிக்கைதான் பார்க்க சொல்லும்.ஒரு குடிகார பயணியிடமே இந்த நிலை என்றால் வீதியில் நடமாடும் ரவுடிகளையும்,கள்வளர்களையும் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன ? ஏன் எழுத்தில் எதிர் மறை விதத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சிலருக்கே அவர் என்ன நினைப்போரா...இவர் என்ன நினைப்பாரோ ,வரும் பதில் தனிப்பட்ட தாக்குதலாக தொடர்ந்து விடுமோ என்று பயந்து யோசிக்கும் பொழுது இப்படி எல்லாம் பதிலடி கொடுக்க வேண்டும் ஆனால் நம்மால் செயல்படுத்த முடியா நிலையில் அந்த அனைத்தையும் டெக்ஸ் வில்லர் என்ற கதாபாத்திரம் செய்யும் பொழுது அந்த பாத்திரத்தில் தன்னை டெக்ஸ் ஆக நினைத்து கொள்கிறான்.நிஜத்தில் எதிரிக்கு கொடுக்க முடியாத "குத்தை " டெக்ஸ் எதிரிக்கு கொடுக்கும் போது அந்த இடத்தில் நிஜ சம்பவத்தில் தான் தட்டி கேட்பதாக நினைக்கிறான்.மற்ற நாயகர்கள் இவன் தவறானவனா ,நிரபராதியா ,பலமானவனா ,ஆபத்தானவனா என யோசித்து செயல்படும் போது தன் கண்ணிற்கு அவன் தவறானவன் என தெரிந்தால் அவன் எப்பேற்பட்டவனாக இருந்தாலும் உடனடி பதிலடி டெக்ஸை இன்னமும் நெருக்கமாகி விடுகிறது .அது மட்டுமா எதிரியை நையபுடைத்த அதே இடத்தில் தைரியமாக "நான் தான் டெக்ஸ் " என்று அறிவிக்கும் அந்த தெனாவெட்டு "நான்தாண்டா பரணி " என்று எதிரிக்கு சவால் விட்டு முடிந்ததை பார் என நாமே சவால் விடுவது ஒரு மாய பிம்பம் தன்னால் அந்த இடத்தில் ஏற்பட்டு விடுகிறது . அதே போலவே நண்பர்கள் ,மகனுடன் இனைந்து சாகஸம் செய்யும் டெக்ஸ்ம் நம்மை போல ஒரு குடும்பஸ்தர் என்ற நெருக்கமும் ,அவரின் மகன் கிட் சாகஸம் புரியும் பொழுதும் ,டெக்ஸ் அதற்கு ஊக்க படுத்தும் பொழுதும் கிட்டின் இடத்தில் நமது வாரிசையும் நினைவுபடுத்தி வாசிக்கும் பொழுது டெக்ஸ் வேறல்ல நாம் வேறல்ல என்ற எண்ணம் தன்னால் டெக்ஸ் உடன் பயணிக்கும் பொழுது ஏற்பட்டு விடுகிறது .

    இன்னும் எத்தனை வருடம் சென்றாலும் டெக்ஸ் தான் தாம் ,தாம் தான் டெக்ஸ் என்ற நினைவை வாசகனும் விட போவதில்லை.டெக்ஸ்ம் நம்மை விட்டு விலக போவதில்லை.

    ReplyDelete
  27. - முதல் டெக்ஸ் இதழ்: ஆரம்பத்தில் டெக்ஸின் எந்த கதையையும் முழுதாகப் படித்ததில்லை; என் வயதும் டெக்ஸ் வில்லர் கதைகளின் நீளமும் காரணமாக இருக்கலாம். முழுமையாக படித்து முடித்தது லயன் சென்சுவரி ஸ்பெஷலில் வந்த இரயில் தடம் தொடர்பான கதை. அதன் பிறகு எவ்வளவு பெரிய கதையாக இருந்தாலும் முடிக்காமல் விட்டதில்லை - கழுகு வேட்டை, டிராகன் நகரம் உட்பட.

    - All-time favorite: பழி வாங்கும் புயல் & பழி வாங்கும் பாவை.

    - டெக்ஸ் & கோ மீது தீராக் காதல் தொடர்ந்திடுவதன் காரணம்: முதல் காரணம் பாலைவனமும், நீண்ட பயணங்களும் கொண்ட கதையமைப்பு எனக்கு எப்போதும் சலித்ததில்லை என்பது. இரண்டாவது டெக்சின் விடாப்பிடியான எதையும் எதிர்கொள்ளும் திறன், வில்லன்களானாலும் சரி பயணம், இயற்கை, சூழ்நிலை எந்த இடரானாலும் உற்சாகம் இழக்காத செயல் திறன். மூன்றாவது கார்சன், கிட் மற்றும் டைகருடன் இணைந்து செய்யும் டெக்னிக்ஸ். தொடர்ந்து 4-5 பக்கங்களுக்கு டயலாக்ஸ் இருந்தாலும் ஈடுபாட்டை குலைக்காத கதையின் தன்மை. And a dozen more reasons... :)

    ReplyDelete
  28. Replies
    1. கணேஷ் குமார் சார் இந்த கனமான சுமையை சுமப்பதால நீங்கள் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை, இந்த தேவையற்ற சுமையை கழற்றித்தான் எறியுங்களேன்.

      Delete
    2. ஏன் பாஸ், மாத்த முடிவு பண்ணியது முழுசாவே மாத்திக்கலாம்ல? அப்புறம் கொஞ்ச நாள் கழித்து full psycho னு வேற யாராவது வந்தா போட்டி போடனும். (நானே வரலாம்)

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. நவநிதன் கிருஷ்ணம் என்னை செமி சைக்கோ என்று எதனால் என்னை அழைக்க வேண்டும் என்பதற்க்கு சேலம் டெக்ஸ் பெரிய விளக்கம் போன பதிவில் குடுத்துள்ளார்.(நானே இந்த கேள்வியை சேலம் டெக்ஸ் கிட்ட கேட்டேன்)
      அதை படித்து தெரிந்து கொல்லவும்.

      Delete
    5. கணேஷ் நம்மை விட உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ கிடையாது. அதிகம் பேர் கேட்பதே கிடைக்கும். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் ! எதிராளியே உன் ஆயுதத்தை தீர்மானிக்கிறான். நீங்கள் அறியாததை நான் சொல்லவில்லை, உண்மையை சொன்னேன்! வாழ்க்கை நாம் சந்தோசமாய் வாழ்வதற்கு மட்டுமல்ல, இயன்றவரை பிறர் சந்தோசத்தை தடுக்காமல் வாழ்வதற்கும்தான்!

      Delete
  29. ஏம்பா... உங்க ரவுசுக்கு ஒரு அளவே இல்லையாப்பா!! :D :))))))))

    ReplyDelete
    Replies
    1. வாய் வலிக்க... lion-muthu blogspot!
      வயிறு குலுங்க...lion-muthu blogspot!
      உருண்டு புரண்டு சிரிக்க...lion-muthu blogspot!

      இன்றே login செய்திடுங்கள்... எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது!! :) :) :) :)

      Delete
  30. ப்ளாக்ல ஒரு வடிவேல் வந்துட்டார் போல,இனி ப்ளாக் ஒரே கும்மாளாம் தான் . எங்களைப்போன்ற மொனப்பார்வையாளர்களுக்கு லயனும் இனிமை அதன் ப்ளக்கும் நல்ல பொழுதுபோக்கு ம்ம்ம் தொடரட்டும் உங்கள் சொல்லாடல் மாலை வணக்கம்.

    ReplyDelete
  31. ஏன் டெக்ஸ் பிடிக்கும்?
    மிக சுலபமான கேள்வி...
    நம்மிடையே உலவிய, உலவிக் கொண்டிருக்கும் கதை நாயக, நாயகியியரின் முடிவுகளோ, திட்டங்களோ நம் மனதிற்கு ஒவ்வாது போயிருக்கும் சமயங்கள் பல.
    எத்தனை சங்கடங்கள் பட நேரிடினும் கலங்காது, தன் மனதிற்கு சரியென படுவதை டெக்ஸ் செய்கையில் அது நம் மனதிற்கும் சரியென படும்.
    டைகர் கிருஷ்ணர் போல, லீலை மன்னன்...
    டெக்ஸ் இராமர் போல, உதாரண புருஷன்...

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ்ஸோட சில போட்டோக்கள் நீங்கள் அவசியம் பார்க்கனும்,

      ஒரு ஹாய் போடுங்க என் வாட்ஸ்அப் க்கு, 9629298300.

      Delete
    2. சூப்பர் நவநீதன்.

      Delete
  32. ஹெர்லக் ஷோம்ஸ்....!!!

    *ஜம்போவின் 2வது இதழான ஒரு குரங்கு வேட்டையின் அட்டைபடமும், இதழின் தயாரிப்பு தரமும் டாக் ஆஃப் த மன்த். அவற்றை தாண்டி இதழினுள் போகவே நாம ஏதாச்சும் சேட்டை செய்தாகனும்.

    *குரங்கை வைத்து திருடும் டோனி தப்பியதை அடுத்து தானாகவே புலனாய்வுல இறங்கும் ஷோம்ஸிடமே அந்த கேஸ்வர, தொடர்வது நையாண்டி ஆட்டம்.

    *என்றோ படித்த இவரது முந்தைய சாகசம் நிழலாக கூட ஞாபகம் இல்லா நிலையில், இந்த பாணி இன்ஸ்டன்டா பச்சக்னு மனசில் ஒட்டிக்கொண்டது.

    *தொடரும் மாறுவேடங்கள், குதிரை வேடத்தில் அடிக்கும் கூத்து என செமத்தியான காமெடி ரகளை. எத்தனை இடங்களில் சிரித்தோம்னு கணக்கு இல்லை.

    *படங்களே குபீர் சிரிப்பை வரவைப்பதால், டயலாக்ஸ்களில் அடக்கி வாசித்து உள்ளார் ஆசிரியர் சார்.

    *குரங்கின் முக பாவணையை வரைந்தவருக்கு எத்தனை கைதட்டல்கள் வேணா தரலாம்.

    *லாஜிக் இல்லா மாஜிக்தான் ஹெர்லக்.

    *5ம் பக்கம் ஸ்காட்லாந்து யார்டு குற்றப்பிரிவு தலைவர் அமர்ந்திருக்கும் காட்சியை பார்த்தா, அவர்தான் சேட்டை பண்ணும் குரங்கோனு தோணும்! மேட்சிக்கான போஸ்! ஹா...ஹா...!

    *டாக்டர் வேஸ்ட்சன்னோட முழி, ஒரு கூடுதல் ப்ளஸ்! அந்தாளு மீசையும், தாடியும்! பார்த்தாவே கெக்கே பிக்கேனு சிரிக்க வைக்கிறார் மனுசன்.

    *2வது சாகசம் ஓகே ரகம்தான் எனக்கு. அந்த சர்க்கஸ்காரன் தேவையற்ற ஒட்டாவே தோணுறான்.

    *கோமாளி கடத்தல்காரர்கள், குஜாலான செவ்விந்திய தலைவரே போதுமான அம்சங்கள்.

    *பிங்கர்டன் ஏஜென்சி பாவம், பிஞ்சடர்ன் ஏஜென்சி யாக ஆகிப்போச்.

    *அடுத்த சுற்றில் சந்தா Cல் ஹெர்லக் வரட்டும் சார். ஜம்போவில், இளம் டெக்ஸ் & பாண்டுக்கு இணையான ஹூரோவை போடுங்க! கலரில் மாடஸ்தி இந்த ரோலுக்கு ஃபிட் ஆவாங்க என்பது என் கருத்து! நம்ம முதல் ஹீரோயினுக்கு ஒரு மரியாதை செஞ்சா மாதிரியும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. // குரங்கின் முக பாவணையை வரைந்தவருக்கு எத்தனை கைதட்டல்கள் வேணா தரலாம். //
      ஹாஹாஹா உண்மைதான்.

      Delete
    2. // லாஜிக் இல்லா மாஜிக்தான் ஹெர்லக் // அவர் போடும் வேடத்திற்கு இது பொருந்தும்.

      அதேநேரம் இவர் துப்பறிவதில் லாஜிக் நிறைய உள்ளது. அதுவே இவரை மிகவும் ரசிக்க செய்தது.

      Delete
  33. நான் படித்த டெக்ஸ் கதையாக என் ஞாபகத்தில் இருப்பது பவளச் சிலை மர்மம்..

    இதை கடையில் பார்த்து விட்டு ஃப்ரண்டிடம் காசு கேட்டு வாங்கிப் படித்தது இன்னும் மறக்காமல் நினைவுப் பேழையில் உள்ளது..

    ஆல்டைம் ஃபேவரைட் எனில் நிறைய கதைகள்.. குறிப்பாக

    பழிவாங்கும் புயல்
    மரண முள்
    கார்சனின் கடந்த காலம்
    வல்லவர்கள் வீழ்வதில்லை
    பனிக்கடல் படலம்
    சர்வமும் நானே

    காமிக்ஸ் படிக்க.. அதுவும் டெக்ஸ் வெளியீடுகளை படிக்க எனக்கு காரணங்கள் தேவையில்லை..

    ReplyDelete
  34. இங்கு டெக்ஸ் முடி அலங்காரம் மற்றும் அவர் ஜேம்ஸ் பாண்ட் மாதிரி இருக்கிறார் என நண்பர்கள் பதிவிட்டு இருந்தார். எனது எண்ணம் ஜேம்ஸ் பாண்ட் முகம்/character இந்த கதையில் வரும் டெக்ஸைக் கொண்டு வரைந்து/உருவாக்கி இருப்பார்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  35. டெக்ஸ் பற்றி சொல்ல யோசித்து பார்த்தால் எந்த கதையை முதலில் படித்தேன் என்று ஞாபகம் வர மாட்டேன் என்கிறது. 🤔

    அதனால் நான் படித்த முதல் ஆர்ச்சி கதை மற்றும் ஸ்பைடர் கதை பெயர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. ஆர்ச்சி மற்றும் ஸ்பைடருக்கு 30/50 வருடம் கொண்டாட்டம் அப்படி எதாவது வந்தால் சொல்லுங்க சார்.😃

    ReplyDelete
  36. Now Sherlock Holmes movie at Sony pix

    ReplyDelete
  37. விஜயன் சார், டெக்ஸ் பற்றி நண்பர்கள் எல்லோரும் அழகாக எழுதி பட்டையை கிளப்புறாங்க. எல்லாம் அருமையாக உள்ளது. நீங்கள் நண்பர்கள் இங்கு பதிவிட்ட அனைத்தையும் உபயோகபடுத்தினால் சந்தோஷமாக இருக்கும். கூடுதல் பக்கங்கள் இதற்காக ஒதுக்குங்கள் சார்.

    ReplyDelete
  38. அதிகமாகப் புழக்கத்திலிருக்கும் பொதுப் பெயர்களைக் கொண்ட நண்பர்கள் தங்கள் பெயருக்கு முன்போ பின்போ தங்கள் ஊர்ப்பெயரையோ, அடைமொழியையோ சேர்த்துக்கொள்வது சில குழப்பங்களைத் தவிர்க்கும்! உதாரணத்திற்கு,

    இங்கே இரண்டு 'Ramesh Kumar'கள் பதிவிட்டுள்ளனர்! இரண்டு பேருடைய புரொஃபைல் பிக்சர் மற்றும் எழுத்து நடையில் வித்தியாசங்கள் இருப்பினும், மெயில் சப்ஸ்கிரிப்ஷன் மூலமாக கமெண்டைப் படிக்கும் நண்பர்களுக்கு யார் - எந்த Ramesh Kumar என்ற குழப்பம் வரக்கூடும்! அல்லது, இருவரையும் ஒரே நபராகவும் எண்ணிவிடக்கூடும்!

    பொதுமக்கள் நலன் கருதி 'ஆலோசனை' என்ற பெயரில் கருத்துகளை வெளியிடுவது : 'ஈரோடு' விஜய்

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை இத்துக்காகத்தான் நண்பர் கணேஷ்குமார் தன் பெயருக்கு முன்னால் செமி சைக்கோ என்று சேர்த்துக்கொண்டார் போல.(அடையாளம் முக்கியம் அமைச்சரே.)

      Delete
    2. என் கமெண்டுகளில் within bracket போட்டு சிலபல கமெண்ட் பதிவிடுவதனால் என் பெயர் இனி பிராக்கெட் பத்மநாபன் என்று அழைக்கப்பட கூடும்.

      Delete
    3. ///பிராக்கெட் பத்மநாபன் ///

      ஹா ஹா ஹா!! :))))))

      Delete
    4. நீங்கள் கூட ராக்கெட் ரமேஷ் குமார் என்று வைத்துக்கொள்ளலாம். ரைமிங் ஆக இருக்கும்.

      Delete
    5. // ராக்கெட் ரமேஷ் குமார் //
      நாசாவுக்கு தூக்கிட்டு போய் விடப் போறாங்க.

      //பிராக்கெட் பத்மநாபன் //
      செம. உங்கள் பெயர் சூட்டல் சிரிப்பை வரவைக்கிறது.

      Delete
    6. விஜய் @ ஒரே பெயரில் ஒரே பெயரில் இருவர் இருந்தால் என்ன செய்யலாம்?
      🤔🤔🤔🤔🤔🤔

      நண்பர் ராமதுரை சொன்னது போல் ஊர் மற்றும் நமது பெயருடன் ஒரு பட்டப் பெயரை சேர்த்துக் கொள்ளலாம், ராக்கெட் ரமேஷ் கோவை ... அப்படியே அவங்க படத்தை புரொபைல் பிச்சரில் அவங்க படத்தை போட்டால் இன்னும் நல்லா இருக்கும்.

      Delete
  39. அன்புள்ள அனாமதேயாக்களில் பிரதானமானவரும், நட்புக்கு இலக்கணம் வகுத்தவரும், ஷெரீப் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவருமாகிய Mahendran Paramasivam அவர்களுக்கு தமிழ் காமிக்ஸ் சமூகத்தின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷெரீப்...!
      நினைப்பது நிறைவேறி என்றென்றும் இன்புற்றிருங்கள்...வாழிய வாழியவே...!!

      Delete
    2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் MP..:)

      Delete
    3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு.மகேந்திரன் பரமசிவம் சார்.
      அடுத்தவரை அடுத்தவரை சந்தோஷப் படுத்தி மகிழும் உமக்கு நீண்ட ஆயுளும்,ஆயுள் முழுக்க ஆனந்தமும் உண்டாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

      Delete
    4. 🎂🎂🎂🎂🎂🍮🍮🍮🍮🍰🍰🍰🍰🍰
      இன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர்,
      சந்தா பரிசுகளால் நண்பர்களை அன்பு மழையில் நனைத்தவர்,
      பண்பின் உறைவிடம்,
      பாசமான சொந்தக்காரர்,
      கண்டிப்பில் நிகரற்ற ஷெரீப்,
      பழகுவதில் பாசக்காரர்,
      உதவுவதில் முன்னே நிற்பவர்,
      என்னுடைய அருமை நண்பர்,
      அமெரிக்க வாழ் மஹிஜி என்கிற மகேந்திரன் பரமசிவம் அவர்களுக்கு
      இனிய
      இனிப்பான
      நெஞ்சம் நிறைந்த
      இதயம் கனிந்த
      பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

      இன்றுபோல் என்றும் கைநிறைய காமிக்ஸோடு அதுவும் டெக்ஸ் புக்குகளாக பெற்று,
      மகிழ்வுற எல்லாம் வல்ல இறைவன் அருள் வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      Delete
    5. வாழ்த்துக்கள் சாா்!

      Delete
    6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஹி.
      ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு இனிய
      வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

      Delete
    7. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மஹி,என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

      Delete
    8. மனமினிய பிறந்த நாள் வாழ்த்துகள் மகி

      Delete
    9. அடடே....உங்களுக்கும் இன்று தான் பிறந்த நாளா மஹி சார் ? நமது உளமார்ந்த வாழ்த்துக்களும் உரித்தாகுக !!

      Delete
    10. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு...நன்றிகள் பல.

      Delete
  40. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே!
    தங்கள் எண்ணம் போல் வாழ்வு உயர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  41. வணக்கம் சார்,

    மரணத்தின் நிறம் பச்சை - நான் படித்த முதல் டெக்ஸ் கதை (அ) த்ரில்லர். விலை ரூ.3/-. ராணி காமிக்ஸில் மூழ்கி இருந்த
    எனக்கு கதை, சித்திரம், மொழிபெயர்ப்பு என சகலத்திலும் ஒரு வித்தியாசத்தை உணர்த்திய படைப்பு. சிறுவனாக படித்த போதும் சரி, மறுவாசிப்பிலும் சரி சற்றும் சலிக்காத பரபரப்பான த்ரில்லர். டெக்ஸ் கதைகளில் இது ஒரு மாறுபட்ட படைப்பு என்பதால், ஹீரோயிசம் துளியும் இல்லை. ஒரு ஜாம்பவானின் கதையை படிக்கிறோம் என்று அறியாமலேயே படித்து பிடித்து போனவர் தான் தல டெக்ஸ்.

    இக்கதையோடு சேர்த்து தலைவாங்கி குரங்கு, கழுகு வேட்டை, கார்ஸனின் க. காலம், நிலவொளியில் ஒரு நரபலி, நள்ளிரவு வேட்டை, மரண முள், வல்லவர்கள் வீழ்வதில்லை, மரண தேசம் மெக்ஸிகோ, டைனோஸரின் பாதையில், ஆகியவை நான் மிகவும் ரசித்ததாகும்.

    டெக்ஸை ஏன் பிடித்திருக்கிறது?
    1. சுற்றி வளைக்காமல் அக்கிரமங்களை தடாலடியாக முகத்திற்கு முன் எதிர்த்தல்.
    2. சண்டை காட்சிகளில் எதிரியை புரட்டி எடுக்கும் ஸ்டைல் மற்றும் அதில் வரும் பன்ச் டயலாக்குகள்.
    3. கார்ஸனின் கூட்டணி.

    மொத்தத்தில் தமிழ் காமிஸ் உலகின் MGR.
    So, யாராலும் நெருங்கவும் முடியாது, அசைக்கவும் முடியாது.

    ReplyDelete
    Replies
    1. ///மொத்தத்தில் தமிழ் காமிஸ் உலகின் MGR.
      So, யாராலும் நெருங்கவும் முடியாது, அசைக்கவும் முடியாது.///

      நச்!

      Delete
    2. செம திருநாவுக்கரசு.

      Delete
  42. எங்கள் இனிய நண்பர் ஷெரீப் அவர்களை என்றும் மகிழ்வுடன் வாழ இன்று மட்டுமல்ல என்றும் வாழ்த்துகிறேன்.


    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஷெரீப்..

    ReplyDelete
  43. மனதில் பட்டது எதுவாக இருப்பினும் வெளிப்படையாக தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் இனிய நண்பர் ரம்மி என்கிற X111 என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.


    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்மி..

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரம்மி....எதற்கும் குறைவில்லாமல் இன்றுபோல் என்றும் வாழ்க..!!

      Delete
    2. ரவுசுப் பார்ட்டி ரம்மிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!

      Delete
    3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்மி,என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

      Delete
    4. டைகர் வெறியர் ரம்மிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...!!!💐💐💐💐🎂🎂🎈🎈🎈🎈🍧🎂

      Delete
    5. டியர் ரமேஷ் எனும் ரம்மி மனமினிய பிறந்த நாள் வாழ்த்துகள்

      Delete
    6. திரு.ரம்மி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
      நீண்ட ஆயுளுடன் ரம்யமான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்.

      Delete
    7. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்மி!

      Delete
    8. வாழ்த்துக்கள் நண்பரே!

      Delete
    9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்மி!

      Delete
    10. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரம்மி.

      Delete
    11. தாமதமாய்...ஆனால் நிறைவாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் !

      Delete
  44. டெக்ஸ் ஏன் பிடிக்கும்?
    ஏன்னா அவர் டெக்ஸ் அதனால்.....



    நான் சிறுவயதில் பல டெக்ஸ் கதைகள் படித்திருந்தாலும், அதனில் மனதில் நிற்பது சைத்தான் சாம்ராஜ்யம்தான்.

    ஜீராஸிக் வேர்ல்ட் வந்தபிறகு டைனாசர்கள் எல்லாம் எங்க பக்கத்தூரான குப்பம்பட்டி வரையில், அட நம்ம டைனோசர்டா என்று அறிமுகமாகிபோனது...

    ஆனால்

    அதற்கு முன்பே அந்த ஆபத்தான மிருகம் வருது.எல்லோரும் தாழ்வான பகுதிக்கு ஓடுங்க என்று தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகபடுத்தியது நம்ம விஜயன்சார்தான்

    அதற்கு பிறகு மனதில் நின்றது

    பழிக்குபழி

    டெக்ஸ்வில்லருக்கு சமமான வில்லன் இக்கதையில் தான் அமைந்தார் என்பது என் கருத்து.

    ஏறக்குறைய டெக்ஸ் மரணத்தின் அருகில் சென்றுவிட்டு புனித மானிடோ வின் அருளால் பிழைத்து அந்த வில்லனை சுழுக்கு எடுத்ததெல்லாம் வரலாறு.
    பிறகு
    டிராகன் நகரம்.

    அந்த சீனர்களின் நகரில் டெக்ஸ் நுழைந்து துவம்சம் செய்ததெல்லாம் அல்டிமேட்...

    அதன்பிறகு

    நள்ளிரவு வேட்டை

    எல்போரா என்ற வில்லன் யாரென்று தெரியாமல் டெக்ஸ் மோதி இறுதியில் கண்டுபிடித்தது.

    பிறகு
    டெக்ஸ் கவுரவ தோற்றத்தில் கலக்கிய கார்சனின் கடந்த காலத்தை மறக்க முடியுமா...

    நான் முதலில் புத்தகம்படிக்க ஆரம்பித்தது ராஜேஸ்குமாரின் பஞ்சவர்ணகொலைகள் மூலம்தான்... அதற்கு பிறகு பல்வேறு இலக்கிய புத்தகங்கள் படித்தாலும் என் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டி முதலில் படிக்க வைத்தது ராஜேஸ்குமார்தான்...

    அதுபோல முதலில் காமிக்ஸ் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது டெக்ஸ்தான்...
    பல்வேறு கிராபிக் நாவல் வந்தாலும் அதை நான் படித்தாலும் ,அதை படிக்க வைத்தது , படிக்க தூண்டியது டெக்ஸ்தான் என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது...



    ReplyDelete
    Replies
    1. செம சுந்தர்!!! சூப்பர்...!!

      பழிக்குப் பழி யும் அட்டகாசம் பண்ணும். கலர்னா கலக்கும்.


      அட டே, நீரும் நம்ம மாதிரி க்ரைம் நாவல் விவேக் பார்டியா!!!
      பஞ்சவர்ணகொலைகள்னா கலருக்கு ஒருத்தனா போட்டுத் தள்ளுவாங்களே அதானே! தெறிக்கும் கதை.

      நீலமேகம், கார்வண்ணன்,2பேர் தான் ஞாபகம் வருது.

      Delete
    2. "டெக்ஸ் ஏன் பிடிக்கும்?"
      கேள்வியே அபத்தமாக இருக்கிறது!
      ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய நல்ல குணங்கள்...
      அன்பு,
      பாசம்,
      பணிவு,
      தானம்,
      ஈகை,
      அறம்,
      நன்றி,
      நட்பு,
      நகைச்சுவை,
      சுறுப்பு,
      விட்டுக்கொடுக்கும் தன்மை,
      பொறுமை,
      உதவி,
      உண்மை,
      சாந்தம்,
      கருணை,
      மன்னிப்பு,
      அமைதி,
      மானம்,
      ஒழுக்கம்,
      அஞ்சாமை,
      வீரம்,
      தைரியம்,
      ரசனை,
      ஆர்வம்......!
      இப்படி நல்ல குணங்கள் ஒன்றாக அமைந்த மனிதனை காண்பது அரிது!
      ஆனால்
      மேற்கூறிய நல்ல பண்புகளின் மொத்த உருவமே டெக்ஸ் எனும் போது அவரை பிடிக்கவில்லை என்பது மட்டுமே விவாதத்துக்கு உள்ளாக்க வேண்டிய விஷயமாக தோன்றுகிறது!
      ஆனால்
      இதுகூட இன்னொன்றும் சேர்ந்திடுச்சுங்கோ!!
      எம்ஜி.ஆர், சிவாஜி, கமல்,ரஜினி, விஜய்,அஜித், தனுஷ்,சிம்பு இப்படி மூன்றெழுத்து காரவங்கள நமக்கெல்லாம் புடிக்கிறது காலம்காலமாக நாம் பாக்குறது தானுங்களே!
      ஒருவேளை
      கார்சன் பெயர் டெக்ஸ் எனவும், டெக்ஸின் பெயர் கார்சன் எனவும் படைப்பாளிகள் வைத்திருந்தால்....?
      அப்ப கொஞ்சம் ரோசன பண்ண வேண்டி வந்திருக்கலாம்!!

      Delete
    3. சுறுசுறுப்பு என்பது சுறுப்பாகி விட்டது.
      மன்னிக்கவும்.

      Delete
    4. சூப்பர் சுந்தர் ஜி

      Delete
    5. பழிக்குப்பழில அந்த வில்லன் துப்பக்கிய உருவாமயே சுடுவானே,, ஒத்த கைல தல சுடுவாரே

      Delete
    6. // பழிக்குப்பழில அந்த வில்லன் துப்பக்கிய உருவாமயே சுடுவானே,, ஒத்த கைல தல சுடுவாரே //

      கவனித்தது இல்லைல... அடுத்த முறை இந்த புத்தகத்தை படிக்கும் போது கவனிக்கிறேன் மக்கா.

      Delete
  45. தளத்தின் டாக்டர் அன்பர்களே@

    இன்று மாடஸ்தி யின் ஒரு விடுமுறை வில்லங்கம் படிக்க ஆரம்பித்தேன்.

    பக்கம் 11 கடேசி பேனல், மாடஸ்தி சொல்லும்,

    "ஒரு பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் போது, உணர்ச்சிகளற்ற ஜடம் போல் நடந்து கொள்ளவும், பணியில் இல்லாத போது ஒரு பெண்ணைத் தொடும்போது சிலிர்க்கவும் எப்படித்தான் உங்களுக்கு சாத்தியமாகிறதோ..,டாக்டர்!"

    டாக்டர் கார்டன், "அது தொழில்முறை இரகசியம்!ஸாரி"

    ////----அந்த ரகசியம் என்னவோ டாக்டர் அன்பர்களே?????

    என்னைப் போன்ற பச்சை மண்ணுகளும் புரிந்து கொள்ளும் படி விளக்கலாமே!

    ReplyDelete
  46. பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல நண்பர்களே🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல நண்பர்களே🙏🙏🙏🙏🙏

      Delete
  47. முதன் முதலாக படித்த டெக்சு கதை: தெரியலை.. ஆனால் நியாபகத்தில் இருப்பது பழி வாங்கும் புயல்..
    அடடா என்ன ஒரு யுக்தி, அப்பப்பா எவ்வளவு தந்திரங்கள்.. ஒரு காலத்தில் என்னுடைய உணவு தட்டத்துக்கு அருகில் இந்த புத்தகம் இல்லையெனில் எனக்கு சோறே இறங்காது.. இந்த புத்தகம் என்னிடமும் , எனக்கு காமிக்ஸ் அறிமுகப்படுத்திய செந்தில்குமார் என்ற நண்பரிடமும் மாறி மாறி இருக்கும். எங்க அம்மா சோறு போட்டு கொண்டு வைத்த பின்னர் அந்த புத்தகம் இல்லாமல் வடக்கு வீதியில் இருந்து தெகோட்டு வீதியில் உள்ள நண்பன் வீட்டுக்கு ஓடிப் போவேன்.. வந்து சேரும் போது கிடைக்கும் திட்டுகள் , அப்பப்பா.. ஆசிரியர் வாங்கும் மொத்துகளை விடவும் ஜாஸ்தியாக இருக்கும்..
    பிடித்த டெக்சு கதைகள்:பழி வாங்கும் புயல், சாத்தான் வேட்டை, எல்லையில் ஓர் யுத்தம், கழுகு வேட்டை, சிவப்பாய் ஒரு சொப்பனம், அப்புறம்... முழுக்க நனைந்த பின்னே முக்காடு தேவையா என்ன?? அட எல்லா கதையுமே புடிக்கும்பா.. அதிலும் சமீபத்திய கதைகளிலே நில் கவனி சுடு, விதி போட்ட விடுகதை, அப்புறம் சந்தேகமேயில்லாமல் சர்வமுப் நானே..

    பி.கு. : இப்பவும் நான் தங்க தலைவன் கொ.பே.சே வே...

    ReplyDelete
    Replies
    1. என் பார்வையில் , சட்டம் அறிந்திரா சமவெளி ,செம்ம ஆக்சன் த்ரில்லர். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாத ஸ்டோரி.

      Delete
    2. ரம்மி ...நல்ல நாளுல நல்ல பதிவு..!! :-))))

      Delete
    3. திருப்பூர் மண்டல டெக்ஸ் கொ.ப.செ. ரம்மி அவர்களே...!!!!

      Delete
    4. ரம்மி பிறந்தநாளில் மனம் திறப்பு!அருமை!

      Delete
    5. சூப்பர் ரம்மி. அருமையாக எழுதியுள்ளீர்கள்.

      Delete
    6. சூப்பர் ரம்மி!!

      டெக்ஸை பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது! சிலர் 'எனக்கு டெக்ஸ் பிடிக்காது - டெக்ஸ் ரசிகர்களையும் பிடிக்காது - நான் சந்தா-B கட்டப்போறதில்லை - டெக்ஸ் புக்கையெல்லாம் பழைய புத்தகக்கடைக்கு இலவசமா கொடுத்துட்டேன்" அப்படீன்னு உதார் விடறதெல்லாம் ச்சும்மா லுலுலுவாய்க்காண்டி!

      ஒரு தமிழ்ப்படத்துல கூட, ஹீரோயினி நம்ம ஹீரோவை எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டேஏஏ இருப்பா!! அதுக்கப்புறம்தான் தெரியும் - அவ ஹீரோவை ரொம்பவே நேசிக்கறான்னும், (குடும்பச் சூழல் காரணமாக) வெறுக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டிருந்தான்னும்!

      இங்கேயும் கூட சிலர் டெக்ஸை 'பிடிக்காது பிடிக்காது'னு அலப்பறை பண்ணிக்கிட்டிருக்கறதெல்லாம் அந்த ஹீரோயினி கதை தான்!!

      இல்லேன்னா பிடிக்காத ஹீரோவின் கதைய எதுக்குப் படிச்சுட்டு வந்து இங்கே மெனக்கெட்டு விமர்சனம் எழுதணும்னேன்?!!

      இதுவும் ஒருவகை காதல் - கொஞ்சம் ஈகோ கலந்து! ;)

      Delete
  48. Hi all😀
    Happy vinayaga chaturthi
    Happy birthday to those two birthday babies

    ReplyDelete
  49. டெக்ஸ் வில்லாின் காதல் பாடல் இசைஞானியின் இசையில்...

    🎵thuppaakki kayil eduthu
    rendu thOttavum payyil eduthu
    hei kokku suda pogum vazhi thaan
    adhu thappi ingu pogum vazhi thaan
    enna chuttadhenna kannu
    indha kannipponnu kannu kannu
    hei enna chuttadhenna kannu
    indha kannipponnu kannu kannu🎵🎶🎶

    அட, அது தமிழ் பாட்டாவே இருந்தாலும் அமொிக்கால இங்கிலீஷ்ல தானே பாடுவாங்க!!

    டெக்ஸ் 70ஐ முன்னிட்டு Evergreen 80sல இருந்து ஒரு பாட்டு!

    ReplyDelete
    Replies
    1. ///அட, அது தமிழ் பாட்டாவே இருந்தாலும் அமொிக்கால இங்கிலீஷ்ல தானே பாடுவாங்க!!///


      :D ஹா ஹா!!

      Delete
    2. ஹா..ஹா...இருந்தாலும் தமிழ் பாட்டை இத்தாலியில,பிரேஸிலியன்ல,நார்வீஜியன்ல,ப்ரெஞ்ச்ல பாடியிருக்கலாம்..

      அமெரிக்காவில் T-REX புகழ் அளவு கூட TEX புகழ் இல்லை என்பது வருத்தம் தரும் உண்மைன்னு நினைக்கிறேன்...

      Delete
    3. ////அமெரிக்காவில் T-REX புகழ் அளவு கூட TEX புகழ் இல்லை என்பது வருத்தம் தரும் உண்மைன்னு நினைக்கிறேன்...////

      அந்தவகையில் பார்த்தால், தமிழ்நாட்டைக்காட்டிலும் அமெரிக்கா சுமார் 30+ வருடங்கள் பின்தங்கியே இருக்கிறது!

      Delete
  50. பிறந்த நாளும் அதுவுமா நல்ல நிகழ்வுகளை நினைவு கூறி கடவுளுக்கு நன்றி சொல்லலாம்னு தோணுச்சு. 2014 ல தான் தளத்துக்கு வந்தேன். 14 ல் இந்தியா வந்த போது நிறய புக் வந்துருக்குடா இடமே இல்லைடா என்று முனுமுனுக்க வாய்ப்பே இருக்காதேன்னுட்டு பாத்தா ஏகப்பட்ட காமிக்ஸ். அப்ப எல்லாம் சந்தான்னு இல்லாம மொத்தமா ஒரு தொகையை கட்டிட்டு வரும் போது படிச்சுக்கறது. ஒரு சில கதைகளைத் தவித்து எல்லாம் வந்திருக்க விட்டுப்போனதையும் ஆபிசுக்கு தொடர்பு கொண்டு ஆர்டர் பண்ணி வாங்கியாச்சு. அப்பத்தான் தளம் பற்றியும் தெரிய வந்துச்சு.

    ஈவியுடன் மின்னஞ்சல் தொடர்பு 2015 ஜனவரி புத்தக விழா திட்டமிடலின் போது ஏற்பட்டது. மேற்கொண்டு டெக்ஸ் விஜய், கிட் ஆர்டின், தலீவர், ப்ளூ, ரம்மி, ஜே கே என வட்டம் பெரிதானது. அப்படியே 2016 ஜனவரியில் வர திட்டமிட்டு ஒரு விபத்தால் வர முடியாமல் 2016 ஆகஸ்டில் ஈபுவிக்கு தான் வர முடிந்தது.

    அங்கு தான் மீத நண்பர்களின் அறிமுகம். இழந்து போன பள்ளி கல்லூரி நாட்களை ஒருங்கிணைத்து கொண்டாடியது போன்ற அனுபவம். கிடைத்த நட்புக்களுடன் தொடர்பு மேலும் இறுக காமிக்ஸால் நண்பர்கள் ஆனவர்கள் அன்பால் இப்பொழுது குடும்ப நண்பர்கள் ஆகி விட்டனர். வெளியே சபை நாகரிகத்தின் பொருட்டு வாங்க போங்கன்னு சொல்லிகிட்டாலும் மனதளவில் வாடா போடா நட்புதான். கிட் ஆர்டின் கண்ணனை பொது வெளியில் கூட யோவ் தான். 😜.

    ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இது போன்ற நண்பர்களை பெறுவது அபூர்வம், காமிக்ஸ், தளம் மற்றும் புத்தக விழா என இதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி அனுக்கர்களை அடையாளம் காண உதவிய ஆசிரிய நண்பர் விஜயன் சாருக்கும் ஸ்பெசல் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ///ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இது போன்ற நண்பர்களை பெறுவது அபூர்வம், காமிக்ஸ், தளம் மற்றும் புத்தக விழா என இதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி அனுக்கர்களை அடையாளம் காண உதவிய ஆசிரிய நண்பர் விஜயன் சாருக்கும் ஸ்பெசல் நன்றி.///

      உண்ம!!

      மீண்டும் பள்ளி, கல்லூரி வாழ்க்கைக்குத் திரும்பியதைப் போன்ற நட்பு வட்டம் அமைந்திருப்பதற்கு எடிட்டரே முழுமுதற் காரணம்! ஆயிரத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு - நமக்கெல்லாம் காமிக்ஸ் மூலம் கிடைத்திருக்கிறது!!

      ஏதோவொரு வகையில் நாமும் வரம் வாங்கிவந்தவர்களே!

      Delete